கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2002.04

Page 1
வவுனியா கலை இலக்
 

ந்சிகை
0.
இந் இத
கலை இலக்கிய ச
sae | – - 잃 前 历 s=
கிய நண்ப

Page 2
வவுனியா கலைஇலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 5 * ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்படும் IDIருதம் இதழ் நீண்ட நாட்கள் சிறப்புற விளங்க வாழ்த்துகிறோம்
METO TRADERS
IDEALERSIN:- ELECTRICAL GOODS&PLUMPINGITEMS
0. 35A, Bus Stand, Regd No: 1837 Shoping Complex, Phone No.: 024 - 22572 §ಯಾ Road,
vunya.

ஆசிரியர் குழு
அகாங்கள்
கந்தையா டிரீ கணேசன்
அச்சு:
udøöst-šææt åfærøgads
குடியிருப்பு, வவுனியா.
другАи: 034 - 23143
வடிவமைப்பு:
க.ரனேஷ்
இலச்சினை:
ப. சிவசமர்பு
தொடர்புகட்கு:
சிபாதிகை, * அலைகை விதி 45 MOUS இநம்பைக்குளம்,
agagafaua.
épw.ớư: 024 - 21310
G66sful:
ajagatabas 6AsõSu
நண்பர்கள் வட்டம்.
கட்டுரைகள்
ás வவுனியாகவை இவக்கிய நண்பர்கள் வட்டத்தின்
நான்கு வருட கலை இவக்கியப்பணிகள்
த.விஜயசேகரன்
ஈழத்தமிழருக்கான இசையும் நடனமும்
(psóosopos Gau.acijipofil Ib
al சமூக, சமய, கலை, இலக்கிய மட்டங்களில்
பணியாற்றும் நிறுவனங்களின் சமூகக் கடப்பாடுகள் ஒரு விழிப்புணர்வு உசாவல்
பொ.ந.சிங்கம்
al ஆர்.சண்முகசுந்தரத்தின்"நாகம்மாள்” நாவல்
விமரிசனக் குறிப்பு
ந.இரவீந்திரன்
ஜந்து ஆண்டுகளுக்குமேலாக செயற்பட்டுவரும்
வவுரியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
கனக, இரவிந்திரன்
தமிழ் மொழியின் அடைமொழிகள்
தமிழ்மணி அகளங்கள்
ás வட்டத்தின் விருது பெறும் இருவர்
ás ás
qp6öcb6obeuf GenJ. aŭĵorbeoflugĥ
கலைஞர் எஸ்.ரி.அரசு
பல்கலைக்கழகப் பட்டம் பெறும் கலை இவக்கிய வாதிகள் இருவர்
asjšonum samorarai
கவிதைகள்
வைகாசிக்காற்று
ar, Udindasarjarai மறக்காதே
ஜெயம்
3

Page 3
உங்கலுநடன்.
1997ம் ஆண்டு பெப்ரவரிமாத முழுநிலா நாளன்றுதொடக்கப்பெற்ற வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின்
நீண்ட நாள் கனவு அதன் 5* வருட நிறைவில் நனவாகிறது. கலைஇலக்கிய சஞ்சிகை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற நண்பர்களின் கோரிக்கையை ஒரு சிறிய அளவில் முன்னெடுக்கும் முயற்சியே இது
தமிழகத்திலும், ஈழத்திலும் தரமான இலக்கிய சிறு சஞ்சிகைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சில காலத்தால் எதிர் கொள்ள முடியாமல் தூங்கி விட்டன. மாருதம் மெல்லெனப் பாயும் தண்ணி போல கல்லையும் அரித்துச் செல்லும். வருடம் இருமுறை வெளியிடும் உத்தேசம் உண்டு.
வவுனியாவில் வாழும் கலை இலக்கிய நெஞ்சங்களின் படைப்புக்களுக்கு களம் கொடுப்பது இதன் முதற்பணி. எனவே இளைய தலைமுறையினருக்கு பிரத்தியேகமாக விடுக்கப்படும் வேண்டுகோள் இது. வாருங்கள் வந்து இணையுங்கள், இலக்கிய வாசிப்பினுடாக சமூகப் பிரக்கிஞை பெற்று செயல் தளத்துக்கு நடைபயிலுங்கள் வாழ்வு ஒரு இனிமையான அனுபவம ஆக இருக்கும்.
- ஆசிரியர்கள்
ஐந்தாவது ஆண்டில் வட்டம்
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் தனது ஐந்தாவது ஆண்டிலும் தனது கலை இலக்கிய நடவடிக்கைகளை தொடர்ந்தது “ஈழத்து கவிதைகள;’ பற்றி பேராசிரியர் சிவசேகரமும் (49) சிறுவர் இலக்கியம் பற்றி (51 & 58) அகளங்கனும் திரு.க.ழரீகணேசனும் பாரதியார் கவிதைகள் பற்றி (53) திரு.செ.அழகரத்தினமும் (பீடாதிபதி, கல்வியியல் கல்லூரி) பண்டாரவன்னியன் பற்றி (55) முல்லைமணி வே. சுப்பிரமணியமும், திருக்குறள் பற்றி திரு.ஜகதிர்காமசேகரமும் (57) உரையாற்றினர். ஜம்பத்திரண்டாவது நிகழ்வு நடிகள் திலகம் சிவாஜிகணேசனின் நினைவாக பாடசாலை மேடையேற்றங்களுடன் இடம்பெற்றது. வட்டத்தின் வெளியீடுகளான செல்லையா குமாரசாமியின் கூடில்லாக்குஞ்சுகள் நாவலும், கனகரவி (இந்தமழைஒயாதோ), கோகுல தாஸ் (பாலைவனத்தில் ஒரு பனித்துளி) ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளும் சோ.ஜெயச்சந்திரனின் புகையிரதம் இசைநாடாவும் கந்தையா முரீகணேசனின் நிதர்சனத்தின் புத்திரர்கள் நாடக எழுத்துருக்களும் வெளியிடப்பட்டன. சமூகப் பிரஞ்ஞை கொண்ட கலை இலக்கிய செயற்பாடுகளில் இளையதலைமுறையினரையும் வழிகாட்டிச் சொல்லும் வட்டத்தின் செயற்பாடுகளை ஆக்கமும், ஊக்கமும் தந்து ஒத்துழைக்கு சுந்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினருக்கு நன்றி கூறுவது இங்கு பொருத்தமானது.
4

GIGGULIT GODGJ GGVõitlu ÖTLÄTESGÏT GALLğÖT TÖÖTG GULL HEDGA) GSGAVŠIWÜ UGIMö6Í
-த. விஜயசேகரன்
தனிமனிதனின் வளர்ச்சியென்பது வாழ்க்கையின் பல வடிவங்களில் பல படிக்கட்டுக்களாக அமைந்துள்ளது. இவ் வளர்ச்சியென்பது தனியே பொருளாதார, கல்வி வளர்ச்சிகளில் தங்கவில்லை இவற்றோடு சமூக அனுபவத் தெளிவுகளிலும் அது தங்கியுள்ளது. கலை இலக்கியங்களை பொறுத்தமட்டில் இவை ஒரு மனிதனின் வளர்ச்சியில் பாரிய பங்கு வகிக்கின்றது. கலை இலக்கியங்கள் தோற்றம் பெறவேண்டும் வளர்ச்சி பெறவேண்டும் என்பதில் நிறைய பேருக்கு ஆர்வம் உள்ளது. அந்த ஆர்வத்தை வெளிக் கொண்டு வருவதற்கு களங்களும் தளங்களும் பல வழிகளில் பல ஊடகங்களில் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
வவுனியாவில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தை பொறுத்த மட்டில் (க.இ.ந.வ.) அது ஆரம்பிக்கப்பட்டதிலும் பல்வேறுபட்ட நோக்கப்பாடுகள் இருக்கின்றன.
本 ஆரம்ப கட்டத்தில் இருக்கும் அதாவது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சமாந்தரமாக ஓர் இலக்கிய அல்லது கலை ஆர்வத்தை தூண்டுவது அல்லது அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது
家 இலக்கிய தெளிவு தேவைப்படும் ஆர்வலர் களுக்கு, அல்லது தேடல் நோக்கிச் செல்லும் இளம் கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒர் உந்து சக்தியாக விளங்குவது.
冰 கலை இலக்கியவாதிகள் தங்களின் கலை இலக்கியம் சம்பந்தமான ஓர் இரை மீட்டல்களுக்கு உறுதுணையாக அமைய உதவுவது.
இது போன்ற பல்வேறுபட்ட நோக்கங்களுக்காகவென 1997ம் ஆண்டு பெப்ரவரி மாத முழுநிலா தினத்தில்(2102.1997) 17 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வட்ட அமைப்பே இந்த க.இ.ந. வட்டம் ஆகும்.
வவுனியாவில் வாழ்ந்து வருகின்ற, இலக்கிய பணிகளில் ஈடுபடுவர்களாகிய தமிழ்மணி அகளங்கன், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ந.இரவீந்திரன், வவுனியா வளாக ஆங்கில விரிவுரையாளர் க.ழரீகணேசன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் ஜகதிர்கமாசசேகரன், மற்றும் 1.B.Cநிருபர் கனக ரவீந்திரன், கா. கணபதிப்பிள்ளை போன்றோரின் உந்துதலுடன் வவுனியாவில் வாழும் கலை இலக்கிய ஆர்வலர்கள்,
5

Page 4
பல்கலைக்கழக வளாக, கல்வியற் கல்லூரி, பாடசாலை மாணவர்களும் இணைந்து கொண்டனர். இவ்வாறு யாரும் கருத்துக்களை தடையின்றி பரிமாறலாம் என்ற நோக்கோடு இந்த முழுநிலா தினக் கருத்தாடல் நிகழ்வினை. ஆரம்பித்திருந்தனர்.
க.இ.ந வட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 4 ஆண்டுகள் கடந்து 47 நிகழ்வுகளை பல்வேறு கருப்பொருள்களின் கீழ் நடாத்தப்பட்டுள்ளது. சங்க கால இலக்கியம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், விஜய நாயக்கள் காலம், என காலங்களின் அடிப்படையிலும் மறுபுறத்தே முற்போக்கு எழுத்தாளர்களது சிறுகதைப் பங்களிப்பு, புதுக்கவிதை, தமிழில் சிறுகதை வளர்ச்சி, ஈழத்து நாவல் இலக்கியம் என இலக்கிய வளர்ச்சி பற்றிய கருத்தாடல்களும், வவுனியாவில் பட்டிமண்டப அரங்கு, ஈழத்து தமிழ் இலக்கியத்தில் வன்னி இலக்கியங்களின் பங்களிப்புக்கள், வன்னிப் பண்பாட்டு பகைப்புலத்தில் வன்னியூர் கவிராயரின் பங்களிப்பு, பாரதிதாசன் கவிதைகளும் அரசியலும், பாரதியார் பாடல்கள், 20ம் நூற்றாண்டில் ஈழத் தமிழ் கவிதையும் அது ஏற்படுத்திய தாக்கமும் போன்ற பிரதேச, கால இலக்கிய பங்களிப்புகள் பற்றி ஆராயப்பட்டு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இவற்றோடு மட்டுமல்லாமல் காலத்திற்கு காலம் வெளியிடப்படும் நூல்கள், சஞ்சிகைளின் அறிமுகமும் கருத்தாடல்களும் இடம் பெற்று வந்துள்ளன. க. பூரீகணேசனின் “யாழ்ப்பாண தமிழ் நாடக அரங்கு’, ந.இரவீந்திரனின் ’பின் நவீனத்துவமும் அழகியலும்" ச.அருளானந்தத்தின் "கடலும் காவிரியும்", தாமரைச் செல்வியின் “ஒரு மழைக்கால இரவு', ந.இரவீந்திரனின் “கலாச்சாரம் எதிர் கலாசாரம் புதிய கலாசாரம்’ தமிழ்மணி அகளங்கனின் “ இலக்கிய சரம்” வவுனியா வளாக கலை கலாசார மன்றத்தின் “தடம்” முதலாவது சுவடு, கவிஞர் சு.வில்வரட்ணத்தின் “நெற்றிமண்’ திருமலை க.தேவகடாட்சத்தின் “ குருதி மண்”, தர்மினியின் “உணர்வுக் கலசம்”, மாநிலாவின் “பூபாளத்துப் பூக்கள்’, சோ.ஜெயச்சந்திரனின் “இருட்டு ஒளி”, சுதாகரின் “நிலம்”, அருணா செல்லத்துரையின் “நுகள்கலைகளும் இலங்கையில் தொலைக்காட்சியும்” நூலும், விந்தனின் இதயதரிசனம்” தொலைக்காட்சி நாடகமும் கனகரவியின் "விடுதலைக்காய்” நூலும் கருத்தாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
க.இ.ந. வட்டத்தில் பாடசாலை, பல்கலைக்கழக, மாணவர்களும் இணைந்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு உபயோகப்படக் கூடிய பாடவிதானங்களில் உள்ளடக்கப்பட்ட சில நாவல்கள், சிறுகதைகள் கருத் தாடல்களுக்காக எடுக்கப்பட்டன. அந்த வகையில் “நாகம்மாள்”, “கனகாம்பரம்” “பாற்கஞ்சி”, “கானல்”, “கமலாம்பாள் சரிதம்”, “தவப்பயன்” என்பன அடங்கும்.
இவ்வாறு க.இ.ந. வட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்காக அதனது கருத்தாடல் தொடரின் எட்டாவது நிகழ்வில் அமைப்புக்குழு என ஒரு குழு உருவாக்கப்பட்டது. அதில் திரு கந்தையா றிகணேசன் அவர்கள் செயலாளராகவும், தமிழ்மணி அகளங்கன், திரு. நஇரவீந்திரன், திரு.க.இரவீந்திரன்,
6

