கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலத்தைக் கடந்து வந்த கதைகள்

Page 1


Page 2

காலத்தைக் கடங் துவங்த கதைகள்
அரச. ஐயாத்தரை

Page 3
"Kalaththai Kadanthuwantha Kathaigal” Twenty four ethical stories in Tamil
'காலத்தைக் கடந்துவந்த கதைகள்'
by
Rev. A. Iyadurai
First Edition : April, 1997
Price : RS. 50/-
Copies : 500
ISBN 955-96225-I-X
Sole Distributors: V. J. P. International,
Importers, Distributors & Publishers, "Inter Mod' Book Shop 240, Galle Road, Colombo - 06. Telephone : 503141.
Printed by Unie Arts (Pvt) Ltd. No.48 B, Bloemendhal Road, Colombo - 13 Tel: 330195

எனனுரை
எனது வாழ்க்கையை வளம் படுத்திய இக்கதைகளை ஒன்று சேர்த்து ஒரு புத்தக ரூபமாக அமைக்க முயன்றபோது, இந்நூலுக்கு என்ன பெயரை இடலாம் என்னும் சங்கடமான நிலைக்குள் ஆளானேன். மனதில் வந்த எண்ணங்கள்:
தொடர்பாடலைத் தெளிவாக்க வரும் தொன்மைமிக்க கதைகள்; வாழ்வை வளமாக்கும் வளம் மிக்க கதைகள்; காலத்துக்கேற்ற கருத்துள்ள கதைகள், வாழ்வை முன்னேற்றும் விழுமியக்கதைகள்; மானிடனை மனிதனாக்கும் மன்னதக் கதைகள்; மானிடனை மகிழ்விக்கும் மானதக் கதைகள்; மக்களை உந்துவிசைப்படுத்தும் உன்னத கதைகள்; காலத்தோடு ஒத்துச்செல்லும் கண்ணியமான கதைகள்; உளத்தை உழுதெடுத்த உன்னத கதைகள்: காலத்தை வென்ற கதைகள்; காலத்தைக் கடந்துவந்த கதைகள் என்பன.
இவற்றுள் இறுதியில் வந்த எண்ணமே, 'காலத்தைக் கடந்துவந்த கதைகள்’ என்னும் இந்நூல்.
இக்கதைகள் யாரின் உள்ளத்தைத் தொட்டு இழுக்கிறதோ-யாருடன் பேசுகிறதோ, அவர்கள் இதைத்தொடந்து தமிழ் மொழியில் பதித்து முன்னோக்கிச்செல்ல, மேலும் பண்படுத்தி விரிவடையச் செய்து தமிழினத்துக்குச் சேவை செய்யும் உரிமை; சர்வரீதியாக ஒவ்வொரு தமிழ்பேசும் மக்களுக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அனுபவ ரீதியாக அறிந்த, வாசித்த கதைகளையே யான் தமிழில் இங்கு தந்துள்ளேன். நீங்கள் இதைத் தொடர்ந்து எழுதும் வேளையில் மூலப்பிரதியை ஆதாரம் காட்டும்படி பணிக்கப்படுகிறீர்கள்.
இதை யான் என் இறைவன் இயேசுவுக்கும், என் மொழிக்கும், இனத் துக்கும், எனது குடும்பத்துக்கும் படைக்கும் தொண்டாக, அர்ப்பணம் செய்கிறேன். வளர்க இத்தொண்டு! வாழ்க மொழிவளம்!!
'ჯახ8füt:" 24/2, றோகினி வீதி, கொழும்பு-6. 25.O3.1997,

Page 4
Dr. E. S. Thevasagayam, M.A., M.Sc., Ph.D 11915A Kynsey Road Chairman Colombo 8, Sri Lanka
Governing Body of Educational Institutions Tel: 686124 Founded by C.M.S. in Ceylon
வாழ்த்துச் செய்தி
பரி. மத்தேயு 18:14 “இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும்
கெட்டுப்போவது, பரலோகத்திலிருக்கிற உங்கள்
பிதாவின் சித்தமல்ல'
இந்த வசனத்தின் அடிப்படையில் எழுந்த இந்நூலே, காலத்தைக் கடந்து வந்த கதைகளாகும்.
பிள்ளைகள் களங்கமில்லாத்தன்மையுடையவர்கள். (Innocent) அவர்கள் எண்ணங்களை எளிதில் ஏற்றக்கொள்ளும் இயல்புடையவர்கள். (Receptive) பிள்ளைகள் தன்னிச்சையாக, சுதந்திரமாக நடக்க விரும்புபவர்கள். (Spontaneous) ஆகவே அவர்களின் பிறப்புரிமையை மதித்து, ஆர்வத்தைத் தூண்டி அவர்கள் விரும்பும் இனிய கதைகள் மூலம் அவர்களுக்கு வாழ்வில் துணையாக நிற்பதே ஆசிரியரின் அவாவும் குறிக்கோளுமாகும்.
பிள்ளைகளையும், பெரியவர்களையும் கூடப்பண்பாளராக்குவதற்கு, உடல், உளவிருத்தியாளராக உருவாக்கி எடுப்பதற்கு இச்சிறிய நூல் துணைபுரியவேண்டும். இச்சேவை, மேலும் விருத்தியடைய வேண்டும் என இறையாசி வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறேன்.
வணக்கம்
இப்படிக்கு அன்புள்ள,
கலாநிதி ஈ.எஸ். தேவசகாயம்.

19.
2O.
2.
23.
24.
உள்ளடக்கம்.
காலத்தைக் கடந்து வந்த கதைகள்.
விறகு வெட்டி
சான்ட குளோஸ்.
சூரியனும் குகையும்.
இரக்கம் கொண்ட செட்டி. சிறிய சிவப்புப் கோழி. இளமையைப் பெற்றுத்தரும் நீர் ஊற்று. இறை மகிமை-அனுபவத்தின் ஊடாக இறைவன். பழைமையைநினை, புதுமையைப் பெறுவாய். தியாகத்தின் பரிசு.
ஏட்டுக்கல்வி, கறிக்கு உதவாது-படித்தறிந்தமேதை. இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன்.
மன்னிப்பு.
செல்வத்தைப் பதுக்கிவைத்த பாட்டி.
கைகூப்பும் கரங்கள்.
ஒற்றுமையே பெலன்.
யானையும் குருடர்களும்.
'கண்ணால் காண்பதுவும் பொய்யே! காதால, கேட்பதுவும் பொய்யே."
கொரிய தேசத்து உவமை. தோள்களில் தூக்கிச் செல்லும் கடவுள்! "பொறுத்தார் அரசாள்வார்’ தாழ்வு உயர்ச்சிதரும்' மன்னிப்பில் மனநிறைவு-"மனம்போன்றவாழ்வு'
ஆமென், அப்படியே ஆகட்டும்.

Page 5

1. விறகுவெட்டி
ஒரு இளம் சுறுசுறுப்புள்ள விறகுவெட்டி வாழ்ந்தான். இவன் தனது தொழிலில் மிகவும் விற்பன்னன். ஆகவே ஒரு விறகு விற்கும் வியாபாரியிடம் சென்று தன்னை வேலைக்கமர்த்திக்கொள்ளும்படி கரைச்சல் கொடுத்துக்கொண்டு வந்தான். இவனின் விடாப்பிடிக் குணத்தைக் கண்ட கடை முதலாளி தன் ஸ்தாபனத்தில் இடம் இல்
லாதிருந்தும் அவனை வேலைக்குச் சேர்த்துக்கொண்டான்.
முதல் நாள் வேலை முடிவுற்றது. முதலாளி விறகுவெட்டியை அழைத்து "இன்று எத்தனை மரங்களை வெட்டினாய்" எனக் கேட்டான் அதற்கு விறகுவெட்டி "30 மரங்கள் ஐயா" எனப் பணிவாகப் பதிலழித்தான். முதலாளிக்கு ஒரே ஆச்சரியம். 25 மரங்கள் தானே சராசரியாக வெட்டுவார்கள், இவன் 30 தைத் தறித்துவிட்டானே என வியந்து கொண்டான். அடுத்தநாள் வந்தது. முதலாளி விறகு வெட்டியிடம் தறித்த மரங்களின் தொகையைக் கேட்டான். அதற்கு அவன் "25 ஐயா" என மறுமொழி கூறினான். இப்படியே தினம் தினம் தறித்த மரங்களின் தொகையை முதலாளி விறகுவெட்டியிடம் விசாரித்து வந்தான். அவற்றின் தொகை தினமும் குறைந்துகொண்டே வந்தது. 20-15-10 ஆகக் குறைந்தது. இவன் தனது வேலையில் கரிசனையற்றவனாக ஆகிவிட்டான் என எண்ணி, அவன் வேலை செய்யும் நேரத்தை முதலாளி அறிவதற்காக அவனைக் கூப்பிட்டு "தினமும் வேலை 8 மணிக்குத் தொடங்குகிறது என்பதை நீ அறி வாயா? " எனக் கேட்டான். "ஆம் ஐயா நான் காலை 7.30 மணிக்கே வேலை செய்யத் தொடங்குகிறேன்." என விறகுவெட்டி பதில்ளித்தான். 'மதிய போசனத்துக்கு 45 நிமிடங்கள் மட்டும் தான் கொடுக்கிறோம் என்பது உனக்குத் தெரியுமா?" என முதலாளி கேட்டான். அதற்கு விறகுவெட்டி "ஆம் ஐயா நான் 30 நிமிடங்கள் மட்டுமே எடுக்கிறேன்" என்றான். எல்லாக் கேள்விகளையும் கேட்டு முடிந்தும் தகுந்த பதிலைக் காணாத முதலாளி, சற்றுச் சிந்தித்த பின்னர் விறகு

Page 6
வெட்டியைப் பார்த்து "நீ வேலை தொடங்கிய நாள் தொடக்கம் எத்தனை முறை கோடரியைத் தீட்டியுள்ளாய்" எனக் கேட்டான். அதற்கு விறகுவெட்டி திகைத்து "ஒரு முறையும் தீட்டவில்லை ஐயா" என்றான்.
ஆம் நாம் தினமும் எமக்குக் கடவுள் தந்த தாலந்துகளைத் தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும். தீட்டும் அளவுக்கு தாலந்துகளின் கெதி, கெட்டித்தனம் அதிகரிக்கும். அப்படியில்லாதவிடத்து தீட்டாத கோடரி அதிக பலன்கொடாதது போல் நாமும் பலன்கொடாது போக நேரிடும்.
OOOOOOO
2. சான்டகுளோஸ்
கிறிஸ்மஸ் காலங்களில் காணும் ஒவ்வொரு காட்சிகளையும் பின்னணியாக வைத்து ஒவ்வொரு கதை அமைந்திருப்பதை நாம் அறிவோம். இக்காலங்களில் நடைபெறும் சம்பவங்களின் ஆரம்பத்தை அறியும்போது மிகவும் உருசிகரமான கதையின் பின்னணியில் இவை
அமைந்திருப்பதைக் காணலாம்.
கிறிஸ்மஸ் காலங்களில் மிகவும் பருத்த, தயவுள்ள, வெள் ளைத்தாடி தரித்த சிவந்த அங்கி அணிந்த 'சான்ட குளோஸைக்” காணாமல் இருப்பது மிகவும் அபூர்வம். இந்த மனிதனுக்கு ஆதியில் இருந்த பெயர் சென்ட் நிக்கலஸ்-பரிசுத்த நிக்கலஸ் என்பதாகும். இவர் உண்மையாகவே பரிசுத்தவான். கிறிஸ்துவை நம்பி ஜீவித்ததற்காகக் கொடுமைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைபட்டிருந்த ஓர் பெருமகன். ஒல்லாந்துக்காரர் இவரை சென்ட் நிகோலஸ் என்று அழைத்தனர். இப்பெயர் திரிபுற்று மாற்றமடைந்து ஒல்லாந்துக்காரர்களால் சேன் நிகோலாஸ் என அழைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கர்கள் மத்தியில்
இவர் ‘சான்ட குளோஸ்" என அழைக்கப்படலாயினார்.
2

