கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பயில்நிலம் 2004.12

Page 1


Page 2
தெரிவு
தம்பி தடி சேகரிக்க, அப்பா மண்குழைக்க, அம்மா அழகுபடுத்த அமைந்தது என் அரண்மனை என்னை மீறிய தெரிவாய்
அடிக்கடி என்னுள் வந்துபோகும்
భ
பக்கத்து வீட்டு கமலாவும், சில குடில் அமைக்க அவசரப்பட்டன மனை புகுதல், பிறந்த தினம், பொ அவரவர் அரண்மனை அமர்க்களட்
ங்கல், தீபாவளி என
༦༦༨ பக்கத்து தெரு பாலு திடீரென் அறிவிப்பு வெளியிட்டான்
எங்கள் குடில்களில் அவன் சொல்லும்
滚
நடந்தனர் சிலர்
KX- ரயுடைத்தது
மரங்கள் சரிந்தன எல்லாம் அடித்துப் போயின - இருந்தும்
ரண்மனை நிலைப்பதாய்”
ரிவாரங்களும் கூச்சலிட்டனர்
தனித்த (35 வந்துபோகும் வர்ணம் மட்டும் அணைபோட் யாருமற்று எனை உசுப்பேற்றுகிறது எனையே அறியாது எனக்குள் உருவாகும்
வர்ணத்திற்கு யார் எஜமான்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/யில்/தில/0
மாத இதழ்
தே.அபிலாஷா விபிரபுநாதன்
ளம்பரம் : ந.பிரசாந்த் விநியோகம் பொ.கோபிநாத்
593, வைத் * ଛା 5527074
பக்க வடிவமைப்பு : கு.அனுசலா அச்சுப்பதிப்பு : விகடன் பிறின்ரர், கொழும்பு 06,
236329
சந்தா விபரம் :
195lbuj 2004
தியா வீதி,
漫
இதழில்.
கட்டுரை :
அ.செஞ்ஞாயிறு ம.இளஞ்செழியன் சு.சுபராஜ் வி.பி.நாதன் பொ.கோபிநாத்
கவிதை :
லோ. பிரசன்னவருண்
இ. சுபாரா நா. மரியாஎன்டனீட்டரா ரா. குழலி
கவிதா
மீரா
க. லீலாவதி உ. பிரதீப்
மீநிலா
LDIT6
சிறுகதை :
ஏ.ஆர். திருச்செந்தூரன்
நேர்காணல் :
நாடகக் கலைஞர்
பிரளயன்

Page 3
/யில்/தி/9 மாற்றங்களை வேண்டி
விதைப்பு 01 91g.j660)L 04
டிசம்பர் 2004
புதியதோர் உலகு செய்வோம்
ன்றைய காலகட்டத்தில் சமூக முரண்பாடுகளும், அவற்றின் விளைவாக சமூகப் பிரச்சினைகளும் நாளாந்தம் வளர்ந்து செல்கின்றன. பொருளாதார சுரண்டலும், அரசியல் அடக்குமுறைகளும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அது வர்க்க அடக்குமுறையாக, இன அடக்கு முறையாக, சாதி அடக்குமுறையாக, பெண் அடக்குமுறையாக இன்னும் பிற வடிவங்களிலான அடக்கு முறையாகச் செயல்படுகின்றது.
இன்று தகவல்கள், கருத்துக்களை பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடாக வணிக பொருளாதார விருத்தி வேண்டும் சக்திகளே எமக்கு அன்றாடம் 24மணிநேரமும் வழங்கிக் கொண்டு இருக்கின்றன. இவர்களே நாம் சிந்திப்பதையும், செயற்படுவதையும், உரையாடுவதையும், உண்பதையும், உடுப்பவைகளையும், உறவாடுவதையும் தீர்மானிக்கின்றார்கள். இவர்களால் மக்கள் மேல் திணிக்கப்படும் நுகர்பொருள் கலாசாரம் மானிடப் பண்பாட்டிற்கு எதிராக வளர்ந்து வருகின்றது.
எமது பண்பாடு புடவைக் கடையிலும், நகைக் கடையிலும் கொலுவிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமையால் பெருமூச்சு விடுகின்றது. புத்தகக் கடைகள் போட்டிப் பரீட்சைப் பயிற்சிகளில் மாணவர்களை முடங்கச் செய்து விடுகின்றன. இதனால் பெருகிவரும் பண்பாட்டு ஆக்கிரமிப்புகளும், சீரழிவுகளும் எமது இளைய தலைமுறையினரை மிக வேகமாகப் பாதித்து விடுகின்றன.
இவை வெறும் பண்பாட்டுச் சீரழிவு மட்டுமல்ல. ஆதிக்கச் சக்திகளின் அடிமைத் தனங்களை ஆராதித்து ஏற்பவர்களாக மக்களைப் பக்குவப்படுத்தும் உள் நோக்கமும் இதனால் ஈடேற்றப்படுகிறது.
இந்நிலைக்கு நாம் ஆட்படத்தான் வேண்டுமா? இத்தனை தெரிந்தும் நாம் மெளனமாக இருப்பது ஏன்? சுய சிந்தனையும், அரசியல், அறிவியல் விழிப்புணர்வும் அற்றவர்களாக மக்களை ஆக்கும் இத்தகைய சீரழிவுகளிற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டாமா? மெளனமாக இருப்பது என்பது பேசாமல் இருப்பது மட்டுமல்ல, பேசும் பொழுது உண்மைகளை வசதியாக பேசாமல் விடுவதும் ஆகும். இது இன்று பலர் கைகளில் மிக வசதியான கருவியாக உள்ளது.
நாம் ஒவ்வொருவரும் எமக்கான சமூககக்கடமையை உணரவேண்டும். இன முரண்பாட்டையே ஊதிஊதிப் பெரிதாக்காமல், பிரதான எதிரியை அறிந்து அம்பலமாக்க எமது குரல்கள் ஓங்கி ஒன்றித்து ஒலிக்க வேண்டும். எப்பொழுதும் அனைவரையும் மகிழ்விப்பதற்காக மட்டுமே எமது குரல் ஒலிக்க முடியாது. தீயவற்றைக் கண்டால் மோதி மிதித்துவிடும் “மனத்தீ’ எம்மிடத்தில் வேண்டும்.
பகுத்தறிவும் மனச்சாட்சியும் எங்கு தொடர்பற்றுப் போகிறதோ அங்கு மனிதம் மரணித்து விடுகிறது. இரண்டும் ஒன்றிணையும் போது ஒரு பண்பாட்டுத் தளத்தில் வேர்விட்டு அது துளிர்க்கும். மனிதகுல வரலாறு கற்றுத்தந்த பாடம் இது. இனிமேலே படிக்க இதழ் உங்கள் கைகளில்.
ஆசிரியர் குழு கவனிக்கவும். பயில்நிலம் புதிய எழுத்தாளர்களை இனங்காணவும்
படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முகமாகவுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது
 
 
 

ab GÓ7 C2 a 6° CM40 () உருவாகாத தேசத்தில்
ఢ தலைவனாகவே தன் கனவுகளோடு மரித்துப் போயிருக்கிறார். “பாலஸ் தீனத்தின் தந்தை” எனப் போற்றப்படும் யசீர் அரபாத். உலக வரலாற்றில் நீணி ட காலமாக விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் தேசமாக நாம் பாலஸ் தீனத்தைக் குறிப்பிடலாம். யசிர் அரபாத்தின் நம்பிக்கையும் சிந்தனையும அர்ப்பணிப்பும் பாலஸ்தீன விடுதலை M அமைப்பை வெற்றிகரமாக நீண்ட காலமாக காவி வந்துள்ளது. விடுதலைப் போராட்டத்துக்கு தலைமையின் அவசியம் குறித்த வினாவிற்கு யசீர் அரபாத்தின் வாழ்க்கை பல வழிகளில் சான்றாகும் என்பதில் ஐயமில்லை.
1ம் உலகப் போரின்போது தங்களுக்கு உதவியதாக பிரிட்டிஷ் அரசாங்கம் “பெல்போர் உடன்படிக்கையின் மூலம் யூதர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமுகமாக 1948ல் இஸ்ரேல் என்ற தேசம் தோற்றம் பெற்றது. இதன் விளைவாக 19வது வயதில் படிப்பை இடைநடுவே நிறுத்திவிட்டு காசா (Gaza) பகுதிகளில் யூதர்களுக்கு எதிராக போராடத் தொடங்குவதோடு இவரது புரட்சிகர வாழ்வு தோற்றம் பெறுகிறது. 1949ல் பாலஸ்தீன மாணவர்கள் அமையத்தை அமைத்த இவர் 1953ல் எகிப்திய தலைவருக்கு “பாலஸ்தீனத்தை மறக்க வேண்டாம்” என்று மட்டுமே எழுதப்பட்ட கடிதத்தை அனுப்பி வைத்தார். 1959ல் இரகசியமாக குவைத்தில் அவர் ஆரம்பித்த ஃபட்டா (Fatah) அமைப்பு 1967ல் 6 நாள் யுத்தத்தில் அராபிய நாடுகள் இஸ்ரேலிடம் தோல்வி கண்டதையடுத்து, அராபிய நாடுகள் மத்தியில் பலம்பெற்ற அமைப்பாக மாற்றமடைந்தது. 1969ல் PLOவின் தலைமைப் பதவியை அரபாத் ஏற்றதிலிருந்து பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டம் வலுவடையத் தொடங்குகின்றது. அவரது ‘ஒரு கையில் ஒலிவ் இலையுடனும், மறுகையில் விடுதலைக்கான துப்பாக்கியுடனும் வந்திருக்கிறேன். ஒலிவ் இலை என் கையிலிருந்து விலகி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்ற வரிகள் ஒரு சுதந்திரத் தாகத்துடனான புரட்சியாளரின் வாய் மொழிகள் என்பதில் ஐயமில்லை. இவ்வாறாக போராடியே தீருவது என்ற சுதந்திர வீரரின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதே எல்லோரும் கற்க வேண்டிய பாடமாகும்.
1987ல் அரபாத் தன் போர்வீரர்களுடன் மேற்கு கரையில் இன்டி. பாடா (Inti Fada) வை ஆரம்பித்தார். இது உலகஅரங்கின் பார்வையை இவர் பக்கம் திருப்பியது. 1988ல் இவரது கொள்கையில் மாற்றம் தெரிந்தது. ஐ.நாவின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய அரபாத் ‘நாங்கள் போரின்றி அமைகியாக பயங்கரவாதத்தை தவிர்த்து வாழ விரும்புகிறோம்” என்றார்.

Page 4
இப்பேச்சு பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான திருப்பு முனையாக கருதப்பட்டது. இதன் பின்னர் இதனை வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டு பாலஸ் தீனத்திடம் ஒரு சில பகுதிகளைக் கொடுத்து அடக்கி ஆளும் முயற்சி | கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் விளைவாககாலப் போக்கில் பால ஸ்தீனர்கள் அமைதியாக வாழ்வது 後父 பற்றியே சிந்திக்கப்பட்டதே தவிர அவர்கள் சுதந்திரமாக வாழ்வது பற் சிந்திக்கப்படவில்லை. அரபாத் தன் கோட்பாடுகளிலிருந்தும் கொள்கைகளிலிருந்தும் விலகி 1993இல் ஒஸ்லோ உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார். இவ் உடன்படிக்கையை ஏற்படுத்திய முக்கிய நாடாக, மூன்றாம் தரப்பாக பங்குபற்றியது நோர்வே என்பது இங்கு நோக்க வேண்டியது. இவ்வுடன்படிக்கை அரபாத்தை சுதந்திரமான தேசத்தின் தலைவராக அன்றி இஸ்ரேலிய கட்டுப்பாட்டுடன் வாழும் ஒரு தலைவராக மாற்றியது. தனது மக்களை இஸ்ரேல் நிர்வகிக்கவும் அதிகாரம் செய்யவும் வழி அமைத்துவிட்டார் அரபாத். உண்மையை அறியாமல் அமெரிக்காவின் மாய வலைக்குள் விழுந்தார் அரபாத்.
இவ்வுடன்படிக்கையின் விளைவாக இஸ்ரேலியர்கள் தங்கள் கட்டிடங்களை பாலஸ்தீனப் பகுதிகளில் கட்டினார்கள். பாலஸ்தீனர்களது வாழ்விடங்களை ஆக்கிரமித்தார்கள். பாலஸ்தீனத்தைச் சுற்றி படைகளைக் குவித்து விசாரணை நிலையங்களையும் அமைத்தார்கள். இதன் மூலம் பாலஸ்தீன அரசின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியதாயிற்று.
இத்தகைய ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதற்காக அரபாத்திற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 1994ல் வழங்கப்பட்டது. இதில் கையொப்பமிட்ட இஸ்ரேலிய பிரதமர் “யிற்சாக் ரபின்’ (Yitzhak Rabin) சில காலத்தின் பின்னர் இஸ்ரேலிய வலதுசாரிகளால் கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் யசீர் அரபாத் இறந்துவிட்ட பிறகும் இன்றுவரை ஒப்பந்தத்தின் விளைவுகளை பாலஸ்தீனம் அனுபவிப்பது வேதனைக்குரியது.
பல கொலை முயற்சிகளிலிருந்தும், 1982ல் லிபிய பாலைவனத்தில் இடம்பெற்ற விமான விபத்திலிருந்தும் தப்பித்துக் கொண்டார். இதனால் இவரை சாகாவரம் பெற்றவர் என பாலஸ்தீனர் அழைப்பதுண்டு. அரபாத்தினுடைய உடல் நிலையை கவனித்து வந்த மருத்துவர் அரபாத் நஞ்சூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஐயம் தெரிவித்துள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
 
