கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பயில்நிலம் 2005.02

Page 1
ரெவரி 2009
 

5ur 2000

Page 2
**毒、 & هr"; منتج
ஆறாவது அறுவடைக்குத் தயாராகும் பயில்நிலம் ஆண்டாண்டு காலத்திற்கும் நடுகையும் விளைச்சலுமாய் தொடர வாழ்த்துக்கள்
$巡
S. R. METALS
Imports & Exporters, Dealers in scrap Iron, Scrap Brass, Copper, Aluminium, All kinds of Metals & Hardware Items
#321, Dam Street, Colombo - 12.
Tel: 2341584, 2421373, 2332185 Fax: 24.54627
Mobile: 071 - 2723624 E-mail : robin@eureka.lk
 

நோம் சொம்ஸ்கி
6:
ஞாலசீர்த்தி மீநிலங்கோ
மிதுனி
கு. பாரதி சீராளன் க. தே. ஜனமகன் (85. (960s)6pm ab. (9 grass அ. செஞ்ஞாயிறு
மாபெரும் அபாயங்களின்போது, மாபெரும் பதELங்களின் போது, மாபெரும் படைப்புக்களின்போது, எது தேவையென்றால், மாபெரும் எதிரிகளும் மாபெரும்
குறிக்கோள்களும் தான்.
பயில்டுலம்
- Greenly r
D. puer
த. பார்த்திபன் 8ബ്. ിjdrങ്ങഖന്ദ്ര
கு. பாரதி
நிலாமகள்
(9,606,
க. லீலாவதி
693. отшпЈп
ബി
குழலி க. ருக்ஷா மீநிலா
பெப்ரவரி - 2005

Page 3
Óyá4M Calály...
କାଁ
/யில்திM)
Urs
பெப்ரவரி 2005 விதைப்பு - O egos GoDL - O6
இதழாசிரியர் தெ. ஞா. மீநிலங்கோ
விநியோகம் கு. பாரதி
asamrubuprub தே. அபிலாஷா
பயில்நிலம் குழு பொ. கோபிநாத் தே. ஜனமகன் ந. பிரசாந்த் ஸைரா கலீல் கி. திவாகரன் க. அபிராமி செ. நந்தமோகன் வி. பிரபுநாதன் செ. கெளரி ந. ரவிச்சந்திரகுமார் த. பார்த்திபன்
வெளியிடுவோர் பயில்நிலம்
59/3, வைத்யா விதி, Y தெஹிவளை 5527O74
அமைப்பும் அச்சும் "கிறிப்ஸ்' 162, டாம் வீதி,
கொழும்பு
பயில்டுலம்
பதில்களைத் 9ேடி
மெல்லத் தவழ்ந்து கைகளால் தடம் பதித்து நடைபயின்று நடை நிமிர்ந்து தடம் பயின்று தடம் பதித்து நடந்து வருகிறோம் உங்களோடு நடக்க வருகிறோம் மெல்லத் தவழ்ந்து உங்கள் கரம் பற்றி எழுந்து நின்று மெல்ல நடந்து நிமிர்ந்து நேர்கொண்டு சீரியமாய் துணிந்தெழுந்து நலம் விசாரித்து முட்கவர்கள் தவிர்த்து பாதைகள் தெளிந்து நடந்து வருகிறோம்
சும்மா இருத்தலும் சுகமல்ல எனவாகி நல்லதொரு வாழ்க்கையும் கனவாகி நினைக்காதது எல்லாம் நனவாகி சுமையாகிப் போனது சும்மாடு
இன்று போகுமோ நாளை போகுமோ போகாமல் இங்கு தங்கி விடுமோ என்ன செய்ய ஏது செய்ய எதுவுமறியாது திகைத்தபடியே புரட்சிகள் பற்றிப் பேசுகிற பொழுது புரட்சியின் அவசியம் குறித்த கவலையற்று கனமாய் எம்மைத் திட்டியவர்களே எங்கள் பூமியை தயைகூர்ந்து கண்திறந்து பாருங்கள் வெளிநாட்டிலிருந்து வருவதெல்லாம் நல்லதெனச் சொல்லி வழிநடந்து வழிநடத்தி அழியவைத்த அவலமெல்லாம் எப்போது மாறும் எங்கள் சுந்தரத்தீவினிலே காத்திருப்பு பதில்களை தேடி
-ஆசிரியர் குழு
aufyarfi - 2ðar

9. tdanå ທົ່ງຖod 24 பெறுகி 畸
அதற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை, அடித் தொண்டை வரண்டு, கைகால் சோர்ந்து இயங்க மறுக்கும் எந்திரமாய் தரித்துவிடுகிறாள். அதிகாலையில் பணியின் கொடுங்குளிர் என்ன ஆகுமோ என்று ஏங்கிக் கிடந்த இரவு, காட்டுவழி, மனித சஞ்சாரத்தை வெறுத்தோடி வந்தவள், என் தாகத் துக்குத்தண்ணிர்தர யாருமில்லையா?. என்று மனிதர்களைத் தேடுகிறாள்.
உயரப் பனை மரத்தில் ஏதோ சலசலப்புக் கேட்கிறது. தாகத்தில் தவிப்பவள் முன்னால் பனை மரத்தில் இருந்து கள்ளு முட்டி யுடன் ஒரு நரம் இறங்கிவருகிறது. அங்கும் இங்கும் கிளிந்து தையல் போட்ட முக்காற் காற் சட்டை, இறுக்கமாக கடும் வண்ணத்தில் ஒருரீசேர்ட் வருவதுஆணா, பெண்ணா Tes எண்ணுவதற் கிடையில் ஒரு கேள்வி எழுந்தது.
"யார் நீங்கள்?," பதில் தாமதம் ஆகுகையில் "RL கெளத? மறுமொழியில் கேள்வி. இன்னும் பதில் வராத நிலையில் கேள்வி சற்று அதட்டலாக வருகிறது. உடை, நடை தோற்றம் - அதற்குள் இருந்து முதலில் கனிவாக வந்த மொழி, கணத்தில் மறைப்பெறுதிகொள்கிறது.
půsosob
"நான் மங்களேஸ். தமிழ் என்று அறிந்த பின் கடுமை கனிவாகி தோள்களை அணைத்து அழைத்துச் செல்கிறது. பனைவடலிப்புதருள் இருந்த தண்ணிர்ப் போத்தல் தாகசாந்தி செய்ய மங்களேஸ் ஒரு வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்படுகிறாள்.
O O. O.
சென்ற மாதம்தான் மங்களேஸின் கணவன் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். வேலைக்குப் போனவன் வீடு வரவில்லை என்று காத்துக் கிடந்தபோது பொழுதுபடும் மைம்மலில் படலையடிக்குச் செய்தி வந்தது. 'பாதையோரத்தில் சடலம், பிரேதம் ஆஸ்பத்திரி சவச்சாலையில், பிரேத பரிசோதனை கொலை' எனத் தீர்ப்பு, பொலிஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
திருமணமாகி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. வயிற்றில் மூன்று மாதக் கரு வளர்கிறது. அதற்குள் விதவைக் கோலமா? நேற்றுத்தான் மங்களேஸ் புருஷனுக்கு அந்தியேட்டிக் கிரியைகள் செய்தாள். பொட்டழித்து, தாலி கழற்றி,
Guůyuf - 2006

Page 4
பூச்சரம் களைந்து கணவனது அசைவிலி மார்பில் வைத்து அழுது முடித்து ஒரு மாதம். இது அவனது ஆத்ம சாந்திக்கான சடங்கு, ஊரவர்க்கு ஒரு வேளை உணவு, உபசாரம், நினை வஞ்சலிமலர் வெளியீடு.
எல்லாம் முடிந்து உறவுகள் எல்லாம் இழவு வீட்டுக்களைப்பில் உறங்கிக்கிடக்க இவள் மட்டும் தனியாகப் புறப்பட்டு வந்தாள். உடுத்திருந்த வெள்ளைச் சேலை தவிர காலில் ஒரு பழஞ்செருப்புத் தானும் இல்லை.
இரவின் பயம் அவளுக்குள் இருக்க வில்லை. பயணப்படும் பாதை பற்றிய தெளிவும் இருக்கவில்லை. கோர யுத்தம் நடக்கும் நாளில் குண்டடிபட்டு வீதியில் கிடந்திருந்தால் கூட கவலையில்லை. சமாதானத்துக்கான ஒப்பந்தம் அமுலில் உள்ள காலம் கணவன் யாராலோ கொல்லப்பட்டுள்ளன்.
மூடிக்கிடந்த பாதைகள் திறந்து, சனம் கொஞ்சம் மூச்சுவிட்டு நடக்கக்கூடிய நிலைமை வந்ததென்று அங்கலாய்த் தனர். ஆயுதங்கள் மறைந்து போய் அல்லது ஓய்ந்து இருந்தாலும் அவரவர் அடையாளங்களுடன் தான் உலவுகின் றனர். இதற்குள் மூன்றாம் படையும், ஐந்தாம் படையும் உலவுவதாகப் பேச்சு, போதாக்குறைக்கு சர்வதேச அவதானிப் பாளர்களும் குறுக்கும் நெடுக்குமாக உலவுகின்றனர்.
எத்தனை மங்களேஸ்வரிகளின் கணவன்மார்கள், சகோதரர்கள்,தந்தை மார் இதற்குள் அநாதரவாகச் செத்திருப் LurTrassiT.
assodab
வெள்ளைச் சேலை உடுத்தி, நெற்றி யில் திருநீறு மட்டும் பூச அனுமதிக்கப் பட்டிருந்தமங்களேஸ்தன் உறவுகளுக்கு இருளையே விடையாக வைத்து விட்டு வந்திருக்கிறாள். வந்த வழி நகரமாக இருந்திருந்தால் அவள் சூறையாடப் பட்டிருப்பாள் அல்லது மற்றொரு அநாதைப் பிணமாகியிருப்பாள். காட்டு வழி என்பதால் தப்பித்து வந்தாள்.
O O O
அதிகாலையில் பனை சீவி, கள் இறக்கி வந்தவள்தான் அந்த ஊரின் தலைவியாக இருக்க வேண்டும். அவள் தானே மங்களேஸை விசாரித்தாள், அரவணைத்தாள், ஆதரித்தாள், உண்ண உணவும், நீருடன் உறங்க இடமும் கொடுத்தாள்.
அந்த ஊரில் இந்த நிமிடம் வரை எந்த ஆணையும் மங்களேஸ் காணவில்லை. அந்தக் குடிசையின் முன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை வெளியாகத் தெரிகிறது. இடையிடையே வேம்பு, மா, முதிரை, பாலை போன்ற நிழல் மரங்கள், இடையிடையே சுறுசுறுப் பான மனித எறும்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தனையும் பெண்கள், மனிதப் பெண்கள், சேற்றில் காலூன்றிஉழைக்கின்றனர்.
இதுபோல் இங்கே இன்னும் சில குடிசைகள், அங்கும் பெண்கள் மட்டுமே. சிலர்பாய் இழைக்கிறார்கள். கைவினைப் பொருள்கள் ஆக்குகிறார்கள். கள் அல்ல, கருப்பநீரில் இருந்து கருப்பட்டி சமைக்கிறார்கள். ஆடு, மாடு, கோழி என்று பண்ணை வளர்ப்பும் நடக்கிறது.
audyalífi - 2005

இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த யுத்தத்தின் அதிரடி படை யெடுப்புகளில் இந்த ஊரில் வாழ்ந்த ஆண்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள், அல்லது காணாமற் போய்விட்டார்கள். ஆனாலும் எஞ்சிய பெண்களும், பிள்ளைகளும் தாமாக வாழப் பழகிக் கொண்டார்கள்.
ஒரு குடிசையில் உணவு தயாரிக் கிறார்கள். அந்தக் கிராமத்து உயிர்கள் அத்தனைக்கும் அந்த வீட்டு மண்டபத் தில் தான் சாப்பாடு. ஆங்காங்கே பிள்ளைகள் ஓடி விளையாடுகிறார்கள். பாரதியின் பாப்பா ப்ாட்டு நினைவுக்கு வருகிறது.
இவர்களால் எப்படி முடிகிறது? கூரை வேய்ந்தால் என்ன, கட்டிடம் அமைத்தால் என்ன? அத்தனை பணிகளையும் இவர்களே பங்கிட்டுக் கொள்கிறார்கள். இங்கு பல்வேறு மொழிகளைப் பேசுகி
றார்கள், அவரவர் இஷ்டதெய்வங்களை
வணங்குகிறார்கள். ஆனால் பேதங்கள் இல்லை. அன்பைப் பகிர்ந்து கொள்ள, உணர்வைப் புரிந்துகொள்ள மட்டுமே இவர்கள் மொழியைப் பேசுகிறார்கள்.
அவசர அவசரமாக நிர்வாக சபை கூடுகிறது. மதியஉணவுக்கு முன்னதாக திாமானம் நிறைவேறிக் கொள்கிறது. மங்களேஸிற்குதனியான குடிசைஒன்று நாளை அமைக்கப்படப் போகிறது. அதற் கான இடமும் தேர்ந்தாகிவிட்டது.
கூட்டம் முடிந்து அனைவரும் மதிய உணவுக்கு ஆயத்தமாகுகையில் மதம் கொண்டதாய் ஒருவன் ஓடிவருகிறான்.
பயில்டுலம்
வெறும் மார்பு, மடித்துக் கட்டிய சாரம், உடல் முழுதும் மரதன் ஒட்டக்காரனின் வியர்வை,முகத்தில் ஆவேசம், கொலை வெறி பற்களில்,
அவன் ஓடிப்புகுந்த வீடு தலைவியின் வீடாகிறது. பின்ப்குதியால் வெளியேறி எதையோ தேடுகிறான். அவனது மொழி இவர்களுக்குப்புரியவில்லை.
கையில் அகப்பட்ட மண் வெட்டியோடு அங்கும் இங்கும் அலைகிறான். வேப்ப மரம், அதன் அடி, உச்சி வெய்யில் பார்த்து அது சரியும் மேற்குத் திசை யறிந்து கிழக்காக நான்கு அடி வைக் கிறான். அதில் ஒரு கொத்து, அங்கிருந்து வடக்காக அளந்து பார்க்கிறான். அதில் எரிந்த பனங்கொட்டு மிஞ்சிக்கிடக்கிறது. முன்பு வெட்டுவைத்த இடத்திற்கு வேக மாக வந்து மண்வெட்டியால் தோண்டு கிறான்.
அத்தனை மகளிரும் பார்த்திருக்க அவன் மட்டும் தனியனாய் இயங்கு கிறான். வாலிபமிடுக்குதளர்ந்து நடுத்தர வயதை எட்டும் உடல்வாகு, ஆனாலும் ஆவேசத்துடன் முயல்கிறான். மூன்று அடிவரை வெட்டியிருப்பான் 'சரக், சரக். எதுவோ அகப்படுகிறது. கிண்டி எடுத்து தூக்கி நிமிர்த்துகிறான். பொலித்தீன் பையில் தன்னியக்கத் துப்பாக்கி ஒன்று ரவைக் கோர்வையுடன் தூங்கிக் கிடக்கிறது.
அதனைத் தட்டி எழுப்பி ஆவேசத் துடன் எடுத்துப் போக முனைகிறான். தலைவி மின்னலாய் முன்னேறினாள்.
பெப்ரவரி - 2005

Page 5
அவன் கழுத்தைப் பற்றி, கைகளை மடக்கி, சரித்து அவனது மார்பில் உதை கிறாள். பொறிதவறியவன் கிடங்கில் விழ, இவள் அவனில் குறிவைக்கிறாள். "இது மட்டும்தானா? இல்லை; இந்தமண்ணில் இன்னும் ஒளித்து வைத்திருக்கிறாயா?” அவள் ஆவேசமாகக் கேட்ட மொழி அவனுக்குப்புரிகிறது.
"இது என்னுடையது. இதை நான்தான் இங்கு வைத்தேன். இப்போது தேவை, அதனால் எடுக்க வந்தேன்." அவன் உழறுகிறான். பதிலுக்குக் காத்திராத
துப்பாக்கி உயிர் கொள்கிறது. அகழ்ந்த கிடங்கில் அவன் சமாதியாகிறான். அடுப்பெரிக்கும் பெண்ணிடம் தலைவி துப்பாக்கியைநீட்டுகிறாள். அதை"எரியும் அடுப்பிற்கு விறகாக்கிவிடு" என்ற கட்டளையுடன்.
மங்களேஸ்வரி தலைவி கொடுத்த புதிய ஆடைக்குள் புகுந்தவளாய் கீரைப் பாத்திக்குள் இறங்குகின்றாள். இன்று அவளுக்கு அங்கே களைபிடுங்கும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
(மாற்றத்தைவேண்டி
சோதனைகளில் வெற்றிகொள்ள
இரவுகள் அதிகாலைகளை தட்டியெழுப்புகின்றன OOP
வேலையின்மை புத்தகப் பார்வையூடே ஒரு நொடியில் என்நினைவில்
N
P
அழைப்பினை ஏற்படுத்தி விடுகிறது C
இதுவும் ஒருவகை சோதனை தான்
அச் சோதனைக்காக
அழைப்பு மணிகள் நாமத்தைச் சொல்லி
ஒவ்வொரு கணமும் தட்டியெழுப்புகின்றன
bôssab
- <>- SọềJể. -
Guógarín - 2005
 
 
 

ശ്രമിഴ്ഭglഞേ?
இலங்கைக்கு அழிவு' என்று பொருள்
எழுத்தில் இன்றி உண்டு போலும்
இராவணன் காலம் முதல் இன்றுவரை தொடர்கிறதே
அனுமனிட்ட தீயில் வெந்து
கண்ணிவெடியில் காலிழந்து
கண்மணிகள் வாழ்விழந்து அகதிகளாய் அல்லும்பகலும் அல்லல்பட்ட காலம் போய்
செல்லடிக்குப் பயந்தோடி பங்கருக்குள் ஒளிந்து வாழ்ந்த
காவலிடை கம்பியறைதனிலே
கழிவகற்றி உயிர் வாழ்ந்த வாழ்வெல்லாம் மாறிப்போய் புதியதோர் உலகெம்மை வரவேற்று நின்ற வேளை
இருபடைக் கலகமென்றும் உள்வீட்டுப் பிளவென்றும் உயிர்களை ஏப்பம் விட பீதியுடன் சில காலம்
இந்திரன் வள்ளல் தன்மை வரம்பு மீறி உயர்ந்துவிட உடைமைகள் தமை இழந்து
உறவுகள் புடை சூழ்ந்து குற்றுயிராய் வாழும் வேளை
LაuნNRადჭიაub
ーウ・ νηλό3νώη -
புதிதாய் இன்னொன்று பூகம்பம் என்றுவர கடல் கொந்தளித்து குறைத்திற்று குடித்தொகையை
இவையனைத்தும் இதுவரைக்கும் இன்னுமேதும் இருப்பிலுண்டா இன்னோர் 'சுனாமி இலங்கைக்கு வந்திடுமா? தாழ் அமுக்கம் தான் தோன்றி வந்திடுமா புயல் காற்று? அமிலமழை பெய்திங்கு
அழிவுகளை தந்திடுமா?
ga0p6) inl இவையெல்லாம் தொடர் கதையா? முற்றொன்று வைப்பாயா?
பெப்ரவரி 2005

Page 6
ஐ.நா. யுத்தத்தின் ,
Urbirefur? ஞாலசீர்த்தி மீநிலங்கோ
Fராக் மீது யுத்தம் தொடுக்கப் பட்டு இன்று உலகில் ஒரு சிக்கலாய் தெளிவுகளற்ற நிலை யில் ஈராக்கிய் மக்கள் அல்லல் படுகையில் யுத்தம் தொடங்க முன்னும் சரி, யுத்தம் நடைபெற்ற போதும் சரி, இப்போதும் சரி உலகின் சமாதானக் காவலனாய் மக்களின் நண்பனாய் தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் அமையம் என்ன செய்து கொண்டிருந்தது, கொண்டிருக் கின்றது, என்ன செய்யப் போகிறது என்பன விடையற்ற கேள்வி களாய் எழுகின்றன. யுத்தத்தின் பின்னணியில் நடந்த சில உண்மை கள் ஐ.நா.வின் உண்மையான முகத்தைக் காட்டுகின்றனவா?
அமெரிக்க - ஈராக்கிய பிரச்சினை யில் ஐ.நாவின் செயலாளர் நாயகம் கொஃபி அனானும் ஐக்கிய நாடுகள் சபையும் தம் பணியை செவ்வனே ஆற்றவில்லை. ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக ஐ.நாவின் உடன்பாட்டுடன் ஈராக் கிற்கு எதிராக பொருளாதாரத்தடை கள் விதிக்கப்பட்டு வந்துள்ளன. இது ஒரு மில்லியன் ஈராக்கியரின் இறப்புக்குக் காரணமாகியது.
பயில்டுலம்
அதில் பெரும்பான்மையோர் சிறார்களாவர். கடந்த 12 ஆண்டு களாக ஐ.நாவின் பேரழிவு ஏற்படுத் தும் ஆயுதங்கள் தொடர்பிலான ஐ.நா. சோதனைக் குழுவினர் ஈராக் பற்றிய தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்யாததன் மூலம் ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் தாக்குவதற்கு வழி செய்தே வந்துள்ளனர். அமெரிக்கா வினுடைய ஈராக் மீதான முற்றுகை யின் தொடக்கத்திற்கான இறுதி மணித்துளிகளிலும் ஐ.நாவின் கவனம் ஈராக்கை அமெரிக்காவி gg)I 60) l— (Lu கோரிக்கைகளுக்கு இணங்க வைப்பதிலே இருந்ததே யன்றி அமெரிக்காவினுடைய யுத்த ஆயத்தங்களை கண்டனம் செய்வ தில் இருக்கவில்லை. ஐ.நா பாதுகாப்புச்சபை அமெரிக்காவின் முற்றுகைக்கு அனுமதி மறுத்த பின்னும் ஈராக் மீதான தாக்குதலை தடுக்கவோ அல்லது வேறு வகை யில் அமைதி பேணவோ ஐ.நா. முன்வரவில்லை. வரலாற்றில் முழு சபையும் அமெரிக்காவுக்கும் அதனது முற்றுகைக்கும் ஆதரவு
பெப்ரவரி - 2005
 

