கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 2001 (6.1)

Page 1


Page 2

பெண்
தொகுதி : 6 இலக்கம் : 1
2001
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் மட்டக்களப்பு.

Page 3
கெளரவ ஆசிரியர்
முன் அட்டை ஓவியம்
அச்சகம்
விலை
பெண் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் சஞ்சிகை
இல.20, டயஸ் வீதி, !
மட்டக்களப்பு தொலைபேசி இல: 065 - 23297 Fax No: O65- 24657, E-mail : suriyaw Goslit.lk
THE WOMAN - A Journal Published by Suriya Women's Development Centre, NO: 20, Dias Lane,
Batticaloa.
நதிரா மரியசந்தனம்
வாசுகி ஜெய்சங்கர்
. . . . . 3ኒ 8  ̈8 ኄ፡¶ - சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்,
மட்டக்களப்பு.
- 30/=

வாசகர்களுடன் .
“பெண்' சஞ்சிகையின் இவ்வருடத்திற்கான முதலாவது இதழ் வெளி வருவதில் மகிழ்ச்சியடைகிறோம். மீண்டும் வெளியீட்டில் தாமதம் தான் எனினும் இம்முயற்சியில் உறுதியாகவே இருக்கின்றோம்.
பெண் சஞ்சிகையின் நோக்கங்கள் பல அவற்றுளொன்று பெண்நிலை நோக்கிலான கருத்துக்களைப் பரவலாக்கல் என்பது. இன்னொன்று பெண் களிடையே எழுத்தாளர்களை உருவாக்குதலாகும். பெண்களை எழுத்துத் தளத்துக்கு கொண்டு வருதல் என்ற இந்த இரண்டாவது விடயத்துக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் பெண்களிடமிருந்து ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். ஆனால் எமது எதிர்பார்ப்பு சற்றுத் தாமதமாகவே நடை போடுகிறது.
எனவே “பெண்ணின் தொடர்ச்சியான வருகைக்குப் பொருத்தமான ஆக்கங் களை எதிர்பார்ப்பதுடன் “பெண்’ தொடர்பான கருத்துக்களையும் விமர்சனங் களையும் வாசகர்களிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். உங்கள்
ஒத்துழைப்பு “பெண்ணின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
ஆசிரியர்.

Page 4

அலுவலகப் பெண்களின் முண்னேற்றம்
-கவனத்திற்குரிய விடயங்கள் சில
-அம்மண்கிளி முருகதாஸ்ட
சமூகத்தில் பெண்கள் பற்றிய பார்வைகள் அண்மைக்காலத்தில் மாறிவருகின்றன எனினும் 90%மானவரின் பெண்கள் பற்றிய நோக்கு மாறுபடவில்லை. ஆண்களின் பார்வையில் பெண்கள் பற்றிய நோக்கு மட்டுமல்லாது பெண்களின் பார்வையிலும் பெண்கள் பற்றிய நோக்கு பெரும்பாலும் மாறுபடாத ஒன்றாகவே இருக்கின்றது.
பல்கலைக்கழகங்களில் கல்வி கற்போரில் 60%மானோர் பெண்களே. மற்றத் துறைகளிலும் பெண்கள் கல்வி அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் பெண்கள் கல்வி தேவைப்படாத ஒரு விடயமாகவே இருந்தது. ஆனால் இன்று கல்வியைப் பொறுத்தவரை பாரபட்சம் காட்டப்படுவது மிகக்குறைவே எனினும் பெண்கள் வேலை பார்ப்பதில் பல மனத்தடங்கல்கள் உள்ளன. ஆயின் இன்றைய பல வெளி அழுத்தங்கள் பெண்கள் உழைப்பதை அல்லது வேலைபார்ப்பதை வலியுறுத்தியுள்ளன. இந்தப் பெண்களின் வாழ்க்கை தொழில் பற்றிய நோக்கைத் தீர்மானிப்பனவாகப் பல விடயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை பின்வருவன:
1. நிரந்தரமாக வளர்ந்து வருகின்ற வருமானக் குறைவு / குடும்பப் பொருளாதாரத்
தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமை, வருமான வீழ்ச்சி.
3. குடும்பத்தலைவரின் இறப்பு.
பெண்களின் சுயசம்பாத்தியத் தேவை என்பன. மிகச் சில இடங்களில் பெண்கள் தமது சொந்தத் திருப்திக்காக வேலை செய்கிறார்கள்.
உலகளாவிய தொழிற்சக்தியில் 50% மானோர் வேலைக்குச் செல்கின்றனர் எனப்படுகிறது. இவ்வாறு வேலைக்குச் செல்லும் பெண் களின் தொழிற் தெரிவை பின்வருமாறு நோக்கலாம். பாரம்பரியத் தொழில்கள் தவிர அலுவலகங்களில் வேலைகளைச் செய்ய முயலும் பெண்கள் பின்வரும் வேலைகளையே தெரிவு செய்கின்றனர்.
- I -

Page 5
ஆசிரியர் 4. எழுதுவினைஞர் தாதிமார் 5. வரவேற்பாளர் போன்றன அவை. 3. மருத்துவர்
மேற்குறித்த தொழில்கள் பெண்களின் வீடுசார்ந்த நிலைமைகளோடு
பெரும்பாலும் ஒத்துப்போகின்றன என்பதில் ஐயமில்லை. குடும்பத்தை வழி நடத்துதல், பராமரித்தல், விருந்தினரை வரவேற்றல் போன்றவற்றை இணைத்துப் பார்க்கலாம். குறிப்பாக தலைமைத்துவம் சார்ந்த தொழில்கள், பொறியியலாளர், விமானஓட்டி போன்ற வேலைத் தெரிவுகள் பெண்களைப் பொறுத்தவரை மிகக்குறைவே. இவ்வாறு பல தேவைகளுக்காகவும் வேலை செய்யத் தொடங்கிய பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி யவராகின்றனர்.
1. பெண்கள் வீட்டைவிட்டு வேலைக்குச் செல்வது என்பது பாரம்பரி யமாக வேண்டாத/விரும்பப்படாத ஒன்றாகக் கருதப்பட்ட நிலை யில் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலைக்குச் சென்றாலும் கூட வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே வேலை செய்யுமிடத்தினைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்கிறது.
2. பெண் வேலைக்குச் செல்வதென்பது பல இடங்களில் கணவனின் உளவியலைத் தாக்குகின்ற ஒருவிடயமாகக் கருதப்படுகின்றது. பெண் கணவனை ஆதிக்கம் செய்யக்கூடும் என்ற பயமும் காணப்படுகின்றது.
3. வேலை செய்யுமிடங்களில் பெண்கள் பாலியல் இன்னல்களுக்கும்
பலாத்காரங்களுக்கும் உள்ளாவதுண்டு.
4. அலுவலகங்களில் பெண்கள் முக்கியமாக மேலதிகாரிகளாக இருப்பதென்பது பெரும்பாலும் விரும்பப்படாத ஒன்றாக உள்ளது. இவ்வாறான தடங்கல்களைத் தாண்டித்தான் பெண்கள் வேலை க்குச் செல்கின்றனர். சரி! இந்த உழைப்பைப் பெண்கள் எதற் காகப் பயன்படுத்துகின்றார்கள் என்ற வினாவை எழுப்பினால்.
5. திருமணமானவர்களெனில் அது அவர்களின் குடும்பச் செலவுக்
காகவே பயன்படுத்தப்படுகிறது
6. திருமணமாகாதவர்களெனில் அவரவர் குடும்பச் சூழலைப் பொறு த்து செலவு வேறுபடும். பல பெண்கள் தமது சீதனத்துக்காக
- 2 -

வீடுகட்டுதல், நகைசேர்த்தல், பணம் சேர்த்தல் ஆகிய வற்றுக்காகத் தங்களது சம்பளத்தை உபயோகிப்பதைக் காண முடியும். தங்கள் முன்னேற்றத்துக்கான கல்வி பற்றிய விடயங் களில் பணத்தைச் செலவிட முயல்வது மிகக்குறைவே. எமது சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை திருமணத்தைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே அவள் திருமணத்திற்காகவே வடிவமைக்கப்படுகிறாள். எனவே திருமணத்திற்கான சகல ஆயத்தங்களையும் அவள் செய்ய வேண்டியவளாகிறாள்.
திருமணத்துக்காக வடிவமைக்கப்படுவதென்பது வீட்டுவேலை களில் அவளே அதிகமாக ஈடுபடுத்தப்படல். கூட்டுதல், துடைத்தல், வீட்டுப் பொருள்களை ஒழுங்காக பாதுகாப்பாக வைத்தல், சமைத்தல் , உணவைப்பகிரல், வீட்டுத்தோட்டம் வைத்தல், மேலதிக குடிசைத் தொழில்களில் ஈடுபடல், தையல், பின்னல், கேக் ஐசிங் போன்றன, சேமித்தல், வருமானத்துக்கேற்ற செலவு செய்தல், உறவுகளைப் பேணு தலில் கவனம் செலுத்துதல், தமது குடும்ப உறுப்பினர், கணவனின் குடும்ப உறுப்பினர், அயலவர் சார்ந்த உறவுகளைப் பேணுதல், திரு மணச் சடங்கு, இறப்புச் சடங்கு, பிறப்புச் சடங்கு போன்றவற்றைக் கவ னத்தில் எடுத்துக் கொள்ளுதல், மற்றவர்களின் மனங்கோணாமல் நடத்தல், பிள்ளைப் பராமரிப்பு போன்றவற்றைத் தாயிடமிருந்து பழகிக் கொள்ளல், அமைதியாக இருத்தல், எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கப் பழகுதல் எனப் பல விடயங்களில் கவனம் செலுத்தப் பழக்கப்படுவதைக் குறிக்கிறது. பெண்கள் பொறுமை போதிக்கப்பட்ட நிலையில் சிறுவயதிலிருந்தே இரண்டாம் பட்சப் பிரஜையாக நடத்தப்படுவதால் இவர்களைப் பொறுத்தவரை தமது கணவர் பற்றிய எதிர்பார்ப்பும் தங்களை விட அந்தஸ்தில் கூடிய ஒருவரை எதிர்பார்ப்பதாகவே காணப்படுகிறது.
இந்த அமைப்புக்குள்ளிருந்து வெளிவரும் பெண்களிற் பலர் தமது வேலைகளைச் செய்ய முனையும்போது ஏற்படும் எதிர்பார்ப்புகளுக்கும் பலியாகி விடுகின்றனர். தீர்மானம் எடுப்பவர்கள் ஆண்களாக இருப்பதால் பெண்களை விட ஆண்கள் பற்றிய உயர்வெண்ணம் மேலோங்கியுள்ளது. நவீன உலகிற் கூட மிகச் சில பெண்களே அலுவலகங்களை நடத்துகின்ற நிர்வாக உத்தியோகத்தராக உள்ளமையைக் காணமுடியும். அந்த

Page 6
இடங்களிலும் அதிகமான ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் தமது மேலதிகாரியாக பணிபுரிவதை இத் தந்தைவழிச் சமூகத்துச் சிந்தனையில் ஊறிய பெண்களிற் பலரும் விரும்புவதில்லை.
இவ்வாறு பெண்ணின்/ பெண்களின் ஆளுமையை நிராகரிக்கும் பண்பு தான் பொறுப்பான அதிகாரம் அல்லது பொறுப்பு ஆகியவற்றிலிருந்து அவளை ஒதுக்கி வைப்பதற்கும் ஒதுங்கி வாழ்வதற்கும் காரணமாகும். வேலை செய்யுமிடங்களில் இரண்டாமவராகவே பெண்கள் கருதப்படுகின்றதால், சக ஊழியர்களிடம் தமது ‘சமத்துவத்தை நிலை நிறுத்து வதற்கு அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. பல இடங்களில் சக ஊழியர்களான ஆண்கள் தமது பொறுப்புகளைச் செய்யுமாறு சக ஊழியரான பெண்களிடம் ஒப்படைத்துவிட்டு ‘ஹாயா’க சுத்தித்திரிவதையும் காணமுடியும்.
மேலும் திருமணமான பெண்கள் தமது குடும்பச் சுமைகளுடன் வேலைகளில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றியடைய உற்சாகப் படுத்தப்படுவதில்லை. திருமணம் ஆகாத இளம் பெண்களும் திருமணச் சந்தையை எதிர்நோக்கி இருப்பதால் ஷோகேஸ் பொம்மைகளாக இருப்பதில் கவனஞ் செலுத்தி “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று இருந்து விடுவதால் தமது வாய்ப்பை இழந்து விடுகின்றனர். மேலும் தொழில் செய்யும் இடங்களில் தமது உரிமைகளுக்காகப் போராடாதவர்களாகவும், உரிமைகளை நிலைநாட்டத் தயங்குபவர்களாகவும் அப்பெண்கள் உள்ளனர்.
பெண்களின் இந்தத் தன்மைகள் காரணமாக பல நிறுவனங்கள் குறைந்த கூலியில் அதிகமான பெண்களை வேலைக்கமர்த்துவதைக் காணமுடியும்,
எனவே பெண்கள் தமது தொழில் வாழ்க்கையில் வெற்றி கொள்ள வேண்டுமெனில் தமது சக்தியை உணர வேண்டும். போட்டியிடப் பழகிக் கொள்ள வேண்டும். தமது ஆளுமையை வெளிப்படுத்தி தம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனில் வீட்டுத் தொல்லைகளை ஒருபக்கம் மூட்டைகட்டி வைத்துவிட்டு உழைக்க வேண்டும். இல்லை யெனில் ஒரு போதும் அவர்கள் வெளியே வர முடியாது.
سے 4 -

ஆயுதப் போரும் சிபண்களுக்கெதிரான வண்முறையும்
(மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சில வழக்குகளும் தரவுகளும்)
-மங்களா.
இலங்கையில் கடந்த இரு தசாப்தமாக நடைபெற்றுக் கொண்டி ருக்கும் யுத்தத்தினால் விலைமதிக்க முடியாத உயிர்களையும், உடமை களையும் நாடு இழந்து கொண்டிருக்கின்றது. இக்கொடிய யுத்தத்தினால் முழுச் சனத்தொகையும் பாதிப்படைகின்ற போதிலும், பெண்களும் சிறுவர்களுமே மிகக் கூடுதலாகப் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக வடக்குக் கிழக்கை யுத்தப் பிரதேசமாகக் கொண்டு நடைபெறும் இந்த யுத்தத்தினால் அதிகளவான பெண்கள் தமது உயிர் களைப் பாதுகாப்பது மட்டுமன்றி தமது குடும்பத்தினர், மற்றும் பிள்ளை களைக் கைது செய்வதிலிருந்தும், குண்டுகள், எறிகணைகள், நிலக் கண்ணி வெடிகள் போன்ற அச்சுறுத்தலிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்களாகவும் இருக்கின்றனர்.
இது தவிர யுத்தப் பிரதேசங்களில் வாழும் பெண்கள், வன்முறை களுக்கும், உரிமை மீறல்களுக்கும் ஆளாக நேர்கிறது. இவை தேடுதல், கைது, தடுப்புக்காவல், மற்றும் சிறை, இடம்பெயர்வு, காணாமல் போதல், சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனை / கொலை, பாலியல் தொந் தரவுகள், பாலியல் பலாத்காரங்கள், சித்திரவதை போன்ற இன்னோரன்ன துன்பங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவை நேரடியான பாதிப்புக் களாகும். ” .....
பொதுவாக பெண்களும், சிறுவர்களும் ஆண்களின் (குடும்பத் தலைவர்களின்) வருமானத்திலேயே தங்கி வாழ்பவர்களாக இருப்பதால் திடீரென குடும்பத் தலைவர்களின் இழப்பு (மரணம்), கைது, காணாமல் போதல் போன்ற காரணங்களால் அவரைச் சார்ந்திருக்கும் பெண்கள் சிறுவர்கள் நிர்க்கதியாகின்றனர். ஒருபுறம் இழப்பினால் ஏற்படும் துன்பமும், மறுபுறம் சீவியத்திற்கான வருமானம் இன்மை போன்ற கஷடங்களுக்கு மத்தியில் சமூக, கலாசார ரீதியான அழுத்தங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவை நேரடியற்ற / மறைமுகமான பாதிப்புக்களாகும். பின்வரும் தகவல்கள் இவற்றைத் தெளிவுபடுத்துகின்றன.
- 5 -

Page 7
அட்டவணை 1
1998.12.31ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசினால் வழங்கப்படும். நட்டஈட்டினைப் பெற்றுள்ள, யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் எண்ணிக்கை
பற்றிய விபரம்.
இல பிரதேச செயலாளர் பிரிவு கணவனை இழந்த பிள்ளைகளின்
பெண்களின் எண்ணிக்கை
எண்ணிக்கை
01 மண்முனை வடக்கு 230 66
02 | மண்முனை பற்று 103 18
03 மண்முனை மேற்கு 100 25
04 மண்முனை தென்மேற்கு 137 123
05 கோரளைப்பற்று - 2126 1870
06 கோரளைப்பற்று வடக்கு 162 29
07 கோரளைப்பற்று மேற்கு O6 143
08 ஏறாவூர் பற்று 632 27
09 ஏறாவூர் பட்டினம் 73 132
10 |போரதீவுப் பற்று 211 31
11 காத்தான்குடி 117 256
12 மண்முனை தெற்கு எருவில் பற்று 241 16
மொத்தம் 4292 3 O 82
மேலுள்ள தரவு அரசினால் வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை யினைப் பெற்ற கணவனை இழந்த பெண்கள் பற்றிய விபரத்தைக் காட்டிய போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கண வனை இழந்தும், நட்டஈட்டுத் தொகையினைப் பெறுவதற்கு தேவையான ஆவணங்களின்மை (உதாரணமாக: விவாகப்பதிவின்மை) தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறுதல், அரசிடம் போதிய நிதிவசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இத்தொகையினைப் பெற முடியாமல் பல பெண்கள் உள்ளனர்.
- 6 -

மேலும் போர்க்காலங்களில் எதிரியின் மேலிருக்கும் பகைமை யையும் வஞ்சத்தையும் தீர்த்துக் கொள்ள பெண்களே கடுமையான பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பாலியல் பலாத்காரம் என்ற வன்முறைக்கு இன்னும் எந்த நிரந்தரத் தீர்வும் காணப்படவில்லை. யுத்தத்தை சாட்டாகக் கொண்டு தமது கைகளில் ஆயுதங்களை ஏந்தியோர் இலகுவாக பெண்கள் மீது தமது பலாத்காரத்தைப் பிரயோகிப்பது மட்டுமன்றி சட்டத்தின் பிடியினின்றும் தப்பித்துக் கொள்கின்றனர். பலாத்காரத்திற்கு உட்படும் பெண்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது பற்றி யாரும் அக்கறைப்படுவதில்லை. பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர், அத்தோடு பெரும் மன உழைச்சலுக்கு உள்ளாகின்றனர். நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். தம்மைச் சமூகம் ஒதுக்கி வைத்து விடுமோ என அஞ்சுகின்றனர். இந்நிலமையின் மத்தியிலும் வெளிவரும் ஓரிரு வழக்குகள் கூட நீதிமன்றம் அசிரத்தையாக இருத்தல், பொலிசார் கடமையை சரிவரச் செய்யாமை போன்ற காரணங்களால் பெண்களை சட்டம், நீதி போன்றவற்றில் நம்பிக்கையில்லாது சலிப்படையச் செய்கின்றது.
தமிழ் செய்தித்தாள்களில் பெறப்பட்ட விபரங்களையும் (தினகரன், வீரகேசரி, தினக்குரல்) நேரடியாக சூரியா’ பதிவேட்டில் பெறப்பட்ட தகவல் களையும் (01.01.1997 - 01.08.2000 வரை) அடிப்படையாகக் கொண்ட பெண் களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைப் பின்வரும் அட்டவணை காட்டு
கின்றது.
சம்பவம் நடைபெற்ற பாதிக்கப்பட்டவர் குற்றவாளி ai Luahib இடம் (வயது)
பெண் (40) 4 ஆயுதப் பாலியல் 09.01.197|தியாவட்டவான் பெண் (16) படையினர் வல்லுறவு
வாழைச்சேனை பெண் (22)
7.03.gg7 மயிலம்பாவெளி பெண் (34)அவரது 4 ஆயுதப் பாலியல்
o A7 V (3 28 படையினர்
LDLL35856TUL சகோதரி(28) வலலுறவு
08.04.1997 மட்டக்களப்பு ஒரு யுவதி ஆயுதப் பாலியல் வல்லுறவும்
(ஆடைத் தொழிற் படையினருடன் மானபங்கப்படுத்திய
சாலையில் இருக்கும் மையும்
வேலை செய்பவர்) குழுவினர்.
முருகேசபிள்ளை பாலியல் வல்லுறவின்
பின் பெண்ணுறுப்பில் கிரை னைற்வெடிக்க வைத்து கொலை.
705ர 11வது கொலணி
மத்திய முகாம கோணேஸ்வரி
(35)

