கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 1997.12

Page 1
நிவே
பால்நிலைக் கற்கை
தமிழ் ஒளிபரப்புகள் : ஒரு பால்நிலை நோக்கி
offrழ்ப்பாணத்து பாஸ்தின்
மும்முவைப்பெண்
ஐவரின் பத்தினி
போரின் வன்முறை
இதழ் 4
LOGUT 2
பெண்கள் கல்வி, பு


Page 2
எழுது குறி 3:3:
:
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ஒரு அரசாங்கச் சார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம். சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயக பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இன பெண்களின் முன்னேற்றத் திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலை பற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன் முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள் , வளங்கள் ஆகியவற்றை சேகரிக்கும் இந்நிறுவனம் , மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும்.
பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்நாட்டு மக்களுக்கு விழிப் புணர்ச்சியை ஏற்படுத்துதல்,
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அக்கறையைத் துரண் டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட குழுக்க ளுககான (அகதிகள், வேலையற்றோர், சேரிவாசிகள்) ளக்குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் நல்கல் ஆகியன எமது நிறுவனத்தின் குறிக்கோள்களில் சிலவாகும்.
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் (ܗ)
WERC
 
 

உள்ளடக்கம்
சில சிதறல்கள் : ஆசிரியரின் உரையாக
பால்நிலை, வறுமை, மற்றும் தேசவழமைச் சட்டம் -முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
மொழியும் ஆண்வழிச்சமூக அமைப்பும்
-செல்வி திருச்சந்திரன்
ஐவரின் தேவி
-ராஜம் கிருஷ்ணன்
ரூபவாகினி தமிழ் ஒளிபரப்புகள் : பால்நிலை
நோக்கில் ஒரு ஆய்வு
-சோமசேகரம் வாசு கி
ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒரு போரும்
-வி. சி. பிள்ளை
யாழ்ப்பான சமூகத்தில் கருத்தியலும் கட்டமைப்பு
களும் நிர்ணயிக்கும் பால்நிலைப்பாடு
-செல்வி திருச்சந்திரன்
மும்முலை ஆடகசவுந்தரி அல்லதுஆளுமைகளை
அடையாளப்படுத்தும் மூன்றாவது முலை
-சி.ஜயசங்கர்
சிறுகதை, கவிதைகள்
ஓரினப் பற்கள்
-கோகிலா மகேந்திரன்
அக்னி சாட்சி -வத்ஸ்லா
சிதை ஏறிய சீதையே பேசு -பீனா அகர்வால்
(மொழிபெயர்ப்பு)
25
39
47
76
8O
IOO
112
II9
2O

Page 3
இச்சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே மறு பிரசுரம் செய்யலாம். கட்டுரை களிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களின் சொந்தக்கருத்துக்களே, இதழாசிரியருடையவை அல்ல.
பணிப்பாளர் குழு
கலாநிதி குமாரி ஜயவர்த்தனா
கலாநிதி ராதிகா குமாரசாமி
GBLIfrootle6ër aflaipehu II
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
அன்பேரியா ஹனிபா
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
58. தர்மராம வீதி,
கொழும்பு - 06.
இலங்கை
ጊF :590985/595296 Fax NO : 596313
ISSN: 39-0353
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிவேதினி
சில சிதறல்கள் : ஆசிரியரின் உரையாக
1997ம் ஆண்டின் இரண்டாம் இதழாக வெளிவரும் இந் நிவேதினி சிறிது வித்தியாசமாக வெளிவருகிறது. ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு, இலக்கியத்தில் பெண்மை என்ற ரீதியில் ஜவரின் தேவியும் ஏகபத்தினி விரதனான இராமனின் தேவியும் கட்டுரைப் பொருளாகவும் கவிதைப் பொருளாகவும் கொள்ளப் பட்டுள்ளன. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட கவிதைகளாக இருந்தாலும் இவற்றின் கருப்பொருத்தம் கண்டு மறுபிரசுரம் செய்கிறோம். தொடர்பு சாதனமும் மொழி வழக்குகளும் எப்படி ஆண்நிலை நோக்கிய ஆண் வழிக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன என்பதை ஆய்வுக் கட்டுரைகள் எடுத்தியம்புகின்றன. வறுமை வர்க்கரீதியில்தான் இயங்கும் என்பது மாக்சிசவாதிகள் முன் வைக்கும் கருத்து இதில் எமக்கும் உடன்பாடுண்டு. ஆனாலும் இந்த வறுமைநிலை கூட எப்படி பாரபட்சமாக பால்நிலை யினுடாக பெண்களைப் பல மட்டங்களில் தேடித் தாக்குகின்றது என்பதை இன்னுமொரு கட்டுரை மேற் கோள்களுடன் காட்டுகிறது.
போரினால் ஏற்படும் அவலங்கள் நீண்டுகொண்டே போகும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். அந்தப் போருக்கு எதிரானவர்கள் நாங்கள் என்று சமுதாயத்தில் பலர் இன்று குரல் கொடுக்கிறார்கள். அரசியல் ரீதியாகவும் சமூக பிரக்ஞை மூலமாக இக்குரல்கள் வெளிப்படுகின்றன. ஆனால் தங்களுக்கு தாங்களே முடிவெடுக்க முடியாத தங்கள் குரல்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவிக்க முடியாத வெளிக் கொணர முடியாத சின்னஞ்சிறு மதலைகள் பல்வேறு கொடுமை களுக்குள்ளாக்கப்படுகின்றார்கள். ஒரு சிறு கட்டுரை இதனை ஆராய்கிறது. ஓரினப்பற்கள் என்ற கோகிலா மகேந்திரனின் சிறுகதை மிகவும் ஆணித்தரமாக சமுதாயத்தில் காலங்காலமாக நடந்துவரும் ஆண் கொடுமைகளை வரிசைப்படுத்துகிறது. பெண்மை என்ற இருப்பு சீதனத்தை மட்டும்தான் நிர்ணயிக்க உதவுவதில்லை. அதன் உடற்கூறு கர்ப்பத்தையும் அதன் சமூக வரவேற்பு, நிராகரிப்பு போன்ற வரையறைகளையும் நிப்ணயிக்கின்றன என்பதை மிகத் துல்லியமாக வெளிக் கொணருகின்றது இச் சிறுகதை. இந்த நிர்ணய அளவு கோல்கள் இன்னொருவரிடம்தான் வேரூன்றி இருக்கின்றன. அந்த அவர் தன் சமூக உருவாக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு ஆண்.

Page 4
இந்த நிவேதினியின் தனிச் சிறப்பு எமது சமகால கணிப்புக்களை உள்ளடக்கியமையே.
எமக்கு தங்களது ஆக்கங்களை அனுப்புவோரின் தொகை அதிகரித்து விட்டது என்பது ஒரு சந்தோஷச் செய்தி. சமுதாய மட்டத்தில் பெண்நிலைவாதக் கருத்துக்கள் மேலும் மேலும் பிரக்ஞை பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதின் அறிகுறி என்று நாம் இதை நிச்சயமாக நம்பலாம். சமூக வரலாற்று ரீதியில், இது ஒரு வளர்ச்சி, ஒரு முன்னேற்றம், ஆகக்குறைந்த மட்டத்தில் ஒரு மாற்றம் என்று இதை நாம் கணிக்கலாம்
செல்வி திருச்சந்திரன்

பால்நிலை, வறுமை, மற்றும் தேசவழமைச் சட்டம்
முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்.
இந்தக் கட்டுரை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவது பகுதி பாலுக்கும், வறுமைக்கும் இடையேயுள்ள தொடர்பினை எடுத்தியம்பும் சமீபத்திய நூல்கள்,ஆய்வுக் கட்டுரைகளின் குறுகிய கண்ணோட்டம் பற்றியது ஆகும்.- சான்றுகள், காரணிகள், மற்றும் கொள்கைகள். இரண்டாவது பகுதி, "தேசவழமை சட்டம் பிரதிபலிக்கும் ஒரு சம்பிரதாயபூர்வ உரிமையாட்சி சட்டத்திற்கும், இலங்கையின் வடமாகாண தமிழ் சமூகத்து பெண்களின் வறுமைக்கும் இடையேயுள்ள தொடர்பினை எடுத்தியம்பும் ஒரு குறுகிய கற்கை ஆகும்.
வறுமையின் பால்
பாலுக்கும் வறுமைக்கும் உள்ள தொடர்பு சமீப காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது, பெண்கள் ஆண்களை விட வறுமையை கூடுதலாக எதிர்நோக்குகின்றனர் என்பது பரவலாக கருதப்படுகிறது. அநேக நாடுகளின் வறியவர்களில் பெண்களின் விகிதாசாரமானது மொத்த சனத்தொகையில் பெண்களின் விகிதாசாரத்தினை விட குறிப்பிட்டளவு கூடியது மட்டுமல்லாமல், சில நாடுகளில் இவ்விகிதாசாரம் அதிகரித்தும் வருகின்றது.
1980ம் ஆண்டுகளில், அமெரிக்காவில், பெண்கள் ஆண்களை விட ஐம்பது வீதம் கூடுதலாக வறுமையை எதிர்நோக்குப வர்களாக, இனம்,வயது ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தனர். மேலும் அபாயகரமாக அமெரிக்காவில் பால்களுக்கிடையேயான வறுமை இடைவெளி 1950 இல் பத்து வீதத்திலிருந்து 1980 ல் ஐம்பது வீதமாக அதிகரித்துள்ளது. (Mclanahanetal, 1989, Cited by Casporet al., 1993) of péi-gj60)pu (Lp spp. Tg, இவ் வறுமையின் பால் இடைவெளியானது பெண்களின் தனித்த வீழ்ச்சியன்றி ஆண்களுடனான ஒப்பீட்டளவு வீழ்ச்சியே ஆகும். இதே மாதிரியான வறுமையின் பால் வேற்றுமை மேலும் பல அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் அவதானிக்கக்

Page 5
நிவேதினி
கூடியதாக இருக்கின்றது. (நடைமுறை சான்றுகளுக்கு Casper et al, 1983 ஐ பார்க்கவும்) சீனாவிலும் கூட பொருளாதார சீர்திருத்தங்கள் பெண்களுக்கிடையேயான வறுமையை தனித்தரீதியாகவும், ஒப்பீட்டளவிலும் அதிகரித்துள்ளது. (Summerfield and Aslanbeigui, 1994) gij føOTTG) flav, (gróL'ulu T55 கிராமப்புறங்களில், பெண்சிசுக் கொலைகளின் அதிகரிப்பை ஓரளவிற்கு விளக்குகின்றது.
வறுமையின் பால் பகுப்பிற்கான சான்றுகள்.
பெண்கள் ஆண்களைவிட வறுமையானவர்களா? ஆசிய நாடுகளில் இதற்கான நடைமுறைச் சான்றுகள் கலந்து காணப்படுகின்றது. நாம் இதற்கான சான்றுகளை கீழ்வரும் அளவுகோள்களைக் கொண்டு அவதானிப்போம். நுகர்வு, எழுத்தறிவு, இறப்புவீதம், சுகாதார கவனிப்பு, தொற்றுநோய் பீடிப்பு, மற்றும் கல்வி அறிவு.
நுகர்வு
ஆசிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில், நுகர்வில் பால் பாகுபாடு அவ்வளவு தெளிவாக இல்லை. அதிகமான தெற்காசிய நாடுகளில், பெண்களுக்கு சார்பற்ற நுகர்வு வேற்றுமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த அனுமானத்தை ஆதரிக்கும் ஆய்வுகள் பல உள்ளன (Agarwal (1986), Banerjee (1983) Behrman (1988 a&b), Sen (1988), Sen and Sengupta (1983), Taylor and Faruque (1983)).9) fig, -9/60/LDIT607 g560g, நிராகரிக்கும் ஆய்வுகளும் சில உள. உதாரணமாக gțbgfuu T6) îțb@g5 Chen, Huq, and De soyza (1981), பங்களாதேஷ்க்கு. Basu (1989 & 1993), Behrman and Deolalikar (1990), Dasgupta (1987), Harris (1990). ஆனால் , தெற்காசியாவில் ஒரு கற்கை ஆண்களுக்கு சார்பற்றதாக சான்று பகருகின்றது. (Al Cited by Quibria : 1993).
இவற்றிலிருந்து, தெற்காசியாவில், நுகர்வில் பால் பாகு பாட்டிற்கான சான்றுகள் ஐயந்திரிபு அற்றது அல்ல. இதற்கு நுகர்வை கணிப்பதற்கு பிரயோகிக்கப்படும் வித்தியாசமான கணிப்பீட்டு முறையும் ஒரு பகுதிக் காரணியாகும்.

நிவேதினி
கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில், நுகர்வில் பால்பாகுபாடு ஏறத்தாழ இல்லை எனலாம். இந்த முடிவிற்கு 6) u (ubub 35 fİb60d35'356si Haddad and Kanbur (1990), îNGÚN GODLI 6ör ffib6.g5, மற்றும் Deaton (1989) தாய்லாந்திற்கு.
எழுத்தறிவு
பால் களுக்கிடையேயான எழுத்தறிவு விகிதாசாரத்தை பொறுத்தவரை பெண்களுக்கு எதிரான வேற்றுமையை பல ஆசியநாடுகளில் காணக்கூடியதாக உள்ளது. இது கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளைவிட தென் ஆசியாவில் (இலங்கை தவிர) கூடுதலாக பிரதிபலிக்கப்படுகிறது (ESCAP, 1993).
இறப்புவீதம்
குழந்தைகளின் (ஐந்து வயதிற்குட்பட்ட) இறப்புவீதத்தில் பெண்களுக்கு எதிரான பால் பாகுபாடு ஆசியா பூராவும், குறிப்பாக தென் ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. (Sen 1990 9) sögufT6) náðg ; ESCAP, 1993).
சுகாதார கவனிப்பு
சுகாதார கவனிப்பு ஏற்பாட்டில் கூட, தெற்காசியாவில், பெண்களுக்கு எதிரான பால் பக்க சார்பு இருக்கின்றது. (Kynch and Sen, 1983, gibg5urTaffibg), Alderman and Gertler, 1988. பாகிஸ்தானுக்கு) ஆனால் இந்த சான்றுகள் கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படவில்லை. உண்மையில் , இந்தோனிசியாவில், பெண்களுக்கு சார்பாக சற்று பால் பாகுபாடு தென்படுகிறது (Deolaikar, 1991) .
தொற்றுநோய் பீடிப்பு
தொற்று நோய் பீடிப்பு வீதம் மீண்டும் பெண்களுக்கெதிரான பால் வேற்றுமையினை தெற்காசியாவில் உறுதிப்படுத்துகிறது. (od 35/TT GODTģf9ffb(J5 Chen, Huq and De Souza, 1981 Luthi J5GIT ITGBg5Giffbg5) ஆனால் இவ்வாறான வேற்றுமையை கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காண்பதற்கில்லை (உதாரணத்திற்கு Deolalikar 1991, இந்தோனிசியாவிற்கு).

Page 6
நிவேதினி
கல்வி அறிவு
பாடசாலை செல்லும் வருடங்களை ஒப்பிடும் போது கூட பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகளைவிட சலுகையற்றவர் களாகவே ஆசிய நாடுகள் பூராகவும் திகழ்கின்றனர். இது கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பார்க்க தெற் காசியாவில் (இலங்கை தவிர்ந்த) அதிகளவு தென்படுகிறது ( ESCAP, 1993) .
மேல்வரும் ஆறு குறியீடுகளும் நல்வாழ்வினை அளப்பன வாகும், மேலும் இவை, விஷேடமாக தெற்காசியாவில், பரவலான பால் பாரபட்சத்தினை திடமாக தெரியப்படுத்து கின்றது. பொதுவாக மேற்குறிப்பிட்டவைகளின் குறைவு (நுகர்வில், எழுத்தறிவில், சுகாதார கவனிப்பில், மற்றும் கல்வி அறிவில்), அல்லது பொதுவான நிகழ்வு (தொற்றுநோய் பீடிப்பு, மற்றும் உயர் சிசு இறப்பு வீதம்) வறுமையையும் வருமான ஏற்றத்தாழ்வினையும் அளப்பனவாக இருக்கின்றன. ஆகவே ஆண்களை விட பெண்கள் கூடுதலாக தாழ்த்தப் பட்டவர்கள் என்பதற்கு போதியளவு நடைமுறை சான்றுகள் உள்ளன என்பது தென்படுகிறது. அதாவது, விஷேடமாக தெற்காசியாவில் வறிய ஆண்களை விட, வறிய பெண்களே கூடுதலாக காணப்படுகின்றனர். நடைமுறைச் சான்றுகளில் உள்ள வித்தியாசத்திற்கு ஓரளவு காரணம், குறிப்பிட்ட முடிவிற்கு வர உபயோகிக்கப்பட்ட வேறுபட்ட முறைகளே si(g) D.
இலங்கை முழுவதுமாக, எழுத்தறிவு மற்றும் கல்வி அறிவு போன்றவற்றில் பால் வேற்றுமை (அவ்வளவாக) குறிப் பிட்டளவு காணப்படாவிட்டாலும், வடக்கு, கிழக்கு மாகா ணங்களில், உள்ளூர் சமரின் நேரடித் தாக்கம் காரணமாக, இவற்றில் பால் பாகுபாடு காணப்படுகின்றது. (IAWID 1994) இதனை விட, சிசு இறப்பு வீதம், தொற்று நோய் பீடிப்பு வீதம், மற்றும் சுகாதார கவனிப்பு ஆகியவற்றில் பால் வேற்று மையானது முழு இலங்கையையும் விட இவ்விரு மாகாண ங்களிலும் கூடுதலாக காணப்படுகின்றது (ibid).
10

நிவேதினி
பால்நிலை அடிப்படையில் வறுமையும் அதன் காரணிகளும்
வறுமையின் பால் பாகுபாட்டிற்கான அதிக காரணிகள் குடி மனைக்குள் (குடும்பத்திற்குள்) நிலவும் செல்வப் பகிர்ந்தளிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளினால் ஏற்படுவன ஆகும். இதற்குக் காரணம் பொருளாதார மற்றும்/அல்லது சமூக கலாசார காரணிகளே ஆகும். குடிமனைக்குள் பால் பாரபட்சத்திற்கான பொருளியல் நியாயப்படுத்தல் என்ன வெனில், ஆண்பிள்ளைகள் தம்மீது முதலிடு செய்யப்படுவதற்கு பெண் பிள்ளைகளைவிட கூடிய பலாபலனைத் தேடிக்கொடுக் கின்றனர் என்பதே ஆகும் (Quibria, 1993). இருப்பினும் இந்த அனுமானத்தினை ஆதரிக்க எந்தவொரு நடைமுறை சான்றுகளும் இருப்பதாக தெரியவில்லை. குடிமனைக்குள் நிலவும் பால் வேற்றுமைகள் சமூககலாசார காரணிகளான சமூக மதிப்புகளுக்கும், வழமைகளுக்கும் உட்பட்டது ஆகும்.
குடிமனைக்குள், உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் போஷாக்கு போன்றவற்றை பெறுவதில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்குரிய வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது. இது பெண்களை வீட்டிற்கு வெளியே வேலை நாடுவதில் சலுகையற்றவர்களாக ஆக்குகின்றது. அவர்கள் ஊதிய (சம்பள) வேலை பெறுவதில் வெற்றி பெற்றாலும் கூட, சம்பள பாரபட்சத்தினை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இந்த சம்பள பாரபட்சம் முற்று முழுதாக பால் பாகுபாட்டினால் தான் நிலவுகிறது என்று கருத முடியாது, ஓரளவிற்கு கல்வி மற்றும் திறமைப்பயிற்சி குறைபாட்டினாலும் நிலவக்கூடும்.
தொழிலாளர் சந்தையில் நிலவும் இந்த சம்பள வேற்றுமை கூட, குடும்பத்திற்குள் பெண்பிள்ளைகள் மீதான முதலீட்டை, கிடைக்கும் பலாபலனில் உள்ள வித்தியாசத்தினால், குறைக்கச் செய்கின்றது. (இந்த வாதத்தினை Quibria, 1993 & 1995 எடுத்தியம்பியுள்ளார்). அதாவது, இது குடிமனைக்குள் பெண்களுக்கு எதிரான பால் பாரபட்சத்திற்கான ஒரு விஷச்சூழலாக அமைகிறது.
ஆசிய நாடுகளில் நடைமுறையில் உள்ள சம்பிரதாய பூர்வமான உரிமையாட்சி சட்டங்களினால், பெண்களுக்கு பொருள் (மற்றும்/ அல்லது செல்வத்தின்) மீது, விஷேடமாக நிலம் (காணி) மீது உள்ள சொத்துரிமையும் அதிகாரமும் மட்டுப்படுத்தப்
11

Page 7
நிவேதினி
Lull-5T3G36) g)(53 d6 pg (Agarwal, 1994a & b; Quibria, 1995). ஆசியாவில் உள்ள பெரும்பாலான கமநல (விவசாய) சமூகங்களில், நிலம் மீது உள்ள சொத்துரிமையும் அதிகாரமும் வறுமை, மற்றும் வறுமையற்ற நிலைமைகளை நிர்ணயிக் கின்றன. ஆகவே பெண்களுக்கு பொதுவாக உற்பத்தித்திறன் தரும் பொருள் மீது, குறிப்பாக நிலம் மீது உள்ள சொத்துரிமையும் அதிகாரமும் குறைவானதாகையால் அவர்கள் ஆண்களைவிட வறியவர்களாகிவிடுகின்றனர்.
ஸ்தாபனரீதியான கடன் பெறுவதற்கான வழிவகை, வறுமை மற்றும் வறுமையற்ற நிலைமைகளை நிர்ணயிக்கின்ற இன்னொரு காரணியாகும். இங்கு, மீண்டும் பல்வேறுபட்ட காரணங்களுக்காக ஆண்களை விட பெண்களே அதிக குறைபாடுடையவர்களாக திகழ்கின்றனர். செல்வத்தின் சொத்துரிமை இன்மையால் பிணை செலுத்த முடியாத குறையும், மற்றும் விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதற்கும் ஏனைய விதிமுறைகளை பின்பற்றுவதற்கும் தேவையான எழுத்தறிவு, கல்வியறிவு போன்றவற்றின் குறையும், பெண்கள் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு, ஸப்தாபனரீதியான கடன் பெறுவதற்கு தடையாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், பங்களாதேஷில் உள்ள Grameen வங்கி போன்றவற்றால், இந்த ஒழுங்கீனம் குறிப்பிட்ட அளவிற்கு வெற்றிகரமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. (இதே போன்று, ஆசிய நாடுகளில், மேலும் வெற்றிகர நிகழ்ச்சிக்கற்கைகளுக்கு Heyzer. 1994: 280 – 297 8 LufTft 59,6)o). மேலும், கலாசார கட்டுப்பாடுகளும் பெண்கள் ஸ்தாபனரீதியான கடன் பெறும் வழிவகைகளை அரிதாக்கியுள்ளது. உதாரணத்திற்கு, பெண்கள் கடன் பெறுவதற்காக நிதி நிறுவனங்களிற்கு செல்லுதல், இவை பெரும்பான்மையாக ஆண் உத்தியோகத்தர்களை கொண்டவை, இதுபல பாரம்பரிய சமூகங்களில் ஒரு கலாசார தடையாக இருக்கலாம்.
இவற்றிலிருந்து மேற்குறிப்பிட்ட பொருளாதார, சமூக, மற்றும் கலாசார காரணிகள் பல ஆசிய நாடுகளில், குறிப்பாக தெற்காசியாவில், ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களி டத்து அதிகப்படியான வறுமையை தோற்றுவித்துள்ளது.
1

நிவேதினி
காரணிகளை அகற்றல்
வறுமைப் பழுவில் பால் வேற்றுமை உள்ளதால், வறுமை எதிர்ப்பு கொள்கைகள் பால் சார்புடையதாக (மையமானதாக) இருக்கவேண்டும். இது "சமத்துவம்' (equity) மற்றும் சாமர்த்தியம் ( efficiency ) ஆகிய அடிப் படையில் பிரேரிக்கப்படுகின்றது ( Quibria, 1993).
வறியவர்களுக்குள், பெண்களுக்கு எதிரான பால் வேறுபாடு நிலவுவதற்கான கணிசமான ஆதாரம் உள்ளதால், இந்த ஒழுங்கீனத்தை நிவர்த்தி செய்வதற்கு வறுமை எதிர்ப்பு கொள்கைகள் பெண்கள் மீது இலக்கு வைக்க வேண்டும்.
சமூக-பொருளாதார, கலாசார, மற்றும் தகவல் போன்ற மேலும் கூடிய இடையூறுகளுக்கு பெண்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளதால் பால்-நடுநிலை கொள்கைகள் பெண்களுக்கு கணிசமான அளவு நன்மை செய்வதில்லை (Quibria, 1993). இதிலிருந்து, பால்-சார்ந்த வறுமை எதிர்ப்பு கொள்கைகள், "சமத்துவம்' எனும் தார்மீக மற்றும் சமூக இலட்சியத்திற்கமைய பெண்கள் மீது சலுகை காட்டக்கூடியனவாக உபாயம் செய்யப்படவேண்டும்.
முன்பு நாம் கலந்துரையாடியது போல, பால் வேற்று மையானது சமூக அளவுகோள்களாகிய சுகாதாரம், கல்வி, போஷாக்கு போன்றவற்றில் நிலவுகிறது. பெண்கள் மீதான Jeps (upg5659-667 felpg, Li GuóT 65gio (Social rate of return) ஆண்களின் மீதானதை விட கூடியதாக இருக்கின்றது என வாதாடப்படுகிறது. உதாரணத்திற்கு, பெண்களின் போஷாக்கு தராதரத்தினை உயர்த்துவதால், தாயின் சுகாதாரத்தினை (உடல் நலத்தினை) மேம்படுத்துவது மட்டுமல்லாமல் சேயின் சுகாதாரத்தினையும் மேம்படுத்தலாம். மற்றும் பெண்களின் சுகாதார வசதிகள் மற்றும் கல்வி ஆற்றலை விருத்தி செய்வதால் அவர்களின் வாழ்க்கை தராதரத்தினை விருத்தி செய்வது மட்டுமன்றி பிறப்புவீத குறைப்பிற்கும், மற்றும் பொதுவாக குடும்பத்தின் சுகாதாரம், சுத்தம், ஆரோக்கியம் ஆகியன வற்றிற்கும் அது திடமான பங்களிப்பு செய்யும். இதிலிருந்து, பெண்கள் மீதான சமூக முதலீடு ஒரு பெருக்கும் விளைவை (Multiplier effect) கொண்டிருக்கும். குடும்பத்தின் இந்த மொத்த முன்னேற்றங்கள், காலப்போக்கில் சமூக துறையில் பொது
13

Page 8
நிவேதினி
முதலீட்டை குறைக்கச் செய்யும் (Quibria, 1993&1995;Agarwal, 1994 a) . ஆகவே, பெண்கள் மீது இலக்குகொண்ட சமூக முதலீட்டினை ‘சாமர்த்தியம்’ என்ற கொள்கை அடிப்படை யிலும் மேற்கொள்ள வேண்டும் என வாதாடப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயம் என்ன வெனில், பால் நிலைப்பட்ட வறுமை எதிர்ப்பு கொள்கைகள் சமூக நியாயம் மட்டுமன்றி பொருளாதார நியாயமும் கொண்டுள்ளது. வறுமையின் பால் வேற்றுமைக்கு காரணம் பொருளாதார மற்றும் சமூக கலாசார காரணிகள் ஆகும், மற்றும் பெருமளவு குடிமனைக்குள் நிலவும் செல்வப் பகிர்ந்தளிப்பில் உள்ள பாரபட்சமே ஆகும் என பல நடைமுறை கற்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. பொருளியல் காரணிகளைக் கொண்ட பால் பாரபட்சத்தினை பொது நடவடிக்கை (Public action) திருத்தியமைத்தாலும் (சரிப்படுத் தினாலும்), விஷேடமாக குடும்பத்திற்குள் நிலவும் சமூக கலாசார காரணிகளை திருத்துவதில் இது மிக சிறிதளவே செய்யக்கூடியதாக இருக்கும். (Quibria, 1995, P382). இதிலிருந்து, வறுமையின் பால் பகுப்பிற்கு உதவும் சமூக-கலாசார காரணிகளை மேன்மை கொள்ள பொது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக சமூக நடவடிக்கைகள் (Community action) மேற்கொள்ளப்பட வேண்டும்.
வழக்கமாக, பெண்களுக்கு ஊதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதே பால் சமத்துவத்திற்கான அதி முக்கிய நடவடிக்கையாகும் என வாதாடப்பட்டு வந்தது. பல அபிவிருத்தியடைந்து வரும் ஆசிய நாடுகள் பெண்களுக்கு ஊதிய வேலை வழங்குவதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள பொழுதிலும், பால் சமமின்மை பிடிவாதமாக நிலைத்து நிற்கின்றது. இதற்கான பெரும் காரணி எதுவெனில், தற்பொழுது பெண்களுக்கு ஊதிய வேலை பெறுவதற்கு கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெறினும், அவர்கள் ஊதிய பாரபட்ச த்தினால் குறைந்த வேதனம் பெறுபவர்களாகவும், அவர்கள் தாழ்வான லிகித (cerica) மற்றும் கீழ்த்தர உத்தியோகங்களில் செறிந்து காணப்படுபவர்களாகவும், மேலும் பெண்கள் மேன்மையாக பங்களிக்கும் தொழில்களின் சுகாதார, பாதுகாப்பு நிலைமைகள் தராதரம் குன்றியதாகவும் இருப்பதே ஆகும். இவை Cho (1994) இனால் கொரியாவிற்கு கலந்துரை யாடப்பட்டுள்ளது. இது உயர் பொருளாதார வளர்ச்சி
14

நிவேதினி
வீதத்தினையும், மொத்த வருமான பகிர்ந்தளிப்பில் நியாயமான சமத்துவத்தினையும் இணைந்து அனுபவிக்கும் ஒரு நாடாகும். உதாரணத்திற்கு, கொரியாவில் பெண்களினது சராசரி வேலை நேரம் ஆண்களினதையும் விட அதிகமானது, மற்றும் பெண்களின் சராசரி ஊதியம் ஆண்களின் சராசரி ஊதியத்தின் அரைப்பங்கு ஆகும் (ibid, p 102).
'ஊதிய வேலை ஊடான பால் சமத்துவம்’ கொள்கையின் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியினால் , பால் சமத்துவத்தினை அடைவதற்கும் , மற்றும் வறுமையின் பால் பகுப்பை போக்குவதற்கும் உற்பத்திப் பொருட்கள் (விஷேடமாக நிலம்) மீதான பெண்களின் சொத்துரிமையும் அதிகாரமும் (ஆட்சியும்) இன்றியமையாததாகும் என தற்பொழுது வாதாடப்படுகிறது.
தெற்காசியாவில், சமூகத்தில் நிலவும் பால் பாகுபாட்டி ற்கும், நிலம் மீதுள்ள சொத்துரிமைக்கும், அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பினை ஒரு தரைபுரட்டும் கற்கையில் எடுத்துக்காட்டி, பொருளாதார, சமூக, மற்றும் கலாசார துறைகளில் நிலவும் பால் சமமின்மைக்கான அதி தீர்மான காரணி சொத்துரிமையில் உள்ள பால் பாகுபாடே (ஆண்கள் சார்பான) ஆகும் என Agarwal(1994 a 1458) வாதாடுகிறார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பரவலான செயல் ஆராய்ச்சி (field research) மூலம் இந்த முடிவு எய்தப்படுகிறது(Agarwal 1994b).
ஆகவே,பெண்களுக்கு நிலம் மீது சுதந்திரமான சொத்துரிமையும் அதிகாரமும் தேவை என்பதனை (அ) நலம்" ( Welfare ), (ஆ) சாமர்த்தியம் (efficiency), மற்றும் (இ) சமத்துவமும் s9.Jg5735 IT U Lib SDGII L L 6), b '' (equity and empowerment ) sig, gulu கொள்கைகளின் பிரகாரம் வாதாடப்படுகிறது(Agarwal, 1994 a).
(9) 56u6ör Lqflės Glastóir Godes (Welfare argument)
பெண்களின் நிலம் மீதான சுதந்திரமான சொத்துரிமையும் அதிகாரமும் குடிமனைக்குள் செல்வப்பகிர்ந்தளிப்பில் நிலவும் பால் சமமின்மையை நிவர்த்திசெய்ய வெகுதுரரம் செல்லும். மற்றும் இதிலிருந்து மொத்த நலனை அதிகரிக்கும். வறிய கிராமத்து குடிமனைகளின் பெண்கள் தமது அதிகாரத்திற்கு உட்பட்ட செல்வத்தை அதிகமாக குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கே செலவிடுகின்றனர் என்பதனை எடுத்துக்
15

Page 9
நிவேதினி
காட்டக்கூடிய நடைமுறைச்சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளன. அப்படி இருக்கையில் ஆண்கள் புகையிலை, மது பானம் போன்ற தனிப்பட்ட நுகர்வு பொருள்களிலேயே அதிகமாக செலவிடுகின்றனர். குழந்தைகளின் போஷாக்கு தராதரம் தகப்பனைவிட தாயின் உழைப்புடன் (வருமான த்துடன்) நன்மையாக தொடர்புபட்டுள்ளது எனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது (ibid, p, 1461). கிராமத்து பிலிப்பைன்சில் தாயின் வருமானம் ஆனது தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஒப்பீட்டு (relative) கலோரி ஒதுக்கீட்டில் நன்மையான விளைவை உண்டுபண்ணியுள்ளது என Senauer et al (1988) ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பெண் களுக்கு சுதந்திர நில உரிமை வழங்குதல் சார்பான வாதம் நலன் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) சாமர்த்திய வாதம் (efficiency argument)
பெண்களுக்கு சுதந்திர நிலச்சொத்துரிமை வழங்கினால், (i) நில அளவு சிறிதாதல், இது சாமர்த்தியமற்றதாகவும், மற்றும் (i) நிலம் துண்டாடப்படல் அதிகரித்தல், இது உற்பத்தித் திறனுக்கு விரோதம் விளைவிக்கும், போன்ற பெறுபேறுகளை தோற்றுவிக்கும் என வாதாடலாம். ஆயினும் இருக்கும் சான்றுகள் சிறிய அளவு நிலங்கள் அவசியமாக குறைந்த உற்பத்தியளவை விளைவிக்கும் என பிரேரிக்கவில்லை. (ஐப்பான் ஒரு உதாரணம்), மற்றும் நிலத்துண்டாடல் ஆண், பெண் ஆகிய இருபாலாரினதும் உரிமையாட்சியின் கீழ் இடம் பெறலாம். (Agarwal, 1994 a, p 1463). ஆகவே, பெண்களுக்கு சுதந்திர நிலவுரிமை சாமர்த்திய அடிப்படையில் கேட்கப்படுகிறது.
(இ) சமத்துவ அதிகாரமூட்டல் வாதம் (equity and
empowerment argument)
பெண்களுக்கு சுதந்திர நிலவுரிமை வழங்குவதன் மூலம் அவர்கள் சம ஸ்தானத்தில் நிற்க அதிகாரமூட்டி குடிமனை க்குள்ளும், பரந்த சமூகத்திலும் நிலவும் ஆண் ஆதிக்கத்தையும், கசப்புத்தன்மையையும் (chauvinism) ஆட்சேபிக்க இயலும் (ibid, p 1464). இது பொருளாதார வாதத்தைப் பார்க்கிலும் 'அறம்' மற்றும் 'சமூக வாதம் ஆகும்.
16

