கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2000.09

Page 1
ή 2000
ILIJ ID II
ଗ4
m H
ரெங்ளி வைதேகியின்
『
si .
 
 
 

ாவகவீைதிருகேகொ:ை

Page 2
தேர்தலும் அரசியல் கலாசாரமும்
"நீதியான சுதந்திரமான வன்முறை யற்ற தேர்தல் நடக்கவேண்டும். அரசு இதற்கு உத்தரவாதம் தரவேண்டும்.” என்று எதிர் கட்சியாக இருந்த யூ.என்.பி அரசைக் கோருகின்றது. இதில் நியாயம் இருக்கத் தான் செய்கின்றது.
சுதந்திரமான, நீதியான வன்முறையற்ற தேர்தலை நடத்துவதற்கு யூ.என்.பி யின் ஒத்துழைப்பை அரசாங்கக் கட்சியாக இருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி
கோரியுள்ளது. இதுவும் நியாயமான
கோரிக்கை தான்.
"தமிழ்ப் பிரதேசத்தில் ஜனநாயக ரீதி யில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தலில் போட்டியிடுகின்ற ஆயுதக் குழுக்கள் வைத்திருக்கின்ற ஆயுதங்களை அரசு களையவேண்டும்.” தமிழர் கூட்டணியின் கோரிக்கை இது. ஜனநாயகத்தை பாது காப்பதற்கு அத்தியாவசியமான கோரிக்கைதான் இது.
"வன்முறையற்ற தேர்தலை நடத்த வேண்டும்’ என்று வன்முறையையே உயிர்நாடியாகக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி கூட (ஜே.வி.பி) அறைகூவல் விடுத்தள்ளது.
நீதியான, நியாயமான, சுதந்திரமான, வன்முறையற்ற தேர்தலுக்கு பெளத்த மகாசங்கத்தினரும் கோரிக்கை விடுத் துள்ளனர். எதிர்வரும் தேர்தலைக் கண் காணிப்பதற்கு உத்தியோக ரீதியான அங்கீகாரம் வேண்டுமென்று மகா சங்கத் தினர் தேர்தல் ஆணையாளரைக் கேட் டுள்ளனர்.
தேர்தலைக் கண்காணிக்க உள்ளுரி லுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக் கின்றன. இதேவேளை தேர்தலைக் கண்காணிக்க 2000 க்கு மேற்பட்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்
இங்கு வரவிருக்கின்றனர்.
எமது நாட்டில் நீதியான, நியாயமான, அமைதியான, வன்முறையற்ற தேர்தல் நடக்கக்கூடிய சாத்தியக்கூறு உண்டா? தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான அரசி யல் கட்சிகள் இதய சுத்தியுடன் மேற்கூறப் பட்ட கோரிக்கையை முன்வைத்துள்ள னவா? ஜனநாயக ரீதியான அமைதியான தேர்தலுக்கு மேற்படி கட்சிகள் தங்களு டைய அந்தரங்க சுத்தியான ஒத்துழைப் பைக் கொடுப்பார்களா? இது சாத்தியமா? எமது நாட்டு மக்கள் இவர்களை நம்புவார் களா? எந்த அளவுக்கு இந்த அரசியல் கட்சிகள் நம்பகத் தன்மையுடையவை?
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரை அது ஒரு தரகு முதலாளித்துவக் கட்சி என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். எந்த நாடாயிருந்தாலும் அங்குள்ள தரகு முதலாளித்துவக் கட்சிகள் ஏகாதிபத்தியத் திற்கு விசுவாசமானதாகி, ஏகாதிபத்தியத் தின் கைக்கூலியாகவே இயங்கி வருகின்
டம், வன்முறை ஆகியவை தான் தரகு முதலாளித்துவக் கட்சிகளின் மூலதனம். கள்ளக்கடத்தல்காரர்கள், பதுக்கல்காரர் கள், கறுப்புச் சந்தைக் காரர்கள், கசிப்பு, போதைவஸ்து முத லாளிகள், பாதாள உலகக் கோஷ்டிகள் ஆகிய பஞ்சபூதங் கள் தான் இந்த தரகு முதலாளித்துவக் கட்சிகளின் ரட்சகர்கள். ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எப்படி விதிவிலக்காக இருக்கமுடியும்? அதன் வரலாறே அதனு டைய புனிதத்தன்மைக்கு (?) சான்று பகர்கின்றது.
கடந்த காலத்தில் இலங்கையில் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் களில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மேற்கூறப்பட்ட பஞ்சபூதங்களின் "புனித சேவையைப் பயன்படுத்தாமல் எந்த ஒரு தேர்தலிலும் பங்குபற்றியுள்ளார்களா?
(தொடர்ச்சி பின் அட்டையில்)
- 2 -

விபவியின் சாதனைகள்
எமது நாட்டில் சிவில் சமூகம் அரசியல் பொருளாதாரத் துறைகளில் மாத்திரம் அதிக கவனத்தைச் செலுத்தியது. கலாசாரத் துறையை சிவில் சமூகம் முற்றுமுழுதாக புறக்கணித்தது.
“தேசங்களை உருவாக்குபவர்கள் கவிஞர்களும் கலைஞர்களும்தான். வணிகர்களும், அரசியல்வாதிகளுமல்ல" என்று உலகப் புகழ் பெற்ற கலைஞானி ஆனந்தக்குமாரசாமி அவர்கள் கூறியுள்ளர்.
கலை தேசத்தின் ஆத்மா. கலைக்கு மகத்தான சக்தி உண்டு. தனி மனிதனுடைய விடுதலையையும் ஒரு சமூகத்தின் விடுதலையையும் தேசத்தின் விடுதலையையும் |கலாசார மறுமலர்ச்சிதான் நிர்ணயிக்கின்றது.
பிரித்தானியாவில் நிகழ்ந்த கலாசார மறுமலர்ச்சிதான் (RENESANGE) அங்கு பெரும் அரசியல் மாற்றத்தை (POLITICALTRANSFORMATION) ஏற்படுத்தியது. புரட்சிக்கவிஞன் ஷெல்லி, காதல் கவிஞன் ஜோன் கிற்ஸ், வில்லியம் வோட்ஸ்வேத், லோட் பைரன், கோல்றிஜ், லோட் ரெனிசன், ஒலிவர் கோல்ஸிமித், மில்ரன் ஆகியோரது உன்னத படைப்புக்கள் ஐரோப்பிய சமூகத்தையே உலுக்கியது. ஐரோப்பாவில் ஏற்பட்ட சிவில் சமூகத்தின் விழிப்புக்கும் பெரும் அரசியல் மாற்றத்திற்கும் கலை இலக்கிய மறுமலர்ச்சிதான் கால்கோளாயமைந்தது. “ ۔ ۔ ۔
வால்டயர், ரூசோ, பொக்காவழியோ, எமிலிஜேலோ, விக்ரர் ஹியுகோ ஆகியோரது எழுத்துக்கள் பிரெஞ்சுப் புரட்சிக்கு அத்திவாரமாயமைந்தது. ரவீந்த்ரநாத் தாகூர், பங்கிம் சந்த்ர சட்டர்ஜி, சரத் சந்த்ரர், வித்யாசாகர், ஆகியோரது கலைப் படைப்புக்களும் அரவிந்தர், விவேகானந்தர் போன்றோரின் ஆத்ம ஞானமும் வங்கத்தில் பெரும் |விழிப்பையும் விடுதலை வேட்கையையும் ஏற்படுத்தின. இந்திய சுதந்திரப்
போராட்டத்திற்கு உந்து ச்க்தியாயிருந்தன.
விபவி கலாசார மையம், எமது நாட்டின் கலாசாரத் துறையிலுள்ள அசமந்தப் போக்கை அவதானித்து அடையாளங் கண்டது. இக் குறைப்ாட்டை எமது சிவில் சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. இத் துர்ப்பாக்கிய நிலையைப் போக்குவதற்கான செயற்பாட்டில் விபவி தன்னை பரிபூரணமாக ஈடுபடுத்தியது. இதற்கான குறிக்கோள்களை வகுத்துக் கடந்த ஒன்பதாண்டு காலமாகச் செயலாற்றி வருகின்றது.
மக்களின் கலாசாரத்திற்காகப் போராடுதல், மக்களிடம் ஏற்கனவே இருக்கின்ற கலாசார உரிமைகளுக்காகப் போராடுதல், ஜனநாயகம், இனங்களுக்கிடையே புரிந்துணர்வு, சமாதானம், மனித உரிமைகள், மனித நேயம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்தல், அவற்றை அபிவிருத்தி செய்து மேம்படுத்தல், போருக்கும் வன்முறைக்கும் எதிராகச் செயற்படுதல், சமாதானத்திற்காகத் தொடர்ந்து பேராடுதல்,
a 3

Page 3
அரசிடமும் அதிகார வர்க்கத்திடமும் சிக்கித் தேக்கமுற்றிருக்கின்ற கலை இலக்கியத்தை மீட்டெடுத்தல், சுதந்திரமான ஆரோக்கியமான கலை இலக்கியத்தை நிர்மாணிக்கின்ற அதேவேளை, அரசினதும் அதிகார வர்க்கத்தினதும் கலாசார நடவடிக்கைகளுக்குப் பதிலாக மாற்றுக் கலாசார நடவடிக்கைகளை (விபவியின் சுதந்திர இலக்கியவிழா) தொடர்ந்து மேற்கொள்ளுதல்,
பத்திரிகைச் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராடுவதுடன் சுதந்திர ஊடகத்துறையை (ஒலி, ஒளி ஊடகங்கள்) நிர்மாணிப்பதற்காகப் போராடுதல்,
ஓரங்கட்டப்பட்ட மக்களின் அதாவது பெண்கள், சிறுவர்கள், சிறுபான்மையினர் உட்பட அடித்தள மக்களின் அடிநாத அனுபவங்களை உள்ளடக்கும் கலைப் படைப்புக்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
மேற்குறிப்பிட்ட பிரதான குறிக்கோள்களை மையமாக வைத்துக் கலாசார விடுதலைக்கான போராட்டத்தை விபவி நடத்தி வருகின்றது.
"கலாசாரம் என்பது மாசற்ற எண்ணக் கருவல்ல. அது சமூக சக்திகளின் மேலாண்மைக்கான போர்க்களமாகும். ஆகவே கலாசாரம் என்பது வர்க்கம், சாதி, பால் நிலை, பிரமுகர் சாமானியர், கிராமம் நகரம் என்ற வகையில் அதிகாரக் கட்டமைப்புப் பற்றிய சமூகக் கருத்தாடல் இடம்பெறும் களமாகும். ஆகவே மனித நேயத்துக்கும் சுதந்திரத்துக்குமான போர்க்களமாக கலாசாரம் அமைந்துள்ளது” என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார். ஆகவே மனித விடுதலைக்கான இந்தப் போர்க்களத்தில் விபவி இரு பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
முதலாவதாக, இன்னும் எமது கலாசாரம் அரைக் காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ சமூக கலாசாரமாக இருக்கின்றது. எமது சமூக, மனித உறவு அக்காலத்திலிருந்ததைப் போலவே இன்னும் எஜமானுக்கும் சேவகனுக்கும் இடையேயுள்ள உறவாகத்தானுள்ளது. இன்று எமது சமூகத்தில் மனிதன் சுதந்திரமான பிரஜையாக இல்லாமல், எஜமானுக்குக் கீழ்ப்படிந்து பணிபுரியும் சேவக உறவு முறையாகத்தானிருக்கின்றது. இன்று எமது நாட்டிலுள்ள சமூகம், குடும்பம், வணக்க ஸ்தலங்கள், அரசு ஆகிய சகல நிறுவன அமைப்புக்களும் அரைக் காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ கலாசார அமைப்பு முறையையும் உறவு முறையையும் கொண்டவையாகவுள்ளன. உதாரணமாக, நாம் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற பொழுது அவர்கள் எமக்கு சேவை செய்வதற்காகவன்றி எம்மை ஆட்சி புரிவதற்காகவே (ழெவ வழ ளநசஎந டிரவ வழ சரடந) தெரிவு செய்தனுப்புகின்றோம். இன்னும் நாம் சுதந்திரமான பிரஜையாகவன்றி கீழ்படிந்து பணிபுரியும் சேவகன் நிலையிலுள்ள கலாசாரத்தையுடையவர்களாகவுள்ளோம்.
எமது நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபித்து நிலை நிறுத்துவதற்கு எமக்கு கலாசாரப் புரட்சி தேவை. அதாவது, கீழ்ப்படிந்து பணிபுரிகின்ற சேவகன் அல்லது குடிமகன் (SUBECT) நிலையிலிருந்து சுதந்திரமான பிரஜையாக (CITIZEN) மாற்றமடைவதற்கு கலாசாரப் புரட்சி (CULTURAL REVOLUTION) தேவை. இதன் மூலம்தான் நாம் உண்மையான ஜனநாயகத்தை நிறுவி அதைத் தொடர்ந்து பராமரித்து பாதுகாக்க (Լplգարք.
இரண்டாவதாக. 77 ஆம் ஆண்டின் பின்பு எமது நாட்டில் ஏற்பட்ட ஆழமான நெருக்கடியாகும். அதாவது 77ஆம் ஆண்டின் பின்னர் எமது நாட்டில் ஏற்பட்ட தாராளவாத
- 4 -