சான்ட குளோஸ் இரகசியமாக மக்களுக்கு பரிசில்கள் வழங்கு வதற்கு ஒரு கதையே உண்டு. அனேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் லைசியா எனும் நாட்டிலே மைரே எனும் நகரத்திலே மூன்று இளம் பெண் பிள்ளைகள் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பார்ப்பதற்கு இருந்த ஒரே ஒருவர் அவர்களின் தகப்பனாராகும். இவர்களுக்கு உடுக்க உடையில்லை. அணிய ஆபர ணம் இருக்கவில்லை. அதுமட்டுமன்றி இவர்களுக்கு உண்ண உணவு தன்னுமே காண்பது அரிதாயிற்று. அவர்களது இல்லம் குளிரினாலும், உடைசல்களினாலும் நிரம்பியிருந்தது. அவர்களின் வீட்டுக் கூரை எங்கும் பொத்தல்கள் உண்டாகி ஒழுகியவண்ணம் இருந்தது. இப் பிள்ளைகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் கதைத்துத் தங்கள் பிற்கால வாழ்க்கையை இட்டு பல கனாக்கள் கண்டபடி இருந்தனர். தாங்கள் ஒவ்வொருவரும் மணம் புரிந்து, தங்களது இல்லங்களை அமைத்து, தங்கள் கணவர்மார்களிடம் வேண்டிய பொருட்களை வாங்குவித்து அனுபவிக்கலாமே, என்று அங்கலாய்த்திருந்தனர். "நான் ஒரு அழகான வீட்டுத் தோட்டத்தை வைத்திருந்தால் எவ்வளவு நன் றாக இருக்கும்", என்று ஒரு பெண் விரும்பினாள். மற்றப் பெண் பிள்ளை "எனக்கு அழகான ஆபரணங்களும், நல்ல உடுதுணியும், உணவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என எண்ணி ஏங்கி நின்றாள். மூன்றாவது பெண் நான் மணமாகியதும் எனக்கு அழகான பிள்ளைகள் பிறப்பார்கள், அவர்களையும் எனது தகப்பனாரையும்
எவ்வளவு அன்பாக வளர்த்தெடுப்பேன்", என ஏங்கினாள்.
அநேக வருடங்க்ள் உருண்டோடின. ஆயின் ஒருவருமே இப்பிள்ளைகளை விவாகம் செய்ய முன்வரவில்லை. காரணம் அவர் களிடம் பணம் இல்லாத்தன்மையே. அவர்களின் வறிய தகப்பனார் மிகவும் கவலைப்பட்டார். சிலவேளை என்னுடைய பிள்ளைகளுக்கு, மிகவும் இரக்கமான, பணத்தை எதிர்பாராத மாப்பிள்ளைமார் வரலாம் எனப் பல வேளைகளில் எண்ணுவார். ஆகவே இடத்துக்கிடம், பட்டணத்துக்குப் பட்டணம், கிராமத்துக்குக் கிராமம் சென்று
சீதனமில்லாமல் மணம் முடித்துக் கொடுப்பதற்கு மாப்பிள்ளைமாரைத்

Page 7
தேடித் திரிந்தார். ஆயின் அவரின் பிரயாசை ஒரு பயனையும் அளிக்கவில்லை. இவர்களின் தரித்திரம் நாளுக்கு நாள் மேலோங்கிச் சென்றது. அருந்த உணவில்லாத் தன்மையினால் இக்குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டனர். இரண்டு வாரங்கள் பட்டினி கிடந்த பின் ஒரு நாள் தகப்பன் பிள்ளைகளைப் பார்த்து, "இனி என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. உங்களை விற்று விடுவதே ஒரேயொரு வழி", என முடிவு செய்தார். பிள்ளைகள் விம்மி விம்மி அழுதனர். செய்வதறியாது திகைத்தனர். தங்கள் மேல் வரப் போகின்ற அவமானத்தை எண்ணித் திகைத்தனர். இப்படியாகச் சீவிப்பதிலும் இறந்து விடுவது மேல் என
நினைத்தனர்.
இவர்களின் துயரம் நகரமெங்கும் பரவியது. அதேவேளை சான்டகுளோஸின் காதிலும் எட்டியது. பிள்ளைகள் மேல் பரி தாபப்பட்ட இவர், "பாவம் இவர்களை எப்படியாவது கரைசேர்க்க வேண்டும்" எனத் தீர்மானித்தார். இவர்களை விற்பதனால் ஒரு வீட்டில் சந்தோஷமும், அன்னியோன்னியமும் இருக்காது என்பதை உணர்ந் தார். ஆகவே இந்த இரக்கமுள்ள சான்டகுளோஸ் இரகசியமாகப் பணத்தைக் கொடுத்து உதவ எண்ணினார். நேரடியாகப் பணத்தைக் கொடுத்தால் தகப்பன் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று இவருக்குத் தெரியும். ஆகவே நிலவற்ற ஒரு கடும் இருள் சூழ்ந்த இரவு வேளையில், மூன்று “பேஸ்களை எடுத்து ஒவ்வொரு பெண்ணையும் கரைசேர்க்கக் கூடிய பணத்தை மூன்று “பேஸ்களிலும் வைத்தார். இதை அவர் அவர்களது வீட்டுத் தோட்டத்துக்குக் கொண்டு சென்ற போது, அங்கே இந்தப் பெண்பிள்ளைகளுடைய அழுகைக்குரல் கேட்டது. அடுத்தநாள்தான் அவர்கள் விற்கப்படுகின்ற தினம். சான்ட குளோஸ் தனது மூன்று பணப்பைகளையும் இந்தப் பிள்ளை களினுடைய தோட்டத்துக்குள் சுவருக்கு மேலால் எறிந்துவிட்டு தனது வீடு சென்றார்.
அடுத்தநாள் காலை இந்த மூன்று பிள்ளைகளும் பணப் பைகளைத் தோட்டத்தில் இருந்து பொறுக்கி எடுத்தனர். அந்தப் பைகளுக்குள் அதிகப் பணம் இருந்ததைக் கண்டனர். சந்தோஷத்தின்

மேலீட்டினால் ஓடோடிச் சென்று தகப்பனிடம் இதைக் கூறினர். இச்செய்தியைக் கேட்ட தகப்பனார் மிகவும் மனமகிழ்ந்தார். இனி நான் உங்களை விற்கத் தேவையில்லை. உங்களுக்கு நான் தகுந்த மணவாளர்களைத் தேர்ந்தெடுப்பேன் எனத் தீர்மானித்தார். மூன்று பெண் பிள்ளைகளும் மூன்று கணவன்மாருக்கு சந்தோஷமாகக்
கலியாணம் செய்து வைக்கப்பட்டனர்.
சான்ட குளோஸ் இவற்றை எல்லாம் கண்டு மிகவும் ஆனந்தம் கொண்டார். மகிழ்ச்சியுற்றார். தேவையுள்ள மக்களுக்கு இரகசியமாக உதவி செய்து அவர்களுடைய முகங்களை மலரச் செய்வது இவரின் இலட்சியமாக அமைந்துவிட்டது. தினமும் மக்களுக்குப் பரிசில்களை வாரி வாரிக் கொடுத்து அவர்களை மகிழ்வுறச் செய்து வருகிறார் இச்
சான்ட குளோஸ்.
0000000
3. சூரியனும் குகையும்
ஒரு குகையின் அருகே ஓர் ஒலி கேட்டது. (அசரீரி) இந்த அசரீரி "வெளிச்சத்துக்கு வா, வெளிச்சத்தைக் கண்டு உருசித்து அனுபவி" என்று கூறி அழைத்தது. குகைக்கு இது புதிராக இருந்தது. "எனக்கு உன்னை விளங்கவில்லை, நீ யார்?" எனக் கேள்வி கேட்டது. அதற்கு ஒளி "நானே மெய்யான ஒளி, என்னைக் கண்டு உருசித்து மகிழ்ச்சியாய் இரு" என்று திரும்பவும் சத்தமிட்டுக் கூப்பிட்டது. தொடர்ந்து அழைப்புக் கிடைத்த வண்ணமாகவே இருந்தது. ஆகவே அழைப்பை ஏற்றுக் குகை சற்று அசைந்து, அசைந்து கிட்டே சென்றது. ஆயின் அசைய அசைய எல்லாவிடத்தும் சூரிய ஒளியையே கண்டது. ஒளியைக் கண்டு குகை பயத்தினால் திரும்பிச் சென்று விட்டது.

Page 8
அழைப்புக்குப் பிரதியுபகாரமாகக் குகை சூரிய ஒளியைத் தன் இல்லத்துக்கு அழைத்தது. "இருட்டாகிய என்னை வந்து பார், எனக்குள் எத்தனை பேர் இல்லமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைவிட வேறு தஞ்சம் இல்லை" எனக் கூறி அழைத்தது. இருட்டு என்றால் என்னவென்று விளங்காத சூரியன் அழைப்பை ஏற்றுச் சென்றது. சென்றவிடமெல்லாம் தன் ஒளியையே கண்டது. இருளை ஒரளவேனும் காணவில்லை.
இந்த ஒளியையே பவுல் அப்போஸ்தலன், கடவுளுக்கு ஒப்பு வித்துப் பேசி, "இந்த வெளிச்சம் எமது உள்ளங்களில் பிரகாசிக்க வேண்டும் என 2கொரி 4-6 ஆம் வசனங்களில் கட்டளையிடுகிறார்.
OOOOOOO
4. இரக்கம் கொண்ட செட்டி
ஒரு ஊரில் ஒரு செட்டியார் வாழ்ந்து வந்தார். அவர் எண்ணெய் வடித்து வியாபாரம் செய்யும் தொழிலைச் செய்து வந்தார். அவரிடம் ஒரு குதிரை இருந்தது. அக்குதிரையை உதவியாகக் கொண்டு அவர் தினமும் எள்ளைச் செக்கிலிட்டு குதிரையை
வட்டமாகச் சுற்றிவரச் செய்து எண்ணெய் வடிப்பது வழக்கம்.
இவ்வாறே காலச் சக்கரம் சுழன்று சென்றது. வியாபாரமும் பெருகியது. அதன் மூலம் செட்டியாரின் வருமானமும் விரிவடைந்தது. குதிரை வயதடைந்து மெலிந்து வாட்டமுற்றது. அநேக காலம் குதிரை செட்டியாருக்கு விசுவாசமாக உழைத்துக் கொடுத்தது. இதன் காரண மாகக் குதிரை வயதடைந்து மெலிந்து வாட்டமுற்றது. செட்டியார் குதிரைமீது இரக்கங்கொண்டார். இனி இக்குதிரையைக் கொண்டு நான் வேலை வாங்கக் கூடாது. அதற்கு இனி ஒய்வு கொடுக்க வேண்டும்,
என எண்ணினார்.

அடுத்தநாள் தொடக்கம் அவர் குதிரையைச் சுயாதீனமாகத் தோட்டத்தில் மேயும்படியாக அவிழ்த்து விட்டார். இத்தனை காலமும் செக்கைச் சுற்றிச் சுற்றியே பழக்கப்பட்டிருந்த குதிரை தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டேயிருந்தது.
குதிரைக்குச் செட்டியார் எவ்வளவு சுயாதீனம் கொடுத்திருந்த போதிலும், குதிரை சுயாதீனமாக வாழ விரும்பவில்லை.
OOOOOOO
5. கிறிய இவப்புக் கோழி
உங்கள் நாட்டில் உள்ள புற்றரைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆம் எமது நாட்டில் பற்ணா, தலாவ என ஒரு சில புற்றரைகள் காணப்படுகின்றன. ஆயின் உலகின் மற்றைய பெரிய தேசங்களில் அதிபெரிய புற்றரைகள் உண்டு. இதில் ஒன்று பிறேறிஸ் எனும் புல்வெளி. இது கனடா தேசத்தில் உண்டு. அனேக வருடங்களின் முன் இப்புற்றரையை அழித்து அவற்றை மக்கள் வாழும் பிரதேசம் ஆக்கும் வேலை நடைபெற்றது. இவ்வேலையில் ஒரு கமக்காரனும் சேர்ந்துகொண்டான். இவன் ஒரு கடவுள் பக்தன். தனக்குக் கொடுக் கப்பட்ட புற்றரையில் அவன் தனது முயற்சியால் ஒரு சிறிய வீட்டை அமைத்துக் கொண்டான். கோடைகாலத்தில் புற்றரை காய்ந்து போய் நெருப்புப் பற்றிக்கொள்வது வழக்கம். ஆகவே இக்கமக்காரன் தனது வீட்டின் அருகாமையில் உள்ள புல்நிலத்தைக் கலப்பை கொண்டு உழுது மண்ணை மேலே புரட்டிவிட்டான். இப்படிச் செய்வதால் நெருப்பு இலேசில் பரவமுடியாது போய்விடும். இப்படியாக வீட்டின் அருகே உள்ள நிலத்தை உழுது தன் வீட்டை அவன் நெருப்பிலிருந்து பாதுகாத்து வந்தான்.
ஒருநாள் காலை கமக்காரன் தனது பிராணிகளுக்குத் தீனி

