கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 1995.12

Page 1
பெண்கள் கல்வி,
 
 

தினி
DIT, ழி | ԱԱ5

Page 2
| எமது குறிக்கோள்களில் சில
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ஒரு அரசாங்கச் சார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம். சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயக பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இன பெண்களின் முன்னேற்றத் திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலை பற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன்
முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள், வளங்கள் ஆகியவற்றை சேகரிக்கும் இந்நிறுவனம், மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும்.
பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் வரிளைவுகளைப் பற்றி இந் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
பெண் எழுத்தாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும், ஊக்குவித்தல், அத்துடன் பெண்களால் எழுதப்படும் சிங்கள, தமிழ், ஆங்கில நூல்களை வெளியிடுதல்.
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அக்கறையைத் துண்டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான (அகதிகள், வேலையற்றோர், சேரிவாசிகள்) மீளக்குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் நல்கல்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் WERC

இந்த இதழின் உள்ளடக்கம்
எம் குரல் : மானிடராகுங்கள்
நாயகரைப்பாடிப் பரவிய நாயகியர் ராஜம் கிருஷ்ணன் 10 பெண்களுக்கெதிரான வன்முறை சந்திரிகா சுப்பிரமணியம் 32
பெண்ணெனப் பிறந்த மனித உயிரினம் மேன்மை பெற பத்மா சோமகாந்தண் 41
பெண்களுக்கெதிரான வன்முறைகளும் அவற்றின் தாக்கங்களும் கெளசல்யா 48
வன்முறையின் இன்னுமொரு கோணம்
செ. கணேசலிங்கம் 62
பீஷ்மரும் பெண்களும் பற்றிய ஒரு சர்ச்சை,யுகந்தாவிலிருந்து
ஐராவதி கார்வே 67
ழந்தைகளின் அறிவுத்திறனிலும் ஆளுமையிலும் 醬 உறவுத் திருமணங்களின் தாக்கம்
- வாசுகி குலவீரசிங்கம் 79 குவைத்திலிருந்து ஒரு சோகக் கடிதம் - றிபாத் ரம்ஜான்
-குவைத 90 அறிக்கைகள் كسر
பால்நிலைப்பாடும் வர்க்கநிலையும் 92
புதியமுறையிலான பெண்களின் கண்ணோக்கு 95 ஆண் - பெண் இருபாலார் சமத்துவத்திற்காக O
நூல் விமர்சனம்
முறியாத சங்கிலித் தொடர் : யாழ்ப்பாண சீதன முறை பற்றிய ஆய்வு செல்வி திருச்சந்திரன் 104
கோமல் சுவாமிநாதனுக்கு கண்ணீர் அஞ்சலி O

Page 3
இச்சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே மறு பிரசுரம் செய்யலாம். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களின் சொந்தக் கருத்துக்களே, இதழாசிரியருடையவை அல்ல.
பணிப்பாளர் குழு
கலாநிதி குமாரி ஜயவர்த்தனா
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
அன்பேரியா ஹனிபா
இதழாசிரியர் கலாநிதி செல்வி திருச்சந்திரன்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
58 தர்மராம வீதி கொழும்பு -06 இலங்கை 7 : 590985 / 595296
Fax. NO : 5963 13 ISSN: 1391-0353
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த இதழின் உள்ளடக்கம்.
அரசியலில் வன்முறை அகற்றப்பட வேண்டும் 66
முன்னுரையில் வலியுறுத்தும் நாம் அதே வன்முறை எப்படி வேறு உருவில் பெண்ணைத் தாக்குகிறது என்பதையே இவ்விதழின் கருப்பொருளாகக் கொண்டுள்ளோம். ஆனால் அரசியலில் வன்முறைக்கும் பெண்ணைத் தாக்கும் வன்முறைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பொதுவாக ஆயுதப் போராட்டமாக மாறும் அரசியல் வன்முறை நசுக்கப்பட்டதின் விழைவாக ஒரு இனத்தாலோ அன்றி குழுவாலோ முன்வைக்கப்படும் உரிமைப் போராட்டமாகவே இருப்பதால் அது அரசியல் ரீதியல் ஓரளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோட்பாடாகவே இருக்கிறது. ஆனால் பெண் இனத்திற்கு எதிராகத் தோன்றும் வன்முறை பெண்ணை அடக்குவதற்கு அவளது அடிமைநிலையின் சின்னமாகவே, வெளிப்படுகிறது. ஆனாலும் அடக்கப்பட்ட அடிமையாக்கப்பட்ட பெண்மை ஆண்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தையோ ஏனைய வன்முறைப் பிரயோகங்களையோ உபயோகிக்கவில்லை. எதிர்ப்பையும் மாற்று வினைகளையும’ எழுத்து மூலம், செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறது.
அந்தச் செயலையே நாம் விண்டு விண்டு பெண்களுக் கெதிரான வன்முறைப் பான்மைகளை, வகைகளை, பரிமாணங்களை தொகுத்திருக்கிறோம். பெண்களுக்கெதிரான வன் முறைகளை இனங் காணுவதற்கும் அவற்றை அகற்றுவதற்கு வழிவகைகளை பிரேரிப்பதற்கும் என ஐக்கிய நாடுகளினால் தெரிந்தெடுக்கப்பட்ட தொடர்பாளர், rapporteur என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இராதிகா குமாரசுவாமியின் கவனத்துக்கு இவ்விதழைச் சமர்ப்பிக்கிறோம். இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவில் சகஜமாகிவரும் வன்முறைகளும் இனங்காணப்பட்டுள்ளன.

Page 4
-6-
இவற்றை விட இரு ஆய்வுக்கட்டுரைகளும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இரத்தமுறைத் திருமணத்தின் ஜதிகங்களையும் உண்மைநிலைகளையும் ஆராயும் ஒரு கட்டுரையும், தேசவழமையின் தாத்பரியங்களும் என்றென்றும் எமக்குத் தேவையான விடயங்கள். சமாதானத்திற்கு பெண்கள் என்ற அமைப்பின் பிரகடனம் அவர்கள் வேண்டுகோளின்படி சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விதழின் சிறப்பம்சமாக சில அறிக்கைகள் பிரசுரிக்கப்படுகின்றன. சமகால நிகழ்வுகளுக்கு எதிராக பெண்களால் எழுப்பப்பட்ட குரல்களை பதிவு செய்கிறோம். அவை இந் நாட் டின் வரலாற்றிலும் பதிவு செய்யப்படவேண்டும் என்பதற்காக அவற்றை இங்கு தொகுத்துத்தருகிறோம். இதை நிவேதனியின் சிறந்த பணி என்றே வாசகர்கள் கணிப்பார்கள் என நம்புகிறோம்.
ஆசிரியை

-7-
எம் குரல் : மானிடராகுங்கள்.
அவலமும் அல்லலும் நிறைந்த மனதுடன் வீடுகள், குடிசைகளை விட்டு ஓடி ஓடி உயிர் காக்க எத்தனிக்கும் மக்கள் கூட்டமும் இரத்தம் சிந்தி உயிர் துறக்கும் யுத்தம் செய்வோருமாக நாடு வடக்கிலும் தெற்கிலும் களையிழந்து நிற்கும் இவ்வேளையில் வெளிவரும் நிவேதினியும் கூட அரசியலை ஒதுக்கி வைக்க முடியாது. சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் தவிக்கும் தமிழ் மக்கள் படும் கஷ்டங்கள் மனதைக் கலங்க வைக்கிறது. இந்த அர்த்தமற்ற யுத்தத்தினால் யாருக்கு என்ன பயன்? யாருக்குத்தான் வெற்றி? அந்த வெற்றியை, இத்தனை இழப்புக்களின் மத்தியிலும் வெற்றியடையலாம் என்ற மமதையில் தொடக்கப்பட்ட இந்த யுத்ததின் வெற்றியை யார் தான் கொண்டாட முடியும்? அரசாங்கம் புலிகளை அடக்கி விட்டோம் என்றும் சிங்கள மக்கள் தமிழ் மக்களை முறியடித்து விட்டோம் என்றும், ஒரு வக்கிரக கர்ச்சனை செய்யப் போகிறார்களா? மனிதாபிமானமற்ற எந்த ஒரு யுத்தமும், ஆயுதம் ஏந்திய எந்த ஒரு வன்முறைவழிவந்த வெற்றியும் எப்போதும் வெற்றியாகாது. யுத்தத்தை, வன்முறையை, மக்களைக் கொன்று குவிக்கும் முயற்சியை, நிவேதினி கண்டிக்கும் அதே வேளையில் உரிமைகளை பகிர்ந்து, விட்டுக் கொடுத்து, ஏற்றுக் கொண்டு சமாதானப் பாதையில் நுழையுங்கள் என்று அரசையும் புலிகளையும் ஒரே சமயத்தில் நாம் கூவி அழைக்கிறோம். −
இலங்கை பெண்கள் ஒன்றையிட்டு நிச்சயமாகப் பெருமைப்படலாம். கொஞ்சமேனும் தேசியவாத தளம்பலோ, பேருமிதமோ இல்லாமல் யுத்தத்துக்கு எதிராக குரல் கொடுக்கிற முன்னணிப்படையாக பல்வேறு அமைப்புக்களும் பல்வேறு அமைப்புக்களில் உள்ள பெண்களுமே இன்று முன் நிற் கறார் கள் . எதிர்கா லத்தில் வரலாற்றை எழுது கிறவர்கள் தீவிர ஆண் ஆதிக்க வாதிகளாக

Page 5
-8-
இருந்தாலன்றி இந்த பேருண்மையை புறந்தள்ளிவிடமுடியாது.
தமிழ் மக்களை இத்தனை இன்னல்படுத்தி, அல்லல்படுத்தி வன்முறைவழிவென்று தான் அவர்களை புலிகளிடமிருந்து பிரிக்கவேண்டுமா? இதனால் தமிழ் மக்களை அரசாங்கம் அந்நியப்படுத்துகிறது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லையா? இத்தனை காலமும் இன்னல் அனுபவித்த யாழ்ப்பாணத்தமிழரை கொடுமையாக அரசாங்கம் மேலும் துன்புறுத்துகிறதேபுலிகளில் உள்ள கோபத்தை எங்களிடம் காட்டுகிறதே அரசாங்கம் என்று தானே தமிழ் மக்கள் கணக்குப் போடுவார்கள் இது தப்புக் கணக்கல்ல என்று தான் அவர்கள் வாதாடுவார்கள். இதனை அரசுக்கு எடுத்துக்கூறும் ஆலோசகர்கள் இல்லையா? அரசியல் வாதிகள் அரசியல் மெய்ஞ்ஞானிகளாகவும் அரசியல் மேதைகளாகவும் மாறும் வரை இந்த் அவலநிலை நீடிக்கத் தான் செய்யும். இது இந்நாட்டின் ஒரு சாபக்கேடு. மாக்களுக்கு இல்லாத வரப்பிரசாதமாக பேச்சை மாந்தர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பேச்சு என்ற பெரும் கொடையை சுயநலமின்றி, மானிட மேன்மைக்கும் ஒற்றுமைக்கும் நன்மைக்கும் பிரயோசனப்படுத்தமுடியாமல் இருப்பது விந்தையே. "பேச்சுவார்த்தை" என்ற ஜனநாயகப் பண்பு அருகிவிட்டது. பேச்சுவார்ததை தொடங்க முன்பே பகமையாக மாறும் நிலை ஒருவருக்கொருவர் மீது நம்பிக்கை இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. புரிந்துணர்வுடன் பேச்சுவார்த்தைத் தொடர்வது ஒரு கலை. இக்கலையை வளர்ப்பதற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை , தப் பெண்ணம் ஏற்பட்டுவிட்டால் அதை உடனே விளக்கி களைந்தெறியும் சூக்குமம் போன்ற மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட பண்புகள் கட்டாயமாக ராஜதந்திரிகளிடம் இருக்க வேண்டும்
அதிகார மோகம், அகங்காரம், தன்மதிப்பு நிலைப்பாடு

-9-
இவை போன்ற குணங்கள் அத்துமீறிப் போவதால் சுயமரியாதை, மானம், வீரம் என்ற போர்வையில் இவை மீளுருவாக்கப்பட்டு, கட்டிறுக்கமான விடாக் கண்டர் மனப்பான்மையை தோற்றுவிக்கின்றது. இந்நிலையில் மானிடத்தின் நன்மை பின்வைக்கப்பட்டு ஒரு சுய திருப்தி நிலையை நாடும் தன்மை தோன்றுகிறது. இந்நிலை வன்முறைக்கு முதற்படியாகிறது. மானிடப்பண்பு, மென்மை, நெகிழச்சி, மன்னிக்கும் தன்மை, மறக்கும் தன்மை, போன்ற மகா குணங்கள அருகிப்போக அங்கு சுயதிருப்பியே மேலோங்குகிறது. மேற்கூறிய இக்குணங்கள் யாவும் கூட “பெண்மைக்குணங்கள்' என்று கீழிறங்கி மதிப்பிழக்கின்றன.
உலகில் தோன்றிய பெருமக்கள் யாவரிடமும் இப் "பெண்மைக்குணங்கள் மிகவும் துலாம்பரமாக இருந்த படியால் தான் அவர்கள் மாமனிதர்களாக மாறியிருக்கிறார்கள் அரசியலில் இவை இடம் பெற முடியவில்லை. ஏனெனில் அரசு வன்கண்மையான (Coercive) ஸ்தாபனமாகவே காலங்காலமாக இருந்து வந்தது. யுத்தங்கண்டு கலங்கி சாத்வீகனாக மாறிய அசோகர்கள் வரலாற்றில் ஒரு சிலரே. ஆகவே நிவேதினியின் வேண்டுகோள், அரசியல் வாதிகளே! உங்களது பதவி மேம்பாட்டுக்காகவும் மானங்காக்க வேண்டிய நிர்ப் பந்தத் தாலும் பொது மக்களைப் பகடைக்காய்கள் ஆக்காதீர்கள். போர்வீரர்கள், பொதுமக்கள் என்று பலர் இரத்தம் சிந்தி, கொன்று குவிக்கப்பட்டு அந்த முடி வில் தோன் றும் தீர் வுக் கும் , அவர் கள் கொல்லப்படுவதற்கும் அகதிகளாக்கப்படுவதற்கும் முன்பே அடையும் தீர்வுக்கும் வித்தியாசம் இருக்குமா என்பது கேள்விக்குறி. இதை உணர அரசியல் வாதிகள் மானிடர்களாக மாற வேண்டும். மானிட வரப்பிரசாதமாக இருக்கும் பேச்சை உபயோகிக்கும் திறமையும் திண்மையும் அவர்கள் பெற வேண்டும். ஆகவே அரசியல் வாதிகளே! புலிகளே! மானிடர்களாக மாறுங்கள் என்று நாம் கூவி அழைக்கிறோம்.

Page 6
நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்
ராஜம் கிருஷ்ணன்
நூற்றாண்டுகாலமாக பெண் தனக்குத் தூலமாகவும் சூக்குமமாகவும் விதிக்கப்பட்ட தளைகளைத்தகர்த்தெழும்புவது சாத்தியமல்லாத முயற்சியாகவே தீர்ந்துவிட்டது. அறிவு மலர்ச்சியும் குடும்பக்கடமையும் இவளுக்கு ஒன்றாக இசையாத வாழ்க்கையே விதிக்கப்பட்டுவிட்டது. இறுகப்போடப்பட்ட முடிச்சை அறுத்து விடுதலை பெறுவதை விட, முடிச்சை அதன் போக்கில் தளரச் செய்து அவிழ்த்து விடுதலைக்காற்றை நுகரமுற்படுவது ஓரளவுக்கு இயல்போடியைந்த செயலாகிறது.
பெண், மாண்ட கணவனுடன் சிதையில் எரிக்கப்பட்டாள், முண்டிதம் செய்யப்பட்டு கட்டாயத்துறவில் ஒடுக்கப்பட்டாள். இல்லையேல் அவள் பொதுமகளாக சீரழிக்கப்பட்டாள். இந்த இரண்டாம் நிலையில் அவளுக்கு அறிவுக் கண் சிறிது திறக்கப்பட்டதால் ஓர் ஆசுவாசம் கிடைத்தது. தன்துயரங்களை வெளியிட்டுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்பட்டன.
ஆனால் முதல் நிலைக்குடும்பக்கூடும் - இரண்டாம் நிலைப் பொதுமகள் அறிவுபெறும் வாய்ப்பும் ஒருநாளும் இசைந்துவிடாதபடி சமூகம் விழிப்புடன் இருந்தது. அவள் கற்புக்கரசி கணவரைச் சார்ந்து தான் மேன்மை பெறலாம். உடல் சார்ந்த போக உணர்வுகளை அவள் வெளிப்படுத்தும் போது அது கட்டிய கணவனைச்சார்ந்து தான் இருக்க வேண்டும். கடவுளையே நாயகனாக அவள் வரித்தாலும் அது அவளுக்கு இழுக்குத்தான். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழுது, தெய்வமாக்குபவள் அவள்.
ஆண் பக்தர்கள், இத்தகைய கற்புக் கோட்பாட்டுக்குள் புழுங்க வேண்டியதில்லை. ஒரே ஒரு நாயகனை

-11
புருசோத்தமனை, காதலனை எண்ணி, உருகி உருகிப் பக்தி செய்து பாடலாம். இறைவனுடன் கூடல் வேண்டி, தங்களைப் பெண்களாகப் பாவித்துக் கொண்டு, உணர்ச்சி வசப்பட்டுத் திரியலாம், தடையில்லை. பெண் அவ்வாறு உணர்ச்சி மிகுந்து பக்தியில் கனிந்து பாடும் போது, ஒருவகையில் தன் கூட்டுக்குள்ளிருந்தே புரட்சிக்குரல் கொடுப்பதாகப் கருதவேண்டியிருக்கிறது. இந்திய மொழிகள் அனைத்திலும் பக்தி இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய சான்றோர் பலர் தம் பாடல்களிலும் காவியங்களிலும் அழியாப் புகழ் பெற்றிருக்கின்றனர்.
தமிழில் சிவபக்தச் செல்வர்களான நாயன்மார்களும் வைணவப்பக்தர்களான ஆழ்வார்களும், இஸ்லாம் வளர்த்த இறையடியார்களும், கிறிஸ்தவம் சார்ந்த சான்றோர்களும், பக்தி இலக்கியங்களுக்கு உரியவர்களாகத் திகழ்கின்றனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் காரைக்கால் அம்மையார் இடம்பெற்றுள்ளார். தமிழில், பக்தி இலக்கியம் என்று வரும் போது, முதலாவதாகக் குறிப்பிடப்படும் பெண்பாற்புலவர் இவர். இவருடைய அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை, மூத்த திருப்பதிகங்கள், ஆகியவை பதினோராந்திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக, பெண்களுடைய வெளிப்பாடாக, ஓர் இலக்கியம் உருவாகும் போது, அது உடல்பரமான உணர்வுகளைச் சார்ந்தே முதிர்சிறது என்பது ஓரளவு உண்மையாக இருக்கிறது.
ஆனால் காரைக்காலம்மையாரின் பாடல்களை அப்படிச் சொல்வதற்கில்லை. "காரைக்கால்' என்ற ஊர்ப் பெயரைச் சேர்ந்தவளாகக் குறிக்கப் பெறும் இவ்வம்மையின் இயற்பெயர் புனிதவதி. இவர் ஆறாம் நூற்றாண்டுக்கு உரியவராகக் கருதப்படுகிறார். சமணம் பரவித் தென்னாட்டில் ஆதிக்கம் பெற்ற நிலையில், ஒரு புறம் வேதப்பிராமணச் செல்வாக்கும் வலிமை பெற்றிருந்த சூழலில், அதற்கு எதிராக , சைவம் என்ற பக்திக் கொள்கை மக்கள் செல்வாக்கைப் பெற்று வந்த காலம்
அது.

Page 7
- 12
சிலப்பதிகாரக் காப்பியச் செல்வியைப் போல், புனிதவதி, வணிக குலத்தில் தோன்றியவர். தனதத்தன் என்ற பெருவணிகனின் ஒரே செல்வியாக உதித்தவர். பொதுவாகப் பெரு வணிகர், சமணம் சார்ந்தவராக இருப்பதை இன்றளவும் காண்கிறோம்.
புனிதவதியார் எந்தப்பின்னணியில் தீவிர சிவபக்தச் செல்வியாக இளம்பருவதிலேயே உருவானார் என்பதெல்லாம் புரியவில்லை ஆனால் தன்னை ஒத்த தோழிகளுடன் விளையாடிய பருவத்திலேயே அவர் சிவபெருமானின் பல்வேறு நாமங்களைச் சொல்லியே ஆடினார் என்று கூறப்படுகின்றது.
புனிதவதி காரைக்காலில் பிறந்தவர், ஆனால் நாகபட்டினத்தைச் சார்ந்த பெருவணிகனின் மகன் பரம தத்தனுக்கு அவர் மணமுடிக்கப் பெற்றாலும், காரைக்காலை விட்டு அவர், மணாளனின் ஊருக்கு, 'புக்ககத்துக்குச் செல்லவில்லையாம்" ஒரே மகளாதலால், அவளை ஊரைவிட்டு அனுப்பாமல் அருகிலேயே வசதியானதோர் இல்லத்தில் மகளும் மருமகனும் வாழச்செய்கிறார் தந்தை.
உள்ளுரிலேயே மருமகனுக்கு ஒரு கடையும் அமைத்துக் கொடுத்ததாகக் கொள்ளலாம். புனிதவதியார் சிவபக்தி, அவளுடைய இல்வாழ்கையில் இருந்து விடுபடக் காரணமாகிறது. கணவருக்குக்கட்டுப்பட்ட, கற்புநெறி வழுவாத ஒரு பெண், கணவருக்கு எதிர்ப்பே காட்டுவது போல சிவபக்தியில் மனம் செலுத்தி, சிவனடியாரை வீட்டில் வரவேற்று விருந்தளித்துக் கடமையாற்றினார் என்ற முரண்பாடு வலிமை பெற்றிருக்கிறது.
பக்தியைப்பரப்பும் சமய இலக்கியங்களில், அடியார்களின் வரலாறுகளில் அற்புதங்கள் பலவும் நிகழ்ந்ததாகவே காணப்படுகின்றன. மக்கள் அவற்றை நம்பினார்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டை எட்டிப்பிடிக்கும், இந்த அறிவியல் சாதனங்களைப் பெற்ற நிலையிலும் அற்புதங்கள்

- 13
நம்பப்படுகின்றன.
குறிப்பிட்ட ஒரு சமயப்பிரிவுக்குள் மக்களை ஈர்ந்து நிலைநிறுத்த அற்புதங்கள் பயன்படுகின்றன. உலக வாழ்க்கையில் துன்பங்களும் சிக்கல்களும் மனித சமுதாயத்தை நெருக்கடிகளில் தள்ளிவிட்ட நிலையில் அற்புதங்கள் மக்கள் கவனங்களைத் திசைதிருப்பவல்லவையாக இருக்கின்றன.
அற்புதவரலாறு இது தான்.
புனிதவதியின் கணவன் பரமதத்தன், ஒருநாட் காலையில், தன் வாணிபத் தலத்திலிருந்து, இரண்டு மாங்கனிகளைத் தன் வீட்டுக்கு அனுப்பியிருந்தான். நண்பகலுக்குத்தான் உணவு உட்கொள்ளவரும் நேரத்தில், மனைவி தனக்கு அதைப்படைப்பாள் என்று எதிர்பார்த்தான்.
கணவன் உணவு கொள்ள வருமுன், ஒரு சிவனடியார் புனிதவதியின் வீட்டுக்குவந்தார். புனிதவதி உடனே அவரை வரவேற்று உபசரித்து, அமுதுபடைத்தாள். அந்தநேரத்தில் அவள் சோறுமட்டும் சமைத்திருந்தாள். , எனவே அந்தச் சோற்றுடன் கணவன்அனுப்பியிருந்த ஒரு மாங்கனியையும் அவருக்குப் படைத்தாள். சிவனடியார் பசியைப்போக்கி விட்டார்.
நண்பகலில் கணவன் உணவு உட்கொள்ள வந்தான். எஞ்சியிருந்த மாங்கனியுடன் புனிதவதி கணவனுக்கு அமுது படைத்தாள். மாங்கனி அதிகச்சுவையாக இருக்கிறது. இன்னுமொரு பழத்தையும் போடு என்றான் கணவன். இந்த இடத்தில், சிவனடியாருக்குப்படைத்த உண்மையை அவள் கணவனிடம் தெரிவித்திருக்கலாம். கணவன் அதை ஆமோதிக்கமாட்டான் என்ற அச்சம் இவளை அலைக் களிப்பானேன்? ஒருகால் அவள் சமணம் சாார்ந்தவனோ? இல்லையேல் எந்த ஒரு சிறு காரியமும் கணவன் சொற் கேளாமல் இவள் செய்யலாகாது என்ற உறுத்தலோ?

Page 8
- 14
மனைவி கணவனின் அனுமதியில்லாமல் சிவனடியாருக்கு உணவு படைத்து தண்டனைக்குரிய குற்றமோ? பேதை நடு நடுங்கிப்போனாள். எனவே, அஞ்சிய புனிதவதி, சமையலறையில் இருந்தபடியே, சிவனைத் தொழுது இறைஞ்சினாள். அவள் கையில் மாங்கனி கிடைத்தது. அதைக் கொண்டு வந்து கணவனுக்குப் பரிமாறினாள். கணவன் அதை உண்டான். அத்துடன் பிரச்சினை தீர்ந்துவிடவேண்டுமே? தீரவில்லை.
இரண்டும் ஒரே மாங்ககனிகள் தாமே? இது மட்டும் எப்படி இவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கிறது. நான் அனுப்பிய கனியா இது? என்று கேட்டுவிட்டான். இளம் மனைவி நடுநடுங்கி உண்மையைக் கூறி விட்டாள்.
அவனால் நம்பமுடியவில்லை. ஆச்சரியப்பட்டுவிட்டு "அப்படியா? நீ இப்போது அது போல் இன்னொரு பழம் வரவழை பார்க்கிறேன!" என்றான். அவள் கண்ணிர்மல்க, சிவனைத் தொழுது வேண்டினாள். ஆச்சரியத்தால் அவள் கையில் ஒரு கனி வந்தது. அதை அவன் கையில் கொடுத்தாள். ஆனால். அவன் கையில் விழுமுன் அது மறைந்து போயிற்று!
முதலிலேயே, சிவனடி யாருக்குக் கணவன் உத்தரவில்லாமல் உணவு படைத்ததன் தண்டனை போல் அவன் கடிந்து கொண்டான் என்று கதை" வரவில்லை. ஆனால் 'குற்றமோ' என்று அவள் உண்மை மறைத்து, தெய்வத்தின் அருள் வேண்டினான் என்று அற்புதம் நுழைக்கப்பெறுகிறது. சிவனை நாடி அவள் குடும்ப வாழ்வை விட்டுச்சென்றாள் என்றால், கற்புடைய பெண்ணுக்கு அது இழுக்காகிறது. மேலும் இவளை முன்னோடியாகக் கொண்டு, கணவனிடம் துன்புறும் பெண்கள் சிவனே தஞ்சம் என்று புறப்பட்டால், சிவபக்தியும் கூட பழுதுபட்டுவிடுமே? எனவே அற்புதம் நுழைக்கப்படுகிறது.

-15
கணவன், "ஓ, இவள் சாதாரணப் பெண் அல்ல இவள் தேவதையோ, யக்ஷணியோ! யரோ!” என்று அஞ்சினான். அதுமட்டுமன்று. அப்படியே வீட்டைவிட்டு நழுவி, கடலில் கலம் ஏறிச் சென்று வேறு ஒரு கரையில் இறங்கி, பாண்டி நாட்டுத்தலைநகர். மதுரைக்குச் சென்று புதிய வாணிபம் தொடங்கினான் என்று வரலாறு கூறுகிறது.
கணவன் அகன்றபின் ஒன்றும் புரியாத புனிதவதி, வீட்டினுள் ஒடுங்கிச் சிவபெருமானைத் தொழுதவளாய் நாட்களைக்கழித்தாள். அப்போது, மதுரைக்கென்று வந்த வணிகர் கூட்டத்தினர் வாயிலாகச் செய்திகள் அவளை எட்டின, பரமதத்தன் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தைக்கு அவள் நினைவாகப் புனிதவதி' என்று பெயரிட்டிருக்கிறான். கணவன் வெறுத்தாலும், மனைவி அவன் நிழலை விட்டு ஒதுங்கலாமா? எனவே அவளைக் கணவனிடம் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அந்தக் கணவன் அவளைத் தன் மனைவியாக, தனக்கு அடங்கவேண்டியவளாகக் கருதவில்லை. தன் மனைவியுடனும், மகளுடனும் அவளுடைய அடிகளில் பணிந்து ஆசிசுற வேண்டினான். புனிதவதி என்ன செய்வாள்? சிவபக்தி அவளுக்கு உலகியல் வாழ்க்கை இல்லை என்று நிர்ணயித்துவிட்டது. -
இந்நிலையில், அவள் சிவனைத்தொழுது, பரமதத்தனுக்கு உரிமையான அவ்வுடலை இளமையை, அழகிய உருவைத் துறந்து, சிவனின் பக்திக்குகந்த பேயுரு தனக்கு வேண்டும் என்று இறைஞ்சினாள் என்றும், அனைவரும் கண்டு நிற்கையிலேயே அவள் பேயுருவானாள் என்றும் கூறப்படுகிறது. பூமியில் ஒராடவருக்குத்திருமண விதிப்படி உரிமையான பிறகு அந்தப் பெண் வேறெரு ஆடவனுக்குக் தன் உடலை உரிமையாக்க முடியாது என்ற கற்பியல் மிக அழுத்தமாக இந்தவரலாற்றில் அறிவுறுத்தப்படுகிறது.

