கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அக்னி 1976.01

Page 1

மனிதாபிமானப் Ugolyurvest84cfast
முற்போக்குச் சிந்தனைக்கலாம்

Page 2

இரவின்
சிறகுகளுக்கு அப்பால்.
இரவின் சிறகுகள் விரிந்து கிடக்கும் "பைன்" மரங்களின் ஊடே வெப் ப மா ன இரத்தத்தால் தாலாட்டப்பட்ட தியாகங்கள் நீக்ரோ மக்களின் வர லாற்றுக்குரியது.
பல நூற்றண்டுகளாக வெள்ளை நிற ஏகாதிபத் திய வெறியர்களால் அடிமையாக்கப்பட்டுவரும் அம் மக்கள், தமது சுதந்திர உணர்வுப் பிரகடனத்தால் போராடி வருகின்றர்கள். காலச் சுவடுகளில் அவர் களின் நியாயமான போராட்டங்கள் கூட அநியாய மாகக் கொல்லப்பட்டிருக்கின்றன.
மார்டின் லூதர் கிங், ஸ்டொக்லி போன்றேர் கொல்லப்பட்டபோதும் அவர்களின் கல்லறை நினைவு கள் புதிய போராட்டக் கறுப்பு மலர்களைப் புஸ்பித் திருக்கின்றன.
கறுப்புச் சக்தியின் உத்வேகமானது பெந்தர், அன்கோலா, கோர் போன்ற இயக்கங்களாக உரு வம் பெற்றிருக்கின்றன. பென்டன் காமிக்கேல் அஞ்சலா டேவிட், மல்கம் எக்ஸ் போ ன் றேர் இருண்ட மக்களின் ஆத்ம ராகங்களாக மட்டுமன்றி அவர்களது ஆவேசக் குரலுமாஞர்கள். இன்று இப் போராட்டமானது வர்க்கரீதியான போராட்ட முனைப் பாகி வருவது வைகறைப் பொழுதின் உதய கதிர் களை வரவேற்பதாகும்.
கலை-இலக்கியத் துறையில், குறிப்பாக கவி தைத் துறையில் அவர்களின் அனல் மூச்சுக்கள், எரியும் பிரச்சினைகளின் வெளிக் காட்ட ல்களாகத் துலங்குகின்றன இவ்விதழ் "அக்னி’ அவர்களின் கவிதைச் சிந்தனைகளுக்கு கூடிய இடமளித்து, அப் போராளிகளை வாழ்த்துகிறது. r
அக்னியில் வெளியாகும் சிருஷ்டிகள் அனைத்தும் அதனைப் படைத்த இலக்கிய கர்த்தாக்
களின் பொறுப்பு என்ற கம்பீரியத்தைச் சார்ந்ததாகும்.

Page 3
2
கறுப்புக் ஷெக் கில்பர்ட் (1925- )
ஸ்டீபன் டிக்ஷன் தமிழில்: மு. கனகராஜன்
(18 வயதான ஸ்டீபன் டிக் ஷன் என்ற நீக்ரோ இளைஞனை ஒரு வெள்ளைத்தோல் பொலிஸ் காரன் சுட்டுத்தள்ளிய போது-)
வதைக்கப்பட்டு கீழே கிடக்கும் வாலிபனுக்காயென் கடைசி அழுகை கடைசி அஞ்சலி சாகின்ற அவனுக்கு சமர்ப்பிக்கும் கடைசிக் கறுப்புப் புகழாரம்.
இரத்தம், வெடி, குண்டுகளாலான இப்படியான எங்கள் வேளையில் ஆவேசச் சொற்கஜளத் திமிங்கிலப் பீச்சலாய்ச் சொரிவது
D-6) காதுகள் கற்களாகிக் கேட்பதை மறந்தன. காலடிகளெமது கல்லறை நாடும்; மீட்டாத கானம் மரணத்தின் ஒலியே.
என்பேனு உடைந்தது மைஒழுகி உறைந்தது
கத்தியும் துவக்குமே இப்போ தெந்தன் கடைசித் தூது. இனிமே லிங்கே வழியப் போகும் இரத்தம் எத்தனை வலிமை
சுரைக்காய்களாக அரிந்து கிடக்கும் சிரசுக ளெத்தனை அழகு!
நோர்மன் ஜோர்டன் (1938- )
கறுப்பு போராளி
தமிழில்: என். சண்முகலிங்கன்
இரவில்
வெள்ளையன் உறங்கும் வேளை,
என் இதயத்திலே நெருப்பு. ஆபிரிக்காவில் ஆயிரமாய் வெடித்தெரியும் தீயின் வெப்பம் என் நெஞ்சில் எரிகிறது
அந்த 總 தூர தேசத்திலிருந்து
நர்த்தன மிட்டுவரும்
போர்ப் பறையின் ஒலியலைகள் கேட்கிறது

கவிதைகள்
அகண்ட சமுத்திரத்தினூடாக நர்த்தனமிட்டுவரும் அந்த ஒலியலைகள் என்னை (6LIT TIT6furrids உணர்வூட்டுகின்றன
அந்த பயங்கர அழைப்பிற்கு ஆட்பட்ட நான், ஒரு கல்லைத் தூக்கி முன் இருந்த *ஸ்டோர் ஜன்னலை’ நோக்கி எறிந்து மறைந்துகொள்கிறேன்.
க்ளோட் மெக்கே (1819-1948)
வெள்ளை மாளிகை தமிழில்: தீபகாந்தன்
எனது உறுதியான முகத்திற்கு எதிராக உன்னுடைய கதவு மூடப்பட்டபோது, எனது அதிருப்திகள் உருக்குப்போல் வைரமாகின. அதனுல்நான் தைரியத்தையும், ஆண்மையையும் அடைகிறேன்.
எனது கோபம் தளர்ச்சியுருவண்ணம் பெருந் தன்மையோடு அதனைக் காப்பாற்றுகிறேன்.
நடைபாதையில் கிடக்கும் கற்கள்கூட என் பாதம் பட்டுச் சூடாகின்றன.
வீதியில் நடக்கும்போதும்
என்மீது வீசப்படும் சுடு வார்த்தைகளைக் கேட்டும்என் அடக்கமான தன்மையால் அமைதியாக நடக்கிறேன். கண்ணுடித் திரையிட்ட உனது மறைப்புக்கள் என்னைத் தடுக்கின்றன
ஒவ்வொரு மணித்தியாலமும் எனது விவேகத்தைத் தேடுகிறேன்.
உக்ரமான
என் நெஞ்சில் ஏற்படும் ஆவேசத்தையும், குரோதத்தையும், உன்னுடைய
கொடுமையான
சட்டத்தின் தாத்கீதுகளையும், எனது மனிதாபிமான குணத்தால்

Page 4
4.
கட்டுப் படுத்துகிறேன். ஓ..நான் உனது நயவஞ்சகவெறுப்பை உடைத்தெறிய எனது இதயத்தைத் திறந்துவிடத் துடிக்கின்றேன்.
இச்மென் கொட்டர் (1895-1919)
நீ என்ன சொல்வாய்? தமிழில்: எம். ஏ. நுஃமான்
வாரும் சகோதரா! நாம் நமது கர்த்தரிடம் Glef6bG86utub. அவரது முன்னிலையில் நாம் நிற்கும்போது நான் சொல்வேன். பிதாவே நான் யாரையும் வெறுக்கவில்லை
யின் நான் வெறுக்கப்படுகின்றேன்" நான் யாரையும் துன்புறுத்தவில்லை ஆயின் நான் துன்புறுத்தப்படுகின்றேன்
நான் யாருடைய நிலத்தையும் அபகரிக்கவில்லை ஆயின் எனது நிலம் அபகரிக்கப்படுகின்றது.
நான் எந்த மக்களையும் ஏளனம் செய்யவில்லை. ஆயின் எனது மக்கள் ஏளனம் செய்யப்படுகிருர்கள் சகோதரா, நீ என்ன சொல்வாய்?
பேர்ள் கிளிஜ் லொமெக்ஸ் (1948-)
பார்வை தமிழில்: கே. எஸ். சிவகுமாரன்,
நேற்றிரவு உலாப் போகையில் நான் உன்னைக் கண்டேன்.
வீட்டிற்குப் பின்னல் பைன் மரங்களின் நேர்த்தியான அடர்ந்த வரிசைகளுக் கிடையில் நீ ஒடிஞய்
உன் வாய்
திறந்திருந்த
போதிலும்
சத்தமெதுவும்
எழுப்பினுய் இல்லை
உன் உதடுகள் ரப்பர்போல் மூடியிருந்தபோதும் உன் பற்கள் நீண்டிருந்தன.
மூடப்பட்ட சருமத்தினூடே உந்தணுெலி உன்னுள் உலுக்கியதுதான்
எனக்கது எட்டவில்லை.
உன்னை நான் நேற்றிரவு கண்டேன் உன் ஷேர்ட்டில் செஞ்சொட்டுகள்ரத்தக் கைவிரலடையாளங்கள்

பைன் மரங்களில் படிந்திருப்பதையும் நான் கண்டேன்.
நேற்றிரவு உலாப் போகையில் நீ ஓட
நான்கண்டேன்.
லங்ஸ்டன் ஹியூஸ் (1902-1967)
ஜோக்வில்லின் மரணம் தமிழில்: ஈழவாணன்
15 வயதுச் சிறுவன் ஒருவனைக் கொல்ல எத்தனை ரவைகள் தேவைப் படும்? என்னைக் கொல்வதற்கு எத்தனை ரவைகள் தேவைப் படும்?
என் அறிவைத் தடைசெய்யவும்காலில் விலங்கிடவும்கழுத்தில் கயிறிடவும்விசாரணையின்றிக் கொலைசெய்யவும் அடிமைப் படுத்துவதற்கும் இன்னும் எத்தனை நூற்றண்டுகள் எடுக்கப் போகின்றீர்?
அடிமை விலங்கிட்டு கழுத்தில் மரணக்கயிறு மாட்டப் பட்டதிலிருந்துஜோக்விலில் பிரயோகித்த
துப்பாக்கிச் சூடுவரையும்
5
1619ல் ஜேம்ஸ் நகரிலிருந்து 1963 வரையும் பிரகடனம் செய்யப்பட்ட சிறைநீக்க நூற்ருண்டுகளில் கூட எமக்கு விடுதலை கிடைக்கவில்லை.
உள்நாட்டுக் கலக
நினைவாஞ்சலி
ஆண்டாகும் 1965
எம்மைக் கொல்லத் தொடங்கி
எத்தனை நூற்ருண்டுகள் கழிந்து விட்டன?
எத்தனை வெப்ப நூற்ருண்டுகள் மாறிஞலும் எங்களை வதைக்கும் கொடுமைக்கு முடிவுகட்டும் முடிவை நீங்கள் அகற்றவே இல்லை.
கெளன்டர் குலன் (1903-1946)
அமெரிக்கக் கவிஞருக்கு தமிழில்: மு. கனகராஜன்
நான் கேட்டேன். இப்போதாவது இந்தக் கவிகள் பாடுவார்களோஅவர்தம் குரல்கள் இரத்தமாய்க் கண்ணிராய் அமெரிக்கக் காதில்

