கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பயில்நிலம் 2005.04

Page 1


Page 2
LIDITb3bČUFöID IDITSIOONILQBID ஒவ்வொன்றும் விலக்கின்றி மற்ற ஒவ்வொன்றும் போல் வளர்வதன்றி வேறு வழியின்றி மாநகரம் வளர்கிறது. அதன் விளிம்பு அயல்களைக் கரைத்துப் புரள்கிறது. அதன் மையம் வானை விழுங்கி உயர்கிறது மாநகரம் தனது முகத்தை மொழியைப் பண்பாட்டை அடையாளத்தை இழக்கிறது.
வருவதையன்றி
வேறுவழியின்றி
மனிதர் மாநகருள் வருகின்றனர் மாநகரின் மையத்தின் கோபுரங்களுட் புதைகின்றனர் அதன் விரையும் விளிம்பினுள் கரைகின்றனர் மாநகரின் முகத்தை
மொழியைப்
பண்பாட்டை அடையாளத்தை தமதாக்கும் முயற்சியில் தமது நாட்களை இழக்கின்றனர்
விலக்கின்றி
மனிதர் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரும் போல
மாநகரம் போல -சி.சிவசேகரம்
35Lğ5ğôI - - - - - - - (நன்றி - வடலி)

ாெற்றங்களை வேண்டி........
父。
иића/ilavi)
uý) த மாத இதழ் ஏப்ரல் 2005
இதழாசிரியர் செ. நந்தமோகன்
விநியோகம் பொ.கோபிநாத்
விளம்மரம் ந. பிரசாந்த்
பயில்நிலம் குழு தெ. ஞா. மீநிலங்கோ கு. பாரதி தே. அபிலாஷா வி. பிரபுநாதன் ஸைரா கலீல் கி. திவாகரன் தே. ஜனமகன் க. அபிராமி செ. கெளரி ந. ரவிச்சந்திரகுமார் த. பார்த்திபன் வெளியிடுவோர் பயில்நிலம் 59/3, வைத்யா வீதி, தெஹிவளை 76Q 5527074 பக்க வடிவமைப்பு Srar Graphics 129/7,சென் ஜோசப் வீதி, கிரான்பாஸ், கொழும்பு.4
ግEዮ 0777229091
அச்சுப்பதிப்பு கொம்பிரின்ட், 334A, K.églesù A. GUJG3JUIT மாவத்தை, கொழும்பு-13
N
பகலவன்
கவிதை கு. பாரதி Ձ. &iւյTՄT டி.எம்.காமிலா நா.மரியா என்டனிட்டா 16 அங்கவை 30 மறப்பதற்கு அழைப்பு 35
of Drasorb . செ.கெளரி
திரை விமரிசனம்
வ.சிவஜோதி 12
விளையாட்டு
றொபேட்:ஏ.ஜோர்ஜ்
தமிழில்;
ஊர்சுற்றி O3
கட்டுரை
கே.எஸ்.அருணன் 14
செ.அருள்மொழி 7
இளையவன் 29
சு.சுபராஜ் 31
(8ps has moorsb
நடிகர் பிரான்சிஸ் ஜெனம் 20
வசந் ம் புத்தகசாலை
(South Asian BookS) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது ஈழத்து எழுத்தார்களின்
படைப்புகளைப் பெற்றுக்கொள்ள
少
வசந்தம் புத்தகசாலை இல. 44, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழும்பு -11.
U தொ:2335844. தொலைநகலி:2473751

Page 3
y |výáVýlevů மாற்றங்களை வேண்டில்
விதைப்பு - O ஏப்ரல் 2005 அறுவடை - 08
துழலை மாசுபடுத்தும் மனித செயற்பாடு
இன்று உலகம் எங்கும் சூழல் பற்றி வெகுவாகவே பேசப்பட்டு வருகின்றது. ஏன்? என்ற கேள்வி எழுகின்ற போது அது சூழல் மாற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொள்வதாலேயே என்று பதில் கிடைக்கிறது. இன்று ஐக்கிய நாடுகள் சபையில் சூழல் பற்றி மிகுந்த கவனம் எடுக்கின்றார்கள். இதற்கு காரணம், சூழல் மனிதனுக்கு பாதகமான சில விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஏன் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றால் மனிதனின் செயற்பா டுகள் காரணம். எத்தகைய காரணம் என்கிறபோது விஞ்ஞான தொழில் நுட்பம் என்று அதிகமாகக் கூறி சூழலை மாசுபடுத்தும் வேலைகளை செய்வதனாலும் ஏகாதிபத்திய நாடுகள் அணுஉலைகளையும், இரசா யன பொருள்களையும், யுத்தப் ஆயுதங்களையும், உற்பத்தி செய்வதுடன் இயற்கையை அழித்து மக்களை நடுத்தெருவில் நிற்க வைக்கின்ற செயல்களையும் செய்து சூழலை மாசுபடுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதுவே சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்று தெற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமி அலைகூட ஒரு வகையில் சூழல் பாதிப்புற்றதன் ஒரு விளைவுதான். சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாசடைந்துள்ளது. இன்னமும் அணுக்கழிவுகளும் இரசாயனக்கழிவுகளும் ஆசிய நாடுகளில் குப்பைகளாக கொட்டப்படு கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இரசாயன வாயு கசிந்ததால் போபால் எனும் ஒரு கிராமம் அழிந்து போனது. இதற்கு கார ணமான அமெரிக்க முதலாளிகள் இன்று வரை கைது செய்யப்படவும் இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை. இவ்வாறு இன்று உலக நாடுகள் பல, சூழலை மாசுபடுத்தும் வேலைகளை செய்து வருகின்றன. இதனைத் தடுப்பதற்கு மக்களாகிய நாங்கள் ஒன்றிணைய வேண்டும். எமது சூழலை நாமே பாதுகாக்க வேண்டும்.
சூழலே எமது சுற்றம். இயற்கையே எமது சுவாசம். - ஆசிரியர் குழு -
 
 

வளையாட்டு :
நேரமில்லை ஒரு நூல் வெளியீட்டில் பேசிய பேச் சாளர் “காலை எழுந்தவுடன் பழப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு Uாப்பா என்று பாரதியாழனான்" என்று பேசிய போது, அவையில் இருந்த சிறுவன் iపభ பக்கத்திலிருந்த தனி அம்மாவிடம் 2 கேள்விகள் கேட்டான். "அம்மா பின்னேரமெல்லாம் விளையாடச் சொல்லியி ருக்கோ? யார் அம்மா அந்த பாரதி" தாயோ மிக அமைதியாக "பாரதி என்று ஒரு வரும் இல்லை. இந்த மாமா சும்மா பொய் சொல்லுகிறார்” என்று பதிலளித்தார். சாந்துக் கட்டிடங்களுக்குள் சோர்ந்து போன சாந்தி நகர வாழ்க்கையில், புத்தகச் சுமைகளோடு மாலை வகுப்புக்களுக்கு தாயும் பிள்ளையும் பயணமாகிவிட்டபிறகு இருக்கின்ற இடத்திலெல்லாம் தொடர்மாழ கட்டிடங்கள் நிரப்பிவிட்ட பிறகு, தொலைகாட்சிகளே எப்போதும் விளையா டுவனவாய் உள்ளபோது, விளையாட்டை எங்கு தேட? விளையாடும் இடத்தை எங்கு தேட? விளையாட தோழர்களை எங்கு தேட ? குழந்தைகள் விளையாடவேண்டியதன் அவசியத்தை உளவியளாளர்கள் 3 முக் கியமான காரணிகள் கொண்டு விளக்குகின்றனர்.
குழந்தை தன்னைத் தானே பிற்கால வாழ்க்கைக்குத் தயார் செய்து கொள்ளு
வதற்காக: مر 2.குழந்தைகளிடம் உண்டாகும் அளவுக்கதிகமான சக்தியை வெளிப்படுத்துவ
தன் மூலம் உடல் வளர்ச்சியை மேம்படுத்த; 3. பரிணாம வளர்ச்சியில் பல பழகளைத் தாண்டி மனிதகுலம் வந்ததால் முன்னைய பழகளில் இருந்த சமூகவிரோத பழக்கவழக்கங்கள்களையப்படது: விளையாட்டுக்கள் பற்றி பல முக்கிய கருத்துக்களை உளவியலாள சிக்மன் ஃபிராய்ட் முன்வைக்கிறார். மனிதனிடத்தில் ஆரம்பகாலந்தொட்டு இன்று வரையிலும் இரண்டு வகையான இயல்பூக்கங்கள் காணப்படுகின்றன.ஒன்று எதிர்பால் மீது விருப்பம்; மற்றையது சண்டையிடும் உந்துதல் என்பனவாகும். மனிதர் இவ்விரண்டு இயல்பூக்கங்களையும் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இவற்றின் வெளிப்பாட்டு வழவங்கள் சமூக ஒழுங்கமைப்புக்கும் காலத்துக்கும் ஏற்ற வகையில் மாறுகின்றன. இதில் தானி விளையாட்டினர் அவசியம் முக்கியத்துவம் பெறுகின்றது. மனிதன் தன் இயல்பூக்கங்களைச் சுதந்திரமாக செயற்படுத்த இடம் தருவதில்லை. ஆகையால் கட்டுகளற்று இயல்பூக்கங்களை வெளிப்படுத்த இரண்டு வகைகளே உண்டு. ஒன்றில், சமூகம் தடைகளற்ற நிலைமையில் இருக்க வேண்டும் அல்லது இயல்பூக்கங்களுடன் போராடி அவற்றை வெற்றி கொள்ளத்தக்க திறனை சமூகம் அடைதல் வேண்டும்.
/யில்திMல் 3
ஏய்ரல் 2005

Page 4
சிக்மனட்ஃபிரய்டு சொல்வது போல மனித தனிமூகம் நிரந்தர நிறை வினிமையிலும் முரண்பாடுகளுள்ளும் சிக்கியுள்ளது. இதன் தீர்வே விளையாட்டு உருமாற்றம் அடைகிறது எனலாம். எனவே தனது இயல்பூக்கங்களை குழந்தைகள் வெளிப்படுத்தாத போது அவர்களிடம் ஒரு நிறைவின்மை நிலவிய வண்ணமே இருக்கும். விளையாட்டு இவ் நிறைவின்மையை நிவர்த்தி செய்கின்றது. இதனால் குழந்தைகள் விளையாடுவது மிகவும் அவசியம்* ஒவ்வொரு விளையாட்டுமே ஏதோ ஒரு வழியில் செய்தியை தன்னக த்தே கொண்டிருப்பன. மனித இனத்துக்கு மட்டுமன்றி எல்லா உயிரினங்களுக்கும் உந்துதல்கள் உண்டு. உயிரினங்களின் உடலியல் மொழி (Physical Language) வெளிப்பாடாகவே விளையாட்டும் m SS அமைகின்றது. பருவங்களுக்b.-- 豹4貓 •ళ్ల கேற்ப விளையாட்டில் வேறுபாடுகள் காணலாம். இவை ஒவ்வொரு பரு வத்துக்குமுரிய உடலியில் உளவியல் தன்மைகளினர் அழப்படைகளில் வேறு படுகின்றன. குழந்தைகளின் அடிப்படையான அறிவை வளர்க்கும் ஒன்றாகவே நாம் விளையாட்டை கருதுதல் வேண்டும். குழந்தை ஒரு விளையாட்டை விளை யாடுகிறது என்னும் போது அது முதலில் அவ்விளையாட்டை கூர்ந்து நோக்கு கின்றது: அவ்விளையாட்டை புரிந்து கொள்கின்றது. பின்பு விளையாடுகிறது. விளையாடும் போது கூட்டுச் சேரும் மனப்பாண்மை என்பன வளர்ச்சியடை கின்றன. பின்னர்குழந்தை அவ்விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான வழி களை தேடுகிறது. அதற்காக அது புதுப்புது உத்திகளையும் திட்டங்களையும் சிந்தித்து நடை முறைப்படுத்துகின்றது. தனது திறமையை வளர்க்கின்றது தன்னையும் பிறரையும் ஒழுங்கமைக்கின்றது.விளையாடுவதனர் விளைவால் குழந்தைகள் வெற்றியையும் தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவத்தை பெற்று விடுகின்றனர். வாழக்கையே ஒரு போராட்டமாகக் கண்ட ஆதிமனிதன் இவற்றின் மூலம் பல பழுப்பினைகளைக் கற்றான். தற்பாதுகாப்புக்காக ஒழயும் நீந்தியும் பாய்ந்தும் பழகிய மனிதர்ை கையில் அகப்பட்டவற்றை யெல்லாம் கொண்டு போராடவும் தயாராய் இருந்தான். காலப்போக்கில் நிரந்தர வாழ்வுக்கு பழகிக் கொண்ட போது அவன் பெற்ற பயிற்சிகள் அவனுக்கு வீரத்தை வழங்கியது.குழு மனப் பாண்மை தோன்றி வளரத் தொடங்கியது. முன்னர் தற்பாதுகாப்புக்காக செய் ததை இப்போது மன மகிழ்விற்காக செய்யத் தொடங்கினான். இவ்வாறே விளையாட்டுதோற்றம் பெற்றது.
3666): "Recreation and games" by Robert A.George தமிழில்: ஊர்சுற்றி
4 Vിഴിv) =ങ്ക ഉrr് 2005
 
 
 
 

