கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சி. வி. சில சிந்தனைகள்

Page 1
மலேயக இலக்கியத்துறை பில் அறுபதுகளில் ஏற்பட்ட எழுச்சியில் மலர்ந்த எழுத் தாளர்களில் ஒருவர் சாரல் நாடன்
சிறுகதை, கவிதை, கட்டு ரை விமர்சனம், மொழி ஆராய்ச்சி என்று தன் இக் வியப் பன்னியை தொடர்ந்
துள்ளார்.
பிறந்து வளர்ந்து கற்று தொழில்புரிவது அனத்தும் மலேயக மண்ணில் தான் அதனுல் தன் பெயரில் அது தெரிய வேண்டும் என்ற அவாவில் குறுந்தொகையில் குறிஞ் சித் திண்ணப்பாடல்களில் வரும் சாரல் நாடன் என்ற வினிப்புத் தொடரை சுயத்துவர்க சுவீகரித்துக் கொண்டார்.
கண்டியில் வெளிவந்த மலமுரசு சஞ்சிகையில் மலர்ந்து தேசிய ஏடுகளான வீரகேசரி, தினகரன், சிந்தாமணி ஆகிய ஏடுகளில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
அகில இலங்கையிலுமே, தேயிலே ஆராய்ச்சி நிலேயமும் LL LLLLLLLLS 0S LaLLLL S a L S L S LLLLtaCH t aaaLLCCCLLLL SS LL சேர்ந்து நடாத்திய தேர்வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெற்று தேயிலேத் தோட்டத் தொழிற்சாவே அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேயக இலக்கிய வானில் தென்றலாக வீசி புயலாக ஒறும் சாரல் நாடனின் எழுத்துக்கள் மலேயக இலக்கியத் திற்கு வலிமை சேர்ப்பன.
Printed at The Union Printers, Colombo Street, Kandy
 
 


Page 2

FICİİ. II GODI ID
"துயரத்தைத் தானே அநுபவிக்கவும், மகிழ்ச்சியைப் பலரோடு பகிர்ந்துகொள்ள வும் - வாழ்ந்து காட்டி - இந்நூலைப் பதிப்பிக்க ஏற்பாடுகள் மேற்கொண்ட 17-11-1986ல் இயற்கை எய்திய என் அருமைத் தந்தைக்கு இந் நூல் சமர்ப்பணம்’
- சாரல் நாடன்
( III )

Page 3
முன்னுரை
"சி. வி. யிடம் நான் நெருங்கி பழகியது கிடையாது. கண்டியில் இடம்பெற்ற 'தாயகம்' நூல் வெளியீட்டின் போது அவருடன் இணைந்து கலந்து கொண்ட நான் அவரது ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்க விருப்பம் தெரிவித்தேன். தனது ஆங்கில நூலே அனுப்பி வைத்திருந்தார். கடிதத் தொடர்பு ஏற்பட்டது.
வாய்மொழி இலக்கியம் குறித்த எனது தொடர் கட் டுரைகளைப் பத்திரிகைகளில் வாசித்தமையால் அக் கடிதத் தொடர்பை அவர் தொடர்ந்தார். நெருக்கம் அவ்வளவே.
மலையக கலை இலக்கியப் பேரவையின் சார்பில் அட் டன் நகரில் 1.12.1985-ல் நடைபெற்ற ஆய்வு அரங் கில் நண்பர் அந்தனி ஜீவாவின் விருப்பத்தற்கியைந்து சி. வி.யின் எழுத்துக்களைப் பற்றி நான் பேசினேன்,
அவ்விதம் பேசுவதற்கு முன்னர் =
"சி. வி. வேலுப்பிள்ளையைப் பற்றிய ஆதார பூர்வ மான எழுத்துக்களைச் சேகரிக்கத் தொடங்கினேன்.
அவரது ஆக்கங்களை மூல உருவில் பெற்றுக்கொள் ளும் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டேன்.
தமிழகத்தில் வெளியான அவரது புத்தகங்கள் அனைத் தையும் பெறுவதற்கென்றே எனது மனைவியைத் தமிழகம் போய் வரச் செய்தேன்.
படைப்பிலக்கியம் நூல் உருவில் வெளிவருவது அபூர் வம் என்ற நிலையில் மலைநாட்டு இலக்கிய கர்த்தாவின் ஆக்கங்களைப் பற்றி எழுதுவது என்பது நடைமுறையில் இன்னெரு படைப்பாளிக்கு இலகுவான காரியமல்ல.
( IV )

எனினும், படைப்பு இலக்கியமும், பற்றி இலக்கிய மும் வெளிவரவேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.
இத்துறைகளில் ஏராளமான நூல்களை எழுதுவதற் கான தளம் மலையகத்தில் உண்டு.
நான் எழுதியதைவிட எழுதாமலிருந்த காலப்பகுதியே அதிகம்.
எழுத்து என்பது நெருப்பைப்போல. அது எந்நேர மும் ஜுவாலை விட்டு எரியாவிட்டாலும் அனலாய், கன லாய், தண்லாய், தழலாய் தொடர்ந்து நீறுபூத்து நிற்கும் தின்மையுடையது.
இயந்திரங்களுக்கு மத்தியில் இயந்திரங்களைப்போன்ற மனிதர்களுடன் தொழில் புரியும் நான் என்னையும் இயந் திர மயமாக்கிவிடாமலிருக்க இலக்கியத்திடம் தஞ்சம் புகு வதை நாளாந்தம் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்,
மலைநாட்டு மக்கள் கல்விகற்பது அபூர்வமாயிருந்த காலத்திலேயே கல்விகற்று ஆசிரியப் பணிபுரிந்தவர் சி வி? அவர்கள்.
அவரைப் பற்றிய நூலே முதன் முதலாக நான் எழுதி இருக்கிறேன்.
என்னுடைய முதல் நூலும் இதுவே ஆகும்.
இது 'சி. வி'யைப் பற்றிய முழு வரலாறு அல்ல, அவரது இலக்கிய முயற்சிகள் பற்றிய முழுமையான ஆராய்ச்சியும் அல்ல.
இந்த இரண்டு துறைகளிலும் நூல்கள் தோன்றுவதற் கானத் தேவையை - உணர்வை - இந்நூல் உங்களிடையே
ஏற்படுத்தினுல், அதுவே எனது முயற்சிக்கான பலன் என நினைக்கிறேன்.
( V )

Page 4
எனது இம் முயற்சி வெற்றிபெறுவதற்கு பலரும் ஒத் துழைப்பு நல்கினர்.
பலாங்கொடை நண்பர் எஸ். எம். லாசரஸ் தன் பழம் பத்திரிகை நறுக்குகளைக் கொடுத்துப் பெரிதும் உதவினர். அவருதவி அளப்பரியது.
சி வி" அவர்களின் நெருங்கிய உறவினர் குருபரனும் தொழிலாளர் தேசிய காங்கிரஸ் பிரமுகர்கள் பி வி. கந் தையா, டி. அய்யாத்துரை, பி. பெருமாள் மூவரும் ‘சி வி" யின் அச்சேருத எழுத்துக்களைப் பற்றிய என் தேடுதலுக்கு பெரிதும் உதவிஞர்கள்.
இத்தனைக்கும் மேலாக அந்தனிஜீவாவின் தொடர்பு ஏற்பட்டிருக்காவிட்டால் இம்முயற்சியில் நான் ஈடுபட் டிருப்பது அபூர்வமே. என்னில் ஓர் இயந்திரச் சிந்த னையை அவர் ஏற்படுத்தி இருக்கிருர்,
இவர்கள் எல்லாருக்குமே எனது இதயபூர்வமான
நன்றி.
சாரல் நாடன்
டன்சினேன்,
பூண்டுலோயா.
(VI)

பதிப்புரை
மலையகத்தையும், மலையக இலக்கியத்தையும் என்னை நேசிக்க வைத்த பெருமை சி வி. யைச் சாரும்.
மலையக சமூகத்தையும், இலக்கியத்தையும் நாட்டார் பாடல்களையும் எவ்வளவு தூரம் சி. வி. நேசித்தாரோ அதைப்போலவே அவர் மனிதர்களையும் நேசித்தார்.
அந்த மனித நேயமுள்ள கவிஞன்தன் வாழ் நாள் முழுவதும் 'மானுடம் பாடும் வானம்பாடி' யாகவே வாழ்ந்தார்.
அந்த மக்கள் கவியுடன் எனக்கு இரண்டு தசாப்த கால தொடர்புண்டு.
அந்த மாபெரும் சிந்தனையாளனும், படைப்பாளியு மான மக்கள் கவிஞன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம். அவரோடு பழகினுேம் அவரோடு மலையக கலை இலக்சிய சமூக விடயங்கள் பற்றி உரையாடியது எல்லாம் நேற்று நடந்த சம்பவம் போல் பளிச்செனக் கண்முன்னே தெரி கின்றன.
சி. வி. வாழும் காலத்திலேயே மதிக்கப்பட்டார். கெளரவிக்கப்பட்டார் பேராசிரியர் அமரர் கைலாசபதி போன்றவர்கள் உச்சி மோந்து உவந்து உன்னதமான கவி ஞன் என விமர்சித்தார்கள்:
அத்தகைய மேதையைப் பற்றிய ஆய்வு ஒன்றை நண்பர் சாரல் நாடன் "சி. வி. சிந்தனைகள்' என்ற பெய ரில் தந்துள்ளார்.
மலேயக மக்களின் துன்ப துயரங்களையும் சோகப்
( VIII )

Page 5
பெருமூச்சுக்களையும் நேரில் கண்டபின் அவற்றை உலகறியச் செய்ய வேண்டும் என நினைத்து அவற்றைப்பற்றி ஆங்கி லத்தில் எழுதி உலகறியச் செய்த பெருமை மலையக மக் கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை அவர்களைச்சாரும்.
அவர் மறைந்து ஈராண்டாகிறது. ஆனல் அவரின் நினைவுகள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின் றன.
எண்பதுகளில் மலையக க*ல, இலக்கியப் பேரவை மூலம் 'மக்கள் கவிமணி" என்ற கெளரவ பட்டத்தை அவருக்கு வழங்கி பொன்னடை போர்த்திக் கெளரவித் தோம்.
மலையக வெளியீட்டகத்தின் முதல் வெளியீடாக, மலை யக எழுத்தாளர்களின் மகாநாட்டின்போது மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சி. வி. யைப் பற்றிய நூலை வெளி யிடுவது. காலத்தின் தேவையை உணர்ந்து. நமது கடமையை செய்கிருேம் என்ற திருப்தி ஏற்படுகி
Digil.
அந்தனிஜீவா 5.2.86
(VIII )

1. இரண்டெழுத்து
* சி.வி என்ற இரண்டெழுத்துக்களில் நண்பர்களிடை யேயும், தொழிற் சங்க வட்டத்திலேயும், இலக்கிய உலகிலும், ஆங்கிகலம் கற்ற வாசகர் மட்டத்திலும் தன் பெயரை நிலை நிறுத்திக்கொண்டவர் கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப் பிள்ளை யாகும்
*சோவி? என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப் பட்ட தமிழகத்து எழுத்தாளர் புதுமைப்பித்தன் என்ற விருத்தாசலத்தைப்போல(1) இலங்கை எழுத்தாளர்களில் * சி.வி.யின் இலக்கியச் சாதனைகள் சிறப்பானவைகள். நின்று நிலைத்து நினைவு கூறும் தரத்தவைகள்
ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். டி. ராமநாதன், அழகு சுப்பிரமணியம், ராஜா புரக்டர் போன்றவர்கள் இவ்விதம் புகழ்பெற்ற ஏனைய இலக்கிய கர்த்தாக்களாவர். அவர்க ளெல்லாம் ஆங்கிலத்தில் எழுதியதோடு அமைந்துவிட தமது கடைசிகால இலக்கியப் படைப்புகளைச் சுயமாகவே தமிழில் எழுதினர் சி.வி.
ஐம்பதாண்டுகாலம் இலக்கிய உலகிலும், பத்திரிகை உல
கிலும் நன்கு பிரகாசித்த சி வி. தனது அந்திம இருபத்திரண் டாண்டுகளாகத் தமிழிலும் சுயமாகவே எழுதினர்.
தன்னுடைய எழுத்துக்கள் தான் பிரதிநிதித்துவம் வகிக் கின்ற மக்களிடம் சென்று பரவவேண்டும் என்ற நியாயமான சமூக உணர்வை சி.வி, பெற்றிருந்தார் என்பதற்கும், மாறி வரும் சமூக மாற்றங்களோடு தன்னை எந்த அளவுக்கு "சி.வி." ஈடுபடுத்திக்கொண்டார் என்பதற்கும் இது ஓர் அரிய உதா ரணமாகும்.

Page 6
காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் தனிப் பட்ட அளவில் தங்களின் ஆங்கில மொழியறிவையும், பிற தகுதிகளையும் உயர்த்திக்கொண்டவர்களில், சுயமொழி மூலம் கல்வி கற்று, ஆயிரத்துத்தொளாயிரத்து ஐம்பத்தாரில் இலங்கையில் ஏற்ப்பட்டச் சமூக மாற்றத்தின் விளைவாக உரு வான புதிய தமிழ் எழுத்தாளர்களிடையேயும் தன் புகழை நிலைநிறுத்திக்கொண்டவர் சி. வி. வேலுப்பிள்ளை ஒருவரே
எனலாம்.
இவரது ஆளுமை வெகுவாக வெளிப்பட்டது ஆங்கிலக் கவிதைகளிலேதாம். ஆர். ஆர், குரொசட் தம்பையா, தம்பி முத்து என்று ஆங்கிலத்தில் கவிதைகள் புனைந்த ஏனைய இலங்கைத் தமிழ்க் கவிஞர்களோடு இணையாக வைத்துப் புகழப்பெற்றவர் சி. வி வேலுப்பிள்ளையாகும்.
ஜோர்ஜ் கெயிட், ஜே விஜயதுங்க, ஹரிசன் பீரிஸ், அனட் ஸ்வேன், நளினி ஜயசூரிய வோல்டர் தல்கொடயிடிய, ஏர்லி மெண்டிஸ், ஹெக்டர் டி அல்விஸ் என்ற ஆங்கிலத்தில் எழுதிய ஏனைய இலங்கை கவிஞர்களோடு சமமாக வைத்துக் கணிக்கப்பட்டவர் "சி,வி. யாகும்
இருபதாண்டு காலம் வாழ்ந்த காரணத்தால் இலங்கை யைத் தனது வளர்ப்புத் தாயமாக வரித்துக்கொண்டு தன் படைப்புக்களை ஆங்கிலத்தில் சுவிதைகளாகவும், கட்டுரை களாகவும் வெளியிட்டுச் சிறப்பு பெற்ற வால்டர் ஸ்டேன்லி ஸினியரைப்போல தமது படைப்புகளால் சிறம்பு பெற்றவர் சி வி. ஆகும்
கட்டுரைகளையும், கதைகளையும் தமிழில் எழுதமுடிந்த இவர் ஒருபோதும் தனது கவிதைகளைச் சுயமாகத் தமிழில் எழுதவில்லை. இது தமிழ் இலக்கியத்துக்கும், இலங்கைத் தமிழ் எழுத்துத்துறைக்கும், மலையக இலக்கியத்துறைக்கும் ஏற்ப்பட்ட மகத்தானதோர் இழப்பு ஆகும்.
இருபத்தெட்டாண்டு காலம் ஆரம்பத்தில் ஆங்கிலத்தி லும், பின்னைய இருபத்திரண்டு ஆண்டு காலம் தமிழிலும்

3
தனது இலக்கிய படைப்புக்களைத் தந்த இவர் சுயமாகத் தமி ழிலும் ஆங்கிலத்திலும் படைத்த ஒரே படைப்பு "இனிப்பட மாட்டேன்? என்ற நாவலாகும். தமிழி ல் இந்நாவலை வாசித்த இலக்கிய விமர்சகர் க. கைலாசபதி இது ஆங்கிலத் திலும் எழுதப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருந் g5Tri (2)
‘இனிப்பட மாட்டேன்" என்ற தன்னுடைய இறுதி நாவ லில் ‘சி வி. தன்னுடைய சுயசரிதையை வெளியிட்டிருந்தார் 6Tair Gp 5, pG Gj6öTGlb. “The Holocaust - A Story of the 1981 Ethnic Violence" என்ற தலைப்பில் இதை ஆங்கிலத் தில் இவரே எழுதிவைத்திருந்தார். இதற்கான பெருமை
க. கைலாசபதியையேச் சாரும்.
இவரது மற்றைய படைப்புகளில் பெரும்பாலான நாவல் களும், கட்டுரைகளும் பொன் கிருஸ்ணசுவாமி, ஈஸ்வர புத்ரா, என்பவர்களாலும், கவிதைகள் சக்தீ. அ. பாலையா வாலும் ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் இவரது அங்கீகா ரத்தோடு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. )
படைப்புக்களின் முக்கியத்துவம் உணரப்பட்ட இவரது மறைவுக்குப்பின்னர் இவரது ஆங்கிலமூலத்தைத் தமிழ் மொழி பெயர்ப்பாக்கும் பணியில் பி. ஏ. செபஸ்டியான் வெற்றிகரமாக அமர்த்தப்பட்டிருக்கிருர் எனலாம்.
வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் முறையே ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, என்ற முறை யிலே தன்னுடைய ஜீவனுேபாயத்தை மேற்கொண்ட சி. வி. வேலுப்பிள்ளை ஆரம்பகாலம் தொட்டுத் தன்னுடைய மரண பரியந்தம் மிகச்சிறந்த இலக்கிய கர்த்தாவாக விளங்கியிருக்கி முர் என்பதுதான் தெளிவான வரலாற்று உண்மையாகும்.
"அவருக்கு ஏகோபித்த புகழையும் பாராட்டுதலையும் மலேய கத்தைச் சாராத மற்ற எழுத்தாளர்கள் கலைஞர்கள் மத்தியில் மட்டற்ற மதிப்யையும் பெற்றுக்கொடுத்தது. அவரது கலை இலக் கியப்பணிகளே ஆகும். தொழிற்சங்கவாதிகளில் தனித்தன்மை

Page 7
4.
கொண்ட அவர் உடலால் தொழிற்சங்க இயக்கத்துக்கு அயராது உழைத்தவர் எனினும் உள்ளத்தால் இலக்கியத்தையே உயிரஐய்க் கொண்டிருந்தவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் தனது படைப்புக்களைச் செய் ததன் மூலம் தமிழின் எல்லைகளுக்கப்பாலும் தான் கிார்ந்த சமூ கத்தின் துயரம் தோய்ந்த அவலங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றவர்’ (4)
ஆயிரத்துத்தொளாயிரத்து எழுபத்திரண்டில் கலாச்சார அமைச்சு அவரை கெளரவித்துச் சிறப்பித்தது.
மே ஆயிரத்துத்தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டு அவரது உருவத்தை தனது அட்டைப்படத்தில் வெளி யிட்டு அவருக்கான இலக்கிய இடத்தை "மல்லிகை’ இதழ் கெளரவித்தது.
மலையகக் கலை இலக்கியப் பேரவை இவருக்கு தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் தலைமையில் 1981ல் "மக்கள் கவிமணி? பட்டம் கொடுத்து மதிப்பு அளித்தது கெளரவித்தது.
சிவி’யின் ஐம்பதாண்டு எழுத்துத்துறை நிறைவு குறித் துக் கலாநிதி க. கைலாசபதி சிறப் புச் சொற்பொழி வொன்றை நிகழ்த்தினர்.
2. "ஏழு பேரில் இவரும் ஒருவர்
செம்டம்பர் மாதம் தமிழர்கள் பொதுவாக புத்துணர் வும் எழுச்சியும் கொள்கிற காலம் செப்டம்பர் பதினேராம் நாள் யுகக்கவிஞன் பாரதிக்கு விழா எடுக்கவும், அவரது கவி தைகளையும், மொழியுணர்வையும் சமூகத்தில் பரவுவதற்கான விரிவான முயற்சிகளில் ஈடுபடவும் தமிழர்கள் பழகிப் போயி ருக்கிறர்கள். அவர்களின் அத்தகு பழக்கத்துக்கு மேலும் வலுவூட்டுவதற்கான வாய்ப்பை "சி.வி.யின் பிறந்தநாள் கொடுத்திருக்கிறது.

