கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்யூனிஸ்ட் 1964.06

Page 1
இலங்கைக் கம்யூனிஸ்ட்
ஆசிரியர்
ஆசாயா நா F
உள்ளடக்கம்
தலமையும் வேலே செ
தேசிய முதலாளி வப் தேசிய விடுதலே இயக்
பிரேசில் இராணுவ சதி
இலங்கிைப் புரட்சி பற்றி பிரச்சினாகள் சில்
புதிய ஜனநா பக трен,
பாட்டாளி வர்த்கத்தின்
வெளியீடு:
இலங்கைக் கம்
123, யூனியன் பி
 
 

கட்சியின் தத்துவ சஞ்சிகை
ண் f கதா F- ன் It i॥
॥
ய்யும் முறைபும்
கமும்
கமும்
பின் பாடங்கள்
ப
றப் புரட்சியில்
தலமை,
யூனிஸ்ட் கட்சி ளேஸ், கொழும்பு-2
விலே சதம் 25

Page 2

526)6OLOutb-66).266Flub (p60)Dub
கே. குலவீ ரசிங்கம்
1964-ம் ஆண்டு ஜனவரி 19-ம் திகதி முதல் 21-ம் திகதி வரை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 7-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இம் மாநாடு நவீன திரிபுவாதத்திற்
கெதிரான மாக்சிஸ்-லெனிஸவாதிகளின் வெற்றி மாநாடு. இக் காரணத்தினுல் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு.
வேலை செய்யும் முறைகளைச் சீர்திருத்தி, புதிய தொழிலாளி வர்க்கத் தலைமையுடன் புதிய தரமான ஓர் கட்சியைக் கட்டி வளர்ப் பதெனவும் இம் மாநாடு தீர்மானித்துள்ளது,
'தொழிலாளி வர்க்கத்திற்கு தனது அடிமைத்தனத்தைத்
தவிர இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனல் வென்றெடுப்பதற்கு
ஒர் உலகம் உண்டு’ என கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகின்றது." கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இந்த உணர்ச்சியுடன் செயல் புரிய வேண்டும். கம்யூனிஸ்டு ஸ் எமது சகாப்தத்தின் வீர புரு ஷர்கள். புரட்சிகரப் போராட்டங்களில், சோஷலித்தின் வெற்
றிக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்யக் கடமைப்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மார்க்சிஸ்
லெனிஸம் என்னும் பதாகையை உயர்த்திப்பிடித்து, புரட்சியின் இறுதி நோக்கத்தில் வெற்றி பெற, நாட்டு மக்களை தலைமை
தாங்கி முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
புரட்சிக்காகத் தமது வாழ்க்கையைத் தியாகம் செய்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமை சபதமேற்கவேண்டும். இவர்கள் திட முள்ள நெஞ்சும், தெளிவுள்ள சிந்தனையும், வீரமிக்க உறுதியும் படைத்தவர்களாக இருத்தல் வேண்டும். புரட்சியின் நோக்கத் தையும், மக்களின் நலனையுமே வேறெதையும் விட மேலான முக்கி யத்துவம் வாய்ந்ததாக இவர்கள் கருதவேண்டும். எந்தச் சந்தர்ப் பத்திலும் சோம்பலுறவோ, தோல்வியுறவோ, மனமுடையவே! கூடாது. இறுதி இலட்சியத்தை நோக்கி உறுதியுடன் முன்னேற வேண்டும்.
ゞ 7-வது தேசிய மாநாடு புதிய தலைமையும், புதுவிதமான கட் சியும், புது முறையில் செயலாற்றும் திறமையும் வேண்டுமென
س--
அறை கூவியதேன்? இதற்குக் காரணம் கெனமன், விக்கிரமசிங்க,

Page 3
2
சமரவிக்கிரமா கும்பலின் வழிச்சென்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னைநாள் தலைமை, திரிபுவாதச் சேற்றில் புதைந்து எல்லா விதமான போராட்டங்களையும் காட்டிக்கொடுத்து, வர்க்க ஒருமைப்பாட்டை நாடியது. திரிபுவாதத்தலைவர்கள், தமது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட் டனர். வர்க்கப்போராட்டத்தை எதிர்த்து, முதலாளித்துவ பாராளுமன்ற நடவடிக்கைகளில் மட்டும் பங்கு கொண்டு, சொகு சான வாழ்க்கை நடத்தப் பழகிக்கொண்டனர். இ. போ. ச. வேலை நிறுத்தத்தின்போதும், 21 கோரிக்கைகளை அடிப்படையாக வைத்த போராட்டங்களில் தலைமைதாங்கத் தயங்குவதன் மூல மும், விலைவாசி உயர்வு, வாழ்க்கைச்செலவு ஆகிய பிரச்சினைகளில் இவர்களின் அக்கறையின்மையும் இந்நிலையை தெளிவுபடுத்துகி றது. கட்சியை ஓர் புரட்சிகரக் கட்சியாகக் கட்டி வளர்க்கவும் இவர்கள் தவறிவிட்டார்கள்.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சாதாரண அரசி யல் வாதிகளைப்போகல், பாராளுமன்றத் தேர்தலில் பங்கு பற்று வதுடன் திருப்தியடையும் சந்தர்ப்பவாதிகள் போல் இருக்கக்
கூடாது. ‘ஓர் புரட்சிவாதி-ஒரு கம்யூனிஸ்ட்-கஷ்டங்களைக் கண்டு மனம் தளர மாட்டான்.’’ ‘புரட்சியைத் தனது இலட்சியமாகக்கொண் டுள்ளவன்," "புரட்சிவாதிகள் அவசியம் என்று நம்புபவன்.'
என்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தோழர் ஹோ சிமின் கூறியுள்ளார். இப்பேர்ப்பட்ட தலைவர்கள்தான் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேவை.
உலக விவகாரங்களைத்தெளிவுடன் புரிந்துகொள்ளக் கூடிய, தூரதிருஷ்டியுள்ள, சரித்திரம் எமக்குக் கற்பிக்கும் பாடங்களைச் சரியாகக் கணக்கிடக்கூடிய, பழைய சமுதாய அமைப்பை மாற்றி, புரட்சிகரமான புதிய சமுதாயத்தை நிர்ணயிப்பதையே தமது இலட்சியமாகக்கொண்ட தோழர்கள், தமது பணி, புரட்சிப்பணி என்பதை உணர வேண்டும். சிந்தனையிலும், செயலிலும் ஓர் புரட்சிவாதியாகத் திகழ வேண்டும். தேச பக்தியுள்ளவனுக, தனது நாட்டு மக்களுக்காக நேர்மையுடனும், அக்கறையுடனும் செயலாற்றவேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, விடா முயற்சி, தொழில் விருப்பம், 'விமர்சனம்-கய விமர்சனம்’’ ஆகிய குணும்சங்களைப் புரட்சிக்கரத் தலைவர்கள் பேணிக்கொள்ளு தல் வேண்டும். கட்சியின் தலைவர்கள், ஊழியர்கள் சகலரும், மற்ற வர்கட்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். ஓர் இயக் கத்தை அணிதிரட்டுவதிலோ, மக்களின் சக்திகளைப் பலப்படுத்து வதிலோ, இவர்கள் முன்னின்று செயலாற்றவேண்டும்.
தலைமைக்கு இன்னுமொரு முக்கியமான கடமையாதெனில், தனது தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா வென்று எப்பொழுதும் எடைபோட்டுப் பார்த்தல். தீர்மானங்கள் நிறை வேற்றப்படுகின்றன, - உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஆனல் இத்தீர்மானங்கள் நடைமுறையில் செயலாற்றப்பட்டன வாவென்று எவரும் கவனிப்பதில்லை. நாம் இயங்கும்போது, தலைவர்கள் மட்டுமல்லாது கட்சியின் எல்லாத் தரங்களிலுமுள்ள

3.
ஸ்தாபனங்கள் தமது தீர்மானங்கள் செயல்பட்டனவா என்பதை கவனித்துக்கொள்ளவேண்டும். இந்த முறையில்தான் சிலவேளை களில் எமது தீர்மானங்கள் சரியானவையா வென்பதையும் சோதனை செய்ய முடியும். W
**விமர்சனம், சுய விமர்சனம்" என்ற பிரச்சினையைப் பற்றிச் சற்று சிந்திப்போம், புதிய தலைவர்களைச் சிருஷ்டிப்பதற்கும், உள் ளவர்களிடமிருந்து கூடிய சேவையைப்பெறுவதற்கும், கம்யூனிஸ் டுகளாகிய எங்களிடமுள்ள புனிதமான கருவி 'விமர்சனம் சுய விமர்சனம்’’ ஆகும். இந்த முறை கம்யூனிஸ் இயக்கத்துடனேயே தோன்றியது. சோ. க. க. (போல்ஷ்விக்)யினுடைய மாஸ்கோ ஸ்தாபனத்தில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்த ஓர் அறிக்கை யில் பின்வருமாறு கூறுகிருர்: "எமக்குத் தண்ணிரும், காற்றும் எவ்வளவு அவசியமோ, அதேபோல் விமர்சனமும்-சுய விமர்சன மும் அவ்வளவு அவசியம். ’’ இது இல்லாமல், எமது கட்சி முன் னேற முடியாது; எமது தவறுகளைப்புரிந்துகொள்ள முடியாது. குறைபாடுகளைத் திருத்திக்கொள்ளமுடியாது. எம்மிடம் குறை பாடுகள் ஏராளம். இதை நாம் ஒழிவு மறைவின்றியும், நேர்மை யாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில தோழர்கள், ‘எமது எதிரிகள் குறைபாடுகளைப் பயன்படுத்திவிடுவர்' என அஞ்சுகின் றனர். இதைக்கண்டு நாம் அஞ்சக்கூடாது. எமது தவறுகளையும், குறைபாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள அஞ்சக்கூடாது. **விமர்சனம்-சுய விமர்சனம்" மூலம்தான் குறைகளை நீக்கி, எமது செயல்முறைகளைத் திருத்தி, நாம் எமது கட்சியின் வேலை களைச் சீர்திருத்த முடியும். 'விமர்சனம்-சுயவிமர்சனம், தலைவர் களுக்கும், மக்களுக்கிடையேயும் உள்ள உறவுகளை ஸ்திரப்படுத்த உதவும.
ஒர் இலட்சியத்திற்காக அர்ப்பணித்த சேவையின் காரண மாக தலைவர்களின் கெளரவம் உயர்வதும், அதன் காரணமாக இவர்களுக்கும், மக்களுக்குமிடையே உள்ள தொடர்புகளில் மாற்றம் ஏற்பட்டு, மக்களிலிருந்து தலைவர்கள் அப்பாற்படவும் - (tpւգ նյւb.
எமது கட்சியின் பழைய தலைமையில் இந்தநிலை உருவான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன. தொழிலாளி வர்க்கத் தோழர்கள் கட்சியின் முக்கிய பதவிகள் ஏற்றதும், தாம் தோன் றிய வர்க்கத்தையே மறந்து, அவர்கள் சிந்தனையிலும் மாற்றங் கள் ஏற்பட்டு, தான்தோன்றித்தனமும், தனித் தம்பிரான் போக்கும் அவர்கள் மத்தியில் உருவெடுத்தன. இந்த நிலையில் இவர்கள் தொழிலாளி வர்க்கத்தினின்றும் பிரிந்து நிற்கின்றனர்.
இதன் காரணமாக எமது கட்சியின் தலைவர்கள், தம்மைப் பிரபல்யம் மிக்கவர்கள் என்றும், தவறேசெய்ய முடியாத அறி வாளிகளென்றும் கருதத் தொடங்கினர். இது கட்சியின் நாசத் திற்கே வழி வகுத்தது.
எமது குறைபாடுகளை எடுத்துச்சொல்ல " சில வேளைகளில் தொழிலாளர்கள் தயங்குவர். அவர்களின் விமர்சனம் 100 க்கு ,

Page 4
4.
100 சரியானதல்லாமல் இருக்கக்கூடும். அவரகள் சொலவதை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லக்கூடும். அவர்கள் சொல்வதில் 5 சதவிகிதம் சரியாக இருக்கலாம். இந்தச் சந்தர்ப் பத்திலும், அமைதியுடன் அவைகளுக்குச் செவிசாய்த்து, இருக்கும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். இந்த வகையால் தான், தலைவர்கள் தலைமைதாங்க முடியும். ‘விமர்சனம்-சுய விமர்சனம்" மூலம் தொழிலாளி வர்க்கத்தின் அக்கறையை ஸ்தி ரப்படுத்த முடியும். அத்துடன் தன்னம்பிக்கையையும், கலாசாரப் பண்பையும் வளர்த்து, தொழிலாளி வர்க்கத்தை நமது நாட்டின் தலைவர்களாகவும்,சிருஷ்டி கர்த்தாக்களாகவும் ஆக்க உதவும். m
குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் விமர்சனம பாதகமான தாயும் இருக்கும். நேர்மையற்றவர்கள், தவருண நோக்கங்களுக் காக விமர்சிக்கும்போது, பாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இப்பேர்ப்பட்ட விமர்சனங்களை நாம் எதிர்க்க வேண்டும். இத்த கைய தவறுகளை நிவர்த்தி செய்யாதுவிடுதல் இயக்கத்தின் வளர்ச் சிக்குத் தடையாக இருக்கும்.
திரிபுவாதத்தைத் தோற்கடித்து, தனது இறுதி இலட்சியத்தை நிறைவேற்ற, கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை தனது மார்க் சிஸ்-லெனினிஸ் அறிவை மேலும் வளர்க்க வேண்டும். கட்சியின் கொள்கைகளைத் தெளிவாகக் கற்றறிய வேண்டும். புத்தகவாதப் போக்கையும், பிரச்சினைகளை அக்கறையின்றி, கண்மூடித்தனமாக அணுகுவதையும் தவிர்க்க வேண்டும், சுக போகங்களில் விருப் பங்கொள்ளாது, இலஞ்ச ஊழல்களை எதிர்த்துப் போராட் வேண்டும்.