கவிதிை
ITT 6T a 2 莎 தத தி NNNAN/InAMAM ZAMANMANAN2A
மனநோய் மருத்தவமனையின் மகிழ மரங்களின் கீழ் மனநோயாளியாய் நான்! உணர்மை சொல்வதால் உலகம் என்னை மனநோயாளியாக்கி உட்கார வைத்தவிட்டது! விலக்கப்பட்டகனியை உண்ட ஆதாமின் வழித்தோன்றல் என்பதால்: இறைவன் எனக்கு சாபமிட்டானோ? நீ இராசியற்றவளாய்இரு என! யேசுநாதர் முள்முடிதரித்தபோது பட்ட வேதனைகளை நாள் உணர்கிறேன். என்னை சூழ்ந்திருக்கும் மனிதர்கள் என் தலையிலேயே கைவைத்த தாம் சொல்வதெல்லாம் உணர்மை என பறை சாற்றும் பொழுதுகளில்! இந்த பொல்லா உலகில்
நட்பின் சின்னங்களிடம் நம்பிக்கை இழக்கும் பொழுதுகளில் எல்லாம் நான் சிலுவையில்
அறையப்படுவதாய் உணர்கிறேன்!
ஆனாலும்
நான் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறொன்றும் இல்லை! என அலறிக் கொண்டுதான் இருக்கிறேன்!. மகிழ மரங்களின் நிழலில்
மனநோயாளியாய் நான்! (g. LIIT தி
ஏய்ரல் 2005
/யில்திMல் = 5

Page 5
சீனாவின் சின்னக்கதைகள்: கவலைகளோடு ஒரு மனிதன்
மிகவும் நேர்மையான எனது நெருங்கிய நண்பனிடமிரு ఖా
ந்து ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது. அதில்;
ఖః భ్య సభ స్థ
அன்புசால் திருவாங், இந்த உலகத்தில் வாழ்வது எனக்கு : மிகவும் கடினமான விடயமாக இருக்கிறது. என்னுடைய ܗܳܝ வாழ்வு ஏன் இவ்வளவு வெறுப்புடையதாய் இருக்கின்ற -ல தென்று எனக்குப் புரியவேயில்லை. ○ எனது காலை உணவை வாங்கு வதற்காக நான் கடை > க்குச் சென்றேன். ஆனால் அங்கு கூடைப்' " விளையாடு ""لہجہ
வெதற்கான பலகை பொருந்தப்படாமல் இருப்பதையே என்னால் அவதானிக்க முடிந்தது. நான் செய்தித்தாள் வாங்கச் சென்றபோது செய்தித்தாள் விற்பனை செய்யும் சிறுவனின் கண்ணிமையில் ரோமங்கள் எதுவுமே இருக்கவில்லை. பேருந்துத் தரிப்பு நிலையத்தில் இரண்டு மனித்தியா லங்களுக்கு மேலாக காத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த
123456789 இலக்கத்தையுடைய பேருந்து வரவேயில்லை. அலுவலகத்தில் எனது மேசையின் மேல் பெரிய பாத்திரம் வைக்கப்படாமலிருந்ததை இட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ஆனால் என்னை அழைத்தவர் ஒரு தடவை கூட ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் வென்றவரல்ல. எனக்காக தேநீரை கோப்பையில் ஊற்றிய போது அந்த தேயிலைக் கொழுந்து களைப் பறித்த பெண் தனது கணவனுக்கு நேர்மையானவளாக இருந்திருக்க மாட்டாள் என்பதை சடுதியாக என்னால் உணரமுடிந்தது. இதன் விளைவால் நான் காலை உணவை உண்ணவில்லை, செய்தித்தாள்களை வாங்க முடியவில்லை. பேருந்தில் பயணிக்க முடியவில்லை, அலுவலகத்தில் இருக்க முடியவில்லை, ஒரு மிடர் தேநீர் கூடக் குடிக்க முடியவில்லை. எனது திருப்திக்காக எதையும் என்னால் செய்ய முடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்ய விரும்புகிறேன் எனது இந்தத் கடிதத்தை உங்களிடம் சேர்ப்பிக்கும் தபால்காரன் குறைந்தபட்சம் ஆறடி உயரம் உள்ளவனாக இல்லாது விடின் தயவுசெய்து இந்தக் கடிதத்தை எரித்து விட மறந்து விடாதீர்கள்.
100 Glimpses into China 6Toot DET65cDfbg.
p6VLð: Wang Meng தமிழில்: பகலவன்
அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் யூத இனப் புனரமைப்பு இயக்கத்துக்கும் எதிரான பலஸ்தீன மக்களினதும் பல்வேறு அரபு நாட்டு மக்களினதும் நீதியான போராட்டத்தை உறுதியாக ஆதரிப்போம்! - ප්ඤ ඊශිඝmඝකීසස් -
6 /யில்திMல் ஏய்ரல் 2005

கவிதை
கிI னல் நீரும் இலவம் பஞ்சும் நி காலம் கடந்தும் உவமையாய் மிளிர யுகம் பல கடந்தும், ஏமாற்றமும், தோல்வியும் வாழ்வில் தொடர, 65) 650) | நீண்ட நெடும்பயணம்
எல்லையில்லா முடிவுநோக்கி எதிர்பார்ப்பும், வெற்றியுமாய் போகிறது! கல்வியை மட்டுமே பிரதானமாக்கும் குடும்பச் சூழல்" ஒரு மழைநாளின் அதிகாலையில் உன்னையும் என்னையும் பிரித்தது. B மறுவாசிப்பற்று விழிமூடி
வெகுதூரம் போனாய்
சோர்திருந்த போதெல்லாம் இடித்துரைத்து பக்குவம் பகிர்ந்த உன் நி வெற்றிடம் மிகவிரிந்து பாதாளம் ஆகிறது. தட்டிவிட்டால் தொடர்பு தரும் 60)) 6Qj] || தொலைபேசியும், கணனியும் அருகிருந்தும் உயிர்குலையில் தேள்கடித்த வேதனை. ந்
புதிய தேசத்தில் என் தாய் மொழி பகிர்ந்து.
உன்னைத் தனித்துவமாக்கினாய்! காந்தபுலங்களின் எதிர்முனையாய் இழுத்தனைத்துக்கொணி டோம். 0 0 0 0 0 0 0 0 0 O. மகரந்த பரம்பலின் தீவிரம் போல் எம் நட்பும் காற்றிடம் கலந்து
காத தூரம் பயணித்தது. மூன்று நாட்களுக்கு மூத்தவனான நீ எப்போதும் எனக்கு குழந்தை ஆனாய்
அன்பைக் கூட அடக்குமறையாய் பேசும் என்னை மெளன எதிர்கொள்ளலால் சுயமதிப்பீடு செய்ய வைப்பாய் அது கூட கணநேரம் தான். உன்னைக் கண்டதும் மீண்டும் ஆமையோட்டினுள் கதையாய் ஒளித்துக்கொள்ளும்
TÉITsio 2005
/ിഴിvങ്ക 7 =

Page 6
எதிர்பார்புகளின் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்ளும் விதமாய் உன்னையன்றி யார் முடிப்பர்? உன் முகத்தில் கண்விழித்து துயில் கொண்டு அதற்குள்ளும் உன்னையறியாது
நாளைய பரீட்சைக்கு ஆயத்தமாகி உன்னை மிஞ்சி சில புள்ளி எடுத்து செருக்குடன் சிரித்து வைப்பேன் உன் தோல்வியை விடவும் என் வெற்றியை உனதாக்கி கொண்டாடும் பண்பு எங்கு கற்றாய்?
பாதரசம் பட்ட தங்கம்
மீண்டு வருமாற் போல
பிரிவின் சோகம் மறையுமென எம் பெற்றோர் சொல்கின்றனர். கண்ணுக்கு தெரியாமல் நாம் இழந்த - இ.சுமாராநிறையும், தரமும் புரியாமல்!!
----w """ "T<سمسسسسسسسس 約
Neelinh jezvellery
l
MANNING PLACEWELLAWAITE, COLOMBO-6. PHONE:505942,0777-597120 .
Z
a ཐོབ།གང་ལ་ཡང་གབ་མ་--
ངོང་
8 yി.ീഴിv) =ങ്ക ഉr]ൺ 2005
 
 

சுனாமிப் பேரழிவும் மனிதநேயச் செயற்பாடும்
2004 டிசெம்பர் 26 ம் திகதி சுனாமிப் பேர ழிவு எதிர்பார்க்காத ஒரு இயற்கை பேர ழிவாகிக் கொணடது. இது இன, மத, மொழி, பிரதேசம் கடந்து எல்லா மனிதர்க ளையும் அழித்தும் பாதித்தும் சென்று யூ" ள்ளது. இயற்கையின் இச் சீற்றத்தைக் க" கண்டு மனிதர்கள் ஒருவருக்கொருவர் இது உதவியும் மீட்ப்புப்பணியிலும் ஈடுபட்டனர். & உணவு, உடை, மற்றும் பொருட்கள், நிதி கி. -- SAAAAAALLLLLSA SAAAAS SSS SSSLSSSqqqqqSSLLLS LLLL SSSSSSS SSASSS என்பனவற்றை தம்மால் இயன்றவரை வழங்கினர். இதனுாடே மனித நேயம் என்பது உயர்ந்து நின்றதை காணமுடிந்தது. ஆட்சியின் தலைவர்கள் கூட இயற்கை சீற்றத்திடமிருந்து தாம் சமத்துவத்தை படிக்கவேண்டுமென்று பட்டறிவு பெற்றதுபோல் உபதேசம் செய்து மனிதாபிமானத்தை வற்புறுத்தினர். ஆனால் இத்தகைய மனித நோக்கும், செயற்பாடுகளும் ஒரு சில நாட்கள் மட்டுமே நீடித்திருந்தன. இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் மேற்கூறிய மனித நேய நோக்குகளும், போக்குகளும் மறந்ததையே காணமுடிந்தது. அரசாங்கத் தலைவர்கள் முதல் அதிகாரம் செலுத்தும் அதிகாரிகள் வரை உள்ளுர் ஊழியர்கள் ஈறாக மனித நேயத்தோடு பாதிக்கப்பட்ட மக்களை அணுகுவது இல்லாமற் போய் விட்டது. இதனால் உறவுகளை இழந்தும் உடை மைகளை துறந்தும் எதிர்காலமே இருண்ட நிலையில் முகாங்களிலும் ஏனைய இடங்களிலும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். மனித நேயம்பற்றி பேசியவர்கள் எல்லோரும் மெளனித்து நிற்கி ன்றனர். அரச நிறுவனங்கள் ஏனோ தானோ என்ற நிலையில் யந்திரத்தனமாக எட்டி நின்று பிச்சை போடும் மனிதனேயத்தோடு மக்களிடம் நடந்து கொள்கின்ற தன்மைகளையே காணமுடிகிறது. அதே போன்றுதான் அரசுசாரா தொண்டர் அமைப்பு என்று சொல்லுகின்றவை யும் நடந்துகொள்கின்றன எல்லாவற்றையும் இழந்த மக்கள் ஏதோ இந்தளவிலா வது கிடைக்கின்றதே என்று நொந்து தலைவிதி என்று கூறி துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். ஒரு புறம் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களின் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய அலட்சியப் போக்கு நீடிக்கிறது. மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு போன்றவற்றில் ஊழல் மோசடிகள் தாரா ளமாக இடம்பெறுகின்றன. இவற்றையெல்லாம் உற்றுநோக்கும்போது மனிதா பிமானம், மனிதநேயம் என்பவை இருக்கின்றனவா என்றே கேட்கத் தோன்று கின்றது. மனித நேயம் என்பது இயல்பாக வரும் ஒன்றல்ல. அது ஒவ்வொருவர்
/யில்திMல் 9
ஏய்ரல் 2005

Page 7
கொண்டிருக்கும் உலக நோக்கினுT டாக சமூக நடை முறைகளினூடா கவே பிறப்பெடுக்க முடியும். ஏற்றத் தாழ்வும் சுரணிடலும் சுயநலமும் மேலோங்கி காணப்படும் சூழலிலே எல்லோரிடத்திலும் மனிதநேயத்தை எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு ' வருடைய சமூகச் சிந்தனையினு: டாக மனித நேயத்தினை கணிப்பிட (Iքtդպմ). జీ.జీ.వీ.శ.424 *,妾、 簽 ஆகவே சுனாமிப் பேரழிவு ஏற்பட்டவுடன் சாத்தான் வேதம் ஒதுவது போல் உயர்ந்த மனிதாபிமானம், மனித நேயம் பற்றி பேசப்பட்டதெல்லாம் வெறும் கதையாக மாறிப் போன் காட்சிகளையே நாம் அன்றாடம் காணுகின்றோம். இத்தகைய ஏற்றத்தாழ்வையும் சுயநலத்தையும் வழிபாடாகக் கொண்டிருக்கின்ற நமது சமூகச் சூழலிலே சுனாமிப் பேரழிவு போன்ற எத்தனை இயற்கை அழிவு வந்தாலும் எல்லோரிடத்திலும் உயர்ந்த மனித நேயம் ஏற்பட்டுவிடும் என்று நமபுவது பொய்யானதாகும். கெளரி
LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LL LLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LL
அட்டைப்படக் கவிதை
வறுமைக்காக வயதை தொலைத்து வெய்யிலுக்காக நிறத்தை தொலைத்து கடமைக்காக காலத்தை தொலைத்து
வயிற்றுக்க வாழ்க்கையை தொலைத்து
ஆயுதம் ஏந்துவது ஆதிக்கத்தை தொலைக்கவா!
- றுநீ.நாகவாணிராஜாதலவாக்கலை
அடிமை விலங்கறுப்போம் - அதில் ஆயுதங்கள் செய்திருவோம்
வாருமை மிக மலிந்த - இக் குவலயம் மாற்றிடுவோம்.
-சுபத்திரன். 10 /யில்திwல் =ணஏய்ரல் 2005
 
 

