கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தன் கருணை ஓரங்க நாடகம்

Page 1
(
ஓரங்க ந
§§
シ
邝
*毽¿? (... *ቅù
* &ኻ oኻ ቘኒካ §§§Łosos
劑
*シ
身劑密
藏
*庭筠
*****
---- -!|- !!!!!): *
፯..
■■鱷
望讀劑*
** 鹰)
Eኜ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

=
繆翻
参
西疇婦』巴*配
赵韶
『ェ
熔劑的電
*片
*)量정:
·啊)---- Nosos.o.현』!~!盘)『』 *』*唱8Éዅ..ኼኔጅ戴)----彩*"............... (ኛጎ 杠)o.シA)sos, oss!感) ***_劑*******‰ `Iኻት'ዚ****:瞿) H距)**,Nossosェ飞靶**** :****!'£ኒሶ(ኻ Š..?- ¿?,“)シkm
ェシ
』譯_疆*』*_** - ·* 『려월:
శ్లో یونایتی نیرون ఘీ క్లో தி
萨 جي థ్రో
ఫ్ల
ಕ್ವೆನ್ಲೆ ষ্ট্র
శొ; వ్లో

Page 2

கந்தன் கருணை
(ஓரங்க நாடகம்)
என். கே. ரகுநாதன்

Page 3
சில குறிப்புகள் * 1969 ஆம் ஆண்டில் இந்நாடகம் எழுதப்பட்டது. * முதலில், நெல்லியடி அம்பலத்தாடிகள் சார்பில் நண்பர் இளையபத்மநாதன் இதனைக் காத்தான் கூத்துப்பாணியில் உருவமைத்து, வட புலத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றினார். நாடகம், நூலாகவும் வெளியிடப்பட்டது. மிக அண்மையில் சென்னையிலும் மேடையேற்றப்பட்டது. * கலாநிதி மெளனகுரு, அ. தார்சீசியஸ், குழந்தை ம. சண்முகலிங்கம் மற்றும் பல முன்னணி நாடகக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, நாடகத்தை மோடியுற்ற வடிவில் நெறிப்படுத்தி, பேராதனைப்பல்கலைக் கழகம், கொழும்பு சரஸ்வதி மண்டபம் உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் மேடையேற்றினர். * சமகாலப் பிரச்சினையொன்றை முன்னெடுத்து அதனை மக்கள் மத்தியில் பரப்பியதன் மூலம், அந்தப் பிரச்சினையை வென்றெடுக்கச் சகல மக்களையம் அணிதிரட்டிய சிறப்பு இந் நாடகத்துக்குரியது. * "முற்போக்குக் கலைஞர்களின் சிறந்த நாடகங்களில் பொதுப் படையாகவும், கருத்துரீதியாகவும் அலசப்படும் பிரச்சினைகள், கந்தன் கருணை என்ற இந்த நாடகத்தில், குறியீடுகளுக்குள் புகலிடம் தேடாமல், மிகத் துல்லியமாகவும், கூர்மையாகவும், அழுத்தமாகவும் சித்திரிக்கப்பட்டு நேரடியாகவே மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது" என்று பேராசிரியர் கைலாசபதி இந் நாடகத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்டுள்ளார். * நாடகம் எழுதப்பட்டு மூன்று தசாப்தங்கள் நிறைவுற்ற போதும் அக்காலத்தவர்க்கு மூலப் பிரதியைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இன்றுள்ள இளம் தலைமுறையினர்க்குநாடகத்தைப் பார்க்கவே சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இவற்றை ஈடுசெய்வதற்கு நாடகத்தின் மூலப் பிரதி தற்போது அச்சில் வெளிக்கொணரப்படுகின்றது. நாடகம் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதும் முக்கிய காரணமாகும். * "சாதி ஒழிந்து விட்டது!" என்று சிலர் முணுமுணுக்கிறார்கள். சிறுபான்மைத் தமிழர்களின் விடிவுக்காகவே தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டுழைத்து மறைந்த தோழர் எம். சி. சுப்பிரமணியம் நினைவாக அண்மையில் ஒரு சிறப்புமலர் வெளி வந்திருக்கிறது. அம்மலரில் "துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன: மரித்துவிடவில்லை!" என்று ஒர் அன்பர் கருத்தை முன்வைத்துள்ளார். இவற்றின் அடிப்படையில் எதிர்கால சமுதாயம் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள , இந் நாடகப் பிரதி தன் பங்களிப்பை நல்குமாக
தெஹிவளை.
2, 1999. என். கே. ரகுநாதன்.

கந்தண் கருணை.
காட்சி: 1
தேவலோகம். பாத்திரங்கள். நாரதர், முருகன், தெய்வானை
(திரை விலகுகிறது. நாரதர் வருகை)
TCs:
வில்லினையொத்த புருவம் வளைத்தனை
வேலவா,வடிவேலவா- அங்கோர் வெற்பு நொறுங்கிப்பொடிப் பொடியானது
வேலவா,வடிவேலவா!
சொல்லினைத்தேனிற்குழைத்துரைப்பாள்
சிறு வள்ளியைக் - குறவள்ளியைக் - கண்டு
சொக்கி மரமெனநின்றனை தென்மலைக்
காட்டிலே,வடிவேலா!
கல்லினையொத்த வலியமனங்கொண்ட காதகன் கொடும்பாதகன்-சிங்கன்
கண்ணிரண்டாயிரம் காக்கைக் கிரையிட்ட
வேலவா,வடிவேலவா!
வேலவா,வடிவேலவா,வடிவேலாவா! வடிவேலாவா!
(நாரதர், முருகன் கொலுவீற்றிருக்கும் அலங்கார மண்டபத்தை வந்தடைகின்றார்)
முருகன். நாரதரே, வருக! வருக! ஏது,நாமார்ச்சனைபலமாக இருக்கிறதே! எங்கிருந்துவருகிறீர்?