தேசிய முதலாளி வர்க்கமும் தேசிய விடுதலை இயக்கமும்
டி. கே. டி. ஜினேந்திரபால உதவித் தேசிய அமைப்பாளர். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி
தேசிய முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்தும் எங் க்ள் நாட்டிலே இப்பொழுது தலையெடுத்துள்ள கூட்டு அரசாங் கம் நிறுவுதல் பற்றிய பேச்சுவார்த்தைகளின் காரணமாக,முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, தேசிய முதலாளி வர்க்கத் தின் உண்மைச் சுயரூபத்தையும் அதன் கொள்கையையும் சரியா கப் புரிந்து கொள்ள வேண்டியது அவ்சியமாகிறது. இது மிக வும் அவசியமாவது ஏனென்ருல், இடதுசாரி ஐக்கிய முன்னணி யின் இன்றைய தலைவர்கள், பரந்த ஏகாதிபத்திய விரோதநிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்பி அந்த முன்னணியின் தலைவராக இடதுசாரி ஐக்கிய முன்னணியை இயக்குவதற்குப் பதிலாக, பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் அர சாங்கத்தோடு அதனை அவசரப் பட்டுக் கொண்டு சேர்த்துவிட முனைவதாகும்.
தேசிய முதலாளி வர்க்கம் என்ருல் என்ன?
சீன நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தைப் பற்றித் தோழர் மா சே-துங் செய்த விளக்கத்தைப் பார்ப்போம். மத்தியதர முதலாளித்துவ வர்க்கத்தைப் பற்றி விபரித்த பொழுது, அவர் கள் 'சீனுவின் முதலாளித்துவ உற்பத்திச் சாதனங்களைப் பரி பாலிப்பவர்கள்?’ என்று கூறினர். “தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்று கூறுவது இந்த முதலாளிகளைத் தான். அவர் களுடைய அரசியல் மேடையானது ஒரே வர்க்கத்தால்-அதாவது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தால் அதிகாரம் செலுத்தப்படும் இடமாகும்.' மேலும் 'பெரும் முதலாளித்துவ ஸ்தாபனங்க ளாகவும் தனிப்பட்ட தேசிய முதலாளிகளாகவும் அந்த வர்க்கம் பிரிந்துள்ளது. முன்னவை ஏகாதிபத்திய நாடுகளில் முதலாளி களால் ஆக்கப்பட்டு அவர்களாலேயே வளர்த்து எடுக்கப்பட் டவை ஆகும். அவை கிராமப்புற நிலப்பிரபுத்துவ இயக்கங் களோடு பலவகையிலும் இணைந்து உள்ளன. சீனுவின் தேசிய முதலாளித்துவ வர்க்கம் உண்மையில் மத்தியதர முதலாளித்துவ வர்க்கமே " என்று அவர் கூறினுர்,

Page 5
6
தேசிய முதலாளி வர்க்கம் தனிப்பட்ட முதலாளிகளைக் கொண்டுள்ளது. தனிப்பட்ட முதலீடு, வர்த்தகம், பொருள் உற்பத்தி, கடன், வங்கிகள் முதலியவற்ருல் அது பெருகி வாழ் கிறது. தேசிய உற்பத்தித் தொழில்கள் முன்னேழுத காரணத் தால் அடிமை நாடுகளில் வியாபாரத் துறைகளிலேயே முதலீடு செய்யப்படுகிறது. பொதுவாகப் பார்க்கும் பொழுது தேசிய முதலாளித்துவ வர்க்கம் மத்தியதர, கீழ்த்தர முதலாளிகளா லும் தேசிய உற்பத்தித் தொழில்களில் முதலீடு செய்துள்ள பணக்காரர்களாலும் ஆனது.
தேசியத் தொழில்களில், தேசிய முதலாளி வர்க்கம் முதலீடு செய்துள்ளதால், நாட்டின் வியாபாரத் துறையையும் அது தன்வசப்படுத்த வேண்டியுள்ளது. ஏகாதிபத்திய பொருளா தார முறையைப் பற்றிக்கொண்டு இருப்பதால் அதனுடைய லாபம் குறைகிறது. தேசத்தைத் தொழில் மயமாக்கத் தேசிய முதலாளித்துவம் முனைகிறது. அதனுல் தேசியத் தொழில்களை முடங்கச் செய்ய முனையும் பிரபுத்துவத்திற்கு அவர்கள் எதிரி களாகிருர்கள். பொருளாதார அபிவிருத்திக்கு உபயோகப் படுத்தக் கூடிய லாபத்தை அடைவதற்குத் தடையாக சொற்ப தொகையான அந்நிய தோட்டக் கம்பெனிப் பிரபுத்துவ ஸ்தா பனங்கள் இருப்பது அவர்களுக்கு எதிர்ப்பை மூட்டுகிறது. சந் தைகளைப் பிறநாட்டு வியாபாரப் பொருள்கள் நிரப்பிக்கொண்டு இருப்பதால் உள்நாட்டில் குறைந்த முதலீட்டால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் விற்பனை இல்லாமல் பாதிக்கப் படுகின்றன. ஆகையால் தேசிய முதலாளி வர்க்கம், ஏகாதிபத் தியத்திற்கும், பிறநாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கும், பெரும் முதலாளித்துவ ஸ்தாபனங்களுக்கும் எதிரியாகின்றது. பெரும் நிலப்பிரபுத்துவத்தை அவர்கள் எதிர்க்கிருர்கள். அதனுல்தான் பூணிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்துள்ள தேசிய முதலாளி வர்க்கம் யூ என். பி.க்கு விரோதமாகிறது.
தேசிய முதலாளித்துவத்தின் செயல் முறை
ஏகாதிபத்திய வாதிகளின் அடிவருடிகளும், பெரும் நிலச் சுவான்தார்களும், பண முதலைகளான கம்பெனிகளும் அரசாங்க அதிகாரத்தைக் கையேந்தி உள்ள நாடுகளில், தேசிய முதலா ளித்துவ வர்க்கம் ஆட்சியைத் தன்வசப் படுத்த முனைகிறது. இலங்கையில் 1956-ம் ஆண்டில் தேசிய முதலாளித்துவம் ஒரு முறை அரசாங்கத்தைக் கைப்பற்றி, பின்பு 1960-ல் சிறிது ᏧᎦᎱᎢ ᏊᏍuᎥy இழந்து, மீண்டும் கைப்பற்றிக் கொண்டுள்ளது. இப்பொழுது அந்த அதிகாரத்தைக் கை பறிய விடாமல் காப்பாற்ற அது பெரிதும் முயல்கிறது.
ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தன்னல் தனித்துச் செய்ய முடியாததால் தேசிய முதலாளித்துவம் அடக்கி ஒடுக்கப்பட்டுக்

7
கஷ்டம் அடையும் பாட்டாளி மக்களையும் உதவிக்கு அழைக் கிறது. அதனல் மிகவும் தாராளமாகப் பலசலுகைகளைத் தருவ தாக வாக்களிக்கிறது. ஆனல் ஆட்சியைக் கைப்பற்றி விட் டால் எல்லாவற்றையும் அது மறந்து விடும்.
முதலாளி வர்க்கம் வெகுஜன இயக்கத்தின் முன்னுல் ஈடு கொடுக்க முடியாது. அதனுல் அது, அந்த வெகுஜன இயக் கத்தை ஏமாற்றித் தனக்குச் சகாயமாக வைத்துக்கொண்டு ஆட்சிபீடத்தில் தொடர்ந்து இருக்க முனைகிறது.
தேசிய முதலாளி வர்க்கத்தை நன்ற கப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பது, அது நிலப்பிரபுத்துவத்தைப் பற்றிக் கொண்டுள்ள கொள்கையும், நடந்துகொள்ளும் முறையும் ஆகும். நிலப் பிரபுத்துவம் தனது அரசியல், பொருளாதார உயர்வு களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பதால், முதலாளித் துவம் அதனை எதிர்க்கிறது, பொது மக்களிற் பெரும் பகுதியி ரான விவசாயிகளின் ஆதரவு, தேசிய முதலாளித்துவம் ஆட்சிக்கு வர மிகவும் அவசியம் என்பதால் அது அவர்களுடைய ஆதரவை எப்பொழுதும் நாடுகிறது. அத்தகைய தேசிய முதலாளித்துவம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும். அல்லது, தான், அவர்களுடயை கோரிக்கைகளுக்கு ஆதரவு உடையது என்று காட்டும் விதத்திலாவது நடந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் தான் தேசிய முதலாளித்துவத்தின் நிலப்பிரபுத் துவக் கொள்கை வெளிப்படுகிறது. ஏனெனில் அதற்கு நஷ்ட ஈடு இல்லாமல் விவசாயிகளுக்கு நிலத்தின் உடமையைப் பெற் றுக் கொடுக்கவும், விளைவிக்கப்பட்ட பொருள்களின் மீது நியாய மான உரிமைகளை வழங்கவும் முடியாமல் இருக்கிறது. தனிப் பட்ட நில உடமையின் பயன்களை, தானும் அனுபவித்துக் கொண்டு இருப்பதால் அதற்கு எதிராகப் போவது தேசிய முத லாளித்துவத்திற்கு முடியாமல் இருக்கிறது. அதனல் பெரும் தோட்டங்களையும் பெரிய நிலங்களையும் தேசியமயமாக்க முனை யாமல் இருக்கிறது தேசிய முதலாளித்துவ ஆட்சி. இந்தக் கார ணத்தால் நிலப் பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சிக்குத் தேசிய முதலாளித்துவ ஆட்சி ஆதரவு தராது.
தேசிய முதலாளித்துவம் பொது மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைக் கொடுக்கும் போதும் நிரந்தரமான முறையில் அந்த உரிமைளை வழங்குவதில்லை. அவர்கள் ஜனநாயக உரிமைகளைப் பற்றிப் பேசுவது பெருநிலச் சுவான்தார்களும் பெரும் பணக் காரர்களும் ஆட்சியில் இருக்கும்போது மட்டுந்தான் சட் டப்படி அந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க, தான். போரிடுவதாகக் கூறித்தான் தேசிய முதலாளித்துவம் அர சியல் உரிமையைப் பெற்றது. ஆனல் ஆட்சிக்கு வந்த பின்பு அந்த உரிமைகளை அது மிதித்துத் தள்ளுகிறது.
தொழில்ாளி வர்க்கம் பலவlனமாக இருக்கும் பொழுது, ‘தேசிய முதலாளி வர்க்கம் ஜனநாயகமாக நடந்துகொண்டு ஏமாற்றுகிறது. ஆனல் தொழிலாளர்களின் அரசியல் அறிவு

Page 6
பெருகப் பெருக ஜனநாயக உரிமைகளைச் சிறிது சிறிதாக அழிக்க முனைகிறது அரசாங்கம்.
தேசிய முதலாளி வர்க்கத்துடன் கூட்டுச் சேருவது
தேசிய முதலாளி வர்க்கத்திடம் இத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் அது ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத் திற்கும் எதிரானது என்பதால் அதனுடன் இணையலாம். ஆணுல் அந்தக் கூட்டு முன்னணி, விவசாயிகள் கொழிலாளர் சிறு பணக்காரர்கள், படித்தறிந்தவர்கள். தேசிய முதலாளி வர்க்கத்தினர் ஆகியவர்களால் ஆனதாக இருப்பதால் அதனைக் கொண்டு போராட்டம் நடத்தி விடமுடியாது. அந்த முன்னணி யைச் சார்ந்த வெகுஜனங்களை ஒன்றுதிரட்டி சரியான, புரட் சிகரமான முறையில் வழிநடத்தினல் மட்டுந்தான் இது சாத்தியமாகும்.
அதனுல் எதிரிகளைத் தோற்கடிக்க இரண்டு கோரிக்கைகளே முன்னிறுத்த வேண்டும். அவை, ஏகாபதித்திய எதிர்ப்புப் போராட்டத்தில் சாதாரண பொது மக்களைச் சேர்த்துக் கொள் ளுவதும், ஐக்கிய முன்னணியின் உள்ளே இருக்கும் எல்ல! ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளையும் ஒன்றுதிரட்டிப் புரட்சிப் பாதையில் வழிநடத்துவதும் ஆகும்.
தேசிய முதலாளி வர்க்கத்துடன் நாம் ஒன்றுசேர்ந்து செயல் புரியும் பொழுது கவனத்தில் வைக்கவேண்டிய அடுத்த விஷயம், ஏகாதிபத்தியத்தையும், நிலப் பிரபுத்துவத்தையும் ஒழித்துக் கட்டும் ஜனநாயகப் புரட்சியின் இறுதிவரை ஒத்துழைக்க அது முன்வராது என்பதாகும். ஏனெனில் அந்தப் புரட்சியைத் தங் கள் வர்க்கத்தின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் அள விற்கு மட்டுப்படுத்த தேசிய முதலாளித்துவம் முயல்கிறது. ஏகாதிபத்தியத்தின் பிடியை முறியடிப்பது, நிலப் பிரபுத்து வத்தை அடையாளம் இல்லாமல் அழிந்துபோகச் செய்வது, ஜனநாயக உரிமைகளைப் பெறுவது ஆகியவற்றில் தேசிய முதலாளித்துவத்தின் பங்கு சொற்பமானது. ஆனலும் மிகவும் கடினமானது. அதனல் அது புரட்சி இயக்கத்திற்குத் தீங்கு விளைவித்துக் கைவிட்டு விட்டுத் தோற்கடிக்கச் செய்தாலும் செய்யலாம்.
வெற்றிபெற வேண்டும் என்ருல்
ஏகாதிபத்தியத்தின் தொடர்புகளை இந்த நாட்டிலிருந்து அகற்றி, நிலப் பிரபுத்துவத்தை ஒழித்து, ஜனநாயகப் புரட்
சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ருல், அதற்கு உண் மையில் உழைக்கவேண்டிய வர்க்கமான தொழிலாளி வர்க்கத்

9
தின் தலைமையில்தான் அதனைச் செய்ய முடியும். பரந்த கூட்டு முன்னணியில் தலைமை வகிக்க வேண்டியது தேசிய முதலாளி வர்க்கமோ அதன் அரசியல் கட்சியான பூரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்ல. அதனைச் செய்ய வேண்டியது தொழிலாளி வர்க்கமும், அதன் அரசியல் கட்சியான மார்க்ஸிஸ்-லெனினி ஸக் கொள்கைகளைப் பின்பற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் தான்.
தேசிய முதலாளித்துவத்துடன் ஒன்று படுவதற்கு ஒரேவழி ஒத்துழைப்போடு போராட்டத்தையும் நடத்திச் செல்லுவ தேயாகும். தேசிய முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத் தோடு ஒன்றுபடும் பொழுது, அந்தப் பலத்தைக் கொண்டு வெற்றி பெறுவதோடு தனது கொள்கைகளை மேலோங்கச் செய்து தொழி லாள வர்க்கத்தைத் தனித்து விடவும் கூடும்.அப்படிச் செய்ய முடி யாமல் போகும் பொழுது, அது அந்தக் கூட்டணியின் தலைமை யைத் தொழிலாளர் வர்க்கத்திற்குக் கிடைக்க விடாமல் தடுத்து, ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராகச் சதி செய்தாலும் செய்யலாம். அப்படிச் செய்யும் பொழுது ஜனநா யகப் புரட்சியைக் கைவிடுவது மட்டும் அல்ல, வேறு எது வேண்டுமென்ருலும் செய்யலாம். அதற்குக் காரணம் தேசிய முதலாளி வர்க்கத்தின் உள்ளே இருக்கும் வலது சாரிகளாகும்.
அதஞல் அப்படிப்பட்ட கோஷ்டிகளுடன் கூட்டுச் சேர்ந்து தொடரத் தொழிலாளி வர்க்கத்திற்கு முடியாது. தேசிய முத லாளித்துவத்துடன் சுட்டுச் சேரும் பொழுது அதன் வலதுசாரி களிடம் இருந்து ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்து வைக்கவேண்டும். தொழிலாள வர்க்கம் தலைமையைக் கைப் பற்ற முடிவது, புரட்சி இயக்கம் பலம் பெறும் பொழுதும், பொது மக்கள் அதிகமதிகமாகப் போராட்டங்களில் ஈடுபட்டுப் பழகும் அளவிற்கும் ஏற்றதாகவே இருக்கும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயகப் புரட்சி ஆகியவற்றின் பொழுது முதலாளி வர்க்கம் கையாளும் ஒரு தந்திரம் என்ன வென்ருல், சில சில சூழ்நிலைகளுக்கேற்ப, ஏகாதிப்த்திய எதிர்ப் பின் முக்கியமான ஒரு அணியான கிராமங்களிலும் நகரங்களி ம் உள்ள மத்தியதரப் பணக்கார வகுப்பாரிடம் தலைமையைக் காடுப்பதாகும். அதனுல் தான் தேசிய முதலாளித்துவத்தின் தந்திரங்களையிட்டுக் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. இந்தத் தந்திரத்தை நல்லபடி புரிந்து கொண்டால் புரட்சிப் போராட் டத்தின் போது எல்லா ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளையும் ஒரு அணியில் திரட்டித் திறமையாக வழி நடத்த முடியும்.
தேசிய முதலாளித்துவத்தினை நன்முகப் புரிந்து கொள்ளத் தவறினல், ஒன்றில் இடதுசாரி இயக்கத்தில் முறிவு ஏற்படவோ அல்லது வலதுசாரிகள் பிழைவிடும் பொழுது அதனுல் தாக்குதல் அடையவோ நேரும். அதனுல் தேசிய முதலாளி வர்க்கம் காட்டும் சலுகைகளையிட்டுக் கவனமாக இருக்க வேண்டும்.

