கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனிதம் 1997.08

Page 1
'அஸ். ஸிறரிஜ்மகா வித்தியா
மூன்று மாதத்திற் வெளிாகும் இெ
 
 
 

தர மாணவர்களி
وإ(
عنهجه
ஆகஸ்ட்
: 97
கு ஒ 0க்கி முறை கிா இதழ்
ற

Page 2
7- N
சிறுகதை - ஹஸீன்
- அப்துல் றஸாக்
நேர்காணல் - அபுல் ஹசன்
(அதிபர்) கட்டுரை - அஸ்வர்
- ஹபீல்
கவிதைகள் - றபீயூஸ்
- பளினா - சாஹிர் ஹூசைன் - மும்தாஜ் சிபாயா
ஓவியம் - நுஸ்ஹா
ಆಹiourius - அப்துல் றஸாத்
ஆசிரியர்கள் :
றபீயூஸ்
ஹளின்
அப்துல் றஸாக்
Typeset: ENNEl - Akkaraipattu
"MANTHAM" AS - SIRAJMAHAVIDYALAYA AKKARAIPATTU- 01
02) மனிதம் )
2
1952ல் எழுதப்பட்ட கு. அழகிரி சாமியின் குமார புரம் ஸ்டேசன்’ என்ற சிறு கதையில் 'எந்த பைத்திய காரனும் அறிவு வளர்ச்சிக்காக பள்ளிக்கு அனுப்புவதில்லை. நீங்களும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம் படிக்காதவ ஒனுக்கும் உத்தியோகம் உண்டு என்று சட்டம் செய்யட்டும் , எவனாவத மழைக்குக் கூடப் பள் விக்கூடத்தில் வந்த ஒதுங்குகிறானா என்ற பார்க்கிறேன் என்று கூறியத இன்னும் ஒரு வடிவம் எடுத்து உத்தியோகம் மட்டுமல்ல, கைக் கூலியும் என்ற நிலை வந்தாகி விட்டத இன்று.
பாடசாலையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டியில் இருந்த வாசகமான "அறிவு உணர்டு திறனி இல்லை தகுதிச்சான்று உண்டு தொழில் இல்லை. தவறு செய்ததத யார்?" என்பதை கண்முன்னே வைத்தக் கொள்ளும் எமக்கு பரீட்சைகளோ அதே கல்லில் வார்த்த அச்சில் அதற்கு முறனாக வருகிறது. திறன் என்ற அடிப்படையில் வாசிப்பு பழக்கத்தை உண்டு பண்ணக்கூட கல்வி அமைப்பு இடம் தராத போத இம் மனிதம்' சஞ் சிகை தருவது எதிர்காலத்தை நினைக்கும் போது அச்சத்தை தருவதாகும். இன்னும்
தொடருவ தெனி பத வாழ்வை நெகிழவைப்பதாகும்.
-ஆசிரியர் குழு

தயநிரப் திரிஇேதினை
ட ஹளபீனர்
சோகமாகி இருந்த என்னை இன்ப ஜனனமாக்கியவன் பொறுத்திருந்து தோற்ற காலங்களில் ஒருநாள் வந்தானே எதிர்பாராமல், ஆசையின் கண்ணற்ற யுகத்தில் அவதரித்த என்னை புத்திசாலித்தனத்தில் யாசகம் செய்யக்காட்டி கனவுகளை வளர்த்தவன்; பூர்வீகத்தை அளித்தவன், திடீரென்று எதிர்பாராமல் ஈரலித்துப் போய்விட்டான்.
என்னை மறந்த லயத்தில் அவன் பற்றி ஏகமாகி வியாபித்த நனவோடைக் குறிப்புகள்,
ஜெஸி எதையும் எழுதிக் கொண்டு போய்
காட்டி "நல்லா இருக்குதா?" என்றால் "நீங்கள் எழுதினது உங்களுக்கு விளங்கும்” என்று வழுகிக் கொள்ளுதல் மெழுகு உருகி திணி மத்தில் திரவம்மாதிரி. ஒரு அசிங்கமான வடிவமைப்பைக் காட்டி இதுதான் எங்கள் சஞ்சிகையில் வடிவமைப்பு "நல்லா இருக்கா?" அதுக்கு அவன் "நீங்கள் செய்கிறது உங்களுக்கே” தட்டிவிட்டு பேசி அசிங்கம் என்பது கூட அழகுதான் என்பதை அனுபவித்து - வெளியீட்டின் பின் காணலாம் என்பது, எதையுமே திணிக்கக் கூடாது "இது எனது கருத்து உங்கள் கருத்து எதுவாகவும் இருக்கலாம்" என்பதில் கூட திணிப்பில்லை: கருத்துச் சுதந்திரம்.
கட்டிலில் பிஜாமாக் கோடு கொண்ட தென்னந்துரும்பு குத்தும் பெட் அதில் போடப்பட்டிருந்த சீத்தை தலைமாட்டுப் பக்கம் உயர்திருக்கும் கட்டிலின் பலகைச் சட்டத்தின் விளிம்பு பிடரியில் வெட்டாமல், அப்போது றப்பர்சீற் வானத்தில் கண்ணாடி ஒட்டின் ஒளி புகுந்து விளையாடும் போது தாடி வைத்த அல்லாஹற், முழக்கத்திற்கு ஓடும் குதிரை, மின்னலுக்கு வைத்த சாட்டை எல்லாம் குழந்தைத் தனமாகக் காண்பதற்கு கொண்டிருக்கும். சாத்திவைக்கப்பட்ட மூங்கிலும் குப்பறக்கப்படுக்கும் மூங்கிலும் கட்டில் கிடக்கும் மூலையும், கட்டிலின் கீழ் ஒரு சூடாமணி அதன் மேல் மண் தயிர்ச்சட்டி அதனுள் காம்புகளும் கொட்டைகளும் அந்தச் சூடாமணியில் இன்னொன்று பற்பொடி அது கொட்டயரின் உறவினர். உதடுகளில் காபன் செய்யும் போது சைன் பேப்பர். ஜெஸியிடம் வீசும் வாசம் அந்த அறையினுள்ளும் கடினமாக ஆட்கொண்டிருந்தது. "தாங்கள் தாங்களுக்கு தொழுது கொள்ளுங்கள். மதம் உங்களுக்குப் போதுமானது மனிதர்களுக்கு ஒரே மதிம் மனிதம் என்கின்ற மதம். "அது எல்லோரிடமும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். தொழுது கொள்ளலாம் நீங்கள் என்னை நானும் ஒரு கடவுளாகவே இருக்கின்றேன். சமையங்களாக மக்கள் பிரிந்து கொள்ளும் போது சமயங்களுக்காக சண்டை இடுகிறான் இதுகூட அதைப் படைத்த அவர்களுக்குப் புரியவில்லை. காலத்தால் பழசுபட்ட இதிகாச புராணங்கள் இன்னும் பயன்படாது. மதவாதிகளிடம் வினாபெற ಆಳ್ವ ஓராயிரம் கேள்விகள் கேட்டால் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி எங்கள் மதம் பற்றி உங்களுக்கு எப்படி இவ்வளவு தெரியும்?” மதம்
மென்மையாக பேசிக் கொள்ளல், தொடர்ச்சியாக பேசுவதை நிறுத்த முடிவதில்லை. காதல் கடிதங்களாக ஒவ்வொரு வசனத்தையும் பின் யோசித்துக் கதைத்தல் உயர் நிலைக்கு மக்களை கொண்டுவர மூளைச் சலவை செய்தல், பிரபலங்களின் பேரில் கற்பனை முன்வைத்தல் கொண்டு என்னிலை, தன்னிலை, மனித நடத்தைகளை கூறி புத்திசாலித் தனத்தை ஊட்டுதல் மொழிகளில் கூட புத்திசாலித்தனத்திற்கும் அறிவுக்கும் வித்தியாசம் தேடி நுண்ணிய ஆராய்ச்சி நடத்துதல் மதங்கள் இல்லையெனில் அறவாழ்க்கை இல்லையென்போருக்கு - "நான் பொய் சொன்னால் நீயும் பொய் சொல்லலாம் நீ களவெடுத்தால் நானும் களவு என்னிலிருந்து
03) மனிதம் )