நிவேதினி
துரதிஷ்டவசமாக, இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் வறுமை மற்றும் சமத்துவமின்மை (வருமான ஏற்றத்தாழ்வு) சார்பான பால்- பிரித்துவைத்த புள்ளிவிபரங்கள் அவ்வளவாக இல்லை. ஆகவே, வெற்றிகர வறுமை எதிர்ப்பு உபாயங்களை ஆக்க மற்றும் அமுலாக்க பால் பரிமாணத்தினை பிரதி பலிக்கக்கூடிய, வறுமை மற்றும் சமத்துவமின்மையை (வருமான ஏற்றத்தாழ்வை) பிடிக்கக்கூடிய ஒரு பூரண ஆராய்வு முன் தேவை (pre-requisite) யாகவுள்ளது.
மற்றைய எல்லா (இலக்கு (göCup GOLDuLUL DIT GOT) ( target group - oriented) வறுமை எதிர்ப்பு உபாயங்களையும் விட பால் - மையமான வறுமை எதிர்ப்பு உபாயங்கள்தான் வறுமை போக்குதலுக்கான அதியுயர்ந்த தாக்கத்தினை கொண்டிருக்கும். ஏனெனில், எல்லா நாடுகளிலும், பெண்கள் மொத்த சனத் தொகையில் ஐம்பது வீதத்தினை சுற் றிவர இடம் பெறுகின்றனர். மேலும், இதே காரணத்திற்காக, ஒரு நாட்டி ற்குள் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வினை குறைப்பதற்கான அதிமுக்கிய உபாயம் குடிமனைக்குள்ளும், பரந்த சமூகத்திலும் வருமான பகிர்ந்தளிப்பில் நிலவும் பால் சமமின்மையை சரிப்படுத்தலே ஆகும்.
தேசவழமைச் சட்டமும் பெண்களின் வறுமையும்
இந்தப் பகுதியின் நோக்கம், தெற்காசியாவின் சம்பிரதாய பூர்வமான உரிமையாட்சி சட்டங்கள் பொருளாதார, சமூக கலாச்சார துறைகளில் பால் சமத்துவத்திற்கு விரோதமானவை (இடையூறானவை) என பீனா அகர்வாவினால் (Bina Agarwal 1994) முன் வைக்கப்பட்ட அனுமானத்தை பரீட்சிப்பதற்கான ஒரு நிகழ்ச்சி கற்கையாக இலங்கையின் "தேசவழமை சம்பிரதாய சட்டத்தின் விமர்சன பகுப்பாய்வு ஒன்று மேற்கொள்ளப்படுகிறது. இந்த பகுதி அதிக அளவில் 14WID (1994 : 29-32) இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடமாகாண தமிழரை "தேசவழமை சட்டம் ஆட்சிபுரிகிறது. இச்சட்டத்தின் கீழ்வரும் விதிகளாவன,(1) தேசவழமை சட்டம் (ii) விவாக உரிமைகளும் உரிமையாட்சி (u1/Typyou ITG007ťD) 5FLilio 1947, Lofibn)|ľo (3) Lazv ofPre-Emption of 1947. இந்த சாசனங்கள் வடமாகாண தமிழர்களின் சொத்துரிமை ஆட்சியையும், விவாக உரிமைகளையும் ஆட்சி புரிகிறது.
17

Page 10
நிவேதினி
மூலபடிவத்தில் "தேசவழமை" "மருமகள்தாயம் (கேரளத்தின் பெண்வழி சட்டம்) மற்றும் தென் இந்திய ஆண்வழி இந்து சட்டங்களினதும் ஒரு கலவை ஆகும். காலப்போக்கில் இந்த மூலப்படிவம் வடக்கு தமிழர்களின் ‘சம்பிரதாய சட்டமாக" விருத்தியாகியது, அவர்களின் 'மலபார்’ (Malabar) அங்கத்தவரின் சம்பிரதாயங்களை பிரதிபலிப்பதாக.
வட மாகாண தமிழர்கள் இலங்கையின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் "தேசவழமை சட்டத்தினால் பிணைக்கப் பட்டுள்ளனர். ஏனைய தமிழர்கள் இலங்கையின் பொது சட்டத்தினால் ஆட்சி செய்யப்படுகின்றனர் (இது ரோமன்டச்சு சட்டம்).
"தேசவழமை சட்டம் பெண்களுக்கு பொருள் மீது "சொத்துரிமை வழங்குகிறது, ஆனால் அவற்றின் மீது அதிகாரம் (ஆட்சி) ஒப்படைக்கவில்லை. பெண் கள் சொத்துக்களின் முதுசத்திற்கும்’ (தகப்பன் வழி உரிமையாட்சி) உரிமைக்கும் (தகப் பன் வழியற் ற உரிமையாட்சி) உரியவர்களாவர். பெண்கள் தமது சீதனத்தை, பணம் மற்றும் சொத்து இரண்டையும், வைத்துக்கொள்ள உரியவர்களாவர். இதனைவிட பெண்கள் தேடியதேட்டத்தின் (திருமணத்தின் பின் இருவராலும் அல்லது ஒருவரால் சம்பாதிக்கப்பட்ட (தேடப்பட்ட) சொத்துக்களும் செல்வமும் அரைப்பங்கிற்காவது, மற்றும் திருமணத்திற்கு முன் அல்லது விவாகரத்து/விதவை ஆகியனவற்றிற்கு பின் கையிருப்பில் இருந்த சொத்துக்களுக்கும், செல்வத்திற்கும் உரியவர்களாவர்.
பெண்கள், சொத்துக்கள் மீது உரிமையுடையவர்களாயினும், அவர்கள் கணவரின் எழுத்துமூல ஒப்புதல் இன்றி அசையா சொத்துக்களை நிர்வகிக்கவோ, முதலீடு செய்யவோ (வியாபாரத்தில்), அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ, விற்கவோ அனுமதிக்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்தில் locus Standi இல்லை, மற்றும் இதிலிருந்து அவர்கள் ஒரு வழக்கில் ஒரு சிறார் (Minor) போன்றே நடாத்தப்படுகின்றனர். இதன் விளைவாக ஒருவரும் எந்த வொரு பெண்ணுடனும், அவரது கணவனையும் சேர்க்காமல், தனிமையாக ஒரு ஒப்பந்தம் செய்ய முற்படார். ஆகவே "தேசவழமை சட்டம் பெண் மீது பெயரளவிலான சொத்து ரிமையை அளிக்கின்றது. அச்சொத்துக்கள் மீதும் செல்வம்
18

நிவேதினி
மீதும் உண்மையான ஆட்சியதிகாரம் இன்றி.
அதாவது, பெண்களின் தனிமையான சொத்துக்கள் ஆயினும் சரி, பொது சொத்துக்கள் ஆயினும் சரி ஆண்களே அவற்றின் மீது நிறைவேற்று ஆட்சியதிகாரமும், கட்டுப்பாடும் கொண்டு ள்ளனர். ஆயினும், 1947ம் ஆண்டு சட்ட திருத்தத்திற்கு பின், ஒரு கணவன் துணைவியின் பெயரில் வாங்கிய ஒரு பொருளை (சொத்தை) அவரின் எழுத்துமூல ஒப்புதல் இன்றி விற்க இயலாது. சில சந்தர்ப்பங்களில், பெண்கள் தமது சொத்து க்களை கணவரின் ஒப்புதல் இன்றி குத்தகைக்கு விட இயலும் என சட்டமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.
"தேசவழமை சட்டத்தின் கீழ், சொல்லளவில், பெற்றோரின் சொத்துக்களில் பெண்பிள்ளைகள் சமனான உரிமையாட்சிக்கு உரித்துடையவர்கள். ஆயினும், நடைமுறையில் பெற்றோரின் சொத்துக்களை உரிமையாளுபவர்கள் ஆண்பிள்ளைகள் தான். அதாவது, பெண் பிள்ளைகள் சீதனம் பெற்றிருந்தால், மற்றும் ஆண் சகோதரர்களை கொண்டிருந்தால், கூடியளவில் பெற்றோரின் சொத்துக்களை உரிமையாளமாட்டார்கள்.
தேடியதேட்டம் "தேசவழமை சட்டத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகும். "தேடியதேட்டம்" திருமணத்தின் பின் ஒருவரால் அல்லது இருவராலும் வாங்கப்பட்ட சொத்துக்கள், மற்றும் இருவருள் ஒருவரின் சுதந்திர உரிமைகொண்ட சொத்துக்களில் ருந்து பெறப்பட்ட இலாபங்கள் ஆகியனவற்றை உள்ளடக் கியதாகும். இவையாவன, கணவன் மற்றும் துணைவியினால் பகிர்ந்து கொள்ளப்படும் பொதுவுடமைகளாகும். அதாவது, கணவனால் மட்டுமே கொள்வனவு செய்யப்பட்ட சொத்தாயினும் அதன் அரைப்பங்கு துணைவிக்கு சொந்தமாகும். மேலும் கணவரின் மரணத்தின்போது, உயில் எழுதாத சொத்துக்களில் தன்னுடைய அரைப்பங்கிற்கு மேலாக தனது கணவரின் பங்கின் அரைவாசியிற்கும் துணைவி உரித்துடையவர் ஆவார் (அதாவது, மொத்தத்தில் முக்கால்பங்கு). இதிலிருந்து 'தேடியதேட்டம்" சொந்தமாக சொத்துக்கள் வாங்கக்கூடிய சந்தர்ப்பம் மிகக்குன்றிய வீட்டுத்துணைவியருக்கு ஓரளவு பொருளாதார பாதுகாப்பினை வழங்குகிறது (ஆனால், மற்றைய பெண்களுக்கு அவசியமாக அல்ல). இருப்பினும், இது ஒரு பெயரளவிலான பாதுகாப்பே ஒழிய உண்மையானது அல்ல (கணவர் உயிருடன் இருக்கும் போது), ஏனெனில் துணைவி ஒரு பகுதி சொந்தம் கொண்டாடும்
19

Page 11
நிவேதினி
சொத்துக்களை சுதந்திரமாக நிர்வகிக்கவோ, முதலீடு செய்யவோ அடகு வைக்கவோ,குத்தகைக்கு விடவோ, விற்கவோ சட்டம் அனுமதிக்கவில்லை.
தற்போதைய சமர் சூழ்நிலையில், "தேசவழமை சட்டம், அதனால் பிணைக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு களை விதிக்கின்றது. உள்ளூர் சமர் பல குடிமனைகளை பெண் தலைமை கொண்டதாக ஆக்கியுள்ளது. இது ஏனெனில், பல ஆண்கள் நாட்டைவிட்டு ஓடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர், மேலும் பலர் உள்ளூரில் "காணாமல் போயுள்ளனர்". இவைகள் பெண் தலைமைத்துவ குடிமனை களை தமிழர்கள் மத்தியில் அலையாய் அதிகரிக்கச் செய்துள்ளது. கணவர்கள் இல்லாமையால் (வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதால்) பெண்கள் தமது சொத்துக்களை விற்கவோ, உற்பத்தித்திறன் கொண்டதாக்கவோ இயலாமல் உள்ளது. இதனை விட "காணாமற் போன” ஆண்கள் விடயத்தில், பெண்கள் தமது சொத்துக்களை விற்கவோ, உற்பத்தித்திறன் கொண்டதாக்கவோ இயலாதுள்ளது, ஏனெனில் தமது "காணாமற் போன” கணவன்மார்களுக்கு இறப்பு சான்றிதழ் பெறுவது என்பது மிகக் கடினமான ஒரு விடயமாகும். இப்படியான சந்தர்ப்ப சூழ்நிலைகளில், சாதாரணமாக, பெண்கள் , சட்டமன்றங்களை தமது சொத்துக்கள் சம்பந்தமான செய்கைகளை (விவகாரங்களை/ காரியங்களை) அங்கீகரிக்கும் படி (அனுமதிக்கும் படி) வேண்டிக்கொள்ளலாம். இருப்பினும் சமர் இடங்களில் சட்டமன்றங்கள் இயங்காமையினால் நீதி பெறுவதற்கான இந்த வழி நழுவப்படுகிறது.
மீதி தமிழர்களை பிணைக்கும் இலங்கையின் பொது சட்டத்தின் அடிப்படையில் பெண்கள் "திருமணமான பெண்களின் (o) J (Tg5g & FL'il 556öT" (Married Women's Property Ordinance) கீழ் சுதந்திர சொத்துரிமை, நிர்வகிக்கும் உரிமையும் அதிகாரம் சம்பந்தமாக பெண்கள் ஒரு தனிநபராக கருதப்படுகின்றனர். பெண்கள் தமது சொத்துரிமைக்கு கீழ் உள்ள சொத்துக்களையும் செல்வத்தையயும் கணவரின் ஒப்புதல் இன்றி நிர்வகிக்க, முதலிடு செய்ய, அடகுவைக்க, குத்தகைக்கு விட அல்லது விற்க முடியும். அதாவது, சட்டமன்றத்தில் பெண்களுக்கு "locus standi o 6i 67g/, LoppJib 916) Isi J56i ' femme -sole sp95 கருதப்படுகின்றனர்.
20

நிவேதினி
எவ்வாறாயினும், பொது சட்டத்தின் கீழ் தேடியதேட்டம்" வழங்கும் பொருளாதார பாதுகாப்பு பெண்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. இதிலிருந்து பொதுச்சட்டத்தின் கீழ் குடிமனை - சார்ந்த பெண்கள் நஷ்டமடைந்தவர்களாக ஆகலாம். இருந்த போதிலும், என்றும் அதிகரித்து வரும் ஊதிய மற்றும் சம்பள வேலையில் ஈடுபடும் பெண்களினாலும், மற்றும் சமூகத்தில் பெண் - தலைமை கொண்ட குடி மனைகளினாலும் , "தேசவழமை முழுமையாக சீர்படுத்தப்படவேண்டிய ஒரு பிற்போக்கான சட்டம் ஆகும்.
"தேடியதேட்டம் குடிமனை-சார்ந்த பெண்களுக்கு ஒரு பொருளாதார பாதுகாப்பு மூலமாயினும், இது வீட்டுப்பணிப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களினதும் சமூக கலாசார விடுதலைக்கு கேடுவிளைவிக்கின்றது. "தேசவழமையின் கீழ் ஒரு நபர் ‘சுதந்திர தனிநபர்’ ஆக அங்கீகரிக்கப்படாத சுபாவத்தால் பெண்கள் சமூகத்தில் இரண்டாம் தர பிரஜைகளாக தாழ்த்தப்பட்டுள்ளனர். இது, சமூகத்தில் பெண்ணியத்தின் சுய-நம்பிக்கை மற்றும் சுய-மதிப்பு போன்றவற்றின் மீது ஆழ்ந்த விளைவை கொண்டுள்ளது. அதாவது "தேடியதேட்டம் குடிமனை சார்ந்த பெண்களுக்கு ஓரளவு பொருளாதார நன்மை பயக்கும் ஆயினும், கலாசார, சமூக ரீதியாக அல்ல.
(Մ?էջ.6ւ
தொகுப்பில், தெற்காசியாவில், சொத்துக்களின் மேல் உள்ள சொத்துரிமையிலும், அதிகாரத்திலும் உள்ள பால் வேற்றுமை தான் பால் சமமின்மைக்கும், குறிப்பாக வறுமையின் பால் பகுப்பிற்கும் அதி முக்கிய நிச்சய காரணி எனும் BinaAgarwal இனால் முன் மொழியப்பட்ட அனுமானத்திற்கு, முன்செல்லும் பகுப்பாய்வுகள் மேலும் உரமூட்டுகிறது (வலு ஊட்டுகிறது). தெற்காசியாவின் சம்பிரதாய f† 6) ut of T607 gd sifflool Du 1 sTL &#) சட்டங்கள்தான் சொத்துக்களின் மீதுள்ள சொத்துரிமையிலும் அதிகாரத்திலும் உள்ள பால் பாகுபாட்டிற்கான பிரதம காரணி ஆகும்.
ஆகவே, பால் சமமின்மை (ஏற்றத்தாழ்வு), மற்றும் குறிப்பாக
வறுமையின் பால் பகுப்பு ஆகியவற்றினை ஒழிப்பதற்கு தெற்காசியாவின் சம்பிரதாயபூர்வமான உரிமையாட்சி சட்டங்கள்
21

Page 12
நிவேதினி
முழுமையாக சீர்திருத்தப்பட வேண்டும். எமது நிகழ்ச்சி கற்கைப்படி வடக்கு சமூகத்தில் நிலவும் பால் சமத்துவ மின்மையும், குறிப்பாக வறுமையின் பால் பகுப்பையும் வெற்றி கொள்வதற்கு "தேசவழமை சட்டம் முழுமையாக சீர்திருத்தப்படுதல் ஒரு முன்தேவை ஆகும். இந்த மாற்றத்தின் அவசியத்தினை நடைபெறும் உள்ளூர் சமரினால் எழும் பெண்களின் துர்ப்பாக்கியநிலை வலியுறுத்துகிறது. இதைவிட சீதனம் உடன் சட்டபூர்வமற்றதாக்கப்பட வேண்டும் (நடைமுறையிலும் கூட).
22

நிவேதினி
Reference
Agarwal, Bina, (1994a), “Gender and Command over Property : A Critical Gap in Economic Analysis and Policy in South Asia", World Development, Vol.22 No 10, October 1994, p. 1455-1478 and references therein.
Agarwal, Bina, (1994b), “Gender, Resistance and Land : Interlinked Strug
gles over Resources and Meanings in South Asia' The Journal of Peasant Studies, Vol 22. No. 1 October, p. 81-125
Casper Lynne, et al., (1993), The Gender Poverty Gap : What can we learn from other Countries?. Working Paper No. 934, Office of Population Research, Princeton University, May 1993, Princeton, New Jersey.
Cho Uhn, (1994), Economic Growth and poverty in Korea: A Gender
Perspective, in Heyzer, Noeleen and Gita Sen (ed), p101-122.
ESCAP (ed), (1993) Economic Bulletin for Asia and the Pacific,
Vol.XLIV. No.2, December 1993, p.71-85.
Haddad, Lawrence, and Ravi Kanbur, (1990), Is There an Intra - Household kuznet's Curve? Some Evidence from the Philippines, Discussion Paper No. 101, Development Economics Research Centre, University of Warwick, April 1990, Coventry.
Heyzer, Noeleen, and Gita Sen (ed), (1994). Gender, Economic Growth, and Poverty, Kali for Women and International Books in Collaboration with Asia and Pacific Development Centre, Kaula Lumpur, Passim.
IAWID, (1994), The Impact of Civil Conflict on Gender and Resource
Distribution, Gender Roles and Attitudes in the Sri Lanka Tamil Community, Volume I, Institute of
23

Page 13
நிவேதினி
Agriculture and Women-in Development, March 1994, Colombo,P 29-32.
Quibria, M. G, (1993), The Gender and Poverty Nexus: Issues and Policies, Economics Staff paper No. 51 Asian Development Bank, November 1993, Manila, and references therein.
Quibria, M. G, (1995), " Gender and Poverty: Issues and Policies with Special Reference to Asian Developing Countries", Journal of Economic Surveys, Vol 9. No.4, December 1995, p 373-411.
Summerfield, Gale, and Nahid Aslanbeigui, (1994), Feminization of Poverty in China?", Development (Journal of the Society for International Development), No. 4, p57-6.
World Bank, (1991), Gender and Poverty in India, A World Bank Coun
try Study, August 1991, Washington. DC.
24

மொழியும் ஆண் வழிச்சமூக அமைப்பும்
செல்வி திருச்சந்திரன்
ஆணின் உடல் ஒரு குறியீடு போல் செயல் படுகிறது. அவ்வுடலின் சினம் , ஆதிக்கம் , அந்தஸ்து போன்றவற்றை அறியும் குழந்தை அதன் பெறுமதிப்பை புரிந்துகொள்கிறது. கலாச்சாரங்கள் வேறானாலும் குழந்தை மனம் உடலை வைத்தே நபரை மதிப்பிடுகிறது. எப்போதும் ஆணுடல் வீட்டிற்கு வெளியே யிருக்கிறது. கொடிய ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறது. பெண்ணுடல்வீட்டிற்கு உள்ளே யிருக்கிறது. வீட்டினரின் வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றைக் கவனிக்கிறது. இவ்வாறு குழந்தைகள் உடலை வைத்து ஏற்படுத்தும் எண் ன மே வளர்ந்து சமூகங் களையும் நாகரீகங்களையும் தீர்மானித்துள்ளது.
Women : Psychologist puzzle
இம்மேற்கோள் உளவியல் பகுப்பாய்வின் ரீதியில் மொழியின் வேறுபட்ட தன்மையை விளக்க முற்படுகிறது. சமூகங்களையும் நாகரீகங்களையும் தீர்மானித்த ஆணின் உடலான குறியீடு மொழியையும் கூட தீர்மானித்தது என்பதும் இவ்வாதத்தினால் பெறப்படும்.
கட்டமைப்பு வாதத்திற்கு பின் வந்த ஒரு கோட்பாடு கட்டமைப்பு வாதத்தின் அடிப்படையை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன் இறுக்கமான கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள வில்லை. Post Structuralism என அழைக்கப்பட்ட பின்னய கட்டமைப்புவாதத்தின் கோட்பாட்டாளர்கள் முதற் பந்தியில் கூறப்பட்ட வாதத்தை ஏற்க மாட்டார்கள். அர்த்தப்படுத்தல் என்பது சமூகமயமானதேயன்றி அதற்கு புறம்பாக அதை புரிந்து கொள்ள முடியாது. அர்த்தங்கள் நிலையானவை அல்ல காலத்தால் ஒருமைப்பட்டவை அல்ல. உள் மனத்தின் உணர்வலைகள் கூட காலத்தை வென்று மொழியின் கூறுபாடுகளை நிர்ணயிக்க முடியாது.
குறிகளும் அடையாளங் களும் உள் மன அடக்கத்தை

Page 14
நிவேதினி
கட்டமைக்கமாட்டா. ஏனெனில் அர்த்தப்படல் என்பது குறியீட்டுடன் ஒரு இயற்கையான தொடர்பைக் கொண்டிரு க்கமாட்டாது. குறியீட்டின் அர்த்தம் என்பது ஏனைய குறியீடுகளுடனும், கட்டுமான அமைப்புக்களின் வேறு பாடுகளுடனும் அவற்றின் இயக்கங்களுடனும் தொடர்பு டையது. ஒரு வஸ்துவிற்கு தனிப் பொருள் இல்லை. அதன் அர்த்தம் வேறொன்றுடன் தொடர்புற்றே உண்டாக்கப்படுகிறது.
இவ்விளக்கம் கலாச்சார அர்த்தங்கள் எப்படி மாறுகின்றன, இயக்கங்கள் மாறுபட இருப்புக்கள் மாறுபட கட்டுமான அமைப்புகள் வேறுபட மொழியின் அர்த்தங்களும் மாறுபடும் என்பதை விளக்குகிறது.
சமூக இயக்கங்களே முக்கியமன்றி உளவியல் தொடக்கங்கள் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்பாலும், பெண்பாலும் உடல் அமைப்பை மையமாகக் கொண்டிருந்தாலும் அவற்றிற்கு வரையறுக்கப்பட்ட குணாதி சயங்கள் சமூகப் பார்வையினாலேயே தோற்றம் பெற்றன. சமூக நியதிகளையும், கருத்தியலையும் உள்ளடக்கியே மொழியின் இயக்கம் வெளிப்படும். இந்த ரீதியில் மொழி முதலில் உருவாகவில்லை. சமூக உருவாக்கத்தின் பின்தான் மொழி உருவாகியது. ஆண்,பெண், சமூக அசமத்துவ நிலையின் பிரதிபலிப்பாக வெளிவந்த மொழி வழக்குகள் ஆண்,பெண் அசமத்துவ தத்துவத்தை வெளிப்படுத்தியே திரும். ஆக, பிழை மொழியில் இல்லை. ஆனாலும் இந்த மொழியின் வழக்கு வகைகளை ஒரு பெண்நிலை நோக்கில் ஆய்வு செய்வது அம் மொழி வழக்குகளைத் தவிர்த்து ஒரு சமத்துவம் கோரும் பணியின் தொடக்கமாகக் கூட இருக்கும். ஏனெனில் ஆண், பெண், அசமத்துவத்தை மேலும் மேலும் வளர்த்தெடுக்கவும், நியாயப்படுத்தவும் இனிவரும் சந்ததியி னரை அதே சமூக வழமைக்குள் தள்ளுவதற்கும் இவ் அசமத்துவ மொழி வழக்குகள் காரணமாக இருக்கும். ஆகவே அவற்றை இனங்கண்டு கூறுபடுத்துதலே இக் கட்டுரையின் நோக்கம்
சமூகத்தால் உருவாக்கப்பட்ட கூற்றுக்கள் பல ஒரு அதிகார த்தின் பாற்பட்டதாகத் தெரிகிறது. மொழி வழக்கின் தளம் கூட ஒரு ஆதிக்க நிலையின் வெளிப்பாடே. இலக்கண, இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்தபடியால் ஆதிக்கமும், அதிகாரமும் அவர்கள் கையில்
26

நிவேதினி
இருந்தபடியால் மொழியில் ஆணிலை நோக்கு ஒன்று மிக இலகுவில் புகுத்தப்பட்டு விட்டது என்பதையும் நாம் மறுக்கக் கூடாது. உயர்சாதி, உயர்வர்க்கம், ஏகாதிபத்தியம், பாசிசம், பெரும்பான்மை மக்கள் போன்றோர் அதிகார ஆதிக்கமில்லாத குறை நிலையில் உள்ள மக்கட் கூட்டங்களுக்கு அவர்களது குறைநிலைக் கருத்தியலை உணர்த்தும் மூலமாக பல்வேறு மொழிப்பதங்களை உருவாக்கியுள்ளனர்.
குலமகள், இழிசனர், கூத்து சண்டாள (மனுதர்ம சாஸ்திரம்) சிங்கள மரத்துடன் ஒப்பிடப்பட்ட தமிழ்ச் செடி கொடி போன்ற சொற்கள் அந்நிலைக்குச் சான்று. இப்படியே பால்நிலைப்பாகுபாடும் ஆணை மேல்நிலையிலும் பெண்ணை கீழ்நிலையிலும் வைத்துள்ளது. கீழ் நிலை, மேல்நிலைக்குரிய சொற்பதங்களை இவ்வாறே நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் மேற்கூறிய வர்க்க சாதிய ஏகாதிபத்திய குறியீடு களைக் குறிக்கும் சொற்பதங்களைப் பல வருட காலங்களுக்கு முன்பே மாக்சிச சமூகவியலாளர் இனங்கண்டுள்ளனர். ஆனால் பெண்ணைக் குறிக்கும் இழி வழக்கு மொழிகளை பெண்நிலைவாதிகளே இனங்கண்டுள்ளனர். சமூக அசமத்துவ நிலைகளைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் பெண்நிலை அசமத்துவத்தைக் காணத் தவறிவிட்டனர். அதே போல அவற்றை மொழிப்பதங்களில் இனங்கண்டபொழுது அது ஒரு தேவையற்ற பரபரப்பு என்று நகையாட பலர் முன் வந்தனர்.
கீழ் நிலையில் உள்ளோரை ஓரங் கட்டுவது, எள்ளி நகையாடுவது தங்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று விலக்குவது, ஒதுக்குவது, அவர்கள் மனதைப் புண்படுத்துவது போன்ற அநாகரீக செயல்களைச் செய்வதற்கும் மொழி பயன்படுத்தப்படுகிறது. தங்களது மேல்நிலை ஆதிக்கத்தை நிலைக்கச் செய்யவும் மொழி பயன்படுத்தப்படுகிறது. மொழி ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று நாம் கூறினால், ஆணாதிக்கத்தின் எத்தகைய கூறுகளை மொழி வெளிப்படு த்துகிறது என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டிய வராகின்றோம்.
குணாதிசயங்கள், நடத்தை, நடை, உடை, பாவனை போன்றன பெண்களுக்கென்றே வகுக்கப்பட்டுள்ளன. இவை மானிடருக்கு
பொதுப்பண்பாக இருந்தாலும் பெண்களுக்குரியன என
27

Page 15
நிவேதினி
வகுக்கப்பட்டிருப்பதை மொழிமூலம் வெளிக்கொண்டு வருவர்.
மெல்லியல், பேதை, மடவோள் என்பன பெண்ணின்
உடல்ரீதியான இயலாமையையும் மன, உள ரீதியான
திண்மையற்றநிலையையும் வெளிப்படுத்துகிறது. பெண்களை
உயிரற்ற பண்டங்களுடன் இணைத்த இலக்கிய கர்த்தாக்கள்
ஆயிழை, சேயிழை பொற்கொடி என்று அணிகலன்களுடன் சேர்க்கும் பொழுது அதனால் வெளிப்படும் கருத்தியல்
அவளைப் பண்டமாகவே நினைக்கத் துரண்டும்
செல்வி, குமாரி, திருமதி, Mr/Mrs/MS போன்ற சொற்பதங்கள் மேல்நாட்டுச் செல்வாக்கை காட்டுகின்றன. எங்கள் நாட்டு வழக்கு அல்ல இது. ஒருத்தியின் தனித்துவம் அவள் பெயரிலேயே இருக்கவேண்டுமன்றி முன் பின் வரும் அடை மொழிகளில் அல்ல. அவள் மணமானவளா, இல்லையா என்பதை உலகிற்கு அறிவரிக்க வேண்டுமென்ற ஒரு கட்டாயத்தின் பேரில்தான் இந்த முன்னிணைப்புச் செய்யப் படுகிறது. ஆனால் ஆணுக்கு மட்டும் திரு என்று கூறி அவனது மணநிலையை கூற வேண்டிய தேவையில்லை என்று சம்பிரதாயம் நிர்ணயித்து விட்டதன் பலன் தான் இச் சொற்கள் புகுத்தப்பட்டமை. பெண் ஆணுடன் இணைக்கப்பட்டு செல்வி, திருமதி என புதிய நாமங்களுக்குட்படுத்தப்படுகிறாள். அந்நிலையில் அவள் பெயர் அடையாளம் தொலைக்கப் படுகிறது. ஆணுடன் ஒட்டிய இத் தொடர்பு அவளது வாழ் நாள் முழுவதும் வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து கொண்டே செல்லும்.
கண்ணகி, மாதவி, நல்லதங்காள், புனிதவதி, பார்வதி என்ற இலக்கியப் புராண பெண் நாமங்கள் தகப் பனையோ கணவனையோ ஒட்டி நிற்கவில்லை. மணம் செய்யும் பெண்ணும் ஆணும் தங்கள் மணம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நியதிக்குட்படுத்தப்பட்ட பொழுது Miss என்றோ Mrs என்றேர் அவளது மணமான நிலை வெளிப்படுத்தப்பட்டது. அதன் மொழி பெயர்ப்புகளாக செல்வி, குமாரி, திருமதி போன்ற சொற்றொடர்கள் ஏற்படுத்தப்பட்டன. மேல்நாட்டு காலனித்துவ ஆதிக்கம் ஒரு பக்கமும் அவர்களது ஆண் ஆதிக்க கலாச்சாரத்தின் கூறு மறுபக்கமுமாக இணைந்து புகுத்தப்பட்டது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதற்கு எம் நாட்டு மக்களின் ஆண் ஆதிக்க கலாச்சாரம் இலகுவில் சம்மதம் அளித்துவிட்டது.
28

நிவேதினி
இச்சொற்களின் மொழி வரலாறு இதுவே.
சுமங்கலி, வாழாவெட்டி, அறுதலி, விதவை, கைம்பெண், வாழ்விழந்தவள், ஆளிற்பெண்டிர் என்ற சொற்களும் அவள் ஆணுடன் இணைந்த தன்மையையும், அத் தொடர்பு அறுந்த தன்மையையும் சுட்டிக் காட்டுகின்றன. அத்தன்மைகள் மங்கலமாகவும் மேன்மை கொண்டவையாகவும் சிறுமை யற்றதாகவும் கருதப்படும் போது பெண்ணின் பெருமைகள் கல்வி, கேள்வி ஞானம், சாதுரியம் போன்றவை அர்த்த மற்றதாகி விட ஆணுடன் இணைந்த இணையாத தன்மைகளே அவளது பெரும் பெட்பாக ஆகிவிடுகிறது.
ஆணுக்கு சமூகம் அளித்த அந்தஸ்து, அதிகாரம் ஆதிக்கம் இச் சொற்களினுாடாகவெளிப்படுகிறது. ஒரு கருத்தியலைப் பிரதிபலிப்பவையாகவும் இவற்றை நாம் கொள்ளலாம். இச் சொற்களும், பதங்களும், சொல் வழக்குகளும் உருவாவதற்கு ஆண்களின் பங்களிப்பே முதன்மையாக இருந்தது என்பதையும் நாம் மறுக்க முடியாது. w
தமிழ் மொழியோ, சமஸ்கிருத மொழியோ, ஆங்கில மொழியோ இந்த வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. இன்னுமொரு L. L 9மேலே போய் அர்த்தப்படுத்தல் என்ற அடிப்படையில் இதன் இன்னுமொரு பண்பையும் நாம் இச்சொற்றொடர்கள் மூலம் கட்டவிழ்க்கலாம். இந்த ஆணுடன் சேர்ந்த, இணைந்த என்ற சொற்கள் எமக்குப் புலப்படுத்துபவை என்னவென்றால் பால்நிலைச் சங்கமம் உடைய, அற்ற பெண் என்பதே. Sexual lite உடைய, அற்ற என்ற பொருளில் அவை அமங்கல மாகவும், வாழ்விழந்தவளாகவும், வாழாவெட்டியாகவும் கருதப் படுகிறாள். இச் சொற்றொடர்களால் அவளுக்கு விடப்படும் வேண்டுகோள் இன்னுமொரு வாழ்வை மங்கலத் தன்மையை, பால்நிலைச் சங்கமத்தைத் தேடாதே, மறுமணம் செய்யாதே என்பதே.
இவை ஆணை விலக்கிவிட்டன. பெண்ணின் பால்நிலை ஒருவருக்கே உரியது. அவன் இறந்தால் நீ, அதை அனுபவிக்கும் ஆவலை, தேவையைத் துறக்கவேண்டும். அமங்கல வேஷம் போட வேண்டும். இந்த உடல் சம்பந்தப்பட்ட பெண்மையின் பெயர்தான் கற்பு என மாறி உருவெடுத்தது.
29