5
செப்டம்பர் மாதம் பதினன்காம் நாள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினன்காம் ஆண்டு அவர் பிறந்தார். வட்டகொடை பூண்டுலோயா பகுதியைச்சார்ந்த மடக்கும் புர மேற்பிரிவில்.
இயற்கையின் நளினம் எழில் எடுத்து ஆடும் பகுதி இது. மனித இனத்தின் கடும் முயற்சியையும், இடையரு உழைப் பையும் வெளிப்படுத்தும் செங்குத்தான மலைகளும், சரிந்து வரும் பாறைகளும் ஒடுங்கி நெளிந்தோடும் நீண்ட தார்ரோடு களும் நிறைந்த மனதில் ஒரு திகிலுணர்வை ஏற்படுத்தும் பகுதியும் இதுவாகும்.
தொழிற்சங்க உணர்வு ஆழமாக இப்பகுதி மக்களின் நாடி நரம்புகளில் வேரூன்றி போயிருக்கிறது பிரபலமான மலைநாட்டுத் தொழிலாளத் தலைவர்களை இப்பகுதி தோற்று வித்திருக்கிறது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டாம் ஆண்டு மணிக்குரல் பத்திரிகையையும், அறுபதிகளில் இளைஞன் குரல் பத்திரிகையையும் வெளியிட்டு மொழிவளர்க்கும் பணியில் தம்பங்கை குறையற்றுச் செய்தவர்கள் இப்பகுதி வாழ்மக்கள்.
இத்தகு சூழலில் தொடர்ந்து வாழாவிட்டாலும், தொடர்பை அறுத்துக்கொள்ளாதிருந்த சி வி. அட்டன் மெதடிஸ்ட் (இன்றைய ஹைலண்ஸ்} கல்லூரி, நுவரெலிய புனித திருத்துவக் கல்லூரி, கொழும்பு நாலந்தா வித்தியால யம் என்ற புகழ்மிகுந்த இடங்களில் கல்வி பயின்றவர். மெட் ரிக் எடுத்தவர்.
இவரது கடைகி நாவலான இனிப்படமாட்டேன்’ இவ் வுண்மைகளைக் கதாபாத்திரங்களின் வாயிலாக சம்பாஷணை உருவில் அழகுற வெளிப்படுத்துகிறது
இயற்கையாய் அமைந்த இலக்கிய உணர்வை, கல்வியால் பெற்ற மொழிப்புலமையும் ஆழ்ந்த சிந்தனையும் உள்ளடக்கி எழுத்துருவில் வெளியிட சி வி. பழகிப்போனர் ஆரம்பத்

Page 8
6
தில் கல்லூரி ஆசிரியராகக் கடமையாற்றினர். அதன் பின் னர். சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதலாவது பாராளு மன்றத்தில் தலவாக்கொல்லைப் பிரதிநிதியாக தெரிந்தெடுக் கப்பட்டார். மலைநாட்டில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் பிரதிநிதிகளாகத் தெரிவான ஏழு பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாத் தொகுயில் எஸ். தொண்டமானும், நாவ லப்பிட்டித் தொகுதியில் கே. ராஜலிங்கமும் கொட்டகலைத் தொகுதியில் கே. குமாரவேலுவும், மஸ்கெலியாத் தொகுதி யில் ஜி. ஆர். மோத்தாவும், பதுளைத் தொகுதியில் எஸ். எம். சுப்பையாவும், அலுத்துவர தொகுதியில் டி. இராமனுஜமும் இவ்விதம் தெரிவான ஏனையோராவர். மலைநாட்டு மக்களின் வாக்குரிமைப் பலம் ஒடுக்கப்படல் அவசியம் என அரசியல் வாதிகள் தீவிரமாகச் சிந்தித்தனர் ஆயிரத்துத் தொள்ளாயி ரத்து நாற்பத்தேழாம் ஆண்டு தேர்தல் நடைபெற்று இவர் கள் தெரிவானர்கள். நாற்பத்தெட்டு நவம்பரில் இந்த மக் களின் குடியுரிமை பறிபோனது.
இந்நவம்பர் கொடுமை இலகுவில் மறக்கமுடியாத ஒன்று அதிலும் தான் நடந்து வந்த பாதை மூடப்பட்டுவிட்டது. தான் ஏறிவந்த ஏணி உடைத்தெறியப்பட்டிருக்கிறது என்ற உண்மையை எந்த உள்ளம்தான் தாங்கிக்கொள்ளும்? அதி லும் இத்தகு கொடுமைக்கு, தேசபிதா டி. எஸ். சேனநாயக்கா எடுத்தப் பிழையான முடிவுக்குச் சோரம் போனத் தமிழர் களை எவ்விதம் பொறுத்துக்கொள்ளும்? சி வி. தனது பாரா ளுமன்ற பதவி காலத்துக்குப் பின்னர் தீவிர தொழிற் சங்க வாதியாக மாறினர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஸில் பல மட்டங்களில் பணியாற்றினர். கருத்து வேறுபாட் டின் காரத்தால் தன் தோழர் கே வெள்ளையனேடு இணைந்து தொளிலாளர் தேசிய சங்கத்தை நிறுவி ஆயிரத்துத் தொள் ளாயிரத்து அறுபத்தைந்தில் - அதன் ஆரம்பகாலம் தொட்டு அமைப்பாளராக இருந்து அச்சங்கத்தை மலைநாட்டின் மூன் முவது பெரிய தொழிற் சங்கமாக வளர்த்தெடுத்தார். மலை

7
நாட்டு மக்களின் பலமும் பலவீனமும் அதன் தொழிற்சங்க அமைப்புக்களிலேயே தங்கியிருக்கிறது என்பது மறைக்கமுடி யாத ஒர் உண்மையாகும்
'மனிதனின் நோக்கு எவ்வளவு உயர்வான தெனினும் பரந்ததெனினும் அது அவனது இயல்பான தற்பாதுகாப்பு உணர்வைக் கொண்டதாகும். எப்போது ஆதிமனிதன் கானக வாழ்வுக்குப் பயந்து தன் இனத்தாருடன் பாதுகாப்பான இடந் தேடி ஒடிஞனே அன்றே நாகரிகம் ஆரம்பமானது. அதைப் போன்ற உணர்வு காரணமாகவே ஒல்வொரு சங்கமும், அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சக்திகளிலிருந்து தனது அங் கத்துவர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், மனித முயற்சியின் பலனை எய்திட வீறு நடைபோடவும், ஆபத்துக்களை அறிவுறுத்த வும் தங்களுக்கென ஒரு வெளியீட்டைக் கொண்டுள்ளண.
இவ்விதக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் எழுதியும், பேசி யுமிருப்பினும் அவற்றின் அம்சங்கள் மறைந்து விடவில்லை என் து தெளிவான உண்மையாகும்’(5) என்பது அவரது முடி வாகும் மாவலியின் நிர்வாக ஆசிரியராக அதஞலேயே கடமை
யாற்றினர்
மலையகத் தோட்டத் தொழிற்சங்கத்துறையின் ஆரம்ப ாலத்திலும் இந்த உ ண் மை உணரப்பட்டிருந்தது. கோ. நடேச ஐயர் தேசபக்தன், உரிமைப்போர், தோட்டத்தொழி லாளி என்ற ஏடுகளை நடாத்தியது இதனுலேயேதாம்.
எனினும் கோ நடேச ஐயர், டி. சாரநாதன், டி. இரா மனுஜம் என்போரது எழுத்துக்களும், ஏடுகளும், பத்திரிகைத் தொடர்புகளும் இலக்கியப் படைப்புக்களாக இல்லாமல் போய்விட்டன. அந்த எல்லையைத் தொட்டவர் "சி. வி." ஒருவரேயாவார்.

Page 9
8
3. "இருளில் ஒளி'
"ஆங்கிலத்தில் நான் எழுதியதும், எழுதுவதும் எனக் குச் சாதகமாகவிருக்கிறது. வாசகர் வட்டமும் விரிந்தது, வேறுபட்டது'{6} என்று கூறுகிற சி. வி. அகில இலங்கை யிலும் புகழ்பெற்றது தன்னுடைய ஆங்கில எழுத்துக்களால்
Enr LO.
மலைநாட்டுச் சமூகம் மிகப் பின்தங்கிபோன ஒன்று. கல்வி, கேள்விகளில் அச்சமூகத்தைச் சார்ந்தவர்கள் பிரகாசிப் பதற்கு ஏராளமான இடையூறுகள் உண்டு. இலக்கிய முயற் சிகளில் இச்சமூகத்தைச் சார்ந்தவர்களில் மிகச் சிலரே ஈடு பட்டு இருக்கின்றனர். இந்தச் சிலரில் மூத்தவராக கருதப் படுபவர் சி. வி. வேலுப்பிள்ளை.
"மலைப்பிராந்தியத்தின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு இவரது பங்களிப்பு நிறைவானதாகும். அடக்கம் மிகுந்த இவர், இளம் இலக்கிய கர்த்தாக்களின் வெகுவான மதிப்பை பெற்றிருந்தார். சிந்தனைவளமும், படைப்பாற்றலும் மலைய கத் தமிழ் இலக்கிய காத்தாக்களிடையே நிறைய காணப் பட்டாலும், மரபொழுங்கு சார்ந்த பட்டப்படிப்பும், பண் டித ஞானமும் அவர்களில் பலருக்கு இல்லாமற் போய்விட் டது.17) இதை மிகைப்படுத்தி, நியாயமான பிற காரணங் களுக்கு மத்தியில், மலையக இலக்கிய கர்த்தாக்கள் இலங்கை யின் தமிழ் இலக்கிய உலகிலும் விமர்சக வட்டத்திலும் அங்கீ கரிக்கப்படாமல் இருந்தார்கள். அல்லது உரிய அங் கீகாரத்தைப் பெருது போனர்கள் சி. வி. யின் எழுத்துக்கள் இந்தப் புறக்கணிப்பை மீறி வெற்றி கண்டன, இந்த குறு கிய இலக்கிய விமர்சக அங்கீகாரத்தைப் பெருமலேயே இலக் கியமாக மிளிர்ந்தன. அதற்கான காரணம் அவரது படைப் புக்களில் மிகப் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட் டமையே. பிரசித்தமான இவரது ஆங்கில படைப்புக்களைப் பற்றி குறிப்பிட்டு எழுதுவதைப் பெருமையாக கருதினர்கள் சில தமிழ் விமர்சகர்கள். இது ஒரு விசித்திரம்தான்.

9
‘நான் ஒரு கவிஞன் அல்ல எழுத்தாளன் கூட இல்லை என லாம். எழுதுவதற்கு நான் தெரிந்தெடுத்த கருப்பொருட் களே இன்றைய எனது பெருமைக்குக் காரணம்’ என அடக் கத்தோடு கூறுகிற சி. வி வேலுப்பிள்ளை தனது கூற்றின் உண் மையை நிதர்சனமாக உணர்ந்திருந்தார். இறக்கும்வரையில் இந்த உண்மைதான் அவரை இயக்கியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து நான்காம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தொன்பதாம் தேதி அவர் மரணித்தார். வாழ்ந்த எழுபதாண்டுகளும், இலக்கிய பணிகளும் இயக்கப் பணிகளும் ஆற்றிய ஐம்பதாண்டுகளும் இந்த இவதுே கூற்றின் வெளிப் படைச் சான்றுகளை ஏராளமாக விட்டுச் சென்றிருக்கின்றன. இவரது ஆவேசம் மிகுந்த எழுத்துக்களின் தாக்கம் நேரிடை யாக மலையக மக்களைச் சென்று அடையவில்லை என்பது மிகப் பெரிய உண்மையாகும்.
ஆனல், புறக்கணிக்கப்பட்டதும் அடக்கி ஒடுக்கப்பட்ட துமான ஒரு சமூகத்தின் அவல நிலையைக் குறித்துப் பலரை யும் சிந்த்க்கவைத்ததும் இவரது எழுத்துக்கள்தாம். இது ஒரு மிகப்பெரும் வெற்றி எனலாம்.
வானம் எட்டி நிற்கும் மலைகளுக்கு நடுவே "வாழ்வே தோட்டம் தோட்டமே வாழ்வு' என்று வாய்மூடி மெளனித் துப் பழகிப்போன மக்களைப் பற்றி வெளி உலகம் அறிந்து கொள்வதற்கு இவரது ஆங்கில எழுத்துக்களே உதவின.
நாகரிகச் சிந்தனைகளும் விஞ்ஞானப் போக்குகளும் மலிந்த ஆங்கில அறிவுபடைத்த இன்றைய அறிவு ஜீவிகளின் அனுதாபம் மிகுந்த ஆதரவு தோட்டப்புறத்து மக்களைச் சார்ந்தற்கு காரணமே சி. வி வேலுப்பிள்ளையின் ஆளுமை மிகுந்த ஆங்கில எழுத்துக்கள்தாம்.
இருள்சூழ்ந்த இடத்தில் விளக்கை ஏற்றிவைப்பதுவும், இருளே ஒளியாக்குவதும் மிகப்பெரிய சாதனையாகும். அதற்கு முன் இருளில் ஒளி உண்டாக்கவேண்டும். இருளை உலகம் ஏற் றுக்கொள்ளவேண்டும் ஒளியேற்றவேண்டிய அவசியம் உண

Page 10
10
ரப்படவேண்டும். சமூகத்தின் எல்லாத் தேவைகளுக்கும், மேம்பட்ட இலக்கிய முயற்சிகளுக்கும், மலையகத்தில் இந்தத் தேவையைத் திறம்பட வெளி உலகுக்கு உணர்த்தியவர் சி. வி வேலுப்பிள்ளைதான் அவருக்கு இந்த வெற்றிகரமான பணி யில் முழுமையாக கைக்கொடுத்து உதவியவை அவரது ஆங் கில எழுத்துக்கள்தாம். அவரது ஆங்கில எழுத்துக்களின் லாவண்யத்துக்குப் பலரும் வயப்பட்டு போனர்கள். ‘ஒப்சேவர்' *டைம்ஸ்’ என்ற இலங்கையின் ஆட்கில தேசிய ஏடுகளில் அவர் நிறைய எழுதினர். “மெயில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' என்ற இந்திய ஆங்கில ஏடுகளிலும் நிறையவே எழுதியிருந்தார். *டைம்ஸ்’ ஆண்டு மலரில் இவரது கட்டுரையை மறுபிரசுரம் செய்வதை சில ஆண்டுகள் தொடர்ந்தும் கைகொண்டு வந்த னர். தனது தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆங்கில மாவலி' வெளியீட்டை இவரே மேற்பார்வை செய்தாா. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் ஆங்கில வெளி யீடான 'காங்கிரஸ்' இவரது ஆசிரியபிடத்தில் வெளிவந்த போது புதிய பரிணுமம் பெற்றிருந்தது. ~:
இவரது ஆங்கில ஆக்கங்களில் Vismajani என்ற பாடல் சார்ந்த நாடகமும், Wayfarer என்ற வசன கவிதைத் தொகுப்பும் 1947 அளவில் நூலுருப்பெற்றன. 1954ல் 10 Ceylon's Tea Garden ot6štsd 5605 UTó Golgihua Lisija). The Borderland என்ற நாவல் அடுத்து வெளியானது. Born To Labour என்ற தலைப்பில் விவரண கட்டுரைத் தொகுப்பு நூலொன்று 1970ல் எம். டி. குணசேன வெளியீ டாக அச்சிடப்பட்டது சி. வி. யின் தமிழ் எழுத்துக்ஃளில் முதன் முதல் நூலுருவம் பெற்றது ‘முதற்படி’ என்னும் இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினரைப் பற்றிய கட்டுரை நூலாகும் 1946ல் இது வெளியானது கலைபிரசுராலய வெளி யீடாக இவரது ‘காதல் சித்திரம் என்ற நாவல் அடுத்து வெளியானது. 1960ல் “தேயிலைத்தோட்டத்திலே’ என தமிழ்ப்படுத்திய கவிதை நூல் வெளியாயிற்று 1981ல் வைகறை வெளியீடாக 'வீடற்றவன் நாவல் வெளியானது 1984ல் இதன் மறுபிரசுரம் இந்தியாவில் வெளியாயிற்று.

11
இதே காலத்தில் இவரது 'இனிப்படமாட்டேன்’ நாவலும் 'ம லே நாட் டு ப் பா ட ல் கள்" நூலும் வெளிவந்தன. "விஸ்மாஜினி வேஃவெயரர் என்ற இரண்டு நூல்களிலும் சி. வி. யின் சொல்லாட்சிகளைக் காணலாம் இவை இரண் டும் அவரது ஆங்கில ஆளுமையை வெளிப்படுத்தவும், பரந் துபட்ட வாசகர் வட்டத்தை பெற்றுத்தரவும் உதவின.
அந்த காலகட்டத்தில் இலங்கையின் ஆங்கில இலக்கியத் தில் செல்வாக்குச் செலுத்திய ஆர் ஆர் குரோஸ்ட் தம் பையா, விக்டர் லூயிஸ், தேவர் சூர்யசேன, எஸ் ஜே. கே. குரோதர், எஸ். ஏ விஜயதிலகா ஆகிய பலரும் வெளியிட்டி ருந்த கருத்துக்களை இணைத்து வேஃவெயரர் என்ற நூல் இரண்டு ருபா விலையில் வெளியாயிற்று
இந்நூல்களிரண்டும் வெளியானபோது சி. வி. தலவாக் கொல்லேத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது இலக்கிய முயற்சி களுக்கு இது மேலதிக விளம்பரமானது
"தொழிற்சங்க, அரசியல் காரணங்களுக்காக அவரோடு இணைந்து செயற்படும் பலருக்கும் தெரியாத ஓர் இரகசியம் அவரொருகவிஞர் என்பது இன்று அது வெளிப்பட்டுவிட்டது" என்று விக்டர் லூயிஸ் என்பார் “டைம்ஸ் ஒஃப் சிலோன்’ னரில் வியப்புத் தெரிவித்தார்.
"மண்ணுலகத்து ஆரவாரம் மிகுந்த அவல வாழ்க்கைக்கு மத்தியில் கவித்துவப்பார்வை மிகுந்த ஒரே அரசியல்வாதி” என்று பாராட்டி எழுதி இருந்தார். “சோஸியல் ஜஸ்டிஸ்" எனும் ஏட்டில் எஸ். ஜே கே. குரோத்தர் "அழகிய கவிதை களை எழுதுவதற்கும், சிந்திப்பதற்கும் கவிஞருக்கு நேரம் இருந்திருக்கிறதே" என்று வியந்த தேவ சூர்யசேன தன் வியப்பின் வெளிப்பாட்டைத் தெரிவிக்குமாப்போல தான் பங்கேற்று நடாத்திய Voice of Lanka என்ற வானெலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகளைப் பரவலாக மேற்கோள் காட்டிஞர்(8)

Page 11
12
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு நவம்பரி ஆரும் தேதிய நிகழ்ச்சியை வேஃபெயரர்" என்ற நூலில் வெளியான கவிதைகளை ஒலிபரப்புவதற்கென்றே ஒதுக்கி இருந்தார்.
இந்த ஆண்டில்தான் இலங்கை சுதந்திரம் பெற்றது சுதந்திர உணர்வும் தேசிய கருத்தும், சுதேசிய பற்றும் மற் றெல்லா உணர்வுகளையும் மழுங்கடித்திருந்தன. அரசியல் வாதிகளிடையே தலைதுாக்கத்தொடங்கிய இனவாதமும், இந் தியத் துவேஷமும் கலைஞர்களிடையே அரும்பாமலிருந்த நேரம். மேற்கத்திய பண்பாடுகளில் இந்திய இலக்கியத்தி னது தாக்கத்துக்கு ஆட்பட்டவர்களாகவே இலங்கை கலைஞர் கள் இருந்தார்கள். &
சிறப்பாக தாகூர், சரோஜினி நாயுடு ஆகியோர், இந்தி யன் ரிவியூ மொடர்ன் ரிவியூ போன்ற புகழ்பெற்ற சஞ்சிகை கள், சாந்தி நிகேதனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இக்கலைஞர் களைக் கவர்ந்திழுக்கும் சக்திகளாக விளங்கின சூர்யசேன புகழ்பெற்ற வழக்கறிஞர் கொழும்பிலிருந்து தனது இல்லத் துக்கு “கீதாஞ்சலி என்று பெயரிட்டிருந்தார் இதிலிருந்தே இவர்பால் ஏற்பட்டிருந்த இந்திய இலக்கியத் தாக்கத்தையும், தாகூர் ஈடுபாட்டையும் உய்த்துணரலாம்
சி வி. வேலுப்பிள்ளையின் ஆரம்பகால கவிதைகள் தாகூர் பாணியிலேயே அமைந்திருந்தன. உண்மையில் தா கூர் இலங்கை வந்தபோது சி. வி. தனது கவிதை நாடகத்தை அவரிடம் சமர்ப்பித்து ஆசீர்வாதம் வாங்கினர் என அறிய முடிகிறது'9) இவரது எழுத்தின் போக்கிலும், நோக்கிலும் பெரும் மாற்றத்தை இதற்கு பின்னுல் வந்த ஆக்கங்களில் காணுகிருேம்.
'தாகூரின் ரோமண்டிஸ் வயப்பட்டிருந்த சி வி தனது பிற்பட்ட கவிதைகளில் இவ்வயப்பாட்டிலிருந்து எப்படியோ விடுபட்டு புதுமைக் கவிஞராக மிளிர்வதாக" பம்பாயிலி ருந்து வெளியான 'பாரத் ஜோதி"யில் ஜக்மோகன் என்பார் எழுதினர்.

13
இவரது கருத்துக்களைத் தொகுத்துக் குறிப்பு எனும் மகு Lisai) In Ceylon's Tea Ga cien 6T657 so gai, gy 65) Lu நூலில் அறிமுகவுரையாக சி. வி இணைந்திருக்கிருர்,
இந்த அறிமுகமும், இலங்கையின் பிரபல ஒவியர் மஞ்சு சிரியின் பதின்மூன்று சித்திரங்களும் இந்நூலின் சிறப்பை மேலும் அதிகரிக்க வைத்தன.
சி. வி. யின் இலக்கிய போக்கிலே ஏற்பட்ட மாற்றத்திற் கான காரணம் இரண்டு என்று துணியலாம்.
ஒன்று வரலாறு சம்பந்தப்பட்டது
மற்றையது அவரது வாழ்க்கைச் சம்ந்தப்பட்டது.
முதலில் அவரது வாழ்க்கைச் சம்பந்தபட்ட நிகழ்ச் சியைக் காணலாம்.
4. ஆழப்பார்வை
நாற்பதுகளிலும் அதற்கு முன்னும் எமது இளைஞர்கள் பெற்ற கல்வி தோட்டங்களில் வேலைபெறும் காரணத்திற்காக மாத்திரமே அவர்களுள் பெரும்பாலாணுேர். தலைமைக் கங்காணி யினதும், தோட்ட ஊழியர்களினதும் பிள்ளைகளே அரசாங்கத்தி லும், தனியார்த்துறையிலும் ஏதோ வாய்ப்பினுல் இடம்பெற்ற கல்வியறிவு பெற்ற இளைஞர், தம்மை யார் என்று இனங்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. தமது பின்ணணியைப் பற்றிப் பிரஸ்தா பிக்க அவர்களுக்கு வெட்கமாய் இருந்தது. நான் தேயிலைத் தோட்டத்தவன் என்று சொல்ல அவர்களுக்கு எவ்வளவோ துணிவு வேண்டியிருந்தது. மலைநாட்டையும், மலைநாட்டு மக்களை யும் ஏளனமாக எவரும் கருதினர்’.
‘ஐம்பதுக்களின் முற்பகுதியில் தான் நான் திரு. ஜோர்ஜ் இட்டை சந்தித்தேன். சாம்ராஜ்ய நாடுகளில் முதன்மையிடம் வகிக்கும் ஒரு ஒவியரும் கவிஞருமாவார் அவர். மலைநாட்டு மண்

Page 12
14
வளத்துக்கு எனது கவனத்தைத் திருப்ப அவரது ஆலோசனைகள் தான் காரணமாயிருந்தன. மலைநாட்டு மக்கள், அவர்களது சுக துக்கம், பழக்கவழக்கம் நாடோடிப் பாடல்கள் போன்றவற்றில் நான் ஈடுபாடுகொண்டேன்.(10) என்று சி வி கூறியிருக்கிருர்,
ஜோர்ஜ்கீட்டின் சந்திப்பு சி வி யின் எழுத்துக்களைத் திசைதிருப்பியது தனது ஆரம்பகாலத்தில் எழுத்துக்களை 1935 - 1940 காலப்பகுதியில் வீரகேசரி யில் எச். நெல்லைய அவர்களின் கண்காணிப்பில் வெளியிட்டபோது காட்டாத ஆழப்பார்வையை 1950க்குப் பின்னர் தினகரனில் எழுதும் போது காட்ட ஆரம்பித்தார்.
இவைகளில் மலைநாட்டைப்பற்றிய படப்பிடிப்புக்களைக் காண்டதோடு தன் எழுத்து தான் சார்ந்த மக்களைச் சென்ற டையவேண்டும் என்ற சி. வி. யின் துடிப்பையும் காண் கிருேம், ஆங்கிலத்தில் எழுதிய தன்னுடைய மூலக்கட்டுரை களில் பலவற்றைத் தமிழில் தரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்
“தேயிலைத் தோட்டத்து வாழ்க்கையின் வெவ்வேறு நிரைகள் பற்றி தினகரனில் தொடராக “தேயிலைத்தோட்டத் திலே’ என்ற தலைப்பின் கீழ் வழிப்போக்கன் என்ற பெயரில் கட்டுன் ரகள் வெளிவந்தன. அத்துணுக்குகளில் முதன் முத லாக "மலைநாடு" என்ற சொற்பிரயோகம் உபயோகக்கப்பட் டது. தோட்டத்த நாடோடிப் பாடல்கள் பற்றி அப்பொ ழுதுதான் முதன்முறையாகத் தெரியவந்தது ஆரம்பகால அம்முயற்சிகள் இலக்கியத்தரம் உயர்ந்ததாக இருக்கவில்லை யென்பதையும் நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அக்கட்டுரைகள் ஏதும் பரபரப்பை ஏற்படுத்தியதோ நானறி யேன். ஆனல் மலைநாட்டில் இவ்வளவு எல்லாம் இருக்கின் றன என்று சிலர் திருப்தியடைந்தனர்.
பொதுவாகத் தமிழ் எழுத்தாளர்கள் எல்லோரும் தின கரன் மூலம் முன்னணிக்கு வந்த கைலாசபதியின் காலப்பகு திக்கு இப்பொழுது வருவோம். "மலைநாட்டுத் தலைவர்கள்’

15
பற்றி மலைநாட்டிலிருந்து பேணுச் சித்திரங்கள் வந்தன. இதைத் தொடர்ந்து எனது பெயரின்கீழ் மலைநாட்டுப் பிரமு கர்கள் என்ற தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. இவை எனது ஆங்கிலமூலக் கட்டுரைகளின் தமிழாக்கம் ஆகும்.(11) வேஃபெயரர் என்று தனக்குப் புகழ் தேடிதந்த நூலின் தலைப் பின் தமிழ் வடிவமான "வழிப்போக்கன்’ என்பதையே தனது புனைபெயராகக் கொண்டு சி. வி. எழுதினர் என்பதை இங்கு கவனத்தில் பொருத்திக் கொள்வது நலம்.
மேலும், இக்காலப்பகுதியில் பெயர் குறிப்பிடாமல் எழு தப்பட்ட மலைநாட்டுக் கடிதம் என்ற தொடர் ஈழநாடு, தின கரன், வீரகேசரி ஆகிய ஏடுகளில் வெளிவரத் தொடங்கின. மலைநாட்டின் சமகாலப் பிரசனைகள் அவைகளில் ஆரா யப்பட்டன. அச்சமற்ற காத்திரமான அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டன. அவை அனைத்தும் சி. வி. யால் எழுதப் பட்டவைகளேயாகும்.
இக்காலப்பகுதியில் ‘கதை’ என்ற சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டார். மலைநாட்டில் எழுத்தாளர் சங்கம் ஒன்றை ஏற்படுத்தும் பாரிய முயற்சியில் ஈடுபட்டார். எழுத்து ஆர் வம்மிகுந்தவர்களை ஒன்றிணைக்க முயன்ருர், சமூகத்தின் பிர திப்பலிப்பாகத் தன்னுடைய எழுத்துக்களை வளர்த்துக் கொள்ளத் தூண்டிய சி. வி. வேலுப்பிள்ளையைத் துளைத் தெடுத்த வரலாற்று நிகழ்ச்சி ஒன்றும் உண்டு அதுதான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு நவம்பரில் நடைபெற்ற கொடுமை.
ஒரு சமுதாயத்துக் கெதிரான அநியாய பழிவாங்கல் மலைநாட்டு மக்களை சமூக பொருளாதார ரீதியாக தீண்டத் தகாதவர்கள் போன்ற வாழ்க்கைக்கு உட்படுத்திய பிரஜாவுரி
)09F 9F D,
இலங்கை சுதந்திரம் பெற்றபின் கொண்டுவரப்பட்ட முதலாவது சட்டம் இதுவாகும்.

