கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்று நூல்கள் நான்கு பார்வைகள்

Page 1


Page 2

மூன்று நூல்கள் ான்கு பார்வைகள்
உள்ளே
1. திரு. பி.பி. தேவராஜ்
பாராளுமன்ற உறுப்பினர், கொழும்பு.
2. திரு. சி. வன்னியகுலம்
பணிப்பாளர், (தமிழ்ப் பகுதி) இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம்.
3. திரு. பி. முத்தையா
செய்தி ஆசிரியர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.
4. கே. விஜயன்
வீரகேசரி - கலாசாரம்.

Page 3
2 துரைவி வெளியீடு
பிரமிக்கச் செய்யும் அசுர முயற்சி புல்லரிக்கச் செய்யும் அபார சாதனை
ஒரே வருடத்தில் ஆறுமாத கால இடைவெளிக்குள் மலையகச் சிறுகதைகளின் இரண்டு தொகுதிகள் துரைவி வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருப்பதை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் மேற்கண்ட வாறு சிலாகித்துப் போற்றியிருக்கிறார். இப்போது மலையகக் குறு நாவல்கள் மூன்றை ஒன்றிணைத்துப் 'பாலாயி’ என்ற பெயரில் ‘துரைவி வெளியீட்டகம் வெளியிட்டிருக்கிறது. மலையக இலக்கியத்துக்கொரு நல்ல காலம் பிறந்திருக்கிறது.
தெளிவத்தை ஜோசப் மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். நல்ல விமர்சகர்; பலராலும் பாராட்டப்பட்ட ஒரு இலக்கிய கர்த்தா, மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர்; இலக்கிய நூல் கள் வெளியிடுவதில் உள்ள சிரமங்களை அனுபவம் மூலம் நன்கு அறிந்து வைத்திருப்பவர். கோ. நடேச ஐயர் காலந்தொட்டு இன்றுவரை வெளியிட்டுள்ள சிறுகதைகளைச் சேகரித்துப் பத்திரமாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம். தெளிவத்தை ஜோசப், மாத்தளை கார்திகேசு போன்றோர் மிகுந்த ஈடுபாட்டோடு இந்தக் காரியத்தைச் செய்திருக் கிறார்கள். சேகரித்து ஒன்று திரட்டி அவைகளைச் சிறந்த வெளியீடாகக் கொண்டுவருவது சாதாரண காரியமல்ல என்பதை நன்கு உணர்ந்தவர் ஜோசப். இதற்குமுன் மலையகச் சிறுகதைகளின் தொகுப்புகள் சில வெளிவந்திருந்தாலும் இவ்வளவு சிறப்பான முறையில் மலயகத் தமிழ்ச் சிறுகதைகளின் நீண்ட வரலாற்றைப் பிரதிபலிக்கும் விதத்தில் வெளி வந்துள்ள தொகுதிகள் என்ற வகையில் தெளிவத்தை ஜோசப் அவர் களைப் புல்லரிக்கச் செய்திருக்கின்றது. இந்நூல்களைப் பார்த்தவுடன் எனக்கும் இத்தகைய ஒரு உணர்வுதான் ஏற்பட்டது.
‘துரைவி' வெளியீட்டகம் என்றால் அது துரை விஸ்வநாதன் அவர் களேயாகும். அபார சாதனையைப் படைத்துள்ள விஸ்வநாதன் அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். அவருடைய சாந்தமான பேச்சும்; அமைதியான போக்கும் அதன் பின்னால் உள்ள ஆழத்தைப் புரிந்துகொள்ள ஒரு கால தாமதத்தை ஏற்படுத்தும். குறையப் பேசி, செயல்திறன் மூலம் இலக்கிய உலகுக்கு துரை விஸ்வநாதன் அறிமுகமாகியுள்ளார்.

மூன்று நூல்கள் நான்கு பார்வைகள் 3
துரைவியின் நூல் வெளியீடுகள் மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இதுகாலம் வரை மலையகத்தில் இருந்து சிறப்பான பல படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவைகளை எல்லாம் ஒன்றிணைத்துப் பார்க்கும்பொழுது நாம் பெருமையடையலாம். மலையக இலக்கியத்திற்கென ஒரு வரலாறு உண்டு. துரைவி வெளியீடு கள் இதற்கு ஒரு அடித்தளம் அமைத்துள்ளது. இதை மையமாக வைத்து மலையக இலக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படட்டும்!
அடுத்த நூற்றாண்டில் புதிய பிரகாசம் தோன்றும் என்ற உணர்வைத் துரைவி வெளியீடுகள் தந்துள்ளன. மலையக இலக்கிய வரலாற்றில் திரு. துரை விஸ்வநாதன் அவர்கள் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவர் பாராட்டுக்குரியவர். மலையக இலக்கிய வளர்ச்சிக்கு மென்மேலும் பங்களிப்புச் செய்வார் என்பதில் ஐயமில்லை.
மலையகத் தமிழர் என்கின்ற பதம் இந்திய வம்சாவழித் தமிழரைக் குறிக்கும் பதம் என்பது யாவரும் அறிந்த விடயம். வட கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்டு மலையகப் பகுதிகளில் வாழ்பவர்களை இப்பதம் உள்ளடக்குவதில்லை. மலையக நாட்டுப் பகுதிகளுக்கு அப்பால் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் அனைவருமே இந்த அடையாளப் பதத்திற்குள் அடங்குவார்கள். சிந்துநதிப் பள்ளத்தாக்கில் வாழ்கின்ற மக்கள் என்பதில் சிந்து என்பது, பாரசீக வழக்காற்றில் ஹிந்து என்று மருவி பின்னர் இந்தியாவாகி இன்று முழு நாட்டுக்கும் பெயராகி விட்டது. இது போன்றுதான் மலையகத் தமிழர் என்கின்ற பதம் 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலும் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தொகையாக இலங்கை வந்து நிலை பெற்று விட்ட தமிழரின் சந்ததியினரைக் குறிக்கும்.
இந்தியத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், மலையகத் தமிழர் என்ற மூன்று பதங்களுமே ஒரே பிரிவினரைத்தான் குறிக்கிறது. வட கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரின் வரலாற்றுக்கும் பாரம் பரியத்துக்கும், மலையகத் தமிழரின் வரலாற்றுக்கும் பாரம்பரியத்துக்கு மிடையே நிறைய வேறுபாடுகளுண்டு.
வடகிழக்கைத் தங்களது பூர்வீகத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள் பூர்வீகக் குடிகளின் வழித்தோன்றல்கள். மலையகத் தமிழருக்குப் பூர்வீகத் தாயகம் தமிழ்நாடாகும். வட கிழக்குத் தமிழர்களுக்கு வாழும் பிரதேசம் எனப் புவியியல் ரீதியான நிலப்பரப்புண்டு. அவர்களை ஒரு நிலப்பரப் புடைய சிறுபான்மையினர் (Teritorial Minorities) என்று சொல்லலாம்.