Page 8
1408.1997
வாழைச்சேனை
பெண் (19)
படையினருடன்
படையினருடன் சேர்ந்திருக்கும் சேர்ந்திருக்கும் குழுவினரால் கைது குழுவினரும், செய்யப்பட்டு ஆயுதப்படையினரும் இராணுவத் தினரிடம்
ஒப்ப டைத்த போது தடுப்புக் காவலில் இராணுவப்படையினர் ஒருவரால் பாலியல் வல்லுறவு. 05.03.1998 விபுலானந்தா வீதி எஸ்.ராசாத்தி இராணுவத்தினர் சுட்டுக்கொலை
வாழைச்சேனை (30) 08.03.1998 ஏறாவூர் பெண் (28) ஆயுதம் தாங்கிய பாலியல் வல்லுறவும்,
குழுவினர் கொலையும் 08.04.1998 கிண்ணையடி எஸ்.மகேஸ்வரி இராணுவத்தினர் சுட்டுக்கொலை
வாழைச்சேனை 22.02.1999 ஏறாவூர் பெண்(28) ஆயுதம் தாங்கிய பாலியல் வல்லுறவும்,
குழுவினர் கொலையும் 26.02.1999 தன்னாமுனை நுார்லெவ்வை | ஆயுதம் தாங்கிய சுட்டுக்கொலை
நஜீரா சித்தி குழுவினர் go LLDLDT (36) 1907.1999 வாழைச்சேனை ஒரு பெண் ஆயுதம் தாங்கிய பாலியல் வல்லுறவு
குழுவினர் முயற்சி 30.07.1999 ஏறாவூர் அபுசாலி 2 இராணுவத்தினர் பாலியல் வல்லுறவும்,
ஜாரியா (34) கொலையும்
பெண்னை அடித்து 10.09.19991 கொண்டையன் பெண்(35) இராணுவத்தினர் துன்புறுத்தி, சித்தி
கேணி,கும்புறுமூலை ரவதை செய்து
தடுப்புக்காவலில் வைத்து பாலியல் வல்லுறவு.
பெண்ணின் கண 28.12.1999 ஹிஜ்ராநகர், ஒரு பெண் 3 இராணுவத்தினர் வனை கட்டி வைத்து
Q LLDT6).It அவன் முன்பாகவே
பாலியல் வல்லுறவு முயற்சி
கொள்ளை, w சித்திரவதை, பாலியல் 05.03.2000 காட்டுப்பள்ளி பெண் (34) ஆயுதம் தாங்கிய வளை
ஏறாவூர் குழுவினர் (அப்பெண்ணின் பிள்ளை
களுக்கு முன்பாக)

போர்ச் சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறை புரிவோர் நீதி விசாரணையிலிருந்து தப்புவதற்கான காரணங்களாக முன்வைக்கக் கூடியவைகள்.
1. சிவில் நிர்வாகம் இருதரப்பினரிடம் இருத்தல்.
2. பொலிசார் குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் கூடிய அக்கறை
g)6öró0) D.
3. அரச படையினரால் செய்யப்படும் குற்றங்கள் மூடி மறைக்கப்படுதலும், படையினருடன் சேர்ந்திருப்போர் செய்யும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமையும்.
எடுத்துக்காட்டாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
சம்பவம் - 1
மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதுப் பெண் திருமணமாகாதவர். 14.08.97இல் ஆயுதம் தாங்கிய குழுவினரால் சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டார். முகாமில் படையினர் நால்வரால் (4) தாக்கப்பட்டு ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என அச்சுறுத்தி விடுவிக்கப்பட்டார். இப்பெண் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் உள்ளது. ஆனால் இன்றுவரை வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.
4. இராணுவத்தினருடன் சேர்ந்திருக்கும் ஆயுதக் குழுவினரின்
தொடர்ந்திருக்கும் அச்சுறுத்தல்.
சம்பவம்- I
மட்டக்களப்பு கும்புறுமூலையைச் சேர்ந்த 38 வயதுப் பெண் திருமணமாகி நான்கு பிள்ளைகளை உடையவர். கணவனைத் தேடிவந்த படையினர் பெண்ணைக் கைது செய்தனர். முகாமிற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்ததுடன், பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டு மயக்கமான நிலையில் பற்றைக் காட்டிற்குள் கொண்டு போய்ப் போட்டனர்.
- 9 -

Page 9
இப்பெண், வைத்தியசாலைக்கு செல்லாதவாறும், சட்ட நட வடிக்கை எடுக்கா தவாறும் அச்சுறுத்தப்பட்டார். தனது கணவன், பிள்ளைகளுக்கு உயிராபத்து வரலாம் என்ற பயத்தால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.
5. குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தலும் பயங்கரவாத தடைச்
சட்டத்தை எதிராக பாவித்தலும்.
சம்பவம் - 1 இல் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து (அதே நபர்களால்) அப்பெண்ணின் 17 வயது சகோதரன் (PTA யின் கீழ்) கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இன்னும் உள்ளார்.
6. முன்பு இராணுவம் அல்லது ஆயுதக் குழுக்களில் இருந்தோர் இன்னும் தம்மிடம் ஆயுதங்களை வைத்திருந்து புரியும் குற்றச் செயல்.
சம்பவம்- II
மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் திருமண மாகி கணவனால் கைவிடப்பட்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தாய். 05.03.2000இல் நான்கு பேர் கதவை உடைத்து உட்சென்று 10 பேர் வரை வெளியில் காவல் நின்று அவரது பிள்ளைகள் முன்பாக குழுவாக பாலியல் வல்லுறவு புரிந்து தலைமயிரையும் வெட்டி மானபங்கப்படுத்தியுள்ளனர். இப்பெண்ணின் உடமைகள் நாசமாக்கப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்டது. எதிரிகளில் ஒருவர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர். இவ்வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
7. குற்றம் புரிந்தோருக்கு இராணுவம் புகலிடமாக அமைதல்.
சம்பவம் - III இல் இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்த எதிரி சம்பவத்தின் பின் மீண்டும் இணைந்து கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு அச்சுறுத்தல் விடும் நிலை.
8. மிகப்பெரும் குறையாக இருப்பது சட்ட நடவடிக்கை எடுப்பதில் காணப்படும் காலதாமதம். இது பாதிக்கப்பட்டவர் சந்தர்ப்ப சூழ்நிலையை மறந்து முன்னுக்குப் பின் முரணாகக் கூறுவதால் எதிரி தப்புவதற்கு ஏதுவாக அமைகிறது.
- 10 سـ

9. சட்டத்தில் காணப்படும் ஒட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளி
கள் தப்புதல்.
10. பாதிக்கப்பட்டவர் திரும்பத் திரும்ப விசாரிக்கப்படுவதால் ஏற்படும்
சலிப்புத்தன்மை.
புத்த சூழலில் பெண்களுக்கெதிரான வன்முறைகளிலிருந்து பெண்களைப் ாதுகாப்பதற்கு முன்வைக்கக்கூடிய சில ஆலோசனைகள்.
1.
7.
வன்முறைகளை குறைக்க சட்டம் நீதி போன்ற துறைகளில் தீவிர கவனம் செலுத்துதல்.
குற்றம் புரிபவர் யாராக இருந்தாலும் அவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துதல்.
யுத்த பிரதேசங்களில் தமது இயலாமையை, தோல்வியை, இழப்பைப் பெண் மீது வன்முறையாகக் காட்டுவதைத் தவிர்க்க நடவடிக்கை
எடுத்தல்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தமான புணர்வாழ்வு நடவடிக்கை வழங்குதல்.
வன்முறையைத் தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி களைப் படையினர் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குதல்.
வன்முறையிலிருந்து பாதிக்கப்ட்ட பெண்களுக்கு பாதிப்பிலிருந்து வெளிவர உளவள ஆலோசனைகளை வழங்குதல்.
நீதித் துறையில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்தல்.
- 1 1 -

Page 10
புறப்படுவோம் புதிய புலர்வுக்காய்
குழந்தைகளைச்சுமக்கும்
கரங்கள் இன்று
бlвѣтрtill2ффji16штфldıрол.
இல்லறப்போராட்டத்தில்
இல்லாமல்போனவர்கள் இங்கே
உரிமைகளை உணரவில்லை.
அடுப்பங்கரையென்னும்
அனல்பிரதேசத்தை
ஆண்டுவரும்பெண்ணரசியர்
அனுவனுவாக நீங்கள்
மாண்டுவருவதை மண்ணில்
சொன்னது யார்?
bst60J6)|Isidobitni L
தாரங்கள் வரிசையில் ஒருத்தி த்தினிக்குளிiபுக்கு
gbi in 1 II6ii 3olóloIII(bibl சூதாட்டக்கட்டத்தில்
பந்தயப்பொருளானாள் ஒர்பாவை.
இலக்கிய காலங்களில் பெண்
இப்போக்கென்றால்
இக்காலங்களில் அவள்
இழிக்கப்படவில்லைமாறாக
கிரிசாந்திஎனவும்ரீற்றாஎன்றும் கிழிக்கப்படுகின்றாள்.
பெண்ணைச்சுமை தாங்கிஎன
முன்னைத்தமிழர்முழங்கினர்.
தலையிலேயூச்சுமை
கழுத்து, கரத்திலே நகைச்சுமை
வருடத்திற்கொன்றாய்ஒர்சுமை
- 12 -

வாடிக்கையாகிவிட்டது நாமேசுமை. அட்டைப்படமாக இவளிருந்தால்தானே சட்டைசெய்கிறார் சமுகப்பேர்வழி சுயமரியாதைச் சூரியன்சுள்ளென்று
சுடர்விட்டபோதும் இங்கே உறக்கம் கலையாமல் இருப்பது
தர்க்கு iறு
எத்தனை சூரியன் எரிந்தபோதும்
பத்தினிவேஷம்வேண்டும் யாவருக்கும்
அத்தனை பட்டங்கள் பெற்றபோதும் சொத்துக்கள்தான் சீர் சிறப்பு
திருமண பந்தம் இல்லையெனில் சமுகத்தில் தரிவிசனப்பட்ட நிலம்தானே இவள்,
கட்டுக்களை அவிழ்த்து இவர்கள்
எட்டெடுத்துவைக்கப்போனால்
குட்டொன்றுகொடுத்து இவளை
கட்டிலே வைத்துவிடுவர்.
in pitfiels)LisbidIILITit
சட்டிபானையோடுதான்வாழ்வு
பாவையரேபாருங்கள் எம்மை
பாட்டுடைவீசும் குரல்கொண்டு நேர்கொண்டநெஞ்சங்களாய்
நிமிர்ந்து பாருங்கள் நம் உலகை புறப்படுவோம் நமக்காக
நம்புதியபுலர்வுக்காக!
- ம. பாரதி
முதலாம் வருடம் கிழக்குப்பல்கலைக்கழகம்.
- 13

Page 11
- θα τιμώ
- விஜயலட்சுமி -
ஜீசஸ் இன்னும் வரவேயில்லை. செத்துப் போ. செத்துப் போ என்ற ஒலியும் அடங்கவேயில்லை. அவர்கள் பார்வைகள் அடிக்கடி மறுபுறம் பார்த்துக் கொள்வதை நான் அவதானித்துக் கொண்டேன். சிலவேளை ஜீசஸ் வரலாம் என்ற பயம் அவர்கள் மனங்களில் உள்ளது என்பது அவர்கள் பார்வையிலேயே தெரிந்தது. மீண்டும் ஒரு பெண் தப்பி விடுவதோ தங்களை தாங்கள் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதோ அவர்களுக்கு பிடிக்காத ஒன்று. இன்னும் நான் தலை குனிந்தபடியே இருந்தேன். தலையில் இருந்து நழுவி விடும் முக்காட்டை என் கை சரிசெய்து கொள்கிறது. என் முன்னால் நிற்பவர்களால் வெட்டப்பட்ட என் அழகிய கூந்தல் துாரத்தே கூரிய நகங்களாய் ளநிற்பது இன்னும் இவர்களுக்கு தெரியவில்லை.
கற்கள் என்னை நோக்கி ஓயாமல் வந்து கொண்டிருந்தன. என்னைச் சுற்றி வீசப்பட்ட ஓராயிரம் கற்கள் குவியலாய்க் கிடக்கிறது. கிறிஸ்துவின் காலத்தில் இருந்து இன்றைய மிலேனியக் கற்கள் வரை. அன்றில் இருந்து இன்று வரை எந்தவித மாற்றமும் இல்லை கற்களின் வடிவத்தில், "இவள் விபச்சாரி, நடத்தை கெட்டவள், இவளைக் கொன்று விடுவதே தர்மம். கூவிக் கொண்டிருந்த இவர்கள் பற்களின் இடுக் குகளில் காயாத இரத்தமும் என் உடலில் இருந்து குதறி பிய்த்து எடுக்கப்பட்ட சதைத் துண்டுகளும் ஒட்டியிருக்கின்றன.
இவர்களால், இரவில் என் குழந்தைகள் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் பண்ணப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு அவலட்சணமாக்கப்பட்டு நொந்து போன என் உடலும் உணர்வும், உயிரை விடச் சொல்லி அழுதுகொண்டே இருந்தது. வெளிச் சொல்ல முடியாத துயரங்களின் வேதனை பொறுக்க முடியாமல் எத்தனையோ தடவை இறந்தும் இருக் கிறேன். இந்தக் கூட்டம் அப்போதும் கலையவே இல்லை. கற்களுடன் மீண்டும் மீண்டும், எறிவதற்காய் காத்துக் கொண்டே இருந்தார்கள். கூட்டத்தைப் பார்க்கிறேன். தெளபீர் இன்னும் அதே கண்களுடன் என்னை வெறித்துக் கொண்டிருந்தான். என்னை, என் உடைமைகளை சூறையாடும் போது இவன் கையில் வைத்திருந்த "பென் டோச்” வெளிச்சத்தில் பார்த்த விலங்கின் முகம். என் பார்வை தன்னை நோக்கியது தெரிந்ததும் உயர்த்திய கையை கல்லுடன் சற்று தாழ்த்திக் கொள்கிறான். என் பார்வை விலகினால்
- 14

இவனால் எறிய முடியும். என் தனித்த ஒரு பார்வையால் ஒரு கல்லை நிறுத்தலாம். அனைத்துக் கற்களையும் எப்படி?
“அபுதாபிக்காரனோட விபச்சாரம் பண்ணினவள் இனிமே உயிருடன் இருக்கக் கூடாது' டேவிட் கத்திக் கொண்டே இருந்தான். அவன் கையில் வைத்திருந்த கல் அடிக்கடி நழுவி அவன் காலையே புண்ணாக்குவது எதுவுமே புரியாமல் தாக்குவதையே குறியாகக் கொள்கிறானே. “நான் கூப்பிட்டமாதிரி என்னோட வந்திருந்தா உனக்கு இந்தக் கதி வந்திருக்குமா..? கேள்வி அவன் கண்ணில் மின்னுகிறது.
இவளுக்கு நியாயம் வேண்டும், ஆம் பெண்களுக்கு நியாயம், வேண்டும்’ நிமிர்ந்து பார்க்கிறேன். எனக்கு கல்லெறியும் கூட்டத்திற்கு பின்னால் வெகு தொலைவில் என் குரல் ஒலியை ஒத்த சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அதற்குள் ஒருநாள், ஒருத்தியாய் நின்று கொண்டிருந்தவள் தானே நான். நாளை என்னைப் போல் ஒருத்தி அங்கிருந்து மறுபடியும் இங்கு வருவாள். நியாயம் பெற்றுக் கொடுத்தால் அந்தப் பெருமை தங்களுக்கே வந்து விடும் என்றபடி போட்டி போட்டு பெருமைக்காய் பெயருக்காய் கொடி துாக்கும் கூட்டத்தின் சொல்லடியில் வாயடைத்துப் போனவள்தானே நான். இருக்கும் பலவீனங்களைக் காட்டி, வளரும். திறமைகளை, நசுக்கும் கெட்டித்தனங்கள் என்றாவது நியாயம் கொண்டுவரும் என்பதை நான் நம்பவில்லை.
வெள்ளை மனதுடன் போராடும் குரல்கள் உண்மை புரிந்ததும் ஒர்நாள் என்னைப் போல் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். உள் ளத்தில் சாட்டையும் உதட்டில் இனிமையும் உள்ள இவர்களுக்கும் என்னைச் சுற்றி கல் எறியும் கூட்டத்திற்கும் வித்தியாசம் என்ன...? எல்லாமே வரட்டுக் கெளரவமும், ஆணவமும், சுய இன்பமும், வெறு மையும் தான். தொடர்கதையாய் நீளும் ஆதிக்கக் கைகள் ஒவ்வொரு பெண்ணால் பாழாக்கி அனைவர் முன்னும் அடித்துக் கொல்லும் துயர் கதை முடிவுறாமல் நீண்டு கொண்டே செல்லும்.
"புருசன விட்டிட்டு இன்னொருத்தனோட அதுவும் வெளிநாட்டுக் காரனோட போன பொம்பிள நாளைக்கு எல்லாப் பொம்பிளைகளையும் வழி கெடுப்பாள்” எனது சின்னப் பெண்ணுக்கு செய்து தந்து, என்னால் அவன் முகத்தில் வீசியடிக்கப்பட்ட காது வளையலுடன் கற்பக நகைக்
- 15

Page 12
கடை முதலாளி. மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தான். என்னைச் சுற்றி உறுமிக் கொண்டிருக்கும் எத்தனை ஓநாய்கள், என் வறுமையின் வாசம் இவர்களை வாலாட்ட வைத்தது. ஆடு நனைவதற்காய் அழுத ஓநாய்கள் தானே. மழைக்கு முளைத்த காளானையே ஒரு பாரிய குடையாக மாற்றிய என் முயற்சி பொறுக்காத குரங்குகள் கூட்டம். மனம் சிறகு விரித்துப் பறந்தது. O
"e tbuDr....... இனிமே நா ஸ்கூலுக்குப் போகமாட்டேன்’ என் சின்னப் பெண் அதிகாலையில் கண்விழிக்காமலேயே முனகியபடி படுக்கையில் புரண்டு படுக்கிறாள். "ஏம்மா...” தலையைத் தடவியபடி கேட்கிறேன். “போம்மா... 99 கையைத் தட்டி விடுகிறாள். “எத்தின நாளைக்கு கிழிஞ்ச வேக்கோட, கிழிஞ்ச சப்பாத்தோட ஸ்கூலுக்கு போற. எல்லாப் பிள்ளைகளும் பழிக்குதுகள், இனிமே நான் போக மாட்டேன்’ மகளின் விசும்பல் என் கண்ணை நிறைக்கிறது. “உம்மா” படுத்தபடியே அழைக்கும் மூத்த பெண் பர்சானாவை பார்க்கிறேன். "நேற்று பின்னேரம் சுந்தரமாமா, இனிமே உன் பிள்ளைகளோட படிப்ப நான் பாத்துக்கிறன். நீ ஒண்ணுக்கும் கவலைப்படாத என்று சொன்னார் தானே. அவர் கிட்ட போய் காசி வேண்டி வாவன். 99
என் கணவருக்கு, எத்தனையோ நண்பர்கள், அதில சுந்தரமும் ஒருவன், என் கணவனும் சுந்தரமும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் போதெல்லாம், வீட்டிற்கு வரவேண்டாம் என்று எத்தனையோ நாட்கள் இவனுக்கும், இவனது நண்பர்களுக்கும் ஏசியிருக்கிறேன். மதுபோதையில் இவர்களது பார்வைகள் சகிக்கவே முடியாது என்னால். கணவன் என்னை விட்டு, வேறு திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்து நான் விரும்பாமலேயே இவர்கள் எல்லோரும் அடிக்கடி வீட்டிற்கு வந்தார்கள். உதவிக்கரம் நீட்டுவதாய் கூறிக் கொண்டு தங்கள் காமக் கண்களால் என்னைத் தடவினார்கள். உதறிவிட்ட, உதாசீனப்படுத்திய என் சொல்லைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் வளைய வந்தார்கள். ஊராரின் பார்வைகள் என் வீட்டை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியது. “வாறத்தில ஒருத்தன் புருசனோ இல்ல எல்லாரும் இவளுக்கு புருசனா. ’ என் பின்னால் வந்த அம்புகள் நெஞ்சைக்குத்தி நின்றது “நீ மட்டும் ஒமெண்டு சொல்லு, தாலி மட்டும் கட்டாத குறை ஒன்றைத் தவிர மற்றப்படி உன்ன ராசாத்தி மாதிரி வைச்சிருப்பன்’ பல தடவை சுந்தரம் கேட்டிருப்பான். ஓர் இரவு வந்த சுந்தரத்தை நாயை விரட்டியது போல விரட்டி விடுகிறேன். என் போதாத காலத்தை சாட்டாக வைத்துக் கொண்டு மறு நாள் ஜாபிர், வேறொரு நாள் ஜோன், இன்னொருநாள் முசாம்பில்,
- 16