Page 9
-16
இதே போல் தமிழ் மூதாட்டி ஒளவை பற்றிய வரலாற்றிலும், ஒளவை தனக்கு மண்ணுலகமான குடும்ப வாழ்வு வேண்டாம் என்று, முதுமையைத் தெய்வவரமாகக் கேட்டுப் பெற்றாள் என்று கூறப்படுகிறது.
ஓராண், மனைவி மக்களுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு - ஆன்மீக ஏற்றம் பெறமுடியும். அவன் குடும்பம் துறந்து கானகமேகித்தவநெறியில் நின்றாலும் அவன் அழகும் இளமையும் அதற்குத்தடையில்லை. ஆனால் பெண்ணுக்கு ஆன்மீக- துறவு வாழ்வே அந்நியமானது, இயல்புக்கு மாறானது எனவே அற்புதமாகவோ எப்படியோ அவள் தன் இளமை மேனி, நலம் இரண்டுக்கும் அவள் தானே உரியவளாக இருக்க முடியாது. இவள் பேயுருவாகவே, தலையால் நகர்ந்து திருக்கயிலையை அடைந்தாள் என்றும், இறைவன் இவளை "அம்மையே " என்றழைத்து அருளினாள் என்றும் வரலாறு அறிவுக்கு ஒப்பாத அற்புதமாகவே விரிகிறது. -
இவருடைய பாடல்கள் அற்புதத் திருவந்தாதி இரட்டைமணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்என்பவை இவற்றில் யாக்கை விடுத்து, சுடுகாட்டில் நடமிடும் சிவனின் பேய்க்கணங்களில் ஒன்றாகிக் களிப்பதான ஓர் இலட்சிய முனைப்பும், அந்த வெற்றியும். தவிர வேறு உலகியல் சிந்தனைகளோ, வாழ்க்கை பற்றிய குறிப்போ இல்லை. ஒரு சாதாரணமான பெண், வெளி உலகம் தெரியாத கற்புடைய மனைவி, பக்தி உணர்வால் மட்டுமே மொழியறிவிலும் இலக்கிய அறிவிலும் இப்பாடல்களைப் படைத்தார் என்பதும் நூற்றுக்கு நூறாக ஒப்புவதற்கில்லை. மொழிப்பயிற்சி, புலமை சிவனடியார் சங்கமம், ஆன்மீகக்கருத்துக்களின் பரிசயம் போன்றவை முற்றிலுமாக வரலாற்றில் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் வெளிப்பாட்டில், குடும்பம், கணவன், மக்கள் சமையல் என்ற அன்றாட வாழ்வின் பிரதிபலிப்புத்தான் முதன்மை பெறுவது இயல்பாக இருந்து வந்திருக்கிறது. ஆண்டாள், அக்கமாதேவி, மீராபாய் ஆகியோரின் பாடல்களில்,

- 17
பெண்களுக்கே உரிய இந்த இயல்புதான் இறைவனின் மீதான ஆறாக்காதலாக, வெளிப்பட்டிருக்கிறன.
வேதப்பாடல்களைப் பார்த்தாலும், பெண்ரு ஷிகாலோகமுத்திரை, “எத்தனை காலம் தான் தவம் புரியும் முனி கணவனுக்குத் தொண்டாற்றி எனது இளமை போய் முதுமை வந்தெய்தியது கணவன்மார்களே உங்கள் சந்ததிக்காவேணும் தவநிலையை மீறி மனைவியை அணுகுங்கள்” என்ற தவிப்பாகத்தான் வெளிப்படுகின்றது.
காரைக்காலம்மை, பேயுருவையும், திருவாலங்காட்டுச் சூழலையும் உயிர்த்துடிப்புடன் சித்திரிக்கும் திறன் பெற்றிருக்கிறார். அது அழகியலைக்காட்டிலும், ஒரு வித அச்சமூட்டும்உலகேமாயம் என்ற கொள்கையில் அழிவில் ஆனந்தம் காணும் இறை தத்துவத்தைக் குறிப்பாக்குகிறது. காரைக்காலம்மை, கடல்கடந்த கிழக்கு நாடுகளில் சைவம் சென்றபிரதேங்களில் தெய்வத்திற்குரிய போற்றுதலுடன் வழிபடப்படுகிறாள். இவர் வரலாறும், பதிகங்களும், இயல்புக்கு ஒட்டாத அற்புங்களாகவே விரிந்திருக்கின்றன எனலாம். பக்தி பரவசமாகிய உணர்ச்சிப்பெருக்கு அக்காலத்தில் பெண்ணின் விடுதலைக்குரல் என்றே சொல்லலாம்.
ஆனால் காரைக்காலம்மையின் வரலாறு, அவருடைய பாடல்களில் ஒரு பெண்ணுக்கே உரிய அநுபவ உணர்ச்சி களாகப் பிரதிபலிக்கவில்லை. எழுத்துப்படிப்பும் ஆன்மீக ஞானமும் நான்கு சுவர்களுக்கள், கணவனுக்கு அஞ்சி உண்மை மறைத்து, அற்புதத்தில் உயிர்த்த பெண்ணுக்கு எப்படிக் கூடியது? எவ்வாறாயினும், அற்புதப்பதிகம், மூத்தபதிகம் என்ற சிறப்பைப் பெற்றிருப்பதும் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழில், இத்தகைய ஞானச்செல்வரின் உண்மை வரலாறுகள், சமய அற்புதப் போர்வைக்குள் உருத்தெரியாமலே

Page 10
-18
அழுத்தப்பட்டுவிட்டது ஒரு வகையில் துர்ப்பாக்கியம் தான்.
III
ஆண்டாள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி. கோதை நாச்சியார்.
பூமாலை மட்டுமின்றி பாமாலையும் புனைந்து கொடுத்த திருமகள் இந்தப் பெருமகள் மண்ணில் உலாவிய காலம் எட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலப்பகுதி என்று வரலாற்றறிஞர் கணிக்கின்றனர். வடநாட்டிலே உதித்த மீரா எட்டு நூற்றாண்டுகள் பிற்பட்டவர். மீரா அரச குடும்பத்தில் பிறந்து, அரசகுடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு கண்ணனையே நாயகனாகக் கருதி, தன்னை அவனுக்கு ஆட்படுத்தியவள். அதன் காரணமாக அவள் அடைந்த துன்பங்கள் அனைத்தையும், கண்ணனின் பால் ஆழ்ந்த காதலாக்கிக் கொண்டவர். அந்த வேதனைகளும் தவிப்புக்களும், விடுதலை பெற்றுப் பேரானந்ததில் இலயிக்கத்துடிக்கும் ஆன்மாவின் தவிப்பாகப் பாடல்களில் பிரதிபலிக்கின்றன.
ஆனால், ஆண்டாளின் பிறப்பே, சீதை எனும் காவிய நாயகியின் பிறப்பபைப் போன்ற மருமமாக இருக்கிறது. சீதை காவிய நாயகி. எனவே ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவிஷயம் என்று விட்டுவிடலாம். ஆனால் இந்தக் கோதையோ, திருப்பாவைமுப்பது பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் அருளிச் செய்த பெருமாட்டி. இவள் மண்ணிலே உலவி, அக்கால வாழ்வைத்தன் பாசுரங்களில் பிரதிபலிக்கச் செய்தவள். கண்ணனையே எண்ணி மறுகித் தன் உணர்வுகளை அழகுதமிழில் பாசுரங்களாக வடித்த இவள் , ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த உயிரும் உடலுமான பெண்தான்.
ஆனால், இவள் வரலாறோ, புராணமரபுகளில் புதைந்து

-19
போயிருக்கின்றது என்றால் தவறில்லை. கட்டுக்கதைகளைப் போல் விரிக்கப்பட்டிருக்கின்றது. இப்பெண்- இறைவனின் திருமார்பில் உறையும் பிராட்டியின் அம்சமாகத் திருவவதாரம் செய்தவள் என்றும், துளசிச் செடிகளுக்கு நடுவே கிடந்தாள் என்றும் திருவில்லிபுரத்துரர் கோயிலில் உறையும் பெருமாளுக்கு மலர்களும் மாலைகளும் கொண்டு செல்லும் பணியைச் செய்து வந்த விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வார் இந்த மகவைக் கண்டெடுத்துப் புதல்வியாக வளர்த்தார் என்று சொல்லப்படுகிறது. இவளைக் கண்டெடுத்த நாளையே கணக்கிட்டு, ஆடிப்பூரம் இவள் திருஅவதார நாளென்றும் கொண்டாடப்படுகின்றது.
ஒரு பெண் மகவு , தாயானால் அநாதையாக விடப்படவேண்டுமென்றால், தந்தை என்று முறையாகச் சொல்லிக் கொள்ளத்திருமணம் இல்லாத நிலையில் ஒருத்திக்குப் பிறந்திருக்க வேண்டும். இல்லையேல் அவள் கணவன் என்ற ஒருவன் இருந்தும், அந்தக்கூட்டுக்கு வெளியே வெறொருவன் உஜவால் பெற்ற மகவாக இருந்திருக்க வேண்டும். எவ்வாறெனினும், அந்தத்தாய்-மகள் தொடர்பு, சமுதாயம் ஒப்புக்கொள்ளாதநிலை என்பது வெளிப்படை. இந்த உண்மை திருவவதாரம் என்ற மருமத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாளின் வரலாற்றில் முரண்பாடாக விளங்கும் கூறுகளில் முக்கியமானவை, அந்தச் சமுதாயம், அவர் பாசுரங்களில் காணப்படும் அதீதமான காதற்சுவையும் தாம்.
விஷ்ணுசித்தர்,நந்தவனத்தில் பூக்கொய்து, எம்பெருமானுக்கு மாலைகள் புனைந்தளிக்கும் திருப்பணி செய்பவர். அந்தணர் என்றும் தெரியவருகிறது. இவர் துளசிவனத்தில் கிடந்த குழந்தையைக் கொண்டு வந்து வளர்க்கிறார். இந்த வளர்ப்பில் தாய் யாரும் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் கண்ணனின் லீலா விநோதங்களை அக் குழந்தைக்குக்கூறி வந்தார். அவற்றைச் செவியுற்று, அக்குழந்தை சிறுமி பருவத்திலேயே கண்ணனைத்தான் நாயகனாக வரித்து விட்டாள்.

Page 11
-20
அந்தண சமுதாயத்தில், பூப்படையுமுன் திருமணம் செய்து கொடுத்து விடும் மரபு உண்டு. நாச்சியார் திருமொழியில் வரும் விவரங்களனைத்தும் மிக நுட்பமாக, உடல்சார்ந்த விகரதாபத்தைப் பல்வேறு கோணங்களில் மனமுருக்கும் சொற்களால் உணர்த்துகின்றன. அவளுடைய தேர்ந்த அறிவும் மன உணர்வுகளை வெளியிடும் திறமும், அவளை இறுக்கமுள்ள ஓர் அந்தண சமுதாயக் குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்ணாகக் காட்டவில்லை. அழகுக்கலைகள் அனைத்தையும் கற்க உரிமை கொண்ட ஒரு குடும்பச் சூழலில், பக்குவமும் பழக்கமும் பெற்ற திருமகளாகவே அவளை அந்தப் பாசுரங்கள் காட்டிக் கொடுக்கின்றன. மொழியும், பாவனைகளும் அவளை அருங்கலைச் செல்வியாகவே அடையாளம் காட்டுகின்றன. இறைவனுக்குத் தொடுத்து வைத்த மாலைகளைத் தான் அணிந்துகொண்டு கண்ணாடியில் அழகுபார்த்ததாக வரும் செய்தியே, ஒழுக்கமுள்ள குடும்பச்சூழலில் ஏழைப்பூக்கட்டும் அந்தணர் வீட்டுப் பெண்ணுக்கு உகந்ததாக இல்லை.
நாச்சியார் திருமொழிப்பாசுரங்கள், தமிழ் இலக்கிய மரபுகளை நன்கு பயின்றுணர்ந்த ஓர் அருங்கலைஞர் யாத்தவையே அன்றி, பன்னிரண்டு வயதில் கண்ணனையே மணம் செய்து கொள்ள விரும்பிய ஒரு பெண் பாடியதென்று கூறமுடியவில்லை. இவளுடைய தாபங்கள் "மானுடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே!" என்ற வரியில் ஓர் அழுத்த நிலையின் உச்சத்தில் வெடித்ததுக்கொட்டும் உணர்வுகளாகவே வெளியாகின்றன.
பெண்ணாகப்பிறந்த வாழ்வு பெற்றதாயில்லாத நிலையில், பேரழகும் கவித்திறனும் உள்ள ஒருத்திக்கு, சுகந்திரமாக வாய்த்திருக்க முடியாது. அக்கமகாதேவியை கொளகிகமன்னன் விரும்பி, மணம் புரிய நிர்ப்பந்தித்தான். நிபந்தனைக்களுக்குட்பட்டு, அவளை அரண்மனைக்குக் கொண்டுவந்தான். ஆனால் , அவளுடைய சிவபக்தியை அவனால் ஒப்பமுடியவில்லை.

-21
அவள் உடலின் மீது மட்டும் அவன் நோக்கு மிகுந்திருந்தது. அக்கமாதேவி அக்கூட்டை விட்டு வெளியேறும் உச்சக்கட்டம் வந்தது. அதே போல், மீராபாய் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு அரசியாக அந்தப்புரத்தில் வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அவள் பக்திக்கு அது தடையாகவே இருந்தது. காரைக்கால் அம்மையின் வரலாறும் இப்படிக்கு குடும்ப முரண்பாட்டில் தான் தொடங்குகிறது.
ஆனால் கோதையின் வரலாற்றில் , குடும்பம் என்ற தடை அழுத்தத்தைக் கொடுக்குமளவுக்கு காணப்படவில்லை. அவள் சூடிக்கொடுத்தததைக் கடவுளே ஏற்றுக்கொண்டார் என்றும், பெருமாள் கனவில் வந்து, அற்புதமாக, அந்தச் சமுதாயமே அவளைப் போற்றி வழிபடச் செய்ததென்றும் காண்கிறோம்.
இந்த நிலையில், ஒரு பதினாறு வயசுப் பெண், தான் இறைவனோடு ஒன்றிவிடுவதற்கு முன்பு, தன்னை ஆயர்குலச்சிறுமியாக நினைத்துக் கொண்டு நோன்பிருந்தும், வழிபட்டதும், உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என்பதை விட, கூட்டை உடைத்துக் கொண்டு வெளிச் செல்ல முடியாத தொரு அழுத்தத்திலும் வேதனையிலும் கற்பனையின் பாவனையிலும் மலர்ந்த உயிர்ச்சொல்லோவியங்கள் என்றே கருதப்பட வேண்டும்.
கண்களில் காணும் பொருட்களில் எல்லாம், காட்சிகளில் எல்லாம், அவள் தன் விரக வேதனையை ஏற்றிப்புலம்புகிறாள். பெண் போகத்துக்குரிய உடலுறுப்புக்களையே குறிப்பிட்டுப் பாடப்படும் இப்பாடல்கள் நிச்சயமாக, போகம் என்ற எல்லைக்குள் எட்டிப் பார்க்கவும் வாய்ப்பில்லாத ஒருகுலத்தில், ஒரு குடும்பச்சூழலில் வளர்ந்த சிறுமியின் பாவனைக்குரியவை என்று கொள்வதற்கில்லை.

Page 12
-22
“பெண்ணின் வருத்தமறியாத பெருமானரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய
gifGig 1"
என்றும்,
நெடுமாறுதி வருகின்ற குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே" என்றும் விரகவேதனையின் உச்சத்தில் வெளிப்படும் சொற்களை, பதினைந்து பதினாறு வயதுக்கற்புடைய மரபுள்ள குடும்பச்சூழலில் வளர்ந்த பெண்ணுக்குரியதாகக் கொள்ள முடியாது.
வளர்ப்புத்தந்தையிடம் கண்ணனின் பெருமைகளை, திருமால்முடிகொண்ட தல மகிமைகளைச் செவியுற்றதனால் மட்டும் தோன்றிவிட்ட கிளர்ச்சி என்று கொள்வது கடினமாக இருக்கிறது. சிலப்பதிகார காப்பியத்தில், கண்ணகி தன் ஆற்றாமை உச்சத்தில், தன் மார்பகத்தைக்கொய்து, மதுரை நகர் பற்றி எ ரிய விட் டெறிந்தாள் என்று வர்ணிக்கப்படுகின்றது. பெண்போகத்ததுக்குரிய அவ்வுறுப்பு பிரிவில் தீயாகவும் உடலில் குளிர்ச்சியாகவும் அவர்களுக்கு இன்பதுன்பங்களைக் தருவதாம்! இந்த உறுப்பு, பெற்ற சேய்க்கு அமுதூட்டும் தெய்வீகத்தன்மை பொருந்தியதாகக் கருதப்பட்ட நிலை மாறி, இது "கற்பு’ என்ற கொள்கையின் தீயைத் தாங்குவதாகவும் பேசப்படுகிறது. எனவே அந்தத்தீயில் அந்தச் செய்கை நினைவில் வரும்படி,
“உள்ளே உருகிநைவேனை உள்ளே இலளோ வென்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனை. கோவர்த்தனனைக்
கண்டக்கால், கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக்
கிழங்கோடும், அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து
என்னழலைத்தீர்வேனே!"
என்று பாடுகிறாள்.

-23
இப்படி ஒரு கற்பனை முதலில் ஓர் ஆணுக்குத்தோன்றியதா, அல்லது பெண்ணுக்கு உரியதாக இருக்குமோ இறுதியில், கோதை கோவிந்தன் வந்து தன்னை மணமுடித்தாற் போன்று கனவு காண்கிறாள். இந்தப் பாசுரங்கள், திருமணவிழாவின் அன்றைய சமுதாயச்சடங்குகள் அனைத்தையும் விரிக்கின்றன.
மதுரை மன்னன் பூரீவல்லபதேவனே, இவளைச் சிவிகையிலேற்றி, திருமணத்துக்குரிய மங்கள வைபவங்களுடனும், திருவரங்கத்துக்குத் தெய்வத்தின் சன்னிதிக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தான் என்றும், அவள் மணமகளாக, சர்வாலங்காரங்களுடன், வளர்ப்புத்தந்தை மற்றும் அடியவர் பெரியவர், புடைசூழ, திருவரங்கத்துப் பெருமானின் சன்னிதிக்கு வந்து, கருவறைக்குள் ஐக்கியமானாள் என்று வரலாறு கூறுகிறது. இது கதை போல் நன்றாக இருக்கிறது.
ஆனால் வரலாறு, இப்படியே இருந்திருக்குமோ என்பது ஐயத்துக்குரியது. கன்னடத்து ஞானச் செல்வி அக்கமாதேவியின் கவி வாசகங்களில் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் மிகத் தெளிவாய்ப் பிரதிபலிக்கின்றன என்றாலும், அந்தப்பெருமாட்டியின் வரலாற்றின் உண்மை காலப்போக்கில் இடம்பெற்றுவிட்ட அதீதங்கள் என்பவை ஆராயப்பெற்று வரலாறு, அறிவுக்கும் காலத்துக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது எனலாம். சமயம்-பக்தி என்று வரும் போது, அற்புதங்களும், மாற்றங்களும் வரலாற்று உண்மைகளை மறைத்துவிடுகின்றன என்பதை கன்னட மொழி ஆய்வாளர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அக்கமாதேவி பற்றி வரலாற்றில் பல ஆய்வாளர் பல கருத்துக்களைத் தெளிவாக்குகின்றனர். கெளசிகமன்னன் அவளை மணம்புரிந்து கொண்டானா, இல்லையா என்பதிலிருந்து, அவருடைய பெற்றோர் பெயர் வரையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

Page 13
-24
இலக்கியவரலாற்று அறிஞருக்கு, அவளை நாயகியாக வைத்து நவீனம் படைப்பதும் கூடச் சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் தமிழில், மிக அண்மைக்காலச்சான்றோர், கவிஞர் வரலாற்றிலும் கூட, அற்புதங்களே முதன்மை பெற்று, உண்மைகளைக் கண்டறியாத வண்ணம் "தெய்வீக முத்திரைகளில் முடக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டாளின் வரலாற்றைச் சுற்றியுள்ள தெய்வீக அற்புதப் போர்வையைச்சற்றே நீக்கி வரலாற்றுக்கண் கொண்டு பார்க்கலாம்.
பக்தி இலக்கியத்துக்கு வளமை சேர்த்த பெண் கவிஞர்களில் மிக அதிகமாகக் காதற்சுவையை போகம் என்ற உருவில் வியக்கத்தக்கவிதம் வெளியிட்டிருப்பவர் கோதை நாச்சியார் தாம். இதனால் தான் போலும் ஒரு சிலர், இப்பாடல்கள் ஒரு பெண்ணால் பாடப்பட்டவை அல்ல நாயகிபாவம் கொண்டு, பெரியாழ்வாரே (கோதையின் வளர்ப்புத்தந்தை) இப்பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார் என்றும் கருத்துரைக்கின்றனர்.
கோயில் திருப்பணி ஆடல் பாடல் உபசாரங்கள் செய்யும் பொது மகளிர் குலத்தில் வளர்ந்து ஓர் ஆடவனை முறைப்படி மணந்து வாழ முடியாத சூழலில், மன்னனுக்கும், எம்பிரானைப் பூசிக்க உரிமைபெற்ற மேற்குலத்தோருக்குமே உரியவள் என்ற செருக்கில், எம்பெருமானே உகந்த மணாளன், மானுடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துயரம் வெடிக்கப்புலம்பினாளோ? செல்வபோகங்களும், அரச ஆணையும் கட்டாயப்படுத்தப் பட்ட போது, அவளுடைய வேதனை அனுபவங்கள் இத்தகைய உணர்ச்சிப்பாடல்களாக வெளிவந்தனவோ? பலகாலம் சிறையிலிருந்த பித்தியாகி அற்புதமான பாவனைகளில் மூழ்கியதால் இத்தகைய அரும்பாசுரங்கள் உருவாயினவோ? உண்மை யாருக்குத் தெரியும்?
ஆனால் சமுதாயம் பெண்ணை அடக்கி ஒடுக்கிய ஆதிக்கத்தில் நிமிர்ந்தாலும், ஆண்டாளைத்திருஅவதாரம் செய்த பிராட்டியாக்கி, தெய்வமதிப்பையே ஏற்றுவித்திருக்கிறது

-25
அவப்பெயர் ஒட்டாத வகையில், வரலாறே அற்புதச்சித்திரிப்பாக மிளிர்ந்திருக்கிறது.
..111
கன்னடத்துச் சிவஞானப் பெண்கவிஞர் அக்கமாதேவி, காரைக்கலம்மைக்குப் பின் ஏறக்குறைய ஆறுநூற்றாண்டுகள் சென்றபின் வட கன்னடப் பகுதியில் இப்போதைய ஷிமோகாவுக்கருகில் உடுதாடி என்ற கிராமத்தில் தோன்றினார். வீரசைவ மரபில் தோன்றிய இவருடைய பெற்றோரே, சிவபக்தச் செல்வர்கள். இவர்கள் தம் அருஞ்செல்விக்கு, இளமையிலேயே அறிவுக் கல்விக்கான "சிட்சை"யும் ஞானப்பயிற்சிக்காக லிங்கதீட்சையும் ஒருங்கே அளித்தனர். அதே கிராமத்தில் கோயில் கொண்டிருந்த கென்னமல்லிகார்ச்சுனனையே இவர் இஷ்டதெய்வமாகக் கொண்டார். இவருடைய காலமும் காரைக்காலம்மையின் வாழ்காலம்போன்று, பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டு செல்வாக்குப் பெற்று வந்த சமாச ஆதிக்கத்தை ஒடுக்கும் முகமாக, வீரசைவ பக்தி இயக்கம் வேரூன்றிப் பரவிய காலமாக இருந்தது. பஸவண்ண அல்ஸ்பிரபு போன்ற ஞானிகள் வாழ்ந்தகாலம் இது.
இளமையிலேயயே சிவபக்தச் செல்வியாக விளங்கிய அக்கமாதேவி, திருமணப்பருவம் வந்த போது, இகஉலக வாழ்வு பற்றிய சிந்தனையே இல்லாதவராவே இருந்தார். உலகியல் வாழ்வுக்கப்பால், தம்மை கென்னமல்லிகார்ச்சுன சுவாமிக்கு அாப்பணித்தவராய், ஞான வழியிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
ஆனால், உரியபருவத்தில் பேரழகுடன் திகழ்ந்த இவருக்குத்தகுந்த வரனைத் தேடி மணமுடிக்க வேண்டும் என்று பெற்றோருக்கு கவலை இல்லாமல் இல்லை. எனினும் செல்வியை எந்த நிலையிலும் கட்டுப்படுத்தி அவளைத் துன்புறச்செய்யும் பெற்றோரும் இல்லை அவர்கள்.

Page 14
-26
இந்தத்தருணத்தில் எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது. வீதி உலா வந்த கெளசிகமன்னன், உடுதலடியைத்தன் இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். இந்தச்சிவமங்கையின் பேரழகினைக் கண்டு விட்டான். மையல் கொண்டான். தனக்கு மணம் பேச அவள் பெற்றோரிடம் காவலனை அனுப்பினான். பெற்றோர் திடுக்கிட்டனர். ஆனால், செல்வி கலங்கவில்லை மணம் பேசவந்த காவலரிடம், தான் தன்னைச் சிவபெருமானுக்கே உரித்தாக்கி விட்டதாகவும், அரசமாளிகையில் தனக்கு எந்தப்பிடிப்பும் கிடையாதென்றும் மறுத்துவிட்டாள்.
பெற்றோர் நடுங்கினர். கெளசிகன் சமணமதத்தினன். அவன் கடுங்கோபி, மகளை அனுப்பவில்லை என்றால், உமக்கு மரணம் என்றும் சொல்லலாமே? அக்கமாதேவி, அரசனுக்குச் சில நிபந்தனைகள் விதித்து, அரசமானிகைக்கு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்தாள்.
சிவபூசை, சிவனடியாாள் உபசாரம், குருவழிபாடு
தொண்டு.
இவள் தன் வாழ்வை இந்த நியமங்களுக்கு உட்படுத்துவாள் அரசன் மறுதளிக்கலாகாது. மன்னன் நிபந்தனைகளை ஏற்றான். மாளிகை சிவனடியார் திருக்கூட்டத்தால் நிறைந்தது அரசியோ, பூசை வழிபாட்டிலும் அமுது படைத்தலிலும் நாள் முழுவதும் செலவிட்டாள். மன்னன் நிபந்தனைகளை நிராகரித்து அவளை நெருங்கினான். சிறிதும் தயக்கமின்றி, தேவி அந்தப்பந்தத்தை அறுத்தாள். அரசமாளிகையின் போகங்கள் அணிபணிகள், ஆடைகள் யாவும் துறந்தாள்.
"எருமை நினைப்பதொன்று, தோல்வினைஞன்
நினைப்பதொன்று”. எனக்கு என் கென்னமல்லிகார்ச்சுனதேவன் ஏற்பானோ
என்ற தாபம் உனக்கோ, இந்த உடலில் காமம் கிளர்த்தி விட்டபசி
என்றும்

-27
“இகத்திலொரு கணவன் பரத்துக்கொரு நாயகனோ? உலகியலுக்கொப்ப ஒரு கணவன், ஆன்மீக நாயகன்
மற்றொருவனோ? என்கணவன் கென்ன மல்லிகார்ச்சுன தேவனே!
என்று உறுதி கொண்டு புறப்பட்டுவிட்டாள். பெற்றோரிடம் ஆசி பெற்றே அந்தப்பருவம் ததும்பும் இளம் பெண், தன் ஆடைகளையும் துறந்து நிர்வாணமாகப் பயணம் புறப்பட்டாளாம்.
இவருடைய வரலாற்றில், காரைக்காலம்மை, தம் இளமையைச் சிவனிடம் வேண்டி மாற்றிக்கொண்டு பேயுருவில் புறப்பட்டது போல் அற்புதம் நிகழவில்லை. சாத்தியமல்லாத அசாத்தியமே, சாத்தியமாக்கப்படும் திட உணர்வையும் நம்பிக்கையையும் தேவியின் அனுபவ உணர்வுகள் பிரதிபலிக்கும் கவி வாசகங்களில் காண்கிறோம்.
காடுமலைகள் கடந்து, கொடிய விலங்குகள், மூடர் மூர்க்கர், கள்வர் என்ற எதிராளிகளைச் சமாளித்து பசி, சோர்வு உறக்கம், களைப்பு என்ற உடல் உபாதைகளை வென் று, பூரீசைலத் த லத் தரில் குடி கொண் ட கென்னமல்லிகார்ச்கன தேவனின் தரிசனமே இறுதி இலட்சியம் என்று தனது கரிய அடர்ந்த கூந்தலால், மேனி முழுவதும் மூட விரித்து, இவள் நடந்தாளாம். இவளைத்துன்புறுத்த வந்தவருக்கு இவர் அறிவுறுத்திய வாசகம் இது:
அவிழ்ந்த கூந்தல், வாடிக்கருகிய முகம், மெலிந்து வற்றிய உடல், மெய் சோர்ந்து, உலகவாழ்வு ஒதுக்கி, குலம் கெட்டு,கென்னமல்லிகார்சுன தேவனைக்கூடிப் புறப்பட்ட பித்தி நான். என்னைத் தொடர்ந்து துன்புறுத்துவானேன் என் பிரிய சோதரரே!
உடுபுடவை துறந்து, நிர்வாணமானாலும்,

Page 15
-28
கருந்கந்தலை விரித்து உடலை மறைப்பதேன், உள்ளத்தில் உடலாசை உணர்வுகள் வைத்துப் புறத்தில் துறவென்று ஆடை துறந்தாயே!”
என்று கேலி செய்து, வம்புக்கிழுத்தவருக்கு மாதேவியின் பதிலும் பாடல்களில் பிரதிபலிக்கிறது.
மேனி வாடிக்கருகிப் போனாலும், மேவும் இளமை மினுமினுத்தாலும், என் உள்ளத்தின் உள்ளே தூய ஒளிபோதுமே
இந்த மேனி எப்படியானாலும் கென்னமல்லிகார்ச்சுன தேவருக்கே உரியது.
உள்ளம் பழுத்தாலன்றோ தோலின் நிறம் மாறும்! ஆசையுணர்வுகள் அடையாளம் காட்டினால்
துன்பமாகும் என்று அன்பினால் அங்கங்கள் கூந்தல் கொண்டு
மறைத்தேன் துன்புறுத்த வேண்டாம் அண்ணா! கென்னமல்லிகார்ச்சுன தேவரின் உள்ளத்தின் உள்ளே
சேர்ந்தவள் இவளே.
இந்தப் பாதையில்லாப் பெருவழியில், தேவி, மேற்கொண்ட ஆன்மீக இலட்சிய யாத்திரை அனுபவங்கள், தாப உணர்வுகள் போராட்டங்கள் யாவுமே கவி வாசகங்களாக, கன்னட இலக்கியத்தின் அருங்குவியலாக வாய்த்திருக்கின்றன.
கல்யாணம் என்ற தலத்தில், சமயகுரவர்கள் தங்கி மேன்மை மிகு உரைகளையும் வாசகங்களையும் உலகுக்களித்த மடத்தில், அக்கமாதேவியும் வருகிறார். பஸ் வண்ணர், அல்லமயிரபு ஆகிய சிவபக்த ஞானியரைக் கண்டு உரையாடும் அனுபவங்களைப் பெறுகிறாள். வ்ேவேறு கொள்கைக்காரரிடம்

-29-.
பேசியும் இவளுடைய அறிவும் ஞான சாதனையும் ஏற்றம் கண்டு மேன்மைகளைப் பெறுகின்றன.
"கல்யாணம் கயிலாயம் உள்ளும் கல்யாணம், வெளியும் கல்யாணம்”
என்று பரவசப்படுகிறாள்.
கல்யாணத்திலிருந்து, பூரீசைலம் செல்லும் பயணம் ஓர் அற்புதசாதனை என்றே கூறலாம்.
அன்பு முற்றிய உச்ச நிலையில் தாபத் தீ எரிக்கும் வேதனையில், கூடலை எண்ணி ஆறுதல் கொள்ளும் எல்லைக் கோட்டில், அவர் வாசகங்கள் அற்புதமான அனுபூதி அனுபவங்களை விரிக்கின்றன. ஆண்டாளைப் போன்று உடல் பிரமான போக உணர்வுகளாய்மட்டுமே வெளிப்படவில்லை,
காரைக்காலம்மை போன்று
"கொங்கை திரங்கி, நரம்பெழுந்து குண்டு கண்
வெண்பற்குழி வயிற்றுப் பதுகி சிவந்திரு பற்கள் நீண்டு பரகுயர்
நீள் கணைக்காலோர் பெண்போல் தங்கி அலறி உளறுகாட்டில்-தாழ்சடை ,
எட்டுத்திசையும் வீசி அங்கங்குளிர்ந்தலை ஆடும் எங்கள் அப்பன்
இடந்திருவாலங்காடே" என்று அச்சம், அவலம் என்ற இரு சுவைகளும் முதன்மைப்படுத்தப்படும் உலகியல் மாயக்கொள்கையாகவும் பிரதி பலிக்கவில்லை.
வாழ்வில், ஆன்மீக இலட்சியம் இரண்டு முனைகளையும் தம் அனுபவசாதனைகளாகப் பெண் என்ற உணர்வுகளோடு இணைக்கும் அநுபூதி அனுபவங்களாகவே இவரது கவிகள் வெளிப்படுகின்றன.