Page 4
4. துரைவி வெளியீடு
ஆனால் மலையகத் தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைத் தங்கள் வதிவிடமாக இல்லாத ஒரு சிறுபான்மையினர் (Non-Teritorial) ஆவர்.
பல இன மக்கள் வாழ்கின்ற இலங்கையில் பெரும்பான்மையினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவே இருந்தனர். கடுமையான அடக்கு முறைகளும் நிர்வாகக் கெடுபிடிகளும் தோட்டத் தொழிலாளர் வாழ்வில் ஒரு அவலத்தை ஏற்படுத்தின. இலங்கை சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் பழைய நிலையின் ஒரு தொடர்ச்சியே இன்றும் காணப்படுகின்றது. மாற்றங்கள் மந்த கதியிலே ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அண்மைக் காலமாக இந்த மாற்றங்களில் ஒரு வேகம் ஏற்பட்டிருக்கின்றது என்பது கண்கூடாகத் தெரிகிறது. கல்வி கற்றவர்கள் தொகை அதிகரித்துள்ளது. கொழும்பு போன்ற நகர்ப்புறம் நோக்கிய நகர்வும் அதிகரித்துள்ளது. ஒரு புதிய மத்திய பிரிவும் வளர்ந்து வருகின்றது.
மலையகத் தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் பரந்து வாழ்ந்தாலும் அவர்களிடத்திலே தங்களுடைய தனித்துவ அடையாளத்தைப் பற்றிய ஒரு உணர்வு இப்போது மேலோங்கி உள்ளது. வாக்குரிமை, அரசியல் பிரதிநிதித்துவம், நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், தொடர்புச் சாதனங்களின் துரித வளர்ச்சியெல்லாம் இதற்குப் பங்களித்திருக்கின் றன. மலையகத் தமிழர் வாழ்வில் ஒரு புதிய சகாப்தம் தோன்றுவதற்கான பிரசவ வேதனையொன்று நடந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் மலையகச் சிறுகதைத் தொகுதி கள், 'பாலாயி போன்ற துரைவியின் வெளியீடுகள் வந்திருப்பது ஒரு புதிய சகாப்தம் உருவாகுவதின் ஒரு பிரதிபலிப்பாகவே நான் காண் கின்றேன். 'துரைவி’ பதிப்பகம் தன்னுடைய சாதனைகளைத் தொடர வாழ்த்துகின்றேன்.
இதுபோன்றே மலையக இலக்கிய கர்த்தாக்கள் புதிய உத்வேகத் தோடு செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகின்றது.
பி. பி. தேவராஜ்
பாராளுமன்ற உறுப்பினர்,
கொழும்பு.
22. OS). 1997.

மூன்று நூல்கள் நான்கு பார்வைகள் 5
மலையக எழுச்சிக்கான புதிய தளம்
ஒரு சமூகத்தின் பரிணாமத்தையும் அதன் இருப்பையும் ஆவண ரீதியாகப் பதிவு செய்பவை அச்சமூகத்திலிருந்து தோன்றும் இலக்கியங்களே. இலக்கியமற்ற ஒரு சமுதாயம் மனிதக் கணிப்பினுக்கு அப்பாற்பட்ட மந்தைகள் கூட்டமாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது. எந்த ஓர் இனத்தின் மேன்மையும், அந்த இனக் குழுமத்திலிருந்து தோன்றிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே மதிப்பீடப் பட்டு வந்துள்ளது.
மலையகத்திலிருந்து 1930ஆம் ஆண்டளவிலே தமிழ் இலக்கியங் கள் தோற்றம் பெறத் துவங்கின. இருந்தபோதும் ‘மலையக இலக்கியம்' என்ற பிரதேச இலக்கியக் கோட்பாடு மிக அண்மைக் காலத்திலேயே தோற்றம் பெற்று மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதுகால வரை மலையகச் சமூகம் புறக்கணிக்கப்பட்டு வந்ததையும், புறந்தள்ளப் பட்டிருந்ததையுமே இந்த நிலைமை தெளிவாக்கி நிற்கிறது. மலையகப் பெருந்தோட்டங்களிலே வேலை செய்வதற்காகக் கூலிகளாக இழுத்து வரப்பட்ட இவர்களுக்குக் கல்வி எதற்காக, இலக்கியம் எதற்காக, உரிமைகள் எதற்காக என்ற மெத்தனமான உளப்பாங்கு வெள்ளைக் காரத்தோட்டத்துரைமார் மத்தியில் மட்டுமன்றி கறுப்புத் துரைமாரிடமும், தமிழ்த் துரைத்தனத்தினர் மத்தியிலுங் கூட வேரூன்றியிருந்ததை அவதானிக்க முடிகிறது.
இந்த இழிநிலை மலையகத் தொழிலாளர்களுக்கு மட்டும் பிரத் தியேகமான ஒன்றன்று. இலங்கையின் வடபாகத்தில், குறிப்பாக யாழ்ப் பாணக்குடா நாட்டில் வாழ்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரான உழைக்கும் வர்க்கத்தினர் மீதும் இதே வகையான நுகத்தடி பூட்டப்பட்டிருந்தது. இந்த மக்களும் உழைக்கப் பிறந்தவராகவே கருதப்பட்டு அடிமைப் படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். தனது மொழியைப் பேசுகின்ற, தனது மதத்தைத் தழுவுகின்ற, தனது இனத்தைச் சேர்ந்த மக்களையே காலின் கீழ்ப் போட்டு மிதிக்கும் அசுரத்தனமான பிரபுத்துவ சிந்தனையும் செயற்பாடுகளும் இதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்