Page 16
நிவேதினி
கற்பு என்ற சொல்லின் பொருண்மை வளர்ச்சி
கற்பு என்பதற்கு அடியொற்றிய பொருள் கற்றல், கற்பிக்கப் பட்டது என்பனவே. கற்பின் பொருள் காலத்துக்குக் காலம் ஆளுக்கு ஆள் வேறுபட்டு வந்துள்ளது. அதனால் இப்போது இதனைப் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடும் ஒரு பரந்துபட்ட கருத்தாக்கச் சட்டமும் உள்ளன. ‘களவுக் கூட்டத்துக்குப் பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம்' என "தமிழ் லெக்சிக்கன்" கற்பு என்ற சொல்லின் பொருளை விளக்குகின்றது. தொல்காப்பியர் கற்பு என்பதை கொள்வதற்கு உரிய தலைவனுக்கு கொடுப்பதற்கு உரித்துடைய பெற்றோர் தலைவியைத் தத்தம் செய்து கொடுத்தல் என்று வரையறுக்கின்றனர்.
கற்பெனப்படுவது கரணமொடு புணரக் கொள்ள ற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.
(தொல்பொருள் : 142) என்பது தொல்காப்பியச் சூத்திரம்.
அக்காலத்தில் கற்பு திருமண விசுவாசத்தை மட்டுமே குறித்தது. ஆண்களும் பெண்களும் திருமணத்துக்கு முந்திய களவுக்காதல் உறவில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருந்த அக்காலகட்டத்தில் திருமணத்துக்கு முந்திய கன்னித்தன்மை பொருட்படுத்தப் படவில்லை, இந்த முரண் சுவையானது. தாய்த்தெய்வம் ஒரு கன்னியாக இருந்த அதே வேளை கன்னித்தன்மை பெண் களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பண்பாக அமைய வில்லை. கன்னித்தன்மை கற்பின் ஒரு பகுதிப் பொருளாகப் பிற்கால த்திலேயே சேர்க்கப்பட்டது. மனுவின் சட்ட விதிகளில் விரிவாகக் கூறப்பட்டவாறான உயர்சாதியினரின் திருமணச் சடங்கின் ஒரு பகுதியான "கன்னிகாதானம்' பிராமணர்களின் திருமண சம்பிரதாயங்களின் ஊடாக சங்ககாலத்தின் பின்னரே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் ஏதோ ஒரு வகையில் கட்டுப்பாட்டுக்குட்படாத எல்லா உணர்வுந்தல் களையும் கட்டுப்படுத்தல் என்ற வகையில் இப்போது கற்பின் பொருள் விரிவாக்கப்பட்டது (புறம் : 196), சாந்தம், அமைதி, மென்சொல், பேச்சில் துடுக்கைத் தவிர்த்தல் போன்ற பண்புகள் கற்புடைப் பெண்ணின் குணங்களாக அமைந்தன. (ஹார்ட் 1975 : 97). கற்பு உடல் தூய்மையை மட்டும் கருதவில்லை.
30

நிவேதினி
ஒரு ஒழுக்கக் கோவை யையும் உள்ளடக்கியது. இதனை மீறுவது உடல் தூய்மையை மீறுவதற்குச் சமமானது என்பது அதன் உட்கிடையாக அமைந்தது.
கணவன் மனைவியருக்கிடையே நிலவிய தலைவன/ தலைவி என்ற சமூக சமத்துவ உறவு இப்போது கடவுள் /அடியான், ஆண்டான்/ அடிமைக்கிடையிலான ஒரு படிநிலை உறவாக மாறுகின்றது. கணவன் தெய்வமாகவும் பதியாகவும் தோற்றமளிக்கின்றான். இந்த மாற்றம் திருக்குறளில் நன்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருக்குறள் தமிழில் எழுந்த முக்கியமான நூல்களுள் ஒன்றாகும். தமிழரின் வேதமாகவும் அது கருதப்படுகின்றது. அரசியல், இலக்கியம் பண்பாடு முதலிய எல்லா வகையான சொல்லாடலிலும் பெரிதும் மேற்கோள் காட்டப்படும் நூல்களுள் அதுவும் ஒன்றாகும். சுருக்கமாகவும் தெளிவாகவும் ஒழுக்கம், மதம் சார்ந்த உண்மைகளைக் கூறும் ஆயிரத்து முந்நூற்றி முப்பது குறட்பாக்களை அது கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் வாழும் தமிழ் இந்துக்கள் தமக்கென்று ஒருமுகப்பட்ட சமய விதிகள் இல்லாத நிலையில், நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு திருக்குறளையே பயன்படுத்துகின்றனர். இது தமிழ்ச் சமூகம் அதனைப் பூரணமாக ஏற்றுக்கொண்டது என்பதைக் காட்டுகிறது. தெய்வத்தைத் தொழாது கணவனையே தொழுது வாழும் ஒரு கற்புடைப்பெண் "பெய்" என்று சொன்ன மாத்திரத்தில் மழை பெய்யும் என திருக்குறள் கூறுகின்றது. "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் எனப் பெய்யும் மழை" என்ற குறளின் பொருள் இதுவாகும். இது சங்ககாலப் பிற்பகுதியில் நிலவிய கற்புப் பற்றிய கருத்தின் வளர்ச்சியாகும். இக்கால கட்டத்தில் கற்பு, கடவுட்தன்மை பெற்றுவிட்டது. கடவுள் சான்ற கற்பு (புறம் 198), கடவுட் கற்பு என அடைமொழியுடன் வழங்கப்படலாயிற்று.
கற்பின் பொருள் பின்னர் மேலும் விரிவாக்கப்பட்டது. உடல்த்துய்மை என்ற நிலையில் இருந்து மனத்துரய்மை என்ற நிலைக்கு இதன் பொருண்மை மாற்றமடைந்ததை இப்போது காண முடிகின்றது. இக்காலகட்டத்தில் பிற ஆடவனை மனத்தாலும் நினையாது தனது மனதைக் காப்பது பெண்ணின் கற்புப் பற்றிய வரைவிலக்கணத்தின் ஒரு பகுதியாக மாறு கின்றது. இது சங்ககாலத்தின் பரின் தோன் றிய திருக்குறளிலேயே வலியுறுத்தப்படுகின்றது. "சிறைகாக்கும்
31

Page 17
நிவேதினி
காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை” என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். பெண்களின் கற்புப் பற்றிய இந்த அதீத எதிர்பார்ப்பு, கவிஞர்களையும் இலக்கண ஆசிரியர்களையும் கற்பு பற்றிய விரிவான வரைவிலக்கணம் கூறத் துரண்டியுள்ளது. சங்க காலத்தின் பின்னர் சிலப்பதி காரத்தின் மூலமும் அதன் தலைவி கண்ணகி மூலமும் இத் தெய்வீகக் கற்பு அழியா நிலை பெற்றது. கண்ணகியின் உறுதி குலையாத கற்பு ஒரு அரசை அழிக்கும் ஆற்றலை அவளுக்கு வழங்கியது. கற்புத் தெய்வம் (பத்தினித் தெய்வம்) என அவள் வழிபடப்பட்டாள். இந்தியாவிலும் இலங்கையிலும் அவளுக்குக் கோயில்கள் கட்டப்பட்டன. சங்ககாலத்தின் பின்னர் இவ்வகை அதீத ஆற்றல்கள் கற்புடன் தொடர்புபடுத்தப்பட்டன. சுயகட்டுப் பாடு, நெஞ்சுரம் ஆகியவற்றின் விளைவாக ஓர் உள்ளார்ந்த ஆற்றலாக அது சிறப்பிக்கப்பட்டது. காவியத் தலைவி கண்ணகியும் நாட்டார் மரபில் வந்த நல்ல தங்காளும் கற்பின் இத்தகைய ஆற்றலுக்கு நல்ல உதாரணங்களாகும். நிரபரா தியான தன் கணவனைக் கொன்று அநீதி விளைவித்த அரசனைத் தண் டிப்பதற்கும் மதுரையை எரிக்கவும் கண்ணகிக்கு ஆற்றல் தந்தது அவளது கற்பின் திண்மைதான். நல்லதங்காள் ஈரவிறகை எரியச் செய்தாள். இங்கு நெருப்புப் பற்றிய குறிப்பு தற்செயலான ஒன்றல்ல. அழிக்கும் ஆற்றலுக்கும் ஆக்கும் ஆற்றலுக்கும் அது குறியீடாக உள்ளது.
தொல்காப்பியர் கற்பினை மிக உயர்நிலையில் வைத்துப் பேசுகின்றார். அச்சம், மடம், நாணம், என்பன பெண்க ளுக்குரிய குணம் என அவர் கருதுகிறார்.
அச்சமும் நாணும் மடனும் முந்துறத் நிச்சமும் பெண்பாற்குரிய என்ப
(தொல்பொருள் ; 99)
இது தொல்காப்பியச் சூத்திரம் "நாணம் உயிரினும் சிறந்தது" என்றும் "நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தது" என்றும் தொல்காப்பியர் கூறுகின்றார். (தொல்பொருள் : 111) கற்புடைப் பெண்டிரை அவர் மூன்று வகையாகப் பாகு படுத்துகின்றார். (மூதானந்தம், புறங்காடு, தாபததிலை). தன் கணவன் இறந்தான் என்பதைக் கேட்ட அல்லது அறிந்த உடனேயே தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண் கற்பின்
32

நிவேதினி
உச்ச நிலையை எய்தியவளாவாள் (மூதானந்தம்). தன் கணவனின் சிதையில் உடன்கட்டை ஏறுபவள் இரண்டாம் நிலைக்குரியவள் (புறங்காடு). கைம்மை நோன்பை வழுவாது பேணி வாழ்பவள் மூன்றாம் நிலைக்குரியவள் (தாபததிலை). தொல்காப்பியர் காலத்து அல்லது அதற்குப் பிந்திய நூலான சிலப்பதிகாரம், முதல் வகையான கற்புக்கு உதாரணம் தருகின்றது. தன் கணவன் இறந்ததைக் கண்ட உடனேயே பாண்டியன் மனைவி தானும் வீழ்ந்து இறக்கின்றாள்.
சங்ககாலத்தின் பின்னர் சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுதப்பட்டன. கற்பு என்ற சொல்லின் சொற்பிறப்பு தெளிவற்றதாகவும் மயக்கம் தருவதாகவும் உள்ளது. இதன் அடிச்சொல்லான கல், கற்றல் என்ற பொருள் உடையது. இது கற்பு என்ற பொருளில் இருந்து முற்றிலும் வேறானது. ஆனால் புகழ்பெற்ற சங்க இலக்கிய உரையாசிரியரான நச்சினார்க்கினியர் சற்றே மரபுக்குப் புறம்பான வகையில் இந்த இடைவெளியை நிரப்ப முயன்றுள்ளார். கற்பு என்பதை அவர் பெண்களுக்குக் கற்பிக்கப்படுவது என வரையறு க்கின்றார். அவரது வரையறை பின்வருமாறு.
கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும் அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுது குரவர் கற்பித்தலானும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலானும் கற்பாயிற்று. இவளை இன்னவாறு பாதுகாப்பாயெனவும் இவற்கு இன்னவாறே நீ குற்றவேல் செய்தொழுகெனவும் அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திரவகையாற் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார்.
(தொல்பொருள் : 142, நச்சினார்க்கினியார் உரை)
கற்பழித்தல் என்ற சொல் பலாத்காரமாக ஒரு பெண்ணுடன் உடலால் தொடர்பு கொள்ளல் என்ற கருத்தில் ன்று பயன்படுத்தப்படுகிறது. பலாத்காரத்தால், உடல்வலிமையால், கொடூர ஆண்மையால் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டால் அவள் எப்படி தன் கற்பு என்று சொல்லப்படும் வஸ்துவை
33

Page 18
நிவேதினி
இழக்கலாம்? அந்தக் கற்பழிக்கப்படுபவருக்கு நாமகரணம் சூட்டப்படும் அதே வேளை, அந்த ஆணைக் கற்பிழந்தவன் என்று கூறும் மரபில்லை. அவன் காமுகன் என்றோ, சேறு கண்டவிடத்து சேறை உழக்கி தண்ணி கண்டவிடத்து காலைக் கழுவும் ஆண் இயல்புடைய ஒரு ஆண்மகன் என்றோ அவன் இயல்பு இயற்கை நிலைக்குள் வைக்கப்படுவான்.
சமுதாயப் பண்பை வெளிப்படுத்தும்முகமாகவேதான் பரத்தை, வேசி, தாசி, விபச்சாரி, கூத்தி, சறுக்கி விழுந்தவள் போன்ற சொற்களுக்கு ஆண்பாற் பதங்கள் தோன்றவில்லை. அப்படி நாம் தோற்றுவித்தாலும், அவை அந்த அர்த்தத்தை தரமாட்டா. தாசன் கூத்தன் என்பன உடலை வைத்துச் சொல்லப்பட்ட கருத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. கம்பதாசன், பாரதிதாசன் என்பன நிச்சயமாக ஓரினச் சேர்க்கையைக் குறிப்பன அல்ல!
உடலோடு, கருத்தரிக்கும் ஆற்றலோடு சம்பந்தப்பட்ட மலடி என்ற சொல்லுக்கு மலடன் என்ற ஆண்பாற் சொல் வழக்கில் இல்லை. விஞ்ஞானம் வளர்ந்ததால் அத்தன்மையை ஆணிடமும் இனங்கண்டால் ஆண் மலடு என்ற ஒரு சொல் உருவாக்கம் நடந்தேறியுள்ளது. இது, பெண்பாற் புலவர் எனப் புலவருக்கு (புலவி என்று கூறாமல்) பெண்பால் ஏற்றியதை ஒக்கும். ஒளவையும், காரைக்கால் அம்மையாரும் தோன்றியிருந்தாலும் பெண் புலவரைக் குறிக்கும் சொல் தோன்றவில்லை. எண்ணிக்கை ரீதியில் இவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
சடப்பொருளாதல்.
கோதானம், பூதானம் போல் பெண்ணைத் தானம் செய்தலை கன்னிகாதானம் என்று கூறுவர். இது சமயச் சடங்குக ளினுாடாகத் தானமாக அளிக்கப்படுவதால் அப்பெண்ணை வாழ் நாள் முழுக்க ஆணுக்கு ஏவல் செய்யும் ஒப்பந்தம் அவனுக்கு அளிக்கப்படுகிறது. திருமணம் சமத்துவமற்ற தன்மையில் 33 தேவர் மத்தியிலும் நடந்தேறினாலும் அந்த தான மனப்பான்மை உடமைப் பொருள் என்ற ரீதியில் அவளை நடத்த முற்படுகிறது.
அவள் எப்பொழுதும் மனைவி, இல்லாள், மனையாள் என்று
34

நிவேதினி
வீட்டுடன் தொடர்புடையவளாக இருக்கிறாள். கணவனுக்கு துணைவியாக அன்றி வீட்டுக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்.
எனது ஆய்வொன்றில் கணவனை இழந்த ஒரு பெண் தன்னைக் குறித்து, தனக்குக் கேட்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தன்னைப்பற்றி முன்னிலையை படர்க்கையாக்கி "ஏன் அது முன்னால் போய் நிற்குது” என்று கூறியதைக் கண்கலங்கி என்னிடம் கூறிய பொழுது, அந்த ஆணுடன் இணையாத தன்மை அப் பெண்ணை உயர்திணைநிலை யிலிருந்து இறக்கி அஃறிணையாக்கிவிட்ட கொடூரத்தை மிகவும் துக்கத்துடன் உணர்ந்தேன்.
இழி பொருளாக்கல்
பேதமை நிறைந்தவள் பெண் என்பதைக் குறிக்கப் பெண்ணை பேதையாக்கி விட்டனர். பெட்டைக் கழுதை என்று ஒரு பெண்ணைக் குறிக்கும் பொழுது கழுதையே கேவலமானது அதிலும் பெட்டைக் கழுதை இன்னும் கேவலமானது அதுவே நீ என்று, சொல்லாமல் சொல்லும் பண்பை இச் சொற்றொடர் குறிக்கிறது.
பால்நிலை வேறுபாடுகள் அசமத்துவ கோட்பாடுகளாக சமூக அமைதி காணல்.
பெண்ணின் பால்நிலையை அடிப்படையாகக் கொண்டு பல அர்த்த பேத சொற்றொடர்கள் தொகுக்கப்பட்டன. குமர் கரையேற வேண்டும் என்ற சொற்பதம் சாதாரண சொல் வழக்காக வீட்டிலும் சமூகத்திலும் பெற்றோராலும் ஏனை யோராலும் மிகவும் துன்பத்துடனும் ஈடுபாட்டுடனும் கூறப்ப டுவதை நாம் கேட்கிறோம். இதை நாம் அர்த்தப்படுத்தினால் பல உண்மைகள் வெளிப்படும். கன்னி ஒருத்தி ஆணைச் சேராமல் இருக்கும் நிலையை இந்தக் குமர் (குமரி) என்ற சொல் வெளிப்படுத்துகிறது. கரை என்பது யாது. அவள் நடுக்கடலில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கிறாள். அவளைக் கரைக்குக் கொண்டு வர வேண்டும் இந்த நடுக்கடல் ஆழம் நிறைந்தது. அவள் அதில் மூழ்கிவிடுவாள். அவளை கவனமாக கரைசேர்க்க வேண்டும் இது பெற்றோரினதும் சமூகத்தினதும் dobl oÕDL D.
35

Page 19
நிவேதினி
இந்த ஆழமான நடுக்கடல் யாது? அவளை அலைக்கழிக்கிறது என்று கருதப்படுவது யாது? அவளது பெண்மை, உடலோடு சம்பந்தப்பட்ட பால்நிலைப் பெண்மை, அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். கரைபுரள விடக்கூடாது. ஆணுடன் சேர்க்கப்பட்டால் அது கரையை அடைந்துவிடும். அப் பெண்மை ஒரு கட்டாய நியதிக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற அர்த்தங்களை வெளிப்படுத்தும் இச் சொற்றொடர் பெண்ணுக்கு பல அநீதிகளை உண்டாக்குகிறது. கல்வி மேன்மை, உத்தியோகச் சிறப்பு, ஆளுமை போன்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. அவளை ஆணுடன் சேர்த்து அவசரமாக அவளது பெண் மையை கட்டுப்படுத்தி கரை சேர்க்க வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் பெரு வழக்காக வந்துவிட்டது.
சமூக பெறுமதிகளையும் நடத்தை வழிமுறைகளையும் இளஞ்சந்ததியினர் கற்று தங்களது நடை, உடை, பாவனை களை நெறிப்படுத்தும் பொழுது இருமுனைப்பட்ட செயற் பாடுகள் ஏற்படுகின்றன. ஒன்று தங்களுக்குள் தங்கள் பரம்பரை தந்த கலாச்சார பரிமாணங்களை ஏற்றுக் கொள்ளல், அதன் படி நடத்தல். அடுத்து அதே பரிமான எல்லைகளை மற்றவர்கள் மீதும் திணித்தும், உபயோகித்தும் அவற்றிற்கு சமூக கலாச்சார அந்தஸ்தை அளிப்பது.
இவ்விரண்டு செயற்பாடுகளும் தங்களைத் தாமே அறியாமல், உள்ளுணர்ச்சியில் (Consciousness) கேள்விகளை எழுப்பாமல் தர்க்க ரீதியில் ஒரு விசாரணை செய்யாமல் ஒன்றிணைத்து விடுகிறது. கருத்தியலின் தாக்கமாக இது வருவதற்கு அந்தக் கருத்தியல் அதிகார, ஆதிக்க மேல் அந்தஸ்தைப் (Higemonic) பெற்றதே காரணம். அந்த மேல் அந்தஸ்தைப் பெறுவதற்கு, சமூகத்துடன் ஒன்றிணைவதற்கு, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அக்கருத்தியலை அனுசரிக்க வேண்டி யிருப்பது ஒரு தேவையாக ஆகிவிட்டது. இதனால்தான் தங்கள் மகள்மாரைக் கூட தங்கள் தங்கைகளைக் கூட வாய்கூசாமல், மனம் நோகாமல் விதவை என்றும் விதவைக் கோலம் பூணுவதற்கும் தந்தையரும், தமையன்மாரும் சமுதாயத்தோடு இணைகின்றனர். “கற்பிழந்த” மகள் ஒருத்தியை வீட்டை விட்டு வெளியேற்றும் தந்தையும், அரிவாளால் வெட்டிவிடும் தமையனும் தமிழ் சினிமாப் படங்களின் கதாபாத்திரப் படைப்புக்கள் மாத்திரம் அல்ல. நடைமுறைச் சித்திரங்களும் கூட. "கற்பிழந்த” என்ற சொற்றொடரும் அதன் கருத்தியலும்
36

நிவேதினி
எந்தளவிற்கு அந்த வெட்டுக் கொத்துக்குக்காரணமானது என்பதற்கு ஆழ்ந்த ஆய்வுகள் எதுவும் தேவையில்லை.
கன்னிக்கெதிரான ஆண்பால் சொல்லை உருவாக்காத தமிழ்க் கலாச்சாரம் காளை என்ற சொல்லை உபயோகிப்பது சகஜமாகிவிட்டது. காளை என்பது ஆண்மை, வீரம், அடங்காத் தன்மை, இளமைத்துடிப்பு போன்றவற்றின் குறியீடு, மாடு என்று சொல்லாமல் காளை என்று சொல்லும் பொழுது மேற்கண்ட குணாதிசயங்களை நாம் அனுமானிக்கிறோம் ஆக ஆடவன், இளைஞன் இப்படித்தான் இருப்பான் ஆண்மை, அடங்காத்தன்மை அவனுக்கிருக்க வேண்டும். ஆகையால் அவை அவனது இயற்கைக் குணங்களாக எடுக்கப்பட்டு அவன் ஏறுமாறாக நடந்திருந்தால் அக் குணங்களின் இயற்கைத் தன்மையை முன்னிட்டு அவன் மன்னிக்கப்படவேண்டும், சமுதாய ஏற்பு அவனுக்கு மறுக்கப்படத் தேவையில்லை என்ற ஒரு தத்துவம் தோன்றியது.
பெண்மை புகையிலை போல விரிக்கப்படாமல், சிரிக்காமல் ஒதுங்கிப் பயந்து நடக்காவிட்டால் "சறுக்கி விழுந்து" விடுவாள் ஏனெனில் பாதை எல்லாம் அவளை வழுக்கச் செய்யும், சறுக்கச் செய்யும், பாழ்பட்ட ஆண்மை தேன் குடிக்கும் வண்டாக காளையாக பரிணமித்திருக்கிறது. கன்னி-காளை "வழுக்கி விழுதல்” போன்ற சொற்களின் கருத்தியல் பால் நிலைப்பட்ட வேறுபாடுகளை மிக அழுத்தி விளக்குகிறது.
10 வயது தொடக்கம் 14 வயது வரை ஏற்படக்கூடிய ஒரு உடல் மாறுபாடு, "சமைஞ்சு விட்டாள்", "பூப்பெய்தி விட்டாள்", "சாமர்த்தியப்பட்டுவிட்டாள்", "பெரியபிள்ளையாகிவிட்டாள்" எனப் பலவாறு அவளது உடற்கூற்றில் ஏற்படும் மாறுதலைவாழ்க்கையின் பெரும்பகுதியில் அவளுக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும் ஒரு சாதாரண நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்தி சடங்காக்கி விட்டன. பெண்ணின் பால்ய பருவத்தில் ஒரு மனரீதியான, உடல்ரீதியான பாரத்தைச் சுமத்துவதற்கு என்று பொறுக்கி எடுக்கப்பட்ட சொற்றொடர்கள் இவை. இதனால் சிறு பெண் களில் பலர் தங் களது பாலியத் தைத் தொலைக்கிறார்கள். கன்னிப்பட்டம் இவளுக்கு வழங்கப்பட ஆண்மகனுக்கு காளை என்ற ஒரு பட்டம் வழங்கப்படுகிறது. இதன் தாற்பரியம் பால் நிலைப்பட்ட ஒரு பெரிய அநீதியாகத் தோற்றுகிறது.
37

Page 20
நிவேதினி
சொற்களும், சொற்றொடர்களும், பழமொழிகளும் பல கருத்தியல்களை, சமூக வழக்குகளை, பல அசமத்துவ நிலைப்பாடுகளைத் நிலை நிறுத்துவதாக பின் அவற்றை நியாயப்படுத்துபவையாக ஒரு படி முறை நிலையை வரலாற்றில் இடம்பெறச்செய்கின்றன. நடைபெற்றுக் கொண்டி ருக்கும் சமூக நிலையைப் பிரதிபலிக்கும் சொற்கோர்வைகள் ஒரு பக்கமும் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களையும், முரண்பாடுகளையும் படம் பிடிக்கும் சொற்கோர்வைகள் இன்னொரு பக்கமுமாக அவை வளர்ந்து கொண்டே போகும். இச் சொற்பதங்களுக்கு அளிக்கப்படும் சமூக, அரசியல் அந்தஸ்துதான் அவற்றை நிலை நிறுத்தும்.
38

ஐவரின் தேவி
ராஜம் கிருஷ்ணன்
திராவிட மக்களின் வெற்றித் தெய்வமாக, "கொற்றவை" கொண்டாடப்பட்டிருக்கிறாள். இவளை முருகனுடைய தாய் என்று திருமுருகாற்றுப்படை (வெல் போர் கொற்றவைச்சிறுவ! 258) குறிக்கிறது. இவளுடைய வழிபாட்டைச் சித்தரிக்கும் நூற்பகுதிகளிலிருந்து, இவள் வழிபாடு வெறியாட்டுடன் நடைபெற்றதென்று அறிகிறோம்.
நெடுநல்வாடையில் போருக்குத் தலைவனைச் செல்லவிடுத்த தலைவியின் தோழியர், தலைவன் வெற்றியுடன் மீளவேண்டும் என்று வெற்றித் தெய்வத்தை வணங்குகிறார்கள். வணக்கத்தைப் பெறும் அவ்வெற்றித் தெய்வம் கொற்றவையாகும். கொற்றவைக்குப் பலி கொடுத்து வாழ்த்துதலைக் கொற்றவை நிலை என்று (தொல் பொருள் : 56) தொல்காப்பியம் குறிக்கிறது.
இதே போல் கொற்றவை வழிபாடு, பதிற்றுப்பத்து 79ம் பாடலிலும், குறுந்தொகை 218ம் பாடலிலும் காணப்படுகின்றது.
இந்தக் கொற்றவைத் தெய்வத்துக்கு நாயகன் குறிக்கப் பெற்றிருக்கவில்லை. எவ்வாறு ருக்வேதம் கூறும் துவக்ககால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் 'அதிதி தாய்க்கு நாயகர் வரையறுக்கப்படவில்லையோ, அவ்வாறே இங்கு கொற்றவை தனித்தெய்வமாகவே விளங்குகிறாள். ஆனால், அதிதியோ, எல்லையற்ற கருணையும் அருளும், வன்மைகளும் உரிய தெய்வமாக வருணிக்கப் பெறுகிறாள். கொற்றவை நேர்மாறானா ஒரு நோக்கில் வழிபடப்படுகிறாள். எனவே தாய்ச் சமுதாயத்தை வீழ்த்தியபின் எழுச்சிபெற்ற தெய்வம் கொற்றவை.
இவள் போரில் வெற்றி காண்பதற்காக, வெறியாட்டம் குருதிப் பலி என்ற பயங்கரங்களுடன் வழிபடப்பெறுகிறாள்.
தந்தைஆண் நாகரீகம், அதிதியைக்கச்யபரின் மனைவி யாக்குகிறது. இங்கும் கொற்றவையாகிய முருகனின் தாய் ,சிவனின் மனைவியாக, உமா, காளி, மாதங்கி

Page 21
நிவேதினி
என்றெல்லாம் அறியப்படுகிறாள்.
சங்க இலக்கியம் காட்டும், பாணன் மகள், மாதங்கி ஆகியோர் விறலியர் எனப்படும் இசை, கூத்துக்கலைகளில் சிறந்த நாடோடிகளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிலப்பதிகாரத்தில், இந்திரவிழாவை விவரிக்கும் பகுதியில் காணப்படும் கண்ணுளாளர் என்பவர் மாதங்கர் என்றே அடியார்க்கு நல்லார் உரையில் விவரிக்கப்படுகின்றார். மாதங்கர்- பாணர் கூத்தர்.
இவர்கள் நாடோடிகளாகத்திரிந்தனர். அரசைப்புகழ்ந்தும் வாழ்த்தியும் பாடினர், மக்கள் கலைஞராகவும் விளங்கினர். நிமித்தங்கள் சொல்லும் சோதிடராகவும் விளங்கினர். ஆண் நாயகத்துக்குக்கட்டுப்பட்டிராத சமுதாயத்தினராக இந்தக்கூத்தர் குழுக்கள் இருந்ததாகக் கொள்ளலாம்.
செளதத்திக்குன்றில், எல்லம்மையின் தாசிகளாகத்தங்களைப் பிரகடனம் செய்து கொண்டவர்கள், தந்தையாதிக்கக் குழுவி னரால் ஒட்டுமொத்தமாகப் பரத்தையராக ஒடுக்கப்பட்டனர் என்பதே வரலாறு. பெண் தெய்வத்துக்குத் தாசியா? 'ஆண்களுக்கு, ஆண்தெய்வங்களுக்குத் தாசியாகுங்கள்’ என்றே வீழ்த்தப்பட்டனர். அரசவையில் இன்றியமையாத பொறுப் பேற்றிருந்த பாணர் பாண்மகள், தேவதாசியாக மறுபிறப் பெடுத்தாள். மேல்வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டு அழிக்கப் பட்ட சக்திகள் சிறு தெய்வங்களாகி விட அச்சம் மேலிட, அதே மேல் வர்க்கத்தினர் வழிபடக்கூடிய சடங்குகளில் காலத்தை வென்று வாழ்ந்து வருகின்றனர்.
தாயாண்மரபு ஒடுக்கப்பட்டுத் தந்தையாதிக்கம் மேல்நிலை யாக்கமாக நாடுமுழுவதும் விரிவடைந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.
ஆதிமரபில், மானுடப்பண்பு அடையாத சில கூறுகள் இருந்தன. முக்கியமாக நரமாமிசம் கொள்ளல், குருதிப்பலி ஆகிய
வழக்கங்கள் எனலாம்.
"பேய் மகளிர் என்பவர்களைப் பற்றிய விவரங்களைச் சங்க
40

நிவேதினி
இலக்கியங்களில் பார்க்கும் போது, நரமாமிசம் புசிக்கும் ஒரு கூட்டத்தார் சமுதாயத்தில் வாழ்ந்திருந்தனர் என்று ஊகிக்க முடிகிறது. இறந்த மக்களின் புலாலை, சுடுகாட்டிலும், போர்க்களத்திலும் இந்தப் பேய் மகளிர் உண்ணுகிறார்கள். இவர்கள் சங்ககாலத்துக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம். இந்தப் பேய் மகளிர் பிணங்களைத் தின்று கூத்தாடும் விவரங்கள், அருவருப்பும் அச்சமும் மிகுந்ததாக இருக்கின்றன. பேய்மகளிர் பிணக்குவியலைச் சூழ்ந்து மொய்த்து நிற்பர் , என்று (புறநானூறு : 359, 1-8) வருணிக்கப்படுகிறது. "போர்க்களத்தில் பிதுங்கிய கண்ணையுடைய கோட்டான்கள் குளலும் குரலாகிய தாள இசைக்கு ஏற்ப, கொடிய கண்களை உடைய பேய்மகள் ஆடுவாள்' என்று பதிற்றுப்பத்து விவரிக்கிறது. இது போன்ற விவரங்களும் கொற்றவை வழிபாட்டு வெறியா ட்டங்களும் தாயாண்மைச் சமுதாயத்துக்கும் தந்தையாதிக்கச் சமுதாயத்திற்குமிடையே நிகழ்ந்த போராட்டங்களைக் குறிப்ப தாகவே ஊகிக்கலாம்.
உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் - ருக்வேதத்தின் பாடல்களி லிருந்தும் காணப்படுகிறது. சுனச்சேபன், அஜிகர்த்தன் என்ற ருஷியின் புதல்வன். இவன் நரபலிக்காகத் தந்தையினால் விற்கப்பட்டுவிடுகிறான். ஏனைய மக்களைக்காப்பாற்ற முடியாத வறுமை, ஒரு சில பசுக்களைப் பெற்றுக் கொண்டு இரண் டாவது மகனான சுனச்சேபனை விற்கச் செய்கிறது. இராமா யணத்திலும் ஐதரேயப்பிராம்மணத்திலும் காணப்படும் இந்த வரலாறு, அரிச்சந்திர மாமன்னனையும் இதில் தொடர்பு படுத்துகிறது. அரிச்சந்திரன் தனக்குப்பிள்ளை இல்லை என்று வருணனைக்குறித்துத் தவமியற்றினான். முதல் பிள்ளையை பலி கொடுப்பதாக நேர்ந்து கொண்டான்.
*ரோஹிதன்” என்று பெயரிட்டான் தலைப்பிள்ளை பிறந்ததும். ஆனால் பலி கொடுக்க மனம் வரவில்லை. ரோஹிதன் வாலிபப்பருவம் எய்தியதும் தந்தை அவனிடம், அவன் பலியாக வேண்டிய பிள்ளை என்பதைத் தெரிவித்தான். ஆனால் ரோஹிதன் இதற்கு ஒப்பவில்லை. நெடுங்காலம் வனத்தில் அலைந்து திரிகையில், வறுமையினால் வருந்திய அஜிகர்த்த ருஷிக் குடும்பத்தினரைக் கண்டான். சுனச்சேபனை நூறுபசுக்கள் கொடுத்துத் தனக்குப் பதிலாகப் பலிபீடத்தில் பிணிப்பதற்கு வாங்கிச் சென்றான். அப்போது விசுவா மித்திரமுனி குருபீடத்திலுள்ளார். இந்தப்பலி பீடத்தில் இருந்து
41