Page 5
6
இடியாக முழங்காதோ
மின்னல் பாணங்களாய் இந்தத் தேசத்தின் m இதயத்தைத் தாக்காதோ
பிணி, மரணம், கேடுகளுக்கெதிராக, போருக்கு எதிராக,
அவர்களின் பாடல்கள் பொங்கிப் பிரவகித்து அரண்மனைக் குள்ளிருக்கும் பகைவரின் சுரண்டல்களை அடியோடு உலுப்பாதோ!
ஷாக்கோ, வன்செட்டிக்காய் அவர்கள் இசைக்கும் மதுர ராகங்களை மனங்கொண்டு நான் சொன்னேன்.
இங்கும் ஒரு காரணம் சூரியனில் வைத்துவிட்ட விழிகளைக்கொண்டவர்க்காய் திவ்யமாய் இருக்கிறதே,
கந்தர்வ இதயத்தைப் பிணைத்து கனிந்த பழச்சாருய் கவிதைக் குரல் மீட்டும் இழிநிலை அத்தனையும் இதிகாசப் பெரும் பிழையும் இங்கே இருக்கிறதே.
இந்தக் கவிகளை நான் தீர்க்கமாய்க் கேட்டேன், இப்போது பாடுவீரோ?
ஆளுல் குரலெழுப்பக் காணுேமே
விந்தை இதுதானே?
டொன் எல் லீ (1942- )
கவிஞனுக்கோர் கவிதை தமிழில்: ச. வாசுதேவன்.
உனது தேசப் பிரஷ்டத்தைப் படி! எனக்கும் ஒரு தாய் இருந்தாள்
6), ສ.ງ போல அவளது இறப்பு உலகம் முழுவதும் பேசப்படவில்லை.
அந்நிய நிலத்தில் நான் வாழ்கிறேன், நடக்கிறேன்! அபூர்வமான எனது சிரிப்போ
யதார்த்தமானது.
எங்கள் எதிரிகள் உண்பதும் நான் உண்பதும் அதே ரொட்டிதான் ஞல் அவர்கள క్తికి القت பன்றிக்குப் போடப்படுகிறது. (ஆமாம், அவர்கள் எப்பொழுதும்
கழிவுகள்தான்)
பிறகு, அதே பன்றியை அவர்கள் உண்டு களிக்கிருர்கள். எங்கள்

ஆபிரிக்காவில் சூரியனும், சந்திரனும் இன்றும்
உதிக்கத்தான் செய்கின்றன.
புனிதமான புற்களையும்
உன்னத
நீரையும் நீங்கள் காணமுடியும்.
ஆபிரிக்க மக்கள் உங்களோடு முகம் மலர்ந்து பேசுகிருர்கள், அவர்களது Gud-Gy. It சங்கொலிபோல் வருகிறது. சங்கொலிபோல்
வருகிறது.
எங்கள் எதிரிகள் இன்னும்அதே ரொட்டியைத்தான் உண்கிருர்கள்! அவர்களது பேராசையின் கழிவுகள்உனது சூரியனை மறைத்தும்சந்திரனை ஒளித்தும் விடலாம்
அவைஉனது புற்களைப் புனிதம் கெடவும் உனது நீரை அழிக்கவும் கூடும்.
உனது மக்கள், மாருத கண்களோடு, மானுடம் பேசலாம்,
அவர் பேச்சு, மந்தமானதாகவும், நிச்சயமற்றதாகவும், அதிவேகமானதாகவும் இருக்கிறது! ஆபிரிக்கா உனது சொந்த வார்ப்பு அங்குள்ள சில வீதிகளிற் கூட
உன் மக்களுக்கு
*கார்கள்” தேவைப்படலாம். நீ விட்டு வைத்த உனது உணவே உண்ணத் தக்கது, தொடர்ந்தும்அதை மனப்பூர்வமாகப் பங்கிடு.
உன் யதார்த்த மனிதனைக் காப்பாற்று, உனது சிற்பிகளை,
உனது கவிஞர்களை
உனது இசைஞர்களை உனது புதல்வர்களை, உனது வீரர்களை
கரிய தோலின்
யதார்த்த மனிதனை உடனே காப்பாற்று.
ஒரு தந்தை, புதல்வர்களை வழி நடத்துகிருர்! அவர்களைக் காப்பாற்று உனது விவேகத்தை அவர்களுக்கும் கொடு! சுதந்திரப் பாதையில் அவர்களையும் நீ அனுப்பவேண்டி இருப்பின்கறுப்பர்களாகவே அவர்களையும் அனுப்பிவிடு!

Page 6
8
லங்ஸ்டன் ஹியூஸ் (1902-1967) சுதந்திரம்
தமிழில்: எஸ். தவராஜா
சுதந்திரம்
அதை என்றும் பயத்தினுலோ, தயக்கத்தினுலோ, சமாதான உடன்படிக்கைகளினுலோ பெற முடியாது.
இன்ருே, இவ்வருடத்திலோ, என்றுமே அதை இப்படிப் பெறவே முடியாது
பிறரைப் போல் என் சொந்த நிலத்தில் நான் நிற்பதற்கு எனக்கு மட்டும் ஏன் உரிமை இல்லை?
நடப்பவைகள் நடந்துவிட்டுப் போகட்டும் நாளை இருக்கிறது, என்ற கோழைகளின் சொல் கேட்டு என் செவிகள்
புல்லரித்துப் போய்விட்டன.
நான் இறந்த பின் எனக்குச் சுதந்திரம் தேவையில்லை, நாளைய பாணில் இன்றைய நாளைக் கழிக்க முடியுமா?
சுதந்திரம் ஒரு சிறந்த
தவைககாக விதைக்கப்பட்ட விதை
நான் இன்று வாழ்கிறேன்
எனக்கு இன்று சுதந்திரம் வேண்டும் உனக்கு இருப்பதைப்போல்.
மாகிரெட் வாக்கர் (1915- )
பரம்பரை தமிழில்: சி சுதந்திரராஜா
எந்தன் பாட்டியர் பலம்மிகக் கொண்டவர் ஏரைத் தொடர்ந்து குனிந்து உழுபவர் அந்த வயலில் விதைகள் தூவினர்.
மண்ணையவர் அளையவும் விதைகள் வளர்ந்தன.
அவர் பலம் மிக்கவர் பாடி மகிழ்ந்தனர்.
எந்தன் பாட்டியர் பழைய நினைவுகள் கொண்டவர்
அவரின் மேனியில் சேறும் வெங்காய நெடிலும் மணக்கும்

உழைக்கும் கரங்களில் உருண்ட நரம்புகள் புடைத்தே ஓடிடும்
அவர்கள் பேச்சிலே தெளிந்த சொற்கள் தெறித்துப் பாயும்.
எந்தன் பாட்டியர் பலம் மிகக் கொண்டவர்
ஆணுல்-நானேன் அவர்போல் இல்லை?
வில்லியம் ஸ்டான்லி ப்ரோய்த் வெயிற் (1878-1962)
மரண பூமியில் தமிழில்:
ஈழவாணன்
அமைதியான சூழலில் அவர்கள் உறங்குகிறர்கள்.
வெறுப்பும், சுரண்டலும், பகையுமற்ற
ஆழமானகருமைச்சவக்குழியுள் எல்லோரும்சகோதரத்துவத்துடன்
அமைதியாக அவர்கள்
உறங்குகிருர்கள்.
பார்வையில்லாது, சப்தமில்லாது, தொடரான
கனவுகளில்லாதுஎல்லாம் முடிந்துபோன பல ஆண்டுகளைக் கடந்து
அவர்கள் அமைதியாக உறங்குகிருர்கள். மதுவும், மலரும், பாட்டும், கூத்தும், இருளும், ஒளியும் இல்லாது
நான்கு பருவங்களிலும்
கலவாமல்
அவர்கள் அமைதியாக உறங்குகிருர்கள்.
சார்ல்ஸ் கோப் (1944- )
தேசம் தமிழில்: என். சண்முகலிங்கன்
பூமியின் வெடிப்புகளுக்கிடையே எம்மவர்கள் உழுது சென்ற சுவடுகள் தெரிகின்றன
வெண்பஞ்சுத் தோட்டங்களில், இனிய கரும்புத் தோட்டங்களில் வியர்வையினுல் நிறைந்த வைரச் சுரங்கங்களில் எங்களைக் காணலாம்

Page 7
O
புகையிலே வீதிகளிலே சேரிகள் நிறைந்த இடங்களில் எங்களைக் காணலாம்
காட்டின் புதர்களில் வெள்ளையனின் அடுப்படிகளில் முதுகு வளைந்தும் உடம்பு நீட்டியும் இருந்தபடி எங்களால் இயன்றவற்றைச் நாங்கள் செய்கின்ருேம். நேற்றும்
இன்றும் பல இன்னல்களைக் கண்டோமீ
ஒரு இனம் க்றுப்பு, மஞ்சள், கபிலம்உலகைச் சுற்றி, பொன்மயமான சூரியனைச் சுற்றி நாங்கள்- V" அதே நிலையிலேயே இருக்கின்ருேம்--
எங்களின் கரங்களில் ஆமர், கலப்பை, நம்பிக்கை எங்களின் முதுகு நிலத்தைப் பிளக்கிறது எங்கள் அழுகைக் குரல் இந்த உலகைச் சுற்றி இரவின் பயங்கரத்தைக் கிழித்து ஒலிக்கிறது எங்கள் உடம்பின் வெப்பம்தான் இந்த உலகை கசப்பான கறுப்பாக்கியது. நாங்கள் வாழ்வதற்காக போரிடும் அந்த நாள் வந்தே தீரும் நாங்கள் நாங்களாக
வாழ்வதற்காக நாளை போராடுவோம்உலகு முழுதும் பரந்த நீண்ட வேர்விட்ட பலம் பொருந்தியவர்கள், நாங்கள் என்பதை அறிவோம் எங்கள் பிள்ளைகளும், அவர்களின் பிள்ளைகளும் அறிவார்கள்நாங்கள் விதைத்த போராட்ட பயனை நாளைய சந்ததி அனுபவிப்பர். அதே வேளையில்
தேசம்
பலம்
LDissir இவைகள்தான் இப்பொழுது எங்கள் தேவை.
லங்ஸ்டன் ஹியூஸ் (1902-1967)
கலப்பு தமிழில்: எம். ஏ. நுஃமான்
எனது கிழத்தந்தை ஒரு வெள்ளைக் கிழவன் எனது கிழத்தாயோ கறுப்பு.
என்றேனும் எனது வெள்ளைக் கிழவனை நான் நிந்தித்திருந்தால்
எனது நிந்தனைகளை நானே
திரும்பப் பெறுகிறேன்.

என்றேனும் எனது கிழத்தாயை நான் நிந்தித்திருந்தால் அவள் நரகில் வாழவேண்டும் என்று நான் விரும்பி இருந்தால் அத் தீய விருப்புக்காக
நான் வருந்துகிறேன். அவள் நலம்பெற
நானின்று வாழ்த்துகிறேன்.
எனது கிழத்தந்தை ஒரு அழகிய பெரிய வீட்டில் இறந்தான். எனது கிழத்தாயோ ஒரு குடிசையில் இறந்தாள். வெள்ளையனும் இல்லாமல் கறுப்பனும் இல்லாமல்
நான் எவ்விடத்தில் இறப்பேன், என்பதே எனக்கு வியப்பாய் உள்ளது.
எல்.வீ.மெக் (1947- )
இறந்த பாடல் தமிழில்: தர்ம-புவணு
1.
நள்ளிரவு நேரம் என் அறையோ நீலம்
அந்த இரவோ வெறுமை.
11
வெள்ளைக் கடிகார முகத்தைப் போல ஏதோ, ஏதோ
நான் அதை நினைக்க விரும்பவில்லை.
நான்உன்னையும்
அந்த
நீல இரவையும் மறந்துவிட்டேன்.
சிகப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட உதயகாலை ஒளிக்கதிர்கள் ஊசி முனையாகி என் விழிகளைக் குருடாக்கின.
நான் உன்னை
மறந்து விட்டேன் நான் உன்னை மறந்து விட்டேன்!
2
பனி உறைந்த மலர்கள் ஒளிக் கதிர் பட்டு திரும்புவதுபோல் வெளிச்சத்தின் உறக்கத்தில் தூசிகள் எல்லாம் இல்லாது போயின
உடைந்துபோன இரவின் அதிகாரம் துவாரத்தின் ஊடாக எனக்குத் தெரிகிறது.