வழங்கியதாகவே பதியப்படும். இதிலே குறிப்பிடத்தக்கது ஏதெ னின் ஐ.நாவின் பரிசோதகர்கள் CIA யுடன் நெருங்கிய தமது தேடுதல்களில் அவர்கள் பலதரப்
பலர் தொடர்புடையவர்கள்.
பட்ட தகவல்களை அமெரிக்க
இராணுவ புலனாய்வுத் துறைக்கு வழங்கியுள்ளனர்.
வது தீர்மானத்தின் அடிப்படையில் ஈராக்கை மீளக் கட்டி எழுப்பவும் இடைக்கால ஈராக்கிய தேசிய சபையை உருவாக்கவும் என ஈராக்குக்கு அனுப்பப்பட்டார். அவரது உதவியோடு அமெரிக்கா தனக்கு வேண்டியவர்களை தேசிய சபைக்கு நியமித்தது.
அமெரிக்காவினுடைய ஈராக் மீதான முற்றுகையின்
தொடக்கத்திற்கான இறுதி மணித்துளிகளிலும் ஐ. நாவின்
கவனம் ஈராக்கை அமெரிக்காவினுடைய கோரிக்கைகளுக்கு ார் இணங்க வைப்பதிலேயே இருந்தது.
ஈராக்கை அமெரிக்கா கைப் பற்றியவுடன் புஷ் நிர்வாகம் ஈராக் மீதான முழுமையான கட்டுப் பாட்டை வேண்டிநின்றது. அதே வேளை ஐ. நாவை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட அனுமதிப்பதாகவும் கூறியது. கொஃபி அனான் வியெரா டி GLDGau T (Viera de Mello) 60) a அமெரிக்காவுக்கு பொறுப்பாக விருந்த உயர் அதிகாரியான போல் பிரெமரின் கீழ் (Paul Bremer) செயற் பட அனுப்பி வைத்தார். இது அமெரிக்காவுக்கு அரசியல் வெற்றி யாக அமைந்தது. ஐ.நாவின் போர்வையில் அமெரிக்கா தனது செயற்பாடுகளை தங்கு தடை யின்றி செய்ய இது வாய்ப்பாகிப் போனது. டி மெலோஐ.நாவின் 148
uაußRადჭsაub
நியமனத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக அராபிய நாடு களுக்குடி மெலோசுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அடுத்த கட்டமாக அமெரிக்க அதிகாரிகள் ஹலிபேட்டன் கூட்டுத்தாபனத்திடம் (Halibutton Corporation) ஈராக்கிய எண்ணெய் கிணறுகளை குத்தகைக்கு வழங்கி தனி ιμ πή மயமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
இறுதியில் அமெரிக்காவை பாது காப்பதற்கும், டி மெலோ மூல மான ஐ.நா போர்வை செயற்பாடு களின் மூலம் அமெரிக்கா வேண்டி யவற்றை செயற்படுத்தவுமே 1483 தீர்மானம் உதவியது. 'ஈராக்கில் உள்ள ஐ.நா அலுவலகம் மீதான தாக்குதலானது, அமெரிக்காவோடு
பெப்ரவரி - 2005

Page 7
கூட்டுச் சேர்ந்ததற்காக ஐ.நாவுக்கு கிடைத்த பரிசு’ என்கிறார் ஐ.நா வின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் டெனிஸ் ஹலிடே (Dennis Halliday).
ஐ.நா சபை செல்கிறது. சமாதானம், சமூக நீதி, தன்னாட்சி, யுத்த எதிர்ப்பு, தேசிய வளர்ச்சி என்ப வற்றுக்காக ஒரு காலத்தில் பாடு பட்ட ஐ.நா இன்று யுத்தத்தின்
ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களி பங்காளியாகி நிற்கின்றது. லிருந்து மிகவும் விலகிய திசையில்
മരർജ്ര
- نه نام لمه الله ورودهٔ ۸۰ دG -
மக்களுக்கு மன்னர் வழங்கும் அழியாச் சொத்து அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்
கேட்டவுடனேயே
கர்ண பரம்பரையினர் அறுத்துத் தரும் கவசகுண்டலம்
ஆதங்கமாய் கேட்க ஆட்சேபமின்றி தந்ததை
ஆனந்தமாய் கேட்டிருந்தோம்
காலம் கரைந்தோட நினைவுகள் நீறாகின நிதர்சனங்கள் நிழலாயின வாக்குறுதிகள் வாயடைத்தன
மன்னர்கள் குருடாகி
செவிடாகி
ஊமையாகி
சடமாகினர்
இவர்கள் அமர்ந்த கதிரைகள்
இவர்களே அமர்ந்து சுத்திகரிக்கும் வரை
அழுக்குடன் காத்திருந்தன
Uமில்டுலம் O
Gügarifi - 2006
 

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய விலங்குடைத்து அடிமை இலங்கை சுதந்திரக் காற்றைச் சுவாசித்த நாள் பெப்ரவரி நாலாம் நாள்!
பொன்விழா கொண்டாடி முடித்த பின்னும்
இலங்கை மக்களுக்கு வரவில்லை சுதந்திரம்! சோதனையும் வேதனையும் மட்டுமே
மக்களுக்கு இன்னமும் எஞ்சியிருக்கின்றன!
வீட்டிலிருந்து வெளியேறுகையில் உயிரைக் கையில் பிடித்தபடி மக்கள்! இரவில் மட்டுமல்ல! பகலிலுந்தான் குண்டுவெடிப்புகள் பயங்கரவாத தடைச் சட்டங்கள் சொந்த நாட்டில், நடமாடும் சுதந்திரம் கூடப்பறிபோனது!
இலங்கை ஏற்படுத்திய அனைவர்க்கும் கல்வி சுமையான கற்கைநெறி, ஒப்படைகள், செயற்றிட்டங்கள்
பயில்டுலம் : f Guûparf - 2005

Page 8
திணிக்கப்பட்ட கல்விமுறை சுயசிந்தனையற்று இரைமீட்கும் நாளைய தலைவர்கள் கல்வியிற் கூடச் சுதந்திரம் கிடையாது
தன் நிறைவுப் பொருளாதாரம் கண்ட நாட்டில் மனநிறைவாய் ஆர்பொருளும் வாங்கிட முடியவில்லை அதிகரிக்கும் விலைவாசி வரவு செலவுத்திட்டம் மாற்றீடு உண்ணும் உணவின் பெறுமதி கேட்கையிலே பசிகூட மறந்து போகும்
உணவில் கூட சுதந்திரம் இல்லாமற் போனது மக்களுக்கு தெரியவில்லை மாற்றமேதும்
அதிகரிக்கும் அகதி முகாம்கள் மழை வந்தால் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் மக்கள் அனாதையாய் நின்றனர் பாடசாலை வளவுகளில் வீடமைப்புத் திட்டங்கள், கடனுதவிகள் ஆறடி நிலம் கூடச் சொந்தமில்லை மக்களுக்கு சுதந்திரமாய் படுத்துறங்க!
இவையெல்லாம் விடுத்துச்
சுதந்திர இலங்கை
பொன்விழா கடந்து
வைரவிழா நோக்கி வெற்றிப் பாதையில் வீறுநடை போடுகின்றதாம்! தேசாபிமானிகள் கூறுகின்றனர்!
(சுதந்திரதினநினைவாக)
uமில்டுலம் GLIůyarfi - 2006

21 lb நூற்றாண்டின் இளம் சமுதாயத்தினர் என்ற வகையில் அறிவியல் உலகின் விந்தைகளை அனுபவிக்கப் பிறந்தவர்களாக எம்மைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மூன்றாம் உலக நாட்டவர்கள் என்ற வகையில் அறிவியலின் ஆற்றலால் மரண ஒலங் களையும் குண்டுச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். விஞ்ஞான உலகு அடிப்படையில் எங்களுக்கு விஞ்ஞானத்திற்குள் விஷத்தை வைத்து அழித்து கொண்டிருக்கின்றது என்பதை நாமறியோம்.
இன்று விருத்தியடைந்த நாடுகளின் ஆயுத விற்பனைச் சந்தையாக மூன்றாம் உலக நாடுகளும், அவற்றின் போர்க்களங்களும் ஆகி வருகின்றன. தங்களது வியாபா ரத்தைத் தொடர மூன்றாம்
£ീ[ |]] £{ിബിന്റെ മ8്
மிதுன்
உலகெங்கும் அமைதியைக் கெடுத்து போர்களையும்,கலகங் களையும், ஆட்சிக்கவிழ்ப்புகளையும் அபிவிருத்தியடைந்த நாடுகள் செய்து வருகின்றன. தமது வணிகத்தைப் பேணவும், அதிகரிக்கவும் வேண்டி மோதுகிற தரப்புகளிடையில் ஆயுதச்சமநிலை பேணப்படுமாறு பார்த்து வருகின்றனர். வல்லரசு நாடுகளின் பரிசோதனைக் களமாக மூன்றாம் உலக நாடுகளே விளங்குகின்றன. ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டு போட்டது தொட்டு ஆப்கானிஸ்தானில் புதிய குண்டு களைப் பரிசோதித்தமைக்கும் அப்பால் நீளும் பட்டியல் இதற்குச் சான்றாகும். இவைதவிர, மறைமுகமான செயற்பாடுகளால் சூழல் மாசடைதல், வளமற்ற குழந்தைகள் பிறத்தல் போன்றன தொடர் கதை யாயிருக்கின்றன.
அணுஆயுதப் பரிசோதனைகளினால் உடற் பாதிப்புக்களை உருவாக்கிய விஞ்ஞானிகளால் உளப் பாதிப்புக்களைக் கொண்ட ஒரு சமூகத்தை எப்படி உருவாக்காமல் இருக்க முடியும். தந்தை, தாய், உறவுகள், சொந்தங்கள் எதுவுமற்று எம்மைப் போலவே தோற்றமளிக்கும் பல மனிதர்களை உருவாக்கக்கூடிய குளோனிங் முறையில் குழந்தைகளை உற்பத்தி
பயில்டுலம் 3 Guûyayıf - 2005

Page 9
செய்வதே அவர்களின் தற்போதைய கடும் முயற்சியாக உள்ளது. விதி வசத்தால் அநாதைக் குழந்தைகள் உருவாகிவிடுகின்றன எனக் கூறி விடலாம். ஆனால் விஞ்ஞானத்தின் வசத்தால் அநாதைக் குழந்தைகள் உருவாகிவிடலாமா? சமூகத்தின் ஆரம்ப அலகான குடும்பம் என்பதையே இல்லாதொழித்து விடும் வகையில் பண்பாட்டுச் சிதைவை அல்லவா உருவாக்கி விடுகின்றன இந்த குளோனிங் குழந்தைகள்.
மூன்றாம் உலக நாடுகளில் அதிக விளைச்சல் தரும் விதைகளைப் பயிரிடுமாறு அபிவிருத்திஅடைந்த நாடுகள் வற்புறுத்துகின்றன. இதனால் மண்ணின் வளம் விரைவாக அழிந்துவிடுகின்றது. இத்தகைய தாவரங்கள் செயற்கை உரங்களை அதிகம் வேண்டுகின்றன. அத்துடன் பயிர்களுக்கு பூச்சி பிடிக்கும் காரணத்தால் பூச்சிகொல்லிகளைப் பெருமளவிற்பாவிக்க நேர்கிறது. இவ்வகையில் தங்கள் சுய லாபங்களுக்காக இதேபோன்ற பல செயன்முறைகள் தொடர்ச்சியாக ஒரு சுழற்சி வடிவில் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. இவற்றால் பலத்த சுகாதார பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. நச்சு இரசாயனப் பதார்த்தங்கள் உணவு, தொடுகை, மூச்சு வழியாகப் பரவக்கூடிய வாய்ப்புக்கள் மிக அதிகம். இதனால் கண் பார்வை கெடல், தோல் நோய்கள் போன்றன ஏற்படுகின்றன. இவ் வகையான உணவுகளை புற்றுநோய்கள் முதற்கொண்டு பல வினைகளை அளிக்கும் ஒன்றாகவே கருதவேண்டும். பெரு முதலாளிய நாடுகள் குறைந்த காலத்தில் குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சல் தரும் பயிர்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப் பின்பற்றும் செயற்பாடுகளில் மிகவும் முக்கியமானவை. 1. தன்னிறைவுப் பொருளாதார நாடுகளின் தன்னிறைவுத் தன்மையை இல்லாமல் செய்வதன் ஊடு மரபணு மாற்றிய உணவுகளை(G.M.Foods) குறைந்த விலையில் இந்நாடுகளுக்கு அறிமுகப்படுத்தல். 2. மரபுவழி உணவுப் பழக்க வழக்கங்களின்இடத்தில் நவீனப் பெருவணிக
உணவுப் பழக்கங்கட்க்கு இசைவாக்கல். 3. விளம்பரம் முதலிய வர்த்தக முறைகளால் மக்களை இவ் உணவுகளின்
பால் கவருதல். விருத்தியடையாத நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக விருத்தி யடைந்த நாடுகள் தொழில் நுட்பத்தையும், வேலை வாய்ப்பையும் கருவிகளாகப் பயன்படுத்துகின்றன. தமது சமூகச் சூழலுக்குப் பொருந்தாத தொழிற் துறைகளை விருத்தியடையாத நாடுகளில் நிறுவுகின்றன. மேலும், வேலை வாய்ப்பு என்பது என்ற பேரில்
பயில்டுலம் 4. பெப்ரவரி - 2005

உழைப்பைச் சுரண்டுகின்றன. இலங்கை போன்ற நாடுகளில் சுதந்திர வர்த்தக வலயங்கட்கு வரி விலக்குகளை அளிப்பதன் மூலமும் இதை ஊக்குவிப்பது கேடானது. அத்துடன் கழிவுகளின் வாழ்விடங்களர்க விருத்தி அடையாத நாடுகள் மாறிவருகின்றன.
மொத்தத்தில் அறிவியலில் ஆற்றலால் உன்னதமான மனிதர்களை
உருவாக்கி உலகம் உய்ய வழி வகுக்கின்றோம் என்பதன் பெயரால் விருத்தியடையாத நாடுகளின் மீதான கட்டுப்பாடுகளையும் சுரண்டலையும் அறிவியலின் உதவியோடு விருத்தியடைந்த நாடுகள் செய்துவருகின்றன என்பது மட்டும் உண்மை.
O ungaffedeo, U&pg|T
கழுத்தோடும் கக்கத்தோடும் இடுப்போடும் தறிபட்டு நிற்கின்ற
தென்னைகள். பனைகள்.
கடந்து போகையில் தொண்டைக்குழி விக்கிக் கொள்கிறது
அந்த கீற்றுக்களில் முன்னைய பொழுதுகளில் விளையாடிய நினைவுகள் நெஞ்சை அடைக்க.
தென்றல் காற்று தேம்பி அழுகிறது
இந்த மரங்களையும் மனதுகளையும் துடைத்தெறிந்த கரங்களே..!
துளிர்க்க வைக்கத்தான் முடியாது ஒருதுளி நீர்விட்டு புதிய நாற்றொன்றை விதைப்பதற்குமா..!
-ருலாமகள் -
widsot;sob 鲇 பெப்ரவரி 2005

Page 10
ன்றைய சிறார்களே நாளைய நாட்டின் தூண்கள் சிறார்கள் மனது மென்மையானது. கடும் சொற்கள் அவர்கள் மனதைப் பெரிதும் காயப் படுத்திவிடும். சிறார்கள் மனதில் விதைக்கப்படும் விதைகள் பின்னாளில் அவர்கள் மனதில் பெரும் விருட்சங்களா கின்றன. சிறுவயது நினைவுகள் பசுமரத் தாணி போல் ஆழமாக அவர்கள் மனதில் பதிந்து விடுகின்றன. அவ்வாறான பிஞ்சு மனங்களை புண்ணாக்கி அதில் நஞ்சைக் கலக்கும் நாசசக்திகள் இன்று சிறுவர் உலகைச் சூழ்ந்துள்ளன. '18 வயதிற்குட் பட்ட யாவரும் சிறுவர்களாக மதிக்கப் பட்டு அவர்கள் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படவேண்டும்' என்று ஐ.நா. சபையின் சிறுவர் நிதியம் வெளியிட்ட சாசனத்தில் உள்ளது. 'சிறுவர் துஷ் பிரயோகம்' ஆசிய நாடுகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றது. சிறுவர்கள், சிறுவர்களாக மதிக்கப்
rل =
முதலிடம் வகிக்கும் நாடக இலங்கை மாறிவருகின்றது! செல்வச் செழிப்பு மிக்க கொழும்பு மாநகரம் 'சிறுவர் துஷ்பிரயோகத்தின் உச்ச நிலையமாக விளங்குகின் றது. இங்கு அதிகரித்து வரும் 'போதைப் பொருள் விற்ப னைக்கு சிறுவர்கள் அதிகள வில் பயன்படுகின்றனர். வறுமையில் வாடும் சிறுவர் களிடம் போதை மருந்துப் பைகளைக் கொடுத்து வியாபாரம் நடத்துகின்றனர். இதில் பெரிய கொடுமை என்னவெனில் தாம் விற்கும் பொருள் என்னவென்று அறியாது அவ்வியாபாரத்தில் இறங்கும் சிறுவர்கள், தாம் கைது செய்யப்படும்போது கூட அவர்கள் செய்த குற்றம் என்னவென்று அறியாம லேயே சிறையில் வாடுகின் றனர். இது மட்டுமல்ல!
உல்லாசப் பயணிகள் சிலர்
சிறுவர்களைப் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உள்ளாக்கு கின்றனர்.
படாமல் துன்புறுத்தப்படு வதால் உடல், உளப் பாதிப்புகளுக்கு உட்படு கின்றனர். அண்மையில் சிறுவர்துஷ்பிரயோகத்தில்
కొGజీడి కిp&& ജക്കണേ!
uமில்நிலம்: 1.
Güyaf — 2005 .
 