Page 22
நிவேதினி
எவ்லாறு தப்புவேன்' என்று சுனச்சேபன் வருந்த, முனிவர் அவனுக்குச் சில மந்திரங்களை உபதேசிக்கிறார். அந்த மந்திரப்பாடல்கள் ருக்வேதம் முதல் மண்டலத்தில் (1.6.1) காணப்படுகின்றன.
இங்கே அதிதி' என்ற பெருந்தாயின் கருணை-அக்கினியான முதல்தேவன்,ஸாவித்ரி என்ற சூரியன்-வருணன் ஆகியோரின் அருள் வேண்டப்படுகிறது. மனமுருக்கும் இப்பாடல்கள் பலிபீடத்தில் பிணைக்கப்பட்ட சுனச்சேபனின் மன்றாட்டுஅதிதியின் மைந்தர்களை, ஆதி தெய்வங்களைக் குருதி வழிபாட்டுக்குடையவர்களல்ல என்று தெரிவிக்கிறது. விசுவாமித்திரர் வேள்வியைச் செய்யும் புரோகிதர். இவரே சுனச்சேபனை விடுவித்தருள்கிறார். எனவே நரபலியை எதிர்த்த புரட்சியாளராகவும் விசுவாமித்திரர் குறிப்பிடப்படுகிறார்.
இந்த விவரங்கள், தந்தையாண் சமுதாய நாகரீகம், பரவலாக நாடு முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான காரணங்களாகத் திகழ்வதை ஊகிக்கமுடிகிறது.
மகாபாரத இதிகாசம் காட்டும் மானுட சமுதாயம், பல்வேறு நிலைகளில் மகளிர் சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதைப் பிரதிபலிக்கிறது. ஏராளமான கதைகளையும், துணைக்கதை களையும் உள்ளடக்கிய ஒரு பெருங்கடல் அது. மானுட இயல்புகளை ஒவ்வொரு கோணத்திலும் தெளிவாக்கும் இந்த இதிகாசத்தில், சத்தியவதி பராசுரர்-வியாசர்-சத்யவதி-சந்தனுகுந்தி என்னும் ப்ருதா பாண்டவர்கள் காந்தாரி-திருதராஷ்ரன் -துரியோதனர் கள் என்று தலைமுறை மாற்றங்களில் , பெண்களின் சுதந்திரங்கள் படிப்படியாக ஒதுக்கப்பட்ட நிலை யிலும், தாய் என்ற மேன்மை அவளுக்கு அளிக்கப் பட்டிருக்கிறது.
ஆனால் மகாபாரதப் போருக்கே காரணியாக விளங்கும் திரெளபதை 'தாய்' என்ற அந்த மேன்மையிலும் இழிந்து போய்விட்ட நிலையைக் காண்கிறோம். திரெளபதி அயோனிஜா என்று குறிக்கப்படுகிறாள். தாயின் வயிற்றில் உதித்திரா தவளாம்! சீதை பூமியில் கிடைத்தாள், இவள் யாக குண்டத்தில் கிடைத்தாள். வளுடைய தந்தை தன்னை அவமானம் செய்தவனைப் பழிவாங்க அருச்சுனனுக்கு மாலையிட ஒரு பெண்ணை வேண்டி வேள்வி செய்தான். அதன்பயனாக
42

நிவேதினி
இவள் அக்கினியில் தோன்றினாள் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து மராத்திய வரலாற்று அறிஞர் ராஜ்வாடே தம் பாரதியத் திருமண முறைகளின் வரலாறு என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்.
"யோனிஜ்" என்ற சொல் தாயின் கருவறையைக் குறிப்பதாகக் கொண்டாலும் பண்டைய மொழியில், அது இல்லம்" என்ற பொருளையும் குறிக்கிறது. அதாவது, இவள் தாய், தம் உறைவிடத்தில் கருவுறவில்லை. (யாக) வேள்விச்சாலையில் கருவுற்றாள் என்பதே பொருள்.
இந்த வகையில் காந்தாரி நூறு மைந்தர்களைப் பெற்றாள் என்பதற்கும் உரிய பொருளை அவர் இந்நூலில் கொடுக்கிறார்.'உயிர்வித்துக்கள் கும்பத்தில் வைக்கப்பட்டன. நூறு கும்பங்களில் இருந்து நூறுபுத்திரர்கள் தோன்றினார்கள் என்ற கூற்றும், அப்படியே பொருள் கொள்ள முடியாததாகும். திருதராஷ்டிரனுக்கு நூறு இல்லங்களில் நூறு பெண்கள் அவன் வித்தைச் சுமந்து பெற்றார்கள். அந்தப்பிள்ளைகள் பட்ட மகிஷியான காந்தாரியின் மைந்தர்களானார்கள் என்று விளக்குகிறார்.
பாண்டவர்கள் இன்றைய திபெத்தைத் தாயகமாகக் கொண்ட தாய்வழிமரபினர் கெளரவர்களே, காச்மீரத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் முன்னவர்களிடையே, பல நாயகமணம் (Polyandry) தடையில்லை. பின்ன வரிடையே, பலதார மனம் தடையில்லை.
குந்தி தன் மைந்தர்களைப் பல நாயகர்களின் தொடர்பில் பெற்றெடுத்தாள். இவள் தாயாண்மரபில் வரும் சுதந்திரத்தைப் பிரதிபலித்தாலும், அதற்கான கடுமையான தண்டனைகளையும் ஆண் நாயகமாற்றத்தில் ஏற்கிறாள். காந்தாரி ஆணாதிக்க ஏகாதிபத்திய வலிமையினால் கவரப்பட்டு, குருடனுக்கு மனைவியாகும் நிலைக்கு உட்படுத்தப்படுகிறாள்.
திரெளபதியின் பிறப்பே ஒரு நிபந்தனை நிமித்தத்துக்கு உட்பட்டது. அருச்சுனனுக்கு அவள் மனையாட்டியாக வேண்டும் என்பதற்காக 'சுயம்வரம்' என்ற பெயரில் சுழலும் மச்சயந்திரம் நிறுவப்படுகிறது. திரெளபதி, கர்ணனின் மீது
43

Page 23
நிவேதினி
ஆசைப்பட்டாள் என்றும், அவன் போட்டியில் தோல்வி யுற்றதால் , அருச்சுனனுக்கு உரியவளானாள் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியாயின் அருச்சுனனுக்கு மட்டும் தானே அவள் உரியவள்?
பல நாயகர் மரபை குந்தி, தொடரச் செய்கிறாள். எப்படி? வெளிக்குத் தெரியாத முரண்பாடுகளில், பெற்ற மகனைச் சீராட்ட முடியாமல் தவித்த அந்தத்தாய், வெளிப்படையாக, "கன்னியை ஐவரும் ஏற்பீர்கள் என்று கூறிவிடுகிறாள். இந்தக்கூற்று, பெண்ணின் தாய்த்தன்மையிலேயே ஓர் அடி போல் வீழ்கிறது. ஐவரும் உண்ணத்தக்க ஒரு கனி, ஐந்து சகோதரர்களால் அனுபவிக்கக்கூடிய ஒரு பெண்.
திரெளபதியின் புத்திரர்களைப்பற்றிய குறிப்புக்கள் இந்த இதிகாசத்தில் முதன்மைப்படுத்தப் பட்டிருக்கவில்லை. ஆனால் கள்ளங்கபடமற்ற திரெளபதியின் பெண்மை, இந்த மாகதை முழுவதும் சோதனைக்குள்ளாக்கப்படும் சந்தர்ப்பங்களே வருகின்றன.
இவள் சிரித்ததால், துரியோதனன் மனதுள் பழிவாங்கும் வெறி கிளர்ந்தது. அதன் எதிரொலியாக, இவளை நடுச் சபையில் அவமானப்படுத்தத் துணிந்தான். தேர்ப்பாகனை அனுப்பி, அவளை அழைத்துவர ஏவுகிறான்.
"நாயகர் தாந்தம்மைத்தோற்றபின்-என்னை நல்கு முரிமை அவர்க்கில்லை-புலைத் தாயத்திலே விலைப்பட்டபின்-என்ன சாத்திரத்தா லெனைத்தோற்றிட்டார்P அவர் தாயத்திலே விலைப்பட்டவர்,-புவி தாங்குந்துருபதன் கன்னி நான்-நிலை காயப்புலைத்தொண்டு சார்ந்திட்டால்-பின்பு தாரமுடைமையவர்க்குண்டோP
அமரகவி பாரதியின் வரிகள் இவை. மூலபாரதக்கதையை ஒட்டிப்படைக்கப்பட்ட இக்காவியத்தில், திரெளபதி, தன் கணவரின் உரிமையைப் பற்றிக்கேட்கும் அற்புதமான வரிகள் இவை. அறிவுமுடக்கப்பட்ட அந்தப்புரப் பெண்களாக-போகக் கருவிகளாக, தம் நாயகர்களின் வெவ்வேறு நாயகியருடன்
44

நிவேதினி
மோதும் பொறாமையில் அழுந்தி வெளி உலகம் அறியாமல் ஒடுங்கிவிட்ட பெண்ணில்லை இவள். இவள் உரிமை கோருகிறாள்,அவையில் அமர்ந்துள்ள மாபெரும் சான்றோரிடம் தருமநீதி கேட்கிறாள். அவர் தம் மனச் சாட்சிகளை உலுக்குகிறாள்.
எல்லோராலும் கைவிடப்பட்டபின்னும் அபலையாக அவள் முடிந்துவிடவில்லை. நட்புக்கு இலக்கணம் வகுக்கும் ஒரு செயலாகக் கண்ணன் விரைந்து அவள் மானம் காக்கிறான். உடுக்கை இழந்தவர் கை போல கண்ணன் இவளுக்கு உற்ற நண்பனாக தோழனாக ஆபத்தில் காப்பவனாக உதவுகிறான். ஒரு பெண், உரிமையாளனில்லாத ஓராணைத் தோழனாக நெருங்கமுடியும் என்ற நிலை காட்டப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கூத்துக்களிலும், நாடகங்களிலும், திரெளபதியைத் துகிலுரியும் வரலாறு மேடையேற்றப்படுவது வழக்கமாக இருந்த போதிலும்,அவள் ஆங்காரியாக, கூந்தலை அவிழ்த்து விட்டு பாழ்த்துரியோதனின் அக்கை இரத்தமும், பாவிதுச்சாதனன் செந்நீரும் கலந்து பூசிக்குளித்தாலே என் சபதம் நிறைவேறும் என்று சூளுரைக்கும் காட்சி இடம் பெறும். அமரகவி பாரதி இதையே பாஞ்சாலி சபதம் என்ற ஒப்பற்ற காவியமாக்கினார். இந்தத் திரெளபதி, பஞ்சகன்னியில் ஒருத்தியாகவும், இந்தியக் கிராம தேவதையாகவும் வழிபடப் பெறுகிறாள். பாண்ட வரில்லாத, தாய்த்தேவதையாக, இவள் பாமரமக்கள் வழிபடும் தெய்வமாக விளங்குகிறாள். இவள் வழிபாட்டில், மக்கள், யாரோ செய்த கொடுமைக்குத் தாங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்வது போல், உடலை வருத்திக்கொள்ளும் கிரிகைகள் மேற்கொள்கிறார்கள். இதில் மிக முக்கியமானது தீமிதித்தல். ஐவருக்கு நாயகி என்றாக்கப்பட்டதே கொடுமை. அதற்கும் அப்பால் , அவளை மானபங்கம் செய்யத் துணிந்த ஆணாதிக்கத்தை அவள் தானே எதிர்த்துக்கேட்கும் நிலையில், அந்த ஐந்து காளைகளும் அவளைக்காப்பாற்ற இயலாத ஒரு தருமம் பாவிக்கப்படுவது அதைவிடக் கொடுமை.
இவர்கள் விராட நாட்டில் ஒளிந்து வாழ நேர்ந்தபோது, திரெளபதி, வெறும் பணியாட்டியாக ஊழியம் செய்கிறாள். அங்கும் கீசகனின் அத்துமீறல் அவளைச் சோதனைக் குள்ளாக்குகிறது. கீசகன் பீமனால் கொல்லப்பட்ட பிறகும், மன்னருக்குப் பிடித்த அனைத்தையும், பெண்ணையும் கூட
45

Page 24
நிவேதினி
அவனுடன் எரிக்கவேண்டும் என்ற வழக்கில் அவளை உட்படுத்த முயன்றது அக்காலத்திய தருமம். அநியாய ஆணாதிக்கத்தருமங்களை எதிர்த்துக்குரலெழுப்பிய சக்தி எழுச்சித் தெய்வமாக இன்னும் பாமரமக்களிடையே வாழ்ந்து கொண்டிருப்பதில் வியப்பில்லையே?
46

ரூபவாகினி தமிழ் ஒளிபரப்புக்கள் : பால்நிலை நோக்கில் ஒரு ஆய்வு
சோமசேகரம் வாசுகி
மானிட வரலாற்றில் பெண்பால் என்றும் ஒரு ஒடுக்கப்பட்ட பாலினமாகவே இருந்து வந்துள்ளது. அதே போல் ஆண்பால் என்றும் ஒரு பலமிக்க, அறிவுமிக்க, ஆற்றல்மிக்க பாலின மாகவும், பெண்பால் ஆனது ஒரு வலிமையற்ற, அறிவு மழுங்கிய, ஆற்றல் குன்றிய பாலாகவும் கருதப்பட்டு, செயற்பட்டு வந்துள்ளது. இந்த பாற்பாகுபாட்டினை நியாயப் படுத்தி, உறுதிப்படுத்துவதில் வெகுசன தொடர்பு சாதனங்கள் வரலாற்று ரீதியாகப் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ் வெகுசன தொடர்பு சாதனங்கள் இரண்டு வகையானவை. ஒன்று, அச்சக (பொதுசன) ஊடகம் இரண்டு, இலத்தி ரனியல் (பொதுசன) ஊடகம். முன்னையதில், பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் ஆகியன அடங்கும் பின்னையதில், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் தொடர்வலை (Internet) ஆகியன அடங்கும்.
ஆரம்பத்தில் அச்சக ஊடகம் வழியாக மேற்கொள்ளப்பட்ட JT Gij op(& DJ LDfTg5)rfgbg56ö760) Duyub (Gender stereotyping) L_1 IT Gij ஒடுக்குமுறையும் இன்று நவீன இலத்திரனியல் ஊடகங்க ளினுாடாக பன்மடங்கு சக்தியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இவை, குறிப்பாக ஒளிமயமான ஊடகங்களாகிய தொலைக் காட்சி, தொடர்வலை மூலம் வெளிப்படுகிறது. தொடர் வலையில் வெளியாகும் ஆபாசங்கள் (pornography) அனைத்து நாடுகளினதும் ஆபாசம் சம்பந்தமான சட்டவரையறைகளுக்கு ஒரு சவாலாக உள்ளது. இருப்பினும், எமது இக்கற்கை தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் பிரதான நோக்கம் (ரூபவாகினி) தொலைக் காட்சி தமிழ் சேவை ஒளிபரப்புகளில் பெண்களை இழிவுபடுத்தக்கூடிய, பாதிக்கக்கூடிய (பாதகமாகவோ/சாதக மாகவோ) மற்றும் பெண்களின் விடிவிற்கு ஊறுவிளை விக்கக்கூடிய காட்சிகள்/ விடயங்களை இனங்காணல் ஆகும். அதாவது, இவ்வாறான காட்சிகள்/கட்டங்கள் /விளம்பரங்கள் ஆகியனவற்றை ஒளிப்பதிவு செய்து, அவற்றினை கூறுபடுத்தி

Page 25
நிவேதினி
விமர்சித்தல் ஆகும். மேலும், இந்த நடைமுறை அனுமான ங்களைக் கொண்டு கொள்கை சிபாரிசுகளை எடுத்துரைத்தல் இந்த ஆய்வின் முடிவான குறிக்கோளாகும்.
வழிமுறைகள்.
இவ்வாய்வு பின்வரும் வழிமுறைகளினால் மேற்கொள் ளப்பட்டது. முதலாவதாக, சித்திரை 01, 1997 தொடக்கம் ஆனி 30/ 1997 வரையிலான காலப்பகுதியில் ரூபவாகினி தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. இவற்றுள் சினிமாப் படங்கள், தொடர் நாடகங்கள், ஓர் அங்க நாடகங்கள், செய்தி ஒளிபரப்புக்கள், விளம்பரங்கள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து தமிழ் ஒளிபரப்புக்களும் அடங்கும்.
இவை அனைத்திலும், பெண்களைப் பாதிக்கக்கூடிய அல்லது
பால் விழிப்புணர்விற்கு மாசு கற்பிக்கக் கூடிய, மற்றும்
பெண்களின் விடிவிற்கு இடையூறாகவுள்ள காட்சிகள்/ கட்டங்கள்/விளம்பரங்கள் அனைத்தும் ஒளிப் பதிவு
செய்யப்பட்டன. இதில் ஒளிரீதியானதும் (காட்சிகள் / கட்டங்கள்)
ஒலிாரீதியானதுமான (சொற்கள்/வசனப் பிரயோகங்கள்) நிகழ்ச்சிகள் அடங்கும்.
இரண்டாவதாக, ரூபவாகினி தமிழ் சேவையில் கடமை புரியும் அனைவரும் தனித்தனியாக பேட்டி காணப்பட்டனர். இவர்களுள் நிர்வாகத்தோரும், தயாரிப்பாளர்களும் அடங்குவர். இப்பேட்டிகள், வினாக்கொத்து மூலமும், பொதுக் கலந்துரை யாடல்கள் மூலமும் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வின் பெறுபேறுகளும், பகுப்பாய்வுகளும்.
நாம் எமது செயல்முறை காலகட்டத்தில் அவதானித்த தமிழ் நிகழ்ச்சிகளை பின்வரும் ஆறு வகைகளுக்குள் உள்ளடக்கி uperGetTD.
1. சினிமாப்படங்கள்
2. விளம்பரங்கள்
3. சினிமாப்படப் பாடல் நிகழ்ச்சிகள்
48

நிவேதினி
4. செய்தி ஒளிபரப்புக்கள். 5. பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.
இவற்றுள் அடங்கியுள்ள பால் வேற்றுமைகள், மற்றும் பெண்களைப் பாதிக்கின்ற (குறிப்பாகப் பாதகமாக) காட்சிகள், வசனப்பிரயோகங்களை பின்வரும் ஆறு பகுப்பாய்வு வகை 35GabởGg567 (Analytical Categories) s 9ļL-Ġ535GavrTb.
1. ஆண்/ பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான தொழில்/
கடமை வேற்றுமை. 2. ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான பாரம்பரிய
கலாச்சார/கடமை வேற்றுமை. 3. ஆண்/ பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான உடை/
உடல் தோற்ற வேற்றுமை. 4. சொற்பிரயோகங்கள் /வசனங்களில் உள்ள பால் பாரபட்சம்
பெண்ணடிமைத்துவம். 5. பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகம்/வன்முறை. 6. பலதரப்பட்ட பெண்ணிய விடயங்கள்.
இருப்பினும், மேற்படி ஆறு விடயங்களும் நாம் வகைப் படுத்தியுள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் (ஆறு வகை) இடம்பெறாமல் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சில விடயங்கள் சில வகையான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. சினிமாப்படங்கள்.
1.1 ) ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான
தொழில்/ கடமை வேற்றுமை
தமிழ் சினிமாப்படங்களைப் பொறுத்தமட்டில் ஆண் கதா பாத்திரங்கள் பொதுவாக படித்தவர்களாக, உயர்பதவி வகிப்பவர்களாக, மற்றும் வீர, தீரச் செயல்களில் ஈடுபடுப வர்களாக கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். அதே வேளை, பெண் கதாபாத்திரங்கள் பொதுவாக வீட்டுப் பெண்களாகவே கதாபாத்திரம் ஏற்கின்றனர். அதாவது, மனைவியாக, தாயாக, சமையல், தையல், மற்றும் பிள்ளை/ வீட்டுப் பராமரிப்பில் ஈடுபடுபவர்களாக பாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.
49

Page 26
நிவேதினி
சினிமாப்படங்களில், ஆண்/ பெண் கதாபாத்திரங்களின் மேற்படி பிரதிபலிப்பானது நிஜ உலகில் நிலவும் தொழில்சார் 1 T Gi) G36) y ffom)/GOLDGODulu 6G3 DT DITf5ff? (Occupational Gender Stereotyping) மேலும் உறுதிப்படுத்துவதாகவும், நியாயப்படுத்து வதாகவும் அமைந்துள்ளது. எமது செயல்முறை காலகட்டத்தில் ஒளிபரப்பப்பட்ட மூன்று சினிமாப்படங்களும் இதற்கு விதி விலக்கானவை அல்ல. மேற்படி சினிமாப்படங்களின் ஆண் கதாபாத்திரங்கள், மேயராக மேயர் மீனாட்சி), வக்கீலாக (மேயர் மீனாட்சி, எதிர்க்காற்று, மீண்டும் கோகிலா) அலுவலகராக (மேயர் மீனாட்சி), விருதுபெற்ற எழுத்தாளராக (எதிர்க்காற்று), நட்டுவனராக (மீண்டும் கோகிலா) Auditor <毁5 (மீண்டும் கோகிலா), தயாரிப்பாளராக (மீண்டும் கோகிலா), சண்டியர்களாக (மேயர் மீனாட்சி, எதிர்க்காற்று) வேடம் பூண்டுள்ளார். அதே வேளை, பெண் கதாபாத்திரங்கள், தாயாக, மகளாக, தங்கையாக மேயர் மீனாட்சி), பயந்த சுபாவம் உடையவர்களாக, சாந்தமானவர்களாக, கடவுள் பக்தி உடையோர்களாக, பேசா மடந்தைகளாக, படிப்பறிவு அற்றவர்களாக (எதிர்க்காற்று, மீண்டும கோகிலா). அல்லது வாயாடியாக, விபச்சாரியாக (எதிர்க்காற்று) பாத்திரம் ஏற்றுள்ளனர். பொதுவாக, ஆண் பெண் கதாபாத்திரங் களுக்கிடையே மேற்படி தொழில்சார் வேற்றுமை நிலவினும் ஒரு சில பெண் பாத்திரங்கள் பெண்களுக்கு சாதகமானதாகவே பிரதிபலிக்கப்பட்டுள்ளன.
ஒரு குப்பை பெருக்கும் பெண் மேயராக பதவியேற்பதும் (மேயர் மீனாட்சி), ஒரு பெண் தினமும் பத்திரிகை படித்து அதன் மூலம் சுயேட்சை குழுவில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெறுவதும் (மேயர் மீனாட்சி), ஒரு பெண் பத்திரிகை நிருபராக வேடம் ஏற்று துணிகரமாக தொழில்புரிவதும் (எதிர்க்காற்று), மற்றும் ஒரு பெண் நடிகையாக பாத்திரம் ஏற்றிருப்பதும் (மீண்டும் கோகிலா) வரவேற்கத்தக்கவையே ஆகும். இவ்வாறே, வக்கீலான ஓர் ஆண் வீட்டில் தேநீர் தயாரிப்பதும், சோறு வடிக்க உதவுவதும் மேயர் மீனாட்சி ) பெண்களுக்கு சாதகமானதே.
மேற்குறிப்பிடப்பட்ட, பெண்களைச் சாதகமாக பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களுக்குள்ளும் சில வேளைகளில் பெண்ணடி மைத்துவம் நிலவுவது கவலைக்குரிய விடயமாகும். உதார ணத்திற்கு, ஒரு குப்பை பெருக்கியான பெண் மேயராக
50

நிவேதினி
பதவியேற்றபோதும், "நான் ஊருக்குத்தான் மேயர், தாலி
கட்டியவுடன் உங்கள் அடிமை” என தனது எதிர்கால
கணவனுக்கு கூறுவது, அப்பெண் கதாபாத்திரத்தின்
முற்போக்குத்தன்மையை ஒரேவரியில் மழுங்கடிக்கச் செய்வதாக உள்ளது (மேயர் மீனாட்சி).
1.2) ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான
பாரம்பரிய கலாச்சார/ கடமை வேற்றுமை
பொதுவாக, சினிமாப்படங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடிப்பவர்கள் தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக பாத்திரம் ஏற்று ஆண்களுக்குக் கீழ் பணிவன் புடன் சேவைபுரிவதாகவே காண்பிக்கப்படுகிறது. மற்றும், பெண் கதாபாத்திரங்கள் சாந்தமானவர்களாக, மென்மையானவர்க ளாக, பயந்தவர்களாக, கடவுள் பக்தி உடையவர்களாக சித்திரிக்கப்படுகின்றனர். மேலும், பொதுவாக பெண்கள் சேலை உடுத்து, பொட்டு வைத்து, பூ வைத்து மங்களகரமாக காட்சியளிக்கின்றனர். இவ்வாறே, சோக காட்சிகளில் பெண்கள் அழுவதாகவும் காண்பிக் கப்படுகின்றனர். (செல் வி திருச்சந்திரன், 1997). பெண்கள் மேற்படி பாரம்பரிய கலாச்சார முறைப்படி தமது கடமைகளை ஆண்களுக்கு புரிவதாகவே பிரதிபலிக்கப் படுகின்றனர். இவற்றினை நாம் அவதானித்த மூன்று திரைப்படங்களிலும் கூட காணக்கூடியதாக உள்ளது. பெண்கள் ஆண்களுக்கு உணவு பரிமாறுவத்ாக பெரும்பாலும் காண்பிக்கப்படுகிறார்களே ஒழிய ஆண்களுடன் சேர்ந்து உணவு உண்ணும் காட்சிகள் அரிதாகவே உள்ளது (மேயர் மீனாட்சி). ஒரு பெண் தனது கணவனின் பெயரை உச்சரித்ததற்கு வாயில் தட்டிக் கொள்வதாக காண்பித்தது (மேயர் மீனாட்சி) , பெண்கள் தமது கணவரின் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது என்ற மரபை முன்வைப்பதாக உள்ளது.
பெண்கள் கண்ணிரும், கம்பலையுமாகத் தோன்றுவது (மேயர் மீனாட்சி, எதிர்க்காற்று மீண்டும் கோகிலா) பெண்கள் பலவீனமானவர்கள், தலை நிமிர்ந்து நின்று பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாதவர்கள், கண்ணிர் வடிக்கத்தான் தெரிந்தவர்கள் என்ற கருத்தினை பார்வையாளருக்கு எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வாறான காட்சிகள் பெண்களின் தன்னம்பிக்கைக்கு இடையூறாக உள்ளன.
51

Page 27
நிவேதினி
ஒரு கட்டத்தில் சண்டியர்கள் ( முரடர்கள்) துரத்திக் கொண்டு வருவதும், அப்போது கதாநாயகி வழியில் உள்ளகோவிலுக்குள் புகுந்து 'மகமாயி' யை என்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்வதும், அத்தறுவாயில் 'மகமாயி' யின் வாகனமான சிங்கம் உயிரெடுத்து வந்து கதாநாயகியை காப்பாற்றுவதாகவும் காட்சி அமைந்திருந்தது (மேயர், மீனாட்சி). இது உண்மையில் யதார்த்தத்திற்கு புறம்பானது மட்டுமல்லாமல், ஆண்களைப் பெண்கள் தனித்து எதிர்க்க முடியாது என்ற கருத்தினையும் கொண்டுள்ளது. இவ்வாறான காட்சிகள் பெண்களைப் பயந்த சுபாவமுடையவர்களாகப் பிரதிபலிக்கின்றன. இவை பெண்களின் சுய நம்பிக்கைக்கும், திடகாத்திரத்திற்கும் , தனித்துவத்திற்கும் சவாலாக உள்ளன.
ஒரு மனைவி, கணவனிற்கு குளிக்கத் தண்ணிர் ஊற்றி விடுவதாகவும், பின்பு கணவன் வெளியில் செல்லப் புறப்படும் போது மேலாடை (Coal) உடுத்திவிடுவதாகவும், கால் உறை (Socks) அணிவிப்பதாகவும் காண்பித்துள்ளமை (மீண்டும் கோகிலா), ஒரு மனைவி தனது கணவனை ஒரு பிள்ளை போல் பராமரிக்க வேண்டுமென்ற கருத்தினை வலியுறுத் துவதாக அமைந்திருந்தது. இதிலிருந்து, ஒரு மனைவி தனது கணவனிற்கு ஓர் அடிமை போன்று கடமைகள் செய்ய வேண்டும் என்றும் எடுத்துக்கூறப்படுகிறது. இது பெண்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது. பெண் பார்க்க வரும் ஆணின் காலில் விழுந்து அப்பெண் வணங்குவதாகவும், பின்பு மாமன், மாமி ஆகியோரின் காலில் விழுந்து நமஸ்கரிப்பதாகவும் காண்பிக்கப்பட்டது (மீண்டும் கோகிலா) பெண்ணடிமையை ஊக்குவிப்பதாக உள்ளது.
1.3.) ஆண் / பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான
உடை/உடல் தோற்ற வேற்றுமை
பெரும்பாலும் சினிமாப் படங்களில் நடிக்கும் பெண் கதாபாத்திரங்கள் அரைகுறை உடைகளில் தோன்றுவதாகவும், உடலின் கவர்ச்சிப் பாகங்களை வெளிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக பாடல் காட்சிகளில் இவ்வாறு காணப்படுவர். ஆனால் ஆண் கதாபாத்திரங்களோ முழுமையான உடைகளுடன் மரியாதையாகத் தோன்றுவர். இதிலிருந்தது, பெண்களை ஒரு பகட்டுப் பொருளாகவும், கவர்ச்சிப் பண்டமாகவும் பெரும்பாலான சினிமாப்படங்கள்
52

நிவேதினி
பிரதிநிதித்துவப்படுத்துவது புலனாகிறது.
இருப்பினும், நாம் கண்காணித்த திரைப்படங்களுள் ஒன்றுதான் மேற்கூறிய கருத்திற்கு (பாடல் காட்சிகள் தவிர்ந்த) சான்று பகர்கின்றது.
(எல்லோரும் உட்கார்ந்து உணவு உண்ணும் காட்சி ஒன்றில் பெண் கதாபாத்திரம் தனது உடலின் கவர்ச்சிப் பகுதிகளை வெளிக்காட்டும்படியாக உடை உடுத்துள்ளமையும் அவரின் உடல் பகுதிகளை ஆண்கள் கண்ணுற்று ஏங்குவதாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளை, ஆண்கள் முழு ஆடைக ளுடனும் மரியாதையாக தோன்றுகின்றனர். நடிகை வேடம் ஏற்று நடித்திருக்கும் பெண்ணின் உடல் அங்கங்களை கவர்ச்சியாக படம் பிடித்துள்ளமை (மீண்டும் கோகிலா) அவரை ஒரு கவர்ச்சிப் பொருளாக, விலைப்பண்டமாக சித்தரிப்பது போல உள்ளது. கதாநாயகி நீராடும் காட்சி மிகவும் கவர்ச்சிகரமாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது (மீண்டும் கோகிலா). இதே வேளை, ஆண்கள் நீராடும் காட்சிகள் பெரும்பாலும் காண்பிக்கப்படுவதில்லை. அதேசமயம், பெண்கள் நீராடும் காட்சிகளைக் காண்பிப்பது மட்டுமன்றி, பெரும்பகுதி உடலை ஆபாசமாக படம் பிடித்து காண்பிக் கின்றனர்.மேல்வரும் காட்சிகள் பெண்களை இழிவுபடுத்து வதாகவும், விலைப்பொருளாக மதிப்பதாகவும் அமைகின்றன. இவை மூலம் பெண்கள் அடக்கமாக, ஒழுங்காக உடை அணியவேண்டும், இல்லையேல் ஆண்களின் சபலபுத்திக்கு இரையாவார்கள் என்பது போல எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பொதுவாகப் பெண் கதாபாத்திரங்களை எவ்வாறு கவர்ச்சியாக காண்பிக்க முடியுமோ அவ்வளவு காண்பித்து சினிமாப் படங்களை அதிக நாட்கள் ஓடச் செய்வர்.
1.4) சொற்பிரயோகங்கள்/ வசனங்களில் உள்ள பால்பாரபட்சம்/ பெண்ணடிமைத்துவம்
சினிமாப் படங்களில் உபயோகிக்கப்படும் சொற்கள் , வசனங்களில் பெண்கள் இழிவாகவும், பாரபட்சமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். இவை பெண்களை மேலும் அவமதிப்பதாகவும், அடிமைப்படுத்துவதாகவும் உள்ளது. நாம் அவதானித்த சினிமாப்படங்களுள் இரண்டு மேற்படி கருத்திற்கு உறுதுணையாகின்றன. ஒரு ஏழைப்பெண்
53

