கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்

Page 1
g56)6) T8 தண்ணிர் மறி
மலையகத் த தேசிய இறைமை மூன்றாமுலகி ஆக்கிரமிப்பு 3
நாடோடிகள்,
 
 

க்கலை ப்புத் திட்டம்:
மிழர் மீதான D அத்துமீறலும் lன் மீதான அபிவிருத்தியும்

Page 2

முதல் படி
புதிய உலக ஒழுங்கின் கீழ் உலகம் பங்கிடப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டமிது. குறிப்பாக 90களின் ஆரம்பத்திலிருந்து இது புது வீச்சுக் கொண்டு செயற்பட ஆரம்பித்திருக்கிறது.
உலகமயமாக்கல் அல்லது பூகோளமயமாக்கல் என்கிற பெயருடன் இந்தக்கபட நாடகம்
அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உலகம் ஒரே கிராமம் அல்லது பூகோள கிராமம் என்ற சொற்றொடர்கள் எங்களுடைய அறிவுசீவிகளின் காலை வாரிவிட்டுள்ளது. தகவல் தொடர்பாடலின் திறந்த தன்மை, எல்லோருக்கும் எல்லாவற்றிற்குமான வாய்ப்பு என்ற சொற்றொடர்களுக்குப் பின்னால் உள்ள அரசியலை இனங்கண்டு கொள்வதில் அவர்கள் தவறிழைத்து விடுகிறார்கள்.
சுயமொழியிலான கல்வி ஒதுக்கப்பட்டு உலக வங்கியின் அனுசரணையுடன் ஆங்கில மொழி மூலமான கல்வி பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டாயிற்று. இதனுாடாக இரு முக்கியமான விடயங்கள் நடைபெறுகின்றன. மேற்கு தனக்குத் தேவையான அறிவுசீவிப்படையை இலகுவாக உருவாக்கிக் கொள்கிறது. இரண்டாவது எல்லோருக்குமான கல்வி என்பது உயர் அல்லது மத்திய உயர் தரத்தினருக்கானதாக மாற ஆரம்பித்திருக்கிறது. அடிப்படைக் கல்வியறிவில் தேய்வு ஆரம்பிக்கிறது. இது மேற்கிற்குத் தேவையானபடி எமது சிந்தனையை வடிவமைக்கிறது. நாங்கள் எதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி அவர்கள் தீர்மானிக்கிறார்கள். சுயசார்பும் எங்களுடைய உண்மையான தேவைகளும் இதில் அடிபட்டுப் போய்விடுகின்றன. நோம் சொம்ஸ்கி ஒரு முறை குறிப்பிட்டதை நினைவு கூர்தல் இங்கு பொருந்தும். அவர் குறிப்பிட்டார் ‘சர்வாதிகாரத்தில் மக்களது நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் ஜனநாயகத்தில் அவர்களது எண்ணங்களையே கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுகிறது” இதைப் புரிந்து கொண்டு செயற்படும் ஒரு சூழலை நாம் உருவாக்கியாக வேண்டும்.
பல்கலாசாரம், பல்வகைப்பண்பாடு, பல்வேறு மொழிகளின் இருத்தல், பல்லின மக்கள் தொகுதி இவை எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் ஒரே சிந்தனை முறையின் கீழ் கொண்டு வருவதே இந்தப் பூகோள மயமாக்கலின் அடிப்படை. அதன் அடிப்படை அம்சமே ஒரே சீரான பண்பாட்டை. உலக மயமாக்கப்பட்ட பண்பாட்டை எங்கும் எதிலும் உருவாக்குவது தான். ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டை அல்லது ரசனையை அல்லது சுவையை இன்னும் சொல்லப் போனால் தேவையை உருவாக்கி அதன் மூலம் உலக மூலதனத்திற்கான உலக சந்தையை உருவாக்குவது தான் இதன் உள்நோக்கம் சுதேசியம் என்ற பேச்சுக்கே இடம் எதுவும் இருக்கப் போவதில்லை அங்கு.

Page 3
சிறீலங்கா போன்று 1977இலேயே தாராளமயப் பொருளாதாரக் கொள்கையூடாக திறந்து விடப்பட்ட ஒரு நாட்டுக்கு இறுதியில் மிஞ்சுவதற்கு எதுவும் இருக்கப் போவதில்லை.
1977இல் பதவிக்கு வந்த ஐ.தே.க அரசாங்கம் உருவாக்கிய மகாவலித்திட்டம் தோல்வியடையும் என்று அதற்கு அனுசரணையாளராக இருந்த இஸ்ரேலுக்கு முன்னரேயே தெரிந்திருந்தது. அவர்கள் எதிர்பார்த்ததும் அதைத் தான். அவர்களுடைய தேவை முழுவதும் மூன்றாம் உலக நாடுகளை தங்கியிருக்கும் நாடுகளாக்குவது தான் மகாவலித் திட்டம் ஒரு குறிக்கப்பட்ட கால அட்டவணையின்றி நீண்டு செல்லும்படியாயும் அதன் மூலம் இத்திட்டத்திற்கான கடனை உலக வங்கியிடம் மென்மேலும் பெற்று நாட்டின் கடன்சுமையை அழுத்தி முற்று முழுதாக கையேந்தி நிற்கும் கட்டத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தை இழுத்து வருவதன் மூலம் அவர்கள் கையில் எமது கழுத்துக்கான சுருக்குக் கயிற்றை தயாரித்தளித்த திட்டம் தான் இது. மிகக்கவனமான முறையில் அமெரிக்க, இஸ்ரேல் அரசுகளால் இதற்காகவே இந்நோக்கத்தை அடையும் வகையில் உலகவங்கி மூலமாக முன்மொழியப்பட்டு நுணுக்கமாக திட்டமிடப்பட்டிருந்த நயவஞ்சக சதித்திட்டம் இதுவாகும்.
உலக வங்கியின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் மக்களுடைய நலன்சார்ந்தவை என்று நாங்கள் நம்ப வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் ஏற்கெனவேயான உலக நாடுகளின் அனுபவங்களிலிருந்து நாங்கள் எந்த அனுபவத்தையும் பெற்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். எமது பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் அது பற்றிய கருத்தாடல் எதுவும் உருவாகிவிடக் கூடாது என்பதில் அக்கறையாயிருக்கிறார்கள்.
இப்போது இந்தக் கொத்மலைத் திட்டம் பற்றி யாரும் எதுவும் அறிந்து விடக்கூடாது. எந்த எதிர்ப்பும் கிளர்ந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனம் குவிந்துள்ளது.
அது பற்றி சிறிய சலசலப்பு ஏற்பட்டவுடனேயே அரசாங்கம் மலையக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைத் துாக்கி அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவோம் என்று எச்சரிக்கிறது. பிரச்சினையைத் திசை திருப்பி விடுகிறது.
உண்மையில் சமூக அக்கறையுள்ளோரின் பணி இவற்றை அம்பலப்படுத்தி மக்களை அறிவூட்டுவதே அவ்வகையில் இப்பிரசுரம் கொத்மலைத்திட்டத்தின் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துகிறது. அது உருவாக்கும் இனத்துவ, சூழலியில் பிரச்சினைகளை விளக்குகிறது. உலகமயமாக்கல் எவ்வாறு தனக்கியைவான நிலைமைகளை உருவாக்கத் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது என்பதை எடுத்துரைக்கிறது. மக்களுடைய பிரச்சினைகளை அவர்களுடன் உரையாட ஆரம்பிக்கிறது. அவ்வகையில் இது முதல்படி மட்டுமே.
பா.சிவகுமார்.