பொருளாதார ஆக்கிரமிப்புக் கொள்கையினால் ஏற்பட்ட நெருக்கடியாகும். அதாவது இந்தத் தாராளவாத பொருளாதார ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட கலாசார சீரழிவாகும்.
அன்று நிலப்பிரபுத்துவ நிலையிலிருந்த ஐரோப்பிய சமூகம் மறுமலர்ச்சியினாலும் கலாசாரப் புரட்சியினாலும் மாற்றத்துக்குள்ளாகியது இதனால் அங்கு சுதந்திரப் பிரஜை உருவானான். இந்த மாற்றத்தின் பின் தாராளமயப் பொருளாதாரத்திற்கு அவனால் தாக்குப் பிடிக்க முடிந்தது. எமது நாட்டைப் பொறுத்தளவில் எமது சமூகம் இன்றும் எஜமான் - சேவகன் நிலையில்தானுள்ளது. இங்கு இன்னும் சுதந்திரப் பிரஜை உருவாகவில்லை. இந்த நிலையில் மனிதன் நுகர்வோனாகத்தான் இருக்கின்றான். இதன் காரணமாக மனிதன் தாராளமய பொருளாதாரத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கலாசார ரீதியில் நெருக்கடிக்குள்ளாகி சீரழிகின்றான். விபவி இவ்விரு பிரச்சினைகளையும் சரியாக விளங்கிக் கொண்டு கலாசாரத் துறையில் அதன் நடவடிக்கைகளை மேற் கொண்டது. ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், கலாசார செயற்பாட்டாளர்கள், புத்தி ஜீவிகள் ஆகியோருக்கு நூற்றுக்கு மேற்பட்ட கலாசார செயலமர்வுகளை விபவி ஏற்பாடு செய்து நடத்தியது. அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கலாசாரத் துறை சார்ந்த புத்தி ஜீவிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும், காலத்துக்குக் காலம் அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தின் அரசியல் கட்டுப்பாட்டிலிருந்து கலாசாரத்தை விடுவிப்பதற்கான கலாசார செயலமர்வுகளை விபவி நடத்தி வந்துள்ளது.
பூரண அபிவிருத்தியின் அத்தியாவசியமான ஓர் அங்கமாக கலாசாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, ‘கலைகளின் சுயாதீனத்தை கெளரவித்து, கலைகள் மீது மறைமுகமாக அரசு தலையீடு செய்வதை இல்லாதொழிக்கும் அதேவேளை கலைகளுக்கு குறிப்பிடத்தக்க அனுசரணை வழங்கப்படும். என இன்றைய அரசாங்கம் தனது உத்தியோகபூர்வமான உறுதிமொழிகளை கொள்கைப் பிரகடனத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது. ஆனால் அது அதிகாரத்திற்கு வந்து பின் இதற்கு மாறாக செயற்பட அரசு முயன்றது.
1) மக்கள் கலாசார உரிமைகள்: ஏற்கனவே இருந்த உரிமைகளைப் பாதுகாத்தல்.
2) மக்கள் கலாசாரத்திற்கான உரிமைகள்: கலாசாரத்தை தொடர்ந்து வைத்திருப்ப
தும் அவற்றை மேம்படுத்துவதற்குமான உரிமைகள்.
மேற்கூறப்பட்ட இரு குறிக்கோள்களையும் அடிப்படையாகக் கொண்டு விபவி இயங்கி வருகின்றது.
1977ஆம் ஆண்டு கலாசாரம் சம்பந்தமாக தற்போதய அரசாங்கத்தின் கலாசார அமைச்சு நான்கு சட்ட வரைவுகளைக் கொண்டு வந்தது. இச்சட்ட வரைவுகள் மேற்கூறப்பட்ட கலாசாரம் சம்பந்தமான உரிமைகளை உதாசீனம் செய்பவையாகவும் கலாசார அமைச்சருக்கும், கலாசார அமைச்சு அதிகாரிகளுக்கும் மேலாதிக்க, கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குபவையாகவும் அமைந்திருந்தன. கலாசார அமைச்சின் இந்த சுதேச்சதிகார செயலுக்கெதிராக விபவி எமது நாட்டிலுள்ள 150க்கு மேற்பட்ட தண்லசிறந்த சிங்கள. தமிழ், முஸ்லிம் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அணிதிரட்டிப் போராடியது. இதனால் கலாசார அமைச்சு இச்சட்ட வரைவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் கைவிடும் அளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது.
மேற்கூறப்பட்ட சட்டவரைவுகளுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனை மனுவில் பின்வருவன கூறப்பட்டன.

Page 4
1) கலாசாரம் சம்பந்தமான நடவடிக்கைகளை கலாசார அமைச்சு மேற்கொள்ளும் போது இந்த நாட்டிலுள்ள கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் ஆலோசனை களையும் அனுசரனைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. *
2) கலாசார நிலையங்களையும் மையங்களையும் கலாசார அமைச்சு அமைத்தாலும், அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு கலைஞர்களிடம் அளிக்கப்பட வேண்டும். அத்துடன் அரசு நிதி உதவி வழங்குவதுடன் இந்நிலையங்களை மேற்பார்வை செய்வதுடன் மாத்திரம் அரச செயற்பட வேண்டும். இக் கலாசார நிலையங்கள் அனைத்தும் பூரண சுதந்திரத்துடன் செயற்பட அனுமதிக்க வேண்டும்.
3) கொழும்பில் மாத்திரம் கலாசார மையத்தை வைத்திருக்காமல் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கலாசார மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் கிராமப்புறங்களிலுள்ள கலைஞர்கள் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு வசதி ஏற்படும் எனவும் ஆட்சேபனை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது. சென்ற வருட்ம் ஜனாதிபதி அவர்கள் மாவட்ட ரீதியாக கலாசார மையங்களை அமைக்க வேண்டுமென்று கலாசார அமைச்சுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அக் கலாசார மையங்களை ஏற்படத்துவதற்கு தலா இருபது லட்சம் ரூபா தனது நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளார். இத்தொகை கட்டடங்களைக் கொள்வனவு செய்வதற்கான பூர்வாங்க நிதியாகும். அதே வேளை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கலாசார நிதியத்துக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து இருபது லட்சம் ரூபா வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட கலாசார மையங்கள் சம்பந்தமாக கொடுக்கப்பட வேண்டிய பிரசாரம் கலாசார அமைச்சினால் செய்யப்படவில்லை. இது குறிப்பிட்ட பிரதேச செயலாளருக்கும் குறிப்பிட்ட அரசியல் அதிகாரிகளுக்கும் மாத்திரம் தான் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த நாட்டின் கலைஞர்களுக்கு கலாசார அமைப்பினால் மேற்கொள்ளப் படுகின்ற கலாசார நடவடிக்கைகள் தெரியப்படாமல் இருக்கின்றது. எனவே இச் செயற்பாட்டில் கலைஞர்கள் பங்குபற்றாமல் இருந்தால் அரச அதிகாரிகளின் கைதான் இந் நிலையங்களில் ஓங்கிநிற்கும். அத்துடன் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் தங்களுடைய சொந்த குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தும் பேராபத்து இருக்கின்றது. ஆகவே இந்த கலாசார மையங்களை அமைக்கும் நடவடிக்கைகளில் இந்த நாட்டின் கலைஞர்களும் எழுத்தாளர்களும் விழிப்புடனிருந்து செயற்பட்டு எமது நாட்டின் கலாசாரத்தை சுதந்திரமாகப் பேணிப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.
சமுதாயத்தின் நுழைவாயிலாகவும், ஆத்மாவாகவும் இலக்கியம் இருக்கின்றது. எமது நாட்டின் கல்வி நிறுவனங்கள் பிரஜைகளை உருவாக்குவதில்லை. அவை தொழில்சார் வல்லுனர்களை மாத்திரம் தான் உருவாக்குகின்றன. இந்த தொழில்சார் வல்லுனர்களுக்கும் சமூகத்திற்கும் எதுவித பிணைப்போ ஆத்ம உறவோ இல்லை. இவர்கள் யந்திரீகமயமானவர்கள். இது கல்வித்துறையின் ஒரு பெரும் குறைபாடு. இக்குறைபாட்டைப் போக்கும் நோக்குடன் விபவி நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்கும் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் இலக்கிய செயலமர்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது. இதன் காரணமாக ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் ஏற்பட்டு வருவதுடன் அநேக
- 6 -

இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும் உருவாகி வருவதற்கு விபவி வழிவகுத்துள்ளது.
கலைஞர்களுக்கிடையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதேபோல எமதுநாட்டிலுள்ள இரண்டு பிரதான இனங்களான சிங்கள் தமிழ் இனங்களுக்கிடையில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதுடன் இச் சமூகங்களுக்கிடையில் சந்தேகமும் கசப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியையும் சந்தேகத்தையும் கலை இலக்கிய பரிமாற்றத்தின் மூலமும் கலை இலக்கிய செயலமர்வுகளையும் ஆய்வரங்குகளையும் இரு மொழிகள் வாயிலாக ஏக காலத்தில் நடத்துவதன்மூலமும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் விபவி அதன் ஆரம்பகாலத்திலிருந்தே செயற்பட்டு வருகின்றது. இவ்விரு சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்களும் எழுத்தாளர்களும் ரசிகர்களும் அடிக்கடி சந்தித்து கருத்துக்களைப் பரிமாறுவதன் மூலமும் கலை இலக்கியப் பரிவர்த்தனை மூலமும் இனங்களுக்கிடையேயுள்ள சந்தேகத்தை அகற்றி புரிந்துணர்வை ஏற்படுத்தும் இன செளஜன்யத்தை வளர்த்துக் கொள்வதில் விபவி தீவிரமாகச் செயலாற்றி வருகின்றது.
ஊடகத்துறையைப் பொறுத்தவரை அது வகிக்கும் பாத்திரம் கேள்விக்குறியாகத் தானுள்ளது. ஒலிபரப்புத்துறை ஆரம்பத்தில் சுதந்திரமானதாக மக்கள் சார்ந்ததாகத்தானி ருந்தது. 1971 க்குப் பின்னர் அது அரசாங்கத்தின் பிரசாரக் கருவியாக மாற்றப் பட்டுவிட்டது. முற்றுமுழுதாக ஒலிபரப்புத்துறை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்த நிறுவனதின் ஆளணி நியமனங்கள் அரசு சார்பானதாக மாறின. நிகழ்ச்சி தயாரிப்புகள்கூட அரசாங்கம் சார்பானதாகவே இருந்தது. மக்களுக்காக நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிலையிலிருந்து அரசாங்கத்தின் நலனைப் பேணக்கூடிய நிலைக்கு ஒலிபரப்புத்துறை மாறியது. அதன் நிகழ்ச்சித் தரமும் குன்றியது. காரணம் என்னவென்றால் இத்துறைக்கான நியமனங்கள் அரசாங்கம் சார்பானதாக இருப்பதால் திறமைசாலிகள் புறக் கணிக்கப்பட்டு திறமைகுறைந்தவர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். இதனால் இத்துறை சீரழிந்தது. 80 ஆம் ஆண்டுவரை ஒலிபரப்பு ஊடகத்துறையில் அரசின் ஏகபோக உரிமை நிலவியது.
80ம் ஆண்டுகளில் ஊடகத்துறையில் மாற்றம் ஏற்பட்டது. தாராளவாத பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் தனியார் துறையினரும் ஊடகத்துறைக்குள் புகுந்தனர். இதனால் ஊடகத்துறை லாபநோக்கம் கொண்டதாக மாறிவிட்டது. மக்களுக்காக ஒலி ஒளிபரப்பும் நிலை மாறி அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தின் நலனுக்கு இத்துறை சேவையாற்றி தனியார்துறை வர்த்தக சமூகத்தின் லாப வேட்டையை நிறைவேற்றும் நிலைக்கு ஊடகங்கள் மாறிவிட்டன. இத்துறை சமநிலையற்றதாகவும் நுகர்வுப் பொருளாதாரத்தை வளர்த்து முன்னெடுக்கும் நிலைக்கு பூரணமாக மாறிவிட்டது.
ஊடகத்துறையில் சமனற்ற நிலையை அவதானித்த விபவி இதற்கு மாற்று வழியை முன்வைக்க முனைந்தது. ஊடகத்துறை நாட்டின் பிரஜைகளுடைய நலன்களை மேம்படுத்துவதாக அமையவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. சமூகநலன் பேண வேண்டுமென்றால், சமூகத்தினால் ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும் இதை நிறுவுவதற்கான பூர்வாங்க ஆலோசனைகளை கருத்தாடல்கள் மூலம் முன்வைத்தது. அத்துடன் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கான செயலமர்வுகளை விபவி நடத்தி இத்துறையிலுள்ளவர்களின் பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்டன. இதன்மூலம் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான

Page 5
வழிமுறைகளும் மக்களின் கட்டுப்பாட்டில் ஊடகத்துறையைக் கொண்டு வரக்கூடிய வழிமுறைகள் இந்த செயலமர்வுகளில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. அரசாங்கம் ஊடகத்துறையை ஜனநாயகமயப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு “ஊடகம் 2000" என்ற ஒரு ஏட்டையும் நடத்தி வருகின்றது.
கணணி இலக்கியத் துறையில் நவீன விமர்சன போக்குகள் பற்றிய ஆய்வரங்குகளையும் செயலமர்வகளையும் விபவி நடாத்தி வந்துள்ளது. மரபு சார்ந்த இலக்கிய விமர்சன முறையையும் இணைத்து பயன்படுத்தும் முறை பற்றி செயலமர்வுகளையும் விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் விவாதிக்கப்பட்ட மார்க்ஸிஸ் விமர்சனம் பெண்ணியம் சார்ந்த விமர்சனம், காலனித்துவ பின்நயம், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட கலை இலக்கிய துறைசார்ந்த நவீன போக்குகள், இலக்கிய விமர்சனங்கள் சம்பந்தமான கருத்தாடல்கள் விபவியின் செயலமர்வுகளிலும் ஆய்வரங்குகளிலும் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.
நவீன இலக்கியப் போக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட நூல்களையும், நவீனத்துவ போக்குகளைக் கொண்ட இலக்கியப் படைப்புகளையும் மொழிபெயர்த்து விபவி வெளியிட்டு வந்துள்ளதுடன் இந்த நூல்கள் பற்றிய கருத்தாடல்களையும் விபவி நடத்தி வந்துள்ளது. 60 ஆம் ஆண்டுகளுக்கு முன்னைய தலைமுறையினர் இரு மொழிகளில் கற்க வாய்ப்பிருந்தமையால் அவர்கள் மேற்கத்திய இலக்கியங்களையும் இலக்கிய விமர்சன முறையையும் கற்பதற்கு வாய்ப்பு வசதிகளிருந்தன. ஆனால் அறுபதுக்குப் பின்னர் ஒரு மொழிக் கற்கையினால் மாணவர்கள் ஆங்கில இலக்கியங்களையும் நவீன இலக்கிய விமர்சன முறையையும் கற்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர். இக்குறைபாட்டை நீக்கும் வகையில் சிறந்த நவீன இலக்கியப் படைப்புகளை மொழியாக்கம் செய்து விபவி வெளியிட்டு வந்துள்ளதுடன் இவை பற்றிய இலக்கிய கருத்தரங்குகளையும் விபவி தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
பொதுவாகக் கூறப்போனால் விபவி கோஷ்டி வாதப் பொக்கில் அதாவது தனித்தம்பிரான் போக்கில் செல்லாமல், எல்லா தொண்டர் ஸ்தாபனங்களுடனும் நல்லுறவைப் பேணி வருகின்றது. ஏனைய தொண்டர் ஸ்தாபனங்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருவதுடன், இங்குள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு கற்கை வளப்பதிவாளராக திட்டங்களை வகுத்து வழங்குவதுடன் அவைகளுடன் தேவையானபோது இணைந்தும் செயலாற்றுகின்றது. ஏனைய மாகாணங்களிலும் மாவட்டங்களிலுமுள்ள ஸ்தாபனங்களின் அழைப்பின் பேரில் விபவி வளப்பதிவாளராக அவர்களின் செயலமர்வுகளில் பங்குபற்றுகின்றது. ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு கலை நிகழ்ச்சிகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை விபவி வழங்குவதுடன் தானும் இப்போராட்டங்களில் பங்குபற்றுகின்றது. ஏனைய தொண்டர் ஸ்தாபனங்கள் நடத்துகின்ற மனித உரிமைகள், ஜனநாயகம், பெண்கள் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, சமாதானம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் ஆகியவற்றிற்காக இதர தொண்டர் நிறுவனங்கள் நடத்துகின்ற போராட்டங்களில் விபவி பங்குபற்றி வருகின்றது.

تانگ
அழகு என்பது என்ன முதலில்? தத்துவமா? உருவமா?
இதைப்பற்றி விவாதங்கள் சச்சரவுகள் ந ைபெற்றிருக்கின்றன. பெரும் புத்தகங் கள் எழுதியிருக்கிறார்கள். சிலர் அழகு என்பது உருவமானால் நசித்துப் போகுமே. அழகு நிரந்தரமாக இருப்பதால் தத்துவம் தான் என்று சாதிக்கிறார்கள். சிலர் தத்து வம் எப்படியாகும். அழகு பஞ்சேந்திரியங்க ளின் ரசனைக்கு உட்பட்டதுதானே. உருவத்தில் தானே மனதை மயக்குகிறது. அழகு உருவம் தான் என்கிறார்கள்.
ஆராய்ந்து பார்த்தால் அழகு உருவமு மல்ல தத்துவமுமல்ல. இரண்டும்தான். இரண்டும் கலப்பு தெரியாத முறையில் கலவை கொண்ட ஓர் உருவத் தத்துவம். அழகு வாழ்க்கையில் தென்படும் பொழுது பொதுவாக உருவம், கலையில் தென்படும் பொழுது பொதுவாக தத்துவம், இரண்டிற்கும் விதிவலக்குகள் இருக்கின் றன. கலையில் சிலை உருவமாக இருக் கிறது. வாழ்க்கையில் ராகம் தத்துவமாக இருக்கின்றது.
வாழ்க்கை கலையாகிறதா? கலை வாழ்க்கையாகிறதா? எந்த முறையில் அழகு பரிமாணம் அடைகிறது. இதுவும் பெரிய கேள்வி. இதற்கும் பெரும் புத்தங் கள் இருக்கின்றன. எழுதினவர்கள் எல் லோரும் சிறந்த ரஸிகர்கள். தத்துவ தாரிகள், ஆராய்ச்சியாளர்கள்.
இந்த ஆராய்ச்சியில் ஒரு விசயம் மிக வும் முக்கியமானது. அது விஞ்ஞானமே புகட்டும் உண்மை. எதுவும் ஒரு தனி வஸ்துவல்ல. ஆட்டம் என்று பரமனுவில் கூட புளுட்டோன். எலக்ரோன் என்று இர ண்டு இருக்கின்றன. அந்த புளூட்டோனைப் பிரித்தாலும் இரண்டும் இருக்கலாம். எனவே எதுவும் இரண்டு அல்லது பல கலந்த ஒன்று - நீர் போல
இந்த உண்மையை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் சிக்கலே இல்லை. இதன்படி உருவத்தில் தத்துவம் இருக்கி
றது. தத்துவத்தில் உருவமிருக்கிறது. வாழ்க்கையில் கலை இருக்கிறது. கலையில் வாழ்க்கை இருக்கிறது. இது 9600 6 i Bal
உருவமோ தத்துவமோ அழகு என்பதற்கு எது உரைகல்? ஒன்றை அழகு வாய்ந்தது, எழில் பெற்றது. வனப்பு மிக்கது. கவர்ச்சி பூண்டது என்று எப்படிச் சொல்லுகின்றோம்?
மனிதனுடைய உள்ளம்தான் அதைத் தீர்மானிக்கும் அதிகாரி உணர்ச்சியை எது சந்திரோதயம் சமுத்திரத்தைத் தூண்டுவது போலத் தூண்டுகிறதோ அது அழகு. சூரியரச்மி தாமரையை மலரச் செய்வது போல எது மனித உள்ளத்தை விரியச் செய்கிறதோ அது எழில். இரும்பைக் காந்தம் இழுப்பது போல எது பஞ்சேந்திரி யங்கள் மூலம் மனதைக் கட்டுகிறதோ அது வனப்பு ஒளி விட்டிலை அழைப்பது போல எது மனிதனை அழைக்கிறதோ அது கவர்ச்சி.
அழகு தந்த நிறத்திலிருக்கிறது. அங்க நிறைவிலிருக்கிறது. கண் இமைப்பிலிருக் கிறது. இதழ்ப் பிரிவிலிருக்கிறது. நிலா வானில் இருக்கிறது. குரல் துவண்ட முணு முணுப்பிலிருக்கிறது. துடிக்கும் தார ஸ்தா யியிலிருக்கிறது. கண்ணில் பதிகிறது. செவியரில் பாய்கிறது. ஸ்பரிசத்தில் ஏறுகி றது. நாசியில் மணக்கிறது. வாயில் சுவை தட்டுகிறது. உள்ளத்தில் இவ்வாயில்கள் வழியே பதிவு பெற்று மனோபாவத்தின் மூலம் மறுபடி வெளியேறி காவியமாகவும், சிலையாகவும், சங்கீதமாகவும் உருப்பெறு கிறது. நெகடிவில் பதிவு பெற்று உருவம் பிரோமைடில் வெளியாவது போல.
அழகு வாழ்க்கையின் ஜீவரஸம். இளமை. இனிமை, நிறைவு. இசை எல்லாம் கொண்டது. கலைஞன் அதை மூலிகை மூலிகையாகப் பிழிந்து சேர்த்துப் புடம் போட்டு முறைப்படி பாதரஸமாக்கி விடுகிறான். வெறும் பச்சிலைச் சாறு அழியும். பாதரஸம் அழியாது. கு.ப.ரா
- 9.

Page 6
இலக்கியத்தில் புதுப்புனல்
வ. இராசையா
மனமும் மனத்தின் பாடலும்
"ஈழத்தில் எங்கோ ஒரு புள்ளியில், வேட்டொலிகளுக்கு நடுவே, வாழ்வு நடத்த வும் அஞ்சும் ஒரு பொழுதில், வன்னியின் சின்னக் கிராமத்திலிருந்து, எழுந்தும் விழுந்தும் மீண்டும் எழுந்தும் உங்கள் கைகயில் வருகிறேன் ஒரு கவிதையைப் போலவே" என்று சொல்லிக்கொண்டு இலக்கிய உலகுக்கு வந்திருக்கிறார் ஒரு புதிய கவிஞர் - முல்லைக் கமல்,
புதிய வீச்சுடன் கவிதை படைக்க வேண்டும் என்னும் ஆர்வம் உந்த “முள்ளந் தண்டு நிமிர்த்திப் பாடுவேன்" என்று முன் வந்துள்ள இக் கவிஞரது முதலாவது தொகுப்பு "மனமும் மனத்தின் பாடலும்" என்னும் மகுடத்துடன் அண்மையில் வெளி வந்திருக்கிறது. இது 25 புதுக்கவிதைகள் கொண்ட நூல்.
“எனது சுயத்தோடும் சுதந்திரத்தோடும், எனது நிலத்தையும், மொழியையும் காதல் செய்கிறேன், எனது மனமும் மனத்தின் பாடலும் எனது நிலத்தில் இருக்கிறது. பூகம்பத்திலிருந்து பூக்கத் தெரிந்த எங்களி டம் யாரும் பூக்களுக்கு விலை பேச வேண்டாம். தியாகங்களுக்கு நாங்கள் கற்றுக் கொடுத்தது போல் தியாகம் வேறு யாரிடமும் கற்றதில்லை." என்கிறார் கமல் இந்த நூலின் முன்னுரையில். இந்த இளம் கவிஞர் வாழும் நிலம் எது, இக்கவிதைக ளின் தளம் எது, பொருள் எது என்பவற் றையெல்லாம் இந்தக் குறிப்புகள் ஓரளவு சுட்டிக் காட்டுகின்றன.
கமல் இங்கு தந்திருக்கும் கவிதைக எளிலே தாம் வாழும் பிரதேசத்தை அங்குள்ள மக்களது வாழ்வுப் போக்கை, அந்த வாழ்வில் ஏற்பட் டுள்ள சீரழிவைச் சித்திரிக்கிறார். இவற்றுள் பல மக்களின் நேர் த லைக் காட்டும் கவி தைகள் அவற்றி டையே காதலை உணர்த்தும்
ஒருசில கவிதைகள், இக்கவிதைகள் யாவ ற்றிலும் இக்கவிஞ னது அடி மனத் து உணர்வுகள் வெளிக் கிளம்புவதைக் காண முடிகிறது.
p560ii. EIT6)LOT கத் தொடர்கின்ற போரின் தாக்கத்தி னால் மக் களது உணர்வுகள் சிதைந்து அன்றாடச் சீவியம் அவலத்துக்குள்ளாகியிருப்பதை இவர் பல கவிதைகளிலே காட்டுகிறார். குண்டு வீச் சின் கொடுரத்தைக் கூறும் "காலம் ஒன்றின் அகாலம்" செம்மணிப் படுகொலைகள் பற்றிக் கூறும் "உப்பு வெளி மண் துகளே சொல்", "துயர் காவித் தலைவிறைத்த காற்று" என்னும் கவிதைகளில் இக் கவிஞரது நெஞ்சக் கனல் உயர்ந்து வீசுகிறது.
ಟ್ವಿ...? 42%4-
※兹
o výhramvž zVoy
அழிவுகளைக் காட்டிச் செல்லும் கவிஞர் அந்தச் சூறாவளியிலே தன்னை இழந்து விடாமல் நிற்கிறார். “நிச்சயமாய் இவையொன்றும் நிரந்தரமல்ல, நாளை நிலவொளியில் நிம்மதியாய்க் கூழ் குடிப்போம்" என்று இவர் நம்பிக்கையூட்டுகி றார். இதுவே ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பலம். அவன் மனித குலத்துக்கு வழங்கக் கூடிய உயர்ந்த பண்பு.
அவலத்தைச் சொல்லும் கவிதையே யாயினும், காதலைக் கூறும் கவிதையே யாயினும் அவையெல்லாம் இயற்கை யோடு இயைந்த கிராமியப் பின்னணியில் வைக்கப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை அழகின் பூரிப்பை இங்குள்ள கவிதைகளில் கானக்கூடிய
- 10 -
 