Page 8
2
இருட்டின்மீது வெளிச்சத் தூவல்; இருட்டைக் கடத்தி மூடியதுபோல் எனது பயமும் எங்கோ போயிற்று.
3
இறப்பின் பார்வை கொண்ட மலர்களைப் போல் இரவில் நீ என்ஜனப் பார்க்காதே வெளிச்சம் விழியைக் குருடாக்குகின்றது. இரவு
கண்ணுடி போன்றது.
கொதிக்கும் வெப்பக்
என்ன நன்மை?
4. என்ன சிறுமையை நீ, அறிவாய்? வாழ்வுக்கது போதாது.
நீ எல்லாம் அறிவாய்உனக்கு எதுவுமே தெரியாது. என்பதையும் உண்மையாகவே நீ அறிவாய். நீ அறிந்தவற்றைவிட அறியாததே
அதிகம்
வெள்ளையரின் அழிவைப்பற்றிக்கூட உனக்குத் தெரியாது. வெளிச்சத்தில் நடப்பவற்றைக்கூட நீ மறந்து விடுவாய்.
(எப்பொழுது நீ இறப்பாய்? என்பது கூட
அறியமாட்டாய்)
உன் காதலன், அவன் காதலின் மென்மை, குழந்தைகள் இவை பற்றியும் நீ நீண்டகால
நினைவுடன் காத்திருக்காதே
P-60 (5.5/5
ஒன்றுமே
இங்கு இல்லை.
5
சுதந்திர ஒளியின் பிறப்பு நிட்சயம். கதவுகளைச் சாத்தினும் அந்த ஒளி பாய்ந்துகொண்டே இருக்கும்.
இருளில் அறை மூடியபோதும் மலர்களின் காட்சி விழிகளில் தெரிவதுபோல், இதய அறை மூடிய பின்னரும் அந்த ஒளி இருந்து கொண்டே இருக்கும்.

இரவினுள் அடிவைக்க அச்சம் தவிர்ந்து அம்மணம் தோன்றும்.
வெள்ஒளி மலராய் நள்ளிரா விடிய பார்வையில் யாவும் தந்திரம் ஆகும். LDpigGuiraoT ஒவ்வொரு நினைவும் ஒளி கபோதியான இரவேயாகும்.
இது-நீ மறந்து போகும் ஒன்று அல்ல.
ஜின் ஜெசப் ரபே அரிவெலோ (1901-1937)
கறுப்பன் தமிழில்-மொழி-வளவன்
கண்ணுடி செய்யும்
கறுப்பன்; அவன் கண்முழி அனந்தம்;
அவற்றைக் கண்டவரில்லை.
அவன்
தோள்களைக் காணுதவரும் இல்லை. கண்ணுடி முத்துக்களால் ஆன புடவை அவனைப் போர்த்தது.
*அத்திலஸ்” போல் அவன் ஆண்மையன் ஏழு விண்களையும்
3
அவன் தன் தோல்களில் தாங்கினவன்
பாரிய முகில் ஆறு,
அவனை
வாரி எறிந்து விடும் என நினைப்பார் பலர். அவன் இடுப்புத் துணியை ஏலவே
நனைத்தது அவ் ஆறு.
அவன் கைகளிலிருந்து ஆயிரம் கண்ணுடித் துளிகள்
விழுந்தன. ஆணுல், காற்றுக்கள் பிறந்த
மலைகள் தெறிக்கவும் அவை அவன் புருவத்தில் மீள மோதின.
நாள் தோறும் அவன் படும் துயர்க்கும், ஒயா உழைப்புக்கும் நீ ஒரு சாட்சி.
கடல் சங்குகள் முழக்கினை கிழக்கு நாட்டுப் போர் அரண்கள் அதிரடிக்கும் வரை,
காணலாம்.
ஆயின் இனி நீ அவனுக்கு இரங்காய். சூரியன் கவிழும் ஒவ்வொரு முறையும் அவன் துயர் மீளவும் எழும் என்பதை
நீ நினையாய்.

Page 9
14 நிக்கி கியோவானி (1943- )
எனது கவிதை தமிழில்: மு. கனகராஜன்
இருபத்தைந்து வயதான நீக்ரோப் பெண்கவி நான் கறுப்பனை நோக்கிக் கொலைத் தொழில் உனக்கு வருமா என்ருெரு கவிதை வரைந்தேன் இவர்கள் என்னைக் கொன்ருலும் இந்தப் புரட்சி நிற்காது.
நான் சூறையாடப்பட்டேன் நையப்புடைக்கப்பட்டேன் என்னுடைய ரெலிவிசன் இரண்டு மோதிரங்கள் ஆபிரிக்க அச்சுப்பிரதி இரண்டு துவக்குகள் எல்லாமும் எடுத்தார்கள் இந்த உயிரை எடுத்தாலும் இந்தப் புரட்சி நிற்காது.
6T60 தொலைபேசி உரையை ஒற்றுக் கேட்டார்கள் கடிதங்களையெல்லாம் உடைத்துப் பார்த்தார்கள் நண்பர்களுக்கெதிராயும் நல்லவருக்கெதிராயும் என்னையே ஏவிவிட எவ்வளவோ முனைந்தார்கள் நீக்ரோக்களனைவரையும் கறுப்பு மக்கள் உலகினையும் இவளும் வெறுக்க நேர்ந்தாலும் இந்தப் புரட்சி நிற்காது.
போகும் இடம் பற்றி தோழிக்கும் சொல்லப் பயம் மீண்டும் வரும் நேரம் பற்றி மக்களுக்கும் சொல்லப்பயம் வாழ்வின் எஞ்சிய நாளில் நான் இந்த அறையில் இருந்தாலும் இந்தப் புரட்சி நிற்காது.
இன்னுெரு கவிதை சிறுகதை என்று வரைவதை நாணினி விட்டாலும் கவலை மறந்து இருந்தாலும் கல்வி பயிலச் சென்ருலும் எனது காரைக் கூட எடுத்தாலும் வானுெலி பழுதுபட்டாலும் சமாதான நாளொன்றைச் சந்திக்காமலே போனலும்
அல்லது
அர்த்தம் செறிந்த கறுப்புப் பணியை ஆற்ருமலே நான் விட்டாலும் இந்தப் புரட்சி நிற்காது
புரட்சி வீதிகள் தோறும் வருகிறது வீதிகள் தோறும் வருகிறது ஐந்தாம் மாடியில் நான் அடைந்தே கிடந்தாலும் நடந்தே தீரும் அது நானிங்கே எதையும் செய்யாதுபோஞலும் நடந்தே தீரும் அது.

MMMMMMMMMMMNMNMMNMNMMMNMMMMMNMNMMNMNMNMNMMMMMM
s
கறுப்பு இலக்கியம்
I5
கே. எஸ். சிவகுமாரன்
சர்வதேச அரசியல் அரங்கில் BLACK POWER (Esp)556) fi சக்தி) என்ற சொல் அடிபடுவதை யும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் போர்க்குணமிக்க, விடுதலை வேட்கையுடைய நீக்ரோ மக்களின் சுலோகக் குரலே 'கறுத் தவர் சக்தி' என்ற மந்திரம். சுமார் த்து வருடங்களுக்கு முன னர் , ஸ்டொக்கிலி கார்மைக்கல் போன்றவர்கள் பயன்படுத்திய இந் தப் பிரயோகம் தீவிர இடதுசாரிக் கொள்கைகளை விரும்புபவர்களின் 506omulguan Sug). STOCKELEY CAR MICHAEL 1667 Luftfloofit டில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த ஓர் இளம் நீக்ரோ அரசி பல்ாேதி. அமெரிக்க B#3ៗ இடதுசாரி இயக்கங்கள் ' 'கறுத்த வர் சக்தி'யை உணரத் தொடங் கின. அமெரிக்க இனப்பிரச்னையில் ஒருமைப்பாட்டுக்கொள்கைசரிவராது ாேன்று இவை கருதத் தொடங்கின. ' 'கறுத்த முஸ்லிம்கள்’’ எனப்படு பவர்கள் தனிநாடு கோரினர்.
“கறுத்த முஸ்லிம்களுக்கும்", "கறுத்தவர் சக்தி'யில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இடையில் சில வேறுபாடுகளுண்டு.
நீக்ரோ மக்கள், வெள்ளைய ரைவிட பலவிதத்திலும் உயர்ந்த வர்கள் என்று கூறும் 'கறுத்த முஸ்லிம்கள்", இஸ்லாம் மதத் தைத் தழுவினர். வெள்ளேயரின் விழுமியங்களை ஒதுக்கித்தள்ளினர். மல்கம் எக்ஸ் என்பவர் இவர் களில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் 1965 ஆம் ஆண்டில் கொலை (o)ruuuuuuuusi Alf. BLACK PANTHER PARTY Taip layu Sue.) கட்சியின் நடவடிக்கைகளையும் இந்த 'கறுத்தவர் சக்தி” கோட் பாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்த் geo (36.607(Bin. SNCE, CORE, SCLC, NAACP என்ற பெயரில் அழைக்கப்படும் இயக்கங் களும் முக்கியமானவை. "புதிய இடதுசாரிகள்’ எனக் கருதப்படுபவர் களும் இதில் அடங்குவார்கள்.

Page 10
I6
எனவே கருமை அழகு, கறுத்த வர் சக்தி என்பனவெல்லாம், ஆபிரிக்க மக்களின் எழுச்சியின் தூண்டுதலினல் எற்பட்ட இயக்கங் களாகும். இசையிலும், விளையாட்டு களிலும் மெய்வல்லுனர் போட்டி களிலும் நீக்ரோ மக்கள் முன்ன னியில் நிற்பதுபோல, அரசியல் துறையிலும் விழிப்படைந்துவரு
வதை சமகால வரலாறு எடுத்துக்
காட்டுகிறது.
"அமெரிக்காவின் கறுத்தவர் (96ăÉulb” BLACK LITERATURE IN AMERICA 67667ps கூறத்தக்க இலக்கியப் படைப்புகள் வெளிவந்துள்ளன. டிக்கர். ரி. வொஷிங்ான். டபிள்யூ. ஈ. பி. டூ போ, ஜ்ஷான் ரூமுர், கவுன்டி கலன், லங்ஸ்ரன் ஹியூஸ், க்ளோட் மெக்கே, ஸ்ரேலிங் எ. பிரவுன், ரிச்சட் ரைட், ரல்ப் எலிஸன்,ஜேம்ஸ் போல்ட்வின், லொறன்ஸ் ஹன்ஸ்பரி லீ ரோய் ஜோன்ஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த ஆக்கங்களைப் படைத்துள்ளனர்.
அடிமை ம ன ப் பான்மையை
வெறுத்தல், இந்த இலக்கியங்க ளின் தொனிப்பொருள்.
கருமை அழகு என்ற கோட் பாட்டின் வெளிப்பாடாக ஒரு சில அமெரிக்க நீக்ரோ திரைப்படங்கள் வெளிவந்ததை நீங்கள் பார்த் 50 dasa)rth. BLACK IS BEAUTIFUL எனபதே இப்படங்களின் அடிப்படைத் தத்துவம். சிட்னி பொயிற்றியே நடித்த சிலபடங்கள், SOUNDER என்று பெயரில் அண் 60) foule) as IT L'ull. Luluh, COTT
ON COMES TO HARLEM
என்ற படம், நீக்ரோ ஜேம்ஸ் பொண்ட் நடித்த சில படங்கள் இவற்றில் சில. ஆன ல் இவை வர்த்தக அடிப்படையில் அமைந்த படங்கள். உலக அதிபார குத்துச்சண்டைவீரர் முகம்மது அலி (கஷியஸ் க்ளே)யும் கருமை யழகு என்று வலியுறுத்துபவர்.
சூரிய அனலால் வறுத்த மணலின் எரி கதிர்களான கவிஞர்களின் கறுப்புக் கவிதைகளைத் தமிழாக்கித் தந்த
கே. எஸ். சிவகுமாரன், எஸ். தவராஜா, மு. கனகராஜன், எம். ஏ. நுஃமான், மொழி-வளவன், என். சண்முகலிங்கன், ச. வாசுதேவன், சி. சுதந்திரராஜா,
தீபகாந்தன்,
தர்ம-புவணு,
இவர்களுக்கும், ஒவியர் ரமணிக்கும் எங்கள் நன்றி
- ஆசிரியர்