Page 3
எடுக்க அனுமதிக்கலாம். கொலை செய்பவன் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும். இன்னிலையில் பாவம் உச்சநிலை எய்கினால், எதன் உச்ச வளர்ச்சிக்குப்பின்னும் வீழ்ச்சி கட்டாயமானது. சமன்பாடுகள் தீர்க்கப்படும்" மனித உரிமை.
நவீன கடவுள்களாக கொன்னைக் கடவுள், "குன்" என்றால் அனைத்தும் படைக்கப்பட்டு விட்டது. ஆயின் கோவேறு கழுதை எங்கிருந்து என்று கேட்கும் ஜனாக் கடவுள் (கொச்சிக்காய் வாங்க கடைக்குப் போனாலும் அதை திருபடைய வைத்து இதனைக் கேட்பவன்)
இவர்கள் இருக்கும் ரூமில் இருந்தேன் ஜெஸியும் இருந்தது. "காதலிக்கயலா"? என்று பம்மாத்துக் கேள்வி கேட்டான் நளினமாக.
"ஓம் ஓராளில்ல ரெண்டுபேர்"
"ஆராரோ"
"ஜெசிக்குத்தான் தெரியுமே"
"காதலிகளை எப்படித் தெரியிரயல்"
"......... (சுயம்வரம் நடத்தி) பெண்மை நிறைந்திருப்பவர்களை தெரிந்து கொள்கிறேன்.
"பெண்மை எனக் கருதுவது"
"எனக்குப் பிடித்துக் கொள்வது" கைகளை விரித்துக் கொண்டு.
"இரு தரப்பிலும் ஒகேயா"
"இல்ல இன்னும் சொல்லல்லே"
"ஏன் சொல்லல்லே"
"சந்தர்ப்பம் கிடைக்கல”
"நீங்கள் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் அவர்கள் உங்களை காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஓர் ரோஜாவை எடுத்துக் கொள்வோம். அதையாருமே நீயும் என்னைக் காதலிக்க வேண்டுமென்று கூறுவார்களா? இல்லை ரோஜாவைக் கேட்கலாம். அல்லது கேட்காமலும் விடலாம் நாம் சொல்லி நமது காதலை வெளிப்படுத்தலாம். ஆம் என்றால் கூட இரு சாராராலும் சம இடைக்கி காதலிக்க முடியாமல் போகலாம் காதலிப்பதாக சொன்னால் தொடர்ச்சியாக நண்பர்கள் என்ற உணர்வோடு இருந்தவர்களும் அந்நிலையை விட்டும் கோபத்தில் மாறினாலும் காதலின் மாற்றமாகி சம்மந்தமாகிவிடும் அதே நிலை மாறாமல். ; காதல்.
"ஒருத்தரும் வரல்ல நான் மட்டும்தான் வந்திருக்கன்" என்று சிரித்து முடிபபதற்குள் வந்து
"பெளமி பேக்தாரண்ட எடுத்துக்குத்தான் வாரன் எண்டான்! கொஞ்சம் பைசிக்கல எடுத்து வாங்க போவம்"
அந்த இறுதி உலாவில் கடும் வெயில் நேரத்தில் மலர்ச்சோலைக்குள் புகுந்த சுகமாய் மாமரம் ஒன்று நிற்கையில் "நல்ல கூளாயிருக்கு" அந்த ரோட்டில் சொன்னது மிக ஆழமாய்ப் பதிந்து விட்டது. அவர்களது வீட்டில் பால் தந்தார்கள் பகல் சாப்பாடு சாப்பிட்டேன் வேண்டாம் என்று நிராகரிக்க முடியாத இக்கட்டான நிலை. பாஸ்போர்ட் வீஸா அனைத்தும் சாம்புறாணி புகை போட்டு வலது கையில் கொடுக்கப்பட்டது. (சோக்கான சீன்ஸ்) பஸ்ஸடிய போனதும் பயணப் பாட்டிதர ஹோட்டலுக்குப் போனதும் பால் ஏவறைக்கு ஏவற வந்ததால் வேண்டாமென்றேன் இன்னுமொராலும் வேணாமென்றார். மற்றவர்கள் எல்லாம் நன்றாச் சாப்பிட்டார்கள். அங்க ஜெஸியின் புலம்பெயர்வு நவீன கடவுள்களின் வீழ்ச்சி பற்றியும் அரங்கேற்றப்பட்டது. நகைச்சுவைக்காக அதுகூட மிக விரைவாக முடிந்தது எனக்கு ரெண்டு டொபி வாங்கித் தருமாறு புசிபுசித்தேன் ஜெஸியிடம். கார் மாதிரி சொக்லற் வாங்கித் தந்தான் பொக்கற்றில போட்டுப் போட்டு ஒன்றை எடுத்துச் சாப்பிட்டேன் முடிய மற்றதையும் சாப்பிட்டேன். கொஞ்சம் என்பதால் மிகவும் ரசமாக இருந்தது. அக்கால வேளை கடைசியாய் என்னயாவது ஒரு கவிதை எங்களுக்குச் சொல்லுங்கள் என்றதும் "நான் மறந்ததை எல்லாம்
04) மனிதம்

நீங்கள் மறந்திடுங்க” என்று ஒரு சிக்கன கவிதையை பொருத்தி விட்டு பஸ்ஸில் ஏறி இருந்ததும் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை கண்கள் பளபளப்பாகத் தொடங்கி விட்டது. வேறுவேறு திசைகளைப்பார்த்துக் கொண்டே பஸ் ட்ர்.
அனுபந்தம் : சோகம் என்பதை மட்டும் நினைத்து அழுகிறேன் உன் பிரிவால் இனியவை எல்லாம் பிரிவுகளை மிகவும் ரம்யமாக சொல்லும். இன்னும் தாமதம் எதற்கு எனில் வாழ்க்கையை உன்னோடு இருக்கையில் சவுக்கு மர தோப்பில் ஊடறுத்துச் செல்லும் தென்றலாக அபிசகித்தேன். இன்று அதன் பிரசன்னம் மாறி நானோ கல்முனை நோக்கிச் செல்லும் வேனில் தொங்கிச் செல்பவன் போல் எனது காதுகளை புகைக்காற்றின் ஓசைகளால் ஆழ இன்னும் துயரங்களால் தூய்மை ஆவதற்கோ மேன்மை ஆவதற்கு போட்டு வைத்தால் நூலான நான் பஞ்சாகலாம் அது வரைக்கும் சிறிது இடை வெளியில் எனது இளமை எனும் பருவகாலச் சீட்டு முடிவதற்குள் சுப நேரம் பாத்திருக்கிறேன் வா. கலங்கிக் கொள்ளும்
காலமிது.
(முற்றும்)
N சிலர் கழுத்திற்குக் கீழ் வயிறு இருப்பதைத்தான்
உணர்கிறார்களே தவிர - கழுத்திற்கு மேல் தலை இருப்பதை
உணர்கிறார்களில்லை.
4vub. 6lu41yő-j っ
N
பழைய, புதிய பாடல்களை துல்லியமாக பதிவு செய்து கொள்ள,
Music Consolis
212, Main ちtreet, Akkaiapattu.
للر V ܢܠ
05) மனிதம்

Page 4
தமிழ் மொழி ஆசிரியரும். தமிழ் மொழியில் ஆழ்ந்த N புலமையும் கொண்டவர்- இலக்கியத்துறையில் அதிக வாசிப்பு மிக்கவர். கலை பண்பாடு சினிமா போன்ற துறைகளில் தனது பார்வை வீச்சை தொடர்ந்து செலுத்திவருபவர். இவை அனைத்தையும் விட எமது பாடசாலையின் அதிபரும் "மனிதம்' சஞ்சிகை வெளிக்கொணர முக்கிய காலுமாக இருப்பவர் அபுல்ஹஸனுடனான எமது சந்திப்பு.
சந்திப்பு v, ஹசீன்
لد
அப்துல் றஸாக் ܓܠ
நீங்கள் நீண்ட காலமாக ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து கல்விச் சேவையாற்றி வருகிறீர்கள். இந்த வகையில் ஆசிரிய தொழிலைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
எனது நாற்பத்தியொரு வருட ஆசிரியப்பணியில் நான் பெற்ற அனுபவத்தால் ஆசிரிய வேலையை, "ஒரு தொழில் என்பதை விட ஒரு பணி" என்று கூறுவதையே பெரிதும் விரும்புகிறேன். ஏனெனில் ஆசிரியன் என்பவன் தனது கடமைக்கு அப்பாலும் மனித குலம் தளைப்பதற்காக வேண்டி மாணவர்களுக்கு சேவையாற்றுகிறான். இக்கால கட்டத்தில் அவன் படும் துன்பம், வேதனை, சோதனை என்பன எண்ணிலடங்காது. அவன் தனது சொந்த வாழ்க்கையில் படும் துன்பங்களை விட அவனது பணி ரீதியாக படும் துன்பம் ஆனந்தமானதாகும். மண்ணில் புதையுண்டு கிடக்கும் மணிக்கற்களை தோண்டி எடுத்து பட்டை தீட்டி அழகிய மாணிக்கக்கற்களாக ஆக்குவது போல் மாணவ சமுதாயத்திற்கு அறிவு, திறன், மனப்பாங்கு, ஒழுக்கம் என்பவற்றை புகுத்தி மனித மாணிக்கமாக ஆக்குபவன்தான் ஆசிரியன். இவ்வாறு பணி செய்யும் ஆசிரியனுக்கு இறைவனைத்தவிர எவராலும் கூலி கொடுக்க முடியாது.
எல்லாத் தொழில்களும் மக்களுக்காகவே உண்டாக்கப்பட்டுள்ளன அத்தொழில்களில் ஈடுபடுவோர் மனித சமுதாயத்திற்கே பாடு படுகிறார்கள் அவ்வாறிருக்க ஆசிரிய தொழிலை மட்டும் நீங்கள் சிலாகிப்பது ஏன்?
எல்லாத் தொழில்களும் மனித குல உயர்சிக்காகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அதைச் செய்பவர்களும் கூட மனித குலம் உயர வேண்டும்; சுபீட்சமாக வாழ வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையிலேயே உழைக்கின்றார்கள். இருந்தும் உலகிலுள்ள அத்தனை தொழில்களுக்கும் ஆதார சுருதியாக இருப்பவன் ஆசிரியன் இவனில்லா விட்டால் பிற தொழில்களை செய்கின்றவர்கள் தத்தமக்கு வேண்டிய அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை பெறமுடியாது. ஆகவேதான் நான் ஆசிரிய தொழிலை உயர்வாக கருதுகிறேன்.
நீங்கள் கூறும் மேன்மைத் தன்மை எல்லா ஆசிரியர்களுக்கும் பொருந்தமா?
நல்ல கேள்வி நயமான கேள்வி. ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த மேன்மைத் தன்மை பொருந்துமா என்று கேட்டால் ஆசிரிய இலக்கணம் உடையவர்களைத்தான் நாம் ஆசிரியர்களென்று மதிக்கிறோம்.
06) (மனிதம் )
 