தாக இருக்கிறது. மரங்களின் நிழலும் வயலின் செழிப்பும் கடலின் பரப்பும் சிட்டின் ஒலியும் கொக்கின் குரலும் ஆகிய எல்லாம் இக்கவிதைகளில் வந்து செல் கின்றன. கவிஞர் தான் நயந்தும் வியந் தும் பெற்ற அனுபவங்களை இங்கே நன் றாக எடுத்துக் காட்டுகிறார். இவ்வகையில் படித்து நயக்க வேண்டிய ஒரு கவிதை "குடை வண்டில் போகிறது" என்பது.
"ஆலமர நிழலூடே அழுது வடிகின்ற நிலவில் குடை வண்டில் போகிறது. துலா
விளக்கின் சிறு ஒளியில் நாம்பன்கள் நடை போடும். வயலூரைத் தாண்ட முதல் வழி நெடுகும் பனை தெரியும்.” என்று இந்தக் கவிதைக் குடை வண்டில் தொடர்ந்து போகிறது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் விரிவான அழகான ஓர் அணிந் துரை வழங்கியிருக்கிறார் இந்த நூலுக்கு. கமலுக்கு நமது கவிதைத் துறையில் நம்பிக்கையான ஓர் எதிர்காலம் இருப்பதை இந்த நூல் காட்டுகிறது.
அதே திடுக்குறலுடன்.
எனக்கான சூழல்
அவிட்டம் முற்றிய
அப்பு சொல்கிறார்,
இப்போது மிக அதிகம்.
O O 翻 பஞ்சமிகள் பற்றிய பயம் எனக்கான சூழல் மிகவும் நொந்தபோய். காற்று மரங்களில் மோதி மோதி தலையில் அடித்துக் கதறி அலைகிறத. மெல்லியதாய் ஈனஸ்வரத்தில் தோய்ந்த படி, பழுப்பு மண்டிய இலைகள் கிளை ஒடிந்த விழவும், நிலத்தில் தயர் முற்றியதான அதிர்வு. அவப் பொழுதின் அவசரம் அப்படியே நச்சரித்த நச்சரித்தக் கத்தித் தொலைக்கிறத அணில், மேயக் கட்டிய எண் மனத பயத்தில் கொடுகியபடி என்னுள் நழைகிறத.
காற்று மிகவும் இழுபட்டு இழுபட்டு எதன் பின்னோ ஒடுகிறது. மரணம் கசியும் அதன் வால்களைப் பிடித்தப்டி,
எதற்கோ தயார்ப்படுகிற அவசரம். தயர அரங்கேற்றத்தின் தயார்ப்படுத்தலாய் புழுதி மணக்கும் வெளிகளில் காற்று உருவேறி உருவேறி ஆடுகிறத. பொலித்தீன் பையொன்றின் மேலெ பழுப்பு மண்டிய இலைகள் காற்றின் சுழிப்பில் மெல்லிய தீவாடை காற்றில், படுத்திருந்த சோம்பேறிச் சொறிநாய் இழுபடும் காற்றோடு குரல் வைத்து தீனமாய்ப் பிலாக்கணத்தில் தேய்கிறத. பதிலுக்கு பிற்பாட்டு ஊரில் எழுகிறத.
ந்த வெளிகளில் இப்போத அநேகம் அநேகம் ஆவிகளின் அசுமாத்தம் தெரிவதாய்
முகட்டுக்குள் எதையோ உறுத்தபடி, எனக்கு பஞ்சமிகள் பற்றி பயம்
- 11

Page 7
போராட்ட உணர்வு பொங்கியெழப்பரடும்
T தெலுங்குக் கவிஞன்
என்று ஆந்திர மக்களால் அழைக்கப்படும் கும்மாடி விட்டலுக்கு 48
வயதாகிறது. அரசியல் கருத்துக்களை
உரத்துச் சொல்பவர் கத்தார். எல்லா கலை வடிவங்களின் தாயாக மக்கள் போராட்டம் இருக்க வேண்டும். மக்களிட மும், ஒடுக்கு முறைக்கு எதிரான அவர்க ளின் போராட்டங்களிலும் ஒரு கலைஞன் அக்கறை செலுத்தாவிட்டால் அவன் சரித் திரத்தின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படுவான்." என்று முழங்குகிறார் கத்தார்.
கத்தார் மக்களின் இதயத் துடிப்புக்குக் குரல் கொடுக்கிறார். ஆந்திரப் பிரதேசத் தின் நாட்டுப்புறக் கலை வடிவமான "ஒகு கதா" என்ற வடிவத்தில் தனது பாடல் களை அமைத்துக் கொள்கிறார். மொழி எல்லைகளைக் கடந்து செல்லக்கூடிய ஒர் ஊடகம் இது.
1969ல் நடந்த ழரீகாகுளம் எழுச்சி முதல் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக "ஜன நாட்டிய மண்டலி" என்ற குழுவை நடத்தி வருகிறார். அவரும் அவரது குழுவினரும் இந்த அமைப்பின் மூலம் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விவசா யிகள், தலித்துகள் மற்றும் பெண்கள் இயக்கங்களையும் தங்கள் பக்கம் ஈர்த்து
வருகின்றனர். வலுவான அமைப்பு இல்லா
விட்டால் கத்தாரே இல்லை என்கிறார் அவர். "கலை கலைக்காகவே” என்று கூறும் பாரம்பரியத்தில் வந்தவர்கள், கலை யில் எதற்காக அரசியலைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்கின்றனர். "அரசியல் இல்லாத கலையை எனக்குக் காட்டுங்கள்
என்று கத்தார் அவர்களையே திருப்பிக் கேட்கின்றார்.
கத்தார் மாற்றுக் கலாசாரத்துக்குக் குரல் கொடுப்பவர். இந்த மாற்றுக் கலா சாரம் வெகுசன கலாசாரத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த மாற்றுக் கலாசாரத்தைச் சார்ந்த கலை வடிவங்கள் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அத்துடன் அவை பிரதான வெகுசன கலாசாரத்தால் புறக்கணிக்கப்படவும், மறக்கப்படவும் பட்டுள்ளன. .
போராடுவதுதான் இயற்கையின் நியதி என்கிறார் கத்தார். "மண்ணில் பதிக்கப்பட்ட ஓர் விதை சுதந்திரமாக வெளியே வரு வதற்காகப் போராடுகிறது. சிறு செடியாக முளை விடுகிறது. இலைகளை அணிந்து கொள்கிறது. பழங்கள் தருகிறது. அது இறப்பதற்கு முன்னால் கோடிக்கணக்கான விதைகளை ஈனுகிறது." என்கிறார் கத்தார்.
நிறுவனத்தின் அடக்குமுறைக்கு வளர் ச்சியும் போராட்டமும் (கத்தாரின் அகராதி யில் இரண்டு சொற்களுமே ஒரே பொரு ளைக் குறிப்பவைதான்) ஆளாகத்தான் வேண்டியிருக்கிறது.
"அடக்குமுறையை எதிர்க்கும் போது மக்கள் தியாகங்களைச் செய்யவேண்டி யிருக்கிறது. போராட்டம் வீரர்களை உரு வாக்குகிறது. தங்களுக்கு இனியவர்கள் மரணமடையும் போது ஒரு கலைஞன் ஒடுக்கப்பட்டவர்களிடையே நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்" என்கிறார் கத்தார்.
இதுபோன்ற போராட்டங்களில் இறந்த
- 2 -
 

வர்களைப் பற்றி கத்தாள் இயற்றிய ஒரு tjäTI. 6ù g. :
விவசாயிகள் கூலிகளின் குழந்தைகளே. எல்லா வழிகளும் அடைக்கப்பட்! மக்களுக்கு குழந்தைகளே. நீங்கள் போராட்டத்தின் பாதையைக் காட்டியிருக்கிறீர்கள் என் அன்பிற்குரிய குழந்தைகளே நன்றி"
1991ல் வாரங்கலில் நடைபெற்ற விவசாயிகள், உழைப்பாளிகள் கூட்டத்தில் இப்பாடல் பாடப்பட்ட போது பிள்ளைகளை இழந்த நூற்றுக்கணக்கான தெலுங்கானா விவசாயிகள் கத்தாருடன் மேடையில் இணைந்து பாடினார்கள்.
மக்கள் இயக்கங்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை "இது ஒரு
இருண்ட காலம்" என்கிறார். எதிர்ப்பு இலக்
கியமோ அல்லது அது போன்ற இதர
கலை வடிவங்களோ வலுக்கட்டாயமாக குறிப்பாக தெலுங்கானா பகுதியில் - ஒடுக்கப்படுகின்றன. ஆந்திர பிரதேச அரசு தெலுங்கான பகுதியில் என்னை பிரயா ணம் செய்ய விடவில்லை. மக்களும் எனது பாடலைப்பாட அனுமதிக்கப்பட வில்லை. ஜனநாட்டிய மண்டலி மீது பிரக டனம் செய்யப்படாத தடை ஒன்று உள் ளது. எனவே மக்கள் தங்களது பாடலை தாங்களே இயற்றிக்கொள்கின்றனர்." என்கிறார் கத்தார்.
இதுபோன்ற சூழலில் வெகு வெளிப் உடையாக இல்லாத அரசியல் செய்திக ளைக் கொண்டு தனது பாடலை உருவாக் கிப் பாடவேண்டிய சவாலை அவர் எதிர் கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்தநச் சவாலை மரபைப் பயன்படுத்துவதன் மூல மும் மரபுக்குள்ளிருந்தே அதை உடைப்ப தன் மூலமும் கத்தார் ஒருவாறு சமாளித் துக்கொள்கிறார். உதாரணமாக தேர்தலில் மக்களிடமிருந்து ஓட்டுக்களை யாசகமாகப் பெற்றுப் பதவிக்கு வந்த பின்னர் அவர் களை உதைத்துத் தள்ளிவிடும் உள்ளூர் அரசியல்வாதியைத் தண்டிக்கக் காளி தேவியை வேண்டுவது போல் தனது புதிய
பாடல் ஒன்றை கத்தார் அமைத்துள்ளார்.
இதே போல லஞ்சம் வாங்கும் பொலீ ஸார். வெறும் தண்ணிரை இன்ஜெக்சனில் ஏற்றி படிப்பறிவில்லாத ஏழைகளுக்கு ஊசி போட்டு ஏமாற்றும் டாக்டர்கள், ஏழை விவ சாயிகளிடம் பணத்தைப் பெற்று அதைப் பணக்காரர்களுக்குக் கடனாகத் தரும் பேங்க் மேனேஜர் போன்றவர்களையும் காளி தண்டிக்க வேண்டும் என்று அப் பாடல் கேட்டுக்கொள்கிறது. தீமையை வென்று நன்மையை நிலைநிறுத்தும் காளி கூட அரசியல்வாதிகளின் தீமைகளுக்கு எதிராகச் சக்தியற்று விட்டாள் என்ற செய்தியுடன் அப்பாடல் முடிகிறது.
1960 ழரீகாகுளம் போராட்டத்தினாலும் பின்னர் நக்ஸலைட் இயக்கமான மக்கள் யுத்தக் குழுவினாலும் பல கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஈர்க்கப்பட்டனர். 70-ன் மத்தியில் கொண்டபள்ளி சீதாராமையா வின் தலைமையில் உருவாகிய நக்ஸ் லைட் இயக்கத்தை தீவிரமாக ஆதரிப்பவர் கத்தார்.
நக்ஸலைட் இயக்கத்தின் தலைவரான கொண்டபள்ளி சீதாராமையாவின் வீழ்ச்சி யைப் பற்றி சொல்லும் போது. "தலைவர் கள் இயக்கத்துடன் வளர வேண்டும். அப் படி அவர்கள் வளரவில்லை என்றால் இய க்கம் அவர்களை ஒதுக்கி விடும் என்கிறார் கத்தார். 1992-ல் சீதாராமையா வெளியேற் றப்பட்ட போதும் கத்தார் தொடர்ந்தும் மக்கள் யுத்தக் குழுவை ஆதரித்து வருகி றார். ஆந்திர பிரதேசத்தில் கிராமங்களில் நிலவி வந்த நிலப்பிரபுத்துவ உறவு முறை களை அவ்வமைப்பு பெருமளவு மாற்றிய மைத்துள்ளது என்கிறார் கத்தார். "நானும் எனது சக தலித்துகளும் கிராமத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடிகிறது எனில் இதற்கு நாங்கள் கட்சிக்குப் பெரிதும் கடன் பட்டிருக்கின்றோம்." என்கிறார்.
“மக்கள் யுத்தக் குழு மக்களின் ஆதரவை இழந்து வருவதுடன் வன்முறை யிலும் பெருமளவு ஈடுபட்டு வருகிறதே" என்று கேட்டால், அதற்கு கத்தார் மக்கள்
بن ۔ 13 ۔