கவிதைக் மானிடனின் மானங் காத்திடும் மனங்களை கவர்ந்திடும் ஆடைபோல் நாடுகள் சூழவும் உள்ளதாம் OG நனி நன்மை நல்கிடும் தாவரம்!
E மறைமுகமாகவும் நேரடியாகவும்
மரங்களை நாடியே வாழும் விலங்குகள் அவை அருகினால் அகிலத்தில்
S அழிவை அண்மிப்போம் அனைவரும்!
OS மக்கள் தம் சுவாசமாய் கொண்டிடும்
ஒட்சிசன் ஒழிந்திட்டால் மரணமே வந்திடும்
S. ஒட்சிசனதனை தானமாய் வழங்கிடும் தாவரம்
தரணியில் தழைத்திட்டாலே கிடைத்திடும் ஆகாரம்! "E தாவரங்களும் உயிரென மதியாது டை,
翡 அநியாயமாய் அழித்திட முயன்றிட்டால்,
காபன் வாயுதான் காற்றிலே கலந்து கருணையே கண்டிரா சாவரும்!
器
சீருடன் சமூகமும் வாழ்ந்திட கவனமாய் இங்கு நாம் இருந்திட སྩལ་ཏུ་ மா அடர்த்தியாய் மிளிர்ந்து எமக்கு . மரங்கள் தான் அழித்திடும் மாவரம் காலங்கள் முன்னேற காடழிப்பினை பிராணிகள் வாழிடத்திற்கும் பிரயாணிகள் நிழலுக்கும் பஞ்சங்கள் பாடவே நாள் வரும்!
誌" ぶ -*
மரங்களை மாய்த்ததும் மழையுமே மர்மமாய் மேகம் போல் மறையுதே மண் சரிவினில் நின்றுமே நிலத்தினை காத்திட அவைகளே ஆதாரம்! மரங்கள் தான் இல்லையேல் மானிடன் தரணியில் தவித்திட வேண்டுமே தேவைக்காய் தாவரம் வெட்டியே வீழ்த்திடினும் பின் மரநடுகை என்றுமே மேன்மை தரும்!
riuഭം:2005 =ങ്ക /யில்திMல் 11

Page 8
திரை விமர்சனம்
"இரமதியம சிங்களத் திரைப்படம்
இரமதியம- உச்சி வெயில். பெயருக்கேற்றாற் போல் ഖ.ടിഖ8ജTളി இலங்கையில் இனப்பிரச்சனை உச்சி வெயில் போல கள்ளிடுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் பிரசன்ன விதானகே அவர்கள் முக்கோணக் கதையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
முதலில் ஒரு தொலைக்காட்சி பேட்டியுடன் இப்படம் ஆரம்பிக்கிறது. அக்காட்சியில் தோன்றும் வெளிநாட்டில் இருந்து வந்திருக் கும் சிங்கள புத்திஜீவி அரசியல் ரீதியான தீர்வின் அவசியத்தையும் விடுதலைப் A. X, புலிகளுடனான பேச்சு வார்த்தையின் முக்கியத்துவத்தையும் சமஷ்டி ஆட்சி தீர்வாக அமையலாம் எனவும் " குறிப்பிடுகிறார். அவருடன் தொலை பேசியில் தொடர்பு கொள்ளும் பெண் அவரை நேரடியாக சந்திக்க விரும்பி,
பின் நேரடியாக சந்திக்கும் போது தனது கணவனான விமானப் படை பைலட்டை விடுதலைப் புலிகள் கைது செய்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்பதற்கு உதவுமாறும் அதற்கு இவரே பொருத்த மானவர் என்று தான் நம்புவதாகவும் கூறி அவருடன் விடுதலைப் புலிகளின் பகுதிக்கு செல்ல முயல்கிறார். .ܗܳܝ அடுத்ததாக, வடக்கு முஸ்லிம்கள் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து முஸ்லிம் சமூகத்தினரின் நிலையை காட்ட விளை கின்றார் இயக்குநர். இதில் முஸ்லிம் மக்களின் N
இடப்பெயர்வின்போது அனுபவிக்கும் இன்னல்களையும் மன உணர்வுகளையும் மன உளைச்சல் களையும் அம்மக்களை கொண்டே அக்கதாபாத்திரங்களின் ஊடாக யதார்த்த புர்வமாக சித்திரிக்கிறார்.
தொடர்ந்து, வறுமைக் கோட்டின் கீழ் இருந்து இராணுவ சிப்பாயாக வரும் இராணுவ வீரரையும் அவரின் குடும்ப பின்னணியையும் காட்டுகிறார். உதாரணமாக அப்படத்தில் காட்டப்படும் காட்சியான புனித நகரான அநுராதபுரத்தில் இராணுவ வீரர்கள் மூவர்
12 =ணvயில்திwல்
ஏய்ரல் 2005
 
 
 
 
 
 
 
 
 

உல்லாசமாக இருப்பதற்காக ஒரு விடுதிக்கு செல்கின்றனர். மதுபானம் அருந்தி பெண் களுடன் உல்லாசமாக இருக்க விளையும் போது அதில் ஒரு இராணுவ வீரரின் தங்கை அந்த விடுதியில் இருந்ததைக் கண்டு அவ்வீரன் மனம் தடுமாறுகிறான. பின்னர்
ങ്ങ 停 N
அவ்வாறு தனது தங்கை அங்கு வந்தது குடும்ப சூழ்நிலை என்பதை அறிந்து வீடு pn 8 is செல்லும் போது அங்கு தனது தாயிற்கும்IF-Pதி இதழில் கேட்கப்பட்ட தங்கையின் திருமணத்திற்கும் எனவினாக்களுக்கான விடைகள் உடுப்புகளும் நகைகளும் கொண்டு சென்று 1. Bées NIKKEI வழங்குகிறான். தங்கை தனது நிலையை எண்ணி மனம் வெதும்புகிறாள். இதன்|2. பகிர் பீடபூமி மூலம் வறுமைக் கோட்டின் கிழ் இருக்கும் இராணுவ வீரர்களின் சில நிர்ப்பந்தங்களை3. டாக்கா யும் காட்ட முற்பட்டுள்ளார். இப்படத்தில் இயக்குநர் சிங்கள பெளத்தத் தையும் சிங்கள மக்களின் கலாச்சார சீர் கேட்டையும் மக்களின் குடும்ப உறவுகளின் சிக்கலையும் நடைபெறும் யுத்தத்தினூடாக|s. Shot message System ஏற்பட்டதாகச் சாடியுள்ளார். சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்ப7. அபிலாஷ் டுவதை படத்தின் பின்னணி இசையாக கிரிக்கட் வர்ணனைகளை படத்தின் ஆரம் பம் முதல் இறுதி வரை புகுத்தி நகைச். . . சுவையாக்கியிருக்கிறார் இயக்குனர். 9. őgrů (é6orm) இத்திரைப்படத்தின் திரைக்கதையை நகள்|10, 17gg த்திய முறை, காட்சியமைப்பு, படத்தில் நாயைக் கதாபாத்திரமாக்கிய விதம், ஒளிய பலர் ஆர்வமாக கலந்து கொண்ட மைப்பு என்பன பாராட்டிற்குரியது. போதிலும் 10 வின்ர்க்களுக்கும் |எவரும் சரியான விடைகளை ஒரு சிங் களபெளத்தராக இருந்து அனுப்பாத காரணத்தினால் அதிக கொண்டே சிங்கள மேலாதிக்க சிந்தனைமரின் வினாக்களுக்கு (7) விடை களை கேள்விக்குள்ளாக்கிருப்பதும் எழுதி பரிசு பெறுபவர் :
ஏனைய 5ம் தர ரசிகர்களுக்காக படம் தயாரி
4. மாக்கியவல்லி
5. கொண்டலிஸ் றய்ஸ்
8. சூரியா
க்கும் தயாரிப்பாளர் போலல்லாது தரமான 9714 షి ്s படங்களை மட்டுமே தயாரிக்கும் பிரசன்ன : த விதானகே அவர்கள் சினிமா ரசிகர்களின்
மதிப்பிற்குரியவர். ܓܠ 少
GTỈrraio 20er

Page 9
கட்டுரை
LOTGULŮ blumoT6UT)
பெளதிகச் சூழல் இணைந்து பிணைந்ததின் பிரதிபலிப்பு மானிடப்பிறப்பு. ஏனைய ஜீவராசிகளும் இச்சூழல்கள் மூலம் பிறப்பெடுத்த போதும் மானிட ஜாதி மேம்பட்டு அல்லது பிரதானமாகி வெளிப்படுவதற்கு பல அடிப்படைக்காரணிகள் உண்டு. மானிட சமூகத்தின் ஆற்றலும், ஆளுமையும், செயற்பாடுகளும், பு, மியில் என்றென்றும் அழிவின்றி நிலையுன்ற வைத்து விடுகின்றது. பிறப்பின் பெறுமானம் புரிந்து கொள்ள முடியாத ஏனைய ஜீவராசிகளின் இருப்பு, உணவு தேடி அலைவதும், அதனை உட்கொள்வதும், இனவிருத்தி செய்வதும், இறந்து போதலும் ஒரு சங்கிலித் தொடராக நடைபெறுகின்றது. இப்போக்குகளுடன் மனித வாழ்வு ஒத்திருந்த போதிலும் இவற்றையும் கடந்த பிறர் நலனும், சமூதாய நலனும் பேணி அன்பு, கருணை, விட்டுக்கொடுப்பு. தியாகம், மானிட நேயம் என்ற மனித விழுமியங்கள் மூலம் மானிட வாழ்வு மரணத்துக்குள் அகப்படாது நிலையுன்றி விடுகின்றது. மனிதனும் அவனது செயற்பாடுகளும் அவனை உயர்நிலைக்கு மேலெழ வைக்கிறது. மேற்குறிப்பிட்ட இவ்விடயங்கள் மனித வாழ்வுக்கு பொது நியதியாக இருந்த போதிலும் நடைமுறை ரீதியில் போரும் புசல்களும் இனமோதல்களும், சாதி, மத முரண்பாடுகளும் மேலெழுந்து பொருளாதாரக் காரணிகளும், இலாபநோக்கும், அடக்கு முறைகளுமே மனித இலக்குகளாக மாறி யுத்த நோய்களுக்குள் அரசுகளும் ஆட்சியாளர்களும் சரிந்து போய் உள்ளனர். போரின் பிரசவங்களாக சமுதாயத்தினுள் கொலை, கொள்ளை, களவு, பொய், வறுமை, அறியாமை என்று பல வீழ்ச்சி நிலைகளினுள் சமுதாயம் தாழ்ந்து போய் உள்ளது. மானிட நேயம் குன்றிய மானிடப் பெறுமானம் அருகி வருகின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். மதங்களும், மத நூல்களும், அகிம்சா மூர்த்திகள் பலரும், அறிஞர் பெருமக்களும், நீதி நூல்களும், இலக்கியங்கள் பலவும் நன்னெறிகளையும் மனித விழுமியங்களையும் வெளிப்படுத்தியுள்ள போதிலும் வெளிச் சூழலும் அதன் அனர்த்தங்களும் மானிடப் பெறுமானத்தின் வலு படிப்படியாக குன்றி வருவதையே யதார்த்தமாக காணக்கூடியதாக உள்ளது. மனித சமூதாயத்தின் வரலாற்றின் தோற்றம், அதன் தன்மை, வளர்ச்சிப் போக்குகளை உற்று நோக்குகின்ற போது மோதல்களும், முரண்பாடுகளும் அழிவுகளும், நோய்நொடி களும், தொடர்ந்தே வருகின்றன. இவ்வாறான இன்னல்கள் நெருக்கீடுகள் மத்தியிலும் மனிதாபிமானம், மானிடநேசிப்பு, பொதுநலவாழ்வு, பிறர் நலன் பேணுதல், பரஸ்பரப் புரிந்துணர்வு, பேணப்பட்டு கட்டிக்காக்கப்பட்டு வருவதையும் காலச் சுழற்சிக்கு ஏற்ப அவை புதிய செயல்வடிவங்களை நடைமுறைப்படுத்த முனைவதையும் முன் கையெடுப்பதையும் இயல்பாகக் கொணி டுள்ளது. மனிதம். மனித விழுமியங்கள்மானிட வாழ்வுப்பெறுமானம் மண்ணில் மரணித்துப்போகாமல் நவயுக வடிவங்களில் நன்னெறிகளாக, சவால்களை எதிர்கொண்டு முறியடிக்கும் ஆற்றல்களுடன் தலையெடுக்க முனைகின்றது. இந்த மனித சமுதாயத்தில் எப்போதும் இறுதியாக நின்று நிரந்தரமடையப் போகின்றவை உண்மைகளும் நீதி, நியாயங்களும்.
14 E vuolaVagavo E GTiITổio 2005