Page 4
கந்தள் கருணை,
நாரதர்; கந்தா, கடம்பா, கார்த்திகேயா, வெவ்வினை தீர்த்தருளும் வேல்முருகா! அடியேன்லோகசஞ்சாரி என்பதுதான்தங்களுக்குத் தெரியுமே. பூலோகத்திலிருந்து சத்தியலோகம் செல்லும் வழியில்,தங்கள் அனுக்கிரகம் பெறவந்தேன். ரகூஷித்தருள வேண்டுகிறேன். தெய்வானைத் தேவி, திருமகளே, பாலித்தருள் செய்க! வள்ளி நாயகி, வேடர் குலக்கொழுந்தே,
4.
(வள்ளி நாயகி அங்கில்லாததால் சிறு துணுக்குற்று) முருகா! எங்கே,
வள்ளியைக் காணவில்லை.
முரு: நாரதா பண்பாட்டின் பிறப்பிடம் என்று முன்னொரு காலத்தில் போற்றப்பட்ட பாரத பூமியில் தோன்றிய நாகர்கள், தமக்குச் சுயநிர்ணய உரிமை கோரிக் கலகம் செய்து வருகின்றார்கள்.* இந்திய அரசு தனது படைபலத்தால் நாகர்களின் நியாயமான கிளர்ச்சியை நசுக்க முயன்று வருகின்றது. நாகர்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகின்றனர். அவர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கு வள்ளி அங்கு சென்றுள்ளாள்.
நார:அப்படியா?. (கேலியானதொனியில் இழுத்தபடி) நான் என்னமோ. ஏதோ. என்று நினைத்தேன்.
முரு: ஏன் இழுக்கிறாய்?நீநினைத்ததைச் சொல்நாரதரே! நார: தெய்வானைநாச்சியுடன் உல்லாசமாக இருக்கிறீர்கள். வள்ளியை. அனுப்பிவிட்டீர்களோ என்று நினைத்தேன்.
தெய்வானை: நாரதர் சும்மா வந்திருக்கமாட்டார். ஏதாவது சுமையுடன்தான் வந்திருப்பார் என்று நான்முதலிலேயே நினைத்தேன்.
நார: இல்லைத் தேவீ சேவலும் மயிலுமின்றி முருகனைக் காணமுடியாது. அதேபோல, வள்ளியும் தெய்வானையுமின்றிக் காணவும் முடியாதே!. அதனால்த்தான் அப்படி நினைத்தேன்.
முரு:நாரதா, இன்று உனக்கு இப்படிச் சந்தேகம் வரக்காரணம் யாதோ? நார:சொன்னால் கோபிக்கமாட்டீர்களே? முரு:கோபிக்கமாட்டேன், சொல்! நார: எப்படியானாலும் வள்ளி. குறமகள்தானே! இழிந்த குலத்தவள்தானே. முரு: (ஆத்திரத்துடன்) நாரதா என்ன விளையாடுகிறாய்? உனக்கு இன்ற வேறு இடம் கிடைக்கவில்லையா?
தெய்: நான் அப்போதே சொன்னேனே, நாரதர் ஏதாவது சுமையுடன்தான் வந்திருப்பார் என்று.
நார:சொன்னால் கோபிக்கமாட்டேன்என்றீர்கள்.இப்போ இருவருமே என்மீது பாய்ந்து விழுகிறீர்கள். நான்மனதில் பட்டதைச் சொன்னேன்.
முரு:நாரதரே! வள்ளி குறமகள்என்று தெரிந்துதானே அவளை ஆட்கொண்டு * - இந் நாடகம் எழுதப்பட்ட 1969ம் ஆண்டுக் காலத்தில், மலைக்குறவர்களான நாகர்கள், தமக்குச் சுயநிர்ணயம் கோரிக்கிளர்ச்சிசெய்தனர்.