Page 13
16
5 கவிதை நூல் பிறந்தது
1947ம் ஆண்டு முதலாவது பாராளுமன்றத்திற்கு நடந்த பொதுத்தேர்தலில் தமது சொந்த இயக்கமான இலங்கை இந்திய தாங்கிரஸ்ஸிலிருந்து ஏழு உறுய்பினர்களைத் தெரிந்தெடுத்த தோடு மாத்திரமல்ல ஏனைய பதினுன்கு தொகுதிகளில் இடது சாரிக்கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்லது யூ. என். பி. எதிர்ப்பு வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளே காரணமாகவிருந்தன.
இலங்கை இந்திய காங்கிரஸ் கூட யூ. என். பியின் எதிர்ப்பு அணியாகத்தான் இக்காலத்தில் விளங்கிற்று. இவை எல்லாவற் றுக்கும் மேலாக கண்டி தொதியில் நடைபெற்ற முதன் முதலான இடைத்தேர்தலின் போது யூ. என். பியின் எதிர்ப்பு வேட்பாள ராகப் போட்டியிட்ட திரு. டி. பி. இலங்கரட்ணு வெற்றி காண்ப தற்கு இந்திய வம்சாவளித் தோட்டத்தொழிலாளர்களே
உதவினர்.
இத்தகைய காரியம் எதிர்காலத்தில் ஒருபோதுமே நடை பெறக்கூடாதென டி. எஸ். சேனநாமகா அன்றே சபதமெடுத் தார்.(12 1948இல் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தை டி. எஸ். சேனநாயகா அறிமுகம் செய்தார். இச்சட்டத்தின் மூலம்தான் முதன் முதலாக இலங்கைக் குடியுரிமை வரை யறுக்கப்பட்டது. பெரும்ாான்மையான இந்திய வம்சாவளி மக்களுக்கு குந்தகமாக அமைந்த சட்டமூலம் மிகவும் குறுகிய நோக்கமுடையதாக இருந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் ஆக பத்தாயிரம் இந்தியத் தொழிலாளர்களே குடியுரிமை பெற முடிந்தது. இந்தச் சட்டமூலத்திற்கு எதிராகக் கிளர்ந்த கண்டனக்களை அடுத்து இந்திய பாகிஸ்தானிய பிரஜாவுரி மைச் சட்டத்தையும் 1949ல் அவர் கொண்டு வந்தார். சாத் தியமற்ற நிபந்தனைகளை கொண்ட இச்சட்டத்தின் கீழ் குடி யுரிமைக்கு விண்ணப்பித்த எட்டு இலட்சம் பேரில் 134,320 பேருக்கே குடியுரிமை வழங்கப்பட்டது.

17
பெரும்பான்மையான இந்திய வம்சாவளி மலைநாட்டுத் தமிழர்கள் பிரஜாவுரிமையோ - வாக்குரிமையோ அற்றவர் களாக நட்டாற்றில் விடப்பட்டனர் இந்தத் தோல்வியின் பாரதூரத் தன்மையை இடதுசாரிகள் விளக்காமலிருந்த வேளை - எதிர்ப்போராட்டத்தின் முதற்படியாக நூறுநாள் சத்யாகிரகத்தை முன் வைத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயர் மாற்றம் பெறற இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன். இதன் பொதுச்செயலா ளராக அப்போது கடமையாற்றியவர் சி. வி வேலுப்பிள்ளை யாவார் சத்யாகிரத்தை முன்னெடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பும் சி. வி யின் உடையதாகவே இருந்தது பிரதம மந்திரியின் வாசஸ்தலத்தின் எதிரே ஐந்துநாள் உண்ணுவிர தத்தை மேற்கொண்டும், சணப்பிரநிதிதிகள் சபைக்கருகே சத்யாகிரகத்தை மேற்கொண்டும் சி. வி. நேரடி பங்கேற்ருர் மக்கள் நடாத்தும் வாழ்க்கைப் போராட்டங்களில் பார்வை யாளனுக மாத்திரம் அமையாது பங்கேற்பவனுகவும் வழி நடாத்து பவனுகவும் சி. வி. இருந்திருக்கிருர்,
தொழிற்சங்கவாதியாகவும், இலக்கிய கர்த்தாவாகவும் செயலாற்றிய காரணத்தாலேயே சி. வி. இத்தகு வாய்ப்பை பெற்ருர் என்று கூறுதல் பொருந்தும்.
பிரதிநிதிகள் சபை ஒன்றும் சி விக்கு புதிய இடமல்ல முதன் முதலாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மலைநாட் டின் ஏனைய ஆறு பிரதிநிதிகளோடு சி. வி. பாராளுமன்ற உறுப்பினராகச் சென்ற இடமே அது. தனது சமுதாயத்துக் கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், கக்கப்பட்ட நச்சுத்தோய்ந்த இனவாத கருத்துக்களையும் அவைகளின் மொத்த உருவான சட்டங்களையும் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்தே அனுபவித்திருக்கிறர்.
பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் போதே இனிமேலும் இந்த வாய்ப்புத் தனக்குக் கிடைக்காது என் பதை உணரவும், அந்த வாய்ப்புக்கான வழி மிகமிகத் திட்ட மிடப்பட்டு அடைக்கப்படுகிறதென்பதை அறிந்து கொள்ள வும் அவருக்கு இடமிருந்தது.

Page 14
18
என்ன கொடுமையான அநுபவம் இது 1 இந்த கொடுமை, அறிவும் நாகரிகமும் அடைந்த இருபதாம் நூற் ருண்டில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படு வதா? இதை வெளி உலகு தெரிந்து கொள்ளவேண்டாமா? கல்லும், மண்ணும் சேர்ந்து எழுப்பிய கட்டிடத்துக்கு வெளியே கடும் வெய்யிலில் போராட்டம் நடாத்திய சி. வி. கல்லையும் மண்ணையும் போல இதயமற்ற மனிதர்களால் கட் டிடத்துக்கு உள்ளே மேற்கொள்ளப்பட்ட காருண்யமற்ற காரியங்களை வெளி உலகு தெரிந்துகொள்ளவேண்டுமென் பதை உணர்ந்தார். ஜோர்ஜ் கீட்டின் அறிவுரைகள் அவ (05565 egg 67055 dGain Gó56O7. In Ceylon's Tea Garden என்ற கவிதை நூல் பிறந்தது.
6. தேயிலைத்தோட்டத்திலே
சமுதாயத்துக்கெதிராக இயற்றப்பட்டச் சட்டத்தை எதிர்த்து மேற்கொள்ளப்படும் சத்யாகிரகப் போராட்டம், ஆருயிரம் தொழிலாளர்கள் பங்கேற்கும் பாரிய போராட்டம். அதன் சிகரமாக பிரதமர் இல்லத்துக்கெதிரே ஐந்து நாள் உண்ணுவிரதம். அதன் தொடர் விளைவாக பத்து மணி நேரம் போலிஸ் வேனிலே அடைபட்டிருந்த அனுபவம்.
"1952 தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் செய்யப் பட்ட ஏப்ரல் 28ம் தேதி திங்கட்கிழமை ஆரம்பமான சத்தி யாக்கிரகம் செப்டம்பர் 16ம் தேதி வரை நீடித்தது 142 தினங்களுக்கு தொடர்ந்து நடைபெற்றது. இந்த நாலரை மாதங்களுக்கிடையில் ஒவ்வொரு ஜில்லாவிலிருந்தும், ஒவ் வொரு தோட்டத்திலிருந்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர் தங்களுடைய சொந்த செலவில் கொழும்பு சென்றனர். செனட்சபைக் கட்டிடத்தின் விராந்தையில் பிரதமமந்திரி காரியாலயத்தின் வாசற்படியிலே உட்கார்ந்து சத்யாக்கிரகம் செய்தார்கள்.

19
புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஜனநாயக இலங்கை ராஜ் யம் இந்தியர்களுக்கு இழைக்கும் அநீதியை எதிர்த்து ஒரு நாள் முதல் ஐந்து தினங்கள் வரை உண்ணுவிரதமிருந்து மெளனமாக தங்களது ஆட்சேபனையை அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள். சத்யாகிரகம் பல ஏற்றத் தாழ்வுகளிலும் நிலைமைகளிலும் சமாளித்துக்கொண்டு நடைபெற்றது. -
ஆரம்ப நாட்களில் சத்யாகிரகத்தைப் பற்றிய செய்திகள் உள்நாட்டு தினசரிப் பத்திரிகைகளில் இருளடிக்கப்பட்டன. அகன்பிறகு சத்யாக்கிரகத்தைப் பரிகசிக்கவும், அபாண்ட பழி சுமத்தவும் முயற்சிகள் ஆரம்பித்தன.
சத்யாகிரகிகளைப் போலிசார் தங்களுடைய மோட்டார் வான்களில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய் தூர இடங்க ளில் விட்டு இம்சிக்க ஆரம்பித்தார்கள்.
ஜூன் 9ம் தேதியன்று இந்திய ஹைகமிசனர் காரியால யத்தின் அருகில் பதினெரு சத்யாக்கிரகிகள் போலிஸ் குதிரைப் படையினரால் தாக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒரு போலிஸ் மோட்டார் வானில் காட்டுமிராண்டித்தனமாக பத்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர் களுக்கு ஜலமோ, உணவோ கொடுக்கப்படவுமில்லை. கொடுப் பதற்கு அனுமதிக்கப்படவுமில்லை, இவ்வாறு இராகத்தனமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பதினெரு பேரில் "சி. வி. யும் ஒருவராவர்?’ (18) இவை போதாவா?
"சி. வி யின் கவிதை உள்ளம் ஆர்த்து எழுந்தது. இந்த அநுபவத்தில் வெடித்து எழுந்த கவிதை துணுக்குகளில் சில 1952 Times of Ceylon Annualdo Gì6ư6ff6ubgear. gìg Gör டாண்டுகளின் பின்னர் அவைகளின் திரட்சியாக n Ceylon's Tea Garden Gov6fatiggs,
இந்நூல் குறித்து, பம்பாய் பாரத்ஜோதியில் ஜக்மோகன் 'ssibua,07 uth Fn isg(plb LÉgig, (Cadence and Imagination) இவரது கவிதைகளின் ஆவேசக் குரலில் மலைநாட்டு ஏழை மக்களின் இதயத்துடிப்பைத் தெளிவாகக் கேட்கலாம்.'" என்று எழுதினர்.

Page 15
20
மக்களின் அவலத்தை ஆவேசமாக்கிக் காட்டுபவனே உண் மையான கவிஞன். உலகுக்குத் தேவையான கவிஞன்.
**வெண்கல உடலோய் என் தோழா, விளித்திடு உன் குரல் மீண்டிடட்டும் பள்ளத்தாக்கை முட்டி வந்து - பனிவரை அதனையும் எட்டி நிற்க' என்று
குரல் எழுப்பிய சி. வி. வேலுப்பிள்ளை, வாக்குரிமை இழந்து விட்ட மலைநாட்டுத் தொழிலாளர்களின் குரல் மீண்டும் பாராளு மன்றத்தில் ஒலிக்கவேண்டும் என்கிறர். தன்னளவில் பாராளு மன்றத்தில் இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்த அவருக்கு இந்த மக்களின் வாக்குரிமைப் பறிக்கப்பட்டதை இடித்துரைத்து அதை மீண்டும் பெற்றுத்தர உழைப்பதில் வெகுவாக ஆர்வ
மிருந்தது.(14)
"ஒரு நூற்ருண்டுக்கு மேலாக மலையகத் தமிழ் மக்கள் மலையகத்தைச் சீராக்கிச் சேர்த்தளித்த செல்வங்கள் எண்ணி லடங்கா கோப்பியையும், தேயிலையையும், றப்பரையும் நட்டு கிராமங்களையும், பட்டினங்களையும் உருவாக்கி பிரதான போ க்குவரத்துப்பாட்டைகளை அமைத்துத் தம் உடல் பொருள் ஆவி அத்தனையும் இலங்கைத் தீவின் நலனுக்காக-நல்வளர்ச் சிக்காக-நல்வாழ்வுக்காக அர்ப்பணித்து நடுக்கடலில் திக்குத் திசையறிந்திடாத நாவாய்போல ஆக்கப்பட்ட ஒர் நிலையை அவர்கள் அடைந்திட நேர்ந்ததைக் கவிஞன் உணர்வு குமுறிக் கூறுகிறது மகாகவி பாரதி பாடினன் 'கரும்புத் தோட்டத் திலே' மக்கள் படும் பாட்டினை நெஞ்சம் குமுறிஞன். அவர் கள் நிலை மாறி உயர்வடைய நினைவளித்தான் ஆம் .அது போலத்தான். கவிஞர் வேலுப்பிள்ளையின் குமுறல்களும் **தேயிலைத் தோட்டத்திலே' நம் தமிழர்களின் நிலை மாறி வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவேண்டுமே என்று உள்ளம் குமுறுகிருர், அவர்கள் சுதந்திரத்தை நினைவூட்டுகிருர்’ கவிஞரின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தியபோது சக்தி அ பாலையா இவ்விதம் குறிப்பிட்டெழுதினர்(15)

21
* புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற் புகல் மொழி இல்லை;
பழுதிலா அவர்க் கோர்
கல்லறை இல்லை; புரிந்தவர் நினைவுநாள் பகருவார் இல்லை,
ஊணையும் உடலையும்
ஊட்டி இம்மண்ணே உயிர்த்தவர்க் கு) இங்கே உளங்கசிந் தன்பும்
பூணுவாரில்லை-அவர்
புதை மேட்டிலோர்-கானகப் பூவைப் பறித்துப் போடுவாரில்லையே' என்று விம்மிய கவிஞர்
**ஆழப் புதைந்த
தேயிலைச் செடியின் அடியிற் புதைந்த அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும்
ஏறி மிதித்து இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவன்
என்னே மனிதர்
இவரே இறந்தார்க்கு இங்கோர் கல்லறை எடுத்திலர்! வெட்கம்

Page 16
22
தன்னை மறைக்கத்
தானே அவ்விறைவனும் தளிர்பசும் புல்லால் தரை மறைத்தனனே)"
என்று வெந்து புழுங்கினர்.
இறந்த மனிதருக்குப் பெருமைச் சேர்க்கும் எச்சமாய் இருப்பது அவர் தம் நினைவுச் சின்னமாய் இலங்கும் கல்ல றையே! புதையுண்ட மனிதரின் மண்டையோட்டை மீளத் தோண்டுவது பாவம் என்பது ஒரு மரபு!
மரணித்த ஜீவனை ஆறடி மண்ணில் ஆழப்புதைத்து அமைதி காண்பது நமது பாரம்பரியம்.
நடுகல் நிறுவி இறந்தவர் நாமம் நிலை நிறுத்துவது ஆண் டாண்டு காலமாய் நம்மில் தொடர்ந்து வரும் பழக்கம்.
இவை அத்தனையும் மலைநாட்டைப் பொறுத்தமட்டில் மறக்கப்பட்டச் சடங்காகும்.
கொடிய வன விலங்குகள் நிறைந்த அடர்ந்த வனப்பிர தேசங்களை அழித்துக் காசுப்பயிர்களை நட்டும் மனித குடி யேற்றங்களை ஏற்படுத்தியும் ஆங்கிலேயத் துரைமார்கள் முன் னின்றபோது அவர்களின் பக்கத் துணையாக நின்று உழைத்த வர்கள் இந்திய வம்சாவளித் தமிழரேயாவர். இந்தக் கடின உழைப்புக்கென்றே கடல்கடந்து கொண்டுவரபட்டவர்கள் இவர்கள். அவர்களது அயராத உழைப்பில் உருவானதுதான் மலைநாட்டின் மரகதப் பசுமை.
அவர்கஃா யார் நினைவில் வைத்திருக்கிருர்கள்? வாழும் போதே அவர்களை மனிதர்களாக மதிக்காதவர்களா-மரணித் தப்போது அவர்களுக்கான இறுதி மரியாதையைச் செலுத் தப்போகிருர்கள்? என்னே மனிதர்.
இவரே இறந்தார்க்கு இங்கோர் கல்லறை எடுத்திலர்! வெட்கம் I என்று கவிஞர் வெம்புவதில் என்ன தவறு?

23
"இலங்கைக்கு வர தோணி ஏறியவர்களில் நூற்றுக்குப் பதி ணைந்து சதவீதம் படகுகள் கவிழ்ந்து இறந்தணர்,
புயல் காற்றுக்கு தப்பிய தோணியில் வந்தவர்கள் மன்னுர், அரிப்ப, கொழும்பு, நீர்கொழும்பு கரையோரங்களில் இறக்கப்பட்ட னர். இங்கிருந்து 212 மைல் பாதசாரிகளாய் காடு, மணல், வெளி தனிபாதைகள் வழிகளாய் இட்டுச் செல்லப்பட்டார்கள் சாவு இவர்களுக்கு இங்கு காத்திருந்தது என்று எழுதிய கவிஞர் சி. வி. அவாகள்.
1856ல் வடமாகாண கவாண்மெண்ட் ஏஜன்ட் டைத் இம்மக்களின் அவல நிலையைக் குறித்தெழுதிய அறிக்கை யையும் "கானகத்தில் வாழ்வு’ என்ற றைட்டான் என்ற ஆசிரியர் எழுதிய நூலையும் ஆதாரமாக அழைத்து வருகிருர்.
நடக்க முடியாத தோழர்களை எவ்வளவு தூரம் தூக்கிச் செல்லமுடியும் பத்து மைல் பதினைந்து மைல் தூக்கி களைத்து முடியாத நிலையில் நடுகாட்டில் மிருகங்களின் இரக்கத்திற்கு இவர்களை போட்டார்கள் இந்தத் துர்பாக்கிய நிலைக்கு ஆளானவர் கள் கையை நீட்டி கதறி அழுவார்கள். ஒரு சிரட்டையில் தண் ணிரும் இலையில் கொஞ்ச ஆகாரமும் வைத்து விட்டு உள்ளம் குமுறி அழுத கண்ணிருடன் சுற்றத்தினர் புறப்படுவார்கள். கான கத்தில் தனிமையில் விடப்பட்டவர் அவஸ்தையை சொல்லமுடி uor” (16)
இவ்விதம் மரணம் ஆனவர்களின் எலும்புக்கூடுகள் ஆங் காங்கே கிடந்தது அடுத்தடுத்து வந்த தொழிலாளர்கட்கு பாதை காட்டுவதற்கு ஏதுவாக இருந்தன என்று அறியும் போது ஒ? எத்தனை அவல மா ன ஆனல் தீரம்மிகுந்த வாழ்க்கை இந்த மக்களுடையது என்பது தெரிய வரும்.
மரணப்பரியந்தம் இந்த மக்களை தீரமும் துயரமும் நிறைந்த வாழ்க்கைதான் தொடர்ந்தது! மிருகங்களைப்போல இவர்கள் நடாத்தப்பட்டார்கள். வாழ்வில் மாத்திரமல்ல

Page 17
24
மரணத்திலும் தாம்-மரணமானபோது இவர்கள் தேயிலைச் செடிகளுக்கு மத்தியிலே குழி தோண்டி புதைக்கப்பட்டார் கள். உழைக்கும்போது எந்தத் தேயிலைச் செடிகளைச் சீருடன் நேசித்து வளர்த்தெடுத் தார்களோ அந்தச் செடிகளு க்கே அவர்களது உடல் உரமாக்கப்பட்டது.
மனித உடல்களை உரமாகக்கொண்ட தேயிலைச் செடிகள் மாருத பசுமைப்பெற்றன. தங்கள் உடலும் இவ்விதம் உர மாகும் வரை இந்தப் பசுமையைப் பேணி வளர்ப்பதிலேயே அவர்களின் சந்ததியினர் அதே மலைப்பிரதேசத்தில் தொடர்ந்து உழைக்கின்றனர்.
*ஆழப்புதைந்த - தேயிலைச் செடியின் அடியிற்
புதைந்த - அப்பனின் சிதைமேல் ஏழைமகனும் - ஏறிமிதித்து - இங்கெவர்
வாழவோ - தன்னுயிர் தருவன்' என்ற கவிஞரின் வரிகள் இன்னேர் உண்மையை எடுத்தியம்பிட தொடர்கின்றது.
'என்னே மனிதர்! இவரே இறந்தார்க்கு இங்கோர் கல்லறை எடுத்திலர் !
மலைநாட்டில் அமைந்திருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்க ளில் நினைவுச் சின்னங்களோடு புதையுண்டிருக்கும் வெள்ளைக் காரத்துரைமார்களுக்கு விபரங்களிருக்கின்றன அவர்களின் உற்ருர், உறவினரின் கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கின் றன.
இங்கிலாந்தில் இறந்தபோதும் மலைநாட்டு மண்ணி லேயே நெடுநாட்கள் வாழ்ந்த நினைப்பு மறக்காதிருக்க தன் ஆஸ்தியை ஹப்புத்தளை மா தா கோயிலில் புதைத்துக் கொண்ட புகழ் பெற்ற கவிஞர் வால்ட்டர் ஸினியரின் கல் லறை இருக்கின்றது.