(கனகரவி) செல் வி.செ.யோகேஸ் வரி, (தற்பொழுது இல்லை) திரு.ஜகதிர்காமசேகரன் இவர்களோடு பின்னர் திருதவிஜயசேகரன், திரு.கறணேஸ் என்போரும் தெரிவுசெய்யப்பட்டனர்
* கல்வி கற்றோரின் செமியாக்குணமே விமர்சனங்கள்’ என அண்மையில் எஸ்.பொன்னுத்துரை (எஸ்பொ) அவர்கள் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டிருந்தார். விமர்சனங்கள் செய்வது தொடர்பாக பல கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்ற பொழுதிலும் விமர்சனம் என்பது ஒருவரது திறமைகளை மட்டம் தட்டக் கூடாது எனவும் அது அவ்விலக்கியவாதியை அல்லது எழுத்தாளனை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு வருகின்றது. திரு.எஸ்.பொ வின் கருத்துப் போலவே க.இ.ந வட்டத்திற்கும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. க.இ.ந வட்டத்தின் 46வது நிகழ்வாக சமூக,சமய, கலை, இலக்கிய மட்டங்களில பணியாற்றும் நிறுவனங்களின் சமூகக் கட்டுப்பாடுகள் சம்பந்தமான ஒரு விழிப்புணர்வு உசாவல்' நடைபெற்ற பொழுது - அங்கே வவுனியா மாவட்டத்தில் சிறுவர்களின் பிச்சை எடுத்தல், மற்றும் சிறுவர் துஷபிரயோகம், சிறுவரை வேலைக்கமர்த்தல், போன்ற காரண காரியங்கள், அதன் விளைவுகள் சம்பந்தமான கருத்தாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதும் இது வேலையற்றவர்களின் பொழுதுபோக்குக்காக கூட்டப்படும் கூட்டம் என்ற கருத்தும் அங்கு முன்வைக்கப்பட்ட போதும் அதற்கு பதிலாக க.இ.ந வட்டம் ஏன் இவ்வாறான கருத்தாடல் நிகழ்வுகளை நடத்தி வருகின்றது என விளக்கமும் அளிக்கப்பட்டது. இவ்வாறாக பல சமூக, கலை, கலாசார, வளர்ச்சிக்கான பங்காளர்களாக கடந்த நான்கு வருடமாக க.இந. வட்டம் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறாக பல நிகழ்வுகளும் நடைபெறுவதற்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் பெரும் பங்காற்றியுள்ளது. இவர்களுடன் வவுனியா நகரசபை, வவுனியா வளாகம் மற்றும் பாடசாலைகளும் (எமது கருத்தாடல் நிகழ்வுகளில் ஒன்று கிராமிய மட்டத்தில் வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது) தமது பங்களிப்பை செய்து வருகின்றன.
தற்போது கலைச் செயற்பாடுகளுக்கு களங்கள் மிக அரிதாக காணப்படுவதனால் கருத்தாடல்களின் இணை நிகழ்ச்சியாக கடந்த ஒரு வருடமாக கலை நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றன. இசை நிகழ்வு, நாடகம், நடன நிகழ்வு போன்ற நிகழ்வுகள் கருத்தாடலின் முன் முப்பது நிமிடங்கள் மேடையை அலங்கரிக்கின்றன.
ஆக மொத்தம் எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியும் ஏனையவர்களிடமிருந்து எமக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ளும் ஒரு பகிர்வாகவும் இக் கருத்தாடல் நிகழ்வுகள் அமைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
(தெரிவுசெய்யப்பட்ட பகுதி தினக்குரலில் வெளியானது) (0704.01)
O
7

Page 5
ஈழத்தமிழருக்கான இசையும் நடனமும்
gabosundof Ganain iridofilii.
இன்று இலங்கையில் தமிழ்த்தேசியம் பற்றி பரவலாகப் பேசப்படுகின்றது. பெரும்பான்மை இனத்துடன் சிறுபான்மை இனம் சங்கமமாகித் தமது தனித்தன்மையை இழக்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு பேசிய மேதாவிகள் கூட இன்று தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுகின்றார்கள். தேசமில்லாமல் தேசியமா? தமிழருக்கென ஈழத்தில் பாரம்பரியத் தாயகம் உண்டு என்றெல்லாம் சொல்கின்றார்கள். ஒரு தேசிய இனத்தின் அடையாளமாக மொழிமாத்திரமன்றி ஏனைய பண்பாட்டம்சங்களும் திகழ்கின்றன. இலக்கியம், சமயம், இசை, நடனம், கூத்து, ஒவியம், சிற்பம், போன்ற பண்பாட்டம்சங்கள் முக்கியமானவை. தனித்துவமான பண்பாட்டு அம்சங்களில்லாமல் ஒரு தேசிய இனம் இருக்க (UP9UTg5!.
இலங்கை, இந்திய உபகண்டத்திற்கு குறிப்பாகத் தமிழகத்திற்கு அண்மையில் இருக்கிறது. பெளதீகரீதியில் பிரிந்திருக்கும் இருநாடுகளிலும் கிறிஸ்துவுக்கு முற்பட்டகாலந் தொடக்கமாகத் தமிழ்மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவிற்கு அண்மையில் இருப்பதனாலும் அரசியல் பண்பாட்டுத் தொடர்புகளாலும் தமிழகத்தின் பண்பாட்டுத்தாக்கம் இலங்கை மக்களில் படியத்தான் செய்யும். அதே வேளையில் இலங்கைக்கே ஏற்ற தனித்தன்மைகளும் இல்லாமல் போகாது.
ஈழத்திற்குத் தமிழகத்தைவிட வித்தியாசமான சமூக அமைப்புக்கள் உண்டு, வித்தியாசமான வாழ்க்கை முறை உண்டு, வித்தியாசமான உலகப
பார்வை உண்டு. இவ்வாறு பல்வேறு விடயங்களில் வேறுபாடுகள்
உணரப்படுகின்றன. தமிழகத்திலும் இலங்கையிலும் ஒரே மொழியான தமிழ்மொழியைப் பேசுபவர்கள் இருந்தாலும் பேசப்படுகின்ற முறையில் வித்தியாசமுண்டு. சிந்தனையிலும் உளப்போக்கிலும் வேறுபாடுகள் உண்டு. இலக்கியம் சமுதாயத்தின் விளைபொருளாக இருப்பதால் ஈழத்துத் தமிழ் இலக்கியம், தமிழகத் தமிழ் இலக்கியத்தை விட வேறுபட்ட விதத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. தற்போது பல்கலைக்கழகங்களிலும் உயர் வகுப்புக்களிலும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சில குறைபாடுகள் இருந்தபோதும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் தோன்றிவிட்டன.
ஈழத்தில் தமிழகத்தை விட வேறுபட்டவிதத்தில் அமைந்த நாட்டுக் கூத்துக்களும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வடமோடி, தென்மோடி, முல்லைமோடி, விலாசம், சிந்துநடைக்கூத்து, எனப் பலவகையான கூத்துக்கள் ஈழத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, முதலான இடங்களில் ஆடப்படுகின்றன. இவைகள் ஈழத்துக்கேயுரிய தனியான பண்புகளை 96.0L6.
8

ஆனால் ஈழத்தழிழருக்கென தனியான, தமிழகத்திலிருந்து வேறுபட்ட இசை, நடன மரபு உண்டா என்பது தற்போதைய வினாவாகும். இங்குள்ள தமிழர்கள் கள்நாடக இசையையே தமது இசையாகக் கொள்கின்றனர். அதனையே பயில்கின்றனர். இசைக் கச்சேரிகளிலும் கர்நாடக இசையே இடம்பெறுகின்றது இதைப்போலவே பரதநாட்டியத்தையே தமது நடனமாகக் கருதுகின்றனர். ஆனால் இவை தமிழகத்திற்குரியவை. ஈழத்தவள் தமிழ்நாட்டிற்குச் சென்று இவற்றைப் பயின்று வந்தனர். இவற்றையே இலங்கையிலும் பரவலாகப் பயிற்றுகின்றனர். சர்வதேச அரங்கில், நடைபெறும் விழாவிற்கு ஈழத்து இசை, நடனம் எனக் கள்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும் கொண்டு போக முடியுமா? கொண்டு சென்றாலும் அவை ஈழத்தமிழரின் பண்பாட்டு அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்படுமா?
எனவே ஈழத்துத் தமிழ்த்தேசிய இனத்துக்கான இசை, நடன மரபுகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். சிங்களமக்கள் தமக்கென இசை, நடன மரபுகளை உருவாக்கியுள்ளனர். தமிழகச் சஞ்சிகைகள் இலங்கையை அடையாளப்படுத்த கண்டிய நடனத்தையும், தலதாமாளிகையையும் இளநீர் விற்கும் கன்னியரையும் படம் போடுகின்றனர்.
ஈழத்திற்கான இசையை நாம் புதிதாக உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே எம்மிடத்தில் எமக்கான இசை இருக்கிறது. ஆனால் அந்த இசை நாட்டார் பாடலுடனும், நாட்டுக்கூத்துக்களுடனும் இணைந்திருக்கின்றது. இவற்றைப் பேணிவந்தோர் கல்வி அறிவு குறைந்த சாதாரணமக்கள் ஆக இருந்ததால் இவை தூசு படிந்துள்ளன. இசைவிற்பன்னர் இவற்றைப் பிரித்தெடுத்து ஸ்வரப்படுத்தி எமக்கான இசையை உருவாக்கலாம். நாட்டுக்கூத்துகளிலும், சிந்து நடைக்கூத்திலும், நாட்டார் பாடல்களிலும் பல்வித இசைவிகற்பங்கள் காணப்படுகின்றன. கர்நாடக சங்கீதம் கூட நாட்டார் இசையிலிருந்து உற்பத்தியானதுதான், அதைப்போலவே நமக்கான இசையை நாம் உருவாக்கலாம். ஈழத்தமிழரின் இசைமரபு ஆராய்ச்சி தொடங்கப்பட வேண்டிய இடம் கிராமப்புறமேயாகும். பரம்பரை பரம்பரையாகத் தனித்துவமான முறையிலே நவீன நாகரீகக் கலப்பற்ற முறையில் வாழ்ந்து வரும் கிராமிய மக்களால் பயன்படுத்தப்படும் தூய இசைவடிவமே நாட்டார் இசையாகும். இவற்றை ஒலிநாடவில் பதிவு செய்து பாதுகாக்கும் முயற்சியை அறிஞர் சிலர் மேற்கொண்டுள்ளனர் ஆனால் நாட்டார் இசையிலிருந்து ஈழத்துக்கான இசைவடித்தை உருவாக்க எவரும் முயன்றதாகத் தெரியவில்லை.
பூர்வீக மக்களின் கலைகளில், முதலில் அவர்களது இசையும் நடனமும் முதன்மை பெறுகின்றன. தொடக்க காலத்தில் இவ்விருகலைகளுமே மக்களது வாழ்க்கைப் பின்னணியில் இன்றியமையாத பயன்பாட்டு முக்கியத்துவம் பெற்றனவாக அமைந்தன. இவ்வகையான ஆட்டங்களில் ஒன்றே, தமிழ்மக்கள் வாழ்க்கையில் சமய பின்னணியில் இடம்பெறும் கரக ஆட்டம் ஆகும். இது இசையும் நடனமும் கலந்ததொரு கலையாகும்.
நாட்டுக் கூத்துக்களான அலங்கார ரூபன் நாடகம், வாளபீமன் நாடகம், இராமநாடகம், தருமபுத்திர நாடகம், வெடியரசன் நாடகம், வீரகுமார நாடகம்,
9