மீண்டும் சுந்தரம். ஓயாமல் ஊளையிட்டன ஓநாய்கள். . வாசல் வரை வந்து கதவில் எறிந்த பந்தாய் இவர்கள் உதவிகள் இவர்களுக்கே திரும்பிச் செல்கிறது. அன்றாடம் உழைத்து உண்பதே கஷ்டமான நிலையில், ஊராரின் சந்தேகப் பார்வைகளும் பழிகளும் மொத்தமாக என் சுய உழைப்பில் மண்ணைப் போடுகிறது.
என்ன செய்வது என்று புரியாமல், இந்த வேட்டை நாய்களின் விரட்டல்களில் களைத்துச் சோர்ந்த வேளையில், என் நண்பி ஒருத்தி அபுதாபி செல்ல உதவி செய்தாள். என் பிஞ்சுக் குழந்தைகளைப் பிரிய முடியாமல், ஆனால் பிரிய வேண்டிய என் தலைவிதியை நொந்து, இறைவனை நொந்து அபுதாபியில் தொடர்ந்து 5 வருடங்கள் இருந்து நான் அங்கிருந்த வேளையில், ஊரில் வயதிற்கு வந்த என் மூத்த பெண்ணுக்கு பல விதமான புடவைகளுடனும், என் இளைய பெண்ணுக்கும் பையனுக்கும் ஆடைகள், விளையாட்டு சாமான்கள் பாடசாலை உபகரணங்கள், நகைகள், வீட்டுக்குத் தேவையான சாமான்கள், ரி.வி. ரேப்செட் இன்னும் பலப்பல சாமான்களுடன் குருவி சேர்ப்பதுபோல ஒவ்வொன்றாய்க் சேர்த்து 5 வருடங்கள் கழித்து என் நாட்டுடன், என் குழந்தைச் செல்வங்களுடன் சேர்ந்து கொண்ட போது இழந்த என் உயிர் மீண்டும் கிடைத்தது போல் அளவு கடந்த ஆனந்தம் எனக்கு. எனது சேமிப்புக்களைக் கொண்டு ஓர் தொழில் செய்து என் குழந்தைகளுடன் வாழ்வது என்று முடிவு செய்த போது, மீண்டும் இந்த ஓநாய்கள் வாலாட்டத் தொடங்கின. பழைய கோழையல்ல நான் என்பதை விளங்கிக் கொண்ட இவர்கள் என்னைப் பழி வாங்க ஊராரின் கண்களுக்கு கறுப்புக் கண்ணாடி அணிவித்தனர். வலிந்து விரட்டும் இவர்கள். கேள்விக் குறியுடன் நோக்கும் அயலவர். ஓர் இரவில் தனிமையில். இருளில் என் உடல் குதறுப்பட, உடமைகள் அழிக்கப்பட, நான் மூழியாக்கப்பட்டேன்.
“பிணந்தின்னும் பிசாசாய், என் முன்னால் கறுப்பு முகமூடிகளுடனும், பேய் நகங்களுடனும், நீண்ட பற்களுடனும் நிர்வாண காட்டுமிராண்டிக் கூட்டமாய் என்னை மாறி மாறி கடித்துக் குதறிய அந்தக் கூட்டம் இன்னும் அதே இரத்தம் தோய்ந்த பற்களுடனும் பல் இடைவெளிகளில் சதைத்துண்டுகளுடனும், காம வெறி பிடித்த கண்களுடனும். தலைக்கு மேல் கழுகுக் கூட்டம் இரைச்சலுடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கற்கள் வீசப்பட்டுக் கொண்டே இருந்தது.
பிய்த்தெறியப்பட்டு கிடக்கும் தம் இனத்தின் சிறகினைப் பார்த்து ஒன்றாய் பத்தாய், நுாறாய் காலம் காலமாய் கூடிக் கூடிக் கரையும் காக்கைகள் கூட்டம் தொண்டைகிழியக் கத்திக் கொண்டே இருந்தன.
-17 سه

Page 13
“இவளுக்கு நியாயம் வேண்டும், வன்முறை ஒழிக, சமத்துவம் வேண்டும், உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும், ஆதிக்கம் ஒழிக, துாரத்தே ஒலிக்கும் ஒலிகள் இன்றா. நேற்றா..? இன்னும் இன்னும் சந்தர்ப்பங்களை உருவாக்கி அநியாயம் செய்யும் வெறியர்களும், சந்தர்ப்பங்கள் உடைக்கப்பட்டு அவமானப்படும் பெண்களும் பெருகிக் கொண்டேதான். இதற்கெல்லாம் முடிவு. எப்படி. எப்படி. என் குதிரையின் கால்கள் குறுகிக் கொண்டே செல்கிறது. பாவம் கால்நீட்டிப் படுத்துக் கொள்ள ஆசை போலும். அருகே மலையளவு குவிக்கப்பட்டிருக்கும் முன்னைய வர்களின் எலும்பு எச்சக் குவியல்களின் நிழலில் மெது மெதுவாய் ஊர்ந்து செல்கிறது.
“வெளிநாட்டுக்காரனுடன் கெட்ட நடத்தை நடந்து பணம் சேர்க் கும் இவள் போன்ற பெண்ணை கல்லால் எறிந்து கொல்வதே புனிதம்'. எனக்காக கல்லறையில் சிவப்புமையினால் எழுதப்பட்ட எழுத்துக்கள் என் பார்வையில் மங்கிக் கொண்டு வந்தது. மீட்பரை எதிர்பாராத என் பட்சி துாங்குவதற்கு முன், தன் சிறகுகளை படபடவென மனதில் அடித்துக் கொள்கிறது.
- 18
 

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்துடனான நேர்காணல்
நேர்கண்டவர் : அபிராமி.
அக்கரைப்பற்று கோளாவில்லைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் புனைகதைத் துறையில் குறிப்பிடத்தக்கதொரு படைப்பாளி. தற்பொழுது லண்டனில் வசித்துவரும் இவர் அங்கு சுகாதார ஆலோசகராகப் பணியாற்றுகிறார். இவரது நாவல்களுள் ஒரு கோடைவிடுமுறை, தேம்ஸ் நதிக்கரையில் உலகமெல்லாம் வியாபாரிகள். என்பன குறிப்பிடத்தக்கன. திரைப்படத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். The Private Place, Escape from Genocide 616tu60T 96.6)605use) (53) Lig5d 560T.
* உங்களுடைய இலக்கியப் பிரவேசம் பற்றிக் கூறுங்கள்.
ஒருவர் எழுத்தாளராகவோ கலைஞராகவோ வருவதற்கு இளமைக் கால அனுபவங்கள் காரணமாகின்றன. நான் எழுத்தாளராக வருவதற்கு எனது இளமைக்காலத்தில் பதினைந்து வயதுக்கு முன்னர் நிறைய வாசித்தது ஒரு காரணம். மற்றையது அந்தக் காலத்தில் எனது தந்தை சமூக சீர்திருத்த, வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவரது எழுத்துப் பணிகளுக்கு நான் உதவி செய்தேன். அதனால் எழுத்துப்பழக்கம், பன்னிரண்டு வயதிலேயே வந்தது. அதே காலகட்டத்தில் வெளிவந்த “சிறிலங்கா’ என்ற சஞ்சிகையில் கோளா வில் பிள்ளையார் கோயில்பற்றிக் கதை எழுதினேன். அந்தக் கோயில் கட்ட ஆரம்பிக்கும் ஒரு சரித்திரம் பற்றியது அந்தக்கதை.
அந்தக்காலத்தில் எனது தகப்பனார், காந்தியப் போராட்டங்களில்
ஈடுபட்டார். அத்தோடு சுபாஸ்சந்திரபோஸ், காந்திய புத்தகங்கள், மற்றும் கருணாநிதி, அண்ணாத்துரை ஆகியோரது எழுத்துக்களை வாசித்தேன்.
பின்னரே இதிகாசங்களுக்கும் அப்பால் சமூக நாவல்கள் படிக்க வசதி வந்தது.
1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தபோது முதல் முதல் அந்த மாணவர்
களோடு முன்னுக்குப் போன மாணவி நான். அதிலிருந்து ஒரு மேடைப் பேச் சாளராக மாறினேன். மாணவர் பேச்சுப் போட்டிகளில், கட்டுரைப் போட்டிகளில்
பங்கெடுத்து அந்த மாவட்டத்திலேயே முதல் மாணவியாகத் தேறியதால்
ம ற்சாகமும் நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் வந்தது. அதே
நேரத்தில் மற்றவர்கள் போல் கல்யாணம் செய்து இருக்கவேண்டும் என்ற
ஆசை இருக்கவில்லை. அந்த வாழ்க்கை பயங்கரமானதாக இருந்தது. அதற்கு
ஒரு காரணம் எனது குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களும் அல்லது பெரும்பாலான ஆண்கள் பெண்
- 19.

Page 14
களை நடத்தும் விதம் எனக்கு அதிருப்தியையும் பயத்தையும் தந்தது. எனது குடும்பத்தைச் சேர்ந்த கணிசமான தலைவர்கள் சின்னவீடு வைத்திருந்தார்கள். அந்தத் துன்பத்தில் எங்கள் பெண்கள் படும்பாடு தெரிந்தது. சமத்துவமில்லாத, சுதந்திரமில்லாத கணவனது விருப்புக்கு மட்டும் இயைந்து போகும் பெண்ணாகத்தான் பெண்ணின் வாழ்க்கை அமைகிறது என்ற கருத்து இருந்தது. அது முழுமையாக தெளிவாக இருக்கவில்லை. ஆனால் திருமணம் என்பது பெண்களுக்குத் துன்பத்தைத் தருவதுதான் என்ற கருத்து இருந்தது. அத்தோடு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசையின் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்று (Nursing) தாதியர் கல்வி கற்றேன். சிறைபோல ஒரு கல்யாண வாழ்க்கைக்குள் காலத்தை முடிக்காது எழுதவேண்டும் என்ற எண்ணத்துடன் யாழ்ப்பாணம் போனேன். யாழ்ப்பாணம் போய் எனது கண்களை விரித்து விட்டது சாதிக் கொடுமை. அதிலிருந்து வெடித்தது தான் எனது இலக்கியம்.
* நீங்கள் ஒரு எழுத்தாளராக வாழ்வைத் தொடங்கி, இன்றுவரை எழுத்துலக வாழ்வில் பயணிக்கின்றீர்கள். இந்த அனுபவங்கள் எத்தகையன? நீங்கள் ஒரு பெண் என்பதை இந்த அனுபவங் களினுாடாக எவ்வாறு உணர்ந்திருக்கிறீர்கள்?
நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் பெண் எழுத்தாளி, ஆண் எழுத்தாளி என்ற பிரக்ஞை இருக்கவில்லை. ஒரு எழுத்தாளி என்ற பிரக்ஞை இருந்தது. அத்தோடு அந்தக் காலகட்டத்தில் பெண்ணிய சித்தாந்தம் எல்லாம் தெரியாது. ஆனால் எங்களது முன்னோடிகளாக இந்திராகாந்தி, சரோஜினிதேவி போன்ற பெண்கள் இருந்தார்கள். எங்களுக்குத் தெரிந்த பெண்கள் இந்தியப் போராட்டத்தில் இருந்த பெண்கள் தான். அந்தமாதிரி சமூகத் தொண்டுகள் இருக்கவேணும் என்ற எண்ணம் வந்தது.
யாழ்ப்பாணம் போய் சாதிக்கொடுமையைக் கண்டேன். மாவிட்டபுரம் கோயில் பிரகாரம், சங்கானை சாதிச்சண்டையில் நேரடியாகத் தாக்கப்பட் டவர்களைக் கண்டேன். தாக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை செய்யும் தாதியாக இருந்தேன். மேல்சாதி வர்க்கத்தால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களைச் சந்தித்தேன். அந்த ஆவேசம் என்னை எழுதத் துாண்டியது. அதுதான் “சித்திரத்தில் பெண் எழுதி” என்ற எனது முதலாவது கதை. மற்றொருகதை மல்லிகையில் வந்தது. அந்தக் காலகட்டத்தில் சமூகக்
- 20

அண்ணோட்டத்தில் சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் ஒரு எழுத்தாளி என்ற நிலையில்தான் இருந்தேன். பெண்ணெழுத்தாளர் என்ற பிரக்ஞையுடன் எழுதத் தொடங்கியது ஆங்கில நாட்டுக்குப் போன பின்னர் தான்.
* புலம் பெயர் இலக்கியம் என்பது, தமிழிலக்கியப் பரப்பிலே முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது. அந்த வகையிலே ஆரம்பத்தில் இருந்து நீங்கள் எழுதினாலும் கூட உங்களுடைய படைப்புகள் புலம்பெயர் இலக்கியம் என்ற தொகுதிக்குள் வைத்துப் பேசப்படுகின்றன. எனவே தமிழ் புலம்பெயர் சமூகம், அதன் கலாசார செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள். புலம்பெயர் இலக்கியத்துள் எனது பெயர் இருப்பது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் எனது எழுத்தின் வளர்ச்சி புலம் பெயர்ந்த பின்னர்தான் வந்தது. பெண்ணிய தத்துவ சித்தாந்தத்தின் ஆரம்பமே அங்கே தான் எனக்கு ஆரம்பமாகியது. துாரத்தில் இருந்து பார்க்கும் போதுதான் எங்கள் பெண்கள்படும் துயரம் எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது. கல்யாணம் என்ற கெளரவமான போர்வைக்குள் எங்கள் பெண்கள் துன்புறுவதைக் கண்டேன்.
நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை “காஞ்சிபுரத்துக்குள் காயங்களை மறைக்கும் கலாசாரம்”. அந்த கல்ாசாரத்தை, குங்குமத்துள் குமுறியெழும் வேதனையை மறைக்கும் சிரிப்பை, அதற்கப்பால் அந்தப்பெண்களின் துயரை எழுதத் துடித்தேன். அதன் பிரதிபலிப்பெல்லாம் எனது ஆரம்பகால நாவல்களில், சிறுகதைகளில் வரும். ‘மாமி’ என்ற சிறுகதையை 80ஆம் ஆண்டுகளில் வீரகேசரியில் எழுதினேன்.அது ஒரு பெண்ணியப் பார்வையில் எழுதப் பட்டது என்று ஆண்கள் சொன்னார்கள். நான் அந்தப் பிரக்ஞையோடு எழுதவில்லை. ஆனால் ஆண் கொடுமை மூர்க்கத்தனத்தைப் பற்றி எழுதினேன். இங்கிலாந்துக்கு நான் போன காலப்பகுதி பெண் எழுத் தாளர்களை வித்தியாசமாக புதுவிதமாகச் சிந்திக்கத் துண்ைடிய காலம். சிமோன் டி புவர், ரொனிமெவிஷன், அலிஸ்வோக்கர் போன்றவர்கள் எழுதினர். அதன் பிரதிபலிப்பாக பெண்கள் இலக்கியத்தில்
- 21

Page 15
தங்கள் சுதந்திரமான சிந்தனைகளை வெளிப்படுத்தினர். அதன் தாக்கம் இங்கிலாந்திலும் வந்தது. அலிஸ்வோக்கர் போன்றவர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது பேச்சை கேட்கும் சந்தர்ப்பம் வந்தது. இது எனது எழுத்துச் சிந்தனையை மாற்றியது. பல குழுக்கள் அங்கு நிறைய வேலைகளை பெண்ணிய விடுதலைக்காகச் செய்தார்கள். கல்விவாய்ப்புக்கான, பாலியல் சமத்துவத்துக்கா கருத்தரங்குகளை வைத்தார்கள், அதில் எல்லாம் ஈடுபடும் சந்தர்ப்பம் .னக்குக் கிடைத்தது. அப்போது நான் தொழிற்கட்சி அங்கத்தவராகச் சேர்ந்தேன். சேர்ந்த பிறகு அற்புதமான சில பெண்களை நான் சந்தித்தேன். அவர்கள் எல்லாம் பெண்விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். உல கெல்லாம் போய் பெண் கல்வி, பெண் முன்னேற்றம் என்பவற்றிற்குப் பாடு படுபவர்களோடு உறவு கொண்டேன். அந்த உறவின் பிரதிபலிப்புத்தான் என்னைத் திரைப்படத்துக்குக் கொண்டு போனது. இதற்குக் காரணம் எனது அருமை நண்பர் டேவிற் ரோனர் என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பெண்ணியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு இளைஞர்.
அவரும் பெண்ணியக்கூட்டத்தில் சந்தித்து என்னுடைய கமரா, புகைப்பட வேலையைப் பார்த்து, இது போன்ற பெண்கள் சினிமாத் துறையில் ஈடுபட்டுத்தான், அங்கிருந்த நிற பேதத்துக்கு வன்முறைகளுக்கு எதிராகப் படமெடுக்க வேண்டும் என்று எங்களை உற்சாகப் படுத்தினார். இதை நான் கூறுவதற்குக் காரணம் எப்போதும் ஆண்கள் எங்களை ஒடுக்கு பவர்களாக இல்லை என்பதனால், டேவிட் ரோனர் இல்லாது விட்டால் நானொரு பட்டதாரியாக வந்திருக்க முடியாது.
* ஆங்கிலத்திலே சிறுகதை, நாவல் போன்றவற்றை எழுதியி
ருக்கிறீர்கள் இதுபற்றி.
ஆங்கிலத்தில் நாவல் என்று ஒன்றுதான் எழுதியிருக்கிறேன் ல் இரு நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். தில்லையாற்றங் யில் ஆங்கிலத்தில் விரைவில் வெளிவர இருக்கின்றது.
ஆங்கிலத்தில் எழுதிய நாவல் “Kiss of a Cobra’. ஆங்கிலத்தில் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த முதலாவது நாவல் இது. பாலியல்
- 22 -