Page 8
யுத்தக் குழுவை மக்கள் ஆதரிக்காவிட் டால் பின் ஏன் கிராமப் பகுதிகளுக்கு எல்லைக் காவல் படை போன்றவற்றை அனுப்ப வேண்டும்? அது ஆதரவை இழந்து வருகிறது என்றால் அது அப்ப டியே செல்வாக்கிழந்து போகும் படியாக அதை விடவேண்டியது தானே?" என்று திருப்பிக் கேட்கிறார்.
ஜூன் 21 முதல் ஆந்திர பிரதேச அரசு மக்கள் யுத்தக் குழுவின் மீது இருந்த தடையை தற்காலிகமாக நீக்கியுள்ள நிலையில் ஏதேனும் மாற்றங்கள் உண்டா?
"தடையை நீக்கியது ஒரு தமாஷ. தடை நீக்கப்பட்ட அன்றே நால்கொண்டா மாவட்டத்தில் ரமணாபேட்டையில் நான்கு இளம் விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் மக்கள் யுத்தக் குழு எந்த வன்முறையிலும் ஈடுபட வில்லை. என்றாலும் என்.டி.ஆர் அரசு பதவியேற்ற பின்னர் 49 பேர்கள் போலி யான மோதல்களில் கொல்லப்பட்டுள்ள னர்." என்கிறார் கத்தார்.
எந்தவிதமான நிபந்தனைகளுமற்று தடையை நீக்க வேண்டும் என்கிறார் கத் தார். அறிவுஜீவிகள், மனித உரிமைக்
குழுக்கள் மற்றும் கலைஞர்கள் அடங்கிய குழுவை நான் முதல்வரிடம் அழைத்துச் செல்வேன்" என்கிறார்.
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தொடாமல் எந்த ஒரு அரசியல் அல்லது சமூக இயக்கமும் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று கத்தார் நினைக்கிறார். “கிராமங்களிலுள்ள அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனிய அமைப் பானது இப்போது ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து நிற்கிறது. இது உடைபட வேண்டும். இதை நிலம் சம்பந்தப்பட்ட உறவுகளை மாற்றியமைப்பதன் மூலமே சாதிக்க முடியும்" என்கிறார்.
இன்று தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்கள் பணி இதுதான். அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டும். பன்னா ட்டுக் கம்பனிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கத்தார் நினைக்கிறார். "கிழக்கிந்தியக் கம்பனி இந்த தேசத்தை 200 ஆண்டுகள் ஆண்டது போதாதென்று இப்போது இந்தப் பன்னாட்டுக் கம்பனிகள் நம்மை மீண்டும் அடிமைகளாக்க முயற்சிக் கின்றன" என்கிறார் கத்தார்.
afkøfŽDIT
எல்லாவித அதிகார வர்க்க நிறுவனங்களின் நடைமுறைகளைப் போலவே திரைப்படத் தொழிலும் சில திருத்த முடியாத விதிகளால் ஆளப்படுகின்றது. இந்த விதிகள் இந்தத் துறையில் பெரிய மனிதர்களின் பொருளாதார நலன்கன்)ளயும் மற்ற நலன்களையும் பாதுகாப்பதற்காக ஏற்பட்டதாகும்.
மாற்றுக் கருத்தின் மதிப்பு
மாற்றுக் கருத்தின் மதிப்பை அங்கீகரிப்பதென்பது மாற்றுக் கருத்தைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மையை மதித்தல் என அர்த்தப்படும். தனிநபர் காட்டும் மறுப்பு பெரும்பாலும் அற்பமாகத் தோன்றலாம். பித்துக்குளிகளின் உளறல்கள் அல்லது நட்பியல் அளவுகோளின் படி அவ்வாறு கருதப்படுபவை யும் இதில் அடங்கும். ஆனால் மாற்றுக் கருத்து எந்தளவு சகித்துக்கொள் ளப்படுகின்றதோ அந்தளவு சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பிரதிபலிப்பதோடு முன்னேற்றத்திற்கான சாத்தியப்பாடுகளை அது தன்னகத்தே கொண்டிருக்கும்.
மிருனாள் சென் (வங்காள திரைப்பட நெறியாளர்)
- 14 -ه

ஆர்வம் ஊட்டிய அருங்கலைக் காட்சி
வழமையான ஓவியக் கண்காட்சி பொன்றைக் காணவெனச் சென்ற கலை ஆர்வலர்களுக்கு கடந்த ஜூலை 23 ஆம் திகதி வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் விபவி கலாசார மையத்தின் ஆதரவில் ந ைபெற்ற செல்வி வைதேகி இராஜசிங்கத்தின் ஓவியக் காட்சியும் அது தொடர்பாக நடைபெற்ற கருத்துரைகளும், கலந்துரையாடலும் புதியதோர் சிந்தனைப் பரிமாணத்தையும் அனுபவத்தையும் அளித்திருக்குமென நிச்சயமாக நம்பலாம்.
இருபது ஒவியங்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கருநிற இந்திய மை, சிவப்பு, பச்சை, நீலநிற இந்தியமை ஆகியன கொண்டு ஆக்கப்பட்ட மனித முகத்தோற்றங்கள் உள்ளத் துடிப்பினை யும் ஓவியரின் கைவேகத்தையும் வர்ணப் பிரயோகத் திறனையும் காட்டி நின்றன. இரே கைகள் தொடர்ச்சியாக அல்லாமல் துண்டு துண்டாக வெவ்வேறு திசைகளில் வடிவத்தின் எல்லைகளிலும், உட்புறத்தி லும் பரவிக் காணப்பட்டன. இவ்வகைப் பிரயோகத்தின் மூலம் தோற்றத்தில்
ஒருவகை அசைவினை ஏற்படுத்த
முயற்சித்தமை தெளிவாகப் புலப்பட்டது.
அடுத்துக் காணப்பட்ட நாலைந்து ஓவி யங்கள் கலப்பூடகப் பரிசோதனைகளாக அமைந்துள்ளன. இவைகளும் பெரும்ப லும் மனித முகங்களாகவே காணப்பட்டன. இந்திய மை வர்ணம், போஸ்டர் வர்ணம். மெழுகு வர்ணம் ஆகியவற்றை ஒன்றன்மே லென்றாக உபயோகித்து கூரிய அல கொன்றினால் சுரண்டி வடிவங்கள் மேற் கொணரப்பட்டுள்ளன. முகத் தோற்றம் மிகக் கச்சிதமாகச் சுரண்டல் மூலம் முப் புரிமாணத் தோற்ற அமைப்பில் செதுக்கப் பட்டுள்ளது. முழுமையான முகத் தோற்ற மும் அரை முகத் தோற்றமும் கொண்ட கூட்டமைப்பொன்று இவ்வகைப் படைப்புக்
i55. A. K. 5l Jirgit
L. *. * የ3 išji களில் குறிப்பிடத்தக்கது. அருமையான தோர் இழைய இயல்பை ஏற்படுத்துவதற்: காக கையினால் உருவாக்கப்பட்ட காகி தத் தாளை பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
மனித உருவ வரைதலில் படைப்பாளி பெற்றுள்ள அனுபவ முதிர்ச்சியும் கைத் தேர்ச்சியும் மெச்சத்தக்கது. மேலும் சில ஒவியங்கள் அச்சுரு அமைத்தலும் பதித் தலும் சம்பந்தமானவை. பார்வையாளரின் கவனத்தை மிகவும் ஈர்த்தவை இவை எனலாம். துத்தநாகத் தகட்டில் சில இரசாயனப் பொருட்களை உபயோகித்து இவ்வகை அச்சுருக்கள் ஆக்கப்பட்டதாக வும் இரசாயனக் கலப்பில் சில மாற்றங்க ளைச் செய்வதன் மூலம் வித்தியாசமான அச்சுப் பிரதிகளைப் பெற முடியும் என்றும் கூறப்பட்டது. அங்கு காணப்பட்ட அச்சுப் பிரதிகள் சில இக்கூற்றினை உறுதிப் படுத்தின.
பார்வையாளர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் படைப்பு:1ளி பொறுமையாக வும் விளக்கமாகவும் பதிலளித்தார். வித்தி யாசமான ஓவியக் காட்சி என்பதால் பெண் மணிகள் பலர் தருவித் துருவிப் பல
- 5 -

Page 9
கேள்விகள் கேட்டதன் மூலம் தங்களது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப் படுத்தினர். அச்சுருக்களையும் காட்சிக்கு வைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்தி ருக்கும் என்பதாக அவர்கள் கருத்திருந் தது. கூடியிருந்தவர்களிற் பெரும்பாலா னோர் ஏதோ ஒரு கலைத்துறையில் ஈடு பாடு கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இக்கூட்டம் காட்சி மண்டபத்திலிருந்து கருத்துரை கலந்துரையாடல் நடைபெறும் மண்டபத்திற்குச் சென்று அமர்ந்தது.
நிகழ்ச்சிக்கு ஓவியக் கலைஞர் ஏ.கே. நடராஜா தலைமை தாங்கினார். முதலாவ தாகத் தலைவர், கருத்துரை வழங்கவென வருகை தந்த முன்னைநாள் தொழிற்கல்வி அதிகாரியும், பிரபல ஓவியருமான திரு. கனகசபை அவர்களையும், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் சித்திர ஆசிரியை திருமதி லலிதா நடராஜா அவகள்களையும் சபையினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தலைவர் தமது கருத்துரையின் போது செல்வி வைதேகி இராஜசிங்கத்தின் முயற்சியையும் திறமையையும் பாராட்டிப் பேசினார். ஒவியங்கள் கருத்தாழமிக்கவை யாகவும் படைப்பாளியின் துறை சார்ந்த திறன் வளர்ச்சியையும் அச்சுப் பதித்தல் துறையில் புதிய உத்திகளைக் கையா ளும் ஆற்றலையும் வெளிப்படுத்துவனவாக வும் உள்ளன என்றும் கூறினார். வழமை யான முறையிலிருந்து சிறிது மாறுபட்டு வளர்ந்து வரும் விஞ்ஞான தொழில் நுட்பங்களுக்கேற்ப ஓவியத் துறையையும் மனித சமுதர்யத்தின் முன்னேற்றத்திற்குப் பலவேறு வகைகளிலும் பயன்படத்தக்க தாக ஆக்க முயற்சிகள் எடுக்கப்படுவது அவசியம் எனவும் கூறினார். படைப்பாளி யின் அல்பத்தில் காணப்பட்ட நீள் வர்ண நிலக்காட்சி ஒவியங்கள், போஸ்டர் வர்ண நிலைப் பொருட் கூட்டங்கள், உயிரோவிய ங்கள் ஆகிய எல்லாம் அவரின் திறமைக் குச் சான்று பகள்கின்றன எனவும் புகழ்ந்து பேசினார்.
அடுத்து பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பின் சித்திர ஆசிரியையான திருமதி லலிதா நடராஜா அவர்கள் தமதுரையில்
செல்வி வைதேகி இராஜசிங்கத்தின் ஒவியங்கள் வர்ணப் பொலிவுடனும் சிறந்த தொழில் நுட்பத்துடனும் காணப்படுவதாக வும் இக்கலைஞருக்க நல்ல சிறப்பான எதிர்காலமுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரை வழங்கிய பிரபல ஓவியர் திரு கனகசபை அவர்கள் தான் ஒவியங்களை விமர்சனம் செய்யப் போவதில்லை என்றும் தனது கருத்துக் கள் படைப்பாளியை ஊக்குவிப்பனவாக அமைவதையே தாம் விரும்பவதாகவும் கூறினார். எதிர்பாராத விதமாக வர நேரிட்ட தாகவும் ஆனால் வந்தபின் இப்படியான ஓர் அமைப்பு கலைஞர்களை ஊக்குவிப் பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட தாகவும் கூறினார். தமிழ் மக்கள் ஒவியத் துறையில் ஈடுபடுவது குறைவு என்றும் அண்மைக்காலமாக நல்ல மாற்றங்கள் ஏற் பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நவீன ஒவியம் பற்றிக் குறிப்பிட்ட அவர் கருத் தெதனையும் புலப்படுத்தாத வெறும் நிற வடிவ இணைப்பை ஓவியமென தன்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்றும் இயம்பினார். தொடர்ந்து நிறைய ஓவியங் களை உருவாக்குவதன் மூலம் ஒருவரு டைய தனித்தன்மை வெளிப்படுமென்றும் கூறினார்.
ஒவியப் படைப்பாளி செல்வி வைதேகி இராஜசிங்கம் தமதுரையில் தான் சிறு வயதிலிருந்து திரு. மார்க் அவர்களிடம் ஓவியம் கற்றதாகவும் அவர் கொடுத்த
- 6 -
 

