கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் (வவுனியா) 2003.10

Page 1
ஐப்பசி - ՔՍՈՑ சமூக கலை
அமரர் பேராசிரியர் 5.
வவுனியா கலை இலக்கிய
 
 
 
 

தி0
இலக்கிய சஞ்சிகை இதழ் 04
கணபதிபிள்ளை
நண்பர்கள் வட்டம்
".

Page 2
மாருதம் இதழ் நான்கு சிறப்புற எமத வாழ்த்தக்கள்
GEBA
கல்வி நிலையம்
கதிரேசு விதி, வைரவபுளியங்குளம், 62/6/6afiu I.

அகmங்கள்
கந்தையா g கணேசனர்
t
உதவி:
செல்வி சிசிவாஜினி
திரு. ப. முரளிதரன்
639;ċifiċi:
மல்ரீவிஷன் பிநீர்ரேஸ்
குடியிருப்பு, வணியா.
65/.6u: 024 - 2223143
வடிவமைப்பு:
.j്6?
இலச்சினை:
ப. சிஅைன்பு
தொடர்புகட்கு:
(1)
olu Saras,
395
அலைகரை வீதி,
5 இநம்மைக்குலீம்,
: attri۲۰ 2 به از وه let.au: o34 - 2221310 (2)
90,திருநாவந் தாம்
Jagatai T, O2Կ - 22.2.1676
வெளியீடு:
வவுனியா கலை இலக்கிய
நண்பர்கள் வட்டம்,
சித்திரை co, இதழ் 01
* அட்டைப்படக்கதை
~ கலாநிதி.க.சொக்கலிங்கம்
* டென்மார்க்கிலிருந்து இரு நாவல்கள் - முல்லைமணி
* கவிதைகள்
* யார் பொறுப்பு (நாடகம்)
- வ.சுப்பிரமணியம்
* இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ்க் கவிதை
- சு.ஜெயச்சந்திரன்
業 செந்தழல் நாடு (சிறுகதை)
- ມີໃg]ມບົດບໍ່?
* மின்மினிப்பூச்சி (சிறுகதை)
~ மு:நந்தகுமார்
* தமிழை வளர்ப்போம்
~ அகளங்கள்
* ஓர் இலக்கியகாரனின் தினக்குறிப்பிலிருந்து. ~ சங்கர{னர்) செல்வி
* வட்ட நிகழ்வு பதிவுகள்
- சிவிவாஜினி

Page 3
உங்களுடன்.
மாருதம் இதழ் 4 தன் சுகந்தமான வாசனையுடன் வெளிவருகிறது. இவ்விதழில் வவுனியா தேசியகல்வியியல் கல்லூரி மாணவர்களின் ஆக்கங்கள் பல உள்ளடக்கப்படுகின்றன. கடந்தவருடம் கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய குழுவினால் நடாத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் இளைய தலைமுறையினர் எழுத களம் கிடைப்பதில்லை என கல்லூரி மாணவர் குறைப்பட்டார்கள். எனவே அவர்கள் படைப்புக்கள் இவ்விதழை அலங்கரிக்கின்றன. அத்தோடு வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச் சின் கலாசார திணைக்களம் வருடந்தோறும் நடாத்தும் இலக்கிய விழாவை இம்முறை வவுனியாவில் நடாத்துவதை ஒட்டியும் இவ்விதழ் சிறப்புடன் ஐப்பசியில் மலர்கிறது. ஆளுநர்விருது, மற்றும் இலக்கிய விருதுகளைப் பெறும் படைப்பாளிகளுக்கு “மாருதம் தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.
வவுனியாவில் பல வேறு கலை இலக் கரியச்
செயற்பாடுகள் அரங்கேறிவருகின்றன. சிறுவா, ஆசிரியர் தினங்களுக்கு நாடக மேடையேற்றங்கள், விஜயதசமி கலை நிகழ்வுகள் என்பன சிறப்பாக நடைபெறுகின்றன. தமிழ் மொழித் தின நிகழ்வுகள், நடன அரங்கேற்றம் , நுால் வெளியீடுகள் என கலை இலக்கிய அரங்குகள் களைகட்டிவருகின்றன. மேலும் இந்நிலைமை தொடர்ந்து சிறப்பான ஒரு கலை இலக்கியப் பண்பாடு இம்மண்ணில் தோன்றி மக்களின் எழுச்சியான வாழ்வுக்கும் சிறப்புக்கும் வழிகோல வாழ்த்தி மீண்டும் அடுத்த இதழுடன் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகின்றோம்.
ஆசிரியர் குழு

அட்டைப்படக் கதை (பேராசிரியரின் பிறந்த தின நூற்றாண்டு நினைவை ஒட்டி. }
கவிஞர், நாடகாசிரியர், சமுகவியல் முன்னோடி
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை •
கலாநிதி.க.சொக்கலிங்கம். தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் தமிழ் உயர் கல்வியானது இருவகைகளாய் நிலவிவருகின்றது. எண்ணும் எழுத்தும் கண்னெனக் கொண்டு குருகுலம், திண்ணைப்பள்ளி வழிவந்த மரபுவழித் தமிழ்க்கல்வி என்பது ஒன்று. இது மிகவும் பழைமையானது. முன்னோர் மொழி பொருளேயன்றியவர் சொல்லும் பொன்னேபோல் போற்றுவம் என்ற குறிக்கோளினின்றும் அணுவளவேனும் விலகாது அதனைச் சிக்கெனட் பிடித்துச் சிலாகிப்பதும் தொன்மை மறவாமையும் புதுமையை ஏற்காமையும் இம்மரபு வழிக்கல்வியின் முதலும் ഗ്രൂഖഥTങ്ങ இலக்குகள்.
மேலைத்தேயக் கல்விமுறை அறிமுகமாகி, கல்விக்கான களங்கள் பலவாய்க் கிளைத்துப் பல்கலைக் கழகம் வரை சென்று நிறைவு பெறுவது புதுமுறைத் தமிழ்க் கல்வி. முன்னைய கல்வி முறை இலக்கணத்திற்கு முதன்மையளித்து, இலக்கியததை அறம், பொருள். இன்பம், வீடு அடைதற்கான கருவியெனக் கொண்டு, அவ்வுறுதிப் பொருள்களை அடைய உதவாதவற்றை இலக்கியம் அல்ல எனப் புறந்தள்ளுவதும் அந்நான்கும் அமைந்தவற்றையே போற்றி நயப்பதும், அவற்றையே மனனம் பண்ணுவதும் கையாள்வதும் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களின் உரைகள் வியாக்கியானங்கள் என்பன் எக்காலத்திற்கும் பொருந்துவன என்று ஏற்பதும், காரிகை கற்றுக்கவிபாடி, அவற்றின் சொல்லாட்சி பொருளாட்சியை விரிப்பதுமாகிய கல்வியினின்றும் பெரிதும் வேறுபடுவது ‘புதுமுறைத் தமிழ்க் கல்வி தமிழின் வளர்ச்சியும் வரலாறும் ஒரு காலத்தோடு நிறைவுபெற்று விட்டன. அவற்றை மீளவும் மீளவும் கற்பதே புலமைக்கு அடையாளம்’ என்பதையும் புதுமுறைத் தமிழ்க்கல்வி ஏற்பதில்லை.
தமிழ்க் கல்வியும் அது சார்ந்த அறிவும் மரபுவழி கற்ற சான்றோர்க்கு மட்டும் உரியனவல்ல. அவற்றைப் நம் காலத்து நோக்குகளுக்கும் போக்குகளுக்குமேற்ப ஆராய்தல், நடுநிலை நின்று விமர்சித்தல், இலக்கண இலக்கியக் கல்வியோடு முடங்கிப் போகாது மொழியியல், சமூகவியல், மானிடவியல். அறிவியல் சார்ந்த சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கண இலக்கியங்களை நோக்கல், அவற்றினை உள்ளடக்கிப் புதியன புனைதல் என்பனவே புதுமுறைத் தமிழ்க்கல்வியின் இன்றியமையாக் கூறுகளாகும். மரபினைப் பொன்னேபோல் போற்றுதல் என்ற கருதுகோளை ஏற்காது போதிய காரணகாரிய அடிப்படையில் அவற்றை மீறலாம் என்ற கருதுகோளும் இன்று மிகுதியும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
இவ்விருவகைக் கல்விகளிலும் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று வாதிடுமவதும் முடிவுமேற்கொள்வதும் இக்கட்டுரைக்கு வேண்டாதவை. மரபு
3

Page 4
வழியையும் முற்றிலும் புறந்தள்ளாது புதிய முறையையும் விருந்தென ஏற்று ஒரு நடுவழி செல்வதே நிறைவான உயர்தமிழ்க்கல்வி என்பதே நடுநிலையாளர்தம் முடிவு. இம்முடிவுக்கு எடுத்துக் காட்டுக்காளாய் எமது ஈழத்தமிழ் மண்ணிலே வாழ்ந்த வாழ்கின்ற அறிஞர்களும் இல்லாது போய் விடவில்லை. இவ்வகையில் எம்மிடையே வாழ்ந்து போன பேராசிரியர், அமரர் க.கணபதிப்பிள்ளையவர்களும் ஒருவராவார்.
யாழ்ப்பாணத்துத் தும்பளையிலே (வடமராட்சி) 1903 - 05.02 ஆந்தேதி கந்தசாமிப்பிள்ளை என்ற சுதேச வைத்தியரின் மகனாகப் பிறந்தவர் கணபதிப்பிள்ளை. தந்தையார் செய்த ஏற்பாட்டின் படி புலோலியிலே ஆரிய திராவிட பாஷா விற்பன்னராய் விளங்கிய மா.முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் என்பவரிடம் தமிழ், சமஸ்கிருத மொழிகளை மரபு வழிநின்று கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. ஆசிரியர் கற்பித்த யாப்பு, இவரை இளம்வயதிலேயே யாப்பமைதியோ டு கூடிய மரபுக் கவிதை இயற்றிட வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ், சமஸ்கிருதக் கல்வியோடு நின்று விடாது ஆங்கிலத்தையும் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியிலே அமைவுறக் கற்ற கணபதிப்பிள்ளை, கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலே தமது கலைப்பட்டப் படிப்பினை மேற்கொண்டார். தமிழ், சமஸ்கிருதம், பாளி மொழிகளைத் தெரிவுபாடல்களாய்க் கொண்டு கலைமாணித் தேர்விலே முதல் வகுப்பிலே 1930 இல் தேறியதும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் வித்துவான் கற்றுப் பட்டம் பெற்றதும், தொடர்ந்து லண்டன் சென்று லண்டன் பல்கலைக்கழகத்தில் ரேணர் (Tumer) என்ற மொழியியற் பேராசிரியரின் வழிகாட்டலில் ஆய்வு நடத்திக் கலாநிதிப் பட்டம் பெற்றதும் இவரின் கல்விச் சாதனைகளாகும். ஆக மரபு வழியும், புதிய வழியும், இணைந்த ஆழ அகலக்கல்வி மூலம் கணபதிப்பிள்ளை பரந்தநோக்கும், பழைமையிற் புதுமை காணலும் வேண்டும் இடங்களில் பழமையிலிருந்து விடுபட்டு புதுமைபுரிதலும் தம் வாழ்விலக்காகக் கொண்டார். என்பதை இவ்விடத்தில் அழுத்திக் கூறவேணடும். முத்துக்குமாரசுவாமிக் குருக்களிலே தொடங்கி, விபுலானந்த அடிகள், ரா.பி.சேதுப்பிள்ளை ஆகியோரின் ஆசிரியத்துவத்தில் வளர்ச்சிகண்டு பேராசிரியர் ரேணரின் நெறிப்படுத்தலில் இவரின் தமிழ், தமிழியல், பன்மொழிக் கல்வி நிறைவுற்றதெனலாம்.
கணபதிப்பிள்ளை தமது கல்வியை நிறைவு செய்து கொண்டு 1936இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளரானார். 1947வரை அப்பணியைத் தொடர்ந்து அது பல்கலைக்கழகமான காலத்திலிருந்து 1965 வரை தமிழ்ட் பேராசிரியராயும். அவ்வவ்போது கீழ்த்திசைக் கல்விட்பீடாதிபதியாயும், (Deam of the Facuffy of Oriental Studies) 6Ýịì6i#6146u 1895[[(B 86o 516òIb . பிரதித் துணைவேந்தர்ப் பதவியும் வகித்தார்.
அவர் விரிவுரையாளப் பணி ஏற்ற காலகட்டம் ஆங்கிலம், கோலோச்சிய காலம். ஆங்கில மொழிமூலம் கலைப் பட்டதாரியாகும் ஒருவர் தமது தெரிவுப் பாடங்களில் ஒன்றாகத் தமிழை எடுத்தல் அரிதினும் அரிது. அவ்வாறு எடுத்தாலும் தமிழ் சார்ந்த வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் ஆங்கில மொழிவாயிலாகவே எழுதப்பட்டன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்து 4.

தேசிய மொழிகளான சிங்களமும் தமிழும் ஆங்கிலத்தின் இடத்தைப் படிப்படியாகப் பிடித்த பின்னரே, கலைத் துறைப்பட்டப்படிப்பிலும், கல்லூரிகளின் உயர்தரப் பரீட்சைகான படிப்பிலும் அவ்விருமொழிகளும் மேலாண்மை பெற்றன. பதிப்பாசிரியர் சி.வை.தாமோ தரம் பிள்ளையின் மைந்தர் கிங்ஸ் பரி தேசிகர் பல்கலைக்கழகக்கல்லூரிக் காலத்தில் மேற்கொண்ட அயரா முயற்சியாலும் தொடர்ந்து பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான விபுலானந்த அடிகளின் ஆளுமையாலும், அவரின் பின் பேராசிரியரான கணபதிப்பிள்ளையின் ஊக்குவிப்பாலும் பல்கலைக்கழகத் தமிழ்க் கல்விக்கு வலுவான அடித்தளம் இடப்பட்டது. ஆங்கில மோகங் கொண்ட தமிழ் மாணவர் தமிழ் மீது பற்றும் பத்தியும் கொள்ள இவர்களின் கற்பித்தலும், ஊக்குவிப்பும் பெரிதும் துணைபோயின.
பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் அவரோடு உறுதுணையாய் நின்ற விரிவுரையாளர் விசெல்வநாயகமும் பின்னாட் பேராசிரியர் தமது ஆளுமையாலும் ஆற்றலாலும் தோற்றுவித்த மாணவர்பரம்பரை அவர்களுக்குப் பின் தமிழியற் கல்வியானது பரந்து விரிந்து உலக அரங்கில் பெருமைபெறப் பெரிதும் உழைத்ததும் உழைப்பதும் விதந்து கூறவேண்டுவன. பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், ஆ.சதாசிவம் , க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, ஆவேலுப்பிள்ளை, அ.சண்முகதாஸ், கலாநிதி சதனஞ்சயராசசிங்கம் ஆகியோரின் தமிழ்ப் பணிகளுக்கு வித்திட்டு அவர்களின் வழியிலே சிறந்ததொரு மாணவ - அறிஞர் பரம்பரை - உருவாகிவருவது பெரிதும் பாராட்டத்தக்கதே.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதோடு நின்றுவிடவில்லை. இலக்கணத்தை மொழியியல் நோக்கில் ஆராய்ந்து புதிய பல மொழிசார் உண்மைகளை நிறுவியதும், சாசனவியலில் ஆய்வு செய்ததும், தம் வழியில் இவ்விருதுறைகளிலும் புலமையாளர்களை உருவாக்கியதும் அவரின் தமிழ்க்கல்விப் பணியிலே குறிப்பிடத்தக்கவை. மொழியியல் சாசனவியல் இரண்டிலும் இவரின் வழிகாட்டலைப் பெற்றவர் பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை என்பதும், சாசனவியலில் வழிப்படுத்தப்பட்டோர் பேராசிரியர்கள் கா.இந்திரபாலா, (யாழ்பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர், இன்று அவஸ்திரேலியாவில் வசிக்கிறார்) சி.க.சிற்றம்பலம் (யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோர் என்பதும் நினைவுகூரத்தக்கன. V
பேராசிரியரைக் கவர்ந்த மற்றும் இருதுறைகள் ஈழத்தமிழர் தம் வரலாறும், அவர்களின் வாழ்வியல்சார் நம்பிக்கைகள், செயற்பாடுகளும் தொடர் Iான சமூகவியல் ஆய்வுமாகும். ஈழத்தமிழரின் தன்மானத்திற்கும் சுதந்திரத்துக்கும் அடையாளச் சின்னமாக விளங்கிய யாழ்ப்பாணத் தமிழ் அரசன் சங்கிலியனின் வீர. தியாக வரலாற்றினை நாடகமாக வரைந்த அவள் சங்கிலி நாடக நூலின் முன்னுரையாக 36 பக்கங்களில் ஈழத்தமிழர் வரலாற்றினை விரித்து எழுதியுள்ளார். இவரின் இந்த முன்னோடி முயற்சியைத் தக்கு வழிகாட்டியாக கொண்டு ஆய்வு நிகழ்த்தி ஈழத்தமிழர் தம் வரலாற்றில் புதிய ஒளி பாய்ச்சும் புலமையாளர் வரிசை ஒன்றே தோன்றியுள்ளதெனலாம். பேராசிரியர்கள் பத்மநாதன், சி.க.சிற்றம்பலம், கலாநிதி புஷ்பரத்தினம், பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா.

Page 5
முதலியோர் இவர்களிலே குறிப்பிடத்தக்கோர்.
‘ஈழ தமிழ் மக்களின் வாழ்வும் வளமும்’ என்ற நூலினுடாகத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கைக் கூறுகள், நம்பிக்கைகள், சமய வழிபாடுகள் என்பவற்றைப் பேராசிரியர் வெளிக் கொணர்ந்துள்ளார். மானிடவியலில் முதன்மைப் படுத்தப்படுவனவும், புதிதாய்த் தோன்றி வளர்ந்து வரும் சமூக இயல் ஆய்விற்குத் துணைபோவனவுமான சில அம்சங்கள் மேற் குறித்த நூலிலே இனங்காட்டப்பட்டுள்ளன. பேராசிரியர் காலத்தில் தமிழில் தோற்றமே பெறாதிருந்த மானிடவியல், சமூகவியல் துறைகளுக்கு அன்றே அவர் வித்திட்டபோதும் அவ்வித்தின் முகையினையே கருக்கிட முனைந்தோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கோயில்வாகனங்கள் பற்றியும் அடுப்பு நாச்சியார் பற்றியும் எழுதுகிறாரே என்று ஏளனம் செய்தோரும் அறிஞர் கூட்டத்திலும் இருந்தது வியப்பிற்குரியதே ஆனால் அவர்தொட்டு விட்ட துறையிலே, பேராசிரியர்கள் வித்தியானந்தன் (நாட்டாரியல் நாட்டுக்கூத்து) க.கைலாசபதி (தமிழ் இலக்கியத் சமூகவியல் அடிப்படையிலும் நோக்கல்) கா.சிவத்தம்பி (தமிழிலக்கிய ஆய்வில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகம் பற்றி நுண்ணாய்வு மேற்கொள்ளல்) முனைந்துழைத்துப் பயன்தரு சிந்தனைகளைத் தமது ஆய்வுகள்மூலம் வெளியிட்டுவருவதை எவரும் மறுக்கார். கவிஞர்
யாப்பறி புலவரான பேராசிரியர் பெரும்பாலும் ஆசிரியப் பாவையும், சிறிதளவு ஆசிரியவிருத்தத்தினையும், கலிப்பாவையும் கையாண்டு தனிப்பாடல்கள் (வல்லிபுரத்தே எல்லிடை நடக்கும்எனத் தொடங்கும் பாடல், வல்லிபுரத் ஆழ்வார் கோயில் திருவிழாவிற்குப் பக்தர் செல்வதையும் அங்கு காணும் காட்சிகளையும் சித்திரிப்பது தமிழ்ப்பாடநூலில் இடம் பெற்று ஒரு காலத்தில் மாணவர் நயந்து பாடிப்பரவசம் அடைந்தபாடல். இவை போன்ற பல அச்சேறாதிருக்கலாம்) நெடும்பாடல்கள் (விந்தைமுதியோன், சீதனக் காதை முதலிய நெடும்பாடல்களின் தொகுப்பு - துவுதும்மலரே என்பது தலைப்பு) பிரபந்தம் (காதலியாற்றுப்படை - காதலியை வழிகாட்டுவதுபோன்று பருத்துத்துறை நகரக்காட்சிகளை அழகாகவும் எதார்த்தமாகவும் சித்திரிப்பது) மொழிப் பெயர்ப்பு (வடமொழி இரத்னாவளி நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு - உரைநாடகமாயினும் சுவையான பாடல்களும் இடையிடையே விரவியது) என்பன அவரது கவித்துவத்தை இன்னும் பறைசாற்றுவன. நகைச்சுவை, சோகம், நையாண்டி, என்பன இவர்தம் ாடல்களிலே மேலோங்கி நிற்றல் காணலாம். இவற்றோடு வடமராட்சிவாழ் மக்களின் இயல்புகள், போக்குகள், மண்வாசனை என்பன எங்கும் விரவிநிற்பது சிறப்பித்துக் கூற வேண்டிய அம்சமாகும். "சீதனக்காதை என்ற நெடும்ப யாழ்ப்பாணத்தில் நிலவும் சீதனக் கொடுமை ை மெல்லிய நகைச்சுவையு ன் சித்திரிப்பது. ‘துவுதும் மலரே நூலினைப் பதிப்பித்த பேராசிரியர் க.கைலாசபதி, இந்நெடும்பாடல் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மருமக்கள்வழி மான்மியத்தோடு ஒத்து நோக்கும் சிறப்பு வாய்ந்தது என்றார்.

கதாசிரியர்
இயல்பாகவே கற்பனைவளமும் கதைகட்டும் திறனும் பேராசிரியரில் அமைந்திருந்தன. எனினும் இத்துறையிலே அவர் பெரும் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஜேர்மன் மொழியிலிருந்து 'நீரரமகளிர் என்ற நெடுங்கதை இவரால் மொழிபெயர் க் கப்பட்டது, ‘வாழ்க் கை வினோதங்கள் பிரஞ்சுமொழிக்கதையைத் தழுவி எழுந்தது. முன்னையதில் காதலின் மேன்மையும் அது தோல்வியுறுகையில் ஏற்படும் சோகமும் உணர்ச்சிபூர்வமாகத் தமிழில் தரப்பட்டுள்ளன. வாழ்க்கையின் வினோதங்கள் சாதாரண வாழ்க்கையிலே காணும் நிலைப்பாடுகள், உணர்ச்சிமோதல்கள் திறம்படச் சித்திரிக்கப்படுகின்றன. நாடகாசிரியர்
பேராசிரியரின் பெயரையும் புகழையும் என்றும் சிரஞ்சீவியாய் நிலைநிறுத்துவன அவள் எழுதிய நாடகங்களே. வடமொழி வல்லாராகிய அவர் வடமொழியிலிருந்து மொழி பெயர் 'இரத்தினமாலை நாடகம் செந்தமிழ் நடையில், வடமொழி நாடகக் கூறான 'நாடிகா' என்பதை அறிமுகப்படுத்தி அமைந்த அரசநாடகம் இதில் பேராசிரியரின் திறமை பெருமளவு வெளிப்படுவதாகக் கூறல் இயலாது.
ஆனால் அவர் எழுதி, பல்கலைக்கழக ஆடவர் அரிவையரால் நடிக்கப்பெற்ற ஆறு நாடகங்கள். ‘நானாடகம்' என்ற தொகுப்பாகவும் இரு நாடகங்கள் இருநாடகம்’ என்ற தொகுப்பாகவும் இரு நூல்களாய் வெளிவந்துள்ளன. உடையார் மிடுக்கு, முருகன் திருகுதாளம், கண்ணன் கூத்து, நாட்டவன் நகரத்தவன் வாழ்க்கை, என்ற நான்கு நாடகங்கள் நானாடகத்திலும், பொருளே பொருள் தவறான எண்ணம் என்ற இருனாடகங்களும் இருனாடகத்திலும் அடங்குவன. துரோகிகள் என்ற நாடகம் உட்பட சகல நடகங்களும் கொண்ட தொகுப்பாக கணபதிப்பிள்ளை நாடகத்திற்கு அண்மையில் வெளிவந்துள்ள. இவையேழும் சமகாலச் சமூக நிலைபரங்களை எதார்த்தமாகச் சித்திரிப்பன.
பல்கலைக்கழக புத்திஜீவிகளின் நோக்குகள், டோக்குகள், தமது கால அரசியல் வாதிகளின் வக்கிரமான சொல்லும் செயலும் அரச உத்தியோகங்களுக்கிருந்த மவுசு, அவற்றால் ஏற்பட்ட சமூக மதிப்பு, அந்த மதிப்பினைத் தவறாகப் பயன்படுத்தி மேலெழும் அரசு உத்தியோகத்தினரின் மேட்டிமை, அம்மேட்டிமையால் சாமானியருக்கு ஏற்படும் அவலங்கள். நவநாகரிகம் விளைக்கும் சீர்கேடுகள். கிராமப்புறமக்களின் கனவுகள், ஏக்கங்கள் ஏற்றங்கள், வீழ்ச்சிகள். சாதிக்கொடுமைகள், என்ற பலவும் வெளிப்படையாகவும் குறிட்டாகவும் நாடகச் சுவை குன்றாது எடுத்தியம்புவனவாய் இவரது நாடகங்களின் தனித்தன்மையான சிறப்புக்களாய் விளங்கின. V
இவையாவிலும் முற்போக்கும் முதன்மையும் கொண்டு விளங்குவன இவரின் பேச்சுத் தமிழ் உரையாடல்கள். வடமொழி நாடகங்கள். தமிழில் வெளியான நாடகங்கள் என்ற யாவும் செம்மொழியிலேயே தமது உரையாடலைப் பெருமளவு அமைத்துக் கொண்டன. வடமொழி நாடகங்களில் தலைமையான
7

Page 6
ஆண்பாத்திரங்கள் செவ்விய சமஸ்கிருதத்திலும், பெண்பாத்திரங்களும் வேலைக்காரர். விகடர் முதலிய பாத்திரங்களும் பிராகிருதம் என்ற பெரிதும் பேச்சுவழக்காய்த் திரிபடைந்த மொழியிலும் பேச வைக்கப்பட்டன. தமிழ் நாடகங்களும் (பேராசிரியரின் சமகாலததெழுந்த நாடகங்கள் உட்பட) இவ் வழிமுறையினைப் பின்பற்றிச் செந்தமிழும், கொடுந்தமிழும் விரவிய உரையாடல்களில் எழுதி அரங்கேறின.
இவ்வருவழிகளையும் புறந்தள்ளிவிட்டுச் சமூகநாடகங்களில் எல்லாப் பாத்திரங்களும் முற்றுமுழுக்கக் கொடுந்தமிழிலேயே பேசுமாறு பேராசிரியர் தமது நாடகங்களைத் துணிந்து எழுதி மேடையேற்றியும் நூல்வடிவில் வெளியிட்டும் புதியதொரு வழியைத் திறந்துவிட்டார். இவ்வாறு முற்றிலும் கொடுந்தமிழில் - பேச்சுத் தமிழில் அவர் நாடகங்களை எழுதக் கூறிய காரணங்கள் அக்காலத்தவருக்கு வியப்பையும் திகைப்பையும் அளித்தன என்று கூறவேண்டுவதில்லை.
தாம் கையாண்ட புதிய உத்திமுறைக்கு அவர் காட்டிய காரணங்கள் சிந்தனையைத் தூண்டுவனவாகும். 1. “உலகியலை ஆதாரமாகக் கொண்டு எழுவது நாடகம் ஆகவே அதில் வழங்கும் மொழிநடையும் உலகவழக்கை ஒட்டிய தாயிருத்தல் வேண்டும்’ (இருநாடகம் - முன்னுரை} 2. “அன்றியும்நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது. ஆகவே வீட்டிலும் வீதியாலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவார் பேசவேண்டும்” (நானாடகம் - முன்னுரை) 3. “செந்தமிழ் மொழிகளை வழங்கும் நூல் கற்பார் கொடுந்தமிழ் மொழியென ஒன்று உண்டு என்பதை மறந்து விடுவர். அம்மட்டோ, கொடுந்தமிழ் மொழி அவ்வந்நாட்டிற்கே உரிய மொழியாம். ஆகவே சோழமண்டலத்துத் தமிழை அறிதற்கு வழியாது? Vb (நானாடகம் - முன்னுரை) 4. அன்றியும் உயிருள்ள மொழியெல்லாம் இடைவிடாது மாறிக்கொண்டே வரும். ஒருவனை ஐந்து வயதிற் பிடித்தட்டமும் ஐம்பது வயதிற் பிடித்த படமும் ஒரு தன்மையாக இருக்குமா? ஆண் ாலார்க்கும் so 1603T1J 6 Tiggs பருவம் ஏழு என வகுத்தனர் ஆன்றோர், அப்படியாயின் ஒவ்வொரு பருவத்திலும் படம் பிடித்தல் விரும்பத்தக்கது. அது போலவே அவ்வக்காலத்துக் கொடுந்தமிழும் தீட்டி வைத்தல் வேண்டும். (மேற்படி முன்னுரை)
இந்நான்கு கூற்றுக்களிலும் முன்னிரண்டும் நாடகக் கலை தொடர்பானவை. அரங்கேறும் நாடகங்கள் இரசிகரது உள்ளங்களில் 5ாதtர்த்த உணர்வை ஏற்படுத் தி அவர் களை நாடக பாத்திரங்களோடும் நிகழ்ச்சிகளோடும்ஒன்ற வைட்டதற்கான உத்தி, சாதாரண பேச்சுத்தமிழே என்பதை அவற்றில் பேராசிரியர் வலியுறுத்தக் காணலாம்.
மூன்றாம் நான்கம் கூற்றுகள் பேராசிரி!1ளின் மொழியில் ஞானத்தை
8

