கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2001.06-07

Page 1
戰
 
 
 


Page 2
. ஒரு மீசைக்காரனின் கனவு
பத்தனையூர் வே. தினகரன் -
எழுந்துவா தோழி வரிச்சுகளை அடுப்பிலிட்டு, வாளெடுத்து, வாசலுடைத்துவா.
நம் வேட்டையில் வீழ்த்த வேண்டியது இனவாதத்தையல்ல ஆணாதிக்கத்தை.
படங்கவிழ். அதிலேதான் பலருக்குப்
பாடை கட்டவேண்டியிருக்கிறது.
விழுந்துவிடாதவுன் கொழுந்துக் கூடை இனி - ஈனக் குப்பையள்ளப் பயன்படட்டும்.
கொங்காணி கிழித்த, இடைக்கயிறவிழ்த்து, கொடிகட்டு ~ வெற்றிக் கொடிகட்டு அதிலுன் முகம்பதி. மலையுச்சியில் நாட்டு
உனக்குள்ளிருக்கும் உறுதிதான் இம்மலைகளின் நிமிர்வுகள், இத்தனை மிருக்காய்.
விடுதலை வால் பிடித்துப் பெறுவதல்ல, வாள் பிடித்தரப் பெறுவத!
ம். தாமதிக்காதே! குருதியைக் கொதிக்கவைத்து புறப்படு.
போர்க்கோலத்தில்.
. என்ன இத வாசனையா..?
! Ibങ്ങഥേ' எங்கிருந்த வருகிறாய்
இத்தனை ஆயுதங்களோடு.?
எட்டயபுரச் சிம்மத்தின் கல்லறையிலிருந்தது.!
நன்றி - ஞானம்

தமிழர் மத்தியில் இசை
வளர்த்ததும் வளர்க்க வேண்டியதும் - பேராசிரியர் சி. மெளனகுரு -
தமிழர் மத்தியில் வழங்கும் இசையினை 4 வகையாக வகுக்கலாம்.
1. செவ்விய இசை
2. நாட்டாரிசை
3. வெகுஜன இசை
4. மக்களிசை
செவ்விய இசைக்கு ஒரு வரலாறுண்டு. இவ்விசையைக் கர்நாடக இசை, தமிழிசை என அழைக்கும் மரபு எம் மத்தியில் உண்டு. கர்நாடக இசை, தமிழிசை சம்பந் தமாக ஏராளமான நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.
செவ்விய இசையை வளர்ப்பதற்கென எம்மத்தியில் ஒரு பிரிவினர் இருந்து வந்துள்ளனர். அரசராலும், பிரபுக்களாலும் கோயிலாலும் நிறுவனங்களாலும் இம் மரபு போஷிக்கப்பட்டதனால் இது வளர்க்கப்பட் டுள்ளதுடன் இவ்விசை மரபே தமிழர் இசை மரபாகக் கூறப்பட்டுள்ளது.
செவ்விய இசைக்குச் சமாந்தரமாக நாட்டாரிசையும் தமிழர் மத்தியில் இருந்து ள்ளது. இவ்விசை மக்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருந்தமை யால் இது அழியாமல் இருந்து வந்துள் ளது. எனினும் கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்றும் வந்துள்ளது.
செவ்விய இசையும், நாட்டாரிசையும் ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும், கொடுத் தும் வளர்ந்து வந்துள்ளமையை இசை வரலாறு மூலம் அறிகிறோம். தமிழ் இசை வரலாறு எழுதியோர் நாட்டாரிசையை அதனுடன் இணைத்தாரில்லை.
19 ஆம் நூற்றாண்டில் பார்ளி நாடக மரபின் வருகையுடன் வெகுஜன இசை மரபு தமிழர் மத்தியில் புகுகின்றது. கர்நாடக இந்துஸ்தானி இசைகளை பார்ளி நாடக மரபு மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது. பின்னணிச் சினிமா (1930 களில்) இவ் வெகுஜன இசையை வளர்க் கும் ஊடகமாயிற்று. அதன்பின் வானொலி, ரெலிவிஷன் என்பன வெகுஜன இசை வளரக் காரணிகளாயின.
வெகுஜனக் கலாசாரம் என்பது தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் மாய்மாலம் என்பர். பணமீட்டும் பண்புடைய இவ் வெகுஜன கலாசாரம் மக்களை மயக்கத்திலாழ்த்தக் கூடியது. இது செவ்விய கலாசாரத்தினதும் நாட்டுப்புற கலாசாரத்தினதும் வீரியத்தை நீர்த்துப் போக வைக்கும் தன்மையுடையது. 19 ம் நூற்றாண்டில் எழுந்த இந்த வெகுஜன இசை (சினிமா இசை) செவ்விய இசையை யும், நாட்டுப்புற இசையையும் மக்கள்

Page 3
மத்தியில் ஜனரஞ்சகப்படுத்தியதாயினும் அவற்றின் வீரியத்தைக் குறைத்து விட்டது. 20 ஆம் நூற்றாண்டில் இவ் வெகுஜன இசை, பணம் பண்ணும் முதலாளிகளினால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டதைக் காண்கி றோம். சினிமாவில் 1930 களில் செவ்விய இசை G. இராமநாதன் போன்றோருக் கூடாகவும், 1950, 60 களில் கர்நாடக இசையை அடித்தளமாகக் கொண்ட மெல்லிசை M.S. விஸ்வநாதன் போன்றோ ருக் கூடாகவும், 1970 களில் கிராமிய இசை பாரதிராஜா போன்றோருக் கூடாகவும், 1980 களில் சிறப்பாக மேநாட் டிசையும் குறிப்பாக கிராமிய, கர்நாடக இசைகள் ரகுமானுக்கூடாகவும் சினிமாவுக் கூடாக வெகுஜன இசையாகப் பரிணமிப்ப தைக் காண்கிறோம். இவ்விசை மரபே. இன்று பட்டி தொட்டிகளிலெல்லாம் கேட்கப்படுகிறது. இச்சினிமா இசையில் செவ்விய, கிராமிய இசைகள் ஜனரஞ்சகப் படுத்தப்பட்டன. மக்களை மயக்கத்திலாழ்த் திய இவ்விசைப் போக்கிற்கு மாற்றாக எழுந்த இசைமரபே மக்களிசை மரபாகும்.
இவ்விசை மரபு, மக்கள் நலநாட்டம் கொண்ட மக்களியக்கங்களாலும் தனிப்பட் டோராலும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் பிரச்சினைகளை மக்களுக்குணர்த்த செவ் விய இசை, நாட்டாரிசை கலந்த ஒருவித இசை மரபினை இவ்விசையாளர் பயன்ப டுத்தினர். ரீனிவாசன் இதன் முன்னோடி யாவார். பாடகர்களின் குரல் வளத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்ட கொயர் இசைக்கு அவர் முக்கியத்துவ மளித்தார்.
நிறுவனங்களுக்குள்ளும், கோயில் களுக்குள்ளும் மேலோங்கிகளுக்குள்ளும் (Elite) ஒடுங்கிக் கொண்ட கர்நாடக சங்கீ
தத்துக்கும் மக்களை மயக்கத்திலாழ்த்திய டப்பாத்தனமான சினிமா சங்கீதத்திற்கும் மாற்றாகத் தோன்றிய இம் மக்கள் சங்கீதம் மக்கள் கலை இலக்கிய மன்றம், தமிழிசை இயக்கம், நக்ஸல்பாரிக் குழுவினர் போன்ற நிறுவனங்களாலும் குணசேகரன் , தேவேந்திரன் போன்றோராலும் முன்னெடுக் கப்படுகின்றன.
தமிழ் நாட்டு அரசியல் சாதிப் பிரச்சினை, பெண்ணுரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பன இப்பாடல்களின் கருவாக அமைந்துள்ளன.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் கரிசல்காட்டுப் பாடல்கள், தன் னானே குழுவினரின் நக்ஸல்பாரி இயக்கம் சார்ந்தோர் வெளியிட்ட சமூக அரசியல் இயக்கப்பாடல்கள் தலித்துகளின் கஷ்டங் களை விளக்கும் குணசேகரனின் பாடல்கள் என்பன ஒலி நாடா வடிவில் இன்று பரவ லாக விற்பனையாகின்றன. இவை கணிச மான அளவு மக்களைக் கவர்ந்துள்ளதுடன் மக்களைச் சிந்திக்கவும் வைக்கின்றன.
ஈழத்துத் தமிழர் மத்தியிலும் இந்த நான்கு வகை இசை மரபுகளையும் காண் கிறோம். தமிழகத் தொடர்பு காரணமாக ஈழத்துத் தமிழர் மத்தியில் பண்டுதொட்டு இன்று வரை ஒரு செவ்விய இசை மரபு இருந்து வந்துள்ளது. அரசவை, பெரும் கோயில்களை மையமாகக் கொண்டு வாழ்ந்த இசை வேளாளர் இம் மரபை வளர்த்துள்ளனர். இம்மரபு இன்று கல்வி நிறுவனங்களினால் வளர்க்கப்படுகின்றது.
நாட்டாரிசையை வளர்க்கும் முயற்சிகள்
1960 களில் ஈழத்தமிழர் மத்தியில் உண்டாயின. ஆனால் அவை திட்டமிட்டு வளர்க்கப்படவில்லை.

வெகுஜன இசை ஈழத்துக்கு என்று இல்லாவிடினும் தமிழ் நாட்டு வெகுஜன இசையே எமது வெகுஜன இசையாயிற்று. இன்று இவ்விசை மரபினை தமிழ்நாட்டிலி ருந்த இங்கு இறக்குமதியாகும் சினிமாவும், தமிழகச் சினிமாக் கலைஞர்களும், எமது நாட்டு வானொலியும், தொலைக்காட்சி நிறுவனங்களும் பெருமளவில் பரவலாக்கி வளர்த்து வருகின்றன. இவற்றிற்கு மாற்றிடாக எழுந்த மக்களிசை மரபொன் றும் எம்மத்தியில் உண்டு.
1970 களில் எம்மத்தியில் மெல்லிசையில் ஊற்றுக்களைக் காணமுடியும். நாட்டுப் பற்று, மக்கள் பிரச்சினைகள் என்பன அவற்றில் பேசப்பட்டன. தமிழ் தேசிய இயக்கங்கள் தம் கருத்துப் பிரசாரத்திற்கு ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாக மக்களி சையைப் பயன்படுத்துகின்றன. கர்நாடக இசை, நாட்டாரிசை கலந்து உருவான இவ்விசை மூலம், பெண்கள் பிரச்சினை (சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலைய இசை ஒலி நாடா ) போன்றனவும் கூறப்படுகின்றன.
எழுந்த
மக்களிசை மரபின்
பூகோள மயமாக்கலும், திறந்த பொருளாதாரக் கொள்கையும் நாடுகளின் இனங்களின் தனித்துவங்களை அழித்து உலக கலாசாரத்தினுள் அதிலும் வெகு ஜன கலாசாரத்தினுள் அனைவரையும் அடக்கும் காலகட்டம் இது.
ஏற்கனவே வளர்ந்திருந்த செவ்விய இசை மரபையும், குணாம்சமுள்ள நாட்டாரிசை மரபையும் வெகுஜன இசை அழித்தொழிக்கும் இக்காலகட்டத்தில் இதற்கு மாற்றாக அலைகடலில் ஒரு துரும் பெனக் காட்சி தருவது இம் மக்களிசை மரபேயாகும்.
உலகெங்கணும் அடக்கப்படும் மக்களி டம் இம்மக்களிசை மரபைக் காணுகிறோம். அமெரிக்காவில் மக்கள் பிரச்சினைகளை யும் வியட்நாம் எதிர்ப்புப் பிரச்சாரங்களை யும் பொப்பில் பாடிய பொட்டிலன், ஜோன் பயஸ் என்போர் வளர்த்த மக்களிசை, லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களிசை ம்ே உலக நாடுகளின் மக்களிசை இயக்கம் என்பன மக்களிசை இயக்கம் என்பது
உலகம் தழுவியது என்பதற்கு உதாரணங்களாகும்.
தமிழர் இதுவரை வளர்த்தவை
செவ்விய இசையும், வெகுஜன இசையுமே. அடக்கப்படும் இனங்களோடும், நாடுகளோ டும், மக்களோடும் தமிழ் நாட்டு மக்களிசை யினரும் இலங்கை நாட்டு மக்களிசையின ரும், ஈழத்தமிழ் மக்களிசையினரும் இணைந்து இன்று வளர்க்க வேண்டியது மாற்று இசையான மக்களிசையே. இப்பணி அங்கொன்று இங்கொன்றாக நடைபெறி னும் திட்டமிட்டு ஒருங்கிணைந்து தம் ஆற்றல்களைக் குவிமையப்படுத்திச் செயலாற்றுவதன் மூலமே இம் மக்களிசை மரபு வளர்ச்சியைச் சாதிக்க முடியும். 9
இன்பத்திற்காகவே வாழ்ந்தோம், இன்பத்திற்காகவே போராடினோம், இன்பத்திற்காகவே இறக்கின்றோம். ஆகவே துன்பம் எமது பெயருடன் இணையாதிருக்கட்டும்”
"இன்பத்திற்காகவே பிறந்தோம்,
ஜூலியஸ் ஃபியூசிக்