Page 28
நிவேதினி
மீது பாலியல் பலாத்காரம் புரிய முற்படும் மேயர் அப்பெண்ணிடம் "அடையார் பங்களா, மைலாப்பூர் பஜார் எல்லாம் உனது பெயருக்கு எழுதுகிறேன்” என்று ஆசை வார்த்தைகள் கூறுவது (மேயர் மீனாட்சி) ஏதோ பெண்கள் என்றால் சொத்திற்காக வாயைப் பிளக்கும் பிறவிகள் என்று நினைக்கத் தூண்டுவதாக அமைகிறது. இதற்கு மேலாக "கொல்லைப் பக்கத்தால் வந்தது கொள்ளையடிக்கத்தான்" என மேயர் அப்பெண்ணிடம் கூறுவது கொள்ளையடிக்க வந்தது பெண்மையையே என்பதனை மிகக் கீழ்த்தரமாக (மறைமுகமாக) எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
ஒரு கட்டத்தில் குப்பை பெருக்கும் பெண் நிலத்தில் உட்கார, மேயராகிய ஆணும் நிலத்தில் உட்கார்ந்து "பேயிற்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தானே ஆகவேண்டும்” என்று கூறுவது பெண்களை வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்வதாகவும், இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது (மேயர் மீனாட்சி). இன்னுமொரு சந்தர்ப்பத்தில் மேயரின் நண்பன் குப்பை பெருக்கும் பெண்ணை சுட்டிக்காட்டி, "முதல் தடவை கோட்டை விட்டுவிட்டாய் இந்த முறை கோட்டை விடாமல் தின்றுவிடு" என மேயருக்கு அறிவுரை கூறுவது பெண்கள் மீது பலாத்காரம் செய்யத் தூண்டுவதாக அமைகிறது (மேயர் மீனாட்சி). பெண் என்றால் ஏதோ தின்பண்டம் எனச் சித்திரிக்கப்பட்டிருப்பது பாலியல் வன்முறையைத் துரண்டு வதாக அமைகிறது.
மற்றும், 'மணி’ என்னும் ஆண் கதாபாத்திரத்தைப் பார்த்து அவனது நண்பர்கள், “ஏன் உனது Wife பேசமாட்டாவா? " என்று கேட்பதுஅப்பெண்ணிற்கு ஓர் பெயர் இருந்தும் ஓர் ஆணிற்குக்கீழ் உள்ள உறவு முறையில் தான் அவரை விமர்சிக்கிறார்கள் (மீண்டும் கோகிலா). இது பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தனித்துவம் புகட்டுவதாக அமைய வில்லை.
1.5) பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்/
வன்முறை
சினிமாப்படங்களில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்,
மற்றும் பாலியல் வன்முறைக் காட்சிகள் அதிகமாகக்
காணப்படுகின்றன. நாம் அவதானித்த மூன்று சினிமாப்
54

நிவேதினி
படங்களிலும் இவை காணப்பட்டன. மேயர், ஒரு ஏழைப் பெண்ணிற்கு வாழ்வளிக்கப் பணம் கொடுத்த பின்பு அன்று இரவே அவளை பலாத்காரத்திற்கு உட்படுத்துவதால் அப்பெண் தூக்கில் தொங்குவதாக காண்பிக்கப்பட்டது (மேயர் மீனாட்சி) பெண்ணினத்தை அடிமைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இங்கு, பாலியல் பலாத்காரத்தின் காரணமாக அப்பெண் தற்கொலை செய்து கொள்வது பெண்மையின் பலவீனம், மென்மை, அச்சம் என்பவற்றை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதே சமயம், தப்புப்புரிந்த ஆண் கற்பு நெறியிலிருந்து தவறினாலும் சந்தோசமாக வாழ்வதாகவே காண்பிக்கப்படுகிறது. அத்துடன், பெண்மை பலாத்காரமாக மீறப்படும் போது வாழை மரம் சரிந்து விழுதல், குத்துவிளக்கு விழுதல், பால்செம்பு கவிழ்தல் போன்ற காட்சிகளுடன் ஒப்பிடப்பட்டது (மேயர் மீனாட்சி). ஆனால், குற்றம் புரிந்த ஆணிற்கோ எந்தவித பாதிப் போ, அவச் சொல்லோ ஏற்படுவதாக காண்பிக்கப்படவில்லை. இதிலிருந்து, கற்பு என்றால் பெண்ணிற்கு மட்டும்தான் உண்டு, மற்றும் கற்பு இழந்த பெண் ணிற்கு வாழ்வே இல்லை என்று எடுத்துக்காட்டப்படுகிறது. மேற்கூறியவை யாவும் பெண்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதாகவும், அவர்களின் மன உறுதிக்கு அச்சுறுத்தலாகவும், மற்றும் பெண்களின் விடிவிற்கு ஆப்பு வைப்பதாகவும் உள்ளன.
இன்னொரு சினிமாப்படத்தில் ஓர் பெண் பத்திரிகை நிருபரைத் துரத்திச்சென்று கொலை செய்ய முயற்சிப்பதும், இன்னொரு பெண்ணைக் கொலை செய்வதாக காண்பிக்கப்படுவது (எதிர்க்காற்று) பெண்ணானவள் தனிமையாக வெளியே சென்று தொழில் புரிவதற்குப் பாதுகாப்பு இல்லை என்பதனை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறான காட்சிகள் பெண்ணின் தொழில்சார் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக உள்ளன. ஒரு பெண்ணை, வில்லன் பலாத்காரமாக, கைப்பொம்மையாக வைத்திருப்பது பெண்கள் பயந்தவர்கள், பலவீனமானவர்கள் என்பதனை எடுத்துக்காட்டுவதாக உள்ளது (எதிர்க்காற்று). மேற்படி குறைபாடுகள் மத்தியில், ஓர் பெண் பத்திரிகை நிருபர் எந்த வில்லனுக்கும் அஞ்சாமல் தனது தொழிலை விசுவாசமாக செய்து பல புதிர்களை அம்பலப்படுத்துவதாக காட்டப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது (எதிர்க்காற்று). இது பெண்களை தமது துறைகளில் ஆர்வமாக, நேர்மையாக பணிபுரிய ஊன்றுகோலாக அமையும் . மற்றையதொரு
55

Page 29
நிவேதினி
சினிமாப்படத்தில் கதாநாயகன் ஓர் பெண்ணின் இடுப்பைப் பார்த்து சபலம் அடைவதும், அவளது இடுப்பைக் கிள்ளுவதுமாக காண்பிக்கப்பட்டது பாலியல் துஷ்பிரயோகம் ஆகும் (மீண்டும் கோகிலா). இக் காட்சிகள் பாலியல் துஷ்பிரயோகங்களை அதிகரிக்கச் செய்யக்கூடும். ஒரு பெண் தனது மேனி தெரியும்படியாக உடை உடுத்தினாலும், அவ் அங்கங்களை ஆண்கள் சபலத்துடன் பார்த்து இரசிப்பதும், அல்லது தொட்டு சேட்டைசெய்வதும் பாலியல் துஷ்பிர யோகங்கள் ஆகும். அதாவது, இங்கு பெண்ணின் உடல், தனித்துவம் ஆகியன அத்துமீறப்படுகிறது. மேலும், நடிகை யாகப் பாத்திரம் ஏற்றிருக்கும் ஓர் பெண்ணை, வெளிக்களப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, ஓர் வில்லன் வன்முறை புரிய எத்தனிப்பதாக காண்பிக்கப் பட்டுள்ளமை (மீண்டும் கோகிலா) பெண்கள் வெளிக்கள வேலையில் ஈடுபடுவதை அதைரியப்படுத்துவதாக (Discourage) உள்ளது. இவ்வாறான காட்சிகள் பெண்களை நம்பிக்கை இழக்கச் செய்கின்றன.
2. விளம்பரங்கள்
(2.1) ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான
தொழில் (கடமை) வேற்றுமை
அநேகமான விளம்பரங்களில் ஆண்கள் தீர்மான பீடத்தில் இருப்பவர்களாக, விளையாட்டு வீரர்களாக சித்திரிக்கப்படுகின்ற அதே நேரத்தில் பெண்கள் வீட்டு வேலையுடன் சம்பந்தப்பட்ட வர்களாகவே பிரதிபலிக்கப்படுகின்றனர்.
எமது செயல்முறை கற்கை காலத்தில் அவதானிக்கப்பட்ட விளம்பரங்களில், பெரும்பாலும் ஆண்கள் படித்துத் தொழில் புரிபவர்களாக அல்லது விளையாட்டுக்களில் ஈடுபட்டு சாதனை புரிபவர்களாக காண்பிக்கப்படுகின்றனர். அதே வேளை, பெரும்பாலும் பெண்கள் வீட்டுப் பெண்களாக, சமையல், டபிள்ளை பராமரிப்பு, மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களாக காண்பிக்கப்படுகின்றனர். அதாவது நிஜவாழ்க்கையில் நிலவும் தொழில்சார் ஆண்/பெண் வேற்றுமை விளம்பரங்களில் பிரதிபலிக்கின்றது.
மேற்படி கருத்திற்கு பின்வரும் விளம்பரங்கள் சான்று
56

[$3ରJøରof)
பகர்கின்றன. ரத்தி பால் மா (15.06.97), தகரத்திலடைக்கப்பட்ட அரலியா மீன் (10.06.97), மில்க்மெயிட் கட்டிப்பால் (15.06.97), அஜினோ மோட்டோ (03.05.97), செலான் வங்கி (11.05.97), Red Cow Milk u ft 6i) DIT (17.05.97), gffhj 35í Ó6ð g2 L1 g5 LU GOOTLI பொருட்கள் (27.05.97), New Astra மாஜரின் (24.05.97), தேசிய s 9| Slo?(555 GauFIg55ÍT (24.04.97), IDDSupercard (10.04.97), Maliban LITT Güv L DIT (O2.04.97), Sunflower Oil, Soya Oil, Palm Oil ( 1 1.04.97), Horlicks (01.05.97), Horlicks (06.06.97).
தேசிய சேமிப்பு வங்கி ‘ரிதிரேகா விளம்பரத்தில் (17.05.97), ஆண்களும், பெண்களும் இடம்பெற்ற போதிலும் பரிசுப் பொருட்களாக Oven, Rice Cooker போன்றவற்றை பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி காட்டியிருப்பது பெண்களே இவற்றை உபயோகிப்பவர்கள் என்ற கருத்தாழத்தை உண்டாக்குகிறது. இருப்பினும் இந்த விளம்பரத்தில் பெண்கள் பற்றிய ஒரு (மறைமுகமான) நன்மையான கருத்தும் உள்ளது. அதாவது உலகின் பல சமூகங்களில் ஆண்களை விடப் பெண்களே சேமிப்புப் பழக்கம் கூடியவர்களாகத் திகழ்கின்றனர். இந்த நடைமுறை உண்மையை மறைமுகமாக ஏற்றுக்கொண்டமை யினால்தான் இச்சேமிப்புத் திட்டத்தின் பரிசுப்பொருட்களாக பெரும்பாலும் பெண்கள் உபயோகிக்கும் வீட்டுப் பொருட்கள் இடம் பெறுகின்றன. இந்தநடைமுறை உண்மையை வெளிப்படையாக ஏற்று விளம்பரப்படுத்தி இருந்தால் ஓரளவிற் காவது பெண் களுக்கு நன்மை பயப் பதாக அமைந்திருக்கும்.
நெஸ்டம் யூனியன் விளம்பரத்தில் (26.05.97) தாய், தந்தை, மகன் பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. மகன் தந்தையிடம் தான் வளர்வதற்கான அறிவுரை கேட்பதாகவும், அதற்கு தந்தை "நெஸ்டம் யூனியர் ஜ சிபாரிசு செய்வதாகவும் காட்சியமைந்துள்ளது. அதே வேளை, தாயே அவ்வுணவை கரைத்து பிள்ளைக்கு கொடுப்பதாகவும் காட்சி அமைந்துள்ளது. இதிலிருந்து வெளிவரும் செய்தி என்னவெனில் பிள்ளைக்கு புத்திமதி கூறுவது தந்தை, ஆனால், பிள்ளையை பராமரிப்பது தாய் என்பதே ஆகும். அதாவது, தந்தை ஓர் புத்திசாலி, ஆனால் தாயோ வீட்டு வேலைக்காரி என்பதே ஆகும். இது பெண்களைத் தாழ்த்துவதாக அமைகிறது. ஒன்றில் தந்தையே புத்திமதி கூறி, மற்றும் பால்மாவைக் கரைத்து பிள்ளைக்குக் கொடுப்பது போல் விளம்பரத்தை அமைத்திருக்கலாம்,
57

Page 30
நிவேதினி
அல்லது தாயே புத்திமதி கூறி, மற்றும் பாலைக்கரைத்துப் பிள்ளைக்கு கொடுப்பது போல காட்டியிருக்கலாம்.
சிங்கர் உடைகழுவும் இயந்திர விளம்பரத்தில் (27.05.97) தோன்றும் பெண் ஒரு ஆசிரியையாக கடமை புரிந்தாலும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் உடைகளைத் தோய்ப்பது (கழுவுவது) போல காட்சி அமைந்திருந்தது. அதாவது, பெண்கள் வீட்டிற்கு வெளியே வேலை பார்த்தாலும் வீட்டு வேலையையும் கவனிக்க வேண்டுமென பொருள்படுகிறது. அதாவது, கையால் உடைகளை கழுவினாலும்சரி, உடைகழுவும் இயந்திரத்தினை பாவித்தாலும் சரி பெண்களே உடைகழுவும் வேலையை செய்யவேண்டும் என உறுதிப்படுத்தப்படுகிறது.
செலான் வங்கி விளம்பரத்தில் (22.05.97) ஒரு பெண்தான் தோன்றுகிறார். அவருக்கு நிதி நிர்வாகம் ஒன்றும் தெரியாது. அதாவது வங்கிக் கணக்கில் எத்தனையோ மேலதிக கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. வங்கிஊழியரோ அது சர்வசாதாரணம் என சடையப்பார்க்கின்றார். ஆனால், அவளுக்கோ இவை அனாவசிய மேலதிக செலவு. இதனால் செலான் வங்கியில் நடைமுறைக் கணக்கை ஆரம்பிக்கும்படியாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விளம்பரத்தில் ஒரு பெண் உபயோகப்படுத்தப்பட்டிருந்தாலும் நிதிநிர்வாகம் ஒன்றும் தெரியாதவளாக பிரதிபலிக்கப்பட்டிருப்பது பெண்களை சிறுமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதே வங்கி (இன்னொரு விளம்பரத்தில்) ஒரு ஆணைப் பயன்படுத்தியிருந்த போது ஒரு கடின உழைப்பாளியாக சித்திரித்திருந்தது. அதே வேளை, பெண் வாடிக்கையாளரை அறிவில்லாத, நிதிநிர்வாகம் புரியாதவராக பிரதிபலித்திருப்பது பால் பாரபட்சத்தினை வெளிக்காட்டுகிறது.
இருப்பினும், மேல்குறிப்பிடப்பட்ட விளம்பரங்களுக்குச் சற்று வித்தியாசமாக கீழ்வரும் விளம்பரங்கள் அமைந்துள்ளன. மலிபன் பால் மா விளம்பரத்தில் (04.05.97), வழமையாக உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்கு பெண்களை உபயோகித்தமுறை இங்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த விளம்பரத்தில் தோன்றிய மூன்று கதாபாத்திரங்களும் ஆண்களே ஆவர். மேலும், வழமையாக உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்கு பெண்களைப் பாவித்து அதனை சமைத்து பரிமாறுவது போல் விளம்பரம் அமைத்திருப்பர். ஆனால்,
58

நிவேதினி
இங்கு ஆண்களை பயன்படுத்தியதால் கடையில் ஆண்கள் மலிபன்பால் வாங்குவதாக விளம்பரம் அமைந்துள்ளதே ஒழிய, அதனை கரைத்து பரிமாறுவதைப் போல அமையவில்லை. இதிலிருந்து, (மறைமுகமாக) சமைத்தல் / பரிமாறல் ஆண்களின் வேலை இல்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இந்த ரீதியில் இந்த விளம்பரமும் தொழில்சார் பால் வேற்றுமை மாதிரியை மேலும் வலுவூட்டுவதாகவே உள்ளது.
சன்டெல் தெலைபேசி விளம்பரத்தில் (03.05.97) ஆண்/பெண் பாத்திரங்களுக்கு சம அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருந்தது வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறான விளம்பரங்கள் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவனவாக அமையும்.
(2.2) ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான
பாரம்பரிய கலாச்சார/ கடமை வேற்றுமை
விளம்பரங்களில் கூட நிஜ உலகில் காணப்படும் ஆண்/ பெண்களுக்கிடையேயான பாரம்பரிய கலாச்சார/கடமை வேற்றுமை பிரதிபலிக்கப்படுகிறது (சோமசுந்தரம், 1990, பக்கம், 16) பின்வரும் உதாரணங்கள் இதனை எடுத்தியம்புகின்றன.
Water Taps விளம்பரத்தில் (29.05.97) ஓர் கணவனும், துணைவியும் நித்திரை கொள்ளும் போது நீர்க்குழாயிலிருந்து (Tap) தண்ணிர் சிந்திக் கொண்டிருக்க துணைவி தூக்கத்தில் இருந்து எழுந்து நீர்க்குழாயை மூடி விடுகிறாள். இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவெனில் தண்ணிர் சிந்தும் சத்தம் கணவன், துணைவி இருவருக்கும் கேட்டாலும் பெண்தான் பாதி நித்திரையில் எழுந்து நீர்க்குழாயை மூடுகிறாள். இதிலிருந்து, கணவர் பெரியவர் நித்திரை குழம்பக்கூடாதவர் போலும், மனைவியே கஷ்டப்படவேண்டியவள் போலும் சித்தரிக்கப்பட்டமை பெண்ணடிமைத்துவத்தை உறுதிப்படு த்துவதாக உள்ளது. பெண் என்பவள், கஷ்டம், தொந்தரவு களுக்கு உள்ளாக்கப்படலாம் என்பது எடுத்துக் கூறப்படுகிறது. IDD Suppercard விளம்பரத்தில் (10.04.97) தாயாக பாத்திரம் ஏற்றவர் யதார்த்தமாக தென்படவில்லை. விளம்பரத்தில் அவர் சேலை உடுத்து காணப்பட்டார். ஆனால், நடை முறையில் வீட்டுக்குள் பெரும்பான்மையான பெண்கள் சேலை உடுப்பது இல்லை. உண்மை நிலை இப்படியிருந்தும் இப்பெண்ணை சேலையுடன் காண்பித்தது பெண்ணின் பாரம்பரிய கலாச்சார
59

Page 31
நிவேதினி
உடை சேலை தான், வீட்டிற்குள்ளும் அதனைத்தான் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துவது போல இருந்தது. இது பால்களுக்கிடையேயான பாரம்பரிய கலாச்சார விதிகளை நிலைநாட்டுவதாக உள்ளது.
Horicks விளம்பரத்தில் (06.06.97) ஒரு பெண் சமையல் அறைக்குள் இருப்பதாக காண்பிக்கப்பட்டாலும் சேலை உடுத்து பொலிவாகத் தோன்றுவது யதார்த்தமாக இல்லை. சமையல் அறைக்குள் வேலை புரியும் இயற்கைப் பெண்ணாக இல்லாமல் சேலையுடன் தோன்றியது பெண்ணின் பாரம்பரிய உடை சேலைதான் என்பதனை எடுத்துக்காட்டவே போல் உள்ளது.
மலிபன் பால் மா விளம்பரத்தில் (02.04.97), இப்பாலை அருந்தும் சிறுவர்களுள் சிறுமி மட்டும் பாலை அருந்திவிட்டு பேழையை (Glass) கழுவுவதாக காண்பித்துள்ளமை பால்களு க்கிடையேயான பாரம்பரிய கடமைகளை வரையறுப்பதாக அமைந்துள்ளது.
சுப்பிரிவிக்கி ஆயுள்வேத பற்பசை விளம்பரத்தில் (24.04.97) ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடுவதுபோல் காட்சி அமைந்திருந்தது. அதில் சிறுமி சேலை உடுத்தி காண்பிக்கப் பட்டது. யதார்த்தத்திற்கு புறம்பானது. அதைவிட, இது பெண்ணின் பாரம்பரிய கலாச்சார உடை சேலைதான் என்பதனை சிறுபராயத்திலேயே அறிவுறுத்துவதாகவும் அமைந்திருந்தது.
(2.3) ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான
உடை/ உடல் தோற்ற வேற்றுமை
பல விளம்பரங்களில் தோன்றும் பெண்கள் கவர்ச்சிச் சின்னங்களாக, பாலியல் கூறுகளாக தோற்றம் அளிக்கின்றனர். சில விளம்பரங்களைப் பார்க்கும் போது அவ்விளம்பரங்கள் பொருட்களுக்கா அல்லது அப்பொருட்களை விளம்பரப் படுத்தும் பெண்களுக்கா என நினைகத் தோன்றுகிறது. இவ்வாறான விளம்பரங்களை பார்வையிடும் ஆண்கள் விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களை விட அவற்றை விளம்பரப்படுத்தும் பெண்கள் பற்றியே அதிகம் விமர்சிப்பது இச்சந்தேகத்திற்கு சான்றுபகர்கிறது (திருச்சந்திரன், 1997, இஸ்மாயில், 1997). Multilacவிளம்பரத்தில் (10.06.97) தோன்றும்
60

நிவேதினி
பெண் கவர்ச்சியாக உடை அணிந்து கை, கால்களை அசைத்தவண்ணம் இப்பொருளை விளம்பரப்படுத்துகிறார். இந்தப் பொருளுக்கும், பெண்ணுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு தோன்றிய பெண்ணின் உடைக்கும், கவர்ச்சித் தோற்றத்திற்கும், கை கால்களை உயர்த்தி நடனமாடுவதற்கும் இவ்விளம்பரத்தில் தேவை இருப்பதாக தென்படவில்லை. இங்கு, பெண் இப்பொருளின் விற்பனையை ஊக்குவிக்கும் கவர்ச்சிப் பண்டமாய் பிரயோகிக்கப்பட்டிரு ப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
Havoline என்ஜின் எண்ணெய் விளம்பரத்தில் (23.05.97) பங்குபற்றிய ஆணின் உடை முறையாக, மரியாதையானதாக இருந்தபோதிலும், பெண்ணின் உடை அரைகுறையானதாகவும், கவர்ச்சியானதாகவும் காண்பிக்கப்பட்டிருந்தமை ஆட்சேபனைக் குரியது. இங்கு, பெண் ஒரு பகட்டுக்காயாக பயன்படுத்தப் பட்டுள்ளார். Diet Jelly விளம்பரத்தில் (27.05.97) ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் இடம்பெறுகிறார்கள். இங்கு தோன்றும் பெண்ணின் உடை கவர்ச்சியாகவுள்ளது. அத்துடன் இப்பெண் தனது உதட்டைக் குவித்து காட்டுவதெல்லாம் மிகத்துல்லியமாக, கவர்ச்சிக்காக காட்டப்பட்டுள்ளதை தெரிவிக்கி ன்றது. ஆனால் இங்கு தோன்றிய ஆண்கள் இவ்வாறு கவர்ச்சித் தோற்றத்தில் காண்பிக்கப்படவில்லை. இதிலிருந்து பெண் என்பவள் விலைப்பண்டம், கவர்ச்சிப்பொருள் என்பது போல் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இரத்னமகால் நகை விளம்பரத்தில் (08.04.97) தோன்றும் பெண் அணியும் ரவிக்கை கழுத்து ஆழமாக வெட்டப்பட்டுள்ளது. இங்கு நகை அணிந்திருக்கும் பெண்ணின் நகையை காட்டாமல் அவரது மார்பின் மேற்பகுதியை காட்டியிருப்பது ஆபாசமாக அமைந்துள்ளது. இங்கு, பெண் கவர்ச்சிக்கும், அலங்காரத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளார். இங்கு பெண்ணின் கவர்ச்சியினால் ஆபரணங்களை விற்க முனையப்பட்டிருப்பது புலனாகின்றது. இவ்விளம்பரத்தை பார்வையிடும்போது நகைகளுக்கா, அல்லது பெண்ணின் உடற் பாகங்களுக்கா விளம்பரம் என எண்ணத் தோன்றுகிறது.
சுப்பிரிவிக்கி ஆயுள்வேத பற்பசை விளம்பரத்தில் (24.04.97) தோன்றிய பெண் மேனியோடு ஒட்டிய ஆடை அணிந்து மிகவும் ஆபாசமாக காட்சி தந்துள்ளார். மற்றும், ஆணும், பெண்ணும் முட்டிக்கொள்வதாக அமைந்த காட்சியும்
61

Page 32
நிவேதினி
தேவையற்றது எனலாம். இப்பெண்ணை ஒரு பகட்டுக்காக, பாலியல் உணர்ச்சிகளைத் துரண்டும் வகையில் பிரதிபலித் திருந்தமை விரும்பத்தகாதது. ஆணிற்கு ஆபாசமற்ற உடைகளும் பெண்ணிற்கு கவர்ச்சிகரமான உடையும் உடுத்திருப்பது பெண்களைச் சிறுமைப்படுத்துவதாக, இழிவு படுத்துவதாக உள்ளது. நடனம் ஆடும் போதும், தேகாப்பியாசம் செய்யும் போதும் பெண் உடுத்திருந்த உடை ஆட்சேபனைக்குரியது. ஒரு பற்பசை விளம்பரத்திற்கும், இவ் ஆபாசத்திற்கும் என்ன தொடர்புP
ஆண்மை வரை விளம்பரங்கள்
இலக்சபான மின்கலம் (Battery) விளம்பரம் (16.06.97) ஆணின் வீரத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது. மணிக்கூட்டில் இம் மின்கலம் பாவித்தால் நேரத்திற்கு Alam அடிக்கும். ஆகவே புகைவண்டியை ஓடிவந்து பிடித்துவிடலாம். மற்றும் ஆண் சிறுவர்கள் தங்கள் விளையாட்டுக் கார்களை இம்மின்கலம் உபயோகித்து விளையாடுதல், மேலும் இம் மின்கலம் உபயோகித்து கிரிக்கட் நேர்முகவர்ணணையைக் கேட்டு ஆண்கள் ஆரவாரித்தல் போன்ற காட்சிகளைக் காட்டுவதன் மூலம் ஆண்களின் வீரதீரச் செயல்களை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது. ஆனால் சிறுமியர் விளையாட்டுக் கார் வைத்துக்கொண்டு விளையாடுவதாகவோ, கிரிக்கட் நேர்முக வர்ணணை கேட்டு இரசிப்பதாகவோ காட்சிகள் இல்லை. இதிலிருந்து, கார், கிரிக்கட் என்பவற்றை ஆண்களுடன் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது, விளையாட்டுக்களிலும், விளையாட்டுப் பொருட்களிலும் கூட பால் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது.
Horlicks விளம்பரத்தில் (07.05.97) ஒரு சிறுவன் Horicks குடித்து பலசாலியாக வந்து நன்றாக கிரிக்கட் விளையாடுவது போல காட்டியுள்ளார்கள். இதன் உள்ளடக்கம் என்னவெனில் விளையாட்டுக்களில் ஈடுபடுவது ஆண்களே என்பது ஆகும். இவ்வாறான விளம்பரங்கள் பெண்களை விளையாட்டுக்களில் ஈடுபட ஊக்குவிப்பதில்லை. பொதுவாக விளையாட்டுக்கள், குறிப்பாக கிரிக்கட் , ஆண்களை சார்ந்தது என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மலிபன் பால்மா விளம்பரத்தில் (02.04.97) காட்டப்பட்ட சிறுமி
62

நிவேதினி
ஒரு பொம்மையை கையிற் பிடித்து பராமரிப்பது போன்றும், சிறுவன் கார் ஒட்டிக்கொண்டிருப்பது போன்றும் காட்டப் பட்டுள்ளது. இதிலிருந்து, சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களில் கூட பால் பாரபட்சம் காட்டப்படுவது விளங்கு கிறது. பெண் என்றால் பிள்ளை பராமரிப்பவர் என்பதனை சிறுமியருக்கு பொம்மைகளைக் கொடுத்து சிறுபராயத்திலிருந்தே எடுத்துரைக்கின்றனர். அதே வேளை, சமூகத்தில் ஆண்களின் பங்கு வீட்டிற்கு வெளியேதான் என்பதனையும் எடுத்துக் காட்டுகின்றனர். இவ்வாறான, விளையாட்டுப் பொருட்களின் பால் வேற்றுமை நிஜ உலகில் நிலவும் பால் வேற்றுமையை உறுதிப்படுத்துகிறது. மற்றும், இங்கு மலிபன் பால்மாவின் மகிமையை முழங்கச் செய்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டலை குறைக்கச் செய்கிறது. பால் மாக்களின் தரத்தையும் பலனையும் தாறுமாறாக உயர்த்தி விளம்பரப்படுத்துவதால் தாய்ப்பாலின் மகிமையை மழுங்கடிக்கச்செய்கிறது. இது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.
3. சினிமாப்படப் பாடல் நிகழ்ச்சிகள்
(3.1) ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான பாரம்பரிய கலாச்சார/கடமை வேற்றுமை.
தமிழ் சினிமாப்படப் பாடல் காட்சிகளிற் கூட ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான பாரம்பரிய கலாச்சார/கடமை வேற்றுமை பிரதிபலிக்கப்படுகிறது. நாம் கண்ணுற்ற பாடல்களுள் இரண்டில் இவ்வேற்றுமை கண்காணிக்கப்பட்டது.
ரு பாடலில், கதாநாயகி தனது தாலிக்கொடியில் குங்குமம்
ட்டு கதாநாயகனின் பாதத்தில் விழுந்து நமஸ்கரிப்பது போன்ற காட்சி ("அழகான மஞ்சள் புறா.. ",01.06.97) பெண் என்பவள் எப்பொழுதும் ஆணின் கீழ்தான் இருக்க வேண்டும், பாரம்பரிய கலாச்சாரம் பேண வேண்டும் என்பதனை வலியுறுத்துவதாக அமைகிறது.
இன்னொரு பாட்டில், இரவு நேரத்தில் குழந்தை அழும் போது தாய்தான் நித்திரையில் இருந்து எழுந்து சென்று குழந்தையைத் தூக்கி பராக்காட்டுவதாகவும், பாலுட்டுவதாகவும் காட்சி அமைந்துள்ளது. ("காதோடுதான் நான் பேசுவேன் ", 04.05.97), இங்கு, தந்தை குழந்தையை பராமரிப்பது
63

Page 33
நிவேதினி
போல் காட்சி இல்லை. இதிலிருந்து, எவ்வேளையிலும் பெண்தான் குழந்தையின் கடமைகளை செய்ய வேண்டியவள் என்பதனை எடுத்துக்காட்டுகிறது.
(3.4) சொற்பிரயோகங்கள்/ வசனங்களில் உள்ள பால்
பாரபட்சம்/பெண்ணடிமைத்துவம்
சினிமாப்படப் பாடல்களில் பிரயோகிக்கப்படும் சொற்கள், வசனங்களில் பெண்களை இழிவுபடுத்தும், இம்சைப்படுத்தும், அடிமைப்படுத்தும் தன்மை சரளமாகக் காணப்படுகிறது. நாம் அவதானித்த பாடல்களுள் உதாரணத்திற்கு இரண்டினை கீழே தருகிறோம்.
முதலாவதாக, “கொக்கு சைவ கொக்கு ...” (04.50)79 பாடலில் வரும் " . . . . . வந்தாடும் வயசு பையா, பாட்டி சொல் கேட்டுக்கையா, தாம்பத்திய வாழ்க்கையிலே சட்டங்கள் இருக்குதையா, பெண்டாட்டியோடு ஒவ்வொரு நாளும் 11ove you நீ பண்ணிரெண்டு தரம் சொல்லு, நித்தம் நீ ஆறு முறை முத்தங்கள் போட்டுவிடு நாளுக்கு மூன்று முறை கட்டிலில் சேர்ந்துவிடு, நான் சொன்ன கணக்கு நாள் தோறும் நடந்தா, பெண்டாட்டி எப்போதும் உன் காலைக்கட்டி கிடப்பா..." என்ற வாக்கியங்களில் பெண்களை பாலியல் கூறுகளாகவும், பெண்கள் பாலியல் இச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதனை எடுத்துக்கூறுவதாகவும் அமைந்துள்ளது. பாலியல் மூலம் பெண்களை அடிமைப்படுத்தலாம் என்ற கருத்தினை வெளிப்படுத்தியது அவர்களை பலவீனமானவர்கள், சில்லறைத் தனமானவர்கள் என்பது போல் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. இது பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் உள்ளது.
இரண்டாவதாக, "சிக்கு புக்கு ரயிலே." (08.06.97) என்ற பாடலில் "உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ளை, சீதனம் அதிகம் கேட்கலாம் ஆண்பிள்ளை, அதை வச்ச பின்பு தான் பூமாலை . இப்பவே கரைச்சல் இல்லை. Love பண்ணினா, சீக்கிரம் செலவில்லாம மணப் பெண்ணாம், அப்புறம் அவஸ்தைகள் கிடையாது, அப்பனின் சேமிப்பும் கரையாது .." என்ற வரிகளில் பெற்றோர் பேசி நடக்கும் திருமணங்களில் சீதனம் வாங்கப்படும், ஆனால் காதல் திருமணங்களில் சீதனம் வாங்கப்படமாட்டாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
64

நிவேதினி
இது பெரும்பாலும் நடைமுறைக்குப் புறம்பானது ஆகும். ஏனெனில், காதல் திருமணங்களிலும் சீதனம் வாங்கப்படுவது பரவலாக இடம்பெறுகிறது. இதற்கு மேலாகச் சீதனத்தை பணயமாக வைத்து ஒரு பெண்ணின் அன்பையும், காதலையும் பெற முயல்வது மிகவும் கீழ்த்தரமான செய்கையாகும், மேலும் சீதனத்தைக் காட்டி பயமுறுத்தி காதலிக்க முற்படுவது பலாத்காரம் புரிவதற்கு சமனாகும். இது பெண்களின் சுய கெளரவத்தையும் தனித் துவத்தையும் குறைத் து மதிப்பிடுவதற்கு ஒப்பானது ஆகும்.
(3.5) பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்/
வன்முறை
சினிமாப்படப் பாடல் காட்சிகளில் கூடப் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்/வன்முறை புரியப்படுகிறது. நாம் கண்காணித்த இரண்டு பாடல்காட்சிகள் பின்வருவன.
"வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டி வேரு வாசம் ." (15.06.97) பாடலில் ஒரு வேலைக்காரப் பெண்ணை நான்கு ஆண்கள் துரக்கிக்கொண்டு சென்று பலாத்காரம் பண்ணுவதாக காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பலவீனமான வர்கள்,வெறும் பாலியல் பண்டங்கள் என்பதனை வலியுறுத்து வதாக உள்ளது. பெண்கள் என்றால் துன்புறுத்தப்பட வேண்டியவர்கள் என்பது போல் அமைந்திருந்தது. இதே பாடலில் , பலாத் காரத்திற்கு உட்படும் பெண் ணின் வளையல்கள் உடைக்கப்படுவது போல் காண்பிக்கப்படுவது அவளது பெண்மை அழிக்கப்படுவதற்கு ஒப்பாக மிகக் கொடூரமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சித்திரிப்பு வன் முறைக்கு இலக் காகும் பெண் களை மேலும் இழிவுபடுத்துவதாகவும், மாசுகற்பிப்பதாகவும் அமைகிறது.
4. செய்தி ஒளிபரப்புக்கள்
(4.1) ஆண் / பெண்களுக்கிடையேயான தொழில்/
கடமை வேற்றுமை
செய்தி ஒளிபரப்புக்களில், பெரும்பாலும் ஆண்கள் படித்த ஆற்றலுள்ள , உயர் பதவி வகிப்பவர்களாக, மற்றும் விளையாட்டு வீரர்களாக பிரதிபலிக்கப்படுகின்றனர். அதே
65