ார். கே. ரகுநாதன். 5
கடிமணம் புரிந்தேன். அப்பய்யா! அவளை இணங்க வைப்பதற்கு நான் பட்டயாடு உனக்குத்தான் தெரியமே! பிறகு எதற்குச் சந்தேகம்?
நார: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று அனுபவஸ்தர்கள் சொல்வார்கள், காட்டுமலரான வள்ளி, இளமை முறுக்குடன் இருந்தபோது, அவளை அடையத் துடித்திருப்பீர்கள். பின், மோகம் தணிந்ததும் கை கழுவி விட்டிருப்பீர்களே. என்று சந்தேகித்தேன்.
தெய்: நாரதரே! நீசொல்வதைக் கேட்கவே என்காதுகள்கூசுகின்றன. நார:தேவீ பூலோகத்தில் இந்த வழக்கம்இருந்துவருகின்றது. அந்த வழக்கம் ஒருவேளை தேவலோகத்தையும் பற்றிவிட்டதோ என்று நினைத்தேன்.
முரு: நாரதரே! பூலோகத்திலுள்ள எனது அடியார்கள் சாதி பேதம் பாராட்டக்கூடாதுஎன்பதை உணர்த்துவதற்காகவே, குறவர்குலப்பெண்ணான வள்ளியைக் கடிமணம் செய்தேன். அப்படி இருக்கும் போது ஏன் தவறாக நினைக்கிறாய்?
நார: (ஏளனச் சிரிப்புடன்) முருகா! என்னை ஏமாற்ற வேண்டாம். வள்ளி உண்மையாகவே வேடர்குலப் பெண்ணாக- ஒரு கீழ்சாதிப் பெண்ணாக இருந்திருந்தால், அவளை நீ திருமணம் செய்திருக்க மாட்டாய். தெய்வானையைப் போல வள்ளியும் தெய்வப்பெண்ணே திருமாலின் புத்திரியே! அவள் பூமியில் சிவமுனிவரிடம் தோன்றி, வேடர் குலத்தவரிடையே வளர்ந்தவள் என்ற கதை உலகறிந்ததுதானே!
முரு:பேதத்தை ஒழித்துச் சமத்துவத்தைநிலைநிறுத்துவதற்காகவே இத் திருவிளையாடலை நிகழ்த்தினேன்.
நார: சமத்துவத்தை உயர்த்த வேண்டுமானால், உண்மையில் ஓர் அசல் வேடர் குலப் பெண்ணையே திருமணம் புரிந்திருக்க வேண்டும். தெய்வப் பெண்ணைப் பூலோகத்துக்கனுப்பி வேடர்கள் மத்தியில் வளரச் செய்து, அவளைத் திருமணம் செய்வதில் என்ன சமத்துவம் இருக்கிறது? போலிச் சமத்துவம்
முரு:(தடுமாற்றத்துடன்) என்ன நாரதரே!வேடிக்கை செய்வதுதான் உனது வழக்கம். ஆனால், இன்ற வலுச்சண்டைக்கு வருகிறீரே! பிறப்பினால் உயர்வென்றும் தாழ்வென்றம் இல்லை. எல்லா உயிர்களும் ஒன்றே! அப்படி இருக்கும்போது வேடர் குலம் என்றம் வேதியர் குலம் என்றும் பேதங்கள் கற்பிக்கலாமா?
நார: சண்முகா! என்னை மன்னித்தருள வேண்டும். பூலோகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கியுள்ளது. அக்கிரமம் தாண்டவமாடுகின்றது! உங்களுடைய அடியார்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு திருக்கூட்டம் செய்யும் அட்டூழியங்களை நேரில்பார்த்துவருகிறேன். அந்த வயிற்றெரிச்சலில் பேசிவிட்டேன்.

Page 5
கந்தண் கருனை, 6 தெய்: வயிற்றெரிச்சலைக் கொட்டித்தீர்க்க நாங்கள்தானா அகப்பட்டோம்? நார: தேவி, பொறுத்தருள்க! முருகனுடைய பெயரைக்களங்கப்படுத்துகிற காரியம் நடைபெறுகிறது அங்கே! முருகனே தலையிட்டுப் பரிகாரம் தேடவேண்டும். அதனால்தான் இங்கு வந்தேன்.
முரு:பூலோகத்தில் என்ன நடக்கிறதுநாரதரே! நார: வேலவா! வேதம் முழுதும் அறிந்தவன் நீ. அதை உன் தந்தைக்கு உபதேசம் செய்து ஞானபண்டிதன் என்று பெயரும் பெற்றவன். ஆனால் உனக்குப் பூலோக வேதம் தெரியாது. அங்கே பேதங்கள் பெருகிவிட்டன. உலகம் உய்ய உழைக்கும் உத்தமர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டிப்பிழைப்பவர்கள்,தங்களைத்தாங்களே, உயர்சாதியினர் என்று கூறிக் கொண்டு,உண்டுகொழுத்து வாழ்கிறார்கள்: திமிர் பிடித்துத் திரிகிறார்கள். உண்மையான உழைப்பாளிகள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். நசுக்கப்படுகிறார்கள். அவர்களுக்குச் சமூகத்தில் உழைப்பதைத் தவிர வேறு உரிமையில்லை.
முரு. (ஆத்திரத்துடன்) எங்கே நடக்கிறது இதெல்லாம்? நார: "யாதும் ஊரே,யாவரும் கேளிர்","ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பன போன்ற உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் வாழ்ந்த தமிழர் மத்தியில்தான் இந்த அக்கிரமம் நடக்கின்றது. அருள் வேந்தன் இராவணேஸ்வரன் ஆண்ட இலங்காபுரியின்வடபகுதியில், யாழ்ப்பாணம் என்ற அசல் தமிழ் நாடு ஒன்றிருக்கிறது.
முரு:ஓ, தெரியுமே! என் கோயில்கள் நிறைய உண்டே அங்கு. நார: அந்தக் கோயில்களில் ஒன்றில் தான் இந்த அக்கிரமழ் தலைவிரித்தாடுகின்றது. கோவிலில் வழிபட வரும் உழைப்பாளிகளைஉண்மையான அடியார்களை உள்ளே செல்ல விடாது தடுத்து வைத்துள்ளார்கள். உள்ளே செல்ல முற்படுபவர்களைத் திமிர் பிடித்த சாதி வெறியர்கள் அடித்தும் உதைத்தும் தீப்பந்தத்தால் சுட்டுப் பொசுக்கியும் துன்புறுத்திவருகின்றார்கள்.
முரு: (கோபத்துடன்)எந்தக் கோயிலில் இத் திருவிளைாயடல் நடைபெறுகிறது?
நார: மாவிட்டபுரம் என்னும் திருத்தலத்தில்! முருகா,நீகுடிகொண்டிருக்கும் கோயிலில்தான்.
முரு:(ஆச்சரியம் பொங்க) என்கோயிலில்? நார:ஆம், முருகா!உன்கோயிலில்தான்மாவைக்கந்தன்ஆலயத்தில்தான்!

