கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் ஒரு பெண்

Page 1

|-)|-■ :*(|-|- : .....
= (−).

Page 2

O O நான் ஒரு பெண் பெண்கள் தொடர்பான 'சரிநிகர் கட்டுரைகளின் தொகுப்பு (1990 - 1996)
பாரதி வெளியீட்டகம்

Page 3
தலைப்பு
முதற்பதிப்பு
வெளியிடுவோர் :
அச்சுப்பதிவு
அட்டை வடிவமைப்பு
விலை
நான் ஒரு பெண் (பெண்கள் தொடர்பான 'சரிநிகர்’
கட்டுரைகளின் தொகுப்பு)
26.05.1997
பாரதி வெளியீட்டகம்
டெக்னோ பிரின்ட்
88, ஆஸ்பத்திரி விதி, களுபோவில, தெகிவளை.
ஏ.எம்.றஷமி
ரூபா 100/=

சமர்ப்பணம்
கரவை ஏசிகந்தசாமி அறு/ர்களின் மனைவி
எங்கள் அம்மா
திருமதி வசந்தாதேவி அவர்களுக்கு

Page 4
பதிப்புரை
இது ஒரு தொகுப்புக்காக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பல்ல. மாறாக, சரிநிகர் பத்திரிகையில் அவ்வப்போது பெண்களின் பிரச்சினைகள் குறித்து பல ரால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற் றின் தொகுப்பு. பத்திரிகையின் பக்க நிலைமைகளுக்கேற்ப கட்டுரைகள் இங்கு எழுதப்பட்டிருக்கும் என்பது இயல்பான உண்மை. இத்னால் கட்டுரைகளில் போதாமையும், முழுமையின்மையும் விரவிக்கிடப்பது தவிர்க்க முடியாததே.
இது வரன்முறையான ஆய்வுநிலைப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இல்லாதிருப்பினும் தமிழில் 'பெண் ணியம்** தொடர்பான விழிப்புணர் வையும், சிந்தனைத் தேடல்களையும் தெளிவுகளையும் தரமுற்படுகிறது என்பதில் ஐயமில்லை.
பாரதி வெளியீட்டகம்
26.05.1997

உள்ளே.
நான் ஒரு பெண் (1994)
பெண்களும் குடும்ப உறவுகளும் (1998)
பெண், குடும்பம், குழந்தைகள் பிரச்சினைகள் குறித்த சில அவதானங்கள் (1995)
பால் வேறுபாடும் பெண்ணிலைவாதமும் (1990) உழைப்பு - பெண்கள் - கூலி (1990)
பெண்ணிலை: இரட்டைச்சுமை (1990)
பெண்களும் மனித உரிமையும் (1991)
பெண்கள் குழந்தைகள் உரிமையும் புதிய சட்டச்சீர்திருத்தமும் (1995)
தேசிய விடுதலைப் போரும் பெண்ணிலைவாதமும் (1991)
தேசிய விடுதலைப் போரும் துப்பாக்கிக் கலாசாரமும் (1991)
இனத்துவமும் பெண்களும் (1991)
விடுதலைக்குத் துப்பாக்கியை மட்டும் நம்பிப் பயனில்லை (1992)
யுத்தமும் பெண்களும் (1990)
தற்கொலைக் கொலையாளிகள் (1992)
கலாசாரத் தளையும் பெண்ணிலைவாதச் சவாலும் (1991)
கற்பென்று எதனைச் சொல்வீர், அது இல்லை கற்பு (1991)
கருத்தடை ஒரு உயிர்க்கொலையா ? (1992)
மகளே! நீ கடவுளின் பரிசு (1995)
பெண்னே! நீ தீண்டத்தகாதவள் (1995)
கணவனின் காலடியில் சொர்க்கம் (1995)
முற்பிறப்பின் பலனே பெண் பிறப்பு (1995)

Page 5

நான் ஒரு பெண்
நான் ஒரு பெண் மூலம்:ஜக்குலின் அன்கரின் தமிழில் : செல்லம்மா

Page 6

நான் ஒரு பெண்
நான் ஒரு பெண். நான் ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள். ஏனென்றால் நான் ஒரு பெண்.
பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள். என்னையும் என் போன்றவர்களையும் இந்தச் சமூகம் நோக்குகின்ற முறைக்கெதிராக குரல் எழுப்புமாறு நான் நிர்ப்பந்திக்கப்படுகிறேன். பெண்களை முழுமையாகவும், தனிநபராகவும், ஆண்கள் அனுபவிக்கும் முறைக்கெதிராகவும், நான் குரல் எழுப்புகிறேன். பெண்களைச் சிறுமைப் படுத்திப் பார்க்கும் முறை பெண்கள் கூட தம்மை அப்படிப் பார்க்கும் படி செய்து விடுகின்றது. ۔۔۔۔ நான் ஒரு பெண்; மற்றப் பெண்களையும் போலவே அறிவுள்ளவள். சிந்திக்கும் ஆற்றல் உள்ளவள், எனக்கென சொந்தமான புத்தியும் கொண்ட வள்; என்னுடைய சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஆண்களில் தங்கிநிற்பதற்கு நான் ஒன்றும் மூளை இல்லாதவளோ முட்டாள் பிரஜையோ அல்ல.
நான் உணர்வுபூர்வமாகவும் ஆனவள் மட்டுமல்ல எனக்கென எந்த யதார்த்த இலட்சியங்களை நான் உருவாக்கிக் கொள்கிறேனோ அவற்றையெல்லாம் அடையக் கூடியவளும் கூட. எனக்கும், என்போன்றவர்களுக்கும் உரித்தான உறுதியும், சக்தியும் ஒரு பெண் என்ற முறையில் என்னிடம் இருக்கின்றன. நானோ அல்லது மற்றப் பெண்களோ நம்பிக்கை இழந்த நிலையில் தன்னம் பிக்கை அற்றவர்களாய் சொந்தப் பாதுகாப்பிற்காகவோ, அல்லது சுயதேவை களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவோ குடிவெறியிலும் சிகரெட்
நான் ஒரு பெண் 3

Page 7
புகையிலும் மூழ்கின்ற இளம் ஆண்களின் கைகளைப் பற்றிக் கொள்ள விரும்புவதற்கு ஒன்றும் அழகான மூளை அற்ற பிராணிகள் அல்ல. அப்படியென்றால், பெண்கள் தொடர்ச்சியாக கீழ்த்தரமான முறையில் சிறுமைப்படுத்தப்பட்டும், வக்கிர மனோபாவத்துடனும் சித்திரிக்கப்பட்டும், பொதுசன தொடர்புச் சாதனங்களில் விளம்பரப்படுத்துவது ஏன்? நான் சினிமாவுக்குப் போகும் போது ஒவ்வொரு முறையும், அதில் காண்பிக்கப் படும் விளம்பரங்களில் பெண்கள் சித்திரிக்கப்படும் விதங்களைக் கண்டு என்னை நானே இறுகக் கட்டிக் கொள்வதும், பற்களை நறநறவென கடித்துக் கொள்வதும் அருவருப்படைவதும் ஏன்?
இவை போன்ற, பெண்களுக்கெதிரான மோசமான கருத்துக்களை விட்டு விடாது கட்டிக் காப்பாற்ற எமது சமூகம் வற்புறுத்துவது ஏன்? ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கின்ற உரிமைக்கான மதிப்பைப் படிப்படியாக அழித்து அவதூறு செய்யும் இவ்வாறான விளம்பரங்களை அரசாங்கம் அனுமதிப்பது ஏன்?
திரைகளிலும் பத்திரிகைகளிலும் இது போன்ற சித்திரிப்புகளை பார்க்கிற போதெல்லாம் பெண்களும் சரி, ஆண்களும் சரி ஒரே மாதிரியாக எவ்வித எதிர்ப்புணர்வுமின்றி அமைதியாக இருக்கிறார்களே ஏன்? நாம் பார்ப்பதை யெல்லாம் உண்மையென நம்புமளவிற்கு எமது மூளைகள் சலவை செய்யப் பட்டு விட்டதனாலா? எனவே அவற்றைப் பற்றிக் கதைப்பதில் அர்த்தம் இல்லை என்பதனHலா?
நான் ஒரு பெண். ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்.
நான் தகுதியும், சயமரியாதையும் எனக்குரிய பெருமையையும் மதிப்பை யையும் கொண்ட ஒரு மனித ஜீவி. அப்படியெனில் என்மீதும் என் போன்ற வர்கள் மீதும் ஆண்கள் தொடர்ச்சியாக ஓநாய்கள் போல் சீழ்க்கையடிப்பதும், ஏளனமாகச் சிரிப்பதும், இகழ்ச்சியுடன் பேசுவதும் ஏன்? மிருகங்களுக்கு மட்டுமே செய்யக்கூடிய பாணியிலான தொல்லைகளை அவர்கள் தொடர்ந் தும் எமக்குத் தருவது ஏன்?
பாலியல் தொல்லைகள் அவை எந்த வடிவில் வந்தாலும் கூட பெண்களை மிக ஆழமாகச் சிறுமைப்படுத்துகின்ற, இழிவுபடுத்துகின்ற தன்மையையே வெளிப்படுத்துகின்றன. மெல்லிய உடலமைப்பும், கருணையும், அழகும் உடைய ஆண்களின் பாவனைப் பொருட்களாக, அவர்களுக்கு மகிழ்வூட்டும் பொருட்களாக இருக்க வேண்டியவர்களே பெண்கள் என்ற கண்ணோட்
டத்திலிருந்தே இப்போக்கு எழுகிறது.
4 நான் ஒரு பெண்

பெண்கள் உடமை கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும், பின் தேவையற்ற போது வீசி விடுவதற்குமான பாலியல் பொருட்கள் மட்டுமே. இவற்றை உடலியல்ரீதியாக அடையமுடியாது போகின்ற போது பெண்களை தங்கள் மனம்போன போக்கில் எல்லாம் கேளிக்கை செய்கின்றார்கள்; தங்களுக்கு அடிமைப்பட்டுப் போக ஒருத்தி வரும் வரை இவ்வாறு மனத்தளவில் அனுபவிப்பதற்கும், காதலிப்பதற்கும், மற்றப் பெண்களைப் போலவே நானும் ஒன்றும் இறைச்சித் துண்டல்ல. என்னை அடிமையாக்கி அவர்களின் பரந்த எதிர்பார்ப்புகளை வரிசையாகத் திருப்தி செய்த பிறகு, கழித்து விடுவதற்கும் நான் ஒன்றும் இறைச்சித் துண்டல்ல.
நான் ஒரு பெண்.
அதற்காகப் பெருமைப்படுகின்ற ஒருத்தி. உலகம் எனது அழகை வரைவிலக்கணப்படுத்தியபடி அல்லாமல் எனது வரைவிலக்கணப்படி நான் அழகான பெண் . அதற்காகப் பெருமைப் படுகிறவள். என்னுடைய உடற்பலத்தில் என்னுடைய சகிப்புத் தன்மையில் எனது விடா முயற்சியில் எனக்குள்ளேயே ஒரு பெண்ணாக இருப்பதில் இருக்கின்றது. என்னுடைய அழகு, என்னுடைய முழுமையும் பெண்ணாக இருப்பதிலேயே என் அழகு இருக்கிறது. நான் பார்க்கும், அலங்கரிக்கும், நடக்கும் போக்குகளில் இது ஒன்றும் தங்கியிருக்கவில்லை. அப்படியானால் பெண்களை நீச்சலுடையில் அணிவகுக்க வைக்கின்ற வக்கிரமான அழிவு நடவடிக்கைகளில் பெண்களை ஈடுபடுத்தி, அவர்கள் அழகாகவும் மெலிந்த உடல்வாகு உடையவர்களாகவும் இருக்கிறார்களா என்று இன்றைய பெரிய விமான சேவையாளர்கள் எல்லாம் பரீட்சித்துப் பார்ப்பது எதற்காக? இந்த வகையான முறை கெட்ட செயல்களுக்கெல்லாம் பெண்கள் தம்மை ஈடுபடுத்த அனுமதிப்பது ஏன்? பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் வேண்டு மாயின் முக்கியமாக வழவழப்பான அழகான ஒடுங்கிய கவர்ச்சிகரமான உடல் அமைப்புகளைப் பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுபவர் களின் முகங்களில் பெண்கள் காறித்துப்பாதது ஏன்? இவைகள் எல்லாம் ஒருவகைப் பாலியல் சுரண்டல்களோ என பெண்கள் இன் னமும் உணராமல் இருப்பது ஏன்? பெண்களின் முக்கியத்துவமும், ஆளுமை யும் பார்வையிலேயே கணிப்பிடப்படுகின்றன. அவளும் தனக்கான கணிப் பீட்டை மற்றவர்கள் பார்க்கும் முறையிலேயே செய்து கொள்கிறாளே ஏன்?
நான் ஒரு பெண். ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்.
நான் ஒரு பெண் 5

Page 8
மற்றெல்லாப் பெண்களைப் போலவே நானும் எனது உடலுக்காகப் பெரு மைப்படுகிறேன். ஏனென்றால் என் உடல் ஆண்களுடையதில் இருந்து வித்தியாசமானதாயும் தனித்துவமுடையதாயும் இருக்கிறது. மற்றப் பெண் களைப் போலவே நானும் ஒரு பெண்ணாயிருப்பதற்கான எனது இயற்பண்பு களுக்காகப் பெருமைப்படுகிறேன். எனது பெண்மைக்காகவும், அதன் பாலியற் தன்மைக்காகவும் கூட. அப்படிப் பெருமைப்படுவதற்கான சகல உரிமைகளும் எனக்கும் இருக்கின்றன. நாங்கள் ஆடைகளை அணிவதும், அலங்காரப்படுத்துவதும், தலைவாருவ தும் நாங்கள் எங்களுக்காகச் செய்பவை. மற்றவர்களின் கேடு கெட்ட மகிழ்ச்சிக்காக அல்ல. ஏனெனில் நாங்கள் நாங்களாகவும் பெண்களாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறோம். எனவே ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்ற போதெல்லாம், அவள் கவர்ச்சிகரமாகவும் உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் உடையணிந்திருந்ததே அதற்குக் காரணம்; எனவே அவளுக்கு அது தகும் என்று இன்னமும் இச்சமூகம் விடாப்பிடியாக கூறி வருவது ஏன்? இக் குற்றச் சாட்டையே பாலியல் பலாத்காரம் செய்யும் கயவர்களும் பெண்கள் மீது சுமத்துவது ஏன்? எட்டு வயதுப் பெண்பிள்ளை மிகவும் கடுமையான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்ற வேளைகளில் கூட ஏனைய பெண்களும் இக்குற்றச்சாட்டை நம்புவது ஏன்? ஆண்கள் கவர்ச்சியாக ஆடையணிந்து அலங்கரித்துச் சென்றால் குற்றம் சாட்டப்படுகின்றார்களா? அல்ல; அவன் அப்படி அழகாக இருந்து கொண்டு பாலியல் தேவைகளுக்காக அழைக்கும்போது குற்றம் சாட்டப்படுகின்றானா? நான் நினைக்கவில்லை? அப்படியானால் அவர்களுக்கெதிராக நடாத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு அவர்களே பழிகாரர்களாக்கப்படுவது ஏன்? இந்தப் பாலியல் பலாத்காரம் அவர்களை நாதியற்றவர்களாய் குற்றவாளிகளாய் குறுகிப் போக வைப்பது ஏன்? இந்தச் சமூகப் பெண்களைப் பாரபட்சமாக நடாத்துவதால் அல்லாமல் வேறு எதனால் இவையெல்லாம் நடக்கின்றன. நான் ஒரு பெண். ஒரு பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
இந்த உலகம் என்னைச் சுரண்டியும் மோசடி செய்தும், சிறுமைப்படுத்தியும் என்னை ஒரு காட்சிப் பொருளாக குறைத்து அவமதித்தும் நடாத்தினாலும் கூட நான் நானாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.
6 நான் ஒரு பெண்

பெண்களும் குடும்ப உறவுகளும்
பெண்களும் குடும்ப உறவுகளும் இராசம்மா அநாமிகா
பெண், குடும்பம், குழந்தைகள் பிரச்சினைகள் குறித்த சில அவதானங்கள்
ஒளவை

Page 9

பெண்களும் குடும்ப உறவுகளும்
எமது தமிழ்ச் சூழலில் பெரும்பாலும் 99% வீதமானவர்கள் நிலவுகிற ஆண் - பெண் அசமத்துவ நிலையை கேள்விக்குட்படுத்தாமல் இருப்பது என்பது ஆச்சரியமாகவே உள்ளது. தமிழ்ச்சூழலில் மிகக் குறைந்தளவில் பெண்ணிலை வாதிகள் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் சீதனம், சமனற்ற சம்பளம், வேலைவாய்ப்பு, உயர்கல்வி, பாலியல் தொல்லை எனக் குறிப்பிட்ட சில விடயங்களையே கவனத்திற்கெடுத்து விவாதிக்கிறார்கள். ஒருபுறம் இந்த அசமத்துவ நிலை என்றென்றும் பெண்கள் முகம் கொடுத்துவரும் பிரச்சினை கள், என்றபோதிலும் அவை மட்டுமே பெண்களது பிரச்சினைகள் அல்ல. அதற்கு மேலாக பல விடயங்களில் குறிப்பாக குடும்பம் (Family), பால் வேறுபாடு (Gender) தாய்மை (Motherhood) பாலியல் உறவு (Sexuality) போன்ற விடயங்களை முழுமையாக ஆய்வுசெய்து அவற்றின் அசமத்துவநிலை, ஐதீக பலம், சமூக கருத்தியல்கள் செலுத்தும் அழுத்தங்கள் என்பனவற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு பெண் நிச்சயமாக பெண் ணிலைவாதியாக இருக்க முடியாது. அதாவது சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் குடும்பம், பால் வேறுபாடு, தாய்மை, பாலியல் உறவு என்பனவற்றை எவ்வாறு முகம் கொடுக்கிறாள். அவற்றின் மீது சமூக கருத்தியல்கள் (கலை, இலக்கியம், கலாசாரபண்பாடு, மதம், ஆணாதிக்கம்) எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின் றன. அவற்றுள் பெண்கள் எவ்வாறு மூழ்கிப் போகிறார்கள் போன்ற முக்கிய விடயங்களை ஆராயாமல் ஆண் - பெண் அசமத்துவநிலையைப் புரிந்து கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல அவை மீண்டும் பெண்களை கீழ்ப்படி விற்கே இட்டுச் செல்லும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
முதலில் குடும்பம் என்ற பதம் என்ன வரையறையைக் கொண்டிருந்தது, தற்போது என்ன வரையறையைக் கொண்டிருக்கிறது என நோக்குவோமாயின் குடும்பம் என்ற பதம் எவர்களை உள்ளடக்குகிறது என்பது கூட காலப் போக்கில் மாற்றமடைந்தே வந்துள்ளது என்பதனைப் புரிந்து கொள்ள (ptquqlub. Jeanillouis Flandrin GT6TUGAJ France Dictionaryu9l6) (5GELðULò GT6TAD
நான் ஒரு பெண் 9

Page 10
பதம் 16, 17, 18ம் நூற்றாண்டுகளில் இரத்த உறவு சேர்ந்து வாழ்தல் ஆகிய இரண்டு வேறுபட்ட விடயங்களை குறிக்கவே பயன்பட்டது எனவும், அரிதாக சில வேளைகளில் இரத்த உறவு அல்லது திருமணத்தால் பிணைக்கப்படாத ஒரே வீட்டில் வசிப்பவரை குறிப்பதாகப் பயன்பட்டது எனவும், 17ம் நூற்றாண்டில் வாழும் அந்த வீட்டு ஆணின் தலைமையின் கீழ் வசிக்கும் அனைவருமே (Wife, Baby, Servant, Domestics) குடும்பம் என்ற பதத்திற்குள் உள்ளடக்கப்பட்டதாகவும், அக்காலத்தில் இதுவே முதன்மையான அர்த்தமாக இருந்தது எனவும் கூறுகின்றார். 18ம் நூற்றாண்டில் இது ஒரே வீட்டில் வாழும் இரத்த உறவினரை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது. 1869ல் குடும்பம் என்பது ஒரே இரத்த உறவைக் கொண்ட ஒரே வதிவிடத்தைக் கொண்ட குறிப்பாக தாய், தந்தை, குழந்தைகள் என்பவர்களை மட்டுமே கொண்டதாக இந்த வரையறை மாறிவிட்டது எனவும் கூறுகிறார். குறிப்பிட்ட ஒரே காலத்தில் ஒரே சமூகத்தின் உள்ளேயே வெவ்வேறு வர்க்கங்களின் மத்தியில் குடும்பம் என்பது வேறுபட்ட அர்த்தங்களைக் கொண்டதாக விளங்கியது. 16ம், 17ம் நூற்றாண்டில் பிரபுக்களதும் விவசாயிகளதும் குடும்பங்களிடை யிலும், கைத்தொழில் புரட்சியின் ஆரம்ப காலத்தில் நிலவிய தொழிலாளவர் க்க குடும்பத்திற்கும் 19ம் நூற்றாண்டு நடுப்பகுதியில் வாழ்ந்த முதலாளி வர்க்க குடும்பத்திற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படவே செய்தது. இக் குடும் பங்களுக்குள் பாலுறவு, சொத்துறவு வாரிசு என்பவற்றிலும் வேறுபாடு காணப்பட்டது. நவீன காலமாகிய 20ம் நூற்றாண்டு குடும்பம் என்ற பதம் திருமணமாதல், பெற்றோராதல், ஒரேவதிவிடத்தை கொண்டிருத்தல் (தாய், தந்தை, குழந்தை) என நவீன வரையறையைக் கொண்டிருந்தாலும் எமது சமூகத்தில் பல் வேறுபட்ட வடிவங்களில் குடும்ப உறவுகள் காணப்படவே செய்கிறது. இவர்களை வரையறுப்பதில் ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. (அட்டவணையைப் பார்க்கவும்)
இந்த அட்டவணையைப் பார்க்கும் போது குடும்பம் என்பதை இன்று வரையறுப்பதில் உள்ள சிக்கலைப் புரிந்து கொள்ளக் கூடியதாய் உள்ளது. இந்த மாதிரியான உறவுகளை குறைந்தளவில் நமது சமூகத்தில் பார்க்க கூடியதாயுள்ளது. ஆனால் சமூக நியமமான (திருமணமாதல், பெற்றோராதல், ஒரே வதிவிடம்) என்பதனை கருத்திற்கெடுக்கும் போது இவர்களை வரை யறுப்பதில் முடிவு காண முடியாதவர்களாகவே உள்ளோம். ஆகவே சமூகத் தில் நியமமாக எடுத்துக் கொள்ளப்பட்ட வரையறை சரிதானா என்பது
10 நான் ஒரு பெண்

திருமணம் பெற்றோராதல் ஒரேவதிவிடம் அர்த்தம்
ஆம் ஆம் ஆம் முழுமையான கருக் குடும்பம்
ஆம் ஆம் இல்லை கணவன், மனைவி தற்காலிகமா
கப் பிரிந்து வாழுதல்
ஆம் இல்லை ஆம் குழந்தையில்லாத திருமணமான
வர்கள்
ஆம் இல்லை இல்லை பெயரளவில் திருமணம்
இல்லை ஆம் இல்லை சமூக வரையறையை
மீறியவர்கள்
இல்லை ஆம் ஆம் திருமணமாகாத, ஒரேவதிவிடம்
கொண்ட பெற்றோர்
இல்லை இல்லை ஆம் ஒன்றாக வாழ்பவர்கள்
சங்கடத்திற்குரியதாகவே உள்ளது. இவற்றைப் பார்க்கும் போது திருமணம் குடும்பம் என்ற வரையறையெல்லாம் நெகிழ்வுநிலை நோக்கி அதாவது காலச்சூழலுக்கு ஏற்ப இன்றுவரை மாற்றமடைந்து வருவதைக் காணக் கூடியதாய் உள்ளது. இவ்வாறு பார்க்கும் போது குடும்பம் என்ற நிறுவனம் எல்லா இடங்களிலும், எல்லா சமூகங்களிலும் ஒரே வரையறையை உடைய இயற்கையான நிறுவனமல்ல என்பது தெட்டத் தெளிவாகின்றது. இதனை மனித சமுதாயத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இன்னும் விரிவான விளக்கத்தைப் பெறுவதுடன் குடும்ப நிறுவனம் எப்படியெல்லாம் கற்பனை பண்ண முடியாதளவிற்கு மாற்றத்திற்கு உள்ளாகி வந்துள்ளது என்பதையும் அறிய முடியும். இதனை 'குடும்பம் - அரசு தனிச் சொத்து' என்ற நூலின் மூலம் மனிதசமூக வரலாற்றுப் பரிணாமத்தின் ஒரு வடிவத்தைப் பார்ப்போம்.
'குடும்பம் அரசு - தனிச்சொத்து' என்ற நூலில் எங்கெல்ஸ் வரலாற்றுக் காலகட்டத்தை மூன்றாகப் பிரித்து நோக்குகின்றார் அவை
1. காட்டுமிராண்டிக் காலம் 11. அநாகரீகக் காலம் 111. நாகரீககாலம் என்பவையாகும்.
காட்டுமிராண்டிக் காலத்தில் மனிதர்கள் விலங்குகள் போல் இருந்தார்கள். வேட்டையாடி உணவு சேர்த்து வந்துள்ளார்கள்.
நான் ஒரு பெண் 11

Page 11
இக்கால கட்டத்தை 'ஆதிகம்யூன்' எனவும் அழைப்பர். ஏனெனில் வர்க்கம், பால் என்ற பிரிவினையோ, உழைப்பு பிரிவினையோ இருக்கவில்லை. தாய் வழிச்சமூகமாகவே இருந்தது. அதாவது பெண்கள் எந்தவித அடக்கு முறை களுக்கும் உட்படாது சுதந்திரமான மனித ஜீவியாக வாழ்ந்த காலகட்டம் இது வேயாகும். இக்காலத்தில் பெண்ணை வைத்தே குழந்தையை இனம்கண்டனர்.
இதனை அடுத்து அநாகரீக காலத்தில் ஒரு புறம் மந்தைமேய்ப்பு, விவசாயம் என விரிவடைய மறுபுறம் வேட்டையாடுவதற்கு தூர இடங்களுக்கு போக வேண்டி ஏற்பட்டது. இதனால் பெண்கள் குழந்தை பராமரிப்பு என வீட்டோடு தங்க ஆண்கள் உணவு தேடுபவராக வெளியில் செல்ல நேர்கிறது. இக்கால கட்டத்தில் சில இடங்களில் நிலைமை இவ்வாறும், வேறு சில இடங்களில் பெண்கள் வேட்டையாடச் சென்று கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து நாகரீக காலத்தில் ஆண்களே உணவு தேடுபவராகவும், அதனால் சொத்து செல்வம் என இவர்களிடம் குவியத் தொடங்கியபோது, இந்தச் சொத்துக்களுக்கு உரித்துடையவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகின்றது. அது தமது வாரிசுக்கே என கோரப்படுகின்றது. இதன் போதே தாய்வழி சமூகம் வீழ்ச்சியடைந்து தந்தைவழி சமூகம் தோற்றம் பெற்றது எனலாம். இந்த வீழ்ச்சியே பெண்களுடைய வரலாற்றுகதியில் ஏற்பட்ட தோல்வி என்றால் மிகையாகாது. இந்த கால கட்டத்தை வெறும் வார்த்தையினால் விளக்கிக் கூறிவிடமுடியாது. ஏனெனில் இந்த தந்தை வழிசமூகம் என்பது கடுமையான போராட்டத்தினூடே வந்திருக்க முடியும். இந்த வரலாற்று ரீதியான தோல் வியே பெண்களை பாலியல் உறவுரீதியில் (Sexuality) பால் வேறுபாடு (Gender) ஒரு தார ஒருபுருஷ குடும்பம் (Monogomy), இரண்டாம் பட்ச கீழ்ப்படிவு நிலை (Sobortionation) போன்றவற்றின் தோற்றத்திற்கு மூலமாய் இருந்தது என்றால் பொருத்தமானதே. இவ்வாறு தந்தை வழிசமூகமே குடும்பத்திற்கு தோற்றுவாயாக அமைந்தது போல் தனிச் சொத்துடமை கருக்குடும்ப நிலைக்கு(Nuclearfamily) வடிகாலாய் இட்டுச் சென்றது என ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். இவ்வாறு தோற்றம் பெற்ற குடும்பமே ஆரம்பத்தில் உற்பத்தியலகாக இருந்தது எனவும் கூறுவர். அதாவது உற்பத்தியானது வீட்டை மையமாக வைத்தே இருந்தது. இதன் போது பெண்களும் நேரடியாகவே உற்பத்தியில் மந்தை மேய்ப்பு, விவசாயம் போன்றவற்றில் பங்கு கொண்டார்கள், பின்னர் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தொழிநுட்பசாதனங்கள் பாரியளவில் வளர்ச்சியடைய உற்பத்தியானது வீட்டிற்கு வெளியே நடைபெறத் தொடங்கியது. இதன் போதே வேலை பிரிவினை (உழைப்பு பிரிவினை) ஏற்பட பெண்கள் சொத்து, வாரிசு என வீட்டோடு கட்டப்பட்டார்கள். இதனால் குடும்ப நிறுவனமானது நுகர்வலகாக மாற்றமடைந்தது எனவும் கூறுவர்.
12 நான் ஒரு பெண்

எனவே ஒட்டுமொத்தமாக குடும்ப நிறுவனம் என்பதை தற்போதைய நிலையில் வைத்தும், வரலாற்றுப் போக்கை வைத்தும் நோக்கும்போது ஒரு தெளிவான முடிவிற்கு வரக்கூடியதாய் உள்ளது. அஃதே குடும்ப நிறுவனம் என்பது நிலையானதோ, இயற்கையானதோ அல்ல. காலத்திற்கு ஏற்ப இன்று வரை மாற்றமடைந்துவரும் ஒரு நிறுவனம் என்பதே பொருத்தமானதாகும். குடும்பம் புனிதமானதா? என்ற கேள்வியைத் தொடுப்போமாயின் அதன் உள்ளார்ந்த அம்சங்களை விரிவாக பரிசீலிக்கும் போதே தெளிவான முடிவிற்கு வரமுடியும். ஆனால் எமது தமிழ்ச் சமுதாயத்தில் குடும்பம் என்பது புனிதமானது என்றும் , பெண் திருமணமாகி, குடும் பத்திற்குள் சென்று வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் போதே நிறைவு பெறுகிறாள் என சமூக கருத்தியல்கள் பலமாக அழுத்தம் கொடுத்து அவளை அதற்குள்ளேயே அமிழ்த்தி விடுகிறது. அவளும் எவ்வித கேள்வியும் எழுப்பாது குடும்ப நிறுவனத்தினுள் சென்று ஒருவித சமூக அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவளாக திருப்தியடைகிறாள். ' புருஷன் மனைவி உற்வுதான் புனிதமானது' என்ற சினிமா பாடல் தொட்டு வெகுஜன தொடர்பு சாதனங்கள் அனைத்துமே இந்த சமூக கருத்தியலின் பலத்தையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. இவை யாவும் பொய்மைவாதமே என்பதை குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரத்தையும் அங்கு பெண்ணின் பங்களிப்பையும் முழுமையாகப் பரிசீலிக்கும் போதே புரிந்து கொள்ளலாம்.
குடும்ப உறவுகள் என்பதை எங்கெல்ஸ் பின்வருமாறு மேற்கோள் காட்டு கிறார். "தந்தை, தாய், குழந்தை, சகோதரன், சகோதரி எனும் சொற்கள் வெறும் மரியாதையைக் குறிக்கின்ற பட்டங்கள் அல்ல. அவை முற்றிலும் திட்டவட்ட மான மிகவும் கூறான பரஸ்பரக் கடமைகளைத் தாங்கியுள்ளன', அஃது எமது சமூகத்தில் வெறும் பாசப்பிணைப்புகளை கொண்டது போல் தோற்றமளிப்பது கானல் நீர் போன்றதேயாகும். இது ஒர் அதிகார படிநிலைவரிசையை தாங்கியுள்ளது. அதாவது குடும்ப நிறுவனம் என்பது அதிகாரத்தினாலும், திட்டவட்டமான கடமைகளினாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு உறவுநிலையே என்றால் மிகையாகாது.
இன்று எமது தமிழ்ச் சமூகத்தில் திருமணம் எனும் போது ஒரு சராசரி ஆண் பெண்ணிடமிருந்து எவற்றை எதிர்பார்க்கிறார் எனப் பார்த்தால் மணப் பெண்ணுடன் கொண்டுவரப்படும் சீதனம், (வீடு, பணம், நகை) அடுத்து அழகானவளாய் இருக்க வேண்டும். சமையல் செய்யக்கூடியவளாகவும், வீட்டைப் பொறுப்பாக பராமரிக்கக் கூடியவளாகவும் , சொத்துக்களை பாதுகாப்பவளாகவும், ஆணுக்கு வாரிசைப் பெற்றுக் கொடுப்பவளாகவும் இவற்றுடன் பொருளாதார வருமானத்தைப் பெற்றுத்தரக் கூடியவளாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். இவற்றுடன் சாதக
நான் ஒரு பெண் 13

Page 12
பொருத்தம், சாதியம், சமயம், குடும்பநிலை (அந்தஸ்து) போன்ற யாவுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இங்கு அதாவது தமிழ்ச் சமூகத்தில் திருமணத்தின்போது ஒரு பெண்ணுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை. மாறாக அவள் தனது விருப்பத்தை (எதிர்பார்ப்பை) தெரிவிக்கும்போது அவளைச் சர்வாதிகாரி, அடங்காதவள், குடும்பத்திற்கு பொருத்தமற்றவள் எனப் பல அர்த்தங்களை சமூகம் கற்பித்து விடுகிறது. இதனால் பல பெண்கள் தம்முடைய எதிர்பார்ப்புக் களை நசுக்கிக்கொண்டே திருமண பந்தத்தின் மூலம் குடும்ப நிறுவனத்திற்குள் நுழைகின்றனர். குடும்பம் என்ற நிறுவனத்தில் பெண்ணின் வேலைப்பிரிவினையைப் பற்றி பார்ப்போமாயின், திருமணத்தின் பின் பெண் சமையல், வீட்டுப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என வீட்டு வேலைகளுடன் வருமானம் தேடித்தருபவ ளாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இங்கு அதாவது இந்த குடும்ப நிறுவனத்தில் பெண்களுடைய வீட்டு வேலைகள் என்பது குறித்து ஆண்கள் எதுவித அக்கறையும் செலுத்துவதில்லை. அது பெண்ணுடைய கடைமை என்பது போலவே உணர்கிறார்கள். வீட்டுவேலைகள் என்பது ஒருவகை உழைப்பு என்ற மதிப்பீடு ஆண்கள் மனதில் எழுவதேயில்லை. அந்தளவிற்கு சமூகக் கருத்தியல்கள் ஆணையும், பெண்ணையும் பாகுபாடுகாட்டி கருத்துப் பலத்தை உருவாக்கியுள்ளது. இதனால் வீட்டு வேலைகள் குறித்து பெண் சலிப்புற்றாலும் கூட உள்ளார்ந்த புரிதலை எட்டுவதேயில்லை. அதாவது கீழ்ப்படிவிற்கும் வேலைச்சுமைகளுக்கும் ஆளாகும் பெண்ணே அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாத போது ஒர் ஆண் எப்படி புரிந்து கொள்வார்? இந்தவகையில் பார்க்கும் போது குடும்ப நிறுவனத்தில் வீட்டு வேலைகள் என்பதை விரிவாக ஆராய வேண்டியது அவசியமாகும்.
குடும்பத்தில் வீட்டு வேலைகள் பற்றியது
வீட்டு வேலைகள் என்னும் போது சமையல், வீட்டுப் பராமரிப்பு (உடை கழுவுதல், வீட்டைச் சுத்தப்படுத்தல்) குழந்தை வளர்ப்பு என்பனவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறானவை வீட்டுவேலைகள் என்பன ஒரு உழைப்பே என70ற்கு முன்பே ஆராயப்பட்டு அதற்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் எனப்பெண்ணிலைவாதிகள் கோரிக்கை எழுப்பியுள்ளார்கள். இது குறித்து ஐக்கிய நாடுகளின் சபையிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கீழைத் தேசமாகிய எமது நாட்டில்வீட்டுவேலைகள் பற்றிய மதிப்பீடே வேறுபட்ட தாகவுள்ளது. குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் வீட்டு வேலைகள் என்பது ஒரு உழைப்பு என பெண்கள் உணர்ந்து கொள்ளாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விடயமேயாகும். பெண் என்பவள் 'பின்தூங்கி முன் எழவேண்
14 நான் ஒரு பெண்

டும்" எனக் கூறப்படுவதன் அர்த்தம் அவள் காலையில் நேரத்துடன் எழுந்து காலை உணவு தயாரிப்பு முதல் குழந்தைகளை பாடசாலைக்கு தயார்படுத்து வது, கணவனின் தேவைகளை நிறைவேற்றுவது(உணவு தயார்படுத்தல், மதிய உணவு பொதி செய்தல், உடையினை ஸ்திரி போடுதல்) இவ்வாறு தொடர்ச்சி யான வீட்டுப் பணிகளில் ஈடுபட்டு இரவு நெடுநேரம் வரை உழைத்து குடும்ப அங்கத்தவர் அனைவருக்கும் சேவை செய்து, அவர்கள் அனைவரும் தூங்கச் சென்ற பின்னரே அவள் தூங்கச்செல்ல வேண்டும் என்பதே ஆகும். இத்தனை தூரம் அவள் தன்னலம் கருதாமல் சேவை செய்தாலும் அவள் உழைப்பு மதிப்பற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. வீட்டு வேலைகள் என்பது ஏனைய வருமானம் (ஊதியம்) வழங்கப்படும் வேலைகளிலும் பார்க்க பலவிதத்தில் வேறுபடுகின்றது. இது ஒரு குறிப்பிட்ட பாலுக்கு (Gender) உரியது என ஒதுக்கப்படுவது போல் வேறு எந்தத் தொழிலும் குறித்த தொழிலை குறிப்பிட்ட பாலினரே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இது தனிப்பட்ட உறவுகளுடன் அந்நியோன்னியமாக இணைக்கப்பட்டதாகவோ அல்லது தனிப்பட்ட சேவையின் கடமையுடன் இணைக்கப்பட்டதாகவோ வேறு எந்த தொழிலும் இல்லை. வீட்டு வேலைகளு க்கு வரையறையோ, ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலை நேரங்களோ, வேலை நியதிகளோ கிடையாது. அதாவது வீட்டு வேலைகள் என்பது எல்லைகள் வரையறைகள் அற்றது என்பதுடன் இதற்கு தெளிவான தொடக்கமோ, முடிவோ கூடக் கிடையாது. வீட்டு வேலைகள் தொடர்பாகப் பெண்களின் உணர்ச்சிகளை ஆய்வு செய்த போது அவர்கள் இரு முகப்பட்ட தன்மையுடையவர்களாகவே இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. பொதுவாக வீட்டு வேலைகள் தொடர்பாக பெண்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அதுவே சில சந்தர்ப்பங் களில் கணவன் மனைவியிடையே சச்சரவுகளை உருவாக்கினாலும் கூட பின்னர் சமாதானம் அடைந்துவிடுகிறார்கள். பெண்கள் ஒரே விதமரன, திரும்பத்திரும்பச் சலிப்பூட்டும், தனிமைப்படுத்தும், களைப்பூட்டும் முடிவே யில்லாத வீட்டு வேலைகளின் தன்மை பற்றி உணர்கிறார்கள். ஆனால் சமூகத்தில் வீட்டு வேலைகள் தாழ் அந்தஸ்து பெறுவது தொடர்பாக ஆத்திரப் படவோ அல்லது தமது வேலைகள் எவரது கவனத்தையும் பெறாது போவது பற்றி எரிச்சலுறுவதோ இல்லை. வீட்டில் உள்ள அங்கத்தவர்கள் தமது சேவையைப் பெறுவது ( தம்மை சுரண்டுவது) அவர்களது உரிமையைப் போலவும் உணர்வார்கள். இவர்கள் அடிக்கடி நியாயமற்ற முறையில் சுமை தாங்க வேண்டியிருப்பதை உணர்வதுடன், வருமானம் பெற்றுத் தரும் உழைப்பிலோ அல்லது கூலி உழைப்பிலோ ஈடுபடும் போது இரட்டிப்பு சுமையை தாங்குவதாக அதிருப்தி அடைந்தாலும் ஒட்டு மொத்தமாக வீட்டு
நான் ஒரு பெண் 15

Page 13
வேலைகள் பற்றி விமர்சனம் செய்ய முன்வருவதில்லை. பெண்ணிலை வாதிகளே வீட்டு வேலைகள் சன்மானம், அளிக்கப்படாத பால்ரீதியான (Gender) வேலைப்பிரிவினை என நிராகரிப்பர்.
வீட்டு வேலைகள் என்பவை வெறுமனே திரும்பத் திரும்ப சலிப்பூட்டும் வேலை மாத்திரமல்ல. இந்த வேலைகள் குடும்பம், வீடு தொடர்பாக கருத்துக்களை அர்த்தப்படுத்துகின்றன. தன்னால் நேசிக்கப்படும் உறவினரை (குழந்தைகள், கணவர், அம்மா, அப்பா) கவனித்துக் கொள்ளும் தனிப்பட்ட சேவையாக, அதுவே தமது கடமையாகவும் பெண்கள் உணர்வதால் வீட்டு வேலைகள் குறித்து சரியான மதிப்பீட்டை செய்ய முடியாதவர்களாய் உள்ளார்கள். இவர்களால் தமது சேவையைப் பெறும் நபர்கள் தொடர்பான தமது உணர்ச்சிகளையும் அவர்களுக்கு செய்யப்படும் வேலைகள் தொடர் பான தமது உணர்ச்சிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதிருப்பதுடன் மட்டுமல்ல இந்த வேலைகள் வீட்டு அங்கத்தவர்களது (குழந்தை, கணவர்) நலன்களுக்கு அவசியமானவை என்பதால் இவற்றை செய்வதில் பெண்களு க்கு கணிசமான திருப்தியும், பெருமித உணர்வும் கூட உண்டு எனலாம். உழைப்பு என்ற வகையில் வீட்டு வேலைகள் தொடர்பான உணர்ச்சிகளையும், மனைவி என்ற பாத்திரத்தை நோக்கி (அதாவது இல்லத்துக்கு (மனைக்குரிய வர்கள்) அவர்கள் உருவாக்கப்பட்டிருப்பவர்கள் என்பதையும் வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம் வீட்டு வேலைகள் தொடர்பான முரண்பட்ட பாகுபாட்டை புரிந்து கொள்ள முடிவதில்லை. வீட்டு வேலைகள் என்பது ஊதியமற்ற ஒன்றாகும். அத்துடன் இது ஊதிய பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் தனிப்பட்ட வீட்டில் நடைபெறுகின்றது. ஏனைய ஊதியம் அளிக்கும் வேலைகள் போலன்றி இதற்கு தெளிவான நேரவரையறைகள் கிடையாது. ஏனெனில் இங்கு குறிப்பிட்ட தொகை ஊதியத்திற்காக கொடுப் பது என்பது கிடையாது. மனைவியால் உருவாக்கப்படும் பொருட்களும் சேவைகளும் பண்டச் சந்தையை (ஊதியத்தை) இலக்காகக் கொண்டதாக இல்லாமல் அவளது நெருங்கிய குடும்ப உறவினரே (கணவர், குழந்தைகள்) நுகர்கிறார்கள். வீட்டு வேலையின் குறிப்பான பண்புகள் இப்படிப்பட்ட சமூக பொருளாதார உறவுகளில் இருந்து, பிறக்கின்றனவே அன்றி இவை மனைவிய ரால் செய்யப்படும் பணிகளின் உள்ளார்ந்த பண்புகள் அல்ல. இதே பணிகளை (உணவு,உடை கழுவுதல், சுத்திகரிப்பு, குழந்தை வளர்ப்பு, பாலுறவு) ஊதியம் கொடுக்கவும் வேலைகளாகவும் செய்விக்கலாம். அதாவது மனைவி வழங் கும் சேவைகளை சந்தையில் பணத்திற்கும் வேண்டலாம். ஆனால் எப்போது இவை வீட்டினுள் நடைபெறத் தொடங்கியதோ அப்போதே அங்கே இதற்குப் பணம் (ஊதியம்) வழங்கப்படாததுடன் அதன் உற்பத்திக்கு (உழைப்புக்கு) மதிப்பு இருப்பதில்லை.
16 நான் ஒரு பெண்