Page 7
10
தேவைக்கு அதிகமாக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் புரட்சிச் சக்தியை நம்பி இறங்கினல் வலதுசாரிகளிடம் மண்டி யிட நேரவும் கூடும்.
கவனமாக இருக்கவேண்டிய சூழ் நிலைகள்
வலதுசாரிகள், முற்போக்குச் சக்திகள் பலம் பெறும் பொழுது அவற்றுடன் சேர்ந்து சந்தர்ப்பவாதிகளாகிவிடுகிருர்கள். அந்தச் சந்தர்ப்பவாதச் செயலின் பயனக ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்ன ணித் தலைவர்கள் முதலாளிகளிடம் சிக்கி விடுவதால் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் வாலாக ஆகி விடுகிறது. அதன் பிரதிபலிப்பு, தொழிலாளி வர்க்கத்தைப் புரட்சிக்குத் தயார் பண்ண முடியாமல் தேசிய முதலாளித்துவத்தின் சந்தர்ப்ப வாதிகளான தனிநபர்களுக்கு இரையாக்கி விட்டுப் பகையாளி யுடன் நடுவழியில் சமாதானம் செய்துகொள்வது போல் புரட்சி யைப் பணயமிடுவதாக முடியும்,
அத்தகைய பிழையான பாதைகளில் செல்வதிலிருந்து விடு பட வேண்டும் என்ருல் தொழிலாளி வர்க்கத்தை வழி நடத் தும் தலைவர்கள் அத்தகைய ஆபத்துக்களையிட்டுக் கவனமாக இருப்பதோடு, வேறு நாடுகளிலுள்ள தோழமையான கட்சி களினதும் அனுபவங்களோடு இந் நாட்டில் நிகழ்ந்த சம்பவங் களால் பெற்ற அனுபத்தையும் சேர்த்துக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் தேசிய முதலாளித்துவத்தின் சேவைகளைப் பற்றிக் கவனிக்காமல் பாட்டாளி வர்க்கம் எந்த வழியில் நடக்க வேண் டும், என்பதைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். அந்த வழியில் தொழிலாளர்கள்ையும், விவசாயிகளையும் ஒன்று படுத்தித் தேசப் பற்றுள்ள படிப்பாளிகளுடன் சேர்த்து ஓரணியில் திரட்டி அந்தச் சக்தியின் மூலம் தேசிய முதலாளித் துத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் உள்ள மாறுபாடு களைப் பெருக்கி அவற்றின் ஒற்றுமையைக் குலைத்து விட்டு புரட் சிக்கு வழிவகுக்க வேண்டும்.
வர்க்கங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் பின்வரும் ஐந்து கொள்கைகளை நாம் கடடாயம் முன்னிறுத்திச் செயலாற்ற வேண்டும்.
1. நமது கட்சியின் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்கத்தை
வழிநடத்துவது.
2. தேசிய விடுதலைப் புரட்சியைச் சோஷலிஸத்தின் வழியில்
செல்வதற்குரிய வாயிலாகப் புரிந்து கொள்வது.

11
3. தேசிய முன்னணியின் முக்கிய இயக்கமாகக் கருதி, தொழி லாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தோழமை யைக் கட்டி எழுப்புவ்து.
4. 'ஒற்றுமையின் ஊடே எதிர்ப்பு' என்ற கொள்கையைக் கையாண்டு பொதுவான கோரிக்கைகளை வென்றெடுக்க ஒற்றுமைப்பட்டு, தொழிலாளர்களுடைய உயர்வுக்கு வழி வகுப்பதற்காகப் போராடுவது என்ற எண்ணங்கள் உடை வயர்களாக இருக்க வேண்டும்.
பலம்பொருந்திய தொழிலாளி வர்க்கக் கட்சி ஒன்றைக் கட்டி எழுப்பித் தத்துவரீதியாகவும் செயல் ரீதியாகவும் புரட்சிகர மாசு இயங்கச் செய்வது.
ஒற்று மைப்படும் பொழுதும் கூட்டுச் சேரும் பொழுதும் பாட்டாளி வர்க்கம் குதிரையாவும், பணக்கார வர்க்கம் குதி ரைமேல் சவாரி செய்பவனுகவும் ஆகிவிட்டால் அது ஒற்றுமை யாகாது. பதிலாகப் பாட்டாளி வர்க்கத்தையும் புரட்சியையும் பணயம் வைத்ததாக முடியும். ஆகையால் வெகுஜனப் போராட்டங்களை வளர்க்க வேண்டியதோடு அந்தப் போராட் டங்களினூடே தேசிய முதலாளித்துவத்தோடு நட்பும் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பாட்டாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ ஜனநாயகக் கருத்துக்களுக்குப் பதிலாகச் சோஷலிஸக் கருத்துக்களை ஊட்ட வேண்டும்.
பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் மருத்துவச்சி ஆகக் கூடாது. முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகப் போரா டாமல், வேலை நிறுத்தங்களைத் தேசத் துரோகம் என்று குற்றஞ் சாட்டி புரட்சி என்பதை வேடிக்கையாக்கி, முதலாளித்துவத் தின் பாதுகாவலர்களாக நடந்துகொள்ளாமல், நமது வர்க்கத் தின் கோரிக்கைகளைச் சிறிது சிறிதாக வென்று எடுப்பதற்காக நமக்குக் கைவந்த போராட்ட முறைகளைப் பயன்படுத்த வேண் டும். அப்படிச் செய்யாவிட்டால் பாட்டாளி வர்க்கத்தில் உள்ள புரட்சிமனம் படைத்த கம்யூனிஸ்டுகளை இழக்க வேண்டி நேரும். அத்தோடு பாட்டாளிகள் மனத்திலும் புரட்சி பற்றிய எண்ணங்கள் மறந்து விடவும் கூடும்.
ஜனநாயகப் புரட்சிபற்றிப் பேசும் தற்காலத்தில், ஏகாதி பத்தியத்திற்கும், நிலப் பிரபுத்துவத்திற்கும் எதிராகப் புரட்சி நடத்த வேண்டும் என்பதை மனத்தில் இருத்திக் கொண்டுதான், தேசிய முதலாளித்துவத்துடன் கூட்டுச் சேர்வது பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் வலது சாரிகளின் சந்தர்ப்பவாதத்திலிருந்து மீள முடியும்.
தமிழில்: கி. இராமமூர்த்தி.

Page 8
பிரேசில் புரட்சியின் LJ fijő5ój,
‘மக்கள் தினசரி’ தலையங்கம்
அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள், பிரேசில் பிற்போக்கு வாதிகளை இராணுவச் சதி நடத்தத் தூண்டியதன்மூலம், ஜன் நாயகரீதியாக அமைக்கப்பட்ட ஜே. அ. ஒ. கெளலாட் அரசாங் கத்தைக் கவிழ்த்து ஓர் இரணவ சர்வாதிகாரத்தை நிறுவியுள் ளனர். சதி செய்து ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவக் கும் பல், நாடு முழுவதும் ஓர் அடக்கு முறையைத் தொடங்கியுள் ளது. அரசியல், இராணுவ நபர்கள் பெரும் தொகையினர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான் தேசபக்தர் கள் கைது செய்யப்பட்டு, கொல்லப்பட்டனர். பரவிலாக பிரே சிலிய மக்கள் இரத்தத்தினுல் ஞானஸ்நானம் பெறுகின்றனர்.
இந்தச் சதிக்கு வாஷிங்டன்தான் சிருஷ்டிகர்த்தா என்பது தெளிவு. அமெரிக்க ஆளும் வர்க்கம் கெளலாட் அரசாங்கத் தைப்பற்றிய தமது வெறுப்பை என்றும் மறைத்ததில்லை. அது மட்டுமல்ல; இவர்கள் நிரந்தரமாகச் சதி செய்த பிரேசில் கும்பலை ஆதரித்து வந்துள்ளனர். 1962-ன் இறுதியில் அமெரிக்க பிர சார இயந்திரம், கெளலாட் அரசாங்கத்தை வீழ்த்தி அதனி படத்தில் ஓர் இராணுவ ஆட்சிக்கான கிளர்ச்சியை வாஷிங்டன் எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளது. அண்மையில், வாஷிங்டனுடன் நெருங்கிய தொடர்புள்ள இரகசிய "புரட்சிக் குழு' ஒரு வருட காலமாகச் செய்த முயற்சியின் பலன்தான் இந்தச் சதி எனவும் கூறியுள்ளது. இந்த ஆயுதக் கிளர்ச்சி ஆரம்பித்து, சதிகாரர் கள் நாட்டை பூரணமாகத் தமது அதிகாரத்திற்குக் கொண்டுவரு முன்னரே, அமெரிக்க ஜனதிபதி லின்டன் ஜோன்சனும், அர சாங்கக் காரியதரிசி டீன் றஸ்க்கும், இராணுவக் குழுவை வர வேற்றும், ஆதரித்தும் பிரகடனம் செய்தனர். ஆதலால் பிரேசி வில் இராணுவச் சதி நடப்பதற்குக் காரணகர்த்தாக்கள் அமெ ரிக்க ஏகாதிபத்தியவாதிகள்தான் என்ற குற்றச்சாட்டை அவர்க ளால் மறுத்துக் கூறமுடியாது. கெளலாட் அரசாங்கம் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒர் முட்டுக்கட்டையாக இருந்தது. ஏர்னென்றல் பிரேசிலிய மக்களின் விருப்பப்படி அந்த அரசாங்கம் ஒர் அளவு மக்களின் தேசிய ஜனநாயகக் கொள்கைகளை அனு சரிக்கும் வழிகளைக் கடைப்பிடித்தது. தனது விதேசியக்

13
கொளகையில், ஏனைய நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடாமை, சுய நிர்ணயம் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்தது. கியூபா வுடன் ஸ்தானிகர் தொடர்புகள் ஏற்படுத்தியது. உள்நாட்டுக் கொள்கையில் விதேசிய மூலதனத்தைக் கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகள் எடுத்து நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய் தது. உதாரணமாக, அமெரிக்க ஹன்னு கார்ப்பரேஷனிட மிருந்த சுரங்க உரிமைகளை மறுத்தது, விதேசிய முதலாளிகள் வெளிநாடுகட்கு பணம் அனுப்புவதைக் கட்டுப்படுத்தியது, பெற் ருேல் இறக்குமதியை அரசாங்கம் பொறுப்பேற்பதாகப் பிரகட னம் செய்தது, அதிகப்படியாக அமெரிக்க முதலாளிகட்குச் சொந்தமான எண்ணெய் சுத்தம் செய்யும் ஸ்தலங்களை தேசியமய மாக்கத் தயாராகியது. அத்துடன் விவசாய சமூக சீர்திருத்தங் களில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்க ஏகாதிபத் திய வாதிகளினதும், உள்நாட்டு பெரும் முதலாளிகளினதும் சுரண்டல் உரிமைகளைப் பாதித்தது. இதன் காரணமாக, கெள லாட் ஆட்சிக்கு வந்தபின், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஏழு தட வைகள் மந்திரி சபையில் குழப்பங்களைத் தூண்டிவிட்டுள்ளது. இராணுவச் சதியைத் தூண்டிவிட்டுள்ளது. இறுதியில் ஆயுதப் புரட்சிச் சதியைத் தூண்டிவிட்டு கெளலாட் ஆட்சியைக் கவிழ்த் தது.
ஏப்ரல் மாதம் மூன்ரும் திகதி வாஷிங்டன் 'ஈவினிங் ஸ்டார்’ என்னும் பத்திரிகையில் றியே-டி ஜனேரே யிலிருந்து ஓர் செய்தியைப் பிரசுரித்தது. இதில் * மிகவும் கவனத்திற்கு உள்ள ஒரு பிரச்சினைகள்-சர்வதேசிய ரீதியில்-காஸ்ட்ருேவின் கியூபா பற்றிய பிரேசில் கொள்கை-தேசிய ரீதியில், திரு. கெளலாட் அவர்களால் புகுத்தப்பட்ட பிரச்சினைக்குரிய சட்டம் , இங்குள்ள, வெளிநாட்டுக் கம்பெனிகள் பணம் வெளியனுப்பு வதுபற்றியது. புதிய அரசாங்கம் இவ்விரு பிரச்சினைகளையும் அமெரிக்காவுக்குச் சாதகமாகத் தீர்த்துவைக்கும் எனத் தெரி கிறது" என்று இச்செய்தி ஒழிவு மறைவின்றிக் கூறுகிறது.
அமெரிக்க வியாபாரக் காரியதரிசி லூதர்ஹெர்ஜஸ் ஏப் ரல் ஏழாம் திகதி, பிரேசில் ஜனதிபதி கெளலாட்டைப் பதவி நீக்கம் செய்தது, பிரேசிலில் அமெரிக்க வர்த்தக முதலீட்டு வச திகட்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கி உள்ளதெனப் பல்லிளித் துக் கூறியுள்ளார்.
இந்தச் செய்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏன் \கெளலாட் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் கடந்த இரு வருடங்களாகச் செயல்பட்டதென்பதைத் தெளிவாகக் காட்டு கின்றன.
அம்ெரிக்க ஏகாதிபத்தியம், லத்தீன் அமெரிக்கப் பிரதே சத்திலுள்ள மிகப்பெரிய நாடான பிரேசிலைத் தனது பூரண ஆதிக் கத்தின் கீழ்க் கொண்டுவர பலகாலம் முயன்று வந்திருக்கின் . 1960-ம் ஆண்டுத் தொடக்கத்தில் அமெரிக்க அரசாங்க, தனியார் துறை முதலீடுகள் 2,500,000,000 டாலர்களாகும்.

Page 9
14
பிரேசிலின் பொருளாதாரத்தில் அமெரிக்க மூலதனம் வெகு வாகப் பரந்துள்ளது. பிரதான வங்கிகள் அவர்கள் கையில்; பிரதான தொழிற்சாலைகளில் அவர்களின் ஆதிக்கம் அதிகம். பிரேசிலின் மிகமுக்கிய உற்பத்திப் பொருள்களான, கோப்பி, பருத்தி ஆகியவற்றின் வியாபாரத்துறையில் ஈடுபாடுண்டு.
புள்ளிவிபரங்களின்படி 1947 தொடக்கம் 1960 வரை பிரே சிலில் செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் இலாபம் இரண்டு டொலர் வீதம்கிடைத்திருக்கிறது.
தற்கும் மேலாக அமெரிக்கா தொடர்ச்சியாக நஷ்டஈடு ஏதுமின்றி, பிரேசிலிலிருந்து ஏராளமான தங்கமும் வைரமும் கடத்திச் சென்றுள்ளது. பிரேசிலில் தனது சுரண்டலைத் தொட ரவும் பாதுகாக்கவும் லத்தீன் அமெரிக்க மற்றும் உலக ஆக் கிரமிப்பிற்கு ஒர் கருவியாகப் பாவிக்கவும், அமெரிக்கா தனது தாளத்திற்கு ஆடக்கூடிய ஓர் ஆட்சியை நிறுவ முயற்சி செய் துள்ளது.
ஆஞல் பிரேசிலின் பெரும் பகுதியான மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையையும் அடக்கு முறையையும் சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அமெரிக்க ஏகாதிபத் திய அடிமை வாழ்விலிருந்து தேசிய விடுதலையையும் சுதந்திரத் தையும் பாதுகாப்பதை அவர்கள் வற்புறுத்துகின்றனர். பிரே சிலின் தேசபக்திமிக்க ஜனநாய்க சக்திகளுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் அடிவருடிகளான பிரேசி லின் பிற்போக்குக் கும்பலுக்குமிடையே கடுமையான போராட் டம் நடந்து வந்திருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளும் பிரேசிலின் பிற் போக்கு வாதிகளும் பிரேசிலிய மக்களின் தேசிய, ஜனநாயக, புரட்சிகர இயக்கத்தைத் தடைசெய்யவும், நசுக்கவும் தம்மால் இயன்றதெல்லாம் செய்துள்ளனர். மாறி மாறி தேசியம் கொஞ்சமேனும் பிரதிபலித்த அரசாங்கங்களை, ஏக்ாதிபத்திய வாதிகள் எந்தவகையிலாவது ஒழித்துக்கட்டிவிடுகிருர்கள், யுத் தத்திற்குப் பின் பதவியேற்ற ஆறு'ஜனதிபதிகளில் நான்கு பேர் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளாலும் அவர்களின் அடிவருடி களாலும் வீழ்த்தப்பட்டவர்கள்.
1945-ம் ஆண்டு அமெரிக்க, பிரேசிலிய பிற்போக்கு வாதி கள் ஒரு இராணுவச் சதி நடத்தி வர்காஸ் அரசாங்கத்தை வீழ்த்தினர். 1954 ஆகஸ்ட் மாதத்தின் அமெரிக்காவினுல் தூண்டப்பட்ட பிற்போக்கு இராணுவத் தளபதிகள் இன்னு மொரு சதி முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக, 1950-ம் ஆண் டுத் தேர்தலில் மறுபடியும் பதவிக்கு வந்த வர்காஸ் தற்கொலே செய்ய நேர்ந்தது. A.
1961 ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, பிரேசிலிய பிற்போக்கு வாதிகள் ஜஞதிபதி குவாட்ருேசை இராஜிமைாச் செய்யப்பண் னினர்.