_இந்த இதழில்
17
எழுதியுள்ள
கறுப்புக்
நிக்கி கியோவானி: ஒகியோ மாகாணத்தில் 1943-ல் பிறந்தார். இப் பெண் கவிஞரின் கவிதைகள் போலவே இவரது பேச்சும் கறுப்பு மக்களிடம் மிகவும் பிரசித் தி பெற்றது. பாடசாலைகள் பல்கலைக் கழகங்கள், பொது நிறுவனங்க ளில் நடைபெறும் கூட்டங்களில் இவரது சொற்பொழிவுகள் இடம் பெறும். இவரது பல கவிதைத் தொகுப்புக்களில் 'கறுப்பு உணர் வுகள்' 'கறுப்பு உரை யா ட ஸ்", 'கறுப்பு நீதி’ ஆகியன இவரது கவித்துவத்தின் சாட்சிகளாக விளங் குகின்றன.
கெளண்டர் குலட்: 1903 ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் பிறந்தவர். நியூயோர்க் நகரி லேயே ஆசிரியராகப் பணியாற்றி னர். இவரது 22வது வ ய தில் 'நிறம்’ என்ற கவிதைத் தொகு ப்பு வெளிவந்தது. இந்நூல், இவ ருக்கு அந்த ஆண்டில வெளிவந்த சிறந்த கவிதைத் தொகுப்புக்குரிய பரிசான "ஹாமன் தங்கப் பதக் கத்தை பெற்றுக் கொ டு த் தது. இதன் பின் இவர் இலக்கிய உலகில் மிகப் பி ர பல மா னர். இதைத் தொடர்ந்து இவரது நான்கு கவி பதைத் தொகுப்புக்கள் வெளிவந் தன. 1946ஆம் ஆண்டில் இவர் கலமானர்.
கவிஞர்கள்
ஸெக் கில்பெர்ட்: 1925 ஆம் ஆண்டு மைசூரி என்ற இடத்தில் பிறந்தார். சிக்காகோவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் கறுப்புக் கவிதைகள் பற்றிப் பல விமர்சனங் கள் செய்துள்ளார். இவரது கவி தைத் தொகுப்பு நூற்களில் "ஒன் கலிலுஜாஸ்' என்ற நூல் மிகப் பிரபல்யமானது. பழம் மரபு இழையோடும் புதுக் கவிதைகள் இவரது தனித்துவமாகும்.
நோர்மன் ஜோர்டான்: 1938 ஆம் ஆண்டு வேர் ஜினி யா வி ல் பிறந்தவர். இவர் பிரபல கவிஞ ராக இருந்தபோதிலும் நல்ல பல நாடகங்களின் ஆசிரியராகப் புகழ் பெற்றுள்ளார். இவரது கவிதைத் தொகுப் புக் களி ல் 'சாம்பல்" "மாயைக்கு மேல்" ஆகியன மிகப் புகழ் பெற்றன. இவரது நாடசங் கள் பல இன்னும் பல்வேறு நக ரங்களில் மேடையேற்றப்பட்டு வரு கின்றன.
சார்ல்ஸ்கோப்: 1944ஆம் ஆண்டு வாசிங்டனில் பிறந்தவர். இவர், பல்கலைக் கழக மாணவராக இரு ந்த பொழுது "அசாத்வீக கூட்டுச் சபை' எனற பெயரில் ஒர் இயக் கத்தை ஆரம்பிப்பதற்காகப் பட்டப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வெளியேறினர். இவரை ப்

Page 11
18
போலவே இவரது தீவிரப் போக்குடையவை. இவரது இரண்டு கவிதைத் தொகுப்பு நூல் களிலும் "எங்கும் உன்னுடையதே' எனற கவிதைத் தொகுப்பு மிகவும் புகழ்பெற்றது.
ஜோசப் சிமென் கொட்டர் ஜூனியர்: கொண்டக் என்ற இடத் தில் 1895ல் பிறந்த இவர், பிரபல கவிஞர் ஜோசப் கொட்டரின் மகன வார். காசநோய் கார ண மா கப் பல்கலைக் கழகப் படிப்பை இடையி லேயே நிறுத்தினர். இவரது 23 ஆவது வ ய தில் "கிட்டன் தடை என்ற கவிதைத் தொகுப் பை வெளியிட்டார். இந் நூல் மிகப் புகழ்பெற்று வரும் காலத்தில் புத் தகம் வெளி யா கி ய அடுத்த ஆண்டே 24 வயதில் இவர் 5.6) மாளுர்,
வில்லியம் ஸ்டான்லி பிரேய்த் வெயிற்: 1878 ஆம் ஆண்டு பொஸ் டன் நகரில் பிறந்தவர். இவரது எழுத்துக்கள் நவீன கறுப்பு இலக் கியத்தை மெ ரு கூட்டின. அட் லாண்டா பல் கலை க் கழகத்தில் ஆக்க இலக்கியப் பேராசிரியராகக் கடமையாற்றினர். இவரது நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளி வந்துள்ளன. இவரது கறுப்பு இலக்கிய விமர்சனங்கள் மிகப் பிர சித்தி பெற்றவை.
ஜின் ஜொசப் ரபெ அரிவெலோ மடகஸ்காரில் உள்ள அந்தனன ரிவோ என்ற இடத்தில் 1901 ல் பிறந்தவர். 13-வது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினர். இவர் பிரெஞ்சு இலக்கியங்களைப் பயின்ற கா ர ண த் தால் இவரது
கவிதைகளும்
ஆரம்பக் கவிதைகள் பிற கே ஞர்களின் நடை கொண்டிருந்தன பிற்காலத்தே இவரது கவிதைகள் தனித்துவமான புதிய ஒரு நை யைக் கொண்டன. ஓர் இலக்கி இதழை வெளி யி ட் டா ர். அதில் பிரெஞ்சு மொழியில் புதிய ம கஸ்காரின் இலக்கிய வழியை வகுத் தார். உணர்ச்சிமிக்கவர், துடிப்ட டையவர், போதை மருந்து கள் உண்பவர். 1937-ல் தற்கொsே செய்துகொண்டார்.
க்ளோட் மேக்கே: மேற்கத்திய தீவுகளில் ஒன்றன ஜமேகாவில் 1890 ல் பிறந்த இவர் அமெரிக் காவில் தனது உயர் படிப்பை மேற் கொண்டார். நியூயோர்க் நகரில் 1920 ஆம் ஆண்டளவில் இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக விளங்கி ரூர். அக் கால கட்டத்தில்தர * லிபரேட்டர்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராகக் கடமை யாற்றினர். 1922 ஆம் ஆண்டில் இவரது கவி தைத் தொகுப் பான 'ஹால மின் நிழல்கள் வெளியா கியது இந்நூல் இவரை ஒரு சிறந்த கறுப் புக் கவிஞன் என்று உலகிற்கு அறிமுகமாக்கியது. இதைத் தொட ர்ந்து இவரது பல க விதை த் தொகுப்புக்கள் வெளி யா கி ன. 1948 ஆம் ஆண்டு இவர் காலமா ஞர்.
பேர்ள் கிளிஜ் லொ மெக் ஸ்: 1948 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஜோர்ஜியாவை இரு ப் பி ட மாகக் கொண்டா?. திருமதி பேர்ள் உள கில் சிறந்த கறுப்புக கவிஞர்க ளில் ஒருவாாக மதிக்கப்படுபவர். கவிதை, கட்டுரை, நாடகம ஆகிய துறைகளில் ஈடுபாடுடைய இவரது நாடகங்கள் பல புகழ்பெற்றவை

யாகும். பெரும்பாலர்ண இலக்கிய சஞ்சிகைகளில் எல்லாம் இவரது கவிதைகள் வெளி யா கியுள்ளன. பல கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார்.
லங்ஸ்டன் ஹியூஸ்: அமெரிக் காவில் உள்ள மிஷோரி மாகாணத் தில் 1902ல் பிறந்த இவர் , கொலம் பியா பல்கலைக் கழகம், லிங்கன் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பட்டதாரியாவார். இலக்கியத்திற் கான பல திறமைப் பரிசில்களும், கெளரவ சான்றிதழ்களும் பெற்று ள்ளார். ஒரு சிறந்த எழுத்தாள ராக ம தி க் கப் படு ம் இவர் பல நாவல்கள், சிறுகதைகள், நாடகங் கள், சிறுவர் இலக்கியங்கள் ஆகிய பல்வேறு இலக் கியத் துறைகளி லும் சிறப்புப் பட்டம் பெற்ற வர். பல நூல்களின் ஆசிரியர். நீக்ரோக் களேப் பற்றிய இவரது கவிதைத் தொகுப்பே இவரது மிகப் பெரிய தொகுப்பாகும். 1967ஆம் ஆண்டு இவர் காலமானபோது இது கறுப்பு இலக்கியத்திற்குப் பேரிழப்பு என்று கூறப்பட்டது. r
டொன் எல்லீ: 1942-ல் அக் கானுஸ் என்ற மலைப் பிரதேசத் தில் பிறந்தார். இவர், ஆபிரிக்கஅமெரிக்க இலக்கியச் சரித்திரம் பற்றிப் படித்து சிக்காக்கோ ரோஸ் வெல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றர். இவரது கவிதை த் தொகுப்புகளில் 'கறுப்புச் சிந்த னைகள் 1967-ல் வெளியாகியது. இதைத் தொடர்ந்து ‘அழ வேண் டாம்' , ' நாம் புதிய உலகை நோக் கிச் செல்கின்ருேம்’, ‘நவீன கவி தைத் திரட்டு' ஆகிய தொகுதிகள் மிகப் பி ர பல்யமாகின. இதைத் தொடர்ந்து பல கவிதைத் தொகுப்
19
புக்கள் வெளியாகின. இவர் ஒரு விமர்சகரும்-பத்திரிகை ஆசிரியரு மாவார். இவரது விம"சன$கள்
இரு தொகுதிகளாக வெளிவந் துள்ளன.
மாகிரெட் வாக்கர் அலபாமா
வில் உள்ள பேமிங்ஹாம் என்ற இடத்தில் 1915 ல் பிறந்த ர். இப் பெண் கவிஞர் லோப ல் கலைக் கழக எம். எ. பட்டதாரியாவார். இவர் ஜெக்ஸன் ஸ்டேட் கல்லூரி யில் பல வருடங்களாகப் பணியாற்றி யுள்ளார். யேல். பல்கலைக் கழகம் நடததிய இளம கவிஞர்களதுக்கான கவிதைப் போ ட் டி யி ல், இவரது முதல் கவிதைத் தொகுப்பான *எனது மக்களுக்காக" என்ற நூல் முதற் பரிசு பெற்றது. இவரது முதல் நாவலான "ஜூப்ளி கேட் டன் மிப்லின் இலக்கிய மன்றத்தில் பரிசுபெற்றது. இவரது இரண்டா வது கவிதைத் தொகுப்பு 1970ல் வெளியாகியது. இதைத்தொடாந்து இவரது நா வல்க ள், கவிதைத் தொகுப்புக்கள், விமர்சனங்கள் ஆகியன வெளிவந்துள்ளன.
எல்-வீ-மெக்: 1947ம் ஆண் டில் நியூயோர்க்கில் உள் ள புரோக் லின் என்ற இடத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மெக்விக்கோ, கலிபோனியா ஆகிய நாடுகளுக்குச் சென்ருர். இவரது கவிதைகள் பல தொகுப்புக்களில் வெளிவந் துள்ளன. 'புதிய கறுப்புக் கவி தைகள்' என்ற நூல் 1970 ஆம் ஆண்டில் வெளியாகியது. இவரது கவிதைகள் கலைத்துவமான யதார்த் தப் படைப்புகளாகும்.
- ஈழவாணன்