 
 

அரபாத்தினுடைய இறுதிக் காலங்கள் மிகக் கொடுமை யானவை. 2002 மார்ச் 19ல் இஸ்ரேலிய அமைச்சரவை அர பாத்தை எதிரி என பிரகடனப் படுத்தியது. பிரதமர் ஏரியல் ஷரோன் அரபாத்தை பாலஸ் தீனத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்படி உத்தரவிட்டார். அதற்கு அரபாத் பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதைவிட இறப்பதே மேல் என்றார்.
தனது இறுதிக் காலத்தை தனது நாட்டிலேயே சிறைக்கைதிபோல் இஸ்ரேலிய கவசவாகனங்கள் புடைசூழ கழித்தார்.
பல ஜோடானியர்களும், லெபனானியர்களும் அரபாத் தங்களது நிலங்களில் இருந்து இஸ்ரேலுக்கெதிராக போரிட்டதனால் தங்களது பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தி விட்டதாக அரபாத் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரபாத், சதாம் உசைனின் குவைத் முற்றுகைக்கு ஆதரவை வழங்கியதால் பல அரபு நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். இதன் விளைவாக சவுதி அரேபியா உட்பட்ட அரபு நாடுகள் PLO விற்கு வழங்கி வந்த நிதி மற்றும் அரசியல் உதவிகளை நிறுத்திவிட்டன.
இன்று பாலஸ்தீனம் தலைமை அற்றுக்கிடக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக அரபாத் தலைமைத்துவத்தை தன் கையிலேயே வைத்திருந்தார். தனக்கு அடுத்தபடியான தலைமையை உருவாக்கும் முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தனது கடைசிக் காலத்தில் ஹமாஸ் இயக்கத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது பாலஸ்தீனம் ஹமாஸ், ட்படா (Fatah), PLO என துண்டுபட்டுக் கிடக்கிறது. அரபாத்தின் சுதந்திர தனிநாட்டுக் கனவு, வெற்றுக்கனவாகவே போய் விடுமா? விடுதலைப் போராட்டத்தில் தலைமையின் தவறுகள் பல சமயம் திருத்தப்பட முடியாமல் போகின்றன. விடுதலை இயக்கங்களுக்கு பாலஸ்தீன தேசியப் போராட்டமும், அரபாத்தின் தலைமையும், நிறைய பாடங்களை கற்றுத்தரும் என்பது உண்மையே. உலக வரலாற்றில் பாலஸ்தீனம் பற்றிப் பேசும் போது இரண்டு விடயங்களே ஞாபகத்திற்கு வரும். ஒன்று பாலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத். இரண்டாவது சுதந்திரத்திற்காக எதிரிமேல் கல் எறியும் சிறுவர்கள். வரலாறு எப்போதும் ஆசானாகவே இருந்து வந்துள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.

Page 5
கருமுகில்களே. விலகிவிடுங்கள் அந்த நம்பிக்கைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் இருண்டு கிடக்கும் மனிதர்களின் இதயத்தை ஊடுருவட்டும்.!
சாகாத நம்பிக்கைகளையும், மனதிடையே நாட்டுங்கள் சாதனை நிழலில் சற்றேனும் நீங்கள் இளைப்பாறிப் போகலாம்.!
அநியாயம், உங்கள் கன்னத்தில் அறைகையில் யேசுவாக மாறி விடாதீர்கள் ஆண்டவரல்லவே நீங்கள் மாண்ட பின்பும் உயிர்த்தெழ.?
அநியாயத்தை சிலுவையில் அறையுங்கள். ஏனெனில் இப்போது நீங்கள் கொடிய யூதர்களல்ல; விடிவைக் கொடுக்கும் சகாயர்கள்.
புரையோடிய கொள்கைகளைப் புறக்கணியுங்கள்;
966 - வாழ்விற்குப் புறம்பானவை.!
கோணல் கொள்கையை நிமிர்த்துங்கள்; ஏனெனில் - உங்கள் மூலமாக இங்கே பல புதிய பிரமாக்கள் உருவாகலாம்..!!!
மீரா (ஜேர்மனி)
கனமாய் ஒரு வியர்வை
கண்டவுடன் ஒரு வியப்பு!
கொடுத்துச் சிவந்த கைகளையும் உழைத்து மரத்த கைகளையும்
கண்டவுடன் ஒரு வியப்பு சீர்தூக்கி பார்த்தேன்! வியப்பு தீர்ந்தது உழைத்து மரத்த கரங்களே கனமாகத் தோன்றின
உழைப்பவன் உடலில் ஊறிய வியர்வை,3
பூமித்தாயை முத்தமிடமுன்
பணக்கட்டுகளை முத்தமிடுகிறார்கள்
முதலாளிமார்கள்.
- Geon. பிரசன்னவருண்
 
 

தருக்கியின் தருவ நட்சத்திரம் இல்மஸ் குனே (1937-1984)
“பொதுவாக நான் துருக்கிய கதாநாயகர்களின்
பணியை வெறுக்கிறேன். அவர்கள் எல்லாவற்றிலும் a w X இலகுவாக வெற்றியீட்டுகின்றார்கள். எனது கதாநாயகன் இNெ சாதாரணமானவன். அநீதியை எதிர்ப்பவன். ஆரம்பத்தில் அநீதியைக் கண்டுகொள்ளாதவன், பின்னர் அநீதி அத்துமீறலாகி வாழ்வினை நசுக்க முற்படும்போது அதை எதிர்த்துப் போராடும் சின்னமாகிறான். ஆனால் இங்கு முக்கிய விடயம் என்னவெனில், என் கதாநாயகன் கடைசியில் தனது பணியில் தோற்றுப்போகிறான். என் கதாநாயகனுக்கு ஹிரோயிசங்களைப் புகுத்த நான் விரும்பவில்லை. ஏனெனில் எனது தனிப்பட்ட கருத்தின்படி ஒரு நாட்டின் அடக்குமுறைக்கு எதிரான வெற்றியளிக்கக்கூடிய நடவடிக்கை தனிமனிதனில் தங்கியில்லை. அது கூட்டாக இணைந்து ஒத்துழைக்கும் மனப்பாங்குடன் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சமூக நடவடிக்கை மூலமே நிறைவேற்றப்படலாம். இதனை வலியுறுத்துவதற்காகவே தனிமனித ஹிரோயிசங்களை நான் வெறுக்கிறேன்” என 1984ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய செவ்வியில் இல்மஸ்குனே (YimaZguney) கூறியிருந்தார். துருக்கியின் துருவ நட்சத்திரம் என்றழைக்கப்படும் இந்த இல்மஸ்குனே யார்?. இவருக்கு சிறந்த இயக்குனர், தனித்துவமான நடிகர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், வீரம் மிகுந்த புரட்சிகர போராளி என பலமுகங்கள் உண்டு. இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உள்ளங் கவர்ந்தவராகக் காணப்பட்டார்.
துருக்கி, ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஒடுக்கப்பட்டுவரும் குர்திஸ் இனத்தின் ஏழைவிவசாயக் குடும்பத்தில் 1937ம் ஆண்டு இல்மஸ்குனே பிறந்தார். இளமைக்காலத்தில் குர்திஸ் இனம் ஒடுக்கப்பட்டுவருவதை கண்ட இல்மஸ்குனேக்கு கண்ணை உறுத்தியது. இவர் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1955இல் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் எழுதிய சிறுகதைகளில் புரட்சித்தன்மை கொந்தளித்தமை காரணம். அவர் ஆறு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

Page 6
துருக்கிய ஆட்சியாளரின் பிற்போக்குத்தனமான கொள்கை, அமெரிக்கா தன் ஆளுமைக்கான ஓர் படைத்தளமாக வைத்திருந்த புதிய| காலனித்துவம்; ஜேர்மனி போன்ற ‘நேட்டோ’ நாடுகள் துருக்கியை ஒடுக்க வழங்கும் " ஒத்துழைப்புக்கள் என எல்லாவற்றினையும் & ബ& జీ భ மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய ஒரே ஆயுதம் திரைப்படங்கள்தான் என்பதை தனது சிறைவாசத்தில் இருந்தது போது உணர்ந்தார். இவரது தீர்மானம் உணர்ச்சி மயமானதாகவே இருந்தது. இதனாலேயே சர்வதேச அளவிலும், துருக்கியிலும் லட்சக்கணக்கான மக்கள் அவரை விரும்பினார்கள்.
1961-1963 சிறைவாசகங்களுக்குப் பின்பு, திரையரங்குகளுக்கு படச்சுருள்கள் எடுத்துச் செல்லும் ஒரு சாதாரண ஊழியராக தன் திரையுலக வாழ்வினைத் தொடங்கினார். 1963ல் நடிகரானது அவரது வாழ்வில் முக்கிய திருப்புமுனையாகும். தனது 26வது வயதில் திரைப்பட நடிகனாக நூறு படங்களில் நடித்த அவர், மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரும் நடிகனாகப் புகழ்பெற்றார். 1972ல் தொழிலாளர்களினது அவலங்களை நேரிடையாகக் கண்ட போதும், குர்திஸ் இன அவலங்களை அனுபவித்த போதும் ஏற்பட்ட கசப்புணர்வுகள் காரணமாக தனது சொந்த நடைமுறையையும் புரட்சிகரமானதாக மாற்றிக் கொண்டார்.
அவரது திரையுலக வாழ்வின் முதல் காலகட்டமாக 60களின் நடுவில் 100 பொழுது போக்குப் படங்களை இயக்கியும் நடித்தும் இருந்தார். இரண்டாவது காலகட்டம் சமூகக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதைகளை உருவாக்குவதில் கழிந்தது. 20 - 30 வரை திரைக்கதைகளை எழுதி இருந்தார். இவை புத்தகவடிவில் பதிப்பிக்கப்பட்டு நாவல்கள் போல மக்களைச் சென்றடைந்தது.
இதுவே அவரின் புகழுக்கு பெரிதும் உதவிய விடயமாகும். இவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்தன. மூன்றாவது காலகட்டம் சொந்த திரைப்படங்களை தயாரித்தது ஆகும். இதில் ‘பூமியின் மணமகன்’ (1968) ‘பசியெடுத்த ஒநாய்கள் (1969), ‘நம்பிக்கை” (1970) போன்ற படங்கள் முக்கியமானவை. மேலும் இவருடைய குறிப்பிடக்கூடிய படங்கள் ‘நண்பன்’, ‘கவலை, “மந்தை”, “பகைவன்”, “ஏழை”, “பாதை’ போன்றவைகளாகும். இதில் ‘மந்தை” சிறையில் இருந்து இயக்கிய படமாகும். ‘பாதை’ படம்தான் இவருக்கு உலக அளவில் சிறந்த அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த
lil D.
8
 

இப்படத்தில் துருக்கியின் வாழ்வு முறையை அற்புதமாகச் சித்தரிந்திருந்தார். 1982ல் “கேன்ஸ்” உலக திரைப்பட விழாவில் முதலாம் இடத்தை பெற்றதும் இப்படம்தான். “பாதை (1975)”, “மந்தை (1978) போன்ற படங்கள் உலகின் பல நாடுகளில் 皺.鯊繳 VN வெற்றிக் கொடியை நாட்டிய படங்கள் ஆகும். ஆனால் இவை இரண்டும் துருக்கியில் தடைசெய்யப்பட்டு இருந்தன. அப்போது அவர் 'குனே பிலிம்ஸ்’ என்ற சொந்த படக்கம்பனியை நடாத்தி வந்தார்’. நான் மிகப்பெரும் நடிகர்களில் ஒருவரானபோதுதான் என் மனவேதனை தொடங்கியது. நான் செய்து கொண்டிருந்தவை எனக்கு மனமகிழ்ச்சியைத் தரவில்லை. குறிப்பிட்ட சிலபடங்களில் மட்டும் நடிப்பது என முயற்சித்தேன். ஆனால் பணத்தின் தேவை காரணமாக மோசமான படங்களிலும் நடிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் நான் தயாரித்த படங்களில் ‘பாதை’ படத்தை மட்டும்தான் நான் மிகவும் உரிமை கொண்டாடுவேன். ஏனெனில் அதன் எடிட்டிங் முழுவதையும் நானே செய்தேன்” என பிற்காலத்தில் செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1974ல் துருக்கியில் இராணுவ ஆட்சிமுடிந்த பின்பு வழங்கிய பொதுமன்னிப்பில் இவரும் இவரது நண்பர் ‘நிகாத்பேரம்” இருவரும் விடுதலையாகினர். இருவரும் சேர்ந்து ‘கவலை” என்ற தொழிலாளர் அவலம் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்கத் தொடங்கினார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வாரத்தில் அங்கு ஏற்பட்ட கலவரத்தில் நீதிபதி ஒருவர் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது வேறொருவர் என்றாலும் குனேயிற்கும் அதில் தொடர்பு உண்டு என குற்றம் சாட்டப்பட்டு 19 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைக்குள் செல்கிறார். அங்கு அவரை கொல்ல முயற்சி நடக்கிறது. ஆனாலும் அவர் தப்பித்துக் கொள்கிறார். இச்சிறைவாச assTGoggo);5|T6 "We want a storm 4 widow and bread” 6T6p spurteoT நாவல் ஒன்றை எழுதியிருந்தார்.
1981ம் ஆண்டு துருக்கிய சிறையில் இருந்து தப்பி மேற்கு ஜேர்மனி செல்கிறார். ஆனால் மேற்கு ஜேர்மன் அரசு அவரை துருக்கிக்கு ஒப்படைக்க முயன்றபோது பாரிசுக்கு அரசியல் அகதியாக தப்பிச் செல்கிறார். இங்குதான் இவர் ‘பாதை'யைத் தயாரித்தார். கடைசியாக இல்மஸ்குனே இயக்கிய படம் 'சுவர்’ இது கொடுமை நிறைந்த துருக்கிச் சிறையொன்றில அடைக்கப்பட்ட சிறுவர்,சிறுமியர் கலகம் பற்றிய கதை. துருக்கியில் இவரைப் பற்றி எழுதுவதோ, பேசுவதோ ஏன் அவரின் புகைப்படத்தை வைத்திருப்பது கூட பாரிய குற்றமாகக் கொள்ளப்பட்டது.