மறுபுறம் நாகரிக மேர்கத்தால் மிக சிறுவயதிலேயே புகைப் பிடித்த லுக்கும், போதை பொருட்களுக் கும், ஆபாசப் படங்களிற்கும் அடிமையாகி 'உல்லாச விடுதி களிலும்', "தியேட்டர்களிலும் தம் வாழ்வை சீரழிக்கும் இளைய சமுதாயம் ஒன்றும் இங்கு உருவாகி வருகின்றமை கவலைக்குரியது.
குடும்பங்களில் ஒற்றுமை யின்மை சிறுவர் மனதைப் புண் படுத்தும் ஒர் பாரிய தாக்கமாகும்! ஒரு குடும்பத் தகராறில் கணவன் அடித்ததில் மனைவி மயங்கி விழ, குழந்தை வீரிட்டு அலறியதால் அந்த ஒன்றரை வயது குழந்தையின் அலறலால் எரிச்சலுற்ற தந்தை குழந்தையைச் சுவரில் மோதி அதன் உயிர் போன நிகழ்வு இலங்கையில் நடந்த ஒரு சம்பவம் தான் ஓயாமல் சண்டையிடும் பெற்றோருடன் வாழப்பிடிக்காது வீட்டைவிட்டு வெளியேறும் பிஞ்சுகள் பலர் ஆடைத் தொழிற் சாலைகளிலும், தேநீர்க் கடை களிலும் தம் வாழ்வைத் தொலைத் துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் வறுமை காரணமாக புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் கற்கள் சுமக்கும், கூலி வேலை தேடிச் செல்லும் சிறுவர் கூட்டங் களை இலங்கையில் பல கிராமங் களில் காணலாம். வெயில், பனி, மழை பாராது கொழுந்து பறிக்கும் பிஞ்சுக்கைகள் பல இச்சிறுவர்கள் தமது குடும்ப வளர்ச்சிக்காய்
ufab.
தம்மையே அர்ப்பணிக்கிறார்கள்! நாளை இவர்கள் படிக்காதவர் களாய், சமூகத்தால் ஒதுக்கப்பட் டவர்களாய் மாறப் போகிறார்கள்!
இவற்றை மீறி பாடசாலைக்குச் செல்லும் ஓர் ஏழைக் குழந்தை அங்குள்ள சில ஆசிரியர்களின் நடத்தைகளால் மனம் புண்படு கிறது. பணக்கார வீட்டுச் சிறுவர் களை ராஜ மரியாதையுடன் நடாத்தும் சில ஆசிரியர்கள் ஏழைக் குழந்தைகளை கண்டால் காரண மின்றி எரிச்சலுற்று அவர்கள் மேல் கோபப்படுகின்றனர். அது மட்டு மன்றி கல்வியில் பின்தங்கிய ஒரு குழந்தைக்கு நம்பிக்கையூட்டிகல்வி புகட்டுவது நல்லாசிரியரின் கடமை. ஆசிரியர்கள் சிலர் குழந்தைகளிடம் "உனக்கு படிப்பு வராது', 'நீ ஏன் படிக்க வந்தாய்?", இந்த முறை பரீட்சையில் தவறத் தான் போகிறாய்! எனக் கூறிக் கூறியே குழந்தையின் மனதில் தனக்கு படிப்பே வராது எனும் எண்ணத்தை உருவாக்கி விடுகின் றனர். அதன்பின்னர்எப்பாடுபட்டு அக்குழந்தைக்கு கல்வி புகட்டி னாலும் அதன் மனதில் தனக்குப் படிப்பு வராது என்ற எண்ணமே இருக்கும்.
இவ்வாறு சிறுவயதில் சமூகத் தால் புறக்கணிக்கப்படும் சிறுவர் களே தீவிரவாதிகளாய் தலை யெடுக்கின்றனர். வேலையின் நிமித்தம் வெளிநாட்டில் வாழும் பெற்றோர், உறவினருடன் வாழும்
பெப்ரவரி - 2005

Page 11
பிள்ளைகள், தம் பெற்றவரின் பாசத்திற்காய் ஏங்கி மனம் வாடு கின்றனர்.
'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற் பிறக்கை யிலே அவை நல்லவராவதும் தீயவ ராவதும் அன்னை வளர்ப்பினிலே! எனும் பாடலிலுள்ளது போல் அன்பும் ஆதரவும் கிடைக்காத குழந்தைகள் தீயவராகின்றனர்.
வீடுகளிலே வேலைக்கு அமர்த் தப்படும் சிறுவர்கள் படும்பாடு சொல்லிடமுடியாது விடிய எழுந்து இரவு வரை ஓயாது, உறங்கிடாது உழைக்கும் கைகள் பல! எசமானர் களின் அடி, உதை பேச்சுக்களு டனும் வாழ்வைக் கழிக்கும் அவலம் என்று அழியும்? படித்த வர்கள் கூட வேலைக்காகச் சிறார் களைத் துன்புறுத்துகின்றனர் சில வருடங்களுக்கு முன்பு இலங்கை யின் முன்னணிக் கல்லூரி ஒன்றின் ஆசிரியை ஒருவர் வேலைக்காரச் சிறுமியின் உடலில் சூட்டுக் காயங்கள் உண்டாக்கியதால் வழக்குத் தொடரப்பட்டது படித்த வர்கள் நிலையே இவ்வாறாயின் மற்றவர் நிலை என்ன?
போர் விளைவித்த தாக்கம் வடக்கு கிழக்குச் சிறுவர்களி டையே அதிகம், போரின் பாதிப் பினால் ஊனமுற்ற சிறார்கள் பலர் ஓடிவிளையாடும் வேளையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி களினால் கால்களை இழக்க
மயில்லேம்பூ
நேரிடுகின்றது. சிறு வயதில் விமானங்கள் குண்டு மழை பொழிவதைப் பார்த்த தாக்கத்தால் விமான இரைச்சல் கேட்டதுமே பல சிறார்கள் தம் காதுகளைப் பொத்திக் கொள்கிறார்கள். இன்று பெருகி வரும் அனாதை இல்லங் களில், பெற்றோரை பறிகொடுத்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சிறார்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு அரசு பதில் கூறுமா? அல்லது அமைதி பதில் கூறுமா?
ka ኣያ t‰ % ܐ A. rs ،سمت - ، a a.
சிறார் உள்ளம் மலர் போன்றது. இனிய நல் அனுபவங்களால் போற்றி வளர்க்கப்படவேண்டிய இளம் சமுதாயம் உடல், உள ரீதியாக ஊனமுற்று விடிவு தேடி எங்கோ ஏங்கித் தவிக்கின்றது. அவர்களுக்கு விடிவு தேடித்தர வேண்டிய கடமை எமது சமுதாயத் தினது, எதிர்காலத்தில் உடல், உளக் காயமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது இளைய சமுதாயத் தின் கடமையாகும்.
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ? .
auúyafl - 2005
 
 
 
 
 
 
 

காரணகாரியம்
ஒரு காரியம் நடக்கும் போது அதற்கான காரணத்தைக் கேட்கிறீர்கள் நீங்கள்
ஒரு காரணத்துக்காகத்தான் அந்தக் காரியம் செய்வதாக சொல்கிறார்கள் அவர்கள்
நீங்கள் காரணந்தான் முக்கியம் என்கிறீர்கள் அவர்கள் காரியந்தான் முக்கியம் என்கிறார்கள்
நீங்கள் காரணத்தைச் சொல்லிவிட்டு காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்கள்
அவர்களோ காரியத்தை செய்துவிட்டு காரணத்தைச் சொல்கிறோம் என்கிறார்கள்
காரணம் கேட்பவர்களுக்கு காரியம் என்னவென்று புரிகிறதா?
காரியம் ஆற்றுபவர்களுக்கு
காரணம் என்னவென்று புரிகிறதது 2 نة ختمة. நீங்கள் காரணத்தைக் கேட்க அவர்கள் ஏன் என மறுக்க தர்க்கம் தொடர *岛 முடிவுகளற்றுப் போக
இறுதிவரை உங்களையும் அவர்களையும் தவி வேறெவருக்கும் காரணம் பற்றியோ -- காரியம் பற்றியோ 芒、°竺a எதுவுமே தெரியாது வழமை போலவே
საußeჭაidკლაub * 19 auúyafl - 2005

Page 12
பிரம்பும் விளக்கும்
- පිං ජිංoorඅෂී -
சக உதரத்தில் பிறந்ததால் நீ அவனின் சகோதரனா சக உதிரத்தில் பிறந்தாலும் அவர்களின் சம உத்தரீயம் ஆகாயப்பா வர்க்கத்தில் சமதராதரமாய் இருந்தாலே அவர்களுடன் சமாந்தரமாவாய் அப்பா
uoluôidosAloub, O auðyalífi - 2005
 

தானாடாவிட்டாலும் உன்தசை ஆடுகிறதா அது உந்தன் தப்பில்லை உலகின் தப்பது பணம் உள்ளவனையே உயர்வாக எண்ணும் வரை குணம் உள்ளவனை எங்கே எண்ணும் உலகு
அவர் தன் பழம் நினைவுகளால் நீ நனவிலும் கனவிலும் துன்புறுகிறாயா தாள்களையும் சில்லறைகளையும் எண்ணவே நேரமின்றி இருக்கும் அவர்கட்கு உன் நினைவுகள் வர நேரம் தான் ஏதப்பா
விரும்பின் ஒன்று செய்யலாம் நீயும் என்போல் அவர்கள்
நினைவுடன் கூட அவர்களுடன் கூடிக்கும்பிட்ட குத்துவிளக்கை பவுணாக விளக்கிப் பத்திரப்படுத்து ஒருவர்மாறி ஒருவராக கூடிக்குடித்த மூக்குப் பேணியை புளிபோட்டு தேய்த்து பேணிக்கொள்
என்ன கசந்து குடித்த மருந்துச் சங்கும் கூட இதயத்திற்கு இனிமை தருகிறதோ உண்மைதான் நண்பா பழம் சொத்துக்கள் கூட பழம் சொந்தங்களின் நினைவுகளால் கனத்த இதயத்திற்கு இதமளிக்குந்தான்
என்னப்பா என்னவோ முணுமுணுக்கிறாயா? என்ன இவையும் உள்ளத்தில் ஒன்றும்
பெரிதாக திருப்தி அளிக்கவில்லையோ? நண்பா நீ உந்தன் சரியான நிலையத்திற்கு வந்திட்டாய் அனுபவம் என்ற பள்ளிப் படிப்பில் இன்றைய பொழுதுகளில் உச்சப் புள்ளிகளைத் தட்டிக் கொள்ளப் போகின்றவனே இனி வெற்றிதான் உன் வாழ்வில் எந்தன் வலதுகரம் முதலில் உந்தனுக்கே
பமில்டுலம் Guûgatif - 2005

Page 13
கட்டிக் கொள் பிடியை விட்டு விடாதே எட்டிக்கொள் உன் வாழ்வின் இலட்சியமதனை
உன்னிடம் சரியான கேள்வி பிறந்துவிட்டதால் சரியான உறவை தெரிந்துவிடுவாய் விரைவில் தேடல் தொடங்கின் சரியான விடையும் கிடைத்திடுமே
நானும் உன்போலவே காலம் பலவாக உறவென்னும் தொடர்வேண்டி எவடம் எவடம் என நான் கேட்க புளியடி புளியடி எனப் பலர் இடங்கள் பல போய்ப் பேய்க்காட்ட ஏமாந்து நான் களைக்க ஏமாற்றி அவர்களும் களைக்க
போலிப்பந்தங்களை களைந்தெறிந்து சொந்த சிந்தனையால் கண்டு கொண்டேன் சரியான சொந்த பந்தங்கள் எவர் என்று தெளிந்தேன் ஐயம் பல இன்று
அதுபோன்று நீயும் தேடலில் அடைந்துவிட்டாய்; உண்மை உறவின் சிகரம் எது என்று இனிவரும் உன் மணமன்றில் ஈரம்
நண்பா நானும் நீயும் மட்டுமன்றி தத்தளிக்கும் மற்றோரும் நம்வழி வந்து கடைத்தேறட்டும் தம் வாழ்வின் சங்கடங்களிலிருந்து அதுவரையும் நாம் விளக்கோ விளக்கென்று நம் விளக்க விளக்குகளை விளக்குவோம் வா செம்புகளின் செழும்புத் தழிம்புகளை தேய்ப்போம் வா மூக்கு பேணிகளின் கழிம்புகளை கழுவிப் பேணுவோம் வா
முடியாதுவிடின் எங்கள் அப்புவின் பிரம்புக் கைப்பிடியையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளோமே தேவையெனின் அதுவும் குறிபோடும்
சரியான வழிகாட்டியாய் குறிகாட்டும்
yôosob 22 Qudyalfi - 20085 -

நோம் விசாம்ஸ்கி
நேர்காணல்
பழமையான கேள்விகளுடன் வழமையான நேர்காணல்களை படித்துப்பழகிப் போன உங்களுக்கு வேறுபட்ட ஒரு நேர்காணல் மாறுபாட்டிற்காக.
எம் காலப்பரப்பில் வாழ்ந்து வருகின்ற பல அறிஞர்களை இருட்டடிப்புக்களி னாலும் அறியாமையாலும் எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போகின்றது. இவ்வகையில் மொழியியற் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் மட்டுமன்றி இன்றைய சமூக விஞ்ஞான ஆய்வாளர்களில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்படும் பேராசிரியர் நோம் சொம்ஸ்கியுடனான நேர்காணல், யார் இந்த நோம் சொம்ஸ்கி?
1928ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி ஒரு ஏழை யூதக் குடும்பத்தில் பிறந்த சொம்ஸ்கி மூன்றாமுலக நாடுகளுக்கெதிரான அடக்குமுறையின் எதிர்ப்பாளர்களில் முதன்மையானவர். அமெரிக்காவின் பல வெகுஜன இயக்கங்களின் முன்னோடியும் அயராத உழைப்பாளியுமாவர். இவர் உலகில் அறியப்பட்டது மொழியியல் வல்லுநராகவும் தீவிர அரசியல் கோட்பாட்டாளராகவும்தான். 1957 இல் அவர் வெளியிட்ட "வாக்கியவியல் ஆய்வு" (Syntatic Structures) எனும் நூலானது மொழியி யலில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. "உருவாக்க ஆக்க இலக்கணம்' என்பதை வளர்த்து மொழியின் அறிவியல் கற்கைகளில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
1988 இல் நோபல் பரிசுக்கு இணையான யப்பானின் உயரிய விருதான “கியோட்டோ" விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1960களின் பிற்பகுதியிலிருந்து சொம்ஸ்கி விடுதலை, சோசலிசம், பகுத்தறிவு என்பவற்றிற்கான ஒரு உலகக் குரலாக மாறினார். இவர்
lotsasoissolid 23

Page 14
இன்றுவரை அமெரிக்க அதிகார வர்க்கத்தால் விரும்பப்படாத ஒருவராகவே இருந்து வருகின்றார். “முன்னணிப் பயங்கரவாத அரசு” என அமெரிக்காவை வர்ணிக்கும் இவர் பல நூல்களையும் எழுதி யிருக்கிறார். சில காலம் முன் வெளிவந்த “9-11" என்ற சர்ச்சைக்குரிய அதிகம் விற்பனையான நூலின் மூலம் உலகெங்கும் அறியப்பட்டவர். கடந்த ஆண்டு பி. பி. சியின் புகழ்பெற்ற மூத்த அறிவிப்பாளர் ஜெரமி பக்ஸ்மன் (Jeremy Paxman) பிரித்தானிய அருங் காட்சியகத்தின் ASSyrian Galleries இல் சொம்ஸ்கியை நேர்கண்டபோது
புஷ்ஷின் கோட்பாடு என்று சொல்லப்படுகின்றதில் ஏதும் புதியது புதுமையானது இல்லை என்பது தங்களின் கருத்தா? அது எடுத்துக்கொள்ளும் பரப்பைப் பொறுத்தது. இது புரட்சிகரமானது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் ஹென்றி கிசிஞ்சர் (Hendry Kissinger) இந்தப் புரட்சிகரக் கோட்பாடு வெஸ்ட் பாலியன் முறையினை (Westphalian System), 17 ஆம் நூற்றாண்டின் அனைத்துலக முறைமையை, ஐக்கிய நாடுகளின் பட்டயக்கூறுகளைத் துண்டு துண்டாகக் கிழித்துக் கந்தலாக்குகின்றது என்கிறார். ஆனால் ஒரு குறுகிய வட்டத்தினுள் இது உண்மையில் புதியதும் எல்லை தாண்டியதுமாகும்.
செப்டெம்பர் 11 இன் திட்டமிட்ட தாக்குதலுக்கு இரையாகிப் போன ஐக்கிய அமெரிக்கா இனி யாது செய்யலாம்? அல்லது எதைச் செய்ய முயற்சிக்கலாம்? ஏன் நீங்கள் செப்டெம்பர் 11ஐ இங்கு கணக்கில் எடுக்கிறீர்கள். 1993ஐ ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது. 1993 இல் இதேபோன்ற குழுக்கள் ஐக்கிய அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட ஜிகாத், உலக வர்த்தகக் கோபுரத்தைத் தகர்த்தது போன்று மிகத் திட்டமிட்ட முறையில் 10,000க்கணக்கான மக்களைக் கொன்றது. அப்போதிருந்தே இதேபோன்ற நிகழ்வு ஏற்படும் நிலை உணரப்பட்டது. இதை 1990இல் இருந்தே நுட்ப இலக்கியத்தாள்கள் (Technical Literature) இதேபோன்ற நிகழ்வுகளை எதிர்வு கூறியது நமக்கும் ஏது செய்யப்படவேண்டும்
என்றும் அறிந்திருந்தோம். நீங்கள் செய்வது காவல் வேலை. பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியது காவலர் வேலையல்லவா?
Lonóàsò$Soub 24 auðyatfi - 2005

உங்கள் கருத்துப்படி ஐக்கிய அமெரிக்கா தன் ஊழ்வினையின் மூலகர்த்தா என்கிறீர்கள்.? நன்று, முதலில் இது எனது எண்ணப்பாடு அல்ல. பயங்கரவாதத்தைப் பற்றிய ஆய்வாளர்களதும் சிறப்புணர்களினதும் கருத்தும் இதுவே யாகும். அண்மையில் வெளியான ஜேசன் பூர்க்கின் (Jason Burke) அல் கொய்தா (Al-Qaeda) என்ற சிறந்த புத்தகத்தைப்படியுங்கள். ஒவ்வோர் அல்கொய்தா நடவடிக்கைகளைப் பற்றிய பதிவுகளைப் பார்க்கும் போது ஆட்சேர்த்தல், ஆளமர்த்தல், நிதியளித்தல், யாவற்றையும் ஒன்றிணைத்தல் போன்றவற்றின் வழி பின்லாடன் பெற்ற சிறுசிறு வெற்றிகள் எப்படிப் பல்கிப் பெருகின எனச் சுட்டப்படுவதை நீங்கள் அறியலாம். ஜோர்ஜ் புஷ் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பயங்கரவாதத்தைப் பற்றி ஜோர்ஜ் புஷ் போன்றோர் கவலைப்படுவ தில்லை. ஆனால் நாங்களறிவோம். எல்லா ஆய்வு, நுண்ணறிவு வல்லுநர்களுக்கும் ஈராக் மீது படையெடுப்பு நடாத்தப்படும் என்பது தெரியும். இது எதிர்வு கூறப்பட்ட ஒன்று மட்டுமல்ல. இதனால் பயங்கரப் பாணியின் வளர்ச்சி வெளிப்பட்டது. அது நடைமுறை யிலும் நிகழ்ந்து.
பின் ஏன் இப்படி செயற்படுகின்றார்? ஏனெனில் ஈராக் மீது ஆக்கிரமித்தது அதற்குள்ளேயே பல்நோக்குப் பெறுமதிகளைக் கொண்டது. அதாவது தன்னை நிலைநிறுத்திக் கொள்வது.
என்ன நோக்கில் பெறுமதி. என்ன நோக்கமா? உலகின் அதாவது சக்தியாக்க வலயத்தின் இதயப் பகுதியில் ஒரு தற்சார்பு நிலை நாட்டில் இராணுவத் தளமொன்றை முதலில் பெற்றுக் கொள்வது. ஈராக்கிய மக்கள் தங்கள் சர்வாதிகாரியை இல்லாமல் செய்ததன் மூலம் அம்மக்கள் முன்னையிலும் நல்வாழ்வு பெற்றுள்ளார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? ஈராக்கிய மக்கள் இரண்டு கொடுர ஆட்சிகளை இல்லாமல் செய்துள் ளார்கள். ஒன்று நாம் பேசக்கூடியது. மற்றது நாம் பேசக் கூடாதது. அதாவது கொடுர ஆட்சியாளர் சதாம் உசைன் மற்றது ஐக்கி1 அமெரிக்க, பிரித்தானியதடைகள் (பொருளாதாரம் முதலிய தடைகள்)
பமில்டுலம் , 25 Guûyarf - 2005

Page 15
இவை சமூகத்தைச் s
ஆயிரம் மக்களைக் இது மக்களை சதாம் கொள்ள வைக்கிறது. பொருளாதாரத்தடுப்பு அ பூழி க் க ப் ப டு ம் குவதை விடுத்து அது
சீரழிக்கின்றது. பலநூறு கொன்றொழித்தது. உசைன் மீது நம்பிக்கை உலகில் தற்போதுள்ள ஆக்கிரமிப்பினாால் சமூகத்தை உருவாக் ஓர் ஆயுதமாக மாற
லாம். இது போல் நிகழ்ந்தால் ஈராக்கிய மக்கள் சதாம் உசைனுக்கு அமெரிக்க, பிரித்தானிய ஆதரவு பெற்ற பிறநாட்டுப்பூதங்களுக்கு ஏற்பட்ட முடிவு போன்ற ஒன்றை வழங்கியிருப்பார்கள். இவ்வகையில் சியூசெஸ்கியூ (Cenuseseu), sismu "G3 m (Suharto), (66 umrGóluuii (Duvelier), LDTřišG335mrav (Marcos) என நீளும் பட்டியலை சான்று பகரலாம். இவ்வுண்மையை ஈராக்கை அறிந்த மக்கள், மேல் நாட்டவர்கள் முன்கூட்டியே எதிர்வு கூறியுள்ளார்கள்.
ஜோர்ஜ் புஷ், பிரதமர் டோனி பிளேயர் போன்ற ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அரச தலைமைகளுக்கும் ஈராக்கிய ஆட்சியாளர் போன்றவர்களுக்கும் ஒரு சமத்தன்மை இருப்பதாக நீங்கள் கருதுகிறீர் கள். அல்லது ஊகிக்கின்றீர்கள் என்று நான் கூறினால் உங்களைப் பொறுத்தவரை நான் நியாயமற்றவனாகலாம். இது பற்றி.
நன்னடத்தைச் சமத்தன்மை என்ற பதம் ஒரு சுவையான பொருளைக் கொண்டுள்ளது. இது ஜீன் கேர்க்பட்ரிக்கினால் (Jeane Kirkpatrick) வெளிநாட்டுக் கொள்கை, அரச தீர்மானங்கள் போன்றவற்றிற்கு ஏற்படும் குற்றங்களைத் தடுப்பதற்கு ஏற்ற முறையாக முன்மொழியப் பட்ட ஒன்று. இச்சொல் கருத்தில் குறையுடையது. எங்கேயும்
எப்போதும் நன்னடத்தைச் சமன் கிடையாது.
தாராள ஜனநாயகக் குழுவில் தனி மனிதன் வாழ்வது விரும்பத்தக்க ஓர் நல்நிலையா? இந்த ஜனநாயக விழுமியங்கள் பரப்பப்படுவதனால் ஏதும் நன்மைகள் ஏற்பட முடியும் எனக் கருதுகிறீர்களா?
இந்தக் கேள்வி அன்றொரு முறை காந்தியிடம் மேலைத்தேய நாகரிகம் பற்றி கேட்கப்பட்டதை நினைவூட்டுகிறது. அவர் சொன்னார் தாராள ஜனநாயக விழுமியங்கள் பரப்பப்படுவது மிகச் சிறந்த எண்ணக்கரு என்று. இதையே நானும் சொல்லுகிறேன். ஆனால் பிரித்தானியாவும் ஐக்கிய அமெரிக்காவும் செய்ய முயல்வது அதுவல்ல. இதுவரை காலமும் செய்ததும் அதுவல்ல. அதாவது நான் கூறுவது யாதெனில்
பயில்டுலம் 26 Guûyaf - 2005
 