15
ஆனல் அமெரிக்காவின் இந்தக் கொலைகார நடவடிக்கைகள் தாம் விரும்பியபடி பிரேசிலிய தேசிய ஜனநாயக இயக்கத்தைத் தடைசெய்யவில்லை. கெளலாட் அரசாங்கம் மக்களின் கோரிக் கைகட்கிணங்கி நாட்டின் நன்மைக்கான தனது கொள்கைகளைக் கொண்டு நடத்தியது. அதன் பின்னதாக அமெரிக்க ஏகாதிபத் தியம், பிரேசிலில் உள்ள பிற்போக்குச் சக்திகளை ஒர் ஆயுதக் கிளர்ச்சி செய்ய இராணுவ சர்வாதிகார ஆட்சியை ஏற் படுத்தி, பாஸிஸ் அடக்குமுறை ஆட்சி நடத்தி, பிரேசிலிய மக் களின் தேசிய ஜனநாயக இயக்கத்தை முறியடிக்கத் துணிந்தது. எதிர்ப்புரட்சிச் சதியை பின்னல் நின்று நடத்தியதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், பரவலாக லத்தீன் அமெரிக்க உலகப் பொது மக்களினல் கண்டிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள முற்போக்கு மக்களும் நாடுகளும், இதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண் டிய அவசியத்தை வற்புறுத்தினர்.
பிரேசில் நிகழ்ச்சிக்ளிலிருந்து வத்தீன் அமெரிக்க் மக்களும்,
உலக மக்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் யாவை?
முதற் பாடம்
அமெரிக்க ஏகாதிபத்தியம் லத்தீன் அமெரிக்க மக்களின் பரமவைரி என்பதும், இந்தப் பயங்கரமான எதிரியைப்பற்றி எந்தவித சந்தேகமும் இருக்கக்கூடாது என்பதுமே முதல் பாடம்.
செளலாட் அரசாங்கம் நாட்டின் நன்மையைக் கருதி சில சமூக சீர்திருத்தங்களை மட்டுமே செய்ய முனைந்தது. அமெரிக்க காதிபத்தியத்திற்கு இது பொறுக்க முடியவில்லை. வாஷிங்டன் ஆட்சிக் குழு, இந்த அரசாங்கத்தை வீழ்த்தக் கங்கணம்கட்டி யது. லத்தீன் அமெரிக்க மக்களின் தேசிய விடுதலே, அமெரிக்க ஏகாதிபத்தியச் சுரண்டலுடன் ஒருபோதும் ஒத்துவராது என் 1.து தெட்ட த் தெளிவு, லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க முதலீடு 10,000,000,000 டாலர்களுக்கு மேல் உள்ளது. அப் பிரதேசத்தின் சகல பாகங்களிலும் அமெரிக்கப் பெரும் முதலாளி கள் பெரும் தோட்டங்கள், தொழிற்சாலைசள் நிர்வகிக்கின் றனர். இவர்கள் லத்தீன் அமெரிக்காவிலிருந்து பலவகையில் உறிஞ்சி ச் செல்லும் இலாபம் வருடத்திற்கு 2,000,000,000 டாலர்கள் ஆகும். அமெரிக்கச் சுரண்டல் இல்லாத லத்தீன் அமெரிக்க நாடு இல்லை என்றே கூறலாம். அமெரிக்க ஆட்சி யாளர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு, 'முன்னேற்றம்’, "சீர்திருத்தம்' ஆகியவற்றிற்கான உதவிகள் செய்வதாகப் பசப்புகின்றனர். ஆளுல் உண்மையில் லத்தின் அமெரிக்க நாடு களில் ஓர் சிறிய மா ப்றத்தை-முன்னேற்றத்தை அவர்களால் சகிக்கமுடியாது. லத்தீன் அமெரிக்க நாடுகள்பற்றி அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் கொள்கை, எல்லாவிதத்திலும் அவர் கள்மேல் தமது ஆதிக்கத்தை நீடிப்பதும், இறுகச்செய்வதும் அதன்மூலம் தமது மனம் திருப்தி அமையும் வண்ணம் தொ

Page 10
15
டாந்து இந்தச் செல்வம் செழிக்கும் நாடுகளைக் கொள்ளை அடிப் பதும், சுரண்டுவதுமே இவர்கள் நோக்கமாகும். இதனுல்தான் எந்த ஒரு லத்தீன் அமெரிக்க நாடாவது தனது சுதந்திரத்தைப் ாதுகாக்க விரும்பினல், தனது தேசியநலன்களைப் பாதுகாக்க & சமூக மாற்றங்களை ஏற்படுத்த விரும்பிஞல், அதன் பயணுக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பைச் சேகரிக்க நேரிடும். நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் தமது தேசிய நலன்களைப் பாதுகாக்கவிரும்பிய தற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் முறியடிக்கப்பட்ட அர சாங்கங்கள் கணக்கிலடங்கா. கெளலாட் அரசாங்கம் இந்தத் தொடரின் அண்மையில் ஏற்பட்ட உதாரணமாகும்.
இதுவரை வத்தீன் அமெரிக்காவில் நடந்த சம்பவங்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இரண்டு பாதைதான் உள்ள தென்பதை எப்போதோ தெளிவாக்கியுள்ளன. ஒன்று நிக்கா குவா அல்லது டொமினிக்கன் குடியரசைப்போல் அவர்கள் தம்மை, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடிகளை ஆட்சி செலுத்தவிட்டு, அமெரிக்காவிஞல் அடிமைப் படுத்தப் பட்டு, சுரண்டப்பட்டு வாழவேண்டும். அல்லது கியூபாவைப் போல் அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து தம்மை விடுவித்து, அமெரிக்கத் தலையீட்டை எதிர்க்கவேண்டும். இதில் மூன்ருவது மார்க்கம் ஏதுமில்லை. லத்தீன் அமெரிக்க மக்கள், அமெரிக்சு , ஏகாதிபத்தியத்துடனும் அதன் ஆதரவாளர்களுடனும் எந்த வித சமரசத்திற்கும் வரமுடியாதென்பதற்கு பிரேசில் சம்பவங் கள் நல்ல ஆதாரம், லத்தீன் அமெரிக்க மக்கள், எந்த நாட்ட வராயினும் அடிமைகளாய், சுரண்டப்படுபவர்களாய் வாழ விரும்பாது உண்மையான முன்னேற்றத்தையும் சுபீட்ச வாழ் வையும் அடைய விரும்பினுல் துணிகரமாக அமெரிக்க ஏகாதி பத்தியத்தையும் அதன் கைக் கூலிகளையும் எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
இரண்டாவது பாடம்
லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள தேசிய ஜனநாயக சக்தி கள், மற்றைய நாடுகளைப்போன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தி ஞல் அடக்கப்பட்டு அடிமைப்படுத்தபபட்டு இருப்பவர்கள் , அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் அதன்அடிவருடிகளினதும் ஆயு தம் தாங்கிய அடக்குமுறைகளுக்கெதிராக எப்போதும் தயாராக ஈவிரக்கமின்றி துணிவுடன், அவசிய மேற்பட்டால் ஆயுதம்-தாங் கியும் போராடத் தயாராக இருத்தல் வேண்டும் என்பது இரண்
டாவது பாடம்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் தலையிடும்போதும் ஆக்கிரமிக்கும்போதும் எப்போதும் இரு முக எதிர்ப்புரட்சி உபாயங்களைக் கையாண்டுள்ளது, ஆணுல் இராணு வத்தலையீடு, ஆயுதம் தாங்கிய அடக்குமுறை இராணுவச் சதி ஆகியவைதான் இங்குள்ள தேசிய ஜனநாயக இயக்கங்களே மாசு

17
படுத்த இவர்கள் பழச்கப்பட்டமுறைகள். அந்தந்த நாடுகளி லுள்ள பிற்போக்குவாதிகளை ஆதரித்து, எல்லாவகையிலும் மக்க ளின் புரட்சிகர இயக்கங்களை நசுக்குவதற்கு உதவுவதோடு அமெ ரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ச்சியாகவும், நேரடியாகவும் ஆயு தம் தாங்கிய அ1 க்குமுறையையும் தலையீட்டையும் தயார் செய்து அவிழ்த்துவிட்டிருக்கின்றது. இரண்டாவது உலக யுத்தத் தின் பின் 14 லத்தீன் அமெரிக்க நாடுகளில் 30 க்கு மேற்பட்ட ஆயுதம்தாங்கிய கிளர்ச்சி அல்லது இராணுவச்சதிகளை அது தூண்டிவிட்டுள்ளது. எந்த அரசாங்கம் ஆனலும் சரி, தானே ஸ்தாபிக்க உதவியதானுலும் தன்னுடன் முரண்பட்டதும்,அதைப் பலாத்காரமாகக் கவிழ்த்துவிடுகின்றது. ‘அடிபணிபவர்கள் காப்பாற்றப்படுவர். சொற்படி கேளாதவர் அழித்தொழிக்கப் படுவர்" என்பதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் லத் தீன் அமெரிக்கக்கொள்கை. உலகத்தின் மறு பாகங்களிலும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் விடுதலைக்காகப் போரிடும் புரட்சிகர மக்களுக்கெதிராக பலாத்காரத்தையே பாவிக்கின்றது. இவர் கள் கொங்கோவிலும் (லியோபொட்வில்) தென் வியட்நாமிலும் ஏற்படுத்திய ஆயுதம்தாங்சிய தலையீடுகள் இந்தவகையில் குறிப் பிடத்தக்கவை.
இத்துறையில் சீன மக்களுக்கு நேரடி அனுபவம் உண்டு. 1945-ம் ஆண்டு யப்பானுக்கெதிரான தற்காப்பு யுத்தத்தின் பின், நாடு முழுவதும், சமாதானத்தையும், ஜனநாயகத்தையும் ஆவ லுடன் எதிர்பார்த்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்ந நோக்கங்கள் நிறைவேறப் பெரிதும் முயற்சிசெய்தது. ஆனல் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் சீனுவிலுள்ள அவர்களின் அடிவருடிகளான குமின்டாங் பிற்போக்குவாதிகளும், சீன மக்க ளின் புரட்சிகர இயக்கங்களை பலாத்காரமாக ஆயுதமூலம் முறி யடிக்கக் கங்கணம்கட்டினர். இந்தச்சந்தர்ப்பத்தில் சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி, நாடு பூராவும் மக்களை சமாதானத்திற்கும் ஜன நாயகத்திற்குமான போராட்டத்தில் தலைமைதாங்கிச் சென்றது. அதேவேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், குமின்டாங் பிற்போக்கு வாதிகளினதும் இராணுவ அடக்குமுறைகளை எதிர்த் துப்போராட, புரட்சிகர ஆயுதம் ஏந்த தனது சக்தியைப் பெருக் கும் முயற்சியில் ஈடுபட்டது. புரட்சிகர மக்கள், ஏகாதிபத்திய வாதிகளினதும் பிற்போக்குவாதிகளினதும் அடக்குமுறையையும், பலாத்காரத்தையும் எதிர்த்துப் போராட ஆயுதம்தாங்கத் தயா ராயிருக்கவேண்டும் என்று தோழர் மா ஒ சே துங் அன்று சொன் குறர். மேலும் அவர் கூறியதாவது; 'மற்றவன் தன் கையில் எதையாவது வைத்திருப்பதை நாம் கண்டால், நாம் சற்று ஆராய் தல் வேண்டும். அவன் கையில் என்ன இருக்கின்றது? வாள் களா? வாள்கள் எதற்கு? கொல்வதற்கு, அவன் தனது வாள்களை யாரைக் கொல்லப்பார்க்கிருன்? மக்களை ! இந்த விபரங்களை ஆராய்ந்ததும் மேலும் அலசி ஆராய்தல் வேண்டும்-சீன மக்களுக் கும் கரங்கள் உண்டு. அவர்கள் வாளைக் கையிலேந்தமுடியும். கையில் வாள் இல்லாவிடில் ஒர் பதில் ஆயுததத்தை அவர்களால் உபயோகிக்க முடியும். சீன மக்கள் இந்த உண்மையை நீண்டநாள் ஆராய்ச்சியின் பின் தெரிந்துகொண்டனர். யுத்தத்த ளபதிகள்

Page 11
18
நிலப் பிரபுக்கள், உள்நாட்டுக் காடையர்கள், கெட்ட துரைமார், ஏகாதிபத்தியவாதிகள் எல்லார் கையிலும் வாள் இருக்கின்றது. கொல்வதுதான் அவர்கள் நோக்கம். மக்கள் இதை உணர்ந்து விட்டனர். ஆதலால் அதேமுறையை அவர்களும் கையாளத் தயார். , இந்த முறையில் தயாராயிருந்ததினுல்தான் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அதன் சீன அடிவருடிகளான குமின் டாங் பிற்போக்குவாதிகளும் சீன மக்களின் புரட்சியைத் தடுக்கத் தமது வாள்களைத் தூக்கியபோது, சீன மக்கள் தாமும் வாளேந் திப் போரிட முடிந்தது. நீண்டதோர் ஆயுதப் போராட்டத்தின் பின் சீன மக்கள் தமது எதிரிகளைத் தோற்கடித்தனர். புரட்சி யின் மாபெரும் வெற்றியைக் கண்டனர்.
கியூபா மக்கள் இந்த உண்மையை உணர்ந்தனர். கடின மான ஆயுதப் போராட்டத்தின் பின், கியூப வில் அமெரிக்க ஏகாதிபத்திய தாசனன பட்டிஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்த் து, உண்மையான விடுதலையையும். தேசிய சுதந்திரத்தையும் பெற் றனர். புரட்சியின் வெற்றிக்குப்பின் கியூபா மக்கள் ஆக்கிரமிப் புக் கெதிராக ஆயுதப் போராட்டம் நடத்துவதென முடிவு கட்டி னர். சகல நாட்டு மக்கள் கையிலும் ஆயுதம்கொடுத்து புரட்சியின் பலன்களைப் பாதுகாத்து மேலும் மேலும் அமெரிக்க ஏகாதிபத்' தியத்தின் ஆக்கிரமிப்பையும், இராணுவத் தலையீட்டையும் முறி யடித்தனர். கியூபா புரட்சியினல் ஆகர்சிக்கப்பட்டு, உற்சாகப் படுத்தப்பட்டு, மேலும் பல லத்தீன் அமெரிக்க மக்கள், அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தினதும், அதன் அடிவருடிகளினதும் ஆயுதம் தாங்கிய அடக்குமுறையை, புரட்சிகர ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் எதிர்க்கவேண்டுமென்பதை உணர்ந்து ஒருவர்பின் ஒருவராக ஆயுதப்புரட்சிப் பாதையில் செல்கின்றனர்.
லத்தீன் அமெரிக்க தேசிய ஜனநாயகப் புரட்சியின் வெற் றிக்கு இதுதான் நம்பிக்கை ஊட்டுகிறது.
பிரேசிலிற்கு இக்கதி நேரக் காரணம் கெளலாட்டும் அவரை ஆதரிக்கும் அரசியல் சக்திகளும் மக்களினுல் தூண்டப்பட்டு சில தேசிய தேவைகளைக் கடைப்பிடித்த அதே வேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் அதன் அடிவருடிகளும் காட்டுமிராண் டித் தனத்தைப் போதியளவு புரிந்துகொள்ளாமல் ,உஷா ராயிருக் கத் தவறியதுதான். முக்கியமாக அவர்களிடம் நம்பிக்கைக்குரிய இராணுவப் படையும் இருக்கவில்லை. மக்கள் மீதும் பூரண நம் பிக்கை வைக்கவில்லை. ஆதலால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், பிரேசிலிய பிற்போக்கு வாதிகளும், இராணுவச் சதி நடத்திய போது அதை வெற்றிகரமாக முறியடிக்கத் தவறிவிட்டனர்.
இந்தப் பிரேசிலிய துயரச் சம்பவம், இரத்தத்தினுல் அண்மை யில் எழுதப்பட்ட ஒர் பாடம். அமெரிக்க ஏகாதிபத்தியவாதி களும் அதன் அடி வருடிகளும் தமது பலாத்காரமான, ஈவிரக்க மற்ற அடக்குமுறைகளை துரிதப்படுத்தும் வேளையில், நவீன திரிபு வாதிகள் உலகத்தின் அடக்கப்பட்ட மக்களுக்கும் நாடுகளுக்கும் பிரேசில் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட ‘சமாதான

