கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழி 1984.04

Page 1


Page 2

*விடுதலைக்கு மகளிரெல்லோரும் வேட்கை கொண்டனம்.' -பாரதி
நட்பு: 1 மட்ல்: 1
என் இனிய தோழி,
நீ எப்போதாவது நம் நிலைபற்றிச் சிந்தித்ததுண்டா?
இவ்வளவு காலமும் நாமிருவரும் நிஜத்தினை மறந்து கற்பனை உலகில் வாழ்ந்துவிட்டோம். இன்று யதார்த்தத்தினுள் நுழை யும் போது தான் நாம் இருளினுள்ளே இருத்தப்பட்டிருப் பது புரிகிறது. இந்தப்பெண் அடிமைத்தனமான சமூக, பொருளாதார கொடுமை மிகு கோர இருளே நிச் ச யம் அகற்றியே தீர வேண்டும்.
யார் இந்த இருளை அகற்ற ஒளியேற்றுவது?
தோழி, நீயும் தானும் முயல்வோம்; எமது முயற்சியின் வெற்றிக்குத் துணை நிற்க நமது தோழிகளையும் அழைத்துக் கொள்வோம். இன்னுமொன்றுகடந்த காலங்களில் நாம்படைத்த நசிவு இலக்கியங்களும், வியாபார எழுத்துக்களும், கற்பணு வாதங்களும் நம்  ைம நிறையவே ஏமாற்றிவிட்டன. இன்றிலிருந்து எம் உண்மை நிலையினைப்பற்றிச் சிந்திப்போம். சிந்தனையின் வெளிப்பாடு ஆரோக்கியமான யதார்த்த இலக்கியமாய்ப் பிரகாசிக்கட்டும். இதுபற்றி உனது கருத்து என்ன?
எழுது விமர்சி உனது நண்பனிடமும் நம்சிந்தனைபற்றிக் கூறு. அவர்களிட மிருந்து கருத்துக்களை எதிர்பார்ப்பதாகவும் கூறு. வேறென்ன? மீண்டும் சந்திப்போம்.
உன்
.தோழி. சித்திரை 1984

Page 3
பெண் இனமே...!
జీడిపపడవ
ஈழமகள்
உன் உறங்கு காலம்
முடிவுறும் வேளை இதோLÉls 9G59)di'...........
"அடுக்களை அரசி? "கற்புத் தெய்வம்" “Gup6igóluorr6ito, etc, etc எல்லாம் வெறும் கனவுப் பொன் விலங்குகள்! சுயநலக்காரர் உன்மேற் குட்டிய மாயமுட் கிரீடங்கள்!
உன் பொறுப்பைத் தட்டிக் கழிக்க
"மெல்லியலாள்" என உன் மேற் போர்த்தப்பட்ட போர்வையைக் காட்டி அதனுள் ஒளியாதே.
கனவுகள் வேஷங்களைக் கலைத்து விரைவில் விழித்தெழு, நிஜத்தை எதிர்கொள் நின் பங்களிப்பைச் செய்!
*seimma
The proletariet cannot achieve complete liberty until it has won complete liberty for women. -Lenin
(பெண்களின் விடுதலைக்கான போரில் வெற்றி பெருத பாட் டாளி வர்க்கம் பூரண விடுதலையைப் பெற்றுவிடமுடியாது.
லெனின்)
(85 ITA 3

வெள்ளை இருட்டில் இருந்து.
இன்குலாப்
மெல்ல இசைக்கும் கவிதைகளும் - கர்தில் ரகசியம் முணக்கும் ஜிமிக்கிகளும் சொல்லாத செய்தியைச் சொல்கிறேன் - உங்கள் சுதந்திரச் செய்தி சொல்கின்றேன்.
நீங்கள் கேட்ட கவிதைகளில் உம்மை நில வென்ருர் வாச மலரென்ஞர் நீங்கள்
சமூகம் என்ற பரந்த வெளிகளைச் சந்திக்காத நிலவுகளோ? சமையல் அறையில் மண்டும் புகையில் சாம்பிய வேர்வை மலர் குலமோ?
கிளிகள் என்றும் ஆடும் மயில்கள் என்றும் - நீங்கள் கேட்ட வருணனை கொஞ்சங்களோ? கிளைகளும் பச்சை இலை விரிக்கும். ஒ கிளிகளே உங்களின் சிறகெங்கே?
கன்னி லைலாவை ஒட்டகத்தில் - அடிமையாய்க் கடத்திய கனவுகள் கழிந்த கதை ஏகாதிபத்திய விமானத்தை லைலா கடத்தும் கதைதான் இன்றின் கதை
இதயம் குமுறும் நீக்ரோ - கையில் ஏந்தும் கறுப்புத் துப்பாக்கியால் ஆஞ்சலா டேவிஸ் புகைகின்ருள் - வெள்ளை ஆதிக்க முகத்தில் உமிழ்கின்ருள்.
சுடரும் நட்சத்திர உலகங்களே! பூமியின் தூதாக ஒரு பெண் வந்ததுண்டோ?
g - . w R & S. தாய்மை பிரபஞ்ச வெளிகளில் - பெண்மையின் சாதனை வரைந்தவள் வாலண்டின!
தோழி 3

Page 4
பண்ணை அடிமை நுகத்தடியில் - உழன்ற பழைய சீனப் புதரியர்தம் கண்ணில் எழுந்த கொழுந்துகளில் - பழக் கட்டுகள் சாம்பலாய் உதிர்கின்றன.
இறக்கை வெட்டிய கிளிகளாய் நீங்கள்! எத்தனை காலம் இக் கூண்டுக்குள்ளே!
வாயில்லா வெறும் பூச்சிகளாய் - நிஜ வாழ்க்கையில் பெண்ணை மதிப்பவர்கள் கோயில் சிலைகளாய்ப் பெண்ணை வைத்து - நிதம் கும்பிடும் சடங்கினில் குறைச்சலுண்டோ?
தாமரைப் பூவில் சரஸ்வதியாய் - பெண்ணை தாங்கள் மதிப்பதாய்க் கதை அளப்பர். தாமரைப் பூவினில் வாழாத - சேரிச் சரசுகள் எத்தனை பேர் படித்தார்?
NNNNNMMMMMMMMMMMMMMMMMMMNew
விருப்பம்
அந்த வீராங்கனைகள் கருக்கலில் பயிற்சி மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய தூய புஷ்பங்கள் சீனுவின் புத்திரிகள்! இவர்களின் புதுமையான விருப்பம் புடவைகள் அல்ல போர்க்களச் சீருடைகள்!
மாவோ (*சோஷலிசக் கவிதைகள் தொகுப்பிலிருந்து") aAAAAAAAAAAAAAAAAAAAAAAA
கோழி 4

பெண் விடுதலையும் எமது சமூகமும்
வஜ்ரா
பெண் விடுதலை என்ற தொடர் இன்று எமது சமூகத்தில் பரவலாக வழங்கி வருகிறது. அரசியல்வாதிகள் தொடக்கம் சமூக சீர்திருத்தம் பேசுவோர் வரை இத் தொடர் பல்வேறுபட்டோரா லும் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமன்றிப் பெண் விடுதலை குறித்து வெவ்வேறு கருத்துக்களையும் சில சமயங்களில் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்ட கருத் துக்களையும் கேட்க முடிகிறது. பெண் விடுதலையை முற்றிலும் ஆத ரிப்பவரைக் காணும் அதே வேளையில் இக் கருத்தினை மூர்க்கத்தன மாக எதிர்ப்பவரையும் இன்று காண்கிருேம். இந் நிலையானது பெண் விடுதலை என்ற கருத்தினை எமது சமூகம் சரிவரப் புரிய வும், ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே பெண்கள், இளைஞர் மத்தியில் பெண் விடுதலை குறித்து முன்னெப்போதும் இல்லாத அளவு பேசப்படும் இவ் வேளையில் பெண் விடுதலை குறித்து ஆழமாகச் சிந்திப்பதும், தெளிவதும் மிக அத்தியாவசியமான சமூகத் தேவையாகும்.
இன்று எமது சமூகத்தில் பெண் விடுதலை குறித்து நிலவும் கருத்துக்களைப் பின்வருமாறு வகுத்துக் கூறலாம்.
(1) பெண் விடுதலை என்பது சகல துறைகளிலும் ஆண்க களுக்குள்ள எல்லா உரிமைகளையும் பெறுதல். குடும்ப, சமூக, அரசியல் நிறுவனங்களில் ஆண்களைப் போன்று நடத்தப்படுதலும் வேறுபாடின்றி நோக்கப்படுதலும் (தொழில் சமவாய்ப்பு, சமவேலைக்குச் சமசம்பளம் போன்றவை) இக் கருத்துக்கள் பெண் விடுதலைபேசும் பெண்களிடையே அதிகம் நிலவுகின்றது.
(2) நெருக்கடி மிகுந்த அரசியற் போராட்ட காலகட்டங் களில் அப் போராட்டங்களிற் பங்கு பற்றுதலும், தேச நிர்மாணத்திற்காக உழைத்தலும்.
(3) குடும்பம், சமூகம் போன்ற நிறுவனங்களைக் கருத்திற் கொள்ளாத, அவற்றிலிருந்து விலகிய, எத்தகைய
தோழி 5

Page 5
ஒழுக்க விதிகளுக்கும் உட்படாத வாழ்க்கை நோக்கம் கட்டற்ற ஆண் - பெண் உறவு, சுதந்திரக் காதல் போன்றவையே பெண் விடுதலையின் நோக்கம் என இவ்வாறு கூறுவோர் கருதுகின்றனர்.
(4) பெண் விடுதலைப் போராட்டமென்பது சாராம்சத்தில் ஆணை மறுதலிப்பது (anti - male) ஆண்களுக்கெதிரா னது. தனியே பெண்களது போராட்டங்களாற் பெற வேண்டியது.
(5) இன்று பெண்களுக்கு உயர் கல்வி வாய்ப்புக்கள், உயர் பதவி வசதிகள், தேர்தலில் வாக்களிக்கும் உரிமை, சட்டப் படியான திருமண சுதந்திர ம் ஆகியவை கிடைத்துள்ளன. பெண்கள் ஏற்கனவே விடுதலை அடைந்துவிட்டனர். இந்நிலையில் பெண் விடுதலை பற் றிப் பேசுவது தேவையற்றதாகும்.
(8) பெண் விடுதலை எமது சமூகத்துக்கும், நாட்டுக்கும் புறம்பான பொருந்தாத ஒரு கொள்கையாகும். மேற் குலகால் இங்கு திணிக்கப்பட்டது.
(7) பெண் விடுதலை என்ற கருத்தோட்டம் உயர் வர்க்கத் தாரது கருத்து நிலையாகும். அது பெண்களை அவர் களது சமூகம், பண்பாடு, சமயம் ஆகியவற்றிலிருந் தும் குடும்பப் பொறுப்புக்கள், கடமைகளிலிருந்தும் அன்னியப்படுத்தி விடுகிறது. இது மட்டுமல்லாமல் தேசிய விடுதலைப் போராட்டம், சோசலிசப் போராட் டம் போன்றவற்றிலிருந்தும் பெண்களைத் திசைதிருப்பி விடுகிறது.
மேற்கூறிய கருத்துக்கள் இன்று பொதுவாக எமது சமூகத் தில் காணப்படுவன. இவற்றில் ஒன்றுகூட பெண் விடுதல்ை என்ற கருத்தை முழுமையாக அர்த்தப்படுத்தவில்லை. மாருகச் சில தவருனவை, பெண் விடுதலைக் கருத்தோட்டத்தைத் தவருன வழியில் அறிமுகம் செய்பவை, கொச்சைப்படுத்துபவை. சிலவோ பெண் விடுதலையின் சில அம்சங்களை மட்டுமே தொடுபவை. 7, 6, 5, 4 ஆகியவை முற்றிலும் தவருனவையாகும். குறிப்பாக ஐந்தாவது கருத்தை எடுத்துக் கொள்வோம். சட்டப்படி சம உரிமை உள்ளவளாகப் பெண் கணிக்கப்பட்ட போதும் இது நடைமுறையில் சாத்தியமாவதில்லை. சம கல்வி வாய்ப்பைப் பெற்றபோதும் திட்டமிடுதல், தீர்மானமெடுத்தல் போன்ற
தோழி 6

அதிகாரங்களையுடைய பதவிகளைப் பெண்கள் வகிப்பது மிகக் குறைவாகவுள்ளது. தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றிருந்த போதும், பெண்களின் அரசியற் பங்கு பற்றலும் மிக மிகக் குறைவே. எனவே சட்ட ரீதியாகச் சமத்துவம் நிலவுவதுபோன்று தென்படினும், பெண்ணின் அன்ருட வாழ்க்கையனுபவங்களி லும் சமத்துவமின்மையையும். சுரண்டலையும் துலக்கமாகக் காணலாம். ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் வேறு பட்ட அளவுகோல்களையும். ஒழுக்க விதிகளையும் பெற்ருே ர், கைக்கொள்கின்றனர். இச் சூழலில் வளரும் பெண் சட்டரீதி யான வாய்ப்புகளும், உரிமைகளும் பெற்றிருப்பினும் தாழ்வு மனப்பான்மையுடனும் அடக்கப்படும் உணர்வுடனும் வாழ்கி ருள். பெண் பலம் குறைந்தவள், அபலை ஆணிலும் தாழ்ந்தவள் என்ற எண்ணம் அவளிடம் நிலவுகின்றது. இத்தகைய பெண் சமவாய்ப்புகளைப் பயன்படுத்துவது எவ்வாறு ?
எமது சமூகத்தின் பொது வாழ்க்கையிலும் பெண் பங்கு கொள்வது குறைவாகும். செய்யும் தொழிலைத் தவிர கலை , அரசியல், சமூக இயக்கங்கள் போன்றவற்றில் பெண்கள் ஈடுபாடு மிகக் குறைவாகும். பெண்களுக்கு இவற்றில் ஈடுபாடு இருப்பி னும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இத்தகைய துறைகளில் ஈடுபடுவதும் பெண்களுடைய இயல்புக்கு மாரு னது என்றே இன்றும் எமது சமூகம் கணிக்கிறது. " உயரப் பறந்தா லும் ஊர்க்குருவி ப்ருந்தாகுமா? என்றும், “பெண் புத்தி பின் புத்தி என்றும் கூறி பெண்ணுடைய அறிவும், ஆர்வமும் அடக் கப்படுகின்றன. இந் நிலையில் மத்தியதர வர்க்கத்தாரிடையே பெண்கள் விடுதலை அடைந்துவிட்டனர் என்ற சுய திருப்தி மனுேபாவம் நிலவுவது பொருத்தமற்றதாகும்.
இத்தகைய ஒரு விளக்கத்துடன் பார்க்கும்போது பெண் விடுதலை பற்றிய சரியான கருத்து எனத் தோற்றம் தருகின்ற, மேற்குறிப்பிடப்பட்ட முதலாவது கருத்திலும் சில குறைபாடுகள் உள்ளன. சம உரிமைப் போராட்டங்கள், பெண் விடுதலையின் உட் கூறுகள் தாம். ஆனல் அவை பெண் விடுதலையை ஒரு எல்லை வரை தாம் எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவை. ஏனெ னில் சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஏற்றுக்கொள் ளப்படுகின்ற சமத்துவம் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவ தில்லை. இது மாத்திரமன்றிப் பெண்களே இது பற்றிச் சிந்திப் பதுமில்லை. ஒரு "மனிதப் பிறவி என்றில்லாமல் பால் வேறு பாட்டைக் கொண்டு கடமைகளும், உரிமைகளும், மதிப்பீடுக ளும் அமைந்திருக்கும் சமூகத்தில் சமத்துவ நிலை மலர யுகங்க
தோழி 7