Page 9
கொடுக்கச் சென்றபோது புல் எரிந்து வெளிவரும் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. அவன் அங்கும் இங்கும் பார்த்துக் கண்டுபிடிப்பதற்கு முன் சூரிய வெளிச்சத்தோடு கூடிய இந்த நெருப்பு அண்மையில் இருந்த பற்றைகளையும் புற்களையும் தாவிப் பிடித்துக் கொண்டது. கமக்காரன் செய்வதறியாது ஓடிக் குதிரைகளைப் பூட்டி, தகரங்களில் குளத்துத் தண்ணீரை நிறைத்துக் கொண்டுவந்து புற்களையும், வைக்கோல் பட்டறைகளையும் நீரினால் நனைத்தபடியே இருந்தான். அடுத்தநாள் காலை சூரிய பிரகாசத்துடன் நெருப்பும் அனல்கொண்டு வீசியது. அத்துடன் காற்றும் சேர்ந்துகொள்ளவே நெருப்பு எல்லாவிடமும் தணலாக வீசப்பட்டது. கமக்காரன் கையில் நனைத்த சாக்குகளுடன் அங்கும் இங்கும் சென்று, பரவும் நெருப்பை பரவுவதிலிருந்து தடுத்தான்.
இதே பண்ணையில் இந்த நெருப்பை இன்னுமோர் பிராணி எதிர்நோக்கவேண்டியிருந்தது. அதுதான் சிவப்புக்கோழியும் அதன் குஞ்சுகளும். நெருப்பு வீசிக்கொண்டு வருவதைக் கண்ட கோழி தன் குஞ்சுகளைத் தனது சிறகுகளின் கீழ் வந்து அடைக்கலம் புகுந்து கொள்ளும்படி அழைத்தது. எல்லாக் குஞ்சுகளும் ஓடிவந்து தாயின் சிறகுகளின் கீழ் பதுங்கிக் கொண்டன. ஆயின் ஒரு குஞ்சு மட்டும் கீழ்ப்படியாது உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தனிமையில் ஓடோடிச் சென்றது. ஐயோ பாவம், அது நெருப்பில் சிக்கிப் பொசுக்கப்பட்டு இறந்தது. நெருப்பு சற்று குறைந்துகொண்டு வந்தது. அடுத்த நாள் கமக்காரன் அங்கும் இங்கும் சென்று நெருப்புத் தணலைத் தட்டி நீரினால் நனைத்தபடியே சென்றான்.
எல்லா இடமும் புகை கிளம்பியபடியே இருந்தது. சற்றுத் தூரத்தில் ஒரு கருகிய பொருள் அவன் கண்களில் தெரிந்தது. ஆவலோடு அவன் அருகாமையில் சென்று அப்பொருளைத் தனது சப்பாத்துக் காலினால் தட்டினான். அப்பொருள் உருண்டு சென்று விழுந்தது. அதன் கீழே மஞ்சள் நிறக் கோழிக்குஞ்சுகள் உயிரோடு ஒடிச்சென்றன. கமக்காரன் அப்பொருளை உற்றுப் பார்த்தான். ஆம்
இதுதான் சிவப்புக்கோழி; தன் உயிரையும் பாராமல் தனது குஞ்சு

களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தது அவனுக்குப் புலனானது. அவன் இதைக்கண்டு திகைத்துப் போனான். தன்னை அறியாமலே அவனின் கை தொப்பியைக் கழற்றியது. கமக்காரன் மிகவும் மரியாதை யுடன் கோழிக்கு முன் பணிந்தான். அப்போது அவன் உள்ளத்தே பல எண்ணங்கள் தோன்றின. இப்படியாகத்தான் எமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து எமது பாவங்களுக்காகத் தனது உயிரைச் சிலுவையில் தியாகம் செய்தார் என்பதை நினைவு கூர்ந்தான். உலகிலுள்ள பாவி களாகிய எங்கள் மேல் கொண்ட அன்பின் நிமித்தம் பிதாவாகிய தேவன் தனது ஒரே பேறான குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பி சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்ததை எண்ணினான். அத்துடன் இதோ ஆண்டவர் எருசலேமைப் பார்த்து மத் 23-37 ‘எருசலேமே எருசலேமே. கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று" என்னும் வசனம் அவன்
மனதில் உதித்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் அவன் கடவுளின் கிருபையை உணர்ந்தான். இதே கிருபை அவர் சிலுவை நிழலில் தங்க ஆயத்தமாக உள்ளவர்களுக்கு இனாமாகவே அளிக்கப்பட்டிருப்பதை அவன் அறிந்துகொண்டான். நித்திய நெருப்பிலிருந்து-நரகத்திலிருந்து தப்பு வதற்கு ஒரேயொரு வழி சிலுவையின் நிழல்தான் என்பதைப் புரிந்து கொண்டான். தனது நன்றிக் கடனைத் தீர்ப்பதற்காக இரு பெட்டிகளைத் தெரிந்தெடுத்தான். ஒன்றில் இறந்த கோழியை வைத்து மரியாதையோடு அடக்கம் செய்தான். மற்றப் பெட்டியில் கோழியின்
குஞ்சுகளை வைத்து வளர்த்தான்.
கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழ் காப்பாற்றியது போன்று தேவபிதா எம்மேல் கொண்ட அன்பினால் எம்மை எமது பாவத்தில் இருந்து மீட்க தனது குமாரன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவர் எமது பாவங்களுக்காகப் பாடுகள் அனுபவித்து முள்முடி தரித்து, அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையுண்டு,

Page 10
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, இன்றும் உயிருள்ள ஆண்டவராக பாவிகளாகிய எம்மை அழைத்த வண்ணம் இருக்கிறார். அவரின் அழைப்புக்கு நமது விடைதான்
என்ன?
OOOOOOO
O 6. இளமையைப் பெற்றுத்தருவ
O O நீர் ஊற்று
அமெரிக்கா தேசத்தில் வாழும் 'வலன்ரீன்" இந்திய மக்களி டையே நிலவும் ஒரு உருசிகரமான கதையுண்டு.
ஒரு வயதுசென்ற வைத்தியர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் வறியவராக, நோயினால் பீடிக்கப்பட்டு உடம்பு முழுவதும் சுருங்கிய வராக, ஞாபகசக்தி இழந்தவராகக் காலம் கழித்து வந்தார். ஒருநாள் இவர் கவலையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு
அற்புதமான கனவைக் கண்டார். அந்தக் கனவிலே யெளவனத்தையும்,
ஞானத்தையும், செல்வத்தையும் பெறக்கூடிய காட்சிகளைக் கண்டார்.
அடுத்த நாட்காலை கனவில் கண்ட தகவல்களைக் கொண்டு நெடுந்துரம் பிரயாணம் செய்யத் தொடங்கினார். பயங்கரமான அமை தியான வனங்களையும் தாண்டிச் சென்று ஒரு நிலையை அடைந்த போது அங்கே ஓர் அசரீரி கேட்டது? அதிலே "நீ யெளவனத்தைப் பெறும் ஊற்றைத் தேடுகிறாய் அல்லவா? எனச் சத்தம் கேட்டது. உடனே வயோதிபர், "நான் தேடும் யெளவன ஊற்றைப் பற்றி நீ அறிந்துள் ளபடியால், அது இருக்கும் இடத்தை நீ எனக்குக் காட்டக்கூடும், ஆகவே அதை எனக்குக் காட்டுவாயாக" என இரந்து கேட்டுக் கொண்டார். உடனே அந்த இடத்தில் கேட்ட ஒலி ஒரு கரியமுகிலாகத் தோன்றி, வயோதிபரை ஒரு தெளிந்த குளத்தண்டை கொண்டு சேர்த்தது. வயோதிபர் ஆசைதீர இக்குளத்திலிருந்து நீரை

அள்ளிக் குடித்தார். சடுதியாக அவரின் மெலிந்த, சுருங்கிய நாடி, கன்னம் யாவும் தைரியம் பெற்றது. அவரின் சுருங்கிய சருமம் மறைந்து போனது. அவரின் ஞாபக சக்தி திரும்பவும் இளமைக்கு வந்தது. ஆம். அவர் இளம் காளைபோல் திரும்பவும் வாலிபரானார். இவ் வதிசய செயலுக்குப் பின் அசரீரி திரும்பவும் உண்டாகி 'நீ அருந்திய நீரில் ஒரு பானை நீரை மொண்டுபோய் மற்றவர்களுக்கும் கொடுத்துப் பகிர்ந்துகொள்" எனப் பணித்தது. வயோதிபர் பணிப்புரையை ஏற்று ஒரு பாத்திரத்துக்குள் நீரை மொண்டு சென்று வீட்டை அடைந்தார். குளத்தின் அமைப்பையும், அது இருக்கும் இடத்தையும் நன்கு கணித்துக் கொண்டு சென்றார்.
புதிய வலுவும், தேக ஆரோக்கியமும் அவருக்கு மிகவும் ஆனந் தத்தையும், ஆணவத்தையும் அளித்தது. விரைந்து வீடு சென்று தனது புதிய வலுவை மற்றவர்களுக்குக் காட்டத்தொடங்கினார். இவரின் புகழ், அத்தேசம் முழுவதும் பரவியது. பல மக்களும் பல பாகங்களிலுமிருந்து வந்து அவரிடம் வைத்தியம் செய்து அவரின் ஞானத்தைப் பெற்றுக் குணமாகிச் சென்றனர். அவரின் வைத்திய ஊழியம் அவரைப் பணக் காரனாக்கியது. ஆயின் அவர் பெற்ற நீரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. பல நாட்கள் சென்றன. திரும்பவும் வைத்தியர் வயோதிபத்தை எதிர்நோக்கியவராய் வருத்தமுற்றார். அவர் கொண்டு வந்த தெளிந்த நீரைக் கவனமாக தனக்காக மட்டுமே பாவித்து யெளவனத்தைத் தேடிக்கொண்டார். கடைசியில் கொண்டு வந்த நீர் முடிவுற்றது. அவரின் வயோதிபம் அவரை இறுகப் பிடித்துக் கொண்டது. ஆகவே அவர் திரும்பவும் அந்தத் தெளிந்த நீர் உள்ள குளத்தைத் தேடிப் பயணமானார். பலதுாரம் சென்று தேடிக் குளத்தை வந்தடைந்தார். ஆனந்தத்தினால் குனிந்து, நீரைப் பாத்திரத்தில் மொண்டெடுக்க வளைந்தார்.
பாத்திரத்தில் தெளிந்த நீருக்குப் பதிலாக சேறும், பாசியும் நிரம்பிய நீர் வந்ததைக் கண்டார். அதுமட்டுமல்ல, ஓர் அசரீரி உண்டாகி 'நீ இந்த நீரை மற்றவர்களோடு பங்கிட்டுப் பருகாததினால், உனக்கும் இது உதவாமல் போகக்கடவது" எனக்கூறி அசரீரி ஓய்ந்தது.
OOOOOOO

Page 11
7. இறைமகிமை அனுபவத்திள் ஊடாக இறைவள்
ஒரு மனிதன் கடவுளைச் சோதிக்கும்படியாக அவரிடம் சென்று, 'பிறப்பு, என்றால் என்ன? என்று கேட்டான். மனிதனின் மனதை அறிந்த கடவுள் "பிறந்து பார் அப்போ தெரியும் என்றார். அதே மனிதன் அவரைப் பார்த்து "வாழ்வு என்றால் என்ன?" என்று கேட்டான். அதற்கு அவர் "வாழ்வு வாழ்வதற்கே, ஆகவே வாழ்ந்து பார் புரியும்" என்றார். அவரின் விடைகளில் நிம்மதி பெற முடியாத மனிதன் திரும்பவும் அவரை நோக்கி, "வறுமையால் மனிதர்கள் வாடி வதங்குகிறார்களே, இதையாவது என்ன என்று கூறுவீரா? ஐயா" என்று கேட்டான். அதற்குக் கடவுள் "வறுமை மிகவும் கொடியது நீ வாடிப் பார்த்தால்தானே அதை விளங்கிக்கொள்வாய்" எனப் பதிலளித்தார். பின்னர் மனிதன் "வறுமையால் மட்டுமல்ல, மனிதர் நோயினாலும், துன்புறுத்தப்பட்டு அவதிப்படுகிறார்களே! ஆகவே நோய் என்றால் என்ன ஐயா?" என்று கடவுளிடம் கேட்டான். அதற்கு ஆண்டவர் "நோயைப் பற்றி அறிய நோய்வாய்ப்படவேண்டும். நான் என்ன விளக்கத்தைக் கூறினாலும் நீ நம்பவே மாட்டாய். ஆகவே நோயுற்றுப் பார். நன்றாக விளங்கிக் கொள்வாய்" என்றார். இவைகளைக் கேட்டு விசனமுற்ற மனிதன், "உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இறந்தே போகிறான். இந்த இறப்பென்றால் என்னவென்றாகுதல் சொல்லுங்களேன் ஐயா?" என மன்றாடினான். அதற்கும் இறைவன் "இறந்துபார் அப்பொழுது தெரியும்" என்றாராம். நீர் ஒன்றும் சொல்ல வேண்டாம் ஐயா!, இன்னுமொரு கேள்வி மட்டும் கேட்கிறேன். இறப்புக்குப் பின் மறுமையுண்டு எனக் கூறுகிறார்களே, "மறுமை யென்றால் என்னவென்று மட்டும் கூறுவீரா? எனக் கேட்டானாம். அதற்கு ஆண்டவர் "மறுமையை அடைய மறுமைக்குள்ளால் மோட்சம் சென்று பார் எனப் பதில் அளித்தாராம். கோபங்கொண்ட மனிதன்
கடவுளைப் பார்த்து "எல்லாவற்றையும் செய்துபார்த்து அறிவதே
12