19
பரிணுமம்' பற்றி பாடம் சொல்கின்றனர். இதைச் சொல்வதன் மூலம் இவர்கள் ஒர் மாயையைத் திணிப்பதோடல்லாது ஓர் பெரும் பாதகமே செய்கின்றனர். பலாத்காரமான எதிர்ப்புரட் சியை, பலாத்காரப் புரட்சியினுல்தான் தோற்கடிக்க முடியும். இது எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருத்தமான உண்மை. இரண் டாவது ஹவான பிரகடனம் பின்வருமாறு கூறுகின்றது; "புரட்சி என்பது சரித்திரம். புதிய உயிர் பிறப்பதற்கு உதவும் டாக்டர் போன்றது. அவசியமேற்பட்டாலன்றி போர்செப்ஸ் என்னும் பிரசவ ஆயுதத்தைப் பாவிப்பதில்லை. அடிமைப்படுத்தப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்கு சிறந்த வாழ்வுக்கான நம்பிக்கையை ஊட்டும் முயற்சிதான் இது' பிரேசிலின் துயர் மிகு சம்பவம் இதன் உண்மையை எதிர் மறையாக மறுபடியும் நிரூபித்துள்ளது. "சமாதான பரிணுமம்' என்ற கொள்+ை யின் பங்கலோட்டுத் தனத்தை அம்பலப்படுத்த புதிய உதாரணத்தைத் தந்துள் ளது.
மூன்ருவது பாடம்
தேசிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கும், தேசிய, சோஷலிச விடுதலை அடைவதற்கும் லத்தீன் அமெரிக்காவின் நசுக் கப்பட்ட மக்களும் நாடுகளும், சகல தேசபக்த ஜனநாயக சக்தி களை ஒன்று திரட்டிய ஓர் பரந்த தேசிய ஜனநாயக ஐக்கிய முன் னணி அமைத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அடி வருடிகளுக்குமெதிராக துணிகரமாகப் போராட வேண்டுமென் பது பிரேசிலிய நிகழ்ச்சிகளிலிருந்து கற்றுக்கொண்ட மூன்ருவது
List L– Lost G5ub.
இரண்டாவது ஹவான பிரகடனம் தவறின்றிப் பின்வருமாறு கூறுகின்றது;- **கணக்கிலடங்காத அதிகப்படியான மக்களை, ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப்போராட்டத் தில், விடுதலை யின் இலட்சியத்திற்காக ஒன்று திரட்ட முடியும். தொழிலாளிவர்க்கம், விவசாயிகள், புத்திஜீவிகள், குட்டி பூர்சுவா (சிறு முதலாளிகள்) மிக முற்போக்கு எண்ணமுள்ள கேசிய பூர் ஷ்வா (தேசிய முதலாளிகள்) சகலரினதும் முயற்சியும் இத்துறை யில் ஐக்கியப்படுகின்றது. ஒன்றுபட்டால் இந்தச்சக்திகள் மக்க ளின் மிகப்பெரிய தொகையினர் பெரும் சமுக சக்திகளைத் தம்முள் கொண்டவை. ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும், நிலப்பிரபுத்துவ பிற்போக்கையும், துடைத்தெறியும் சக்திவாய்ந்தவை. பழைய புரட்சிகர மார்க்சிஸவாதி முதல், நேர்மையுள்ள கத்தோலிக்கன் வரை, யாங்கி (அமெரிக்க) மூலதனத்திற்கும் நிலப்பிரபுக்களுக் கும் அனுதாபம் இல்லாதவர்கள் என்ற காரணத்தால், இவர்கள் சகலரும் தோளோடு தோள்நின்று, இந்தப் பரந்த இயக்கத்தில் தமது நாட்டின் நன்மைக்காக, தமது மக்களின் நன்மைச்காக அமெரிக்காவின் நன்மைக்காகப் போராட முடியும், போராட வேண்டும்.”*

Page 12
20
லத்தீன் அமெரிக்க நாடுகளில், அமெரிக்க ஏகாதிபத்திய அடக்கு முறைக்கு, ஆதிக்கத்திற்கு, அடிமைப்படுத்தலுக்கு ஆளான எல்லா நாடுகளையும்போல், பரந்த மக்கட் பகுதியினர் அமெரிக்க ஏகாதிபத்திய அடக்கு முறையை, அடிமைப்படுத்தலை எதிர்க்கின்றனர். தமது தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்க வும், பாதுகாக்கவும் விரும்புகின்றனர். ஒரு சிறிய நிலப்பிரபுக்க ளும், (கொபுரு டோர்) பெரு முதலாளிகளும் மிகவும் பிற்போக்கு வாதிகளாதலால், தமது தேசீய உரிமைகளை விற்கவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மைகளாக வாழவும், தமது மக்களின் பரந்த பகுதியினரை எதிர்க்கவும் தயாராயுள்ளனர். ஆதலால், தேச பக்தியுள்ள 90 விகிதத்திற்கும் மேலான மக்களை ஒன்று திரட்ட முடியும். ஒன்றுதிரட்டுவதவசியம். இவர்களை ஒன்று திரட்டி பிற்போக்கு சக்திகளைத் தனிமைப்படுத்தி அமெரிக்க ஏகர் திபத்தியத்தையும் அதன் அடிவருடிகளையும் தோற்கடிக்க முடி யும். தோற்கடிக்க வேண்டும்.
இந்த ஐச்கிய முன்னணியை ஒருமைப்படுத்தி வளர்ப்பதில் முக்கியமானது பரவலாக வெகு ஜனங்களைத்தட்டி எழுப்புவ தாகும். இந்த ஐக்கிய முன்னணி சக்தியுள்ள ஓர் தலைமையைக் கொண்டதாக இருத்தல் அவசியம் இத் கலைமை ஜனத்தொகை யில் மிகக் கூடிய தொகையினரான தொழிலாளி விவசாயி ஐக்கி யத்தின் அடிப்படையில் எழுந்ததாக இருத்தல் வேண்டும். லத் தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய-ஜனநாயகப் புரட்சியில் விவசா யப் பிரச்சினை ஒர் முக்கிய பிரச்சினை. ஆதலால் விவசாய இயக் கங்களை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்க வேணடும். தேசிய-ஜனநாயகப் புரட்சியின் முக்கிய சக்தியாக அவர்கள் வளர உதவிசெய்தல் வேண்டும். ஆதலால்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலப்பிரச்சினையைத் தீர்க்கும் மார்க்கம் அடங்கிய தேசீய ஜனநாயகப்புரட்சிகர வேலைத்திட்டமின்றி தேசிய ஜன நாயக ஐக்கிய முன்னணி பை ஒருமைப் படுத்த முடியாது; தேசிய ஜனநாயகப் புரட்சியின் வெற்றிக்குத் தலைமை தாங்கவும் (ւpւգաո Ցl.
பிரேசில் தேசிய ஜனநாயகப்புரட்சிகர இயக்கம் குறிப்பாக சக்தியுள்ள தலைமையுடன் பரந்த ஐக்கிய முன்னணி இல்லாத தல்ைதான் பின்தங்கியுள்ளது. இவ்வியக்கம் பரந்த விவசாய மக்க ளையும், ஏனைய மக்கட் பகுதியினரையும் உண்மையாகவே தட்டி எழுப்பி ஒன்றுதிரட்ட வில்லை. ஆதலால், ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் ஆயுதக்கிளர்ச்சி நடத்தியபோது பலமான ஒர் எதிர்த்தாக்குதலை அதனல் ஏற்படுத்த முடியவில்லை
நான்காவது பாடம்
சகல லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களும் முடிந்தளவு பரவலான சர்வதேசிய ஐக்கிய முன்னணி ஒன்று அமைத்துக் கொள்ளவேண்டும். தமது பொது எதிரியான அமெரிக்க ஏகாதி பத்தியத்தை எதிர்த்துப் போராடவும், பொதுவான போராட்

2.
டத்தில் ஒருவரையொருவர் ஆதரிக்கவும், தமது நடவடிக்கை களை இணைக்கவும் இந்த ஐக்கிய முன்னணி அவசியம் என்பது பிரேசில் சம்பவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய கடை சிப்பாடமாகும்.
லத்தீன் அமெரிக்க மக்கள்மேல் தனது காலனி ஆதிக்கத்தை நீடிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பின் வரும் கொள்கை யைக் கடைப்பிடிக்கின்றது. கியூபாப் புரட்சியை முறியடிக்கத் தன்னலானதையெல்லாம் செய்கிறது. ஏனைய லத்தீன் அமெ ரிக்க நாடுகளில் தனது பிடியை மேலும் இறுகச்செய்து, தனது ஆக்கிரமிப்பு ஸ்தலங்களை ஸ்திரப்படுத்தி. ஏனைய லத்தின் அமெ ரிக்க நாடுகளை டொமினிக்கன் குடியரசு போன்று அடிமை நாடுகளாக மாற்றுகின்றது.
பிரேசிலிய தேசிய ஜனநாயக புரட்சிகர இயக்கத்தைத் தடைசெய்ய அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கொடூரமான அடக்குமுறைகளைக் கையாள்வதன் நோக்கம், கியூபாவுடன் தலையீடில்லாத கொள்கையைக் கையாளும் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பயமுறுத்தி தனக்கு அடிபணியச் செய்து, அதன் மூலம் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய, ஜனநாய கப் புரட்சிகர இயக்கங்களை முறியடிப்பதே.
லத்தீன் அமெரிக்காவில் எல்லோருடனும் பகைத்துக் கொண்ட பின் ஒரு நாட்டின் ஆதிக்கத்தை இழக்காது மற்றென் றைச் சமாளிக்கமுடியாது திண்டாடிக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த நாடுகளை ஒவ்வொன்ருக அடிமைப் படுத்தி இறுதியில் எல்லாவற்றையும் அடக்கியாள முயல்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த உபாயத்தைத் தெரிந்து கொண்டதால்" லத்தீன் அமெரிக்க மக்களின் பொது நன்மைக் காக லத்தீன் அமெரிக்க நாடுகள் தமக்குள் ஒர் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, ஒரு வ ை ஒருவர் ஆதரித்து, குறிப் பாக கியூபாப் புரட்சியைப் பாதுகாப்பது தங்களின் ஒவ்வொரு வருடைய முழுமுதற் கடமை என்றெண்ணிச் செயலாற்ற வேண் டுவதவசியம். அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவை ஆக்கிர மிப்பதை வன்மையாகக் கண்டிக்கவேண்டும். ஏனைய நாடுக ளின் மக்களின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கும் அமெ ரிக்கக் கொள்கையைக் கண்டிக்கவேண்டும் தம்மை ஒவ்வொரு வராக அடிமைப் படுத்தும் அமெரிக்க சூழ்ச்சியைத் தோற்க டிக்கவேண்டும். இந்த முறையில் இவர்களால், அமெரிக்க ஏகா திபத்திய ஆக்கிரமிப்பை முறியடித்து, தலையீட்டைத் தடுத்து இறுதியில் அமெரிக்கத் துருப்புகளை லத்தீன் அமெரிக்கா விலிருந்தே விரட்டியடிக்க இவர்களால் நிச்சயம் முடியும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரேசிலில் பிற்போக்கு இரா ணுவச் சக்தியைத் தூண்டிவிட்டது அதன் பலத்தைக் கூட்ட வில்ல்ை. மாருக லத்தீன் அமெரிக்காவிலும் உலகின் வேறு பாகங்களிலும் செல்வாக்குக் குன்றி வருவதையே இது காட்டு

Page 13
22
சின்றது. இன்று லத்தீன் அமெரிக்காவில் தேசிய ஜனநாயக இயக்கம் துரிதமாக வளர்கிறது; அமெரிக்க ஏகாதிபத்தியத் திற்கு எதிரான மக்கள் இயக்கம் முன்னேறுகிறது; பல நாட்டு அரசாங்கங்கள் அமெரிக்க அடக்குமுறைக்கும், பயமுறுத்தலுக் கும் விட்டுக் கொடுப்பதை மேலும் மேலும் குறைத்துக் கொள் கின்றன; அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவிக்க முனைகின்றன. வெளிப்படையாக அமெரிக்கத் தூண்டுதலினல் பிரேசிலில் ஓர் இராணுவ சதியாட்சி நிறுவப்பட்டதிலிருந்து அமெரிக்கா தனது "கோடியில் "ஒழுங்கை நிலைநாட்ட முடியாது மேலும் மேலும் கஷ்டப்படுகிறதென்பது தெளிவு.
எதிர்ப் புரட்சி இராணுவ சதியினல், பிரேசிலிய தேசிய ஜனநாயக புரட்சிகர இயக்கம் தற்காலிகமாகப் பின்வாங்க நேரிட்டாலும், பிரேசிலிய மக்களின் புரட்சிகர இயக்கத்தை எந்தப் பிற்போக்குச் சக்தியாலும் ஒழித்துவிட முடியாது. மாருக இந்த அதிர்ச்சியின் பயணுக, பிரேசிலிய மக்கள் தமது சிரத் தையை மேலும் துரிதப்படுத்தி தமது முன்னேற்றப் பாதையை மேலும் தெளிவாக்கி முன்செல்வர். அவர்கள் அரசியல், இராணுவ பலத்தை ஒன்று திரட்டி, புதிய போராட்டங்களை நடத்தி, தமது புரட்சிகர இயக்கத்தில் புதிய வெற்றிகளைக் காண்பர். லத்தீன் அம்ெரிக்க நாடுகளின் புரட்சிகர மக்கள் பிரேசிலிய சதியைப் பாடமாகக் கொண்டு, தமது சிந்தனையைத் தெளிவாக்கி, அமெரிக்க ஏகாதிபதியத்திற்கும் அதன் அடி வருடிகளுக்குமெதிராக ஐக்கிய முன்னணி அமைத்து, மேலும் தீர்மானத்துடனும், வீரத் துணிவுடனும் ஆயுதப் புரட்சியின் கனலை மூட்டி விடுவர்.
லத்தீன் அமெரிக்காவில் இன்னும் பல கியூபாக்கள்தோன் றுவது நிச்சயம்.
தமிழில்: சத்தியன்