Page 6
ளாகலாம். (ஆனல் அதற்காகச் செயற்பாட்டை ஒத்திவைப்ப தன்று) எனவே சம உரிமைப் போராட்டங்களுக்கும் மேலாக மனித உரிமைகளை அழுத்தும் வகையில் பெண் விடுதலைக் கருத் தோட்டம் வலுவடைய வேண்டும். இது மட்டுமல்ல இரண் டாவது கருத்தும் முற்றிலும் முழுமையானதல்ல. உதாரண மாக, இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது பெண் விடுதலை குறித்து முன்பில்லாத வகையில் பேசப்பட்டது. ராஜா ராம், மோகன்ராய் போன்ற சமய, சமூக சீர்திருத்தவாதிகளி லிருந்து காந்திபோன்ற அரசியற் தலைவர்கள் வரை இக்கருத்தை மிக மிக அழுத்திக் கூறினர். ஆனல் இந்திய சுதந்திரத்தின் பின் இக்கருத்தின் முக்கியத்துவம் திடீரெனக் குறைந்தது. பெண்க ளின் முன்னேற்றம் அவர்கள் பணிபற்றிய நோக்குகளும், திட் டங்களும் வேகமிழந்தன. ஒரு குறிப்பிட்ட தேவைக்காகப் பெண் கள் விடுதலை பேசியமையாலேயே இந்நிலை ஏற்பட்டது. எனவே இத்தகைய அபாயங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டியதும் அவ சியமாகும். தொடர்ச்சியாகப் பெண்களை விழிப்புறச் செய்வ தென்பதும், ஒழுங்கமைப்பதென்பதும் இங்கு முக்கியமானதா கும். இல்லாவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப நேரி டலாம்.
மூன்றுவது, நான்காவது, ஆருவது, ஏழாவது கருத்துக்கள் முற்றிலும் தவமுனதாகும். குறிப்பாக மூன்ருவது கருத்து பெண் விடுதலையை எமது சமூகத்தில் ஆதரிக்காதோராலும், பூர்ஷ்வா மனப்பான்மை கொண்டோராலும் பிரபல்யப்படுத்தப்படுகின் றன. மேற்குலகில் முதலாளித்துவத்தின் சீரழிந்த கலாச்சார எண்ணங்களால் பாதிக்கப்பட்டோர் பெண் விடுதலையை இவ் வாறு கொச்சைப்படுத்துகின்றனர். எமது சூழலில் இது முற்றி லும் தவருனதாகும். இதே போன்று பெண் விடுதலை ஆண்க ளுக்கெதிரானது என்பதும், தனிப்படப் பெண்கள் சம்பந்தப் பட்டதென்பதும் தவருனதாகும். இது பற்றிப் பிறிதோர் சந் தர்ப்பத்தில் பேசலாம். பெண் விடுதலை பேசுவது எமது கலாச் சாரத்துக்கு அன்னியமானது என்பது முற்றிலும் நிராகரிக்கப் படவேண்டியதாகும். இது சாதி முறைக்கெதிரான போராட்டம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என்று கூறுவதை ஒத்தது*
பெண் விடுதலைப் பேராட்டங்களும், இயக்கங்களும் தேசிய விடுதலைப் போராட்டம், சோசலிசப் போராட்டம் போன்ற வற்றிலிருந்து மக்களைத்திசை திருப்பப் பயன்படுகின்றன என்ப தும் தவழுனதாகும். உண்மையில் தேசிய விடுதலை, சோசலிச நிர்மாணம் ஆகியவற்றுடன் சமாந்தரமாக ஒரே நேரத்தில்
தோழி 8

பெண் விடுதலையும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியதா கும். (சோசலிசம் மலர்ந்த பின்னரே பெண் விடுதலை சாத்தியம் அதுவரை இப் போராட்டங்களால் எதுவித பயனுமில்லை எனச் சிலர் கூறுவர். இவர்கள் நிகழ்கால யதார்த்தம் பற்றிச் சிந்திக் காத, வரலாற்றைப் புரிந்து கொள்ளாத, நிலையியல் வாதிகள் என்று தான் கூறவேண்டும்.)
பெண் விடுதலை பற்றிய மேற்கூறிய கருத்துக்களை விமர்சிக் கும்போது பெண் விடுதலை பற்றிய தெளிவான கருத்துக்களை முன் வைத்தல் எமது கடமையாகும். பெண் விடுதலை பற்றிய எமது கருத்தோட்டங்களை வகுத்துக் கொள்ளும்போது இன்று இலங்கையில் தமிழ் பெண்களின் யதார்த்த நிலையை அடிப்ப டையாகக் கொள்ளுதல் வேண்டும்.
தமிழ் பெண்கள் என்னும்போது அவர்களிடையே உள்ள மத கலாசார, வர்க்க வேறுபாடுகளையும் நாம் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். இதுவும் ஒரு முக்கியமான அம்சமா கும், ஏனெனில் இந்த வேறுபாடுகளுக்கேற்பப் பெண்கள் எதிர் கொள்ளும் அடக்கு முறைகளும், சுரண்டல் வடிவங்களும் வேறு படுவதாகும். பெருந்தோட்டத் துறையிலும், தொழிற்சாலையி லும், விவசாய நிலங்களிலும் வேலைசெய்யும் அடிமட்டத் தொழி லாளர் வர்க்கத்துப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அடக்கு முறைகளும், அவற்றின் தன்மைகளும் வேறு. ஆசிரியர், எழுது வினைஞர், தாதிகள் போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ள கீழ் மத்திய தர வர்க்கத்துப் பெண்களின் பிரச்சனைகள் குடும் பத்தையே தமது இறுக்கமான எல்லையாகக் கொண்டு வீ ட் டு வேலைகளில் காலம் முழுவதும் உழலும் பெண்களின் பிரச்சனை கள் வேறு. இவை தவிர சீதனம், பெண்ணுடைய சுதந்திரமான நடமாட்டத்திற்கிருக்கும் தடைகள். பெண்களைப் பாலுறவுப் பொருளாக எண்ணுதல் போன்றபொதுவான நிலைமைகளால் பெண்கள் யாவரும் பாதிக்கப்படுகின்றனர்.
எமது சமூகத்தின் பிரத்தியேகமான அரசியற், சமூகச்குழல் கள் பெண்களது பிரச்சனைகளையும், துன்பங்களையும் மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. பெண் தாயாகவும், சகோதரியாக வும், மனைவியாகவும் வகிக்கும் பாத்திரம் எ மது சமூகத்தில் பெரிதாகப் பாராட்டப்படுவது. அத்தகையோர் இன்றைய நிலை யில் அடையும் பயமும், பீதியும் அவலமும் மிகப் பெரியதா கும். இது மட்டுமல்ல நாளுக்கு நாள் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுகள் பெண்ணை நேரடியாகக் கொடூரமாகத் தாக்குகின் றன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இப்பிரச்சனை பொதுவான
தோழி 9

Page 7
தாக இருப்பினும் பெண்கள் மிக மோசமாகப் பாதிப்புறுகின்ற னர். உயரும் செலவைக் கட்டுப்படுத்த சிக்கனத்தைக் கடைப்
பிடிக்கும் பெண் தனது உடலுழைப்பை மேலும் இழக்கிருள்.
தனது உணவைக் கட்டுப்படுத்தி உடல் வலுவை இழக்கிருள்.
எமது சமூகத்தில் பெண் செய்யும் வீட்டூழியமானது அவளது
உழைப்பாகக் கருதப்படுவதில்லை. மாருக அவளது கடமையாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் சிக்கனம் என்பது மேலும்மேலும் பெண்ணுடைய உழைப்பைச் சுரண்டும் நிலைமைக்கே இட்டுச் செல்கிறது.
தமிழர் சமூகத்தில் மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்களின் நிலைமையே மிக மோசமாகும். மலை நாட் டுத் தோட்டங்களில் வேலை செய்வோரில் பாதிக்கு மேற்பட் டோர் பெண்களே. தேயிலைக் கொழுந்தெடுக்கும் அவர் களது வே லை, செய்திறனற்ற உடலுழைப்பாகவே (unskil manual Work) கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு தோட்டங்களில் வேலை செய்யும் ஆண்களைவிடக் குறைந்த ஊதியமே கிடைக்கின்றது. இலங்கையிலே மிகக் குறைந்த ஊதியம் பெறுபவள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தமிழ்ப் பெண்ணே. எத்தகைய தொழிலாளர் நலவசதியுமில்லாமல் இவர்கள் உழைக்கின்றனர். இதுவுமன்றி அடிக்கடி இலங்கையில் இடம்பெறும் இன வன் செயல்கள் இவர்களை மிகக் கொடுமையாகப் பாதிக்கின்றன. தோட்டங்களில் மிகக் கொடூரமாகச் சுரண்டப்படும் இப் பெண் கள் தம் பாரம்பரிய வேலைகளான சமையல், குழந்தை பரா மரிப்பு, முதியோர் பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் போ ன் ற வற்றையும் செய்ய வேண்டியுள்ளது. இவை அவர்களது உழைப் பாகக் கருதப்படுவதில்லை. ஆயினும் இப் பெண்கள் விரைவில் தம் இளமையையும், வலிமையையும் இழந்து முதுமையிலும் நோயிலும் வாடுவதற்கு வழி செய்கின்றன. ',
வடக்கிலும், கிழக்கிலும் பயிர் த் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் ஆண்களைவிடக் குறைந்த நாட் கூலியைப் பெறுகின்றனர். இது தவிர அவர்கள் அதிக வேலை செய்ய வேண்டுமென எதிர்பார்த்தல், கு  ைற ந் த உணவு வழங்குதல், போ ன் ற நிலைமைகளால் துன்புறுகின்றனர். நெசவாலைகள், சவர்க்காரம், கற்பூரம், ஊதுபத்தி, விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்ற வற்றில் வேலை செய்யும் பெண்ணின் நிலையும் மிக அவல ம் வாய்ந்ததாகும். அவர்களது சம்பள விபரம், வேலைத்தலத்தின் நிலவரம், அவர்களுக்குரிய விடுமுறைகள், சலுகைகள் போன்
தோழி 10

றவை பற்றிய புள்ளி விபரங்களைத் திரட்டிப் பார்க்கும் எவரும் இலகுவில் அதிர்ச்சியடையக்கூடும். இத்தகைய கொடூரமான சுரண்டல் முறைக்கு இப் பெண்கள் உட்பட்டுள்ளார்கள். இவர் கள் தவிர, கந்தோர்களில் பல் வ  ைக யா ன தொழில்களையும் வகிக்கும் பெண்கள். பெண்கள் என்பதால் சில விசேடமான பிரச்சனைகளை எதிர் நோக்குகிருர்கள். குடும்பப் பெண்களாக வெளி வேலையற்று வாழும் பெண்களின் எண்ணிக்கையும் கணிச மானதாகும். இவர்கள் செய்கின்ற எந்த ஒரு வீடு சார்ந்த வே லை யும் ஊதியத்துக்குரிய உழைப்பாகக் கருதப்படுவதில்லை. பெரும் பாலான முஸ்லீம் பெண்களும் இத்தகைய நிலையிலேயே காணப்படுகின்றனர்.
இது வரை எமது பெண்களின் நிலை - பிரச்சனை என விப ரிக்க முயன்ற அம்சங்களையே அடிப்படையாக வைத்துப் பெண் விடுதலை பற்றிய எமது கருத்துக்களை வகுத்துக் கொள்ள ல் வேண்டும்.
1. இன்றைய சமூகத்தில் மனித ஜீவி என்ற வகையில் யாவ ருக்கும் இருக்கும் உரிமைகளைப் பெண்களும் பெறுதல். 2. எமது சமூகத்தில் காலம் காலமாகப் பெண் பற்றி இருந்து வரும் இரண்டாம்பட்ச மனப்பான்மையிலி ருந்து விடுபடல். 3. சுரண்டலற்ற சமூக விடுதலைக்காக உழைத்தல் அந்த உழைப்பில் தமது வளர்ச்சியையும் விடுதலையையும் எய்துதல். இந்த மூன்று அம்சங்களும் மேலும் விரிவாக்கவும் தெளி வாக்கவும் வேண்டியவையாகும். அவ்வாறு செய்யும் பொழுதே பெண் விடுதலை தொடர்பாக நடை முறை ரீதியில் ஏற்படும் பிரச்சனைகளை இ ன ம் காணவும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியவும் முடியும்.
சுகத்தை ஆணுக்கும் சோகத்தைப் பெண்ணுக்குமாய்ப் பங்கு பிரித்திருந்தார்கள். அபலை என்பதற்கு ஆண்பாற் சொல்லில்லை.
- கந்தர்வன்,
தோழி 11