Page 5
6 துரைவி வெளியீடு
திலும் நிலவியுள்ளன. கட்டைப் பெருவிரலில் மை தடவி ‘ஒப்பமிடும் நிலை வரைக்குமே அவர்கள் சுதந்திர புருஷர்களாக விளங்கியுள்ளனர். புலவர்களும் பண்டிதர்களும் பள்ளு, பிரபந்தங்களிலே இந்த மக்களின் கீழ்த்தரமான வாழ்க்கையைப் பாடி மகிழ்ச்சிக் கூத்தாடினர். அரசியல் வாதிகள் தேவையானபோதெல்லாம் இவர்களின் வாழ்விடங்களைத் தீக்கிரையாக்கித் தமக்கான வாக்குகளைத் தேடிக் கொண்டனர். யாழ்ப் பாணத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும், மலையக உழைக்கும் சமூகத்தினரும் ‘பிரபுத்துவக் கரத்தையிலே பூட்டப்பட்டு வேடிக்கை பார்க்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் 1950களில் இடதுசாரிக் கொள்கைகள் மலையகத்திலும், யாழ்ப்பாணத்திலும் ஊடுருவத் துவங்கின. உழைக் கும் வர்க்கத்தினர் சிந்திக்கத் துவங்கினர். தம்மை அடிமைப்படுத்திய ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, பேனாக்களை அவர்கள் கையி லேந்தினர். கே. டானியல், டொமினிக் ஜிவா, என்.கே. ரகுநாதன், கவிஞர் பசுபதி ஆகியோர் யாழ்ப்பாணத்தில் உருவான அதே காலப்பகுதியில் அதற்குச் சற்று முன்பாக மலையகத்தில் கோ. நடேச ஐயரும் சி.வி. வேலுப்பிள்ளையும் சமூக அடக்கு முறைகளுக்குகெதிராகத் தமது பேனாக்களைத் தூக்கினார்கள். யாழ்ப்பாணத்திலே இழிசினர் இலக்கியமும் மலையகத்திலே ‘தோட்டத் தொழிலாளர்'இலக்கியமும் ஊற்றெடுத்தன. பிரபுத்துவச் சிந்தனையாளர்களால் இந்த ஊற்றுக் களின் வேகத்தைத் தாமதப்படுத்த முடிந்ததே தவிர, கட்டுப்படுத்த முடியவில்லை. டானியல் பஞ்சமர், தொடர் நாவல்களை எழுதினார். டொமினிக் ஜீவா மல்லிகையையும், மல்லிகைப் பந்தல் வெளியீட்டையும் ஆரம்பித்தார்.
இந்த நிலையிலும் மலையக இலக்கியம் உதிரிகளாகச் சிதறுண்டே கிடந்தது. நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் மலையகத்திலே உருவான போதும் ‘மலையகத் தமிழ் இலக்கியம்' என்ற கருதுகோள் உருவாக்கம் பெறுவதில் தாமதமடைந்தே வந்தது. இந்த நிலையில்தான் ‘துரைவி பதிப்பகம் தனது பதிப்புப் பணியை ஆரம்பித்திருக்கின்றது. “மலையகச் சிறுகதைகள்”, “உழைக்கப் பிறந்தவர்கள்”, “பாலாயி” ஆகிய மலையக இலக்கியங்கள் மூன்றினை அது பதிப்பித்து வெளியிட்டுள்ளது. சமயத் தையும், பிரதேச வாதத்தையும், அடிப்படையாகக் கொண்டு நூல்கள் தொகுக்கப்படுகின்ற எமது தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திலே இது ஒரு புதிய தடம். மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகளை மட்டுமன்றி மலையகத்தைப் பற்றி எழுதிய ஏனைய எழுத்தாளர்களின் சிறுகதை களையும் இந்நூல்களிலே தொகுத்துத் தந்துள்ளார் துரை விஸ்வநாதன் அவர்கள்.

மூன்று நூல்கள் நான்கு பார்வைகள் 7
இந்த முயற்சியின் பகைப்புலத்தை விளங்கிக் கொள்வது எமது எதிர்கால செயற்பாட்டைத் தெளிவுற வகுப்பதற்கு ஏதுவாக அமையும். மலையக மக்களின்/சமூகத்தின் சிந்தனைப் போக்கு இந் நூல்கள் வாயிலாக ஒன்று திரட்டித் தரப்பட்டுள்ளன. ஒன்று திரட்டு மளவுக்கு அவர்களின் சிந்தனைகள் சமூக முக்கியத்துவம் பெற்று விட்டன. மலையக சமூகம் இனிமேலும் எடுப்பார் கைப் பிள்ளையாக இருக்கப் போவதில்லை என்ற உண்மையை அவை பறை சாற்று
கின்றன.
சமூகவியலும் அரசியலும் ஒரு வண்டியின் இரு சக்கரங்கள் போன்றவை. இரண்டு சக்கரங்களும் ஒரே திசையில் ஒரே கதியில் செல்ல வேண்டியவை. இவற்றில் ஊறுபாடுகள் ஏற்படுமிடத்து சமூக முரண்பாடுகள் தீவிரமடையும், சமூக அமைதியின்மை வெடிக்கும்.
‘துரைவி' பதிப்பகம் தனி ஒருவரின் சொத்தாக இருப்பினும் அது மலையக மக்கள் யாவரினதும் குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்கிறது; மலையக மக்களின் சிந்தனைப் போக்கைப் பிரதிபலிக் கின்றது; மலையகத்தின் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் புதிய பாய்ச்சல் ஒன்றினுக்கு வழி வகுக்கப் போகின்றது. இந்தத் தளத்தினைச் சீரிய முறையிலே பயன்படுத்த வேண்டியது மலையக எழுத்தாளர்களினதும் மக்களினதும் தலையாய கடமையாகும்.
எஸ். வன்னியகுலம் பணிப்பாளர், தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு, இலங்கை ரூபவாஹினி. 22. O9. 1997