ஊக்கமே தன்னை இத்துறையில் மேலும் ஈடுபடவைத்ததாகவும் நன்றிப் பெருக்குடன் கூறினார். தாம் அண்மையில் இந்தியாவில் பெங்களுரில் ஓவியக் கலை பயின்று பட்டதாரியானதாகவும் பின்னர் அச்சுக் கலையில் மூன்று வருடம் பயின்றதாகவும் தெரிவித்தார். அவர் தாம் கொழும்பிலுள்ள சர்வதேசக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிவதாகவும் கூறினார்.
தொடர்ந்து கலந்துரையாடல் ஆரம்ப மானது. பிரபல ஓவியக் கலைஞர் இராஜ ரத்தினம் அவர்கள் தமதுரையில் படைப் பாளி இந்தியாவில் ஒவியத்துறையில் நல்ல அடிப்படை அறிவைப் பெற்றுள்ளார் என்றும் இடைவிடாது செயலாற்றுவதன் மூலம் நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் இயம்பினார். நிர்வாண ஒவியம் பற்றிக் குறிப்பிடுகையில் இவ்வகை ஒவியங்களின் நீரின் இயல்பு வெளிப்படக் கையாளவேண்டும் என்றார். தொடர்ந்தும் இவ்வூடகத்தில் நிறையப் பயிற்சி பெறவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பத்திரிகைத்துறை எழுத்தாளர் கே. விஜயன் அவர்கள் பேசுகையில் ஓவியம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்றும் ஒரிரு ஒவியங்கள் கூட ஒரு சமூதாயத்தின் போக் கையே மாற்றியமைக்கும் வல்லமை
கொண்டவை என்றும் கூறினார். உதாரண
மாக வியட்நாம் ஓவியரொருவரின் படைப் புக்கள் அம்மக்களிட்ம் தொற்றுவித்த மன உந்துதல்கள் பற்றிக் குறிப்பிட்டார். அண்மையில் தான் சந்தித்த சிங்கள ஓவி யரொருவர் யாழ்ப்பாண மக்களின் அவலங் களை தென்னிலங்கை மக்களின் கண்க
ளுக்குக் கொண்டு செல்ல இருப்பதாகக்
குறிப்பிட்டதையும் தெரிவித்தார்.
ஓவிய மரபு ஒன்று ஏன் இன்னமும் யாழ்ப்பாணத்தில் உருவாகவில்லை என கலாநிதி சிவத்தம்பி அவர்கள் எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட விடயம் வாதப் பிரதிவாதங்களுக்கு இடமானது. மரபென ஒன்று உருவாவதற்கு காலத்தால் முந்திய ஓவியங்கள் தொடர்ச்சியாகப் பாது காக்கப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாணத் துச் சூழ்நிலை அதற்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கவில்லை. பழையனவற்றைப்
பேணும் இயல்பு அண்ம்ைக்காலத்தில்
விழிப்படைந்துள்ளது. ஒவியர்களும் மரபு முறையைப் பின்பற்றுவதை விடுத்து தனித் துவத்தில் அதிக அக்கறை கொண்டுள்ள போதும் மரபொன்று உருவாகிக்கொண்டு வருவதாகவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
¥ಣ” {'ಇಜ್ಗ;
密
*ఓభ
காட்சிக்கு வைக்கப்பட்ட உயிரோவிய ங்கள் எல்லாம் அவலச் சுவையை வெளிப் படுத்துவனவாகவே உள்ளனவே. ஒன்று
கூட மகிழ்ச்சியானதாக இல்லையே. இதற்கும் படைப்பாளியின் அனுபவத்திற் கும் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடுமோ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற் குப் பதிலளித்த படைப்பாளி தான் அப்படி யொரு சோக சிந்தனையோடு அவற்றைப் படைக்கவில்லை. தாமாகவே அவை அப்படி அமைந்து விட்டன என்றார். நாம் நினைக்காதவை கூட ஓவிய உருவாக்கத் தின் போது நம் அடிமனத்திலிருந்து வெளி வரும் என்பது எவ்வளவு உண்மை.
செயலாளர் தமது நன்றியுரையின் போது நடந்தேறிய காட்சி அங்கு நடத்தப் பட்டவற்றுள் இரண்டாவது என்றும் முன்னர் நடந்தது பிரபல ஓவியக் கலைஞர் கைலாசநாதனின் காட்சியும் கலந்துரை யாடலும் எனவும் கூறினார். ஓவியர்கள் தமது படைப்புக்களை அங்கு காட்சிக்கு வைத்து பொதுமக்களுக்கு அத்துறையில் ஆர்வமும் அறிவும் ஊட்ட வேண்டுமென வேண்டிக்கொண்டார். தலைவர், படைப் பாளி. கருத்துரை வழங்கியோர், கலந்து ரையாடலிற் பங்கு பற்றியோர், பார்வை யாளர் ஆகிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
17

Page 10
புதுக்கவிதை என்ற இலக்கிய வகை யைக் கைலாசபதி முதலில் ஏற்கவில்லை. பின்னாளில் ஏற்றார். தமிழ்த் திளனாய்வுல கம் அறிந்த செய்தி இது. இதற்கான காரணங்கள் வெளிப்படை தொடக்க காலப் புதுக்கவிதைகள் - மணிக்கொடிக் கால வசன கவிதைகள் மற்றும் எழுத்துக் காலப் புதுக்கவிதைகள் - கொள்கைத் தெளிவுடனோ அன்றேல் பொருட் சிறப்பு டனோ உருவானவையல்ல என்பது கைலாசபதியின் கருத்து குறிப்பாக எழுத் துக் கவிதைகள் பொருட் சிறப்பற்றவை என்பது மட்டுமன்றி பாலியல், மனப்பிறழ்வு, நம்பிக்கை வரட்சி, போலித்தன்மை முதலி யவற்றின் வெளிப்பாடாக அமைந்தன என்பதும் அர்த்தமற்ற புதிர்த்தன்மை கொண்டன என்பதும் கைலாசபதியின் விமர்சனம். பின்னாளில் உருவான வானம் பாடிக் குழுவினரின் புதுக்கவிதைகள் இவற்றுக்கு நேர்மாறாக கொள்கைத் தெளிவு, சமுதாய நேயம், பொறுப்புணர்வு. எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, எளிமை முதலிய பண்புகள் கொண்டன என்பது அவரது கணிப்பு. கவிஞர் தமிழன்பனின் தோணி வருகிறது (1973) கவிதைத் தொகுதிக்குக் கைலாசபதி எழுதிய முன்னுரையில் மேற்படி முன்னைய பின்னைய புதுக்கவிதைகளின் பண்புநிலை வேறுபாடுகள் பேசப்பட்டுள்ளன
எனவே புதுக்கவிதையை கைலாசபதி முதலில் ஏற்காமைக்கும் பின்னாளில் ஏற்ற
புதுக்கவிதையும் N கைலாசபதியும்
கலாநிதி நா. சுப்பிரமணியன்
மைக்குமான முக்கிய அடிப்படை அவ்வக் காலப் புதுக்கவிதைகளின் உள்ளடக்கம் என்பது தெளிவாகின்றது. புதுக்கவி தையை ஒரு இலக்கிய வகையாக ஏற்கும் நிலையிலே அவற்றை அவர் நவீன தமிழி லக்கியத்தின் தன்னுணர்ச்சிப் பண்பின் தர்க்க ரீதியான வளர்ச்சியாக இனங்காண் கிறார். எழுத்து வட்டத்தினர் ஏறத்தாழ எல்லாருமே வடிவ அமைதியும் உணர்வுச் செறியும் பொருந்திய தன்னுணர்ச்சிப் பாடல்களை எழுத இயலாதவர்களாயிருந் தனர் எனவும் ஆனால் வானம்பாடி மற்றும் புதிய தலைமுறை, தாமரை, செம்மல்ர் முதலிய சிற்றேடுகளால் நெறிப்படுத்தப் பட்ட நிலையில் தத்துவவீச்சும் தமிழ்த் திறனும் தனித்துவமும், பொருள் தெளி வும், கருத்து அழுத்தமும் வாய்க்கப்பெற்ற புதுக்கவிதைகள் பல தோன்றின எனவும் அவள் கூறுகிறார். புதுக்கவிதையை ஏற்றுக் கொண் டமையை நியாயப்படுத்தும் முயற்சியாக இவ்விளக்கம் அமைகிறது 616016) Tib.
எழுத்துக் காலகட்டப் புதுக்கவிதைகள் பற்றி கைலாசபதி முன்வைத்த விமர்சனங் கள் பொதுவாக மார்க்சிய இலக்கியவாதி கள் பலருக்கும் ஒப்ப முடிந்த ஒன்றுதான். குறிப்பாக நா வானமாமலையவர்கள் புதுக் கவிதையின் முற்போக்கும் பிற்போக்கும் என்ற தலைப்பில் எழுதிய சிறு நூலில் இத்தகு விமர்சனம் அமைந்துள்ளமை நமது கவனத்திற்குரியது.
- 18 -
 

புதுக்கவிதை தொடர்பாகக் கைலாச பதி புலப்படுத்தி நின்ற பார்வை, அணுகு முறை என்பன தொடர்பான விமர்சனங்க ளையும் இத்தொடர்பில் கவனத்திற்கொள் வது அவசியமாகிறது. "கைலாசபதி புதுக் கவிதையைக் கவனிக்காமல் விட்டு விட்டார்” என்கிறார் தி.சு. நடராசன். "தொட க்ககால ஆக்கங்களை புதுக்கவிதை என்ற இலக்கிய வகையாக அங்கீகரிப்பதே இலக்கிய சனநாயகம்" என்றும் ஆனால் அத்தகைய சனநாயகம் கைலாசபதியால் அளிக்கப்படவில்லை என்றும் கோ. கேசவன் விமர்சித்துள்ளார்.
தி.சுநடராசன் கூறுவது போல கைலா சபதி புதுக்கவிதையைக் கவனிக்காமல் விட்டு விட்டார் என்பதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது. முற்சுட்டிய தமிழன்பனின் தோணி வருகிறது மற்றும் மு. கனகராசனின் முட்கள் முதலிய புதுக் கவிதைத் தொகுதிகளுக்கு அவர் வழங்கி யுள்ள முன்னுரைகளிலும் "தன்னுணர்ச்சிப் பாடல்களும், தனி மனித வாதமும்" (நூல் சமூகவியலும் இலக்கியமும்) முதலிய கட்டுரைகளிலும் கைலாசபதி புதுக்கவிதை மீதான தனது கவனத்தைப் பதிவு செய்து ள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் அவர் புதுக்கவிதையின் வரலாற்றுப் போக் கைத் தெளிவாக இனங்கான முற்பட்டுள் ளமையும் தெரிகிறது. ஆயினும் நாவலு க்கு அவர் அளித்த முக்கியத்துவத்தை
- புலப்படுத்தியுள்ள விரிவான கவனத்தை
புதுக்கவிதைக்கு (சிறு கதைக்கும் கூட) அவர் அளிக்கவில்லை என்று மட்டும் கூறலாம்.
கைலாசபதி இலக்கிய சனநாயகப் பண்பைப் புலப்படுத்தவில்லை என்ற கேச வனின் விமர்சனத்தை ஒப்புக்கொள்வதில் தடையில்லை. ஆயினும் இது, ஒரு இலக் கிய வகையை ஏற்பது அல்லது மறுப்பது (புறக்கணிப்பது) ஆகியவற்றுக்கான அடிப்
படை யாது? என்ற வினாவுக்கு நம்மை இட்டுச் செல்வதாகும். இது ஈற்றில் பொருளா? வடிவமா? (உள்ளடக்கமா? உருவமா?) என்ற விவாதத்தில் நம்மை ஆழ்த்திவிடும் என்பதையும் நாம் மனங்கொ ள்ள வேண்டியுள்ளது அவசியம். இத்தொட ர்பிலே கைலாசபதி எத்தகு மனப்பாங்கை வெளிப்படுத்தினார் என்பதை அவர் எழுத் துப் புதுக்கவிதைகளுக்கு விளக்கம் தந்து நின்றோர் மீது வைத்த பின்வரும் விமர்ச னக் குறிப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
"எழுத்து" வட்டத்துடன் முதலில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சிலர் ஆங்கிலச் சொற்கள் இடையிடை யிட்ட தரங் குறைந்த தமிழில் மேலை நாட்டுப் புதுக்கவிதைகள் சிலவற்றை எதிரொலிக்கத் தொடங்கினர். மன முறிவு, பாலியல் தடுமாற்றம், நோய்மை அந்நியப்பாடல் என்றெல்லாம் (சி.கண்க சபாபதி போன்றோர்) இவர்களது கவிப் பொருளுக்கு விவரணமும் விளக்கமும் கூறுவது கூட சருகுக்குள் கிடப்பவ ற்றை மெத்தையிலே தூக்கி வைப்பதா கவே எனக்குத் தோன்றுகிறது.
கைலாசபதியின் மேற்படி கூற்று விவா தத்துக்குரியது. ஆயினும் தகுதியற்றவ ற்றை கணிப்புக்கு இட்டுவரக் கூடாது என்ற தமது எண்ணப்பாங்கை அவர் இதிற் புலப் படுத்தியுள்ளார். விமர்சனத்தை ஒரு அறி வாயுதமாகப் பயன்படுத்தும் நிலையில் சமகாலப் படைப்புகள் தொடர்பாக இவ்வா றான கறாரான நிலைப்பாடுகளை மேற் கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடுகி றது. பின்னாளில் வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் போது மேற்படி கறாரான நிலைப் பாடு சனநாயக விரோதமாகத் தெரிவது இயல்பே. கைலாசபதி பற்றிய கேசவனின் மேற்படி விமர்சனத்தை இவ்வாறுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
سے 19 -۔