Page 7
அந்த அளவுக்கு துருக்கிய ஆட்சியாளரின் வெறுப்புக்கு இல் மஸ் குனே ஆளாகி யிருந்தார். “என் தாய்மண்ணில் இருப் பேனென்றால் இன்றும் மாறுபட்ட சிறப்பான திரைப்படங்களை தயாரித்திருப்பேன்’ என குனே கூறினார். இத்தகைய அற்புதமான கலைஞன் 1984ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ம் திகதி வயிற்றுப் புற்றுநோயால் தன் வாழ்வினை முடித்துக் கொண்டார். பாரிஸ் கம்யூனிஸ்ட் வீரத்தியாகிகள் புதைக்கப்பட்ட ‘பெரிலெச்சாய்சே” கல்லறைத் தோட்டத்தில் குனேயின் உடல் புதைக்கப்பட்டது. 47 வயதான இல்மஸ்குனேயின் மறைவு உலகெங்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் புரட்சிகர உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பே ஆகும். பெண்களின் தொப்புளைச் சுற்றி கதை பின்னிக் கொண்டிருக்கும் நம் சினிமா இயக்குனர்களுக்கு இவர் வித்தியாசமாகத் தெரிந்தாலும் ஆச்சரியப்படு
வதற்கில்லை. ,
പ്പെഴ്ചപ്പെഴ്ചപ്പെട്രൂപ്പുജപ്പുജപ്പെട്ടപ്പുജപ്പെജയ്പൂപ്പമ്പ്പൂപ്പുളിപ്പൂപ്പുഴുപ്പുപ്പുഴ്ചപ്പെട്രൂപ്പുജപ്പെട്രൂപ്പു மனிதனைத் தேடி.
துப்பாக்கி முனையிலே துர்பாக்கிய நிலையிலே. மனிதனைத் தேடும் தேடுதல் வேட்டையிலே சிக்கியது மனிதனல்ல
மரக்கட்டைகள்..!!!
விடியலையும் மனிதனையும் விடாமல் தேடியதில் சிக்கியவை எச்சங்களும் மிச்சங்களுமே...!!!
காடுகளிலும் கலைகளிலும் மனிதனைத் தேடிபோது கிடைத்தவை கேவலமானவை.!!!
தேடியதில் இப்போது தொலைந்ததும் மனிதமே இங்கு!
10
 
 
 
 

இயற்கையும்
எல்லோரும் விரும்புவது
செயற்கையைத்தான் எல்லாவற்றிலும் செயற்கைக்கே முதலிடம் இறப்பர் முதல் அழகு வரை
அனைத்திலும் இப்போது செயற்கைக்கே முதலிடம்`
ళ .
இயற்கை தனனுள தாழநது மனம் வருந்தி முடிவெடுத்துக் கொள்கிற
*ww.
\ இறுதியில் 7 / N இயற்கை இற்கையாகவே <_X\colone 27o ́
எல்லோரும் விரும்பு செயற்கையைத்தான் இயற்கை ஒன்றே செயற்கையால் இயற்கை அணு அணுவாய் அழிந்து போகிறது என்பதே.
。 حمل ܝ ܐ * செயற்கையும்
11

Page 8
-ஏ. ஆர். திருந்செந்தூரன் -
(இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் யாவும் கற்பனை அல்ல! உண்மையே!!)
அன்று முதன்முதலில் நான் கண்ட ‘நாளக்கவை எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கின்றது. விடுதியில் உள்ளோர் அணிய வேண்டிய கட்டாயப் பகிடிவதை உடை, ‘பாட்டா செருப்பு, கையில் ஒரு ஃபைல், வீட்டிலிருந்து அம்மா கொடுத்தனுப்பிய சாதாரண அளவை விட கொஞ்சம் பெரிய உணவுப்பொதி. ‘நாளக்க ஒருவரோடும் ஒட்டாமல், கூட்டமாய்க் கூடி நின்று கலகலப்பாய்க் கதைக்கின்ற மாணவ, மாணவிகளை வேடிக்கை பார்க்கின்ற ரகம. யாரும்’ என்னுடன் கதைக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லும் தோரணை.
ஆனால் அன்று நான் கதைத்தேன். (என் வாய் சும்மாயிருக்காதே) பெயர் ‘நாளக்க. அப்பா இல்லை, அம்மா, அண்ணா அம்மா மதிய நேரத்தில் சாப்பாடு செய்வதும், அவற்றினை விநியோகிப்பதும் மூலமாக இவர்கள் மூவரும் மூன்று நேரமும் சாப்பிடுகின்றனர். அண்ணன் இயந்திரங்களைப் பழுதுபார்த்தல் வேலை மூலம் வீட்டின் ஏனைய செலவுகள் சரி செய்யப்படுகின்றன.
‘நாளக்கவின் குடும்பநிலமை புரிந்ததும் அவன் மீது அனுதாபம் எட்டிப்பார்த்தது. கொஞ்சம் அவனோடு பேசிப் பார்க்கையில் வர்க்க முரண்பாட்டை எவ்வளவு தூரத்திற்கு அவன் உணர்கின்றான் என்பதும், தெற்கில் வசிப்போரிடம் பணம் உள்ளவர், பணம் இல்லாதவர் என்கின்ற இரண்டு வர்க்கங்கள் உள்ளதை அவன் ஆழமாக வெறுக்கின்றான் என்பதும் புரிந்தது.
அடுத்தவாரம் கறுப்பு நிறச் சப்பாத்து, பச்சைக் கோடு போட்ட சட்டை, இடுப்புப்பட்டி என ஆளே மாறியிருந்தான். கேட்க முதல் அவனாகவே கூறினான்.
‘அண்ணாமார் தந்தார்கள்” நான் புரியாமல் அவனையே பார்த்தபடி இருந்தேன். கொஞ்ச நேரத்தில் தன் விரிவுரையை ஆரம்பித்தான்.
‘திரு, இன்று நாட்டில எதால பிரச்சினை?”. ‘இனவாதம்! அடக்குமுறை” என்கிறேன் நான். ‘இல்லை, வர்க்க முரண்பாடு; வளங்கள் சரியாப் பகிரப்படேல்ல; இனவாதம் எல்லாம் இல்லை. ‘சமதர்மம்' என்ற ஒன்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இந்த நாட்டில இருக்காது”
நான் நக்கலாகச் சிரித்தேன். முதலில் புரியாதது இப்போது புரிந்தது. தெற்கில் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலானோர் ஒரே குட்டைக்குள்
12
 
 

எப்படி விழுகின்றார்கள் என்பது தெரிந்தது. கறுப்புச் சப்பாத்து, பச்சைக் கோடுபோட்ட சட்டை, மண்ணிற இடுப்புப்பட்டி எல்லாம் கொடுத்தாலும் ‘நாளக்கவிற்குப் பூசிவிட்டது என்னமோ சிவப்புச் சாயம். வடகிழக்குப் பல்கலைக்கழக நிலைமையை யோசித்தேன். அது உணர்வுகளால் தானாக ஒன்றுபட்ட கூட்டமாம்.
அன்று முதல் நாளக்கவின் பாதை அரசியல் பக்கமும் சாய்ந்தது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்குள் இடம்பிடித்தால் அப்படியே கட்சியிலும் முக்கிய இடம் பிடித்து விடலாம் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. என் நண்பர்கள் உட்பட ஏராளமானவர்கள் இதனை ஆணித்தரமாக நம்பினர்.
“20 வயதில் சமதர்மம் பேசாதவன் மனிதனில்லை. எங்கோ படித்தது ஞாபகம் வந்தது. இது உண்மையான சமதர்மா? ஆட்சிபிடிக்கும் ஆசையும், இனவாதமும் கலந்த கலவைதான் சமதர்மமா?”
அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ முறை அவனிடம் கேட்டிருக்கின்றேன். அவன் தன் கொள்கையில் ஆணித்தரமாக இருந்தான்.
மீண்டும் பொதுத்தேர்தல். எந்த வகுப்புக்களிற்கும் அவன் வருவதில்லை. பகல் எல்லாம் பிரச்சாரம், கூட்டம். இரவு முழுவதும் மிகுந்த கஸ்ரப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டுவானாம் - நண்பர்கள் சொன்னார்கள்.
பஸ்ஸில் பிரயாணிக்கும் போது, தென்படுகின்ற சுவரொட்டிகளில் ‘நாளக்கவின் முகம் தெரியும். அவன் கடின உழைப்பு தெரியும். சிலவேளை அவன் ஒட்டிய சுவரொட்டியாய் இருக்கலாமல்லவா?
பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது ‘நாளக்கவின் புகழ் வளாகம் முழுவதும் பரவிவிட்டது. இவன் இந்தக் கட்சி என்று முத்திரை குத்தப்பட்டு விட்டான். அவன் பின்னால் அவனால் சிவப்புச்சாயம் பூசப்பட்ட தம்பிமார்! காலம் எவ்வளவு வேகமாகச் செல்கின்றது பாருங்கள்.
அன்று யூலை 28 எனக்கு நல்ல ஞாபகம்!! மறக்கமுடியுமா? பரீட்சை, ஆரம்பமாக அரை மணிநேரமே உண்டு. பரீட்சை அனுமதியட்டை கையில், பல்கலைக்கழக அடையாள அட்டையைத் தொலைத்துவிட்டேன். எனக்கு நானே மனதில் அர்ச்சனை செய்து கொள்கின்றேன். அவரைப் பார்த்தால் இவரைப் போய்ப்பார், இந்த கையொப்பம் வேண்டும் என்கிறார்கள். அந்த இவரோ இன்னும் வரக்காணோம்.
நான்கைந்து பேருடன் நாளக்க வந்தான். சொன்னேன் ‘இதிலேயே நில்:" அவ்வளவும்தான் சொன்னான்.
நிமிடத்தில் வெற்றியோடு வந்தான். பரீட்சை எழுத வாழ்த்தும் சொன்னான். உதவிக்கு நன்றி சொல்வதா? பரீட்சைக்கு வாழ்த்துச் சொல்வதா? தடுமாறிப் போய் நின்றேன். அப்போது என் மனதில் ஒரே நினைவுதான்; ‘இவன் நிச்சயம் பெரிய ஆளாகி வருவான்’
Poos iuriros fD SvefolkerN 3

