கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொந்தளிப்பு 1992.10

Page 1

ܒ ܐ ܒܘ ளி
ந்டோபர் 1992

Page 2

* கொந்தளிப்பு”
இந்த இதழின் முகப்பு அட்டை, தனது எதிர்காலம் என்ன வாகும்? என ஏங்கித் தவிக்கும் சிறுவன் ஒருவனின் சோக முகத்தைத் காங்கி வருகிறது.
உலகின் பல பாகங்களிலும் சுயநல வெறி பிடித்த ஆட்சியாளர் கள், அரசியல்வாதிகளால் போரினாலும் பொறுப்பற்ற ஆட்சியினா லும் பஞ்சம், பசி, பட்டினி, விரக்தி போன்ற காரணங்கள்ால் பலவித மான தொல்லைகளுக்கு ஆளாகி தம் எதிர்கால வாழ்வே கேள்விக் குறியாகி விடுமோ என்ற சிந்தனையில் மூழ்கியுள்ள கோடிக்கணக் கான சிறுவர்களின் பிரதிநிதியே எமது அட்டைப்பட நாயகன்! * சார்க் நாடுகளின் சிறுவர்கள் தின விழாக்கள் அமர்க்களப்படும்
இந்த நேரத்தில் இதனை வெளியிடுவது பொருத்தமுடையதே!
*தோட்டங்கள் தனியார் மயமாக்கலில் எதிரணியினரின் நிலை" என்ற கட்டுரை தொழிற்சங்கக் கூட்டுக் குழுவின் நடந்து முடிந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு முன்பே அச்சில் வந்துவிட்டது. பல மாதங்களாக தோட்டங்களை தனியார் மயமாக்குவது பற்றி அரசாங்கம் பேச்சிலும் செயலிலும் இறங்கி நடவடிக்கைகளை மேற் கொண்ட போது, தொழிலாளர்களுக்கு அது பற்றிய விளக்கத் தையோ ஆட்சேபனையையோ போராட்ட வடிவில் எடுத்துக் கூறாத மேற்படி அமைப்புகள், தொழிலாளர்கள் தாங்களாகவே ஆங்காங்கே இரண்டு மாத காலத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு எதிர்ப்பைக் காட்டி போராட்டத் திற்கு தயாராக இருந்த போது வேறு வழியின்றி அடையாள வேலை நிறுத்தத்திற்கு திகதி நிர்ணயித்தது மட்டுமே இவர்களது வேலை யாகும். அரசு சார்பு தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர் களும் பல இடங்களில் தாங்களாகவே வேலைக்குச் செல்லாமல் இருந்த நிலை அதனைத் தெளிவு படுத்துகிறது.
இலங்கையின் தேசியத்துவ இயக்கம் பற்றிய ‘ஒரு கோட்பாட்டு நோக்கு’, இந்நாட்டு அரசியலைப் புரிந்து கொள்ள அருமையான

Page 3
ஒரு கட்டுரையாகும். கலாநிதி அம்பலவாணர் சிவராசா அவர்களுக்கு கொந்தளிப்பு நன்றி தெரிவிக்கிறது.
'நிபந்தனையின் கீழ் தோட்டங்கள் தனியார் மயம்' பற்றி திரு. டியூ குணசேகர அவர்களின் சொற்பொழிவு பயனுள்ளது என்ப தால் அப்படியே பிரசுரமாகி உள்ளது.
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ள பெண்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனரா? என்ற கட்டுரை திருமதி ரத்னா ஜெகநாதன் அவர்களுடையது. தமது நிரந் தர பணிகளுடன் எழுத்துத் துறையிலும் தீவிர கவனம் செலுத்தும் குறிப்பிடத்தக்க மலையகப் பெண்களில் இவரும் ஒருவராகும்.
சாந்தி என்ற பெயரில் "மலையகப் பெண்களும் அவர்கள் மத்தியிலான நடவடிக்கைகளும்" என்ற கட்டுரை டாக்டர் ஏ. சாந்தகுமாரால் இன்றைய காலநிலைக்கு ஏற்ப விரிவாகவும், விளக்க மாகவும் எழுதப்பட்டுள்ளது. -
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற போர்வையில் தொழி லாளர்க்கு எதிரான சட்டமூலம் ஒன்று தற்டோது பாராளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக் குக் குந்தகமான எந்தவிதமான நடவடிக்கையையும் முறியடிப்பதே இச் சட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. சுதந்திர வர்த்தக வலயத்தின் ஏற்றுமதி உற்பத்திகளை மையமாகக் கொண்டதாக இது இருப்பினும் தேயிலையும் ஏற்றுமதிப் பொருளே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது" எதிர்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களையும் இச் சட்டம் பதம் பார்க்கப் போவது நிச்சய மாகும். எப்போதும் போல் கடைசி நேரத்தில் விழித்துக் கொண்டு விழி பிதுங்கும் தொழிலாளர் தலைவர்கள் இது விசயத்திலாவது முன்கூட்டியே கவனமெடுக்க வேண்டும்.
2 V. கொந்தளிப்பு

வளைவுகளும் விளைவுகளும்
அரவிந்த்
தமிழகத்தின் " கட்அவுட் கலாசாரமும் வரவேற்பு வளைவு களும் மலையகத்திற்கும் இப்போது இறக்குமதி செய்யப்பட்டுவிட் டன. இதுவரை தலைமைகள்தான் இவ்வாறு வேற்று நாட்டவர் களால் கைப்பற்றப்பட்டு வந்தது .
தமிழ்நாட்டில் பொதுமக்கள் பணத்தில் வானளாவ தனக்குத் தானே ‘கட் அவுட்கள்" வைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார் ஜெய லலிதா ! அவருக்கு, எவ்வகையிலும் தாங்கள் சளைத் தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் "உலகத் தலைகள் நடந்து கொள் கின்றன.
உயிரோடு இருக்கும் போதே தனது பெயரில் அமைந்த வளைவை தானே திறந்து வைப்பதிலும் புதியதோர் கலாசாரத்தை உருவாக்குகின்றனர்.
இறந்த தனது அன்புக்குரியவரின் பெயரில் திடல் அமைக்க புதைக்கப்பட்டவர்கள் தூக்கியெறியப்பட்டுள்ளனர். செத்தும் நிம் மதி காணாதவனாக மலையகத் தமிழன் இருக்கிறான்.
தன் வாழ்நாள் முழுவதையும் பயன் கருதாமல் சமூகத்திற் காக அர்ப்பணித்த குறிஞ்சி பாலா’ வின் புகழுடம்பும் தோண்டி எடுக்கப்பட்டு ஆற்று நீரில் அடித்துச் செல்ல விடப்பட்டது. இனி மேல் இறப்பவர்க்கு புதைக்க இன்னமும் அங்கு இடம் ஒதுக்கப்பட வில்லை. தெய்வம் நின்று கொல்லும் என் பார்களே! அது உண்மை தானா என பொது மக்கள் பொறுமையிழந்து நிற்கின்றனர்.
வளைவுக்கும் திடலுக்கும் லட்சம் ஐம்பதைத் தாண்டி விட்ட
தாகக் கதை அடிபடுகிறது. நூற்றைம்பது ரூபா கூலியில் தினமும் நூறு பேர் மூன்று மாதமாக வேலை செய்ததைப் பார்க்கும் போது
கொந்தளிப்பு 3 بحسب سائنسی۔سی۔سب

Page 4
இந்தத் தொகை இன்னமும் அதிகமாகவே இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
வளைவுகளை அனைவரும் நின்று நிதானித்துப் பார்த்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக முன்னும் பின்னும் பிர தான பாதை குன்றும் குழியுமாக அப்படியே விடப்பட்டிருக்கிறது.
இரண்டு வளைவுகளுக்கும் இடையில் தொழிலாளர் வாழும் லயன்கள் மூன்று அவர்களது அவல நிலையை படம் பிடித்துக் காட்டும் புராதன சின்னங்களாக அமைந்துள்ளன. லயத்திற்கு முன்னால் ஒய்வு நாட்களில் பெண்கள் பகிரங்கக் குளியலை நடத் தும் போது பாதையில் செல்லும் வாகனங்களில் பயணம் செல்வோ ரின் பார்வையிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ளப் பகீரதப் பிரயத்தனம் செய்வது இந்த மாபெரும் தலைமைகள் கண்ணில் படுவதில்லையா என குமுறுவோர் பலர்!
இது ஒருபக்கமிருக்க வெளியிடப்பட்டுள்ள மலரைப் பார்க்க வேண்டுமே! மறந்தும் இலங்கையைச் சேர்நத ஒருவரும் மலரில் எழுதவில்லை. தங்களைப் புகழ்ந்து எழுத தமிழகத்தில் மட்டும் தான் புலவர்கள உள்ளனர் என்று நினைத்து விட்டது மலரைப் பார்த்தவர்களுக்குப் புரியும். தொழிலாளி ஒருவனும் வாழ்த்துக் கூறாதது மிகப் பொருத்தமே!
"கட் அவுட் அமைப்பும் தமிழக இறக்குமதி தான்! இங் குள்ள கலைஞர்கள் பிழைத்து விட்டால் தங்களுக்குப் பெருமை இல்லை என நினைத்துவிட்டார்கள் போலும்!
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் என்றும் மழைதான்!
4 கொந்தளிப்பு

பத்ரகாளியின் பிடியில் தமிழகம்!
- லஷ்மி
ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாத்துரை, கருணாநிதி, எம். ஜி. ஆர். போன்ற செயலாற்றலும் மக்கள் செல்வாக்கும் மிகுத்த தலைவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில் இன்று ஒரு பத்ரகாளி கோலோச்சுகிறது.
தமிழகத்தின் தலைமை கடந்த இரு தசாப்தங்கலாக மலை யாள, கன்னட தலைமைகளால் நிர்வகிக்கப்படும் நிலைக்கு உள் ளாகியுள்ளது. எம். ஜி. ஆர். வீட்டில் பேசுவது மலையாளத்தில்! ஜெயலலிதா கன்னட இறக்குமதி! தமிழர்களின் துயர் கண்டு துடிக்க தமிழ் ரத்தம் இவர்கள் உடம்பில் இல்லை: உலகில் பரந்து வாழும் பல கோடி தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு இவர்கள் கைகளில்!
அண்மைக்காலமாக தமிழகத்தில் ஜெயலலிகாவை விமர்சிக் கும் பத்திரிக்கைகள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்படுகிறது. பழம்பெரும் எழுத்தாளர் சாவி, ஆபாசமாக அட்டைப்பட நகைச் சுவை எழுதினார் என்று கைது செய்து காவலில் வைக்கப்பட்டார்: **ஆடையில்லாமல் மாப்பிள்ளைக்குப் பால் கொடுக்குப்படி மாமி யார் கூறினாராம். மனைவி உடையின்றி பால் எடுத்துச் சென்ற தாக கேலிச் சித்திரம் அட்டையில் அமைந்துவிட்டது. ” இதுதான் சாவி செய்த குற்றம். அப்பனை நேரில் காணாத ஆபாசச்செல்வி அந்த முதுபெரும் எழுத்தாளரை சிறையில் தள்ளி வேடிக்கை பார்த் திருக்கிறது. சாவி, கலைஞர் கருணாநிதியின் மீது பற்றுள்ளவர் என் பதுதான் கைது உத்தரவிற்குக் காரணமே தவிர ஆபாசம் என் பது புனைகதை.
எம். ஜி. ஆர். தன் பக்கத்தில் இருக்கும் போது 'குளு குளு’’ என சிலிர்ப்பேற்படுத்தும் என குமுதம் இதழுக்குப் பேட்டி கொடுத்த
கொந்தளிப்பு 5

Page 5
வர் இந்த ஜெயலலிதா! ஜெயலலிதாவின் தாயார் நடிகை சந்தியா வின் உற்ற நண்பர் எம். ஜி. ஆர். சந்தியா இறந்தபின் ஜெயலலிதா வின் கார்டியனாக மாறினார் எம். ஜி. ஆர். !
எம். ஜி. ஆர். தன்னுடைய (திரை) நாயகிகளை காலத்திற்குக் காலம் மாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் மறந்தும் விடுவார். பானுமதி, சரோஜாதேவி, ஜெயலலிதா, லதா, மஞ்சுளா என அந்த பட்டியல் நீளமானது.
அடிமைப் பெண் படத்தின் பின்பு ஜெயலலிதாவின் உறவு முறிந்து விட்டது. 1980ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடந்த போது "காவிரி தந்த கலைச் செல்வி’ நாட்டிய நாடகத்தை நடத் தியதன் மூலம் மீண்டும் உறவை புதுப்பித்துக் கொண்டார். எனி னும் அ.தி.மு.க. கோஷ்டிகளால் கட்சியில் மேலெழ விடாதவாறு அடக்கியே வைக்கப்பட்டிருந்தார். எம். ஜி. ஆரின் இறுதி யாத்திரை யின் போது வண்டியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் படிப்படியாக அ.தி.மு.க. விற்குள் கோஷ்டிகளை உருவாக்கி இறுதியில் தலைமையை தனதாக்கிக் கொண்டார்.
வந்தாரை (மட்டும்) வாழ வைக்கும் தமிழகம் பெங்களூர் வாசியான ஜெயலலிதாவை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து விட்டது.
எப்படியோ, எந்தப் பெண்ணுக்குமே எளிதில் கிடைக்காத ஒரு உயர் பதவியை தமிழக மக்கள் தனக்குத் தந்திருக்கிறார்களே! என்ற நன்றி, விசுவாசம் சிறிதளவேனும் கொள்ள வேண்டாமா? எந்தெந்த வகையில் தமிழகத்தைக கொள்ளையடிக்க முடியுமோ எந்தளவு தமிழ் மக்களை பழிவாங்கிக் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவையும் ஜெயலலிதா செய்து வருகிறார்.
6 கொந்தளிப்பு

மூத்த அமைச்சர்கள், சபாநாயகர் போன்றோரை தனது காலில் விழுந்து வணங்க வைக்கின்றார். அந்த வெட்கங்கெட்ட ஜென்மங்களும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் சோபன்பாபு என்ற நடிகருடன் பல ஆண்டுகள் திருமணமாகாமலேயே ஒன்றாக வாழ்ந்த பதிவிரதையின் காலை நக்கி வாழ்வு நடத்துகிறார்கள்.
1989ல் தன்னிடம் பணமே இல்லை என பகிரங்கமாக அறிவித் தவர் ஜெயலலிதா. ஒரு கோடி ரூபா பெறுமானமுள்ள போய்ஸ் கார்டனை அடமானம் வைக்கப் போவதாக அப்போது கூறினார். அ.தி.மு.க. வேட்பாளர்களிடம் தேர்தல் செலவுக்கு பணம் வசூலித் தார். ஆனால் இன்று நிலைமையில் தலை கீழ் மாற்றம்! “ ‘ஜெய லலிதா சாம்ராஜ்யம்' மொகலாய சாம்ராஜ்யம் போல் விரி வடைந்து கொண்டே போகிறது.
ஜெயலலிதாவும் அவர் உயிர் தோழி சசிகலாவும் சேர்ந்து நடத்தும் கொள்ளைகள்; ரூபா 1.87 கோடிக்கு சென்னை கிண்டி யில் ஜெயா பப்ளிகேஷன்ஸ், கிண்டியில் பழைய இதயம் பேசுகிறது அச்சகம்; 12.60 லட்சம், ஹைதராபாத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் 18 ஏக்கர் பண்ணை. 1 ஏக்கரில் ரூபா 2 லட்சம் வருமா னம் வருகிறது. இப் பண்ணையைச் சுற்றி பல லட்சம் ரூபா செலவில் கருங்கல் சுவர்! பண்ணையின் நடுவில் ரூபா 35 லட்சம் செலவில் மாளிகை கட்டப்பட்டு வருகிறது.
எங்கிருந்து வந்தது இந்தப்பணம் என்கிறார்கள் தமிழகத்தில் சுயமரியாதையுள்ள ஒரு சிலர். நடித்து முடித்த 125 படங்களுக்கும் ரூபா 1 லட்சம் என்றபடி பார்த்தாலும் இந்த கணக்கு சரிவராது
தோழி சசிகலா சாதாரண நடுத்தர குடும்பம். ஜெயலலிதா கூட்டுடன் அண்மைக் காலமாக பலகோடி சொத்துகளுக்கு அதிபதி! தஞ்சாஊரில்52 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 37.20 லட்சம்
கொந்தளிப்பு 7

Page 6
(நிஜமதிப்பு, 1 கோடிரூபா) திருத்துறைப்பூண்டியில் 1 கோடி ரூபாவில் திருமண மண்டபம் . மன்னார்குடியில் ரூ 12 லட்சம் பெருமதியான திவான் மாளிகை , தஞ்சாவூர் விளார் கிராமத்தில் சசிகலாவின் கணவர் 30 ஏக்கர் பண்ணை ரூ 45 லட்சத்திற்கு வாங்கி இருக்கிறார்.
இவை தவிர அன்மையில் பல நூறு கோடி ரூபா செலவில் இரண்டு தேயிலைத் தோட்டங்கள் வாங்குவதற்கு பேரம் நடத்திக் கொண் டிருக்கிறார்களாம் இந்த அல்லிராணிகள்.
சம்பல் பள்ளத் தாக்கில் தான் கொள்ளைக்காரிகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இப்போது தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வந்து விட்டது போலும். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது அடுத்த தமிழக முதல்வர் சண்டை நடிகரான ரஜனிகாந்த் என தகவல் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்த இலங்கையில் தலைமைகளைப் பிடிக்கும் தலைவர்கள் அங்கேயே முயற்சி பண்ணாததன் காரணம் இப்போது தான் விளங்குகிறது.
ஒதுங்கி ஓடியவர்கள் சில்லென்று இளங்காற்று மெல்ல வீசும் நெல்லிடையே மறைந்திருத்த பதர்கள் ஒடும் தழுவுகிற காற்றினிலே கிளைகளாடும் பழுதுண்ட இலைளெலாம் பதறிவீழும் சீறுகிற புயலினிலே பாறை நிற்கும் சிறுமணல்கள் புழுதியுடன் சேர்ந்து ஒடும் ஆறோடி மோதுகையில் வேர்கள் ஆழ்ந்த மரம்நிற்கும். புல்பிய்ந்து சூழலில்மூழ்கும். எதிர்ப்புரட்சிப் புயல்மோதச் சிலபேர்ஓடி எதிரணியில் சேர்வார்கள் சிதறுவார்கள். பதர் விலகி நெல்கெட்டுப் போவதாமோ? வழி விலகிப் போனோராற் புரட்சிசாமோ?
நன்றி:- செப்பனிட்ட படிமங்கள்
(கவிதை தொகுப்பு) சி. சிவசேகரம் - செங்கொடி 6-1-74
8 கொந்தளிப்பு
 