Page 16
-30
"மலையுச்சியில் வாழத்தெரிந்த உனக்கு வனவிலங்குகளிடம் அச்சமுண்டோ? கடற்கரையில் வசிக்கும் உனக்கு, கடலேற்ற இறக்கங்களைப்பற்றிய பீதி ஏன்? சந்தை இரைச்சலில் வதியும் உனக்கு, பேரிரைச்சலின் பாதிப்பு ஏது? உலகில் வாழப்பிறந்தபின், புழுதி க்கும் பூச் செண்டு க்கும் மணம் கு ைலயா அமைதிக்கும் பழகுவாய். 99
பசி எடுக்கும்போது இரந்துண்பேன்.
தாகமேடுக்கும்போது, கிணற்றிலும் குட்டையிலும் பருக
நீரிருக்கிறது, தூக்கம் வரும் போது பழைய கோயில்கள் எனக்கு
இளைப்பாறும் இடமாகும்.
வாழ்நாள் முழுவதும் என் உள்ளத்தினுள்ளே நீதுணையாக இருக்கும் போது, எனக் கென்னபயம்? எதுநேர்ந்தாலும் அச்சமில்லை.
"சருகுகளைத்தின்று வாழ்வேன், கத்தி முனையில்
தலை வைத்துப்படுப்பேன்.
வான் திறந்து பேய்மழை பொழிந்தால் நான் நீராடும்
மகிழ்வில் திளைப்பேன்.
பாறை பிளந்து என்மீது விழுந்தால், எனக்கு மலரணி
கிட்டியதாக மகிழ்வேன்.
என் தலை கொய்யப்பட்டால், ஓ, பிரபுவே
என் உயிரை உங்கள் காலடியில் சமர்ப்பிப்பேன்.
தம் வாழ்வின் இலட்சியத்தை எட்டிவிட்ட பேரானந்தத்தில் திளைக்கிறார், மாதேவி,
லிங்கமொன்று வைப்பாய், ஐக்யமென்றுரைப்பாய்.
லிங்கமொன்று வைப்பாய், (பற்று)விட்டதென்று
ரைப்பாய்
உண்டென்றுரைப்பாய், இல்லை என்றுரைப்பாய்.

-31
கென்னமல்லிகார்ச்சனலிங்க- ஐக்யமானபின், உரைப்பதற்கு ஏதுமில்லை.
தன்னுடைய உயர்ந்த இலட்சியத்துக்காக, சமுதாயத்தையும், அரச அதிகாரத்தையும், ஒரே சமயத்தில் எதிர்த்துநின்ற அக்கமாதேவி, வாழ்நாள் முழுவதையும் போராட்டத்தில் கழித்தாள். கன்னட மொழி இலக்கியத்துக்கு சிறப்பான வசன இலக்கியத்துக்கு வளமும் புகழும் சோத்தவர் மகாஞானியான கவி அக்கமாதேவி. கவிவசனங்கள், கிடைத் திருப்பவை முந் நூற்று நாற்பத்து இரண்டு. இவ்வசனங்களைத்தவிர, சிருஷ்டியின் வசனம், யோகாங்கத்ருவிதி, ஸ்வரவசனங்கள் என்று வழங்கப்பெறும் பதினேழு (கீதங்கள்) இசைப்பாடல்கள் ஆகியவையும் அக்கமா தேவியின் படைப்புக்களாகும். இவை அனைத்தும், பக்தி இலக்கியத்தில், இந்திய மொழிகளில் கூட்டை உடைத்துக்கொண்டு குரல் கொடுத்த சுவிச்செல்விகளில் பிக முக்கியமானசிறப்புடையவராக, அக்கமாதேவியை இனம் காட்டுகின்றன.

Page 17
பெண்களுக்கெதிரான வன்முறைகள்.
* சந்திரிகா சுப்பிரமணியன்
பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு விசயமாகும். இந்த விசயத்தை விளங்கிக் கொள்ளுமுன் வன்முறை என்பதன் முழு அர்த்தத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அகராதிகளின் படிபாதிக்கக்கூடிய மோசமான தாக்கம், காயம், உணர்வுகளின் பிாதிப்பு, இப்படி பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எனவே வன்முறை என்றவுடன் வெறும் உடல் தொடர்புடைய புறத்தாக்கம் என்று மட்டும் நினைக்காமல் அகத்தைப் பாதிக்கக்கூடிய நீண்டகால நிரந்தர மனக்காயங்களைத் தரக்கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களையும் மனதில் கொள்ள வேண்டும். ஆக, வன்முறைகள் உடலியல் ரீதியானவை உளவியல் ரீதியானவை என்று வகைப்படுத்தப்படும்.
உடலில் தாக்கங்கள், அடி தடி, மனைவியை அடிப்பது, மாமியார் கொடுமை, பலாத்காரம் என்ற கட்டாய உடலுறவுக்கு வற்புறுத்தல், பாலியல் துன்புறுத்தலாகிய சில்லறைச் சேட்டைகள், கற்பழிப்பு, போன்றவை அடிப்படையான வன்முறைகளாகக் கருதப்படுகின்றன. அத்தகைய பாதிப்புக்களின் சுவடுகள் உடலில் வடுக்களையும் மாறுதல்களையும் உருவாக்கக் கூடியன. அத்தோடு நில்லாமல் அவை மனதில் துயரத்தையும் உருவாக்கக்கூடியன.
* இவர் எக்ஸ்பிரஸ் நீயூஸ்பேப்பரில் இணைநூலாசிரியராகப் பணிபுரிகிறார்

-33
உளவியல் தாக்கங்கள் பெண்களை அவமரியாதை செய்து அவர்களைப் பற்றி அவதூறு பேசி அவர்களின் உணர்வுகளைப் பாதித்து மனதை பாதிக்கின்ற செயல்களாகும். அத்தகைய பாதிப்புகள் பிறகு உடலை வருத்தும் நோயாகவும் மாறி விடுகின்றன. ஆக உடலில் அல்லது உளவியல் எந்த ரீதியல் பெண்கள் துன்புறுத்தப்பட்டாலும் பெண்ணின் உடலும் மனமும் பாதிப்படைகின்றன.
ஆதிக்க உணர்வுகளின் மிகையான செல்வாக்கினால் இன்றைய உலகில் இத்தகைய கொடுமைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தகைய வன்முறைகளைப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுபவர்கள் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான். குறிப்பாக உளவியல் ரீதயான வன்முறைகள் பெண்கள் மீது பெண்களே அதிகமாக பிரயோகம் செய்கிறார்கள் என்று சொல்லலாம்.
அடையப்படவேண்டிய இலக்குகள் தெளிவாக இருந்தும் கூட பெண்கள் மேம்பாடு எங்கோ தடைப்பட்டுக் கொண்டு இருப்பது தெளிவாக இருக்கிறது. வழிகள் பல இருந்தும் கூட வாய்ப்புகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் கண்கூடு. இந்தக் தடைக்குக் காரணம் என்ன என்பதும் கேள்வியாகும். ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் சமுதாயத்தில் பெண்ணிய மேம்பாட்டுக்கென தனியான கவனம் செலுத்தவதுதென்பது சிக்கலானதே. ஆனால் எந்த ஒரு விசயத்திலும் அது பெண்களால் முடியாது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்கலாம் இல்லையா? அந்த அடிப்படையில் பெண்களின் வேலை வாய்ப்புகள் இரண்டாம் இடத்திற்கே நிர்ணயப்படுத்தப்படுகின்றன. கல்வி திறமை அநுபவம் அனைத் துமே பால் அடிப்படையில் பதவிகள் தீர்மானிகப்படுகின்ற காரணத்தினால் பெண்களுக்குச் சிறந்த நிலைகளை எட்டுவதற்குப் பயன்படாமல் போகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் தாண்டி முன்னுக்கு

Page 18
-34
வரக்கூடிய பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் அநேகமாகும். பணிப்பாகுபாடு காட்டிப் பெண்களை அச்சுறுத்தி உடல் ரீதியான தாக்கங்களை உண்டு பண்ணக்கூடிய ஆபத்துக்களைப் பெண்களின் மீது திணிக்கிறார்கள். பணியில் ஆணும் பெண்ணும் சரியாக சமமாக நடத்தப்படாமை பெண்கள் செய்யும் பணிகளில் குற்றம் கண்டுபிடித்தல் பெண்களின் நடத்தையைத் தூற்றுதல் ஊதியத்தில் சமமின்மை போன்ற பல தீமைகள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பபடுகின்றன. இவை அனைத்துமே பெண்களை மனவியல் ரீதியாகப் பாதிக்கின்றன. குறிப்பாக பெண்களை தரக்குறைவாக பேசும் கொடுமை பெரியளவு பாதிப்புக்கயை ஏற்படுத்துகின்றன.
Character ASSasination எனப்படும் ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் கேவலமான பணியைப் பெண்கள் மீது பெண்களே கட்டவிழ்த்து விடுகின்றனர். ஆண்களும் இத்தகைய கீழ்த்தரமான வேலையைச் செய்கின்றனர் என்றாலும் பெண்களே அதிகமாகச் செய்கின்றனர். கல்வி அது தரும் திறமைகள் அதனால் வரக்கூடிய பதவி இவை அனைத்தினாலும் கிடைக்கக்கூடிய சமூக அந்தஸ்து இவை பெண்களின் சாதனைகளாகும போது மற்றவர்கள் இவற்றைச் சாதிக்க முடியாத நிலைமைகளில் ஏற்படும் பொதுவான பொறாமையின் வெளிப்பாடே இத்தகைய தூற்றுதல் முயற்சிகளாகும். உடலியல் பாதிப்புகள் காலத்தால் மாறிவிடக்கூடியன. ஆனால் உளவியல் பாதிப்புக்கள் அப் படியல்ல. பல மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. நீண்ட காலமாக நிலைத்து வாழ்க்கையைப் பாதித்துவிடக்கூடியன. எனவே உளவியல் ரீதியான வணி முறை களையும் நாம் கருத் தரில் கொணடு பெண்களுக்கெதிரான வன்முறைகளை நாம் ஆராய வேண்டும்.
பெண்கள் காலம்காலமாகச் கலாசாரச் சின்னமாக கருதப்பட்டு வருவதால் தான் இந்தச் சிக்கல். Ошобот என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டியவள் இவ்வாறு தான் இருக்க வேண்டியவள் என்றெல்லாம் பல

-35
சம்பிரதாயங்களை நாம் காலம் காலமாக வகுத்து வைத்துக்கொண்டு வந்திருக்கிறோம். சமுதாய நவீனத்துவமும் கல்வி மற்றும் தொழில் வட்டங்களின் விஸ்தரிக்கப்பட்ட பரிமாணங்களும் பெண்களை கலாச்சார வட்டங்களை தாண்டத்துரண்டுகின்றன. ஆனால் அது நிச்சயமாக ஒழுக்கச் சீர்கேடு என்று சொல்ல முடியாது. இதை ஒவ்வொரு பெண்ணும் மனதில் கொள்ள வேண்டும். காலாசார வட்டங்களே இன்று வேறு பல புதிய முகங்களுடன் உலா வரும் கால கட்டத்தில் நாம் நிற்கிறோம். முன்பிருந்த பண்பாடுகளும் பழக்கங்களும் இன்று மாறி உள்ளன. ஒரு காலத்தில் மறுக்கப்பட்ட விசயங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ளன. எனவே பெண் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நாம் புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பெணிகளைப் பலாத்காரம் செய்வது அவளது வாழ்க்கையைப் பாதிக்கும் காரணியாக அமைகிறது. ஒரு பெண் பலாத்காரப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலையை அநுபவித்தாலே கூடப் போதும் அவள் வாழ்வு அத்தோடுமுடிவடைய வேண்டியது தான போன்ற உணர்வே இன்றும் நிலவுகிறது என்பது மிகவும் வேதனைக்குரிய விசயமாகும்.
பல மதங்களின் சம்பிரதாயங்கள் இனங்களின் சடங்குகள் இன்றும் தொடர்கின்றன. அவை பல சமயங்களில் பெண்களைத் துன்புறுத்துவதாகவே அமைகின்றன. இவ்வகையான இன மத கலாசாரச் சூழ்நிலைகளில் தான் பெண் இன்னும் வாழந்து கொண்டிருக்கிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனால் தான் மதரீதியான சம்பிரதாயங்கள் கலாசார ரீதியான பழக்கங்கள் ஆகியன தவிர குடும்ப பழக்கவழக்கங்களும் கூட பல சமயங்களில் வன்முறைகளைப் பெண்கள் மீது திணிக்கின்றன. உடலில் அல்லது உள்ளத்தில் காயம் இதனால் ஏற்படுமாயின் அது பெண்களைப் பெரிதும் பாதிக்கிறது என்பதே இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

Page 19
-36
பெண்களுக்கெதிரான வன்முறைகள் பெண்களை மட்டுமின்றி முழுக்குடும்பத்தையுமே பாதித்து விடக்கூடியன. குடும்ப தகராறுகள் அதனால் ஏற்படும் வன்முறைகள் போன்றவை முழுக்குடும்பத்தையுமே குறிப்பாகக் குழந்தைகளை மிகவும் பாதித்து விடக்கூடியன. எனவே குடும்ப முன்னேற்றமே தடைப்படும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்பதைப்பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து எப்படிப் போராடுவது என்று சிந்திப்பதற்கு முன்பாக இந்தப் பிரச்சினை உலகில் எப்படி அவதாரம் எடுத்துள்ளது என்று பார்ப்போம். 1992இல் யூகோஸ்லாவியாவில் 12000 ஆயிரம் பேர் வன்முறைகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள். 6 நிமிடத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இதில் 5 சதவீதமானோரே பொலிசில் முறையிடுகின்றனர். பாப்புவா நியூகினியில் 67.7 கிராமப்புறப் பெண்கள் வன்முறைக் குள்ளாகிறார்கள். கனடாவில் 4 பேருக்கு ஒரு பெண் வன்முறையை அனுபவிக்கிறாள். தாய்லாந்திலிருந்து சுமார் எட்டு முதல் பத்து ஆயிரம் பேர் விபசாரத்திற்காக கடத்தப்படுகிறார்கள். ஆபிரிக்காவில் பல மில்லியன் பெண்கள் பிறப்புறுப்பு சிதைக்கும் சடங்குகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் வரதட்சனைக் கொடுமை காரணமாக மரணங்களும் பெண் சிசுக்கொலையும் அதிகமாக காணப்படுகின்றன. கென்யாவில் 42 சதவீதமான பெண்கள் கணவனின் அடி உதைகளை வாங்க நேரிடுகிறது. இலங்கையிலும் இதே நிலைதான்.
ஆக, முழு உலகமுமே பெணிகளுக்கெதிரான வன்முறைகளை ஏதோ ஒரு ரூபத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சகித்துக்கொண்டிருக்கிறது. இதற் கெல்லாம் மூல காரணம் பற்றி ஆராய்ந்தால் அது அடிப்படையிலேயே பெண்களுக்கு சம உரிமை தரப்படாமல் உள்ள சமுதாய

-37
வரலாறு என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இன்று பல நடைமுறைச் சட்டங்கள் பெண்கள்.
பாதுகாப்புக்கென இருந்தாலும் கூட இவற்றையும் மீறி பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பலாத்காரம் போன்றவற்றுக்குக் கடுமையான தண்டனை முறைகளைப் பின்பற்ற வேண்டும். தண்டனை முறைகளை அமுல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை அகற்றப்பட வேண்டும். இவை சரியாக இல்லாத காரணத்தினால் தான் பெண்கள் தொடாபான முறையீடுகள் பொலிசுக்கு அறிவிக்கப்படாமலேயே மறைக்கப்படுகின்றன.
அதை விட முக்கியம் இத்தகைய வன்முறைகள் உலகுக்கு உணர்த்தப்பட வேண்டியது ஆகும். இது தொடர்பான சமூக விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். அதனால் சமூக அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும். பெண் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாடு முறைகள் பெண்களைப் பலப்படுத்த கூடிய அவர்களின் தொழில் பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுப்பதாக மாற்றப்பட வேண்டும். பெண்களிடையே தன்னம்பிக்கையையும் சுய நிர்ணயத்தையும் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பெண்கள் தொடர்பான புதிய புரிந்துணர்வையும் புதிய நோக்குகளையும் பரவலாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாகப் பெண்கள்பிரச்சினைகள் பற்றி பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ள வழிகளைத் திறந்து விட வேண்டும்.
இந்த முயற்சிகளுக்கு பெருந்துணையாக இருக்க கூடியவை பெண்கள் மேம்பாட்டுக்கு பாடுபடும் நிறுவனங்களும் வெகுஜனத் தொடர்பு ஊடகங்களுமே ஆகும். பெண்கள் தொடர்பான இயக்கங்கள் பெண்களை நம்பிக்கையூட்டும் பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தவும் பெண்கள் தொடர்பான புதிய

Page 20
-38
அணுகுமுறைகள் சார்ந்த கருத்துப்பரப்பலுக்கு வழி செய்யவும் முன் வரவேண்டும். அவர்களின் திட்டங்கள் செயல்பாடுகள் அறிவூட்டற் பணிகள் அனைத்துமே பெண்களைப் பற்றிய சரியான ஒரு புரிந்துணர்வை வெளிப்படுத்தக் கூடிய நோக்கத்தை மையமாக கொண்டே செயல் பட வேண்டும். இந்த முயற்சி முதலில் பெண்களிடையேயும் பின்னர் குடும்பங்களிடையேயும் அதன் பின் சமூகத்திலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் சுயபலத்தை அவர்கள் உணரச்செய்வதுடன் நில்லாது அந்தப் பலத்தின் உதவியால் அவர்கள் தமக்கு எதிராகப் பிரயோகிக்கப்படக்கூடிய வன்முறைகளை எதிர்த்து நிற்கக் கூடிய சக்தி பெற்று எப்படிச் செயல்படுவது என்பது பற்றி அறிவுறுத்தப்பட வேண்டும். அப்போது தான் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அளவில் குறைவதுடன் பெண்களும் புதிய பலத்துடன் செயல்பட முடியும் என்பது மிகச் சாத்தியமான ஒன்றாகும்.
வெகுஜன தொடர்பு ஊடகங்கள் பெண்கள் தொடர்பான சரியான புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் வெறும் பாலியல் படைப்பாக பிரதிபலிக்கப்படும் அவலம் நீக்கப்பட வேண்டும். 1957க்கும் 1990க்கும் இடையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி வன்முறைகளைத் தூண்டி விடுவதில் தொலைக்காட்சி ஆற்றும் பங்கு அது காட்டும் வன்முறைக் காட்சிகளின் அடிப்படையில் அதிக வீச்சுடன் மக்களை பாதிக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி காட்டும் மாதிரிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முன் மாதிரியாக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனைவியை அடிப்பது, பெண்களிடம் நடத்தும் சேட்டைகள், பெண்களை மரியாதைக்குறைவாக நடத்தல், போன்ற அம்சங்கள் பெண்களை இழிவான நிலைக்குத் தள்ளுவதற்கு காரணமாகி விடும் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. தொலைக்காட்சி தவிர ஏனைய தொடர்பு சாதனங்கள் அனைத்துமே கூடப் பெண்களை சரியாக

-39
உருவகப்படுத்தவில்லை என்பதில் தவறில்லை. குறிப்பாகத் திரைப்படங்களில் பெண் கள் பாலியல் மற்றும் வன்முறைக்காட்சிகளில் காட்டப்படும் விதம் பெண்களைத் தரம் தாழ்த்தி விடுகின்றது. அதன் பாதிப்பாக ஆண்கள் தங்களை ஏதோ உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் போலவும் பெண்கள் தம்காலின் கீழ் நசுக்கப்பட வேண்டியவர்கள் போலவும் நடந்துகொள்ளத் தலைப்படுகின்றனர்.
ஆண்கள் கம்பீரம், அறிவு, சாதனை, புகழ், வீரம், உரியவர்களாகவும் அறிவு மிகு விளம்பரங்களாகவும் பாத்திரங்களாகவும் காண்பிக்கப்படுகின்றனர். அதே சமயம் பெண்கள் அழகும் ஆண்களின் பக்கத்துணையாகவும் காண்பிக்கப்படுகின்றனர்.
ஆணின் அனைத்து நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ளும் ஒரு சுமை தாங்கி என்ற உணர்வை ஊட்ட முற்படும் நிலைமை மாறாத வரை பெண்ணினத்தை பிடித்துள்ள பெரும் சாபம் மாறாது. வெகு ஜனத்தொடர்பு ஊடகங்கள் இவ்வகை குறைவான மதிப்பீடுகளை பெண்கள் தொடர்பாக தருவதை தவிர்த்தால் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கம் குறையும். அதன் காரணமாக பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் வன்முறைப் பிரயோகங்களும் குறையும்.
ஆணும் பெண்ணும் சரிநிகர் என்ற சரியான கொள்கையை சரியான அளவு நமது ஊடகங்கள் பரப்பினால் போதும். சமுதாயம் பெண்களைப் பற்றி சரியான முறையில் புரிந்துகொள்ள உதவும். அடுத்த தலைமுறையாவது இந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றால் ஊடகங்கள் தமது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் தவிர பெண்கள் இயக்கங்களும் அரசு சாரா நிறுவனங்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்க்கும் நோக்குடைய இலக்குகளுடன் செயல்பட வேண்டும்.

Page 21
-40
அரசு சட்ட திட்டங்கள் கூட இந்த இலக்குகளை ஆதரிப்பதாக இருக்க வேண்டும் . பெண்கள் அமைப்புக்கள் அனைத்தும் ஒரு குடைக் கீழ் திரட்டப்பட்டு ஒரு தேசிய இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். அது பெண்களுக்கெதிரான வன்முறைகளை நீக்குவதற்கான முறைகளைச் சட்ட பூர்வமாகச் செயல்படுத்த முனைய வேண்டும்.
அது வரை பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடரும். தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பெண்ணெனப் பிறந்த மனித உயிரினம்
மேன்மை பெற. . . . . . .
பத்மா சோமகாந்தன்.
மனிதப்பிறப்பு உறுப்புக்களினாலேற்பட்ட வேறுபாட்டினால் ஆண், பெண் என்ற பகுப்பு ஒன்றை ஆதிநாள் தொட்டே கொண்டிருக்கிறது. பெண்ணின் உடம்பில் கருப்பையும் கருவைச் சுமந்து இன்னோர் உயிரின் பிறப்புக்கு அதாவது சிசு வளர்வதற்குத் தேவையான பால் சுரப்பிகளும் இயல்பாகவே பெண்ணுக்குரியனவாக இருக்கின்றன. பெண்ணென்ற உடலின் தோற்றம் பொறுப்பு மிக்கதும் சிறப்புப் பொருந்தியதும் சுமையைச் சுமப்பதாகவும் கொள்ளப்படுகிறது. எது எப்படியாயினும் ஆணும் பெண்ணும் இணைந்த இந்த மனித சமுதாயத்தில் தொகையிலும் வகையிலும் பெண்கள் ஐம்பதுக்கைம்பதான அளவைக் கொண்டுள்ளமையை அவதானிக்கலாம்
பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் இம் மானிட சமுதாயத்தில் ஆண் முன்னேற பெண் தங்குதடங்கலோடு பின்னடைந்து நிற்பதனால் சமூகம் வளர்ச்சியின் உச்சநிலையை எட்டமுடியாமல் தவிப்பதை முகங்கொள்ள வேண்டும். இந்நிலை தனிப்பட்ட ஒருவரின் பின்வாங்கல் அல்ல. இது ஒரு சமுதாயத்தின் பின்னடைவு. அவசரமாகவும் அவசியமாகவும் தடங்கல்களை தடைகளை வென்றெடுத்து ஒழுங்கான ஓட்டத்திற்கு வழிசமைக்கவேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரின் கடமையுமாகும். இதிலே பல சிக்கல்கள், முரண்பாடுகள், பிணைக்கப்பட்டு குமைந்துபோய் இறுகிக் கிடக்கின்றன. வெளிப்படையாக விரிப்பதாயின் பெண்ணின் அடிமைநிலை, பாலியல் வன்முறைகள், சமத்துவமின்மை, சமுதாயச் சம்பிரதாயக் கெடுபிடிகள், பெண்ணின் கவர்ச்சியை மோகிக்கும் போகநிலை,

Page 22
-42
உயர்நிலைக்கல்விக்கேற்ற வேலை வாய்ப்பின்மை இப்படிப் பல கோணங்களைச் சுட்டிக்காட்டலாம்.
எனவே, இவற்றை ஒழுங்காக்கி சீர்செய்வதற்கு இதற்கான காரணிகள், தடைகள், சிக்கல்களின் இறுக்கங்கள் முதலியவற்றைச் சற்றுக்கூர்மையாக உற்றுநோக்குதல் அவசியம்.
பெண்தோற்றம் கொண்ட மானிட உயிரின்ம் விலங்கு நிலையிலிருந்து அடிமைநிலைக்கு முன்னேறி கல்விகற்கும் விடியலுக்கு தன்னை ஆளாக்கிக் கொண்ட்து. கற்றலிலும் பாடத் தெரிவுகள் தையல், சங்கீதம், மனையியல், சித்திரம், கைவேலை, அதிகமான அளவு மெல்லியலாள் என்ற மனிதத்துவத்திற்குள்ளே திணிக்கப்பட்டது. உடல் கூற்றின் இயல்புத்தன்மையினால் பாரந்துக்கல், விறகுவெட்டல், உழுதல், தோட்டவேலை என்பன ஆண்களுக்கெனப் பதியப்பட்டன. மத்தியதரவர்க்க நிலையிலும் எழுத்துவேலை, "ரைப்பிங்' சுருக்கெழுத்து, ஆசிரியசேவை, தாதிவேலை போன்றன மென்மையும் இலகுவும் கருதிப் பெண்களையே சார்ந்தது. மேல் நிலை மட்டத்தொழில்களில் அதிகாரம், நிதி, நிர்வாக அந்தஸ்துக்கொண்ட பொறுப்புள்ள பதவிகளை-லிவு வசதிகள், பெண் கருவுறும்காலம், குழந்தைபிறப்பு இன்னெரு ஆணில் தங்கிவாழும் தன்மையினால் நீண்ட நேர வேலைப்பழுவை ஏற்கமுடியாமை, இவற்றையெல்லாம் முன்வைத்து ஆணினமே ஆகர்ஷித்துக் கொண்டது.
வழிவழிவந்த மரபுச் சிந்தனைகளின் தாக்கம் மிக ஆழமாகப் பதிந்துவிட்டது. வீட்டிலே தாய், தகப்பன், குழந்தை, கணவன் ஆகியோரைப் பராமரிக்கும் பொறுப்புக்களினால் கடும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கேவண்டி நேரிடும் போது தீர்க்கமான முடிவைத்திடமாக தீர்மானிக்க மாட்டார்கள், கூடிப்பணிபுரிவோரை உற்சாகப்படுத்தும் உந்துசக்தியாக அமைந்து உழைப்பின் உச்சக் கட்டத்தை பெற்றுக் கொள்ளமாட்டார்கள். அடக்கியொடுக்கப்பட்டு வாழ்ந்து

-43
பழகிய காரணத்தால் சுயாதினமாக முடிவெடுக்கத்தயங்குவர் என்று வசதிக்கேற்ற வகையில் பெண்களைப்பற்றித் தமது சிந்தனையை முடக்கிக் கொண்டனர். இத்தகைய எண்ணச் சிதறல்களினால் தான் சமுதாயமே முடக்குவாதத்தில்தடக்கி விழுகிறது என்ற சிந்தனை பலருக்கு பரிச்சயமாகவில்லை.
மரபு நிலைச் சிந்தனைகள் மனதில் உறைந்தன. பெண்ணென்றால் அழகான எதற்கும் வளைந்து கொடுக்கக்கூடிய தியாகம் செய்யக்கூடிய பாத்திரம். வீட்டைப்பராமரிப்பது, விருந்தினரை வரவேற்பது குழந்தை, கணவன் முதலியோருக்கு வகைவகையாய்ச் சுவையான உணவுகளை ஆக்கி படைப்பது, வீட்டை அலங்கரிப்பது, ஒழுங்குசெய்வது, உணவைப்பதப்படுத்தல், பாதுகாத்தல், சேமித்தல், கோலமிடுதல், பூத்தையல்தைத்தல், தன்னையும் அலங் கார பூஷி ைதயாக அலங்கரித்துக் கொள்ள ல் , சடங்குகளைநடாத்த உறுதுணையாயிருப்பது, விழாக்கள் பண்டிகைகளைவிமரிசையாக நடத்த உதவுவது, மங்கள நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி அமங்கலதிகழ்வுகளிலும் பிரதானம் பெறுவது , வழவழபிவந்த fb60L. முறை களைத் தவறாது கடைப்பிடிப்பது, இத்தனையும் பெண்களின் பொறுப்பாக அரங்கேற்றப்பட்டது. இச்சடங்குகளின் போதெல்லாம் கணவனுக்குத் துணையாக மனைவியே கடமை புரிவதனால் பெண்களும் பெருமையும் பூரிப்புக் கொண்டு மகிழ்ந்தனர்.
கல்வி கற்று சற்று விழிப்பேற்பட்ட பின்னர், முற்போக்குச் சிந்தனை படைத்த சில சமூகச்சிற்பிகள் கட்டிக்காட்டிய போது பெண்களின் தாழ்வுற்றசிக்கல் நிலையை உணர முற்பட்டனர். முற்றுமுழுதாகக் கற்றோர் அனைவருமே தமது இருப்பை உணர்ந்துகொண்டனரோ என்றால் அங்கேயும் பல கேள்விகள் கொக்கிகளாகக் குத்திட்டு நிற்கின்றன. இன்னும் ஓரளவு வசதியாகவும் வருவாயுடனும் சுமைகுறைந்து வாழ்பவர் தமக்கெல்லாம் என்ன குறை முந்திய நிலையிலிருந்தது தாம்