எனவே குடும்பத்தில் வீட்டு வேலைகள் என்பது ஊதியம் அளிக்கப்படாத துடன் அதன் மதிப்பும் குறைவாகவே கணிக்கப்படுகின்றது. வீட்டு வேலைகள் பெரும்பாலும் பெண்களை ஒரே விதமான வேலையினை திரும்பத் திரும்ப செய்விப்பதனால் சலிப்பூட்டுவதுடன் அதிருப்தியையும், வேலைச் சுமையை யும் கொடுக்கின்றது. குடும்பம் என்ற நிறுவனத்தினுள் இரண்டு நபர்கள் சம்பந்தப்படும் போது அதில் ஒரு நபர் வீட்டின் (குடும்பத்திற்கு அத்தியாவசி யமான)வேலைகளை செய்வது என்பதும், மற்ற நபர் எந்தவித பங்களிப்பும், செலுத்தாமல் இருப்பது என்பதுமே சமத்துவமற்ற, ஜனநாயகமற்ற சுரண்டல் நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அதாவது குடும்பத்தில் வீட்டுவேலைகள் (சமையல், உடை கழுவுதல், வீட்டுச்சுத்திகரிப்பு, குழந்தை வளர்ப்பு) போன்றவற்றில் ஆண்கள் தமது பங்களிப்பை செய்யாது நழுவி விடுவது மட்டுமல்ல அதனை தமக்காகவும் செய்வித்துக் கொள்கிறார்கள்.
இதனை பெண்கள் புரிந்து கொள்வதே இல்லை. பெண் ஆணினுடைய உழைப்பு சக்தியை உருவாக்குகிறாள். உதாரணமாக கணவருக்கு அடுத்தநாள் வேலை செய்வதற்கு தேவையான பணிகளை (சாப்பாடு, உடை. ஓய்வு) ஒழுங்கு செய்வதன் மூலம் (மறுநாள் உழைப்பு சக்திக்கானத் தயாரிப்புக்களை செய்வதன் மூலம்) ஆணினுடைய உழைப்பை உருவாக்குகிறாள். அதனையே ஆண்பரிவர்த்தனை செய்துவரும் ஊதியத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். இந்த அர்த்தத்தில் ஆணாதிக்க உற்பத்தி முறையினுள் மனைவியின் உழைப்பை ஆண் சுரண்டுவதாகக் கூறமுடியும். சமூகத்தில் வீட்டு வேலைகள் பெண்களுக்கே உரியது என சமூக கருத்தியல்கள் வலியுறு த்துவதால், பெண் இது குறித்து சலிப்புற்று, அதிருப்தி அடைந்தாலும் கூட ஆணின் பங்களிப்பு என்பது செய்யப்படுவதில்லை என்பதை புரிந்து கொள்வது இல்லை. குடும்ப நிறுவனத்தையே கேள்விக்குட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு செல்கிறார்கள். உழைப்பு, நபர் என எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் பெண்கள் சுரண்டப்படுவதை வெளிப்படையாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பெண்களின் இருமுகப் போக்கினால் இது இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. ஆயினும் குடும்ப நிறுவனத்தால் இன்று நேரடியாகப் பயனடைபவர்கள் ஆண்களே என்றால் மிகையாகாது. ஆனால் பெண் ஊதியமற்ற, மதிப்பற்ற, சலிப்பூட்டும் ஒரே தன்மையான வேலை களைத் திரும்பத்திரும்ப செய்விக்க தூண்டப்பட்டு வாழும் வாழ்க்கை என்பது நபர் என்ற வகையில் ஒரு முதலாளி தொழிலாளியை சுரண்டி இலாப மடைவதற்கு ஒப்பானது. இங்கு பெண்ணானவள் தனது உழைப்பின் (வீட்டு வேலைகள்) மதிப்பு, ஆணின் பாதுகாப்பின்மை சமூக கருத்தியல் ஆகிய வற்றை கேள்விக்குட்படுத்துவதன் மூலமே உண்மையான தனது (சுரண்டல்) வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இல்லாத பட்சத்தில்
Tär go Luar 1 7

Page 14
ஊதியமற்ற, மதிப்பற்ற உழைப்பு என்பது பெண்ணை என்றென்றைக்குமே கீழ்ப்படிவிற்கு இட்டுச் செல்வதுடன் என்றென்றைக்குமே குடும்பத்தில் ஆண் - பெண் அசமத்துவ உறவையே நீடிக்க வழியமைக்கும்.
குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங்கள்
எமது தமிழ்ச் சமூகத்தில் குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங்கள் குறித்து ஆராய்வோமாயின் அவை:
பொருளாதார பாதுகாப்பு.
. சமூகப் பாதுகாப்பு.
சந்ததி மறு உற்பத்தி, பாலியல் தேவை. சித்தாந்த மறுஉற்பத்தி
உளவியல் தேவை
என குறிப்பிடலாம், மேற்குறிப்பிட்ட பாத்திரங்களை குடும்ப நிறுவனம் ஆற்றுகிறது உண்மையாயினும் இவற்றால் பெண்கள் திருப்தி அடைகிறார்களா? குடும்பத்தில் சமத்துவமாக நடத்தப்படுகிறார்களா? என்பதே எம்முன்னுள்ள கேள்விக்குரிய விடயமாகும். இதனை குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங்கள் குறித்து ஆராய்வதன் மூலமே தெளிவான முடிவிற்கு வர முடியும்.
பொருளாதார பாதுகாப்பு பற்றியது:
வரலாற்று ரீதியில் தந்தை வழி சமுதாயத்தின் தொடக்கமே பெண்களை வீட்டோடு கட்டிப் போட்டது எனவும், அதனால் பெண் முற்று முழுதாகவே பொருளாதார பலம் அற்றவளாகவும் ஆணில் தங்கியிருப்பவளாகவும் உருவாக்கப்பட்டது. இன்று விஞ்ஞான வளர்ச்சியோடும், மாற்றங்களோடும் பெண்கள் கல்வி வாய்ப்பைப் பெற்று ஓரளவு பொருளாதாரப் பலத்தினை பெற்றுக் கொண்டாலும் கூட பல பெண்கள் ஒப்பீட்டளவில் பொருளாதார பலம் அற்றவர்களாகவே உள்ளனர். அதாவது பல குடும்பங்களில் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதும் ஆண் வருமானம் தேடுபவராகவும், பெண் வீட்டு வேலைகளை செய்பவராகவும் காணப்படுகின்றனர். இங்கு குடும்பத் தில் வீட்டு வேலைகள் என்பது பற்றி முன்பே ஆராய்ந்துள்ளோம். எனினும் சுருக்கமாக நோக்கின் சமையல், வீட்டு பராமரிப்பு, குழந்தை வளர்த்தல் போன்றவற்றில் பெண்கள் தமது நேரத்தில் பெரும்பகுதியை செலவிடுவதி னால், ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப சலிப்புடன் செய்ய வேண்டியு ள்ளது. இவ்வாறான சார்ந்த (Depend) வாழ்தலே பெண்ணின் கீழ்ப்படிவிற்கு,
1 R Grir a Luar

அதாவது ஆண் - பெண் அசமத்துவ நிலைக்குக் காரணம் எனக் கருதப்படு கிறது. இதனையே மார்க்ஸ் 'சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தை பெற்று உற்பத்தியில் ஈடுபடும் போது சமத்துவமாவே நடத்தப்படுவார்கள்' எனக் கூறினார். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட 18ம் நூற்றாண்டிலே பெண்கள் சார்ந்து வாழ்தல் என்பதைக் கேள்விக்குட்படுத்தி கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு என்பவற் றைப் பெற்றுக்கொண்டபோதும் பெண்ணின் கீழ்ப்படிவு என்பது தொடரவே செய்தது. இன்று (இலங்கையின்) தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு பெண்கள் பொருளாதார பலத்தைப் பெற்றுக் கொண்ட போதும், ஏன் பொருளாதார பலம் எதுவுமற்ற ஒருவரை ஒரு பெண் தனது துணைவராக தேர்வு செய்து குடும்ப வருமானத்தைப் பெண் தேடுபவராக இருக்கும் பட்சத்திலும் கூட குடும்பத்தில் பெண்ணின் கீழ்ப்படிவு தொடரவே செய்கிறது. எனவே குடும்ப வருமானத்தை பெற்றுக் கொடுப்பவராக பெண் இருந்தாலும், சில சமயங்களில் ஆணைவிட பெண் கல்வி, பொருளாதார பலம் அதிகளவில் தேடுபவராக இருந்தாலும் கூட கீழ்ப் படிவு தொடர்ந்து செல்வதையே காணக்கூடியதாக உள்ளது. ஆனால் பொதுவாக பெண் தொழிற்சாலை களிலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுக் குறைந்த ஊதியத்தையும், அவள் தொழில் சில சமயங்களில் நிச்சயமற்ற தன்மையுடையதாகவும் இருப்பதனால் தமது திருமண வாழ்வில் குறைந்த பட்சம் பகுதியளவிலாவது பொருளாதார ரீதியாக ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் அல்லது ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் வருமானம் 2000/-க்கு மேல் தாண்டுவதில்லை. 40வயது வருமானால் அல்லது கருத்தரித்திருந்தால் அவர்களுடைய வேலை நிச்சயமற்றதாக உள்ளது.
எனவே பொதுவாக பல்வேறு ஆய்வுகளின் படி குடும்ப வாழ்வில் பெண்கள் பெருளமவு பொருளாதார பங்களிப்பினை செய்தாலும் கூட குறைவாக மதிக்கப்படுவதுடன் ஆண்களே வருமானம் தேடுபவராகக் கருதப்படுகின்றது. பெண்கள் எவ்வளவுதான் முக்கியளவு பங்களிப்பு செய்தாலும் கூட அந்த பற்றாக்குறையை ஈடுசெய்யும் மேலதிக வருமானமாகவே கருதப்படுகிறது. பெண்ணினுடைய பொருளாதார பாத்திரம் குறைவாக மதிப்பிடப்படுவதுடன் பெண்களை வீட்டுக்குரியவர்களாகவும் உறுதிப்படுத்துவதில் சமூக கருத்தி யல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று பெண்களின் பொருளாதார பாத்திரம் குறைவாக மதிப்பிடப்படுவதற்கு சிறந்த உதாரணம் திருமணத்தின் போது ஆண் செய்யும் தொழிலையே பெண்ணும் செய்து ஒரே வருமான த்தைப் பெறுபவர்களாக இருந்தாலும் சீதனம் எனப் பல லட்சங்களுடன் வீடு, நகைகளை ஆண்களுக்கு கொடுக்கும் முறையைக் குறிப்பிடலாம். எனவே
v.
Tir Ouais 19

Page 15
குடும்ப நிறுவனத்தில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒரு பொதுவான விலாசத்தைக் கொண்டிருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் ஒரே விதமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. பொதுவாக கணவன்மாரை விட அதிகளவு ஊதியம் பெறும் நிலையிலும் கூட குடும்ப வருமானம் என்பதை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பதை நிர்ணயிப்பதில் ஆண் களுக்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்னும் சில குடும்பங்களில் ஆண்கள் தமது வருமானத்தில் பெரும் பகுதியை அல்லது குறிப்பிடத்தக்களவு வருமானத்தை குடி, புகை, வேறு டாம்பீக முறையில் செலவு செய்து குறிப் பிட்ட தொகையையே குடும்பச் செலவிற்காக செலவிடுவார்கள். இங்கு பெண்கள் உழைப்பில் ஈடுபடுபவராயின் தமது வருமானத்தை முற்று முழுதாகவே குடும்ப அங்கத்தவருடைய தேவைகளை ஈடு செய்வதிலேயே செலவிடுகிறார்கள். ஆண்களில் தங்கியிருப்பவராக இருந்தால் கடன்பட்டோ, வேறு வீடுகளுக்கு கூலி வேலைகளுக்கு சென்றோ பற்றாக்குறையை ஈடுசெய் வதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலைமை அவரவர் வர்க்க நிலைமைக்கேற்ப வேறுபட்டாலும் மொத்தத்தில் பெண்கள் பொருளாதார பலத்தை பெற்று உழைப்பில் ஈடுபட்டாலும் கூட அவர்களின் கீழ்ப்படிவு ஆண் - பெண் அசமத்துவ நிலை தொடரவே செய்கிறது.
எனவே பொருளாதார சுதந்திர பலம் மட்டுமே பெண்களுடைய கீழ்ப்படிவு நிலையை போக்கிவிட முடியாது. சில சமயம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதற்கு இந்த பலம் உதவினாலும் கூட குடும்ப நிறுவனத்தினுள் அசமத்துவ நிலையை போக்கிவிட முடியாது. ஆகவே சில பெண்ணிலை வாதிகள் மார்க்ஸ் கூறிய பொருளாதார பலம் பெண்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்பது பொய்த்துவிட்டது எனக் கூறுவதும் உண்டு. ஆனால் குடும்ப நிறுவனம் என்பது ஆணாதிக்க கருத்தியலினால் (சித்தாந்த நிலை) திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணாதிக்க சித்தாந்தம் குடும்பத்தில் மட்டுமல்ல சமூகத்தில் பல அரசு நிறுவனங்களினால் (கல்விக் கூடம், கலை, இலக்கியம், மதம், சட்டம்) பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பலப்படுத்தல்கள் பல ஒன்று சேர்ந்து செயற்படுவதினால் பொருளாதார சுதந்திரம் மட்டுமே பெண்ணின் கீழ்ப்படிவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இல்லை. எனவே மார்க்ஸ் கூறுகின்றார் சமதர்ம பொருளாதார அரசு தோற்றுவிக்கப்படும் போது தனியுடமை நீக்கப்பட்டு பொதுவுடமை தோற்றத் துடன் பெண்கள் யாவரும் உற்பத்தி உழைப்பில் ஈடுபட வீட்டுவேலைகள், குழந்தை வளர்ப்பு என்பனவற்றை அரசே பொறுப்பு எடுக்கும் ஒரு காலகட்ட த்தில் இந்தப் பெண்களின் அசமத்துவ நிலை படிப்படியாக மறைந்து விடும் இவைகள் கூட எந்தவொரு நாட்டிலும் நடைமுறையில் அமுல்படுத்தப்படாத ஊகங்களே. எனவே இந்தக் கருத்துக்கள் கூட எந்தளவு பெண்களின் கீழ்ப்படிவை அசமத்துவ நிலையை போக்கி விடக்கூடியது என உறுதி
20 Sir go Luar

கூறமுடியாததாகவே உள்ளது. ஆனால் முதலாளித்துவ அரசு இருக்கும் நாட்டில் நிச்சயமாய் இந்த ஆண் - பெண் அசமத்துவ நிலை என்றுமே தீர்த்துவைக்க முடியாத ஒன்றேயாகும்.
சமூகப் பாதுகாப்பு பற்றியது:
இன்று தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு பெண் குடும்ப நிறுவனத்தினுள் செல்வதற்கு சமூகப் பாதுகாப்பும் முக்கிய விடயமாகின்றது. பாலியல் தொல்லைகள், முதல் பாலியல் பலாத்காரம் வரை பெண்களுக்கெதிரான அனைத்து விடயங்களும் சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றன. பருவப் பெண்கள் மட்டுமல்ல பெண்குழந்தைகள் (வயதிற்கு வராதவர்கள்) கூட சமூகத்தில் பிரபல்யமான நடிகர்கள், சட்டத்தைப் பாதுகாப்பவர்கள் போன் றோரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான செய்திகளை வெகுஜன தொடர்பு சாதனமாகிய பத்திரிகைகள் வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது. இதனால் ஒரு பெண், குழந்தைப் பருவம் முதல் திருமணமாகும் வரை பெற்றோரின் அதீத கண்காணிப்பில் இருக்க வேண்டியவளாக உள்ளாள். பருவப் பெண்கள் பாடசாலை செல்லும் போது, அல்லது அரசசார்பற்ற கல்விக் கூடங்களுக்குச் செல்லும் போது, அல்லது பல தொழிற்சாலைகளில் கடமை புரியும் போது பெண் என்பதற்காக அவள் பாலியல் தொல்லைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உட்பட வேண்டியுள்ளது. அண்மைக்காலங்களில் தமிழ்ச் சினிமாக்களில் வரும் பாடல்கள் இரட்டை அர்த்தம் பெறுவனவாகவே உள்ளது. உதாரணமாக 'மதினி மதினி நான் மத்தோடு வாரேன். பருப்பு கடைந்து உண்ணலாமா', 'சோலிக்குள் என்ன இருக்குமாராப்பில் என்ன இருக்கு', 'ஸ்ரைலுஸ்ரைலுதான். ஏழு மணிக்கு பிறகு நீயும் இன்பலச்சுமி' போன்ற பல பாடல்கள் பெண்களின் பாலியல் வன்முறைக்கு காரணங்களாக அமைவதுடன் பெண்கள் வெறும் நுகர் பண்டங்கள் தான் என்பதை அழுத்துவனவாகவே உள்ளன. இத்தகைய பாடல்களை ஒரு ஆண், தெருவில் செல்லும் பெண்கள் மத்தியில் பாடினால் அது அத்தனை பெண்களையும் பாலியல் சேட்டைக்கு உட்படுத்துவதாகவே அர்த்தப்படும்.
இதேபோன்று தொழிற்சாலையிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ வேலை பார்க்கும் பருவ மங்கையை (திருமணமானவர் அல்லது திருமண மாகாதவர்) மேலதிகாரிகள் பல சலுகைகள் வழங்கி அவர்களது பதவி உயர்விற்கு உதவுவதுபோல் நடந்து தமது பாலியல் இச்சைகளுக்கு தீனி போடுமாறு அழைப்பது நம் கண்முன்னே நடப்பவைதான். இந்தக் கட்டு ரையை எழுதும் நானும் கூட ஆசிரியத் தொழிலில் இருந்தவள்தான். ஒரு
ஆசிரியை சம்பள உயர்வு (increment) தொடர்பாக கல்வித்திணைக்களம்
நாள் ஒரு பெண் 21

Page 16
சென்று முறையிடும் போது 'என்னோடு தொழில் பார்க்கும் சக ஆசிரியர் களுக்கு எல்லாம் செய்துவிட்டீர்கள் எனக்கு மட்டும் செய்யவில்லையே?’ எனக் கேட்டால் சோ. என்ற சிரிப்பொலியுடன் "நாங்கள் செய்வதற்குத்தானே உள்ளோம் நீங்கள் சம்மதித்தால் சரி' எனக் கூறுவதை பல தடவை என் காதுகளாலேயே கேட்டிருக்கிறேன். அத்துடன் அந்த ஆசிரியைப் பலமணி நேரம் உட்கார வைத்து நேரத்தைக் கடத்துவர். இந்த மாதிரியான வன்முறை களின் போது பெண் அசடுவழிய சிரித்தாலும் உண்மையில் அவள் அவமானப் படுத்தப்படுகிறாள். அசிங்கமாக அர்த்தப்படுத்துகிறார்கள் என அவள் கோபப்படுவதில்லை. மனதிற்குள் திட்டுவதுடன் சரி. இவ்வாறு பல கஷ்டங் களுக்கு முகம் கொடுக்கும் பெண்கள், குடும்பம் என்ற நிறுவனத்தினுள் சென்றுவிட்டால் ஓரளவு பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் குடும்ப நிறுவனத்தின் முரணான செயற்பாடுகளினால் ஏமாற்றமே யடைகிறார்கள்.
1. ஜனநாயக மறுப்பு.
2. கட்டாய பாலியல் உறவு
3.தான் விரும்பாத போது கருவை சுமப்பது
4. வன்முறை (அடி உதை) என மிக மோசமாகவே சுரண்டப்படுவதுடன் அடக்குமுறைக்கும் உள்ளா கிறாள். சில சமயங்களில் பால் உறுப்புக்கள் அல்லது நடத்தை கெட்ட ஒருவரை குறிப்பிடும் பதம் போன்றவற்றைக் கூட நாகூசாமல் ஆண் கூறுவது கூட குடும்பத்தில் சர்வசாதாரணமான விடயமாகவே உள்ளது. இவற்றை யெல்லாம் நோக்கும் போது "சட்டிக்குள் இருந்து அடுப்பிற்குள் குதித்தது' போன்ற தோற்றப்பாட்டையே பெண்கள் உணர்கிறார்கள். எனவே பெண் சமூகப் பாதுகாப்பு எனக் கருதி குடும்ப நிறுவனத்தினுள் வருவது என்பது ஒருவிதத்தில் கானல் நீர் போன்றதே. இங்கு தனிமையில் இருப்பது பாதுகாப்பற்றது. குடும்பத்தினுள் செல்ல வேண்டும் எனத் திணிப்பது எல்லாம் சமூக கருத்தியலே ஆகும். இதனைப் பெண்கள் உணர்ந்து கொள்ளாதபோது மீண்டும் ஏமாற்றப்படுகிறார்கள்.
சந்ததி மறுஉற்பத்தியும் பாலியல் தேவையும் பற்றியது:
திருமணம் என்பது எமது தமிழ்ச் சமூகத்தில் எதிர்ப்பாலார் (ஆண்-பெண்) இருவரும் உடலுறவு (Herto Sexual) கொள்வதற்கு அனுமதியளிப்பது போலாகும். இப் பாலியல் தேவை என்பது ஒவ்வொரு விலங்குகளினதும் (மனிதன் உட்பட) இயல்பூக்கம் ஆகும். இதனைக் கட்டுப்படுத்தவோ, நசுக்கவோ முயன்றால் வேறுவழிகளில் உளவியல் பாதிப்புக்களை உருவாக்
22 நான் ஒரு பெண்

கும் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். இந்தப் பாலூக்கமானது குழந்தைப் பருவம் முதல் வெளிப்படுவதை நாம் அவதானிக்கலாம். ஆனால் எமது குடும்ப நிறுவனமானது அது தவறான பழக்கம் எனக் கட்டுப்படுத்தும், அதனால் குழந்தை பயந்து கட்டுப்பட்டதாக செயற்படுவதும் தவறான வழிநடத்தலேயாகும். அதே போல் வயதுவந்தவர்களின் பாலியற்தேவையை பூர்த்தி செய்வதன் வழிமுறையாகவே திருமணம் அமைகிறது என்பது உண்மையென்றபோதிலும் பெண்கள் அந்தப் பாலியல் தேவை என்பதை எந்தளவிற்குப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. திருமணம் அதாவது குடும்பம் என்ற நிறுவனத்தினுள் பெண்ணோ, ஆணோ பலவிதக் கற்பனையில் புகுந்து கொள்வதும், பின்னர் யதார்த்த பூர்வமாக சில அனுபவங்களைப் பெறுவதும் கசப்பான உண்மைகளாகும். பாலியல் தேவையினை பூர்த்தி செய்வதன் விளைவாகவே சந்ததி மறு உற்பத்தி என்பது சாத்தியமாகிறது. எமது சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் தமது பாலியல் திருப்தி என்பதற்கு மேலாக தாயாக வேண்டும் என்றே விரும்புகிறாள். இவர்கள் பாலியல் திருப்தி (Orgasm) என்பதை பெற்றுக் கொள்ளுமுன் தாயாகும் போது திருப்தியடைகிறார்கள், இயற்கைக் காரணிக ளால் சிலசமயம் சந்ததி மறு உற்பத்தி நடைபெறமுடியாமல் போனால் ஏதோ ஒருமிகப் பாரிய குறைபாடுடையவர்கள் போல் பேதலிக்கிறார்கள். குழந்தை பெறுவது என்பது கஷ்டங்களின் மத்தியில் உருவாக்கப்படுவது ஆகும். இவ் வாறு ஏதோ ஒரு காரணத்தால் பெண் தாயாகும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமானால் உடனேயே பெண்ணையே குற்றம் சாட்டி மலடி எனப் பட்ட மும் சூட்டி விடுகிறார்கள். இங்கெல்லாம் ஆணிடம் குற்றம் குறையிருந்தாலும் கூட பெண்ணையே குற்றாவாளிக்கூண்டில் நிறுத்திப் பார்ப்பது என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தின் குறைபாடேயாகும். இதற்கு பெண்களும் பழியாகி குற்றவுணர்வடைவது என்பது ஒரு வேடிக்கையான விடயமாகும்.
இனி எதிர்பால் பாலியல் உறவு (Hetro Sexual) பற்றிய உண்மைக்கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம். பெண்ணிலைவாதிகள் பாலியல் உறவுபற்றி ஓர் ஆய்வு செய்த போது பின்வரும் முடிவுகள் கிடைத்தன. அஃது எதிர்பால் பாலியல் உறவில் ஈடுபடும் போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆண் 100% திருப்தியடைகிறான் எனவும், ஆனால், பெண்களில் 30% மானோர் மட்டுமே திருப்தியடைகிறார்கள் எனவும் கூறப்படுகின்றது. அதனால் பெண்ணிலை வாதிகள் இந்த (Hetro Sexual) எதிர்பால் பாலுறவு என்பது பரஸ்பரம் என்பதற்கு மேலாக பாரபட்சமான உறவுமுறை எனக் கூறுகிறார்கள்.
எனவே எதிர்பால் பாலுறவில் ஈடுபடும் மிகுதி 70% பெண்களின் திருப்தி என்பதை ஆண்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? என்பது சமூகத்தைப் பொறுத்தவரை கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே குடும்ப நிறுவனத்தில்
நான் ஒரு பெண் 23

Page 17
எதிர்பால் பாலுறவு என்பது அசமத்து பாலுறவு நீடிப்பாகவே அர்த்தப்படும். ஆனால் இந்த ஆய்வு உண்மைகள் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த வரை இன்று வரை அறியப்படாத விடயமாகவே இருக்கும் என நம்புகிறேன். எனவே பாலியல் உறவு என்பதை பெண்கள்தான் தேடிக் கற்க வேண்டும். ஏனெனில் அந்த உறவில் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்கள் இவர்களேயாவர். பெண்கள் பாலியல் தொடர்பாக மற்றவர்களுடன் பேசவோ கருத்தைப் பகிர்ந்து கொள்ளவோ முடியாதளவிற்கு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை பேசப்படாத விடயங்களாக (இன்றும் சமூகத்தில்) காணப்படுவதினால் பாலியல் தேவையின் திருப்தி (Orgasm) என்பது பல பெண்களுக்குத் தெரியாமலே உள்ளது. சில சமயம் இவர்களுக்கு குழந்தைகள் இல்லாவிடின் தம்மில் ஏதோ குறைபாடு இருப்பதாகவும், அதனால் தான் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை எனவும் தம்மைத்தாமே குறைபட்டுக் கொண்டிருப்பதை நாம் நெருங்கிப்பழகும் பெண்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. எனவே இங்கு பெண்கள் பாலுறவு என்பதை பேசும் பொருளாக்கி மற்றவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் குறைந்த பட்சம் அவர்களுடைய குற்றவுணர்வு தவறானது என்பதை யாவது புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால் பல மேலைநாடுகளில் பாலியல் கல்வி (Sexual Education) என்பது ஒரு பாடமா கவே கல்விச்சாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. நமது குழந்தை என்பதில் ஆண் -பெண் இருவரும் திருப்தியடைந்தாலும் கூட சந்ததி மறு உற்பத்தி என்பது ஒரு பெண்ணின் உடல் நலம் பற்றிய விடயம் என்பதால் எத்தனை குழந்தைகள் பெறுவது? எப்போது பெறுவது? தேவையில்லாத போது அதனைக் கலைப்பது என்பதெல்லாம் அவள் கட்டுப்பாட்டிற்குள் நிகழ வேண்டும். அதனை விடுத்து ஆணுக்கு வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகப் பெண்ணைப் பயன்படுத்துவது, அவள் பத்துமாதம் படாத பாடுபட்டு சுமந்து பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றாலும் கூட தனது குழந்தை அல்லது தனது வாரிசு எனத் தாயை வைத்து இனம் காணாது விடுவது என்பதெல்லாம் ஆணாதிக்கக் கருத்தியலேயாகும். இங்கு பெண் தான் கீழானவள் என ஏற்றுக் கொள்வது போலவே அவளது உடன்பாடு அர்த்தப்படுத்தப்படும். அதாவது ஆணாதிக்க கருத்தியலுக்குப் பலியாகிப் போகும். இதனால் பெண், குழந்தை பெறுவது முதல் வாரிசு உரிமை வரை அனைத்து விடயங்களிலும் ஆண்தான் தீர்மானிப்பது சரி என ஏற்றுக் கொள்கிறாள்.
எனவே பாலியல் தேவையும் மறு உற்பத்தியும் பற்றி குடும்ப நிறுவனத்தினுள் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்வோமாகில் பாலியல் திருப்தி என்பதும், எதிர்பால் பாலுறவு என்பதும் அசமத்துவ உறவாகவே நீடித்து வருகிறது. இந்த திருப்தியின்மையென்பது பற்றி பெண் வெளிப்படையாகவே பேசாவிட்
24 நான் ஒரு பெண்

டாலும் எங்கோ ஓரிடத்தில் குடும்ப நிறுவனத்தினுள் உடைசல் ஏற்படுவதன் மூலம் பிரதிபலிக்கும். ஆனால் இந்த பாலியலில் திருப்தியின் மையே இவ்வாறு வெளிப்படுகிறது என இவர்களாலும் ஏன் இவர்களின் கணவன் மார்களினாலும் கூட இடம் காணமுடியாது. அடுத்த மறு உற்பத்தியை பாரபட்சமான முறையில் ஆணே தீர்மானிப்பது என்பதும் ஒருவித அடக்கு முறையே என்றால் மிகையாகாது. இங்கு கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்ணே இவற்றை கேள்விக்குட்படுத்தி விழிப்புணர்வைப் பெறவேண் டுமே தவிர ஆண்கள் ஒருபோதும் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுப்ப வராக குறைந்த பட்சம் ஜனநாயக உறவைப் பேணுபவராகக் கூட இருக்க மாட்டார் என்பதே கசப்பான உண்மையாகும்.
சமூக கருத்தியலின் (சித்தாந்த) மறு உற்பத்தி பற்றி.
சமூக கருத்தியலின் மறு உற்பத்தி என்பது பலம் வாய்ந்த ஒன்றாகும். நமது சமூகத்தில் 99% வீதமானோர் சமூக கருத்தியலின் தாக்கத்திற்கு உட்பட்ட வர்களேயாவர். இந்த சமூக கருத்தியல் யாராலும் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு பாலூட்டும் போது தொட்டு மெல்ல மெல்ல ஒவ்வொருவருக்கும் ஊட்டப்படும் விடயமாகும். இந்த சமூக கருத்திய லினுள் மதம், கலாசாரம், குடும்பம், ஆணாதிக்கம், சட்டம், அரசு போன்ற நிறுவனங்களை உள்ளடக்கலாம். இந்தக் கருத்தியல்கள் தானாக தோன்றிய இயற்கை அம்சங்கள் அல்ல. திட்டவட்டமாக தெளிவாக மானிடனால் பின்பற்றக்கூடியவகையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு விடயம் ஆகும். உதாரணமாக மதக் கருத்தியலை எடுப்போமாயின் அது உருவம் அல்லது உருவமற்ற முறையில் மானிடரைத் தொடர்புபடுத்தி பல அர்த்தங்களையும், நம்பிக்கையினையும் உருவாக்கியுள்ளது. அந்த நம்பிக்கையில் குழந்தைப் பேறு என்பதைக் கூட இறைவனின் கொடை என அர்த்தப்படுத்திக் கொள்வர். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஒரு பெண்ணில் ஆயிரக்கணக்கான முட்டைகள் உருவாகும் என்றால் அவள் குடும்ப நிறுவனத்தினுள் சென்று பாலுறவில் ஈடுபடும்போது ஒவ்வொரு வருடமும் கருத்தரிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் படசத்தில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டிருக்க முடியுமா? ஒரு காலத்தில் குடும்பத் திட்டம் என்றாலே என்ன என விளங்கிக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் இந்தக் கருத்தரிப்பே பெண்களுக்கு யமனாக வந்ததுண்டு. ஆனால் இன்று விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் ஒரு பக்கம் வளர்ச்சியடைந்து சுகாதார மருத்துவப்படி இரண்டு குழந்தைகளுக்கிடையில் குறைந்த பட்சம் 3 வருடங்களாவது இடைவெளி இருத்தல் வேண்டும் எனவும், அத்துடன் பெண்ணின் உடல் நிலை, விருப்பு, குடும்ப வருமானம் என்பவற்றைப் பொறுத்து குழந்தைகளின் எண்ணிக்
நான் ஒரு பெண் 25

Page 18
கைகளை மட்டுப்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கருத்தரிக் கும் நிலை ஏற்பட்டால் மதக் கருத்தியலுக்கு கட்டுப்பட்டு இறைவனின் கொடை எனப் பொறுத்துக்கொள்ள முடியாதளவிற்கு அறிவு முரண்படு கின்றது. இதனால் அவள் கருக்கலைப்பு செய்து கொள்வது சர்வசாதாரணம். ஆனால் இரகசியமாகவே களவு செய்பவர் போல் குற்றவுணர்வு அடைபவர் களும் உண்டு. ஆனால் கரு சுமப்பது, கலைப்பது என்பதெல்லாம் ஒரு பெண்ணின் விருப்பு. உடல்நிலை சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அது அவளுடைய உரிமையும் கூட. எனவே மதக் கருத்தியல் அதனை சிசுக் கொலை என அர்த்தப்படுத்திக் கொண்டாலும் கூட இன்றைய காலகட்டத்தில் அதனை மீறவே செய்கிறார்கள். இலங்கையில் ஒவ்வொரு நாளும் ஏதோ வொரு காரணத்தால் ஆயிரம் பேர்வரை கருக்கலைப்பு செய்து கொண்டே யிருக்கிறார்கள். இங்கு கருக்கலைப்பு, நிகழ்வு சட்டரீதியாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து நாம் ஒரு தெளிவான முடிவிற்கு வரலாம். மதக் கருத்தியல் எவ்வளவு பலம் வாய்ந்த கருத்துக்களை கொண்டி ருந்தாலும் கூட அவசியத் தேவையான தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் அவற்றுடன் முரண்பட்டு வேறு முடிவுகளை நடைமுறை வாழ்க்கையில் எடுப்பதற்கு வழியமைக்கின்றது. இதிலிருந்து மதக் கருத்தியல் எவ்வளவு தான் அர்த்தப்படுத்தலுடன் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் கூட அறிவுத் துறையுடன், யதார்த்த வளர்ச்சிப் போக்குடன் வெற்றியீட்ட முடியாதளவிற்கு தோல்வியைத் தழவியுள்ளது என்பதே உண்மை. அடுத்துகுடும்ப கலாசாரகருத்தியலை நோக்குவோமாயின் இவை நேரடியாக செயற்படுவதில்லை. குடும்ப நிறுவனம், குழந்தைகள் சமூக இசைவாக்க மடையச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு சமூக இசைவாக்கம் என்பது சமூகம் ஏற்றுக்கொண்ட நியமங்களை ஒரு குடும்பத்திலும் அந்தக் குழந்தை வளரும் போது அன்றாட சாதாரண நிகழ்வுக் கூடாகவே அவர்களின் மனதில் ஆழப்பதியவைத்தல் அதாவது அவற்றை உள்வாங்கி - என்பதாகும். இந்தச் சமூக இசைவாக்கம் குடும்பத்தில் குழந்தை வளர்ப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களை கற்றுக் கொடுக் கின்றது. பெண் குழந்தைக்கு பொம்மை, விளையாட்டு சட்டிபானை என்ப வற்றைக் கொடுத்தும், ஆண் குழந்தைகளுக்கு வீரம், பலம் என்பதை அடையாளப்படுத்துவதற்காக துப்பாக்கிகள், வாகனங்கள் போன்றவற்றைக் கொடுப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இங்கு குடும்பத்தில் திரும்பத் திரும்ப ஒரே விதமான பாத்திரங்கள், நடத்தைகள் குழந்தைகளின் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. பெண் குழந்தைக்கு முன்மாதிரியாக தாயாரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் . ஆனால் ஆண் குழந்தைக்கு தந்தையின்
26 நான் ஒரு பெண்

உண்மையானப் பாத்திரம் விளங்காமுடியாதளவிற்கு இருப்பினும் அது வேறு சமூக இசைவாகும். நிறுவனங்களாகிய பாடசாலை, ஒத்தார் குழு, சமூக யதார்த்தம் (தொலைத் தொடர்பு) வெகுஜன சாதனங்கள் இவற்றைப் பார்த்து கற்றுக் கொள்ளும்.
எனவே குடும்ப கருத்தியலின்படி குடும்ப நிறுவனத்தில் சமூக இசைவாக்கம் என்பது (Gender) பால் வேறுபாடு பற்றிய கருத்தியலையே மறைமுகமாக பலப்படுத்துகிறது. அதாவது மறு உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த பலப்படுத்தல்களில் பெண் என்றால் அழகு, அடக்கம் , ஒழுக்கம் என சினிமாக்களின் மூலம் காட்டப்படுகின்றது. கலை,இலக்கியம், மதம், சினிமா போன்ற தொடர்புத்துறைகள் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தாலும், சினிமாத்துறையை எடுப்பின் இங்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஒழுக்கம் குறிப்பாக ஒரு தார மணம் அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் அதில் பங்கு கொள்பவர்களை மீறவே செய்கிறது. இவர்கள் தம்மளவில் பாலியல் ஒடுக்குமுறையை எதிர்த்து தமது நடைமுறை வாழ்க்கையில் செயற்பட்டபோதும், இது சமூகத்திற்கு வேறு அர்த்தத்தையே கொடுக்கின்றது. இதிலிருந்து சமூகத்தில் வலியுறுத்தப்படும் கருத்தியல் என்பது திட்டமிட்டு ஒருதலைப்பட்சமாக ஒழுங்கமைக்கப்பட்டதே என்றால் மிகையாகாது.
ஆகவே ஒரு மனிதனின் ஆளுமையினை வளர்த்துச் செல்வதில் இந்தச் சமூக கருத்தியல்கள் முக்கிய பங்களிக்கின்றன. தமிழ்ச் சூழலில் வாழும் ஒரு குழந்தையின் நடத்தைக் கோலத்திற்கும் தற்போது அகதிகளாக தஞ்சம் கோரி வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களில் அவ்வத்தேசச் சூழலில் வளரும் ஒரு குழந்தையின் நடத்தைக் கோலத்திலும் வேறுபாடு காணப்படவே செய்யும். அது நாம் விரும்பாவிட்டாலும் கூட அந்த இடத்தில் சூழலில் பலம் மிகுந்து இருக்கும் சமூக கருத்தியல்களைக் குழந்தைகள் உள்வாங்குவது தவிர்க்க முடியாததாகும். அதனை நாம் கண்களாலேயே பார்க்கக் கூடியதாக உள்ளது. வெவ்வேறு நாடுகளில் சமூக கருத்தியல்கள் அவர்களுடைய வளர்ச்சிகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டே உள்ளது. நாம் கலாசாரம், மதம், குடும்பக்கலை,இலக்கிய, சட்டநிறுவனங்கள் மூலம் சமூக கருத்தியல் களை எவ்வளவுதான் அழுத்தம் கொடுத்தாலும் அறிவுத்துறையின் வளர் ச்சியில் இவை தோல்வியுறவே செய்யும் என்பதே உண்மையாகும். எமது தமிழ்ச் சமூகம் இன்று நியமம் என ஏற்றுக்கொண்டவை எப்படி புலம் பெயர்வுடன் மாற்றமடைகிறதோ அதே போல் வளர்ச்சிப் போக்கில் கருத்தியல் மாற்றங்கள் உருவாகியே தீரும் என்பதை யாராலும் மறுத்து விட
(փնգս III3;].
நான் ஒரு பெண் 27