வல்லுறவுக்கு உட்பட்ட பெண்ணின் கதை. அது எடுபடவில்லை. அதைத் திருப்பி எழுதுவதற்கு நேரமில்லாமல் இருக்கின்றது. அடுத்தது சிறுகதை ஒன்றிரண்டு எழுதியிருக்கின்றேன்.
* The Private Place என்ற ஆங்கிலப்படத்தையும் ஒரு விவரணத் திரைப்படத்தையும் எடுத்துள்ளிர்கள். அதுபற்றிக் கூறுங்கள். இனியும் பெண்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொணரும்
படங்களைத் தயாரிக்கலாமல்லவா?
பிரைவேட் பிளேஸ் என்பது குடும்பங்களில் கணவன் எப்படி தன்னுடைய கணவன் என்ற அதிகாரத்தைக் காட்டி பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறான் என்பதை வெளிப்படுத்துவது. தமிழில், அந்தரங்க இடம் என்பது அர்த்தம். அதில் நடக்கும் கொடுமைகள் வெளியில் சொல்லமுடியாத கொடுமைகள். மற்றையது Escape from Genoside என்பது 85ம் ஆண்டு நாட்டைவிட்டு ஓடி வந்த தமிழ் பெண்ணின் வாய்மூலம், தமிழர்கள் படும்பாட்டை, தமிழ் பெண்கள் படும்பாட்டை, தமிழினம் படும்பாட்டை உலகுக்கு சொல்ல எடுத்தபடம். அது ஒரு டொக்கியூமென்றரி. அதன்பிறகு குடும்பக் காரணத்தால் சினிமாத் துறையில் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் எனக்கு வசதி வந்தால் இப்போது இலங்கையில் நடக்கும் மாற்றங்கள், பெண்கள் படும் துன்பங்கள், சாதி, மத, இன, வயது வித்தியா சமின்றி பெண்கள் பாலியல் கொடுமைக்கு அரசியல் ரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாக, குடும்ப ரீதியாகப்படும் துன்பங்களை படம் எடுக்கும் விருப்பம் உண்டு. படத்தின் மூலம் சிந்தனையைத்துாண்டி பெண்களே தங்களைப் பாது காத்துக் கொள்ளவும் தன்காலில் நின்று தங்களது சுதந்திரத்துக்கு, விடுதலைக்கு, சமத்துவத்திற்கு போராடுவதற்கு வழிவகுக்கும் என்ற நிலையில் தான் அந்தப் படங்களை எடுக்க யோசிக்கிறேன். இங்கிலாந்தில் படம் எடுப்பது என்றால் மிகப் பெரிய பணக்காரராக இருக்க வேண்டும். எனக்கு அந்த வசதியில்லை. இந்தியாவில் எனக்கு எப்போதும் வரவேற் புண்டு. அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரேயொரு கேள்வி எப்ப வர்றிங்க எங்களோடு படமெடுக்க? என்பதுதான். ஏனென்றால் அங்கு ஒரு முற்போக்கான தமிழ் இளைஞர் கூட்டம் இருக்கிறது. எனினும் எனது சிந்தனைக்கும் வர்த்தக இந்திய சினிமாச் சிந்தனைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் அங்கு போய் படமெடுப்பது சிரமமானதுதான்.
- 23 -

Page 16
* உங்களுடைய ஆரம்ப கால எழுத்துக்களைவிட பிற்பட்டகால எழுத்துக்களின் நடை, கருத்தியல் என்பவற்றுக்கிடையிலே வேறுபாடு இருப்பதாகக் கூறலாமா?
அந்தக் காலத்தில் தமிழ்க் கலாசாரம் என்ற கட்டுப்பாட்டுக்குள், கட்டுக் கோப்புக்குள் தான் எனது சிந்தனைகளும் இருந்தன. மாக்சிய சித்தாந்தம் போன்றவற்றைப் படித்தேன். சிந்தனையிலும் மாற்றம் வந்தது. ஆரம் பத்தில் சாதாரண பெண்களின் துயர் வாழ்க்கையைப் பற்றி எழுதினேன். இப்போது வரும் கதைகள் எனக்குத் தெரிந்த பெண்கள் எடுத்துக் கொண்ட பாதையைக் காட்டுகிறது. “அவனும் சில வருடங்களும்’ நாவலில் வரும் இந்துமதி விரும்பாத கணவனை விட்டுவிட்டு ஆறு மாதத்தில் லண்டனுக்கு வருகிறாள். லண்டனுக்கு வந்தும் தனக்கு விருப்பமான ராகவனைத் திருமணம் செய்ய முடியவில்லை. ஆனாலும் அதே வீட்டில் வாழுகிறாள். ஆளுமையுடன் முழுமையுடன் வாழ்ந்து, படித்து, காசு சேர்த்து, இந்தியாவுக்குப் போகிறாள். அந்தமாதிரிப் பெண் உலகம், நான் இப்பொழுது காணும் உலகம். நான் ஏதோ வருந்தி எடுத்து எனது கதைகளில் புகுத்தவில்லை. நிறைய நிறைய இந்துமதிகள் பரிஸில் இருக்கிறார்கள். அதுபோல தன்னுடைய காலிலே தான் நின்று சுதந்திரமான வாழ்க்கையைக் காணும் பெண்களாக இருக்கிறார்கள். அப்போதைய எழுத்துக்களில் நான் அந்தப் பெண்களை மிகக் குறைவாகவே கண்டேன். இப்போது நிறையத் தமிழ்ப் பெண்கள் தன் காலில் சுயமாக நின்று சமுதாயத்தில் கெளரவத்துடன் குடும்பத் தைக் காக்கும் பெண்களாக, குடும்பத் தலைவர்களாக இருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்புத்தான் இப்போது நான் காணும், எழுதும் நாவல்களும் சித்தாந்தங்களும்.
* லண்டனில் நீங்கள் சார்ந்திருந்த, இருக்கின்ற பெண்கள் அமைப்
புக்கள் பற்றிக் கூறுங்கள்.
லண்டனில் நிறைய பெண்கள் அமைப்புகளுடன் ெ பாய் இருந்தேன். ஆரம்பகால கட்டம், நான் Labour party இல் பெண்கள் பகுதியில், கறுப்பினத்தவர் பகுதிக்கு அங்கத்தவராக இருந்தேன். அதன்பின் லண்டனில் உள்ள Domestic violence என்ற பகுதியில் வேலை பார்த்தி ருந்தேன். Wiser link என்ற ஸ்தாபனத்தில் ஆரம்ப ஸ்தாபகராக இருந்தேன்.
- 24

Wiser link 6T6örpriso Women International Educational Information Link. அதில் ஆரம்ப கர்த்தாவாக இருந்தேன். அதன் பின்னர் (Tamil Women's 1eak) தமிழ் மகளிர் அணி 1981இல் இங்கிலாந்தில் முதன்முதல் தொடங்க ப்பட்ட ஒரு ஸ்தாபனமாக இருந்தது. அதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகளுக்கு அப்பால் நடக்கும் கொடுமைகள் பற்றி பிரசாரம் செய்து நிறையக் கருத்தரங்குகளை நடத்தினேன். அக்காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள் வந்தபோது எங்கள் வாயில்களும் மூடப்பட்டன. அதனால் செயல் இழந்த நிலையில் அந்த ஸ்தாபனம் இருக்கின்றது. அத்துடன் "Migrance film forum” gigig)ub gayubu 6rbg5Tu8JT8 g)(bibGg56i. 5pGLIT(pgbyub Domestic Violence இற்கு எதிரான வேலைகளை நான் வேலை செய்யும் துறையின் ஊடாகச் செய்து கொண்டிருக்கின்றேன். அத்துடன் பெண் கல்வி விடயமாக, தாய்மாரின் மேன்மை பற்றிய விடயங்கள், அதாவது தாய்ப் பாலின் மகிமை என்ன, குழந்தையின் வளர்ச்சி பற்றி தாய் ஏன் அறிந்து கொள்ளுதல் வேண்டும், போன்ற கல்வி ஊட்டும் விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
* உங்களுடைய சமூகப் பணிகள் பற்றிக் கூறுங்கள்.
நான் இங்கிலாந்திலே முதன்முதல் ஒரு அகதி ஸ்தாபனத்தை உண்டாக்குவதற்கு முன்னின்று உழைத்தேன். 1985இல் Tamil Refuge Organaization என்பதன் தலைவியாக இருந்தேன். அதில் இலங்கையைச் சேர்ந்த பல இயக்கங்கள் முன்னிருந்தன. இங்கிலாந்திலே முதன்முறை ஒரு சிறுபான்மை இனத்தவருக்கான வீடமைப்புத் திட்டத்தை உருவாக் கினேன். பெண்களுக்கு சுகாதாரக்கல்வி (Women Health Education) சார்ந்த கருத்தரங்குகளை, விரிவுரைகளை செய்து வருகின்றேன். தென் ஆபிரிக்கப் பெண்களுடன் நிறைய ஈடுபாடுண்டு. அவர்களது அமைப்புக் களிலும் இருந்தேன். அத்துடன் Save the children அமைப்பில் அங்கத் தவராக இருந்தேன். இவ்வாறு எனக்குள்ள நேரங்களில் ஒவ்வொரு வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றேன்.
- 25 -

Page 17
* சமீப காலமாகப் பெண்கள் மேற்கு நாடுகளுக்கு குடிபெயருவது அதிகமாக இருக்கிறது. கூடுதலாக அந்த நாடுகளில் வதியும் இளைஞர்களுக்கு மணமகள்களாகச் செல்கினர்றனர். இந்த வகையிலே புலம்பெயர்ந்தவர்களாக, கறுப்பராக, தொழிலாளியாக வாழுகின்ற பெண்ணின் மீது திணிக்கப்படுகின்ற தமிழ்ப் பெண் என்ற கலாசாரம் சார்ந்த ஒரு கருத்து நிலையையும் சேர்த்து அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. எனவே புதிய சூழலில் இவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் எவை?
நிறையப் பிரச்சினைகள் இளம் பெண்களுக்கு வருகின்றன. இளம் பெண்கள் இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்குப் பயந்து ஏஜென்சி மூலம் நீண்டநாட்கள் வெளியிடங்களில் எல்லாம் தங்கி வருவதனால் அவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது, அவர்களுக்குச் சகஜமாகி விட்டது. அதையும் தாண்டிக் கல்யாணம் செய்து விட்டால் ஒரு அற்புதமான தமிழ் பெண்ணாக இருக்கவேணும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அந்த பெண் அங்கே வந்து அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும். மொழி புரிய வேண்டும். முன் பின் தெரியாத மொழியில் வேலை செய்ய வேண்டும். சம்பிரதா யங்கள், குடும்ப உறவுகள், எல்லாவற்றையும் ஒரு பெண்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதனால் ஏகப்பட்ட சுமைகள் தமிழ்ப் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது என் கருத்து. கணவனைத் தவிர வேறு ஒருவரிடமும் சொந்த மொழியில் பேச முடியாத நிலையில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அதேநிலையில் ஆண்கள் இவர் களைத் துன்புறுத்தினால் இவர்கள் எங்கே போவார்கள்? அதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உட்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். இந்த மன அழுத்தங்கள் வித்தியாசமான நிலையில் வெளிப்படுகின்றன. சில பெண்கள் விவாகரத்துச் செய்கிறார்கள். சில பெண்கள் பிரிந்து இருக்கிறார்கள். சில பெண்கள் கல்யாணம் செய்யாமல் சேர்ந்திருக்கிறார்கள் இப்படி நிறைய சமுதாய மாற்றங்களைச் சட்டென்று கொண்டு வந்து ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்குகிறது. தமிழ் பெண்களுக்காக தனிப்பட்ட ஸ்தாபனங்கள் இல்லாதது ரொம்ப துக்கம். Tamil Women's leak என்று 1981ம் ஆண்டு என்னால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இன்று பெரும் வேலை செய்ய முடியாமல் இருக்கின்றது. அரசியல் காரணங்களால் எங்கள் வேலைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
- 26 -

அப்போது இந்த மாதிரிப் பெண்கள் வரும்போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்க ஒரு ஸ்தாபனம் இல்லாதது பெரிய துக்கம். இலங்கைக்கு வந்தால் மட்டக்களப்பில் உங்கள் ஸ்தாபனம் எல்லாம் பெண்களுக்காக எவ்வளவோ செய்கிறார்கள் அந்தளவுக்கு அங்கு தமிழ் பெண்களுக்கு ஒரு ஸ்தாபனம் இல்லாதது ரொம்ப துக்கமான விஷயம்.
* வெளிநாடுகளுக்குப் போய் பெண்கள் தாங்களாகவே உழைக்கத் தொடங்கியதனர் பினர்னர் அவர்கள் பொருளாதார ரீதியில் சுயமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். அது ஆணாதிக்க சிந் தனையுடைய ஆண் வர்க்கத்துக்குச் சவாலாகக்கூட அமைகின்ற போது அவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்றன. குடும்பங்களிலே பொதுவாக இந்த புலம்பெயர்ந்த பெண்கள் ஆணாதிக்க ஒடுக்குமுறையை முழுவடிவிலே அனுபவிக்கிறார்கள்
என்று கூறலாமா?
நிச்சயமாக. அங்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த பெண்ணை ஆண்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது உண்டு. அது அந்தப் பெண் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வந்திருப்பதை மட்டந் தட்டுவதேயாகும்.
நீ என்ன கணக்க உழைக்கிற? நீ என்ன எனக்குச் சொல்ல வந்திட்ட? என்ற மட்டந்தட்டல்கள். எப்படித்தான் உழைத்தாலும் எவ்வளவு தான் கல்வி கற்றாலும் எனக்கு நீ அடங்கியிருக்க வேண்டும் என்ற ஒரு ஆணவம் அவர்களுக்கு இருக்கிறது. அவற்றைப் பெண்கள் எடுத்துச் சொன்னால் நீ என்ன வாய் காட்டுகிறாய்? உனக்கு பெண்சாதியாக இருக்கத்தகுதி இல்லை என்று அடக்குவது. பெண்சாதியாக இருக்கத் தகுதி இல்லை என்ற வார்த்தைக்கு நீ அடிமையாக இருக்க வேண்டும் என்பதே அர்த்தம். அடிமையாய் இருக்க பெண்கள் இப்பொழுது தயாராக இல்லை. இன்னுமொரு கோணத்தில் பார்த்தால், நான் சொல்வதை எல்லாம் செய்து கொண்டு வாய்மூடி மெளனமாக குருடியாக, செவி டியாக இருந்து கொண்டு எனக்கு இன்பத்தைத் தா. அதற்கு மட்டும் நீ பெண்ணாக இரு. ஆனால் என்னுடன் சமமாக இருப்பதற்கோ, உன் னுடைய உணர்வுகளை நான் புரிந்து கொள்வதற்கோ இங்கு இடமில்லை. அதுதான் பெண்சாதியாக
- 27

Page 18
இருக்க தகுதி இல்லை என்று சொல்லும் வார்த்தையின் அர்த்தம் என்பது என்னுடைய கருத்து.
* சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான மதிப்பீடுகள் இன்னும் மாற்றத்துக்கு உட்படாத நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையில் குடும்பம் என்னும் நிறுவனம் பெண்களை எவ்வாறு நோக்குகிறது? ஆணாதிக்கம் செயற்படும் ஒரு நிறுவனம் என்ற வகையில் குடும்ப அமைப்பு முறையை எவ்வாறு எதிர்கொள்ளலாம்?.
குடும்ப அமைப்பில் ஆண், பெண் சமத்துவம் இல்லாவிட்டால் குடும்ப அமைப்பு அழிந்து விடும். குடும்ப அமைப்பில் பெண்கள் பங்கு மிக மிக முக்கியமானது. ஒரு உயிர் உற்பத்திக்கு ஆணின் பங்கு முக்கியம். ஆனால் ஒரு தாயின் பங்குதான் அதி முக்கியம். அந்த அதி முக்கி யத்தை ஆணாதிக்கத்தின் மூலம் அவர்கள் மட்டந் தட்டுகிறார்கள். ஆண்கள் இல்லை என்றால் பெண்களால் வாழ முடியாது என்ற ஒரு தத்துவத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பொருளாதாரம் தான் ஆண்கள் இல்லையென்றால் பெண்களுக்கு வாழ்வு இல்லை என்று கருத வைக்கிறது. ஆனால் உண்மையாக பெண்கள் இல்லா விட்டால் தான் ஆண்களுக்கு முழுமையான வாழ்வு இல்லை. உதாரணமாக ஒரு கணவன் மனைவியை இழந்து விட்டால் இரண்டு மாதத்தில் அல்லது இரண்டு வருடத்தில் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி கல்யாணம் செய்வார். ஆனால் ஒரு பெண்ணால் அது முடியாது ஏனென்றால் பெண்ணுக்குள்ள சமூகக் கட்டுப்பாடு விதவையாய், தன் ஆசாபாசங் களை ஒடுக்கி ஒரு மரக்கட்டையாய், மனித உணர்வற்ற பெண்ணாக வாழ்வதையே சமூகம் எதிர்பார்க்கிறது. சமய நம்பிக்கையின்படி “விதவை’ இன்னொருவனைத் திருமணம் செய்யமாட்டாள். ஏனென்றால் அப சகுனம். திருமணம் செய்தால் அந்த ஆணும் இறந்து விடுவான் என்ற நம்பிக்கை. அதாவது பெண்ணின் புனிதம் தான் கணவனைக் காப்பாற்றுகிறது என்பது ஐதீகம். விரதங்களை எடுத்துப் பார்த்தால், புருசனுக்கு சுகமில்லை என்றால் பெண் விரதம் இருப்பாள். பெண் சாதிக்கு சுகமில்லை என்றால் புருஷன் விரதம் இருக்கிறதில்லை. ஏனென்றால். பெண் பத்தினியாய் இருப்பது என்பது மிக மிக முக்கியமான விசயமாகக் காட்டப்படுகிறது. அதாவது நீ எவ்வளவு துாய்மையாய் இருக்கிறாயோ அவ்வளவு அவர் சுகமாக இருப்பார். நிறையப் பொருளாதாரம்
- 28

உள்ளவராக இருப்பார் என்பது. இதனால் முழுக்க முழுக்க துாய்மைப் பண்பு, கலாசாரம் என்பவற்றுள் பெண் தன்னைப் புதைத்துக் கொண்டு நீச்சலடித்து கணவனின் திருப்பதிக்காக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறாள். இதெல்லாம் ஆரிய, பிராமணிய ஐதீகங்களின் மிச்ச சொச்சம். அடுத்தது பெண் உடம்பு குடும்ப வாழ்க்கையில் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாக, கர்ப்பப்பை ஒரு தொழிற்சாலையாகக் காட்டப்படுகின்றது. அதாவது ஆணின் இன் பத்துக்கும் ஆணின் வர்க்கவிருத்திக்கும் சமுதாயத்தின் வர்க்கவிருத்திக்கும் பெண் உடம்பு பாவிக்கப்படுகிறது. அதில் பெண்ணின் விருப்பு, வெறுப்புக்கள், வேண்டாமைகள், உணர்வுகள் என்பன எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் பெண் உடம்பு உடலியல் ரீதியாக சொல்லப் போனால் இனப்பெருக்கத்துக்கு அற்புதமான படைப்பு. ஆனால் கலாசார ரீதியில் பார்க்கப் போனால் கலாசாரத்தின் விளம்பரப் பலகை யாகத்தான் காட்டப்படுகின்றது. சமயக் கண்ணோட்டத்தில் ஒரு காட்சிப் பொருளாகக் காட்டப்படுகிறது. கலாசாரம், சமயம் இரண்டும் சேர்ந்து பெண் உடம்பின் வரையறைகளை முடிவு செய்கின்றன. எவ்வாறு பெண் இருக்க வேண்டும் என்று வரையறை செய்கின்றன. விதவையானால் பொட்டு வைக்கக் கூடாது என்ற மதக் கோட்பாடுகள் இருக்கின்றன. பெண் உடம்பு சமுதாயத்தின் பொதுச் சொத்தாகப் பார்க்கப்படுகிறது. அரசியலில் எதிரியின் போர்க்களமாக பார்க்கப்படுகிறது. பாலியல் வல்லுறவு என்பது உடல் ஒரு பெண்ணின் சொத்தல்ல. அரசாங்கத்தின் சொத்து, ஆணின் சொத்து, சமுதாயத்தின் சொத்தாகத்தான் பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
* கலாசாரம், பாரம்பரியம் என்பவற்றைக் கட்டிக் காக்கும்படி பெண்கள் மட்டுமே அறிவுறுத்தப்படுகின்றனர். ஆண்கள் அவ்வாறு கட்டிக்காக்க வேண்டுமென்றில்லை.
குடும்பத்தில் வரையறை இருக்கிறது. ஆண் உழைத்துத் தருவான். பெண்தான் குழந்தைகளை வளர்க்க வேணும் என்பதுபோல சமுதாயத்திலும் ஆண்கள் எப்படியும் போகலாம். பெண்கள் மட்டும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஏனென்றால் பெண் உடம்பு அந்தக் கலாசாரத்தைப் பாதுகாக் கிறது இது பிராமண ஐதீகத்திலிருந்து வந்தது. பெண்கள் மத அடையாள ங்களைப் (இந்து, முஸ்லிம்) பேணுபவர்களாகவும் இருக்கவேண்டும் என்ற
ი9