இவ்விரு நாடுகளின் ஆதிக்க வலயங்களைப் பாருங்கள். அவர்கள் தாராள ஜனநாயகத்தைப் பரப்புவதில்லை. தங்களில் மற்றவர்கள் தங்கியிருக்க வேண்டும். தங்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டுடன் செயற்படும் நாடுகள் இவை. இதற்கு மேலாக காரணத்துக்கு மேல் காரணமாக ஐக்கிய அமெரிக்கக் கொள்கைகளுக்கு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மாபெரும் எதிர்ப்பு இங்கு நோக்கற் பாலது. இது 1950களிலேயே அறியப்பட்ட ஒன்று.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் சாம்ராஜ்ஜியத்துக்குள் அடை பட்டு, அவமானப்பட்டு, கறைபட்டு இருந்ததைவிட தற்போது மிக நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு மேற்குலகின் நடத்தைப் போக்கின் வெளிப்பாடே காரணமாகின்றது எனப்படுகின்றது. நன்று, நன்று. நீங்கள்கூறுவது சரியானால் மத்திய அமெரிக்கா, கரிபியன் போன்ற பல நாடுகள் ஐக்கிய அமெரிக்க காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற விரும்புகின்றனவே? நாம் இந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பது பற்றியோ ஐக்கிய அமெரிக்கா இந்த நாடுகளில் என்ன செய்கிறது என்பது பற்றியோ கவனிப்பதில்லை. 1980களிலும் ரீகனின் காலப்பகுதியிலும் மத்திய அமெரிக்காவில் மக்கள் படு கொலை செய்யப்பட்டது இங்கு நோக்கற்பாலதே. ஐக்கிய அமெரிக்கா பாரிய பயங்கரவாதத் தாக்குதல்களை நிகாரகுவாவிலும் குறிப்பாக தேவாலயத்திற்கு எதிரான போரினையும் நினைத்துப் பாருங்கள். அது பேராயரை படுகொலை செய்ததும் யேசு மார்க்க அறிஞர்களைக் கொலை செய்ததும் எதைக் காட்டுகிறது. இது எல் சல்வடோாரில் நிகழ்ந்தது. இக்காலம் படுபயங்கரக் காலம். இதை ஏன் செய்தார்கள்? இதுதான்தாராளஜனநாயகமா? இல்லையே.
நீங்கள் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அம்ெரிக்க - பிரித்தானிய உறவு பற்றிக் குறிப்பிட்டீர்கள். டோனி பிளேயர் ஆப்கானிஸ்தான், ஈராக் செயற்பாடுகளில் ஏன் இவ்வாறு செயற்பட்டார்?
பிரித்தானியாவின் இராஜதந்திர வரலாற்றைப் பார்த்தால் 1940 வரை பிரித்தானியாவே தீர்மானமெடுக்கும் ஒரு உலக வல்லரசு. ஐக்கிய அமெரிக்கா செல்வந்த நாடாக இருந்த போதிலும் உலக அரங்கில் முக்கிய நடிகனல்ல. அதுவோர்வலய வல்லரசாகவே இருந்தது. 2ஆம் உலகப் போர் ஐக்கிய அமெரிக்கா ஒர் ஆதிக்க வலுமிக்க நாடாகப் போகின்றது என்பதை எடுத்துக் காட்டியது. இதை யாவரும் அறிவர். பிரித்தானியர் இக்காலகட்டத்திற்குப் பின் ஒரு நிலைப்பாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. ஒன்றில் அது ஐரோப்பாவின் ஒரு
பயில்நிலம் 27 பெப்ரவரி 2005

Page 16
பகுதியாக இறைமையுடன் இருப்பதா? அல்லது ஐக்கிய அமெரிக்கா வின் கீழ்நிலைப் பங்காளனாக இருப்பதா? என்பதே. இதில் ஐக்கிய அமெரிக்காவின் கீழ்நிலைப் பங்காளியாக இருப்பது என்ற நிலையைத் தேடியது. கியூபாவின் ஏவுகணை நெருக்கடியின் போது பிரித்தானியா வுக்கு அதாவது கரோல்ட் மக்மிலனுக்கு (Harold McMilan) என்ன நடக்கப் போகின்றது என்பது பற்றிக் கூறப்படவில்லை. இது பிரித்தானியாவை அவமதித்தது போன்றதொன்றே, ஐக்கிய அமெரிக்காவில் அரச உயர்அலுவலர் (Dean Acheson ஆக இருக்கலாம்) எங்கள் லெப்ரினன்ட் (இதன் நாகரிகப் பண்புச் சொல் பங்காளி) என பிரித்தானியாவை வர்ணித்தார். பிரித்தானியர் தங்களை பங்காளிகள் எனக் கூறுவதைக் கேட்கப் பிரியப்படும்போது அவர்களின் எசமானர் உண்மைச் சொல்லான லெப்ரினன்ட் என்பதைப் பயன்படுத்தினர். இதிலிருந்து பிளேயரின் தீர்மானங்கள் எப்பால் அமைந்தன, அமையும் என்பது புரியும்.
கொக்கோகோலா, பெப்சி பானங்களில் பொஸ்பேசிக் அமில முள்ளது. குளிர் பானங்களை குளிர்விப்பானில் வைத்ததும் உடனேயே குளிர்ச்சியைப் பெறுவதற்காக எதிலின் சிறிதளவு கலக்கப்படுகிறது இது ஆசனிக் போன்ற மெல்லக் கொல்லும் தன்மையுடையது. கொக்கோ கோலா 3.4 PH அமிலத் தன்மை உடையது. இது பற்களையும் எலும்புகளையும் கரைக்கக் கூடியது. நம் உடல் 37 செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது. இந்த செயற்கை குளிர்பானங்கள் மிகவும் குறைவான வெப்ப நிலையில் (9 செல்சியஸ்) இதனை அருந்தும்போது நமது உடலில் உணவை சமிபாடடையச் செய்யும் என்சைம்களை தகர்த்து இரத்த நாளங்களுக்குள் நச்சைப் புகுத்துகின்றன. இனி கோக், பெப்சி குடிக்க முன் சிந்தியுங்கள்.
AAA AAAA AMMLLALAAA MMAMeAA AgMAMM AAAqA AAACT eeAAqA MeMMe .فهمرGشقانهای لیدی درGض فلعههها شام، سرگرم) رده دیر مقاله به ان شهر
-Dagam
uussiobsob 28 audyarfi = 2005

திரை விலகுகிறதா?
கிடந்த டிசெம்பர் மாதம் கொழும் பில் இந்தியக் க  ைல ஞ ர் க ள் பங்குகொண்ட நிகழ்வின்போதும் அதன் முன்ன ரும் நடைபெற்றதுமான நிகழ்வு கள் மதம் தொடர்பிலான பல கேள்விகளை மக்கள் மனங்களில் விதைத்துள்ளது. மதம் என்பது தேவைதானா? அதன் எல்லைக் கோடுகள் எதுவரை, மதச் சார் பின்மையின் அவசியம் எனப் பல் வகைப்பட்ட விடயங்களை இவை தொடர்பில் ஆராய வேண்டிய தேவை உள்ளது.
வரலாற்று ஏடுகளின் பக்கங் களைப் புரட்டிப்பார்க்கின்ற போது அவை உலகளாவிய ரீதியில் நடை பெற்ற பல துயரங்கள் நிறைந்த நிகழ்வுகளின் காரணகர்த்தாவாய் மதம் அமைந்துள்ள மையை காணமுடியும். சிலுவைப் போர் தொடக்கம் இன்றைய பயங்கர வாதச் செயற்பாடுகள் வரை அனைத்தையும் தோற்றுவித்து, வழிநடாத்தி உயிர்களைக் காவு கொண்ட பெருமை மதத்தைச் சாரும். அதிகாரம் மதத்தைத் தன் வசதிக்கேற்பவும் தேவைக்கேற் பவும் காலங்காலமாக பயன் படுத்தி வந்துள்ளது. எனவே,
பயில்நிலம் "
29. E .
சீராளன்
20ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் உலகில் நடைபெற்ற சில நிகழ்வுகளைப் பார்ப்பது இங்கு சாலப் பொருத்தம்.
1992இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டது முதல் அங்கு நிகழ்ந்த மதக் கலவரங்களுக்கும் படுகொலை களுக்கும் எல்லையே இல்லை. பாபர் மசூதிப் பிரச்சினையின் வரலாற்றைத் தேடுகின்றபோது பிரித்தானியர் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக "1528ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப் பட்டது. அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டது" என்ற புரளியை பிரித்தானிய அதிகாரிகள் கிளப்பி விட்டனர். இதிலிருந்து இன்று வரை அயோத்தியில் குழப் பங்கள் தொடர் கதையாக இருக் கின்றன. பாபர் மசூதி இடிக்கப் பட்டதன் பின் அங்கு ஒரு புதை பொருள் ஆய்வு நடத்தப்பட்ட போது 'பெளத்த மத விகாரை யொன்று இங்கு முன்னர் அமைந் திருந்தது எனவே எங்களுக்கும்
ALJůyaNrf - 2005

Page 17
இதில் பங்குண்டு’ எனச் சில பெளத்த அமைப்புக்கள் உரிமை கொண்டாடியதையும் நினைவில் கொள்ளவேண்டும். இக்கலவரங் கள் இத்துடன் நின்றபாடாகத் தெரியவில்லை. பின்னரும் குஜராத் படுகொலைகள் எனத் தொடர் கின்றன. இந்தியாவில் மதத்தின் முகங்கொண்டு நடக்கும் கொடுரங் களோபலப்பல.
பாலஸ்தீனியர்கள் தங்கள் சுதந் திரத் தனிநாட்டின் தலைநகராகக் கருதுகின்ற ஜெரூசலம், இஸ்ரே லிய - பாலஸ்தீனப் பிரச்சினையின் முக்கியமான மையப் பிரதேசமாக இன்றுவரை இருந்து வந்துள்ளது. மேற்குக் கரை, காசாப் பள்ளத் தாக்கு, கோலான் குன்றுகள் போன்ற இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களை விட ஜெரூசலம் பற்றியும் அதனது உரிமை தொடர் பிலும் அடிக்கடி கருத்து வேறுபாடு கள் இருந்து வருகின்றன. முக்கிய மான ஒரு மத அடையாள இடமாக ஜெரூசலம் காணப்படுவதே இதன் முக்கியத்துவத்துக்குக் காரணம். யேசு பிறந்த இடம் ஜெரூசலம் என்பதனால் இதைத் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க
கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள். மக்காவுக்கு அடுத்தபடியான இரண்டாவது மிகப் பெரிய பள்ளி வாசலான அல் அஸ்கா பள்ளி வாசல் ஜெரூசலத்திலேயே அமைந் துள்ளது. இதேவேளை யூதர்களின்
பாவங்களைத் தீர்ப்பதாக
uமில்டுலம்
யூதர்களால் நம்பப்படுகின்ற
அழுகைச் சுவரும் இங்கேயே
அமைந்துள்ளது. எனவே, மூன்று வேறுபட்ட மதத்தவருக்குரிய ஒரு பிரதேசமாக ஜெரூசலம் இருப்பது இஸ்ரேலிய பாலஸ்தீனியப் பிரச்சனையை மேலும் சிக்க லாக்குகின்றது. இப் பிரச்சனை தீர்க்கப்படாமைக்கான காரணங் களில் ஒன்றாக மதமும் இருந்து வருவதை நாம் ஏற்றாக வேண்டும். இதேபோல இஸ்லாமிய ஜிகாத் என்ற புனிதப்போரின் அடிப்படை யில் அப்பாவி மக்களை அநியாய மாகக் கொன்று குவிக்கின்றனர். இந்தோனேசியாவின் பாலி நகர இரவு விடுதியில் நடந்த குண்டு வெடிப்பு இதற்குச் சான்றாகும். இக்குண்டு வெடிப்பு பல நூறு உயிர்களைப் பலியெடுத்தது. இக் குண்டுவெடிப்பை முன்னடத்திய வர்களை சிறையில் நேர்கண்ட பி.பி.சி. நிருபர் 'அப்பாவி மக்களை அநியாயமாகக் கொலை செய்கிறீர்களே? இது பிழை யில்லையா?" எனக் கேட்டபோது அவர்கள் 'நாங்கள் புனிதப் பயணத்தில் இணைந்திருக்கின் றோம். இறைவன் இட்ட பணியை நாங்கள் செவ்வனே நிறைவேற்றி யிருக்கின்றோம்" எனப் பதிலளித் தனர்.
இன்றுவரை வடஅயர்லாந்தின் Orange Order Sfogo.Triai is Linggs
படுகின்ற (வருடந்தோறும்) ஊர்வலம் கத்தோலிக்க மதத்தைப்
பெப்ரவரி - 2005

பின்பற்றும் மக்களின் பகுதிக் கூடாகப் போகும்போது கலவரங் கள் ஏற்படுவதும் பல பொருட் சேதங்கள் ஏற்படுவதும் வழமை யாகி விட்டது. −
இவ்வாறெல்லாம் பார்க்கின்ற போது உலகில் அமைதியின் மையை ஏற்படுத்துவதில் மதத்துக் குப் பெரும் பங்குண்டு. எமது தேசம் பல்லின மக்கள் வாழுகின்ற நாடு என்பதால் அது எப்போதுமே மதச் சார்பற்ற நாடாகவே இருக்க வேண்டும். ஆனால் எமது தற்போதைய (1978) அரசியலமைப் பில் 9வது சரத்து 'இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு முதன்மைத் தானம் வழங்கப் படுதல் வேண்டும். பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருக்க வேண்டும் என விதந்துரைப்பதன் மூலம் இலங்கை ஒரு பெளத்த நாடாக மாற வழியமைத்தது. ஆனால், 1972ஆம் ஆண்டில் 1வது குடியரசு அரசியல் யாப்பு இலங்கையின் புகழ் பெற்ற இடதுசாரியாகக் கருதப்படுகின்ற கொல்வின் ஆர். டி. சில்வாவினால் வரையப்பட்ட போதே முதன்முதலில் தேசிய மதம் என்ற ஓர் எண்ணக்கரு தோற்றம் பெற்றது.
டிசெம்பர் மாத கலை நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட மைக்கு இந்நிகழ்வால் இலங்கை யின் பண்பாட்டுக் கட்டுமானம்
மயில்நிலம்
பாதிக்கப்படுமென்பதோ அல்லது வெளிநாட்டுக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நடாத்த விடக் கூடா தென்பதோ காரணமாக இருக்க வில்லை. மாறாக, 2003 இல் கால மான யாரோஒரு மதப் பெரியாரின் நினைவு நாளன்று இந்நிகழ்வு நடந்ததே இவ் எதிர்ப்புக்குக் காரணம். ஒரு வேளை நிகழ்ச்சி வேறொரு நாள் நடத்தப்பட்டிருப் பின் எவ்வித இடையூறும் நேர்ந் திருக்காமல் இருந்திருக்கலாம்.
இன்று இலங்கை அரசியலில் 9 பாராளுமன்ற ஆசனங்களில் பெளத்த துறவிகள் அமர்ந்து அரசியலில் ஈடுபடுகின்றனர். புத்த பெருமான் சுகபோகங்களையும் தன் அரசாட்சியையும் துறந்து துறவியானார். இலங்கையின் நிலைமையோ எதிர்மாறாக இருக் கின்றது. இங்கே அரசியலை யார் செய்வது என்பதை விட தங்கள் மதச் சிந்தனையும் கட்டுப்பாடு களுடன் கூடியதாகவே அரசின் செயற்பாடுகள் அமைய வேண்டு மென்பதே மதவாதிகளின் நோக் காக இருக்கின்றது. அமைதி பற்றி யும் ஒற்றுமையாய் வாழ்வது பற்றியும் அதிகம் பேசும் மதத் தலைவர்கள் பாராளுமன்றத்தில் ஒற்றுமையாய் தாங்களே இல்லா மலும் பெளத்த நாடு என்பதை வலியுறுத்துவதன் மூலம் மற்றைய மக்களை ஒடுக்கி வாழவைக்க வேண்டும் என்றும் செயற்படு கின்றார்கள். இதற்கு ஏதுவாக
பெப்ரவரி - 2005

Page 18
அவர்கள் இனத்துவேசத்தைக் கக்குகிறார்கள்.
உலக வரலாற்றில் மதம் என்பது எப்போதும் வர்க்க முரண்பாடு களை தோற்றுவிக்கவும் பேணி வளர்க்கவும் பொதுவுடமை சமுதாயம் உருவாகாமல் இருக்க வும் காலங்காலமாகச் செயற்பட்டு வந்துள்ளது. மார்க்சியம் சொல்லு கின்ற புராதன பொதுவுடமை சமுதாயத்தில் மதம் என்ற ஒன்றே இல்லை. பின்னர் உருவான அடிமை முறை சமுதாயத்திலேயே தோற்றம் பெற்ற மதம் நிலப் பிரபுத்துவ சமதாயத்தில் வளர்ச்சி யடைந்து இன்றைய முதலாளித் துவ சமுதாயத்தில் வலுவாகக் காலூன்றி நின்று நிலைக்கிறது.
முதலாளித்துவ சமுதாயக் கட்டு மானம் உலகில் தொடர்ந்துநிலைக்
கவும் வளர்க்கப்படவும் மதம்
பாரிய பங்காற்றியுள்ளது. இங்கே எல்லாப் பண்டிகைகளுக்கும் மதச் சாயம் பூசப்பட்டாயிற்று. உழவர் திருநாள் கூட மத நிகழ்வானமை சோகத்தின் உச்சம். பண்டிகைகள் புத்தாடை அணியச் செய்கின்றன. மதங்கள் சில பண்டிகைகளுக்கு புத்தாடை அணிவதை வலியுறுத்து கின்றன. இவ்வாறான கோட்பாடு களெல்லாம் முதலாளித்துவம் நின்று நிலைக்க உருவாக்கப்பட்டி ருக்கின்றன.
oமில்டுலம்
உண்மையில் 'மக்களை நல் வழிப்படுத்தவே மதங்கள்’ என்ற கோசங்களுடன் வலம்வரும் மதங் கள் இனவெறியைத் தூண்டுதல், அமைதியின்மையை நிலை நாட்டல், அடக்கியாளவழியமைத் தல் என வேறுபட்ட கோணங் களில் செயற்பட்டு வந்துள்ளமை யும் செயற்படுவதும் மிகவும்
வேதனைக்குரியது.
அன்றுதொட்டு இன்றுவரை மத மானது அதிகாரபீடங்களில் உள்ள வர்களால் பிழையாகப் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. தங்கள் தங்கள் அரசியல் சுய லாபங்களுக் காக மதமானது வெற்றிகரமாகக் கையாளப்பட்டு வந்துள்ளது. அண்மையில் இலங்கையில் நடை பெற்ற நிகழ்வுகளும் அதற்கு விதி விலக்கல்ல. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் தோன்றியிருக்கிறது. உண்மைகளை உள்வாங்குவதன் மூலம் உயிர்கள் காவுகொள்ளப்
மக்கள்
படுவதையும் உடைமைகள் அழிக் கப்படுவதையும் தவிர்க்க முன்வர வேண்டும். இப்பொழுது திரைகள் விலகுவது போல் தெரிகிறது. திரை விலகுவதும் இருள் நிலைப்பது வும் மக்களின் சிந்தனை தெளிவி லேயே தங்கியுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இங்கே சொல்லப்பட்டவை
எல்லாம் மதம் எதற்கெல்லாம்
பெப்ரவரி - 2005

எவ்வாறெல்லாம் ஆதிக்க சக்தி களால் பயன்படுத்தப்பட்டுள்ளது
என்பது பற்றிய மேலோட்டமான
பார்வையே. இக்கட்டுரை உலக வரலாற்றில் சில பக்கங்களோடும் அவற்றின் உண்மைகளோடும் சில திரைகளை விலக்க முயன்றிருக் கின்றது.
இறுதியாய் வைரமுத்துவின் சில வரிகள் உங்கள் சிந்தனைக்காக , , , ,
மாண்புமிகு மதவாதிகளே!
சில கேள்விகள் கேட்பேன் செவி தருவீரா?
அயோத்திராமன் அவதாரமா? மனிதனா?
அயோத்திராமன் அவதாரமென்றால் அவன் பிறப்புமற்றவன் இறப்புமற்றவன் பிறவாதவனுக்கா பிறப்பிடம் தேடுவீர்?
அயோத்திராமன் மனிதன் என்றால் கர்ப்பத்தில் வந்தவர் கடவுள் ஆகான் மனிதக் கோயிலுக்கா மசூதி இடித்தீர்?
10,
6,6aola 6-10
கினெசெட் இந்தோனேசியா u6uTLIT gelG88F (Banda Aceh) மார்க்சிம் கார்க்கி
450 km/h
Global System Mobile பசுபிக் சமுத்திரத்தின் ஹவாயில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சுவாமி விபுலானந்தர் லான்ஸ் ஆம்ஸ்ரோங் (Lance Armstrong)
கடந்த இதழில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடைகளை எழுதி நூற் பொதியை பரிசாகப் பெறுபவர் :
ம. யுகதர்வடினா தங்கமணிபதி, பெரியகல்லாறு - 2.
ტ^\ხ მბრAto $ჩტიტჩ %8ა Gianო-\o \o^რო (სას,გარტ Giოა^ცხAთო! 02:24, 0AAიჭოცხ
ومهمه فكلمكلتلهون د3)صSمضX
onàsiosaob 38
-6ીગીકી -
Qudyarfi - 2006 í

