கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 1998 (3.2)

Page 1
தாக்கியெறியப்பட உங்கள் முன் பிரச
 

முடியாத கேள்வியாய் STGOTLDTusi (36T66

Page 2
உள்ளே.
1. பெண்களது காதல் கவிதைகள் - சி. ஜெயசங்கர்
2. தூய்மையாக்கல்
- கிறேஸ்புவர்
3. புதுயுகம் படைப்போம்
- வாசுகி குணரத்தினம்
4. நிஜங்களின் சாட்சிகள்
- சே விஜயலட்சுமி
5. மொழியும் பால்வாதமும்
- சித்ரா
3.
குங்குமம் - வாசுகி குணரத்தினம்
7. வேலை
- ராஜம் கிருஷ்ணன்
8. பயணம்
- சே. விஜயலட்சுமி
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள்
எதிர்நோக்கும் சட்டரீதியான பிரச்சினைகள்
- யுமுனா இப்ராஹிம்
10. நாளைக்கு இன்னொருத்தன்
இச் சிறுகதைத் தொகுதியில் வரும் வித்தியாசமான பெண் பாத்திரங்கள்
- அருந்ததி இரட்டணராஜ்
பக்கம்
Ο 1
O8
22
23
26
31
32
43
44
53

தொகுதி 3 66)66);
"தாக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளேன்

Page 3
பெண் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் சஞ்சிகை 27A, லேடி மனிங் ட்ரைவ்,
மட்டக்களப்பு.
The Woman - A journal published by Suriya Women's Development Centre, 27A, Lady Manning Drive,
Batticaloa.
ஆசிரியர் :
கமலினி கணேசன்
அட்டைப்படம் :
அனுஷியா
Printed by :
New Karthikeyan (Pvt) Ltd., 50 1/2, Galle Road, Colombo - 06.
விலை : 30/-

வாசகர்களுடன்.
பெண் சஞ்சிகையானது சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடாக வெளிவரத் தொடங்கி ஆண்டு ஒன்றிற்கு மேலாகிவிட்டது. ஐந்து இதழ்களை வெளியிட்ட அனுபவத்தை நாம் பெற்றுக் கொண்டுள் ளோம். எனினும் வாசகர் மத்தியில் உள்ள கருத்துக்கணிப்பீடுகள் எம்மை வந்து சரியாக அடையவில்லை. இருப்பினும் இவ்வனுபவம் சார்ந்ததான ஒரு சிந்தனையின் பிரதிபலிப்பினை இவ்விதழினினூடாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது அர்தமுடையதாக இருக்கும் என நம்புகின்றோம்.
பெண்களிற்கான சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது, அதிலும் பெண்களிற்கான மாற்றுக் கருத்தியலை மனதிற்கொண்டதான செயல் வாதத்திலீடுபடும் ஒரு நிறுவனத்தினர் சார்பில் வெளியிடுவது என்பது சாதாரண இதழியல் அனுபவத்திலிருந்து வேறுபட்டதாகும். ஆண் முனைப்பு கருத்தியல் சார்ந்ததாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எமது சமூகத்திற்குரியனவாக அணுகப்படும் போது, அச்சமூகச் சூழலினை மையப்படுத்திய வெளிப்பாடாக இச்சஞ்சிகை திகழ வேண்டும் என்ற அவா சார்ந்ததாக அமைகின்ற போது இவ்வனுபவம் காத்திரமானதா கின்றது.
எமது சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டால், அவை குடும்ப வன்முறைகள், யுத்தச்சூழல் சார்ந்த வன்முறைகள், உளநிலை பாதிக்கப்படல், தற்கொலை, மரணம், அங்க வீனம், காயங்களிற்குள்ளாதல், கைது செய்யப்படல், காணாமல்ப்போதல், குடும்ப அங்கத்தவரின் இழப்புக்காரணமாக அல்லது அங்கவீனம் காரணமாக கூடுதல் பொறுப்புக்களைச் சுமக்கவேண்டி வருதல், வேலையின்மை, வறுமை, கீழுழைப்பு, கல்வி கற்க முடியாத நிலை, சுகாதாரநிலை மோசமாக இருத்தல் எனப்பலவாக அமைகின்றன.
பெண்கள் நிறுவனம் ஒன்றினுடைய செயற்ப்பாடுகளும் இவற்றினை அணுகுவதாகவே உள்ளன. இந்த அணுகுமுறைகள் மிகுந்த கவனத்தி னையும் பக்குவத்தினையும் வேண்டி நிற்கின்றன. பெண்கள் பிரச்சினை களை அணுகுதலும் தொடர்ந்து பெண்களிற்காக இயங்குதலும் சாதாரண மான சமூக இயக்கங்களுடன் ஒப்பிடும் போது சில தனித்துவங்களை வேண்டி நிற்கின்றன.
பெண்கள் சார்ந்த செயல்வாதமும் இதழியலும் அவ்வாறானதொரு பின்னணியின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளப்பட வேண்டியன.
உலகமகா அதிசயத்தை வெளிப்படுத்துவது போல அல்லது சில கண்டுபிடிப்புக்களை உலகிற்குப்பறை சாற்றுவது போல ஒரு செய்தியை கட்டம் போட்டு வெளிப்படுத்துவது அங்கு கடினமான காரியமே. அது போல அவ்வாறு வெளிப்படுத்துவதுடன் காரியம் முடிந்துவிடாது.

Page 4
நாங்கள் இதைச் செய்தோம் அதைச் செய்தோம் என மார்தட்டிக் கொள்வதும் முடியாத காரியமாகவே உள்ளது. பெண்கள் நிறுவனங்கள் என்ன செய்கின்றன? பெண் நிலைவாதிகள் என்ன செய்கின்றனர்? என்ற கேள்விகள் இம்மாதிரியான செய்திகளுடன் கேட்கப்படுகின்றபோது இதையே நாம் சொல்ல விரும்புகின்றோம். பெண்கள் சார்ந்த செயல் வாதம் என்பதும் இதழியல் என்பதும் சாதாரணமான அணுகுமுறைகளை முன்வைக்க முடியாதனவாகவே உள்ளன. அவ்வகையில் சாதாரண உரையாடல்களிலும் ஏனைய பத்திரிகைகளிலும் வரும் இம்மாதிரியான கேள்விகள் பெண்கள் பிரச்சனைகள் தொடர்பான புரிந்துணர்வுடன் கேட்கப்படுவனவாக இருக்கின்றனவா என்பதே எமது கேள்வி. பெண்கள் எழுதுவது குறைவாக இருத்தல் என்ற பிரச்சனையை இல. 2 இதழில் இதழாசிரியர் எடுத்துக் கூறியிருந்தார். எழுதுவது என்பது பிரச்சனையாக இருகுகின்ற அதே சந்தர்ப்பத்தில், வெளியிடுதல் என்பதும் பிரச்சனைக்குரியதாக பெண்களைப் பொறுத்தவரை அமைகின்றது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
பெண்கள் தமது கருத்துக்களை வெளியிடுகின்றபோது பெண்களிற் கான ஒரு சஞ்சிகை வெளிவருகின்றமை மட்டும் போதாது. அச்சஞ்சிகை யின் முழு உருவாக்கமுமே நீண்டகாலத்தில் பெண்களிற்குரியதாக மாறவேண்டிய தேவையை நாம் அறிவோமாயினும் எமக்கென ஒரு வெளியீட்டு அலுவலகத்தை (Printing Press) உடனடியாக ஏற்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு நாமும் வளர்ந்து வருகின்ற ஒரு நிறுவனமாகவே இருக்கின்றோம். அதனால் சஞ்சிகை வெளியீடு தொடர்பாக நாம் மற்றவர்களில் தங்கியிருக்கின்ற ஒரு நிலைமையே இன்று எமக்கு இருக்கின்றது. இக்காரணத்தினால் எமது அலுவல்கள் அதிகரித்தவையாக இருப்பதுடன் நேர விரயத்தையும், அனேக சந்தர்ப்பங்களில் ஏமாற்றங்களையும் உதாசீனத்தையும் சந்திக்க வேண்டியதாக உள்ளது.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் "கனல் என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைத் தொகுப்பினை வெளியிட்ட அனுபவம் இங்கு சிறந்த உதாரணமாகும். வெளியிடப்பட வேண்டிய நூல்களின் எண்ணிக்கை 500 ஆக இருந்த போதிலும் 50 நூல்களே வாசகர்களுக்கு அனுப்பி வைக்கக்கூடிய நிலையில் இருப்பதுடன் இதற்கான நட்ட ஈட்டையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இவ்வாறான பல பிரச்சினைகளின் மத்தியில் பெண் சஞ்சிகை தொடர்ந்து வெளி வந்து கொண்டிருப்பினும் வாசகர்களின் கருத்துக்கள் எம்மை வந்தடையாமை எனும் மன்க்குறையும் எம்மிடம் தொடர்ச்சியாக உண்டு. எம்மை ஊக்கப்படுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பையும்
காத்திரமான விமர்சனங்களையும் வேண்டி நிற்கின்றோம்.
-ஆசிரியர்

பெண்களது காதல் கவிதைகள்
சி. ஜெயசங்கர்
காதலுக்கும் கவிதைக்குமான தொடர்பு நெருக்கமானது. காதல் கவிதைகள் என்றுவிட்டால் சொல்வதற்கும் வேண்டுமோ? கற்பனை சிறகடித்துப் பறக்கும்; பெண்கள் பூக்களாக, பூச்சூடும் பாவைகளாக இன்னும் பலவாக ‘உள்ளங்கிறங்க வைக்கும்' பல்வேறு உருவெடுப்பர். இவைகளெல்லாம் ஆண்களின் பார்வையில் பெண்களது வடிவமைப்பு. இதுவொரு நிலை. V
மற்றையது பெண்களது உணர்வுகளை ஆண்கள் வெளிப்படுத்துவது. இது இன்னொரு நிலை. இந்த இரண்டு நிலைகளும் ஒன்றையொன்று தீர்மானிக்கின்றன. இவை இரண்டுமே ஆண்களால் கட்டமைக்கப்பட்டிருப் பவை. மனிதன் எனும் போது மனுஷியும் அதனுள் அடங்கிவிடுகிறாள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுகளில் இதுவுமொன்று.
பெண்களது காதலுணர்வுகளை ஆண்கள் வெளிப்படுத்துவதே எம்மத்தியில் இன்னமும் பிரதான மரபாகக் காணப்படுகிறது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட 'தமிழர் பண்பாடு பெண்களை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு உடையவர்களாக வடிவமைத்து மெளனிகளாக்கி விட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆண்களால் சித்திகரிக்கப்பட்ட பெண்களது காதலுணர்வுகளே சமூகத்தில் பெண்களுடைய காதலுணர்வு களாக நம்பப்படுகின்றன. இதன் உச்ச வெளிப்பாடு தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சமூக இயக்கத்தில் மிக முக்கியமானதும்; மிக நுண்ணியதுமான ஒரு விடயம் பொய்யானதாக சித்திகரிக்கப்பட்டிருப்பது தவறான விளக்கங் களுக்கும்; அதன் காரணமாக தவறான நடத்தைகளுக்கும் இட்டுச் செல்கிறது. தினசரிப் பத்திரிகைகளில் பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள், பாலியல் வல்லுறவுகள் பற்றிய செய்திகளின் பின்னால் மேற்படி தவறாக விளங்கிக்கொள்ளலுக்கும் உள்ள தொடர்புகளை நாங்கள் இனங்கண்டு கொள்ளலாம்.
எனவே பெண்களது காதலுணர்வுகளை பெண்கள் தாங்களாக இனங்கண்டு அவற்றை வெளிப்படுத்தும் போது அதில் உண்மை இருக் கும். அவர்களது இயல்பு அவர்களால் அடையாளம் காணப்படும். இவ்வாறு அவர்களது அடிப்படை உணர்வுகளை அவர்களே இனங்கண்டு

Page 5
வெளிப்படுத்துபவர்களாக மாறும் பொழுது சுய ஆளுமைமிக்கவர்களாக வடிவெடுக்கிறார்கள். பெண்நிலைவாதம், பால்நிலை என்பவற்றின் அடிநாதம் அதுதான். அவர்களின் குரலாக அவர்களே இருப்பது. அவர்க ளின் முகத்தை அவர்களே காட்டுவது.
நவீன கவிதைகளில், பெண்களது கவிதைகள் என்றால் ஆணாதிக் கத்திற்கெதிரான வன்மையான சொற்கள், சொற்றொடர்கள், படிமங்கள் என்ற நினைப்புகளுடன் இருக்கும் எங்களுக்கு அவர்களது கவிதை வயல்களில் காதலின் கனிகள் விளைவதையும் அறிமுகப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. ஏனெனில் அடக்குமுறைக்கு உள்ளாகுபவர் களிடமிருந்து வன்மையான வெளிப்பாடுகள் மட்டுமே வருகின்றன என்பது பொதுவான தப்பபிப்பிராயம். 'எங்களுக்குப் பாண் வேண்டும் 55(65ub GougioTGib" ("We want bread and roses too") 6T6TD J. Gqostasib பெண்களது எதிர்பார்ப்புகளைக் கவித்துவமாக வெளிப்படுத்துகிறது.
தமிழிலக்கிய வரலாற்றில் பெண்கள் தங்களது காதலுணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளைத் தேடுவோமாயின், சங்க இலக்கியத்தில் சில பாடல்களைக் கண்டு கொள்ளலாம். அவை தவிர கடவுளை நாயக னாகப் பாவனை பண்ணிப் பாடிய காதல் கவிதைகளையே அதிகம் கண்டு கொள்ள முடிகிறது. இதனைப் பாடியவர்கள் சமூகத்தில் அசாதாரண மானவர்களாக மாறியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஆண்கள் மீதான காதலுணர்வுகளை சுயாதீனமாக வெளிப்படுத்த முடியாத சமூகக் கட்டுப்பாடு காரணமாக அடக்கப்பட்ட உணர்வுகளின் பீறிட்ட வெளிப் பாடுகளோ இவையெனச் சிந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் கிராமியக் கவிதைகளில் ஆண்கள் மீதான காலுணர்வுகள் பெண்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தன்மையும் முக்கிய கவனத்திற்குரியது. இவைதவிர தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் ஆண்கள் மீதான காதலுணர்வுகளைத் தங்கள் கவிதைகளில் வெளிப் படுத்திய பெண்கள் ஆங்காங்கே ஒற்றை நட்சத்திரங்களாகவே மின்னுகின்றனர்.
தமிழ்ச் சமூகத்தில் பெண்நிலைவாதம், பால் நிலைச் சிந்தனைகளின் அறிமுகமும்; பெண்நிலைவாத இயக்கங்களின் செயற்பாடும்; குறிப்பாக ஈழத்தில் இனத்தின் பெயரால் பெண்கள் எதிர்கொள்கின்ற அழுத்தங்க ளும் பெண்களது சுயாதீனம், தனித்துவம் பற்றிய பிரக்ஞையைத் தூண்டி விட்டிருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தங்களது காதலைக் கவிதைகளாகப் படைப்பதென்பது தங்களின் சுயத்தை வெளிப்படுத்த முனைவதன் வெளிப்பாடாகவும்; அதன் மூலம் அவர்கள் தங்களது சுய அடையா ளத்தை நிலை நிறுத்த முனைவதன் வெளிப்பாடாகவுமே அமையும். எனவே தமிழ்க் கவிதைச் சூழலில் பெண்களது காதல் கவிதை மரபொன்றை வளர்த்தெடுப்பது அவசியமாகிறது. . . . . ..་་་་་་་་་་
இந்த நோக்கத்திற்காக எட்டுத்திக்கிருந்தும் முன் அனுபவங்களைக் கொண்டு வருவதும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்கனவே இருப்பவற்றை தொகுப்பதும்; ஆய்வுக்குட்படுத்துவதும் அவசியமாகிறது.
இவ்வாறாக மாபெரும் எதிர்பார்புகளுடன் சேதுவுக்கு மண் சுமந்த 960sfa)T), Love Poems by Women: An Anthology of poetry from around the World and through the ages 6T6TD 56,36055 Qg5T (596) g(5.5g மூன்று காதல் கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தொகுப் பாளரில் ஒருவரான Wendy Mulford தனது தொகுப்பை, 'காலங்காலமாக உலகம் பூராவுமுள்ள கவிதைகளின் தொகுப்பு' எனக் குறிப்பிட்டிருந் தாலும் உண்மையில் அது மேற்கத்தயோரால் குறிப்பாக அமெரிக்கர்க ளால் எழுதப்பட்ட காதல் கவிதகைளின் தொகுப்பாகவே காணப்படுகிறது. உலகக் கவிதைகள் பாயாசத்தில் பயறாகவே காணப்படுகின்றன. ஆங்கிலயேர்கள் காண்கிற உலகம் ஐரோப்பாவுள் சுருங்கிய உலகம் என்பது புதியதல்லவே. ஆயினும் இத்தொகுப்பு எங்களில் ஏற்படுத்து கின்ற பார்வையும்; தொகுப்பாளரின் அனுபவமும் எங்களுக்கு அவசிய மானவை. தொகுப்பாளரில் ஒருவரான Wendy Mulfordன் அறிமுகக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற கருத்துகளும் அனுபவங்களும் தனித்தவொரு கட்டுரைக்குரிய விடயங்கள்.
அவற்றுள் சிலவற்றை இக்குறிப்பில் பகிர்ந்து கொள்கிறேன். 2000 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் காதல் கவிதைகளை எழுதி வருகிறார் கள். இன்று வரையில் அவற்றுள் மிகக் குறைந்தளவே தொகுப்புகளாகி இருக்கின்றன. இந்த வகையில் முதல் முயற்சியான Love Poems by Women தொகுப்பு காலங்காலமாக ஆண்களுக்குரியதாக இருந்த காதல் கவிதை வகையில் பெண்களது வித்தியாசமான வெளிப்பாடுகளைக் கொண்டு வருகிறது.
இப்பெண் கவிஞர்கள் ஆண்கள் மீதான காதலை மட்டுமல்ல, அவர்களது பெண் காதலர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், நண்பர்கள்
3.

Page 6
மற்றும் கலைகள், கடவுளர், இயற்கை, தாயகம் மீதான காதலையும் பாடியிருக்கிறார்கள். பெரும்பாலும் பெண் கவிஞர்களது காதல் கவிதைகள் ஆண்களது கவிதைககளை விடவும் யதார்த்தமானவை யாகவும்; வேடிக்கை நிறைந்தவையாகவும், விரிந்த பரப்பை அடக்கியவையாகவும் காணப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'பெண்களால் எழுதப்பட்ட காதல் கவிதைகள்' தொகுப்பை ஹெலன் கிட், யூலியா மிஸ்கின், சன்டி றஸல் ஆகியோருடன் இணைந்து வென்டி மல்வோட் தொகுத்துள்ளார். இதன் முதலாவது பதிப்பு 1991 ல் அமெரிக்காவில் வெளியாகி இருக்கிறது. இத்தொகுப்பின் முன் அட்டையை ஜேம்ஸ் ஆர் ஹரிஸ் வடிவமைக்க அதற்குரிய ஓவியத்தை கஸ்ரேவ் கிளிம்ற் வழங்கியுள்ளார்.
ஒருவரையொருவர் நோக்கியிருத்தல்
ஓம், நாங்கள் ஒருவரையொருவர் நோக்கியிருந்தோம் நாங்கள் ஒருவரையொருவர் நன்கறிவோம் நாங்கள் பல தடவை சுகித்திருந்துள்ளோம் நாங்களிருவரும் சேர்ந்தே இசைகேட்டோம் நாங்களிருவரும் சேர்ந்தே கடலுக்கும் போனோம் நாங்கள் சேர்ந்தே சமைத்தோம், சாப்பிட்டோம் நாங்கள் இரவும் பகலும் பல தடவை சிரித்தோம் நாங்கள் வன்முறையை அறிவோம்; வன்முறையை எதிர்த்தோம். அகமும்புறமுமான அடக்குமுறைகளை வெறுத்தோம் ஓம், நாங்கள் ஒருவரையொருவர் நோக்கியிருந்த அந்நாளில் நாங்கள் கண்டோம் சூரிய ஒளி ஊற்றை, மேசைமூலை எங்களிருவருக்கும் இடையில் பாணும் பூக்களும் மேசையில் இருந்தன எங்களுடைய கண்கள் ஒருவருடையதை மற்றையவை நோக்கின எங்களுடைய வாய்கள் ஒருவருடையதை மற்றையது நோக்கிற்று? எங்களுடைய மார்பகங்கள் ஒருவருடையதை மற்றையவை நோக்கின எங்களுடைய உடல்கள் முழுதாய் ஒருவருடையதை மற்றையது நோக்கிற்று
ஓம், ஒவ்வொரு உடலிலும் அது ஆரம்பமாகிறது அது எங்களது உயிர்களுக்குக் குறுக்கே அலைகளை வீசியது நாடித்துடிப்பு வரவரக் கூடித்துடித்தது இதயத்துடிப்பு மிகவும் தெளிவாகக் கேட்டது
4