வெளிப்படுத்துகின்றன. ஆங்கிலம் போன்ற மொழிகளிலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தோன்றிய கால்ட் வெல், 1856 இல் தமிழுக்கு அறிமுகப் படுத்திய தென்னிந்திய திராவிடமொழிகளின் ஒப்பியக்கணம் மூலம் ஒரளவு தமிழ்மொழியில் விடிவெள்ளியாய் விளங்கியபோதும் தமிழறிஞரால் அறிந்து கொள்ளப்பட்ாத துறையாயிருந்த அதனைக் கற்றிருந்த பேராசிரியர் அதன் செயற்பாட்டு அடிப்படையில் எடுத்துக் கூறிய இரண்டு உண்மைகள், (இடத்துக் கிடம் பேசப்படும் மொழியிலே ஏற்படும் வேறுபாடுகள் ஆவணப்படுத்தப்படல். 2. காலந் தோறும் பேச்சுமொழி மாறிக் கொண்டே இருப்பதைத் தெரிந்து கொள்ளல்) உளங்கொள்ளவேண்டியவை,
ஆனால், புதுமையைத் கண்டு அச்சமும் திகைப்பும் ஒவ்வாமையும் கொள்கின்ற பழைமைவாதிகள் பேராசிரியர் பேச்சுத்தமிழில் எழுதியதைக் கண்டு மிரண்டார்கள். அவருக்குத் தமிழறிவு சூனியம் என்று பேசி மனநிறைவு கொண்டார்கள். தமிழாய்வினை அதன் 10ணமே வீசாத லண்டன் மாநகரிலே மேற்கொண்டவர் என்று ஏளனம் செய்தார்கள். இந்த ஏளனத்திற்கு இவரின் மாணவ பரம்பரையினர் சிலரும் இலக்கானது சுவைதிறைந்த கதை. விரிக்கிற்பெருகும்.
இன்று சமூகநாடகங்கள் யாவுமே பேச்சுத் தமிழிலேயே அரங்கேறுகின்றன. செந்தமிழ்படாடோப அலங்கார எதுகை மோனை வசனங்கள் இன்று அவற்றில் இடம்பெற்றால் சிறுபாலகர்களே அவற்றைக் கேட்டு முகம் சுழிக்கின்றார்கள், பழிக்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்.
ஆனால் பேராசிரியர் தமிழ் நாடகங்களிலே பேச்சுத் தமிழைக் கையாண்டதற்குப் பெரிய விலையைக் கொடுக்க நேரிட்டது துர்ட்பாக்கியமாகும், 1946இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாடு ஈழத்தமிழ்ப் புலவர்மன்றமாம், 1951இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் விழாவும் அவரைப் பேச்சாளராகவோ, பேராளராகவோ இடம்பெற அழைக்காது புறக்கணித்தன. ஆனால் பேராசிரியர் மனங்கலங்கவில்லை. குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு என்று குமுறவில்லை. தாமே சான்றோர் என்ற மிதப்பிலிருந்த அலட்சியகாரன்பற்றி எவ்வித கருத்தும் வெளியிடாது அமைதி காத்தது அவரின் பெருந் தன்மையை நன்கு புலப்படுத்துகின்றது. -
இன்று பழைமை வாதங்கள் மெல்லச் செத்துக் கொண்டிருக்கின்றன. பேராசிரியரின் மாணவபரம்பரையின் முற்போக்கான எழுச்சிநிறைந்த செயற்பாடுகளில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை வாழ்ந்து கொண்டிருக்கின்றார். என்று தயங்காது கூறவும் கூறவைக்கவும் அம் மாணவ பரம் 11ரை முன்வருவதென்றே அவருக்கு அது செய்யத்தக்க பெருநன்றியாகும்.
குறிப்பு: கட்டுரையாளர் முதுபெரும் தமிழறிஞர், ஆக்க இலக்கிய கர்த்தா, 6f Dsf F &5 Hi , ஆயப் வாளர் , பரிர சுரகர் தீ தா. வித் துவான் கலாநிதி. க.சொக்கலிங்கம் அவர்கள் கலாசார அமைச் சினால் ‘சாகித்தரத்னா’ விருது வழங்கி கொளரவிக்கப்பட்டமைக்கு “மாருதம்”
வாழ்த்து தெரிவிக்கின்றது. (2003)
9

Page 7
வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் பரிசு பெறும் படைப்பாளிகள்- 2003 (அக். 17,18, 19)
2002 ஆம் ஆண்டில் வெளியான நூல்களில் பரிசு பெறுவதற்குரிய நூல்கள், படைப்பாளிகளின் பெயர்கள் வருமாறு. கவிதை இலக்கியம் : க.சச்சிதானந்தம் (பருவப் பாலியர் படும்பாடு - காவியம்), அ.யேசுராசா (பனிமழை - மொழிபெயர்ப்பு), செ.மகேஷ் (மனிதத்தைத் தேடி - ஆக்கம்) சிறுகதை இலக்கியம் : ஆ.இரத்தினவேலோன் (நிலாக்காலம்) நாவல் இலக்கியம் : தமிழ்க்கவி (இனி வானம் வெளிச்சிடும்) நாடக இலக்கியம் : அராலியூர் சுந்தரம்பிள்ளை (எங்கள் நாடு) ஆய்வு இலக்கியம் : நா.சுப்பிரமணியம் (நாவலர் வாழ்வும் வாக்கும்) பல்துறை இலக்கியம் திருமதி மீரா மங்களேஸ்வரன் (நிருத்தியம்), எஸ்.பேராசிரியன் (கருகும் பசுமை) உயர்கலவி இலக்கியம் : டாக்டர் சே.சிவசண்முகராசா (சித்தமருத்துவம் மூலதத்துவம்) சிறுவர் இலக்கியம் : அரு.வை.நாகராஜன் (சிறுவர் சிந்தனைக் கதைகள்)
வட்டத்தின் 78ஆவது நிகழ்வில்-பாரதி நினைவு நாளில் மேடையேறிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய
மாணவியரின் புதிய வாழ்வு பிறந்தது நாடகத்தில் ஒரு காட்சி
O
 
 

டென்மார்க்கிலிருந்து இருநாவல்கள்
இலக்கியச் செல்வர் முல்லைமணி
இந்தத்தலைப்பைக் கட்டுரைக்கு இட்டதும், பேராசிரியர் கா.இந்திரபாலா எழுதிய “டென்மார்க்கிலுள்ள ஒரு தமிழப் பொன்னேடு” (வன்னிப் பிரதேசத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு மலர் 1983) என்னும் கட்டுரை நினைவுக்கு வருகின்றது. இப்பொன்னேட்டில் டென்மார்க் அரசாங்கத்திற்கும் தஞ்சை நாயக்க மன்னன் இரகுநாத நாயக்கருக்கும் (1600 - 1634) உடனான தொடர்பு குறிப்பிடப்படுகின்றது. இரகுநாத நாயக்கள் டென்மார்க் அதிகாரிகளுக்கு பொன்னேட்டில் கடிதம் எழுதியிருந்தார். இந்தப் பொன்னேடு டென்மார்க் அரசினால் பேணி வைத்திருக்கப்பட்டது.
டென்மார்க் அதிகாரியாகிய ‘கப்பித்தான் லூலங்கலப்பை என்பவருக்கு பல்லக்கு இட்டு வெகுமானம் பண்ணிச் சலுகைகள் கொடுத்தது பற்றியும் அத்தேசத்தார் தரங்கப்பாடியில் குடியிருப்பதற்கு மன்னன் வசதி செய்து கொடுத்ததுபற்றியும், போர்த்துக் கீசருடைய தாக்குதலிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியமை பற்றியும் இப்பொன்னேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“டென்மார்க் தேசத்தவர்கள் இலங்கையில் வன்னிப்பிரதேசத்துக்கு வந்து சிறிதுகாலம் தங்கி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். திருகோணமலைத் துறைமுகத்தைப் பெறுவதற்கு முயன்றிருக்கிறார்கள்’ எனப் பேராசிரியர் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார், *
ዶ “எதிர் காலத்தில் புலம்பெயர் இலக்கியம் தான் தமிழ் இலக்கியத்தின் செல்நெறியைத் தீர்மானிக்கப் போகிறது” என எஸ்.பொ.கூறுவது எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காலந்தான் தீர்மானிக்க வேண்டும்.
டென்மார்க்கில் கடந்த பதினாறு ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கை எழுத்தாளர் கே.எஸ்.துரையின் (கே.செல்லத்துரை) இரண்டு நாவல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 17ம் நூற்றாண்டிலேயே இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் தொடர்பு இருந்தது. இன்று ஈழத்தமிழர் டென்மார்க்கில் அகதி அந்தஸ்துடன் வாழ்கின்றார்கள். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தமிழ் எழுத்தாளர்களும் அங்கு வாழ்கின்றாள்கள் எழுத்தாளர் அபாலமனோகரன், கவிஞர் முல்லையூரான் என்பவர்களும் டென்மார்க்கிலிருந்து தொடர்ந்தும் இலக்கியப் பணியாற்றுகின்றனர்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர் டென்மார்க் பாடசாலை ஒன்றில் முழுநேரத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்றால் அது வியப்பைத்தரும் செய்திதன். அவர் தான் கே.எஸ்.துரை அவர்கள் சுயம்வரம், ஒரு பூ என்பனவே அவரின் நாவல்கள் சுயம்வரம்

Page 8
இராச குமாரத்தி ஒருத்தி 11ல அரசகுமாரர்களுள் ஒருவரைக் கணவனாக தேர்ந்தெடுப்பதையே சுயம்வரம் குறிக்கும், கதையை வாசித்துக் கொண்டு போகும் போது டென்மார்க்கில் வாழும் ஜீவா என்னும் இளைஞன் தனக்கேற்ற பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுக்கப் போவதைத்தான் குறிப்பிடுகின்றது என எண்ணத் தோன்றும் கதையின் முடிவில் தான் அவன் வரித்துக் கொள்ளும் இலட்சியம் பற்றிப் புலப்படும்.
மேலெழுந்தவாரியாக வாசிக்கும் போது இது ஒரு முக்கோணக் காதல் கதை போலத் தோன்றலாம். ஆழ்ந்து நோக்கும்போது கதை சொல்வது தான் அவரது நோக்கம் அல்ல என்பது புலனாகும்.
ஊரிக்காடு முதல் ஊறணி வரை சுமார் இரண்டு மைல் தூரம் நீண்டிருக்கும் வல்லெட்டித்துறையின் கரையோரப் பகுதி மீனவர்களின் வாழ்க்கை, பண்பாட்டம்சங்கள், நம்பிக்கைகள், பாரம்பரியப் பெருமைகள் போராட்டங்கள். விடுதலை வேட்கை, வாழ்க்கை நோக்குகள், தொழில் முறைகள், நேவிக் கட்பலில் இருந்து ஏவட்படும் ஷெல்மாரிகளால் மக்கள்படும் அவலங்கள் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ என்ற பெயரால் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற கொலைகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் கலையழகுடன் சித்திரிக்கிறார் ஆசிரியர்.
வல்வெட்டித்துறை மாத்திரமன்றி டென்மார்க்கும் கதையின் களமாக அமைகிறது.
மனத்தைத் தொடும் விதத்தில் வயோதிடர் மயிலர், வீச்சுக்கார சிவலிங்கம், வீரன் தில்லையம்பலம், செங்கமலம், வள்ளிக்கொடி, டென்மார்க்கில் வாழும் மயிலரின் பேரன் ஜீவா, சோபியா, வைகுந்தன் என்னும் பாத்திரங்கள் வார்க்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
மயிலர், ஜிவா, என்னும் இருவரையும் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. “பாதிவாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்ட பட்டணச் சுருட்டொன்று மயிலரின் வாயில் மெல்லிதாகப் புகைந்து கொண்டிருந்தது. சித்திரைமாதக் கடைசியில் ஏற்படும் கச்சான் காற்றுக் குழப்பம் வந்துவிட்டாலே போதும் மயிலருக்கு விளைமீன் மோட்டம் நாசில் தட்டிவிடும். பிரித்து வைக்கப்பட்டிருந்த கடதாசிச் சரையில் பன்னிரண்டாம் நம்பன் தூண்டில்கள் பளிச்சிட்டன. தங்கூசியை நன்றாக இழுத்து விரலிடுக்குகளால் நீவி பக்குவமாகத் தூண்டில்களில் பொருத்திக் கொண்டிருந்தார் கிழவர். தொழிலில் அனுபவமும் பொறுமையும் அவர் போடும் முடிச்சின் இறுக்கத்தில் பரிமளிக்கும்.”
தாங்கள் பரம்பரை பரம் 1ரையாக ஆணLனுபவித்த கடலில் வேண்டாத விருந்தாளியாக நின்றிருந்த அந்த இரண்டு கப்பல்களையும் (வீரையா, சூரையா) பார்த்த போது மயிலரின் கலன்களிரண்டும் அனலைக் கக்கின.
“எங்க ைகடலை ஆக்கிரமித்தது போதாதென்று இட்ட எங்கடை மக்களின்ரை. உயிர்களையும் எடுக்கிறதுக்கோடா வந்திருக்கிறியள்'
“இரண்டாம் உலக மகாத்த காலத்திலை பெரிய ஐ.ணவுத் தட்டுட்பாடே இந்த நாட்டில் ஏற்பட்டது. அந்த நேரம் துணிச்சலோடு கடலோடி இந்த நாட்டைப் tட்டினியிலிருந்து காட்பற்றியது 61ங்கடை கடலோடிuள்தான்’.
“பிள்ளை நான் இனிட் பப்பிட என்ன கி க்கு? ஐ ந்தப் பீரங்கிக்
2
 

கப்பலை வெடிவச்சுத் தகர்க்கப் போறம். டொடியளோடு சேர்ந்து நானும் போகப் போறன்’
என்னும் மயிலரின் பேச்சு மயிலரின் குண இயல்பினைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றன. அவர் திட்டமிட்டது போலவே இளைஞர்களால் பீரங்கிக் கப்பல் தகர்க்கப்படுகிறது. மயிலர் கடலில் துப்பாக்கிக்கு இரையாகி மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவிக் கொள்கிறார்.
மயிலரின் பேரன் ஜீவா டென்மார்க்கிற்குச் சென்றதே நிர்ப்பந்தத்தின் பேரில்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மரணத்தின் பிடியிலிருந்து தற்செயலாகத் தப்பிய ஜீவா பெற்றோரால் நிர்ட்யந்திக்கப்பட்டே டென்மார்க் செல்கிறான் அவனுடைய உள்ளத்தில் விடுதலைப் போராட்டத் தீ கனன்று கொண்டே இருக்கிறது. அது கடைசியில் வெற்றி பெற்றுவிட்டது. டென்மார்க்கிலிருந்து ஈழத்திற்கு வந்து போராட்டத்தில் இணைந்து கொள்கிறான். -
இது ஜீவாவின் ஒரு முகம். இன்னொரு முகம் அவன் செங்கமலத்தின் மீது கொண்ட காதல் பற்றியது. டென்மார்க்கின் இயற்கை அழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தது பற்றியது.
உறைபனியால் மூடப்பட்டு விறகுதடிகள் போல நின்ற மரங்களெல்லாம் தற்போது கிசுகிசுவெனத் தழைக்கத் தொடங்கின. டெனிஷ் காலநிலையில் ஏற்படும் ஒவ்வொரு சிறுமாறுதல்களையும் கூடக் கூர்ந்து அவதானித்துக் கொள்வான் ஜிவா,
டென்மார்க் யுவதி சோபியா அவனைக் காதலித்த போதும் அதனை நிராகரித்துச் செங்கமலத்தின் நினைவாகவே வாழும் அவன் இறுதியில் அவளையும் திருமணம் செய்யாமல் அவளின் ஆசியுடனேயே விடுதலைப் போரில் குதிக்கிறான். “சோபியா. எங்கடை மூதாதையர் லேசுப்பட்ட ஆக்களில்லை! அன்னபூரணி என்ற பாய்க்கப்பலைச் செய்து அமெரிக்காவுக்குப் போய் சாதனை நிலை நாட்டியவர்கள்’ என்னும் ஜீவாவின் வார்த்தைகள் வல்வெட்டித்துறையின் பாரம்பரியப் பெருமையைப் பறை சாற்றுகின்றன.
வீரன் தில்லையம்பலம் (செங்கமலத்தின் தந்தை) என்ற பாத்திரமும் வல்வெட்டித்துறை மக்களின் வீரதீரச் சாதனைகளுக்கு வகைமாதிரியானது. தென்னிந்தியாவும் வல்வெட்டித்துறைக்குமிடையே வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்குப் படகோட்டியவன் அவன் “அவருடைய ஐ.டம்பில் எத்தனையோ இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த தழும்புகள் இருக்கு” என்றும் கூற்று எத்தனை சவால்களை எதிர்கொண்டு அவன் படகோட்டினான் என்பதைக் காட்டுகின்றது.
யாழ்ப்பாணச் சமூகத்தின் வகைமாதிரியான பாத்திரம் டென்மார்க்கில் வாழும் வைகுந்தன். தன் சகோதரிகளின் நல்வாழ்வுக்காக முட்பத்தாறு வயது வரை தன் இளமையைத் தியாகம் செய்து மாடாய் உழைத்து ஓடாகத் தேய்ந்திருப்பவன்.
கிராமிய வழக்குச் சொற்களையும் கனதியான இலக்கியச் சொற்களையும் அளவாகக் கலந்த கெம்பிரமான உரைநடையில் நாவல்
13

Page 9
நகள்த்தப்படுகின்றது. சம்பவங்களை விபரிக்கும் பாங்கு, வாழ்க்கையோடு ஒட்டிய உவமைகளின் உபயோகம், போர்க்காலச் சூழ்நிலைப் படம் பிடிக்கும் நேர்த்தி என்பன நாவலுக்கு உயிருட்டுகின்றன. நல்லதொரு மண்வாசனை (மீன்வாசனை என்றும் சொல்லாம்) நாவலை சமுதாயப் பார்வையுடன் படைத்துள்ளார் ஆசிரியர்.
ஒரு
Ա பூமணி என்ற பெண்ணின் கதையை கூறுவதுடன் அதனூடாக தொண்டமானாறு, கரணவாய்க் கிராமங்களின் மண்ணின் கதையையும் சொல்லிவிடுகிறார். தொண்டமானாற்றங்கரையில் அமரும் செல்வச்சந்நிதி ஆலயம், ஆற்றின் மறுபுறத்தில் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் காற்றாடி வெளிக்கள நிலையம், பரந்த மணற்பரப்புக்களையுடைய கடற்கரையோரம் என்பவற்றை யெல்லாம் எம் கண்முன் நிறுத்திகிறார் ஆசிரியர்.
“தலைமுழுதும் பனைமரங்களை நட்டுவைத்திருக்கும் ஆட்பாட்டமில்லாத சிறிய கிராமம் கரணவாய். கடற்கரையோரமாக வந்திறங்கும் இராணுவம் தன் வேட்டைப்பற்களை நீட்டும் போதெல்லாம் மக்கள் வெகுண்டோடிப் போய்க் சேரும் கடைசிக் கிராமம்’ எனக் கரணவாயை அறிமுகப்படுத்துகிறார்.
விடுதலைப் போராட்டம், ழரீலங்க இராணுவம் இந்திய அமைதி காக்கும் படைகள் போன்றவற்றால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் யாவற்றையும் சுவையுடனும் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் கதையில் பெய்து கதையை நகள்த்துகிறார் கே.எஸ்.துரை.
இதில் இடம்பெறும் பாத்திரங்கள் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றனர். அவர்கள் நம் அன்றாடவாழ்வில் கண்டு பழகியவர்களாகவே எமக்குத் தோன்றுகின்றனர். அவர்களின் துன்ப துயரங்கள் வாசகரை நேரடியாகத் தாக்கும் விதத்தில் உள்ளன. கதைமாந்தர் என்பதை மறந்து அவர்களுக்காக நாம் கண்ணி வடிக்கிறோம். இது ஆசிரியருக்குக்கிடைத்த மகத்தான வெற்றி எனலாம்.
பூமணி தனது குடும்பம் தனது மகன் என்ற குறுகிய வட்டத்தில் தன்னை அகப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். அவளைப் பொறுத்த அளவில் சொந்தச் சகோதரிகூட அந்நியமானவள் ஆகிவிட்டாள். தன் மகன் ஈஸ்வரனே அவளுக்கு எல்லாமாக இருந்தான். தன்மகனே உயர்வானவன், அவனது நடவடிக்கைகள் அனைத்தும் மெத்தச் சரியானவை என்ற இறுமாப்பினால் அயல்வீட்டுப் பெண் மாதக்கரசுவுடன் முரண்பட்டுக் கொள்கிறாள். தனது மகனின் மனைவிகூட உலகிலே ஒப்புயர்வில்லாதவள் எனக் கருதினாள். இறுதியிலே இராணுவத்தின் வெறியாட்டத்தினால் மகனை இழந்த நிலையில் சித்த சுவாதீனமற்று உலைகிறாள். பித்து நிலையில் ஞானம் பிறக்குமென்பார்கள். பூமணிக்கும் ஞானம் பிறந்திருக்கிறது.
“இப்ப நீயும் பைத்தியக்காரிதான். இந்தக் காட்டைவிட்டு வேறைகாட்டுக்கு ஓடினரப் போல பிரச்சினை எல்லாம் முடிஞ்சு போடுமே? ஒடுறமான்களை
lá.

பிரச்சினை எப்ப முடியும் எண்டு பேப்பருகளிலை தேடும். இப்பவே நில். மாதக்கரசு, இந்த விடுதலைப் போரைப் பிரச்சினை எண்டு பேசுறதே ஒரு அறியாமைதான். இதைப் பிரச்சினையாகப் பார்ப்பதை நிப்பாட்டிப் போட்டு எண்டைக்கு உன்ரை கடமையாகப் பார்க்கிறியோ அந்தக் கணமே தமிழீழப் போரும் வாழ்க்கையாய் மாறிவிடும்” என்னும் கருத்துக்கள் பூமணியின் பித்த நிலையில் பிறந்தவை.
பேன்கடிக்கு கள்ளுக் கொட்டிலில் கேட்ட மூக்குத்தூள் வைத்தியத்தைப் பிரயோகித்ததால் சிறுமி பூமணி அறிவு நினைவில்லாமல் போய் வைத்தியரின் கெட்டித்தனத்தால் உயிர்பிழைத்தவருக்கு கைகுறட்டிட் போனதைக் கண்ட பூரான் கிழவர் பிராயச்சித்தமாக மாப்பிளை தேடி மணம் செய்து வைத்தது மாத்திரமன்றி நாலுபவுன் சங்கிலியும் பரிசளித்தது அவரின் குணவியல்பினைக் காட்டுகின்றது.
சம்மந்தியான நாகபிள்ளையுடன் முரண்பட்டு திட்டித் தீர்த்துவிட்டு வெளியேறிய பூமணி பிரேதமாகக் கொண்டு வரப்பட்ட போது இறுதிக் கிரியைகளை செய்து ஒப்பேற்றிய நாகபிள்ளையின் தாராள மனசு வியக்க வைக்கிறது.
இரு நாவல்களையும் ஒப்பு நோக்கும் போது சுயம்வரம் என்னும் நாவலே ஒருபூவைவிட சிறந் தோங்கி நிற்கிறது. ஒரு பூவில் நல்ல நாவலுக்குரிய பண்புகள் நிறைய இருந்தாலும் சில இடங்களில் தொய்வு காணப்படுவதை அவதானிக்கலாம்.
冰冰米
இலங்கை சாகித்திய மண்டலம் - பரிசுத் தேர்வு செப்ரெம்பர் 2003 சாகித்திய மண்டலப் பரிசுக்காகத் தமிழ் இலக்கியக் குழுவினால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நூல்கள் வருமாறு
01. கவிதை
நூல் : அந்த மழைநாட்களுக்காக ஆசிரியர் : மருதூர்க்கனி 02. சிறுகதை
நூல் : சர்ப்ப வியூகம் ஆசிரியர் : செம்பியன் செல்வன்
03. சிறுவர் இலக்கியம்
நூல் : சிறுவர் அரங்கு ஆசிரியர் முத்து இராதாகிருஷ்ணன் 04. மொழி பெயர்ப்பு
நூல் : அண்ட வெளியினிலே அதிசயயாத்திரை ஹிந்தி மூலம் : கிருஷ்ணசந்தள் தமிழில் ஸ்லீ.எம்.ஏ.அமீன் 05. நாவல் 1.
நூல் : கானலில் மான் ஆசிரியர் : தெணியான் 08. பல்துறை
நூல் : தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மாதமும் ᏧᏏ60Ꭰ6ᎠulliᎠ
ஆசியர் : கலாநிதி பரமுபுஷபரட்ணம் | 07. நாடகம்
தெரிவுக்கான நூல் தகுதியின்மையால் அந்த இடத்திற்கு இந்நூல் பரிசு பெறுகிறது.
நூல் : காரைநகர் தொன்மையும் வன்மையும் ஆசியர் : ச.ஆ.பாலேந்திரன்
5

Page 10
கவிதைகள்
இலையுதிர் காலம்
இலையுதிர் காலமே! ஏணிப்படி
மரங்களை, இரக்கமின்றி விதவைகளாக்கினாய்? இலையுதிர் காலமே! ஏனிப்படி மனச்சாட்சியின்றி மரங்களை, நிர்வாணமாக்கினாய்?
இலையுதிர் காலமே! எதற்காக
மரங்களின் இலைக் கூந்தலை மழித்துவிட்டிருக்கிறாய்?
மரங்களே! நீங்கள் என்ன
இலையுதிர்கால அறையினில்
உங்களின்
ஆடைகளைந்து அழகுபார்க்கின்றீர்களா?
அ.பேனாட், பட்டகாடு, வவுனியா.
அன்றேல் - அந்த ஆதி மனிதனின் ஆடைக் கலாசாரத்தினில் ஆசை கொண்டு விட்டீர்களா?
மரங்களே! எந்த அழகரசிக்கு - உங்கள் கூந்தலை, மலர் மஞ்சமாக்கினீர்கள்? அல்லது
எந்த முனிவனின் தவம் கலைத்து ~ இந்த இலையுதிர்கால சாபத்தினைப் பெற்றீர்கள்?
இல்லையென்றால், அந்த வானத்திடம் ஏதாவது விண்ணப்பம் செய்கின்றீர்களா? இதையும் விட்டால், உங்களின் பச்சைக் குடையை எங்கோ பழுதுபார்க்க அனுப்பினீர்களா?
 
 
 
 
 
 

կIյնան տանgll
போலி மனிதர்களே புறப்படுங்கள் புற்றரை மீது புரண்டதுபோதும் சில்லென்ற காற்றை ரசித்ததும் போதும் . சீக்கிரம் புறப்படுங்கள்
செல்வத்தால் கரை சேர்ந்தவர்கள் ஆலம்விழுதுகளாய்ப் பரம்பரைத் துளிர்விட்டு ஏழைகளை அடிமையாக்கி மாளிகையில் மகிழ்ச்சியுடன் மயங்கிச் சரிகின்றனர்
சோகங்களுக்கும் சுமைகளுக்கும் சொந்தமான ஜீவன்கள் மெளனக் கணைகளால் மனதை மறைத்து முனகிக் கொண்டிருக்கின்றனர்
ஏழைக்கு உறவில்லை ஏந்துவதற்கும் கரமில்லை துன்பம் வரும்போது துவண்டழுது ஓடிவந்து ஏனென்று கேட்பதற்கும் உரித்தென்று யாருமில்லை
ஊமை விழிகளுக்குள் உறுத்தும் நீர்த்திவலைகள் உரிமையுடன்
உறவாடும் மறுப்பதற்கும் யாருமில்லை கன்னிக் காளான்களாய் கற்பனையில் முடங்கும் பொற்சிலைகட்கு மாலையிட
மனமிரங்கும் மைந்தர்களும் செல்வத்தால் கட்டுண்டு சீர்வரிசைத் துண்தேடித் திரிவதுவும் பிழையில்லை
ஏந்திழைகளின்று மடிந்து கொண்டிருப்பது திருமண நாள் குறிக்கும் சீர்வரிசைப் புதையலுக்காய்! “அதிஷ்டம் என்பது ஆண்களுக்கு மட்டும்தான்’
ஆண் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு அலையும்
el 6006).36036 ஆதரிப்பவர்கள் இவ்வுலகில் இன்று யாருளர்
எல்லாமே போலி மனிதமே போலி பகட்டுக் காய்ங்களுடன்
Taip6qFgf85
பரிந்துரைக்கும்
புஸ்பங்களே காலத்தின் காலடியில் கலங்கி மடியும் கன்னிகளைத் தட்டியெழுப்ப காளையரே புரண்டெழுங்கள்
செல்வி வேணுகா நவரத்தினலிங்கம் ஆரம்பக்கல்வி முதலாம் வருடம். வ.தே.க.க.