Page 6
8 துரைவி வெளியீடு
மும்மணிகள்
நினைத்துப் பார்த்தால் சற்றே வியப்பாக இருக்கிறது!
மிகக் குறுகிய காலத்தில் மூன்று நூல்கள்
அதுவும் மலையகத்தைப் பற்றி!
இது என்ன கனவா, நனவா?
ஆம்! நனவுதான். “மலையகச் சிறுகதைகள்”, “பாலாயி”, “உழைக் கப் பிறந்தவர்கள்”- மூன்றும் துரைவி பதிப்பகத்தினரின் வெளியீடு!
எழுபத்தைந்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள்! தேடிப் பிடிப்பதே சற்றுச் சிரமமான விஷயம். இருந்தாலும் தேடிப் பிடித்துவிட்டவர்கள் நன்றிக்குரியவர்கள்; மறக்கப்பட முடியாதவர்கள்.
மலையகச் சிறுகதைகள் தொகுதியைப் பார்த்தபோது, இது மலை யகத்தைப் பற்றிய நூலா? என்ற வியப்பு இருந்தது. மலையகத்
தேயிலையின் மணம் உலகப் பிரசித்தி பெற்றது. ஆனால், அவர்களின் படைப்புக்கள், நான்கு மலைகளின் நடுவில் பள்ளத்தில்தான் கிடந்தன.
மலையகத்தில் இருந்து எழுதியவர்கள், எழுதுகின்றவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் எழுதிய எழுத்துக்கள், பத்திரிகை அலுவலகக் குப்பைக் கூடைகளில் நிறைந்திருக்கின்றன.
செல்வாக்கு, தெரிந்தவர்கள் - அறிந்தவர்கள் இல்லாத நிலைமை, அதற்கும் மேலாக மலைநாடு என்ற அலட்சியப் போக்கு
இவை எல்லாம் மலையக எழுத்தாளர்களின் மனங்களில் நெருஞ்சி முட்கள்!
ஒரு கதையைப் பிரசுரித்துக் கொள்வதே சிரமம் என்றால், புத்தகத்தைப் போடுவது எப்படி?
அப்படியே ஒன்றிரண்டு கதைகளை வெளியிட்டுக் கொண்டாலும்,
அவற்றைப் பாதுகாத்து வைப்பது அதைவிடக் கஷ்டமான விவகாரம். இப்படிப் பல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மலையகத்து மழை

மூன்று நூல்கள் நான்கு பார்வைகள் 9
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. எஞ்சி இருப்பவை தான் தேடி எடுக்கப்பட்டுப் பிரசுரமாகி இருக்கின்றன.
மலையகச் சிறுகதைகள் தொகுதி வந்தபோது ஒரு உண்மை வெளிப்பட்டது. அந்தத் தொகுதியில் ஏறக்குறைய இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து எழுதி வந்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளியாகி இருந்தன. அந்தக் கதைகள் பிரசுரிக்கப்பட்டு இருந்த விதம், “மகாவம்சம்” மாதிரி, ஒரு வரலாற்றுப் பதிவைத் தருவதாக இருந்தது. இந்த வரலாற்றுப் பதிவைத் தந்தவர்கள் மலையக எழுத்தாளர்கள் மாத்திரமே. அந்த வகையில் “மலையகச் சிறுகதைகள்” மற்றைய தொகுப் புக்களைவிட விஞ்சி இருந்தது.
区 区 区
யாராவது "மலர்” போட்டால், இலங்கை முழுவதையும் தழுவிய வகையில் ஒரு “தொகுப்பைப்” போட்டால், மலையகத்துக் கதையும் பத்தோடு பதினொன்றாக இருக்கவேண்டும் என்று தப்பித்தவறி நினைத்து விட்டால், நினைவுக்கு வருபவர் "தெளிவத்தை ஜோசப்”- "அவரைக் கேட்டுப் பாருங்களேன்” என்று முணுமுணுப்போடு பதில் வரும், மலையகத்தில் மாத்திரமின்றி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும், அதைவிடத் தமிழ் நாட்டிலும் பேர்பெற்ற ஒரு எழுத்தாளர் தெளிவத்தை என்பதில் நெஞ்சம் பூரிக்காமல் இருக்க முடியாது. அவரது குறுநாவல் களின் தொகுதிதான் “பாலாயி" இதனையும் வெளியிட்டிருப்பவர்கள் துரைவி பதிப்பகத்தினர்.
மூன்று குறுநாவல்கள். இதில் முதலாவது குறுநாவல் கலை மகளில் வெளியானது. அப்போதே படித்த ஞாபகம். இரண்டாவது தடவையாக, நூல் வடிவில் பார்க்கும்போது பெரிய மகிழ்ச்சி. கலைமகள் கதையில், தெளிவத்தை ஜோசப், இலங்கை வாழ் மலையக மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அற்புதமாகச் சித்திரிக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தமிழகத்தில் உள்ளவர்களும் சரி, வெளிநாடுகளில் உள்ளவர்களும் சரி, மலையக மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ளாதவர்களும் சரி, இதனைப் படிப்பதன் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்டு இருக்கும் ஒரு சமுதாயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, அவர்களின் உழைப்பு முறை, வாழ்க்கை அவலம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும். இந்தக் கதைகளும் கூட, ஒரு வகைக் காலக் கண்ணாடிதான் என்றால் அது மிகையல்ல. “மலையகச் சிறுகதைகள்”, “உழைக்கப் பிறந்தவர்கள்” ஆகிய இரண்டு மலைகளுக்கு நடுவே சலசலத்து ஓடுகிறாள் “பாலாயி”.
区 区 区