அந்த அழைப்பு அந்த எழுச்சி , அந்த வருகை அந்த வெளிப்படுகை அங்கே அது இருவருக்கும் முழுமையாய் ஓம், நாங்கள் ஒருவரையொருவர் நோக்கியிருந்தோம்.
மியூளியல் றுக்கேய்ஸர் (1913-1980) அமெரிக்கர் சுயசரிதையாளர், பெண்களது உரிமைகளுக்காகப் போராடிய கவிஞர்.
காதலுருவெடுத்த பேயுடன் சம்வாதம்
எனது பெயர் யூடித்
போற்றப்படுபவள் என்று அர்த்தப்படும் நான் விரும்பவில்லை போற்றப்படுபவள் என்று அழைக்கப்படுவதை காதலின் சக்தியென்று அழைக்கப்படுதலையே விரும்புகிறேன்.
காதலென்பது பாதுகாப்பது என்றர்த்தப்படுமாகில் எப்போதாயினும் உனைக்காப்பாற்ற இயலாத பொழுகளில் என்பெயரைக் காதலெனநான் அழைக்க முடியாது காதலென்பது மறுபிறப்பு என்றர்த்தப்படுமாகில் காலூன்றி நாங்கள் நிற்பதைக் காண்பேனாயின் என்பெயரைக் காதலெனநான் அழைக்க முடியாது காதலென்பது வழங்குவது என்றர்த்தப்படுமாகில் உனக்காக வழங்க முடியாத ஆளாக இருப்பேனாயின் ஏன் என்பெயரைக் காதலென அழைக்கிறாய்?
என் மார்பகங்களை உருளைக்கிழங்குக் குவியல்களாகவோ வயிற்றை வறுத்தபெரிய வாத்தென்றோ கருதி விடாதே உதட்டை அதிஸ்டக் கீற்றென்றோ கழுத்தை அப்பிள் மரமென்றோ எடுத்து விடாதே கண்களைத் தண்ணென்ற தேனிப்படையென நம்பி விடாதே காதலை என்னுடன் சேர்த்துக் குழப்பி விடாதே என் கைகளைக் கோபுரமுள்ள கோயிலெனப் புரிந்து விடாதே கால்களைப் பரந்த செம்மண் தரையென்றோ எல்லையற்ற பெறுமதி கொண்ட எதையாயினும் என் மாடப்புறாவே

Page 7
என்னுடையவை என்றெண்ணிக் குழம்பிவிடாதே
நாங்கள் நிற்கவோர் நிலம் எங்களுடையதெனக் கிடைக்கும் வரையில் எங்களுடையதென எம்கரங்களில் ஆயுதங்களும் சூழ்ந்து சிலவகை நண்பர் கூட்டமும் கிடைக்கும் வரையில் எங்கள் பெயரை எவராயினும் காதல் என்றழைப்பரோ எப்போதாயினும்?
அவ்வாறடைந்த பின்,
காதலின் காவல்
காதலின் சக்தி என்றெங்களை வீரியமிக்க பெயர்களில் அழைத்துக் கொள்ளலாம். அதுவரையில் என் இனிய நெஞ்சங்களே எங்களில் எவராயினும் ஒருவரின் தகுதியிலும் குறைந்ததும் இலகுபட்டதுமான காதலுணர்வுகளை எளிமையாகப் பேசுவோம்.
யூடி கிளின்
அமெரிக்கர். பெண்களது எழுத்துகள், கவிதை, ஒருபால் சேர்க்கைக் கற்கைகள் கற்பிப்பவர்.
உன்னுடைய பெயரைக் கேட்கும் பொழுதில்
உன்னுடைய பெயரைக் கேட்கும் பொழுதில் அதனை நான் சற்று இழந்ததாக உணருகிறேன் அது நம்ப முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது : ஆறெழுத்துகளுக்கு அவ்வளவு மகிமையிருக்குமென்று
உனது பெயரால் ஒவ்வொரு சுவரையும் தகர்த்து விடும் உத்வேகம் கொண்டுள்ளேன் இல்லங்கள் எல்லாவற்றிலும் உன் பெயரை எழுதுவேன் உனது பெயரைக் குனிந்து நான் கூவாத கிணறெதுவும் அங்கிருக்காது உனது ஆறெழுத்துகளை நான் கூவி

அவை எதிரொலிக்காத மலையெதுவும் அங்கிருக்காது.
பறவைகள் உன் பெயரைப் பாடிடப் பயிற்றுவது மீன்கள் உன் பெயரைப் பருகிடப் பயிற்றுவது உன் பெயரை உச்சாடனித் திருப்பதன்றி பைத்தியகாரத்தனம் வேறொன்றுமில்லை என மனிதர்க்குப் பயிற்றுவதென்பதே என் உத்வேகம்.
ஆறெழுத்தும் அல்லாத வேறெழுத்துகளை மறந்து போவதும் இலக்கங்கள் முழுவதையும், வாசித்த நூல்களையும் நானெழுதிய கவிதைகள் அனைத்தையுமே மறந்து போவதும் என் உத்வேகம்.
உன் பெயரால் முகமன் சொல்லவும் உன் பெயரால் இரந்து உண்ணவும் 'அவளெப்பொழுதும் அதையேதான் சொல்வாள்' என எனைக் காணும் பொழுதில் மற்றவர்கள் கூறக்கேட்பதில் பெருமைப்படுகிறேன் மகிழ்ச்சியடைகிறேன் ஆதலால் மிகவும் திருப்தியுறுகிறேன்.
மறு உலகிற்கு
உன் பெயரை என் நாவில் சுமந்து செல்லுவேன் அவர்களின் கேள்விகளுக் கெல்லாம் உன் பெயரையே பதிலாயும் சொல்லுவேன் புனிதர்களும் நீதிவழங்குவோரும் எதையுமே விளங்கிக்கொள்ளார்.
எப்பொழுதும் உன் பெயரையே உச்சரித்திருக்க கடவுள் தீர்ப்பளிப்பார்.
ஸ்பானிய மொழியில் குளோறியா பியூற்றஸ் கவிதை, புனைகதை, சிறுவர் நாடகங்கள் எழுதியிருப்பவர்.
ஆங்கிலத்தில் பிலிப் லெனவன், அடா லோங்

Page 8
தூய்மையாக்கல்
கிறேஸ்புவர்
ஒரு மத்தியான நேரத்தில் அது வந்திருந்தது - எனது உள்ளாடையில் காய்ந்த வாழைப்பழச்சாற்றின் நிறத்தில் கறை ஒன்று 'அம்மா என்ர உள்ளாடையில் மண் நிறத்தில் கறை ஒன்று படிஞ்சிருக்கு' சாப்பாட்டு மேசையில் அம்மாவிடம் சொன்னேன்.
ஒரு வாய் சோற்றை வாயில் போடக் கொண்டு சென்றவள் அதனைக் கோப்பையில் போட்டாள். என்னை முழுசிப் பார்த்து 'என்ன கறை? எங்க?' என்று அவசரமாகக் கேட்டாள்.
'எனக்குத் தெரியா அது தன்பாட்டில் என்ற உள்ளாடையில் வந்திருக்கு' அவளுடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. சத்தம் எதுவும் இல்லாமல் என்னையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் பின்னர் சோற்றை வாயில்ப் போட்டு, அசைபோட்டு மென்றாள்.
நான் கோழி இறைச்சித்துண்டொன்றை எடுத்துக் கடித்தேன். தீபாவளி நாளில் மற்றாக்களின் வீடுகளில் நான் சாப்பிட்ட கறி எல்லாவற்றையும் விட அம்மா சமைத்தது உருசியாக இருந்தது. இறைச்சித்துண்டுகள் குழம்புடன் கரையாத வகையில் பதமாகச் சமைத்தி ருந்தாள். சரக்குகள் கூட உறைப்பைக் கொடுக்காத விதத்தில் அளவாகச் சேர்க்கப்பட்டிருந்தன. இன்னுமொரு இறைச்சித் துண்டைக் கோப்பையி லிருந்து எடுத்தபோது உள்ளங்கை மடிப்புகளிற்குள் ஒட்டிக்கொண்ட கறிக்கலவை விரல் நுனிகளையும் நனைத்தது. எப்பொழுதும் போல அவள் சமைத்த கறியின் வாசனை சாப்பிட்டு அதிக நேரத்திற்குப் பின்னா லும் இருந்து கொண்டே இருந்தது.
'அம்மா என்ர வீட்டுப்பயிற்சிகளை முடிச்சுப்போட்டு பீற்றரின்ர பைசிக்கிள நான் ஒட முடியுமா?' அமைதியை உடைத்துக்கொண்டு ஜீவனின் குரல் வந்தது. அவன் என்னுடைய ஒன்பது வயது நிரம்பிய தம்பி. முன்னம் ஒரு தடவை அவன் விழுந்து முழங்காலில் கடுமையாகக் காயம் பட்டது. அதிலிருந்து அவன் சைக்கிள் ஓடுவதனை அப்பா விரும்புவதில்லை. இரண்டு மாதங்களாக ஒரு நாவல் நிற காய இசறு அவ்விடத்தில் இருந்தது.

அம்மா ஜீவனைப் பொருட்படுத்தாமல் இருந்தாள் ஜீவன் அவனுடைய விரல்களைச் சூப்பிக்கொண்டிருக்க, அவள் சோற்றைக் குழைத்துக் கொண்டிருந்தாள். ஜீவன் மீண்டும் முயன்றான் ‘அம்மா நான்.'
'விரல் சூப்ப வேண்டாம் என்று உன்னட்டை எத்தனை தடவை சொல்லியிருக்கன். சாப்பிட்டு முடிஞ்சா போய் உன்ர கையைக் கழுவு' அவன் தன்னுடைய வார்த்தைகளை முடிக்கு முன்னமே அவள் கத்தினாள்
'ஆனால் நான் இன்னும் சாப்பிட்டு முடிக்கல்ல' ஜீவன் முறைப்பாடு செய்தான்.
'பின்ன சாப்பிட்டு முடி' கதையை அத்துடன் முடிக்க நினைத்த அம்மா சத்தமிட்டவாறே ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றினாள்.
ஜீவன் சைக்கிள் விடயத்தை கைவிடுவதற்கு ஆயத்தமாக க்கவில்லை. அவளைத் தொல்லைப்படுத்துவதைத் தொடர்ந்தான். (5 த cத ததுவதைத clதாடாநத
'பின்ன நான் பீற்றருடைய சைக்கிள ஒட."
'உன்ர சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மண்டபத்துக்கு போ ஜீவன்' அம்மா அவனது பக்கம் தலையைத் திருப்பிச் சொன்னாள்
'ஆனா நீங்கள் தான் மண்டபத்திற்குள்ள இருந்து சாப்பிடக்கூடாது என்று சொன்னது' ஜீவன் விவாதித்தான்
'சாப்பாட்டை எடுத்துப்போய் மண்டபத்திற்குள்ள இருந்து சாப்பிடு. நான் கீதாவோட கதைக்க வேணும்'
'ஏன்' ஜீவன் சிணுங்கினான்
“தேவையில்லாத கேள்விகள் கேக்கிறத நிப்பாட்டிப் போட்டு நான் சொல்லுறத செய்யிறியா என்ன? உன்ர கோப்பையை எடுத்திட்டு அங்கால வெளியில போ' அம்மா கூச்சலிட்டாள். அவளுடைய கைகள் சோற்றையும் கறியையும் வேகமாகப் பிசைந்து கொண்டிருந்தன.
இன்னுமொரு நிமிடமாயினும் கூடுதலாக இருந்தால் சிக்கலில் அகப்படுவான் என்பது ஜீவனுக்குத் தெரியும். அவன் அவனுடைய கோப்பையை எடுத்துக்கொண்டு குசினிக்கு வெளியில் சென்றான். அம்மா தான் இருந்த கதிரையைப் பின்னால் தள்ளி விட்டு வக்குக்குச் சென்று கை
9

Page 9
கழுவிய பின் படுக்கை அறைக்குள் சென்றாள். நான் அவளைப் பின் தொடர்ந்து சென்றேன். என்னுடைய மதிய உணவும் அவளுடையதும் சாப்பிட்ட குறையில் மேசையில் இருந்தன.
கதவுகளை மூடி, அதன் பின்னால் நின்று வெள்ளைப் பொருள் ஒன்றை என்னிடம் திணித்துவிட்டு மெல்லிய குரலில் சொன்னாள், "இதனை உன்னுடைய இரு கால்களுகிடையில் வை'
அவள் செய்யச் சொல்வது என்னவென்று தெரியாது திகைத்து நின்றேன். இரு நுனிகளிலும் வளையங்களைக் கொண்ட ஒரு பெரிய பாண் துண்டு போன்று அப்பொருள் இருந்தது.
'உன்னுடைய உள்ளாடைக்குள் இதனைவை” என்னுடைய தயக்கத்தை அவதானித்தவள் கட்டளையிட்டாள்.
நான் அந்தப் பாணை அவளிடம் இருந்து வாங்கினேன். ஒரு பக்கம் அம்மாவின் சேலையைப் போல் மென்மையாக இருந்தது. மற்றப்பக்கம் கொஞ்சம் கடினமாக இருந்தது. அது நுண்ணிய வலை போன்ற மேற்பரப் பைக் கொண்டதாக இருந்தது. ஒரு நீல நிறக்கோடு அதன் நடுவில் மேலும் கீழும் ஓடியிருந்தது.
‘என்னத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உனது தொடைகளுக் கிடையில் அதை சரி செய்து கொள்' அம்மா என் சிந்தனையைக் கலைத்தாள்.
என்ன செய்வதென்றே எனக்குத் தெரியாது. 'எப்படி அம்மா' நான் கேட்டேன்.
"ஒரு சின்ன வேலையைக் கூட உன்னால் செய்ய முடியாதா?" என்னிடமிருந்து அந்த 'பாட்" ஐப் பறித்தாள். பின்னர் அவள் அவளு டைய சேலையை உயர்த்தி, அதனை அரைவாசி தூக்கிப்பிடித்து, இரண்டு தொடைகளிற் கிடையிலும் அந்த 'பாட்'ஐ வைத்தாள். அம்மாவின் முழங்காலிற்கு மேல் நான் ஒரு போதும் பார்த்தில்லை. அவளுடைய தொடைகளைப் பார்த்ததால் நான் 'பாட்'ஐ மறந்து விட்டேன். அவளுடைய மெல்லிய மண்ணிற தோலின் கீழ் பச்சைக்கோடுகள் நெளிந்திருந்தததை காணக்கூடியதாக அவள் அங்கு நின்றிருந்தாள். நான் பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்த அவள் சேலையைக் கீழே: விட்டாள். நான் என்னுடைய மனத்தில் உணர்ந்தவற்றை அவளுடைய கண்களில் காணக் கூடியதாக இருந்தது. என்னுடைய அம்மாவின்
10

தொடைகளை ஒரு போதும் நான் கண்டிருக்கக்கூடாது என நினைத்தேன்.
இப்பொழுது என்னுடைய முறை வந்தது. என்னுடைய உள்ளாடைக் குள் ‘பாட்'ஐ வைப்பதற்காக தடுமாறினேனாயினும் எனது பாவாடையை தொடர்ந்து கீழே இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தேனாகையால் நான் என்ன செய்கின்றேன் என்று தெரியவில்லை. எனினும் அவள் செய்தது போல என்னுடைய தொடைகள் வெளித்தெரியுமாறு செய்ய நான் விரும்பவில்லை. ‘இன்றைக்கு அப்பா வீட்டிற்கு வரும் போது இந்த 'பாட்' இற்கு ஒரு பட்டி வாங்கிக் கொண்டு வருவார்' என்று அம்மா சொன்னாள்.
அதனை எங்கே கட்டப்போகிறேன் என அதிசயித்தேன் அம்மா தொடர்ந்தாள் 'நீ இந்த வளையங்களைப் பட்டியிலிருக்கும் கொழுக்கிக ளில் கொழுவினால் 'பாட்’ அசையாமல் இருக்கும்'
"எவ்வளவு நாளைக்கு நான் இதை அணிவது?"
'உன்னுடைய மாதவிடாய்க் காலம் முடியும் வரை இதை நீ அணிய வேண்டும். ஒவ்வொருமுறையும் இது அழுக்காகும் போது அதனை மாற்ற வேணும். வக்குக்குக் கீழே புதினப் பத்திரிகை இருக்கு அதில பாட்ஐ சுற்றி முன்னால் இருக்கும் குப்பை வாளியில் போடவேணும். குசினிக்குள் இருக்கும் வாளியில் போடாதே. முன்னுக்கு கொண்டு போ, புரிஞ்சுதா?” நான் உள்ளாடையை 'பாட்டிற்கு மேலால் இழுத்து விட்டேன். அம்மா. சொன்னாள். 'நாளை நீ வீட்டில் இருக்கிறாய். நான் உன்னுடைய
ஆசிரியைக்கு ஒரு குறிப்பு அனுப்புகிறேன்"
ஆனால் எனக்கு ஒரு வலைப்பந்து போட்டி இருந்தது. அதற்கு நான் போக வேண்டியிருந்தது.
'அம்மா நான் வலைப்பந்து விளையாடுகிறன், திருமதி ஹோ சொன்னவ, வராமல் இருந்திர வேண்டாமென்று'
‘நான் ஒரு குறிப்புத்துண்டு எழுதிறன்' அவள் என் வாயை மூடினாள்.
'ஆனால் திருமதி ஹோ சொன்னவ வராமல் இருக்க வேண்டா மென்று'
"நான் சொல்லுறன் நீ போக முடியாது”
11

Page 10
'எனக்கு வருத்தம் ஒண்டும் இல்லை ஏன் நான் போக முடியாது'
‘எப்ப உனக்கு இப்பிடிப்பெரிய வாய் வந்தது? நீ போகல்ல, இதுதான் முடிவு' *
"ஆனா திருமதி ஹோ.'
'யாரந்த மண்ணாங்கட்டி ஹோ? உனக்கு சாப்பாடு தாறவ அவவா அல்லது நானா? நீ இப்படிக்கதைக்கிறத அப்பா கேட்டாரெண்டால் உனக்கு நல்ல அடிதான் தருவார்.' என் இருதொடைகளுக்கிடையிலும் ‘பாட்' வைக்கப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன், அப்பாவின் கோபம் ஞாபகத்திற்கு வந்தது, மண்ணிறக்கறையைப் பற்றி நினைத்தேன், எனது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்.
அம்மா கதவைத்திறந்து வெளியில் சென்றாள். நான் கட்டிலில் அமர்ந்திருந்து மெதுவாக அழுதேன். எவ்வாறு என் விளையாட்டு அணி யினருக்கு விளங்கப்படுத்துவேன்? திருமதி ஹோ என்ன நினைப்பார்? அம்மா மதிய உணவுக்கோப்பைகளைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்ததை திறந்த கதவினூடாக அவதானித்தேன். கண்ணீர்த்துளி என் மூக்கின் மேலால் இறங்கி வந்தது.
அடுத்து வந்த ஐந்து நாட்களும் ஒரு வித புதிராகவே இருந்தன. அம்மா இதற்கு முன் ஒரு போதும் தந்திராத கட்டளைகளைத் தந்தாள். 'நாயைக்கூட்டிக் கொண்டு வெளியே போகாதே' ஜீவனை உன்னுடைய கட்டிலில் இருக்க விடாதே, இன்றைக்குத் தலையில் குளியாதே. அப்படிச் செய்வாயானால் கண்ணிற்குக் கீழ் கருவளையங்கள் வரும் இன்னும்
மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்'
“எத்தனை தடவை உனக்குச் சொல்லுறது 'பாட்'ஐ முன்னால் உள்ள குப்பைக் கூடையில் எறி என்று' அவள் சத்தம் போட்டாள். நானும் பதிலிற்கு "மறந்து விட்டேன் அம்மா' என்று கத்தியதற்கு அவள் கோபப் பட்டு, இன்னும் பெரிதாகக்கத்தினாள் "உனக்கு முன்னமே சொல்லியி ருக்கன் பொம்பிளப் பிள்ளையன்ற பொருள், ஜீவன் பாக்காத மாதிரி நீ கவனமாக இருக்க வேண்டும் என்று'
நான் ஏன் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கிறேன் என்று ஜீவனுக்கு ஒரு போதும் தெரிந்திருக்கவில்லை. அவன் என்னைப் பற்றிக் கேட்ட போதெல்லாம் அப்பா அவனை அவனுடைய வேலையைக் கவனிக்கும்படி கூறிவிட்டார். அவனிற்கு ஒன்றும் சொல்ல வேண்டாம்
12

என்று அம்மா சொல்லியிருந்ததால் நான் ஒரு வார்த்தை கூட அவனிடம சொல்லவில்லை. அதனால் ஜீவன் சுற்றுப்புறத்துப் பையன்களிடம் எனக்குப் பொக்களிப்பான் என்று சொல்லியிருந்தான்.
ஒரு நாளைக்கு இரு தடவை சீனியுடன் கலந்த பச்சைக் கடலையின் இறுகிய கூழை அம்மா சாப்பிடத் தந்தாள். என்னுடைய கருப்பையை உறுதியாக்க வேண்டும் என்பதற்காக காலையில் பச்சை முட்டைக் கருவை விழுங்கவும் நல்லெண்ணையைக் குடிக்கவும் கட்டாயப்படுத்தினாள். இதற்கிடையில் இளஞ் சிவப்புநிற நெகிழ்வான பட்டி ஒன்று என் இடுப்பில் கட்டப்பட்டிருந்தது. அது என் தசையை வெட்டியது. என்னு டைய மண்ணிற கறை ஒரு ஒட்டும் தன்மையுள்ள சிவப்புத் திரவமாக வந்தது. அதை அம்மா ‘மாதவிடாய்' என்று கூறினாள். தொப்புளுக்குக்கீழ் வயிறும் முதுகுப்புறம் கீழ்ப்பாகம் முழுவதும் வலித்தது.
ஒரு வாரமாக நான் பாடசாலைக்குச் செல்லவில்லை. வலைப்பந்து விளையாட்டைப் பற்றிச் சிந்திக்கலானேன். இனிமேல் திரும்பவும் விளையாடலாமா என்பதும் சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது. ஒருக்காலே இரண்டு தரமே பாடசாலைக்குப் போக முடியுமா என்று அப்பாவிடம் கேட்டுப்பார்த்தேன். முதலில் போக முடியாது என்று கூறி னார். இரண்டாம் தடவை அடிவிழும் என்று பயப்பிடுத்தினார். அதனால் கேட்பதனை நான் நிறுத்தினேன். அந்த வாரத்தில் கூடுதலான நாட்களை கட்டிலில் இருந்து எனிட் பிளைட்டனின் மர்மக்கதைகளை வாசிப்பதில் செலவிட்டேன். இப்படிக்கதகைளை வாசிப்பது சந்தோஷமாக இருந்தது. இது மட்டும் தான் அப்பொழுது சந்தோஷமான ஒரு பகுதியாக இருந்தது.
எனது வயிற்றுவலி கூடியவிரைவில் நின்றதுடன் இரத்தம் போவதும் நிற்கத் தொடங்கியது. மீண்டும் மற்றவர்களின் உடைகளுடன் எனது உடைகளையும் ஊறப்போடலாம் என்று அம்மா கூறினாள். இதனால் வண்டுகளைப் பிடிப்பதற்காக சிலந்திகள் கூடுகளைக்கட்டுகின்ற கொடி யின் இன்னொரு மூலையில் என்னுடைய உள்ளாடைகளை இனிமேலும் காயப்போட வேண்டி இருக்கவில்லை.
என்னுடைய சுகயினம் அனேகமாகப் போனபின் நான் தமிழ்ப்படங் களில் மட்டுமே கண்டிருந்த ஒரு பொருளை அம்மா என்னிடம் தந்தாள். அது சினிமாப்படங்களில் பின்னர் வில்லனாக மாறிவிடும் ஒரு கனவான் அல்லது அரசன் முன் பெண்கள் நடனமாடுகின்ற போது அணிகின்ற ஆடையாகும். மஞ்சள் நிற சற்றின் மேற்ச்சட்டை ஒன்றையும் அவளு
3