Page 8
அம்மாவுக்கு மகள் எழுதிய கடிதம்
வ. ஐ. ச. ஜெயபாலன்
நீ சிந்தும் கண்ணிருக்கு வலிமையில்லை அம்மா, ஏனெனில் t எனது தோழர்கள் சிந்துவதிரத்தம். உனது அழுகைக்கு ஒவி இல்லை அம்மா ஏனெனில் எனது அயலெல்லாம் மரண ஒலம். உனது வாக்குறுதிக்குப் பெறுமதியில்லையம்மா ஏனெனில் கொழுத்த சீதனம், பேணு மட்டும் ஏந்தும் மாப்பிளை கரிபடிந்த பரம்பரை அகப்பை எனது உயிரைக் காக்குமோ இவையெல்லாம். இன்று வேண்டுவதெல்லாம் ஊரின் தோழமை இன்று வேண்டுவதெல்லாம் எனக்கோர் ஆயுதம் போலிக் கிடுகு வேலிகள் யாவும் என்றே சரிந்தன,
அவற்றின் கீழே y நரைத்த தலையும் பரம்பரைப் பெருமையுமாக செல்விகளாக எத்தனை பெண்கள் நசிந்துபோய், இப்படி நானும் வீழ்வேனென்று நினைந்தனையோ? பொன்முலாமிட்ட தமிழரின் கவுரவமெல்லாம் கறுத்துப் போனது அம்மா, ஒவ்வோர் வீட்டு ரொட்டித்துண்டிலும் பெண்களின் வியர்வை; தோட்ட நிலங்களில் நமது வியர்வை, தொழிலகங்களிலே நமது வியர்வை; தடைகளை உடைத்துப் போர்க் கோலத்துடன் ஊர்வலம் போகும் கொதிப்பில் எல்லாம் பாதிக்குமேலே பெண்கள் அம்மா. ஊரெல்லாம் கொடியவர் எரியிடும் காலம் ஒலைக் குடிசையுள் பதுங்கக் கூடுமோ? எதிரியிடத்தே நாம் எதனைக் கேட்டோம்?
தோழி 12

ஒன்றுமேயில்லை. ‘கைது செய்த என் தோழனை விடுக, ஊருக்குத் திரும்புக" - என்ருேம்
வீட்டிலும் வெளியிலும் இன்று நாங்கள்,
வீதியில் எப்படி வெறி பிடித்த எதிரியைக் குந்தி இருக்க விடுவது? இன்று வேண்டுவதெல்லாம் ஊரின் தோழமை, இன்று வேண்டுவதெல்லாம் போரிட ஆயுதம். அண்ணன் ஜெர்மனி சென்றதும் நான் பல்கலைக் கழகம் செல்வதும் பொய்யென உனக்குத் தெரியுமா அம்மா? இன்று நாமெல்லாம் விரிவுரை எடுக்கும் காலம். உன்னல் எம்மைக் காட்டிக் கொடுப்பது இயலுமா அம்மா? . உன் கண்ணிரை விடவும் தடித்தது அம்மா தோழரின் இரத்தம்.
----namamooooO Ooommmmmm-----
நீங்கள் சிரித்தால் முத்துதிரும் என்றவர்கள் அழுதால் என்ன உதிரும் என்று சொல்ல மறந்தார்கள். அடிக்கடி தேய்வதால்தான் உங்களை
நிலவென்றர்கள்.
- கந்தர்வன்
ஆடவும் பாடவும் கேளிக்கைக்காகவே நீங்கள் மேடைக்கு வந்தீர்கள் இப்போதுதான் கோரிக்கைக்காக
வந்தீர்கள்.
- கந்தர்வன்
јъwм
தோழி 13

Page 9
‘வாழா வெட்டி’
அருண் விஜயராணி
“அவன்தான் ஒவ்வீஸிற்குப் போட்டானே வாசல்ல நிண்டு கொண்டு என்ன செய்யிருய்? கல்யாணம் கட்டி மூன்று வருஷ மாகப் போகுது. இன்னும் அவன் போகேக்கிள்ளை நிண்டு வழி யனுப்ப வேண்டுமாக்கும்'
வீணு திரும்பிப் பார்த்தாள்.
அவள் கேட்கின்ற “பொங்கும் பூம்புனல்" எ ப் போது மே மாமியின் கீதங்கள் தான். மனமெல்லாம் ஒரு க ச ப் புப் பரவ பதிலடி கொடுக்க வாய் துடிக்கிறது. கைகளை இறுக்கிக்கொண்
டாள்.
வீணு கொஞ்சம் கொஞ்சம். ப்ளிஸ் உன் அம்மா அப்பா
- வுக்காக உன் பிரதீபுக்காக
‘மாமி போஸ்ட்மனைப் ப்ார்த்துக் கொண்டு நிக்கிறன்'
“எங்கடை வீட்டுக் காயிதத்தை அடுத்த வீட்டில கொண்டு போய் குடுக்க . அவனுக்கு ஒண்டும் விசரில்லை பேசாமல் உள் ளுக்குள்ள வா... ??
'இல்லை மாமி நேற்றிரவு அப்பாவைப் பற்றிக் கூடாத கனவு. அப்பபா பட்டு வேட்டி கட்டிக் கொண்டு நிற்கிறதைப் போல .
*கொப்பர் அவ்வளவு கெதியில் போய் ச் சேரமாட்டார். செய்த பாவங்களுக்கு கிடந்து அழுந்த வேண்டாமே! கல்யாணம் பேசேக்கிள்ளை பென்ஷன் ஆன கையோடை இருபதினுயிரம் காசு தாறன் எண்டல்லவோ சொன்னவர். தந்த வ ரே! மனிஷன் பென்ஷனுகியும் இப்ப ஒரு வருஷம் முடியப்போகுது'
வீணுவுக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
இந்த இருபதினுயிரம் காசு அவள் வாழ்க்கையைத்தான் என்னமாய்ப் படுத்துகிறது அவள் அப்பா சொன்ன மா தி ரி. அவளது காசைத் தந்து விடத்தான் துடிக்கிருர் ஆனல் சோம் பல் முறித்துக் கொண்டிருக்கும் பென்ஷன் டிபார்ட்மன்ட் அவரது
தோழி 14

பென்ஷனையே குடுக்கத் தொடங்காத போது வண்ட்ஐப்பற்றி அவர் யாரிடம் சொல்லி அழுவார்? ஏன் இதையெல்லாம் அவள் சொல்லச் சொல்லக் கூட இவர்கள் புரிந்து கொள்ளாதவர்கள் போல சட. சட. அவளை விரட்டிக்கொண்டு.
‘மாமி. அப்பாவுக்கு "வண்ட்" (Fund) வந்தவுடன் கட்டா யம் உங்கட காசைத் தந்து விடுவார். எல்லாம் தெரிஞ்ச பின்ன ரும் ஏன் இப்படி . அன்எடியூகேட்டட் மாதிரித் திரும் பத், திரும்ப ஒன்றையே கதைக்கிறீங்கள்?"
பவளம் பத்திரகாளியாகி விட்டாள்.
"என்னடி நாங்கள் படிக்காதனங்களோ. நீங்கள் மெத் தப்படிச்சனீங்கள் பிறகு ஏன் எங்களிட்டை மாப்பிள்ளை தேடி வந்தனிங்கள். பொறு பொறு பிரதீப் வரட்டும் "
வீணுவுக்குப் புரிந்து விட்டது. ஒரு கிழமை அவளுக்கும் பிரதீப்புக்கும் சண்டையை மூட்டி விட மாமி இன்று காலையே ஆயத்தமாகி விட்டாள்.
பிரதீப்பும் அம்மா பக்கம் தானே! ஏதோ தாயைக் கட்டிக் கொண்டு அழுபவர் போல தலையில் வைத்துக் கொண்டாடுபவர் போல. இந்தக் கிழமை முழுவதும் கூத்தடிக்கச் சரி .
அவள் நினைத்தது போல. பிரதீப் அவளைத் தேடிச் சீறிக
கொண்டு தான் வந்தான்.
‘அம்மாவைப் பார்த்து படிக்காதனங்கள் எண்டாயாம். பிறகு ஏன் உன்னுடைய அப்பா உன்னை எனக்குக் கல்யாணம் கட்டித்தந்தவர் எண்டு கேட்கிறன்? விருப்பமில்லா வி ட் டா ல் இண்டைக்கே வெளிக்கிட்டு விடலாம்"
அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது
தாயாருக்கு முன்னுல் அவளுக்காக அவளை ஓட ஓட விரட்டித் திட்டித் தீர்ப்பதும் . பின்னர் இரவில் அவளருகில் படுத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்பதும் .
சே. இப்படிப்பட்ட ஒரு கோழைக்கா நான் வாழ்க்கைப் பட்டேன்!
இருந்தது போல் குமராக அம்மா அப்பாவுடன் இருந்திருந் தால் கூட சந்தோஷமாக இருந்திருக்கலாமோ! பஞ்சம் என்ரு
தே? பூழி 15

Page 10
லும்கூட அப்பா . அவளைத் தங்கைச்சியைத் தம்பியை எப்படிப் பசுமையாக வைத்திருந்தார்! சிரிப்பும் கும்மாளமுமாக. வீடு எந்த நேரமும் களை கட்டிக் கொண்டு, மனம் தான் எத்தனை நிறைவாக . சந்தோஷமாக
சீரும் சிறப்புமாக வாழுகிருள் என நினைத்துக் கொண்டிருக்கும் அவள் குடும்பத்தினர் அவள் இங்கு படும் சீர்கேட்டை நேரில் கண்டால் எப்படி ஆடிப்போய் விடுவார்கள் அப்பாவின் நோய் இறப்பாகவே மாறி விடக்கூடாது என்பதற்காக அவள்தான் எப்படி அவளது கவலையை. கண்ணிரை ம  ைற த் து க் கொண்டு. போலிச் சிரிப்புடன்
அப்பா. கன்சர்" வருத்தத்தில் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது கூட . அந்த இருபதினுயிரத்தைக் குடுக்காமல் இறந்து போய் விடுவேனுே என்று அந்தரப்படுகின்றீர்களே உங்களு டைய அந்த மனம் எங்கே. தராமலே இறந்து போய் விடு வாரோ என்று நித்தமும் என்னைப் போட்டு உயிரோடு வதைக் கும் இவர்கள் எங்கே.
டடாங் டடாங்.
வைரவர் கோயில் மணி ஓசை.
இரவு முழுவதும் தூங்காமல் வடித்த கண்ணிரோ பொழுது கூட மறைந்து விடியற்காலை பிறந்து விட்டதோ.
ஹை ஹை ஹை ஹை தூரத்தே மாட்டை விரட்டும் ஒலி வீண கன்னங்களே அழுத்தித் து  ைட த் து க் கொண்டு எழுந்தாள்.
பாலைக்காய்ச்சி விட்டுத் திரும்பும் பொழுது வாசலில் மணிச்சத்தம், V
ஒடிப்போய் . கையெழுத்து வைத்துவிட்டுத் தந்தியைப் பெற்றுக் கொள்ளும் பொழுது கைவிரல்கள் நடுங்கத்தொடங்கின. நெஞ்சமெல்லாம் ஒரு பதை பதைப்பு. அப்பா அப்பா
ப்ளீஸ் எங்களை ஏமாற்றி விடாதேங்கோ கடவுளே கடவுளே
வேண்டுதல்கள் வேண்டுதல்கள்
அத்தனையையுமே ஏமாற்றி விடுவது போல் தந்தியில் அவள் அப்பா இறந்து போய் விட்டது சுருக்கமாக அழகிய ஆங்கிலத்தில், எழுதப்பட்டிருந்தது,
தோழி 16

வீணு கதறிக்கொண்டு கீழே விழுந்தாள். யாழ்தேவி விரைவாக யாழ்ப்பாணத்தை நோ க் கி ஓடிக் கொண்டிருந்தது.
அப்பா எவ்வளவு அன்பாக அருமையாக வளர்த்தீர்கள். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் என் கண்ணில் ஒரு முறை பட்டு விடாமல் புறப்பட்டு விடுவதில் உங்களுக்கு என்ன அப்படி அவசரம் அப்பா? உங்களுக்குப் பக்கத்தில் இருந்து உங்களுக்கு சேவை செய்யக் கூடமுடியாமல்
கன்னங்களில் நீர் பொல பொலவென்று வழிந்தது.
"ஏன் அழுகிருய்? சந்தோசப்படு. கொப்பர் கண் ணை யும், மூடிட்டார் இனிக் காசும் வந்த மாதிரித்தான். உனக்கும் சந் தோஷம் தானே!"
வீணு திடுக்கிட்டு மாமியைப் பார்த்தாள்.
இவள் என்ன மனுஷி? மனதில் கொஞ்சம் கூட ஈவிரக்கம். அப்பாவைப் பறிகொடுத்து விட்டு நிற்கிருளே என்று கூடச் சிந்தனை யில்லாமல் மற்றவையின் துயரத்தைக் கூட எண்ணிப் பார்க் காத அற்பப் புழுக்களுக்கிடையிலா நானும் ஒரு மனுஷியாக ஒட்டி உறவாடிக்கொண்டு
"என்ன பார்க்கிருய் தாருர் தாருர் எண்டு நாலு வருஷம் ஏமாத்தியாச்சு . இனி அப்பா செத்துப் போட்டாரே செத்துப் போட்டாரே எண்டு மீதிக் காலத்தை ஒட்டுவது தானே. எண் , டாலும் ஆட்கள் வலு கெட்டிக்காரர் אי
'அம்மா நடந்து முடிஞ்சதைப் பற்றி இப்ப கதைக்கிறதில என்ன பிரயோசனம் எண்டு கேட்கிறன்! கல்யாணம் பேசேக் கிள்ளேயே எல்லாம் கருராகப் பேசி வாங்கி இருக்க வேண்டும்"
பிரதீப்பா . பேசுகிருன் சீதனம் என்ன சீதனம் . அப்பா பிறகு தருவதாகச் சொன்ன இருபதினயிரம் வேண்டவே வேண் டாம் வீணுவைப் போல ஒரு தங்கவிக்கிரகம் கிடைத்ததே எனக் குப் பெரிய சீதனம் தானே .
பவளம் ஏசும் பொழுதெல்லாம் . பிரதீப் தனிமையில் இப்படி
யெல்லாம் கூறித்தான் சமாதானப் படுத்துவான்.
இன்று பிரதீப்பே உண்மையிலேயே காசு கிடைக்காதோ ான்ற எண்ணத்தில் அவனுடைய உள் நோக்கமும் இப்படியே வார்த்தைகளாக . அம்மாவுக்குப் பிள்ளை தப்பாமல் . சாடிக் கேற்ற மூடியாக −
தோழி 17