Page 12
2
இவ்வாண்டு இலக்கியத்திற்கு நோபல் பரிசுபெற்றவர் இத்தாலி நாட்டுக் கவிஞரான யூஜினியோ மொன்றேல் ஆவர். பிறநாட்டுக் கவிஞர்களின் புலமைச் சித்தாந் தம், விருத் தி ஆகியவையற்றி வளரும் தமிழ் புதுக்கவிதையுல
கம் அறிந்திருத்தல் அவசியம்.
இத்தாலி நாட்டுக்
கவிஞர் யூஜினியோ மென்றேல்
பொருளாதாரம்போன்றதேபுலமை யாதாரமும். ஒன்றகிவரும் உலகிற் குப் புலமை ஒருமை மிகமிக அவ சியம்.
சிறிய கட்டுரைகளில் கவிஞர் களின் கவிதைகளை எடுத்து ஒப் பிட்டு ஆய்தல் இடந்தர:மையால்
புலமைக்கருத்துக்களைச் சுட்டிச் சொல்லல் பொருத்தமுடையது. இன்னும் கவிஞரின் பிரத்தியேக வாழ்வும் நாம் விரிவாக அறியப் படவேண்டிய ஒன்றன்று. ஏனெ னில் இக்கட்டுரைத் தலைவரான கவிஞரும் தம் வாழ்வைப் பிரத் தியேகமாகவே வைத்துக் கொண் t_7 fỉ.
இவர் 1896இல் பிறந்தார். 29 ஆவது வயதில் தம் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட் டார். 50 ஆண்டுகளின் பின் 79 ஆவது வயதில் நோபல் பரிசினைப் பெற்ாmர். இவரின் கவிதைகள் பற்றிய ஒரு மதிப்பீட்டினை வெளி யிடுவது ஒர் இரண்டாந்தர மதிப்பீ டாகவே இருக்கும். எனெனின் இவர் இத்தாலி மொழியில் கவிதை எழுதினர். இவரின் மொழி பெயர்ப்புக்களையே நாம் அறிவோம். எனவே அவர்பற்றி நாம் போடும் எடை நிழலே மதிப்பிட்டதற்குச் சமம். ஆணல் ஒன்று, மொழி பெயர்ப்பாளர் புலமை மிக்கவர் ஆதலின் பொருள் நடை இரண்
டையும் இயன்றவரையில் திரிபு படுத்தாமல் மொழிபெயர்த்துள் ତn | {{t.
 
 

இக்கவிஞர் முதலாம் உலகப் போரில் ஈடுபட்டவர். ஆயின் தம் நாட்டில் எழுந்த பாசிச இயக்கத் த ல் மனமநொந்து துன்புற்றபி. அரசினர் இவரைத் தம் கட்சியில் சேர்க்க முயன்றும் இவர் இனங்க வில்லை. இவர் பல மாத இதழ்களை ஆதரித்துக் கவிதைகள் எழுதி வந் தார். 1927 இல் இவர் புளோரன் சிலிருந்த நூல்நிலையத்திற்கு அதி பரானர். இவரும் பல ஆங்கிலக் கவிஞர்களின் நூல்களே இத்தாலிய மொழிக்குப் பெயர்த்தார். ரி. எஸ். எலியட், ஒப்கின்ஸ், எமிலி டிக்கின் சன் போன்ற கவிஞர்களது கவி தைகளை இவர் மொழிபெயர்த்தார். இதனுல் இவர் ஒரு விமரிசகராக வும் விளங்கினர். 1948 தொடங்கி இவர் மிலானில் வசித்து வருகிருர், இங்கு இவர் ஒரு தினசரியின் இலக்கியப்பகுதிக்கு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறர். இவர்க்கு இசை நாடகங்களிலும் ஈடுபாடுண்டு. ஒவியத்திலும் இவர் ஈடுபாடுகொண்
6)] FT
இவரின் கவிதை உள்ளத்தை அறிவதுதான் நமக்கு முக்கியம். வாழ்வு நோக்கிலும் கவிதை வடிவி லும் பொருளிலும் இவர் பழைமை விரும் பி யும் இல்லை, புதியவரு மில்லை. கவிஞனின் வாழ்வு அவன் கவிதைகளே. இவரில் இது தெளிவு. நன்கு வாசித்து, தானே தன்னைக் கல்விமானுக்கிய கவிஞர் இவர். பல்கலைக் கழகம் செல்லாத வர் இவர்.
இவர் மரபுவழி நின்று புதி யது படைத்தவர். அாசியல்நோக்கு எப்படியோ அப்படியே இவர் கவி தையின் போக்கும். இவர்க்கு முந்
திய புகழ்பெற்ற சில கவிஞர்கள் பழைய யாப்பினையும் சொற்கோவை களையும் அறவே உடைத்தெறிய இவர் அவற்றில் நிலையாக நின்று புதிய நடை வகுத்தவர். பழைய இலக்கியச் சொற்களை இவர் எறிந்து விட வில்லை. பழைய சொற்களை வெறும் இலக்கியப் பகட்டுக்காக இவர் பயனபடுத்தவில்லை. நன்று நின்று நல்லது சொல்லத்தான் அவற்றைப்பயன்படுத்தினர். சொற் ருெடர் அமைதி, அழகு, என்ப வற்றைப் பொறுத்துத்தான் இவர் சொற்கள் அணிவகுக்கும். இவர் நடை பேச்சு நடை, ஆனல் கொச் சையல்ல. பழகிப் புளித்ததுமல்ல.
இவர் கவிதை கம்பீரமற்றது; மெளனமானது; தடையினறிச் செல்வது. கவிதையின் தொழில் நுட்பம் சொற்ருெடர்ச் செட்டில் உள்ளது. பழைய எதுகை மோனையை இவர் சில இடத்தில் கையாள்வர், சில இடத்தில் விட்டு விடுவர். கடை எதுகையைக் கை
விற்பனையாகிறது
தமிழில் ஒரு புதிய முயற்சி முற்போக்கு இலக்கியத்துக்கு மேலும் ஒரு பங்களிப்பு யோ. பெனடிக்ற்பாலன் எழுதிய
தனிச் சொத்து
குட்டிக் கதைகள் იმ%ა: 2|-

Page 13
22
விட்டு, அமூச்சி வேறு இடத்தில் எழுப்பிக் கட்வேர். கடை எது கையை உடைத்து, இடைக்கிடை சப்த ஜாலத்தால் தெளித்து வைப் பார். இடைக்கிடை அடிகளில் கூடிய சீர்களைப் பேடுவார், சில அடிகளில் குறைப்பார். மேனைகளை எதிாபாரா இடங்களில் பங்கீடுசெய்து வியப்பினைத் தருவார். பொருள் அழுத்தம் வேண்டிய இடத்து குறிபபறிந்து இந்த யாப்பு நுட்பங் கள் எல்லாம் செய்வார். இவர் கவிதையின் சில சீரசைகள் இராக பாவமுள்ளன. சில கொட்டு மேளச் சம்பிரதாயமுள்ளன.
இவர் கவிதை நடையைப்பற்றி நாம் இங்கு குறிப்பது மற்றைய விம ரிசகர் குறிப்பே. இத்தகைய உத்தி களை நம் நம் புதிய கவிதை ஆக் கங்களிலும் பழையனவற்றிலும்
காணலாம். கவிதைப் பொருள பற்றி நாம் இங்குநேராக ஆராய லாம் எனினும் போதிய இடமில் லாமையால் விடுகிறேம். கவிதை நடையின் யாப்பு நுட்பத்தி?ன நம் புதிய கவிஞர்கள் அறிந்திருப்பது பயனுடையது. இக் கவிஞரின் ஒரு கவிதையை இங்கு தருகின்றேன்.
கதறு மிந்தச் சிறுவாழ்வை விரும்பில் நீ கரைத்துவிடு; நிலையில்லாக் கரும்பலகைச் சிறுகீற்றைத் துணிஅழிப்பதுபோல் தடுமாறும் என்பயணம் முடிந்தவுடன் உன்சுற்றுள் திரும்பிவரத் தரித்திருப்பேன். நான் இங்கு வந்ததுவும் ஒரு நியதிக் கொருசாட்சி; வந்தென்ன? வந்தபின் சாட்சிதனே மறந்துவிட்டேன்.
துருவத் தரையின் வசந்தப் பூவுக்கு
துருவத் தரையிலும் வசந்தப் பூக்கள் உண்டல்லோ! வசந்தப் பூக்களின் வருகைக்காக துருவப் பாளங்கள் கரையத் தொடங்காவோ! துருவப் பாளங்கள் கரையத் தொடங்கையில் புத்தம் புதிய புது நீர் அந்த வெண் பணி வாய்க்கால் விளிம்பில் சலசலென ஓடிவருகையில்.ஓ-
வாழ்வின் வனப்பை வரைய முடியுமா?
ஆங்கோர்
சண்உயரப் பூக்காடு
தள தளத்து நின்றந்தச்
சீதளக் காற்றில் சிலிர்த்து நிமிராதோ?
தான் கரைய வேண்டும், நான் கரைய வேண்டும், என்னுள் ஒடுங்கி இருக்கின்ற ஆனந்த மென் உணர்வின் வித்தெலாம் இந்த மண்ணில் முளைத்து மலர்ந்து சொரியாதோ-ஒ!
சண்முகம்
நான் கரைய வேண்டும், நான் கரைய வேண்டும்,
சிவலிங்கம் தருவத் தரையின் வசந்தப் பூவுக்கு,

சிகிச்சை - சபா. ஜெயராசா
வடிகிறது சீழ்; வலுவான சனநாயகப் புண் வீங்கி
நொடி கண்ட
suurrís நெடுநாளாய்ச் சீர்திருத்தக் களிம் பெடுத்துத் தடவுகிறர்.
புண் ஞெந்து விண்ணென்ற வலிப் பெடுக்க, வடிகிறது சீழ்.
அயறின்றி முற்றக அறுத் தெறியும் சிகிச்சை முறைவழு வழுத்துச் சீழ் வடியும் வலுவான நோய் போக்கும்.
புதிய றுவடை - ஏயெம்மே நவSர்
காடுவெட்டி
களனியிலுழைத்து
in GLL
iu:2r07Guusü60ITib
GsGostill
போடி காலடி
போடுவதற்காகவா
மியில் பிmங்கோம்?
றநதே -இல்லையே?
23
ஆதலால்இந்த தறுதலைகளின்
கொட்டம் அடக்கிட
கறுவிக் கொண்டு
6TD
வயல்களில்
புது அறுவடை ஒன்றினை நிகழ்த்திடத் துடிக்கிருேம்.
யாத்திரை
- மேமன்கவி
எங்கள் வாப்பா மரணித்து விட்டார் அதோ. வாப்பாவின்
DJ633T 2onIñ616}iko நகர்கிறது.
கரத்தை இழுத்து கரங்களில் வலுவை இழந்து இரத்தத்தை கக்கியே எங்கள் வாப்பா மரணித்தார்.
எட்டு மணி நேரமும் அந்த கரத்தையில் எருமை மாட்டைப்போல் உழைத்தும் எங்கள் வாப்பாவுக்கு ஈ. பி. எப் கிடைக்கவில்லை" ஆனல், டி. பி. தான் கிடைத்தது.
அதோ எங்கள் வாப்பாவின் மரண ஊர்வலம் நகர்கிறது
நாங்கள்
வாப்பா பசிக்குது” என்று கேட்ட போதெல்லாம்