இலங்கைப் புரட்சி பற்றிய பிரச்சினைகள் சில
விக்கர் சில்வா
கிடந்த 30 வருட காலமாக பலதரப்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கிடையில் அபிவிருத்தியடைந்து வந்த இந்நாட்டின் சோஷலிஸ் இயக்கங்களில் அன்று இருந்ததைப் போலவே இன் அவ்வபிப்பிராய பேதங்களில் சில இருந்து வருகின்றன என்பது பலரும் அறிந்த விஷயமாகும். இவ்வளவு நீண்ட கால |மாக இருந்துவந்த ஒரு பாரதூரமான கொள்கை அபிப்பிராய இந் நாட்டின் சோஷலிஸ் இயக்கம் பல குழுக் களாகப் பிளவுபட்டிருந்ததோடு, அக் கொள்கை பேதங்களும் சரித்திர பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருந் தன. இக் கொள்கை அபிப்பிராய பேதங்களுக்கு ஆரம்பத்தி லிருந்தே அதிகப்படியாக உட்டட்டிருந்த பிரச்சினை டிரொட்ஸ் |கியவாதமும் ஸ்டாலினிஸ் வாதமுமேயாகும். இவ்விரண்டு அபிப்பிராயபேதங்களையும் முன் வைத்து இந் நாட்டில் ஏற்பட்ட வாத விவாதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தது. சோவியத் நாட்டில் சோஷலிஸத்தைக் கட்டி வளர்ப்பது சம் பந்தமாக ட்ரெ ட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையில் ஏற்பட்ட அடிப்படைக் கொள்கை வேறுபாடாகும்.
இந்தக் கொள்கை வேறுபாடு ஏற்பட்ட சரித்திர காலகட் டத்தில், சர்வதேசிய அரங்கில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைக் கேற்ப உலகில் நிலைகொண்ட ஒரே சோஷலிஸ் நாடான சோவியத் நாட்டை ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் பாசிஸ் வாதிகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுவதும் நிலைநாட்டிக் கொள்ளுவதுமே உலகம் பூராவிலுமுள்ள சர்வதேச சோஷலிஸ் இயக்கத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கடமையாக இருந்தது. ஆகையினல் அக் கால கட்டத்தில் எவரும் எத்தகைய பிரயத்தனங்களில் ஈடுபட் டிருந்தாலும் அபிப்பிராய பேதங்கள் சரித்திர பூர்வமாகவே முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. அதைத் தட்டிக் கழிக்கவும் முடியாமலிருந்தது. அவ் வபிப்பிராயங்களினல் இந் நாட்டின் சோஷலிஸ் இயக்கம் பிளவுபட்டிருந்தாலும் அதனூடே மிக முக்கியமான சிந்தனைப் பரிணுமமும் அதன்மூலம் ஏற்பட் டது. ஆனல், இதன்மூலம் குறிப்பிடவேண்டியதென்னவெனில், அவ் வபிப்பிராயபேதங்களுக்கிடையில் இலங்கைப் புரட்சியின் வெற்றிக்கான முக்கிய தேசியப் பிரச்சினையான ஒன்றுகூட அவ்

Page 14
24
விவாத்ததி ஃகு உட்பட வில்லை. ட்ராஸ்கிய வாதம் அல்லது ஸ்டாலினிஸம் சம்பந்தப்பட்ட அபிப்பிராயபேதம் பற்றி இந் நாட்டு சோஷலிஸ் இயக்கத்தில் ஏற்பட்ட பெரும் விவா தத்தில் சாதாரண பொதுமக்கள் கவனம் செலுத்தவோ அல்லது ரசிக்கவோ விரும்பாததுவும் ஒரு காரணமாகும். அபிப் பிராய பேதங்களுக்கு உட்பட்டவர்கள், இலங்கைப் புரட்சியின் வெற்றியை வேகப்படுத்துவதற்குரிய செயல்களை அமைப்பதற் கான வழிவகைகளை ஏற்படுத்துவற்குரிய நடவடிக்கைகளையோ அல்லது பின்பற்றக்கூடிய தந்திரோபாயங்கள் சம்பந்தமான தூர திருஷ்டி கண்ணுேட்டங்களையோ சம்பூரணமாகவே மறந்து, மானசீக சிருஷ்டிகளையும், பிரத்தியட்ச நடவடிக்கைகள் சில வற்றையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு விவாதித்த படியால் அவ் விவாதங்கள் சாதாரண மக்களுடைய பிரச்சினை களை மறந்து, தேசியத் தேவைகளைத் தட்டிக் கழித்து நடை பெற்ற சம்பவங்களாகவே திகழ்ந்தன. இலங்கைப் புரட்சியின் எதிர் வர்க்கம் எது, நட்பு கொள்ளும் கூட்டு வர்க்கம் யாது என்பதைப் பற்றிய விவாதமே நடைபெற வில்லை. அத்துடன் அப் பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் எவரும் கொடுக் கவுமில்லை. w
ஆணுல் 1963-ம் வருடம் இந்நாட்டிலுள்ள சோஷலிஸ் இயக்கங்களுக்கிடையில் நடைபெற்றுவந்த ட்ராஸ்கிய, ஸ்டா லினிஸ் விவாதங்களை விட தேசிய ரீதியாக பல முக்கிய பிரச் சினைகள் எழுந்துள்ளன. இப் பிரச்சினைகள் இடதுசாரி இயக் கத்தினுள் ஏதாவதொரு வகையில் ஐக்கியம் ஏற்பட்டதிலிருந்தே வெளிக்கிளம்பின. இக் காலகட்டம் அதாவது இடதுசாரி ஐக் கியம் ஏற்பட்ட இக் காலகட்டத்தில், கொள்கை ரீதியான சில பிரச்சினைகளை எழுப்பியவர்களைச் சிலர் வேண்டுமென்றே சீர்குலைவு வாதிகள் என்று ஒதுக்கி பிரச்சினையை தட்டிக்களிக்க செய்த முயற்சி ‘தொண்டைக்குக் களவாக மருந்து சாப்பிடு வதற்கு’’ எடுத்த முயற்சிக்குச் சமமாகும். இன்று இந்நாட் டின் சோஷலிஸ் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள அபிப்பிராய பேதங் கள் இலங்கைப் புரட்சியின் தீர்மானமான காலகட்டத்தில் எழுந்துள்ள அபிபபிராய பேதமாகும். சர்வதேசிய புரட்சிகர இயக்கத்தில் சகல தீர்மானமான காலகட்டத்திலும் இத்த கைய கொள்கை அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டன. அவ் வபிப்பிராய பேதங்களினுள் தவறற்ற தீர்மானங்களை எடுத்து முன் சென்ற புரட்சிகர இயக்கத்தினர் வெற்றிபெற்றனர். 1917-ம் வருட அக்டோபர் புரட்சி, சீனப் புரட்சி, அல்ஜீரியப் புரட்சி, கியூபாப் புரட்சி போன்றவைகள் அதற்கு உதாரணங் களாகும். இலங்கைப் புரட்சியும் இன்று ஒரு தீர்மானமான கட்டத்திற்கு வந்துள்ளது. இங்கு எடுக்கப்படும் தவறற்ற தீர் மானங்களின் மேல்தான் இந்நாட்டின் சோஷலிஸ் இயக்கத்தின் வெற்றியும் தங்கியுள்ளது. நம்முன் இன்று எழுப்பப்பட்டுள்ள விவாதம் அடிப்படையாக இலங்கைப் புரட்சியின் சுயரூபங் களும் கொள்கைகளும் வழிமுறைகளும் தந்திரோபாயங்களும் சம்பந்தப்பட்ட விவாதங்களேயாகும்.

25
அவைகளுக்கு அடிப்படையாகவுள்ள முக்கிய பிரச்சினை யாகவுள்ளது ஏகாதிபத்திய, நிலப் பிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலல்லாது வெற்றிகொள்ள முடி யுமா? பாராளுமன்ற முறையின் மூலம் சோஷலிஸத்தை ஸ்தா பிக்க முடியுமா? சோஷலிஸத்தை ஸ்தாபிக்கும் பொழுது பாட் டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் அவசியமா? இல்லையா? புரட் சியை வெற்றிகரமாக்குவதற்கு அக்கால கட்டங்களின் போது எத்தகைய வர்க்கத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுவது போன்ற பிரச்சினைகளேயாகும்.
இடதுசாரி ஐக்கிய முன்னணி ஏற்பட்டதற்குப் பிறகு, அம் முன்னணியின் தலைவர்கள் எடுத்த சில சில நடவடிக்கைகளி ணுல் பொதுமக்கள் மத்தியில் இடதுசாரி முன்னணி சம்பந்த மாக இருந்த ஆசைகளும் அபிலாஷைகளும் படிப்படியாக குன்று வதற்கு ஆரம்பித்தன. அதற்குக் காரணம், இடதுசாரி முன் னணி இலங்கை மக்களின் புரட்சிகரத் தேவைகளை குறைவாக மதிப்பிட்டு, முதலாளித்துவ பாராளுமன்றத்தின் மூலம் அதி காரத்தை கைப்பற்றுவதற்கு எடுத்த முயற்சியேயாகும். இன்று வரை முதலாளித்துவ சமூக ஜனநாயகத்தின் சுயரூபங்களையும், பிரத்தியட்ச நடவடிக்கைகளையும் படிப்படியாக இந்நாட்டு உழைப்பாளி மக்களின் இதயங்களில் இடதுசாரித் தலைவர்களே காலாகாலமாகப் புகுத்தி வந்தமையால், பாராளுமன்றத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்கின்ற இடதுசாரித் தலைவர்களின் கொள்கைகளை ஆரம்பத்திலேயே பொதுமக்கள் விமர்சனத்திற் குட்படுத்தவில்லை. இதுவரை நாடு ஏற்றுக் கொண்ட இடதுசாரித் தலைமை ஐக்கியப்பட்டு முன்வந்தால் பாராளுமன்றத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது என்று பொதுமக்களிடம் நம்பிக்கை இருந்தது. என்ருலும் கூட, தினசரி நெருக்கடிக்குட்பட்டு தகர்ந்து வரும் தேசிய முதலாளித்துவ அரசாங்கத்திற்கு, வலதுசாரி பயமுறுத் தல் என்கிற முகமூடியில், முட்டுக் கொடுப்பதும், சில மந்திரிப் பதவிகளைப் பெறுவதும், மறுபக்கத்தில் முழுத் தொழிலாளி வர்க் கத்தையும் சம்பூரணமாக நட்டாந்திரத்தில் விட்டு, அவ்வர்க் கத்தின் உரிமைகளை காட்டிக் கொடுத்து, இன்னுமொரு புறத் தில் பொதுமக்களின் புரட்சிகர இயக்கத்தை முடமாக்கி, சில தலைவர்களின் அரசியல் தேவைகளை சிறு அளவில் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மாத்திரம், முழு இடதுசாரி இயக் கத்தையும், வரையறுத்துக் கொண்டமையால் முழு சோஷலிஸ் எண்ணங்கொண்ட மக்களிடையில் அதிர்ச்சியும், வெறுப்பும் ஏற்பட்டுள்ளது. அத்தகைய காரணங்களாலேயே இடதுசாரி இயக்கத்தின் நேர்மையான புரட்சியாளர்கள் எனக் குறிப்பிடப் படும் பகுதியினர் சம்பந்தமாக மக்கள் நம்பிக்கை வைக்க முன் வந்துள்ளமையால் மேலே குறிப்பிட்ட பிரகாரம் இலங்கைப் புரட்சியின் முக்கிய கால கட்டம் ஒரு முக்கிய சந்தியில் வந் துள்ளது எனக் கூறினுேம்.
இலங்கை சோஷலிஸ் இயக்கத்திலுள்ள உண்மையான புரட்சி யாளர்களுக்கும் மாக்ஸிஸ்-லெனினிஸ்டுகளுக்கும், வலதுசாரி சமூக

Page 15
26
ஜனநாயகவாதிகளுக்குமிடையேயுள்ள வேறுபாடுகள் இப் பொழுது பட்டவர்த்தனமாகவே தெரியவந்துள்ளன. அதுமாத் திரமல்ல, இலங்கைப் புரட்சியின் வெற்றிக்குத் தேவைப் படும் சக்திகளைத் தெரிவுசெய்து கொள்ளுதலும், வரிசைப் படுத்திக் கொள்ளுதலும் இச் சம்பவங்கள் மூலம் நிகழ்ந்துள் ளன. இத் தெரிவு செய்தலும், வரிசைப் படுத்தலும் எவ்வகை யில் ஏற்படவேண்டும்? அதன் விளைவுகள் என்ன? என்பவை கள் பற்றி நமது கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும்.
கடந்த மாதங்களில் இடதுசாரித் தலைவர்கள் பூஞரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தல் சேர்ந்து சிலமந்திரிப் பதவிகளைப் பெறுவதற்கு எடுத்த முயற்சிகளினலும், தொழிலாளி வர்க் கத்தினுற் சமர்ப்பிக்கப்பட்ட 21 கோரிக்கைகளைக் காட்டிக் கொடுப்பதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகளினுலும், இடது சாரி இயக்கத்தில் தலைமை வகிக்கும் சமூக ஜனநாயக வாதிக ளின் சுயரூபம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. ஐக்கியப்பட்டுள்ள இடதுசாரி இயக்கத்தை வர் க்கப் போராட்டத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்று பாமர மக்க ளின் போராட்ட உணர்வை, சக்திவாய்ந்த புரட்சிகர முன் னணியாகப் பரிணுமமாக்கி, மக்களின் கிளர்ச்சிகளை மேலும் விருத்தி செய்து, தேசிய ரீதியாக முழு இலங்கை மக்களுக் கும் தலைமை கொடுக்கும் அரசியல் சக்தியாக அதைச் செயல் படுத்தி நிரூபிப்பதற்குப் பதிலாக, இடதுசாரித் தலைவர்கள் இன்றுவரை எடுத்துள்ள முயற்சிகள் சமூக அபிவிருத்தியின் அடிப்படையான வர்க்க முரண்பாடுகளினல் எழக்கூடிய தொழி லாளர்வர்க்கத்தின் தலைமையிலான ராஜ்ப அமைப்பைக் கொண்ட ஒரு சமுகத்தை ஏற்படுத்துவதை சம்பூரணமாக நிராகரித்து, நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஒரு முதலாளித்துவ அவசாங்கத் திற்கு தொழிலாளிகளிடையேயும், பொதுமக்களிடையேயும், ஏற்பட்டுள்ள எதிர்ப்பு எண்ணங்களைத் திசைதிருப்பி, அதற் குப் புத்துயிர் அளிப்பதுதான். சரித்திர ரீதியாக இத்தகைய சம்பவங்கள், காட்டிக் கொடுத்தல் போன்றவைகள் ஏராளம் நடைபெற்றுள்ளன. இடதுசாரி இயக்கத்திற்கு தலைமை தாங்கி வந்துள்ள சமூக ஜனநாயகவாதிகள் (சோஷல் டெமொக்கி றற்ஸ்) நெருக்கடிக்கு ஆளாகியிருந்த முதலாளித்துவத்தை, தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பாதுகாத்த சம்பவங்கள் பலவுண்டு.
இன்றைய தீர்மானமான காலகட்டத்தில் இலங்கைப் புரட்சியின் சரியான வெற்றிக்காக திறமையான புரட்சிகர முன்னணியாக இடதுசாரி ஐக்கியத்தை விருத்திசெய்ய முயற் சித்தல் வேண்டியுள்ளது இதனலேயாகும். இந்த சரித்திரபூர்வ மான காரியத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு பொது அடிப் படைக் கொள்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இடதுசாரித் தலைவர்கள் இதுவரை செய்ததுபோல் முக்கிய கொள்கைப் பிரச்சனைகளைத் தட்டிக்கழிக்க முயற்சிக்கக் கூடாது