Page 11
இப்போது கண்களில் இருந்து வடியும் நீர் இரண்டு மடங் காகப் பெருகத்தொடங்கியது. அது அப்பாவுக்காக மட்டும் அல்ல . / என்பதும் வீணவுக்குப் புரிந்தது.
டாங்கு டக்கட டக்கு - டக்கட .
"ஐயோ ஐயோ. என்னை விட்டுட்டுப் போட்டாரே போட்டாரே...' ۔’
ஒழுங்கையில் இறங்கு முன்னமே அம்மாவின் கதறல் காதை அடைக்கிறது.
வீண. தன்னையும் மறந்து ஓடினள். 'அக்கா. அக்கா. அப்பா எங்களை ஏமாத்திப் போட்டுப் போட்டார். ஏமாத்திப் போட்டுப் போட்டார் ஐ யோ. வீணு . வீணு . எண்டு கூப்பிட்டாரே. அவரின்ர ஆசைக்கு நீ பக்கத்தில் இல்லையே ??
கட்டிக் கொண்டு அழுத தங்கையோடு சேர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள் வீன.
அவளுடைய உடம்பில் ஒடும் இரத்தத்தின் பாதி. அவளுக்கு நிலாக்காட்டி சோறு ஊட்டி. படுக்கும் பொழுது "பாச்சா" கதை சொல்லி அம்ப்பா யானை போகுதாம். அம்ப் பா யானே போகுதாம் என்றெல்லாம் முதுகிலும் தோளிலும் சுமந்து வேடிக்கை காட்டி அவள் படிக்கத் தான் நித்திரை முழித்திருந்த அந்த அன்பு தெய்வம் . அங்கே அமைதியாக . உறங்கிக் கொண்டு . .
அப்பா எந்தவிதக் கவலையும் இல்லாமல் எந்தக்கவலையும் அறிந்து கொள்ளுமுன்னே போய்ச் சேர்ந்து வீட்டீர்களா அப்பா? இனி இனி என் கவலையை யாருக்குச் சொல்லுவேன் . உங்க ள து இழப்பையே ஜீரணிக்க முடியாமல் துடித்துக் கொண்டிருக் கிருளே அம்மா அவளிடமா முடியுமா? என்னல் முடியுமா அப்பா? உங்களைப் போல் எதையும் இலேசாக அவளால் எடுத் துக் கொள்ளத் தெரியாதே W
அப்பாவின் கால்மாட்டில் தலையை வைத்து விம்மும் தாயைத் தூக்கித் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
"வீணு அப்பா இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுட்டுப்
போய்விடுவார் என்று கனவிலும் நான் நினைக்கேல்லை . ஐயோ. இனி எங்களுக்கு யார்துணை? தங்கைச்சியை எப்படி விலத்தப்
தோழி 18

போறன்? சாகேக்கிள்ளையும். வீணுவின்ர காசைக் குடுத்திடுங்கோ குடுத்திடுங்கோ எண்டுதானே சொல்லிச் செத்தார்"
அவளுக்கு விம்மல் வெடித்தது.
"ஐயோ. மச்சாள். இப்ப யார் அந்தக் காசைக் கேட் டது? உதுவும் ஒரு காசோ? எங்களுக்குத் தேவையோ . தங்கப் பவுணுண மனுஷன் போட்டாரே ஒ ஓ '
தாய்க்கு ஆறுதல் கூறி ஒப்பாரி வைக்கும் பவள த் தி ன் வார்த்தைகளைக் கேட்டதும் வீணுவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை -
யார் இது . கதைப்பது என் மாமிதான? ட்ரெயினில் வரும் பொழுது கூட வாட்டி எடுத்தாளே அவளா. எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் விரும் என்பார்களே என் மாமி திருந்த என் அப்பாவின் சாவே ஒரு சந்தர்ப்பமாக. அமைந்து விட்டதா. அப்பாவைக் கட்டிக் கொண்டு கதறும் அம்மா. தங்கைச்சியைக் கண்டதும் அவள் மனம் கூட இளகி விட்டதா.
அம்மாவைத் தேற்றி தங்கையை அணை த் து ஆறுதல் சொல்லி - தம்பிக்கு பொறுப்புக்களை எடுத்துக் கூறிவிட்டுப் புறப் படும் மாமியைப் பார்க்கும் பொழுது. வீணுவுக்குச் சந்தோஷ மாக இருந்தது. மாமி. மாமி திருந்தி விட்டாள்.
ட்ரெயினில் ஏறும்வரை வீணு அப்ப் டி எண்ணித்தான் மனக் கோட்டைகள் கட்டினுள்.
ஆனல் அவை அத்தனையுமே நடிப்பு என்பது கொழும்பு வந்து இறங்கியதுமே புரிஞ்சு போச்சுது.
'நாங்கள் காசைக் கேட்டிடுவம் எண்டுதானே . செத் த வீட்டில கொம்மா. சொல்லிச் சொல்லி ஒப்பாரி வச்சவா" "கொப்பனுக்கு சீவன் போகேக்கிள்ளையும் உண்ட சீதனக் காசு தான் நினைப்பிலையாம். பெரிய அரிச்சந்திர மகராசா பாருக் கடி கதை விடுகிறியள். 媳滕
* உன்ர சீதனக் காசைத் தர வக்கில்லை. கொப்பர் தங் கைச்சிக்குக் கல்யாணம் பேசினவராம். செத்த வீட்டில மரகதம் சொன்னுள் கடவுளுக்கு அநியாயம் பொறுக்கேல்ல மணிசனைப் பட்டென்று எடுத்திட்டார் பார்த்தியே'
வீஞ எச்சிலை மென்று விழுங்கிக் கொண்டாள்.
தோழி 19

Page 12
நடிப்பு. ஒ. அது தான் சிலருக்கு எ ப் படி இயற்கையா கவே இயல்பாக.
நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன.
"வீணு . வீணு உன்ட தம்பி குமார் வந்திருக்கிருன் . அவன் Vý
பிரதீப் சொல்லிக்கொண்டு முடிக்கு முன்னமே. ப வளம் இடை மறித்தாள்.
“என்னத்துக்கு வந்திருப்பான் மாதம் முடிய அந்திரட்டி. செலவுக்கு உதவி செய்யுங்கோ எண்டு கேட்க வந்திருப்பார். இதுதானே எல்லோருக்கும் ஒரு தர்ம சத்திரம். கேட்டால் ஒரு சதமும் இல்லையென்று சொல்லிப்போடு. பார்த்துக்கொள்'
அதட்டி விட்டு முன்னல் நடக்கும் பவளத்தைத் தொடர்ந்து பிரதீப்பும் வீணவும் நடந்தார்கள்.
குமாரைக் கண்டதும் வீஞவுக்கு ம ன ம் தாங்கவில்லை. எப்படி மெலிந்து போஞன் அப்பாவின் மறை வு இவனேயே இப்படி உருக வைத்திருக்கும் என்ருல். அம்மா. தங்கைச்சி.
‘மாமி. அப்பாவின்ர அந்திரட்டி வருகுது அதுதான்.
"மாசம் முடிந்தால் அந்திரட்டியும் வரும்தானே. எங்கள் எல்லோருக்கும் வர வசதிப்படாது. கொக்காவை மட்டும் வந்து கூட்டிக்கொண்டு போ "
**அதில்லை மாமி அப்பாவின்ர செத்தவீடு அந்திரட்டிச் செலவுக்காக . அம்மாவின் தாலிக்கொடியை விற்றணுங்கள். அம்மா. அக்காவின்ர இருபதிஞயிரத்தையும் குடுத்திட்டுவரச் சொன்னவ ??
குமார் முன்னல் நீட்டிய காசைக் கண்டதும் பவளத்தின் கண்களில் பொல பொல வென கண்ணிர் உதிரத் தொடங்கியது.
"ஐயோ. ஐயோ. குமார். யார் இந்தக் காசைக் கேட் டது . அவ்வளவுக்கு நான் பணத்துக்கு வீங்கியெண்டு நினைச்சீங் களோ இப்பவும் உன்ர அப்பாவின்ர சாவை நினைச்சால் எவ் வளவு தூரம் மனம் அந்தரப்படுகுது தெரியுமே .. .
குமாரின் கண்கள் கலங்கின.
'மாமி . நீங்கள் வேண்டாமெண்டாலும் கா  ைச த் தர வேண்டியது எங்களுடைய கடமை. இந்தாங்கோ காசைப் பிடி
தோழி 20

யுங்கோ. அப்பாவுக்கு சாகேக்கிள்ளையும் இந்தக் கா சின் ர
நினைப்புத்தான்"
பவளம் கையை நீட்டினள். 'தம்பி அந்தக் காசை குடுக்காதையடா குடுக்காதை" அந்த வீடே அதிரும் வண்ணம் வீணு கத்தினுள். "இப்ப ஏன் சத்தம் போடுருய் வீண?" பவளத்தின் பரிவான குரல். 'வட் இஸ் திஸ். உனக்கு என்ன வந்தது அக்கா?
குமார் ஆதரவுடன் கிட்ட வந்தான்.
எனக்கொன்றுமில்லை. எனக்கொன்றுமில்லைக் குமார் இனி யும் இவையளின்ர நடிப்பைக் கண்டு ஏமாருதையடா. கேவலம் இந்த இருபதினுயிரத்திற்காக என்னே என்ன பாடு படுத்தினம் எண்டு தெரியுமா குமார்? உயிரோடு போட்டு வதைக்கினமடா அப்பாவுக்காகத்தான் இவ்வளவு நாளும் என்னுடைய கவலைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு இருந்தனன். இனியும் எ ன் ஞ ல தாங்க முடியாது. இப்படிப்பட்ட காசாசை பிடிச்சு அ லை யி ற கூட்டத்தில வாழமுடியாது. தயவு செய்து என்னையும் கூ ட் டி க் கொண்டு போய்விடு"
வீணு. விம்மி. விம்மி அழுவதைப் பார்த்ததும் குமாருக் குத் தாங்கவில்லை.
'அக்கா காசு கிடைக்காத கோபத்தில அவர்கள் ஏதும் அறியாமல் பேசி இருக்கலாம். ஆனல் இனி உன்னுடைய பிரச் சினை தீர்ந்து விடும் தானே.. ?? ܗܝ
* அவர்களுடைய பிரச்சிக்ன தீர்ந்துவிடும் எண்டு சொல். ஆனல் என்னுடைய மனம் என்னுடைய அப்பாவின்ர சா வா ல அம்மாவின் தாலிக்கொடி வில்பட்டுத்தான் என்னுடைய குடும்பம் சந்தோஷமாகி நடக்குது என்று ஒவ்வொரு கணமும் நொந்து கொண்டுதான் இருக்கும் . இவையளைச் சபித்துக் கொண்டுதான் இருக்கும்"
"பின்னத் தம்பிக்குப் பின்னல கூடிக்கொண்டு போ வ ன் என்னுடைய பிள்ளை ஆம்பிளைப் பிள்ளை பார்த்துக்கொள். சுண் டிச் சுண்டி பெம்பிளை எடுத்துப் போட்டுப் போவன். நீ தா ன் வாழா வெட்டியெண்ட பேர் எடுத்துக் கொண்டு இருப்பாய் பார்த்துக் கொள்"
தோழி 21

Page 13
வீணுவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக - ஒரு பெண்ணை நல் லாக வாழவைக்கும் மனமில்லாமல் வாழ்ந்தாலும் பொறுக்க முடியாமல் . இவள் போன்ற பெண்களால் - எத்தனை பெண்கள் வாழாவெட்டிகளாக உருவாக்கப்பட்டுக் கொண்டு இவர்களே இப்படியே விட்டுவிடக் கூடாது. இவர்களது அதட்டலுக்குப் பயந்து வாழாவெட்டி என்ற பட்டத்துக்குப் பயந்து அ டி பணிந்து போய் கொண்டிருப்பதால் தான் இவர்கள் இன்னமும் மேலே மேலே ஏறிக்கொண்டு. அதிகாரம் பண்ணிக்கொண்டு. பெண்ணை அடிபணிய வைத்துக் கொண்டு .
"இங்கை மட்டும் சந்தோஷமாக வாழ்ந்திட்டனே மாமி’’ ஒரு பெண் ணை வாழவைப்பதும் வாழாவெட்டியாக்குவதும் கேவலம் ஒரு இருபதினயிரமாகப் போனபிறகு. அந்தப் பெண் ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவைதான? இருபதினயிரத் தைக் குடுத்து இங்கு வாழ்வதை விடக் குடுக்காமல் வாழாவெட் டியாக வாழ்வது எ ன் னை ப் பொறுத்தவரையில் எவ்வளவோ மேல் அட்லீஸ்ட் போலி உறவுகளோடை நானும் ஒரு உறவாக வாழாத திருப்தியாதல் என் மனத்துக்குக் கிடைக்கும்
உறுதியாகச் சொல்லி விட்டு எல்லோரும் திகைத்துநிற்க
உள்ளே சென்றவள் தன் உடுப்புக்களை ஒவ்வொன்ரு க எடுத்து பாக்கினுள் அடுக்கத் தொடங்கினுள்.
(யாவும் கற்பனை)
--on-e-
RINNAAQAAIADEIREANNAEVAARAABIAANAGINDAYALIDADE ஆண்டவனுக்காக ஆங்காங்கே கன்னிகாஸ்திரி மடங்கள் எங்கள் தேசம் முழுவதும் பரவி இருந்தன. இப் போது வரதட்சனை சைத்தானுக்காய் எங்கள் தேசம் முழுதுமே ஒரு கன்னிகாஸ்திரி மடமாய் மாறி வருகிறது. MeV. MeSeNeMÆFINITI! ARNINNN!ISTS!INKIN
கோழி 22