Page 19
உளவியல் தேவை பற்றியது.
மானிடனாக உயிர்பெறும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அடிப்படை தேவைகள் பல உண்டு. அவற்றில் அன்பு, காதல், அரவணைப்பு என்பனவும் கணிசமான பங்கை வகிக்கின்றன. இவற்றை அடிப்படை உளவியல் தேவையெனவும் குறிப்பிடலாம். ஒரு குழந்தைக்கு அன்பு, அரவணைப்பு எத்தனை அவ சியமோ அதேபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் இவை அத்தியாவசிய மானதேயாகும். குடும்ப நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் ஒர் ஆணோ, அல்லது பெண்ணோ வீட்டு வேலைகளிலும் அல்லது ஒர் ஊதியத்தை பெற்றுத்தரும் வேலைகளிலிலும் பல மணி நேரத்தை செலவிடுவதினால் களைப்பு, சோர்வு, சலிப்பு அடைவது இயற்கையே. இதனால் இருவருமே ஒருவருக்கொருவர் நிலைமைகளை பரஸ்பரம் புரிந்து கொண்டு ஒருவர் மீது மற்றவர் அன்பு, ஆறுதல், அரவணைப்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்ப் பதும் இயல்பானதே. ஆனால் குடும்ப நிறுவனத்தினுள் இந்த உளவியல் தேவை என்பது ஒருதலைப்பட்சமாக பெண் இவற்றை வழங்க வேண்டும் என்றே வலியுறுத்துப்படுகிறது. ஓர் ஆண் தான் வெளியில் சென்று தொழில் பார்ப்பதை மட்டுமே உழைப்பு எனக் கருதி தான் களைத்து வீடுவரும் போது மனைவி சிரித்த முகத்துடன் வரவேற்று அன்பு, கவனிப்பு, ஆறுதல் அளிக்க வேண்டும் என எதிர்பார்க் கப்படுகிறதே தவிர ஒரு பெண் அதாவது மனைவி என்பவள் வீட்டில் ஓய்வாக இருப்பவளாகவே இவரால் கருதப்படுகிறது. ஆறுமணித்தியால ங்களோ அல்லது எட்டு மணித்தியாலங்களோ உழைப்பில் ஈடுபட்டு வீடுவரும் ஒரு ஆண் எத்தனை எதிர்பார்ப்போடு வருகிறாரோ அதே போல் 10 அல்லது 12 மணித்தியாலங்கள் வீட்டு வேலை என்ற உழைப்பில் ஓய்வின்றி ஈடுபட்டு சலிப்புற்றவளாக, தனிமைப்பட்டவளாக உணர்ந்து வேலைச்சுமையால் களைப்புற்றவளாக அதே அன்பு, ஆறுதல், அரவணைப் பிற்காக ஏங்கிக் கொண்டிருப்பாள் என்பது ஏனோ ஆண்களால் புரிந்து கொள்ளப்படுவதேயில்லை.
ஆனால் பல வரலாற்று காவியங்களைப் பார்க்கும் போது ஒரு ஆணின் வெற்றியின் பின்னே ஒரு பெண் செயற்படுகிறாள் எனக் கூறப்படுகிறது. அஃதே ஆணின் உழைப்பினை பெண்ணே உருவாக்குகிறாள் என்றால் மிகையாது. எனவே காதல், அன்பு கொள்ளல் என்பதெல்லாம் ஒருவரை யொருவர் (கணவன் -மனைவி) பலப்படுத்துவதாகவும் ஒருவரின் உயர்ச்சி யில் மற்றவர் இன்பம் காண்பவராகவும் உற்சாகப்படுத்துபவராகவும் இருக்க வேண்டுமேயன்றி ஒரு தலைப்பட்சமாக ஆணை பெண் பலப்படுத்துவதாக மட்டுமே இருப்பது அநீதியானதேயாகும். ஆனால் குடும்ப நிறுவனத்தினுள்
28 நான் ஒரு பெண்

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு அதிகார உறவாகவும், அசமத் துவ உறவாகவும் இருப்பதால் இங்கு பெண்ணின் உளவியல் தேவையும் கூட மற்றைய காரணிகள் போல் புறக்கணிக்கப்படவே செய்கிறது.
எனவே குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங்களை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்வோமாயின், வீட்டு வேலைகள் என்பது ஊதியமளிக்கப் படாத, மதிப்பளிக்கப்படாத, ஒரே தன்மையான வேலைகளை திரும்பத் திரும்ப செய்வதினால் சலிப்படையச் செய்கிறது. இங்கு ஆண்கள் தமது பங்களிப்பை செய்யாததுடன் பெண்களை சுரண்டிப் பயனடைகிறார்கள் என்பதே உண்மையாகும். பொருளாதாரப் பாதுகாப்பு என்பது பெண்கள் முற்று முழுதாக ஆண்களிலேயே தங்கியிருப்பவராக இருக்கும் சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகவே உள்ளது. ஆனால் பெண்கள் உயர்கல்வி பெற்று வேலைவாய்ப்புக்களைப் பெற்று வருமானம் தேடுபவராக இருப் பினும் கூட ஏன் ஆண்களை விட அதிகளவு வருமானம் பெற்றுக் கொடுப்ப வர்களாகவும், வீட்டு வேலை, ஊதியவேலை எனும் இரட்டைச்சுமையை சுமந்தாலும் கூட ஆண் - பெண் அசமத்துவ உறவு நீடிக்கவே செய்கிறது. சமூகப் பாதுகாப்பை குடும்ப நிறுவனம் அளிக்கிறது எனக் கூறப்பட்ட போதிலும் இதில் ஓரளவு உண்மையிருப்பினும் இங்கு பெண்கள் கட்டாய பாலுறவு, ஜனநாயகமின்மை, தான் விரும்பாத போது கருவை சுமப்பது, வன்முறை (அடி, உதை) எனப் பல கஷ்டங்களையும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
அடுத்து மறுஉற்பத்தியை குடும்ப நிறுவனத்தில் மூன்று வகையாக நோக்க லாம், ஒன்று பெண் குடும்ப நிறுவனத்தினுள் ஆண் ஒருவரை மறுநாள் உழைப்பினை செய்வதற்கு வேண்டிய தேவைகளை செய்வதன் மூலம் உழைப்பு சக்தியை உருவாக்குகிறாள். இதனையே ஆண் பரிவர்த்தனை செய்து ஊதியத்தைப் பெறுகிறார். இங்கு பெண்ணின் உழைப்பு என்பது ஆண்களால் புரிந்து கொள்ளப்படுவதேயில்லை.
இரண்டாவது சந்ததி மறுஉற்பத்தியை நோக்கின் ஆண்-பெண் ஆகிய இருவரின் பாலியல் திருப்தி (Orgasm) யின் விளைவாகவே சந்ததி மறு உற்பத்தி என்பது சாத்தியப்படும். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் பாலியல் திருப்தி என்பது பற்றி பேசுவதே அபத்தம் என அவை பேசப்படாத விடயங்களாக இருப்பதுடன் பெண்கள் பாலியல் திருப்தி என்பதை சரிவர புரிந்து கொள்ளாதவர்களாகவே உள்ளார்கள். ஆண்களோ தமது திருப்தி என்பதை முதன்மைப்படுத்துகிறார்களே தவிர பெண்ணை திருப்திப்படுத்து வதில் அக்கறை செலுத்துவதில்லை. ஆகவே குடும்ப நிறுவனத்தில் எதிர் பாலுறவு என்பதே அசமத்துவ உறவாகவே நீடிக்கின்றது. அத்துடன் சந்ததி மறுஉற்பத்தி என்பது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் உடல்சம்பந்தப்பட்ட
நான் ஒரு பெண் 29

Page 20
விடயம். ஆகையினால் அதனை தீர்மானிப்பது பெண்களின் உரிமையாகும். ஆனால் நமது தமிழ் சமூகத்தில் குடும்ப நிறுவனத்தில் குழந்தை பெறுவது உட்பட பல விடயங்களை தீர்மானிப்பவர் ஆணாகவே உள்ளனர். இங்கு பெண்களுடைய உடன்பாடு, உடல்நிலை மற்றும் பல அசெளகரியங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. குறைந்த பட்சம் பரஸ்பரம் கலந்தாலோசிக்கலாம் என்பதற்கே இடமிருப்பதில்லை, குடும்பக் கட்டுப்பாடு என வரும் போது கூட கருத்தடை சாதனங்களைப் பாவிப்பவர்கள் பெண்க ளாகவே உள்ளார்கள். பெண்களும் அது குறித்து சர்ச்சைப்படுத்துவதே யில்லை. சமூகத்திலும் பெண்கள் பாவிக்கும் கருத்தடை சாதனங்களே அதிகளவில் உள்ளன. கருத்தடை சாதனங்களை கண்டுபிடிப்பவர்கள் ஆண்களாகவே உள்ளதும் ஒரு காரணம். அடுத்து கருத்தியல் மறுஉற்பத்தியினை நோக்கி, 'தாயைப் போல பிள்ளை நூலைப் போல் சேலை' என்பதுபோல் ஒவ்வொரு பெண்ணும் தாம் எப்படி மத கலாசார ஆணாதிக்க கருத்தியல்களுக்கு உட்பட்டு அடக்கு முறைகளை யெல்லாம் நியமம் என ஏற்று நடந்தாளோ அவற்றை அப்படியே அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சென்றுவிடுவாள். குழந்தைகளை சமூக இசைவாக்கம் அடையச் செய்வதில் குடும்பத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இங்கு இந்த சமூகக் கருத்தியல்கள் அறிவு வளர்ச்சிக்கு பொருந்தாததாக இருப்பினும் கூட பெண்கள் மீறுவதே இல்லை.
சிலசமயம் தமது செளகரியத்திற்காக ஏதும் மாற்றம் செய்ய விரும்பினாலும் சமூகத்துக்குப் பயந்து தவிர்த்துக் கொள்கிறார்கள். உதாரணம் திருமணமான பெண் சேலை கட்ட வேண்டும் என வலியுறுத்தும் அதேவேளை ஆணை வேட்டிகட்டவேண்டும் என வலியுறுத்துவதில்லை. பெண் தனது செளகரியத் திற்காக உடையை மாற்றினால் கலாசாரம் சீரழிகிறது என்ற புலம்பல் தொடங்கிவிடும். இவ்வாறு சமூக்க் கருத்தியல்கூட பெண்களை சுதந்திரமாக செயற்படவிடாது அடக்குமுறையும் கீழ்படிவும் தொடருவதற்கே வழியமைக் கின்றது. அதேபோல் உளவியல் தேவை என்பது கூட பெண்களுக்கு பாரபட்சமாகவே நடத்தப்படுகின்றது.
எனவே குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங்கள் முற்றும் முழுதாக பெண் களை கீழ்ப்படிவிற்கு, இரண்டாம் பட்ச நிலைக்கு இட்டுச் செல்வதாகவே உள்ளது. அஃதே ஆண் பெண் அசமத்துவ நிலையை பேணுவதாகவே உள்ளது. அவ்வாறெனில் பெண்கள் தொடர்ந்தும் குடும்ப நிறுவனத்திற்குள் செல்ல ஏன் விரும்புகிறார்கள்? என்ற கேள்வி எழுகின்றது. 'நமது தமிழ் சமூகத்தில் திருமணத்திற்கு வெளியே பாலுறவு, சந்ததி மறுஉற்பத்தி என்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடும்பத்தில் பெண்பிள்ளைகள் சுமை யாகவே கருதப்படுகின்றனர். இதனால் எப்படியும் பெற்றோர் பெண்ணை
30 நான் ஒரு பெண்

திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதுடன், சமூகம் திருமணம் செய்வதனால் பெண்களுக்கு ஒரு அந்தஸ்தை அளிப்பது போல் மாயைத் தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அதனால் ஒவ்வொரு பெண்ணும் திரு மணம் செய்துகொண்டால் சமூக அந்தஸ்து பெற்றுவிட்டவர்கள் போல் உணர் கிறார்கள். எனவே பெண்கள் சமூக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு குடும்ப நிறு வனத்துள் செல்கிறார்கள். பின்பு குடும்ப நிறுவனத்தினுள் அசமத்துவ உறவு நீடிப்பு, சுமை என்பன மேலும் மேலும் துன்பநிலைக்கே இட்டுச் செல்கின்றன. இவற்றை நோக்கும் போது பெண்கள் திருமணத்தினால் எந்தவித பலனும், திருப்தியும் அடைவதில்லை. ஆளுமை சீரழிவிற்கே வழியமைக்கிறது என்பது சரிதானா? இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண்நிலைவாதி சராசரி குடும்ப உறவை ஆளுமை சீரழிப்பிற்கே இட்டுச் செல்கிறது என்றே கூறுவார். ஆனால் சராசரி பெண், குடும்ப நிறுவனத்தை கேள்விக்குட்படுத்தாதவரை அற்ப சொற்ப சந்தோசத்திற்காக (திருமண உறவில்) குடும்ப நிறுவனத்திற்குள் செல்வது தவிர்க்க முடியாததேயாகும். கேள்விக்குட்படுத்தும் பெண்கள், குடும்ப நிறுவனம் குறித்து விழிப்புணர்வு பெறுபவர்கள் குறைந்தபட்சம் எவற்றை எதிர்பார்க்கிறார்கள்?
முடிவுரை:
குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங்கள் என்பது பெண்களைப் பொறுத்த வரை ஒரு கற்பனை எதிர்பார்ப்பேயன்றி வேறில்லை. தமிழ் சமூகத்தில் இன்றைய குடும்ப நிறுவனம் அதிகாரமயப்பட்ட உறவுகளைக் கொண்ட ஆணாதிக்க அடக்குமுறை நிறுவனம் என்பதே பொருத்தமாகும். இதனால் நேரடியாக உச்சப்பயனை அடையும் சுரண்டும் முதலாளி ஆண்களேயாவர். சுரண்டப்பட்டு அடக்குமுறையை அனுபவிப்பவர்கள் பெண்களேயாவார். இந்த குடும்ப நிறுவனம் ஆணாதிக்க பலன்களை பேணும் நிறுவனமாகவே செயற்படுகின்றது. இதனைப் பலப்படுத்தும் வகையில் வேறு பல நிறுவனங் கள் (மதம், கலை இலக்கியம், அரசு, சட்டம், பாடசாலை) செயற்படுகின்றன. எனவே குடும்ப நிறுவனம் அதிகார உறவைக் கொண்ட ஆணாதிக்க நலன் களைப் பேணும் சுரண்டல் நிலையைக் கொண்ட ஓர் நிறுவனம் என்பது தெட்டத்தெளிவாக விளங்குகிறது. ஆனால் அதற்குரிய பரிகாரம் உடனடி யாக குடும்ப நிறுவனத்தை சிதைப்பது என அர்த்தப்படுத்த முடியாது.
இன்று குடும்ப நிறுவனத்தின் உள்ளம்சங்கள் ஆண்-பெண் அசமத்துவ உறவை நீடிக்கவைப்பதற்காகவே உள்ளன. எனவே குடும்ப நிறுவனத் திற்குள்ளேயே தமது நியாயமான உரிமைகளை வென்றெடுக்கப் போராட வேண்டும். அதன் மூலம் குறைந்த பட்சம் ஜனநாயக உறவைப் பேணுவதற்கு
நான் ஒரு பெண் 31

Page 21
முன் நின்று உழைக்க வேண்டும். குடும்ப நிறுவனத்தை ஜனநாயகப்படுத்து
வது என்பது
1. வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்களிப்பைக் கட்டாயப்படுத்தல். 2. ஆண்-பெண் சமத்துவ உறவாகப் பேணுதல் 3. பெண்ணை சுயமாக செயற்படுவதற்கான உரிமையை வழங்குதல் 4. சந்ததி மறுஉற்பத்தி என்பது பெண்ணின் உடல் சம்பந்தப்பட்ட
8.
9.
தனால் ஆணுடன் ஆலோசனை செய்தாலும் முடிவு எடுப்பது அவளிடமே இருக்க வேண்டும்.
பாலியல் வற்புறுத்தல் இன்மை; பரஸ்பரம் பாலியல் திருப்திக்கு முக்கியத்துவம் கொடுத்தல். வன்முறை தவிர்க்கப்படல் வேண்டும் (அடி உதை, நிந்தனை வார்த்தைகளைத் தவிர்த்தல்) திருமணத்தில் சீதனம் எனும் சந்தை வியாபாரத்தை ஒழித்துக் கட்டுதல்.
தாய்வழி சமுதாயம் உருவாக்கப்படல்.
பரஸ்பரம் அன்பு காட்டல்,
இத்தனை அம்சங்களும் குடும்ப நிறுவனத்தில் நடைமுறை சாத்தியப் படுமேயானால் ஒவ்வொரு பெண்ணும் சுய ஆளுமையுடனும் மகிழ்ச்சி யுடனும் இருப்பதற்கு வழியமைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையே யாயினும் இதனை வென்றெடுப்பது என்பது மிகச் சிரமாகவே இருக்கும்
என்பதில் ஐயமில்லை. சமூக நியமனங்கள், விழுமியங்கள், கலாசார பண்பாடு என்பவை என்றுமே நிலையானவையல்ல. அவற்றிற்கு உயர்ந்த கட்ட வளர்ச்சி உண்டெனில் மாற்றம் வந்தேதீரும். எனவே பெண்கள் குடும்ப நிறுவனம் குறித்து விழிப்புணர்வு பெற்று எழுச்சியுறும் போது சமூகமாற்றம் அதாவது குடும்ப நிறுவனம் ஜனநாயகமயப்படுவது யாராலும் மறுத்துவிட முடியாத உண்மையாகும்.
32
நான் ஒரு பெண்

பெண், குடும்பம், குழந்தைகள் : பிரச்சினைகள் குறித்த சில அவதானங்கள்
'நான் ஆறுவயசுவரை பால் குடிச்சனான். நான் என்ரை அம்மாட்டை மட்டுமல்ல ஆச்சியிட்டையும் குடிச்சனான். இப்ப நீங்கள் எவ்வளவு காலம் பிள்ளைகளுக்கு பால் குடுக்கிறீர்கள்? இது தான் பிரச்சினை. இதாலை தான் எங்கடை சமுதாயம் நலிவான சமுதாயமாக மாறுகிறது.' இது வேறு யாரு மல்ல மேல்மாகாண கல்வித்திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.நல்லையா அவர்கள் 1995யூன் மாதம் 26ம் திகதி நடைபெற்ற ஆசிரியர்கட்கான கருத்தரங்கொன்றிலே நவீன குடும்பம்' பற்றிப் பேசிய போது குறிப்பிட்ட கருத்துதான் இது. நாற்பதுக்கும் அதிகமான ஆசிரியர்கள் மத்தியில் பெண்கள் சம்பந்தமான கருத்துகளை அவர் போகிற போக்கில் கூறிச் சென்ற விதத்தைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும். வீடு சார்ந்த வேலைகளில் பங்களிப்பது தான் சிறந்தது என்பதெல்லாம் பொதுவாகக் கேட்டுப் புளித்துப் போனவை தான். ஆனால் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கூட இக்கருத்துக்களை ஆசிரியர்கள் மத்தியில் கூறியது தான் எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந் தது. இந்தக் கருத்தரங்கு பற்றியும் கருத்தரங்கில் கூறப்பட்ட விடயங்கள் பற்றியும் ஆராய்வது எனது நோக்கல்ல. இவ்வாறான கருத்துணர்வுகளுக்கு காரணங்கள் என்ன? பெண்கள் பற்றிய கருத்துக்கள் ஏன் இவ்வாறு பேசப் படுகின்றன என்று யோசிக்கவும், அது பற்றி எழுத வேண்டுமென என்னைத் தூண்டிய சம்பவம் இது என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகிறேன். எவ்வாறாயினும் வளரும் குழந்தைகட்கு கல்வியூட்டும் ஆசிரியர்களுக்கு கருத்தரங்கொன்றில் இவ்வாறான கருத்துக்கள் தான் போதிக்கப்படுகின்றன என்ற துர்ப்பாக்கியமான நிலை பற்றி என்னால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. காலத்தோடொத்து இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எமது சூழலும் மாறுகின்றது. இந்த மாற்றங்களுக்கேற்ப யாவுமே தம்மை இசைவாக்கிக்
ST e Cun 33

Page 22
கொள்கின்றன. மரம், செடி, கொடியிலிருந்து நுளம்பு கூட இதற்கு விதிவிலக் கல்ல. அப்படி இருக்கும் போது பெண்கள் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?
பெண்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகளாக வீடு, குடும்பம் சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சமுதாய மாற்றங்களுடன் கால ஓட்டத்தில் அதற்கப்பாலும் பெண்ணின் உழைப்பு தேவைப்பட்டது. புராதன கம்யூனிச சமுதாயத்திலிருந்து நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாறிய போதும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது வாழ்க்கை முறையிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தியது. பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்டபோதும் குடும்பம் சார்ந்த உழைப்பை யும் அவளே செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேலைகள் சமனாக பங்கிடப்படாமல் இரட்டைச் சுமையுள் அவள் அழுந்தினாள். அவளது சமூக உற்பத்திக்கான உழைப்பு இரண்டாம் தரமானதாகவே கருதப்பட்டது. மீண்டும் குடும்பத்திற்கான அவளது உழைப்பே வலியுறுத்தப்பட்டது. விரும்பவும் பட்டது. இவ்விரட்டிப்பு வேலைப்பழுவிலிருந்து பெண் விடுபட முனையும் போது, அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது, குடும்பத்திற்கு வெளியே உலகைக் காணவிளையும் போது, மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்குள் பெண்ணைத் தள்ளுவதற்கான எதிர்ப்புக் குரல்கள் உயர்வாக ஒலிப்பது இயல்பானதுதான். ஏனெனில் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத வசதிகளை அனுபவிக்க விரும்பும் அனைவருமே பெண் விடுதலை பெறுவதை விரும்பமாட்டார்கள்.
பெரும்பாலான மக்கள் மத்தியில் பெண் வேலைக்குப் போவதால்தான் குடும்ப உறவு சீரலைகிறது. பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். போதை வஸ்து பாவிக்கின்றனர். தீய பழக்க வழக்கங்களால் அழிந்து போகின்றனர் அவர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை. குடும்ப உறவு அழிகிறது. சமுதாயம் நலிந்து போகிறது போன்ற எல்லாப் பிரச்சினைகளுமே பெண்ணால் தான் உருவாகிறது என்ற கருத்துக்கள் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. பெரும்பாலான மக்கள் உண்மையைத் தரிசிக்க மறுக்கின்றனர். அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம் முன் உள்ளன. ஆனால் இவர்கள் பெண்கள் முன்வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. பரீசீலிக்கப்படவேண்டியவை. பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண், சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கும். காலம் காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையலறை, குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும்
34 நாள் ஒரு பெண்

போது அவ்வேலைகளில் குறைபாடும், நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் போது பிரச்சினைகளும் மறைந்து போகும்.
இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும் பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்பைப் பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக, அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணிபெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. உதாரணமாக தற்காலக் குழந்தைகள் பால் குடித்து வளர்வதில்லை. தாய்மார் வேலைக்கு போவதால் பால் கொடுப்பதில்லை. இதனால் பிள்ளைகள் நலிந்து போகின்றன. எனவே பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து பிள்ளை வளர்க்க வேண்டும் என்று 'புத்திசீவி' ஒருவர் பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் கூறியிருக்கிறார். இதில் கூறப்பட்ட பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான அவர் கூறும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைக்கு ஒரு தாய் பால் கொடுக்க முடியவில்லையென்றால் அது ஒரு தனிப் பெண்ணின் பிரச்சினை அல்ல. சமுதாயத்தின் பிரச்சினை. இதற்கான தீர்வை பரந்த மனதுடன் ஆராய்ந்து தீர்வு காணவேண்டும். பால் ஒரு பிள்ளைக்கு எவ்வளவுகாலம் கொடுப்பது சிறந்தது என்பது அறியப்பட்டு அந்நாட்களை தாய்மாருக்கு விடுமுறையாக வழங்கவேண்டும். நோர்வே, கனடா,டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகளில் பாலூட்டும் தாய்மார்க்கு, பாலூட்டும் நேரங்கள் என குறுகிய நேர விடுமுறைகள் அமுலில் உள்ளன. இப்பிரச்சினைக்கு மாற்றுத் திட்டங்களைப் பற்றி நாமும் யோசிப்பது அவசியம். பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அதை விடுத்து கேலியாகவும் கிண்டலாகவும் குடும்பத்தை சீரழிக்கும் பாவிகளாகவும் பெண் சித்திரிக்கப்படுவது ஆணாதிக் கச் சிந்தனை முறையின் மேலாட்சியைக் காட்டுகிறது. இன்றைய காலம் குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப அலகே பெண்களின் அடிமைத்தனத்துக்கும் அடக்குமுறைக்கும் காரணம் என்று தீவிரப் பெண் ணியவாதிகள் கருதுகினறனர். திருமணம் என்ற உறவுக்குப் பின்னர் குடும்பம் என்ற அலகு மிக இறுக்கமாகக் கட்டப்படுகிறது. உடைக்கப்பட கூடாத புனிதமான அமைப்பாக இருக்கிறது. குடும்பத்துள் பெண்ணுக்கு எவ்வளவு மோசமான அடக்குமுறைகள் நடைபெறுவதாக இருந்தபோதும், அதன்
5 Tir 69 Oudolf 35

Page 23
ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தும் கருத்தியல்புகளே சிறந்தது என்று கருதப்படுகின்றன. ஆனால் குடும்ப உறவு குறித்த கருத்தாக்கங்கள் காலத்து க்குக் காலம் மாறி வந்துள்ளன என்பது பற்றியோ, அவை மாறக்கூடியவை என்றோ ஏற்றுக்கொள்ள பலர் தயங்குகிறார்கள். ஒருதார மணமுறை மனிதகுல வரலாற்றில் மிக அண்மைக்காலத்திய ஒன்று என்பதை பலர் மறந்து விடுகின்றனர். பல ஆண்களை ஒரு பெண் முடித்து குடும்பமாக வாழ்ந்ததற்கு பல சான்றுகள் இலக்கியங்களில் காணப்படுகின்றது. சமுதாய உற்பத்தி முறைமை அதன் உறவுகள், கலாசார விழுமியங்கள் என்பவற்றிற்கேற்ப குடும்ப அமைப்பு காலத்துக் காலம் மாறி வந்துள்ளது. எமது இன்றைய சமூகமுறைமை ஐம்பது அறுபதுகளில் இருந்ததை விடவும் எவ்வளவோ மாறி விட்டது. பெண்கள் சமுதாய வேலைகளில் பங்களிப் பதால் குடும்பம் சிதைவுறுவதாக கூறுவதானது மிகவும் தவறான கருத்தியல்பு ஆகும். குடும்பம் பற்றிய கோட்பாடுகள் முன்னைய சமூக வாழ்வு முறைக் கேற்ப இயல்பாக்கம் அடைந்ததாக இருப்பதால் இன்றைய வாழ்வு முறைக் கேற்ப அவை தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. தகவமை த்துக் கொள்ளும் வரையான காலத்தில் குடும்பம் சீரழிந்ததாகப் படுகிறது. இவை சிதைவுகளல்ல. மாறாக அமைப்பு புதிய நிலைக்கு ஏற்ப மாற்றுருப் பெறும் போக்கில் ஏற்படும் உடைவுகள் அல்ல வளர்ச்சிகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியைக் கூட ஒரு பயன் விளைவுள்ள வளர்ச்சியாக மாற்றுவதில் எமது பங்களிப்பை வழங்க முடியும். இன்றைய குடும்ப அமைப்பின் போக்கை விமர்சித்து, மாறாக வேறுவழிகள் உருவாகி வருகின்றன. குடும்பம் இன்றைய ஜனநாயக சமூக அமைப்பினுள் உள்ள ஒரு வடிவம் என்பதால் குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தைகளுக் கிடையிலான உறவினையும் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று மாக்ஸியப் பெண் ணிலைவாதிகளில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். 'புதிய ஜனநாயகத்தை' சீனாவில் அறிமுகப் படுத்துகையில் குடும்ப வேலைப் பிரிவினை மற்றும் பெண்ணுக்கும் ஆணுக் கும் இடையிலான உறவில் சமத்துவம் என்பவற்றைப் பேணுவது பற்றிக் குறிப்பிட்டார். "ஜனநாயக பூர்வமான" அடிப்படையில் குடும்பம் அமைதி காணமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். இன்னொரு சாரார் குடும்பம் என்னும் வழமையான முறைகளை மீறி, ஆணும் பெண்ணும் தம்மால் சேர்ந்து வாழமுடியும் என்று விரும்பும் போது எத்தகைய சம்பிரதாய பூர்வமான திருமண முறைகளுமற்ற புரிந்துணர்வு, சமத்துவம் என்ற அடிப்படையில் "சேர்ந்து வாழல்' (Living together) என்ற முறைமை யினை மாற்றாகக் கருதுகின்றனர்.
36 T (Our

இன்னொரு சாரார் குழந்தைப் பேறும், ஆண் பெண் இருபால் உறவுமுறையில் அமைந்த குடும்ப அமைப்புமே சமத்துவமும், ஜனநாயகமும் அற்ற குடும்ப அமைப்பிற்கு காரணமாகின்றன. எனவே ஒரு பால் உறவுக்குடும்பங்களே உண்மையான காதலையும் சமத்துவமான உறவையும் தரும் என்று கூறுகின்றது.
எவ்வாறெனினும் சமூகத்தில் பெண்களின் சமஉரிமை, சம அந்தஸ்து என்ற விடயங்களில் அக்கறை இன்றி பெண்ணிலை வாதம் பற்றித் திறந்த மனதுடன் ஆராய யார் மறுத்தாலும் குடும்பம் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டுத்தான் வருகின்றன. காலச் சக்கரம் தனது பாதையில் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைத் தடுப்பது என்பது சூரியனை கைகளால் பொத்த நினைப்பதுபோலத்தான்! எனவே இவ்வாறான மாற்று அமைப்புகள் அல்லது மாற்று வழிமுறைகள் பற்றிய கணிப்பீட்டை நிதானமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே சமுதாயம் தொடர்பான புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும். வாழ்வுக்கும் அர்த்தம் சேர்ப்பதாக அமையும்.
நான் ஒரு பெண் 37

Page 24

பெண்களும் சட்டமும் சமூகமும்
பால் வேறுபாடும் பெண்ணிலைவாதமும் அனுஷா
உழைப்பு - பெண்கள்-கூலி பாஞ்சாலி
பெண்ணிலை : இரட்டைச்சுமை பாஞ்சாலி
பெண்களும் மனித உரிமையும் சரோஜா
பெண்கள் குழந்தைகள் உரிமையும்
புதிய சட்டச் சீர்திருத்தமும் ஜீவா ஆரோக்கியமேரி

Page 25

பால் வேறுபாடும் பெண்நிலைவாதமும்
ஆண்மையும் பெண்மையும் பிறப்பிலேயே வேறு வேறாகத் தீர்மானம் செய் யப்பட்டுள்ளனவா? ஆண்கள் யுத்தம் புரிவதற்கென்றும், பெண்கள் இல்லக் கிழத்திகள் என்றும் பிறப்பிலேயே ஏதாவது திட்டமிடல் நடந்துள்ளதா? ஆண், பெண் குழந்தைகளை அவற்றின் 'பாரம்பரிய குணாம்சங்களை மீறி வளர்க்க விரும்புகிற பெற்றோர்கள் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வி களில் சிலவே மேலுள்ளவை. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக உயிரியலாளர்களும், உளவியலாளர்களும், சமூகவியலாளர்களும், மானுடவியலாளர்களும் மனிதர்களிடையே குண வியல் சார்ந்த பால்வேறுபாடுகளின் ஊற்று மூலம் என்ன என்று ஆராய்ந்து வந்துள்ளனர். இந்த நூற்றாண்டு மிக ஆரம்பத்தில் புத்திசாலித்தனமும், அறிவும் மூளையின் அளவில் தங்கியிருக்கிறது என்றும் 'இயல்பாகவே ஆண்களுக்கு மூளையின் அளவு பெரிதென்றும், எனவே கலை, விஞ்ஞானம் அறிவுத்துறைகளில் ஆண்களின் மேலாட்சி நிலவியே தீரும் என்றும் சொல் லப்பட்டது. ஆண் மேலாதிக்க வாதத்துக்கு அழகிய முறையில் நியாயம் செய்த கருத்து காலகதியில் அழிந்து விட்டது. ஒரு சின்ன உதாரணம், மூளையின் கொள்ளளவைப் பற்றி ஆய்வு செய்த ஒரு விஞ்ஞானி, பெண் விஞ்ஞானிகள் சிலரதும் ஆண் விஞ்ஞானிகள் சிலரதும் மூளைக் கொள்ளளவை ஆராய்ந்த போது மிகப் புகழ்பெற்ற ஒரு ஆண் மானுடவியலாளரின் மூளையே அனைத்திலும் மிகச் சிறியதெனத் தெரிய வந்தது.
பால் வேறுபாடுகள் பற்றி ஆய்வு, செய்வதற்கு பெண் நிலைவாதிகள் கொள்கைரீதியாக எதிர்ப்பைத் தீவிரமாகக் காட்டி வருகிறார்கள். ஏனெனில் ஆய்வு முடிவுகள் எப்படியிருந்த போதிலும் அவை பெண்களுக்கு எதிரா கவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன, பயன்படுத்தப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
நான் ஒரு பெண் 41

Page 26
அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கும் அடிப்படையான ஒரு அம்சம் எதிர்கால ஆண்-பெண் உறவுநிலைகளைத் தீர்மானிப்பதில் முக்கிய மானது.
பாரம்பரியமான, வகைமாதிரி (Stereotype) ஆண் -பெண் இயல்புகள் எவ்வளவு இறுக்கமாகச் சமுதாயத்தில் பேணப்பட்டாலும் ஒரு தனிநபர் வளர்ப்பு முறை மூலம் அதனை மாற்ற முடியும். மிகச் சுலபமாகச் சொல்வ தானால் ஆண் பெண் குழந்தைகளின் குணவியல் உருவாக்கத்தில் வளர்ப்பு முறை, பெற்றோரின் தீர்க்க தரிசனம் என்பன முக்கியமான பங்கு வகிக் கின்றன என்பதே.
உயிரியலுக்கும் கலாசாரத்துக்குமிடையேயான போராட்டம் குறித்து எவர் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் ஆண் - பெண் பால் வேறுபாடுகளை விட ஒருமைப்பாடுகளே அதிகம் என்பது சுவாரசியமான ஒரு உண்மையாகும். மேலும் ஆண்களுக்கிடையேயும், பெண்களுக்கிடையேயும் அவரவர் களுக்குள் கிடைக்கப் பெறும் வேறுபாடுகளை விடப் பலமடங்கு - சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அதிகமாகும். எனினும் உயிரியல் விஞ்ஞானம் சார்ந்து பால் வேறுபாடுகளை விளக்கும் தீவிர முயற்சிகளும் அண்மைக்காலங்களாக வளர்ந்து வருகின்றன. பல தளங்களிலிருந்தும் இம் முயற்சிகளுக்கு எதிர் முயற்சிகளும் கண்டனங்களும் உள்ளன.
ஆண், பெண் ஆகியோரது மூளைகளும் உடலமைப்பும் வேறுபட்ட முறை யில் வளர்வது அந்த அந்த உடல்களில் கிடைக்கும் ரெஸ்ரோஸ் ரெறோன் எனும் ஓமோனின் (ஒமோன் -Hormone என்பது ஒருவகை உயரிரசாயனத் தூண்டி ஆகும்.) அளவில் தங்கியுள்ளது. மற்றும் இந்தக் கூற்றுக்கான பெருமளவு நியாயம் விலங்குகளின் மீது நடாத்தப் பெற்ற பரிசோதனை களிலிருந்தே வருகிறது. உதாரணமாக ரெஸ்ரோஸ் ரெறோன் ஓமோன் மேலதிகமாகத் தரப்பட்ட போது எலிகளில் மூளை வளர்ச்சி வேறுபட்டுக் காணப்பட்டது. ற்சஸ் என்னும் ஒருவகைக் குரங்கின் மீது இவ் ஓமோன் பரீட்சை செய்து பார்க்கப்பட்ட போது விளைவுகள் ஆண், பெண் குரங்கு
களில் வேறு வேறாக இருந்தன.
ஓமோன் சிகிச்சை பெற்ற ஆண் குரங்கு ஒன்று தன்னுடைய கூட்டினுள் இடப்பட்ட குரங்குக் குட்டியைத் தாக்க முற்பட்டது. ஆனால் பெண் குரங்குகள் பெருமளவில் குட்டியைப் பேணும் முயற்சியிலேயே ஈடுபட்டன. எல்லா மிருகப் பழக்க வழக்கங்களுக்கும், மனிதச் சமாந்தரங்கள் உண்டு என்ற கருத்தை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வதில்லை எனினும், மானுட வியலிருந்து வரும் சில ஆதாரங்களை நாம் கவனத்தில் எடுக்கலாம்.
42 நான் ஒரு பெண்

உதாரணமாக கலாசாரங்களுக்கிடைப்பட்ட பல ஆய்வுகளிலிருந்து தெரிய வருவது என்னவெனில், வன்முறையைப் பொறுத்து வித்தியாசமான சமு தாயங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாச் சமுதாயங் களிலும் பெண்களை விட ஆண்கள் ஆக்கிரமிப்பு மனோபாவம் அதிகம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
எனினும் ஆக்கிரமிப்பு மனோபாவம் என்று இங்கு நான் குறிப்பிடுவதை
உடல் சார்ந்த வன்முறை (Physical Violonce) என்ற அர்த்தத்திலேயே
விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது. போட்டி மனோ
பாவம், மனோவியல் வன்முறை, ஆக்கிரமிப்பின் ஏனைய வடிவங்களைப்
பொறுத்தவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் எத்தகைய வேறுபாடும்
இல்லை. (உதாரணமாகப் பெரிய நிறுவனங்களின் தலைவிகள், அரசியல் தலைமையிலிருக்கும் பெண்கள் ஆண்களைப் போலவே ஆக்கிரமிப்
புணர்வுடன் அதிகாரத்தை வீசி வாழ்வதைப் பார்க்கலாம்!)
பெண்களும் தாய்மையும் பிரிக்க முடியாத அம்சமாக இருப்பது போலப் பட்டாலும் உயிரியல், பெண்களை மென்மையானவர்களாகவும் அன்புடை யோராகவும், தாய்மை உணர்வைத் தருவதாகவும் தயார்படுத்துகிறது என்பதற்கு விஞ்ஞானரீதியாக உறுதியான சான்றுகள் இல்லை என்று மேலும் தெரிய வருகிறது.
சமூக விஞ்ஞானிகளும், உயிரியலாளர்களும் பால் வேறுபாடுகள் குறித்து ஒரு போதும் உடன்பாட்டிற்கு வரமுடியாமல் போகலாம். ஆனால் எமது குழந்தைகள் ஒரு நாள் தமக்கிடையேயான ஒற்றுமைகளே அதிகம் என்று மட்டும் உணர்கிற காலம் ஒன்று வரும். இதற்காக உங்கள் குழந்தையை தயார் செய்ய நீங்கள் ஆயத்தமா?
நான் ஒரு பெண் 43

Page 27
உழைப்பு - பெண்கள் - கூலி
ஆண்களுக்கு வழங்கப்படும் கூலிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் கூலிக்கும் இடையில் அதிக வேறுபாடு நிலவுவதை நாம் அறிவோம். இக்கூலி வேறுபாட்டினைப் பலர் பலவாறு நியாயப்படுத்துவார்கள். இதனை முதலா ளித்துவப் பொருளியலாளர் பின்வருமாறு நியாயப்படுத்துகிறார். ஆண்களுக்கு வழங்கப்படும் கூலி முழுக் குடும்பத்தையும் பராமரிக்க வழங்கப்படுவதால் அதனை குடும்பத்தைப் பராமரிப்பதற்குரிய கூலி (Family wage) எனவும் , பெண்களுக்கு வழங்கப்படும் கூலி, குடும்பத்தை பராமரிக்க வழங்கப்படும் கூலியுடன் கூடவே மேலதிகமாக உழைக்கப்படும் கூலி (additionincome) யும் ஆகும். மேலும், குடும்பத்தைப் பராமரிக்கும் கூலி மேலதிக கூலியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நியாயமாகக் கொண்டு ஆண்களுக்குப் பெண்களை விட கூடுதலான கூலி வழங்குவது நியாயப்படுத்தப்பட்டது. பொருளாதாரச் சுரண்டலை மறைக்கும் முகமாக முன்வைக்கப்பட்ட பொரு ளாதாரக் கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. மேலும் வளர்முகநாடுகளில் காணப்படும் நிலைமை இதனை மறுதலிக்கின்றது. பெரும்பாலான பெண்கள் கூலி உழைப்புக்குச் செல்வதற்கான காரணம் அவர்களது கணவன்மாரது உழைப்பு குடும்பத்தைப் பராமரிக்கப் போதாமல் இருப்பதால் தான். அத்துடன் கணவன் மனைவி ஆகிய இருவரும் உழைத்தும் கூட குடும்பத் தைப் பராமரிக்க முடியாத நிலையை நாம் அன்றாடம் காண்கிறோம். பல குடும்பங்களில் ஆண்கள் உழைத்து வரும் கூலியில் பெரும்பகுதி மதுபானம், பீடி, சீட்டாடுதல் போன்றவற்றினால் வீண் விரயமாகிறது. இப்படிப்பட்ட குடும்பங்களில் பெண்களது கூலியே குடும்பத்தைப் பராமரிக்க பெருமளவில் பயன்படுகிறது.
சாதாரண வறிய குடும்பங்களிலேயே இந்த நிலைமை காணப்படுகின்ற தென்றால் ஆயிரக்கணக்கில் நமது பிரதேசங்களில் வாழும் விதவைகளின்
44 நான் ஒரு பெண்

லைமை எவ்வளவு பாரதூரமானது என்பதைச் சிந்தித்துப் பார்க்கலாம்.
து து தச சநததது வ்விகவைகள் பெரும்பாலம் கமக சொங்க உமைப்பினாலேயே கம
த ரு லும தமது 西西 냉) தமது குடும்பங்களைப் பராமரிக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கும் தொடர்ந்து மிகக் குறைந்தளவு கூலியே வழங்கப்படுகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில் மிளகாய், புகையிலை, வெங்காயம் போன்ற தோட்டங்களில் 8-10 மணித்தியாலங்கள் வேலை செய்வதற்குப் பெண்களுக்கு 25/= தொடக்கம் 30/= வரை வழங்கப்படுகிறது. இதே வேளை 3-4 மணித்தியாலங்கள் வேலை செய்யும் ஆண்களுக்கு 60/= தொடக்கம் 70/= வரை வழங்கப்படுகிறது. ஆண்கள் செய்யும் வேலை பெண்கள் செய்யும் வேலையை விடக் கடினமானது எனச் சிலர் வாதிடலாம். ஆனால் பார்க்கப் போனால் பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான நேரம் வேலை செய்வது மட்டுமில்லாமல் கூடிய கடினமான வேலையையும் செய்கிறார்கள். ஆண்கள் அனேகமாக வெய்யில் உச்சிக்கு ஏறுவதற்கு முன்னர் வேலையை முடித்து விடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் பாத்தி கட்டுதல், தண்ணீர் இறைத்தல் போன்ற வேலைகளையே செய்வார்கள். பெண்கள் நாள் முழுவதும் களை பிடுங்குதல், மிளகாய்ப் பழம் பறித்தல், நாற்று நடுதல் போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். இது வெய்யில் எரிக்கும், முதுகை முறிக்கும் வேலை என்பதை யாரும் மறுக்க முடியாது. விவசாயத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. இனி புனருத்தாரண வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் (இவர்கள் அனேக மாக ஆண்களாகவே காணப்படுகிறார்கள்) பெண்களை எப்படி நோக்குகிறார் கள் எனச் சற்றுப் பார்ப்போம். விதவைகளுக்கு எப்படி புனர் வாழ்வு அளிக்கலாம் எனக் கேட்டவுடன் அவர்களின் வாயில் முதலில் வருவது தையல் இயந்திரங்கள்தான். இதை விட வேறு சில திட்டங்களையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். கோழி வளர்ப்பு, கைப்பணிப் பொருட்கள் (பனை போன்றவற்றில் இருந்து) செய்தல் ஆகியன அவற்றில் பொதுவாக காணப் படுவன, பெண்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இவ்வாறான தொழில்களில் மட்டுமே பெண்களை மீண்டும் மீண்டும் ஈடுபடுத்துவதால் ஏற்படும் பிரச்சினகளை கீழ்வரும் உதாரணத்தின் மூலம் எடுத்துக் காட்டலாம்.
யாழ் குடாநாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட கிராமம் ஒன்றில் ஏறத்தாழ 15 விதவைகள் இருக்கின்றார்கள். குறிப்பிட்ட ஒரு புனர்வாழ்வுத் தாபனம் அப் பதினைந்து விதவைகளுக்கும் தையல் இயந்திரங்களை வழங்கியது. சில மாதங்களுக்குள் பலர் இதனை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். காரணம் என்ன? அக் குறிப்பிட்ட கிராமத்தின் தேவையை
நான் ஒரு பெண் 45