மனிதாபிமானமும் அவற்றுக்காய் அரும்பாடுபட்டு அர்ப்பணித்து அந்த இலட்சிய மார்க்கத்தில் தடம் பதித்த மாமனிதர்களுமே. அசைக்க முடியாத நம்பிக்கைகளின் உறுதியினால் நிலையுன்றி ஆற்றும் கருமங்கள் மூலம் ஆகாயத்தில் வெளிச்சமிடும் நட்சத்திரங்களையும் நாளை நாம் தொட முடியும் மானிட வாழ்வு என்பது மனித
ஜிவிப்பின் சாரத்தை கேள்விக்கு உள்ளாக்கு வது. மானிடப் பெறுமானங்களை உட்புகுத்தி முழு நிறைவான மகோன்னத மனித வாழ் வுக்கு வழி சமைப்பதும் வழி காட்டுவதும் ஆகும். தினந்தோறும் மரணங்களால் அவலப்படும் சமுதாயத்தின் மேன்மைக்கும் அதன் விமோசனத்திற்கும் மானிடப் பெறு மானம் வலியுறுத்தப்பட வேண்டியதும். கட்டிக்காக்கப்பட வேண்டியதும் வளர்த் தெடுக்கப்பட வேண்டியதும் ஆகும். இன் னும் இந்தப் பு, மியில் மனிதம் மாண்டு விட வில்லை. அது குன்றியுள்ளது. திறந்த மனதுடன் நேர்மையாய் அர்ப்பணித்து ஆற் றும் பணிகள் மூலம் அது தழைத்து ஓங்கி உயரும் என்பதும் வரலாற்று உண் மையும் சத்தியமும் ஆகும். கே.எஸ் அருணன்
( பயில்நிலம் சந்தா விபரம்
இலங்கை
இதழின் விலை ரூபா 20.00 ஆண்டு சந்தா Ibu T 300.00
வெளிநாடு
இதழின் விலை S 1 ஆண்டு சந்தா S 12
உள்நாட்டில் பயில்நிலம் சந்தா பணத் தினை தெகிவளை தபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக மணியோடரில் அனு ப்பி வைக்கலாம்.
1. மடக்கை அட்டவணையை
கண்டு பிடித்தவர் யார்? உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது? 3. ஈராக்கின் தலைநகரம்
எது? . சமுதாய ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர் யார்?
2.
5. பிரான்சையும் பிரித்தானி
யாவையும் பிரிக்கும் நீரிணை எது? 6. யப்பானின் புதிய பெயர்? 7. இதுவரைக்கும் உலகில்
யுத்தம் நடைபெறாத நாடு எது? 8. இலங்கையின் வர்த்தக
நுகர்வோர் அமைச்சர் uurtsr? 9. PGA Golf g6stis6ir
தரப்படுத்தலில் முதலிடம் வகிக்கும் வீரர் யார்? 10. பாகிஸ்தானின்
சுதந்திரத்தில் தந்தை எனப்படுபவர் யார்? மேற்தரப்ப்ட்ட் 10 வினாக் களுக்கும் பதிலை எழுதி அனுப்பும் அதிஷ்டசாலி வாசகருக்கும் நூல்கள் பரிசாக வழங்கப்படும்
விநியோகக்குழு
உலகத்திலே கல்வி மிக முக்கியமானது மட்டுமன்றி வியத்தகு
өтіпт6ko 2005
மாற்றங்களையும் உண்டு பண்ண வல்லது. இங்கர்சால்
/யில்திMல் 1S

Page 10
துகிலுரித்த பாம்புகளின் துயரமான யுத்த போராட்டமாய் துரிதமாய் நகர்ந்த அக்காலத்து வன்முறைகள் வலுவிழக்க முனையும் போது சுருக்கிட்டு கொண்டது “சுனாமி” யால் இயற்கை சுகராகங்கள் சுவாரஷ்யமின்றி அழுகையோடு வன்முறை புரிந்து கொண்டன.
அணுகுண்டுகளோடு மனிதன் அபிநய மொழிகளை பேசி அதிசயித்துக் கொண்டிருந்த வேளையிலே இயற்கையின் வன்முறையால் தன் இயலாமையை உணர்ந்து கொண்டான்
の2/
dzýr விருந்தாளிகளையே உணவாக்கும் விசமத்தனமான போராட்டங்களினூடே விரைந்தோடும் சதிராட்டங்களாய் G2 விமர்சனங்களும் வன்முறை புரிகின்றன
றை
சுயமாய் சிந்திக்க தெரியாத பிறர் மீது மட்டுமே பழிசுமத்தும் விமர்சனத்தை மட்டுமே சுவாரஷ்யமாக்க தெரிந்த அரசியல் வாதிகளால் அரசியலும் அறிவியலும் வன்முறை புரிந்துகொண்டிருக்கின்றன
விழித்துவிட்டதன் பின் உறங்கத்தெரியாத வன்முறைகளை எழுப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்கும்
இ%
மனிதத்துடன் 8 : ള്ള, காலங் காலமாய் 滚 வன்முறையே நடனங்கள் புரிகிறது.
வன்முறைகளை மனிதனே வழிமொழிந்து ஏற்றுக்கொண்டு வர்ணமிட்டு வடிவம் கொடுக்கும் போது வன்முறைகள் காலத்தால் வடிவம் மாறும் ஆனால் வன்முறைகள் மாறாது
நா.மரியா என்டனீட்டா -நாவலப்பிட்டி
16 /யில்திwல் ஏய்ரல் 2005
 
 

ஆய்வுக் கட்டுரை: இன்றைய சூழலும் இளைஞர் யுவதிகளும்
உலகின் நம்பிக்கைக்கு உரியவர்கள் இன்றைய இளைஞர்கள் என்று சொன்னால் மிகையாகாது. சமூகச் சிந்தனைகள் அரிதாகிவிட்ட இக்காலப் பகு தியில் இளைய சமுதாயத்தின் சிந்தனைகளை செயல் களை நல்ல வழியில் ஊக்குவிக்கும் போது அவை
மிகப் பெரிய சாதனையாளர்களை உலகிற்கு வழங்கும் என்பது நிச்சயம். வாலிபப் பருவம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் மிகவும் இன்றியமையாத ஒரு பகுதியாகும். இளைய சமுதாயம் வலிமை மிக்கது. எதையும் செயலாற்றும் திறன் மிக்கது. இவ் ஆக்கம் மிகு வலிமையை எவ்வழியில் செயற்படுத்த திட்டமிடு கின்றோம் என்பதிலேயே நம் சமுதீர்யத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது. வாழ்க்கையில் நாம் எடுக்கக் கூடிய தீர்மானங்கள் சரியானதாக அமையாவிடின் அவை நம்மை தீய வழிகளுக்கூடாக கொண்டு சென்று நம் வாழ்வைச் சீரழித்து சமுதாயத்தையும் சீர்குலைத்து விடும். சமுதாயச் சீரழிவுக்கு பெரிய பங்கை வகிப்பவைகளாக வானொலி, தொலைக்காட்சி போன்ற ஒலி ஒளிச் சாதனங்களில் வெளிவரும் பாடல்கள் சம்பாசனைகள் திரைப்படங்கள், நாடகங்கள் என்பனவற்றில் பாலியல் பிறழ்வுகளும் வன்முறைச் சித்தரிப்புகளும் மிகத் தாராளமாக இடம் பெற்று வருகின்றன. இவ் ஊடகங்கள் மூலம் தரப்படும் சில நல்ல தகவல்கள் தவிர பாத்திரங்களின் சித்தரிப்புகள் நடந்து கொள்ளும் விதங்கள் ஆகியவை பார்ப்பவர்களைப் பன்மடங்கு தாக்குகின்றன. கதாநாயகன் கதாநாயகியைச் சீண்டி கலாட்டா செய்வதில் இருந்து ஆபாசம், பாலியல் பலாத்காரம் வரை சர்வசாதாரணமாக இவ்வுடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. இன்றைய திரைப்படங்கள் நாடகங்கள் முற்றிலும் வணிக நோக்கிலேயே தயாரிக் கப்படுகின்றன. மற்றும் விளம்பரங்களில் பெண்களைச் சித்தரிக்கும் முறைகளும், பத்திரிகைகளில் செய்திகள் கொடுக்கப்படும் பாலியல் பலாத்காரங்களின் தலைப்பிற்கு பயன்படுத்தப்படும் மொழிநடை, வெளியிடப்படும் புகைப்படங்கள் போன்றவை விற்பனைக்கான கிளர்ச்சியுட்டும் செய்திகளாகவே அமைகின்றன. திரைப்படங்கள், விளம்பரங்கள் என்பவை உணர்வுகளின் எண்ணப்பதிவுகளைத் தாக்கக் கூடியவை. கனவுகளையும் ஆசைகளையும் தேவைகளாக மாற்றும் திறன் படைத்தவை. அத்தோடு மேலைநாட்டுக் கலாச்சாரங்கள் நம் நாட்டின் பண்பாடு ஒழுக்கங்களையும் மீறி மிகவும் விரைவாக திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டுக் கலாச்சாரங்கள் மேலை நாட்ட வர்களை ஒரு போதும் அசைத்தும் பார்ப்பதில்லை. ஆன்ால் அந்தநாட்டுப் பழக்க வழக்கங்கள் நம்நாட்டவர்களை வேகமாக வந்தடைந்து கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் மிகவும் பாரிய அளவில் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திக்
/யில்திwல் 17
ஏய்ரல் 2005

Page 11
கொண்டிருக்கும் இந்நாட்களில் ஊடகங்கள் மூலமாகத் தவறான காரியங்களின் விளைவாகவும், மேல்நாட்டுக் கலாச்சாரத் திணிப்பினாலும் நாகரீகம் எனும் போர்வையிலும் தங்கள் வாழ்வைக் கேள்விக் குறியாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். காதில் தோடும் கையில் புகையுமாக பைக்கை முறுக்கிக் கொண்டு பெண்களைப் பின் தொடர்வதும் சீண்டி கலாட்டா செய்வதுமாக தங்களையே தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமத்துவம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் தொட்டுப்பழகுதல் இளம் சமுதாயத்தினரால் வரவேற்கப்படும் ஒன்றாகவே அமைகின்றது. இது வெறும் நட்பின் அடையாளம் என நாம் கூறி விட முடியாது. நாம் எவ்வளவு சாக்குப் போக்குகள் சொன்னாலும் தொடுதல் என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே ஓர் ஈர்ப்புத் தன்மையை உருவாக்கி விடுகின்றது. விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போமானால் நம் உடம்பில் சுரக்கும் HORMONE களின் செயற்பாடுகள் தொடுதல் மூலமாக நம் உணர்வுகளை தூண்டி சந்தர்ப்ப சூழ்நிலைகளை மறந்து தவறுகள் செய்யத் தூண்டும் வடிகாலாக அமைந்து விடுகின் றன. அதோடல்லாமல் நாம் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறைகேடான சில காரியங்கள் நம்மைச் சுற்றியிருக்கும் மற்ற இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்களை மிகவும் பாதிப்படையச் செய்யும். பார்வையினூடாக உள்வாங்கும் காரி யங்களில் தவறான காரியங்களே அதிகமாக மூளையில் பதிந்து விடுகின்றன. இப்படி பதிந்து விட்ட காரியங்களை மீண்டும் மீண்டும் அசை போட்டுப் பார்ப்பதன் மூலம் இக் HORMONE சுரப்பிகளின் செயற்பாடு அதிகரிக்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் நம் கட்டுப்பாட்டையும் மீறி அவை செயற்பட ஆரம்பிப்பதால் நம் முந்திய நல்ல குணங்கள் மறைக்கப்பட்டு தீய குணங்களே மேலோங்கி வளர ஆரம்பிக்கின்றன. இவை சந்தர்ப்பு சூழலில் நம்மை தீயவர்களாக்கி சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க முடியாதவர்களாக மாற்றி விடும். எனவே நண்பர்களாக இருப்பினும் தனிமையில் சந்திப்பதையும், தனிமையான சந்தர்ப்பங்களில் அதிகம் கதைப்பதையும் தவிர்ப்பதும் சாலச் சிறந்ததாகும். இல்லையெனில் எதிர்விளைவுகளாக குற்ற உணர்வினால் குன்றிப்போதல், தற்கொலைகள், பெண்கள் தவறான கர்ப்பம் தரித்தல் போன்ற கவலைக்குரிய விடயங்கள் நிகழ்கின்றன. பெண்கள் கர்ப்பத்தைக் கலைக்க முற்படும் போது தொற்றுக் கிரு மிகளினால் மரணம் நிகழ வாய்ப்புண்டாவதோடு, கர்ப்பப்பை பலவீனமடைந்து மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பு அரிதாகி விடுகிறது. இலங்கையில் இதய நோயுள்ள வலிப்பு ஏற்படும் தாய்மார்கள் போன்றவர்களுக்கே கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வாழ்வைத் தொலைத்து விட்டு நிர்க்கதியாகிப் போகும் முன் இலட்சியத்தோடு வாழ்வைக் குறித்த சரியான சிந்தனை திறன்களுடாக சீரான பாதையை அமைத்துக் கொள்வதன் மூலம் சமுதாயச் சீரழிவுகளை தவிர்த்துக் கொள்ளலாம். தந்தை மகளின் வாழ்வை சீரழித்ததும். தாத்தா பேத்தியை அணைத்துக் கொண்டதும், அண்ணன் தங்கையை மானபங்கப்படுத்தியதும், இருபத்தெட்டு வயது வாலிபன் இரண்டு வயதே நிரம்பிய பெண் குழந்தை மேல் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததும், பாலில் மயக்க மருந்து
18 ஏப்ரல் 2005
= vw)&g)wil”)