கோடை
செல் வி
அந்திவானம்
செம்மையை விழுங்கும்
அலைகள் மெலிதாய்
கரையைத் தழுவும்
குளத்தோரத்துப் புற்களின்
கருகிய நுனி
நடக்கையில் - காலை நெருடும்
மேற்கே விரிந்த
வயல்கள் வெறுமையாய்
வானத்தைப் Linfiggl
மெளனித்திருக்கும்
வெம்மை கலந்த
மென்காற்று
மேனியை வருடும்.
புதிதாய்ப் பரவிய சாலையின் செம்மண் கண்களே உறுத்தும் காய் நிறைந்த மாவில் குயிலொன்று இடையிடை குரலெழுப்பும்
வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச் செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையையறியும்
ஒதுங்கிப் போன கல்
ஏளனமாய் இளிக்கும்
இதயத்தில் நினைவுகள் விரிந்து
சுரீரென்று வலியெடுக்கும்.
வாடைக் காற்றின் சிலிர்ப்பும் வரப்போரத்தில் நெடிதுயர்ந்த கூழாமரத்தின் பசுமையும் நிறைந்த குளத்தின் மதகினூடு திமிறிப் பாயும் நீரின் அழகுமாய் ஒதுங்கிப்போன இனியபொழுது
f
ஊமையாய் மனத்துள் அழுத்தும்.
தோழி 3

Page 14
உணர்வுகள்
ஒளவை
ஆம் அன்று நான் உன்னை ஒருமுறை நோக்கினேன். ஒரே முறை நோக்கினேன். நீல விழியின் அழகுதான் காரணமோ? இல்லை. இல்லை. ராஜநடை போட்டு - நீ வாசலில் நின்றபோது மனம் சிலிர்க்கும்.
நோக்கினேன். என்றும் போல் அதே பார்வை. அதே கணத்தில் பார்வைகள் ஆயிரம் சங்கமித்தன. மனதின் உணர்வை அடக்கி. நோக்கினேன். வாயில் அரும்பிய சொற்கள் உதிர விடை பெற்றுச் செல்வாய் நீ! ஆம், - அதிலுமோர் அழகுதான். வட்டப்புல் வெளியில் - வானத்தை நோக்கி
கைகளை ஆட்டி
கால்களை உதைந்து,
நிற்கும் அழகில்,
உன்னில் தெறிக்கும் ஆயிரம் பார்வையில்,
அர்த்தமுள்ளஅர்த்தமாயுள்ள பார்வை ஒன்றே உன்னைத் துளைக்கும்.
இப்படி இப்படி எத்தனையோ! ஆஞலும்சமூகத்தில் நடக்கும் அசிங்கங்களைப்போல் எங்கள் உறவுகள் ஆகிவிட வேண்டாம். கண்கள் நோக்கும். கால்கள் அசையும்.
ஆஞலும் - நான்
வருதல் கூடாது. 1981 - 11 - 06
தோழி 24

கிராமிய ஆய்வு 1.
பாவற்குளம்
செல்வி. செ. இந்தி J п
வவுனியாவிலுள்ள கிராமங்களுள் ஒன்ருகப் பாவற்குளம் திகழ்கிறது. பெரிய குளமான பாவற்குளத்தின் அருகாமையில் பத்து யூனிட்டுக்கள் கொண்ட ஒர் பெரிய கிராமம் அமைந் துள்ளது.
இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏழை விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களுமே. மழையை நம்பி வாழ்க்கை நடாத் துபவர்களாகவே இவர்கள் இருக்கிருர்கள். பெரும்பாலான ஆண்களும், பெண்களும் பருவகாலக் கூலித் தொழிலினைச் செய் கிருர்கள். அடுத்து அரைக்கூலி விவசாயிகளும் இதற்குள் அடங் குகிருர்கள். இவர்களது விவசாய நடவடிக்கைகள் 3 வழிகளில் நடைபெறுகிறது.
(1) உப உணவுப் பயிர்ச் செய்கை (2) நெற் பயிர்ச் செய்கை (3) தோட்டம் செய்தல்
மானுவாரி உப உணவுப் பயிர்ச் செய்கை பொதுவாக எல்லா மக்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தமது வாழ்வுக்கு முழுமையாக இ த னை நம்பி வாழ்கின்றனர். இப் பயிர்ச் செய்ன்க மழை நீரினை நம்பியே செய்யப்படுகின்றது. உழுந்து பயறு, கெளப்பி என்பன இதிலடங்கும். எனினும், கூடுதலாக உழுந்துதான் பயிர் செய்யப்படுகின்றது. ஓர் வருட கால சீவியத்திற்கும் இந்த உழுந்தையே நம்பி இருக்கின்றனர்.
தோட்டம் செய்தலை எடுத்துப் பார்த்தால் ஒரு சிலராலேயே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது கிணறு, நீர் இறைக்கும் இயந்திரம் ஆகிய வசதிகள் உள்ளவர்களே தோட்டப் பயிர்ச் செய்கையினைச் செய்கின்றனர். சிறு பிரிவினரே இதனைச் செய் கின்றனர். தோட்டப் பயிர்களில் மிளகாய், வெங்காயம், நிலக் கடலை, மரவள்ளி என்பன உள்ளடங்கும்.
பாவற்குளம் வவுனியாவிலேயே ஓர் பெரிய குளம் எனலாம். இது ஒர் பெரிய கிராமத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. கிராம
தோழி 85

Page 15
மக்கள் குளத்து நீரினை நம்பியே நெற்பயிர்ச் செய்கையை மேற் கொள்கின்றனர். பள்ளக் காணி உள்ள சுமார் ஐந்துவீதமான மக்கள் மட்டும் மழை நீரில் வேளாண்மை செய்கின்றனர் என லாம்.
மந்தை வளர்ப்பு இக் கிராமத்தில் அதிகமாக மேற்கொள் ளப்படாவிட்டாலும் சிறிதாவது மேற்கொள்ளப்படுகிறது. ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு மாடாயினும் வளர்க்கிருர்கள். பெறப்படும் பால் வவுனியா நகரத்திலிலுள்ள பாற் சபைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. ஓரிரு இளைஞர்கள் பாலினைக் கிராமத்திலிருந்து நகரத்திற்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத் துகின்றனர்.
இங்கு வாழும் மக்கள் தமது உணவிற்கு நெல்லரிசியினையும், தானியங்களையும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான குடும் பங்களில் ஒரு நேர உணவு கெளடபி, பயறு போன்ற தானியமா
கவே அமைகின்றது. தினமும் ஒர் நேர உணவை விடுத்து இரு நேர உணவுடன் பொழுதைக் கழிப்பவர்களும் இருக்கிருர்கள்.
மக்கள் பல சமூக பொருளாதாரப் பிரச்சனைகளின் மத்தியில் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள். ஏழை விவசாயிக ளாகவும், கூலித் தொழிலாளர்களாகவும், அரைக் கூலி விவசா யிகளாகவும் இருக்கும் இவர்கள் அந்தக் கூலித் தொழிலையோ, விவசாயத்தையோ ஒழுங்காக மேற்கொள்ள இயற்கை இடை யூருக உள்ளது.
பாவற்குளம் ஒர் பெரிய குளம், போதிய நீர் வரத்தில்லாத இடத்தில் பெரியகுளத்தைக் கட்டியுள்ளனர். பாவற்குளம் நீர் நிறைந்து கலிங்கு பாய்வது அரிது. இதனல் வருடா வருடம் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடிவதில்லை. நான்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தமிழ்ப் பகுதிகளில் சூரு வளி, வெள்ள அழிவு ஏற்படும். இக்காலங்களிலேயே குளத்திற்குப் போதிய தண்ணீர் வருகிறது. இச்சந்தர்ப்பங்களில் வேளாண்மை செய்ய முடிகிறது. கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால் 1978/ 79ற்குப் பிறகு 1984-ல் தான் குளம் கலிங்கு பாய்ந்து நெல்பயிரி டக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு இடைக்கிடை நீர்வசதி கிடைத் தாலும் போதிய முதல் இல்லாமல் நெல் பயிரிட முடியாது மக்கள் கஷ்டப்படுவார்கள். அரசாங்கத்தால் எந்தவித கடன் உதவியும் கிடைப்பதில்லை.
உப உணவுப் பயிர்ச் செய்கையையும் அங்கு அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் பார்த்தால் முதல்இல்லாத பிரச்சனை
தோழி 36

ஓர் முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது. உற்பத்தி அவர்களது அன்ருட சீவியத்திற்கே போதாமல் இருப்பதால் சேமிக்க முடிவ தில்லை. வீட்டிலுள்ள நகைகள் மட்டுமே குடும்பங்களின் மூல த ன மும், மொத்தசேமிப்புமாகும். உழுந்து ஒன்றைத்தான் மக்கள் முழு மையாகத் தமது வாழ்வுக்கு நம்புபவர்கள். அதனுல் வரும் விளைவு சீவியத்திற்கே காணுமல் உள்ளதால் முதல் பற்றிய பிரச்சனை தோன்றுகிறது.
கிணற்று நீரினைப் பயன்படுத்தி ஒரு சிறு பிரிவினரே தோட் டம் செய்கிறர்கள். எல்லோராலும் இதனை மேற்கொள்ள முடி யாதிருப்பதற்கு வறுமை நிலையும், கோடையில் கிணறுகள் வற்றி விடுவதும் காரணமெனலாம். சிலரிடம் பள்ளக் காணிகளில் கோடையிலும் நீர் நிறைந்திருக்கக் கூடிய கிணறுகள் இருந்தும் இறைப்புக்கு இயந்திரம் இல்லாது தோட்டம் செய்யமுடியாமல் இருக்கிறர்கள். சிலர் கிணறு வெட்டமுடியாமலும், அதாவது பண வசதியில்லாது பள்ளக் காணிகளில் இருக்கிருர்கள். இதனல் இவர்களால் தோட்டம் செய்ய முடிவதில்லை. அநேகமான காணி களில் ஆழமான கிணறுகள் இருந்தாலும் கோடையில் அவை வற்றிவிடுகின்றன. குடிநீருக்கே சொந்தக் கிணறுகளைவிட்டு வேறு கிணறுகளை நாடவேண்டிய நிலைவரும். 1983ன் இறுதிக் கால கட்டத்தை எடுத்துப் பார்த்தால் இந்நிலைமையைக் காணலாம். ஒரு சில கிணறுகளில்தான் நீர் இருந்தது, அக் கிணறுகளையே பலரும் நாடினர்.
மக்களில் பெரும்பாலானுேர் கூலித் தொழில் செய்பவர்கள். ஆனல் இந்தக் கூலி வேலைகூட நிரந்தரமாகக் கிடைப்பதில்லை. பயிர் செய்யக்கூடிய காலநிலை ஏற்பட்டால்தான் கூலிவேலையும் கிடைக்கும். குளம் நிறைந்து கலிங்கு பாய்ந்தால்தான் நெற் பயிர்ச்செய்கையின் போது வயல்களில் வேலைவாய்ப்புக் கிடைக் கும். உழுந்து பயிரிடும் காலங்களிலும் வேலை இருக்கும். குறிப் பிட்ட காலத்துக்கே கூலிவேலை இருக்கும். மற்றைய காலங்களில் கூலிவேலை கூட மக்களுக்குக் கிடைப்பதில்லை. எந்தவித வருமான மும் இல்லாமல் வேலையும் இல்லாமல் நாட்களைக் கடத்துவார் கள். ஒருசில குழுவினரே தோட்டம் செய்வதால் அத்தோட்டங் களிலும் சிறிய தொகையினரே வேலைவாய்ப்பினைப் பெறுவர்.
அடுத்து அண்மையில் ஏற்பட்ட தொடர்ச்சியான மழையி னல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உளுந்து அறு வடை செய்யும் காலத்திலேயே மழை தொடர்ச்சியாகப் பெய்தது. இதனல் அறுவடை செய்ய முடியாமல் போய்விட்டது. உழுந்து,
தோழி 37

Page 16
கெளடபி, பயறு போன்றன மழையில் ஊறிமுளைத்துப் பயனற்ற தாகி விட்டன. உழுந்து ஒன்றையே முழுமையாக நம்பி வந்த மக்களுக்கு மழையினல் ஏற்பட்ட அழிவு வறுமையினை ஏற் படுத்தி உள்ளது. அன்ருடச் சாப்பாட்டிற்குக்கூட எந்தவித வசதி யும் இல்லை.
பெரும்பாலான மக்கள் நிலை அவ்வாறே இருக்க உழவுயந் திரம் வைத்திருந்தவர்கள் கூட மோசமாகப் பாதிக்கப்பட்டுள் ளார்கள். உழவுயந்திர சொந்தக்காரர்களும் பெரும் பணக்கா ரர்களல்ல. ஏழை விவசாயிகளுக்கு உழவுயந்திரம் வைத்திருப்ப வர்கள் உழுது கொடுத்து அறுவடையின் பி ன் பே அதற்கான கூலியைப் பெறுவது வழக்கம். உழவுயந்திரங்களைக் கடன்பட்டுப் பழுது பார்த்தும் டீசல் அடித்தும் கடனுக்கு உழுது கொடுத் தார்கள். மழையினல் பயிர்கள் அழிந்ததால் மக்களால் உழவு யந்திர உரிமையாளர்களுக்கு உழவுக் கூலியைக் கொடுக்க முடிவ வில்லை. இதனுல் உழவுயந்திரம் வைத்திருப்பவர்கள் தமது பயிர் நட்டத்துடன் இயந்திரம் பழுதுபார்க்க டீசல் வாங்க பட்ட கடன்களாலும் இறுக்கப் படுகின்றனர்.
சுமார் ஐந்து வருடங்களின்பின் இவ்வருடம்தான் நீர் நிரம் பியதால் நெற்பயிர்ச்செய்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனல் அதிலும் பாதிப்புகளே ஏற்பட்டன. தொடர்ச்சியாக மழை பெய்ததால் ஓரிரு வாரப் பயிர்கள் மணலினல் மூடப்பட்டது. இதனல் அழித்து விதைக்க நேரிட்டது. இவ் வா று மூன்று தடவை அழித்து விதைத்தவர்களும் இருக்கிருர்கள். முதல் இல் லாமல் தனிப்பட்டவர்களிடம் கூடுதலான வட்டிக்குக் கடன்பட் டும் மக்கள் வங்கியில் நகைகளை அடைவுவைத்தும், உடமைகளை, நகைகளை விற்றும் நெல்விதைத்தார்கள். ஆனல் அது மேலும் மூலதன அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை பிரச்சனைகளின் மத்தியிலும் மக்கள் வாழ அகதி களாக வந்தவர்களும் ஆற்றேரத்தில் குடியேற்றப்பட்டார்கள். தொடர்ச்சியான மழையின் காரணமாக ஆறு பெருக்கெடுத்த தால் இவர்கள் மேலும் பாதிக்கப்பட்டு, இருந்த சிறு உடமைக ளையும் இழந்துள்ளனர். ஆற்றேரத்தில் சிறுசிறு குடிசையமைத்து இருந்தனர். அக்குடிசைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுவிட் டன. அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் புதிய அகதிகளாக இருக்கிருர்கள்.
மக்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமாயின் அவர்களது பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்பட
தோழி 88