ஒடுக்கப்பட்ட மக்கள்
ஏன் ஒன்றிணைகிறார்கள்?
- சிவப்பிரகாசம்
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட போது அந்த சுதந்திரம் தங்களுக்கு எவ்வகையி லும் உதவப் போவதில்லை என உறுதியுடன் கூறியதோடு தங்க ளுக்குத் தனியான ஏற்பாடுகள் தேவை என இருபது கோடிக்கும் அதிகமான ஒடுக்கப்பட்ட மக்கள் அப்போது குரல் எழுப்பினர். நீண்ட இழுபறியின் பின் அம்மக்களின் ஒப்பற்ற தலைவன் கலாநிதி அம்பேத்கர் அவர்களே சுதந்திர இந்தியாவின் அரசியல் அம்ைப்பை ஆக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் ஒடுக்கப்பட்ட மக்க ளின் உரிமை காக்க தேவையான விதிகளை அரசியல் யாப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் முடிவாகியது.
இருந்தபோதிலும் இன்றும் கூட ஜாதி ஆதிக்க வெறியர்களின் கோரப்பிடியில் சிக்கி தங்கள் உயிர் உடைமைகளை இழந்து தினமும் பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்டவர்கள் தவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். வி.பி சிங்கின் அரசு ஆட்சியில் இருந்த போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சில சலுகைகளை சட்டமூலம் வழங்கி னார் என்பதற்காக பல உயர் ஜாதி வெறியர்கள் தீமூட்டிக்கொண்டு எதிர்ப்பைக் காட்டி செத்தார்கள்.
“...சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது.'
என பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மிக அழகாக அன்றே சொல்லிவிட்டு சென்றான். திருடர்களுக்கும் ஏமாற்றுக்காரர்களுக் கும் தான் இன்று எல்லா நாடுகளிலும் சட்டம் பாதுகாப்பு தரு கிறது. சம்பந்தப்பட்ட மக்கள் நிலைமையை உணர்ந்து போராடாது போனால் உயர்வர்க்கம் என தம்மை கூறிக்கொள்வோர் ஏறி மிதிப் பதும் எட்டி உதைப்பதும் எந்நாளும் தொடரவே செய்யும்.
கொந்தளிப்பு V 9 ܫ

Page 7
  

Page 8
பிரிவினை எதிர்ப்பு பாதயாத்திரைக்கு நடந்தது என்ன?
மதன
இல மாதங்களுங்கு முன் "எங்களுக்கு பிரிவினை தேவை யில்லை" என கோஷமிட்டு பாதயாத் திரை நடத்தப் டோவதாக ஒரு தொழிற்சங்கம் அறிக்கை விட்டிருந்தது. பொகவந்தலாவையி லிருந்து அட்டனுக்கு இப்பாதயாத்திரை நடக்கும் என அறிவித்தல் கூறியிருந்தது. ஆனால் இது நாள்வரை இந்த யாத்திரை நடைபெற வில்லை. இனிமேலும் நடைபெறாது என சம்மந்தப்பட்ட தொழிற் சங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதயாத் திரையில் கலந்துக்கொள்ள ஆள்பிடிப்பதில் ஏகப் பட்ட சீரமங்கள் இருக்கும்போலும்!
மலையகத்தில் பாதிப்பேர் பிரிவினை கேட்பது போலவும் தாங்கள் இந்த பாதயாத்திரை மூலம் அக் கோரிக்கையை மழுங் கடிக்கச் செய்துவிடப் போவது போலவுமே அப்போது பத்திரிகை களில் வெளிவந்த அக் குறிப்பிட்ட சங்கத்தினரின் அறிக்கையில் இருந்தது.
யாரோ ஒரு சிலரை திருப்திப்படுத்தி தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அரசியல்வாதிகள் அவ்வப்போது இப்படிப்பட்ட அறிவிப்புகளை விடுவதும் பின்னர் அது பற்றி மறந்து விடுவதும் வழக்கம்தான்.
எங்கே ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் அதைப் பற்றிப் பிடித் துக் கொண்டு தங்கள் இனவாதக் கூச்சலைப் போடலாம் என எம் நாட்டில் உள்ள குழப்பவாதிகள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மலையகத்தில் இல்லாத ஒரு நிலைமையை தூக்கிப் பிடித்துக் கொண்டு அதற்கு எதிராக பாத யாத்திரை போகிறோம் என கூறுவதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது?
இனிமேலாவது இப்படிப்பட்ட வெற்று அறிக்கைகளை பத்திரி கைகளில் விட்டு நாட்டையும் மக்களையும் குழப்புவதோடு தங் களையும் குழப்பிக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட தலைவர் (?) கள் இருப்பார்களா?
12 கொந்தளிப்பு

நாளைக்கு.
இன்றைக்கு ராப்பொழும் பசியோடு உள்ளோரே, நாளைக்கு உங்களுக்கு நன்றாகச் சோறுவிழும், முட்டைப்பொரியலுடன் மீன்கட்லெற், கடல்நண்டு, மாட்டிறைச்சி, கோழிக்கால், சிங்கஇறால் சிலதுண்டு, கோவாப்பூ அரை அவியல், தக்காளி பச்சடியாய், முழுசான முந்திரியங் கொட்டையுடன் நெய்ச்சோறு, இடியாப்பப் புரியாணி, அன்னாசிப் பழத்துண்டு, அன்னமுன்னாப் பழக்கூட்டு ஐஸ்கிறீமுடன் கலந்து கொட்டிக் குவிந்திருக்கும். கட்டாயமாய் உண்மை:
அரசாங்க ஆதரவில் எப். ஏ. ஓ. தாபனத்தார் பட்டினியை இல்லாமற் பண்ணுதற்காய்க் கூட்டுவித்த மாநாடு, பலநூறு தீர்மானம் பரிந்துரைகள் செய்ததன் பின் இன்றோடு முற்றாச்சு - ஆதலினால் நாளைக்கு நீங்களெல்லாம் வயிறாற உண்டதன்பின் பிள்ளைகட்கும் தோழர்கட்கும் பொதியாகக் கட்டியது போய்மீந்து, நாய், பூனை விட்டொதுக்கக் காகங்கள் தின்று, பறப்பதற்குத் திணறுகிற வாறுண்மை!
இன்றிரவு, மாநாட்டில் பங்கேற்ற மானுடர்க்குப் பெருவிருந்து. காலையிலே ஹோட்டேலின் பின் சுவரின் ஒரத்தே தொட்டி அருகாகக் கட்டாயம் காத்திருப்பீர். கொட்டிக் கிடக்கும்.
கை கவனம் -
சோற்றுக்கு இடைநடுவே கண்ணாடிச் சில்லிருக்கும்.
நன்றி: செப்பனிட்ட படிமங்கள்
சி. சிவசேகரம்.
கொந்தளிப்பு 13

Page 9
வெயிலிலும் போராட்டமில்லை
மழையிலும் போராட்டமில்லை
தோட்டங்கள் தனியார் மயமாக்கலில் எதிரணியினரின் நிலை
- மணியன் -
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. அவற்றை தனி யார் கைகளில் ஒப்படைக்கப் போகிறோம் என அரசாங்கம் கடந்த பல மாதங்களாக கூறிவந்து இப்போது செயலிலும் காட்டிவிட்டது. அதாவது சொன்னதைச் செய்து விட்டது. இ. தொ. கா. வும் பகி ரங்கம்ாக அதற்கு ஆதரவு தெரிவித்து தானும் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் பங்காளியே என்பதை நிரூபித்தது. இதில் எந்த வித சிக்கலும் இல்லை. வெளியூர் கம்பனிகளுக்கு தோட்டங்களை தாரை வார்க்கவில்லை என்பதில் மட்டுமே இ. தொ. கா. விற்கு கொஞ்சம் ஊடல்!
ஆனால் தனியார் துறைக்கு பெருந்தோட்டத்துறை கையளிக் கப்படுவதை இறுதி (மூச்சு) வரை எதிர்ப்போம் என மார்தட்டிய எதிரணியினர் இது விசயமாக என்ன உருப்படியான நடவடிக்கையில் இறங்கினார்கள்?
ஒன்றுபட்ட வேலை நிறுத்தம் என்றார்கள். திகதியும் குறித் தார்கள். வழக்கம் போல் வாபஸ் பெற்றார்கள். சம்பந்தப்பட்ட தலைவர்களை அணுகினால் கொளுத்தும் வெயிலில் எவனாவது வேலை நிறுத்தம் செய்வானா? என்றார்கள். திகதி குறிக்கும் போது வெய்யில் பற்றி ஞாபகம் வரவில்லையா என நாம் கேட்கக்கூடாது. அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்கள்.
வெய்யில் போய் மழை வந்தது. கொழுந்து எக்கச்சக்கமாக வளர்ந்து நின்றது. அட இது சரியான சந்தர்ப்பமாயிற்றே இப்போது வேலை நிறுத்தத்தில் குதித்தால் என்ன என்று கேட்டோம். 'தொழி லாளி பல மாதங்களுக்குப் பின் கொழுந்தைப் பார்க்கிறான். அவ னது வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றார்கள்’’.
14 கொந்தளிப்பு

வருமானப் பாதிப்பு தொழிலாளியை விடவும் அரசாங்கத் தைப் பாதிக்கும் என இவர்கள் கவலைப்பட்டார்களோ என்று சந்தேகம் கொள்ளக் கூடாது. அவர்களது மனம் சங்கடப்படும்.
இதை எல்லாம் விட வேடிக்கை என்னவென்றால் எல்லாம் முடிந் க பின் அதாவது தோட்டங்களை தனியார் துறையினர்க்குக் கையளித்த பின் கூட்டம் கூடி ஒப்பாரி வைத்ததுதான்.
எங்களுக்கு சொல்லாமல் திடீரென்று எடுத்து விட்டார்கள்! சொல்லாமல் எடுத்து விட்டார்கள்! இதுதான் அந்த எதிர்ப்புக் கூட் டத்தில் பேசப்பட்ட கருத்துக்களின் தொனிப் பொருள்!
இது எப்படி இருக்கின்றது என்றால், 'தனது மகள் அடுத்த வீட்டு இளைஞனோடு தொடர்பு என்பது பல காலமாக தெரிந் திருந்தும் அது பற்றி எந்த கவலையும் படாமல் இருந்து விட்டு, க்ளரைவிட்டே அந்த இருவரும் ஓடிப்போன பின், ஐயோ சொல்லா 10ல் போய்விட்டாளே' என ஒப்பாரி வைப்பது போன்றதே ஆகும்.
இந்த கூட்டுத் தலைவர்களில் பலர் ஐம்பதுக்கு ஜம்பது என்ற வாதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். தனியார் துறையினரிடம் கை யளிப்.கில் ஐம்பது வீதம் ஆதரவு, ஐம்பது வீதம் எதிர்ப்பு என்பதே இவர்களது மாபெரும் தத்துவமாகும்.
கூட்டு ஒப்பந்தம் ஒன்றுக்காவது முனைந்து ஏற்பாடு செய் கிறார்களா? என்றால் அதிலும் ஆமை வேகம்தான்! உலகில் என்ன நடந்தாலும் இவர்களுக்கு கவலை என்பதே கிடையாது. அடுத்த தேர்தல் வரும்வரை அவசரப்படமாட்டார்கள். ஒவ்வொரு மேதின ஊர்வலத்தில் கோஷிப்பதற்கு ‘ரெடிமேட் கோரிக்கைகளை கை வசம் நிறையவே வைத்திருக்கிறார்கள்!
பாவம் தொழிலாளர்கள்!
கொந்தளிப்பு 15

Page 10
இலங்கையின் தேசியத்துவ இயக்கம்
ஒரு கோட்பாட்டு நோக்கு
- கலாநிதி அம்பலவாணர் சிவராசா (சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக் கழகம்)
19ιρ நூற்றாண்டில் இலங்கையில் பிரித்தானிய காலணித்துவ அதிகாரிகள் ஏற்படுத்திய சமூக பொருளாதார மாற்றங்களின் விளை வாக தோற்றம் பெற்ற உள்ளூர் உயர் மத்திய வர்க்கம் தலைமை தாங்கி பிரித்தானிய ஆட்சிக்கெதிராக சீர்திருத்தம் கோரி நடாத்திய கிளர்ச்சிகள் 1912ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தேசிய சங்கம் 1917ல் அமைக்கப்பட்ட இலங்கைச் சீர்திருத்தக் கழகம் என்பவற்றி னுாடாக வெளிப்பட்டது. இவ்விரு இயக்கங்களும் 1919ல் ஒன் றிணைந்து உருவாக்கியதே இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆகும். * 'இலங்கை மக்களுக்குப் பொறுப்பாட்சி பெற்றுக் கொடுப்பதும், பிரித் தானிய சாம்ராஜ்பத்தினுள் இலங்கை சுயாட்சி செலுத் தும் ஒரு அங்கத்துவ நாடு என்ற அந்தஸ்த் தைப் பெற்றுக் கொடுப் பதுமே" இலங்கை தேசிய காங்கிரசின் இலக்காக இருந்தது.
இலங்கைத் தமிழரான சேர். பொன்னம்பலம் அருணா சாலம் இதன் முதல் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு தேசிய காங்கிரஸ் மிதவாத அரசியல் திட்ட வாதிகளினால் ஆக்கிர மிக்க பட்டதாகவும் இருந்தது. இம் மிதவாதிகள் இலங்கைப் பொறுப்பாட்சி அரசாங்கத்தினை பெற்றுக் கொடுப்பதை இலக்காக கொண்டியங்கியபோது குறிப்பிட்டதொரு குழுவினதோ அல்லது பிரதேசத்தினதோ பிரதிநிதிகளாகச் செயற்படாது இலங்கை முழு வதற்குமான ஒரு இயக்கமாக காங்கிரஸ் விளங்க வேண்டும் என்றும் விரும்பினர். மேற்சொன்ன நோக்கங்களைக்கொண்டு பார்க்கும்போது காங்கிரஸ் நவீன மாதிரியிலமைந்த இலங்கையர் தேசிய வாதத்தி னையே பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதில் ஐயமில்லை. இருந்த போதிலும் இலங்கைத் தேசிய காங்கிரசின் இயல்பு உயர்ந்தோர் குழாமின் இயக்கம் என்ற தன்மையைக் கொண்டிருந்ததோடு அதனை
16 கொந்தளிப்பு

ஒரு மக்கள் இயக்கமாக ஆக்குவதற்கு இதன் தலைவர்கள் ஒரு போதும் விரும்பி இயங்கவில்லை. மேலும் இத் தலைவர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட குரோதங்கள் இலங்கை தமிழர்களுக்கு மேல் மாகாணத்தில் விசேடமான ஒரு தேர்தல் தொகுதியினை ஒதுக்க வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் தமிழ் தலைவர்க ளுக்கும் சிங்கள தலைவர்களிடையேயும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கள் காரணமாக விரைவில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் பிளவு பட்டது. இலங்கை தேசிய காங்கிரசில் ஏற்ப்பட்ட பிளவுக்கான கா ரணங்கள் எவை என்பதனையும் எவ்வாறு ஒர் இலங்கைத் தேசிய வாதம் பின்னடைந்து சிங்கள தமிழ் தேசியவாதங்கள் வளர்ச்சிய டைந்தன என்பதனையும் இக் கட்டுரையில் நாம் காண்போம். இலங் கையர் தேசிய வாதத்தினையும் இலங்கை தேசிய இயக்கதினையும் காண முன்பு தேசிய வாதம் பற்றிய கோட்பாட்டினை இங்கு நோக்குதல் பொருத்தமானதாகும்.
தேசிய வாதம் பற்றிய கருத்துக்கள்
1836 ம் ஆண்டளவில் புழக்கத்துக்கு வந்த "தேசியவாதம்' என்ற பதம் சூழ்நிலை, தேவை என்பன காரணமாக இன்று வரை பல அர்த்தங்களைக் கொண்டதாக மாறிவந்துள்ளது. இருந்த போ திலும் தேசியவாதம் என்ற பதத்துக்குப் பொதுவாக ஏற்றுக்கொள் ளப்பட்ட பண்புகள் சில உண்டு. அவை பின்வறுமாறு
1. நாம் ஒரே குழுவினைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வுடன்
கலந்த நீண்டகால சமூகத் தொடர்புகள். 2. ஒரே குழுவைக் சேர்ந்தோர் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தினை தமது வாழ்விடமாக கொண்டிருப்பதோடு அதனை வெளியா ரிடமிருந்து பாதுகாத்து வருதல். 3. அக்குழுவினர் தனியொரு மொழியையோ அல்லது தனியொரு மொழியோடு தொடர்பு பட்ட பேச்சு வழக்கினையோ கைய்ாழு
5G). 4. கடந்த காலங்களில் பெரும் காரியங்களைச் செய்து முடித்த வர்கள் என்ற உணர்வும் எதிர்காலத்திலும் அவ்வாறு காரியங் களைச் செய்வதற்கான விருப்பம் .
5. தேசிய வீரர்கள் பலரை உருவாக்குதல். 6. ஒன்றுபடுவதற்கான விருப்பம்.
அதனால் தான் கால்ரன் ஜே. கேய்ஸ் என்பவர்' தேசிய இனம்
நாட்டுப் பற்று என்பதுடன் ஒன்று கலப்பதோடு மற்றை மனித
கொந்தளிப்பு 7