Page 11
டைய புதிய ஜோஜற் சேலை ஒன்றிலிருந்து தைக்கப்பட்ட மணியிழைத்த நீள்பாவாடை ஒன்றையும் தந்தாள். பாவாடை கணுக்கால் வரையும் வந்தது. மேற்சட்டை முன்னால் நீளவும் பொத்தான்களை உடையதாக இருந்தது. கைகளிற்குச் சுருக்குவைக்கப்பட்டிருந்தது.
"நாளைக்கு இதனை நீ உடுத்திக்கொள்' அவள் சொன்னாள்.
'மாமாமார்கள் மாமிமார்கள் எல்லோரும் இங்கு வருகிறார்கள் போதகர் உனக்காக ஒரு ஜெப வழிபாடு செய்வார்'
'ஏன் அவர்கள் வழிபாடு செய்கிறார்கள்' நான் கேட்டேன்.
"இது எங்களுடைய வழக்கம், ஒவ்வொரு பெண்ணும் இதனைத்
தாண்டிச் செல்ல வேண்டும்'
அவள் விடையளித்து உரையாடலை முடித்தாள்.
நாள் முழுவதும் அம்மா மண்ணெண்ணெய் அடுப்பிற்கு முன்னால் நின்று இந்திய இனிப்பு வகைகளைச் செய்தாள். அவள் ஏலக்காயின் விலையைப்பற்றி முணுமுணுத்துகொண்டும் விருந்தினருக்கு உணவளிக்க போதிய உணவில்லாமை பற்றி கவலைப்பட்டுக் கொண்டுமிருந்தாள். மீண்டும் அவளை நான் ஏன் எங்கள் வீட்டிற்கு ஆட்கள் வருகிறார்கள் எனக் கேட்ட போது இது ஒரு கொண்டாட்டம் என்றாள். எதனை நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். எனக்கேட்டபோது, அவளுடைய நேரத்தை வீணாக்க வேண்டாமென்று பேசியதுடன், குசினியை விட்டு நகருமாறும் கூறினாள்.
அடுத்த நாள் மத்தியானம் மூன்று மணிக்கு சொந்தக்காரர்கள் எங்களுடைய சிறிய வீட்டினை நிறைத்து, என்னுடைய அறையைத் தவிர எல்லா அறைகளுக்கும் பட்ை எடுத்தனர். என்னைத்தான் கூப்பிடும் வரைக்கும் நான் எனது அறையிலேயே இருக்க வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தாள். நான் கட்டிலிலிருந்து சுற்றிவர நடந்து கொண்டிருந்த ஊரளப்புக்களையும் சிரிப்பெலிகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். இரு மாமியர் உள்ளே வந்து எவ்வாறு இருக்கிறேன் எனக் கேட்டனர். என்னுடைய மச்சாள்மார் திறந்த ஜன்னலூடாகப் பார்த்தனர். மாமாக்கள் கதவடியில் நின்று அடிக்கடி என் மீது பார்வையை வீசினராயினும் யாரும் கிட்ட வரவில்லை.
சிறுது நேரத்திற்குப்பின் எல்லோரும் என்னைத்தனியே விட்டுச்
14

சென்றனர். தவறிய சிவப்பு அங்கியின் மர்மம்' எனும் கதையை வாசிக்க
முயற்சித்தேனாயினும் என்மனம் வெளியில் நடக்கும் விடயங்களையே
கவனித்தது. என் கண்கள் அப்புத்தகத்தில் இருந்தாலும் காதுகள் மூடப்
பட்ட கதவுகளிற்கு அங்கால் நடக்கும் கதைகளைக் கேட்கும் வண்ணம்
வெளியேதான் இருந்தன. ஆதர்மாமாவிற்கு கற்றரக்ட் சத்திரசிகிற்சை
நட்தது, ஈஸ்தர் மாமி ஒரு பொறியியலாளரைத் திருமணம் செய்யப் போகிறாள், திருமதி தொரையின் மகள் ஒக்ஸ்போர்ட் பரீட்சையில்
சித்தியடையத்தவறிவிட்டாள். ஜோசுவா மச்சானின் மகன் ஒரு
யாழ்ப்பாண மணப்பெண்ணுடன் திரும்புகின்றான்.
அம்மாவினுடைய சமயல் வாசம் குசினியிலிருந்து வீடெங்கும் பரவியது. எங்கள் விசேட றோஸ்நிறக் கோப்பைகளில் சீனிப்பாகில் மின்னிய குலாப் ஜாமூன்களை அம்மா அடுக்குவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ரிசுக் கடதாசிகளிலிருந்து மீன் வடிவ உலோகதா லான றேகளைப்பிரித்தெடுத்து அவற்றுள் வெள்ளை புர்விக்களிற்குப் பக்கத்தில் தங்க நிற லட்டுக்களை ஒழுங்கு படுத்தினாள். இன்று காலை அவள் பைறெக்ஸ் கோப்பைகளை கோழிக் கறியினாலும் கராம்பும் கறுவாவும் கொண்ட சோற்றினாலும் நிரப்பினாள். எப்போ அதனை உண்ணப் போகின்றோம் என்று அங்கலாய்த்தவாறு கட்டிலிலிருந்து அவளது உணவை கற்பனையிற் சுவைத்தேன்.
சூரியன் வெளியில் பிரகாசமான ஆராஞ்சு நிறத்திற்கு மாறியபோது அம்மா என் அறைக்கு வந்தாள். 'மூத்தமச்சான் ஐவி இப்பொழுது உன்னைக்குளிக்க வார்க்கப் போகிறாள்' அவள் சொல்லிவிட்டுப் போனாள். நான் பயந்து போனவளாகக்கட்டில் நுனியில் அமர்ந்திருந் தேன். எனக்கு மூத்த மச்சான் ஐவியை தெரிந்திருக்கவில்லை.
"கீத்தா வா, நீ குளிப்பதற்கு எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது' அம்மா கூப்பிட்டுக் கேட்டது. நான் தகவுக்குப் பக்கத்தில் காத்திருந்தேன். யாரோ கதவைத்தட்டி'கீதா உன்னை அம்மா கூப்பிடுகிறாள்' என்று சொல்லிக் கேட்டது. ஆனால் நான் நகரவில்லை. நான் அறைக்குள் இருந் தால் அம்மா ஒரு வேளை உள்ளே வரக்கூடும். வந்தால் மூத்த மச்சான் ஐவியைப் பற்றி அவளிடம் விசாரிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அம்மா உள்ளே வரவில்லை மாறாக அப்பா யன்னல் இடுக்கினூடாக 'ஒய் கீதா, அம்மா உன்னைக் கூப்பிடுகிறாள் நீயென்ன செவிடா?" என்றார்.

Page 12
கதவுக்குமிழைத்திருப்பித்திறந்து வெளியில் அடியெடுத்து வைத் தேன். மாமாமார் கதைப்பதை நிறுத்தினர். மாமிம்ார் புன்னகை பூத்தனர்: நான் பொறியில்கப்பட்டதாகவும் வெட்கிக்கப்பட்டதாகவும் உண்ர்ந்தேன். ஏன் அவர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர்? நான் என்ன தான் செய்து விட்டேன்?
குளியலறைக்குச் செல்லும் நடைவழிநீண்டுகொண்டு செல்வதாய்ப் பட்டது. என் கண்கள் நிலத்தில் பதிய, நான் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். ஏதோவொன்று என் வயிற்றின் நடுவில் இறுக்கிப் பிடிக்க,'என் கால்கள் பலவீனப்படுவதாக உணர்ந்தேன்.
நான் குளியலறையை அடைந்த போது மூத்தமச்சான் ஐவி காத்துக்கொண்டிருந்தாள். இதற்கு முன்னர் ஒரு போதும் அவளை நான் கண்டதில்லை. அவளுடைய பாதத்தை நோக்கினேன். நிலத்தில் போர்த் தப்பட்டிருந்த குடம் ஒன்றைக் கண்டேன். குளியலறைக்குள் நான்
'வா, உன்னுடைய உடைகளைக் கழற்று" அவள் சொன்னாள். நான் ஏழுவயதை அடைந்ததும் வெட்கம் என்றால் என்ன என்று தெரிந்ததி லிருந்து, ஜீவன் எனது தம்பியுல்ல ஒரு ஆண் என்று தெரிந்ததிலிருந்து, எனது மாமாமார்கள் மாமாமார்கள் அல்ல ஆண்கள் என்றும் தமது உடல்களை மறைக்க வேண்டியவர்களே பெண்கள் என்றும் அறிந்ததிலி ருந்து, நான் ஒரு போதும் இன்னொரு நபருக்கு முன்னால் ஆடையின்றி நின்றதில்லை: -
நான் மூத்த மச்சான்ஐவியை வெட்கத்துடன பார்த்தேன். அவளது பார்வையை நோட்டமிட முயன்றேன். ஆனால் அவள் துவாயால் மறைத்து பார்க்காமல் இருப்பது போல நடித்தாள்: அவளது முகத்தை என்னேரமும் கவனித்தவாறே நான் காலை மாற்றி ஊன்றி நின்றேன். திடீரென அவள் சத்தமிட்டாள்' 'ச்சீ. வா.கெதியா நான் நாள் முழுவ தும் நிக்கல்ல'நான் எனது உடையிலிருந்த பொத்தான்களைக் கழற்ற முயன்றேன் ஆனால் எனது விரல்கள் விறைத்துப் போயிருந்தன:
'இதென்ன செய்கிறாய்? பாவைப்பிள்ளை மாதிரி நிற்காதே நான் இதற்கு முன்னால் டசின் கணக்கில் கவடுகளைப் பாத்திருக்கன்' அவளுடைய கொச்சைத்தனத்தைக் கண்டு நான் வெறுத்துப் போனேன். கடுமையான பெருமைபிடித்த முகத்தினை உடைய இந்தப் பெண் யார்? அம்மா இவளை ஏன் அழைத்தாள்?
b

மூத்த மச்சாள் கீழே குனிந்து குடத்தின் மேல் மூடியிருந்த சீலையை எடுத்தாள். சூடான பாலின் நறுமணம் மேலெழுந்து காற்றை நிரப்பியது. அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். கைகளை அவளது இடுப்பில் வைத்தபடி காத்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு பொத்தான்களாக கடந்து சென்று கொண்டிருக்கும் போது என்கைகள் நடுங்கின. கடைசிப்பொத்தானையும் கழற்றினேன். குளியல றைச்சுவரின் குளிரான ஓடுகளிற்கு முன்னால் நான் நிர்வாணமாக நின்றேன். மூத்த மச்சான் முன்னால் வருமாறு சைகை காட்டினாள். நான் அவளிற்கு முன்னால் நகர்ந்து நிலத்தில் அமர்ந்தேன். அவள் தமிழில் சிறு வணக்க மந்திரத்தை முணுமுணுத்து விட்டு குடத்தைத் தூக்கிக் கவிழ்த்து அதிலிருந்தவற்றை என் தலை மீது கொட்டினாள். வெது வெதுப்பான பால் மெதுவாக என் கண்களிற்குக்கீழே அருவியாக ஒடியாது. என் தலைமயிரை ஈரப்படுத்தி கண்ணிமைகளிலும் தேங்கியது.
'சரி எல்லாம் செய்து முடிந்தாகிவிட்டது' அவள் அறிவித்தாள். என்னுடைய தோலின் மேல் பாலின் வெண்மை இருந்தது. அது நாங்கள் இந்த வீட்டிற்கு குடிவந்த நேரத்தை நினைவுபடுத்தியது. அப்பா முன் அறையின் நிலத்தில் கரி அடுப்பில் பால் காச்சினார். அதனால் எங்கள் வீடு தீய ஆவிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும். அந்தப் பால்
காற்றைத் தூய்மையாக்கும் என அம்மா சொன்னாள்.
ஆறு வருடத்திற்கு முந்தய நேரத்தை என் நினைவிற்குக் கொண்டுவர சடுதியாக நான் ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டேன். பால் என்னைத் தூய்மையாக்கிக் கொண்டிருந்தது. எனது இரத்தத்தின் மாசினை அது நீக்கியது.
மூத்த மச்சான் குளியலறையை விட்டுப் போனாள். என் உடலில் விரைவாகக் காய்ந்து கொண்டிருக்கும் அருவருப்பான திரவத்தை தேய்த்துக் கழுவுவதற்காக நான் அங்கே நின்றேன். சவ)காரம் போட்டு பாலைத்தேய்துக் கழுவினேன். நான் இதனை வெறுக்கிறேன், அவளை யும், அவர்களையும், எல்லாவற்றிலும் மேலாக என்னுடைய இரதத்தினை வெறுக்கிறேன்.
குளித்து முடிந்ததும் மணியிழைத்த பாவாடையையும் மினுங்குகு கின்ற மேல்ச்சட்டையையும் அணிந்தேன்.
அம்மா என்னை வெளியில் சொந்தக்காரர்களிற்கு முன்னால் கூட்டி
17

Page 13
வந்து அவளுக்குப் பக்கத்தில் அமரச் செய்தாள் வணக்கத்திற்குரிய தங்கராஜ் ஜெபம் ஒன்றை வாசித்து என்னை ஆசீர்வதித்தார். ஒரு கீதம் இசைக்கப்பட்டு வாழ்த்துப் பெறப்பட்டது. பின்னர் எல்லோரது கண்களும் என் மீது விழுந்தன. அவர்கள் எனது முகம், தலைமயிர், தோலின் நிறம், முதலியவற்றை கூர்ந்து நோட்டமிட்டனர். ஒரு நாள் நான் ஒரு பொருத்தமான மருமகளாக மாறுவேனா என்பதனைக் கருத்திற் கொண்டு கவனமாகப் பார்த்தனர். இறுதியாக அவர்களுடைய ஆராய்ச்சி முடிந்ததும் என்னிடம் வந்து என் கையைக் குலுக்கினர்.
அறையின் மறுமூலையில் அப்பா எழுந்து நின்று சாப்பாட்டை ஆரம்பிப்பதற்கு விருந்தினரை அழைத்தார். அம்மா பரிமாறிய விருந்தை ஒவ்வொருவராக மொய்த்துக்கொண்டனர். நான் அங்கே இருப்பதை எல்லோரும் மறந்து போனார்கள். நான் எனது கதிரையிலமர்ந்திருந்து அவர்களைப்பார்த்துக் கொண்டிருந்தேன். லட்டு, குலாப் ஜமூன்கள், கோழிக்கறி, சரக்குகளிடப்பட்ட சோறு இவற்றின் வாசனையில் நான் காணமல் போயிருந்தேன்.
பிற்குறிப்பு
சடங்கு, கொண்டாட்டம் என்பவற்றினூடாக ஒரு பெண் பிள்ளையின் முதலாவது மாதவிடாயினை அனுட்டிக்கும் தமிழர்களது வழக்கமானது அவளுடைய வாழ்க்கைப் படிமுறையில் பெண் மைத்தன்மையினை அடைகின்றமையினை ஒப்புக்கொள்ளலாகும். இந்த வழக்காறானது அவளுடைய பெண்மையினை நேர்நிலையாக உறுதிப்படுத்தும் ஒன்றாக இருக்கின்ற அதே வேளை திருமணத்திற்குத் தகுதியுடையவளாக அவர்களுடைய மகள் வந்து விட்டாள் என்பதை அப்பெண் பிள்ளையின் குடும்பத்தினர் மற்றவர்களிற்கு அறியத் தருகின்ற ஒரு வழிமுறையாகவும் நடைமுறையில் மாறியுள்ளது. இதன் விளைவாக இந்தக் கொண்டாட்ட மானது பெண் பிள்ளைக்கானது என்பதை விட அதிகமும் அவளின் குடும்பத்தினரிற்கு உரியதாகவே உள்ளது. காலம் மாறிச் செல்கையில் என்னுடையதைப் போன்ற நகர மத்தியதர வகுப்பு தமிழ்க்குடும்பங்கள் திருமணத்தைப் பின்போடுவதனையே ஊக்கப்படுத்துவதனால் பெண்கள் அவர்களுடைய திருமண வயதை இருபத்தியந்து, இருபத்தி ஒன்பது என்றும் சிலவேளைகளில் முப்பதிற்கும் மேலும் பின்போடுகின்றனர். இப்படியான ஒரு மாற்றத்தைக் கருத்திற் கொள்ளும் போது, ஒரு பெண் பிள்ளையின் மாதவிடாயினைக் கொண்டாடுகின்ற வழக்கமானது அவளைக்கல்யாணச் சந்தையில் நிறுத்தும் ஒரு பொறிமுறை என்பதைவிட
18

கூடுதலாக, அவளுடையவ்ாழ்க்கைப் படிமுறையின் ஒரு கட்டத்தை கெளரவப்படுத்தும் ஒரு விட்யமாக மாற்றமடையும் என்பது போலத் தெனப்பட்டது. எனினும் அவ்வாறு இன்னும் நடைபெறவில்லை.
ஒரு தமிழ்ப்பெண்பிள்ளை இப்பொழுது தனது மிகவும் இளமையான காலத்தில் திருமணஞ் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லையாகையால் பருவமடைதல் என்பது திருமணம் எனும் நிறுவனத்தினூடாக அவள் பிள்கைளை உருவாக்கத் தயாராக இருக்கிறாள் என்ற கட்டத்தக்ை குறித்து நிற்பதாக இருக்கின்றது. அதனால் மாதவிடாய்க்காலத்தில் உணவு முறையில் ஏற்படும் மாற்றம் என்பதிலிருந்து, கொண்டாட்டத்திற்கான அவளது உடை வரை எல்லர் விடயங்களும் அவளிற்கும் அவளைச் சுற்றியுள்ள ஏனையோரிற்கும் அவள் ஒரு இயலுமையுள்ள மனைவியும் தாயும் என்ற பாத்திரத்திற்கான பொறுப்புக்களை உரித்தாகப் பெற்றுள்ளாள் என்பதை அறிவிக்கின்றன.
என்னுடைய குடும்பத்தில் மாதவிடாய் இரத்தமானது தூய்மையற்றது எனும் நம்பிக்கை இருந்ததன் காரணமாக மாதவிடாய்ச்சடங்கானது இன்னுமொரு பரிமானத்தையும் எடுத்தது. ஒரு பெண்பிள்ளை வயதிற்கு வந்ததற்காக ‘கொண்டாடப்பட்டது மட்டுமன்றி 'தூய்மையாக்கவும்" பட்டாள். தூய்மையாக்குவதற்கு பாலினை உபயோகிப்பது தமிழர்களதும் இந்துக்களதும் வழக்கமாகும். எவ்வாறாயினும் தென்னாசிய மக்கட் கூட்டத்தினிடையே உள்ள பண்பாட்டு நடைமுறைகளாவன சமயத் தொடர்புகள், நம்பிக்கைகள் என்பவற்றிற்குப் பிறிம்பாக தனித்த வடிவங்களில் தொடர்ச்சியைப் பேணுகின்றன. அதனால் பாலினைக் கொண்டு தூய்மையாக்குதல் என்பது இந்துக்களுடைய வழக்கமாக அல்லாமல் தமிழர்களது வழக்கமாக தமிழ் கிருஸ்தவ சமூகத்தில் செயற்பாட்டினையும் ஆற்றுகின்றது. அதே போல மாதவிடாயுள்ள ஒரு பெண் பிள்ளை அல்லது பெண் ஒரு தாவரத்தைத் தொட்டால் அது இறந்து விடும் என்ற கருத்து இந்துக்களுடையது என்பதாகவும் அதை விடக்கூடுதலாக விவசாய சமூகம் சார்ந்த ஒரு கருத்தாகவும் இருக் கின்றது. இந்த நம்பிககையும் கூட என்னுடையதைப் போல கைத்தொழில் நகரில் வாழும் தமிழ்க்கிருஸ்தவ குடும்பங்களினால் கைக்கொள்ளப் படுவதாக உள்ளது.
மேலும் சீனர்களையும் மலாயர்களையும் பொருந்தொகையாகக் கொண்ட மலேசியாவிற்கு நாங்கள் புலம்பெயர்ந்தலிருந்து, இந்த இனக்குழுக்களிற்கிடையே அனுட்டிக்கப்படும் சில மாதவிடாய்த்
I9

Page 14
தொடக்கு முறைகளும் தமிழ் வழக்குகளில் ஒரு பகுதியாக மாறின. உதாரணமாக மாதவிடாய்க் காலத்தில் முதல் மூன்று நாட்களில் தலையில் குளித்தால் கண்களிற்குக்கீழ் கருவளையங்கள் வரும் என்பதால் முதல் மூன்று நாட்களில் தலையில் குளிக்காமல் இருக்கும் வழக்கமானது தென் சீனர்களின் வழக்கத்தின் ஒரு பகுதியாகும். அதனால் மாதவிடாய் வழக்கு களின் தோற்றுவாய் என்பது உண்மையாக மாதவிடாய் விதிகளை மாதவி டாய்க் காலத்தில் விதிப்பதும் அனுட்டிப்பதும் என்பதை விட குறைவான முக்கியத்துவத்தையே பெறுகின்றது.
வெளிநாட்டுப் பார்வையாளர் ஒருவருக்கு தன்னுடைய பண்பாட்டை வெளிக்காட்டுவது, ஒரு குடும்பத்தின் கெளரவத்தைக் கெடுக்கின்ற குடும்ப ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வது போன்றதாகும். எனினும் தனி நபர்களின் ஆற்றலைக் கெடுக்கின்ற பயிற்சிகள் அல்லது நடைமுறைகள் எல்லாப் பண்பாடுகளிலும் இருப்பதால் அவை மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டியனவாக, மீள்வியாக்கியானிப்பு செய்யப்பட வேண்டியனவாக அல்லது தூக்கியெறியப்பட வேண்டியனவாக உள்ளன. இக்கதையை எழுதுவதில் பெரியதொரு தயக்கம் எனக்கு இருந்தது. அதனை வெளியிடுவதற்காக சமர்ப்பிக்கும் போது, அதை விட பெரிய தொரு தய்க்கம் இருந்தது. ஆனால் கோபத்தை வெளிப்படுத்தவும் அனுபவத்தைக் கதையாடலாக மாற்றவும் இது ஒரு அவசியமான நடவடிக்கையாக இருந்தது.
தூய்மையாக்கல் பல காரணங்களுக்காக எழுதப்பட்டது. கொண்டா டுவதற்கு எனக்கருதப்பட்டு ஆனால் உண்மையில் பெண்பிள்ளைகளை யும் பெண்களையும் இழிவுபடுத்துகின்ற ஒரு வழக்கத்தை உலகிற்கு வெளிக்காட்டவும், அடக்குகின்ற தன்மையுள்ள வழக்கங்களை சவாலுக்குட்படுத்துபவர்கள் மீதும், கேள்வி கேட்பவர்கள் மீதும் எல்லாப் பண்பாடுகளும் சுமத்தும் மெளனத்தைக் கலைக்கவும், பிள்ளைகளுக்கு அர்தமில்லாமல் இருக்கின்ற, பயத்தினை உண்டு பண்ணுகின்ற, அவர்கள் மனிதர்கள் எனும் கெளரவத்தைக் குறைத்து மதிக்கின்ற சடங்குகளில் அவர்களை வற்புறுத்தி பங்குகொள்ள வைப்பதனை எதிர்க்கவும், தாங்கள் பிள்ளைகளாக இருந்தபோது தம்முடைய ஆற்றலை பலவீனப் படுத்திய அதே வழக்குகளைப் பயிற்ச்சி செய்கின்ற, தமது சமூக அந்தஸ்திற்காக அதன் தொடர்ச்சியைப் பேணுகின்ற, பண்பாட்டு மரபுகளைப் பாது காக்கின்றோம் என்ற பெயரில் தமக்கு அடுத்த சந்ததிக்கு இவற்றைக் கையளிக்கின்ற பெரியோர்களை எதிர்கொள்ளவும் எழுதப்பட்டது.