கொடுத்து தாயைக் கர்ப்பமாக்கிய போதைப்பொருள் பாவனைத் தனயனின் கோரச் செயல்களும் எங்கோ ஒர் அயல்நாட்டில் கேட்ட விடயங்கள் அல்லாமல் நம் நாட்டில் இடம் பெற்றவைகளே என்பது வருத்தம் நிறைந்த உண்மையாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான முறையோடு எதை வேண்டு மானாலும் செய்துகொள், எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை அமைத்துக் கொள் என்று இலவச அனுமதியளிக்கும் நாகரீக தாய்மார்களாக இல்லாமல் பிள்ளை களுக்கு நல்லவை தீயவை குறித்த சமுதாயப் பகுத்தறிவுக் காரியங்களை பகிர்ந்தளிப் பதனாலும் அக்கறை காட்டுவதாலும் அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாக இருந்து சமுதாயத்தில் அவர்களது வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்துவதால் ஒரு நல்ல சமுதாயம் உருவாக வழிவகுக்கலாம். இளைய சமுதாயமே எப்படியும் வாழலாம் எனும் கொள்கையை விடுத்து இப்படித் தான் வாழ்ந்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் எனும் வலிமை மிக்க சிந்தனைகளை உள்வாங்கி அர்ப்பணிப்போடும் புரிந்துணர்வோடும் செயற்பட்டால் நாளைய சமுதாயம் சிறப்படைய முடியும் என்பது நிச்சயம்.
செ.அருள்மொழி பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கத்துக்காக ஐக்கியப்படுங்கள். இது
ஜாயினி ஜூவல்றி
Buyers Ond Sellers of Gold JeWels exaróð 22 sy'i gyfrais ysgob Basgo6ar
உத்தரவாதத்துடன் orders Execed prompty குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும்
150 B 1, Galle Road, :x: 150 B1, 3rs 6TIL,
Wellawatte, à * வெள்ளவத்தை, Colombo-6. , கொழும்பு- 6.
必签
Te:4512622 ” தொலைபேசி 4-312

Page 12
1. நாடக உலகிற்கு எவ்வாறு பிரவேசம்? சில்லாலை பாடசாலை கலை விழாவில், பாடசாலை நிதிக்கான நாடகத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது தான் நான் முதல் முதலாக நடித்தேன். மறைந்த C.T செல்வராஜாவினால் பழக்கப்பட்டு ”யூடித்” என்ற விவிலிய நாடகம் போடப்பட்டது. இது பாடசாலை நாடகங் களை விட தரங்கூடியதாக இருந்தது. என்று சொன்னார்கள் இதில் யூடித் என்னும் பெண் பாத்திரம் ஏற்று நடித்தேன். இந்நாடகம் அக்காலத்தில் எனது ஊரான சில்லாலையில் நாடகங்கள் இல்லாத காரணத்தால் ஒரு பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இப்போதும் எனது நண்பர்கள் யூடித் என்றே என்னை அழைப்பர். 2. உங்ளுடைய நாடக அனுபவங்கள் எப்படி? என்னுடைய முதல் அனுபவம், என்னிடம் இப்போது இருக்கும் நண்பர்கள் தான். நாடகத்தால் நான் சம்பாதித்தது நல்ல நண்பர்களைத்தான். அதிக மாக நாடகத்துறை சார்ந்தவர்களுக்கு நண்பர்கள் கூடாது என்றொரு பேச்சு இருக்கிறது. அந்த காலத்தில் நாடகத்தில் நடிக்க விடுவதில்லை. காரணம் கெட்டுப் போய்விடுவான் என்று. ஆனால் எனக்கு நல்ல அதிர் ஷடமோ, புறநடையோ தெரியவில்லை. எனக்கு கிடைத்ததெல்லாம் நல்ல நண்பர்கள். நான் நாடகத்திற்கு வந்த காரணமே நல்ல நண்பர்கள், நல்ல உறவுகள் கிடைத்தபடியால்தான். நான் நடித்த நாடகங்களிலும் பார்க்க எனக்கு மனத்திருப்தியை தருவது, இலங்கையில் இருக்கின்ற சிறந்த தமிழ் நாடக நெறியாளர்கள், நடிகர்களோடு தொடர்பு வைத்திருந்தமை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் நெறியாள்கையில் நடித்திருக்கிறேன். நாட்டுக் கூத்து காலாநிதி பூந்தான் ஜோசப் அவர்களோடு நாட்டுக்கூத்து நடித்திரு க்கிறேன். அவர்கள் என் நாட்டுக்கூத்து குரு. அதை தொடர்ந்து நாடக அரங்கக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்
20 vuolavo==== griu6o 2005
 

அ.தாசிசீயஸ் அவர்கள் பேராசிரியர் சி.மெளன குரு அவர்கள், சிதம்பரநா தன் அவர்கள், S.T.அரசு அவர்கள், இப்படியே நீண்டு இறுதியில் வைத்திய கலா நிதி சிவயோகன் நெறியr \ ள்கையிலும் நடித்திருகT `து கிறேன். அதுமாத்திரமல்ல. k ༄།” காலஞ்சென்ற நெறியாளர் ே * A *ష్యి *శ్లో భిన్లో జస్టీళ ** சுஹைர்ஹமீட் அவர்கள் இயக்கிய நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். இப் போது பிரான்சில் இருக்கும் ஏ.ரகுநாதன் இயக்கிய நாடகங்களிலும் நடித் திருக்கிறேன். அந்த பட்டியல் நீண்டு செல்கிறது. நாடகத்துறையில் இருந்த வகையில் நா பற்றிய என்னுடைய அனுபவம் அது. இன்னும் நாடகம் பரவலாக்கப்படவில்லை. என் சிறுவயதில் நாடகம் எப்படி இருந்ததோ இப்போதும் அப்படியே இருக்கிறது. ஆனால் இதற்கும் நாடகக் கலைஞர்களுக்கும் உண்மையில் தொடர்பில்லை. தனியாக அவர்களை குறைசொல்வது பிழை. அந்த காலத்தில் நாங்கள் தான் பிரதி எழுதுவது, நடிகர்களை தெரிவு செய்வது, வீடுவீடாக சென்று பணஞ் சேர்ப்பது. அயலவரிடம் இரவலாய் மரங்கள், பலகைகள் வாங்கி அதன் மூலம் மேடை செய்து பின்னர் நாடகம் அதிகாலை 2 அல்லது 3மணியளவில் முடிய முகப்பூச்சுக்களை கழற்றாமல் மேடைகளை கழற்றி உரியவர்களிடம் கொடுப்பது. எல்லாம் நாடகக் கலைஞர்கள்தான். அதற்குப் பிறகு நாடகம் போட்டதில் நவுத் டம் ஏற்பட்டிருந்தால் வீடுகளில் பெற்றோர் “இனி நடிக்க போவியோ?” என்று திட்டி பணம் தருவார்கள். அப்படி கவுத்டப்பட்டுதான் நாங்கள் நாடகம் போட்டோம். இப்போதும் இதுதான் நிலைமை. நகர்ப்புறங்களில் நாடகம் போடுவது என்றால் கடைகடையாக திரிந்து விளம்பரம் எடுத்து அல்லது கொடையாளிகளிடம் இருந்து பணம் பெற்றுத்தான் நாடகம் போடுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். புத்தக வெளியீட்டில் இப்போது மாற்றம் தெரிகிறது. எழுதுகிறவரே. வெளியிட்டாலும் விநியோக வலையமைப்பு ஒன்று காணப்படுகிறது. இப்படியொரு நிலை நாடகத்திலும் காணப்பட வேணடும் சிங்கள நாடகங்களில் ஏறக்குறைய இந்நிலை வந்துவிட்டது. இப்போது பெரிய பெரிய நாடகக் கலைஞர்கள் நாடகங்களை தயாரிக்கிறார்கள். அவற்றை மேடையேற்ற அனுசரணையாளர்கள் உதவி செய்கிறா ர்கள். இந்தியாவிலும் இம் முன்னேற்றகரமான நிலை காணப்படுகிறது. அதே நிலை இங்கு வந்தால் தான் நடிகர்கள் காத்திரமான நாடகங்களைத் தயரிப்பார்கள். நாடகமும் மக்களிடையே பரவலாகும் என்பது என்னுடைய
/யில்திwல் 21
ॐ ° .ޑި: ޘް& &ގު
ஏய்ரல் 2005

Page 13
கருத்து. பாடசாலை நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளேன். சிறுவர் நாடகங்களை சுண்டுக்குழி மகளிர் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, பொஸ்கோ பாடசாலை போன்ற கல்லூரிகளில் சங்கிலியன், புழுவாய் மரமாகி போன்ற நாடகங்களை நெறியாள்கை செய்திருக்கிறேன். 3. நீங்கள் எத்தனை நாடகங்கள் நடித்திருக்கிறீர்கள்? உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி கூறுங்கள்? நான் கணக்கு வைக்கவில்லை. ஒரு தேவைக்கு எழுதிப் பார்த்தபோது 147 நாடகங்கள் நடித்திருக்கிறேன். இவற்றில் முக்கியமான நாடகங்கள் சில வற்றின் பெயர்கள் நினைவிருக்கிறது. 1978க்கு பிறகு நாடக அரங்கக் கல்லூரி தொடங்கிய பிறகு நடித்த நாடகங்களைத்தான் நான் நடித்தேன் என்ற உணர்வோடு சொல்லிக் கொள்கிறேன். பொறுத்தது போதும், கந்தன் கருணை, சங்காரம், அபசுரம், எந்தையும் தாயும் என்று இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். அதில் பொறுத்தது போதும் நாடகத்தில் நடித்தமைக்காக 1981ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஜனா திபதி விருது கிடைத்தது. சம்மாட்டியார் பாத்திரத்தில். தாசீசியஸ் தான் அந்த நாடகத்தை பிரதியாக்கம் செய்து நெறியாள்கை செய்திருந்தார். அதிலே யாழ்ப்பாண தென்மோடி இராகங்கள், கூத்து இணைந்து பரவலாக வரும். நாட்டுக் கூத்து கலாநிதி பூந்தான் ஜோசப் அவர்களிடம் நான் கூத்து பற்றி கொஞ்சம் படித்தபடியால் எனக்கு தென்மோடி இராகத்தில் பாடுவது இலகுவாக இருந்தது. 2000ம் ஆண்டு கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தால் கொண்டாடப்பட்ட உலகநாடக தினத்தன்று எனக்கும் மட்டக்களப்பை சேர்ந்த அண்ணாவி யார் ஒருவருக்கும் கலைக்கோல் விருது கிடைத்தது. மட்டக்களப்பில் என் னைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் மட்டகளப்பைச் சேர்ந்த பேராசி ரியர் மெளனகுரு எனக்கு நல்ல பழக்கமானவர். அவரின் நாடகங்களிலும் நான் நடித்திருக்கிறேன். அவர் நல்ல நண்பர். 1977 என்று நினைக்கிறேன். தினகரனி நாடகவிழாவில் சிறந்த குணசித்திர நடிகருக்கான விருது கிடைத்தது. கலைக்கழகத்தால் முது பெரும் கலைஞர் என்ற விருது தந்தார்கள். இன்னும் விருதுகள் கிடைத் திருக்கின்றன. அவை நினைவில் இல்லை. ஒரு கலைஞனுக்கு விருதுகள் கிடைக்கவேண்டும் என்றல்ல. நிறைய திறமானவர்களுக்கு விருது கிடை க்கவில்லை. மூலையில் பேசாது இருக்கிறார்கள். 4. இந்தியாவில் நாடகப்பயண அனுபவங்கள் பற்றி? 1997 என்று நினைக்கின்றேன். இப்போது லண்டனில் இருக்கும் அதாசீ சியஸ் மற்றும் களரி நாடகமன்றத்தை சேர்ந்த 10 நாடக நடிகர்களோடும் இலங்கை நாடக அரங்கக் கல்லூரியை சேர்ந்த 10 நாடகநடிகர்களையும் இந்தியாவிலே சந்தித்து இந்தியாவிலே இருக்கின்ற பேராசிரியர் அரசு
22 vuflavo Sigrirso 2005

அவர்களின் துணைவியார் மங்கை அவர்களின் கலைத் தொடர்பினால் சென்னைப் பல்கலை அரங்கைச் சேர்ந்த 10 கலைஞர்களையும் சேர்த்து 30 கலைஞர்களும் சேர்ந்து ஒரு கிழமையாக நாடகங்களை அங்கே பழகி, ஏறக்குறைய 10 நாட்கள் இரவு பகல் என்று பாராமல் ஒரு பஸ்சில் சென்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நாடகங்களை போட்ட திருப்தி கிடைத்தது. அங்கு நாங்கள் மேடையேற்றிய நாடகங்கள் பொறுத்தது போதும், புதிய தோர் வீடு, எந்தையும் தாயும். இந்த நாடகங்களுக்கு இந்திய மக்கள் நல்ல வரவேற்பைத் தந்தனர். குறிப்பாக எந்தையும் தாயும் நாடகத்தை கூறலாம். அதன் கதையின் கரு போர்க்காலச் சூழலில் வெளிநாட்டு கடிதங்களு க்காக மக்கள் ஏங்கும் ஏக்கம் பற்றியதாகும். இது பற்றி அங்கு நடைபெற்ற கருத்தரங்கிலே பேசிய ஒருவர், தபால் வரு வது சாதாரணமான விடயம். இந்த சாதாரண தபாலுக்கே மக்கள் இவ் வளவு ஏங்குகிறார்கள் என்றால் நீங்கள் அங்கு எவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்கிறீர்கின் என்பது ஒரு தீப்பொறி போல விளங்குகிறது என்று குறிப்பிட்டார். இது எமது நாடகங்களுக்கு அங்கு கிடைத்த வரவேற்புக்கு சிறு உதாரணம் மட்டுமே, அத்துடன் சென்னை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலே எனக்கு பாராட்டும் வழங்கினார்கள். கருத் தரங்கிலே சிலம்பொலி செல்லப்பன், அன்று அமைச்சாராக இருந்த தமிழ் குடி மகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்திய நாடகப் பயணத் தில் நாங்கள் உணர்ந்தது, இந்திய கலைஞர்கள் நாடகங்களை நடித்து சினிமாவுக்கு போய்விட்டால் அவர்களுடைய கனவு நிறைவேறிவிடுகிறது என்பதும் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் அடையும் தேர்ச்சி என் றும் அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இங்கு இலங்கையில் அந்த நிலை இல்லை. உண்மையில் நாங்கள் சின்னவயதில் இருந்து இந்த வயது வரை அதாவது இப்போது நடிக்கவிட்டாலும் நாடகங்களை நேசித்துக் கொண் டிருக்கிறோம் என்பது பெரியவிடயம். அத்துடன் நாடகத்தை நேசிக்கும் கலைஞரோ, ரசிகரோ பொருளாதார ரீதியாய் இதுவரை ஒரு சதமேனும்
ஏய்ரல் 2005