Page 19
கட்டுப்பாடு உள்ளது. ஏனென்றால் ஆண்கள் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று தங்களுக்குள்ளேயே தங்களுக்கான சுதந்திரமான ஒரு வரைவிலக் கணத்தை வைத்துக் கொள்கிறார்கள்.
* பணிபாடு என்பது பெணர்களினுடைய ஆளுமையைக் கட்டுப்
படுத்துகிறது அல்லது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது.
பொதுவாக எல்லாக் கலாசாரமும் பெண்மையின் முழுமையான ஆளுமையைக் கட்டுப்படுத்தும் கோட்பாடுகளைத் தான் கொண்டு வந்திருக் கிறது. பொதுவாக எல்லா மதங்களும் சமத்துவத்தைப் பற்றிச் சொல்லு கின்றன. ஆனால் நடைமுறையில் ஆண்கள் படைத்த கோட்பாடுகளுக்கேற்ப பெண்களின் ஆளுமையைக் குறைத்து, எப்போதும் தங்களை மதிப்பவர்க ளாகவும், தங்கள் சொற்களைக் கேட்பவர்களாகவும், தங்கள் பார்வை மூலம் உலகத்தைப் பார்ப்பவர்களாகவும், தங்கள் சிந்தனைகளை உள்வாங்கி தம்மைப் போலவே சிந்திக்கப் பண்ணுபவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படித்தான் எங்கள் பெரும்பாலான பெண்களும் இருக்கிறார்கள்.
* பெண்நிலைவாதம் சம்பந்தமான புதிய கோட்பாடுகள், புதிய போக்குகள் தமிழ்ச் சூழலுக்கு எந்தளவுக்கு பொருத்த மானவை?
தமிழ்ச்சூழலில் என்று சொல்லும்போது அரசியல் மாற்றம் வரும் போது பெண்களின் நிலையிலும் நிறைய மாற்றம் ஏற்படுகிறது. பெண்கள் வெளியில் போகிறார்கள். உழைக்கிறார்கள். வெளி உலகத்தின் சிந் தனையை உள்வாங்குகிறார்கள். அவர்களது சிந்தனை விரிகிறது. தமிழ்ச் சூழ்நிலையே மாறிப் போய்விட்டது. சூழ்நிலையும் சமுதாயமும் எந்த நிமிடமும் எந்தக்கணமும் மாறிக் கொண்டிருக்கின்ற விடயம். கலாசாரம் என்பது ஒரு கட்டிவைத்த துாண் அல்ல. கலாசாரம், பலம் வாய்ந்த கலா சாரத்துடன் மோதும் போது அந்த பலம் வாய்ந்த இன்னொரு கலாசா ரத்திலுள்ள விடயங்களை எடுத்துக் கொள்ளும். அப்போது எங்கள் கலாசாா ரத்தில் நலிவுள்ள விடயங்களை இந்தப்பெண்கள் கேள்வி கேட்கிறார்கள். அது தமிழ்க் கலாசாரத்துக்கு சவாலான விடயங்களாக இருக்கிறது.
படிப்பு வசதியுள்ள காரணத்தால், தேசிய விடுதலைப் போராட்டங் களில் பெண்கள் கொண்டுள்ள பங்கு காரணத்தால், பெண்கள்படும் துன்பம் - 30

காரணத்தால், அரசியல் காரணத்தால், பெண்கள் உடம்பு போர்க்களமான காரணத்தால் தமிழ்ச்சூழலில் பெண்களின் வித்தியாசமான போக்கு ஒரு வித்தியாசமான சித்தாந்தத்தை எங்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.
* இன்றைய தொடர்பூடகங்கள் பற்றிய உங்களது கருத்துக்கள்.
இன்றைய வணிக சினிமா தமிழ் பெண்களை மிகவும் ஆட்டிப் படைக்கின்றன என்று கூறலாம். இங்கிலாந்தில், பிரான்ஸில், ஜேர்மனியில், இலங்கையில் தொலைக்காட்சியின் முன்னால் இருக்கும் பெண்களைத்தான் பார்க்கின்றேன். அத்தோடு பெரும்பாலான பத்திரிகைகள் அழகாக இருப்பது எப்படி, எதைப் பாவித்தால் வெள்ளை நிறத்தில் இருக்கலாம், அழகான லிப்ஸ் உடன் எப்படி இருக்கல்ாம் என்று போதைப் பொருளாக, நுகர்பொருளாக இருக்கத்தான் பெண்ணுக்கு வெறியை ஊட்டிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் 10 வருடங்களில் 5 அழகிகள் வந்துவிட்டார்கள் ஏனென்றால் அது வியாபார முறையில் மேற்கத்தைய நாடுகள் இந்தியாவில் 100 கோடி மக்களுக்கு தங்கள் படைப்பான கவர்ச்சிப் பொருட்களை விற்பதற்கான நாடகம், இந்தியா Sun TVயில் வரும் சினி நாடகங்களில் பெரும்பாலானவை பெண்ணடிமைத் தனத்தை முன்வைக்கிறது. ஆண்களுக்கு பெண்கள் அடிமையாக வாழ வேண்டும் என்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டுகின்றன. இதைப் பார்த்து இக்கால கட்டத்தில் ஆண்களின் மனநிலை ஒரு வெறிபிடித்த நிலையில் இருக்கின்றது. இவற்றைப் பார்த்துவிட்டு தங்கள் பெண்களும் தங்கள் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றார்கள். அந்த சிந்தனையின் பிரதிபலிப்புத்தான் இந்த தயாரிப்புக்கள் முழுவதும். அதற்கு எங்கள் பெண்கள் Brain Wash பண்ணப்பட்டு போவதுதான் துக்கமானது. அதனுடன் ஆண்களும், தேசிய பிரச்சினை நடக்கும் போது தேசிய உணர்வில்லாமலிருப்பது வேதனையானது. தேசிய பிரச்சினையில் எத்தனையோ விதத்தில் பங் கெடுக்கலாம். அதேநேரம் சமூகத் தொண்டு, சமூக சீர்திருத்தம, என பவற்றில் பங்குகொள்ளாமல் ஆண்களும் பெண்களும் கேவலமான மூன்றாம் தரமான படைப்புக்களுக்கு முன்னால் இருப்பது வேதனையாக உள்ளது. அதிலும் வாழ்க்கை, சித்தி போன்ற தொடர்கள். மனித மேம்பாட்டிற்கு எதுவும் செய்வதில்லை. அது குழந்தையில் இருந்தே ஒரு தொலைக் காட்சியோடு பின்னிப் பிணைந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உளவியல் மாற்றத்தை கொடுக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.
- 31

Page 20
* நீண்ட காலத்தினர் பின்னர் நீங்கள் இலங்கைக்கு வந்திருக் கின்றீர்கள் தற்போது இலங்கைச் சூழலில் நீங்கள் காணுகின்ற மாற்றம், மற்றும் உங்கள் ஊரில் நீங்கள் காணுகின்ற, உணரு
கின்ற மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்.
என்னுடைய அனுபவம் மட்டக்களப்பில் மிக மிக சோகமானது. ஆவேசத்தை, ஆத்திரத்தை உண்டாக்கியது. கூட்டுக்குப் போகும் சிறைக் கைதிகள் போல எங்கள் கிராம மக்கள் இருக்கின்றார்கள். பெண்மையின் பொலிவற்று பெண்களெல்லாம் சோர்ந்துபோய் இருக்கின்றார்கள். துயர் வடைந்த முகங்கள், காய்ந்து போன உடல்கள், பட்டினி கவலை, துன்பம், இராணுவம் எப்பவரும் என்ற ஏக்கம் பரந்த முகங்கள், சுதந்திரமற்று வீட்டுக் கைதிகளாக மக்களைக் காண்கின்றேன். குழந்தைகள் வெளியில் விளையாடுவதில்லை, அந்த சுதந்திரம் கிடையாது. பெண்களின் வாய்மொழி மரபைக் காணமுடியவில்லை. பெண்கள் தங்களுக்குள் பழகுவது கிடையாது. ஒரு காரணம் அரசியல் அடுத்தது தொலைக்காட்சியின் வருகை. இதனால் எல்லாரும் தங்கள் வீட்டிற்குள் இருக்கின்றார்கள். அதனால் அந்த கிராமத்து பரிவர்த்தனை ஒடுங்கிப் போய் இருக்கின்றது. சமயச் சடங்குகள் இல்லை. போர் நடந்து கொண்டிருக்கும் பூமியாகத்தான் இருக்கின்றது. போர் என்றால் எந்த நேரமுமல்ல ஆனால் எப்போது நடக்கும் என்ற பயம். முன்னர் தில்லை யாற்றில் எப்போதும் நாரைகள, கொக்குகள் எல்லாம் ஆயிரக்கணக்கில் வரும். இப்ப துப்பாக்கிச் சத்தத்தினால் பறவைகளே தில்லையாற்றுக் கரையில் இல்லை. தில்லையாற்றுக் கரைகளில் குழந்தைகள் விளையாட முடியாத நிலை. இப்போது தில்லையாறு சோர்விழந்து, சேறுபடிந்து, நாணல்ப்புல் நிறைந்து கிடக்கின்றது.
* தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன?
இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தால் மக்கள் மனநிலையில், நடைமுறையில், சமூக உறவில், இன உறவில் மாற்றம் உண்டாகி இருக்கிறது. இதனால்தான் பெண்கள் அநேக எதிர்ப்புக்களை அரசியல் ரீதியாக எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழ்ப் பெண் என்பதால் பொரு

ாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தது பேச்சு சுதந்தி ரமற்ற, எழுத்து சுதந்திரமற்ற மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு உள்ளாக்கப்பட்டி ருப்பதால் தமிழ்ப் பெண்ணின் விடுதலை உணர்ச்சி மட்டுப்படுத் தப்படுகிறது என்பது எனது கருத்து. இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் பெண்கள் செய்ய வேண்டியது இன, மத மொழி, வேறுபாடற்ற வகையில் மற்றப் பெண்களுடன் சேர்ந்து மனித உரிமைக்குரல் கொடுக்க வேண்டும். மட்டக்களப்பு, கோளா வில் போன்ற இடங்களில் பெண்கள் அபிவிருத்தி இயக்கங்கள் செய்யும் பணிகளை அறிந்தேன். அதுபோல் மாகாணரீதியாக மட்டுமல்லாமல் தேசிய ரீதியாகவும் அனைத்துப் பெண்களும் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து.
ஓவியம் : அருந்ததி

Page 21
சிமாழிபெயர்ப்பாளராத திலகவதி
-6lőf. élő5UTőfI -
திலகவதி எழுத்தாளரென்பதனை இலக்கிய ஆர்வலர் பலருமறிந் திருப்பர். அவர் கவிஞரென்பதனை அறிந்தோர் சிலராகவே இருப்பர். ஆயி னும், தமிழிலுள்ள குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளருள் திலகவதி ஒருவரென் பதனை மிகச் சிலரே அறிந்திருக்கக்கூடும். எனவே, மொழி பெயர்ப்பாள ரென்ற விதத்தில் திலகவதி பற்றி வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.
இன்றுவரை தொகுப்பு வடிவம் பெற்ற திலகவதியின் மொழி பெயர்ப்பு நூல்கள் இரண்டு அவை :
எட்டுத் திக்கிலிருந்து ஏழு கதைகள் - நர்மதா பதிப்பகம், சென்னை. மு.ப, செப். 1995. கடைத்தெருவின் ஞானி - நர்மதா பதிப்பகம், சென்னை, (Up.LJ. LDTffèr 1996. தவிர,
மேற்குறித்த நுால்களை அடிப்படையாகக் கொண்டு மொழி பெயர்ப்பு முயற்சி பற்றிக் கவனிப்பதற்கு முன் மொழிபெயர்ப்புத் தொடர்பாக இரு விடயங்களை நினைவு கூர்வது அவசியமாகின்றது. இவற்றுளொன்று, நவீன இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவமும் இது குறித்த தமிழ்ப் படைப்புலகத்தின் நிலை எத்தகையது என்பதும் பற்றியது. இது தொடர்பாக திலகவதி முதற்தொகுப்பு முன்னுரையில் கூறியுள்ள விடயங்கள் கவனத்திற்குரியவை:
6 á
- தங்களுடைய இலக்கியத்துக்கு நீண்ட பாரம்பரியம் இல்லை என்கிற உணர்வே உந்துசக்தியாக அவர்கள் (அதாவது, குறுகியகால வரலாறு கொண்ட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ள இந்திய எழுத் தாளர்கள் கர்), உலக மொழிகளின் சிறந்த இலக்கியங்கள் அனைத் தையும் தங்கள் மொழிகளுக்குள் அழைத்து வந்திருக்கிறார்கள். அம் முயற்சி அம்மொழி பேசும் மக்களுக்குத் தரமான இலக்கியத்தைப்
- 34

பரிச்சயப்படுத்தியிருக்கிறது. அதன் வழி அவர்கள் உணர்வும் மனமும் அறிவும் வளம் பெற்றிருக்கின்றன. உள்ளிடும் உத்திகளும் வலிமையும் புதுமையும் பெற்றுள்ளன”.
நாமோ பழம்பெருமை கொண்டாடுவதோடு திருப்தியடைந்து விடுகிறோம். நாம் பண்டைத் தமிழ் இலக்கியங்களின் மீது நாமாக கற்பித்த ஒரு தெய்வீகத் தன்மையை ஏற்றி வைத்திருக்கிறோம்
உலக இலக்கியப் பரப்பையும் தரமான படைப்பாளிகளையும் அறிவதும் பயில்வதும் நமது இலக்கியத்தையும் படைப்பாளிகளையும் மேலான தரத்துக்கு இட்டுச்செல்லும் படிகளாகும் என்றே நான் கருதுகிறேன்.
நாம் அறிந்த மலையாள மொழி இலக்கியத்தின் வீச்சும் வளர்ச் சியுமே இதற்குச்சான்று. இன்றைக்கும் உலகின் எப்பகுதியில் சிறந்த இலக்கியம் தோன்றினாலும் அதைத் தங்கள் மொழியின் சொத்தாக்கிக் கொள்கிற முனைப்பு அவர்களிடம் இருக்கிறது நம்மிடமோ, தாஸ்தாவ்ஸ்கி படைப்புகளின் முழுமையான மொழி பெயர்புகள் கூட இல்லை.
இருபது வருடங்களுக்கு முன்பு வரை கூட பிறமொழி இலக்கி யத்தில் தெறித்த வெளிச்சம் நமது இலக்கியத்தில் அடுத்த ஆண்டே மொழி பெயர்புகளாக வெளிவந்து ஒளிகாட்டின. இன்று இந்த நிலை அருகிப்போய் விட்டது.
அறைக்குள் வளரும் செடிபோல் தமிழ்படைப்புகள் செக்குமாடுகளாக சில பொருட்களையே சில கருத்துக்களையே சுற்றிச் சுற்றி வருகின்றன.
ஆண் பெண் உறவுச் சிக்கலும், முக்கோணக் காதலும் கிரைமும்
தான் இன்று படைக்கப்படும் இலக்கியத்தில் 99% ஆக இருக்
கிறது. ஆரவாரம் மிக்க சொல்லடுக்குகளும் வார்த்தை ஜாலங்களும்
சொற்சிலம்பமும் வாசகனைப் போதையில் ஆழ்த்தும் பூந்தோரணச்
சொற்கட்டும் இலக்கியமாகப் பகட்டிக் காட்டப் படுகின்றன. 99
- 35

Page 22
இங்கு தரப்பட்டுள்ள மேற்கோள் நீண்டு விட்டதாயினும், இன்றைக்கு தமிழ்ப் படைப்புலகின் அவல நிலையையும் மொழிபெயர்ப்பின் முக்கியத் துவத்தையும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது. அதுமட்டுமன்றி, மொழிபெயர்ப்பினைத் “தொழிலாகக் கொள்ளும் இன்றைய மொழி பெயர்ப்பாளர்களிடமிருந்து திலகவதியை வேறுபடுத்திக் காட்டவும் செய்கின்றது. மேலும், தலைசிறந்த சிறுகதைகளையும் படைப்பாளிகளையும் அவர் தேர்ந்தெடுத்ததன் அவசி யத்தையும் அதற்கான தேவையையும் மொழிபெயர்ப்பிலே அவர் கொண்ட உள்ளார்ந்த, உண்மையான ஈடுபாட்டினையும் உணர்த்தி நிற்கின்றது!
மொழிபெயர்ப்பு முயற்சி தொடர்பாகக் குறிப்பிட வேண்டிய மற் றொரு விடயம், மொழிபெயர்ப்பும் ஒருவகையில் ஆக்க இலக்கியமே என்பது. அதுமட்டுமன்றி, ஏனைய ஆக்க இலக்கியங்களைவிட, கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நேர அவகாசத்தையும் (குறைந்தது) இருமொழிப் புலமையையும், இருமொழி இலக்கிய அறிவையும் படைப் பாற்றலையும் கொண்டிருக்கும் போதுதான் மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்க தாகத் திகழ முடியும். இத்தகைய சிரமம் மிக்கதான படைப்பாக்கப் பின்னணியில் மொழிபெயர்ப்பாளரென்ற விதத்திலே திலகவதி எவ்வளவு துாரம் வெற்றி பெற்றுள்ளார் என்பதே எம் முன்னுள்ள கேள்வியாகும்.
இங்கு கவனத்திற்கெடுத்துக் கொண்ட மொழிபெயர்ப்பு நூல்க ளுள் ஒன்றான ‘எட்டுத்திக்கிலிருந்து ஏழு கதைகள்’ என்பது (1990 வரை) இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற 83 படைப்பாளிகளுள் ஆல்பெர் காம்யு, கேப்ரியேல் கார்சியா மார்க்வெய், எர்னஸ்ட் ஹெ மிங்வே, நதீன் கோ(ர்)டிமர், ஐஸக் பாஷெவிஸ் ஸிங்கர், அலெக் ஸாண்டர் சோல்ஸெனிட்சின், தாகூர் ஆகிய ஏழுபேர்களது சிறந்த படைப்புக்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. நுாலின் முன்னுரையிலே தமது எழுத்தாளர் தேர்வு பற்றி திலகவதி பின்வருமாறு கூறுகின்றார்:
“. எனவே, நான் நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலில் இருந்து இருபது பேர்களை மட்டும் கொண்ட ஒரு சிறு பட்டியலைத் தயார் செய்தேன். என்னுடைய பட்டியல் இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டான 1947 லிருந்து 1991 வரையிலும் இலக்கியத்துக்காக பரிசு பெற்றவர்களை மட்டுமே கூர்ந்து கவனித்துத் தயாரிக்கப்பட்டது.
(அடிக்கோடு கட்டுரையாளரால் இடப்பட்டது)
- 36

எழுத்தாளர்களைத் தேர்வு செய்வதைவிடச் சிரமமானது அவர்தம் படைப்புக்களில் சிறந்ததான ஒவ்வொன்றைத் தேர்வு செய்வது. அவ் வேளை பல்வேறு கஷ்டங்களை மொழிபெயர்ப்பாளரொருவர் எதிர் கொள்ள நேரிடும். திலகவதி தாம் பட்ட கஷ்டங்கள் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
“ஒவ்வொரு படைப்பாளரின் எழுத்தையும் பிரதிநிதித்துவப்படுத் தக்கூடிய படைப்புகளை தேர்ந்து தரவேண்டும் என்று எண்ணினேன். அத்தேர்வை நிகழ்த்துவதும் தேர்ந்தெடுத்த படைப்புக்களை அடை வதும் மிக மிக சிக்கலான காரியங்களாயின. சோல்செனிட "சினின் படைப்பான "மேட்ரியோனாவின் வீடு' எனும் கதைப்பிரதிக்காக உலகம் முழுதும் தொடர்பு கொண்டேன்.கடைசியாக ஒரு பிரதி அமெரிக்காவிலிருந்து வந்தது. அல்எபர்காம்யூவின் படைப்புகளில் அளவில் சிறுத்த, அதே சமயத்தில் சிறந்த, ஆனால் ஏற்கெனவே அடிக்கடி மொழிபெயர்க்கப்படாத கதையைத் தேர்ந்தெடுப்பது சிரம மாகவே இருந்தது. ஹெமிங்வேயின் படைப்புகளும் அவ்வாறே”
(அடிக்கோடு கட்டுரையாளரால் இடப்பட்டது).
திலகவதியின் கதைத் தேர்வுகள் சிறந்த படைப்புகள் என்பதனை அவற்றை வாசிக்கும்போதுதான் அறிந்து கொள்ளமுடியும். ஆயினும், எடுத்துக்காட்டு ஒன்றினுாடாக இதனை விளக்கலாம். ஹெமிங்வேயின் கதை யாக அவர் தேர்ந்தெடுத்த ‘மழையில் பூனை” என்பது அளவில் சிறியது. ஆயின் அக்கதை பற்றி பர்மிங்ஹாமில் ஒரு கருத்தரங்கே நடை பெற்றுள்ள தாம். அக்கருத்தரங்கிலே அக்கதை பற்றி தெரிவித்த கருத்துகளுள் சில பின்வருமாறு:
இக்கதை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. - பூனை என்பது அப்பெண்ணின் மனதில் இருக்கிற செளகர்யமான வீட்டு
வாழ்க்கையின் குறியீடு.
- பூனை அவளுடைய பற்பல ஏக்கங்களுக்கான மாற்று.
- 37 م.