Page 11
போராட்டம். கருவறை தொடங்கி கல்லறை வரை பூக்களிட்டு பூஜிக்க வேண்டிய கருவறைப் பூஞ்சோலையில் அவளின் ஏக்கங்களை ஏமாற்றி உதைத்து உதைத்து உணர்ச்சிகளிற்கு தாழிட்டு உலகிற்கு சஞ்சரிக்க உள்ளிருந்து சிலநாள்.
ஊனப்பட்ட உலகில் சங்கமித்த பின் தண்ணிருக்கும் தாய்பாலுக்கும் நீ வாய் விரிக்கும் போது கண்களை கண்ணிராக்கி ஆறிலே நீ குளித்து அழும்போது இதயத்தை இடித்துச் செல்லும் அழுகையும் பார்வையை பறிக்கும் உன் கண்களும் உன் கூச்சலால் தாயின் கை உன்னை கட்டி அணைக்கும் போது தாயின் மனதும் மனிதா நீயும் பல நாள்.
தோளுக்கு மேல் வளர்ந்து தொடுவானில் நீ இருக்க உலகம் உன்னை வெருட்டும் அப்போது. கல்விக்கும் உனக்கும் Lj6-bit 6i..... உலகின் வேடிக்கைகளையும் வேள்விகளையும் வெற்றி கொண்ட உனக்கு
எதிரிகளையும் எதிர்ப்புக்களையும் வெற்றிகொண்ட உனக்கு உரிமைகளையும் உறவுகளையும் வெற்றி கொண்ட உனக்கு மனைவி என்ற புதுவாழ்க்கையிலே நீ மரணிக்கும் வரை.
உன் உணர்வுகளுக்கும் நீ உறவாடியவளுக்கும் மஞ்சம் தொட்டு தொட்டில் வரை உன் கபடங்களுக்கு மனிதா! உலகம் எதுவரையோ 3}lgol6).f60).J.....
8
S.ஹசீர் ஆரம்பக்கல்வி. வ.தே.க.க
 
 
 
 
 
 
 

மலரே நீ
ஏன் மெளனமாக LD60: இப்பூமியில் மலர்ந்து மானிடங்களின் உள்ளம் மான்புறுவண்ணம் மணம்
வீசுகின்றாய்
உன்னைத் தாண்டி வரும் காற்றினையும் உன் அழகினையும் மானிடர்கள் உலகில் அனுபவிப்பதை விட வேறெதுவும் சிறப்பாகவில்லை
வேதனையால் துன்பப்பட்டவர்களும் வீராவேசத்துடன் கோடாத்தால் பொங்கியெழுபவர்களும் உன்னைக் கண்டவுடன் மனம் ஒரு நிலைப்பட்டு அமைதியுடன் நிற்கின்றார்களே
எம்.ஏ.எம். நயீம் முதலாம் வருடம் ஆரம்பபிரிவு வ.தே.க.க
அது மட்டுமா எம்பச்சிளங்குழந்தைகள் - கூட உன் பசுமையினைக் கண்டு உலகமே வேண்டாம் - இந்த மலரே வேண்டும் என்கின்றார்களே அவர்களைக் கவரும் விதமென்ன?
செடியினில் கொய்த ஒரு நொடிப் பொழுதில் வாடிவிடும் - நீ இத்தனை டெருமையைக் கொண்டுள்ளாயே - அதன் மாயத்தினை கொஞ்சம் சொல்வாயோ?
19

Page 12
எது ஆன்மிகம்
கீதை
குரான் பைபிள் உணர்த்தும் ஆன்மிகம் கடமையைச் செய் பின் என்னை வழிபடு என்பதே
உயிர்போனாலும்
உண்மை பேசி உண்மையுடன் வாழ்ந்து உண்மைக்காகச் சாட்சி பகர்வதே
ஆன்மிகம்
வழங்கும் கையே வாழ்க்கை இருப்போர் இல்லாருக்கு வாரி வழங்கும் வாழ்க்கையே
ஆன்மிகம்
ஆசை அறுமின்
வாழ்வில்
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை அறுப்பது ஆன்மிகம் எல்லோரும் எல்லாம் பெறவேண்டும். இங்கு இல்லாதோர் இல்லாத நிலை வேண்டும்
என்றும் பொதுவுடமையை வளர்ப்பது
ஆன்மிகம்
கிறீஸ்தவம் 1ம் வருடம்
ஆங்காங்கே அமுல்படுத்தப்படும் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுப்பது அநீதிபுரிவோரை எதிர்த்து நிற்பது
ஆன்மிகம்
கிறிஸ்தவனே கிளம்பிடு முஸ்லிமே முழங்கிடு இந்துவே எழுந்திடு என்றழைக்காமல் மனிதமே இணைந்திடு மனித நேயம் காத்திடு மனித மாண்பு மதித்திடு என்றழைப்பது ஆன்மிகம்.
கிறிஸ்தவர்களை உருவாக்கும் பைபிள் இஸ்லாமியர்களை உருவாக்கும் குரான்
இந்துக்களை உருவாக்கும் கீதை இனி இவைகள் நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆன்மிகம்
எம்.என்.வசந்த
வ.தே.க.த
 
 
 
 
 

சீதேவியிடமா சீதனம் கேட்டு சிறுமைப்படுகின்றீர்கள்?
காளையரே. இளம் காளையரே. உங்கள் தாலியைக் காலம் முழுவதும் கழுத்திலே சுமந்து உங்களைத் தம் மார்பிலே சுமந்து உங்கள் வாரிசுகளை வயிற்றிலே சுமந்து இன்ப துன்பங்களை இதயத்திலே சுமந்து குடும்பப் பாரத்தைத் தலையிலே சுமந்து மாமியார் மைத்துனியர் இடி சொற்களை இடிதாங்கியென இன்முகத்தோடு சுமந்து உங்களையே கண்கண்ட தெய்வமாக மதித்து வாழும் அந்த உத்தமியிடமா வரதட்சணை கேட்கிறீர்கள்? ஏன் அவள் வாழ்வையுமல்லவா வதைத்து அழிக்கிறீர்கள்?
பெற்றாரைப் பிரிந்து உற்றாரை உதறி உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் சேவை செய்வதே தன் தேவை எனக் கருதி வேதனம் இல்லாத வேலைக்காரியாக வேளா வேளைக்கு வாய்க்கு ருசியாக வகை வகையாக சமைத்துப் போட்டு நீங்கள் உண்னும் அழகைப் பார்த்து மகிழும் மங்கலப் பெண்ணிடமா? இல்லை இல்லை அந்த மகராசியிடமா சீர்வரிசை கேட்கிறீர்கள்??
செல்வி யசோதா முருகேசு 2ம் வருடம் உடற்கல்விப்பருவம், வ.தே.க.க
குடும்பம் விளங்க வந்த குலமகளாக இல்லம் சிறக்க வந்த இனிய மகளாக வீட்டிற்கு விளக்கேற்ற வந்த திருமகளாகத் திகழும் அந்த சீதேவியிடமா சீதனம் கேட்கிறீர்கள்?
தாய்க்குப் பின் தாரமாக மட்டுமன்றி தாயாகவும் விளங்கும் அந்தத் தாய்க்குலத்திடமா தர்மப் பணம் கேட்கிறீர்கள்???? அந்தப் பத்தினிப் பெண்களுக்கு நீங்களல்லவா வரதட்சணை வழங்கி அவர்களது வாழ்வை வளம்படுத்த வேண்டும். இனியாவது வரதட்சணை கேட்டு வனிதையரின் வாழ்வை வீணாக்கி விடாதீர்கள் சீதனம் கேட்டு நீங்களும் சிறுமைப்பட்டு விடாதீர்கள்.
21

Page 13
f கசங்கிப்போன துணி உடுத்தி கலங்கிப் போன விழிசுமந்து முடங்கிப் போய் இருப்பதுயார்? s ஒ. அவன் தான் ஏழையோ..?
கண் ஒரம் எட்டிப்பார்க்கும் கண்ணிர்த் துளி இரண்டும் 鱼 என்ன அவன் சோகமென்று சொல்ல வில்லை புரிகிறது. sjang
வார்த்தைகளை தொலைத்துவிட்டு சோர்ந்து போன உதடுகளில் குடிசைச் சுவர்களிலே - ஏழை வந்து வந்து வார்த்தைகளும் வடித்து வைத்த சித்திரத்தில் நொந்து மறைந்து போன தெங்கே..? கோடி கோடி அர்த்தங்கள்
தேடிக் கண்டுபிடியுங்கள்
மரத்துப் போன இதயத்தில்
இரத்தம் மெல்லக் கசிகிறது பிய்ந்துபோன ultug56f(86) உரத்து ஏதோ சொல்லவந்து நொந்து போய் விழிமூட மறந்து சோர்ந்து போவதென்ன வந்திடாத தூக்கமதை - அவன்
வருந்தியழைக்க நினைக்கவில்லை. அறுந்து போன தந்தியென
அபஸ்வரம் பாடுகின்றான் மழைக்கால மேகமது திருத்தி அந்த வீணையிலே தெளித்து விட்டநீராலே சுருதி சேர்க்க யாருமில்லை செழிக்காத அவன் சோலை
சகாராதான் என்றும் சூரியன் எட்டிப்பார்த்து
வேடிக்கை செய்து நிற்க இளவேனிற் காலமது குடிசைக் கூரையிலே தழுவாதோ தனை என்று கோடி கோடி யன்னல்கள் எதிர்பார்த்தான் ஏமாந்தான் - இவன்
நானறிந்த ஏழை
அட அது தானே அவன் வாழும் மாட மாளிகை - அங்கே தொடங்கி முடியாத - ஒரு தொடர்கதையைப் LJợgb(856ÖT V பாதள சிகா
ஆரம்பக்கல்வி “A”
வ.தே.க.க
 

வண்டுகளின் குண்டுகளால்
வெய்யிலில் திரிபவன் நான் நீயோ குளிரறையில் கும்மாள மிடுபவன்
வலிந்து வளையில் வீழ்பவன் நான் புத்தகப் பெட்டிக்குள் புதைபவன் நீ
குயிலின் கூவுகை உனக்கு இன்பம் காகத்தின் கரைதலும் இசைதான் எனக்கு
சின்ன வயது குறும்புகளின் நிறைவு வனம்புகள் எனக்கு நினைப்புகளே மரிக்க வேண்டிய மாசுக்கள் உனக்கு.
முத்தமிடும் வண்டுகளின்
ரீங்காரம் புரியாத பூவாய் நீ வண்டுகளின் குண்டுகளால் உடைந்த கட்டிடமாய் நான்
நான் இயற்கையை ரசிக்கும் போது குப்பையை அகற்று என்பாய் நீ
எனது உணர்வுகள் உனது சுயத்தின் வற்றிய ஆறாகியவுடன்
என் கண்ணில் பணித்த நீரில் உன் கடுகதிப்பட்டு கடலில்ப் பறந்தது. என் விருட்ப வீதிகளில் உன் உணர்வெனும் வண்டி சவாரி செய்கிறது.
பசுபதி.முரளிதரன்
23

Page 14
இளமையும் நானும்
தென்றல் வீசுவதும். புயல் அடிப்பதும் ஒரு காலம் தான் பூ பூப்பதும், கனி கணிதலும் ஒரு காலம் தான் y காதல் கனிவதும் இல்லறம் இனிப்பதும் ஒரு காலம் தான் இளமையும் அதன் துடிப்பும் ஒரு காலம் தான் அதற்குள் எவ்வளவு முடியுமோ ജൂഖഖണങ്ങഖult)
சாதித்து விடு
எவ்வளவு காலம் தான் - பழைய வரலாறுகளை புரட்டிக்கொண்டிருப்பது நீ - புதிய வரலாற்றினைப் படைத்துவிடு கண்ணாடி முன் நிற்கிறேன் என் இளமைத் தோற்றத்தினை எண்ணி! எவ்வளவு விரைவாக என் இளமை பறிபோனது சாதிக்காமல் தொலைந்துவிட்ட எனது இளமையினை எண்ணி வெட்கப்படுகின்றேன்.
இருபத்தைந்தில் மில்ரனும் இருபத்தொன்பதில் செல்வியும் உலக மகா கவிகளானதும் வெல்வதற்கு தேசமில்லை என அலெக்ஸாண்டர் முழக்கியது வெறும் இருபத்தொன்பதற்குள் இன்னும் எத்தனை எத்தனை. இவர்கள் சாதித்தவற்றுள் ஒரு துரும்பையேனும் என்னால் சாதிக்க முடிந்ததா! 6}6ö16ði (og tíu I........
நான் சாதனைப் படிக்கட்டில் ஏறுவதற்காக ஒரு காலை எடுத்து வைக்கும்போது மற்றைய காலை இருவர் இழுத்து விடுகின்றனர். இவர்களைக் கடந்து சிலபடிகள் கடப்பதற்குள் - எனது இளமை தொலைந்து போகிறது.
என்னைப் போல் நீயும் இருந்து விடாது இளமையிலே சாதிக்க முயற்சி செய் அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன இளமையில்தான் அதிகம் சாதிக்க முடியுமென்று
 
 

கூடது இழந்து நிற்கும் குருவியின் வாழ்க்கை ஆச்சே
போரினால் விளைந்த தீமை
புகலுதல் எளிதே யாமோ வேரதும் அற்றுப் போனார்
வீனிலே அலைந்து நொந்தார் ஆரது அறியார் இங்கே
அனைவரும் அறிந்த தாமே நீரதும் உண்ண இல்லா
நிலைமையும் வந்து சேர
காரணி மானார் தாமும்
கருதிட வேண்டும் அன்றோ சீரெலாம் கெட்டு இங்கே
சிறுவர்கள் அலைகின் றார்கள் ஏரிது இதுவே இங்கே
ஏதொரு வழியும் இல்லை காரிருள் தன்னில் காணும்
கனல்அது என்னும் மின்னல்
போலவே அயலார் வந்தார்
புக்கிடம் சிறிது தந்தார் ஆலினைப் போன்று வாழ்ந்தும்
அனைத்துமே இழந்து வந்தார் சேலையும் கட்ட இல்லை
சோறிட ஆரும் இல்லை வேலையும் தேடிச் சென்று
வீண்பழி பட்ட துண்டு
சிவநெறிப் புலவர் சீ.ஏ.இராமஸ்வாமி,
ഖiquിൺ ഥങ്ങpuിന്റെ தோய்ந்து
வேதனைப் பட்ட மக்கள் வீடது செல்ல வேண்டும்
வேண்டிய செய்ய வேண்டும் வாடியே நாளும் இங்கே
வீனிலே கழிக்க லாமோ கூடது இழந்து நிற்கும்
குருவியின் வாழ்க்கை ஆச்சே,
25

Page 15
நாடகம்
யார் பொறுப்பு
வ.சுப்பிரமணியம்
நான்கு திசைகளிலும் இருந்து மனிதன் பிரச்சனைகளால் தாக்கப்படுகின்றான். (மனிதனை ஆண்பெண் இணைந்த - அர்த்தநாரீஸ்வரர் போல
மனிதன்
எடுத்துரைஞன்
உருவாக்கலாம்) என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள் என்னைக் காப்பாற்றுங்கள்! பிரச்சினைகள் நான்கு புறங்களிலிருந்து என்னை நெருக்குகின்றன. பிரச்சினைகள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து என் குரல்வளையை நசுக்குகின்றன. பிரச்சினைகள் என்னை அணுஅனுவாக நெருக்குகின்றன. என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்! இந்தப் பிரச்சினைகள் என்னை வாட்டுகின்றன. இந்தப் பிரச்சினைகள் என்னைக் கொல்லுகின்றன. என்னைக் காப்பாற்றுங்கள்! ஆண்டவனே என்னைப் படுத்தும் பாடுகளை நீ அறியவில்லையா? பிரச்சினைகள் என்னை வாட்டி வதைப்பது உனக்குப் புரியவில்லையா? பிரச்சினைகள் என்னை சித்திரவதை செய்து சாகடிப்பது உனக்குத் தெரியவில்லையா? என்னைக் காட்பாற்றுங்கள்! பிரச்சினைகளில் இருந்து காட்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்! (மனிதன் நிலத்தில் விழுகின்றான) படைப்புக்களிலே இந்த மனிதன் மாபெரும் மகோன்னத சிருஷ்டி பகுத்தறிவு என்னும் குறியால் மற்றைய விலங்குகளிலும் பார்க்க உன்னதமானவன் என்று அடையாளமிடப்பட்டவன். ஆனால் அப்பகுத்தறிவே சாபக்கேடாய் மாறி இன்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு மற்றைய விலங்குகளை விட துன்பத்தில் முகம் துடைத்துக் கொண்டிருப்பவன். ஏன் இத்தனை வேதனைகள்? என்ன இந்தப் பிரச்சனைகள்? யார் இதற்குப் பொறுப்பு? இந்த வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நாடகம், நிதானித்துப் பாருங்கள். யார் பொறுப்பு என்பது உங்களுக்கு புரியும். ஏன் அது நீங்களாகக் கூட இருக்கலாம். நிதானித்துப் பாருங்கள்.
(இறைவன் உருத்திர தாண்டவம் ஆடுகின்றார்)
மனிதன்
இறைவன் மனிதன்
எங்கிருந்து இந்தச் சத்தம் வருகின்றது? எங்கிருந்து இந்த ஒலி கேட்கின்றது? யார் நீ? யார் நீ? 2 ன்னை அழிக்க வந்திருக்கின்றேன் என்னை அழிக்கவா? யார் நீ? நீ யார் என்பதை முதலில்
JY3).
26

இறைவன்
மனிதன்
இறைவன்
6ങ്ങബ6്
மனைவி
bങ്ങlഖങ്ങ}
LD60)606)
85ങ്ങI6്വ6I
மனைவி
8Б6006ж6б1
நானா? என்னைத் தெரியவில்லையா? என்னைத் தெரியவில்லையா? இதுவரை கதறிக் கதறி அழைத்தாயே. உன்னைப் படைத்த அந்த இறைவன் வந்திருக்கின்றேன். இறைவா வந்து விட்டாயா? என்னைக் காட்பாற்ற வருவாய் என்றல்லவா காத்திருந்தேன். ஆனால் நீயோ என்னை அழிக்கவா வந்தாய்? இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை அளிக்கத்தானே உன்னை அழைத்தேன். நீ என்னை அழிக்கவா வந்தாய்? அப்படியானால் ஏன் என்னைப் படைத்தாய்? படைத்துவிட்டு பராமுகமாய் ஏன் இருந்தாய் இத்தனை துன்பங்களை ஏன் கொடுத்தாய்? நானா, உனக்கு துன்பங்களைக் கொடுத்தவன்? நான்றாகச் சிந்தித்துப் பார். இவையெல்லாம் நீயாகத் தேடிக்கொண்ட வினைகள். நன்றாக யோசித்துப் பார். இவையெல்லாம் நீயாக உன் தலையில் போட்ட மண் குவியல்கள். நானா தேடிக்கொண்டேன்? இந்தப் பிரச்சினைகள் நான் சம்பாதித்தவையா? நீயேதான். உனக்கு நான் கொடுத்த குடும்ப ஏற்பாட்டை சிந்தித்துப்பாள். இந்த குடும்பம் சின்னாபின்னமாகிய விதத்தைச் சற்றே திரும்பிப் பார். (பின்காட்சி மாறுகிறது. மனிதன் மேடையின் வலப்புறம் செல்ல நடுவில் காட்சி தொடர்கிறது) இது என்ன வீடா. இல்லை பைத்தியக் கார ஆஸ்பத்திரியா? r. குடும் பத் தைக் கொண்டு நடத்த வேணி டியவன் பைத்தியக்காரனாக இருந்தால், குடும்பமும் பைத்தியகார ஆஸ்பத்திரியாகத்தான் இருக்கும். என்ன என்னைப் பைத்தியக்காரன் என்ற சொன்னாய்? நட்ட நடு ராத்திரியில நிறைவெறியிலே வந்து கத்திறது. சண்டை பிடிக்கிறது. பொருட்களைப் போட்டு உடைக்கிறது. நித்தம் இதுதான் காட்சியென்றால் பிள்ளைகள் அந்த மாதிரியைத் தானே பின்பற்றும். மகன் உளர் சுற்றுகிறான் என்று சத்தம் போடுறியள்? ஒம் என்னுடைய மாதிரியைப் பார்த்துதான் ஊர் சுற்றுகிறான். நீ பொறுப்பில்லIம இருக்கிறதாலதான் என்னுடைய மகளுக்கு இன்னும் கலியாணம் நடக்கவில்லை. கலியாணம் பண்ணுறது என்றால் சீதனம் கெடுக்க வேணும். நீங்கள் தினம் தினம் குடிச்சிபோட்டு வந்தால் எப்படி சீதனம் கொடுப்பது? இந்த பொறுப் எனக்கு மட்டுமல்ல உனக்கும் இருக்கு, அதை மறந்தி த. அகதி முகாமில இருந்து ஒரு
27

Page 16
மனைவி கணவன் மனைவி
கணவன் மனைவி
bങ്ങഖങ്ങി
மனைவி
ITL6)
இறைவன்
சிறுவன் g9 D DIT
சிறுவன்
2)itts I
சிறுவன்
Stilä DIT சிறுவன்
வேலைக்காரியைக் கூட்டிக்கொண்டு வந்தன். அதுகூட என்னை மதிக்கிறது இல்லை. நீ இருபத்தினாலு மணி நேரம் தொலைக்காட்சிக்கு முன்னால் இரு இல்லையெண்டால்கை சந்தை என்று சுற்று. வேலைக்காரி செய்யிற வேலையை நீ செய்தால் அந்தக் காசு மிச்சம்தானே? அதிலையே சீதனத்தைச் சேர்த்துவிடலாமே, எல்லா பழியைபும் என்ற தலையில போடுங்கோ. என்ன. எதிர்த்தா கதைக்கிறாய்? மூடு வாயை (அடிவிழுகின்றது) இன்னும் ஒருக்கா என்னில கைவைச்சுப் பாருங்கோ. நடக்கிறதே (წ6)][]}.
என்னடி செய்வாய்?
அடியுங்கோ பாப்பம்
(அடிவிழுகின்றது) பொம்பிளைகளுக்கு வரவர வாய் நீளுது. இத்தனை கொடுமைகளா, இதை எம்மால் தாங்க முடியுமா? பதில் சொல்லுங்கள். இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். வண்ணமிகு வாழ்க்கை வழி தவறிப்போனதே எண்ணம் போல வாழ்ந்து படுகுழியில் வீழ்ந்ததே முன்னம் அது வாழ்ந்த நிலை மறந்து போனதே சின்னா பின்னமாகி அது சிதைந்து வீழ்ந்ததே
இந்த குடும்ப சீரழிவுக்கு நானா காரணம்? கணவன், மனைவி, பிள்ளைகள் எவ்வாறு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நியதி கூடவா உனக்குத் தெரியாமல் போய்விட்டது? குழந்தைகள் புனிதமானவர்கள் சிறுவர்கள் இந்த உலகத்தின் சொத்துக்கள் அந்தச் சின்னஞ் சிறார்களை நீ படுத்தியிருக்கும் Ur6) J.JTT.
(56öl abırrüf) ஐயோ என்னால ஏலாம இருக்குது. மேலெல்லாம் நோகுது என்ன வேலையெல்லாம் செய்து முடிச்சிட்டியா? இங்க வந்து இருக்கிறாய்? வீடெல்லாம் கூட்டிட்டியா? சட்டி பானை கழுவிட்டியா? உடுப்பெல்லாம் தோய்ச்சிட்டியா..? ஓம் அம்மா. எல்லா வேலையும் செய்து முடிச்சிட்டேன். பசிக்குதம்மா. காலையில் இருந்து ஒண்ணுமே சாப்பிடலை சரி சரி பிள்ளைகளின் சப்பாத்தைக் கழுவி வைத்துவிட்டு பழஞ்சோறு இருக்கு வந்து சாப்பிடு சரி அம்மா (சிறுவன் வேலை செய்கிறான்) அம்மா! அம்மா! என்ன வேலை எல்லாம் செய்து முடிச்சிட்டியா? TLL TTccL gMLLLLLLLLT TTTLMT TLkCT L TS SLLLLL TTMMMMTTS
28

eLID
நேரம் போய்விட்டது. தங்கச்சி போய் விட்டா. நானும் போக வேணும்: -. நீ ஏதோ படிச்சு கிழிக்கவா போகிறாய்? சரி போ, டோய் விட்டு வந்து வேலையைப் பார்.
(பாடசாலைக் காட்சி வகுப்பறை ஒன்றில் ஆசிரியரும் மாணவரும்)
சிறுவன்
ஆசிரியர்
சிறுவன் ஆசிரியர்
சிறுவன் 294 DA DIT
சிறுவன்
மனிதன்
இறைவன்
பேரன்
கிழவன்
பேரன்
(சிறுவன் பாடசாலைக்குச் செல்லல்) (பக்கத்தில் உள்ள மாணவர்களைப் பார்த்து பார்த்து யோசித்துக் கொண்டு இருத்தல்) சுரேஷ் என்னடா பக்கத்து கொப்பியைப் பார்த்து எழுதுறாய்? பாடசாலைக்கு நேரம் செல்ல வாறது. வந்து பக்கத்துக் கொட்பியைப் பார்க்கிறது. அந்தக் கணக்கைப் போய்ச் செய் பார்ட்போம். (கணக்குச் செய்யத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருத்தல்) இந்தக் கணக்கை வீட்டில் செய்து கொண்டு வா. பின்பு வந்து கவனிக்கிறேன்.
(வீட்டுக் காட்சி) (சிறுவன் பாடசாலையில் இருந்து வீடு செல்லல்) Stb DT. SlíbuDT... என்ன பாடசாலையில இருந்து வந்திட்டியா? ஐயா தோட்டத்தில இருக்கிறார். போய் அவருக்கு உதவி செய். (அழுது கொண்டு தோட்ட வேலைகளை செய்தல்) இத்தனை சுமைகளா? என்னால் இந்த சுமைகளை சுமக்க முடியுமா? என்னைப் பற்றிச் சிந்தியுங்கள் என்னால் இந்த சுமைகளை சுமக்க முடியாது. தவறு தான். இறைவா தவறு தான். குடும்பங்கள் பிளவுண்டு போனமைக்கு நான் தான் காரணமென்று தெரிகின்றது. மழலைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு நான் தான் காரணம் என்று புரிகின்றது. அதற்காக நீ என்னை கைவிட்டு
6-6TLDT
மனிதா நீ சிறுவர்களை மட்டு துஷ்பிரயோகம் செய்தாய்? முதியவர்களை நீ படுத்திய 1ாட்டைப் பார். (பின்காட்சி மாறுகிறது)
(கிழவன் வருதல்) என்ன தாத்தா செய்யிது? ஏன் தாத்த அழுகின்றீர்கள்? அழ வேண்டாம் இருங்கோ தாத்த தண்ணி கொண்டு வந்து தருகின்றேன் என்னால் ஏலாது. ஒழுங்காக சாட்டு தருகிறார்கள் இல்லை. குளிக்க தண்ணீர் அள்ளித் தருகிறார்கள் இல்லை. ஏன் தாத்தா நான் இருக்கின்றேன் தானே. என்னிடம் கூறலாம் தானே. அழா தீங்கோ தாத்தா,
29

Page 17
கிழவன்
தாய்
கிழவன்
இறைவன்
மனிதன் 1. மனிதன் 2. மனிதன் 3
நீ சின்னப்பிள்ளை தானே. இந்த வேலையெல்லாம் உன்னால் செய்ய முடியாது? ஏய் தம்பி உனக்கு எத்தனை தடவை சொல்வது? இந்தக் கிழவனுக்கு அருகில் வரவேண்டாம் என்று. யாரும் வந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
ஏன் எங்களை ஒதுக்கிறீர்கள்? நாங்கள்என்ன துன்பமா
செய்கின்றோம்? நீங்கள் ஒரு காலத்தில் முதியவராகத்தான் வரப்போகின்றீர்கள். எங்களை ஏன் ஒதுக்கிறீர்கள்? இல்லை மனிதா இல்லை. நான் ஒருபோதும் உன்னைக் கைவிட்டதில்லை. காலத்திற்குக் காலம் பெரியோர்களையும் யுகபுருஷர்களையும் அவதாரங்களையும் மண்ணுக்கு அனுப்பி வைத்தேன். நீ உள்ளம் வருந்தவில்லை. சாதி, மதம், பணம், என்பவற்றின பெயரால் உன் சொந்தப் பிரதேசங்களில் நீ செய்த அட்டூழியங்களைத் திரும்பிப்பார்.
(பின்காட்சி மாறுகிறது)
என்ர மதம் தான் புனிதம் உங்கட எல்லாம் வெறும் பாசாங்கு என்ர சாதி தான் பெரியது. நீங்கள் எல்லாம் கீழ்ச்சாதிகள் என்ர பணத்திற்கு முன்னால் உங்களுடைய சாதி மதம் எல்லாம் வெறும் தூசு.
(எல்லோரும் மோதுதல்)
LIFTL (5
இறைவன்
போர் காட்சி Lாட்டு
இறைவன்
மலர்கின்ற மனிதம் மாய்கின்றதே
உலர்ந்திங்கு வீழ்ந்து காய்கின்றதே புலர்கின்ற வழியின்றி சாய்கின்றதே தளர்வுற்று அது இங்கு ஒய்கின்றதே
பார்த்தாயா மனிதா நீ செய்த மகத்தான தவறுகளின் விளைவுகளை இது மட்டுமா? சக மனிதனோடு சமாதானமாக வாழச் சொன்னேன். நியோ யுத்தங்களினால் அவனை வெட்டித் தாழச் செய்தாய். உலகை சமாதானப் பூங்காவாக மாற்ற3ர் சொன்னேன். நீயோ சண்டையிட்டு சுடுகடாய் வாட்டச் செய்தாய் நீ செய்த போரின் கொடுமைகளை நீயே திரும்பிப் டார்.
இரத்தம் தோய்ந்த யுத்த மண்ணிலே நித்தம் அவலச் சத்தம் கேட்குதே பித்தம் கொண்டு சித்தம் தடுமாறியே யுத்த வெறி நித்தம் தொடருதே
நான் படைத்த பூமியை நாசமாக்கிய உன்னை முற்றிலும் நிர்மூலமாக்க முடிவு செய்துள்ளேன்.
30

(இறைவன் உருத்திர தாண்டவம் ஆடுதல்)
மனிதன்
இறைவன்
மனிதன்
மனிதன் பாட்டு
ஆண்டவனே! என்னை மன்னித்து விடு. மாபெரும் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு இறுதிச் சந்தட்பம் ஒன்றை எனக்குக் கொடு. உன் சட்டங்களை மதிக்க இந்தப் பூமியை சீர்படுத்தி சக மனிதனோடு சமாதானமாக வாழ எனக்கொரு இறுதி சந்தர்ப்பம் கொடு. மகிழ்ச்சி மனிதா மகிழ்ச்சி. மனம் வருந்தினாய். குணம் திருந்தினாய், மகிழ்ச்சி. உன் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள். இது உனக்கு இறுதி சந்தர்ப்பம், ஒழுக்கமாக வாழ இது உனக்கு இறுதி வாய்ப்பு சகமனிதனோடு சமாதானமாக வாழ இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் பற்றிக் கொள். இறுதியாகவும் உறுதியாகவும் பற்றிக்கொள் புறப்படு புதுயுகம் படைக்க புறப்படு. நான் சென்று வருகிறேன். மறுபடியும் உன்னை நான் சந்திக்கும் போது புதுயுகம் படைத்த மனிதனாகக் காண்பேன். புதுயுகம் படைப்பேன் என்னை விலங்கிட்டிருக்கும் இந்தப் பிரச்சினைகள் யாவற்றையும் உடைத்தெறிவேன். (பிரச்சினைகளை உடைத்தெறிதல்) புத்தம் புதிதாய் ஒரு யுகம் படைப்போம் பழைய கனவுகள் மாறி ஒழிந்திட புதிய ஒளியது உலகைப் போக்க இருளின் திசையை இல்லை என்று ஒழிப்போம்.
முற்றும்.
(தமிழ்த் தினப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றது. வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் நடித்தது)
இந் நாடகத்தில் ஒரு காட்சி கீழே
} }
3.