Page 14
24
அவரின் இதயம் கல்லாய் இருக்கவில்லை. அதனுல்தான்.
அந்த சுரண்டல் a fasud எங்கள் வாப்பாவின் தொண்டையில் உழைப்புக் கயிற்றை இறுக்கியே இரத்தம் கக்க வைத்துவிட்டது.
அதோ எங்கள் வாப்பாவின மரண ஊர்வலம் நகர்கிறது! அதனுேடு. எங்கள் சிந்தனையும் நகர்கிறது. நாங்கள் வருகின்ற காலத்தில் வாப்பாவைப் போல் சாக விரும்பாததால். இனி-எங்கள் மூச்சின் நோக்கமாய் செயலாய் இருக்கப் போவது
உழைக்கும் வர்க்கத்தின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு வர்க்கத்திற்கு உலை வைப்பதே
மலைப் பூக்கள் விரிகின்றன!
நீலா - குழந்தைவேல் மீனுட்சி அக்கா1.
கோணியே உனது மேனியினை மூட நீ ம%லயில் எறி நிதமும் கொழுந்து கிள்ளுகிறங்; டச்சைக் கொழுந்தை உன் கைகள் பறிக்கையிலே அச்சோ!. .
உன் வாழ்வின் சுகங்கள் அனைத்தையுமே
சுரண்டும் கழுகுக் கூட்டம் பறித்துக்கொண்டிருக்கிறதே!
பனி உலராக் காலையிலே. நீ மலையேறிப் போகையிலே. உன் கவலைப்பூ விரிகின்ற முகத்தினை தரிசித்தே மலைப் பூக்கள் கண் சிமிட்டி இதழ் விரித்துச் சிரிக்கிறது!
எத்தனைப் பூ விரிந்தாலும் இளங்காலை புலர்ந்தாலும் எந்நாளும் உன் மனதைக் கப்பிப் பிடித்த கவலைப் பூ மாறியதா?
வாட்டத்தை உனக்காக்கி அது வளர்ந்து பெருகிற்றே! மேனியினை மூடும் கோணிக்குப் பதிலாக நீ ஓர் புது ஆடை உடுக்க முடிந்ததுவா?
நீ ஒர் புது ஆடை
உடுக்க நினைத்தாலும் மாத வருமானம்
வயிற்றுக்குப் போதாதே!
பிள்ளைக்குப் பாலா. பிட்டுக்குத் தேங்காயா. நல்லபடி உறங்க இல்லிடமா. அல்ல, உன்றன் நோயை தப்ேபதற்கு வற்ற மருத்துவமா. ஏதுமில்லை!
உன் துயரப் பாை உயர்ந்து அகன்று நீள்கையிலே. மீனுட்சி அக்கா!. உன் கவலை மாப. நல்ல உணவுண்டு நீ 6FTO. இந்த மண்ணில் உன் வரிக்க மீட்சி ஒன்றே வழிகாட்டும். அப்போது காலை உனக்காக கண் விழிக்கும்

அக்னி
TU
விமர்சனம்
2
*எரியும் பிரச்சினைகள் எங்கள் எழுத்துக்கள் ஆவதால் மகோன் னதங்களுக்காகவல்ல, மக்களுக்கா கவே நாம் எழுதுகின்றேம்’ என்ற அக்கினியின் சரியான இலட்சியம் கவிதைகளில் காணப்படவில்லை. எரியும் பிரச்சினைகள் கவிதைகளில் காணப்படவில்லை.
அவ்வாறன யதார்த்தத்தை மீறிய புரட்சி அவசரம் கொண்ட "நீங்களும், நாங்களும் அடிப்ப டையில் அமைந்த கவிதைகளுக்கு
பூட்டுக்கள் உடைபடுகின்றன. இது நடக்கும், இரு பக்க நிதர் சனங்கள், கொடுமைகள் மடியும், வெற்றி, இனங் கண்டு கொண் டோம் முடிவு, உலகம் எங்களு டையது, திருத்தப்படுவீர், மீறல்கள் எங்கள் சமுதாயம், எத்தன்ை கலம்? வெதும்பலிடை, வெடிப்பு விரைவில் தெரியும் முதலிய கவி தைகளை உதாரணமாகக் கூறலாம்.
இக் கவிதைகளில் முதலாளித் துவ வசீக்கம், சுரண்டல் கொடு மைகள், கண்ணிர், அழிப்போம், இரத்தத்தால் பதில் சொல்வோம், வாக்க உணர்வு, எகாதிபத்தியம் என்ற சொற்களே பெரிதும் விர விக் கிடக்கின்றன. இச் சொற்களை
25
வைத்துக் கவிதை எழுதக்கூடாது
என்றல், இவர்களால் கவிதை எழுத முடிய.தோ எனச் சந்தே கம் ஏற்படுகிறது.
இப் படைப்பாளிகளின் உணர் வுகள் தாம் படித்துக்கொண்டவற் றில் இருந்து எழுந்தனவாக உள் ளனவே தவிர, மக்களைப் புரிந்து கொண்டதனுல் இயற் கையாக எழுந்த உணர்வுகளாக, வாழ்க் கைக் களத்தில் கலந்துகொண்ட வையாக தெரிய வில்லை. இவை மக்கள் மத்தியில் காலூன்றத, மக்களின் இயக்கங்களோடு ஒன்றி நிற்காத சிறு மு த லா விதி துவ, புத்தி ஜீவிகளிள் தன்மைகளையே புலப்படுத்துகின்றன என்றே கூற வேண்டும்.
t ல்தெந்கி
இப் படைப் பாளிகள் "ஒரு புதிய சகாப்த்தத்தின் இளைய இரத் தங்கள்’ ஆக இருப்பதால், புரட் சியிலும், புதிய சமுதாயத்தை அடைவதிலும் தீவிரமும் அவா வும், ஆவேசமும் கொள்வது இவர் களின் தன்மையாக இருந்தாலும் புரட்சிக் காலகட்டத்தை அடைவ தற்கு முன்னே, தூங்கிக் கிடக்கும் மக்களை பல சமுதாயக் கட்டங்க ளுக்கூடாக வழிப்படுத்திச் செல்ல வேண்டியதையுணர்ந்து செயல்பட வேண்டியதும், தம்மை அதற்காக பொறுமையுடன் புதிய வார்ப்பில் மாற்றிக்கொள்வதும் அவசியமா கும்.

Page 15
26
புதுக் கவிதைகளில் இன்னெரு பாரதூரமான டலவினம் விளங் காத கவிதைகள்; புரிந்துகொள்ள முடியாத கவிதை க ள் ஆகும். "அக்னி கவிதைகளில் குறிப்பிடத் தக்களவு இந்த வகையைச் சேர்ந் தன.
முதலாம் இதழில் தியாகிகள், தே ர் த ல் முடிவு, கவிதை, இடைவெளிகள் இல்லாத தலேமுறை, மரபு--கலை-O, விட் டில், மரண பே த நீ கள், மக்கள் கலை,காவிகளும் ஒட்டுண்ணிகளும்
இரண்டாம் இதழில், அனு மதியோம், பலவீன்ம், தீபக், தர வுகள், காலம், பருவம், குருக்கத் திப் பூக்கள், குருதிப் பயணங்கள்
மூன்ரும் இதழில், அக்னிக் காற்று, தொடரும் வழி காதல், பாலி ஆறு நகர் கிற து, இளைய தலைமுறை, சமத் துவ ம் காண் போம், வேஷங்கள் என்பன உதா ரணங்களாகும்.
இது யாரை முதன்மைப் படுத் துகிருேம்? யாருக்காக எழுதுகி ருேம் என்ற பிரச் சினை யோடு தொடர்புடையது. “மகோன்னதங் களுக்காக அல்ல, மக்களுக்காக எ முது கிறே ம்" என்பது நடை முறையில் பறந்துபோய்விடுகிறது. *தன் வீரத்தைக் காட்ட இடமில் லாத ஒரு வீரனைப்போல் இவர்கள் தமது த த் து வங்களை ஒளித்து மறைத்து பெரிய மனித த் தன் மையை வெளிக் காட்டுகிறர்கள். இவர்கள் கூறும் பேருண்மைகள்
மக்களுக்கு விளங்காது போனல்
அதனுல் எற்படும் பயன் என்ன?
ஒரு காதல்
படைப்பாளிகளை அறிந்தும் படும்; அவர்கள் அறியாமலும் ஏற்
தொழிலாளி வர்க்க நிலைப் பாட்டில் நின்று மக்களை மையமாக வைத்து எழுதப்படுமானல் இக் குடைபாடு எற்படுவதற்கு இடமில் லாமல் போய் விடும். தமக்கு
விளங்கும் கருத்துக்களும், வார்த் தைகளும், ஒளிப்பு மறைப்புக்களி ளும், மக்களுக்கும் விளங்கவேண் ம்ே என்னும் சிறு மு த லா வித் துவ புத்திஜீவி கண்ணுேட்டத்தால் உட் படுத்தப்பட்டிருப்பதனலேயே படைப்பாளிகள் இவ்வாறு புரியாது எழுதுகிறர்கள்.
இவர்கள் தம் கண்ணுே ட் டத்தை தொழிலாளி வர்க்கக் கண் ணுேட்டமாக மாற்றிக் கொண்டு தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டை தமதாக்கிக்கொள்ளும்போதே இக் குறைபாடு நீங்கும்; கவிதைகள் மக் களால் விரும்பப்படும்.
படைப்பாளிகள் எவ்வளவுக்கு
முதுபெரும் பாவனை காட்கிரும் களோ அவ்வளவுக்கு மக்களை விட்டு விலகியே சென்று கொண் டிருப்பார்கள் என்பது மக்கள்
படைப்பாளிகளுக்கு என்றும் நினை வில் இருக்க வேண்டும்.
கவிதைகளின் மற்ற எந்தக் குறைபாடும் மக்களுக்குப் பாதக மான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனல் தத்துவார்த்தப் பிழைகள், மக்களுக்கு மக்களின் இலட்சிங் களுக்கு எதிரான லிளேவுகளையே ஏற்படுத்தும். ஆகவே எந்தப் பிழையான கருத்தும் விமர்சனத் துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இவ்வாறன தத்துவப் பிழைகள் ஏற்