இக்கதையை என் மருமகள்களிற்காக எழுதுகிறேன். அதனால் ஒரு கிருஸ்தவ தமிழர் குடும்பப் பெண்ணாக வளர்ந்ததற்காக கீதா தாண்டிச் சென்றவற்றை அவர்கள் தாண்டிச் செல்ல வேண்டியிராது. மாதவிடாய்ச் சடங்கு உண்மையானதொன்றாகக் கொண்டாடப்படுவதற்கு அது தற்பொழுது எந்த அடிப்படையில் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறதோ அந்த கடின அடிப்படைகள் மாற்றப்பட வேண்டியதுடன் பெண்களது பாலியல் தொடர்பான மெளனமும் விலக்கப்பட வேண்டும். அப்பொழுதான் மாதவிடாய்ச் சடங்கின் போது எல்லோர் கவனத்தின் மையமாக இருக்கும் பெண், மாதவிடாய் அவளிற்கு வருகின்ற காரணத்தால் சிறுமையையும் வெட்கத்தையும் பரம்பரைச் சொத்துப்போல பெற்றுக்கொள்ளும் நிலைமையிலிருந்து விடுதலையாக்கப்படுவாள். அப்பொழுது தான் அவள் பெண்ணாக இருப்பதற்காக தண்டிக்கப்படாதிருப்பாள்.
தமிழில் : வே - அழகரத்தினம்.
éÏÛւնվ:
பெண்கள் தகவல் கூட்டினால் வெளியிடப்படும் Options எனும் ஆங்கிலச்சஞ்சியிைல் (No 11, 3rd Quarter 1997) இலிருந்து இச்சிறுகதை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது முதலில் Our feet walk the sky (Tg) if TGSci) gLib Quibp 5.g3,605ungsb (Lute press, California 1993). ஆங்கிலத்தில் இச்சிறுகதையின் தலைப்பு. Puriftcation' 6T6Tug5 T(5th.

Page 15
புதுயுகம் படைப்போம்.
கெளதமர்களைக்
கல்லாக்கி
இராமர்களைத் தீயில் இறக்கி
பாண்டவர்கள்
ஒவ்வொருவரையும் பாஞ்சாலியாக்கி மாதவியைத்
தெய்வமாக்கி
இலக்கியங்களைப் புதுப்பித்து
புதுயுகம் படைப்போம்! விரைந்து வாருங்கள்
பதிவிரதை
பத்தினி
கற்பரசி எனும் சொற்களுக்கு நமது அகராதியில்
புதிய அர்த்தம்
கொடுத்து புதுயுகம் படைப்போம்.
வாசுகி குணரத்தினம்

நிஜங்களின் சாட்சிகள்
சே. விஜயலட்சுமி
நான் குந்திக் கொண்டிருந்தேன் என்பதை விட தொங்கிக் கொண்டி ருந்தேன் என்று கூறலாம். இந்தப் பூமிக்கும் பாதாளத்திற்கும் இடையில் ஊஞ்சல் போட்டு வேகமாக ஆடிக் கொண்டிருந்தேன். அங்கே அந்த சூனியமாய்க் கிடக்கும் வெட்டை வெளியில் குதிரை, பிடறி சிலிர்த்து எழும்பியபடி முதுகில் முளைத்த அதன் சிறகுகளை பட படவென்று தட்டியது. எங்கும் பரவிய புளுதிப்படலத்தில் அந்தக் குதிரை மறைந்து நின்றது. வீசிய காற்றினால் முறிந்த ஓர் மரக்கிளை நடுவே நிலவற்ற வானத்தில் அந்த நட்சத்திரம் மறைந்து மறைந்து மின்னியது. இல்லை அது நட்சத்திரமாய் இருக்க முடியாது. இன்னும் சொற்ப வினாடியில் அல்லது ஒன்றிரண்டு நாட்களின் பின் எரிந்து அணைந்து விழும் எரிகல் என்பதை உள்ளே என் பட்சி உறுதிப்படுத்தியது.
அதன் மரணப் பயம்தான் கண்ணைச் சிமிட்டி துணைக்கு யாரையோ அழைக்கின்றது. புளுதி அடங்கி விட்டது. என் குதிரை மட்டும் என்னைப் பார்த்தபடி தனித்து நின்றது. இன்னும் அது தன் செயற்திறனில் ஈடுபடாமல் சிறகுகளை ஆட்டியது. முன்னே வர தன் கால்களை அசைத்தது. பாவம் எல்லாமே மணல்தான். கால் எது மணல் எது? ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டதா? ஒன்றே பலதாகி விட்டதா? கற்பனையுடன் காலைப் பார்த்தது. எதிர்பார்ப்புடன் என்னைப் பார்த்தது. நான், என் சிறுவயது, என் குடும்பம், அதன் நிலை, என் படிப்பு, என் முயற்சி என் சிறு வயதினிலே பிரிந்து தனிக்குடும்பமான அண்ணர்மார், தான், தன் சுகம் என்றலைந்த சுயலாபம் பிடித்த அப்பா, பரிதாபமான
selfCLD.
தனித்து நின்று துடித்தது இன்னும் அந்த எரிகல். நான் படித்தது எது? என் படிப்பு நிலை எது? குடும்பத்தில் இவற்றை கண்டுகொள்ள நேரமும் இல்லை அக்கறையும் இல்லை.
எல்லாமே என் முயற்சியில்தான். உள்ளே என் பட்சி புறுபுறுத்தது 'ஏணி ஒன்று கொடுத்து இறங்கி வரச் சொல்லாமா அந்த உயரத்தில் இருக்கும் எரிகல்லை' என்று.
க.பொ.த. (சா/த) ஒரே தடவையில் 8 பாடங்களும் மொத்தத்தில் சித்தியடைவது பசுமரத்தாணி போல் இலகுவாய் இருந்தது க.பொ.த. (உ! த) படிக்கும் போதுதான் கல்விக் கவலை கண்டு கொண்டேன். ‘புத்தகங்களை வாங்கிக் கொள்', என்றோ ரீயுசனுக்கு செல் என்றோ
23

Page 16
சொல்ல உள்ளங்களும் இல்லை உதவிக் கரங்களையும் காணவில்லை நான்.
அந்தக் குதிரையின் பார்வை என்மீது கோபமாக விழுந்தது. தன் முயற்சிக்கு கைகொடுக்காமல் இருக்கும் என் மேல் அதற்கு ஆதங்கம். அதன் பார்வை மறுபுறம் திரும்பி விட்டது. பல்கழைக்கழகம் செல்ல வேண்டும். பட்டங்கள் பெறவேண்டும் என் பிறப்பிற்கு அர்தமும் என் வாழ்க்கைக்கு பொருளும் சமூகத்திற்கு சேவையும் செய்து வாழ வேண்டும் என.. பற்பல ஆசைகளும் கற்பனைகளும் அலை கடல் நுரையாய் என் மன வெளி எங்கும் பரவும் நாட்கள் அவை,
அந்த எரிகல், எப்படித்தான் துடித்தாலும் அது அணைந்து விழவேண்டியதுதானே நியதி. என் பட்சி கூறியது, ‘ஏணி எடுத்துக் கொடு" என்று. கீழிருந்தபடி கீழே விழுந்தால் ஏற்படும் சேதத்தின் அளவு குறைவு. ஆனால் உயரத்தில் இருந்து பள்ளத்தில் விழும் போது. என்னால் தாங்க முடியவில்லை. என் கல்வியில் தோல்வி கற்பனைக்கும் கிட்டாத பட்டப்படிப்புக்கள் எத்தனை நாள் என் கண்ணீர் தலையனைகளை நனைத்திருக்கும் 1 சூடான இதயத்துடன் ஈரமான தலையனையை அணைத்தபடி எழ முடியாமல் எத்தனை. எத்தனை நாட்கள், எனக்காக யாராவது வேண்டும், இரக்கம் காட்ட வேண்டும் என்ற வெறி, தொடர்ந்து. என் காதல். குதிரை தன் தலையை சட்டென்று வெட்டித்திருப்பியது. அதன் பார்வையில் பட்டது முழுக்க வெட்ட வெளிகளும், பொட்டல் காடுகளுமே. வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு வெறுப்புடன் என்னைப் பார்த்தது மீண்டும். எங்கும் ஊழல்கள், காதலை மறந்து விட்டு எனது வேலைக்கான போராட்டம் தொடங்கியது. அரச துறை வேண்டுமா, தனியார் துறை வேண்டுமா, சேவைகள் செய்யும் அரச, பொது, தனியார் நிறுவனங்கள் வேண்டுமா?
கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் வாழ இடம் கொடுத்த இந்தப் பென்னம் பெரிய் .ய வானம் அந்தக் குட்டி எரிகல் ஒதுங்க இடம் கொடாமல் பள்ளத்தில் தள்ளி விடப் போகிறதே. உள்ளே என் பட்சி பட படத்தது.
வேலையற்றபடியே அங்கும் இங்கும் என பந்தாய் அடிபடுவதும் அண்ணனுக்கு பாரமாய் இருப்பதும் எத்தனை நாளைக்கு? திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. பூமியிலே நிச்சயிக்கப்பட்டு சொர்க்கத்திலும் நரகத்திலும் வாழச் செல்கின்றன. இவளுக்கும் திருமணம் நடந்தது. தொடர்ந்து. வயிற்றில் குழந்தை வெளியூர் கணவன், தனித்த
போராட்ட வாழ்வு.

ஒட்டவும் முடியாமல், கீழே விழவும் முடியாமல் சிறு காற்றைக் கூட தாங்கும் சக்தி அற்று முறிந்த கிளை ஆடியது. ஒரு அங்குலம் கூட உயர உதவாத சிறகை உதறி விட முனைந்தது. குதிரை பிடறி மயிரை சிலிர்த்துக் கொண்டது. சிறகை உதறி உதறி புளுதியை கிளப்பி தன்னை மறைத்துக் கொண்டது குதிரை எனக்கு ஒதுங்கி வாழப் பிடிக்கவில்லை. துயரப்பட பிடிக்கவில்லை அழப் பிடிக்கவில்லை. வாழும் வரை தானும் ஓர் நட்சத்திரம் என நடித்தது, கிளைநடுவே மறைந்து, மறைந்து கண் துடைத்த குட்டி எரிகல்.
என் குறும்புத்தனங்களும் என் உதட்டோர சிரிப்புக்களும் எத்தனை நாளைக்கு முகத்திரையிட்டு என்னை மறைக்க என் சுமையை மறக்க உதவப் போகின்றன? எரிகல்லின் இதயம் வேக வேகமாய் துடி துடித்தது. தற்கொலையின் பயத்தில் பட்சி பயங்கரமாய் அலறியது.
அமைதியான வானத்தில் பருத்த கரிய பூதக் கூட்டங்கள் தோன்றின. தனித்த குதிரை, முறிந்த கிளை, அணையும் எரிகல், சில நொடிகளில் இரையாகின பூதங்களிற்கு பலத்த காற்று எதுவும் புலப்படாத கண்ணை மறைக்கும் மையிருட்டு. என் உச்சந்தலையில் சட்டென்று குட்டு வைத்தது குளிர்து குனிந்த மழைத் துளி.
ஒ.வழமை போல் இந்த மாரியிலும் நல்ல மழை வரத்தான் போகிறது. வெட்டை வெளிகள் எல்லாம் கர்ப்பவதிகளாக வயற் காடுகளை பிரசவிக்கப் போகின்றன. அந்த வானமும் இந்த வெட்டை வெளியும் நியதி மாறாத நிஜங்களாக பொய்ப்பிக்காத வாழ்க்கை வட்டங்களாக வருடம் தோறும் வாழ்கின்றன. அந்தக் குதிரை பறந்திருக்கலாம் அல்லது மண்ணுடன் கலந்திருக்கலாம். வீசிய காற்றில் முறிந்த கிளை விழுந்திருக்கலாம் அந்த ஒரு கிளை இருந்த இடத்தில் இன்னும் பல கிளைகள் தோன்றி பூத்துக் காய்க்கும். யாருக்காகவும் எதற்காகவும் எவரும் எதுவும் மாறப் போவதில்லை, நிற்கப் போவதில்லை.
மழையும் காற்றும் விட்டிருந்தன வெட்ட வெளியில் நீர் நிறைந்திருந்தது, மரம் தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்தியது துடைத்து விட்ட வானத்தில் நட்சத்திரங் கூட்டங்கள் இடையே ஒன்றிரண்டு கண் சிமிட்டல்கள். என் பட்சி அமைதியாய் தூங்கியது. மழையும் காற்றும் ஓய்ந்துதான் இருந்தன.

Page 17
மொழியும் பால்வாதமும்
சித்ரா
மனிதரது உணர்வு, கருத்து ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும், மனிதர் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதைச் சாத்தியப்படுத்தும் கருவியாகவும் மொழி அமைகிறது. இவை மொழியின் பொதுப் பண்புகளாகும். எனினும் மொழியானது சமூகத்துக்குச் சமூகம் வேறுபடு கிறது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், சிங்களம், இந்தி, கன்னடம் என்றெல்லாம் பல நூற்றுக்கணக்கான மொழிகள் வழங்கி வருவதைக் காணலாம். இவ்வாறு வெவ்வேறு மொழிகள் வழங்கி வந்தபோதும் அவற்றுடைய பண்புகளும், பயன்பாடும் பொதுமைப்பட்டனவாகவே உள்ளன. அவற்றுக்கிடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
ஒரு சமூகத்தினுடைய வரலாற்று ஓட்டத்துடன் இணைந்ததாகவே மொழியும் உருவாகி வளர்ச்சி அடைந்திருக்கும். இவ்வகையில் மொழி தனியே ஒரு தொடர்பாடற் சாதனமாக மாத்திரமன்றி அச்சமூகத்தினுடைய வரலாறு, அம்மொழியில் வளர்ந்த சமூக சிந்தனை, பண்பாடு ஆகிய வற்றை எடுத்துரைக்கும் ஒரு சாதனமாகவும் அமைகிறது. இவ்வகையில் மொழியானது மனித குலத்துடைய வரலாற்றாலும் அதன் பண்புகளாலும் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவே வளர்ந்து வந்துள்ளது.
பொதுவாக மனிதகுல வரலாறானது பெண்களை பாரபட்சப்படுத் தியும் கீழ்மைப்படுத்தியும் வளர்ந்துள்ளது. புராதன காலத்திலிருந்து தற்காலம் வரையுள்ள வரலாற்றுப் போக்கில் பெண் அடைந்துள்ள அந்தஸ்து மாற்றத்தை மொழி தனக்குள் உள்வாங்கியுள்ளது. இதனால் பெண்களை இழிவுபடுத்தும், பாரபட்சப்படுத்தும் சொற்கள், சொற்தொடர் கள், மரபுத் தொடர்கள், பழமொழிகள் எனப் பலவும் மொழியில் உருவாகியுள்ளன. இவ்வகையில் சமூகத்தினுடைய யதார்த்த நிலை, நடைமுறை ஆகியவை மொழியில் செல்வாக்குச் செலுத்தி சொற்கள், சொற்தொடர்கள் ஆகியவற்றை உருவாக்க மறுதலையில் இச் சொற்களும் சொற்தொடர்களும் அடங்கிய மொழியானது பால்வாதத்தை வெளிப்படுத் துவதாகவும் அதனை நிலை நிறுத்தும் சாதனமாகவும் அமைகிறது. இது மாத்திரமன்றி இன்றைய ஆணாதிக்க, தந்தை வழிச் சமூகத்தில் மொழியின் இலக்கணங்கள், சமூகத்தில் அதிகாரம் பெற்றிருந்த ஆண்களாலேயே உருவாக்கப்பட்டிருந்தன. இலக்கண நூல்களில் காணப்படும் மொழி பற்றிய சிந்தனைகளும் நிகண்டுகள், அகராதிகள், சொற்களஞ்சியங்கள் போன்றவற்றில் நிரைப்படுத்தப்பட்டிருக்கும் சொற்களும் அதிகாரம்
26

பெற்றிருந்தோராலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடைய பார்வையும் கிரகிப்புமே மொழியில் முதலிடம் பெற்றன. இவ்வகையில் ஆண் நிலைப்பட்ட ஒன்றாகவே மொழி உருவாகி வளர்ந்துள்ளது. அவ்வாறே அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாய்மொழி' என ஒருவருடைய சொந்த மொழியைக் குறிப்பிட்டா லும், மொழியைப் பெண்ணாக உருவகம் செய்தாலும், யதார்த்தத்தில் மொழி தந்தையர் மொழியாக' 'ஆண்மொழியாகவே அமைவது எமது அவதானத்திற்கு உரியதாகும்.
இன்று சமூகத்தில் பெண்ணுடைய முன்னேற்றம், வளர்ச்சி, விடுதலை போன்றவை பற்றிப் பேசும் போது, மேலே குறிப்பிட்ட மொழியின் பால் வாதம் பற்றியும், அதன் பக்கச் சார்பு பற்றியும் அக்கறைப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் கருத்துகள் மொழி மூலமே வடிவம் பெற்றுள்ளன; பெறுகின்றன. பெண்களைக் கீழ்மைப்படுத்துகின்ற ஆணாதிக்க கருத்து நிலையுடைய மொழியை பெண்கள் தொடர்பான புதிய சிந்தனைகளையும் கருத்துகளையும் வெளியிடுவதற்கு எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்? மொழியில் இது தொடர்பாக ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் யாவை என்பது இன்று எம் முன்னாலுள்ள வினாக்களாகும். மொழி பற்றிய ஆராய்ச்சிகளில் பெண் நிலைவாதிகள் ஏற்கனவே இவ்வினாக்களை முன்வைத்துள்ளனர்.
தமிழில் சில உதாரணங்களைக் கூறுவதன் மூலம் இப்பிரச்சனையை விளக்கலாம். தமிழில் சொற்களில் பால்பகுப்புச் செய்யப்பட்டுள்ளது. மனிதரைக் குறிக்கும் சொற்கள், பால் அடிப்படையில் ஆண்பால், பெண்பால், பலர் பால் என வகுக்கப்பட்டுள்ளன. சில சொற்கள் பால் பொதுச் சொற்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
ஆண்பால் விகுதியான 'அன்' விகுதி கொண்டு முடியும் சொற்கள் ஆண்பாலைத் தீர்க்கமாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் அச்சொற்களில் சிலவற்றிற்கு எதிர்ப்பாலான பெண்பாற் சொற்கள் இல்லை. இந்நிலைமை இன்று பெண்கள் சில துறைகளில் தம்மை அடையாளப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக எழுத்தாளன், கலைஞன், கவிஞன், ஒவியன் போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். இவை ஆண்பாற் சொற்கள். ஆனால் ஒவியரான பெண், கவிஞரான பெண், கலைஞரான பெண் போன்றோரைக் குறிக்கப் பெண்பாற் சொற்கள் இல்லை. இதனாலேயே இத்தகையோர் பற்றிக் குறிப்பிடும் போது பெண் என்று ஒரு அடைமொழிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பெண் ஒவியர், பெண் கவிஞர் என்றே குறிப்பிடுகிறோம். இவ்வாறு
27