தலவாக்கலை தண்ணிர் மறிப்புத் திட்டம்:
மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை
- அத்துமீறலும் மூன்றாமுலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தியும்
மலையகத் தமிழர் தேசிய வாழ்வின் இதயப் பிரதேசமான நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை நகரில் மின்னுற்பத்திக்கான நீர்த்திட்டமொன்றை மேற்கொள்ளும் முயற்சிகள் துரிதமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகையதொரு நீரேந்தியை உருவாக்குவதனால் மலையகத் தமிழ் தேசத்தினரான நாம் ஒட்டுமொத்த இலங்கைத் தீவின் மக்களும் கூட) எதிர்கொள்ளப் போகும் தேச அரசியல், சூழலியல், சமூக வாழ்வியல் பாதிப்புகளை விரிவாக மதிப்பிடுவது உடனடித் தேவையாக உள்ளது.
தண்ணிரைத் தேக்கி வைப்பது இலங்கைத் தீவின் மக்களுக்குப் புதியதல்ல. மழை நீர் வீணாகாது அதைச் சேர்த்து வைப்பதன் மூலம் விவசாயத்திற்கும் மக்களது அன்றாடத் தேவைகளுக்கும் பிரயோசனப்படுத்தும் நோக்கத்துடன் குளங்கள் கட்டப்பட்டன. இயற்கையிலிருந்து கிடைக்கப் பெறும் களிமண்ணையும் கருங்கற்களையும் கொண்டு சூழலை எவ்விதத்திலும் பாதிக்காத, பதிலுக்கு இயற்கைக்கு நன்மையைத் தரும் குளங்களை அன்றைய பொறியியலாளர்கள் கட்டமைத்தனர். மண்ணையும், நீரையும், இயற்கையையும் பற்றின ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்த இப்பொறியியலாளர்கள் நிலக்கீழ் நீரோட்டத்தை நீண்டகாலத்தில் பாதுகாத்திடும் வகையில் குளங்களை வடிவமைத்தனர். அதனால் தான் இன்று வரையில் அக்குளங்கள் நீடித்து நிலைத்திருந்து மக்களுக்குப் பயன் தருகின்றன. இது மக்கள் நலன்சார் நீரபிவிருத்தித் திட்டங்களாகும்.
காலனிய ஆக்கிரமிப்புடன் இயற்கையை பாதுகாத்திடும் சுதேச முறையுடன் கூடிய மக்கள் நலன்சார் நீரபிவிருத்தித் திட்டங்களுக்கு சவக்குழி வெட்டப்பட்டது. மழை நீரைச் சேகரிக்கும் முறை கைவிடப்பட்டதனால் விவசாயத்திற்கும் மக்கள் வாழ்வுக்கும் அவசியமான நீர் கிடைக்கப் பெறாது போயிற்று.
19ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் ஆங்கிலேயர் தமது தேவையை முதன்மைப்படுத்தி இலங்கையில் மின்சாரத்தை அறிமுகப்படுத்தினர். 1940களில்

Page 4
லக்ஷபான நீர்மின் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் அதிகார வர்க்கத்தினரின் தேவைகளுக்கும் நகரங்களுக்குமே வழங்கப்பட்டது.
லக்ஷபான நீர்மின் திட்டத்துடன் நீரபிவிருத்தியும் மின்னுற்பத்தியும் இணைக்கப்பட்டது. மக்களது அடிப் படைத் தேவைகளுக்கும் விவசாயத்திற்குமான நீரபிவிருத்தி என்பதிலும் விட மின்னுற்பத்திக்கான நீரபிவிருத்தி என்பதாக இது மாறியது.
1970 இல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ தலைமையிலான கூட்டரசாங்கம் மின் விநியோகத்தை விரிவாக்கும் நோக்குடன் நீரேந்திகளை நிர்மாணிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது. இதற்கான பெருந்தொகை நிதியை உலக வங்கி கடனாக வழங்கியது. இவ்வாறு மின்னுற்பத்திக்கான நீரேந்திகளை நிர்மாணிக்க உலக வங்கி கடன் வழங்க முன்வந்ததன் உள்நோக்கம் அடுத்து வந்த காலங்களில் வெளிப்பட்டது. -
1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கையை உயர்த்திப் பிடித்தபடி ஆட்சியேற்ற ஜே.ஆர். அரசாங்கம், பன்னாட்டு முதலாளிகளது சுதந்திர வர்த்தக வலய உற்பத்தித் தேவைகளைக் கருத்திற் கொண்டு கூடியளவு மின்சாரத்தை மிக விரைவாக வழங்கும் நோக்குடன் நீரேந்திகளை மிக விரைவாக நிர்மாணித்து முடித்தது. உண்மையில் இந்நீரேந்திகளை உரியமுறையில் நிர்மாணிப்பதற்கான நிர்மாண காலம் (construction period) 30 ஆண்டுகள் என பொறியிலாளர்களால் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆறே வருடங்களில் நீரேந்திகளை நிர்மாணித்து மின் விநியோகத்தை ஆரம்பித்தது. இத்தனை பாரிய நீரேந்திகளை இத்தனை குறுகிய காலத்தில் நிர்மாணித்து முடிப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. இவ்வாறு துரிதப்படுத்தியதில் உலக வங்கியின் திறந்த பொருளாதார தேவைகளும் பிரதானமாக அடங்கியிருந்தன.
மண்ணின் பசுமைத் தன்மையை, மரங்களதும் காடுகளதும் உயிர் வாழ்வை, நிலக் கீழ் நீரோட்டத்தின் நீடித்த இருப்பை, மலைகளின் உறுதியான நிலைத்தலை, மண் சரிவு அபாயங்களைப் பற்றியெல்லாம் அக்கறைப்படாது ஆற்று நீரை
A.

மலைகளுக்கிடையே மறித்து சீமெந்தினால் கட்டப்பட்ட இந்நீரேந்திகளது பாதக விளைவுகள் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதா? ஆற்று நீர் பாய்ந்தோடும் பிரதேசத்திற்கு அண்மிய பகுதிகளெங்கும் பசுமை பூத்துக் குலுங்கும். மக்களும் தமது தண்ணிர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். உயிரினங்களுக்கான தண்ணி அதிலிருந்து கிடைக்கும். விவசாயம் செழிப்புறும். ஆறுகள் உயிர் வாழ்வது காடுகளுக்கு அவசியம். காடுகள் உயிர்வாழ்வது மழை பொழிந்து மண் குளிர்வதற்கு அவசியம்.
இங்கோ நடந்தது என்ன? ஆற்று நீரை மறித்து பெரும் விஸ்தீரணத்தில் நீரேந்திகளை உருவாக்கியதால் கிளைத்தோடிய சிற்றாறுகள் மறித்தன. நீரூற்றுகள் காய்ந்து போயின. மழைகளிலிருந்து வழிந்தோடிய நீர் அணைகளில் மறிக்கப்பட்டதால் அந்நீரால் குளிர்ந்த காடுகள் உயிரிழந்தன. பசுமை அழிந்தது. நீரேந்திகள் பெரும் விஸ்தீரணமுடையனவாக இருப்பதால் நீரின் மேற்பரப்பில் நீர் ஆவியாவது அதிகமாய் நிலவுகிறது. அதிலும் சீமெந்து அணைகள் வெயில் காலத்தில் கொதிப்படைந்து நீர் ஆவியாவதை மேலும் அதிகமாக்குகிறது. நிலக்கீழ் நீரோட்டம் வரட்சியடையத் தொடங்கியது. சிற்றாறுகள் அழிந்து போனதால் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அவதியுறத் தொடங்கினர்.
இன்றைய கடும் வரட்சிக்கும் மழையின் மைக்கும் அடிப் படைக் காரணங்களிலொன்று இயற்கையை உதாசீனம் செய்து ஏற்படுத்தப்பட்ட இப்பாரிய நீரேந்திகளாகும்.
இந்நீரேந்திகளை ஸ்தாபிக்கும் காலகட்டத்தில் இனி இலங்கை சிங்கப்பூர் போல் மின்சாரத் தீவாகும் என்றும், இந்தியாவுக்கும் நாம் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யலாம் என்றும் அன்றைய ஆட்சித் தலைவர் ஜே. ஆர். முழங்கினார்.
ஆனால் இன்னும் 50வீதமான இலங்கை மக்கள் மின்சாரத்தை அறியாதவர்களாக இருளில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. У
இத்தகைய பாரிய நீரேந்திகளை உருவாக்கி பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்தும் மக்கள் இருளில் வாழும் நிலையின் காரணம் என்ன? அடிப்படையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதன் நோக்கமே இங்கு கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதொன்றாகவுள்ளது.