யானால், நீர் ஏன் ஐயா இருக்க வேண்டும்? என்று கோபத்தோடு கேட்டானாம். அதற்கு ஆண்டவர் "இந்த அனுபவங்கள் மூலம் தான் நீ என்னைக் காணுகிறாய், நான் அவற்றுடன் கூடிச் சீவிக்கிறேன்" என்று வினயமாகப் பதில் அளித்தாராம்.
ஆம் கிரியைகளுக்கு ஊடாகவே கடவுள் தன்னை நமக்கு வெளிக்காட்டுகிறார். "...உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடிைவாய்"
என உபாகமம் 4:29 ஆம் வசனம் கூறுகிறது.
OOOOOOO
8. LusUngsUDLO6Unu GsUnsU, புதுமையைப் பெறுவாய்
ஒருநாள் “வாழ்வு” என்பவன் இந்த உலகுக்கு வந்தான். அவன் ஒரு தூசி நிறைந்த பாதையில் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒரு குருடனைச் சந்தித்தான். "நீ யார்?" என குருடன் கேட்டான். "நான்தான் வாழ்வு" என அவன் பதிலளித்தான். உடனே குருடன் தான் இழ்ந்த பார்வையைத் திருப்பித் தரும்படி மன்றாட்டமாய்க் கேட்டான். நான் பார்வையைத் தந்துவிடுவேன், ஆயின் நீ என்னையும் உனது எளிமையான இக்குருட்டு வாழ்க்கையையும் மறந்துவிடுவாய்" என வாழ்வு கூறினான். "நான் ஒருக்காலும் மறக்கமாட்டேன்”, எனக் குருடன் வாக்களித்தான். சரி நல்லது, "நான் ஏழு வருடங்களின் பின் வந்து உன்னைத் திரும்பவும் சந்திப்பேன் என வாழ்வு கூறி, நிலத்தில் இருந்து ஒரு துளி மணலை எடுத்து அவனுடைய கண்களில் பூசி
அவனது குருட்டை இல்லாமல் ஆக்கிச் சென்று விட்டான்.
பாதையில் சென்று கொண்டிருக்கும் போது குஷ்டரோகி ஒருவன் வாழ்வை கண்டு நீ யார்?" என வினவினான். "நான்தான்
வாழ்வு" என, வாழ்வு பதிலளித்தான். ‘வாழ்வா? அப்படியாயின் நீ
15

Page 12
எனது பிணியைக் குணப்படுத்துவாயா?" எனக் குஷ்டரோகி கேட்டான். "என்னால் குணமாக்க முடியும், ஆயின் நீ என்னையும், உனது எளிய குஷ்டரோக வாழ்வையும் மறந்துவிடுவாயே?’ என வாழ்வு கூறினான். "அப்படியல்ல நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்", எனக் குஷ்டரோகி பதிலளித்தான். "நான் ஏழு வருடங்களின் பின் வந்து பார்ப்பேன்" எனக்கூறி வாழ்வு அவனின் பிணியைக் குணப்படுத்தினான். அதன் பின் தொடர்ந்து வாழ்வு பாதையில் சென்று கொண்டிருந்தான்.
சற்றுத் தொலைவில் ஒரு முடவன் இருந்தான், அவன் வாழ்விடம் 'நீ யார்?" எனக் கேட்டான். "நான்தான் வாழ்வு’, என வாழ்வு பதிலளித்தான். 'நீ வாழ்வாயின் எனது ரோகத்தைக் குணப் படுத்தி எனக்கு வாழ்வு அளிப்பாயா?" என முடவன் நம்பிக்கையோடு கேட்டான், 'ஆம் நான் குணமாக்குவேன், ஆயின் நீ என்னையும், உனது நிலைமையையும் மறந்துவிடுவாயே", என வாழ்வு கூறினான். "அப்படியல்ல நான் சத்தியமாக மறக்க மாட்டேன்", என முடவன் கூறினான். வாழ்வு இரக்கங்கொண்டு அவனையும் குணமாக்கி "நான்
ஏழு வருடங்களின் பின் வந்துபார்ப்பேன்" எனக் கூறிச் சென்றான்.
ஏழு வருடங்களின் பின் வாழ்வு திரும்பவும் குருடன் வடிவில், முன்னர் குருடனாக இருந்தவனை அடைந்து, பசிக்கு ஆகாரமும், படுக்கப் படுக்கையும் ஒரு இரவுக்குத் தரும்படி கேட்டான். 'ஓடிப்போ, உன்னால் எனக்கு ஒரு பிரயோசனமும் இல்லை" எனக் கூறி விரட்டினான் பழைய குருடன். சற்றுத் தாமதித்த பின் வாழ்வு அவனைப் பார்த்து, "நான் முன்னர் கூறவில்லையா? ஏழு வருடங் களுக்கு முன் நான் பார்வை தந்தேன். அந்நேரம் நீ இவற்றை மறக்கமாட்டேன் என்று கூறினாயே. பொல்லாதவனே இப்போது நான் குருடன் என்பதால் என்னைத் துரத்துகிறாய். திரும்பவும் நீ குருடனாவாய்" எனச் சபித்தான். உடனே அவன் பழைய குருட்டைப்
பெற்றான்.
பின்னர் வாழ்வு குஷ்டரோகி ரூபத்தில் பழைய குஷ்டரோகியை அடைந்து, ஆகாரமும், இருப்பிடமும் இரந்து கேட்டான். 'ஓடிப்போ
14

கிட்டவராதே உனது நோயை எனக்கும் தராதே! எனக்கூறி வாழ்வைப் பழைய குஷ்டரோகி விரட்டினான். "நான் முன்னர் கூறினேனே! நீ குஷ்டரோகியாய் இருந்தாய், நான் குணப்படுத்தினேன். ஆயின் இப்போது நீ உன் நிலையை மறந்தாய்" எனக்கூறி வாழ்வு அவனைப்
பழையபடி குஷ்டரோகி ஆக்கினான்.
அதன்பின் வாழ்வு முடவன் ரூபத்தில் முன்னர் முடவனாக இருந்தவனிடம் சென்று, ஆகாரமும் தங்க இடமும் கேட்டான். பழைய முடவன், "நீ இங்கு தங்கினால் வாழ்வு எனும் மனிதன் வருவான், அவன் உனக்கும் சுகம் தருவான்', எனத் தனது பழைய வாழ்வை மற வாதவனாக வாழ்வை வரவேற்று வேண்டிய உதவிகளைச் செய்தான். வாழ்வு அவனுக்குத் தன்னை வெளிப்படுத்தி நித்திய சுகத்தைக் கொடுத்து வாழ்த்திச் சென்றான்.
9. தியாகத்தின் பரிசு
இரு மேல்நாடுகளுக்கிடையில் போர் நடைபெற்றது. இரண்டு நாட்டுப் படைப் போர்வீரர்களும் மிகவும் திறமையாகப் போர் செய்தனர். இப்போரை அந்த நாட்டில், ஒரு தோட்டத்தில் வாழ்ந்த மிருகங்களும், பறவைகளும் உன்னித்துக் கவனித்தன. அத்தோட் டத்தில் பன்றி, கோழி, ஆடு, மாடு, ஆகிய மிருகங்கள் யாவும் வாழ்ந்தன. இவற்றுள் மிகவும் விறுவிறுப்படைந்தவர்கள் பன்றியும், கோழியுமே. இவர்கள் ஒருவருக் கொருவர் சண்டையின் தன்மையை ஆராய்ந்து போர்வீரர்களை மெச்சிக் களிப்புற்றனர். தமது நாட்டுப் படை வெற்றியீட்டியதைக் கேள்விப்பட்டு மிகவும் பரவசப்பட்டனர். ஆகவே படைவீரர்களுக்கு ஒரு விருந்துபசாரம் கொடுக்க வேண்டும், எனத் தீர்மானிக்கப்பட்டது. எல்லா மிருகங்களும், பறவைகளும் தங்களால் ஆன உதவியைச் செய்து விருந்தைச் சிறப்பிக்க ஆயத்த
மாகின. விருந்துக்கு என்ன பண்டங்களை ஆயத்தம் செய்ய வேண்டும்

Page 13
என்ற பிரச்சினை தோன்றியது. ஒவ்வொரு மிருகமும், பறவைகளும் படை வீரர்கள் நன்கு விரும்பும் உணவையே கொடுக்க வேண்டும் என முடிவு செய்தன. மேல்நாட்டு வழக்கப்படி உணவைத் தயார் செய்ய அவை விருப்பம் தெரிவித்தன. ஆகவே அந்நாட்டில் பிரபல்யம் மிக்க "பேக்கன் அன்ட் எக்" - பன்றிக் கருக்கலும் முட்டையையும் உணவாகக் கொடுக்கத் தீர்மானம் ஆனது. கோழி முட்டைகளை இட்டுக் குவித்தது. நாள் கிட்டக் கிட்டப் பன்றிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தான் மற்றப் பிராணிகளோடு சேர்ந்து செய்து கொண்ட தீர்மானத்தையிட்டுக் கலக்கம் அடைந்தது. வேறு வழி தெரியாது இறுதியில் தன்மானத்தைக் காக்கும் வண்ணம் தன்னையே விருந்துக்காகத் தியாகம் செய்து, போர்வீரர்களை மகிழச் செய்தது. தனக்குத் தனக்குத் தலைவலி வந்தால்தான், அதன் தன்மை, வலிமை தெரியும் அல்லவா?
0000000
10. "ஏட்டுக் கல்வி, கறிக்கு உதவாது படித்தறிந்த மேதை
ஒரு நாட்டில் ஒரு பெரிய படித்த கனவான் இருந்தார். அவர் எல்லாப் பட்டங்களையும் பெற்றுப் பெரிய மேதையாக இருந்தார். அந்நாட்டுச் சர்வகலாசாலை அவருக்குக் கலாநிதிப் பட்டம் கொடுத்
துக் கெளரவித்தது. -
இவர் ஒருநாள் உல்லாசப் பிரயாணம் செய்ய வெளிநாடு சென்றார். அங்கே ஒரு ஆற்றைக் கடக்க வேண்டி ஏற்பட்டு ஒரு படகில் ஏறினார். படகு ஒட்டி படகை ஒட்டிச் செல்லும்போது அவனோடு கதைக்கலானார். மேதை அவனைப் பார்த்து நன்றாகப்
படகை ஒட்டுகிறாயே! நீ எத்தனையாந்தரம் மட்டும் படித்துள்ளாய்"

என வினவினார். அவன் அவரைப் பார்த்து "நாங்கள் ஏழைகளுங்க, எங்களுக்குப் படிக்க வசதி கிடைக்கவில்லைங்க" என்றான். அதைக் கேட்ட அறிஞன், ‘என்ன தவறு செய்துவிட்டாய்? உன் வாழ்வு முழு வதையும் வீணாக்கி விட்டாயே" எனக் கடிந்து நொந்து கொண்டான்.
படகு விரைந்துகொண்டே சென்றது. படகோட்டி படகை வலித்துக்கொண்டு முன்னோக்கிச் சென்றான். படகு ஆற்றின் நடுவே செல்லச் செல்ல காற்றின் வேகத்தினால் நீரில் அலை வெகுவேகமாக எழும்பத் தொடங்கியது. அலையின் அசைவு கட்டுக்கடங்காமல் போகவே, படகு ஒரு பக்கமாகச் சரியத் தொடங்கியது. அப்பொழுது படகோட்டி மிகவும் திகைப்புற்று "ஐயா என்ன செய்வது? ஆற்றின் அலைவீச்சு மோசமாகிவிட்டது! இனிப் படகு தொடர்ந்து போக முடியாது, கவிழப்போகிறது. உங்களால் நீந்த முடியுமா? எனக் கேட்டான். அப்பொழுது மேதை "ஐயோ எனக்கு நீந்தத் தெரியாதே" என மிகவும் தவிப்போடு எடுத்துக் கூறினான். இதைக் கேட்ட பட கோட்டி, "என்ன தவறு செய்துவிட்டீர்கள் ஐயா? நீந்தத் தெரியாமல் உங்கள் வாழ்க்கை முழுவதையுமே இழந்து விட்டீர்களே? எனக் கூறி ஆற்றுக்குள் பாய்ந்து கரையை நோக்கி நீந்தத் தொடங்கினான். மேதை நீந்தத் தெரியாதவராக நீரில் மூழ்கி மாண்டார்
11. இயேசுவின் விள்ளே போகத் துணிந்தேன்.
வட இந்தியாவில் ஒரு செல்வந்தர் இருந்தார். இவர் நல்ல குலத்தைச் சேர்ந்த படித்த கல்விமான். இவருடைய வளர்ந்த மகனில் ஒருவர் வேறு ஒர் பட்டினத்தில் வாழ்ந்தார். ஒருநாள் இவர் பாதையில் சென்று கொண்டிருந்தபொழுது ஒரு சனக்கூட்டத்தைக் கண்டு அவ்விடம் சென்றார். அங்கே ஒரு புத்தக வியாபாரி புத்தகங்களை
17