Page 18
இத்தறைகளில் பெண்களைக் குறிக்கும் சொற்கள் இல்லாமல் போனதற் கான காரணம் என்ன? சொற்களை வடிவமைத்தோர் பெண்களை இத்துறைகளுடன் சேர்த்துச் சிந்திக்காமை தான். தமிழ்ப் பாரம்பரியத்தில் எத்தனையோ பெண்கள் புலவர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்துள்ள னர். ஆனால் 'புலவன்' என்ற சொல்லுக்கு பெண்பால் தமிழ் இலக்கணத் தில் இல்லை 'பெண்பாற்புலவர்' என்ற தொடரைப்பயன்படுத்தி விட்டு, இப்பிரச்சனையைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்காமல் விட்டுவிடுகிறோம்.
பாற்பொதுச் சொற்களும் கூட ஆணையே கருதுகின்றன. தமிழில் பாற்பொதுச் சொற்கள் உள்ளன. எனவே அவற்றைப் பயன்படுத்தலாம். மேலும் தமிழில் பெரிய அளவில் பால் வாதம் இல்லாமைக்கு இப்பாற் பொதுச் சொற்கள் சான்றாகவும் அமைகின்றன எனச் சிலர் வாதாடுவர். ஆனால் அச்சொற்களைப் பயன்படுத்தும்போது கூட அவை ஆண்பாலார் சார்ந்தே குறிக்கப்படுகின்றன. உதாரணமாக 'அவர் ஒரு எழுத்தாளர்' "அவர் ஒரு ஓவியர்' ஆகிய வசனங்கள் உணர்த்தும் பொருள்யாவை? இச் சொற்தொடர்களைக் கேட்கும்போதோ படிக்கும் போதோ, எழுதும்போதோ, பேசும்போதோ உருவாகும் படிமம் யாது? பெரும்பா லான சந்தர்ப்பங்களில் இத்தொடர்கள் சுட்டுபவர் ஆணாகவே அமைகிறார்.
ஆணை நடுநாயகமாக வைத்தே வளர்ந்து வந்த சிந்தனையினதும் வரலாற்றினதும் மொழி சார்ந்த விளைவு இது எனக்கூறலாம்.
ஆணே சமூகத்தில் முதன்மை; மையம். இந்த மையத்தைச் சார்ந்தே யாவும் அமைந்துள்ளன என்ற கருத்தே பெண்ணை, ஆணைச் சார்ந்த 'இரண்டாவது பால்' (Second Sex) ஆக்கியுள்ளது என்ற கருத்துப்பட பிரஞ்சுப் பெண்நிலைவாதியான சிமோன்டிபூவர் குறிப்பிடுவார்.
மேலே எடுத்துக்காட்டிய உதாரணங்களை இக்கருத்தின் பின்ன ணியில் விளங்கிக் கொள்ளலாம். ஆண்பாலுக்கு இச் சொற்கள் தரும் முதன்மை நிலையாலேயே பெண்கவிஞர், பெண் ஒவியர் என அடை மொழி கொடுத்து பெண்பாலை நிலை நிறுத்த வேண்டியுள்ளது.
ஆனால் இந்நிலையை மொழியில் இவ்வாறே தொடரவிடுவதா என்பதே இன்று எம்முன்னாலுள்ள வினாவாகும். இக் கருத்துகளையும், சிந்தனைகளையும் குறிக்க மொழியில் புதிய சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். அதாவது ஆண்பாலுக்குச் சமதையான பெண்பாற் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இதே சமயம் சில சொற்கள் தனியே பெண்பாலாரை மாத்திரமே
23.

குறிக்கப்பயன்படுகின்றன. உதாரணமாக விதவை, விபசாரி ஆகியவை. கணவனை இழந்த பெண் விதவை; ஆனால் மனைவியை இழந்த ஆணு டைய நிலையை அறிவிக்கும் சொல்லாக தபுதாரன் எனும் சொல் இருந்தாலும் அது வழக்கத்தில் இல்லை. ஏனெனில் மனைவியை இழப்பது ஆணுடைய அந்தஸ்தை மாற்றுவதில்லை; அல்லது இழப்பை ஏற்படுத்து வதில்லை எனச் சமூகம் கருதுகிறது. ஆனால் பெண் பற்றிய சிந்தனை வேறு. சுருக்கமாகச் சொன்னால் சமூகத்தின் பால்வாதம் மொழி மூலம் வெளிப்படும், நிலை நிறுத்தப்படும் ஒரு சந்தர்ப்பமாகவே விதவை' என்கின்ற இந்தச் சொல் விளங்குகிறது. இதனாலேயே இச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்; இச் சொல்லுடன் சார்ந்திருக்கும் இழிவுத் தொனி அற்ற, பாரபட்சம் இல்லாத ஒரு சொல்லை உருவாக்கவேண்டும் எனப் பெண்நிலை வாதிகள் கூறுகின்றன. இதே போலத்தான் விபசாரி என்ற சொல்லும் அமைந்துள்ளது. இது வெளிப்படையாகவே பெண்ணைக் குறிக்கின்ற சொல்லாயுள்ளது.
ஆண்கள் விபசாரம் செய்கின்ற நிலை இருந்தபோதிலும், இன்று அத்தொகை அதிகரித்து வருகின்ற போதும் 'விபச்சாரி என்பது பெண் ணைக் குறிப்பதாகவேயுள்ளது. இன்று ஆண் விபச்சாரி என்ற தொடரைப் பயன்படுத்தச் சிலர் முனைந்துள்ளனர்.
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டவை ஒரு சில உதாரணங்கள் மாத்திரமே. மொழியின் பால் வாதத்திற்கு பல்வேறு வகையான
உதாரணங்களைக் கூறலாம்.
தமிழில் அகராதிகளும், சொற்களஞ்சியங்களும் மறு சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மேலே காட்டிய பிரச்சனைகள் வற்புறுத்து கின்றன. புதிய சொற்கள் உருவாக்கப்பட வேண்டியதும் அவை அகராதி யிலும், பாவனையிலும் இடம் பெற வேண்டியதும் முக்கியமானதாகும். ஏற்கனவே ஆங்கிலமொழி அகராதியில் இத்தகைய மாற்றங்கள் சில செய்யப்பட்டுள்ளன.
புதிய சொற்களை ஆக்குவதும் பயன்படுத்துவதும் அவசியமானது போலவே சில சொற்களை ஒதுக்கி விடுவதும், கைவிடுவதும் கூட இன்று தேவையானதாகும்.
உதாரணமாக 'கற்பழிப்பு' என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட, பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ணை 'கற்பழிக்கப்பட்ட பெண்' என்று கூறுவது பொருத்தமா என்ற வினாக்கள் இன்று தோன்றியுள்ளன. 'கற்பு' என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்று அதனைப் பெண்ணுக்கு அத்தியாவசியமான ஒரு பண்பாகக்
29

Page 19
கொண்டு அதை இழப்பது அவமானம், இழிவு என்ற தொனிப்பட இந்தத் தொடர் இயங்குகிறது. எனவே இத்தொடர் உருவாக்குகின்ற எண்ணக் கருக்கள் யாவை? இச் சொற்தொடரைத் தொடர்ந்து கையாள்வதன் மூலம் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் உளவியலில் ஏற்படும் பாதிப்பு என்ன? சமூகத்தில் எத்தகைய கருத்தை இது நிலைநிறுத்துகிறது? என்பதெல்லாம் முக்கியமானவையாகும். இதனையொட்டியே 'கற்பழிப்பு என்ற சொற்தொடருக்குப் பதிலாக இன்று வெவ்வேறு சொற்கள் கையாளப்படுகின்றன. 1985 ஆம் ஆண்டு வாக்கிலேயே இலங்கையின் தமிழ்ப் பிரதேசத்தில் இருந்த சில பெண்கள் அமைப்புகள் ‘கற்பழிப்பு' என்ற தொடரை விடுத்து "பலாத்காரம்’ என்ற சொல்லைக் கையாளுமாறு கோரியிருந்தன. தற்காலத்தில் பாலியல் வல்லுறவு என்ற சொல்லைப் பத்திரிகைகள் சில பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தச் சொல்லும் எவ்வ ளவு தூரம் கருத்துத் தெளிவு கொண்டுள்ளது என்பது கேள்வியாகும். அதே சமயம் பலாத்காரம் என்ற சொல் ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் புணர்வது என்ற கருத்தில் பத்திரிகைகளிலும் கூட இலங்கையில் பல ஆண்டுகளாகவே வழங்கி வந்துள்ளது. தொடர்ந்து அதனையே பயன் படுத்தினால் என்ன என்றும் சிலர் கேட்கின்றனர். இச் செயலில் அடங்கி யுள்ள பாலியல் துஷ்பிரயோக-வன்முறைப் பரிமாணத்தை பலாத்காரம் என்ற சொல் வெளிப்படுத்தவில்லை; எனவேதான் இவற்றுக்குப் பதிலாகப் புதிய சொற்கள் உருவாக்கப்படவேண்டும் என்று கூறப்படுகின்றது.
ஒரு சமூகத்தில் புதிய வளர்ச்சிகள் ஏற்படும் போது அவற்றை உள்வாங்கும் வகையில் மொழியில் சொற்கள் உருவாவது வழக்கமாகும். எனினும் அவை உணர்வு பூர்வமாக மனிதராலேயே உருவாக்கப்படு கின்றன. பெண் நிலைவாதச் சிந்தனைகள் எம் மத்தியில் வளரத்தொடங் கிய காலத்திலிருந்து கடந்த சுமார் பத்து, பதினைந்து வருடங்களாக சில புதிய சொற்தொடர்கள் வழக்கில் வந்துள்ளன. பெண்ணியம், பெண்நிலை வாதம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பால்வாதம், தந்தையாதிக்கம், ஆணாதிக்கம் போன்றவையும் இத்தகையனவே.
இத்தகைய வளர்ச்சிகளை மனங்கொண்டும் மொழியில் காணப்படும் பால்வாதத்தை நிராகரிக்கும் வகையிலும் தமிழ் மொழியை மறுசீராக்கம் செய்வது அவசியமானதாகும். எழுத்துச் சீர்திருத்தம் மாத்திரமல்ல; ஏனைய சீர்திருத்தங்களும் தமிழில் இன்று தேவைப்படுகின்றன. இந்தப் பணியில் பெண் கிலைவாதிகளும் ஈடுபடுதல் வேண்டும்.

குங்குமம்
என் சுதந்திரங்கள்
யாவும்
இங்குதான் அடக்கம்
வட்டத்தைப் போட்டு
என் வாழ்க்கையை
குட்டிச் சுவராக்குவது என் இதய இரத்தத்தை எடுத்து
சாறாக்கி
நெற்றியில் வைத்து விட்டு
சுறறித் திரிகின்றேன்
சுமங்கலிப் பட்டத்துடன்
வாசுகி குணரத்தினம்
čSl

Page 20
வேலை
ராஜம் கிருஷ்ணன்
'அபி, இந்தாம்மா, திருநீறு வச்சிட்டுப்போ!'
அபிராமி தன் முக ஒப்பனையைத்திருத்திக் கொண்டு, அத்தையின் முன் குனிந்து ஆசிவாங்கிக் கொள்கிறாள். இரட்டை மண்டை உச்சியில் இருந்து சாதிமல்லிகை ஓர் அரைமுழம் தொங்குகிறது. இப்போது நாகரிகத்தில் இல்லாத பழைய கைக்கடியாரத்தின் குமிழைத் திருகிச் சாவி கொடுத்துக் காதுகளில் வைத்துப் பார்க்கிறாள். திருப்தியுடன் அதன் வெளிறிய தோல் பட்டையை மொழுமொழுவென்றில்லாதகையில் போட்டுக் கொள்கிறாள். துளியூண்டு முள் எட்டில் தான் நிற்கிறது. வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் பஸ் புறப்படும் இடம். ஏறி உட்கார்ந்தால் ஒன்பதரைக்கு அலுவலக வாயிலில் இறங்கிவிடலாம். அந்த அடுக்குமாடி அலுவலகத்துக்கு ஏற்கெனவே நேர்முகத்தேர்வுக்குப் போயிருக்கிறாள்.
வேலை கிடைக்கும் என்ற நினைப்பு கனவில் கூட இல்லை. இப்போதும் ஒருவேளை இன்னும் ஒருத்தி அழகானவளாக, டி.அபிராமி என்று போட்டிருந்து, தவறாக இவள் பெயருக்கு ஆணை அனுப்பப்பட்டிருக்குமோ என்ற இலேசான ‘கரும்புரும் நெஞ்சுள் உரசாமல் இல்லை. அந்த ஆணையை மறுபடியும் எடுத்துப்பார்க்கிறாள்.
டி.அபிராமி, பி.எஸ்.ஸி பொதுநல சுற்றுப்புறத்தூய்மைப் பராமரிப்பு
• e s so a v v v 8 a முகவரி எல்லாம் இவளுக்கே வேலை என்று உறுதி கூறுகின்றன. இந்தச் சிறப்புப் பட்டம் இவளுக்கு எங்கோ வெளிநாட்டில் ஒரு பல்கலைக்கழகம் கொடுத்திருக்கிறது. அவர்கள் தெற்கே துவம்சாபுரம் ஊர் மேல்நிலைப் பள்ளியில் நடத்திய வகுப்பரங்கில் நோட்ஸ் பொறுக்கி, பரீட்சை எழுதி, அனுப்பிப் பெற்ற பட்டம். செலவு பத்தாயிரம் ரூபாய். இந்தப்பட்டத்தின் சிறப்பை இந்த மூன்றாண்டுகளாக யாரும் உணர்ந் திருக்கவில்லை. கேவலம், ஒரு மழலைப்பள்ளி ஆசிரியை வேலைக்குக் கூடத் தகுதியில்லாததாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. பத்தாயிரம் கட்டி இவளை மட்டும் பட்டம் பெற வைத்திருப்பதும், வேலைக்கு அனுப்பத் தீர்மானித்திருப்பதும் தங்கை வனிதாவுக்குப் பொறுக்கத்தான் முடிய வில்லை.

"என்னை பிளஸ்டுவில் சேர்த்தோ, பாலிடெக்னிக்கில் சேர்த்தோ படிக்க வைத்திருந்தால் நான் இத்தனை நாட்களில் இன்ஜினியராகி இலட்சக்கணக்கில் சம்பாதிப்பேன். ருக்மினி டீச்சர் என்னை மேலே படிக்கவைக்கச் சொல்லிக்கட்டாயம் பண்ணினாங்க கேட்டீங்களா? இப்ப மட்டும் என்ன? எனக்கு சுந்து அப்பளம், வடகம், ஊதுவத்தி புராடக்ட்ஸ்ல மார்க்கெட்டிங் டிவிஷன் வேலை கொடுக்கத் தயாராக இருக்காங்க. மாசம் அஞ்சாயிரம் சம்பாதிப்பேன். ஆனா, கண்ணுக்கு அழகாக இருப்பதால் வேலைக்கு அனுப்பக்கூடாது, கல்யாணம் செய்து வைக்கணும்னு முடக்குறீங்க! இவளுக்குப் படிச்சும் புண்ணியம் இல்லை. எப்பவேலை கிடைச்சு எனக்குக் கல்யாணம் பண்ண சம்பாதிக்கப் போறா?' என்று பேச்சுக்குப்பேச்சு சொல்லிக் காட்டுகிறாள்.
அப்பா மூன்றாம் நிலை ஊழியராக வேலை பார்த்து, ஒய்வு பெற்ற மறுமாதத்திலேயே மண்டையைப் போட்டுவிட்டார். அவருக்கே நாள் கழித்த இல்லறம். அத்தை ஒருத்தி திருமணம்ாகி. கணவனை இழந்து அண்ணன் குடும்பத்துக்கு உரிமை கொண்டாட வந்துவிட்டாள்.
அபிராமி மூத்தவள். எப்போதோ இவர்கள் குடும்ப பரம்பரை முப்பாட்டியைக் கொண்டு, கருப்பாக, இலட்சணம் என்று சொல்ல முடியாத உறுப்புக்களுடன் பிறந்து விட்டாள். இவளுக்குக் கல்யாணம் செய்யும் முயற்சியை விட, படிக்கவைத்து, சம்பாதிக்கவைத்து, குடும்பத்தில் இன்னும் இரண்டு பையன்களையும் கடைத்தேற்றும் ஆதரவாக்கிக் கொள்ளலாம் என்றே தாயும் மற்றவர்களும் திட்டமிட்டிருக்கின்றனர்.
'ஏய், அடி, என்ன, என்புடவையை உடுத்திட்டுக்கிளம்புற? உன் புடவைய உடுத்திட்டுப்போ!.குடு' என்று புறப்படும் சமயத்தில் அவளை வனிதா வழிமறிக்கிறாள். "சித்தப்பா, எனக்கு வாங்கிக் குடுத்தது போனாப் போவுதுன்னு இன்டர்வுயுக்குக் குடுத்தேன். இன்னிக்குக் கிடையாது!" us
'வனி, வனி, ப்ளிஸ், இன்னிக்கு முதல் நாள் ஆபீஸ் அதிர்ஷ்டமாக இருக்கட்டும். நான் சம்பளம் வாங்கியதும் உனக்கு இரண்டு புடைவையாக வாங்கித்தரேன்!' என்று இறைஞ்சுகிறாள். பம்மென்று கஞ்சிபோட்டாற்போல் விறைந்து நிற்கும் ஆர்கண்டி வகைச்சேலை அது. அவள் நிறத்துக்கும் குச்சி உடம்புக்கும் சிறிதளவு வசீகரமூட்டும் என்று தான் அதை உடுத்திருக்கிறாள். அந்த இன்டர்வ்யூ" வெற்றி அவளுக்கு ஒரு தன்னம்பிக்கை ைஊட்டும் சேலையாக மனசில் பதிந்திருக்கறது.
33

Page 21
பிளாஸ்டிக் தோல்ப்பையில்:சோற்றுச் சம்புடமும் தண்ணீர்க்குப்பியும் குலுங்க இவள் வருமுன் கூட்டம் நிறைந்திருக்கிறது. தொத்திக் கொண்டு ஏறிப் பெண்கள் பக்கம் நசுக்குண்டு நிற்கையில் தன் நெஞ்சத்துடிப்பு மட்டுமே விசுவரூபம் எடுத்து ஆட்கொள்வதாகப்படுகிறது. முகமறியா எதிர்காலம். பேரூந்து அவளைத்தள்ளிச் செல்கிறது.
பெருஞ்சாலையின் பேரியக்கத்தில் ஒருதுளியாக இறங்கி, அலுவல கமாடிக்கு ஏறிவருகையில் மேட்டு நெற்றி வியர்க்கிறது. கைக்குட்டையால் ஒத்திக் கொண்டு, 'பொது நலம் சுற்றுச்சூழல் பராமரிப்பு நிறுவனங்கள்." என்ற கை காட்டியின் முன்நிற்கிறாள்.
தூய்மை பராமரிக்கப்ப்ட்ாத மூல்ை ஒன்றில்: ஒரு வழுக்கைத்தலை ஏதோ ஒரு மலிவுப் பதிப்பில் ஒன்றியிருப்பது தெரிகிறது. அபி தொண்டையைச் செருமிக் கொள்கிறாள்.நிமிர்கிறார். ஒட்டு மீசை ஒட்டிய கன்னங்கள்.
'.புது அபாயின்ட்மென்ட்." என்றுதீன்"ஆணைக்கவண்ர்ப் பையிலிருந்து எடுக்கிறாள். s
'உள்ளே:* என்று கைகாட்டப்படுகிறது. ஒரு படிகடந்து, இயக்குநர் என்ற எழுத்துக்களைப்பார்த்துகதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே அடிவைக்கையில் நெஞ்சு ஏகத்துக்குத் தந்தியடிக்கிற்து.
நெளி நெளியான நரைகலந்த கிராப், கறுப்பு, குள்ளம். ஏதோ ஒரு சென்ட் நாசியை ஆக்கிரமிக்கிறது. அதிகாரியாக இலட்சணமாக்
கோப்பு ஒன்றைப் பார்வையிடும் கோலம்.
கால்கள் தொய்கின்றன. நிறைய மலிவு நாவல்களில் வருவது போல், இவருக்கு வீட்டில் ஒரு மனைவி, நோயாளி, அல்லது அடங்காப்பிடாரி இருப்பாளோ, மூன்று பிள்ளைகளில் பெரியவன் கல்லூரியிலோ வெளி நாட்டிலோ இருப்பானோ என்றெல்லாம் மின்னல்கள் பளிச்சிடுகின்றன.
'.கு.குட்மார்னிங் ஸார்.'
நிமிருகிறார் "யாரம்மா நீ?"
அவள் தன் ஆணையைத் தயாராக நீட்டுகிறாள்.
'ஒ. புது அபாயின்ட்மென்ட் இல்லை?. உனக்கு இங்கே போஸ்டிங் இல்லை. நீ டிப்போவுக்குப் போகணும்.' கை மணி
34