Page 6
பப்பிரவாக நாடகம், சூரசம்மாரம், கோவலன் கூத்து, குருகேந்திரன் போர், என்றிக் எம்பரதோர் நாடகம், குசேலநாடகம் முதலானவற்றில் பல்வேறு விதமான ஆட்டங்கள் இடம்பெறுவதைக்காணலாம். இந்த ஆட்டங்களுக்குரிய தாளக்கட்டுகள் அண்ணாவிமாரின் வாயிலாகவே கேட்டறியத்தக்கன.
நாட்டுக் கூத்துக் களில் பயின்றுவரும் ஆட்டமுறைகளில் முக்கியமானவற்றைப் பிரித்தெடுத்து நமக்குரிய நடனத்தை உருவாக்கலாம் முல்லை மோடியில் அமைந்த கோவலன் கூத்தில் இடம் பெறும் வஞ்சிப்பத்தன் ஆட்டம், ஆட்டநுணுக்கங்கள் நிறைந்த விறுவிறுப்பான ஆட்டமாகும். இதைப் போலவே மாதோட்டப்பாங்கு, யாழ்ப்பாணப் பாங்கு கூத்துக்களிலும் பல்விதமான ஆட்ட முறைகளைக் காணலாம். நாட்டுக்கூத்துகளில் இடம்பெறும் கட்டியகாரன் ஆட்டம் வெவ்வேறு கூத்துக்களில் வெவ்வேறு முறையில் அமைந்துள்ளது.
இவை அனைத்தையும் கூர்ந்து நோக்கி சிலவகை ஆட்டங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மெருகேற்றி எமக்கான நடனத்தை உருவாக்கலாம். இதனைக் செய்யக்கூடியவர்கள் நடன விற்பன்னர்களே.
எனவே ஈழத்தமிழருக்கான இசை நடன மரபுகளை உருவாக்க வேண்டியது இன்றைய நிலையில் மிகவும் அவசரமும் அவசியமானதுமான பணியாகும். இசை நடனத்துடன் தொடர்புடையோர் இத்துறையில் முயல்வார்களாக, ጳ
 

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் கருத்தாடல் நிகழ்வு - 46
சமூக, சமய, கலை, இலக்கிய மட்டங்களில் பணியாற்றும்
நிறுவனங்களின் சமூகக் கடப்பாடுகள் - ஒரு விழிப்புணாவு உசாவல்
கருத்துரை : சமுக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள்
(fiti Ltd. (Socio Economic and environmental Developers-Seeds) - பொ.ந.சிங்கம்
உலகின் அதிநவீன தொழில்நுட்ப மற்றும், பொருளாதார, சமூக வளர்ச்சிகளின் மத்தியிலும் வறுமை, போர் என்பவற்றின் கோரக் கரங்களிற்குள் சிக்குண்டிருக்கும் மக்களின் அவல ஒலங்கள் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படுகின்ற அனைத்து நாடுகளிலுமே இந் நிலைமையை கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வகையில் இலங்கையிலும் வறுமை என்பது நிரந்தரப் பிரச்சினையாக இருந்துவர அதன் மேலாக அண்மைக்காலத்தில் போரின் பேரிடிகள் மக்களின் ஒருபகுதியினரை விபரிக்க முடியாத பேராபத்துக்குள் தள்ளியுள்ளமை யாவரும் அறிந்ததே.
போரிற்கான நியாயப்பாடுகளிற்கப்பால் மக்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற இழப்புகள், இன்னல்கள், தொடரும் விளைவுகள் என்பன கருத்தில் எடுக்கப்பட வேண்டியவையாகவுள்ளன. போரில் ஈடுபட்டுள்ள தரப்புக்களில் ஏற்பட்ட கூட்டுமொத்த மரணங்களை விட சாதாரண பொது மக்களின் மரணங்கள் பல மடங்கு அதிகமாகும்.
இதனால் கணவனை இழந்த மனைவிகளினதும், மனைவியை இழந்த கணவர்களினதும், பெற்றோரைச் சுற்றத்தாரை இழந்து “அநாதைகள்’ எனப்பட்டம் சூட்டப்பட்ட குழந்தைகளினதும் அவலக் கதைகள் இங்கு புதியவை அல்ல.
தமது வாழிடங்களையும் பல பரம்பரைகளாக முயன்று சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த சொத்துக்களையும் போரினால் பறிகொடுத்து, ஏதிலிகளாக்கப்பட்டு “அகதிகள்” எனப் பட்டம் சூட்டப்பட்டு, சொந்த மண்ணை விட்டும், சொந்தமண்ணிலேயும் அலைந்து திரியும் அவலமும், முகாம்கள் எனப்படும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு மனிதம் நசுக்கப்படும் காட்சிகளும் இங்கு பழக்கப்பட்டுப் போனவை.
பெற்றோரின் ஆதரவில் பள்ளி சென்று துள்ளித் திரியவேண்டிய குழந்தைகள் குடும்பத்தலைவர்களாக, குடும்பச் சுமைகளைத் தாங்கி வீடு வீடாக போத்தல் சேகரித்தும், புதிய எஜமானர்களிடம் மிகக் குறைந்த ஊதியத்திற்கு தொழில் செய்தும், பிழைப்பு நடாத்துவதுடன், அவர்களே பின் கசிப்பு பீடீ போன்றவற்றிற்கும் அடிமையாகி கீழ் நிலையான வாழ்முறைக்குள் தள்ளப்பட்ட நிலமைகளையும் இங்கு சாதாரணமாகக் காணமுடிகின்றது.
முகாம்களுக்குள் 10 x 10 அடி வாழ்விடங்களுக்குள் ஆரம்பிக்கும்
11

Page 7
ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் எம் விழுமியங்களையும், சமூகத் தனித்துவங்களையும் உடைத்து விபச்சார நிலையங்களைத் தோற்றுவிக்கும் அளவுக்கு திசை மாறி செல்லும் நிலை மிக அவலமானது.
இவை தவிர உறுப்புக்களை இழந்து அங்கவீனர்கள் ஆகியவர்களதும், இழப்புக்களால் மனநோயாளிகளாக்கப்பட்டவர்களதும், காரணம் தெரியாமல் சிறைகளில் விழிபிதுங்கிக் கிடப்பவர்களதும் கதைகள் பல்லாயிரக்கணக்கில் தனித்தனியே இருக்கின்றன.
இவை அனைத்தும் மனித வாழ்வியலுக்கான அடிப்படைக் கட்டமைப்பைக் குலைத்தது மட்டுமன்றி வாழ்வாதாரங்களையும் மனிதத்துவத்திற்கான அடையாளங்களையும் கூட சுவடற அழித்துள்ளன. மக்களின் பெரும் பகுதி மீள நிமிர முடியாதளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டு வாழ்வை சமூக அமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கான சொற்ப நம்பிக்கையையும் இழந்து திக்குத் தெரியாத, இலக்கற்ற அகதிச் சமூகமாக நடுத்தெருவில் நிற்கின்றது என்பதே இன்றைய கசப்பான உண்மை.
மேற்சொன்ன நிலையில் மக்களிற்கு நம்பிக்கையூட்டி, அவர்கள் தமது புதிய வாழ்வை, அல்லது பழைய வாழ்வை மீளக் கட்டமைத்துக் கொள்வதற்குத் தேவையான அடிப்படை வலுவினையும் கொடுத்து அவர்களுடாக சுமூக அமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தினையும் இடவேண்டிய அவசியம் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது.
இங்கு ஓர் முக்கிய கேள்வி எழுகின்றது மக்களிற்கு நம்பிக்கையூட்டி வலுவூட்ட முன் வருபவர்களும் அதற்கான சக்தி, தகுதி உள்ளவர்களும் யார்?
இவ்விடத்தில் சர்வதேச உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள், ஏனைய சமய, கலை, இலக்கிய சமூக நிறுவனங்கள் என்பவற்றைக் கருத்தில் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஏனெனில் இவை சமூக அமைப்பை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள திறன் உடையவையாக இருக்கின்றன என்பதுடன் தற்போதைய நிலையில் சர்வதேச ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றவையாகவும் இவ் அமைப்புக்களை அடையாளம் காண முடிகின்றது.
வவுனியா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பார்ப்போமாயின் இந் நிறுவனங்கள் பல்வேறு இலக்குகளுடனான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. இவை விவசாயம், கைத்தொழில், மீள் குடியேற்றமும் உட்கட்டுமானமும் நீர், மலசலகூடம், சமூக உட்கட்டுமானம் ( கல்வி, சுகாதாரம், சமூக நலம், கலைகலாசார சேவைகள், விசேட தேவைகளிற்குள்ளானோருக்கான சேவைகள், உளவியல் தொடர்பான சேவைகள்) ஆகிய துறைகளில் இவற்றின் அபிவிருத்தி நோக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை நடைமுறைப்படுத்துகின்ற பணியில் பல நூறுபேரை உள்ளடக்கிய உள்நாட்டு வெளிநாட்டு மனிதவளத்தையும், பல்வேறு வகையான பெளதீக வளங்களையும் மிக வலுவான நிதி மூலகங்களையும், தம்மகத்தே கொண்டு பாரிய நிறுவன அமைப்புக்களாக இவை செயற்பட்டிருகின்றன.

இவற்றை விட பல உள்ளுர் சமய கலை இலக்கிய சமுக அமைப்புக்கள் சமூக அபிவிருத்தி நோக்கிய பல்வேறு வேலைத் திட்டங்களில் முதலீடுகளை மேற் கொள்வதைக் காண முடிகின்றது. அதற்கு உதாரணமாகப் பராமரிப்பை இழந்த அல்லது உறவுகளை இழந்த குழந்தைகள் வயோதிபர் போன்றோரை பராமரிப்பதற்காக இந் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் இன்று வளர்ந்து வருவதைக் கூறமுடியும். இவற்றுடன் எமது விழுமியங்கள் தகர்க்கப்படாமல் சமூக உணர்வைக்கட்டி வளர்ப்பதில் கலை இலக்கியப் பணிகளை ஆற்றுவோரின் பங்கும் மக்களைக் கூட்டாக இயங்கவைப்பதில் ஏனைய பல கிராம, சமூக அமைப்புக்களின் பங்கும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
இந் நிறுவனங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் கணக்கான ரூபாய்கள் வெளிநாட்டில் இருந்தும், அரசாங்கத்திடமிருந்தும், வேறு உள்ளுர் நிறுவனங்களிடமிருந்தும் உட்பாய்ச்சப் படுகின்றன. இந் நிதிகள் மேற் சொல்லப்பட்ட நிறுவனங்களின் முகாமை நிர்வாகச் செலவுகளைத் தாண்டி, சமூக அபிவிருத்திப் பணிகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அண்மையில் RRAN வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இரண்டாயிரம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் இவ்விதம் செலவு செய்யப்பட்ட மொத்த வெளிநாட்டு நிதி 239.1 மில்லியன் ரூபா ஆகும். (Budget + 268.6m). இக் காலப்பகுதியில் RRAN செலவு செய்த தொகை 10.38M ரூபா ஆகும்(Allocation 212.011 Millon).
சமூகப் புனருத்தாரணம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நிறுவனங்கள் தமது சமூகக் கடமையை எந்தளவு பூரணமாக நிறைவு செய்கின்றன? அதன் மூலம் சமூகத்தில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன? உட்பாய்ச் சப்படும் நிதிகளின் உச்சப்பயன்பாட்டை அல்லது விளைவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந் நிறுவனங்களால் இந்நிதி முகாமை செய்யப் படுகின்றதா? ஏனைய சமய, கலை, இலக்கிய, சமூக அமைப்புக்கள் தமது சமூகக் கடப்பாட்டை உணர்ந்து பொறுப்புடன் செயற்படுகின்றனவா? என்பன போன்ற வினாக்களை விவாதித்து இந் நிறுவனங்கள் தங்கள் செயற்பாடுளை தாமே மீளாய்வு செய்வதன் மூலம் இவை தம்மில் தேவையான சீராக்கங்களை மேறகொள்ள உதவுவதுடன், இந் நிறுவனங்களது ஒட்டுமொத்த செயற்பாட்டுகளினுடைய பிரதிபலிப் புக்களின் போதுமான தன்மை பற்றியும், இவற்றை மக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது தொடர்பாகவும் ஒர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந் நிகழ்வை ஒழுங்கமைத்ததன் நோக்கமாகும்.
46வது கருத்தாடல் நிகழ்வில் வாசிக்கப்பட்டது (0702.2001)
13