படும். எவ்வாறயினும் அவே எற் பாத்தும் விளைவு எதிரானதே.
"அக்னி" மூன்று இதழ்களி லும் தத்துவப் பிழையான கவி தைகளும் காணப்படுகின்றன. இவை அக்னியின் இலட்சியத்துக் குப் பாதகமானவை.
முதலாம் இதழில் நான் ஒரு விவசாயி காவிகளும் ஒட்டுண்ணி களும், கூத்து, மூலதனம், நீதிக் கண், தொழிலாளர், ஒர் அடிமை யின் மடல், தேர்தல்முடிவு.
இரண்டாம் இதழில் விருந்து, குருதிப்பயணங்கள், காலம்.
மூன்றம் இதழில் எங்கள் நாட்டிலும் இளவரசர்கள் இருக்கி ருர்கள், திருத்தப்படுவீர் என்பன இவ்வகைக் கவிதைகளே.
ஓர் அடிமையின் மடல் என்ற கவிதையில் அடிமை தன் விடுத லேக்காக தானே போராடுவதாகக் காட்டப்படவில்லை. வேறு யாரோ வசந்தத்தின் வருகை நோக்கிக் குரல் எழுப்புவதில் நம்பிக்கை வைத்து, மனைவிக்கு ஆறுதல் கூறுகிறன் அடிமை.
*தேர்தல் முடிவு" என்னும் கவிதையில் இறுதி அடிகள் மக் கா மனதில் தோன்றி என்றும் நிலைத்து நிற்பது பஞ்சம், பசி பட் டினிச் சாவு என்று வருகிறது. பஞ்சம் பசி, பட்டினிச்சாவு றும் நிலைத்து நிற்பவையா? எதிர் காலத்தில் நம்பிக்கையீனத்தை இது ஏற்படுத்துகிறது. 'கூத்து, என்ற கவிதை ஆன்மிக வாத விரக்தியுணர்வின் வெளிப்பாடாக
என்
27
இருக்கிறது. வாழ்க்கையில் ஒன்று மில்லை, ஒரு கூத்தே என உணர்வு கொள்ள வைக்கிறது.
"நான் ஒரு விவசாயி'யில் விவ சாயி சொல்கின்றன் வர்க்கம் இரண்டு என்று பலபேர்கள் சொன் ஞர்கள், எனக்குப் புரியவில்லை, எனென்றல் நானே எழுதப்படிக் கத் தெரியாத விவசாயி.
அவனை ஒடுக்கும் வரிக்கத்தை
அவனுக்குப் புரியாமல் யாருக்குப்
புரியும்? படித்தவனுக்குத்தான் வர்க்கபேதம் புரியும் என்ற கண் ணுேட்டம் தொழிலாளி வாக்கக் கண்னேட்ட மல்ல. அது படித்த புத்திஜீவிகள் கண்ணுேட்டம். ஏனெ னில் கவிதை எழுதியவர் படித்தே வர்க்கங்களைப் புரிந்து கொண்டிருக் கிருர் என்பதே உண்மை. இது விவ சா மிக ளி ன் தரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.
*தொழிலாளர்" என்ற கவிதை யில் பலகால்களால் உதைபடும் தொழிலாளர்கள் சில நேரம் அவர் கள் முகத்தில் திருப்பி உதைப் பார்கள் என்ற கருத்தை வலி யுறுத்துகிறது. தொழிலாளர்கள் தம்மை அடக்குபவர்களுக்கு எதி ராக எழுவது தற்செயலானது என்ற உணர்வை இது ஏற்படுத்து கிறது. தொழிலாளர்கள் திருப்பி உதைப்பது நடந்தேதீரும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.
"நீதிக்கண்' கவிதையில் கற்பை இழக்க மறுத்த பெண் கற்
புக்கரசி கண்ணகியானள்" என எளனம் செய்யப்படுகிறது.
(தொடரும்)

Page 16
ஒரு சிறுகதைத்தொகுதி அழுது வடிகிறது அல்லது ത്ത தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
இச் சிறுகதைத் தொகுதி பற் றிய விமர்சனத் தை அனுபவ முதிர்ச்சியற்ற ஒரு இனைஞனின் விரக்தி ஒலங்கள் என்ற வார்த்தை களில் கூறி முடித்து விடலாம். இச் சிறு கதைத் தொகுதி இதை எழு திய எழுத்தாளன் யேசுராசாவின் கையில் கையெழுத்துப் பிரதியாக இருந்திருந்தால், வாங்கிப் படித்து விட்டு அப்படிக் கூறி அவரிடமே அதைத் திருப்பிக் கொடுத்து விட லாம். ஆஞல் இத் தொகுதி அச் சாகி மக்களுக்கு விற்பனை செய்யப் படுவதால் கடுமையான விமர்சனத் துக்கு உள்ளாக்கப்படவேண்டும்.
தொலைவும் இருப்பும் எனைய கதைகளையும் படித்து முடித்ததும் என் மனதில் ஒரு காட்சி பதிவா கிக்கொண்டிருக்கிறது. கதைகளில் யேசு, சத்தியசீலன் முதலிய பெயர்
களில் வரும் பாத்திரங்கள் எல்.
லாம் ஒரு உருவெடுத்து எழுத்தா ளன் யேசுராசாவாகி, அந்த யேசு ராசா இருட்டினிலே குந்தி இருந் தவாறு, இரு கைகளாலும் குனி ந்த தலையைப் பொத்திப் பிடித்த l JLG. 'நண்பர்களை நம்ப முடிய
"வில்லையே! காதலி ஏமாற்றி விட்
டாளே! மனிதன் மாறு கி ருனே! மனிதனை நம்பமுடியவில்லையே! இதனல் என் வாழ்க்கை சாரமற் றுப் போகிறதே! என் வாழ்க்கை நீண்ட இழப் புக்களைக்கொண்டது தானே?’ என மெதுவாக அழுது கொண்டிருக்கிறர்.
இவர் 1966-1974 காலப் பகு தியில் எழுதிய பத்துச் சிறு கதை கள் இத்தொகுதியில் உள.
வாழ்க்கையில் நீண்ட இமப் புக்களை அனுபவித்தும், நண்பர்களே யும், காதலியையும் நம்பி எமாந் தும், அதனல் சிறுபிள்ளைந்தன மாக, உலகத்தின் சுகங்கள் எல்லா வற்றையும் இழந்ததாக கருதி, சலிப்பும், விர க் தி யும் கொண்ட யேசுராசா தான் எழுதிய பத்துக் கதைகளில் ஆறில் தானே பாத்திர மாகி ஆக்கிரமித்து நிற்கிருர்,
இந்த யேசுராசா வாழ்க்கை
யில் கண்ட வேறு அனுபவங்கள் என்ன?
பலருக்கு முன்னல் பிச்சை போட வெட்கப்படும் க ந் த சாமி,
 

முன்பு அறிமுகமான ஒருவருக்கு தேனீர் பானத்தைக் கொடுக்கும் ஹோட்டல் சேவகன், அப்பம் சுட்டு வாழ்க்கை நடத்தும் ஒரு அம்மா, பெண் கேட்டு வரும் பணக்காரச் சம்மாட்டி.
இவை மக்க ளோ டு பழகிக் கொள்ளாத, யேசு ரா சா வுக்குப் புதுமையானவையாக இருக்கலாம். ஆனல் இவை மிகச் சர்வசாதாரண மான நிகழ்ச்சிகள். இளம் எழுத் தாளர்கள் பலமுறை கையாண்ட புளித்துப்போன விடயங்கள்.
சரி, யேசுராசா விரக்தியுண ர்வை வெளிப்படுத்த ஒரு கதை எழுதியிருக்கலாம். ஆனல் என் ஆறு கதைகளில், ஒரே பாந்திர ம.கி, ஒரே ராகத்தில், ஒரே விரக்தி அழுகைகளைக் கொ ட் டி தி தீர்க்க வேண்டும்?
யேசுராசாவே ஒரு விரக்தியின் இயக்கமா?
ஆம் போலும். ஏனென்றல்இவருக்குப் பிடித்தமானவர்கள் யார் தெரியுமா?
விரக்தியினுல் மெய்யுளுக்குள் மோ ச ம ன தளைய சிங்கம், தற் கொலை செய்யும் சுப்பிரமணியம் என்ற எழுத்த 1ளன், மகத்தான துயரங்களோடு வாழும் திரைப்படக் கதாநாயகன் ஒ பூ, கருமேகங்கள் இருள்கொண்ட கடல்கள்.
இவருக்குப் பிறந்து வளர்ந்த சொந்தக் கி ரா மத்திலும் வாழ முடியவில்லை. (ஒர் இதயம்வறுமை கொண்டிருக்கிறது ) வாழ்க்கையின் விநோதங்கள் கொண்ட கொழும்பி லும் வ, ழப் பிடிக்கவில்லை.
வாளிப்பான பேராதெனியா விலும் வாழ்க்கை சாரமற்றதாக இருக்கிறது. இது மட்டுமா?
எ முத் தா ளரூகவும் வாழப் பிடிக்கவில்லை.
நண் டர் களையே நம்ப முடிய வில்லை
Ged? *மனித னையே நம்ப முடிகிற தில்லை!"
இவர் கதைகள் எல்லாம் சார மற்ற நீண்ட விரக்திகளைக் கொண்
29
டதுதானே? ஆம் அப்படித்தான்.
1966 முதல் 1974 வரை இவர் கண்ட சத்தியங்கள் இவைதான். லேபல்களை விட மனிதன் பெரிய வன் எனக் கூறும் இவர், நண்பர் கள் தன்னேடு ஒத்துவரவில்லை என் பதால் ஒரு மகத்தான சத்தியத் தைக் கண்டு பிடிக்கிருர். "மனுஷ் னையே நம்ப முடி கிற தில்லை"யாம் (கேவலங்கள் நிறைந்த சூழ்நிலை யில் 'அலை'யின் ஆசிரியராக லேபல் ஒ ட் டி க் கொள் வ தில் பெருமை போலும்) மனிதனை நம் பா மல் வேறு எதை நம்பப் போகிருர்?
இவரது விரக்தி ஒலங்களை இவ ரது உள்வட்ட மூதேவிகள் சேர்ந்து கட்டி அழட்டும. ஆனல் பரந்துபட்ட 6:சகர்களுக்கு அப்படி ஒரு விதியும் இல்லை.
உலகத்தில் நம்பிக்கையிழந்து, வாழ்க்கையிலும் பி டி ப் பற் று, விரக்தியுணர்வுகளுக்குள் குறுகிச் சாகும் உணர்வுகளை முக்கியப்படுத் தும் இத்தொகுதி, மனிதனை பெல யீனணுக்கும் நா சகாரத்தன்மை கொண்டது. துன்பந்தரும் சூழ் நிலைகளை மாற்றி மு ன் னே ஆறு ம் மனித இயற்கைக்கு உற்சாகமூட்டு வதற்குப் பதிலாக சோர்வைத்தரும் இக் கதைகள் நசிவு இலக்கியமே, மக்கள் விரோத இலக்கியமே. யேசு ராசா இச் கதைகளே என் எழுதினா? இவரின் இதய ம் வறுமை கொண்டிருப்பது மட்டுமல்ல, மக் களை விட்டு ஒதுங்கி நிற்கும் இவரது மூளையும், சமுதாய அனுபவமும், சமுதாயம் பற்றிய தத்துவத் தெளி வும் இன்றி வறுமை கொண்டிருக் கிறது. தனி மனித வாத பிற்போக் குச் சிந்தனைகளால் ஆக்ரமிக்கப்பட் டிருக்கிறது.
இவரும், இவரது சகாக்களும் இப்பொழுது இலக்கியத்தில் சத்தி யத்தைத் தேடப் புறப்பட்டிருக்கிறர் է56Ո •
இந்தச் சிறுபிள்ளைத்தனமான வர்களுக்கு சத்தியம் என்ன? அதை எங்கே தேடுவது? எப்படித்தேடுவது என்று புரியவில்லை. இவர்கள் பரி தாபத்துக்குரியவர்கள்