அடிக்கிறது. மயில்சாமி என்ற பணியாள் வருகிறான். 'இவங்களுக்கு டெப்போ எங்கேன்னு சொல்லு.' என்று கூறிவிட்டுத் தொலைபேசியில் யாரோ ஒரு பெஞ்சமினிடம், டெப்போவுக்கு, ராமுறுவுக்கு ரிலீவர் வந்து விட்டதாகவும் "அவள் என்றும் அழுத்திச் சொல்கிறார்.
‘போங்கம்மா. நீங்கள் எங்கேயிருந்து வரீங்க?.
'விஸ்வநாதபுரம் எக்ஸ்டென்ஷன் ஸார். பஸ் வசதி இருக்கு ஸார் இங்கே வர...'
"இங்கே எதற்கு வரனும்? டெப்போ, கலசப்பாக்கம் தாண்டி இருக்கு. அங்கே தான்வேலை. நீங்க டிஸ்ட்ரிப்யூஷன் பொறுப்பு எடுக்கிறீங்க. இத்தனை நாள் அந்தப் பொறுப்பில் இருந்த ராமுறு என்பவர் ரிடயர் ஆகுறாரு . போய்ச்சார்ஜ் எடுக்கணும்.'
"தாங்கியூ ஸோஸ்ச் ஸார். இட்ஸ் கைன்ட் அஃப்யூ ஸார்.' என்று அடுக்கடுக்கான ஸார்களை உதிர்த்துக்கொண்டு வெளிவருகிறாள்.
“கலசப்பாக்கம் எங்கே இருக்குதுங்க?"
மயில்சாமி உடனேயே, 'ஒரு டூவீலர் வாங்கி வச்சிக்குங்க மேடம் அது திருவொத்தினார் பஸ்ஸில் போயி, கல்லடிப்பேட்டையில் இறங்கி குறுக்கா நடக்கணும். நீங்க இங்க ஆபீசுக்கு எப்பவோ மாசத்துல ஒரு நாதா வரவேண்டி இருக்கும்’ என்று வழி சொல்கிறான்.
பஸ் பிடித்து கல்லடிப்பேட்டை நிறுத்தத்தில் இறங்கும் போதே மணி பன்னிரண்டரை, வயிறு பசி பசி என்று கூவுகிறது.
சாலையின் இருமருங்கிலும் ஊர்க்குப்பையெல்லாம் கொட்டியி ருந்தது. லாரிகள் வந்து வந்து சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. குப்பை. பிளாஸ்டிக் தாள்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாக, எங்களை அழிக்க முடியாது என்று அறை கூவுகின்றன. பன்றிகள் கும்பல் கும்பலாக ஆங்காங்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும் அழுகல் வாழைத்தார்களின் பகுதிகளைச் சுற்றி மேய்கின்றன. இந்த சாம்ராச்சியத்துக்கு அப்பால் சற்று எட்ட ஒரு பாதையில் யார்யாரோ நடப்பது தெரிகிறது. ஊமை வெயிலில் வியர்த்துக் கொட்டுகிறது.
"இந்த ஆபீசைக் கொண்டு வேணுன்று இங்க தொலைச்சிருக்காங்க. நான் இன்னிக்கு லீவு போட்டு ரெண்டில ஒண்ணு பார்க்கிறதுன்று வரேன்'
35

Page 22
என்று நீலத்தில் பூப்போட்ட கஞ்சி வாயில் உடுத்திய பருமனான ஒரு பெண்மணி ஒல்லியாக ஒற்றைச் சட்டையுடனும் வேட்டியுடனும் வரும் ஓர் ஆளிடம் சொல்லிக் கொண்டு நடக்கிறாள்.
அருகில் வந்து பார்க்கும் போது, தகரம் வேய்ந்த கொட்டகை அலுவலகம் தெரிகிறது. பொ. து. சு. சூ. ப. அலுவலகம், கிடங்கு.
இதுவேதான்.
முன்புறமுள்ள ஒரு கொட்டகையில், ஓர் அலுவலகத்துக்குரிய இலட்சணங்கள் இருக்கின்றன. ஒரு அறிவிப்புப்பலகையில், கையிருப்பு - 36 - சிறப்பு - 8 - (த) 12. என்ற விவரம் தெரிகிறது. இரண்டு சைகிள் - தீ, என்ற எழுத்துடன் சிவப்பு மணல் வாளி. மூலையில் யாரோ துப்பிய வெற்றிலைச் சாற்றின் சிவப்பு அடையாளம்.
அவசரமாக ஓர் ஆள் - இளைஞன் - அவளைப்பார்த்து இங்கே வராதீங்கம்மா! நீங்கல்லாம் அங்கே அந்த "ஷெட்டில் காத்திருங்க இப்ப இன்னும் கொஞ்ச நேரத்தில் புது டி.ஓ. அம்மா வந்திடுவாங்க! போன் வந்திருக்கு' என்று தகவல் தெரிவிக்கையில் அவள் எச்சிலைக்கூட்டி விழுங்கிக் கொள்கிறாள்.
"நான்தான், மிஸ் அபிராமி புதுசாவேலை ஏற்க வந்திருக்கிறேன்." அவன் உடனே குழைந்து வணக்கம் தெரிவிக்கிறான்.
'ஸாரி மேடம் நானு அந்த சோசலிசக் காலனியில் இருந்துதா பிரச்சனையைக் கொண்டிட்டு வந்திருக்கிறவங்கன்னு நெனச்சிட்டே ஸாரி. வாங்க உள்ள'
தலைமறையாத அளவுக்கு ஒரு தடுப்பு, பெயருக்கு ஒரு கதவு, உள்ளே பழைய காலத்து மர மேசை, நாற்காலி, ஒரமெல்லாம் பெஞ்சு. பழுப்பேறிப் போன காகிதங்கள், கோப்புகள். நாற்காலியில் ஒரு வயோதிபர், உட்கார்ந்தவாறே மெல்லிய குறட்டையில் ஆழ்ந்திருக்கிறார். வெயில் கடுமைதானே!
'ஸார். ஸார்..? புது டி.ஓ. வந்துட்டாங்க...'
அவர் உறக்கம் கலைந்து துள்ளினாற்போல் எழுந்திருக்கிறார். 'ஆ.? வந்திட்டாங்களா?."

"ராப்பூரா வூட்டில கொசு. தூக்கமே இல்ல. மேட், வத்தி, அது இது எல்லாத்தையும் சாப்பிட்டு அது நம்ம ஒன்னு கேக்குது. நேத்து ராத்திரி கரன்ட் வேற மூணுமணிநேரம் கட்பண்ணிட்டாங்களா?'
மன்னிப்புக்கேட்கும் பாவனையில் ஒரு புன்னகையை நெளிய விடுகிறார். நல்ல சிவப்பு கன்னங்கள் பழுத்த பழம்போல் கட்டுக்குலைந்து தொங்குகின்றன.
"ஐ ம், மிஸ். அபிராமி ஸார்.'
'வாங்கம்மா, நீங்க வரதுக்காக நான் எத்தனை நாளாவோ காத்துக் கிடக்கிறேன். இங்கே வேலை சுளு ஒரு பிரச்சனை கிடையாது. எங்கேயிருந்து வாரீங்க? லிங்கராசு அந்த நாற்காலியை இப்படிப்போடு, அம்மா உட்கார்ந்துக்கட்டும்' என்று பேச்சோடு உபசரிக்கிறார். இவன் பெயர் லிங்கராசுவா?.ப்ார்ப்பதற்கு டி.வி.தொடர்களில் வரும் ஹிரோ போல் களையாக இருக்கிறானே! லிங்கேஷ் நிகமேஷ் நிகிலேஷ் என்றெல்லாம் மனம் நாம கரணம் நடத்திக் கொண்டிருக்கையில் அவருடைய குரல் குறுக்கிடுகிறது.
'நல்லவேளை நீங்க வந்தீங்க இல்லாட்டி இந்த சமாசாரங்களை இவங்கிட்டியே ஒப்படைச்சிட்டுப்போறாதா இருந்தேன். என்னால முடியல. வாலன்டரி ரிடயர்மென்ட் வாங்கிக்கறேன்னே, விடல. இப்ப ரிடயர்ஆற வயசு எனக்கு நாலுமாசலீவு சம்பளம் வாணாம் நான் லீவு எடுத்துக்கிட்டுப்போறேன்: இதாயாருங்க. எல்லாம் எழுதி ஆறு காப்பி வச்சிட்டேன். நீங்க சார்ச் எடுத்திட்டுக்கையெழுத்துப் போடுங்க. நான்
போயிட்டே இருக்கிறேன்: 's
:லிங்ராசு அம்மாக்குலிஸ்ட்படி எல்லாம் காமிச்சிக்குடு"
அவன் கூரையில்லாமல் தடுப்புச் சுவர்களுக்குள் நீள் சதுரமாக இருக்கும் ஒரு கூடித்தின் பெரிய கதவைத்திறக்கிறான்.
சட்டென்று அவள் மூளையில் ஒரு மின்வெட்டு இதுதான் ட்ெப்போவா? - - - - - - - - -
"உறுதியான கங்கிரீட் சேமிப்புக்க்லன்கள், ஒரு-ப்க்கம் மட்டும்ே மூடப்ப்ட்ட"உருளை விடிவில் கிடக்கின்றன: w
ஒவ்வொன்றின் மீதும் ப.பொ.க.க. நம்பர். சமத்துவ குடியிருப்பு

Page 23
"ஏங்க. இதெல்லாம். தண்ணித்தொட்டியா?"
'தண்ணிக்கு எதற்குங்க இப்படி களம் காபந்தெல்லாம் அதான் பிளாஸ்டிக் டாங்க் இருக்குதே?'
பின்ன?
'ப.பொ.க.க. பயனற்ற பொருள் கழிகலம். சமத்துவக்காலனிக்குன்னு ஆர்டர் பண்ணி வந்திருக்கு ஏற்கெனவே ஒரு சமத்துவ சப்ளைல ஒரே பிரச்சனை, அந்தக் காலனியே இங்க வந்து கூச்சல் போடுது. இப்பவும் வந்துகிறாங்க உங்களண்ட வருங்க நா. அதா ஒரு எடத்துல தங்க வச்சிருக்கிற'
அபிக்கு எலும்பை ஊடுருவும் உதறல் ஏற்படுகிறது. ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதத்துக்குத்தான் இத்தனை அழகாகக் காலை விடிந்திருக் கிறதா?
'பிரச்சனை என்னங்க?"
"என்ன பிரச்சனை? ரூல் படிக்சு அலாட் பண்ணுறாங்க. சோசலி சக்கலனின்னா எல்லாரும் சமம். இது ஏ வூட்டுக்கு முன்ன இருக்கக்கூடா துன்னு எல்லாம் உருட்டித் தெருவுல கடாசிட்டா எப்பிடிங்க? அங்க காலனிக்குள்ள எதுனாலும் தொட்டிக்குள்ள இருக்க வேண்டியது வெளியல கெடந்தா ஃபைன்னு ஒரு சட்டம் கொண்டாந்திருக்கு. நா ஏ எல்லாம் இப்ப சொல்லனும் வருவாங்க, தெரிஞ்சிக்குங்க”
இன்னொருபக்கம் அறையாக இருக்கிறது. அதில், சிறப்புக் கொள் கலங்கள் இருக்கின்றன. வழுவழுவென்று, நகர்த்த, எடுக்கப்பழு வில்லாமல் ஏதோ பிளாஸ்டிக் போன்ற கூட்டுப் பொருள் கொண்டு தயாரிக்க்பட்டது.
ப.பொ.க.க. (சிறப்பு) என்ற முத்திரை கருநீல வண்ணத்திலும் இளம் பச்சை வண்ணத்திலும் இருக்கின்றன. இன்னொருபக்கம், இதே போன்ற கலன்களில், கண்களைக்கவரும் ஒவியங்கள் தீட்டப்பட்டு, மூடிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. "இதுங்களுக்கு நெம்பர் இல்லீங்க வி.வி.ஜ. பிங்க வூடுகளுக்கு நேரா ஆளுங்க வந்து எடுத்திட்டுப் போவாங்க." இருட்டுக்குகைக்குள் நுழையும் திகில் பரவுகிறது. அபி கைப்பபையில் இருந்து தண்ணீர்க்குப்பியை எடுத்து இரண்டு வாய் விழுங்குகிறாள்.

'மணி ஒன்றே முக்கால் பகலுணவு கிடையாதா? கையெழுத்துப் போட்டுச் சார்ச்சை எடுத்துக்குங்கம்மா! நா கிளம்புறேன்! என் ஸன் அப்பவே புடிச்சு டூவீலர்ல வந்து காத்திட்டிருக்கிறான்'
கண்களை மூடிக் கொண்டு கையெழுத்துப்போடுவதாகப்படுகிறது.
கருவலாக, ஒடிசலாக ஒருபையன். கல்லூரி மாணவன் போல் வருகிறான். "ஹலோ!' என்று இவளைப்பார்த்துப் புன்னகை செய்கிறான்.
'வரேம்மா!. பாத்துக்குங்க..' என்றவர், குரலை இறக்கி, 'இந்தப் பிரச்சனை தீர்க்கமுடியாது மெள்ள நாலஞ்சு மாசம் இருந்திட்டு வேற எங்கேயாலும் மாத்தல் கேட்டுட்டுப் போயிருங்க! உங்களுக்கென்ன, யு ஆர் யங், எனஜடிக்' என்று வாழ்த்திவிட்டு அவர் பையனுடன் வெளியேறுகிறார்.
சிறிது மூச்சு விட்டுவிட்டு, "லீங்கேஷ்! நான் இப்ப லஞ்ச் எடுக்க லாம்னு நினைக்கிறேன். மணியாயிட்டுது...' என்று அவள் சொல்லும் போதே, தடையை உடைத்துககொண்டு வரும் தண்ணீர் போல் கதவைத் தள்ளிக் கொண்டு தலைகள் தெரிகின்றன.
குட்டை, நெட்டை, கறுப்பு, சிவப்பு, ஆண், பெண், இளசு, பெரிசு. எல்லோருடைய கைளிலும் புகார் மனுக்களா, அல்லது. வேறு என்ன மனுக்கள்?
'பளிஸ், ஏனிப்படி எல்லாரும் நெருக்கியடிச்சிட்டு வரீங்க? இப்ப லஞ்ச் டைம் இல்லையா?.' அபி இதைச் சொன்னது தான் தாமதம்
"நாங்க எத்தனை நேரம் காத்து இருக்க? எங்கேயோ கொண்டு இந்த ஆபீசை வச்சுக்கிட்டு! நாங்க என்ன மனுசங்களா, என்ன? என்ன நியாயம்? வீட்டுக்குப்பையை எங்கே போட? தொட்டிய நாலுபேரா வந்து உருட்டிட்டுப் போயிட்டாங்க"
"எங்க வீட்டு முன்னால பிளாஸ்டிக் பறந்து விழுந்து எனக்கு ஐநூறு ரூபாய்க்கு பைன்! எங்க பிளாக்கில அஞ்சு இருக்குதுங்க! அவங்க பிளாக். அதா, இ.பிளாக், அங்கேந்து வர வாடை சொல்லி முடியாது!"
'தலைசீவினமுடி, பந்து பந்தாகத் தொங்குது. சுற்றுச்சூழல்
பராமரிப்புத் துறைன்னு புகார் பண்ணப்போனா, அது இங்க வராது கல்லடித்தோட்டம் போய்ப்புகார் பண்ணுங்கிறாங்க. அவங்கவங்க,
39

Page 24
சிறப்புக்கலம் வாங்கி வச்சுக்குங்றாங்க. சிறப்புக்கலம் என்ன விலைங்க!'
இவள் குழம்பிப் போகிறாள்.
'இந்த நம்பர் போட்டதுங்களை உங்க லாரியை அனுப்பி எடுத்திட்டுப் போங்க. எனக்கு ஒரு சிறப்புக் கலம் இப்பகுடுங்க!" நான் எடுத்திட்டுப் போறேன் கையோடு!"
அபி வழியில் வரும் போது பார்த்த பெண்மணி எராளமாக அப்பிய பவுடரோ, பசையோ, வேர்வையில் கரைந்து முகம் திட்டுத்திட்டாகக் காட்சிதருகிறது.
இவள் எதுவும் பதில் கூறுமுன், உயரமும் தாட்டியுமாக ஓராள் இவர்களைப் பின் தள்ளிக் கொண்டு வருகிறான். அவன் கையில் ஒருகவர்
இருக்கிறது.
"எனக்குப் பத்துத்தனி வேண்டும். இந்தாங்க. பணம்’
'த. தனிக்கு. நாங்க அலாட்செய்ய அதிகாரமில்லை' அவன் நேரடியாகப் பதில் சொல்லாமல் சினிமா வில்லன் போல் கற்றை நோட் டுக்களை எடுத்து விசிறுகிறான். ஓர் உதறல் அவளை ஆட்கொள்ளுகிறது. பாம்பைக்கண்டாற்போல் நடுக்கம் இது எதற்கு? இவளைக் கையும் களவுமாகப்பிடிப்பதற்கா? முருகா! காப்பாற்று!
'ஸார். ப்ளிஸ், இது தப்பு அது.வி.வி.ஜ.பி. அலாட்மென்டுக்கு இப்பவே நீங்கள் நான் லஞ்சம் வாங்கியதாகப் பிடிப்பதற்குக் கண்ணியா? ப்ளிஸ், இங்கிருந்து இதை எடுத்திட்டுப் போங்க"
'ஹேய். நான் யாருன்னு நினைச்சிட்டு விளையாடுகிற? நான் ஸ்பெஷல் கேடகரிக்குத்தான் நியாயமாவிலை கொடுத்துவாங்குகிறேன்! பில்போடுங்க!”
லிங்கேசன் சாவியுடன் அவளுக்குச் சைகை காட்டுகிறான்.
'ஸார். ப்ளிஸ் கோபிச்சுக்காதீங்க. அம்மா. புதிசு.' நாக்குழற அபி அவன் சைகை புரியாமல் பார்க்கிறாள்.
'ஸார். ப்ளிஸ் ரூல்படி.அதுக்கு நாங்க. பில்போட்டுப்பணம் வாங்குறதா. தெரியல நீங்க எதுக்கும் மினிஸ்ட்ரிலேந்து ஓராணை வாங்கிட்டு வந்தா நான் இஷ்யூ, பண்ணுறேன்.'
40

படாலென்னு தூண்பிளந்து நரசிம் மாவதாரம் வெளிப்பட்டாற் போல் அவன் குரல் ஒலிக்கிறது.
'ஏய். ரூலு பேசுற நீ ரூலு? உன் சீட்டுக் கிழிஞ்சு போகும் மரியா தையா காசை எடுத்திட்டுக்கதவத்திறந்து சாமானை எடுத்து வண்டில வைக்கச் சொல்லு!'.
வியர்த்துக் கொட்டுகிறது. கற்றையை எண்ணிப்பார்த்து ஒருபில் போட்டுத்தருகிறாள்.
அவன் வெளியேறியதும், கூட்டம் கட்டவிழ்த்து விட்ட நிலையில் பாய்கிறது.
"நாங்கள் கேட்டா, விற்பனைக்கில்லம்ப வெறுஞ்சிறப்புக்கு எங்க கோட்டாவுக்கு ஆறு நூறாம் ஆனா அதுவே 'எஸ்'கேடகரிக்கு வெறும் நூறு ரூபாயாம் நியாயமா எங்களுக்கும் அஞ்சு நூறுக்கு, அதே டிஸைன் போட்ட தனிக்கலம் குடுத்திடு இல்லாட்ட சும்மா விடமாட்டோம்! பட்டப் பகல்ல கொள்ளையா அடிக்கிறீங்க? நாம பாத்திட்டே தான் இருந்தோம்'
"ஆமா, அந்த ஆளுகண்ணக்காட்டுகிறான், இவ சாவிய எடுத்திட் டுப்போய்த்திறந்து விடுங்கறா!'
'மூஞ்சியப்பாரு! மேட்டு நெத்தியும் பள்ளக்கண்ணுமா! எப்படித் தான் இந்த மாதிரி ஆளுங்கள செலக்ட் பண்ணுறாங்களோ கருமாந் தரம்!"
"யம்மா தில்லு முல்லெல்லாம் பண்ணாதே." 'அய்யோ, ப்ளிஸ், நான் சொல்லுறதுக்கேளுங்க."
'நீங்க வாணாப் பாருங்க! ரூல்ஸ்."
"ரூல்ஸா மண்ணங்கட்டி!' காகிதங்களைக்கிழித்து அவள் மேல் போடுகிறார்கள். 'லிங்கேஷ். லிங்கேஷ்.'
அவள் கத்துகிறாள் குரல் வெளியில் வரவேயில்லை.
'ஐயோ கிடைத்தவேலை. மூவாயிரம் சம்பளம் . முருகா. காப்பாற்று லிங்கேஷ். லிங்கராஜஸ். எப்படி பில் போடணுமுன்னு சொல்லு. என்னென்ன பிரிவு. சொல்லு. நான் இந்த வேலையக்காப் பாத்திக்கணும். எனக்குக்கல்யாணம் கிடையாது. வேலை. வேலை."
41

Page 25
'ஏ, அபி, மணி எட்டாகப் போகுது! ராத்திரி ஒருமணி வரை டி.வி. படம் பார்க்கிறது இப்ப விடிஞ்சு பத்துமணிவரை தூங்குது? எழுந்து போயி, வேலைக்காக யாரோ கார்பரேஷன் ஆபீசைப் பார்க்கணும்னியே? GusT.....!’’’
அம்மாவின் குரல் கேட்டும் கேட்காதவள் போல் தூக்கமும் விழிப்பும் இல்லாத மயக்கத்தில் ஒன்றியிருக்கிறாள் அபி.
(355)ւնւյ:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜம் கிருஷ்ணன் தமிழ்ப்புனைகதைத் துறையில் குறிப்பிடத்தக்க பெண்ணொழுத்தாளர்களுள் ஒருவர். இவரது நாவல்களும் சிறுகதைகளும் பெருமளவில் பெண்களின் குடும்ப, சமூக வாழ்க்கைச் சிக்கல்களைச் சித்தரிக்கின்றன. நாவல்களையும், சிறுகதைகளையும் தவிர கட்டுரைகள் பலவற்றையும் எழுதிழுள்ளார். தற்பொழுதும் தொடர்ந்தும் இவர் எழுதிவருகின்றார்.