27
இதிலிருந்து எழக் கூடிய பிரச்சினை அத்தகைய முன்னணிக்கு அடிப்படைக் கொள்கையாக இருப்பது எது என்பதே. இப் பிரச்சினையை ஒரு தடவை நாம் எழுப்பியமையால் சில திரிபுவா தத் தலைவர்களால் நாங்கள் கேலிக்கிடமாக்கப் பட்டோம். அது தீர்க்கப்படாமலேயே ஏற்படுத்தப்பட்ட முன்னணி இன்று கொள்கைரீதியாகப் பைத்தியக்காரியின் குப்பைத் தொட்டியைப் போல் ஆகியுள்ளது, அதனை கதிர்காம பக்திமான்கள் தொட்டு யங்கி கலாச்சாரத் தலைவர்கள் வரை ஆட்டிப் படைக்கிருர் கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்னவேண்டிய பாடம் என்னவெனில், இலங்கைப் புரட்சியை முன்னுேக்கிக் கொண்டு செல்ல, நம்மிடையில் தெளிவுபடுத்திக்கொண்ட அடிப்படைக் கொள்கையின்மேல் ஐக்கியம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தாகும்.
இன்று முழு உலகிலும் சகல நாடுகலும் புரட்சிகர இயக் கத்தை இயக்குவிப்பது மார்க்ஸிஸ்-லெனிஸ் உண்மைத் தத்து வத்தின் மூலமேயாகும். எந்த நாடாயிருந்தாலும் சரி, உள்ளே இருக்கும் சகல பரஸ்பர முரண்டாடுகளுக்கிடையேயும், புரட்சி கர மார்க்ஸிஸ்-லெனினிஸக் கொடியான மார்க்ஸிஸ்-லெனி னிஸ கொள்கையே வானளாவ உயரப் பறக்கின்றது. அதன் உண்மையை ஏற்றுக்கொள்ளுபவர்கள், சர்வதேசிய சோஷலிஸ் இயக்கத்தில் கடந்த நூற்ருண்டில் பெற்ற சரித்திரபூர்வமான அனுபவங்களை எவ்வித சஞ்சல மனப்பான்மையும் இன்றிக் கற் றுக்கொள்ள விரும்புபவர்கள் இலங்கைப் புரட்சியின் தலைமை, தந்திரோபாயங்கள், நடைமுறைகள் சம்பந்தமாகத் தெளிவான முடிவிற்கு வருவதன்மூலம் கொள்கை ரீதியான ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இலங்கைப் புரட்சியை வெற்றிகரமாக்குவதற்கு சகல புரட்சிகர சக்திகளையும் ஒன்று சேர்ப்பது முக்கியமாகும். கொள்கை ரீதியாகப் பரஸ்பர முரண்பாடுகளுக்கிடையில் தடுமாற் றத்தில் இருக்கும் சகல தோழர்களும் மீண்டும் சிந்தித்து, அவர் களது கருத்துக்களைப் பொறுமையோடு விவாதித்து முடிவுக்கு வருவதன் மூலமே, இலங்கைப் புரட்சியின் வெற்றியைநோக்கிச் செல்வதற்கு முன் அடி எடுத்து வைப்பதாகும்.
தமிழில்: அ. மரியதாசன்

Page 16
புதிய ஜனநாயகப் புரட்சியில்
பாட்டாளி வர்க்கத் தலைமை
பிரேமலால் குமாாரசிறி (பொதுக் காரியதரிசி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி)
புரட்சிகர ஐக்கிய முன்னணிக்குள்ள மிக முக்கிய மூலா தாரமான பிரச்சினை தலைமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். ஐக்கிய முன்னணியின் தலைமையிலிருக்கும் வர்க்கத்தைப் பொ றுத்தே புரட்சி எத்தகைய பாதை எடுக்கின்றது என்பதைத் தீர்மானிக்க முடியும். புரட்சியின் வெற்றியையோ தோல்வி யையோ அன்றிப் புரட்சியின் எதிர்கால வளர்ச்சியையோ ஐக்கிய முன்னணிக்குத் தலைமைதாங்கும் வர்க்கத்தின் மூலமே தீர்மானிக்க முடியும்.
இலங்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, புதிய ஜனநாயகப் புரட்சி எடுக்கவேண்டிய பாதையை யும், அப் புரட்சியின் வெற்றி தோல்வியையும், புரட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியையும், அதற்கான அணியாகிய அனைத் தையும், புதிய ஜனநாயகப் புரட்சியின் பொழுது அமைக்கப் படும் அல்லது அமைக்கப்படவேண்டிய பரந்த ஐக்கிய முன்ன ணிக்குத் தலைமைதாங்கும் வர்க்கத்தினுலேயே தீர்மானிக்க முடியும்.
இலங்கை மக்கள் எடுக்கக்கூடிய ஒரேயொரு சரியான நடைமுறைப் பாதை, புதிய ஜனநாயக நெறியில் அமைந்த சோஷலிஸப் பாதையாகும். (புதிய ஜனநாயக முறை எனப்படு வது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமை களை நிறைவேற்றிய பின் ஸ்தாபிக்கப்படும், அரசியல் ரீதியில் சுதந்திரமானதும் யொருளாதார ரீதியில் செழிப்பானதும், பரந்த மக்களுக்கு ஜனநாயகத்தை அளிப்பதும், புதிய முற் போக்கான தேசிய கலாச்சாரத்தைக் கொண்டதுமான, தொழி லாள வர்க்கத் தலைமையிலான பல வர்க்க மக்களின் ஜனநாயக சர்வாதிகார ஆட்சியாகும்.) இப் பாதையில் வெற்றிகரமாக முன்செல்வதென்றல், எமது கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் மிகவும் பரந்தளவில் நண்பர்களை வென் றெடுத்துப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை ஸ்தாபித்தல் வேண்டும்.
வர்க்கத் தொடர்புகளை ஒட்டிப் பார்க்கும் பொழுது, இலங்கைப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமை இருவகை

29
மருவங் கொண்டதாக இருத்தல் வேண்டும், புரட்சிகர ஐக்கிய முன்னணியாகிய நேசக்கூட்டு மூலம் இந்த இருவகை உருவங் களையும் புரிந்துகொள்ள முடியும். ஒன்று, தொழிலாளி வர்க்க மும், மறுபக்கத்தில் விவசாய மற்றும் உழைக்கும் ர்ைக்க மக்க ளும் அமைக்கும் நேசக் கூட்டாகும். (மற்றும் உழைக்கும் மக்களா கிய தனிப்பட்டமுறையில் கைத்தொழில் செய்பவர்கள் சிறிய சில் லறை வியாபாரிகள் தாம் சுரண்டப்பட்டாலும் மற்றவர்களை சுரண்டாத வகையைச் சேர்ந்த புத்திஜீவிகளும், பரந்த மாணவர் களும், வலிபர்களும் இப் பகுதியைச் சேர்ந்தவர்கள்) இந்தக் கூட்டின் பிரதான அம்சம் தொழிலாள, விவசாயிகள் ஐக்கியமா கும். விவசாய, மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் தொழிலாள வர்க்கத் தலைமைக்காகப் போராடுவதும், அத்தகைய தலை மையை ஸ்திரப் படுத்துவதும் இந்த தொழிலாள, விவசாயிகளின் நேசக் கூட்டின் மூலமே யாகும். தொழிலாள வர்க்கம் தேசிய முதலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுடன் சேராத, ஆனல், ஆதரவைப் பெறக்கூடிய பகுதிகளுடன் அமைக்கும் நேசக் கூட்டு மற்றையதாகும். (ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சுதந்திரத்தையும் விரும்பும், ஆனல் தனிநபர் சொத்துரிமையை இல்லாமல் செய்வதையும் உண்மையான சோஷலிஸத்தை அமைப்பதையும் விரும்பாத மத்திய முதலாளிகளும் உயர் மட் டத்திலிருக்கும் சிறு முதலாளிகளும், அவர்களுடைய புத்திஜீவி களும் இந்த ரகத் ைகச் சார்ந்தவர்கள்) இதன் பிரதான அம்சம் தேசிய முதலாளி வர்க்கத்துடன் நேசக் கூட்டு ஏற்படுவதாகும். தேசிய முதலாளிகள் மற்றும், தேசாபிமானப் பகுதிகள் மத்தி யில் தொழிலாள வர்க்கத் தலைமைக்காகப் போராடுவதும் அத் தலைமையை ஸ்தாபிப்பதும் இந் நேசக் கூட்டு மூலமேயாகும்
இவ்விருவகை நேசக் கூட்டுகளிலும் அடிப்படையானதும், ஜக்கிய முன்னணி அமைப்பின் அத்திவாரமாக அமைவதும் தொழிலாள, விவசாயிகள் கூட்டாகும். தொழிலாள, விவசா யிகள் கூட்டு கட்டி எழுப்பப்படுமளவிற்கு, பலமுறுமளவிற்கு தொழிலாள வர்க்கம் தனது / பக்கத்துக்கு தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றும் தேசாபிமான பகுதிகளையும் வென் றெடுக்க முடியும்; பரந்த முதலாளி வர்க்கத்தையும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தையும் பிரித்து தனிமைப்படுத்த முடி யும்; அதேபோல புரட்சியின் வெற்றியை ஸ்தாபிக்கும் சாத்தி யப்பாடும் விரிவுறும். சுருக்கமாகவும், அடிப்படையாகவும் கூறு வதாணுல் பாட்டாளிவர்க்கத் தலைமை சம்பந்தப்பட்ட பிரச் வினை விவசாய மக்கள் மற்றும் உழைக்கும் மக்களை தமது பக் கத்துக் வென்றெடுக்கும் பிரச்சினையாகும். தொழிலாள, விவ 1 யிகள் நேசக் கூட்டை ஏற்படுத்தி விருத்தியாக்கும் பிரச்சினை பாகும். சகல காலனி, அரைக்காலணி நாடுகளிலும்போல இலங்கையிலும் தேசிய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பிரச்சினை இதுவேயாகும்.
தேசிய முதலாளித்துவ வர்க்கம், மற்றும் உழைக்கும் மக் ாளேச் சேராத, ஆனல் ஆதரவு பெறக்கூடிய பகுதிகளுக்கும்

Page 17
30
தொழிலாள வர்க்கத்திற்குமிடையே அமைக்கம்படும் நேசக் கூட்டு பி ர தா ன மா ன கூட்டாக முடியாது. அது ஆரம் பக் கூட்டாக அமைந்தாலும் இலங்கையில் இருக்கும் விசேஷ நிலைமையின் கீழ் இந்தக் கூட்டு முக்கியமானதொன்ருகும். தேசிய முதலாளி வர்க்கத்துடன் அமைக்கப்படும் இந்நேசக் கூட்டு அடிப்படையான முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லா விட்டாலும் தொழிலாள வர்க்கம் தனது தலைமையில் அதனை அமைப்பதற்கு ந ட வ டி க் கை க ள் எடுத்தல் வேண்டும். தொழிலாள வர்க்கம் புரட்சிகர ஐக்கிய முன்னணியின் சம் பூரணமான சகல அம்சத் தலைமையைப் பெறவும், தொழி லாள-விவசாயிகள் கூட்டின் ஆரம்ப அணியை உற்பத்தி செய்யவும், ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ வர்க்கத்தைப் பூரணமாகத் தனிமைப்படுத்திப் பலவீனப் படுத்தவும், புரட்சி யின் வெற்றியை உத்தரவாதப் படுத்தவும் இதன் மூலம் மட்டுமே முடியும்.
தொழிலாள-விவசாயிகள் கூட்டை உருவாக்கி விருத்தி யாக்குவதன் அடிப்படையான, தமது பக்கத்துக்கு வென்றெ டுக்கக்கூடிய சகல அணிகளையும் வென்று, நாட்டின் மக்கள் தொகையின் பெரும்பான்மையினரின் ஐக்கியத்துடனேயே தொழிலாள வர்க்கம் தமது பலம் மிக்க பூரணமான தலைமையை ஸ்தாபிக்க முடியும்; எதிரியைத் தனிமைபடுத்திப் பலவீனப் படுத்த முடியும்; புரட்சியின் வெற்றியைக் காண முடியும் என் பதைச் சீனம் தொட்டு சகல காலனி, அரைக்காலணி நாடு களிலும் வெற்றிகண்ட புரட்சிகளும் உதாரணமாக அமைந்து எமக்குக் கற்பிக்கின்றன.
பாட்டாளி வர்க்கத் தலைமையை ஸ்தாபிப்பதும் பலப் படுத்துவதும் போராட்டத்திற்கு அவசியமான காரியம். அப் போராட்டம் ஏகாதிபத்திய சார்பான முதலாளித்துவ வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்தும் காலனி, அரைக்காலணி முறை, தேசிய முதலாளித்துவப் பகுதி பிரதிநிதித்துவப் படுத் தும் பழைய ஜனநாயக முறை ஆகிய இரண்டினையும் எதிர்த்து தொழிலாள வர்க்கத்தின் முயற்சியுடன் புதிய ஜனநாயக முறைப் பாதையில் நடைபெறும் போராட்டமாகும். முடிவாகப் பார்க் கும்பொழுது பழைய ஜனநாயக முறைப் பாதைக்கு எதிரான போராட்டம் காலனி, அரைக்காலணி முறைக்கு எதிரான போராட்டமேய்ாகும். (பழைய ஜனநாயக முறைப் பாதை எனப்படுவது சுதந்திரம் கிடைத்ததற்குப் பின் முதலாளி வர்க் கத்தின் தலைமையில் முதலாளித்துவ ஜனநாயக முறையி இ. மூலம் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் செல்வதாகும். புதிய ஜனநாயகமுறைப் பாதை எனப்படுவது சுதந்திரம் கிடைத்ததற் குப் பின் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயக முறை அமைப்பின்மூலம் சோஷலிஸப் பாதையில் செல்வதா கும்.) ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிக் காலத்தில் எவ் வர்க்கம் தலைமை அளித்தது என்பதைப் பொறுத்தே இவை இரண்டில் எது என்று இனங்கண்டு கொள்ள முடியும்.

31
தேசிய முதலாளிவர்க்கத்தின் பழைய ஜனநாயக முறைப் பாதைக்கெதிரான போராட்டத்தில் முக்கிய கொள்கையாகத் திகழ வேண்டியது தொழிலாள வர்க்கக்தின் பக்கத்துக்கு விவ சாய மக்களையும் நகரப்புற சிறு முதலாளிகளையும் வெண்றெடுப் பதாகும். விவசாய மக்களும் நகரப்புற சிறு முதலாளிகளும் பரி ணும வளர்ச்சியினல் பாதிக்கப்படும் வர்க்கங்களாகையால் இரு வகைத் தன்மைகள் கொண்டவையாகும் இவர்கள் மத்தியில் உள்ள பெரும் பகுதியினர் பாட்டாளி வர்க்கத்தின் அரசியலையும் ஸ்தாபன அமைப்மையும் மட்டுமல்லாது தத்துவார்த்தத்தையும் ஏற்றுக் கொள்பவர். இது இந்த வர்க்கங்களின் சிறப்பான புரட்சி கரப் பக்கமாகும். ஜனநாயகப் புரட்சியை விரும்பும் இவர்கள் இவை சம்பந்தமாக ஒன்றுபட்டுப் போராடும் திறமையும் உடைய வர்கள். எதிர்காலத்தில் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து சோஷலிசப் பாதையை எடுப்பகற்கும் இவர்கள் தயாராக இருக் கின்ருர்கள், இவ்வர்க்கங்களின் கெட்ட, முற்போக்கற்ற Tவிஷ யம் இவர்களிடையே பவவித பலவீனங்கள் இருப்பதாகும். இந்த ளவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்திலும் வித்தியாசமானவர் கள். இவர்சளுக்கு பாட்டாளி வர்க்கத் தலைமை இல்லாதவரை யில் இவர்கள் பெருமளவிற்கு முன் செல்லாது, தேசிய முதலாளி வர்க்கத்தினதும் சில நேரங்களில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்தினதும் ஆதிக்கத்துக்குள் சிறைப்பட்டிருப்பர்.
இதனை நன்கு தெளிதல் வேண்டும். ஒன்று தொழிலாள வர்க் கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாய மக்களையும் நகரப்புற சிறு முதலாளிகளையும் தமது பக்கத்துக்கு வென்றெடுத்தல் வேண்டும். இப் பகுதிகளுக்குக் கல்வி ஊட்டிப் பாதைகாட்டும் தேசிய முத லாளி வர்க்கிம், ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கம் ஆகிய வற்றின் பாதிப்பிலிருந்து அவற்றை விலக்கி, புதிய ஜனநாயக முறைப் பாதைக்கு அவர்கள் வருவதற்கு அவர்களுக்கு உதவுவ தற்கு தொழிலாள வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் திறமையும் தகுதியுமுடையவனதாயிருந்தால் அப்பொழுது பாட்டாளிவர்க்கம் விவசாய மக்கள், சிறு நகரப்புற முதலாளி வர்க்கம் ஆகியவற்றின் அரசியல் தலைமையை எடுத்து முதலாளி வர்க்கத்தைத் தனிமைப் படுத்த முடியும். மறுபுறத்தில் இவற்றினை நிறைவேற்ற தொழி லாள வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் திறமையும் தகுதியுமில்லா திருந்தால் அதன் விளைவாக விவசாய மக்களினதும் நகரப்புற சிறு முதலாளி மக்சளினதும் அரசியல் தலைமையை வென்றெடுக்கவும், தொழிலாள வர்க்கத்தை இப் பகுதிகளிலிருந்து தனிமைப்படுத் தவும் தேசிய முதலாளி வர்க்கத்திற்கும் சில நேரங்களில் ஏகாதி பத்திய சார்பு முதலாளி வர்க்கத்திற்கும் இடங்கொடுப்பதாகும்.
இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கமும் சில வரையறைக்குள் ரகாதிபத்திய எதிர்ப்பு தேசாபிமான உருவத்தை எடுக்கக்கூடிய வர்க்கம். மற்றைய காலணி அரைக் காலனி நாடுகளைப்போவே இலங்கையிலும் தேசிய முதலாளி வர்க்கம் இருவகை முகமூடியுடன் இருவகை உருவங்கொண்டதோர் வர்க்கம். தேசிய பொருளா தார அபிவிருத்தி அவர்களின் வர்க்கத் தேவையானபடியால்