Page 23
பூனை என்பது அவள் மனதிலுள்ள குழந்தைக்கான ஏக்கத்தின்
வெளிப்பாடு.
ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் அலசப்பட வேண்டியிருக்
கின்றமை
(அக்கருத்தரங்கிலே அவ்வாறு நடைபெற்றது).
எனவேதான் 'மழையில் பூனை” என்ற அக்கதைபற்றி திலகவதி
இவ்வாறு கூறுகிறார்: “இப்படியெல்லாம் வார்த்தைகளின் கனம் பார்த்து எழுதும் படைப்பாளிகளும் ரசிக்கும் வாசகர்களும் தமிழிலும் பெருக வேண்டும் என்று அவாவுகிறது என் இதயம்”
தவிர, கதைத் தேர்வுகளில் மொழிபெயர்ப்பாசிரியர் செலுத்திய கவனம் பன்முகப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. கோடிமரின் கதைத் தேர்வு இதனைப் புலப்படுத்தும் ஒரு சான்றாகிறது. இத்தொடர்பில் பின்வரும் மேற்கோளை எடுத்தாள்வது தவிர்க்கவியலாதது:
“அவ்வாறே படைப்பாளிகளில் அனைவரும் ப்ரன்ஸ் கா."ப்காவின் மேதைமையைக் கைகூப்பித் தொழுது கொண்டிருக்க, கா."ப்கா வாழ்ந்த வாழ்க்கை அவருடைய பெற்றோரின் பார்வையில் என்னவாக இருந்திருக்கும் என்பதைச் சித்திரித்து - பொதுவாக கா."ப்காவின் வாசகர்களுக்கு வில்லனாகவே தோற்றமளிக்கும் கா."ப்காவின் தந்தையின் எண்ணங்களைத் தாய்மை பொங்க சித்திரித்த விதமும், அதற்குப் பின்னால் நிற்கும்- மெளனப்பட்ட மனிதர்களின் குரலாய் இலக்கியம் ஒலிக்க வேண்டுமென்ற எண்ணமும் என்னை வெகுவாக ஈர்த்ததால் கோடிமரின் தந்தையின் கடிதத்தை நான் இத்தொகுதிக்கு ஏற்றதாகக் கருதினேன்”
(கீழ்க்கோடு கட்டரையாளரால் இடப்பட்டுள்ளது).
இப்பகுதியில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தமிழ் வாசகர்கள், எழுத்தாளர்கள் மொழிபெயர்பாளர்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கும் சிந்தனைக் குமுரியவை திலகவதி என்ற மொழிபெயர்ப்பாளரின் ஆற்றலுக்கும் தகைமைக்கும் சான்று பகர்பவை.
இனி, மொழிபெயர்ப்பின் தரம், சிறப்பு எத்தகையதென்பதனை விளங் கிக் கொள்ளும் பொருட்டு மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியை எடுத்தாள்வது அவசியமாகின்றது. இதற்கு வசதியாக, தாகூர் சிறு கதையின் மூலத்திலிருந்து ஒரு பகுதி கீழே தரப்படுகின்றது:
- 38 -

"He remembered the glorious meadow where he used to fly his kite all day long; the broad river-banks where he would wander the livelong day singing and shouting for joy; the narrowbrooks where he could drive and swim whenever he liked. He thought of the band of boy comanions Over whom he was despot; and above all, thoughts of even that tyrant mother of his; who had such a prejudice against him, filled his mind day and night. A kind of physical love like that of animals, a longing to be in the presence of the loved one, an in expressible wistfulness during absence, a silent cry of the in most heart for the mother, like the lowing of a call in the twilight this love, which was almost an animal instinct stir, red the heart of this shy, nervous, thin, in couth and ugly boy. No one could understand it, but it preyed upon his mind continually",
மேலுள்ள பகுதியை திலகவதி இவ்வாறு மொழிபெயர்த்துள்ளார். ' “அவன் ஒவ்வொரு இரவும் தன் கிராமத்து வீட்டையும் அவன் அங்கு திரும்பப் போவதைப் பற்றியும் கனவு காண்பான். அவன் வழக்கமாக நாளெல்லாம் பட்டம் பறக்க விடும் அருமையான புல்வெளியையும் ஆனந்தமாகப் பாடிக் கொண்டும் கத்திக் கொண்டும் பொழுதெல்லாம் திரியும் அகன்ற நதிக்கரையையும் விருப்பப்பட்ட போதெல்லாம் குதித்தும் நீந்தியும் விளையாடும் குறுகிய ஓடைகளையும் நினைத்துக் கொள்வான். அவன் சர்வாதிகாரியைப் போலக் கெளரவித்த நண்பர் குழுவையும் எல்லாவற்றுக்கும் மேலாக அவனுக்கு எதிரான போக்குடைய கொடு மைக்கார அம்மாவின் நினைவும் அவன் மனதை இரவும் பகலும் நிறைத்தன. அன்புடையவர்களின் முன்னிலையில் இருக்கவும்- அவர்கள் இல்லாதபோது தோன்றும் ஏக்கமும் தாய்க்காக உள்மனம் எழுப்பும் ஏக்கமான மெளனக் குரலும் அவன் இதயத்தை ஆக்கிரமித்தன. ஏதோ பிராணிகளிடையே நிலவும் அன்பு போல, விடியலில் குரலெழுப்பும் கன்றுக் குட்டியின் விலங்கு ணர்ச்சி போல, நடுக்கமும் கொண்ட ஒல்லியான, காணச்சகியாத, அழகற்ற அந்தப் பையனின் உள்ளத்தில் சுழன்றது. அது அவன் மனதை சதாகாலமும் அரித்துத் தின்று கொண்டே இருந்தது”.
ஆக, மேலே தரப்பட்டுள்ள மூலத்தையும் மொழிபெயர்ப்பையும்
நோக்கும்போது திலகவதி மொழிபெயர்ப்பின் சிறப்பு ஓரளவாவது புலப் படவே செய்யும்!
- 39

Page 24
தவிர, திலகவதியின் மொழிபெயர்ப்புக்குள்ளான மேற்குறித்த தாகூரின் சிறுகதை பாரதியாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறி பிடத்தக்கது. ஆர்வலர்கள் இவ்விருவர் தம் மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு பார்ப்பது பயன்மிக்கது (திலகவதி தாமே இவ்விரு படைப்புகளையும் ஒப்பிட் சில அபிப்பிராயங்கள் தெரிவித்துள்ளமை நயத்தற்குரியது). இவ்வாே திலகவதி மொழிபெயர்த்த சிங்கரின் (முட்டாள் கிம்பெல்) கதையும் ச காலத்தில் மற்றொருவரால் மொழிபெயர்க் கப்பட்டுள்ளதும் இங்கு நினைவிற் வருகின்றது (இதுபற்றி திலகவதி அறிந்திருக்கவில்லை).
தவிர, ஒவ்வொரு கதைக்கும் முன்னால் தரப்பட்டுள்ள அறிமுக மும் விதந்துரைக்கப்பட வேண்டியது. எழுத்தாளரது வாழ்க்கை, அவரது படைப்புகள் பற்றிய விமர்சனம் உட்பட அவசியமான பல விடங்களைத் தருகின்ற அப்பகுதி சுவாரஸ்யமான முறையில் எழுதப்பட்டுள்ளமை குறிட் பிடத்தக்கது.
இன்னொரு விடயமும் இங்கு கவனத்திற்குரியது. கனவு (20/92) என்ற தமிழகச் சிறுசஞ்சிகை நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் ஒன்பது சிறுகதைகளைச் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இம்முயற்சி பாராட்டுக்குரியதெனினும் படைப்பாளிகள் பற்றிய ஓரிருவரி கொண்ட அறிமுகத்தைக் கூட, தராமலும் முன்னுரைதானும் இல்லாமலும் இத்தொகுப்பு வந்துள்ளது. ஆக, இத்தொகுப்புடன் ஒப்பிடும் போது திலகவதியின் “எட்டுத்திக்கிலிருந்து ஏழுகதைகள்’ தொகுப்பின் சிறப்பு மேலும் வலுப் பெறுகின்றமை கண்கூடு.
'கடைத்தெரு ஞானி’ என்ற திலகவதியின் மற்றொரு தொகுப்பு உலகப் புகழ்பெற்ற பன்னிரு சிறுகதைகளைக் கொண்டது. ஜிாங்ஸி, பிராங் ஓ கன்னர், ஜவோ அந்திரிக், கென்றியச் போல், அச்தியாத்கே மிஹார்த்ஜா, விளாடிஸ்லாவ் ரேமாண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், கேப்ரியல் கார்சியா மார்க்வே, பிரான்ஸ் கா.கா, ஐசக் பாஷெவில் ஸிங்கர், ஏர்னஸ்ட் ஹெமிங்வே (இறுதியான இருவரும் முதற்தொகுப்பிலும் இடம் பெற்றவர்கள்) ஆகியோரது படைப்புகளே இத்தொகுப்பிலுள்ளவை.
மேற்கூறிய இரு மொழிபெயர்ப்புத் தொகுப்புகளிலுமிருந்து ‘நல்லிசைப் புலமை மெல்லியலார்’ என்ற நுால் வேறுபட்டது. இத்தொகுப்பு பற்றி முன்னுரையில்,
- 40

“.ஆண்டாளின் குரல் தமிழிலக்கியம் என்னும் தோப்பில் தன்னந் தனியான பெண்குரலாக ஒலிக்கிறது. அதற்குப் பிறகு நுாறு நூறு ஆண்டுகளாக தமிழலக்கியப் பரப்பில் பெண்குரல் மெளனப்பட்டே போய்விட்டது எனலாம். இந்தச் சூழலில் பூலோக சொர்க்கம் என்றும் நவீன உலகின் பெண் விடுதலைச் சித்தாந்தத்தின் பிறந்த வீடு என்றும் கருதப்படுகின்ற அமெரிக்காவில் அல்லது சகலருக்கும் சம உரிமை பேசிய ரஷ்யாவில் பெண்கள் என்னதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிய முனைந்தேன். அவர்களுடைய எழுத்துக்களில் "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சில பாடல்களையும் சிலரது வாழ்க்கைக் குறிப்புகளையும் திரட்டி தமிழ் மட்டும் அறிந்த என் சகோதரர்களுக்கு சொல்லி வைக்க நினைத்தேன்’
என்று குறிப்பிடுகின்றார் திலகவதி. ஆயினும், சாதாரண வாசகர்களுக்கு ஏற்றவிதத்தில் சுவையாக எழுதப்பட்டுள்ளன அவ்அறிமுகக் கட்டுரைகள்!
இறுதியாக, திலகவதியின் இதுவரை கூறப்பட்ட மூன்று நுால்கள் பற்றியும் ஒன்று கூறத் தோன்றுகிறது. முதலிரு தொகுப்பு முயற்சிகளும் உலகின் உன்னதமான சிறுகதைகளை தமிழில் முதன்முதல் மொழி பெயர்த்து வழங்கிய புதுமைப்பித்தனையும், மூன்றாவது தொகுப்பு, உலகின் தலைசிறந்த இலக்கியங்களைத் தமிழிற்கு அறிமுகம் செய்த க.நா.சுப்பிரமணியத்தையும் நினைவுபடுத்துகின்றன என்பதே அதுவாகும்!
41

Page 25
தேசிய கொள்கைகளில் பெண்கள் கண்ணோட்டம் (Women's Perspectives on public policy)
- பெண்கள் கற்கைகளுக்கான ஒன்பதாவது இந்தியத் தேசிய மகாநாடு -
நிஸியத், ஹைதராபாத், 2000
-நதிரா.மட
பெண்கள் கற்கைகள் தொடர்பான ஒன்பதாவது இந்திய தேசிய மாநாடு இம்முறை இரண்டாயிரமாம் ஆண்டு ஜனவரியில் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இலங்கையிலிருந்து சுனிலா அபயசேகர, சித்திரலேகா மெளனகுரு உட்பட நாங்கள் பலர் கலந்து கொண்டிருந்தோம்.
‘தேசியக் கொள்கைகளில் பெண்கள் கண்ணோட்டம்” என்பது இம்மாநாட்டின் அடிப்படை வரம்பாக அமைந்தது. இம்மாநாடு கொள்கை அமுலாக்கல்கள் பல்வேறு மட்டங்களிலும் உள்ள பெண்களை எவ்வாறு பாதிக்கின்றன என்ற மீளாய்வை நோக்கமாகக் கொண்டமைந்ததோடு இந்தியாவில் பெண்களது வாழ்வின் பல்வேறு அம்சங்களோடு தொடர் புடைய சட்டவாக்கங்களில் புதியதோர் அணுகுமுறை இடம்பெற வேண்டு மென்ற கொள்கையை ஏற்றுக்கொண்டமைந்தது. அத்துடன் பெண்களது அபிவிருத்தி, உரிமைகள் தொடர்பான தேசியக் கொள்கைகள் வகுக்கப் படுவது மிகக்குறைவாக இடம்பெறுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது. எனினும் பெண்கள் தொடர்பாக தேசியக் கொள்கைகள் வகுக்கப்படுவதில் ஒரு சில வாய்ப்பான நிலைமைகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
பெண்கள் உரிமைகள் தொடர்பாக தேசியக் கொள்கைகள் வடி வமைக்கப்படும் பொழுது அது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெறவேண்டுமென்றும் பெண்கள் இயக்கங்கள் இவ்விடயத்தில் கூடுதலான கவனத்தையும் தலையீட்டையும் மேற்கொள்ள வேண்டு மென்றும் கருதப்பட்டது.
இம்மாநாட்டுக் கருத்தரங்கு அமர்வுகள் ஜனவரி எட்டாம் திகதியி லிருந்து பதினொராம் திகதி வரை பின்வரும் தலைப்புகளில் நடைபெற்றது.
1. பெண்களது பொருளாதார வலுவூட்டல்
2. கல்வி
- 42 -

சுகாதாரப் பிரச்சினைகள் பழங்குடியினரது பிரச்சினைகள் பெண்கள் இயக்கங்கள் ஒதுக்கீட்டுக் கொள்கைகள்
செய்தித் தணிக்கை என்பனவாகும். இவை முக்கிய கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு சில உபதலைப்புக்களில் கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. கலந்துரை யாடலுக்கான உபதலைப்புக்களாக பின்வருவன அமைந்திருந்தன.
1. மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அணிதிரளுதல்: சாத்தியங்களும்
சவால்களும். 2. பஞ்சாயத்துகளில் பெண்களின் அனுபவங்கள்: பெண்கள் தலைமைத் துவம் வகித்தலை வலுப்படுத்தலில் அரசினதும் பொதுசன சமூகத் தினதும் பங்கு. 3. புதிதாக உருவாகிவரும் சமுதாய உரிமைகளும் இயற்கை வளங்
களை நிருவகித்தல் பற்றிய பொறுப்புணர்வும். 4. சமூகத்தினது கலாசார, பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றல்: பெண்நிலை நோக்கில் உணவுக்கும் போஷாக்கிற்குமிடையிலான இடைவெளி. 5. விபச்சாரம், பாலியல் தொழில் சார்ந்த மக்களும் தேசியக் கொள்
கையும், 6. பால்நிலை, முரண்பாடுகள், அரசியல் ரீதியான வன்முறைகள். 7. வர்த்தகத்தில் பெண்கள்.
8. பெண்களுக்கெதிரான வன்முறைகள்.
பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள தேசியக் கொள்கை மாற் றங்களின் மத்தியிலும் பெண்களது நிலைமை அபிவிருத்தியடையாமலே உள்ளமை அனைத்து அமர்வுகளிலும் முக்கிய கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மைத்திரேயி கிருஷ்ணராஜ் என்பவரது தேசியக் கொள்கைகளில் பெண்கள் கண்ணோட்டம் “நிறைவு பெறாத அல்லது தொலைந்த நிகழ்ச்சி நிரல்" என்னும் கட்டுரை பெண்களது நிலைமைகளைச் சரிவரப் புரிந்து
- 43

Page 26
கொள்வதற்கான அடிப்படைகளாக அமைந்தது. இதனுாடாகப் பின்வரும் முக்கிய கருத்துக்களை முன்வைத்தார். பெண்களது கண்ணோட்டம் என்பது அவர்களது பங்களிப்பு, அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள விடயங்கள் அவர்கள் அங்கீகரித்துள்ள விடயங்கள் என்பவற்றை உள்ளடக்கும். தேவைக்கேற்ப இவற்றை நான் எடுத்தாளவுள்ளேன். “பெண்கள் தொடர்பான தேசிய கொள்கைகள்’ உண்மையிலேயே இருந்திருக்கவில்லை. அவ்வப்போது எழுந்த பிரச்சினைகளுக்கான சமயா சமய தீர்வுகளே வழங்கப்பட்டுள்ளன. கொள்கைகள் சட்ட மாக்கப்படுவதன் முன்போ அல்லது நடைமுறைப்படுத்தப்படும் முன்போ எத்தகைய பெண்கள் அமைப்புகளுடனும் கலந்தாலோசிக்கப்படவுமில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார விடயங்கள், விபச்சாரம், வறுமை போன்ற சமூகப்பிரச்சினைகள் தொடர்பான ஒரு சில நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. ஐம்பத்திரண்டு வருடங்கள் என்பது மிக நீண்ட காலப் பகுதியாகும். இந்திய யாப்பில் பெண்களுக்கென சிறப்பாக குறிப்பிடப்பட்ட நலவுரிமைகள் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை. எனவே அரசியலிலும் தேசியக் கொள்கை வகுப்பிலும் பெண்களது உரிமைகள், நலன்கள் கூடுதலாக இடம்பெறும் வகையில் முயற்சி செய்யப்படவேண்டும்.
தேசியக் கொள்கைகள் என்று குறிப்பிடும்போது காலத்துக்குக் காலம் அரசு வெளியிடும் கொள்கை அறிக்கைகளை மட்டும் நாம் குறிப்பிடவில்லை. மாறாகப் பால்நிலை சமத்துவம், பால்நிலை நீதி என்பவை தொடர்பாகப் பொது அமைப்புக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம்.
பெண்கள் இயக்கங்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பெண்களு ரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தினைக் கொடுத்து வந்துள்ளன. அத்தோடு ஆய்வுகள் நடத்தல், தகவல் சேகரித்தல் என்ற அடிப்படையிலும் நியாயமான பணிகளை பெண்கள் அமைப்புக்கள் மேற் கொண்டு வந்துள்ளன. பெண்களுக்குக் கூடிய வேலைவாய்ப்பைக் கொடு த்தல், சுகாதாரம், கல்வி, சட்ட உதவி, பெண்களது ஆக்க சக்திகளுக்கு ஊக்கம் கொடுத்தல், பெண்களுரிமைக்கென மாற்று அமைப்புக்களை ஏற் படுத்தல் என்ற வகையில் இவ்வியக்கங்கள் பெரும் பணியாற்றி வந்துள்ளன.