Page 8
ஆர்.சண்முகசுந்தரத்தின்
* நாகம்மாள்”
- நாவல் விமரிசனக் குறிப்பு
ந.இரவீந்திரன்
ஆங்கிலம் மூலம் பெறப்பட்ட Novelநாவல் என வழங்கப்படுகிறது. இது நவீனம், புதினம் என்றும் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது மாற்றமுறும் மனித வாழ்வின் புதுமைப் போக்குகளை அதன் முழுமை சார்ந்து பிரதிபலிப்பது எனும் வகையில் நவீனம், புதினம் என அழைப்பது பொருத்தமுடையதே. ஏனையபுனைகதை வடிவங்களான சிறுகதை, குறு நாவல் என்பற்றிலிருந்து நாவல் பின்வரும் அம்சங்களில் வேறுபடும்:
1. பரந்த களங்களைக் கொண்டிருத்தல் 2. முழுமையான பாத்திர வார்ப்பு. 3. வாழ்க்கைப் பிரச்சனைகள் பலவற்றை வெளிப்படுத்தல்
பொதுவாகப் படைப்புகளில் சொல்லப்பட்டவற்றை விட சொல்லாது விடப்பட்டவை முக்கியத்துவமிக்கவை (அவையே சிந்தனை ஓட்டத்தைத் துரிதப்படுத்துவன). சிறுகதை, குறுநாவல் என்பன முடிவில் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும். நாவலின் படைப்பு வளர்க்கப்பட்டுச் செல்லும் போதே இடைவெளிகள் தோன்றித் தேடலுக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும்.
இந்த அம்சங்களை முழுநிறைவாக்கியுள்ள ஒரு தலை சிறந்த படைப்பு “நாகம்மாள்” நாவல் இதன் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்துவமிக்க ஒவ்வொரு களங்களை நோக்கி விரிவடைந்து செல்கிறது. அத்தியாயங்கள் காட்டும் களங்கள் மேல்வருமாறு அமைவதைக் காணலாம்.
(1) சந்தையிலிருந்த வீடு நோக்கி நடைப்பயணம். (2) வீடு (3)&(4) கோயில் (5) காடு (எருமைக்குப் புல் வழங்குவது) (6)&(7) தோட்டம் (8) காடு (கள்ளச்சாரயம் காய்ச்சுமிடமும் இரகசியச் சந்திப்பிடமும்) (9) ஊள் (குடும்பச் சண்டை ஊர் வாயில்) (10) பக்கத்து வீடு (11) தோட்டவேலை (12) காடு நோக்கிய நாகம்மாளின் ஒட்டம் (13) காட்டில் சதித்திட்டம் (14) காளியம்மாளின் பிரவேசம். (15) முரண்பாட்டின் கூர்மை (16) பரம்பரைச் செல்வாக்கு எதிர் அரச உத்தியோக அதிகாரம் (ராமசாமிக் கவுண்டர் குடும்பம் எதிர் மணியகாரர்) (17) மணியகாரர் வீடு. (18) களத்துக்காடு (19) சின்னப்பனின் மைத்துனன் (காளியம்மாளின் மகன்) நோய்ப்படுக்கையில். (20) காடு - பாகப்பிரிவினைச் சதி (21) மோதல் உச்சம் - சமரசமும் சந்தர்ப்பவாதமும். (22) சின்னப்பனின் மைத்துனன் மறைவு - மரண வீட்டுக்காக சின்னப்பன் குடும்பம் மாமியாரின் ஊருக்குச் சென்று பலநாட்கள் தங்க நேர்தல். (23) தனித்திருக்கும் நாகம்மாளின்
14

தன்னிச்சைப்போக்கு (கூட்டுவாழ்வுக்கு எதிரான உணர்வு) (24) நாகம்மாளைத்தேஷ் மணியகாரர்(25) மணியகாரர் வீட்டில் நாகம்மாள். (26) சின்னப்பன் வீட்டில் பிரச்சனையின் கனதியும் சிந்தனைப் போராட்டமும் (27) தோட்டத்தில் சொத்துத் தகராறும் மோதலில் சின்னப்பன் மரணமும்.
இந்த நாவலின் கதைப்போக்கில் வளர்க்கப்படும் பிரதான முரண்பாடு சின்னப்பனுக்கும் அவனது விதவையான அண்ணிக்கும் இடையில் நிகழும் சொத்துத்தகராறில் வெளிப்படுவதைக் காணலாம். ஆயினும் அடிப்படை முரண்பாடு இதுவல்ல. இந்த முரண்பாட்டைச் சமாதானமாக தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன. இது வேறொரு அடிப்படை முரண்பாட்டால் தூண்டப்பட்ட இரண்டாம் பட்சமான ஒரு முரண்பாடே : அடிப்படை முரண்பாடு பற்றிய தெளிவு சின்னப்பனுக்கும் நாகம்மாளுக்கும் இல்லாமற் போனதன் விளைவாக அதற்கு எதிராக தாம் ஐக்கியப்பட்டுப் போராடியிருக்க வேண்டிய இவ்விருவரும் தமக்குள்ளான இரண்டாம்பட்ச முரண்பாட்டை முதலாமிடத்துக்குக் கொண்டு வந்து மோதிக்கொண்டு அழிகின்றனர்.
இந்த அம்சம் கவனத்திற்கொள்ளப்படாதமையினால் நாகம்மாள் குற்றவாளியாக்கப்படுகிறாள். விதவையான அவள், ஊர் வெறுக்கும் ஊதாரியான கெட்டியப்பனுடன் கோயிலில் கொட்டமடித்து ஊராரின் தூற்றலுக்கு உள்ளாகிறாள். காட்டில் களவாகக் கெட்டியப்பனைச் சந்தித்துச் சதி செய்கிறாள் இறுதியில் தன் மைத்துனன் சின்னப்பனின் சாவுக்கு காரணமாகிறாள்.
கெட்டியப்பனை அந்தக் குடும்பத்தினுள் வலிந்து இழுத்தது சின்னப்பனின் மாமி காளியம்மாள் தான். சின்னப்பனிடம் சொத்து முழுவதையும் விற்கச் சொல்லித் தன் ஊருக்குப் பெயர்த்தெடுத்து விட காளியம்மாள் எண்ணினான். நாகம்மாளின் தனித்துவத்தை சின்னப்பனோ காளியம்மாளோ கவனத்திற் கொள்ளளாமல், கைப்பெண் என்ற வகையில் அண்டி வாழ வேண்டியவள் என க்கணக்கிட்டனர். இதனை வாய்ப்பாக்கிக் கொண்ட கெட்டியப்பன் நாகம்மாளிடம் சொத்துப் பிரித்துத் தனித்துவாழும் விருப்பத்தை தூண்டி விடுகிறான்.
காளியம்மாள் கெட்டியப்பனை அரவணைக்க நினைத்தது தனது மருமகனின் ஊர்ச் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கே, சின்னப்பனின் தந்தை ராமசாமிக் கவுண்டர் செல்வாக்கு மிக்கவர். அவர் வாக்குக்கு ஊர் கட்டுப்பட்டது. அதே மதிப்பு சின்னப்பனுக்கும் இருந்தது. ஆங்கில அரசின் கிராமப்பிரதிநிதியான மணியகாரனுக்கு இது சவாலாக அமைந்தது. அந்த ஊர் மதிப்புக்கும் அரசதிகாரத்துக்குமிடையேயான முரண்பாடே அடிப்படையான முரண்பாடு. அந்த அடிப்படை முரண்பாடு சின்னப்பன் குடும்பத்தின் சிறிய முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி முனைப்பாக்கிவிட்டது. அந்தச் செயற்பாட்டுக்கு மணியகாரனின் பக்கத்திலிருந்து கெட்டியப்பன் உதவி செய்து விடுகிறான்.
இத்தகைய சிக்கலுக்குள் அல்லாடிய நாகம்மாளின் பாத்திரவார்ப்பு அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. கணவன் இருந்த காலத்திலேயே ஆளுமையுடன் இருந்தவள் அவள்: அண்டிப்பிழைப்பது அவளுக்கு ஏற்புடையதில்லை. அந்த வகையில் அவளுடைய ஆளுமையை சின்னப்பன் கவனத்திலெடுத்திருக்க வேண்டும். அவளுடன் கலந்து பேசி ஒரு
15

Page 9
முடிவையெடுக்கும் ஜனநாயகப் பண்பு அவனிடம் இருக்கவில்லை. (அண்ணிமீதான மதிப்புணர்வும் பரஸ்பரப் பேச்சுவார்த்தைக்குத் தடையானது.) முதல் அத்தியாயத்தில் நாகம்மாளை அறிமுகப்படுத்தும் ஆசிரியர் “பிறருக்கு அடங்கி நடக்கும் பணிவும் பயமும் என்னவென்றே அவள் அறியமாட்டாள்’ எனக் காட்டுகிறார். “கிளர்ச்சியை முதலில் கிளப்பிவிட்டவள்’ காளியம்மள் என்பதையும் ஆசிரியர் பதினான்காம் அத்தியாயத்தில் தெளிவாக்குகிறார். செல்வாக்கு மிக்க பலமான குடும்பத்தை நாசம் பண்ணுகிறேனே என்ற தடுமாற்றம் நாகம்மாளுக்கு ஏற்படுவதை அத்தியாயம் 23ல் காணலாம். அத்தியாயம் 26ல் ஒரு தாயைப்போலத் தன்னைப் பராமரித்த நாகம்மாளை சின்னப்பன் நினைவு மீட்கிறான். இறுதி அத்தியாயத்தில் சின்னப்பன் தாக்கப்பட்டுச் சரிந்த போது நாகம்மாள் அதிர்ந்து போகிறாள்.
இந்த முடிவு குறித்த சூசகமான அறிகுறியொன்று இடையே ஒரு ஒளிக்கிற்றென வந்து மறையும், பல்லியொன்றால் துண்டிக்கப்பட்டு கீழே விழுந்து துடிக்கும் பூச்சியின் ஒரு கூறு பாகப்பிரிவினையின் பாதக நிலையை அழகாகப் படிமப்படுத்துகிறது.
ஆக நாகம்மாளின் அடங்காத்தனத்தையும், தவறான நடத்தையையும், பிழையான முடிவுகளையும் காட்டுவதல்ல ஆசிரியரின் நோக்கம் நாகம்மாள் தற்செயலாகவே சதிக்குள் ஆழ்ந்து போகிறாள். தீர்வு நாகம்மாள் திருந்துவதில் மட்டும் இருக்கவில்லை. சின்னப்பனின் நிதானமான செயற்பாட்டிலும், ஜனநாயகபூர்வமான அணுகுமுறையிலும் தங்கியிருந்தது. கதைமாந்தர்கள் தவறிழைத்து விட்டனர். சரி இதை 1942 இல் எதற்காக படைப்பாக்கியிருக்க வேண்டும்? படிப்பவர் மனதில் உறைக்கும் அம்சம் என்ன?
அது இந்திய சுதந்திரம் உறுதிப்பட்டுவிட்ட ஆண்டு அந்த வருடத்தில் வீறு கொண்ட தேசியக் கொந்தளிப்பு ஆங்கில அரசுக்கு இந்தியாவின் சுதந்திரம் வழங்கப்பட்டாக வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தது. அதன் பின் எப்படி அந்தப்பணி நிறைவு செய்யப்படுவது என்பதே நடைமுறைநிகழ்வில் இடம்பெற்று வந்தது என்பதில் பாகிஸ்தான் பிரிவினை ஒரு பிரதான அம்சம் பிரிவதைத் தடுப்பது இஸ்லாமியரிடம் மட்டுமல்ல, நியாயமான அரசியல் வடிவம் காணல் என்றவகையில் நேரு போன்ற தலைவர்களிடமும் இருந்தது. காந்தி அதனை உணர்ந்திருந்தார். நேருவை வற்புறுத்தினார். நேரு தவறிழைத்தார் என்பது ஓர் வரலாற்று நிகழ்வு.
அனைத்து மக்களுக்கும் பிரிவினையின் கொடுரத்தை உணர்த்தும் மிகச் சிறந்த குறியீட்டு நாவல் “நாகம்மாள்’ கதைமுடிவல்ல, இன்றுங்கூட அதன் படிப்பினை கவனஞ் செலுத்தப்படுவதாயில்லை என்பதே அவலம்.
ஆயினும் இக் குறியீட்டுப் பண்பு நாவலில் எங்குமே (மறைமுகமாகவேனும்) காட்டப்படவில்லை என்பது முக்கியத்துவம் மிக்க அம்சமாகும். கலைப்படைப்பு என்ற வகையில் அது தூண்டும் உள்ளுணர்வுகளால் வாசகரே அந்த முடிவுக்கு வந்து கொள்ள வழிவிடுகிறார் ஆசிரியர்.
இந்த அம்சத்தில் மட்டுமன்றி, கதைப்போக்கில் இடையிட்டுத் தமது நீதிபோதனைகளையும் தீர்ப்புக்களையும் கூறிச்செல்லும் ஆசிரியர் குறுக்கீடுகளும்
16