Page 5
இலங்கையில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு 1250 மெகா வோட்ஸ் ஆகும். இதில் நீர் மின்சாரம் 950 மெ.வோ. அனல் மின்நிலையங்களால் கிடைக்கப்பெறும் மின்சாரம் 300 மெ. வோ. இன்னும் 100 மெ.வோ. மின்சாரத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மொத்த மின்னுற்பத்தியில் 33 வீதமே மக்களுக்காக வழங்கப்படுகிறது. மிகுதி மின்சாரம் பன்னாட்டு உற்பத்தித்துறைக்கும், வெளிநாட்டாரை முதன்மைப்படுத்திய உல்லாசப்பயண மற்றும் ஆடம்பர நடவடிக்கைகளுக்கும். அதிகார வர்க்கத்தினரின் கேளிக்கை நிலையங்களுக்கும், வியாபார நிறுவனங்கள், தொழில் நிலையங்கள் போன்ற இன்ன பிறவற்றிற்கும் செலவிடப்படுகிறது.
எனினும் மின்சார நெருக்கடியாலும் மின்கட்டண உயர்வின் சுமைகளாலும் அழுத்தப்படுபவர்கள் பொது மக்களே.
கிராமிய மக்களும் பெருந்தோட்டப் பகுதி மக்களும் மின்சாரத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். சில தோட்டங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டாலும் மக்களின் வெளிச்சம் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மிகவும் வலுக்குறைந்த மின்சாரமே வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் மண்ணெண்ணெய் விளக்குடன் தொடர்ந்தும் வாழ நேர்ந்துள்ளது.
அந்நிய மூலதன விஸ்தரிப்பு தேவைகளை குறைந்த காலத்தில் சிறப்பாக நிறைவேற்றி வைப்பதற்காக உள்ளூர் மக்களின் இயற்கையைச் சூறையாடி சொந்த மக்களை வதைப்பதே இதுநாள் வரையிலான மின்னுற்பத்தியின் வரலாறாய் இருக்கிறது.
இத்தகைய நிலையில் தான் மேல் கொத்மலை எனும் பெயரில் தலவாக்கலை நகரில் நீர் மின் நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலவாக்கலை தண்ணிர் மறிப்புத் திட்டமானது யார் யாரது குறுங்கால நீண்டகால நலன்களைச் சுமந்துள்ளது? யார் யாரெல்லாம் இதில் கூட்டாளிகளாக செயற்படுகிறார்கள்? இதனால் உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படுபவர்கள் யார்? எனும் கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியவர்களாக இருக்கிறோம்.
(5

தலவாக்கலை தண்ணிர் மறிப்புத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புகள்
கொத்மலை ஆற்றை தலவாக்கலை நகருக்கருகில் மறித்து இந்நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்காக இந்நாட்டின் மிகவும் அழகிய, பசுமைத் தன்மைக்கு புத்துணர்ச்சியூட்டும் ஆறு, நீர் வீழ்ச்சிகளை அவற்றின் தொடக்கத்திலேயே மறித்து, மலைகளைக் குடைந்து சுரங்கக் கால்வாய்கள் அமைத்து அதனூடே அந்நீரை மின்நிலையத்திற்குக் கொண்டு செல்வதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
டெவொன், சென். கிளயார்ஸ், சென். அன்ரூஸ், ரம்பொடை, பூண்டுலோயா, புனா ஆகியனவே இந்நீர் மின் திட்டத்திற்காக திசை திருப்பப்படவுள்ள நீர்வீழ்ச்சிகளாகும். இவற்றில் நான்கு நீர்வீழ்ச்சிகள் இலங்கையின் அதிபிரசித்
நீர்வீழ்ச்சிகளாகும்.
இவ்வாறு இந்நீர்வீழ்ச்சிகளைத் திசை திருப்பி நீரை மின்நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்காக மலைகளைக் குடைந்து 127 கிலோ மீற்றர் நீளமான சுரங்கக் கால்வாய்த் தொகுதி ஏற்படுத்தப்படவுள்ளது. கால்வாய் அமைக்க உத்தேசித்துள்ள மலைகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் 50 வீதமான பிரதேசம் மண்சரிவுக்கு உள்ளாகிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இது மலைகளின் இருப்புக்கே ஆபத்தானதாகிறது.
フ

Page 6
மின்நிலையத்தை அமைப்பதற்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பகுதியானது மண்சரிவுக்கு உள்ளாகும் ஆபத்தைக் கொண்ட பகுதியாகும் என இத்திட்டத்தின் ஆரம்ப முயற்சிகளின் போதே Central Engineering Bureau எனும் அரச நிறுவனம் சுட்டிக்காட்டி அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதன் காரணத்தினாலேயே இப்பகுதியானது மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பான பிரதேசமல்ல என மகாவலி அதிகார சபை அறிவித்து சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் செய்தது. இன்றும் மின்நிலையத்தை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ள பகுதிக்குச் செல்லும் பாதை மண் சரிவுக்குள்ளாவதாக அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடிப்படையிலேயே ஆபத்தான இப்பகுதியில் நீர்த்தேக்கத்தை அமைப்பதனால் பெருமழை காலத்தில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டு அணையே உடைந்து செல்லும் ஆபத்தைக் கொண்டுள்ளது.
மேலும் நீர்த்திட்டத்திற்கு அண்மித்த மலைப் பிரதேசமானது மேற்பரப்பில் நீரை உறிஞ்சி வைத்திருக்கும் மலைத் தொகுதிகளைக் கொண்டதாகும். மலைகளின் மேற்பரப்பில் மண் செறிவாகவும் உட்பகுதிக்குச் செல்லச் செல்ல மண்ணின் செறிவுத்தன்மை குறைவாகவும் காணப்படுகிறது. அதனால் கிடைக்கப்பெறும் நீரில் பாரியளவு நீரை மலைகளின் மேற்பரப்புத் தொகுதியே சேமித்து வைத்திருக்கிறது. இதனால் இப்பகுதியில் வளரும் தாவரங்கள் அதிகளவு நீரை கொண்டுள்ள மண்ணிலேயே வளரும் இசைவாக்கத்தைக் கொண்டுள்ளன. நீர் வீழ்ச்சிகளை சுரங்கக் கால்வாய் மூலமாக நீர்த்தேக்கத்திற்கு திருப்புவதால் நீர்வீழ்ச்சிகளினால் மேற்பரப்பில் கிடைக்கப்பெறும் நீர் கிடைக்காது போய் மலைகளின் மேற்பரப்பு மண் நீரின்றி காய்ந்து போகும். அது மாத்திரமின்றி மலைகளின் வழிந்தோடும் நீர்ப்பாதைகள் காய்ந்து போய் நிலக்கீழ் நீரோட்டமும் வரண்டு போகும். இதனால் இப்பகுதிகளில் தளைத்திருக்கும் மரஞ்செடி கொடிகள் படிப்படியாக காய்ந்து போய் பசுமை அழிந்திடும். இதுயாவும் தம் பங்கிற்கு மழையின்மையையும் வரட்சியையும் ஏற்படுத்தும்.
கொத்மலை ஆற்றை தொடக்கத்திலேயே மறிப்பதால் அதிலிருந்து கிளைத்திடும் சிற்றாறுகள், பீலிகள், ஓடைகள் அழிந்துபோக, அவற்றால் பயன்பெற்ற மக்களும் உயிரினங்களும் பெருந்தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே தலவாக்கலை தண்ணீர் மறிப்புத் திட்டத்தினால் மின்சாரத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது கற்பனையானதாக அமைவதுடன் ஆக்கிரமிப்பு அபிவிருத்தியாளர்களின் வெறித்தனமான மின்சாரத் தேவைக்கு வளமான ஆறுகளை மேலும் மேலும் பலியிடுவதாகத்தான் அமையும். ஈற்றில் அந்நிய முதலீட்டாளர்களிடம் மின்சாரத்தை மாத்திரமல்ல குடிப்பதற்கான தண் ணிரையும் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும். இதையும் ஆக்கிரமிப்பாளர்கள் கருத்திற் கொண்டு தான் தண்ணீரை தனியார் மயமாக்கிடும் திட்டத்தையும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நீர் வீழ்ச்சிகளிலிருந்து தண்ணீர் கீழே வீழ்ச்சியுறுகையில் அதிலிருந்து சிதறும் நீர், பனிப்படலம் போல் அதைச் சுற்றியுள்ள பகுதியில் பரவுகிறது. தொடர்ச்சியாக நீர் பனிப்படலம் போல் காற்றில் கலப்பதால் நீர்வீழ்ச்சிகளை சுற்றியுள்ள பகுதி குளிர்ச்சியாகவும் ஈரப்பதனுடையதாகவும் இருக்கிறது. சூழலியல் விஞ்ஞானத்தில் இத்தகைய பிரதேசம் நீர்வீழ்ச்சியின் பனிப்படலப் பிரதேசம் (Spray zone) என அழைக்கப்படுகிறது. இந்த பனிப்படலப் பிரதேசம் மிகவும் சிறிய பரப்பளவில் இருந்தாலும் கூட இந்தப் பகுதியின் சிறப்புத் தன்மை காரணமாக இப்பிரதேசத்திலுள்ள தாவரங்களும் உயிரினங்களும் ஏனைய பகுதிகளில் காணக்கிடைக்காத விசேஷ இலட்சணங்களைக் கொண்டிருப்பதுடன் விசேஷ மரபணுக்களையும் கொண்டுள்ளன. நீர்வீழ்ச்சிகளை சுரங்கக் கால்வாய் மூலமாக நீர்த்தேக்கத்திற்கு திசைதிருப்பும் நடவடிக்கையால் நீர்வீழ்ச்சிகளினால் உருவாகும் பனிமூட்டம் இல்லாது போய் இப்பனிப்படலப் பிரதேசமும் அதன் விசேஷ தன்மைகளும் அழிந்து போகும்.
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத் திட்டத்தினால் ஏற்படவுள்ள பாரிய சூழலியல் பாதிப்பு குறித்து மத்திய சூழலியல் அதிகார சபையினால் சுட்டிக்காட்டப்பட்டு 1995இலேயே இத்திட்டம் கைவிடப்பட்ட திட்டமாகியது. எனினும் இலங்கை மின்சார சபையானது இத்திட்டம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சூழலியல் அமைச்சுக்கு முறையீடு செய்ததையடுத்து இத்திட்டம் குறித்த விரிவான மதிப்பீட்டைச் செய்வதற்கான நிபுணத்துவக் குழுவொன்று சூழலியல் அமைச்சின் செயலாளர் சிசில் அமரசிங்கவினால் நியமிக்கப்பட்டது. விசேட நிபுணர்கள் அடங்கிய இக்குழுவானது பல்வேறு நிபுண்த்துவ பிரிவினரதும் மக்களதும் கருத்துகளைப் பெற்று விரிவான தேடலை நடாத்தி தனது தீர்ப்பை வழங்கியது.
")