Liu 1600TLib
என்
மிருகத்திலிருந்து ar AAN . . . மனிதராகி - மீண்டும், தடுத்து வைககபபடட மனிதரே மிருகமாகும்
பயணம. P அபரினாம வளர்ச்சியை, பூமயைத தாணடி, ர்ளி நின் சுற்றும் கோள்களை தள ಛೋಣ. a சுகமாய் ரசிக்கும் மனு யாய பாாககும சுதந்திர பயணம். இது என
கடலின் அடியில், தனதத பயணம. அமைதியாய் கிடக்கும் அதிசயம் காணும் ஆனந்தப் பயணம்.
பூமியின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் புதை பொருளையும், சுரங்கங்களையும், கண்டு களிக்க புறப்பட்ட - என் புத்தம் புதுப் பயணம்.
பூட்டிய கதவிலும், மூடிய ஜன்னலிலும், முட்டிய பந்தாய், மோதுண்ட காலங்களில் சிறகு கட்டிய சந்தோசப் பயணம்.
சலவைக்குச் சிக்காத, சம்பிரதாய போர்வைக்குள், சுருண்டு தூங்கும், உலகத்தை விட்டு, விடியல் காணும் சே. விஜயலட்சுமி
விண் வெளிப் பயணம். நாவற்குடா - கிழக்கு உழைக்கும் மாதர் சங்கம்

Page 26
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சட்டரீதியான பிரச்சினைகள் - அனுபவப்பகிர்வும் சில தகவல்களும்
யுமுனா இப்ராஹிம்
பெண்கள் பொதுவாக எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எல்லாவற் றையும் சட்டரீதியாக அணுகக்கூடிய வகையில் சட்ட அமைப்பு இடம் தருவதில்லை. எனினும் கடந்த தசாப்தங்களுடன் ஒப்பிடும் போது நிலைமை மாறிவருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்படும் மாற்றங்கள் எமது நாட்டிலும் சட்ட அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவனவாக உள்ளன. குறிப்பாக பெண்களது மனித உரிமைகள் சார்ந்த சட்டங்கள் அவ்வகையினைச் சாரும் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படினும் அவற்றினை அமுல்படுத்துவது, பின்பற்றுவது போன்ற செயற்பாடுகள் எமது நாடுகளில் மெதுவாகவே நடைபெறு கின்றன.
இச்சட்டங்கள் தொடர்பாக பெண்களுக்கிருக்கின்ற விழிப்புணர்வும் போதுமானதாக இல்லை. இவ்வகை விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு அரசையே சாரும். எனினும் நடைமுறையில் எமது நாடுகளில் அரசு அப்பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. பெண்கள் இயக்கங்கள், பெண்கள் அமைப்புக்களே இப்பொறுப்பை ஓரளவிற்குச் ஏற்றுவருகின்றன.
சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு என்பது அடையப்படக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட எமது சமூகங்களில் நடைமுறையில் தகுந்த நீதியை ஒரு பெண் பெற்றுக் கொள்ள பல தடைகள் காரணமாக இருக்கின்றன. சமூக மாற்றம் குறிப்பாக மருத்துவ முறைமை, சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்களின் முறைமை என்பன மாற்றமடையாத வகையில் பெண்கள் உரியநியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது.
அவ்வகையில் ஒரு சில பிரச்சினைகளுக்கு மட்டுமே ஒரு பெண் சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து தனக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. உதாரணமாக வீட்டில் தனது கணவனால் நாளாந்தம் அடித்துத் துன்புறுத்தப்படும் ஒரு பெண் நீதிமன்றத்தில் அதற்காக வழக்குத்தொடராமல் பொலிசில் முறைப்பாடு செய்கின்ற போக்கே இலகுவான நடைமுறையாக நமது சமூகத்தில்
44

நடைபெற்று வருகின்றது. பொலிசில் முறைப்பாடு செய்யும்போது இவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்து விட்டு புத்திமதி சொல்லி, சேர்ந்து வாழுமாறு ஆலோசனை வழங்குவர். இவ்வாறு அடித்துத் துன்புறுத்தும் போது அவளுக்குக் காயம் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய வேண்டிய பொறுப்பு சட்டப்படி பொலிஸாருக்கு இருந்தும் நடைமுறையில் இவ்வாறு நடைபெறுவதில்லை.
கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற விரும்பினால் வழக்குத் தொடரக்கூடிய சட்டரீதியான வாய்ப்புக்கள் ஒரு பெண்ணிற்கு இருக்கின் றது. எனினும் பெண்கள் வழக்குத் தொடர்வதற்கான நடைமுறைகள் பிரச்சினைக்குரியவையாகவே உள்ளன. கலாசாரரீதியான நம்பிக்கைகள், செலவு, அபாயம், துணையின்மை என்பன அவற்றில் சிலவாகும். ஓரளவு படித்த பெண்கள் இவ்வகையில் விவாகரத்துப் பெற்றுக் கொண்டாலும் பரவலாக துன்புறுத்தல் வின் மத்தியிலும் உதாசீனத்தின் மத்தியிலும், மேற்கூறிய பிரச்சினைகளை மனத்திற் கொண்டவர்களாக தொடர்ந்தும் கணவனுடன் வாழும் பெண்களே கூடுதலாக உள்ளனர். இவ்விடத்தில் பெண் தானாக முன்வந்து ஒரு குடும்பமுறைமையிலிருந்து விடுபடுதல் என்பதே பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். மாறாகப் பெண்களைக் கணவன்மார் கைவிடுதல் என்பது ஆண்களைப் பொறுத்தவரை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலகுவானதும் அதிகரித்துவரும் ஒரு நடைமுறையாகவும் உள்ளது. இவ்வாறு கைவிடப்பட்ட பெண்கள் விவாகரத்தினைப் பெறும் நடைமுறை கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கின்ற நிலைமையில் துன்புறுத்தல் காரணமாக மனைவி வழக்குத்தாக்கல் செய்து விவாகரத்துப் பெறும் நடைமுறையுடன் ஒப்பிடும் போது இலகுவானதாக இருப்பதுடன் நடைமுறையில் ஓரளவிற்கு சாத்தியமானதொன்றாகவும் இருக்கின்றது.
ஒரு பெண்ணைக் கணவன் கைவிட்டுச் சென்று அவளையும் பிள்ளைகளையும் பராமரிப்புச் செய்யாதபட்சத்தில் அவள் அவனிட மிருந்து தாபரிப்புப்பணம் கோரி வழக்குத் தொடர முடியும். அதிலும் சட்டபூர்வமாகப் பதிவுத்திருமணம் செய்யாத சந்தர்ப்பத்தில் பிள்ளைக ளுக்கு மட்டுமே தாபரிப்புப் பெறமுடியும்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் கடந்த இரண்டு வருடங்க ளாக சட்ட உதவித்திட்டத்தினை அமுல்படுத்தி வருகின்றது. எமது அனுபவப்படியும் அவதானிப்பின்படியும் மட்டக்களப்பு மாவட்டத்தில்
45

Page 27
கணவனால் கைவிடப்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் அனேகமாக தாபரிப்புப் பெறுவதற்கும் விவாகரத்துப் பெற்றுக் கொள்வதற்குமாகவுமே சட்டத்தின் உதவியை நாடுகின்றனர். இதிலும் தாபரிப்புக்காக வழக்குத் தாக்கல் செய்வதே முன்னுரிமை பெறுகிறது.
மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் இளம் பெண்களாலேயே நீதிமன்றம் நிரம்பி வழிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மிகவும் இளம் வயதிலேயே பெண்கள் குழந்தைகளுடனும் தனியாகவும் நின்று தாபரிப்புப் பணம் பெற்றுக் கொள்வதனை நாம் காண்கிறோம். சராசரியாக ஒரு நாளில் 75 பெண்கள் வரையில் இவ்வாறு தாபரிப்புப்பணம் பெற வருகின்றனர்.
பெண்களுக்கு இக்கதி ஏற்படுவதற்கான காரணத்தை நாம் அறிய முற்பட்டபோது அதற்காக இரண்டு காரணங்கள் கூறப்பட்டன.
1. பெண்ணும் ஆணும் தமது இளவயதிலேயே திருணம் செய்து
கொள்வது
2. சட்டபூர்வமாக பதிவுத்திருமணம் செய்யப்படாமை
இவ்விரு காரணங்களும் அவர்களினால் கூறப்படும் காரணங்கள் எனினும் இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இக்காரணங் களினால்
ஒரு ஆண் தனது மனைவியைக் கைவிடும் நடைமுறை கூடுதலாக உள்ளது.
2. சமூக நிலைமைகளுக்கமைய அவ்வாறு கைவிடப்படும் பெண்
நிர்க்கதியாகின்ற நிலைமை.
சமூகத்தில் கணவனால் கைவிடப்படுதல் என்பது பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூகரீதியாக ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளதே ஒழிய மனைவியால் கணவன் கைவிடப்படுதல் என்பது பாரிய சமூகப்பிரச்சினையாக உருவெடுப்பதில்லை.
பெரும்பாலும் அனேகமான இடங்களில் பெற்றோர் தமது மகளை மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றனர்.
அல்லது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமது 16, 17 வயதிலேயே காதலித்துத் திருமணம் செய்து கொள்வதோ அல்லது பெற்றோருக்குத்
46

தெரியாமல் சேர்ந்து போய் குடும்பம் நடத்தும் நிலைமையோ காணப்படு கின்றது. இவ்வாறு விபரம் தெரியாத வயதில் திருமணம் செய்து கொள்ளும் இவர்கள் சில வருடங்கள் குடும்பம் நடத்திய பின் மனக் கசப்புகளிற்கு ஆளாகின்றனர். புரிந்துணர்வின்மை, ஒத்துப்போக முடியாத நிலைமை. என்பவை ஏற்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்ணே கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றாள். கணவனால் பலவகையி லும் துன்புறுத்தப்பட்டு இவர்களிடையே கடைசியில் பிரிவு ஏற்படுகின் றது. இதனால் பெண் நீதிமன்றம் சென்று தனது தாபரிப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியகாக உள்ளது.
பொதுவாக கணவனது வருமானத்திற்கேற்ப பெண் தாபரிப்பு தொகையைப் பெறக்கூடியதாக உள்ளது: எனினும் நீதிமன்றங்களில் அனேகமாக ஒரு பிள்ளைக்கு மாதம் ரூபா 300/- வழங்கும்படியே தீர்ப்பளிக்கப்படுகின்றது. மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே இதை விடச் சற்றுக்கூடுதல் சொகையைப் பெறுகின்றனர். இத்தொகை பெண் ணிற்கு எவ்வகையிலும் நிவாரணம் அளிப்பதாக இல்லை.
மேலும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டபூர்வமான திருமணங் கள் நடைபெறாமை என்பது பெண்களைப் பாதிக்கின்ற ஒன்றாக இருப்பதால் இவ்விடயம் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. மட்டக்களப்பில் கிராமப் பகுதிகளில் சட்டபூர்வமான திருமணமுறை என்பது வழக்கில் இல்லை. இப்படியொருமுறை இருப்பது பற்றிய அறிவே மக்களுக்கு இல்லாமல் இருக்கின்றது.
கோயிலிற்குச் சென்று சமயக்கிரியைகளுடன் திருமணம் செய்து கொள்வதுடன் அத்திருமணம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதாகக் கருதுகின்றனர். இத்திருமண முறையினால் நீதிமன்றம் இவர்களைக் கணவன் மனைவியாக ஏற்றுக்கொள்வதில்லை. மூன்று முறைகளினாலான திருமணங்களையே நீதிமன்றம் அங்கீகரிக்கின்றது.
1. சட்டபூர்வமான பதிவுத்திருமணம்
2. வழமைப்படி (custom) திருமணம் செய்தல் - அதாவது திருமணத் தின்போது ஒரு வயது போன பெண்ணைக் கொண்டு ஏழு மரக்கறி களும், சோறும் சமைத்து அதனை ஒரு பாத்திரத்திலிட்டு உறவினர்; சுற்றத்தவர் மத்தியில் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் ஊட்டிவிடுதல்.

Page 28
3. ஒரு ஆணும் பெண்ணும் குறைந்தது பத்து வருடங்களுக்காவது ஒன்றாக வாழ்ந்ததையும், இவர்கள் இருவரையும் ஒன்றாக திருமண வீடுகள், மரண வீடுகள் கோயில்கள் போன்ற பொது இடங்களில் கண்ட எவராவது சாட்சிசொல்லும் பட்சத்தில் இவர்கள் கணவன் மனைவியாக நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்கள்.
இம்மூன்று முறைகளுக்குள்ளும் அடங்காத திருமணங்கள் பெண்க ளுக்கு பின்வரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியன.
1. இவர்கள் குழந்தைகளிற்குப் பிறப்புச்சாட்சிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் போது பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது.
2. மனைவியையும் பிள்ளைகளையும் கணவன் கைவிடும் போது நிர்க்கதிக்குள்ளாதல் அல்லது கணவனால் இலகுவாகக் கைவிடக் கூடிய நிலைமையையும் பொறுப்பற்ற தன்மை ஏற்படுவதற்கும் வழிவகுக்கின்றது.
3. கணவனுக்கு விபத்து, மரணம் ஏற்படும் பட்சத்தில் அரசாங்கத்தின்
நஷ்டஈட்டுக் கொடுப்பனவிற்கு மனைவி தகுதியற்றவளாகின்றாள்.
4. சில சந்தர்ப்பங்களில் கணவனின் சொத்து மனைவிக்குப் போய்ச் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அனேக சந்தர்ப்பங்களில் பிள்ளைகளிற்குப் போய்ச் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சட்டபூர்வமான திருமணம் நடைபெறாத சந்தர்ப்பங்களில், கணவன் இறக்கின்ற போது இதற்கான உரித்தினை மனைவியும் பிள்ளைகளும் இழக்கின்ற சந்தர்ப்பம் ஏற்படலாம். . . . . . . . . . .
மேற்கு நாடுகளிலும் எமது நாடுகளிலும் ஒன்றாயிருத்தல் (Livingtogether) எனும் நடைமுறை அதிகரித்து வருவதை நாம் காண்கின்றோம். இம்முறை குடும்பம் என்ற சமுக நிறுவனத்திற்குள் தம்மைக் கட்டிப்போட விரும்பாதவர்களினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. படித்த பெண்களும் விழிப்புணர்வினை ஒரளவிற்கு உடைய பெண்களும் இம்முறையின்ை விரும்புவதற்கு பல காரணங்கள் உண்டு.
குடும்பம் என்பது பொதுவாக அதிகாரம் சார்ந்த பகிர்வினை சமனற்ற தாகக் கொண்டதாகவே நடைமுறையில் சமூகங்களில் நிலவுகின்றது. குறிப்பாக ஆண் முனைப்புச் சமூகங்களாகவே தற்போதய சமூகங்கள் எல்லாம் இருப்பதனால் இவ்வாறான அதிகாரப்பகிர்வின் சமனற்ற தன்மையின் விளைவுகளைப் பெண்களே எதிர்கொள்கின்றனர். ஆனால்
48

ஆணுக்கும் பெண்ணுக்குமான நெருக்கம் (உளரீதியானதும், உடல்ரீதியானதும்) காதல், அன்பு இவற்றை ஏற்றுக்கொண்டாலும் குடும்பமுறைமையையும் சம் பிரதாயங்களையும் ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் இவ்வகையில் ஒன்றாக இருப்பதை விரும்புகின்றனர்.
ஒன்றாக இருத்தல் என்பது எவ்வளவு தூரம் பெண்களிற்குத் தீர்வுகளை வழங்குகின்றது என்பது விவாதத்திற்குரிய விடயமே. எனினும் கிராமப்புறங்களை எடுத்துக் கொள்ளும் போது பதிவுத் திருமணம் செய்யாதவர்களை இப்படியான ஒரு நிலைமையுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் பெண்கள் விழிப்புணர்வுடன் பதிவில்லாத திருமணத்தை ஒரு மாற்றீடாகத் தெரிவு செய்வதில்லை. கிராமிய சமூகங்களில் ஆண் கைவிடும் சந்தர்ப்பத்தில் பெண் நிர்க்கதியாகும் நிலைமை ஏற்படுகின்றது. பெண்கள் குறைவான படிப்பறிவினை உடையவர்களாக இருத்தல், நிரந்தர வருமானத்தினைப் பெறமுடியாது இருத்தல் என்பன இவற்றிற்குக் காரணங்களாகும். மேலும் சமூக நிலைமைகள் பெண்களிற்கு கைவிடப் படுதல் தொடர்பாக உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துபவனவாக இருக்கின்றன.
இவற்றைக் கருத்திற் கொண்டு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம். கடந்த வருடங்களில் சட்டரீதியான பதிவுத் திருமணம் தொடர் பான விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தவும் பாதிக்கப்பட்ட பெண்களிற்கு உதவுவதிலும் ஈடுபட்டது. கடந்த வருடங்களில் இப்பெண் களின் நலன் கருதி மட்டக்களப்பில் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 194 பெண்களுக்கு பதிவுத் திருமணத்தையும் செய்து வைத்துள்ளது. இன்னும் அனேக கிராமங்களில் இந்நிலை இருந்து வருவதால் இத்திருமணம் பற்றிய விழிப்புணர்வை பெண்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. பெற்றோர் இளம் வயதில் தமது பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுப்பது பற்றி இவ்விடத்தில் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
இவை குடும்பம், திருமணம், விவாகரத்து, குடும்பவன்முறை தொடர் பான சில பிரச்சினைகளும் அனுபவங்களும் நடைமுறைகளுமாகும். இதே போல ஏனைய பிரச்சினைகளையும் சட்டரீதியான நடவடிக்கைகள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை எடுத்துக் கொள்ளும் போது பின்வரும் ஒரு சில விடயங்களைக்
கவனிக்கலாம்.
ஒரு பெண் வீதியில் நடமாடும் போது எவராவது தூஷண வார்த்தை
49

Page 29
களால் பேசி இம்சைப்படுத்தி விட்டால் அதற்காக அவள் பொலீசில் முறைபாடு செய்து சம்மந்தப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடர சட்டத்தில் ஒரு பிரிவு இடமளிக்கின்றது. இது எம்மில் அனேகருக்குத் தெரிந்திராததுடன் நடைமுறைப்படுத்தப்படுவதும் குறைவாகவே உள்ளது.
அத்துடன் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளை தகப்பன் கடத்திச் சென்று தன்னுடன் வைத்துக் கொண்டாலும் சட்டரீதியாக அப்பிள் ளையைத் தாயிடம் ஒப்படைக்க சட்டம் வழிவகை செய்கின்றது. இவ் வாறே சொத்துக்கள் சம்மந்தமாகவும் ஒரு பெண் தனக்குச் சேர வேண்டிய வற்றைப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் பல ஏற்பாடுகள் உள்ளன.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் அண்மைக் காலத்தில் கையாண்ட பிரச்சனைகளில் பெண்கள் மீதான வன்முறைகள் பாரீய பிரச்சனையாக உள்ளது. குடும்பப் பிரச்சினைகளால் அல்லது பிற ஆண்க ளால் ஏமாற்றப்பட்ட பெண்களின் தற்கொலை முயற்சிகள், பாலியல் வன்முறை, துன்புறுத்தல், இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை, சிறுமிகள் தந்தையராலும் குடும்ப அங்கத்தவர்க ளாலும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படல், சகோதரிகளின் கணவன்மாரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படல், தாய்மார் வெளிநாடு சென்று விட்டதால் வீட்டில் தகப்பனாரால், சிறிய தந்தையால் எனப் பலரால் வேலைப்பளு சுமத்தப்படுதல், இம்சைப்படுத்தப்படுதல் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம்.
பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் சார்ந்து முன்வைக்கப் படும் அணுகுமுறைகளில் ஒரு பெண்கள் நிறுவனம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதைச் சிந்திக்கின்ற போது பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
1. பெண்களுடைய உரிமைகள் தொடர்பாகவும் சட்டங்களில் உள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் விழிப்புணர்வினைப் பெண்களுக்கு ஏற்படுத்துவதுடன் சமூக மட்டத்திலும் ஏற்படுத்திப் பரவலாக்கல்.
2. வன்முறைச் சம்பவங்களை அறிதலும் ஏனையோருக்கு அறியப்
படுத்தலும்.
3. பாதிக்கப் பட்டவர்கள் முறையிடும் சந்தர்ப்பங்களில் அல்லது வேறு வழிவகைகளில் அறிகின்ற பட்சத்தில் அவசரகால வைத்திய உதவிகளையும், ஆலோசனைகளையும், பொருளாதார உதவிகளை யும் ஏனைய உதவிகளையும் வழங்குதல்.
50

4. உளவியல் ரீதியான பரிகாரங்களுககான வசதிகளைச் செய்தல். 5. நிரந்தர காப்பகம் ஒன்றைப் பராமரித்தல் அல்லது தற்காலிக
வசதிகளையாவது செய்து கொடுத்தல். 6. சட்டரீதியான ஆலோசனை வழங்கல். 7. சட்டமுறைமை, மருத்துவ முறைமை என்பவற்றைப் பெண்கள்
சார்பான நடைமுறைகளைக் கைக்கொள்ளுமாறு தூண்டுதல். 8. பெண்களிற்கெதிரான வன்முறை தொடர்பாக சமூகத்தில் விழிப்பு ணர்வை ஏற்படுத்தலும் சமூக நோக்கினை இவ்வகையில் பெண் நிலை சார்ந்ததாக மாற்றுதலும் இதனூடாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனித்து விடப்படுதலை அல்லது சமூகத்தினால் ஒதுக்கப்படுவதைத் தவிர்த்தல்.
இவ்வாறு பல அணுகுமுறைகளைப் பெண்கள் முன்வைக்கலாம். ஒரு பெண்கள் நிறுவனம் என்னும் வகையில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் இவற்றில் பல அணுகுமுறைகளைக் கைக்கொள்கின்றது.
இவற்றிற்கான முழுமையான வளங்களும் வசதிகளும் சூரியாவிடம் குறைவாக காணப்பட்டபோதும் நீண்ட காலத்தில் இவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக பின்வரும் தகவல் களை பகிர்ந்து கொள்வதும் இங்கு பயனுள்ளதாக இருக்கும். இத்தகவல் கள் Women3Rights Watch என்ற தலைப்பில் பெண்கள் தகவல் கூட்டினால் வெளியிடப்படும் சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டவையாகும். (1st quarter 1998).
பெண்களிற்கு எதிரான வன்முறைகளாவன சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கமைய பெண்களின் மனித உரிமைகள் மீதான மீறல்களாக காணப்படுகின்றன. எல்லா நாடுகளும் இந்த உரிமைகளை தனது நாட்டின் பிரசைகளிற்கு வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளன. இவ்வாறான கடப்பாடுகளை எடுத்துக் கொள்ளும் போது இலங்கை அரசாங்கம், பெண்கள் உரிமைகள் தொடர்பாக பின்வரும் ஏற்பாடுகளில் (Conventions) கையெழுத்திட்டுள்ளது.
1. சிவில் அரசியல் உரிமைகள் சார்ந்த சர்வதேச ரீதியான ஏற்பாடு international Convenant on Civil and Political Right (ICCPR) 2. எல்லா வடிவங்களிலுமான பெண்களிற்கெதிரான பாரபட்சத்கை
ஒழித்தல் சார்ந்த ஏற்பாடு.
51