தொடர்புசாதனங்கள் பெண்கள் உரிமைகளுக்கு 70-80களில் கொடுத்த முக்கியத்துவத்தைக் குறைத்து அபரிமித இலாபமீட்டுவதையே முக்கிய குறிக்கோளாகக் கொள்ளத் தலைப்பட்டுள்ளன. பெண்களுக் கெதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
பெண்களது அந்தஸ்தினை மேம்படுத்துவது என்பது எதிர்பார்த் ததைக் காட்டிலும் கடினமான பணியாகவே உள்ளது. பெண்கள் சமத்து வத்துக்குக் கொடுக்கப்பட்ட குரல் அதிக விளக்கமற்ற வகையில் பெண்களை வலுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையாக மாற்றப் பட்டுள்ளது.
மேலதிகமான பொறுப்புக்களைப் பெண்கள் ஏற்றுள்ளார்களே தவிர, அடிப்படையில் பெண்களது அந்தஸ்து இன்னும் மேம்படவில்லை. வேலைவாய்ப்பு, கல்வி போன்றவை குடும்ப நலன்களை விருத்தி செய்ய உதவுகின்றனவே தவிர பெண்களது அந்தஸ்தினை மாற்ற வழிவகுக் கவில்லை. குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்கள் சனத்தொகையைக் கட்டுப் படுத்த உதவியுள்ளனவே தவிர பெண்களது மகப்பேற்றுச் சுமையைக் குறைக்க வில்லை என்றே கூறலாம். பெண்கள் நலனுக்கு எதிராகச் செயற் படுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகின்றார்கள் என்பது வருந்தக்கூடிய விடயமாகும்.
மைத்திரேயி தனது கருத்துரையில் பெண்கள் தொடர்பான எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்வது கடினமானதால் அபிவிருத்தியோடு தொடர்புடையதான கல்வி, குடித்தொகை, சூழல் தொடர்பான கொள்கைகள் பற்றிய கருத்துக்களையே ஆய்வு செய்தார். (இவை தொடர்பாக உப தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் ஆழமாகச் செய்யப்பட்டன).
பெண்கள் நலன்களையும் உரிமைகளையும் கவனத்திற்கொண்டு சட்டவாக்கங்கள் செய்வதில் கூடிய கவனம் செலுத்துவதை விடுத்து அரசு சார்ஸ்தாபனங்கள் ஆணாதிக்கத்தைக் காத்துக்கொள்ளும் வகையில் மாற்றுக் கருத்துக்களை மறைத்துக் கொள்வதற்காக பெண்களது இயக்கங்களை தம்முடன் கூட்டுச் சேர்த்துக் கொள்வதாக சில விமர்சகர்கள் கூறுகின்றனர். இக்கருத்தில் ஓரளவு உண்மையிருந்தாலும் முழுமையாக அவ்வாறு செயற்பட
(pl9.ulstgs.
د ـ 45 -

Page 27
"நீதி’ என்ற சொல்லை இந்திய அரசியல் யாப்பு பல விடயங்கள் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளது. ஆனால் அவை அரசின் அடிப்படைக் கொள்கை நெறிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளிலுமே தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. சமூக மாற்றத்துக்கான குறிக்கோள்களை அரசியல் யாப்பு திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றது. கிடைக்கக்கூடிய இயற்கை வளங்கள் யாவும் சமூக மேம்பாட்டுக்குச் சரிவரப் பங்கீடு செய்யப்படுவதையே அரசியல் யாப்பு குறித்துக் காட்டுகின்றது. பால்நிலை, நீதி தொடர்பாக அரசியல் யாப்பை வரைந்தவர்களோ அல்லது பிற்பட்ட திருத்தங்களைச் செய்தவர்களோ எவ்வித விளக்கத்தினையும் வழங்க வில்லை.
அரசியல் யாப்பிலுள்ள 325 ஷரத்துக்களிலும் பத்து அட்டவணை களிலும் பெண்கள் தொடர்பான விடயங்கள் மிகமிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. இவை அரசின் கொள்கைகளில் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளமையால் சட்டரீதியாக அவற்றை அமுல்ப்படுத்த முடியாதுள்ளது.
யாப்பின் 51வது சரத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி எந்த ஒரு குடியுரிமையாளனும் பெண்களை இழிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது. அரசு பெண்களது உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என யாப்பு பொதுப்படக் கூறுகின்றது. 1961ஆம் ஆண்டின் மகப்பேற்றுச் சகாயநிதிச் சட்டம், 1971ஆம் ஆண்டின் வைத்திய காரணங்களுக்காகக் கருக்கலைப்புச் செய்தற் சட்டம, 1961ஆம் ஆண்டின் சீதன ஒழிப்புச் சட்டம், 1976ஆம் ஆண்டின் சமஊதியச் சட்டம், 1986ஆம் ஆண்டின் ஆட்கடத்தலைத் தடைசெய்யும் சட்டம், 1987ஆம் ஆண்டின் உடன் கட்டையேறுதலைத் (sati) தடுக்கும் சட்டம் ஆகியன மேற்சொல்லப்பட்ட அடிப்படையிலேயே நடை முறைக்குக் கொண்டு வரப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தேசியக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களோடு இணைந்த செயற்பாடுகளாக இவை உள்ளன. சீதனக் கொடுமையால் இறப்போர் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விபச்சாரம் செய்வோர் தொகை கணிசமான அளவு குறைந்துள்ளது. உடன்கட்டை ஏறும் வழக்கமும் அருகி வந்துள்ளது. கருவிலுள்ள குழந்தையின் பால்நிலை யைத் தீர்மானிக்கும் அல்லது மாற்றும் நடவடிக்கைகளும் குறைந்துள்ளன.
- 46 -

பாலியல் வல்லுறவுக்குக் கடும் தண்டனை வழங்குவதற்கும், குடும்பத்தில் ஏற்படும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சட்டவரம் புக்குள் கொண்டு வருவதற்கும், திருமண பந்தங்களோடு ஏற்படும் சொத்துரிமைகளில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. இவை பெண்கள் இயக்கங்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட பலாபலன்களே. பால்நிலையோடு தொடர்புடைய நீதியை சட்ட நடவடிக் கைகளின் மூலம் நிலைநாட்டுவதற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
குடும்பத்தகராறுகளை விசாரிப்பதற்கென விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் காவற் றுறையில் ஈடுபடுத்தப்படுகின்றமையும், காவற்துறையில் பெண்கள் நலன்களைக் கண்காணிப்பதற்கென விசேட பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளமையும் நீதிமன் றங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் பெண்கள் நல்லமுறையில் நடத்தப்படுவதற்கு வகை செய்துள்ளன.
பெண்களது நல உரிமைகள் சட்டரீதியாக வலியுறுத்தப்படுகின்ற மையும் இது தொடர்பாக அரசுசார் ஸ்தாபனங்களின் ஆதரவும் பல்வேறு வகையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான சட்டமன்று சார் நடவடிக்கைகளில் தேசிய பெண்கள் ஆணைக்குழு (National Commission Of Women- 1990) அமைக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். காலத்துக்குக் காலம் சட்டங்களைப் பகுப்பாய்வு செய்து பரிந்துரைகள் செய்வதற்கும் நிருவாகரீதியிலும் சட்டரீதியிலும் செயற்படுவதற்கும் இவ்வாணைக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் கொள்கையை எடுத்துக்கொண்டால் இந்தியப் பெண்கள் திட்டமிட்ட பொருளாதாரத்தில் பெண்களின் நிலை பற்றிய முன்னோடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்பது மறை பொருளா கவே இருந்து வந்துள்ளது. பெண் தொழிலாளர்கள் தமது சொந்த வருமானத்தின் மீது மேலாதிக்கம் உள்ளவர்களாதலும், இரவில் பெண்கள் தொழில் செய்வதைத் தடைசெய்தலும் வேலைப்பளு குறைக்கப்பட்டமையும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை. தற்போது குடும்பப் பராமரிப்போடு
- 47

Page 28
தொடர்புடைய பொருளாதார ரீதியிலான கணிப்பு வழங் கப்படவேண்டுமென்ற
பரிந்துரைகள் செய்யப்பட்டு வருகின்றன.
குடித்தொகை தொடர்பான கொள்கையில், 1970களிலிருந்து அரசின்
குடித்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கை பெண்கள் இயக்கங்களினால் கடுமை
யாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் சிறப்பாக சுட்டிக் காட்டப்பட
வேண்டியவை:
1.
s
சனத்தொகைப் பெருக்கத்தை ஒரு பக்கச் சார்பாக அவதானிக்கின்ற மையும் அதனால் குடித்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை களை ஊக்குவித்தலும்,
இலக்குகளை அடையும் ஒரே நோக்கில் கொள்கைத் திணிப்புக்களை மேற் கொள்ளல்.
மாற்றுவழி இல்லாதவகையில் கருவுறுதலைத் தடுத்தல்.
பெண்களது ஆரோக்கியத்துக்கு பாதிப்புக்களை விளைவிக்கும் மருந்து களைப் பாவித்தல்
மருத்துவக் காரணங்களுக்காகக் கருக்கலைப்புச் செய்வது சட்ட ரீதியானதாக ஆக்கப்பட்டாலும் வைத்திய நிலையங்களில் அதற்கான போதிய வசதிகளின்மை.
பெண்களுக்கு சுகாதார ரீதியில் பாதிப்பை விளைவிக்கும் விடயங்களில் அசிரத்தையாக இருத்தல். ஆணாதிக்கம் அழுத்தம் பெற்றுள்ள சமூகங்களில் மகப்பேற்று விடயங் களில் பெண்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரமின்மையைப் பற்றி சரியான விளக்கங்களைக் கொண்டிராமையும் அதனால் குடும்பக் கட்டுப்பாட்டு விடயங்களில் ஏற்படும் சீர்கேடுகளும்,
மகப்பேற்று விடயங்களில் பெண்களுக்கேயுரிய உரிமையைக் கவனத் திற்கெடுக்காமை. அடிக்கடி நிருவாகத்திலும் பொதுமக்களது கவன ஈர்ப்பிலும் ஆனா திக்கக் கருத்தியலைப் பரவவிடுதல் என்பனவாகும்.
டில்லியில் நடைபெற்ற மாநாடொன்றில் பெண்கள் தொடர்பான
விடயங்களில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை அவர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வலுப்படுத்துவதாக இருக்க வேண்டு
- 48

மென்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. “ஹியானா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்களின் மூலம் இரு குழந்தைகளுக்கு மேல் குழந்தைகளைக் கொண்டிருப்போர் பஞ்சாயத்துக்களின் அங்கத்த வர்களாக செயற்படுவதைத் தடைசெய்து இச்சட்டங்கள் நிபுணர்களின் பாராட் டைப் பெற்றாலும் பெண்களியக்கங்களின் பாரிய எதிர்ப்புக்குள்ளாயின. பெண்களது ஜனநாயக உரிமைகளை உதாசீனப் படுத்துவதாகவும் அவை வர்ணிக்கப்பட்டன. 1994இல் சுவாமிநாதன் ஆணைக்குழுவின் சிபார்சில் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இவற்றில் உள்ள டக்கப்பட்ட முக்கியமான அம்சம் பிரசவ நிதி போன்றவை இரு குழந்தைக ளுக்கு மேல் பெறுவோருக்கு வழங்கப் படக் கூடாதென்பதாகும். இதுவும் பெண்கள் இயக்கங்களின் வலுவான எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டது பால்நிலை சமத்துவக் கோட்பாடுகள் இவ்விடயம் தொடர்பாக பிரயோகிக்கப்பட வேண்டுமென வலியுறுத் தப்பட்டது.
தாய்மை விசேட கவனத்தைப் பெறாதபட்சத்தில் மகப்பேற்றுக் காலங்களில் பெண்களது இறப்பு விகிதம் கூடுமென்பதும் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. மிக வறிய குடும்பங்களும் தமது சுகாதாரத் தேவைகளைப் பெறக் கணிசமான அளவு செலவிடுகின்றனர். ஒருசில வேலைகளைச் செய்யும் போது ஏற்படக்கூடிய சுகாதாரக்கேடுகள் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆயினும் சுயேச்சையாக குடும்ப அங்கத்தவர்களின் தொகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
கல்கத்தாவைச் சேர்ந்த பொருளியற்துறைப் பேராசிரியை நிர்மலா பாணர்ஜி பெண்களைப் பொருளாதாரத்துறையில் வலுப்படுத்துவது தொடர்பாக தேசியக் கொள்கையில் இடம்பெற்றுள்ள குறைபாடுகள் பற்றிக் குறிப்பிட்டார். பெண்களையும் பெண்கள் ஸ்தாபனங்களையும் அரசியல் இலாபத்துக்காக இணைசேர்த்துக் கொள்ளுகின்ற ஒரு மனப்பான்மையே நிலவுவதாக குறிப்பி டுகிறார். இதனால் பொருளாதார அடிப்படையில் பெண்கள் எவ்வகையிலும் வலுப்படுத்தப்படவில்லை என்பதே அவரது வாதமாகும்.
மனிஷா குப்தா, “பெண்களின் சுகாதாரம் பற்றிய அவதானிப்பும்
குடிப்பரம்பல் கொள்கையும்” என்ற தமது கட்டுரையில் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார். இந்தியப் பெண்களின் ஆரோக்கியம் அவர்களது
மகப்பேற்றை அடிப்படையாக வைத்தே தமது குடும்பத்தில் கவனத்துக்
கெடுத்துக் கொள்ளப்படுவதாகவும் குடித்தொகைக் கட்டுப்பாட்டு அடிப்
-49 ܚ

Page 29
படையில் அரசின் கவனத்தைப் பெறுவதாகவும் குறிப்பிடுவர். ஆனால் சிறுமியர்களது ஆரோக்கியம் முற்றாக எவரது கவ்னத்தையும் பெற வில்லையென கூறுவர். பெண்களை வலுப்படுத்தும் விடயங்களில் அவர்களது உடல்மீது அவர்களுக்கிருக்க வேண்டிய உரிமை அங்கீகரிக்கப்படாத நிலைமை நிலவுவதையும் குறிப்பிட்டார்.
பெண்களின் பாலியல் தொடர்பான வேலைகளும், திருமணமும் விபச்சாரமும் பலவிதமான வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்தன. திரு மணமும் விபச்சாரமும் பெண்களின் பாலியல் நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் காரணிகளாகக் (நிறுவனங்களாகக்) கருதப்படுகின்றன:
சுசிதரு பெண்கள் இயக்கங்கள் புதியதொரு அரசியல் வடிவினைப் பெற வேண்டும் என்கிறார். அப்படியென்றால் மட்டுமே முடியாட்சி என்பது மறுசீரமைப்புப் பெறும் என்பது அவர் கருத்து. பெண்களுக்குச் சார்பற்ற தேசியக் கொள்கைகள் பரவலாக உள்ள நிலைமையிலும் பெண்கள் தம்மில் சுயநம்பிக்கையுள்ளவர்களாகச் செயல்படுவது உற்சாகமளிப்பதாக உள்ளது. எதிர்கால நிலைமைகளில் மாற்றம் ஏற்படுவதற்கான நல்ல சகுனமாகும்.
சுனிலா அபயசேகரா தனது உரையில் “தேசியக் கொள்கை வகுப்பில் பெண்களது தலையீடு' களைப் பற்றி குறிப்பிடுகையில் புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஆசிய நாடுகளின் அரசியல் செயல்முறைகளைப் பற்றிச் சற்றுக் கூடுதலாகவே கவனத்திற்கெடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுவர். ஏனெனில் இவை மீண்டும் சாதி, வகுப்பு, பால்நிலை போன்ற அம்சங்களைத் தழுவியவையாக அமைந்துள்ளன. அதே நேரத்தில் சமூக சமத்துவ மின்மை க்கு சவால் விடுவனவாக புதிய அமைப்புகளும் தோன்றியுள்ளன. முற்றுமு ழுதான குடியுரிமை பெண்களுக்கும் இருக்குமானால் அவர்களும் சமவுரிமைக் காகவும் பாகுபாடற்ற நிலைமைகளுக்காகவும் தலையீடுகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
பெண்கள் விடயம் தொடர்பான சிறு சிறு அமர்வுகளும் இடம் பெற்றன. அவ்வமர்வுகளில் பல்வேறு விடயங்களும் விவாதத்துக்குள்ளாயின. அவற்றுள் சில வருமாறு:
மாற்றத்துக்காக மக்களை அணிதிரட்டல்: சந்தர்ப்பங்களும் சவால் களும் குடும்ப வாழ்வுக்கல்வி மூலம் பெண்களை வலுப்படுத்தல்:
.. من 50 -

இவ்விடயம் சார்பாக மும்பை பெண்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனிஷா கப்ரா, இந்தியாவின் குடும்பக்கட்டுப்பாட்டுச் சங்கம் ‘குடும்ப வாழ்வுக்கான கல்வி' எந்த அளவுக்கு பெண்களை வலுவுள்ளவர் களாக மாற்றும் என்பதையும் சிறப்பாக கல்வியறிவற்றோரதும், ஓரளவு கல்வி கற்றோரையும் எவ்வாறு மாற்றும் என்பதை அறிவுறுத்துகின்றது என்றார்.
குடும்ப வாழ்வுக் கல்வி அறிவை வழங்கி, தகவல்களை அறியச் செய்து சமூக பொருளாதார வாழ்வில் பெண்களை அபிவிருத்தியடையச் செய்யும். அத்தோடு மகப்பேற்று ஆரோக்கியம், குடும்பக்கட்டுப்பாடு, தொழிற்திறன் ஆகியவற்றையும் மேம்பாடடையச் செய்யும்.
தேசியக் கொள்கையும் விபச்சாரம் புரிவோர், பாலியல் தொழிலாளர் கள் ஆகியோரது நிலையும்; சிறுவர் பாலியல் விபச்சாரம் தொடர்பான ஆய்வு:
இக்கருத்தாடலை டாக்டர்.ப.யசோதரா தொடக்கி வைத்தார். இருபது வயதுக்குட்பட்டவர்களையே சிறுவர்கள் என இங்கு குறிப்பிடுகின் றோம். இவ்விடத்தில் நாக்பூரில் இடம்பெற்று வந்த நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிடலாம்.
விபச்சாரம் புரிய வந்தோர் சம்பந்தப்பட்ட வீட்டுச் சொந்தக் காரருக்கு ஓரளவு பணம் வழங்கினார்கள். சம்பந்தப்பட்ட விபச்சாரம் புரிபவரின் பெற்றோருக்கும் அவ்வாறே பணம் வழங்கினார்கள். குறிப்பிட்ட குடும்பத்தினர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் விபச்சாரத் தொழிலையே செய்து வந்துள்ளனர். வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை, நகர்ப்புறவாழ்க்கை மீதுள்ள நாட்டம் என்பன இவர்களை விபச்சாரத்தில் ஈடுபடத் தூண்டியுள்ளன. சமூக, சுகாதார, பொருளாதார விடயங்களில் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களில் நூற்றுக்கு நூறு வீதமானோர் பெரும் இரத்தப்பெருக்கு ஏற்படுதல், அடிவயிற்றில் மோசமான வலி போன்றவற்றால் துன்புற்றுள்ளார்கள். இவர்களது உடல் ஆரோக்கியம் திருப்திகரமானதாக இருக்கவில்லை. 65% மானோர் கயரோகத்தினாலும் 65% மானோர் மேகரோகத்தினாலும் பீடிக்கப்பட்டிருந்தனர். வைத்திய வசதிகள் பெறக் கூடியதாகவிருந்தும் அதுபற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. திருப்தியற்ற வாழ்வாக இருந்த போதும் வருமானத்துக்காக வேறு வழியின்மையால்
-51

Page 30
அவர்களுக்கு இத்தொழிலைக் கைவிடவும் இயலவில்லை. சட்டவாக்கங்கள் மூலமும் புணர்வாழ்வுத் திட்டங்கள் மூலமும் விழிப்புணர்வு மூலமாகவும் அர்ப்பணிப்புள்ள சமூக சேவையாளர்கள் மூலமாகவுமே விபச்சாரத் தொழில் புரியும் சிறுமிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும். பால்நிலை உரிமை களைக் காத்து இவர்களை வலுப்படுத்தி விடுதலை பெற்ற வாழ்க்கை யொன்றை அமைத்துக்கொள்ள வழி செய்வது இன்றியமையாத தாகும்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள்.
மாதவ் சனாப் வன்முறை தொடர்பான ஆய்வு பற்றிக் குறிப்பிட்டார். ஏனைய குற்றங்கள் பெருகியுள்ள அளவுக்கு பெண்களுக்கெதிரான வன்முறைகளும் பெருகியுள்ளன. தேசிய மட்டத்தில் இது 4.21%மாகும். மகாராஷ்டிராவில் 6.10%மாகும். சமூக முன்னேற்றத்தோடு குற்றச் செயல்களும் பெருகி வருகின்றன. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்களுக்குத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். புதிய சட்ட வரைவுகளும் அமுல்படுத்தப் படவேண்டும். ஆனால் இந்நடவடிக்கை மட்டுமே பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தப் போது மானவையல்ல. சமூக அமைப்புகளும் மாற்றம் பெறவேண்டும். எல்லாச் சமூக ஸ்தாபனங்களும் குழுக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குடும்ப அமைப்புகள், காவற்றுறை ஊடகங்கள், சட்ட முறைமைகள், சமூக நிறுவனங்கள், நிருவாக அலகுகள், கல்வி நிலையங்கள் போன்றன பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதில் பெரும் பணியாற்ற முடியும்,
பெண்களைத் தாக்குதல் (மனைவியைத் தாக்குதல்): பெண்களது அபிவிருத்தியினைப் பாதிக்கும் தடை:
பெனாரஸ் பல்கலைக்கழக பெண்கள் கற்கைகள் நிலையத்தைச் சேர்ந்த சுவேதா பிரசாத் இதுபற்றிய கருத்துரையைத் தொடக்கி வைத் தார்.
மனைவியைத் துன்புறுத்தல் ஒரு காலத்தில் இடம்பெற்று தற் போது மறைந்துள்ள ஒரு விடயம் அல்ல. ஒரு முறை பெண் கணவனால் துன் புறுத்தப்பட்டால் அது தொடர்ந்து நீண்ட கதையாகவே அமையும். அது
- 52 -