Page 14
விற்றுக் கொண்டிருந்தான். மற்றவர்கள் வாங்குவதைக் கண்ட இவ் வாலிபன் தானும் பணம் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கினான். இப்புத்தகம் சுவிசேஷ புத்தகத்தில் ஒன்றாகக் காணப்பட்டது.
வீட்டில் இதை வாசித்தபொழுது, புத்தகம் அவனைக் குழப்பியது. பல வாரங்களாக, மாதங்களாக, அவனைச் சிந்திக்கச் செய்தது. அவனின் சிலகாலச் சிந்தனை, அவனுக்குப் பல உண்மைகளை வலியுறுத்தின. சுவிசேஷத்தில் கண்ட செய்திகள் யாவும் உண்மை யானவையென்றும், அவற்றை முழுமையாக ஏற்று நடக்க வேண்டும் என்ற அசையாத நம்பிக்கை அவனிடம் படிப்படியாகத் தோன்றியது. புத்தகத்தில் கூறிய சத்தியங்களைத் தவிர அவற்றைப் பற்றி கூடுதலாக அறிய வேறு கிறிஸ்தவர்களோ, கிறிஸ்தவ ஆலயங்களோ அவன் இருக்கும் ஊரில் இருக்கவில்லை. எப்படியாயினும் தான் சுவி சேஷங்களில் வாசித்தறிந்த இந்த இரட்சகரை ஏற்று அவரின் சீடனாக ஆகவேண்டும் என்னும் மன வைராக்கியம் அவனில் தோன்றியது. இது அவன் மனதில் வலுப்பெற்றதும் அவன் தன் தீர்மானத்தைத் தனது குடும்பத்தினருக்குச் சொன்னான்.
இதைக்கேட்ட குடும்பத்தினர் திகைத்து அவன் எடுத்த முடிவை மாற்றத் தங்களால் ஆன எல்லாச் செயல்களிலும் ஈடுபட்டனர். தாய் தந்தையர் முன்னர் காட்டிய அன்பிலும் பார்க்கக் கூடுதலாக அவனை நேசித்து அவனின் மனதை மாற்ற முற்பட்டனர். சகோதரர்களும், சகோதரிகளும் அளவுக்கு மிஞ்சிய அன்பை அள்ளி அள்ளி வீசினர். அவனுக்கு ஒரு குறைவும் இல்லாது எல்லாச் செல்வங்களும் அளிக்கப்பட்டன. குடும்பக் கெளரவம் காப்பாற்றப்பட வேண்டும் என எல்லோரும் இடித்துக் கூறினர். பாரம்பரிய சமயக் கோட்பாடுகளுடன் நடக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்து அடிக்கடி ஓதினர். சினேகிதர்கள் கூட அவனின் தீர்மானத்தைக் கண்டித்துப் பேசினர். கடைசியில் ஒன்றும் ஏலாமல் போகவே அவனை உறுக்கித் தண்டித்து
மனதை மாற்ற முயன்றனர்.
இறுதியில் ஒன்றாகிலும் ஏலாமல் போகவே தகப்பனார், அவன் தன் பிள்ளையில்லையெனக் கூறி, அவனைத் தன் குடும்பத்திலிருந்தும்
18

அகற்றி விட்டார். அத்துடன் அவனை வீட்டால் விரட்டி தனது குடும்பத்துடன் சேராமல் இருக்கும்படி கட்டளை பிறப்பித்தார்.
அவன் தனக்குரிய எல்லாவற்றையும் இழந்து பாதையில் தன்னந்தனியனாய்த் தவிக்கவிடப்பட்டான். அவனுக்கு ஆறுதல் கூறுவார் ஒருவரும் இருக்கவில்லை.
அவனுக்குள் இருந்த நம்பிக்கையும் விசுவாசமுமே அவன் உள்ளத்தைத் தேற்றியது. அவனின் அசையா அனுபவம் அவனை எல்லாத் துன்ப துயரங்களிலிருந்தும் காப்பாற்றியது. ஆறாத் துயருக்கு மறுமொழியாக அவன் உள்ளத்தில் எழுந்த கருத்துக்கள் பாட்டாக மாறியது.
(இப்பாடலே "இயேசுவின் பின்னே. என்ற பாடல்)
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்!!! பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் !! சிலுவையென் முன்னே உலகம் என் பின்னே! பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்!
பின்னர் இவ்விசுவாசி வேதாகமப் பாடசாலை சென்று பயிற்சி பெற்று, நற்செய்தியைப் போதிக்கும் சுவிசேஷகராக மாறி, எல்லா இடமும் சென்று ஊழியத்தை நடாத்தினார்.
ரோ 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை, ஆமென்.
OOOOOO

Page 15
12. மள்ளிப்பு
இயேசுகிறிஸ்து சீடர்களோடு சேர்ந்து பங்குகொண்ட இராப் போசனப் படத்தை வரைந்தவர் லியோனார்டோ டாவின்சி என்பவர். லியானார்டோ இப்படத்தை வரைய முன் அவருக்கும் மற்றொரு சித்திரக்காரனுக்கும் இடையில் ஒரு சமயம் வாக்குவாதம் உண்டானது. இந்த வர்மத்தை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்று எண்ணிய லியோனார்டோ யோசித்து, "நான் இயேசுவின் கடைசி இராப்போஜன பந்தி படத்தை வரையும்போது யூதாசின் முகத்தை, என்னோடு வாக்குவாதம் பண்ணின சித்திரக்காரனின் முகத்தைப் போல் வரைவேன்", என்று திட்டமிட்டு அப்படியே தன் படத்தில் முதலாவதாக யூதாஸ் படத்தை வரைந்துவிட்டான். படமுடிவில் அவன் இயேசுவின் படத்தை வரையும் சமயம் வந்தபோது அவனால் அதை வரைய முடியவில்லை. தான் அதை வரைய எவ்வளவு முயன்ற போதும் தன் முயற்சி அத்தனையும் வியர்த்தமாகிறதை அவன் உணர்ந்தான். அவன் இருதயத்தில் இதன் காரணத்தை அவன் உணர்ந்தான். உடனே தனக்கு விரோதியான அந்தச் சித்திரக்காரன் முகம்போல வரைந் திருந்த யூதாஸ் படத்தை மாற்றி, மன நொருங்குதலோடும் மன்னிப்பின் சிந்தையோடும் தன் சித்திரத்தை வரைந்தான். இன்றும் அவன் வரைந்த அந்த இயேசுவின் கடைசி இராப்போஜன படம் அநேக இடங்களை அலங்கரிக்கிறது.
இயேசுவின் பிம்பம் நம்மில் பிரதிபலிக்க வேண்டுமானால் யூதாசாக நம் வாழ்க்கையில் காணப்படும் நபர்களையும் நாம் மன் னித்தே ஆகவேண்டும். அதுமட்டும் அல்ல, அவர்களில் நாம் அன்பு கூரவும் வேண்டும்.
"நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர் களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." (மத் 7:12)
OOOOOOO
2.

13. செல்வத்தைப் பதுக்கிவைத்த பாட்டி
ஸ்கொட்லாந்து தேசத்தில், வயது முதிர்ந்த பாட்டி வறுமையில் சீவித்து வந்தாள். அநேக வருடங்களுக்கு முன், அவளின் மகன் அமெரிக்கா தேசத்தில் சென்று அங்கே வாழ்க்கை நடாத்தி வந்தான். பல வருடங்கள் சென்றும் அவன் தாயாரைப் பார்க்கத் திரும்பி வரவில்லை. கடிதத் தொடர்பு மூலமே அவனின் வாழ்க்கை ஒடிக் கொண்டிருந்தது.
ஒருநாள் இந்தப் பாட்டியைப் பார்க்க அவளின் சினேகிதி ஒருத்தி வந்தாள். பாட்டி வறுமையில் சீவிப்பதைப் பார்த்துக் கவலைகொண்டு "உனது மகன் நன்றாகத்தானே வாழ்கிறான். அவன் உனக்கு ஒரு உதவியும் செய்வதில்லையா?" எனக் கேட்டாள். பாட்டி மிகவும் சஞ்சலத்தோடு, "அவன் ஒன்றும் உதவுவதில்லை. ஆனால் மாதாமாதம் கடிதம் எழுதுவான். அவற்றோடு சேர்த்து பல வர்ணப் படக்கடதாசிகளையும் அனுப்புகிறான்" என்று பெருமூச்சோடு கூறினாள். இதைக் கேட்டபோது சிநேகிதி கோபப்பட்டுப் பாட்டியின் மகனைக் கடிந்து பேச முற்பட்டாள். ஆயின் சற்று யோசித்தபின், 'பாட்டி பாட்டி அந்தக் கடதாசிகளை நான். பார்க்கலாமா?" எனக் கேட்டாள். பாட்டி அவற்றை மேசையின் லாச்சிக்குள்ளால் ஒவ் வொன்றாக எடுத்துச் சிநேகிதியிடம் கொடுத்தாள். இவற்றைச் சினேகிதி கண்டபோது மிகவும் வியப்புற்றாள். படக்கடதாசிகள் என்று பாட்டி கூறியது காசோலைகள். பணக்குவியலில் இருந்துகொண்டு அநேக வருடங்களாக இவள் வறுமையில் வாடியதையிட்டுத் திடுக்
கிட்டாள்.
எங்களிலும் அனேகர் இப்படியாக வெறுமையான வாழ்வில் இருப்பதாக நினைத்து வறுமையாக வாழ்கிறோம். கடவுள் எங்கள் எல்லோருக்கும் வேண்டிய அளவு செல்வங்களைக் கொடுத்துள்ளார் பலவிதமான தாலந்துகளைத் தந்துள்ளார். அவர் எவ்வளவோ ஆசீர் வாதங்களை எங்கள் முன் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல கேளுங்கள்
கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடை
21

Page 16
வீர்கள். (மத் 7:4) என வாக்குறுதி அளித்துள்ளார். ஆயின் நாங்கள் இதை விளங்காதவர்கள் போல், கதையில் பாட்டி செய்தது போன்று சதா தரித்திரத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் தாலந்துகள் யாவும் லாச்சிகளில் பூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. (அப் 17:28) அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். ஆதலால் நாம் அசதியாக இருக்க முடியாது. ஆம், அப்படியாயின் நாம் என்ன செய்யவேண்டும்? கடவுள் தமக்குத் தனித்தனியாக தந்துள்ள தாலந்துகளை லாச்சிகளில் இருந்து இழுத்து எடுக்க வேண்டும். கடவுள் தினமும் நமக்கு வெறுமையான காசோலை களைத் தருகிறார். அவற்றை நாங்கள் நம்பிக்கை, தைரியம், பொறுமை, எளிமை அன்பு, ஆகிய பரிசுத்த நிதியினால் நிரப்பி, வாழ்க்கையில் சிறந்த முறையில் பாவிக்க வேண்டும். இறைக்க, இறைக்கக் கிணறு ஊறிக்கொண்டே இருக்கும். ஆகவே இவ்வுலகில் தேவகாரியங்களிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்ற மடைய, அவர் அளித்துள்ள தேவ கொடைகளைப் புரிந்து, விளங்கிக் கொள்ள வேண்டும் - அவற்றைப் பிரயோசனப்படுத்த வேண்டும். மேன்மை தங்கிய இராஜாவின் பிள்ளைகளாக வாழுவதனால் நம்பிக்கையோடு அவர் தரும் வெறும்
காசோலைகளை நிரப்பிப் பிரயோசனப்படுத்துவோமாக!
OOOOOOO
14. கைகூப்பும் கரங்கள்
ஒரு தேசத்தில் இரு இளம் நண்பர்கள் மிகவும் அன்பாக ஒருவரையொருவர் நேசித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இரு வருக்கும் பணக்கஷ்டம் இருந்தது. இவர்கள் இருவரும் மேற்படிப்பைத் தொடர ஆவலாக இருந்தனர். ஆயின் அவர்களின் பணக்கஷ்டம் அவர்களை நெருக்கவே, இவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. ஒருநாள் இருவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். இருவரில் ஒருவர் முதலில் தூரதேசம் சென்று படித்து முடித்து வந்து மற்றவருக்கு உதவுவதாக முடிவு செய்யப்பட்டது.
22