Page 4
விபவியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கவிதை படிப்போம் வருங்கள்" என்ற கவியரங்கில் படிக்கப்பட்ட கவிதை
அகாலத்தில் அவளுக்கொரு கடிதம்
எஸ். சித்ராஞ்ஜன்
பிரியமானவளே!
நாங்கள் : - ஊர்விட்டு ஓடிவந்த மறுநாளே சுடுகாடாயானதையும் வீங்கிய உடல்களில் பூட்பாத சுவடுகளை தாங்கிவந்த நண்பர்கள் சொல்லக் கேட்டேன்
வீதி ஓரங்களிலும் கடைகளிடை ஓடைகளிலும் அரைகுறை உயிராய் அடுக்கிய உடல்கள் எரிந்ததாமே?
எம்மவரின் கருகிய அந்த உடல்களுக்கு நாயும் பன்றியும் போட்டி போட்டனவாமே
நாயும் பன்றியுமாவத நன்றியுடையதாய் இருக்கட்டும் அரக்கர்களுக்கு.
நாங்கள் ஊர்விட்டு ஓடிவந்து ஊர்ஊராய் அலையும் இந்த ஓயாத படலத்தில்
உனக்கு நான் எதைச் சொல்வேன்
தோட்டக் காறைகளில் தரவுத் தண்ணியோடு எங்கள் காலங்கள் கரைந்ததைச் சொல்லவா?
(6
பம்பர்களும் ஹெலிகளும் இன்னுமொரு வெள்ளை விமானமும் எண்ணிக்கையில்லாமல் குண்டுகள் போட்ட நேரம் எப்படித் தப்பினோம் எண்பதைச் சொல்லவா.
காயாம்பற்றைகளை கடந்ததையும் கண்ணாவுக்குள் கிடந்ததையும் கதை கதையாய்ச் சொல்லவா?. உனக்கு நான் எதைச் சொல்வேன்.
செல்லோசை செவிகளைத் தளைக்க வெடியோசை எங்களை விரட்ட வெறும் பாதங்களை சுடுமணலும் முட்களும் பதம் பார்த்ததைச் சொல்லவா.
ஒரு நடுமதியம் அலவாக்கரையோரம் கால்கள் புதையப் புதைய கூனிய முதுகுடன் நாவறள நடந்த - நெடு நடையைச் சொல்லவா.
இந்த ஓயாத படலத்தில்
உனக்கு நான் எதைச் சொல்வேன்
அகதி முகாமொன்றில் ஒழுகுகின்ற ஓலைக் கொட்டிலினுள் ஈரமண்ணில்
நித்திரையேயின்றி

எங்கள் நிலையை எண்ணி அழுது அழுது விழித்திருந்த இரவுகளைச் சொல்லவா.
ஒரு நள்ளிரவிலும் பின்னோர் பின்னிரவிலும் ஓட்டத்தோணிக்கு கைகளைத் துடுப்பாக்கி மங்கல நிலவொளியில் எங்கள் உயிரைக் கொண்டோடினோமே அந்தக் கணங்களைச் சொல்லவா.
இந்த அகாலத்தில் உனக்கு நான் எதைச் சொல்வேன்.
aff இத்தனைக்கும் மத்தியில் p 6i 560)61 JLy எப்படி வந்ததென்றா எண்ணுகிறாய். சொல்கிறேன்.
இன்று காலை எனது வெற்றுப் பேர்ஷை உதறிய வேளை விழுந்தது இரண்டு ரூபாய் ஐம்பத சத 'கண்டோஸ்' உறை அதைப் பார்த்த போததான் நாளை உன் பிறந்த நாள் என்பதம் அதற்காக நீயொரு கவிதை கேட்டதம் ஞாபகம் வந்தது.
என்னையே எனக்கு ஞாபகமில்லாத மரணத்தையே மடியில் சுமந்து திரியும் இந்த நாட்களில் உன்னை நினைத்து எப்படி நான் கவிதை எழுத முடியும்? என் ஞாபகத்தோடு இருப்பதெல்லாம் நான் கடைசியாய் எழுதி வைத்த இந்த கவிதை வரிகள் மட்டும் தான்.
‘சாவு இப்போ என் பக்கத்தில் படுத்திருக்கிறத் இனி
ஒடியென்ன ஒழித்தென்ன? வெட்டியோ கொத்தியோ சுட்டோ! எப்படியோ
giនា ទាំង
தனதாக்கிக் கொள்ளும்
இந்தக் கவிதை வரிகளோடு இன்னும் நான் மரணப் பாதாளத்தின் விளிம்பில்தான்.
இதுவரை நீ உயியோடு இருந்தால்
ஊரிலுள்ள அகதி முகாமில்தான்
இருப்பாய்
என்ற நம்பிக்கையில்
அந்த அகதிமுகாமுக்கே
விலாசமிடுகிறேன்.
தபாலில் சேர்ப்பதற்காகவல்ல இங்கு வரும் வியாபாரிகளிடம் கொடுத்தனுப்புவதற்காக இக்கடிதம் உன் கரம் கிடைக்கும்போத என்நிலை சொல்ல முடியாது
ஒரு வேளை.
அந்தோ.
நாய்கள் குரைக்கின்றன. துப்பாக்கிகள் வெடிக்கின்றன. அதனால்
இப்படிக்கு இவன்
உன்னில்
பிரியமுள்ளவன். O
திகதி: 90களின் பிற்பகுதி

Page 5
i − ஒவ்வொரு நாட்டிலும் சில குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டங்களில் பேரறிஞர்க ளும் கலை இலக்கிய மேதைகளும் தோன்றியுள்ளார்கள். இவர்கள் தமது கலை இலக்கியப் படைப்புக்களால் தத்தமது நாடுகளின் கலை கலாசாரத்தை யும் மனித குலத்தின் கலாசாரத்தையும் மேன்மையுறச் செய்துள்ளார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ரவீந்திரநாத் தாகூர், பாரதி போன்ற மேதைகள் தோன்றி தமது படைப்புக்கள் மூலம் விடுதலைப் போராட்டத்தை உத்வேகப்படுத்தியதுடன் இந்திய கலாசாரத்தைச் செழுமைப்படுத்தி யுள்ளார்கள். ரஷ்யாவில் ரோல்ஸ் ரோய், புஸ்கின், மார்க்ஸிம் கார்க்கி போன்றவர்கள் ரஷ்ய கலை இலக்கியத்தை வளப்படுத்தி யுள்ளார்கள். பிரான்சில் விக்ரர் ஹியுகோ, எமிலிஜோலோ, மாப்பஸான் போன்ற அரிய படைப்பாளிகள் உன்னத சிருஷ்டிகளை மனித குலத்திற்கு அளித்துள்ளார்கள், சீனாவின் கலாசாரப் புரட்சியை கலை இலக்கிய மேதை லூசுன் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.
லூ சுன் சீனாவின் தலைசிறந்த எழுத்தாளர். புகழ்பெற்ற பேரறிஞர். சீனாவின் மார்க்ஸிம் கார்க்கி என்று லூசுன் அழைக்கப்படுவார்,
சீன கலாசாரப் புரட்சியின் தலைமைத் தளபதி லூசுன் மகத்தான இலக்கியவாதி
கலாசாரப் புரட்சியின் பிரதம தளபதி லூசுன்
யாக மட்டுமன்றி, ஒரு மாபெரும் சிந்தனை யாளராகவும். புரட்சிவாதியாகவும். திகழ்ந்தார். அவர் இம்மியளவும் விட்டுக் கொடுக்காத நேர்மை கொண்டவராக இருந்தார். அண்டிப் பிழைப்பதும் அடிமை மனப்பான்மையும் அவரிடம் எள்ளளவும் இருக்கவில்லை. காலனித்துவ, அரைக் காலனித்துவ நாட்டு மக்களிடையே இத்தகைய பண்பு விலைமதிப்பற்றதாகும். தேசத்தின் மிகப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதியாக இருந்த லூகன், எதிரியின் கோட்டையில் விரிசலை உருவாக்கி, அதைச் சூறாவளியாய்த் தாக்கியவர். கலாசாரத் துறையில் அவர் அனைவரிலும் பார்க்கத் துணிவு மிக்கவர். மிகச் சரியான அதிக உறுதி வாய்ந்த, நம் வரலாற்றில் ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்தவர். அவர் மேற்கொண்ட பாதை சீனத்தின் புதிய தேசிய கலாசாரப் பாதையாகும் என்று மாமேதை மாஓ சேதுங் அவர்கள் லூசுன் னைப் பற்றி போற்றிப் பாராட்டியுள்ளார்.
லூசுன்னின் இலக்கியப் படைப்புக்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி யாக்கப்பட்டு பிரபல்யம் பெற்றுள்ளன. சோவியத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிப் பிரகடனக் குரலாக இருந்தவர் மார்க்ஸிம் கார்க்கி, சீன விவசாயிகளின் புரட்சிப் பிரகட னக் குரலாக ஒலித்தவர் லுசுன் மகத்தான சோவியத் அக்டோபர் சோஷலிஸப்
 

புரட்சியின் போர்ப் பிரகடனக் குரலாக ஒலிக்கின்றது மார்க்சிம் கார்க்கியின் தாய். லூ சுன் அவர்களின் ‘ ஆ, கியுவின் உண்மைக் கதை' என்ற சிருஷ்டி சீன விவசாயிகளின் புரட்சிப் போர்க் குரலாக ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.
ஆங்கில, பிரெஞ்ச், சோவியத் இலக்கி யங்களுக்கு தமிழ் வாசகர்கள் நன்கு பரிட்சயப்பட்டவர்கள். ஆனால் சீனா கீழைத் தேசங்களில் ஒன்றாக இருந்தும் கூட அந்த நாட்டின் இலக்கியம் குறிப்பிடக்கூடிய அளவிற்கு தமிழ் வாசகள்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம்.ஏனைய இலக்கியங்கள் ஆங்கில மொழியிலும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டும் அவை தமிழ் போன்ற பிற மொழிகளில் மொழியாக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இலங்கை இந்தியர் போன்ற நாடுகள் ஆங்கிலேயரின் காலனித்துவ நாடாக இருந்தமையால், ஆங்கில மொழி நிர்வாகத்துறையிலும் கல்வித்துறையிலும் ஆதிக்கம் செலுத்தியமையால், ஆங்கிலஆங்கிலத்திலுள்ள பிறமொழி இலக்கியங் கள் காலனித்துவ நாட்டு மக்கள் பரீட்சமாவதற்கு வழிவகுத்தது. அத்துடன் ஆங்கிலம் இலகு மொழியாகவும் இருந்தது. சீன மொழியைப் பொறுத்தவரை அது செழிப்பானதாக இருந்தாலும் மிகக் கடினமாகவும், ஆங்கில மொழியில் குறைந்தளவே சீன இலக்கியப் படைப்புக் கள் மொழியாக்கப்பட்டிருந்தமையும் இதற்கு பிரதான காரணங்களாகும்.
லூசுன் சீன தேசிய இலக்கியத்தின் ஸ்தாபகள் மாத்திரமல்ல. நவீன இலக்கியத் தின் முதலாவது சிறுகதையைப் படைத்த சிருஷ்டிகள்த்தாவுமாவார். அவர் சீனப் புரட்சி இயக்கத்தின் வீறான பாய்ச்சலின் ஆழமான தாக்கத்துக்குள்ளானவர். இதனால்தான்
9
அவரால் உயிரோட்டமுள்ள வலுவான சிருஷ்டிகைளப் படைக்க முடிந்தது. சீனாவின் அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனித்துவ சமுதாயத்தில் சீன விவசாயி களும், பரந்துபட்ட வெகுஜனங்களும் பாரதூரமான ஒடுக்குமுறைக்குள்ளாகி அல்லல்பட்டு. துன்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இத்துயர வாழ்வு லூசுன்னின் பாலிய பராயத்தில் மிகப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
மாணவனாயிருந்த காலத்தில் லூசுன் ஆழமான தேசபக்தியினால் உந்தப்பட்ட மைக்கு ஒரு சம்பவம் பின்புலமாயிருந்தது.
1902 ல் லூசுன் மருத்துவம் படிக்க ஜப்பானுக்கு சென்றார். 1905 ஆம் ஆண் டில் ஜப்பானில் அவர் ஒரு திரைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. அப்படத்தில் ஒரு சீனப்பிரஜை மிக மோசமாக அவமானப் படுத்தப்படுவதை அவர் பார்த்தார். இக் காட்சி அவரை ஆழமாகப் பாதித்தது. அதனால் அவர் உடனடியாகவே தனது தாய்நாட்டுக்குத் திரும்பிவந்து, ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட ஆரம்பித்தார். தமது போராட்ட முயற்சியில் அவர் தோல்வி கண்டார். தூங்கிக் கிடந்த சீன மக்களை அவரால் தட்டி எழுப்ப முடிய வில்லை. இதனால் அவர் பாரிய மனச் சோர்வும் விரக்தியும் அடைந்திருந்தார். 1917 ஆம் ஆண்டில் சோவியத்யூனியனில் நடந்த மகத்தான அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் வெற்றி லூசுன்னுக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. அவர் மிக வேகமாக இயங்கத் தொடங்கினார். கலை இலக்கியத் துறையினூடாக அவர் மக்களைத் தட்டி எழுப்ப முயற்சித்தார்.
சீனாவில் 1919 மே இயக்கம் ஒன்று பேரெழுச்சியுடன் வெடித்துக் கிளம்பியது.