Page 9
பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போதும், “மாகாண சபை உறுப்பினர் நாளக”, “பாராளுமன்ற உறுப்பினர் நாளக்க”, “பிரதியமைச்சர் நாளக்க” எல்லோரும் நினைவில், உலா வந்தனர். தகுதியானவன்தான் துணிவு, கடின உழைப்பு, கொஞ்சம் சூழ்ச்சி எல்லாம் இருக்கின்றது.
மாதங்கள் செல்லச், செல்ல ‘நாளக்க மிகவும் பரபரப்பான புள்ளியாகிவிட்டான், ‘அண்ணை IT Room திறக்கினமில்லை, வந்து கேளுங்கோ.”
‘நாளக்க Exeption வேலையில சமிந்தன்ர gang வந்து குழப்புது, பெரியவயிற்ற சொல்லு”
கீழ் மட்டத்திற்கும், மேல் மட்டத்திற்குமான முதற் தரத் தொடர்பூடகமாக ‘நாளக்க இப்போது மாறிவிட்டான்.
அன்றைய பத்திரிகைச் செய்தி - “பாராளுமன்றத்தில் வீடியோகமரா கையடக்கத் தொலைபேசி!” பொதுவான அனைத்து சிங்களப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தது.
‘திரு அப்பிடியொரு தொலைபேசி இருக்குதா?” நாளக்க அப்பாவியாய்க் கேட்டான். அந்தத் தொலைபேசியை வைத்து ஹம்பாந்தோட்டையில் வாழ்கின்ற எத்தனை வறியோரின் பசியை ஆற்ற முடியும்?? மக்களுக்குத் துரோக மிழைப்பவன் மன்னிக்கப்படவே கூடாது. மனதுள் நினைத்தேன.
‘ம்.அப்பிடியோரு தொலைபேசி இருக்கு முழுக்க வாசி!! எல்லாக் குட்டும் குப்பைகளும் புரியும்.”
வாசித்தான், அதன் பிறகு பத்திரிகைகளில் வெளிவந்த வண்டவாளங்களையும் வாசித்தான்.
“தவறுகள் இருக்கின்றன; இல்லையென்று சொல்லவில்லை. எங்கள் காலம் வரும் போது, எல்லாம் சரியாகும்.”
காலம் வந்தது. அவ்வளவு காலமும் அவர்கள் தமது இறுதிப் பரீட்சையை விட ஆவலாய் எதிர்பார்த்த அந்தப் பல்கலைக்கழகத் தேர்தல் வந்தது. இது வித்தியாசமான தேர்தல். ஏனெனில் எப்படியும் வெல்லப் போவது அந்த ஒரு கட்சிதான்! அந்தக் கட்சிக்குள் யார்யார் தேர்தலில் நிற்கப் போகின்றார்கள் என்பது தான் ஆட்டமே! அது தான் உண்மையான
தேர்தலே!
தேர்தலுக்கு மனுக்கொடுக்கும் நாளன்று ஆட்டம் உச்சக்கட்ட சூடு பிடித்தது. போட்டியிடும் வேட்பாளர்களையும், பதவிகளையும் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரில் நாளக்கவின் பெயர் இல்லை. இவன் ஏன் செயலாளருக்கு கேட்கின்றான் என்று யோசித்தபடி கீழே பார்த்தால் ‘நாளகவைக் காணவில்லை.
14

எல்லாவற்றையும் வாசித்தேன்! நாளக்க தேர்தலில் நிற்கவேயில்லை!!!.
முட்டாள்..!!! இதற்காகத் தானே இவ்வளவு கஷ்டப்பட்டான்? அந்தக் கட்சி என்றால் ‘நாளக்க' எனும் அளவிற்கு இருந்தானே? எங்கே அந்த முட்டாள்? தேடினேன்; நாளக்க கிடைக்கவில்லை.
அவனது உற்ற நண்பன் பிரியங்கதான் பின்னணியில் நடந்த நாடகத்தைக் கூறினான். தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவன் அந்தக் கட்சியின் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துப் படுத்தும் பிரதியமைச்சரின் அக்காவின் மகனாம். மிகுதி உங்களுக்குப் புரியும் தானே?
என் நண்பன் ரோசக்காரன்! வேறெந்த சில்லறைப் பதவியும்
வேண்டாமென்று விட்டானாம்.
இப்போதெல்லாம் நாளக்க, என்னோடு வகுப்பில் வந்து இருக்கின்றான்.
கிரிக்கட் பற்றிப் பேசுகின்றான். தனக்கு ஒரு வேலை எடுத்துத் தரும்படி விடாப்பிடியாக வற்புறுத்துகின்றான்.
கடந்த செவ்வாய்க்கிழமை நாமிருவரும் பல்கலைக்கழக முடிதிருத்தும் நிலையமருகில் நடந்து வருகையில் ஒரு முதலாம் வருட மாணவன் முடி திருத்துபவரிடம் கூறுகின்றான்.
“தலைமயிர் இப்படி இருக்க வேண்டும். பின்னால் வெட்ட வேண்டாம். கீழே கொஞ்சம் தாடி அப்படியே, இருக்கட்டும்”.
‘ஓ! அந்த * கட்” ஹ?”
திடீரென நாளக்க கடைக்குள் புகுந்தான். உட்கார்ந்திருந்த அந்த தம்பியிடம் சூடுபறக்க கேட்டான்.
‘ஏன் இங்கு வந்து முடிவெட்டுகிறாய்?”
‘அது. வந்து. அண்ணா.”
‘ம். சொல்லு ஏன்?”
‘இங்கு என்றால் 25 ரூபாய்க்கு வெட்டலாம்..”
b...... நீ மட்டுமல்ல! இங்கு படிக்கும் அனைவரும் ஏதோ பணத்தை சேமிக்க வேண்டும் என்ற கீழ்மட்டத்திலயோ, மத்தியதரத்திலயோ இருக்கின்றவர்கள் தான்! பத்திரிகை எடுத்துப்பார்! யார் மாதிரி இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாயோ அவரது முடிதிருத்தும் மாதாந்த செலவு மட்டும் மாதத்திற்கு 2000 ரூபாய்! திருந்தி நடவுங்கடா!”
அங்கிருந்த எல்லோருக்கும் கையைக் காட்டிவிட்டு வேகமாக நடந்தான். .
“என்ன திரு நான் சொன்னது சரிதானே?”
“சிவப்பின் கறுப்பு வெளிக்கிறது’ தமிழிலே சொன்னேன்.
‘என்ன சொன்னாய்? புரியவில்லை?”
“சரி என்பதைக் கொஞ்சம் நீளமாக சொன்னேன்” என்றேன்.
米 米 来
15

Page 10
O O \ O O Κ. re re じ? O ፖrዃፃ O s リー
༤ With Best compliments from
Mayoora
Enterprises
}
{Infogetable TDelicious TDishes... Oou Order
“MVe Caterl!
2A - 2N SECOND FLOOR
BUILDING B.
115, WEMBLEY COMMERCIAL CENTRE EASTLANE, NORTH WEMBLEY,
O ದ್ವಿ”» HAQ 7UR, 'N'sسٹیئم
o N BUZZ; 020 89083218 G.
O fo

மனித சமுதாயத் திணி
நாகரிக வளர்ச்சியை அசைத்துப்
பார்த்துக் கொண்டிருக்கும் இந் நோயை பற்றி பேச ஏன் சில நிமிடம் சிந்திக்கக் கூட நம் மில் பலர் அருவருக்கின்றனர். எயிட்ஸ்சிற்க்கு என ஐ.நா. திறந்தஅமைப்பொன்றை உருவாக்கும் வகையில் இந்நோய் பரவ இதுவே மிகமுக்கிய காரணி யாகும். பில்லியன் கணக்கான டொலர்களை மருத்துவ ஆராய்ச்சி களில் செலவழித்தும் அவை வெற்றி பெறாமல் இந்நோயின் அணிவகுப்பு தொடர்வதற்கான காரணம் என்ன?
1981ம்ஆண்டில் வெளியிடப் பட்ட முதலாவது எய்ட்ஸ் தொடர் பான ஆய்வறிக்கையில், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலற்ற தாக்கும் ஓர் வகை வைரஸ் நோய் என கூறப்பட்டது. ஏறத்தாழ 23 ஆண்டுகள் இவ் வெயிட்ஸ் தொடர்பில் மேற் கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவு கள் வைரஸ் செயற்பாட்டினை ஏறத்தாழ 5% கூட முழுமையாக அறிய முடிய வில்லை என்பது பெருமபாலான ஆய்வாளர்களின் முடிவாகும்.
எயிட்ஸ் நோய்க்கு காரண மான ஏச்.ஐ.வி.யின் மரபணு வடிவம் டி.என்.ஏ (டிஒக்ஸிரைபோ நியூக்ளிக் அமிலம்) வடிவில் அல்லாமல்
ஆர்.என்.ஏ (ரைபோ நியூக்ளிக்
அமிலம்) வடிவில் அமைந்துள்ளது. எச்.ஐ.வி ஓர் ரெட்ரே வைரஸ் வகையினி லெனிடி வைரஸ் வகையை சேர்ந்தது என வகைப் படுத்தப்பட்டுள்ளது. இவை சாதாரண வைரஸ் களை விட மிகமிகச் சிறியவை. உதாரணத்துக்கு ஓர் பென்சில் முற்றுப் புள்ளியில் 23 கோடி ஏச்.ஐ.வி நுண்மங்கள்
உள்ளடங்கும். (ஏறத்தாழ)
மனித உடலில் இவை புகுந்தவுடன் வெண்குருதி படலங் களுடன் ஏற்படும் மோதலில் ஆரம் பத்தில் இவை அநேகமாக தோற்றுப் போய்விடுகின்றன. எவ்வாறாயினும் தப்பிக்கும் நுண்மங்கள் ஏதாவது ஒரு செல்லுக்குள் புகுந்து அவற்றின் டி.என்.ஏ.யை தமக்குள் பதிவு செய்து புது நுண்மங்களை உருவாக்கு வதாக கருதப்படுகிறது. (அதாவது R.N.A எச்.ஐ.வி நுண்மங்கள் D.N.A யை எதிர்க்கும் வகையில் மாற்றம் பெறுகின்றன) காலப் போக்கில் இவை வெண் குருதி நுண்மங்களின் முக்கியமான டி செல் களை (நோய் எதிர்ப்பு கட்டளை செல்கள்) அடியோடு அழித்துவிடுகின்றன.

Page 11
இதன்பின் உடலில்
சிறு நோய்களுக்கும் மரணம சம்பவிக்கின்றது. அடிப்படையில் எச்.ஐ.வி ஓர ஏமாற்று வைரஸாகும்.
மேலே விபரிக்கப பட்டவை ஓர் கணிப்பே தவிர, இதுபற்றி நிறைய காரியங்கள ஆராய்ச்சியா ளரகளுக்கு தெரியாது என்பது கவலைக் கிடமானது.
இந்நோயின் தாக்கம் பெரும்பாலும் வளர்முக நாடுகளினை குறிப்பாக ஆபிரிக்க நாடுகளையும், ஆசிய நாடுகளையும் அதிவேகமாகப் பாதிக்கின்றது. இன்றைய திகதி வரை பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப் படையில் தென்ஆபிரிக்காவிலேயே அதிக எயிட்ஸ் நோயாளிகள் காணப் படுகின்றனர். அங்கு மூன்றில் ஒரு வருக்கு எயிட்ஸ் நோய்த்தாக்கம் உள்ளது. எனினும் தற்போது இந் நோயின் தாக்கம் இந்தியாவையும் பெரிதும் பாதித்துள்ளது. ஏனெனில் மொத்த ஆபிரிக்க சனத்தொகை யையும்விட இந்தியாவின் சனத்தொகை அதிகம் . அத்துடன் உலகில் தற்பொழுது இந்தியாவிலேயே அதிகூடிய வேகத்தில் எயிட் ஸ் பரவிவருகின்றது. பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஏறத்தாழ மூன்றுகோடிக்கும் அதிகமானோர் எயிட்ஸ் நோய் காரணமாக உலகம் முழுவதும் இறந்திருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.அத்துடன் 42,000,000 அதிகமானோருக்கு எயிட்ஸ் தொற்றி யிருப்பதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்நோய் பரவ முக்கிய
காரணி பாதுகாப்பற்ற பாலுறவு முறை களாகும். எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு
மிகமிகக் குறைவாக காணப்படல் இதற்குரிய காரணியாகும் . பெற்றோரிடம் இருந்து குழந்தை களுக்கும் இந்நோய் பரவுதல் ஓர் துக் ககரமான விடயம் ஆகும். (இதை தடுப்பதற்கான மருந்து வகைகளில் பாரிய முன்னேற்றம் காணப் பட்டுள்ளன)
எயிட்ஸ் க்கு எதிரான மருத்துவ முறைகள் மரணத்தை பிற்போட வல்லமையுடையவை ஆயினும் மருத்துவ முறைகளுக்கு வேண்டிய செலவு நோயாளிகளால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக உள்ளது. உகாண்டா, பிறேசில் போன்ற நாடுகளில் உள்ளூர்ச் சிகிச்சைத்திட்டங்கள் எயிட்ஸ்சினால் ஏற்படும் மரணங்களை பிற்போடு வதில் வெற்றியளித்து வருகின்றது எனினும் நோய் இல்லாமல் போவது சாத்தியமில்லை.
இந்நோய் தொற்றுக்கள் அனைத்தையும் , மனிதர் படும் அவஸ்த்தையையும் தடுத்திருக் கலாம். தடுக்கவும் முடியும் என்பதே கவலைக்குரிய விடயம். தடுப்பதற் கான முறைகள் எல்லோருக்கும்
தெரியும். உங்களுக்கும் தான்!
தவறுக்குவருந்துகிறோம் கடந்த இதழின் அமெரிக்க தேர்தல் சில:
 
 