Page 7
இக்குழுவின் தீர்ப்பானது மேல்கொத்மலை நீர்த்திட்டத்தை ஆரம்பிக்க அனுமதிக்கக் கூடாது என்பதாயிருந்தது.
மீளவும் இத்தீர்ப்பை எதிர்த்து இலங்கை மின்சார சபை சூழலியல் அமைச்சகத்தை அணுகியது. இம்முறை அமைச்சின் செயலாளராக இருந்தவர் எவ்வித பரிசீலனையும் செய்யாது திட்டத்தை ஆரம்பிக்க அதிகாரம் வழங்கினார். இந்நாட்டின் பலதுறைகளை சார்ந்த நிபுணர்களதும் சூழலியலாளர்களதும் மக்களதும் ஆலோசனையுடன் மத்திய சூழலியல் அதிகார சபையினால் இருமுறை நிராகரிக்கப்பட்ட திட்டமே இன்று அவசர அவசரமாக முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டிற்கு நாளொன்றுக்கு தேவைப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு 1350 மெகா வோட்ஸ் ஆகும். தற்போது 1250 மெகா வோட்ஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. மிகுதி 100 மெகா வோட்ஸ் மின்சாரத்தை மேல்கொத்மலை திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என இலங்கை மின்சார சபை கருதுகிறது.
தலவாக்கலையில் நிர்மாணிக்கப்படவுள்ள நீரேந்தியின் கொள்ளளவு 0.8 மில்லியன் கன மீட்டராகும். அதனால் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யக்கூடிய உயர்ந்த பட்ச மின்சாரத்தின் அளவு 150 மெகா வோட்ஸ் எனக் கூறப்படுகிறது. எனினும் நாளொன்றுக்கு 126 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்கின்ற ரந்தெனிகல நீரேந்தியின் கொள்ளளவு 861 மில்லியன் கன மீற்றராகும். 201 மெகா வோட்ஸ் உற்பத்தி செய்யும் கீழ் கொத்மலை நீரேந்தியின் கொள்ளளவு 172 மில்லியன் கன மீட்டராகும். 120 மெகா வோட்ஸ் உற்பத்தி செய்யும் சமனலவெவ நீரேந்தியின் கொள்ளளவு 278 மில்லியன் கன மீட்டராகும். இப்பிரமாண்டமான நீரேந்திகளுடன் ஒப்பிடுகையில் தலவாக்கலையில் உருவாக்கப்படவுள்ள நீரேந்தி மிகச் சிறியதாகும். எனவே இதனால் எதிர்பார்க்கப்படும் 150 மெகா வோட்ஸ் மின்சாரத்தை நாளொன்றுக்கு உற்பத்தி செய்ய முடியுமா என்பது கேள்வியே.
தலவாக்கலை திட்டத்திற்கு மாற்றுத் திட்டமாக யோக்ஸ்பர்ட் திட்டம் பொருத்தமானது என சூழலியல் அமைச்சின் செயலாளர் சிசில் அமரசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது. இதற்குக் காரணம் யோக்ஸ்பர்ட் திட்டத்தினால் எந்தவொரு நீர்வீழ்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படாததுடன்
1()

இப்பிரதேசத்திலிருந்து ஒரு குடும்பம் கூட வெளியேற வேண்டிய தேவை இல்லாததாலாகும். அவ்வாறே மிகக் குறைந்த சூழலியல் பாதிப்புடன் நாளொன்றுக்கு 100 மெகா வோட்ஸ் மின்சாரத்தை இத்திட்டத்தினால் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அக்குழு சுட்டிக் காட்டியிருந்தது. எனினும் இதை கவனத்திற்கெடுக்காது ஆட்சியாளர்கள் தலவாக்கலை திட்டத்திலேயே ஆர்வமாயுள்ளனர். W S.
2002ம் ஆண்டானது ஐக்கிய நாடுகள் சூழலியல் பாதுகாப்பு ஆணையத்தினால் உலக மலைகளைப் பாதுகாக்கும் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகையதொரு காலகட்டத்திலேயே பூரீலங்கா அரசு மலைகளை குடைந்து சிதைத்திடும் காரியத்தை மேற்கொள்கிறது என்பதையும் இதற்கு ஜப்பான் நவகாலனிய ஆக்கிரமிப்பாளர்கள் பின்னணியில் செயற்படுவதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.
அவ்வகையில், தலவாக்கலை தண்ணீர் மறிப்புத் திட்டமானது வெறுமனே
மின்னுற்பத்தியை மாத்திரம் நோக்கமாகக் கொண்டதல்ல. மின்சார உற்பத்தி எனும்
முகமூடியின் பின்னால் உள்நாட்டு அதிகார தரப்பினதும் அந்நிய சக்திகளினதும்
பல்வேறு ஆக்கிரமிப்புத் திட்டங்கள் விரவிக் கிட்க்கின்றன என்பதே உண்மையாகும்.