Page 6
மார்க்ஸ்ஸிஸ்டுகளதும். இளம் புத்திஜீவிக ளினதும் தலைமையில் ஏகாதிபத்தியத்தை யும் நிலப் பிரபுத்துவத்தையும் எதிர்த்துப் போராடும் ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக இது தீவிரமாகச் செயல்பட்டது. இந்த தேசபக்த இயக்கத்துக்கு ஆதரவாக ஷங்காய் மாகாணத்தில் 70000 தொழிலா ளர்கள் ஒன்று திரண்டு ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டம் பூரண வெற்றியீட்டிய துடன் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த ஐக்கிய முன்னணியை உருவாக்கியது. அதேவேளை அன்னிய ஏகாதிபத்தியத்துக்கும் சீன நிலப் பிரபுத்துவத்திற்கும் எதிரான ஒரு மாபெரும் கலாசார, இலக்கியப் புரட்சிக்கு உருவகத் தையும் வேகத்தையும் கொடுத்தது. இந்தக் கலாசாரப் புரட்சிக்கு முன்னணித் தளபதி யாய் தலைமை தாங்கியவர் லூகன்.
1918, ‘புதிய இளைஞன்’ என்ற சஞ்சிகையின் மே மாத இதழில் 'ஒரு பைத்தியக்காரனின் நாட்குறிப்பு என்ற லூாசுன்னின் சிறுகதை வெளிவந்தது. இச்சிறுகதை சீனாவின் நிலப் பிரபுத்துவ சமூகத்துக்கு எதிரான ஒரு யுத்தப் பிரகடனமாகும். அது மாத்திரமல்ல, இக்கதை சீன நவீன இலக்கியத்தில் முதல் முதலாகப் படைக்கப்பட்டு வெளிவந்த முத லாவது சிறுகதை. மேலும் இக்கதை சீனா வின் புதிய இலக்கியத்துக்கு ஒரு உறுதி யான அத்திவாரத்தையும், இட்டுள்ளது
என்பதை சீன கலை இலக்கிய அறிஞர்கள்
விதைந்துரைத்துள்ளனர்.
லுசுன் மருத்துவம் படிப்பதற்கு ஜப்பான் தேசத்திற்குச் சென்றார். அவர் அங்கு மாணவனாயிருந்த காலத்தில், 1905 ஆம் ஆண்டில் ஒரு திரைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. அப்படத்தில் ஒரு சீன பிரஜை
O
மிக மோசமாக அவமானப்படுத்தப்படுவதை அவர் அவதானித்தார். இக்காட்சி அவரது இதயத்தை ஆழமாகத் தாக்கி விட்டது. இதனால் அவர் உடனடியாகவே தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தன் தாய் நாட்டுக்குத் திரும்பி வந்தார். இங்கு அவர் ஒடுக்கு முறைக்கு எதிராக தீவிரமாகப் போராட ஆரம்பித்தார். ஆனால் அடிமைத்தழையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சீன மக்களை அவரால் உசுப்பி விழிப்படையச் செய்ய முடிய வில்லை. நிலப் பிரபுத்துவ மலையுடனான மோதலில் அவர் தோல்வி கண்டார். இதனால் அவர் பெருமளவு மனச் சோர்வும் விரக்தியுமடைந்திருந்தார். 1917 ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவில் நடந்த மகத்தான அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் வெற்றி விரக்தியுற்றிருந்த லூசுன்னிற்கு பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. அவால் புதிய உற்சாகத்துடன் தீவிரமாகக இயங்கத் தொடங்கினார். கலை இலக்கியத்துறையினூடாக அவர்
சீன மக்களைத் தட்டி எழுப்ப முயற்சித்தார்.
சீனாவில் 1919 மே இயக்கம் ஒன்று பேரெழுச்சியுடன் வெடித்துக் கிளம்பியது. மாக்ஸிஸ்டுகளதும் இளம் புத்திஜீவிகளதும் தலைமையில் ஏகாதிபத்தியத்தையும் நிலப் பிரபுத்துவத்தையும் எதிர்த்துப் போராடும் ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக இது தீவிரமாகச் செயல்பட்டது. இந்த சீன தேச பக்த இயக்கத்துக்கு ஆதரவாக சீனாவின் ஷங்ஹாய் மாகாணத்தில் 70,000 தொழிலா ளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டம் பூரண வெற்றியீட்டியதுடன், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த ஐக்கிய முன்னணியை உருவாக்கியது. அதே வேளை அந்நிய ஏகாதிபத்தியத்துக்கும்

சீன நிலப் பிரபுத்துவத்துக்கும் எதிரான ஒரு மாபெரும் கலாசார, கலை இலக்கியப் புரட்சிக்கு உருவத்தையும் வேகத்தையும் கொடுத்தது. இந்தக் கலாசாரப் புரட்சிக்கு முன்னணித் தளபதியாய் தலைமை தாங்கி நடத்தியவர் லூசுன் ஆவார்.
1918, புதிய இளைஞன்` சஞ்சிகையின் மே மாத இதழில் ஒரு பைத்தியக்காரனின் நாட்குறிப்பு என்ற, லூசுன்னின் ஒரு சிறுகதை வெளிவந்தது. இச்சிறுகதை சீனாவின் நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கு எதிரான ஒரு யுத்தப் பிரகடனம், அது மாத்திரமல்ல, இக்கதை சீன நவீன இலக்கியத்தில் முதல் முதலா கப் படைக்கப்பட்டு வெளிவந்த முத்லாவது சிறுகதை. மேலும் இக்கதை, சீனாவின் புதிய இலக்கியத்துக்கான ஒரு உறுதியான அத்திவாரத்தையும் இட்டுள்ளது என்பதை சீன கலை இலக்கியப் பேரறிஞர்கள் விதைந்துரைத்துள்ளனர்.
என்ற
சிறுகதை, கவிதை, நினைவுக் குறிப்புக் கள், அரசியல் கலை இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் ஆகிய முறைகளில் சாதனை படைத்துள்ளார் லூகன். கட்டுரைத் துறை யைப் பொறுத்தளவில், அவரது படைப்புக் கள் எளிமையானவை. தெளிவானவை. கூர்மையுடையவை. இப்படைப்புக்கள் எதிரி யின் கோட்டையில் விரிசலை உருவாக்கி அதைச் சூறாவளியாய்த் தாக்கியவை. சிறுகதைத் துறையில் தான் லூசுன் மகத்தான சாதனை படைத்துள்ளார்.
1919 லிருந்து 1925 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் லூசுன்னது தலைசிறந்த அநேக படைப்புக்கள் வெளிவந்தன. ஒரு பைத்தியக்காரனின் நாட்குறிப்புக்கள் ஒரு நிகழ்ச்சி', 'தேனிர்க் கோப்பையில் புயல், எனது பழைய இல்லம்', ‘ ஆ, கியூவின்
உண்மைக் கதை. ‘கிராமிய இசை நாட கம் ‘புத்தாண்டுக்குப் பலி. மதுக்கடை, * ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பம். ‘சவர்க்காரம், கடந்த காலத்துக் கவலை. “விவாகரத்து, மிஸ் அந்துறோம். ஆகிய உன்னத கதைகள் வெளிவந்தன.
ஒரு பைத்தியக் காரனின் நாட் குறிப்புக்கள்' என்ற லூசுன்னின் படைப்பு சீனாவின் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்ட யுத்தப் பிரகடனம். வரலாறு முழுவதும் மக்களை உண்ணுங் கள் என்று இக்கதையின் பிரதான பாத்திரம் கூறுவதைக் கேட்கின்றோம். இதன் அர்த் தம், நிலப்பிரபுத்துவத்தை சாகடியுங்கள் என்பதுதான். அதாவது வரலாறு முழுவ தும் மக்களை உண்ணுகின்றது நிலப்பிரபுத் துவம் தான். மனிதனைத் தின்கின்ற நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுங்கள் என்ப தைப் புலப்படுத்துகின்றது இக்கதை. ‘கடந்த காலத்துக்காகக் கவலை என்ற கதை கோழைத்தனமான, கபட உள்ளம் கொண்ட ஒரு பலவீனமான புத்திஜீவியைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. * மிஸ் அந்துறோம் மதுக்கடை ஆகிய கதை களை 'தன்னிலையில் நான் என்று கதை கூறும் பாணியை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கின்றார் லூசுன்,
'ஆ கியூவின் உண்மைக்கதை ஒரு உன்னத சிருஷ்டி. ஒரு வறிய, வீடற்ற பழைய சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள நபர் தான் கதாநாயகன். ஆ கியூ என்ற இந்த பிரதான பாத்திரத்தின் நிஜப் பெயரோ, குடும்பப் பெயரோ, பூர்வீகமோ ஒன்றுமே எவருக்கும் தெரியாது என்று கதையின் முகவுரையிலேயே லூசுன் குறிப்பிடுகின்றார். சீன நிலப் பிரபுத் துவத்தின் சுரண்டலினாலும், கொடுரமாக மக்கள் ஒடுக்கப்பட்டமையினாலும் சமுதா

Page 7
யத்தில் உருவான நபர்தான் ஆ கியூ இப்பாத்திரம் ஒரு தனி நபரைக் குறிப்ப தல்ல. சீன நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டலி னாலும், சூறையாடலினாலும் ஒடுக்கு முறையினாலும் உருவாக்கப்பட்ட லட்சக் கணக்கான சீன மக்களை ஒரு சிறு கும்ப லைத்தவிர, சீனாவின் விவசாயிகளையும் பரந்துபட்ட வெகு ஜனங்களையும் உருவகப்படுத்துகின்றது, ஆ கியூ என்ற பாத்திரம், நிலப்பிரபுத்துவத்தின் இந்த கொடுர சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான துயர வாழ்வை அனுபவித்து வருகின்ற ஆ கியூ என்ற கதாநாயகன் இறுதியில் புரட்சி செய்கின்றான். அவனைக் கொடுமைப்படுத்தியவர்கள் திகைத்து, செயலற்று, கையாலாகாதவர்களாகி நிற்கின்றனர். இக் கதை சீனாவின் நிலப்பிரபுத்துவத்தை ஆட்டம் காணச் செய்து, இறுதியில் தகர்த்தெறியும் மகத்தான சக்தியாக விளங்குகின்றது.
அடிமைகளின் உழைப்பை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருந்த ரோமாபுரியின் ஆளும் கூட்டத்தின தும் அவர்களது அடிவருடிகளும், அடிமை களை படுகேவலமாகக் கருதி, அவர்களை எவ்வளவு கொடுமையாக நடத்துகின்றனர் என்பதை ஸ்பாட் டாக்களில் என்ற உன்னத நாவல் சித்திரிக்கின்றது. இதை எழுதியவர் ஹவாட் ட்யாஸ்ட் என்ற அமெரிக்க நாவலா சிரியர். ரோமாபுரியின் அடிமைகளை அற்புதமாக, உள்ளம் உருகச் செய்யும் வகையில் ஆசிரியர் சித்திரிக்கின்றனர். அத்துடன் அவர் நின்று விடவில்லை. இந்த நவீனத்தின் கதாநாயகன் ஸ்பாட் டாக்கஸ் அங்குள்ள அடிமைகளை அணிதிரட்டி ரோமாபுரியின் ஆட்சியினரை ஒழித்துக்கட்ட தீவிரப் போராட்டத்தை வீராவேசமாய் நடத்தினான் என்று தர்மாவேசத்துடன்
வர்ணிக்கின்றார் ஆசிரியர். இப்போராட்டம் நசுக்கப்பட்டாலும், இது ரோம சாம்ராஜ்யத் தின் அத்திவாரத்தையே அதிரவைத்து ஆட்டங் காணச் செய்தது. அதேபோலத் தான் லூசுன்னின் ஆ கியூ புரட்சி செய் ததும் சீன நிலப்பிரப்புத்துவம் திகைத்து செயலற்று நிற்கின்றது. ஸ்பாட்டாகஸின் போர்க்குரல் ரோம சாம்ராஜ்யத்தின் வர லாறு முழுவதும் ஒலித்துக் கொண்டிருப்பது போல ஆ கியூவின் புரட்சிக்குரல், மனித வரலாற்றில் சுரண்டல் தொடரும்வரை ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
லூசுன்னுடைய கதைகளில் வருகின்ற பாத்திரங்களின் உருவாக்கத்தை நோக்கு கையில், அவர் படைத்த ஒவ்வொரு பாத்திரமும் உண்மையான ஒரு தனி மனித அமைப்பைப் போலல்லாது பல மனிதர்க ளின் பல்வேறுபட்ட குணாம்சங்களை ஒன்றி ணைத்த பாத்திரங்களாக உருவாக்கப்பட் டுள்ளன. உதாரணத்திற்கு 'ஆ கியூவின் உண்மைக்கதை யில் வருகின்ற கதாநாய கன் பல மனிதர்களின் பல்வேறுபட்ட குண வியல்புகளைக் கொண்ட ஒரு பாத்திரமாக அமைந்துள்ளது. இந்த பாத்திர ஒழுங்க மைப்பு முறை சீன மரபுக்கு இசைவான தாக இருக்கின்றது. அத்துடன் குறைந்தள வான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு சொற் செட்டுடன் மிக முனைப் பான உயிரோட்டமுள்ள பாத்திரப் படைப்பு லூசுன்னுடைய விசேஷ அம்சமாக இருக் கின்றது. அவரது வார்த்தைப் பிரயோகங் கள் மிகச் செட்டானவையாகவும், அதேவேளை மிகக் கூர்மையானவையா கவுமிருக்கின்றன. சுருங்கக் கூறி விளங்க வைக்கும் பண்புடையவர் அவர். லுசுன்னு டைய சகல படைப்புக்களும் இறுக்கமா னவையாகவும் கட்டுக்கோப்புடையனவாக வுமிருக்கின்றன. ஏனென்றால் சீன மரபு