Page 34
நிவேதினி
வேளை, பெண்கள் பெரும்பாலும் வீட்டுப்பெண்களாக, சிற்றுாழியர்களாகதான் பிரதிபலிக்கப்படுகின்றனர்.
எமது செயல்முறை அவதான காலகட்டத்தில், செய்திகளில் கண்காணிக்கப்பட்ட ஆண்/பெண்களுக்கிடையேயான தொழில்/ கடமை வேற்றுமைகள் பின்வருவன.
சுகாதார அமைச்சர் பெளசி ஒரு வைத்தியசாலையின் புதிய கட்டடம் ஒன்றினை பொரளையில் திறந்து வைப்பதனை செய்தியில் காண்பித்திருந்தார்கள் (01.06.97). இதே வைபவத்தில் கலந்து கொண்ட பிரதி சுகாதார அமைச்சராகிய பெண்ணை காண்பிக்காதது பால் பாரபட்சமாகக் தோன்றுகிறது. இவ்வாறான செய்திப் படப்பிடிப்புக்கள் பெண்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பதாக அமையவில்லை.
வீடமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொது மக்களுக்கு அரசு வீடுகளை கையளிப்பதனை படம்பிடித்துக் காட்டினார்கள் (21.05.97). இதன்போது, இவ்வீடுகளில் பெண்கள் அரிசி அரித்தல், கழுவுதல் போன்ற காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. இதன் மூலம், ஆண்களை உயர்த்தியும், பெண்களை வீட்டு வேலையுடன் ஒப்பிட்டு அவர்களை சிறுமைப்படுத்தியும் காண்பித்திருந்தமை ஆட்சேபனைக்குரியது.
இலங்கை மின்சாரசபை மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்க குறைந்த அலகுடைய மின் குமிழ்களை உபயோகிக்கும் படி பொதுமக்களை வேண்டுவதாக செய்தி அமைந்திருந்தது (30.04.97). இவ் அறிவிப்பின் போது ஆண்கள் மின்குமிழ் வெளிச் சத்தில் புத்தகம்/ பத்திரிகை படிப்பதாகவும் , அலுவலகங்களில் மின்விசிறி, குளிரூட்டப்பட்ட அறைகளின் கீழ் வேலை செய்வதாகவும், அதே வேளை பெண்கள் Rice cooker இல் சமைத்தல், மிக்சியில் அரைத்தல், குளிர்சாதனப் பெட்டியை த்திறந்து பொருட்களை எடுத்தல் போன்ற காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. இவைகள் ஆண்களை அறிவுடையவர் களாகவும், அலுவலக உத்தியோகம் புரிபவர்க ளாகவும் சித்திரித்திருந்தமை ஆண்/பெண் தொழில்சார் ஒரே மாதிரியை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
தாய் மார்களின் தினம் (Mother's Day) குறிக்குமுகமாக பலகாட்சிகள் செய்தியில் காண்பிக்கப்பட்டன. (1.05.97). இதில்
66

நிவேதினி
"அன்னையர் வழமையான வாழ்க்கையை வாழ பல சவால்களை சந்தித்து வருகிறார்கள்" என்ற கூற்றின் பின் தாய் ஒருவர் பானையில் தண்ணிர் பிடிப்பது, குழந்தைகளை பாலூட்டி பராமரிப்பது, கேத்தலில் தண்ணிர் பிடித்து அடுப்பு பற்ற வைப்பது, மற்றும் உணவு தயாரிப்பது போன்ற காட்சிகளுடன், பிள்ளைகளின் நன்மைக்காக தமது சீவிய காலம் முழுவதையும் அர்ப்பணித்த அன்னையர் ...” என்று கூறி சில தாய்மார்கள் கல் உடைப்பது போன்ற காட்சியும் காண்பிக்கப்பட்டது.
தாய்மார் தமது பிள்ளைகளுக்காக எவ்வளவோ கஸ்டப்படு கிறார்கள் என்பது மறுக்க முடியாது தான். ஆனால், அவர்கள் சமைப்பது, தண்ணிர் பிடிப்பது, பிள்ளையைப் பராமரிப்பது போன்ற காட்சிகளை மட்டும் காண்பித்தது தவறானதாகும். ஏனெனில், இன்று எத்தனையோ அன்னையர் அலுவல கங்களில் வேலைபார்த்துக் கொண்டும், பொறுப்பான பதவிகளை வகித்துக்கொண்டும் தமது பிள்ளைகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருகின்றனர். அப்படி இருக்கையில், தனியாக வீட்டுப்பணிகளில் ஈடுபடுவதனை காண்பித்தது எதேச்சையானது (Arbitrary). திரும்பத் திரும்ப பெண்ணை வீட்டு வேலைகளோடு சம்பந்தப்படுத்தி காட்டாமல், வெளியுலகத்துடன் தொடர்பு உடையவள் என்பதனையும் காட்டியிருக்க வேண்டும் . இவ்வாறு, பெண் களை வெளியுலகுடன் சம்பந்தப்படுத்தல் அவர்கள் முன்னேற வழிகோலும்.
செய்திகளில் மேற்படி குறைபாடுகள் தென்படினும் சில வேளைகளில் பெண்கள் சாதகமாகவும் பிரதிபலிக்கப் படுகின்றனர் என்பதற்கு பின்வரும் உதாரணங்கள் சான்று பகர்கின்றன.
இந்தியப் பிரதமரின் மந்திரிசபையில் புதிதாக நான்கு பெண் அமைச்சர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டது காண்பிக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும் (04.06.97). இச்செய்தி ஒளிபரப்பு பெண்களும் அரசாட்சியில் பங்குபற்ற இயலும் என்பதனை எடுத்துக்காட்டுவதாகவும், அவர்களை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது.
போக்குவரத்து, சுற்றாடல், மகளிர் விவகார அமைச்சர் சிறிமனி
67

Page 35
நிவேதினி
அத்துலத்முதலி மரநடுகை வைபவம் ஒன்றில் கலந்து கொண்டது (05.06.97), கொழும்பு மாநகரை சுத்தமாக்கும் தினத்தில் பங்குபற்றியது (07.06.97), புதிய ரயில் என்ஜின்களை அங்குரார்ப்பணம் செய்து வைப்பது (26.05.97) போன்றவை படம்பிடித்து காண்பிக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும். வ்வாறானவை வளரும் பெண் சமூகத்திற்கு தென்பு ஊட்டுவதாக அமைந்திருந்தது.
ஹேமா ரத்னாயக்க என்ற பெண் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது, மற்றும் நிரூபமா ராஜபக்ச என்ற பெண் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டது என்பன காண்பிக்கப்பட்டமை (17.06.97) பெண்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிப்பதாக இருந்தது.
ஒரு பெண்ணாகிய கலாநிதி விஜயவர்தன தேவையற்ற கருச்சிதைவு, எயிட்ஸ் போன்ற மருத்துவ விடயங்களில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதனை கெளரவிக்கும் முகமாக உலக சுகாதார ஸ்தாபனம் விருதுகள் வழங்குவதனை செய்தியில் காண்பித்தமை பாராட்டுக்குரியது(16.05.97). இது பெண்கள் பல்வேறு துறைகளில் வளர்ந்து வருவதனை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. மற்றும், வடதுருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் பிரித்தானிய வீராங்கனைகள் பற்றி செய்தியில் அறிவித்தமை நன்மையானதே (29.05.97). இது பெண்களை எத்துறையிலும் முன்னேற வைக்கும் ஒரு முயற்சியாக அமைந்திருந்தது எனலாம். வ்வகையான செய்திகள் பெண்களின் முன்னேற்றத்திற்கு இன்றியமை யாததாகும்.
4.2) ஆண் /பெண்களுக்கிடையேயான பாரம்பரிய
கலாச்சார/கடமை வேற்றுமை
செய்திகளிலும் ஆண்/பெண்களுக்கிடையேயான பாரம்பரிய கலாச்சார/கடமை வேற்றுமை பிரதி பலிக்கப்படுவதை அவ்வப்போது அவதானிக்கலாம். நாம் இவ்வாறான காட்சி ஒன்றினை கண்ணுற்றோம்.
புதிதாகப் பதவியேற்ற பிரித்தானிய பிரதம மந்திரி தனது பாரியாரை ஒரு கையால் அணைத்த வண்ணம் மேடைக்கு வருவது, மற்றும் அரவணைத்தபடியே உள்ளே செல்வது
68

நிவேதினி
போன்றன காண்பிக்கப்பட்டது (02.05.97). இதன் அர்த்தம் தனது பாதுகாப்பின் கீழ்தான் தனது மனைவி என்பது போன்றதாகும். இங்கு குறிப்பிடப்பட வேண்டியது என்ன வென்றால் அவரது மனைவி ஒரு சாதாரண குடும்பப் பெண் அல்ல. அவரும் ஒரு பிரபல சட்டத்தரணி (Barrister)ஆவார். அப்படியாக இருந்தும் கணவனின் அரவணைப்பிலேயே காண்பிக்கப்படுகிறார். இவ்வாறான ஒரு பெண் பிரதம மந்திரியாக இருக்கும் பட்சத்தில் என்றாவது தனது கணவரை அரவணைத்து செல்வது காண்பிக்கப்படுவதில்லை.
இதிலிருந்து, ஒரு பெண் எவ்வளவு படித்து, உயர்பதவி வகித்தாலும் அவர் ஆணின் பாதுகாப்பில் தான் இருக்க வேண்டும் என்ற கருத்து புலப்படுகிறது. இவ்வாறான காட்சிகள், பெண்களை, குறிப்பாக, படித்த, பதவி வகிக்கும் பெண்களை சிறுமைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
(4.3) ஆண்/பெண்களுக்கிடையேயான உடை/உடல்
தோற்ற வேற்றுமை
செய்திகளில் கூட சில சந்தர்ப் பங்களில் பெண்கள் கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் தோன்றும் காட்சிகள் இடம் பெறுகின்றன. எமது செயல்முறை காலத்தில் இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் அடையாளம் காணப்பட்டது.
ஹோமாகம பிரதேசத்தில் குழாய் நீர் விநியோகம் மட்டுப் படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வாசிக்கப்பட்ட போது வீதியில் பெண்கள் குழாய்நீரில் நீராடும் காட்சியும் காண்பிக்கப் பட்டது. (02.06.97) ஒவ்வாததும், ஆபாசமானதும் ஆகும். இங்கு ஆண்கள் நீராடுவது காட்டப்படவில்லை. அதிலிருந்து, பெண்களை பாலியல் கூறுகளாக செய்திகளிலும் காண்பிக்கப் படுவதனை சகிக்க முடியாமல் உள்ளது. இச் செய்தி அறிவிப்பிற்கும் பெண்கள் நீராடும் காட்சிக்கும் ஆபாசம் தவிர்ந்த வேறு எந்த நியாயமும் கிடையாது.
(4.5) பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்/
வன்முறை
செய்திகளில் சில வேளைகளில் பெண்களுக்கு எதிரான
69

Page 36
நிவேதினி
பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை பற்றி குறிப்பிடப்படுகிறது. சில வேளைகளில் இவை பெண்களுக்கு சாதகமாகவும், சிலவேளைகளில் பாதகமாகவும் அமைகிறது. நாம் அவதானித்த காலகட்டத்தில் ஒரு தினம் இவ்விடயம் ஒளிபரப்பப்பட்டது. அது பெண்களுக்கு சாதகமாகவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில், ஒரு தாய் (கோணேஸ்வரி) பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகம் அவ் ஊர் பொது மக்கள் மத்தியில் நிலவியதால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரனாயக்க குமாரதுங்க ஒரு சுயாதீன துப்பறியும் குழுவை நியமித்து இச்சந்தேகம் பற்றி மீள்விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டதாக அறிவிக்கப்பட்டமையானது (06.06.97), பாலியல் துஷ்பிர யோகங்களுக்கும், வன்முறைக்கும் உட்படும் அனைத்துப் பெண்களுக்கும் சற்று நம்பிக்கையூட்டுவதாகவும்,
தென்பு ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது.
(4.6) பலதரப்பட்ட பெண்ணிய விடயங்கள்
செய்தி ஒளிபரப்புக்களில் அடையாளம் காணப்பட்ட பெண்ணிய விடயம் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.
சிங்களப் புத்தாண்டையொட்டி கடுவல எனும் இடத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் பற்றி குறிப்பிடப்பட்டது (24.04.97). இங்கு ஆண்களுக்கான போட்டி களுக்குள் வள்ளம் செலுத்துதல், யானை ஒட்டுதல், நீச்சல், துவிச்சக்கர வண்டி ஒட்டுதல் போன்றவை இடம் பெற்றன. அதே வேளை, பெண்களுக்கான போட்டிகளுள் தேங்காய் துருவும் போட்டி தான் காண்பிக்கப்பட்டது.
இதிலிருந்து இவ்வகையான பண்டிகை போட்டிகளுள் கூட LHTG) 62630 LDH5rfj595/6) lub (Gender Stereotyping) 9560LL'IL 949-5341 படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதிலிருந்து, ஆண்கள் வீர, தீரப் போட்டிகளில் ஈடுபடுவதாகவும், பெண்கள் சமையல் சம்பந்தமான போட்டிகளில் ஈடுபடுவதாகவும் பிரித்துக்காட்டப்படுகிறது. பெண்கள் சமையல் வேலைக்கு த்தான் உகந்தவர்கள், தகுந்தவர்கள் என்று எடுத்துக்காட்டப் படுவது பெண் களின் பல்வேறு துறைகளினதுமான
70

நிவேதினி
முன்னேற்றங்களை மறைப்பதாக உள்ளது. இது மிகவும் பாரபட்சம் ஆனதும் நியாயம் அற்றதும் ஆகும்.
6. பல தரப்பட்ட நிகழ்ச்சிகள்
(6) ஆண் பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான
தொழில்/கடமை வேற்றுமை
இவ்வகையான நிகழ்ச்சிகளிலும் ஆண்/பெண்களுக்கிடையேயான தொழில்/கடமை வேற்றுமை பிரதிபலிக்கப்படுவது துரதிஷ்ட வசமே ஆகும். இருப்பினும், இவற்றுள் சில பெண்களுக்கு சாதகமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எமது செயல் முறை காலகட்டத்தில் நான்கு நிகழ்ச்சிகளில் இவ்வாறான வேற்றுமை அவதானிக்கப்பட்டது.
'சங்கமம்" நிகழ்ச்சியில் (08.05.97), 'உண்டா சர்வதேச விருது' பெற்றவர்களின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது. இந்த விருது பெற்றவர்களுள் மூவர் பெண்களாவர். இவர்களின் பேட்டியும் இடம் பெற்றது. இவ்வாறான ஒளிபரப்புக்கள் பெண்களின் தன்னம்பிக்கைக்கும் , முன்னேற்றத்திற்கும் ஏதுவாக அமையக்கூடியது.
"சிகரம்’ நிகழ்ச்சியில் (16.05.97) விசாலி கண்ணதாசன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றவர்களின் கலைத்துறைப் படைப்பு க்களின் திறமைகள் பற்றி பேட்டி காணப்பட்டது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கம் அளிக்கக் கூடியதாக இருந்தது. அத்துடன், இப்பேட்டி பெண்களின் இசைத்து றையையும் வளர்க்க ஊன்று கோலாக அமையலாம்.
மற்றும், இதே நிகழ்ச்சியில், சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் இலங்கையின் போர்ப் பிரதேசங்களில் பொதுமக்களுக்கு ஆற்றும் வேலைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இங்கு, பொதுமக்களை அகதி முகாம்களில் சந்தித்து பேட்டி காண்பது ஒரு பெண்ணாகவே இடம்பெற்றுள்ளார். இவ்வாறான ஒளிபரப்புக்கள் பெண்கள் தற்போது பல்துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதற்கு சான்று பகர்கின்றது. இது ஏனைய பெண்களுக்கு உந்துகோலாக அமையும்.
71

Page 37
நிவேதினி
முடிவுரையும் சிபாரிசுகளும்
சினிமாப் படங்களை எடுத்துக்கொண்டால் ஆண்/பெண்
கதாபாத்திரங்களுக்கிடையேயான தொழில்/கடமை வேற்றுமை,
ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்கிடையேயான பாரம்பரிய
கலாச்சார/கடமை வேற்றுமை, ஆண்/பெண் கதாபாத்திரங்களுக் கிடையேயான உடை/உடல் தோற்ற வேற்றுமை, சொற்பிர
யோகங்கள்/வசனங்களில் உள்ள பால் பாரபட்சம்/பெண்ணடி
மைத்துவம், பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்/ வன்முறை போன்றவை அடையாளம் காணப்பட்டன.
நாடகங்களை எடுத்துக்கொண்டால், தொழில்/கடமை வேற்றுமை, பாரம்பரிய கலாச்சார/ கடமை வேற்றுமை, உடை/ உடல் தோற்ற வேற்றுமை (ஒன்றில்), சொற்பிரயோகங்கள்/ வசனங்களில் உள்ள பெண்ணடிமைத்துவம் ,பாலியல் துஷ்பிரயோகம்/வன்முறை போன்றன அவதானிக்கப்பட்டன.
விளம்பரங்களை எடுத்துக்கொண்டால், தொழில்/கடமை வேற்றுமை, பாரம்பரிய கலாச்சார/கடமை வேற்றுமை, உடை/ உடல் தோற்ற வேற்றுமை என்பன இனங்காணப்பட்டன.
சினிமாப்படப் பாடல் நிகழ்ச்சிகளில், பாரம்பரிய கலாச்சார/ கடமை வேற்றுமை, உடை/உடல் தோற்ற வேற்றுமை, பாலியல் துஷ்பிரயோகம்/வன்முறை போன்றவற்றின் வெளிப்பாடுகளை அவதானிக்க முடிந்தது.
செய்தி ஒளிபரப்புகளில், தொழில்/கடமை வேற்றுமை, பாரம்பரிய கலாச்சார/கடமை வேற்றுமை, உடை, உடல் தோற்ற வேற்றுமை, சொற்பிரயோகங்கள்/வசனங்களில் உள்ள பெண்ணடிமைத்துவம் என்பன அவதானிக்கப்பட்டன.
எமது செயல்முறை கற்கையின் மேற்படி பெறுபேறுகளின்படி இத்தகைய பால் பாரபட்சங்கள்/ வேற்றுமைகளை நிவர்த்தி செய்யக்கூடிய கொள்கை சிபாரிசுகள் பின்வருவன.
தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உத்தேசிக்கப்படும் அனைத்து
நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும், செய்தி ஒளிபரப்புக்களும் தயாரிப்பிற்கு முன்னதாகவே ஒரு பால் பால் நிலைக்
72

நிவேதினி
கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் (Gender Audit) இதன் மூலம் பெண்களை பாதகமாக பாதிக்கக்கூடிய காட்சிகள், கட்டங்கள், தோற்றங்கள், சொற்கள்/வசனங்கள், படப்பிடிப்பு க்கள் ஆகியனவற்றை களைந்து எடுத்து, தாழ்த்தப் பட்ட பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், விடுதலைக்கும் அடிகோலக்கூடிய விடயங்கள், காட்சிகள், கருத்துக்கள் ஆகியனவற்றை முன்வைக்க ஆவண செய்யவேண்டும். இவ்வாறான ஒரு பால்நிலை நோக்கிற்கு ஒரு தணிக்கைக் குழு ஒன்று அமைக்காமல் பெண் களை சாதகமான பிரதிபிம்பங்களாக (Positive image) பிரதிநிதித்துவப்படுத்த முயல வேண்டும்.
இவ்வாறான 'பால் பரிசோதனை", கலைப்படைப்புக்களின் யதார்த்தத் தன்மையை மழுங் கடிக் கச் செய்வதாக அமையக்கூடாது. கலைகள் பொதுவாக நிஜ வாழ்வில் இடம் பெறுவனவற்றையே பிரதிபலிக்கின்றன. கலைஞர்களிடம் இருந்து இந்த யதார்த்தத் தன்மையை, சுதந்திரத்தை பறித்தல் ஆகாது. நிஜ உலகில் நிலவும் யதார்த்தத்தை எடுத்துக்கூறும் அதே வேளை அவ் யதார்த்தம்" களில் உள்ள நியாயமற்ற தன்மைகளையும், பாரபட்சங்களையும், ஒடுக்குமுறைகளையும் எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறான பக்க சார்பற்ற, சமத்துவ கலைப்படைப்புகளே சமூகத்திற்கு நன்மை பயக்கும்.
நீண்ட நோக்கில், திரைப்படத்துறையினருக்கு, நாடகத்துறை யினருக்கு, விளம்பரத்துறையினருக்கு மற்றும் செய்தித் துறையினருக்கு பெண்ணியம், பெண்நிலைவாதம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பட்டறைகள், கருத்தரங் குகள், மற்றும் குறுகிய கால பயிற்சி நெறிகள் நடாத்தப்பட வேண்டும். அதில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள், கவிஞர்கள், நடிகர்கள் (நடிகன்/ நடிகை), விளம்பரதாரர்கள், படப்பிடிப்பாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், மற்றும் இத்திரைப்படங்கள் நாடகங்கள் ,விளம்பரங்கள் ஆகியனவற்றை தமது ஆதரவில் காண்பிப்போர் (Sponsors) அனைவரும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்.
ஆயுதப்படையினருக்கு போரில் கடைப்பிடிக்கப்படவேண்டிய மனித உரிமைகள் பற்றி எவ்வாறு எடுத்துக்கூறப்படுகிறதோ (கருத்தரங்குககள், பயிற்சி வகுப்புகள் மூலம்), அவ்வாறே ஊடகத் துறையினருக்கும் பால் நிலை வாதம் பற்றி
73

Page 38
நிவேதினி
எடுத்துரைக்கப்பட வேண்டும். ஏனெனில் பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகளே.
மேலும், பெண்கள் வெகுசன தொடர்பு சாதன துறைகளில் பயிற்சி பெற்று, பதவியேற்று தொழில்புரிய ஊக்குவிப்புத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.
மேல்வரும் கொள்கை சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதன்
மூலம் பெண்களின் விழிப்புணர்விற்கும், முன்னேற்றத்திற்கும், விடுதலைக்கும் வழிகோலலாம் என நம்புகின்றோம்.
74

l
நிவேதினி
உசாத்துணை நூல்கள்
இராஜதுரை, அன்னலட்சுமி, (1996), “தொடர்பு ஊடகங்களும் பெண்களும்", வீரகேசரி, (10.03.1996)
சுப்பிரமணியன், சந்திரிகா, (1995), “பெண்களுக்கெதிரான வன்முறைகள்”, நிவேதினி, மலர் 2. இதழ் 2 , மார்கழி
1995.
மீரா, இ, (1994), “வெகுஜன தொடர்பு துறையில் காட்சிப்பொருளாக சித்திரிக்கப்படும் பெண்கள்" வீரகேசரி, 26.11.1994.
சோமசுந்தரம், சந்திரிகா, (1990), மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும், பெண்கள் கல்வி நிலைய
வெளியீடு, கொழும்பு.
றுாத்சந்திரிகா, ஆத்மராஜா , (1997), “தொடர்பு சாதனங்களில்
பெண்ணியம்” வீரகேசரி, 09.03.1997
75

Page 39
ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும்
ஒரு போரும்
வி . சி . பிள்ளை நாறாமல் நாறி நாற்றமெம்பும் காண் பாதம் காண் பிஞ்சு மலர்களின் கரங்கள் காண்
தாயின் கருவறையிலிருந்து போர்ச் சூழலுக்குள் குழந்தை பிரசவிக்கப்படுகிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ தலைவர்களால் கட்டமைக்கப்பட்ட இச்சூழலில் குழந்தைகளை பறிகொடுத்துக் கொண்டேதானிருக்கப் போகிறது இந்தப் பிரபஞ்சம்.
சிறுவர்கள் போர்ச் சூழலுக்குள் தள்ளப்படுவதற்கான பல வெளிப்புறச்சூழல்களை கவனத்தில் கொள்ளாது போரினால் சிறுவர்கள் விழுங்கப்பட்டு உமிழப்படுவதை விளங்கிக் கொள்வது கடினமாகும். சிறுவர்கள் எவ்வாறு விபச்சாரத்திற்கு தள்ளப்படுகிறார்களோ அவ்வாறே போர்ச் சூழலுக்குள்ளும் தள்ளப்படுகிறார்கள். போர் என்பது எந்தவிதமான மனித நேயங்களையோ, நிரந்தரக் கோட்பாடுகளையோ கொண்ட வையாக இருப்பதில்லை.
போர்ச்சூழலில் இருவகைப்பட்ட சக்திகள் எப்போதும் வரிந்து கட்டிக்கொண்ட விதிமுறைகளை தலைவிதியாகக் கொண்டு போராடிக் கொண்டிருக்கின்றன. போர்ச்சூழலிலே இந்த இருவகைப்பட்ட சக்திகளால் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுவர்களும் விசேடமாக சிறுமியருமாவர். ஒரு புறம் போரினால் சிறுவர்களது வாழ்க்கை வீட்டுக்குள்ளேயே முடங்கப்பட்டுவிடுகிறது. பெரும்பாலும் குடும்பத் தலை மைகள் அழிக்கப்பட்டு விடுவதினால் குடும்பச் சுமையினை பொறுப்பேற்க வேண்டிய இடர்பட்ட நிலைக்கு சிறுவர்களும் சிறுமியரும் தள்ளப்படுகின்றனர்.
பாடசாலைகளில் கல்வியைத் தொடர முடியாத நிலமையும், கல்வியின் பயன்பாடு பற்றி எந்த வகை நோக்கமுமின்றி

நிவேதினி
கல் விக்கு முற்றுப் புள்ளி வைக் கின்றனர். அல்லது வைக்கப்படுகின்றது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார நிலமை வறட்சியுற்றிருப்பதால் குறுக்கு வழியிலான வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் இச் சிறுவர்கள் போதைப்பொருள் கடத்துவதற்கும் விபச்சார த்துக்குமாக சர்வதேச எல்லைகளில் விற்கப்படுகிறார்கள் மலிவாக.
இந்த வியாபாரங்களுக்குள் உறிஞ்சப்பட முடியாத சிறுவர்கள் அகதி முகாம்களில் பிச்சைப் பாத்திரங்கள் ஏந்தியபடி நாய்களுடனும், பூனைகளுடனும் சண்டைசெய்து முகமிழந்து காலம் தள்ளுகிறார்கள். இந்தச் சிறுவர்கள் தான் போர் சூழலில் காணப்படும் இருவகைச் சக்திகளாலும் அள்ளப்படுகிறார்கள். சிறார்கள் பிச்சைப் பாத்திரத்தை ஏந்த சோற்றுப் பருக்கைகளாக துப்பாக்கி ரவைகளும், உலகின் அதி நவீன ஆயுதங்களும் திணிக்கப்பட்டு விடுகிறது.
இவ் இருவகைச் சக்திகளுக்கும் சிறுவர்களைப் பயன் படுத்துவதில் பலவிதமான நன்மைகள் பல்கிப் பெருகிக் காணப்படுகிறது.
* தலைமைகளின் உத்தரவுகளை எந்தவிதக் கேள்வியுமில்
லாமல், நிறைவேற்றி முடிக்கிறார்கள். எனவே மனிதக் கேடயங்களாய், மனிதக் குண்டுகளாய் கடினமான தடைகளைத் தகர்க்கும் பண்டங்களாய் மாற்றப்பட்டு விடுகிறார்கள்.
* அரசியல் ரீதியாக தலைமையைக் கேள்விக்குள்ளாக்காமல் இருப்பதால் தலைமைகளுக்கும் தங்கள் தலைமைகளை தக்கவைத்துக் கொள்ள இலகுவானதாக அமைந்து விடுகின்றது.
* இலகுவாக மூளைச்சலவை செய்யப்பட்டு பயமறியாத இளம் கன்றுகளைப் போல் போருக்குப் பாவிப்பது இலகுவான தாகின்றது. துப்பாக்கியைத் துரக்குதலும், வெடிகுண்டு வைத்தலும் ரம்போ பாணியில் வெளிப்படுத்தப்படுவதனால் கதாநாயகர்களாக வெளிப்படுவது இலகுவாகின்றது.
* சிறுவர்கள் ஆதலால் உளவுத் தொழிலுக்கும் பயன்
77

Page 40
நிவேதினி
படுத்துவது இலகுவானதாக அமைந்துவிடுகிறது.
எனவே போர்ச் சக்திகள் மிகவும் அவதானமாகவும் உச்ச சக்தியைப் பயன்படுத்தியும் போருக்காக சுரண்டுகிறாார்கள். இப்படி உள்வாங்கப்படுவது கடினமானதாக அமைகிறபோது பலவந்தமாக இழுத்துச் செல்லப்படுகிறார்கள். இப்படி உள்வாங்கப்பட்டோர் தப்பிச் செல்லும் போது தண்டனை களாலும்,மரண தண்டனைகளாலும் பெரியோர்களிலும் பார்க்க சிறுவர்களை தக்கவைத்துக் கொள்வது இலகுவானது. ஆபிரிக்க நாடுகளில் சிறுவர்கள் போருக்காக பாவிக்கப்படுவதாக விசேடமாக உகண்டா மக்கள் படையில், 3000-5000 வரை சிறுவர்கள் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகின்றது. அண்மையில் வெற்றிபெற்ற கொங்கோ நாட்டினது கபில்லாவின் படையில் மீசை முளைக்காத சிறுவர்கள் இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்தச் சிறுவர்கள் தங்களது கொடூர நடவடிக்கைகளினால் நித்திரையையும் இழக்கும் போது, தாக்கப்பட்டு மற்றையோரின் கருத்தியலுக்கு தள்ளப்படுவதாக அரசியல் அவதானிகள் நம்புகின்றனர். -
இதைத் தடுப்பதற்கான ஒரேவழி போரற்ற சூழலை ஏற்படு த்துவதுதான், ஆயினும் போர்கள் தொடரப்படுவதால் சிறுவர்கள் தங்களது சிந்தனைக்கும் அப்பால் போர்ச்சூழலால் போருக்குப் பலவந்தமாக தள்ளப்படுகிறார்கள். வீட்டுக்குத் திரும்பும் போது பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடியாத வர்களாக காணப்படுகிறார்கள்.
எனவே இதைத் தடுப்பதற்கான வழியானது போர்ச் சக்திகள் சிறுவர்களைப் பயன்படுத்தாதவாறு நிர்ப்பந்திப்பதும் அந்த வழியிலிருந்து மீளும் போது கடுமையான கோட்பாடுகளைப் பிரயோகிப்பதாலும் மட்டுமே குறைக்க முயலலாம்.
ஆயினும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தாங்கள் ஆறுவயதிலும் பத்து வயதிலும் போராட புறப்பட்டதாக கூறுவது இன்னொரு தடையாகவுள்ளது.
மேலும் போர்ச் சூழலில் சிறுமியரை பாலியல் வன்முறை யிலிருந்து காப்பாற்றுவதும், இளமையில் ஏற்படும் பிரசவங் களைத் தடுப்பதும் முயல்க்கொம்பாகிவிடுகிறது. இன்னுமொரு
78

நிவேதினி
வேதனையான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் கந்தகக் குண்டுகளை பரீட்சித்துப் பார்க்க குரங்குகள் பயன்படுத்தப்பட்டது. இப்போது எங்கள் சிறார்கள் தானே.
(சிவரமணியின் கவிதையில்,)
தும்பிக்கையின் இறக்கையை பிய்த்து எறிவதும் தடியையும் பொல்லையும் துப்பாக்கி யாக்கி எதிரியாய் நினைத்த நண்பனைக் கொல்வதும் எமது சிறுவரின் விளையாட்டானது.
போரில்லாமல் சிறார்கள் வாழலாம். ஆனால் சிறார்கள் இல்லாமல் போர் இருக்குமா? என்பதே எம் கேள்வி.
தீச்சுவாலையின் நடுவே. பிஞ்சுமலர்கள் கரங்கள் பணிந்து வேண்டுவதென்ன? பாதம் கூப்பி பயணிப்பதெங்கேP
79