25
முதலாம் உலகயுத்தத்திலே மரணமான இருநூற்றுப் பதி னெட்டு துரைமார்களுக்கென கருங்கல்லில் நினைவு சிலுவைச் சின்னம் ஒன்று கண்டியில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்துமூன்று பெப்ரவரி பத்தாம் தேதி திறந்து வைக்கப் பட்டது.{17)
மனித உயிர்களை மதித்துச் செய்யப்பட்ட நாகரீகச் செயல்களைப் பறைசாற்றும் பணிகள் இவைகள். வளர்ந்து வரும் மனித பண்பாட்டின் வரலாற்றுச் சின்னங்களில் இவை களுமடங்கும்.
ஆனல் மலைநாட்டில் தேயிலைச் செடிகளுக்கிடையில் இலட்சக்கணக்கில் புதையுண்டு கிடக்கும் மனித உடல்களை யாரால் இனம் காட்டமுடியும்? இந்தக் குரூரச் செயல் குறித்து நினைக்கையில் எழுகின்ற வெட்கத்தை யாரிடம் போய்ச் சொல்வது?
"வெட்கம் தன்னை மறைக்கத் தானே அவ்விறைவனும் தளிர் பசும் புல்லால் தரை மறைத்தனனே' என்று கவிஞர் கூறி அமைகிருர் மலைநாட்டு மக்களின் வாழ்க்கையை கருகிய மலர்களோடு ஒப்பிட்டுக் காணும் கவிஞர் அம்மக்களின் உள் ளக்கை உடைந்த தேன்கூட்டோடு ஒப்பிட்டுப்பாடினர்.
**உள்ளக் கமலங்கள் உடைந்த தேன்கூடு கைகளிரண்டும் கட்டிக் கரும்பு நெற்றி வியர்வை நிலத்தில் சொட்ட வேலையோ நாளுக்கு எட்டு மணி நேரம் கிழமையில் அதுவும் ஏழு நாட்கள் இந்நாடு இன்பமுற இரண்டொருவர் சுகம்பெற பாட்டாளியின் செங்குருதி பாயுதுகாண் அந்தோ' என்பது

Page 18
26
மலையான் என்பவரால் தமிழ்ப்படுத்தப்பட்ட சி. வி. யின் கவிதை. (18) - மலையான் என்பவர் தமிழ்ப்படுத்திய அந்தக் கவிதையை
* 'கலைத்த தேனீக்
கூடவர் இதயம் கரங்களைத் தேன்கசி திரட்டெனக் கொளலாம்
நிலைத்த உறுதி
மனந் தளராது நிலத்திலே அவருடல் வியர்வையைக் கொட்டி
ஒவ்வொரு நாளும்
எண்மணி நேரம் ஒய்விலா தேழுநாள் உழைப்பவர் ஓர் வாரம்
இவ்வித மிவர்தம்
வாழ்க்கையின் இரத்த வெள்ளம் இந் நாட்டை விருத்தி செய்தாலும்
யாரோ சிலரின்
மோட்ச வாசமாய் ஆச்சுதே இந்த அழகிய பூமி !
uumrGSprimr 8Gnofsir
சுவர்க்க இன்பமாய் ஆச்சுதே என் மக்கள்
ஆக்கிய பூமி' என்று
சக்தீ அ பாலையாவும் தமிழில் மொழி பெயர்த்திருந்தார்.

27
Disturbed bee hives their hearts Their hands honey combs Drip warm with the sweat Eight hours in a day Seven times in a week Thus their life blood flows To fashion this land A paradise for some'' 6T6irp
வரிகளே ஆங்கில மூலத்தில் சி. வி. வேலுப்பிள்ளை எழுதியவை
யாகும்.
எத்தனை ரத்னச் சுருக்கமான வரிகள் எட்டே வரிகளில் தமிழில் எண்சீர் விருத்தத்தைப்போல - மலைநாட்டு மக்களின் அவல வாழ்க்கையின் பிரதிபலிப்பு மலைமக்கள் உழைக்கப் பிறந்தவர்கள். உழைப்பு ஒன்றே அவர்களின் மூலதனம். அவர்களின் கடின உழைப்புக்குத் தேனியைவிட வேறு உதா ரணமிருக்க முடியாது.
தேனி எத்தனை சுறுசுறுப்பானது! அதன் அயராத உழைப்பு எத்தகையது! ஆனல் அது சேகரிக்கும் தேன் அத் தேனிகளுக்கு மாத்திரமா பயன்படுகிறது? எவரெவரோ அனு பவிக்கின்றனர். அதுவும் மரக்கொம்பில் தொங்கும் தேன் கூடு நெடுநாளையச் சேகரிப்பு ஒன்ருய், பத்தாய், நூருய், ஆயிரமாய், பத்தாயிரமாய் பல்கிப்பெருகி தம்முள் தாமாய் சேர்ந்து உழைத்துச் சேகரித்த தேனடைகள் நிறைந்து நீண்டு தொங்குகிற கூடு எவரின் கண்தான் படாது?
கல்லெடுத்து அடித்து உடைத்து தேனீக்களைக் கலைப்பதி லேயே மகிழும் சிறுவர்கள் - என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்ற நினைப்பில் எதிரில் கிடைத்ததை விட்டெ றிந்து தேன்கூடு உடைவதைக் கண்டு களிப்பதோடமைவர்!
தேனைச் சேகரித்துப் பயன்பெற நினைக்கும் மனத்தினரோ தீயிட்டுப் பொசுக்கித் தேனிக்களைத் கலைத்துத் தம் எண்ணம் ஈடேற உழைப்பதில் முனைவர்! இரண் டு நிலைகளிலும்

Page 19
28
பாதிப்பு தேனீக்களுக்குத்தாம். மலைநாட்டுத் தொழிலாளர் களின் நிலை இதுதான். இந்த உண்மை எல்லாருக்கும் தெரி யும் இந்த எல்லாருக்கும் தெரிந்த உண்மையை எழுத்தில் வடிப்பதுவா சி. வி. யின் நோக்கம்?
Disturbed beehives their hearts. அன்று சி வி. எழு திய மூல வரிகளின் உண்மை அர்த்தம் தான் என்ன ?
"'கலைத்த தேனிக் கூடவர் இதயம் ' என்ற சக்தீ அ. பாலையாவின் மொழி பெயர்ப்பிலாகட்டும்.
உள்ளக் கமலங்கள் உடைந்த தேன் கூடு ?" என்ற மலையானின் மொழி பெயர்ப்பிலாகட்டும்.
சி. வி. யின் மூலக்கருத்து வெளிப்பட்டுத்தானிருக்கிறது. தேன் கூடு உடைப்பட்டால் தேனீக்கள் வாளா இருப்பதில்லை.
கல் லெறிந்து கூட்டை உடைத்துக் களித்தவரென்ருே. தீயிட்டும் பொசுக்கித் தேனெடுக்கப்பார்ததிருப்பவரென்ருே அவைகள் வைத்துப் பார்ப்பதில்லை
அகப்பட்ட அனைவரையும் ப்ொட்டித் தீர்த்து விடும் எதிர்பட்ட எல்லாருமே அவைகளுக்கு இலக்காக வேண்டியிரு க்கும்.
மலைநாட்டு உழைக்கும் மக்களின் மனப்பாங்கை கவிஞர் சி. வி. வேலுப்பிள்ளை இந்நிலையில் காணத்தான் விரும்பினர்
உடைந்த தேன் கூடாய் உறங்காத நிலையினராய் உத்வேகம் கொண்டவராய்
தங்கள் அமைதியை அழித்தவரை கொட்டித்தீர்ப்ப தையே குறியாய் கொண்டவராய் மலைநாட்டு மக்கள் வாழ்ந் தாக வேண்டிய அவசியத்தை கவிஞரின் வரிகள் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன நானுாற்றைம்பத்தைந்து வரிகளில் வெளியான முப்பத்திரண்டு கவிதைகளும், வாழ்ந்து

29
வீழ்ந்து போன ஒரு சமூதாய அமைப்பின் சோக வர லாற்றை விளக்கிடும் சொற்சித்திரம்,
எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கி நின்ற கவிஞ ரின் உணர்ச்சிக்குவியல்.
ஆங்கிலம் கற்றவர்களின் நாடிநரம்புகளில் வீறு பெருக் கும் சக்தி மிகுந்த கவிதைத் தொகுப்பு கவிஞரின் ஆளுமை மிகுந்த ஆங்கிலப் புலமைக்குச் சாவதேசப் புகழைத் தேடி தந்த இலக்கிய படைப்பு
7. உழைக்கப்பிறந்தவர்கள்
உழைக்கப்பிறந்தவர்கள் எனப்பொருள்படும் Born to Lahmur எனும் ஆங்கில நூல் 1970ல் எம். டி குணசேன வெளியீடாக வெளி வந்தது. " " இறந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தேயிலைத் தோட்டத்து ஆண்களுக்கும் பெண்களு க்கும் இந்நூல் சமர்ப்பணம் "" என்று சி. வி. குறிப்பிடுவதி விருந்து அவரது உளவேட்கை நன்கு வெளிப்படுகிறது.
இந்த நூல் ஒரு விவரண கட்டுரைத் தொகுப்பாகும். (Collection of Vivid Sketches grGL 6), Libai); for6L 5th சேவர் ; ஒப்சேவர் ; மெட்ராஸ் மெயில், என்ற சஞ்சிசைகளில் இக்கட்டுரைகள் முதலில் வெளியாகியிருந்தன. இக்கட்டுரை கஃாத் தொகுத்து இந்நூலை வெளியிடுவதற்கு முன்பே இவை களில் சிலவற்றை தமிழுருவில் ஈழநாடு, தினகரன், வீரகேசரி முதலிய சஞ்சிகைகளில் சி. வி வெளியிட்டிருந்தார் பி ஏ. செபஸ்டியன் என்பவரால் 1985 டிஸம்பா மாத மாவலி இதழி லில் இருந்து தொடர்கட்டுரை உருவில் தமிழில் வெளியான இக்கட்டுரைகள் இரண்டாவது தமிழ்ப்படுத்தப்பட்ட முயற்சி யாகும் இத்தகைய முயற்சி காலத்தின் தேவை என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுமிருக்க நியாயமில்லை இவரது கவிதைகளுக்கும் இந்தத் தேவை இன்று ஏற்பட்டிருக்கிறது.

Page 20
30
இக்கட்டுரைகள் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளை அம்மக்களின் ஆசாபாசங்களை அவர்களுக்கென்றிருக்கும் தனித்த கலைகள், கலாச்சாரங்களை நன்கு வெளிப்படுத்துன வாக அமைந்திருக்கின்றன.
இலங்கையில் நாட்டின் வேறெந்தப் பகுதிகளிலும் காணுச் சடங்குகள், மதக்கோட்பாடுகள் ஆசாரங்களை மலை நாட்டுமக்கள் பின்பற்றுகின்றனர் என்பது பலரறியா உண்மை. இந்த குறைபாடுகளை சி. வி. யின் இந்நூல் தீர்த்து வைக்கின்றது.
' குழந்தை பிறந்து வளர்ந்து வாழ்ந்து பின்னர் தாம் நீரிட்டு வளர்த்த செடிகளுக்கே உரமாவது தெரிந்த கதை. ஆனல் அதனை தமக்கே உரித்தான நகைச்சுவையுடன், தேவைப்படும் பொழுது சிறு குத்தலுடனும் தனிச்சுவையுட னும் சி வி. எடுத்துக் காட்டியுள்ளார். புத்தகம் ஆங்கிலத் திலேயே இருந்தாலும் சில மலைநாட்டுக் குழுஊக் குறிகளை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்ததிருக்கின்றர். ஆசிரியர் உதாரணமாக ஒரு பெண் தாய்மை எய்தும் நிலை யிலிருந்தால் அவள் முழுகாமல் இருக்கிருள் எனக்கூறுவார் கள். இதனை “Without bathing என்று ஆங்கிலமாக்கி யிருக்கின்ருர் ஆசிரியர்'
*தோட்டத்திலே நாம் அன்ருடம் காணும் பல பாத்தி ரங்களை இப்புத்தகத்கில் சந்திக்கின்ருேம். தோட்டம் சிறு உலகம் அங்கு வாழ்வோரின் விரக்தி நிறைந்த வாழ்விலே இந்த பாத்திரங்கள் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்து கின்றன. எதிர்காலத்தை எடுத்துக்காட்டும் கோடங்கி, தோட்டத்தின் முடிசூடாமன்னன் பெரியதுரை, வற்றி உலர்ந்து போன ஆயம்மா, தொழிலாளர்கள் பல நோக்கு உபகாரி பெரிய கங்காணி. காலத்தால் மாருத பண்டாரம், ஆயிரத்திலொருவஞக நினைவில் நிலை பெற்ற மாணிக்கம், தோட்டத்து ஒலிப்பரப்பி, மயிர்வினைஞன், ஆகியோர் நவர சத்துடன் அந்த ஒடுங்கிய வாழ்வுக்கு ஒரு பெருமையை ஏற் படுத்துகின்றனர். இம்மக்கள் இயந்திரமாகிவிடாமல் காப் பாற்றிய பெருமை இப்பாத்திரங்களுக்குரியது."

31
மலை நாட்டுக்கலைகளான ஒயிலாட்டம், காமன் கூத்து, ஆகியனவற்றைப் பற்றியும் இரண்டு அத்தியாயங்கள் புகுத் தப்பட்டிருக்கின்றன. ஒயிலாட்டம் அதன் பெயர்க்கேற்ப ஒா ஒயில் மிக்க ஆட்டம் இதனை நாம் நாட்டின் வேறெந்தப் பகுதியிலும் காண முடியாது. அவ்வாறே-இரதி-மன்மதன் கதை நாட்டுக் கூத்தாக " " காமன் கூத்து ' என்று தோட் டங்களிலே மாசி மாதங்களில் நடைபெறுகின்றது. நாம் இவற்றை நேரில் கண்டு இரசிக்கும் பொழுது நாம் உணரா பல விடயங்களை திரு. சி. வி. இக்கட்டுரைகளில் தெளிவு படுத்தியிருக்கிருஜர்."
* சி வி தோட்டத்திலே பிறந்து வளர்ந்தவர். அங்கு அல்லற்படும் தொழிலாளரின் அவல நிலையைக் கண் கூடாகக் கண்டவர். எனவே அவரது இந்தப்புத்தகத்திலே தோட்டத் தொழிலாளரின் உண்மையான நிலையை பத்தடி, பன்னிரண் டடி " லயம் காம்பராவிலே ' மூன்று தலைமுறைகள் எப்படி ஒரே சமயத்தில் வாழ்ந்து மறைகின்றன. என்பதை மனத் தையுருக்கும் விதத்தில் காட்டியுள்ளார்.
* இவர்கள் கிராமம். நகரம் ஆகியவற்றுக்கு வெகு தூரத் தில் லயங்களில் ஒதுக்கப்பட்டு வாழ்கிருர்கள். இலையின் கருமை நிறைந்த குழ்நிலையிலே, கவ்வாத்து கொழுந்தெடுப்பு ஆகிய அன்ருட செயல்களையே வாழ்வாகக் கொண்ட இவர் கள் \தோட்டத்திற்கு வெளியேயுள்ள உலகத்துடன் தொடர் பை இழந்து விடுகிருர்கள். கிராமத்திலும் நகரத்திலும் வாழும் அவர்களது அயலார்களைக் கூட நெருங்க முடியாதென வர்ணிக்கின்ருர், ஆசிரியர் இன்பமும் துன்பமும் அழகும் அவலமும் நன்கு கலந்து தீட்டப்பட்ட ஓவியமாக அமைத் துள்ள பத்தகம் ‘உழைக்கப்பிறந்தவர்கள் ' அத்துடன் பாத்திரங்களுக்கும் ஆசிரியருக்கு முள்ள நெருங்கிய தொடர் பும் இழையோடும் பரிவும் இதனை சுவைமிக்க புத்தகமாக்கி யிருக்கின்றன." (19)

Page 21
32
மிகச்சிறப்பாக கூறுவதென்றல், மனிதர்களாகவே கருதப்படாத ஒரு கூட்டத்தாரின் மிகமிக ஒதுக்கத்தில் உயிர் வாழ்ந்த நாடோடிப்பாடல்களைத் தே டி த் தெரிந்து தொகுத்து அதற்கு ஆங்கில மொழி பெயர்ப்பையும் தந்து அதன் சாராம்சங்களை இந்நூலின் மூலம் வெளி உலகுக்கும் கொணர்ந்த பெருமை சி வி. யுடையது எனலாம்.
இவைகளை ஆராய்ந்தும், தொகுத்தும் வெளியிட்டதன் மூலம் மலைநாட்டு மக்களின் இனமரபு நூல் குறித்து (Ethnological) ஆராய்ந்து எழுதிய பெருமையும் சி வி யையே சேர் கிறது எனலாம். இந்த உழைக்கப்பிறந்த மக்களைப் பற்றி பலரும் அறிந்து கொள்ள முயற்சித்தனர். அத்தகு கல்வி சார்ந்த ஆய்வுமுயற்சிக்கும் சி. வி. யின் இத்தொகுப்புக் கட்டுரைகள் பெருதும் உதவியிருக்கின்றன.
* உழைக்கப்பிறந்தவர்கள் தோட்ட உழைப்பாளர் சமூகத் தைப்பற்றியச் சித்திரங்கள். கர்ண பரம்பரை கதைகள், அவதா னிப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கிய சுவை மிகுந்த தொகுப் பாகும். ஆசிரியரின் அநுபவ அறிவு இவைகளுக்கூடாக இழை யோடி நுலாகப் பின்னிப்பிணைந்து இனமரபு கட்டுரையாக உயர் வடைகிறது. இந்த நாட்டைத்தாய் நாடாகக் கருதும் எந்த மனி தருக்கும் உழைக்கப்பிறந்த தோட்டத்து மக்கள் உறவினர்களாக கருதப்படல் வேண்டும் என்ற எண்ணத்தை இத்தொகுப்பு ஏற் படுத்துகிறது” என்பது சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்ரமசிங்காவின் கணிப்பாகும். “அவரது எழுத்துக்களில் இருந்த கவித்துவம் என்னைக்கவர்ந்தது இவைகள் தொழிலா ளர்க்கு விளங்கும் மொழியில் எழுதப்பட்டிருந்தால், ஒரு சொல் கூட மாற்றப்படாமல், அவர்கள் அவற்றை நாதஸ்வர இசையாக்கி இருப்பார்கள்' என்று எஃவ். டி. சில்வா இத்தொகுப்புக்கான
முகவுரையில் புகழ்த்திருக்கிறர்.
ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட நூல், நூலில் எழுதப் பட்டிருக்கும் மக்களைச் சென்று அடைவதில் மொழிப்பிரச்னை யைக் கொண்டிருந்தாலும் இந்த மக்களைப்பற்றிய வெளி உலகின் நோக்கத்தைப் பரவலாக்கி விடுவதில் பெரும் பங்கு ஆற்றியது. ۔۔۔۔۔

33
எ0ணடே டைம்ஸ் ' பத்திரிகையில் ஆசிரியராக இருந்த போதே இக்கட்டுரைகளை வெளியிடுவதற்கு முன் வாசித்து அதன் நடையிலும், உள்ளடக்கத்திலும் மனம் லயித்து கண் களைக்குளமாக்கிக் கொண்டதாக குறிப்பிடும் சில்வா மேலும் இவ்விதம் குறிப்பிடுகிருர்,
* மலைநாட்டு :: ஆங்கிலத்தில் கவிதை ஆக்கும் ஒரே கவிஞரான சி. வியைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந் தேன். ஒதுக்கப்பட்ட மக்களின் துயர உணர்வுகளுக்கு உருவேற் றித்தரும் உண்மைக்கவிஞர் அவர். W
அவரது கவிதைகள் படிப்பவர் நாடி நரம்புகளில் சூடேற்றும் ஆர்வத் துடிப்பு மிகுந்தவை,
இம் மக்களின் வாழ்க்கையே துயரம் மிகுந்த கவிதைகள் தாம். அந்த உலகு இருள் நிறைந்தது; குளிர் மிகுந்தது ; அட்டைகள் நிறைய உயிர்வாழும் பகுதி அது.
அட்டைகள் இரத்தம் குடித்து உயிர் வாழ்பவை. அது இயற் கை நியதி.
தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் இயற்கையின் குழந்தைகள் எனவே, அவர்களுக்கு இந்நியதியைத்தவிர வேறு நியதி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் அதை முழுதாக ஏற்றுக்கொண்டிருக்கிறர்கள்.
பலவிதமாண அட்டைகள் தங்கள் இரத்தத்தைக் குடிக்க அவர்கள் வழி விட்டிருக்கிறர்கள்.
முதலாளித்துவப் பெரும் அட்டைகள், லேவாதேவி அட்டை கள், வெள்ளைக்கார அட்டைகள், கங்காணி அட்டைகள், அரசியல் அட்டைகள், கடைக்கார அட்டைகள், விசா - பாஸ்போர்ட் பெற்றுத் தரும் தரகு அட்டைகள் என்று பல அட்டைகள் அவர்களை ஒரே அடியாக உறிஞ்சி எடுக்கின்றன.