OLDIDDOJUJUĆEG
ٹGU
semitish
1. 1992 வரை நாத்திக நாடாக
இருந்து 1992ல் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்த நாடு எது?
2. இலங்கையின் மகாகவி என அழைக்கப்படுபவர் யார்?
கொள்கை வகுத்தார்கள்
3. பொன்னியின் செல்வன்,
சிவகாமியின் சரிதம் போன்ற புகழ் பூத்த நாவல்களை எழுதிய கல்கியின் இயற்பெயர் யாது?
4. பத்திரிகையாளர் தினம் யார் நினைவாக கொண்டாடப் படுகின்றது?
5. “வரலாறு என்னை விடுதலை
செய்யும்” என்ற நூலை எழுதியவர் யார்?
6. செஞ்சிலுவைச் சின்னத்தைத்
தன் கொடியில் கொண்ட நாடு
போவதாய்
(கடந்த இதழில் கேட்கப்பட்ட
வினாக்களுக்கான விடைகள் எது?
1. நெதர்லாந்து 7. கிரிக்கட் மட்டை என்ன மரத் 2. உதயதாரகை தினால் செய்யப்படுகின்றது? 3. லியோ டால்ஸ்டாய் 4. இயன் பிளெமிக் 8. உலகின் மிகப்பெரிய ஜலசந்தி 5. கவிமணி தேசிக விநாயகம் எது?
பிள்ளை
9. இலங்கைக்கு சர்வஜன வாக்
தென்னாபிரிக்கா குரிமை வழங்கிய யாப்பு எது?
மைக்கல் சூ மேக்கர்
8. ւ6նամ நதி 8 10. அண்மையில் காலமான பிரபல 9. நீதிபதி ஓல்ட் கிறட்ஷர் சிங்களத் திரைப்பட நடிகரின் 10. றிச்டர் பெயர் என்ன?
அதிக வினாக்களுக்கு விடை களை ಆಳ್ವ°: † எழுதி பரிசு பெறும் வாசகா எழுதி அனுப்பும் அதிஸ்டசாலி ச.சித்திரா, 11, பொன்னையா வாசகருக்கு நூல்கள் பரிசாக ஒழுங்கை, ஆனைக்கோட்டை வழங்கப்படும்.
19

Page 12
கவிதைக் காதலும்
கண்டல் கத்குரிக்காயும்
கனவுகளோடு நான் கவிதைகளோடு நீ காத்திருப்போடு நான் காகிதங்களோடு நீ எனக்கோ கடிந்து பேச மனசில்லை உனக்கோ கலந்து பேச மணியில்லை காதல் என்பது கலந்து பேசல் என்கிறேன் காதல் என்பது கலந்து போதல் என்கிறாய் میبینید கருத்துக்களோடு முட்டி மோதலாம் வா என நானும் காசிருந்தால் ஒட்டிப் போகலாம் என நீயும் காதலுக்கு கண் இல்லைத்தான் எனும் ஐயத்துடன் நான் திகைக்க கலந்தது கண்களோடு தானே எனும் உறுதியோடு நீ நிலைக்க முத்தத்தில் மோடியாகி மொத்தத்தில் பேடியாகி பெட்டைப் புலம்பல் என என்னை சட்டை செய்யாத உன்னை விட்டுப்போதல் என்ன பாவம்? போடா எனக்குந்தன் காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம். க.விலாவதி S LLL SLLLS LL LLLSS S LL LLL L L L S SL S S S S S SLL LLL LL S S LL
O O எட்டிக்கூட பார்க்கவில்லை காலங்கள் வந்தது உனைக் கண்டது - கவிதை அணைத்துக் கொண்டது உன்பின்னே வந்தது ஊரே பார்த்துச் சென்றது எனக்கு பரீட்சையும் வந்தது அதில் மூன்று கொடிகள் தந்தது முரட்டுப் பையன் என்றது பைத்தியம் என பெயர் வந்தது நல்லவை விட்டுச் சென்றது நாசங்கள் தொட்டுச் சென்றது முறைத்தது சிரித்தது முந்தியது நான் பிந்தியது நீ !
asoose insists vassaRN 2O
 
 
 

óls 6ASAT
':u.
##్య
... . ... UKRANE ,
濠签 42:228-28*xo &
姿※ 鲨 பெலாறுஷ் எனும் நாடு
பலராலும் அறியப்படாததொன்றாகும்.
இது முன்னாள் சோவியத் ஒன்றி யத்தில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று. பெலாறுஷ் குடியரசின் முதல் ஜனாதிபதி “அலெக்சாண்டர் லுகா ஷென்கோ” ஆவார். இவர் 1994ம் ஆண்டு அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டார். நாளடைவில் இவரது அதிகார மோகம் வெளிப்படத் தொடங்கியது.
அணி மையரில லு கா ஷென்கோ தான் மூன்றாம் முறை யாக ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடுவதை அனுமதிக்கிறீர்களா? என மக்களிடம் வாக்கெடுப்பு நடாத்தி யுள்ளார். இவ்வாக்கெடுப்பில் வாக் களிக்கும் தகுதியுள்ளோரில் 90% மானோர் வாக்களித்துள்ளதாகவும் 77.3 % மானோர் இவர் மீண்டும் போட்டியிடுவதை ஆதரிப்பதாகவும் பெலாறுஷ வாக்கு முடிவுகள் தெரிவிக் கின்றன.
ஆனால் அங்கே நடைபெற்ற சில தேர்தல் மோசடிகள் புகைப்பட
நூஷ் வாக்சிகருப்பு
ஆதாரங்களுடன் வெளிவந்திருக் கின்றன. வாக்களாரிடம் வாக்குச்சீட்டு ஒப்படைக்கும் முன்னரே அவை புள்ளடியிடப்பட்டு இருந்தமை, ஒரு மூதாட்டியிடம் தேர்தல் சாவடியில் புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை அளித்தமை, ஒரு மேசை மேல்
புள்ளடியிடப்பட்ட மேலும் பல
வாக்குச் சீட்டுக்கள் இருந்தமை போன்ற சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தொலைக்காட்சியில் கருத்துக் கணிப்புக்களை பெலாறுஷ் சட்டவிதியை மீறி ஒளிபரப்பியமையும் இதில் அடங்கும். பெலாறுஷ் தலை நகர் மின்ஸ்க்கில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்குட்பட்டோர் இத்தேர் தலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளனர். இதில் 46 எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலைப்பற்றி வெளி நாட்டுக் கருத்துக்களை பார்ப்போ மாயின் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன இத்தேர்தல் ஜனநாயக தராதரத்திற்கு ஏற்புடையளவில் நடத்தப்படவில்லை என்று அறிவித்துள்ளன. அமெரிக்கா லுகாஷென்கோவை ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என வர்ணித் துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது இப்படி மேற்குல நாடுகள் கூறும் வேளையில் ரஷ்யா பெலாறுஷ் இல் நடந்த தேர்தல் சரியானது எனத்தான் கருதுவதாக கூறியுள்ளது. ஏன் இவ்வாறு சர்வதேச நாடுகளின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண் படுகின்றன?
21

Page 13
ஆராயப் வோமெனில் , பொதுவாக ஒவ்வொரு நாடும் தன் நாட் டோடு லுகா ஷெனி கோ கொண்டுள்ள உறவையொட்டியே இத்தேர்தல் நியாயமானது அல்லது நியாயமற்றது எனக் கூறுகிறது என்பது புலப்படும். பெலாறுவழில் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு விட்டது என்று கதறும் அமெரிக்கா பாகிஸ்தானில் நடை பெறும் இராணுவ சர்வாதிகார ஆட்சியை விமர்சிப்பதை அண்மைக் காலமாக கைவிட் டுவிட்டது. ஏனெனில் பாகிஸ்தான் முஷாரப்பின் கீழ் தற்போது அமெரிக்காவின் நண்பனாக செயற்பட்டு வருகின்றமையேயாகும். ஐரோப்பிய ஒன்றியம் பொதுவாக நடுநிலைமை வகித்து கருத்துக்கள் கூறுவதுபோல தோன்றினாலும், அதில் பங்குபற்றும் நாடுகளின் விருப்பு வெறுப்புகளிற்கு ஏற்பவே அதன் நடவடிக்கைகள் அமைகின்றன.
இனி ரஷ்யா இத்தேர்தலை ஆதரித்துள்ள பின்னணியைப் பார்ப் போம் லுகாஷென்கோ’ 1994ம் ஆண்டு பதவிக்கு வரும்முன் ரஷ்யாவுடன் பெலாறுஷ் இணையும் என வாக் குறுதி அளித்து இருந்தார். ஆனால் அவர் பதவிக்கு வந்தபின் ஒன்று சேர்க்கும் எண்ணத்தை கைவிட்டு அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ஒப்பந்தங்களை செய்து கொண்டார். சிறிது காலத்தின் பின் ஒரேபணம், ஒரேகொடி என்பனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு
கடந்த பத்து வருடங்களாக லுகா ஷேன்கோ ரஷ்யாவுடன் சிறந்த உறவைப் பேணி வந்துள்ளார். இதன் அடிப்படையிலேயே பெலா றுவழில் நடந்த தேர்தலை ரஷ்யா நியாயப் படுத்தியுள்ளது. இத் தேர்தல் முடிவின்பின் ரஷ்யாவில் முக்கிய புள்ளிகளால் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் சுவராசியமானவை. 'பொவெல் பொளடின்' என்பவர் இதேபோல ஒரு வாக்கெடுப்பை ரஷ்யாவிலும் நடத்தி அதிபர் புட்டினும் 2008ம் ஆணர் டின் பின் வரும் தேர்தலில் பங்கு பெறலாம் எனக் கூறியுள்ளார். நமது நாட்டிலும் இப்படிப்பட்ட ஒரு வாக் கெடுப்பு அடுத்த ஆண்டில் நடைபெற்றால் நாம் வியப் படைய தி தேவையில் லை.
-வி.பி.நாதன்
CEYLON
MEDCA
Dispensing Chemist, Druggist & Grocers 4B, Fussels Lane, Wellawatta, Colombo - 06. Tel: 5-519767, Fax : 01—360897
We pray for your health
22

பெண்ணியம்
கருத்துமேடை
கடந்த இதழில் எழுப்பப்பட்ட இப் பிரச்சினை தொடர்பாக எமது வாசகர்கள் எழுதி அனுப்பிய கருத்துக்கள் கீழே .
01. மேலைநாட்டவர் தங்களுடைய நாட்டின் கலாசார பண்பாட்டிற்கேற்ற வகையில் ஆடைகளை அரை குறை யாக அணிகின்றனர். ஆனால் எமது நாட்டு பெண்களோ எமது தாய்நாட்டு கலை, கலாசார மற்றும் பண்பாட்டை மறந்து மேலை நாட்டவரை விட மோசமான முறையில் அவ்வுடையோடு பொது இடங்களிற்கு செல்வதால், முதலாளித்துவத்திலுள்ள ஆண்கள் தம் வசதிக்கு பெண்களை காலம் காலமாக பல விதமாக வியாபார நடவடிக்கை களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக கின்றனர்.
இவ்வகையான முதலாளித்துவ சிந்தனையுடைய ஆண்களின் பிடியி லிருந்து வெளிவருவதற்கு பெண் களே அவர்களை எதிர்த்து எமது நாட்டு பண்பாட்டை பேணினார களானால் இவர்களே தமது உரிமைகளை சிறந்த முறையில் பேணக் கூடிய தாயிரு க்கும். ஆகவே சிலகாலம் வாய் மூடிக் கிடந்தது போதும். பெண்ணே உன்னை விலை பேசும் ஆணை நீயே எதிர்த்து போராடு. கட்டாயம் உன் உரிமை உனக்கு கிடைக்கும்.
R. சுகன்யா, வெள்ளவத்தை
02. எல்லாவற்றுக்கும் சமூக விழிப் புணர்வு என்பது அவசியம் . சமூகத்தை மாற்ற நினைப்பவன் கூட மாற்ற நினைக்கிற சமுதா யத்தில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளான். எனவே முழுமையான விடிவிற்கு சமூக மாற்றமே வழி வகுக்கும்.
மா.தர்ஷன், கொழும்பு - 04
O3. திறந்த பொருளாதாரத்தை கை
கூப்பி வரவேற்றதன் விளைவை நாங்கள் அனுபவிக்கிறோம் என நினைக்கிறேன். இலங்கை வறுமைக் கோட்டுக்குள் இருப்பதால் பெண்கள் வேலைக்குச் செல்வது தவிர்க்க முடியாத தாகிறது. இதனால் நீங்கள் சொல்லி யிருக்கின்ற இரு தீர்வுகளை யுமே நடைமுறைப் படுத்துவது கடினம் என கருதுகிறேன். நான் கேட்பது பெண்ணிய அமைப்புக்கள் எனச் சொல்லிக் கொண்டிருப்பவை என்ன செய்கின்றன?
ப.ராஜ்குமார், வவுனியா
23

Page 14
சிறுவிழியின்
ஒளிக்கிற்றே
(அட்டைப்படக் கவிதை. நவம்பர்)
சடங்குகளும், சம்பிரதாயங்களும் பெண்களை அடக்கியொடுக்கியும், அவர்களின் சுதந்திரம் மறுக்
இயற்கையின் மடியில் ஒளிந்திருக்கும் ஆபத்து! செங்குத்தான மலையெனத்தெரிந்தும் கரடுமுரடான கற்களிடையே கால்வைத்து நெஞ்சில் கொண்ட நம்பிக்கை தளராது லட்சியம் முடிக்கப் புறப்பட்ட வீரனே! சிறுவன் நானெனினும் பாதையே இல்லா மலைமேல் நீ ஏறியதைப் பார்த்தபின்னும் சோர்ந்து போவேனா?
என் சிறு விழிகளுள்ளும்
நம்பிக்கை, போராட்டத்தில் ஈடுபட்ம்ே ஒளிக்கீற்றை நிறைத்தவனே! மகிழ்ச்சிக்காகவே நாளை சாகின்றோம் : என் வாழ்க்கைப் எங்கள் பேர்களி ဇွိုနှို பாதையில் வரும் துக்கத்தின் சாய தடைக்கற்களெல்லாம்
தகர்த்தெறிந்து
வீறுநடை போடேனோ!
 