Page 23
-44
சற்று உயர்ந்துதானே வாழ்கிறோம் என்று திருப்திகொள்கின்றனர் ஏதோ பிறந்தோம், வாழ்கிறோம் இறப்போம் என்ற சோம்பலில் மூழ்கியவரும் சமாதானமாயுள்ளனர். மரபிலிருந்து நகருவதா? என அங்கலாய்ப்போரும் உளர். ஆண் முன்னிலைப்பட்ட சமூகமே இம் மரபுகளை ஏற்படுத்தியது என்ற உண்மை நிலையை உணருவோர் சிலர் மரபின் அழுத்தத்திலிருந்து முற்றுமுழுதாக விடுபடாவிடினும் மரபு அமுக்குகிறதே என்ற எண்ணத்தை உணரத்தலைப்பட வேண்டாமோ? பரம்பரை வழக்கங்கள், மூடநம்பிக்கைகள், இன்னும் பெண்களை விட்டுவிலகியபாடாக இல்லை.
இத்தகைய பிரச்சினைகள் பெண்களுக்குரியவைதானே அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என நாம் வாளாவிருக்க முடியாது. பெண்களின் பிரச்சினைகளாக இருந்தாலும் அது சமுதாயத்தின் பிரச்சினையே. இது சமுதாயத்தின் பள்ளம். இப்பள்ளம் நெருடலில்லாமல் நிரப்பப்பட்டால் தான் நாம் நிம்மதியாக நடைபோடலாம். தனியாக ஒருத்தியோ, ஒருவரே மாத்திரம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. ஒவ்வொருவர் எண்ணத்திலும் இப்பொறிதட்டிச் செயற்பாடாக நல்ல மாற்றங்கள் வெளிவர வேண்டும்.
பெண் கல்விகற்றுத் தொழில் பார்த்தால் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து, பெற்றுக்கொள்ளும் வருவாயால் சற்று சுயாதீனமாகிறாள். இதனால் மாத்திரம் அவள் பூரண வளர்நிலையை எய்திவிட்டாளென்றோ, சமூகம் மேல்நிலையை அடைந்துவிட்டதென்றோ கொள்ளமுடியாது. கல்வியின் பயன் தொழில் ஆற்றுதல் என்ற பரிமாணத்திலிருந்து அறிவு விரிவு என்ற நிலையை எய்தவேண்டும். பெண்ணினத்தின் அறிவுநிலை விரிவடையவேண்டும் என்பதேஇங்கு அழுத்தம் பெறும் கருத்து நிலையாகும். பெண்கல்வி கற்றுத் தொழில் பார்ப்பது என்பது ஒரு படிதாவிய முன்றேற்றமேயன்றி பூரண சுகந்திரம் பெற்ற நிலையல்ல. இந்த ஒரு படி ஏறிய நிலையில் நின்றுகொண்டும் பழைய ஒவ்வாத வாழ்வு மரபுகளையே கண்மூடித்தனமாகப்

-45
பின்பற்றிக்கொண்டு, 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் ' என்ற போக்கில் வாழமுற்பட்டால், அது எண்ணும் எழுத்தும் கற்ற சிறுமாற்றநிலையேயன்றி பழைய குருடி கதவைத்திறவடி நிலைதான்.
பெண்ணென்ற மனித உயிரினம் மாண்புறவாழச் சரிந்த னைத் தெளிவுதரும் கல் வியே அவசியம் , அடக்கியொடுக்கப்பட்டிருந்த பெண்ணெனப் பிறந்துவிட்ட மனித உயிரினம் கல்வி கற்பதற்கான முயற்சிகள் கட்டியிருந்த கால்நடைப்பட்டிகளை நீர்பருக அவிழ்த்துவிட்டதைப் போன்றசெய்கையே கற்கத்துணிந்த பெண்களும் என்னத்தைக் கற்றனர்? அச்சம். மடம். பயிர்ப்பு, நாணம் என்ற நான்கும் பெண்களின் இயல்பான உயர்ந்த ஆபரணங்களே என்று பழைய காலத்துச் சிந்தனையின் விருந்தாகப் படைக்கப்பட்ட அறநூல்களையே கற்றனர். பண்டைய இலக்கியங்களெல்லாம் தலைவனை முன்னிலைப்படுத் தியே பேசப்பட்டன. வானொலியில் இசைக்கும் பாடலைக் கெசற்றில் பதிவு செய்வது போலவே, அக்கால நூல்களையே கற்ற பெண்கள் அவற்றையே தமக்கு அறிவு கொழுத்தும் சுடர்களாகத் தாங்க முற்பட்டனர். நடமாடும் நூல்களாகத் தம்மைப் பதிவு செய்து கொண்டார்களேயன்றி, அங்கு சொல்லப்பட்ட கருத்துக்களை சிந்தையில் ஏற்று அலசி ஆராயத் துணியவில்லை. முயற்சிக்கவில்லை. இன்றைய தடங்கலுக்கு இதுவே ஒரு முக்கிய காரணி என்பதை இங்கு நாம் உரத்துச் சொல்லுகின்றோம். உறைக்கச்சொல்லுகின்றோம். "அச்சில் ஏற்றப்பட்டதெல்லாம் அரன் நாமமே என்று எண்ணிய கோணங்கித்தனத்தின் பிரதிபலிப்பு பாரதியைப் பூரணமாகப் புரிந்து கொள்ளாத மந்தைக்குணம் ஈ.வே. ரா பெரியாரின் ஆணித்தரமான கூர்மைச் சிந்தனைகளைச் செவிமடுக்காத குறைபாடு, திரு. வி. க.வின் கருத்துக்களைக் கண்டுகொள்ளாத கயமைத்தனம் இவையெல்லாமே பெண்களை இன்று தாழ்நிலையில் கிடந்து தயங்கச் செய்துள்ளது.

Page 24
46
பெண்கல்வி பொருளாதாரச் சுதந்திரத்தை மட்டுமல்ல அறிவு விருத்திக்கும் பெரிதும் பயனளிக்கேவண்டும். பெண்ணினத்தின் அசமத்துவநிலை எங்கோ தொலைதூரத்தில் திரட்சிகொண்டிருக்கவில்லை. அன்றாடம் நாம் கண்விழித்ததும் நமது கைகளிலும், கால்களிலும், காதுகளிலும் மூச்சுக்காற்றிலும் உரசிச் செல்லும் செய்திகள் அநந்தம். வானெலியிலும் தொலைக்காட்சியிலும் விரிக்கும் எண்ணங்களின் தாக்கங்கள் எமது முடக்கு நிலையின் போக்கை வெளிக்காட்டும். கைகளை முஷ்டியாக இறுக்கிக் கொண்டு விரல்களைத் தேடும் நிலையில் நாம் பழைய மூடக்கொள்ளைகளில் தோய்ந்து இறுகிப்போய், புதுமை எங்கே எல் ஏங்குகிறோம்.
குசினியில் முடங்குகிறார்கள், வேலைத்தலத்தில் தொழிற்படுகிறார்கள், ஓய்வு என்றெரு நேரந்தானுண்டா? கொஞ்சநேரம் அமைதிகிடைத்தால் அதற்கும் ஒய்வொழிச்சலற்று ஏதாது கழுவல், துடைத்தல், துப்புரவாக்கல், ஒழுங்காக்கல் என்று சேர்த்துக்கொள்வர். சிறிது நேரமாவது நல்ல கருத்துக்களை அலசி ஆராய ஆறுதல் உண்டா? இங்கே தான் படித்தபெண்ணும் சறுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
உயர் கல்விகற்று வெளியேறுவோர்களையெல்லாம் பாராட்டிப்பட்டம் வழங்கும்போது சர்வகலாசாலை அறிஞர்கள் கூறும் கூற்றை நாம் நினைவில் கொள்வோம் . "அந்தந்தத்துறையைக் குறிப்பிட்டு கல்வி என்பது என்ன என்பதைக் அறிந்து கொண்டனர். இன்மேல் தான் கற்கப் போகின்றனர்" என்பர். இதிலே பெரிய உண்மை பொதிந்துள்ளது. கல்வியை அறிந்து அதனை உலகோடும் நமது அன்றாட வாழ்வோடும் இணைந்து இயங்கச் செய்து இனிமை பயப்பதில்தான் கல்வியின் முற்றுமுழுதான வெற்றி தங்கியுள்ளது. இங்கேதான் கல்விகற்ற பெண்கள் கோட்டை விட்டு, வெற்றிக்கோட்டையும் விலத்தி அப்பால் நிற்கின்றார்களே? என்று எண்ணத்தோன்றுகிறது. இவ்வினாவுக்குள்ளே இன்னோர் வினாவையும் உள்ளடக்கலாம் ஒழுங்கான கல்வி,

-47
வரைமுறையான கல்வி திட்டமிடப்பட்டு ஊட்டப்பட்டதா? இதுவே அந்த வினா?
சமூகச் சிந்தனை படர்ந்த புதிய சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களே இன்றைய காலத்தின் தேவையாகப் பாண மக்கும் போது தொடர் பற்ற பல்லாண்டுகளுக்கு முன் ஒழுங்கிலிருந்து சமுதாயத்தின் சிந்திக்கப்பட்ட பிம்பங்களை உள்ளடக்கிய கல்விநிலை எவ்வாறு பொருந்தும்? இந்நிலை மாற்றமுறவேண்டும். புதிய சிந்தனையோட்டத்தோடொட்டிய ஒழுங்கான சீரமைப்புக் கொண்ட கல்வியொழுக்கம் அறிமுகம் ஆகவேண்டும். கல்வி மனித மேம்பாட்டையும், சமூக ஒழுக்கங்களையும், பூரணப்படுத்தும் பண்புகளைக் கொண்டதாக அமைந்தால்தான் பெண்ணின் இருப்பு உயர்வடைய கல்வியின் பெறுபேறு சமுதாய விளக்கமாக ஒளிபெறும். அண்மைக்காலத்தில் அறிமுகமான பெண்கல்விச் சிந்தனைக் கூறுகளை உள்ளடக்கியதாக பெண்ணினத்தின் அறிவுமேம்பாட்டை விரைவுபடுத்தக்கூடிய அம்சங்கள் பொதிந்ததாக அமைந்திருப்பின் திறமான பேறுகளை அடையமுடியும். சமூகம் சீரடையும், எழுச்சியுறும்.
பின்தங்கிய நிலையில் அவலமுறும் பெண்ணாகப் பிறந்துவிட்ட உயிரினத்தின் முன்னில்ை விரைவுபெற, சிந்தனை விரிவுறும் கல்விச்செயல்பாட்டின் உந்துதல்கள் மிகமிக அவசியமும் அவசரமுமான தேவை என்பதை வற்புறுத்திக் கூறவே விழைகின்றோம்.

Page 25
பெண்களுக்கெதிரான வன்முறை - வகைகளும் அவற்றின் தாக்கங்களும்.
எஸ் . கொளசல்யா
சீதனம்
ஆரம்ப காலங்களில் பெண் புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது தாய் வீட்டில் பெண்ணிற்குச் சீதனமாக (அன்பளிப்பாக) சிலவற்றை கொடுத்துவந்துள்ளார்கள், அதுவே இன்றைய கால கட்டத்தில் வரதட்சணைக் கொடுமையாக மாறிப் பெண் இரக்க மற்ற முறையில்கொல்லப்படுகின்ற நிலைக்கு வளர்ந்துள்ளார்கள்.
குறிப்பாக வரதட்சணை கொடுமை என்பது பண்க்காரர்களுக்கு மட்டுமோ அல்லது குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமோ நடப்பது சிடையாது. ஏழைக் குடும்பத்தில் தினக்கூலியாக உழன்று கொண்டிருக்கும் அனைத்து மக்களிடமும் இந்த வரதட்சனைப் பேய் பிடித்துள்ளது. ஒரு பெண்ணை பெண்ணாக, மனித ஜீவியாகப் பார்க்காமல், அவளை வியாபாரப் பொருளாக, அவள் கொண்டு வரும் பொருட்களை கணக்கில் வைத்து (வரதட்சணை) அவளை LD 600T Lô முடி க்க லாமா, வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படுகின்றது. வரதட்சணை என்ற பெயரில் குறிப்பாகப் படித்த மாப்பிள்ளை, அரசு ஊழியர், ஜாதி, இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு "ரேட்டு 'நிர்ணியிக்கப்படுகின்றது.
* இவர் தமிழ் நாட்டின் பெண்கள் உரிமை இயக்கத்தைச் சார்ந்தவர். இவ் ஆய்வு ஆவணி மாதக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

-49
இப்படிப்பட்ட காரணங்களால் பல பெண்கள் முதிர்கன்னிகளாக இருக்கும் நிலை உள்ளது. இப்படிப்பட்டவர்கள் பின்பு கொடுமைக்காரன், கொலைக்காரன், இரண்டாம் திருமணம் என்று கணவர்களை தேர்வு செய்யும் நிலைக்கு குடும்பத்தின் கட்டாயத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டு, தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.
உசிலாம்பட்டி : சிசுக்கொலை
மதுரைக்கு அருகாமையில் உள்ள உசிலம்பட்டியில் சிசுக்கொலை இன்றும் தொடர்கிறது. இந்நிகழ்ச்சி தெரிந்தே நடப்பவை. இந்திய அளவில் இப்படிப்பட்ட கொலைகள் நாளுக்குநாள் நிமிடத்திற்கு நிகழும் தொடர்.
குறிப்பாக உசிலம்பட்டியில் நடக்கும் பெண் சிசுக்கொலையைத் தடுக்கப் பெண்கள் அமைப்புக்கள் பலவகையில் முயற்சி செய்து வருகின்றனர். இந்த படு மோசமான கொலை வெறிக்கு அப்பகுதி மக்கள் கூறும் காரணம், (உண்மையும் கூட) , "நாங்கள் தினக் கூலிகளாக உண்பதற்கும் கூட சரியான உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகின்ற நிலையில் பெண்களுக்கு வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியாது. எங்களால் உறவுக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையாக இருந்தாலும் கூட அவன் கேட்கும் வரதட்சணையைக் கொடுத்தால் தான் திருமணம் நடக்கும். ஆகையால் பெண் பிள்ளைகளை பெற்றுவிட்டு வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியாமல் வருந்துவதை விடப் பிறந்தவுடன் கொன்றுவிடுவது எவ்வளவோ மேல்” என்கின்றனர்.
ஒரு தாய்க்கு குழந்தை பிறந்தவுடன் அவளின் மயக்கம் தெளிவதற்கு முன்பாகவே பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் பிரசவம் பார்க்கும் ஆயாக்களே அக்குழந்தைக்கு

Page 26
-50
கள்ளிப்பால், நெல் கொடுத்துச் சாகடிக்கின்றார்கள். குழந்தையைப் பெற்ற தாயே கூட பெண் குழந்தையாக இருந்தால் பால் கொடுக்காமல் சாகடிக்கின்ற கொடிய செயல் இந்த ஜனநாயக நாட்டில் நிகழ்கின்றது. இந்தக் கொடிய செயலுக்கு தமிழக அரசின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் பெண் முதல் அமைச்சர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.
தொட்டில் குழந்தைத் திட்டம்
தமிழக அரசு பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகத் தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிவித்துப் பிறக்கின்ற குழந்தை பெண்குழந்தையாக இருந்தால் நீங்கள் அதைக் கொல்ல வேண்டாம். அரசு அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டுள்ள தொட்டிலில் கொண்டு வந்து போட்டு விடுங்கள், அக்குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார்கள். குழந்தைகளும் அப்படிப் போடப்பட்டுச் சரியான பராமரிப்பு இல்லாததால் ஒரு சில குழந்தைகள் இறந்தும் போயுள்ளன. இந்த திட்டம் குழந்தைகளை அனாதைகளாக்கும் திட்டம், பெண்கள் இயக்கங்கள் இத்திட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றனர். காரணம் இந்தச் சிசுக்கொலைக்கு முழுமையான காரணம் வரதட்சனைக் கொடுமைதான் என்பதை அறிந்த தமிழக அரசு அதற்காகப் போடப்பட்ட சட்டத்தை சரிவர அமுல்படுத்தாமலும், வரதட்சணை வாங்கும் கொடியவர்களுக்கு சரியான தண்டனை வழங்காமலும் இப்படி ஒரு கண்மூடித்தனமான திட்டத்தை அறிவித்து, பெண் குழந்தைகளை அரசாங்கமும் தங்கள் பங்கிற்குக் கொலை செய்வதைப் பெண்கள் அமைப்புக்கள் கண்டித்து தமிழக அரசுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினாார்கள். இன்று இந்தத் திட்டத்திற்குச் சரியான ஏற்பு மக்களிடையே இல்லாமல் போய்விட்டது. வெறும் விளம்பரத்திற்காக, அரசியல் லாபத்திற்காகக் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் வெறும் நீர்க்குமிழியாகியது.

-51
அமினோ செனடிசிஸ்
இந்தக் கருவியை வைத்துக் கருவுற்ற குழந்தையின் வளர்ச்சியை, உருவ அமைப்புக்களைக் கண்டுபிடிக்காமல், இன்று பெண் குழந்தையா என்று கருவிலே இனம் கண்டு அழிக்கப் பயன்படுத்துகிறார்கள். பெண் குழந்தையைப் பெற்றுவிட்டால் அவளுக்குத் திருமணம் என்று ஒன்று நடக்கும் வரை ஒரு பாரமாகக் கருதும் இச்சமுதாய மக்கள் அக்குழந்தையை பிறக்க விடாமலேயே அழித்து விடுகிறார்கள், வரதட்சணை கொடுக்க வேண்டுமே என்பதும் இதற்குக் காரணம். இப்படித் தவறாக பயன்படுத்தப்படும் மருத்துவத் துறை மீதும் அரசு சரியான நடவடிக்கை எடுக்கத் தவறி வருகிறது. W
செய்தித் தாள்கள்
இப்படிப்பட்ட சமுதாய சூழ்நிலைகளில் அன்றாடம் செய்தித்தாள்களில் பல பெண் கொலைகள் குறித்துச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஸ்டவ் வெடித்து பெண் இறப்பு' என்று பொதுவாகச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், உண்மையில் இவற்றில் பெரும்பன்மை வரதட்சணைக் கொலைகளே. மண்ணெண்ணையை ஊற்றி மனித உயிரை மாய்க்கும் கொடுமை இங்கு மிகச் சாதாரண நிகழ்வாகும்.
காவல் நிலையம்
வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் காவல் நிலையங்களுக்கு சென்றாலும் கூட வாக்குப் பதிவு செய்ய மறுப்பதுடன், சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகின்றது. சில நேரங்களில் இப்படிக் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க செல்லும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படடு, கொலையும் செய்யப்படுகிறார்கள். சட்டத்தைச் சரியாக அமுல்படுத்த வேண்டிய காவல்துறையே

Page 27
-52
சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகின்றது. அவ்வளவு ஏன் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டரே கூட மனைவியை வரதட்சணைகேட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதத்தில் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி, மிகவும் முக்கியமானது ஒரு பொலிஸ் அதிகாரி மதுரை மாநகரில் 25 ஆண்டுகளாக மனைவியை வரதட்சனை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக இன்ஸ்பெக்டரின் மனைவி புகார் செய்துள்ளார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இப்படிப் பல கொடுமைகள் தொடர்கின்றன. அரசின் புள்ளி விவரங்களின் படி 1994-ல் மட்டும் 10, 326 கற்பழிப்பு சம்பவங்களும், 4227 பெண்கள் எரிப்பு சம்பவங்களும் பதிவாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிவராத சம்பவங்கள் எத்தனையோ!
கிராமப் பெண்கள் விடுதலை இயக்கமும்அதன் எதிர்ப்புக்குரலும்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரக்கோணம், திருத்தணிப் பகுதிகளில் செய்யப்பட்டு வரும் கிராமப் பெண்கள் விடுதலை இயக்கம், பல வரதட்சனைக் கொடுமைகளுக்கு எதிராக் குரல் எழுப்பி உள்ளது. பல பெண்களின் அவல அநுபவங்களைச் சந்தித்த இவ்வியக்கம் எப்படி அப் பிரச்சினைகளை எதிர் கொண்டது என்பது வேறு பல பெண்களுக்கும் , அமைப்புக்களுக்கும் முன் மாதிரியாக இருக்கும்
கல்பாக்கத்தைச் சேர்ந்த புஷ்பலதாவிற்கும், அரக்கோணத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி உள்ளது. இவர் ஒரு அரசு ஊழியர், தன் திருமணத்தில் கொடுக்கப்பட் வரதட்சணைப் பொருட்களில் ஒரு பீரோ குறைகிறது என்ற காரணத்தினால் மனைவியின் தாய்வீட்டிலிருந்து பிரோ வாங்கி வரும்படி கொடுமைப் படுத்தியுள்ளார். இந்தக் கொடுமைக்கு மாமியார், நாத்தனார்களும் உடந்தையாக இருந்துள்ளார்கள். கணவன் மனைவியை ஒன்றாகப்படுத்து

-53
துரங்கவிடுவதில்லை, தலைக்கு எண்ணெய்கொடுப்பதில்லை, குளிப்பதற்கு சுண்ணாம்பு சோப்பு கொடுப்பது, உட்காருவதற்கு கோணி கொடுப்பது சரியான உணவு கொடுப்பது கிடையாது, போன்ற பல கொடுமைகளை செய்தது மட்டுமல்லாது, அனைவரிடமும் புஷ்பலதாவிற்குப்பைத்தியம் என்றும் தானாகப் பேசுகின்றாள், சிரிக்கின்றாள். என்ற பொய்யான வதந்தியையும் பரப்பினர். யாரிடமும் பேசக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்துள்ளனர். புஷ்பலதா தன் தாய் வீட்டிற்கு கணவன் பீரோ கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தைக் கண்ட பெற்றோர்கள் அங்குள்ள மனித உரிமைக் கழகத்தை நாடியுள்ளார்கள். அவர்கள் கிராமப் பெண்கள் விடுதலை இயக்கத்திற்குத் தெரிவிக்க உடனடியாக புஷ்பலதாவின் மாமியார் யாரிடமும் பேசவிடாமல் அவளைத் தடுத்ததுடன் இயக்க உறுப்பினர்களையும் தரக்குறைவாக ஏசியுள்ளார். தொடர்ந்து இயக்க உறுப்பினர்கள் புஷ்பலதாவைச் சந்தித்து அவர்களிடமிருந்து மீட்டு, அவளுக்குத் தங்குவதற்கு இடம் கொடுத்து அனைத்து உதவிகளும் செய்து பின்பு காவல்நிலையத்திற்குச் சென்று புகார் பதிவு செய்ய உதவியுள்ளனர். உடனடியாகப் புஷ்பலதாவின் கணவர், மாமியார், நாத்தனார் கைது செய்யப்பட்டனர். இயக்கத்தின் சார்பில் முக்கிய சாட்சியாகச் செல்வி. பாத்திமா அவர்கள் இருந்து வேலூர் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. புஷ்பலதா தன் தாய் வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த வழக்கில் இப்படி ஒரு சாட்சி இருப்பதை அரசு தரப்பு வழக்கறிஞரே ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் செல்வி பாத்திமாவை தனியாக அழைத்து, வழக்கு பெண்ணிற்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது, குற்றவாளி தண்டனை பெறக்கூடாது, என்ற நோக்கில் பேசி மழுப்பி உள்ளார். ஆனால், செல்வி பாத்திமாவோ இவ்வழக்கில் கொடுமைக்காரன் தண்டிக்கப்பட வேண்டும், மற்ற ஆண்களுன்கு இது ஒரு பாடமாகவே அமைய வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வழக்கில் தொடர்ந்து வாதாடி வருகிறார்.

Page 28
-54
கீதாஞ்சலி, அரக்கோணம்.
அரக்கோணத்தைச் சோர்ந்த கீதாஞ்சலிக்கும், திருப்பதியைச் சேர்ந்த சந்திரபாபுக்கும் திருமண ஏற்பாடு பெரியோர்களால் செய்யப்பட்ட போது, வரதட்சணைக் கொடுப்பது குறித்துப் பேசி உள்ளார்கள். மாப்பிள்ளை மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் 20 சவரன் நகை, மற்றும் கையில் 10 ஆயிரம் திருமணச் செலவுகள் அனைத்தும் பெண்வீட்டாரே ஏற்க வேண்டும் என்று பேரம் பேசியுள்ளார்கள். தன்மகளுக்குக் காலாகாலத்தில் திருமணம் நடந்தாலே போதும் எனக்கருதி, 10 சவரன் குறைத்து மற்ற எல்லாவற்றையும் தானே ஏற்று நடத்தி தருவதாகப் பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்துள்ளனர். மாப்பிள்ளை அரை குறை மனதுடன் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டார். பின்பு திருமணம் ஆனதிலிருந்து கீதாஞ்சலியை தாய் வீட்டிற்கு சென்று டேப்ரெக்கார்டர், டிவி வாங்கி வரும்படி துன்புறுத்தியுள்ளார். கீதாஞ்சலி தன் பெற்றோர்களிடம் கூறப் பெற்றோர்களும் தன் மகளை அப்பொழுதாவது சந்தோஷமாக வைத்துக் கொள்வார் மாப்பிள்ளை, எனக் கருதி மாப்பிள்ளையை உடன் அழைத்துச் சென்று கேட்டவைகளை வாங்கித் தந்துள்ளனர். ஆனாலும் சந்திரபாபுவிற்கு வரதட்சணை ஆசை விட்டபாடில்லை. அரசு ஊழியரான இவர் வேறுயாரையாகிலும் திருமணம் செய்து கொண்டால் நிறைய வரதட்சணை கொடுப்பார்களே என்ற பேராசையை மனதில் வளர்த்துக் கொண்டு, சீதாஞ்சலியை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். பகலில் அடித்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது எனக் கருதிய சந்திரபாபு, இரவு நேரங்களில்மற்றவர்கள் துரங்கிய பிறகு கீதாஞ்சலியின் தொண்டையை இறுகப்பிடிப்பது, அவளுக்கு மயக்கம் வரும்வரை அடிப்பது, என்று கொடுமைப் படுத்தியுள்ளார். தன் தாய் வீட்டிற்கு கடிதம் எழுதக்கூடாது, என்றும் யாரும் பார்க்க வந்தால், அவர்களுடன் சரியாகப் பேசக்கூடாது என்ற நிபந்தனைகளும் விதித்துள்ளார். இதற்கிடையில் கீதாஞ்சலி கருவுற்றாள். குழந்தை பிறந்து

-55
விட்டால் தன்னையாரும் திருமணம் செய்து கொள்ள முன் வரமாட்டார்கள் எனக் கருதிய சந்திரபாபு அவளது கருவைக் கலைப்பதுடன் அவளுக்குத் தெரியாமலேயே அறுவைச் சிகிச்சையும் செய்துவிட்டால், பின்பு தனக்குக் குழந்தை வேண்டும் என காரணம் கூறி வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முடியும் என்று திட்டமிட்டுக் கரு வைக் கலைக்க, மருத்துவமனைக்கு வரும்படி அழைத்து, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தினமும் வயிற்றிலுள்ள கருவை கலைத்துவிட வேண்டும் என்பதற்காக மிளகாயை அரைத்து வெறும் வயிற்றில் கொடுத்துள்ளார்கள். அனைத்து கொடுமைகளையும் கீதாஞ்சலி அனுபவித்து வந்தள்ளார். கீதாஞ்சலியின் சித்தப்பா தன் மகனின் திருமணத்திற்காக அழைப்பு தெரிவிக்கச் சென்ற போது கீதாஞ்சலியின் உடல், முகம், கழுத்து அடிபட்டு வீங்கி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். பின்பு விசாரிக்கும் போது கீதாஞ்சலி உண்மையைக் கூற, சித்தப்பா கீதாஞ்சலியின் பெற்றோர்களிடம் கூற உடனடியாக கீதாஞ்சலியைச் சந்திரபாபுவிடம், இரண்டு நாள் வைத்திருந்து அனுப்புவதாக கூறிவிட்டு, அவனை மருத்துவ பரிசோதனை செய்தனர். அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்கள். அரக்கோணம் நகர காவல் நிலையத்தின் மகளிர் பிரிவிற்கு புகார் செய்துள்ளார்கள். வாக்குமூலம் வாங்க வந்த பெண் காவல் அதிகாரி, கீதாஞ்சலியை மிரட்டி, கணவன் மீது இப்படி வழக்குத் தொடுக்கலாமா, என அவர்களுக்கே உரித்தான பாணியில் மிரட்டி உள்ளார். மேலும் திருப்பதி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கிறோம் எனக் கூறியுள்ளார்கள், அப்படி ஏதும் தகவலும் கொடுத்ததாகத் தெரியவில்லை.
கீதாஞ்சலியும் அவளின் பெற்றோர்களும், கிராமப் பெண்கள் விடுதலை இயக்கத்தின் உதவியை நாடினார்கள். இயக்கத் தலைவியின் திருப்பதியில் செயல்படும் மகிளாசக்தி உறுப்பினர்களுடன் இணைந்து வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் கீழ் சந்திரபாபுவைக் கைது செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டும், மற்றும் அவனை நிரந்தர வேலை

Page 29
-56
நீக்கம் செய்ய வேண்டும், மேலும் அவன்மீது சிசுக்கொலை வழக்கு தொடரவேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள். இந்த முடிவுகள் அனைத்தும் கீதாஞ்சலி என் கணவருடன் ஒரு நாள் கூட என்னால் வாழமுடியாது, என்னைக் கொன்று விடுவார் என கூறியதன் அடிப்படையில் தான் முடிவு செய்யப்பட்டது. சட்டம், நீதிமன்றம் இவைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் குற்றவாளியை வெளியில் வந்துவிடாமல் இருக்கப் பெண்கள் இயக்கங்கள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். சந்திரபாபுவுக்கு எந்த வகையிலாவது தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கிராமப்பெண்கள் இயக்கம் முயற்சித்து வருகின்றது.
ஜெயா, வாணியம்பபடி
சென்னையைச் சோந்த, தண்டையார் பேட்டை10A ஜஸ்டிஸ் பண்டாலித் தெருவைச் சேர்ந்த ஜெயாவிற்கும், வாணியம்படி கோபிநாத்திற்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் எட்டு மாதங்கள் முடிந்திருந்தது. அப்போது ஜெயா கர்ப்பமாக இருந்தாள். கணவன் கோபிநாத் அடிக்கடி ஜெயாவை, தங்களை விட வசதியில் குறைந்த அந்தஸ்து உடையவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிக் கொடுமைப்படுத்தி வந்துள்ளான். அதுமட்டுமல்லாது கோபிநாத், சாப்பிடுவதற்கே ஜோசியம் பார்ப்பவன், தான் மேலும் நல்ல பணக்காரனாக மாற வேண்டும் என்ற நோக்கத்தொடு சாமியாரை அணுகி உள்ளான். "பசுவோடு, கன்றையும் பலி கொடுத்தால் அவன் நல்ல நிலைக்கு வருவான் ” என்று ஜோசியர் கூறியுள்ளார். ஜெயாவைக் கொன்று விட்டாள் வேறு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு, அவளைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளான் கோபிநாத்.
1993 செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி, வியாழக்கிழமை ஜெயாவின் அம்மா வீட்டிற்கு டெலிபோன் மூலம், ஜெயா பாய்லர் ஷாக் அடித்து முட்டியிலிருந்து பாதம் வரை