வேண்டும். குளத்து நீரினை நம்பித் தமது ஜீவனுேபாயத்துக்கு வழி தேட முடியாது. ஆதலால் இவர்களது பொருளாதாரப் பிரச் சனைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டுமாயின் மாற்று உற்பத்தி, தொழில்நுட்ப வழி க ளை மேற்கொள்ளுவதுடன் வேறு ஊக்குவிப்புக்களை செய்ய வேண்டும்.
தமது வாழ்வுக்கு முழுமையாக நம்பியிருக்கும் உபஉணவுப் பயிர்ச் செய்கையையாவது திறமையாகச் செய்வதற்குக் குறைந்த வட்டியிலாவது கடன் பெறக்கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். கடன் வசதி இருந்தால் சிறந்த முறையில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அடுத்து, தோட்டம் செய்யக் கூடிய காணி வசதி இருப்ப வர்களுக்குக் கிணறுவெட்டவும் நீர் இறைக்கும்யந்திரம் வாங் கவும் மானிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் தோட்டம் செய்யக் கூடியதாக இருக்கும். இதனுல் கூலிவேலை செய்யும் இருபாலாருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
வளர்ச்சி பெருத நிலையில் ஓர் சிறிய நெசவுசாலை அமைந் துள்ளது. இந்த நெசவுசாலை சிறந்த முறையில் இயங்கினல் பல பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுவர். பருவகால கூலிவேலை செய்யும் பெண்களுக்கு இது ஓர் வரப்பிரசாதமாக அமையும்.
இக்கிராமம் மந்தை வளர்ப்புக்கு ஒர் சிறந்த இடம் என லாம். ஆனல் பால்சந்தைப்படுத்த வசதியில்லை. 12 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் இங்கேயே ஒரு பாற்சபை அமைத்தால் வசதியாக இருக்கும். பாற்சபை இருக்கு மாஞல் அநேகமானுேர் மந்தை வளர்ப்பதில் ஈடுபடுவார்கள். இதனல் பொருளாதாரக் கஷ்டங்கள் ஒரளவு நீங்கலாம். பருவ கால கூலித் தொழில் செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்.
அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுப் பயிர்ச்சேதம் அவடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும். அன்ருட வாழ்க்கைச் செலவுக்கே எந்தவித வருமானமும் இல்லாது இருப் பவர்களுக்கு பண உதவியோ பொருளுதவியோ (அரிசி, மாவு) போன்றவற்றைக் கொடுத்துதவி செய்தால் அவர்கள் தற்போது அனுபவிக்கும் கஷ்டநிலை ஓரளவாவது தீரும். இவர்களுடன் புதிய அகதிகளாக இருப்பவர்களுக்கும் இந்த உதவியைச் செய்யவேண் டும். வெள்ள நிவாரண வேலையில் ஈடுபட்டுள்ளவர்களும் பாவற் குளத்தைக் கவனத்துக்கு எடுத்தல் வேண்டும்.
இவ்வாறு பாவற்குளம்வாழ் ஏழை மக்களது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுமாயின் அவர்களும் சந்தோஷமாக பொரு ளாதாரக் கஷ்டமில்லாது வாழக் கூடியதாக இருக்கும்.
தோழி 29

Page 17
பிரதிபலிப்பு
சி - நடனராணி
கடந்த காலத்தில் என் வாழ்வில் வீசிய தென்றல்களையும் புயல்களையும் எண்ணியவாறே என் கால்போன போக் கி ல் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். என்னில் எவ்வித உணர்வோ, உணர்ச்சியோ இருப்பதாக எனக்கே தெரியவில்லை. அன்பாலும், பண்பாலும் எண்ணங்கள் - கருத்துகளாலும் ஒன்று பட்ட இரு உள்ளங்கள் வாழ்க்கையினுள் நுழை ய முற்படும் போதுதான் எத்தனை எதிர்ப்புக்கள் . எத்தனை வசைமொழி 56it......
அப்பப்பா. சொல்லில்தான் அடக்கிவிட முடியுமா?
அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது-நம் காதலைப்பற்றி என்ன வாழ்க்கை இது..! எண்ணிப்பார்த்தால் மறுகணமே உயிரைப் போக்கிவிட வேண்டுமென்ற துடிப்பு. என்னைப் படைத்தவனுக்கு ஒரு வேண்டுகோள்
‘என்னைப் போன்ற ஒரு அப்பாவிப் பெண்ணை இனிமேலும் இவ்வுலகில் படைத்து வேடிக்கை பார்க்காதே!'
நானும் மோகனும் ஒன்முக க. பொ. த. உயர்வகுப்பில் கல்வி கற்பதற்காக வெவ்வேறு பாடசாலைகளிலிருந்து புதிதாக அந்தப்பாடசாலைக்கு அநுமதி பெற்றவர்கள்.
ஏனைய மாணவர்கள் எ ல் லோ ரு ம் அதே பாடசாலையில் படித்தவர்கள் என்பதால் எனக்கும் மோகனுக்கும் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்குத் தயக்கமாக இருந்தது. இதனுல் நாம் இருவரும் சிலநாட்களாகத் தெரியாத பாடங்களையும், புரியாத புதிர்களையும் எம் இருவருக்கிடையேயுமே தீர்த்துக்கொள்வோம்.
இதனை அவதானித்திருந்த சகமாணவர்கள் சிலர் எம்மைக், கேலி செய்யத் தொடங்கினர்கள். இதனல் வெட்கம் கொண்ட நான், மோகனை விட்டு சிறிது சிறிதாகப் பிரியு ஆரம்பித்தேன். இப்பிரிவு எவ்வளவுதூரம் மோகனைப் பாதித்திருந்ததென்பது எனக்குத் தெரியாது.
காலங்கள் கடந்து கொண்டிருந்தன.
கோழி 30

இறுதியாண்டுப் பரீட்சைக்கு இன்னும் சொற்ப நாட்களே யிருந்தன. இக்காலகட்டத்தில்தான் மோகன் தனது நீண்டநாள் ஆசைகளையும், கனவுகளையும் தன் நண்பன் சுகந்தன் மூல ம் வெளிப்படுத்தியிருந்தான்.
சாந்தியைத் தான் உயிருக்குயிராகக் காதலிப்பதாகவும் சாந் தியின் விருப்பத்தைக் கேட்டுத் தனக்குக் கூறும்படியும் சுகந்த னிடம் கூறியதாக அவன் என்னிடம் கூறினன்.
நான் செய்வதறியாது திகைத்தேன். என் மனதில் ஆயிரம் எண்ணங்களும் கருத்துக்களும் அலையலையாய் வந்து மோதின.
மோகன் தச்சுத் தொழில் செய்யும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். என்ருலும் அவ னி ட ம் அன்பு, அழகு, அறிவு, பண்பு இவையாவும் நிறையப் பெற்றிருந்தன. இவனுக்கு மூன்று சகோதரிகளும் இரு தம்பியரும் இருந்தார்கள். குடும்பத்துக்கு மூத்தவனக மோகன் இருந்ததால் குடும்பப் பொறுப்பு இவனுக் கிருந்தது. எனவே, நான் இளம் பருவ உணர்ச்சிகளால் உந்தப் பட்டு, இவனது வாழ்க்கையில் தலையிடுவது ஒரு துரோகச்செய லாகவே அமைந்து விடும் எனக் கருதினேன்.
என் குடும்பமும் மோகனின் குடும்பம் போன்று சாதாரண மாகவே இருந்தது. எனினும், என் தந்தை ஒரு 'சாதிமகன்’ என்றே கூறவேண்டும். எனது மூத்த அக்காவுக்குத் தந்தையின் விருப்பப்படியே பேச்சுத் திருமணம் நடைபெற்றது.
சின்னக்கா தபாற்கந்தோரில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அங்கு அவவுடன் தொழில் புரியும் ஒருவருடன் காதல் கொண்டிருந்தா. இதனை அறிந்த அப்பா எரிமலையானர்.
'அந்தக் கீழ்ச்சாதியான இண்டைக்கே மறந் தி டு இல் லாட்டி நடக்கிறதை இருந்து பார்' என்ருர்,
அப்பாவின் பிடிவாதத்தையும், கெளரவத்தையும் அறிந் திருந்த அக்கா ஓரிரவில் நித்திரையோடு நித்திரையாக தூக்க மாத்திரைகளையுண்டு, மீளாத்துயிலில் ஆழ்ந்தாள். இந்தச் சம்ப வம் நடந்தும் கூட அப்பாவின் சாதித்திமிர் அடங்கிய பாடில்லை. இறுதியாக இப்போது நான் மட்டுமே எஞ்சி இருக்கின்றேன்.
நான் சாதாரணதர வகுப்பில் படிக்கும்போதே அப்பாவிடயத் திற்கு முந்தி, மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கியிருந்தார்.
கோழி 31

Page 18
அம்மாதான் இடையில் குறுக்கிட்டாள். **படிக்கிற பிள்ளையை படிக்க விடுங்களன். ஏன் அவளின்ரை எதிர்காலத்தைப் பாழாக்கிறீங்கள்’ என்றெல்லாம் வாதிட்டாள்.
ஏதோ நல்லவேளை - எனக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம்.
அப்பா மாப்பிள்ளை தேடுவதை விட்டார். இப்படியாக, என் நிலையும் குடும்பத்தின் நிலையுமாக என்ன செய்வதென்றே எனக் குப் புரியவில்லை.
மோகனை என்னுடன் நேரடியாகப் பேசிக்கொள்ளும்படி சுகந்தனிடம் கூறி அனுப்பினேன். எ ன க் கோ மனம் எதி லுமே நாட்டம் கொள்ளவில்லை. இருதினங்கள் கழித்து. பஸ் நிலையத்தில் மோகனேடு கதைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் அப்பாவின் நிலைமைபற்றி விளக்கினேன்.
**காலம்பூராவும் கண்ணிரோடு வாழ்ந்து கல்லறைகளிலே சமாதிகளாக்கப்படுவதைவிட இப்போதே நாம்பேசி ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்துவிடலாம்' என்றேன்.
மோகன் என்னிடம் பேசினர்.
'உமது மூத்த அக்காவுக்கு வெளியுலகமே தெரியாது. வீட் டிலேயே முடங்கியிருந்தா. இதனல் தந்தையின் விருப்பப்படி திருமணமும் நடந்தது. உம்முடைய சின்னக்கா வாழத்தெரியாத கோழை. பிரச்சினைகள் எப்படியிருந்தாலும் வாழ்ந்தே காட்டி யிருக்க வேண்டும். இவர்களுக்கு முன்மாதிரியாக உன் தந்தைக் குச் சவாலாக ஏன் வாழ்ந்து காட்டக்கூடாது?" என்ருர்.
மோகனின் வார்த்தைகளின் உண்மைக்கு அடிமைப்பட்ட நான் என் தந்தைக்கும் சமுதாயத்திற்கும் வாழ்ந்து கா ட் ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் எமது நட்பு புதுவடிவம் பெற்றது.
பரீட்சைக்கு இன்னும் இருவாரங்களேயிருந்தன. இதுவரை படித்ததெல்லாம் மோகனின் கரங்களால் எழுதப்பட்ட காதல் கடிதங்களேயல்லாது பாடப்புத்தகங்கள் அல்ல. இருவாரங்களுள் இயன்றவரை படித்து பரீட்சை எழுதினேன். பரீட்சை எழுதிய விதத்தில் திருப்தியில்லை. மோகனின் நிலை யும் அதுவாகவே யிருந்தது.
தோழி 32

நாட்கள். வாரங்களாகி, மாதங்களாயின. பரீட்சை முடிவுகளும் வெளியாகின.
அவற்றின் பெறுபேறுகளிலும் நாம் இருவரும் ஒன்றுபட் டோம். நான்கு பாடங்களிலும் சாதாரணசித்தி. நானும் படிப்பை நிறுத்திக்கொண்டேன். மோகனுக்குக் குடும்ப நிலைமை காரணமாக தொடரமுடியாதிருந்தது.
மோகனுக்குக் குடும்பத்தில் பொறுப்பு அதிகம் இருந்தமையால் தந்தையின் தொழிலுக்கு உதவி செய்வதுடன் வேலைதேடும் படலத்திலும் இறங்கினர். என் மோகனுக்கு ஏதாவது வேலை கிடைக்கவேண்டும் என்று நான் வேண்டாத தெய்வங்களில்லை.
படிப்பை நிறுத்திக் கொண்டதில் இருந்து, மோகனை நேரில் சந்திக்க முடியாமலிருந்தது. சுகந்தன் மூலம் ஓரிரு கடிதங்கள் மட்டும் கிடைத்தன. இதனுல் என்மனம் வேதனையும் விரக்தியும் கொண்டிருந்தது. A
ஒருநாள். எனது நண்பி ஒருத்தியின் வீட்டிற்குக் கதைப் புத்தகம் வாங்கச் சென்று கொண்டிருக்கும்போது, "சாந்தி. சாந்தி." என யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பிப்பார்த் தேன். யாருமேயில்லை - என்மோகனேதான். மோகனைக்கண்ட துமே அழுதேவிட்டேன். காரணத்தைக் கேட்ட மோகன் கள்ள மில்லாச் சிரிப்பொன்றை உதிர்த்தார்.
**இதற்காகவா குழந்தைபோல் அழுகின்ருய். நான் உன்னை நேரில் கண்டு கதைக்காவிடினும் சுகந்தனிடம் கடிதம் அனுப் பினேன் தானே’’ ஆறுதல் கூறினர்.
'சாந்தி ஒரு good news. எனக்குக் கச்சேரியில் கிளார்க் வேலை கிடைச்சிருக்கு. அதோட என் மூத்ததங்கைக்கும் சென்ற வாரம் திடீரென்று கல்யாணம் நடந்தது' என்ருர்,
எனக்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை நானும் மோகனும் எப்படியாவது வாழ்க்கையில் ஒன்றிணைந்து விடுவோமென்ற புதிய நம்பிக்கையும் பிறந்தது. இப்படியாக எம் காதல் நம்பிக்கையோடு வலுப்பெற்ற வேளையில்தான் என்தலையில் ஒரு பாருங்கல்லைத் தூக்கிப் போட்டார் அப்பா.
எனது பெரியக்காவின் அத்தானின் த ம் பி. படிப்பறிவே இல்லாதவர். அவரை எனக்குக் கல்யாணம் செய்து வைக்கப்
தோழி 88