Page 28
நிறைவு செய்ய இரண்டு தையற்காரர்கள் போதும். இந்நிலையில் பதினைந்து தையல்காரருக்கு எங்கு வேலை கிடைக்கப் போகிறது? மேலும் இவர்களுக்கு இத்தையல் வேலை மூலம் கிடைக்கும் வருமானமும் மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு நாளைக்கு 40/= உழைப்பதே பெரும்பாடாக உள்ளது.எனவே விதவைகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது நடைமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முதலாவதாக, பெண்களின் விருப்பம் (பலர் விவசாயத்தில் ஈடுபட விரும்புகிறார்கள்) சந்தை நிலைமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே திட்டங்களை வரையவேண்டும். அடுத்ததாக மரபுரீதியான தொழில்களிலேயே பெண் களை ஈடுபட வைக்காமல் எத்துறைகளில் அதிக தேவை இருக்கிறதோ அத்துறைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். இன்று நமது நாட்டில் மேசன் வேலை, தச்சு வேலை, நீர்க்குழாய் பொருத்துதல் (Plumbing) போன்ற துறைகளில் அதிக வேலைவாய்ப்பு இருக்கின்றது. இத்துறைகளில் பெண் களை ஈடுபடுத்த எவருமே முன்வராததற்குக் காரணம் என்ன? பெண்கள் மென்மையானவர்கள், கடின உழைப்புச் செய்ய மாட்டார்கள் என எவராவது நினைத்தார்களாயின் நமது தோட்டங்களிலும் கைத்தொழில்களிலும் ஈடுபட்டுள்ள பெண்களை ஒரு தடவை சென்று பார்த்தால் அவர்களது எண்ணத்தை மாற்ற அதிக நேரம் செல்லாது என நினைக்கிறேன்.
46 நான் ஒரு பெண்

பெண்நிலை: இரட்டைச் சுமை!
ஏனைய வளர்முக நாடுகளைப் போலவே, இலங்கையிலும் கிராமங்களில் வாழும் வறிய பெண்களில் பெரும்பான்மையோர் தமது சொந்த வீட்டு வேலைகளைக் கவனிப்பதுடன் சந்தைக்கான பொருள் உற்பத்தியில் (உதாரணமாக, பாய் இழைத்தல், பனங்கட்டி செய்தல், கற்பூர உற்பத்தி அல்லது) சேவை வழங்கலில் (வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றல்) ஈடுபட்டிருப்பதைக் காணலாம். இவர்களில் அனேகமானோர் தோட்டங் களிலும் வயல்களிலும் கூலி வேலை செய்கிறார்கள். இன்னும் சிலர் தமது வீடுகளில் இருந்தபடியோ அல்லது சிறுவேலைக் கூடங்களிலோ வேலை செய்கிறார்கள். இவ்வகைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொதுவான அம்சம் யாதெனில், இவர்கள் அனைவரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் காணப்படுவதுடன், வெவ்வேறு தொழில் கொள்ளுநர்களிடம் வெவ்வேறு வேலை நிபந்தனைகளின் கீழ் வேலை செய்வதாகும். இதனா லேயே இதனை 'ஒழுங்கு படுத்தப்படாத தொழிற்துறை (Unorganised Sector) என அழைப்பர். அரசாங்கம் தொடக்கம் தொழிற்சங்கங்கள் வரை தொழிலாளர்கள் தொடர் பான வேலைத் திட்டங்களை அமுல்படுத்துகையில் தொழிற்சாலைகளிலும் ஏனைய வேலைத்தளங்களிலும் வேலைசெய்யும், தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை மனதிற் கொண்டே செயற்படுகின்றன. எனவே அநேகமானோர் 'ஒழுங்குபடுத்தப்படாத தொழிற்துறையைச் சேர்ந்த 'தொழிலாளராக' இனங் காணத் தவறி விடுகிறார்கள். மேலும் 'ஒழுங்கு படுத்தப்பட்ட தொழிற்துறையைச் (Organised Sector) சேர்ந்த தொழிலாள ர்களே அநேகருடைய கவனத்தையும் ஈர்ப்பதுடன், 'தொழிலாளர்கள்' என இனங்காணவும்படுகிறார்கள்.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள் "ஒழுங்குபடுத்தப்படாத தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள்.
நான் ஒரு பெண் 47

Page 29
இந்தியாவைப் பொறுத்தவரையில் 89% ஆன பெண் தொழிலாளர்கள் 'ஒழுங்குபடுத்தப்படாத" தொழிற்துறையைச் சேர்ந்தவர்களாகக் காணப் படுகிறார்கள். எனவே பெரும்பான்மையான பெண் தொழிலாளர்கள். "தொழிலாளர்கள்’ என இனங்காணப்படுவதில்லை. இதனால் எழும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று. தொழிற் சட்டங்கள் (Labour laws) எவையும் இவர்களுக்கு நடைமுறையில் இல்லை. 'ஒழுங்கு படுத்தப்படாத தொழிற் துறையைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது பொதுவான பிரச்சினையாக இருக்கின்ற போதும், பெண்களைப் பொறுத்தவரையில் அது மிகப் பெரும்பான்மையானோரைப் பாதிப்பதுடன், பெண்கள் என்ற ஒரே காரணத்தினால் அது அவர்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது. உதாரணமாக, 'ஒழுங்கு படுத்தப்படாத தொழிற்துறையைச் சேர்ந்த எவருக்கும் இழிவுக் கூலி மட்டம்' (minimum Wages) சட்டரீதியில் நிர்ண யிக்கப்படாத போதிலும் ஆண்களைவிடப் பெண்களே இதனால் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். 'ஒழுங்குபடுத்தப்படாத தொழிற்துறையைச் சேர்ந்த பெண்கள் எதிர் நோக்கும் மிகமுக்கிய பிரச்சினை குறைந்த கூலியாக இருப்பினும் அதனுடன் கூடவே இன்னும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவற்றுள் சில வருமாறு: வேலைக்கு போகும் பெண்களின் குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய அமைப்புக்கள் இல்லாமை ஒரு பெரிய குறைபாடாக உள்ளது. குழந்தைப் பராமரிப்பகங்களை (Creches) கிராமங்கள் தோறும் நிறுவுவதன் மூலம் இப்பெண்களின் சுமையை ஓரளவுக்கு குறைக்கலாம். இவ்வசதி இல்லாததன் காரணமாக சில வறிய குடும்பங்களில் சிறிய பெண் பிள்ளைகள் தமது தம்பி தங்கையரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களது கல்வியைப் பாதிக்கக் கூடிய அளவிற்குக் கூட பாரதூரமாக அமைகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண் பிள்ளைகளே. பெண்கள் பிரச்சினையானது நச்சு வட்டமாக மீண்டும் மீண்டும் பெண்களைப் பாதிப் பதற்கு இது ஒரு சிறு உதாரணமாகும். இப்பெண்கள் வெளியில் வேலை பார்ப்பதால் அவர்களது வீட்டுக் கடமைகள் குறைவதாக இல்லை. வெளியில் வேலை செய்வதுடன் கூடவே பெரும் பான்மையான வீட்டு வேலைகளையும் (சமையல், துவைத்தல், குழந்தை களைப் பராமரித்தல் போன்றன) இவர்களே தொடர்ந்து செய்ய நேர்கிறது. இதனையே சுருக்கமாக 'இரட்டைச் சுமை" (Double burden) என அழைப்பர். மத்தியதர உயர்தர வர்க்கப் பெண்களைப் போலன்றி இப்பெண்களுக்கு வீட்டுப் பணிப் பெண்களை வைத்திருக்கும் அளவிற்கு பொருளாதார வசதியும் கிடையாது.
48 jari 9g Guru

சிறிய வேலைத்தளங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. அத்துடன் நீண்ட நேரங்களும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் தொழிற்சட்டங்கள் நடை முறையில் இல்லாததால் சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை எவையும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. மேற்கூறிய பிரச்சினைகள் தொழில் நிபந்தனைகள், நிலைமைகளுடன் மட்டும் தொடர்புபடாது குடும்ப அமைப்பு, ஆண் பெண் உறவுகள், சமூகப் பெறுமானங்கள் (Social Values) ஆகியவற்றுடனும் நெருங்கிய தொடர்பு 2.60)LU J60.
மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க எண்ணும் அமைப்புக்களும் அரசாங் கங்களும் முதலிலே மேற்கூறிய 'தொழிலாளர்களாக இனங்காண வேண்டும். இவ்வாறு இனங்காணப்படும்வரை அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் சமூகரீதியான நடவடிக்கை களையும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது. இன்று பெண்நிலைவாத அமைப்புகள் எதிர்நோக்கும் சவால்களில் ஒன்று மேற்கூறிய பெண்களை அமைப்புரீதியாக ஒருங்கிணைத்தல் ஆகும். இது ஒரு இயலாத காரியம் இல்லை. இந்தியாவின் பெரும் நகரங்கள் சிலவற்றின் சில பகுதிகளில் வீட்டுப் பணிப்பெண்கள் யாவரையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவதில் பெண்கள் அமைப்புக்கள் ஓரளவு வெற்றியீட்டி யுள்ளனர். அதேபோல, பங்களாதேஷிலும், சில கிராமங்களில் உள்ள கூலி விவசாயப் பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குரிய 'இழிவுக் கூலியை நிர்ணயிப்பதில் பெண்கள் அமைப்புக்கள் வெற்றி கண்டுள்ளன. இப் பெண்களை அணி திரட்டிப் போராட வைப்பது பெண்விடுதலையை மட்டுமன்றி, சமூக மாற்றத்தையும் விரைவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை.
நான் ஒரு பெண் 49

Page 30
பெண்களும் மனித உரிமைகளும்
மனித உரிமைகள் மீறப்படுவதற்கு இன்று எந்த ஒரு நாடோ, அரசாங்கமோ விதிவிலக்கல்ல. ஆனால் இவற்றின் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களின் அவல நிலைகள் பல தரப்பட்டவையாகும்.
பெண்கள் பாலியல் வன்முறைகட்கு உள்ளாக்கப்படல் இவற்றுள் பொது நிகழ்வாக உள. குடும்பத்தவர் முன் பெண்கள் பலாத்காரப்படுத்தப்படல், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இளம் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் பிரயோகித்தல், கணவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற் காக மனைவி துன்புறுத்தப்படல் மகள் அரசியலில் ஈடுபட்டமைக்காக தாயார் சுட்டுக் கொல்லப்படல், காணாமற் போனோரைத் தேடுவதில் முனைப்பாக ஈடுபட்டதாயோ, மகளோ பயமுறுத்தப்படல், இன்று சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. இக்குற்றங்களில் பெரும்பாலானவை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் ஆகியோராலேயே புரியப்படுவது யாரும் அறிந்ததே.
இப்படியாகப் பெண்களுக்கெதிராக இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் முடிவற்ற தொடர் நிகழ்வுகளாகவே உள்ளன. இவற்றை எப்போது முடிவுக் குக் கொண்டு வருவது யார் கொண்டு வருவது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இவற்றிற்கெதிராகக் குரல் கொடுக்கும் பெண்நிலைவாதிகள், அரசியலில் பலம் வாய்ந்தவர்கள், சமூக அமைப்பாளர்கள் பெண்களாக இருக்கும் கட்டத்தில் அவர்களும் இக்கொடுமைகளுக்கு இலக்காகின்றனர். ஏனைய பெண்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதின் மூலம் ஓர் சமுதாயத்தினையே பழிவாங்க முற்படுகின்றனர். பாலியல் ரீதியாக வன் முறைகளில் பெண்களை இலக்காக்குவது இலகுவாக உள்ளது. பயமுறுத்தல் கட்கு அஞ்சி, பெண்கள் தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக எதனையும் செய்யத் தயாராக இருக்கின்றனர். இம் மனிதாபிமானமற்ற போக்குகள் கண்டிக்கப்படாது இவற்றிற்கெதிராக குரல் கொடுக்கப்படாத விடத்து இவை தொடர்ந்தும் உக்கிரமாக இடம்பெற இடமுண்டு.
50 நான் ஒரு பெண்

ஆகவே, இவ்வாறான மனித உரிமை மீறல்கட்கெதிராக நாம் இயன்றவரை குரல் கொடுத்தல் இன்றைய காலகட்டத்தில் மிக மிக இன்றியமையாததாகும். இதன் மூலம் எதிர்காலத்திலாவது இவை இடம் பெறாது பாதுகாக்கப் படுவதற்கு இடமுண்டு. ஓர் தனிநபர் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை சுதந்திரமே. இச்சுதந்திர த்தினை வெளிப்படுத்தக் கூடிய பல வழிகள் இன்று உண்டு. ஓர் தனிநபர் அறிவுபூர்வமான கருத்துக்களை வெளியிடல், சுதந்திரமாக ஒன்று கூடல், பாரபட்சமற்ற விசாரணையினை வேண்டிநிற்றல் போன்றவை சுதந்திரத்தின் வெளிப்பாடுகளாகும். ஆனால் இவை யாவும் இன்று எட்டாக் கனிகளாகவே உள. சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரசாங்கங்களே இவற்றை மீறுகின்றன. எவ்வித கஷ்டமான சமூக, அரசியற் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் காலங்களிலும் இவற்றை மீறும் அரசுகட்கு மன்னிப்பே கிடையாது. ஆண்கள், சிறுவர் போன்றோருக்கு ஏற்படுத்தப்பட்டது போலவே, பெண் களது மனித உரிமைகளும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலம், சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இச்சிபாரிசுகள் எழுத்தளவில் மட்டும் தானா என்ற கேள்விகளும் எழுகின்றன. பெண்களைப் பொறுத்தவரை மனித உரிமை மீறல்களில் முன்நிற்பது பலாத்காரமே. இது ஒரு வகை சித்திர வதையே தடுத்து வைக்கப்படும் பெண்கள் மீது மட்டுமன்றி சாதாரண குடிமக்கள் மீதும் இராணுவத்தினரால் இழைக்கப்படும் மிகக் கடுமையான கொடுமையாகவே இதனை வர்ணிக்கலாம். பெண்கள், பலாத்காரம் மூலம் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதை ஐ.நா.பிரகடனம் தடைசெய்தபோதிலும் பெண்கள் தொடர்ந்தும் இப்பாலியல் வன்முறைகட்கே இலக்காகி வருவது மிக வருந்தத் தக்கது. போர் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, இவ்வாறு பெண்களை இம்சைப் படுத்தல் எமது பிரதேசத்திற்குப் புதிதல்ல. பெண்கள் கைதுசெய்யப்படும் நிலையில் கர்ப்பிணியாக இருந்துவிட்டால் அவள் பல்வகைத் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. இதனால் கருச்சிதைவு கூட ஏற்படுகிறது. பாலியல் வன்முறைகளினால் தடுப்புக் காவலில் வைக்கப்படும் பெண்களோ அன்றி சாதாரண பெண்களோ அதன் மூலம் தாயாக நேரிடின் அவளுக்கு ஏற்படும் சுமைகள் சமூகத்தின் அவலநிலைகள் பலப்பல. திடீரென உழைக்கும் ஆண்கள் காணாமற் போவதனால் பெண்கள் சடுதியாக ஆதரவற்ற நிலைக்குள்ளாகின்றனர். இதனால் தமது உறவினரின் நிழலில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. கணவன் இறந்தமை தெரியப் படுத்தாத கட்டத்தில் விதவையாக்கப்பட்ட மனைவி, ஓய்வூதியம் போன்ற அரச சலுகைகளைக் கூட பெறமுடியாதுள்ளது. இவ்வாறு அதிகாரபூர்வ
நான் ஒரு பெண் 51

Page 31
மக\eவா அன்றி சட்ட பூர்வமாகவோ இறப்பைத் தெரிவிக்காதவிடத்து பெண்கள் பெரும் இன்னல்கட்காளாகின்றனர். காணாமற் போனவர்களைத் தேடும் பணியில் இவர்கள் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர். காணாமற் போனவர்களைத் தேடுதலை பெண்கள் பல வருடங்கள் சென்றாலும் கைவிடுவதில்லை. காணாமற் போனோர் திரும்பி வரும் வரை அல்லது அவர்கள் உடல் காணப்படும் வரை இவர்கள் நிலையற்ற தன்மையிலேயே உள்ளனர். இவ்வாறு அல்லற்படும் பெண்களுக்கு தேடப்படுபவர்கள் காணப்படும்வரை அரசு உதவிப் பணம் கொடுக்க வேண்டும்.
மேலும் பெண்கள் போர் சூழ்நிலைகளினால் அகதிகளாக்கப்படும் போதும் பலாத்கார பாலியல் உறவுகட்கு தப்புவதில்லை. அகதிகளாக இடம் பெயரும் பெண்களுக்கு ஆதரவற்ற நிலை காணப்படுவதனால் இவர்கள் இவ்வாறான தாக்குதலுக்கு இலகுவில் உள்ளாகின்றனர். போர் நிகழ்வுகள் பயங்கரவாத செயல்களினால் அரசுகள் கவிழ்க்கப்படும் நிலைகளைச் சாதகமாகக் கொண்டு பெண்களை பாலியல் வன்முறைகட்கு உள்ளாக்குதல் சாதாரணமாக பல நாடுகளில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளாகும். ஆகவே அரசுகள் அடிப் படை மனித உரிமைகளை பாதுகாத்தலை உறுதி செய்யும் வரை இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெறும்.
பெண்கள் சில கலாசார சமூக பாதிப்புக்களினால் தமக்கு நிகழும் துன்பங் களை முறையீடு செய்வதோ வெளிக்காட்டுவதோ இல்லை. கடந்த காலங் களில் பல பெண்கள் தமக்கெதிரான மனித உரிமை மீறல்களை வெளிக்
காட்டியுள்ளனர். இதுமட்டுமன்றி ஏனைய சமூக பெண்களின் துன்பதுயரங் களையும் எடுத்துக்காட்டியுள்ளனர். இவர்கள் குழுக்களாக இயங்கவும் ஆரம்பித்துள்ளனர். எல்சல் வடோரில் கொமாரெஸ் (Coma Dres) என்ற பெண்கள் அமைப்பு மனித உரிமை மீறல்கட்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க முனைந்துள்ளது. இலங்கையிலும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அன்னையர் முன்னணி மனித உரிமை மீறலுக்காகக் குரல் கொடுத்துள்ளது. தென்னாபிரிக்காவிலும் பெண்கள் மனித உரிமை மீறல்கட்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இவ்வாறாக இன்று சர்வதேசச் சமூகத் திலிருந்து பல பெண்கள் மனித உரிமை மீறல்கட்காக, பெண்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்துள்ளமை இன்று அவதானிக்கப்பட்டுள்ளது. பெண்களுக் கெதிரான வன்முறைகள் அதிகரிக்கும் காலகட்டத்தில் அதிக பெண்கள் இவ்வாறான நடைமுறைகளில் ஈடுபடும் போக்கு இன்று தெளிவாகியுள்ளது. ஆகவே, மனித அடிப்படைச் சுதந்திரம் உறுதி செய்யப்படும் வரை, பெண் களின் அபிவிருத்தி என்பது ஓர் கண்துடைப்பாகவே அமையும். துன்பங் களும் துயரங்களும் அபிவிருத்தியின் ஊக்குவிப்புகளாக மனித நடவடிக்
52 நான் ஒரு பெண்

கைகளின் பயன்பாடுகள், அவர்களின் சுதந்திரமான இயக்கத்தின் மூலமே பெறப்பட வேண்டும். பலாத்காரத்தையும், மனிதாபிமானமற்ற செயல் களையும் சந்திக்கும் எவராலும் இத்தேவைகளை நிறைவாக்க முடியாது. பெண்களின் அபிவிருத்தியின் உள்ளார்ந்த குறைபாடுகளை நீக்க அரசாங் கங்கள் மட்டுமன்றி மனித நேயமுள்ள சகல சமூகங்களும் ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கம் சமூகத்தில் பெண்களோ, இளைஞரோ அன்றி இன சமயசார் சிறுபான்மையினரது பொறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளாவிடில் -எவரது மனித உரிமைகளும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
நான் ஒரு பெண் 53

Page 32
பெண்கள், குழந்தைகள் உரிமையும் புதிய சட்டச் சீர்திருத்தமும்
இலங்கையின் குற்றவியல் கோவையானது 1883ம் ஆண்டு வரையப்பட்ட நூற்றுப் பன்னிரெண்டு வருடகால பழமை வாய்ந்ததாகும். இதில் பெண்கள் - குழந்தைகள் தொடர்பாக சரத்துகளில் சில திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ளது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம். பழமைவாதிகள், மதவாதிகள் போன்றோரது கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் பெண்கள் - குழந்தைகள் சம்பந்தமாக விரும்பியோ விரும்பாமலோ சட்டத்தில் திருத்தங்களைச் சேர்க்க அரசு தலைப்பட்டது ஏன்? பெண்கள் - குழந்தைகள் பால் அரசுக்குள்ள கரிசனையா? அல்லது பெண் ஜனாதிபதி, பெண் பிரதம மந்திரி ஆகியோரது 'ஜனநாயக / பெண் விடுதலை' உணர்வுகளின் நிமித்தமா? நிச்சயமாக நடைபெறுகின்ற சம்பவங்கள் இதிலெதுவும் காரண மில்லை எனத்தான் புலப்படுத்துகின்றன. அப்படியானால், பெண்கள் - குழந்தைகள் தொடர்பான ஏற்கனவே இருந்து வரும் சட்டங்கள் சர்ச்சைக் குட்படுத்தப்பட்டு புதிய திருத்தங்கள் இணைக்கப்பட என்னதான் காரண மாயுள்ளது? பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு பலாத்காரம் போன்றவை சமூகத்தில் மிக மோசமாயுயர்ந்துள்ளது. விசேஷமாக சிறுமிகள் மீதான பாலியல் குற்றம். தகப்பன் மகளை பாலியல் வல்லுறவு கொள்வது, பாட்டன் பேத்தியை வல்லுறவு கொள்வது கும்பலாகச் சேர்ந்து பாலகிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியபின் கொலைசெய்து புதைப்பது. பெண்களையும், சிறுமிகளையும் ஏமாற்றி! கடத்திச் சென்று விபச்சாரத்திலீடு படுத்துவது. மேலும், ஆண் சிறுவர்களை தன்னினச் சேர்க்கை விபச்சாரத்தில் ஈடுபடுத்து வது தென்னிலங்கையில் கரையோரப் பகுதிகளில் மலிந்து விட்டது. உல்லா சப் பிரயாணிகளின் டொலர்களுக்கு இவர்கள் பலியாக்கப்பட்டும் வருகி றார்கள். இது மாத்திரமின்றி, உள்ளூர்க்காரர்களின் பாலியல் இச்சைக்கு
54 நான் ஒரு பெண்

எததனையோ ஆண் சிறுவர்கள் இரகசியமாய்ப் பலியாகி வருகிறார்கள். சிலமாதங்களுக்கு முன் ஒன்றரை வயது பாலகன் ஒருவன் குதம் வழியாகக் கொள்ளப்பட்ட பலாத்கார உறவால் குடல் வெளியேறி மரணமானான். புத்த பிக்கு ஒருவர் தனது மடாலயத்தில் வைத்து பதினொரு வயதுச் சிறுவனுடன் பலாத்காரமாக குதவழி உறவு கொண்டதினால், சிறுவனுக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டான். இவ்வாறே பல சம்பவங்கள் நிகழ்ந்து செல்கின்றன. பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவின் அதிகரிப்பும், ஆணாதிக்கம் பெண்களுக்கெதிராய் எடுத்துள்ள பாசிச வடிவமும் மனிதா பிமானமுள்ள எவரையும் அச்சுறுத்துவதாயுள்ளது. இந்நிலையில் இலங் கையின் பெண்கள் இயக்கங்களதும், ஜனநாயகவாதிகளதும் நிர்ப்பந்தத்தின் காரணமாகவும். சர்வதேச அரங்கில் எழுப்பப்படும் கேள்விகளாலும், புதிய அரசாங்கம் தன்னை "ஜனநாயகமானது', 'பெண்கள் - குழந்தைகளில் அக்கறையுடிையது" எனக் காட்டிக்கொள்வதற்காகவும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசானது சட்டத்தில் சில புதிய வரிகளைச் சேர்த்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு தொடர்பாக ஏற்கனவே இருந்து வரும் 1883ம் ஆண்டைய சட்டம் பாலியல் வல்லுறவை எப்படி அணுகுகிறது என்று பார்ப்போபு.
குற்றவியல் கோவை 363வது சரத்து பாலியல் வல்லுறவு பற்றிக் கூறுகிறது. இப்படிக் கீழ்க்காணும் ஐந்து சந்தர்ப்பங்களில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் புணர்ச்சியில் ஈடுபடுவது பாலியல் பலாத்கார மாகக் கிொள்ளப்படுகிறது.
முதலங்து - அவளது விருப்பத்திற்கெதிராக இரண்டாவது - அவளது சம்மதம் இல்லாமல் மூன்றாவது - அவளைக் காயப்படுத்துவதாக அல்லது கொலை செய்வதாக அச்றுத்தி அவளது சம்மதத்துடன் நடைபெறுவது. நன்காவது - அவளது சம்மதத்துடன், ஆனால் ஆண் தான் அவளது கணவன் இல்லையென அறிந்திருக்கும் நிலையில், பெண் அவன் தான் தனது #ட்டபூர்வமான கணவன் அல்லது நிச்சயிக்கப்பட்டவன் என நம்பி புணர்ச் சிக்கு தனது சம்மதத்தை வழங்கியபோது' (இருட்டான இடத்தில் ஆள் மாறாட்டம் நடத்தல், ஒரே சாயலில் இருத்தல். இந்நிலையில் பெண் விரும்பி ஆணுடன் ஒன்று கூடிய பின்னர், தான் கூடியவன் கணவனோ, காதலனோ இல்லை என்பதைக் கண்டு கொள்ளும் போது அவனால் அவள் மோசடி செய்யப்பட்டதை உணர்கிறாள் -கட்டுரையாளர்) ஐந்தாவது - 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணுடன் அவளது சம்மதத் துடனோ சம்மதமின்றியோ புணர்ச்சியில் ஈடுபடுவது.
நான் ஒரு பெண் 55

Page 33
விளக்கம் - ஆண்குறியையோனியில் உட்செலுத்துவது மாத்திரமே பாலியல் பலாத்காரம் என்று ஒப்புவிப்பதற்கு போதுமானது. விதிவிலக்கு - ஆண் தனது சொந்த மனைவியுடன் கொள்ளும் புணர்ச்சி மனைவி பன்னிரெண்டு வயதுக்குக் கீழ்ப்பட்டவளாயில்லாதவிடத்தில் பாலியல் பலாத்காரம் ஆகாது' குற்றவியற் கோவை 364வது சரத்து பாலியல் வல்லுறவிற்கான தண்டனை யைக் கூறுகிறது. 'யார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாலும் சிறைத்தண்டனை வழங் கப்படும். இது இருபது வருடங்களுக்கும் நீடிக்கப்படலாம். அதேபோல் தண்டப்பணம் செலுத்தவும் வேண்டும்' பன்னிரெண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு கொள்வது குற்றமாகக் கூறப்படுவதன் காரணம், நூறு வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்கு பன்னிரெண்டு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படும் வழக்கம் பரவலாகக் காணப்பட்டதாகும். இதைச் சட்டமும் அங்கீகரித்தது. ஆண்களுக்கு பதினான்கு வயது திருமணத்திற்கு அங்கீ கரிக்கப்பட்ட வயதாகும். பன்னிரெண்டு வயதில் சிறுமிகள், சிறுமிகளாயன்றி பெண்களாகக் கருதப்பட்டதன் விளைவுதான் இத்தகைய சட்டம் இயற்றப் பட்டதன் காரணமாயுள்ளது. இந்தச் சட்டம் மூளைக் குறைபாடுடைய, உடல் ஊனமுற்ற, சித்த சுவாதீன மற்ற பெண்களில் தனித்துவமான நிலையைக் கணக்கிலெடுக்கத் தவறிவிட்டது. மனைவியின் சம்மதம் இல்லாவிட்டாலும் அவள் 12 வயதுக்குக் கீழ்ப் படாதவளென்றால் கணவன் அவளைப் வல்லுறவுக்குட்படுத்துவது குற்ற மாகாது. அதாவது திருமண உறவில் மனைவியை பாலியல் வல்லுறவு செய்யும் உரிமை கணவனுக்கிருப்பதை சட்டம் உறுதிப்படுத்துகிறது. மேலும், அமுலில் உள்ள இச்சட்டம் தான் 'குற்றமற்ற' பாலியல் LG0ຕໍ່ໄຮ່ທົ என அங்கீகரிப்பவற்றை விட தனது சட்டத்தின்படி குற்றத்திற்குரியவை எனக் காணும் சம்பவங்களிற்கு எத்தகைய தீர்ப்பை வழங்குகிறது? சட்டத்தில் காணப்படுவது போல் பாலியல் வல்லுறவு கொள்ளும், எல்லாக் குற்றவால் களும் தண்டனை அனுபவிக்கிறார்களா? நடைமுறையில் வல்லுறவுக் குள்ளான பெண் தான் வல்லுறவு செய்யப்பட்டதை நிரூபிக்க அவளுக்குள்ள ஆற்றலிலேயே குற்றவாளிக்கான தண்டனை தங்கியுள்ளது. பாலியல் வல்லு றவுதொடர்பான சட்டரீதியான இயக்கப்போக்கு பின்வருமாறு அமைகிறது. அ) பலாத்காரத்துக்குள்ளான பெண் பிறரது நிர்ப்பந்தமின்றி தானாக முன்வந்து வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் (பொலிஸில் முறையிட வேண்டும்)
56 நான் ஒரு பெண்

ஆ) அதையும் கூடிய விரைவில் செய்ய வேண்டும். பலாத்காரம் செய்யப் பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்கள் கடந்த பின் முறையீடு செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (வல்லுறவுக்குள்ளான பெண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியிருப்பதால் பரிசோதனைக்குட்படும்வரை அவள் குளிக்கக் கூடாது. குளித்தால் அவளது உடலில் ஒட்டியிருக்கும் ஆண் விந்து கழுவப்பட வாய்ப்பிருப்பதால் குற்றவாளியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமற் போகும் என இந்த வழக்கை அணுகும் பொலிஸார், சட்ட மருத்துவ அதி காரிகள், வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். பொலிஸில் முறையிட்டு இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் வைத்திய பரிசோதனைக்கு பெண் உள்ளாக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் இரண்டு நாட்களும் செல்லும், அதுவரை தன்மீது விழுந்துள்ள அசிங்கத்தைக் கழுவாமல் சுய உணர்வு நிலையிலுள்ள ஒரு பெண்ணால் எப்படியிருக்க முடியும்? தனது உடலைக் கழுவிக் கொள்வ தன் மூலம் அந்த அருவருப்பு உணர்வுகளிலிருந்து மீளுவதாக பெண் உணர் கிறாள். இது பெண்ணின் உளவியலுடன் பிணைந்த ஒன்றாகும். 'குளிக்கக் கூடாது' எனக் கூறுவதும் பெண்ணை அந்தப் பயங்கரமானதும் அருவருப் பானதுமான உணர்வுகளிலிருந்து மீளவிடாது தடுத்து வைத்திருக்கும் ஒரு சித்திரவதையே என பெண் உளப்பகுப்பாளர் ஒருவர் கூறுகிறார்.) இ) வல்லுறவுக்கான சாட்சியங்களாக பெண்ணிடம் எதிர்பார்க்கப்படுபவை; * அவளது உடலில் ஒட்டியிருக்கும் ஆண் விந்து.
* பெண்ணின் உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள் (காயங்கள் காட்டப்படாவிட்டால் அவள் சம்மதித்ததாகவே கருதப்படுகிறது. இதனால் வழக்கு விசாரணையில் காயங்கள் முக்கிய சாட்சியங்களாகின்றன.)
* சம்பவம் நடந்த இடம், நேரம்.
* சம்பவ நேரத்தில் அவள் உடுத்தியிருந்த உடைகள் மிக முக்கியமான சாட்சியங்களாகக் கணிக்கப்படுகின்றன. விசேடமாக உள்ளாடைகள்.
இந்த சாட்சியங்களுடன் பொலிஸில் முறையீடு செய்யும் பெண் தனக்கு நடந்த சம்பவத்தை அப்படியே பொலிஸாருக்குச் சொல்ல வேண்டும். (பொலிஸ் நிலையத்திலுள்ள ஆண்கள் முன்நிலையிலேயே பெண் பலவாறும் விசாரிக்கப்பட்டு முறையீடு பதிவு செய்யப்படும்)
ஈ) பின்னர் அவள் 24 மணித்தியாலங்களுக்குள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படுவாள். இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு சட்ட மருத்துவர்கள் என்ற வீதத்திலேயே உள்ளனர். இதனால் "24 மணி நேரத்துக்குள்ளான பரிசோதனை' என்பது சாத்தியமா என்பது சந்தேகமே. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான் ஒரு பெண் 57

Page 34
2) குற்றவாளியை அவளால் யாரெனச் சரியாக கூற முடியாவிட்டால் சந்தேக நபர்கள் அழைத்து வரப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். ஆண் அடையாளங் காணப்பட்டால் அவனும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத் தப்படுவான். அவனது உடலிலிருந்து விந்து எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும். பெண்ணின் உடலில் காணப்பட்ட விந்தும் ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட விந்தும் ஒன்றா என பரிசோதிக்கப்படும் (மூன்று மாதத்திற்குள் ஆண் அடையாளங் காணப்படாவிட்டால் / தப்பி விட்டால் வழக்கு தள்ளுபடியாகும்.) குற்றப் புலனாய்வுத் துறைக்கென இலங்கையில் ஒரேயொரு இரசாயன ஆய்வு கூடமேயுள்ளது. பரிசோதனைக்காக விந்துகள் ஆண், பெண் இருவரதும் உடைகள் அனுப்பப்பட்டு அறிக்கை வந்த பின்னரேயே மஜிஸ்ட் ரேட் நீதிமன்றில் வழக்கு ஆரம்பமாகும். இந்த மருத்துவ அறிக்கை வர ஐந்து மாதங்களுக்கு மேல் செல்கிறது. மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் வழக்கு பிரதான வழக்கறிஞர்கள் சபையில் (Atorney Generals Department) பாலியல் வல்லுறவு என அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின் அது உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படும். மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு செல்ல குறைந்தது இரண்டு வருடங்களாவது எடுக்கும். இதற்கிடையில் விந்து பரிசோதிக்கப்பட்டு குறிப்பிட்ட ஆண் வழக்குத் தொடுத்துள்ள பெண்ணுடன் புணர்ச்சியிலீடுபட்டது நிச்சயிக்கப்பட்டால் அவன் இரு வார தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்படலாம். அல்லது மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் வைத்தே பிணையுடன் விடுவிக்கப்படலாம். பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில் பெண்ணின் சாட்சியங்கள் மிகக் கூர்மையாக அவதானிக்கப்படும். பொலிஸ் நிலையத்தில் மஜிஸ்ட்றேட் மன்றில், உயர்நீதிமன்றில் அவர் ஒரே மாதிரியாகவே கூற வேண்டும். பொலிஸ் நிலையத்தில் கதைத்ததற்கும், உயர் நீதிமன்றில் கதைப்பதற்கு மிடையிலுள்ள கால இடை வெளியை வருடங்களாலேயே கணிப்பிட வேண்டியுள்ளது. இந்நிலையில் வல்லுறவிற்குள்ளான பெண் எங்ங்ணம் ஒரே மாதிரியான சாட்சியத்தைக் கூற முடியும்? வழக்கறிஞர்கள் ஒருவரின் கூற்றுப்படி பாலியல் வல்லுறவிற்குள்ளான பெண்ணை சட்டம் பகிரங்கமாக மூன்று முறை வல்லுறவு செய்கிறது. பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் அவள் பல ஆண்களுக்கு முன்னிலையில் தனது அந்தரங்கப் பகுதிகளையெல்லாம் குறிப்பிட்டு தனக்கு என்ன நடந்ததென்பதை அப்படியே கூற சட்டம் பெண்ணை நிர்ப்பந்திக்கிறது. தன் மீது இழைக்கப்பட்ட் கொடுமையானது தனது சம்மதத்திற்கு மாறாக நடந்த குற்றம் என்பதையே பெண் நிரூபிக்க வேண்டும். பெண்ணின் சம்மதம்
58 நான் ஒரு பெண்

என்பது தான் பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில் பிரதானமான தாயுள்ளது குறிப்பிட்ட ஆண் விந்தும் பெண்ணுடலில் காணப்பட்ட விந்தும் ஒன்றென நிரூபணமான நிலையில் எதிரியின் தர்க்கம் பெண்ணின் சம்மதத்துடனேயே புணர்ச்சி நடைபெற்றது என்பதாயிருக்கும். ஆணின் பக்க வழக்கறிஞர்கள் பெண்ணின் சம்மதம் என்பதைத் தான் தமது வழக்கிற்கு ஆதாரமாய்க் கொள்கின்றனர். பாலியல் வல்லுறவு வழக்கில் 'புணர்ச்சி பெண்ணின் சம்மதத்துடன் நடந்ததா |இல்லையா? என்பதே தீர்மானிக்கும் காரணியாயிருப்பதால் நான் சம்மதிக்க வில்லை என பெண் வாதாடுவதிலும் விட அவள் சம்மதித்தாள் எனும் ஆணின் வாதம் பலமானதாயமைகிறது. இதைவிட நீதிமன்ற அணுகுமுறைகள் ஆணுக்குமான வழக்கில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஆண்தரப்பு வக்கீல் பெண்ணிடம் பலவிதத்திலும் கேள்வி கேட்கலாம். (உம்) ஒரு வழக்கில் எதிர்தரப்பு வக்கீல் பெண்ணிடம் ஒரு பென்சிலைக் கொடுத்து அதை தனது கையிலுள்ள கடதாசியில் காணப்படும் ஒட்டையில் போடச் சொன்னார். பெண் அதைப் போட முயற்சிக்கும் போது அந்த வக்கீல் கடதாசியை அங்கும் இங்கும் அசைத்து அதைப் போடவிடாமல் தடுத்தார். பின் அவரது வாதம் பின்வருமாறு அமைந்தது. 'நான் கடதாசியை அங்கு மிங்கும் அசைத்ததால் இந்தப் பெண்ணால் பென்சிலை கடதாசியிலுள்ள ஒட்டையில் போட முடியவில்லை. அதேபோல் இவள் எதிர்த்திருந்தால் எப்படி ஆண் குறியை யோனியில் செலுத்தியிருக்க முடியும்.?)' மேலும் பெண்ணின் கடந்தகால வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கலாம் பெண் நடத்தை சரியில்லாதவள் என நிரூபிப்பது ஆணின் தரப்புக்கு மிக இலகுவானதும் பயனுள்ளதுமாகும். இதனால் அநேகமாக எல்லா வழக்கு களிலும் இதுவே ஒரு துடுப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிரிக்காக அமரும் வக்கீல்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை விபச்சாரியாக ஒழுக்கங் கெட்டவளாக சித்திரிக்க முயல்வர். வக்கீல்களால் பலர் முன்னிலையிலும் வல்லுறவு பல செய்திருந்தாலும் அவற்றிற்கெதிராக வழக்குத் தொடுக்கப் படாதிருந்தால் அவற்றைக் காரணம் காட்டமுடியாது. ஆண்தரப்பு வக்கீல் ஒருபோதும் அவனை விசாரணைக் கூண்டிற்கு கொண்டு வருவதில்லை. அப்படி வரும்பட்சத்தில் அவன் அகப்பட்டுக் கொள்வான் என்பது வக்கீல்மாருக்குத் தெரியும். இதை 'நீதிமன்றும்' அங்கீகரித்துள்ளது. இங்கு பாலியல் வல்லுறவு (Rape) என்பது பெண்மீது இழைக்கப்படும் வன்முறையாக - அத்துமீறலாக பார்க்கப்படாமல் வெறும் பாலியல் செயற் பாடாக குறுக்கப்பட்டுள்ளது.
நான் ஒரு பெண் 59