-57
தீக்காயம் ஏற்பட்டுள்ளது, அவளை வேலூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என்று தகவல் வந்துள்ளது. உடனடியாகப் பெற்றோர்கள் வேலூர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, ஜெயாவின் அம்மா காந்தாமணி, தான் நேரில் கண்டதைக் கண்ணிர் மல்கக் கூறுகையில், என் மகள் அலங்கோலமாக இருந்தாள், என் மகளைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள், மாப்பிள்ளை கோபிநாத்திடம் விசாரித்ததிற்கு அவர் ஏதும்பதில் கூறவில்லை. என் மகளின் அருகில் சென்றேன், அழுதாள், அவளிடம் என்ன நடந்தது என்றேன், முதலில் தயங்கினாள் பின்பு "அம்மா எனக்கு பயமாக இருக்கிறது. மாமியார், கணவன் மாமனார், வீட்டைச் சேர்ந்த மணிஆகியோரைப் பார்க்கப் பயமாக உள்ளது" என்னை விட்டுப்போய்விடாதே என்று அழுதாள், பேச முடியாமல் பேசினாள். அவள் வாய் திறந்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி "பல்லெல்லாம் கருகி, நாக்கு வெந்து, காது கருகி, உடம்பு முழுவதும் தீயில் பொசுங்கி இருந்தது" அவளின் கழுத்தில் கத்திக் காயம் காணப்பட்டது. உன் மகள் அம்மா "என்னை ரொம்பக் கொடுமைப்படுத்தி வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று கொழுத்தி விட்டார்கள், நீ எதையும் அவர்களிடம் கேட்டாதே, உங்களுக்கும் ஆபத்து என்று பேசிய பின்பு மயக்கமாகிவிட்டாள்" என்றார்.
பின்பு ஜெயா பத்து நிமிடம் கழித்து நினைவு திரும்பிப் பேசியிருக்கிறாள். "நீ எங்களை எல்லாம் காட்டிக் கொடுத்தால் உனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மாாட்டோம் நீ விளையாட்டாகச் செய்து கொண்டேன் என்று கூறினால்தான் நான் உனக்குச் சிகிச்சை அளிப்பேன், இல்லையென்றால் நீ செத்தாலும் உங்க அப்பா அம்மாவிற்கு தெரிவிக்க மாட்டேன், நீ யாருடனோ ஒடிப்போய்விட்டாய் என்று எல்லோரிடமும் சொல்வேன்” என்று கோபிநாத் மிரட்டியதாகவும், உன்னை அனாதை என்று மருத்துவமனையிலேயே விட்டுவிடுவேன் என்றும் கூறியுள்ளாள். செப்டம்பர் இரவு (2ம் தேதி) 10.30 மணிக்கு ஜெயா இறந்துவிட்டாள். -

Page 30
-58
மகள் திருமணம் முடித்துச் சிறப்பாக வாழவேண்டும் என்று தங்கள் வீட்டை விற்றுத் திருமணம் செய்துள்ளார்கள், ஜெயாவின் பெற்றோர்கள். ஆனால் ஜெயா பிறந்த நாளான செப்படம்பர் 2ம் திகதி அன்று கொல்லப்பட்டாள்.
ஜெயாவின் அண்ணன் கிராமப் பெண்கள் விடுதலை இயக்கத்தின் உதவியை நாடினார். நடந்த சம்பவங்கள் குறித்துத் தகவல்சேகரித்துக் கொண்டு, வேலூரில் உள்ள ஆர். டி. ஒ அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அவர் திருப்பத்தூர் ஆர்.டிஒ விடம் அனுப்பியுள்ளார். அங்கு சென்று விசாரித்தில் அது சம்பந்தமாக கோப்பு மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறி அவரை விசாரிக்கும்படி அனுப்பிவிட்டார்கள். பின்பு மகளிர் குரல் என்ற புத்தகத்தில் நடந்த கொடுமைகள் குறித்து போட்டோவுடன் எழுதி வாணியம்படி குழுவதும் பலருக்கு வழங்கப்பட்டது. கோபிநாத் மகளிர் குரல் ஆசிரியை மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாக தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் அனுப்பினான். கிராமத்துப் பெண்கள் இயக்கத் தலைவிகள் வழக்கை எதிர்கொள்ள முனைந்தனர்.
பத்மினி, அரக்கோணம்.
வட ஆற்காடு மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனுார் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சநேயலு நாயுடுவின் கடைசி மகளான பத்மினி (வயது14) என்கிற பெண்ணிற்கும் அரக்கோணம் நேருஜி நகர் 6-வது தெருவைச் சேர்ந்த, ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ராஜாவிறகும் திருமணம் 22.1.88 ல் நடைபெற்றது. பத்மினி தன் தாய் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டாள் பத்மினிக்கு திருமணம் செய்வதற்கு முன்பே மாப்பிள்ளைக்கு பத்மினியன் தாயார் 4 பவுண் தங்கச் சங்கிலி, 3 பவுண் நெக்லஸ் தவிர மற்றும் நகைகள், பொருட்கள் பணத்தை வரதட்சனையாகக் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் ஒரு நாள் பத்மினியின்

-59
தாயாரும், அண்ணனும், பத்மினியைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்ற போது, அவர்கள் கொடுத்த பீரோ சரியில்லை என்றும் வேறு பீரோ வேண்டும் அல்லது பணம் கொடுக்க வேண்டும் என்றும் வலிபுறுத்தியுள்ளார்கள். மேலும் நெக்லஸ் கொடுக்க வில்லை என்றால் உங்கள் மகளை உயிரோடு பார்க்க முடியாது என்று ராஜாவும், அவரது தாயாரும், இவர்களை மிரட்டி உள்ளனர். இந்தச் சம்பவங்கள் திருமணம் ஆகி ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ளது.
திருமணத்தன்று கூட நெக்லஸ் கொண்டு வந்தால் தான் தாலி கட்டுவேன் என்று ராஜா பிடிவாதம் செய்துள்ளான். அதற்கு பத்மினியின் பெற்றோர்கள் மூன்றாம் மாதம் கண்டிப்பாகப் போடுகின்றோம் என்று கூறியுள்ளார்கள். இச்சம்பவங்களுக்கு பிறகு 12 நாட்களில் பத்மினி இறந்துவிட்டாள். (திருமணம் முடிந்து சரியாக 12 நாட்களில் பத்மினி இறந்துவிடுகிறாள்).
6.2.88ம் தேதி பத்மினி உடல் நலம் சரியில்லாததால் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக, பத்மினியின் குடும்பத்தாருக்குத் தகவல் வந்துள்ளது. குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, பத்மினி துரக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக உணர்ந்து விசாரணை நடத்தக் கூறியதன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்த முன் வந்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தபின்பு பத்மினியின் உடல் டாக்டர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. பத்மினி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளாள் என்று பிரேதபரிசோதனைத் தகவல் மூலம் தெரியவந்தது. இதன் பிறகு ராணிப்பேட்டை உதவி கலெக்டர், பத்மினியின் தாயார் சரோஜாம்மாவை விசாரணை செய்து, பத்மினியின் கணவர், மாமியார், நாத்தனார், ஆகியோரைக் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

Page 31
-60
பத்மினியன் தாயார் அரக்கோணம் கிராமப் பெண்கள் விடுதலை இயக்கத்திற்கு மனுக் கொடுத்ததைத் தொடர்ந்து "போதிய அளவு வரதட்சணை கொண்டுவரவில்லை என்பதற்காக அரக்கோணம் நேருஜி நகரில் பத்மினி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டாள். இந்தக் கொடிய சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி நடந்துள்ளது.” என்று பெண்கள் இயக்கத்தினர் நோட்டீஸ் போஸ்டர் மூலம் பொது மக்களுக்கும் மற்ற பெண்கள் இயக்கத்தினருக்கும் தெரியப்படுத்தினர். அதைத் தொடர்ந்து 14.2.88 அன்று பெண்கள் இயக்கம் அரக்கோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் என்பவற்றை நடத்தியது. அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கிராமப் பெண்கள் விடுதலை இயக்கம், விவசாயக் கூலிகள் இயக்கத்தினர், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சென்னை தமிழகப் பெண்கள் விடுதலை இயக்கத்தினர், திருவள்ளுவர், திருவண்ணாமலை, மதுராந்தகம் போன்ற பல இடங்களிலிருந்து அமைப்புக்கள் இதில் பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது
செய்யாதே, செய்யாதே கொலையைச் செய்யாதே! வாங்காதே, வாங்காதே வரதட்சணை வாங்காதே! கேட்காதே, கேட்காதே வரதட்சணை கேட்காதே!
ஒழிக ஒழிக வரதட்சணைக் கொடுமை ஒழிக! தேவை, தேவை,பத்மினிக்கு உடனையாக நீதி! விடாதே, விடாதே, ராஜாவை வெளியே விடாதே! கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் வன்முறையை
கண்டிக்கிறோம்!
மேற்கண்ட கோஷங்கள் எழுப்பியவாறு ராஜா வசித்து வந்த வீதியின் வழியாக பொதுக்கூட்ட மேடையை அடைந்தார்கள். பொதுக்கூட்டப் பேச்சாளர்கள் பத்மினியின் கணவனுக்கு வரதட்சனை சட்டத்தின் படி தண்டனை வழங்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துப் பேசினார்கள். (ராஜாவின் வீட்டின் முன்பு 15 நிமிடம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது)

-61
இவ்வாறாகப் பிரச்சினை நடந்தபின் கண்டனக் குரல் எழுப்புவதோடு நிறுத்திவிடாமல், பொதுமக்கள் வரதட்சணைக் கொடுமை குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தவது, பாடல்கள் மூலம் விழிப்புணர்வு கொடுப்பது மற்றும் வரதட்சணைச் சட்டங்கள் குறித்து மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அளித்தல் போன்ற பல செயல்பாடுகள் மூலம் வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க கிராமப் பெண்கள் விடுதலை இயக்கம் செயல்பட்டு வருகின்றது.

Page 32
வன்முறையின் இன்னுமொருகோணம்
செ. கணேசலிங்கம் *
இன்றைய சமூகத்தில் வன்முறை எங்கணும் ஊறிச் செறிந்துள்ளது. இதற்கு ஒரு வரலாறும் உள்ளது. மகா பாரதம், இராமாயணம் தொடக்கமான புராண இதிகாசங்களிலிருந்து புறநானூறு வரையான சங்க இலக்கியங்கள் வரை எங்கள் பண்பாடே வன்முறையைப் பற்றிப் புகழ்பாடும்; புத்தகங்களைப் போற்றிப் பெருமைபப்படுவது எமது வீரமரபாகிறது.
நிலப் பிரபுத்துவத்தில் நிலத்திற்காக நடைபெற்ற போர்கள் முதலாளித்துவத்தில் மூலப் பொருட்களை அபகரிப்பதும், சந்தை பிடிக்கும் போட்டா போட்டியும் யுத்தத்திற்கு வித்திட்டது. இரண்டு உலகமகா யுத்தங்களை இந்த நூற்றாண்டு தரிசித்தது. அவற்றின் வன்முறை வடுக்கள் இன்னும் உலகெங்கும் கல்லறைகளாகக் காட்சியளிக்கின்றன.
வன்முறை பகைமை உறவின் அடிப்படையில் எழுவது, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் ஏற்படுவது. புரட்சிகர வன்முறையால் மட்டுமே தீர்க்கப்பட முடியும். அடுத்தது ஆணினத்திற்கும் பெண்ணினத்திற்கும் இடையில் சமத்துவமின்மையால் எழுவது.
இன்றும் அமெரிக்க திரைப்படங்களில் ஆரம்பித்து இங்கும் சினிமா, டி.வி. யில் பரவியுள்ள பாலியலும் வன்முறையும்
* இவர் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர், நாவலாசிரியர். தற்போது தமிழகத்தில் வசிக்கிறார்.

-63
சார்ந்த காட்சிகளும் கதைகளும் ஆதிக்கம் பெற்றிருப்பதைக் காணலாம்.பெண்ணினத்தை மலினப்படுத்தும் ஆபாசக் காட்சிகளையும் குரூர வன்முறைப் போராட்டங்களையும் திரையிலும், சின்னத் திரையிலும் ஒப்பிட்டுப்பார்த்து வேதனைப்படாது ஆரவாரம் செய்து ரசிக்கும் நிலை தொடரும் வரை சமூக வன்முறைகளை ஒழித்துவிட இயலாது.
பாலியல் தொல்லைகள், பாலியல் வன்முறைகள் ஆண்களால் பெண்கள் மேல் திணிக்கப்படுவது. ஆணாதிக்கம் தலையெடுத்து சமத்துவம், சமூக நீதி மறுக்கப்பட்டு இரண்டாம் தரப்பிரஜையாக, தாழ்ந்த சாதியினர் போல பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
நீ ஒரு பெண்’ என எளிதில் இனங்காணத் தக்கதாக தனி உடை, நீண்ட முடி, தனித்துவ ஆபரணங்களை அழகு" என்ற பெயரில் ஏற்கத்தக்கதாகச் சில மதிப்புகளை ஆணாதிக்கம் பெண்ணினம் மேல் திணித்துள்ளது. 'நீ ஒரு பெண்' எனசெயற்கைப் புறத்தோற்ற மூலம் இனங்காணும் போது நீ ஒரு அடிமை என்பதே ஆணினத்தின் கணிப்பாகும். இத்தகைய அடிமை நிலையில் வாழ்வதால் அவற்றிலிருந்து விடுபட முடியாத நிலையிலும் பெண்கள் உள்ளனர்.
பெண்கள் மேல் திணிக்கப்பட்ட தனி உடையும் நீண்ட முடியும் கூட ஆணாதிக்கத்தின் பாலிச்சையைத் துண்டுவதாக உள்ளது. ஆண்களின் உடை போல வாய்ப்பான, வசதியானவற்றை பெண்ணினத்திற்கும் ஆண்கள் ஏன் வழங்கக்கூடாது என்ற வினா எழுகிறது.
நான் ஒரு பெண் பாலியல் தொல்லைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் தயாராக உள்ளேன் என பெண்ணினம் ஏன் உடை, முடி, ஆபரணம் மூலம் இனம் காட்டிக் கொள்ள வேண்டும் எனக் கேட்கலாம். சமத்துவமற்ற அடிமை நிலையில் வாழ்வதால் எதையும் தாமே தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

Page 33
-64
நாலுகால் மிருகங்களிடையே பாலியல் பேதங்களை ஆரம்பகாலங்களில் காண இயலாது. அவற்றிடையே பாலியல் தொல்லைகள், பாலியல் வன்முறைகளையும் பார்க்க முடியாது. நாலுகால் பிராணி இனங்களின் பாலியல் சின்னங்கள் மறைவாக உள்ளன. சில பாலூட்டி மிருகங்களில் மட்டும் இனப்பெருக்கத்தின் பின் பாலூட்டி உறுப்புகள் பெண்ணினத்தை தனியே காட்டுகின்றன.
முன்னங்கால்களை கைகளாக உயர்த்தி முதுகை நிமிர்த்திய போது மனித இனத்தின் பாலுறுப்புகள் நேரெதிரே வெளிப்படையாகத் தெரிய நேரிட்டது. இதனால் பால் கவர்ச்சியும் பாலெழுச்சியும் தூண்டப்படுவதாகக் கூறப்படுகிறது. விழிப்பு நிலைபெற்ற மனித இனம் சுவாத்தியத்திற்கேற்ப உடைகளை உற்பத்தி செய்து நாகரிக காலகட்டத்தை அடைந்தபோது பாலுறுப்புகளையும் மறைத்துக் கொண்டது. ஆயினும் ஆணுக்கு ஒரு உடையும் பெண்இனத்தை இனங்காணத் தனி உடையும் ஏன் திணிக்க வேண்டும்? ஆணினம் தன் பாலுறுப்பை உடை மூலம் மறைப்பது போன்று பெண்ணினமும் இரண்டாவது பாலுறுப்பான மார்பையும் முழுமையாக அதே ரக ஆணுடை மூலம் ஏன் மறைக்க முடியாது? முடியையும் ஆணினம் போல ஏன் அழகுபடுத்த இயலாது.
பெண்ணினம் ஆண்போன்று உடை, முடியில் சமத்துவ நிலை ஏற்படுத்தி பால் வேறுபாட்டை எளிதில் காணமுடியாத பால்கவர்ச்சி குன்றிய நிலையில் தொல்லைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்கள் பெரிதும் விடுதலை பெறமுடியும்; புறத்தோற்றத்தில் சமத்துவமும் மதிப்பும் ஏற்படமுடியும். பெண் என உற்றுப்பார்க்கும் (Male-Gaze) ஆணாதிக்கப் பார்வை சமத்துவ நிலையில் குறைந்துவிடவும் வாய்புண்டு. இராணுவம், பொலிஸ் பதவிகளில் இன்றும் இவற்றைக் கவனிக்கலாம்.
இந்நிலையில் எதிர்பாலரின் பாலின்பத்தை (ஆணும்

-65
பெண்ணும்) துறந்துவிட வேண்டுமென்பதில்லை. அத்தகைய இன்பத்தைச் சமத்தவநிலையில் இருவர் மனமொத்து வன்முறையற்ற பண்பாட்டு நிலையில் அனுபவிக்க வேண்டும். அதுவே மனித சாரத்தின் ஒரு சிறப்பம்சமாகும்.
பெண்ணே இன்றைய சமூகத்தில் அதிக வன்முறைக்கு உட்படுகிறாள். அது சிறுவயதிலிருந்தது திருமணம் வரை நடைபெறுகிறது. ஆணினம் கூட உறவின் ஆரம்பத்தில் பெற்றோரால் தண்டிக்கப்பட்டு, பாடசாலையில் ஆசிரியரால் அடிக்கப்பட்டு , பின்னர் அரசுயந்திரமான பொலிஸாரால், இராணுவத்தினரால் வதைக்கப்பட்டு சமூக வன்முறைக்கும் ஆணாதிக்க அடக்குமுறைக்கும் உட்படுகிறாள். மேலும் வயதுவந்த நாள் தொடக்கம் கருவள காலம் முடியும்வரை மாதம் தோறும் இரத்தம் சரிந்துவது மட்டுமல்ல பிள்ளைப்பேற்றின்போதும் இரத்த வன்முறைக்கு உட்பட நேரிடுகிறது.
பாலியல்தொல்லைகள், வன்முறை சார்ந்த பாலுறவு உட்பட பெண்களை ஆணாதிக்கம் ஆபாசமாகப் பல்வேறு வடிவங்களில் சித்திரித்து மலினப்படுத்துவதையும் காண்கிறோம்.
வன்முறைப் பாலுறவு, பாலியல் தொல்லைகள் ஆங்காங்கே பரவலாக வீடுகளிலும் வெளியேயும் நடைபெறும் போதும் அவற்றில் அம்பலத்தில் வருபவை மிகச் சிறிய பகுதியேயாகும். ஆபாசத்தைக் கண்டிக்க வேண்டும் என ஒரு புறம் கூப்பாடு போடும் போது மறுபுறத்தில் பல்வேறு புதிய வடிவங்களில் ஆபாசம் பெருகி வருவதைக் காணலாம். முதலாளித்துவம் பெண்களுக்கென பல்வேறு வகை ஆடம்பர உடைகள், அணிகள், அழகுசாதனங்களை உற்பத்தி செய்து இலாபம் சேர்ப்பது மட்டுமல்ல அவர்களது உடலுறுப்புகளை ஆபாசமாகக் காட்டியும் பணம் பறிக்கிறது. சினிமாவில், விளம்பரத்தில், கலை, இலக்கியங்களில் இவற்றைக் காண்கிறோம்.

Page 34
-66
அண்மைக் காலத்தில் முன்னர் என்றும் இல்லாத அளவில் வன்முறைக் கொலைகள் இலங்கையில அதிகரித்துள்ளதை அனைவரும் அறிவர், அவற்றின் தாக்கம் புத்தமதம் சார்ந்த சிங்கள மக்களிடையே புதியவித பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதும் இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. வன்முறைக் கொலைகளின் தாக்கம் பேய், பிசாசு, ஆவிகளின் நடமாட்டக் கதைகளைப் பரப்பியுள்ளது. தெய்வத்தை நம்பாத பெளத்த சிங்கள மக்கள் பேய், பிசாசுகளை நம்புவது ஒருவித உளவியல் தாக்கமே. இவ்வன்முறைப் பிரதிபலிப்பையும் சமூக வியலாளர்கள் இன்று ஆராய்ந்து வருகிறார்கள். கொலையாளர் வன்முறையாளர் தெருக்களில் தண்டனை பெறாது நடமாடும்போது பேய், பிசாசு, ஆவி, ஆகிய கற்பனை மூலம் பலர் ஆறுதல் பெற முயல்கின்றனர்.
எய்ட்ஸ் நோயின் ஆபத்துப் பற்றிய பிரச்சாரம், பாலுறவு, பாலின்ப வேறுபாடுகள் பற்றிய அறிமுகக் கல்வியைப் பாடசாலைவரை விரிவாக்கியுள்ளது. மத ஆதிக்கம் கொண்ட நிலப்பிரபுத்துவ மதிப்புகளிடையே இந்த ஊடுருவல் புதிய கருத்துக்களை கலை, இலக்கியத்தில் கொணரவும் வாய்ப்பளிக்கிறது.

பீஷ்மரும் பெண்களும் பற்றிய ஒரு சர்சை,
யுகந்தாவிலிருந்து
*ஜராவதி கார்வே
மகாபாரதப்போர் பீஷ்ம பருவத்தில் ஆரம்பமாகிறது. இப்புத்தகத்தைப் படிக்கும் போது சண்டையின் ஆரம்பத்தில் அதை நிறுத்த பீஷ்மர் பெரிய முயற்சி எதுவும் செய்யவில்லை என்பதை நாம் முழுவதும் உணர்வோம். பீஷ்மரின் முழுவாழ்க்கையும் எந்தவித பயனுமில்லாத தியாகம். ஆனால் அவர் வாழ்வின் இந்தக் கடைசி பத்து நாட்கள் பயனின்மை மற்றும் தியாகத்தின் உச்சத்தை அடைகிறது. வாழ்க்கையில் அவருக்கு நியாயமாகக் கிடைத்த எல்லாவற்றையும் துறந்த பிறகு முதுமையின் எல்லைக்குப் போனபின்புகொளரவர்களின் படைத்தலைவராக பொறுப்பேற்க ஏன் சம்மதித்தார்? இந்தக் கேள்வி படிப்பவரை எப்போதும் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் அவருடைய வாழ்க்கை முழுவதையும் நாம் ஆராயும் போது ஒரு முடிவுக்கு வருவோம். அவருடைய கடைசி காலத்துச் செயல்கள், அவருடைய வாழ்க்கையுடன் பொருந்தியது மட்டுமல்லாமல் அவரால் தவிர்க்க முடியாமலும் போயிற்று.
* இப்பகுதி ஐராவதி கார்வே எழுதிய யுகந்தா ஒரு யுகத்தின் முடிவு) என்ற புத்தகத்திலிருந்து அதன் ஆழமும் கருத்துச் செறிவும் கருதி, பெண்"என்று இயங்கும், இயக்கப்படும் ஒரு ஜிவனை அடிப்படையாகக வைத்து எழுதப்பட்டதால் இங்கு மறுபிரசுரம் செய்யப்டுகிறது. அழகிய சிங்கரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலில் இறுதி முயற்சி என்ற இரண்டாம் அத்தியாயத்தின் ஒரு பகுதியே இது.

Page 35
-68
மனித வாழ்க்கையின் அனைத்து முயற்சிக்கும் எந்த அர்த்தமும் இல்லை எல்லா மனித வாழ்க்கையும் விரக்தியில் தான் முடியும் என்பது தான் மகாபாரதம் நமக்கு கற்றுத்தரும் பாடமா? மனிதனின் கடுமையான உழைப்பு, எதிர்பார்ப்புகள், வெறுப்புகள் , நட்பு எ ல் லாமே அற்ப மா கவும் உண்மையற்றதாகவும் காற்றில் உதிரும் காய்ந்த இலைகளாகவும் காணப்படுகின்றனவா? ஆனால் கடுமையாக உழைப்பவர்கள், கனவுகாண்பவர்கள அன்பைப் பொழிபவர்கள், வெறுப்பை உமிழ்பவர்கள் எப்போதும் மறக்காமல் இருப்பார்கள். அவர்களுடைய நினைவு தொடர்ந்து இதயத்தை துளைத்துக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் வசப்படாத ஒரு தீர்மானமான ஒரு முடிவை நோக்கிச்செல்வதை நாம் ஒவ்வொருவரும் மகாபாரதத்தைப் படிக்கும்போது பார்க்கலாம். ஒவ்வொரு வரும் தம் முடிவை அறிவானென்றும், அவனுடைய துயரமும் வெறுப்பும் நம்முடையது போல் தோன்றும். ஒவ்வொருவரின் துயரத்தின் மூலம் நாம் உலகம் முழுவதுமுள்ள துயரத்தை அறிகிறோம்.
பீஷ்மரின் வாழ்க்கை முழுவதும் வெளிப்படையான் முரண்பாடுகள் கொண்டவை. ஆனால் எல்லா முரண் பாடுகளுக்கு அப்பாலும் அவர் செய்கையிலும், யோசனையிலும் ஒரு வித ஒழுங்கு இருந்தது. பிஷ்மர் ஒரு சபிக்கப்பட்ட பிறவி, அவருடைய தோழர்கள் கங்காதேவியால் சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் பீஷ்மரோ உலகத்தில் பிறிவி எடுப்பதற்காகத் தள்ளப்பட்டவர். சில காரணங்களால் கங்காதேவியும் பூமியில் தவிர்க்கமுடியாமல் சிலகாலம் வாழ நேர்ந்தது. அதே சமயத்தில் வசித்தாவினால் எட்டு வசுக்க்ள மனித அவதாரம் எடுக்கும் படி சபிக்கப்பட்டார்கள். அந்த வசுக்கள் கங்காதேவியைப் பார்த்து நாங்கள் உங்கள் வயிற்றில் பிறக்கிறோம். பிறந்தவுடன் எங்களை கொன்று நிச்சயமற்ற உலகத்திலிருந்து விடுதலை கொடுங்கள்' என்று வேண்டிக்கொண்டனர். கங்கா தேவியும்அவ்வாறு உறுதி அளித்தாள். தேவர்கள் இந்த உலகத்தில் பிறவி எடுக்க

-69
தயாரானார்கள். கங்காதேவி ஒரு பெண்தெய்வம். எப்போதும் இளமையாக இருப்பவள். பூமிக்கே உரிய சாதாரண வரைமுறைகள் அவளுக்குப் பொருந்தாது. இந்தப் பெண் பூமிக்கு இறங்கிவந்தாள். நேரிடையாக பிரதீபா என்ற அரசனின் மடியில் போய் அமர்ந்துசொன்னாள்: "நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அரசனும் பதில் சொன்னான்: 'பெண்ணே நீ என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருந்தால், என் இடப்பக்கத் தொடையில் அமர்ந்திருக்க வேண்டும். வலது பக்கம் அல்ல. ஏனெனில் வலதுபக்கத் தொடை மகனுக்கும் மருமகளுக்கும் உரியது. எனக்கு ஒரு மகன் பிறக்கட்டும். அவனை உனக்குத் திருமணம் செய்து வைக்கிற்ேன்' கங்காதேவியும் இதற்கு ஒப்புக்கொண்டாள் பிரதீபாவிற்கு சந்தனு என்ற மகன் பிறந்தான். அவன் பெரியவனானவுடன் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் கொடுத்துவிட்டு, பிரதீபா காட்டிற்குச் சென்று விட்டான். சந்தனு மற்ற கூடித்திரிய அரசர்களைப் போல், வேட்டை யாடுவதில்விருப்பம் உள்ளவன். கங்கை நதிக்கரையில் அவன் வேட்டையாடிக்கொண்டிருக்கும் போது, ஒரு அழகான பெண்ணைப் பார்த்தான். வேட்டையாடியவன் பிடிபட்டான்! இந்தப் பெண் கங்காதேவி. அவனைத் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாள். ஆனாலும் அவளை மணக்க சில தேவ கன்னிகைகள் போல் நிபந்தனைகள் இட்டாள். "ஓ! அரசனே! நான் என் விருப்பப்படி சிலவற்றை செய்வேன். நான் செய்யும் சில செயல்கள் உங்களுக்கும் சரியாகப்படாது. அதற்காக என்னைத் தடுக்கவும், நிந்திக்கவும் கூடாது. அவ்வாறு ஏதாவது ஒரு நாள் நீவீர் செய்வீர்களானால் நான் உம்மைவிட்டு விலகிப் போய்விடுவேன்!
காதல் வசப்பட்ட அரசன் எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொண்டான். கங்கை அவன் மனைவியானாள் மகாபாரதத்தின்படி எல்லாவித சந்தோஷங்களையும் கங்காதேவி அவனுக்குத் தந்தாள். ஆனால் ஒவ்வொரு சமயமும் பிறக்கும் குழந்தையை ஆற்றுக்கு எடுத்துச்சென்று மூழ்கடித்து விடுவாள்.

Page 36
-70
சந்தனு மகாராஜா அவளுக்கு அடிமையாக இருந்ததால் , இது குறித்து ஒன்றும் கேட்க வில்லை. ஆனால் அவள் தன்னுடைய எட்டாவது குழந்தையை அவ்வாறு செய்யத்துணிந்த போது, அவனால் அனுமதிக்க முடியவில்லை. நீ ஒரு கொடூரமான பெண்! தயவுசெய்து இந்தக் குழந்தையைக் கொல்லாதே" என்று பதட்டத்துடன் கூறினான். கங்காதேவி இத்தருணத் திற்காகத்தான் காத்திருந்தாள். நான் இந்தக் குழந்தையை விட்டுவிடுகிறேன். ஆனால் நாம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நான் உன்னைவிட்டுப் பிரிகிறேன்"என்று கூறியபடி குழந்தையை எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டாள்.
மனைவியும், குழந்தையும் போனபிறகு சந்தனு மகாராஜா திரும்பவும் வேட்டையாடச் சென்றான். ஒரு நாள் கங்காதேவி அவன் முன் தோன்றி, அவனுடைய மகன் தேவவிரதனை அவனிடம் ஒப்படைத்தாள். அவன் ஒரு வாலிபனாக அனைத்து கூடித்திரிய கலைகளையும் கற்றவனாக இருந்தான். சந்தனு அவனைத் தன்னுடைய தலைநகருக்கு அழைத்துச் சென்றான். இளவரச பட்டாபிஷேகம் செய்வித்தான். தேவவிரதனின் நல்ல பழக்கவழக்கங்கள் மக்களிடையே அவனை செல்வாக்குப் பெற வைத்தது. உலகத்தைத் துறக்க வேண்டிய இந்தப் பிறவி, மிகப்பழமையான அரசபீடத்தில் அரசனாக மாட்டிக்கொண்டது.
நான்கு வருடங்கள் சென்றன. சந்தனுமகாராஜாவிற்கு முன் எப்போதும்போல் வேட்டையாட ஆசை ஏற்பட்டது. இந்த வயதான காலத்திலும் ராஜாவிற்கு ஒரு அழகான பெண்ணின் மீது மையல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் பெயர் சத்தியவதி. தசாராஜ் என்ற செம்படத்தலைவனின் பெண். இந்த முறை பெண்ணின் தகப்பனான செம்படத் தலைவன் அவளைத் திருமணம் செய்கொள்ள ஒரு சத்தியம் செய்யும் படி கேட்டுக்கொண்யுான். அந்தச் சத்தியம் முழுக்கமுழுக்க நடைமுறையில் இருக்கக்கூடிய உலக ரீதியானது. அதனால் தேவவிரதனின் வாழ்க்கை புதிய வழியில் திரும்பியது.