Page 11
முற்போக்கு கலை இலக்கியவாதி
கே.ஏ. அப்பாஸ்
கே. கணேஷ்,
இந்திய சுதந்திரப் போராட்ட காலங் களில் இந்திய காங்கிரசின் விடுதலைப் போராட்ட இயக்கத்தினை ஆதரித்த வெள் ளையர்களில் பிரசித்தமானவர்கள், சி.எப். அண்ரூஸ் பாதிரியார், அன்னிபெசண்ட் அம்மையார், பி.ஜி ஹார்னிமென் ஆகிய முன்னோடிகளாவர். ஹார்னிமென் அவர்கள் "பம்பாய் கிரானிக்கள் என்ற ஏட்டினை வெளியிட்டுப் பணி புரிந்தார். பிரிட்டிஷாரின் கெடுபிடி சட்டங்களை மீறி நாட்டு நடப் பினை நாடெங்கும் பரப்பியதுடன் வெளி நாடுகளிலும் அறிவுறுத்தினார். அவரது வார இதழில் நாற்பதுகளில் குவாஜா அகமது அப்பாஸ் கடைசிப் பக்கத்தில் (LAST PAGE) 6163 g606), si OgiTLil JT85 எழுதிவந்த பந்திப்பகுதியை வாசகர்கள் வாராவரம் ஆவலுடன் அனுபவித்து ரசிப் பார்கள். பம்பாய் கிரா னிக்கலினின்று விலகியபின் அப்பாஸ் ஆர்.கே. கரஞ்ஜியா வின் பிரசித்தி பெற்ற பிளிட்ஸ் (BLITZ) கிழமை இதழில் ‘அசாத்கலம் (சுதந்திர எழுதுகோல்) என்ற தலைப் பில் எழுதிவந்தார்.
பந்திப் பகுதியில் அரசியல், கலை, இலக்கிய நிகழ்வுகளின் செய்திகள் குறி த்த விமர்சனங்கள் அங்கத நகைச்சுவை களுடன் வெளிவந்தமை வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன.
இந்தியாவின் வடபகுதி திரைப்படத் தயாரிப்பில் கோலோச்சிய காலம் பம் பாயைக் கேந்திர தளமாகக் கொண்டி ருந்தது. மராத்திய, இந்திப் படங்களை பம்பே டாக்கீஸ், மேஹற்பூப், பிரபாத் ஸ்ரூடியோவின் சாந்தாராம் தயாரிப்புகள், கே.சி.டே போன்ற பாடகர்களும் , துர்க்கா பாய் கோட்டே நர்கீஸ், தேவிகாராணி, அசோக்குமாள் திலீப்குமார். ராஜ்கபூர் என்ற விண்மீன்கள் திரைப்பட வானிலே சுடர்விட்டுப் பிரகாசித்த காலம்
鷹。 262*: 'ந்த
இத்தகைய திரையுலகின் தரமான ஏடாக ஒசை (Sound), வெறும் கிசுகிசுப்புக் கள், நடிகர் நடிகைகள் குறித்த தகவல் களை குறித்த சலசலப்பான செய்திகளை வெளியிட்டு வந்த திரை ஏடுகள் போலல் லாது உயர்மட்ட சஞ்சிகையாக விளங்கி யது. அதில் அப்பாஸின் திரை விமர்சனங் கள் வெளிவந்ததடன், மற்றும் இலக்கியம், கலை சார்ந்த கட்டுரைகளும் வெளிவந் தன. தவிரவும் பம்பாயின் இந்திய மக்கள் BTLELD66pub 6T66, INDIAN PEOPLES THEATRES ASSOCIATION (gp3 (3 unts (5 நாடகங்களை நடாத்திய நிறுவனத்தின் அமைப்பாளர்களில் முக்கியஸ்தராக விளங்கியதன் சேவைகள் குறித்த செய்திகளும் வெளிவந்தன.
திரைப்பட தயாரிப்பாளர்களும் இத் துறையில் உதவினார்கள். மெஹற்பூப், சாந்தாராம் போன்றவர்களுடன் அப்பாகம் இத்துறையில் முன்னின்றார். அவரது டாக்டர் கோட்னிஸ்கா அமார்கஹானி (டாக்டர் கோட்னிசின் சிரஞ்சீவிக் கதை, என்ற சித்திரம் முதலில் வெளியானது. ஜப்பானிய சீனப்போர் நடந்த காலங்களில் இந்தியாவின் நல்லெண்ண சமிக்ஞையாக ஒரு மருத்துவப் படை டாக்டர் கோட்னிஸ்
خ 20 ۔
 
 
 

அவர்களது தலைமையில் அனுப்பப்பட்டுப் பெரும்பணி புரிந்தது. காயமடைந்தவர் கட்கு மற்றுமன்றி பொதுமக்கள் பிணிகள் போக்குவதுமான பணிகளிலும் ஈடுபட்ட அவர், சீனப் பொது மக்களின், பேரன்பிற்கு ஆளானார். அவரும் அங்கு வாழ்ந்து குறை வயதிலேயே இறக்க நேர்ந்தது. அவரது பணியினை உணர்த்தும் படமாக அமை ந்தது. அதன் திரை வசனம் கதை அப்பா சினது. அப்படம் உலகப்புகழ் பெற்றது. பின்னர் அப்பாஸ் படத்துறையில் சிறிது காலம் ஈடுபட்டார். அவரது பூட்பாலிஷ், அவாரா, பாபி போன்ற படங்களின் கதை களை வரைந்தார். ராஜ்கபூரின் சிறந்த நடிப்புடன் பெரும்புகழ் பெற்றது. அவர் சொந்தத் தயாரிப்புகளில் ஈடுபட்டதில் பெரு நஷ்டமடைந்து சோர்வுற்று மறைந்த காலத்தில்பொருளாதாரச் சீரின்றி வாழ நேர்ந்தமை துயரக்கதை. அவரது தன் வரலாறு உணர்த்துவன.
ஐரோப்பாவில் இரண்டாம் பெரும்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் ஹிட்லர், முசலோனி முன்னின்ற பாசிஸ் சக்திகளின் கொடுர நோக்கங்களையும், மக்களை மாக் களக அடிமைப்படுத்தி இம் மென்றால் சிறைவாசம் அம் என்றால் வனவாசம் என்று ஆட்சிபுரிந்த உலகப் பெருந்தனக் காரர்களின் போர்க்கருவி வாணிபப் பெருக்கத்தையே நோக்கமாகக் கொண்ட அசுர சக்திகளை எதிர்த்துப் பாசிஸ் எதிர் ப்பு முன்னணி ஐரோப்பாவிலும் அமெரிக்கா விலும் ஒன்று திரண்டன. கவிஞர்கள், பாட கர்கள், எழுத்தாளர்கள், நாடக சினிமாத் துறையினர் அடங்குவர். இப்பேரவையின் கிளையாக அடிமைப்பட்டிருந்த பல கீழை நாடுகளிலும் எழுச்சிகள் உருவாகின. அத்தகைய போக்கில் அமைந்தவை ஐவுயு என்ற இந்திய மக்கள் நாடக மன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவை.
1946-47 களில் போர் முடிந்து இந்திய விடுதலைப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த காலத்தில் பிரிட்டிஷ் அரசில் தொழிற்கட்சி ஆட்சி புரிந்த காலத்தில் ஒரு இடைக்கால இந்தியரின் ஆட்சி நிலவியது. பாக்கிஸ்தான், பங்களாதேஷ்
பிரிவினையாகாது இந்தியா வில் உள்ளடங்கி இருந்த காலம், இன்றைய தழிழ்நாடு (சென்னை) மதராஸ் மாநிலமாக
நிலவியது. ஆந்திரம், கன்னடம், மலையா
ளமாகிய கேரளம் மற்றும் கொச்சின், திருவாங்கூர், ஹைதராபாத், மைசூர், புதுக்கோட்டை, ராமனாதபுரம் போன்ற அரசர்களின் சமஸ்தானங்களை உள்ள டக்கியதாக நிலவியது. சென்னையே தலை நகரமாக அமைந்த காலகட்டம்.
ஆந்திர மாநிலத்தில் முன் குறித்த முற்போக்கான இயக்கங்கள் மற்ற மாநிலங் களை விட முன்னின்றது. அடுத்து கேரளத் தைக் கூறலாம். 1947ல் ஆந்திர முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் பெரிய மகாநாட்டினைக் கூட்டினர். அதற்கு அப்பாஸ் தலைமை தாங்கினார். ஏற்க னவே அவரது சிறுகதைகளை மொழி பெயர்த்திருந்த தொடர்பால் அவற்றின் நுால் வெளியீடு குறித்து ஏற்பாடு செய்ய வாய்க்குமெனக்கருதி அப்பாஸ் சென்னை யில் சந்திக்க விருப்பந் தெரிவித்தார். தியாகராயநகரில் ஆந்திர நடிகர் நாகையா அவர்களது மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடந்தன. தெரு நாடக பாணியில் "புர்ரகதா' என்ற ஆட்சி ஆளர்களது குறைபாடுகளை நகைச்சுவையுடன் குத்திக் காட்டிய நிகழ்ச்சி பொதுமக்களை பெரிதாகக் கவர்ந்தது. பல ஆந்திர எழுத்தாளர்களும், கவிஞர்களும் உரையாற்றினர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தாம் எழும்பூரில் உள்ள “எவரெஸ்ட் ஹோட்டலில் தங்கியிருப்ப தாகவும் மறுநாள் காணும்படியும் குறிப்பிட் டார். தழிழகத்தில் 'நரசுஸ் காபி' பிரபலமானது. அதன் உரிமையாளர் திரு. சுந்தரம் திரைப்படத் துறையிலும் முன்னின் றவர். அவரது “எவரெஸ்ட் ஹோட்டல் சென்னையில் மத்திய தரத்தினர் தங்கும் நவீன வசதி கொண்ட தாக அமைந்தது. அதில் சென்னையில் கண்ணதாசன் நடத் திய "தென்றல் இதழைச் சிறிது காலம் நடத்திய கவிஞர்களான குயிலன், தழிழ் ஒளி ஆகியோருடனும், அன்பர் தி.க சிவசங்கருடனும் சென்று சந்தித்தோம். ஹோட்டலின் எதிர்ப்புறமாக அமைந்த சென்னை மாநகரசபையின் ரிப்பன்
- 21 -