எண். கே. ரகுநாதன்,
தெய்: நாரதரே! கோயிலில் பூஜை நடக்கின்றதா? நார: பூஜையாவது, புனஸ்காரமாவது?கோயிற் கதவுகளை இழுத்துமுடி, பெரியபூட்டுப்போட்டுப்பூட்டிவைத்திருக்கிறார்கள். போதாததற்கு கோயிலைச் சுற்றிச் சண்டியர்களைக் குவித்து வைத்திருக்கின்றார்கள்.
முரு:வேதாகம முறைப்படி பூஜை நடக்கும் கோயிலாயிற்றே அது? நார: வேதமாவது, ஆகமமாவது! அதைத் தங்கள் அக்கிரமத்துக்குத் துணையாக வல்லவா வைத்திருக்கிறார்கள்.
தெய்: என்ன அநியாயம்! எனக்கு உடலெல்லாம் நடுங்குகின்றது! முரு:நாரதா, எனக்கு மூச்சுத் திணறுகின்றதே! நார: (வேடிக்கையாக) மூச்சுத் திணறாமல் என்ன செய்யும் முருகா? இருட்டறைக்குள் - மூலஸ்தானத்தக்குள் அல்லவா உன்னைப் பூட்டிவைத்திருக்கிறார்கள் உன் "பக்தர்கள்"
தெய். நாரதரே! இத்தனை அக்கிரமங்களும் நடக்க அங்கு ராஜாங்கமே இல்லையா?
நார: ராஜாங்கம் இருக்கிறது. ஆட்சியாளரே இது போன்ற சமூகக் குறைபாடுகளை ஒழிப்பதற்கு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
முரு:சட்டமா?எதற்குச் சட்டம்? நார: உன் அடியார்கள் உன் திருக்கோயிலுள் சென்று வணங்குவதற்குச் &F Lib z
முரு:(காதுகளைப் பொத்திக்கொண்டு) சிவ.சிவ. கோயிலுக்குச் சென்று வணங்குவதற்குச் சட்டமா? பூலோகத்தில் ஆத்ம நெறியே அழிந்துவிட்டதா?
தெய்தெய்வத்தை வணங்கக் கட்டளையா? நார:அவசரப்படுகிறீர்களே! தெய்வத்தை வணங்கச் சட்டமல்ல. வணங்கச் செல்பவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்கச் சட்டம்
தெய்வேடிக்கையாயிருக்கிறதே! தெய்வத்தை வணங்கச்செல்பவர்களைத் தடுப்பதற்கு ஒரு கூட்டம்
முரு: அவர்களைத் தண்டிப்பததற்கு ஒரு சட்டம் நார: அப்படி இருக்கிறது வேலவா, பூலோக வேதம்! தெய்: சீ, வெட்கமாயிருக்கிறதே! முரு: நாரதா! அண்மையில்தான் ஆட்சியாளர் இச்சட்டத்தைக் கொண்டுவந்தார்களோ?
நார: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டுவந்த சட்டம் இது

Page 6
கந்தள் கருனை, சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்று அதற்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள்.*
தெய்: அப்படியானால் இவ்வளவு காலமும் ஏன் இச் சட்டம் அமுல் படுத்தப்படவில்லை?
நார:யார் அமுல்படுத்துவது? சட்டத்தை அமுல்படுத்தவேண்டிய அரசாங்க அதிகாரிகளே சாதிவெறியர்களும்பிற்போக்குவாதிகளும்தானே! தங்களின் சுகபோகத்தைப் பாதிக்கும் சட்டத்தை அமுல்ப் படுத்த முட்டாள்களா அவர்கள்?
முரு; அப்படியானால் ஏன் இச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்? நார: பூலோகத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் ஒருவித மாய ஆட்சி நடைபெற்றுவருகிறது. சமூகத்தின் அடித்தட்டுமக்களுக்கும் சமத்துவம், சம அந்தஸ்து என்று சொல்லிக் கொண்டு, அவர்களைக் கண்ணாமூச்சி காட்டவல்லது இந்த அரசு முறை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளுக்காகக் கிளர்ந்தெழும்போது, அக் குறைகளைத் தீர்க்க முயல்வதாகப்பாசாங்கு காட்டிக்கொள்கிறது. ஆனால்நடைமுறையில் அது பிற்போக்கு வாதிகளையே பாதுகாக்கிறது. பல்லாண்டு காலமாகச் சாதிக் கொடுமைகளுக்காளாகி வந்த மக்கள், தங்கள் விமோசனத்துக்காகக் குரல் எழுப்பியபோது, சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்ற இச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இந் சட்டத்தின் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் பொது மயானங்களில் பிணத்தை எரிக்கவும், பொதுக் கிணறுகள், தேநீர்க்கடைகள் போன்றவற்றில் சரிசமமாக நடத்தப்படவும், ஆலயங்களுள் சென்று வழிபாடு செய்யவும் அவர்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்கவும் விதிசெய்யப்பட்டது. ஆனால் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
முரு:மயானங்களில், இறந்தவர்களின் பிணங்களை எரிப்பதற்குக் கூட இந்த மக்களுக்கு உரிமை கிடையாதா?
நார:கிடையாதுவேலவா!வில்லூன்றிஎன்றமயானத்தில், ஓர் உறவினரின் பிணத்தை எரிக்கச் சென்ற முதலி சின்னத்தம்பி என்பவனை அங்கேயே வைத்துத்துப்பாக்கியால் சுட்டுப்பிணமாக்கிவிட்டார்கள், பாதகர்கள்!
தெய்; என்ன கொடுமை! நார:(ஏளனச்சிரிப்புடன்) நீங்கள் கொடுமை என்கிறீர்கள்! செத்தபினத்தைச் சுட்டெரிக்கும் மண்ணுக்கே சாதி பார்க்கும் "மகத்தான காலாசாரம்" தேவி இது
முரு:இதுபோன்ற அக்கிரமச் செயல்கள் எவ்வளவு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனநாரதரே!
* 1958ம் ஆண்டளவில்
8