 
 
 
 

பேச்சுவார்த்தைகளுக்கான பேச்சுக் களோடு நிறைவு நோக்கி 2004 ஆம் ஆண்டு. ஆளும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தமது உறுப்புரி மையை நிறுவிக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றன. ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களின் கடந்த கால வாழ்க்கையை கிளறி, குற்றவாளிகளாய் இனங்காட்டும் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது. எதிர்கட்சியோ இவற்றை மறுத்து பேரணிகள் நடாத்தி வருகிறது. இதற்கு ஆதரவாக அல்லது எதிராக சிறுபான்மை கட்சிகள் மாற்றப்படும் பெட்டிகளுக்கு நமஸ்காரம் செய்து கொண்டிருக்கின்றன.
மொத்தத்தில் வெளிநாடு களின் கடன் வசதிகளை பெற்றுக் கொள் வதற்காக கட்சிகளுக்கிடையேயான முரண் பாடுகளை பயன்படுத்தி
மக்களின் கவனத்தை திசைதிருப்பி
வருகின்றது. நாடாளுமன்ற பிரதி நிதித்துவம் ஒவ்வோர்கட்டத்திலும், ஒவ்வோர் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் முன்வைப்பது இன்றைய ராஜதந்திர மாகிவிட்டது.
2004ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நிறைவு கண்ட போது சமாதான அறிக்கைகளோடு தொடங்கி இப்போது பொருளாதார சுமைகளை தாங்கிக் கொண்டு இலங்கை மக்கள். அத்தோடு உலக நாடுகளுக்கு ரூ 93,000 கடன் என்ற பெருமையும் நம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
‘* ஊர் இரணர் டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பது
মেঠোঠে১৫১ Qg-dბqდwშ
இந்த் பாகுை ஐ
போல இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்காவின் கூத்தாடிகள் மூன்றாந் தரப்பு வேடங்களுடன் மேல் கொத் மலைத்திட்டம், நுரைச்சோலை அனல்மின் திட்டம், சேது சமுத்திரம் திட்டம் என செயற்றிட்டங்களையும், கடன் ஒப்பந் தங்களையும் கைகளில் வைத்துக் கொண்டு சமாதான மேடையை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள். வெளிநாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டி
ருக்கும் இந்நிலைமை தொடருமானால்,
இலங்கையர் அனைவரும் நவயுக அடிமைகளாய் மாறி வாழவேண்டிய நிலைமையே ஏற்படும்.
r
NA
தில்லைச்சிவன்
சொக்கன
இலங்கை இலக் கரிய உலகு மெளனித்து நிற்கிறது. இரண்டு முக்கிய இலக்கிய கர்த்தாக்களை இழந்துவிட்டோம். தில்லைச்சிவன் (தரி. சிவசாமரி), சொக் கனர் (க.சொக்கலிங்கம்). இவர்கள் எம் முடைய இலக்கிய உலகிற்கும் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியன. இவை ஈடுசெய்ய முடியாதன. இவர்களுடைய பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எங்களுடைய அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களுடைய எழுத்தும் நினைவும் எமது நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் الصر
ܢܠ
25

Page 15
நேர்கா
w - vo O W கு(டகக்கலைஞர் பிரrேயலுடன் ஓர் ருள்ே
தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடககக் கலைஞர் பிரளயன் அவர்கள் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவர் கவிதை, குழந்தைகள் நாடகம், வீதி நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். வீதி நாடகத்துறையிலே அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் “சென்னைக் கலைக்குழு’ என்ற அமைப்பினுடாக நாடகமுயற்சிகளைச் செய்து வருகின்றார். அண்மைக்காலங்களில் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்டுள்ளார். “அன்பேசிவம்” படத்தில் இவருடைய வீதி நாடகத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இலங்கைக்கு வந்து இவர் யாழ்ப்பாணம், மலையகம், கிளிநொச்சி, திருகோணமலை ஆகிய இடங்களிலும் பயிற்சிப்பட்டறைகளை நடத்தியுள்ளார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இவருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துரையாடிய விடயங்களை பயன்கருதி சுருக்கமான வடிவத்தில் பயில்நிலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
1. தமிழ்நாட்டில் வீதி நாடகங்கள் எந்தக்காலப் பகுதியில் ஆரம்பமானது?
அதற்கு உந்து சக்தியாக இருந்தது எது?
தமிழ் நாட்டில் வீதி நாடகம் 70களின் இறுதிகளில் ஆரம்பித்தது. ‘பாதல்சர்க்கார் தமிழ் நாட்டிற்கு வந்து 3ம் வகை நாடகப் பயிலரங்குகளை நடத்தினார். அதில் பங்குபற்றிய பலரும் நாடகங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் வீதி நாடகங்கள் என்று அழைத்துக்கொள்ளவில்லை. ஆனால் தெருவில்போய் மக்கள் மத்தியில் நாடகம் இயக்கினார்கள். பின்னர் கர்நாடகாவைச் சேர்ந்த ‘சமுதாயா’ என்ற நாடகக்குழு வருகின்றது. இடதுசாரிச் சித்தாந்தங்களின் மேல் நம்பிக்கை கொண்ட கலைஞர்களைக் கொண்ட அமைப்பு. அதன் அமைப்பாளரான ‘பிரசன்னா’ தேசிய நாடகப் பள்ளியினுடைய பட்டதாரி. Ph.d கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த அவர் அதனை விட்டுவிட்டு தேசிய நாடகப்பள்ளியில் சென்று சேர்ந்தார். அவர் வீதிநாடகங்களைச் செய்து வந்தார். பல இடங்களிற்குச் சென்று நாடகம் போடும் முறையை தமிழ் நாட்டில் தொடங்கி வைத்தவர்கள் என இவர்களைக் குறிப்பிடலாம். 10 - 15 பேர் சேர்ந்து சைக்கிள்களில் சென்று ஒரு ஊரில் நாடகம் போடுவார்கள். அங்கேயே தங்கிவிட்டு அடுத்த ஊரிற்குச் செல்வார்கள். நாடகப் பொருட்களையெல்லாம் சைக்கிளில் பின்னால் கட்டிக் கொண்டு செல்வார்கள். அவர்களுடைய குழுவினர் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழிலும் நாடகம் நடித்தார்கள். ‘ஓ சாஸ்டலா’ என்கிற நாடகம். பீகார் சுரங்கத்தில் பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்ததால் ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் இறந்த துயரத்தை அவர்கள் நாடகமாக்கியிருந்தார்கள். சாஸ்டலா என்பது அந்த இடத்தின் பெயர். அப்பொழுதுதெல்லாம் மேடை நாடகங்களைத் தாண்டி ஒரு நாடகத்தை கற்பனை செய்யக் கூட முடியாது. சோ, மனோகர் போன்றோரின் நாடகங்கள்தான் பொதுவாக மேடையேற்றப்பட்டு வந்தன. அவைதான் நாடகங்கள் என்ற கற்பனை இருந்தது. 1978ம் ஆண்டு தமிழ் நாடு முற்போக்கு
26
 
 

எழுத்தாளர் சங்கம் கோயம்புத்தூரில் ஒரு மாநாட்டை நடத்தியது. நான் அப்பொழுது கல்லூரி மாணவன். அப்பொழுது அந்த நாடகத்தைப் போடுகிறார்கள். அது வசனம் இல்லாத நாடகம். நடிகர்கள் வருவார்கள், சப்தம் செய்தபடி சுரங்கத்தில் இருக்கிற எல்லா வேலைகளையும் செய்து காட்டுவார்கள். துளையிடும் கருவியினால் துளையிடும்போது உடலிலே ஏற்படும் அதிர்ச்சியைக் காட்டுவார்கள். இது போன்ற பல விதமான வேலைகளை உடல் மொழியில் உக்கிரமானதொரு உடற்பாவனையிலே செய்து காட்டினார்கள். திடீரென்று துளையொன்று ஏற்படுகின்றது. விரலால் அடைப்பார்கள், கைகளால் அடைத்துப்பார்ப்பார்கள். அடைக்கமுடியாத அளவிற்கு தண்ணிர் பெருக்கெடுக்கத் தொடங்கிவிடும். பாதம், முழங்கால், இடுப்பு, நெஞ்சு, கழுத்து என்று நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே செல்லும். இவையனைத்தையும் பாவனை மூலமே வெளிப்படுத்தினார்கள். தண்ணிருக்குள்ளேயே அவர்கள் மூழ்குவது போல நமக்கொரு பிரம்மை ஏற்பட்டுவிடும். தலைக்குமேல் நீர்மட்டம் சென்றதும் ஆட்கள் கீழே விழுந்து விடுவார்கள். அப்பொழுது ஒரு பெண் வருவார். அமைதியாக செய்தி வாசிப்பார். “சாஸ்டலா என்ற இடத்தில் தண்ணிரில் மூழ்கி 40 தொழிலாளர் பலி” என்பதோடு அடுத்த செய்திக்குப் போய்விடுகின்றார். நாடகத்தில் இருக்கும் வசனம் அந்தச் செய்தி மட்டும்தான். இந்த நாடகம் எங்களுக்குள் இருந்த நாடகம் பற்றிய புரிதல்களையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டது. 10 நிமிடங்கள் எந்த ஒப்பனையும் இல்லை; மேடைப் பொருட்கள் எதுவும் இல்லை. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பலரும் நாடகம் செய்யத் தொடங்குகின்றார்கள். பாதல்சர்க்கருடைய பயிலரங்குகளில கலந்து கொண்டவர்களும் நாடகம் செய்யத் தொடங்குகின்றார்கள்.
பின்னர் ‘மக்கள் கலை இலக்கிய கழகம்' என்கின்ற மாக்சிய, லெனினிச அமைப்பு ‘சமுதாயா’ அமைப்பு செய்து வந்த 'பெல்சி என்ற நாடகத்தை தமிழிலே பல இடங்களிலே நிகழ்த்தினார்கள். பெல்சி என்பது பீகாரிலே தாழ்த்தப்பட்ட ஹரிஜன ஏழைத் தொழிலாளர்கள் உயிரோடு கொழுத்தப்பட்டது பற்றிய கதை. தமிழகத்தில் கூட 1966ல் 44 விவசாயிகள் உயிரோடு கொழுத்தப்பட்டார்கள். தமிழ்நாடு முழுவதிலும் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது. வீதி என்கின்ற அமைப்பு சென்னையைச் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பாதல்சர்க்காரிடம் பயிலரங்குகளில் பயின்றவர்கள். அவர்கள் ஏதாவது ஒரு மாலை சென்னைக் கடற்கரைக்குச் செல்வார்கள் உடனடியாகவே அப்போதைய பிரச்சினைகளை வைத்து 10,15 நிமிடத்திற்கு உள்ளாகவே ஒர் நாடகத்தை நிகழ்த்தவிட்டு வந்து விடுவார்கள்.
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல் வேலி, மதுரை போன்ற இடங்களில் வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டு வந்தன. மதுரையிலே ‘நிஜ நாடக இயக்கம்' என்ற பெயரிலே மு.ராமசாமி நாடகங்கள் நிகழ்த்தி வந்தார். நாடகம் நடத்தப்படுவதற்கு முன்னால் கழுத்திலே ஒரு கயிறு கட்டி, அதிலே ஒரு அட்டையில் இந்த இடத்தில், இன்நேரத்தில், இந்த நாடகம் நடக்கும் என்று எழுதி பஸ்ஸில் ஏறிவிடுவார்கள். மாலையிலே நாடகம் நடக்கும். இவையெல்லாம் ஆரம்பங்களில் நடந்த முயற்சிகள். ஆனால் எந்த முயற்சியும் தங்களை வீதி நாடகம் என்று சொல்லிக் கொள்ளவில்லை.நவீன நாடகம் என்றோ, நிஜ நாடகம் என்றோதான் சொல்லிக் கொண்டார்கள். பெயர்களில் பிரச்சினை இல்லை. இவைதான் ஆரம்பகால வீதி நாடகங்கள். இன்னமும் தமிழகத்தில் இவையெல்லாம் எழுத்து மூலம் தொகுக்கப்படவில்லை, பதிவு செய்யவு மில்லை என்பதுதான் உண்மை.
27