Page 19
போவதாக அம்மாவிடம் கூறிவிட்டார். அம்மா என் சம்மதத் தைக் கேட்டா. நான் தட்டிக்கழித்தேன்.
"ஒரே குடும்பத்தில் இரு வ ர் கலியாணம் செய்தால் ஒரு குடும்பம் வாழுமாம். மற்றக் குடும்பம் சீ ர ழி ந் து போகுமாம் அம்மா. நான் எப்படியெண்டாலும் சீரழியட்டும் எண்டு உங் கடை எண்ணம் போலே இருக்கு...”* அம்மாவிடம் கருத்து ரீதியாக பெரிதாய் ஒரு சண்டைபோட்டேன். அதனுல் இந்த வரன் குழம்பினலும் வேறிடங்களில் தொடர்ந்தும் அப்பா மாப் பிள்ளை வேட்டை நடத்திக் கொண்டிருந்தார்.
மோகனைத் தவிர வேறுயாரையும் எண்ணிப் பார்க்கக் கூட என் ம ன ம் இடந்தரவில்லை. எப்படியாவது மோகனைக்கண்டு நடந்ததை, நடக்க இருப்பதை கூறிவிட வேண்டுமென்ற முடி வோடு, அம்மாவிடம் கோயிலுக்குப் போய்வருவதாகக் கூறி விட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டேன்.
என் வரவிற்காக நின்றது போன்று மோகன் கச்சேரி வாச லில் நின்றிருந்தார். என் வரவை சிறிது ம் எதிர்பார்த்திராத தால் சிறிது அதிர்ச்சியடைந்தாலும் கூட,
‘என்ன சாந்தி. தனியாக இவ்வளவு தூரம்' என்று தைரியத்துடன் கேட்டார். −
நான் எனது நிலைமையை விளக்கினேன். மோகனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ‘இன்னும் ஒருவருடம் மாத்திரம் காலத்தைக் கடத்திச் சென்றீரானல் எப்படியும் நான் உம்மைக் கைப்பிடித்து விடுவேன். என்னுடைய இரண்டாவது தங்கைக்கும் நிச்சயம் செய்தாகிவிட்டது. இன்னும் ஒரு தங்கைதானே. அவள் சின்னப்பிள்ளை. அது தவிர, இன்னும் இரண்டு தம்பிமார் இருக் கிருர்கள் என்பதால் நான் அவ்வளவு தூரம் யோசிக்கத் தேவை யில்லை' என்று ஆறுதல் கூறினர்.
நீண்டநேரம் கதைத்த பின்னர் நான் மோகனிடமிருந்து விடைபெற்றேன். அன்றுதான் என் மோகனை இறுதியாகச் சந் திப்பேன் எனக் கனவிலும் கூட நினைக்கவில்லை. நான் வீடுவரு முன்னரே எம் உரையாடலின் மர்மத்தை யாரோ பாவி அப் பாவுக்குக் கூறிவிட்டான். V
வீட்டுவாசலில் அடியெடுத்து வைத்ததுதான் தெரியும். அப் பாவின் ஆணவக்குரல் என்னை நடுங்கவைத்தது. 'தச்சனேடு உனக்கென்னடி சமாச்சாரம். '
தோழி 34

மறுகணம் அப்பாவின் கரம் என் கன்னத்தைப்பதம் பார்த்தது நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து விட்டேன். பெற்றதாயின் வயிறு பற்றி எரிந்தது. ‘ஓ’ என அழுதாள். தந்தையைத் தடுத்தாள். எனக்குக் கிடைத்த மீதி என் அன்னைக்கும் கிடைத்தது.
இந்தநிகழ்ச்சியைக் கண்டுகளிக்க உளவறியும் கூட்டமே எம் மைச் சூழ்ந்து விட்டது. என் நிலையையும் என் தாயின் நிலையை யும் பாராது அத்தனை வசை மொழிகள்! பத்தினிப் பெண்டிரின் பல்வேறுபட்ட வசைமொழிகள் என்’காதுகளில் தொனிக்கின்றது.
"இந்த ஊருக்கையும் எவ்வளவு குமர்ப்பிள்ளையள் இருக்குது கள். இவள் ஆடித்திரியிற மாதிரி எந்தப் பிள்ளையள் தி ரி யுது
கள். ** V
-இது என் நெஞ்சில் குத்தப்பட்ட ஈட்டி.
'இவள் பிள்ளைகளைப் பெத்து வளத்தமாதிரி யார் வளர்த் ததுகள்'
-இது என் தாயின் நெஞ்சைப் பிளக்கின்ற கூரான அம்புகள்.
“இது இன்றைக்குச் சாகப் பாத்திது; மற்றது தபால்கார னேடை ஒடிப்போக விடவில்லை யெண்டு குளிசை போட்டு ச் செத்திது.*
-இவைகள் என் காதில் ஒலித்த மதுரகீதங்கள். இன்னும் எத் தனையோ. இன்னமும் மெளன கீதங்களாய். மனத்தில் ஒலித்த வண்ணம் உள்ளன.
நான் மெல்ல எழுந்து, பொறுமையை இழந்தவளாய் தோட் டப்பக்கம் செல்கிறேன். சின்னக்காவின் நினைவு அம்மாவை வாட்ட, அம்மா என்னைப் பின்தொடர்ந்து வந்து என் அருகி லிருந்து சமாதானமளித்தா.
இந்தச் சம்பவத்தின் பின்னர் நான் கூண்டுக்கிளியாகிவிட் டேன்.மோகனின் நினைவு என் உடலின் அரைப்பங்கைக் கொண்டு சென்றுவிட்டது. மூன்று வாரங்களாக மோகனைக் காண வே யில்லை. என் துயரங்களையெல்லாம் கடவுளிடம்தான் முறையிட் டேன். ஆனல் - பலன் கிடைக்கவில்லை.
al
தேடியேவிட்டார் தந்தை - எனக்கோர் வரன்.
நான் இப்போது எதுவும் பேசா மடந்தையாகிவிட்டேன். எப்படியாவது இக்கொடிய வாழ்விலிருந்து நிரந்தர விடிவுகாண
தோழி35,

Page 20
வேண்டுமென்று துடித்தேன்; சின்னக்காவை "வாழத் தெரியாத கோழை என்று ஏசிய மோகன் எ ன் னை யு ம் அப்படித்தானே சொல்வாரென எண்ணிப் பார்த்தேன். அதற்கு ப் பதிலடி கொடுத்தது என் இதயம்.
* உங்களுக்காகவே உயிர்வாழ்கிறேன்" எ ன் ற வ ள் இன்று என்ன செய்து கொண்டாள் என்று ஏங்குமே என் மோகனின் இதயம்.
என் எண்ணங்கள் தடுமாறி நின்றன. அம்மாவையும் எண் ணிப்பார்க்க வேண்டிய க ட  ைம. சின்னக்காவின் இழப்பால் அம்மாவின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்டிருக்கும் தாக்கங் கள். இத்தனைக்கும் மத்தியில் உயிரை மோகனுக்குக் கொடுத்து உள்ளத்தை என் அப்பா தேடிய வரனுக்கு அர்ப்பணிக்க உறுதி கொண்டேன். எதுவித ஆடம்பரமுமின்றி தி ரு ம ண ம் நடத் தேறியது.
நாட்கள் நகர்ந்தன . .
பெயரளவில்தான் இல்வாழ்க்கையே த வி ர உள்ளத்தால் எனக்குச் சிறைவாசமாகவே யிருந்தது. மோகனின் நினைவோடு காலங்கள் விரைந்து கொண்டிருந்தன. இதுவரைக்கும் எனக்கு மோகனைப்பற்றிய எந்தவிதத் தகவலும் கிடையாது.
ஒருநாள்
நானும் எ னது கணவரும் மனநோயாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் அவருடைய சிறியதந்தையைப் பார்க் கச் சென்றிருந்தோம். என்பார்வையை நாலாபக்கமும் திசை திருப்பினேன்.
"நான் கண்ட அந்தக் ..கொடூடூடூ. ரக் காட்சியை எப்படி
வர்ணிப்பேன்.
நிலை தடு மாறினேன் .
மறுகணம் எனக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. கண் விழித்தபோது என்னருகில் வைத்தியரும், கணவரும் நின் றிருந்தனர். வைத்தியர் கூறுவதைக்கேட்டு அழுகைக்கிடையிலும் சிரிப்புத்தான் வந்தது.
*உங்கள் மனைவியின் உள்ளம். எதையும் சகிக்கக்கூடியதல்ல *அதனுலே அவமயங்கி விழுந்து விட்டா' என்ருர்,
கோழி 38

வைத்தியருக் கெப்படித் தெரியப்போகிறது - என் உள்ளத் தில் கட்டிவைத்த கோவிலின் தெய்வம் இங்கு உறைவிடம் கொண்டுள்ளதைப் பற்றி. என் உயிரென மதித்த என் மோக னின் நிலைமையைத்தான் எப்படி எடுத்துரைப்பேன்!
கட்டழகைக் கொண்ட கண்கண்ட தெய்வம் கட்டிலிலே ஒட்டிக்கிடக்கின்றதே. சிரித்த முகத்தோடு என் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் மோகன் இன்று ஒட்டி உலர்ந்து, தாடி, மீ  ைச இவைகளுடன் தனக்குள்ளேயே சம்பாஷணை நடத்துகின்றரே.
இவைகளைப் பார்த்து இனியுமா நான் இன்பமில்லா இல் வாழ்க்கை நடத்தவேண்டும்? என் தந்தையைப்போன்ற சாதி மகான்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்துப் பல் இளிக்கும் சமுதாயத்தின் போலிப் போர்வைகளை உத்றித் தள்ள வேண்டும். இல்லையேல், எ ன் மோகன்போன்று எத்தனை மோகன் கூட்டம் மனநோயாளர் கட்டிவில்!
தோழி! நீயும் ஒரு பெண்தானே! சிந்தித்துப்பார். அன்பால் ஒன்று பட்ட இரு இதயங்களை வாழ்க்கையில் ஒன்றுசேரவிடாது கண்ணீரிலும், கல்லறையிலும் வாழவைக்கும் இந்த சமுதாயம் எந்த நூற்ருண்டில் விழிப்புணர்ச்சி காணப்போகின்றது? எந்த மருத்துவராலுமே குணப்படுத்த முடியாது. இரத்தத்தோடு ஒன் றித்த இந்தச் சாதி என்னும் கொடியநோயை எம்மால் - எம் பெண் இனத்தால் நிச்சயம் குணமாக்க முடியும்.
m--—
வாங்கிய வரதட்சணையின் வட்டிப்பணத்தில்தான் வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்கு உணவும் உடையும் உவந்தளிக்கப்படுகின்றது.
-கந்தர்வன்
y 女 ★ \r
நீங்கள் அடுப்பங்கரையில் நின்று அரிசியை வேகவைப்பீர்கள் பருப்பை வேகவைப்பீர்கள் உங்களையே வேகவைப்பதுமுண்டு ஆம் - வெண்மணியில் வெந்ததில் பெண்மணிகளே அதிகம். - கந்தர்வன்
தோழி 37

Page 21
பெண்ணும் சிலுவையும்
தோழி 38
சாருமதி
எத்தனை யுகங்கள் இவள்
இப்படிக் கிடப்பாள்.
தனியுடமைத் தர்பார்கள்
தந்த சிலுவையில்.
ஆணதிகார ஆணவ ஆணிகளின்
கூர் முனைகள் தானு
மானிதத் தொடர்ச்சியின்
மேனிக்கு தளை.
தேவ குமாரனுக்கு Y
திரும்பவும் உயிர்ப்பிருந்தது. யார் இவளின் மீட்பர்.? இவளின் உயிர்ப்பிற்கு உத்தரவாதமே இல்லையா,
இதுவே இவளுக்கு
அங்கீகரிக்கப் பட்டிருந்தால்
இவளே எழட்டும்.
நரகங்களையே சொர்க்கமாய்
நயந்து நயந்து காட்டியோரின்
நியாயங்களே இவள் சிலுவையானல்
இவளின் எழுச்சி
சொர்க்கங்களின் சுவர்களை
சுக்கு 'நூருக்கட்டும் .
இவளுக்குத் தேவை மீட்பர்கள் அல்ல
இவளின் சிலிர்ப்பை
ஏற்பவர் மட்டுமே.
சிலுவைகள் சிதற
இவள் ஒரு நாள் எழுவாள்
வெள்ளைப் புழுக்களை
தன்னிரு கைகளால்
விண்ணில் விடுவாள்*