முறைகளை தனது புரட்சிகர இலக்கியத் துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார் லுசுன்.
சோவியத் யூனியன். தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள்,
ஆகியவற்றின் தலைசிறந்த இலக்கியங்
களை பரந்தளவு புரிந்துணர்வுடன் படித்து புலமை பெற்றார் லூசுன், அவர் சீனாவின்
பழைய இலக்கியங்களை ஆழமாகக் கற்று .
புலமை பெற்றிருந்த அதேவேளை, ஐரோப்பிய நவீன இலக்கியங்களையும் கற்று புலமை பெற்றிருந்தார். மேலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சீன தேச பக்தப் போராட்டத்திலும், நிலப்பிரபுத்துவத் திற்கு எதிரான போராட்டத்திலும் அவர் நேரடியாகப் பங்குபற்றியமையால் விசால மான அனுபவஞானத்தையும் பெற்றிருந் தார். சீன பழைய இலக்கியத்திலும், ஐரோப்பிய நவீன இலக்கியத்திலும் பெற்றிருந்த ஆழமான புலமையையும், ஏகாதிபத்தியத்துக்கும் நிலப்பிரபுத்துவத் துக்கும் எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டு பெற்ற விசாலமான அனுபவ ஞானத்தையும் ஒன்றிணைத்து சீனாவின் சிறந்த மரபுகளுக்கு இசைவாக தமது இலக்கிய சிருஷ்டிகளைப் படைத்துள்ளார். இதனால்தான் உயிரோட்டமுள்ள, ഖഞ്ച வான படைப்புக்களை அவரால் சிருஷ்டிக்க முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக,
அவர் பெற்றிருந்த தெளிவான, ஆழமான
மார்க்ஸிஸ் நோக்கும், சீனாவின் அரை நிலப் பிரபுத்துவ அரைக்காலனித்துவ அமைப்பைப் பற்றிய கூர்மையான அறிவும் தான் கலை இலக்கியத்துறையில் அவர் புரிந்த அரிய சாதனைகளுக்கு அடித்தள மாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தன.
கலை இலக்கியத்துறையில் மகத்தான சாதனைகளைப் புரிந்த லூசுன் ஒரு உதிரி
எழுத்தாளரல்ல. அவர் ஸ்தாபன ரீதியாக கலை இலக்கிய கர்த்தாக்கள் ஒன்றிணை ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டார். 1930 இல் லூசுன் புரட்சிகர இயக்கத்தின் ஒரு ஐக்கிய முன்னணியை இடதுசாரி கலைஞர்களையும், எழுத்தாளர் களையும் ஒன்றிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி அதை வழிநடத்திச் சென்றார். இதனால் அவருக்கும் அவரைச் சார்ந்த கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கலை இலக்கியம் சம்பந்தமாக ஒரு தெளி வான உறுதியான நோக்கும் செயல்பாடும் இருந்தது. லூசுன் நிலப்பிரபுத்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக ஒரு விட்டுக் கொடுக்காத தீவிரமான சமரசமற்ற கொள் கைப் பிடிப்புள்ள ஒரு கலை இலக்கியவாதி யாக இருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் உறுப் பினராக இல்லாவிட்டாலும் கட்சி மேற்கொண்ட அனைத்து வெகுஜனப் போராட்டங்களி லும், புரட்சி நடவடிக்கைக ளிலும், கலை இலக்கிய இயக்கத்திலும் நெருக்கமாக இணைந்து இதய சுத்தியுடன் தீவிரமாக பங்கு கொண்டார். போராடினார்.
‘நெற்றிக்கனலை சுட்டும் ஆயிரம் விரல்களையம் மீறி முற்றிலும் பணிந்த எருதுபோல் குழந்தைகட்குச் சேவை செய்கின்றேன்' என்று தன் கவிதையில் லூசுன் கூறியதற்கமைய கலை இலக்கியத் துறையிலும் நிலப்பிரபுத்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான புரட்சிப் போராட்டத்துக்கு இதய சுத்தியுடன் பரி பூரணமாகத் தன்னை அர்ப்பணித்த உத்தமர். அவர் நவீன சீன கலை இலக் கியத்தின் முன்னோடி மாத்திரமல்ல, உலகி லுள்ள சகல அடித்தள மக்கள் இலக்கிய ஆதர்ஷபுருஷராகவும் விளங்குகின்றார்.
நீர்வை பொன்னையன்

Page 8
அழகியல்
பேராசிரியர் ஆர். சீனிவாசன்
ஆர் சீனிவாசன் அவர்கள் அரசு. கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இளமையிலே புரட்சிகர அமைப்புக்களோடு தொடர்பு கொண்டிருந்தார். மணிஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தவர். மணிஓசை மக்கள் கலாசார கழகத்தின் இதழ். அரசியல், கலாசாரம், இலக்கியம் ஆகிய பரப்புகளில் பெரும் செலுத்தியுள்ளார். 1994 டிசம்பர் 9 ஆம் திகதி தோழர் சீனிவாசன் தமது 43 வது வயதில் காலமானார்.
பங்கு
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கிப் பார்க்கும் அழகுணர்ச்சி கவிஞர்களுக்கு மட்டும் உரியது அல்ல. நாம் அனைவருமே அழகுணர்ச்சி உடையவர்கள் தான். ஒரு பூ மலர்வதிலும், ஒரு குழந்தையின் மழலைச் சிரிப்பிலும் உள்ள அழகைக் கண்டு மயங்காதவர்கள் யார்? ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும் மிளிருகின்ற அழகுக்கு மனதைப் பறிகொடுக்கிற அனுபவமும் உணர்வும் நம் அனைவருக்குமே உண்டு. நாம் பயன்படுத்துகிற பொருட்கள் அனைத்தும் தேர்ந்தெடுப்பதில் நம்முடைய அழகுணர்ச்சியும் ஒரு அளவுகோலாக உள்ளது. நம்முடைய அழகுணர்ச்சியைப் பூர்த்தி செய்யாத பொருட்களையும் செயல் களையம் அழகற்றது என நிராகரித்து விடுகிறோம்.
நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அழகானது, அழகற்றது எனத் தரம் பிரிக்கும் ரசனை உணர்வையே அழகு ணர்ச்சி என்கிறோம். இந்த அழகியல் உணர்வு மனித சமுதாயம் முழுவதும் கூட்டாகத் தன்னுடைய காலங்காலமான உழைப்பிலிருந்து பெற்றதாகும். சமுதாய
வளர்ச்சிக்கு ஏற்ப, ஒவ்வொரு கால கட்டத்திற்கும் இந்த ரசனை வேறுபடுகிறது. எல்லா சமயங்களிலும், எப்போதுமே இந்த ரசனை ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஆதிகால மனிதனுக்குச் சமுத்திரம் அச்ச மூட்டுவதாக தோற்றம் அளித்திருக்கும். ஆனால், அந்தச் சமுத்திரம் இன்று மனிதனின் அழகியல் ரசனைக்குரியதாக உள்ளது.
காலத்திற்குக் காலம் அழகுணர்ச்சி வேறுபடுவதைப் போலவே மனிதனுக்கு மனிதன் அழகு பற்றிய ரசனை உணர்வு வேறுபடுகிறது. கவிஞன் பாரதிக்கு அழகாகத் தோற்றமளிக்கும் புல்லும், பூவும் வேறொருவருக்கு அழகானதாகத் தோன்றுவதில்லை. ܫ
உண்மையில் அழகு என்பது என்ன? நாம் காண்கின்ற அனுபவிக்கின்ற, ஒவ்வொன்றையும் எந்த அடிப்படையில் அழகானது என்றும், அழகற்றது என்றும் தரம் பிரிக்கிறோம்?
இந்தக் கேள்விக்குச் சாதாரணமாகச் சொல்லப்படுகின்ற பதில் மிக எளிதாகும். அழகு என்பது காணப்படுகின்ற பொருளில்
4. "
 

இல்லை: காண்பவர் கண்களில் உள்ளது என்பது தான் அந்த பதில். ஆனால் அழகு என்பது உண்மையில் அவரவர் மனதைப் பொறுத்தது தானா?
இல்லை. எது அழகு என்பது தனிப்பட் மனிதன் மனதைப் பொறுத்து அமைவதி ல்லை. அது அவன் வாழ்கின்ற சமூகத்தில் நிலவும் உற்பத்தி, அதற்கான உறவுகள், அதன் விளைவாக எழுந்த கருத்துக்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.
மனிதனின் அழகியல் ரசனைக்கு உரியதாக உள்ள பொருட்கள் மனிதர்களு டைய கூட்டுழைப்பினால் தோன்றியவை, இயற்கையும் கூட அவர்களுடைய கூட்டு ழைப்பினாலே அழகு பற்றிய கருத்தும் அப்போதுள்ள சமூக உறவினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
* அழகான ஒரு பெண்’ என்று சொன்னால் அதையொட்டி எழுகின்ற சித்திரத்தில் அந்தப் பெண் சிவப்பாக, மென்மையாக இருப்பாள் - இப்படித் தான் ஆளும் வர்க்க கலை இலக்கியங்கள் வர்ணித்துள்ளன. காரணம், காலம் கால மாக ஆதிக்கத்தில் இருப்பவர்களின் நிறம் சிவப்பாக இருந்ததால், சமூகத்தில் சிவப்பு தான் அழகானதாக அவர்களால் அங்கீகரிக்கப்படுகிறது.
சாதாரண உழைக்கும் மக்களுக்கு அழகு என்பது சிவப்பு நிறமாக இருக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை அழகு என்பது உழைப்பதற்கான திடகாத் திரம்தான். வெய்யிலிலும் மழையிலும் சலிக்காமல் உழைக்கும் பணி பே அழகானது.
ஒடுக்கப்படுகின்ற நீக்ரோ மக்கள் கருப்பு நிறத்தை அழகு என்று போற்றுகி றார்கள். கருப்பு நிறமே அங்கு மதிக்கப்படு வதால், அவர்களது சமூகத்தில் வெள்ளை நிறம் பேய் பிசாசுகளின் நிறத்தைக்
5
குறிப்பதாக உள்ளது.
ஒரு சமூக உணர்வு பெற்ற தொழிலா ளிக்கு ‘அழகான பெண் என்பது அந்தப் பெண் உழைப்பதற்கான திடகாத்திரத்துடன் சமூக உணர்வு பெற்றவளாக இருப்பதும் அழகின் ஒரு அங்கமாகி விடுகிறது.
மனிதனுக்கு மனிதன் அழகியல் ரசனையில் உள்ள வித்தியாசத்திற்குக் காரணம் அவர்களுடைய மனம் அல்ல. அவர்கள் எந்தச் சமுதாயத்தில் வாழ்கிறார்கள். எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது தான்.
இதைப் போலவே, ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகு பற்றிய ரசனை வேறுபடுகிறது. கைவினைக் கலைஞர்கள் திறமைக்கு முக்கியத்துவம் தரப்பட்ட சமூகத்தில், வீடுகள் கதவுகளையும், சித்திரங்கள் தீட்டப்பட்ட மாடங்களையும் கொண்டு கட்டப்பட்டன. அப்போது, அத்தகைய வீடுகள் தான் அழகானவை களாகக் கருதப்பட்டன. ஆனால், முதலாளித்துவப் பெருவீத உற்பத்தியில் கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு இடமில்லை, இன்றைய உற்பத்தி முறைக்கு ஏற்றவிதமாக, "ஜியோமிதி டிசைன்களில் வட்டம், அரைவட்டம், சதுரம், செவ்வகம் என வீடுகள் அழகுபடுத்தப் படுகின்றன. இப்படிப்பட்ட அழகுணர்ச்சியை மக்களிடையே ஊட்டுவதற்காகவே, முதலாளித்துவ விளம்பர சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.
அழகு என்பது காலத்திற்கு ஏற்ப மாறக், கூடியது. ஒவ்வொரு வர்க்க சமுக அமைப்பிற்கும் ஏற்ப வேறுபடக் கூடியது. ஆனாலும், அந்தச் சமூகத்தில் எந்த வர்க்கம் ஆதிக்கத்தில் உள்ளதோ, அதன் கருத்துக்களே சமூகத்தின் கருத்துக்க ளோடு மாற்றப்படுகின்றன. அழகு பற்றி ஆதிக்க வர்க்கத்தினர் கொண்டிருக்கும் கருத்துக்களே உழைக்கும் மக்களிடமும்