-71
‘என் பெண்ணை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஆனால் அவள் மகன் தான் அடுத்த அரசனாவான் என்று எனக்கு சத்தியம் செய்து தரவேண்டும்' என்றரன் செம்படத்தலைவன். சந்தனுவால் இந்த நிபந்தனையை ஏற்க முடியவில்லை. துக்கத்துடன் தன் தலைநகருக்கு திரும்பினான். தன் தந்தை துக்கத்தில் ஆழ்ந்திருப்பதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள தேவவிரதன் முயற்சி செய்தான். சந்தனு பதிலோ மழுப்பலாக இருந்தது "மகனே, நான் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது, அரசாளும் சகல திறமைகளும் வாய்ந்த நீ இருக்கும்போது. ஒரே ஒரு விஷயந்தான் என்னை உறுத்துகிறது. நீ என் ஒரே புதல்வன். உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நமது அரசு என்னாகுமோ? இளவரசன் தந்தையின் அந்தரங்க உதவியாளர்களைக் கூப்பிட்டு முழு கதையையும் தெரிந்து கொண்டான். சந்தனுவிடம் சொல்லாமல் மந்திரியுடனும் மற்றும் சில அலுவலர் களுடனும் செம்படத்தலைவன் தசாராஜைப் போய்ப் பார்த்தான். அவன் மகள் சத்தியவதியைத் தகப்பனாருக்காகப் பெண்கேட்டான். தசாராஜா தன் நிபந்தனைகளை தேவவிரதனிடம் கூற, தேவவிரதன் அங்கு கூடியுள்ள மக்களிடம் நான் இந்த ராஜ்ஜியத்தைக் கோரமாட்டேன்' என்றான். இதைக் கேட்டும் தசாராஜா திருப்தி அடையவில்லை. நீவீர்சொல்வது சரிதான். ஆனால் உமக்குப் பிறக்கும் புதல்வர்கள் ராஜ்ஜியத்திற்காக என் பெண்ணுடைய புதல்வர்களுடன் சண்டையிடலாம் அல்லவா? உடனே இனவரசன்இன்னொரு சத்தியமும் செய்தான். அது முதல் சத்தியத்தைவிடச் சிரமமானது " செய்துகொள்ளாமலேயே என் வாழ்நாளைக் கழித்து விடுவேன்”
நான் திருமணம்
என்றான் இந்தக் கடுமையான சத்தியத்தால், தேவவிரதனை எல்லோரும் பீஷ்மர் அற்புதமான செயலை செய்யத் துணிந்தவன்-என்று அழைத்தனர். தசாராஜா திருப்தி அடைந்தான். தன் பெண்ணை பீஷ்மரிடம் ஒப்படைத்தான். பிஷ்மரும் 'அம்மா வாருங்கள்' என்று அவளைத் தன் தேரில் நாட்டின் தலைநகருக்கு அழைத்துக் சென்றார். தன் தந்தைக்கு மணம் முடித்து வைத்தார்.

Page 37
-72
இந்த அசாதாரண தியாகத்தினால், சந்தனு சந்தோஷத்துடன், பீஷ்மன் தான் எப்போது இறக்க வேண்டுமென்று நினைக்கிறானோ அப்போது இறக்கலாம் என்ற வரத்தை அளித்தான். பல அண்டுகளுக்குமுன் "புரு" என்ற அரசன் தன் இளமையை தன் வயதான தந்தைக்காக மாற்றிக்கொண்டான் ஆனால் பிருவின் தியாகம் தற்காலிக மானது. அதனால் தேவைக்கு அதிகமான வெகுமதியையும் பெற்றான். புரு எல்லோரையும் விட இளைய புதல்வன்; அவன் தந்தை அரசை மற்ற சகோதரர்களிடமிருந்து பறித்து அவனுக்குக் கொடுத்தான். ஆனால் இந்தத் தியாகத்தினால் பிஷ்மருக்குக் கிடைத்தது என்ன? விரும்பும்போது இறப்பு பீஷ்மரின் தியாகம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்யப்பட்டது. ஏன் அவருக்கே தெரியாது, அவர் ஒரு சபிக்கப்பட்ட பிறவி என்பது. ஆனால் கங்காதேவி இந்த ரகசியத்தை சந்தனுவிடம் சொல்லியிருந்தாள். முந்தைய பிறவியைப்பற்றி தெரியாமலே பீஷ்மர் இருப்பதாக நாம் நினைத்தாலும், சந்தனுவின் வரம் பீஷ்மருக்கு புதிய அர்த்தத்தைத் தரும். அவர் சாதாரணமாக இந்த உலகத்தில் பிறந்திருந்தால், பிறவியிலிருந்து தப்பிக்க முயற்சித்திருப்பார் சீக்கிரம் விடுபட முயன்றிருப்பார். அரசபதவி, திருமணம் இவற்றிலிருந்து விடுதலை , விருப்பப் பட்டபோது இறப்பு என்றெல்லாம் இருந்ததால், பீஷ்மர் இந்த உலகத்தை விட்டுப்போகசுதந்திரமாக இருந்தார். கூண்டு பறை விடுதலையைக் கண்டுபிடிக்கத்தான் செய்தது. ஆனால் பீஷ்மருடன் உருவான விதியால், பீஷ்மர் தளையிலிருந்து திரும்பவும் விடுபடமுடியாமல் போய்விட்டது.
சத்தியவதிக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது சந்தனு இறந்து விட்டான். பிஷ்மர் தன் இளம்வயதான சிறிய தாயாரையும், சிறிய குழந்தைகளையும்விட்டுப் பிரிய முடியாமல், வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளைச் சந்திக்கத் தயாரானார். இரண்டு தலைமுறைகளுக்கு அவர் அரசனாக இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக- அரசபரிபாலனம் சரிவர

-73
நடத்திட அதிகாரத்தை எடுத்துக்கொண்டார். தான் திருமணம் செய்து கொள்ளா ததால், இரண்டு தலைமுறைகளுக்கான மணப்பெண்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. சத்தியவதியை அழைத்துவந்து தன் தந்தைக்கு மணமுடித்து வைத்த நாள், அவர் பின்னாளில் உள்ள வாழ்க்கைக்கு முன்னுரையாக அமைந்துள்ளது. விசித்திரவீரியன், திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் முதலியவர்களின் திருமணங்கள் பீஷ்மர் பொறுப்பில் நடந்தன. குழந்தைகள் இல்லாத பிரம்மச்சாரி, கடைசிவரைக்கும் தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் குழந்தைகளைச் சுமப்பதிலேயே கழிக்க வேண்டியிருந்தது. கடைசி வரை, பீஷ்மர் இந்தக் தொல்லைகளிலேயே இருந்தார்.
சத்தியவதியின் முதல் புதல்வன் பட்டாபிஷேகம் செய்துகொண்டான். ஆனால் அவன் சீக்கிரமாகவே ஒரு சண்டையில் இறந்துவிட்டான். இரண்டாவது புதல்வன் விசித்திரவீரியன் மிகச் சிறிய வயதிலேயே அரசனானான். அவனுக்கு உடனடியாக திருமணம் செய்யவேண்டுமென்று பீஷ்மர் நினைத்தார். காசி நாட்டின் மூன்று ராஜகுமாரிகளின் சுயம்வரத்திற்குச் (கணவனை மணப்பெண் தேர்ந்தெடுக்கும் சடங்கு) சென்று பிஷ்மர் மூவரையும் கடத்திக்கொண்டு வந்தார். அம்பை என்கிற மூத்த பெண், தான் சால்வன் என்ற ராஜகுமாரனிடம் மனதைப் பறிகொடுத்ததாகச் சொன்னாள். அவர் அவளை அவனிடம் அனுப்பி வைத்தார். விசித்திர வீரியனுக்கு மற்ற இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்.
அந்தப் பெண்கள் காசியிலிருந்து ஹஸ்தினாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள். அதில் அம்பை சால்வனை மணப்பதற்கு விருப்பம் தெரிவித்தாள். அவனிடம் அனுப்பப்பட்டாள். அவள் காசியிலிருந்து சால்வனைப் போய்ப்பார்க்க சில வாரங்கள் ஓடிவிட்டன. இத்தனை நாட்கள் இன்னொருவரின் பொறுப்பில் உள்ள பெண்ணை

Page 38
-74
திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி சால்வன் அவளைத் திருப்பி அனுப்பிவிட்டான். அம்பை பீஷ்மரிடம் சென்று நீங்கள் என்னைக் கடத்தி வந்ததால், நீங்கள் தான் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என்று கேட்டாள். பிரமச்சாரியாக இருப்பதாக பிரதிக்ஞை செய்திருப்பதால் பிஷ்மர் மறுத்தார். இறுதியில் புறக்கணிப்புக்கு ஆளான, அவமானம்டைந்த, பாதுகாப்பு அற்ற அம்பை தன்னை எரித்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாள். இந்தத் தருணம் வரை பீஷ்மரின் வாழ்க்கையை குற்றம் சொல்ல முடியாது. யாரும் அவரைச் சபித்தபடி இறக்கவுமில்லை. அவர் தீங்கிழைத்த முதல் பெண் அம்பைதான். பின்னால் இன்னும் அதிகமானவர்கள் இருந்திருக்கிறாார்கள்.
விதித்திரவீரியன் குழந்தைப்பேறு இல்லாமல் உடனே இறந்துவிட்டான். சத்தியவதிக்கு தன் மக்களைப் பற்றிய நம்பிக்கை போய்விட்டதோடல்லாமல் "குரு பரம்பரையே இத்துடன் அழிந்து விடுமோவென்ற நடுக்கத்தையும் உண்டாக்கியது. பிஷ்மரைப் பார்த்து இரக்கத்துடன் அவருடைய பிரதிக்ஞையைக் கைவிடும்படிக் கேட்டுக் கொண்டாள். அரசை ஏற்றுக்கொண்டு பரம்பரையைத்தொடர்ந்து ஏற்படுத்துமாறு வேண்டிக் கொண்டாள். அது முடியாவிட்டால், அவருடைய சகோதரன் மனைவிகளின் மூலமாவது குழந்தைகளை உண்டாக்கும் படி கேட்டுக் கொண்டாள். பீஷ்மர் மறுத்து விட்டார். ஒரே வழிதான் இனி உண்டு. வியாசன் என்ற பெயரில் சத்தியவதிக்கு ஒரு புதல்வன் உண்டு. சந்தனுவைத் திருமணம் செய்து கொள்வதற்குமுன் ஒரு பிராமணன் மூலம் அவளுக்குப் பிறந்தவன். இவன் விசித்திவீரியனுக்கு ஒன்றுவிட்ட சகோதரனாக இருப்பதோடல்லாமல், அவனுடைய மனைவிகளுக்கு மைத்துனனாகவும் உள்ளான். பீஷ்மரின் ஒப்புதலுடன், இறந்த அரசன் பொருட்டு வாரிசு உருவாவதற்கு, வியாசனை பிள்ளைப் பேறு உண்டா க்குவதற்கு அழைக்கலாமென்று முடிவு செய்தாள். அவள் மூத்த மருமகளிடம் சென்று சொன்னாள்.

-75
"பெண்ணே, இன்று இரவு உன் மைத்துனனுக்காகக் காத்திரு புரியாத இந்த வார்த்தையைக் கேட்டு, அந்தப்பெண் ஆவலுடன் காத்திருந்தாள். வரப்போவது பீஷ்மரா அல்லது வேறு யாராவது குருகுலத்தின் தலைமைப் போர்வீரனா என்று காத்திருந்தாள். தலைமுடி சரியாக வாரப்படாத, சிகப்பு விழிகளுடன் கூடிய ஒரு கறுப்பு மனிதன் தீடீரென்று அவளை நெருங்கினான். அவள் மயங்கி விழுந்து விட்டாள். அவர்களுடைய உறவில்-திருதராஷ்டினன்-குரு டனாகப் பிறந்தான். சத்தியவதி வியாசனை இரண்டாவது அரசியிடம் அனுப்பினான். இந்தப்பெண் வியாசனின் கொடூரமான் உருவத்தைப்பார்த்து, வெளிறிப்போன தோற்றத்தில் பயத்துடன் இருந்தாள். அவளுக்கு சோகை பிடித்த தோற்றத்தில் பாண்டு பிறந்தான். மூன்றாவது முறை வியாசனை அனுப்பப்போவதை அவர்கள் அறிந்தவுடன், அவர்களுக்குக் பதிலாக ஒரு பணிப்பெண்ணை படுப்பதற்க ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பெண்ணிற்கு பிறந்த புதல்வன் தான். விதுரன்!
கண்குருடான திருதராஷ்டினனுக்கு பீஷ்மர் பலகாத தூரமுள்ள இடத்திலிருந்து ஒரு ராஜகுமாரியை மணமுடித்தார். அந்தப் பெண் தன் கணவர் குருடன் என்பதைக் கேள்விப்பட்டவுடன், வாழ்நாள் முழுவதும் தன் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டாள். பருமனும் இளமையும் இல்லாத குந்தியையும், அழகான மாத்திரியையும் ஆண்மையற்ற பாண்டுவிற்கு மணமுடித்து வைக்கப்பட்டார்கள். பாவம் மாத்திரி, அவள் இளமையாக இருக்கும் போதே, கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிரைத் துறந்தாள். எப்படியெல்லாம் இந்தப் பெண்கள் துன்பப்பட்டார்கள். எப்படியெல்லாம் அவர்கள் பீஷ்மரை சபித்திருப்பார்கள்! அவர்தான் அவர்கள் இழிவிற்கும் காரணம். அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டு குருகுலத்தின் முக்கியமான தலைவராக பீஷ்மர் இருந்தார். தன் வீட்டை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் இந்த அரசிகளுக்கு இழுக்கையும்

Page 39
-76
அவமானத்தையும் ஏற்படுத்தினார். மக்கள் குந்தி மாத்திரி அல்லது காந்தாரியைப் பற்றி என்ன வெல் லாம் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்று எதுவும் சொல்ல வில்லை. காசி தேசத்து ராஜகுமாரிகளுக்கு இழைத்த கொடுமைக்காக பீஷ்மர் சிசுபாலனிடம் அவமானப்பட்டார். யுதிஷ்டிரன் (தருமபுத்திரன் என்றும் குறிப்பிடலாம்) ஒரு யாகம் நடத்தினான். யாருக்கு முதல் மரியாதை என்பதைக் குறித்து சச்சரவு நடந்தது. எல்லா பெரிய அரசர்களையும் அழைத்திருந்தனர். பீஷ்மரின் ஒப்புதல்படி, பாண்டவர்கள் கிருஷ்ணனு க்கு முதல் மரியாதை தர லாமென்று தீர்மானித்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்யத் தொடங்கியவுடன், சிசுபாலன் எதிர்ப்புத் தெரிவித்தான். 'ஒரு வெளி நபரை மரியாதை செய்வதற்குப் பதிலாக, பீஷ்மருக்கு மரியாதை செய். அவர் உங்கள் குடும்பத்திற்கே முத்தவர்' இதற்கு பதில் சொல்லமுடியாது. கிருஷ்ணன் கூட இதை எதிர்த்து பதில் சொல்லமுடியாது. ஆனால் பீஷ்மரே எழுந்து, எப்படி கிருஷ்ணன் எல்லா விதங்களிலும் இதற்கு தகுதியானவன் என்பதை விவரித்தார். சிசுபாலனோ பொறுமை இழந்து ஆத்திரத்துடன் பீஷ்மரே உமது முழு வாழ்க்கையும் கூடித்திரிய குலத்தை இழிவுபடுத்த பயன்பட்டுவிட்டது. அம்பை சால்வனுக்குத்தான் என்று தெரிந்தபின்னும், நீர் அவளை கடத்திக்கொண்டு வந்தீர். உன் சகோதரன் துறவி மனப்பான்மை உடைய அரசன் அவளை மணக்க மறுத்து விட்டான். அதனால் அவள் உம்மை நாடி வந்தாள். ஆனால் நீரோ அவளை ஒதுக்கி விட்டீர். உம் சகோதரன் இறந்தபிறகு உரிமைப்படி அவனுடைய ராணிகள் உம்மைச் சோர்ந்தவர்கள். ஆனால் நீரோ அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ரகசியமாக ஒரு பிராமணனை வைத்திருந்தீர். நீர் பதிவிரதன் அல்லன், ஆண்மை இல்லாதவன். இப்போதோ முதல் மரியாதை பெறுவதற்கு உரியவனாக நீர் இருந்தாலும், ஏற்றுக்கொள்ள நீர் மறுக்கிறீர்கள். கிருஷ்ணன் புகழைப்பாடுகிறீர்"
நல்லகாலமாய் பீஷ்மர் துரியோதனனுக்கும் தருமனுக்கும்

-77
மணப்பெண்ணைத் தேடவில்லை. அந்தத் தலைமுறையில் அவரால் எந்தப் பெண்ணும் துன்பப்படவில்லை. ஆனால் அரசவையில் மூத்தவராக அவர் வீற்றிருந்தாலும், ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அகெளரவத்தைத் தடுத்து நிறுத்த அவர் விரலைக்சுட அசைக்கவில்லை. திரெளபதி திருதராஷ்டிரனுடைய அரசவைக்கு இழுத்துவரப்பட்டேபாது, விதுரன்தான் குறுக்கிட்டான். அவன் திருதராஷ்டிரனின் இளைய சகோதரன். அதையும் தவிர அவன் ஒரு அடிமையின் புதல்வன். இன்னொரு விதத்தில் பீஷ்மர் இதுமாதிரியான ஒரு அவலமான காட்சியைத் தடுத்து நிறுத்த அதிகாரம் பெற்றிருந்தார். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பதில், அவர் எது தர்மம் எது தர்மமில்லை என்பதைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். பெண்ணைப் பெருமைப்படுத்தும் விதமாக மகாபாரத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால் பீஷ்மரை போல் வேறு யாரும் கடுமையாக இருந்ததில்லை. இந்தக் கொடுமைகளை வேண்டுமேன்றே பீஷ்மர் செய்தாரென்று நாம் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் அவர் சிரத்தை எடுத்துக்கொள்ளாதவராக இருந்தார். குருவம்சம் தொடர வேண்டுமென்ற தீவிரத்தினால் அவர் சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாமா? அவர் தன்னை முழுவதும் தியாகம் செய்துகொண்டவர். "தனக்காக அவர் வாழாதவர். இந்தப் பெருமைகளெல்லாம் பெண்கள் விஷயத்தில் மனிதாபிமானமற்று நடந்து கொண்டதை நியாயப்படுத்துமா? தனக்குசில காரியங்களை செய்துகொள்வதை கடுமையாக கண்டிப்பவர், மற்றவர்களுக்கு அக்காரியங்களை செய்வது சரி என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அல்லது மகாபாரதம் குறிப்பாகச் சொல்வது, மனித வாழ்க்கை ஒரு வருக்காக வாழ்வதாக இருந்தாலும் அல்லது சுயநலமில்லாமல் சில காரியங்களைச் செய்வதாக இருந்தாலும் மற்றவர்களுக்கு துன்பத்தைத்தரத்தான் முடியும் எனலாமா?.
சுயநலமில்லாத வாழ்க்கை என்றாலும் சுயம் எங்கோ எதையோ எதிர்பார்த்து இயங்குகிறதா? ஏன் பீஷ்மர் வியாசர்

Page 40
-78
மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு சம்மதித்தார்? மகாபாரதத்தைப் பார்க்கும்போது, தேவையான அளவிற்கு அரசவையில் இளைஞர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு மனிதனை குழந்தை பெறுவதற்கு தேர்ந்தெடுத்திருந்தால், குரு சபையில், அவர் முக்கியமான இடத்தை அடைந்திருப்பார். பீஷ்மர் தன் அதிகாரத்திற்கு இது குந்தகம் விளைவிக்கும் என்று குழம்பி இருப்பாரா? பீஷ்மரின் ஜாதகத்தில் அவர் அரசராவதற்கு எந்த கிரகமும் கூடிவரவில்லை. ஆனால் நிச்சயமாக அதிக ஆண்டு அதிகாரத்துடன் ஆள நிறைய நட்சத்திரங்கள் கூடியிருந்தன. வியாசரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், பீஷ்மர் அதிகார பலத்தை தனக்குள் வைத்துக்கொள்ள உதவி செய்திருக்கலாம். அதே சமயத்தில் தன் பிரதிக்ஞைக்கு உண்மையாகவும் இருந்திருக்கலாம். அரசியல் பின்னணியில் அவர் செய்கைகள் நியாயமானதாக இருந்தாலும் மனித தர்மத்தின் படி நிந்திக்கக்கூடியவையே.

குழந்தைகளின் அறிவுத்திறனிலும் ஆளுமையிலும்
இரத்த உறவு திருமணங்களின் தாக்கம்.
குலவீரசிங்கம் வாசுகி
பொதுவான நடைமுறையிலும் சரி, அறிஞர்கள் மத்தியிலும் சரி, குழந்தைகளின் அறிவுத்திறனிலும் ஆளுமையிலும் பாரம்பரியத்தின் (Hereditiary) தாக்கம் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நமது கிராமங்களில் குலத்தளவே ஆகுமாம் குணம் " தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை” போன்ற பழமொழிகள் பல வழக்கில் உண்டு. ஒரு குழந்தையின் அறிவுத்திறனையும், ஆளுமையையு ம் நிர்ணயிப்பது பாரம்பரியமா சூழலா என்பது பல்வேறு சமூக விஞ்ஞானிகள் மத்தியில் நீண்ட கால சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட ஒன்று. கால்டன். (Galton)என்ற விஞ்ஞானி அறிவுத்திறனும் ஆளுமையும் பாரம்பரியமாகத்தான் வருகிறது என்று உறுதிபடக் கூறுகிறார். ஆனால் அகப்பண்புகளுக்குப் புற வாழ்வுக் கூறுகளே காரணம் என்றும் கோட்பாட்டாளர்கள் (Behaviourist) அதை முற்றாக மறுக்கிறார்கள். சில குறிப்பிட்ட சமூக வட்டங்களிலும் பலர் படித்தவர்களாக அறிவுஜீவிகளாக இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு அறிவை வளர்ப்பதற்கான சூழலும் வாய்ப்புகளும் இயற்கையாகவே அமைந்தமையும், படிக்க வேண்டும் என்ற குடும்ப நிர்ப்பந்தமுமே என்கிறார்கள். அதுமட்டுமன்றி அவர்கள் மேலும் வலியுறுத்துவது ஒரு குழந்தையின் அறிவுத்திறனும் ஆளுமையும் அது வாழும் சூழலிலேயே தங்கியிருக்கிறது. என்றும் சூழலை மாற்றுவதன் மூலம் மேற்படி அறிவையும், ஆளுமையும் செம்மைப்படுத்த முடியும் என்ற கருத்தையே. இவர்களின் (Behaviourist) இன்னொரு முக்கிய கருத்து ஒரு குழந்தையினதோ மனிதர்களினதோ அறிவுத்திறனை அளக்க (p - II II gil . அப் படியே அளந்தாலும் அது யதார்த்தபூர்வமானதாக அமையாது. அறிவுத்திறனை அளக்க பயன்படுதும் எல்லாச் சோதனைகளும் (Intelligencetests)ஒரு

Page 41
-80
மாணவி பரீட்சையில் செயல்படும் ஆற்றலை தான் (Ability to perform the test)G6) of Lu(55g/dipGg5 6pful -916) 16ffair முழமையான அறிவுத்திறனை அல்ல. ஆனால் அறிவுத் திறனை அளக்கும் முறைகள் நீண்டகாலமாக சில சமூக தேவைகள் காரணமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வித்தேவைகள் தொடர்பாக மாணவர்களை இனம்கண்டு வகைப்படுத்தவும் உகந்த முறையில் அவர்களை நெறிப்படுத்தவும் இத்தகைய அறிவுத்திறன் சோதனைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு மனிதனின் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையான காரணிகள் (Raw materials) பிறப்பு மூலம் கிடைக்கப்பெற்றாலும் அது வளர்ந்து பரிமளிப்பதும், வளராமல் முடங்கிப் போவதும் அவள் வாழும் சூழலை பொறுத்தே அமையும் என்பது முக்கியமான ஒரு கருத்தாகும். ஒரு குழந்தைக்கு பாரம்பரியம் மூலம் கிடைக்கும் ஜீன்களுக்கும் (Genes)சூழலுக்கும் இடையே பல்வேறு விதமான தொடர்புகள் காணப்படுகின்றன. ஒரே குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளாக இருப்பினும் அவர்களின் அறிவுத்திறனும் ஆளுமையும் ஒருவருக்கொருவர் மாறுபட்டதாக இருக்கும். இதற்கு காரணம் ஒரே குடும்பமாக இருந்தும் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலை அமைவதில்லை. அவர்கள் படிக்கும் பாடசாலைகள் வேறுபடலாம், அல்லது ஒரு குழந்தை பாடசாலைக்குப் போகும் ஒரு முக்கிய காலகட்டத்தில் நோய்வாப்பட்டிருக்கலாம். இதனால் அதன் வளர்ச்சியில் ஒரு பின்னடைவு உண்டாகி இருக்கலாம். இது போன்ற காரணங்களை தவிர வேறு முக்கிய காரணிகளும் சில உள்ளன. ஒரு குழந்தை கருவில் உருவாான சமயத்தில் பல்வேறு சூழல் காரணங்களால் அந்தக் கரு பாதிக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக சிபிலஸ் (Syphilis) போன்ற பால் வினை நோய் களோ, கருவைச் சுமந்துகொண்டிருக்ககும் போது தாயார் உட்கொண்ட மருந்துகளில் ஏதாவது கருவை பாதிப்புக்குள்ளாக்சி இருக்கலாம்.

-81
இதுவே இரட்டைக்குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மாற்று வியாதிக்கு (Transfusional Syndrome) அதாவது ஒரு குழந்தை மூலம் மற்ற குழந்தைக்கு நச்சுத்தன்மையை (Toxic effect) உண்டாக்குவதன் மூலம் இரத்த ஓட்டத்தை பாதிக்கச் செய்யலாம். இது போன்ற காரணிகளால் கருவிலிருக்கும் போது கூட ஒரு குழந்தையின் சூழல், மறுகுழந்தையிடமிருந்து வேறுபடலாம். அதன் காரணமாக அறிவுத்திறனும், ஆளுமையும் மாறுபட்ட பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படலாம்.
எனவே ஒரு குழந்தையின் அறிவுத்திறனும் ஆளுமையும் பாரம்பரியம் என்ற ஒரே ஒரு காரணியால் மட்டுமன்றி வேறு பல காரணிகளாலும் தாக்கத்துக்குள்ளாக்கப்படுகின்றது. பிறப்பு மூலம் ஒரு குழந்தையின் அறிவுத் திறன், ஆளுமை போன்றவற்றிக்கான அடிப்படை மூலப் பொருட்கள் உருவாக்கப்படுகிறதே ஒழிய அவற்றை வளர்ப்பதில் சூழலே பெரிதும் பங்களிப்புச் செய்கிறது.
நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது குறிப்பாக தென் இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னமும் பலமாக செல்வாக்கு செலுத்துகிற ஒரு சமூக வழக்கமாக உள்ளது. மேற்படி சமூகங்களில் இத்தகைய திருமணங்கள் இரத்த உறவு, கேள்மை ( நட்புறவு) என்பவற்றை தலைமுறை தலைமுறையாக மீழ ஸ்தாபித்து வருகிறது. இந்திய இலங்கை திருமண முறையை ஆராயும் ஒருவர் இரத்த உறவும் ஏனைய கேள்மைகளும் அடிக்கடி பின்னிப் பிணைந்திருப்பதை காண்பர். ஆனால் வட இந்தியாவில் காணப்படும் வழக்கம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. வெளி உறவுத் திருமணங்களே வட இந்தியாவில் பரவலாகக்காணப்படுகிறது. ஆனால் வட இந்திய முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மத்தியில் ஒரு ஆணின் தந்தை வழிச் சகோதரரின் மகளை மணப்பது என்ற முறை வழக்கில் உண்டு. ஆனால் தென்இந்தியாவிலும் இலங்கையிலும் இம் முறை வழக்கில் இல்லை. வட இந்தியாவுடன் ஒப்பிடும் போது உறவு வழித்திருமணங்கள் செல்வாக்கு

Page 42
-82
செலுத்துகின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் ஒப்பீட்டு ரீதியில் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பு உள்ளது. அதுமட்டுமன்றி
ஒரு பெண் தான் புகுந்த வீட்டில் இலகுவாக தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறாள். ஏனெனில் அவள் புகுந்த வீடு அவளின் மாமா வீடாகவோ மாமி வீடாகவோ இருக்கும் காரணத்தால், சட்டப் பாதுகாப்பு பெண்ணுக்கு அதிகம் இல்லாத காரணத்தால் அந்த நாளில் இத்தகைய உறவுகள் ஒரு பெண்ணுக்கு மனரீதியாக மிகுந்த பலத்தை கொடுத்தது, அவளின் குடும்பத்தை செவ்வனே நடாத்தித் செல்ல வழிவகுத்தது.
கீழே கொடுக்கப்பட்ட பன்முக மாதிரி, ஒரு குழந்தையின் அறிவுத்திறன் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் பல்வேறு காரணிகளை இனங்காண உதவுகிறது. ”
பெற்றோரின் சமூக குழந்தையின் அந்தஸ்து அறிவுத்திறன்.
Α பெற்றோரின் குழந்தையின்/ அறிவுத்திறன் சூழல்
А
பெற்றோரின் குழந்தையின்
பாரம்பரியம் - >பாரம்பரியம்
மேற்படி வாதப் பிரதிவாதங்களின் பின்னணியில் “ஒரு குழந்தையின் அறிவுத்திறன் ஆளுமை என்பவற்றை நிர்ணயிப்பது குழந்தையின் பாரம்பரியமே” என்ற எடுகோளை (Hypothesis) ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன். மேற்படி எடுகோளை

-83
பரிசீலிப்பதற்காக சென்னை மாநகரவட்டாரத்தில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகள் மத்தியில், இரத்த உறவு திருமணம் மூலம் பிறந்த 30 குழந்தைகளையும் வெளி உறவுத் திருமணம் மூலம் பிறந்த 30 குழந்தைகளையும் (ஆண், பெண் இருபாலாருக்கும்) மாதிரிகளாக தெரிவு செய்தேன்.
மேற்படி மாதிரியின் வயது அமைப்பு 12-17 வயது என்ற அடிப்படையில் ஏறுமாறாக (Random) தெரிவு செய்யப்பட்டது. Binet என்ற விஞ்ஞானியின் கருத்துப்படி அறிவுத்திறனுக்கும் வயதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ஒரு மனிதனின் அறிவுத்திறன் உச்சத்தில் இருப்பது அவளின் 16-20 வயதுக்கிடையில் கீழ்க்கண்ட வரைபடம் (Graph) மூலம் இது விளக்கப்படுகிறது.
60
வயது (வேறு, வேறு ஆட்கள்)
எனது ஆய்வு முறையில் கேள்விக் கொத்தே முக்கிய அம்சம்
வகிக்கிறது. குழந்தைகள் பற்றிய பொது விபரங்கள் அவர்களது பெற்றோர்களிடமிருந்து கேள்விக்கொத்து (Questionnaire) மூலம் திரட்டப்பட்டது.