நாகம்மாள் நாவலில் இடம் பெறவில்லை என்பதிலும் இதன் ஆசிரியர் தனித்துவம் பெறுகிறார். நாவலின் துன்பியல் முடிவு இந்தியச் சமூகம் எதிர் நோக்கியிருந்த விபத்தின் வெளிப்பாடு. அதன் அதிர்வு வாசகனின் சிந்தையைத் தூண்டவும், சமூக - அரசியல் செல்நெறியைக் கற்கவும், செயல் முனைப்புக் கொள்ளவும் தூண்ட வேண்டும் என ஆசிரியர் கருதுவதாய்க் கொள்ளலாம்.
சமூக இருப்பை உணர்த்துகிற அளவுடன் நாவல் அமைதி காண்கிறது. இயற்கை நியதியாய்த் தோன்றுவனவற்றை மானுடச் செயலூக்கத்தால் மாற்ற முடியும் என்ற உந்துதலை இந்த நாவல் ஏற்படுத்த எவ்வகையிலும் முனையவில்லை. அந்தவகையில் யதார்த்தவாதப் பாங்கைவிட இருப்பியல் வாதப் படைப்பு எனும் தன்மையையே “நாகம்மாள்” கொண்டிருக்கிறது எனலாம், யதார்த்த வாதப்படைப்பொன்று இருப்பைக் காட்டுவதுடன் அமையாது மாற்றத்தையும் காட்ட முயல்வது. (இப்படைப்பில் பல்லியால் துண்டிக்கப்பட்ட பூச்சி” என்கிற படிமம் பாகப்பிரிவினையையும் தேசப்பிரிவினையையும், விமர்சிக்க மட்டுமே செய்கிறது. அவற்றைத் தடுத்து மானுட மேன்மையைக் கட்டியெழுப்பும் ஆளுமை இங்கு வெளிப்படவில்லை)
இத்தகைய ஒரு குறைபாடு “நாகம்மாள்” “ தோன்றிய காலத்தை மனங்கொள்ளும் போது பெரிதுபடுத்தத்தக்கதல்ல “பஞ்சும் பசியும்”, “தாகம்”, * கரிசல்”, “பஞ்சமர்’ போன்ற யதார்த்தவாதப் படைப்புகளுக்கான முன்னோடி முயற்சியாக “நாகம்மாள்” மதிக்கப்படவல்லது. கிராமத்து உழைக்கும் மக்களின் பண்பாட்டுத் தளத்தில் காலூன்றி, நாட்டுப்புற வாழ்வையும் உழைப்பையும் போராட்டங்களையும் வெளிப்படுத்திய முதல் நாவல் என்ற வகையில் இதன் முக்கியத்துவம் விதந்துரைக்கத்தக்கது. அண்மைக்காலத்து ஜி.நாகராஜனின் “ நாளை மற்றுமொருநாளே” போன்ற இருப்பியல்வாதப்படைப்புடன் ஒப்பாய்வு செய்யின் “நாகம்மாள்” மிக உயர்ந்த தளத்தில் வைத்து மதிக்கத்தக்கது என்பது புலனாகும். அத்தகைய ஒப்பாய்வுகளை எதிர்காலக் கருத்தாடலரங்குக்கு உரியதாக்குவோம்!
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பதினேழாவது கருத்தாடலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது) 09.07.1998
யாழ் நோக்கி. ஐயோ என் வீடு. யுத்தத்தின் கோரத்தாண்டவத்தில் என் வீடு.
என் வீடு மட்டுமல்ல.
எம் நாடு. எம் நாடு முழுவதுமே.
-க.ரணேஷ்

Page 10
ஐந்தாண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டுவரும் வவுனியா
கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
ஐந்தாண்டுகளிற்கு மேலாக வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தினர் மாதந்தோறும் முழுநிலாக் கருத்தாடல் நிகழ்வொன்றை நடத்தி வருகின்றனர். பதின்னேழு பேர் ஒன்றுகூடி இப்படியொரு நிகழ்வை நடத்துவதற்கு ஆலோசித்தபோது, சிலர் தொடர்ச்சியாக இப்படியான நிகழ்வை நடத்த முடியுமா? என்ற கேள்வியையும் கேட் டிருந்தனர். அப் படியான ஐயப்பாட்டை எழுப்பியவர்கள் அடுத் தடுத்த நிகழ்வுகளிற்கு வந்துகலந்து கொள்ள முடியாதவர் களாகப் போனார்கள். கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் பல்வேறான கருத்துக்களை உள்ளடக்கி தவிர்க்க முடியாத நிலையால். என்று சொல்வதிலும் பார்க்க நாட்டின் நிலையினால் சில மாதங்களில் நிகழ்வை நடத்தமுடியாத நிலை ஏற்பட்ட போதும் கடந்துபோன காலங்களில் அறுபது நிகழ்வுகளை மரிகவும் சிறந்த முறையரில் நடத்தியுள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.இந்த அறுபது நிகழ்வுக ளிலும் கலை இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை சமர்ப்பித்து அந்தக் கட்டுரைகளில் உள்ள விடயங்கள் தொடர்பான பல் முனையிலிருந்தும் வரும் கருத்துக்களையும் கேட்டு தருக்கம் செய்யும் நிகழ்வாக பல முழுநிலா கருத்தாடல் நிகழ்வுகள் நடைபெற்றன. தவிர பல்வேறான, ஆறு நூல்களையும் வெளியிட்டு வைத் துள்ளனர். பல நூல்களை அறிமுகம்
18
5675 இரவிந் திரன்
செயப் து வைத்ததுடன் நுT ல விமர்சனங்களையும் நடத்தியுள்ளனர்.
'கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் இலக்கியம் தொடர்பான நிகழ்வுகளை மட்டுமல்லாமல் , கலையினை வளர்க்கும் நோக்குடன் வவுனியாவிலுள்ள கலைஞர்களை அரவணைத்து கலை நிகழ்ச்சிகளையும் மேடையேற்றி அவை தொடர்பான விமர்சனங்களையும் நடத்திவந்துள்ளது குறிப்பிட்டுக்கூறக் கூடியதாகவுள்ளது.
கலை இலக்கியமென்றால் எனன? அது சமூகத்துடன் எவ்வளவுக் கெவ்வளவு அக்சறை கொண்ட செயற்பாடாக அமைந்து ஆர்வத்துடன் செயற்படவேண்டும்? படைப்பாளிகள், படிப்பாளிக்கு எதைக் கொடுக்க வேண்டும்? என்பதை மனதிலிருத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக சமூக அக்கறையுடனான பல செயற் பாடுகளையும், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் பல முழுநிலா கருத்தாடல் நிகழ்வுகளில் நடத்தி உள்ளது. குறிப்பிட்டுக் கூறுவதென்றால், போரினால் இடம் பெயர்வுகளைக் கண்டு பாதிப்படைந்தவர்களின் பிள்ளைகள் நூற்றுக்கணக்கானோர் வவுனியா கடைத்தெருவில் அலைந்து திரிவதை அவதானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக வவுனியாவை தளமாக வைத்தியங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களை வரவழைத் து கையேந்து நிலையில் அலைந்து திரியும் சிறார்களிற்கு என்ன செய்யலாம். என்ற கேள்வியுடன் கருத்தாடல்

நிகழ்வொன்று நடைபெற்றதைக் குறிப்பிடலாம்.
அறுபதாவது நிகழ்வான 28/03/2002 அன்றைய முழு நிலா நிகழ்வு எழுத்தாளர் அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடந்தகால நிகழ்வுகள் பற்றியும், இனிவரும் காலங்களில் என்ன செய்யலாம் என்பன பற்றியும் பேசப்பட்டது.
இதில் இ.க.கணபதிப்பிள்ளை, எஸ்.ரி. அரசு ஆகிய இருவரும் கடந்தகால நிகழ்வுகள் தொடர்பாக பாராட்டிப் பேசினார்கள். நிறுவன மயப்படாமல், ஐந்தாண்டுகளிற்கு மேலாக கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் இயங்கிவருவது வியப்புக் கொள்ள வேண்டியதொன்று தான். எனினும் கடந்த சில மாதங்களாக நிகழ்வுகள் தொயப் நிதுபோய் விட்டதென்றும், இதற்குக் காரணம் நிகழ்வுகளை முன்னின்று நடத்து பவர்கள் இல் லாமையே என எஸ்.ரி.அரசு அவர்கள் குறிப்பிட்டதுடன், இனிவரும் காலங்களில் நாடகங்களை மேடையேற்றக்கூடிய வகையில்
அதற்கான செயற்பாடுகளை
முன்னெடுக்க வேண்டும் என்றும் தனது கருத்தைக் கூறினார். இ.கா.கணபதிப் -பிள்ளை வெற்றிகரமாக இவ்வளவு நிகழ்வுகள் தொடர்ந்து வரலாற்றுப் பதிவாகுமென்று கூறியதுடன், வவுனியா மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினை உண்டு. இதனை கவனத்திலெடுத்து எம்மாலான வரையில் குரல்கொடுக்க வேண்டுமென்று நண்பர் களை வலியுறுத்தினார். இதனையடுத்து ஏனையவர்களிடமிருந்து பல்வேறான
கருத்துக்கள் வெளிவந்தன. தலைமை
தாங்கிய அகளங்கன் கூறுகையில்
குளங்களையும்,
வவுனியாவில் குளங்களில் நீர் தேங்கியிருந்தாலே கிணறுகளில் நீர் வற்றாது. நகர வாழ்க்கையின் மோகத்தால் குள அலைகரைகளை ஆக்கிரமித்த குடியேற்றங்கள் குளங்களின் நீர் த் தங் கலை தடுக்கக்கூடிய வகையில் உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அரச பணிமனை உயர் அலுவலர்கள் முன் வர வேணி டும் . ஆனால் அரசபணிமனை உயர் அலுவலர்களே அலைகரையில் பெரும் வீடுகளை கட்டிவைத்துள்ளனர். இவர்கள் சட்ட விரோதமாகவே வீடுகளை கட்டி வைத்துள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் கொள்கின்றனர் எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வி ஏனைய நண்பர்களாலும் எழுப்பப்பட்டது. இது விடயத்தில் வவுனியா நகரின் வளர்ச்சி என்ற கூற்றை மட்டும் வைத்துக் கொண்டு வன்னியின் வளமான நெற்பயிர்ச் செய்கைக்கு ஆப்பு வைப்பது போல வயல்களையும், ஆக்கிரமிக்கும் குடியிருப்பாளர்கள், இருப்பதற்கு வாழ்விடங்கள் இல்லாத வசதியற்ற வர்களல்ல. இதனைச் சுட்டிக் காட்டுவதன் முழுமையான நோக்கம் எவரையும் புண்படுத்துவதற்காகவல்ல. நிலமையரினை விளக்கமாக மனதிலிருந்தி வன்னியின் வளம்காக்க நல்நோக்கமுடனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்பதற
‘காகவுமே என்பதை இவ்விடத்தில்
வலியுறுத்துவது பொருத்தம் தானே?
கலை, இலக்கிய நண்பர்கள்
வட்டம் குடிநீர்ப்பிரச்சினை என்ற
விடயத்தைப் பற்றிப் பேசுவது, அது
19

Page 11
தொடர்பாக கருத்தாடல் நிகழ்வொன்றை வைப்பதற்கு முயற்சி செய்வது பாராட்ட வேண்டிவொன்றே. அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வளர்ச்சி பற்றியும், அது ஒரிடத்தில் தனது வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் கூட ஒருமித்த கருத்துடையவர்களாக அனைவரும் பேசிக்கொண்டனர். கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் தனது ஐந்தாண்டு காலமான வளர்ச்சி என்ன என்பதைப் பற்றியும் , பலரால் பேசப் பட்டதுடன் , இனி வரும் காலங்களில் கலை இலக்கிய சமூக அக்கறையுடனான செயற்பாடுகளில் நீணி ட 85 fi 6) LD (T 8E6 ஈடுபாடு கொண்டவர்களைத் கெளரவிக்கும் பணிகளையும் கலை, இலக்கிய, நண்பர்கள் வட்டம் முன்னெடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இப்படியான கெளரவிப்புக்கள் செய்யவேண்டுமென வெளியிலுள்ள சிலரே கேட்கின்றனர் என்பதையும் இதனை எப்படிச் செய்யலாமென்பது பற்றியே ஆலோசிக்கப்பட்டது. இதில் பலரிடமிருந்தும் பல வேறான கருத்துக்களும் வெளிவந்தன. பொன்னாடை, நினைவுச்சின்னம், சான்றிதழ் 6I 6ốĩ LJ 6)j mồ [[]] L- 6öĩ பட்டமொன்றையும் வழங்குவதற்கே கூடிய கவனம் செலுத்தப்பட்டது. சிலர், நண்பர்கள் வட்டம் இன்னும் வளர்ச்சியடைந்த பின்னர் இது போன்ற நிகழ்வுகளை நடத்துவோம் என்றும் கூறினார்கள். பட்டங்கள் கெளரவிப் புக்களுடன் பணமுடிப்பொன்றை வழங்குவது பயனுள் ளதாக இருக்குமென்ற கருத்தொன்றும் முன்வைக்கப்பட்டது. இவற்றோடு காலாண்டு இதழ் ஒன்றை கலை
20
இலக்கிய நண்பர்கள் வட்டம் வெளியிடுவதற்கும் ஆலோசித்துள்ளது. நடைமுறைக்கு வருவது கடினம் என்றாலும் இதழ் ஒன்றை வெளியிடுவது சிறப்பானதாக இருக் கும் . இவை யெ ல லா வறி றினையுமி ஆலோசிப்பதிலும் பார்க்க நடை முறைப்படுத்துவதே கடினமான விடயமாகும்.
மாதம் தோறும் நடாத்தி வரப்பட்ட முழுநிலா நிகழ்வுகளின் வளர்ச்சியில், வரும் அறுபத்தோராவது: நிகழ்வு சிறப்பானதாக நடை பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பாராட்டும் வைபவமும் இடம் பெறவுள்ளது. ஐந்தாண்டுகளிற்கு மேலாக நிறுவன மயப்படாமல் இயங்கும் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் முழு நிலா நிகழ்வு ஒரு சாதனை தானே?
தினக் கதிர்
07.04.02
 