Page 16
*2. நீங்கள் எப்படி நாடகத்துறைக்குள் பிரவேசித் தீர்கள்? தங்களுடைய தற்போதைய முயற்சிகள் பற்றியும் கூறமுடியுமா?
1988லிருந்து 1998வரை நான் முழுநேர நாடகனாக, ஒரு இயக்கத்தின் கலாச்சார அமைப்பின் பொறுப்பாளனாக தொழிற்பட்டேன். நான் படித்தது ‘கம்பியூட்டர் புரோக்கிராமிங்'. 添猴 / படித்துவிட்டு ஜூனியர் புரோகிராமர் ஆக 82, 83களில் தொழில்புரிந்தேன். அப்போது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு படம் தயாரித்தார்கள். அதுஒரு கலைப்படம். அதற்காக வெற்றிகரமாக வேலையை விட்டுப்போனவர்களில் நானும் ஒருவன். ஒன்றரை வருடங்களாக அதில் மூழ்கி இருந்தேன். அதைச்சரியாகச் செய்ய முடியவில்லை. ஆதரவும் கிட்டவில்லை. பலர் பணத்தை இழந்தார்கள். நான் வேலையை இழந்தேன். அதன் பின்னரும் சில முயற்சிகளில் ஈடுபட்டேன்,சரிவரவில்லை. தராசு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதனோடு இணைந்து செயற்பட்டேன். அதன்மூலம் சில தைரியமான புலன்விசாரணைகளை மேற்கொண்டோம். பின்னர் அது நின்றுவிட்டது. காரசாரமான உரைநடையைக் கண்டுபிடித்தது தராசுதான். பின்னர் தராசிலிருந்து வெளியேவந்து நண்பன் கோபாலுடன் இணைந்துநக்கீரன் பத்திரிகையை ஆரம்பித்தோம். அப்பொழுது நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் அகில இந்திய அளவில் நான் நாடகப் பயணம் சென்றதில் எனக்கு நாடகம்செய்ய வேண்டும். என்ற எண்ணம் ஏற்பட்டது. முதல் ஒரு வருடம் நக்கீரன் தொடர்ந்து வருவதற்கான வேலைகளை கோபாலுடன் இணைந்து பின்னணியில் இருந்து செய்துவிட்டு 88ல் இருந்து 98வரை முழுநேர நாடக ஊழியனாக இருந்தேன். 1998ன் பின் முழுநேரம் என்ற நிலையில் இருந்து விடுபட்டு “Media Development Foundation” என்கின்ற அமைப்போடு சேர்ந்துபணியாற்றினேன். அதில் ஒரு மூன்று வருஷம்.அவர்களோடு சேர்ந்து கிட்டத்தட்ட 36 விவரணச் சித்திரங்களை டெல்லியில் உள்ள “News Channe’ இற்காகத்தயாரித்தேன். இதிலெல்லாம் பல அனுபவங்கள். பின்னர் 2001லிருந்து கடந்த ஏப்ரல் வரை கமலஹாசனோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.
3. இதுவரை நீங்கள் செய்த நாடகங்கள் பற்றிய விபரங்களைக் கூற
முடியுமா? முதன்முதலாக உருவாக்கிய நாங்கள் இருக்கிறோம் நாடகம் 12 முறை மேடையேற்றப்பட்டது. போபால் என்கின்ற நாடகம் 2 முறை மேடையேறியது. முதன் முறையாகச் செய்த பெண்’ நாடகம் 86களிலிருந்து 90வரை நூற்றுக்கணக்கான முறை மேடையேறியுள்ளது. தொடர்ந்து முற்றுப்புள்ளி, நாற்காலி’, ‘சதி, ஜப்தி’, ‘ஆட்கொல்லி போன்ற நாடகங்கள் செய்தோம். அறிவொளி இயக்கத்தோடு கிட்டத்தட்ட 15 நாடகங்கள் செய்தோம். பின்னர் சத்தியாக்கிரகமி’ என்கின்ற (மொழிபெயர்ப்பு) மேடை நாடகம், முற்றுப்புள்ளி' என்கிற ஒரு பெரிய வீதி நாடகம். பின்னர் 90களில் ‘மாநகர்’, ‘உரமி, ஜேம்ஸ்பாண்டு போன்ற நாடகங்கள் செய்தோம். பின்னர் பாரதிதாசனுடைய
28
 
 
 

புரட்சிக்கவியை மேடை நாடகமாகச் செய்து இருந்தோம். பிறகு ‘பயணம்’, ‘பல்லக்குத்துக்கிகள்’ (சுந்தர ராமசாமியினுடைய பல்லக்குத் தூக்கிகள் அல்ல) போன்றன. 2000ஆம் ஆண்டளவில் அளவில் ‘உபகதை என்கின்ற மேடை நாடகத்தை நாம் உருவாக்கினோம். அது வீழ்த்தப்பட்டவர்களுடைய கண்ணோட்டத்தில் நம்முடைய புராண, இதிகாச நாயகர்களைப் பார்த்தது. ஏகலைவனுடைய கண்ணோட்டத்தில் ஏகலைவன் 多 - கதை, சம்புகனுடைய கதை, அனார்க்கலியின் கதை, இரணுகாமனுடைய கதை, சமகாலத்தில் பள்ளியில் இருக்கின்ற ஒரு சிறுவனின் கதைபோன்றன பரிசீலிக்கப்பட்டன. அது ஒரு பெரிய தயாரிப்பு 45 - 50 நடிகர்கள் பங்குபற்றினார்கள். அது கிட்டத்தட்ட 13 முறை மேடையேறியது. அதுதான் கடைசியாக மேடையேறியது. அண்மையில் தயாரிக்கப்பட்ட நாடகம் இடம்'. சமய ரீதியில், சாதிரீதியாக, கருத்து ரீதியாக, பழக்கவழக்கங்கள் ரீதியாக வேறுபட்டோர் என இல்லாமல், எல்லோருக்குமான சமமான இடம் இங்கு உண்டு என்கின்ற நாடகம் அது. இதுவரை 36 வீதி நாடகங்கள் செய்திருக்கின்றோம். தேர்தல் காலங்களில் செய்த நாடகங்களைக் குறிப்பிடவில்லை.
4. ஒரு அமைப்பு சார்ந்து நாடகம் நிகழ்த்துவது பற்றி உங்களுடைய
அபிப்பிராயம் என்ன?
பார்வையாளர்கள் மத்தியில் வீதிநாடகம் வரவேற்புப் பெறாமல் அது
முழுமையடையாது. அதனை ‘வீதி நாடக முயற்சி என்றுதான் கூறலாமே தவிர முழுமையடைந்த முயற்சி என்று கூறமுடியாது. ஒரு அமைப்பு சார்ந்து தான் வீதி நாடகம் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி வருகிறது. வீதி நாடகம் வெறும் காட்சி மட்டுமல்ல. பலவிதமான கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்புகிறீர்கள் பலவிதமான பிரச்சினைகளைப் பற்றி மக்கள் மத்தியில் பேசுகிறீர்கள். பேசிவிட்டு உங்கள் பாட்டிற்குச் சென்று விடுவீர்களா? எதற்கு நீங்கள் நாடகம் போட்டீர்கள் என்ற கேள்வி வராதா? நாடகம் என்பது கோட்பாடுதான். நாடகம் என்பது தொடக்கம், முடிவு அல்ல. எங்கே நாடகம் முடிகிறதோ அங்கே வாழ்வு தொடங்குகின்றது என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. அங்கே நாடகத்தின் முடிவில் ஒரு செயல் பிறக்கவேண்டும். அந்த செயலிற்கு வடிவங் கொடுப்பவர்கள் யார்? ஒரு இயக்கமாகத்தான் இருக்கமுடியும். வீதி நாடகம் என்பது தொடரும் வேலை களுக்கான ஒரு ஆரம்பம்தான். நீங்கள் ஏற்படுத்திய விளைவுகளை, பார்வையாளர் மத்தியிலான பாதிப்புக்களை அறுவடை செய்வதற்கு ஒரு அமைப்பு வேண்டும். ஒரு இயக்கம் வேண்டும் அல்லது ஒரு செயல்முறை வேண்டும். எதுவாக இருந்தாலும் முக்கியமாக அதற்கு வேலைத்திட்டம் தேவை. இது தான் வீதி நாடகத்தின் முக்கியமான செயற்பாடாக இருக்கின்றது. ஆனால், என்ன ஒரு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்றால், ஒரு இயக்கம் சார்ந்து நாங்கள் நாடகம் போடுகின்றோம் என்பதற்காக கருவை எடுத்துக் கொண்டு நாடகத்தை நாடகமாகச் செய்யாமல் இருந்துவிடக் கூடாது. மோசமான கலை நல்ல பிரச்சாரத்தைச் செய்யமுடியாது. மோசமான கலை எங்கள் நோக்கத்தையும் மோசமாக்கிவிடும். நாடகம் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். நோக்கங்கள் உயரியவையாக இருந்தாலும் அதைச் சலுகையாக எடுத்துக் கொள்ள முடியாது. செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும்.
29

Page 17
5. நீங்கள் தொடர்ச்சியாக நாடகங்கள் நிகழ்த்துகின்ற போது ஏற்படும்
செலவீனங்களை எப்படி ஈடுசெய்கிறீர்கள்? ஆரம்பத்தில் கைக்கரிசைப் போட்டுத்தான் செய்தோம். ஆனால் இதே நடைமுறையைப் பின்பற்றித் தொடர்ந்து செய்ய முடியாது. ஒரு வாரத்தில் 4.5 நாட்கள் தான் நாடகத்தை நிகழ்த்துகின்றோம். 6 மணிக்குப் பின்தான் அனைவரும் வேலையைவிட்டு வருவார்கள். இரண்டுசக்கர வாகனங்களிலும். பெண்கள் ஆட்டோவிலுமாகச் சென்று பொதுவாக இாண்டு இடங்களில் நாடகம் போடுவோம். 20 நிமிடங்களிலிருந்து ஒ த்தியாலம் வரை நாடகங்கள் செய்திருக்கிறோம்.
எங்களை ஒழுங்கு செய்பவர்கள் சில சமயங்களில் பணம் கொடுப்பார்கள். சில சமயங்களில் நாங்கள் மக்கள் மத்தியில் ‘ரின் கலெக்ஷன்” பண்ணுவோம். எங்களைக் கூப்பிடுபவர்களிடமிருந்தும் ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொள்வோம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பணத்தைப் பெற்றுக் கொள்வோம். பெரிய யூனியன் என்றால் சற்று அதிகமாக வசூலிப்போம். அரச நிறுவனங்களிற்கு என்றால் ஒரு தொகை. இவைதான் எங்களுடைய் நிதி. கலைஞர்கள் எவரையும் செலவு செய்ய அனுமதிப்பதில்லை. சில புரவலர்களைக் கண்டுபிடிப்பதன் மூலமும் நிதியைத்திரட்டிக் கொள்ளலாம். 6. தங்களுடைய மாநகர் நாடகம் பற்றிக் கூறமுடியுமா?
1000 தடவைகளிற்கு மேல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் சென்னை மாநகரின் இருண்ட பக்கத்தைக் காட்டுகிறது. சென்னை என்றாலேஅனைவரும் பெரிய மலைப்போடுதான் பார்ப்பார்கள். கொழும்பென்றால் Twin Tower இரண்டைப் பார்ப்பது போல். ஆனால் ரெயில்வே பாதை ஒரமாகச் சென்று பார்த்தால் தான் தெரியும். அங்கிருக்கும் கொழும்பு வேறு. அதேபோலத்தான் சென்னைஎன்றால் வானளாவ உயர்த்த கட்டிடங்கள், கண்ணாடி மாழிகைகள், றஜினிகாந்துகள், கமலஹாசன்கள் மாதிரியான விஷயங்கள் பற்றித்தான் கற்பனை போகும். ஆனால் 60% மக்கள் குப்பங்களிலும், புறநகரங்களிலும் தான் இருக்கிறார்கள். இவர்கள் பற்றிப் பேசுவதுதான் இந்த நாடகம், சென்னையை மறுவாசிப்புச் செய்கின்றது. சென்னை மெரீனா பீச்சிலுள்ள உழைப்பாளர் சிலை மாதிரி ஒரு படிமத்தை உருவாக்கினோம். 4 நடிகர்கள் வருவார்கள். அவர்கள் நகரம் பற்றிய மாயையில் உருண்டு பிரண்டு ஒரு பாறைபோல் மாறிவிடுகிறார்கள். பிறகு இரண்டு பேர் வருவார்கள். அவர்கள் உண்மையைச் சொல்வார்கள். “குப்பத்தொட்டி சோறெடுக்க நாயோட சண்ட, குண்டி கழுவத் தண்ணியில்ல என்னாத்தக் கண்ட, காகிதம் பொறுக்கி காலம் தள்ளும் கன்னிப் பொண்ணுங்க, அதைக் கட்டம் போடக்காத்திருக்கும் காக்கிச் சட்டைங்க; மனிசன் கட்டின மாடியெல்லாம் நிமிர்ந்து நிக்குது, மனிதனோட வாழ்க்கை இங்கே விழுந்த கிடக்கிறது; நாகரீகம் ரக்கைகட்டி எங்கோ பறக்குது, றோட்டு மேல கோழிக்குள்ள குடும்பம் நடக்குது. அட என்னாங்கடா. அட என்னாங்கடா..” என்றபடி மெட்ராஸ் கெட்டவார்த்தைகளோடு சேர்த்துச் சொல்லு வார்கள். அப்படியே பாறையை புரட்ட முயலுவார்கள். உழைப்பாளர் சிலை
3ር)
 
 