Page 14
சம்பாதிக்கவில்லை. மாறாக நிறைய விடயங்களை இழந்து கொண்டிருக்கி றார்கள். அனுபவமும் ஆத்மதிருப்தியும் தான் கிடைக்குமே தவிர வேறொ ன்றும் இல்லை. 5. திருமறைக் கலாமன்றத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்கள்? திருமறைக் கலா மன்றம் உண்மையிலேயே ஒரு கடல். 1965 ஆண்டு அருட்திரு மரியசேவியர் அவர்கள் உரும்பிராய் ஆலய பங்குத் தந்தையாய் இருந்த போது அங்குள்ள சில இளைஞர்களைக் கொண்டு தவக்காலங் களிலே “பாஸ்க்” நாடகங்கள் போடுவது வழக்கம். அப்படியான நாடகங்க ளில் நானும் பங்கேற்பது உண்டு. உரும்பிராய் தவிர யாழ்பாணத்தில் இருந்தும் சில இளைஞர்களை நாடகத்துக்கு எடுத்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றவர்களில் நானும் ஒருவன். அப்படியாக தொடங்கிய பழக்க த்தில் திருமறைக் கலாமன்ற வளர்ச்சியில் இன்றும் ஈடுபட்டிருக்கிறோம். அது இப்போது பாரிய ஆலமரமாக வளர்ந்து வெளிநாடுகளில் பல கிளை களை பரப்பி உள்நாட்டிலும் பல கிராமங்களிலும் கிளைகளை பரப்பி அரச சார்பற்ற நிறுவனமாக சேவையாற்றி வருகின்றது. கத்தோலிக்க துறவியி னால் நடாத்தப்படுவதால் அது சமயம் சார்ந்தது என்று சிலர் நினைக்கிறா ர்கள். ஆனால் ஆரம்பத்தில் அப்படியிருந்த போதும் இப்போது அந்த முத்திரை இல்லை. எல்லா சமயத்தவர்களும் எல்லா இனத்தவர்களும் அதில் இணைந்திருக்கிறார்கள். திருமறைக் கலாமன்றம் மூலமும் பல நாடகங்களை நாங்கள் மேடையேற்றியிருக்கிறோம். அவர்கள் அரசசார் பற்ற நிறுவனமாக இருப்பதால் நாடகங்களை மேடையேற்றுவதில் பொரு ளாதார பிரச்சினைகள் குறைவு. அதனால் இலவசமாகவே நாடகங்களை மேடையேற்றுகிறார்கள். எனவே நல்ல நாடகங்களை மேடையேற்றுகிறா ர்கள். யாழ்ப்பாணத்தில் எல்லாம் நல்ல நாடகங்களை மேடையேற்றிக் கொண்டிருக்கிறார்கள். • 6. உங்களுடைய குடும்பத்தைப் பற்றி, எனக்கு ஒரு மகள், ஒரு மகன், மகள் வத்தளை புனித அன்னாள் பெண்கள் பாடசாலையில் ஆசிரியையாக இருக்கிறார். மகன் கனடாவில் இருக்கி றார். பிறகு 3 பேத்திகளும் 2 பேரன்மர்ரும் உள்ளனர். நாடகத்துறை சார்ந்த முறையில் மகள் பாடசாலைக் காலங்களில் நாடகங்கள் நடிப்பார். அதற்கு பிறகு இல்லை. ஆனால் ஆர்வம் இருக்கிறது. 7. இந்திய நாடகப் பயணத்தில் அப்போதைய அமைச்சர் தமிழ் குடிமகன். இந்தியாவில் இருந்திருந்தால் இன்னொரு சிவாஜியாக மாறியிருப்பீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் ஒரு சிறந்த நாடக நடிகராக எவ்வாறு நீங்கள் உருவெடுத்தீர்கள்? நான் 5ம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு “யூடித்’ நாடகம் பயிற்று வித்த ஆசிரியர் நான் அந்நாடகத்தில் பெண் வேடமேற்றமையால் சங்கானையில் 'கண்ணகி” என்ற சினிமாவுக்கு கூட்டிச் சென்றார். ஆனால் அப்போது
24 - vിരിv) -- ஏய்ரல் 2005

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. மற்றவையெல்லாம் அண்ணா வியார் சொல்லித்தந்தார். ஒரு பெண் எவ்வாறு நிற்க வேண்டும், கையை எப்படி வைத்து கொள்ள வேண்டும். கால் பெருவிரலால் நிலத்தில் கோடு போட வேண்டும் என்பதையெல்லாம் அண்ணாவியார் சொல்லித் தந்தார். பிறகு நான் மற்ற நாடகங்களில் பெண் வேடத்தில் நடிக்கும் போது அந்த உத்திகளை பயன்படுத்தியிருக்கிறேன். அத்துடன் வேறு விடயங்களையும் அந்தந்த நாடகங்களின் நெறியாளர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள். 1978ம் ஆண்டுக்குப் பிறகு நாடக அரங்கக் கல்லூரியில் பயிற்சி எடுத்த போது அங்கு நடிப்பு என்று சொல்லிதரவில்லை. ஆனால் அதற்குரிய சில வழிமுறைகளை நாங்கள் பயிற்சியாக செய்தோம். அப்படி செய்யும் போது எங்களுக்கு தெரியாமலேயே எங்கள் தேகங்களில் இவ்வகையான மாற்ற ங்கள் வரும். சில எண்ணங்களும் வரும். அத்துடன் நான் இணைந்து வேலை செய்த நாடக நெறியாளர்கள் மூலமும் நாடகம் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த ஆளுமைகளை வைத்து எந்த பாத்திரத்தையும் இய ன்ற அளவுக்கு செய்வேன். ஆனால் யாரையும் பின் பற்றி நடிப்பதில்லை.
இந்தியாவில் தமிழ்க்குடிமகன் கூறியது. அவர்களுக்கு நடிப்பு என்றல் சிவாஜியை பிடிக்கும் என்பதாலாகும். இன்னொரு சமயம் தஞ்சாவூரிலோ சென்னையிலோ நடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கும் போது சிலர் வந்து “நாங்கள் M. R. ராதாவின் ரசிகர்கள், மேடையில் M. R. ராதாவை பார்த்தது போலிருந்தது” என்றார்கள். அவர்கள் இன்னொன்றை வைத்து தான் ஒன்றைப் பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் அப்படி நடிப்பதில்லை. பாத்திரத்தை பொறுத்து தான் நடிப்போம். தாசீசியஸ் சொல்வார் “பிரதி களை நூறு முறையாவது வாசிக்க வேண்டும்” என்று. அதுவும் ஒவ்வொரு நிலையில். தூங்கி எழுந்ததும், அலுப்பாய் இருக்கும் போது, சந்தோசமாய் இருக்கும் போது, பசியாக இருக்கும் போது, தாகமாய் இருக்கும் போது என்று ஒவ்வொரு மனநிலைப்பாட்டிலும் வாசிக்க வேண்டும் என்று வலியு றுத்துவார். நான் சரியாக இந்த படிமுறைகளை பின்பற்றியிருக்கிறேன். அத்துடன் பாதையால் செல்லும் போது சாதாரண மக்களை அவதானிக்க வேண்டும். அப்போது சில இயல்பான பழக்கவழக்கங்களை கதாபாத்திரங் களை ஏற்று நடிக்கும் போது பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். நான் நிறைய சமயங்களில் அவற்றை பயன்படுத்தியதுண்டு. 8. உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர் மற்றையது மறக்க முடியாத நாடக அனுபவம்? (சிரித்துக் கொண்டே) சினிமா நடிகர்களை பார்த்து கேட்கும் கேள்வி போல இருக்கிறது. உண் மையில் நடிகர்களுக்கு இருக்கும் தீய பழக்கமாக கூறும் மதுபானம் பாவித் தல், புகைத்தல் என்று எந்த பழக்கமும் இல்லாது இருப்பதற்கு காரணம் என் நணர்கள் தான். என் நண்பர்களை என்னால் ஒருபோதும் மறக்க
griurio 2005 EEE viuha&gáavy 25

Page 15
முடியாது. குறிப்பிட்டு இவர்தான் என்று என்னால் சொல்ல முடியாது. நாடக அனுபவத்தை பொறுத்தவரை “எந்தையும் தாயும” நாடகத்தில் கிழவனுக்கு கடிதம் வரவில்லை என்றதும் தூணில் போட்டு தலையை அடி க்க வேண்டும். நாற்சார் வீட்டில் அந்த காட்சியை நடிக்கும் போது நாடகம் பார்க்க வந்திருந்த ஒரு பெண் அதை பார்த்து அழத்தொடங்கிவிட்டார். அப்போது எனக்கு கண்ணிர் வந்துவிட்டது. சிதம்பரநாதன நான் உணர் ச்சிவசப்பட்டு விட்டதாகவும் அந்த பெண் அழுதது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்னனென்று தெரிந்தது என்று கூறினார். எனக்கு என் றால் உண்மையாக தெரியவில்லை. அந்த பெண் “ஐயோ பாவம்’ என்று அழுவது எனக்கு கேட்டது. ஆனால் அவர், “அப்படி கேளாது, நீராவே உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்” என்று சொன்னார். அதை எனக்கு சொல் லத் தெரியவில்லை. ஆனால் இது அனுபவத்தில் கண்டது. பொறுத்தது போதும் நாடகத்திலும் எல்லா தொழிலாளர்களும் வரிசையாக நிற்பார்கள். நான் முறாய்ப்பாக பார்த்துக் கொண்டு போவேன், அவர்கள் “என்னடா பார்க்கிறாய்” என்று தெரியாமல் கேட்பார்கள். அது போல் நான் நிற்கும் போது “ஐயா சம்மட்டியாரே” என்று காலில் விழுந்து கும்பிடுவார்கள். அப் போது காலை கிள்ளுவார்கள். ஆனால் அது தெரியாதது போல் நான் இரு க்க வேண்டும். இப்படியெல்லாம் நடக்கும். ஏலியனேசன் என்று சொல்வா ர்கள். அதாவது அதிலிருந்து நாங்கள் பாரதீனப்படுத்தப்பட்டாலும் அது பார்ப்பவர்களுக்கு தெரியாது. 8. அந்த கால நாடக நடிகர்கள், இந்தக் கால நாடக நடிகர்கள் பற் றிய உங்கள் கருத்து? அந்த கால நாடகங்களில் தனிமனிதனுடைய ஆளுமை கூடுதலாக இரு ந்தது. நடிகனுடைய முகம்தான் கூடுதலாக நடிக்கும். அப்போது ரசிகர்க ளுக்கு அல்லது பார்ப்பவர்களுக்கு தனி மனிதனுடைய பார்வையும் முகபா வமுமே புலப்படும். இப்போதைய நாடகங்கள் தனிமனிதனை மையப்படு த்தாது குழுவாக வைத்தே சம்பவங்களும் பிரச்சினைகளும் விளக்கப்படுகி ன்றன. நடிப்புகளும் மாற்றமடைந்திருக்கின்றன. அன்று ஒரே இடத்தில் இருந்து கொண்டு முகபாவத்தால் வசனத்தை பேசி நடிப்போம். இப்போது உடல் முழுவதும் நடிக்க வேண்டியுள்ளது. அதனால் மேடையில் ஒருவரோ, இருவரோ இருந்து நடிக்கும் காட்சிகள் மிக குறைவு. எப்போதும் 7 அல்லது 8 பேர் நின்று நடிக்கும் காட்சிகள் தான் அதிகம். அப்போது அவர்களுடைய தேகங்கள் அசைவுறுவதால் பார்ப்பவர்களின் பார்வை சிதறுகிறது. அத னால் இப்போதைய நடிகர்களை அடையாளம் காணுவது மிகக் குறைவு. இன்று நடிகர்களை முக்கியத்துவப்படுத்துவது மிகக்குறைவு. நடிகரின் ஆற்றலை விட வேறு வகையில் காட்சி விளக்கத்தை நெறியாளர் கொடு க்கத் தொடங்கியுள்ளனர். மேடைக் காட்சியமைப்பு, இசை என்பவற்றை கையாளத் தொடங்கியுள்ளமையால் நடிகனுடைய முக்கியத்துவம் முன்
26 /யில்திMல்
ஏய்ரல் 2005