ஆசிரியர்களென்று மதிக்கிறோம். ஏனையவர்களை நாம் ஆசிரியரென்று கருதுவதில்லை. அவர்கள் குட்டையில் பெய்த மழையைப் போல, முத்துக்களுடனிருக்கும் கிளிசல்களைப் போல துரதிஷ்டவசமாக ஆசிரியர் தொழிலுக்கு வந்து விட்டார்கள். இது நமது சக்திக்கு அப்பாற் பட்ட ஒரு விடயம்.
அதிபர் பணியைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
அதிபர் பாடசாலை என்ற அமைப்பின் சாரதி. முதலில் ஒர் அதிபருக்கு தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு என்பவற்றை எடுக்கும் திறனும் முடிவினை அமுல் படுத்துகின்ற ஆற்றலும், நல்ல மனப்பாங்கும் ஆழ்ந்த அறிவும் இருக்க வேண்டும். அவ்வாறிருக்கும் ஒரு அதிபரால்தான் பாடசாலையை நடாத்த முடியும். நமது பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருடன் நேயமான தொடர்பு அவருக்கிருத்தல் வேண்டும். சென்ற காலங்களில் அதிபர் ஒரு நிருவாகியென எண்ணப்பட்டார். தற்போது அவரொரு முகாமையாளர் என்று கணிக்கப்படுகிறார். நிருவாகி சட்டங்களுக்கும் விதிகளுக்கும் முன்னுரிமை கொடுத்தான். சட்டங்களையும் அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு ஆசிரியர்களை கட்டுப்படுத்தினான். தற்போது அவன் முகாமையாளன் என்று கணிக்கப்படுவதால் தன்னகத்தே உள்ள ஆசிரியர்களை, மாணவர்களை இனம் கண்டு அவர்களால் * கிடைக்கப்பபெறுகின்ற அதி உச்ச பயனைப் பெற்று கல்வி வளர்ச்சிக்கு பயன் படுத்துவதே
ஒரு அதிபரது கடமையாகும்.
உங்களுடைய அதிபர் பதவிக் காலத்தில், குறிப்பாக எமது வித்தியாலயத்தில் இந்நோக்கம் நிறை வேற்றப்படுகின்றதா?
இது பற்றி நான் கூறுவதைவிட உங்களைப் போன்ற உயர்தர மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றையோர்களும்தான் கூற வேண்டும். அதை உங்களிடத்தே விட்டு விடுகிறேன்.
மாணவர்களின் ஒழுக்கம் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன? அது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
பாடசாலையின் ஒழுங்கும் கட்டுப்பாடும் அமைதியும் இருக்க வேண்டுமென்றால் பாடசாலை சமுகத்திடையே குறிப்பாக மாணவர்களிடையே ஒரு ஒழுகலாற்று விதிமுறை ஒன்று அமைய வேண்டும். இவ்வொழுகலாற்றின் விதிகள் காலத்திற்கு காலம், இடத்திற்கிடம், நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. ஒவ்வொரு பாடசாலையும் அமைந்திருக்கும் சமுக ஒழுக்கத்தோடு இயைந்து மாணவர்களும் போக வேண்டும். ஓரிடத்திலுள்ள ஒழுக்கம் இன்னொரு இடத்திற்கு பொருந்தாது. உதாரணமாக எமக்கு அண்டை நாடான மாலைதீவில் உள்ள பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களை பெயர் கொண்டே அழைப்பார்கள். அது அங்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் பெயர் கொண்டு அழைப்பது ஒழுக்கமின்மையென கருதப்படுகிறது. எமது நாட்டை பொறுத்தவரை இன்றைக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாடசாலை ஒழுக்கநிலை மாற்றமடைந்திருக்கிறது. ஆகவே சுருங்கக்கூறின் மாணவர்கள் தம்மிடத்தே நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் அதுவே சிறந்த ஓர் ஒழுக்கமாகும்.
எமத பாடசாலையை பொறுத்தவரையில் உங்களது இலக்கு ஏதாவத உண்டா?
பாடசாலையில் மூன்று முக்கிய தேவைகள் இருக்கின்றன.
1. ஒரு ஆராதனை மண்டபம் அமைத்தல். 2. க.பொ.த உயர் தர விஞ்ஞான வகுப்பு ஆரம்பித்தலும், விஞ்ஞான கூடம் நிறுவுதலும்,
3. ஒரு விளையாட்டு மைதானத்தை பெற்றுக் கொள்ளல்.
07) மனிதம் )

Page 5
இவைகளே இப்பாடசாலைக்கு அவசியமானவை. நான் இருக்கும் போது இவை முன்றையும் அமைத்து விடலாம் என்ற முனைப்பு என்னிடமுண்டு. இதற்கான முன்னேற்பாடுகள் இப்பொழுது நடந்து கொண்டு வருகின்றன. அரசியல், சமுக ஆதரவுகள் எமக்கு நிறைய கிடைக்கப்பெறுமாயின் இவற்றை செய்வது மிக எளிது. இதற்கான உதவிகளை நாம் கோரி நின்றோம். செய்து தருவதாகவும் வாக்குத்தந்துள்ளனர். இவற்றை நிறை வேற்றுவதே எனது இலட்சிய நோக்கு.
நமது பாடசாலையிலிருந்து வெளிவரும் இம் "மனிதம்" சஞ்சிகை பற்றி என்ன கருதகிறீர்கள்?
மிகவும் திருப்தியாக இருக்கின்றது. இது முகஸ்துதி அல்ல சிற்சில அற்பக்குறைகள் இருந்தாலும் உங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மிகக்கூடுதலான ஓர் அரிய சேவையென்றே இதை நான் கருதுகிறேன். பத்திரிகை வெளியிடுவதென்பது சாதாரணமானதல்ல. ஆனானப்பட்ட எத்தனையோ ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் பத்திரிகை தொழிலில் ஈடுபட்ட போதிலும் நஷ்டமும், கஷ்டமும் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மாணவர்கள் உங்கள் ஆர்வத்திற்கு ஏற்றளவு பொருளாதாரம் அற்றவர்கள். இருந்தும் ஒரு கையளவு கிண்ணத்தில் எடுக்கப்பட்ட அமுதத்தை ஒத்தது மனிதம். ஆகவே உங்களுடைய பத்திரிகை மெல்ல
மெல்ல பாய்கின்ற ஒரு குளிரோடையை போன்றது.
(முற்றும்)
போராட்டம் என்பது எதுவரை.
- அஸ்வர் - பயங்கரவாத ஒழிப்பு சம்பந்தமான மகா நாடு ஒன்று தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்றது.
பயங்கரவாதம், பயங்கரவாதி என்னும் வார்த்தைகளை கேட்கும் போது சில காலமாக எமது நாட்டில் நடைபெற்ற நிகழ்சிகளும் நடத்திய ஹீரோக்களும்தான் கண் திரையில் தோன்றுகிறார்கள்.
எட்டு வயது சிறுவனாக ஒதப்பள்ளிக்கு போயிற்று நண்பர்களும் நானும் வருவோம் மெயின் ரோட்டால். ஒன்றுக்கு ஒன்றத்தொட்ட மாதிரி பல ஜீப்புகள் வரும். அதில சிலர் நின்டுக்கு துவக்க வைத்திருப்பாங்க. ஆக்கள் கூடியிருக்கிற இடத்தை கண்டதும் திடீரென ஜிப்புகள் நிற்கும். நின்றவங்க படபடஎன்று பாஞ்சு இறங்கி ஓடுவார்கள். ஆளுகளுக்கு அடிப்பார்கள். குட்டி நாய் மாதிரி ஆட்களெல்லாம் கத்தித்தெறிப்பார்கள். நானும் அதற்குள் மிதிபட்டு துவைபட்டு சப்பாத்தை களட்டி கையில எடுத்திட்டு வீடு வந்து சேர்வேன். பின்ன என்னன்டா இரவில ஊர்ல உள்ள பணக்காரர்களிடம் போய் காசு கேட்பார்களாம். இல்லன்டா சுட்டுப்போட்டு போயிடுவார்களாம். என்று வாப்பா சொல்லி இரவில் யாராவது வந்து கூப்பிட்டா; கதவத்தட்டினா பேசக்கூடாது என்று படிச்சிக்கிட்டு இருக்கிற காக்காமா ரிடமும் சொல்வார்.
இந்த கொம்பியூட்டர் யுகத்தில் தானும் தனது சமுதாயமும் நிம்மதியாக வாழ்வதற்கு தடையாக உள்ள இலாப அரசியல் அலகுகளுக்கும், பேரினவாத சக்திகளுக்கும் எதிராக நின்று அவர்களின் அடாவடித்தனங்களுக்கும், அக்கிரமத்திற்கும் முடிவு கட்ட எண்ணி சுதந்திர உணர்வுடன், சுதந்திரமான உரிமைகளைப்பெறுவதற்காக சுவீகரிப்
(தொடர்ச்சி - 14) 08) மனிதம் )
 