Page 9
நிலைநாட்டப்படுகின்றன.
ஒரு அலுவலகத்தில் கறுப்பாகவும், தேய்க்காத சட்டையும் அணிந்து ஒருவர் இருப்பார். அவர் வேலையில் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அவரை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். அதே அலுவலகத்தில் சிவப்பாக, தேய்த்த சட்டையும், பாண்ட்டும் அணிந்து எடுப்பான தோற்றத்துடன் இருப்பவர்தான் அவர் வேலையில் எவ்வளவு திறமையற்றவராக இருந்தாலும் - எல்லோருடைய கவனத்திற் கும் உரியவராக இருப்பார். அதேபோல், அரசு அலுவலகங்களுக்கு நன்றாக ஆடையுடுத்தி வருபவர் மதிப்புடனும், சாதாரணமாக ஆடையுடுத்தியுள்ள உழைக்கும் மக்கள் அலட்சியமாகவும் நடத்தப்படுவதை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். ஒருவர் உடையுடுத்தும் அழகே அவருடைய வர்க்கத்தை வெளிப் படுத்துவதாக அமைகிறது. அதற்கேற்பவே, சமூகத்திலும் அவர் மதிப்புப் பெறுகிறார்.
காண்பவர் கண்களில் இருப்பதாகச்
சொல்லப்படும் அழகு உண்மையில்
வர்க்கக் கண்ணோட்டத்தைக் குறிக்கிறது. அதனால் தான் தோற்றமும், அந்தத் தோற்றம் உணர்த்தும் வர் க் கப் பண்புகளுமே இந்த சமூக அமைப்பில் அழகானதாகக் கருதப்படுகின்றன.
துணி வகைகளில் மிக நேர்த்தியான தாகவும், அழகானதாகவும் பட்டு கருதப் படுகிறது. ஆனால் அந்தப் பட்டு பல பட்டுப் பூச்சிகளைக் கொன்று நெய்யப்பட்ட தாகும். அதைப் போலவே கோடிக்கணக் காண மக்களின் உழைப்பைச் சுரண்டி ஆதிக்க வர்க்கத்தினர் அனுபவிக்கும் ஆடம்பரமும், பகட்டுமே இன்று அழகு எனப் போற்றப்படுகிறது.
மக்களுடைய அழகியல் உணர்வை, ரசனையை முதலாளித்துவ வர்க்கம்
16
எப்போதும் கீழ்மட்டத்திலேயே வைத்திருக் கிறது. மக்களுடைய உழைப்பினால் விளைந்து சிறந்தவற்றையெல்லாம் தனக்காகச் சுவீகரித்துக் கொள்கிறது. ஆனால் மிகவும் மலிவான கீழ்த்தரமான வற்றை மக்களிைேடயே திணிக்கிறது. பொருட்களின் உள்ளார்ந்த மதிப்பிற்காக அவற்றை விரும்பச் செய்வதற்குப் பதிலாகத் தோற்றத்தைக் கண்டு மயங்கு வதற்கு பயிற்றுவிக்கிறது. இதற்கு நிறைய உதாரணங்களைக் கூறலாம். சாதாரண மக்களுக்கு விற்பனை செய்யப்படும் துணிகள் பளபளவென்று இருக்கும். ஆனால் அவை செய் நேர்த்தியற்றவை யாக, சீக்கிரம் நைந்து போகக் கூடியதாக இருக்கும். இசையை எடுத்துக் கொள்ள லாம். மேட்டுக் குடியினருக்காகத் தேர்ந்த கலை நுணுக்கத்தைக் கற்றுத் தருகிற இசை வடிக்கப்படுகிறது. ஆனால் மக்க ளுடைய ரசனைக்குத் தரப்படும் இசை என்பது திரைப்படங்களில் உள்ள மூன்றாம் தர டப்பாங்குத்து இசைதான். கலை நுணுக்கம் மிக்க ஒவியங்களை ரசிப்பதற்கு மக்களைப் பயிற்றுவிக்க முடியும். ஆனால், இன்று பெரும்பான்மை மக்கள் படிக்கும் பத்திரிகைகளில் படம் வரைகின்ற ஜெயராஜ் போன்ற ஒவியர்கள் கீழ்த்தர மான உணர்வுகளைத் தூண்டுகின்ற ஒவியங்களையே மீண்டும் மீண்டும் மக்களிடையே ரசனைக்குப் படைக்கின்ற னர். இப்படி ஒவ்வொன்றிலும் திட்டமிட்டு மக்களுடைய ரசனையை மலிவுபடுத்த, அழகற்றவைகளே தொடுக்கப்படுவதை நாம் காண முடியும். மக்களுடைய அழகி யல் உணர்வைக் கீழ்மட்டத்திலேயே வைத் திருப்பதுதான் அவர்களுடைய நோக்கம்:
ஆளும் வர்க்கம் அழகு என்று திணிக் கின்ற ஆடம்பரத்தையும், பகட்டையும் நாம் போற்ற முடியாது. எளிமையும் மனித
நேயமுமே மக்களுக்கான அழகு.
O

இலக்கியத்தில் புதுப்புனல் -டி-நோக்கு: வ. இராசையா
நூல: முள்ளில் படுக்கையிட்டு.
படைப்பு:
யாரோ ஒரு கிராமியக் கவிஞர்
பதிப்பு: எஸ். நஜிமுதின்
இது நாம் படிக்கின்ற இன்றைய படைப்பிலக்கியங்களிலிருந்து சற்றே வித்தியாசமான ஒரு நூல். மூச்சுத்திணற வைக்கும் இக்கால வாழ்க்கைச் சூழலி லிருந்து வாசகனை விடுவித்து, அமைதி யான ஒரு புதிய தளத்துக்கு அவனை அழைத்துச் செல்லத்தக்க ஓர் இலக்கியம். ஏறக்குறைய நான்கு தலைமுறைகளுக்கு முன் பிறந்து, மக்களது செல்லப் பிள்ளையாக அவர்கள் நவிலே தவழ்ந்து வந்த இந்த இலக்கியம் இப்பொழுது புத்தக வடிவம் பெற்று, நம்மிடையே வந்திருக்கிறது. ஆம். இது நாட்டார் பாடல் வடிவில் அமைந்த ஒரு காவியம். மட்டக்களப்புப் பிரதேசத்து வாய்மொழி இலக்கியத்தி லிருந்து கிடைத்த ஓர் அறுவடை,
ஊர்
மட்டக் களப்பு முஸ் லீம் களது வாழ்வியலை மையமாகக் கொண்டது இந்த நூலின் கதை. அஹமது என்னும் இளைஞன் தனது மைத்துணி ஆசியத்துவை அடைய முயல்கிறான். அவள் அவனை உதாசீனம் செய்கிறாள். அவன் மாயக்
கிழவி ஒருத்தியின் உதவியினால் அவளைக் கைவசப்படுத்தி, வன்முறையில்
அவளிடம் இளமைநலம் துய்க்கிறான்.
அவள் தான் கன்னிமையை இழந்தமைக்கா
கலங்குகிறாள். அஹமதுவுக்கும்
வேறொரு பெண்ணுக்கும் கல்யானம்
நடைபெறுகிறது. மாப்பிள்ளை ஊர்வலத்தின்
போது அஹமது ஏறிவந்த யானை ஆசியத் துவின் வீட்டு வாசலில் வந்ததும், அப்பால் நகராது படுத்துக் கொள்கிறது. ஆசியத்து
வந்து கட்டளையிட்ட பின்னே எழுந்து
செல்கிறது. ஈற்றில் கல்யாண வீட்டில்
ஏற்பட்ட தீ விபத்தில் மணப்பெண்ணும்
மாப்பிள்ளையும் மாண்டு போகிறார்கள்,
கக்
வளமார்ந்த ஒரு பெருநிலப்பரப்பில் மனநிறைவுடன் வாழ்ந்த ஒரு சமுதாயத்தை இந்தக் கதையினூடாக நாம் காண முடிகிறது. இந்தச் சமுதாயத்தின் ஓர் அங்க மாகிய இந்த இஸ்லாமியக் குடும்பத்திலே பாசவுணர்வு கமழும் ஒர் அமைதி நிலவு கிறது. இறைபக்தி மேலோங்கி நிற்கிறது. சொத்துரிமை, சம்பந்தமாக உறவினரிடையே

Page 10
உண்டர்ண் ତv5 முரண்பாடு விரோதமாக மாறியதால் இந்த இதமான சூழ்நிலை சிதைவுறுவதை இக்கதை உணர்த்திச் செல்கிறது. யதார்த்தமான ஓர் சித்தரிப்பு இது.
மாப் பிள்ளை ஏறிவந்த யானை ஆசியத்துவின் வீட்டு வாசலில் வந்ததும் படுத்து விடுகிறது என்றும், பரிகாரிமர் வந்து மந்திர தந்திரங்கள் செய்தும் எழும்ப மறுத்த அந்த யானை. ஆசியத்து வந்து 'ஏன் படுத்தாய் யானை? நீ எழும்பி நட என்று சொல்ல எழுந்து நடந்தது என்றும் ஓர் அதிசயம் இந்தக்கதையில் கூறப்படுகின் றது. சினங்கொண்ட கண்ணகி மதுரையை எரியூட்டியது போன்ற ஓர் அதீத நிகழ்வு இது. இந்தக் காவியம் பாடிய கவிஞன் ஆசியத்தினது நல்ல மனத்தின் வலிமை யைக் காட்ட இந்த உத்தியைக் கையாண் டிருக்கிறான் போலும். நாட்டார் கதையிலே இது சிலிர்ப்பூட்டும் ஒரு நிகழ்வு தான். இந்த அதீதமான சித்தரிப்பைத் தவிர இக்காவியத்தின் கதை முழுவதும் கிராமிய மக்களது வாழ்வியலோடு இழைந்ததாக - அவர்களைத் தன் வசப் படுத்துவதாக இருக்கிறது.
இது பாடலில் அமைந்த காவியம். பாடல்களில் எளிமையான இசையோடு பாடத்தக்க சந்தம். அதிலே எதுகையும் மோனையும் சரளமாக வந்து சேர்கின்றன. மட்டக்களப்புப் பேச்சு நடைக்கு உரிய நளினம் ஆங்காங்கே பளிச்சிடுகிறது.
"விடிய விடியளவும் விடிஞ்சு
பொழுதேறு மட்டும் கண்டு மகளார் - நீ கவிபடிச்ச தாரோடகா"
யாப்புக்குள்ளே சிக்குப்பட்ட கவிதைகள் அல்ல இவை. அன்றைய கிராமியக் கவிஞன் புனைந்த புதுக்கவிதைகள்,
இந்தக் காவியத்தை ஒரு கவிதை
நாடகம் என்று சொன்னாலும் பொருந்தும் கதை பெரும்பாலும் உரையாடலாகவே நகர்கிறது. இந்த நாடகப் பாங்கின் செழுமை யின் முழு வீச்சையும் கதையின் முதல் அத்தியாயத்தில் நாம் காணலாம்.
கலிங்கத்துப் பரணியில் வருவது போன்ற கடை திறப்புக் காட்சி ஒன்று இங்கு வருகி றது. அஹமது தனது மைத்துணி ஆசியத் துவை அடைய வேண்டும் என்ற நோக்குடன் நள்ளிரவில் அவளது வீட்டுக்கு வந்து, அவள் படுத்துத் தாங்கும் அறைக் கதவைத் தட்டி அழைப்பதும், அவள் திறக்க மறுத்து வாதாடுவதும், அருமையான ஒரு சித்தரிப்பு. அங்கே கெஞ்சுதலும் கொஞ்சுதலும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், சீற்றமும் வஞ்சமும் அலைகளாக வந்து புரள்கின்றன.
"பொடுபொடுத்த மழைத்துாறல்
பூங்கார மானநிலா
கடும்இருட்டு மாலைவெள்ளி
கதவுதிற மாலைவெள்ளி"
என்னும் அவனது வேண்டுகோள்,
"உன்ட வாசலுக்குவந்து
வெகுநேரம் ஆகுதிப்போ -
காலும் கடுக்குது கா
கண்மணியே நான் போயிரட்டோ"
676.
என்னும் அவனது கெஞ்சுதல்,
"என்ர அசவிலோர் பாயெடுத்து இறப்பாலே நான் தாறன் அழகான் மச்சான் - என்ட
திண்ணையிலே நீ படுகா" என்னும் அவளது நையாண்டி. இப்படி வளர்கிறது அந்த நாடகம்.
அவள் கதவு திறக்க மறுத்துவிட அவன் சீற்றத்தோடு திரும்புகையில்
"வருக்கப் பலாப் பழத்தை
மடியில் வளத்தாட்டிச்