Page 43
-84
அதன் பிறகு குழந்தையின் அறிவுத்திறனை அளப்பதற்கு "Gpralair' (Raven's Standard Progressive Matrices) 6Tait a pringi) வடிவமைக்கப்பட்ட சோதனைப் படிவத்தை பயன்படுத்தினேன். இப்படிவம் ஒரு குழந்தையின் கவனிப்புத்தன்மையையும் (Observation), Gig,6flourteor dig56060760uuyid (Clear thinking) gafraoi Du760T egy fia,5 5pá5605uyúD (Accurate IntellectualWork) மதிப்பிட உதவுகிறது. அதில் உள்ள 5 பிரிவுகளும் (A,B,C, D and E) ஐந்து விதமான அறிவுசார்ந்த திறமைகளயை மதிப்பிட உதவுகிறது. ஆகவே குழந்தையின் முழுமையான அறிவுத்திறனையும், வளர்ச்சியையும் மதிப்பிட இந்த சோதனை உதவுகிறது.
குழந்தையின் ஆளுமையை மதிப்பிடுவதற்கு HSPQ(High School Personality Questionnaire) G35 air and Gj, ngi gy பயன்படுத்தப்பட்டது. ஒரு குழந்தையின் முக்கியமான பண்பியல்புகளை கண்டறிய இக் கேள்விக் கொத்து பெரிதும் உதவுகிறது. ஒரு குழந்தையின் குண இயல்புகளை கண்டறியுவும் அவற்றை செம்மைப்படுத்தவும் ஆசிரியர்களுக்கும், ஆலோசனை நல்குவோருக்கும், (Counselors) இது பெரிதும் உதவுகிறது.
ஒரு வருடம் தொடர்ந்து என்னுடைய ஆய்வின் படி பேறுபேறுகள் பின்வரும் அவதானிப்புகளுக்கும் முடிவுகளுக்கும் என்னை இட்டுச் சென்றன. என்னுடைய மேற்படி ஆய்வின் பெறுபேறுகள் குழந்தையின் அறிவுத்திறனையும் ஆளுமையையும் நிர்ணயிக்கும் காரணிகள் தொடர்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் விவாதத்தின் ஒரு அங்கமாகவே நோக்கப்படவேண்டும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஆய்வுகள் மேற்படி விடயம் தொடர்பாக மேலும் தெளிவை உண்டாக்கலாம்.
இரத்த உறவுத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளின் அறிவுத்திறனையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரத்த உறவுத்திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளின் அறிவுத்திறன்

-85
மேலோங்கிக் காணப்பட்டது. ஆனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு குழந்தையின் அறிவுத்திறனுக்கு காரணியாக அமைவது அதன் பாரம்பரியமே என்ற முடிவுக்கு வர இயலாது. ஏனெனில் அறிவுத்திறன் என்பது திருமண முறை என்பதில் மட்டுமன்றி அக்குழந்தை வாழும் சூழல் படிக்கும் பாடசாலை படிப்பதற்கு ஏதுவான வசதிகள் வாய்ப்புகள் போன்றவற்றிலும் தங்கியிருக்கிறது. இரத்த உறவு முறைத் திருமணங்களால் ஒரு குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கப்படுகின்றது என்றும் இத்தகைய திருமணங்களை எதிர்ப்பவர்களின் வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. "ஸ்ரேன’ (Stem) என்பவரது இலகுவான வரவிலக்கணம் "அறிவுத்திறன் என்பது நவமான நிலமைகளுக்கு மனரீதியாக இசைவாக்கமடைசிற(பொருந்திப்போகிற) வல்லமை” என்கிறது.
என்னுடைய மேற்படி ஆய்வின் மூலம் நான் கண்டறிந்த இன்னுமொரு விடயம் ஒரு குழந்தையின் அறிவுத்திறன் அக்குழந்தை வாழும் குடும்ப அமைப்பிலும் (Family Type) குடும்ப அளவிலும் (Family size) அக்குழந்தையின் பிறப்பு வகையிலும் (Type of Birth) தங்கியுள்ளது. கூட்டுக்குடும்பம், விரிவுபடுத்தப்பட்ட தனிக்குடும்பத்தில் (Nuclear family) வாழும் குழந்தையின் அறிவுத்திறன் அதிகமாக காணப்பட்டது. கூடடுக்குடும்பத்தில் காணப்படும் ஒரு ஒழுங்கற்றதும், கட்டமைப்பற்றதுமான ஒரு சூழ்நிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழும் குழந்தைக்கு உண்டாகும் இடையூறுகளும், தலையீடுகளும் தனிக்குடும்பத்தில் வாழும் குழந்தையை விட அதிகமாக இருப்பதும் இன்னொரு காரணமாக இருக்கலாம். அத்தகைய ஒரு சூழ்நிலை குழந்தையின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு ஏதுவாக இருப்பதில்லை.
இதே போன்று நடுத்தர (Medium) பெரிய (Large) குடும்பங்களில் வாழும் குழந்தைகளை விட சிறிய (Small)

Page 44
-86
குடும்பங்களில் வளரும் குழந்தையின் அறிவுத்திறன் அதிகமாகக் காணப்பட்டது. சிறு குடும்பமாக இருக்கும் பட்சத்தில் பெற்றோரின் முக்கியமாக தாயின் அதிகப்படியான கண்காணிப்பும் அக்கறையும் அக் குழந்தைக்கு கிட்டுகிறது. அதுமட்டுமன்றி வீட்டில் நிலவும் அமைதியான கட்டுக்கோப்பான ஒரு சூழ்நிலை குழந்தையின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு ஏதுவானதாக அமையலாம். ஒரு குழந்தையின் அறிவுத்திறனை வளர்ப்பதில் ஒரு தாய் பெரும் பங்கு வகிக்கிறாள். ஒரு சிறுகுடும்பத்தின் தலைவியாக இருக்கும் ஒரு பெண் சுமக்கும் சுமைகளும், நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் மிக அதிகமாக இல்லாத காரணத்தினால் அவளால் கூடிய நேரத்தை தன் குழந்தையுடன் கழிக்க முடிகிறது. இதுவும் ஒரு குழந்தையின் அறிவுத்திறனை வளர்க்க உதவுகிறது.
இதைத்தவிர சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தையின் அறிவுத்திறன் சாதாரண பிரசவம் மூலமோ ஆயுத உதவி (Aided) மூலமோ பிறந்த குழந்தையின் அறிவுத்திறனை விட அதிகமாக காணப்பட்டது. சத்திர சிகிச்சை (Caesarian) மூலம் பிறந்த குழந்தைகள் உடலியல் ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும் குறைந்த பிரசவ பாதிப்புக்கு (Birth trauma) உள்ளாக்கப்படுகிறாள். பிரசவத்தின் போது ஏற்படும் இத்தகைய மனநெரிசலும் பிறப்பு அல்லலும் சாதாரண பிரசவம் மூலமோ, ஆயுத உதவியுடனோ பிறந்த குழந்தைகளின் அறவுத்திறன் வளர்ச்சியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம். பிறப்பு முறையினால் ஒரு குழந்தையின் அறிவுத்திறன் வேறுபடுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆளுமை !
வுட்வேர்த் (Woodworth ) என்பவரின் கருத்துப்படி "ஆளுமை என்பது ஒரு தனிமனிதரின் நடவடிக்கைகள் ஒட்டு மொத்த சேர்க்கையே ஒரு குழந்தை பிறக்கும் போதே ஆளுமையுடன் பிறப்பதில்லை, ஆனால் அக்குழந்தைக்கும்

-87
சூழலுக்கும் இடையே தொடர்ச்சியாக ஏற்படும் தொடர்புகள் அக்குழந்தையின் ஆளுமையையும் தனிமனித பண்பியல் புகளையும் வளர்க்கிறது. எனது இந்த ஆய்வின் முடிவுகள் இரத்த உறவு திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் இரத்த உறவு அல்லா திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் இடையில் 'ஆளுமையில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. ஒரு குழந்தையின் தனிமனிதப் பண்பியல்கள் மரபு வழியாக தொடர்கிற சாத்திகயக்கூறு மிக அரிதே ஒரு குழந்தையின் ஆளுமையில் அதன் பாரம்பரியம், சமூக கலாசாரப் பின்னணி பெரும்பங்கு வகிக்கின்றன. அது மட்டுமன்றி அக்குழந்தை வாழும் வீட்டின் சூழல், அது பழகும் நண்பர்கள் வட்டம், அதற்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் போன்றவை ஒரு குழந்தையின் ஆளுமையின் தாக்கத்தை உண்டுபண்ணலாம். கடுமையான மன உழைச்சல், மனத்தாக்கம், மனதை வருத்தும் துயர அனுபவங்கள், மூளையில் ஏற்பட்ட பலமான காயம், தொற்றுநோய்கள் நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டிருந்தல் போன்றவை ஒரு குழந்தையின் ஆளுமையைச் சீர்குலைக்கலாம். இத்தகைய ஆளுமையை அளப்பதற்கு கேள்விக்கொத்து. அளவீடுமுறை (Rating), செய்கைச்சோதனை (Performance test) எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க மாதிரி அனுவபங்கள் மூலம் நிறுவப்படும் வாதம் (Casehistory) போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனது ஆய்வில் நான் கண்டறிந்த மற்றொரு முக்கிய அம்சம் இரத்த உறவுத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளில் பெரும் பாலானோரிடம் பல்வேறு நடத்தை குறைபாடுகள் (Behaviour Problems) j, it goOT Lu LaoT. G. L. It gija). Ty, குழந்தைகளிடம் காணப்படும் நடத்தைக்குறைபாடுகள் பல. கை சூப்புதல், முரட்டுத்தனமான மனநிலை மாறுபாடுகள் (Temper tantrums ) ஒரு குழந்தை தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதலும் அதன் காரணமாக தேவையின்றி கத்துதல், தலையை சுவரில் மோதுதல், அழுது அடம் பிடித்தல் போன்றவையும் இதில் அடங்கும். இது தவிர ஒரு குறிப்பிட்ட

Page 45
-88
வயதுக்கு (3) மேலும் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதும் ஒரு முக்கிய நடக்கைக் குறைபாடு. உடல் ரீதியான சில குறைபாடுகளும் இத்தகைய நடக்கைக் குறைபாடுகளுக்கு ஒரு காரணமாக அமையலாம்.
இது தவிர சரியான பயிற்சியை பெற்றோர் பிள்ளைகளுக்கு அளிக்காத படியாலும் அல்லது சரியான கவனிப்பு கிடைக்காத படியாலும் இத்தகைய நடத்தைக் குறைபாடுகள் குழந்தைகளிடம் ஏற்படலாம். மேற்சொன்ன உடல்ரீதியாக நரம்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகள் உறவுமுறைத் திருமணத்தால் உண்டாவதற்கான சாத்தியக்கூறு அதிகம். குடும்பத்தில் காணப்படும் இத்தகைய குறைபாடுகள் உறவுக்குள் திருமணம் செய்யும் காரணத்தால் ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் அவர்கள் சந்ததிக்கு போய்ச்சேரும் வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில் இரத்த உறவுத் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளில் காணப்படும் நடத்தைக் குறைபாடுகளின் விகிதாசாரம் மற்ற குழந்தைகளை விட அதிகமாக காணப்படுகிறது. ஒரு குழந்தையின் உளஇயல் எதிர்காலம் (Psychological Fate) குறிப்பிடத்தக்க அளவிற்கு பெற்றோரின் மன உணர்வுகளின் நலனாலும் (Emotionalhealth)அவர்களது குடும்ப வட்டத்துக்குள் காணப்படுகின்ற சிக்கல் மிகுந்த பல்வேறு சக்திகளாலும் நிர்ணயிக்கப்படுகின்றது குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் தாக்கங்களும் அவர்களிடம் நடத்தைக் குறைபாடுகளை தோற்றுவிக் ஏதுவாகிறது. இத்தகைய குறைபாடுகள் காரணமாக மனோதத்துவ நிபுணரை நாடுபவர்களில் பெரும்பாலானோர் பள்ளியில் பயிலும் மாணவர்களே என்பது ஒரு கருத்துக் கணிப்பரில் அறியப்பட்டுள்ளது.
ஆகவே ஒரு குழந்தையின் அறிவுத்திறன் ஆளுமையை முற்றுமுழுதாக நிர்ணயிப்பது பாரம்பரியம் தான் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு குழந்தையின் அறிவுத்திறன் ஆளுமையில் பாரம்பரியத்தின் பங்களிப்பு

-89
அவசியமாகிறது. மேற்கண்ட ஆய்வை அதிகப்படுத்துவதன் மூலமோ, மாதிரிகளை வேறுவேறு சமயங்களிலிருந்து தெரிவு செய்வதன் மூலமோ அல்லது சாதாரணபிள்ளைகளினதும், அங்கவீனமான பிள்ளைகளின் ( Physically handicpped) அறிவுத்திறன், ஆளுமையை ஒப்பீடு செய்து பார்ப்பது மூலமோ மேலும் விபரங்களை அறிந்து கொள்ளலாம். இது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட எடுகோளை மேலும் தெரிவுபடுத்தும்.

Page 46
குவைத்திலிருந்து ஒரு சோகக்
கடிதம் . . . . .
றியாத் ரம்ஜான்
இன்று இலங்கையிலிருந்து ஏராளமானோர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக வருகின்றனர். இதில் பெரும் பாலானோர் வீட்டுப் பணிப்பெண்களாகும். இன்று நாம் நினைக்கின்றது போல் இவர்கள் அனைவரும் தமது தொழில் திருப்தியாக உள்ளார்கள் என்று கூறமுடியாது.
நான் குவைத் நாட்டில் ஒரு காரியாலயத்தில் (Recruitment of Manpower) சுமார் ஒன்றரை வருட காலமாக தொழில்புரிந்து வருகிறேன். எனது இந்த சேவைக்காலத்தில் இலங்கையில் இருந்து குவைத் வரும் வீட்டுப்பணிப்பெண்கள் படும் துயரங்கள், கஷ்டங்களை கண்கூடாகப் பார்த்தவண்ணம் உள்ளேன்.
இவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. எந்த ஓய்வுமின்றி வேலை செய்யும் இவர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. புதிதாய் வருபவர்கள் மொழி தெரியாமல் திணறும் பொழுது மிருகங்களைப் போல் அடி உதைகள் வாங்குகிறார்கள்.
நாட்கணக்கில் சரியான முறையில் உணவுகூட இல்லாமல் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.
15.795 தினமுரச பத்திரிகையில் வெளிவந்த இக்கடிதம் மத்திய கிழக்கிற்கு பணிபுரியச் செல்லும் இலங்கைப் பெண்களின் அவலத்துக்கு ஒரு சான்று. சம்பந்தப்பட்டவர்கள் இந்த அவலத்தை தீர்ப்பதற்கு வழி கோலுவார்களா? இதில் மகளிர் விவகார அமைச்சின் பங்கு என்ன?

-91 -
இலங்கை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இங்குள்ள ஒரே இடம் எமது "இலங்கை துரதரகம்” ஆனால் இவர்கள் சரியான முறையில் எங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை. இவர்கள்இங்குள்ளவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களாகவே உள்ளனர்.
இன்று 300க்கும் மேற்பட்ட பணிப்பெண்கள் இலங்கைத் துரதரகத்தில் ( குவைத்தில் ) அகதிகளாக உள்ளனர்.
சில பெண்கள் தமது உடம்பில் எரி காயங்களுடன் காணப்பட்டார்கள். மேலும் சில பெண்களைப் பார்த்ததும் எனக்கு எதியோப்பியர்களின் தோற்றம் தான் மனதில் பதிந்தது.
இன்று குவைத்தில் பிலிப்பைன் தூதரகம் என்றால் குவைத் நாட்வர்கள் அச்சம் கொள்கின்றனர். ஏனெனில் பிலிப்பைன் வீட்டுப் பணிப்பெண்களின் பிரச்சினைகளுக்கு அத்துதரகம் தகுந்த நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்கின்றது.
எமது தூதரக ஊழியர்கள் இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நன்றி : தினமுரசு ஜூலை 09.1995

Page 47
பால்நிலைப்பாடும் வாக்க நிலையும், பணிப்பெண்ணைத் தீமூட்டியமை.
பெண்களுக்கெதிரான வன்முறை பெரும்பாலும் ஆண்களால் இழைக்கப்படுகின்றது என்று நாம் பொதுவாகக் கூறிவந்தோம். பெண்லைவாதிகளும் இதை ஒரு பெரிய சமூக வன்முறையாகப் பார்த்து அதற்கு காரண காரியத் தொடர்புகளையும் கண்டறிய முயல்கின்றனர். அதன் ஆழ்ந்த மனோதத்துவப்பண்புகளையும் ஆய்வு செய்து அதை அகற்ற வழிவகை தேடி மிக சிரத்தையுடன் இப்பணியில் ஈடுபட்டு ள்ளனர். சமூகவியலாளர், அரசு தரப்பு, நீதித்துறையைச் சேர்ந்தோர், என்று பலரும் விழிப்படைந்துள்ளனர். ஐக்கிய நாட்டுச் சபை கூட அதற்குத் தனியாக ஒரு துறையை நிலை நாட்டி அதற்கு தொடர்பாளர், (Rapporteur ) ஒருவரைக்கூட நியமித்துவிட்டது. அப் பெண்மணி எம்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இவ்வன்முறையின் வர்க்கச்சார்பு சரிவர வெளிக்கொணரவில்லை. என்று தான் கூறு வேண்டும். வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் காவலற்ற, துணையற்ற, பணபலமற்ற, கீழ்நிலையில் உள்ளபெண்களே பெரும்பாலும் இவ்வன்முறைக்கு ஆளாவது பிரத்தியேகமாக நோக்கப்படல் வேண்டும். குடியானவப் பெண்களும், வயலில் வேலை செய்யும் பெண்களும், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களும், ஆலைகளில் வேலை செய்யும் பெண்களும், காரியாலயங்கனில் வேலை செய்யும் பெண்களும், இரண்டாந்தர வேலைசெய்யும் பெண்களும், வீட்டு வேலையில் பணிப்பெண்களாகப் பணிபுரிபவர்களும் தான் பெரும்பாலும் இக்கொடுமைக்காளக்கப்படுபவர்கள். அதிகார படி முறை நிலையில் ஒரு ஆணின் கீழ் நிலையிலிருக்கும், பெண்களும் அவர்களின் வேலை ரீதியில் கீழ்நிலைத்தொடர்பில் உள்ள பெண்களும் அன்றாடம் இந்த இம்சைக்கு அடிபணிய

-93
வேண்டி இருக்கிறது. தங்கி நிற்கும் நிலை இதற்கு ஏதுவாகிறது.
ஆனாலும் இந்த வர்க்க நிலை வக்கிரகங்கள் கட்டாயமாக பால்நிலைப்பட்டன என நாம் கூற முடியாது. நம் நாட்டில் மிக அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் இக் கூற்றுக்கு ஆதாரம். உண்ண உணவும் உடுக்கப் போதிய உடையும் கொடாது சிறு பெண் குழந்தை ஒன்றை பணிப்பெண்ணாக அமர்த்திய பெண்மணி அவளைச் சங்கிலியால் கட்டிலில் கட்டி வைத்த செய்தியைப் படித்த எமக்கு திகில் உண்டாகியது. நீதித்துறை ஆவன செய்ய முற்பட்டது ஒரு திருப்தியைத்தந்தது. ஆனாலும் மிக அண்மையில் நடந்த இன்னொரு சம்பவம் எம்மைத் திடுக்கிட வைத்து பயங்கர வேதனையையும்
தந்தது.
20 வயதுப் பணிப்பெண்ணெருத்தியை தீயிட்டுக் கொழுத்திக் கொலை செய்ததாக ஒரு எஜமானி கைது செய்யப்பட்டாள்(வீரேகசரி 3.10.95). போதிய சாட்சிய மில்லாதபடியால் இவ்வக்கிரக வன்செயலுக்கப்பால் தெரிவது வர்க்கநிலைதான். எஜமானி பணிப்பெண் என்ற உறவுமுறை வர்க்கநிலையின் பாற்பட்டது. பணபலம், ஆட்பலம், சமூகஅந்தஸ்துப்பலம், இன்னோரன் பலம், அதிகார வம்சத்தை பாதுகாக்க, பணிப்பெண்ணின் தனிமைநிலை, ஒரு விதி பலமும் இல்லாத தன்மை அவளைப் பலிக்கடா வாக்கியது. தனக்கு தீமூட்டியவர் வீட்டுக்கார அம்மா என்றும் கட்டைத்தலைமுடி உடையவர் அவர் என்றும் அவள் இறப்பதற்கு முன் கூறிய வாக்குமூலத்திலிருந்துங் கூட எஜமானி, விடுதலையாகிவிட்டாள்.
பணிப் பெண்ணின் போன உயிர் இனி வரப் போவதில்லை. ஆனாலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பணிப்பெண்களையும் எஜமானிகளையும் இச்சமூகம் கொண்டுள்ளது. நெடுங்காலத்துக்குக் கொண்டிருக்கும்.

Page 48
-94
இப்படிப்பட்ட எஜமானிகள் தொடர்ந்தும் உருவாகாமல் இருக்கத்தக்க வகையில் நாம் போராட வேண்டும். நீதிவிசாரணையும், தண்டனையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்பும் நாம் இந்த வழக்கு சரிவர விசாரிக்கப்படவில்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.
வீட்டுக்கார அம்மா இல்லா விட்டால் இந்தப் பெண்ணைத் தீயிட்டுக் பொசுக்கியவர் யார் என்பதற்கு விடை கோரும் உரிமை எமக்கு உண்டு. நாம் அறிய வேண்டிய விடயம் தானே அது! பெண்நிலைவாத அடிப்டையில் அன்றி வர்க்க பேதங்களைப் புரிந்தோர் நாம் என்பற்காக மட்டுமன்றி, சமூகப் பிரக்ஞை கொண்டு கேட்கிறோம். இப்பெண்ணைக் கொலை செய்தது யார்? இதற்குப் பதில் கூறத்தலைப்பட்டவர் அரசா? நீதித்துறையா? கொலையுண்டவரை தம் பொறுப்பில் பணிப்பெண்ணாக வைத்திருந்த வீட்டுக்கார அம்மாவும் ஐயாவுமா? அரசும் நீதித்துறையும் சமூகப் பிரக்ஞை உள்ளோரும் தயவு செய்து எமக்கும் பதில் அளியுங்கள் பதில் உங்களிடமில்லாவிட்டால் நாம் அணிதிரண்டு ஆவன செய்வதற்கு வழிகோல வேண்டும். மனித உரிமை அமைப்புக்களே, தொழிலாளர் வர்க்கத்தை பரி ரதநரிதரித் துவப் படுத்தும் தொழரிற் சங்கங்களே, பெண்ணிலைவாத அமைப்புக்களே, சமூகப்பிரக்ஞை உள்ள முற்போக்குச் சிந்தனையாளர்களே எல்லோரும் ஒன்று திரண்டு இரட்டடிக்கப்பட்ட இப்பெண்ணின் கொலையை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள். அதற்கு அவன செய்ய முன் வாருங்கள்.

சமாதானத்துக்காகப் பெண்கள் என்ற
அமைப்பின் பிரகடனம் புதிய முறையிலான பெண்களின் யதார்தத்தை தெரிதலும் நோக்குதலும் தொடர்பாக பெண்களின் கண்ணோக்கு
எமது நாடு மீண்டும் ஒரு முறைபோரினால் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அங்கு போர், இங்கு போர், இங்கு தாக்குதல்கள் என்ற கதைகள் தான் எமக்கு சொல்லப்படுகின்றன. இது இப்படித்தான் நடக்கிறது இப்படித்தான் நடக்க வேண்டும் என தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் போன்ற பொதுசன தொடர்பு சாதனங்களும் அரசியல் வாதிகளும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இந்த யுத்தத்திற்கு எந்த மாற்று வழிகளும் இல்லையா?
அழிவும் அவலமும் உறுதியற்ற நிலையும் தான் இப் போரின் விளைவுகளாகும். நாம் பெண்கள் இதை ஆரம்பிக்கவில்லை எனினும் ஒரு மகளாக தாயாக, மனைவியாக, சகோதரியாக இப்போரின் கொடிய விளைவுகளால் பாதிக்கப்படுகின்றோம். வருந்துகிறோம் . எனவே இவ்வன்முறைக்கு எப்படி நாம் பதில் கொடுக்கப்போகிறோம். எமது மெளனத்தினாலும் செயலற்று இருப்பதனாலும் நாம் இப்போருக்கு உதவுகிறோமோ? எம்மால் சமாதானத்திற்கான முயற்சிகளாக எதையாவது செய்ய முடியுமா?
ஆனால் மீண்டும் எமது நாமு சமாதானத்திற்காக வெகு தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு முடிவற்ற யுத்தத்தில் நாம் நிலைத்து நிற்கிறோம். யாருக்காக இந்தப் போர்? ஒரு நாட்டிற்காக நடத்தப்படும் போர் என எமக்குச் சொல்லப்படுகிறது. தமிழ் தேசம் சிங்கள தேசத்திற்காகு எதிராக நடத்தப்படுகிறது. ஆனால் யாருடைய இந்தச் தேசம். ஈது யாருடையது ஆயினும் இந்தத் தேசத்தில் பெண்களாகிய எமது தொடர்பு என்ன? எமக்கு சமவுரிமை நிலவுகிறதா? அல்லது ஆணாதிக்க சமூகமா? எந்த விதத்தில் நாம்

Page 49
-96
இவற்றிலிருந்து வேறுபட்டு நிற்க விரும்புகிறோம். இதை எம்மால் மாற்ற முடியுமா? ஒடுக்கு முறைகள் குறைந்து சமாதானமும் சமத்துவமும் கூடிய ஒரு சமூகத்தை நாம் எதிர்பார்க்க முடியுமா? போருக்காகத்தான் ஆண்கள் என்றால் பெண்களாகிய நாம் சமாதானத்திற்காக நிற்க முடியுமா?
இந்தத் தேசம் ஆண் சமுதாயத்தின் கட்டுப்பாட்டுக்கு இணங்கவே சட்டியெழுப்பப்பட்டது என்பது வரலாற்று ரீதியான உண்மை. கொடுமையான ஆயுதப் போராட்டம், புரட்சிகரமான வன்முறைகள் என்பன மூலம் இத் தேசவழமைகள் ஆண் தேசிய வாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இவ் ஆளுமையையும் வெளிப்படுத்துவதை தடை செய்கின்றன. இவ்வரசியல் திட்டத்தில் பெண்கள் கலாசார, உடல் ரீதியான மீள் உற்பத் தயாளராகவும், புதிய பரம்பரையை தோற்றுவிப்பவராகவும் தேசத்திற்கு ஊட்டம் கொடுப்பராக மட்டும் பார்க்கப்படுகின்றனர். ஆனால் போலியாக நியாயப்படுத்தப்படும் இம்முடிவுற்றதும் அர்த்தமற்றதுமான யுத்தத்தினால் பெண்களாகிய நாம் தான் உண்மையாக பாதிக்கப்படுகின்றோம்.
தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்கள் இப்போரினால் கண்டது என்ன? அடிப்படையில் அழிவும் சாவும் அகதி வாழ்க்கையுமே. பிரேதம் இல்லாமலே ஒரு உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அனுபவத்தையே இப்பெண்கள் பெற்றுள்ளனர்.இளம் பெண்கள் தங்கள் காதலர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர முன்னரே இழந்தள்ளனர். தென்னிலங்கை முழுவதும் பெண்கள் தமது வாழ்க்கை ஆதாரத்திற்காக வழிமுறைகளை இழந்துள்ளதுடன் பொருளாதார ரீதியில் உறுதியற்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். போரின் விளைவுகளால் அவர்களின் வாழ்க்கையின் அர்த்தங்கள், பெறுமதிகள் குறைக்கப்பட்டுள்ளன. பெண்களின் இச்சீர்குலைவினையையும் அவர்களின் வாழ்க்கை நிலைக்கான காரணத்தையும் நாம் எதிர் கொள்ள வேண்டாமா?