Page 18
வன்னி ஒளற்று - ஒலி நாடா பற்றியவிமர்சனம்
பெருமிதத்திற்குரிய இம்முயற்சி எமது மண்ணின் தமிழ்மெல்லிசைப் பாடல்
முயற்சிகளில் முக்கியத்துவம்பெறுகின்றது. இதில் இடம்பெற்றுள்ள 10 பாடல்களுள் பல நல்ல கவிதைக்கான அம்சங்களைதம்மிடத்தே கொண்டு திகழ்வது ஒரு தனிச்சிறப்பு.அனுபவம் மிகுந்த பாடகர்களுக்கு இணையாக LifтL- дъ i ćѣ 6ії இதரில் இ ைண ந துளர் ள  ைம பாராட்டப்படவேண்டியதே. இப் பாடல் களினி ப ா டு  ெப ா ரு ள சம கால ம க களி ர்ை வாழ் நிலை மற்றும் மனே நரி லை களி ன எ த ரொ ல க ள |ா க அ ைம ந த ருட பது ரசிகர்களின் மத்தியில் அ த னரி ட த  ைத உறுதிசெய்து கொள்ளும் அம்சமாக உள்ளது. நேற்றைய நெஞ் சின் நெருடல்கள் அகன்று ஒரு புதுவாழ்வை தரிசிக்க விழையும் ம ன சை எதிர்கொள்ள புலருகின்ற O புதிய காலை வரவாய் அமையும் இப்பாடல்கள் T எமது மணி னின் பாடல்களாய் என்றும் எதிரொலிக்கக் கூடியவை
~ நமது ஈழநாட்டில் விமர்சகள் ந.சத்தியபாலன். வன்னி ஒளற்று - ஒலி நாடா வெளியிட்டு நிகழ்வில்
 
 

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதையும் அ
தமிழில் ஏற்படுத்திய தாக்கமும் (வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட பெளர்ணமி இலக்கிய நிகழ்வு - 35ல் வாசிக்கப்பட்ட கட்டுரை - 19032000) சு. சிஜயச்சந்திரன் 1.0 மரபுக்கவிதை - நவீன கவிதை - புதுக்கவிதை வேறுபாடுகள். 2.0 மரபுக்கவிதைப் போக்கின் தொடர்ச்சி எ-டு- அ.குமாரசுவாமிப்புலவர். 3.0 மரபிற்கும் நவீனத்துவத்துக்கும் இடைப்பட்ட போக்கு எ-டு பாவலர் துரையப்பாபிள்ளை, சோமசுந்தரப்புலவர், விபுலானந்தர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, புலவர் மணி பெரியதம்பிபிள்ளை, நவாலியூர் சோ.நடராசன். 4.0 நவீன கவிதை ஊற்றுக்கள் (19ம் நூற்.) எ-டு.சுப்பையனார். உடுப்பிட்டி
குமாரசுவாமி முதலியார் தி.த.சரவணமுத்துப்பிள்ளை. 5.0 நவீன கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
5.1 மறுமலர்ச்சிக்குழு (1940)
மஹாகவி, அ.ந.கந்தசாமி. நாவற்குழியூர் நடராசன் சாரதா, வரதர், செ.கதிரேசபிள்ளை. மஹாகவி : யதார்த்தவாழ்வு, கிராமியம். பேச்சோசை, சிறுகதைவடிவம், குறும்பாவடிவம். அ.ந.கந்தசாமி 1 இடது சாரிச் சிந்தனைகள் நாவற்குழியூர் நடராசன் : மனோரதியப்பாங்கு. காதல், இயற்கை. 5.2 ஐம்பதுகளில் ஏற்பட்டமாற்றங்கள் 52.1 மொழி, இன உணர்ச்சி ஆரையூர் அமரன், ராஜபாரதி, சச்சிதானந்தன்,
நீலாவணன், காசியானந்தன், பாண்டியூர் 5.3 அறுபதுகளில் ஏற்பட்ட மாற்றம் 53.1 முற்போக்குச் சிந்தனைகள் : சுபதி, சுபத்திரன், நூ.'மான். சண்முகம்,
சிவலிங்கம், சாருமதி 5.3.2 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
1960 - தா.இராமலிங்கம், தருமுஅருட்சிவராம், வன்னியூர்கவிராயர் 1970 - அயேசுராசா சாருமதி, வ.ஐ.ஜெயபாலன். சிவசேகரம். திக்குவலை கமால். சம்ஸ். மேமன் கவி, சோலைக்கிளி 6.0 6. எண்பதுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.
6.1.1 எதிர்ப்புக் கவிதைகள்.
5-டு (மரணத்துள் வாழ்வோம் - தொகுதி நுட்மான், சண்முகம். சிவலிங்கம், சேரன், சிவசேகரம். சு.வில்வரெத்தினம் முதலானோர். 6.1.2 பெண்ணிலை வாதம்
அ.சங்கரி, மைத்திரேயி, ஊர்வசி, ஒளவை, சிவரமணி, கல்முறை கிதாயா. துல்பிகா மைதிலி, செல்வி முதலியோர் 6. 1.3 புகலிடக் கவிதைகள்
வ.ஐ.ச.ஜெயபாலன், கி.பி.அரவிந்தன் முதலானோர்
33

Page 19
6.14 போராட்டக் கவிதைகள் புதுவை இரெத்தினதுரை. பாரதி. வானதி, களில்தாரி
7.0 பன்முக வளர்ச்சி
7. குழந்தைக் கவிதைகள்: எ-டு. சோமசுந்தரப்புலவர், வித்துவான் வேந்தனார். மு.நல்லதம்பி, திமிலத் துமிலன், திமிலை மகாலிங்கம், bí 9mř i T6)|í. 7.2 மொழிபெயர்ப்புக் கவிதைகள்: எ-டு கி.கணேஸ், நு.'மான்
சிவசேகரம் முதலானோர் 7.3 கவியரங்குக் கவிதைகள்: எ-டு வி.கந்தவனம், அரியாலை
ஐயாத்துரை, சில்லையூர் செல்வராஜன் 7.4 கவிதா நிகழ்வு
எ-டு நுட்மான், சேரன் முதலானோர் 7.5 நாட்டார் பாடல் செல்வாக்கு
எ-டு இ.சிவானந்தன், செ.குணரெத்தினம் 7.6 வாய்மொழிக் கவிதை மரபின் செல்வாக்கு
எ-டு மலையகம், மட்டக்களப்பு, வன்னி 7.7 தொண்ணுறுகளில் ஏற்பட்ட மாற்றம்
எ-டு நட்சத்திரன் செவ்விந்தியன், றஸ்மி, கனகரவி, மலர்ச்செல்வன், அஸ்வகோஸ். பிற்குறிப்பு
கவனிக்க தரப்பட்ட கவிஞர்களின் பட்டியல் முழுமையான தன்று முக்கியமான மூத்த கவிஞர்களும் (உ-ம் முருகையன், புரட்சிக்கமால், அண்ணல் சோ.பத்மநாதன்) இளைய கவிஞர்களும் (உ-ம் வாசுதேவன்) இடம்பெறாதிருக்கலாம். அத்தகையோர் பெயர்களை உரிய இடங்களில் சேர்க்குக.
எண்பதுகளின் பின்.
80 களில் ஈழத்தின் சமூக அனுபவம் மாறுகின்றது. இனத்துவப் போர் காரணமாக ஏற்பட்ட அரச ஒடுக்குமுறை நடவடிக்கைகள் சிறப்பாக இளைஞர்களை, பொதுவாக மக்கள் எல்லோரையும் பாதித்தன. அக்காலத்தில் நடந்த யாழ்ட்டான நூலக எரிப்பு, இனட்படுகொலைகள் (83) முதலியன போன்ற சம்பவங்கள் பெருத்த உணர்வுக் கிளர்ச்சியை ஏற்படுத்தின. இத்தகைய ஒர் அனுபவம் இதற்கு முன் ஏற்படவில்லை எனலாம்.
தமிழ் இளைஞர் இயக்கங்களின் வருகையினால் ஏற்பட்ட விழிப்புணர்வு, பெருந்தேசியவாதம் அல்லது பெளத்த இனவாத அரசின் அ.க்குமுறை யுத்தம் அதனால் ஏற்!! மனித உரிமை மீறல்கள் என்பன மக்கள் வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தின. இந்த மாற்றங்கள் இலக்கியத்தில் இருமுனைகளிலிருந்து வெளிப்படுவதைக் காணலாம்.
34

1. இக்காலத்தில் எழுதிக் கொண்டிருந்த முதிய, இளம் கவிஞர்கள்,
இந்த அனுபவங்களைப் டாடியமை, உ-ம் முருகையன், வ.ஐ.ச.ஜெயபாலன். எம்.ஏ.நு."மான், சிவசேகரம்
"போரின் முகங்கள்" V 2. இந்த அனுபவங்களினூடே தோன்றிய ஒரு புதிய தலைமுறையினர் இவர்கள் தங்களின் அனுபவங்களின் ஊடாக இந்த நிகழ்ச்சிகளை பார்க்கத்தொடங்கினர். இந்தச் செல்நெறி முற்றிலும் ஒரு புதிய கவிதை வளர்ச்சிக்கு இடமளித்தது. இவர்களில் சேரன் மிகமுக்கியமானவர். இவரின்
1. இரண்டாவது சூரிய உதயம் 2. u Lp66, போன்ற கவிதைகள் ஈழத்தின் புதிய புலப்பதிவுகளைப் புதிய படிமங்கள் நிறைந்த ஒரு கவிதைப் போக்கினைக் காட்டுகின்றன. இந்த வளர்ச்சியில் இளவாலை விஜயேந்திரனும் குறிப்பிடத்தக்கவர் புதுசு இதழின் மூலம் வெளிப்பட்டவள். தமிழ் தேசியம் அல்லது இனத்துவப் போர் கவிதைத்துறையில் இரண்டு முக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டது.
1. புலம் பெயர் இலக்கியம் 2. பெண்ணியம் இதே வேளையில் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்த கவிதைப் போக்கும் முக்கியமானதாகும். இதில் புதுவை இரத்தினதுரையின் “நினைவழியாநாட்கள்’ (1992) குறிப்பிடத்தக்கது. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்த புதிய மாற்றங்களினதும் புதிய வளர்ச்சிகளினதும் தொடக்கத்தை முற்றுமுழுதாகப் பிரகடனப்படுத்தி நிற்பது "மரணத்துள் வாழ்வோம்” இது 1985 இல் தமிழியல் அமைப்பினால் தொகுத்து வெளியிடப்பட்டது.
இனத்துவப் போராட்டங்களில் ஏற்பட்ட திருப்பங்களும் மாற்றங்களும் இலக்கிய உணர்வினும் பதிவினும் மாற்றங்களை ஏற்படுத்தின. இத்தகைய மாற்றத்தினை மிகுந்த கவிதை வனப்புடன் எடுத்துக் கூறுபவராக
1. சோலைக்கிளி - எட்டாவது நரகம் 2. ஒட்டமாவடி அறபாத் - "எரி நெருப்பிலிருந்து 3. கி.பி. அரவிந்தன் - “முகம் கொள் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சோலைக்கிளியின் அசாதாரணமான படிமங்கள், மொழிநடை என்பன கவனத்துக்குரியன. ஆத்மாவின் சில கவிதைகளும் குறிப்பிடத்தக்கன.
தொண்ணுாறுகளில் வரும் கவிதைகளில் இரு முனைப்பட்ட வெளிப்பாட்டினைக் காணலாம். 1. டோரின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தத்தமக்குரிய சூழ்நிலைகளில் நின்று வெளிப்படுத்துகின்றனர். இனப் போர் ஏற்படுத்திய சமூகச் சிதறல்களின் கொடூரத்தை மிகவும் நுண்ணிதான முறையில்
35

Page 20
நட்சத்திரன் செவ்விந்தியன் - வசந்தம் (1993) ஒட்டமாவடி அறபாத் - எரி நெருப்பிலிருந்து (1996) என் ஆத்மா - மிக அதிகாலையில் நீல இருள் (1997)
2. போர்க்களத்தில் ஈடுபட்டவர்கள் தமது மனநிலைகளைப் பதிவு செய்தல்.
குறிப்பாக, 1. கஸ்தூரி
கஸ்தூரியின் ஆக்கங்கள் 1991 2. வானதி
வானதி கவிதைகள் 1992 3. பாரதி
காதோடு சொல்லிவிடு 1992 இவையும் தமிழுக்கு புதியவையே. இவற்றைவிட இனத்துவப் போராட்டங்களில் நேரடியாகப் பாதிப்படையாமல் ஆனால் இந்த சமூக, அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள். பாதிக்கப்பட்டாலும் முன்னர் எழுதியவைகளைவிட 80களின் பின் வளர்ச்சியுடன் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் புதுக்கவிதை நிலையான இடத்தைப் பெற்றுள்ள போதும் மரபும், யாப்பும் மிக்க கவிதைகளும் இக்காலப்பகுதியில் ஈழத்தில் தோன்றியதை மறத்தலாகாது. மரணத்துள் வாழ்வோம் - முன்னுரை (1985)
எமது நிகழ்காலம் கேள்விக்குள்ளானது, கொடூரமானது, இராணுவ அடாவடித்தனங்களும் கொடுமைகளும் பல்வேறு வடிவங்களிலும் வெடித்தெழும் போர் உணர்வும் எதிர்ப்புக்களையும் வரலாறாக்கியது.
அநீதி, துயரம், அறிவும், சுமந்து கொள்ள முடியாத அளவிற்குப் படுகொலைகள் தங்களின் சொந்தமண்ணில் இருந்து வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாய் வெளியேறிய மக்கள். எல்லைப் புறங்களில் ஏற்படும் படுகொலைகள் முதலியவையே சூழலின் யதார்த்தம்.
மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள் மனிதனுக்குரிய கெளரவம், வாழ்க்கைக்கான உத்தரவாதம் இவற்றை வெறும் வார்த்தைகளாலும், வெற்று ஒப்பந்தங்களாலும் உத்தரவாதம் செய்ய முடியாது என்ற கசந்துபோன அரசியல் வரவாற்றின் தர்க்கரீதியான வளர்ச்சியில் இன்று விடுதலைக் குரல்கள் ஒலிக்கின்றன. இவை எதிர்ப்புத்தன்மை கொண்ட இலக்கியங்களாயுள்ளன.
கடந்த பதினேழு வருடங்களாக, அரும்பி வளர்ந்த ஒரு வேகம் மிக்க அரசியல் நெறிப்பாட்டின் ஓர் உச்ச நிலையே இது எனலாம். இது எமது மக்களின் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் வாழ்க்கை அனுபவங்கள் என்ற தளத்திலும் இதுவரை காலம் எதிர் கொண்டிராத வாழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கப்பண்ணியுள்ளது. அரச பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் முகங்களைச் சிதைக்க முயன்றபோதெல்லாம் மரணத்துள் வாழும் உயிர்ப்பின் (pBIOLb L. ÓLui L.L. 56öI6OOLDI6ODUJ&b &ET 60076MDAT Lb.
ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் என்ற வகையில் எமது போராட்டம், தேசத்தை - அதனுடைய பெளதீக அம்சங்களை மட்டும் மீட்பது என்ற பொருள்
36

கொள்ள முடியாது. மாறாக எமது மொழி, எமது நிலம், எமது கலைகள் இலக்கியம், கலாசாரம் இவையனைத்திலும், சுதந்திரமான விகCப்பை உருவாக்கும் தன்மை கொண்டது. அந்நிலை ஒடுக்குமுறைக்கு எதிராக கலை இலக்கியங்கள் முனைப்புப் பெற்று மேற்கிளம்பின.
தேசிய ஒடுக்குமுறை என்பது ஒட்டு மொத்தமாக ஒரு மக்கள் திரளால் உணரப்பட்டு, விடுதலை வேட்கை பரவலாகக் கிளர்ந்தெழுவதற்கு முன்பாக, ஒடுக்குமுறையின் ஆரம்ப நிலைகளிலேயே அபாயத்தை இனங்கண்ட கலைஞர்கள் குரலெழுப்பத் தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக கவிஞர்கள் முதன்மை பெறுகின்றனர். ஆரம்பத்திலேயே வெளிக்காட்டப்படும் இத்தகைய கலாசாரரீதியான எதிர்ப்பே பின் ஆயுதப்போராட்டமாக பரிணாமம் பெறுகின்றது. தேசிய ஒடுக்குமுறையின் ஆரம்ப நிலைகளில் தமிழ் மொழிக்குரிய உரிமைகள் தமிழ் மொழிப்பயன்பாடு என்பவை மறுக்கப்பட்ட போது அதற்கெதிராகக் கவிதைக்குரல்கள் நிறையவே எழுந்தன.
மஹாகவி, முருகையன், நீலாவணன், காசி ஆனந்தன் புதுவை இரத்தினதுரை உட்பட ஈழத்தின அனைத்து முக்கியமான கவிஞர்களும் இவை பற்றி வலிவுடன் எழுதியுள்ளனர்.
தமிழ்மொழி மீதான காதல், இனப்பற்று. இனவிடுதலை என்று 'தமிழ் நிலைப்பட்ட ஒரு வெளிப்பாடாகவே இவை இருந்தன. இனவாதப் பண்புகள் காணப்பட்டதால் பாரபட்சம், புறக்கணிப்பு, ஒடுக்குமுறை என்பவற்றிக்கெதிரான குரல்கள் என்ற வகையில் இவை வரலாற்று முக்கியத்துவமுடையதாகவுள்ளன. ஆனால் இன்று கவிதை எழுதும் கவிஞர்கள் பேசும் குருதியும், போர்க்களமும், மரணமும், தியாகமும், உயிர்ப்பும் உள்ளவை சாத்தியமானவை, வாழ்ந்து பெற்றவை. இதில் கற்பனையில்லை. குறிப்பாக 1980 களின் பின் இந்தத் தரமாற்றம் ஈழத்துக் கவிதைகளைப் புதிய தளத்திற்குக் கொண்டு செல்கின்றது.
தேசிய ஒடுக்குமுறை பல்வேறு வழிகளிலும் ஸ்திரமாகி கொண்டு வருகின்றபோது ஒடுக்கப்படும் மக்களுக்கு தமது கலைகள், கலாசாரம், நிலம் என்பவற்றிலும் மிகுந்த இறுக்கமான பிணைப்புகள் வலிமையுறுகின்றன. ஒடுக்கு முறைக்கெதிரான தேசியவிடுதலைப் போராட்டம் கிளர்ந்தெழுகையில் அக்கிளர்ச்சி, தேசத்தின் பல்வேறு அம்சங்களையும் காட்டி நிற்பது இலக்கியம். அதில் குறிப்பாக, கவிதை முதலிடம் பெறுகின்றது.
மேற்குலகின் அடிமைத்தனங்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்ட ஆபிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டம் சரி. இந்து வெள்ளைநிற வெறித் தென்னாபிரிக்க அரசிற் கெதிரான ஆபிரிக்க மக்களின் போராட்டம் சரி லத்தின் சரி, தமது மக்கள் போராட்டப் பின்புலமாக ஒரு தேசிய கலாசார விழிப்புணர்வையும், தமது பாரம்பரியச் செழுமையையும் பெற்று புதுக்கவிதைப் போக்கினை மேற்கொண்டனர்.
இவை அந்நியப்பதிவுகளை எதிர்த்துக் கிளம்புவன இருப்பிற்கு எதிரான சவாலுக்குரிய எதிர்விளைவுகள் ஒடுக்குமுறைக்கெதிரான தமது அடையாளத்தை
37

Page 21
தமது வேர்களை தமது ஆளுமையை முகத்தில் அறைந்து பிரகடனம் செய்வன. இத்தகையதொரு வரலாற்றுக் கட்டத்தில் தான் ஈழத்துக் கவிதைகளும் 1980 களிலிருந்து எழுந்தன.
தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலகட்டம் சகல கலை இலக்கிய வெளிப்பாடுகளிலும் இத்தன்மை (எதிர் காலத்தன்மை காட்டும் போக்கு) காணப்பட்டது. அரசியல் கவிதைகளின் பரவலை பொதுவாகவே அவதானிக்கக் கூடியதாகயுள்ளது. 'அரசியல் கவிதைகள்' எனும் இந்தத் தோற்றப்பாடு இன்று ஈழத்தில் இருந்து 1980 களின் எழுந்த கவிதைகள் நவீன தமிழ்க்கவிதைக்கு புதுவலிமை சேர்ப்பதாக அமைகின்றது.
'அலங்காரமும் ஆடம்பரமும் அற்று, சொற்செட்டும் இறுக்கமும் மிக்கதான ஒரு நடையிலும் லயத்திலும் 1980 களில் கவிதைகள் தோன்றின. குறிப்பாக, வீடற்ற நிலை, நிலத்தின மீதான பிணைப்பு, மனிதம், விடுதலை, துணிவு, வீரம், என்பவற்றைப் பேசுகின்றன.
உறுதியும், மனவெழுச்சியும் கோபமும் விரவிய மொழிநடை இதற்குத் துணையாக, உணர்வு, உணர்ச்சி நிலைகளில் கவிதை பல சந்தர்ப்பங்களில் ஒத்திசையும் பேணுவதைக் காணலாம். s
அரசியல் எழுச்சியும் கலாசார விழிப்புணர்வும், இருக்கின்ற சூழ்நிலையில் பிரக்ஞைபூர்வமாக கலாசாரத் தளத்தில் இயங்குவதன் மூலம் இத்தொடர்புத்தடையைக் குறைக்கலாம் என்பது எங்களுடைய அனுபவமாயிற்று. பெண்நிலைப்பட்ட அனுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வருகின்றன.
புலம் பெயர் இலக்கியம். 1. சமுக அரசியல் பின்னணி
உலகின் பல்வேறு நாடுகளிலும் பரந்துள்ள இலங்கைத் தமிழர் சமூகம் ஒரு வரலாற்று யதார்த்தமாகயுள்ளது. வடக்கே கனடாவிலிருந்து தெற்கே அவுஸ்ரேலியா நியூசிலாந்து வரை இச்சமூகம் அகன்று விரிந்துள்ளது. ஒரு குடும்பமே வெவ்வேறு கண்டங்களில், வெவ்வேறு நாடுகளில் சிதறுண்டு கிடக்கின்றது. இத்தகைய சிதறலின் துன்பியல் தன்மை கவிதைகளிலும் வெளிப்பட்டுள்ளது.
யாழ்நகரில் என் பையன்/ கொழும்பில் என் பெண்டாட்டி/ வன்னியில் என் தந்தை/ தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா! அந்தப் பிறாங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோ வழிதவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல ஒஸ்லோவில், என்ன நம் குடும்பங்கள் காற்றால் விதிக் குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?
(ஜெயபாலன்.வ.ஐ.ச. 1989) 1980 களுக்கு முன்னர் குடிபெயர்ந்தவருக்கும் பின் பு குடிபெயர்ந்தவருக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. எண்பதுகளின் பின்னர் குடிபெயர்ந்தோர் தொடர்மாடி வீடுகளில் நெருக்கடி மிக்க அறைகளில் நகரில் வறிய பகுதிகளில் வாழ்பவர்கள். -
38

இலக்கிய முயற்சிகள்
மொழி, கலாசாரம் பொது அபிவிருத்தி, போன்றவற்றில் பாரிய வேறுபாடுள்ள அந்நியநாடுகளில் வாழுகின்ற நிலை, அப்புலம் பெயர்ந்தோரிடையே சில குறிப்பிட்ட தேவைகளைத் தோற்றுவித்துள்ளது. இவர்கள் சகல இலக்கிய முயற்சிகளிலும் தம்மை ஈடுபடுத்திய கவிதைத்துறையில்
தமயந்தி, வ.ஐ.ச.ஜெயபாலன், இளவாலை விஜேந்திரன், மைதிரேயி, சிவசேகரம், கி.பி.அரவிந்தன்
முதலியோர் ஈழத்திலிருந்த போதே எழுதிக் கொண்டிருந்தனர். இவர்கள் தாம் வாழும் நாடுகளிலும் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டதுடன் புதிய சூழலில் தமது நாடு பற்றிய நினைவை நிலைநிறுத்திக் கொள்ளவும், இவர்களுக்கு இலக்கியம் ஒரு தளமாக அமைந்தது.
தாம் விட்ட நீங்கிய தமது நாடு, சுற்றம், சூழல், பற்றி நினைக்கின்ற ஒரு செயல் முறையாக எழுதுதலென்பது செயற்படுகின்றது. இவ்வாறு பல்வேறு காரணங்களின் கூட்டுமுயற்சியினால் புலம்பெயா தமிழர்களின் இலக்கியப் படைப்புகள் அமைகின்றன.
இலக்கியம் வெளிப்படுத்தும் உணர்வுகள்
1. கலாசார ஆன்மீக தளங்களின் பிரிவும் நினைவும், 2. அரசியல் விமர்சனம், 3. அகதிநிலை, 4. பெண்களது விழிப்புணர்வு, 5. புதிய அனுபவங்கள், 6. புதிய வெளிப்பாடுகள், 7. எதிர்காலம்
சொந்த நாட்டு நினைவு, அது தோற்றிவிக்கும் ஏக்கம், இவ்விலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்றன. தாம் இழந்து விட்ட தாய்நாட்டைப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நினைக்கவேண்டி ஏற்படுகின்றது. யன்னலுக்குள்ளால் பச்சை இலை காணாது கட்டிடங்களையே காணும் போதும், சூரிய ஒளியே காணாது பேஸ்மன்ஸ் வீடுகளிலும் அறைகளிலும் பொழுது கழியும் போதும் பனிக்காலக்குளிர், எலும்பை ஊடுருவும் போது தாய்நாட்டின் நினைவு பல கோணங்களிலும் விரிகின்றது.
சொந்த நாட்டின் காலநிலை, இயற்கை அழகுகள், அங்குள்ள மரங்கள், மலர்கள், சிறுகுட்டைகள், குச்சொழுங்கைகள், வெண்மணற் கடற்கரைகள், கோயில் முற்றம், வீடு, கிணறு, கிணற்றடி வாழைமரம், கிடுகு வேலிகள் என இயற்கை பெளதீகச் சூழலை நினைவு கூருகின்றார். இவற்றை தம் எழுத்துக்களில் விபரிக்கும்போது அச்சூழலை தம்மளவில் மறு உருவாக்கம் செய்து, எழுதுகின்ற அந்தப் பொழுதில் அதற்குள் வாழ்வதாய் அதனை உணர்வதால் ஒரு மனோநிலையும் உருவாகின்றது. அத்துடன் இதனால் பிரிவு பற்றிய ஏக்கமும் ஏற்படுகின்றது.
சிறுகுருவி வீடு கட்டும்/ தென் னோலை பாட் டிசைக்கும் / சூரியப்பெடியன் செவ்வரத்தம் பூவை/ புணரும் என் ஊரில் இருப்பிழந்தேன்! அலை எழுப்பும் கடலோரம் ஓர் வீடும் செம்மண்பாதையோரம் ஓர் தோட்டமும்/
39