னர் போலில்லை. 9. தேசிய கலை இலக்கியப் பேரவையின் நாடகமுயற்சிகள் பற்றி? ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு நல்ல மனதோடு நாடகக் கலையை வளர்க்க
பண்பாடு, சமூக அக்கறை எனப்கே பலமுகங்களோடு செயற்படும் அமைப்பாக காணப்படுகிறது கொழும்பிலும் மட்டகளப்பிலும் அவர்கள் ஏற்பாட்டில் எந்தையும் தாயும் நாடகத்தில் நான் நடித்திருகிறேனர். குழந்தை ம. சண்முக லிங்கத் தினி இராமாயணத்தின் மீள் வாசிப்பான “மனத்தவம் :
நாடகத்தை புதிய வடிவில் குறுகிய காலத்தில் சிறுஅரங்கில் மேடை ஏற்றியிருக்கிறார்கள். “எந்தையும் தாயும’ நாடகத்தின் ஆரம்பமும் இவ்வாறே இருந்தது. அதனைப் பின்பற்றியே இந்நாடகம் வடிவமைக் கப்பட்டுள்ளது.இவ்வாறான அவர்களது முயற்சிகள் நாடக ரசிகர்களுக்கு ஆறுதலை தருவதாகும். 10. இந்திய நாடகவளர்ச்சிக்கும் இலங்கை நாடக வளர்ச்சிக்கும் இடையிலான வேறுபாடு என்ன? 1997இல் சென்று அவதானித்ததின்படி நவீன நாடகங்கள் பரவலாக்கப்பட வில்லை. அதைப்பற்றி மக்கள் பேசவும் இல்லை. அப்போது வீதி நாடகங் களே பார்க்கக் கூடியதாக இருந்தது. மக்களிடம் ரசிப்பு தன்மை இருந் ததை எங்கள் நாடகங்களான பொறுத்தது போதும், எந்தையும் தாயும், புதி யதொரு வீடு ஆகிய நாடகங்களுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து கணி க்க கூடியதாக இருந்தது. 11. இப்போதைய நாடகங்கள், நாடக வளர்ச்சி எந்த நிலைமையில் இருக்கின்றன? இப்போதைய நாடகங்கள் அந்தக் காலத்தை விட எவ்வளவோ முன்னே ற்றம் அடைந்துள்ளன. பாத்திரமாக இருக்கட்டும். வேடங்களாக இருக்கட் டும். காரணம் மக்களுடைய விழிப்புணர்ச்சி. நாடகம் ஒரு கற்கை நெறியாக மாறியுள்ளமை. பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை அது பாடநெறி யாகவே உள்ளது. அதனுடைய தாக்கங்கள். எல்லாம் மாற்றமாக நாடகங் களை தயாரிக்க வேண்டும் என்ற சிந்தையை தோற்றுவித்திருக்கின்றன. முந்தைய நாடகங்களில் அநேகமானவை சினிமாவை பின் பற்றியே தயாரிக் கப்பட்டன, அப்போது சினிமாவில் எட்டு பாடல்கள் இருந்தால் நாடகத்தி லும் எட்டுப் பாடல்கள் இருக்கும், அதிலுள்ள வசனங்கள் தான் இதிலும்
/யில்திwல் 27
Sri IT so 2005

Page 16
இருக்கும், அந்த காலத்தில் மனோகரா, பராசக்தி, பூம்பு கார் போன்ற திரைப்பட ங்கள் கதை வசனப் புத்த கங்களாக கடையில் விற்க ப்பட்டன. அவற்றை நாடக ங்களாக போட்ட காலங் களும் உண்டு. சினிமா தானர் நாடகம், நாடகம்
தான் சினிமா என்றும் ஒரு காலம் இருந்தது தானே! இப்போது சினிமாவும் அப்படி இல்லை. நாடகமும் அப்படி இல்லை. நாடகம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. ஆனால் நாடகங்கள் தரமாகத் தான் இருக்கிறது. அது வியா பாரரீதியாக முன்னேற வில்லை என்று சொல்லலாம். நாடகம் பார்க்கும் மக்களும் குறைவு. காலஞ்சென்ற கலைஞர் சொர்ணலிங்கம் காலத்தில் இந்தியாவில் இருந்து பிரதிகள் வந்தன. தேரோட்டிமகன், நல்லதும் கெட்டதும் போன்ற நாட கப்பிரதிகள் குறிப்பிடத்தக்கன. இங்கோ நாடகப்பிரதிகள் :# மிகக்குறைவு. இப்போது அப்படி இல்லை, இந்தியாவை விடத் தரமா பிரதிகள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. 12. நாடகக் கலைஞர்களுக்கு ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நான் சிறுவனாக இருந்தகாலத்தில் நாடகம் எப்படி இருந்ததோ. அதைபோல் மக்களிடம் பரவலாக்கபடவில்லை. தரத்தில் உயர்ந்து இரு ந்தாலும் அதில் ஈடுபடுபவர் பொருளாதார ரீதியாக இழந்திருக்கிறார்க ளேதவிர எதையும் பெறவில்லை. சமூகத்தில் நாடக நடிகன் என்றால் பார்க்கிற பார்வை வித்தியாசமானது. இந்த நிலை இந்தப் பரம்பரையோடு முடிய வேண்டும் . நாடகம் கல்வித்துறையாக வந்திருக்கிறது. படித்தவர் எல்லோரும் நாடகத்துறையில் ஈடுபடக்கூடிய சூழல் வந்து பெண்கள் நடிக்க வந்திருக்கிறார்கள். இனங்களும், சமூகங்க ளும் இணைந்து இதனை மேம்படுத்த கூடிய திட்டத்தை வகுத்து, நாடக கலைஞர்கள் ஒரு பக்கமாகவும் ரசிகர்கள் இன்னொடு பக்கமாகவும் இருந்து மேம்படுத்த வேணடும். இதனையே சிங்கள நாடகங்களிலும் முன்னெடுத்து வருகிறார்கள். நாடகக் கலைஞர்களுக்கு வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் தொழில் ரீதியான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படல் வேணடும். அப்போதுதான் நாடகமும் மக்களிடையே செல்லும். அதில் ஈடுபடுபவர்க ளும் மகிழ்ச்சியுடன் ஆர்வமாக ஈடுபடுவார்கள்
நேர்கண்டவர் வ. சிவஜோதி
28 Vിഴിv) =ങ്ക ഉriurൺ 2005
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுரை
மேல் கொத்மலைத்திட்டம் இலங்கையின் அழிவு
இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் திட்டங்கள் சில நாட்டை அழிக்கும் திட்ட ங்களாகவே இருக்கின்றன. சிறுபான்மை இனங்களின் இருப்பை கேள்விக்குறியா க்கி அச்சமூகங்களை நாடோடிகளாக்கி இனச்சுத்திகரிப்புச் செய்யும் நடவடிக்கை யுமாக அமைகிறது.
இன்று இலங்கையில் எடுக்கப்படும் திட்டங்களில் மேல் கொத்மலைதிட்டம், நுரைச்சோலை திட்டம், சுனாமிக்குப்பின் புனர்வாழ்வு புனரமைப்பு என்ற பெயரில் சிங்கள குடியேற்றங்கள் பேரினவாதிகளின், ஏகாதிபத்திய, பிராந்திய விஸ்தரிப்பு வாதிகளின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்ற முனைகின்றனர். பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இத்திட்டத்தை முன்னெடுக்க முயன்று வருகின்றனர். இதற்கு முட்டு கொடுத்துக் கொண்டு அப்பிரதேசத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அதனை தமது வசதிக்கு ஏற்றவாறும் பதவிகளுக்கு ஏற்ற வாறும் ஆதரிக்கின்றனர். இவ்வாறே மேல்கொத்மலை திட்டத்தை முன்னெடுப்பதற்கு யப்பானிய அரசாங்கத்தோடு இணைந்து அடிக்கல் நாட்டப்பட்டது. வேலைத் திட்டத்திற்கு ஒழுங்கும் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பேரின வாத கட்சிகள் இதில் மாத்திரம் கருத்து முரண்படாது ஒன்றுட்டு நிற்கின்றனர். இக்கட்சிகள் இதனால் வரக்கூடிய விளைவுகள் தெரியாதது போலவே பாசாங்கு பண்ணுகின்றனர். இலங்கையில் இருந்து பல கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் சுமாத்திரா தீவுகளில் ஏற்பட்ட பூமியதிர்வு இலங்கையை எல்லா வழிகளிலும் எப்படித்தாக்கி யிருக்கிறது. இதனால் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பேரா தனை பல்கலைகழக புவியியல் பேராசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார். எதிர் காலத்தில் மண்சரிவு, புவியதிர்வுகள் இலங்கையில் ஏற்படலாம் என்று குறிப் பிட்டுள்ளார். மேல்கொத்மலை திட்டத்தால் இலங்கையில் மூன்று அழகுமிகுநீர்வீழ்ச்சிகள் இல் லாது போகும். பல ஏக்கர் நிலம் நீரில் மூழ்கும். அங்கு பெரும் பாண்மையாக வாழும் தமிழ் மக்களின் இருப்பிடம் தண்ணில் மூழ்கும். தலவாக்கலை நகரம் இல்லாது போகும். இங்கு பாதிக்கப்படப்போவது சிறுபான்மையினர். எனவே இத்திட்ட த்தை அமுல்படுத்த முனைகிறார்கள். பேரின வாதிகள் அதற்கு ஒத்தூது கிறார்கள் மலையகப் பெருந் தலைகள். இலங்கையின் கரையோர பிரதேசங்களில் அநேகமான பிரதேசம் சுனாமியால் பாதிக்கப்பட்டது. இதில் சிறுபான்மையினர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு உட்பட தெற்கு கரையோரப்பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஆனால் இன்றும் அவர்களுக்கு நிவாரணமோ அல்லது மீள் குடியேற்றமோ ஒழுங்காக வழங்கப்பட
/யில்திMல் 29
ஏபரல் 2005

Page 17
வில்லை. ஆனால் இந்த மேல்கொத்மலை திட்டத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு மீள் குடியேற்றம், நட்டஈடு வழங்கப்படும். இதற்கு அது பரிகாரம் என்று மலையக கட்சிகள் கூறுகின்றனர். இதிலும் ஒருகட்சி, எதிர்கட்சிக்கு விசுவாசமாக பேரினவாதிகளின் அடிவருடிகளாக இருந்துகொண்டு பாராளுமன்ற ஆசனங் களை கட்டிப் பிடித்து கொண்டு பேசுகிறார்கள். இது சம்பள உயர்வு போல மலையக மக்களுக்கு அமைந்து விடக்கூடாது.
இவ்வாறான தில்லுமுல்லுகளை கைவிட்டு, இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியா கிவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள், மற்றும் பல அமைப்புக்கள் ஒன்று திரண்டு பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்பு ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றனர்.நாடு பூரவும் இந்த இயக்கம் பிரச்சாரங்களில் இறங்கியிருக்கிறது. மேல் கொத்மலை எதிரான அமைப்பில் இலங்கைத் தீவை நேசிக்கும் சகலரும் இன மொழி பேதம் மறந்து ஒன்றிணைவோம். எமது நாடு எமது இயற்கையை
நாமே வளப்படுத்தி பாதுகாக்க வேண்டும். இளையவன்
கரங்களிலேயே கல்லெடுத்துக் கொண்டபோது மனிதஇனம்
குரங்குக் கூட்டத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டது காலப்போக்கில் அரிதாரம் பூசி வேண்டியபடியெல்லாம் வேடம் பூண்டு வாழ்க்கையை கடத்தியது பரிமாறி பரிமாற்றிப் பண்பாட்டில் மேன்மை சொல்லி வாழ்ந்து காட்டியது மனித இனம் தனது என்று தனியே பிரிந்து வரையறை வகுத்து உரிமை கொண்டாடினான் ஒருவன் அவன் துரோகியாய் இனம் காணப்பட வேண்டியவன் என்னது உன்னது இவனது அவனது பிரிப்புக்கள் வேறுபாடுகள் தோன்றி தோற்றுவித்து சின்னாபின்னமாகிப் போனது மனித இனம் இப்பொழுது மீண்டு விழாமலிருக்க வார்த்தைகளைப் பிடித்து நிறுத்தி அழகாய் நாக்குகளை பிரட்டிப்பிரட்டி வேஷமாகிப் போனது மனிதம்
-அங்கவைஓசை உற்பத்தியில் மகிழ்ந்து திளைக்கிறது இன்று
30 /யில்திMல்
ஏய்ரல் 2005
 

வரலாறு நமக்குச் செல்ால்வியவைக
ஆப்கான் மறைமுக யுத்தத்தின் படிப்பினைகள் அநேகமான அமெரிக்கர்கள் கீழ் காணும் வாக்கியம் பற்றி பெரிதும் அறிந் திருப்பதில்லை. “சார்லிவில்சனின் யுத்தம்”. ஆனால் ஆப்கான் யுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்து சிறிதளவு அறிந்திருக்கலாம். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் நெறிபடுத்தலின் கீழ் ஆப்கான் முஜாயிதீன்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்திதுக்கு எதிராக மேற்கொண்ட இரத்தம் தோய்ந்த முகவர் யுத்தத்தின் முலவேர்தான் இந்த "சார்லி வில்சன்" சோவியத் ஆக்கிரமிற்ப்பிற்கு எதிராக 1980ல் மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை
பகிஸ்கரித்தாலும் அதன் உண்மையான பொருள்பட்டது.
டெக்ஸாஸ் மாநிலத்தின் நாடாளுமன்ற ပြိုး
பிரதிநிதியான சார்லிவில்சன் யோசனை யில் உருவான இந்த யுத்தம், சவுதி இ* அரேபியாவின் நிதியுதவியுடனும் பாகிஸ் ': * தான் உளவு பிரிவின் உதவியுடனும் ஆப்கான் முஜாயிதீன்களால் நடத்தப்பட் ; டது. ஜோர்ஜ் கிரில் என்பவர் எழுதிய புத்தகத்தில் சோவியத் படைகளை வாபஸ் பெற வைப்பதிலி சார்லி வில்சனின் பங்களிப்பு, ஆதிக்கம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. கிரில்லின் கூற்றுப்படி சார்லி வில்சனின் மறைமுக யுத்தமே நவீன உலகளாவிய தீவிரவாதத்திற்கான அடித்தளமாக அமைந்துள்ளது. ஏனெனில் ஆப்கான் யுத்தமானது ஆப்கானிஸ்தானியர்களால் மட்டுமன்றி முழு பிரதேசங்களிலிரு ந்தும் வந்த சுதந்திரவாதிகளாலும் நடாத்தப்பட்டது. ரஷ்யர்கள் அறியாவண்ணம் சிஐஏ யுத்தத்திற்காக பெறுமதிமிக்க இராணுவ உபகரண பயிற்சி திட்டமிடல் மற்றும் தொடர்பாடல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. ஆரம்பத்தில் செம்படை, ஆப்கான் யுத்தத்தில் நவீன யுத்த ஆயுதங்கள் மூலம் வெற்றிகளை பெற்றாலும் 80களின் பிற்பகுதிகளில் அமெரிக்கா ரஷ்ய தயாரிப்புகளுக்கு எதிராக தயாரித்த மதிப்பற்ற ஏவுகணைகள் மூலம் முஜாயி தீனர்கள் செம்படையின் படைபலத்தை முடக்குவதில் வெற்றி பெறத் தொடங்கினர். ஜோர்ஜ் கிரில்லின் புத்தகம், ஆப்கான் யுத்தத்தை அமெரிக்காவின் அரசியல் பொருளாதார நோக்குகளில் ஆராய்கின்றபோதும் யுத்தம் பற்றி விரிவாக ஆராய தவறிவிடுகிறது. S. யுத்தம் பற்றி தெரிந்து கொள்ள ரஷ்ய மூலங்களை நோக்க வேண்டும். சோவியத்
/யில்திMல் 31
ஏப்ரல் 2005