Page 19
$.тауи
(தமிழ்நாடு)
تفاصطبوع
அந்நிய நாட்டிற்கு ஆகாய பிரயாணம். அந்தப் பரபரப்பில் பிரிவுகளின் கீறல் புரியவில்லை. சீழ்கட்டி ரணமானது இருவாரங்களில்.
கட்டிட காட்டின் உச்சமாடி. குடியிருப்பு அழகுக்காய் செருகப்பட்ட தண்ணிர் குழாயில் காற்றுக்கூட வருவதில்லை. மஞ்சள், நீலம், பச்சை. என வானவில் நிறங்களின். அணிவகுப்பாய் குடங்கள் எஞ்சும். மாநகரத்தின் கண்ணீர் லாரிக்காய்
ஒரு நாளில் இரு பொழுது யே நகரும்
அந்நிய மொழியை ஒசிந்த ாக்கிய கல்விக்கூடங்கள்"
எழுத்து மொழி ஒன்றாயும் பேச்சு மொழி வேறுபட்டும் வெகுதூரம் விலகி நின்றோம். ஆரம்ப நாட்களில் நட்பு வட்டத்தில் எனைக் கவர எதுவும் இருக்கவில்லை. வரைபடத்தில் புள்ளியாய் தெரிந்த என் தேசத்தை தேடத்தொடங்கினேன். கல்வியின் ஆர்வமும் சுத்தமான மொழி உச்சரிப்பும். அங்கீகாரம் ஆக்கியது தேசம் தொலைத்த நாராயாய் புழுதி தெறிக்கும் பரப்பு
வெளிகளில் புண்பட்டு கிடந்த எனக்கு சாய்ந்து கொள்ள சில திண்ணைகள் வர - ஐந்து வருடத்தில் அந்நியத்தினுள் அடைக்கலமானேன்
uiSssib - $4 பெப்ரவரி 2005
 
 

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் பாரதி பாரதிதாசனின் குமுறலும் ஆங்கில பாடல்களின் நடுவே குறுக்கிடும் தமிழும் சினிமா சுவராட்டிகளான சுவர்களும் இட்லியும் பிட்சாவும் போட்டியிட மல்லிகைப் பூவின் மணத்தில் கூவம் மறந்து போனது புத்தரும் வைரவருமற்ற அரச மரங்கள் போலிச் சாமியார்களின் சுகபோகம் ஆகியது. மாறிவரும் வல்லரசாய் முகம் காட்ட முயலும் அரசும். "பன்னாட்டு முகவர்களின் சொத்துத் தேம்பல்களாய் குவிந்து பெருகும் குளிர்பானங்களும் குளிரூட்டிய வண்டிகளும். கேட்டதும் கொடு
ம் தொலைபேசியுமாய் கணினி யுகத்தின்  ைபடக்க சேவைகளுள்
| Fð
சுகாதாரம் விலைபுே சூழ். புற்றீசலாய் பறக்கும் ரு 8፭m {3ဦ ரத்து மக்களுள் நானும் ஒன்றானேன். நதி நீர் இணைப்பு என அரசியல் அலறும் கண்முடி ஆந்தைகளின் அலட்சியம் இன, மத பேதம் மீறி - தொட்டளைந்த மகாவலியை ஸ்பரிசிக்கத்தூண்டும் t ஒப்பிடுதல் அதிகரிக்க நினைப்பு மீளும் என் வீடு, ஒழுங்கை பள்ளி நண்பர்கள். என்குட்டி நாய், செவ்விளநீர், ஐந்தூரியம் பூ என
எண்ணிக்கை பெருகும். இவையெல்லாம் மீண்டும் வரும். ஆனால் என் தேசத்துகான என் இளம் பருவம் யார் தருவார்? இன்று என் மண்ணின் புழுதி மூக்கினுள் புகுந்து தும்மலுடன் கண்ணிர் ஆகிறது என் மாங்கனியே, என்னை ஓர் வண்டாக்கி உன்னுள் அடைத்துக்கொள்!!!
மயில்டுலம் 85 GALügarfi - 2005

Page 20
1937 ஏப்ரலில் ஸ்பெயினின் பாஸ்க் (Basque)பிரதேசத்தின் பழைய தலைநகரான குவேனிக்காவைநாற்ஸிவிமானப்படைகள்தாக்கி அழித்தன. ஸ்பானியஉள்நாட்டுப்போரின்போது ஜெனரல் பிரான்சிஸ்கோ பிரான்கோ (Francisco Franco) பிற பாசிச அரசாங்கங்களின் உதவி யுடன் ஸ்பானிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியைத் தொடங்கினார். இதை எதிர்த்த குவேனிக்கா மக்களை முற்றாக அழிக்கும்படி பிரான்கோ தன் நாற்ஸி நண்பர்களிடம் வேண்டினார்.
இத் தாக்குதலில் 1700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிகழ்வு ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கியது. அது இராணுவம் பொது மக்களுக்கும் போராட்ட வீரர்களுக்கும் இடையே வேறுபாடு பார்க்காமல் "எல்லோருக்கும் மரணம்" (death for al) என்ற அடிப்படையில் செயற்பட வேண்டுமென்பதாகும்.
విరా
க்காசம்பவத்தை
1)Sassolb 36 Guûyaf - 2005
 
 

2004 நவம்பரில் ஃபலூஜா (Falujah) எனும் பழமை வாய்ந்த ஈராக்கிய நகரை அமெரிக்கப் படைகள் விமானக் குண்டுகளால் தாக்கி அழித்தன. பென்டகன் “அமெரிக்க இராணுவம் வெற்றிகரமான குண்டுத் தாக்குதல் மூலம் நகரின் 30 000 வீடுகளையும் அழித்துவிட்டது. இவை கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருந்த இடங்கள்” எனச் சொல்லியது.
நவம்பர் 15ம் திகதி பி. பி. சி. செய்தியாளர் "இறந்தவர்களின் எண்ணிக்கை 2 000க்கும் அதிகம். அதில் சாதாரண பொதுமக்களே பெரும்பான்மையோர்’ என்றார். இதேவேளை நவம்பர் 14ம் திகதியின் ரொய்ற்றர் செய்தி “அமெரிக்கக் குண்டு வீச்சு நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையை தாக்கியதன் விளைவாக அங்கிருந்த வைத்தியர்கள், தாதிமார்கள்,
நோயாளிகள் எல்லோரும் கொல்லப்பட்டனர்” என்றது.
டுத்துபிகாசோ வரைந்த ஓவியம்
மயில்டுலம் 37 Guyaff a 00

Page 21
தி வீன உலகில் எமது சூழல் தொடர்பில் எம்மைச் சூழ்ந்துள்ள அபாயம் பற்றி மிகவும் அவதான மாயிருக்க வேண்டியவர்களாய் நாம் உள்ளோம். வனவளம் எங்கள் சொத்து என்பதை நாம் யாவருமறி வோம். ஆனால் இன்று அதனைச் சரிவரக் காக்க வேண்டியதும் பயன் படுத்த வேண்டியதும் இவற்றைப் பற்றி விழிப்பூட்டுவதும் கடமை.
ஆதியில் மனிதன் காடுகளுக்கு உள்ளேயே தனது வாழ்க்கையை வாழ்ந்தான். மனிதன் காலப் போக்கில் விலங்குகளை மட்டுமே உணவுக்கு நம்பியிராது காடுகளை அழித்துப் பயிர் செய்து உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொண் டான். படிப்படியாக மனித குல வளர்ச்சியின் போக்கில் சனத்
பயில்டுலம்
தொகை பெருகத் தொடங்கியது. அதன் பின்னரே பெருமளவில் காடழிப்புத் தொடங்கியது எனலாம்.
இலங்கையில் தொடக்கத்தில் நீர்வள நாகரிகமே இருந்தது. அதாவது, நீர் உருவாகும் ஆற்றுப் பகுதிகளை அண்டிய பகுதியில் நீர்ப்பாசனச் செய்கைகள் தொடங் கின. பின்னர் அந்நியப் படை யெடுப்புக்கள் காரணமாக இராஜ தானிகள் அடிக்கடி இடம்பெயரத் தொடங்கின. இதனால் காடழிப்பு என்பது அக்காலப் பகுதியில் தவிர்க்க முடியாததாகி விட்டது. இலங்கையின் வன வளங்களின் அழிப்பில் பெரும் பங்கு பிரித்தா னியரைச் சாரும். ஆங்கிலேயர் களின் வருகையின் பின் அவர்கள்
Guûyarıfi - 2005
 

பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை யினைத் தொடங்கியதால் மத்திய மலை நாட்டிலும் அதன் சாய்வுப் பகுதிகளிலும் தென்மேற்குக் கரையோர பிரதேசங்களிலும் ஆரம் பிக்கப்பட்ட பெருந் தோட்டப் பயிர் செய்கையின் விளைவாக காடழிப்பு அதிகளவில் இடம் பெற்றது. இதைவிட பாரிய உட் கட்டமைப்பு செயற்பாடுகள் காரணமாகவும் (புதிய வீதிகள்) காடழிப்பு நடந்தது.
1956-1961 காலப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட காட்டுப் பகுதி களின் அளவீட்டின்போது நாட்டின் மொத்தப்பரப்பில் 2.9 மில்லியன் ஹெக்டேயர் (44%) வனப்பகுதி களாக கணிக்கப்பட்டன. ஆனால் உலக உணவு நிறுவனத்தால் (WFO) மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின் போது (1982-85) காட்டுப் பரப்பு 1.76மில்லியன் ஹெக்டேயராக (27%) கணிக்கப்பட்டது. எனவே 25 வருடகாலத்தில் பெருமளவு காடு கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. தற்போதைய கணக்கெடுப்புக்
களின்படி 1.56 மில்லியன் ஹெக்
டேயரே எஞ்சியுள்ளது. இதற்கு கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர், குடியேற்றத் திட்டங்கள் எனபன கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளன.
காடுகள் பல உயிரினங்களின் வாழ்விடமாக அமைவதனால்
பமில்நிலம்
காடழிப்பு அவற்றுக்குப் பாரிய ளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அவற்றின் இயல்பான வாழ்விடங்கள் சுருங்கிப் போகின் றன. இதனால் எமக்கே உரித்தான சில உயிரினங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாயுள்ளது. உதாரண மாக, யானைகள் எமது தேசிய சொத்துக்களில் ஒன்று. ஆனால், குடியேற்றங்களுக்காகவும் வேறும் பல தேவைகளுக்காகவும் அவற் றின் வாழ்விடங்கள் அழிக்கப்படு கின்றன. இதனால் உணவுக்கா உறைவிடத்திற்காகவும் யான்ைகள் கிராமங்களைத் தாக்கு
கவும்
கின்றன. பயிர்நிலங்களை நாசம் செய்கின்றன. இவற்றைத் தடுக்க கிராமவாசிகள் துவக்குகளைப் பயன்படுத்தும்போது யானைகள் காயமடைகின்றன. கண்பார்வை இழக்கின்றன. மேலும் அண்மைக் காலத்தில் புகையிரதங்களில் அடிபட்டு இறக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின் றது. இதற்கு அவற்றின் வாழ்விடங் கள் அழிக்கப்பட்டது ஒரு காரணி யாக அமைகின்றது.
இலங்கையில் கடந்த சில தசாப்தங்களில் சராசரியாக ஆண் டொன்றிற்கு 4500 ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. காடுகளின் முழுமையான பயன் பாடு பெறப்படாமல் விடப்படு வது ஒரு சிக்கலான பிரச்சினையே.
audyarfl - 2005

Page 22
அழிக்கப்பட்ட காடுகளிடையே உச்சவளப் பயன்பாடு பெறப்பட வில்லை என்பதும் வேதனைக் குரிய உண்மை. காடுகள் அழிக்கப் படுவதால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள் குறித்த பொது அக்கறை பொதுவாகவே குறை வானதாகவே காணப்படுகிறது. காடுகள் பொதுச் சொத்துக்கள் என்பதன் அடிப்படையில் மக்கள் அதை எவ்வாறேனும் தமது தேவை களுக்குப் பயன்படுத்தலாம் என்ற
எண்ணப்போக்கு நிலவி வருவதும்
காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக சட்டங்கள் பல உள்ளன. தாவர உயிரின பாதுகாப் புச் சட்டம், வனப்பாதுகாப்புச் சட்டம், தேசிய வனவியல் சட்டம் போன்றன இவற்றுள் சில. ஆனால் இவையெல்லாம் உள்ள போதும் முழுமையான கட்டுக் கோப்பான நடவடிக்கைகளும் வகுக்கப் படா மையினால் சட்டங்களின் பயன் பாடு பற்றிக் கேள்விகள் எழுகின்
றன.
uமில்டுலம்
40 t.
காடுகளை அழிப்பதென்பது வெறுமனே மரங்களை வெட்டு வதன் மூலம் மரங்களை இழப்பது மட்டுமல்ல. இதனால் பிரதேச மொன்று நீரைத் தாங்கி வைத்திருக் கும் ஆற்றலையும், அதனை உறிஞ்சும் திறனையும் இழந்து மண்ணரிப்பும் ஏற்படுகிறது. எமது நாட்டில் விறகு, தளபாட உற்பத்தி என்ற குறுகிய வட்டத்துடன் தேவைகள் நிறைவாகின்றன. மரங்களின் அழிப்பைக் குறைக்க தளபாட உற்பத்திக்கு பதிலீட்டுப் பொருட்களைப் பாவிப்பது பொருத்தமானதாய் அமையும்.
இனிவரும் காலத்திலாவது தளபாடங்களை வேறு பொருட்கள் உலோகம்) கொண்டு தயாரித்தல், புதிதாகக் காடுகளை அழிக்காமல் இருக்கின்ற நிலங் களின் பயிர்ச் செய்கையையும் குடியேற்றங்களையும் மேற்கொள் ளுதல், காட்டு உயிரினங்களுக்கு அவர்களுக்குரித்தான வகையி லமைந்த புகலரண்களை உருவா க்கல் போன்றன நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
(a + b :
பல திணைக்களங்கள், அமைச் சுக்கள், அதிகாரிகள் என எல்லாம் உள்ளபோதும் அடிப்படையில் இலங்கையின் பொதுச் சொத்துக் களில் ஒன்றாகிய காடுகள் பற்றி கவனிக்கப்படுவதே யில்லை. மக்கள் விழிப்புணர்வும் கூட்டான
பெப்ரவரி - 2005.
 

நிகழ்ச்சித் திட்டங்களுமே நாம் எமது காட்டைக் காக்க உதவும். இருக்கின்ற நிலை தொடருமிடத்து இன்னும் சில தசாப்தங்களில் இலங்கையின் புதிய குடிமக்க களாகும், இளையவர்கள் புகைப் படங்களிலும் தொலைக்காட்சி களிலுமே இலங்கையில் முன்பு காடுகள் இருந்ததாக அறியும் சோகம் நிகழும்,
உலகமயமாக்கல் என்ற போர்வையின் கீழ் இலங்கையின் இயற்கை வளங்களை ஏகாதி பத்திய சக்திகள் சுரண்டிச் செல்லும் நிலையும் மறைமுகமாய் வேறு
போர்வையில் நிகழ்கின்றது. அண்மையில் ஒரு பேராசிரியர் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு
இலங்கை மரவகைகளை கொண்டு செல்வதாக, இலங்கையிலிருந்து இயற்கைப் பொருட்களை கடத்த முயன்றதாக சுங்கத் திணைக்களத் தால் பிடிக்கப்பட்டு தண்டிக்கப் பட்டார். எனவே எம்மவரே எங்களையும் எங்கள் சொத்துக் களையும் காட்டிக் கொடுக்கும் நிலை தொடர்வதால் எங்களைக் காக்கவேண்டிய நிலையுமுள்ளது.
காட்டு வளங்களை பேணுவதும் புதிய காடுகளை உருவாக்குவதும் எங்கள் வளச் சுரண்டலைத் தவிர்ப் பதும் இனிவரும் சந்ததிக்காய் கவனிக்கப்பட வேண்டியவை.
ம்யில்டுலம்
0.
வினாக்கள் - 16 செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர் யார்? இரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசைப் பெற்றுக் கொடுத்த நூல் என்ன? யுகோஸ்லாவியா நாட்டின் தற்போதைய பெயர் என்ன? SIM என்பதன் விரிவாக்கம் யாது? ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union) 6Ti556060T நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன? 2005ல் நூற்றாண்டை நிறைவு செய்யும் டென்னிஸ் சுற்றுப் போட்டி எது? முதலாவது தமிழாராய்ச்சி மகாநாடு எங்கு நடைபெற்றது? இலங்கையில் தொலைக்காட்சி சேவை எத்தனையாம் ஆண்டு தொடங்கப்பட்டது? முதல் தமிழ் நாவல் இலக்கியம் எது?
கடந்த ஆண்டு தனது 50வது இதழை வெளியிட்ட நீண்ட காலமாக இலங்கையில் வெளிவந்து கொண்டிருக்கும் காலாண்டிதழ் எது?
أص
பெப்ரவரி 2005

Page 23
காதலர்தினத்தை முன்னிறுத்தி
வாரத்தில் ஏழு தினம் என அறிந்தவை போய் ஒவ்வொரு தினமும்
பற்பல தினங்கள்
தினங்களிற்கென சிறப்பு திரைப்படம் பாடல், வாழ்த்து உடை, உணவு,
LDL6) பிரதான அனுசரணைகள் இணை அனுசரணைகள் வாழ்த்துக் கூறும் நாங்கள், நீங்கள் நடிகர், நடிகைகள்
நினைப்பை வேண்டிய 606
நிறுவனங்கள் என
அறியாத புதிய பெயர்கள் fa
கடைகள்
நிறுவனங்கள் அறிமுகமாகும் நாளாய் (υριθ-μHLb.
தினங்கள் எதற்காய் தினமும் வருகிறது சிந்தனை நமக்கு சிறப்பை தருவதால்
fe ώ
裂
* జిల్లో 。臀 * 事
வீழ்ந்தடித்து
வாங்கியவை அனைத்தும் காணாமல் போகையில்
தொட்டுச் சென்றவை போட் நமக்காய் ጳ விட்டுச் செல்பவை விஸ்திரமான
வியாபகமான வியாபார நிறுவனங்களின் நாமங்களே
முருகனின் தந்தையின் திருவிளையாடல்களாய் தோன்றிய தினங்கள் போய் முதலாளிகளின் தந்தைமார்களின் திருவிளையாடல்களில் ஒன்றே
இத் தினங்கள்
மீண்டும் ஒரு முறை சிந்தனை நமக்கு சிறப்பைத் தருவதால் சிந்திப்போம் செயற்படுவோம் நாளை நோக்கி
۔ چوکو ۔۔
uso$ab
42
பெப்ரவரி - 2005
 

ása 莎 ----
இயற்கை. இணைப்பு. ஈர்ப்பு. இயல்பு
ரஜர4ஜி
ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து புறப்பட்ட வண்டி புளியங்குள நிறுத்தத் தில் தன் அலுவல்களை முடித்துக் கொண்டு ஏ9 வழியாக வடக்கு நோக்கிச் செல்கிறது. புளியங்குளம் சந்தியில் வலப்புறம் திரும்பி வயலும் கடலும் வாரிக் கொடுக்கும் முல்லை நிலம் நோக்கிய பயணம் அது. பாதையின் இருபுறமும் சிறிய வீடுகள், வயல்கள், தாமரைக் குளங்கள், காடுகள், மந்தைகள், பட்சிகள். மாறி மாறி என் பார்வையில் பட்டுவிலகிவிலகிச்செல்லச் செல்ல மனதிலே புது வித உணர்வு களோடு நான் இருக்கையில், இடையில் வரும் சிறிய கோயில்களையும் கை யெடுத்து வணங்கியபடி தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
மதிய இடைவேளைக்காக காட்டுமரங் களிற்கு மேலே பகலவன் ஒய்வெடுத்துக்
பயில்டுலம்
கொண்டிருக்கிறான். மெல்லிய காற்று மேனியைச் சிலிர்க்க வைக்க எனது சிந்தனை முழுவதும் நகர்ப் புறத்து நெரிசலில் இருந்து முற்றுமுழுதாக விலகி நிற்கும் இந்த பச்சை நிலங்கள் பற்றியே. திடீரென எப்படியோ என் கைப்பையின் மேற்பரப்பில் முளைத்த பாம்புஒன்று. என்ன ஆச்சரியம் அதுவும் பச்சைப்பசேல் என்று. வாகனத்தின் முற்பகுதிநோக்கி காற்றில் ஒதுங்கும் ஓர் பயிர் போல் தாவ எனது கை, கால், உடம்பு, தலை எல்லாமே காக்கை வலி யின் துடிப்பில் கதவு திறபட வீசி எறியப் படுகிறேன். புல்லும் நீரும் பேசிக்" கொண்டிருந்த தரை மீது குருதியில் முகமும் முதுகும் வலக்கையும்.
இயற்கையோடு இதயத்தை கூடிக்
கலக்கவிட்டு குதூகலத்தோடு வந்து கொண்டிருந்த எனக்கு இயற்கையின்
s: Gruffyraurfi - 2005