Page 11
பணிவுகள் எல்லாவற்றையும் விட தேசிய நாட்டுப் பற்றுக்கு முத லிடம் வழங்குவது' தேசியவாதம் என வரைவிலக்கணம் படுத்தினர் மேற்கு ஐரோப்பிய நாட்டு அனுபவங்களை அடிப்படையாக கொ ண்டெழுந்த மேற்படி வரைவிலக்கணம் ஒரு பல இனநாட்டுக்குப் பயன்படுத்தும் போது சில பிரச்சினைகள் ஏற்படுத்துகிறது.
மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்திலும் பிரான்சி லும் தேசிய இனங்கள் உருவாவதற்கு முன்பே அரசினைக் கட்டி யெழுப்புகல் என்பது நடைபெற்று முடிந்துவிட்டது. இந் நர்டுகளில் ** அரசியல் சமுதாயம்’ என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டு அங்கு தேசிய இனமும் அரசும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் ஐரோப்பாவின் மற்றய பகுதிகளில் அரசியல் சமுதாயத்திற்கு இல்ல ஒரு குறிப்பிட்ட மொழிக்கு அல்லது கலாச்சாரத்துக்கே மக்களின் பணிவு இருந்தது. அதனால் இத்தகைய தேசியவாதங்களை மொழி வழித்தேசியவாதம் அல்லது கலாச்சார தேசியவாதம் என அழைத் தனர். ஆகவே ஒ ன் று க் கு ம் மேற்பட்ட அ ல் ல து பல தே சி ய இ ன ங் க  ைள உ ள் ள ட க் கி ய அ ர சு க ளி ல் ப ல் வேறு தே சி ய உ ண ர் வு க ள் இயக்கத்தில் இருக் கலாம் என்பது தெரிகிறது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஆசியா ஆபிரிக்க, நாடுகளில் சிலவற்றில் மேற்சொன்ன கேசியவாகம் நடைமுறையில் உள்ள கைக் காணலாம். இந்நாடுகளில் ஒரே நேரத்தில் இரண்டு விதமான தேசியவாதங்கள் இயக்கத்தில் உள்ளன. ஒன்று முழு கேசத்தினை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதம். மற் றயது அத் தேசத்தில் வாழும் குறிப்பிட்ட தேசிய இனங்களை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக இலங்கையர் தேசி வாதம் ஒன்று இயக்கத்திலிருந்து பின்னர் இதற்கு எதிராக சிங்கள தேசியவாதமும் தமிழ் தேசியவாதமும் வளர்ச்சியடைந்துள்ளது. இவ்விரு தேசியவாதங்களும் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைப் பார்க்கு முன்பு தேசியவாதம் பற்றிய மார்க்சீய-லெனினிச கருத்துக் களை நோக்குவது அவசியமாகும்.
தேசியவாதம் பற்றிய மார்க்சிய லெனினிச நிலைப்பாடு
தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துக் ஈளும் கொள்கைகளும் பல்வேறு பிரிவினராலும் முன் வைக்கப்பட் டுள்ளது. இவற்றுள் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர் பாக ஒரு திட்ட வட்டமான நிலைப்பாட்டினை முன் வைப்பதில் தாராண்மை ஜனநாயகக் கோட்பாடுகள் வெற்றியடையவில்லை எனலாம். மாறான மார்க்சீய - லெனினிசம் தேசிய இனப் பிரச்
18 ܐܕ கொந்தளிப்பு

சினை பற்றி ஆராய்ந்து அது எவ்வாறு தீர்க்கப் படலாம் என்பது பற்றி தெளிவான நிலைப்பாட்டினை முன் வைத்துள்ளது. இனப் பிரச்சினை பற்றி மார்க்சீய லெனினிச நிலைப்பாட்டினைச் சுருக்க மாக நோக்குவோம்.
தேசிய இனப்பிரச்சினை பற்றி கோட்பாடு, நடைமுறை ஆய்வுகளில் கார்ல்மாக்ஸ் வீ. ஐ. லெனின், ஜே. வீ. ஸ்ராலின் என்போர் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். தேசியவாதம் என்பது முதலாளித்துவ யுகத்துக்கே பிரத்தியேகமான ஒரு தோற்றப்பாடு எனவும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியோடு அதுவும் மறைந்து விடும் எனவும் மார்க்ஸ் நம்பினார். அதனால் கார்ல்மாக்ஸ்" ம் ஏங்கல்சும் தாம் எழுதிய கொமுனியுச கொள்கைத்திட்டத்தில் எல்லா நாடுக ளிலுமுள்ள தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுமாறு அறைக் கூவல் விடுத்தனர். தொழிலாளர்களுக்கு எந்தவொரு நாடும் இல்லை என்பதால் அவர்களிடமிருந்து இல்லாததொன்றை எவரும்பறித்துவிட முடியாது என வாதிட்டனர். “ஒரு தேசிய இனத்திலுள்ள வர்க்கங்க ளிடையேயான காழ்ப்புணர்வுகள் எந்த ஒரு விகிதாசாரத்தில் மறை கிறதோ அதே விகிதாசாரத்தில் ஒரு தேசிய இனத்துக்கும் இன் னொரு தேசிய இனத்துக்குமிடையிலான காழ்ப்புணர்வும் முடிவுக்கு வரும் என மார்க்ஸ் வா கிட்டார். சுருங்கக் கூறின் "" தேசிய வாதம் வர்க்க உணர்வின வளர்ச்சியை தடுக்கம். அதனை காலந் தாழ்த்தும் இந்தக் காரணங்களுக்காக தேசியவாதத்திற் கெதிராகப் போராட வேண்டும். ஆனால் இறுதியில் வர்க்க எதிர்ப்புணர்வுகளுக்கும் பாட் டாளி மக்களின் சர்வதேச ஒற்றுமைக்கும் தேசியவாதம் இடமளிக்க வேண்டிவரும்' என மார்க்ஸ் குறிப்பிட்டார், ஆனால் அவர் தேசிய இனப் பிரச்சினையில் ஒரு பொதுக் கோட்பாட்டை அபிவிருத்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்ஸ், ஏங்கல்ஸ் என் போரது தேசிய இனப் பிரச்சினை பற் றிய சிந்தனைகளை ஒரு விபரமாக செயற்திட்டமாக லெனின் அபி விருத்தி செய்தார். புதிய வரலாற்று சூழ்நிலைகளில் பாட்டாளி களின் வர்க்கப் போராட்டம் தேசிய ஒடுக்குதல்களுக்கெதிரான போராட்டங்களோடும் அடக்கியொடுக்கப்பட்ட மக்களது விடு தலைக்கான போராட்டத்தோடும் இணைகிறது’’ என்ற கருத் தினை லெனின் முன் வைத்தார். முரணறுவாத பொருள் முதல் அணுகுமுறையினைப் பயன்படுத்தி லெனின் தேசிய உணர்வு என்பது «5F . OTI" 555 எழுந்ததொன்றல்ல மாறாக வர்த்தக, கைத்தொழில் நலன்களிலேயே அது வேர் கொண்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.
கொந்தளிப்பு 9

Page 12
தேசிய இனப் பிரச்சனையில் இடம், பங்கு என்பவற்றைத் தீர்மானிப்பதில் பின்வறும் காரணிகளை லெனின் தம் ஆய்வில் வற்புறுத்தினார்.
(அ) குறிப்பிட்டதொரு யுகத்தின் தனித்துவமும் மக்களது அபிவி
ருத்தியின் வரலாற்று கட்டமும் தேசிய தொடர்புகளும். (ஆ) தேசிய சர்வதேசிய வழி முறைகளது பொருளாதார தளத்
தினது முக்கியத்துவம் , (இ) ஒரு யுகத்தின் நோக்கங்களில் தங்கியிருக்கும் தேசிய இயக்
கங்களின் மாற்றங்களுக்குட்படும் உள்ளடக்கும். (ஈ) பாட்டாளிகளின் சர்வதேசீய வாதம் பூர்சுவாத் தேசியவாதம் என்பவற்றிற்கிடையிலான மாற்ற முடியாத எதிர் மறையும் சமூக தொடர்புகள் மீதான அவற்றின் செல்வாக்கும். (உ) தேசீய இனத்தின் வாழ்வில் வர்க்கங்கள் அல்லது வர்க்கப் போராட்டத்தில் பங்கும் தேசீய தொடர்புகளின் உள்ளடக் கமும் . (ஊ) தேசீய காரணியில் வர்க்கக் காரணியின் தொடர்பு.
மேற்சொன்ன காாணிகளை கவனமாக ஆராய்ந்த பின் லெனின் பூர் சுவா ஜனநாயகம் எப்போதும் எங்கும் இனங்கள் என் பவற்றிடையே சமத் தவம் என்பதை வாக் க ளித் து ஸ் ள து. ஆனால் முதலில் ஆக்ரமிப்புக் காரணமாக அக்தகைய சமத்துவத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் தொழிலாள்ர் வர்க்கம் தேசீய அடக்கு முறையை ஒழிக்கவும், எல்லாத் தேசங்களும், தேசிய இன ங்களும் சமத்துவத்திற்கும் போராடவேன்டுமன்று லெனின் குறிப்பி ட்டார். ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையினை ஆதரிப்பதும் பிரிந்து செல்வதற்கான அதன் உரிமையை ஆதரிப்பதும் அடங்கும். தேசிய இனத்திலுள்ள ஒரு சமூக ஜனநாயகக் கட்சியிலும் உள்ள வரலாற்றுக் கடமையென லெனின் வாதிட்டார். லெனின் கருத்துப்படி தேசிய சுயநிாணய உரிமைக்குத் திட்டவட்டமான கெட்டியான அர்த்தம் இருக்கிறது. அது அடக்கியொடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து செல்லும் உரிமையினை முக்கியத்துவப்படுத்து கிறது, ஆகவே சுயநிர்ணய உரிமையும் பிரிந்து செல்வதும் சமப்படுத் தப்படுகிறது. பிரிந்து செல்வதற்கான உரிமை, பிரிவதற்கான அவசி யம் அல்லது விருப்பம் என்பதற்குச் சமமாக்கப்படவில்லை. சுய நிர்ணய உரிமையினை அங்கீகரிக்க ஒரு ஜனநாயக சோஷலிச கோரிக்கை என்பதால் ஒரு சமூக ஜனநாயகக் கட்சியினரும் இது ஆதரிக்க்ப்பட வேண்டும் என்று லெனின் வற்புறுத்தினார். மேலும்
20 கொந்தளிப்பு

லெனின் சுயநிர்ணய தத்துவத்தினைப் பரந்ததாக்கி தங்கியிருக்கும் நாடுகளினதும், கலனிகளிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் முழுமை யாகப் பிரிவதற்கான உரிமையாகவும் அவை அரசுகளாகச் சுதந்திர மாக செயற்படுத்துவதற்குமான உரிமையெனவும் விளக்கமளித்தார். மேலும் பிரிந்து செல்வதற்கான உரிமையினை அவர் எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் வழங்கவில்லை. விடுதலை இயக்கத்தினை எந்த வர்க்கம் வழி நடத்திச் செல்கிறது, அவ்வியக்கத்தின் தன்மை என்ப வற்றை அடிப்படையாக வைத்தே அவ்வுரிமை வழங்கப்பட வேண் டும் என்றார். ஒரு விடுதலை இயக்கத்தை ஒரு பிற்போக்கு பூர்சுவா வர்க்கம் தலைமை தாங்கி நடத்தினால் அதனை ஆதரிக்கக் கூடா தென்றும், மாறாக ஒரு முற்போக்கு புரட்சிகர தொழிலாள வர்க்கம் தலைமை தாங்கினால் அதனை ஆதரிக்க வேண்டும் என்றும் லெனின் குறிப்பிட்டார்.
மார்க்ஸ், லெனின் போன்றோரைப் பின்பற்றி ஜே. வீ. ஸ்ரா லின் சுயநிர்ணய உரிமை என்பது ஒரு தேசம் தனது சொந்த விருப்பத் தின்படி தனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொள்வதையே குறிக் கும் என்று விளக்கினார். தேசம் ஒன்றுக்கு மற்றைய தேசங்களோடு சமஷ்டி ஒருமைப்பாடு ஒன்றில் சேரும் உரிமை உண்டு. தேசங்கள் இறைமை படைத்தவை, எல்லாத் தேசங்களிலும் சமமானவை என் றும் அவர் வா திட்டார். ஒரு குறிப்பிட்ட தேசம் எவ்வாறு தனது வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்; எத்தகைய முறைகள்ை அது எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் என்பது அக்குறிப் பிட்ட தேசத்தில் பொருளாதார, அரசியல், கலாச்சார சூழ்நிலை களே தீர்மானிக்க முடியும் என்பதையும் ஸ்ராலின் வற்புறுத்தினார்"
தொகுத்து நோக்கும் போது இனப்பிரச்சினைகள் ஒரு கடந்து செல்லும் கூட்டத்தைப் போன்றது. ஒரு சோஷலிச சமுதாயத்தின் இயல்பான வர்க்கப் போராட்டங்கள் மேற்சொன்ன இனப்பிரச்சினை யினை மறைத்து விடும் என்றே மார்க்சீய அணுகுமுறை கொள்கிறது. இதனால் தான் தேசிய ஒடுக்குதல்களுக்கும், சமத்துவமின்மைக்கும் எதிரான டோ ராட்டம், தனியார் சொத்து, சுரண்டல் என்பவற்றை ஒழிப்பதற்கெதிரான பொதுப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருத்தல் வேண்டுமென்ற முடிவுக்கு மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் என்போர் வந்தனர்.
உயர்ந்தோர் குழாமும் இலங்கையர் தேசியவாதமும்
இலங்கை தேசிய காங்கிரஸை உருவாக்கிய உயர்ந்தோர் குபத்
கொந்தளிப்பு 21

Page 13
தலைவர்கள் **தீவிலுள்ள பல்வேறு சமுதாயங்களும், விசேடமாகச் சிங்கள, தமிழ் சமுதாயங்கள் இலங்கைப் பொறுப்பாட்சி அரசாங் கத்தைப் பெறுதல் என்ற பொது இலக்கினை அடையப் பயன்படும் ஒரு உண்மையான தேசிய இயக்கமாகக் காங்கிரஸ் அமையும்’ என எதிர்பார்த்தனர். ஆனால் இன வேறுபாடுகள், தனிப்பட்டவர்களுக் கிடையிைலான முரண்பாடுகள் என்பன காரணமாக இத்த இலக்கு ஒரு போதும் நிறைவேறவில்லை. தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டு இரண்டு வருடங்களுள் பிரதேச வாரிப் பிரதிநிதித்துவம் , மேல் மாகாணத்தில் தமிழருக்கென விசேடமாக ஒரு தொகுதி என்ற இரு பிரச்சினைகளில் சிங்களத் தலைவர்களுக்கும் இலங்கை தமிழ் தலை வர்களுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. இப்பிரச்சினையில் அருணாசலம் உட்பட உயர் மத்திய வர்க்கத் தமிழ் தலைவர்கள் 1922ல் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகித் தமிழர் சீர் திருத்தக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினர். இருந்தும் இக் குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு உயர்ந்தோர் குழாம் மட்டத்திலேயே தீர்வுகள் காணவும் முயற்சிக்கப்பட்டது.
பெளத்த புனருத்தாரண இயக்கமும் சிங்கள தேசியவாதத்தின் எழுச்சியும்
இலங்கையர் தேசியவாதம் அல்லது தாரண்மை தேசியவாதத் திற்கு எதிராக 20ம் நூற்றாண்டில் வேறொரு தேசியவாதமும் எழுச்சியடைந்தது. இது 19ம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் எழுந்த பெளத்த புனருத்தாரண இயக்கத்தோடு தொடர்பு பட்டதாகும். இவ்வியக்கம் கிறிஸ்தவ மதம், கிறிஸ்தவ மிஷனறி இயக்க நடவடிக்கைகளை ஆதரித்த பிரித்தானிய ஆட்சியாளர் என் பவற்றிற்கு எதிரானதாக எழுந்ததாகும்.
அரசின் உதவியையும் பாதுகாப்பையும் இழந்தமையால் பெளத்த மதம் அடைந்த தாழ்வு நிலையிலிருந்து அதனைக் காப் பாற்றுவதற்கும், சிங்கள பெளத்த கலாச்சாரப் பெறுமதிகளை மறு மலர்ச்சி அடையச் செய்வதற்குமான கிளர்ச்சியாகவே இது தோற் றம் பெற்றது. இப்புனருத்தாரண இயக்கம் ஆரம்பத்தில் மிகேத்து வத்த குணானந்த தேரோ, டிறிக்கடுவ பூரீ சுமங்கல தேரோ என்போ ரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கொலொனியல் ஒல்கொற், கெலனா பலவற்ஸ்கி என்போரின் வருகையால் வளர்ச்சியடைந்து பின்னர் குறிப்பிட்ட இருவரும் இலங்கையில் பெளத்த மத சங்கத்தை அமைத்தனர். ஆனால் இவ்வியக்கத்தின் உந்து சத்தியாகத் திகழ்ந்த வர் அநாகரிக தர்மபாலா ஆவார். இவர் சிங்கள மக்களின் இன
22 கொந்தளிப்பு

மேன்மை, பெளத்த மதத்தினை காப்பதில் சிங்கள மக்களின் விசேட கடமைப் பங்கினைப் பற்றியும் பிரச்சாரம் செய்தார்.
இவ்வாறு தாராண்மை, மதசார்பற்ற தேசியவாதத்திற்க எதி ராக இம்மத ரீதியான தேசியவாதம் மரபு ரீதியான கடந்த காலத் தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இப்புதிய தேசியவாதமும் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்தது.
1. மரபு ரீதியான மதம், கலாச்சாரம் என்பவற்றின் மறுமலர்ச்சி யும் தமது பண்பாட்டு பழமையினையிட்டு பெருமை கொள்ளு தலும்,
2. மரபுகளை அடிப்படையாகக் கொண்ட இத் தேசியவாதம் குத்து வெட்டான (இன ரீதியான) ஒருமைப்பாட்டுக்கு உதவி செய் ჭნჭjl •
3. ஆங்கில அறிவில்லாத மக்களையும், கிராமப்புறத்தவர்களையும்
தேசிய இன உணர்வினுள் அழைத்துச் சென்றது.
4. மத அடையாளங்களும், வணக்க முறைகளும் பிரதான அம்சங்க
ளாயின.
5. கடந்த காலத்தையிட்டு பெருமையடைதலும், அதனோடு அடையாளம் காண்பதும் இப்புதிய தேசியவாதத்தின் வழியா யிருந்தது.
வாக்காளர்களை ஒழுங்குபடுத்தி 1956ம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்தது.
இவ்வாறு சுதந்திரத்திற்கு முன்னரும், சுதந்திரத்திற்குப் பின் னர் சிறிது காலத்திற்கும் நடைமுறையிலிருந்த ஆங்கிலம் கற்ற உயர் மத்திய வர்க்கத்தினரால் முன் வைக்கப்பட்ட மத சார்பற்ற, பல் இன தேசம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கை யர் தேசியவாதம் என்பது 1950களில் சிங்கள தேசியவாத கோட் பாட்டின் முன்பு ஈடு கொடுக்கமுடியாது தோல்வி கண்டது.
வெளத்த மதம், சிங்கள மொழி என்பவற்றோடு தொடர்பு பட்ட மரபு ரீகியான கலாச்சார, மத சார்பினை சிங்கள தேசிய வாதம் வற்புறுத்தியது. அது இதனை இலங்கையர் தேசியவாதம் என்பதோடு சமப்படுத்த முயற்சித்தது. ஆனால் சிறுபான்மையினர், குறிப்பாக இலங்கைத் தமிழர் சிங்கள தேசியவாதம் தான் இலங்
கொந்தளிப்பு 23