இதன்படி ஒரு நண்பன் தனது படிப்பை மேற்கொள்ளப் பிறதேசம் சென்றார். மற்றவர் பாடுபட்டுச் சம்பாதித்து அவருக்கு மாதாமாதம் செலவுக்குப் பணம் அனுப்பி வந்தார். மேல்நாடு சென்ற நண்பன் ஒரு ஓவியனாகக் கல்வியை மேற்கொண்டான். வருடங்கள் பல கழிந்தன. நாலு வருடங்களின் பின் படிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஒவியன் தனது நாட்டுக்குத் திரும்பினான்.
படிப்பை நிறைவேற்றிய நண்பன் தனது மற்றைய நண்பனைப் படிப்பிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றான். அங்கு வீட்டுக்குள்ளே சென்றபோது தனது நண்பன் கடவுளோடு ஜெபம் செய்துகொண்டு இருப்பதைக் கண்டான். அவனை உற்றுப்பார்த்த போது கடினமான வேலை செய்து காய்த்துப் போன நண்பனின் இரு கரங்களும், அவனின் மனதை உறுத்தின. அவனின் இரு கரடு முரடான கைகளிலும் காணப்பட்ட சுருண்ட உலர்ந்த தோல், வேலை செய்து களைத்துப்போன கைகளில் காணப்பட்ட காயங்கள் தழும் புகள், நார்கள், மற்றும் கீறுகள் இவனின் உள்ளத்தில் பலகையில் ஏறிய ஆணி போல் பதிந்தது. உடனே அவன் கண்களில் கண்ணீர் சொரியத் தொடங்கியது. கண்ணிரோடு அவன் நின்றுவிடாமல் தனக்காகத் தன் சிநேகிதன் செய்த தியாகத்தைத் தான் கற்றுவந்த வித்தை மூலம் வெளிக்காட்ட ஏவப்பட்டான். உடனே பேப்பரையும் தூரிகையையும் எடுத்து தன் நண்பன் தனக்காகப் பட்ட கஷ்டங்களை வெளிக்காட்டும் உருக்கமான கூப்பும் இரு கரங்களையும் ஒவியமாகத் தீட்டினான். அதன் மூலம் அவன் தனக்காக எவ்வளவு பாடுபட் டிருப்பான், மனக்கவலைகள் அடைந்திருப்பான் என்பதை உணர்ந் தான். நண்பனின் தியாகத்தை உணர்ந்தான். இதுவே நாம் எமது வீடுகளில் காணும், தொங்கப்போட்டு அழகுபார்க்கும் கூப்பிய இரு
கரங்களின் கதையாகும்.
OOOOOOO
235

Page 17
15. umri 6Luñu6uň?
ஒரு நாள் நாக்குக்கும் பல்லுக்குமிடையே ஒரு பெரிய விவாதம் ஏற்பட்டது. நாக்கு, "நான் மனிதனின் வாய்க்குள் இருந்து மனிதனுடைய எண்ணங்களை வெளிக்கொணராவிடில், அல்லது கருமமாற்ற முடியாதவிடத்து இம்மனிதனின் சரீரமாகிய உடம்போ, நீயோ வாழ முடியாது", ஆகவே என்னால்தான் எல்லாம் ஆகும், என்று செருக்குடன் கூறியது. அதற்குப் பல் சிரித்தபடியே, நீ கூறுவது சரிதான் ஆயினும் உன்னைப் பாதுகாப்பவன் நான் என்பதை மறந்துவிடாதே, நான் இல்லாவிடில் உன்னுடைய எலும்பற்ற தன்மையினால் மனிதனின் அவயவம் முழுவதையுமே நீ தீங்குபெறச்செய்துவிடுவாய். ஆகவே உன்னைப் பாதுகாக்கிற நானே
பெரியவன் என்பதை மறவாதே", என்று கூறியது.
அதற்கு நாக்கு, "என்னுடைய பேச்சு வல்லமையில்லாது, உணவை உருசித்துப் பசியாறும் குண இயல்புகள் இல்லாது மனிதனால் வாழ முடியுமா? அல்லது உன்னால்தான் இவற்றைப் போக்கி வாழ முடியுமா?" என்று செருக்குரைத்தது. அதற்குப் பல் சிரித்தவண்ணம், "நீ செய்கிற குறும்புத்தனம் முழுவதற்கும், உன்னுடைய பொய் புரட்டு, ஜாலம், மாயாஜாலம், கெட்ட வார்த்தை பேசுதல் போன்ற உனது தீய செயல்களுக்கும், வார்த்தைகளுக்கும் மனிதர் உன்னை அல்ல என்னையே விழித்து, பேசித் தண்டிக்கிறார்கள். நீ பொய் பேச, அவர்கள், உன்னுடைய பல்லைக் கழற்றி விடுவேன், என்றுதான் விழித்துப் பேசுகிறார்கள். இதிலிருந்தாவது உனக்கு யார் பெரியவன் என்று தெரியவில்லையா?
என்று பல் கூறியது.
இவர்களின் வாக்குவாதத்தைக் கேட்டுக்கொண்டிருந்த மனது இருவரையும் பார்த்துச் சிரித்து, "நீங்கள் சண்டை பிடிப்பது எனக்கு வேதனையாயிருக்கிறது. நாங்கள் ஒவ்வொருவரும் மனிதனின் அங்கங்கள் அல்லவா? மனிதனை முன்னேற்றுவதற்காக நாம்
அவனுக்குப் பிரயோசனப்படுகின்றோம். ஆகவே, எங்களுக்குள் சாந்தம்,
24

சமாதானம் நிலவ வேண்டும், என்று சமரசப் பேச்சுப் பேசியது. அன்று தொடக்கம் மனிதன் நிதானமாகவும், நிம்மதியாகவும் திருப்தியுடனும்
இருக்கப் பழகிக்கொண்டான்.
OOOOOO
16. Singguninsu Elueusin
ஒற்றுமையாக வாழ்ந்த கோவேறு கழுதைகள்.
ஒன்றாக இணைந்து வாழ்! ஒன்றாக இணைந்து சிந்தித்துப் பார்! ஒன்றாகச் சேர்ந்து கருமமாற்று! ஒன்றாக முயற்சி செய்!
ஒரு கிராமத்தில் ஒரு கமக்காரன் வாழ்ந்து வந்தான். அவனின் வீட்டுத் தோட்டத்து வேலைகளைச் செய்விக்க, அவன் இரு கோவேறு கழுதைகளை வளர்த்து வந்தான். அவை ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து ஓடிச் செல்லாமல், காணாமல் போகாது இருக்க அவற்றைக் கயிற்றி
னால் பிணைத்து, இணைத்துக் கட்டி வளர்த்தான்.
அவற்றுக்கு அவன் வைக்கோல், புல் ஆகியவற்றைக் கத்தை யாகக் கட்டி உணவாக அளித்து வந்தான். இவை நன்றாக வயிறு நிறையச் சாப்பிட்டு வந்ததைக் கமக்காரன் கண்டான். தினமும் அவனால் ஆகாரம் கொடுப்பது சிரமமாக இருந்தது. ஆகவே அவன் ஒரு திட்டமிட்டான்.
தினமும் வைக்கோலை இரு கத்தைகளாகக் கட்டி நேருக்கு நேரே இரு புறங்களில் வைத்து விடுவான். இவை ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு தமது பக்கத்தில் காணும் வைக்கோலையே உண்ண முயற்சித்தன. கயிறு இரண்டு கற்றைகளை அடையும் அளவுக்கு நீளமாக இருக்கவில்லை. ஆகவே இரண்டினாலும் வைக்கோலை அடைய முடியவில்லை. பசியின் கொடுமையால் இரண்டும் ஒன்றையொன்று இழுத்த வண்ணம் தமது பெலனைக் காட்டிக் கொண்டிருந்தன. கயிறு மிகவும் வலிமையானதாக
இருந்தமையால் அறுந்து போகவே இல்லை. ஆகவே கழுதைகள்
25

Page 18
ஒன்றையொன்று உதைத்தன. ஆயின் இரண்டுமோ விட்டுக் கொடுக்க வில்லை. வீறுடன் இழுத்துப் பார்த்தன. வெற்றிபெறவோ முடிய வில்லை. வைக்கோலையும் உண்ண முடியவில்லை. இறுமாப்பாகச் செயல்பட்டு இளைத்தன. இரவாகியது, உணவோ கிடைக்கவில்லை. பசி ஒரு புறம், மாய்ச்சல் இன்னுமொரு புறம், அடியின் உபாதி இன் னொருபுறம், வெயில் கொடுமை அவைகளை மேலும் உபத்திரவப் படுத்தியது. ஆகவே மிகவும் வாடிய நிலையில் இரண்டும் சற்றுச் சிந்திக்கலாயின.
இரண்டும் சற்று ஆறி இருந்தவண்ணம் என்ன செய்வது, என யோசித்தன. ஒன்றையொன்று கவலையோடு பார்த்தன. அவைகளின் முகத்தில் சோகமே பிரதிபலித்தது. ஆகவே அவை களைப்பின் மிகுதியால் சாந்தமாயின. பசிக்கொடுமையால் ஒன்றையொன்று பார்த்துப் பரிதாபப்பட்டன. தங்களுக்குள் கதைத்துக் கொள்வதுபோல் முகத்தோடு முகம் ஒன்று சேர்ந்தன. இரண்டும் ஒன்றாக முயற்சித்தன. ஒன்றாக இணைந்து சிந்தித்தன. ஒன்றாக இணைந்து வாழ்வோம் என்று முடிவுகட்டின. ஆகவே ஒன்றாகக் கருமமாற்ற முற்பட்டன. ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாது இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து 905 பக்க வைக்கோலைப் பகிர்ந்து கொண்டன. அது முடியவே அவை இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து மறுபக்கத்தில் இருந்த கத்தையைப் பசியாறின. இரண்டு கழுதைகளுக்கும் பசியாறுவதற்குப் போதிய உணவு இருந்தது. ஆகவே அவை ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்துப் பசியாறி உண்டு மகிழ்ந்தன.
'ஒற்றுமையே உயர்வுதரும்
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'
OOOOOOO
25

17. யானையும் குருடர்களும்
இந்துஸ்தானில் படிப்பில் ஆர்வமுடைய ஆறு மனிதர்கள் யானையைப் பார்க்கச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் குருடர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் அவதானிப்பும் அவர்களைத்
திருப்திப் படுத்துவதாக அமைந்தது.
1. முதலாம் ஆள் யானையை நெருங்கினான். பருத்த உடம்பருகே சென்று மோதுண்டு விழுந்தான். உடனே அவன் எழுந்து யானையைத் தடவியபடி பலத்த சத்தத்துடன் "கடவுள் என்னைக்
காப்பாற்றினார், யானை சுவரைப் போன்றது" என்றான்.
2. இரண்டாம் ஆள் கிட்டே சென்று தந்தத்தை தொட்டுப் பார்த்தான். "ஆஹா இவ்வளவு கூர்மையாகவும், அழுத்தமாகவும், வளை வாகவும் உள்ளதே இது". எனச் சத்தமிட்டு, யானை ஈட்டியைப்
போன்றது என்றான்.
3. மூன்றாம் ஆள் யானையின் தும்பிக்கையைக் கையால் தடவிப் பார்த்தான். பார்த்த அவன், உடனே துணிவான குரலில் "யானை பாம்பைப் போன்றது" என்றான்.
4. நான்காம் ஆள் ஆவலுடன் யானையை அணுகி, முழங் காலைப் பற்றினான். யானையின் காலைத் தடவியபின் "இம் மிருகம் மரத்தை ஒத்திருக்கிறது" என்றான்.
5. ஐந்தாம் ஆள் யானையின் காதைத் தொட்டுப் பார்த்தான். குருடனாயினும் மிருகம் எதை ஒத்திருக்கிறது என்பதைச் சொல்ல முடியும் அல்லவா? ஆகவே அவன் "யானை விசிறி (சுளகு) போன் றது" என்றான்.
6. ஆறாம் ஆள் தட்டித் தடவி யானையைத் தேடியபோது அவனுக்கு அதன் வால் கைகளில் அகப்பட்டது. ஆகவே அவன்,
"யானை கயிறை ஒத்தது" என்றான்.
இந்துஸ்தான் மனிதர்கள் ஒவ்வொருவருக்குமிடையே தங்கள்
27

Page 19
அபிப்பிராயம் குறித்துப் பலத்த தகராறு ஏற்பட்டது. அவர்களின் அனுபவத்துக்கேற்ப, யானையைப் பற்றிய வித்தியாசமான எண்ணங் களே அவர்களிடம் நிலவிற்று. ஒரு வகையில் ஒவ்வொருவரினதும்
எண்ணக்கரு சரியாயினும், எல்லோரது கூற்றும் பிழையானதே!.
OOOOOO
17. கண்ணால் காண்பதுவும் பொய்யே காதால் கேட்பதுவும் பொய்யே!
முன்னொரு காலத்தில் இரக்கமுள்ள, வல்லமைமிக்க அரசன் அயோத்தியா எனும் நாட்டை ஆண்டு வந்தான். இவன் தனது குடிகளிடம் அன்பும் கருணையும் கொண்டவன். மக்களை நல்ல முறையில் நடாத்திப் பராமரித்து வந்தான். ஒரு சமயம் நாட்டில் வறுமை குடிகொண்டது. இதனால் நாட்டில் கொள்ளை, களவு என்பன இடம்பெறத் தொடங்கின. இவற்றைக் கேள்விப்பட்ட அந்த நாட்டு அரசன் தவறான வழியில் செல்பவரைக் கைது செய்வதற்காக இரவுவேளைகளில் கிராமப் புறங்களில் சென்று, அவதானித்து, இவற்றை நிறுத்த முயன்றான்.
இவ்வாறு ஒரு நாள் சிறிய நகர்ப்புறத்தைக் கடந்து செல்கையில் ஒரு கடைக்கு அருகே, "கையை வெட்டு" என்ற சத்தம் கேட்டது. உடனே அரசன் திடுக்கிட்டான். சிலவினாடிகளின் பின்னர் "காலை வெட்டு" என்ற இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கள்வர் களையும், கொலைகாரர்களையும் கண்டு பிடிக்கும் நோக்குடன் சென்ற அரசன் கடையினுள் கொலை நடப்பதாக நினைத்தான். இதனை ஊர்ஜிதப்படுத்த கடையை நெருங்கி கதவின் அருகே நடப்பதை அறியும்முகமாக உற்றுக் கேட்டான். சில நிமிடங்களில்
மீண்டும் அக்குரல் “கையையும் காலையும் வெட்டினால் பெட்டியில்
28