Page 22
34
இந்த மக்களின் வாழ்க்கை உண்மையில் மிகவும் கொடுர மானது என்ருலும், வதங்கி, நிச்சயமற்ற தமது அவல வாழ்க்கை யிலும் தங்களுக்கு என்று ஒரு கெளரவத்தைக் கொண்டிருந்
தார்கள்.
அவர்களிடையே சோகம் ததும்பிய அழகு நிறைந்து காணப்படுகிறது. இவைகளை எல்லாம் புரிந்து கொள்ளவும், தங்களது பார்வையை ஆழமாக்கிக் கொள்ளவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும். இந்த மக்களை அந்நியர்களாகக் கருதும் அரசியற்சிந்தனை மிகவும் குரூரமானது,
இந்திய அரசாங்கம் இன்ணுெரு மண்ணில் இருக்கும் தங்க ளின் குழந்தைகளுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று கூறு வதும், இலங்கை அரசாங்கம் கொடிய நோயினுல் நாசமுற்றக் கோப்பிப் பயிர்ச் செய்கைக்குப்பின்னர் தேயிலைச் செடியை நட்டு, பேணி, வளர்த்து வளம் சேர்த்த ஒன்பது லட்சம் பேர்களை அரசியல் அணுதைகளாக்கி அல்லலுற வைப்பதுவும் இந்நூலின் சித்ரப் பொருள்களாகின்றன. இவைகளைக் காணுகையில் அதி காரம், மன்னர் ஆதிக்கம், பாராளுமன்ற பலம், படைகளின் சக்தி என்ற எவற்றிலும் என்னுல் நம்பிக்கை வைக்க முடிய வில்லை.
இந்த மக்களை அந்நியர்களாக அபிப்பிராயப்படும் மக்கள் இந்த உழைப்பாளக் கூட்டத்தினரால் உருவாக்கப்பட்டத் தே யிலைச் செடிகளையும், அகன்ற வாகன பாதைகளையும், நீண்ட ரயில்வே பாதைகளையும், நீண்டுவளைந்த பாலங்களையும் உருவழிக் கத் தயாராயில்லை.
மனிதனை மனிதன் வேண்டாம் என்று ஒதுக்கவும்-ஒடுக் கவும் பழகிக்கொண்டானே தவிர மனிதனின் உழைப்பால் உருவானவைகளை ஒதுக்க முடிவதில்லை.
இந்த மக்களின் உழைப்பை ஏற்றுக்கொண்டோம். அதனுல் ஏற்பட்ட வளத்தை அநுபவிக்கிறேம். அந்த உழைப் பாள மக்களின் உணர்வுகளை மதிக்கவும், இந்நாட்டின் தேசிய

35
ஒட்டத்தில் அவர்களை இரண்டற கலக்க விடவும் நாம் நம்மைத் தயார் செய்து கொள்வது அவசியம். இதற்கு சி. வி. யின் இப்புத்தகம் உதவும்,” (20)
மத்திய மலைநாட்டில் ஒதுங்கி வாழும் மக்களின் வாழ் வைச் சித்தரிக்கும் தெளிவான விவரணக்கட்டுரைகள் இவை அம்மக்களில் ஒருவராகவே சிவி பிறந்து வளர்ந்து இருந்த தால் இக்கட்டுரைகளில் உயிர்த்துடிப்பு இருக்கிறது. மேலோட்டப்பார்வை என்று ஒன்றுமே இல்லை.
வெள்ள அகதிகளைப்பார்த்து எழுதும் விவரணங்களைச் சார்ந்தவை அல்ல இவ்விவரணக் கட்டுரைகள்.
ஏனைய சமூகத்தவர்களால் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படும் இம்மக்களின் வரலாற்று ஆசிரியராக இருந்து இக்கட்டுரைகளைத் தீட்டி இருக்கிருர் சிவி.
அரசியல் சார்பும், தனிமனித குரோத பாவமும் இல் லாது இம்மக்களைப்பற்றிய முதல் சித்தரிப்பாக மிளிரும் உழைக்கப்பிறந்தவர்கள் என்ற நூல் தாம் உழைத்த தோடு இன்னும் உழைப்பைத் தொடர்வதற்கென்று தமது சந்ததி யினரையும் உருவாக்கி விட்டுச் செல்லும் மக்களைப்பற்றிய அடி மட்ட உண்மைகளை அழகுற விவரிப்பதில் வெற்றி கண்டி ருக்கிறது.
தொகுப்பைப்பூரணத்துவப்படுத்தும் இருபத்தெட்டுக் கட்டுரைகளும் வாசிப்பவர்களின் நெஞ்சை சுண்டியிழுக்கும் தரத்தவை என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நூலின் பின்புற உள்ளட்டையில் "சிவி யின் எழுத்துக் களைப்பற்றி பல ஏடுசளில் வெளிவந்த கருத்துக்களைத் தொகுத்து கொடுத்திருந்தது சிவியின் எழுத்துக்களுக்கிருந்த பரந்து பட்ட வாசகர்வட்டத்த்ை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பாயிருக்கிறது.
'சிவி பகுப்பறிவும் கவர்ச்சியும்.மிகுந்த கவிஞன்" இந்தி யன் ரிவ்யூ.

Page 23
36
'சிவியின் கவிதைகள் தொழிலாளர்களுக்கான பரிந் துணர்வை வலிந்து ஒலிப்பவை’ சிலோன் டெய்லி நியூஸ்
"தாகூரைப்போல ஆரம்பத்தில் கவிதைகள் எழுதிய சிவி தேசிய உணர்வை வளர்த்த கொழும்பின் பிரபலக் கல்லூரியில் படித்தவர் நெருடாவின் நெருப்புக் கவிதைகளைப்போலில் லாவிட்டாலும் தேயிலைத் தொழிலாளர்களைப்பற்றிய அநுகா பத்தையும், மனித உணர்வையும் தட்டி எழுப்பிவிடும் கவி தைகள் அவருடையவைகள். தன்னுடைய வேர்வ்ை, குருதி. எலும்பு அத்தனையையும் தேயிலை நிலத்துக்கு உரமாகக் கொடுத்துவிட்டு இன்னும் ஒதுக்கப்பட்ட கூலியாகக் கருதப் படும் மக்களைப்பற்றிய கவிதைகள் அவைகள்' இல்லஸ்ட்ரட் வீக்லி ஒப் இண்டியா.
'இலங்கையின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவர் 'சிவி ஆவார். அவரது இரண்டு நாவல்களும் தோட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிய த த் ரூ ப ம 1ா ன நாவல்களாகும்' எழுத்து.
""இவரது எழுத்துக்கள் புதிய சமுதாய அமைப்புக்கான போராடத் துணியும் ஆசிரியரின் துணிவைத் சித்தரிக்கின் றன?? நெஷனல் ஹேரால்ட்.
8. பேணுச் சித்திரங்கள்
சி.வியின் எழுத்தழகுப் பளிச்சிட்ட இன்னேர் அம்சம் அவர் தொடராக எழுதிய பேணுச் சித்திரங்கள்.
இப்பேணுச் சித்திரங்கள் 'தினகரனில் வெளிவந்தன. ஆயிரத்துத்தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு - ஐம்பத்தொன் பதுகளில் ஞாயிறு இதழ்களில் அவை வெளிவந்தன.
முதலில் ஆயிரத்தித்தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டில் "மலைநாட்டுத் தமிழ் மக்கள் தலைவர்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பித்தார்

37
“இலங்கையின் பொருளாதார விருத்தி வரலாற்றிலே மலைநாட்டுத் தமிழ்ப் பெருங்குடியினருக்குத் தனியிடமுண்டு. இலங்கையின் செல்வச் செழிப்பிற்கு இணையற்ற வகையில் உழைத்துள்ள அம்மக்களது தலைவர்களின் வாழ்க்கை வர லாற்றையும், அவர்கள் வகுக்கும் ஸ்தானத்தையும் பற்றி விளக்கும் கட்டுரைகளாக' இவைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.
முதற் கட்டுரை கோ. நடேச ஐயரைப் பற்றி எழுதப்பட் டது ஆகும்
“நடேச ஐயர் அவர்களின் வாழ்க்கையே ஒரு சகாப்தத்தின் தொடக்கமாகும். காட்சிக்குரியவராக இருப்பதற்கு இணையற்ற ஆற்றல் படைத்தவர். நூற்றுக்கணக்கான செயற்கரிய செயல் களை ஆற்றிய பெரியார். பல சூழ்நிலைகளைச் சாமர்த்தியமாக வென்றவர். நிகழ்ச்சிகள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. நிக ரற்ற தலைவராய் விளங்கினுர். அவர் பல துறைகளிலும் ஈடுபட்டி வர்” என்று ஆரம்பமாகி அவரது சாதனைகளை, வெற்றி தோல் விகளை விவரித்துச் செல்கிறது.
மலைநாட்டு மக்களின் வாழ்விலும் தாழ்விலும் தன்னைப் பிணைத்துக்கொண்டதன் மூலம் பிரமாண்டமான சக்தியாக எழுந்து நின்று வெள்ளைத் தோட்டத்துரைமார்களை வெருண் டோட வைத்த வியூகத்தை விவரிக்கும் சிறப்பானக் கட்டுரை
இது.
அடுத்து அப்துல் அஸிஸ், எஸ். தொண்டமான், ஜோர்ஜ் மேத்தா, கே. ராஜலிங்கம், எஸ். பி வைத்திலிங்கம், குஞ்சுபரி சண்முகம் ஜ். எக்ஸ் பெரைரா, டி. சாரநாதன், சார்ல்ஸ் ஆண்ட்ரூஸ், எஸ் சிவனடியான் ஆகியோர் குறித்தெல்லாம் எழுதியிருந்தார்.
அவைகள் ஓரிரண்டு கேலிச் சித்திரமாகவும் பெரும்பாலா னவை வாழ்க்கைச் சித்திரமாகவும் அமைந்திருந்தன.

Page 24
38
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதாம் ஆண்டிலிருந்து மலைநாட்டில் ஏற்பட்ட தொழில் மாறுதல்கள், தொழிற் சங்க வளர்ச்சி. அரசியல் பாதிப்புக்கள், சமூக மாற்றங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆதியன இத்தொடரில் அற் புதமாக தொகுத்து அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத் தும் வரலாற்றுக்குறிப்புக்கள் மட்டுமல்ல இலக்கிய நயத்தோ டும். அங்கதச் சுவையோடும் எழுதப்பட்ட பேணுச் சித்திரங் களுமாகும்.
சி. வி. அத்தோடு அமைந்தாரில்லை. அது அவரது நோக் கமாகவும் இருந்ததில்லை.
"மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைப்போர்த் தளபதி கள்" என்ற தலைப்பில் இன்னுமொரு கட்டுரைத் தொடரை ஆரம்பித்தார். இக்கட்டுரைத் தொடரும் தினகரனிலேயே வெளியானது.
இத்தொடரில் எஸ். சோமசுந்தரம், எஸ்.எம். சுப்பையா போஸ்" செல்லையா, எஸ். செல்லையா, கே குமாரவேலு, கே. சுப்பையா, வி. கே. வெள்ளையன், டி. இராமனுஜம், சிவபாக்கியம் பழநிசாமி, எஸ் நடேசன், பி. தேவராஜ், கோகிலம் சுப்பையா, சிவபாக்கியம் குமாரவேல், கே ஜி எஸ். நாயர், எஸ். மாரியப்பா என்ற பதினைந்துக்கும் மேற்பட்ட வர்களைக் குறித்து எழுதி இருந்தார்.
இவர்களெல்லாம் இளைய மலையகத்தின் எதிர்கால நம் பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்டவர்கள்.
துடிப்பும் செயற்றிறனும் மிகுந்தவர்களாய் மிளிர்ந்தவர் கள், அதுவரையிலும் மேல்மட்டத் தலைவர்களாக வராமலி ருந்தவர்கள். ஆனல் அதற்கான தகுதியைப் பெற்றிருந்தவர் கள், சமுதாய உணர்வும், சமுதாய மேம்பாட்டு பணிகளிலே ஈடுபர்டும் கொண்டிருந்தார்கள். அவர்கள் பலதரப்பட்ட வர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், மாதர் சங்க தலைவிகள்,கங்காணிமார்கள், தோட்டச் சொந்தக்காரர்

39
கள் சுயதொழில் நடத்துபவர்கள் எனப்பலர். ஆனல், மலை யகத் தொடர்பு மிகுந்தவர்கள், மக்களுடன் ஏதோ ஒரு வழி யில் தம்மைப் பிணைத்துக்கொண்டவர்கள்.
இந்தப் பிணைப்பினலேயே சிவியின் கணிப்புக்கு ஆளான
வர்கள்.
இந்தக் கணிப்பினலேயே இக்கட்டுரைகளில் இடம் பெற்றவர்கள்.
இந்த இரண்டு கட்டுரைத் தொடர்களின் தலைப்புக்களும் குறிப்பிடத்தக்கவைகள்.
"மலைநாட்டுத் தமிழ் மக்கள் தலைவர்கள்", மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்" என்ற இக்கட் டுரைகளில் தலைவர்களாக ஏற்கனவே பரிணமித்தவர்களையும், தலைவர்களாவதற்கான பக்குவம் பெற்று வருபவர்களையும் குறித்து’எழுதினர்.
மலைநாட்டைச் செப்பனிடும் சிறந்த பணியில் அவர் களின் ஈடுபாடு எவ்விதம் தாக்கத்தை ஏற்படுத்தியது என்ப தை விளக்கினர்.
அவர்சளில் சிலர் மக்களை பயன்படுத்திக் கொண்டு தலை வர் ஆனவர்கள். மற்றும் சிலர் மக்களுக்குப் பயன்பட்டுத் தலைவர் ஆனவர்கள்.
இக்கட்டுரைகளை வாசிக்கும் போது புளுட்டார்ச் எழுதிய வாழ்க்கைக் சித்திரங்கள் நினைவிற்கு வருவது தவிர்க்க முடி யாக ஒன்ருகிறது.
* புளுட்டார்ச் எழுதிய வாழ்க்கைச் சித்திரங்கள் முழு மையாக வாழ்க்கைவரலாறு என்ற இலக்கணத்துக்குட்படு பவை அல்ல சரியான உண்மைகளைத் தெரிந்தெடுப்பதற்கு அவருக்கு ஆர்வமிருந்தாலும் அவைகளைத் தெரிந்தெடுப்பதற் கான ஆதார உண்மைகள் அவரிடம் இருந்ததில்லை தத்துவ

Page 25
40
வாதியாகவும். ஒழுக்கக் சீலராகவுமிருந்த அவர் உலகைச் செப்பனிட்ட தலைச்சிறந்த வீரர்களிடையே அவை யிரண்டும் எவ்விதம் குடி கொண்டிருந்தன என்பதை ஆராய்வதையே முதல் நோக்காகக் கொண்டிருந்தார் அவைகளின் செல்வாக் கையும், அக்குணங்கள் அவ்வீரர்களின் செயற்பாடுகளில் ஏற் படுத்திய பாதிப்பையும் அவர் அடுத்த நோக்காகக் கொண்டி ருந்தார். எனவே இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வ தற்கு அவர் அகவியல் முறைகளையே கையாண்டார். மேலும் ஒவ்வொரு ரோமானிய வீரருக்கும் சமமான கிரேக்க வீரரை யும் தெரிந்தெடுத்து எழுதினர்.” (21)
சி வி. முழுமனதாக மலைநாட்டை நேசித்தவர். மலை நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தவர். தோட்ட மக்களின் தொழிற் சங்க நடவடிக்கைகளிலும், அரசியல் தொடர்புகளிலும் நேரடிபங்கேற்றவர். எனவே இந்த குறிக் கோள்களுடள் இம்மக்சளுடன் வாழ்ந்தவர்களையும் வாழ்வ தாக பாசாங்கு செய்தவர்களையும் அவரால் இனம் காண முடிந்தது அவர்களின் வெற்றி தேர்ல்விகளுக்கான காரணங் களை ஆராய்ந்து நிர்ணயிக்க முடிந்தது.
அவர்கள் அனைவரோடும் அவருக்கு நேரடிப்பரிச்சயம் இருந்தது. நெருங்கி பழகியும், விவாதித்தும், கருத்து வேறு பாடு கொண்டும் விலகி நின்றும் அவர்களின் செயற்பாடு களின் பாதிப்பை அவரால் எழுத முடிந்தது.
இந்தமுறையில் இப்பேனச் சித்திரங்கள் மலைநாட்டு மக் களின் இரண்டு தலைமுறையினரின் வரலாற்றைப் வெளிப் படுத்தும் வரலாற்றுக் குறிப்புக்களாக அமைகின்றன. அத்து டன் தான் காணவிரும்பிய இலட்சிய மலைநாட்டை நோக்கி உடன் நடக்கும் சகபாடிகளின் வெற்றி தோல்விக்கான கார ணங்களைக் ஆnாய்வதன் மூலம் தன்னையும் - தனது சமகாலத் தவர்களையும் வெற்றிக்கான பாதையில் நடைபோட தூண்டி டும் வழிகாட்டியாகவும் சி வி. விளங்குகிருர் இந்தவிதத்தில் சி, வி. ஒரு Electric நற்பண்புத் திரட்டாளர் எனலாம்.

41
'முன்னைநாள் எம். பி. திரு. டி இராமனுஜத்தின் சகோ தரர். ஒரங்க நாடகங்களும் அரசியல் கற்பனைச் சித்திரங்க ளும் திரு. சாரநாதனுக்கு ஈடாக எவருமிருக்கவில்லை. திரு' ஏ ஈ. குணசிங்கா தமது பிரசித்திபெற்ற இந்தியர் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது, அதை எதிர்ப்பதற்காகத் திரு. சாரநாதன் கொழும்புக்கு விரைந்தர்ர். பிரபல ஒரு சதத் தினசரிப் பத்திரிகையான "காந்தி’யைக் கொழும்பு ஜாம்பெட்டா தெருவிலிருந்து வெளியிட்டார்.'
W (சாரநாதன்)
"அவர்களுக்கு இளமையின் மனேகரம் - தோன்றிய அன்றே அழியும் மலரைப்போல குறுகிய காலமே நீடிக்கிறது.
உரிய காலத்துக்கு முன்பே மறைந்து விடுகிறது."
(சிவபாக்கியம் குமாரவேல்)
* ‘மேஜர் ஒர்டி பிரெளண் தமது பிரசித்துபெற்ற அறிக் கையில் கூறுகிறர் தலைமைக் குமாஸ்தாவும், கண்டக்டரும், டிஸ்பென்ஸரும், அரிசி ஸ்டோர் கீப்பரும், கணக்கப்பிள்ளை யும் தலைமைக் கங்காணியும் தோட்டத்திலே அதிகாரமுள்ள எவரும் சுப்ரண்டனின் நேரடியான பிரதிநிதியாக விளங்கு கிருர்கள். அவர்களுடைய சகல நடவடிக்கைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் சுப்ரிண்டண்ட் பொறுப்பேற்ருர், எந் தத் தொழிலாளியாவது அவர்களுடைய வழியில் குறுக்கிட் டால் நிர்வாகிகளின் நேரடியான எதிரியானன். இப்படி நடந்துகொண்டதற்காக அந்தத் தொழிலாளி கடுந் தண்ட னையை எற்க வேண்டியிருந்தது. இத்தண்டனை எப்பொழு தும் அவனுடைய வேலை நீக்கமாகவே இருந்தது.
திரு சி. டி சிவனடியான் தோட்டத்திலுள்ள இந்த உயர்வகுப்பைச் சேர்ந்தவர்' (சிவனடியான்)
"அவருடைய மக்கள் அரசியல் அநாதைகளாகிக் கொண்டே வந்தனர். 1935ம் வருடத்தில் அவர் கூறியவை 1952ல் உண்மையாயிற்று. அவர் பதவி வகித்தாலென்ன, வகிக்காவிட்டாலென்ன மக்கள் இயக்கத்தின் ஒரு பாக மாகவே இருந்து வருகிருர், மக்கள் இல்லாமல் அவருக்கு வாழ்வில்லை', (கே. இராஜலிங்கம்)

Page 26
42
"அம்மைத் தழும்புகளைக் கொண்ட அவருடைய முகத் திலே பல் துலக்கும் பிரகூடி போன்ற ஹிட்லர் மீசை நிமிர்ந்த தலை, நரையாக மாறும் தலைமயிர். தவிர்க்க முடியாத முகச் சுளிப்பு, இவை சமரசத்துக்கு இணங்காது, சவால் விடுக்கும் ஒரு தோற்றத்தை அவருக்கு உடனே வழங்கின. அவரின் தோற்றம் " உடை அல்லது உடைபடு ' என்ற அவருடைய சொந்த வார்த்தைகளையே எடுத்துக் கூறுவதாக அமைந்தது' (ஜோர்ஜ் ஆர். மோத்தா)
" அவர் தம்மைப் பின்பற்று வோரில்லாத ஒர் அரசியல் வாதி. அத்துடன் ஏந்த ஸ்தாபனத்தையும் அவர்கட்டுப் படுத்துபவருமல்லர். எனினும் அவர் ஒரு தலைவராக இருக் கிருர்.' (எஸ். டி. வைத்திலிங்கம்)
** தலைமைக் கங்காணிமார் சங்கக் கூட்டங்களுக்கு வரு மாறு தொழிலாளர்களை அழைத்த - தலைமைக் கங்காணிமார் சங்கம் தொழிலாளர்களுக்கும் சொந்தமானது எனப் பகிரங்க மாகக் கூறிய ஒரேயொரு தலைமைக் கங்காணி திரு. சண்முகம் தான்.""
(குஞ்சுபொரி சண்முகம்)
"உருளை வள்ளித் தோட்ட வேலை நிறுத்தத்துக்குத் தலைமைதாங்கியுள்ளார். பிரஜா உரிமை வழக்கொன்றைப் பரீட்சார்த்த வழக்காகப் பிரிவு கவின்சிலுக்கு கொண்டு போயிருக்கிருர், காங்கிரஸுக்காக "நண்பன்’ என்ற ஒரு வாரப்பத்திரிகையை நடாத்தியுள்ளார்'
(கே. ஜி. எஸ். நாயர்)
“உண்மையில் அவர் வந்து சேர்ந்த பிறகுதான் மாதர் காங்கிரஸ் புதிய தோற்றத்தைப் பெற்றது. அவர்கள் தங் கள் ஆண்டு மகாநாட்டுக்கு அணியும் ஜாக்கெட்டுக்குப் போர்க் கோலமுள்ள சிவப்பு நிறத்தைத் தெரிவு செய்தனர். தங்களு டைய சுலோகங்களைப் பெருமிதத்துடன் இசைக்க முஷ்டி
யைக்காட்டத் தொடங்கினர்'
(கோகிலம் சுப்பையா)