Page 35
இப்படியாக ஒவ்வொரு வழக்கும் எட்டு முதல் பத்து வருடங்களுக்குக் குறையாமல் தொடரும். இவ்வளவு காலத்திற்கும் குற்றவாளி வெளியில் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படுகிறான். இதற்கிடையில் பல பாலியல் வல்லுறவுக் குற்றங்களை புரியும் சந்தர்ப்பம் அவனுக்குள்ளது. இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் இவ்வளவு காலத்திற்கும் வழக்கு நடத்த செலவழிக்க வேண்டியுள்ளது. ஆணின் தரப்பில் அனுபவ முள்ள வக்கீலை கூடிய செலவு செய்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அமர்த்துகிறான். ஆனால் பெரும்பாலும் பெண்ணின் தரப்புக்கு ஓரிரு வருட அனுபவமுள்ள அரச வக்கீல்களே ஆஜராகின்றனர். இதனால் பெண் தரப்பு வாதங்கள் காத்திரமாயிருப்பதில்லை. மிகப் பெரும்பாலான வழக்குகள் (70% என்பதும் குறைவானதே) தள்ளுபடியாவதே நடைமுறையிலுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் ஒத்திவைப்புச் சிறைத்தண்டனையே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. உ+ம்: மகளை பலாத்காரம் செய்த தகப்பன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவனுக்கு ஒரு வருட ஒத்தி வைப்புச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதன்படி இத்தகைய குற்றத்தை அவன் மீண்டும் செய்தால் தண்டனையை அனுபவிக்க நேரும்.) பொதுவாக இந்த வழக்குகளின் முடிவின் போது - பெண் வேறு திருமணம் செய்திருப்பாள் - இறந்திருப்பாள் -ஆண் இறந்திருப்பான் - நிர்ப்பந்தத்தின் காரணமாகவோ / இயலாமையாலோ பெண் தன்னை வல்லுறவு செய்த வனையே திருமணம் செய்திருப்பாள். ஒட்டு மொத்தத்தில் இந்தச் சட்டநடவடிக்கையால் நீதி கிடைத்ததா இல்லையா என்பதை விட பெண் மேலும் துன்புறுத்தப்பட்டதாகவே முடிகிறது. பல வருடங்களாக இழுத்தடிக்கப்படும் வழக்குகளில் அநேகமான பெண்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர். இதனால் இவர்கள் தமக்குள் குமுறிக் குமுறியே உளவியல் ரீதியாகக் காயப்படுகின்றனர். வாழும் காலம் முழுதும் தமக்குள் துயரத்தைப் புதைத்துக் கொண்டிருக்க நேர்கிறது. அப்படித் தான் குற்றவாளி தண்டிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன நிவாரணத்தை - ஆறுதலை அளிக்க சட்டம் முயன்றுள்ளது..? இந்நிலையில் பெண்களையும் - குழந்தைகளையும் பாதுகாக்க இருக்கும் சட்ட த்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம். * இரத்த உறவுகளுக்கிடையிலான புணர்ச்சி (incest) குற்றமாகும். * கணவனும் மனைவியும் விவாகரத்துக் கோரின நிலையில் நீதிமன்றத்தின் முடிவுப்படி பிரிந்து வாழும் காலத்தில் ஆண் பெண்ணை நிர்ப்பந்தித்து உறவு கொள்வது பலாத்காரம் ஆகக் கருதப்படும். * பெண்ணின் திருமண வயது பன்னிரண்டிலிருந்து பதினெட்டாக உயர்த்தப் பட்டுள்ளது.
60 நான் ஒரு பெண்

* பதினாறு வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்ணுடன் அவளது சம்மதத்துடனோ ! சம்மதமின்றியோ ஆண் உறவு கொள்வது பலாத்காரமாகக் கருதப்படும். * சிறுவர்/சிறுமியரை ஆபாசப்படங்களுக்குப்பாவிப்பது சிறுவர்கள் மீதான பாலியல் இம்சை, சிறுவர்கள பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்துவது யாவும் குற்றமாகக் கருதப்படுகிறது.
மேற்கண்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தது ஏழு வருட சிறைத்தண்டனை அளிக்கப்படுவதுடன் அவர்கள் தம்மால் பாதிக்கப் பட்டவர்களுக்குநிவாரணமும் அரசுக்கு குற்றப்பணமும் செலுத்த வேண்டும் எனவும் புதிய சட்டம் கூறுகிறது. திருமண வாழ்வில் கணவன் அந்தரங்கத்தில் மனைவியை இம்சிப்பது சட்டத்தில் பேசாப் பொருளாயிருக்கிறது. அரசும் அதை மூடி வைத்து விட்டு விவாகரத்து செய்து கொள்ளும் நிலையிலிருப்பவர்கள் பக்கம் மாத்திரம் பெயருக்குப் பார்வையைச் செலுத்தியுள்ளது. அப்படியானால் திருமண உறவில் கணவன் மனைவியை வல்லுறவு செய்வதை (Marital rape) சட்டமும் அங்கீகரிக்கின்றது என்று தானே அர்த்தம்? நாளாந்தம் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி எதுவுமே கதைக்காமல் நழுவி விட்டதும் அரசின் சாமர்த்தியம் தான். வல்லுறவு செய்த குற்றவாளியை பெண் பிடித்துக் கொடுத்தாலும் அவனைத் தண்டிக்க திராணியற்ற / விரும்பாத அரசு, தினம் தினம் வீதிகளிலும் பஸ்களிலும் பொது இடங்களிலும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் அத்துமீறலை 'ஆணாதிக்க பாசிசத்தை" அடக்க எப்படி முன்வரும்? ஆணாதிக்க சட்டத்துறையில் கட்டமைப்பில் எதுவித மாறுதலும் ஏற்படுத் தாமல் பெண்களை பாலியல் பண்டமாகவே பார்க்கப்பழகி விட்ட ஆணா திக்க மனோபாவமுடைய சமுதாயத்தை அப்படியே கட்டிக் காத்தபடி புத்தகத்தில் சில வரிகளை மாத்திரம் மாற்றி விட்டால் பெண்களும் - குழந்தைகளும் நன்மையடைவார்கள் என அரசு நம்பினாலும், நாளாந்தம் பாதிக்கப்படும் பெண்கள் தமது காதில் பூச்சுற்றப்படுவதை உணரவே செய்கிறார்கள். புதிய சட்ட திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட சூடு கூட மாறாத நிலையில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பல காதுக்கு எட்டி விட்டன. அதிலொன்று நுவரெலியா மாவட்டத்தில் ஐம்பத்தைந்து வயது ஆண் மூன்று வயதுப் பாலகியை வல்லுறவு செய்த சம்பவம். சட்டங்கள் இயற்றப்படுவதையல்ல. குறிப்பிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதையே பெண்களாகிய நாம் எதிர்பார்க்கிறோம். கருக்கலைப்பு பற்றியும், பெண்கள் நலன் காக்கும்(!) அரசு கதைக்கத் தவறவில்லை. புதிய சட்டத்தின்படி தாயின் உயிருக்கு ஆபத்து நேரும் போது
நாள் ஒரு பெண் 61

Page 36
மாத்திரமல்ல. வல்லுறவுக்குள்ளான பெண்கள், தடை செய்யப்பட்ட இரத்த உறவுகளால் கருத்தரித்த பெண்கள் தமது வயிற்றில் வளரும் கருவைக் கலைத் துக்கொள்ளும் உரிமையுடையவர்கள். அதேபோல் ஊனமுற்ற குழந்தையாக மாறும் என மருத்துவர்கள் நிச்சயிக்கும் போதும் கருவைக் கலைத்துக் கொள்ளலாம். இதைத்தவிர வேறு எந்த நிலையிலும் பெண்களுக்கு தமக்கு வேண்டாத கருவைக் கலைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது. இந்த நாட்டில் பெரும்பாலான பெண்கள் முறையான குடும்பக்கட்டுப்பாட்டு அறிவின்றியிருப்பதும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் சமூகக் காரணங்களுக்காகவும் தமக்கு வேண்டாத கருவை அவர்கள் ஏதாவதொரு வழியில் கலைத்துக் கொள்வதும் அரசுக்குத் தெரியாதா? 'தமக்கு வேண்டாத கருவைக் கலைத்துக்கொள்ள இந்நாட்டின் பெண்கள் அனைவரும் உரிமையுடையவர்கள்' என ஒரேவரியில் கூறிச் செல்ல ஏன் இந்த அரசுக்கு முடியாதிருக்கிறது? பெண்கள் தமது உடலை தமது கட்டுப் பாட்டில் வைத்திருக்க ஆணாதிக்க அரசு விரும் பாது என நாமே தான் சமாதானம் செய்துகொள்ள வேண்டும்?
எப்படியோ புதிய சட்ட திருத்தங்கள் பரந்தளவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்து வதை தொடர்பூடகங்கள் மூலமாக அறிய முடிகிறது. எனினும் இதுவரை கால சட்ட இயக்கப் போக்கிலும் சட்ட அணுகுமுறையிலும் பெண்களாகிய நாம் கசந்து போயுள்ளோம். புதிய சட்டத்தின் மூலம் நடைமுறையில் பெண்களு க்கு நீதி தேடித்தருமளவுக்கு சட்டத்துறையின் பக்கத்தில் ஒத்துழைப்புக் கிடைக்குமா என்பது சந்தேகமே எழுத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் நடைமுறையென்று வந்து விட்டால் மீண்டும் அதே பழைய பாணி சட்ட அணுகுமுறையைத் தான் முகங்கொடுக்க நேரும் என்பதை நாம் அறிந்தே யுள்ளோம். இதனால் புதிய சட்டங்களின் வருகையால் பெண்கள் எமது மனிதாய உரிமைகள் பாதுகாக்கப்பட்டு விட்டது என நாம் ஏமாறப் போவ தில்லை. இப்பொழுதெல்லாம் எமது கண்கள் எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கின்றன.
62 நான் ஒரு பெண்

பெண்களும்
தேசிய விடுதலைப் போரும்
தேசிய விடுதலைப் போரும் பெண்ணிலைவாதமும் பாஞ்சாலி
தேசிய விடுதலைப் போரும் துப்பாக்கிக் கலாசாரமும்
பாஞ்சாலி
இனத்துவமும் பெண்களும் பாஞ்சாலி
விடுதலைக்குத் துப்பாக்கியை மட்டும் நம்பிப் பயனில்லை
மல்லிகா சிவகடாட்சம்

Page 37

தேசிய விடுதலைப் போரும் பெண்ணிலைவாதமும்
எமது சமூகம் யுத்தத்தின் பிடியில் கடந்த 8 வருடங்களாக இருந்து வந்து ள்ளது. பாரதூரமான சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களை நமது சமூகம் எதிர் கொண்டுவருகிறது. இந்த நிலையில் நமது சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என ஆராய்தல் பொருத்த மானதாகும். மேலும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டக்களத்தில் உள்ள போராளிக் குழுக்களின் பெண்கள் அமைப்புகள் பெண் விடுதலையை முன்னெடுப்பதில் எவ்வளவு தூரம் வெற்றியடைந்துள்ளன, என்பதையும் அப்படித் தோல்வியைத்தான் தழுவி உள்ளனவாயின் அதற்கான காரணங் களை அறிந்து கொள்வது எதிர்கால நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் பெருமளவு உதவும். போராளிக் குழுக்களின் பெண்கள் அமைப்புகளின் பங்களிப்புப் பற்றி மட்டும் ஆராய்வதற்குக் காரணங்கள் உண்டு. முதலாவதாக அன்னையர் முன்னணி போன்ற பெரும் பெண்கள் அமைப்புக்கள் (இவை மிகவும் சிலவே) தோன்றிய போதும் இவை பெண் நிலைவாதத்தை முன்னெடுப்பதற்கென உருவாகியன அல்ல. மாறாக காலத்தின் தேவையை ஒட்டி உருவாகிய அமுக்கக் குழுக்களே (Pressure Groups) அவை. இரண்டாவதாக பெண்நிலை வாதத்தை முன்னெடுக்க வேறு ஒரு சில அமைப்புக்கள் உருவாக்கப்பட்ட போதும் அவை சமுதாயத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஈரோஸ் தவிர்ந்த அனேகமான ஏனைய போராளிக் குழுக்கள் ஒவ்வொரு பெண்கள் அமைப்புக்களை அமைத்துக் கொண்டமை உண்மையே. ஆனால் இவ்வாறு பெண்கள் அமைப்புக்களை அமைத்து விடுதல் மட்டும் அவ்வியக் கத்தில் பரவலாக பெண்நிலைவாதம் பற்றிய விழிப்புணர்வு இருந்தமையைக் குறிக்காது. ஒவ்வொரு இயக்கத்திலும் ஒரு சில பெண்கள் (கைவிட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே என்பது எனது கருத்து) பெண்நிலைவாதி
நான் ஒரு பெண் 65

Page 38
களாக இருந்தாலும் அவர்களால் தமது இயக்கத்தின் ஆணாதிக்க கருத்தியலை (Patriarchal ideology) மாற்றவோ அல்லது சமுதாயத்தில் ஒரு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தவோ முடியவில்லை. E.P.R.L.F. இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கலைக்கப்பட்ட போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் கலைக்கப்பட்டபோது பல ஈ.பி.ஆர்.எல்.எப் பெண்கள் எல்.ரி.ரி.ஈயினால் அடிக்கப்பட்டார்கள். எல்.ரி.ரி.ஈயின் ஒரு முன்னணி உறுப்பினர் அடிக்கும் போது கூறியது 'உங்களுக்கு என்ன விடுதலை போய்க் குசினிக்குள் இருங்கோ. அதுதான் உங்களுக்குச் சரியான இடம்' (முறிந்த பனை, பக்கம் 327) என்பதாகும். விடுதலைப் புலிகளின் பெண்கள் அமைப்பான சுதந்திரப் பறவைகள் அமைப்பினால் கடந்த ஆண்டு வைகாசி மாதம் வின்ஸர் தியேட்டரில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பத்து அம்சப் பிரகடனம் ஒன்றும் முன்வைக் கப்பட்டது. பெண்நிலைவாத வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக இது பலருக்குப்படலாம். ஆனால் இச்சம்பவம் நிகழ்ந்த போது வடக்கு கிழக்கில் நிலவிய அரசியற் சூழலை நாம் மறந்து விடலாகாது. அக்காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகள் மிகவும் பரந்தளவில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந் தார்கள், 11 வயது நிரம்பிய சிறார்களைக் கொண்ட மழலைப்பட்டாளங் களைக் கூட வரவேற்ற காலம் அது. எனவே பெண்விடுதலை என்ற கோஷ த்தை ஆட்சேர்ப்புக்கு ஒரு தளமாகப் பாவித்தார்களோ என எண்ணத் தூண்டுகிறது. போராளிக் குழுக்கள் இவ்வாறு பெண்கள் அமைப்புகளை நிறுவிய போதும் பெண்நிலைவாதக் கருத்துக்கள் பரந்துபட்ட மக்களிடம் செல்லாததற்கான காரணம் என்ன? போராளிக் குழுக்களின் பொதுவான குணாம்சம் அதாவது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுக் (Alienated) காணப்பட்டமை ஒரு காரணமாகும். ஆதிக்கத்தில் இருந்த, இருகின்ற ஒவ்வொரு போராளிக் குழுவும் ஆளும் வர்க்கத்திற்குரிய அதிகார வெறி கொண்டிருந்தமையை யாரும் மறுக்க இயலாது. அடுத்ததாக இப்பெண்கள் அமைப்புகளிடம் ஒரு திட்டவட்டமான நிகழ்ச்சித் திட்டம் (Working Programme) இருக்கவில்லை. எனவே இவ் அமைப்புக்கள் வெறுமனே சர்வதேசப் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதிலும், பத்து அம்ச பிரகடனத்தை நிறைவேற்றுவதிலும் மட்டுமே தம்மை வரையறுத்துக் கொண்டன. எனவே, இப்பெண்கள் அமைப்புக்கள் எவையும் நமது சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் மீது எதுவித தாக்கத் தையும் ஏற்படுத்தவில்லை. இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் காற்சட்டை யுடனும் துவக்குகளுடனும் 'பஜீரோக்களில் சென்றபோதும் பெரும்பான்மை
66 நான் ஒரு பெண்

யான பெண்கள் வயல்களிலும் தொழிற் கூடங்களிலும் ஏன் சொந்தக் குடும்பங்களிலும் கூட சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் ஆளாகியே காணப்பட்டார்கள். இவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடி க்கைகளில் ஈடுபட எந்தப் பெண்கள் அமைப்பும் முன்வரவில்லை.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஆயுதம் ஏந்திப் பெண்களும் போராடத் தொடங்கியவுடன் பெண் விடுதலையும் வழிதொடரும் என்ற நிலைப்பாடே தலையோங்கிக் காணப்பட்டது. இக்கட்டத்தில் வின்ஸர் தியேட்டரில் நடைபெற்ற மகாநாட்டில் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர் காலம் சென்ற சுந்தரி பின்வருமாறு பேசினார். 'தமிழீழப் பெண்கள் இன்று விடுதலைப் போராட்டக்களத்தில் குதித்திருக்கிறார்கள். மகளிர் படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு பெண்கள் ஆயுதம் தரித்து ஆண்களுடன் சரிநிகராகப் போராடும் அளவிற்கு எமது போராட்டத்தில் புரட்சிகரமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது' 83-86 காலப் பகுதியில் அப்பளமும் பிரசார சஞ்சிகைகளும் விற்றும், முதலுதவிச் சிகிச்சை வகுப்புக்களை நடாத்தியும் வந்த சுதந்திரப் பறவைகள் இப்போது ஆயுதம் ஏந்தும் அளவிற்கு இயக்கத்திற்குள் வளர்ந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் தான். ஆனால் ஆயுதம் ஏந்துவதால் பெண்கள் விடுதலையடைய முடியும் என்ற ஒரு தவறான மனப்பாங்கு 'பெரும் பான்மையான இயக்கப் பெண்களிடம் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது' ஆயுதத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கை யுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ள பெண்களும் இவ்வகையான ஒரு மனப்பான்மையைக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மேலும் இயக்கத்துக்கு அப்பால் உள்ள பரந்துபட்ட சமுதாயத்தை ஒதுக்கும் தன்மை மற்ற இயக்கங்களிலும் காணப்பட்டது. ஈரோஸ் இயக்கத்தைப் பொறுத்தவரையில் தனியே ஒரு பெண்கள் அமை ப்பை நிறுவாமைக்குப் பின்வரும் காரணம் அவர்களால் பொதுவாக எடுத்துக் கூறப்பட்டது. 'எமது இயக்கத்தில் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாகப் பெண்கள் நடாத்தப்படுகிறார்கள். எனவே எங்களுக்கு ஒரு தனியான பெண்கள் அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை' என்ற வாதம் ஆகும்.
* * * 骨 骨 骨
இயக்கத்துக்கு அப்பால் காணப்படும் பரந்துபட்ட மக்களின் -இச்சந்தர்ப் பத்தில் பெண்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் நடாத்தப்பட்டு வரும் அரசியலுக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டாக அமைகிறது.
நான் ஒரு பெண் 67

Page 39
அடுத்ததாக, விடுதலை இயக்கங்கள் பெண்கள் தொடர்பாக எத்தகைய நோக்கினைக் கொண்டிருந்தார்கள் எனக் கவனிப்போம். ஆரம்பகாலங்களில் பெண்களை எடுத்தால் பிரச்சினை என்ற கருத்தே பரவலாக நிலவியது. மணியந்தோட்டத்தில் பெண் போராளிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட போது இக்கருத்து மேலும் வலுப்பெற்றது. 'ஒரு காலத்தில் பெண்கள் தீயவர்களாகக் கருதப்பட்டார்கள். ஏனெனில் பெண்களால் ஆண்கள் தமது இலட்சியத்தை இழந்து விடுவார்கள். இதனால் பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என எல்.ரி.ரி.ஈயினால் அதன் இயக்க உறுப்பினர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது. (முறிந்த பனை, பக்.327) இந் நடைமுறை பிரபாகரனின் திருமணத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
தற்போது எல்.ரி.ரி.ஈ ஐப் பொறுத்தவரையில் பெண்கள் தொடர்பாக இரண்டு கருத்துக்கள் தலையோங்கிக் காணப்படுகிறது. எல்லோரும் ஆயுதம் ஏந்திக் தங்களுடன் இணைந்து போராட வேண்டும் அல்லது இப்போராட்டத்திற்கு புதல்வர்களைப் (புதல்விகளை மறந்து விட்டார்கள் போலும்) பெற்றுத்தர வேண்டும்.
'இழப்புக்களிலிருந்து உயிர்பெற்றெழும்
தேசத்திற்காக -தாய் நிலம் பிளந்து
இன்னும் புதல்வர்களைத் தா அம்மா...' மேற்படி கவிதை வரிகள் மறுமலர்ச்சிக் கழகத்தின் எல்.ரி.ரி.ஈ யின் யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு) சஞ்சிகையான தளிரில் அட்டைப்பட கவிதையாக 1985ம் ஆண்டளவில் முதன் முறையாகப் பிரசுரிக்கப்பட்டது. தொடர்ந்தும் எல்.ரி.ரி.ஈ சார்ந்த சஞ்சிகைகளில் இது வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
தங்களுடன் இணைந்து போராடவேண்டும் அல்லது வெறுமனே சடங்களாக (பெண்களைப் பொறுத்தவரையில் பிள்ளைகள் பெறும் இயந்திரங்களாக) இருக்க வேண்டும் என்ற எல்.ரி.ரி.ஈயின் நிலைப்பாடு, போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரைக்கும் அவர்கள் கொண்டுள்ள கண்ணோட்டத்துடன் உடன்படுவதாகவே உள்ளது. முன்னர் யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் யோகி பின்வருமாறு பேசினார். '40 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விமர்சனங்களை நிற்பாட்டி விட்டு, உங்களு டைய வாய்களை மூடிவைத்துக் கொள்ள வேண்டும்.' எல்.ரி.ரி.ஈஐப் பொறுத்தவரையில் தலைமைப்பீட உத்தரவுகளை அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்தும் மத்தியமயப்படுத்தப்பட்ட (Centralised)
68 நான் ஒரு பெண்

இராணுவ அமைப்பாகும். இதன் கொள்கைகளையும் நடைமுறைகளையும் விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ இயக்கத்திற்குள்ளோ அல்லது வெளி யிலோ யாருக்கும் உரிமை கிடையாது. இவ்வகையான ஒரு சூழ்நிலை பெண் ணிலை வாதம் பற்றிய விவாதத்தை இயக்கத்திற்குள் நிகழ்த்த எவ்வகையிலும் உதவாது. பெண்ணிலைவாதம் எதனையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, எல்லாவித அமைப்பு களையும், நடைமுறைகளையும், கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் ஏனைய எல்லா அம்சங்களையும் கேள்விகளுக்கு உட்படுத்தி விடைகாண முனைகிறது. எமது சமுதாயம் ஒரு தந்தைவழிச் சமுதாயம். எனவே இச் சமுதாயத்தின் அனேக அமைப்புகளும் நடைமுறைகளும் பெண்களுக்குப் பாதகமானதாகவே அமைகிறது.இதனை நாம் நன்கு உணர்ந்து கொண்டோ மாயின் எமது சமுதாயத்தில் நாம் எதனையும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகக் கருதமாட்டோம். 'நாம் இப்போது கூறுவதில்லை; எங்களுக்குக் கூடுதல் வேலை வாய்ப்புக் களை, உரிமைகளைத் தாருங்கள். உங்களுக்குச் சமமானவர்கள் என்றோ அல்லது உங்களுடன் இன்னும் அதிகமாகப் போட்டியிட சந்தர்ப்பம் தாருங்கள் என்றோ கூட, ஆனால் அதைவிட நாம் முழுக் கேள்விகளையும் மீள ஆராய்ந்து பார்ப்போம். எல்லாக் கேள்விகளையுமே ஒன்றையும் நாம் முடிந்த முடிவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாம் எம்மையும் எமது பாத்திரத்தையும் (Role) எமது தோற்றத்தையும் மட்டும் மீள வரையறுத்துக் கொண்டால் போதாது. நாம் எவ்வகையான சமூகத்தில் வாழ விரும்புகிறோம் என்பதையும் வரையறுக்க வேண்டும்." (மனுஷி, தை 1979) மேற்கூறப்பட்ட விடயம் நமது பெண் போராளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். நாம் நமது பாத்திரங்களையும் தோற்றத்தையும் (ஆயுதம் ஏந்தி நாட்டைக் காப்பதன் மூலம்) மட்டும் மீள வரையறுத்துக் கொள்வதன் மூலம் பெண் இனத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. நாம் வாழவிரும்பும் சமுதாயத்தையும் நாமே வரையறுக்கும் போதுதான் அது எம் விடிவிற்கு வழிகோலுவதாக அமையும். இவ் அடிப் படை உண்மையை உணரும் வரை பெண் போராளிகள் யாரும் வீணே பாவிக்கப்படுவார்கள். சோசலிசம் வந்தால் பெண்கள் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும்' என்ற மரபுரீதியான மார்க்சிஸ்டுகளின் வாய்ப்பாட்டைப் போலவே, "ஈழம் வந்தால் பெண்கள் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும்' என்ற நம்பிக்கை பல பெண் போராளிகளிடம் காணப்படுகிறது. இன்னும் சிலரிடம் எமது தலைவரே எல்லாவற்றையும் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
நான் ஒரு பெண் 69

Page 40
இயக்கத்துக்குப் பெண்கள் பிரச்சினை தொடர்பாக அதிக குழப்பம் இருக் கிறது. எனினும் இறுதியில் அவர்கள் (சுதந்திரப் பறவைகள்) தமது விவாத த்தை முடிக்கையில் தமக்கு தங்கள் தலைவர் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக் கூறினார்கள். (முறிந்த பனை, பக். 328)
எமது சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அது பெண்கள் இயக்கங்களில் சேர்ந்தமையை / சேர்கின்றமையை சிறிதளவும் ஆதரிக்கவில்லை. E.PR.L.F. போன்ற இயக்கங்கள் எல்.ரி.ரி.ஈயினால் கலைக்கப்பட்டபோது கூட இந்தப் பெண்கள் தான் இயக்கத்தைக் கெடுத்ததுகள்' என்ற கருத்தே பரவலாக நிலவியதை நாம் மறுக்க முடியாது. ஓர் ஆண் போராளி இயக்கத்தை விட்டு விலகி தன் வீடு திரும்பும் போது மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் வரவேற்கப்படுகிறான். அவனது உயிருக்கு ஆபத்து நிகழலாம் என்று எண்ணப்படும் போதோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவனை எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பி விடவும் பெற்றோர் தவறுவதில்லை. ஆனால் இயக்கத்தை விட்டு வெளி யேறும் பெண் போராளிகளில் பெரும்பான்மையானோரைப் பொறுத்த வரையில் அவர்கள் கதை வேறாக உள்ளது.
அனேகமான சந்தர்ப்பங்களில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவள் வீட்டார் ஏற்கும் நிலையில் இல்லை. சமுதாயமும் இவர்களைத் தீண்டப்படாதவர்களாகவே நோக்குகின்றது. இது எதனைக் காட்டுகிறது? பெண்கள் தொடர்பாக நமது சமுதாயம் கொண்டுள்ள பக்கச் சார்பினையே புலப்படுத்துகிறது. அதாவது, பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிட்டால் போதும் அவர்கள் கறை படிந்தவர்கள்' என்ற கருத்தே நமது சமூகத்தில் இன்னும் நிலவுகிறது. (குறிப்பு: நான் 'கற்பு', 'கறை படிந்தவர்கள்' போன்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சமுதாயத்தில் நிலவும் கருத்துக்களை ஆராய்வதற்காகவே இப்பதங்களைக் கையாள்கிறேன்), மேலும் ‘கற்புத் தொடர்பாக நமது சமுதாயம் கொண்டுள்ள இரட்டை நிலைப்பாடு அதாவது ஆண்களுக்கு ஒரு விதி. பெண்களுக்கு ஒரு விதி என்ற நிலை - இன்னும் எள்ளளவு கூட மாறவில்லை. என்னைப் பொறுத்தவரையில் பெண் விடுதலை யின் அடிப்படை கற்புப் பற்றியதுதான். ஏனெனில் ஒரு பெண் சுதந்திரமாகச் சம்பாதிக்கலாம் அல்லது காற்சட்டை போட்டு துவக்கு ஏந்தி போராடலாம். ஆனால் கற்பு எனும் கோட்பாடு அவளைத் தொடர்ந்து அடிமைப்படுத்தலாம்.
70 நான் ஒரு பெண்

தேசிய விடுதலைப் போரும் துப்பாக்கிக் கலாசாரமும்
விடுதலைப் புலிகளின் மகளிர் முன்னணியின் யாழ் மாவட்டப் பொறுப்பாள ரான மாலினியுடன் நடாத்தப்பட்ட பேட்டியில், ‘இன்றைய மகளிருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?' எனக் கேட்கப்பட்டபோது அதற்கு அவர் பின்வருமாறு விடையளித்திருந்தார். 'இன்றைக்குப் பொதுவாகவே உல கெங்கும் ஆணாதிக்க சமூகத்தால் பெண்கள் தங்கள் விடுதலைக்கு ஒரு சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்று தமிழ் பேசுகின்ற மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்கக் கூடிய பலம் வாய்ந்த உறுதியான அரசியல் கட்சியாக விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி இருக்கின்றதை உலகமே அறியும். இந்த நிலையில் இக்கட்சியின் ஒரு அங்கமாகிய விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணியால் இங்குள்ள பெண் களின் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அனைத்துப் பெண்களும் எமக்குப் பின்னால் அணிதிரளவேண்டும்' (நங்கை இதழ் மே-ஜூன் 1990, பக்-4)
பெண்விடுதலை எனும் கோஷத்தினையும் பெண்கள் அமைப்பினையும் எவ்வாறு வெறுமனே யுத்தத்திற்கான ஆட் சேர்ப்புத் தளமாக மட்டுமே பாவிக்கப்படுகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தற்போது புலிகளின் பெண்கள் அமைப்பு புலிகள் இயக்கத்தின் கைப் பொம்மை களாகவே இயங்கி வருகின்றார்கள். இம் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் கூட காலத்திற்குக் காலம் வெளியிடும் அறிக்கைகளிலும் பேட்டிகளிலும் ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக எப்படித் தாங்களும் களத்தில் போரிட்டு மடிகிறார்கள் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்களேயொழிய பரந்து பட்ட பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பவோ நடவடிக்கைகள் எடுப்பதாகவோ இல்லை. சர்வாதிகார ஆட்சி நடாத்தும் புலிகள் இயக்கத்தின் கீழ் இயங்கும் இம்மகளிர் அமைப்பு முற்போக்கான
நான் ஒரு பெண் 71

Page 41
காரியங்களைச் சாதிக்கும் என நாம் எதிர்பார்க்க இயலாது. எனினும் இவ்வமைப்பில் உள்ள ஒரு சில பெண்களாவது தவறுகளை உணர்ந்து அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்காமை கவலைக்குரிய விடயம். முழுச் சமூகமும் எவ்வகையான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத நிலையில் வாய்மூடி மெளனிகளாக துப்பாக்கியின் நிழலில் வாழும் இக்கால கட்டத் தில், ஆயுதம் ஏந்திய பெண்களும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால், இப்போது அதனைச் செய்யக் கூடிய நிலையில் வேறு யாரும் இல்லை. நாம் ஒரு முக்கிய விடயத்தை மனதிற் கொள்ள வேண்டும். எத்தனை ஆயிரம் பெண்கள் இயக்கத்தில் சேர்ந்து போராடுகிறார்கள் என்பதோ அல்லது எத்தனை பெண்கள் களத்தில் உயிர்நீத்தார்கள் என்பதோ அல்லது பெண்கள் எவ்வாறு ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாகப் போர் புரிகிறார்கள் என்பதோ பெண்கள் எவ்வளவு தூரம் முன்னோக்கிச் சென்றுள்ளார்கள் என்பதனைத் தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக இயக்கத்திற்குள் முடிவெடுக்கும் மட்டங்களில் / அதிகார ஸ்தானங்களில் எவ்வளவு பெண்கள் இருக்கிறார்கள் என்பதே இயக்கத்திற்குள் பெண்களின் பலத்தைத் தீர்மானிக்கப்போகிறது. அத்துடன் அதிகாரத்தில் இருக்கும் பெண்களும் 'பெண்கள் விடயத்தில் எவ்வளவு தூரம் விழிப்புணர்வு கொண்டுள்ளார்கள் என்பதும் முக்கிய மானதாகும். இல்லாவிட்டால் அவர்களும் ஆணாதிக்க கருத்தியலை உள்வாங்கிய நிலையில் பெண்களுக்கு துரோகம் இழைப்பவர்களாகவே இருப்பார்கள். இயக்கத்திற்குள் இருக்கும் பெண்கள் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கேள்விகள் எதனையும் கேட்பதாக இல்லை. மத்திய குழுவில் எத்தனை பெண்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்றோ அல்லது முக்கிய பதவிகளில் பெரும்பாலும் ஆண்களே இருக்கின்றார்கள் என்றோ இவர்கள் இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை. பனாமா ஆக்கிரமிப்பு, ஈராக்கிற்கு எதிரான யுத்தம் போன்றவற்றில் அமெரி க்கப் பெண்கள் எவ்வாறு யுத்த முனையில் போரிட்டார்கள் என்பது பற்றி அதிகம் பேசப்பட்டது. பெண்கள் ஆண்களைப் பின்பற்றி நடப்பதன் மூலம் விடுதலையடைந்து விட முடியும் என்ற கருத்தே பெண் புலி உறுப்பினர்களின் பேச்சில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது. இவ் விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். ஆண் ஆதிக்கத்தினையும் அடக்கு முறையினையும் ஒழித்துக் கட்டுவதே பெண்கள் அமைப்புகளின் பணியாக இருக்க வேண்டுமேயொழிய இவ் ஆண் ஆதிக்க அதிகார அமைப்பில் பங்கு கொள்வதற்கல்ல. அதிகார துஷ்பிரயோகங்கள், கொலைகள் போன்றவற்றை பெண்கள் அமைப்புகள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
72 நான் ஒரு பெண்

புலிகளின் பெண்கள் அமைப்பு பெண் விடுதலையை முன்னெடுக்க முடி யாமைக்குரிய அடிப்படைக் காரணம் அவர்களுடைய அரசியல் சித்தாந்தம் தான். குறுகிய தேசியவாத அரசியலில் சிக்கிக் கொண்டுள்ள புலிகள் இயக்கம் தற்போது ஒரு வலதுசாரி சர்வாதிகார அரசியல் ஆட்சியை தமது கட்டுப் பாட்டுக்குள் உள்ள பிரதேசங்களில் நிறுவியுள்ளது. தேசியவாதம், இனவாதம் என்பவற்றுடன் ஆணாதிக்கம் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளில் பார்த்தோம். இவ்வகையான அரசியல் நிலைமையின் கீழ் பெண்கள் நிலை மேலும் மோசமடையப் போவதுடன் போராட்டம் என்ற பெயரில் பெருமளவு பெண்கள் அணி திரட்டப்பட்டு யுத்தத்தில் தொடர்ந்து பலியிடப்படப் போகிறார்கள்.
sredir g (Luau 73

Page 42
இனத்துவமும் பெண்களும்.
சமூக விஞ்ஞான கழகத்தினால் ஒரு பாசறை நடாத்தப்பட்டது. இப்பாசறை யில் 'இனத்துவமும் பெண்களும்' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. குறிப்பாக இன முரண்பாடுகள் கூர்மை யடைந்துள்ள நாடுகளில் பெண்களுக்கும் இன முரண்பாட்டிற்கும் இடையே நிலவும் தொடர்பு பற்றி பேசப்பட்டது. அதன் சாராம்சம் வருமாறு: இரண்டு சமூகங்களிடையே இன முரண்பாடு நிகழும் போது அம்முரண் பாட்டின் மையத்தில் பெண்கள் இருப்பதை பலரும் உணர்வதில்லை. இருவகையில் பெண்கள் இம் முரண்பாட்டின் மத்தியில் இருக்கின்றார்கள்.
முதலாவதாக ஒவ்வொரு சமூகத்தினதும் மறு சந்ததியினரை உருவாக்கு பவர்கள் பெண்கள் ஆவர். இதனாலேயே ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் தமது சமூகத்தின் பெண்களது கருவளத்தை (fertility) தீர்மானிப் பதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அனேகமான சந்தர்ப்பங்களில் பெரும்பான்மையினம்/ஆட்சியதிகாரத்தில் உள்ள இனம் சிறுபான்மையினத் தினது சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதில் அதிக தீவிரம் காட்டு கிறது.அதே போல சிறுபான்மையினம் தமது சனத்தொகையைப் பெருக்கு வதில் அதிக அக்கறை காட்டுகிறது. இவ்வகையில் சனத்தொகைக் கட்டுப் பாடு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அம்சமாகிறது. இவ்வகையான காலங்களில் கருவளக் கட்டுப்பாடானது பெண்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் அரசியல் தீர்மானமாகவும் அமைகிறது.
இன முரண்பாடுகள் நிகழும் காலகட்டங்களில் ஒவ்வொரு இனமும் அதன் 'இனத் தூய்மையை’ பேணுவதில் அதிக கவனம் செலுத்துகிறது. எனவே இக் காலகட்டங்களில் ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த ஆண்களும் தமது பெண்கள் தமது இனப் பெண்களையே பெற்றெடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு இணங்க கற்பு, தூய்மை போன்ற கருத்தியல்களை வலியுறுத்துகின்றனர்.
74 நான் ஒரு பெண்

இரண்டாவதாக ஒரு சமூகத்தின் கலாசாரத்தினை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றார்கள். தாமே கலாசார த்தின் சின்னங்களாக இருப்பதுடன் மட்டுமன்றி குழந்தைப் பருவத்தில் இருந்தே அடுத்த தலைமுறையினருக்குக் கலாசாரத்தை வழங்குவதில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். பாசறையில் கலந்து கொண்ட பெண் ஒருவர் இதற்கு நல்ல உதாரணம் ஒன்றை எடுத்துக் காட்டினார். 'இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆண்களை எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என என்னால் இனங் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் இவ் ஆண்கள் தமது மனைவியருடன் வந்திருந்தார்களேயானால் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என இலகுவாக இனங் கண்டு கொண்டிருப்பேன். ஏனெனில் ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சர்வதேச உடையான காற்சட்டை, ஷேர்ட்தான் உடுப்பார்கள். ஆனால் அவர்களது மனைவியரோ அவர்களது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள்.
போராட்ட காலங்களில் பெண்களும் பெருவாரியாக விடுதலை இயக் கங்களில் சேர்க்கப்படுவதுண்டு. எனினும் யுத்தங்களின் முடிவில் 'மீண்டும் குசினிக்குள் போன நிலை' தான் வரலாற்றுப் பாடமாக இருப்பதைப் பல பெண்கள் சுட்டிக் காட்டினார்கள். இலங்கயின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது பெண்கள் தொடர் பாக ஒரு வேலைத் திட்டம் தீட்டப்படாமை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் அநாகரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் போன்றோர் கூட பெண்கள் தொடர்பாகக் கொண்ட பிற்போக்குத்தனமான கருத்துக்கள் உதாரணங்களுடன் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
நான் ஒரு பெண் 75

Page 43
விடுதலைக்கு துப்பாக்கியை மட்டும்
நம்பிப் பயனில்லை
1993ம் வருட முற்பகுதியில் 'விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள்' என்ற ஆங்கில நூலை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டனர். திருமதி அடேல் பாலசிங்கம் இந்நூலை எழுதியுள்ளார். விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது இராணுவ நடவடிக்கைகள் பற்றிப் பெருமையுடன் எடுத்துக் கூறுவதாகவே இந்நூல் அமைந்துள்ளது. இது அவர்களின் கதை என்று அடேல் கூறுகிறார். 1986ம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈறாக இப்பெண் போராளிகள் பங்குபற்றிய தாக்குதல்கள் அவர்களின் வெற்றிகள் என்பனவே இந்நூலில் அமைந்துள்ளன.
பெண் போராளிகளின் கதை என்று அடேல் பிரகடனப்படுத்தினாலும் கூட இந்நூல் ஒரு முழுமையற்ற கதையாகவே தென்படுகிறது. தாக்குதல்களும், இராணுவ நடவடிக்கைகளுமே அவர்களது வாழ்க்கையின் பிரதானமான அடிப்படையான அம்சங்கள் என்ற கருத்தே இந்நூலில் உள்ளோட்டமாகக் காணப்படுகிறது. இவ்வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் வழமையான இராணுவ வாதத்தின் ஒரு பகுதியாகவே இந்நூல் அமைந்து விடுகிறது.
இந்நூலின் முன்னுரையில் அடேல் கூறியுள்ள சில கருத்துக்கள் விவாதத்திற்கு இடமானவையாகும். குறிப்பாக வன்முறையற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை அவர் முக்கியமற்றவையாகக் கூறுகிறார். குறிப்பாக பெண் களது வாழ்க்கையிலும் நிலைமையிலும் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த வல்லது அவர்களது ஆயுதப் போராட்டப் பங்களிப்பே என அறுதியிட்டுக் கூறுகிறார். இது போராட்ட வடிவங்கள் பற்றிய கருத்துநிலைப் பிரச்சினை யொன்றை எழுப்புகிறது. அடேல் பின்வருமாறு கூறுகிறார்.
அகிம்சைரீதியான அரசியல் நடவடிக்கைகள், பாராளுமன்ற அரசியலில் பெண்கள் பங்குபற்றுவதானது அவர்களைப்பற்றிய கலாசாரப் படிமங்களில்
76 நான் ஒரு பெண்

அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. இவை பாராளுமன்ற அரசிலும், அகிம்சைரீதியான அரசியற் செயற்பாடுகளிலும் பெண்களது நடவடிக்கைகள் என ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட எல்லையுள்ளேயே அமைந்துள்ளன. ஆனால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் வரலாறு அடிப்படையில் வேறானதாகும். போராடும் பெண்களது வாழ்க்கை சாதாரண பெண்ணின் வாழ்க்கைக்குப் புறம்பான ஒரு உலகத்தைச் சார்ந்தது. பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டாலன்றி அவர்களது வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றமோ அவர்களைப் பற்றிய சமூகக் கருத்தோட்டத்தில் அடிப்படை மாற்றமோ ஏற்படாது என்ற கருத்தே மேற்கூறும் கூற்றில் தொனிக்கிறது. அப்படியானால் பெண்களதுநிலைமையில் முற்போக்கான அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் ஆயுதப் போராட்டம் கட்டாயமான முன் நிபந்தனையா? ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் சாதாரண நடைமுறையில் இருந்து மாறுபட்ட நிலைமையையும் சவாலையும் சந்திக்க வேண்டியுள்ளதென்பது உண்மைதான். ஆனால் அவர்கள் எதிர்கொள்கிற இந்த அசாதாரண நிலைமைகள் பெண்கள் பற்றிய சமூகக் கருத்தினையும் மனோபாவத்தினையும் எவ்வளவு தூரம் மாற்றியுள்ளன? ஆயுதப் போராட்டத்தில் பெண்கள் பங்கேற்ற ஏனைய நாடுளின் அனுபவங்கள் யாவை? தேசிய விடுதலை இராணுவத்தில் அங்கம் வகித்த பெண்கள் விடுதலைக்குப் பின்னர் எவ்வாறு நோக்கப்பட்டனர்? அவர்களது அரசியல் ரீதியான அந்தஸ்து அதிகாரம் என்பன எவ்வாறிருந்தன? தேசிய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் உதாரணங்களை நோக்குவதன் மூலம் இவ் வினாக்களுக்கு ஒரு பொது மையான விடையை உருவாக்க முடியும். இந்த நாடுகளின் அனுபவங்களை நோக்கும் போது பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளும் ஆணாதிக்கமும் விடுதலை இயக்கத்திலும் விடுதலை இராணுவத்திலும் உள்ள ஆண்களி டையே தொடர்ந்து நிலவியதைக் காணலாம். இராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதற்குப் பெண்கள் பயன்பட்டார்கள். ஆனால் இத்தகைய பங்கு பற்றலினால் விடுதலைக்குப் பின்னர் அவர்களது நிலையில் பெரியளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. பால் அடிப்படையில் அமையும் வேலைப் பிரிவினையில் எந்தவித மாறுதல்களும் ஏற்படவில்லை. மேலும் புரட்சி முடிந்ததும் பெண்கள் இராணுவப் பணியில் இருந்து விலக்கப்பட்டனர். சீனா, வியட்நாம் , நமீபியா, அல்ஜீரியா, மொசாம்பிக், நிக்கரகுவா போன்ற நாடுகளின் நிலைமை இதுவாகவே இருந்தது.
போர்க்காலமானது ஒரு அசாதாரணமான காலமாகவே கருதப்படுகிறது. போர் முடிந்தபின் மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்ப வேண்டும் எனப் புதிய தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தச் சாதாரண நிலைக்குத் திரும்புவதன்
நான் ஒரு பெண் 77