Page 41
யாழ்ப்பாண சமூகத்தில் கருத்தியலும் கட்டமைப்புகளும் நிர்ணயிக்கும் பால்
நிலைப்பாடு
செல்வி திருச்சந்திரன்
கட்டுரைத் தலையங்கத்தில் எடுத்தாளப்பட்ட சொற் பதங்களுக்கு முதலில் விளக்கவுரை ஒன்று தேவைப் படும் என்று எண்ணுகின்றேன். கருத்தியல் என்ற சொற்பிரயோகம் கருத்து நிலை என்று எடுத்தாளப்படுவதும் உண்டு. ஆனலும் கூட்டு மொத்தமாக பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு தன்மையை உடையதால் இயல் என்ற சொல்லே பொருந்துமென்று எண்ணுகின்றேன். மாக்சிச சித்தாந்தத்தில் பயன்படும் Ideology என்ற சொற்பிரயோகத்தையே கருத்தியல் என்று நான் இங்கு கூறுகின்றேன். ideas என்பது கருத்து, எண்ணம், கோட்பாடு, கொள்கை, பாவனை போன்ற இன்னேரன்ன பல அர்த்தங்களை உள்ளடக்கிய சொல் . இவை 67 GialsTG) 1 fib60) puto go 6il 6JTL 5gul science of ideas at 667 JG35 ideology என்று பெறப்படும். இங்கு கருத்தியல் என்று நான் கூறுவது கருத்துக்கள், சொற்கள், கோட்பாடுகள், இலட்சியங்கள், பாவனை இன்ைேரன்ன மனஉணர்ச்சிகளின் வடிவங்களாகப் பரிணமிக்கும் ஒரு தொடர்ச்சி நிலை. இவை சமயாச் சாரங்களிலும், சமூகச் சட்டங்களிலும், சமுதாய மரபு, (Traditions) of plurid,6i (values) Grbstscupaopg,6it (norms), 65gay,6i (codes), குழு வழக்குகள் (folkways), மரபாண்மைகள் (ethos), அளிப்புக்கள் (Sanction) பழக்க வழக்கங்கள் போன்றவற்றினூடாக வெளிப்படும். இவை வளரும், குன்றும், நீளும். தமிழில் இவை செந்தமிழ் இலக்கியங்களிலும், செம்மை மரபுகளிலும் நாட்டுப் பாடல்களிலும் பழமொழிகளிலும் செறிந்து நிற்கும்.
கட்டமைப்பு (structure) என்பது பல அலகுகளைத் தன்னகத்தே கொண்டு அந்த அலகுகளால் இயங்கும் ஒரு இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்தாபனம், நிறுவனம், அமைப்பு, போன்றவற்றைக் குறிக்கும். வீடு, கோயில், பாடசாலை போன்றன மிக முக்கியமான அமைப்புகளாக விளங்குகின்றன. கோயில் பூசாரிகளும், பள்ளி ஆசிரியர்களும், வீட்டின் அங்கத்தவர்களும் அவர்களது கடமைகளும் செயல்களும் அலகுகளாகக் கொள்ளப்படும். கருத்தியலைப்

நிவேதினி
பரவலாக்கும் சாதனங்களாக இக் கட்டமைப்புகள் இயங்கும்
கலை, இலக்கியம் போன்ற ஊடகங்கள் பெரும்பாலும் ஆதர்சநிலை (idealistic) ஒன்றைக் கொண்டு மானசீகப் படுத்தப்பட்ட பண்பாட்டு நிலையைக் காட்ட, நடைமுறைப் பண்பாடு வேருனதாக இருக்கலாம். மாற்றுக் கலாச்சாரம் விளையும் ஒரு பண்பாட்டு நிலை இவ்விரண்டு நிலையிலும் வேறு பட்டதாக இருக்கலாம். "பெய்யெனப் பெய்யும் மழை" "யாதும் ஊரே யாவரும் கேளிர்” “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என்பன செந்நெறி இலக்கிய, மானசீக ஆதர்ச நிலைப் பண்பாட்டுக் கோலங்களாக இருக்கும். சாதிப் பிரிவினைகள் நடைமுறைப்பண்பாடாகவும், கோலமாகவும் இருப்பது கவனிக்கப்பட வேண்டும்.
இவற்றில் கருத்தியலின் வெளிப்பாடு மிகத் துலாம்பரமாக விளங்குகின்றது. வாழ்க்கையை எப்படி ஒரு சமுதாயம் அர்த்தப்படுத்துகிறது என்பதுதான் பண்பாட்டு உருவாக்கமாகத் தோன்றுகின்றது. இந்த அர்த்தப்படுத்தல் மாறிக் கொண்டே போகும். ஆகையால் பண்பாடு என்பது ஸ்திரமான மாற்றமற்ற ஒரு வடிவம் என்று நாம் கூற முடியாது. கலாச்சாரப் பரிவர்த்தனை போன்றவை தவிர்க்க முடியாத தாக்கத்தை உண்டு பண்ணி விடும். இந்த மாறி வரும் பண்பாட்டுக் கூறுகளை முதலில் படம் பிடிப்பது மொழி. ஆகவே கருத்தியலின் மிக முக்கிய கருவறை மொழி. மாதவிடாய், மாதவிலக்காக மாறியதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். யாழ்ப்பான சமூகத்திற்குரிய பண்பாடு எது என்று ஓர் கேள்வியை எழுப்புவது அபத்தம். அதன் பண்பாட்டுக் கோலங்கள் எப்படி மாறிக் கொண்டு சென்றன, செல்கின்றன, அதன் பரிமாணங்கள் யாவை, என்றுதான் நாம் எம் கேள்வியை மாற்ற வேண்டும்.
யாழ்ப்பாணத்து சமுதாயத்தை விளங்கிக் கொள்வதற்கு ஒரு முதல் நிலையாகச் சில விடயங்களைச் சிவத்தம்பி (1993) அவர்கள் அண்மையில் தனது சிறு பிரசுரம் மூலம் இனம் கண்டிருக்கிறர். இங்கு இவர் இரு வகைக் கருத்தியலை முன் வைத்து அவை தான் யாழ்ப்பாணத்தின் சமூக உருவாக்கத்தின் முக்கிய நிலைப்பாட்டை நிர்ணயித்தன என்று கூறுகிற கருத்தில் எனக்கு ஓரளவு உடன்பாடுண்டு.
அந்தக் கருத்தியலைச் சைவமும் தமிழும் என்றும் , யாழ்ப்பாண
81

Page 42
நிவேதினி
இளைஞர் காங்கிரசினால் முனைப்புற முன்வைக்கப்பட்ட முற்போக்கு வாத சீர்திருத்தக் கோட்பாடு என்றும் அவர் கூறுகிறார். அதேசமயம் சைவம் தமிழுடன் ஒன்றுபட்ட நிலையில் ஏனைய மதங்களை முற்று முழுதாக நிராகரித்தது என்றும் கூறுகிறார். இந்தக் கூற்று இன்னும் நன்கு ஆராயப்பட வேண்டும் என்பது என் எண்ணம். கிறிஸ்தவம் தமிழுடன் ஒன்றுபட்டதும் கிறிஸ்தவர் தமிழுக்குச் செய்த தொண்டினை ஏற்று கிறிஸ்தவர்களை காலகட்டத்தில் தன்னுள் அடக்கிய ஒரு கருத்து நிலையும் பிற்காலத்தில் தோன்றியிருந்தபடியால் அதையும் நாம் கவனத்திற்கு எடுக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸில் (1) இருந்த கிறிஸ்தவர் தமிழுடன் ஒன்று பட்டனர். இது வரலாற்றுச் செய்தி. அதேபோல் கிறிஸ்துவ ஆசிரியர்களும், ஆசிரியைகளும் சமூக மேலாண்மையுள்ள குழுக்களாக யாழ்ப்பாணச் சமூகத்தில், அதன் உருவாக்கத்தில் பல அர்த்தமுள்ள போக்குகளை நடாத்தி வந்தனர் என்பதும், தமிழும் சைவமும் ஒன்றபட்டு ஏனைய மதங்களை முற்றுமுழுதாக நிராகரித்தன என்ற கூற்றைக் கேள்விக் குள்ளாக்கும். ஆனல் ஆறுமுக நாவலரால் ஒரு கட்டத்தில் கிறித்தவ நிராகரிப்பு நடத்தப்பட்டது என்பதும் உண்மையே. அதே சமயம் அத்தகைய கருத்து ஒன்று நிலவி வந்தது என்பதையும் மறுக்க முடியாது. அது ஒரு மானசீக எதிர்பார்ப்பாக இருந்தது என்றும் கூறலாம். ஆனல் அது எவ்வளவுக்கு சரியானதென்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இதை நான் இங்கு கூறுவதற்குக் காரணம் பால் நிலையில், பெண்களது சமூக நிலையில் கிறிஸ்தவர்கள் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை இத்துடன் தொடர்புபடுத்தி நோக்க வேண்டும் என்பதாலேயேயாகும்.
பெண்களது நிலை ஏனைய சமூகக் கட்டுக் கோப்புக் களிலிருந்தும் அவற்றின் பல்வேறு அலகுகளிலிருந்தும் ஒதுங்கி தனித்து நிற்பதல்ல. அது அவற்றுடன் இரண்டறக் கலந்து, அவற்றிலிருந்து பிரிக்க முடியாத நிலையிலேயே உள்ளது. ஆகவே அதற்கு ஒரு களம் அமைத்துத் தர வேண்டிய தேவை உண்டு. இரண்டாவதாக பெண்ணின் சமூக நிலைப்பாடு சாதி வர்க்க, மாவட்ட வாரியாக மிகவும் வேறுபடும் என்பதும் ஒரு முக்கிய அடிப்படை அம்சமாக ஏற்கப்பட வேண்டும். யாழ்ப்பாணச் சமூகத்திற்கு பல்வேறு மட்டங்களிலுமுள்ள அதிகாரப் படிநிலை முறையில் சில பிரத்தியேகத் தன்மைகள் உண்டு, சாதி, சாதிப்பிரிவினைக் குட்பட்ட அதிகாரப் படிநிலை முறை, அதற்குட்படாத
82

நிவேதினி
வர்க்கநிலை, ஆண், பெண், மூத்தோர், இளையோர், ஆசிரியர், மாணாக்கர், கற்றோர், கல்லாதவர் போன்ற பல நிலைகளில் அதிகாரமும் அந்த அதிகாரத்தைச் சேர்ந்த ஆதிக்கம், வல்லமை, திறமை, ஆதிபத்தியம் போன்ற பண்புகளும் படிநிலை முறையில் வெவ்வேறு நிலையில் காணப்படும்.
இந்தப் பல்வேறு நிலைகளிலும் முறைமைகளிலும் பர்ல் நிலை வேறுபட்டு நிற்கும். அதே போல இன்னுமொரு முக்கிய Lμώδοτι 1 πέθ, இச்சமூகத்தில் நாம் பார்ப்பது கூர்மையான பாசப் பிணைப்புள்ள உறவு முறைகள். இந்த உறவு முறைகளுடன் ஒட்டிய கடமைகளும் உரிமைகளும் கூட ஒரு பிரஜையின் சமூக நிலையைச் சில சமயங்களில் நிர்ணயிக்கும். உதாரணமாக அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என்ற இரத்த உறவு முறைக்கப்பால் சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா ஆகியோரும் இவர்களின் பிள்ளைகளும் மாமன் மாமியரின் பிள்ளைகளும் பெறாமகள், பெறாமகன் என்றும் மருமகன், மருமகள் என்றும் மறு அவதாரம் எடுப்பவர்களாக இருப்பர். இங்கு கடமைகளும் உரிமைகளும ஒரே பாங்கில் நிர்ணயிக்கப்படுவதால், கொள்ளி வைக்கும் இறுதிக் கிரியைவரை கடமை என்பது நீடித்துச் செல்லும். இந்த உறவு முறை கூட ஒரு படிநிலை முறையிலே அமையும். கீழோர், மேலோர் என்பதை முறைப் பெயர்களே சுட்டிநிற்கும்.
இந்த அமைப்பு முறை அதிகாரப் படிநிலையின் தாக்கத்தை விளக்கும். பெண்ணுக்குப் பாதுகாப்பும், அடைக்கலமும் கொடுக்கும் நோக்குடன் உருவாக்கப்பெற்ற இந்த அமைப்பு முறை அவளது தன்னம்பிக்கை, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை மழுங்கச் செய்வதுடன் தனித்தியங்கப் பயந்த, தன்னம்பிக்கையற்ற தன்மை போன்ற நிலமையையும் உண்டாக்கி விடுகிறது.
83

Page 43
நிவேதினி
யாழ்ப்பான சமுதாயத்தின் அதிகாரப் படிமுறை நிலையை ஒரு வரை படத்தின் மூலம் விளக்கலாம்.
யாழ்ப்பாணத்து அதிகாரப் படிமுறை நிலை
வர்க்கம் சாதி பால்நிலை
மேல் நடு கீழ் மேல் நடு கீழ் ஆண் பெண்
(சமூகம்) (சமூகம்) (குடும்பம், சமூகம்)
கல்வி o lugi)
ஆய்வறிவாளர் கற்றோர் கல்லாதோர் மூத்தோர் இளையோர்
(குடும்பம், சமூகம் )
பொதுப் பண்புகள்
1. உயர் சாதிப் பெண்ணுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். கண்காணிப்பு, பேசி முடிக்கும் மணம், கல்விக்குத் தடையில்லை, ஆனால் கட்டளைக்குக் கீழ்ப்படிதல், வீட்டுப் பொறுப்பு, குழந்தைப்பராமரிப்பு போன்ற வற்றில் கட்டாயத்தின் பெயரில் ஈடுபடுதல். வீடு பெண்மையின் மையமாக வலியுறுத்தப்பட ஏனையவை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.
2. உயர்சாதி + உயர்வர்க்கம் இதே நிலை.
3. உயர்சாதி கீழ்வர்கப் பெண்ணுக்கு உயர் சாதியினரால்
பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கவே செய்யும்.
84

நிவேதினி
4. சாதியிற் குறைந்த உயர் வர்க்கப் பெண்ணின் குடும்பம் உயர்வர்க்க சாதித் தரத்திற்கு உயர எத்தனிக்கும் பொழுது பெண்ணின் பால்நிலையே குறையீடாகக் கொள்ளப்பட்டு அவளது சுதந்திரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
குடும்பம் என்ற கட்டமைப்பு மேன்மை நிலையை அடையும் போது அதற்குள் அகப்பட்ட பெண் பலவகைகளில் குறியீட்டுப் பொருட்களாகக் கொள்ளப்படுகிறாள். தாய்மை, குழந்தை வளர்ப்பு, சமையற் கலை, வீட்டு நிர்வாகம் என்ற பல வாழ்க்கைத் துணை நலப் பண்புகளை அவளிடம் சுமத்தத் தொடங்குவர். ஒரு பாரிய கருத்தியலை உள்ளடக்கிய "வீடு” என்ற கட்டமைப்பின் சுமையை அவள் கடமையாக, மேன்மை பொருந்திய பங்களிப்பாக, ஒரு சுலபமான செய்கை என ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சாமியறை, நாற்சாரம், வெளி விறாந்தை, சமையற் கூடம், கோடி என ஒரு கருத்தியல் ரீதியில் திட்டவட்டமாகப் பிரிக்கப்பட்ட கட்டமாக வீடு மாறிய கட்டம், வரலாற்றில் பெண்கள் வீட்டுக்குள் புகுத்தப்பட்ட பொழுது தான் ஏற்பட்டிருக்க வேண்டும். அதிகாரமும் ஆதிபத்தியமும் வீட்டின் வரைவுகளுக்குள் பரிவர்த்தனை செய்யவேண்டும். இந்த வரைமுறைகளில் சில பகுதிகள் பெண்களுக்கே உரியதாக அமைய சில ஆண்களுக்கே உரியதாகிவிடும். வீட்டிலே ஆண்களுக்குரிய உரிமைகள் பொதுவாக ஓய்ந்திருத்தல், உல்லாசமாக பொழுது போக்குதல், அரட்டை அடித்தல், சீட்டு விளையாடல் போன்றன. இவை வீட்டின் வெளி விறாந்தையில் நடைபெறும் வீடு, வளவு கூட்டுதல், சமைத்தல், உடை தோய்த்தல், வீட்டு விலக்குத் துடக்கு அனுட்டித்தல், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடல், நெல் குற்றல் போன்றன வீட்டின் ஏனைய பகுதிகளில் தொழில் மயப்பட்ட நடவடிக்கை களாக இருக்கும். இவை பெண்களுக்குரிய பணிகளாக வகுக்கப்பட்டன. இவை பொதுவாக வர்க்க சாதிப்பிரிவுகளை கடந்த பொதுப் பண்புகளாக இருக்கும். "துடக்கு" என்ற கருத்தியலுக்குட்பட்ட சாதிப்பிரிவுகளும் கூட இவ் வரை யறைகளுக்குட்பட்டு கோடியில்தான் அனுமதிக்கப்படுவர். துடக்காகி வீட்டு விலக்கு அனுட்டி க்கும் பெண்ணும் கோடியிலேயே இருக்கவேண்டும். இது பெண் தற்காலிகமாக சாதி நிலைப்படிமத்திற்குள் அடக்கப்படுவதைக் காட்டுகிறது.
85

Page 44
நிவேதினி
கருத்தியலை வலியுறுத்தும் கட்டமைப்புகளில் குடும்பம் என்ற அலகு மிக முக்கியமானது. ஆண்களைக் கூடக் கட்டுப்படுத்து வதாக இது இருக்கும். உரிமைகளும் கடமைகளும் மாறி மாறி அலைக்கழிக்கும். குடும்பத்தின் ஸ்திரமான நிலை வேண்டி அதற்குக் கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாக்கப்பட்டு விடும். இதை நாம் பெண்களுக்கு அளிக்கப்பட்ட பாரபட்ச நிலை என்றே கருத வேண்டும்.
இதற்கு அடுத்த இரண்டு படி நிலைகளிலும் ஒரு வித்தியாசமான போக்கைக் காணலாம். ஒரு படித்த பெண்ணைப் படிக்காத ஓர் ஆணுடன் ஒப்பிட்டு நோக்கும் போது பொதுவான ஆண்பால் மேன்மை குறைக்கப்பட்டு அந்தப் பெண்ணிற்குரிய மதிப்பு அளிக்கப்படும். இவ்வாறு ஒரு ஆசிரியையும், குரு என்ற முறையில் ஆணுக்குக் கொடுக்கப்படும் மதிப்பையும், மரியாதையையும் பெறுகிறாள். சமூக மட்டத்தில் இப் பெண்களுக்கு கலாச்சார மேன்மை மிக எளிதில் பால் நிலையை மீறிக் கொடுக்கப்பட்டு விடும். இதற்குக் காரணம் இச் சமூகம் கல்விக்கும் பண்பாட்டுக்கும் கொடுக்கும் முதலிடமா என்பது ஆய்வுக்குரியது. ஆனால் இதற்கு எதிர்மாறான நிலைமை ஒன்று குடும்பம் என்ற கட்டமைப்பில் ஏற்படுவதைக் காணலாம். ஆண் என்ற மேலாதிக்க வரன்முறைக்குட்பட்டவராகிய தம்பிமாருக்கு அடங்கிய அக்காமாரும் மூத்த மகனுக்கு அடங்கிய தாய்மாரும் பால் நிலைப்பட்ட ஒரு படி நிலைக்குட்பட்டவர்களாக இருப்பதை எல்லாச் சாதி, வர்க்க முறைகளிலும் காணலாம். "சாண் பிள்ளை என் றாலும் ஆண் பிள்ளை " என்று ஆண்மேலாதிக்கம் கோலோச்சுவதை நாம் எங்கும் பரவலாகக் காணலாம். இது உள்ளுறவு முறையில் மாத்திரம் நடப்பதல்ல. பெரியம்மா, சின்னம்மா, மாமன், மாமி போன்றோரின் இளைய மகன்மாருக்கும் இந்த உரிமை அளிக்கப்படுகிறது.
கீழ்ப்படிதல் தன் கடமை என்று வயதில் மூத்த பெண் அதை ஏற்றுக் கொள்கிறாள். கைம்பெண்ணான ஒரு பெண் தன் தம்பியின் கட்டுப்பாட்டிலும் தனது கணவனின் தம்பியின் கட்டுப்பாட்டிலும் இருப்பதற்கு அவர்கள், தாங்கள் அவளைப் பாதுகாக்கவும், ஆலோசனை வழங்கவும் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்று நினைப்பதும் ஒரு காரணம். கடமை செய்யும் உரிமையும் உதவி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் அடக்குமுறையாக மாறக்கூடும். இதில் விசித்திரமான இன்னுமொரு அவதானிப்பையும் சேர்க்கலாம். ஒரு சிறு
86

நிவேதினி சம்பவத்தைக் கூறி இதை விளக்குகின்றேன்.
பத்து வயதுச் சிறுமியாக நான் இருந்த பொழுது மாமரம் ஒன்றில் ஏறி மாங்காய் பறித்துக் கொண்டிருந்தேன். எனது தந்தையார் நான் கீழே எறியும் மாங்காய்களை சாக்கினால் ஏந்தி நிலத்தில் வீழ்ந்து விடாவண்ணம் பிடித்துக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுப் பெண்மணி இதைப் பார்த்து விட்டுப் படலை தாண்டி வந்து என் தந்தையும் நான் மரம் ஏறிய செயலுக்கு உடந்தை எனக் கண்டு கோபத்தோடு திரும்பிப் போய் விட்டார். ஆனால் அன்று மத்தியானம் மூன்று மணிக்கு திரும்பவும் வந்து, எனக்கு ஒரு உபதேசம் செய்து விட்டார். “பெண் அடக்கமாக இருக்க வேண்டும். மரமேறக் கூடாது. உயரத்திலிருந்து குதிக்கக் கூடாது. மரமேறுவதை அயலவர் பார்த்தால் எள்ளி நகையாடுவார்கள். குடும்ப கெளரவத்திற்கு இழுக்கு. உங்கள் தந்தைக்கு இதெல்லாம் தெரியாது." என்று கடுமையாக எச்சரித்து விட்டுச் சென்றார். தாயில்லாமல் வளர்ந்த எனக்கு செல்லம் அதிகம். கடுமையான வார்த்தைக்கு பழக்கப் படாத சிறு பராயம். இச்சம்பவம் என்னை மிகவும் தாக்கிவிட்டது. இதை நான் இங்கு கூறுவதற்கு காரணங்கள் பல உண்டு.
1. ஒரு பெண்ணைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு மற்றொரு பெண் வேலி தாண்டி வந்தாள்.
2. சாதிமுறையில் குறைந்தவர் என்று சமுதாயத்தால் கணிக்கப்பட்ட அப் பெண் சாதி, வர்க்க வரம்புக ளையும் மீறி, அவளிலும் வேறுபட்ட மத்திய தர வர்க்கப் பெண்ணான என்னிடம் , பெண்மை சீர்குலைந்து விடக்கூடாது என்றாள். கடுமையாக எச்சரிக்கை செய்தாள். பெண் என்ற ரீதியிலும் வயதில் மூத்தவள் என்றதாலும், நான் "மாமி’ எ ன் று அழைத்த தன் பயனாகக் கிடைத்த உரிமையாலும் என்னைத் திட்டித் திருத்த அவருக்கு உரிமை உண்டு என்று அவள் நினைத்துச் செயற்பட்டாள். கடைசியாக "ஐயாவுக்கு இதெல்லாம் தெரியாது. பெண்பிள்ளை நீ கவனமாக இருக்க வேண்டும்" என்று முடித்தாள். தான் பெண், அடுத்த வீட்டுக்காரி, வயதில் மூத்தவள் என்ற ரீதியில் தனக்கு உரிமை உண்டு என்று நினைத்துக் கொன்டாள். இது ஒரு பெண்ணுக்கு சமுதாயம் விதிக்கும் ஒரு கட்டளை, அடக்கு முறை. இங்கு சாதி, வர்க்க
87

Page 45
நிவேதினி
பாகுபாடுகளும் அதன் மேலாண்மைப் பாங்குகளும் உடைத்தெறியப்பட்டு கற்றுத் தெரிந்தவர் என்று கணிக்கப்பட்ட என் தந்தைக்கு நடைமுறைப்பால்நிலைத் தத்துவங்கள் புரியவில்லை என்று கூறுமளவுக்குப் பெண்மையின் சமூகப் பண்புகளுள் வரையறுக்கப்பட்டு விட்டன.
இந்த உண்மையைப் பிற்காலத்திலேதான் நான் உணர்ந்தேன். நான் ஓர் ஆண்பிள்ளையாக இருந்து வேறு பல சேஷ்டைகளைச் செய்திருந்தால் இந்த அயல் வீட்டு மாமி வயசுக் கோளாறு என்று பாராமுகமாக இருந்திருப்பார். இது ஆண், பெண் என்ற நாணயத்தின் மறுபக்கமாகும்.
யாழ்ப்பாண ஆண், பெண் நிலைமைகளை தமது ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ள பேரின்பநாயகம், (1982) தம்பையா (1973) (தம்பையா H.W.) ஆகியோர் பெண்களது மேன்மை நிலைக்குக் காரணமாக இரு கருத்துக்களை முன் வைத்தார்கள்.
1. தேசவழமைச் சட்டம் மேல்சாதிப் பெண்களுக்குப் பல
உரிமைகள் கொடுத்திருக்கிறது. 2. பிராமண ஆதிக்கமற்ற சமூகச் சூழல்.
தமிழ் நாட்டிற்போல, பார்ப்பன ஆதிக்கத்துக்குட்பட்ட பெண் ஒடுக்கு முறைக் கருத்துக்கள் யாழ்ப்பாணத்தில் வேரூன்ற வில்லை. தலை மழித்தல், விதவைகளின் அவலம், மறுமண எதிர்ப்பு போன்றவை யாழ்ப்பாணத்து வழக்கில் மிக அருகியே இருந்தன. சொத்துரிமை யாழ்ப்பாணப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதை மறுக்க முடியாது. என்றாலும் இவை எல்லாச் சமூக மட்டத்திலும் பெண்களை முன்னேற்றி விட்டதா என்பது கேள்விக்குரியதாகும். என் தந்தையார் கூறிய இரு உண்மைக் கதைகள் நினைவுக்கு வருகின்றன.
முதலாவது சண்டிலிப்பாயைச் சேர்ந்த உயர்சாதி ஆணைப் பற்றியது. அவருடைய மனைவி தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என உத்தரவு வேண்டி நின்றாள். வீட்டுக்கு அடுத்ததாகப் பெண் வெளியே செல்லும் இடம் பொதுவாக கோயிலாகவே இருந்து வந்தது. அதற்குப் பொதுவாகத் தடை இருக்கவில்லை என்றே நான் எண்ணியிருந்தேன். அந்தக் கணவனும் தன் மனைவியைக் குளித்து நல்ல சேலை கட்டி வரும்படி சொன்னார். அம்மாதும் அப்படியே அவர் முன்
88

நிவேதினி
வந்து நின்றாள். உடனே அக்கனவான் வீட்டைச் சுற்றி இருக்கும் வாசல் எல்லாவற்றிலும் அவளை விழுந்து கும்பிடச் சொன்னாராம். இறுதியில் தன் காலிலும் விழுந்து கும்பிடச் சொன்னாராம். வீடே பெண்ணிற்கு கோயில், கொண்ட கணவனே கண்கண்ட தெய்வம் என்று அவளுக்குத் தான் போதித்து விட்டதாக அவரது அகங் காரம் அன்று குதுர கலித்திருக்கும். ஆனாலும் தேசவழமை வழங்கும் பெண் உரிமைச் சரத்துக்களினால் பலன் ஏதும் இல்லை என்று கூற முடியாது.
விவாகரத்துக் கோரும் பெண்களுக்குத் தன் சொத்து தனக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை பலத்தைக் கொடுக்கும். துணிந்து தான் விரும்பாத மணவாழ்க்கையிலிருந்து விடுபடலாம். தன் காலிலே நிற்கலாம், விரும்பினால் மறுமணம் புரியலாம். அந்த மறுமணத்திற்கு அவளது குடும்பம் ஆதரவு தரும் என்ற எண்ணமும் சமுதாயம் இம்மறுமணத்தை ஏற்கும் என்ற உண்மையும் அவளுக்கு என்றும் அனுகூலமாகவே இருக்கும். ஆனால் இதை மட்டும் வைத்து பெண்ணின் நிலை என்றும் மேம்பட்டு நிற்கும் என்று கூற முடியாது.
அண்டை வீட்டில் நித்தியம் கணவனால் அடி வேண்டி அழுது குளறும் மனைவியின் கூக்குரலையும், அழுகுரலையும் கேட்கச் சகிக்காமல் வீடு மாறிய அனுபவமும் சின்ன வயதில் எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்டது. கணவனிடம் அடி , உதைவாங்கிய பெண்ணின் சிவந்து கறுத்துக் கன்றிப்போன அவயவங்களை நேரிற் பார்த்து வருந்திய அனுபவமும் எனக்கு உண்டு. இவை புறநடையாக இருப்பவையா அல்லது வீட்டுக்கு வீடு வாசற்படிதானா என்பது குடும்பம் என்ற கூட்டுக்குள் நுழைந்து ஆய்வு செய்தால்தான் தெரியும். ஆய்வுகளிற் கூட ஒரு பிரச்சினை உண்டு. "நான்கு சுவருக்குள் நடப்பவற்றை வெளியே சொல்லக் கூடாது" என்ற போதனைக்குள் வளர்ந்த பெண் பெரும்பாலும் அச் செய்திகளை வெளியிடமாட்டாள். குடும்ப கெளரவம் குலைவதை அவள் ஆதரிக்கமாட்டாள். ஆகவே அவள் இவ்வகைச் செய்திகளைப் பற்றிக் கதைப்பதை நாசூக்காகத் தவிர்த்துக் கொள்வாள். தமிழ் நாட்டில் நான் மேற்கொண்ட ஆய்வொன்றில் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலக் கலந்துரையாடலின் பின்பே தங்கள் அவல நிலையைப் பற்றிப் பெண்கள் பேச முன்வந்தனர்.
இந்த உண்மைக் கதையில் அவள் சீதனமாகக் கொண்டு
89

Page 46
நிவேதினி
வந்த சொத்தும், அச் சொத்திற்கு அவளது ஏகபோக உரிமையும், எந்த முறையில் அவளை ஒரு அவல நிலை யிலிருந்து காப்பாற்றியதுP அவள் விதவையாக வந்த பின் அவளுக்கு ஏற்பட இருக்கும் ஒரு நிலைமை தற்போதைய அவளது மனைவி என்ற நிலையை எப்படி மாற்றி விடப் போகிறது. இவை காத்திரமான கேள்விகள். இதனால் நான் நிறுவ முனைவது சில உரிமைகள் இருந்தால் மாத்திரம் ஒரு பரிபூரண சுதந்திர சந்தோஷ வாழ்க்கையைப் பெண் பெற முடியாது என்பதே. ஆண்களின் தனிப்பட்ட மனோநிலை மாறவேண்டும்.
இதைப் போலத்தான் வட்டுக் கோட்டையைச் சேர்ந்த கல்வியில் சிறந்த உயர் அதிகாரி ஒருவர் தன் மனைவியை அவளுடைய தாய், தந்தை வீட்டிற்குச் செல்ல அனுமதி கொடுக்க மாட்டார். அப்படி அவள் கெஞ்சி மன்றாடிப் போனாலும் அரை மணிக்குள் வெளியில் நிற்கும் தனது காருக்குத் திரும்பி விட வேண்டும் என்பது நிபந்தனை. மனைவியைத் தனது உடைமைப் பொருளாக, ஒரு உயிரற்ற ஜடமாகக் கருதும் மனோநிலை எப்படி ஒரு தாய் வழிச் சமுதாயமாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தில் தோன்றியதுP மணம் முடித்து தாய் வீட்டு உரிமை அகலாமல் தாய் தந்தையருடன் சகோதர, சகோதரிகளுடன் அவர்கள் வீட்டில் வசிப்பதே யாழ்ப்பாண வழக்கு முறையாக இருந்தது. மனைவி கணவன் வீட்டாரின் சொத்தாக மாறுவது பிராமணிய தர்ம சாத்திரமுறை என்பது எமது கணிப்பு. நடைமுறையில் எப்படி இப்படியான மாறுபாடுகள் தோன்றின? இத்தகைய நடைமுறைகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை யாது என்பதை அறிய கள ஆய்வு ஒன்று தேவை. அதன் பின்பே நிலமையை நிர்ணயிக்க முடியும்.
உரத்த பேச்சு, வன்சொற்பிரயோகம், கடுங்கோபம் போன்ற வற்றுக்குத் தாம் பலமுறை உள்ளாக்கப்பட்டதையும் கண்ணி ருடன் கூறிய பெண்மணிகள் அநேகம் பேர் உண்டு. (ஆய்வொன்று செய்த பின்னரே இது பற்றி விளக்கமாகக் குறிப்பிட முடியும்)
வயதில் குறைந்தவள்,சமமாகப் பழகும் உரிமை அற்றவள், பணிவாக சேவை செய்ய வந்தவள், தனது உரிமைப் பண்டம்,
தான் மறுத்துப் பேசவோ சொல்வதற்கு எதிராகச் செயற் படவோ உரிமையற்றவள் என்ற அடிமை நிலையில்
90

நிவேதினி
கணிக்கப்படுவதாலேயே ஒரு மனைவி அடிக்கும் வன் முறைக்கும் உட்படுத்தப்படுகின்றாள்.
போதிக்கப்படும் ஒரு செயல் முறையின் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட வேண்டும். சமுதாய விழுமியங்கள், மரபுகள், நெறிமுறைகள், விதிகள் என்பனவற்றை ஒட்டியே மக்கள் நடக்க வேண்டும் என்று (socialisation) வீட்டில் தொடங்கும் போதனா முறை (pedagogic process) அடுத்த கட்டமாகப் பாடசாலையின் புத் தகப் படிப் பாகவும் , சமயாசார விதிமுறைகளாகவும் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்படும்.
"எதிர்த்துப் பேசாதே. அடக்கமாயிரு, துள்ளாதே, ஏறாதே, பின் துTங்கி முன் எழு, வீட்டு வேலைகளை முடித்து விட்டுப்படி, படலை அருகே நிற்காதே, படி தாண்டாதே, சாண் பிள்ளையே ஆனாலும் அவன் ஆண்பிள்ளை, கோழி கூவி விடியாது, பெண் புத்தி பின் புத்தி, அண்ணாவும், தம்பியும் அதிகாலையில் எழுந்து படிப்பதற்கு நீ அதிகாலையில் எழுந்து கோப்பி போட்டுக் கொடு” என்று வீட்டில் தாய் தந்தையரின் போதனை பாடசாலையில் சற்று செந்தமிழில் தொடரும். "தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் எனப் பெய்யும் மழை" என்று கூறப்பட்டு சீதையும், கண்ணகியும் மாதிரி உருவங்களாக முன் வைக்கப்படும். இப்போதனாமுறை பெண்ணுக்கு ஒரு வகை "அடிமை” நிலையை ஒத, ஆணுக்கு "ஆண்டான்” என்ற மனநிலையை வளர்க்கும். இந்த இரு வேறுபட்ட மனநிலையை ஏற்று வளர்ந்து விட்ட ஆணும் பெண்ணும் வெவ்வேறு எதிர்பார்ப்புக்களை முன் வைத்து குடும்பம் நடாத்த தொடங்க, பெண்ணடிமை தொடர ஆணாதிக்கம் மேலோங்க அடுத்த தலைமுறையிலும் 'பழைய குருடி கதவைத் திறவடி கதைதான். இப் போதனா முறையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே பெண்நிலை வாத மாற்றுக்கலாச்சாரம் முன் வைக்கும்
முதற்படி.
இந்தப் போதனா முறையை யாழ்ப்பாணத்தில் உதித்த பல பெரியார்கள் அங்கீகரித்ததுதான் வரலாறாக இருக்கிறது. சாதிக் கட்டுக் கோப்பின் காவலராகவும், சைவசமய வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தியவருமான ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணப் பால்நிலைப் பாட்டில் சிறிதேனும் கவனம் செலுத்தவில்லை. பார் புகழும் கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி தனது Dance of Siva என்ற புத்தகத்தில் சீதையை இராமன் காட்டுக்கு
91