போடு" எனக் கேட்டது. இது அரசனின் சந்தேகத்தை வலுப்பெறச் செய்தது. உடனடியாக கொலையாளியைப் பிடிக்கும் நோக்குடன்
கதவைத் தட்டினான் அரசன்.
கடையின் கதவு திறக்கப்பட்டதும், வயது முதிர்ந்த ஒருவன் அளக்கும் நாடாவுடன் வெளியே வந்தான். பதற்றமடைந்த அவன் குழம்பிய நிலையில் காணப்பட்டான். அரசர் கோபத்துடன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அரசரை மரியாதையுடன் வரவேற்றான். அரசரும் நடந்ததை எண்ணி மனம் வருந்தினான். இது தையல்காரன் கடை, கொலைகாரன் கடையல்ல என்பதை உணர்ந்தான். எனவே மனம் வருந்தி அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கடையை விட்டுச்
சென்றான் அரசன்.
OOC
19. கொரிய தேசத்து உவமை
கொரியாவிலுள்ள 'சியா-லீ என்ற கிராமத்தில் செல்வம் நிறைந்த ஒரு வாலிபன் திருமணம் செய்ய ஆயத்தமாக இருந்தான். திருமணத்திற்கு முதல் நாள் அவனது மாம்னார் புதிய உடை வாங்குவதற்காகப் பணம் அனுப்பியிருந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெரிய நகரத்திலிருந்கும் ஒரு ‘சுப்பர் மார்க்கட் கடைக்குச் சென்று ஒரு சூட்டைத் தெரிந்தான். கோட்டை அணிந்து, அளவோ என்று பார்த்தான். ஆனால் நேரமின்மையால் காற்சட்டை அளவாய் இருக்கும் என நினைத்து வீட்டுக்குச் சென்றான். வீட்டிற்குச் சென்று இரவுவரை காற்சட்டையை அணிந்து பார்க்கவில்லை. பின்னர் இரவுவேளை அணிந்து பார்த்தபோது நீளக்காற்சட்டை மூன்று அங்குல நீளம்
கூடியதாகக் காணப்பட்டது.
காலையில் திருமணம் நடக்க இருப்பதால், எதுவும் செய்ய முடியாது என நினைத்து, இதை வீட்டாருடன் கூறி, அப்படியே மடித்து அணிவதெனத் தீர்மானித்தான்.
29

Page 20
இந்த இளைஞனுக்கு இரக்கமுள்ள பாட்டியார் ஒருவர் இவர் களது வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். தனது பேரன் நீளக் காற்சட்டையை மடித்து அணியப் போகிறானே என்ற ஞாபகம் அவளின் மனதுக்கு வரவே, வீட்டாரைக் குழப்பாமல் அவள் இரவில் எழுந்து, அவன் காற்சட்டை வைத்திருந்த அறைக்குள் அமைதியாகச் சென்றாள். கவன மாக அதனை எடுத்து மேலதிகமாக இருந்த மூன்று அங்குலத்தையும் வெட்டினாள். ஊசிநூலால் தைத்து பழையபடி தொங்கவிட்டாள். பின்னர் தன் படுக்கைக்குச் சென்று நிம்மதியாகத் தூங்கினாள்.
இளைஞனின் தாயார், மகன் எல்லோரது முன்னிலையிலும் மடித்த காற்சட்டையுடன் நிற்பதாகக் கனவு கண்டு, இரவு இரண்டு மணியளவில், காற்சட்டை தொங்கவிடப்பட்டுள்ள அறைக்குள் அமைதியாகச் சென்றாள். காற்சட்டையைக் கவனமாக அளந்து
மூன்று அங்குலத்தை வெட்டிச் சீராக மடித்துத் தைத்தாள்.
விடியற்காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாக, இளைஞனது மூத்த தமக்கையார் எழுந்தாள். இரவு முழுவதும் அவரால் நித்திரை கொள்ள முடியவில்லை. வீட்டிலுள்ள யாவரும் எழும்ப முன் எழுந்து, காற்சட்டையை எடுத்து மூன்று அங்குலத்தை வெட்டிச் சீராக மடித்துத் தைத்து கொழுக்கியில் தொங்கவிட்டாள்.
காலையில் திருமணத்திற்கு முன் காற்சட்டையை வாலிபன் அணிந்தான். அவனது நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங் களே உணரமுடியும். மூவரும் அவனுக்குச் செய்த உதவி, அவனுக்கு முரணாகவே சென்றது. அவர்களுக்குள் ஒரு வித தொடர்பும் இல்லாமற் போனதினால் இது இப்படி நடந்தேறியது.
OOOOOOO
5

20. தோள்கள்ல் தரக்கிச் செல்லும் கடவுள்
காலடி ஓசை கேட்டீரோ?
ஒருநாள் இரவு, ஒரு மனிதன் ஒரு கனாக் கண்டான். அதிலே அவன், கடவுளோடு சேர்ந்து தான் கடற்கரையில் உலாவுவது போன்று அவனுக்குத் தோன்றியது. கடற்கரையில் வானத்திலிருந்து அவனது பழைய காலச் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண் டிருந்தன. அந்தக் கனவிலே, அவன் தனது வாழ்நாட்களில் நடந்து வந்த பாதை, ஒரு நீண்ட காட்சியாகத் தோன்றியது. ஒவ்வொரு காட்சி யிலும், அவன் மணற்றரையை உற்று நோக்கினான். இரண்டு சோடிப் பாதங்களின் அடையாளங்களைக் கண்டான். ஒன்று அவனுடையது. மற்றது அவனின் மனதைக் கடந்தவராகிய தெய்வத்தினுடையது. (கடவுள் என்பவர், மனதைக் கடந்தவர், மனதை ஆட்கொண்டவர், தனது மனதைத் தூய்மையாக்கி அவன் உள்ளத்தில் வதிபவர் என்ற மன உறுதி கொண்டவன் இவன்.) அவனின் வாழ்க்கைப் பாதையிலே அனேக சந்தர்ப்பங்களில் ஒரு சோடி காலடிகள் மட்டும் காணப் பட்டதை அவன் அவதானித்தான். இப்படியாகக் காணப்பட்ட வேளை கள், அவனது வாழ்வில் மிகவும் சஞ்சலமான, துக்ககரமான, மிகவும்
சோர்வுற்ற தருணங்களாக இருந்ததையும், அவன் நோக்கினான்.
வாழ்வின் தாழ்ச்சியான வேளைகளில் ஒரு சோடிக் காலடிகள் மட்டும் இருந்தது, அவன் உள்ளத்தை உறுத்தியது. எனது உள்ளத் தைக் கடந்தவர், எப்பொழுதும் என்னோடு இருப்பவர், என்னை எப்படி விட்டுப் பிரிந்திருக்க முடியும்? என வருந்தியவனாக அவன், கடவுளைப் பார்த்து, "என் உள்ளத்தில் இருப்பதாக வாக்களித்தவரே, உம்மைப் பின்பற்றினால் வாழ்வு முழுவதும் என்னோடு வருவேன்என்று வாக்களித்தவரே, எனது வாழ்வின் முக்கியமான சஞ்சலம், வருத்தம், சோதனை நேரங்களில் நீர் எங்கே ஐயா போயிருந்தீர்? என்று வருத்தத்தோடு கேட்டான்.
51

Page 21
அதற்கு ஆண்டவர், (அவனின் வாழ்வு முழுவதையும் ஆண்டு நடத்தியவர்) "அன்பின் பிள்ளையே, என்னை அன்பாக அரவணைத்து என்னோடு வாழ்க்கை நடத்தியவனே கேள். நான் உன்னை ஒரு காலமும் விட்டுப் பிரிந்ததேயில்லை. நீ எப்பொழுது உனது வாழ்வில் துன்பம், துயரம், சஞ்சலம் என்று கதறியழுதாயோ, அந்தக் காலத் தில்தான் நான் உன்னோடு கூடுதலாகத் தரித்திருந்தேன். அந்த வேளைகளில் ஒரு சோடிக் காலடிகளை மட்டும் பார்க்கிறாயே! அவ் வேளையில்தான் அதிக அன்பாக இருந்து, உன்னை என் தோள் களின்மேல் தூக்கிக் கொண்டு உன்னோடு பிரயாணம் செய்தேன்", எனப் பதில் கூறினாராம். ஆம்; நானே உனக்கு வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத் தில் வரான்" என்று இயேசு உறுதியளித்துள்ளார். அவரே நமக்கு வழி, அவரே நமக்குச் சத்தியம், அவரே நமக்கு ஜீவன்.
"இயேசுவே ஆண்டவர், உயிர்த்தெழுந்தார் அவர் ஆண்டவர். முழங்கால்கள் மடங்கும், நாவு யாவும் அவரைக் கர்த்தர் என்றறிக்கை செய்யும்".
OOC
21. பொறுத்தார் அரசாள்வார்
60TT தேசத்தில் கிராமம் ஒன்றில், மழை இல்லாது வரட்சி காரணமாக வயல்களுக்குப் போதிய நீர் இருக்கவில்லை. ஆகவே நீர்ப்பாசன வசதிகள் கொண்டு வயல்களை நிரப்ப வேண்டியிருந்தது. ஒரு கிறிஸ்தவ கமக்காரன் இராமுழுவதும் விழித்திருந்து தனது வயல்களை நீர்ப்பாசன வசதிகளைக் கொண்டு நிரப்பிக் கொண்டான்.
அதன் பின்னர் வீடு சென்று ஒய்வெடுத்த பின்பு திரும்பவும் வந்து
52

பார்த்தபோது அவனது வயலில் நீர் இருக்கவில்லை. அவன் அங்கு இல்லாமல் இருந்தபோது பக்கத்து வீட்டு வயல்காரன் அதைக் கள வெடுத்துத் தனது வயலுக்கு நீர்ப்பாய்ச்சி விட்டான். இவன் அவனோடு சண்டையிட நினைத்தான். ஆயினும் கிறிஸ்தவன் என்பதற்காகப் பொறு மையைச் சாதித்தான். அடுத்த நாள் இரவு நித்திரை முழித்துத் திரும்பவும் அவன் தனது வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சினான். அதி காலையில் வீட்டை அடைந்து நித்திரை செய்தான். பல மணித் தியாலங்கள் ஓய்ந்தபின் திரும்பவும் தனது வயலைப் பார்க்கும்படி சென்றான். அங்கு சென்றபோது அவனது வயலில் தண்ணீர் இருக்கவில்லை. ஆயின் பக்கத்து வீட்டுக்காரன் வயலில் தண்ணிர் தேங்கி நின்றதைக் கண்டான். அவனுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. அவனைக் கொன்றால் என்ன என நினைத்தான். ஆயின் அவனின் தாழ்மை உள்ளம் அவனைச் சமாதானப்படுத்தியது. அவன் தனது சபைக் குருவானவரிடம் சென்று ஆலோசனை கேட்டான். அவர் அவனைப் பார்த்து இதில் சரி, பிழை அல்ல முக்கியம். அதற்கு மேலாகச் சென்று நீங்கள் இருவரும் வாழ்வதற்குரிய வழியென்ன என்பதை சிந்திக்க வேண்டும், அதில்தான் உனது வாழ்வும், உனது அயலானின் வாழ்வும் தங்கியுள்ளது, என ஆலோசனை கூறினார். அத்துடன் அயலான் உனது நீரைக் களவாடினால், முதலில் அவனின் வயலை நீர்ப்பாய்ச்சி, பின்னர் உனது வயலை நீர்ப்பாய்ச்சு’ எனக்கூறி அனுப்பினார். கிறிஸ்தவ கமக்காரன் குருவானவர் கூறியபடியே செய்தான்.
அடுத்த நாள் பக்கத்து வீட்டு வயல்காரன் கண்களில் கண்ணிர் ததும்பியவனாக, அவன் முன் வந்து நின்று தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அது மட்டுமல்ல கிறிஸ்தவ நம்பிக்கை உன்னை இவ்வளவு கருணையுள்ளவனாக்க முடியுமானால் நானும் அந்த நம்பிக்கைக்குள் வர விரும்புகிறேன், எனக் கூறி முழந்தாள் இட்டான். கிறிஸ்தவ வாழ்க்கைத் தத்துவம், இன்றைய இருள் சூழ்ந்த காலத்திலும் பயனைக் கொடுக்கிறதைக் காணுகிறோம் அல்லவா?
OOOOOOO
55