Page 14
கையர் தேசியவாதம் என்பதை நிராகரித்தனர். அவர்கள் இதற் கெதிராக தமிழ்த் தேசியவாதம் என்பதை வளர்க்க முற்பட்டனர்.
தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றம்
தமிழ்த் தேசியவாதத்தின் தோற்றம் சிங்களத் தேசியவாதத் தோற்றத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்கின்ற போதிலும் அதன் வேரினை 19ம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மறுமலர்ச்சி இயக்கம், பிரித்தானிய காலனி ஆட்சியின் போது தோற்றம் பெற்ற யாழ்ப்பாணச் சங்கம் தமிழர் மகாஜன சபை, யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பவற்றிலும் அதற்கு முன்னர் எழுச்சி பெற்ற சுதந்திர யாழ்ப்பாண இராச்சியத்திலும் காணக்கூடியதாக உள்ளது. அரசரத் தினம் அவர்கள் குறிப்பிட்டது போல் சிங்கள தேசியவாதத்தின் எழுச்சியும் தவிர்க்க முடியாத விளைவு. "அதிலிருந்து தமிழர் அந்நியப்படுத்தப்பட்டமையும் அவர் களை அதில் சேர்த்துக்கொள்ளா மையுமே தமிழர் தமது சொந்த மரபு ரீதியான தேசியவாதத்திற்கான புற வரைவினைக் கட்டி யெழுப்ப முனைந்தனர்.’’ எதிர்பார்த்தது போல தமிழ்த் தேசிய வாதம் சிங்களத் தேசியவாதத்தின் பலத்தின் எதிர் விளைவாக வளச்சி யடையலாயிற்று.
தெற்கில் எழுந்த பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தைப் போல் இந்த மறுமலர்ச்சியும் கிறிஸ்தவ மிஷனறி நடவடிக்கைகளுக்கு எதி ரானதாகவே எழுந்தது. இந்த இயக்கித்தினை தனி ஒருவராக நின்று வழி படுத்தியவர் ஆறுமுகநாவலராவர். * சைவ சித்தாந்த இந்து சமயத்தின் பெறுமதிகளை உணர்த்திய பெருமகன், தமிழ் அறிஞர். அவர் தமிழ் வசன நடைக்கு ஆற்றிய தொண்டு போல அவருக்கு முன் னரும், பின்னரும் யாரும் இதுவரை தொண்டாற்றவில்லை. நடை முறையில் வடமாகாணத்தில் நவீன தமிழ்க் கலாசாரத்தை ஒரு உயிருள்ள சக்தியாக ஆக்கியவர் அவரே. நாவலர் கிறிஸ்தவ சமயத் துக் கெதிராகத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டது மாத்திரமல லாது பாலர் வகுப்பு, இரண்டாந்தர பாடசாலைக்குத் தேவையான பாட நூல்களையும் எழுதி வெளியிட்டார். அவர் சைவ பரிபாலன சபை என ஒரு இந்து அமைப்பினை ஏற்படுத்தி சமய விழிப்புணர்ச் சியை ஏற்படுத்தினார். இச் சபை இந்துப் பிள்ளைகளுக்குச் சமயப் பின்னணியில் கல்வி போதிப்பதற்காக பல இந்துப் பாடசாலைகளை ஆரம்பித்தது. நாவலர் தனியே கல்வி விடயங்களுடன் மாத்திரம் கட்டுண்டிருக்கவில்லை. 1876ல் ஏற்பட்ட தீவிரமான பஞ்சத்தின் போது நிவாரண நடவடிக்கையை ஒழுங்கு செய்தார். கலால் எதிர்ப்பு இ ய க் க நடவடிக்கைகளை ஆரம்பித்த்ார். 1887ல் திரு பீ. இராமநாதனை இ ல ங்  ைக ச ட்ட ச  ைபக் குத் த மிழ் ப் பி ர தி நி தி யா க த் தெ ரிவு செய் வ தற்கு ப் பி ர ச் சா ர ம்
24 - கொந்தளிப்பு

செய்தார். இவ்வாறு நாவலர் மத ஈடுபாட்டிற்கு மிகவும் அவ சியமான விடயங்ளைத் தான் செய்ததோடு சமூக - அரசியல் விடயங் களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இந் நடவடிக்கைகள் பின் எழுந்த தமிழ்த் தேசிய உணர்வு வளர்ச்சிக்கு முன்னோடியாக அமைத் ტნჭნl -
பிரித்தானியர் ஆட்சிக்கெதிராக அரசியல் திட்ட சீர்திருத்தம் கோரி பின்வரும் மூன்று தமிழர் இயக்கங்கள் கிளர்ச்சி செய்தன.
1. யாழ்ப்பாணச் சங்கம் - இது உயர்ந்தோர் குழு அங்கத்தவர்
களையே கொண்டிருந்தது.
2. தமிழர் மகஜன சபை - இதனைக் கொழும்புத் தமிழர்களே
ஆக்கிரமித்தனர்.
3. யாழ்ப்பாண இளைஞர் சபை.
யாழ்ப்பாண இளைஞர் சங்கம் எஸ். எச். பேரின்பநாயகம், சீ. பாலசிங்கம், எம். எஸ். பாலசுந்தரம், வீ. கந்தையா, ரீ. சி. இராசரத்தினம், பீ. நாகலிங்கம் போன்ற பிரமுகர்களைக் கொண் டிருந்ததோடு டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் நடந்த 1வது அரசாங்க சபைத் தேர்தல்களை வடக்கில் பகிஸ்கரிப்புச் செய்வதனை ஒழுங்குபடுத்துவதில் வெற்றியும் கண்டது.
சேர். பொன்னம்பலம் இராமநாதன் வாக்குரிமை கட்டுப் பாடற்று விஸ்தரிக்கப்படுவதனை எதிர்த்ததோடு 1931க்குப் பின்பு அரசியலமைப்பில் தமிழர்கள் ஒதுக்கப்படுவதனையும் கண்டித்தார்.
இவ்வாறு சிங்கள தேசியவாதத்திற்கு எதிராகத் தமிழ் தேசிய வாதம் தோன்றுவதற்கான சூழ்நிலைகள் தோன்றின. 20ம் நூற் றாண்டின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி ஏற்படப் பல இயக்கங்கள், சஞ்சிகைகள், நூல்கள், செல்வாக்குமிக்க பிரமுகர்கள் உதவினர். அவற்றுள் பின்வரும் இயக்கங்களும் புதினத் தாள்களும் முன்னணி நிலை வகித்தன.
1. தமிழர் மாகாண சபைகள். 2. வடக்கிலிருந்து கிராமச் சங்கக் குழுக்கள். 3. வடமாகாண ஆசிரியர் சங்கம்.
கொந்தளிப்பு . 25

Page 15
4. உதயதாரகை (புதினத்தாள்) 5. கத்தோலிக்க பாதுகாவலர் (புதினத்தாள்) 6. சைவபரிபாலன சபை வெளியிட்ட இந்து சாதனம்.
1944ல் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு ஐம்பதுக்கைம்பது கோரிக்கை முன் வைக்கப்பட்டதோடு தமிழ்த் தேசியவாதம் புதிய உத்வேகத்தைப் பெற்றது. இருந்த போதிலும் 1949ல் சமஷ்டிக் கட்சி ஆரம்பிக்கும் வரை தமிழ்த் தேசியவாதம் அதற்குரிய உண்மை அர்த்தத்தைப் பெறவில்லை. அதன் பின்னர் தமிழ்த் தேசியவாதம் விரைந்து வளரலாயிற்று.
Աpւգ6ւյ6Ծծ
இலங்கையின் தேசியத்துவ இயக்கத்தினை தேசியவாதம் என்ற கோட்பாட்டுப் பின்னணியிற் பார்க்கும் போது மேற்கு ஐரோப்பா வில் எழுந்த தேசியவாதக் கோட்பாடு ஒரு குறுகிய காலத்திற்கே நடைமுறையிலிருந்தது என்பது தெரியவருகிறது. 1918ம் ஆண் டினை அடுத்து எமுச்சியடைந்த இலங்கையர் தேசியவாத உணர்வு இத்தகையதே. ஆனால் மிக விரைவில் இத்தகைய இலங்கையர் தேசியவாத உணர்வும் பின்னடையத் தொடங்கியது. இருந்தும் 1950களில் முற்பகுதி வரை இந்த உணர்வினைப் பிரதிநிதித்துவப் படுத்திய தலைவர்கள் இருந்தது உண்மை. இப்பின்னடைவிற்குச் சிங்களத் தேசியவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியுமே முக்கிய காரணமாகும். இது சிங்கள மொழி, பெளத்த கலாச்சாரம், சுதே சிய மரபுகள் என்பவற்கு முக்கியத்துவம் வழங்கியது. இச் சிங்களத் தேசியவாத உணர்வுக்கு எதிர்த்தாக்கமாக எழுந்ததே தமிழ்த் தேசிய வாதமாகும். இது இந்து சமய மறுமலர்ச்சி, தமிழ் மொழி, தமிழ் பண்பாடு என்பவற்றை வற்புறுத் தலாயிற்று. ஆகவே இலங்கையினைப் பொறுத்தவரை மேற்கு ஐரோப்பிய நாட்டு தேசியவாதக் கோட்பாட் டினைப் பிரயோகிக்க முடியாது என்பது தெரியவருகிறது. அதே வேளையில் தேசியவாதம் பற்றிய மார்க்சீய, லெனினிச நிலைப் பாடும் இங்கு பின்பற்ற முடியாமல் போய்விட்டதை நாம் காண்கின் றோம். ஏனெனில் இங்கு வர்க்க உணர்வு வளர்ச்சியடைந்து அது தேசிய உணர்வினை அழித்து விடவில்லை. அதாவது சிங்கள, தமிழ் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து ஒரு சோஷலிச சமுதாயத்தை அமைக்கப் போராடுவதற்குப் பதிலாகக் கடந்த காலங்களில் ஒன் றுடன் ஒன்று மோதி வந்திருக்கின்றன. ஆகவே இலங்கையின் தேசி யத்துவ இயக்க அனுபவங்களுக்கு ஒத்தான ஒரு எண்ணக் கருவினை நாம் உருவாக்குவது அவசியமாகும்.
26 கொந்தளிப்பு

பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள பெண்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனரா?
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ள பெண்களது சமூக, பொருளாதார அமைப்பை நோக்கும் போது, அவை வேறெந்த சமூக, பொருளாதார அமைப்போடும் ஒப் பிட முடியாத அளவுக்கு மிக நலிந்த நிலையில் இருப்பதைக் காண் கின்றோம். இதுதான் நாம் அவர்களைப் பொறுத்து காலா கால மாகக் கூறிவரும் பல்லவியும் கூட. இவர்களில் நாம் ஏதாவது மாற் றங்களைக் காண்கின்றோமா, காண முடிகின்றதா என்பதை சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது பெருத்த மூச்சு ஒன்றே பலத்த வேதனையுடன் வெளிவருகின்றது. இவற்றுக்கு யார் காரணம்? எங்கே பிழை இருக்கின்றது. ஏன் அவற்றை எம்மால் சரிவரச் செய்ய முடியவில்லை என்பதை சிந்தித்திருக்கின்றோமா?
மலையகப் பெண்கள், குறிப்பாக பெருந்தோட்டங்களில் வேலை செய்கின்றவர்கள் தமது இந்நிலை குறித்து சிந்தித்திருக்கின் றார்களா? சிந்திக்கத் தொடங்கிவிட்டார்களா என்பதே எமது இன் றைய கேள்வி. தாமே தம் நிலைக் குறித்து சிந்திக்காத வரை இந் நிலை நீடிக்கத்தான் போகின்றது. அவர்கள் சிந்தித்து செயற்பட முடியாமைக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவைகளில் பின்வருவனவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
போதிய கல்வியறிவின்மை. ஒய்வு இல்லாமை. வேலைக் களைப்பு.
குடும்பச் சுமை.
பொருளாதார வசதியின்மை.
மேற் குறித்த இடங்களிலிருந்து அவர்களை மீட்டு, அவர் களது எதிர்காலத்தை வளமுள்ளதாக்க பல சமூகநல நிறுவனங்கள், மகளிர் அணிகள், தொழிற்சங்கங்கள் என்பன பல்வேறு வழிகளில் பல்வேறு முயற்சிகளை கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புக்கள்
கொந்தளிப்பு 27

Page 16
என்பவற்றின் மூலம் முயன்று வந்துள்ளன. இம் முயற்சிகள் குறுகிய காலத்தில் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் அல்ல. ஒரளவு முதிர்ச்சிபெற்றவை. அப்படியாயின் மேற்குறித்த நிறுவனங்கள் சாதித்தது தான் என்ன? அவர்களது முயற்சிகள் நீண்டகாலத்தில் பலன் அளிக்குமாயின் இன்னும் எவ்வளவு காலம் தான் செல்லும்? கடந்த கால முயற்சிகளின் பலனைக் கண்டு வருகின்றோம்? அம் முயற்சிகள் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனவா? அப்படியாயின் அவை என்ன?
பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் தம்மைத் தானே உணர்ந்து, தமது அறியாமைச் சூழலிலிருந்து விடுபட்டு வரு வதற்கான ஆரம்பக் கல்வியறிவினையாவது நாம் அவர்களுக்குப் புகட்ட வேண்டும். அதன் மூலம் அவர்கள் வெளியுலக அனுபவங் களைப் பெற வழிகாட்ட வேண்டும். வெறும் போதனைகள் மட்டும் அவர்களை இருளிலிருந்து அகற்றுவதாக்க முடியாது. எமது முயற்சி கள் நீண்ட காலத்தில் பலன் அளிக்கும் என்றிருப்பின், வெகு விரை வில் ஒரு இருள் சூழ்ந்த காலமும் எம்மை வரவேற்கக் காத்திருக்கின் றது என்பதை உணர்ந்து செயற்பட அவர்கள் தம்மைத் தயாராக்க வேண்டும். ஆகவே, அவர்களுக்கு அறிவினை ஊட்டி சிந்திக்கத் தூண்ட வேண்டும். அவர்களது சிந்தனையில் வேகம் பிறக்க வழி வகுக்க வேண்டும். அவர்களே சாதனைகளைப் படைக்க முன் வர வேண்டும். அதற்கான வழிமுறைகளைத் தான் நாம் கண்டு பிடிக்க வேண்டுமே தவிர, ஒருவரையொருவர் சாடிக்கொண்டிருக்க இது நேரமல்ல.
a22a2a2a22 -
டிரேட்டன்
கி. தொ. ஒ. நடப்பாண்டு நிர்வாகிகள்:
செயலாளர்: ஆர். முத்துராமன் துணைச் செயலாளர்: கே. இராமர்
பொருளாளர்: எஸ். கனகசபை துணைப் பொருளாளர்: எம். முருகையா
நூலக செயலாளர்: ஏ. கணேசன் உதவி நூலக செயலாளர்: எஸ். துரைசாமி செயற்குழு: ஏ. வீரையா, கே. லோகநாதன், ஏ. முருகேசு, பி. சுந்தர ராஜ், ஆர். சிவலிங்கம், என். ஜெயராமன், கே. புஷ்பா, கே. தெய்வானை, என், தனலட்சுமி, ஏ. சண்முகசுந்தரம்.
28 கொந்தளிப்பு

தொழிலாளியும் புதிய பெண்ஷன் திட்டமும்
இன்று தொழிலாளிகள் அனுபவிக்கும் உரிமையானது பிரவி டன்பட் ( ஈ . பி. எப் ) சலுகை. இதை இப்போது அரசாங்கம் இல்லாதொழிக்க பார்க்கிறது. இந்த உரிமை நாம் போராடி பெற்ற உரிமையாகும். தொழிலாளர்கள் அந்திய காலத்தில் அவர் களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய இப்பணம் பிரயோ சனப்படும் என்பதாகும்.
இந்த உரிமை 1958 பண்டாரநாயக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. அவரும் கூட தட்டில் வைத்து இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. நாம் போராடினோம் அதன் பேரில் 1958 ல் இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாகவும் கடைசி தடவையாகவும் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளை அமைச்சரவைக்கு அழைத்து பேச்சு வார்த்தையை நடத்தியது.
இப்பேச்சுவார்த்தைக்கு திரு. பீற்றர் கெனமன் திரு. எம். ஜீ. மென்டீஸ் திரு. சன்முகநாதன் போன்றவர்கள் போய் இருந் தார்கள். இதன் அடிப்படையில் தான் தொழிலாளர்கள் இன்று வரை இந்த சலுகையை அனுபவித்து வருகிறார்கள். இதையும் அரசாங்கம் இல்லாதொழிக்க அன்மையில் பாராளுமன்றத்தில் சட்ட மூலம் கொண்டு வந்தது அது எமது பலமான எதிர்ப்பினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பென்ஷன் திட்டம் தொழிலாளர்களுக்கு எவ்வ கையில் நன்மையளிக்கப்போகின்றது என்று பார்ப்போம். இலங்கை யில் அரசாங்க ஊழியர்கள் பென்ஷன் பெறுகின்றார்கள். அதேவே ளை அவர்களும் ஈ . பி. எப். பெறுகின்றார்கள். அவர்களின் சம்ப ளத்தில் இருந்து பென்ஷன் பணம் அரவிடப்படுவதில்லை. அது அரசாங்கமாக வழங்குகிறது. தோட்ட தொழிலாளிகளுக்கு மட்டும சம்பளத்தில் அரவிட்டு பென்ஷன் கொடுக்க வேண்டுமாம். இது என்ன அநியாயம். 1955 - 1956ம் ஆண்டுகளில் கொழும்பில் "புரூக் போன்ட் தொழிலாளர்கள் மூன்று மாத போராட்டத்தின் மத் தியில் இவ்வுரிமையை பெற்றார்கள். அப்போது 2000 ம் பேர் தான் இப்போராட்டத்தில் பங்கு கொண்டிருப்பார்கள். இப்போது
கொந்தளிப்பு 29