Page 44
ஒரு அம்சமாகப் பெண்களும் தமது வழமையான தாய், மனைவி என்ற பாத்திரங்களை ஏற்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. போர்க் காலத்தில் இழந்த மக்கட் தொகையை ஈடுசெய்ய வேண்டும். புதிய ஆரோக்கியமான சமூக அங்கத்தவர்களை உருவாக்க வேண்டும். இத்தகைய தேவைகளை ஈடுசெய்ய குடும்பம் என்ற நிறுவனத்தை உறுதிப்படுத்த வேண்டும். பாரம் பரிய சமூக அமைப்பில் குடும்பக் கடமைகள் பெண்களுக்கே உரியன. தாய், மனைவி என்ற பாத்திரங்களை உறுதிப்படுத்துவதன் மூலமே குடும்ப நிறுவனத்தை நிலை நிறுத்த முடியும். இதனாலேயே புரட்சிக்கு அல்லது விடுதலைக்குப் பிறகான காலங்களில் பெண்கள் மீண்டும் தமது மரபுவழிக்கடமைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.
இத்தகைய வரலாற்று அனுபவங்களை மனங்கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்துடன் சமாந்தரமாகப் பெண்கள் தமது உரிமைகட்கான கோரிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும். இல்லாவிடின் மீண்டும் சமையலறைக்குள் தள்ளப்பட வேண்டிய அபாயமே ஏற்பட்டு விடலாம். அல்ஜீரியத் தேசிய விடுதலைப் போரில் பெண்கள் பங்கெடுத்தனர். ஆயுதம் ஏந்தினர். அவ்வாறே ஈரானிலும் நடந்தது. ஆனால் இன்று பெண்களைப் பொறுத்தவரை மிகுந்த வைதீக வாதத்தையே அந்நாட்டு அரசுகள் கடைப்பிடித்து வருகின்றன. பெண்களின் போராட்ட நடவடிக்கைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கூறப்படும் நிக்கரகுவா, பலஸ்தீனம் போன்றவற்றிலும் வைதீக வாதம் இல்லாவிடினும் பொதுவான பின்தள்ளப்பட்ட நிலைமையே காணப்படுகிறது. எதிர்காலம் பற்றிய இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு இல்லாவிடின் புரட்சிக்குப் பிறகான எதிர்காலச் சமூகம் பற்றிய அவர்களது கனவு நனவாக முடியாது. போராட்டம் நடைபெறும் வரைக்கும் அவர்கள் போற்றப்படுவர். ஆனால் அவர்களது எதிர்காலம் குறித்து எத்தகைய உத்தரவாதமும் கொடுபடுவதில்லை. மேலும் பெண்களை இராணுவத்தில் சேர்த்துப் பயிற்றுதல், தாக்குதல்களிற் பங்கெடுக்க அனுமதித்தல் போன்றவை எப்போதும் பெருமைக்குரிய விடயங்களாகவே கருதப்படுகின்றன. சர்வதேசப் பெண்கள் தினத்தை ஒட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் விடுக்கும் செய்திகளில் இத்தகைய பெருமித உணர்வு தொனிப்பதைக் காணலாம். காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த பெண்கள் இராணுவ உடை அணியவும், களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேராகச் சமர் செய்யவும் வாய்ப்பை உருவாக்கியது தமது இயக்கமே என்றும், பெண்களது வீரத்தையும் துணிச்சலையும் வெளிக்காட்டும் சந்தர்ப்பத்தை அது அளித்திருக்கிறது என்றும் பொருள்பட இச்செய்திகள் அமைந்துள்ளன. பலஸ்தீனம், ஈரான் போன்ற நாடுகளில் பெண்களது இராணுவப் பங்களிப்பு, பெண்விடுதலை ஆகியவை தொடர்பாக ஆராய்ந்த ஆய்வாளர் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்.
78 நாள் ஒரு பெண்

'முகத்திரை அணிவதைக் கைவிட்ட ஒரு பெண்ணுக்கும் ஒரு உழவு இயந்திரம், ஒரு கைத்தொழிற்பேட்டை, ஒரு புதிய தண்டவாளப்பாதை ஆகியவற்றுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை ஆண்கள் காண்பதில்லை. முகத்திரை அணியாத அளவு பெண்ணை முன்னேற்றி விட்டோம் என்பது ஆணினுடைய இன்னோர் சாதனையின் ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது.' எனவே இராணுவத்தில் பெண்களின் முன்னேற்றம் சாதனை ஆகியவற்றைத் தேசிய இயக்கம், விடுதலை இயக்கம் ஆகியவற்றின் தலைவர்கள் தமது சாதனையின் ஒரு அம்சமாகக் கருதுகின்றனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் பெண்கள் அணியை நிறுவியவர் என்ற குறிப்புடன் பிரபாகரனின் புகைப்படம் இந்நூலில் இடம்பெறுதல் இதற்கு ஒரு சான்றாகும். மேலும் நாம் அடேல் பாலசிங்கத்தின் முன்னுரையிலிருந்து எடுத்துக் காட்டிய கூற்றில் இன்னோர் பிரச்சினையும் உள்ளது. அதாவது ஆயுதப் போராட்டம் தான் பெண்கள் பற்றிய கருத்துநிலையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதனால் ஏனைய போராட்ட வடிவங்களின் தகுதிப்பாடு என்ன என்ற வினாவை இது எழுப்புகிறது. ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள், வேலைநிறுத்தம் போன்ற ஆயுதத் தாக்குதலை உள்ளடக்காத போராட்டங்கள் பெண்களைப் பொறுத்தவரை பயனற்றவை என்ற கருத்து இதில் தொனிக்கிறது. ஆனால் இத்தகைய போராட்ட வடிவங்களூடாக பெண்களது உரிமைகள் வென்றெடுக்கப்பட்டமைக்கு சில நாடுகளையாவது உதாரணம் காட்டலாம்.
எனவே பெண்களைப் பழைய கட்டுகளிலிருந்து விடுவித்து விட்டோம் என்பதற்கு அவர்கள் இராணுவச் சீருடை அணிவதையோ, துப்பாக்கி ஏந்துவதையோ மாத்திரம் அளவு கோலாகக் கொள்ள முடியாது என்பதை உணரவேண்டும். பிறநாடுகளில் பிறசமூகங்களில் என்ன நிகழ்ந்திருக்கின்றது என்பது பற்றிக் கவனம் கொள்ளாது எம்மிடையே எல்லாம் உள்ளது என மனப்பால் குடிக்கும் போக்கைக் கைவிட வேண்டும். பெண்கள் தமது வாழ்க்கையைத் தமது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். விடுதலைக்குத் துப்பாக்கியை மட்டும் நம்பிப் பயனில்லை.
நான் ஒரு பெண் 79

Page 45

பெண்களும் யுத்தமும்
யுத்தமும் பெண்களும் பாஞ்சாலி
தற்கொலைக் கொலையாளிகள்
சசி பெளலேமி

Page 46
82 நான் ஒரு பெண்

யுத்தமும் பெண்களும்
இது யுத்த காலம். யுத்தங்களின் போது உயிர் இழப்புக்கள் பொருள் இழப்புக்களுடன் கூடவே மனிதர்கள் வன்முறைக்கும் உட்படுகிறார்கள். ஆண்கள் வன்முறைக்கு உட்படும் போது, வன்முறைக்கு ஆளாகிய ஆணைச் சமுதாயம் பரிதாபக் கண் கொண்டே பார்க்கிறது. மாறாக, பெண்கள் வன்முறைக்கு உட்படும்போது சமுதாயம் அவர்கள் மீது குற்றஞ் சுமத்துகிறது. கீழ்த்தரமாகப் பேசுகிறது. யார் மீது குற்றம் இழைக்கப்பட்டதோ, அவர்களே குற்றவாளிகளாகக் கருதப்படுவது பெண்களைப் பொறுத்தவரையில் சர்வ சாதாரணமாக உள்ளது. இன்று ஆயிரக் கணக்கில் மத்திய கிழக்குநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்புகிறார்கள். இப்படி நாடு திரும்பியவர்களில் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகை ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறிய ஒரு விடயம், தான் தங்கியிருந்த அகதி முகாமில் மட்டும் 36 இலங்கைப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்தார்கள் என்பதாகும். பத்திரிகைகளும் இதனை ஆரவாரத்துடன் வெளியிட்டன. இது எம்மவர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரது கருத்துப்படி இங்கிருந்து வெளிநாடு போய் விட்டு வரும் பெண்கள் (குறிப்பாக மத்திய கிழக்குக்குப் போய் திரும்புகிறவர்கள்) நடத்தை கெட்டவர்கள்' என்பதாகும். இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளுக்கு (தற்போது மத்திய கிழக்கிற்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா போன்ற நாடுகளுக்கும் கூட நமது பெண்கள் பணிப்பெண்களாகச் (house maids) செல்கிறார்கள். வறுமை தான் இவர்களை இவ்வாறு வெளிநாடு களுக்குச் செல்லத் தூண்டுகிறது. தங்கள் கிராமங்களைக் கூட விட்டு வெளிக்கிடாத பெண்கள், மொழி தெரியாத அந்நிய தேசங்களுக்குத் தமது அன்பிற்குரியவர்களை பிரிந்து செல்வதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா? உழைத்துப் பணம் சம்பாதித்தல் தான் அவர்களின் பிரதானமான நோக்கமாக உள்ளது. பல குடும்பங்களில் கணவன்மாரே தமது மனைவியரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
நான் ஒரு பெண் 83

Page 47
இவ்வாறு வெளிநாடு செல்லும் பெண்களுக்கு உதவ அங்கு யாரும் கிடை யாது. அவர்கள் அங்கு சென்றதும் அங்குள்ள தமது வீட்டு எசமானர்களின் தயவிலேயே தங்கியுள்ளார்கள். இவ்வாறு வெளிநாடு செல்லும் பெண்களில் அனேகமானோர் ஆயிரக்கணக்கில் கடன் எடுத்துத்தான் முகவர்கள் (Agents) ஒப்பந்தக் கட்டணத்தைக் கட்டும் வரைக்குமாவது அங்கு நிற்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைமையில் வேலை மிகவும் கடினமாக இருந்தால் கூட அதைத் தாங்கிக் கொள்வதை விட அவர்களுக்கு வேறு தெரிவு கிடையாது. இப்படியான பரிதாபகரமான நிலையிலேயே பெரும்பான்மையான நமது பெண்கள் வாழ்கிறார்கள். இவ்வாறு வாழும் பெண்கள் தமது எசமானர்களால் பலவந்தப்படுத்தப் பட்டால் அது அவர்களுடைய குற்றமா? அதை அவர்கள் எப்படித் தவிர்க்க முடியும்? அப்படி அந்நிலையைத் தவிர்க்க வேண்டுமாயின் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, இப்படிப்பட்ட பாதுகாப்பு எதுவும் அற்ற வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லாமல் விடுவதுதான். எனவே வெளி நாடுகளில் இருந்து திரும்பும் பெண்களைச் சந்தேகக் கண்ணுடனும், பழிச் சொற்களுடனும் எதிர் கொள்வதை விடுத்து இவ்வாறான பாதுகாப்பற்ற நிலைமைகளில் வெளிநாடுகளுக்கு நம் பெண்கள் போவதை நிறுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றுவேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். நாட்டில் நிலவும் இன்னொரு நிலைமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. யுத்தம் காரணமாக பலர் தமது வாழ்க்கைத் துணைகளை இழக்கிறார்கள். ஒரு ஆண் தனது மனைவியை இழந்து 6 மாதத்திற்குள் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தால் கூட சமுதாயம் அவளைப் பார்த்து அவளுக்காக இரங்கும். ஆனால் கணவனை இழந்த ஒரு பெண் இன்னொரு ஆணுடன் கதைத்து விட்டால் போதும், உடனே அவளைப் பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கி விடுவார்கள். நமது சமுதாயம் மனித நடத்தையில் காட்டும் இரட்டை நிலைப்பாட்டை (Double Standard) இது எடுத்துக்காட்டுகிறது. யுத்த இழப்புகளால் இலட்சக்கணக்கான மனிதர்கள் அதிக உடல், உளப் பாதிப்பு களுக்கு உட்பட்டிருக்கிறார்கள். இந்நிலையிலும் நமது சமுதாயம் தொடர்ந் தும் பாதிக்கப்பட்ட பெண்களைத் தொடர்ந்து சித்திரவதை செய்வதை நிறுத்த வேண்டும். யுத்தத்தின் சுமையில் பெரும் பகுதியைத் தாங்கும் பெண்களுக்கு மேலும் கொடுமைகளை இழைக்காது அவர்களுக்கு அன்பும் ஆதரவும் வழங்க வேண்டும். நமது சமுதாயம் பாரிய இழப்புகளை எதிர் கொண்ட வண்ணம் உள்ளது. மனித துயரத்தை எங்கும் காணக் கூடியதாக உள்ளது. இவ்வளவு இழப்புகளில் இருந்தும் இனியாவது நாம் மனிதர்களாக இருப்போமாக.
sa
84 நான் ஒரு பெண்

தற்கொலைக் கொலையாளிகள்
இருவேறு கருத்துகளுக்கு இடமளிக்கக்கூடிய Suicide Klers எனத் தலைப் பிடப்பட்ட வீடியோ நிகழ்ச்சியைத் தனது Inside Story என்ற வரிசையில் பி.பி.ஸி தொலைக்காட்சி, 1991ம் வருட இறுதியில் ஒளிபரப்பியது.
திரு.பிரபாகரன் உட்பட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க உயர் மட்டத் தலைவர்கள் இதில் ஒரு சேரத் தோன்றியுள்ளமையும் இந்நிகழ்ச்சி தயாரிக்கப் பட்ட காலப் பின்னணியையும் நோக்கும் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இதனை முக்கியமாகக் கருதியிருப்பது தெரிகிறது. அதுவும் பிரபாகரன் நீண்ட காலத்திற்குப் பின்னர் சர்வதேச மட்டத்திலான, ஒரு வெளிநாட்டுச் செய்தி ஸ்தாபனத்தினருடன் உரையாடுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிப்பதற்கும் பொது நிகழ்ச்சிகளிற் கலந்து கொள்வதற்கும் மிக மிக அரிதாகவே ஒப்புக்கொள்ளும் பிரபாகரன் பி.பி.ஸிக்குப் பேட்டி அளிக்க ஒப்புக்கொண்டமை வீடியோ நிகழ்ச்சியை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் எத்தனை முக்கியமாகக் கருதினர் என்பதற்குப் போதுமான சாட்சியாகும்.
ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கை ராணுவத்தினருடனான தொடர்ச் சியான யுத்தம், தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் பற்றிய இந்திய தமிழ் நாட்டு அரசின் கடும்பிடி நடவடிக்கை ஆகியவை விடுதலைப் புலிகள் இயக்கத் தினருக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பல இடையூறுகளையும், தளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாததாகும். இந் நிலையில் தமது அரசியல் இலட்சியத்தையும் , தமது போராளிகளின் தியாகத்தையும் தமக்கு யாழ்ப்பாண மக்கள் அளிக்கும் 'ஆதரவையும் வெளியுலகுக்குத் தெரிவிப்பதற்கும் அதன் மூலம் இழந்துபோன ஆதரவை மீண்டும் ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பாக பி.பி.ஸி தயாரிக்க விரும்பிய நிகழ்ச்சியை அவர்கள் கருதியிருக்கின்றனர். பி.பிஸி யாழ்ப்பாணத்தில் படமாக்கிய காட்சிகள் விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பையும், பெரும் பாலும் அவர்களது காட்சித் தேர்வையும் புலப்படுத்துகின்றன.
நான் ஒரு பெண் 85

Page 48
தமது இயக்கம் பற்றிய சாதகமான அபிப் பிராயத்தை வெளி உலகில் ஏற்படுத்த வல்லது என்று கருதி, விடுதலைப்புலிகளின் உயர்பீடம் காட்சி களைப் பெரும்பாலும் தேர்ந்து அளிக்க, பி.பி.ஸி குழு தயாரித்த இந்நிகழ் ச்சியில் பெண்கள் பற்றி வெளிப்படுகின்ற அவர்களது பார்வை குறித்து எனது விமர்சனத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். பெண்கள், பெண்போராளிகள் பற்றிய விடுதலைப் புலிகளின் பார்வையும், கருத்துநிலையும் அவர்களை அறியாமலே தெளிவாக இந்நிகழ்ச்சியில் உருவாக்கம் பெறுகின்றன. பெரும்பாலான தேசிய இயக்கங்களைப் போலவே விடுதலைப் புலிகளின் தேசியமும் பால் நிலைப்படுத்தப்பட்டதாகவும் (Gendered) ஆண் நிலைப் படுத்தப்பட்டதாகவும் (Masculinized) உள்ளது என்பதற்கு இவ் வீடியோ நிகழ்ச்சியின் காட்சிகள் துல்லியமான உதாரணங்களாகின்றன. இந்த வீடியோ நிகழ்ச்சியில் பெண்களைப் பற்றிய பேச்சு இடம்பெறும் போது புலிகளின் பிரதான பேச்சாளர் கலாநிதி பாலசிங்கத்தின் மனைவியான அவுஸ்ரேலியப் பெண் அடேல், விடுதலைப் புலிகள் இயக்கம் பெண்களைச் சமத்துவமாகவே நடத்துகிறது எனவும் பெண்கள் ஆண்கள் போலவே சகலவிதமான பயிற்சிகளும் பெற்று தாக்குதல் உட்பட சகல நடவடிக்கை களிலும் பங்கு பற்றுகிறார்கள் எனவும் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து பெண்கள் பங்கு பற்றும் சில காட்சிகள் பின்வருமாறு: பெண்கள் இராணுவப் பயிற்சி பெறுவதும் இயக்கத்திற்கும் தலைவர் வே.பிரபாகரனுக்கும் விசுவாசமாக இருப்போம் என சத்தியப்பிரமாணம் செய்தல், அவர்களது சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதன் அடையாளமாக சைனைட் மாலை வழங்கப்படுதல்,
காயமடைந்த பெண் போராளி சிகிச்சை பெறுதல் அங்கவீனரான பெண் போராளியுடன் உரையாடல்.
பெண் போராளியின் இறுதிக் கிரியை.
இந்தக் காட்சிகள் மேலே உள்ள ஒழுங்குமுறையிலோ, ஒன்றை அடுத்து ஒன்றாகவோ இடம் பெறவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத் தினரின் பெண்கள் பற்றிய கருத்து நிலையைத் தெளிவாக்குவதற்காக இவற்றைத் தனியாகத் தொகுத்தேன். இந்த காட்சிகளின் உள் உறையும் கருத்துநிலையை வெளிக்கொணர முன்பு தேசிய இயக்கத்தில் பெண்களது பங்கு பற்றுதல் தொடர்பான முற்குறிப்பு ஒன்றைக் கூறவேண்டியது அவசியம். இந்தக் குறிப்பும் தகவல்களும் பின்னால் எனது கருத்தாய்வுக்கும் கூற்றுகளுக்கும் பின்னணியாக அமையும்.
86 நான் ஒரு பெண்

தமிழ்த் தேசியக் குழுக்களிற் பெண்கள் சேர்வதும், வெளிப்படையான எதிர்ப்பு நடவடிக்கைகளிற் பங்கு பற்றுவதும் எண்பதுகளின் ஆரம்பத்தி லிருந்து கணிசமாக அதிகரித்தது. அக்காலத்தில் தலைமறைவாக இயங்கிய இக்குழுக்களில் பெண்கள் சேர்ந்தமைக்கு தேசிய விடுதலை நோக்கத்தை விட, சமூகத்தில் அவர்களது தாழ்த்தப்பட்ட நிலையும் முக்கிய தூண்டுதலாக அமைந்தது. மீண்டும் மீண்டும் ஒரே வட்டத்துள் சுழலும் சாதாரண வாழ்விலி ருந்து வேறுபட்டதாகவும் அதனால் ஆர்வமூட்டுவதாகவும் இயக்க வாழ்வு அமைந்திருந்தது. ஆனால் ஆண்களால் தோற்றுவிக்கப்பட்டு அவர்களாலேயே வழிநடத் தப்பட்ட தேசிய குழுக்கள், சமூகத்தில் ஏற்கனவே ஆண் பெண்ணுக்கிடையே நிலவிய வேலைப்பிரிவினையையே கடைப்பிடித்தன. நிதி சேகரிப்பு, செய்திப் பரிமாற்றம், உணவு, மருத்துவம் தொடர்பான வேலைகள் ஆகிய வற்றில் ஆரம்பத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் நீண்ட தயக்க மயக்கங்கள், விவாதங்களின் பின் பெண்களின் இடைவிடாத வற்புறுத்தல், அதிகளவான போராளிகளைச் சேர்க்க வேண்டிய தேவை ஆகியவற்றின் பயனாக பெண்கள் இராணுவப்பயிற்சிக்கு அனுமதிக் கப்பட்டனர். தாக்குதல்களிலும் பங்கு பற்றினர். தமிழ்த் தேசிய வாதக் குழுக்களின் வரலாற்றில் முதன் முதல் பெண்களும் பங்கு கொண்ட இராணுவத் தாக்குதல் 1985 இல் நடைபெற்றது. காரைநகர் கடற்படைத் தளம்மீது ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட தாக்குதலின் போது அதில் பங்கு பற்றிய சோபா கொல்லப்பட்டார். இதற்கு அடுத்ததாகப் பெண்கள் பங்குபற்றிய முக்கிய தாக்குதல் 1986 இறுதியில் மன்னாரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்டதாக்குதலாகும். அவர்களது இராணுவ அணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விக்ரர் கொல்லப்பட்ட இம் மோதலின் போது, இந்தியாவில் பயிற்சி பெற்ற முதலாவது பெண்கள் அணி பங்கு பற்றியது. முதன் முதலாக இலங்கை ராணுவத்தினர் சிலர் கைப்பற்றப்பட்டதும் இத்தாக்குதலின் போதாகும். இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முக்கியமான தாக்குதல்கள் பலவற்றில் பெண்கள் பங்குபற்றியுள்ளனர். இவற்றில் குறிப்பிடக் கூடியவை 90ன் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற கொக்காவில், மாங்குளம் ராணுவமுகாம் தகர்ப்புகளாகும். கொக்காவில் தாக்குதல் ஒன்பது பெண் போராளிகளைப் பலிகொண்டது. மாங்குளம் போரின் போது அதிகளவான பெண்கள் கொல்லப்பட்டனர். இவை இரண்டும் ராணுவரீதியாக விடுதலைப்புலிகளின் முக்கியமான வெற்றிகளாகும். மாங்குளம் வெற்றியின் பின்னரே விடுதலைப் புலிகள் தமது தெற்கெல்லையை நொச்சிமோட்டை வரை விஸ்தரிக்கவும்,
நான் ஒரு பெண் 87

Page 49
வடக்கிற்கும் தெற்கிற்குமிடையிலான போக்குவரத்தை திறமையாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடிந்தது. விடுதலைப் புலிகளின் பெண்கள் அங்கத்துவ எண்ணிக்கை கணிசமானது. இராணுவம், மருத்துவம், பிரசாரம், மாணவர் பிரிவு முதலிய யாவற்றிலும் (ஆண் தலைமையில்) அவர்கள் குறிப்பிடத்தக்க பணி ஆற்றியுள்ளனர். இதன் மூலம் இயக்கத்தின் பலத்தை அதிகரித்துள்ளனர். (ஆனால் அவர்களின் பணி சரியானபடி கெளரவிக்கப்படவில்லை. 'எமது இயக்கத்தில் ஆணும் பெண்ணும் சமம்' என வசனம் பேசினாலும் நடைமுறை அவ்வாறாக இல்லை. பெண்களது பல வருட கால தீவிரமான பங்கு பற்றுதல், தியாகங்கள் ஆகியவற்றின் பின்னர் கூட விடுதலைப்புலிகளின் உயர்மட்டக் குழுவில் ஒரு பெண்ணும் இடம் பெறவில்லை. அரசியற்பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் உபசெயலாளராகவிருந்து இறந்து போன மேஜர் சுந்தரியின் இடத்திற்கு மீண்டும் ஒரு பெண்ணும் நியமிக்கப்பட வில்லை. இத்தகவல்களின் பின்னணியிலேயே தற்கொலைக் கொலையாளிகள்' என்ற வீடியோ நிகழ்வில் நான் மேலே குறிப்பிட்ட காட்சிகளினூடு பொதிந்துள்ள கருத்துநிலையை ஆராய்தல் வேண்டும். ஏனெனில் தேர்ந்து கொடுக்கப்பட்ட இக்காட்சிகளில் வெளிப்படும் செய்தி அலட்சியப்படுத்த முடியாதது. பெண் விடுதலையாளர்களின் கவனத்துக்கு உரியது. அன்ரன் பாலசிங்கம் தமிழ் ஈழப்போராட்டம் பற்றி விளக்கும் அரசியல் வகுப்பொன்றில் பங்கெடுக்கும் போராளிகளில் ஆண்களுடன் பெண்களும் காணப்படுகின்றனர். ஆனால் ஒரு தாக்குதலை நடத்துவது எவ்வாறு எனக் கற்பிக்கப்படும் இராணுவக் கல்வி வகுப்பில் யாவரும் ஆண்களாகவே உள்ளனர். இது தவிர பி.பி.ஸி கமராக் குழுவிற்காகப் புனையப்பட்ட ஒரு போலித்தாக்குதல் நிகழ்ச்சியின் போதும் ஒரு பெண் போராளியும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
இன்னோர் காட்சி; புலிகளின் முகாம் ஒன்று; யாவரும் ஆண் போராளிகள்; திடீரென வான்தாக்குதல், அதனை அவர்கள் எதிர்கொள்கின்றனர். எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகின்றனர். கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஒரு படையணி புறப்படுகிறது. மீண்டும் அனைவரும் ஆண்கள். இக்காட்சியின் இறுதியில் உணவு மூட்டைகளைச் சுமந்தபடி களைத்த தோற்றத்துடன் சில பெண் போராளிகள் வருகின்றனர். போராட்டத்தில் பெண்கள் துணைப் பாத்திரங்களாகவே நோக்கப்படுவதை இக்காட்சி சித்திரிக்கிறது. போராட்டத்தின் அச்சாணியான, வலிமையின் குறியீடான ஆயுதப் போராட்டத்திலன்றி, அந்தப் போராட்டத்தில் ஈடுபடு பவர்களுக்கு (ஆண் போராளிகளுக்கு) தேவையான உணவைச் சுமந்து வருபவர்களாக (கவனிக்கவும், பங்கிடுபவர்களாகவும் அல்ல) பெண்கள்
88 நான் ஒரு பெண்

காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னொருவகையில் கூறினால் புலிகள் இயக்கத்தினரின் பெண்கள் பற்றிய கருத்துநிலை மரபுரீதியானதாகவே, இன்னும் அமைந்துள்ளதையும் இக்காட்சி விபரிக்கிறது. ஆயுதத்தைக் கையில் ஏந்திய ஆண், உணவைச் சுமந்து வரும் பெண் ஆகிய இவ்விரு படிமங்களும் பாரம்பரியமான ஆண் பெண் வேலைப்பிரிவினை (Sexual division of labour man the hunter women the gather) 5(55G5ITL-560.5Guj (9);5uaS356TD60T. 'சமத்துவம்' என்பது வசன வடிவம் மாத்திரமே ஆனால் இக்காட்சிகளை ஒழுங்கு செய்தவர்களின் ஆழ் உணர்விலோ, கருத்து நிலையிலோ பெண்களின் முக்கியத்துவம் பதிந்திருக்கவில்லை என்பதே. நடைமுறையில் பெண்களின் பங்கு இருந்தும் கூட கருத்துநிலையில் அது உருவாகவில்லை. பிரதிபலிக்கவில்லை. எதிர்பாராத வகையில் தம்மிடமிருந்து மேற்கிளம்பும் இக்கருத்து நிலை வெளிப்பாட்டை விடுதலைப் புலிகளே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். (1991 ஜூன் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய முத்தமிழ் விழாவில் 'மாமனிதர் கெளரவிப்பு நடைபெற்றது. பிரபாகரனே - பிரபாகரனது இரண்டாவது பொது நிகழ்ச்சிப் பங்குபற்றுதல் இது. இவ்வகை யில் மிக முக்கியமானது - மாமனிதர்களான பத்து ஆண்களுக்குப் பரிசு வழங்கினர். பெண்கள் எவரும் மாமனிதர் ஆகும் தகுதி பெறவில்லை போலும்!) தாக்குதலில் பெண்கள் பங்குபற்றுவது காட்டப்படவில்லை. ஆனால் காயமடைந்த அங்கங்களை இழந்த பெண் போராளிகள் காட்டப்படு கின்றனர். இக்காட்சிகள் மிக முக்கியமானவை. இருவகையில் ஒன்று; காயம்பட்ட பெண்ணுக்கு ஒரு ஆண் போராளி சிகிச்சை அளிக்கிறார். விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் திறமைசாலிகளான பெண்கள் உள்ளனர். எனினும் ஆணே சிகிச்சையாளனாகக் காட்டப்படுவது ஏன்? பெண் நோயாளி ஆண் மருத்துவர் என்ற மரபு ரீதியான படிமத்தில் மீள் உருவாக்கமா இது? மற்றது, அங்கவீனரான பெண் போராளி இரு கைகளை இழந்த இளம் பெண்; அவளுக்கு உணவூட்டும் இன்னோர் பெண் 'எனது கைகளை இழந்தது பற்றிக் கவலையில்லை. தேசவிடுதலைக்காகப் போரிட் டேன்; தொடர்ந்தும் என்னாலானதைச் செய்ய முயல்வேன்' என உணர்ச்சி யற்ற குரலில் கூறி விட்டு அவள் எழுந்து போகிறாள். கமரா பின்பக்கத் திலிருந்து கைகளற்ற தோளின் மேலாகத் தொங்கும் ஷேர்ட்டின் துணிக்கைகள் அசைய அவள் மெதுவாக நடந்து செல்வதைக் காட்டுகிறது. விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த அனுதாபத்தைக் கிளப்புவதற்கு இந்தக் காட்சி உதவும். கை, கால்களை இழந்து அங்கவீனரானோர் பெண்களிலும் ஆண்களே அதிகம். அப்படியிருக்க ஏன் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர்? தமிழ்ச் சமூகம் ஆணைப் பாதுகாவலனாக, சகலவலிமையும் பொருந்தியவனாகவே
நான் ஒரு பெண் 89

Page 50
எதிர்பார்க்கிறது. பூரித்த தோள்கள் கொண்ட, உடற்குறையும் நலிவும் அற்ற ஆண் உருவம் இலட்சிய பூர்வமான ஆண்மையின் சான்றாகும். அங்க வீனர்களான ஆண்கள் இந்த இலட்சியப் படிமத்துடன் பொருந்தமாட்டார்கள். அது மாத்திரமன்று அவர்கள் திரையில் காட்சிப்படுத்துவதை தமிழ்ச் சமூகத்தின் ஆண் கெளரவம், பெருமை (Male pride) சகித்துக் கொள்ளாது. ஆண் உளவியல் அதனை ஏற்காது; அதனால் பாதிக்கப்பெறும், ஆனால், பெண்; பாவம், பேதை எவ்வளவு தான் உயரப் பறந்தாலும் பருந்தாக முடியாத குருவி. இரக்கத்திற்கும், அனுதாபத்திற்கும் உரிய பொருளாவது மிகப் பொருத்தமானதாகவே தோன்றியிருக்கலாம். இவ்வகையில் முன்னர் நான் கூறிய புனைவுத் தாக்குதல் காட்சியும், இந்தக் காட்சியும் ஒன்றுக்கொன்று எதிர்நிலைக் காட்சிகளாகும். விடுதலைப் புலிகளின் கருத்துநிலை யதார்த்தத்தை நன்கு வெளிப்படுத்துவனவாகும். இவ்வீடியோவில் யாழ் நகரின் சில பகுதிகள் படமாக்கப்பட்டுள்ளன. இடிந்த கட்டிடங்கள், அவசரமாக விரையும் மனிதர்கள், பாடசாலை செல்லும் மாணவிகள், தாக்குதல் நடத்தும் விமானம் என்று யாழ்ப்பாணத்தின் போர்க்கால வாழ்வின் வெட்டு முகத் தோற்றத்தைக் காட்சிகளாக்கிய போது, நகரின் சுவர்களில் இறந்த போராளிகளின் படங்கள் ஒட்டப்பட்டிருப்பதையும் கமரா காட்டுகிறது. கமராவின் கண்களுள் பெண்களின் படங்கள் எதுவும் அகப்படும்படியாக இல்லை. கணிசமான பெண்கள் இறந்தபின்பும் மேல் மட்டத்தில் தெரிவதெல்லாம் ஆண்களின் பிம்பங்களே. (வீடியோ நிகழ்வின் காட்சியொன்றில் இறந்த பெண்னொருத்தி புதைக் கப்படுவது காட்டப்படுகிறது. விடுதலைப் புலிகளின் வரலாறு எழுதப்படும் போது பெண்களின் பணியும் பங்கும் புதையுண்டு போகுமோ?) போராளிகளல்லாத வேறு மூன்று பெண்கள் இந்நிகழ்ச்சியில் இடம் பெறு கின்றனர். ஒரு பெண், போராட்டத்தில் உயிர்நீத்த தனது புதல்வனைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறாள். மீண்டும் இங்கே அழுத்தம் வீரப்புதல்வர் களுக்கே அளிக்கப்படுகிறது. புதல் வியருக்கும் புதல் வியரின் அன்னை யருக்கும் அளிக்கப்படும் அந்தஸ்து என்ன என்ற வினா இவ்விடத்தில் எழுவதைத் தவிர்க்க இயலாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண் போராளியின் மரணச்சடங்கில் சோகம் தாங்காது அழுகின்ற அவளது தந்தையை அழாதே என அதட்டும் ஒரு பெண்; மிகச் செயற்கையான இந்தக் காட்சி பெண்களது மனவலிமையைக் காட்டுவ தாகக் கருதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்னொரு பெண் - திருநீறு பூசி சந்தனக் குங்குமப் பொட்டிட்டு, பட்டுச் சேலை கட்டி சைவத் தமிழ்ப் பெண்ணின் குறியீடு போலத் தோன்றி இலங்கை
90 நான் ஒரு பெண்

அரசின் அநீதி பற்றியும், விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு பற்றியும் பேசுகிறார். இந்த மூன்று பெண்களும் வயது முதிர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்ந்த பெண்கள் தமிழ்ச் கலாசாரத்தில் அன்னை ஸ்தானத்தை அடைந்தவர்கள். அவ்வகையில் பழைய வீரத்தாய்" பிம்பமே இங்கு மறு அமைப்புப் பெறுகிறது. தாய் என்ற பாத்திரத்தைப் பயன் படுத்துவது சில சமயம் தவிர்க்க முடியாமல் போன போதும் (அன்னையர் முன்னணி அமைப்புகள் 84இல் வடக்கிலும் 91 இல் தெற்கிலும் தோன்றிய பின்னணியை இங்கு கவனிக்கலாம்) பெண்களுடைய விடுதலை முன்னே ற்றம் - ஆகியவற்றைப் பொறுத்தளவில் அது அவர்களது எல்லைகளைக் குறுக்குவதாகவே அமையும், சமூகத் தாய்மை (Social Motherhood"Combative Mothehood as Molyneive says) s 96daogluLusi) GODGġ55 TLÜ GOLD GTg5JGJ Tu9lg) tid அதற்கு சில குறிப்பிட்ட குணாம்சங்கள் அளிக்கப்படுகின்றன. தன்னல மின்மை, தியாகம், பாதுகாப்பு அளித்தல் போன்ற இந்தக் குணாம்சங்கள் பெண்களது மரபுரீதியான ஸ்தானத்தையே மீண்டும் உறுதிப்படுத்துவனவாக அமைந்து விடும். எனவே புலிகள் அளிக்கின்ற இத் 'தாய்’ படிமம் பற்றி நாம் அக்கறை கொள்ளுதல் வேண்டும். இவ்வீடியோ நிகழ்ச்சியில் பிரச்சினையைக் கிளப்புகிற இன்னோர் காட்சி திருமதி.அடேல் பாலசிங்கம் தோன்றுவதாகும். பெண்களின் சமத்துவநிலை பற்றிய வசனம் ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரப் பெண்ணின் (இந்த மொழிக்கையாளுகையை சர்வதேச பெண்நிலைச் சகோதரிகள் மன்னிப் பார்களாக) வாக்கு மூலமாகவே இடம்பெறுவது ஏன்? அடேலை ஒரு பெண் போராளி பெண்களின் முகாமொன்றுக்கு கூட்டி வருகிறார். இருவரும் அருகருகாகவே நிற்கின்றனர். எனினும் அடேலுக்கு முக்கியத்துவம் அளிக் கப்படுகிறது. அடேலின் போராட்ட ஈடுபாடு பற்றி நாம் சந்தேகம் கொள்ள வில்லை. ஆனால் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணிபுரிந்த பேச்சா ற்றல் உள்ள ஜெயா பெரும்பாலும் வாய்திறவாமல் இருக்க வெளிநாட்டுப் பெண்ணாகிய அடேல் கதைப்பதேன்? விடுதலைப் புலிகளுடைய முக் கியமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்களாக பிரபாகரன், யோகி, மாத் தையா, பாலசிங்கம் ஆகிய ஆண்களுடன் சமத்துவமாக இந்நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிப்பது பெண்களுள் அடேல்தான். அவரை ஆண் தலைவர் களின் அந்தஸ்துக்கு உயர்த்தியதற்கு அவரது நிறம், இனம் காரணமாகினவா என்பது சுவையான வினாவாகும். ஏகாதிபத்தியத்தின் சின்னம் என்று யாழ் டச்சுக் கோட்டையைத் தகர்க்க முனைந்த விடுதலைப்புலிகளது உளவியல் அவர்களை அறியாமலே Colonized ஆக இருப்பதை இது காட்கிறதா?
ஆயுதந்தாங்கிய இயக்க அங்கத்தவர்களை பெடியன்கள்' என்றே
நான் ஒரு பெண் 9 1

Page 51
யாழ்ப்பாண மொழிவழக்கு குறிப்பிட்டு வந்துள்ளது. கணிசமான அளவு பெண்கள் இயக்கத்தில் சேர்ந்த பின்பும், ஆயுதந்தாங்கிய பெண்கள் பஜிரோ ஜிப்புகளைச் செலுத்துவதும் சைக்கிளில் வலம் வருவதும், கால்நடையாக ரோந்து செல்வதும் சாதாரணமான அன்றாடக் காட்சியாகி விட்ட போதும் பெடியன்கள்' என்ற மொழி வழக்கு மாறவில்லை. அவ் வகையில் போராட்டமும் இயக்கமும் ஆண்மைப்படுத்தப்பட்டதாகவே யாழ்ப்பாணத்து பொதுசன உளவியலிலும் கருத்துநிலையிலும் உருவாகியுள்ளது.
இயக்கத்திற்குள் முக்கியமான பணிகளை ஆற்றியிருந்தும், பல தியாகங்களைச் செய்திருந்தும் பெண்களினுடைய பங்கும் ஆற்றலும் போதியளவு கெளரவிக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல; விடுதலைப் புலிகளின் நினைவாற்றலும் (Memory) உளவியலும், கருத்துநிலையும் ஆண்நிலைப்பட்டதாகவே உள்ளது. பெண்களையும் 'பெடியன்களாகவே காணுகின்ற காட்சிப்படுத்துகின்ற நிலை அது. தற்கொலைக் கொலையாளிகள் இதனைத் துல்லியமாகவே படம் பிடித்துள்ளது.
92 நான் ஒரு பெண்

பெண்களும் கலாசாரமும்
கலாசாரத் தளையும் பெண்ணிலைவாதச் சவாலும் நிருஷா
கற்பென்று எதனைச் சொல்வீர்,
அது இல்லை கற்பு பாஞ்சாலி
கருத்தடை ஒரு உயிர்க்கொலையா ? அனிச்சா

Page 52
94 நான் ஒரு பெண்

கலாசாரத்தளையும் பெண் நிலைவாதச் சவாலும்
கொழும்பு 'மார்கா நிலையத்தில் 1991 மே 5ந் திகதி முஸ்லிம் மகளிர் ஆராய்ச்சி செயல் முன்னணியினரால் ஒரு கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இம் முன்னணியால் நடாத்தப்பட்ட இரண்டாவது கருத்தரங்கு இதுவாகும். கடந்த ஆண்டு ஜனவரி 19ம் திகதி கல்கிசையிலுள்ள Tropic Inn இல் முதலாவது கருத்தரங்கை இவர்கள் 3 நாட்கள் நடாத்தியிருந்தார்கள். இக்கருத்தரங்குகள் இரண்டுமே 'தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர் களுக்கான கருத்தரங்குகள்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தன. எனவே பல்வேறு இடங்களிலிருந்து தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இரண்டாவது கருத்தரங்கில் பெரும்பான்மையாக தமிழில் எழுதும் முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இக் கருத்தரங்கில் திரு.எம்.ஏ.நுஃமான், செல்வி.திருச்சந்திரன், சாந்தி சச்சிதானந்தம் ஆகியோர் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். இவர்களது கருத்துக்களைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது. இக்கருத்தரங்கின்போது நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களையும் அவை என்னில் ஏற்படுத்திய தாக்கங்களையும் சுருக்கமாக சரிநிகர் வாசகர்களுக்குதருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். $C. J.LDITóT Cultural Constraints and the Feminist Challenge to creative writing என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் போது பெண்கள் இயக்கத்தில் பெரும் சாதனைகளை ஆற்றாமைக்கு கலாசாரத் தளைகளே காரணம்; ஒவ்வொரு கால கட்டத்திலும் அவ்வப்போது நிலவிய சமூக அமைப்பில் காணப்படும் கலாசாரங்கள் தான் பெண்களை அடிமைப்படுத்தும் காரணி களில் முக்கியத்துவம் வகித்தவை. புராதன இலக்கியத்தில் பெண்களை சக்தியாக, தேவியாக உயர்த்தி வைத்திருந்த போதிலும் அந்தக் காலகட்டம் ஆணாதிக்க சமுதாய அமைப்பாக இருந்தமையால் பெண்கள் அடிமைப் படுத்தப்பட்டு வந்தார்கள். நிலவுடமைச் சமுதாய அமைப்பிலிருந்து
நான் ஒரு பெண் 95