Page 8
ஜப்பானின் ஆக்கிரமிப்புத் திட்டமும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் மலையகத் தமிழர் இறைமையும்
1980 - 87 காலப்பகுதியில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தலவாக்கலை தண்ணிர் மறிப்புத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்நீர்த்திட்டத்தை தேசிய சூழலியல் சட்டத்திற்கமைய இலங்கை மின்சார சபை சூழலியல் குறித்து மதிப்பீடு செய்தது. இந்த ஆரம்ப மதிப்பீட்டிற்கான கடனை மேற்படி ஜப்பானிய நிறுவனம் வழங்கியது.
தலவாக்கலை தண்ணிர் மறிப்புத் திட்டத்திற்கான மொத்த செலவு 38 கோடி அமெரிக்க டொலர்களாகும். இதில் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் 29 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கச் சம்மதித்துள்ளது. 10 ஆண்டுகள் கழித்து 30 ஆண்டுகளுக்குள் இக்கடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
மலையகப் பிரதேசத்தில் நீரேந்தி அமைப்பதால் ஜப்பான் கொண்டுள்ள உண்மையான நலன்கள் என்ன? இலங்கை மக்களுக்கு மின்சாரம் கிடைக்கப் பெறுவதில் ஜப்பான் அந்தளவு கரிசனை கொண்டுள்ளதா?
12

உலக வங்கியின் ஆலோசனைக்கமைய இலங்கை மின்சார சபையை நான்கு கம்பனிகளுக்கு விற்று மின்சாரத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மைப் பங்கு அமெரிக்க நிறுவனங்களுக்கும் அடுத்தது ஜப்பானிய நிறுவனத்திற்கும் செல்கிறது. இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதுடன் இலங்கையின் மின்னுற்பத்திக்கு இத்தனியார் நிறுவனங்களே உடமையாளர்களாகவும் ஆகிறார்கள். மின்சாரத்தையும் எரிபொருளையும் யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள். இலங்கையின் அனைத்துச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் வல்லமை உடையவர்களாக இவர்கள் இருக்கப் போகிறார்கள். இவர்கள் இலங்கையைப் பிரதேச வாரியாகப் பிரித்துக் கொண்டு மின் விநியோகத்தில் இறங்கியுள்ளார்கள். தற்போதைக்க்ே ASLOM எனும் அமெரிக்க நிறுவனம் வடமாகாணத்திற்கான மின்சார வழங்கலைப் பொறுப்பேற்று யாழ்ப்பாணத்தில் கட்டுமானப் பணிகளையும் ஆரம்பித்தும் விட்டது. மின்சாரத்தைக் கொண்டு செல்வதை முன்னோடியாகக் கொண்டு குறிப்பிட்ட பிரதேசத்தில் தமது அதிகாரத்தை நிறுவுவதே இவர்களின் நோக்கமாயுள்ளது.
இலங்கை மின்சார சபையானது உலக வங்கியின் விருப்பத்திற்கமைய 4 அந்நிய தனியார் கம்பனிகளின் உடமையாயுள்ளது. இக்கம்பனிகளே இலங்கை மின்சார சபையை இயக்குகின்றன. யோக்ஸ்பர்ட் திட்டத்தை பின்தள்ளி தலவாக்கலை திட்டத்தை முன்னெடுப்பதில் இவர்களின் நீண்ட கால நோக்கங்களும் அடங்கியுள்ளன.
1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கை அமுலாக்கப்பட்டதுடன் அமெரிக்கா அடங்கலான ஐரோப்பிய நாடுகளே சுதந்திர வர்த்தக வலையங்களில் பெரிதும் முதலீடு செய்தன. இதனுடன் ஒப்பிடுகையில் ஜப்பான் மற்றும் கொரிய முதலீடுகள் குறைவானதே. 2005 உடன் ஆடைத் தொழிற்சாலைக்கான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் வேறு திசை நோக்கி தமது கவனத்தைத் திருப்பி வருகின்றனர். உலகமயமாதல் எனும் ஏகாதிபத்திய கொள்கைக்கமைய புதிய உற்பத்தி, புதிய பிரதேசம், புதிய சுரண்டல் முறைகள் என வியூகம் வகுக்கின்றனர்.
வடக்கு கிழக்குப் பிரதேசமானது சுரண்டல் தளத்தில் அந்நிய ஊடுருவல் நிகழாத புத்தம்புது பிரதேசமாக இருக்கிறது. இதை நோக்கி உலக வங்கியினதும்
13

Page 9
அமெரிக்கா அடங்கலான ஐரோப்பிய நாடுகளதும் கவனம் குவிந்துள்ளது. வடக்கு கிழக்கு பிரதேசத்தில் “சமாதானத்தை’ ஏற்படுத்தி தமது சுரண்டல் திட்டங்களை அமுலாக்குவதே அவர்களின் தீவிர எத்தனிப்பாயுள்ளது. ஜப்பானின் புதிய மூலதன முயற்சிகள் மலையகப் பிரதேசம் நோக்கிக் குவிந்துள்ளது. பரந்த நிலப்பிரதேசத்தையும், செறிவான நிலக்கீழ் கனிம வளங்களையும், மலிவு விலையில் உழைப்புச் சக்தியை விற்கும் பெருந்தொகை தொழிலாளர் படையையும் கொண்டுள்ள மலையகப் பிரதேசத்தை தமது புதிய முயற்சிகளுக்கு உட்படுத்துவதே ஜப்பானின் நோக்கமாகும். ஜப்பான் தனது வாகன உதிரிப்பாக உற்பத்திக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் உண்டு.
மறுபுறம் தேயிலை உற்பத்தியானது அதன் உற்பத்தி முறையில் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஆரம்பத்தில் பெருமளவு தொழிலாளர்களை உழைப்பில் ஈடுபடுத்தி, பெருமளவு விஸ்தீரண நிலத்தில் உற்பத்தி செய்து அதிகளவு லாபம் திரட்டப்பட்டது. தற்போது குறுகிய நிலப் பிரதேசத்தில் குறைந்த கூலியையுடைய சிறுதொகை தொழிலாளரைக் கொண்டு பெருமளவு லாபத்தை சம்பாதிக்கும் துறையாக மாற்றமடைந்து வருகிறது. தற்போது வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் வாழும் உயர் குழாத்தினர் செயற்கைத் தன்மையற்ற இயற்கையான பதார்த்தங்களை நாடிடும் போக்கைக் கொண்டுள்ளனர். இவர்களின் நுகர்வுத் தேவைகளை முதன்மைப்படுத்தி உரமோ கிருமிநாசினியோ உபயோகிக்காத organic tea உற்பத்தி செய்யப்படுகிறது. மிகவும் பணம் படைத்தவர்களின் ரசனைக்கேற்ப உற்பத்தி செய்யப்படும் இந்தவகை தேயிலை அதன் உற்பத்தி மதிப்பிலும் விட அதி உயரிய கற்பனை மதிப்புடன் கூடிய பாரிய லாபத்தை ஈட்டித் தருகிறது. கடந்த மே மாதம் லண்டனில் இந்த ரக இலங்கைத் தேயிலை ஒரு கிலோ 16 லட்சம் இலங்கை ரூபாய்களுக்கு விற்பனையாகியுள்ளது இந்தப் போக்கை நிரூபிக்கிறது.
அவ்வகையில் எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு சிறிய பிரதேசங்களில் கூடியளவு லாபத்தை தரும் வகையில் தேயிலையை உற்பத்தி செய்வதே போதுமானதாகிறது. இவர்கள் தமது உற்பத்திக்குப் போதுமான தோட்டங்களை வைத்துக் கொண்டு மிகுதியை விற்பார்கள். இதனால் பாரியளவு தமிழ் தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்.
14.

ஜப்பான் மேற்கொள்ளவுள்ள உற்பத்தி திட்டத்திற்கு மலையக தமிழர் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்கள் அபகரிக்கப்படும். தோட்டத்தில் வேலையிழந்த மக்கள் அனைவரையும் ஜப்பானிய நிறுவனங்கள் உள்வாங்காது. ஆரம்பகால கட்டுமானப் பணிக்கு வேண்டுமானால் மலையகத் தமிழ் தொழிலாளரின் உழைப்பை உபயோகப்படுத்திக் கொள்ளும். கைத்தொழில்துறை உற்பத்திக்கு அடிப்படை கல்வியறிவு தேவை. மலையகத் தொழிலாளர்களோ ஆரம்பக் கல்வி இல்லாதவர்கள். சிங்கள சோவினிச நலன்களை திருப்திப் படுத்துவதற்காகவும் பெளத்த உறவுகளை பலப்படுத்துவது எனும் பெயரிலும் இத்தொழிற்சாலைகளில் சிங்களத் தொழிலாளர்களே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
அவிசாவளை ஆதர்பீல்ட் இறப்பர் தோட்டத்தை அரசுடமையாக்கி தமிழ் தொழிலாளர்களை துரத்திவிட்டு ஒரு பகுதியில் கம்முதாவ வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டனர். தற்போது தோட்டத்தின் மையப்பகுதி அழிக்கப்பட்டு ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் பாரிய சுதந்திர வர்த்தக வலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெயருக்குத்தானும் அப்பகுதிவாழ் தமிழர் ஒருவருக்குக் கூட இந்த கைத்தொழில் வலயத்தில் வேலை வழங்கப்பட வில்லை. இந்த நடைமுறையே ஏனைய இடங்களுக்கும் பிரயோகிக்கப்படும்.
இவ்வாறே கண்டி மாவட்டத்தின் பல்லேகலை தோட்டத்தை மூடி தமிழ் தொழிலாளர்களை வெளியேற்றி உருவாக்கப்பட்ட கைத்தொழில் பேட்டையில் எந்தத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. மாத்தளை நாலந்தா தோட்டத்தில் அமைக்கப்பட்ட கைத்தொழில் பேட்டை, அதைவிட மலையக தோட்டக் காணிகளை சுவீகரித்து உருவாக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் என்பனவற்றால் மலையகத் தமிழரின் வாழ்விடம் அபகரிக்கப்பட்டதேயன்றி எந்தப் பொருளாதார நன்மையும் இதனால் மலையகத் தமிழருக்கு கிடைக்கப்பெறவில்லை.
உலக வங்கியின் ஆலோசனையுடன் மலையகப் பகுதியில் தொடர்மாடி வீடுகள் அமைக்கப்படுவதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வியலுக்கு தொடர்மாடி வாழ்வு பொருத்தமற்றது. கைத்தொழில்துறை வாழ்வியலுக்கே தொடர்மாடி வீடுகள் பொருத்தமானது. மலையகப் பிரதேசத்தில் உருவாக்கப்படவுள்ள கைத்தொழில் உற்பத் திமுறையை நோக்காகக் கொண டே தொடர் மாடிகள்