Kர். கே. ரகுநாதன்.
நார: பல்லாண்டு காலமாக, முரு: இப்போது மட்டும் அவர்களுக்கு எப்படி இந்த உணர்ச்சி ஏற்பட்டது? தங்கள் அடிமை விலங்கை அறுத்தெறிய அவர்கள் எப்படித்துணிந்தார்கள்? நார: கொடிய அரக்கன் சூரனைக்கொன்றொழித்த தங்களுக்கா நான் இதனைச் சொல்லவேண்டும்? அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் தர்மம் வீறுகொண்டெழுவது இயற்கை நியதிதானே முருகா! அதனடிப்படையில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களனைவரும் ஓரணியில் திரண்டு, தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கத் துணிந்துவிட்டார்கள்.
முரு:ஆம் நாரதரே! அடக்குமுறை ஒருபோதும் வெற்றிபெறமுடியாது. அதை உடைத்தெறியபாதிக்கப்பட்டவர்கள் அணிதிரளவே செய்வார்கள். அதுசரி, மாவிட்டபுரத்தில் இப்போ என்ன நடைபெறுகிறது?
நார:அராஜகம்நடைபெறுகிறது! அங்கே ஆலயமணி ஒலிப்பதுநின்றுவிட்டது. பூஜைகள் இல்லாதொழிந்துவிட்டன. பக்தர்கள் தங்கள் தெய்வத்தை வணங்க முடியாது திண்டாடுகிறார்கள்.
முரு: அவ்வளவுதூரம் அக்கிரமம் தலை தூக்கி விட்டதா? துஷடர்களின் அட்டகாசம் மேலோங்கிவிட்டதா?
நார: அட்டூழியங்களுக்கு மத்தியிலும் கோயிலை வணங்கச் செல்லும் அடியார்கள் பொறுமையாயிருக்கிறார்கள். ஆலய வாயிலிலே அமைதியாயிருந்து திருக்கதவுகள் திறப்பதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். பசிதாகத்தையும், கொடிய வெயிலையும் சகித்தக்கொண்டிருக்கிறார்கள். உனதுமுருக நாமத்தைப் பஜனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
முரு:அப்படியா நாரதரே! நாம் உடனே புறப்படவேண்டும். பூலோகம் சென்று எமது அடியார்களை ரகூஷித்து வரவேண்டும்!
நார: அப்படியே ஆகட்டும் முருகா! இதோ புறப்பட்டுவிட்டேன். தெய்: (முருகனிடம்) நாதா, நானும் உங்களுடன் வருகின்றேன். பூலோகத்தைப்பார்த்து வெகுநாளாகிவிட்டது. வள்ளியுமில்லாமல் என்னால் தனியே இருக்கவும் முடியாது.
முரு: தேவீ அக்கிரமம் தலை தூக்கியுள்ள இடத்துக்கு நீ வருவது நல்லதல்ல. பூலோகத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
தெய்வஸ்ளியைத்தனியேகலகப்பிரதேசத்துக்கு அனுப்பியுள்ளிர்கள்.நான் மட்டும் வரக்கூடாதா?அதுவும் உங்களுடன்.
நார:தேவீ அவள் வள்ளி. காட்டிலும், மேட்டிலும், குடிசையிலும் வாழ்ந்து பழகியவள். தாங்களோ தேவயானி. பெரிய இடத்துப் பெண். துன்பத்தை உங்களால் தாங்க முடியாது.
முரு:ஆம் தேவீ கலங்காதே! நாம் விரையில் திரும்பிவிடுவோம்!
(இருவரும் டங்என்று மறைகின்றனர்)

Page 7
கந்தள் கருணை,
đБTLđ: 2. பூலோகம் பாத்திரங்கள்: முருகன், நாரதர் (மனித உருவில்) (உஷத்காலம். கீரிமலையில் நீராடி, இடுப்பிலே வேட்டிக்கு மேலே ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு, வெடவெடக்கும் குளிரில் மாவிட்டபுரத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள் இருவரும்)
முரு: ஆகா! என்ன சுகம். என்ன ஹிதம் விடிகாலையில் இக் கங்கையின் ஸ்பரிஷம் உடலைச் சற்றே வருத்தினாலும், உள்ளத்துக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது நாரதரே! மனசு படிகம்போலத் தூய்மையாயி ருக்கிறது. புனித தீர்த்தமல்லவா?
நார: அளவுக்கு மிஞ்சிப் புகழாதீர்கள் முருகா! உங்கள் மனது தூய்மையானது. கங்கை ஒன்றையும் புனிதமாக்கவில்லை. ஹி..ஹி. (கேலியாகச் சிரிக்கிறார்)
முரு: நாரதரே! உனக்கு என்ன கோளாறு பிடித்துவிட்டதா? புனித கங்கையைப் போய் இப்படிக் கீழ்மையாகப் பேசுகிறீரே! கர்மபலனால் நகுலமுனிக்குக் கிடைத்த கீரிமுகத்தையே மாற்றிஜென்ம சாபல்யம் செய்த கங்கையாயிற்றே நாரதரே!
நார: புனித கங்கை நகுல முனியை ரட்சித்ததுடன் நின்று விட்டதா? அது வெறும் கட்டுக் கதை முருகா! பிறகு ஒரு புதுமையும் நடைபெறவில்லையே முருகா!
முரு: (கோபத்துடன்) என்ன சொல்கிறாய் நீ! புதுமையாயிருக்கிறதே நீ சொல்வதெல்லாம்.
நார:புதுமைதான் முருகா! காலம் காலமாய் அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள் மட்டுமல்லாது, துரந் தொலையிலிருந்தெல்லாம் வந்து இக் கங்கையில் நீராடுகிறார்களே, அவர்களின் மனம் ஒன்றும் சுத்தமாகவில்லையே! . தங்களில் ஒரு சாராரைத் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கிவைத்திருக்கிறார்களே! அவர்கள் பாடுபட்டு உழைப்பதால்தான் நாடுவாழ்கிறது. ஆனால் அவர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.
முரு:ஆச்சரியமாயிருக்கிறதே முருகா! நார: அனைவரும் ஆண்டவன் படைப்பே என்று சொல்வதில் ஒன்றும்
10
குறைச்சல் இல்லை. அந்த ஆண்டவனையே வணங்கவிடாமல் தடுத்து
வைத்திருக்கிறார்களே கொடியவர்கள்! அதுவும் உங்கள் திருக்கோயிலில்
முரு: எனக்கு உள்ளம் கொதிக்கிறது நாரதரே. பூலோகத்தில் அந்தளவு
தூரத்துக்குத் தர்மநெறி சீரழிந்துவிட்டதா?
நார: அதைத்தானே, இப்போ நேரில் பார்க்கப்போகிறோமே! இதோ ஆலய