தமிழ் சிமாழியின் அடைமொழிகள்
-தமிழ்மணி அகளங்கண்
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி” என்பது தமிழ்க்குடியின் தொன்மைக்குச் சான்று பகரும் வாக்கியம்.
“திங்களொடும் செழும்பரிதிதன்னோடும் விண்ணோடும், மண்ணோடும் உடுக்களோடும், மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம்.sy எனப் பாரதி தாசன் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
எமது தாய்மொழி தமிழ், எம் தாய் மொழியாம் தமிழ்மொழியின் தாய்மொழியும் தமிழ் தான். அதன் தாய்மொழியும் தமிழ்தான்.அதன் தாய்மொழியும். என சொல்லிக்கொண்டே போகலாம்.
தமிழ் என்றால் இனிமை என்று பொருள் என்பர் சிலர். தமிழ் என்றால் அழகு என்று பொருள் என்பர் சிலர். தமிழ் என்றால் அமுது என்பார் பாரதிதாசன். “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என அவர் பாடினார்.
தமிழ், தமிழ், தமிழ். என வேகமாக உச்சரித்தால் அது அமிழ்து அமிழ்து அமிழ்து என ஆகும் நுட்பத்தை உச்சரித்துப் பார்த்து உணருங்கள்.
"எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே." எனப் பாரதி தமிழை உரிமை உணர்வோடு வாழ்த்திப் பாடினான்.
செந்தமிழ் என்ற சொல்லே தமிழுக்கு வாய்த்த முதல் அடைமொழியாகும். செந்தமிழ் என்ற சொல் தொல்காப்பியத்தில் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளது.
செந்தமிழ் நிலத்து செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்
என்பவையே அவை. செந்தமிழ் என்ற சொற்பிரயோகம் வந்த அளவிலேயே தமிழில் கலப்பு ஏற்பட்டு விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
தமிழின் அடைமொழிகளில் செம்மை என்ற பண்பு சேர்ந்தது போல "தண்மை” என்ற பண்பும் சேர்ந்து சங்க இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை சேர்த்தது. “தள்ளப் பொருளியல்பில் தண்டமிழ் ஆய்வந்திலார்” “தண்டமிழ் வேலித் தமிழ் நாட்டகம்’
எனப் பரிபாட்டிலும்
“தண்டமிழ் செறித்து” எனப் பதிற்றுப் பத்திலும் “மண்டினி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்.” "தண்டமிழ் பொதுவெனப் பொறா அன்.” "தண்டமிழ் வரைப்பகம் கொண்டியாக.”
எனப் புற நூனுற்றிலும் தண்டமிழ் என்ற சொற் பிரயோகம் இடம் பெற்றுள்ளது. சுங்க இலக்கிய நூலான பரிபாடலில் மாண்டமிழ் என்பது முத்தமிழ் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தெரிமாண்டதமிழ் மும்மைத் தென்னம் பொரும்பன்” என்பது பரிபாடல் வரி.
ஐம்பெருங்காப்பியத்துள் பெரிதும் சிறப்புப் பெற்ற சிலப்பதிகாரத்தில் “வண்மை’ தமிழ் மொழிக்கு அடை மொழியாயிற்று. அத்தோடு வேறுபல அடைமொழிகளையும் இளங்கோ அடிகள் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். * வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த.” * தென்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த.” “ அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த.” * குடக்கோ முனிசேரன் தண்டாவுரை முத்தமிழ்.”
21

Page 12
என வண்டமிழ், தென் தமிழ், அருந்தமிழ், முத்தமிழ்’ ஆகிய சொற்களை அருமையாகப் பயன்படுத்தியுள்ளார் இளங்கோ அடிகள். தென் தமிழ் என்பது இனிமையான தமிழ் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பின்னால் தேவார முதலிகளில் முக்கியமானவராகப் போற்றப்படும் திருஞான சம்பந்தர் தமிழ் மொழிக்குப் பல அடைமொழிகளைக் கொடுத்துப்பாடல் பாடினார். அவை புதுப்புது அடைமொழிகளாக மிளிர்ந்தன.
ஆரா அருந்தமிழ், இசைமலிதமிழ், இன்புறுந்தமிழ், இன்றமிழ், உருவாகும் ஒண்டமிழ், உரையார் தமிழ், ஏரினார் தமிழ், ஒண்டமிழ், ஒளிர் பூந் தமிழ், கலைமலிதமிழ், கலைவளர் தமிழ், குலமார் தமிழ், குற்ற மரிலி செந் தமிழ் , குன்றாத தமிழ் , சங் கமலிசெந் தமிழ் , சந்தநிறைதண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார் ந் தழகாயதண்டமிழ், சந்தமாலைத் தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந்தமிழ், சீர் மிகுந்ததமிழ், சீரின் மலிசெந்தமிழ், செந்தண்டமிழ், செறிவண்டமிழ், சொல்லார் தமிழ், ஞாலமிக்க தண்டமிழ், ஞானத்தமிழ், தகைமலிதண்டமிழ், தவமல்கிதமிழ், தன் னார் வம் செயப் தமிழ் , திருநெறிய தமிழ் , துளங் கசில தமிழ் , தேனேரார் தமிழ், நல்லவாயஇன் தமிழ், நலங்கொள் தமிழ், நற்றமிழ், நிகரில் லனதமிழ், படமலிதமிழ், பண்ணிய தமிழ், பண்ணாருந்தமிழ், பந்தமார் தமிழ், பரவார் தமிழ், பரவிய தமிழ், பலமிகுதமிழ், பாரினார் தமிழ், புகழ் நின்ற தமிழ் , பேரியல் இன் தமிழ், மருவிய தமிழ், மறையிலங்கு தமிழ், மறைவளிரும் தமிழ், முடிவில்இன்தமிழ், முத்தமிழ், வளமார்தமிழ், விலையுடை அருந்தமிழ் என்பன சம்பந்தப் பெருமாள் தமிழ் மொழிக்குக் கொடுத்த அடைமொழிகள் தம மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்றும், நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன் என்றும் குறிப்பிட்ட அவரேதான்தமிழ் மொழிக்கு அதிகூடிய அடைமொழிகளைக் கொடுத்த முதல்வர் எனப் போற்றத்தகுந்தவராகின்றார். வண்ணச் சரபந் தண்டபாணி அடிகளார் தன்னேரில்லாத் தமிழ்” என்றார். தமிழ் விடுதூதார் “இருந்தமிழ் என்றார். கவிச்சக்கரவர்த்தி கம்பனோ என்றுமுளதென்தமிழ் என்றார்.
சேக்கிழார் சுவாமிகள் ஞாலமளந்த மேன்மைத் தமிழ், ஏழிசை இன்றமிழ், ஒண்திந்தமிழ், சீர்மன்னு செந்தமிழ் செஞ்சொற்தமிழ், தண்ணார் தமிழ், திந்தமிழ், துய்ய தமிழ், தூய தமிழ், தெய்வத் தமிழ், தென்னன் தமிழ், தேககுறு தமிழ், தேமருதமிழ், நல்லிசைத் தமிழ், பண்பட்ட செந்தமிழ், பூந்தமிழ், பொய்யாத் தமிழ், மூவாத் தமிழ், மேன்மைத் தமிழ், வியன் தமிழ் என்றெல்லாம் தமிழைப் பல அடைமொழி கொண்டழைத்துச் சிறப்பித்தார். பாரதியார் தேமதுரத்தமிழென்றார். பாரதிதாசன் பொங்குதமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இன்று பொங்கு தமிழ் என்பது யாவருமறிந்த ஒன்றாயிற்று.
இன்னும் பல அருந்தமிழ்ப் புலவர்கள் அழகிய அடைமொழிகளைத் தமிழ்மொழிக்குப் பொருத்தி அழகுபார்த்தனர்.
இன்றோ தமிழை இவ்வகையில் போற்றுவாரில்லை. தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்று அறியாத தமிழர் (தமிலர்) பலர் இன்று தமிழ் படித்தவர்களாகப் போற்றப்படுகின்ற பரிதாப நிலையில் வாழ்கின்றோம்.
தாயே தமிழே உன்னைக் காக்கும் பணி தெய்வீகப்பணி. புண்ணியப்பணி என்று போற்றித் தமிழ்மொழியை வளர்த்துக் காப்போம்.
ܣܦܼܫ ܦܼܫ ܣܘ ܢܫܹC G
22 ' ' ' '

வட்டத்தின் விருது பெறும் இருவர்
*முல்லைமணி வே.சுப்பிரமணியம்
*கலைலுநர் எஸ்.ரி.அரசு
இல9க்கியச் செல்வர்
g6ö6osaso (ss. siigassuså
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட முல்லைமணியவர்கள் (03.05.1933) 1951ல் ஈழசேகரியூடாக எழுத்துலகில் பிரவேசித்தார். திருநெல்வேலி பண்டித கலாசாலையில் வித்துவான் க. வேந்தனாரிடமும் மகரகம ஆங்கில ஆசிரிய கலாசாலையில் பண்டிதர் கா.பொ.இரத்தினம், அவர்களிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்தார்.
சாவச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்று 1957ல் \ ஆசிரியரானார். அதேயாண்டு 'கலைமானும் கருவண்டும் என்னும் இலக்கியகட்டுரையை எழுதினார். 1959ல் வீரகேசரி நிருபராக தொழிற்பட்டார். 1960களில் வன்னிப்பிரதேசத்தில் ஏற்பட்ட புதியவிழிப்புணர்ச்சி காரணமாக வன்னி மண்ணின் வரலாற்றை எழுத ஆர்வம் கொண்டார். இந்தவகையில் அவரது பண்டாரவன்னியன் நாடகம் இலங்கை கலைக்கழகத்தின் பரிசைப்பெற்றுக் கொண்டது. நாடகத்துறையில் இருபது நாடகங்களை எழுதியபோதும் அவை நூல் வடிவம் பெறவில்லை. 'சேற்றில் மலர்ந்த செந்தாமரை', 'இருள் நீங்கியது', 'மலர்ந்தவாழ்வு', 'வரப்பிரசாதம்' என்பன ஒருசிலவாகும்.
ஒரு கவிஞராக கவியரங்குகளில் கலந்து கொண்ட முல்லைமணியின் ஒட்டிசுட்டான் தான் தோன்றிஸ் வரன் பாமாலை','நெடுங்கேணி தில்லையடிப்பிள்ளையார் பாமாலை', 'காதவத்தை நிலகாமம் முத்துமாரியம்மன் திருவூஞ்சல் என்பன நூலுருவம் பெற்றுள்ளன. வீரகேசரி வெண்பாப்போட்டியிலும் துறைநீலாவணை இலக்கிய பேரவையின் போட்டியிலும் பரிசுகள் பெற்றார்.
நாவல் ஆசிரியராகவும் மிளிர்ந்த முல்லைமணியவர்கள் 'மல்லிகைவனம் (சமூகநாவல்), 'வன்னியர் திலகம்' (வரலாற்றுநாவல்), கமுகஞ்சோலை (வரலாற்று சமூகநாவல்) மழைக்கோலம்', 'பிறந்தமண்", ஆகியவற்றை எழுதியுள்ளார். 'வன்னியர்திலகம், தேசிய அரச சாகித்திய விருதையும் வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசையும் பெற்றது.
இவரது சிறுகதை 'துணை 1970ல் வீரகேசரியில் வெளியானது. அவரது நாற்பது கதைகளில் பன்னிரண்டு அரசிகள் அழுவதில்லை' என்னும் தொகுப்பாக (1977) வெளிவந்தது. இது தேசிய சாகித்திய விருதைப் பெற்றுள்ளது. "இலக்கிய இரசனை', 'இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு புதுக்கவிதையும் மரபுக்கவிதையும்', 'இலக்கணவரம்பு, தமிழில் உரைநடை' 'தமிழர் கூத்துமரபு, 'மஹகவியின் கோடை', 'கணிதரீதியில் குறள் விளக்கம் முதலான பதின்மூன்று
23