Page 10
உருவாக்கப்படுகின்றன என்பதையும் இங்கு நாம் இலகுவில் புரிந்து கொள்ள (փlգեւյլն.
இலங்கை தீவை மூன்று அந்நிய சக்திகள் தமது கேந்திர தேவைகளுக்காக பங்கு போட்டுக் கொண்டுள்ளன.
அமெரிக்கா தனது இராணுவ தேவைகளுக்காக இலங்கையின் வான், கடல் பரப்பை பாவிப்பதற்கான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ளது. இந்தியா தான் ஏற்கெனவே குறிவைத்துள்ள கேந்திர முக்கியத்துவமுள்ள திருகோணமலை துறைமுகத்தில் கால் பதிக்கும் நோக்குடன் எண்ணெய்க் குதங்களை உபயோகிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதைவிட காங்கேசன்துறை துறைமுகத்தையும் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. ஜப்பான் மலையகப் பிரதேசத்தில் அபிவிருத்தி எனும் பெயரில் மேற்கொள்ளும் புதிய ஆக்கிரமிப்பு முயற்சியானது வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மாத்திரமல்ல. தென்னாசிய பிராந்தியத்தில் தனக்கான கேந்திரத்தை உருவாக்கும் நீண்டகால முயற்சியாகவே இதுவுள்ளது. ஜப்பானின் கேந்திர நலன்களுக்கான பிரதேசமாக மலையக தமிழர் பிரதேசம்
அமையப் போகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பானுக்கு
சர்வதேச தரத்திலான இராணுவத்தை வைத் திருப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அத்தகையதொன்றை மீள நிர்மாணித்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நிகரானதாக திகழும் திட்டங்களுடன் அது நகர்ந்து கொண்டிருப்பதை அவதானித்தாக வேண்டும்.
15

சிங்கள சோவினிச நோக்கங்களும் தலவாக்கலை தண்ணிர் மறிப்புத் திட்டமும்
ஒரு தேசத்தை யுத்தத்தினால் மாத்திரம் தான் அழித்தொழித்திட முடியும் என்றில்லை. குறிப்பிட்ட தேசத்தின் தேசிய வாழ்வை வேரறுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை ஒரு கைதேர்ந்த ஆக்கிரமிப்பாளரால் மேற்கொள்ள முடியும். சிங்கள அரசு திட்டமிட்ட கருவள அழித்தொழிப்பை மலையகத் தமிழர் மீது மேற்கொண்டு வருவதன் மூலமாக படிப்படியாக மலையக தமிழர் இருத்தலை விழுங்கி வருகிறது. இந்த தேசிய அழித்தொழிப்பின் இன்னொரு வடிவமாக பிரதேச ஆக்கிரமிப்பையும் அமுல்படுத்தி வருகிறது.
சிங்கள அரசு மலையக தமிழர் பிரதேசங்களில் பிரதேச ஆக்கிரமிப்பை
மேற்கொள்ளும் வழிகள்
மலையகத் தமிழரை வன்முறை மூலமாக பிரத்ேசங்களில் இருந்து துரத்திவிட்டு அப்பகுதியில் சிங்கள மக்களைக் குடியமர்த்தல். தோட்டங்களை சுவீகரித்து அவற்றில் உற்பத்தியை கைவிடுவதன் மூலமாக தொழில் தேடி தமிழ் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலைமையை உருவாக்குகிறது. பின்னர் இப்பகுதியில் தனது விருப்பத்திற்கமைய குடியேற்றங்களை மேற்கொள்கிறது. அபிவிருத்தி எனும் பெயரில் மலையகப் பிரதேசங்களைச் சுவீகரித்து அதில் சிங்கள மக்களைக் குடியமர்த்துதல். (மகாவலி அபிவிருத்தி, நகர நிர்மாணம்,
17

Page 11
நீர்த்திட்டம் அமைத்தல் என்பன உட்பட புதிய வீடமைப்பு எனும் பெயரிலும் தமிழ் மக்களை தோட்ட வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி அப்பகுதியில் சிங்கள மக்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது). பிரதேச செயலகங்களை உருவாக்குவதன் மூலமாக மலையகத் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களை துண்டாடி சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுடன் மலையகப் பகுதிகளை இணைக்கிறது. இதன் மூலம் புதிய பிரதேச செயலர் பகுதிகளில் மலையகத் தமிழர் எண்ணிக்கை சிறுபான்மை ஆக்கப்படுகின்றனர்.
இப்படியாக, மலையகத் தமிழர்களின் ஒருமைப்பாடு, அரசியல், எதிர்காலம். உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளுதல், எழுச்சியுறுதல், போராட்டங்களை முன்னெடுத்தல் என்பனவற்றை திட்டமிட்டு சிதைக்கிறது. ஈழத்தமிழர் பாரம்பரிய பிரதேசத்தை வடக்கு கிழக்கு எனத் துண்டாடி அவர்களின் பிரதேச ஒருமைப்பாட்டை அரசியல் ஒருங்கிணைவை சிதைப்பதில் சிங்கள அரசு திட்மிட்டு செயற்பட்டதை இங்கு நாம் படிப்பினையாக எடுத்துக்கொள்ள முடியும்.
இத்தகைய பிரதேச ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமாக தலவாக்கலை தண்ணிர் மறிப்புத் திட்டம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை உருவாக்கப்பட்டுள்ள நீரேந்திகள் அனைத்தும் மலையக தமிழர் வாழ்விடப் பிரதேசங்களிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இரந்தெனிகல. விக்டோரியா, கொத்மலை, காசல்ரீ, மவுசாகலை, கெனியன், பொல்கொல்ல, நோட்டன் பிரிஜ் ஆகிய பாரிய நீரேந்திகள் உருவாக்கப்பட்ட போது இப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த மலையக தமிழ் மக்கள் தமது சொந்த உழைப்பால் தாம் உருவாக்கிய தமது வாழ்விடப் பிரதேசங்களையும் குடிமனைகளையும் நகரங்களையும் இழந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறு வெளியேறியவர்கள் சுய அடையாளமிழந்து அரசியல் அநாதைகளாயினர். .
அத்துடன் தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் தோட்ட எல்லைப்புற சிங்கள கிராமங்களில் வாழும் சிங்கள மக்களுக்குமிடையிலான பரஸ்பர உறவு இவ்வாறான திட்டமிட்ட அரச நடிவடிக்கைகளினால் இன முரண்பாடாக
1B