Page 17
இத்திட்டத்தில் நன்மை பெறுவோர்கள் எண்ணிக்கை 44 இலட்ச டேராகும், அன்று தொழிலாளர்களுக்கு ஈ. பி. எவ் வேண்டுமெ ன போராடினார்கள். இன்று தோட்ட அதிகாரிகளும், துரைமார் களும் இச்சலுகையை அனுபவிக்கிறார்கள்.
பென்ஷன் முறை
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 750/- முதல் ரூபா 1000/- வரை பென்ஷன் கொடுக்க போகின்றார்களாம். இதில் தொழிலாளி ஒருவர் இறந்து போனால் அவரின் மனைவிக்கு 60% பணம் கிடைக் கும். அவர் ஒரு தொழிலாளியானால் அப்பணமும் கிடைக்காது. பிள்ளைகள் 20 வயதிற்கு கீழ்பட்டவர்களாக இருந்தால் தான் கிடைக்கும். ஆனால் உத்தியோகஸ்தர்களுக்கு அப்படி அல்ல. (அர சாங்க ஊழியர்) அவர் மனைவி வேலை செய்தாலும் கிடைக்கும். பிள்ளைகளுக்கும் கிடைக்கும். இது தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும்.
தோட்டத் தொழிலாளிகளை பொறுத்தவரையில் 60 வயதில் ஒய்வு பெறவேண்டும். இலங்கையில் சராசரி உயிர் வாழும் காலம் 65 வயது தான் அப்படியானால் இவர்கள் எவ்வளவு தான் அனுபவிக் கப் போகின்றார்கள். ஈ. பி. எவ். மொத்தமாக 50,000/- பெற்றுக் கொண்டால், மனைவியுடையது ரூபாய் 50,000/- பெற்று 1 லட்சத் தை வங்கியில் வைப்பிலிட்டு 16 சதவீதம் வட்டி கிடைக்கும். அது அரசாங்கம் கொடுக்கும் பென்ஷனை விட மூன்று மடங்கு அதிகம். அதே நேரம் வைப்பிலிட்ட முதல் அப்படியே இருக்கும். அப்பணத்தை எமது தேவைக்கு மாத்திரமே உபயோகம் செய்யலாம். தொழிலாளி 50,000/- ஈ. பி. எவ். பெற்றால் தோட்ட துரைமார்கள் 10 இலட்சம் பெறுகின்றார்கள்.
அதே நேரம் இன்று நாட்டில் அனேகர் பென்ஷன் திட்டத்திற் கென்று பணம் செலுத்துவதாக இல்லை. தோட்டத் தொழிலாளி யிடம் மட்டும் பணம் செலுத்த வேண்டுமென்று கேட்பது தான் வியப்பு ஜே. ஆர். எம்.பி. யாகவும், அமைச்சராகவும். ஜனாதிபதி யாகவும் இருந்த அனைத்துக்கும் பென்ஷன் வழங்கப்பட்டது. ஆனால் பென்ஷனுக்கு என்று ஒரு சதம்கூட செலுத்தவில்லை. இன்று ஈ. பி. எவ். பணத்தில் 400 கோடி ரூபா பணம் இருக்கிறது. இலங்கை யில் இருக்கும் வங்கிகளில் உள்ள தொகையை விட அதிகமானது. இப்பணத்தை அரசாங்கம் எடுத்துச் செலவு செய்துள்ளது. இதை
Հ0 கொந்தளிப்பு

திருப்பி கட்ட முடியாமல் இருப்பதால் தான் மூடிவிட அரசு எத் தனிக்கிறது.
ஆகவே அரசாங்கம் இப்போது அறிமுகம் செய்யும் பென்ஷன் திட்டத்துக்கு எமது ஈ. பி. எவ் பணத்தில் 30% போதும். இதை இப்படி செய்வதன் மூலம் மிகுதி 70% பணத்தை கொள்ளையிட பார்க்கிறார்கள். இது இவ்வாறு இருக்க தோட்டங்களுக்கு புதிதாக போகும் முதலாளிகளுக்கு சலுகை செய்யவே தான் இத்திட்டம் அவர்கள் ஈ. பி. எவ் க்கு எஜமான் பக்கம் போடவேண்டிய 12% பாதுகாக்கதான் இச்சட்டம். எனவே தொழிலாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மையளிக்க போவதில்லை. அதே வேளை 1977 ல் டொ லர் ஒன்று ரூபா 7 சதம் 35 இப்போது டொலர் ஒன்று ரூபாய் 42/- ஆகை யால் இந்த அரசாங்கம் ரூபாவின் மதிப்பை குறைத்தது. அதன் காரணமாக வெளி நாட்டு கடன்களை திருப்பிச் செலுத்தும் போது 1977 இல் 7. 35 வாங்கிய கடன் இப்போது 42/-ரூபாவாக திருப்பி ச் செலுத்துகிறோம். ஆகையால் இது 6 மடங்கு அதிகரித்துள்ளது இதன் காரணமாகத்தான் எமது நாட்டு மக்கள் மூன்று பரம்ப ரைக்கு கடண்காரர்களாக இருக்கின்றார்கள். இந்த அரசாக்கம் ஆட்சிக்கு வந்தபின் பல தடவை ரூபாவின் மதிப்பை குறைத்துள் ளது. இதன் காரணமாக நாம் பெற்ற கடனும் அதற்கான வட்டியும் வேறாக கட்டவேண்டியுள்ளது. பென்ஷன் திட்டமானது மாபெறும் ஏமாற்று. உயர்குடியில் இருந்து வந்தவர் தொழிலாளர்களுக்கு ஈ. பி. எவ் திட்டத்தை நடைமுறைபடுத்தினார். ஆனால் அடிமட் டத்தில் இருந்து வந்தவர் இத்திட்டத்தை இல்லாமல் செய்கிறார்.
தொழிலாளர்களின் உரிமைகன் பறி போ கி ன் ற து இதை எதிர்க்க வேண்டும். அதனால் தான் எமது போராட்டத்தை முனைப் புடன் செயல்படுத்த வேண்டும். எமது தொழிலாளர்களுக்கு பென் ஷன் பணம் கிடைத்தால் எமக்கு சந்தோசம். எமது ஈ. பி. எவ். பணத்தில் கைவைக்கக் கூடாது. அரசாங்கம் ஊழியர்களுக்கு கொடுக்கும் முறையில் (எமக்கும் எமது சம்பளத்தில் வெட்டாமல்) பென்ஷன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளுகின்றோம்.
கொந்தளிப்பு V 31

Page 18
உலக வங்கி, சர்வதேச நாணய நிதிச் சபைகளின் நிபந்தனையின் கீழ் தோட்டங்கள் தனியார் மயம்
“கோட்டங்களை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டுமென் பது உலக வங்கியின் நிபந்தனைகளில் ஒன்றாகும். இது சம்பந்தமான கடிதம் ஒன்றை 1988ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தோட்டங்கள் நட் டத்தில் இயங்குவதாகக் கூறப்படுவதெல்லாம் கற்பனையாகும். அரசாங்கம் கூறுவது போல தோட்டக் கூட்டுத்தாபனங்களின் நிர் வாக ஊழலே காரணம் என்றால் அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டியது இப்போது ஆட்சியில் இருக்கும் யு. என். பி.யே ஆகும். ஏனெனில் 1974ல் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்ட பின் 3 ஆண்டுகள் மட்டுமே வேறு அரசாங்கம் பதவியில் இருந்தது. 1977 முதல் யு. என். பி.யே தொடர்ந்து ஆட்சியில் இருந்துவரு கின்றது என்பது குறிப்பிடத்தக்கது’.
இவ்வாறு அண்மையில் தலவாக்கொல்லை செங்கொடிச் சங்க அலுவலகத்தில் சங்கப் பொதுச்செயலாளரும். மத்திய மாகாண சபை உறுப்பினருமான திரு. ஓ. ஏ, இராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய முன்னால் கலவான தொகுதி பாராளு மன்ற உறுப்பினரும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவருமான திரு. டியூ. குணசேகர அவர்கள் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றும் போது அவர் கூறியதாவது; தோட்டங்கள் வெளிநாட்டுக் கம்பனிகளிடமிருந்து அரசுடமையாக் கப்பட்ட போது அது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க கமிசன் ஒன்று நியமிக்கப்பட்டது. அக்கமிசன் அப்போது தெரிவித்த சில முக்கிய தகவல்கள் கவனிக்கத்தக்கவை. வெளிநாட்டுக் கம்பனி கள் வருமான வரி கட்டி இருக்கவில்லை. இரகசியமாக பெருந் தொகையான பணம் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதுபோன்ற மோசடிகள் கமிசனால் அம்பலப்படுத்தப்பட்டன.
30 வருடங்களுக்கு முன் தொழிலாளர் அடிமைகள் போலவே தோட்ட நிர்வாகங்களால் நடத்தப்பட்டனர். அரசுடமை ஆன பின்
32 கொந்தளிப்பு

சுதந்திரமாகவும் சுகாதாரமாகவும் வாழும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது. நவீன வீடுகளையும் தோட்டங்களில் காணக்கூடிய நிலை தோன்றியது. தொழிலாளர்கள் இவற்றை தெளிவாகவே உணர்ந் துள்ளனர்.
தோட்டங்களால் நட்டம் எவ்வாறு ஏற்படுகின்றது? மூன்று வகையாக கணக்கு சரிசெய்யப்படுகின்றது. தோட்ட மட்டத்தில் செலவு போக லாபம் காட்டப்படுகின்றது, பின்னர் பிரதேச மட்டத் தில் வரவு செலவு சமமாக சரி செய்யப்படுகிறது. இறுதியாக தேசிய மடடத்தில் முழுமையாக நட்டம் என கூறப்படுகிறது.
கம் உதாவ, மகாபொல, அரசாங்க மேதின கூட்டங்கள் போன்றவற்றிற்கு பெருந்தோட்ட வருமானம் செலவிடப்படுகிறது. 1989ல் மகாவலி அமைச்சுக்கு ஜனவசம பணம் செலவிடப்பட்டுள்ள தென பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் காலங்களி லும் இவ்வாறு செலவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அரசுக்கு சொந்தமான 502 தோட்டங்களில் 448ஐ தனியாரிடம் கையளித்துவிட்டு நட்டத்தில் இயங்கும் 54 தோட்டங் களை தனது பொறுப்பில் வைத்துக் கொள்ளப் போகிறது.
தங்களிடம் தொழில் செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்களுக்கு தொழிற் சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமையை வழங் காத, தொழிலாளிகளோடு தொடர்பில்லாத தொடர்பேற்படுத்திக் கொள்ள விருப்பமில்லாத பல முதலாளிகள் வசம் இத் தோட்டங்கள் கையளிக்கப்படப் போகின்றன. V
தற்போது வருமானத்தில் 60% ஊதியமாகவும் 20% நிர்வாக செவவாகவும் 20% பராமரிப்புக்காகவும் செலவிடப்படுகிறது. இவற் றில் தனியார் எந்த செலவை குறைக்கப் போகிறாாகள்? நிர்வாக, பராமரிப்பு செலவினங்களில் குறைப்பு செய்ய முடியாது. எனவே தொழிலாளிகளின் ஊதியத்தில் தான் கை வைப்பார்கள்.
தொழிலாளர்களைக் குறைப்பார்கள். வேலை நாட்களைக் குறைப்பார்கள். மேலதிக வேலைகளை இல்லாமல் செய்வார்கள். தொழிலாளர் குடியிருப்புகளை தனியார் பொறுப்பேர்க மாட்டார்க
கொந்தளிப்பு 33

Page 19
ளாம். குடியிருப்புகளை அமைத்தல், பழுது பார்த்தல், சுகாதார, குடும்ப நல வசதிகள் செய்து கொடுத்தல், பொழுது போக்கு வசதி கள் அளித்தல் போன்ற செலவுகளை செய்து தனியார் சுமைகளை ஏற்காமல் இருக்கவும் வசதி செய்து கொடுக்கப்படுமாம். குடியிருப்பு களை அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.
மேலும் நினைத்த மாத்திரத்தில் தொழிலாளர்களை வேலையி லிருந்து நிறுத்திவிடுவதற்கு எதிராக 1971ல் தொழிற் பாதுகாப்பு கூட்டம் 1971-45வது பிரிவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினோம். அச்சட்டத்தை ரத்து செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் நிபந்தனையின்றி நீக்கப்பட Ꭷu) f7 Ꮏ D .
தற்போது அரசாங்கமே முழு இலங்கையில் உள்ள தோட்டங் களில் வாழும் தொழிலர் ளர்களுக்கு எஜமானாக உள்ளது. தொழிலா ளர் ஒன்றுபட்டு போராடவும் உரிமைகளைக் கேட்கவும் ஐக்கியப்பட முடிகிறது. இனி பல எஜமானர்களிடம் நீதி கேட்க வேண்டியவர்க ளாக தொழிலாளர் சக்தி சிதறடிக்கப்படுகிறது.
தோட்டங்களைப் ப்ொறுப்பேற்கும் ஒரு முதலாளி அட்டனில் ஒரு தோட்டத்தையும் ஹொரனையில் ஒரு தோட்டத்தையும் பதுளையில் ஒரு தோட்டத்தையும் என பல பகுதிகளிலும் பரவலாக தனது நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவார். ஒரு தோட்டத்தின் வேலை நிறுத்தம் அல்லது நட்டம் அவரது ஏனைய தோட்டங்களைப் பாதிக்காது. இவ்வாறு திட்டமிட்டு தொழிலாளர்களுக்கு எதிராக வும் முதலாளிக்கு சாதகமாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தனியார் துறையினர் எந்தவித இடைஞ்சலும் சிரமுமில்லாமல் லாபமீட்டும் வழிவகைகளை அரசாங்கம ஏற்படுத்திக் கொடுத்துள் ளது. இதனால அமைச்சர்கள் பின்னாலும் ஜனாதிபதியின் பின்னா லும் முதலாளிகள் ஒட்டப் பந்தயம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். செல்லச்சாமி போன்றவர்கள் இதற்கு ஒத்து ஊதுவதில் வியப்பு ஒன் றும் இல்லை. ஆனால் தொண்டமானும் இதற்கு ஆதரவாக இருப்பது தான் வேடிக்கையாகும்.
இறுதி நேரத்திலாவது அனைவரும் ஐக்கியப்பட்டு தொழிலா ளர் எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்த்திட வேண்டும்.
34 கொந்தளிப்பு

ஏதென்ஸ் முதல் பார்வRலோனா வரை ஒலிம்பிக் போட்டிகள்
1896 ஏதென்ஸ்
1904 செய்ன்ட்லூயி 1908 லண்டன் 1912 ஸ்டொக்ஹோம் 1916 பேர்லின்
(முதலாம் உலகப் போர் செய்யப்பட்டன) 1920 அன்ட்வர்ப் l924 Taiu 1928 ஆர்ம்ஸ்டர்டாம் 1932 லொஸ்ஏஞ்சல்ஸ் 1936 Gir565g 1940 டோக்கியோ 1944 லண்டன்
கிறீஸ்
பிரான்ஸ் வட அமெரிக்கா இங்கிலாந்து சுவீடன் ኣ ஜெர்மனி
காரணமாக இப்போட்டிகள் இரத்துச்
பெல்ஜியம் பிரான்ஸ் ஒல்லாந்து வட அமெரிக்கா
ஜெர்மனி
ஜப்பான்
இங்கிலாந்து
(1940, 48 ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாவது உலக யுத்தம் காரண
மாக தடைப்பட்டன) 1948 லண்டன் 1952 ஹெல்சயின்சி 1956 மெல்பர்ன் 1960 GBUmro 1964 GLBigGurr, 1968 மெக்வலிகோ 1972 முனிச் 1976 மொன்ட்றீல் 1980 மொஸ்கோ 1984 லொஸ் ஏஞ்சல்ஸ் 1988 8)(оlшп5i) 1992 பார்வமிலோனா
இங்கிலாந்து பின்லாந்து அவுஸ்திரேலியா இத்தாலி ஜப்பான் வட அமெரிக்கா
ஜெர்மன் w வட அமெரிக்கா சோவியத் யூனியன் வட அமெரிக்கா தென் கொரியா ஸ்பெய்ன்
கொந்தளிப்பு
35

Page 20
德
*சும்மா சொல்லக்கூடாது நம்ப மலைமுகில்தாசனின் கவி
தைகளில் அப்படியே தேன் கொட்டுது. அவரின் மற்ற தொகுப்பை விட. இந் த
*" காதல் குயில்’’ என்ற கவிதை தொகுப்பில் கொஞ்சம் செக்ஸை
தாராளமாகவே . பயன்படுத்தி யிருக்கின்றார்.'
வானளாவ புகழ்கின்றார் கோவில் நிர்வாக கமிட்டித்
தலைவர் திரு. சாமிநாதன்.
இதை கே ட் டு க் கொண் டிருந்த பத் தி ரி கை நிருபர் சூசைமணிக்கு ஆத்திரம் பொத் துக்கொண்டு வந்தது.
"ஆமா சும்மா பெரிசா புக ழாதீங்க' என்றான்.
"என்னப்யா சொல்றீங்க. நம்மள்ள இப்பத்தான் ஒரு கவி ஞன் தோன்றியிருக்காரு. அவர பெரிசா புகழாம. சும்மா இருந்தா எப்படி..?”
**இந்தாப்பாருங்க இதெல்
பொன்னாடை
மல்லிகை சி. குமார்
祿漸漸激激漸漸漸漸漸漸漸漸漸漸療粥粥粥粥粥粥繫擁攝
திட்டு வாங்குவான்.
婆
லாம் நமக்கு ஒத்துவராத கவி தைங்க. தேயில மலையில. கூனி குறுகி. அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகி. இருக் கிற பெண்களுக்கு எழுச்சியான
ஒரு சின்ன கவிதை கூட எழுத தெரியாத அந்த மலைமுகில் தாசன் என்னமோ பொம்ப ளைங்க இடுப்பையும். கழுத் தையும். காலையும். Gnuri ணிச்சி எழுதுவதால யாருக்கு பிரயோசனம். வேணுமின்னா
ஓங்க கூட்டத்துக்கு அது பெரி தாப்படலாம். ஏன்னா இவரும் ஒரு முதலாளி கவிஞன் தானே' சூசைமணி இறு க் க மா க வே
சொன்னான். 48
பள்ளிக் காலத்தில் இருந்தே மலைமுகில்தாசனின் மறுபக்கம் எப்படி என்று இவனுக்கு தெரி யும் . மருத முத்து என்றவன் இடையில் வைத்துக்கொண்ட புனைப் பெயர்தான் இந்த மலை முகில்தாசன். ஓ. எல். (O.L) படிக்கும் போதே மாணவிகளி டம் சேட்டை செய்து நன்றாக
கவிதை
36
கொ ந்தளிப்பு