ார். கே. ரகுநாதன். 11
வாசலுக்கு வந்து விட்டோம். இங்கு நடப்பதைக் கண்முன்னே காண்போமே.
őöTLőF: 3
மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முகப்பு.
* வெளிமண்டபத்துக்கும் உள்மண்டபத்துக்குமிடையில் உள்ள இரும்புக் கிராதியின் கதவு அடைக்கப்பட்டுத் தாழ்ப்பாள் ஒன்றினால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
* பூட்டிய கதவுக்குப் பக்கத்தில் கரிய திருமேனிகொண்ட நவீன சூரன் ஒருவன் நிற்கின்றான். வேட்டியைமடித்துக்கட்டி, அதற்கு மேலே ஒரு துண்டு. உச்சி பிளந்த தலைமுடி நெற்றியில் முக்கிற்றுவிபூதி.
* அவனுக்கு அக்கம்பக்கமாகச் சில குண்டர்கள். இரும்புக் கிராதிக்கு உள்ளேயும் குண்டர்கள்.
* மூலஸ்தானக் கதவு அடைக்கப்பட்டுள்ளது.
* வெளிமண்டபத்தையொட்டிய வெற்றுத் தரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சம்மணங்கட்டியிருந்துமுருக பஜனை செய்கிறார்கள்.
மாவிட்டபுர ஆலயத்துக்கு மனித உருவில் வந்த முருகனும் நாரதரும் வெளிமண்டபத்துக்கும் அப்பால் நின்று, அங்கே நடப்பவற்றை அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். வெளிமண்டபத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் பக்தர்கள முருகனை வேண்டிப்பஜனை செய்கின்றார்கள்)
பஜனை:
ஓம் முருகா, ஓம் முருகா, ஒம் முருகா, ஒம்! ஓம் முருகா, ஓம் முருகா, ஒம் முருகா, ஓம்!
காலமெல்லாம் கடிதுழைத்தெம் உடல்நலிகின்றோம்-எம் கால் வயிற்றுக் கஞ்சிக்காகத் துயர்வடைகின்றோம். -ஓம் முருகா

Page 8
கந்தர் கருணை.
உழைததுழைதது உருககுலைநதும மீட்சியில்லையே-நம் உழைப்பையெல்லாம் சுரண்டுவோர்க்கும் வீழ்ச்சி இல்லையே! -ஓம் முருகா
ஏழை சிந்தும் கண்ணிரை உன் கண் திறந்துபார் -நாம் வாழ உந்தன்வரமளித்தெம் துயர் இதனைத் தீர்! -ஓம் முருகா
சமத்துவத்தைப் பேணி வையம் ஓங்கி வளருது-இங்கே சாதி பேசிக் கோயில் வாசல் சாத்திக் கிடக்குது -ஓம் முருகா
தாள் பணிந்தோம் வேல் முருகா தயை புரிவாயே - திருத் தலம் திறந்துன்பக்தர் நமக் கருள்பொழிவாயே! -ஓம் முருகா
(மூன்று இளைஞர்கள் கோயிலுக்குச் சென்று வணங்குவதற்காக வாசலண்டை செல்கின்றார்கள்)
சூரன்: (அவர்களை மிறாய்த்துப்பார்த்தபடி) எங்கை போறியள்?
இளைஞன் 1:நாங்கள் கோயில் கும்பிடவந்தனாங்கள்.
சூரன்: உள்ளேபோகேலாது. வெளியாலை நிண்டு கும்பிடுங்கோ.
இளை 1: தெய்வச் சன்னதியிலை ஏனையா உள்ளே, வெளியே எண்டு பாக்கிறியள்?
சூரன்: எளிய சாதி உள்ளை போறதில்லை. வெளியாலை நிண்டுதான் கும்பிடோணும்.
இளை 2. சாதியை எழுதி நெத்தியிலை ஒட்டியிருக்குதோ?நீ என்ன சாதி எண்டு கண்டுபிடிக்கிறது?
12