கூர்மையடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது தன்பங்கிற்கு மலையக தமிழர்களது வாழ்வியலை மேலும் நிச்சயமற்றதாக்கியுள்ளது.
நீரேந்திகளை அண்மிய பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். அப்பிரதேசங்கள் சிங்கள மயமாயின. அதைவிட நீரேந்திகளை பாதுகாப்பது எனும் பெயரில் இராணுவ சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அடிப்படையில் இச்சோதனை மையங்கள் நீரேந்திகளை “பாதுகாப்பது” என்பதைவிட மலையகத் தமிழர் பிரதேசங்களின் மீதான கண்காணிப்பு மையங்களாகவும் , மலையகத் தமிழர் சுதந்திர நடமாட்டத்தை கட்டுப்படுத்துவனவாகவுமே செயற்படுகின்றன. தேவைப்படும் போது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.
அவ்வகையில் தலவாக்கலை தண்ணீர் மறிப்புத் திட்டத்தை தடுத்து நிறுத்துவது மலையக தமிழரின் உடனடி நீண்டகால தேசிய நலன்களுடன் இணைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டம் மலையகத் தமிழரின் அரசியல் கேந்திரப் பகுதியாகும். இதைத் துண்டாடுவதில் சிங்கள இனவெறி அரசியல் தலைமைகள் மிகவும் தூர நோக்குடன் திட்டமிட்டு செயற்பட்டு வந்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைப்பதற்காக கண்டி மாவட்டத்துடன் இணைந்திருந்த ஹிங்குரங்கெத்த பிரதேசம் நுவரெலியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, நுவரெலியா மாவட்டத்தின் சிங்கள இனவிகிதாசாரம் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் மறைந்த காமினி திசாநாயக்க நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டு தேர்தல்களிலும் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை நகரானது மலையகத் தமிழர் அரசியல் போராட்ட வாழ்வின் வரலாற்றை சுமந்து கொண்டுள்ளது. இந்நகரை துண்டாடுவது சிங்கள அரசியல் தலைமைகளின் நீண்டநாள் தேவையாயிருந்து வருகிறது. இதற்கான மிக வாய்ப்பானதொரு நடவடிக்கையாக தலவாக்கலை தண்ணி மறிப்புத் திட்டத்தை அவை காண்கின்றன. எனவே மின்னுற்பத்தி எனும் பெயரில் தலவாக்கலை தண்ணீர் மறிப்புத் திட்டத்தை மேற்கொள்வதில் சிங்கள அரசு மும்முரமாயிருக்கிறது.
19)

Page 12
இத்திட்டத்தினால் தலவாக்கலை நகரின் அரைவாசி பகுதி நீரில் மூழ்கிடும். இதனால் 460 வீடுகள் தண்ணீரில் மூழ்கிட நேரிடுமென இலங்கை மின்சார சபை கூறுகிறது. எனினும் 600 - 800 வீடுகள் மூழ்கிடும் என பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.
இதைவிட பாடசாலை, திரையரங்கம், வாடி வீடு, நகரக் காரியாலயம், 50 - 100 வரையிலான கடைகள் மற்றும் சிறு தொழிற்சாலைகள், சைவ கோயில், கிறிஸ்தவ தேவாலயம், நூல் நிலையம் ஆகியனவும் மூழ்கடிக்கப்படும். நீரணையினால் புகையிரத சாலையும் பாலமும் கூட நீரில் மூழ்கிடும் ஆபத்துண்டு.
இப்படியாக, ஒரு நகரையே அழித்து மின்சார உற்பத்தி செய்வதில் அரசு தீவிரமாய் இருக்கிறதென்றால் அதன் நோக்கத்தை நாம் அடிப்படையிலேயே கேள்விக்குள்ளாக்கிட வேண்டும். மின்னுற்பத்தி எனும் பெயரில் அது மேற்கொள்ளும் இன ஆக்கிரமிப்பு வியூகத்தின் ஆழத்தையே அதன் தீவிர முன்னெடுப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
தலவாக்கலை நகரின் அரைவாசியை மூழ்கடித்து உருவாக்கும் தண்ணிர் திட்டத்திற்கு மேல் கொத்மலை என பெயரிடவும் தீர்மானித்திருக்கிறார்கள். அடுத்து தலவாக்கலை நகரையே “கொத்மலை உதாகம” (கொத்மலை குடியேற்ற நகரம்) ஆக்கிவிடுவார்கள். ஏனெனில் இதுவரைகால நீரேந்திகளின் வரலாறு “உதாகம” க்கள் உருவாக்கப்பட்டதன் வரலாற்றையும் தானே காட்டுகிறது.
மலையக தமிழரான நமது அரசியல் வாழ்வினதும், வெற்றிகரமான போராட்டங்களதும் பாரம்பரிய்ங்களை சுமந்து கொண்டுள்ள வரலாற்று பெறுதிமிகு நகரை பாதுகாப்பது நமது கடமையும் தேவையுமாயுள்ளது.

உலகமயமாதல கொளகை: உலக வங்கியின் நோக்கமும் மலையக தமிழர் எதிர்காலமும்
உலக மயமாதல் எனும் ஏகாதிபத்திய கொள்கையே இன்று மனித குலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தனது லாப நோக்கத்தை உச்ச பட்சம் நிறைவேற்ற முடியாதிருக்கும் அனைத்தையும் அவர்கள் கழித்துக் கட்டிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
மூலதனத்தை குறுகிய காலத்தில் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் உற்பத்தி அதற்கு இசைாவன வகையில் உயர்ந்த பட்ச திறனை (skill) வெளிப்படுத்தக் கூடிய குறைந்தளவு தொழிலாளர் படை இதில் உடலுழைப்பு மூளையுழைப்பு இரண்டும் அடங்கும்), இந்த உற்பத்திமுறைமையை மீளுற்பத்தி செய்வதற்கு அவசியமாயுள்ள உலகமயமாதல் சமூக வாழ்வியல் முறைமைக்கு இசைவாக்கம் பெறும் மக்கள் சமூகங்களை உருவாக்குதல் ஆகியனவே அவர்களது இலக்காயுள்ளது.
உலக மயமாதல் கொள்கையுடன் இணைந்து வரமுடியாத (நவீன உற்பத்தித்துறையுடன் பரிச்சயப்படாத, திறன் அற்ற, உலகமயமாதல் பொருளாதாரத்தை பாதுகாத்திடும் கலாசாரத்தை பின்பற்ற முடியாத மக்கள்
1

Page 13
சமூகங்களையும், உலகமயமாதல் கொள்கையை எதிர்த்திடும் மக்கள் சமூகங்களையும் அவர்கள் வரலாற்றிலிருந்தே துடைத்தழித்துவிட்டுச் செல்ல முயல்கிறார்கள்.
மலையகத் தமிழரான நாம் ஒரு தேசமாக (nation) இருக்கும் அதே நேரம் ஒரு பாரிய தொழிலாளர் படையையும் கொண்டவர்களாயிருக்கிறோம். நமது தேசத்தின் அதிபெரும்பான்மை மக்கள் பெருந்தோட்ட உற்பத்திதுறையுடன் பிணைந்த தொழிலாளர்களாயுள்ளனர். நமது தேசிய வாழ்வைக் கட்டமைத்ததில் நாம் சார்ந்த உற்பத்தித்துறைக்கும் தீர்க்கமான பங்குண்டு. நாம் தேசமாக ஈடுபட்டுள்ள பெருந்தோட்ட உற்பத்தித்துறையானது தனது பங்கிற்கு நமது தேசிய வாழ்வை தீர்மானிப்பதாகவும் உள்ளன. இந்த உற்பத்தித்துறையிலிருந்து பிரிக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது மக்கள் வாழ்விடப் பிரதேசங்களை இழந்து அரசியல் அநாதைகளாக அடையாளமிழந்தனர். இவ்வொவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது தேசத்தின் செறிவு சிதைக்கப்பட்டு நமது தேச அரசியல் பலவீனமாக்கப்பட்டது.
நமது மலையக தமிழ் தொழிலாளர்கள் 150 வருடகால பழமையுடைய உற்பத்தித்துறையைச் சார்ந்தவர்களாவர். திறன் அற்றவர்கள். அடிப்படை கல்வி மறுக்கப்பட்டவர்களாயிருப்பதால் புதிய திறன் பயிற்சிகளுக்கு உட்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். பெருந்தோட்ட உற்பத்தித்துறை அல்லது விவசாயம் சார்ந்த உற்பத்தித்துறை அல்லாத நவீன ரக இயந்திரங்களுடன் கூடிய நுட்பமான கைத்தொழில் உற்பத்தித்துறையில் இவர்களால் ஈடுபட (ՄծlԳեւ IIIՖl.
திறன் பயிற்சியற்ற, 150 வருடத்திற்கு முன்னைய விவசாயப் பண்பாட்டைக் கொண்டுள்ள மலையக தமிழ் தொழிலாளர்கள் உலகமயமாதல் கொள்கையுடன் இணைந்து கொள்ள முடியாதவர்களாக இருப் பதால் இத் தொழிலாள படைப்பிரிவை உற்பத்தித்துறையிலிருந்து கழித்துக் கட்டுவதையே உலக வங்கி இலக்காகக் கொண்டுள்ளது. ஏகாதிபத்திய லாபத் திரட்சியை முதன்மைப்படுத்தி தேயிலை உற்பத்தித் துறையிலிருந்து பெருமளவு தொழிலாளரை கழித்துக்கட்டிவிட்டு, தேர்ச்சி பெற்ற மிகக் குறைந்தளவு தொழிலாளரை தேயிலையில் தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அது ஆரம்பித்தும் விட்டது.