Page 13
கட்டுரைகளின் தொகுப்பாக "இலக்கியப்பார்வை’ (1999) வெளிவந்துள்ளது.
இலக்கியம், வரலாறு, சமயம், நாட்டார் வழக்கியல், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் தொடர்பான கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. 84 - 85 காலத்தில் ஈழமுரசுப் பத்திரிகையில் 'மதியும் பிறையும்' என்னும் தொடரில் தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் பற்றி எழுதியுள்ளார். வன்னியின் அரசு, இலக்கியம், கலைகள், பற்றிய கட்டுரைத்தொகுப்பு, 'வன்னியியல் சிந்தனை என்னும் தலைப்பில் வெளிவரவுள்ளது.
இவரது தமிழ் எழுத்துப்பணியைப் பாராட்டி அவருக்கு தமிழ்மணி" 'கலாபூசணம்’, ‘கலைஞர் திலகம்’, முதலான பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவரது ஆக்க இலக்கியங்கள் அனைத்துமே பரிசுபெற்றுள்ளன. வடக்கு கிழக்குமாகாண ஆளுநர் விருதும் பெற்றுள்ள முல்லைமணி அவர்களுக்கு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் அவரது இலக்கியப்பணியைப் பாராட்டி ‘இலக்கியச் செல்வர்'என்னும் பட்டத்தினை அதன் ஐந்தாவது வருட நிறைவுவிழாவில் (61வது) நிகழ்வு வழங்கி கெளரவிக்கின்றது.
ஒரு ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி பத்திரிகை நிருபராகவும் எழுத்தாளனாகவும் இயங்கியதுடன் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும், (1973 - 1983) பின்னர் உதவுக் கல்விப் பணிப்பாளர் ஆகவும் கல்விப்பணிப்பாளராகவும் ( 1990 - 1993) கடமையாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர்கலாசாலை விரிவுரையாளராக இருந்தகாலமே தனது பொற்காலம் எனக்கூறும் முல்லைமணியவர்கள் புதிய சூழலில் தோன்றும் மனித இன்னல்களை இலக்கியமாக்குவதே தனதுநோக்கம் என்கிறார்.
நாடகச் செல்வர் எஸ்.ரி.அரசு
ஒரு மாமனிதராக சமூகத்தால் அங்கீகரீக்கப்பட்ட நாடகவியலாளர் திரு.எஸ்.திருநாவுக்கரசு அவர்கள் (எஸ்.ரி.அரசு) யாழ்ப்பாணம் நல்லூரைப்பிறப்பிடமாகக கொண்டவர். பரம்பரை வைத்திய தொழிற்படிப்போடு தனது ஆரம்பக் கல்வியை யாழ்சென்ஜோன்ஸ் \ / கல்லூரியில் மேற்கொண்டார். சிற்பத்துறை நாட்டம் N A காரணமாக தென்னிந்தியா சென்று அக்கலையைப் பயின்றார். அக்காலகட்டம் இரண்டாம் உலகப்போர் کسسسسسسس ح நடந்துகொண்டிருந்து. நாலுவருடகட்டாய இராணுவ சேவையில் ஈடுபட்ட பின் நாடுதிரும்பினார். ஒரு புகைப்படப்பிடிப்பாளனாக தன் வாழ்வை தொடர்ந்ததோடு நாடகத் துறையிலும் அரசியலிலும் தம்பங்கை ஆற்றினார்.
1961ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தின் போது நடுறோட்டில் துப்பாக்கி முனைகளுக்கு மத்தியில் மக்கள் சிதறிஓடிய போதும், நெஞ்சை நிமிர்த்தி வீழ்ந்து கிடந்தார். இந்த அரசியல் நோக்கும், உறுதியும் அவரது
24
 

நாடகப்பணிகளில் பிரதிபலித்தன. ‘அடங்காப்பிடாரி புகழ் வி.சி. பரமானந்தத்துடன் அரசரின் நாடகப்பணிகள் ஆரம்பித்தன.
நல்லூர் காமாட்சிநாடகமன்றம், அரியாலை சரஸ்வதி வாசிகசாலை, வட இலங்கை நாடகமன்றம், வண்ணைக் கலைவாணர் நாடக மன்றம், அண்ணாமலை இசைத்தமிழ்மன்றம், யாழ் ஓரியன்ஸ்கிளப், மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றம், யாழ்நாடக அரங்ககல்லூரி போன்ற அமைப்புக்கள் ஊடாக நாடகப்பணியாற்றினர். இவர் இயக்கிய அரசவரலாற்று நாடகங்களில் 'திப்புசுல்தான்', 'தமிழன்கதை’, ‘வீரமைந்தன்', 'வீரத்தாய்', என்பன குறிப்பிடத்தக்கன. கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த தேரோட்டிமகனில் அருச்சுனனாகவும் கோவலன்' நாடகத்தில் கோவலனாகவும் நடித்துப் புகழ் பெற்றவர். சொக்கனின் கவரிவீசிய காவலன்', "ஞானக்கவிஞன் 'தெய்வப்பாவை’, கூப்பியகரங்கள், சு.வேலுப்பிள்ளையின் வீரசிவாஜி', 'சைலொக்', 'ஒத்தொல்லொ', மற்றும் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் 'வையத்துள் தெய்வம், மற்றும் பாஞ்சாலிசபதம்', ஆகியவற்றையும் இயக்கி தனது முத்திரைப் பதித்தார். அத்தோடு சொக்கனின் நல்லைநகர் நாவலர், அரசரால் நாவலர் நூற்றாண்டு விழாவுக்காக இயக்கப்பட்டு மேடையேறியது.
நவீனநாடக இயக்கத்தோடு இணைந்து குழந்தை ம.சண்முகலிங்கத்தின், 'எந்தையும் தாயும் நாடகத்தில் ஜயாத்துரை என்னும் பாத்திரம் ஏற்று சிறப்புற நடித்தவர். இந்நாடகம் யாழ்ப்பாணம், கொழும்பு, மற்றும் தமிழக நகரங்களில் மேடைஏற்றப்பட்டது. 1997ல் தமிழகத்திற்கு கலைப்பயணம் மேற்கொண்ட “நாராய்,நாராய்” என்ற நாடகக்குழுவுடன் இணைந்து ஈழத்தமிழர்களின் இன்னல்களை தமிழகத்தில் நாடகத்தினுடாக வெளிப்படுத்தினார்.
ஒரு நாடகவியலாளராக இருந்ததுடன் தொழில்ரீதியில் ஒளிப்படவியல் கலைஞராக வாழ்ந்த அரசர், தனது சிற்பம் செய்யும் ஆற்றலிலும் பங்களிப்பைச் செய்தார் . தயாகரி சிவகுமாரன் , பருத் தரித் துறை புற்றளை கந்தமுருகேசனார்,சதாவதானி புலோலியூர் கதிரவேலுப்பிள்ளை ஆகியோரது சிலைகளை தனது மருகள், ரமணி, மற்றும் அன்ரன் ஆசிரியருடன் இணைந்து உருவாக்கினார். இவரது சிற்பம் செதுக்கும் ஆற்றலும் படம் பிடிக்கும் உத்தியும் அவரது நாடகத்துறையில் பாத்திரங்களை உருவாக்கவும் சிறப்புற ஒப்பனை செய்யவும் கைகொடுத்தன.
நாடகத்தின் விரிவான சலனப்படலத்திலும் அவரது பங்களிப்பு காணப்பட்டது. ‘கடமையின் எல்லை' (உதவி நெறியாளர்), குத்துவிளக்கு, டாக்ஷிறைவர்', ஆகிய ஈழத்து சினிமாப் படங்களில் நடித்திருந்தார். அத்தோடு சமகாலத்து வில்லிசைக்கலைஞர்களான திருப்பூங்கொடி, ஆறுமுகம் கலாவிநோதன், சின்னமணி கணபதிப்பிள்ளை, ஆகியோருடன் இணைந்து வில்லிசைக்கலையிலும் சிறப்புற மிளிர்ந்தார். இவ்வாறு பல்துறை ஆற்றல் உள்ள ஒரு கலைஞரை இடப் பெயர்வுகாலத்தில் வவுனியா பெற்றுக் கொண்டது. வவுனியா வளாகம், கல்வியியல்கல்லூரி, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, முதலான பாடசாலைகள் நாடகத் துறையில் இவரது சேவையை பெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒருகலைஞரை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், தனது ஐந்தாவது ஆண்டு நிறைவுவிழாவில் 'நாடகச் செல்வர்” என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கிறது.
25

Page 14
பல்கலைக்கழகங்கள் கெளரவித்த இருவர்
கெளரவ கலாநிதிபட்டம் பெற்ற எழுத்தாளர் சொக்கன்
சொக்கன் என இலக்கிய உலகில் அறியப்பட்ட திரு.க.சொக்கலிங்கம் அவர்கள் ஒரு தமிழ் ஆசிரியர், ஆய்வாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பாடப்புத்தகங்கள் எழுதும் ஆசிரியர், நாடக எழுத்தாளர், விமர்சகள், மொழிப்பெயர்ப்பாளர், என பல்வேறு முகங்கள் கொண்டிருப்பவர்.
02.06.1930ம் திகதியில் ஆவரங்காலில் பிறந்த சொக்கன் இளவயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் தம்கல்வியை யாழ்ப்பாணத்தில் வளர்த்துக்கொண்டவர். பழந்தமிழ்க் கல்வியும் சைவசமயக்கல்வியும் ஒருங்கே பெற்றுக் கொண்ட சொக்கன் நவீன இலக்கியத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.
பதினான்கு வயதில் (1944) 'தியாகம்' எனும்கிறுகதை வீரகேசரியில் பிரசுரமானது பத்தொன்பதாவது வயதில் (1949) மலர்ப்பழி' என்னும் முதல் நாவல் ஈழகேசரியில் தொடராக வெளிவந்தது. வேதாந்தி என்ற பெயரில் உரைச்சித்திரங்களையும் எழுதினார். ஏறக்குறைய இருநூறு சிறுகதைகளை எழுதிய சொக்கனின் முதல் சிறுகதைத்தொகுதி 'கடல்' என்னும் பெயரில் வெளிவந்தது. இது சாகித்திய மண்டல பரிசையும் பெற்றது.
1960 இல் அவர் எழுதிய “சிலம்புபிறந்தது”, “சிங்ககிரிக்காவலன்” ஆகிய நாடகங்கள் இலங்கைக் கலைக்கழகத்தின் பரிசில்களைப் பெற்றுள்ளன. தனது முதுகலைமாணி, பட்டத்திற்கு எழுதிய "ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி” எனும் நூல் சாகித்திய மண்டலப்பரிசைப் பெற்றுக்கொண்டது. நாவல் துறையில் இவர் எழுதிய நூல்கள் மலர்ப்பலி (1949) செல்லும் வழி இருட்டு (1985) , சீதா (1963) என்பன. "ஞானக்கவிஞன்’, ‘சலதி’ (1985), பத்திக்சந்த்(1985),முகங்கள் (1986), என்பன. "ஞானக்கவிஞன்’ ’சலதி' என்பனமுறையே கம்பராமாயணம், சிலப்பதிகாரம், ஆகியவற்றின் பின்னணியில் எழுந்தவை. முகங்கள் ஒரு குறுநாவலாகும். பத்திக்சந்த் வங்காள எழுத்தாளர் சத்தியஜித் ரேயின் சிறுவர் நவீனத்தின மொழிபெயர்ப்பாகும்.
கவிஞராக 'வீரத்தாய் நசிகேதன், நல்லூர் நான்மணிமாலை', 'அப்பரின் அன்புள்ளம்', 'கவிதைக்கதம்பம்', 'நெடும்பாமூன்று', என்பவற்றை சொக்கன் எழுதியுள்ளார். நாவலர், நாவலரான கதை என்னும் விபரணபாநாடகம் சேந்தன் என்போருடன் இண்ைந்து எழுதப்பட்டது. ‘இலக்கிய கருவூலம்’ எனும் நூல் பல இலக்கிய கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. 'கவிதை பிறந்த கதை' எனும் பா நாடகமும் எழுதியுள்ளர்.
26
 