Page 17
இலக்கிய உலகில்
இன்றைய மிகவும் மும்முசமாக நடைபெறும் ஒரு விவாதம் புதுக் கவிதை மரபுக்
கவிதை பற்றியதாகும். வேறு எந்த இலக் கி ய உருவங் களிலும் LT tř a 5 புதுக்
கவிதை பற்றிய விமர்சனங்களும், கோஷங்களும் பெரிதும் முக்கியப் படுத் த ப் பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் நா வல், சிறு கதை போன்ற உரைநடை இலக்கியங்கள் எப்படி பண்டிதர்களாலும், புல வர்களாலும் பரிகசிக்கப்பட்டு இலக் கியமல்ல என்று ஒதுக்கப்பட்டதோ
அதுபோல்தான் இப் புதுக் கவிதை யும் புதுரகப் பண்டிதர்களாலும், கலாநிதிப் பண் டி த ர் களாலும் ஒதுக்கப்பட்டது. ஆனல் நவீன உரைநடை வடிவ இலக்கியங்கள் எப்படி பண்டிதர், புல வர் களை ஒதுக்கிவிட்டு சமூக மாற் ற சூழ் நிலைக்கு ஏற்ப வளர்ச்சி உற்றதோ அதுபோல் புதுக் கவிதை என்னும் இலக்கிய வடிவமும் இன்று வளர் ச்சியடைந்துவிட்டது. இதை யாரா லும் தவிர்க்க முடியவில்லை.
இந்தப் புதுக் கவிதை, மரபுக் கவிதை என்னும் விடயத்தில் தாய இலக் கி ய வா தி களும் மற்றும் தம்மை முற் போக்கு இலக் கிய வா தி கள் (எ ல் லோ ரும் அல்ல) என் போரும் பலதரப்பட்ட விதத்தில் சருத்து மோதல்பட்டார் கள். இதில் ஒரு நியாயம் முற் போக்கு வட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தது. அதாவது, முதலில் புதுக் கவிதை, வசன கவிதை என்ற வடிவத்தைக் கையாண்ட வர்கள் வெறுமை, விரக்தி முனைப்பு, ம ன முறிவு போன்ற தமது உள் மனக் குமைச்சல்களை யும், செக்ஸ் வழி சம்பந்தப்பட்ட
விடயக் கருத்துக்களையும் கூற்த் தான் புதுக் கவிதையைப் பயன் படுத்தினர்கள். அதஞல் அ/onத,
அன்றைய காலக்கட்டத்தில் பல முற்போக்கு விமர்சகர்கள் விமர் சித்து தா க் கினர்கள். ஆனல், காலப்போக்கில் புதுக் கவிதை எbன் னும் 5டிவத்தை மக்கள் இலக்கி யம் படைட்பேrரும் கையா கா தி தொடங்கி அதில் வெற்றியும் கண்
II GT
இந்த இடத்தில்தான் போட்டி பூசல்களும், புதுக் கவிதைய- மர புக் கவிதையா? என்னும் விவா தங்களும் தோன்ற ஆரம்பித்தன.
 

ஆதலால் நாம் இந்த விடயத்தில் ஒரு நிதான போக்கையும் தெளி வான கொள்கையையும் வைக்க வேண்டும். இதில் மு ன்னுக்குப் பின் முரணு ன கருத்துக்கள் இருக் கக்கூடாது. இந்த புதுக் கவிதைமரபுக் கவிதை என்பதை சிறிது தனித்து நோக்கி இறுதியில் ஒரு முடிவுக்கு வரலாம். இதில் மற் ஆறும் ஒரு உண்மை என்னவெ னில் புலன் உணர்வுப் பிரச்சினை யாகும். அதாவது, ஓசை என்ற கேட்டலுக்கும் பார்வை என்ற கண் ணுடனும் சம்பந்தப்பட்ட வாசிப்புக் குமுள்ள பிரச்சினையும் முக்கியமா னது என்பதை நாம் மறக்கக் கூடாது.
மரபுக் கவிதை, புதுக் கவிதை இதில் நாம் காணும் வேற்றுமை 'மரபு, புதிய' என்ற அடைமொழி களில் ஆகும். இந்த மரபு' என்றல் என்ன? இது தொடர்ந்தும் வரு கின்றதா? தமிழ்க் கவிதை உலகில் தொடர்ச்சியான என்றும், மாருத தனித்துவமான 'மரபு' என்றும் ஒன்று உண்டா? என்பதைக் கேட்க வேண்டியுள்ளது. ஆனல், இந்த * மரபு’ ‘புதிய' என்ற இரண்டையும் இணைப்பது கவிதை ஆகும். கவிதை என்பது இல்லையெனில் இரண்டுமே இல்லை!
எந்த கலே , இனக்கிய வடிவ மும் சமுதாய வர்க்க நிலை க்கு ஏற்ப மாற் ற மடை யும் என்பது நாம் அறிந்த து ஆகும், இந்த விதிக்கு எற்ப தமிழ்க் கவிதை உலகும் அதாவது, சங்க காலம் தொடக்கம் இன்றைய காலம் வரையும் ஒரே தொடர் ச் சியான மரபு ரீதியிலே இயங்கவில்லை என
31
ஏற்க வேண்டி வரும். அதாவது நிலப்பிசபுத்துவ முதலாளித்துவ வர்க்க மேம்பாட்டில் கவிதை உரு வமும் உள்ள டக்கமும் அந்த வர்க்க கால சூழ் நி லே யை யும், அந்தந்த வர்க்கத்தின் நலனையும் தான் கருவாகவும் அந்தக் கருவை கொள்வதற்கு வற்ற உருவையும் உடையதாக இருந்திருக்கும்.
இந்த மரபு என்பது எல்லாம் ஒரு அர்த் த மற்றதாகப் போகின் றது. அதாவது, வர்க்க சமுதா யத்தில் இந்த மரபு' என்பதும் வர்க்கம் சார்ந்தது ஆகின்றது. இந்த நிலைமையில் மரபு என் றல் என்ன? என்ற கேள்வி நியா யமானதே என நினைக் கிறேன். உண்மையில் நாம் மரபு என்றல் இதுதான் சான்று எநதக் காலத் துக்கும் முடிவான திடமான ஒரு மரபு உண்டா? மரபு ரீதியா ன கவிதை என ஒரு தொடர்ச்சியான பண்பு உண்டா? என்பது கேள்விக் கிடமானதும் ஆகும். இதை விட இன்றைய முதலாளித்துவ வகாே பத்திய வளர்ச்சியினல் எற்பட்ட விஞ்ஞான இயந்திர வளர்ச்சியி னல் கவிதை வடிவம் என்பது மாறமல் இருக்க முடியுமா? என்ப தும் கேள்விக்குரியது ஆகும்.
எல்லாம் சரி, இன்றைய யுகத் தில் "மரபு' என்ற ரீதியில் கவிதை எழுதி வெற்றி யடைந்தவர்கள் யார்? அதாவது இந்த விடயத் தில் நான் உள்ளடக்கம், உருவம் என்ற ரீதியில்தான் கேட்கின்றேன். பாரதிக்குப் பிறகு கவிதை உலகில் இவன்தான் மகோன்னதமான மக் கள் கவிஞன்-கவிதை ஆற்றல்

Page 18
32
படைத்தவன் என கூற முடியும்? பார தி யை கூட நாம் எவ்வளவு காலத்துக்கு கட்டி அழி மூடியும்? பாரதி ஒரு தேசிய விழிட புணர்வுக் காலத்தில் மலர்ந்த ஒரு பூர்ஷ9வா கவிஞன்! அந்த தேசிய பூர்ஷஜூவா கவிஞன் இடத்தில் உண்மையான மக்கள் கலாச்சார மரபுகளைக் காண முடியுமா?
இன்று எத்தனையோ கவிஞர் கள் நமயிடையே இருக்க லா ம். ஆனல், இவர்கள் எல்லாம் உண் மையான சவிஞர்களா? புதிய ஜன நாயக எழுச்சிசகு எழுச்சியூட்டும் உண்மையான மக்கள் கவிதை யையா படை த் து வி ட் டா ர்கள்? பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல் பாண சுந்தாம், கண் ண தா சன் மஹாகவி, முருகையன் என நீங் கள் கூறலாம். அல்லது நினைக்க லாம். பாரதிதாசன் கவிதைகளை எடுத்தால் அதில் உள்ளடக்கம் சரி யான கருத்து ரீதியில் விழவில்லை என்றே கூற வேண் டும். பட்டுக கோட்டை முழுமையாக வளர்ச்சி யுறமுன் போய்விட்டான் கண்ண தாசனையும், மு ரு கை யனையும். மஹாகவியையும் கூறமுடியுமா? முருகையன் கவிதைகள் இன்று யாருக்கு விளங்குகின்றன? என் னைப் பொறுத்தமட்டில் முருகைய னிலும் பார்க்க மஹாகவியிடம் ஒரு கவித்துவம் இருந்தது என் பேன்; மற்றும்படி இங்கு மஹா கவியை நான் சிறப்புடைய கவி ஞன் எனக் கூறவில்லை. இவர்கள்
எல்லாரும் கவிஞர்கள்தான் என் பதை நான் மறு க் க வில்லை. ஆனல், இவர்கள் அப்படி என்ன உலக இலக்கியம் போற்றும் சிறப் பான கவிதைகளைப் படைத்துவிட் டார்கள்?
சரி இவற்றை விடுவோம். மரபு ரீதியில் எ ல் லா ம் சரியர்க உள்ள இன்றைய காலகட்ட கவி தையை படைக்க முடியுமா? ஒரே பழமையைத்தான் நாம் இன்னும் எத்தனேக் காலத்துக்குக் கட்டிய: முடியும்? எம்மை பொறுத்தவரை காலமாற்றம், சமூகமாற்றம் என பன நடப்பது இல்லையா? எமது கதா ப் பிரசங்கக்காரர்கள் எப்படி சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
போன்ற பழைய - ஒரே சலித்துப்
போன - புராண இதிகாசங்களைக் கட்டி அழு கின் ரு ர்களோ அது போல்தான் மரபு என்ற போர்வை யில் நாமும் எத்தனை க் காலத் துக்கு குத்துக்கரணம் அடிக்கலாம்? கவிதையில் என் நாம் மா ற் ற செய்து பார்க்கக்கூடாது? இங்கே, யென்ஆன் கலை இலக்கியக் கருத தாங்கு உரையில் தோழர் மாசேதுங் கூறிய ஒரு பகுதி பொருத்தமுடை
யது என நினைக்கின்றேன். 'ஒரு பிரச்சினையை விவாதிப்பதில் நாம் வரைவிலக்கணங்களிலிருந்து அல் லாமல், ய தா ர் த்தத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்’ எனக் கூறு கின்றர் அவர்.
(தொடரும்)
ஆசிரியர்: ஈழவாண்ன். 33, லோரீஸ் வீதி, கொழும்பு-4ஐச் சேர்ந்த என். லோகேந்திரலிங்கத்தால், மருதானே, 27-2/2, ஜயந்த வீரசேகர மாவத்தை, கவிதா பப்ளிக்கேஷன்வயில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

>பனையாகிறது
கே. எஸ். சிவகுமாரன்
எழுதிய
TAML WRITTING IN SRI LANKA
* ஈழத்துப் படைப்பாளிகளையும்
படைப்புக்களையும் பற்றிய ஆங்கில மொழி முயற்சி.
೫ಖ 5/75
விபரங்களுக்கு: கே. எஸ். சிவகுமாரன், 21, முருகன் இடம், கொழும்பு-6.
விற்பனையாகிறது
சாந்தன் எழுதிய
ஒரே ஒரு ஊரிலே. (சிறு கதைத் தொகுதி)
G2ay 4
ரூ. 450 க்கு போஸ்டர் ஒடர். அல்லது மணி ஒடர் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
பரங்களுக்கு A SANDHAN, 20, Lorensz Road, Colomb0 4.

Page 19
AGNI AAN
With Best
fı
SAREBIVA ||
General Merchants dea Lamps Parts Grocer
20, DAM COLOM
Te:
விற்பனையாகிறது.
கவிஞர் முருகை எழுதிய
விபரங்களுக்கு:- நிர்வாகி-அக்னி, 487/5, பேர்க்கூஷ கொழும்பு-15.

Compliments
ΟΠΠ.
ENTERPRISE
lers in Lamps & Lantens, ties & Oilments goods.
1 STREET,
MBO - 12.
35065.
பன்
ஆதிபகவன்
(காவியம்) விலை ரூ. 2.00
ன் வீதி,