சாதாரண நடத்தையின் ஓர் அம்சமாக மாறிவிடும். பெண்களது அபிவிருத்தியைத் தடுக்கும் ஒன்றாகவே அது அமையும். எப்போதும் தாக்கப்படலாம் என்ற பயம் பெண்களின் மனதில் தோன்றிக் கொண்டி ருக்கும். இத்தகைய பயங்கள் பெண்கள் தமது தொழிற்றிறனை மேம்படுத் ’துவதற்கான கல்வியைப் பெற வீட்டுக்கு வெளியில் செல்வதைத் தடை செய்யும். இதன் காரணமாக பளு நிறைந்ததும், கூலி குறைந்த துமான வேலைகளையே பெண்கள் செய்யவேண்டி ஏற்படும்.
கணவனால் மனைவி துன்புறுத்தப்படல் தனிப்பட்ட சொந்த விடயமாகவே இன்றும் கருதப்படுகின்றது. குடும்பச் சூழ்நிலையைக் காப்பதே அரசின் கடமையாகவும் இருந்து வருகிறது. அடிமட்டத்தில் இத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யவேண்டும்.
பெண்கள் செயல்வாதமும் பெண்களுக்கு எதிரான வன்செயல்களும்: சண்டிகாரைச் சேர்ந்த டாக்டர்.நீலு இது பற்றிய கருத்துரையை வழங்கினார்.
ஆணாதிக்கம் உள்ள சமூகங்களில் பெண்கள் பலவாறான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். பெண்கள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் பெண்களுக்கெதிராக வன்முறைகளை பகிரங்கப் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இச்செயற்பாடுகள் எல்லா மட்டங் களிலும் அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இம்மாநாட்டின் சிறப்பம்சங்களாக பல விடயங்கள் அமைந்திருந் தன. ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் கலைநிகழ்வுகள் உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பெண்களது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான விவரணத் திரைப்படங்கள் (Breaking in the barriers, skin deep, memories of fear, three women and camera போன்ற பெண்களால் தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட முப்பது படங்கள்) காண்பிக்கப்பட்டன. பெண்களது பிரச்சினைகள் வெளிக்கொணரும் நாட கங்கள் அளிக்கை செய்யப்பட்டன. பெண்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், ஆடைகள் மற்றும் பால்நிலை, பெண்கள் கற்கைகள் தொடர்பான நுால்கள் போன்றவற்றின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றன.
- 53

Page 31
இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்ந்த பெண்நிலைவாதிகள் பல பெண்கள் நிறுவனத்தைச் சேர்ந்த பெண்நிலைச் செயற்பாட்டாளர்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி பெண்கள் வாழ்வின் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கொள்கை அமுலாக்கல்கள் பல்வேறு மட்டங்களிலும் உள்ள பெண்களைப் பாதிக்கின்றமை, சட்டவாக்கங்களில் பின்பற்றப்பட வேண்டிய புதிய அணுகு முறைகள் பற்றி விவாதித்தமை முக்கியமானதொரு விடய மாகும். இவ்வாறானதொரு மாநாடு எமது நாட்டில் இடம்பெறுமானால் அத னுாடாக பெண்களது பிரச்சினைகள் தொடர்பான பல விடயங்களை வெளிக் கொணர்வதோடு முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
தேலைக்கமர்த்திலும்
துன்புறுத்தலும்
ஆத
ജ്ജ് 
ஓவியம் : அருந்ததி
- 54
 

ஒர் இரவில் எங்கள் தினூரில் ஆண்கள் எல்லாம் துடைக்கப்பட்டனர்.
பலகுடிசையினுள் வெளிச்சொல்ல
(pgllg5 முனகல் சத்தங்கள் கேட்டது.
எலியின் சலசலப்பிற்கு பயந்த அவளது நாலு வயது மகன் மீண்டும்பச்சை மண்ணில் цЈаји ир செத்துக்கிடந்தான் பதினெட்டுவயதில்,
இடங்களில்எல்லாம்
Ga2uz Saozu
சிவப்பும் கறுப்புமாய்.
tidiidid6itki வாரிசுக்கு பயந்த 8lbib கிராமதேவதைகளின்
o
ஒரிரு நாட்களில் தற்கொலைசெய்தன.
`வின்" என்ற
அதிகாலைவேதனை
el)016).Jg (pdbigfilgit அதிகமாய்அய்யியிருந்தது.
இருட்டுநாய்கள் மறைந்துபோயின மீண்டும்வரும் இரவுவேட்டைக்காக,
-விஜயலட்சுமிசேகர்.
- 55

Page 32
பெண்களுடைய வாழ்க்கை நிலைமைகளை இலகுபடுத்தல்:
- கமலினி. க.
பெண்களுடைய வாழ்க்கை நிலைமைகளை இலகுபடுத்தல் என இங்கு இத்தலைப்பை எடுத்துக் கொள்கிறோமாயின் பெண்களுடைய வாழ்க்கை நிலைமைகளில் ஏதோ கஷடங்கள் இருப்பதாகக் கொள்கி றோம். அல்லது பெண்களுடைய வாழ்க்கை நிலைமைகளிற் சில பிரச்சினை கள் இருப்பதாகக் கொள்கிறோம் என்பது பெறப்படும். சில பிரச்சினைகள் பெண்களுக்கு மட்டும் உரியவையாக இருக்கின்றன. இவற்றை நாங்கள் “பெண்களின் பிரச்சினைகள்’ எனக் குறிப்பிடுகின்றோம்.
பெண்களின் பிரச்சினைகள், பெண்களாக இருப்பதால், அவர்களால் எதிர் நோக்கப்படும் பிரச்சினைகளாகும். பெண்களாக இருப்பதனால் பெண்களைச் சில விடயங்கள் பாதிக்கின்றன. அதனால் இவற்றை நாங்கள் "பெண்களுக்குரிய விடயங்கள்’ (Women's issues) எனக் கூறுகின்றோம். பெண்களுக்குரிய விடயங்கள் நாடுகளுக்கு நாடுகள், சமூகங்களுக்கு சமூகங்கள் என மாறுபட்ட வகையில் அமைகின்றன. எனினும் சில பொது வான பிரச்சினைகள் உலகளாவிய ரீதியில் நிலவுகின்றன. உதாரணமாக பெண்களுக்கெதிரான வன்முறை (பாலியல் வன்முறை, அடித்தல், இம்சித்தல், பாலியல் தொல்லை, கொலை, கொலைப் பயமுறுத்தல், உளவியல் ரீதியான தாக்கத்தை உண்டு பண்ணல் போன்றன), மீளுற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பிரச்சினைகள் உலகப் பொதுவானவையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாகும்.
பெண்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெண்கள் ஆர்வ முடையவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு இருக்கவும் வேண்டும். பெண்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு அத்தீர்வுகள் அவசிய மானவை. இத்தகைய ஆர்வத்தின் வெளிப்பாடு செயல்களாக இருக்கின்றன. பெண்கள் எதனை விரும்புகின்றனர், எதனைத் தமது உரிமைகளாகக் கருதுகின்றனர் என்பதை அவர்களின் ஆர்வங்கள் வெளிப்படுத்து கின்றன. பெண்களின் ஆர்வங்களை ஆங்கிலத்தில் நாங்கள் Women's interest எனக் கூறுகின் (3pmb.
பெண்கள் தமது ஆர்வங்களைத் தனித்த வகையிலும் கூட்டாக வும் வெளிப் படுத்துகின்றனர். அவை குழுக்கள், தாபனங்கள், அமைப்புக்கள்,
- 56 -

நிறுவனங்கள் போன்றவற்றின் செயற்பாடுகளாக அமைகின்றன. இவற்றிற் சிலவற்றில் தொடர்ச்சியாகச் செயற்படுகின்ற தன்மை காணப்படு கின்றது. g6 si60p artisologisi) “Women's group, Women's organizations Curtairp பதங்களால் சுட்டுகின்றனர்.
பெண்கள் அமைப்புக்கள் பெண்களின் பிரச்சினைகளிற்குத் தீர்வு காண விளைகின்றன. இத்தீர்வுகளிற் சில பெண்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விளைகின்றன (Basic gender needs). சில பெண்களின் தந்திரோபாய ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்ய 6,606 Tissip6.T. (Strategic gender needs).
பெண்களின் அடிப்படைத் தேவைகள், தந்திரோபாய ரீதியான தேவைகள் ஆகியவற்றின் விளக்கத்தைப் பின்வருமாறு குறிப்பிடலாம். அடிப்படைத் தேவைகள், பெண்கள் ஆட்களாக இருப்பதால், அவர் களுடைய அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்பு பட்டவை. இவை பொதுவாக மனிதர்கள் எல்லோருக்கும் இருக்கின்ற பிரச்சினைகள் ஆயினும், பெண்களை அவை வித்தியாசமான வகையிற் பாதிக்கின்றன.
உதாரணமாக ஒரு கிராமத்தில் தண்ணிர் வசதி இல்லாமல் இருத்தல் என்பது ஒரு பிரச்சினையாயின் அப்பிரச்சினை பெண்களை வித்தியாசமான வகையிற் பாதிக்கின்றது. ஏனெனில் வெகுதுாரம் சென்று தண்ணிர் எடுத்துவரும் பொறுப்பினைப் பொதுவாகப் பெண்கள் எடுத்துக் கொள்கின்றனர். சுமையானதும், நேரத்தைக் கூடுதலாக எடுக்கும் ஒரு வேலையாகவும் அது அமையும். அத்துடன் வீட்டில் தண்ணிர் இல்லை என்ற பிரச்சினையைப் பெண்கள் உடனடியாக உணர்கின்றனர். ஏனெனில் ஏற்கனவே வீட்டுவேலைகள் தொடர்பான சுமை அவர்கள் மேல் விழுந் துள்ளது. இது ஒரு அடிப்படைப் பால்நிலைப் பிரச்சினையாக இருக்கின்றது.
- 57

Page 33
இவற்றிற்கான தீர்வினைப் பெண்கள் தனித்தும் கூட்டாகவும் அடைய முயல்கின்றனர். பெண்கள் நிறுவனங்கள், ஏனைய உதவி புரியும் நிறுவனங்கள் இவற்றிற்கான தீர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அடிப்படைப் பிரச்சினைகளிற்கான தீர்வு நடவடிக்கைகள், சமூகத்தில் பெண்களின் இரண்டாம்பட்ச நிலையை மாற்றும் வழிவகைகளை (8յ5Մնգաnas ஏற்படுத்துவதில்லை. ஆனால் தந்திரோபாய ஆர்வங்கள் பெண்களுடைய இரண்டாம்பட்ச நிலைமையை மாற்றுவதில் நேரடியாகத் தொடர்புடையவை.
பல்வேறு மட்டங்களிலும் தொடச்சியாகப் பெண்களின் ஆர்வத்தைத் தந்திரோபாயரீதியில் வெளிக்காட்டுவதனுடாக பெண்களின் இரண்டாம் பட்ச நிலைமையை மாற்றக் கூடியதாக இருக்கும்.
1. பெண்களின் அரசியல் (உரிமைகள்) உரிமைகளை ஈட்டுதல்,
பண்பாட்டு ரீதியான தடைகளை நீக்குதல்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழித்தல்.
சொத்துரிமைகளை சம உரிமையுடையதாக்கல். பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் (உரிமை) உரிமையை அதிகரித்தல்.
2
3 4. மீள் உற்பத்தி உரிமைகளை உறுதிப்படுத்தல்,
5
6
போன்ற பல்வேறுபட்ட நடவடிக்கைகளை பல்வேறு மட்டங்களில், கூட்டான வகையில் தொடர்ச்சியாக அணுகுவதனுாடாகப் பெண்களின் இரண்டாம்பட்ச நிலை ஒழித்துக் காட்டப்படுகின்றது. இவற்றைப் பெண் நிலைச் செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்கின்றனர். சமூக மாற்றத்தை உண்டுபண்ணும் வகையில் அழுத்தத்தை ஏற்படுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள் “பெண்கள் இயக்கங்களின் செயற்பாடுகளாகும்.
- 58 -

பெண்களின் வாழ்க்கை நிலைமைகளை இலகுபடுத்தும் செயற்பாடுகளில் நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு வகையிலும் ஈடுபடுகின்றோமாயினும், கூட்டான தொடர்ச்சியான செயற்பாடுகள் அழுத்தம் தருவனவாகவும், பாரிய சமூகமாற்றத்தை ஏற்படுத்துவனவாகவும் அமைகின்றன. பெண்களின் பிரச்சினைகள் தொடர்பான வெளிப்படுத்தல்கள், கலந்துரையாடல்கள், தொடர்
பாடல்கள் மூலம் நடவடிக்கைகளை மேலும் இலகுவாக்கக் கூடியதாயுள்ளது.
பெண்கள் (பெண்களாக) தமது பிரச்சினைகளை உணர்ந்தவர்களாக, அவற்றினைத் தீர்ப்பதற்கான ஆர்வத்தினை வெளிப்படுத்துபவர்களாக ஒன்றிணைதல் என்பதும், தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்தல் என்பதும்
பெண்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அவசியமான செயற்பாடுகளாகும்.
''. r ( 鹽*蠍
Af JA th s S
悠/佐
リ。 乔
- 59

Page 34
இனி ஒரு சுதந்திரம் ?
இகண்கள்
முடிவின்றிதொடரும் இதுஎங்கள்
போர்க்கால இரவுகள்.
காதைய்பிளக்கும்
ஒலிகளில்
வெடிகளில்,
குழந்தைகள்அதிர்வதில்லை.
உணரும்முண்ணமே இறந்துவிடுகின்றன.
g506)66)gain உடல்வறாய் சிதைjண்டதாயின் பால்முலைதேடும் பச்சைய்யிஞ்சுகள், மாற்றுத்தாயின்
NIslaou
முட்டிவ் 1ιπίδφiι.
கையசைத்துவிடைபெறும் எம்உடலில்
எதுதங்கும்-குழந்தைகளை மீண்டும்அரவணைக்க
கேள்விக்கவலையுடன்
தொடரும்-எங்கள்
gólolarjii uuj6olib.
நாளைக்காலை
இவர் இருப்பாரோ - என்று
எங்களைய்பார்த்து அவர்களும் அவர்களைய்பார்த்துநாங்களும்
6dbi dibióIDITit)
மெளனிகளாய், விடைபெறும்
முண்பணிக்கால
அந்திய்பொழுதுகள்.
மருண்டுஉருளும் சின்ன விழிகள். கைநடுங்க
வயோதிபதி யிர்கள்.
எதுவும்எய்படியும்
எங்கும் நடக்கும்
இதுஎங்கள் போர்க்கால இரவுகள்,
-விஜயலட்சுமி

வாசகர்களின் கருத்துக்கள்.
அன்புடன் பெண் சகோதரிகளுக்கு,
வாழைச்சேனை இளங்கலை இலக்கியப் பேரவையினுாடாக எதேச்சையாக மூன்று பெண்’ இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. இலக்கிய வட்டாரத்தில் “பெண் பற்றிய பேச்சு பரவலாக அடிபட்டும், ஆனால் படிக்கக் கிடைக்காத குறை அன்றுடன் சற்றுத் தணிந்ததான பெருமிதம்.
பெண்ணியம் பற்றிய எனது வாதத்துக்கும் பெண்ணின் கருத்துக்குமிடையே பெரிய இடைவெளி இருப்பதாக எனக்குப்படவில்லை. துாக்கி யெறியப்படாத கேள்வியாய் எம்முன்னிலையில் பிரசன்னமாயுள்ள பெண்ணின் ஆக்கங்கள் ஆறுதலைத் தருகிறது. இலக்கியச்சூழலில் பெண்களுக்கென தனியான இதழ்கள் வெளிவரத்தான் வேண்டுமா? எனும் பலரின் ஆதங்கத்தொனி இவ்விடத்தில் மனதை நெருடத்தான் செய்கிறது. ஆனால் இது நியாயமற்ற குமுறலாகவே கருதப்பட வேண்டியது அவசியமாகும்.
இன்று பெண்ணியம் பற்றி விரிந்த கருத்துக்களை முன்வைப்பதற்கு போதியளவு ஊடகங்களுக்கு பாற்றாக்குறை மிகைதான். அந்த இடைவெளிகளை நிரப்புவதற்காக வேண்டி ஆங்காங்கே சில முயற்சி களின் முனைப்பும் நிகழ்கிறது. அந்தவகையில் நோர்வேயிலிருந்து வெளிவரும் சக்தி ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. ஈழத்தில் அக்குறையை நிவர்த்திக்க பெண்ணின் வரவு காத்திர மானதுதான். பெண்ணின் தொடர் வரவில் சற்று விரிசல் நிலை நிலவுவது ஆசிரியர் குறிப்பிலிருந்து அறியக்கிடைக்கிறது. இந்நிலை தொடர்வது பெண்ணு க்கு ஆரோக்கியம் என்று சொல்வதற்கில்லை. பெண்ணின் தொடர் இருப்பும் இன்றைய சூழலில் அவசியமாகின்றது. ஈழத்தைப் பொறுத்தமட்டில் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்த நிலையில்தான் இருக்கின்றன. ஆனால் இவற்றுக்கெதிரான குரலை உயர்த்த பெண்களில் இன்று அநேகர் துணிவின்றி இருக்கின்றனர். இதுபற்றி எழுத முடியாமல் அச்சஉணர்வு மிகைத்திருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் எழுதக் கிடைத்தால் அதை சரியான முறையில் வெளிப் படுத்தக் கூடிய தளமின்றித் தவிக்கின்றனர்.
எனவே, பெண்ணின் விநியோக மட்டத்தில் ஒரு விரிந்த தளத்தினாலான
- 61 -

Page 35
பாய்ச்சல்தேவை என்பதை பெண் ஆசிரியை குழுவுக்கு தயவுடன் சுட்டி காட்டுகிறேன்.
மறுமடலில் சந்திக்கும் வரை.
அன்புடன்
பாலை முஹம்மதியா.
யா/பொலிகண்டி இ.த.க.பாடசாலை வல்வெட்டித்துறை 18.09.2000.
அன்புடையீர்;
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் வெளியிடப்படும் 1999 தொகுதி 4 இலக்கம் 4 “பெண்' சஞ்சிகை கிடைக்கப் பெற்றோம், நன்றி
1. ஆசிரிய மட்டத்தில் இளம் ஆசிரியர்கள் இருபாலாரும் விரும்பி வாசிக் கின்றார்கள். மாணவர் மட்டத்தில் தரம் 9,10,11 இல் கற்கும் மாணவர்கள். மாணவிகள் மாணவரிலும் பார்க்கக் கூடுதலான சிரத்தையுடன் வாசிக் கின்றார்கள். பெண்களே கூடுதலாக வாசிக்கிறார்கள்.
2. பெருமளவு மாணவர் இது போன்ற நூல்களை விரும்பி வாசிப்பதால் மாணவர்களின் வாசிப்புத் திறன் அதிகரிப்பதுடன் எழுத்தாற்றலும் படிப் படியாக அதிகரிக்கிறது.
3. பால்நிலைக் கருத்துக்கள் மாணவர்களைக் கணிசமான அளவு சென்ற டைந்திருக்கிறது. தொடர்ந்தும் இச்சஞ்சிகை எமது நுாலகத்திற்கு கிடைக்க உதவுக. தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்.
அன்புடன் சற்குருநாதன்
- 62 -


Page 36