சுள கழத்தித் தின்னவந்தார்
வாய்க்கவில்லை போறாராக்கும்" என்று அவள் குத்தல் சொல்கிறாள். இது போன்ற கவிநயம் செட்டும் இடங்கள் பலட்டல இந்த நூலிலே. இந்தக் குறுங் காவியத்துக்கதை, கவிதைகளிலே ஆட்டுக் குட்டி போலத் துள்ளித்துள்ளிச் செல்கிறது. வாய்விட்டுப் படித்துச் செவிவழியாகவும் நுகரவேண்டிய நாட்டார் பாடல் இந்தக் குறுங்காவியம்.
முள்ளில் படுக்கையிட்டு. என்னும் இந்தக் குறுங்காவியம் நமது மூதாதையர் நமக்கு வைத்துச் சென்ற ஓர் முதுசொம், இது அநாதையாகிக் கால வெள்ளத்துள் அடியுண்டு போகாமல் காப்பாற்றியிருக்கிறார், இதன் பதிப்பாசிரியரான டாக்டர் எஸ். நஜிமுதீன், ஏடறியா இலக்கியமாகிய இந் நூலைப் புத்தகமாக்கி இவர் செய்த பணி அரியது. பெரியது.
இந்த நூலானது முழுவதும் கவிதை வடிவில் அமைந்தது. பதிப்பாசிரியர். இக் கவிதைகளுக்கு இடையே ஒரு தொடர்பு ரையை எழுதிச் சேர்த்திருக்கிறார். கதைத் தொடர்பைக் காட்டுவதாகவும், சில நடை முறைகளுக்கு விளக்கம் தருவதாகவும். கவிநயத்தைத் தொட்டுக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது, இந்தத் தொடர்புரை. இந்தக் காவியத்தின் தனித்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு இது துணை செய்கிறது.
இந்தப் பதிப்பிலே சேர்க்கப்பட்டுள்ள அணிந்துரை, முகவுரை முதலியன நூலின் பண்புகளையும் அருமை பெருமைகளையும் பரவலாகத் தொட்டுக் காட்டுகின்றன. இவற் றுக்குப் புறம்பாக, இந்தக் குறுங்காவியம் பற்றி ஆய்வு நிலைப்பட்ட ஒரு தனிக் கட்டுரை இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய
ஒரு தளம் வாசகனது இலக்கிய நுகர்வு
க்கும் தேடலுக்கும் துணை நிற்கும் என்பது உறுதி.
கவிதைகளை மூலப்பிரதியில் உள்ள
வாறே பதிவு செய்திருக்கிறார். நஜிமுதீன்,
ஓசை குன்றியே, மிகைத்தோ கட்டுடைந்து போன கவிதைகளும் சீர்மை செய்யப்படாது அப்படியே பிரசுரமாகியிருக்கின்றன. பதிப் த் துறையில் பேணப்பட வேண்டிய நற்பண்பு இது.
இந்த நாட்டார் இலக்கியத்துக்குரிய செந்தப் பெயர். தந்தை சூட்டிய நாமம் என்ன? முள்ளில் படுக்கையிட்டு என்பதா, கிழவியின் பாட்டு என்பதா? வாசகனுக்கு எழக்கூடிய இந்த ஐயத்தை பதிப்பாசிரியர் நீக்கியிருத்தல் வேண்டும்.
மேலும், கதையுருவில் அமைந்துள்ள இந்த இலக்கியத்தை காவியம் எனவும் நாவல் எனவும் நஜிமுதீன் குறிப்பிடுகின்றார். கவிஞர் ஷெரிப்தீன் கூறுவது போல, இதனைக் குறுங்காவியம் எனக் கொள்வதே பொருத்தமாகும்.
நூற்பதிப்பிலே கவிதைகளுக்கு உபயோ கிக்கப்பட்டிருக்கும் அலங்கார எழுத்து வாசிப்பு ஓட்டத்துக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது.
நூல் முகப்பில் உள்ள கிராமக் காட்சி நன்று. அது நூலின் பொருள் அடக்கத்துக்கு அணி செய்கிறது.
காணாமல் போகவிருந்த ஒரு குறுங் காவியம். தந்தையின் பெயரையே மறந்து விட்ட ஒரு பிள்ளை. இப்பொழுது கையளவு புத்தகமொன்றில் குடியமர்த்தப்பட்டுவிட்டது. எங்கோ ஒரு கிராமத்தில் மறைந்துகிடந்த இந்த இலக்கியத்தை தேடிஎடுத்து நூலாகப் பதிப்பித்த டாக்டர் எஸ் நஜிமுதீன் அவர் களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Page 11
விபவி - செயற்பாடுகள்
(ஏப்பிரல், மே, ஜூன் 2001)
நூல் திறனாய்வு:
விபவி 2001 ஏப்பிரல் 22 ஆந் திகதி நூல் திறனாய்வுஒன்றை நிகழ்த்தியது. லண்டனில் வாழும் திருமதி ராஜேஸ்வரி பாலசுட்பிரமணியம் படைத்த அவனும் சில வருடங்களும் என்னும் நாவல் அன்றைய நிகழ்வில் ஆய்வு செய்யப்பட்டது. திரு. வ. இராசையாவினது நெறிப்படுத்த லில் இந்த அரங்கு நடைபெற்றது. இதில் ஐந்து ஆய்வாளர்கள் திறனாய்வு அடிப்படையில் நாவலை ஐந்து அங்கங்களாக வகுத்து ஆய்வுக்குட் படுத்தினர். ஜனாப் முகம்மது சமீம் நாவலின் உருவும் உள்ளடக்கமும் பற்றியும், திரு. கே.எஸ். சிவகுமாரன் பாத்திர வார்ப்புப் பற்றியும், திருமதி சுதர்ஷினி ஜீவாஹரன் நாவலின் பெண்ணிலை நோக்கு பற்றியும் திரு. கே. விஜயன் நாவலின் நடையும் உத்தியும் பற்றியும். திரு. சோ. தேவராஜா நாவலின் சமூக நோக்கு பற்றியும் ஆய்வு செய்தனர்.
நாவலின் ஒவ்வோர் இலக்கிய அங்கத்தையும் தனித்தனியாக ஆய்கின்ற பாங்கில் அமைந்த இந்தத் திறனாய்வு நோக்குகள் கருத்தாழமும் விரிவும் கொண்டவையாக அமைந்ததோடு நூலின் முழுமை கலந்துரையாடலில் நன்கு பிரதிபலித்தது. சபையோர் முன்வைத்த பல்லினமான கருத்துக்கள் நிகழ்வுக்கு நிறைவு தந்தன. ()
நூல் திறனாய்வு:
திரு. மு. பொன்னம்பலம் எழுதிய 'திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் என்னும் திறனாய்வு நூல் விபவி இலக்கிய அரங்கில் திறனாய்வு செய்யப்பட்டது. 2001 மே மாதம் டாக்டர் எம்.கே.முருகானந்தன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி நெறிப்படுத்தினார்.
20

திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் என்னும் இந்த நூல் மு.பொ. எழுதிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றை மூவர் ஆய்வு செய்து கட்டுரை படித்தனர். இவற்றுள் வட இலங்கைத் தமிழ்ச் சிறு கதை என்னும் கட்டுரை எம்.ரீ. தேவகெளரி அவர்களாலும், யாழ்ப்பாணப் பிரதேசக் கவிதை இலக்கியம்', '90 க்குப்பின் ஈழத்துத் தமிழ்க் கவிதை' என்னும் இரண்டு கட்டுரைகள் சி. சிவகுமார் அவர்களாலும், மீண்டும் ஒரு சத்திமுத்துப் புலவர், தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கு என்னும் கட்டுரைகள் இரண்டு எம். பெளஸர் அவர்களாலும் விமர்சிக்கப்பட்டன. ஒவ்வொரு விமர்சனத்தின் பின்னரும் அது பற்றிய கருத்தாடல் இடம்பெற்று ஈற்றில் நூல் பற்றிய பொதுவான கருத்துப் பரிமாற்றமாக அது நிறைவெய்தியது. O
ஆய்வரங்கு:
விபவியின் மற்றொரு ஆய்வரங்கு ஜூன் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்விலே கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆய்வு நோக்கில் புலம்பெயர் பெண் படைப்பாளிகள் என்னும் பொருளில் ஆய்வுக் கட்டுரை படித்தார். செல்வி அவர்கள், கடந்த மூன்று மாத காலம் ஐரோப்பாவிலும் கனடாவிலும் தங்கியிருந்து, ஆங்காங்கு உள்ள தமிழ் இலக்கியப் பெண் படைப்பாளிகளையும் பெண்ணியவாதிகளையும் சந்தித்து, அவர்களது இன்றைய சிந்தனைகளை அறிந்தும், ஆங்காங்கு வாழும் தமிழர்களது வாழ்வியல் சார்ந்த நிலைவரங்களை நோக்கியும் தாம் பெற்றுக்கொண்ட அறிவு அனுபவங்களை இந்த ஆய்வுரையில் வழங்கினார். அந்த நாடுகளில் உள்ள தமிழ்ப் பெண் எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட 26 சிறுகதைகள் அவரது ஆய்வுக்குத் தளமாக அமைந்திருந்தன.
இந்த அரங்கு திருமதி சுல்ட்பிகா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
விவாதப் பொருள் புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பெண்களது சிந்தனைக்கும் உணர்வுகளுக்கும் வாய்த்த ତଓ கட்டவிழ்ப்பாக அமைந்திருந்தது. அதனால் ஆய்வுரையைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் சபையோர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். அங்கே நுட்பமும் ஆழமும் கொண்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 9

Page 12
எதை எழுதுவது?
சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
மு.பொ.வின் 'திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் நூலுக்கான விபவியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வரங்கில் முன்வைத்த கருத்துக்களிலிருந்து.
மு. பொன்னம்பலம் அவர்களின் 'திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் என்ற இந்த நூல், ஐந்து சிறிய கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. அவர் கவிதைகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் மீது நான் எனது கருத்துக்களைச் சொல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.
மொத்தம் 29 பக்கங்களில் இரண்டு கட்டுரைகள் கவிதைகள் பற்றியவை. “யாழ்ப்பாணப் பிரதேச கவிதை இலக்கியம் '90 களுக்குப் பின் ஈழத்தமிழர் கவிதைகள் ஆகிய தலைப்புக்களில் மிகச் சுருக்கமான முறையில் நம் கவிதைகள் குறித்த தனது பார்வையை முன்வைக்கிறார் மு.பொ.
'இது வதைகளும் வாதைகளும் நிறைந்த பூமி. இங்குதான் உன்னத இலக் கியங்கள் தோன்ற முடியும். இங்கே கொம்பனுக்குக் கொம்பனான படைப்புச் செயல்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. நம்மிடம் இல்லாதது உலகில் வேறெங்கும் இல்லை’ என்கிற தன் முதுகுத் தட்டல்கள்.
நாமே வகுத்துக் கொண்ட எல்லை களுக்குள் அதி தீவிரமாக நின்று கொண்டு, வெளியே உள்ளவர்களைக் காணவும் - காட்டவும் செய்யாது. நாம் போடும் ஒற்றை வெளிச்சத்தையே
2
2
பாதையாகக் காட்டும் முயற்சிகள்.
நம்முடன் ஒத்துவராதவர்களைக் கணிப்பில் கண்டுகொள்ளமலே விட்டு விடுவதன் மூலம் பிறருக்கான வரலாற்றுப் புதைகுழிகளை நாசூக்காகத் தோண்டி விட்டபடி நகருதல். என்றெல்லாம் நம் பிரத்தியேக இலக்கியச் சூழலுக்குள் மூச்சுத் திணறி நிற்கும் நமக்கு -
வெளியிலும் நிற்கும் படைப்புக்களைக் கணிப்புக்குட்படுத்தியபடியே தன் படைப்புக் கோட்பாட்டை நிறுவிச் செல்லுதல். தானற்ற பிற வை மறுக்காத மறைக்காத போக்கு. என்பவையால் ஆசுவாசமளிக் கிறவராகத் தெரிகிறார் மு.பொ.
நம் இலக்கிய மனங்களின் இயங்கு முறை எப்படிப்பட்டதாக இருக்கிறது? இன்னும் விரித்துச் சொன்னால், நமது சமூக, மனம், தான் பங்காக இருக்கும் இன்றைய அவல நிலையின் குற்றத் தன்மையிலிருந்து எப்படித் தன்னை விடு வித்துக் கொள்கிறது? மனித வாழ்வைக் கேவலப்படுத்தும் மரணங்களுக் கெல்லாம். எத்தகைய சமாதானத்தைத் தனக்குள் நிகழ்த்துகிறது? நடப்பில் அக்கறையின்றி. இருப்பதன் மூலம் ஒருவன் குற்றமற்றவன் $166ird நிலையை அடைய முடியுமா?
நடந்த நடக்கும் நிகழ்ச்சிகளில்

எல்லாம் நாங்கள் எங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை மட்டுமே காண்கிறவர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு வரவு செலவுக் கணக்கையும்
மனச்சாட்சி போடும்
தன்னைப் பற்றிக் கழிவிரக்கம் கொள்ளவும் ,
ஒரு சந்தர்ப்பமாக அந்த மனச்சாட்சி பயன்படுத்திக் கொள்கிறது.
எங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களையே நினைத்து வருத்தப்பட்டு அதன் மூலம் நம்மை நாமே புகழ்பாடும் மனப்பான் மையை வளர்த்துக் கொண்டு விட்டிருக் கின்றோம்.
நம் கிணற்றுக்குள்ளிருக்கும் துன்பங்
களின் அளவை உலகம் வந்து எட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மேல் சிந்தனையை விரிக்காதவர்களாகி விட்டோம்.
எங்கள் கவிதை நூல் ஒன்றை மொழி பெயர்த்து நோபல் பரிசுக் கமிட்டிக்கு அனுப்பி வைக்கும் தன்னம்பிக்கையைப் பெறும் நோக்கில் - அதுகுறித்து நகர்கி றோமா? அல்லது அது அவசியமற்றது. எங்கள் துன்பங்களும், எங்கள் படைப்புக களுமே அதியுந்நதம் என்று அமைந்து விடுகிறோமா?
நாம் ஒரு மகத்தான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதைச் சொல்லி வருகின்ற இந்தக் காலகட்டத்தின்
புகைப்படச் சித்தரிப்பு மாபெரும் இலக்கியம்.
ஆகிவிடாது.
இலக்கியத்தின் கடமை பிரக்ஞை களுக்கு அப்பால் இருப்பதை வெல்வ தாகும். அனுபவத்தை உணர்வு பூர்வமான சிந்தனையாகக் கொண்டு வருவதாகும். இந்தக் காலகட்டத்தைக் கடப்பது எவ்வாறு என்று மக்களுக்குச் சொல்வதாகும்.
3
மகத்தான கவிதை தரிசனங்கள் மனித அனுபவத்தைச் செழுமைப்படுத்துகின்றன. வாழ்வது எவ்வாறு என்பதை அவை மனிதர்களுக்குப் போதிக்கின்றான.
பிரபஞ்சம் தழுவிய முறையில் - உலக அளவில் நம் சூழலின் அவலத்தைப் பொருத்திப் பார்க்கிறோமா? எங்கள் குறை பாட்டின் வேரைக் கண்டுபிடிக்கிறோமா?
வேண்டுமென்றே சிலவற்றை மறைத் தலும் - தூக்கிப் பிடித்தலும் எங்களைப் பற்றி நாங்களே உருவாக்கிக் கொள்ளும் மிகையான அபிப்பிராயங்களையும், பிறர் - தாட்சண்யத்தில் உருவாக்கும் மிகை யான அபிப்பிராயங்களையும் மறுபரிசீ லனை செய்வதற்கே மனமொண்ணாத தற்பெருமைக்குள்ளும் புதைந்தபடி.
பகீரதன் முதல் ஜெயமோகன் வரை சொல்லும் அபிப்பிராயங்களுக்கு நமது எதிர்வினை எப்படி இருக்கிறது? ஊர்ச் சண்டைகளை உருவாக்குவதற்குப் பின்னுள்ள உணர்ச்சி போல, வெறுங் குழு உணர்ச்சி மறுப்புகளை வீச முற்படுகி றோமே அல்லாமல், அவற்றைச் சுயவிமர்ச னத்தோடும் உலகப் பரப்போடும் ஒப்பிட்டு விவாதித்திருக்கிறோமா? விவாதிக்கும் அளவுக்கு விரிந்த பார்வை கொண்டவர்கள் கூட சங்கடங்களின் போது நான் மெளனம்' என்கிற கிருஷ்ண பரமாத்மா நிலையைக் கடைப்பிடித்து விடுகிறார்கள்.
அவற்றிலுள்ள கணிசமான உண்மை களை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள் வது நமது இலக்கிய ஆரோக்கியத்துக்கு அவசியம் என்கிற மு.பொ. நமக்கு ஆசுவாசமளிக்கிறார். தொடர்ந்து எழுத ஊக்குவிப்பவையாகத்தான் நமது புகழ்ச்சி யுரைகள் இருக்க வேண்டும். இதுவே