Page 24
பிறப்பிலே ஒருசிறிய விலங்கு. அதுவும் அத்தனை அழகு. அதுசரி அது என்னை ஏன் தூக்கி எறிந்தது இயற்கை இப்படித்தானோ வாரி அணைப்பதும் காலை வாரிவிடுவதும் அதற்கு கைவந்த 666GUn
மெல்ல இடக்கரம் ஊன்றி சரிந்து நிமிர்ந்து எழுந்து விடுகிறேன் சா! என் இடக்கரத்திற்கு இவ்வளவு சக்தியா வலக் கரம் இயங்க மறுத்த போதுதான் இது புரிகிறதோ! முகத்திலும் முழங்கையிலும் ஆங்காங்கே உராய்வுக் காயங்கள். வலதுதோள்பட்டையில் ஆழமான நோ. மீண்டும் நடந்து வண்டியில் ஏறி அமர்ந்து கொள்கிறேன். அதே இருக்கை. அதே வண்டி. அதே பச்சைப்பசேல் என்ற பாம்பு எழுந்த மண்ணிறக்கைப்பை வண்டிசெல்கிறது. வருகின்ற காற்று மெல்ல முகத்திலும், தலையிலும் வருடுகிறது. வயல்கள், காடுகள், தாமரைக் குளங் கள், பயிர் நிலங்கள் கோயில்கள் பயணம் தொடர்கிறது.
மனம் அப்படியே பழையபடி ஒன்றிப் போகிறது. மீண்டும் பச்சைப்பசேல் என பாம்பு வரலாம். துள்ளி விழுபடலாம். மீண்டும் காயங்களுடன் எழுந்து இயற்கையோடு மீண்டும் ஒன்றிப் போகலாம். இயற்கை இடரிவிடுகிறது என்பதற்காக விலகிப் போக முடியுமா? ஒ. அதுவும் இயற்கையோ
வண்டி முள்ளியவளை கிராமத்தின் வைத்தியசாலைக்குள் நுழைகிறது. எனது காயங்களை காய வைப்பதற் 355..... ஆ! எத்தனை அகோரமான
lაußRაtტNoub
காயங்களுடன் முகங்கள், மூக்குகள், முதுகுகள் கை கால்கள் ஆம்! எழ முடியாமல் அசைய முடியாமல் சுவாசிக்க கூடமுடியாமல்.ஓ எப்படி இவர்கள் எல்லாம் எழுந்தார்கள்! என்னைச் சூழ்ந்து. ஆதரவான விசாரணைகள். என் காயங்கள் பற்றியதாய் யாரோ ஒரு விசர் கவிஞன் சொன்னான். “மனிதம் செத்து மாதங்கள், வருடங்களாச்சு.” இல்லையே! மனிதம் இன்றும் உயிருடன்தான். எனக்கோ அவர்களின் Lutfuu முன்னே என்னுடையவை சிறுகச் சிறுக குறுகி காணாமல் போகிறது. அவர்களுக்கோ எனது புதிய காயங்களைப் பார்த்தபோது அவர்களின் பழைய காயங்கள் ஆறிப் போகின்றது. ஒஇயற்கையே இங்கும் நீ வந்துவிட்டாயா.
stuffseit
வித்தியானந்தாக் கல்லூரி முகாமிற் குள் எங்கள் நாலு சக்கரங்களும் ஊர்ந்து சென்று நின்று விடுகின்றன. மெல்ல இறங்கிய எனது இரண்டு கால்களும் முன்நோக்கிச் சென்று அங்கிருந்த பல சோடி கால்களிற்கு முன்னால்மெல்லநிற்கபார்வையைபடர விடுகிறேன். துயரங்கள் விழித்து நிற்கும் பார்வைகளோடு இழப்புக்களல் இளைத்துப்போனமனிதர்கள்.tமெல்ல, மெல்ல வார்த்தைகளை தூது அனுப்பி அவர்களுக்குள் அமுங்கிக் கொண் டிருந்த இறுக்கங்களின் கட்டுக்களை மெல்ல மெல்ல கழட்டிக் கொண்டிருந் தேன். அவர்களுடைய உதடுகள் அசைந்து உதிர்க்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் கட்டுமெல்லமெல்ல
Guûyarf - 2006

தளர்ந்து கொண்டிருந்தது. சின்னஞ் சிறிய எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கக்கூடிய சிறுவன் என் முன் தோன்றி விழிகளைக் குளமாக்கி அழுகிறான். "அக்கா என்ர அம்மா, அப்பா, தம்பி, தங்கை எல்லோரும் அலையோடு அள்ளுப்பட் நான் மட்டும் தனித்துவிடப்பட்டுள்ளன். நீங்கள் கொழும்பிற்கு போகும்போது என்னையும் கூட்டிப் போங்கள்” விக்கலும், விம்மலுமாக அழுகை தொடர்கிறது. திடீரென எங்கிருந்தோ வந்த செய்தி "கடல் வருகுது” ஆ என்ன நடந்தது? இந்த மனிதர்களுக்கெல்லாம் எங்கும் ஒரே கூக்குரல் அல்லோல கல்லோலம். முகங்கள் யாவிலும் மரண பயம். பொம்மர் வருகிது. ஷெல் வருகிது. ஆமி வருகிது. அட இப்போகடலும் வருகிதா. அந்தச் சிறுவன்அப்போவிழித்துக்கொள்கிறான்."அக்கா! நீங்கள் பயப்படாதேங்கோ. இது நல்ல உயரமான இடம். இங்க கடலும் வராது; அலையும் வராது." சொன்னவன் “பொறுங்கோ பாத்திட்டு வாரன்” போனவன் திரும்பவேயில்லை, அவனை எதிர்பார்த்துநீண்டநேரமாக நிற்கிறேன். அவன் வரவே யில்லை. உள்ளே சென்று தேடியும் பார்க்கிறேன். எங்கும் அவன் இல்லை. எங்கு போனான். ஒ அவனுக்கு இந்த மூன்று நாள் வாழ்க்கை. மூன்று நாள் உறவுகள், இந்தக்கல்லூரி, மேசைகள், கதிரைகள், மாமரம், பரந்துகிடக்கும் மைதானம். விட்டுவர மனம் இல்லையோ ஓ இந்த மூன்று நாட்களில் இப்படியொரு ஈர்ப்பா.
ஐ.நா அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி 130 மில்லியன் பிள்ளைகள் கல்வி கற்கவேண்டிய வயதில் கல்வி கற்க இயலாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆண்டொன்றுக்கு 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. இவ்வளவு தொகையை திரட்ட முடியாமையால் அவர்களுக்கு கல்வி வழங்க முடியவில்லை என்கிறது ஐ.நா. இதேவேளை கோல்ப் என்ற விளையாட்டு விளையாடுவதற்கு ஆண்டொன் றுக்கு 42 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப் படுகின்றது. ஆண்டொன்றுக்கு 60 பில்லியன் அமெரிக்க டொலர் களுக்கு பியர் அருந்தப்படுகிறது. ஆயுத தளபாடங்களுக்காக ஆண்டொன்றுக்கு 800 பில்லியன் செலவழிக்கப்படுகின்றது.
}O), 0ა^ტოიA فاخت6fb ملك لمفAلملجأG ܟܐyAܗܝ2 شامله راG ۱۰ مم دمی به سه مو (مو و نه ها ضفاصيلهمه له صممه هدمهAدم 98 ( وا (زاده می Ο δήή مهم و پولها و . (*^7 ق فرمانش و og/wదీగ్రంAగగిణి.
டிமில்லம் 等辱 பெப்ரவரி - 2005

Page 25
uაwნYŇადჭიაtb
கால்நடைகளுக்குள் கடுஞ்சண்டை சமாதானம் பேசவென நீண்ட தொலைவிலிருந்து பறவைகளும் மீன்களும் வந்தன.
நட்சத்திரங்கள் பொறித்த நீலச் சால்வையணிந்த சிவப்பு பறவைகளும் தர்மச் சக்கரம் அணிந்த பச்சை ஆரஞ்சு நிற மீன்களும்
இன்னும்
பல பல நிறங்களில் பறந்தும், மிதந்தும்
வந்தன.
வந்த இடத்தில் இருத்தல் நினைத்து கூண்டுகள் பல செய்தன.
வந்தவை கால்நடைகளுக்குள் வேலியிட்டு சில கால்நடைகளுக்கு உலகம் சுற்றிக் காட்டின.
கால்நடைகளுக்குள் சில பறவைகளையும் மீன்களையும் எதிர்த்தன
A. Gwyfyn if - 2005 i
 

RNR)f;s)ubוט
அவற்றில் சில திடீரென்று நோய் வந்து மரித்துப் போயின பறவைகளும், மீன்களும் மரியாதை அணிவகுப்புடன் நல்லடக்கம் செய்தன இப்போதெல்லாம் கால்நடைகளுக்குள் சண்டை இல்லை, அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டன கால்நடைகளுக்குள் சில இன்னமும் பறவைகளையும் மீன்களையும் எதிர்த்தன ஆனால், அவை கால்நடைகளுக்கு பணமும் பொருளும் கொண்டு வந்தன
கால்நடைகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். உண்மை வேண்டி கண்களை இறுக மூடி கடவுளை நினைத்தன திறந்து பார்த்த போது பறவைகளும் மீன்களும் கூண்டுகளுக்குள்
கடவுள் கண்திறந்து விட்டதாய் கால்நடைகள் எக்காளமிட்டன இன்னமும் சில கால்நடைகள் கூக்குரலிட்டன "கூண்டுக்குள்ளிருப்பவர்க்கு வெளியில் இருப்பவர் • கூண்டுக்குள் இருப்பதாய் தோன்றும்" கால்நடைகள் இன்னமும் ஏற்பதாயில்லை,
47 auðyarfl = 2005

Page 26
uமில்டுலம்
!
மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மாணவர்கள் தமது பாடசாலைகளுக்கும் தனியார் வகுப்பு நிலையங்களுக்கும் விரைந்து கொண்டிருக்கின்றனர். எனினும் இத்தகைய மாணவர்கள் ஆளுமை உடையவராக தமது வாழ்வை விருத்தி செய்யக்கூடியவர்களாக காணப்படுகின்றார்களா? இல்லையாயின் அவர்களிடத்தில் கல்வியானது சரியான முறையில் ஏன் சென்றடையவில்லை?
நாம் உலகின் கல்வி நிலையை பார்ப்போமாயின் உலக சனத் தொகையில் 875 மில்லியன் வயது வந்து மக்கள் எழுத்தறிவற்றவர்கள். இது உலக சனத்தொகையில் 1/6 பங்கு ஆகும். இத்தொகையில் பெரும்பான்மையானோர்
விருத்தி அடையாத நாட்டினரே. அங்கு பாடசாலைக்கு செல்லவேண்டிய பருவத்தினரான 130 மில்லியன் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதில்லை. இதில் 73 மில்லியன் பெண்களாவார். இத்தொகையிலும் பெரும் பாலானோர் விருத்தியடையாத நாடுகளைச் சேர்ந்த பெண்களே. விருத்தியடையாத நாடுகளிலே 150 மில்லி யனுக்கு மேலான பிள்ளைகள்கம் வகுப்புவரைகூடத்தமது கல்வியைத் தொடரவில்லை. தென் ஆசியா, ஆபிரிக்கா,
48 auúyafl - 2006
 

சஹாரா பிரதேசங்களில் நான்கு பிள்ளைகளுக்கு மூவர் 5ம் தரத்தை கூட அடைவதில்லை. இத்தகைய மோசமான நிலை விருத்தி அடையாத நாடுகளிற்கு ஏன் ஏற்பட்டுள்ளது? இதற்கு தீர்வுதான் இல்லையா?
போலோ ஃபிறேறி என்பவர், இலத்தின் அமெரிக்காவிற் காணப் படும் சுரண்டல் முறையை அடிப் படையில் ஒடுக்குவோர் ஒடுக்கப் படுவோர் மீது சுமத்துகின்ற மோச மான கல்வி நிலையின் பயனே விருத்தி அடையாத நாட்டினருக் கான கல்வித்திட்டம் எனக் கூறு கின்றார். மேலும் இத்தகைய நாடு களிலே ஆசிரியருக்கு அனைத்தும் தெரியும், மாணவர்களுக்கு எதுவும் தெரியாது, ஆசிரியர்கள் பேசுப வர்கள், மாணவர்கள் கேட்பவர் கள் ஆசிரியர்கள் தமக்குத் தெரிந்த வற்றை மாணவர்களுக்கு கூறுவார் கள், மாணவர்கள் அவை பற்றிய எதுவித சிந்தனையுமின்றி அவற் றினை ஏற்றுக்கொள்வார்கள். ஆசிரியர் சிந்திக்கும் அதே முறை யில்தான்மாணவர்களும் சிந்தித்தல் வேண்டும். ஆசிரியர்கள் மாணவர் களோடு கலந்தாலோசிக்காது மாணவர் பற்றிய முடிவுகளை எடுப்பார் மாணவர்கள் அகச் சார்பானவர்களாகவும் ஆசிரியர்கள் புறவயமான சிந்தனையுடையோ ராகவும் காணப்படுவ்ார் எனக் கூறு கின்றார். அத்துடன், இத்தகைய
uமில்டுலம்
கல்வி முறையின் மூலம் உருவா கும் சமுதாயத்தினரிடம் உலகை மாற்றியமைக்கும்தன்மை, புரட்சி மேற்கொள்ளும் தன்மை என்பன இல்லாது காணப்படும் எனவும் மோசமான உலக நிலைமைகளை ஏற்று அதற்கு இசைவாகவே மாற்றியமைக்கும் பண்புடையராக இருப்பார்கள் எனவும் அவர் கூறு கின்றார்.
இத்தகைய பிரச்சினைக்கான தீர்வாக போலோ ஃபிறேறி 'பிரச்சினை முற்கவிப்பு' எனும் கல்வி முறையினை முன்மொழிந் துள்ளார். அதாவது மாணவர்களின் சக உணர்வை தூண்டக்கூடியதாக வும், மாணவர்களுக்காக ஆசிரியர், ஆசிரியருக்காக மாணவர் என்ற ஒன்றிணைந்த பண்பு இருத்தல் வேண்டும் எனவும், மாணவர்கள் ஒரு விடயம் தொடர்பாக தாமே முயற்சி செய்து அதனை அறிந்து கொள்ளும் மனப்பக்குவத்தினை அடைந்து கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர்களை மாணவர் கள்விரோதியாக கருதாது பங்காளி யாகக் கருதும் மனப்பக்குவத்தி னையும், உலகம் மனிதரிலிருந்து வேறானதல்ல என்ற கருத்தும் மாணவர்களிடத்தில் தோன்றும் வகையில் கல்வி விடுதலைக்கான கல்வியாக மாற்றம் வேண்டும் எனவும் தன் மாற்றுக் கருத்தினை போலோ ஃபிறேறி எடுத்துரைத்துள்ளார்.
பெற
பெப்ரவரி - 2005

Page 27
போலோ ஃபிறேறி ஒடுக்கு வோர் ஒடுக்கப்படுவோர் என்னும் அடிப்படையில் கல்வியின் மோச மானநிலை பற்றி விமர்சிக்க பசில் பேர்ன்ஸ்ரின் என்பவர் கல்விச் செயற்பாட்டில் மொழியும் வர்க்க மும் பெறும் தாக்கங்களை உண்டு பண்ணுகின்றது எனவும் இதனால் பாட்டாளி வர்க்கமே பெரும் தாக்கங்களிற்கு உள்ளாகின்றது எனவும் தெரிவிக்கின்றார். இவர் மொழியைப் பொதுமொழி, முறைசார் மொழி எனப் பாகுபடுத் தினார். இங்கு பொதுமொழி யானது பாட்டாளி வர்க்கத்தினால் பயன்படுத்தப்படுகின்ற உணர்ச்சி மிக்க மொழி எனவும், முறைசார் மொழி என்பது மத்தியதர வர்க்கத் தினாலும், முதலாளித்துவ வர்க்கத் தினாலும் பயன்படுத்துகின்ற தர்க்கப் பண்புகள் சிக்கல்கள் நிறைந்த மொழி எனவும் விளக்கம் அளிக்கின்றார். இத்தகைய சிக்கல் கள் நிறைந்த முறைசார் மொழியே கற்பித்தல் செயற்பாட்டுக்கு பயன் படுத்தப்படுகின்ற மொழியாகை யினால் பாட்டாளி வர்க்கத்தினரின் குழந்தைகளுக்கு அவை கடினமாக உள்ளது எனக் கூறுகின்றார்.
இவ்வாறு பாட்டாளி வர்க்கத் தினருக்கு பாதகமாக காணப்படு கின்ற மொழியும் வர்க்கமும் என்ற பாகுபாட்டை விளக்கி அதற்குத் தீர்வாக 'சேர்தல் வகை, ஒன்றி ணைதல் வகை’ எனும் கலைத்
பமில்டுலம்
திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இதில் சேர்தல் வகை என்பது உயர் மட்ட மக்களிற்கு மட்டுமே பயன் படும் என்றும் இதனால் ஒன்றி
ணைதல் வகையே சிறந்த மொழி
யாகக் கல்விக்கு பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் தனது தீர்வை முன்வைத்தார். மேலும் இம்முறையிலேயே சமூக வகுப்புக் களிடையே சம சந்தர்ப்பத்தைத் தரக் கூடியது என விளக்கம் தருகின் றார்.
போலே ஃபிறேறி, பசில் பேர்ன்ஸ்ரின் போன்றோர் பாட சாலை மட்டங்களிலே காணப்பட வேண்டிய கல்விமுறை பற்றிய தமது தீர்வுகளைக் கூற பாடசாலை கள் என்னும் அமைப்பையே
"། يع
பெப்ரவரி 2005
 

கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இவான்இலிச் என்பவரின் கருத்துப் படி, பள்ளிக்கூடங்கள் என்பவை கல்விச் செயற்பாடுகளை மந்த மடையச் செய்கின்றன என்றும், இவை நலிந்தவர்களுக்கு எப்போ தும் பாதகமானதாகவும், வாய்ப்பு மிக்கவர்களுக்காகவே பாடசாலை கள் தொடர்ந்து பணியாற்று கின்றன என்றும் தெரிவிக்கின்றார். மேலும் தாமே கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்கின்ற ஒரேயொரு சமூக நிறுவனம் என்ற எண்ணமும், தாமின்றி கற்பித்தல் செயற்பாடு நிகழாது என்ற கருத்தும் பரந்து காணப்படுகின்றது என கூறுகின் றார். இவரது இக்கருத்தை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் தாய் ஈறெப்மர் என்பவர் 'பள்ளிக் கூடங்கள் இறந்து விட்டன எனும் நூலை எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். மேலும் வறியவர்கள் சமூக நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொண்டு செயற்படும்போது அச் சமூக நிறுவனங்கள் அவர்கள் நம்பிக்கையை இல்லாதொழித்து அவர்களை நடைமுறை வாழ் வோடு ஒத்துவாழ முடியாதவர் களாக்கி விட்டன என்றும், இங்கு நாட்டின் சட்டங்களைவிடக்கூடுத லான வலுமிக்கவர்களாக ஆசிரியர் கள் செயற்பட்டு மாணவர்களை இயந்திரப்பாவை ஆக்கி விட்டனர் எனவும் கருத்து தெரிவித்தார்.
பள்ளிக்கூடங்களிற்கு
uაuნNBდადჭდააub
மேலும் பள்ளிக்கூடங்களின்றிக் கல்வியில் ஈடுபடக் 'கற்றல் வலைப்பின்னல்" என்னும் தீர்வை முன்வைத்துள்ளார். அதாவது கற்றல் செயற்பாட்டிற்கு நூலகம், ஆய்வுகூடம், வள நிலையங்கள், தொடர்புசாதன வசதிகள், வழி காட்டி நூல்கள், திறன்கள், பரிமாற லுக்கான அறிஞர்களோடு தொடர்பு கொள்வதற்கான நூல்கள் என்ப வற்றை கொடுப்பதன் மூலமாக பள்ளிக்கூடங்கள் இன்றியே கல்வி கற்கலாம் என தீர்வு கூறுகின்றார்.
மூன்றாம் உலக மக்களாகிய நாங்கள் இவ்வாறு பல்வேறுபட்ட கல்வி தொடர்பான சிக்கல்களை எதிர்நோக்கும் இவ்வேளை, மேலைத்தேய நாடுகளில் இருந்து "வாடகை வசந்தங்கள்’ என்ற பெயரில் எமக்கு ஒவ்வாத கல்வி முறைகளை பின்பற்றுவதைத் தவிர்த்து எமக்கே உரித்தான தனித் துவமான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதன்மூலமே வளமான எதிர்கால உலகை உருவாக்கலாம். இனி வரும் காலம் இத்தனையும் தாண்டி இனிதாய் அமைய விடியலை நோக்கி.
QLúyafl - 2005

Page 28
-க.அபிராமி颅 8. هي من ". 以°丛 * ،4ܚܦܵ இருந்தத் திருச்சிழ்த்தக்
வருத்தம் என்ற பதத்தை நாம் சிலகணங்களில் வரையறுப்பினும் அழுத்தம் என்ற பதத்தை வரையறை செய்ய எமக்கு ஒரு சில நிமிடங் களாயினும் கழியும் என்பது திண்ணம். ஏனெனில் பரந்த பல கிளை களைக் கொண்டது அழுத்தம்
சுயமாகச் சிந்திக்கத் தொடங்கும் ஒரு சிறு பிள்ளை முதல் முதியோர் வரை பல கோணங்களில், பல்வேறு சந்தர்ப்பங்கள் ஊடாக இவ்' அழுத்தம் அவர்கள் வாழ்வை நரகமாக்குகிறதென்பது வருத்தத்திற்கு உரியதொன்றாகும். ሰ
அழுத்தம் என்றால் என்ன?
இது ஒரு மனம் சார்ந்த நோயாகும். இதனை எதிர் நோக்குகிறவர்கள் துக்கம் நிறைந்தவர்களாகவும், அன்றாட கருமங்கள், நிகழ்ச்சிகளில் நாட்டமற்றவர்களாகவும், தாங்கள் எதற்கும் அருகதையற்றவர்கள் போன்ற உணர்ச்சியையும் கொண்டிருப்பர். அமெரிக்க உளவியல் சபையினது ஆய்வுக்கிணங்க மனஅழுத்தத்திற்கு மூளையிலே காணப்படுகின்ற பல மூலக்கூறுகளின் சமநிலையற்ற தன்மையே வழிகோலுகின்றன. கீழ்க் காணப்படும் அறிகுறிகள் ஒருவரில் தொடர்ந்து இரு வாரங்களுக்கு காணப்படின் சிறந்த ஓர் உளவியல் நிபுணரை அணுகி கலந்துரையாடுதல் அவர்கள் வாழ்வை ஒளிரச் செய்யும்.
மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதை எவ்வாறு இனங்காணலாம்:
முன்னர் விரும்பி ஈடுபட்ட கருமங்களில் தற்போது அவ்வளவாக நாட்டமின்மை.
வாழ்க்கையில் அதிருப்தி.
சமூகத்துடன் தொடர்புடைய கருமங்களிலிருந்து பின்வாங்குதல்.
" நான் எதற்கும் பிரயோசனமற்றவன் போன்றதான உணர்வுகள்,
மேலோங்கல்.
பலம் குன்றல்,
uயில்நிலம் 52 ണ്ണി - 2006
 