முகம் காய்ந்து முடிசுருட்டை யாகிய அவனைக் கண்டதும் uՄ6խ& நிலையொன்றாகிய அகமகிழ்ச்சி எனக்குள் ஏற்பட லாயிற்று. கடந்து சென்ற எத்த னை நாட்கள் இவனைக்கானா த வெற்றிடங்களாக்கி இருக் கின்றன என்ற சோகவெள்ளத் தை கட்டுப் படுத்துவதாகிய மகிழ்ச்சிக்கிளர்வு அது. இன்று நேற்று இதுவரையெல்லாம் எனக்கும் அவனுக்கும் தொடர் பென்ற கோட்டின் ஒரு சிறு புள்ளியாவது எந்த வகையி லும், இருந்ததில்லை. எப்போ தோ பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த என் மூதாதையர் களின் குருதியோட்டத்தில் இவன் மாமிசம் சங்கம் கொணி டிருக்கலாம் என்ற படி மனம் நினைக் கும் நிகழ் வையும் என்னால் முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள இஷ்டமில்லை. அந்தரங்கமான அந் நியோ ன்யம் ஒன்றுதான் அவனுக் கும் எனக்கும் சிலந்தி யாய் நூல் இழுத்திருக்க வேண்டும்.
ஏழெட்டு நாட்களுக் குள்ளான அண்மைக்காலமாய் இவன் எனக்கு வேண்டும். இவன் சகவாசம் வேண்டும். செட்டை கழற்றிய நிலா முற்றத்துப்பரப்பில் வெளிறிய மணற்பூக்களுக்குள் கால் புதைத்து இவனோடு ஒடியாக வேண்டும். இது வாகிய பல கற்பனை உதிப்புகள் எனக்குள் முகாமிடும். அது ஏனென்று என்னால் வாய் திறந்து காரணமாக எதுவும் கூறி நிற்க முடியவில்லை. செய்கை ரீதியாக செயலில் நற்பு பற்றிய அந்நிகழ்வை காட்டி நின்றாலும் சாட் டுக்கு செய்கின்ற குத்திக்கரணமாகவோ, தோப்புக்கரணமாகவோ அது இருந்து விடும். ஒரு வே ளை காக்கி நிறங்களின் கெடுபிடியாக இருக்கும் முட்டுக்கால் வேதனையாகக்கூட அது என்னை பீய்த்தெறியலாம்.
汤
இவனைக்கண்டு ஒரு மாத காலமிருக்கும். சரியாய் இன்றோடு இருபத்தியாறு நாட்கள். இதே நண்பகல் என்றாகிய கானல் பொழுது வளி மண்டலத்தில் நீருக்கு பஞ்சம் பீடித்து தொண்டை வறண்ட மேகத்தால் ஆரியனை தணிக்க இயலவில்லை. வெயிலை ஊத்திய சூரி யனின் நிர்வாண நாள் ஒன்றில் புலம் பெயர் மனிதக்கருவாடுகளுக்கும் துப்பாக்கி தோல் உரித் த இனவாதத்தின் எச்சசொச்சங்களுக்கும் பழகிப்போயிருந்த கொடிய ஆட்டின் அனல் அலைகளில் சுட்டுப்பொசுக்கினாலும் பரவாயில்லை என்ற நோக்கில் பொட்டி முட்டைகளுடன் எங்கள் வீட்டருகாமையில் நெட்டுயிர்த்து நின்ற பலகை கெண்டர் மீதில் முதல் முதலாய் அவனைக்கண்டேன். அவ்விடத்தில் அவனைப்பற்றி அறிய அவசியமானதொன்று இருக்கவில்லை. புழுதி தட்டிப்போட்டு தூர்த்து வெளிசாக்க வேண்டிய பரிதாப நிலையில்
09 (மனிதம் )

Page 6
கிடந்த பாடசாலையொன்றில் அவனும் அவன் குடும்பமும் தங்கப்போவதாக நேற்று முன்தினம் வந்த "கெண்டர்"காரனொருவன் சொல்லியிருந்தான்.
மெளனமாகவே இறங்கினான். படித்தவன் போலாகிய முகச்சாடையில் குடியேறிய பணிவு, அழுக்கேறிய துணிப்பையையும் கம்பி கழன்ற 'பாஸ்கட் வாளியையும் இழுத்து தாக்குகையில் முகச்சுருக்கத்தில் ஏறிய அவமான வரிகள் அவனது இயல்பான தன்மையை எங்ங்ணம் மறைக்க இயலும் என்ற பாணியிலிருந்தது.
இடுப்பை வளைத்திருந்த சாறணின் மூட்டோரத்தில் தையல் தனது - சக்தியை இழந்திருந்தாவோ என்னவோ வெட்கத்துடன் கொசுவிப்பிடித்து மறைக்க இயலுமா என்று சங்கடப்பட்டான். முகத்தில் உதடு பிதுக்கி கண்கள் மெதுவாக சுழல்கையில் அரும்பி விட்டிருந்த தாடியை சொக்கோரத்தில் கோணலாய் சிலிர்த்து அலுப்பைக் கக்கினான்.
படிரென்று முகத்தில் அறைந்தாற் போல் அப்பிய அவன் செய்கை சேற்றினுள் துள்ளித்திரியும் எருமை மாட்டின் காற் குளம்பாய் சுருக்கென என் மனதில் தைத்துக் கொண்டது. அதனால் பரிதாபமோ துன்பமோ அவனளவில் துக்குணியும் ஏற்படவில்லை. சாதாரண மனிதனின் நிலையிற் கூட ஏதாவதொன்றை ஏற்படுத்தியிருக்குமான அந்நிகழ்வு: அவன் நிலை என்னில் எவ்வித துலங்களையும் ஆராயும் பொருட்டு தோண்டி எடுக்கவில்லை. அவன் செயல்களில் வினோத பாவனைகளும் அங்க அசைவின் மாமிச துடிப்புகளும் இன்னும் சிலவற்றுமான ஒரு சில சிணுங்கல்களுமே என்னுள் படர்வதாயிருந்தது.
அவன் பொட்டி முட்டைகளுடன் உம்மாவும் ரெண்டு சகோதரிகள் தாங்க அகதி முகாமாய் புனரமைக்கப்பட வேண்டிய பாடசாலையை நோக்கி நடந்து சென்றான். வழிகாட்டியாக "கெண்டர்"காரன் முன்னால் சென்றான். பின்னால் நடந்து கொண்டிருந்த அவன் ஆமையாய் ஊர்ந்தே போனான். தலைப்பாரம் காரணமாக இருக்கலாம் என்ற படி அவன் காலைப்பார்த்த எனக்குத்தலை பாரிப்பது போலிருந்தது.
தோலுரிந்து அடி கழன்ற அவனது செருப்பின் அவஸ்தையால் காலை தூக்கி வைக்காமல் நிலத்தில் அரைந்தே நடந்து போனான். செருப்பினுடைய பின் பக்கம் எங்கள் பாடசாலை நண்பனொருவனின் 'உணர்வுச்செருப்பை நினைவூட்டியது. ரெண்டும் சேர்ந்து ஆறுகிலோ இருக்குமான அந்த செருப்புக்களைப் பற்றி ஒரு மாநாடே நடத்தினோம். அதிலெடுக்கப்பட்ட முடிவின் படி செருப்பு வெகு தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டது. அந்தக்கோபத்தில்..'உணர்வுச் செருப்பே' என்ற தலைப்பிலான கவிதையொன்று எழுதிக் கொண்டு வந்தான். அதைப்பார்த்த மற்றமொரு நண்பன் "அடி செருப்பால அவர்ர அசிலுக்குள்ள கவிதையும் எழுதுறாரா?” நக்கலடித்தான். எனக்கு பொறுக்க முடியாமல் தொண்டை கனத்தது.
"சே.அவன் பெரிய சமாதானக்கவிஞன்டா நம்மட சஞ்சிகையில வந்த அவன்ட
கவிதையை வாசிச்சுப்பார்க்கலியா? சுப்பர் கவிதடா"
"ஒ.ஓ.வாசிச்சுப்பார்த்தம். இவிய சமாதானத்தப்பத்தி எழுதி என்னத்த கிழிக் கப்போறாங்க இவருக்கெல்லாம் ஒரு செருப்பால அடிக்கப் போடா ஒரு சாக்கில பத்துப் பதினஞ்சு செருப்பப் போட்டு அடிச் சாத்தான் கெணக்காச்செருப்பால அடிச்சமாதிரியிருக்கும்."
"டேய் நக்கல் ஒவராப்பெய்த்து” சொல்லி முடிப்பதற்குள் சலசலவென மேசை களுக்குள் கதிரைகள் மைக்கல்ஜெக்சனாய் புரண்டு போக ரெண்டு பேரும் கட்டிப்பிடித்து ஆளுக்கு ஆள்மாறி குத்தியும் இடிச்சும் சின்னப்பிள்ளையாட்டமாய் சண்டை பிடிக்க ரெண்டு பேரையும் பிரிச் செடுக்கிறத்துக்கே கால்மணித்தியாலயம் தேவைப்பட்டது. அப்பயும் சண்டையப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் "சும்மா. றியல் சண்டடா இன்னேரம் ஒரு வீடியோ இருந்தாஆட்பண்ணி
(10) மனிதம் )