Page 53
முதலாளித்துவ அமைப்பை நோக்கி சமுதாயம் மாற்றமுற்ற போது ஆணா திக்கம் தளர்நிலையடைந்து வந்தது. மாறுகின்ற சமுதாய அமைப்பிற்கேற்ப ஏதோ ஒரு வகையில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
பால்ய விவாகத்தை பாரதி வெகுதீவிரமாக எதிர்த்தான். அந்தக் காலத்தில் வெகுவாகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்தப் பால்ய விவாகமானது பின்னர் சட்ட மூலமே தடைசெய்யப்பட்டு விட்டது. இன்னும் பரதநாட்டியக் கலை ஆரம்ப காலத்தில் கோயில் கலையாக இருந்தது. பரத நாட்டிய மகளிருக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்கப்பட்டது. கடவுளுக்கு சேவை புரியும் தேவதாசியாக மதிக்கப்பட்டாள். பின்னர் பிரித்தானியராட்சிக் காலத்தில் இக்கலை முக்கியத்துவமின்றி மெல்ல அழிந்து ஒரு விலைமாதர் சமூகத்தைத் தோற்றுவித்தது. மதிப்பிற்குரியதாக இருந்த பரதக் கலை மதிப்பிழந்தது. கெட்டவள், ஆட்டக்காரி என்ற பெயர்களால் பெண் திட்டப்பட்டாள். பின்னர் சில காலத்தில் ருக்மணி போன்றவர்களால் பரதக் கலை உயர்மட்டப் பெண்களின் அந்தஸ்தைப் பெற்றது. இவ்வாறு தான் எல்லா அம்சங்களும் சமூக அமைப்புகளின் மாற்றங்களுக்கேற்ப தன்மைகளிலும், அளவுகளிலும் மாற்றம் பெற்றன. மதக் கோட்பாடுகளில் கூட ஆணாதிக்க நிலைப்பாடுகளே உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இந்து மதத்தில் திருவள்ளுவரின் திருக்குறளிலிருந்து சகல மதப் பிரச்சாரங்களும் ஆணாதிக்க அம்சங்களையே கொண்டிருந்தன. இஸ்லாம் மதத்தில் ஆணும் பெண்ணும் சமணல்ல என்பதே கோட்பாடு. ஆனால் இவற்றைவிட கிறிஸ்தவ சமயம் சற்று வளர்ச்சி யடைந்திருந்தது. திருமணத்திற்கு முன்பான உறவுகள் கூட இங்கு குற்றமாகக் கருதப்படவில்லை.
தமிழ் இலக்கிய வரலாற்றிலே பெண்விடுதலை பற்றி பாரதியே முதலில் தீர்க்கமான கருத்துக்களை முன்வைத்தான்.பின்னர் வந்த பாரதிதாசன், பெ.ரா. புதுமைப்பித்தன், ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன் போன்ற படைப்பாளி களும் பெண்களின் பிரச்சினைகளை ஆங்காங்கே எடுத்துக் கையாண் டுள்ளனர். இலங்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் பவானி என்பவர் சிறுகதைகளை எழுதியிருந்தார். இதுவரை அவரும் அறியப்படாத ஒருவராகவே இருக்கிறார். இவரது சிறுகதைத் தொகுதி ஒன்று 'கடவுளும் மனிதர்களும்' என்ற பெயரில் வெளி வந்துள்ளது. இவருக்குப் பின்னர் அம்பை தனது சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகளை பெண்களின் அடக்குமுறையை வெகுதிறமையாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.
கலாசாரத் தளைகள் என்பது சமூக அமைப்பில் நிலவுகின்ற பழைய கலாசார அம்சம் புதிய போக்குகட்குத் தடையாக இருத்தலாகும். கலாசாரத் தளைகளை உடைக்க சமூகமாற்றம் தேவைப்படும். சமூக மாற்றத்தைக் கொண்டுவர சமூக இயக்கங்கள், போராட்டங்கள் தேவைப்படுகின்றன.
96 நான் ஒரு பெண்

'ஆண், பெண் என்ற இனரீதியில் அமைந்த வேலைப் பிரிவினை' என்ற தலைப்பில் செல்வி திருச்சந்திரன் உரையாற்றினார். அவரது உரையின் போது 'ஆண் பெண் என்று இன அடிப்படையிலேயே கருத்துக்கள் நெறிப்படுத் தப்பட வேண்டும். பால் அடிப்படையிலான வேலைப்பிரிவினைகள் என்பது Sexual division of Labour GT6örg Jop UGépg). Sex UTai 9 to UGOLuggyub Gender என்ற பதம் கருத்தியல் கொள்கையைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது.
பால் அடிப்படையிலான வேலைப்பிரிவினையானது பொருத்தமற்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் பால் உறுப்புக்களில் வேறுபாடு இருப்பதால் ஆண்பால், பெண்பால் என்ற பிரிவு அமைகிறது. இதுவே காலப்போக்கில் ஆணாதிக்க கருத்தியலுக்கு மேலும் வசதிகளை வழங்கி விட்டது. மிருகங் களுக்கும், பறவைகளுக்கும் இவ்வாறான வேலைப்பிரிவினை இல்லை. வெவ்வேறு வேலைகளை அவை செய்தாலும் தொழிற் பாகுபாட்டால் அவை தங்களை கூறுபடுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மானிட வரலாற்றில் பெண்களின் வேலைகள் மதிப்பிழந்து அவர்களின் பங்கு மறைக்கப்பட்டு வந்துள்ளது. ஆணாதிக்க சமூக தன்மைகள் மேலோங்கி இருந்தமையால் வரலாற்றில் சமூகவியலாளர்களின் ஆராய்வுகளில் கூட பெண்ணின் பங்கு மறைக்கப்பட்டு விட்டது. குரங்கில் இருந்து எழுந்து நடந்த முதல் மனிதனும் ஆணாகவே சித்திரிக்கப்பட்டான். இவ்வகையான பிழையான கருத்தோட்டங்களை தூக்கி எறியும் விதத்தில் பெண் நிலைவாதிகள் பலர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர் களில் பிஷர் (1979), றெய்ற்றர் (1977), லீகொக் (1977) என்பவர்கள் முக்கியமானவர்கள். வரலாற்றில் பெண்களின் பங்கையும் முக்கியத்துவம் இன்றி விடுபட்ட பெண்கள் பற்றிய கருத்துக்களையும் இவர்கள் மீண்டும் உயிர்ப்பித்து வருகின்றனர். தற்போது சகல வேலைகளையும் பெண்களும் செய்யும் நிலை இருந்தும் அவளின் வேலை துணையான உழைப்பு அல்லது துணை வருவாயைப் பெற்றுத்தரும் உழைப்பு என்றே கருதப்படுகிறது. வீட்டு வேலையைக் கடமையாகவும், வெளி வேலையை துணைவருவாய் பெற்றுத் தரும் தொழிலாகவும் கருதி பெண் இழிமைப்படுத்தப்படுகிறாள். வர்க்க வேறுபாட்டுக்கு அமையவும் தொழிற்பாகுபாடு அமைகிறது. ஆயி னும் வர்க்கம், சாதி, சமயம் எல்லாவற்றையும் மீறி பெண்கள் ஆணாதிக்கத் தினாலும், முதலாளித்துவத்தினாலும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பால் அடிப்படையிலான வேலைப்பிரிவினையை இல்லாதொழித்து சமூகத்தில் நிகழும் அசமத்துவ நிலையை போக்க வேண்டும். இந்நிலைமையினைப் போக்குவதற்கு ஏற்ற விதத்தில் கருத்துக்களை ஊட்டி குழந்தைகளை வளர்க்க
நான் ஒரு பெண் 97

Page 54
வேண்டும். வேலைப் பிரிவினைக் கருத்துக்கள் ஏற்படாவண்ணம் பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும். அடுத்ததாக 'கலைப் படைப்புக்களில் பெண்கள்' என்ற தலைப்பில் சாந்தி சச்சிதானந்தம் பேசும் போது விளம்பரங்களை எடுத்தால் என்ன, இலக் கியத்தை, திரைப்படங்களை, ஏன் வேறெந்தக் கலைப்படைப்பை எடுத்தால் என்ன யாவுமே ஆணாதிக்க நோக்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளன. இப்படைப்புக்களில் தற்துணிவும், சுதந்திரமுமுள்ள பெண்களைக் காணவே முடியாது. பெண்களின் பாத்திரங்கள், இலட்சியத்தின் வடிவாக அமைந்தாலே படைப்புகள் வெற்றிபெறும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இயல்பிலேயே பெண் உணர்ச்சி வசப்படுபவள், பொறாமை பிடித்தவள், சிந்திக்கும் ஆற்றலற்றவள், பலவீனமானவள் என்பதே பொதுவான கருத்துக்கள். எங்கும் ஆணாதிக்கம் மேலோங்கி இருக்கும் போது வேறுவிதமான கருத்து க்களை நாம் எப்படி எதிர்பார்க்கலாம்? 1972 இல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி உலகில் திரைப்படத்துறை, ஒலி/ஒளிபரப் புத் துறை, பத்திரிகைத் தொழில் என்பவற்றில் பெண்களின் தொகை 30 சத வீதத்திற்கும் குறைவே. இதிலும் 10 சதவீதத்திற்குக் குறைவாகவே முடிவுகள் எடுக்கப்படும். இயக்குநர் மட்டங்களில் பெண்கள் காணப்படுகின்றனர். எனவே தான் ஆண்களின் கருத்தியல் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகிறது. இவற்றை மாற்றியமைக்க பெண் கலைஞர்கள் தமது படைப்புத் திறனை வளர்த்தல், ஆழமும் தேடலும் உள்ள படைப்புகளை உருவாக்குதல், ஆண்களுடன் சம வேலைவாய்ப்பில் ஈடுபடுதல், தொடர்பு ஊடகங்களில் மாற்றங்களைக் கொண்டு வருதல் போன்ற முக்கிய செயற்பாடுகளைப் பெண்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு உரையின் முடிவிலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதில் பெண்களது பிரச்சினைகள், பெண்கள் செய்யவேண்டியவைகள் பற்றிப் பேசப்பட்டன. பெண்களுக்குத் தனியான அமைப்புகள் வேண்டும். பெண்கள் அப்போதுதான் சுதந்திரமாக வளரமுடியும் என்ற கருத்தும் சொல்லப்பட்டது. சமூக எதிர்ப்புக்களை தாண்டி பெண்கள் வளர வேண்டும். எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு துணிவுடன் செல்ல வேண்டும் என்பன போன்ற பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன. உண்மையில், பெண்கள் இன்று நேற்றல்ல, காலம் காலமாக அடக்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு சமூக அமைப்பிலும் ஏதோ ஒரு வகையில் தன்மைகளிலும் மாற்றங்களுக்குள்ளாகி பெண்ணடக்குமுறை தொடர்ந்து வருகிறது. பெண்களின் விடுதலை என்பது சில சீர்திருத்தங்களினால் பெற்றுவிடக்கூடிய ஒன்றல்ல. நிலவுகிற ஆணாதிக்கத்திற்குத் துணைபோகும் சமூக அமைப்பின் மீது நடாத்தப்படும் போராட்டம், அதன் கலாசார
98 STär go our

பண்பாட்டுத்தளங்கில் நடாத்தும் தாக்குதலும் இக்கலாசாரப் பண்பாட்டிக்குப் பதிலியாக எழுந்து வரவேண்டிய மக்களது - சனநாயகப் பண்புடைய -கலாசாரப் பண்பாட்டுப்போக்குகளே பெண் விடுதலைக்கு வாய்ப்பளிக்கும்.
திரு. நுஃமான் அவர்கள் இவ்விடயத்தை போகிற போக்கில் கூறியிருந்தாலும் அதில் ஆழமாக அக்கறை செலுத்தவில்லை. அதற்கான வழிமுறைகளை, பெண்களின் பங்கை வளர்க்கவில்லை. இது அவரது உரையின் குறைபாடாக விளங்கியது. செல்வியும், சாந்தியும் சமூகமாற்றத்தைப் பற்றி அக்கறைப் பட்டதாகத் தெரியவில்லை. புதிய சமுதாய உருவாக்கத்தின் தேவை பற்றியோ, அதில் பெண்களின் பங்கு பற்றியோ, அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. மாறாகத் தற்போதுள்ள அமைப்பில் சீர் திருத்தங்களை ஏற்படுத்துவதால் பெண் விடுதலை சாத்தியம் என்ற கருத்து அவர்களின் கருத்தில் இழையோடியது. கடந்தகால வரலாற்றை எடுத்தோமானால் எத்தனையோ சீர்திருத்த வாதிகள் தோன்றி சீர்திருத்தங்களை செய்திருந்தும் ஏதாவது பெரிய மாற்றம் ஏற்பட்டதா? இல்லை. அடக்குமுறை எங்கு நடக்கிறதோ அங்கு போராட்டம் தேவை.போராட்டம் இல்லாமல் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை, எந்த ஒரு ஆதிக்கவாதியும் தனது வாய்ப்புக்களை, வசதிகளை இலேசாக விட்டுக் கொடுக்க மாட்டான். போராடிப் பெறப்பட வேண்டியதே சுதந்திரம்.
எனவே பெண்களின் விடுதலைக்கு சமூக விடுதலையுடன் கூடவே நாம் கலாசாரம், பண்பாடு போன்ற துறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரவும், புதிய பண்பாட்டை உருவாக்கவும் போராட வேண்டும். அந்தப் புதிய பண்பாடு எப்படி இருக்கும்? அந்தக் கேள்வியைத் தான் நாம் இப்போது ஆய்வு செய்ய வேண்டும். இன்றைய பெண்நிலைவாதம் நிலவும் கலாசார பண்பாட்டம்சங்களை எதிர்க்கும் நிலையிலேயே இன்னமும் உள்ளது. அதன் சமூக வேர்களை இனங்காணவும், அதன் மூலம் அதைத் தகர்த்து புதிய பண்பாட்டம்சங்களை உருவாக்குவதற்குமான போக்கில் அது இன்னமும் வளர்ச்சியடைய வேண்டும்.
இந்த சமூக அமைப்பு குறைபாடுடையது. இதன் கலாசார அம்சங்கள் ஏற்கப்படமுடியாதவை. பண்பாட்டு அம்சங்கள் பெண்களை இரண்டாந்தரப் பிரஜை ஆக்குகிறது என்றால் எம் முன்னுள்ள அடுத்த கேள்வி சமூக அமைப்பை எப்படி மாற்றலாம்? இன்றைய கலாசாரம் பிழையானால் புதிய கலாசாரம் என்ன? பண்பாட்டு அம்சங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதே எம்முன்னுள்ள கேள்வி, தற்போது பெண்ணின விடுதலைக்காக குரல் எழுப்பும் பெண்கள் இவ்வடிப்படைகளில் தங்களது வேலைகளை வகுத்துக் கொள்வது தான் சரியானதாகும். அதுவே பயனுடையது. அதை விட்டு பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். கணவன் அடிக்கிறான்.
Brdir grib Guadir 99

Page 55
துன்புறுத்துகிறான் என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்தவற்றையே திரும்பத் திரும்ப தமது கருத்துகளிலும் தெரிவிப்பது தற்போது பயனற்றது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தமது அசமத்துவ நிலையை உணர்ந்துள்ளார்கள். ஆனால் அதைக் களைவதற்கான வழி வகைகளை அறியாத நிலையிலுள்ளனர். அவை பற்றி அக்கறைப்படுதலே தற்போது மிகவும் அவசியமானது என நான் கருதுகிறேன். இவ்வகையில் முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணியினரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. கருத்துக்களை எழுதுவதுடன் பேசுவதுடன் நிற்காமல் செயல்படுத்துவதில் ஆர்வமாக இருக்கும் இவர்களது பணி இன்றைய முக்கிய தேவையாகும். மிகவும் ஆர்வமாகவும், நேர்மையாகவும் பெண் விடுதலைக்கு உழைக்கும் சக்திகளாக நான் அவர்களைக் காண்கிறேன். இம் முன்னணியினர் மேலும் மேலும் வளர்ந்து பெண் விடுதலைக்கு ஆக்கபூர்வமான பங்கை ஆற்றுவார்கள் என்பது எல்லோரது அவாவும் விரும்பமுமாகும்.
100 நான் ஒரு பெண்

கற்பென்று எதனைச் சொல்வீர் அது இல்லை கற்பு.
கற்புப் பற்றி எல்.ரி.ரி.ஈ கொண்டுள்ள நிலைப்பாட்டை ஆராய்வோம். 'சீதனக் கொடுமையை ஒழிப்போம்', 'பெண்ணடிமைத் தனத்தை நீக்கு வோம்' என்றெல்லாம் பிரகடனப்படுத்தும் இவ்வியக்கம் கற்புப் பற்றியோ அல்லது ஆணாதிக்கம் பற்றியோ எதுவித கருத்துக்களையும் இன்னும் பகிரங்கமாக முன்வைக்கவில்லை. எனினும் எல்.ரி.ரி.ஈ இயக்கமும் அதன் உறுப்பினர்களும் இது தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாட்டினைப் பல உதாரணங்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இயக்கத்தின் உயர்மட்டங்களில் கூட பாலியல் வன்முறைக்கு உட்பட்ட பெண்களைக் 'கற்பழிக்கப்பட்டவர்கள்', 'வழிதவறியவர்கள்' என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காணலாம். கற்புப் பற்றி நமது சமுதாயம் கொண்டுள்ள கருத்தினை இவ்வியக்க உறுப்பினர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. பாலியல் தொடர்பாக இவ்வியக்கத்திடம் ஒரு தூய்மை வாதப் போக்கு காணப்படுகிறது. இந்தத் தூய்மை வாதம் அடிப்படைவாதத்துடன் (Fundamentalism) மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஆண்களும் பெண்களும் வெவ்வேறான முகாம்களில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை இதுக்கொரு நல்ல எடுத்துக்காட்டு. ஆண்மை, பெண்மை என்ற பிரிவுகள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பிரிவுகள் என்பதை அவர்கள் உணர்ந் திருப்பார்களாயின் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்திருக்கமாட் டார்கள். அடிப்படையிலேயே ஆண்களும் பெண்களும் வேறுபட்டவர்கள் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. மேலும் ஆண், பெண் உறவுகளிலும் இவர்களது பிற்போக் கான கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஒரு உறுப்பினர் இயக்கத்தில் சேர்ந்து 5 வருடங்களுக்கு திருமணம் செய்யவோ அல்லது உறவு வைத்திருக்கவோ
நான் ஒரு பெண் 101

Page 56
கூடாது என்ற நடைமுறை மனித உறவுகளைப் புரிந்து கொள்ளாத் தன்மையை உணர்த்துகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் (யாழ்ப்பாண த்தில் வெளிவரும்பத்திரிகைகள் யாவும் எல்.ரி.ரி.ஈயின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். அத்துடன் அவையாவும் எல்.ரி.ரி.ஈயின் பிரச்சார இயந்திரங்களாகவே உபயோகி க்கப்படுகின்றன) பின்வரும் கருத்துப்பட ஒரு கடிதம் 'நலன் விரும்பி ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. 'கொழும்பிலே சீரழியும் பெண்கள்' என அக்கடிதத்திற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.
'யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் போகும் இளம் பெண்கள் சிங்கள இராணுவத்தினருடனும் முஸ்லிம் இளைஞர்களிடமும் சோரம் போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏனெனில் இப்பெண்களின் சகோதரர்களோ அல்லது உறவினர்களோ பொலிசாராலோ இராணுவத்தினராலோ கைது செய்யப்படும் போது அவர்களை மீட்டெடுப்பதற்காக இவ்வாறு சோரம் போகிறார்கள். இந்த நிலையைத் தடுக்கும் பொருட்டு எல்.ரி.ரி.ஈ இளம் பெண்கள் கொழும்பு போவதைத் தடைசெய்ய வேண்டும்.
கொழும்பிலிருந்து திரும்பி வரும் பெண்களைத் தீக்குளிக்கச் செய்து அவர்களது கற்பைச் சோதிக்க வேண்டும் என்றும் அந்த நலன் விரும்பி ஏன் எழுதவில்லை என்று தான் புரியவில்லை.
எல்.ரி.ரி.ஈயின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இப்பத்திரிகையில் இவ்வாறான ஒரு கீழ்த்தரமான கடிதம் வெளிவந்தமை எல்.ரி.ரி.ஈயின் ஆதரவு இந்நிலைப்பாட்டுக்கு உண்டு என்பதை வெளிக் காட்டுகிறது. அல்லாவிட்டால் கடுமையான பத்திரிகைத் தணிக்கையை அமுல்படுத்தும் இவர்கள் இக்கடிதத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் அல்லது கண்டித்து ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.
இக்கடிதத்தின் மூலம் எல்.ரி.ரி.ஈ யின் நிலைப்பாடுகள் பல நன்கு அம்பலமாகின்றன.
முதலாவதாக, பெண்களைக் கட்டுப்படுத்த கற்பு எனும் கருத்தியலை பாவித்து எல்.ரி.ரி.ஈயினர் மக்களின் நடமாட்டத்தை அதிகமாகக் கட்டுப்படுத்தி வருகிறார்கள், 'பாஸ்' முறை கூட இதனைச் சாதிக்கும் முகமாக அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு நடைமுறைதான். பெண்களை கட்டுப்படுத்த இன்னும் அதிகமாகவே கற்பையும் இழுப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிப்படைவாதம் தலைதூக்குகிறது என்பதற்கு இது ஒரு அறிகுறியாகும்.
மேலும் 'அந்நிய இனத்தைச் சேர்ந்த ஆண்களுடன் சோரம் போதல் பற்றிப் பேசப்படுகிறது. நாம் எமது பெண்களை என்னவும் செய்யலாம். ஆனால்
102 நான் ஒரு பெண்

மற்றைய ஆண்கள் எமது பெண்களை ஏறெடுத்துப் பார்க்கவும் கூடாது' என்ற கருத்து கற்புப் பற்றி இவர்கள் கொண்டுள்ள இரட்டை நிலைப்பாட்டை வெளிக்கொண்டு வருகிறது. எல்.ரி.ரி.ஈயின் கண்களில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் எதிரிகள். இந்த இனப்பூசலைக் கூடப் பெண்களை அடக்கு வதற்கு பாவிப்பது கவலைக்குரிய விடயமாகும். என்ன? எமது பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்து விட்டார்கள். முன்னொரு போதும் அனுபவிக்காத சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் எனச் சிந்திக்கிறீர்களா? பெண்விடுதலையின் அடிப்படையே கற்புப் பற்றியதுதான். துப்பாக்கியேந்திக் காற்சட்டை போட்டாலென்ன, ஏன் 'பஜேரோக்களில்" திரிந்தாலென்ன அது மட்டும் சுதந்திரமாகிவிடாது. நாம் எமக்குச் சரியெனப் படும் வகையில் நடக்கும் உரிமையைப் பெறும்போதுதான் நாம் உண்மையில் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். ஈரான் - ஈராக் யுத்தத்தின் போது பெண்களும் ஈரானிய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். அடிப்படை வாதம் தலைவிரித்தாடும் அந்த நாட்டில் இதை எப்படி அனுமதித்தார்கள்? ஒரு பெண் இராணுவத்தில் சேர்ந்து கொள்ள விரும்பின் அவள் தனது தந்தையின் அல்லது சகோதரனின் அல்லது கணவனின் அனுமதி பெற்றுத்தான் சேர்ந்து கொள்ள முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிந்தவுடன் அவ்வளவு பெண்களும் குசினிக்குள் திரும்பிப் போகத்தான் நேர்ந்தது. இவ்வாறான வரலாற்றுப் பாடங்களில் இருந்து நாம் என்ன விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்? முதலாவதாக எவ்வகைப் போராட்டமாக (அது வர்க்கப் போராட்டமாகவோ அல்லது தேசிய விடுதலைப் போராட்ட மாகவோ) இருந்தாலும் சரி அதில் பெண்கள் இணைந்து கொள்வதன் மூலம் மட்டும் விடுதலையடையப் போவதில்லை. ஏனெனில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் பல்வேறு சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால் அவை யாவும் ஆணாதிக்கக் கருத்துக்களால் வெவ்வேறு அளவுகளில் கட்டுண்டு கிடக்கின்றன. சுயாதீன (Automomous) பெண்கள் அமைப்புகளின் முக்கியத்துவம் இதில்தான் அவசியமாகிறது. இயக்கத்திற்குள்ளும் கட்சிக்குள்ளும் ஆணாதிக்க வெறிபிடித்த கருத்துக்கள் தலைதூக்கும் போதெல்லாம் அவ்வியக்கத்திற்குள் இருக்கும் பெண்களால் அதைத் தடுக்க முடிவதில்லை. ஏனெனில் அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதுடன் அனேகமாக அதிகாரத்தில் இருப்பதில்லை. சுயாதீன பெண்கள் அமைப்புகள் இவ்வாறான அரசியல் இயக்கங்களுக்குச் சமாந் தரமாக வளர்ச்சியடைந்திருப்பின் அவை அயராது விழிப்புணர்வுடன் இருப்பதின் மூலம் இவ்வாறான பிற்போக்கான கருத்துக்கள், நடைமுறைகள் தலைதூக்கும் போது அதற்கெதிராக கடுமையாகப் போராடலாம்.
நான் ஒரு பெண் 103

Page 57
இயக்கத்திற்குள் இருக்கும் பெண்கள் கட்சியின் சட்டதிட்டங்கள் ஒழுங்கு முறைகள் போன்றவற்றாலும் கட்சிக்குத் துரோகம்' செய்யக் கூடாது என்ற உணர்வாலும் இவ்வாறு போராட முடிவதில்லை.
நமது தேசத்தில் ஏன் இவ்வாறான சுயாதீன பெண்கள் அமைப்புகள் இல்லை? இக் கேள்விக்கு விடை காண வேண்டுமாயின் நாம் முதலில் எமது பிரதேசத்தில் காணப்படும் பொதுவான அரசியல் நிலைமையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.எல்.ரி.ரி.ஈ இயக்கம் துப்பாக்கியின் பலத்தால் அதிகாரத் தில் இருக்கும் ஒரு அமைப்பு. அரசியல் அமைப்புகளிலும் வெகுஜன அமைப்புகளிலும் அதற்கு அதீத பயம் உண்டு. எனவே காலந்தோறும் உருவாகும் அரசியல் அமைப்புகள், வெகுஜன அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் ஆகியவற்றையும் அரசியல் சித்தாந்திகள், செயல்வாதிகள் (activist) ஆகியோரையும் எல்.ரி.ரி.ஈ இயக்கம் கிரமமான முறையில் அழித்து வந்துள்ளது.
தற்போது எமது பிரதேசங்களில் ஒரு வலதுசாரி சர்வாதிகார அரசியல் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலைமையை எதிர்க்கும் தனிநபர்களும் அமைப்பு களும் அழிக்கப்படுகிறார்கள். வலதுசாரி ஆட்சிகள் வலுப்பெறும் போதெல்லாம் அவை பெண்களை அதிகளவில் அடக்கி ஒடுக்க முயல்வதை நாம் காணலாம். இவ்வகையான நிலைமையில் பெண்களை இயக்கங்களிலும் இராணுவத்திலும் சேர்த்துக் கொள்ளும் முகமாக ஒரு தந்திரோபாயமாகப் பெண் நிலைவாதம் ஆட்சியாளர்களுக்குப் பயன்படுகிறதேயொழிய அது பெண்களை விடுதலை நோக்கி இட்டுச் செல்லப் போவதில்லை. எனவே இந்நிலைமைகளில் பிற்போக்கு ஆட்சியாளர்களின் கருவிகளாகப் பெண்கள் உபயோகிக்கப்படுவார்கள். இதுதொடர்பாகப் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
104 நான் ஒரு பெண்

கருத்தடை ஒரு உயிர்க்கொலையா?
ஃபிரான்சிலிருந்து வெளிவரும் சமர் சஞ்சிகையில் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் கருச்சிதைவு தொடர்பான 'விளக்கம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. கருச்சிதைவு சம்பந்தமான தனது கொள்கையை எந்தவிதமான யதார்த்தமான ஆய்வுகளும் இல்லாமல் முடிந்த முடிப்ாக 'கொலை' என்று முத்திரை குத்தி விளக்கமளித்திருக்கிறது சமர்!
சமர் ஆசிரியர் குழுவிலிருந்து ஒருவரை வெளியேற்றியதற்கான தமது விளக்கமாக வெளியிடப்பட்ட சமரின் விளக்கவுரை குழந்தைக் கொலை யையும் கருச்சிதைவையும் ஒன்றாகக் போட்டுக் குழப்பியுள்ளது. வர்க்கப் போராட்டமே எல்லாவற்றுக்குமான முடிந்த முடிவு எனக் கூறி, நடைமுறைப் பிரச்சினையை கோட்டை விடுவது சமரின் பிரச்சினை. அதையிட்டு நாம் அக்கறைப்படாவிட்டாலும் கூட கருச்சிதைவு சம்பந்தமான சமரின் கருத்து பெண்களுடன் தொடர்பானதாக அமைவதால் அது தொடர்பான கருத்துப் பரிமாறல் அவசியமானதாகும்.
இன்று அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும், அடைந்து வரும் நாடுகளிலும் கருச்சிதைவு என்பது ஒரு பரவலான பிரச்சினையாக இருந்து வருகிறது. இன்று நேற்றல்ல, நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாகவே மூலிகைகளாலும், கைமருந்துகளாலும் இன்னும் பலமுறைகளையும் பயன் படுத்தியும் கருச்சிதைவு நடத்தப்பட்டது. இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூட மிகப் பரவலாக எங்கும் கருச்சிதைவு ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றதானால் அதன் ஆழம் எவ்வளவு பெரியது என்பது வெளிப்படை. ஒரு வட்டத்துக்குள் கண்ணை மூடி இருந்து கொண்டு ஒரு கருவை ஏதாவது வழிகளின் மூலம் அழிப்பதை மட்டும் சிந்தித்தால் கருச்சிதைவு ஒரு பயங்கரமான விசயமாகவே இருக்கும். அவ்வாறு பார்ப்பது மனித வாழ்வின் நடைமுறைக்கும் இயங்கியலுக்கும் பொருத்தமற்ற கற்பனாவாதமே உண்மை யில் கருச்சிதைவு பற்றி கதைக்கு முன்கருச்சிதைவுக்கான காரணங்கள் என்ன என்று ஆராய்வது மிகவும் முக்கியமானதொன்றாகும்.
நான் ஒரு பெண் 105

Page 58
சமர் கூறுவதுபோல வெறும் பொருளாதார காரணங்களினால் மட்டுமல்ல, இன்று நிலவுகிற சமுதாய அமைப்புமுறையும் அதன் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களும் கூட கருச்சிதைவை தூண்டி விடும் காரணங் களாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள அசமத்துவ நிலையை பேணும் வகையிலேயே சமுதாயம் கட்டப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்று உறவுகள் இருந்தாலும், கரு உருவாகி வளர்ந்து வளமான ஒரு குழந்தையை உருவாக்குதல் என்பதில் பெண்ணே முதன்மைப்படுத்தப் படுகிறாள். 'குழந்தை உருவாகுவதால் ஏற்படும் பிரச்சினைகள் யாவற் றிற்குமே பெண்ணே முகம் கொடுக்க வேண்டிய நிலைமையே இன்று காணப்படுகிறது. திருமணத்திற்கு முன்பான உறவுகளால் உருவாகும் குழந்தைகளுக்குநூறுவீதமும் பெண்களையே குற்றம் காண்கிறது சமுதாயம். அந்தக் குழந்தை உருவாக்கத்தில் ஒரு ஆணின் பாத்திரமும் இருப்பதை எல்லோரும் மறந்து விடுகின்றனர். திருமணத்திற்கு முன்னர் உருவாகும் குழந்தைக்கு சிலசமயம் ஆண்கள் எந்தவிதமான பொறுப்பையும் எடுக்க முன்வரமாட்டார்கள். அந்த நிலையில் கரு உருவாகிய அன்றிலிருந்து குழந்தைப் பிறப்புவரை பெண்ணே பொறுப்பானவளாக இருக்கிறாள். இந்தப் பெண் எந்தவர்க்கத்தில் வாழ்கிறாள் என்பதைப் பொறுத்து பிரச்சினைகளின் அளவு வேறுபடலாம். ஆனால், எதிர்நோக்கும் சமூக எதிர்விளைவுகள் வேறுபடுவதில்லை. உதாரணமாக எனது கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். பதினாறு வயதுப் பெண் எப்படியோ குழந்தை உருவாகி விட, வாய் திறக்க உரிமையில்லா நிலை. தாய் தந்தை சகோதரர்களின் கொடுமைக்கு அஞ்சி விசயத்தை மறைத்து விட்டாள். குழந்தைக்குப் பொறுப்பானவன் வெளிநாட்டில், சொல்வதற்கு யாருமில்லை. இரண்டு வழிகள்;
1) தற்கொலை 2) விசயத்தை சொல்லி சித்திரவதைப்படுவது.
இறுதியாக விசயத்தை சொல்லி விட்டாள். தாய், தந்தை, சகோதரன் அடி, உதை சித்திரவதை மூலம் குழந்தை இறந்தது. சமய நம்பிக்கை உள்ள உறவினர் குழந்தை இறப்பை பெரிதுபடுத்தவே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தில் தமது கெளரவத்தை, மதிப்பைக் காப்பாற்ற குழந்தை அழிந்ததை, மகள் அழிவதைக் கூட வரவேற்றனர். திருமணத்திற்கு முன்னர் குழந்தை உருவாகினால் பெண்ணுக்கு தற்கொலையே முடிந்த முடிபாகவும் நாகரீகமானதாகவுமே சமூகத்தில் கருதப்படுகிறது. பெண்ணை ஆட்டக்காரி எனவும் அடக்கமற்றவள் எனவும் கூறி அவளை இரண்டாம் தரமாக கருதுகிற இந்த மனப்பான்மை இருக்கும் வரை கருச் சிதைவு எப்படித் தடுக்கப்பட முடியும்? பல பெண்களுடனான ஆண்களின்
106 நான் ஒரு பெண்

உறவை ஆண்களின் ஆளுமையாக நினைக்கும் சமுதாயம் பெண்களின் உறவுகளை மறுக்கிறது. பெண்களின் இனவிருத்தி இயல்பினாலேயே பெண் இரண்டாந்தரமாக கருதப்படுகிறாள் என்ற தீவிரவாத பெண்நிலையாளர் களின் கூற்றை சமூகம் எவ்வாறு ஜீரணிக்கப் போகிறது என்பது இன்று ஒரு சவாலாக உள்ளது. திருமணத்திற்கு பின்னர் ஏற்படுத்தப்படும் கருச்சிதைவுகளுக்கு மிக முக்கிய மான காரணங்களில் ஒன்று பாலியல் தொடர்பான கல்வி அறிவு இல்லா மையே. முக்கியமாக பெண்கள் பாலியல் தொடர்பாக கதைப்பதே தரக் குறைவு, வெட்கம் என்றும் அதைப்பற்றிய அறிவு ஆண்களுக்கு இருந்தால் போதும் என்ற உணர்வுமே காணப்படுகிறது. குழந்தை தேவை என்று உணராத வேளைகளில் எதிர்பாராத விதத்தில் குழந்தை உருவாவது பாலியல் அறிவின் பற்றாக்குறையினாலேயே, அதைவிடவும் கருத்தடை மாத்திரை களின் நம்பகமற்ற தன்மையும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் அவற்றை உபயோகிக்குமளவு திறமையின்மையும் வேண்டாதபோது ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கும் கருச்சிதைப் புக்கும் காரணமாக இருக்கின்றன. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து பெருந்தொகையான ஆண்கள் கலியாணம் முடிந்து ஒரு மாதத்தில் திரும்பவும் சென்று விடு வார்கள். ஆண் - பெண் பாலியல் உறவுக்கு ஏற்படுத்தப்பட்ட சட்டரீதியான அங்கீகாரமான கலியாண உறவினால் கூட பெண்களுக்கு ஆண்களின் உறவு அற்றுப் போகிறது. இந்நிலையில் பெண்களின் இரகசிய உறவுகள் வளர் வதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது. இரகசிய உறவினால் உருவாகும் பிள்ளையை சமூகம் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. அங்கீகரிக்க போவது மில்லை. இந்நிலையில் தனித்து வாழும் பெண்கள் எப்படி வாழவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது? இதற்கு விடை தேட முனைகையில் மீண்டும் அடிமை வாழ்வையும் , பொறுமை, அடக்கம், அச்சம், மடம், நாணத்தையும் பெண்களின் இரண் டாந்தர நிலையையும் வலியுறுத்தி அடக்கு முறைக்குள் அல்லது ஆணாதிக்க சமூகத்துள் பெண்ணை பேணி வைத்திருக்கும் படியே கருத்துக்கள் கூறப் படும். ஆனால் வெளிநாடு செல்லும் ஆண்களின் கற்பு பற்றியோ தூய்மை பற்றியோ கற்பனை கூட செய்ய சமூகம் தயாராக இல்லை. இங்கும் பெண் களின் இனவிருத்தி இயல்பே பெண்களை அடிமைப்படுத்துகிறது.
இதுமட்டுமன்றி, குடும்பத்தின் பொருளாதார நிலையும் கூட குழந்தை பெறுவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உருவாகும் குழந் தையை வளமான எச்சமாக உருவாக்க முடியாத சூழலில் கருச்சிதைவு தான் ஒரே வழியாக கையாளப்படுகிறது. கணவன், மனைவி இருவருமே
நான் ஒரு பெண் 107

Page 59
வேலைக்கு சென்ற போதிலும், கடினமாக நாள் முழுவதும் உழைத்த போதிலும் பொருளாதார ரீதியில் குழந்தை பெறுவது சாத்தியமற்றதாக இருப்பதுண்டு. குழந்தையை உருவாக்கி விட்டு பட்டினியாலும் பசியாலும் சாகடிப்பதை விட கருவில் சிதைப்பதை விளங்கி கொள்வது கடினமல்ல. மார்க்ஸினாலேயே தனது மகன் எட்காரை வறுமையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. ஜென்னியின், முலையில் பாலுக்கு பதிலாக இரத்தம் கசிந்த போது உள்ள வேதனையை விட, பிறந்த பின் உணவூட்ட முடியாமல் சாகடிக்கச் செய்த துன்பத்தை விட கலங்களால் உருவாகிக் கொண்டிருக்கும் சிசுவை கருச்சிதைவு செய்வது பாரதூரமானதாக கருதப்பட முடியுமா?
எங்கெல்லாம் போர் நடக்கின்றதோ அங்கெல்லாம் பெண்களை பலாத்காரம் செய்தும் ஒரு சம்பிரதாயமாகவே நடந்து வருகின்றது. எந்தவிதமான உணர்வுகளும் இல்லாமல் அந்நியன் ஒருவனின் பலாத்காரத்தினால் உருவாக்கப்படும் குழந்தையை பேணி வளர்ப்பதற்கும், அந்த குழந்தை உருவாகிய பின் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் பெண் எந்த விதத்தில் பொறுப்பாக இருக்க முடியும்? அந்த நிலையில் தன்னைக் காப்பாற்றுவதற்கு பெண்ணுக்கு என்ன மாற்றுவகைகள் காணப்படுகின்றன? கருச்சிதைவை விட இலகுவானதும் மலிவானதுமான ஏதாவது வழி முறை காணப்படுகின்ற னவா? யாழ் நகரில் அந்நிய இராணுவப்படை எடுப்பின் போது ஒவ்வொரு கிராமங்களையும் திடீர் திடீரென சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்திய போது எத்தனை பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்? எந்தப் பெண்ணா வது தனக்கு குழந்தை வேண்டுமென்று இராணுவத்துடன் உடலுறவு கொண்டி ருப்பாளா? அல்லது இந்தப் பலாத்காரத்தின் விளைவுகளை அவளால் தடுத்திருக்க முடியுமா?
கணவன் கிளிநொச்சிக்குச் சென்று தட்டுப்பாடான பொருட்களை வாங்கி வருவதும் மனைவி அதை கிராமத்தில் விற்பதுமாக ஒரு குடும்பம் நான்கு பிள்ளைகளையும் பராமரித்து வந்தது. கணவனில்லாத ஒரு மழைக்கால காலையில் திடீரென தேடுதல் நடத்திய இராணுவத்தினர் பிள்ளைகளுடன் தனிமையில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். எழுந்து நடக்க முடியாத அப்பெண் பய உணர்வினால் அயலவர்க்கு சொல்ல கிராமம் முழுவதும் கதை பரவியது. கிராமத்தில் தலை நிமிர முடியாத அப்பெண் கிராமத்தை விட்டு வெளியேறினாள். ஆறுமாதங்களின் பின் கணவனால் கைவிடப்பட்டு அந்தப் பெண் நான்கு குழந்தைகளுடனும் கிராமத்திற்கு மறுபடியும் வந்தாள். எந்த விதமான பொருளாதாரப் பின்னணியும் இல்லா மல் வாழ்வதற்கு வழி தெரியாத அப்பெண் செய்த குற்றமாகவே இந்தப் பலாத்காரம் சமூகத்தால் கருதப்பட்டது. இந்நிலையில் அவள் இராணுவத்தால் உருவாகிய குழந்தையை கருச்சிதைவு செய்திருந்தாள்.
108 நான் ஒரு பெண்