சிறு விடயங்களுக்காகவும் எளிதில் சினங்கொள்ளல். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் முழுமையாக கவனஞ் செலுத்த முடியாமை/முடிவெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளல். பசிக்குறைவு அல்லது உடல் எடை திடீரெனக் குறைதல்.
உளவியல் சார்ந்த அறிகுறிகள்:
(உணர்ச்சிகள், எண்ணங்கள், நடத்தைகள்)
நாள் முழுவதும் கவலையாக, சோர்வாகக் காணப்படல். அன்றாடக் கருமங்களில் நாட்டமில்லையாயினும் அவர்கள் மகிழ்ச்சி யாக ஈடுபடக்கூடிய ஏதோவொரு கருமத்தைத் தெரிவு செய்ய முடியா திருத்தல். ஒரு குறிப்பிட்ட காரணமின்றி வாழ்வை முடித்துக்கொள்ள அல்லது சாவை எதிர்கொள்ள எத்தனித்தல்.
உடலியல் சார்ந்த அறிகுறிகள்:
திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை உடல் எடை அதிகரிப்பு, அளவுக்கதிகமாக பசித்தல், நித்திரைக் குறைவு அல்லது அளவுக்கதிகமான நித்திரை.
சோர்வு ஒரு விடயத்தைக் குறித்து சிந்திக்க, ஒருமுனைப்படுத்த, தீர்மானிப் பதற்கு வேண்டிய திறன் குன்றல், நாவரண்டு போதல், அதிக வியர்வை வெளியேறல், வயிற்றுப்போக்கு.
மன அழுத்தத்தைக் குறைக்க அல்லது முற்றாகத் தவிர்ப்பதற்குரிய வழிவகைகள் நீங்களாக செய்யக்கூடியவை:
வியர்வையை அதிகமாக வெளியேற்றக்கூடிய அதேவேளை அதிகளவு ஒட்சிசனை அதிகளவு உள்ளெடுக்கக்கூடிய அப்பியாசங்கள் ஒரு செல்லப் பிராணியை வளர்த்தல்,
பூந்தோட்டம் செய்தல். நகைச்சுவை கலந்த திரைப்படங்களை, நாடகங்களைப் பார்த்தல், நீங்கள் வசிக்கும் இடம் இயற்கை எழில் மிக்கதாயின் ஆறுகள், மலை கள் போன்றவற்றைப் பார்த்தவாறே காலாற நடத்தல், ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல்,
lossoisob 58 GLuÔyQIrf - 2006

Page 29
பிறருடன் இணைந்து செய்யக்கூடியவை:
வாரத்தில் குறைந்தபட்சம் 3 நாட்களாவது உங்கள் மனதிற்கு இதம் தரக்கூடியவர்களைச்சந்தித்து மனம்விட்டு உரையாடுதல். நண்பர்களுடன் இருக்கும் வேளைகளில் கையடக்கத் தொலை பேசியை முற்றாகத் துண்டித்தல். நெருங்கிய நண்பர்களுடன் பேசுதல். உங்களுக்குத் திறமையிருப்பினும் இல்லாவிடினும் ஒர் நாடகப் பட்டறையிலோ, சங்கீத வகுப்பிலோ, நடனப் பள்ளியொன்றிலோ இணைதல்.
சூழலை மாற்றியமைத்தல்:
மரங்களையும் பூக்கும் செடிகளையும் வெட்டி செப்பனிடல். உங்கள் அறையை சுத்தம் செய்து நேர்த்தியாக வைத்திருத்தல். துணிகளை துவைத்து சுத்தம் செய்தல். சுவரின் வர்ணத்தை இளம் மஞ்சள் நிறத்தில் மாற்றியமைத்தல். ஒரு புது அனுபவத்தைத் தருவதற்காக உங்கள் அறையில் இருக்கும் தளபாடங்களை வேறு கோணத்தில் மனதிற்கு ரம்மியமாக இருக்கும் வண்ணம் மாற்றி அடுக்குதல்.
வாலிபப் பிராயத்தை எட்டியவர்கள் (யெளவனர்கள்) எதிர்நோக்கும் மன அழுத்தம்
இவர்கள் தொடந்து இரு வாரங்களுக்கு கவலை தோய்ந்தவர்களாகவும் வீணாக கோபம் கொள்கிறவர்களாகவும் காணப்படின் உளவியல் நிபுணரை அணுகி ஆலோசனை பெறுதல் சாலச் சிறந்தது. இவர்களது முகம் இதற்கான அறிகுறிகளை இலகுவில் பிரதிபலிக்காமையினால் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை இவர்களில் கண்டறிதல் சற்று சிரமமா யினும் பின்வருவனவற்றை அவதானிப்பின் எச்சரிக்கையாக இருப்பது நன்று.
உணவு மற்றும் நித்திரை கொள்ளும் அளவுகளில் வேறுபாடு. பாடசாலை கருமங்களில் தொய்வு. நண்பர்களுடன் பழக பின்வாங்கல். ஞாபகசக்தி மற்றம் கிரகிக்கும் தன்மை குறைதல். " மது, போதைவஸ்துகளுக்கு அடிமையாதல்.
1აuნNRაtჭRoub 54 audyarfl - 2005

தீவிர நடத்தைகள் பிழைகள் சுட்டிக்காட்டப்படும் வேளைகளில் அளவுக்கதிகமான பிரதிக் கிரியை.
யெளவனர்கள் இத்தகைய அழுத்தத்திற்கு உள்ளாவதற்கான காரணங்கள்: சொந்த அனுபவங்கள்: உற்றார் ஒருவரின் பிரிவு/மரணம், பெற்றாரின் மணமுறிவு, காதல் தோல்வி, அன்பாக பராமரித்த ஒருவரை நீண்ட கால மாகப் பிரிந்திருத்தல், துஷ்பிரயோகங்கள். மறப்பதற்குக் கடினமான கசப்பான அனுபவங்கள்: உணர்ச்சிகளை தெளிவாக வெளிக்கொணர முடியாத சிறு பிராயத்தில் ஏனையோரால் மிகக் கொடூரமான வகையில் சித்திரவதைக்குள்ளாதல். இவை ஆழமாக அடிமனதில் பதிந்து விடுவதாலும் அடிக்கடி அந்நிகழ்ச்சிகளை மனத் திரையில் அசைபோடுவதாலும் ஏற்படும் விரக்தி. சுரப்பிகளின் மாற்றம்: வாலிபப் பிராயத்தை எட்டும் வேளையில் ஏற்படும் உடலியல் மாற்றங்களும் இவற்றின் மூலம் ஏற்படும் மன எழுச்சிகளும். போஷாக்கின்மை அமினோ அமிலங்களின் அசமநிலை அல்லது உயிர்ச் சத்துப் பற்றாக்குறை.
யெளவனர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதன் விளைவுகள்: போதைவஸ்துக்கள் மற்றும் மது பாவனைக்கு அடிமையாதல், அவர்கள் தங்களைத் தாங்களே குறைவாக மதிப்பிடல் (தாங்கள் அவலட்சணமானவர்கள் எனப் புலம்புதல், எதிலும் திறமைசாலி களல்ல என வருத்தப்படுதல்). உணவில் ஒழுங்கின்மை (விரும்பிய உணவு வகைகளைக்கூட உண்ண முடியாது தவித்தல்). தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளுதல் (கூரிய ஆயுதங் களால் உடலைக் கீறுதல், நெருப்பினால் சுடுதல்) தேவைக்கதிகமாக நடந்து கொள்ளல் (கலகங்களில் ஈடுபடுதல், அபாயகரமான காரியங்களை வெறித்தனமாக செய்தல்) தற்கொலை பற்றிய எண்ணங்கள், அதற்காக முயலுதல்.
அண்மைய கணிப்புகளின்படி இன்று
யெளவனர்களின் மரணத்திற்கு மிகப்பெரும் பங்கு வகிப்பவற்றில் தற்கொலை 3 இடத்தை பெற்றிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
பயில்டுலம் பெப்ரவரி - 2005

Page 30
யெளவனப் பருவத்திலே அவர்களால் சகித்துக்கொள்ள முடியாத சவால் களை அல்லது சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடுகையில் இவை யனைத்திற்கும் சிறந்த தீர்வு தற்கொலை என எண்ணி அதனை நாடி ஒடு கின்றனர். வயதுவந்த நபரொருவர் துச்சமென நினைக்கும் காரியங்கள் கூட வாலிபப் பருவத்தை எட்டிய ஒருவருக்கு மலை போல் தோன்றும். இதற்கான அடிப்படைக் காரணம் என்னவெனில் அனுபவம் இல்லாமையே.
யெளவனர்களை தற்கொலைக்கு இட்டுச்செல்லக் கூடியவைகள்:
நெருங்கிய குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பரின் இழப்பு (விசேஷமாக அவ் இறப்புதற்கொலையாக அமைதல்) விவாகரத்தின் மூலம் பெற்றோரில் ஒருவரை இழத்தல். ஆவலாக நீண்டநாட்கள் எதிர்பார்த்திருந்த ஓர் அரிய வாய்ப்பு, வேலை கைநழுவுதல், பாலியல் துஷ்பிரயோகங்கள். எதிர்பாராத கர்ப்பம். பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிட்டாமை. குடும்பத்தவரொருவருடன் அல்லது மிகவும் நேசிக்கும் ஒருவருடன் ஏற்படும் சச்சரவு/ மனமுறிவு. சங்கடத்திற்குள்ளாதல், தாழ்த்தப்பட்டு அவமதிக்கப்படுதல், தண்டனையை எதிர்கொள்ள/அனுபவிக்க திராணியின்மை, யெளவனர்கள் இத்தகைய மன அழுத்தத்திலிருந்து விடுபட அல்லது இத்தகைய அனுபவத்திற்கூடாக செல்பவர்களை மீட்க செய்ய வேண்டியவைகள்:
பெற்றோர், நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர்கள் மற்றும் ஆசான் களுடன் கலந்தாலோசித்தல், பரீட்சைகள் உங்களுக்கு அழுத்தம் கொடுப்பவையாகவிருப்பின் பொறுப்பாசிரியரை சந்தித்து கலந்துரையாடலாம். எதிர்பாராத கர்ப்பத்தினால் குழப்பமாயின் குடும்பக்கட்டுப்பாட்டு சங்கத்தினரையோ, பெண் வைத்தியரொருவரையோ அணுகி மேற் கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி முடிவெடுக்கலாம். கூடுமானவரை உங்களை உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய வேலை களில் ஈடுபடல்.
uயில்டுலம் Guğyanırfi - 2006

மது மற்றும் போதைவஸ்திற்கு அடிமையானவர்களோடு சகவாசம் வைத்திருப்பதை கூடுமானவரை தவிர்த்தல் அல்லது முற்றாக விட்டு விடல்,
சிறந்த உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறல்.
யெளவனர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதில் பெற்றோரின் பங்கு
அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் நல்குதல். உதவி தேவைப்படும் நேரங்களிளெல்லாம் நீங்கள் பக்கபலமாக இருப்பீர்கள் என்பதை உங்கள் கிரியைகள் மூலம் தெரியப் படுத்துங்கள். அவர்கள் எந்தவொரு சிறிய காரியத்தில் ஈடுபடினும் தட்டிக் கொடுத்து பாராட்டுங்கள். பிள்ளைகள் உங்களிடம் பேசும்போது கவனமாகவும் கரிசனை யாகவும் அவர்கள் பேச்சிற்கு செவிமடுங்கள். அதிகமான நேரத்தை அவர்களோடு செலவழிப்பது மட்டுமல்லாது அவர்கள் செய்யும் கருமங்களில் நீங்களும் ஈடுபடுங்கள். பிள்ளைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மனதிற்கு ரம்மியமான இடங்களுக்கு அழைத்துச் சென்று பின்னர் அங்கு கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றி அவர்களுடன் கலந்துரையாடுங்கள். உங்கள் பிள்ளையின் சிநேகிதர்களை அறிந்திருப்பதோடு அவர்களிட மும் அளவளாவுங்கள். ஏனெனில் உங்கள் பிள்ளை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாததொன்றை சிநேகிதர்களோடு பகிர்ந்திருக் கலாம். நிலைமை மோசமாகக் காணப்படின் தாமதிக்காது தேர்ச்சி பெற்ற அல்லது அனுபவம் மிக்க ஒருவரிடம் ஆலோசனை பெறலாம்.
மேற்கூறிய எல்லாவற்றையும் விட மன அழுத்தத்திற்கு உள்ளாகி யிருக்கும் ஒருவர்அவரைத்துன்புறுத்தும் அல்லது மரணத்தை தருவிக்கும் செயல்களில் ஈடுபடாதிருப்பதையிட்டு கவனமாகவும் எச்சரிக்கை யாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், தற்காலிகமான, நிலையற்ற ஒர் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வே தற்கொலை’. அசையாத நம்பிக்கை யிருப்பின் இவ்வுலகில் தீர்வு காண முடியாதது எதுவுமில்லை!
மில்டுலம் 57 பெப்ரவரி - 2005

Page 31
இம்மது காதுகள் செவிடாகியது போதும்
இனியும் வேண்டாம் போர் நாதங்கள்
மனித உயிர்கள் துடிதுடிக்க இறந்தது போதும் இனியும் வேண்டாம் வெடிகுண்டுகள்
ஊனமுற்ற மனிதர்கள் உருவாகியது போதும் இனியும் வேண்டாம் கண்ணிவெடிகள்
அனாதையாக்கப்பட்ட உயிர்கள் போதும் இனியும் வேண்டாம் செம்மணிப் புதைகுழிகள்
அகதிமுகாம்களில் தஞ்சமடைந்த மக்கள் போதும் இனியும் வேண்டாம் புலப்பெயர்வுகள்
பதுங்கு குழிகளை நோக்கி தலைதெறிக்க ஓடிய ஒட்டங்கள் போதும் இனியும் வேண்டாம் குண்டுவீச்சுக்கள்
பிஞ்சுக்கரங்கள்துப்பாக்கி ஏந்தியது போதும் இனியும் வேண்டாம் கொடூர ஆயுதங்கள்
இரத்தினதுவிபமான இலங்கை
இரத்த துவீபமானது போதும் இனியும் வேண்டாம் யுத்தங்கள்
മം )1 معاشد M இன்புக் வேண்டாக் யுத்ஆங்கள்
பயில்டுலம் 5. பெப்ரவரி - 2005
 

நீதி வேண்டி
40 ஆண்டுகளாக மறைக்கப்படிருந்த உண்மை
eyp6xob i Yong Un Yuk தமிழில் அ.செஞ்ஞாயிறு
1948ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதி செஜ" தீவைச் (38 it by LD iss6it (Chegu Island) sGLD5disast 667 இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் நின்று விடாமல்
தென் கொரியாவை பிரித்து தனியே தேர்தல்
நடத்தும் அமெரிக்காவின் திட்டத்திற் கெதிராக போராடினர். இவர்களது கிளர்ச்சி 7 ஆண்டுகளுக்கு நிலைத் தது. இக்காலப் பகுதியில் அத்தீவின் மொத்த சனத்தொகையில் 1/3 பங்கினரான கிட்டத்தட்ட 80,000 மக்கள் கம்யூனிஸ்டுகள் எனக் காரணம் காட்டி கொலை செய்யப் பட்டனர். கொரியாவை ஒன்றுபடுத்து வதற்காக அமெரிக்காவுக்கு எதிராக நடந்த முதலாவது கிளர்ச்சி இதுவே ஆகும். இது “ஏப்ரல் 3 செஜ மக்கள் கிளர்ச்சி" எனப்பட்டது.
இன்று இத்தீவானது பல இலட்சம்
மக்கள் வந்து போகும் ஒரு புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா மைய மாகும். அதிலும் குறிப்பாக இளைய தென் கொரிய தம்பதிகளின்
பயில்டுலம்
தேனிலவுத் தெரிவாக இவ்விடம் அமைகின்றது. அழகிய மஞ்சள் பூக்கள், கண்ணைக் கவரும் நீர்வீழ்ச்சிகள், வயல்கள் போன்ற வற்றில் நின்றவண்ணம் எடுத்த புகைப்படங்களுடன் அவர்கள் திரும்பு கிறார்கள். அதற்கமைய இத்தீவு எப்போதும் மகிழ்வுடன் இருப்ப தாகவே தோற்றமளிக்கிறது. கடந்த அரை நூற்றாண்டுக்கு முன் அத் தீவினுடைய இருண்ட பக்கங்கள் பற்றியோ இரும்புப் பிடி பற்றியோ அங்கு நடைபெற்ற மனிதத் தன்மை யற்ற படுகொலைகள் பற்றியோ பேசப் படுவதில்லை. அமெரிக்க, தென் கொரிய அரசாங்கங்களின் கவனமான மூடி மறைப்புகளால் இது பத்திரமாக மறைக்கப்பட்டு வந்துள்ளது.
பெப்ரவரி - 2005

Page 32
பின்னணி
1945ம் ஆகஸ்ட் 15, இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் அதிசய
மாக கொரியாவுக்கு சுதந்திரம்
கிடைத்தது. 36 ஆண்டு கால யப்பானிய காலனித்துவப் பிடிக் குள்ளிருந்த கொரியர்கள் முதன் முதலாக சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தொடங்கினர். எல்லோ ரும் தங்கள் வாழ்வின் நிலையை தாங்களே தீர்மானிக்கின்ற ஒரு புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் கனவுகளுடன்தங்களுக்குள்ளேயே குழுக்களை அமைத்துக் கொண்டு கிராமிய, தேசிய மட்டங்களில் செயற்பட்டு சுதந்திரநாட்டைகட்டி யெழுப்பும் பணியில் ஈடுபட்டிருந் தனர். முழு நாடுமே தேசிய பொரு ளாதாரத்தை சீர்படுத்தவும் பல தசாப்தகால யப்பானிய காலனித்து வத்தால் ஏற்பட்ட குறைகளையும் நீக்க மிகுந்த அக்கறையுடன் தொழிற்பட்டது.
இரண்டாம் உலகப் போரை அடுத்து உலகின் ஆதிக்கம் மிக்க சக்தியாகிய அமெரிக்கா, வழமை போல அழைப்பின்றி புதிதாக சுதந்திரம் கண்ட கொரிய மண்ணில் தன்னை நிலைநிறுத்திக் கொண் டது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கொரிய மக்களின் ஆசைகளை தகர்த்தெறிந்து அரசாங்
கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்து கம்யூனிச எதிர்ப்பு
bונפINRbg8וט
இயக்கத்தை தொடங்கியது. கூடவே நிழல் யுத்தத்தையும் தோற்றுவித்தது. .
கொரியாவின் தென் பகுதிகளை ஆக்கிரமித்த அமெரிக்கா, மக்கள் குழுக்களுக்கிடையிலான அரசியல் செயற்பாடுகளுக்கு தடை விதித்த துடன் பழைய யப்பானிய முதலாளித்துவ நிர்வாகிகளை மீண்டும் வேலைக்கு அமர்த்தி பழைய காலனித்துவ முறை மையே மீண்டும் கொண்டு வந்தது. கொரியா சுதந்திரமடைந்த ஐந்து ஆண்டுகளில் தென் பகுதிகளில் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. வறுமையும் உச்சத்தை எட்டின. கொரியாவின் கனவுகள் யாவும்
பசியும்
சிதைந்து போனதுடன் வாழ்க்கை யும் கடினமாக மாறியது. அங்கு. மாற்றுக் கருத்துக்களுக்கு இடமே இருக்கவில்லை.
aाg
بی 항 Sr. 3骏°C兹; ar
"密: , &
South १ *orea ;
% “濑然姆兹
, S: t 。事 " a. јарал
பெப்ரவரி - 2005
 