Page 30
The Convention on Elimination of all forms of Discrimination Aganist Women (CEDAW)
3. துன்புறுத்தல் சார்ந்த ஏற்பாடு
The Convention on Turture (CAT)
அதுபோல இலங்கை அரசு பின்வருவனவற்றை பின் பற்றக் கடமைப்பட்டுள்ளது.
1. மனித உரிமைகள் சார்ந்த உலகரீதியான அறிக்கை
Universal Declaration of Human Rights (UDHR)
2. பெண்களிற்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல் தொடர்பான
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை United Nations Declaration on the Elimination of Violence Against Women.
3. நாலாவது பெண்கள் மகாநாடு சார்ந்த தளசெயற்பாடு
The Platform for Action of the Fourth World Conference On Women.
பெண்களிற்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை என்பது குறிப்பாகப் பின்வரும் பிரச் சனைகள் மையப்படுத்தியது.
1. குடும்பத்தில் பெண்களிற்கெதிரான வன்முறை. 2. சமூகத்தில் பெண்களிற்கெதிரான வன்முறை. 3. அரசினால் மேற்கொள்ளப்படும் பெண்களுக்கெதிரான வன்முறை.
அரசாங்கங்கள் இம்மாதிரியான கட்டுப்பாடுகளுக்கமைய பெண்க ளுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கின்ற நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவேண்டிய அதேவேளை இவற்றில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதிலும் கட்டாயமாகக் கவனஞ் செலுத்த வேண்டிவையாக உள்ளன.
மேலும் குற்றவியல் நீதிமுறைகளை இவை தொடர்பாக விழிப்பூட்ட லுக்கு உட்படுத்த வேண்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதுடன் பெண்களுக்கெ திரான வன்முறை தொடர்பான தகவல்களையும் திரட்ட வேண்டும். பெண்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான முறை களையும் வழிவகைகளையும் வரைவிலக்கணம் செய்கின்ற பொறுப்பு அரசாங்கத்தினையே சாரும். எனினும் சட்டங்களிற்கும் நடைமுறைக ளிற்குமான இடைவெளி என்பது பெரிதாகவே இன்னும் இருக்கின்றது
52

நாளைக்கு இன்னொருத்தன்
சிறுகதைத் தொகுதி - நாஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
இச் சிறுகதைத் தொகுதியில் வரும் வித்தியாசமான பெண் பாத்திரங்கள்
அருந்ததி இரட்டணராஜ்
இச்சிறுகதைத் தொகுதியில் பதினெட்டு சிறுகதைகள் அடங்குகின்றன. பதினெட்டுச் சிறுகதைகளிலும் பதினெட்டு வித்தியாசமான பெண் பாத்திரங்களைச் சந்திக்கின்றோம். கதைகளைப் படிக்கத் தொடங்குகின்ற போதே காட்சிகள் மனத்திரையில் ஒடத் தொடங்குகின்றன. போகப் போக கதைகளைப் படிக்கின்றோம் என்பதிலிருந்து விடுபட்டு அவை நிகழும் களத்தில் நிற்கின்ற அனுபவம் ஏற்படுகின்றது கதையின் முடிவிலும் அவலம், ஆத்திரம், வெறுப்பு, கோபம் எனப் பலவகைப்பட்ட உணர்வு கள் எழ கதையை மூடிவைத்து விட்டு சற்று நேரம் அக்கதையின் சம்பவங் களைச் சிந்திக்கின்றோம். ஒவ்வொரு கதையும் சில பக்கங்களையே உள்ளடக்கியவை ஆனால் ஒவ்வொன்றும் எம்மை உசுப்பி விடவைப்பன வாகவும் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் அமைகின்றன. இது படைப்பாக்கத்தின் வெற்றியாகும்.
ஒவ்வொரு கதையிலும் சந்திக்கும் பெண் பாத்திரங்களை தனித்தனி யாக நோக்குவது பொருத்தமானதாக உள்ளது.
முதலாவதாக 'வளர்மதியும் வாசிங் மெசினும்' எனும் தலைப்பி லான சிறுகதையில் வருகின்ற மாலதி என்கின்ற பாத்திரம் இரண்டு விதமான சிக்கல்களுக்கு மத்தியில் அகப்படுவதனை அவதானிக்கலாம். ஒன்று அவளது பாலியல் சார்ந்ததாகவும் இரண்டாவது பொருளியல் சார்ந்ததாகவும் அமைகின்றது. அவளது கணவனின் ஒத்துழைப்பின்மை யால் அவள் சுமைதாங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். இதனால் பெண் எதிர் நோக்க வேண்டிய தொடர் சிக்கல்கள் பலவற்றை அவளும் எதிர் நோக்க வேண்டியவளாகிறாள். அதில் ஒன்றாக பொருளாதார தேவை களை நிறைவு செய்ய முற்படுகின்றாள். பெண்ணானவள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளிற்குப் பங்களிக்க வேண்டியவள் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டாலும் இக்கதையில் பணம் தேடுவதற்காக தன் நேரம் முழுவதையும் அவள் செலவிடுவதால் குழந்தையைக் கவனிக்க
ARKAR

Page 31
முடியாமல் போகின்றது. அதனால் குழந்தை பாதிப்புறுகின்றது. இத்தாயின் நிலை மிகப் பரிதாபத்துக்குரிய தாகின்றது.
இரண்டாவதாக 'கற்புடைய விபச்சாரி' எனும் சிறுகதையில் 22 வயதான புவனேஸ்சைச் சந்திக்கின்றோம். இனித்தான் உலகம் புரியப் போகும் வயதில் ஏராளமான கற்பனைகளுடன் திருணம் செய்து கொள்ப வளிற்கு வாழ்க்கை தலைகீழாக மாறுகின்றது. இங்கும் குழந்தை பெறல் எனும் விடையத்தில் பெண்மட்டும் பொறுப்பானவளாக்கப்படுகின்றாள். அவள் அடிக்கடி கருக்கலைப்பிற்கு கட்டாயப் படுத்தப்படுவதால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல கஸ்டங்களை எதிர் நோக்குகின் றாள். மீள் உற்பத்தி உரிமை என்பது அதிக பட்சம் பெண்ணிற்கு கொடுக் கப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. பெண்ணின் விருப்பிற்கே கூடுத லாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாறாக இக்கதையில் அவளது விருப்பு புறக்கணிக்கப்படுகின்றது. மேலும் கணவனிற்கு இருக்க வேண்டிய புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவளது கணவனிடம் இருந்து கிடைக்கவில்லை. குழந்தை பெறாமல் கவனமாக இருக்க வேண்டிய கடமை மனைவிக்கு மாத்திரம் உரியதாகக் கருதுகின்றான். இக்கதையில் மற்றோர் ஆங்கில இளம் பெண்ணின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுவத னுாடாக இக்கருத்து நிலை எமது சமூகத்திற்குரிய தொன்றாக இருப்பதனை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
மூன்றாவது கதையில் 'மஞ்சுளா எனும் பாத்திரம் அறிமுகமாகின் றாள். கதையின் தலைப்பும் 'மஞ்சுளா என்பதாக இருக்கின்றது. அவள் கல்யாணம் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டு லண்டனிற்கு கொண்டு வரப்படுகின்றாள். அவளது கணவன் ஏற்கனவே திருமணமானவன். அவளது மென்மையும் அடக்கமும் அவளைப் பலிகொள்கின்றது. பத்து வருடம் மாமியாருடன் வாளா வெட்டியாக இருக்கின்றாள். இறுதியில் மனநோயாளி ஆகின்றாள்.
'அவன் வந்து நிற்கின்றானாம்’ என்ற நாலாவது கதை சற்று வித்தி யாசமானது இக்கதையில் சறோஜா, சுசீலா என்ற இரு பெண்களைச் சந்திக்கின்றோம். சறோஜா ஒரு சாதாரண மனைவியாகவும், சுசீலாவை ஏற்றுக் கொள்ள முடியாத மனப் போக்குள்ள ஒரு பெண்ணாகவும் இங்கு பார்க்கின்றோம். அவள் தன் வாழ்விற்கு வசதி சேர்க்க தகுதியற்றவன் என்பதால் தான் நேசித்த எழுத்தாளனை ஒதுக்கித் தள்ளுகின்றாள். பொதுவாக பெண்கள் என்றால் பரிதாபமானவர்கள் என்று இருக்கின்ற கருத்திற்கு மாறாக தன் வசதிக்காக வாழ்வைத் தேடிக் கொள்பவளாக
54

அவள் இருக்கின்றாள்.
'உஷா ஓடி விட்டாள்' என்ற கதையில் குடும்பத்தினால் பலி கொள்ளப்படுபவளாக உஷா வருகின்றாள். கதையின் போக்கு மிக அற்புதமாக இருக்கின்றது. நாமும் உஷா நிற்கும் சூழ்நிலையில் நிற்பது போன்ற உணர்வும் படபடப்பும் ஏற்படுகின்றது. ஒரு இந்திய சமூகத்தை மையமாகக் கொண்ட கதை இது. சிறிய பெண்ணாக உஷா பொருத்தம் இல்லாத மாப்பிள்ளைக்கு நிச்சயிக்கப்படுகின்றாள். அந்நிலையில் வீட்டை விட்டு ஓடிவரும் அவளை ஓர் கறுப்பின ஆண் விபச்சார விடுதிக்கு அனுப்பிவைக்கின்றான். இங்கும் பெண்ணின் பாத்திரம் பரிதாபத்துக்கு உரியதாகவே அமைந்து விடுகின்றது.
'இன்னும் சில அரங்கேற்றங்கள்' எனும் கதையில் லண்டனில் வாழும் தழிழ்ச் சமூகத்தின் பாத்திரங்களை தத்ரூபமாக காணக்கூடி யதாகவுள்ளது. இரு சந்ததிகளிற்கிடையிலான வித்தியாசத்தினை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இதில் வரும் பெண்ணின் சீரான சிந்த னைப் போக்கும் முதிர்ச்சியும் தனது ஆசைகளை அவள் முன்வைக்கும் பாங்கும் பெண் தொடர்பான நேர் நிலையான பிம்பத்தைத் தருகின்றது.
'இப்படியும் கப்பங்கள்' என்ற ஏழாவது கதை சகித்துக் கொள்ளக் கடினமான ஒன்றாக இருக்கின்றது. கணவனால் வாங்கப்பட்ட கடனிற்காக மனைவி பாலியல் ரீதியாக பலவந்தமாக அனுபவிக்கப்படுகின்றாள். பொலிசை நாடுபவளாக அவளைச் சித்தரித்திருப்பது சற்று மனதிற்கு நிம்மதியைத் தருகின்றது. ஏனெனில் அம் முடிவால் ஏனைய பெண்களை இந் நிலையிலிருந்து அவள் காப்பாற்றக்கூடும்.
'நாடகங்கள் தொடரும்' என்ற கதை நாடகப் பாணியின் பின்னணி யுடன் அறிமுகமாகின்றது. மூன்று நான்கு ஆண் பாத்திரங்களை ஆசிரியர் சிறப்பாக அடையாம் காட்டுகின்றார். ஒரு பெண் தன் சொந்த வாழ்வில் எடுக்கும் தீர்மானங்கள் பற்றி நடு வீதியில் தீர்ப்பு வழங்கும் உரிமையை இந்த ஆண்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களை நிராகரிக்கப்பட வேண்டியவர்களாக ஆசிரியர் சித்திரிக்கின்றார்.
'நாலாம் உலகம்' எனும் கதையில் மீனா எனும் பாத்திரத்தைச் சந்திக்கின்றோம் அவள் ஒரு விபச்சாரியாக ஆவதற்கு அவளுடைய இந்தியச் சமூகம் காரணமாக இருப்பினும், அதே சமூகம் பின்னர் கலாச்சாரத்தை உயர்வாய்ப் பேசுகின்றது. ஒரு குறுகிய நேரத்திற்கு ஓர் திறந்த யன்னலூடாக அறிமுகமானாலும் அவளது ஆத்திரம், கசப்பு
55

Page 32
போன்ற மன உணர்வுகள் எம்மை உடனேயே தொற்றிக் கொள்கின்றன.
"பொலீஸ் காவல்' என்ற பத்தாவது கதை பஸ்சிற்குள் நடைபெறும் சம்பவச் சேர்வையாக அமைகின்றது. சன நெரிசலான பஸ் ஒன்றில் பலர் பல தேவைகளை நோக்கியவர்களாக பயணஞ் செய்யும் வேளையில், கடவுள் பற்றி பிரசங்கம் செய்யும் மூன்று பெண்களை இக்கதை சித்தரிக் கின்றது. பலரகப் பெண்களை இச் சிறுகதைத் தொகுதியில் ஆசிரியர் அறிமுகப் படுத்துகின்றார். அதில் இவர்கள் ஒரு ரகம் எனினும் இவர் களை எக்கண்ணோட்டத்தில் நோக்குவது என்ற சிக்கல் எழுகின்றது.
'நாளைக்கு இன்னொருத்தன்' கதையின் நிகழ்வுகள் யாவும் உண்மையின் பிரதிபலிப்புக்களாக அமைந்து விடுகின்றன. கதையின் முக்கிய பாத்திரமாக லண்டனில் குடும்பத்தவருடன் வாழும் 30 வயதைத் தாண்டிய திருமணமாகாத பெண் எமது சமூகத்தின் 'நல்ல தமிழ்ப் பெண்ணாக இருத்தல்' என்ற கருத்துநிலைக்கமைய விரும்பியோ விரும்பாமலோ வாழும் பெண்களுள் ஒருத்தியாகச் சித்திரிக்கப்படுகின் றாள். இக்கதயிைல் இன்னொரு பெண் பாத்திரம், அவளது தாய், தமிழ்ச் சமூகத்தின் இன்னொரு பிரதிபலிப்பாக அவள் இருக்கின்றாள். மகள் பாத்திரத்தில் வருபவள் சலிப்படைந்து தனது வாழ்வை மாற்ற யோசிக் கின்றாளாயினும் நடை முறையில் அவற்றைச் செயற்படுத்த முடியாதவ ளாகவே இருக்கின்றாள்.
"ரவுண்ட் அப்' என்ற பன்னிரெண்டாவது கதை இலண்டன் சூழலில் இருந்து விடுபட்டு இலங்கைப் போர்ச் சூழலுக்கு எம்மைக் கொண்டு வருகின்றது. ஆண்களின் இறப்பும் பெண்களின் அவலமும் அங்கு வெளிக்காட்டப்படுகின்றன. ஒரு சின்னப் பெண்ணை மையமாக வைத்து கதையினை ஆசிரியர் எழுதிச் செல்கின்றார்.
"ஈஸ்வரா உன் தயவெங்கே' என்ற கதையில் பார்வதி எனும் ஐம்பது வயதுப் பெண் அறிமுகமாகின்றாள். ஓர் உதவாத புருஷனுடன் வாழும் தன் மகளுக்கு காசு அனுப்புவதற்காக பல கொடுமைகளைச் சந்திக்கும் தாய் எனும் இப்பாத்திரம் வேதனையைத் தருவதாக அமைகின்றது.
'இரவில் வந்தவர்' என்ற பதின் நான்காவது கதை இரண்டு குழந்தைகளுடன் கணவனை இழந்த இளம் பெண்ணைப் பற்றியது. அநியாயமாக வேறொருவர் செய்த பிழைக்கு அவள் மேல் சமூக விரோதி எனும் பட்டம் சுமத்தப்படுகின்றது.
56

'அம்மா ஒரு அகதி' என்ற கதை இலண்டனிற்கு குடி பெயரும் வயதான தாயைப் பிரதான பாத்திரமாகக் கொண்டது. லண்டன் சூழல் அவளிற்குப் பொருத்தமில்லாததாகவும் நோயையும் மறதியையும் தவருவதாகவும் இருக்கின்றது. முடிவில் அவள் பரிதாபமாக இறக்கின் றாள
‘என்னவள்' என்ற கதை பல வருடங்களின் பின் தன் மனைவி யைப் புரிந்து கொள்ளும் கணவனைப் பற்றியது. எனினும் இதுவரை வந்த பெண் பாத்திரங்களைப் போலவே இக் கதையிலும் பெண் மெளனமானவ ளாகவும் சகித்துக் கொள்பவளாகவும் சித்திரிக்கப்படுகின்றாள்.
'என் வீடும் தாய் மண்ணும்' எனும் தலைப்பிலான பதினேழாவது கதை 70 வயது மூதாட்டியின் மன ஓட்டம் பற்றியது. இக்கதை எல்லோ ரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கட்டளையின் பேரில் ஊரையும் வீட்டையும் விட்டு நகரும் மக்கள் வெள்ளத்துள் ஒருத்தியாக வெளியேறி, அன்றிரவே இறக்கின்ற மூதாட்டியைப் பற்றியது.
பதினெட்டாவது கதை 'சொக்கிலேட்மாமா' என்ற தலைப்பினைக் கொண்டது. சொக்கிலேட் மாமாவின் இறப்புடன் கதை தொடங்குகின்றது. பார்வதி என்ற பணிப் பெண் இங்கு முக்கிய பாத்திரமாக சித்தரிக்கப் படுகின்றாள்.
முடிவுரை
பெண்ணிலைச் சிந்தனை கதையாக்கத்திற்கு அடிப்படையானதாக இருக்கின்றது. பெண் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்ததில் பல வகையான அணுகுமுறைகளை ஆசிரியர் கையாண்டிருக்கின்றார். யதார்த்த பூர்வமான கதைகளாகவே எல்லாக் கதைகளும் அமைந்துள்ளன. தமிழ்ச் சமூகத்தின் கருத்து நிலையை ஆசிரியர் அழகாக வெளிப்படுத்துகின்றார். தமிழ்ச் சமூகக் கட்டுப்பாடுகளும் கொள்கைகளும் பெண்களை மட்டும் கட்டுப்படுத்தி அவர்களின் உரிமைகளை நிராகரிப்பனவாகவே இருக்கின்றன என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.
57

Page 33

:
வருடாந்த சந்தா - பெண்
ஐரோப்பா, வட அமெரிக்கா
அவுஸ்திரேலியா U.S. $ 20/
இந்தியா U.S. $ 10/- இலங்கை ரூபா 150/=
சந்தா விண்ணப்பம் 199.
பெண் சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
பெயர்
LLS LSL LSLLSLLSLLSL LLLLL LL LL LL0LLLSLLL LL LSLSLLLL LLLLLL LLL LLLL0SLLLSLLL LL0LL L0LLLLLLL LLL LLL 0 LLLLCLSLLLLL LSL LSL L LSL LLL LLL LLLL L LSL L LSL LLSLLLL LL LLL LLL LL 0SL LL
LL LL 0 LL L0 LSL 0LL LL L0L0L0 LLLLLL LLL 0LLL LLLLLL LLLLLLLLLLSLS LLLLL 0LL LSL 0LSL0LLLLLLL LLLLLLLL LLL LLSL LL LLS LLLLLL LLLL LL LL SL LLLL L LL 0L LLSLLGLLLLL LL LLL LLSL
இத்துடன் காசோலை / மணி ஒடரை சூரியா பெண்கள் அபிவிருத்தி
நிலையத்தின்பேரில் அனுப்பிவைக்கிறேன்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 27A லேடி மனிங் ட்றைவ், மட்டக்களப்பு
Suriya Women Development Centre, 37A, Lady Manning Drive, Batticaloa.

Page 34

一
சூரியா ஆலோசனைக்குழு
அம்மன்கிளி முருகதாஸ் ஒட்றி றிபேரா கமலினி கணேசன் குமுதினி சாமுவேல் சரளா இம்மானுவேல் சித்திரலேகா மெளனகுரு சுனிலா அபேயசேகரா சூரியகுமாரி பஞ்சநாதன் நதிரா மரியசந்தனம் இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி வாசுகி ஜெயசங்கர்
சூரியா அலுவலர்கள்
சிறிவஸ்ளியம்மன் சிதம்பரப்பிள்ளை
விஜயகுமாரி முருகையா யுமுனா இப்ராஹிம்
ஜெயந்தி தளையசிங்கம்

Page 35
மூடிக்கிடந்த கதவுகள் முற்றுகை தேடித் தேடி அலுத்த வாழ்வில் ட யுகங்களின் மெளனத்தை இன்று சேருவோம் தோழி நாம் சோர்வக
பொறுமையே உயர்வு என்னும் ெ
அடக்கி அடக்கி நம்மை ஏய்க்கும் உணர்வுகள் மரத்து நாம் உயிர் பி
உண்டு நமக்கு வீரமென்று உல
கருவிலே துவங்கியே இறுதி மூச்
வன்முறையோ பெண்கள் நமது ஆதிக்க கரங்களின் பிடியிலிருந்:
பெண்ணடிமை வேறுத்து உலக

தளர்ந்தது
ாதை ஒன்று தெரியுது நாம் கலைக்கிறோம்
ற்றிச் சேருவோம்
பாய்மையை புறக்கணி
சிந்தனையை சிதறடி
ழைத்தல் தேவையோ கத்திற்கின்று உணர்த்துவோம்
சு விடும் வரை
வாழ்க்கையின் அடித்தளம் து மீளுவோம் கை நமது ஆக்குவோம்