Page 13
நிறைவு என்று இழுத்து மூடிக்கட்டிவிட்டு அதற்குள் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக நம் முதுகுத் தட்டல்கள் போய் விடக் கூடாது.
புகழ்ச்சியான பாராட்டுரைகள் சிலசமயம் எதிர்மறையான விளைவுகளைத் தோற்று விப்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்
‘தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்று ந. முத்துசாமி அறியப்படும் காலம் வரும். இதை எனக்குப் படிக்கக் கிடைக்கும் எல்லா மொழி எழுத்துக்களையும்வைத்தே சொல்கிறேன். என்று அவரது ‘நீர்மை தொகுப்பைப் பார்த்துவிட்டு அசோகமித்தி ரன் சொன்னார். அதன்பின் முத்துசாமி கதை எழுதுவதையே நிறுத்திவிட்டார். பாராட்டுக்கு ஈடுகட்டும்படியாக எழுதவேண் டுமே என்பதில் சுமைவிழுந்து விடுகிறது.
மு.பொ. அவர்களின் திறனாய்வுப் பார்வையில் நான் அழுத்திச் சுட்டிக்காட்ட விரும்புகிற அம்சமாக இதைச் சொல்வேன். நம் பலங்களுக்கு மனந்திறந்து பாராட்டும் சமயத்திலேயே நம் போதாமைகளையும் ஞாபகப்படுத்திச் செல்வது. மூத்த எழுத்தா ளர்களுக்கேயுரிய பாந்தத்தோடு, இளைய தலைமுறையினரிடத்து உள்ள சின்னச் சின்ன நல்ல விஷயங்களையும் மனமு வந்து பாராட்டி உற்சாகப்படுத்திவிட்டு, உண்மையில் எங்களிடம் உள்ள பலவீனத் தைக் கோடி காட்டி விடுகிறார். எனது நான் எனக்கு மிகவும் சிறிதாக இருக்கிறது என்பதை உணர்கிறேன்' என்று கவிஞன் மயகோவ்ஸ்கி கூறியதை இன்றைய கவிதைப் போக்கிற்கு பொருத்திப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். அதாவது இன்று நாம் ‘கவிதை' என்று ஈடுபடும் அல்லது புகுந்துள்ள துறையானது, நம்முன்னே விரிந்து கொண்டிருக்கும்
24
உலகக் கவிதைப் பரப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகச் சிறிது என்பதை நாம் உணர வேண்டும். இந்த உட்ணர்வும் அதன் வழிவரும் தெளிவும் நம் எதிர்காலக் கவிதைச் சிருஷ்டிக்கு நல்ல பசளையாக இருக்கும். என்கிறார் மு.பொ.
இன்றைய நம் இலக்கிய நிலைமை என்ன? என் நாட்டுச் சூழலை. பிரச்சினை யைப் புரிந்து கொள்ள நம் நாட்டில் எழுதுகிறவர்களிடமிருந்து நான் எதுவும் அறிந்து கொள்ள முடியாமலிருக்கிறது. எங்களைப் போலவே வேறெங்கோ அல்லல்படுகிற அல்லது இதைத் தன் வயப்படுத்தியிருக்கிற இன்னொரு நாட்டுக் கவிஞனிடமிருந்தே அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இதைச் சொல்வதில் என்ன வெட்கம்? அந்த அளவுக்கு எங்கள் கவிஞர்களோ, படித்து விஷயங்களை அலசும் புத்திஜீவி களோ எமது பிரச்சினையின் ஆழத்தை, அது நம்மை இழுத்துப் போகும் திசையை, முரண்களை வெளிப்படுத்தியோ துணிச்ச லுடனோ பேசுகிறவர்களாக இல்லை. தனிமையில் கூட மனம் விட்டு விவாதிப் பவர்களாக இல்லை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமோ என்று 'கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடுபவர் களாகவே உள்ளார்கள். (ஒருவர் தேடும் போது இவர் ஒளிந்திருப்பார், பிறகு இவர் தேட அவர் ஒளித்து விடுவார்)
வேறு தேசத்தவர்களின் சில கவிதை களை, நாவல்களைப் படிக்கும் போது, அ. நம் அவலமும் இப்படித்தானே என்று உணருவதைப் போல - இங்கே எழுதிக் கொண்டிருப்பவர்களின் எழுத்தில் நம்மால் வாழ முடிவதில்லை என்பது என் அனுபவம்.

வெறும் ஆவேசமும், ஒப்பாரியும். போர்ட் பரணியுமாக நம்மை மன்னராட்சிக் காலத்திய உணர்ச்சியாவேசம் மிக்க ஊழியர்களாக்கிவிடக் கங்கணங் கட்டி
என்று
"ר: "ר) (י") ; ; ; ; ; i iti i C Go
யிருக்கிறார்களோ இருக்கிறது.
ஆழமான உள் விசாரம் பொருந்திய வையாக மு.பொ. குறிப்பிடும் கவிதை வரிகளிலும் சம சமூகம் கொண்டிருக்கும் உள்ளார்ந்த முரண்பாடுகளின் - அந்தச் சிக்கல் அல்லது மெய்மை திசை திரும்பிப் பாய்ந்து விடுகிறது.
'உயிர்களை இழந்தும் ஆழப்பாயும்
வேர்களின் வீர்யம்
மண்தான் அறியும் என்ற வார்த்தைகள் சொல்வது என்ன? உயிர் இழப்புக்களினால் வீர்யம் பெறும் மண்ணின் இரசாயனத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுடன், இந்த அழிவுகளினால் நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்கிற சுயவிமர்சனச் சிந்தனையைச் சரியாகச் செய்கிறார்களா கவிஞர்கள் சந்தேகம் எழுகிறது.
என்ற
சாதாரண மக்கள் போல உணர்ச்சி வசப்பட்டுச் சிந்திக்கிறவர்களாகவும், புதையுண்ட உடல்களின் மேலே பொற் காலத்தை நிறுவலாம் என்கிற கனவை விற்பனை செய்யும் வியாபாரிகளாகவுமே ஏமாற்றம் தருகிறார்கள்.
படைப்பு என்பதன் மூலமாக சூழலை தமது இயங்குதளமாக அமைத்துக் கொள் வதன் மூலம் மனிதர்கள் தங்கள் இருத் தலை நிலைப்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்றைக்கு நாம் இந்த அவலங்களி லிருந்து மீட்சி பெறுவதற்கான - அந்தத்
2
さ
திசை சுட்டும் தத்துவ விசாரத்தையோ கலைப் படைப்பின் சாதனையையோ யார் செய்கிறார்கள் என்று தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
‘நம் கவிதைகள் மக்கள் முகங் கொள்ளும் அவலத்தையும். அடக்கு முறையின் குரூரங்களையும், விடுதலைப் போராட்டத்தின் உள்குத்து வெட்டுக்களால் நேர்ந்த மனக்கசப்பு, விரக்தி, தமிழ்த் தேசியத்துக் கெதிரான குரோதம் போன்றவற்றையும் காட்டுவனவாய் உள் ளனவே ஒழிய, பாரதி பாஞ்சாலி சபதத்தில் காட்டுவதுபோல போராட்டத்தின் பலபக்க தத்துவார்த்த, கருத்தியல் வெளிக் கோடுகளைக் காட்டுவனவாய் இல்லை என்று மு.பொ. சரியாகவே குறிப்பிடுகிறார்.
இதற்கான காரணத்தையும் ஆரம்பத்தி லேயே தருகிறார். கருத்தியல் ரீதியான அடித்தளம் நமது இனத்துவப் போராட்டத் திடம் இல்லாத பெருங் குறைபாடு, எங்களி 1 ம் செழுமைமிக்க படைப்புக்கள் தோன்ற முடியாமைக்குக் காரணமாகிறது என்கின் றனர். இது எங்களின் நடப்பு அவலம். சரியானதை வெளியே சொல்ல முடியாத நிலை. நமக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் களுக்கிடையில் நமக்கானதை வடிவமைத் துக் கொள்ள முடியாத நிலை. சூழலின் தாக்கம் - நாமே நமக்குள் தணிக்கையிட் டுக் கொண்டவற்றையே வெளிப்படுத்த முடியும் என்கிற நிலை. எங்கள் புத்திஜீவிச் சமூகமும், இதை மீறும் துணிச்சலை மேற்கொள்ளாத நபும்சகத்தனத்துடன் நடந்து கொள்கிறது.
தன் சந்தேகங்களை வெளிப்படுத்தாது வாழ்தல். இதுவே எங்கள் அவலம் என்று சொல்ல வேண்டும்.
எனவே உள்ளதுக்குள் வள்ளிசான வற்றைப் பாராட்டிக் கொண்டிருப்பது என்ற எங்கள் process - எங்கள் கவிதை எதை

Page 14
நோக்கியதாக வீர்யம் பெற வேண்டும் என்கிற அழுத்தத்தை நொய்மைப்படுத்தி விடும் என்றே படுகிறது.
இந்தச் சூழலில் எழுதப்படுகின்ற கவிதைகள் மட்டுமல்ல அனைத்து எழுத்து வகைகளும் கேள்விகளைக் குறைத்துக் கொண்டு வெறும் அழிவு குறித்த ஒப்பாரி களையும், குரோதங்களையுமே இலக்கிய மாகவும் செய்தியறிக்கைகளாகவும் முன் வைத்து வருகின்றன. கருத்தியல் அடித்தள மற்ற இத்தகைய சொல்லாடல் களை நிகழ்த் தும் போது பிம்பங்களும் குறியீடுகளும் தமது ஆற்றலை இழந்து விடுகின்றன.
இவ்வகையான நம் சுய தணிக்கை யையும், எந்தவொரு தெளிவான கருத்திய லுமற்ற போர்ப் பரணிகளையும் அல்லது எந்த அடித்தளத்திலும் காலூன்றாமல் அலைப் போக்கில் மிதந்தபடி விடுதலைச் சொற்களை உதிர்த்தலையும் தான் நமது இன்றைய மிகப் பெரும் அவலமாகக் கொள்ள வேண்டும்.
தன்னை விலகி நின்று - வெளியே நின்று பார்த்துத் தன் அழிவுகளின் போக்கை, திசையை அறிந்து கொள்ளாத சமூகம், தனக்குள்ளாகவே மொண்னை யாக ஒற்றைப் படைத் தன்மையோடு சிந்தனையை மழுக்கி வைத்திருக்கும். இந்தச் சிந்தனை மழுங்கலை எதிர்ப்பதற்கு, அதிலிருந்து மேவே வருவதற்கு - நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு குறியீட்டையும் புரிந்து கொள்வதும், அது உருவானதின் வழிமுறையை அறிந்து கொள்வதும் அவசியமாகிறது.
ஓர் இனக் குழுவினரின் இருப்பு சார்ந்த பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு. அதற்கான தத்துவங்களின் பின்னணியோ
டும், அந்தக் குழுமத்தின் உணர்ச்சித் தீவிர உந்துதலோடும் நடத்தப்படுகின்ற போராட்டமும் - நிஜத்தில் தான் சார்ந்த மனிதர்களின் இருப்பையும் எந்த விநாடியி லும் தன்னால் சிதைத்துவிட முடியும் என்னும் சாத்தியக்கூறோடும், அந்த இருப்பின் மீது மிகக் குரூரமான வன் முறையை பிரயோகிக்க முடியும் என்னும் அதிகாரத்தோடும், அவர் மீது செலுத்தப் படும் மரண மிரட்டலினால் மட்டுமே தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது.
உண்மையில், விடுதலை என்பதற்கான
பல பக்க சிந்தனைகளை, வழிமுறை களை, எண்ணும் மனங்களின் மீது
கடுமையான கண்காணிப்பை நிகழ்த்துவ தன் மூலமே இது சுயதணிக்கை முறை யில் எழுதப்படும் இன்றைய இலக்கியப் படைப்புக்கள் மற்றும் செய்தியறிக்கைகள் மூலம் வெளிப்படுகிறது. மிக அதிகமான அதிகாரத்தைத் தன்னிடம் குவித்துக் கொள்கிறது.
இந்தச் சூழலில்,
மொழியின் மூலமாக நாம் நிகழ்த்தும் சொல்லாடல்களும், நம்மை நோக்கிச் செலுத்தப்படும் சொல்லாடல்களும் இந்த ஆதிக்கத்தின் உள்ளார்ந்த வன்முறையைச் செலுத்தக் கூடியனவாகவும், அதே நிலையில் அந்த வன்முறையை ஏற்றுக்
கொள்ளக் கூடியதுமான உள் அலகுகளை
உருவாக்குகின்றன.
அறிவின் ஒவ்வொரு கூறும் அழித் தொழிப்பு நுட்பத்திற்குச் சாதனமாகிறது. இலக்கியம், பத்திரிகைச் செய்திகள் என்று மட்டுமல்லாது, உடலியல், உடற்கூறியல், கண்காணிப்பு உத்திகள், புலனாய்வு முறைகள், புள்ளிவிபர இயல், தொடர்பு சாதனவியல், நிலவியல், பெளதிகவியல்,