நடையில் காதல் கடிதம் எழுது
வது, பச்சையாக பேசுவதெல் லாம் இவனுக்கு விருப்பமான ஒன்று.
ஒகுமுறை கல்லூரி விடயத் தில் பொலிசை ஈடுபடவைத்த அதிபருக்கு எதிராக
மாணவர் *ள் நடத்திய போராட்டத் திற்கு விரோதமாக காட்டிக்
கொடுப்பு வேலை செய்து சில *ப்பாவி மாணவர்களை உள். இரக்குத் தள்ள உதவியாக இருந் உதும் இந்த மருதமுத்துவும் இவ னின் சக பாடிகளான சில பெரிய புள்ளிகளின் (முதலாளி) வீட்டுப் பையன்களும் தான். நாங்க ளெல்லாம் பெரிய புள்ளிகளின் பையன்கள் என்று அதிபரின் கை கூலிகளாக இருந்து மாணவர் *ளுக்கு எதிராக ஈடுபட்டவர் களே இவர்கள் தான். இப்படிப் பட்ட கும்பலை அப்போதிருந்
lf
டிெயின் வீதியில் சொந்த நகை கடையோடு வீடியோ விஷனும் பக்கத்தில் புடவை கடையும் சொல்ல வேண்டுமாக் கும்? காதல் குயில் ஒரு தொகுப் பென்ன. பத்து தொகுப்பும் வெளியிட முடியும்.
ஆனால் இதை பெரிது படுத் தி பத்திரிகைக்கு செய்தி அனுப்ப சூசைமணி உண்மையிலேயே தயங்கினான். இலக்கியம் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடும் போலிகளை அவன் ஒதுக்கித் தள்ளவே முயன் றான். எனவே தன் மனதில்
தே வெறுத்து வந்தான் சூசை
னி.
GT 66vrt Lb
இரு ப் ப தை சாமிநாதனிடம் வெளிப்படுத்தினான் அவன்.
"சூசைமணி. நீங்க சொல் லுறது ஒங்களுக்கு பெரிசாப்பட லாம் ஆனா. மலைமுகில்தாச னை நாங்க பகைச்சிக்க முடி யாது. அவர நான் பகைச்சிக் கிட்டா நாளைக்கே டெம்புள் கமிட்டி லீடர் பதவியில இருந்து தூக்கி வீசப்படுவேன். ஏன்னா அவருக்கு இந்த நகர் வர்த்தகர் களிடம் அவ்வளவு மதிப்பு. இன் றைக்கு 2-30க்கு இந்து மா மன் றத்தின் சார்பில் அவருக்கு பாராட்டும் ‘காதல் குயில் கவி தைத் தொகுப்பின் வெளியீடும் இருக்கு என்பது நிருபர் என்ற ரீதியில் ஒங்களுக்கு நல்லா தெரி யும். இப்படி ஒரு ஏற்பாடு இங்கு நடப்பதை நீங்க நேற்றே பத்தி ரிக்கையில் வர்ர மாதிரி செய்தி யை அனுப்பியிருக்கணும். போன மாதம் நம்ம ஆர். கே. ஜ"வலரி முதலாளி தன் கடை சிப்பந்தி ஒருவனை அடித்ததும். இத னால் கடையின் மற்ற சிப்பந்தி கள் எல்லாம் ஒன்று கூடி ஆர். கே. முதலாளியை அடித்ததை. எவ்வளவோ பெரிசுப் படுத்தி பத்திரிகையில போடவச்சிங்க. ஆனா. இந்த மாதிரி இலக்கிய செய்தியை முழுமையா இருட் டடிப்பு செய்யுறிங்களே?’’
சாமிநாதனின் பேச்சைக் கேட்டு சூசைமணி சிரித்தான். இலக்கியம் யாருக்காகப் படைக் கணும், எதற்காக படைக்கணு மின்னு தெரியாதவனுங்களெல் லாம் இலக்கியத்தைப் பற்றி
கொந்தளிப்பு
37

Page 21
பேசுவதைக் கேட்க அவனால் சிரி க் கா ம ல் இருக்க முடிய வில்லை.
ஒரு பாலியல் கவிதைத் தொகுப்புக்கு இந்து மா மன்றம் அடிமையாகி அதற்கு பாராட்டு விழா வும் பொன்னாடையும் போத்துவது. பெரும் கேலிக் கூத்தாகவே அவனுக்குப் பட்
• lن سسا
* மிஸ்டர். கு  ைச ம ணி நீங்க ஒரு ரிப்போட்டர் என்ற முறையில விழாவுக்கு சுணங் காம வந்திடுங்க. விழாக் குழு அமைப்பாளர் என்ற முறையில் இதை சொல்லுறேன். போன மாதமே இந்த நூலை வெளி யிட்டிருக்கணும். ஆனா விஷேச விருந்தினரா அழைக்க இருந்த மந்திரி சொந்த ஜோலியா இந் தியாப் போயிட்டாரு. இன் னைக்கிக்கூட அவரு வல்ல. அவ ரோடப் பேரன்தான் வரவிருக் கிறார். இலங்கைக்கு சுற்றுலா வந்தவர். எங்க வேண்டுகோளுக் கிணங்க தன் பாரியாரோடு இந் த விழா வி ல் க ல ந்து க்
கொள்ளவிருக்கிறார். கவிதை நூலை வெளியிட்டு வைப்ப துடன் மலைமுகில்தாசனுக்கு
பொன்னாடையும் போத்திவிடு வார்’ என்றார் சாமிநாதன்.
நாட்டில் சமாதானம் ஒரு நிலைக்கு வந்ததும் போதும் பதுங்கி இருந்த பெருச்சாலிகள் மன்றம், வட்டம், சங்கம் என்ற பெயர்களில் மீண்டும் பறிக்க ஆரம்பித்து விட்டன என எண் ணிக் கொண்டே சாமிநாதனி
டம் விடைபெற்றுக் கொண்டு அவர் அறையில் இருந்து வெளி யேறினான் சூசைமணி" அதே நேரம் சாமிநாதனின் அறையில் "டெலிபோண்’ சத்தம் போட்டு அலறியது.
இன்று பிற்பகல் 2-30க்கு நடக்கவிருந்த மலைமுகில்தாச னின் "சாதல் குயில் கவிதை நூலின் வெளியீட்டு விழா ரத் தாகிவிட்டது. மலைமுகில்தாச னின் வீட்டில் வேலைசெய்த ஒரு வேலைக்காரப் பெண்ணால் இந்த விழா ரத்தாகுமென்று யாருமே நினைக்கவில்லை.
ஏன் ரத்தானது.? தான் பொலிஸ் மூலமாய் அறிந்துக் கொண்ட செய்தியை தொலைப் பேசி மூலம் பத்திரிக்கை காரியா லயத்திற்கு தெரிவித்துக் கொண் டிருந்தான் நிருபரான சூசை As Goof. V
* * ... «3шот... * *
* புது சாத் தா ன் அந்த பொண்ணு அந்த வீட்டுக்கு வே லை க் கி சேர்ந்திருக்கா.
இருபது வயசிருக்கும்'
s is
LL LLL 0 S0L 0L 0L S0L LLL YS L LLLL LL SSS LLL LLL 0L LSLL LL LLL LLL LLSL
*" வளத்திப் பிடிப்போட்டக் காடு வெட்டுர கத்தி. மனுஷ னுக்கு பொன்னாடைப் போத் திர நாளும் அதுவுமா ஒரு பெண் ணோட ஆடையை கலைச்சிப் பார்க்கிற ஆசை. ஏன் தான் வந்திச்சோ’’.
· · · · · w · · · s o a · · · · · a s as sa
38
கொந்தளிப்பு

* 'இல்ல. இவளே பொலீ சுக்குப் போய் ச ர ண் ட ரா கி இருக்கா. தன்னைக் காப்பாற் றிக் கொள்ள அவள் எடுத்த முயற்சி அது’.
s
'ம லை முகில் தாசனோட மனைவி அப்ப வீட்டில் இல்ல.
*பதினொரு மணி பூசை க்கு குழந்தையோ டு கோவிலுக்கு போய் இருக்கிறாள். வேலைக் காரக் கிழவனும் அவளுக்கு
துணையாகப் போயிருக்கிறான். அப்ப வேலைக்காரி மட்டுந்தான் வீட்டில** .
● 多 ! %
*" என்னா. வேலைக்காரி தானே. வழிக்கு வந்திருவா னுத் தான் முயற்சி பண்ணியிருக் கணும். ஆனா. அவ. தப்பிக்க எவ்வளவோ முயன்று பாத்திருக் கா. குசினிக்கி டீ குடிக்க வந்த சமயம் அந்த வேலைக்கார கிழ வன் அந்த "கத்தியை அங்
கேயே வச்சிட்டு மிஸ்ஸிஸ் முகில்
தாசனோ டு கோ விலுக் கு போய்விட்டான். ஒருத்தியோட மானத்தைக் காப்பாத்தவும் , ஒருத்தனோட ஒரு கை போவ தற்கும் அது பயன்படுத்தப்பட் டிருக்கு’’ .
is y
**வை த் தி ய சா லைக் கு கொண்டுபோயிருக்காங்க வலது கை துண்டாகவே போயிடுச்சி. அவள் நினைச்சிருந்தா ஆளை யே குளோஸ் பண்ணியிருக்க
s
Glf)
is e' a e « s » - «a e a « s » o «» ) è
* எப்படி நடக்கும்? காதல்
குயில் இப்ப ஒரு கை இழந்தக்
குயிலா போயிடுச்சி".
மலைமுகில்தாசனைப்பற்றி மேலும் விபரங்களை டெலிபோ ணில் அந்த பத்திரிக்கை நிறு வனத்திற்கு சொல்லிக்கொண் டிருந்தான் சூசைமணி.
(யாவும் கற்பனை)
வெஸ்டோல் - ரிலாகலை
கி. தொ. ஒ. நடப்பாண்டு நிர்வாகிகள்:
செயலாளர்: துணைச் செயலாளர்:
பொருளாளர்: பி. ஜி துணைப் பொருளாளர்: செயற்குழு: எஸ். ஜெயரட்னம் ,
எஸ். தங்கவுேல்,
கே. சந்திரமோகன் ஆர். ராஜரட்னம்
சுமதிபால கே. மயில்வாகனம்
எஸ். ஆர். ஜெய
சீலன், கே. லோகநாதன், ஏ. சுப்பிரமணியம், ஏ. அந்தணி
பிள்ளை,
எஸ். கணபதி,
கே. கண்ணன்.
கொந்தளிப்பு
39

Page 22
யாருக்குப் பரிசு? - குறிஞ்சி தென்னவன்
கொலை யுணர் வேறி உயிர் மலர் ஆயிரம்
கொட்டிடும் நிலை கூறாது விலை மகள் ஆட்டம் விரும்பிடும் கூட்டம் விருந்தயர் வார்க ளார்ப் பாட்டம் திலை பெறும் இடங்கள் கலை வளர் அரங்காம்
நிதம் விளம் பரம் இதற்(கு) ஊட்டம் கலை வளர் பூமி மலையகம் இதனை காண்பவர் கண்கள்தாம் குருடா?
போர் புயல் குண்டு மழையெனச் சொரிய
பூமியின் மேனி குருதி நீர் புரண் டோடும் நிலையினைச் சொல்லும் நெஞ்சுரம் இல்லா சுயவர் ܢܠ ܐ ஊர்ப்புறம் செல்வரின் உயர்மா னிகையின்
ஒ இர வுணர்வினை கலையாய் கார்களில் வருவார் களிப்பதற் காக
காட்டிடில் பரிசுக ளுண்டாம!
தலை நகர் வாழும் ஒருசில பேரை
தன்னடி போற்றிடு வோரை கலைகளில் மன்னர் என பெரும் பரிசும் கணக்கிலா செல்வமும் கொடுப்பார்! மலை களின் மக்கள் வாழ்வியல், இவர்கள்
மனத்துயர், உணர்வினைத் தூய கலை வடி வாக கவிதைக ளாக
படைத்திடும் கலைஞரைப் பாரார்!
பொய் யினை கற்பனை போர்வையால் மூடி
புண்படர் கலையாய் தருவார் துய்ப்பது இந்திர போகம்; மக்கள்
துயர்நிலை மாற்றிட நாளும் மெய்க் கலை படைப்பார் வீதியில் திரிவார்
வீட்டினில் வறுமையே சூழும் நைச்சியம் பேசி நடிப்பவர் தமக்கே நாளும்பா ராட்டும் பரிசும்!
நீரினுக் கேங்கும் நிலமகள் தாகம்
தீர்த்திடும் கார்முகில் போல பாரினில் எளியோர் படுந்துயர் போக்கும்
பணியே பண்புளோர் செயலாம் வாரிதி பெய்யும் மழைபோல், செல்வம்
வைத்திருப் போர்க்கே வழங்கும் மேரென செல்வம் மிகவுடை யோரா மேலவர் மனிதரில் கடையர்!
40
கொந்தளிப்பு

மலையகப் பெண்களும் அவர்கள் மத்தியிலான நடவடிக்கைகளும்
- சாந்தி -
பெருந்தோட்டங்களிலும் அதை சூழ்ந்துள்ள சிறிய பெரிய நகரங்களிலும் கிராமங்களிலும் வாழும் பெண்களையே, அதாவது இந்தியாவில் இருந்து பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இலங் கைக்கு கொண்டுவரப்பட்டோரின் வழித்தோன்றலில் வந்த பெண் களையே நாம் இங்கு மலையகப் பெண்கள் எனக் குறிப்பிடுகின் றோம். இவர்களில் பெரும்பான்மையானோர் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு இந்நாட்டின் பொருளாதாரத்தில் முக் கிய பங்கு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நேரடியாகவெ உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பத னால் பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு மீது அக்கறைகொண் டுள்ள அனைவரும் இவர்கள் மீது அக்கறை கொள்வதும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் அவசியமானதும் அவசர மானதுமாகும். இலங்கை பூராவும் நகரசுத்தி தொழிலில் ஈடுபட் டுள்ள பெண்களில் பெரும்பான்மையானோரும் மலையகப் பெண் களே.
இம் மலையகப் பெண்களை அவர்களின் சமூக பொருளாதார கல்வி அந்தஸ்த்தின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்த а)птцѣ.
1. மலையகத்திலே நகரங்களில் வாழும் பெண்கள். 2. தோட்ட உத்தியோகத் தர்களை சார்ந்த பெண்கள். 3. தொழிலாளர்கள் மத்தியிலிருந்து கல்வி அறிவு பெற்ற பெண்கள். 4. பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரளவு எழுத
வாசிக்கத் தெரிந்த பெண்கள். 5. பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள எழுத்தறிவே இல்
லாத பெண்கள்.
இவர்களை ஐந்துவகையாக வகைப்படுத்திய போதிலும் இவர் கள் அனைவரும் பெண்கள் என்ற அடிப்படையில் எல்லாப் பெண்க ளும் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக் கும் அதேவேளையில் ஓர் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள்
கொந்தளிப்பு 4l

Page 23
என்ற அடிப்படையிலும் ஒர் வளர்ச்சி குன்றிய சமூகத்தை சார்ந்த வர்கள் என்ற அடிப்படையிலும் வேறு சில விஷேட பிரச்சினைகளுக் கும் அவரவர் சமூக பொருளாதார அந்தஸ்த்திற்கேற்ப முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
1. மலையக நகர்புறத்தில் வாழும் பெண்கள்:
இவர்களில் பெரும்பான்மையானோர் வியாபாரத்துறையில் ஈடுபட்டிருப்போரினதும் நகர்ப்புறங்களில் உள்ள காரியா லயங்களில் வேலை செய்வோரினதும் பெண்கள். இவர்கள் பெரும்பாலும் வீட் டுப் பெண்களாகவே இருப்பர். சிலர். ஆசிரிய தொழில் போன்றவற் றில் ஈடுபட்டிருப்பினும் மற்றய வீட்டுப் பெண்களில் இருந்து வித்தி யாசப்பட்டவர்களை காண்பது மிக மிக அரித இவர்கள் மலைய கத்தை சார்ந்தோர் எனினும் பொருளாதார அடிப்படையில் ஏனைய மலையகப் பெண்களை விட உயர்ந்தவர்கள். அத்தோடு தாங்கள் ஏனைய மலையகப் பெண்களைவிட வேறுபட்டவர்கள் என்ற மனோ பாவத்தை கொண்டவர்களானபடியால், எல்லா தந்தர்ப்பங்களிலும் தம்மை வித்தியாசமாக அடையாளங்காட்டிக்கொள்ள முனைவர். இவர்களே மலையக சமூகத்தின் மத்தியிலான மேல்மட்ட வர்க்க பெண்கள். ஏனைய வளர்ச்சியடைந்த சமூகப் பெண்களைப்போன்று அறிவு ரீதியாகவும் நாகரீக ரீதியாகவும் வளர்ச்சியடைந்தோராயி னும் பழைமைவாத கருத்துக்களிலிருந்து விடுபடாதவர்களாகவும் ஏனைய சமூகங்களை சார்ந்க நகர்ப்புற பெண்களை போன்று பெண் களுக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்ற சிந்தனையை கொண்டவர் சள். பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக செயற்படும் பெண்களை ஏளனமாக பார்ப்போரும் பட்டங்களை சூட்டுவோரும் இவர் சளே என்பதால் இவர்களை பெண்கள் அமைப் புக்களில் ஸ்தாபனமயப்படுத்துவது என்பது மிகவும் 6, 1967 fift 607 காரியமாகும். பஜனைகளுக்கு போய்வருவது, சணவனுக்கு அடங்கி ஒடுங்கி நடப்பது, பழைய சம்பிரதாயங்களை அவ்வாறே கடைப் பிடிப்பதையே விரும்புகின்றனர். அவ்வாறு நடப்பவர்களையே ஒழுக்க மான பெண்கள் என்றும் கருதுகின்றனர். வித்திய எசமான சிந்தனை கொண்ட ஓரிருவரை ஆங்காங்கே காணலாம். ஆனால் சூழ்நிலை காரணமாக நடவடிக்கைகளில் இறங்கமாட்டார்சள் .
நகரங்களில் நகரசுத்தி தொழில் போன்றவற்றில் ஈடுபட்டிருக் கும் பெண்களின் நிலை பெரும்பாலும் தோட்டத்துறையில் தொழி லில் ஈடுபட்டிருப்போருக்கான பிரச்சினைகளை போன்றதாகவே இருக்கும். இருப்பினும் ஏனைய சமூகத்தை சார்ந்த நகரசுத்தி தொழி
42 $ሎ − கொந்தளிப்பு

லாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் இவர் களுக்கு கிடைப்பதில்லை.
2. தோட்ட உத்தியோகத்தர்களைச் சார்ந்த பெண்கள்:
பொருளாதார பிரச்சினை எவ்வளவு இருப்பினும் இவர்களது பெற்றோர் கல்வி அறிவுடையோராக இருப்பதாலும, 'டெடி', ""மம்மி" கலாச்சாரத்தை அந்தஸ்தா + கருதுவதாலும் தமது பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளுக்கு அனுப்பி கற்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு ஒரு மாயை சூழலிலேயே வளர்ப்பர். இவர்களின் பெற்றோரின் எண்ணம் அனேகமாக இவர் களை நகர்புற பெண்களின் நிலைக்கு கொண்டு வருவதாகவே இருக் குப0 .
இப் பெண்களின் சிந்தனையும் உயர்வர்க்க பெண்களைப் பற் றியதாகவே இருக்கும். அதாவது அவர்களின் நிலைக்கு உயர்வதா கவே இருக்கும். தமது உறவினர்களில் சிலர் தொழிலாளர்களாக இருப்பதை வெளிப்படுத்த தயங்குவதோடு தொழிலாளப் பெண் களை இரண்டாம் தரமாக கருதுவோராகவும் இருப்பர். பெண்களுக் கான பிரச்சினைகளை ஒரளவு அறிந்திருப்பினும் அதைப்பற்றி அக் கறை செலுத்துவதில்லை. பொதுவாக மலையக தொழிலாளப் பெண் கள் முகம் கொடுக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக் கிறார்சள் என்பதை அறியாதவராகவும், மலையகத் தொழிலாளப் பெண்களின் அபிவிருத்தியிலேயே தமது அபிவிருத்தி தங்கியுள்ளது என்பதை புரியாதவராகவும் உள்ளனர். இவர்கள் வளர்ச்சியடைந்த சமூகப் டெண் களுக்கும் தங்களுக்கும் உள்ள பாரபட்சத்தை அறியாத வர்களாகவும் உள்ளனர்.
3. தொழிலாளர்கள் மத்தியில் கல்வி அறிவு பெற்ற பெண்கள்:
பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிள்ளைகளே இவர்கள். இவர்களில் சிலர் தமது க. பொ. த . (சா) கல்வியை பூரணத்துவப்படுத்திவிட்டு ஆங்காங்கே கொழில்களில் ஈடு பட்டாலும் தமது நிலையையும் தமது பெற்றோரின் நிலையையும் அறிந்திருந்பினும், தொழில் ஸ்தானத்தில் தமது சகாக்களின் நடை உடை பாவனை ந டவடிக்கைகளிலும் தம்மை முழுமையாக ஒரு செயற்கையான வாழ்க்கைக்கு இட்டு செல்வதில் ஆர்வமாக இருப்பதி னால் தமது நிலை தொடர்பா சவும் தமது பெற்றோர் நிலை தொடர்பாகவும் சிந்திக்க தவறுகின்றனர். இவர்கள் தோட்டங்க
கொந்தளிப்பு 43

Page 24
ளுக்கு வரும்போது தொழிலாளப் பெண் களைவிட உத்தியோகத்தரின் பெண்களுடனேயே கமது தொடர்புகளை வைத்துக்கொள்வதை காணலாம். பெரும்பான்மையானோர் கணிதம் விஞ்ஞான பாடங் களில் சித்தியெய்யாமையினால் தமது படிப்பை தொடரமுடியா ம அலும் வேலைவாய்ப்பின்றியும், இன்னும் சிலர் தமது பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக தமது கல்வியை இடைநடுவில் கைவிடுகின்றனர். இவ்விரு சாராரும் ஒரு திரிசங்கு நிலையில் உள்ள வர்கள். ஏனெனில் வேறு தொழில்வாய்ப்பின்றியும், தோட்டங்களி லேயே தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் சந்தர்ப்பத் தையும் இழக்கின்றனர். ஏனெனில் தோட்டங்களில் வேலை செய் வதற்கு ஒரு குறிப்பிட்ட வயதிலேயே பெயர் பதிவு செய்தல் என்ற ஒரு வழமை உள்ளது. இக் கால கட்டத்தில் இவர்சள் பாடசாலை களில் கற்றுக்கொண்டிருப்பதனால் குறிப்பிட்ட வயதிற்கு பிந்திய நிலையில் பதியப்படமாட்டார்கள். தமது பெற்றோரின் பொருளா தார நிலை காரணமாக கல்வியையும் தொடர முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக சொல்வதாயின் தாம் முகம் கொடுக்கும் நெருக்கடி நிலை காரணமாக ஒரு சிந்திக்க கூடிய கூட்டமாக இருப் பினும் முன்னெடுப்பாளர்களோ வழிகாட்டுனர்களோ இல்லாமையி னால் விரக்தி நிலையை அடைகின்றனர். தமது நெருக்கடி காரண மாக தமது பிரச்சினைகளில் அக்கறை செலுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர். மலையகத்தில் தொழில் செய்யும் பெண்களுக்கே திருமண வாய்ப்பு அதிகம். (தொழிலே முக்கிய சீதனமாக கருதப் படல்) என்பதனால் தொழில் அற்று இருக்கும் இவர்கள் நீண்ட காலத்தில் திருமணம் என்ற சந்தர்ப்பத்தையும் இழக்கின்றனர். இவர் களே மலையகத்தில் உள்ள பல்வேறு வகையான பெண்களுக்கிடை யில் இணைப்பை ஏற்படுத்தும் இண்ணப்புப் பாலமாக செயற்பட முடி யும். இவர்களை ஸ்தாபனமயப்படுத்தும் பெண்கள் அமைப்பு ஒரு திட்டவட்டமான தெளிவான சித்தாந்தத்தை கொண்டிருப்பதோடு அவர்களை சித்தாந்தமயப்படுத்தாவிட்டால் அதுவே பெண்ணினத் தின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நடவடிக்கைக்கு இழைக்கும் மா பெரும் துரோகமாகும்.
4. பெருந்தோட்டத்துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ள எழுத வாசிக்க
தெரிந்த பெண்கள்:
இவர்களுக்கு ஒரளவு எழுத வாசிக்க தெரிந்த ாோதிலும் முழு நாளையும் தொழிலிலும் தொழில் நேரம் முடிந்த பின்னர் வீடடு வேலையிலும் கழிப்பதனால் தமது அறிவை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள இவர்களுக்கு சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. பத்திரிகை கூட வாசிப்பதற்கு வாய்ப்போ சந்தர்ப்பமோ இன்மையால் இவர்களது அறிவு வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுகிறது.
44 கொந்தளிப்பு

பெண்களுக்கென பிரத்தியேகமான பிரச்சினைகள் உண்டு என்பதை இவர்கள் உணராவிட்டாலும், உணர்த்தினால் உணரக் கூடியவர்கள்.
5. பெருந்தோட்டத்துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ள எழுத்தறிவே
இல்லாத பெண்கள்:
இவர்களுக்கு எவ்விதமான கல்வி அறிவும் இன்மையினால் பெண்களுக்குப் பிரச்சினை இருப்பதைபற்றியோ, தமக்கு பிரச்சினை இருப்பதுபற்றியோ அறியாதவர்கள். பிரச்சினைகளை உணர்த்தி னாலும் இலகுவில் உணர முடியாதவர்கள்.
பெருந்தோட்டத்துறையில் உழைப்பில் ஈடுபட்டுள்ள பெண் கள் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் வர்க்க ரீதியான ஒடுக்கு முறைக்கும் (உற்பத்தி உழைப்பு சுரண்டல்) பெண்கள் என்ற ரீதியில் பெண் ஒடுக்குமுறைக்கும், சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் இன ரீதியான ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர். மலையகத் தொழிலாளப் பெண்கள் மூன்று விதமான ஒடுக்குமுறைக்கு உள்ளா கின்றனர். இப் பெண்கள் பம்பரத்தை போன்று சுழட்டிவிட்டால் சுழலக் கூடியவர்கள். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதி இன்றைய தேவையாகும். இதுவே பெண்கள் அமைப்புகளின் கடமை யும் பொறுப்புமாகும்.
மேலே வகைப்படுத்தப்பட்ட பெண்களில் 3ம், 4ம், 5ம் வகையி னர் தங்களது பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அவர்களின் வாழ்நிலை, சூழ்நிலை காரணமாகவும் இப் பிரச்சினைகள் பற்றி அவர்கள் சிந்திக்க முடியாதுள்ளனர். 80ம் ஆண்டிற்கு பின்னர் இலங் கையில் தோன்றிய பெண்கள் அமைப்புகளின் விளைவாக மலையகத் திலும் பெண்கள் அமைப்புகள் தோன்றினாலும் இவ் அமைப்புகள் ஏனைய சமூகத்தைச் சார்ந்த மேல்மட்ட வர்க்கப் பெண்களின் தலை மையின் கீழோ அல்லது ஆண் ஆதிக்க தலைமையின் கீழோ இப் பிர தேசத்தில் உள்ள மேல்மட்ட பெண்களைக் கொண்டு அமைந்துள்ள தாலும், இவ் அமைப்புகள் ஒரு திட்டவட்டமான தெளிவான சித் தாந்தத்தை அடிப்படையாக கொண்டிருக்காமையினாலும், தலை மை தாங்குபவர்களே பெண்களின் பிரச்சினைகள் பற்றி ஒரு தெளி வான கருத்தை கொண்டிராமையினாலும் இங்கு வகைப்படுத்தப்பட் டிருக்கும 3ம் , 4ம், 5ம் வகையினரின் பிரச்சினைகளை அவர்களுடைய தலைமைகளோ அவர்களோ சரிவர அறியாமையினாலும், இப் பெண்கள் அமைப்புகள் நேரடியாக அப் பெண்களின் பிரச்சினைகளில்
கொந்தளிப்பு 45

Page 25
சம்பந்தப்ப்ட்டவர்கள் என்பதாலும் இப் பெண்கள் அமைப்புகளால் இவர்களின் பிரச்சினைக்கு சரியான ஒரு அணுகுமுறையை கையாண்டு வழிகாட்ட முடியா துள்ளது இன்று பெரும்பான்மையான பெண்கள் அமைப்புகள் வெளிநாட்டு பண உதவியை மாத்திரம் பெற்றுக் கொள் வதற்கான பெண்கள் அமைப்புகளாக இருப்பது வருத்கத்திற்குரிய விடயம்ாகும். இப்பெண்கள் அமைப்புகள் ஒரு திட்டவட்டமான தெளிவான சித்தாந்தத்தை கொள்ளாதவிடத்து கடந்த ஒரு சகாப் தத்திற்கு மேலாக பல கோடிக் சணக்கான ரூபாய்களை பெற்றுக் கொண்டு செயற்பட்ட சமூக சேவை அமைப்புகள் மலையக சமூக மத்தியில் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது போலவே அமையும்.
மலையக தொழிற்சங்கங்களை பொறுத்தவரையில் தொழிற்சங் கங்களில் அங்கத்துவம் வகிப்போரில அரைவாசிப் பேர் பெண்களாக இருப்பினும் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் பெண்களை தலைமை பாத்திரத்திற்கு கொண்டுவருவதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப் படவில்லை ஏன் பெண்கள் அணிகளும், மாதர் சங்கங்களும் உள்ள எல்லாத் தொழிற்சங்கங்களிலும் அவ் அணிகள் நேரடியாக ஆண், ஆதிக்கத்தின் கீழேயே செயற்பட்டு வருகின்றன அத்தோடு அவ் அணிகளின் தலை விகள் மேல் மட்ட வர்க்கத்தை சார்ந்த நகர்ப்புறப் பெண்களாகவோ அல்லது தொழிற்சங்க தலைவர், செயலாளர் களின் மனைவியராகவோ இருக்கின்றனர். இவர்களுக்கும் மலையக பெண்கள் முகம் கொடுக்கும் எந்தப் பிரச்சினைக்கும சம்பந்த மில்லை. இதுவரையில் தோட்ட தலைவிகளாகவேனும் பெண்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. தொழிற் சங்க காரியாலயங்கள் தொழிற் பிணக்குகளை கையாள்வதில் பெண் தொழிற்சங்க பிரதிநிதிகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் இது; வரையிலும் மேற்கொள்ளப்படவில்லை. தொழிற்சங்க காரியால யங்களுக்கு வேலைக்காக சென்ற பெண்கள் மீது பாலியல் துஷ்பிர யோகமும் வன்முறைகளும் நிகழ்ந்த சம்பவங்கள் பல
இன்று மலையகத்திலே பெண்களுக்கு தொழில் ரீதியான தொழிற்சங்கமின்மையே அபிவிருத்தியின் மைக்கு காரணம். அவ் வாறான தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு பெண்கள் அணிதிரட்டப் பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. அவர்களின் பிரச்சினை களை அவர்களே உணர்ந்து கொள்ளும் சூழலை உருவாக்காமல் அறிவு ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்தாமல் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது சட்டியிலிருந்து நெருப்பில வீழ்த்தும் . கதையாகத் தான் அமையும். பெண் விடுதலை என்பது தொழிலாள வர்க்க விடு
46 கொந்தளிப்பு

தலையில் இருந்து பிரிக்க முடியாதது. சமூக மாற்றம் என்பது கூட முழுமையான பெண் விடுதலையை கொண்டுவராது. இது பெண் விடுதலையின் ஓர் ஆரம்பம் மாத்திரமே.
பெண்களின் பிரச்சினைக்கான தீர்வென்பது ஒர் நீண்டகால போராட்டமாகும். எனவே தீர்வை நோக்கி நகர சரியான வழிவகை களை ஏற்படுத்திக் கொடுப்பதும், அவர்களின் பிரச்சினைகளுக்கு அவர்களே தலைமை கொடுத்து முன்னெடுத்து செல்ல வழி காட்டுவ தோடு, இதே காலகட்ட்த்தில் அவர்கள் சுயாதீனமாக இயங்கவும் வழிசமைத்துக்கொடுத்தல் அவசிய்மாகும்.
இன்றைய தேவை:
தொழிலாளர் மத்தியிலிருந்து கல்வி அறிவுபெற்று வந்தவர் களையும் க ல் வி யை தொட ர முடியாதவர்களையும் க ல் வி யை தொடர வழிவகை செய்வதினூடாக ஸ்தாபனமயப்படுத்தி இவர் களுக்கும் தோட்ட உத்தியோகத்தர் குடும்பங்களை சார்ந்த பெண் களுக்குமிடையில் ஒர் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்இணைப் பை ஏற்படுத்த இவர்களிடையே கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற் சங்கள் என்பவற்றால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை களுக்கு இவர்களும் முகம் கொடுக்கின்றார்கள் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். மலையக தொழிற்சங்சங்களில் அங்கத்துவம் வகிப்போரில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள் என்பதால் பெண்களின் தொழிற் பிணக்குகளை கையாளக்கூடியவகையில் மேற் குறிப்பிட்ட பெண்களில் சிலரை தொழிற்சங்க பிரதிநிதிகளாக தயார் படுத்துவதனாலும் தொழிலாள பெண்களுக்கும் இவர்களுக்குமிடை யில் தொடர்பை வலுப்படுத்துவதனாலு ம் தொழிலாள் பெண்களை அறிவு மயப்படுத்த வேண்டும். அத்தோடு இப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு என்பதால் சுயதொழில் முயற்சிக்கான வழிவகை களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள எழுத்தறிவே இல் லாத டெண்களை நோக்கின் இவர்களுக்கு பூரணமான கல்வி அறிவு இல்லாமையினால் கல்வி அறிவை வழங்குவதனால் ஏனைய பெண் களுக்கும் இவர்களுக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்தலாம்.
கொந்தளிப்பு ".47 - .. ތ

Page 26
இவற்றிற்கு புறம்பாக வயோதிபர் எனும் ஒரு பிரிவினரும் உள்ளதால் அவர்களை வயது சென்ற காலத்தில் பராமரிக்க வயோ திபர் இல்லங்கள் அமைக்க வழிவகைகள் மேற்கொள்ளல் அவசியம். ஏனெனில் தோட்டங்களில் வேலை செய்யும் காலம் வரையில் மாத் திரமே அவர்கள் தோட்ட குடியிருப்புகளில் இருக்கலாம். அதன்பின் னர் அக்குடும்பத்தை சார்ந்த யாராவது தோட்டத்தில் வேலை இல்லையாயின் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவர்.
மூன்றாம் உலக நாடுகளுக்கிடையில் ஒப்பிடும் போது இலங்கை யின் பிரசவதாய்மார் இறப்பு வீதமும் சிசு மரண வீதமும் குறைவாக இருப்பினும் மலையகத்தில் தொழில் நிலை, பொருளாதார நிலை ஒழுங்குபடுத்தப்படாத சமூக நடவடிக்கை காரணமாக வளர்சியடை யாத ஆபிரிக்க நாடுகளுடன் போட்டியிடுமளவில் உள்ளது. எனவே இந்நிலையை போக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட எல்லாவகையான மலைய்கப் பெண்களையும் ஏனைய சமூகப் பெண்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கிலும் பரவலாக பெண்கள் என்ற அடிப்படையில் மொத்தப் பெண்களின் பிரச்சினையை முன்னெடுக்க ஒரு ஐக்கியப்பட்ட ஸ்தாபனம் மலர ஏனைய சமூக பெண்களுக்கும் மலையக பெண்களுக்கு மிடையில் கலந்துரையாடல்களையும் கருத்து பரிமாரல்களையும் ஏற்படுத்த வேண்டும்.
ப்ரவுன்ஸ்வீக் கி. தொ. ஒ. நடப்பாண்டு நிர்வாகிகள்: செயலாளர்: பி. கே. சிவகுமார் துணைச் செயலாளர்: பி. சிவகுமார்
பொருளாளர்: பி. பந்மனாதன் துணைப் பொருளாளர்: எஸ். பன்னீர்செல்லம்
நூலக செயலாளர்: எம். மணிவண்ணன் செயற்குழு: எஸ். செல்வராஜ், எஸ். ராஜகுரு, பி. லோகேஸ்வரி, எம். யோகலெட்சுமி, பி. இராஜலெட்சுமி, எம். கிருஷ்ணராஜ், கே. டிக்சன், எஸ். நல்லையா, எஸ். ஜெயக்குமார், ஏ. குமாரவேல், எம். முத்துமாலை, டி. இராஜகுமார், எஸ். தங்கராஜ்.
48 கொந்தளிப்பு
 