ஒரு தமிழ் ஆசிரியராக தனது கல்விப் பணியைத் தொடங்கி அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இலக்கணத்துறையில் சொக்கனின் பங்களிப்பு நாவலர் மரபைத் தொடர்ச்சியாக பேணுகிறது. அந்தவகையில் அவரது இலக்கணத்தெளிவு மற்றும் உரைநடைத் தெளிவு’ என்பன காத்திரமான நூல்களாக காணப்படுகின்றன. திறனாய்வுத்துறையில் மாணவர்களை வழிநடத்த அவரது கட்டுரைக்கோவை நல்லதொரு நூலாகும். பாடநூலாக்கப்பணிகளில் 'தமிழ் இலக்கிய வினாவிடை’ தமிழ் இலக்கிய விளக்கம்', 'கட்டுரைபூந்துணர்', என்பன குறிப்பிடத்தகுந்தவை. அத்தோடு 'இந்துசமயம்" (1973) என்கின்ற நூல் பல பதிப்புகளைக் கண்டது நல்லை நகர் தந்த நாவலர்’ (1968), சேர் பொன்னம்பலம் இராமநாதன் வாழ்க்கைவரலாற்றுச்சுருக்கம் என்பன அவரது வரலாறு சார்ந்த நூல்களாகும்.
ஒரு இலக்கிய அமைப்பு செயற்பாட்டாளனாகவும், அவர் பணிபுரிகின்றார். இலங்கை சேக்கிழார் மன்றச் செயலாளர், முத்தமிழ் வெளியீட்டுக்கழக பொதுச்செயளாலர், திருமுறை மன்றத்தலைவர், என பல பதவிகளை வகித்தவர். ஒரு சிறந்த சமய இலக்கிய பேச்சாளராகவும், பழம்தமிழ் இலக்கிய உரையாசிரியராவும் தனது பணிகளை விரித்துக் கொண்டார். காரைக்காலம்மையார் புராணம்', 'திருக்குறள்’ என்பவற்றிற்கு உரை எழுதியுள்ளார். இப்படிப்பட்ட பல்துறை ஆற்றல் மிக்க சொக்கன் அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கெளரவகலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்தமை பாராட்டுக்குரியது. அவர் இன்னும் நீண்டகாலம் தமிழுக்கு பணியாற்ற வேண்டும் என்று மாருதம்' வாழ்த்துகின்றது.
OO O
ா மறக்காதே
ப வனத்துள் இருக்கும்
புதிராய் என்னைப் தப்பித்துக் கொள்ள
ப பாராதே நீ பேசும் தந்திரமா உயிர் பெறும்
KO I W W அது கரிய மேகத்தை என் முகம் மட்டும் (pOQUUNT,5) மறக்காதே நீ ஏறு முகம் நான் அன்பின் மழையில் என் உள்ளம் அன்றில் இனத்தவன் நனை வாய்
660) s என்பதை மறக்காதே
- ஜெயம். ఇU கணம் நின்று கரியமேகம் அதைப்
ஒரு சொல்பேசு பார்க்க வெறுக்கும் மனம்
ப ஒராயிரம் அர்த்தம் மழையாகி மண்ணில்
காணபாய விழும்போது
என் சொல்லில். எத்தனை விந்தைகள்
27

Page 15
ஈழத்து நவீன நாடகத்தின் தாக்கமான வளர்ச்சிக்கு வித்திட்ட குழந்தை ம. சண்முகலிங்கம்
ஈழத்தின் நவீன நாடகத்தின் தலைமகனாக கொண் டாடப்படுபவர் 85 60) 6) up J 8, சொர்ணலிங்கம் அவர்கள் பாரம்பரியக் கூத்து முறமையில் இருந்தும் இசை, நாடக மரபில் இருந்தும் மாறுபட்டு மேற் கத்தேய மனோரதிய, மிகைப்பாட்டுவடிவங்களை தமிழ்மயப்படுத்தி வடமொழி இதிகாச, மேற்குலக நாடக எழுத்துருக்களை தமிழ் அரங்கில் தந்தவர் சொர்ணலிங்கம், தமிழகத்து பம்மல் சம்பந்தமுதலியாரைக் குருவாகக் கொண்டு தனது தத்ரூப நடிப்பினாலும் அரங்க அமைப்பு முறைகளினாலும் நவீனமயப்பட்ட அரங்கொன்றை ஈழத்திற்கு தந்தார். அவரது பாசறையில் வளர்ந்து பின்னர் உலக நாடக அரங்கியல் மாற்றங்களோடும், தன்னை புடம் இட்டு ஈழத்தமிழரின் அரசியலை, வாழ்வை நாடகத்தின் பொருளாக்கி ஈழத்தின் தமிழ் நாடகப் போக்கயே புதிய நடையில் பயில விட்டவர். குழந்தை.ம.சண்முகலிங்கம் ஒரு கலைப்பட்டதாரியான சண்முகலிங்கம், யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப்பிறப்பிடமாகக் கொண்டவர். நீர் கொழும்பில் தனது இளமைப்பராயத்தைக் கழித்தவர். நாடகத்துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக அவரை யாழ்ப்பாணப் பல்கலைகழகம் வருகைவிரிவுரையாளராக நியமித்தது. அவரது நாடகப்பணியைப் பாராட்டி கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் 2001இல் கெளரவ இலக்கியகலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது.
திரு சண்முகலிங்கத்தின் நாடகப்பணிகள் ஜம்பதுகளில் தொடங்குகின்றது. 1951இல் திருநெல்வேலி இந்துவாலிப சங்க நாடகமொன்றில் கிழவன் பாத்திரம் ஏற்று திரு க.செல்வரட்ணம் அவர்களுடன் இணைந்து நடித்தார். 1957ல் 'அருமை நண்பன்' என்னும் நாடகத்தை எழுதித் தயாரித்தார். 1958ல் கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த P.S. இராமையாவின் தோரோட்டி மகனில் அருச்சுனன் பாத்திரம் ஏற்று நடித்தவர். 1960ல் திருக்குறள் தந்த திருவள்ளுவரின் வாழ்வைச் சித்தரிக்கும் 'வையத்துள் தெய்வம்' என்னும் எழுத்துரு இவரால் எழுதப்பட்டது. இது 1974ல் எஸ்.ரி.அரசு அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டு உலகத்தமிழராய்ச்சி மாநாட்டில் மேடையேற்றப்பட்டது. இடைக்காலத்தில் விதானை செல்வரத்தினத்துடன் இணைந்து 'சந்தி, தாலியைக்கட்டு, 'அன்னத்துக்கு அரோகரா’ போன்ற சமூகவிமர்சன நாடகங்களில் பங்கு கொண்டார்.
ஒரு ஆசிரியராக பின்னர் ஒரு அதிபராக கடமையாற்றிய சண்முகலிங்கம், 1976ல் கொழும்புப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட நாடக டிப்பிளோமாப்பயிற்சியில் பங்கு கொண்டார். இந்தபயிற்சி நெறியில் பெற்றுக் கொண்ட உலகநாடக அறிவும் சிங்கள நாடகங்களின் அனுபவமும் அவரை
28
 

நாடத்துறையில் புதிய பயணத்தை மேற்கொள்ள உதவியது. அந்த அனுபவத்தினை தன் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள எண்ணி நாடகக்கலைஞர், தாசீசியஸ் உடன் இணைந்து நாடகஅரங்கக் கல்லூரி என்னும் அமைப்பை நிறுவினார். அதன் முதல் படைப்பாக கூடிவிளையாடுபாப்பா' என்னும் சிறுவர் நாடகத்தினை எழுதி அரங்கேற்றினார். நாடகம் ஒரு அரங்கக்கலை என்னும் அடிப்படையில் செயற்பாடுகளை மையப்படுத்தி சிறுவர்களுக்காக பெரியோர், நடித்த நாடகமாக அமைந்தது. அது நெறியாள்கை செய்தவர் பிரபல நாடக கலைஞர் அ. தாசீசியஸ்.
தாசீசியஸ் உடன் இணைந்து நாடக அரங்கக் கல்லூரியினூடாக நாடக ஆர்வலர்களுக்கு களப்பயிற்சியினை நடாத்தினார். யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பொஸ்கோ பாடசாலை,சுண்டுக்குளி மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இவரது நாடகமுயற்சிகள் இடம் பெற்றன. 1980களில் எழுதித்தயாரித்த நேர் நாடகம் உறவுகள் இதனைத் தொடர்ந்து நாளைமறுதினம், மாதொருபாகம், புழுவாய் மரமாகி, தாயுமாய் நாயுமானார், திக்குவிஜயம், நரகத்தில் இடர்ப்படோம், “சத்தியசோதனை', 'தியாகத்திருமணம்', போன்ற பாடசாலை நாடகங்களை எழுதித் தயாரித்தார் இந்தப்பாடசாலை நாடகங்களுடாகவே சண்முகலிங்கத்தின் நாடக முறைமை உருப்பெற்றது என பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார்.
1985ல் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக கலாச்சார குழுவுக்காக மண்சுமந்தமேனியர் என்னும் நாடகத்தினூடாக ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி பேசினார் சண்முகலிங்கம், இதனுடைய அடுத்தகட்டமாக 'மண்சுமந்த மேனியர் II எழுதித் தயாரிக்கப்பட்டது. போராட்டத்தின் தாக்கத்தால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடுக்களுக்கு தனது 'அன்னை இட்ட தி" (1991) நாடகம் ஊடாக ஆறுதல் செய்தார். தொடர்ந்து பிள்ளைகள் எல்லாம் பிறதேசம் சென்றுவிட தனியே நின்று அவலப்படும் யாழ்ப்பாண முதியவர்களை சித்தரிக்கும் நாடகமாக அமைந்தது, 'எந்தையும் தாயும், முதுமையில் பெரியோர்களை பேணுதல் பற்றி அவரது நீ செய்த நாடகமே பேசுகிறது. இடையில் போரினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களின் அவலங்களை யார்க்கெடுத்துரைப்பேன் என்ற நாடகம்மூலம் விம்மினார்.
1987, 1989 காலப்பகுதியில் இந்திய அமைதிகாக்கும்படை காலத்தில் போர்வீரனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையையும் அது குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்திய விளைவுகளையும் அவரது 'வேள்வித்தி நாடகம் சித்திரிக்கிறது. தாகூரின் துறவி கிரேக்க இடிபஸ் மன்னன்', நேர்வே ஒரு பாவை வீடு என்பனவற்றை மொழிபெயர்த்து மேடையேற்றினார். நூறுக்கு மேற்பட்ட நாடகங்களை சமூகவிடுதலை சார்ந்தும் அரசியல் விடுதலை சார்ந்தும், பண்பாட்டு விடுதலை சார்ந்தும் எழுதிய சண்முகலிங்கம், ஒரு நாடக கலைஞராகமட்டும் அல்லாமல், நாடக அறிஞராகவும், ஆய்வாளனாகவும் தயாரிப்பாளனாகவும், களப்பயிற்சி நடத்துநராகவும், எல்லாவற்றிக்கும் மேலாக மனிதப்பண்பு நிறைந்தவராகவும், காணப்படுகின்றார். அவருக்கு நாடகத்துறையில் கெளரவ இலக்கியகலாநிதிப்பட்டம். வழங்கப்பட்டமை பொருத்தமானதும் , பாராட்டுக்குரியதுமாகும். கந்தையா றுநீகணேசன்.
29

Page 16
வவுனி27 கலை இக்ைகி: தணர்கர்கன் வட்டகம்தடத்துகம் ஜத்த7ண்கு தீதிைவு தீகதுர்வு
பிரதமவிருந்தினர்
திருமதி மேரி ஆன் இமெல்டா சுகுமார்
(பதில் அரசஅதிபரும், பிரதேசச்செயலாளரும், வவுனியா)
சிறப்புவிருந்தினர்
米 திருநா.சேனாதிராஜா
(தலைவர், சுத்தானந்த இந்து இளைஞர்
சங்கம், வவுனியா)
掌 திருசிஏ.இராமஸ்வாமி
(தலைவர், இந்துமாமன்றம், வவுனியா)
திருநாக.சண்முகநாதபிள்ளை (முன்னாள் அதிபர், யாழ்மத்தியகல்லூரி)
இடம் : வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபம்
காலம் :26.04.2002 வெள்ளிக்கிழமை
Iഞ്ഞ 3.00ഥങ്ങി தலைமை :தமிழ்மணி அகளங்கன்.
*இசைநிகழ்ச்சிகள் இசைமைந்தன் பத்மநாதன் சிவமைந்தனின் 1008 மேடை அமர்வு திருமதி.நந்தினி உதயகுமாரன் Dip.in Music செல்வி.வாசுகி இராமலிங்கம் *விருது வழங்கும் வைபவம்
விருது பெறுவோர் முல்லைமணி வே.சுப்பிரமணியம் கலைஞர்.எஸ்.ரி.அரசு
*மாருதம் சஞ்சிகை வெளியீடு வவுனியா நர்தனாஞ்சலி நாட்டியப்பள்ளி மாணவர்கள் வழங்கும் வவுனியா நிருத்ய நிகேதன மாணவிகள் வழங்கும் *நடன நிகழ்ச்சிகள்
30

வவுனியா கலைஇலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 5 * ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்படும் IDIருதம் இதழ் நீண்ட நாட்கள் சிறப்புற விளங்க வாழ்த்துகிறோம்
N.S.RATNAMI RzBROS
Dealers in all kinds of electronic items and spares
No:6, 11“ Cross Street, Vavuniya.
Te/Fax:024-21237
31

Page 17
r 27 മL്
இரசாயனவிடரங்கள்
விற்ப னை
米米> சீவம்ஸ் 4 டிச, கந்தசுவாமி
வவுனி
米米>
உதயன்ஸ் | 2O3HEHS.",
米米>
蜥、
ஆரங்கநாதன
74^, கை வவுனி
LL L LaLS aa LLaL STSYS
 
 
 
 

திண்மர்கண்வட்டத்திச்
தட்ஜவெண்டப்பகுதம்
ܠܐ ܒܛ1 உதrட்கணச்சிறப்புற
த்துகிஜாக்
米
് ഖഖ്യമfur
கிருமிநாசினிகள்
UTGITT
料
E Imal