பலாத்காரம் செய்தவனின் முகம் கூட தெரியாமல் ஒரு பிள்ளையை - கருப்பையை உடலில் சுமந்து வைத்திருப்பதற்காகவே - பெற்று விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? இப்படி இலட்சக்கணக்கில் பலாத்காரம் செய்யப்பட்ட உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மாற்று வழி என்ன?
வேலைவாய்ப்புகளை தேடி சிங்கப்பூர், மத்தியகிழக்கு போன்ற நாடுகளுக்கு செல்லும் பெண்களின் நிலையும் இதே போன்றதே! வீட்டுப்பணிப் பெண் வேலைக்கு செல்கையில் ஆளுமையோ அதிகாரமோ அற்ற நிலையில் அவளுக்கு குழந்தை உருவாகும் போது அதைத் தடுப்பதற்கு அவளுக்கு என்ன வழிகள் உள்ளன. சமீப கால ஆய்வுகளில் வெளிநாடுகளில் வேலை க்கு செல்லும் பெண்கள் நிரந்தர கருத்தடை செய்து விட்டு போவதாக தெரிவிக்கின்றன. கருத்தடை செய்யாத பட்சத்தில் அதன் பின் விளைவுகளை எதிர்நோக்குவதை விட கருத்தடை செய்து விட்டு செல்வதை கணவனும், உறவினர்களும் விரும்புவதாக பல பெண்கள் கூறுகின்றனர்.
பெண்களின் உடல்நிலையைப் பொறுத்தும் கருச்சிதைவுகள் நடைபெறு கின்றன. கருத்தரிப்புக் காலங்களில் உருவாகும் சில நோய்கள் குழந்தைக்கு ஆபத்தாக அமைவதால் வைத்தியர்களே கருச்சிதைவை செய்வதற்கு ஆலோசனை கூறுவர். எயிட்ஸ் நோயாளிக்கு பிறக்கும் குழந்தையும், ஜேர்மன் சின்னமுத்து உருவாகிய தாயின் குழந்தையும் அழிக்க முனையும் சமுதாயம் பெண்களின் சொந்தப் பிரச்சினைகளால் - அது எவ்வளவு மோசமானதாக இருப்பினும் - குழந்தையை தவிர்க்க முனையும் போது மட்டும் ஏன் கொலை என்று முத்திரை குத்திவிடுகிறது. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கருச்சிதைவு செய்வதை சட்ட விரோதமாக கருதுகின்றன என்ற போதிலும், இந்நாடுகளிலேயே மிகக்கூடிய அளவில் கருச்சிதைவுக்கான காரணிகளும் வளர்ந்துள்ளன என்பது ஆச்சரியத் திற்குரிய ஒன்றாகும். குழந்தை பெறப்போகும் தாயின் உடல் நிலை மட்டு மல்ல தாயின் மனோநிலையும் முக்கியமானது. தாயின் மனோநிலையின் தன்மையைப் பொறுத்து சிசுவின் அனைத்து வளர்ச்சிகளும் பாதிக்கப் படலாம். (மூளை, உடலுறுப்புகள்) என்று வைத்திய நிபுணர்கள் கூறுகின் றனர். எமது பெண்கள் மனோரீதியாக பாதிப்படைவதற்கு இந்த சமூகமே பெரிய காரணியாக அமைந்து விடுகிறது. தனது குழந்தையை பெறுவதா, அல்லது கருச்சிதைவை செய்வதா மனோநிலையை அதிகளவில் பாதிக்கும் என்பதைக் கருத்திற் கொண்டு ஒரு தாயே அது தொடர்பான முடிவை எடுக்க முடியும். இதனால் தான் பிரித்தானியாவில் 1967ல் கொண்டு வரப்பட்ட கருச்சிதைவு சட்டம் 27 வாரங்கள் வரைக்கும் கருச்சிதைவு செய்வதற்கு தாயினுடையதும் பிறக்கப் போகும் குழந்தையினதும் உடல்நிலை
நான் ஒரு பெண் 109

Page 60
மனோநிலை போன்றவற்றை நிபந்தனையாக முன் வைத்து அங்கீகரிக்கிறது.
இறுதியாக சமரின் கருத்து தொடர்பாக ஒரு கேள்வி. வர்க்கப் போராட்டமும் புரட்சியும் மக்களின் விடுதலைக்கு அவசியம் எனக் கருதும் சமர், உயிர்க்கொலையை நிச்சயம் நிபந்தனை அற்று நிராகரிக்க மாட்டாது என நினைக்கிறேன். புரட்சிகர வன்முறை பற்றிப் பேசிய மார்க்சியவாதிகள் யாரும் கொலையாளிகளோ, கொலை செய்யும் நோக்கம் படைத்தவர்களோ அல்லர். ஆனால் வர்க்க போராட்டத்தில் கொலை தவிர்க்க முடியாத அம்சமாக வந்து சேர்கிறது. வெறுமனே கொலை என்று பேசுவதனால் மயில்பீலிகையுடன் நடமாடும் சமணர்களை தான் நாம் எமது வழிகாட்டி களாக ஏற்க வேண்டும்.
கருச்சிதைவை கொலை என்று கூறும் சமர், வர்க்கப் போராட்டம், புரட்சி எல்லாம் முடிந்து பொருளாதாரக் காரணிகள் சுமூகமாக அமையப் போகிற சோசலிச சமுதாயத்தில் இத்தகைய பிரச்சினைகள் வராதென்று கருதுகிறதா? அவ்வாறாயின் அதுவரை இந்நிலைமைக்கு என்ன தீர்வைச் சொல்கிறது சமர்.
கருச்சிதைவை கொலை என்றால், கருத்தடையையும் கூட அவ்வாறே கருத வேண்டும். தக்கண பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாட்டுக்கு அமைய உயிரினம் வாழ்ந்தால் இயற்கை உயிரினச் சமனிலை பேணப்படும். ஆனால் மனிதன், இயற்கையை வெல்லப் பழகிவிட்ட பின், மனித வாழ்வுக்கும் அதன் நலனுக்கும் உதவாத பழைய கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பது எவ்வகையில் இயங்கியலாகும்?
110 நான் ஒரு பெண்

பெண்களும் மதங்களும்
மகளே! நீ கடவுளின் பரிசு மூலம் : சகோதரிவின்னி பிரிடா தமிழில் : செல்லம்மா
பெண்ணே நீதீண்டத்தகாதவள் மூலம் : விபூகுடி பட்டேல் தமிழில் : செல்லம்மா
கணவனின் காலடியில் சொர்க்கம் மூலம் :நாகார் செளத்ரி தமிழில் : செல்லம்மா
முற்பிறப்பின் பலனே பெண் பிறப்பு மூலம் : லிலா முத்துகம தமிழில் : செல்லம்மா

Page 61

மகளே! நீ கடவுளின் பரிசு
எமது சமூக கலாசார அமைப்பானது பெண்களை சுரண்டும் ஒரு ஒடுக்குமுறை அமைப்பாகும். இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் பல மில்லியன் கணக்கான பெண்களை அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்தி வைத்துள்ளது.
பெண்கள் ஒடுக்குமுறை அல்லது பெண்விடுதலை தொடர்பாக மதங்கள் எவ்வகையான பாத்திரத்தை ஆற்றுகின்றன என்பது தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றிய கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து, பெளத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விடுதலை சக்தியின் ஒரு கூறாக சமயங்கள் இருந்தபோதும், நடைமுறையில் அவை சமூக, பழக்க, கலாசார மரபுகளை மீண்டும் சமூகத்தின் மீது திணிக்கின்றன என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆண்களின் தவறான வியாக்கியானங்களிலும், ஆணாதிக்க கலாசாரத்திலும் சமயங்கள் நிறுவனமயமாக்கப்பட்டதன் விளைவுதான் இது. சமயச் சிந்தனைகளையும், விழுமியங்களையும் தீவிர மீள்பரிசீலனை செய்வதற்கான தேவை இப்போது உள்ளது.
கத்தோலிக்க திருச்சபையில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை;
திருச்சபை வரலாற்றில் பெண்கள் இரண்டாம்படியான, பலவீனமான பால் (Sex) ஆகவே கருதப்படுகின்றனர். சில சிறந்த மறைசிந்தனையாளர்களும் கூட பெண்களின் உண்மையான பெறுமதியைக் காணத்தவறிவிட்டனர். ஆனால் திருச்சபை அன்னை மரியாவுக்கு சிறந்த மரியாதையை அளிப் பதுடன், பல பெண்களுக்கு புனிதர் பட்டங்களை அளித்துள்ளன. தேவாலயங்கள், பால் அடிப்படையில், சமத்துவம் உண்டு என்பதை உத்தயோகபூர்வமாக ஏற்றுள்ளன. கடவுளின் பிள்ளைகளாக, மனிதர்களாக,
Sir go Luar 1 13

Page 62
அவர்களுடைய உரிமைகளில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். கல்வி கற்பதற்கும், வாழ்க்கையிலும், திருச்சபை மிஷன்களில் சிறந்த பாத்திரத்தை வகிப்பதற்கும் பெண்களுக்கு சம உரிமைகள் உண்டு. எனினும் பெண்கள் இப்பொழுதும் திருச்சபையில் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையை நாம் தட்டிக்கழித்துவிடமுடியாது.
சமயக் கொண்டாட்டங்களின் போது பெண்கள் பங்கெடுப்பதை திருச்சபை உற்சாகமூட்டுகின்றது. இப்பொழுது பெண்கள் சில பதவிகளையும் வகிக்க முடியும், ஒரு பெண் நற்கருணை வழங்கக் கூடியவளாக இருந்தபோதும், அவள் பலிபீட கிரியைகளில் ஈடுபடமுடியாது. எட்டு வயதுப் பையன் இதற்குப் பொருத்தமானவனாக கருதப்படுகிறான். ஆனால் ஒரு சிறுமியோ, பெண்ணோ, அப்படிக் கருதப்படுவதில்லை. ஒரு பெண் தான் அடக்கப் படுகிறாள் எனத் தானாகவே உணருகின்ற முதல் சம்பவம் இதுவாகும். 'எம்.சீகிறிட் வோகல் இதை மிகவும் உறுதியாகக் கூறுகிறார்.
'ஆசி வழங்கும் ஆராதனை நேரங்களில் பலிபீட பையன் இல்லாவிட்டால் தூபகலசத்தைத் தாங்குவதற்கு ஒரு பெண்ணை விட இரும்பு நிலை ஒன்றே நல்லது எனக்கருதப்படுவது உங்களுக்கு ஞாபகமுள்ளதா?"
திருச்சபைகள் ஆணாதிக்கமயமானது என எந்தவித தயக்கமுமின்றி எங் களால் கூறமுடியும். திருச்சபைகளில் அதிகாரத்துவ படிமுறையான போப் பாண்டவர், ஆயர்கள், பாதிரியார் என்ற பதவிகள் ஆண்களாலேயே வகிக்கப் படுகின்றன. எல்லா முடிவுகளும் இவர்களாலேயே மேற்கொள்ளப்படு கின்றன. பெண்களுக்கு முடிவுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் எந்தவிதமான இடமுமில்லை. பெண்களுக்கே உரிய மாதவிடாய் , கருக்கொள்ளல், தாய்மையடைதல், பிள்ளைபெறுதல் போன்ற விடயங்கள் தொடர்பான முடிவுகளையும் தேவாலயங்களில் உள்ள ஆண் தலைவர்களே மேற்கொள்கின்றனர். பெண்கள் அவற்றை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே,
திருமண ஆராதனைகளில் பாவிக்கப்படும் சில வாசகங்களைப் பற்றி, சில கருத்துக்களை தெரிந்து கொள்வது இங்கு பிரயோசனமாக இருக்கும். சில வாசகங்கள் ஒரு பெண்ணை மானுடப்பிறப்பாகக் கருதுவதை விட ஒரு பொருளாகவே கருதுகின்றன. ஆண் ஒரு மனிதன், பெண் அவனுடைய உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டவள். திருமறைத் தொகுதி 26 (1-4- 13-16) இப்படிக் கூறுகிறது.
'கணவனுக்கு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால் மனைவிக்கு கணவன் எப்படி இருக்க வேண்டும்மென்பதையல்ல' 'கணவனை மகிழ்விப்பவளே உண்மையில் நல்ல மனைவி. சிறந்த மனைவியே அவளுடைய கணவனின் இன்பம். மனைவியினுடைய
114 நாள் ஒரு பெண்

பண்பில் அவளுடைய கணவன் கவரப்பட வேண்டும். ஒரு அமைதியான மனைவி கடவுளிடம் இருந்து கிடைக்கப் பெற்ற பரிசு.' இரண்டாவதாக உருவாக்கப்பட்ட கதையில் பெண் ஆணுக்கு உதவி செய்யும் துணைவியாக இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டவள். முதலாவதாக உருவாக்கப்பட்ட கதையில், ஆணும் பெண்ணும் உருவாக்கப்பட்டது மிகவும் அர்த்தமுள்ளது என்பது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்துக்கள் மனித சமத்துவக் கருத்துக்களுக்கு எதிரானவை என்பது தெளிவானது. தேவாலய ஆராதனைகளிலும், திருமண ஆராதனைகளிலும் இப்பொழுதும் இந்த வாசகங்களைப் பரிந்துரைப்பது வருந்தத்தக்கது. பெண்கள் இந்த வாசகங்களை உணர்ந்து கொள்ளாத காலமொன்று இருந்தது. ஆனால் இப்பொழுது அந்தக்காலம் மலையேறிவிட்டது.
Aê
நான் ஒரு பெண் 115

Page 63
பெண்ணே! நீ தீண்டத்தகாதவள்
கடமையுணர்வுள்ள மகளாக எனக்களிக்கப்பட்ட பாத்திரத்தை இலகுவில் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் என்னுடைய சுற்றுப்புறச் சூழலை என்னால் விரைவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. வளர்ந்தவுடன் நான் தங்கி வாழும் மனைவியாகவும் தியாக மனம்படைத்த தாயாகவும் இருக்க வேண்டுமென்பதையே திரும்பத் திரும்ப எனக்கு எல்லோரும் வலியுறுத்தி னார்கள். நான் திறமையான மாணவியாக இருந்ததனால் உயர்தரக் கல்வி கற்பதற்கும் அனுமதித்தார்கள். எனக்கு மாதவிடாய் வரத் தொடங்கியவுடன் என்னுடைய குடும்பப் பெரியவர்கள் எனக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக அலைந்தார்கள். அந்த வருடங்கள் மிகவும் கஷ்டமானவை.
இந்து சமயத்தின்படி பெண் மாதவிடாய் காலத்தில் தூய்மையற்றவளாக எண்ணப்படுகிறாள். இதனால் அவள் ஒதுக்கி தனித்து விடப்பட்டு 'தொட முடியாதவள் ஆக வீட்டுக்கு விலக்கானவளாகக் கருதப்படுகிறாள். என்னுடைய வாழ்க்கையில் 116 பகுதிகாலம் நான் ' தொடமுடியாதவள்' ஆகவே நடத்தப்படுவேன் என எண்ணும் போது எனக்குள் பயங்கரமான உணர்வுகள் ஏற்படுகின்றன. இப்போதுதான் இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களின் (தீண்டத்தகாதவர்கள்) நெருக்கடியான வாழ்நிலையை நான் முதல் தடவையாக விளங்கிக் கொள்கிறேன். இந்தச் சமூகத்தின் உறவுகளின் ஒடுக்குமுறையை உருவாக்கிய மனு தன்னுடைய மனுதர்ம சாத்திரத்தில் கூறுகிறார்: 'முரசு, முட்டாள், தொடமுடியாதவர்கள், மிருகம் , பெண் ஆகியோர் அடி வாங்குவதற்கு மட்டுமே தகுதியானவர்கள்'
இரண்டு வருடங்களாக கணவனைத் தேடும் வேட்டை வியாபாரம் என்னு டைய பெற்றோர்களால் நடத்தப்பட்டது. வருங்காலக் கணவனும், அவருடைய உறவினரும் 'நேர்முகம்' ஒன்றிற்காக வருபவர்கள். அவர்கள் முன் நான் அலங்கரிக்கப்பட்ட பொருளாக காட்சிக்கு நிறுத்தப்படுவேன். அவர்கள் பார்வையில் நான் போதுமான நிறம் கொண்டவளாக இல்லை.
1 16 Tär ga luar

மற்றவர்களுக்கோ நான் பார்ப்பதற்கு போதுமான அழகாக இல்லை என்கிறார்கள். அவர்களுக்கு தேவையானதெல்லாம் தற்போது செல்வம் நிறைந்த லஷ்மி போன்ற, மெலிந்து, நாகரிகமான தோற்றமுடையவளாக, இனிமையானவளாக நான் இருக்க வேண்டுமென்பதே. எல்லோரும் அப்படி இருக்க முடியுமா? கடைசியாக ஒரு குடும்பம் அவர்களுடைய மகனை மணந்து கொள்வதற்காக என்னைத் தெரிவு செய்தது.
இதன் பிறகு 'சீதனம்' தொடர்பான வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. என்னுடைய குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. எனக்கு ஒரு தங்கையும், இரு தம்பியரும் இருக்கின்றனர். அப்பொழுது அவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். எனது பெற்றோர்களால் நிறைவேற்ற முடியாதவாறு மாப்பிள்ளை வீட்டார் கோரிக்கைகளை முன்வைத்தனர். எனது அப்பாவோ அவர்களுடன் தயவாகப் பேசினார். அப்படியிருந்தும் பல விவாதங்களின் பின்பே இந்தப் பிரச்சினையில் ஒரு முடிவுக்கு வந்தனர். 1000 ரூபா பணம், ஒரு ஜோடி தங்க ஆபரணங்கள், 25 சாரிகள், கலப்படமில்லாத உருக்கிலான ஒரு தொகுதி சமையல் பாத்திரங்கள், ரேடியோவுடனான டேப்ரேக்கோடர் ஒன்று ஆகியவற்றுடன் வேறு சிலவற்றையும் என்னுடைய தகப்பனார் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தனர். என்னுடைய திருமணத் தயாரிப்பு வேலைகளுக்காக நிறைய கடன்களைப் பெறும் நிலைக்கு எனது அப்பா தள்ளப்பட்டார். நிலைமை மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னுடைய திருமணம் உண்மையிலேயே கொண்டாடச் சந்தோசமான நிகழ்ச்சியாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். அவமதிப்புகளுக்கு உள்ளானமை வேதனையாக இருந்த போதும், ' எமது மகளை அன்பளிப்பாகக் கொடுத்தால், நாம் சொர்க்கத்திற்குள் நுழையலாம்' எனக்கூறி தம்மைத் தாமே தேற்றிக் கொண்டனர் என் பெற்றோர். இந்து மரபில் கன்னிகாதானம் சிறந்த தானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனடிப்படையில் பெண் தானமாகக் கொடுக்கப்படக் கூடியளவிற்கு சடப்பொருளாக தரங்குறைக்கப்படுகிறாள்.
திருமண நாளன்று நான் மிகவும் கவனமாகவும் அக்கறையுடனும் எனது நண்பிகளால் அலங்கரிக்கப்பட்டேன். ஐயர் சமஸ்கிருத மொழியில் ஏதோ கூற, எனது கணவரும் நானும் மண மாலைகளை மாற்றிக் கொள்வதற்காக ஏழு தடவைகள் அக்கினியைச் சுற்றி வந்தோம். ஐயர் கூறிய சில வாசகங்கள், தெளிவாக ஞாபகமுள்ளன அவை;
'பிள்ளைகளுடன் வாழவும், தாய்மையை அடையக்கூடியவளாகவும் இந்தப் பெண்ணை புனித அக்கினி பாதுகாக்கட்டும்' சொர்க்கம் நான்; பூமி நீ; நாங்கள் ஒரு மகனை உருவாக்க ஒன்றுபடுவோம் வாருங்கள், செல்வத்தை அதிகரிப்பதற்காக, அருள் கிடைப்பதற்காக, தாராளகுணமிக்க கடவுள் இந்தப்
நாள் ஒரு பெண் 117

Page 64
பெண் மகன்மாருடன் சந்தோஷமாக வாழ அ " புரிவாராக, இவருக்கு பத்துப் புதல்வரைக் கொடுத்து பதினொர தாக அவருடைய கணவன் இருக்க அருள்புரியட்டும்'. திருமணத்தின் பின் நான் கணவனுடைய குடும்பத்துடனேயே இருக்க வேண்டும். முதலில் புதிய இடத்திற்குப் போவதைப் பற்றிப் பயம் எனக்கு இருந்தது. புதிதாக திருமணம் முடித்த மணமகள்மார், கணவன் வீட்டாரினால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், சில நேரங்களில் கொலை செய்யப் படுவதாகவும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மறு பக்கத்தில் நான் மணப்பெண்ணைப் பற்றிய புதுமையான கனவுகளையும் காணத் தொடங்கினேன்.
கணவன் வீட்டில் கழுவுதல், சமைத்தல், சுத்தப்படுத்தல், கூட்டுதல், குறைந்த சீதனம் கொண்டு வந்ததற்காக அவமதித்தல், முறை தவறாமல் அடி வாங்குதல், மனைவியாக எனது கடமையைச் செய்தல் இவையே என் பணி. அவற்றை ஒழுங்காகச் செய்து வந்தேன். இந்து நூல்களில் ஒரு பெண் அவளுடைய பழக்க வழக்கத்தின் அடிமை போலவும், உணவு (பால்) ஊட்டும் காலங்களில் தாயாகவும், படுக்கையறையில் போகமூட்டும் துணைவியாகவும் இருக்க வேண்டுமென வரையறுக்கப்பட்டுள்ளாள்.
எங்களுக்கு 3600 மில்லியன் இறைவனும், இறைவியும் இருக்கின்றார்கள். ஒரு தனிப் பெண்ணுக்கு. இவர்கள் எல்லோருக்காகவும் விரதம் இருப்பது சாத்தியமானதல்ல. ஆனால் என்னுடைய கணவனின் நலனுக்காகவும், ஒரு மகனைப் பெறுவதற்காகவும் நான் பல சடங்கு முறைகளையும் விரதங் களையும் பின்பற்றுகின்றேனா என கண்காணிக்கப்பட்டேன். ஒரு பெண் பிள்ளையை பெற்றதன் மூலம், என்னுடைய பிரார்த்தனைகள் வீண் போயின. ஒவ்வொருவரும் அவளுடைய பிறப்புக்காக புறுபுறுத்தனர். என்னுடைய கணவன் பல நாட்கள் என்னுடன் கதைப்பதைப் புறக் கணித்தார். பல வாரங்களுக்கு என்னுடைய மகளைக் கூடப் பார்க்கவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டத்திற்காக என் கணவன் வீட்டார், என் மீது பழிசுமத்தினர். இரண்டாவது பிள்ளைப் பேற்றின் போது நீ ஒரு மகனைப் பெற்றுத்தரா விட்டால், என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, எனது கணவனை வேறொரு பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக என்னைப் பயமுறுத்தினர். பின்பு அதிர்ஷ்டவசமாக நான் ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றேன். V எல்லோரும் சந்தோசமடைந்தார்கள். என்னுடைய கணவனும், வீட்டாரும் இனிப்புகள் வழங்கினர். என்னுடைய நண்பி சீலா, அவளுக்கு மகள் பிறந்தவுடன் ஏன் கொலை செய்தாள் என்பதை இதன் பின்பே புரிந்து கொண்டேன்.
118 நான் ஒரு பெண்

என்னுடைய மகள் பாரபட்சமாக நடத்தப்படும்போதெல்லாம் நான் மிகவும் கோபப்படுவேன். நான் பலவீனமானவளாக இணைந்து போகிறவளாக, சிற்றின் பத்துக்கு மட்டுமுரியவளாக இருந்தால் என்னை நன்றாக உபசரிக்கவோ, மரியாதை செலுத்தவோ மாட்டார்கள் என்பதை திருமணம் முடித்த கடந்த ஏழுவருடத்தில் புரிந்து கொண்டேன். 'ஏன் என்னை உறுதியுள்ளவளாக மாற்றமுடியவில்லை' என எனக்குள்ளேயே நான் கேட்டுக்கொள்வேன். இப்பொழுது நான் என்னுடைய மனதை உறுதியாக்கிக் கொண்டேன். என்னுடைய மகளின் உரிமையில் நான் உறுதியாக இருக்கிறேன். அவளை நன்றாகப் படிக்கவைப்பதிலும், தன்னம்பிக்கை, உற்சாகம். நம்பிக்கை, பொருளாதார ரீதியான சுதந்திரம் உள்ளவளாக மாற்றுவதுமே எனக்குத் தேவையானவை.
நான் ஒரு பெண் 1 19

Page 65
கணவனின் காலடியில் சொர்க்கம்
பங்களாதேஷ் முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் இஸ்லாம் மிகவும் உயிரோட்டமான முறையில் பிணைந்துள்ளது. முஸ்லிம்கள் கடவுளின் மீதும் இறைதூதர் மீதும் அளவற்ற நம்பிக்கை கொண்டவர்கள். புனித குர்ஆனின் போதனையின் வழியிலேயே தமது வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.
ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் மதத்தின் வழியாக ஏற்றுக் கொள் ளப்பட்ட சமூக விதியாகும். ஆண் உறவினர்களின் கண்காணிப்பிலேயே பெண்கள் வாழ வேண்டியவர்களாக உள்ளனர். பெண் சுதந்திரமாக இருப் பதை இவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அனுமதிப்பதில்லை. விரும்புவது மில்லை. பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலைபற்றிய பல விம்பங்கள் ஆதியிலிருந்தே நிலவி வருகின்றன. பெண்கள் உடல்ரீதியாக பலவீனமானவர்கள்; புத்தி குறைந்தவர்கள், மன உறுதியற்றவர்கள்; வெகுளித்தனமாகப் பயங் கொள்பவர்கள்; உளவியல் ரீதியாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் உறுதியற்றவர்கள் என்பன அவற்றில் ઠીeo.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து குடும்பமொன்றில் பால் அடிப்படையிலான பாரபட்சம் ஆரம்பமாகின்றது. முஸ்லிம் ஆண் பிள்ளைக்கு பெயர் சூட்டும் சடங்கில் இரண்டு மிருகங்கள் பலியிடப்படுகின்றன. ஆனால் பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் ஒரு மிருகம் மட்டுமே பலியிடப்படுகின்றது. பர்தா (purdah) என்ற சொல்லின் அர்த்தம் முகத்திரை அல்லது முக்காடு. இது ஒரு சமய நடைமுறையாகும். பருவமடைந்த பெண் அவளது நெருங்கிய ஆண் உறவினர்களைத்தவிர மற்ற ஆண்களிடம் முகம் காட்ட முடியாது. அவள் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை - இது முழு உடம்பையும் மறைப்பது - அணிந்திருந்தால் மட்டுமே வாசல்வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றாள்.
120 நான் ஒரு பெண்

ஒவ்வொரு முஸ்லீம் தகப்பனும் கணவனும் தங்களுடைய மனைவியரையும் மகள்மாரையும் சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதிப்பார்களானால் தங்களு டைய பெயர்கள் பாவச்செயல் செய்வோரின் பட்டியல் புத்தகத்தில் எழுதப்படும் என நம்புகின்றார்கள். வழமையாக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் குர் ஆனை படிப்பதற்காக சமய ஆசிரியர்களை நியமிப்பார்கள். ஆனால் படிப்பித்தவற்றின் அர்த்தத்தை படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி கட்டாய மானது' என இறைதூதர் தெளிவாகக் கூறியபோதும் முகத்திரையானது உள்ளூர் சமய ஆசிரியர்களிடம் கல்விகற்பதைத் தடைசெய்கிறது அல்லது உற்சாகப்படுத்தத் தவறுகின்றது. பெண்கள் சமய ஒன்று கூடலிலோ, பள்ளி வாசலுக்குள்ளோ, கூட்டங்களுக்கோ, விழாக்களுக்கோ அனுமதிக்கப் படுவதில்லை.
பெண்களுக்கு குறிப்பாக வீட்டுக்கு வெளியே பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு முகத்திரை (Veil) தடையாக உள்ளது. இதனாலேயே உற்பத்தி நடவடிக்கைகளில் ஆண்களுக்குத்தான் உரிமையிருப்பதாக கருதப்படுகிறது. அவள்தான் குடும் பத்திற்கு உணவளிப்பதில் முதன்மையானவள்? சமூக பழக்க வழக்கத்தில் ஆண் பிள்ளையே குடும்பத்தில் உற்பத்தியாளனாக அடையாளங் காணப்படு கிறான். பெண்பிள்ளை ஒரு கடனாகவும் சுமையாகவுமே கருதப்படுகிறாள். இதனாலேயே முகத்திரையானது பெண் சமூக, பொருளாதார அரசியல் கலாசார துறைகளில் முன்னேறுவதற்குப் பிரதான தடையாக உள்ளது. எப்படியிருந்த போதும் வறுமையின் அதிகரிப்பு, உற்பத்தி முயற்சிகளில் பங்களிப்பதற்கு பெண்களின் தேவை அதிகரிப்பு, குடும்ப நலனுக்கு உழைப்பது ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக இன்றைய நாட்களில் முகத்திரையின் பயன்பாடு குறைந்துள்ளது. இஸ்லாமிய முறையில் திருமணம் எல்லா ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமானது. முஸ்லிம் தகப்பனார் திருமணம் முடிக்கும் வயதில் புதல்வியை வைத்திருப்பதற்கு 'புனிதப் பயணம்' அனுமதிப்பதில்லை. இதனாலேயே சமூகமானது எப்பொழுதும் திருமணமாகாத பெண்களைக் கீழ்த்தரமாக நோக்குகின்றது. திருமணத்தின் பின் கணவனே அவளுடைய வாழ்க்கை. இஸ்லாத்தின்படி ஒரு பெண்ணின் கணவன் அவளுடன் எல்லா வகையிலும் திருப்தியடைந்தால் மட்டுமே அவள் சொர்க்கத்திற்குள் நுழையலாம். பெண்களைத் தாழ்த்தி வைக்க பிரபலமான பல நம்பிக்கைகள் உண்டு. உதாரணமாக கணவனின் காலடியிலேயே பெண்ணின் சொர்க்கம் உள்ளது
நாள் ஒரு பெண் 121

Page 66
என்று சொல்வது, மனைவி கணவனிடம் அடிவாங்கிய பகுதியானது புனித மாக மாறும் என்பது மற்றொன்று. ஒரு மனைவியிடம் அவள் கணவனுக்குக் கீழ்ப்படிந்து, நேர்மையானவளாக பக்தியுள்ளவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழ்ப் படிவுக்கு குறிப்பாக கணவன் கூறுவதை எதிர்ப்பின்றி கேட்கவேண்டும் என்பதே அர்த்தம். அவளது கணவனின் காலைத் தொடுவதுடன் அவனது பெயரை ஒருபோதும் உச்சரிக்கவும் பெண் அனுமதிக்கப்படுவதில்லை. முஸ்லிம் சட்டத்தின்படி திருமணம் ஒரு உடன்படிக்கையாகும். தேவையான போது விவாகரத்து செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நிபந்தனைகள் தெளிவானதும் நிலையானதுமாகும். ஆனால் அதிகமான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் கணவன் விவாகரத்து நிபந்தனைகளை மீறியே செயற்படுகிறான். எந்த நேரத்திலும் எந்தக் காரணமுமின்றி அவனுடைய மனைவியை அவன் விவகாரத்து செய்யலாம். முஸ்லிம் திருமணப் பதிவாளர் முன்னிலையில் பெண்ணின் கணவன் திருமண ஆவணப்பதிவில் விவாகரத்து உரிமையை அவளுக்கு அளிக்காவிடத்து முஸ்லிம் மனைவி விவாகரத்து செய்வதற்கான உரிமையை இழக்கின்றாள். ஆனால் இது நிச்சயமில்லாதது. நீண்ட செலவுமிக்க ஆபத்தான நடைமுறையாகும். சமூகமும் உறவினர்களும் விவாகரத்து செய்த பெண்ணின் குறைகளை நீதிமன்றத்தில் எடுத்துக் கூற ஊக்குவிப்பதில்லை. விதவையின் நிலையுடன் ஒப்பிடும்போது விவாகரத்து செய்து கொண்ட பெண் சமூகத்தின் கண்களுக்கு மிகவும் மோசமானவளாகத் தெரிகின்றாள். இதனால் திருமணமான பெண்கள் பல கஷ்டங்களை எதிர் நோக்குகின் றார்கள். விவாகரத்தை தவிர்த்துக் கொள்வதற்காக அவளது கணவன் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக் கொள்கின்றாள். அதிகமான விவாக ரத்தின் காரணமாகவே பலதாரமணம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. விவாகரத்துப் பெற்ற பெண் கடுமையான பொருளாதார சிக்கலை எதிர் நோக்குகின்றாள். அவளுக்குப் பிள்ளைகளும் இருப்பின் மிகவும் நெருக்கடியான வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இந்த நிலைமைகளில் அவள் அவளுடைய தகப்பனாரின் குடும்பத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறாள். அங்கு அவள் ஒரு மேலதிக சுமையாகவே கருதப்படுகிறாள். சில சந்தர்ப்பங்களில் அவள் பணிப் பெண்ணாகக் கூலித் தொழிலாளியாக நகரத்துக்கு வேலை தேடிப் போகிறாள். சில நேரங்களில் அவள் பிச்சை எடுத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அல்லது அவள் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு விபச்சாரத்திற்குள் நுழைகிறாள்.
122 நான் ஒரு பெண்

ஆண் பெண் இருவருக்குமான சம உரிமைகளை ஆதரிப்பவர் இறைதூதர். நடைமுறையில் இது கவனிக்கப்படுவதில்லை. ஆணாதிக்க குடும்பத்தில் பெண்களைச் சுரண்டுவதற்கு ஆண்களின் தலைமைத்துவம் கொண்ட மதமே கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. பங்களாதேஷ் சமூகம் படிப்படியாக மாறி வருகிறது. எனினும் இந்த மாற்றங்கள் பயன்தர நீண்டகாலம் எடுக்கும். பழைய விழுமியங்களும் சமூக பழக்க வழக்கங்களும் இறந்து கொண்டிருக்கும் அதேவேளை புதியவை இடம் பிடிக்கின்றன. பெண்களின் விடுதலை தொடர்பான விடயங்கள் அண்மைக்காலமாகப் பலம் பெற்று வருகின்றன.
நான் ஒரு பெண் 123

Page 67
முற்பிறப்பின் பலனே பெண் பிறப்பு
ஆரம்பத்தில் பெளத்த மதம் தீவிரமாக இயங்கிய சமூக அடக்குமுறை சக்திகளுக்கு ஒரு சவாலாக விளங்கியது. பெளத்தம் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் சாதிய அமைப்பானது இந்திய சமூகத்தில் மேலாட்சி பெற்றிருந்தது. சமூகத்தில் பெண்களதும் மற்றவர்களதும் தராதரமும் படிநிலையும் அவர்களுடைய சாதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டு வந்தது. ஆரிய சமூகம் குடும்ப ஆட்சியைப் பாரம்பரியமாகக் கொண்டது. ஆதிகாலம் முதல் சமய, சமூக நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் இரண்டாம் பட்ச நிலையிலேயே வைக்கப்பட்டனர். குழந்தைப் பருவத்தில் அவர்கள் தமது தந்தையினதும், இளமைக் காலத்தில் கணவனதும், பிற்காலத்தில் அவர்களு டைய ஆண் பிள்ளைகளதும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்கின்றனர். பெளத்த தத்துவத்தின் பரவலானது வேதம் சார்ந்த சமய பழக்கவழக்கங் களுக்குள் ஊடுருவியும் சமூக நடவடிக்கைகளில் ஆழமாக பதிந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இது ஒரு வடிகாலாக அமைந்தது. சாதியடிப் படையிலான சமூக அமைப்பின் மீது மிகப் பெரிய தாக்கத்தை பெளத்தம் ஏற்படுத்தியது. அத்துடன் மக்களது சிந்தனையைப் படிப்படியாகத் தட்டி எழுப்பியதுடன் நீதி, சமத்துவம், சுதந்திர சிந்தனை போன்ற அடிப்படையான விழுமியங்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கும் பங்களிப்புச் செய்தது. புத்தர் அவருடைய போதனைகளில் மனித சமத்துவத்தை அழுத்தமாக வலியுறுத்தி கூறியதுடன் சாதிய அமைப்பை வன்மையாகக் கண்டித்தார். சமூகத்தில் ஆட்சி பெற்றிருந்த சாதியச் சித்தாந்தத்திற்கு (வர்ணாச்சிரம தர்மம்) பதிலாக அவர் உயிர் வாழும் எல்லா உயிரினங்களின் சார்பான கோட்பாட்டையும் எல்லா வகையான மனித இனக்குழுமங்களின் சமத் துவத்தையும் வலியுறுத்திப் பிரச்சாரப்படுத்தினார்.
124 நான் ஒரு பெண்

தன்னுடைய சித்தாத்தங்களைப் பரப்பும் போது புத்தர், ஆண் பெண் சமத்துவத்தை எல்லா நிலையிலும் அழுத்தமாக வலியுறுத்தினார்.
பிராமணிய போதனைகளின் அடிப்படையில் கற்பதற்கான உரிமையானது பிராமண சாதியினருக்கு மட்டுமே இருக்கின்றது என்பது முக்கியமானதாகும். இந்தச் சிந்தனைக்கு எதிராக அறிவின் எல்லாத் துறைகளிலும் ஆணுக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் வித்தியாசமான பாத்திரங்களை வகிக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு எனப் புத்தர் போதித்தார்.
முற்பிறப்பில் செய்த பாவச் செயலின் விளைவினாலேயே ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கின்றது என்பது இந்து மரபின் நம்பிக்கை. அரசன் கோசலனின் அரசி இளவரசியொன்றைப் பெற்றெடுத்த போது அரசன் மிகவும் வேதனையடைந்தான்.
'ஆணை விடப் பெண் பலமடங்கு மிகவும் திறமையானவள்' என புத்தர் அரசனுக்கு அறிவுரை கூறினார்.
பெளத்த இலக்கியத்தில் உன்னுடைய தாயை ஈவிரக்கமற்ற முறையில் கொல்வது பரிநிர்வாணமடைந்த ஒருவரை புனிதத்துவமற்ற முறையில் கொல்வதற்குச் சமமானது என்று சொல்லப்படுகிறது. உயர்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக தியாகத்தின் மூலம் பங்களிப்பு செய்யும் அவள் மதிக்கப்பட வேண்டியவள், சமூகத்தில் பெண்ணின் அந்தஸ்தும் முக்கிய பாத்திரமும் எவ்வகையானது என்பதைக் குறிப்பிட்டே இவையெல்லாம் போதிக்கப்படுகின்றன.
முன்னைய காலங்களில் பெளத்த சங்கத்திற்கான அங்கத்துவம் ஆண்களுக்கு மட்டுமே இருந்தது. எப்படியிருந்தபோதும் பின்னர் பெண்களின் கோரிக்கை
யினால் பெளத்த பிக்குணிகளுக்கான பிரிவும் அனுமதிக்கப்பட்டது.
பெளத்த பிக்குணிகளின் பிரிவு நிறுவனமயமானது. பெண்கள் தலைமைத் துவத்தை கட்டியெழுப்ப உதவியது. இந்த முன்னேற்றகரமான நோக்கத் திற்காக அரசிகளான பராஜபதி, கெளதமி, யசோதரா, விமலா போன்றவர்கள் கூட முன்வந்தார்கள். பூரணா, பட்டாசாரா, கிஸ்சகோதமி போன்ற பெண்கள் நாதியற்ற சமூகத் தவர்களாகவே மதிக்கப்பட்டார்கள். விபச்சாரியாக வாழ்ந்த அம்பாளியின் வாழ்க்கை புத்தரினால் புனரமைக்கப்பட்டது. புத்தரின் காலத்தில் நாடானது முன்னைய சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை உயர்த்தும் நோக்குடன் முன்நோக்கி நடந்துள்ளது என்பதையே இவைகள் காட்டுகின்றன. புத்தரின் போதனைகள் பரவியமையானது பெண்களின் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான கதவுகளைத் திறந்து விட்டது. ஆனாலும் ஆழமாக
STär ga ou 125

Page 68
பதித்திருந்த சமூகப் போக்குகளினால் பெண்கள் தொடர்ந்தும் அடிமை களாகவே வைக்கப்பட்டனர். இதனால் அடிமை விலங்குகளை உடனடியாக உடைத்தெறிவதானது கடினமானதாகவே இருந்தது. உண்மையான நடைமுறையில் சமூகத்தின் உள், வெளிப்போக்குகளினால் பெளத்தமதம் கறைபடிந்ததுடன் பெண்களை தொடர்ந்தும் இரண்டாம் நிலையிலேயே வைத்தது. இதற்கு பிக்குமாரும் காரணமாவர். பல வருடங்கள் பெளத்த பிக்குணி சேவை 1ெ 'த போதும் அவள் பெளத்த கோயில் குருமாரின் தொண்டரடிப் பொடி 431ாகவே இருந்து வருகின்றனர். பிக்குமாரின் காலில் விழுந்துதலை வணங்குவது அவர்களின் கடமைகளிலொன்றாகும்.
இதேபோல,பெளத்த பிக்குணிகள் பிக்குவைப் போல பெளத்த கடமையை நிறைவேற்ற முடியாது. புத்தரின் போதனைகளில் செய்யப்பட்ட இப்படியான ஆக்கிரமிப்புகள் பெண்களை இரண்டாம் நிலையிலேயே வைத்திருக்கும் போக்கை ஆண்களில் இருந்து முற்றாக வெளியேற்ற முடியாது என்பதையே காட்டுகின்றது. ஒருவர் முற்பிறப்பில் செய்தவற்றின் பலனாலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் என பெளத்த இலக்கியங்களில் கர்மா என்ற செய்யுளை விளக்கும் போது குறிப்பிடப்படுகின்றது. முற்பிறப்பில் செய்த பாவச் செயலினாலேயே இப்பிறவியில் ஒருவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்ற கருத்துக்கள் ஜாதக கதைகள் மூலமும் பரப்பப்படுகின்றன. எமது சமூகத்தில் இப்பொழுது கூட, ஆண் குழந்தையை பெறும் விருப்பம் பெண் குழந்தையைப் பெறுவதில் இல்லை. இதேபோல் மனைவிக்கு கணவனே உயர்ந்தவன் என்ற எண்ணம் எங்கள் சமூகத்தின் சிந்தனைகளில் ஆழமாகப் பற்றிக் கொண்டுள்ளது.
126 நான் ஒரு பெண்


Page 69
■■_----------*)*「『』『*』 韃 村)Lae|-|-s',----:■sae|-|-T|-|-- 糯)壽鞑)
! |-sı,|-目---- |-
*|- ".|-
『TT......... ---- |-■ F
*『확.國『: } : ** .......를
TT--------- sae
·|-)
--------is.|- |-|T*를|-|-I. |----- **------ )|------*)|- ----│ ├─T.|-----!-s';----■s.--
|-*: |- saessss!!!
)
├
----*|-* |- |-saesae|-|-sae|-|-----|-|-|- · ----)- | : :sssssssssae (, , ! (**)「*!)!)
 

:
言。"
—心
|-|- . s (s)| ()s).|-*||||||)s', 靈壽靈 |-No))
|-
|- ( )sos, |-|-s.|-|-|: |- ,|-|-
sae