-97
ஏன் சிங்களத் தாய்மார்கள் தம் புதல்வர்களை போருக்கு அனுப்புகிறார்களா? கொல்லப்படுவதற்கும் முடமாவதற்குமா? அவர்கள் தமது விடயங்களை தெரிவு செய்வதற்கும் சிந்திப்பதற்கும் தெளிந்து கொள்வதற்கும் தடுப்பதற்கும் அவர்கட்கு சுகந்திரமும் உரிமையும் இல்லையா? சாவை விட்டு வாழ்வை தெரிவு செய்யவும் தன்னை அழித்துக் கொள்வதை தவிர்ப்தற்கும் அழிப்பதற்கு பதிலாக ஆக்க வேலைகளில் ஈடுபட்டு சந்தோசமாக வாழவும் அவர்கட்கு உரிமை இல்லையா? தமது புதல்வர்கட்கு எதிராகவும் புதல்விகளுக்கு எதிராகவும் ஒரு போரை நடத்த இந்த அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது. என என்றைக்காவது கேள்வி எழுப்பனார்களா?
மறுபுறம் வடக்சில் வாழும் தாய்மாரைப் பொறுத்தவரையில் புலிகளால் கட்டாய ராணுவப்புரட்சிக்காக அழைத்துச் செல்லப்படும் புதல்வர், புதல்விகளின் விதியைத் தீர்மானிக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டுளனர். புலிகளின் உறுப்பினர்களாக்கப்பட்டு அவர்களின் யுத்த இயந்திரத்தை பலப்படுத்துவதற்காக அவர்களின் சொந்தஇடங்ளிலிருந்து புதல்வரும் புதல்வியரும் காட்டிற்கு இழுத்துச் செல்லப்படும் போது பெண்கள் ஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இத்கைய சமூக ரீதியாக இராணுவமயமாக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் பெண்கள் தினம் தினம் அவமானத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி பயம் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள். மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படுகின்றன. புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. பிற்போக்கு வாத கொள்கைகளை பலாத்காரமாகத் திணிக்கப்படுகின்றன. தமது புதல்வர்களையும் புதல்விகளையும் தற்கொலைப்படைக்கு அனுப்புமாறு பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சாவின் மூலமே புகழ் பெற முடியும். சாகசங்கள் வீரமயமாக்கப் படுகின்றன. தியாகிகள் எனக் கொண்டாடப்படுகின்றனர். தன்னிகரில்லா பாதுகாவலர்கள் என பூசிக்கப்படுகின்றனர். தாம் வன்முறையில் புகழ்ச்சிக்குரியதாக்கியிருக்கும் புனங்கிதம்

Page 50
-98
அடைவதுடன் அதைக் கொண்டாடவும் செய்கின்றனர். அவர்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வாய்ப்புபெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. சயனைட் கலாசாரத்தில் சிக்குண்டுபோயுள்ள வடபகுதித்தமிழ் பெண்கள் ஒரளவேனும் நம்பிக்கை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏங்குகின்றனர். இந்த யுத்தத்தின் விளைசவாக அவர்களது உயிர்கள் மதிப்பிழந்து போய்விட்டன. பெண்களின் உயிர்கள் இவ்வாறு சிறுமைப்படுத்தப்படுவதை நாம் ஆட்சேபிக்க வேண்டாமா?
கொழும்பில் வாழும் பெண்களே தம் கணவன், பிள்ளைகள் இனம் தெரியாதோரால் கடத்திச்செல்லப்படும் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். கொழும்பிலும் அதன் சுற்று புறநகர்ப் பகுதிகளுக்குள்ளும் புலிகள் ஊடுருவியுள்ளனர் என்ற அச்சமானது அரச படைகளின் தாக்குதல்கள், புலிகளின் அதிகாரத்துவம் என்பன காரணமாக வடபகுதியில் இருந்து தப்பியோடி வந்துள்ள தமிழ்ப்பெண்களின் உயிர்கள் இவ்வாறு சிறுமைப்படுத்தப்படுவதை நாட் ஆட்சேபிக்கவேண்டாமா?
புலிகளின் அண்மைக்கால தாக்குதல்களின் பின்னர் கிழக்குமாகாணத்திலுள்ள முஸ்லீம் பெண்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சமூக வாய்ப்பு என்ற பெயரில் அவர்களால் சந்தைக்கோ வேலைத்தளத்திற்கோ நண்பர்களைச் சந்திக்கேவா வெளியே செல்லமுடிவதில்லை. தமது சமுதாயத்தை ஏழ்மை நிலைக்கு இட்டுச்செல்லும் தாக்குதலின் உக்கிரத்தைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக முஸ்லிம் பெண்கள் உருவாக்கப்படுகிறார்கள். சமுதாய கலாசார சீரழிவானது புதிய வடிவத்திலான புறத்தாக்குதல்களிற்கு ஆளாகும் நிலையிலிருக்கும் இவர்கள் சமூகநல கட்டுமானங்களிலிருந்து அந்தியப்படுத்தலையும் தனிமைப்படுத்தலையும் அதிகரிக்கவே உதவும். அண்மையில் 23 வயதான இளம்முஸ்லீம் பெண் மட்டக்களப்பில் சிங்களப் பொலிசார் ஒருவரால் பலாத்காரமாய் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்

-99
இதற்கான உதாரணங்களாகும். பெருமளவுக்கு மாற்ற மடைந்திருக்கும் இச் சூழ்நிலையில் வாழ்வதற்கே தினம் தினம் தவிக்க வேண்டியுள்ளது. இப்போரினால்அவர்கள் உயிர்கள் மலினப்படுத்தப்பட்டுள்ன. இதனை நாம் எதிர்க்க வேண்டாமா?
இன்னோர் வகையில் கார்த்தால் இப்போரால் ஆண்களைவிட அதிகமாகவும் குறிப்பாகவும் பாதிக்கப்படுவது பெண்களே. சிங்கள தமிழ் முஸ்லிம், பேகர் என இந்நாட்டின் அனைத்துத்தரப்பட்ட பெண்களுமே இதில் அடங்குவர். இன்று அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது எமக்குத் தெரியும். இந்நாட்டில் பெருமளவுக்குள் இடம் பெயர்ந்திருப் பவர்கள் பெண்களே. 1993 வரை 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அதிகமாக தகர்க்கப்படுபவர்களும் பெண்களே. இப்போரினால் பாதிக்க்பபட்ட பெண்கள் கண்டு கொள்ளப் படாமலும் கேட்பாரற்றும் கவனிக்கப்படாமலும் உள்ளனர். இவர்களின் மாற்றத்திற்காக தாமே உழைக்க வேண்டும். இதற்காக உழைப்பவர்களே சமாதானத்தற்காக பெண்களாக
இருக்கமுடியும்.
இது தான் நிலமை எனின் பெண்களாகிய நாம் இன்று என்ன செய்யலாம்? இந் நிலை யரிலிருந்து எதை நோக்கிச்செல்லலாம். எமக்குத் தேவை ஓர் புதிய ஆரம்பம். இலங்கை அரசியலுக்குத் தேவையானதும் சாத்தியமானதுமான இலங்கையின் பல்லினத்தன்மையையும் வெளிப்படுத்தக் கூடிய நிலையை நாம் ஆதரித்து அதற்காகப் பேசவேண்டும். இப்போதைய பிரச்சினைக்கு இனப்படுகொலையல்லத்தீர்வு. மாறாக இங்கு வாழும் சகல இனங்களையும் சேர்ந்த சமூகத்தினரும் சுயகெளரவத்துடனும் சுகந்திரத்துடனும் வாழக்கூடிய ஓர் சூழ்நிலையை உருவாக்குவதற்கு உழைக்கவேண்டும் என்ற எமது முன்னைய அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கெதிரான பாரபட்சமான நடவடிக்கை களினேலேயே இனப்பிரச்சினை உருவானது. இப்பாரபட்ச

Page 51
-100
மான போக்கிற்கு முடிவு காணாமல் இப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தமிழ் மக்கள் தமது தேவைகளைத் கவனித்துக்கொள்ளக் கூடியஅதிகாரப்பகிர்வு வழங்கப்படாமல் நாம் இந்நாட்டில் ஒன்றுபட்ட ஓர் சமுதாயத்தைக் காணமுடியாது. இது மட்டுமே சமாதானம் என்பதன் உண்மையான அர்த்தமாகும். பெண்களாகிய நாம் இதற்காக உழைப்போம். நாம் சமாதானத்திற்கான பெண்களாக இருப்போம். நாம் செய்ய வேண்டியன ஒருமித்த கருத்தை உருவாக்கலும், பின்தள்ளப் பட்டிருக்கும் பெண்களுக்கு சமூகத்தில சமத்துவம் அளித்தலும் எமது குரல்கள் கேட்கப்படவும், எமது முகங்கள் தெரியப்படவும், தேவையான புதிய வழிமுறைகளை தேடலும் என்பனவேஆகும்.
பெண்களே! நாம் தொடங்குவதற்கு இதுவே தருணம். அதை மீண்டும் எல்லா இடங்களிலும் தொடங்குவோம் உங்கள் நிலைமைகளையும் எங்கள் நிலைமைகளையும் மறுபரிசீலனை செய்வோம். உங்களையும் எங்களையும் திருத்தி எடுத்துக்கொள்வோம். நாம் செய்தவை போதாது. மற்றவர்கள் எமக்காக விழித் திருக்கும் நிலையைத் தாண்டி நாம் செல்லவேண்டும். எமக்கு முன்னால் புதியவையாக ஆக்கபூர்வமானவையாக சாத்தியமானவையாக உள்ளவற்றைப் பார்க்கவேண்டும். பெண்கள் நாம் ஒன்றுபட்டு இதனைச் சாதிக்க முடியும். ஒன்றுபட்டாலே சமாதானத்திற்கான பெண்களாக இருக்கமுடியும்.

"ஆண்பெண்இருபாலர்சமத்துவத்திற்காக”
ஆடி மாதம் 25 ம் திகதி “ஜலன்ட்" பத்திரிகையில் "ஆண்-பெண் இருபாலர் சமத்தவத்திற்காக" என மகுடமிடப்பட்டுவெளியான ஆசிரியர் தலையங்கம் தொடர்பாக சில கருத்துக்கள் பெண்கள் ஆய்வு நிறுவனத்தால் விடப்பட்ட அறிக்கை
இக்கட்டுரை பொதுவாக பெண்ணிலைவாதம் பற்றியும் குறிப்பாக பெண்கள் பால்ரீதியாக சுரண்டப்படுவது பற்றியதுமான அறியாமையைக் கணிசமான அளவு வெளிக்காட்டுவதாகத் தெரிகிறது. “ஆன் பெண் இருபாலர் சமத்துவத்திற்காக” எனும் இக்கட்டுரை, 110 வருடங்கள் பழமையான “பீனல்கோட்" சட்டங்களுக்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்களை பால்பாகுபாட்டுக்குரிய தீர்வாகக் கொள்கிறது. மேற்படி முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உண்மையில் சமூகத்தில் மிகப் பாரதூரமாகப் பாதிக்கப்படும் இரண்டு பகுதியினரான பெண் கள், சரிறார்கள் ஆகியவர்களையே பாதுகாக்க முயல்கிறது. அத்தோடு மேற்படி திருத்தங்கள் பெண்களுக்கும் சிறார்களுக்கும் எதிராகச் செய்யப்படும் பால்ரீதியான இம்சைகள் கணவனின் பலாத்காரம், தகாதபால் உறவு, பால்ரீதியான இம்சைகள் போன்றவற்றிலிருந்து அவர்கட்கு நிவாரணம் அளிப்பவையே. ஆகவே இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவெனில் மேற்படிதிருத்தங்கள் அடிப்படையில் முழுக்கமுழுக்க சட்ட அமைப்புக்குரியவையேயொழிய, பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கா வகுக்கப்பட்ட பால்பாகுபாட்டுத் தீர்வுகளல்ல என்பதே.
ஆசிரியர் தலையங்கம், இலங்கையில் பெண்களுக்கு மேலதிகமான சட்டப்பாதுகாப்பு தேவையா என்ற வினாவை
எழுப்புகிறது. இதற்குரிய பதில் இது தான்: ஆம், இலங்கைப்

Page 52
- 102
பெண்களுக்கு ஓர் விரிவான சட்டரீதியான பாதுபாப்புக்கான ஒரு சட்டக்கோவையொன்று தேவையே. இன்று பெண்கள் வீட்டிலும், வெளியிலும் பல்விதமான வன்முறைக்கு முகங் கொடுக்க வேண்டியவர்களாய் உள்ளனர். பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகள் அதிர்ச்சிதரும் அளவுக்கு வளர்ந்துள்ளன. இன்று எந்த தினசரிப்பத்திரிகையை எடுத்தாலும் அதில் கற்பழிப்பு, தகாத உடலுறவு, சிறுவர்மேல் பலாத்காரம், பால்ரீதியான இம்சைகள் போன்ற செய்திகளையே காணலாம். ஆனால் வேடிக்கை என்னவெனில் இத்தகைய வன்முறைகள் யாவும் இன்றைய நடைமுறையிலுள்ள சட்டவாக்கத் தின் போதாத்தன்மையால், திட்டமிட்ட முறையில்பாராமுகமாக விடப்படுகின்றன. ஆகவே முன்வைக்கப்பட்ட சட்டத்திருத்தம் எவையும் பெறற்கரிய செல்வமுமல்ல, அதை "மேலதிகச் சட்டப் பாதுகாப்பு' எனக் கூறுவது நியாயத்தின் பாற்பட்டதுமல்ல.
மேலும் ஆசிரியர் பெண் ணிலைவா தத்தின் பிராந்தியத்தன்மையையும் பாலியல் வன்முறையையும் பிழையாக விளங்கிக் கொண்டார் போல் தெரிகிறது. இவை மேற்குலகின் இன்றைய நாகரிக நடைமுறை பழக்கமெனவும் இவை மேற்கிலிருந்து கிழக்குக் கொண்டுவரப்பட்டுள்ன' என்றும் ஒரு கருத்து வலியுறுத்தப்படும் வகையில் கூறப்பட்டிருக்கின்றது. அதை விட இது உண்மைக்குப் புறம்பானவை விடயம் ஆகவே இந்தப் பின்னணியில், பெண்ணிலைவாதத்தினை மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள தன்மைகள் சில பற்றி விளக்குவது மிக அவசியமென் நாம் கருதுகிறோம். பெண்ணிலைவாதம் என்பது மேற்கத்தைய கருத்துருவமாக ஆசிரியர் தலையங்கம; தவறாகக் எடுத்துக்காட்டுகிறது. இந்த விவாதத்தின் தர்க்கம் பிழையானது. பெண்ணிலைவாத்த்தின் எழுச்சி என்பது ஒரு பிராந்தியத்துக்குரியதென்றோ அல்லது அர்த்தமற்ற புதுவிதமான நோக்கென்றோ கூறமுடியாது.

-103
இது அகில உலகினதும் பிரக்ஞையின் பாற்பட்டது. ஆனால் அதற்காக அது மேற்கத்தேய தாராண்மைக் கொள்கையின் செல்வாக்குட்பட்ட தென்பதையும் மறுப்பதிற்கில்லை. வரலாற்று ரீதியாக பெண்ணிலைவாத விழிப்புணர்வு பல கிழக்கு நாடுகளில் இருந்து வந்திருக்கிறது. இதற்குதாரணமாக இந்தியாவில் உடன்கட்டை ஏறுதல், சீதன்கொடுமை ஆகியவற்றுக்கு இருந்த எதிர்ப்பையும் சீனாவில் பாதங்களைச் சிறுக்க வைக்கும் போக்குக்கு இருந்த எதிர்ப்பையும் காட்டலாம்.
“பீனல் கோட்' சட்டங்களுக்கு திருத் தங்கள் கொண்டுவரும் போது இலங்கையின் சூழல் கவனத்திற் கெடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று ஆசிரிய தலையங்கம் கேட்டுக்கொள்கிறது. எது எவ்வாறாய் இருந்தாலும் இலங்கையின் சூழலும் சரி சமூக மரபும் சரி பெண்மையையும் பெண்களினதும் சிறுபிள்ளைகளினதும் உடல்களையும் வன்முறைக்குள்ளாக்குவது அனுமதிக்கப்படக்கூடாது என்பதையே நாம் விரும்புகிறோம். சமூகச் இம்சைகளிலிருந்தது பெண்கள் விடுதலை பெறவேண்டும் என்பது மேற்கத்தேயக் கருத்தல்ல, மாறாக அது ஒரு அடிப்படை மனித உரிமை என்பதை நாம் மிகவும் தீவிரமாக வலியுறுத்த விரும்புகிறோம்.
தனிப்பெற்றார்(Single Parenthood) பற்றிக் கூறும் போது, ஆசிரியர் பெண்ணிலை விழிப்புணர்வின் நேரடி விளைவு இது என்கிறார். இந்த விவாதம் பிழையானது மட்டுமல்ல முரட்டுத்தனமானதும் ஷ்ரு தலைப்பட்சமான வாதமாகும். இந்தத்தவறான நோக்கு, தனிப்பெற்றார் என்றொரு சமூக அமைப்பு தோ ன்றுவதற்கு காரண மாயரிரு க்கும். பல்வகைப்பட்ட சமூக பொருளாதாரச் காரணிகளைக் கணக்கில் எடுக்கத்தவறியுள்ளது.
இத் தவறான கரு த்து க்களை க் கவனத் தி ற் கெடுத்ததினாலேயே, நாம் இன்றைய இலங்கையில் உள்ள சம காலப் பெண் ணலை வா தத்தினர் அடிப்படை நோக்கங்களைத் தெளிவுபடுத்த வேண்டியவர்களாய் உள்ளோம்.

Page 53
நூல் விமர்சனம் :
முறியாத சங்கிலித்தொடர் யாழ்ப்பான சீதன முறை பற்றிய ஆய்வு
ஆசிரியர் அடேல் ஆன்,
மாலதி அச்சகம் இராதா லேன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் . 1994 பக்கங்கள் 64
செல்வி திருச்சந்திரன்.
இரண்டு பாகங்களையுடைய இச்சிறிய வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிலவும் சீதன முறை பற்றியதாகும். முதற்பகுதி தேசவழமையின் சாரத்தைக் கூறுவதோடு, தாய்வழி முறையோடு சம்பந்தப்படுத்தப்படும் தேசவழமையையும் அதன் குறைபாடுகள் பற்றியும் ஆய்வு செய்கின்றது. இரண்டாவது பகுதி இன்றைய சமகால யாழ்ப்பாணத்தில் சீதனமுறை எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதைஆய்வு செய்கிறது. அடேல் ஆன், தான் யாழ்ப்பாணத்து மக்களின் மிகச் சிக்கலான விடயங்களில் ஒன்றை அணுகுவதாக ஒப்புக் கொள்கிறார்.
இச்சீதன முறைமையை ஒரு முழுமையான சமூக வராலாற்று கோட்பாட்டின் ஆய்வுக்குரியதாகக் கூற முயலவில்லை என்பதைக் கூறும் இவர் அதேசமயம், கீழே குறிப்பிட்டுள்ள பல பாரிய விடயங்களை இச் சிறுநூல் மூலம் கூற வின்ழகின்றார். சீதன முறையோடு தேசவழமை சம்பந்தப்பட்ட சமூக-கலாசார வரலாற்று அம்சங்கள், அதன் வரலாற்று ரீதியான தோற்றுவாய், சமூகத் தொடர்பு என்பவற்றுடன், அதில் வேர் கொண்டுள்ள சமூகவியல் பண்புகள் முதலியவற்றை தனது ஆய்வுக்குட்படுத்துவதாக கூறுகிறார்

-105
இந் நூலாசிரியரின் முக்கிய நோக்கம், நடைமுறையில் உள்ள சீதன முறைமை பெண்களை உண்மையில் அடக்கி ஒடுக்குவதற்கே வழிவகுக்கின்றது என்பதை அழுத்திக் கூறுவதாகும். எனினும் தேசவழமை சட்டங்களுக்கும், அதன் நடைமுறைக் குறைபாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள தவறிவிட்டார்.
தேசவழமையின் வரலாறு பற்றிய ஆய்வில் எச். டபிள்யு தம்பையா அவர்களின் பல கருத்துக்களை இந்நூலாசிரியர் ஆழமாக முன்வைக்கிறார். அதே வேளையில் தம்பையா அவர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வரும் தேசவழமையின் சில முக்கிய அம்சங்களை இவர் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டார் சீதனம் பெண்களின் பெயரிலேயே தனியாக வைக்கப்பட்டுள்ளமையின் சிறப்பை தம்பையா அவர்கள் வலியுறுத்துமளவிற்கு, அடேல் ஆன் அவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதே நேரம் தேசவழமையின் தோற்றம் பற்றியும் அது படிப்படியாக ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதன்மை பற்றியும் ஆய்வு செய்த இன்னெரு சாரார் ( குணசேகர) அது ஒன்றிணைக்கப்படும் போது அதை ஒன்றிணைத்த டச்சுக்காரர்களின் தந்தை வழிமுறையை அது உள்வாங்சி மாற்றம் அடைந்தது என்று கூறுகின்றனர். அசையாச் சொத்துக்களை விற்கவோ ஈடுவைக்வோ மனைவி கணவனின் எழுத்து மூலமான அனுமதி பெறவேண்டும், என்பது பெண்கள் சொத்துப் பற்றிய தேசவழமையின் சிறந்த கருத்துக்கு முரண்பட்டதாக அமைகின்றது. இந்த நிபந்தனை டச்சுக்காரர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
அடேல் ஆன் அவர்கள் யாழ்ப்பாணச் சமூகம் பற்றி அறிந்து கொள்ளுவதற்கு மிகுந்த சிரமம் எடுத்துள்ளார். இருந்தாலும் சில இடங்களில் இவரது முடிவுகள் கேள்விக் குரினவாய் உள்ளன. ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணங்களை இகழ்சியுடன் நோக்கும் இவர் இத்தகைய ஒழுங்குபடுத்தல் மூலம் பெண்கள் தெரிவுச் சுகந்திரத்தை இழக்கும் ஒரு சதி

Page 54
- 106
திட்டத்திற்கு பலியாகிறார்கள் என்று கூறுவது ஒரு மிகைப் படுத்தப்பட்ட கூற்றாகும். ஒரு பெண் தன்சொந்த மைத்துனனை திருமணம் செய்யும் பொழுது அது தொடர்பான ஏற்பாடுகளை அறிந்தவளாக இருக்கின்றாள். விவாகமானது வெளியிடத்தில் இருந்து ஒழுங்குபடுத்தப்படும் பொழுது அங்கு மணப்பெண்ணின் சம்மதம் கேட்கப்படுகின்றது, அல்லது விவாகம் நிச்சயிக்கப்படுவதற்கு முன் மணப்பெண்ணின் தயாரின் மூத்தசகோதரிகள் அல்லது தாயாரின் தங்கைமார் பெண்ணின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்ளும் விடயங்களில் ஈடுபடுகின்றனர். பெண் விரும்பாத பட்சத்தில் அவளது முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு கெளரவிக்கப்படுகின்றது. ஒரு பெண்ணை அவளது விருப்பத்திற்கு மாறாக, கட்டாயத்தின் பேரில் விவாகத்திற்கு உடன்படுத்துவது மிக அரிதாகவே நடைமுறையில் காணப்படுகிறது. பெண் படித்தவளாகவும் தொழில் புரிபவளாகவும் இருக்கும் பட்சத்தில் அவளுக்கு நிச்சயமாக அதை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்வோ வசதியிருக்கின்றது.
மேலும் அவர்கள் தனக்குரிய ஒரு துணையை தேடிக்கொள்ளும் தனிப்பட்ட சுதந்திரம் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு பூரணமாக விலக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளதென வாசகர் மத்தியில் அடேல் ஆண் அவர்கள் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது போல்படுகிறது. இது உண்மைக்குப் அப்பாற் பட்டதாகும். "காதல் திருமணம்” என்று சொல்லப்படுபவை எங்கும் போல் அங்கும் உண்டு. அவர் குறிப்பிடும் கலியான ஒழுங்குகள் நடக்கும் போது பெண்களுடைய கல்வி உத்தியோகம், சமூகநலன் அக்கறை போன்றவை உதாசீனம் செய்யப் படுகின்றன. (பக்கம் 4) என்பது பொருந்தாவாதமாகும். மாறாக துணை தெரிவு செய்யப்படும் போது பெண்களுடைய கல்வி, உத்தியோகம், தொழில் போன்றவை மிக நுணுக்கமாக கணக்கில் எடுக்கப்படுகின்றன. அவர் குறிப்பிடுவது போல் யாழ்பாணத்துப் பெண்கள் "மெளன” பண்டங்கள் அல்ல. (பக்கம் 42) ஆணாதிக் விழுமியங்களே ஒரு பெண்ணுடைய

-107
வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதில் அபிப்பிராய பேதங்களுக்கும் இடமில்லையாயினும் குடும்பம் என்னும் ஸ்தாபனம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி அடேல்ஆன் அவர்கள் பூரணமான விளக்கத்தை பெற்றிருக்கவில்லை என்றே சொல்லலாம்.
இந்நூலாசிரியர், குடும்பம் என்ற ஸ்தாபனத்தின் பல்வேறு அம்சங்கள் யாழ்ப்பாணத்தில் செயல்படும் முறை பற்றி, அறிந்திருக்காமையினாலேயே சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன என நான் நினைக்கிறேன். தந்தைமாரும், சகோதரரும் அடிக்கடி தமது, மகள்மாரினதும் சகோதரி களினதும் நன்மைக்காக பலவித பெருந்தியாகங்களைச் செய்ய வேண்டியவர்களாய் உள்ளனர். ஆண்களால் கோரப்படும் சீதனத்தை வழங்குவது ஒரு சமூகத்தீமை என்பதில் எனக்கும் அடேல் ஆன் அவர்களுக்கும் கருத்துவேற்றமை இல்லை என்பதும் இது அகற்றப்படவேண்டும் என்பதும் உண்மை. ஆனால் அதே வேளை பெண்ணுக்குரியதெனக் கூறப்படும் சொத்துமுறை பாதுகாக்கப்படவேண்டும் என்பது முக்கியமானது
இரத்த உறவு முறை, சொந்த மைத்துனனை விவாகம் செய்வதற்கான சமூக அங்கீகாரம் போன்றவற்றை ஆன் அவர்கள் (பக்கம்38 ) பிற்போக்கு முறையெனக் கூறுகிறார். ஆனால் மானிடவியலாளர்களான கணணாத் ஒபயசேகர ( Gananath Obeysekera) போன்றவர்கள் இத்தகைய சொந்த மைத்துனனை மணந்துகொள்ளும் விவாகமுறையானது பெண்களுக்கு நன்மை அளிக்கும் பல அம்சங்களை உள்ளடக்கி யிருப்பதாகக் கருதுகின்றனர். இத்தகைய உறவு முறை விவாகம், ஏற்கனவே பழக்கமும் அன்பும் உள்ள மாமி, மாமன், மச்சாள் ஆகியோருடன் இறுக்கமான ஒரு பிணைப்பை உடையதாக இருப்பதால் வழமையாக ஒரு புதுமணப் பெண் அனுபவிக்கும் அவஸ்தையும் அல்லலும் தனிமையும் அகன்று விடக்கூடிய அனுகூலம் ஏற்படுகிறது.

Page 55
-108
மேலும் அடேல் ஆன் அவர்கள், ஆண் பெண் இருபாலாரிடையேயும் திருமணத்திற்குமுன் எந்தவித சமூக உறவோ தொடர்போ இருக்கவாய்ப்பில்லை எனவும் கூறுகிறார். (பக்கம்41) யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்த முடிவுக்கு அவர் எப்படி வரநேர்ந்தது என நாம் ஆச்சரியப்படவேண்டியுள்ளது. V அவர் யாழ்ப்பாணச்சமூகத்தை ஆண்,பெண் என இருவகையாப் பிரிக்கப்பட்ட அலகுகளாகவே பார்க்கிறார். ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து படிக்கும் கல்வி முறை ஆரம்பத்திலேயே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதென்பதும் பல்கலைக் கழங்களிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் இத்தகைய இருபாலாரும் இணைந்த கல்வி முறையானது அவர்களிடையே பரஸ்பர உறவை ஏற்படுத்த வசதியளித்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டும். இதனால் ஆண் பெண் இருபாலாரும் விவாகத்துக்கு முன்னதான சமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள வாய்பிருந்திருக்கிறது என்பதை எந்த சமூகவியல் ஆய்வாளரும் காணலாம். அவர் நினைப்பது மாதிரி இது ஒரு ஒழுக்கத்தின் பாற்பட்ட விவாதமல்ல. எவரும் தகுந்த ஆதாரங்களோடு எந்தவித சமூக பிரச்சினைகளையும் கலந்துரையாடச் சுகந்திரமுடையவர் ஆவார். அவர் நினைப்பது போல் யாழ்ப்பாணம் அப்படி தனியான குறுகிய போக்ககுடையதல்ல. இப்படி சமூக பொருளாதார, சமூக கலாசார நிலைகளிலிருந்து ஆண் பெண் உறவை தனிமைப்படுத்திப்பார்ப்பது, அரை உண்மைக்கு நம்மை இட்டுச் செல்வதோடு, விஞ்ஞானப் பார்வை குன்றிய ஒரு பக்க முடிவுகளையே நமக்கு தருவதாய் அமையும்.
இந்நூலாசிரியரின் முக்கிய பலவீனமாக நான் கருதுவது, அவர் தமது கருத்துக்களை கள ஆய்வுக்குட்படுத்தப்படாத, வெறும் அவதானிப்பின் மூலமே பெறுகிறார் என்பதே. குறிப்பாக இந்நூலின் இரண்டாவது பகுதி, எந்த ஒரு ஆய்வின் பெறுபேறனக் கூறமுடியாது.
ஒரு நல்ல ஆய்வுக்கு உகந்தது என்று கூறப்படும்

-09
கலாசார வேறுபாடு, இங்கு அவருக்கு உதவவில்லை. அதே வேளை இக்கலாசாரத்துக்குள்ளிருந்தவாறே அதற்குரிய பக்கச்சாய்வோடு அதற்காக வக்காலத்து வாங்கவோ அல்லது நான் வாழும் அக்காலாசாரத்தின் முற்போக்கு அம்சங்களைக் காட்டி அதைக்காப்பாற்ற முயலும் செயலோ அல்ல இந்நூல் விமர்சனம். எது எவ்வாறாயினும் எனது இவ்விமர்சனத்தின் நோக்கம், அவர் தமிழ்ப்பெண்களின் முற்போக்கு வளர்ச்சியில் காட்டும் அக்கறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதல்ல. பெண்கள் பிரச்சினை சம்பந்தமாக அவர் முன்வைக்கும் பரந்த தரிசனத்திலும் நம்பிக்கைத் தெளிவிலும் பங்குகொள்ளும் நான் சில குறைபாடுகளை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன் அவ்வளவே.

Page 56
கலைஞர் கோமல் சுவாமிநாதனுக்கு கண்ணீர் அஞ்சலி
கலைஞர் கோமல் சுவாமி நாதன் அவர்களது மரணச்செய்தி பெண்கள் என்ற வகையிலும் ஆரோக்கியமான தமிழ் கலை இலக்கிய நாடக சினிமா வளர்சியிலும் விமர்சனங்களில் ஆர்வமுள்ளவர்கள் என்ற வகையிலும் எமக்கு இயல்பாகவே அதிர்ச்சி தந்தது.
நீண்டகாலம் அவர் ஒர பிரபல நாடக கலைஞராக தமிழ் நாட்டில் அறியப்பட்டிருந்தார். எனினும் 1980பதுகளில் அவருடைய "தண்ணிர் தண்ணிர்" நாடகத்தை திரைப்பட வடிவில் காண்கிற வாய்ப்பு இலங்கைத் தமிழர்கள் பலருக்கு கிட்டியபோதுதான் அவர் நம்மத்தியில் அறிமுகமானார். எனினும் 1990 களில் அவர் ‘சுபமங்களா' சஞ்சிகை மூலம் சமூகப் பிரக்ஞையுள்ள முன்னணிக் கலை இலக்கிய பத்திரிகையாளராக வெளியிடப்பட்ட போது தான் ஈழத்தமிழர் பெண்களதும், ஒடுக்கப்பட்ட மக்களதும் இயக்கங்களாலும் தமது நண்பராக அடையாளம் காணப்பட்டார். அவருடைய சமூக அக்கறையே அவரது வாழ்வும் வரலாறுமாகும். ஒரு நாடகக்காரராக தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகள் எங்கணும் தனது சுவடுகளை பதித்த தோழர் கோமல் அவர்கள் சுபமங்களாக ஆசிரியராக இலங்கை மண்ணிலும் யுத்தத்தால் சிதைக்கப்பட்டருந்த யாழ்ப்பாணத்திலும் தனது சுவடுகளை பதித்தார். இது வெறும் பெளதீக படிமம் அல்ல.
அகாலமரணம் நிச்சயமாகி விட்ட போதும் கூட இரத்த புற்றுநோயை புறங்காலால் தள்ளிவிட்டு ஒரு மாவீரனாக தனது இலக்கிய பத்திரிகைப் பணியை தொடர்ந்ததும் கூட வெறும் பெளதீகக் குறியீடல்ல. அவர் கடைசியாக தொகுத்த சுபமங்களாவில் (அக்டோபர் 95) நிவேதினி பற்றி தோழமையுடன் சிலாகித்து பேசியுள்ளமை

-1 1 l
நினைவு வருகிற போது தமது நெஞ்சு நெகிழ்கிறது.
அவருடைய மரணய் செய்தியில் தோழமையுடன் கண்கலங்குகின்ற சமூகப்பிரக்ஞை உள்ள தமிழ் கலை இலக்கிய வாதிகள், பெண் உரிமை இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட வர்க்க சாதி அமைப்புகள், போன்றோர் வரிசையில் நின்று நிவேதினியும் தலைசாய்த்து தோழர் கோமலுக்கு அஞ்சலி செலுத்துகிறது.