Page 7
... 10 துரைவி வெளியீடு
இனி உழைக்கப் பிறந்தவர்களைப் பார்ப்போம். இதுவும் ஒரு சிறுகதைத் தொகுதியே. ஆனால், இதற்குப் பல தனிச் சிறப்புக்கள் உள்ளன. பழம்பெரும் எழுத்தாளர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் BORN TO LABOUR என்ற தலைப்பையே “உழைக்கப் பிறந்தவர்கள்” என்று சுமந்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுதி.
இந்தத் தொகுதிச் சிறுகதைகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன. மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகள், மலையகத்தவர் களைப் பற்றி மற்றவர்கள் எழுதிய கதைகள், அதாவது இலங்கையின் மற்றைய பாகங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதிய கதைகள்; தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன் போன்றோரின் கதைகள். இதை நினைக்கும் போது நா. பார்த்தசாரதி "தீபத்தில்” எழுதிய “அந்த மேகம் மூடிய மலைகளின் பின்னால்” நெஞ்சை வருடுகிறது.
இந்தத் தொகுதியில் மூன்று வகை எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன. சிறுகதைத்துறையில் துறை போனவர்கள் ஒரு சாரார்; வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் எழுதி ஒன்றிரண்டு கதை களை வெளியிட்ட ஒரு சாரார்; ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பற்றி எழுதுகின்ற ஒரு சாரார்.
செ. கணேசலிங்கன், என்.கே.இரகுநாதன் போன்றவர்கள் இவர் களில் குறிப்பிடத்தக்கவர்கள். மலையகத்தைச் சாராமல், மலையகத்தில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட பலரும் கூடத் தமது எழுத்துக்கு மலையகத்தைக் களமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது எழுத்துக்களும் இதில் உள்ளன.
எழுத்தாளர்களின் பட்டியலைச் சற்றுப் பார்த்தால், மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளுக்கும் இவர்களின் கதைகளுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காணமுடியும். மேகக் கூட்டங்களைத் தூரத் தில் இருந்து பார்ப்பதற்கும் மேகக் கூட்டத்துக்குள்ளேயே புகுந்து பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசம் இது அவ்வளவே - ஆனால் சோடைபோக முடியாது. இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள எழுத்தாளர்களில், அதுவும் மலையக எழுத்தாளர்களில் பலர் “அதிகம்” படித்தவர்களல்லர். இருந்தாலும், அவர்களோடு, அவர்களின் இரத்தத் தில் இரண்டறக் கலந்துவிட்ட வாழ்க்கையின் வெளிப்பாடுகளே அவர் களின் கதைகளாக இருக்கின்றன. உதாரணமாக, வ.அ.இராசரத்தினம், சு.வே., செ.கணேசலிங்கன், யோ.பெனடிக்ட் பாலன், எஸ்.அகஸ்தியர் ஆகியோரோடு ஒப்பிடக் கூடியவர்கள் சி.வி., தெளிவத்தை, செந்தூரன் போன்ற ஒரு சிலர் தான். பெரும்பாலான மலையக எழுத்தாளர்கள், மிஞ்சிப் போனால், 60ஆம் ஆண்டுகள் வரை- உயர்தர வகுப்பைத்

மூன்று நூல்கள் நான்கு பார்வைகள் 11
தாண்டியவர்களில்லை. அதுவரை மலையகத்தில் மலையகப் பட்டதாரி களின் வாசம் அடித்ததுகூடக் கிடையாது. இந்தக் கதைகள் பற்றி எழுதுவதென்றால்- அது விரிவாக ஆராயப்பட வேண்டிய விஷயம். இருந்தாலும், 500 பக்கங்களில் வெளியாகியுள்ள இந்த சிறுகதைத் தொகுதியை, வெறும் சிறுகதைத் தொகுதியாக யாரும் பார்த்து விட முடியாது. மலையக மக்களின் வாழ்க்கை பற்றி எழுதுவதற்கு இவ்வளவு வெளி எழுத்தாளர்கள் முன்வந்தார்கள் என்றால், அது அவர்கள் மலையக மக்கள்பால் கொண்டிருந்த பரிவுணர்வு தவிர வேறெதுவுமாக இருக்க - لقاfلللاوامر)
தமிழக மண்ணில் இருந்து இந்த மண்ணுக்கு வந்த தமது இரத்தத் தின் இரத்தங்கள் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதிய அளவுக்குக் கூட இந்தியத் தமிழ்த் தலைவர்கள் இந்த மக்கள்பால் அக்கறை காட்டிய தில்லை என்பதை அடித்துக் கூறலாம். இன்னுமொரு அம்சம், மலையக மக்களைப் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதியிருப்பது. இன்றைய எழுத் தாளர்கள் பலருக்கு அதுவே புதுமையாகவும் இருக்கலாம். இந்தத் தொகுதியில் உள்ள கதைகளை எழுதிய மலையக எழுத்தாளர்களில் எத்தனை பேருக்குப் புதுமைப்பித்தனைத் தெரியும் என்பதுகூட ஒரு புதுமையே. இந்த மலையக எழுத்தாளர்களுக்கும் மலையகத்தைப் பற்றி எழுதிய மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மலையக எழுத்தாளர்கள் லயன் காம்பராக்களில் வசித்து, அந்தச் சிறிய எட்டடி வீட்டுக்குள், புகைமண்டலத்துக்கு மத்தியில், குப்பி லாம்பின் வெளிச்சத் தில் தமது ஆக்கங்களைப் படைத்தனர். மற்றவர்கள், தோட்டங்களில் அல்லது நகரங்களில் ஆசிரியர்களாகவோ, வேறு தொழில் புரிந்தோ வந்தவர்கள். இதுவும் ஒரு சிறிய வித்தியாசமே.
“உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற சிறுகதைத் தொகுதியின் மற்று மொரு சிறப்பு, இதில் இருக்கும் ஒரு பின்னிணைப்பு. இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள், தேயிலைத் தூரில் மாசி இருந்தது என்று கூறி ஏமாற்றி அழைத்து வரப்பட்டார்கள் என்பது செவிவழி அறிந்துகொண்ட விஷயம். ஆனால் இதற்கு எழுத்து மூலமான ஆவணங்கள் இருந்ததில்லை. இத்தகைய ஆவணம் ஒன்று இதில் இணைக்கப்பட்டுள்ளது. 1922ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி திருச்சிராப்பள்ளி சிலோன் லேபர் கமிஷனர் எச்.எஸ். நிக்கல்சன் எழுதி வெளியிட்ட இலங்கைக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, இன்னமும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு சமுதாயத்தின் கதையைக் கூற இந்த ஆவணத்தைத் தவிர வேறு என்ன வேண்டும்!
ஏறக்குறைய 150 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டுக்காக உழைக்கவே பிறந்தவர்கள் மலையக மக்கள். அவர்களுக்காக