43
“அவர் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்துள்ள போதிலும் அந்நாட்டின் முன்னேற்றம் அரை வசீகரிக்கவில்லை, அவர் ஜெனிவாவுக்குச் சென்ருரெனினும் தார்மீகம் புனருத் தாரண இயக்கம் அவரைக் கவரவில்லை. காந்திஜியைக்கூட அவர் தமது குருவாக ஏற்றுக்கொள்கிருரில்லை. தாம் முற்
போக்குவாதி என்று அவர் கூறுவதில்லை.
(வி. கே. வெள்ளையன்)
*நான் நம்பிக்கையைக் கை விடவில்லை. எனது மக்கள் நேர்மையானவர்கள்; கடினமாக உழைப்பவர்கள்; நாட்டின் பொருளாதாரம் அவர்களுடைய கட்டுப்பாட்டிலிருக்கிறது. அவர்களுடைய பெறுமதியை என்ருவது ஒரு நாள் அங்கீக
ரிக்க வேண்டியிருக்கும்'
... " (சார்ல்ஸ் ஆண்ட்ரூஸ்)
*தோட்டத்திலே யாராவது ஒருவர் நோய் வாய்பட்டால் தோட்ட டிஸ்பென்சரின் உதவியை விடக் கோடங்கியின் உத வியே மேலெனக் கருதப்படுகிறது. இதற்குத் தொழிலாளர் களின் அறியாமை ஒரு காரணம் என்ருலும், தோட்டத்தி லுள்ள டிஸ்பென்சரின் அபகீர்த்தியே முக்கியமான காரணம்’ (கோடாங்கி)
'தமது எஜமானரின் அடிச்சுவட்டில் நடந்தவர்-தோட் டத்டி9தத் தமது சொத்தெனக் கருதியவர்-தமது சொந்த மக் களை வெறுப்புடன் நோக்கும் இச்சிறிய மனிதரின் வாழ்க்கை மற்றெந்தத் தொழிலாளரைப் போலவே விருந்தையில் உட் காரவேண்டிய நிலையில் முடிந்து விடுகிறது. கணக்கப்பிள்ளை இன்று தோட்டங்களிலே ஒரு பெரிய கேள்விக் குறியாக விளங் குகிருர். கணக்கப்பிள்ளை இரு தலைக்கொள்ளி எறும்பு போன்ற நிலையிலிருக்கிருர், தொழிலாள வர்க்கத்தால், வெளியே வீசப்பட்டவராகவும், உத்தியோக வர்க்கத்தால்
நிராகரிக்கப்பட்டவராகவுமிருக்கிருர்'
(கணக்கப்பிள்ளை)

Page 27
44
பொறுக்கு மணிகளாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் மேற்கண்ட வரிகள் சிவியின் பேணுச் சித்திரங்களில் காணக் கிடைத்த விலை மதிப்பை வெளிப்படுத்தும்
பத்திரிகையில், முழுப்பக்க அளவில், சித்தரிக்கப்படுபவ ரின் புகைப்படத்தையும் இணைத்து, சிவி எழுதியிருந்த இப் பேணுச் சித்திரங்கள் நிரந்தர வடிவில் கிடைக்கப்பெருதது மிகப் பெரியதோர் இழப்பு ஆகும்.
9 நாவல்கள்
'நீலகிரி மலைத்தொடரில் ஆரம்பித்து ஏழு மைல் தூரம்"
வரை அலை அலையாக நெளிந்தோடும் குன்று ளை அழகான
பச்சைப் போர்வையால் தேயிலைச் செடிகள் மூடி மறைக்கின்
றன". என்று ஆரம்பமாகிறது "வாழ்வற்ற வாழ்வு" என்ற நவீனம்,
‘வாழ்வற்ற வாழ்வு' இவரது முதல் தோட்டத்து நாவ லாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது - மார்ச் 27ல் இருந்து இது திணகரனில் தொடர் நவீனமாக ஞாயிற் றுக்கிழமைகளில் வெளி வந்தது.
இதுவும் 'எல்லைப்புறம்’, 'பார்வதி என்ற ஏனைய இரண் டும் ஆக மொத்தம் மூன்று நாவல்களும் தினகரனில் தொட ராக வெளி வந்திருக்கின்றன.
'பார்வதி நேரடியாகவே தமிழில் எழுதப்பட்டது மற்றைய இரண்டும் பொன். கிருஸ்ண சுவாமியால் தமிழாக் கம் செய்யப்பட்டிருந்தன. இவைகளில் எதுவும் இன்னும் நூலுருப்பெறவில்லை.
‘வீடற்றவன’ ‘இனிப்படமாட்டேன்" என்ற இரண்டு நாவல்களும் வீரகேசரியில் தொடர் கதைகளாக வெளிவந்தன. பிறகே இவை நூலுருவம் பெற்றன்.

45
"வீடற்றவன்' வீரகேசரி ஞாயிறு இதழ்களில் 1962ல் தொடராக வெளிவந்தது.
ஒவியர்களின் சித்திரங்களுக்குப் பதிலாக கதாபாத்திரங் களாகச் சிலரை நடிக்க வைத்து அவர்களின் புகைப்படங்களை இணைத்து வெளியிடுவதன் மூலம் கற்பனைக் கதைகளுக்குத் தத்ரூபத் தோற்றத்தை ஏற்படுத்தி வாசகர்களை தொடர்கதை களில் லயித்து ஈடுபட வைப்பதை பத்திரிகைகள் ஒர் உத்தி யாகக் கையாள்கின்றன.
இந்த உத்தி வீடற்றவன் தொடர்கதையாக வந்தபோது பின்பற்றப்பட்டது. மிகுந்த வரவேற்பையும் பெற்றது.
கதாநாயகனுன ராமலிங்கம் தியகம தோட்டத்தில் மர னித்த ஏப்ரஹாம் சிங்கோவின் கல்லறைக்குச் சென்று வணங் குவதைக் காட்டும் புகைப்படம் போன்றவை வாசகர்களி டையே புத்துணர்வை ஊட்டின.
ஏப்ரஹாம் சிங்கோவின் உண்மையாக நிாணயிக்கப்பட் டக் கல்லறை புகைப்படங்களில் வெளியானபோது மலையக
இலக்கிய ஆர்வலர்களுக்கும் புதிய தெம்பு பிறந்தது.
தங்களுக்கு விருப்பமான ஒரு தொழிற் சங்கத்தில் சேரத் தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காக ஒரு பெரிய போராட்டத்தை தியகமையைச் சேர்ந்த வீரம் பொருந் திய தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் சரித்திரப்பிரசித்தி யுள்ள போராட்டத்தை முன்னின்று நடாத்தினர், இதிலேதான் ஏப்ரஹாம் சிங்கோ என்னும் வீர வாலிபர் 1956ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி தன் இன்னுயிரைப் பலிகொடுத்தார். முற் போக்குச் சிந்தனைகள் நிறைந்த வெளிநாட்டில் படித்து வந்த வர்கள் தொழிற்சங்கங்களில் இப்போராட்டத்தால் ஈர்க்கப் பட்டனர்".(22)
சி வி தமிழில் எழுதிய வீடற்றவன் ஒரு குறுநாவலாகும். 'தமிழில் எழுதுவது நமக்கு அவ்வளவு ஒன்றும் சிரமம் இல்லே ஆணுல், இந்த வல்லின-மெல்லின பேதங்கள் கொஞ்சம் கஷ்டப்

Page 28
46
படுத்துவன’ என்றும் அவரே கூறி இருக்கிறர். ஆங்கில இலக் கியத்திலுள்ள அதே அளவு பரிச்சயம் தமிழ் இலக்கியத்தோடும் அவருக்கு இருந்தது".(23)
இக்குறுநாவல் ‘வைகறை வெளியீட்ாசு மு. நித்தியானந் தஞல் இலங்கையில் 1981ல் முதலில் நூலுருவம் பெற்றது. இலங்கையில் புத்தக வடிவில் வெளிவந்திருக்கும் சி வி. யின் ஆக்க இலக்கியங்கள் ‘காதல் ஜோதி” வீடற்றவன்' என்ற இரண்டு மாத்திரமே.
தமிழ்நாட்டிலும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டட் வெளியீடாக மே 1984ல் வீடற்றவன் நூல் உருவம் பெற்றது. தமிழ்நாட்டில் இது இவரது மூன்றுவது நூலா கும். ‘இனிப்படமாட்டேன்’ என்ற இவரது கடைசி நாவல் இதற்கு முன்பே ஜனவரி 1984ல் மீனுட்சிப் புத்தக நிலையத் தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ என்ற தலைப்பில் நவம்பர் 1983ல் கலைஞன் பதிப்பகத்தாரால் இவர் தொகுத்த நாட்டுப் பாடல்கள் நூலுருவில் வெளி வந்திருக்கின்றது.
வீடற்றவன் என்ற தனது நூலின் முன்னுரையில் "இந் திய வம்சாவளியினரான மலைநாட்டு தொழிலாளமக்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை தொட்டுக் காட்ட முற்பட்டிருந்தேன்." இவர்களது கதை, இத்தீவி னில் இன்றும் ஒரு வஞ்சிக்கப்பட்ட கதையாகத்தான் தொடர் கின்றது. இன்று இவர்களை பழிவாங்க கிரிமினல் சட்டங்கள் இல்லை ஆனல் கிரிமினல் அரசியல்வாதிகள் இருக்கின்ருர்கள்.
**கண்ணிரால் கறைபட்டுப்போன இம்மக்களின் சரிதம்
குறித்து தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரிதும் தெரிந்திருக்க நியாயமில்லை.”*
is a & 8 w a w x "வெளியிட் ஏற்பாடு செய்தமைக்கு நானும் நீதிகோரி போராடும் எங்கள் சமூகமும் நன்றிக்கடன் பட்டவர் கள்தாம்' என்றுகுறிப்பிட்டிருக்கிருர்,

47
தனது எழுத்துக்களின் மூலம் சி. வி. சாதிக்க நினைத்த வைகள் எவை? அதன் காலத்தேவை எத்தகையது? அதில் அவர் இலக்கிடகர்த்தாவாக எவ்வாறு வெற்றிகண்டார். என்பவைகளை யெல்லாம் இந்தவரிகள் கோடி காட்டுகின்றன.
தன்னுடைய எழுத்து வெளி உலகத்துக்குத் தனது சமூகத்தின் கெளரவத்தை வெளிப்படுத்துவதாகவும், இடர்ப் பாடுகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அமையவேண்டுமென்பது அவரது
967.
சமீபத்தைய அரசியல் கருத்து மாற்றங்களின் பின்னர் இந்தியத்தமிழரின் நிலை தமிழகத்தில் தெரியப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையுமுணர்ந்திருந்தார். இரண் டுக்கும் மேலாக தன்னுடைய மூன்ருவது தமிழ்ப்புத்த கத்தை வெளியிடுவதற்கு முப்பத்தெட்டாண்டுகள் காத்து நின்ற இலக்கிய கர்த்தாவின் தாபத்தைக் காணலாம்.
*"புதினப் பத்திரிகைகளில் வெளிவரும் படைப்புக்கள் இளம் எழுத்தாளருக்குப் பயிற்சி அரங்காகவும் முதிர்ந்த எழுத்தாளனுக்கு வெளிப்பாட்டுச் சாதனமாகவும் அமைவன அவைகளை மாத்திரம் கொண்டு எந்த ஒரு நல்ல எழுத்தாள னும் எழுத்துலகில் வாழ்ந்துவிட முடியாது. அவற்றை வைத்துக்கொண்டு எவருமே கணிக்கமுடியாது. அவற்றினுல் பின்மரபு ஒன்றும் உருவாகப்போவதில்லை. முதலில் எமக்கு வேண்டியது யாதெனில் எமது எழுத்துக்களை நிரந்தர 2-CD5 வில் கொண்டு வருவதாகும் அதாவது புத்தக உருவில்'(24) என்று திண்ணமாக கருதியதைச் செயல்படுத்துவதற்கு இருப தா ண் டுசால இடைவெளி சி.வி. க்குத் தேவையாக இருந்தது
மலையக இலக்கிய கர்த்தாக்களின் மிகப்பெரிய இடர்ப்
பாடு இன்றும் இது இந்த இடர்ப்பாடுகளையும் வென்று காட்டிய பெருமையும் சி. வி. க்கு உண்டு.

Page 29
48
'வானத்தை சதா ஆலிங்கனம் செய்துகொண்டிருக்கும் அந்த மலைத்தொடர் அசுரமரங்களையும் அடர்ந்த புதர்களை யும் பின்னிய காட்டுக் கொடி படர்ந்த நீல முகில் காடு இதற்கு நீலகிரி என்ற பெயர் மிகப் பொருத்தமானது. ஒரு சனிக்கிழமை மாலை நாலு மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள ரயில்வே ஸ்டேசனை கோச்சி அடைந்தது. ஒரு பிரயாணி மட்டுமே இறங்கினர் இரண்டே நிமிசத்தில் கோச்சி மறு படியும் திணறிக்கொண்டு புறப்பட்டது என்று ஆரம்பிக் கின்ருர் சி. வி. தனது நாவலை, இறங்கியவன் ராமலிங்கம். பல தோட்டங்களில் வேலை தேடி சோர்ந்து போனவன். தனது மாமன் பெரியசாமி எட் கங்காணியாக இருக்கும் தோட்டத்துக்கு வந்து பற்றுச் சீட்டுக்களை அவர் கையில் கொடுத்தான். கங்காணி பத்து சீட்டை திரும்பத் திரும்ப பார்த்துவிட்டு முகத்தைச் சுழித்தார். ஏதோ ஒரு முடிவுக்கு வத்தவர்போல் எழுந்து உள்ளே போனர். பூசை அறையில் இருந்து வெள்ளித் தட்டில் கற்பூரம் கொழுத்தி 'தம்பி ராமலிங்கம் ஒன்னப் பத்தி முந்தியே தொரைக்கி தாக்கல் வந்திருக்கு. நான் நம்பிக்கையோடு பேசணும் சங்கத்துக்கு ஆள் சேர்க்கமாட்டேன்னு கற்பூரத்தைக் தொட்டுக்குடு" என்ருர்,
ராமலிங்கம் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்ட பாக்கு வெட்டியில் அகப்பட்ட கொட்டைப் பாக்கின் நிலையில் பரி தாபப்பட்டான்' சங்கத்துக்கு நான் ஆள் சேர்க்க மாட் டேன் இது சத்தியம் என்று நடுங்கும் கரங்களோடு கற்பூரத் தைத் தொட்டுக்கொடுத்தான்.
ரம்மியமர்ன நீலகிரி மலைச்சாரலின் கடைக்கோடியில் ஆரோகணித்திருக்கும் தோட்டம் பச்சை திரண்டு பொங்கும் இந்திரத் தோற்றத்தோடு இருந்து மக்களுக்கு அது ஒரு நரக மாயிருந்தது. தோட்டத்தை நடத்தும் சட்டதிட்டங்கள் அதை ஒரு துன்பக் கேணியாக மாற்றின. நின்றல் குத்து விழுந்தால் உதை என்ற பழமொழி நீலகிரி தோட்டத்தில் தான் முதன் முதலில் உருவாகி இருக்கவேண்டும். இந்த அநீ

49
திகளுக்கு முடிவுகாணவே இரவோடு இரவாக சங்கத்துக்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த வேலைக்கு ராம லிங்கம் தூண்டுகோலாக இருந்தான் எனவே பெரியசாமி கங்காணிக்குக் கொடுத்த சத்தியத்தைப் பற்றி பலவாழுகச் சிந்தித்துக்கொண்டிருந்தான் சத்தியமே வெல்லும் ! என்ரு லும் நீதிக்குச் சத்தியமா? அநீதிக்குச் சத்தியமா? என்று பலவாருக எண்ணி அவன் மனம் குழம்பினுன்’’.
இதே ராமலிங்கம் நாவலின் முடிவில் மறுபடியும் கையில் பற்றுச் சீட்டுடன் வேலை தேடி தோட்டம் தோட்டமாக அலை கிருன், தோட்டங்களுக்கு மக்கள் கொண்டு வரப்பட்டு நூறு வருடங்கள் ஆனபிறகும் தொழிற்சங்கச் சட்டம் 1935ல் இலங்கையில் அமுலாக்கப்பட்ட பிறகும் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பதில் முன்னேற்றம் காணப்படா ததை இந்த முடிவு யதார்த்தமாகக் காட்டி நிற்கிறது.
ராமலிங்கம் சங்கத்துக்கு ஆள் சேர்த்த சங்கதிகள் தெரிய வந்ததும் தோட்ட நிர்வாகம் அவனுக்கு இன்னல் கொடுக் கிறது. கவ்லாத்துக் காட்டில் இருந்து லயத்துக்கு விரட்டப் படுகின்றன். அவனுடைய மனைவியும் கொழுந்துக் காட்டில் இருந்து விரட்டப்படுகிருள்,
ராமலிங்கத்தை துரை ஆபீசுக்கு வரச்சொல்லி வேறு வேறு காரணம் காட்டி பற்றுச்சீட்டு கொடுக்க முயற்சிக்கிருர். ராமலிங்கம் வாங்க மறுக்கவே ' ராங்கிக்காரன் கரச்சல்காரன் பற்றுச்சீட்டு கண்ருேலுக்கு அனுப்புறேன் அங்கே போ. நாளையிலிருந்து வேலை இல்லை . . .' என்று படீரென்று சன் னலை இழுத்துச் சாத்தினர்.
ராமலிங்கத்துக்கு நடந்த விஷயங்கள் ஜில்லா ஆபீசுக்குப் போகிறது. தொழிற் சங்கப் பிரதிநிதி "தோழர்களே நீங் கள் இன்றையிலிருந்து ஒரு போராட்டத்தில் இறங்கி விட்ட தாய் தெரிந்து கொள்ளவேண்டும் இஸ்டோர், பங்களா, ஆபீஸ் இவைகளை உடைத்து விட்டு உங்கள் தலையில் கட்டி வைத்து போலீசைக் கூப்பிட்டு தொந்தரவு கொடுப்பார்கள்

Page 30
50
தேயிலைத் தூளை அட்டாலில் போட்டுவிட்டு காவற்காரனை விட்டுப்பிடிப்பார்கள் ஜாக்கிரதை' என்று கூறி அறிவுரை வழங்குவதுடன் வேலை இழந்த ராமலிங்கத்துக்கு சாப்பாடு மற்ற வசதிகளை செய்ய எல்லோரும் தயங்கக் கூடாது என் றும் வலியுறுத்துகிருர்.
தோட்ட நிர்வாகம் ராமலிங்கத்தை பற்றுச் சீட்டுக் கொடுத்து வேலை நிறுத்தி வெளியேற்றுவதற்குக் காட்டும் காரணம் பழனியப்பன் தோட்டத்துக்குள் வரக்கூடாது என் னும் உத்தரவை மீறியது, அதற்கு இவனும் உடந்தையாக இருந்தது' என்பதாகும்.
பழனியப்பன் ராமலிங்கத்தின் தம்பி. அவன் காதலித்த பெண்ணை அவன் அடித்ததற்காக தோட்டம் அவனை விலக்கியது.
"பழனியப்பன் அலமேலுவை ஏதோ காதலித்தான். ஏதோ ஆத்திரத்தில் அடித்து விட்டான். இதில் எதற்காக துரை தலையிட வேண்டும்.
சி. வி. இப்படிக் கூறுகின்ருர், "கூலிக்காரனுக்கும் பொண்டாட்டியா என்பது சரியாகி விட்டது. துரைமார் கிளப்பில் இவன் பெண்டாட்டியை அவனும் அவன் பெண் டாட்டியை இவனும் பிடித் a க் கொண்டு இரவிரவாக ஆடு வதைப் பற்றி பேச உரிமை உண்டா. இங்கே என்றல் புருஷன் பெண்டாட்டி சண்டையில் கூட அவர்கள் உள்ளே நுழைவார்கள். தோட்டம் என்பது ஒரு மதிலல்லாத சிறை,
திரு. சி வி. மலையக நாட்டார் பாடலில் மிகுந்த அக்க றையும் ஈடுபாடும் உள்ளவர். நாட்டார் பாடலில் அவருக் குள்ள ஆழ்ந்த தேர்ச்சி இந் நாவலின் உரையாடல்களை செழுமைப் படுத்துகின்றன.
தொழிலாளர்கள் தமது பிரச்சினைகளைத் தாங்களாகவே பேசிக் கொள்ளும் போதும், பவ்வியமாக தோட்டநிர்வாகி களுடன் உரையாடும் போதும்; உரிமையுடன் தொழிற்

5
சங்கப் பிரதிநிதிகளிடம் முறையிடும் போதும் இந்தபிராந் திய வழக்கு அருமையாக, ஆணித்தரமாக விழுந்துள்ளதை மனம் லயித்து ரசிக்க முடிகிறது. பழனியப்பன் அலமேலு காதல் விவகாரம் ஒரே ஒரு இடத்தில் தான் வருகிறது அதுவும்ஒருசில உரையாடல்கள் மூலம்.
பழனியப்பன் ஸ்டோர் மேல் தட்டில் வேலை. அலமேலு கொழுந்து சாக்குதூக்கிக் கொண்டு மேலே வந்தாள். சாக்கை குலுக்கிக் கொட்டச் சொன்னன் அவன்
அதெல்லாம் எனக்குத் தெரியும்" என்ருள் அவள் "என்னைத் தெரியுமா?* "ஏன் தெரியாது ஆம்பளை ஆள்தானே?" இருவரும் சிரித்தனர். "எந்தலயன் புள்ளே" "ஓங்க வீட்டுலே இருந்து நாலாவது காம்புரா" ராவைக்கு நெருப்புப் பெட்டி வாங்க வாரேன்' "நான் சுருட்டு குடிக்கிறதில்லே. என்றுசிரித்தாள். அன்று இரவு பழனியப்பன் அலமேலு வீட்டுக்குதீப்பெட்டி வாங்கப் போனன். சிலநாட்களுக்குள் அவர்கள் சிநேகம் முற்றியது அவளை யாரோடும் கேலிபரிகாசம் பேசக் கூடாது என்று எச்சரித்தான். ஒரு நாள் மதியம் அலமேலுகொழுந்து கொட்டி விட்டு திரும்பும் போது பெரிய கங்கர்ணியின் மகன் அவளை மறித்து ஏதோபேசினன். ஸ்டோர் மெத்தையில் இருந்து இதைப் பார்த்த பழனியப்பன் அன்றுமாலை அவளை நையப் புடைத்து விட்டான்,
தோட்டத்துப் பெண்ணை அடித்த குற்றத்துக்காக வேலை நீக்கிவிட்டது தோட்டநிர்வாகம்.
மலையகத்து அவலங்களில் தொழிற்சங்க அறிமுகம். எப்படிச் சிரமமான ஒன்ருக இருந்தது என்பதை யதார்த்தமாகக் காட்டும்' (26) நூல் வீடற்றவன் ஆகும்.
இலங்கை மலையக தமிழர்கள் பற்றிய இக்குறுநாவலுக்கு சி.வி. யின் தொழிற்சங்க அனுபவம் பெரிதும் உதவியாயிருக்கி Ո9Ֆl.