Page 22
கனவுப் பணம் தேட கடல் கடந்தோம் நானும் நாங்களும் அகதித் தரையில் முகமிழந்தோம்/ w
(செல்வம் 1992 கட்டிடக் காட்டுக்குள்)
இன்னோர் கவிஞர் எத்தனை நாள் தனதுதாய் நாட்டைப்பிரிந்திருக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் கேட்கின்றான்.
"இன்னும் எத்தனை நாள் இந்துக் கடல் மடியில் மரகத வீணையென வடகிழக்காய் நீண்ட என் தாய்நாட்டை! நெஞ்சில் சுமந்து சுமந்து நான் ஏங்குவது? நாட்டேக்கம்/ என்னுயிரை/ நஞ்சாய் பிக்கிறதே.
(Gogu ituíT6AD6ö 1997) தமயந்தி எனும் கவிஞனின் கவிதைகளில் தனது நாடு தனது சுற்றம், மீண்டும் பார்க்க வேண்டும் என்கின்றான். நாட்டின் இழப்பு, நினைவு, ஏக்கம் என்பவைகள் அடிமனதில் பரந்துள்ள நாடு பற்றிய படிமங்களை மேலெழும்பும் U6)LD 6)Tubg5606).
இரையுங் கடலின் அலையுங் கரையும் /கரையிலிரக் கரும்பாறைகளும் பாறைகாக்கும் ஒற்றைக் கொக்கும் /கொக்கின் பிடியிற் தப்பும் மீனும் /மீன்கள் நிரப்பில் அசையும் படகும் படகிற் கேட்கும் அம்பாக்குரலும் குஎறும் வானை உரசும் கூத்தும் /கூத்து முடிந்த கொட்டகைத் தரையும் கொட்டிகைத் தரையில் உதிர்ந்த மணியும்/ மணிகள் தேடும் சிறுவர் படையும் /படையில் திரளும் முள்ளிக்கொடியும் கொடியிலுலருஞ் சுங்கன் கிளையும் /கிளை முள் சிலிர்த்த கிழாத்தி மரமும் /கிழாத்தி மரமும் கண்ணாத்தீவும்/ தீவுகள் சூழ்ந்த எந்தன் கரையும் /கரையிலோலைக் குடிசை நிரையும் (நிரையாய்ச் சடைத்த ஈச்சை மரமும் /ஈச்சை மரத்தில் பழுத்த குலையும் /or/ பனையின் தலையில் நுங்குக்குலையும் 'குலைகளிறக்கும் இருட்டுக் கதையும்/ இன்னும் இன்னும். / என்னைப் பிரிந்த எனது தேச வனப்பும் வனப்பின் எழிலுஞ்சிறப்பும/ காதல் கொண்ட கடலுங்கரையும் எல்லாம் எனக்கு மீள வேண்டும்/ பார்க்க ரசிக்க, பேச, எழுத/ சுதந்திர மனுவால் இவற்றைச் செய்ய/ மீண்டும் எனக்கு வேண்டும் இவைகள் யாரிடம் சென்று விண்ணப்பம் செய்வேன்! பனிமலைச் சுவரில் பட்டியல் எழுதி /பணிமுகிலிடமா முறையிட்டழுவேன்?
தமயந்தி 1992 நாடு என்பது புவியியல் காட்சி மாத்திரமல்ல சுற்றமும் குடும்பமும் சேர்ந்து குடும்பம், சொந்தபந்தம், நண்பர்கள் பற்றிய ஏக்கமும் கவிதைகளில் விரிவடையக்
B63816)TLO.
கண்டறியாத தேசத்தில் இயந்திரப் பற்களுக்குள் கனவுருகி வாழ்வுருகி/
40

உன்னப்பன் நானிருக்க /உன் காதுள் பஞ்சடைத்து தன்னுள் உனைப் போர்த்து உன் அன்னை காத்திருப்பாள் /மெல்ல நீ கண்ணுறங்கி /கண்ணுறங்கு கண்மணியே/ (கி.பி.அரவிந்தன் 1995) மொத்தத்தில் சொந்த நாட்டின் பெளதீக கலாசார, ஆன்மிக தளங்களின் பிரிவு, புலம்பெயர்ந்தோரை மிகவும் தாக்குகின்றது.
இந்த யுத்த நிலையில் தமிழர் அனுபவிக்கின்ற போர்ச்சூழல், வாழ்க்கை நெருக்கடிகள் என்பவற்றிலிருந்து தாம் அகன்றிருப்பது குறித்தான ஒரு குற்ற உணர்வும் புலம்பெயர் இலக்கியங்களில் புலப்படுகின்ற புது அம்சமாகும். இலங்கை அரசியல் பற்றிய விமர்சனப்பார்வையும் புலம் பெயர் இலக்கியங்களில் காணப்பட்டது. குறிப்பாக தமிழரது போராட்டம் குறுகிய தேசிய வாதமாக, பலத்துக்கான போட்டியாக இராணுவ வதாமாகச் சிதைந்து போனமை பற்றிய ஏமாற்றம் கவிதைகளில் அதிகமுண்டு.
“சற்று நிதானமாய்க் /கனவு காணப்பழகிக் கொள் /கனவுகளிலாதல்/ வீதிக்குப் போனவர்கள் /உயிருடனேயே வீடு திரும்பட்டும் பெற்ற புதல்வர்கள்/ ஒருவரோடொருவர்/ துப்பாக்கிகளால் மட்டும்/ பேசாதிருக்கலாம்! SSS SSS S SSS SCC SS L 0S SSS S 0SCCCC C C00CL S LS S 0 C CC S S S C CS LC /அல்லது பிணக்குத் தீர்க்கவந்தவர்கள்/ பிணங்களை வீழ்த்தாதிருக்கட்டும்/ இனி மேலாவது /தயவு செய்து கனவு காணப்பழகிக் கொள்/
(இளவாலை விஜயேந்திரன் : துருவச்சுவடுகள்)
இதனுடாக உண்மையான மனிதப் போராட்டமாக மாற வேண்டுமென்கின்றார். சொந்த நாட்டு அரசியல் பற்றிய ஆதங்கம், நம்பிக்கை நம்பிக்கையீனம் யாவற்றினதும் கலப்புணர்வு புலம் பெயர் இலக்கியங்களில் கவிதைகளில் காணப்படுகின்றது. இது முக்கியமான பண்பு எனலாம்.
பொதுவான உணர்வோட்டம் புலம்பெயர்ந்தோருள் அகதிநிலையுடன் தொடர்புபட்டது. இவர்கள் தாம் போய்க்குடியேறிய நாடுகளில் சட்டரீதியாகவும், கலாசாரரீதியாகவும், நிறரீதியாகவும் அந்த நாட்டு மக்களிடமிருந்து வேறுபட்ட வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றனர். கறுப்பின மக்களுக்கு எதிராக இவர்கள் முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. புதிய சூழல்கள், புதிய அனுபவங்கள் பேசப்படுகின்றன. இவற்றில் பேசப்படும் மொழிக் கையாளுகைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வித்தியாசங்கள், காலநிலைகள், பருவகாலங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்படும் இயற்கைப் படிமங்கள், புதிய கருத்துக்களையும், குறியீட்டு அர்த்தங்களையும் அளிக்கின்றன.
இன்பக் கனவு போல்
தோன்றி மறைந்தாலும் கோடை
வெயிற் சுகம் தோ.
இவ்வாறு 1980 களின் பின் ஈழத்துக்கவிதை உலகில் புலம் பெயர்
4-l

Page 23
இவ்வாறு 1980 களின் பின் ஈழத்துக்கவிதை உலகில் புலம் பெயர் இலக்கிய புதிய சூழலையும் அதன் அனுபவங்களையும் தோற்றிவித்துள்ளது.
கவிதைத் தொகுதிகள்
1. மறையாத மறுடாதி | 992 2. கோசல்யா கவிதைகள் 1992 3. முகங்கொள் 993
கி.பி.அரவிந்தன் -4 துருவச் சுவடுகள் 1992 5 கட்டிடக் காட்டுக்குள் 1992 செல்வம் இலையுதிர் கலைநினைவுகள் 1989
முதலியனவும் குறிப்பிடத்தக்கன. இவைகள் குறிப்பாக களத்துக் கவிஞர்கள். போராளிகள் தம் அனுபவங்களை வெளிப்படுத்தியமை, புலம்பெயர் இலக்கியமுயற்சிகள் (குறிப்பாக கவிதைகள்) பெண்களின் வெளிப்பாடுகள் காட்டிய புதிய உள்ளடக்கம் முதலியன ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக கவிதை இலக்கியத்தில் புதிய வரவுகளாகும். இவ்வரவுகளே பொதுவாக தமிழ் இலக்கியத்தில் இன்று பெரும்மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மேற்குலக நாடுகளில் ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு தமிழத்தில் கூட ஈழத்தின் கவிதைகளை மிகச்சிறப்பான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.
மாருதத்தின் அஞ்சலிகள் அண்மையில் காலமான கலைஇலக்கிய பத்திரிகையாளர்களுக்கு எமது அஞ்சலிகள்
பூ பத்திரிகையாளர் சி. சிவகுருநாதன் ஆ கவிஞர் அன்பு முகைதீன் ஆ, கூத்து அண்ணாவியார் செல்லையா ஆநாதஸ்வர வித்துவான் என்.கே.பத்மநாதன் இயலிசை வாரிதி பிரம்மபூg என்.வீரமணிஜயர் யூ கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை
42

சிறுகதை
செந்தழல் நாடு
வவுனியா தேசியக்கல்வியற் கல்லூரி. மெதுவாய் கண்விழித்த போது ஏன் “கண்விழிப்பு வந்தது என்ற நினைப்புத் தான் மனதில் அடித்தது. சில சின்ன நட்சத்திரங்கள் சூரியக் கடமையில் தம்மைத் தோய்ந்திருந்தன. வைகறை நாளாயினும் பொழுது சற்றே அதிகமாய்க் கருமையைக் குடித்திருந்ததாய்த் தோன்றிற்று. ஆனாலும் இனி விடியும். இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் பொன் மஞ்சள் கதிரெறிந்து சூரியன் மேலெழுந்து புல்லிதழ் தொட்டுப் பூமியின் பகுதிகள் பலதையும் பிரகாசப்படுத்தியபடி பகல் வெளிச்சமாய் மிதந்து வரும், ஆனால் இருண்டு கிடக்கின்ற தமிழர் வாழ்வு எப்போது வெளிக்கும்.? சிந்தனைக் கரங்களுக்குச் சிக்காமல் கேள்வியின் பதில் போக்குக் காட்டிற்று.
நித்யா எழுந்து உட்கார்ந்தாள். இடம் அத்தியார் இந்துக்கல்லூரி மண்டபம். தென்மராட்சியிலிருந்து குறிப்பாகக் கைதடி, நாவற்குழி, மட்டுவில் பகுதிகளிலிருந்து இடம் பெயர்த்தப்பட்ட மக்கள் தற்காலிகமாய்த் தங்கிச் செல்லும் இடமாக அது வயது சாதி - மத பேதங்களை ஒருங்கே அடித்துத் தள்ளிய படி இடம்பெயர்வுப் படலம் அங்கு அரங்கேறி இருந்தது. உயிர் இழப்புக்களும் உடைமைகளைத் தொலைத்த சோகங்களும் நெடுந்துாரம் நடந்த களைப்பும் அனைவருக்கும் பொதுமைப்பட்டிருந்தது.
அந்த மண்டபத்தினுள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில குப்பி விளக்குகளின் சுடர்கள் காற்றில் அலைந்து கொண்டிருந்தன. வீட்டில் குத்துவிளக்கேற்றும் தருணங்களில் ஒளிரும் சுடரின் அழகை மெய்மறந்து ரசிப்பது நித்தியாவின் வழக்கம். அதன் அழகு அற்புதமானது. வடிவமற்ற இரத்தச் சிவப்பு மலரொன்றின் முகை அவிழ்ந்தது போல தீ விளிம்பு சுடரும் அதன் தோற்றத்தைத் தீர்மானிக்க முடியாதிருப்பது அதனை உற்றுப் பார்க்கும் சுவாரஸ்யத்தை கூட்டும். ஆனால் இட்போது மனம் ரசனையற்ற பாலை வெளியாய் கிடந்தது. “ஒவ்வொரு இலங்கைத் தமிழனின் வாழ்வும் காற்றிலாடும் குப்பி விளக்குச் சுடர் தானண்ணை’ கணவனின் தங்கை நோர்வேயிலிருந்து ஒரு
பக்கத்தில் அசதியோடு விழிகள் மூடித் தூணில் சாய்ந்திருந்த படி துங்கிப் போன புருஷன் கீர்த்தனன். சற்றே தடிப்பான துணியினை வெறும் நிலத்தில் விரித்து அதன் மேல் கிடத்தியிருக்கின்ற ஐந்தே வயதான மகள் ஹரி, அவசரவசரமாய் இடம் பெயர்கையில் 6ாடுத்துக் கொண்ட சில முக்கியமான ஆவணங்கள். ஒரு சைக்கிள் அந்தளவு தான். நினைக்கும் போதே துயரம் நெஞ்சைக் கவ்விற்று. அம்மாவின் மரணம் அந்தக் கடைசி வேண்டுதல் அனைத்தும் சேரக் குழிழ்ந்தது கண்ணி பார்வையைக் கலக்கிற்று. நினைவுகள் தன் பாட்டில் நழுவிப் பரந்தன.
சந்தோசம் நிறைந்த அந்த நாட்கள் - மெதுவாய் பூவரசு சுமந்து வருகின்ற தென்றல். கிராமப்புறங்களுக்கு உரிய தெய்வீகச் சூழலைச் 43

Page 24
சிருஷ்டிக்கின்ற மணியோசை அவசரமற்ற நிதானமும் அட்டாவித்தனமும் நிறைந்த மக்கள், பச்சை வெளியாயப் பரந்து கிடக்கின்ற வயல் வெளிகள், மெல்லிய மழை துளிக்க எழும்புகின்ற மண்வாசனை, நெத்தலியும், கருத்திரளியும் மணலையும் துள்ளுகின்ற வாய்க் கால்கள். தியாக வீரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பனைமரங்கள், மணல் வீடு கட்டி விளையாடிய குச்சொழுங்கைகள் இரட்டைச் சடை வயதில் சிறு பெண்ணாய்ப் பூப்பறித்த சாலையோரங்கள் அத்தனையும் சேர்ந்து சொல்ல முடியாத மகிழ்வு தரும் ஓர் அன்பு மிகுந்த தாயின் மடியில் தலை வைத்துப் படுப்பதுபோல சொந்த ஊரில் வாழ்கின்ற அந்த விபரிக்க முடியாத சுகத்தை இழந்து விட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. வீட்டை விட்டு வெளியேறிய அந்த இறுதி நிமிஷங்கள் வேதனைத் தழும்பாய் இதயத்தில் மடிந்து வருத்துகிறது. போர் தொடங்கிய இருபத்தைந்தாம் நாளில் தாயின் மரணத்தின் மறுநாள்.
"இனி இருக்கேலாது பிஞ்சுக் குழந்தை இவனையும் வைச்சுக் கொண்டு.” கீர்த்தனன் தான் சொன்னான். இவளுக்கு நெஞ்சு முட்ட ஆழுகை பொங்கித் தொண்டை அடைத்துப் போனது. “சீதாவை விட்டு விட்டு. எட்பிடியப்பா போவது.? பாவம் இண்டைக்கோ நாளைக்கோ முதல்முதல் போடுற கண்டுக்குட்டி.”
வெள்ளைப் பசு சீதா. கண்ணுக்குக் கண்ணாகப் போற்றி வளர்த்த அன்பான நாட்களின் நினைப்பில் சொல்லும் போதே விம்மல் வெடித்தது. “கயித்திலை கட்டாம விட்டுவிடுவம், கோழிக்குஞ்சுகளையும் திறந்து விட்டுட்டு. முயல் கூட்டுக்க முருக்க மிலையைப் போட்டு விடுவம்.”
எப்படி? சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய வீட்டை முற்றத்துப் பவள *بر மல்லிகையை புதிதாய் ஒட்டி முதற் காய் காய்த்திருக்கின்ற விலாட் மரங்கன்றை. எல்லாவற்றையும் நிமிஷ நேரத்தில் இழப்பது எப்படி? ஆனால் ஈவிரக்க மற்ற எறிகணைத் தாக்குதல்களின் மத்தியில் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக் கொண்டால் போதும். என்ற நிலை அன்றே வந்துவிட்டது.
மரணக்களை அப்பிய முகத்தோடு அவலம் என்கின்ற உணர்வைத் தவிர அனைத்தையும் மறந்தவர்களாய் நடந்தார்கள். வயல்கள் சோடை இழந்திருந்தன. ஆங்காங்கே கால்நடைகளின் சடலங்கள் நாதியற்றுக் கிடந்தன. மல்ரிடெரல்கள் கணிசமாக மலன் தின்றிருந்தன. மன்ை தொட்டுக் கண்ணில் ஒற்றி விதைட்புச் செய்கின்ற பூமி தொடர் ஷெல் வீச்சில் சிதலமாகிக் கிடந்தது.
யுத்தத்தின் கொடூரங்கள் தீண்டிய தேசத்தைப் பார்க்கும் போது கண்கள் பார்வை பெற்றதற்குக் கவலைப்படத் தோன்றியது. பாடிததிரிகின்ற சிறு குருவிகள் கும்மாளம் போடுகின்ற குளக்கரைச் சிறுவர்கள் எல்லாவற்றையும் தொலைத்து விட்ட கவலை சுயதுன்பத்தோடு சேர்ந்து கனத்தது. வரும் போது கூட ஹரி கேட்டான் “அம்மா என்ரை முயல குட்டியளை ஏனம்மா விட்டுட்டுப் போறம்” அதைக் கொண்டு வர ஏலாதப்பன்." அதெல்லாம் ஷெல் விழுந்து செத்துப் போகாதாம்மா..? இல்லை. மகனுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டிச் சொன்னாள். ஏன்? அவனும் விடுவதாக இல்லை “கடவுள் காப்பத்துவார்.”
4 4.

வேறெதைக் காரணமாய்ச் சொல்ல முடியும் அவனுக்கு மகன் சடுதியாய் கேட்டான். அப்ப. என்ரை வசி அங்கிளையும் கடவுள் காப்பாத்துவாரா?”ம்” மெல்லிய முனகலாய் இவள் குரல் ஒலித்தது. மனம் தன்னை அறியாத ஒரு குற்றவுணர்வில் குறுகுறுத்தது. ஏனெனில் ஹரியின் வசியங்கிள் உண்மையில் வஜிர பெரேரா வாக இருந்த காரணத்தால். மூன்று வருடங்களின் முன்னதான ஒரு கார்த்திகை மாதத்து நிசப்தமான இரவொன்றில் சற்றே வித்தியாசமான முறையில் அறிமுகமானவன் இந்து 'வஜிகரபெரேரா தேசத்தின் சுடராய் செத்துப் போன தம்பிக்கு விளக்கேற்றியதை அறிந்த பிறகும் கூட மன்னிக்கத் தெரிந்த மனிதாபிமானம் உடையவனாக இருந்தான். அந்த நாளில் அவன் இவர்களது வீடு தேடி வந்தது அதிசயமில்லை. தமிழர்களிடையே காக்கை வன்னியன்களுக்கு எப்போதுமே தட்டுப்பாடு இருந்ததில்லை.
“தம்பியின்ரை பெயரென்ன? இயல்பான தமிழ் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி. ஒரு வேளை இவனும் ஒரு தமிழன் தானோ? அல்லது இப்படி நிதானம் இவ்வாறான வேளையில் எப்படி சாத்தியம்? அம்மா தான் அவசரமாய்ச் சொன்னாள். “வசந்தகுமாரன் - வசி என்று சொல்வுறது” நான் வஜிரபெரேரா. வஜி பெயர் ஒற்றுமைப்பட்டதிலோ என்னமோ குரலில் சினேக மனப்பான்மை தெரிந்தது. இது கூட ஒருவகைத் தந்திரம்தானே. நித்தியாவின் மனதில் சந்தேகம் தான். சிங்களவர்களால் தமிழனின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுவது பற்றி எதுவித கருத்தும் அவளது தலை முறையில் வார்த்தெடுக்கப்படவில்லை. இந்தப் பாடுபட்டு மனப்பான்மைக்குள்ளேயே ஒரு சந்ததியை வளர்த்தெடுப்பது தேசத்தின் தேவையாக இருக்கிறதா? இந்தக் கேள்வியின் பதிலையும் அவளுக்கே கண்டு பிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து வந்த நாட்களின் ரோந்துகளின் போதும் அவனது பழக்கம் தொடர்ந்தது. இவர்களது குடும்பத்தினரின் அரசுக்கெதிரான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகவும் இருக்கக் கூடும். என்று ஊரில் கதைத்தார்கள். கண்டிச் சிங்களவன் என்றும் டிலானி என்ற செல்லமகள் இருப்பதாகவும் தாய் தமிழச்சி என்றும் தன்னைப் பற்றித்தகவல் சொன்னனான். அம்மாவுக்கு வசி ஆகவும் ஹரிக்கு வசி அங்கிள் ஆகவும் ஆகிப்போனான்.
ஆனால் தம்பியின் புகைப் படம் பார்க்கும் போதெல்லாம் இவள் மனம் குற்றவுணர்ச்சியோடு குறுகுறுக்கும். அவனது ஒளிவிழிகள் துரோகி என ஏளனம் செய்வதாய்த் தோன்றும். ஒரு சிங்களவனோடு நன்மதிப்பு இருப்பது பற்றி அவன் இவர்களைத் துவேசிக்கக் கூடும். முன்பெல்லாம் எப்போதாவது தம்பி வீட்டுக்கு வரும் வேளைகளில் இவள் கேட்டாள்.
வசி எதுவரைக்கும்? எது வரைக்குமடா இந்தச் சண்டை. நிதானமாய உறுதியாய் அவன் பதில் சொல்லுவான். “உணர்வுள்ள கடைசித் தமிழன் இருக்கும் வரைக்குமே.” “இப்படியே அவங்களும் நீங்களும் செத்துச் செத்து. இவ்வளவு காலமும் சண்டையில் என்னடா எங்களுக்குக் கிடைச்சுது? இனி எங்களுக்கும் பலன் கிடைக்காம இல்லை அக்கா, அலங்கள் எங்களையும் ஆக்கள் கண்டு கனக் கெடுக்க வைச்சிருக்குது. இது நல்ல திருப்பம் ஒரு
45

Page 25
நல்ல தீர்வுக்குக் கொண்டு போகும் என நான் நம்புறன்.”
அந்த நம்பிக்கையோடு தான் அவள் மரணித்தாள். இந்த இனத்தின் மனமாற்றத்திற்குச் சாட்சியாக 'வஜிர இருந்தாள். அனால் அவன் முழுச் சிங்கள இனத்தினதும் குறியீடல்ல என்பது உண்மை தான். ஒரு நாள் எதிர்பாராத படி 'வஜிர அம்மாவிடம் கேட்டான். அம்மா உங்கட மகன்களும் நாங்களும் அழிஞ்சிட்டேயிருக்கிறது நல்லமா? அம்மா துணிச்சலாகவே பதில் சொன்னாள். 'நல்ல ஒரு தீர்வு ஒரு புரிந்துணர்வு அடிப்படையில வந்தா நல்லம் இல்லையா? அது சரி உங்கடை ஆக்களும் உணர வேணுமே..?
”உணருற காலம் வந்தாச்சு எங்கடை காலம் போகட்டும். ஹரியும் டிலாவும் கூட சண்டை பிடிக்கக் கூடாது. இல்லையா அம்மா." இயல்பான தமிழில் இனவாதம் அற்று அவன் கதைப்பதில் நித்தியாவுக்கு எப்போதுமே வியட்புத்தான்.
ஒரு நாள் மரத்திலிருந்து தவறி விழுந்த ஒரு அணிற்குஞ்சோடு வந்தான். புத்த தர்மம் பற்றிச் சொன்னான். இடையிடையே யுத்த தர்மம் பற்றியும் கதைத்தான். ஆக வெறும் கருவிகளாய் குடும்பப் பிழைப்புக் கருதிப் படையில் சேர்கின்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் சாட்சி இவனோ? என்று கூட இவள் சிந்தித்திருக்கிறாள். ஒரு புறம் இந்தக் கொடிய யுத்தத்தின் இளஞ்சந்ததி. மறுபுறம் புலம்பெயர்ந்த சிந்தனை இவளை நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது.
இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் வாழ்வு வாழ்வதற்காக அன்றி சாவதற்காச் சபிக்கப்பட்டிருக்கின்றதா? நோர்வே மச்சாள் அடிக்கடி போன் பண்ணிச் சொல்வது போல நாட்டை விட்டுப் போயிடலாமா? சொந்த மண்ணில் வாழ்வைத் தொலைத்து விட்டு. போவது நல்லதா? அவ்வாறாயின் தம்பி வசி போன்றவர்களின் சாவுக்குத் தேவை என்ன? அர்த்தந்தான் என்ன? கேள்விகள் மனதுள் பெருகின. அதிகரிக்கும் குழப்பத்தைப் போல அமைதியான நினைவோட்டத்தைக் கணவனின் குரல் திருப்பிற்று.
'தங்கச்சிக்கு என்ன பதில் சொல்லுறது.? “என்னப்பா சொல்லுறது ஊரை விட்டு வந்ததையே. சகிக்க கஷ்டமாயிருக்கு. நாட்டை விட்டு போறதெண் T. ஹரியின்ரை காலத்திலையாவது உயிர்ப் பயமில்லாம. நிலையாய் ஒரு வீட்டிலை வாழுறது இஞ்சை இனி சாத்தியபடுமோ? என்னமோ. தனக்குள் சொல்வது போலக் கீர்த்தனனின் குரல் மென்மையாய் ஒலித்தது.
நியாயமான கேள்வி. பிள்ளை கசங்கின பூவாய்ச் சேர்ந்து கிடந்தான். யுத்தம் தொடங்க ஒரு வாரத்தின் முன் ஒரு சிறுவர் நாடகத்தில் ஹரி குட்டி பாரதியாராக மேடையேற்றினான். மானமுள்ள வீரத் தமிழனின் குறியீடு, மிடுக்காக ராஜ தோரணையில் மகன் மேடையில் தோன்றிய பொழுதில் கரகோசம் வான் தொட்டது.
”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். அதை ஆங்கொரு காட்டினில் பொற்திடை வைத்தேன்.
வெந்து தணிந்தது காடு தழல் வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
46

ஹரியின் குழந்தைக் குரல் வாளின் கூரிய ஒரமாய் ஒவ்வொரு மனதையும வெட்டிற்று. 'இல்லை. இல்லை. இல்லை. என்று பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது. மனதினுள் வசி பெருநெருப்பாகவும் ஹரி சிறுதழலாகவும் தோன்றினர்கள். அக்கினிக் குஞ்சு ஏனோ மெய் சிலிர்த்தது. இந்த உணர்லெல்லாம் உதறிவிட்டு போக முடியுமா?
குட்டி பாரதி. சொன்னபடி மெல்லத் தலை வருடினாள் மகன் திரும்பிப்படுத்தான். ”சந்தோஷமாயிருக்கிறது. சொந்த நாடு போல வருமோ எண்டு தான் யோசினையாய் இருக்கும்” , மாமா கூடக் கடைசியாயும் தாயின் கடைசி வேண்டுதல் இவள் மனக் கண்ணில் எழுந்தது. -
"நாட்டை விட்டிட்டுப் போயிடாத மோனை, வசி சொன்ன மாதிரி சிங்கள வரிட்ட மனமாற்றம் வரும். நல்ல தீவு வரும். ஆன. அதை அனுபவிக்க நாட்டிலை தமிழன் இல்லாமைப் போயிடக் கூடாது”
அம்மா எந்த வசியைச் சொன்னாளோ தெரியாது. ஆனால் தன் சந்ததி
நாட்டில் இருப்பதை விரும்பினாள். அவ்வளவு தான். பிறநாடு போனவர்களைக் குற்றஞ் சொல்ல முடியாது. ஆனால் புலம் பெயருகையில் தத்தம் சுய நிறைவுகளையும் திருப்தியையும் பற்றி சிந்தித்துத் தான் ஆக வேண்டும். இன்றெல்லாம் சொந்த நாடு, பிறநாடெனக் கிளைத்த இரு சிந்தனைச் சந்தியில் ஒவ்வொரு தமிழனும் நின்று யோசிப்பதாக ஒரு வாழ்வு சகலருக்கும் பொதுமைப்பட்டிருப்பது உண்மை. முடிவுகளை எடுப்பது ஒவ்வொருவரதும் தனி உரிமை. மிகக் குழப்பமாக இருந்தது. பொழுது விடிந்து கொண்டிருந்தது.
வட்டத்தின் 6ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் சிறுவர் இலக்கிய செல்வர் விருதினை பேராசிரியை இ.மகேஸ்வரனிடம் இருந்து பெறும் திரு.ச.அருளானந்தம்.
47