நானெடுக்கிற ட்றாமாவுக்கு போடலாம்”என்றான். மெய்யாகவே சொன்னவன் ஒரு டைரக்டர் என்பதால் இன்னம் ரெண்ணடுமுனு பேர் அவருக்கு "வால் வைக்க சுவாரசியமான பல நிகழ்ச்சிகளும் பாடசாலையில் நடந்தேறிற்று.
இந்த நினைவுகளில் தூரத்தே போகும் அவனை மறந்திருந்தேன் நீண்ட கோடாய்த் தெரிந்து சிறிதாய்க்குறைந்து புள்ளியாய் உருமாறி மறைந்து போனான்.
ஒருகிழமை நகர்ந்திருக்கும். வீட்டுக்கு வெளியால ஒட்டறை அடிச்சிக்கொண்டிருக்கும் போது ரோட்டுல கெறவல் மண் கொட்டுற மாதிரி சத்தம் கேட்டது. ஆச்சரியமாய் இருந் தது. நாலுவரிஷம் கூடி இந்த ரோட்ட சரியா எணக்கித்தரும்படி எத்தின 'பிட்டிஸம் போட்டிருக்கு இப்பதான் ரோட்ட எணக்க ஆள்வந்திருக்காக்கும் என்று எண்ணிய படி கடப்பலடிய வந்து பார்த்த ஏனக்கு வாய் விட்டு சிரிப்பதா அழுவதா என்று சங்கடமாய் இருந்தது.
அவன்.அவன்தான். மடுவுகள் நிரப்ப வேண்டிய சைக்கிள் வரிசையில் முதலா வதாக நிற்பாட்ட வேண்டிய உருக்குலைந்த ஒரு றொத்தலை சரசரத்த பெரும் சத்தத் தோடு இயலாமை கொண்டு மிதித்துப்போனான். அதன் பிறகு அபூர்வமாகவே அவனைக் கண்டேன்.
இன்றைக்குக்காண்கிறேன். காட்டி மறைத்தாற் போல் என்னைக்கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கிறான். 'ஏய்' என்று கைதட்டி கூப்பிடும் தூரத்தில்தான் செல்கிறான். அது நாகரீகமில்லை வெரக்கொல இந்த ரோட்டாலதான் வருவான் வேதாளத்தை வீழ்த் திய விக்கிரமாதித் தனாக ரோட்டோர முருங்கை டிரத்தின் கீழ் புத்தரின்தியான நிலையில் நின்று கொண்டிருக்கிறேன்.
சுருட்டை முடியின் அகோர சுருள் புஷ்பம், பிடிவாதமாய் முகத்திலிருந்து தெறித்தெழும்பியிருக்கும் மயிர் வெளித்தள்ளல், தொங்கிய பெரிய கண்கள் என்றாகிய செஞ்சிவப்புக்கலர்களுடன் உயிர்பரவிய யாக்கையை இயல்பானதாகவே செப்பனிட்டிருந்த அவனின் உருவை நினைக்கையில் புகைக்கனவு மாதிரி, கலங்கிய தண்ணிரில் அடியாள விம்பம் மாதிரி மேலெழுந்த வாரியாக அருபமுகம் தந்து ஆட்கொள்ளும். என் நினைவுப்படி மத்தில் பாசிபிடித்திருக்கும் இவனை இன்று எப்படியும் சந்தித்தேயாக வேண்டும்.
யாரோ கூப்பிடுகிற மாதிரி சத்தம் கேட்டதும் திரும்பினேன் உம்மாதான் நின்றா "என்னம்மா.கூப்பிட்டையலா"
"ஓம்மகன் இஞ்ச வாங்க...மரமறுக்கிற மில்லில தூள் வாங் ப்போட்டு ஏழெட்டு நாளாப்பெய்த்து அடுப்பு பத்த வைக்க கொள்ளியுமில்ல சைக்கிலக்கொண்டு போய்துள் பேக்க ஏத்திக்கொண்டாந்து தாங்கோ"
'சீ.இன்னம் கொஞ்சம் நின்டா அவனச்சந்திக்கலாம் அதுக்குள்ள வேல மெனக்கெட்டு தூளும் துப்பட்டையும், சிஸ்.அந்த ரோட்டால போய் கணகாட் டுப்படனும், குவியல் குவியலாக வேலியோரங்கள்ள சின்னச்சின்ன கொங்றிற் கல்ல கொட்டி வெச்சிருக்கானுகள் அது அங்குமிங்கும் தெறிச்சுக்கிடக்கும். சைக்கல தள்ளிக்கொண்டுதான் வெரணும். சைக்கலுக்கு கெரியலுமில்ல முன்னுக்கு ஹென்றில்ல வெச்சி தள்ளி வாரதும் பெரிய கக்கிசம்'
"என்ன மகன் யோசிச்சுக்கொண்டிருக்கையல் சோறு கறியாக்க நேரமாகுதில்ல.
நான் சொல்லுறது ஏதாவது காதில உழுகுதா?”
C1 )

Page 7
“ஓம்மா.நல்லா உழுகுது இதறிங்க நேரத்தோட சொல்லியிருக்கலாமே இப்ப போய்.முணுமுணுத்துக்கொண்டே நடந்து போய் செவர்ல சாத்தி வெச்சிருந்த சைக்கல எடுத்துக்கொண்டு மில்லை நோக்கி மிரிச்சன். "என்னால வேறென்ன செய்ய முடியும்" என்ற மனநிலையை ஒத்தவாறு சைக்கிளும் என்னோடு சரிசமமாய் வேகமான சுவாசத்தைக்கொண்டு பறந்து போனது.
வாச்சர் கிழவனுக்குக்கிட்ட விசயத்த செல்லிப்போட்டு கம்மாலக்குப்பக்கத்தில சாத்தியிருந்த தூள் பேக்கத் கஸ்டப்பட்டு தூக்கி ஹென்றில்ல வெச்சி மெதுவாக தள்ளிக்கொண்டு வந்தன். கையின் மயிர்களுக்கிடையே தூளின் துகள்கள் அகப்பட்டு அரிப்பெடுத்தது. முதுகுத் தண்டால வேர்வை எறங்க பின்னாலையும் கடுமையாக சொறிஞ்சது. உடுப்ப மாத்தியாவது தூள் எடுக்க வந்திருக்கலாம். லோங்கிளிலெல்லாம் தூள் பட்டு புழுதி போல் அப்பியிருந்தது. உடுப்புக்கழுவுற பாடு.பெரிய அழுத்த வேல அது.
ஜங்சனால வெட்டினன். தூரத்தில் ஊட்டுக்குப்பக்கத்திலிருக்கிற போக்கடியால வெள்ள உடுப்போட உருவம் ஒன்று அசைஞ்சு வருவது தெரிந்தது. நடையைப்பார்த்து மதிக்குமளவிற்கு பழகிப்போயிருந்த உருவமது, ஒன்றாக வகுப்புல படிக்கிற பிள்ளைதான். இன்னமும் ரெண்டுமுணு வருஷத்தில கலியான )ாம் மாப்பிள்ள கேட்டிருக்காம் நண்பனொருவன்தான் சொன்னான். எனக்கு அதனால் ஆச்சரியமேது மேற்படவில்லை. பெரிய அதிசயமில்லை என்ற காரணத்தால் அலட்டிக்கொள்ள வில்லையாயினும் ஆம்பிள்ளைகளான நாம ரெண்டு வரிசத்தில எப்படியிருப்போமென்று யோசிக்கத்தலைப்பட்ட நேரம் அவள் என்னைக்கடந்து போனாள். தூள் பேக்கோட புழுதி புடித்துப்போன எனக்கு அந்தப்பிள்ளட மொகத்தைப் பாக்கிறத்துக்கே வெட்கமாயிருந்தது. நடை பின்னி இழுப்பது போலிருந்தது.
என்னைக்கண்டால் லேசாய் சிரிச்சுக்கிட்டுப்போறவள் வலுக்கட்டாயமாய் முகத்தை இறுக்கி வெளிறிய இயந்திரத்தனத்துடன் குனிஞ்சு போனதுதான் மனசை அரிச்சது. ஏதோ பாடசாலையில் நடந்த குழப்பம் ஒன்றினால் "இனி ஓங்களோட கதைக்கயும் மாட்டம் சிரிக்கையும் மாட்டம் என்று மெளனமாய் இருந்தாள். தூய நட்பின் ஆளமாகவே என்னுள் புதைந்தவர்களுள் ஒருவளான இவளால் எப்படி மெளனத்தை வேஷமுலாம் பூச முடிகிறது. சிறுகதையோ, கவிதையோ எதையெழுதினாலும் இவளிடம் காட்டாமல் நான் வாசிப்பதில்லையே என்ற பிணைப்புத்தொடரில் நட்பின் சங்கிலி வளையமாகவே என்னளவில் உறுதியாக இருந்தேன். அப்படிப்பட்ட இவள் மெளனமே உருகியதாய் - என்ன கோலமிது.
நட்பு பற்றி என்வாழ்வின் இப்போதெல்லாம் அதிகமாகவே சிந்தித்துப்போகிறேன். ஆழ்ந்த காதலை விடவும் தூய நட்பு சிறந்தது என்று யாருக்கோ ஒட்டோகிராபில் எழுதியும் கொடுத்திருக்கிறேன். யாரைக்கண்டாலும் இவரோடு நட்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அலைகிறது. ஒரு நாள் வகுப்பில சேர் மனோதத்துவம் பற்றி கதச்சதையும் அதனோடு இழுபட்டதாய் நட்பியல் ரீதியான நோயில் கவ்வப்பட்டிருக்கிறேனா என்பதுமில்லைதான். நன்றாகவே எப்பொழுதும் சிந்திக்கிறேன்.
நண்பர்களுடனான வாழ்வு நிலைத்திருக்குமென்ற சந்தேகத்தின் நிர்ப்பந்தங்களில் நட்பு பற்றி அறிய அவாக்கொண்டு அவர்களின் இயல்பை புரிந்து கொள்ளவே சயனித்திருந்தேன். அதன் தீவிர எண்ணச்சிதைகள் நிலையான வாழ்வுக்கு எங்ங்ணம் துணைபுரியும் என்ற கட்டுக்கடங்கா கேள்வியுடன் நீண்ட பாதைகளில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். வழியில் மேகமன்றத்தின் சொற்பொழிவுகளும், ஆரியனின் கரிய தாக்குதல்களும் என் வாழ்வின் ஒரு பகுதியை வறட்டுத்தன்மையாக்கி வசந்தமிழக்கச் செய்து விட்டதாகவும், மீண்டும் சிலரை சந்திக்கும் வேளையில், நட்பு பற்றி உரையாடும் நிமிஷங்களில் பறி போனவை துளிர்விட எத்தனிப்பதாகவும் நினைக்கிறேன். வாழ்வின் இறுதி வரை சிறந்ததான நட்பொன்று இருந்து விட இயலுமானால் அதைப்பற்றி சந்தோஷ மெய்தி மனமகிழ்பவனாக இருப்பேன் என்ற செய்தி பளிங்கு போன்ற கண்ணாடி உருளைகளின் தோண்டி எடுக்கப்பட்ட நட்பின் எழுத்துருவங்களாகவே நான் மரணித்த பின்பும் என் ஆத்மாக்களில் எழுதப்பட்டிருக்கும்.
(12) (ம்னிதம் )