Page 18
32
ஒரளவிற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்கும். ஒரளவிற்கு தேசிய கைத்தொழில் வளர்ச்சிக்கும் தேசிய வியாபார அபிவிருத்திக்கும் நடவடிக்கை எடுக்கும். அதேபோல் விதே ச பாதிப்புக்கு எதிராக தேசிய பண்பாட்டை வளர்க்க நடவடிக்கை எடுக்கும். மறுபக்கத்தில், தேசியமாயிருந்தாலும் முதலாளி வர்க் கம் ஆனபடியால் அவர்கள் தமது வர்க்க நலன்களை ப்பாதுகாப்பதற் காகத் தொழிலாள வர்க்கத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் எடுப்பர். சோஷலிசம் பற்றி வாய்கிழியப் பேசினலும் முதலாளி வர்க்கப் பாதையிலேயே செல்ல விரும்பும் அவர்கள் தொழிலாள வர்க்க விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தமது வர்க்கத்தின் நலனுக்காக ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக் கைகளை எடுக்கும் அவர்கள் அதற்காக உழைக்கும் வர்க்க மக்க ளின் ஆதரவைத் தேடுவர். அதேநேரத்தில் தமது வர்க்க நல னுக்காக முதலாளித்துவ சலுகைகளைப் பாதுகாக்க நடவடிக்கை கள் எடுக்கும் அவர்கள் அதற்கு ஊறுவிளைக்கும் தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவர். அவர்களின் இயற்கையான குளும்சம் ஊசலாட்டமும் நடுவழியில் காட்டிக்கொடுப்பதுமாகும்.
இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏகாதிபத்திய சார்பு (யு. என். பி.) முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து பிரிந்து அதற்கு (pTGð7 Lunt டான ஓர் சக்தியாகும். 1951-ல் காலஞ் சென்ற எஸ். ட பிள்யு ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் யூ. என். பி.யிட மிருந்து பிரிந்து வந்து பூரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்த தன் பின் தேசிய முதலாளி வர்க்கம ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சிக் கடமைகளை நிறைவேற்றக் கூடிய அணியாகப் படிப் படியாக வளர்ச்சி அடைந்தது. வர்க்கம் என்ற முறையில் பொருளாதார ரீதியில் பலவீனமான அவர்களுக்கு தனியணுக எழுந்து நிற்கும் வன்மை இருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் ஆதரவின்றி அவர்கள் தனியணுக ஆட்சி அமைக்க முடியா திருந்தபடியாலும், இன்னும் பலத்துடன் திகழும் யூ. என் யின் பிற்போக்குக்குப் பயந்தபடியாலும் அவர்கள் ஒரள விற்கு மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டனர். ஒரளவிற்கு முற்போக்கு நடவடிக்கைகள் எடுத்தனர். முன்னர் தேசிய பண் பாட்டுப் பிரச்சினைகளில் மூழ்கி இடதுசாரி இயக்கத்தில் இருந்து பிரிந்து இடதுசாரி இயக்கத்தைக் கைவிட்ட அணியில் சிக்கி இருக் கும் குழுவும் இன்று தேசிய முதலாளி வர்க்க அரசியல் அணியில் இடம் பிடித்துள்ளது என்பதும் கவனத்துக்குரியது. எப்படியிருந் தாலும் மேலே கூறப்பட்டவாறு எந்தத் தேசிய முதலாளி வர்க் கத்திற்கும் இருக்கும் குறைபாடும் இலங்கைத் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் உண்டு.
தேசிய முதலாளி வர்க்கத்தின் தலைமையில் 1956-ல் நடை பெற்ற மாற்றத்தின் மூலம் ஏகாதிபத்தியத்துக்கும் அதனுடன் சார்புள்ள உள்நாட்டு முதலாளி வர்க்கத்திற்கும் நிலப்பிரபுத்துவ முறைக்கும் ஒரளவிற்கு அடி விழுந்தது. சில சில ஏக திபத்திய எதிர்ப்பு நிலப்புரபுத்துவ எதிர்ப்பு நடிவடிக்கைகள் அந்த மாற் றத்தின் பின் எடுக்கப்பட்டன. ஓரளவிற்குப்பொது மக்களின் சிந்

33
தனையும் விரிந்தது. அந்த மாற்றத்தின் சரித்திர முக்கியத்துவம் பெரிதாயினும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவனதிர்ப்பு ந வடி ச்கைகளை பூரணமாக நிறைவேற்ற அதனுல் முடியவில்லை.
இதல்ை ஒரு விஷயம் நிரூபிதமாகிறது. தேசிய முதலாளி வர்ச் கத்தின் தலை பை யில் நடத்தப்படும் பழைய ஜனநாயக முறைப் பாதை தற்பொழுதைய சரித்திர நிலைமைகளின் கீழ் மறு நாடுகளைப் போலவே இலங்கைக்கும் பொருந்தாதது. ஏகாதிபத் திய பாட்டாளி வர்க்கப் புரட்சி யுகத்தில் நடைபெறும் இப் புரட்சி பழைய ஜனநாயக முறைப் பாதையில் நடைபெறமுடி யாது.
இலங்கையில் தற்பொழுது போராடும் இரு அணிகளான புரட்சி அணி, எதிர்ப் புரட்சி அணி ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் கடுமையான போராட்டத்தில் சிக்கி இருக்கும் தேசிய முதலாளி வர்க்கம் பலவீனமானது, சிறியது. திரும்பவும் தோல் வியை எதிர்நோக்கவோ அல்லது திரும்பவும் பிற்போக்கு யூ. என். பி. ஆட்சிக்குக் கீழ் இருக்கவோ விருப்பமில்லாத அவர் சளுக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ யூ. என். பி. பிற்போக்கு வாதிகளுக்குமிடையே பரஸ்பர முரண் பாடுகளும் தகராறுகளும் உண்டு. அதே நேரத்தில் தொழி லாள வர்க்கத்தின் தலைமையில் நிகழும் மக்கள் புரட்சி அணி பூரணமாக வெற்றியீட்டி இலங்கையில் புதிய ஜனநாயக முறை மக்கள் அரசாங்கம் ஏற்படுத்துவதைக் குறித்தும் அவர்கள் பயப் படுகின்றர்கள். ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத்துக் கும் ஏகாதிபத்திய சார்பு யூ. என். பி. முதலாளி வர்க்கத்துக் கும் எதிராக தயவு தாட்சண்ணியமின்றியும் தீர்க்கமாகவும் நடைபெறும் புதிய ஜனநாயக முறைப் புரட்சிச் சமயத்தில் இலங்கைப் புரட்சி அணிகள், ! எதிர்ப் புரட்சி அணிகள் ஆகியவற்றிற்கிடையேயிருக்கும் தேசிய முதலாளி வர்க்கத் திற்கு சரியான முறையில் அரசியல் சக்தியாக வளரவோ அன்றித் தமது நோக்கங்களைத் தாமாகவே நிறைவேற்றவோ முடியாத நிலைமை எழுந்துள்ளது. இன்று அடிபடும் கூட்டு அர சாங்க இயக்கத்தின் தர்க்க ரீதியான பின்னணி இதுவேயாகும்.
சீன சமுதாயத்தின் வர்க்கங்களின் ஆராய்வு என்ற தலை யங்கத்தில் 1962-ம் ஆண்டு தோழர் மா சே-துங் எழுதிய கட்டுரையிலிருந்து பின்வரும் பகுதியை மேற்கோள் காட்டுதல் உசிதமானது.
**தேசிய முதலாளி வர்க்க ஆட்சியின் கீழ் அரசாங்கத்தை ஸ்தாபிக்க தேசிய முதலாளி வர்க்கம் எடுக்கும் முயற்சி சற்றும் செயல்படுத்த முடியாதது. ஏனென்ருல் இன்றைய உலக நிலைமையில் பிரதான அணிகள் இரண்டாகிய புரட்சி, எதிர்ப் புரட்சி அணிகளிடையே இறுதிப் போராட்டம் நடை பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இடையிலிருக்கும் வர்க்கங் கள் கலைந்துவிடுவது நிச்சயம். அப்படியாயின் சில பகுதிகள்

Page 19
34
புரட்சியில் இணைவதற்காக இடது பக்கம் திரும்பும். மறுபகுதி கள் எதிர்ப் புரட்சியில் இணைவதற்காக வலது பக்கம் திரும் பும். மேலும் சுயேச்சையாக இருப்பதற்கு அவர்களுக்கு இடம் கிடையாது. ஆகையால் தான் அடிப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றி சுயேச்சையான புரட்சி செய்வது சம்பந்தமாக சீனத்தில் மத்திய முதலாளி வர்த்தத்திற்கிடையே இருக்கும் அபிப்பிராயம் வெறும் மாயை மட்டுமேயாகும்.'
தேசிய முதலாளி வர்க்கத்தின் பழைய ஜனநாயக முறை, மாயை அபிப்பிராயம் மத்திய பாதை எனப்படுவதன் மூலம் வெளிவருகின்றது; யூ. என். பி. மூலம் பிரதிநிதித்துவப் படுத் தப்படும் ஏகாதிபத்திய சார்பு முதலாளிகளுக்கு நெருங்கியது. அரைக் காலணி அரை நிலப்பிரபுத்துவ முறையை அமைத்துச் செல்வதே அவர்கள் தேவை.
கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு பூரண சுதந்திரத்துடனும் ஜன நாயகத்துடனும் கூடிய புதிய ஜனநாயக முறை ஆட்சியமைகக தாமதமின்றி சோஷலிஸத்தை நோக்கிச் செல்வது அவசியமா கும். வலது பக்கமுமில்லை இடது பக்கமும் இல்லை என்ற தேசிய முதலாளி வர்க்கத்துக்குத் தேவையானது சுயேச்சையான முத லாளித்துவ வளர்ச்சி ஆகும். மூலாதாரமாகப் பார்க்குப்பொ ழுது மத்திய பாதை எனப்படுவது பழைய ஜனநாயக முதலாளித்துவக் குடியரசு ஆகும். நீண்டகாலத்துக்கு முன்ன லேயே காலங்கடந்த இம்முறை சரிவராததாகும். தமது வர்க் கத்தின் தலைமையில் சுதந்திர இயக்கமென்ற ரீதியில் இப்பாதை யில் செல்லவேண்டுமென்ற தேசிய முதலாளி வர்க்கத்தின் கொள்கை நிறைவேற முடியாதது. இதன் விளைவாக சுதந்திர மான இயக்கம் விரைவில் சுதந்திரமற்ற நிலைமைக்கு விழும். அதேபோல் அரைக் காலணி பாதையில் தேங்கி நிற்கும். ஆகையால் மத்திய பாதைக் கெதிரான போராட்டம் அரை காலணி முறைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டமாகும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சி யின் பொழுது பாட்டாளி வர்க்க தலைமையை ஸ்தாபிக்கவும் வளர்க்கவும் விசேஷமாக தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றைய தேசாபிமான பகுதிகளையும் தமது பக்கத்திற்கு வென் றெடுக்கவும் தொழிலாள வர்க்கம் ஒரு புறத்தில் தேசிய முத லாளி வர்க்கத்தின் பழைய ஜனநாயக முறைப்பாதையை எதிர்த்து கடுமையாகப் போராட்டம் நடத்தல் வேண்டும். மறு பக்கத்தில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்தின் காலணி அரைக் காலணி முறைப் பாதையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்தல்வேண்டும். அவ்வர்க்கத்தின் பிற்போக்குப் பலத்தை ஒதுக்கித் தகர்த்தெறிதல் வேண்டும். இவ்விரு போராட் டங்களில் ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கத்துக்கு எதி ராக நடத்தப்படும் போராட்டம் கூடுதல் முக்கியமானதா கும். தொழிலாள வர்க்கம் அப்போராட்டத்தின் பொழுது

35
தலைமை எடுக்குமளவிற்கு நோக்கத்தை நிறைவேற்றுமள விற்கு தேசிய முதலாளி வர்க்கத்தையும் மற்றும் தேசாபி மானப் பகுதிகளையும் தமது பக்கத்திற்கு வென்று அவர்கள் மத்தியில் தமது தலைமையை ஸ்தாபிப்பது இலகுவாகும். தொழி லாள வர்க்கம் தமது போராட்டத்தை இவ்விரு போராட்டங் களில் ஒன்றுக்கு மட்டும் வரையறைப்படுத்துவது தவருனது. புதிய ஜனநாயகப் புரட்சியில் மேற்கூறப்பட்ட இரு போராட் டங்களையும் வெற்றிகரமாக நடத்துவதன் மூலமே பாட்டாளி வர்க்கத் தலைமையை வெல்லவும் ஸ்தாபிக்கவும் வளர்க்கவும் முடியும்.
தமிழில்: தம்பி.
பிரேசில் இராணுவ சதியின் பாடங்கள்
மூன்ருவது கட்டுரையின் தலையங்கத்தை TG
சில் இராணுவ சதியின் பாடங்கள்’ எனத் திருத்தி
வாசிக்கவும்.

Page 20
u Yu yu
மாக்சிஸ வெளியீடுகள்
O தொழிலாள வர்க்கம் ஆட்சியைக்
கைப்பற்றுவது எப்படி?
ந்ா. சண்முகதாசன் O லெனினிஸமும்
நவீன திரிபுவாதமும்
நா. சண்முகதாசன் () கம்யூனிஸ்ட்-மே இதழ் இவ் வெளியீடுகளே மானேஜர், தொழிலாளி பதிப்பகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
Via Va Vala lauauauaua u uuu uuuuuuuuuuuuuu uuauauaau
சேர்ந்துவிட்டீர்களா? சேர்ந்துவிட்டீர்களா? இலங்கை மாக்சிஸ
போதனைக் குழு
மாக்சிஸ அறிவுபெற விரும்புபவர்கள் அனை வரும் குழுவில் அங்கத்தவர்களாகச் சேர்ந்து கொள்ள முடியும்.
அங்கத்துவ சந்தா மாதம் 25 சதம் 9F.5G) விச்ார்ணைகளும், விண்ணப்பப் பத்திரங்களும் கூட் டுக் காரியதரிசிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
W கே. பிரான்ஸிஸ் பெரேரா 123, யூனியன் பிளேஸ், இ. தி. மூர்த்தி கொழும்பு-2 கூட்டுக் காரியதரிசிகள்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
2


Page 21
(இலங்கைத் தொழிற்சங்க TI
* தொழிலாளர் * பொதுமக்கள்
賣 உலகத் தொழி
ாதம் 10
(இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சங்க சம்மேளன
* ஈழத்து வாலிய
புரட்சிக் கீதம்
* மானவ உலக
அறிவுக் கதிர் போராடும் பாட் தோழமைக் கு
விலே சதம் -2
அச்சிட்டு வெளியிடுவது டி.
அப்ரகம்

WEDIGIf
மே ளனத்தின் வார வெளியிடு)
வழிகாட்டி நண்பன் லாளர் போர்முரசு
23. பூனியன் பிளேஸ்
கொழும்பு-2.
சக்தி
மற்றும் முற்போக்கு ாத்தின் மாத வெளியிடு)
ர்களின்
த்தின்
ட்டாளியின் ரல்
,ே நபெல் விதி, கொழும்பு-2.
டி. ஜினேந்திரபால தொழிலாளி
臀 டீமெல் விதி, கொழும்பு2.