Page 26
f சிறுகதை
மு.நந்தகுமார் வெளிச்சம்
சூரியன் உச்சவானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். சோளகக்காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது. இலுப்பம்பூக்களின் நறுமணம் சோளகக்காற்றில் மிதந்து வந்தது. இலுப்பை மரத்தின் கீழ் சாரதா இருந்தாலும் அவள் இலுப்பம் பூக்களின் நறுமணத்தை இரசிக்கும் மனநிலையில் இல்லை. அவளுடைய மனம் அன்று காலையில் நடந்த சம்பவங்களை எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தது.
அன்று காலை எழுந்ததிலிருந்து அவள் எவ்வளவு சுறுசுறுப்பர்க இயங்கிக்கொண்டிருந்தாள்.
பிட்டு அவித்து பின் அதற்குச்சம்பல் அரைத்து முடித்தவளுக்கு நேற்றிரவு படுக்கைக்கு போக முன்னர் அவளுடைய கணவன் தங்கராசா சொல்லியது ஞாபகத்துக்கு வந்தது. “சாரதா! நாளைக்கு முதலாளி சாமான் வாங்க டவுனுக்குப் போறார். அதாலை நானும் கடைக்கு வேளைக்கே போகவேனும் என்னை விடியப்புறமே எழுப்பிவிட்டிடு” உடனடியாக உள்ளே போய் தங்கராசாவைத் தட்டி எழுப்பிவிட்டாள். அவனும் கண்களைக் கசக்கியவடி பாயில் எழுந்திருந்தான். பாயில் இருந்த தங்கராசா எழுந்து நிற்பதற்கு உதவிசெய்த சாரதா எதிரே சுவரில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த அவனுடைய ஊன்றுகோலைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.
ஊன்றுகோலைப் பெற்றுக்கொண்ட தங்கராசா தன்னுடைய ஒற்றைக்காலையும் ஊன்றுகோலையும் ஊன்றியபடி காலைக்கடன்களுக்காக வெளியே போனாள்.
அவனுக்குத் தேவையான நீரை கிணற்றடியிலும் மலசல கூடத்திலும் ஏற்கனவே அவள் வாளிகளில் நிரப்பி வைத்திருந்தாள்.
பிட்டு அவித்த அடுப்பில் மீண்டும் தண்ணீர்ைச் சுடவைத்து கோப்பி தயாரித்தாள்.
கோப்பியை காலைக்கடன்களை முடித்துவிட்டுத் திரும்பிய தங்கராசாவுக்குக் கொடுத்தாள்.
பின்னர் வெளியேயிருந்து வேலி இடுக்குக்கூடாக குளத்தைப் பார்த்து அதில்தெறியும் சூரியோதயக் காட்சியை இரசித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மாமனாருக்கும், வெளியே முற்றம் கூட்டிக்கொண்டு இருக்கும் மாமிக்கும் அவள் கோப்பி கொடுத்தாள்.
கோப்பியை வாயில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்த மாமனாரைப் பார்த்த சாரதாவுக்குத் தன்னு ைய! காதுகளை நம்பமுடியவில்லை. தன்னு ைய மாமனாள் இத்தனை கேவலமாக தன்னை ஏன் ஏசுகிறார் என்று
48

அவளுக்குப் புரியவில்லை. மிகவும் தரக்குறைவான தூஷண வார்த்தைகளை அவள் கோட்டாள். அவள் காதுகளைப் பொத்திய வண்ணம் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட நேரே தங்கராசுவிடம் போனாள்.
கண்ணி பெருகிய முகத்துடன் தன்முன்னே வந்து நிற்கும் தன்மனைவியைப் பார்த்த தங்கராசா திகைப்படைந்தான். கடைக்குப் புறப்பட ஆயத்தமான அவன் அவளிடம் ‘என்ன விஷயம்” என்று கேட்பதற்கு முன்பாகவே அவள் முந்திக் கொண்டாள்.
“மாமா என்னைக் கண்டபடி தூஷணத்தால ஏசுறார். என்னால தாங்கமுடியேல்லை”
“ஆர் அப்பாவோ? நீ என்ன சொல்றாய்?" “நான் என்ன விளையாட்டுக்கே சொல்றன்" என்று கூறிய சாரதா விம்மி விம்மி அழுதாள்.
தங்கராசு செய்வதறியாது திகைத்துப்போய் நின்றான். பின்னர் அவன் கூறினான். “சாரதா! அழாதை. அப்பாவை நான் கேட்கிறன்' அவன் இவ்வாறு கூறியதும் சாரதா ஒருவாறு சமாதானமடைந்தாள்.
“எனக்கு நேரம் வந்திட்டுது. பின்னேரம் வந்து அப்பாவிட்டை நான் கதைக்கிறன்’ என்று கூறியபடி ஊன்றுகோலின் உதவியுடன் அவன் கடைக்குப் புறப்பட்டான். அவனுடைய முகத்திலும் துயரத்தின் ரேகைகள் படர்ந்தன.
ஊன்றுகோல்களின் உதவியுடன் மெதுவாக நடந்து போய்க்கொண்டிருக்கும் தன்னுடைய கணவனையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இப்போது தன்னுடைய துயரத்தை மறந்து அவனுக்காக அனுதாபப்பட்டாள். கடைக்குப் போகும் நேரத்தில அவரைத்துயர் அடையச் செய்துவிட்டேனோ. இருந்தாலும் இதனைச் சொல்லத்தானே வேண்டும். தெருவில்தான் கரைச்சலென்றால் வீட்டிலும் அப்படியா? இவ்வாறு அவள் எண்ணிக்கொண்டாள்.
அவளுக்கு நேற்றுமாலை நிகழ்ந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. நேற்றுமாலை அவள் அண்மையிலுள்ள கடையொன்றுக்கு பொருள்கள் வாங்குவதற்காகச் சென்றிருந்தாள். கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு திரும்பிவரும்போது மூன்று இளைஞர்கள் அவளுக்குப் பின்னால் வந்தனர். அவள் அச்சத்துடன் அடிக்கடி பின்னால் திரும்பிப்பார்த்தவாறு வேகவேகமாக நடக்கலானாள். அப்போது அவளுடைய காதுக்குள் மிகவும் கீழ்த்தரமான தூஷணத்தால் அவர்கள் ஏசுவது தெளிவாகக் கேட்டது. அவளுக்கு அதன் பின்னர் பின்னால் திரும்பி அவர்களைப் பார்க்கட் பuமாக இருந்தது. பின்புறம் திரும்பிப் பார்க்காமலேயே வெறிபிடித்தவள் போல வீட்டை நோக்கி நடக்கலானாள். அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
கண்கள் இருண்டன. நடப்பதற்குக் கால்கள்மறுத்தன மயக்கம் வருவதுபோலிருக்கவே தெருவோரத்திலிருந்த மின்சாரக்கம்பத்தில் சாய்ந்து கொண்டாள். அப்படியே அதில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தியபடி மெதுவாகத் திரும்பிப்பார்த்தாள். அங்கே அந்த மூன்று இளைஞர்களையும்
车9 -

Page 27
காணவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்தியவளுக்கு பயம் மறைந்து விட்டது. மெதுவாக நடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்தாள்.
இப்போதும் அந்தச்சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் போது
அவளுடைய உள்ளம் பதறியது. அந்த மூன்றுபேரும் எவ்வளவு கேவலமாக ஏசினார்கள். அதைப்போல்தானே இன்று மாமாவும் ஏசினார். சே. இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள். தெருவில் யாரோ அயோக்கியர்கள் அப்படி நட்ந்தார்களென்றால் வீட்டிலும் அப்படி நடக்கிறார்களே. பெண்ணென்பது அவ்வளவு கீழ்த்தரமான இழிபிறப்பா..? இப்படி அவள் எண்ணினாள். இப்போது அவளுக்குத் தனக்கு மேலையே கழிவிரக்கம் ஏற்பட்டது.
இன்றுமாலை இவர் வந்து என்ன சொல்லிவிடப்போகிறார் தன்னுடைய தகப்பனாரை விட்டுக்கொடுத்துவிடுவாரா..! ஏதாவது பசப்பு வார்த்தைகளைச் சொல்லி என்னைச் சமாதானப்படுத்துவார். இந்த ஆண்களே இப்படித்தான்.
ஆண்களின் பசப்புவார்த்தைகளை உண்மையென்று நம்பி நாமும் ஏமாந்து விடுகிறோம். அவளுக்கு ஆண்களின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இதில் அவளுடைய கணவனும் விதிவிலக்கல்ல.
அவள் பல்வேறு எண்ணங்களால் அலைக் கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். இவர்களுக்காக நான் எவ்வளவு தூரமிருந்து எவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் இங்கு வந்தேன். அந்த பெயர் தெரியாத நாட்டில் அப்போதே இறந்திருந்தால் என்னுடைய சடலம் கூட இவர்களுக்குக் கிடைத்திருக்காது. பதினைந்து மாடிக் கட்டடத்திலிருந்து மிகவும் வாகனட்போக்குவரத்து நிறைந்த அந்த வீதியில் விழுந்திருந்தால் வாகனங்களால் மிதிபட்டு என்னுடைய உடல் அடையாளங்காண முடியாத அளவுக்கு சிதைந்திருக்கும் அவள் அந்தக்கணங்களை எண்ணிப்பார்த்தாள்.
கடந்தக ഖഥ1ിഖിt !, அந்தக் கணங்கள் மிகவும் கொடுமையானவை. வாழ்வின் எல்லாத்திசைகளையும் பாலைவனங்கள் வளைத்துக் கொண்டுவிட்டது போல் உணர்ந்தாள். வாழ்வை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதற்கு வகைதெரியாது தனக்குள்ளெயே குறுகிட்போயிருந்தாள். அதன் விளைவாகத்
தற்கொலை செய்யும் முடிவுக்கு அவள் வந்தாள். வாழ்தல் என்பதன் எல்லா அர்த்தங்களையும் அவள் இழந்து சாதலில் அர்த்தத்தைக் கண்டிருந்தாள்.
இலங்கையின் வடமாகாணத்திலுள்ள கிராமமொன்றில் பிறந்த பின் இடம்பெயர்ந்து வவுனியாவில் வாழ்ந்து பின்னர் வேலைக்கு என்றுபோன அட்போது அந்த பெயர் தெரியாத வெளிநாட்டில் அவள் சாகத்துணிந்துவிட்டாள். அந்த அறையில் தற்கொலை செய்வதற்குக் கூட வழிகளைத் தேடுவதென்பது சிரமமானதாக இருந்தது. அந்த உல்லாச ஹோட் லின் பதினைந்தாவது பாடி அறையிலிருந்த அவள் கீழே தனது பார்வையைச் செலுத்தினாள். தரைக்கும் அந்தப் தினைந்தாவது மாடிக்குமிடையே காங்கோ
50

ஒரு மாடியில் பெரிய களியாட்டம் நடப்பது போல் தோன்றியது. ஏதோ புரியாத மொழியிலமைந்த துள்ளிசைப்பாடல் காற்றில் மிதந்து வந்தது. பல்வேறு வண்ணங்களாலான இராட்சத மின்குமிழ்களும் பாடல் வந்த திசையை நோக்கி அவள் பார்த்தபோது அவளுடைய கண்களுக்குத் தெரிந்தன. அவள் அப்பகுதியை நன்கு கவனித்துப் பார்த்தாள். இராட்சத மின்குமிழ்களின் பல வண்ண ஒளியில் பெண்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்கள் ஏதாவதொரு மதுவைக் குடித்திருப்பார்கள் என்று சாரதா நினைத்தாள். அந்த அரை நிருவான அழகிகளின் ஆட்டத்திலும் பாட்டிலும் பெரிய ரசிகள் கூட்டமொன்று கிறங்கிப் போயிருந்தது. அந்த ரசிகள் கூட்டம் அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் உல்லாசப்பயணிகளாக இருக்கக்கூடும் என்று அவள் எண்ணினாள்.
இரவைப்பகலாக்கும் இராட்சதமின்குமிழ்கள், அரை நிருவான அழகிகள், அவ்வழகிகளின் உடல்களை வண்டுகள் போல் தாபம் நிறைந்த கண்களால் மொய்த்துக் கொண்டிருக்கும் இரசிகர்கள். இவையெல்லாம் அவளுக்குப் பெரும் அருவருப்பைக் கொடுத்தன. அந்த அறையின் எதிர்ப்பக்க ஜன்னலூடாகப் போய் கீழே பார்த்தாள். ஹோட்டலின் அந்தப்பக்கத்தின் முன்பாக பிரதான வீதியொன்று இருந்தது. அந்த இரவில் கூட அவ்வீதிவழியே வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
இறுதியாக அவள். தான் தங்கியிருந்த அந்தப் பதினைந்தாவது
அப்படிக்குதிக்கும் போதும் தெருவில் வீழ்ந்தால் சிலவேளைகளில் எலும்புகள் மட்டும்இருந்து கைகால் ஊனமாக உயிபோகாமல் ஊசலாடிக்கொண்டிருந்தால். ஊசலாடும் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு ஏதாவது வாகனமாவது வந்து மோதி துன்பம் நிறைந்த இந்த வாழ்க்கையிலிருந்து
குதிக்கும் போது மிகவும் முன்னெச்சரிக்கை தேவை. தான் விழுகின்ற இடம் வீதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவள் ஜன்னலுக்கு வெளியே வீதியை நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் சுவரிலிருந்து குதிக்கத் தீர்மானித்தாள். அவள் மெதுவாக நடந்து சுற்றுமுற்றும் பார்வையை ஒடவிட்டாள். யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தாள். குறிப்பாக அந்த முகவரின் தலைக்கறுப்பு எங்காவது தெரிகிறதா என்று பார்த்தாள். பின்னர் மெதுவாக ஒசைப்படாமல் அந்த ஜன்னலின் மீது ஏற முயன்றாள். காலை உயர்த்தி வைக்க முடியாமல் இருந்தது. காலெல்லாம் மிகவும் வலித்தது. கைகளாலும் ஜன்னல் நிலையைப் பற்றிப் பிடிக்கமுடியாமல் இருந்தது. கொஞ்சம் ஆறியிருந்த உடல் எரிவு இப்போது மீண்டும் ஆரம்பித்தது.
அவளின் உடலெங்கும் இரத்தக்காtங்களும் எரிகாயங்களும் நிறைந்து காணப்பட்டன. அந்த முகவரும் அவனுடைய ஆட்களும், அவள் விபச்சாரத்திலும் களியாட்ட நடனங்களிலும் ஏனைய அழகிகளைப் போல கலந்து கொள்ள மறுத்துவிட்டபடியால் அவளை மிகவும் சித்திர வதைக்குள்ளாகினர்.
முகவர் தன்னுடைய என்ைனத்லத், முதலில் வெளியிட்டபோது
S.

Page 28
சாரதா வெகுண்டெழுந்தாள். விபசாரம், ഉ_Lഞെ9 ഖുകങ്ങണ வெளிப்படுத்தும் கீழ்த்தரமான நடனம் போன்றவற்றுக்குத்தான் ஒரு போதும் உடன்பட முடியாது என்று தெரிவித்து விட்டாள். இதனால் ஆத்திரமடைந்த அந்த முகவரும் அவனுடைய ஆட்களும் சங்கிலி ஒன்றால் மூர்க்கமாக அடித்தனர். அடிபட்ட இடங்களில் இரத்தம் வெளிப்பட்டு கன்றிப்போனது. இதன்பின்னர் சிகரெட்டினால் அவளுடைய உடலெங்கும் தீக்காயங்களை ஏற்படுத்தினர். பின்னர் அறையில் அவளை விட்டுப் பூட்டிவிட்டு வெளியே போனார்கள். அப்படிப் போகும் போதும் அவர்களுக்கு அவள் மேல் ஆத்திரம் அடங்கவில்லை. காது கூசும்படியான தூஷணத்தால் அவளைக் கண்டபடி ஏசினர். இதன் பின்னரும் இடையிடையே வந்து தன்னுடைய நோக்கங்கத்துக்கு ஒத்துப்போகும்படி கேட்பார்கள். மீண்டும் அவள் மறுக்கவே தூஷணத்தால் ஏசிவிட்டுச் செல்வார்கள். அவர்கள் பேசிய தூஷண வார்த்தைகள் அவள் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தன. காயங்களிலிருந்து உண்டான வலி நமைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மறுபடியும் அவள் மிகுந்த சிரமப்பட்டு ஜன்னலின் மீது ஏற முயன்றாள். இம்முறை அந்த முயற்சியில் அவள் ஜன்னலுக்குக்கீழே வீதியைப் பார்ந்தபடி நீட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சுவரில் இறங்கினாள். அந்த மெல்லிய சுவரிலிருந்து கீழே வீதியைப் பார்த்தாள். ஒரு பெரிய பாரவண்டியொன்று மிகுந்த வேகமாக ஒடி மறைந்தது. அவளுக்கு கால்கள் கைகளெல்லாம் நடுங்கத்தொடங்கின. மெதுவாகக் கைகளை உயர்த்தி ஜன்னல் நிலைகளைப் பிடித்துக் கொண்டாள். கண்கள் இருண்டன. அவள் இன்னும் இறுக்கமாக ஜன்னல் நிலைகளை இறுக்கப் பற்றிக் கொண்டாள். இருண்ட கண்களினூடாக சாரதாவுக்குச் சில காட்சிகள் தெரிந்தன.
அது என்ன பாலைவனமா. ! முட்கள், பாறைகள் கூட வழியெங்கும் கிடக்கின்றனவே. அந்த கரடுமுரடான பாதை வழியே ஒரு குழந்தையைத் தோளில் சுமந்தவண்ணம் தன்னுடைய ஊனமடைந்த காலுக்குட்பதிலாக ஊன்று கோலின் உதவியுடனும் மற்றைய காலாலும் மெதுவாக ஓர் உருவம் நடந்து சென்று கொண்டிருந்தது. வழியெல்லாம் நடந்த களைப்பால் அதிலிருந்து வியர்வை பெருகி ஓடியது. அவள் அந்த உருவத்தை உற்றுப்பார்த்தாள். அது வேறுயாருமல்ல அவளுடைய கணவனே. அந்த உருவத்தின் தோளில் கிடைப்பது அவளுடைய குழந்தையே.
திடீரென பாறையொன்று தடுக்கிவிடவே அவளுடைய கணவன்
சமநிலை குலைந்து பாறையில் நெற்றி மோத நிலத்தில் வீழ்ந்தான். நெற்றியில் பட்ட காயத்திலிருந்து குருதி பெருகியோடியது. அவனுடைய கையிலிருந்த குழந்தையும் நிலத்தில் வீழ்ந்து வீல் என அலறி அழுதது. அவன் அந்த நிலையிலும் குழந்தையை எடுத்து அனைத்தபடி மெதுவாகத்தவழ்ந்து போய் ஊன்றுகோலை எடுத்துக் கொள்ள முயன்றான். ஆனால் அவைகள் பாறையின் அப்பாலிருந்த பள்ளத்துள் வீழ்ந்து கிடந்தன. அதனால் அவனால் அவற்றை எடுக்க முடியவில்லை. அவனால் தரையிலிருந்து எழுந்து நிற்கவும் முடியவில்லை. ஊன்றுகோல்களையும் எடுக்க முடியவில்லை.
இவ்வளவு நேரமும் பொறுமையாக இருந்த சாரதா இப்போது
52

அவர்களை நோக்கி ஓடினாள். ஊன்றுகோலை எடுத்து அவனிடம் கொடுத்தாள். ஊன்று கோலை நீட்டியபடி தன் முன்னே நிற்கும் அவளை அவன் நன்கு பார்த்தான் அந்தப் பார்வை அவளைப் பார்த்துக் கேள்விக்கனை தொடுப்பது போலிருந்தது.
இட்போது மட்டும் இந்த ஊன்றுகோலை எடுத்துத் தந்து விட்டால் போதுமா? இன்னும் இந்த வாழ்க்கைப்பாதையில் எத்தனையோ பள்ளங்கள். மேடுகள், பாறைகள். முட்கள் எல்லாம் வரப்போகின்றன. அவற்றிலெல்லாம் நானும் என் குழந்தையும் இடறிவிழுந்து எழுத்தான் போகிறோம். அப்போதெல்லாம் நீ வந்து ஊன்றுகோல்களை எடுத்துத் தருவாயா? நீ மட்டும் என்னருகில். இருந்தால் இந்த ஊன்றுகோல்தான் எனக்கெதற்கு. அவளுடைய நெஞ்சம் உருகி கண்களிலிருந்து கண்ணிர் தாரைதாரையாக வழிந்தது.
நான் செய்ய மாட்டேன்; இனிமேல் தற்கொலை செய்ய மாட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள் என்று அவள் கதறி அழுதாள். அவன் அப்படியே அவளை அனைத்துக் கொண்டான். அனைத்துக்கொண்டவன் பின்னர் தன்னுடைய அணைப்பை விலக்கி அவளுடைய உடல் முழுவதும் பரவிக்கிடந்த இரத்தம் கன்றிப்போன காயங்களையும் சிகரெட் எரிகாயங்களையும் தன்னுடைய விரல்களால் தடவிக்கொடுத்தான். அவையாவும் உதிர்ந்து விழும் சின்னச்சின்னப் பொய்களைப்போல அவளுடைய உடலிருந்து ஓடிமறைந்தன. உடலிலிருந்து எல்லா வலிகளும் பறந்துபோய் விட்டன. உடலில் புதுப்பிரவாகம் பெருக்கெடுத்து
QUjl. ܝ
ஏதோ கனவுபோல இந்தக்காட்சிகள் அவளுக்கு ஏற்பட்டன. அவள் கண்களை விழித்துச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் இப்போது அறையினுள்ளே கிடந்தாள். ஜன்னலின் கீழேயிருந்து சுவரிலிருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தான் எப்படி மறுபடியும் அறையினுள்ளே வந்தேன் என்று யோசித்துப்பாத்தாள், மனதால் உணரமுடியாத ஆன்மாவின் கட்டளைக்கு உடல் செயற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். அப்படியானால் அந்தக்காட்சிகள் எல்லாம் சூட்சுமமான தன்னுடைய ஆன்மாவின் வெளிப்பாடே என்று எண்ணினாள். அவளுக்குத் தன்னுடைய கணவன் குழந்தையையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொளுந்து விட்டு எரியவே அத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் மறுபடியும் அவர்களிடம் வந்து சேர்ந்தாள். இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு இங்கு வந்தது வீண்தானோ என்றெண்ணி அவள் வேதனைப்பட்டாள்.
தெருவில் போனால் இளைஞர்களின் துஷண ஏச்சுகள் என்று வீட்டில் அடைந்து கிடந்தால் வீட்டிலும் மாமனார் தூஷணத்தால் ஏசுகிறாரே என்று வேதனைப்பட்டாள்.
அன்று மாலை அவளுடைய கணவன் வீட்டுக்குத் திரும்பியதும் அவள் அவனுடன் பெரும் சொற்போரில் ஈடுபட்டாள்.
'உங்களுக்கு என்மேல் கொஞ்சமும் அன்பில்லை. எல்லோரும் என்னை துஷண வார்த்தைகளால் ஏசியும் நீங்கள் அவையளை என்ன ஏது என்று எதுவுமே கேட்க மட்டன் என்று இருக்கிறிஸ் ஏன்?
53

Page 29
அவள் இவ்வாறு ஆத்திரத்துடனும் வேதனையுடனும் தங்கராசாவைக் கேட்டாள். ஆனால் அவன் கோபம் சிறிதும் இன்றி மிகவும் கனிவோடு அவளிடம் கூறினான்
”சாரதா! நீ தானேயம்மா சொன்னாய். நேற்று பின்னேரம் அந்த மூன்று இளைஞர்களும் பேசிய தூஷண ஏச்சுக்கள் உன்னுடைய காதுக்குள்ள கேட்டுக்கொண்டிருந்த போது நீ பின்னால் திருப்பிப்பார்க்கேக்க அவங்களைக் காணேல்ல என்று”
”அவங்களைக் காணேல்ல. ஆனா தூஷண ஏச்சு மட்டும் காதுக்குள்ள கேக்குதே'
இப்ப கா துக்குள்ள கேட்கிற ஏச்சுக் களை அந்த ஏஜென்சிக்காரன்(முகவர்) ஏசின ஏச்சுக்களோடு ஒப்பிட்டுப்பார்”
இப்படி அவன் கூறியதும் அவள் ஆழமாக யோசிக்கத் தொடங்கினாள். அவளுடைய கடந்தகாலங்கள் கண்முன் நிழலாடின.
ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன்பு அபுதாபிக்கு வீட்டுப்பணிப்பெண்ணாகக் கடமைபுரிவதற்கு ஒரு முகவர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டாள். வீட்டுப் பணிப்பெண்ணாக அபுதாபிக்குப் போகும் முடிவு அவளால் அவளுடைய கணவனை மீறி எடுக்கப்பட்டது. அவன் அப்போது எறிகணைத்தாக்குதலால் காயமடைந்து ஒரு காலை இழந்து வயிற்றிலும் பெருங்காயத்துக்கு உள்ளாகி படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவன் ஓர் உற்சாகமான விவசாயி. அவன் காயப்பட்டுப் படுக்கையில் கிடந்தபின் அவனுடைய குடும்பம் வறுமையின் கோரப்பற்பளுக்குள் சிக்கித்தவித்தது. அவனுடைய காயங்கள் ஓரளவு ஆறிக்கொண்டு வரும் சமயத்தில் அவனுடைய தாயாரை அவனுக்கு ஒத்தாசையாக இருக்கும்படி கூறிவிட்டு இவள் அபுதாபி செல்ல எண்ணினாள்.
வயிற்றுப்புண் விரைவில் ஆறினாலும் ஒரு கால் முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்ட நிலையில் அவனால் எதுவும் செய்ய முடியாது என்று அவள் நினைத்தாள். ஆனால் அவனோ தன்னுடைய வயிற்றுப்புண் ஆறியதும் தன்னால் மீண்டும் ஏதாவது தொழில் செய்து வாழ முடியும். என்றும் அதுவரை பொறுத்துக் கொள்ளும்படியும் கூறினான். ஆனாலும் அவள் இறுதியில் கணவனையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்து முகவர் ஒருவருடன் அபுதாபிக்குப் புறப்பட்டாள். அவளுடன் வேறுபல பெண்களும் கூட வீட்டுப் பணிப்பெண்களாக அபுதாபிக்குப் புறப்பட்டனர்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் இடையில் எங்கோ தரையிறங்கியது. அது எந்த நாடென்றும் அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. அங்குதான் முகவரும் அவனுடைய ஆட்களும் அவளை விபசாரத்துக்கும் ஹோட்டல் நடனங்களுக்கும் உபயோகித்து பெரும்பணம் சம்பாதிக்கத் திட்டம் தீட்டினர். அவளுடைய அழகினைக் கண்ட அவர்களுக்கு ஆரம்பம் முதற்கொண்டே இப்படியொரு எண்ணம் ஏற்பட்டது. அவர்களுடைய எண்ணங்களுக்கு அவள் அடிபணிய மறுக்கவே அவளை ஹோட்டலொன்றின் பதினைந்தாவது ιριτιή அறையொன்றில் வைத்து அவனுடைய ஆட்கள்
54

சித்திரவதை செய்தனர்.
அவர்களுடைய சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்தும் அவள் அவர்களுடைய நோக்கங்களுக்கு இணங்காதபடியால் அவளைக்கற்பழிக்க முயன்று சித்திரவதைகள் பல புரிந்தபின்னர் மீண்டும் இலங்கைக்கு யார் மூலமாகவோ அனுப்பி வைத்தனர்.
அவர்கள் ஏசிய ஏச்சுக்களே அவளுடைய காதில் ஒலித்துக்கொண்டிருந்தன. தான் அநியாயமாக தெருவில் போவோரையும் மாமனாரையும் குறை சொல்கிறேன். என்பதை அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
அவள் அவனைக்கேட்டாள். "என்னுடைய இந்த காதுக்குள்ள கேக்கிற தூஷண ஏச்சுக்களை நிறுத்தவே முடியாதா?”
'நாளைக்கு ஒரு நல்ல மனோ வைத்தியரிடம் போவோம்” என்று கூறினான்.
கவலைப்படாதை இந்த காதுக்குள்ள ஏச்சு கேக்கிற வியாதியை அவர் நிச்சயம் மாற்றுவார்” அவனுடைய உள்ளத்தில் ஏதோ காட்சிகள் விரிந்தன. அமாவாசை இரவு. மழைமேகங்கள் சூழ்ந்து விண்மீன்கள் யாவற்றையும் மறைந்திருந்தது. கும்மிருட்டில் தட்டுத்தடுமாறிப் போய்க் கொண்டிருந்த அவனுக்கு முன்னால் ஆண்டவனின் அருளொளிபோல மின்மினிப்பூச்சியொன்று பறந்து வந்தது. அந்த மின்மினியின் வெளிச்சமே அவனுக்கு விளக்கானது. அந்த மின்மினி வெளிச்சம் இப்போது பெரிதாகி எங்கும் ஒளிவெள்ளம் பரவியது போலிருந்தது. அவனும் அவளைக் குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் ஆழ்ந்து அமைதி அடைந்தான்.
வாசகள் கடிதம் கிழக்கு வளாக வாசக சாலையில் மாருதம் படிக்க கிடைத்தது தரமான ஆக்கபூர் வமான படைப்புக்கள் அத்தனையும் அற்புதமானவை. மாருதம் போன்ற தரமான சஞ்சிகைகள் என்போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. மருதம் இதழ்களை எனக்கு அனுப்பிவைக்கவும்
ஓட்டமாவடி 16.09.03 எம்.பீ.நலீம்