ள்ை. கே. ரகுநாதர்.
சூரன்: என்னடா கதைக்கிறாய்? என்னை யாரெண்டு தெரியாதோடா? (கோபத்துடன்) போங்கடாஅங்காலை! அங்கை இருந்துபாடுறவங்களோடை போய்நீங்களுமிருந்துபாடுங்கோடா!
இளை 3: என்ன? மரியாதையில்லாமல் எடா, புடா எண்டு கதைக்கிறீர்? பெரிய படிப்பாளி எண்டு சொல்லுறாங்க . இது தானோ படிப்பின்ரை இலட்சணம்?மனிசக் குணத்தைக் கொஞ்சமும் காணேல்லையே..?
இளை2; சகல மணிசரும் ஆண்டவன் படைப்பே எண்டு சொல்லி வைச்சிருக்கிறாங்க. படிச்சமனுஷங்கள்.
சூரன்: கணக்கக் கதைக்காதையுங்கோ! வீண் தொந்தரவுதான் வரும். இளை 2: அதைத்தான் நாங்களும் ஒருக்கால் பாத்திட்டுப் போகவந்தனாங்கள்.
(சத்தியாக்கிரகம் இருந்தவர்களில் ஒருவர் ஓடிவந்து) "இங்காலை வாருங்கோ தம்பிமாரே! எங்களோடை வந்திருங்கோ!" என்று அழைத்துப் போகிறார்)
(துரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் முருகன் நாரதரைப்பார்த்து, அவர் வேளையிற்சொன்னசம்பவங்கள் கண்முன்னேநடைபெறுவதைக்கண்டு, வியப்போடு கண்ணைச் சிமிட்டுகிறார்)
(மேலும் மூன்றுநான்கு இளைஞர்கள்கோயில்வாசலண்டை செல்கிறார்கள்) சூரன்; எங்கை போறியள்? வந்தவர்கள்:(ஒருமித்த குரலில்)நாங்கள் கந்தனை வணங்க வந்தனாங்கள். சூரன்: வணங்குங்கோவன். வந்: நாங்கள் உள்ளை போய்க்கும்பிடப்போறம். சூரன்: உள்ளைபோகேலாது. வந் 1: ஏன் போகேலாது? சூரன்: பூட்டிக்கிடக்குது. வந்2: ஏன் பூட்டிவைச்சிருக்கிறியள்? சூரன்: அது. வந்து. கண்ட நிண்டசாதியளையும் உள்ளை விடேலாது. வந் 3: என்னையா கதைக்கிறியள்? எல்லாரையும் கடவுள்தானை படைச்சவர்?பிறகென்ன, கண்ட நிண்ட சாதிக்கதை?
சூரன்: அந்தக் கதை இந்தக் கதை ஒண்டும் வேண்டாம். போற இடத்தை போய் உங்கடை அலுவலைப்பாருங்கோ?
வந்3: எங்கடை அலுவல் இங்கைதான்! கந்தக் கடவுளைக்கும்பிடத்தான் வந்தனங்கள். நீங்கள் வழிமறிக்காதையுங்கோ!

Page 9
சூரன்: எங்கடை கோயில்அதைப் பூட்டுறதும் திறக்கிறதும் எங்கடை விருப்பம்
வந்4:உங்கடைகோயிலில்லை. இது கந்தசாமியின்ரை கோயில். அதைக்
கும்பிடுறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு. மறிக்கிறதுக்கு ஒருவருக்கும் உரிமை இல்லை.
சூரன்: என்ன கணக்கக் கதைக்கிறாய்?
வந்4:நீங்கள் விசர்க்கதையெல்லாம் கதைக்கிறியள். அதுக்குத்தான்நான் பதில் சொன்னனான்.
சூரன்: போதும், போ அங்காலை,
வந் 4: அங்காலை போகேல்லை. (ஆலய மூலஸ்தானத்தைக்காட்டி) இங்காலைதான்போகோனும்,
சூரன்: போ, பாப்பம்
வந்4:போகத்தான் போறம்!
(சற்றுத்தூரத்தில்நின்றகுண்டன்ஒருவன்மெல்லநகர்ந்துவந்து, சூரனாரின் காதுக்குள் ஏதோ இரகசியமாகச் சொல்கிறான்)
சூரன்: (ஆச்சரியம் மேலிட, வாதாடிய அந்த இளைஞனைப் பார்த்து) நீ, நிச்சாமத்துவிதானை வேலாயுதம்பிள்ளையின்ரை பெடியனெல்லே?
வந்4:ஓ! நான் அவற்றை மோன்தான்!
சூரன் சீ உனக்கு வெக்கமில்லையே?ஏன்இவங்களோடை கூடிக்கொண்டு வந்தனி?நீஎப்பவும் கோயிலுக்குள்ளை வரலாம் போகலாந்தானே!
வந்4:நான் மட்டும் வரேல்லை. இன்னும்கனபேர் வந்திருக்கிறம், நாங்கள் எல்லாரும் ஒரு இனம். ஒருவர்க்கம் உலகத்திலை நடக்கிறகொடுமைகள், அக்கிரமங்களை இல்லாமல்ச்செய்ய ஒண்டாய்ச் சேர்ந்திருக்கிறம். நாங்கள் எல்லாரும் கோயிலுக்கை ஒண்டாய் வந்துகும்பிடவேணும்.
சூரன்:ம். சேர்ந்து என்ன செய்யப் போறியள்?
வந்4:உலகம் ஊத்தையாய்ப்போச்சு. படிஞ்சதூசி ஒருக்காலும் தானாகப் போகாது. அதைத் தட்டித்தான் அப்புறப்படுத்த வேணும். அதைத்தான் செய்யப்போறம்!
சூரன்: சரி, போய்த்துடையுங்கோ
இருவர்: (சூரனின் நெஞ்சைச் சுட்டிக்காட்டி) முதல்லை இங்கை படிஞ்சிருக்கிற தூசியைத் துடைக்க வேணும். உன்ரை நெஞ்சிலை படிஞ்சிருக்கிறதுரசியை.
(சூரன் வாய் பேசாது அவர்களை நிமிர்ந்து பார்க்கிறான். அதற்கிடையில்
14