அப்படியே உழைப்பாளர் சிலையாய் மாறிவிடுகிறார்கள்.பின்னர் கதை தொடங்குகின்றது. பாதாளச் சாக்கடையில் விழுந்து கிடக்கும் குழந்தையொன்றை மையமாக வைத்து கதை நகரும். அந்தக் குழந்தையை அப்புறப்படுத்து வதிலிருந்து பொலிஸ், அரசியல்வாதிகள், நிர்வாக முறையிலுள்ள சீர்கேட்டைப் பற்றியெல்லாம் நாடகம் பேசும். பின்னர் குழந்தை ஒன்றை தொலைத்து விட்டுத் தேடுகின்ற தாய் ஒருத்தி வருகின்றாள். அவளது பொறுப்பற்ற குடிகாரக் கணவன், குழந்தையைத் தேடும் போது ரவுடிகளின் பிரச்சினை என்று பல சம்பவங்கள். "மல்லிகா. மல்லிகா.” என்று அழைத்த படியே குழந்தையைத் தேடிச் செல்வாள். அவள் நடைபாதை வியாபாரிகளிடம் உதவி கேட்பாள். அவர்கள் உதவ முயலும் போது பொலிசார் வந்து நடைபாதைக் கடைகளைச் "சட்டவிரோதம்’ என்று உடைக்கத் தொடங்கி விடுவார்கள். இதே போலவே ரேஷன்கடை, தண்ணிகியூ, கழிவிடப் பிரச்சினை என்று அன்றாடத் தேவைகளின் சத்தத்தில் இவளில் குரல் அடங்கிவிடும் கடைசியில்'மல்லிகா.மல்லிகா.” என்றபடியே இவளது குரல் ஒரு வனாந்தரத்தில் தொடர்ந்து ஒலித்துத் தேய்ந்து ஒயும்.
மீண்டும் முதற்காட்சியை நடத்திக் காட்டுவோம். "ஆஹா! அடேங்கப்பா!! பட்டணம்டா. மட்ராசுடா. எம்மாம் பெரிய மாடிங்க. பீச்சு.” என்று தொடரும் நகரம் பற்றிய வியப்புக்களோடு நாடகம் முடிந்துவிடும். அவள் குழந்தையைக் கண்டுபிடித்தாளா? அந்தக் குழந்தை அவளுடையதுதானா? என்று நாங்கள் எதையுமே நாங்கள் சொல்லவில்லை. எதார்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைதான் இது. நாங்கள் யாரையும் அழவைக்கவில்லை. சிந்திக்க வைக்கிறோம். பின்னர் ஒரு பாடல் "இருண்ட காலத்தில் பாடல் ஒலிக்குமா? ஒலிக்கும் இருண்ட காலத்தைப் பற்றி” அந்தப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது ‘மல்லிகா. மல்லிகா.” என்று இந்தக் குரல் ஒலிக்கும். எல்லோருமே மனிதனாக இருக்கக் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அன்றாடப் பிர்ச்சினைகள் அவர்களைத் துரத்திவிடுகிறது. அதையும் தாண்டி மனிதாபிமானம் கதறிக் கொண்டு இருக்கிறது என்கின்ற ஒரு பொதுவான செய்திதான் இது. 1991ல் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது. 7. பின்நவீனத்துவம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
பின்நவீனத்துவம் என்றால் நவீனத்தினுடைய போதாமைகளைச் சுட்டிக்காட்ட வந்ததாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் பின்நவீனத்துவம் ஒரு ஒட்டு மொத்தமான அரசியல் கோட்பாடு அல்ல. இது இலக்குகள் அற்றது. பின்நவீனத்துவம் முழுக்க முழுக்க முதலாளித்துவத்தின் சிக்கலில் உருவானது. ஆனால் முதலாளித்துவத்தின் சிக்கல்களை மூடி மறைக்கின்ற விதத்தில் மாறுகின்றது. இந்தப்பதில் முழுமையானதல்ல. இது பற்றி இன்னுமொரு தருணத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும.
தொகுப்பு : க.தேஜா
உதவி : கி.திவாகரன்
பிரளயனர் அவர்களின் இலங்கை அனுபவங்கள் உட்பட அவருடைய நாடக அனுபவங்களையும் உள்ளடக்கிய செவ்வி அடுத்த இதழிலும் தொடரும்.
31

Page 18
EXK
நிண்ட இடைவெளிக்குப பிறகே பயில்நிலத்தின் 3வது து இதழ் கிடைத்தது. பின்னட்டைப்படக் கவிதை வழமை
யைவிட வாசிக்கச் சரமம் தருவதாய் உள்ளது. அதிக எழுத்துப் பிழைகளைக் கண்டது வருத்தத்தை உண்டு பண்ணியது. முதல் இரு இதழ்களையும்விட Layout முன்னேற்றகரமாக இருக்கிறது. உங்கள் பயணம் தொடரட்டும். உங்களோடு நாங்கள் பலமாய் இருப்போம்.
சி.செவ்வந்தி, வெள்ளவத்தை
பயில் நிலம் இதழின் தரம் மேலும் அதிகரித்திருப்பது மகிழ்வளிக்கிறது. உங்கள் கடந்த இரு அட்டைப்படங்களும் ஒரே வகையில் அமைந்ததை காணக்கிடைத்தது. அட்டைப்பட அமைப்பில் மாற்றங்களைச் செய்ய முயலுங்கள். உங்களது இலங்கை பற்றிய கல்விமுறைமை,
சேதுசமுத்திரத்திட்டம் என மாறு பட்ட பார்வைகளைத் தொடருங்கள்.
ப.தீபன், யாழ்ப்பாணம்
பயில் நிலத்தின் 3 அறுவடைகளும் வாசிக்கக் கிடைத்தது. இத்தகைய ஒரு மாத இதழ் வெளிவருவதை இட்டு நான் மிக்க
மகிழ்வடைகின்றேன்.
மா.கார்த்திகா, கொழும்பு - 10
சாதாரணமாக இளைஞரால் வெளியிடப்படும் சஞ்சிகை என்று கூறும் போது எம்மத்தியில் ஓர் அலட்சியப் பண்பே தோன்றுகின்றது. ஆனால் “பயில்நிலம்’ சஞ்சிகை அவ்வாறு அல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் ஒவ்வொரு ஆக்கங்களும் பல் வேறுபட்ட தகவல்களைத்
தருவதாய் அழகாய் அமைந்துள்ளது.
உ.செந்தூரன், வவுனியா
பயில் நிலம் பயிலப்படுவதற்கான நிலம் அல்ல. அது தேர்ச்சி பெற்ற பண்படுத்திய ஓர் பெரு நிலம். உங்கள் செயற்பாடுகள் மேலும்
தொடர, பயில் நிலம் பாரினில் தளைத்திட வாழ்த்துகின்றேன்.
கு. தர்ஷிகா, வத்தளை
'வாசகர் கடிதம்" பகு வெறுமனமே பயில் கவர்ந்த கட்டுரைகளைப் பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அவற்றின் சிறப்புக்களையும் அவசியமானால் குறைகளையும்
துங்கள். நல்ல கருத்துரைகள் பயில்நிலத்
22:X8888888&88888
32
 
 
 

உங்களோடு சில நிமிடங்கள். 73
அன்புள்ள நண்பர்களே,
பயில் நிலத்தின் 4வது இதழைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு முன்னால் மூன்று இதழ்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆயினும் நீண்ட நாட்களாக வெளிவருவது போல வாசகர்களிடையே பயில்நிலத்தின் செல்வாக்குப் பரவியிருக்கின்றது.
பயில் நிலத்தின் 3வது இதழ் வெளியீடு நாவலப்பிட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பயில் நிலம் குழுவினருடன் நாவலப்பிட்டி நண்பர்களும் இணைந்து நிகழ்ச்சிகளைப் படைத்தனர். “விஜய்” பத்திரிகை ஆசிரியர் சட்டத்தரணி இரா. சடகோபன் ஆய்வுரையினை நிகழ்த்தினார். கவியரங்கு, விவாதம் ஆகியனவும் இடம்பெற்றன. நாவலப்பிட்டி வாழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்விற்கு வருகை தந்து எமக்கு உற்சாகமூட்டினர். பெருந்தொகையானோர் விழா அன்றே பயில்நிலச் சந்தாக்காரர்களானார்கள்.
மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வின் வெற்றிக்கு திரு. தர்மசீலன், நண்பர் ரவி ஆகியோரின் கடின முயற்சியே முக்கிய காரணம். அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த இதழின் அட்டைப்படம் 4 வர்ணங்களில் புதுப்பொலிவுடன் வெளிவருகின்றது. பயில் நிலத்தை மேன்மேலும் தரமாக வெளிக் கொணர்வதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கின்றோம். தகுந்த சூழ்நிலை ஏற்படும் போது இன்னும் பல சிறப்புக்கள் செய்ய வேண்டும் என்பதே எமது ஆவல்.
பயில்நிலம் பற்றிய உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையெல்லாம் கவனத்துக்கு எடுத்துக் கொள்கின்றோம். பாராட்டுக்களை நன்றியோடு ஏற்று மகிழ்கின்றோம். குறைகளைக் கண்டு சுட்டிக்காட்டும் வேளையில் அது குறித்து, கலந்தாலோசித்து உண்மையிலேயே அவை தவ்றுதான் எனக் கண்டால் திருத்திக் கொள்கின்றோம். பயில் நிலத்தை உங்கள் விருப்பப்படி உருவாக்க விமர்சனங்கள் எங்களுக்கு உதவும். என்ன? எழுதுவீர்கள் தானே!
சந்தா மூலம் பயில்நிலத்தைப் பெறமுயலுங்கள். இதனால் கால தாமதம் இன்றி உங்கள் கதவைத் தேடி பயில்நிலம் கிடைப்பது உறுதி செய்யப்படுகின்றது. உங்கள் நண்பர்களுக்கும் ஏன் உறவினர்களுக்கும் பயில்நிலம் பற்றிச் சொல்லுங்கள், அவர்களையும் சந்தாதாரர் ஆக்கிவிட முயலுங்கள்.
பயில்நிலத்திற்கு எழுத விரும்பும் நண்பர்களே! நீங்கள் நல்ல நூல்களை நாடுங்கள், படியுங்கள், குறித்த விடயம் பற்றி நண்பர்களுடன் விவாதியுங்கள், தகுதியான பெரியவர்களிடம் அணுகிக்கேளுங்கள். ஆய்வு மனப்பான்மையோடு செய்திகளைத் திரட்டுங்கள். சிந்தனை செய்யுங்கள். தெளிவான நடையில் எழுத முயலுங்கள். இம்முயற்சி அறிவுத் தேடலுக்கு ஒரு சிறந்த அணுகு முறையாக அமையும். ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
மகிழ்ச்சிகரமான, வளமான, அமைதிமிக்க ஓர் பூமியில் எம்முடைய எதிர்காலம் அமைய வேண்டுமெனில் நாம் கைகோர்த்துச் செயற்பட வேண்டும். அதற்காக இனி நாம் ஒவ்வொரு மாதமும் சந்திக்க வேண்டும். சம்மதந்தானே? வாசகர்கள் அனைவரிற்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள். சுறுசுறுப்பான 2005ஐ எதிர்பார்க்கலாம். மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்.

Page 19
அன்பின்
39|GEJ] Ejiji TL தந்தைே பெருந்த
գg-IHII ՃվE உலகெ
}Iה6לה6נגHb E foi fill EG L
வெறுஞ் ஆப்கான slG3 (BGL செயல்வி
பாக்தாதி சதாமை மக்களிற்
ஆப்கான ஈராக்கில எண்னெ மெத்தப்
நமக்குத் நம் துயர்
இத்தோடு உன்னை ஒரு தீவி ஆயிரம்
ஒரு தீவி
அல்லது
அந்நாட்(
மக்கள் உனது த ஆனால்
கண்விழி Քեչեեւ)ITեն முழங்கட் வளரட்டு
ii மாத இதழ் நீங், புேதிய மதி தெகிவளை பபிப்நிடி
 

வெற்றித்திருமகன் (வாழ்த்துப்பா)
இருப்பிடமே! பாப் பெரு விளக்கே! சொற் காத்தவனே! ண்மையின் புகலிடமே!
க்கும் அடிபணியா முடிவேந்தே! ங்கும் இறையாகி உயர்ந்தவனே! ன் புஷ்ஷே வாழ்க! மக்கள் கண்ணிர் வளர்க்க!! சனத்தை அழித்து ரிஸ்தானின் அதிபயங்கரவாதி
ைேன விரட்டிய
ரன் நீயன்றோ!
ன்ெ இடிபாடுகளில் ப் பிடித்து
(95 9ILI (IT) Lugħ அளித்தவனும் நியன்றோ!
பிளப்தானை அடைந்ததும்
இறங்கியதும்
பப்க்குத்தானாம்
படித்தவர்கள் பொப்யுரைக்கின்றனர் தெரியும் அது அழியாது காக்கத்தான்
டு விடாதே த்தவிர அனைத்து நாடுகளிலும் ரவாதி இருப்பான் பேர் மடிந்தாலும் ரவாதி தப்பக்கூடாது ரையும் தேடி அழி
=్క
டு வளத்தை அணிந்துகொள்.
வெறும் மந்தைகள் னிேக்கு தலையாட்டும் உயிர்வாழிகள்
மறவாதே
க்கவில்லை, இன்னும்
| -Յl:ElճնճմII,
டும் போர்முரசு!!
ի վճի Լյելի !!
ம் தழுவினரால் விகடன் பிரின்டர்சிப் அச்சிட்டு வெளியிடப்பட்டது.