Page 30
தமிழை வளர்ப்போம். தமிழராய்த் தலைநிமிர்வோம்.
தமிழ்மணி அகளங்கண்
தமிழ் என்றால் இனிமை என்று பொருள் என்பர் அறிஞர். ”தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழ் என்றால் அன்பு என்றும், அழகு என்றும் பொருள் கொள்ளலாம் என்பர் இன்னுஞ் சிலர்.
தமிழ் என்பது தனிமைப் பொருள் குறித்த 'தமி என்னும் வினையடி கொண்ட சொல் என்றும் தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். தமியன், தமியள் என்ற சொற்கள் தனித்தவன், தனித்தவள் என்று பொருள் கொள்வதை உற்று நோக்கும் போது இது தெற்றெனத் தெளிவாகும். எனவே தமிழ் என்பது தனித்ததொரு செம்மொழி என்பர் அறிஞர்.
தமி’ என்பது தனக்கு ஒப்பில்லாத என்று பொருள் கொள்ளும் வகையிலும் அமைந்து விடுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது தமிழ் என்பது தனக்கு ஒப்பில்லாத மொழி என்ற பொருளில் அமைந்த சொல்லாகும். என்பர் இன்னும் சில தமிழறிஞர்.
தமிழ் என்ற சொல்லில் வரும் 'ழ' கரம் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தாகும். மலையாளம், அரபு ஆகிய மொழிகளிலும் 'ழ' கரம் உண்டு என்பர். இருப்பினும் 'ழ' கரம் அரபு மொழியில், தமிழ் மொழியில் ‘ழ’ கரம் ஒலிப்பது போல ஒலிப்பதில்லை. மலையாளம் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த குழந்தை என்பதால், மலையாளத்தில் ‘ழ’ கரம் ஓரளவுக்குத் தமிழில் ஒலிக்கப்படுவது போலவே ஒலிக்கப்படுகிறது என்பர்.
ஆக, தமிழிலுள்ள சிறப்பெழுத்தான 'ழ' கரத்தைக் கொண்ட தமிழ் என்ற சொல்லே தனித்துவம் மிக்கதாக விளங்குவதைக் காணலாம். தமிழ் என்ற சொல்லில் வல்லினமும், மெல்லினமும் இடையினமும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகனிறோம். வேறு மொழிகளில் இத்தகைய சிறப்பைக்
காணமுடியாது. -
தமிழரின் பாரம்பரிய வாத்தியக் கருவிகளில் தோற்கருவி துளைக்கருவி, நரம்புக்கருவிகளின் பெயர்கள் ழ கரத்தில் இருப்பதைப் பார்த்து வியந்து நிற்கிறோம்.
முழவு, குழல், யாழ் என்பன முறையே தோல், துளை, நரம்புக் கருவிகள் என்பது யாவரும் அறிந்ததே. இந்த மூன்று பெயர்களிலும் தமிழின் சிறப்பெழுத்தான ‘ழ’ கரம் இருப்பதால் இக்கருவிகள் தமிழருக்கே சொந்தமான பாரம்பரிய இசைக்கருவிகள் என்று உறுதிபடக் கூறி உவகையடைகின்றோம்.
தமிழிலே ஒரெழுத்தே சொல்லாகவும். வாக்கியமாகவும் வருகின்ற
அழகையும், வளத்தையும் கண்டு வியக்காதவர்கள் இல்லை. ஆ (பசு), ஈ, கா (சோலை), கை, கு(பூமி), தீ நா. நீ யா, பூ, பை, மா (குதிரை) முதலான பெயர்ச் சொற்கள் ஓரெழுத்துச் சொற்களே, கா (காப்பாற்று) தா. போ. வா. வை, ஈ (கொடு) முதலான வினைச் சொற்கள் ஓரெழுத்தைக் கொண்ட சொற்களாகவும், ஒரெழுத்தில் அமைந்த வாக்கியங்களாகவும் விளங்குவதைப்
56

பார்த்து வியக்காத மொழியியல் அறிஞர்கள் இல்லை எனலாம்.
இவற்றை "ஒரெழுத்தொரு மொழி" என இலக்கணகாரர் கூறினும் வினைச் சொற்களை "ஒரெழுத்தொரு வாக்கியம்” எனவும் அழைக்கலாம்.
நாய் என்ற பெயரை நா தொங்குகின்ற மிருகத்துக்கு வைத்தனர். பன்றி என்ற பெயரை, பல் அதிகம் கொண்ட மிருகத்திற்கு வைத்தனர். அதிகமான பற்களைக் கொண்ட மிருகம் பன்றி. 44 பற்கள் பன்றிக்கு உண்டு என்கின்றார்கள். புல்லைத் தின்னாத மிருக்திற்கு புலி (புல் இலி) என்றும், மார்பினால் ஊர்ந்து செல்லும் பாம்புக்கு உரகம் (மார்பு) என்றும், அளக்க முடியாத நீரைக் கொண்ட நீர்நிலையை அளக்கர் (கடல்) என்றும் அழைத்தனர்.
தம்பின்னால் பிறந்தவனை தம்பின் என்று அழைத்தனர். அது பின்பு தம்பி ஆயிற்று. மூத்தவணை அண்ணா என்றழைத்தனர். அண்ணா என்பது மூத்த, மேலே உயர்ந்த முதலான பொருள்களைத்தரும் சொல் அண்ணம் என்பது மேலேயுள்ளது என்பதைக் குறிக்கும். அண்ணாந்து என்பது மேலே என்பதைக் குறிக்கும். எனவே அண்ணன் என்றால் மேலேயுள்ளவர் என்று பொருள்.
இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்த சிறப்பை விட இன்னொரு நுட்பமான சிறப்பை இங்கு பார்ப்போம்.
நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும், பயன் பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் அழைத்த நுட்பத்தை அறியும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. -
குளம், ஏரி, ஊருணி, பொய்கை, சுனை, மடு, கேணி, மோட்டை, அள்ளல், கிணறு, துரவு, தடாகம், கயம், சமுத்திரம், அளக்கர், அகழி, அசம்பு எனப் பல பெயர்களை நீர் நிலைகளுக்கு இட்டனர்.
ஏர்த் தொலிலுக்காக (பயிர்ச் செய்கை விவசாயம்) அமைக்கப்பட்டதை ஏரி என்றும், குளிப்பதற்காக அமைக்கப்பட்டதை குளம் என்றும், ஊரவர் உண்ணுவதற்காக (சுத்தமான குடிநீர்த் தேவைக்காக) அமைக்கப்பட்டதை ஊருணி என்றும் ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பிடங்களை அகழி என்றும் (அகழ்ந்து உருவாக்கப்பட்டது) சிறிதளவு நீருள்ள பள்ளத்தை சுனை என்றும், சேறு பொருந்திய நீர்ப்பள்ளத்தை அள்ளல் என்றும் மலர்கள் நிறைந்த நீர் நிலையை பொய்கை, என்றும், அதை விடச் சற்று விசாலமானதை (தடம் - விசாலம்) தடாகம் என்றும், தோட்டஞ் செய்வதற்காகத் தோண்டட்பட்டதைத் துரவு என்றும். ஆலயத்தில் அமைக்கப்படுவதை கேணி என்றும், ஆழமாக வெட்டிக் கட்டிப் பாதுகாப்பாகப் பயன் படுத்தப்படுவதை கிணறு என்றும் , அளக்க முடியாது நீர் நிலையை (கடல்) அளக்கர் என்றும் நுட்பமான வேறுபாடு விளங்கப் பெயர் வைத்து அழைத்தனர்.
பூவின் பல்வேறு நிலைகளைத் தமிழர் பெயரிட்டு அழைத்த நுட்பத்தை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பின்வருமாறு அழகாக எடுத்து விளக்கியுள்ளார்.
அரும்பும் பருவம் அரும்பு, மொக்கு விடும் பருவம் மொட்டு. முகிழ்க்கும் பருவம் முகை, மலரும் பருவம் மலர், மலர்ந்த பருவம் அலர்,
57

Page 31
வாடும் பருவம் வி. வதங்கும் பருவம் செம்மல்.
இத்தகைய பலநுட்பங்களைக் கொண்டது நம் தமிழ் மொழி. உரைத்தல், அறைதல், கூறுதல், செப்புதல். இயம்புதல், பிதற்றுதல், விளக்குதல், விள்ளுதல், கழறுதல், உளறுதல், புகலுதல், சொல்லுதல், ஏசுதல். பேசுதல், கதைத்தல், அளவளாவுதல், பகருதல், மிழற்றுதல், பன்னுதல், அகவுதல், அலம்புதல், மொழிதல் முதலான பல சொற்கள் நுட்பமான வேறுபாடு கொண்ட சொற்களாக விளங்கியிருக்கின்றன.
இன்று இவற்றில் பல சொற்கள் ஒரே கருத்தை உணர்த்துவனவாக இருக்கின்றன. இது மொழியின் தேய்வையே காட்டுகிறது. உரைத்தல் என்பது விளக்கமாகச் சொல்லுதல், அறைதல் என்பது யாவரும் அறியும்டடி பகிரங்கப்படுத்தல், கூறுதல் என்பது பல கூறுகளாகப் பகுத்துச் சொல்லுதல், செப்புதல் என்பது தெளிவாகச் சொல்லுதல், பன்னுதல் என்பது மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லுதல், அளவளாவுதல் என்பது கலந்து மகிழ்ந்து பேசுதல், விளம்புதல் என்பது விளக்கமாகச் சொல்லுதல், விள்ளுதல் என்பது மெதுமெதுவாக விடயத்தைச் சொல்லுதல், கதைத்தல் என்பது கதைகளைச் சொல்லுதல், கழறுதல் என்பது உறுதியாகச் சொல்லுதல், என நுட்பமான பொருள் வேறுபாடுகளை மேற்குறித்த சொற்கள் உணர்த்தின. இவை மட்டுமன்றி எது ஒன்றையும் துல்லியமாகக் குறிப்பிட தமிழ் மொழியில் சொல் உண்டு. இன்று தாய் என்ற சொல்லை தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடங்களிலும் பயன்படுத்தும்போது, என்னுடைய தாய், உன்னுடைய தாய், அவனுடைய தாய் என்று தான் சொல்கிறோம்.
ஆனால் முற்காலத்தில் சுருக்கமாக யாய் என்று தன்னுடைய தாயையும் (தன்மை), ஞாய் என்று உன்னுடைய தாயையும் (முன்னிலை), தாய் என்று அவனுடைய தாயையும் (படர்க்கை) குறித்தனர்.
இதேபோல எங்கை, நுங்கை, தங்கை, எம்பி, நும்பி, தம்பி முதலான சொற்கள் பொருளுணர்த்திய நுட்பம் இன்று தமிழ் மொழியில் பாவனையில் இல்லை.
கடல் சார்ந்த நகரத்தைப் பட்டினம் என்றும், கடலில்லா நகரத்தைப் பட்டணம் என்றும் நுட்பமாக அழைத்ததை இன்று நினைத்து தமிழின் வளத்திலே மயங்கிப் பூரித்துப் போகிறோம்.
மிருகங்கள், பறவைகளின் ஒலிகளை வேறுபடுத்தி மயில் அகவும், கிளி பேசும், குயில் கூவும், சிங்கம் கர்ச்சிக்கும், புலி உறுமும், பூனை சீறும், வண்டுகள் ரீங்காரம் செய்யும், என்றெல்லாம் மரபுச்சொற்களை வகுத்த தமிழ்ட் புலவர்கள் வாத்தியக் கருவிகளிலிருந்து வரும் ஒலிகளையும் வேறுபடுத்திப் பெயரிட்டு அழைத்தனர்.
குழல் அகவ யாழ் முரல முழவு அதிர முரசு இயம்ப விழவு அற இயல் ஆவணத்து
எனச் சங்க காலத் துப்
58

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை, குழலின் ஒலியை அகவல் என்றும் யாழின் ஒலியை முரல்தல் என்றும், முழவின் ஒலியை அதிர்தல் என்றும், முரசின் ஒலியை இயம்பல் என்றும் நுட்பமாகக் குறிப்பிடுகின்றது.
கம்பன் தனது இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் கைகேயி சூழ்வினைப் படலத்தில்
வங்கியம் பல தேன் விளம்பின வாணி முந்தின பாணியின் பங்கி அம்பரம் எங்கும் விம்மின பம்பை பம்பின; பல்வகைப் பொங்கு இயம் பலவும் கறங்கின நூபுரங்கள் புலம்ப வெண் சங்கு இயம்பின கொம்பு அலம்பின
சாம கீதம் நிரந்தவே.
(அயோ.கை.சூழ்.1554) விளம்பின, முந்தின. விம்மின, பம்பின, கறங்கின. புலம்ப, இயம்பின, அலம்பின, நிரந்த, எனப் பல்வேறு ஒலி வேறுபாடுகளைக் குறிப்பிடுவதையும் படித்து மகிழாதார் இல்லை.
இது மட்டுமன்றி கம்பன் பாலகாண்டத்தில் நாட்டுப் படலத்தில் சில ஒசைகளை நுட்பமாகப் பின்வருமாறு அழகாகக் காட்டுகின்றான்.
ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலைபாய் அமலை ஆலைச் சாறுபாய் ஒதை வேலைச் சங்கின்வாய் பொங்கும் ஓசை ஏறுபாய் தமரம் நீரில் எருமைபாய் துழனி இன்ன மாறுமாறு ஆகித் தம்மின் மயங்குமாம் மருத வேலி.
(பாலகாட்.1) அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி என ஓசை வேறுபாடுகளைக் காட்டி, பெயரிட்டு அழைத்த அழகு தமிழ் மொழியின் சொல்வளத்தைக் காட்டுகிறது.
பெரிய புராணத்தைப் பாடிய சேக்கிழார் பெருமானும் இத்தகைய நுட்பத்தைத் தனது பாடல்களிலே காட்டியுள்ளார்.
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஒலமும் சோலை வாய்வண்டு இரைத்துழுை சும்மையும் ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும் வேலை ஒசையின் மிக்கு விரவுமால்
(பெரிதிருநாட்டுச் சிறப்பு - 68) ஒலம், சும்மை, ஒதை, ஓசை என ஒலி வேறுபாடுகளைப் பாடி, ஆரவாரச் சத்தத்தை ஒலம் என்றும், வண்டினம் இரைச்சலோடு எழுகின்ற ஒலியை சும்மை என்றும், வேதமுழக்கத்தை ஒதை என்றும் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார் சேக்கிழார் பெருமான்.
59

Page 32
இது மட்டுமன்றி மக்களை வாழ்த்துவதை வாழ்த்துதல் என்றும், தெய்வத்தை வாழ்த்துவதை வழுத்துதல் என்றும் கூட. நுட்பமான வேறுபாட்டைத் தமிழ்ப் புலவர்கள் கையாண்டு தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக் காட்டினர். 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்ற பழமொழியைச் சொல்லுகிறோமே, இதன் நுட்பத்தை அறிந்து கொண்டா சொல்கிறோம். தேன். பால், முதலியவற்றிலும், பழவகைகளிலும் உப்பு இல்லை. எனறு குறை கூறி அவற்றைக் குப்பையிலே கொட்டுகிறோமா, விரும்பிக் குடிக்கிறோமே. உண்கிறோமே.
உண்மையில் உப்பு என்று ஒரு சுவையில்லையே. உவர்ப்பு என்பதைத்தான் உப்பு என்று இன்று அழைக்கிறோம். உப்பு என்பதை ஒரு குறித்த சுவையாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் உப்பு என்பது சுவை என்ற பொருளை மட்டுமே குறிக்கிறது.
புளிப்பு, இனிப்பு, உறைப்பு (கார்ப்பு - காரம்) கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு (கரிப்பு). என்று செர்ல்லப்படுகின்ற அறுவகைச் சுவைகளையும் குறிக்கும் சொற்கள் யாவற்றிலும் உப்பு என்ற ஒலி(ப்பு) இருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக புளிப்பு என்றால் புளி ஆகிய சுவை என்றே பொருள் கொள்ள வேண்டும். எனவே ”உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி "சுவையில்லாத பண்டம் குப்பையிலே' என்ற பொருளையே தருகிறது. பண்டம் என்பது பொதுவாக உண்ணும் பொருளைக் குறிக்கிறது. தின் பண்டம் என்ற சொல்லை நோக்க இது விளங்கும்.
இருப்பினும் திருவள்ளுவரின் காலத்திலேயே உவர்ப்பு என்ற சொல் உப்பாக மருவி விட்டதனால் உப்பு என்பது ஒரு சுவையைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்,
(குறள் -1302) இக்குறளில் ஊடல் என்பது உணவுக்கு உப்பைப் போன்றது என்ற பொருளில் வருவது கவனிக்கத்தக்கது.
வறுமை, செல்வம் ஆகிய இரண்டுமே மனிதனுக்கு நிரந்தரமானவை அல்ல என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும் தத்துவ நோக்கில் வறுமையைத் தரித்திரம் (தரித்து-இரம் - தங்கி இருக்க மாட்டோம்) என்றும், செல்வத்தை செல்வம் (செல்வோம்) என்றும் பயன்படுத்திய சொல் நுட்பத்தை யார்தான் வியக்க மாட்டார் யார்தான் இரசிக்க மாட்டார்.
இத்தகைய நுட்பத்தை உலகிலுள்ள வேறெந்த மொழியிலும் காணவே முடியாது. இட்படிப் பல நுட்பங்களை எடுத்துக் காட்டலாம். விரிவஞ்சி விட்டு விட்டோம். இத்தகைய சிறப்பு தமிழ்மொழிக்கே உரிய பெருஞ்சிறப்பாகும். அதனாற்றான். தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்றும், தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் மார்க்ஸ் முல்லர் குறிப்பிட்டார்.
60

ஆற்றல் மிக்கதாகவும், சொல்லவந்த பல கருத்துக்களைச் சிற சொற்களால் தெளிவுறப் புலப்படுத்த வல்லதாகவும், தமிழ் மொழிபோல் வேறு எம்மொழியும் இல்லை என்றார் பெர்கில் என்ற பாதிரியார்.
உலக அறிவை உணர்த்தும் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக இலக்கிய உலகில் வேறு எதுவும் இல்லை என்றார் டாக்டர் அல்பர்ட் சுவைட்சர்.
தமிழ் மொழியில் அமைந்த அகத்துறை இலக்கியங்கள் போல் உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் இல்லை என்று பெஸ்கிப் பாதிரியார் (வீரமாமுனிவர்) கால்டுவெல் போப் முதலியோர் வியந்து சொல்லி வைத்தார்கள். தமிழ் மொழியில் உள்ள தொல்காப்பியம் என்னும் மிகப் பழமை வாய்ந்த இலக்கண நூலில் சொல்லப்பட்ட பொருள் இலக்கணம் போல வேறு எந்த மொழியிலும் இல்லை என்று அறிஞர்கள் வியக்கின்றனர்.
இத்தகைய சிறந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள். பெரும் புலவர்களையும், சிறந்த இலக்கியங்களையும் கொண்ட உயர்தனிச் செம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள். மனித இனம் முதலில் தோன்றிய குமரிக் கண்டத்தில் (லெமூரியாக் கண்டம்) தோன்றி வளர்ந்த மூத்த பழங்குடியினர் நாங்கள்.
கி.மு.10° சாலமன் என்ற மன்னனுக்குக் கப்பல்கள் மூலம் மயில்த் தோகை, யானைத் தந்தம், சந்தனம், வாசனைத் திரவியம் முதலியவற்றை நட்பு முறையில் அனுப்பி வைத்தவர்கள் நாங்கள்.
h− கி.மு.5 இற்கு முன்பே அரிசி, மயில், சந்தனம் முதலானவற்றை பபிலோனியா, பிலிப்பைன்ஸ், சீனா, கிரேக்கம், இந்தோனேசியா முதலான நாடுகளுக்கு அனுப்பி வாணிபஞ் செய்தவர்கள் நாங்கள், என்று பிளினி (கி.பி.2479) மெகஸ்தனிஸ் (கி.மு.3) தொலமி (கி.பி.150) முதலானவர்களின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்த்துவுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து, உலகிலேயே ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், இலக்கியத்தின் வளர்ச்சிக்குமென முதன் முதல் ஓர் அமைப்பு மூலம் செயற்பட்டவர்கள் தமிழர்களாகிய நாங்கள். 13 லூயி என்ற பிரஞ்சுப் பேரரசன் தன் மொழியைப் பாதுகாக்க 1525 ஆண்டு பிரஞ்சுக் கலைக் கழகத்தை நிறுவினான். (Royal Acadamy of the French) 6T66 Lusi 6); J 6lbstiq e365i.
ஆனால் தமிழ் மொழியை வளர்க்க கி.பி.470ல் வச்சிர நந்தி என்ற சமணத் துறவியால் மதுரையில் அமைக்கப்பட்ட திராவிட சங்கமும் கி.மு காலத்தில் அமைக்கப்பட்ட முதல், இடை, கடை என்றழைக்கப்படும் முச்சங்கங்களும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதை நினைத்துப் பார்க்கும் போது தமிழ் மொழியை வளர்ப்பதில் தமிழ்ப் புலவர்களும், அரசர்களும் காட்டிய அக்கறை எம்மை வியப்படைய வைக்கிறது.
ஒரு நாட்டின் பிரஜைக்கு அந்த நாட்டின் எட்பகுதிலும் வாழ்வதற்கு உரிமையுண்டு, மனித உரிமை என்ற வரையறையில் இதுவும் ஒன்று. எமது சங்க காலப் புலவரான கணியன் பூங்குன்றனாரோ இதைவிட ஒருபடி மேலே
61

Page 33
சென்று, இப் பூமியில் பிறந்த மனிதன் ஒருவனுக்கு இப்பூமியின் எப்பாகத்திலும் வாழும் உரிமை உண்டு என உலகளாவிய மனித உரிமையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். அத்தோடு மனிதர்கள் யாவரும் உறவினர்கள் என ஏற்றத் தாழ்வற்ற மானிட நேயத்தைப் போற்றி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியிருக்கிறார்.
இன்னோரன் ன பழம் பெருமைகள் பலவற்றைக் கொண்டவர்களாகிய எமது தமிழ் மொழியிலே, உலகுக்கே பண்பாட்டையும், மனித நேயத்தையும், அறிவையும் புகட்டக் கூடிய சிறந்த கருத்துக்களைக் கொண்ட இலக்கியக் கருவூலங்கள் மிகுந்து கிடக்கின்றன. இவைகளை யெல்லாம் அழிய விடலாமா. -
தமிழ் மொழி அழிந்து போனால் எமது காவியங்கள் அழிந்து போகும். பிரபந்தங்கள் அழிந்து பேகும். புராண, இதிகாசங்கள், பக்திப்பனுவல்கள், அறம் கூறும் பாடல்கள், அகம் கூறும் பாடல்கள் யாவுமே அழிந்து போகும். நமது பண்பாடு, விழுமியங்கள் யாவும் மண்ணோடு மண்ணாகிவிடும்.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூத்த மொழிகளான சமஸ்கிருதம், இலத்தீன் ஆகிய மொழிகள் பேச்சு வழக்கிழந்தும், திரிபு பட்டும் இருக்க, அவற்றிற்கு முன் தோன்றிய மூத்த மொழியாகிய நம் தமிழ் மொழி இன்றும் இலக்கிய, இலக்கணச் செழுமை மிக்க மொழியாக, அன்றாடம் பாவனையில் இருக்கிறதே இது எப்படிச் சாத்தியமாயிற்று.
எமது முன்னோர், மொழியைப் பாதுகாத்தனர். மொழியை வளர்த்தனர். மொழி அழிந்தால் மொழிவழி இனமே அழிந்து போகும் என்பதை உணர்ந்து மொழியைக் காத்தனர்.
மொழி என்பது வெறும் தொடர்பு ஊடாகம் மட்டுமல்ல. அதுவே நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் வளர்க்கிறது. சிந்தனையையும் அதன் வெளிப்பாட்டையும் வளர்க்கிறது.
மனித குல்த்தின் மானுடத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி மொழிவழியாகப் பெறப்படும் உயர்ந்த பண்பாட்டிலேயே தங்கியுள்ளது என்பதை எவரும் மறக்க முடியாது. -
எனவே தமிழர்கள், தாங்கள் வாழுகின்ற இடங்களிலெல்லாம் தமிழை வளர்க்கும் பணியைச் செவ்வனே செய்ய வேண்டும் பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் அவ்வந்நாட்டு மொழிகளை அரச தேவைக்காகவும் தொடர்புச் சுகத்திற்காகவும், கல்விக்காகவும் கற்றாலும், தாய் மொழியாகிய தமிழ் மொழியைக் கட்டாயம் வீட்டு மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.
வீடுகளிலே குழந்தைகளுக்குத் தமிழறிவூட்டி, தமிழைப் பேசப் பழக்கி, எழுதப்பழக்கி வைத்தால் அவர்கள் தமிழ் இலக்கியங்களைக்கற்று எமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வார்கள். அதன் மூலம் தம் உலகியல் வாழ்க்கையையும், ஆன்மீக வாழ்க்கையையும் செம்மைப்படுத்திக் கொள்வார்கள்.
அறிஞர் மட்டத்திலே எவ்வளவுதான் ஆராய்ந்தாலும், மொழியானது அன்றாடப் பாவனையில் இல்லாது போனால் அது பிரேத பரிசோதனைக்குத்தான் ஒட்டாகும்.
62

மொழியின் நிலைப்பு என்பது அதனைப் பயன்படுத்துவோரிலேயே தங்கியிருக்கிறது. சமஸ்கிருத மொழி மிகச் சிறந்த இலக்கியங்களை, இதிகாசங்களை இலக்கணங்களை யெல்லாம் கொண்டிருந்த போதிலும், இன்று பேச்சு வழக்கிழந்து போய் மந்திரங்களோடு மட்டும் நிற்கிறது. இத்தகைய 'ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து” சிதைந்து போகும் நிலை தமிழ் மொழிக்கு வரலாமா. இதனை யாவரும் சிந்திக்க வேண்டும்.
“எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே” என்று தமிழ் மொழி வாழ்த்தைப் பாடினால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடாது. வாழ்ந்து விடாது. எமது அன்றாடப் பாவனையில் தமிழை வைத்திருந்தால் மட்டுமே தான் தமிழ் வாழும்.
பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை வைக்கும் வழக்கம் இங்கே இலங்கையில் வடக்குக் கிழக்கு மாகாணத்திலேயே குறைந்துவிட்டதே. தாய், தந்தையரை ஆங்கிலேய மோகத்தில் மம்மி, டடி, மம், டட், என அழைக்கின்ற மகாகேவலம் எங்கள் மாவீரர்கள் இரத்தஞ் சிந்திய செந்தமிழ்ப் பூமியிலும் இன்று அதிகமாகி வருகின்றதே. "மம்மி" என்ற சொல்லுக்கு பழம் பிணத்தைக் குறிக்கும் கருத்தும் உண்டு. என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
தமிழிலே கையெழுத்து வைக்கின்ற தமிழர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணினால் விரல்கள்தான் மிஞ்சும் நிலை இங்கேயே இருக்கிறதே.
இலட்சக் கணக் கானவர்களைப் பலி கொடுத்தும் , கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தும், இடம் விட்டு இடம் பெயர்ந்தும், நாடு விட்டு நாடு சென்று அகதியாகியும், சொந்த நாட்டிலே, சொந்தப் பிரதேசத்திலே, சொந்தக் கிராமத்திலேயே அகதி வாழ்க்கை வாழும் நிலையடைந்தும், இன்னும எதற்காக நாம் இவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை அறியாதவர்களாக இங்கேயே பலர் இருக்கின்றார்களே. -
எதையும் தாய் மொழியில் கற்றால் தான் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் குழந்தைகளிடம். பெருகுகிறது என்பது உலகம் முழுவதும் மழலைக்கல்வி அறிஞர்கள் வலியுறுத்தும் உண்மை.
இருப்பினும் எங்கள் பகுதிகளிலேயே பாலர்களை சர்வதேசப் பாடசாலைகளுக்கு (International Schools) ஆங்கிலத்தில் படிக்க அனுப்புகின்ற தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுகிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என இரண்டாயிரம ஆண்டுகட்கு முன் கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் கூறிய புறநானூற்றுப் பாடல் வரி, உலக சகோதரத்துவததை உறுதிப் படுத்தும் உண்மை வரியாகட்டும். பெயரளவிலே தமிழராக வாழாமல் வாழ்வளவிலே தமிழராக வாழ வேண்டும். தமிழைத் தமிழர்கள் மதித்துத் தம் அன்றாடப் பாவனையில் வைத்திருந்தால் உலகம் முழுவதும் தமிழ் ஒலிக்கும். இங்கே நாம் இழந்த உயிர்களின் பெறுமதிக்கு அது ஒன்றே கைம்மாறாகும். அதுவே அஞ்சலியுமாகும். எங்களுக்காக உயிர்நீத்தவர்களின் ஆன்ம சாந்திக்கும் அதுவே வழியுமாகும். எனவே தமிழை வளர்ப்போம். தமிழராய்த் தலை நிமிர்வோம்.
63

Page 34
ஒர் இலக்கியக்காரனின் தினக்குறிப்பிலிருந்து . .
-சங்கர (ன்) செல்வி ? -.
குறிப்பு 1 பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நூறாவது பிறந்ததின நிகழ்வு
பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி, சிதில்லைநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் அமரர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நூறாவது பிறந்ததின நினைவு வைபவம் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் யூலை மாதம் இடம்பெற்றது. 1930களில் இருந்து 60 கள் வரை பல்கலைக்கழகத்தில் தமிழை கற்பித்து பேராசிரியராக விளங்கிய அமரர் கணபதிப்பிள்ளையின் பல்வேறு பணிகள் பற்றி பேராசிரியர்கள் நா.பாலகிருஷ்ணன். சி.மெளனகுரு, கலாநிதி நா.சுப்பிரமணியம், கலாநிதி வண.பிதா ஜெகநேசன், தினக்குரல் ஆசிரியர் சிவநேசச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர் நாட்டாரியல், சாசனவியல், மொழியியல், நாடகம், என பல்வேறு தளங்களில் தமிழ் இலக்கிய பரப்பை விரித்து சென்ற முன்னோடியாக பேராசிரியர் கணபதிப்பிள்ளை அடையாளப்படுத்தப்பட்டார். அவர் தொடங்கி வைத்த வழியில் பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், சு.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எ.நு.மான், நா.சுப்பிரமணி ஐயர், சி.மெளனகுரு என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இன்று தமிழ் இலக்கிய வரலாற்றை இலக்கிய வழிகொண்டு மட்டுமல்லாமல் சாசனங்களையும் துணை கொண்டு விரிவான ஆராய்ச்சிகளை அறிஞர் மேற்கொள்கின்றனர். விவரணப் பாங்காக அமைந்த நாட்டாரியல் இன்று விமர்சனப் பாங்காக மானிடவியல், சமூகவியல் என்பவற்றையும் இணைந்து செல்கின்ற தன்மைகளையும் காணலாம். இரசனை முறைத்திறனாய்வில் இருந்து மூலபாட திறனாய்வு, சமூகவியல் மற்றும் மாக்ஷிச பார்வையில் அமைந்த திறனாய்வு என தமிழ் இலக்கிய திறனாய்வு தளம் ஆழ்ந்து அகன்று செல்கின்றது. மனோரதிய பாங்கில் அமைந்த நாடக முறைமையிலிருந்து இயற் பண்பு நெறி கூடிய நாடகங்களை மொழியியல் பார்வையோடு பேச்சு நடையில் நாடக உலகை பேராசிரியர் நடாத்திச் செல்ல அது யதார்த்த மோடியில் தாவி பின்னர் நாட்டார் மூலங்களையும் இணைத்து மோடியுற்ற நவீன நாடகங்களாக இன்று பரிமளிக்கின்றது. மொழியியல் ஆய்வு தனியான துறையாக விரிந்து செல்கின்றது. ஆக ஒரு பரந்த தளத்தை பேராசிரியர் ஏற்படுத்தினார் என்பது வரலாற்று 92.60ö760)LDuJTGJ5it), குறிப்பு 2 திருமறை கலாமன்ற பிரதேச அலுவலக திறப்பு விழா
வவுனியா பிரதேச திருமறை கல மன்ற அலுவலக திறப்பு விழா யூலை 20 அன்று புகையிரத நிலைய வீதியிலுள்ள மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனிய மாவட்ட அரச அதிபர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
6A.
 