Page 8
12 துரைவி வெளியீடு
'உழைக்கப் பிறந்தவர்கள் எனப் பலர் தம்மைக் கூறிக் கொள்ளலாம். ஆனால், ஒரு உண்மை இருக்கிறது. இந்த மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டுமென்பதற்காக மலையக எழுத்தாளர்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், உழைக்கப் பிறந்த இந்த மக்களுக் காக உழைக்கப் பிறந்தவர்கள். அவர்களின் எழுத்துக் களை நூலுருவில் கொணர்ந்து, மலையக மக்களின் சீரும் சிறப்பும் உலகில் உலா வரச் செய்கின்றவர்கள் இருக்கிறார்களே; அவர்களை நாம் எப்படி அழைப் பது? எழுத்தாளன் தனது எழுத்துக்களைப் பிரசவித்ததுடன் நின்று கொள் கிறான். ஆனால், அந்தப் புத்தகத்தை நூலுருவாக்கியவர்களின் பணி எத்தகைய மகத்தானது? பணம் எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால், நல்ல காரியங்களுக்காகச் செலவிடும் மனம் வேண்டும். அந்த மனம் உள்ளவர் 'துரைவி பதிப்பக உரிமையாளர் துரை விஸ்வநாதன். உழைக்கப் பிறந்தவர்களுக்காகவும் உழைக்கப் பிறந்தவர்களைப் பற்றி எழுதிய உழைப்பாளிகளுக்குமாக உழைக்கப் பிறந்தவர் அவர். மலையக மக்களை அடக்கி ஆண்ட துரைமார்கள் எத்தனையோ பேர். ஆனால், அவர்களின் பெயர்களுக்கு முன்னால் சின்னதுரை, பெரியதுரை என்ற அடைமொழிகள் இருந்தன. ஆனால், திரு. விஸ்வநாதன் அவர்களும் ஒரு துரையே. உழைக்கும் மக்களுக்காக எழுதும் எழுத்தாளர்களின் அரும்பு களை ஒருகூடைக் கொழுந்தாக தருவதற்கு யாரால் முடியும்?
உலகத் தமிழ் இலக்கியம் பல கிளைகளைக் கொண்டது. இந்திய இலக்கியம், ஈழத்துத் தமிழிலக்கியம், மலேசியத் தமிழிலக்கியம், இப்போது, லண்டன், பாரிஸ், கனடா, அவுஸ்திரேலியா என்று அந்தந்த நாடுகளில் எல்லாம் உருவாகும் தமிழ் இலக்கியங்கள். இதில் மலையக இலக்கியத்தின் பங்கும் உண்டு. மலையகச் சிறுகதைகள், பாலாயி, உழைக்கப் பிறந்தவர்கள் என்ற மும்மணிகளைத் தமிழன்னையின் பாத கமலங்களில் சமர்ப்பித்திருக்கும் துரைவி பதிப்பகத்தினர் பெரும் பாராட்டுக்குரியவர்களே.
பி. முத்தையா
செய்தி ஆசிரியர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 22. O9. 1997