பொதுவுடைமைக் கொள்கை
யும் பெண்களும்
எஸ். தமயந்தி
Pனித சமுதாயத்தின் வளர்ச்சிக் காலகட்டத்தில் ஆதிச் சமூக அமைப்பிலிருந்து அடிமைச் சமுதாய அமைப்பு உருவாகிய போது பெண்ணும் அடிமையாக்கப்பட்டாள். உழைப்பும், பாது காப்பும் ஆண்கள் கைக்கு மாற்றப்பட்டபோது, இவற்றில் பெண் ணின் பங்களிப்பு குறைவடையத் தொடங்க, அந்தச் சமூகத்தில் பெண் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அக்கால கட்டத்திலிருந்து சமூகம் படிப்படியாக வளர்ச் சியுற்ற போதும், இன்றைய முதலாளித்துவ அமைப்பு வரை பெண்களின் அடிமைத்தனம் மேலும், மேலும் புதிய வடிவங்க ளில் வளர்ச்சியுற்றதே தவிர, நீக்கப்படவில்லை. இவற்றுக்கெல் லாம் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பு மட்டு மே சரி யான தீர்ப்பைக் கொடுக்க முடியும்.
பெண்களுக்கு மட்டுந்தான் அடிமைத்தனம் என்பதில்லை. ஆண்களும் பாதிக்கப்பட்டிருக்கிருர்கள் தான். ஆனல், ஆண்களை விட பெண்களே மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கி ருர்கள். பெண் குழந்தைகள் பெற்றேர்களுக்கும், பெரியோர்க ளுக்கும் அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்ற தாழ்வு மனப் பான்மையை சிறு வயுதிலேயே ஏற்படுத்தியதன் மூலம் அவர்களை மனுேரீதியாகவே பலவீனப்படுத்தியிருக்கிருர்கள். குழந்தைப் பரு வத்தில் தந்தையாலும், வாலிபப் பருவத்தில் கணவனலும், வயோதிப காலத்தில் மகஞலும் காப்பாற்றப்பட - அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்ற தவருன கருத்து ஊட்டப் பட்டிருக்கிறது. இவற்றிற்கு மதம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
இந்து சமயத்தில் பெண் கணவனின் பாதி அங்கமாகக் கரு தப்பட்டாள், இதனுல் கணவன் இறக்கும்போது அவனின் பாதி அங்கமான மனைவியும் சென்ற நூற்ருண்டு வரை இந்தியாவில் உடன்கட்டை ஏற்றப்பட்டாள். இந்தக் கொள்கை ஆண்களைப் பொறுத்தவரை கடைப்பிடிக்கப்படவில்லை. இதேபோன்று ஐரோப் பாவின் கிறிஸ்தவ பாதிரிமார்களும் சில நூற்ருண்டுகளுக்கு முன் வரை பெண்களுக்கு ஆத்மா இல்லையென்று சொல்லிவந்தார்கள்.
தோழி 39

Page 22
முஸ்லிம் பெண்களின் அழகை பிற ஆடவர்கள் பார்க்காதவண் னம் கோஷா அணியும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. உலக நாடுகள் எல்லாவற்றிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ் வேறு தனிச் சட்டங்கள் ஏற்பட்டிருந்தது. பெண்கள் தனியாகச் சிந்திக்காதபடி சமுதாயம், ஆசாரம், பண்பாடு போன்ற விஷயங் களில் ஆண்களிலிருந்து நேர்மாறனி வழிகள் செய்யப்பட்டன மத சம்பந்தமான கதைகளால் மூட நம்பிக்கையைத் தோற்று வித்து அவற்றிலிருந்து மீளவே முடியாமல் செய்தார்கள். இவற் றுக்குக் காரணம் கடவுள் என்றும், விதி என்றும் போலிவேஷ மிட்டார்கள். இவை எல்லாவற்றையும் விட, முக்கியமாக பொரு ளாதார அடிமைத்தனம்" பெண்களை அடிமை விலங்கிட்டிருக்கிறது.
மேலை நாடுகளில் சென்ற நூற்ருண்டில் தான் பெண்களின் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது. இலங்கையில் அது இப் போதுதான் ஆரம்ப நிலையிலிருக்கிறது. எனினும், பெண்களுக்குப் பொருளாதார முறையில் சுதந்திரம் கிடைக்காத வரை, திரும ணம் அவர்களுக்கு வாழ்க்கை நடத்தும் தொழிலாகக் கருதப்படும் வரை சுதந்திரம் என்று சொல்வது அர்த்தமற்றதுதான்.
பொருளாதார சுதந்திரம் என்பது பெண் தனது வாழ்க்கையை நடத்துவதற்கு "பிறருடைய உதவியை எதிர்பார்க்காதிருத்தல்" என்பதே. ந ம து சூழ்நிலையில் விருப்பமிருந்தும், சந்தர்ப்பம் கிடைத்தும் கூட, சமுதாயத்தின் கட்டுக்கோப்பும், பண்பாடு போன்றவையும் இவற்றிற்குத் தீர்வினைத் தர மறுக்கின்றன. ஜேர்மனி போன்ற மேற்கு நாடுகளில் பெண்கள் நாம் நினைத் தளவு சுதந்திரமானவர்களாக இல்லை. மணம் முடித்த பின்னர் உத்தியோகம் பார்க்கக் கூடாதென்ற சட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டிருக்கிறது. மணம் என்ற தொழில் கிடைத்தபின் பெண் களின் பொருளாதாரச் சிக்கல் தீர்ந்துவிடுமென்று நினைத்துவிட் டார்கள் போலும்.
பெண்கள் உணவு, உடை, வீடு, பிரயாணம் போன்ற செல வுகளுக்காகவும் நோய், பிரசவ காலம், முதுமை போன்ற நிலை மைகளிலும் ஆண்களிடம் கைநீட்ட வேண்டிய அவசியமில்லாம லும் செய்வதுதான் உண்மையான சுதந்திரம். இவையெல்லாம் ஒரு சோஷலிஸச் சமுதாயத்தில் தான் நடைமுறைப்படுகின்றதே தவிர, ஒரு முதலாளித்துவ அமைப்பில் நடைபெற முடியாது. முதலாளிகள் தங்கள் தொழிற்சாலைகளில் பெண்களுக்கும் இடம் கொடுக்கிருர்கள் தான். ஆனல், அதிலுள்ள அடிப்படையான நோக்கத்தைத் தெரிந்துகொள்ளும்போது இதைவிட அடிமைத் தனத்துக்கு வேறு உதாரணம் தேவையில்லையென்பது புரியும்.
தோழி 40

தொழிற்சாலைகளில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் குறை வான கூலி கொடுக்க முடியும். ஒரு ஆணுக்குக் கொடுக்கும் தொகையை விட அரைவாசித் தெர்கைதான் ஒரு பெண் தொழி லாளிக்குக் கொடுக்கப்படுகிறது. இதனல் குறைந்த சம்பளத்தில் பெண் வேலைபார்க்கும் அதே நேரத்தில் ஆண்கள் வேலையற்றவர் களாகிவிடுகிருர்கள். எனவே, பெண்களுக்கு வேலை கொடுப்பத ஞல், அவர்களின் உழைப்பில் அதிகமான பங்கை மிக இலகுவாகச் சுரண்ட இந்த முதலாளிகளுக்கு முடிகிறது.
ஆனல், பொதுவுடைமைச் சமுதாய அமைப்பில் வாழ்க்கை யின் எல்லா நிலைகளிலும் பெண்களுக்குச் சமவுரிமை கிடைப்ப தோடு பொருளாதார சுதந்திரமும் கிடைக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் த னது தேவைக்குச் சம்பாதிப்பதை ஆதரிக்கிறது. இதனல் ஆண்களோடு சமமாக வாழ அது வழிவகுக்கிறது. பெண்கள் தொழிற்சாலைகள், காரியாலயங்கள், சேனை முதலிய எந்த இடங்களிலும் தடையின்றி வேலைசெய்ய அனுமதிக்கிறது. இதனல் அவர்களின் உழைப்பைத் திருடுவதோ அல்லது ஆண்கள்ை வேலையற்றவர்களாகவோ ஆக்குவதில்லை. பிரசவத்தின் முன்னும் பின்னும் பெண்களின் பலவீன நிலையைக் கருதி மூன்று மாத ஒய்வுடன் முழுச் சம்பளமும் கொடுக்கிறது. இவ்விதமாக நோய் வாய்ப்படும் போதும், பலவீனமான சந்தர்ப்பங்களிலும் அவர்க ளைப் பராமரிக்கும் பொறுப்பை நாடு ஏற்றுக்கொள்கிறது. இப் படியான செய்கைகள் முதலாளித்துவக் கொள்கைக்கு அப்பாற் பட்டது. V
பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைத்து விட் டால் குடும்ப சுகம், கணவன்  ைமனைவிக்கிடையிலுள்ள அந்நியோன் னியம், பெற்றேர்களுக்கும், பிள்ளைகளுக்குமிடையிலுள்ள 'பரம் பரை அன்பு" போன்ற விடயங்கள் யாவும் கனவுபோல ஆகி விடுமென்றும், ஆண் - பெண்களுக்கிடையிலுள்ள ஒழுக்கம் கெட் டுப்போய்விடுமென்றும் சொல்கிருர்கள். ஆஞ ல் பெண்களின் மனிதத் தன்மையைக் கொஞ்சங்கூடப் புரிந்து கொள்ளாதவர்க ளும், புரிந்துகொள்ள மறுப்பவர்களுமே இப்படியெல்லாம் கூறு கிருர்கள் பெண்கள் தங்கள் எண்ணப்படி, தமது கட்டுப்பாட் டின் கீழ் அடிமைத்தனமாக வாழவேண்டும் என்று எண்ணுகி ருர்கள். இவர்களின் இந்த எ ன் ண ங் களு க் கெல் லாம் எதிர்மாருக பொதுவுடைமைச் சமுதாயம் அமைந்திருப்பதாலேயே முதலாளிகள் அனைவரும் இதனை எதிர்க்கின்றனர். ஏனெனில், பொதுவுடைமைச் சமுதாயத்தில் மக்களின் உழைப்பைச் சுரண்டு தல், பெண்களைத் தமது காம இச்சைக்குப் பயன்படுத்துதல் போன்ற சகல தீய செயல்களும் கண்டிப்பாக மறுக்கப்பட்டுள்ளன.
தோழி 41

Page 23
மக்களனைவரும் ஒருவரையொருவர் ஏமாற்ருமலும் வஞ்சனை செய்யாமலும், சுரண்டாமலும் நேர்மையானவர்களாய் வாழ வேண்டுமென பொதுவுடைமைக்காரன் ஒவ்வொருவனும் விரும்பு கிருன். இங்கு ஆசை காட்டுதலுக்கோ, பலாத்காரத்திற்கோ சிறிதும் இடமில்லை. எனவே, இங்கேதான் உண்மையான சுதந் திரத்திற்கு வழிகிடைக்கின்றது. இது சுதந்திரத்திற்குப் பகைமை யான மதம், கடவுள், சமூகம், பொருளாதாரச் சிக்கல் எதனையும் பொருட்படுத்தாமல் அவற்றுக்கு ஏற்ற தீர்ப்பளிக்கிறது. பெண் களுக்குத் திருமணம் ஒரு தொழில் என இது கூறவில்லை. பெண் கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று கருதுகிறது. இங்கே கொடுமை செய்கின்ற சொற்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை.
வெளிச்சத்துக்கு
நன்றி மனஓசை,
கோவை அவினுசிலிங்கம் மனையியல் கல்லூரியில் 15 சிங்கள மாணவிகள் பயில்கிருர்கள். இலங்கையில் அண்மையில் ஏற் பட்ட கலவரத்தின்போது சில பகுத்தறிவு வாதிகளும், அரசியல் கட்சிகளும் இக்கல்லூரியின் சுவர்களில் ‘எங்களுக்கும் காமப்பசி அதிகரித்துவிட்டது. சிங்களச்சிகளை வெளியே அனுப்பு' என்று எழுதியிருந்தனர். இதுபோன்ற இதைவிட மோசமான வாசகங் களை கோவை நகர் முழுவதும் எழுதியுள்ளனர்.
கோவை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள், ஒரு சரியான நிலைப்பாடு எடுத்து, பின்வரும் வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை அவினசிலிங்கம் கல்லூரிச் சுவர்களிலும் பிற
இடங்களிலும் ஒட்டினர்கள்.
“சிங்களவர்கள் தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிருர்கள். தமிழர்கள் சிங்க ள ப் பெண்களைக் கற்பழிக்கத் துடிக்கிழுர்கள். மொத்தத்தில் கற்பழிக்கப்படுவது நீதான்- பெண்ணினமே! இக் கொடுமைக்கு எதிராகக் குரல்கொடு, ஒரு முடிவெடு.”*
இச் சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.
தோழி 42

எழுவாய் தோழி
மிதிலா
மார்கழி பொழிந்து மழையால் நிறைந்து ஒடிய வெள்ளம் ஒருநாள் வடியும்
நீதிகள் ஒழிந்து நெருப்பினுள் அமிழ்ந்த நெடுநாள் வாழ்வும் ஒருநாள் குளிரும்.
பாரடி தோழி பாரினில் உண்மை பகர்ந்திடும் சரித்திரம் இதுவே தான்.
நீ இனி எழுவாய் நெஞ்சினை உயர்த்தி நெடுநாள் துயரை ஒரு நாள் முடிக்க
தன்னந் தனியணுய்
பெண்ணின் அடக்கப்
பொய்மைகள் தகர்ப்பாய்
முன்னம் வாழ்ந்த மூதாதை வாழ்வு இன்னும் தொடரா இதை நீ அறிவாய்.
எல்லா உலகும் எழுச்சி நிமிர எங்கும் பொதுமைச் சிவப்பு ஒளிகள்.
உன்னைச் சிறையில்
உட்கார வைத்த
பழைய உலகுப் பாதகம் ஒழியுது.
எங்கும் உழைப்போர் ஏந்திய கொடிகள் உன்னையும் தன்னுள் இணைத்தே கொண்டது.
ஏகாதிபத்திய தாசர்கள் தந்த முக்காடு வாழ்வு முடிந்தது எழுவாய்
அந்நியர் தம்மின் அடக்கு முறைக்குள் இன்னும் தமிழர் இருப்பதை வெறுப்பாய்
எழுவாய் தோழி எழுவாய் இனிமேல் எதிர்ப்படும் கொடுமை தடுப்பினைத் தகர்த்தே
தோழி 43

Page 24
தரமான
தங்க வைர நகைகளுக்கு
செல்லையா சிவபாதலிங்கம்
220 A, கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்.
தோழிக்கான ஆக்கங்கள், அபிப்பிராயங்களை அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்ருேம். அனுப்பவேண்டிய முகவரி.
தோழி, *ஆனந்தக்குமாரசுவாமி விடுதி, பொன். இராமநாதன் வீதி,
யாழ்ப்பாணம்.
தோழியின் ஆக்க அமைப்புக்களுடன் தொகுப்பு
செல்வி: எஸ். தியாகராசா.
தோழி 44

DEALERS IN:
EleCtriCd GOOCS SLOn DiOe
De V. C. Dipe
And Electrica COntra CterS.
ATS OWER ELECTRICALS
601, K. K. S. Road, JAFFNA.

Page 25
தோழியின் வளர்
5 TLD ghlநல்வாழ்த்துக்கள்!
பியூற்றி
19, பொ
ழ்ப்பா
பர்ன் ? நின்ாேர்ஸ் tே ,

ாச்சிக்கு
சென்ரர்
luas GonL
ᎦᏡᎼᏤ ᎥᏝ . .
கே,
ாஸ், விநி. பார்ப் பானம்