வெறி கொண்ட சிந்தனையுடன் வெந்து போனவனாய் வீட்டை அண்மித்தேன். வீட்டுக்கடப்பலில் தூள் பேக்கை கெழிச்சுப்போட்டுப்போட்டு கெணத்தடிக்க போய் மேலக் கழுவி வந்து திண்ணக்கட்டோரம் தொடச்சுக்கொண்டிருந்தன். றோட்டின் மீதே என் முழுக்கவனமும் சிதறடிக்கப்பட்டிருந்தது.
அவன்.அவன்.வந்தாலும் வருவான். பேரென்ன எண்டு கூடத்தெரியாதே. அப்பொழுது பின்னால குசினுக்குள்ள இருந்து உம்மா கூப்பிட்டா. நான் போவதற் குள் அவவே எழுந்து நடந்து வந்தா.
"மகன் நம்மட றோட்டால போவானே ஒரு அழகான பொடியன். சுருண்ட முடி. நீங்கதான் ஒரு நாள் சொன்னயள் யாழ்பாணத்திலவிருந்து அகதியாய் வந்தவங்கள் எண்டு"
"ஒம்மா.தூள் வாங்கப்போறத்துக்கு முன்னாலதான் நம்மட றோட்டால போனான். அடிக்கடி போவான்"
"அதில்ல மகன் இப்பதான் அந்தப் பொடியன பத்துப்பதினைஞ்சு பேர் ஜிப்புல தேடி வந்து புடிச்சி துவக் குப்பொடங்கால முதுகு கால்ல எல்லாம் அடிச்சு இழுத் துக்கிட்டுப் போறாங்களாம். யாழ்ப்பாணத்தில இருக்கக்கொலயே இவன் ஏதோ இயக்கம் அப்படி இப்படி எண்டு ஆரோ சொல்லிக்கொடுத்திருக் காங்க. பாவம் அவண்ைட ரெண்டு தங்கச்சிகளும் உம்மாவும். கெம்பஸ் முடிச் சவனாம் . " வாழ் வினி சுருதி நரம் பு தறிக்கப்பட்டவனாய் முனகல்களை மட்டுமே குட்டி போட முடிந் தது என்னால், மெதுவாகவே நடந்து போய் கட்டிலின் விளிம்பில் சொரனை அற்று உட் கார்ந்து கொள்கிறேன். திமிர்த்துப்போயிருந்த நான் தூக்கத்தில் உலவி கட்டிலில் இருந்து சரிந்து கெழியும் வரை கட்டையாகவே இருந்தேன்.
கழிந்து போகும் இப்போதெல்லாம் மனம் இழுபட்டு நொய்ந்து போகிறேன் பிசிர் போல. அவனது முகம் நேரில் வந்து பயம் கவ்வச்செய்கிறது. கடலோரங்களில் சங்கமித்து ஆற்றில் அலைபுரண்டு வரும் போது குமுறலில் கரை தேடி நகர்கின்ற சலசலப் பான பக் கங்களில்; அதன் கண்ணாடித்துண்டுகளில் என் உயிரின் சட்டை மிதப்பது போல் உணர்ந்து
நிற்கிறேன். சாந்த சொரூபியாய் தவங்கிடந்து சமாதானம் கொளுத்திய தீயில் வெந்து போன புலம்பெயர்வு அகதிகளின் முட்டையஞக்குளில் அவன் முகம் பார்த்து கடலாமை ஒட்டின் வழுவழுப்பான பகுதிகளில் சுவாசம் கொள்கிறேன். இராணுவங்க ளின் காலடி சத்தத்துள்ளும் அசிங்கமானதாகவே அவன் பால் ஏற்பட்ட காதல் துயரின் வடிகால்கள் என்னுள் குமுறுவதாய் உள்ளது. நான் எழுந்து நடக்கும் போது என் அல றுகையை நூல் கம்பிகளின் அதிர்வு நாண்களிலும் மெல்லிதான செவிகளால் யாரோ உணர்ந்து பார்க்கிறார்கள். அதுவாறான ஒரு மோசமான நிலையில் என் கலங்களும் உடலின் இயக்கங்களும் பிடுங்கி எறியப்பட்டவனாக முதுகில் பாரம் சுமந்தவனாக அந் தரத்தில் வானங்களுக்கும் பூமிகளுக்கும் எல்லை பிரிக்கப்பட்டிருக்கம் வாயு வெளிப்பரப்பில் அலைந்து கொண்டிருக்கிறேன். என்ஆத்மா இடைக்கிடை அலரிமரத்து நுண் இலைமடல்க ளிலும் ஆலமரத்து வேர் சிறு கணுக்களின் அடி வாரப்பகுதிகளிலும் உறைந்து போய் சில்லிட்டு பொறுத்து நிற்பதாய் உணர்ந்து காற்றாய், நெருப்பாய் அந்தரத்தில் உலவுவதற்கு எத்தனிக்கையில் என் மணிக்கட்டு முட்டுக்களில் பாரமான விண்கற்கள் கட்டித் தொங்க விடப்பட்டவனாய் மனிதம் தொலைந்த நிலையில் நாயாய் புரண்டு தெருவோரப்புழுதியில் குளித்தெழும்புகிறேன்.
C1 3`ა ( up6უfiaurნ

Page 8
ஒரு கிழமை போயிருக்கும் அதையும் உம்மாதான் சொன்னா. அவனது உடல் ஊர்க்கோடியில் பல்லிளித்து நிற்கும் வாவியில் மிதந்ததாகவும்.உருக்குலைந்து போய் தோல்கள் உரிந்து நாறிப்பொங்கியெழுந்ததாகவும். கவிஞர் சிவசேகரம் சொன்னது. போல் அவனுடைய முகம் அவனுடையதாக இருக்கவில்லை என்றதாகவும்.
அந்நிகழ்வால் மரணபயம் என்னுள்ளும் கிளைவிட்டுப்படர்வது போல் இருந்தது. அவனோடு நட்புக்கொண்டிருந்தால் நானும் இந்நேரம் ஏதோ.ஊர்க்கோடி வாவியில் தோலுரிந்து ஊதிப்போனவனாய் உருக்குலைந்து நாற்றமெடுத்தவனாய்.
-முற்றும்
(8ம் பக்கத் தொடர்.) பாளர்களுடன் போராட்டம் நடத்துபவர்களைத்தான் பயங்கரவாதி என்றும், பயங்கரவாத இயக்க மென்றும் அழைக்கிறார்கள்.
இவர்களின் நியாயமான கோரிக்கைகளை வழங்கி இவர்கள் உரிமை, சுதந்திரம் என்பவற்றைப்பெற்று நிம்மதியாக வாழ்வதை விரும்பாத பெரும்பான்மையினர் இவர்களின் சுதந்திர உணர்வுகளை அடக்கி நிலங்களை அபகரித்து குடியேற்றக்கொள்கையிட்டு தமது அடிமைகளாக்கி வைக்க சிறுபான்மையினரை சாடுகின்றார்கள். இந்நிலை நிலைக்குமேயானால் நம்நாட்டில் என்றுமே வெள்ளைப்புறா பறக்கப்போவதில்லை. உலகத்திலும் கூட ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை தமக்கு சமமான சமூகமென்று எப்போது மதித்து நடக்கிறதோ அன்றைக்கு நம்நாட்டிலும் உலகிலும் கொழுத்த வெள்ளைப்புறா சிறகுடையாமல் பறக்க முடியும். அவ்வாறு பறந்தால் அப்பு சொல்றது உண்மை.
எல்லாயினமும் ஒற்றுமையாக ஒன்றாயிருந்த காலமது. அப்பு எல்லாம் வேளாண்மை செய்ய வந்தா வந்ததுதான். வேளாண்மை விதைச்சு அறுவடை செய்ததற்கும்பிறகுதான் போவாங்களாம். பிறகும் வருவாங்கலாம். எங்கட ஊட்டுல நிற்பாங்களாம். மாதக்கணக் கென்ன ஆயுளே இங்கதானாம். - ஆனா இப்பன்டா அவன் நம்மட பகுதிக்கு வர முடியல்ல நாம அவன்ட பகுதிக்கு போக முடியல்ல என்ற நிலமை. நம்மளே சிறு பான்மையினர். மொத்தம் சேர்த்து அவன் தள்ளுறான். அதுக்குள்ள நமக்கெதுக்கு சண்ட, w
இதல்லாம் விட்டுப்போட்டு நம்ம சுதந்திரமாக இருக்கணுமென்டா இருவரும் ஒத்துமப்பட்டு வாழுறதும் மட்டுமல்ல மத்தாக்களையும் சேர்க்க வேண்டும்.
ஒருவருடைய உரிமைகளை மற்றவர்கள் சுரண்டாமல் மற்றைய சமூகங்கீளையும் மதித்து வாழும் போது நிச்சயமாக சமாதானக்கொம்பியூட்டர் பிறக்கும். இவ்வளவும்தான் வேறொன்றுமில்ல.
(முற்றும்)
ஆத்மா சடலத்தை சுமையாக்கியதுபோல் வாழ்வுவிடுபடப் போகும் துயரை சுமந்து கொண்டு - இன்னும் கால்ப் பெரு விரலில் கொழுகிவரும் இண்பத்தை தரிசிக்க நாடி வருகிறது.
- எச். ஆசீக் .
(149 மனிதம் )