மூன்று நூல்கள் நான்கு பார்வைகள் 13
தொடர்கதையாகும் இலக்கிய ஆய்வுகளும் புதிய வரலாற்று பதிவுகளும்
இலக்கிய ஆய்வு அரங்குகள் அடிக்கடி இடம் பெறுவது நமது கலாசார வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளமாக அமையும். இத்தகைய நிகழ்வுகளைக் கொழும்பில் அடிக்கடி நடத்திவரும் விபவி மாற்றுக் கலாசார மையம், தமிழ்க் கதைஞர் வட்டம், திருமறைக் கலா மன்றம் என்பன பாராட்டுதற்குரியன. இத்தகைய ஆய்வரங்குகளில் பல நல்ல ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்பது மிகையல்ல; குறைபாடு களும், முரண்பாடுகளும் கணிசமான அளவு இடம் பெற்றதாக அறிஞர் பலர் முகம் சுழித்துக் கொண்டதும் உண்மைதான். -
கடந்த நான்கு தசாப்தக் காலமாகவே குறிப்பிட்ட ஒரு பெயர்ப் பட்டியலே திரும்பத் திரும்பச் சமர்ப்பிக்கப்படுகின்ற்து. சிறுகதை, நாவல் மற்றும் சகலவற்றிலும் இந்நிலைதான் என்பது அவர்கள் மனக் குறையாகும். இந்த மாபெரும் தவறு ஏன் நிகழ்கின்றது?
வரலாறு பிழைக்கக் கூடாது; தவறான குறிப்புகள், சில இருட் டடிப்புகள் சரியான வரலாற்றை மண் மூடிப்போகச் செய்யும்; அந்தக் கைங்கரியம் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. 'பல எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் விடுபட்டுப் போவதற்கு அவர்களுடைய சிறுகதைத் தொகுதிகள் வராததே காரணம்' என நொண்டிச் சமாதானங்கள் வேறு தரப்படுவது நகைப்புக்கிடமானதாகும்.
ஆய்வு என்பது கடின உழைப்பின் பெறுபேறாகும். பிரமிட்டுகள் பற்றிய திகில்மிகு ஆய்வுக் கதைகள் 'ஆய்வின் மகிமைக்குச் சான்றாகும். ஆழமாகவும், அகலமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படாவிட்டால் உயர் பலன் அடையமுடியாது.
‘வடகிழக்கு முதல், கொழும்பு, மலையகம் மற்றும் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் மாவட்டங்கள் தோறும் எங்கெங்கு தமிழ்ப் படைப்புகள் தோன்றுகின்றனவோ, அவற்றின் ஒட்டுமொத்தமான ஒரு கோர்வையே ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.

Page 9
14 துரைவி வெளியீடு
பிரதேசத் தனித்துவம், மக்களின் ஜீவிதத் தன்மை, பேச்சு மொழி அந்தந்தப் பிரதேசத்திற்குரியதாகும். இப்படிப் பல தனித்துவங்களின் ஒட்டு மொத்தமான வடிவமே தமிழ் இலக்கியம் எனக் கூறும் பேரா சிரியரின் கூற்று ஒரு விசாலமான பார்வையின் வெளிப்பாடாகும். பல எழுத்தாளர்களின் ஆக்கங்களுடன் பிரதேச ரீதியான தொகுப்புகள் சரியான வரலாற்றுப் பதிவுகளுக்கு வழி சமைக்கும்.
இலக்கிய ஆர்வலர் துரை விஸ்வநாதன் இத்தகைய சரியான திசையில் அடித்தளம் பதித்துள்ளார். 33 படைப்பாளிகளின் கதைகளைத் தொகுத்து மலையகச் சிறுகதைகள் என வெளியிட்டுள்ளார். அனைத்தும் மலையகப் படைப்பாளிகளினால் எழுதப்பட்ட மலையகக் கதைகள், எழுத்தாளர் பற்றிய குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் தோறும் இவ்வாறான தொகுதிகள் தோன்றுமானால் எமது ஆய்வாளர் களின் பணி சுலபமாகிவிடும். எப்பொழுதும் இருட்டடிப்புகளுக்கு உள்ளாகும் பல படைப்பாளிகள் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து தவிர்க்கப் பட மாட்டார்கள். ஆய்வாளர்கள் கூட இத்தகைய இரண்டொரு நூல் களைத் தம் வசம் வைத்துக் கொள்வதன் மூலம் 'ஆய்வு' என்ற பெயரில்
ஒரு அசுர சாதனை புரிந்துவிடலாம்.
கே. விஜயன்
' வீரகேசரி - கலாசாரம் O9. O5. 1997
(இந்தக் கட்டுரை “உழைக்கப் பிறந்தவர்கள்” நூலின் பின்னிணைப்பில் சேர்க்கப்படாமல் தவறுதலாக எங்களையும் மீறி விடுபட்டுப் போனது. இதற்காக வருந்துகிறோம். எனினும் வாசகர்களை இக்கட்டுரை சென்றடைய வேண்டும் என்ற ஆவலில் இங்கு மீளப் பதிவு செய்துள்ளோம்.)
மலையக இலக்கியத்தின் மலர்விற்கு
s O o உரமாகும் துரைவியின் மூன்று நூல்கள்
மலையகப் படைப்பிலக்கியத் துறையில் ஒரு புதிய சகாப்தம் மலர்கிறது என்ற உண்மையை துரைவி பதிப்பகத்தின் மூலம் வெளி வந்துள்ள மலையகச் சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள், பாலாயி ஆகிய மூன்று நூல்களும் நிரூபிக்கின்றன.
மலையகச் சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரு நூல்களும் மலையக எழுத்தாளர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு

மூன்று நூல்கள் நான்கு பார்வைகள் 15
நூல்களாகும். தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல்களை உள்ளடக்கமாக்கிப் பாலாயி தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மலையகச் சிறுகதைகள் தொகுப்பைப் பற்றி 9.5.97 வீரகேசரியில் ‘தொடர்கதையாகும் இலக்கிய ஆய்வுகளும் புதிய வரலாற்றுப் பதிவு களும்' என்ற எமது கட்டுரையில் வட-கிழக்கு முதல் கொழும்பு, O60) 6) யகம் மற்றும் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் மாவட்டங்கள் தோறும் எங்கெங்கு தமிழ்ப் படைப்புக்கள் தோன்றுகின்றனவோ அவற் றின் ஒட்டு மொத்தமான ஒரு கோர்வையே 'ஈழத்து தமிழ் இலக்கியம்' என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தை முன் வைத்துச் சரியான வரலாற்றுப் பதிவுகளுக்கு வழிசமைக்கும் விதத்தில் இலக்கிய ஆர்வலர் துரை விஸ்வநாதன் சரியான திசையில் அடித்தளம் பதித்துள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தோம்.
இக்கருத்தினை மீண்டும் இக்கட்டுரையில் நினைவுபடுத்துவதன் நோக்கம் இந்நூல் மலையக இலக்கியத்திற்கு எவ்வாறு ஓர் உந்து சக்தியாகவிருக்கப் போகின்றதோ அதைப் போலவே ஒட்டு மொத்தமான ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு முதுகெலும்பாக விளங்கப்போகின்றது என்ற உறுதியான, பெறுமதியான உண்மையை உணர்த்துவதன் பொருட்டே.
முதல் தொகுதியான “மலையகச் சிறுகதைகள்” 33 படைப்பாளி களின் அறுவடைகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் உள்ளடக்க மாக்கி வெளிவந்து அந்த ஆனந்தத்தை இன்னும் அசை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் 56 படைப்பாளிகளின் நெற்கதிர்களைச் சுமந்து கொண்டு “உழைக்கப் பிறந்தவர்கள்” ராஜநடை போட்டு வந்து விட்டது. தொடர்ந்து “பாலாயி’யும் புன்னகை சிந்துகிறாள்.
56 எழுத்தாளர்களின் கதைகளுடன் வெளிவந்துள்ள உழைக்கப் பிறந்தவர்கள் முன்னதை மிஞ்சுவதுபோலப் பல சிறப்புக்கள் கொண்டது. இத்தொகுப்பில் மலையகப் படைப்பாளிகளின் கதைகள் மட்டுமல்ல, மலையகம் சார்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்ட ஏனைய பிரதேசத்துப் படைப்பாளிகளின் பதினான்கு கதை களும் இடம் பெற்றுள்ளன. ஆக மொத்தமாக இரு நூல்களிலும் 89 படைப்பாளிகளை, கல்மேல் எழுத்து என்பார்களே அதுபோல் அற்புதமான வடிவமைப்புக் கொண்ட நூல்களில் வரலாற்றுப் பதிப்பாக்கி விட்ட இலக்கிய ஆர்வலர் பாராட்டுக்குரியவர். அப்பப்பா அரிய சாதனை இது.
எமது ஈழத்து இலக்கியப் படைப்புகளைப் பற்றிய ஆய்வு அறிக்
கைகள், வெளியிடப்படுகின்ற ஒவ்வொரு வேளையிலும், கிட்டத்தட்ட நான்கு ஐந்து தசாப்த காலங்களாகவே சில குறிப்பிட்ட பெயர்களே

Page 10
16 துரைவி வெளியீடு
கிளிப்பிள்ளைப் பேச்சாக வெளியிடப்படுவதுண்டு. மற்றைய படைப் பாளிகள் அனைவரும் இருட்டடிப்புச் செய்யப்படுவார்கள். மலையக இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இந்த கண்மூடித்தனமான நாடகம் இனிமேல் மேடையேற முடியாது. இந்த இரு தொகுதிகளும் பதிவு செய்துவிட்ட படைப்பாளிகளை யார் இரட்டடிப்புச் செய்ய முடியும். இதுவே இந்த நூல்களின் அரிய சாதனை அதுவே இந்நூல்களின் வரலாற்றுச் சிறப்பு.
மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் தெளிவத்தை ஜோசப் பும் ஒருவர். நான்கு தசாப்த காலம் மலையகப் படைப்புலகில் அவர் உயிர்த் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். அவர் எழுதிய 3 குறு நாவல்களைப் “பாலாயி” நூல் உள்ளடக்கமாக்கிக் கொண்டுள்ளது. இந்திய சஞ்சிகையான கலைமகளில் வெளிவந்த “ஞாயிறு வந்தது என்ற குறு நாவலுடன் மனம் வெளுக்க', 'பாலாயி ஆகிய குறு நாவல் களின் தொகுப்பு பாலாயி நூல். இக்கதைகள் அனைத்தும் மலையக உழைப்பாளிகளின் வாழ்வை உயிரும் உணர்வுமாகச் சித்தரிப்பவை.
துரைவி பதிப்பகத்தின் இம்மூன்று நூல்களும் மலையகப் படைப் பாளிகளை எழுத்துலகில் வீறுடன் செயல்படச் செய்ய உந்து சத்தியாகும் என்பதில் கருத்து வேறுபாடிருக்க முடியாது.
உழைக்கப் பிறந்தவர்கள் தொகுதியின் பின்னிணைப்பாகப் பத்திரிகைகளும், சில அறிஞர்களும் மலையகச் சிறுகதை நூல் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு வித்தியாச மான செயல்முறைதான். மலையகச் சிறுகதைகள் தொகுப்புப் பற்றிப் பிரசுரமாகியுள்ள, 'ஆகா, ஓகோவெனப் புகழாரம் சூடப்பட்ட அக்கருத்துக் களை விட, அந்நூலின் வரலாற்றுப் பெறுமதி பற்றி வீரகேசரி கலாசாரப் பிரிவில் கட்டுரை வடிவில் வெளியான கருத்துக்கள் இடம் பெறாமல் போனது வருந்துதற்குரியது.
‘மலையகச் சிறுகதை இலக்கியம் தொடர்பான ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கு மூல ஆவணமாகவும் மலையகச் சிறுகதைகளின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் ஒர் ஊடகமாகவும் இந்நூல்கள் நிலைத்து நிற்கும்' என்று நூலின் பதிப்பாளர் துரை விஸ்வ நாதன் பதிப்புரையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் எமது நிலைப்பாட்டை மேலும் வலியுறுத்துகின்றன.
கே. விஜயன்
வீரகேசரி - கலாசாரம்
12. O9. 1997


Page 11
‘துரைவியின் வெளியீ
1.
மலையகச் சிறுகதை
- 33 மலையக எழுத்தாளர்களி
உழைக்கப் பிறந்தவர் -55 எழுத்தாளர்களின் மலையக்
LJưTẩu Tử#" தெளிவத்தை ஜோச - மூன்று குறுநாவல்க
d
மலையகம் வளர்த்த தமிழ்
- சாரல் நாடனின் கட்டுை
5 சக்தி பாலையாவின் கவிதை
- சகதி பாலையா
 

டுகள்
கள்
:ன் கதைகன்
ர்கள்
கக் கதைகள்
(ஆச்சில்)
ரகள்
கள் (அச்சில்)