Page 31
95)füLIL LDT"GLij
சி. வி. யின் இறுதி நாவல் இது.
இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர்களின் அவல நிலை பற்றிய புதினம் என்று ஒரு குறிப்புடன் மீனுட்சி புத்தக நிலை யத்தார் இந்நாவலை வெளியிட்டிருக்கின்றனர்.
சந்தியாகு, பசுபதி, கண்ணம்மா, ராஜன், சித்ரா, கார்த்திகேசு, ஜகன், மனேஹரி பத்மினி என்ற குறைந்த பாத்திரங்களை வைத்துக் கொண்டு சமீபத்தைய நாட்டின் இனக்கலவரம் குறித்து எழுதப்பட்ட நாவல் இது.
மேலும், சி வி யின் சுயசரிதையாக அமைந்தது இந்நா வல் என்பதை நாவலைப்படிக்கும் போதும், சி வி. யின் வாழ்க் கையின் பல அம்சங்களை அறிந்திருக்கும் போதும் இலகுவில் அறிந்து கொள்ள முடியும்
" இனிப்பட மாட்டேன்’ நாவலில் வரும் ஜகன் - தமிழ் தந்தைக்கும் சிங்களத்தாய்க்கும் பிறந்தவன். வன் முறைக்குப் பின்னர் தமிழ் நாடு செல்லலாமா என்று யோசித்து, அந்நாட் டைச் சென்று பார்த்து வருகிருன். அங்குள்ள நிலைமைகள் அவனது போக்குக்கும், சிந்தனை ஓட்டத்துக்கும் ஒத்துக் கொள்ளவில்லை.
இங்கேயே இருந்து விடுவது என்று தீர்மானமான முடிவு எடுக்கிருன்.
"மலைநாட்டில் வீடுகள் கட்டவும் இளையதல்ை முறையின் மனதை அச்சமில்லாது அமைக்கவும் சிற்பிகள் தேவை "" என்று ராஜன் ஜகனிடம் சொன்னது உண்மையிலும் உண் மை. மலேநாட்டு மக்கள் தைரியத்தையும் வீரத்தையும் வளர்க்க வேண்டும்.
மனிதன் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்வது இயல்பு. இன்று புறமுதுகுக்காட்டி ஓடுகிறவன் நாளை வந்து சண்டை செய்வான் என்பது இதற்கு எடுத்துக்காட்டு.

53
மலைநாட்டவர் இந்நாட்டின் பாட்டைகளை அமைத்தவர் கள். பாலங்கள் கட்டியவர்கள், தோட்டங்கள் திறந்தவர்கள் உரிமைக்காக உருளைவள்ளி போராட்டம் 100 நாள் சத்தியா கிரக போராட்டம் நடத்திய வலிமையான உள்ளமும், உட லும் உடையவர்கள்.
மனிதன் தூசியாக்கப்பட்ட போது அந்த தூசியிலிருந்து புனர் ஜென்மம் எடுத்து வரும் தனித்துவம் மனிதனுக்கு மாத் திரமுண்டு என்பதை நான் எங்கோ வாசித்த ஞாபகம்.
எனவே ராஜன் அமைக்கும் திட்டத்தில் ஜகன் சேர்ந்து சேவை செய்ய வேண்டு மென்ற முடிவு எனக்கு கொஹா வானம்படி புதிய நாளை வரவேற்றது போலிருந்தது. என்று முடிகிறது நாவல். தனது சொந்த உணர்வுகளை - சிங்களப் பெண்ணை முடித்து 1977 - 1979 பட்டு அனுபவித்த உணர்வு களை நாவல் முழுக்கக் காணலாம்.
* வெள்ளிக்கிழமை உங்கவீட்டு அம்மாளை நல்லாய்பார்த் தேன் ரொம்ப மிடுக்கா சிங்கள நடை போட்டு உங்களோட GunršGSF. ””
'அதென்ன சிங்கள நடை' என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். சிங்கள ஆளுக நடக்கிறதையும். தமிழ் ஆளுக நடக்கிறதையும் பார்த்தாலே தெரியும். அவங்க சொந்த வீட்டுக்குள்ளே நடக்கிற மாதிரி நடக்கிருங்க நாம் பரக்கப் பாக்கப் பார்த்து நடக்குருேம்.
மேலே காண்பது நீங்கள் படிக்கவிருக்கும் இந்தக் கதை யில் வரும் உரையாடலில் ஒரு பகுதி என தனது அணிந்து ரையை Auம்பிக்க தொ. மு. சி. ரகுநாதன் இலங்கை நாட் டிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் சிங்களப் பெண்ணுெருத்தியைக் கா த லித் து மணந்துகொண்ட அதே கமிழினத்தைச் சேர்ந்த ஒர் ஆணும் பேசிக்கொள்ளும் பகுதி இது. இந்த வரிகளிலே இலங்கையி

Page 32
54
லுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் அங்கு எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதைப் புலப்படுத்தி விடுகின்றன.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாக வும். வீடற்றவர்களாகவும், இருந்து வருகின்றனர். அது மட் டுமல்ல அவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் வாழ்ந்து வரு கின்றனர். இந்த உண்மையைத்தான் மேலே கண்ட உரை யாடல் இரண்டே வரிகளில் உணர்த்திவிடுகிறது,
எழுத்தாளன் என்பவன் வாழ்க்கையில் வெறும் பார்வை யாளஞக இருக்கக்கூடாது. அதில் பங்கெடுப்பவனகவும் இருக்கவேண்டும். சி. வி. எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஆசிரியராக இருந்தவர். அவர் ஓர் அரசியல்வாதி இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் மேலும் அவர் ஒரு தொழிற் சங்கத் தலைவருங்கூட இன்றும் அவர் தொழிற்சங்க வாதியா கவே இருந்து வருகிருர். சொல்லப்போனல் - எழுத்தாளர் என்ற முறையில் இலங்கை நாட்டின் மலையகப் பாட்டாளி மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் இலக்கியத் தின் கருப்பொருளாக்கியதில் அங்கு அவரே முன்னேடியாக விளங்கினர் எனலாம். அவர் எந்த மக்களைப் பற்றி எழுதுகி ரு மரா, அந்த மக்களின் நலன்களுக்காகப் போராடியவர் போராடி வருடவர்.
எனவேதான் அவரது கதைகளில் நாம் உண்மையான வாழ்க்கையைக் காணமுடிகிறது. நறுக் குத் தெறித்தாற் போன்ற சுருக்கமான வாக்கியங்களில் சற்றேனும் உணர்ச்சிப் பெருக்குக்கு உள்ளாகாமல் உள்ளதை உள்ளவாறே கூறும் உத்தி அவரது கதைகளில் ஓர் அலாதியான சிறப்பாகும். நூலாசிரியரின் அடக்க சுபாவத்தைப் போலவே அவரது கதைகளும் அடக்கமும், அமைதியும் மிக்கவை.
‘இனிப்படமாட்டேன் என்ற இந்தக் கதையும், இத்தகை யதுதான். ஆயினும், கொதிநிலையை எட்டாத நீரிலும் குமு

55
றத்தொடங்காத எரிமலையிலும் குடிக்கொண்டிருக்கும் அமை தியல்லவா அது!
நாம் இருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம்
என்பதறிந்தோம் என்று பாடினன் பாரதி
இந்த உணர்விலே ஊறி இந்த உரிமையையும் இலங்கை யிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் பெறுகின்ற நாளிலேதான் அவர்களுக்கு விமோசனம் கிட்டும் அந்த உணர்வைச் சூசகமாக உருவேற்றும் ஓர் அருமையான நாவல் என்று சி. வி. யின் எழுத்துக்களைப் பற்றி கருத்துக்கள் வெளிப் படுத்தியிருக்கிருர்.
சி.வி. யின் நாவல்கள் மலைநாட்டின் தத்ரூபமான படப் பிடிப்புக்கள்.
தமிழ் எழுத்தாளர்களிடையே மலிந்து கிடக் கும் வார்த்தை ஜாலங்களால் சிலம்பம் விளையாடும் கைங்கரியம் அவைகளிலே காணக்கிடைப்பதில்லை.
ஆனல், அவரது எழுத்துக்கள் சத்திய சொரூபங்கள்.
இலங்கையில் மலைநாட்டினரைப் போலவே அமெரிக்கா வின் கறுப்பின மக்கள்.
நீக்ரோக்களைப் பற்றி பலரும் எழுதினர். ஆனல், Go Tell it on the Mountain; Another Country; Cry my beloved Country என்ற அமெரிக்க நீக்ரோக் கதைகள் அமெரிக்க இலக்கியத்தில் மைல் கற்களாகக் கணிக்கப்பட்டன.
"போய் மலைமேல் நின்று சொல்", "இன்னெரு நாடு" "அன்புத் தாயகமே அழு’ என்ற நாவல்கள் நீக்ரோ இனத் தின் உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தின. ܖ

Page 33
56
ஜேம்ஸ் போல்ட்வின் கறுப்பின மக்களில் ஒருவர். கண் ணிரை கதைகளாக்கித்தருவதற்கு அவருக்கு கற்ப னை த் தேவைப்படவில்லை.
அவர்களின் மொழியை அவர் நன்கறிவார். அவற்றுக்கு கவித்துவ நடைதந்தார். அவர்களைப் பிறர் மதிக்கத் தூண் டினர்.
"சி. வி. யின் நாவல்கள் அத்தகையனவே. அவைகளை வாசிக்கும் எந்த வாசகனும் தேயிலைத் தோட்டத்து உழைப் பாளர் சமூகத்தை மதிப்போடு நோக்குவான்.
10 நாட்டுப்பாடல்கள்
மலையக இலக்கியத்துக்கு நூற்றைம்பது வருடகால பாரம்பரியம் உண்டு. முதல் நூற்ருண்டு கால பாரம்பரியம் வாய்மொழி இலக்கியம் சார்ந்தவையாகும்.
கிராமியப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், தோட் டப் பாடல்கள், கதைப் பாடல்கள், தெம்மாங்கு என்றெல் லாம் குறிப்பிடப்படும் இவ்வாய் மொழி இலக்கியம் மக்களின் அடிமனத்து உணர்ச்சிகளையும், அவர்தம் ஆசாபாசங்களையும் அழகுற வெளிப்படுத்துவனவாகும்.
மலையக ஆக்க இலக்கிய முயற்சிகள் பெருமளவில் கவிதை வடிவில் வெடித்துக்கிளம்பியதற்கு இப்பாரம்பரியமும் பாரிய காரணம் ஆகும்.
கடந்த ஐம்பது ஆண்டுகால இடைவெளியில் பெருந் தோட்டச் சமுதாய அமைப்பு முறையில் ஏற்பட்ட மாற்றங் கள் புதிய பொருளாதார உறவுகளையும், புதிய சமூக உறவு களையும் ஏற்படுத்தின. இந்தப் புதிய சமூக உறவுகளை எடுத்துக்காட்டுவதற்கு அதுவரை மலைநாட்டில் வழக்கிலி ருந்து வந்த வாய்மொழி இலக்கியங்கள் வலுவற்றவையாக இருந்தன.

57
தமிழிலும் ஆங்கிலத்திலும் பரிச்சயம் பெற்றிருந்த இந் திய வம்சாவளியினர் இக்கால கட்டத்தில் உலகின் பல பாகங் களிலும் செல்வாக்குப் பெற்று வந்த நவீன படைப்பு இலக்கி யத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினர் சி.வி. யும் இந்த வகையைச் சார்ந்தவர்
எனினும் நாட்டுப் பாடல்களில் அவரு குத் தனியான தோர் லயிப்பு இருந்தது.
தொழிலாளர்கள் தீபாவளி, பொங்கல் நாட்களிலும், வேலைத்தளங்களிலிருந்து வீடு திரும்பும் போதும், ஒய்வு நேரங்களில் அவர்கள் லயன்களில் பாடியபோதும் அவைகளை அவர் செவிமடுத்திருக்கிறர்
சி. வி யின் பாட்டனர் பெரிய கங்காணியாயிருந்தவர் சி. வி. மழலைப் பருவந் தொட்டே தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். தோட்டங்களில் கலை, கலாச்சார முயற்சிக ளுக்கு மூலாதாரமாக இருந்தவர்களே இந்தப் பெரிய கங் காணிமார்கள்தாம்.
"பாட்டுப்பாடுவோர் கங்காணி வீட்டுக்குச் சென்று பாடி ஆடி, சேலை, பணம், பரிசு என்று பெற்றுக்கொள்வது வழக்கம்".
பெரிய கங்காணியின் ஆதிக்கம் தோ ட் டங்க ளில் ஆலமரம் போல் உயர்ந்து, படர்ந்து விழுது இறங்கியதன் மூலம் மலை நாட்டில் ஒரு புது மேல்மட்ட சமுதாயம் உருவானது."
**இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பிரயாண தடையில்லாத அந்த காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கதிர்காமம், வெனெளிபாத யாத்திரையை மேற்கொண்டு கவிராயர்கள் பெரிய கங்காணி வீடுகளுக்கு வந்து பாடுவார்கள், தோட்டத்து வாலிபர்கள் இவைகளில்லயித்து கேட்டு தோட்டங்களிலே பாட்டுக் கச்சேரிகள் நடத்துவார்கள்.

Page 34
58
பாஸ்கரதாஸ் ர்ேத்தனங்கள், அண்ணுமலை ரெட்டியார் காவடிச்சிந்து, பாடுவதுடன் பாரதியின் கரும்புத்தோட்டத் திலே என்றதை தேயிலைத்தோட்டத்திலே என்றும் பாடு GirTrTesi; Git” o . (26)
சிறுவயதுமுதலே இந்தச்சூழலில் வளர்ந்த சி. வி பின் னர் தேவேந்திர சத்தியேர்த்தி, விரியர் எல்வின், வட்டு கோட்டை ராமலிங்கம் போன்றவர்கள் தொகுத்தப்பாடல் களைப்படித்தார்.
மலைநாட்டு மக்களின் பாடல்களைச்சேகரிக்கவேண்டும்; பத்திரிகைகளில் வெளியிடவேண்டும் என்ற அவா இயற்கை யாகவே அவரிடம் எழுந்தது.
அப்பாடல்களைத் தொகுத்து, அவைகளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து, சஞ்சிகைகளில் வெளியிடும் அரும்பணி யில் ஈடுபட்டார். இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவி லிருந்து வெளிவரும் ஆங்கில ஏடுகளிலும் இவைகளை வெளியிட்டார்.
தோட்டத்து நாடோடிப்பாடல்களைப்பற்றி முதன்முறை யாக வெளி உலகுக்குத் தெரிய வைத்தப் பெருமை சி. வி. யினுடையதே என்பதை மறுப்பதற்கில்லை.
1959-ல் தேயிலைத்தோட்டப்பாடல்" என்ற கட்டுரையை தமிழ்நாட்டு மஞ்சரி யில் எழுதிஞர் 'இவை வெறுமனே காதல்யும் சாதலயும் சித்திரிக்கும் இதய கீதங்கள் மட்டு மல்ல, அங்கு வாழும் மக்களின் ஜீவிய சரித்திரம் முழுவதை யும் விஸ்தரித்துக் காட்டுவன' என்று சி. வி. தன் கட்டுரை யில் குறிப்பிட்டெழுதினர். 27)
"மலைநாட்டு மக்கள் சுயமாக உருவாக்கித்தந்துள்ள இப்பாடல்கள் மிகுந்த முக்கியத்துவ முடையன
மஜலநாட்டு மக்கள் சேர்த்துக்கொண்ட இப்பாடல்களின் வகைகள் ஓர் விசாலமான பரப்பை உள்ளடக்கியுள்ளன

59
தாலாட்டு என்று தொடங்கிக் காதல், ஒப்பாரி கும்மி என்று விரியும் இந்தப் பரப்புக்கு ஆதாரமாய் நிற்பது தமிழ் நாட்டின் பண்டைய கிராமியக் கலாச்சாரம்தான்.
இன்று தமிழ்நாட்டுக் கிராமங்களின் சாதாரனக் குடிமக னின் மத்தியில் புழக்கத்திலிருக்கக்கூடிய தாலாட்டுப் பாடலே அன்றும் இன்றும் மலைநாட்டுத் தமிழ் மக்கள் மத்தியிலும் புழக்கத்திலிருந்து வருகின்றது என்று கூறினல் இதில் ஆச்சர்
யம் கொள்ள விடயம் யாதுமில்லை
ஏனெனில், இந்த மக்கள் அங்கிருந்து வந்தவர்கள் தானே. வரும் போது என்ன, சதையும் எலும்புகளும் மாத்திரமா மலையகத்தில் குடியேறின ?
ஆளுல் தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரி இவற்றைத் தவிர்ந்த ஏனைய மலைநாட்டு நாட்டார் பாடல்கள் பெரும் பாலும் உண்மையில் முற்ருக என்றும் சொல்லலாம் - தமக்கே உரிய தனித்துவத்தைக் கொண்டுள்ளன.
இப்பாடல்கள் வெறுமனே ஓர் அந்நிய மூலதனத்தின் விளை பொருள் என்ற ரீதியிலும் ஒரு வித்தியாசமான உற் பத்திமுறையின் விளைவு என்ற ரீதியிலும் மாத்திரம் மேற் கூறிய கிராமிய நாட்டார் பாடலிலிருந்து வேறுபட்டு அதனுர டாய்த் தனது முக்கியத்துவத்தை நிலை நாட்டிக்கொள்ள oslavža).
அல்லது எளிமையான உணர்ச்சி வடிப்புகள், இயல் பான உவமான உவமேயங்கள், சமுகக்கூட்டு வாழ்க்கையின் உற்பத்தி, வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை அல்லது வாழ்க் கையைத் தீரத்துடன் எதிர் கொண்டு நிற்கும் போது இயல் பாய் அதன் பிரவாகத்தில் பொங்கியெழுந்த உன்னதங்கள் என்ற வகையில் மாத்திரம் இதன் முக்கியத்துவம் போற்றத் தக்கது என்பதும் அல்ல. -
முக்கியமானது யாதெனில், இப்பாடல்கள் ஒரு சமூகத் தின் உருவாக்கத்தையும், இலா கையின் வரைபடத்தின்

Page 35
60
மத்தியப்பிரதேசத்தில் இருந்திருக்கக்கூடிய வெறும் வனந்த ரத்துக்குப் பதிலாக ஓர் யெனவனமிக்க நந்தவனத்தை ரத்தப் பிரசேதசத்தை உருவாக்கி இந்தப்பிரமாண்டமான மனித உழைப்பின் மகோன்னத வெற்றியைப் பெரும் அளவு பிரதிப லிக்கும் வரலாற்றுச் சாட்சிகளாகவும் இவை விளங்குகின்றன என்று பின்னுரைக்கான சில குறிப்புக்களைத் தனது " மலை நாட்டு மக்கள் பாடல்கள் ' என்ற நூலில் சி. வி. எழுதி இருக்கிருர்.
இந்நூலுக்கு முன்னுரை எழுதியவர் கலாநிதி க. கைலாச பதி ஆவார்.
* நாட்டுப்பாடல்கள் ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினதின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமையவில்லை; அவர்களது கனவுகளின் இலட்சியக் குரலாகவும் விளங்குகின்றன" என்று கூறும் அவர்
* மலையக நாட்டுப்பாடல்கள் குறித்து அவ்வப்போது பத்திரி கைகளிலும், சஞ்சிகைகளிலும் சிற்சில ஆய்வுக் கட்டுரைகளும் வானுெலியில் விவரணச் சித்திரங்களும் இடம் பெற்றன. ஆயி னும் மலையக நாட்டுப்பாடல்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப் படுத்துவதும், அதிகாரப்பூர்வமானதும், நம்பத்தகுந்ததுமான தொகுதியொன்று இதுகாறும் வெளிவந்திருப்பதாகத் தெரிய வில்லை. அத்தகைய தொகுதியை வெளியிடும் தகுதி திரு. ஸி. வி. வேலுப்பிள்ளைக்கு நிரம்ப உண்டு ஆசிரியராய், தொழிற்சங்கவாதியாய், பாராளுமன்ற உறுப்பினராய், அரசியல் பிரமுகராய், இலக்கிய கர்த்தாவாய், பத்திரிகை எழுத்தாள ராய், இவையாவற்றிற்கும் மேலாக அப்பழுக்கற்ற மனிதாபி மானியாய் வாழ்ந்துவரும் வேலுப்பிள்ளை அவர்களுக்கு நாட் டுப்பாடல்களில் நாட்டம் இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல, அவரது ஊனுடனும் உதிரத்துடனும் ஒன்றகிக் கலந்துவிட்ட பாடல்கள் இவை. ஈழத்தின் முக்சியமான கவிஞர்களில் ஒரு வராய்த் திகழும் ஆசிரியர், பல நூற்றுக்கணக்கான பாடல்க ளிலிருந்து வரைகர் மாதிருக்குப் பொருத்தமான சிலவற்றை தொகுத்து அளித்திருப்பது பலருக்குப் பயன்தரக்கூடிய நூல்' என்று முடிக்கிருர்.

61
அறுபதுக்குப்பிற்பட்ட - இலக்கிய விழிப்புணர்ச்சியால் உந்தப்பட்ட காலப்பகுதியில் சிலர் இந் நாட்டுப்பாடல்க ளில் தீவிர கவனம் செலுத்தினர். அவர் ளரில் சிலர் சி. வி. திரட்டி எழுதிய பாடல்களைத் தாமே கஷ்டப்பட் டுத் திரட்டியதாகவும் பாசாங்கு செய்தனர்.
கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்படுவதற்கென்று சேர்த்துக் கொள்ளப்பட்டச் சில பாடல்களை பல ஆண்டு களுக்கு முன்பே இவர் திரட்டி சஞ்சிகைகளில் வெளியிட் டிருக்கிருர் இந்த உண்மை நிலையை சி. வி. பின்வருமாறு குறிப்பிடுகிறர்.
'சில வருடங்களுக்கு முன் சஞ்சிகைகளுக்கு நான் எழுதிய கட்டுரைகளில் இடம்பெற்ற பாடல்களில் சில வற்றைத் தங்கள் கட்டுரைகளில் இளம் எழுத்தாளர்கள் உபயோகித்திருக்கிருர்கள். இளைய தலைமுறை எழுத்தாளர் கள் மக்கள் பாடல்களின் பெருமையைத் தெரிந்தவர்கள். இவைகளைச் சேகரிப்பதில் முயற்சியெடுத்தால் மங்கி வரும் மலைநாட்டு மக்கள் இலக்கியத்துக்குப் புனர் ஜென்மம் நிச் சயமுண்டு'
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல வார்த்தை களைப் பாவிப்பதற்கு கைதேர்ந்த படைப்பாளியாலேயே முடியும். சி. வி " அதற்கோர் உதாரணம்
11. அச்சேருத எழுத்துக்கள்
"நமது கதை", "மனித பிண்டம்’, Human Cargo - என்ற தலைப்புகளில் நூலுருவில் வெளிக் கொணர்வதற் கென்றே இவர் எழுதியவைகள் மலையகத்துத் துயரம் மிகுந்த கதையாகும்
சரித்திர ஆதாரங்களை ஆங்காங்கே பெய்து எழுதிய இவை இரண்டும் உழைக்கும் சமூகத்தின் உறங்கிபோன சரிதம்.