திருமறை கலாமன்றத்தின் சேவை 60 களின் நடுப்பகுதியில் தொடங்கப்பெற்றது. பின்னர் தற்போதைய பணிப்பாளர் வண.பிதா மரிய சேவியரின் தலைமையின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயற்பாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. நாடகம், கூத்து, ஒவியம், இசை நடனம் என பல்வேறு கலைப் பயிற்சிகளும் சஞ்சிகை வெளியீடு இலக்கிய நூல்கள் அறிமுகம் என பல இலக்கிய நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடாத்தப்படுகின்றன. அந்த வகையில் வவுனியா, திருகோணமலை என இலங்கையின் பல பாகங்களிலும் தனது பணியை விஸ்தரித்து இன்று உலகலாவிய மட்டத்திலும் கலைப் பணியைச் செய்கின்றது.
கலைப்பணியூடு இறை பணி எனும் மகுட வாத்தியத்துடன் இயங்கும் திருமறைக்கலா மன்றம் இளைஞர்களை கலையில் ஆற்றுட்படுத்தலில் முன்னிக்கின்றது. சமகாலத்தில் போதைவஸ்து பழக்கம் போன்ற தீய வழிகளில் மாணவர்கள் நாட்டம் கொள்ளாது கலைகளோடு வாழ்வின் அர்த்தத்தை கண்டு கொள்ள வழிசமைப்பதில் திருமறை கலாமன்றம் வெற்றி கண்டுள்ளது. இன்று சமாதானம் என்ற கருத்தில் வடக்கு தெற்கு உறவுப்பால நிகழ்ச்சிகளையும் மன்றம் நடாத்தி வருவது பாராட்டுக்குரியது. இந் நிகழ்வில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர் M.M.மடுத்தீன், விடுதலைப் புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர் எழிலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். குறிப்பு 3 நிதர்சனத்தின் புத்திரர்கள் நூல் அறிமுகம்
வன்னிப் பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கு கரையோரம் பூநகரி பகுதியில் உள்ள ஒரு சிறு காட்டு கிராமம் வேரவில் என்பதாகும். இது பூநகரி சந்தியிலிருந்து மன்னார் வீதியில் 12 கட்டையில் பிரிந்து செல்லும் 5 மைல் காட்டுப்பாதையில் முடிவில் உள்ள கிராமம். இதனை 16ம் கட்டையில் இருந்து - பல்லவராயன் கட்டிலிருந்து செல்லும் பாலை சார்ந்த வெளியூடாகவும் அடையலாம். காட்டுக்குள் ஒரு கிராமம் என்று கூட சொல்லலாம். ஆயினும் இவ் ஊரிலிருந்து 3 km தொலைவில் வங்காளவிரிகுடாவைச் சந்திக்கலாம். இதனை சுற்றி கடற்கரை. கிராமங்களான வலைப்பாடு. கிராஞ்சி மற்றும் வயல் கிராமமான பொன்னாவெளி என்பன காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ஆரம்ப பாடசாலைகள் உள்ளன. உயர்தர பாடசாலை ஒன்று வேர வில்லில் அமைந்துள்ளது. அது வேரவில் இந்து மகா வித்தியாலயம். - 80களில் இப்பாடசாலையில் அரங்கேற்றப்பட்ட நிமிர்வு’ எனும் நாடகத்தினை கந்தையா ரீகணேசனின் நிதர்சனத்தின் புத்திரள்கள் என்ற நாடக நூல் கொண்டுள்ளது. அதில் நடித்தவர்கள் சிலர் இன்று அப்பிரதேசத்தில் ஆசிரியர்களாகவும், மற்றும் அரச கூட்டுறவு சங்க, தனியார்துறை ஊழியர்களாகவும் கடமையாற்றுகின்றார்கள். அவர்களின் விருப்பத்தின் பேரில் மேற்படி நூல் அறிமுகம் கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி பாடசாலை அதிபர் திரு ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக முன்னாள் அதிபரும் தற்போதைய பூநகரி கோட்டக்கல்வி அதிகாரியுமாகிய திரு.தி.கணபதிப்பிள்ளை
65

Page 35
கலந்து கொண்டார். நூலின் அறிமுக உரையை ஆரம்பக் கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் அவர்களும் பிரபல நாடக கலைஞருமாகிய திரு.பொன்தில்லைநாதன் வழங்க கருத்துரையை திரு.விஜயநாதன் (ஆரம்பகல்வி ஆசிரிய ஆலோசகள்) வழங்கினர்.
ஏற்புரையில் நூலாசிரியர் பேசும் பொழுது இன்னும் சமகால மக்கள் வாழ் நிலைகளை எவ்விதம் இந்த நூல் படம் பிடிக்கின்றது என்றும், குறிப்பிட்ட நாடகத்தில் நடித்த மாணவர்களின் ஆற்றல் உணர்வு, முன்னேற்றம் என்பவற்றையும் குறிப்பிட்டு பேசினார். வசதிகள் குறைந்த கிராம பாடசாலைகளை எவ்வாறு கிடைக்கும் வளங்களுடன் தாம் படிப்பித்த காலத்தில் முன்னேற்ற எடுத்த முயற்சிகளையும் நினைவூட்டியதோடு இன்று அந்த கிராம பாடசாலைகள் தம் ஊரவர்களையே ஆசிரியர்களாக கொண்டு வளர்ந்துள்ளமையையும் சுட்டிக்காட்டி இந்த நூல் அறிமுக நிகழ்வு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு அடையாளமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். குறிப்பு 4 இரு கவிதை நூல்களின் அறிமுகம் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் ‘உலைக்களம் - கவிதை நடையில் அமைந்த பக்தி எழுத்துக்கள் வவுனியாவில் அறிமுகம் ஆகஸ்டில் செய்து வைக்கப்பட்டது. தமிழர் உரிமைப் போராட்டத்தின் ஆவேசங்களை உண்மை நிலைமைகளை மக்களின் யதார்த்த நிலமைகளை எடுத்து இயம்பும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட எழுத்துக்கள் உலைக்களம் தொகுதியில் இடம்பெறுகிறது. வீச்சான பார்வை கொண்ட கிராமிய தமிழ் மணம் கமழும் விடுதலை வீரம் பேசும் படைப்பாக இது அமைகின்றது.
கிளிநொச்சியில் ஜூலையில் இடம்பெற்ற வெளிச்சம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.எஸ்.கருணாகரனின் ஒரு பயணியின் நாட்குறிப்பு எனும் கவிதை நூல் அறிமுகம் பல்வேறு விமர்சன கருத்துக்களும் இடம்கொடுத்தது. கவிதையின் உணர்ச்சி மற்றும் அறிவு பெறுமானங்கள் பற்றி உரையாற்றிய நிகழ்வின் தலைவர் திரு.நிலாந்தன் தமிழில் உணர்ச்சிவயப்பட்ட கவிதைகளே அதிகம் எனவும் திருக்குறள் போன்ற நூல்கள் அறிவு மயப்பட்டவை என்றும் கருணாகரனின் கவிதைகள் அறிவு மயப்பட்டிருக்கின்றன. அறிவு சார்ந்த இலக்கியப் படைப்புக்கள் தமிழ் சமூகத்திற்கு அவசியம் எனவும் குறிப்பிட்டார். பேச்சாளர்களின் குறிப்பில் கருணாகரனின் விடுதலை சார்ந்த கவிதைகள் தனித்துவமானவை மொழி இறுக்கம் கொண்டவை ஆனால் அதே வேளை உலகலாவிய விடுதலைப்போராட்ட கவிதைகளின் சாயலை அவரது கவிதைகள் பெறுவது தவிர்க்கமுடியாதவையா எனவும் கேள்வி எழுட்பட்டட்டது. ஆக கவிதை என்பது உணர்ச்சியின் மீது கட்டியெழுப்பப்பட்டு அறிவின் மொழிகொண்டு முழுமைப்படுத்தப்பட வேண்டியது. அதுவே முழுமையான கவிதையை மக்களுக்கு வழங்க முடியும், குறிப்பு 5 கலாநிதி வி.நித்தியானந்தம் அவர்களின் நூல் வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைகழக பொருளியற்துறை அதிதி பேராசிரியர் கலாநிதி விநித்தியானந்தம் அவர்கள் எழுதி இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக்கிழக்கு பரிமாணம்’ என்ற நூலின் வெளியீடு ஆகஸ்ட்
66

மாதத்தில் யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், விமர்சகர் ஏ.ஜே.கனகரட்ணா பொருளியல் நிபுணர் எஸ்.சண்முகரட்ணம் ஆகியோர் உரையாற்றினார்.
நூல் பொருளாதார வரலாற்றின் தேவையை சுட்டி நின்றது. யாழ்ப்பாணப் பொருளாதார அமைப்பை விரிவாக்கக்கூறி. காலனித்துவகாலந்து பொருளாதார போக்கின் எழுச்சியையும் வளர்ச்சியையும் எடுத்தியம்புகிறது. ஈழத்தமிழர் கல்வியின் பொருளியல் பற்றியும், பெளதிகவளங்களின் பாவனைபற்றியும் கூறிய இந்நூல் பரந்து பட்ட வடக்கு - கிழக்கு பொருளியல் நிலைமைகளை ஆழமாக எடுத்தாளவில்லை என்பது விமர்சகர்களின் நிலைப்பாடு அதாவது வடக்கு யாழ்ப்பாண மையம் - பரிமாணம் கொண்டதாக பெரும்பாலும் அமைந்துள்ளமை தவிர்க்கமுடியாதது என நூலாசிரியர் ஏற்றுக் கொண்டு எதிர்காலச் சந்ததியினர் அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். - குறிப்பு 6 ஈழத்து கூத்து விழா திருமறைக் கலாமன்றம் செப் 11, 12, 13, 14 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கூத்துக்கள் பற்றிய கருத்தரங்குகளையும் கூத்து மேடையேற்றங்களையும் நடாத்தியது. பேராசிரியர் நீ.மரியசேவியர் அடிகளாரின் நெறிப்படுத்தலில் திரு.சாம்பிரதீபன், ஜோஜோன்சன் ராஜ்குமார், மற்றும் ஜிபீ-டேர்மினஸ் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இவை இடம்பெற்றன. மன்னார் கூத்துக்கள் பற்றி திரு.எஸ்.ஏ.உதயன், கலாபூசணம் செபமாலைகுழந்தை ஆகியோரும் மலையக கூத்துக்களாக காமன் கூத்து, அர்ச் சுணன் தபசு என்பவை பற்றி திரு.பொன்.பிரபாகரனும், திரு.ஆஜெகன் தாசனும் உரையாற்றினர். முதல்நாள் இரவு நிகழ்ச்சியாக அர்ச்சுனன் தபசு, கல்சுமந்த காவலர்கள் (மன்னார் வடபாங்கு) ஆகியவை மேடையேறின.
இரண்டாம் நாள் மட்டக்களப்பு பிரதேச கூத்துக்கள் பற்றி திரு.சி.ஜெயசங்கள். திரு.து.கெளரீஸ்வரன், திரு.மா.செந்தூரன் ஆகியோரது உரைகளும் விளக்கங்களும் இடம்பெற்றன. மட்டக்களப்பு சீலாமுனை மற்றும் கன்னங்குடா கூத்து கலைஞர்களின் வடமோடிக்கூத்தும் இடம்பெற்றன.
மூன்றாம் நாள் யாழ்ப்பாண பிரதேச கூத்துக்கள் பற்றி திரு.ஜோ.ஜோன்சன் ராஜ்குமாரும், வட்டுக்கோட்டை கூத்து மரபு பற்றி
ஆகியோரும் உரையாற்றினர். மாலையில் கத்தோலிக்க கூத்து மரபு பற்றி முல்லைக்கவி, அமிர்தநாயகமும் மற்றும் ஜோன்சன் ராஜ்குமார் ஆகியோரும்
திருமறைக்கலா மன்றத்தின் தென்மோடிக் கூத்தான கம்பன் மகனும் வட்டுக்கோட்டை வடமோடிக்கூத்தான சடாசுரன் வதையும் மேடையேறின.
நான்காம் நாள் காலை அமர்வில் பேராசிரியர் சி.மெளனகுருவின் கூத்துக்களின் மாற்றங்கள் பற்றிய உரையும் தொடர்ந்து கூத்தைப் பேணுதலும் தேசிய அரங்கு அமைத்தல் என்பது பற்றியும் கலந்துரையாடலும் இடம்பெற்றன. கலந்துரையாடலில் திரு.சி.ஜெயசங்கள், திரு.பாலசுகுமார். திரு.பா.அகிலன்.
67

Page 36
திரு.செ.மெட்ராஸ் மெயில், திரு.ஜோன்சன் ராஜ்குமi, திரு.கந்தையா ரீகணேசன், திரு.கதிலகநாதன், அண்ணாவியார் முருகவேள் ஆகியோர் கலந்து கொண்டனர். வண. பிதா மரிய சேவியர் கருத்தரங்கை நெறிப்படுத்தினார்.
கூத்துக்களை கிராம மக்களிடமே ஆட விடவேண்டும் என்ற கருத்தும் கூத்தின் வீரியம் மிக்க ஆட்டங்களையும் பாடல் தருக்களையும் பயன்படுத்தி ஈழத்து தேசிய அரங்கை பரதத்திற்கு இணையாக உருவாக்க வேண்டும் என்கிற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. உண்மையில் கூத்துக்களை ஆடிவரும் கிராமத்து கலைஞர்கள் தொடர்ந்து ஆடுவதில் காலம் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதே வேளையில் கூத்துக்களின் செறிவான அம்சங்களை பயன்படுத்தி ஈழத்தமிழரின் கலை அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு தேசிய அரங்கை நிர்மாணிப்பது அவசியமாகும். அதுவே எமது அரசியல் உரிமையின் பாலமாகவும் இருக்கும். இதற்குத்தான் பேராசிரியர் விததியானந்தன் தமிழ் பாரம்பரியத்தினூடாக ஒரு கலை அடையாளத்தை கூத்துக்களை புனரமைப்பதன் மூலம் ஏற்படுத்தலாம் என சிந்தித்தார். இந்த தொடர்ச்சியில் வடகிழக்கு எங்கும் காணப்படுகின்ற கூத்துக்களில் ஆட்டம் விரவியுள்ள மட்டக்களப்பு கூத்துக்களை வெளியிலே கொண்டுவந்தார். இன்று பேராசிரியர் மெளனகுரு இராவணேசன் என்ற வடமோடிக் கூத்தில் அமைந்த நாடகத்தினை தயாரித்து வெற்றியும் கண்டார். எனவே வடமோடிக் கூத்து (தென்மோடி ஆட்டங்களையும் இணைத்து) மரபுதான் எமது தேசிய அரங்குக்குரிய முழுமையைக் கொண்டுள்ளது. இம் மரபை ஒரு கல்வி நெறியாக்குவதன் மூலம் எதிர்கால சந்ததியினர் ஈழத்து நடன மரபாக அவற்றை கொள்ள முடியும். இம் மரபூடாக எம் உணர்வுகளை வெளிப்படத்த முடியும். அது எம் கலை அடையாளமாகும்.
(குறிப்புக்கள் தொடரும்.) வட்டத்தின் ம்ே ஆண்டு நிறைவு நிகழ்வில் கல்வியியற் செல்வர் விருது பெற்ற திரு.செ.அழகரத்தினம் அவர்களுக்கு அரச அதிபர் பொன்னாடை போர்த்தும் காட்சி. அருகில் தமிழ் மணி அகளங்கன்
68
 

வட்டத்தின் பெளர்ணமி நிகழ்வுப் பதிவுகள்.
நிகழ்வு 72
18.03.2003 காலை 11.00 மணிக்கு கலாசாரமண்டபத்தில் விரிவுரையாளர் திருநLார்த்தின் தலைமையில் நடைபெற்றது. ‘உறுதிகுலையாத உள்ளத்தின்’ நினைவாக நூலின் அறிமுகவுரையை திரு.ப.முரளிதரனும் சிறப்புரையை திரு.சி.கா.செந்தில்வேலும் (புதிய பூமி ஆசிரியர் குழு) உதவிக்கல்விட்பணிட்டாளர் திரு.ஆபொன்னையாவும் நிகழ்த்தினர். கலை நிகழ்வாக செல்வி, மரியஜெயந்தி தயாளநாயகம் கிராமியப்பாடல்களைப் பாடினார். இரு நிகழ்வின் வரவேற்புரையை செல்வி.சி.சிவாஜினியும் நன்றியுரையை செல்வி அ.வாணிஜெயாவும் நிகழ்த்தினர். நிகழ்வு 73.
நிகழ்வு 16.04.2003 காலை 1 100 மணிக்கு செல்வி சிவாஜினி சிவபாதசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை திரு.அ.பேணாட் நிகழ்த்தினார். அமரர் வித்துவான் வ.செல்லையா அவர்கட்கான அஞ்சலியுரையினை தமிழ்மணி அகளங்கனும், கலைமாமணி பொன்.தெய்வேந்திரன் எழுதிய *சிலம்பின் செய்தி நூல் விமர்சன உரையை திரு.கதி சரவணபவனும் தமிழ்மணி அகளங்கன் எழுதிய கூவாத குயில்கள் வானொலி நாடகநூலுக்காக விமர்சன உரையை திரு.சின்னையா வையாபுரிநாதனும், நன்றியுரையை திரு.ப.முரளிதரனும் நிகழ்த்தினர்.
கலைநிகழ்ச்சிகளாக வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டியப்பள்ளி மாணவியர் வழங்கிய செம்பு நடனம் கும்மி, பதம், வன்னி ஊற்றுப்பாடல், மங்களம் என்பன இடம்பெற்றன. இன்நடனநிகழ்ச்சிகளுக்கான நட்டுவாங்கத்தினை செல்வி கஜப்பிரியா குலேந்திரன் வழங்கியிருந்தார். நிகழ்வு 74
நிகழ்வு 18.05.2003 மாலை 700 மணிக்கு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் கூடி ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பற்றி கலந்துரையாடியது. நிகழ்வு 75
14.06.2003 மாலை 4.00மணிக்கு நகரசபை மண்டபத்தில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் ஆறாம் ஆண்டு நிறைவு விழா சான்றோர் கெளரவிப்பு விழாவாகவும் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக அரச அதிபர் திருகே.கணேசும் கெளரவ விருந்தினராக வவுனியா வளாக முதல்வர் பேராசிரியை திருமதி.இ.மகேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக பிரதேசசெயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், நகரசபை செயலாளர் திரு.வி.எஸ்எஸ்.செல்வராசா சுத்தானந்தா.இ.இ.ச.தலைவர் திரு.நா.சேனாதிராஜா, இந்து மாமன்றதலைவர் திரு.சி.ஏ.இராமஸ்வாமி, {1.நோ.கூ.சங்க தலைவர் திருபூகுமரகுலசிங்கம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
நிகழ்ச்சிகளாக 'மாருதம் சஞ்சிகை திரு. எஸ்.சத்தியசீலனால் வெளியிடப்பட்டது. வெளியீட்டுரையை திரு.ஜகதிக சேகரமும் ஆய்வுரையை
69

Page 37
திருமதிவி. முருகேசபிள்ளையும் நிகழ்த்தினர். தொடர்ந்து வன்னி ஊற்று இசைநாடா திருமதி.இ.மகேஸ்வரனால் வெளியிடப்பட்டது. வெளியீட்டுரையை திரு விநோதனும் நயவுரையை தமிழருவி சிவகுமாரனும் வழங்கினார். சான்றோர் விருது வழங்கும் வைபவத்தில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி திரு.செ.அழகரத்தினத்திற்கு ”கல்வியியற்ச்செல்வர்” விருதும் முன்னாள் மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு.ச.அருளானந்தத்திற்கு ”சிறுவர் இலக்கியச் செல்வர்” விருதும் பேராசிரியை இ.மகேஸ்வரனால் வழங்கப்பட்டது. கெளரவ உரையை விரிவுரையாளர் கந்தையா ழரீகணேசன் நிகழ்த்தினார். அரச அதிபர் கே.கணேசன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
கலை நிகழ்ச்சிகளாக செல்வன் பத்மநாதன் சிவமைந்தனின் இசைவிருந்தும் நிருத்திய நிகேதன, மற்றும் நர்த்தனாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றது. வரவேற்புரையை செல்வி.சி.சிவாஜினியும் நன்றியுரையை திரு.ப.முரளிதரனும் நிகழ்த்தினர். நிகழ்வு 76
நிகழ்வு 13.07.2003 காலை 1100மணிக்கு கலாசார மண்டபத்தில் தமிழ்மனி அகளங்கன் தலைமையில் கூடியது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றி கலாநிதி எஸ்.சிவலிங்கராஜவும் ஆசிரியர் ஜகதிர்காமசேகரமும் உரையாற்றினர் நிகழ்வு 77
• நிகழ்வு 11.08.2003 காலை 11 மணிக்கு கலாசார மண்டபத்தில்
திரு.L.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. திரு.வ.சுப்பிரமணியம் ஆக்கிய திருமதிவெண்ணிலா சிவசுந்தரம் நெறியாள்கை செய்த “யார் பொறுப்பு நாடகம் சைவப்பிரகாச மகளின் கல்லூரி மாணவியர் வழங்கினர். "போட்டிக்காக போடப்பட்ட நாடகம் தனியே மேடையில் மட்டும் போட்டுவிட்டு போய்விடாது சமூகத்திற்கும் ப்ோய்ச் சேரவேண்டும். மனிதனது துன்பங்களிற்கு மனிதனே காரணம் என்ற கருப்பொருளைக் காட்டியுள்ளது. ஒவ்வொரு வார்த்தைகளும் உணர்வு ஊட்டப்பட்டது. யதார்த்த பிரச்சனைகளை குறியீடாக காட்டியுள்ளளார். என பலரும் பல்வேறு கோணங்களில் விமர்சனம் வழங்கியிருந்தனர். திரு.வ.சுப்பிரமணியம் ஏற்புரையை வழங்கினார்.
பத்திரிகையாளர் இ.சிவகுருநாதன் பற்றிய அஞ்சலி உரையினை தமிழ்மணி அகளங்கன் வழங்கினார். பேராசிரியர் தனிநாயகம் இடிகளாரின் தமிழ்ப்பணிபற்றிய கருத்தாடலும் இடம்பெற்றது. நிகழ்வு 78
10.09.2003 காலை 10.30 மணிக்கு நகரசபை மண்டபத்தில் விரிவுரையாளர் திரு.ந.பார்த்தீன் தலைமையில் பாரதி நினைவு நாளாக நடாத்தட்பட்டது. திரு.ந.ார்த்தின் தலைமையுரையில் “பாரதி ஏன் தேடப்பட்டான் அவன் வெடிகுண்டா வைத்திருந்தான் இல்லை அக்கினிக் குஞ்சல்லவா வைத்தான். காலத்தினை மிஞ்சிவாழலாம் என்பதை பாரதியின் வாழ்வு சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.
7O

பாரதி வாழும் போது கெளரவிக்கப்பட்டவில்லை. ஆனால் இன்றும் வாழ்கின்றான். பாரதிக்கு முன்னர் எத்தனையே பெண் எழத்தாளர்கள் கூட பெண்ணடிமைபற்றிப் பேசினாலும் பாரதியின் பின்னர்தான் பெண் அடிமை பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டது. பாரதி மக்களுக்காக போராடினான். பாரதியை புரிந்து கொள்ளுங்கள் அதனைப் பின்பற்றுங்கள் “என உரையாற்றினார்.
t நிகழ்வுகளாக வவுனியா தேசியகல்வியற்கல்லூரி மாணவர்கள் வழங்கிய பாரதியின் கவிதாவிலாசம் என்னும் இயல் அரங்கு இசை அரங்கும் திருமதிவதனி பூரீதரனின் பாரதி பாடல்களும் இடம்பெற்றது. நர்த்தனாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவியர் வழங்கிய நடன நிகழ்வும் செல்வி விமலினி வேலாயுதம் தொகுத்து நெறியாள்கை செய்த 'புதிய வாழ்வு பிறந்தது” எனும் நாடகம் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்வு 79 நிகழ்வு 9.10.03 காலை 11 மணிஅளவில் சுத்தானந்த இந்துஇளைஞர் சங்க சேக்கிழார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழில் எழுந்த பிரபந்தங்கள் பற்றி தமிழ்மணி அகளங்கன் உரையாற்றினார்.
வட்டத்தின் பாரதி நினைவு நாளில் வவுனியா நர்த்தனாஞ்சலி நாட்டியப்பள்ளி மாணவியரின் நடனம்
7.

Page 38
மாருதம் இதழ் நான்கு சிறப்புற எமத வாழ்த்தக்கள்
ASTAN INSTITUTION
Pandarikulam Vavuniya.
F2

மாருதம் இதழ் நான்கு சிறப்புற எமத வாழ்த்தக்கள்
COMPUTINGS AND BUSINESS COLLEGE -ECBC
Accredited with
AAT - Sri Lanka IBSL - Sri Lanka
Conducting Courses
AAT ACS IBSL IAB Computer Courses Language Courses
No 30 Station Road, Vavuniya.
TP 0777 585920, 024 - 2221322
73

Page 39
(7
மாருதம் இதழ் நான்கு சிறப்புற எமத வாழ்த்துக்கள்
People Attractive Textile Land
108, பஜார் வீதி, வவுனியா.
T. P: o24-22879
f4
 

கேக் வகைகள்
ஐஸ்கிறீம்
இனிப்புகள்
பழவகைகள்
பழச்சாறு
குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு நாடுங்கள்.
Tastv Cool Bar
29, Bus Stand Complex, Vavuniya.
T.P:024-2222765
METO TTRADERS
DEALERS N:- ELECTRGA GOODS 8 PLVMAP NG TEMS
35A, Bus Stand, Shoping Complex, Station Road,
Regd No: 1837 Vavumiya.
Phone No: 024-22572
75

Page 40
N.S.RATNAM &BROS
Dealers in all kinds of electronic items and spares
No:6, 1$" Cross Street, Vavuniya. Te/Fax: 024-21237
வேகல்வி நிலையம்
தரம் 01 தொடக்கம் 05 புலமைப்பரிசில் பரீட்சை க.பொ.த(சாதாரணம்) உயர்தர கணித விஞ்ஞான கலை வர்த்தக வகுப்புக்கள் G.A.0 ,B.A விரிவுரைகள் நடைபெறுகின்றன
Station Road,
Vavuniya. T.P 077-61631.33
O24-2222033
76

ரங்கனாஸ் ஜூவலர்ஸ்
74A கடைவீதி வவுனியா.
Ꭰial 024 22226449 Prop : Ranjit
ARVAHO OPEAS
Eye Testing and Dispensing
No 13, Bus Stand Complex, Vavuniya.

Page 41
மாருதம் சிறப்புற வாழ்த்
GHA DE SI
Bazaar Street,
Löfiligi giji.jl:L

துகிறோம்
LVA & EO .
Vavшпіya.
II. 024.-2223143