வளர்ச்சி
ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடை யிலான கூட்டு ஆணைக்குழு (Joint Commission) தோல்வி கண்டதும் அமெரிக்காவின்கட்டுப்பாடுகளில் இருந்த பகுதிகளில் தேர்தல்களை நடாத்தி புதிய தென்கொரிய அரசாங்கத்தை அமைக்க அமெரிக்கா விரும்பியது. ஆனால் கொரிய மக்கள் அமெரிக்காவின் எண்ணங்களுக்கு வன்மையாக எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். குறிப்பாக, பெரும்பான்மையான செஜ" தீவு மக்கள் தனியான தேர்தல்களையும் அமெரிக்காவின் நிலை கொள்ளலையும் கண்டித் தனர்.
1948 மார்ச் 1ம் திகதி அன்று செஜ9 மக்கள் தங்கள்சுதந்திரஇயக்கத்தை நினைவுகூரும் முகமாக ஒரு ஊர்வலத்தை நடத்தினர். அமைதி யான ஊர்வலத்தில் அவர்கள் கொரிய பிரதேசங்களில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என வலியுறுத்தி நின்றனர். இக் கோரிக்கைகளுக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் அமெரிக்க துப்பாக்கிக் குண்டுகளையே பதி லாக வழங்கியது. அன்று அறுவர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயத்திற்கு உள்ளானார்கள்.
கோபத்தால் ஒன்றிணைந்த செஜ" மக்கள் ஒரு குழுவை உருவாக்கி அந்நிகழ்விற்குப்
působ
பதிலடி கொடுக்கத் தொடங்கினர். அவர்கள் தொடர்ச்சியான பாரிய தீவு தழுவிய வேலை நிறுத்தங் களை எட்டுநாட்களாகத் தொடர்ச்சி யாக மேற்கொண்டனர். இதற்குப் பதிலாக அமெரிக்கா, செஜசவை 'இரண்டாவது மாஸ்கோ' என அறிவித்ததுடன் அத்தீவு மக்களை கம்யூனிஸ்டுகள் என முத்திரை குத்தியது. அமெரிக்கா இராணுவ படையினரைவருவித்து எதிர்ப்பை முறியடிக்க முயன்றது. சித்திர வதைகளும் பயங்கரவாத செயற் பாடுகளும் செஜூ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப் பட்டன. பலர் கொலை செய்யப் பட்டனர்.அதைவிடப் பெருந் தொகையானவர்கள் கைது செய்யப்பட்டனர். செஜ"மக்களுக் கெதிராக ஏழு ஆண்டுகள் நீடித்த வன்முறைகளுக்கு இதுவே
தொடக்கமாக அமைந்தது.
கம்யூனிஸ்டுகள் இப்பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்படுகிறார்கள் என்ற வதந்தியை ஆதாரமாக கொண்டு பொலீஸார் வீடுகளை யும் கிராமங்களையும் தீ மூட்டி எரிக்கத் தொடங்கினர். கிராமவாசி கள் தங்களுக்கு எதுவுமே தெரி யாது எனவும் தங்களை விட்டு விடும் படியும் கெஞ்சியபோதும் படைவீரர்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். இவ்வாறு கொல்லப் பட்டவர்களில் அதிகமானோர் பெண்களும் சிறுவர்களுமே, அமெரிக்கா செஜு மக்கள்
Guûyarfi - 2006

Page 33
தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அடிபட்டு இறந்ததாக வெளி யுலகுக்கு காட்டிக்கொண்டது. அமைதி மரணத்தையே தரும் என்ற நிலையில், செஜ" மக்களுக் குப் போராடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. தங்களைக் காத்துக் கொள்வதற்காக, மக்கள் மலைப் பகுதிகளில் கூடித் தளங் களை அமைக்கத் தொடங்கினர். பொலிசாருக்கு எதிராக போராட மூங்கிலான ஆயுதங்களையும் விவசாயக் கருவிகளையும் தயார் செய்தனர்.
கிளர்ச்சி
1948 ஏப்ரல் 3ம் திகதி செஜ ? தீவினரின் முயற்சிகள் ஒரு பெரிய கிளர்ச்சியாக உருவெடுத்தது. அதிகாலை ஒரு மணிக்கு சமிக்கை நெருப்புகள் 89 மலை உச்சிகளி லும் ஒரே நேரத்தில் ஏற்றப் பட்டன. மலை உச்சிகள் ஒளியேற் றப்பட்டதும். 1500 கிளர்ச்சி யாளர்கள் பத்து அமெரிக்க காவல் நிலையங்களையும் அவர்களோடு தொடர்புடையவைகளையும் தாக்கினார்கள். அது கிளர்ச்சியாளர் களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. மேலும் தென் கொரியா வில் தனியான தேர்தல்களை தற்காலிகமாக நிறுத்தவும் அது உதவியது. செஜ"மக்களின் வெற்றி அமெரிக்காவுக்கு அவர்கள் மீதான வெறுப்பை அதிகரித்தது. அதுவே அவர்களுக்கெதிரான இனப்
பயில்டுலம்
படுகொலைகளுக்கு வித்திட்டது எனலாம்.
இக்கிளர்ச்சியின் பின்னர் கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் தேசியப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குச் சென்ற னர். ஆனால், இப்பேச்சு வார்த்தை குறுகிய காலத்திற்கே நீடித்தது. சமாதான நடவடிக்கைகளைக் குழப்புமுகமாக அரசு ஒரு திட்டத் தினை வகுத்தது. அதன்படி பொலிஸ் குழு ஒன்று கிளர்ச்சி யாளர் போல் வேடமிட்டு செஜ வில் உள்ள ஒராரி (Orrari) என்ற கிராமத்தை முற்றுகையிட்டு பொலிஸ் நிலையங்களை தாக்கி யது. இதன் விளைவாக பொலிசா ருக்கும் மக்களுக்குமிடையிலான சண்டை மீண்டும் வலுத்தது.
படுகொலைகள்
ஆகஸ்ட் 15இல் சிங்மன் றீ (Syngman Rhee) Glgait Glastinuta9hair முதலாவது சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தென் கொரியா விற்கான தனியான தேர்தலின் பின்னரே இந்த அரசாங்கம் தோற்றம் பெற்றது. இதன் மூலம் அமெரிக்கா வெளிப்படையான நேரடியான கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டது. அதுவரை நடைபெற்ற கொலைகளுக்கு அமெரிக்காவே பொறுப்புடை யவதாக இருக்கிறது. அமெரிக்கா
audyalífl - 2006

விலகியதிலிருந்து படுகொலைகள் அதிகரித்தன. அவை அந்நியரின் ஆக்கிரமிப்பின் விளைவல்ல, உள் நாட்டுப் பிரச்சினையே எனச் சொல்லித் தப்பிக் கொள்ளவும் அது வழிவகுத்தது.
ஆயுதப்படைகள் மலைப் பகுதி களை குறிவைக்கத் தொடங்கின. தீவு முழுவதிலும் மக்கள் கொல்லப்பட்டனர். பாடசாலை மைதானங்களில், நீச்சல் தடாகங் களில் என வயது பால் வேறுபாடு இன்றி தீவு மக்கள் சுடப்பட்டனர்; உயிரோடு புதைக்கப்பட்டனர்.
உதாரணமாக Bucholi என்ற நகரத்தைச் சேர்ந்த 600 பேர், இரண்டே நாட்களில் படையின ரால் கொல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து 1949 யூன் 9இல் கிளர்ச்சியாளர் களின் இறுதித் தலைவர் டுக் கூ லீ (Duk Kuh Lee) God 355 TG37g L Göt கிளர்ச்சி முடிவடைந்ததாக கூறப் பட்டது. ஆனால் அடுத்த 6 ஆண்டு களில் 80,000 பேர் கொல்லப் பட்டனர். உண்மையில், வறுமை யாலும், கிளர்ச்சி தோற்றாலும் சரணடைந்த மக்கள் கொல்லப் பட்டார்கள். அல்லது சித்திரவதை யால் இறந்தார்கள்.
இன்று
நான்கு தசாப்தங்களாக பத்திர LDITs Syngman Rhee, Park Chung
pயில்டுலம்
Hee, Chunn Doo Hwan, Roh Tae Woo ஆகிய சர்வாதிகாரிகளாலும் அவர்களது பயங்கரவாத அமைப்புக்களாலும் மூடி மறைக் கப்பட்டிருந்த செஜ "தீவுகள் பற்றிய உண்மைகள்1988இல் வெளியிடப் பட்டது.
இன்றுவரை இப்படுகொலை களில் அமெரிக்காவின் பங்கு குறித்தும் தென்கொரிய அரசாங்கத் தின் உண்மை மறுப்புத் தொடர் பிலும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
உண்மைகள் வெளிவர ஏன் இவ்வளவு காலமாகிற்று? ஒரு தீவின் மூன்றிலொரு பங்கினர் கொல்லப்பட்டது ஏன்? மறைக்கப் பட்டது ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளை உரியவர்களிடம் வேண்டி இன்னும் எவ்வளவு காலத்திற்கு வேதனை யான கடந்த காலத்தை புறக்கணிப் பது? இன்றுவரை தென்கொரிய பாடப் புத்தகங்களில் 'ஏப்ரல் 03 கிளர்ச்சியானது கம்யூனிச பகுதி யினரால் கட்ட விழ்க்கப்பட்ட கலவரம்' என்றும் அது "தேசப் பற்றுள்ள வீரர்களாகிய தென் கொரிய படையினரால் முறியடிக் கப்பட்டது' என்றுமே குறிப்பிடப் படுகிறது, 80,000 ஆன்மாக்கள் முடிவற்ற துயருடன் நீதி வேண்டி நிற்கின்றன.
Ձսմgolf - 2005

Page 34
பூச்சியக் பற்றி
உன் வாழ்க்கை பூச்சியம் என்ற போதும் புள்ளிகள் உனக்குப் பூச்சியம் என்ற போதும் உன்னுடைய அறிவும் பூச்சியம் என்ற போதும் எனக்கு பூச்சியம் குறித்தவொரு சந்தேகம் எழுகிறது
ஏதாவதொரு எண்ணை பூச்சியத்துடன் கூட்டும் போதும் சரி
கழிக்கும் போதும் சரி
அவ்வெண்ணே விடையாகியது
f ஏதாவதொரு எண்ணை பூச்சியத்தால் பெருக்குகின்ற போது
பூச்சியமே விடையாகிறது
ஏதாவதொரு எண்ணை பூச்சியத்தால் பிரிக்கின்ற போது முடிவிலியே விடையாகிறது
இங்கே பூச்சியம்
எதுவுமற்று
அதுவாகி முடிவிலியாய்
என்னைப் பூச்சியம் எனச் சொன்னவர்கள் இதில் கருதியது எதை?
மீநிலா
7 TYahu
铬等° GLuüyQIrfi – 20O6
 
 
 
 
 
 
 

கருத்துமேடை - 05
அந்நியநாட்டு
உதவிகள் மூலம் நம்
நாட்டுப்
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பமுடியுமா?
கடந்த இதழில் வாசகர்களின் சிந்தனைக்கு விடப்பட்ட சிக்கல் குறித்த சில வாசகர்களின் பதில்களும் எண்ண
அலைகளும்
எமக்கு வழங்கப்படும் உதவிகள் பெரும்பாலும் நிபந்தனைகளுக் குட்பட்ட உதவிகளாகவே இருக் கின்றன. எனவே எமது பொருளா தாரத்தைக் கட்டியெழுப்ப முடி யாது. ஒரு வேளை அந்நிய உதவி கள் நிபந்தனையற்றுக் கிடைக்கு மிடத்து பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்புக் கள் உண்டு.
-க. டினேசன், ஹற்றன்
பொருளாதாரத்தை மீளக் கட்டி யழுப்புவது என்பது உண்மையில் அந்நிய நாட்டு உதவிகளுடன் தொடர்புடையதல்ல. நிர்வாகம் என்பது சரியாக நடக்கின்றபோது எல்லாவற்றையும் வெற்றிகரமா கச் செய்ய முடியும். சீரற்ற நிர்வாகமே அனைத்தையும் பாழாக்குகிறது. வளப் பாவனை, பங்கீடு முதற் கொண்டு அனைத்துமே தவறான கொள்கைகளினூடும் கோட்பாடு களினூடும் செயற்படுத்தப்பட்டு
பயில்டுலம்
(mismanagement)
65
வருவதாலேயே எமது நாட்டின்
பொருளாதாரத்தை மீளக் கட்டி
யெழுப்ப முடிவதில்லை.
-பா. விஜிதா, வவுனியா
இலங்கையில் 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் பல அந்நிய நாட்டு உதவிகள் எமக்குக்கிடைத்துள்ளன. ஆனால் மக்களது வாழ்க்கைத் தரம் குறை வடைந்து வந்திருக்கிறதே தவிர வளர்ச்சியடையவில்லை. எனவே அந்நிய நாட்டு உதவிகளால் பொருளாதாரத்தை மீளக் கட்டி யெழுப்ப இயலாது.
-ந.டானியல், கொழும்பு
உலகெங்கும் வியாபித்திருக்கும் சுரண்டல் கலாசார நோயினால் எவ்வளவு உதவிகள் எங்கிருந்து கிடைத்தாலும் பிரயோசனம் இல்லை. ஏனெனில் சுரண்டுபவர் கள் தங்களுக்கு வேண்டியளவு சுரண்டிய பின்னரே மக்களுக்கு
GuÔyraurfi - 2005

Page 35
வழிவிடுகிறார்கள். இதனால் பொருளாதாரம் அந்நிய நாட்டு உதவிகளாலும் கூடக் கட்டி யெழுப்பப்பட முடியாததொன் றாகி விட்டது.
-மா. வசந்தாதேவி, திருகோணமலை
பொருளாதாரத்தை மீளக் கட்டி
யெழுப்புவது என்பது நாட்டின்
குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளி லான புனர்நிர்மாணங்கள் அல்ல. முழுமையான தேசத்துக்குமுரிய மீளக்கட்டியெழுப்பலே உண்மை
யான பொருளாதாரத்தை மீளக்
கட்டியெழுப்புதல் எனக் கொள் ளப்படும். வளங்களைப் பகிர்வ திலுள்ள பிரச்சினைகளும் அது சார் அரசியலும் மிகவும் சிக்கலா
னவை என்பதால் அந்நிய நாட்டு
உதவிகள் எவ்வளவு வந்தாலும்
நம் நாட்டுப் பொருளாதாரத்தை
மீளக் கட்டியெழுப்புதல் சாத்திய
மல்ல.
-ஏ.என்.அன்சார், புத்தளம்
அந்நியநாட்டு உதவிகள் பொருள், பணம், ஆள் உதவி எனப் பல வகைகளில் அமைகின்றன. சில உதவியாகவும் பல உபத்திரவ மாகவும் அமைவதால் எமக்கு இருக்கிற பொருளாதாரக் கட்ட மைப்பைப் பேணுவதே மிகவும் கடினமான விடயமாகிறது. எனவே நாங்கள் அந்நிய உதவி களை நம்பாமல் எமது சொந்தக் கால்களிலேயே நிற்கப் பழக வேண்டும் அப்படிச் செய்தால் மட்டுமே இருக்கின்றவற்றைக் காப்பாற்ற முடியும் நாம் இருப் பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது.
- மு. முனாசர், பேருவளை
O கருத்துமேடை-06
சீதன முறையானது பெண்களை அவமதிப்பதுபோல ஆண் களையும் அவமதிக்கின்றதா?
கருத்து மேடைக்குக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கருத்துக் களைத் தவறாமல் எழுதி அனுப்புங்கள்.
lაtნtp:Šაrჭsაlხ
GLôganrif - 2006

G)JIGF DG)U
வாசகர்களே! உங்களது நிறையக் கடிதங்கள் எமக்குக் கிடைத்தது மகிழ்வளிக்கின்றது. காலப் பொருத்தம் கருதியும் இடச் சிக்கனம் குறித்தும் சிலவற்றை இங்கு பிரசுரித்துள்ளோம். எல்லோருடைய கடிதங்களையும் பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகின்றோம். உங்களது கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுங்கள்.
பயில் நிலம் இதழ் காலம் தாழ்த்தியே எம் கைகளுக்கு கிடைக்கிறது. இனியாவது நேரத்தோடு கிடைக்கச் செய்யுமாறு வேண்டுகிறேன். சுனாமி சிறப்பிதழாக மிளிர்ந்த கடந்த பயில் நிலம் கனத்த மனதைத் தந்தது. சுனாமிக் கவிதைகள் ஆழமாய் இருந்தன. மக்களை விழிப்படையச் செய்யும் உங்கள் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.
- ச. குமாரருபன், கண்டி
தவிர்க்க முடியாத காரணங்களால் சந்தா அனுப்பப் பிந்திய போதும் தொடர்ந்தும் பயில் நிலத்தை அனுப்பியது உங்களின் பெருந்தன்மை இலங்கையில் வெளியாகும் சஞ்சிகைகளில் ஒரு மாறுபட்ட ஒரு சஞ்சிகை யாக நான் பயில்நிலத்தைக் காண்கிறேன். இது ஒரு பயிலுகின்ற நிலம் அல்ல
என்பதை சஞ்சிகையை பார்பவர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
- எம். முகம்மட், நீர்கொழும்பு
வீடு சிறுகதை காலப் பொருத்தத்தால் அருமையாக இருந்தது. இவர்கள் சுனாமிக்கு பிறகாவது திருந்துவார்களா? விழிப்புணர்வூட்டும் உங்கள் பணிகள் வெற்றியளிக்க வாழ்த்துக்கள். 6வது இதழை எதிர்பார்த்து நானும்
எனது நண்பர்களும் காத்திருக்கிறோம்.
- அ. நிஷாந்தி, யாழ்ப்பாணம்
சுனாமிவந்து கைவரிசைகாட்டியபின்னர் கைகளில் எட்டிய பயில்நிலத்தை பார்த்தேன். பின் அட்டைக் கவிதை நம்பிக்கை தருகிறது. சுனாமியின் சமூகவியற் பார்வையின்மூலம் உண்மையான அனர்த்தத்தின் அளவைப்புரிய முடிந்தது. இன்னும் முன்னேற்றகரமாக பயில்நிலம் அமைய வேண்டி
வாழ்த்துகிறேன்.
- த றோபேட், கொழும்பு
lაuნზrწადჭიააuს 67 audyarfi - 2005

Page 36
Lbsasosanib
ܒܝܬ
with dest camptiments puam
Jaffna Hardwares
Sole distributors of Asian paints
for Niothern Province
32, Stanly Road, Jafna.
Tel: O21-222 7028
༢
كم
பெப்ரவரி 2005

KALKI SONS
B. G. Building 102, Wolfendhal Street, Colombo - 13
Tel 00 11 2328729, 2332950 Fax: 00 11 2439623
6. Guůyarfi - 2006

Page 37
Mayoora Enterprises
کS
2A - 2N Second Floor, Building B 115, Wembley Commercial Centre, Eastlane, North Wembely, Middlesex HAO 7UR London
Buzz 02089083218
buôàểò85ulb 70 duúyalífi - 2008
 
 
 

CMVell M/i/ez
வாழ்த்துக்களுடன்
தலைமைக் காரியாலயம் இல. 340, 202 செட்டியார் தெரு, கொழும்பு - 11, இலங்கை தொ.பே, 242232 தொ.நகல் : 2337313
fairGoT65F6) : pbdhoGPslt.lk
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியியாளர்கள்
கிளை
இல. 309A,2/3 காலி வீதி, கொழும்பு - 06, இலங்கை
தொ.பே. 4 515775
இல, 4 A, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பாணம்
மில்டுலம் 7.
பெப்ரவரி 2005

Page 38
சிந்தனைக்காய் சில வரிகள்
Lயில்நிலம் வெறுமனே பக்கங்களால் நிரப்பப்பட்ட சஞ்சிகைகளின் நடுவே வாசகர்களுக்கு சிந்தனையைத் தூண்டக்கூடிய பலவிடயங்களை உள்ளடக்கிய ஓர் இதழாக வெளிவருவதில் நாம் மகிழ்வடைகின்றோம். பயில்நிலம் பல எழுத்தாளர்களை, வாசகர்களை உருவாக்கி இருக்கின்றது. பல புதிய முகங்களை எமது இதழ் அறிமுகப்படுத்தி வருகின்றது. எமது இதழோடு முதலில் வாசகராக இணைந்த பலர் இன்று எழுத்தாளர்களாக, விநியோகஸ்தர்களாக இணைந்து செயற்பட்டு வருகின்றனர். ஒரு இதழ் வெற்றியடைவதற்கு இம்மூன்று தரப்புகளும் தமக்கிடையே பலமான இணைப்பை ஏற்படுத்துதல் அவசியம். நீங்களும் எமது இதழோடு வாசகர்களாக, எழுத்தாளர்களாக, விநியோகஸ்தர்களாக இணைந்து செயற்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிந்தனைப் புரட்சி மூலம் நல்லதோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.
நிறைவாய் நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சூழ உள்ள உலகத்தை நமது பார்வையின் விரிவிற்கு ஏற்ப ஒரு வகையில் மாற்றத்தான் முயற்சிக்கிறோம். இல்லாவிடின் கலை இலக்கியங்கள் மட்டுமல்ல, பெரும்பாலான உரையாடல்கள் கூட அவசியமில்லாது போயிருக்க வேண்டும்.
- சி. சிவசேகரம் -
DIRRატისას, 72 auúyarfi - 2005
 

ea.
=
i. ་པ། །
so. ATLAS INTERNATIONAL (PVT) LTD à
No. 227, Central Road, Colombo - 12.
TP: 2431498, 2466720 Fax: 2436254
ATLAS INTERNATIONAL TRAVELS 8. COURIER SERVICE
No. 223, 1/2, Central Road, Colombo - 12. TP:4720034, Fax: 2436254
Branches
ATLAS INTERNATIONAL TRAVELS & TOURS
ATLAS IMPORTS & EXPORTS No. 362, Galle Road, Wellawatte, Colombo - 06.
TP: 2363.030, 2362525 Fax: 2362727
ATLAS INTERNATIONAL ASSOCATION
No. 77, K.K.S Road, Jaffna TP: 021 2222557, 021 2225252, Fax: 0212222990
ATLAS COMMUNICATION No. 01, Kandy Road, Kodikamam TP: 021 22634.00, 021 2263411
குளிருeடிய, குளிருeடப்படாத சொகுசு Uஸ்/வான் சேவை
கொழும்பு - யாழ்ப்Unணம் 本 யாழ்ப்Unணம் - கொழும்பு ܘ ܐܠ 3

Page 39

巨司D昌圖TLilith U昌hü மஹாகவி
"மப்பன்றிக் காலமழை கானா மண்ணிலுே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது." 몰입TT
ஏறாது. காளை இழுக்காது. எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைப்பான் என் ஆாரான், ஆழத்து நீருக் ககழ்வான் அவன். நாற்று. . . . .』|-_ sự tựžosii și o apsigoaewriae பொங்கிவளர்ந்து பொலிந்ததுபார் 2 司哥GETa爬**|-