சத்தியாக்கிரகி ஒருவன் ஓடிவந்து அவர்களை அழைத்துச் செல்கிறான். அவர்களும் வேண்டா வெறுப்பாக அங்கு செல்கிறார்கள்)
(முருகனும் நாரதரும் கோயில் வாசலை நோக்கிவருகிறார்கள். அருகில் வந்ததும்)
சூரன்: எங்கை போறியள்? நார: நாங்கள் சுவாமி கும்பிட வந்தனாங்கள். உள்ளுக்கை போய்க் கும்பிடவேணும்!
சூரன்: உள்ளைபோகேலாது. இதிலைநிண்டு கும்பிடுங்கோ.இல்லாட்டி. நார: இல்லாட்டி? சூரன்: அங்கையிருந்து பசனை வைக்கினம். அவையோடை போயிருந்து நீங்களும் பசனைவையுங்கோ!
முரு: நாங்கள் பசனை வைக்க வரேல்லை. கந்தனைக் கும்பிடத்தான் வந்தனாங்கள். கதவைத் திறந்துநாங்கள் உள்ளை போக வழிவிடுங்கோ!
சூரன்: அப்படி விடேலாது. நார: ஏன் நந்தி மாதிரி வழிமறிச்சுக் கொண்டிருக்கிறியள்? சூரன். நளம்,பள்ளுகள் வந்தால் வழிமறிக்கத்தானே வேணும்! நார: நந்தனாருக்கு வழிமறிச்சதுபோல? சூரன்:ஓ! அந்தப்பறைக்கூட்டமும் உதுக்கை இருக்குதுகள். நார: அது, அந்தக் காலம்! நந்தனாரை வழிமறிச்சு, அவரை அக்கினி பகவானுக்குப் பலிகொடுத்திட்டுச் சிவலோகம் அனுப்பியாச் செண்டு கதை கட்டிவிட்டியள். இப்ப அப்படி நடக்காதெண்டு நினைச்சுக்கொள்ளுங்கோ!
சூரன்: என்ன, கனக்கக் கதைக்கிறாய்? நார: நீங்க முரட்டுக் கதை கதைச்சால், நாங்கள் அதுக்குப் பதில் சொல்லத்தானை வேணும். நந்தி மாதிரிநிக்காதீங்க, வழி விடுங்க!
சூரன்: வழி விடேலாது. நார: (முருகனைத் தொட்டுக் காட்டி)இவர் ஆரெண்டு தெரியுதே?இவர்தான் உள்ளே இருக்கிற கந்தன். அவரையே மறிச்சுவைச்சிருக்கிறீங்க.
சூரன்: ஹ. ஹ. ஹா கந்தன்! இந்தக் கந்தனுகள், வேலனுகள்தான் இப்ப கோயிலுக்கை போகத்துடிக்கினம். கந்தனாம், கந்தன்!
நார: அவர் குடியிருக்கிற கோயிலுக்கை அவர் போகத்தானை வேணும். தடுக்கிறதுக்கு நீயார்?
முரு: வழிவிடுங்கள்! நாங்கள் மட்டுமல்ல, இங்கே முருக நாமம் பாடிக்கொண்டிருக்கிற பக்தர்கள் அனைவரும் கந்தனை வழிபட

Page 10
கந்தர் கருனை, வழிவிடுங்கள்!
சூரன்: முடியாது. அங்காலே போங்கள்! நார:இந்த அக்கிரமத்தின் பலனை நீங்கள் அடையத்தான் போறியள்! சூரன்: என்ன செய்வியள்? (தள்ளி நிற்கும் குண்டர்களைக் கை தட்டி அழைக்கிறார்)
(அதற்குள்சத்தியாக்கிரகம்செய்துகொண்டிருந்த பக்தர்கள் சிலர் ஓடிவந்து அவர்களை அழைத்துச் செல்ல முற்படுகிறார்கள். முருகன், அவர்களை நோக்கிக் கை அசைத்து)
முரு: உங்கள் போராட்டம் வெல்லட்டும் ! கந்தன் உங்களுக்கு அருள்பாலிப்பான். நாம், இதோ போய்வருகிறோம்! (என்று சொல்லிவிட்டு, நாரதரை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு முன்னால் உள்ள பனங்கூடல் காணிக்குச் செல்கின்றார்)
dösTaf: 4. பாத்திரங்கள்:நாரதரும் முருகனும்,
நார: முருகா, பார்த்தீர்களா? இந்த நாரதன் சொன்னதைக் கண்முன்னே கண்டீர்கள்தானே!
முரு:ஆம், நாரதரே!யாவும் அறிந்தோம்! இந்தப்பக்தர்கள் சாந்திவழியிலே தமது கோரிக்கைக்காகப் போராடுகிறார்கள். இந்த மார்க்கம், ஒரு போதும் அவர்களுக்கு வெற்றியளிக்கப் போவதில்லை. நான் அவர்களுக்கு என் வேலைக் கொடுத்து அதன் மூலம் வெற்றியீட்ட அணுக்கிரகம் புரிகின்றேன். இதோ.
(தனது வலக்கரத்தை உயர்த்தி, மானசீகமாகத்தன்கை வேலைப்பெற்று, இரு கரங்களாலும் அதனைத் தன் பக்தர்களுக்குக் கொடுத்தருளி, ஆசீர்வதிக்கின்றார். அத்துடன் இருவரும் மறைகின்றார்கள்)
(திரை)
 


Page 11
தொடர்புகளுக்கு N. K. RAGUI 5. A., Piyaratna Dehiwala, Sri Lanka.

NATHAN
rama Road,