Page 22
22. தாழ்வு உயர்ச்சி தரும்
"ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ!" இதை விளக்குவதற்கு ஒரு கொரிய தேசத்துக் கதை இருக்கிறது. கொரியாவில் வட கொரியர்களுக்கும், தென் கொரியர்களுக் குமிடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில், ஒரு தென் கொரிய மனிதன், வட கொரிய இராணுவ வீரர்களினால் ஒரு பெரிய சுமையைத் தூக்கிச் செல்லும் படியாக வற்புறுத்தப்பட்டான். இந்தச் சுமையை, கடும் வெயிலில், அவன் 8 மைல் தூரம் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. 8 மைல் முடி வடைந்தபோது, அவன் தன் பாரத்தை மேலும் தொடர்ந்து பல மைல்களுக்குத் தூக்கிச் சென்றான். இறுதியில் வட கொரிய இராணுவ வீரர்கள் பாரத்தை இறக்கும்படி கூறி அவனுக்கு நன்றியும் தெரிவித்தனர். அதுமட்டுமல்ல, அவர்கள் அவனைப் பார்த்து, '8 மைல் துTரம் சென்றடைந்ததும் உன் னைக் கொல்லும் படியாகக் கூறப்பட்டிருந்தது. ஆயின் நீ கட்டாயப்படுத்தப்பட்ட தூரத்துக்கு மேல் பாரத்தை தூக்கிச் சென்றதன் பயனாக உன்னைக் கொல்ல விரும்பவில்லை, உன்னுடைய தாழ்மை எம்மை வெகுவாகத் தொட்டுவிட்டது. எனக் கூறி அவனை விட்டுச் சென்றனர். இயேசுவும் இதையே போதிக்கிறார். கடமையை மட்டுமல்ல, அதற்கு மேல் உங்களால் இயன்றளவு, வற்புறுத்தலுக்கு மேலாகச் செய்யுங்கள். அது மட்டுமல்ல, பழிக்குப்பழி எண்ணத்திலிருந்து விலகிக் கொள்ளும்படியும் போதிக்கிறார்.
OOOOOOO
54

23. மன்னிப்பில் மனநிறைவு
ஒரு போதகர் தனது மேல் படிப்புக்காக மேல்நாடு சென்றிருந்தார். அந்த வேளையில் தனிமையில் இருந்த மனைவி ஒருமுறை விபச்சாரத்தில் ஈடுபட்டார். ஆயின் அவரை விவாகரத்துச் செய்தால், தான் போதகர் உத்தியோகத்தில் இருக்க முடியாது. இதன் மூலம் தனது ஊழியம் சின்னாபின்னப்படும் என்பதை உணர்ந்தார். அது மட்டுமல்ல, இச்செய்கை தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை பழுதாக்கி நாசப்படுத்தும் என்பதையும் உணர்ந்தார். அவர் எது சரி, எது பிழை என்பதை உணர்ந்து தீர்மானம் எடுத்திருந்தால் அவர் விவாகரத்தைச் செய்தே இருக்க வேண்டும். ஆயின் அவர் தனக்குள்ளே ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்த்தார். "நான் குடும்பமாக முன்னேறிச் சென்று வாழ்வதற்குச் சரியான வழியெது?" என்று. அதற்கு அவர் விடையைக் கண்டு பிடித்தார். அவர் மனைவியை மன்னித்து விவாகரத்திலிருந்து விலகிக் கொண்டார். இன்று அவர் ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்கிறார். அவருடைய பிள்ளைகள் யாவரும் வளர்ந்து நல்ல நிலைகளில் இருக்கிறார்கள். அவர் ஒரு பெரிய சபைக்குப் பொறுப்பாக இருக்கிறார். அவர் நீதியான வழியைத் தெரிந்து அதன்படி செய்திருந் தாலும், பரிசுத்த வேதாகமத்தின்படி அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆயின் இவ்விடயத்தில் அவர் நீதிக்காக தனது மகிழ்ச்சி மிக்க வீட்டையும் ஊழியத்தையும் இழந்தே
இருப்பார். வாழ்க்கை என்பது வாழ்வாங்கு வாழ்வதற்கே!
OOOOOOO
A. O O O O 24. "deslun6ŭro dBHŭLILéu di£basiń!
ஒரு கிராமப்புறத்தில் இருந்த தேவ ஆலயத்தில் ஒரு குரு வானவர் திருப்பணி புரிந்து வந்தார். தனது சபைமக்களைச் சென்று
பார்த்து வருவதற்காக இவர் ஒரு குதிரையை வளர்த்து வந்தார்.
55

Page 23
இக்குதிரையை ஓடச் செய்வதற்கு இவர் "அல்லேலூயா! அல்லேலூயா!" எனச் சத்தம் இடவேண்டும். இச்சத்தத்தைக் கேட்ட பின்னரே குதிரை நகரத்தொடங்கும். இதேபோன்று குதிரையை நிறுத்துவதற்கு அவர் "ஆமென்! ஆமென்!!" எனக் கத்த வேண்டும். இவ்விரு சொற்குறி களாலுமே, குதிரை ஒட, தரிக்கப் பயிற்றப்பட்டிருந்தது.
பலகாலம் கிராமத்தில் திருப்பணி புரிந்த இவர் நகரப்புற ஆலயமொன்றுக்கு மாற்றப்பட்டுச் சென்றார். நகரத்திற்குக் குதிரையைக் கொண்டு போக முடியவில்லை. ஆகவே குதிரையை அக்கிராமத்தில் உள்ள ஒரு வயதுபோன கமக்காரனுக்கு விற்றுவிட்டார். விற்கும்போது
குதிரையை எப்படி இயங்கச் செய்வது எனச் சொல்லிக் கொடுத்தார்.
பல நாட்களின் பின் கமக்காரன் குதிரை மேல் ஏறிச் சவாரி. செய்ய ஆயத்தமாகி, "அல்லேலூயா!' எனச் சத்தமிட்டான். உடனே குதிரை மின்னல் வேகத்தில் ஒடத்தொடங்கியது. குதிரையை விரை வாகச் செல்லப் பண்ணும் முகமாக திரும்பவும் "அல்லேலூயா!' என வேகமாகச் சத்தமிட்டான். குதிரை அதி விரைவாக ஒடத்தொடங்கியது. "அல்லேலூயா!! ஓசையோடு அதிக தூரம் பிரயாணம் செய்த கமக் காரன் ஒரு மலைத் தொடரிலே ஏறிக்கொண்டிருந்தான். குதிரையை மேலும் முறுக்கி அல்லேலூயா!! என ஆரவாரம் செய்தான். குதிரை கடுகதி வேகத்தில் சென்று கொண்டிருந்தது. கமக்காரன் மிகவும் களைப் புற்றான். மலை உச்சியைக் கிட்டக் கிட்ட அவனுக்குத் தண்ணிர்த் தாகம் உண்டானது. ஆகவே சோர்வுற்றவனாகக் குதிரையை நிறுத்த முயன்றான். ஆயின் குதிரை தரிக்கவில்லை. குதிரை பயங்கரமாக ஓடிக்கொண்டே இருந்தது. திடுக்குற்றுப் பதட்டப் பட்ட கமக்காரன், பயத்தின் மேலீட்டினால் கடவுளை நினைத்து ஜெபிக்கத் தொடங்கி "அல்லேலூயா! அல்லேலூயா!! என ஜெபிக்க லானான். குதிரை மேலும் விரைவாகப் பாய்ந்து சென்றது. மலைப் பாறையின் உச்சிக்கே கமக்காரன் சென்றுவிட்டான். கீழே பார்த்தான். குதிக்கவும் முடியாது, நிறுத்தவும் முடியாது, குதிரை ஓடிக்கொண்டே இருந்தது. பல ஒலிகளையும் செய்து பார்த்தான். குதிரை"தரிக்கவே இல்லை. இறுதியில் தனக்கு அழிவு கிட்டி விட்டது என்பதை உணர்ந்த

. கமக்காரன், பரமண்டல ஜெபத்தைக் கூறித் தனது உயிரைப் போக்க எண்ணினான். ஜெபத்தின் இறுதியில் ஆமேன் என்ற பதம் தானாகவே வந்தது. குதிரையின் ஒடும் வேகம் குறைந்து தரிக்க ஆயத்தமானது. இதைக் கண்ட கமக்காரன் "உமக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா" என உரத்துத் துதி செலுத்தினான். அல்லேலூயா தொனியைக் கேட்ட குதிரை மேலும் விறுவிறுப்படைந்து ஒடத் தொடங்கியது. ஆமென் என்ற சொல் இவன் மனதில் தனிமையாக வரவே இல்லை. ஆகவே அவன் திரும்பவும் பரமண்டல ஜெபத்தைக் கூறினான். அதன் முடிவில் ஆமென் என்ற சொல் வந்ததும் அதைப் பிடித்துக் கொண்ட வனாக அனேக முறைகள் "ஆமென். ஆமென்" என உரத்துக் கூறினான். குதிரை ஒருவாறு வேகத்தைக் குறைத்து, ஒடுவதை நிறுத்திக்கொண்டது. கமக்காரன் தப்பினேன் பிழைத்தேன் எனக்கூறி அன்று தொடக்கம் அல்லேலூயா, ஆமென் என்றும் "பதங்களை
மறவாது சொல்லத் தக்கதாக தனது மனதில் பதித்துக் கொண்டான்.
ஆமென் என்னும் பதம் சரியான நேரத்தில்-தருணத்தில் மறவாது உச்சரிக்கப்படும்போது மட்டுமே கடவுளின் அதிகாரப் பூர்வமான வாக்குறுதிகள் நிறைவேறுகின்றன. இவ்வாக்குறுதியை நிறை வேற்றவே இயேசு உலகத்தில் சிறு பாலகனாக அவதரித்தார். ஆகவே வாக்குறுதிகளை நிறைவேற்ற இவ்வுலகில் மானிடனாக உதித்த இயேசுவை "ஆமென்" என்ற பெயரினால் அழைத்துத் தினமும் அவரோடு அண்டி அன்பினைப் பெற்று வாழ்வோமாக வெளி 3:14
OOOOOOO
TYPESET BY
இ
No. 385-1/7, Galle Rd., Colombo-06.
57

Page 24
நூலாசிரியர் பற்றி .
கொழும்பு வெஸ்லிக் கல்லூரி, ே கல்லூரி ஆகியவற்றில் ஒன்பது வருட ஆசிரியராகத் தொழில்புரிந்து, அதன் பி 'ரேடியோ சிலோன், இலங்கை ஒலிப கூட்டுத்தாபனத்தில் மும்மொழிகே உள்ளடக்கிய கல்வி ஒலிபரப்புக் கலையி வருடங்கள் ஈடுபட்டு, இத் துறைக சிந்தித்துச் செயலாற்றித் தயாரிப்ப அமைப்பாளர், கட்டுப்பாட்டாளர், பணிப் என்னும் பதவிகளை வகித்துப் பணியாற் மூலமாக நான்கு சர்வதேசக் கல்வி நி பரிசுகளைப் பெற்ற பெரும்பகுதி அணு தென்கொரியா கேபிஎஸ் (RBS), மலே கழகங்களில் வானொலி, தொலைக்க திட்டமிடல், முகாமைத்துவம் ஆகிய துை சுற்றுலாக்கள் மூலம் தென்னிந்திய பிலிப்பைன்ஸ், தைவான், மாலைதீவு, ே வானொலி நிலையங்களில் நடைபெ கற்றறிந்து கொண்ட அனுபவமும், ! வந்தடைகின்றன.
இவற்றுடன், இலங்கை மெதடி இன்றுவரை துடிப்புமிக்க உறுப்பினராக கொண்டிருப்பதன் மூலம் பெற்று வரு இந்நூல் பிரதிபலிக்கின்றது.
பதிப்பு 25.03.1997
Primeid. Hy LJ nie Autis, 4 Fly || LT || Nr.3, 13 14. E3

ராயல்
J. ПЕULi
ள்ளர்
TůL|á TILL
ல் 32
எரிலே
ாளர்,
LIITETri
றியவர். இத்தகைய பதவி வழியுயர்ச்சிகள் கழ்ச்சிப் போட்டிகளில் பங்குபற்றி உலகப் பமும், அவுஸ்திரேலியா ஏபிசி (ABC), பசியா ஏஐபீடீ (AID) ஆகிய பயிற்சிக் ாட்சி என்னும் ஊடகங்களில் தயாரிப்பு, றகளில் பெற்ற பயிற்சியும்; மற்றும் கல்விச் வடஇந்தியா, யப்பான், சிங்கப்பூர், நபாளம் ஆகிய பிரதேசங்களில் கானும் றும் ஒலிபரப்பு நிர்வாக முறைகளையும் இக் கதைகள் வாயிலாக வாசகர்களை
ஸ் திருஅவையில் பிறப்புத் தொடக்கம் இருந்து, போதகராகக் கடமையாற்றிக் ம் இறையியல் துறை அனுபவங்களையும்
ISBN 955-96.225-1-X
LLLLLLLL LLLLLLLLSS LLLLLS S0S LSS 0L0a00