Page 18
வாபஸ் ஆனபிறரு அரிட்யோம் போரோவிக் எழுதியTHEHIDDENWAR புத்தகம் ஓர் சிறந்த உதாரணமாகும். ரஷ்ய அரசாங்கம் அதன் மக்களுக்கு ஆப்கானி யுத்தத்தை தாய் நாட்டை பாதுகாக்கும் யுத்தமாக காண்பிக்க முற்பட்டது. ஆப்கான் யுத்ததிற்கு பல்வேறு பட்ட காரணங்கள் கூறப்பட்டன. அவற்றில் சில: 1. ஆப்கானிஸ்த்தானை அமெரிக்க, பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் விழவிடாமல் தவிர்ப்பது, 2. ரஷ்யாவின் ஆயுதங்களை பரிசோதித்து மக்களை செம்படையை ஆதரிக்க செய்வது. 3. இஸ்லாமிய போராளிகளிடம் இருந்து தென் சோவியத்தை பாதுகாப்பது. ஆரம்பத்தில் ரஷ்யர்கள் ஆப்கான் யுத்தத்தை தமது தலையாய கடமையாக கருத முற்பட்டாலும் பின்னர் அந்த யுத்தம் முழுமையான பொய்களால் சோடிக்கப்பட்டதென்பதை உணர தொடங்கினர் என போரோவிக் தனதுநூலில் கூறியுள்ளார். யுத்தம் மட்டுமன்றி சோவியத் மக்களின் மனவலிமையும் குறைந்தது. அவரது நோக்கின் படி அதிகாரிகளின் பொய்யான அறிக்கைகளும் கூட அதைச் செய்தன. போரோவிக் தனது தகவல்களை ஆப்கானிலிருந்த செம்படையினரிடமிருந்தே பெற்றுகொண்டார். அவர்களது அனுபவங்கள் 70களில் அமெரிக்க படையினர் வியட்நாமில் பெற்ற அனுபங்களை பெரும்பாலும் ஒத்திருந்தது. இதைத்தான் அமெரிக்கா எதிர்பார்த்தது. போரோவிக் நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடுகிறார். முதலாவது- யுத்தம் ஆரம்பித்து செம்படை சிறுவெற்றிகளை பெற்றது. இரண்டாவது- யுத்தத்தில் பங்கெடுத்த காரணத்தினால் மேலும் 30,000 வீரர்கள் பங்கேற்றால் யுத்தம் முடிந்துவிடும் என்ற ஊகங்கள். மூன்றாவது 30.000 வீரர்கள் போதாது. இன் னொரு இராணும் எல்லைகளை அடைக்க தேவை, நான்காவது- கூடிய சீக்கிரம் இங்கிருத்து போய்விட வேண்டும். ஒன்பது ஆண்டுகால யுத்தத்தில் 15000 வீரர்கள் உயிரிழந்து 30,000 க்கும் மேற்பட்டோர் ஊனமுற்றனர். 1,000,000க்குக் மேற்பட்ட ஆப்கானிஸ்தானி யர்கள் இறந்தனர். இந்த யுத்தம் தந்தது என்னவெனில் உன்னை கெடுக்க வந்து நானும் கெட்டேன்
என்ற வாசகம் அமெரிக்கர்களுக்கு. čičLITIT
ஏய்ரல் 2005
/யில்திwல்
 
 
 

கருத்து மேடை-0> இ
அடிப்படையில் தாய்மொழிக்கல்வியின் விளைவால் உயர்கல்விக்கான தேடல் தோற்றுப்போகிறது. தாய்மொழிக்கல்வி உயர் கல்வியையோ நல்ல தொழிலையோ பெற்றுத்தர முடியாமல் போவதால் தாய்மொழிக் கல்வி என்பது கேள்விக்குறியே!
(S.ரிசா வத்தளை) இன்றைய சூழலில் தாய்மொழிக்கல்வி மத்தியதர கீழ்தரமக்களின் கல்வி முறை யாகவும் ஆங்கில மொழிக்கல்விமேல்தட்டு மக்களின் கல்விமுறையாகவும் இருப் பதுதான் தாய்மொழிக்கல்வியின் தோல்வித்கும் பின்னடிைவுக்கும் காரணம்.
(Tர்ாஜன் நுவரெலிப்ா) இன்று தாய்மொழிக்கல்வி கற்பது என்பது திட்டமிட்டு நசுக்கப்பட்டு வருகிறது. எவ்வாறு எனின் எமது கல்வி துறையை உலக வங்கியின் கல்வித்திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது தான் காரணம். எவ்வாறு என்றால் தாய்மொழிக்கல்வி தனித்துவத்தையும் ஒரு இனத்தின் அடையளத்தையும் பேணக்கூடியது. அதனை திட்டமிட்டு அழிப்பதற்கு தனியார் ஆங்கிலகல்லூரிகளை இன்று நமது நாடுகளில் கொண்டு வந்தமையே காரணம். (N.மோகன் நீர்வேலி) இன்று வெளிநாடுகளில் வாழக்கூடிய எமது நாட்டு குழந்தைகள் தாய்மொழி கல்வி இல்லாது வாழ்கிறார்கள். இவர்கள் இன்னொரு தலைமுறை தாய்மொழிக் கல்வி அல்லது தாய்மொழியை தெரியாத குழந்தைகளாகவே வாழ்வதற்கு கார ணம் பெற்றோர். ஏன் என்றால் இன்றைய நாகரிகம் என்று எண்ணுகிறார்கள். w (S.செல்வம் லண்டனர்) இன்றைய இளைஞர்கள் கூட தாய்மொழிக்கல்வி கற்பது என்பது நாகரிகக் குறைவாக நினைக்கிறார்கள். இது மட்டுமல்ல. இந்திய பல்கலைகழகங்களின் வருகையும் காரணம். இதைவிடதாய்மொழிக்கல்வி உலகப்புரட்சிக்கு வழிவகுத் தது. உதாரண்ம் பிரஞ்சியப்புரட்சி, ரசியப்புரட்சி , சீனப்புரட்சி , அதுவே எமது சமூகவிடுதலைக்கு வழிவகுக்கும். ஒரு தேசிய இனத்தின் முக்கிய அடையாளமே தாய்மொழியும், தாய்மொழிக்கல்வியும் ஆகும். (A.இக்பால் புத்தளம்) இக் காலப்பகுதியில் தாய்மொழிக் கல்வி மிகவும் அவசியமே. மற்றைய மொழிகள் நாம் வாழும் சூழலுக்கேற்ப தொழில் வாய்புக்களுக்கேற்ப தெரிந்திருப்பது அவசியமே. ஆனால் தாய் மொழியை இழந்து மற்றைய மொழிகள் நம் வாழ்வில் இடம் பெறுவதனால் தாய் மொழி அழிந்து விடும் நிலையை உருவாக்கி விடும். தாய் மொழியை தமிழாகக் கொண்ட ஒரு இளைஞனி ஹிந்தி பாடலை ஆங்கிலத்தில் எழுதிவைத்தும் பாடுகிறநிலை மாறவேண்டுமாயின் தாய்மொழிக் கல்வி அவசியமே. (S.இளங்கோ யாழ்ப்பாணம்)
öüğğSLae)L = 08 பல்கலைக் கழகங்களி அடிக்கடி இழுத்து மூடப்படுதல் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்
கருத்து மேடைக்கான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.கருத்துகளைத் தவறாமல் எழுதி அனுப்புங்கள்.
whagav 33
grredo 2005

Page 19
இதழாசிரியர் அவர்களுக்கு பயில் நிலம் வாசகர்களில் நானும் ஒருவன். ஒரு சிற்றிதழ் என்பது வெறும் கேலிச்சித்திரங்கள், சினிமா, குட்டிகதைகள் என்று சாதாரண ஒரு யதார்த்தை மீறி ஒன்று சேர்த்து தருகின்ற புதுமை சில இதழ்களுக்கு உண்டு. அவ்வகையில் பயில் நிலமும் இந்த வகையில் சேரும்.
பெருகி வரும் வாசகர் மத்தியில் பயில் நிலத்தோடு நானும் சேர்ந்திருக்கிறேன் என்கிறபோது ஒரு வித மகிழ்ச்சி என்னுள் எனவே எனக்குள். எழுந்ததை கவிதை வடிவில் முதன் முதலில் எழுதியுள்ளேன். தரம் இருப்பின் பிரசுரிப்பிர்கள் என எண்ணுகிறேன்!
நன்றியுடன் உங்கள் வாசகர்ச.சீலன் கொழும்பு-06
கடந்த இதழில் கவிதைகள் மிகவும் வேறுபாடான கோணங்களுடன் காணக்கிடைந்தது.
கடலுலக நண்பர்கட்கு கால்நடைகவின் கடிதம்' அருமை. தொடர்ந்தும் வித்தியாசமான
கவிதை முயற்சிகளை பயில் நிலம் முன்னெடுக்கும் என நம்புகிறேன்.
(R.ஜாசப் -கம்பளை)
தயானந்தாவின் பேட்டி நேர்த்தியில்லாமல் இருந்ததை அவதானிக்க முடிந்தது. உங்கள் 7வது இதழ், காலம் தாழ்த்தியே கைகளுக்குக்கிடைத்தது. எங்கள் பகுதிகளுக்கு எப்போது பயில்நிலம் குழு வரும் என அறியத்தாருங்கள்.
(செ.ராதா - யாழ் பிரதான வீதி')
வழமை போலவே பின்னட்டைக் கவிதையும் பாட்டும் மிக அழகு. அப்படியே இரு பயில்நிலமே. தொடரட்டும் உம் பணி.
(ச.சசிதரன் - தலவாக்கல)
് ഖഞ്ഞുണ്
34 vിഴിv) =ങ്ക് ഉrrഭ2005
 
 

9 66 மார்கழியில் என் சிறைக் கூண்டை நள்ளிரவில் ஒரு உறைகுளிர் அறையோரும் பகலில் ஒரு வெதுய்பகத்தோடும் ஒய்பிடுவேன்.
இய்போதுவெய்யிற்காலம் என்பதால் இதை நரகத்தோடு ஒப்பிடுகிறேன் எனினும் இதன் சிறிய அளவு கருதி இதை ஒரு உலையோடு ஒய்பிடுகிறேன்.
இது ஒரு சீறும் உலை :
எஃகைய் பதனிடுகிறது.
இது ஆறுதல் தரும் ஒரு உவமேயம்.
ஹோலே மரியா விஹோன் பிலிப்பின்ஸ் ( நன்றி-மறப்பதற்கு அழைப்பு -சி.சிவசேகரம்)
துப்பாக்கியின் தெ
O. O. O. O O O O என்னிடம் சிறிய நீலவான மொன்றிருந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் அதை என்மீது விழுத்தினர். சிறிய இருணிட நிறக் குருதியாறொன்றும் , தேன் கனவுப் பொதியொன்றும் சேகரித்த புத்தகங்களும் என்னிடம் இருந்தன. அவர்கள் அவற்றையெல்லாம் கொள்ளையடித்தனர்.
ஆயினும் அவர்கள் என் சருமத்தை மாற்றி எண்முகத்தைச் சிதைக்க வந்தபோது Režis: நான் வெண்பனியும் இடியொலியும் பூண்டு s என் தாயகத்தைத் தோளிற் சுமந்து శత துப்பாக்கியின் தெருவில் இறங்கினேன்.
-றபீக் ஸபி தென் குர்திஸ்தான்-(நன்றி-மறப்பதற்கு அழைப்பு-சி.சிவசேகரம்)
/யில்திMல் 35
grİTesto 2005

Page 20
Micro Technology System (Pvt) Ltd.
Brond-new 8. Used Computer Sales Computer Accessories Soles Computer Service & MointenOnce Web page Designing
Networking PABX System / Intercom System Telephone wire installation Electronic Equipment Repairing Internet & Emoil Services Software Developing Desktop Publishing
Complete IT Service Providers
d0.
d
Ko
4)
0.
0.
Х•
Ko
Ko
0.
X
0
()
Ko
K
Х•
54, PomonkOdd LOne, Colombo 06, MObile: 0777-378556 Email: SalesGmicrotecsyS.COm, Vsyothi(Ghofmail.Com Website: microteCSyS,COm
36 /ിഴിv) =ങ്ക് ഉrIrൺ 2005
 

鄞 斑 | 8 | 5 || 9求
பெ
ாபிசேச

Page 21
அந்த
@ಶಿಕ9U# Uföðು
呜U函函Dā座y包苏函矿万7雳