Page 36
62
'தமிழ் நாட்டிலிருந்து நம் மக்களை கூலிகளாகக் கொண்டு வந்தது இப்பொழுது பல கோணங்களிலிருந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக ஒரு சில ஆராய்ச்சி நூல்களும் வெளிவந்திருக்கின்றன, இவைகளெல்லாம் அந் தக் காலத்து உண்மைச் சரித்திரத்தையோ அல்லது அம் மக்க ளின் அனுபவங்களையோ ஈடு செய்யக் கூடிய முறையில் எழு தப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனினும், தொன்றுதொட்டு வழக்கம் போல தங்கள் அனுபவங்களையும் உணர்ச்சிகளையும், அவர்கள் பாடிய பாடல்களில் நமக்குத் தந் திருக்கிறர்கள். அந்தப் பாடல்கள் அவர்களது சரித்திரத்தை மணமணத்தோடும், உயிர்த் துடிப்போடும் தருகின்றன" என் பது சிவியின் முடிபு.
மலைநாட்டு மக்களைப் பற்றி நூல் வடிவில் வந்தவை களும், பி. எச். டீ பட்டத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டச் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளும், தொனியிலும். உள்ளடக் கத்திலும், சில தவருன கருத்துக்களைக் கொண்டிருக்கின் றன.
எதிர்கடை இல்லாத இடத்தில் இலுப்பம் பூவே சர்க்கரை என்ற நிலையில் இம் முயற்சிகள் பாராட்டு பெறு கின்றன என்பதை சி. வி. உணர்ந்து மலையக சரிதத்தை எழுதும் பணியில் ஈடுபட்டார்.
சி. வி எழுதியவைகள் ஏராளம், ஐம்பதாண்டுகாலம் அயராது எழுதிய கரங்கள் அவருடையவை.
சிலவே நூலுருவில் வெளிவந்திருக்கின்றன. எனினும், பத்திரிகைகளில் வெளிவந்தும், மறுபிரசுரமாகியும் அவைக ளுள் பலவும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன
வெளி உலகின் கவனத்துக்குக் கொண்டுவரப்படாத
இவரது படைப்புகளை - குறிப்பாக நூலுருவில் வெளியிடு வதற்கென இவர் எழுதியவைகளை அச்சில் கொண்டுவரு

63
வது மிக மிக அவசியமாகும். சி. வி. மலைநாட்டு மக்களைப் பற்றி ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகளை வெளி உலகு அறிந்து கொள்வது அவசியம்.
மலைநாட்டு மக்களைப்பற்றிய தவருண கணிப்புக்களையும்தப்பான கருத்துக்களையும் - பக்கம் சார்ந்த ஆராய்ச்சிகளை யும் ஒதுக்கி வைப்பதற்கு அவை மிகவும் உதவியாயிருக் கும்.
12. பல்பிடுங்கப்பட்ட பாம்!
"சி. வி தலவாக்கொல்லையின் எம் பி.யாக இருந்த போது ( 1947 - 1952) தனது தொகுதியின் மேம்பாட் டுக்குப் பொதுவாகவும் - தனது மக்களின் உயர்ச்சிக்குச் சிறப்பாகவும் உழைத்தார்.
தனது தொழிற் சங்கமான இலங்கை இந்திய காங்கி ரஸ்ஸை வளர்க்கவும் - அதன் கிளைகளை நகர்ப்புறங்களில் நிறுவவும் வருத்தி உழைத்தார்.
திடச்சித்தமும், விடாப்பிடியும், வெஞ்சினமும் மிகுந்த வெள்ளைக்காரத் துரைமார்களை எதிர்த்து இவைகளைச் செய்ய வேண்டியிருந்தன.
தோட்டங்களில் மன்றங்களையும், இளைஞர் கழகங்களை யும். விளையாட்டுக் குழுக்களையும் தோற்றுவிக்கும் உந்து சக்தியாக விளங்கினர்.
தனது வட்டகொடையில் "பாரதி மன்றத்தை" தோற் றுவித்தார். பெல்மோரல் தோட்டத்தில் ஐக்கிய விளை யாட்டுக் கழகத்தை தோற்றுவித்தார் பொகவந்தலாவை யில் ஐக்கிய வாலிபர் சங்கத்தை ஊக்குவித்தார் அங்கு இலவச நூலகத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்.
வட்டகொடை புகையிரதச் சேவையின் மேம்பாட்டுக்கும் நுவரெலியாவில் தேசிய சேமிப்பு வளர்ச்சிக்கும் பெரிதும்

Page 37
64
பணியாற்றினர். இவரது காலத்திலேயே தலவாக்கொல்லை லிண்டுல நகரங்கள் மின்சார வசதியைப் பெற்றுக் கொண்
65.
வட்டகெர்டை, ஹொலிரூட், தங்காகல்ல ஆகிய தோட்டங்களில் பாடசாலைகள் அமைக்க நிலம் பெற்றுக் கொடுத்தார்.
மக்கள் அவரை ‘ஏஜண்ட்" என்றே அப்போது விளிப் பர். தோட்டத் துரைமார்களில் சிலரும் அவ்விதம் விளித்தே கடிதம் எழுதினர். C. I. C. Agent என்று அவர் இனம் astr680TilULL-5f6 5rrg600Tib J9laisi Ceylon Indian Congress தொழிலாளர் யூனியனின் ஏஜண்டாக - செயல் தலைவ ராக கடமையாற்றியதே எனலாம்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் விசாலித்துப் பரவாத அந்நாட்களில் இவ்விதம் எம். பி.யாகத் தெரிவான எழு வரும் தம்தம் தொகுதிகளில் முழு நிறுவனத்தின் ஏகப் பிரதிநிதியாக - ஏஜண்டாக - செயல் தலைவராக - மொத் தத்தில் எல்லாமுமாக பணியாற்ற வேண்டியிருந்தது.
எனினும் இப்பதவி காலத்தில் - பல் பிடுங்கப்பட்ட பாம்பாகவே டி. எஸ். சேனநாயக்கா தனது ஆட்சியில் இந்த எழுவரையும் வைத்திருந்தார்.
எனவே இவர்களின் பணி தமது மக்களைச் சுற்றி சுற்றியே வரவேண்டியிருந்தது.
சுதந்திர உணர்வைக் கருகவிடாது வளர்ப்பதுவும், மக்களை ஒன்றுபட வைப்பதுவும், தீமையைக் கண்டு சோர்ந்துவிடாதிருக்கவும் தமது மக்களை அவர்கள் கவ னிக்க வேண்டியிருந்தது.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு"

65
என்ற பாரதியின் வரிகளே மன்றங்களுக்கும், சங்கங்களுக்
கும் நெறியுரையாயிருந்தன.
சி. வி' பாரதியின் சுதந்திர கருத்துக்களில் நீடித்த
ஈடுபாடு கொண்டிருந்ததும் இதற்கு உதவிற்று
தனது முதல் நூலான “முதற்படி"யை
“என்று தணியுமிந்த சுதந்திர தாகம் என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்’
என்று ஆரம்பித்தவரல்லவா சி. வி. வேலுப்பிள்ளை.
13. உண்மைக் கலஞன்
"சி. வி. ஓர் உண்மைக் கலைஞர். 'கலை படைப்பு என்பது பூரணத்துவம் பெற்ற ஒன்று அல்ல. அது ஒரு அர்ப்பணிப்பு - தொழுகை' என்று கூறியவர் அவர்.(29)
சி. வி. மனம் ஊன்றிப் பாடுபட்டு எழுதும் ஒரு எழுத்தாளர். "காந்திஜி" என்ற கவிதையை - இதில் பதி ஞன்கு வரிகளை - தம் திருப்திக்கேற்ப எழுதி முடிக்க அவ ருக்கு ஆறு மாதகாலம் பிடித்தது.
மலையக மக்களின் குடியுரிமை பறிமுதலாக்கப்பட்ட வேளை இ தொ. கா. மேற்கொண்ட போராட்ட வேகம் 'நூருவது நாள் என்ற கவிதையை அவருள் ஜனிக்கச் செய்தது. ஒரேயொரு இரவிலேயே இக் கவிதை முழுமை கொண்டது. உண்மைக் கலைஞனுக்கு அழகு இதுதான். எந்தவிதமான நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகாமல் அதே நேரத்திலே தனக்குத் திருப்தி ஏற்படுத்தும் விதத்தில் தனது படைப்புக்களை உலகின் பார்வைக்கு வைத்திடுதல்.
தம்மைச் சுற்றியிருந்த மக்களின் அவலங்களும் போராட் டங்களும்தாம் அவரைப் பாடவைத்தன என்றில்லை. சர்வ தேச நிகழ்வுகளும்கூட சி. வி.யைத் தாக்கங்கொள்ளச்

Page 38
66
செய்திருக்கின்றன. கென்யா வின் விடுதலை வீரன் ஜோமோ கென்யாட்டா சிறையிடப்பட்ட சமயம் அவர் அந்த எரி யீட்டியைப் பற்றியும் பாடினர்.
அணு ஆயுதப் பயங்கரங்களிலிருந்து உலகை காப்பது பற்றி அவரது ‘சமாதானக் கவிதை' பேசுகிறது.
அவரது மனைவியார் ஒரு சிங்களப் பெண்மணி. நண் பரொருவர் அவரிடம் இவ்வளவு தமிழுணர்ச்சி உள்ள தாங்கள் எப்படி ஒரு வேற்றினத்தவரை மணம் முடிக்க் முடிந்தது" என்றபோது சி வி யின் பதில் அவர் ஒரு பெண் என்பதால், தொழிற்சங்க வாழ்வில் வேலுப்பிள்ளை அவர் கள் கண்ட களங்களும் ஈட்டிய வெற்றிகளும் ஏராளம்! 30)
"கவிதை என்பது எளிய நடையிலிருக்க வேண்டும் என்பது இன்று எல்லாரும் ஏற்றுகொண்ட உண்மை. ஆஞல் அது இன்று நடையில் மாத்திரமல்ல உள்ளடக்கத் திலும் எளிமையாகிக் கொண்டிருக்கிறது அதனுல்தான் எளிய நடை எளிய நடை என்று கூறுகிருர்களே - அது என்ன வறிய நடையா ‘Poverty Stricken என்று இவர் அங்கலாய்த்தார் (31)
எளிமை என்ற போர்வையில் கவிதை எளிமை ஆகி விடக் கூடாதென்ற இந்தக் கலைஞரின் இலக்கிய முயற்சிக ளில் மட்டும்தான் கலை நயம் இருந்தது என்றில்லை.
அவரது பேச்சில், நடையில், செயற்பாடுகளில், தொழிற் சங்க அறிக்கைகளில், பத்திரிகைத் தலையங்கங்களில் அவை பளிச்சிட்டன,
'சாகித்திய மண்டலப் பரிசுகளைப் பகிஷ்கரிக்கக் கோரி ஒன்பது கலை, இலக்கிய அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கைப் பிரதியினை வாசித்துவிட்டு அந்த அறிக்கையோடு
நூற்றுக்கு நூறு கருத்து உடன்பாடு கொண்ட சி வி. சொன்னர், "இரண்டு பந்திகளின் வரிசையை மாற்றி அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இப்போதுள்ள

67
வரிசையில் அரசியல் தொனி மேலோங்கி இருக்கிறது நாம் கலைஞர்கள், கலைஞர்களின் பாஷையில் பேசவேண்டும்.
'வீடற்றவன் குறுநாவல் குறித்து நடந்த கருத்தரங் கில் "கதாநாயகன் நாவலின் இறுதியில் பலாங்கொடைக் காட்டில் இருந்து “போகுமிடந் தெரியலையே" என்று புலம் புவது பிற்போக்குத் தனமானது. இது சோர்வு வாதமா கும்' என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டபோது " நாவலின் கதாநாயகன் காட்டில் உட்கார்ந்து துக்கப்பட்டதைக் குறைபாடாக ஒருவர் சொன்னர். இருபத்தொரு வருஷங் களுக்குப் பிறகு ( கதை நிகழ்வது 1960-ல் ) 1981-ல் இதே பலாங்கொடைக் காட்டுக்குள் ஆயிரக்கணக்கான தோட் டத்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஒழிந் திருந்து புவம்பினர்களே! இதைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?' என்று குறிப்பிட்டு எல்லோர் மனதி லும் தாக்கமாய் பதியும் வண்ணம் தமது கருத்துக்களை நிதானமர்யும், தனக்கேயுரிய அமைதியுடனும் அவர் விவ ரித்து ‘கற்பனையில் புரட்சி பண்ண விரும்பும் முற்போக் குப் போலிகளிற்கு, வரலாறும் வாழ்க்கை யதார்த்தமும் ஓங்கி முகத்தில் அறைந்து சென்ற ஒர் உதாரணத்தை பல ரிடையையேயும் மின்னலாய்ப் பளிச்சிட வைத்தது.(32)
‘'சி. வி. யின் எழுத்துக்கள் என்றும் வாசிக்கத்தக் கவை 1952-ல் தான் மேற்கொண்ட சத்யாக்கிரகத்தைப் பற்றி “பிரதம மந்திரியின் காரியாலயத்தில் ஐந்து நாட் கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந் தார். ‘ஐந்து சிங்கள இளைஞர்கள் தன்னேடு இணைந்து சத்யாக்கிரகம் செய்வதைப் பார்க்கும்போது பழைய போர் வீரரான சேர். ஒலிவர் என்ன நினைப்பாரோ?" என்று குத் தலாக எழுதி இருந்தார். இக் கட்டுரையின் மறு பிரசு ரம் சமீபத்தில் வெளிவந்திருந்தது. இதை வாசித்துத் தனது பழைய முப்பது வருடங்களுக்கும் மேலான நினைவை தாயக நினைப்போடு-மெய்சிலிர்த்திருக்கிருர் ஜகமோகன். (33)
இந்த ஜக் மோகனின் குறிப்புகள்தாம் சிவியின் கவி தைகளைப் பற்றி பம்பாய் ஏட்டில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தன. இப்போது இவர் டியூடெல்லியிலே வசிக்கிருர், அநுபவம் வாய்ந்த "ஜேர்ணலிஸ்ட்'.

Page 39
68 -
எதையும் இதய சுத்தமாக செய்ய வேண்டும் - திருப்தி தரும் வகையில் செய்ய வேண்டும் என்பதில் "சி விக்கு நம்பிக்கை தனது மலையக நாட்டுப் பாடல்களைத் தொகுத்து இலங்கையில் வெளியிட முயற்சி செய்தார்" 'மாமன் மகளே' என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட அப்புத் தகத்தைத் தனக்குத் திருப்தி ஏற்படாததால் அப்படியே வைத்துவிட்டார்.
தமிழ் நாட்டில் வெளியான தனது எல்லாப் புத்தகங் களையும் அவரால் பார்க்க முடியாது போய்விட்டது.
அதற்குள் அவரது மரணம் சம்பவித்து விட்டது
அவரது இறுதி சடங்குகள் நடந்த இருபத்திரெண் டாம் திகதி - வேறு அரசியல் காரணங்களுக்காக - ஊரடங் குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது
அதனுல், அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதி மரி யாதைச் செய்ய முடியாது ஆதங்கப்பட் டோர் ஆயிரக் கணக்கானேர்கள் ஆவர்
அந்த ஆதங்கத்தை அவருக்கு இறுதி மரியாதை செய்ய முடியாது போண பல்லாயிரக் கணக்கானுேரில் நானும் ஒரு வன்’ என்று சரத் முத்தெட்டுவேகம நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
14. தேயிலை உள்ளவரை
ஆக மொத்தத்தில் ‘சி. வி. யின் சாதனைகள் என்ன? ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் படைப்பாளிகள் வரிசை யில் அவர் மற்றவர்களை விஞ்சி நிற்கிருர் எனலாம்.
“தாய் மொழி மூலம் கல்வி என்ற புதிய நியதியால் ஏற்பட்ட சமூக மாற்றத்தால், இலங்கை போன்ற சுதந்திர மடைந்த நாடுகளில் ஆங்கில மொழி மூலம் இலக்கியம் சமைக் கவல்ல எழுத்தாளர்கள் தோன்றுவது சாத்தியமல்ல வென்

69
றும் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்கள் அழிந் தொழியும் ஒரு கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாக விளங்கியவர்கள்” என்ற கணிப்பிலும், (34)
"ஆங்கிலக் கல்வியும், கிறிஸ்தவ சமயமும் யாழ்ப்பாணத் தவரிடையே ஏற்படுத்திய தாக்கங்களின் சாயலைச் சுப்ரமணியத் தின் ஒவ்வொரு கதைகளிலும் காணமுடியும். சமுதாயத் தைச் சமுதாய கண்கொண்டு பார்ப்பதுதான் இலக்கியம் என்று புதுமைப்பித்தன் சொல்வது உண்மையாயின் அதற்கு இலக் கணமாகத் திகழ்பவர் அழகு சுப்ரமணியம் என்று சொல்லி விடலாம்' என்ற வரையறைக் கூற்றிலும்(35)
“இங்கிலாந்துப் பத்திரிகைகளிலும், இல்லஸ்ட்ரட் வீக்லியி லும் தனது சிறுகதைகளைப் பிரசுரித்ததனுல் ஈழத்துக்கு இலக்கியப் பெருமையைத் தேடித் தந்துள்ளவர் நம்மவர்" 36) என்ற உரிமைக் கொண்டாடலிலும் சி வி. தனது படைப் பாற்றல் ஒன்றினலேயே தனியாக பிரகாசிக்கிருர், சமதை யாகவும், எஞ்சி நின்றும் பிரகாசம் புரிகிறர்.
டொம் ராமநாதன் தான் எழுதிய இறுதி நாவலில் தானே கதாநாயகன் என்று கூறுயதாக காவலூர் ராச துரை குறிப்பிடுகிருர் சி. வி யின் கடைசி நாவல் ஏறக் குறைய அவரது சுயசரிதையேதான்
ராமநாதனும், அழகு சுப்ரமணியமும் தமது இறுதி காலத்தில் விரக்தி அடைந்தவர்களாகக் காலத்தை கடத்தி வந்தனர்
SQ. 659. G3u urri இலட்சியப்பற்றும், சமூக உணர்வும், கொள்கைப் பிடிப்பும் கொண்டவராக இறுதிவரை வாழ்ந் 5rtř.
பாராளுமன்ற உறுப்பினராக விருந்த - பரபரப்பும் செல்வாக்கும் மிகுந்த வாழ்க்கை வாழ்ந்த சி. வி. யின் நினைவுகளில் இத்தகு விரக்தி இருந்திருக்க இடமுண்டு.

Page 40
70
ஆனல், அவரது எழுத்துக்களில் ஓரிடத்தில்கூட விரக்தி தலைக்காட்டியதில்லை. அமைதியும் அழுத்தமுமே காணப் LJL-L-6OT.
குமுறத் தொடங்காத எரிமலையும், கொதி நிலை எட்டாத நீரும், அவரது படைப்புக்களின் பாணியாய் அமைந்து, உடல் உழைப்பைத் தர மாத்திரமே லாயக்கானவர்கள் மலைநாட்டு மக்கள் என்று வேரோடிபோன எண்ணத்தை மாற்றி அமைக்க வழி சமைத்திருக்கின்றன என்பதை மறுக்க யாராலும் முடியாது.
இலங்கையில் தேயிலை உள்ளவரை, தேயிலை மக்களைப் பற்றிச் சிந்தித்த சி. வி. வேலுப்பிள்ளையின் படைப்புக்க ளும் நின்று நிலைக்கும் என்பது உறுதி.
★ \ \
ஒரு குறிப்பு
சி. வி. சில சிந்தனைகள் என்ற நூல் ஒரே வாரத்தில் அசுர கதியில் பதிப்பிக்கப்பட்டதால் எங்களையறியாமலேயே ஏற் பட்ட அச்சுப் பிழைகளுக்கு வருந்துகிருேம்.
பதிப்பாசிரியர்

10
11.
T2。
13,
14.
15.
6.
7.
71
மேற்கோள் - விவரங்கள்
புதுமைப்பித்தன் வரலாறு
- ரகுநாதன் - ஸ்டார் பிரசுரம் பக்-141 இனிப்படமாட்டேன்
- சி. வி. வேலுப்பிள்ளை - மீனுட்சி புத்தக நிலையம் உழைக்கப் பிறந்தவர்கள்
- பி. ஏ. செபஸ்டியான் - மாவலி - டிசம்பர் 1985 மறையா கவிஞர் சி. வி. வே.
- சியாமளா தெரேஸா - தினகரன் - 24-11-1985 மாவலியின் பணி
- மாவலி - ஜூலை 1973 மலையக இலக்கியக் கணிப்பு
- சி. வி. வேலுப்பிள்ளை - செய்தி - 9-5-1965 Tamil Writing in Sri Lanka
- K. S. Sivakumaran Page-17 சி. வி. வேலுப்பிள்ளைக்கு
- சூர்யசேன எழுதிய கடிதம் சி. வி. யின் படைப்புக்கள்
- கருணு - சிந்தாமணி - 24-11-1985 மலையக இலக்கியக் கணிப்பு
- செய்தி கட்டுரை மலையக இலக்கியக் கணிப்பு
- செய்தி கட்டுரை இந்திய வம்சாவளியினரின் குடியுரிமைப் பிரச்னை - என் சண்முகதாசன் - வீரகேசரி - 5-1-1986 இலங்கை இந்திய காங்கிரஸ் கமிட்டியின்
1952-1953வது வருட அறிக்கை - பக் 5-7 மலையகக்கவிதை இலக்கியம்
- சாரல்நாடன் - செய்தி - ஜனவரி 1970
தேயிலைத்தோட்டத்திலே
- சக்தியுரை - செய்தி வெளியீடு - 1969 ‘நமது கதை"
- சி. வி. யின் தட்டச்சுப் பிரதி The Sunday Times
- 50th Anniversary Number - Page 7

Page 41
72
18. மலையகக் கவிதை இலக்கியம்’
- மலையான் - தினகரன் - டிசம்பர் 1963 19. உழைக்கப் பிறந்தவர்கள்
.பொ. கிருஷ்ணசுவாமி - மாவலி - ஜூலை 1973 20. Born to Labour
- Preface - M. D. Gunasena Ltd - 1970 21. Life Stories of Men Who Shaped History
- Edward C. Lindeman - 1952 22. பேணுச்சித்திரம்
- சி. வி. வேலுப்பிள்ளை - தினகரன் - மார்ச் 1959 23. அட்டைப்பட ஓவியங்கள்
-- தங்கதேவன் - மல்லிகைப்பந்தல் - பக் 33 24. மலையக இலக்கிய கணிப்பு'
ட செய்தி கட்டுரை 25. பாலம்"
- தெளிவத்தை ஜோசப் - வீரகேசரி - 7-4-1985 26. ‘நமது கதை"
- தட்டச்சுப் பிரதி 27. நாட்டுப்புற இலக்கிய வரலாறு
- டாக்டர் சு. சண்முகசுந்தரம் - 1980 - பக் 49 28, 'நமது கதை'
- தட்டச்சுப் பிரதி 29. குண்டலகேசி
- கொழும்பு கலைச்சங்க நினைவு மலர் 30. அட்டைப்பட ஓவியங்கள்
- தங்கதேவன் கட்டுரை - மல்லிகைப் பந்தல் - பக் 33 3 அக்னிப்பூக்கள்?
- ஈழவாணன் - முன்னுரையில் முருகையன் 32, 'ഷി'
- அ. யேசுராசா - பக் 780 33. Congress News
- October 1986 34. தேனருவி
- காவலூர் ராசதுரை - நவம்பர் 1962. 35. மல்லிகை
- வே. சு. மணியம் - பொங்கல் மலர் 1971
36. மல்லிகை
- டொமினிக் ஜீவா - மார்ச் 1971