உழைப்பாளிகளுக்கு தேவனின் ஆசி
கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பின் மலையக சேவைக் குழுவின் மேதின தொழிலாளர் திருப்பலி ஆராதனை இம்முறை மலையகத்தின் எழில் கொஞ்சும் மஸ்கெலியா பிரவுண்ஸ் வீக் தோட் டத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பூசைக்கு முன் தொழிலாளர்கள் தங்களுடைய தொழில் உப கரணங்களை ஏந்தியவாறு மலையகத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சி களுடன் ஊர்வலம் தோட்ட தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் இருந்து ஆரம்பமானது. இதில் எமது அமைப்பின் நாடு முழுவதிலு முள்ள கிளைகளின் அங்கத்தவர்களும் , மலையக தோட்டக் குழுக்க ளும் கலந்து கொண்டன. இவ்விழாவில் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பின் அட்டன் பிராந்திய இணைப்பாளர் திரு. பி. மோகன் சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்று விழாவை ஆரம்பித்து வைத்தார். வணக்கத்துக்குரிய பிதா போல் கெஸ்பர்ஸ், விக்டர் மோசஸ், ஜெப்ரி அபயசேகர. பேனார்ட் பாலசிங்கம் ஆகிய குரு மார்கள் இப்பூசையை நடத்தி வைத்தார்கள்.
இங்கு சொற்பொழிவாற்றிய வணக்கத்துக்குரிய பிதா போல் கெஸ்பர்ஸ், "கிறிஸ்தவ தொழிலாள்ர் ஒத்துழைப்பு தனது வரு டாந்த மேதின திருப்பலி ஆராதனையை கொழும்பிலும் மலையகத் திலும் நடாத்துகின்றது. கொழும்பில் மேதினத்தன்று சாலையில் ஆராதனை நடாத்தப்பட்டபின் அவர்கள் தங்களின் அரசியல் தொழிற்சங்க மேதின கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். மலை யகத்தில் இரண்டாவது சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இங்கு இருக்கும் அனேக காட்சிகள் அழகாக இருப்பதற்கு காரணம் தொழி லாளர்களின் உழைப்பு கான்! இந்த உழைப்பாளிசளுக்கு தேவனின் ஆசியை வேண்டியே இம் மேதின திருப்பலி ஆராதனை நடைபெறு கின்றது. இங்கு இன, மத பேதம் இல்லை. அனைவரும் தொழிலா ளர்கள் என்ற தோரணையில் ஐக்கியப்படுகின்றார்கள்’’ என குறிப் பிட்டார்.
இதன் பின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கொந்தளிப்பு 49

Page 27
கே.
கே
6 Giu).
Gj, :
6 si).
என்ன செய்வது?
கண் முன்னே அதி
மதியழகன், கந்தப்பளை, டி டவுள் ஏன் கல்லானார்? சிமெந்தி விலை அதிகமான தாலும் உலோக த் தால்
செய்தால் மனிதன் திருடி விடுவான் என்ற பயத்தா லும்.
குருமூர்த்தி, பலாங்கொடை மகாத்மா காந்தி மீண்டும் பிறந்தால்?
மீண்டும் "மோ கன் தா ஸ் கரம்சந்த் காந்தி’ என்று தான் பெயர் சூட்டுவார் கள். இப்போதைய இந்தி யாவில் அவர் வளர்ந்து * மகாத்மா பெயரை வாங் குவாரா என்பது தெரிய வில்லை. பிழைக்கத் தெரி யாதவன்", 'உருப்படாத கேஸ்" என்ற பட்டங்களை நிச் ச யம் வாங் கு வார். ஆனால் ஒன்று மட்டும் நிச்ச
யம். கோட்சே சுடுவதற்கு
வ ரு ம போ து மெட்டல் டிடெக்டர் வைத்து பிடித்து விடு வா ரீ க ள். மனிதக் குண்டு கூட கண்டு பிடிக்கப் படும். அவன் வேறு வழி தான் யோசிப்பான்.
udsI 6UT,
ஆல்கரனோயா,
யாயங்கள் நடக்கும் போது இ ர த் தம் கொ தி க் கி ற தே
நடந்த அநியாயங் \ களை செய்தியாகப் படிக் கும் போதே கொ தி க் கி ற தே! அதற்கென்ன செய் வது? கவலைப்படா
எல்.
'எதைப்பற்றி
தீர்கள். அடிக்கடி கொதித் துக் கொதித்துப் பழகிப் போய்விடும்.
எழில்ராணி, இறம் பொடை.
எழுத அனு பவம் தேவையில்லை?
எதைப்பற்றி எழுதவும் அனு பவம் தே  ைவ யி ல்  ைல. * எழுத்தாளன் தானே துக் கப்பட வேண் டு மென் u தில்லை. ஆனால் பிறரின் துக்கத்தை உணரக்கூடியவ னாக இருக்க வேண்டுமென் பது ஒரு கட்டாய விதி!
. சுந்தரி, புசல்லாவை, ; வெவஸ்த் தை கெட் ட
தனம் என்பதன் அர்த்தம் என்ன?
சொல்லக்கூடாத வார்த்தை
களை சொ ல் ல க் கூடாத
சந்தர்ப்பத்தில் சொல்லிப் பாருங்கள் புரியும்.
50
கொந்தளிப்பு
 

ந - புஸ்பராஜ், நுவரெலியா.
கே: காதல்
t
காட்சிகளே இல் லாத பிறமொழிப் படங்கள் வெற்றிவாகை சூடும்போது அவையெல்லாம் தமிழில் எடுபடாது என ஒதுக்குவது இலக்கிய ரசனையில் மேம் பட்ட தமிழனை - தமிழ்
ரசிகர்களை ஒட்டுமொத்த
மாக அவமானப்படுத்துவ தாகாதா?
ஆம், நம் ரசிகர்களை படு கோரமாக
படுத்துகிறோம். அவர்க ளது ரசிகத் தன் மை யை, உணர்வுகளை, அறிவை
தொடர்ந்து பிடிவாதமாக நாம் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தடி எடுத் தவனெல்லாம் தலைவ னாகும் தமிழுலகில் தமிழ் படைப்பாளிகளிலும் மண்
டையில், ச ர க் கி ல் லா த
பலரே படமெடுக்கிறார்கள்.
அ வ மா ன ப்
சினிமாவைப் படைப் ப வ னுடைய பொறுப்புகளில் மக் க ளி ன் ர ச னை யை உயர்த்துவதும் அடங்கும் படைப்பாளி தெளிவான ரசனை கொண்டவனாக, இலக்கியம், கவிதை, எடிட் டிங், இசை, நடனம், கலை அனைத்திலும் ஒரளவாவது உன்னதமான ஈர்ப்பு, ஈடு பாடுடையவனாக இருப்பது அவசியம். சமகால இலக் கியத்தில் ஒரு பரிச்சயம் இருக்கிறதென்றால் அது நிச்சயமாக அவன் சினிமா வில் பிரதிபலிக்கும். தமி ழிலே ஒரு நல்ல படம் வர ணும், அதை நாம் எடுக்க ணும் அப்படி ஒரு ஆர்வம், வேட்கை, வெறி படைப்பவ னுக்கு இருந்தால் தமிழிலும் நல்ல படங்கள் வர முடியும், ரசிகர்களும் நிச்சயமாக வரவேற்பார்கள்
வெஸ்ட்வார்ட்ஹோ
கி. தொ. ஒ. நடப்பாண்டு நிர்வாகிகள்:
செயலாளர்: எஸ். கிருஷ்ணன்
துணைச் செயலாளர்: எஸ். பாக்கியலட்சுமி
பொருளாளர்: எம். ராதாகிருஷ்ணன்
செயற்குழு: எம். சாம்பசிவம்,
ஏ. திரியோகசெளந்தரி, எஸ். மைக்கல், எம். பார்வதி.
ஜே. மோஸஸ்,
ஜே. சசிகலா,
கொந்தளிப்பு
5.

Page 28
பெருந்தோட்டப் பெண்களின் வேலை நேரம் 6 மணித்தியாலங்களாக்கப்பட வேண்டும்.
சர்வதேச பெண்கள் தினத்தை இம்முறை மலையக பகுதிகளில் வேலை செய்யும் நான்கு பிரதான அமைப்புகளுடன் கிறிஸ்தவ தொழி லாளர் ஒத்துழைப்பு மிகவும் விமரிசையாக அட்டன் நகரசபை மண்ட பத்தில் கொண்டாடியது.
இக் கொண்டாட்டத்திற்கு முன் பெண்கள் அட்டன் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட போது பொலிஸ் தலை யிட்டு நிறுத்தியது. அதன்பின் எமது அட்டன் கி. தொ, ஒ. அமைப் பாளர் திரு. பி. மோகன் சுப்பிரமணியம் பொலிஸ் நிலையப் பொறுப் பாளருடன் பேசி ஊர்வலத்திற்கு அனுமதி பெற்று, ஊர்வலத்தில் கோஷங்கள் போடாமல், கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு பெண்கள் அட்டன் நகரசபை "மண்டபத்தை அடைந் தார்கள்.
அங்கு கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு, நவயுக சமூக அபி விருத்தி மன்றம், சத்தியோதய, அசோகா ஆகிய நான்கு அமைப்பு களும் இவர்களை வரவேற்றது. இதில் மேல் மாகாண சபை உறுப்பி னர் திருமதி நந்தா த சில்வா, கினிகத்தேன உதவி அரச அதிபர் செல்வி ஜே. குமாரசிங்கம் ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள். இங்கு பெண்களின் விடுதலை சம்பந்தமான நாடகங்களும், பாரம் பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இங்கு கீழ் கண்ட தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. ஃ சர்வதேசப் பெண்கள் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறை
தினமாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் . ஃ மலையகப் பெண்களின் வேலை நேரத்தை 6 மணித்தியாலமாக
குறைக்க வேண்டும். ஃ பெண்களை அடிமையாகவும், விளம்பரப் பொருளாகவும் கருதல்
நிறுத்தப்பட வேண்டும். ஃ சுதந்திர வர்த்தக வலையத்துப் பெண்களுக்கு தொழிற்சங்கம்
அமைக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். Ο Ο தோட்ட தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படல்
வேண்டும்.
52 கொந்தளிப்பு

......”лжиж
எழுத்து
ஒர் உற்சாகமான விஷயம்
எழுத்து ஒர் உற்சாகமான விஷயம். தன்னை அறியும் கலை யின் முதல்படி இது. படிப்பதும், எழுதுவதும் தனிமையின் விஷயங்
$ ଘt .
கூட்டாய்க் கதை படிப்பவர் உண்டா? கும்பலாய் எழுத முடி யுமா? சிரமம். சினிமா மாதிரி ஆயிரம் பேர் ஆரவாரிக்க, ஆரவாரத் தில் படத்தை ரசிக்க முடியாமலும், படத்தைவிட ஆரவாரம் சுவா ரஸ்யமாகவும் போகும் விஷயமில்லை எழுத்து.
ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டிப் படித்தால் அரை மணி தனிமை நிச்சயம். ஒரு மாத நாவல், ஒரு வாரப் பத்திரிகை மடியில் இருந்தால் ஒண்ணரை மணி நேரம் அமைதியாய்ப் போகும். அடுத்த அரை மணி, படித்த சுகத்தில் ஒரு யோசிப்பு மனசுள் ஒடும். விழித் திருக்கும் பதினாறு மணி நேரத்தில், இரண்டு மணி நேர தனிமை மிகுந்த அமைதியைத் தரும். படிப்பு அதிகரிக்க நாலு மணி நேரம், ஆறு மணி நேரம் அமைதி வரும் .
இதனால் வீண் பேச்சுக் குறையும். ஆழ்ந்த சிந்தனை வர வாய்ப்பு உண்டு. ஆழ்ந்த சிந்தனைக்குக் கை பழக்கப்பட, சொந்தப் பிரச்சினைகளில் தெளிவு காண்பது சுலபம்.
படிக்கப் படிக்க படிப்பின் கனம் கூடும். அதாவது கனமான விஷயங்களைப் படிப்பதற்கு நாட்டம் அதிகமாகும். கதைகளைவிட கட்டுரைகள் சுவைதரக் கூடும். யோசிப்பு சக்தியை அதிகம் தூண்டும். பேச்சில், நடத்தையில் நிதானம் கூடும்.
கொந்தளிப்பு 53

Page 29
ஒரு தீவிர படிப்பு, பதினாறு பதினேழு வருடங்கள் தொடர, புத்தகப் படிப்பு நின்று போய், மக்களின் வாழ்க்கையை உற்றுப் பார்த்தலே பெரிய படிப்பாய் போகும். அந்நேரம் தெளிவின் உச்சத் திற்குக் கூட போக முடியும். பதட்டமே இல்லாமல் இருக்க முடியும். நண்பர்கள் தேவையில்லாது போகும். நல்ல புத்தகம் நண்பனாகும். விவாதம் பிறரோடு நிகழாமல், தன்னுள்ளே கேள்வியும், தனக்குத் தானே பதிலும் தேடும் ஆரோக்கியம் வரும். ஆளோடு முரண்படத் தான் வாழ்க்கை சிக்கலாகிறது. தன்னோடு தான் போரிடத் தன் முரண் எது என்று தெளிவாகும் ,
படிப்பு நல்ல விசயம், படிப்போடு ஒன்றிவிட மேலும் மேலும் தெரியும்; ஆசை துளிர்விடும் கொடியாய் படரும். ஒவ்வொரு படி யாய் கால் வைத்துப் போக முடியும்.
படிப்பு ஒரு சுகம். ஆரவாரமில்லாத சுகம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- பாலகுமாரன்.
எல்லோரும் ஊமைகள் எப்போது?
நான் கொடுக்கும் காசுக்கவள்
விலையானால் அதன் பெயரோ விபச்சாரம் அவள் கொடுக்கும் காசுக்கு நான் விலையானால் அதன் பெயரோ சம்சாரம்.
கே. பொன்னன். File:-----------------
54 கொந்தளிப்பு

ஒரு ரூபாய்க்கு 64 பத்திரிகைகள்
இந்தியாவில் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பத்திரிகைகளின் விலை கால் அணா மட்டுமே! 16 அணா ஒரு ரூபாய். எனவே ஒரு ரூபாய்க்கு 64 பத்திரிகைகளை அந்தக் காலத்தில் வாங்கக் கூடியதாக இருந்தது.
காலணா விலையில் வெளிவந்த சில முக்கிய வாரப் பத்திரிகை
கள்.
9066) கும்பகோணத்திலிருந்து * யதார்த்த வசனி’ 1930s, சென்னையிலிருந்து * சுதந்திரச் சங்கு" 19306წ) p “காந்தி" (வாரமிருமுறை) l936) விநோத விகடன்" 1931ல் தூத்துக்குடியிலிருந்து * சுதந்திர வீரன்"
(வாரமிருமுறை)
1936) சென்னையிலிருந்து * விகட சக்ரம்" I9336) கண்டனூரிலிருந்து "சுதர்மம் (நாளிதழ்)
19386) சென்னையிலிருந்து *நாடோடி"
1947க்குப் பின்னர் புதுக்கோட்டையில் இருந்தும் ராமச்சந்திர புரத்திலிருந்தும் காலணா விலையில் வெளிவந்த சிறுவர் பத்திரிகை கள்: யுவன், சங்கு , முத்து, பாப்பா.
அரையனா விலையில் வெளிவந்த சிறுவர் இதழ்கள்: டமாரம், பாலர் மலர், அணில்,
தகவல்: மா. அருள்.
கொந்தளிப்பு s - - 55

Page 30
அறிஞர் கருத்துரைகள்!
தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. நீங்கள் இன்னும் வெற்றி அடை யவில்லை என்று பொருள் !
தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல. சில பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கின்றீர்கள் என்று பொருள்!
தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக பொருள் அல்ல. முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறது என்று பொருள்!
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லையென்று பொருள் அல்ல வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்துவிட்டீர்கள் என்று பொருள். t
A
தோல்வி என்றால் வாழ்க்கை வீணாக்கிவிட்டதாகப் பொருள் அல்ல. மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.
தோல்வி என்றால் விட்டு விடவேண்டும் என்று பொருள் அல்ல" இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.
தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல. அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று டொருள்.
தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கைவிட்டு விட்டார் என்று பொருள் அல்ல. உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ண யம் செய்து வைத்துள்ளார் என்று பொருள்.
- டாக்டர் ஷல்லர்.
தொகுப்பு:- வெதமுல்ல கருப்பையா இரவீந்திர்ன், இறம்பொடை.
56
கொந்தளிப்பு


Page 31
حياته
Registered as a News Paper in Sri La
變率率撫率率*率率率摔
韃
எழுத்தாளர்களுக்கு
ஒரு
உங்கள் சிறுக
கட்டுை
கவிை
துணுக்
கீழ்க்கண்ட முகவ பிக்
粗漸漸率率摔摔播漸漸率遷料 இப் பத்திரிகை கி. தொ. ஒ. செயலி
அச்சகத்தில் அச்சிட்டு

anka. விலை ரூபா. 5-00
வேண்டுகோள்!
தை
குகளை எழுதி
கு அனுப்புங்கள்.
ஆசிரியர்,
கொந்தளிப்பு,
882, டன்பார் வீதி,
அட்டன்.
தொலைபேசி: 0512-332 *
ாளருக்காக அட்டன் யுனிவர்சல் வெளியிடப்பட்டது.