இரசாயனவியல், பொறியியல், கலைவடிவ இயல், இறையியல் முதலியனவாய்த் தொடரும் அனைத்து அறிவுசார் துறைகளும் இந்த அழித்தொழிப்பின் சாதனங்களாகின்றன. −
இரண்டாம் உலகப் போருக்குப் பின், பாசிசம் என்பது ஒரு சமூகக் கருத்தியல் மட்டுமல்ல, அரசியல் உத்தி மட்டுமல்ல - அது உயிர்களைத் தீண்டும் பருண் மையான கொடுரம், எல்லா உடல்களை tயும் பற்றிச் சுழலும் அழிப்பு இயந்திரம். எல்லா மனதினுள்ளும் கண்காணிப்பை நிகழ்த்தியபடி, தன்னையே வழிபடு பொருளாய் அச்சுறுத்தும் பயங்கரம்!
சமூகத்தை இந்த அழுத்தங்களிலிருந்து வெளிக் கொண்டு வர, இன்றைய நம் எழுத்துக்கள் என்ன பங்களிப்பைச் செய்கி ன்றன என்று பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைய எழுத்து என்பது சமநிலை யைக் குலைக் கக் கூடியதாகவும் , இன்றிருக்கிற ஒழுங்கமைவை சிதைக்கக் கூடியதாகவும் இருந்தே ஆகவேண்டும். சமூக அமைப்பின் உள் அலகுகளான தனிமனித இருப்பை ஒடுக்கி வைப்பதன் மூலம் முழுமையான அமைப்பு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொழுது -
சமூக அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாடுகளை வெளிக் கொணரும் ஒரு செயலே இங்கு சமநிலையைக் குலைத் தல் என்பதாகிறது. இதுவரை பேசப்படாத வைகளைப் பேசியாக வேண்டும்.
இரண்டாம் கட்டுரையின் முடிவில் மு.பொ. குறிப்பிடும் கவிதை வரிகளை, இங்கே இன்னொரு வாசிப் புக்கு உட்படுத்தலாம்.
வரிக்கு வரி படிமம், குறியீடு என்று அல்லல்படாது, சாதாரண வார்த்தைகளின் ஒழுங் கமை வின் மூலமே முழுக் கவிதையே ஒரு படிமமாக, குறியீடாக
மாற்றுகின்ற போக்கை 90 களுக்குப் பின் வந்த முக்கிய அம்சமாகக் குறிப்பிடுகிறார் (Up. G. J. T.
இதற்கு அவர் உதாரணமாகத் தரும்
கவிதை வரிகளையே இங்கே நம் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளலாம்.
‘போரின் கனத்த குரல் ஒலிக்கும்போது
கேள்விகளைக் குறைத்துக் கொள்வோம்
அது மிகவும் நல்லது
இந்தக் கவிதை என்ன சொல்கிறது?
போரின் கனத்த குரலுக்குள் நம் குரல் எடுபடாது என்பதா? போர் பெரு முனைப்பாக நடைபெறும் சமயத்தில், அதன் நியாயத்தன்மையைப் பற்றிய கேள்விகள் இருக்கக் கூடாது என்பதா?
கேள்விகளைக் குறைத்து போருக்கான வெற்றிக்காகச் செயல்படுவதா? எதைச் சொல்கிறது கவிதை? எல்லோரும் ஒதுங்கியிருங்கள் என்றா?
கனத்த குரலுக்குள் காணாமல் போவதற்காகவே - போவதாகவே கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பது சரிதானா? போரின் கனத்த குரலுக்கு மேலாகக் கேள்விகள் எழுப்புவோம் என்றால், அது நல்லதில்லையா?
ஒருவேளை கவிதைக்கு அது அழகு சேர்க்காது என்றால் நம் அவலங்களைக் கேள்விக்குட்படுத்த, அதிலிருந்து மீளும் வழியைக் கோடிட்டுக் காட்ட, அல்லது அதுபற்றிய உள் விசாரங்களையேனும் மேற்கொள்ள அழகான கவிதைகளுக்கு முடியாதா?
கேள்விகள் கூடுகின்றன. குறைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் இது நல்லதில்லையா? நிறுத்திக் கொள்ள (36.606GSLDT?
O
27 .

Page 15
காற்று
- சுப்பிரமணிய பாரதியார் -
ஒரு வீட்டு மாடியிலே ஒரு பந்தல், ஓலைப்பந்தல், தென்னோலை. குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரணக் கயிற்றினால் கட்டி மேலே தென்னோலைகளை விரித்திருக்கிறது.
ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது. ஒரு சாண் கயிறு.
இந்தக் கயிறு ஒருநாள் சுகமாக ஊசலாடிக்கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரிய
வில்லை.
சில சமயங்களில் அசையாமல், "உம்
மென்றிருக்கும். கூப்பிட்டால் கூட ஏன்
என்று கேட்காது.
இன்று அப்படியில்லை. "குஷால்" வழியிலிருந்தது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம், நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வதுண்டு.
“கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"
பேசிப்பார். மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும்
சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும். பெண்களைப்போல.
எது எப்படியிருந்தாலும் இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமேயில்லை.
ஒரு கயிறா சொன்னேன். இரண்டு கயிறுண்டு.
ஒன்று ତ୍ର ଓ சாண் , மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண், மற்றொன்று பெண். கணவனும் மனைவியும்.
அவையிரண்டும் ஒன்றையொன்று மோகப் பார்வைகள் பார்த்துக்கொண்டும், புன் சிரிப்புச் சிரித்துக் கொண்டும் , வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப் போக்கிலே இருந்தன. ʻ-- * . -"*. ʻ. : V
அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண் கயிற்றுக்குக் கந்தன் எனப் பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை. (மனிதர்களைப் போலவே துணி டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)
கந்தன் வள்ளியம்மை மீது கையைப்

போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்தச் சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.
“என்ன கந்தா, செளக்கியந்தானா? ஒருவேளை நான் சந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ என்னவோ? போய் மற்றொருமுறை வரலாமா?" கேட்டேன்.
என்று
அதற்குக் கந்தன் "அடபோடா, வைதிக மனுஷன் உன் முன்னே கூட லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது
“சரி, சரி. என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம்" என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன் கடகடவென்று சிரித்து, கை தட்டிக் குதித்து நான் பக்கத்திலிருக் கும் போதே வள்ளியம்மையைக் கட்டிக் கொண்டது.
வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷந்தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கு மிகவும் திருப்திதான். உள்ளதைச் சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டு விட்டது.
சில கூடிணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக்கொண்டது.
மறுபடியும் கூச்சல் மறுபடியும் விடுதலை, மறுபடியும் தழுவல். மறுபடியும்
கூச்சல். இப்படியாக நடந்துகொண்டே
6 fig5g.
"என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேனென்கி றாயே! வேறொரு சமயம் வருகிறேன். போகட்டுமா?" என்றேன்.
”அட போடா! வைதீகம் வேடிக்கை தானே பார்த்துக்கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு. இவளிடம் சில வியவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிரு க்கிறேன். போய்விடாதே. இரு” என்றது.
நின்று மென்மேலும் பார்த்துக்கொண் டிருந்தேன்.
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நின்றதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.
உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடா க்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ண மெட்டு.
இரண்டே சங்கதி, பின்பு மற்றொரு பாட்டு.
கந்தன் பாடி முடித்தவுடன் வள்ளி. இது முடிந்தவுடன் அது. மாறி மாறிப்பாடி (335|T6) TE6)to
சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டேயிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக் கொள்ள வரும். இது ஒடும். கோலாகலம்.
இங்ங்ணம் நெடும் பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக் களையேறிவிட்டது.
நான் பக்கத்துவிட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப்போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும்

Page 16
கவனிக்கவில்லை.
நான் திரும்பி வந்து பார்க்கும் போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது. என்னைக் கண்டவுடன் "எங்கேடா போயிரு ந்தாய்? வைதீகம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாயே" என்றது.
* 9 ufó o T நல்ல நித் திரை போலிருக்கிறதே?” என்று கேட்டேன்.
ஆஹா! அந்தக் கணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னவென்று சொல்வேன்! காற்றுத் தேவன் தோன்றினான். அவன் உடல் விம்மி விசாலமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
வயிரவுபூசி போல ஒளிவடிவமாக இருந்தது.
”நமஸ்தே வாயோ, த்வமே வ பிரத்யக்ஷம் ப்ரஹற்மாஸி"
காற்றே போற்றி. நீயே கண்கண்ட JLD b.
அவன் தோன்றிய பொழுதிலே வான
முழுதும் பிராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக்கொண்டிருந்தது. ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.
காற்றுத்தேவன் சொல்வதாயினன்: "மகனே ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய்விட்டது. நான் பிராண சக்தி என்னுடன் உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவில்லாதது சவம். நான் பிராணன். என் னாலே தான் அச் சிறு கயிறு உயிர்த்திருந்து சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதை உறங்க - இறக்க விட்டுவிடுவேன். துயிலும் சாவுதான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவையிரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்துவிடும். நாண் விழிக் கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க" என்றான்.
”நமஸ் தே வாயோ திவமே வ ப்ரத்யகூடிம் ப்ரஹற்மாஸி: த்வமே வ ப்ரத்யகூடிம் ப்ரஹற்ம தவதிஷ்யாமி”
O
"நாம் மனிதனை, அழுக்கைக் கழுவிவிட்டு சிங்காரித்துக் கொண்டு நடமாடும் மனிதனைத்தான் அறிவோம். இவனைத்தான் நாம் நமது இலக்கியங்களில் பார்க்கிறோம். இன்னொரு மனிதன் இருக்கிறான். நமக்கெல்லாம் தெரிந்த, நாம் அறிந்த மனுசப் பயல். அவனை நாம் இந்த நாட்டுப்புறக் கதைகளில் தான் பார்க்கிறோம். பார்த்து ரசிக்கிறோம். சிரிக்கிறோம். நாணப்படுகிறோம். சங்கடப்படுகிறோம். சிலசமயம் வெறுப்படைகிறோம். இவை அனைத்தும் நமது மக்கள் உண்டாக்கிய மக்களைப் பற்றிய கதைகள்”
கி.ரா

Jurés MuñT : LOTGOTIT LIDå för 3: 104 விலை இந்திய ரூபா 3000 வெளியீடு : மணிமேகலைப்பிரசுரம்
7, 50 killsGuto 370), QScibOXOT-600 Ol7
விலை: ரூபா 5000
நூல் செந்தணல்
6lᏋ08Ꮟ : f5Kilku நூலாசிரியர் அங்கையன் கயிலாசநாதன் பக்கங்கள் 256
விலை ரூபா 25000
H12, அரசங்கத் தொடர்மடி கொழும்பு 4.
நூல் பெண்
வகை: சஞ்சிகை நூலாசிரியர் : சித்திரலேகா மெளனகுரு LyᎦᎦiᎦᎬᏂ6iᎢ : ᎾᏅ
விலை ரூபா 3000 வெளியீடு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
ULI–å

Page 17
சமாதானம்
இவரைக் காணவில்லை ஐக்கிய நாடுகள்
Him IIIIIGaliЈ தேடப்படும் ஒரு சர்வதேசப் பயங்கரவாதி இவர்.
உயிருடனோ ‘FETTILÄTFJÄRGI III பிடித்துத் தரு வருக்கு சுேட்டகப்படும் Hன்ானம்
பழங்கப்படும்
கதி முகாம்களில் தகியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பலரீன் கைகளில் பலமுறை ரிக்கி தப்பீவர்.
கடைசியாகக் கண்ட போது வெள்ளை அடை அணிந்திருந்தார்.
இவரது
வலது ஈன்றும் இடது காலும் இரண்டைக்கிருந்தன
பாரிமுத்து யோகராஜன்

"더 R&ET E-SAM) "A(1구의 1R :FT韓),드府u% --Itcolorusos) is ‘‘Nosso -isteiltelo III. os./Lo
o sierīņs