நினைவின் ஆறுதல் நெருப்பு
விரல்களை உருட்டிய நீர்த்துளிஒன்றில் இறுகப்பொத்திய நரம்புகளையே ரவை உருட்டிவிட்டாய்
கொழுயில் ஆழய சிலையின் ஊசியாய் இன்னும் மினுக்குகிறாய் அந்த மேசையின் நிழலை ஒழித்தாய் நகத்துள் இருக்கியஊத்தையின் வடிவாய் வெட்டியும் நினைவாகிறாய் புல்லில்படுத்து சொணைக்கும் சொணையாய் இன்னும்குளிக்கவைக்கிறாய்
எங்கேயோஉடலில்முள் பிய்க்கிறது இடையில் முறிந்த கனவை கெண்டமுடியவில்லை இரவுக்குப்பொறுக்காது நிலவையும் தேய்த்துவிட்டன. துரியனை அடித்துவிரட்டு இனினும் கெண்டிப்பார்க்கனும்
கதிரைகள் கறள் பிடிக்கிறது கறையானின் வாசி
நினைவின் ஆறுதல் நெருப்பு பல்லிளித்துபூக்கொத்தியது இடையில் அழியுமோ ஈர்க்கைப்புனைந்து ஒலைதைக்கவிரல்நீளும் சேர்க்கை
கட்டிய கனவின்கண்ணாடியாய் காய்ந்த புல்லும் கசந்துUய்கிறது. உச்சிவையில் இன்னமும் உரசி வெரசி வருகிறது.முதுகு வலிக்க
திண்ணையில் தூங்கிய உடம்பைங்கும் ஊர்ந்த கட்டெறும்பைப்பிழக்க நீளும் மனசு ஏனோ செளத்துக்கிடக்கு
அந்த நட்சத்திரத்தைக்கூட்டிவா ஒரேயொருதடவை மல்லாக்கப்படுத்து மரணித்துப்போகிறேன்.
-எஸ்.எஸ். சாஹிர் ஹ9 லைன்
tബ Lib
மனிதச் சேற்றில் விழுந்த கல்லாயிற்று
so
விடுபடாமல் தவிக்கும் கால ஜடத்தில் விஞ்ஞானக் கூர்கள் கிழித்துவந்தது சாதனை இரத்தம்
மனித எக்களிப்பு பிசாசுபாஷையாக தொடை நடுங்கி ஒழயது காலம் சதையை பிளக்கும் ரவையாக ராக்கட்புணர சிலிர்த்ததுவான மேனி
விக்கித்த நிலையில் விறைத்துப் போன காலத்தை இறந்ததாய் எண்ணி அதனை மனித அரக்க கரங்கள் புதைத்திட எத்தனிப்பு
விழிக்கும் காலத்தின் பார்வையால் மனித நார்களில் ஒன்றோ இரண்டோ υτού 62ίβuj6ύ υθύUιρrπύ துவப்பட்டாலும் சாசுவதகாலத்தில் துல் கொள்ளும் மனிதப்பரிமானத்தைக் எண்ணி வெடவெடத்துக்கொண்டிருக்கும் காலம் மனிதச் சேற்றில் விழுந்த கல்லாயிற்று
-எம்.ஏ.எல். மும்தாஜ் சிபாயா.
(15)(மனிதம் )

Page 9
ரிதாUம்
6) O6T
னத்தினி 60T
U
C16)
மனிதம்
 

கனல்
துயராமி
துரமாய் இரவும் பகலுமாய் கடந்தன பொழுதுகள் அவளின் அவஸ்தையைப்போல் கனலியாய்த் தனிமையன் காமங்கொண்டு நிர்வாண இரவுகளுடன் இச்சை தீர்த்து தனியனாய் உறங்க. அவளின் அடிவயிற்றுச்சுருக்கமாயிற்று இந்தத் துயரத் தீவு காதல் இவளுடையது பரிதாபம் இவளுடையது
நம் வயதும் ஆன்மாவும்
பிரியும் வரை இவர்கள் போராளிகளாவே இருக்கட்டும் நம்மதங்கள் உறவினர்கள் நம்மைப்பிரிப்பதும் நம் உறவை வதைப்பதும் இவர்கள் போராளிகளாக இருப்பதும் ஒன்றுதான் அன்பே
சில இடைக்காலம்
வரை
முன்னூறு நாட்களாக
அவள் முனகல்களை முந்தானைக்குள் புதைத்து பரவசம் கண்டாள் அந்நாள் முனகல்களின் மொழிகளை கண்டறிய துழக்கும் உன்காம உணர்வுகளோ இன்று துப்பாக்கி முனைகளாய் மிரட்டிக்கொண்டிருக்கிறது
மெளனத்தாயின் சுமையாக நீ இருந்த போது சத்தியம் தவறா தயாளனாக கோட்டைகட்டினாள் அந்நாள் இந்நாள் கமைதாங்கும் மைண்மையினர் பெண்மையை அறியத்துழக்கும் உன் காவியுடை காமவெறியின் ஆக்கிரமிப்பால் இயற்கை தந்த பொறுமையும், பலவீனமும் உங்கள் துப்பாக்கி முள் முனர் தவிரு பொடியாகின்றதா?
வேலியே பயிர்களை மேயும் போது நீண்ட விழியாளின் சட்டங்கள் எதற்கு அவள் விழிகள்
நீதமான நியாயங்கள்
பொழியும் வரை மாக்சிசத்தில் ஒரு பாட்டாளி போல் பெண்ணியத்தில் ஒரு பெண்ணிலைவாதம் மட்டும் நிலைக்கட்டும் சில இடைக்காலம் வரை
--LJ65orf1--
(17) மனிதம் )