தனது நோக்குடன் இசைவாக்கம் பெற முடியாத மக்கள் பிரிவை தனது அணியிலிருந்து கழித்துக் கட்டுவதும் அவர்கள் வாழும் வளமான பிரதேசத்தை தனது ஆக்கிரமிப்பு அபிவிருத்திக்கு பயன்படுத்துவதும் உலக வங்கியின் திட்டமாகும். மலையகத் தமிழ் தொழிலாளரை பெருந்தோட்ட உற்பத்தித் துறையில் இருந்து நீக்குவது மட்டுமல்லாது வளமான மலையகப் பிரதேசத்தைக் கைப்பற்றி நிலக்கீழ் கனிம வளத்தையும் வன வளத்தையும் நீர் வளத்தையும் சுரண்டுவதும், வேறு உற்பத்திக்கு அந்நிலத்தை பயன்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.
மூன்றாமுலக நாடுகளில் உலக வங்கியின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டங்கள், வனவள மறுசீரமைப்பு முகாமைத்துவத் திட்டங்கள், நகர நிர்மாணங்கள் மற்றும் சேரி ஒழிப்புத் திட்டங்கள் யாவும் சமூகத்தின் அடக்கப்பட்ட (தேசிய, மத, வர்க்க, நிற ரீதியான அடக்குமுறைகள்) மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. இதன் மூலம் இம்மக்கள் தமக்கிருந்த இறுதி வாழ்விடப் பகுதியிலிருந்து அரசுகளினால் பலவந்தமாக பொலிஸ், இராணுவம் ஏவிவிடப்பட்டு துரத்தியடிக்கப்படுகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்படும் இம்மக்களின் சனச்செறிவு சிதறடிக்கப்பட்டு ஒரு சக்தியாக குறைந்த பட்சம் தமது உயிர்வாழ்வை கூட தக்க வைக்க முடியாத நிலைமைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர்.
அடக்கப்பட்ட மக்களை அப்புறப்படுத்தி அம்மக்கள் தொகுதிகளை அழித்தொழிப்பதானது புதிய அபிவிருத்தி முயற்சிகளுடன் திட்டமிட்ட வகையில் இணைத்து முன்னெடுக்கப்படுகிறது. 7
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பாரிய சேரி அழிப்புத் திட்டங்களாலும் பெரு நகர நிர்மாணத் திட்டங்களாலும் நேரடியாக அழிந்து போகிறவர்களாக சாதிய அடக்குமுறைக்குள்ளான மக்களும் முஸ்லிம் மக்களும் இருக்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பாரிய நர்மதா நீரணைத் திட்டத்தினால் சிதறடிக்கப்படுபவர்களாக பூர்வகுடி மக்கள் இருக்கிறார்கள்: இவ்வாறு உள்நாட்டு அதிகார தரப்பும் உலக ஆதிக்க சக்தியும் இணைந்து திட்டமிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினூடே அடக்கப்பட்ட மக்களது
2$

Page 14
வாழிடங்களை ஆக்கிரமித்து அம்மக்கள் சமூகங்களை வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தி விடுகிறார்கள். .
ஒவ்வொரு நூறாண்டுகளிலும் அறுநூறு மக்கள் குழுமங்கள் அழித்தொழிக்கப் பட்டிருப்பதாக யுனெஸ்கோ நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டிருப்பதை இதனுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்.
மலையக தமிழ் தொழிலாளர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி அவர்கள் ஒரு மக்கள் தொகுதியாக நிலைத்திருப்பதை அழித் தொழிப்பது உலக வங்கியினதும் ஆக்கிரமிப்பாளர்களதும் தேவையாயுள்ளது.
மலையகத் தமிழ் தொழிலாளர்கள் மலையகத் தமிழ் தேசத்திற்கு அரசியல் வடிவம் கொடுப்பவர்களாக இருப்பதால், இத்தொழிலாளர் படைப்பிரிவை அவர்கள் பிணைந்துள்ள உற்பத்தித்துறையிலிருந்து பிரித்து விடுவதன் மூலமாக மலையக தமிழ் தேசத்தை பலவீனப்படுத்திட முடியும் என்பதை சிங்கள அரசும் அறிந்து வைத்துள்ளது. அதனால் தான் அது தனது நோக்கிலிருந்து மலையகத் தமிழ் தொழிலாளரை உற்பத்தித்துறையிலிருந்து வெளியேற்றி, பாரம்பரிய வாழ்விட பிரதேசங்களில் இருந்து துரத்துவதன் மூலமாக மலையக தமிழர் தேசிய வாழ்வை துடைத்தெறிவதற்கான திட்டங்களை முன்வைக்கிறது.
இப்படியாக, சிங்கள சோவினிச திட்டங்களும், உலக வங்கியின் ஆக்கிரமிப்பு கொள்கையும், ஜப்பானிய நேரடி முதலீட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் இணைந்து மலையக தமிழர் தேசிய வாழ்வின் ஆணிவேரையே அறுத்தெறியும் காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றன.
மலையகத் தமிழ் தேசத்தினரான நமது பெரும்பலம், ஆதாரம், சக்தி யாவும் உற்பத்தித்துறையுடன் கூடிய நமது வாழ்விடப் பிரதேசங்களாகும்.
தென்னந்தோட்டங்கள், பாம் எண்ணெய் மர தோட்டங்கள், இறப்பர் தோட்டங்கள்
எங்கும் நாம் உழைப்போடு பிணைந்து வாழ்ந்திருந்தோம். அங்கெல்லாம் நமது வேர்கள் அறுக்கப்பட்டு விட்டன. இன்று நமக்கென்றிருப்பது தேயிலை
24.

மண்ணொன்றே நமது தேசிய வாழ்வின் இறுதி அடையாள பூமியான தேயிலை பூமியை பாதுகாப்பது நமது தேசிய இருத்தலுக்கான அடிப்படை அவசியமாகும்.
9 பெருந்தோட்ட உற்பத்தித்துறையுடன் நமக்குள்ள பிணைப்பை உறுதியுடன் பாதுகாப்போம்
9 தோட்டங்களும், தோட்டங்கள் சார்ந்த நகரங்களும் அழிக்கப்படாமலும் அபகரிக்கப்படாமலும் பாதுகாப்போம்
9 நமது தேசிய வாழ்விற்கு அச்சுறுத்தலாக தோன்றும் அனைத்தையும் எதிர்த்து நமது பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்களைப் பாதுகாப்போம்!
• இலங்கைத் தீவின் ஏனைய தேசங்களுக்கு நிகரான உரிமையும் கெளரவமும் உடைய தேசமாக வாழ்வதற்கு நமக்குள்ள உரிமையை வென்று கொள்வோம்!
“மலைகளைத் தவிர நமக்கு நண்பர்கள் இல்லை”
வளர்மதி ஜூலை 2002
தகவல்களுக்கு நன்றி. ஹரய, தினக்குரல், நியமுவா

Page 15
■
தலவாக் தண்ணிர் மறிட்
மலையகத் தமி தேசிய இறைமை மூன்றாமுலகி ஆக்கிரமிப்பு அ
G66
BEITGLITọassi, gp6i
சரிநி
 

56O)6) புத் திட்டம்:
ழர் மீதான
அத்துமீறலும் ண் மீதான
பிவிருத்தியும்
றாவது மனிதன்,