Page 12
மண்டபத்திற்கு முன்னதாக அமைந்த பூங்காவில் அமர்ந்து அளவளாவ வாய்த் தது. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப் பது குறித்து திட்ட மிடப்பட்டது. அத்த கைய மகாநாடு கூடும் பொழுது தாமும்
அன்பர் முல்க்ராஜ் ஆனந்த் ஆகியோர்க
ளும் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். இடையில் பேசிய நண்பர் ஒருவர் தழிழகத்தில் 'கல்கி" யின் எழுத்தைக் குறித்து அவை பாமரரஞ்சகமாக அமைத்து பிற்போக்குக்கு திசை திருப்புவ தாகவும் மக்கள் அவரது நடையையும் படைப்புகளையும் ரசிப்பதாகவும் குறிப்பிட் டார். அதற்கு அவர் உடன் கூறிய பதில் நீங்களும் அவர் பாணியில் எழுதி முற் போக்கு எண்ணங்களைப் புகுத்தினா லென்ன? எனக் குறிப்பிட்டது நினைவில் நிலவுகிறது. மீண்டும் அவரை அப்பொழுது சென்னை தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் ராஜமன்னார் என்ற ஆந்திரரின் இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். அன்று தழிழ்ப்பண்ணையில் தழிழகத்துக் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் படப்பிடிப்பு நிகர்த்து ஓவியம் வரைந்த 'ஜெகத் என்ற கேளர அன்பரை அழைத் துச் சென்று அப்பாஸின் உருவத்தை வரைபடம் வரைந்தோம். அதனை 'தென்றல் வெளியிட்டது. அதனை 'விபவி இவ்விதழில் வெளி யிடுகிறது.
இச்சந்திப்பின் விளைவாக சென்னை மயிலாப்பூர் தனியார் கல்லூரியில் (TUTORIAL COLLEGE) 6 pilot) g560TLD600s இணை ஆசிரியராக கடமை ஆற்றிய திரு.ஏ.ஜி வெங்கடாச்சாரியின் தலைமை யில் அப்பாசுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. சக்திதாசன், சுப்பிர மணியன், குயிலன், தமிழ்ஒளி ஆகிய உபகுழு அமைக்கப் பட்டு தழிழக எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டு அமைக்கத் திட்டமிடப்பட்டது. இவை குறித்து பல கட்சிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களது ஒத்துழைப் புச் சம்மதமும் கிட்டின. தழிழரசுக்கட்சி யின் சிவஞானகிராமணியார், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ப.ஜீவானந்தம்,
எஸ்.ஆர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் ஊக்குவித்தனர். காஞ்சி சென்று திரு. அண்ணாத்துரையைச் சந்தித்தோம். அவரும் பெரிதும், விரும்பினார். அப் பயணத்தில் ஓவியர் ஜெகத்தும் உடன் வந்து அவரது படத்தை வரைந்து உதவி னார். எனினும் பலவித சூழ்நிலைகளால் உடன் மகாநாடு கூட்ட வாய்க்கவில்லை. பல ஆண்டுகட்குப் பின் நாடு சுதந்திர மடைந்த பின் அன்பர்கள் இத்தகைய அமைப்புகளைத் தோற்றுவித்து சிறப்புடன்
நடாத்துகிறார்கள்.
மறுநாளும் இருவருமாக தமிழ்நூல். வெளியீட்டாளர்களைச் சந்தித்து அவரது கதைகளின் தமிழாக்கத்தை வெளியிடும் ஏற்பாடு குறித்து பலபடி ஏறினேர்ம். மொழிபெயர்ப்புகள் எடுபடுவதில்லை என்று கூறி தயக்கம் காட்டினர். அன்று பகல் கல்கி எங்களுக்குப் பகல் உணவுடன் கலந்துரையாட விருப்பம் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் டாக்டர் குருசாமி தெருவில் அமைந்திருந்த இல்லத்தில் விருந் தளித்தார். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, சதாசிவம் தம்பதிகளும் கலந்து கொண் டனர். விருந்திற்குப் பின், நான் உடன் கொண்டு சென்ற சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது. யாதொரு தயக்கமுமின்றி கல்கி தமது வார இதழ்களில் தொடர்ச்சி யாக வெளியிட விரும்புவதாகத் தெரிவித் தார். மணியத்தின் படங்களுடன் அவை 1949 இதழ்களில் வெளிவந்தன. வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றதாக கல்கி பின்னர் அறிவித்தார்.
அவற்றின் தொகுப்பாக குங்குமப்பூ என்ற தலைப்புடன் நூலுருவில் சென்னை இன்ப நிலையத்தார் 1956 ல் வெளியிட் டனர். இரண்டு பதிப்புகளாக வெளிவந் துள்ளது. ஆனந்த விகடனில் 'எனக்குப் பிடித்த நூல்' என்ற வரிசையில் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய தொடரில் வட இந்தியாவில் வாழ்கின்ற திருமதி. லட்சுமிரமணன் குங்குமப்பூ தமிழாக்கத் தைப் பாராட்டி சிறப்பித்து எழுதியிருந்தார்.
இவை தவிர அவரது இல்குலாப் நூல் அன்பர் எம்.ஏ அப்பாஸ் தமிழாக்கி வெளிவந்தது. *
- 22 -

(முன் அட்டை தொடர்ச்சி) யாழ்ப்பாணத்தில் நடந்த மாவட்டசபைத் தேர்தலின் போது தேர்தல் வாக்குப் பெட்டிகளை யாழ்நகரிலுள்ள சுபாஸ் ஹோட்டலுக்கு ஐதேக அமைச்சர்களான சிறில் மத்யூ, காமினி திஸநாயக்கா ஆகியோர் எடுத்துச் சென்று வாக்குச் சீட்டுக்களை நிரப்பிய சம்பவத்தை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். இத் தேர்தலின் போது இந்த அமைச்சர்களின் தூண்டுதலால் நடந்த வன்முறையில் இந்தநாட்டின் அரும்பெரும் பொக்கிஷமான யாழ்நூலகம் தீக்கிரையானது. இத் தேர்தலின் போது எத்தனை யாழ் அப்பாவித்தமிழ்ப் பொது மக்கள் கொல்லப்பட்டனர்? ஒவ்வொரு பாராளு மன்றத் தேர்தலின் போதும் வன்முறையைத் தான் ஐ.தே.க வினர் உபயோகித்து வந்துள்ளனர். அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலைத்தான் விட்டுவைத்தார்களா?
தரகு முதலாளித்துவக் கட்சியின் நீண்டகால நண்பரும் தேர்தல் காலங் களில் பேரம்பேசி தமிழ்மக்களைக் காட்டிக்கொடுத்து என்றோ தமிழ் மக்களால் நிராகரித்து ஒரம் கட்டப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரசும் ஜனநாயகம் பற்றியும் வன்முறை பற்றியும் பேசுகின்றது. தமிழ் காங்கிரஸின் விழுதாகவிருந்து விருட்சமாக மாறி பட்டமரமாக நிற்கின்ற தமிழர் கூட்டணி யினர் கூட ஆயுதக் களைவு பற்றி கூறுகின்றனர். தமிழர் கூட்டணியின் தலைமையின் பெரும்பான்மையினர் கறுப்புக்கோட்டுக்காரர். இவர்கள் அன்றி லிருந்து இன்றுவரை தமிழுக்காகப் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டா லும் தங்கள் தொழிலைக் காப்பாற்றும் நோக்குடன் உண்மையில் ஆங்கில மொழிக்காகத்தான் போராடி வந்துள்ளனர். ஆயுதம் ஏந்துவதற்கு தமிழ் இளைஞர் களைத் தூண்டி ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தவர்கள் கூட்டணியினரே. அல்பிறட் துரையப்பா கொலையிலிருந்து செழியன் பேரின்பநாயகம் வரை நடந்த அரசியல் வாதிகளின் கொலைகளுக்கு பதில் கூற வேண்டியவர்கள் தமிழர்
கூட்டணியினரே. ஆயுதக்களைவு பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன அருகதையுண்டு?
தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்படும் போது பதவியிலிருந்த அரசாங்கம் அதன் இறுதிக்காலத்தில் எடுக்கின்ற சில நடவடிக்கைகள் சில சந்தர்ப்பங்களில் சந்தேகத்தை உண் டாக்குவதும் பொது மக்கள் மத்தியில் இவை பற்றி கேள்விகள் எழுவதும் தவிர்க்க முடியாததாகும்.
பாராளுமன்றம் தேர்தலுக்காக கலைக்கப்படுவதற்கு முன் கடைசி நேர த்தில் அவசர அவசரமாக சில அமைச்சு களுக்கு குறைநிரப்பாக ரூபா 4500 கோடி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணம் எதற்காகப் பயன்படுத்தப்பட வுள்ளது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தள்ளது.
கலைக்கப்படவிருந்த பாராளுமன்றத்தி லிருந்த அமைச்சர்கள் உள்பட 225 உறுப்பினர்களுக்கும் தலா 55 லட்சம் ரூபா பெறுமதியான, வரிவிலக்கப்பட்ட, மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித் துள்ளது. இந்த வகையான ஆடம்பர மோட்டார் வாகனத்துக்கு சுங்கவரி 300 வீதம் அறவிடப்பட வேண்டும். இந்த மோட்டார் வாகனங்களுக்கான சுங்கவரி விலக்கால் எமது நாட்டுக்கு ரூபா 1000 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த 225 உறுப்பினர்களில் 8 உறுப்பினர் களைத் தவிர ஏனைய 217 பேரும் இந்த ஆடம்பர மோட்டார்களை இறக்கவுள்ளனர். அதிசயம் என்னவென்றால் இந்த வாகனங் களின் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரங்களில் பெரும் பான்மையானவை ஆடம்பர மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டுவிட்டன. இந்த மோட்டார் இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் மூலம் ஒவ்வொரு உறுப்பின ரும் ரூபா 20 லட்சத்திற்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தேர்தல் காலகட்டத்தின் போது பெறப்பட்ட இப்பணம் எதற்காகப் பயன்படுத்தப்படவு ள்ளது. என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- 23 -

Page 13
செப்டெம்பர் 8 ம் திகதி சனிக்கிழமை .ெ30 மணிக்கு கரணிம என்ற சிங்கள திரைப்படம் ரூபாவாஹினியில் ஒளிபரப்பப் பட அட்டவனையிடப் பட்டிருந்தது. இப் படம் திரையிடப்படுவதற்கு பதிலாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போது சன ஐக்கிய முன்னணி உறுப்பினர்களு க்கு ஆற்றிய உரை ஒளிபரப்பப்பட்டது. இச்செயல் அரச நாடகத்துறையை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்துகின்ற பார LIL-FLATGð allE, ILIīLisičā'īITT?
அரச மரக்கூட்டுத்தாபனம் செப்டெம்பர் 10 ஆம் திகதி திங்கட்கிழமை லங்காதிப சிங்களப் பத்திரிகையின் 12 ம் பக்கத்தில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை பிரகரித் துள்ளது. இந்த முழுப்பக்க விளம்பரத்தில் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் அணபச்ச ரான திரு. மகிந்த ராஜபக்ஷவின் படத்து டன் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்று பிரகரிக்கப்பட்டுள்ளது. மரக்கட்டுத்தாபனம் தனது நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினருக்காக எப்படி பயன்படுத்த முடியும்? இதில் என்ன நியாயம் இருக்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது!
இப்பொழுது தேர்தல் காலம் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படுகின்ற கோஷங் கள், வாக்குறுதிகள், உத்தரவாதங்கள், ஒப்புதல்கள் எல்லாம் தேர்தல் காலம் முடிந்தவுடன் அவையும் காற்றுடன் கலந் துவிட்ட வாக்குறுதிகள், நிதியான, நியாய மன. வன்முறையற்ற ஜனநாயக ரீதியான, தேர்தல் என்ற வாசகங்கள் எல்லாம் பொய் பாய் கனவாய் பழங்கதையாய் கடந்த காலத்தில் மாறிவிட்டதைப் போல இத்தேள் தலுடனும் மாறிவிடும். முதலாளித்துவ சமூகத்தில் முதலாளித்துவ, தரகு முதலா வித்துவ கட்சிகளிடமிருந்து வேறு எந்த வகையான தேர்தலையும் வாக்குறுதிக ளையும் நாம் எதிர்பார்க்க முடியும்.?
ஜனநாயகத்துக்கா ன் Hrı LL:LDÜL|. வன்முறையற்ற முறையில் தேர்தலை நடத்தக்கோரி, பஞ்சள் பட்டி இயக்கத்தை நடத்தி வருகின்றது
இதுதான் Iது நாட்டின் அரசியல் கார்சாரம்
நீர்வை பொன்னையன்

|- ! ----「山! |-TT활的日니험|- *「麒圖圓*[:|- |- ---- ! *... : ----o ,
|- -
286818-820 ozoy-T5 : TI? : uolo *Títolsfloor(s) foi oss -iss II Fto un "+/18
бčҳ дапда