Page 10
யுத்தம் என்ற அபிவிருத்தி
இன்றைய நவீன பின்னனிர் ஆழலில் உலக நாடுகளிடையே முன்னேற்றமான ஒரு துறை யுத்தப் பிரபலமாகும். ஒரு நாளில் தலை நகரிலோ, வேறெந்த புற நகர் பகுதிகளிலோ யுத்தத் தனி முடுக் கல களி நுண னிய முறையிலாவது வேர் விடப்படா மலில் லை எனலாம். இதற்கமைவாகவே குண்டு வெடிப்பு களும், துப்பாக்கி வேட்டைகளும் நாடெங்கும் பரவலாகி தற்போதைய நவீனத்தனத்துடன் \ ஒட்டிய சமுதாய வாழ்வில் தானும் ஒரு அங்கமாக புரையோடிப்பரந்திருப்பது தவிர்க்கவும் தணிக்கவும் இயலாத வரலாற்று உண்மை. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் யதார்த்த நிகழ்வும் இதுவேதான். இதன் புறவினைகளும் தாக்கங்களும் முன்னேறிப்பறந்து கொண்டிருக்கும் நாகரீக சமுதாயத்திற்கு புரிவதாக இல்லை. மனித நடத்தையோடு அங்கமாகிக்கொண்ட யுத்தத்தின் ஆரம்பங்களும், அதன் கொடிய அழிவுகளும் வரலாற்றுப்பாதையில் குருதிக்கலவையில் புரளும் மாமிச பிண்டங்களாகவும், நெஞ்சமோ காதுகளோ உணர்ந்து கொள்ள முடியாத வீறிடல்களாகவும்தான் தடங்களுற்று வந்திருக்கின்றன.
ஆரம்ப காலப்போராட்டங்கள் சமுதாய அடித்தளத்திலிருந்தே தனிமனித சமூக உரிமைகளை பெற்றுக்கொள்வதாக அமைந்தன. இதனோடு தொடர்புடையதான இன்றைய போர்ச்சூழல், வரலாற்றில் கொடியதாகவே வர்ணிக்கப்படுகிறது. இதற்கான காரணங்களும் பல படிகளைத்தாண்டியே மேலேறி வந்திருக்கின்றன.
காலத்திற்குக்காலம் யுத்தங்கள் நடைபெறுவதற்கான எதிர்பார்ப்புகள் புரட்சிகள் மூலமும், சுதந்திரப்போராட்டங்கள் மூலமும் தொடங்கி மனித மனங்களில் மாபெரும் இரு பள்ளங்களை தோண்டிய உலக மகாயுத்தங்கள் வரை தமது காலடிகளை ஊன்றச் செய்திருக்கின்றன. அடுத்தடுத்து வரிசையாக கைகட்டி நின்ற முதலாம் இரண்டாம் உலக மகாயுத்தங்கள் மனித வரலாற்றின் சனத்தொகை வீதங்களில் தன் அழிவுக்கரத்தை புகுத்தியதிலிருந்து நவீனரக யுத்த கெடுபிடிகளுக்கு தயார்படுத்தும் வேளை வரை தன் பணியை செம்மையாக நிறைவேற்றியமையே போருலகிற்கு குத்து விளக்கேற்றி வைத்த ஆனந்தமான செய்தி. இவ்வகை நோக்கில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பாரிய விளைவுகளை உலகம் இலகுவில் மறந்திருக்க முடியாது. படுகொலைகள் மலிந்து விட்ட யுகத்தில் மனிதாபிமானம் கிழித்தெறியப்பட்ட நாற்பது இலட்சம் பேரின் பலிக்களமாக விளங்கியதே இரண்டாம் உலக மகா யுத்தத்தின் விசேட தன்மையாகும்.
1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலந்தைத்தாக்கியதிலிருந்து 1944ம் ஆண்டு செப்டம்பர் மாதம்வரையிலான இடைக்காலத்தில் ஐரோப்பாவில் பல நாடுகளிலிருந்தும் “மனிதக்கும்பல்கள்” ஒய்ச்சல் ஒழிவு இல்லாமல் லொறிகளிலும், குதிரைவண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும் புளி முட்டைகளைப்போல் வந்திறங்கி குவிக்கப்பட்டார்கள்.
போலந்தின் கிராக்கோ நகருக்கும், காட்டோவிஸ் நகருக்கும் இடையிலுள்ள மைதானத்தில் புழுக்களைப்போல் நெளிந்து நசுங்கி திறந்த வெளிச்சிறை முகாமில் செத்து வீழ்ந்தவர்களும் பல்லாயிரமாகவே காணப்பட்டார்கள். இதனை "ஸ்டானிஸ்டா வைகாட்ஸ்கி" என்ற கட்டுரையாளர். "பெலன்கள். ஆண்கள் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள். நொண்டிகள், முடம் எல்லோரும் வெந்து சாம்பலானார்கள். வேறு மொழி பேசியதோ, அவர்களுடைய தலை முடியின் நிறம் வேறாக இருந்ததோ, அவர்கள் தங்கள் சொந்தப்
4 RA DCTs
 

பண்பாட்டை விரும்பியதோதான் அவர்கள் புரிந்த குற்றம். இதற்காக அவர்களை விஷவாயுவால் கொன்று எரியும் காளவாய்க்குள் தள்ளினார்கள். அக்கிரமத்தை எதிர்த்ததிற்காக, கடவுளை நம்பியதற்காக, நியாயம் வழங்க வேண்டுமென்று விரும்பியதற்காக அந்த மக்கள் ஈவு இரக்கமில்லாத சித்திரவதைக்கு ஆட்பட்டார்கள்” என்று மனமுருகி எழுதினார். இவ்வாறு நாஜிகளின் கொடுமைகளை நம்பமுடியாதளவுக்கு நாம் நம்புகையில் நம் கண்முன்னேயே ஹிட்லர், முஷோலினி, இடியமின், பினாஸே, மொபட்டு போன்றவர்களின் சர்வதிகார அடக்குமுறை ஆட்படுத்தலுக்கு உலகம் சமகாலை ஆளாகியிருக்கிறது. "சமாதானம் என்பது கோழைகளின் வார்த்தை. கலை என்பது துப்பாக்கியை சுழற்றுவது போன்ற உணர்வு" என்ற ஹிட்லரின் தத்துவார்த்த கருத்தை இன்றைய உலகம் இலகுவில் மறப்பதாகவில்லை. சமாதானத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் இன்றைய தாபனங்கள் போர் மூலங்களின் ஆணிவேராகவே கருதப்படுகிறது. சமகால காஷ்மீர்-இந்திய, பலஸ்தீன்-இஸ்ரேல், பொஸ்னிய-ஸேர்பிய பிரச்சினைகளின் மூலஸ்தானங்கள் வேவ்வேறுதாபனங்களால் தூண்டி விடப்பட்டு மறை முகமான பனிப்போருக்கு வந்திருப்பது உலக சமாதானத்திற்கெதிரான நச்சுக்குரலாகும்.
3ம் உலக மகா யுத்தம் ஒன்றிற்கு அடி கோலாக இவை காணப்படலாம் என்ற சர்ச்சை ஒரு புறமிருக்க பாரிய அழிவுகள் விடயத்தில் அந்த ஹிட்லரும் அவனோடு இயைந்த சர்வதிகாரிகளும் மேலென்று படுவதாய் விமர்சனக்குறிப்புகள் வட்டமிட்டு காட்டுகின்றன. மேற்குலக நாடுகளின் அணுவாயுதக் கொள்கைகளும், மறைமுக ஆயுத வியாபார கலாச்சாரங்களும் யுத்த முடிவின் வயதெல்லையை அதிகரித்துக்கொண்டு செல்லும் காலஓமோன்களாகி விட்டன. "யுத்தப்பேய் பிடிக்காத நாடொன்றிற்கு சாபக்கேடே விளையும்" என்ற கருத்து நிலவிவரும் யுகத்தில் நம்நாடும் சாபக்கேட்டிலிருந்து தப்பிவிட்டது என்பதாக ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியது கடமையாக நம்மீதும் திணிக்கப்பட்டுள்ளது. சமாதான நலன்விரும்பி சமுதாயமொன்று சில நூற்றாண்டுகளுக்குப்பின்னும் உருவாவதற்கு முன்னர் யுத்த விமானங்களையும், பல்ரக டாங்கிகளையும், லோஞ்சர் துப்பாக்கிகளையும் உள்ளடக்கி அதன் எண்ணிக்கை விகிதத்தை கணக்கெடுப்பில் பகுப்பாய்வு செய்து ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிடும் சாதனங்களாக அவைகளையும் சேர்த்துக்கொள்ள அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் நாம் ஆச்சரியப்படப்போவதற்கில்லை. (முற்றும்)
-எஸ்.எல்.ஹபீல்
சென்ற இதழ் பற்றி.
மனிதம் தனது பாதையை விஸ் திரப்படுத்தியுள்ளது. இம் முயற்சியானது வரவேற்கத்தக்கதே. அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய உயர்தர மாணவர்களின் முதலும் சிறப்புமான இம்முயற்சி ஏனைய மாணவர்களை ஓர் இலக்கிய பாதையில் இட்டுச்செல்லக் கூடிய வழிகாட்டியாக அமைகின்றது. மாணவர்கள் தங்களின் இலக்கித்திறனை வெளிக்கொணர்ந்து சிறந்த படைப்பாய் உருவெடுத்தாலும் இடையில் நிற்காமல் இம்முயற்சி தொடர வேண்டும். பாடசாலையும், படிப்பும் என்றில்லாமல் மாணவர்கள் நூலகம், வேறு படைப்பு என்று தங்களின் கவனத்தையும் , சிந்தனையையும் பரவலாக்கினால் மட்டுமே இம்முயற்சியில் ஈடுபட முடியும். அதனால் இம்முயற்சி பாராட்டக்கூடிய தொன்றாய் அமையும். அதிபர், ஆசிரியர்களின் உற்ற துணையும் முக்கிய காரணியாகும். முதல் குழந்தையை பற்றிய எதிர்பார்ப்புகளைப்போல் மனிதமும் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்புகள் வீணாகாத படி முதல் மனிதம் வெளிவந்தது. ஆனாலும் இரண்டாவது மனதம் ஆக்கங்கள் குறைவானதாகவும் சிறியதாகவும் வெளியானது. இது ஆசிரியர்களின் பிழையல்ல ஆக்கவாளர்களின் பிழையெனலாம். என்றாலும் ஆசிரியர்களின் விடாமுயற்சியினால் இதனை விஸ்திரப்படுத்தியிருக்கலாம்.
எதிர் காலத்தில் மேலும் வளர மொட்டு விட்டிருக்கும் மனிதமும், அதன் ஆசிரியர்களும், கலை இலக்கிய ஆக்கங்களும் வழித்தடையின்றி மேலும் முன்னேற வேண்டும். இதற்கு அனைவரினதும் ஆசியும் உதவியும் உண்டு.
-எம்.எம்.றிஹானா
மனிதம் சஞ்சிகை பற்றி உங்கள் கருத்துக்களும் ஆக்கங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Page 11
a črá čícv r.
LOCAU & |DD CLU'S, FAD,
PHOTO COP', RUBBGR STAMPS, FIUM ROUE COLLECTING
உள் நாட்டு வெளி நாட்டு தொலை பேசி அழைப்புக்கள், போட்டோ பிரதி,
பெக்ஸ், இறப்பர் முத்திரைகள் செய்பவும்
புகைப்பட சுருள்களை கழுவவும்
நாடுங்கள்
Cellte : ()72-6() l I77 TI : () (65-297.52 065-29752 : אלו:"וI
 

Zarfra fosrcors
torri
Mill Street, Akkaripattu.