Page 47
நிவேதினி
அனுப்பியது சரி என்று வாதாடுகிறார். அவளது கற்பை சந்தேகித்த சமுதாயத்தின் ஆணையை மதிக்க வேண்டியது சிறந்த அரசனின் கடமை. சமுதாய அபிலாஷைகளை அங்கீகரிப்பதுதான் அரச தர்மம் என்று வாதாடுகின்றார். ஆகவே பெண்ணின் சொந்த விருப்பங்கள் அவளது கெளரவம், கண்ணியம், மேன்மை, எல்லாம் சமுதாயத்திற்காக் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டுமென 2000 ஆண்டுக்கு முன் போதிக்கப்பட்ட நீதி கற்றுத்தெளிந்த அறிவாளிகளாற் கூட திரும்பவும் போதிக்கப்படுவது சமுதாய மரபுகள் எவ்வளவு ஸ்திரமாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. தனிமனித விருப்புகளுக்கு இடமில்லை என்ற ஒரு பாரிய தர்ம விதிக்குள் புதையுண்டு போவதும் நியாயப்படுத்தப் படுவதும் பெண் ஒடுக்கு முறைக்கு அளிக்கப்பட்ட பொன் முலாம் பூசிய ஒரு அநீதி முறையாகும்.
கலாயோகியின் பெண் ஒடுக்குமுறை இப்படிக் கலாச்சார ரீதியில் நியாயப்படுத்தப்பட அரசியல் ரீதியிலும் கூட இதே பண்பைக் காணலாம். இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை அளிக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக வாதப் , பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்ட பொழுது ஒரு விசித்திரமான வாதம் எழுந்தது. தேசியத் தலைவர் எனக்கருதப்படும் சேர் பொன் இராமநாதன் வெள்ளாளர் அல்லாதோருக்கும், பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது ஒரு ஒழுங்கற்ற கலகக்காரக் கூட்டமொன்றின் ஆட்சிக்கு வழிகோலும் என்று கூறியுள்ளார் (ஜேன் ரஸ்சல்,1982 : 16).
கலாச்சாரத்துடன் இம்மறுப்பைத் தொடர்புபடுத்த எத்தனித்த இராமநாதன் அவர்கள், இது இந்துசமய ஒழுக்கங்களுக்கு ஒரு சாபக்கேடு என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் போதனாமுறை எப்போதும் மேலாதிக்க முறைகளையும், கருத்தியலையும் பொறுக்கி எடுத்து ஸ்திரப்படுத்தும். அவையே சமுதாயப் பண்புகள் என்று ஒரு பிழையான கருத்தை முன் வைக்கும். அடக்குமுறைகளையும், ஒடுக்கப் பண்புகளையும் எதிர்க்கும் ஒரு மாற்றுக் கலாச்சாரம் ஒரம் கட்டப்பட்டு இழிசனர் வழக்காகக் கொள்ளப்பட்டு விடும். சுதந்திரமாக வெளியே செல்லும் பெண்ணும், எதிர்வாதம் செய்யும் பெண்ணும், தன் விருப்பப்படி மணாளனைத் தேர்ந்தெடுக்கும் பெண்ணும், எப்போதும் சமுதாய மதிப்பினில் குறைத்து மதிப்பிடப்படுவாள். அடங்காப்பிடாரிப் பட்டம் மிக எளிதில் அவள்மேல் போடப்பட்டு விடும். இந்தப் பட்டத்தை தவிர்க்கவே
92

நிவேதினி
பெண் பெரும்பாலும் தன் சுய விருப்பங்களை வெளியிடாமலும், மறைத்தும், நல்ல பெண்மணிப் பட்டம் பெறுவதற்கு எத்தனிப்பாள். போதனா முறை இதற்கு தொடர்ந்து சேவை செய்யும். இவை யாவும் பேராசிரியர் சிவத்தம்பி கூறிய சைவமும் தமிழும் என்ற மாதிரியான பழைய மரபுகளைப் பாதுகாக்கும் ஒரு மனப்பான்மையை பிரதி பலிப்பதாக இருக்கும். மாற்றங்களை விரும்பாத ஒரு சாராரால் முன் வைக்கப்பட்ட வாதங்கள். பெண்ணைக் குறியீடாக வைத்து அவளைக் கட்டுப்பாட்டில் வைக்க விரும்பிய கருத்தியலை பிரதிபலிக்கும் செய்திகளாக இருப்பதை நாம் காணலாம்.
இந்தப் போதனாமுறையின் சில பகுதிகளைப் பழைய பத்திரிகைகளிலிருந்து உதாரணத்துக்குத் தருகின்றேன். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரசுரிக்கப்பட்ட Hindu Organ The Jaffna Native Opinion at 667 so lugg5, food, doit LDUL grill LIGOg வலியுறுத்துவனவாக இருந்தன. மரபு காக்கும் இந்த மனப்பான்மை இதை எழுதியோர் மனப்பாங்கில் தேசியம் கலந்த விழுமியங்களாகவும் தேசிய வாதங்களாகவும் கருதப்பட்டன என்பதை உணர்த்துவதாக இதை எழுதியோர் எண்ணியிருந்தனர். Hindu Organ ல் (22/9/1897ல்) " தேசிய வாதி” எனக் கையொப்பமிட்டு ஒருவர் "கலியுகப் பெண்ணிண் அலங்கோல உடை" என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் அன்புள்ள சகோதரிகளை விளித்து, சட்டை போட வேண்டாம் என்று எச்சரித்து சாதிமரபுகள், தேசியப் பற்று, மதக் கொள்கைகள் யாவும் இதனால் நிராகரிக்கப்பட்டு விட்டன என்று கூறுகிறது. மதம், சாதி, தேசீயம், டெண்களது உடை யாவும் ஒரே கணிப்பில் இடப்பட்டு இவை யாவும் பிறளக்கூடாது என்று கூறுகின்றார். மத வழிபாடு, சாதிக்கட்டுப்பாடு, பெண்களது உடை யாவும் கலாச்சாரத் துய்மையை நிலை நாட்டும் பிறன் மனைவி நோக்காத கருத்தியலுடன் ஒப்பிடப்பட்டு தேசிய வாதத்திற்குள் அடக்கப்பட்டு விட்டது.
1900 556 (6616th 6 lib5 Hindu Organ, The Jaffna Native Opinion 6T657 sp பத்திரிகைகளில் பிராமணிய பெண் வாதங்கள் முன் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இரண்டு விதமான கருத்தியல்களை பத்திரிகை முன் வைத்துள்ளது. இதன் ஆசிரியருரை, சிறுகதை, கட்டுரை முதலியவற்றின் ஆய்வில் அவற்றை இனம் காணக் கூடியதாக இருக்கிறது. இல்லாளின் குணாம்சங்கள் சேவை, அடி பணிதல், தியாகம் என்ற
93

Page 48
நிவேதினி
மும்மரபுகளில் அடங்க வேண்டும் என்று வற்புறுத்தும் அதே நேரம் சேவையும் அடி பணிதலும் மாமன், மாமி, போன்ற கணவரது உறவினருக்கும் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. தாய்வழிச் சமுதாயமான யாழ்ப்பாணத்துச் சமுதாயத்தில் தாய், தந்தையுடன் வசிக்கும் மனைவிக்கு இப்படி ஒரு கட்டளை போடப்பட்டது விந்தையே. ஆகையால் இது இந்திய பிராமணிய ஆதிக்க கருத்தியலின் திணிப்பு என்றே கொள்ளப்பட வேண்டும். இதே மாதிரி மனைவியின் கெட்ட குணங்களை 11/3/1907, 27/5/1907, 17/6/1907, 08/07/1907 தேதிகளில் வெளிவந்த பத்திரிகைகள் வரிசைப்படுத்தி உள்ளன. மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்ட பெண் வெறுப்புக் கொள்கைகள் கூறுவதைப் பிராமணிய கருத்துக்களின் தாக்கம் என்று கூறலாம். எடுத்தாளப்பட்ட சொற் பிரயோகங்களின் ஒற்றுமை நம்மைப் பிரமிக்க வைக்கிறது. பெண்ணின் சபல புத்தி, கணவனுக்குத் துரோகம் செய்வது அவளது கூடப் பிறந்த குணம், புத்தியீனம், மந்த மூளை போன்றன தர்மசாஸ்திரத்தில் கடன் வாங்கப்பட்ட சொற் பிரயோகங்கள். பெண்ணின் கற்பினை வலியுறுத்துவதற்கு திருக்குறளும் ஆங்காங்கே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
Morning Star என்ற கிறித்தவ புதினப் பத்திரிகை விக்டோரிய (Victorian) கருத்தியல் என்று சொல்லக் கூடிய பல கருத்துக்களை பரப்பியது. இங்கும் பெண் குறியீட்டுப் பொருளாக வருவதை நாம் காணலாம். திருக்குறளும், மனுதர்ம சாஸ்திரமும் கற்பையும் மனைவிக்குத் தேவையான ஆசாரங்களையும் வலியுறுத்தியது. விக்டோரிய கருத்தியலின் முதற்படி தாய்மையாக Morning Starல் வெளிவருவதைக் காணலாம். தாய்மை, தெய்வீகம் என்று கிறிஸ்தவ மத அனுட்டானங்களுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பலமுறை கூறப்பட்டிருக்கிறது. (27/01/1845, 13/ 3/ 1845, 25/ 9/ 1845) தாய்மை, தெய்வீகம், அது கிறித்தவ மதப்பண்பு என்ற ரீதியில் கருத்தியல் ஒன்று முன்னோக்கிச் சென்று மதத்தன்மை பெறுவது கருத்தியலின் எளிதான உட்செல்லலை (Internalisation) விளக்கும். மதத்துக்குச் சமம் தாய்மை என்ற போதனா முறை பெண்ணை தாய்மைப் பண்புக்கு மிக இலகுவில் உடன்படுத்தி விடும்.
மனுதர்ம சாஸ்திரத்தின் அடிப்படைப் பெண்கொள்கை கற்பின் பாற்பட்டு விதவை மறுமணத்தை மறுக்கும் சமுதாயத்தைக் காட்டியது. விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கும் தேசவழமைச்
94

நிவேதினி
சட்டத்தை ஏற்ற யாழ்ப்பாணச் சமுதாயத்துடன் அக்கொள்கை ஒன்றுபட்டதா என்ற கேள்விக்கு கண்ணகியின் வருகையையும் சேர்த்துத்தான் நாம் பதிலளிக்க வேண்டும். திருமணத்திற்கு முன் பெண்ணுக்கு கன்னித்தன்மையும் திருமணத்தின் பின் கணவனுக்கு நேர்மையாக இருப்பதையும் வற்புறுத்தும் யாழ்ப்பாண சமூகம், கணவன் இறந்த பின் மனைவி மறுமணம் செய்வதையும் பொருந்தாத கணவனுடன் வாழப்பிடிக்கா விட்டால் விவாகரத்து செய்வதையும் சட்ட மூலமாகவும் சமுதாய அங்கீகரிப்பாகவும் கொண்டுள்ளது. பெண்ணுக்கு கன்னித் தன்மையையும் கற்பையும் வற்புறுத்திய அதே நேரத்தில் ஆணுக்கு வைப்பாட்டியை அனுமதித்து தனது தேடிய தேட்டத்தில் அவளது பிள்ளைகளுக்கு சொத்துரிமையையும் வழங்கியுள்ளது. வைப்பாட்டிக்கு மனைவிக்குக் கீழான ஒரு அந்தஸ்து வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் கல்வி மேம்பாட்டுக்கு பாதிரிமாரின் பங்களிப்பு ஒரு முக்கிய காரணம். இக்கல்வி ஆணுக்கும், பெண்ணுக்கும் காலக் கிரமத்தில் ஓரளவு சமமாகவே அளிக்கப்பட்டது. வீட்டைவிட்டு வெளியே வந்து வெளி விவகாரங்களில் பெண் ஈடுபடுவதற்கு மூல காரணமாக இருந்தது இக் கல்வியே. கிறிஸ்தவப் பெண் கள் திருச்சபையுடன் தொடர்பு கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அங்கீகாரம் பெறத் தொடங்கினார்கள். இந்த இரு முனைத்தாக்கம் முதலில் கிறிஸ்தவப் பாடசாலைகளிலும் பின் கிறிஸ்தவப் பெண் பாடசாலைகளிலும் முதலில் தொடங்கியது. சைவத்துக்கு ஆபத்து என்ற குரல் எழும்பிய பின்பே இந்துக் கல்லூரிகளும் இந்துப் பெண்களும் இந்தக் கல்வி ஆதிக்கத்திற்கு உட்பட்டனர்.
கிறித்தவ கல்வியுடன் வீட்டு வேலை நுண்ணிய பிரிவினை களைக் கொண்டு சமையற் கலை, பரிமாறல் , தையல் , வீட்டலங்காரம் (Home Science) என்று ஒரு மட்டத்தில் பெண்களை மேலும் மேலும் வீட்டுக்குள் தள்ள இன்னொரு மட்டத்தில் கல்வி அறிவு வளர்ச்சியும் ஏற்பட்டது. பெண்னொருத்தி இந்த இரண்டையும் இணைத்து கல்வி அறிவில் மேம்பட்டாள் என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி. பொதுவாக இரண்டையும் ஏற்றாள் என்றே அறிகிறோம் . சைவமும் தமிமும் கிறித்தவத்துடன் ஒன்றிணைந்ததற்கு இதுவும் ஒரு உதாரணம்.
95

Page 49
நிவேதினி
இவ் ஆய்வின் முடிவுரையாக நாம் சிலவற்றை நிறுவலாம். கருத்தியலின் தாக்கம் பெரும்பாலும் ஒரு நிலைப்பாட்டில் இருக்கமாட்டாது. பல கருத்தியலின் மோதல்கள் ஏற்படும் பொழுது சில பல காரணங்களினால் ஒன்று வலுவடையலாம். ஒன்று சிதறிப் போகலாம். ஆனாலும் மேலாண்மை பொருந்திய கருத்தியலுக்கு என்றுமே சமூக மதிப்புண்டு. யாழ்ப்பாணச் சமூகம் என்று தற்போதைய சமூகப் பண்புகளை ஆராயும் பொழுது கடந்தகால வரலாற்றிலிருந்து அதன் முக்கிய பண்புகளை ஆராய வேண்டும். சாதி மரபுகளும், வர்க்க நிலைப்பாடுகளும் ஆய்வுக்கு களம் அமைத்துத் தரும். பால் நிலையை ஒரு போதும் இவற்றிலிருந்து விலக்கித் தனித்து ஆய்வு செய்ய முடியாது. பெண் பெண்ணாகப் பிறப்பதில்லை, அவள் உருவாக்கப்படுகின்றாள் என்று சைமன் டி புவர் (Simon de Beauvoir) 1949ல் கூறியதின் பரிமாணங்கள் இன்றுவரை அகன்று நீடித்துச் செல்கின்றன. உடற் கூறுகளை முதன்மைப்படுத்தி சமுதாயம் பல உருவாக்கங்களைச் செய்துள்ளது. இது யாழ்ப்பாணச் சமுதாயத்திற்கும் பொருந்தும். தற்போது துவக்குத் துரக்கிய இயக்கப் பெண்ணையும் இந்நியதிக்குட்படுத்தி நோக்கலாம். தற்போது மேலாதிக்கம் செலுத்தும் தேசியம் என்ற கருத்தியலுக்குட்பட்டதே இப் பாரிய மாற்றம். இத்தேசிய கருத்தியல் எவ்வளவுக்கு உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய சமூக கட்டமைப்பின் அடித்தளங்களின் பிரதிபலிப்பாயிருக்கிறது என்பது நமது கடந்த நாற்பது வருட கால வரலாறு.
ஆனாலும் பெண்ணடிமையும், ஆண் மேலாதிக்கமும் சாதி சமய, வர்க்க இனரீதியாகப் பிரிக்கப்பட்ட மானிடப் பகுப்புகளில் எங்கும் எப்போதும் கீழும் மேலுமாகவே இருந்தன என்பது பெண்ணிலைவாத மானிடவியலாளரின் முடிவு. ஆனால் அந்நிலையின் மட்டங்களிலும் தரத்திலும் வேறுபாடுகள் உண்டாகிய வண்ணமே இருக்கும்.
96

நிவேதினி
பின் குறிப்புகள்
1. S. Handy Perinbanayagam, Memorial Volume 6T657 p. gig5.55gai தமிழும் கிறிஸ்தவமும் பல கட்டங்களில் இணைந்ததையும் அதன் பாரிய தாக்கத்தையும் சீலன் கதிர்காமர் எழுதி உள்ளார். Hindu Organ பத்திரிகையுடன் ஏற்பட்ட கருத்து மோதல்களும் ஆங்காங்கே தரப்பட்டிருக்கின்றது. மேலும் யாழ்ப்பாணச் சமூக உருவாக்கத்தில் கிறிஸ்தவ பாட சாலைகளின் தாக்கம் இன்னும் ஆராயப்பட வேண்டிய
ஒரு விடயம்.
97

Page 50
நிவேதினி
உசாத்துணை நூல்கள்.
Perinbanayagam, R.S. 1992. The Karmic Theater, Self, Society and
Astrology in Jaffna, The University of Massachusetts Press Amherst.
Tambiah S.J. 1973. "Dowry Bride wealth and Property Rights in South
Asia in Bride Wealth and Dowry. Jack Goody and S.J. Tambiah, ed. Cambridge University Press,
London.
Jane Russell 1982. Communal Politics Under the Donoughmore Con
stitution 1931 - 1947 Tisara Publication Ltd Colombo.
Simone de Beauvoir 1953. The Second Sex NewYork
Tambiah, H.W. N.D The laws and customs of the Tamils of Jaffna. The
Times of Ceylon.
Kadirgamar.S. 1980. Handy Perinbanayagam, A Memorial Volume, The Jaffna Youth Congress and Selection from his Writ
ing and Speeches, Sri lanka, Jaffna.
Ramanathan .P. 1934. Memorandum on the Donoughmore Constitu
tion. London.
Sivathamby . K. 1993 Yalpana Samkuthai Vilankikollal, Uruvakkam,
Iyalpu, Acaiviyakkam Pattia Or Piraramba Usaval.
98

நிவேதினி
பத்திரிகைள்
Hindu Organ Jaffna (22/09/ 1897)
The Jaffna Native Opinion (11/3/1907, 27/05/1907, 17/06 1907,
08/07/1907)
The Morning Star (27/01/1845, 13/03/1845, 25/09/1845)
99

Page 51
மும்முலை ஆடகசவுந்தரி அல்லது ஆளுமைகளை அடையாளப்படுத்தும் மூன்றாவது முலை
சி - ஜயசங்கர்
உன்னரசு ராச்சியத்தின் பெண்ணரசி ஆடகசவுந்தரி பற்றிய கர்ண பரம்பரைக் கதைகள் கிழக்கு மாகாணத்தின் பழைய தலைமுறையினரிடம் ஓரளவு புழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் இளையோர் மத்தியில் இக் கர்ணபரம்பரைக் கதைகள் பரிச்சயமானவையாக இல்லை.
கிழக்குமாகாணச் சரித்திரத்தில் ஆடகசவுந்தரி காலம் பொற் காலம் என்றும் நம்பப்படுகிறது. ஆடகசவுந்தரி உன்னரசு கிரியிலிருந்து கொண்டு மட்டக் களப்பு, தெட்சணா கிரி (திருகோணமலை முதலிய பிரதேசங்கள் அனைத்தையும் கலி பிறந்து 3180 (கி.பி. 78) தொடக்கம் ஏறக்குறைய 113 வருடங்கள் ஆட்சி செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.
உன்னரசு கிரியில் அரசு செய்துவந்த ஆடகசவுந்தரி அரசி பற்றியும், அவளது பிரசித்தமான மறு பற்றியும், தென்னிந் தியாவில் இருந்து வந்து திருகோணமலையில் கோணேசர் கோயிலெடுத்து குளந்திருத்தி அரசு செய்துவந்த குளக்கோட்டன் பற்றியும், குளக்கோட்டன் மீது ஆடக சவுந்தரியின் போர்த் தொடுப்புப் பற்றியும், அவிமூர்த்தி (மாமங்கம் தீர்த்தம்) தீர்த்தத்தில் நீராடி ஆடகசவுந்தரியின் மறு நீங்கியமை பற்றியும், அவர்களது திருமணம் பற்றியும் இக்கதைகள் கூறுகின்றன.
பிறக்கும் பொழுதே முடித்த கூந்தலும் பேரழகுமுடையதாய் இருந்த குழந்தை ஆடகசவுந்தரியின் கழுத்தடியில் இருந்த அமங்கலமான பெரிய மறுவொன்று நாட்டுக்குத் துர்ச்சகுன மென்று சோதிடர் கூறிய படியால், மன்னர் குழந்தையைப் பேழையில் வைத்துக் கடலில் விட்டாரென்று ஒரு கதை.
* கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறை
விரிவுரையாளர்.

நிவேதினி
இந்த மன்னர், இந்தியாவின் கலிங்க நாட்டின் வடக்கே அசோக் கிரியைத் தலைநகரமாகக் கொண்ட பேரரசர் அசோகசுந்தரர். அவரது மனைவி மனோன்மணி சுந்தரி. இவர்களது மருமகனே குளக்கோட்டன் என்பது மற்றொரு தகவல்.
மனுநேயகயவாகுவின் வளர்ப்பு மகள் தான் ஆடகசவுந்தரி என்கிறது வேறொரு தகவல். மிதந்து வந்த பேழையிலிருந்து மனுநேய கயவாகுவால் எடுத்து வளர்க்கப்பட்ட குழந்தையே ஆடகசவுந்தரி.
ஆடகசவுந்தரியின் கழுத்தின் கீழ் இருந்த மறு அவளுடைய நூறு வயதுக்குப் பின்பு இராமச்சந்திர தீர்த்த விசேடத்தினால் அழியுமென்றும், அதுவரை அவளுடைய பேச்சு, செயல் யாவும் ஒரு வீரனுக்குரியவை போன்றே இருக்குமென்றும், திருமணத்தைப் பற்றியே சிந்திக்க மாட்டாளென்றும், இந்த மறு அழிந்த பின்னரே சிறந்ததோர் ஆடவனைத் திருமணஞ் செய்து தனது 117 வது வயதில் ஒரு புத்திரரைப் பெறுவாள் என்றும் முனிவர் கூறியதாகக் கதை.
முன்முடி , முன்முலை என்று கூறப்படுகின்ற மறு அழிந்த பின்னர்தான் பெண்களுக்குரிய அச்சம், மடம்; நாணம், பயிர்ப்பு என்ற நாற்குணங்கள் இவளிடத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் என்பதும் முனிவர் கூறியது தான்.
இக்கதைகளினுாடாக ஆடகசவுந்தரியின் ஆளுமையையும், ஆளுமையில் ஏற்படும் மாற்றங்களையும், இந்த ஆளுமையுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்ற ஆடகசவுந்தரியின் மறு பற்றிச் சிந்திப்பதும், இவற்றின் உருவாக்கங்களுக்கான பின்புலங்களை விளங்கிக்கொள்வதும் புதிய பார்வைகளுக்கு வழிவகுப்பதாக இருக்கும்.
கடந்த காலத்துக்குரிய கட்டுக்கதைகளை மரபைப் பேணும் நோக்கில் பயன்படுத்துவதிலிருந்து சமகாலச் சிக்கல்களை விளங்கிக்கொள்வதற்கும் , வெளிப்படுத்துவதற்குமுரிய வளமாகப் பயன்படுத்துவது பற்றிய சிந்தனையில் அல்லது விவாதத்தில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்களை அல்லது முரண்பாடுகளை விளங்கிக்கொள்வது அவசியமாகின்றது.
101

Page 52
நிவேதினி
அதுவும் அடையாளங்களைப் பேணியேயாக வேண்டிய யதார்த்தத்தின் நெருக்குதல்களுக்கும், அடையாளங்களைக் களைந்து கொள்ளல் என்ற சமகால மேற்கத்தைய நவ திக்கத்திற்கான தயாரிப்புக் கோட்பாடுகளின் திணிப்புகளுக்கும் டையில் அகப்பட்டுச் சிந்திக்கத் துரண்டப்பட்டதன் விளை வாகச் சில தற்புதுமையான கருத்துக்கள் முகிழ்த்தெழுவதும் இயல்பாயிற்று. இத்தகைய சூழல் சார்ந்த சிந்தனைப் போக்குகள் வளர்த்தெடுக்கப்படுவதும் அவசியமாகின்றது.
இலக்கியத்தில் பொதுவாக அவலப் பாத்திரங்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது "நற்பண்புமிக்க பாத்திரம் நலிவடைதல்” என்று கொள்ளப்படும். சகல வல்லமைகளும் முழு நிறைவு முடையதாகத் தோன்றும் பாத்திரம் விதிவசத்தாலோ அல்லது தன் தவறாலோ கையது நிலைக்குத் தள்ளப்படும். வானத் திற்கும் பூமிக்குமிடையில் அப்பாத்திரம், இழப்பதற்கென்று அதனிடத்தில் எதுவுமே எஞ்சியிருக்காது. அது "என்புதோல் போர்த்தவுடல்” அவ்வளவுதான். வரலாற்றில் ஆடகசவுந்தரியின் நிலையும் அவ்வாறுதான்.
அரசியானாலும் மரபு ரீதியான பெண் பற்றிய படிமங்களுக்குப் பொருந்தும் வகையில் மாறிவரும் பொழுதே அவள் காதலிக்கப்படுவதற்கு உரியவளாகக் கணிக்கப்பட்டுள்ள கருத்துருவம் நன்கு வெளிப்படுகின்றது. இந்த வகையில் ஆடகசவுந்தரியும் அவலநாயகியாகக் கணிக்கப்படத்தக்கவள் ஆகின்றாள். குளக்கோட்டனை மணமுடிக்கும் தறுவாயில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்குணங்களும்" மேற்கிளம்ப, மீதி ஆளுமைகள் அத்தனையும் ஆடகசவுந்தரி இழந்திருந்தாள். அவை உதிர்ந்து போயிற்று அல்லது உள்ளுறைந்து போயிற்றாP என்பது ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியது.
ஆடகசவுந்தரி பூதப்படை உடையவள், இராம கோத்திர முள்ளவள். அந்த அரசியின் பருவம் நூற்றாண்டுக்கு மேல் இருக்க வேணும். இப்போதும் வாலமங்கையாயிருக்கிறாள். மண முறையில்லை. அந்த அரசியோடு போர் செய்து வெற்றியடைய இயலாது. நாங்களிருவரும் உன்னரசு கிரிக்குச் சென்று அரசியோடு சமாதானம் பெற்று வாழவேண்டும் மறுப்புரை சொல்லக்கூடாது.
(மட்டக்களப்பு மான்மியம்)
102

நிவேதினி
தட்சணாகிரி நோக்கிய ஆடகசவுந்தரியின் படையனுப்புதலை எதிர் கொள்ள அனுரதன்புரி அரசனான தெத்தீசனைச் சந்தித்த குளக்கோட்டனை நோக்கி தெத்தீசன் மேற்கூறியவாறு கூறியதாக மட்டக்களப்பு மான்மியத்தில் காணக்கிடக்கிறது. இது அரசி ஆடகசவுந்தரியின் ஆளுமைச் சிறப்பைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
தெத்தீசனுடன் குளக்கோட்டன் உன்னரசு கிரிக்குச் சென்று ஆடகசவுந்தரியைக் கண்டு தங்களுடைய உறவுமுறையைத் தெரிவித்தனர். ஆடகசவுந்திரியும் மனமகிழ்ச்சி கொண்டு தனது சந்ததியாரென்று சிம்மாசனம் விட்டிறங்கி இருவரையும் ஆசிர்வதித்து அமரச் செய்து மூவருமாகப் பேசி, வைதுரலிய மென்னும் சைவ சமயத்தைப் பற்றிக் குளக்கோட்டனிடம் கேட்டறிந்து ஆச்சரியமுற்றுத் தானும் அந்தச் சமயத்தில் இருக்க விரும்பினாள். இந்தச் செயற்பாட்டில் ஆடகசவுந்தரியின் முதன் மந்திரியாரின் பங்கு மிக முக்கியமாக இருப்பதனையும் இது பற்றிய தகவல்களில் இருந்து அறிய முடிகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஆடகசவுந்தரி கண்ட கனவுகள் பற்றி மட்டக்களப்பு மான்மியத்தில் கூறப்பட்டுள்ளனவற்றுள் இக்கட்டுரைக்குத் தேவையான பகுதிகளைப் பார்ப்போம்.
ஒரு சமயம் ஆடகசவுந்தரி பாங் கிமாருடன் மஞ்சத்தில் சயனித்திருக்கும் நேரத்தில் இராமமூர்த்தி பிரசன்னராகி, அரசிக்கு நூற்றியிருபது பருவம் ஆயுள் என்றும், நூற்றுப் பதினேழாவது பருவத்தில் ஒரு புத்திரனைப் பெறுவாளென்றும் சொல்லி மறைந்தார்.
பிறிதொரு கனவில்,
காசி அவிமுத்தி நீர் கலந்த நதி உன்னுடைய ஆச்சிரமத்திலிருக்கிறது. அந்த நதியை அறிய வேண்டில் பசும் சேறாயிருக்கும். குஸ்டரோகிகள் ஸ்நானஞ் செய்தால் உடனே நோய் தீர்ந்து போகுமென்று இராமபிரான் கூறி மறைந்தார்.
அரசியும் அந்நதியைக் கண்டறிந்து அதில் ஸ்நானஞ் செய்ய அவருடைய மூன்றாவது முலை மறைந்து போயிற்றென்றும், அரசியும் பெண்ணியல்பு கொண்டவளாக இருந்தாரென்றும்
103

Page 53
நிவேதினி
அன்றுமுதல் அந்த நதியும் மாமங்கை நதியென பெயர்பூண்ட தென்பதும் தகவல்கள். இதனை இப்பொழுது மாமங்கம் என்று அழைக்கின்றனர்.
இவ்வாறாக புனித தீர்த்தத்தில் நீராடிய ஆடகசவுந்தரியின் மூன்றாவது முலை மறைய, "பெண்களுக்கிருக்க முடியாத இயல்புகள் மறைய, அரசியார் பெண்களுக்கேயான இயல் புடையவராக மாறிப்போனார் என்பதை அறிய முடிகிறது.
பெண் ஆளுமையின் "அதீதத் தன்மையை அவள் திருமணம் முடிக்கும் வரையில் விகாரச் சிறப்பாக ஏற்றுக்கொள்ளும் ஆணாதிக்க நிலைப்பட்ட சமூகப் பார்வை, அவள் திருமண பந்தத்தில் ஈடுபட முற்படும்பொழுது அவளை மரபு ரீதியான நாற்குணங்களுடன் அல்லது 'நற்குணங்களுடன் தான் ஏற்றுக்கொள்கின்றது.
இதற்காக அவள் 'புனித தீர்த்தங்களில் மூழ்க வேண்டி யிருக்கிறது அல்லது சுய ஆளுமைகளை உள்ளுறைய வைக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு அல்லாதவர்கள் ஆண்தன்மை கொண்டவர்களாகவே அழைக்கப்படுகின்றார்கள். "ஆண்மூச்சுக் காறியள்’ என்ற பேச்சுவழக்கிலுள்ள சொற்பிரயோகம் இதனை நன்கு வெளிப்படுத்தும்.
மேலும், குடும்ப இயக்கத்தினை வீட்டின் அகத்தும், புறத்தும் நிகழ்த்துபவர்களாக பெண்கள் விளங்குகின்ற பொழுது அக்குடும்பத்தை "பெண் மூச்சுக்கொண்ட குடும்பம்" என்று அழைப்பதும், "பெண் மூச்சுக்கொண்ட குடும்பம் உய்யாது” என்ற பேச்சு வழக்கிலுள்ள மரபுத்தொடர் சுட்டி நிற்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. V
மூன்றாவது முலை அல்லது மும்முலை பற்றிய தகவல்கள் தமிழரது சமூக வரலாற்றில் இது தவிர, வேறிரு இடங்களில் வருவதும் அவதானிக்கத்தக்கது.
ஒன்று, பாரத இதிஹாஸத்தில் இடும்பன், இடும்பி கதையில், வீமனைச் சந்திக்கும் வேளையில் இடும்பியின் மூன்றாவது முலை மறைகிறது. மற்றையது, திருவிளையாடற் புராணத்தில் தடாதகைப் பிராட்டியார் பரமசிவனைச் சந்திக்கும் வேளையில் மூன்றாவது முலை மறைகிறது.
104

நிவேதினி
இடும்பியின் நிலையினை பாரத அம்மானை கீழ்க்கண்டவாறு சித்திரிக்கின்றது.0
வேளுக்கொப்பா மிடும்பன் மிக்கதங்கைப் பார்த்து இங்கே மனித ரியக்கம்போற் காணுகுது அங்கே நீயும் ஆராய்ந்து வாவெனவே சென்றா ளவளுந் திறமாக அவ்வனத்தே கண்டாளவள் தானுங் கருத்துடைய வீமனைத்தான். அங்கவட்கு மூன்றுமுலை யாயிருப்ப நாள்தோறும் மங்கை சிவனைநோக்கி வருந்தித் தவசுநிற்க ஈசுரனார் தோன்றியுனக் கென்னவரம் வேணுமென்றார். நேசமுடன் வாணுதலா ளரிரண்டுமுலை இங்கெனக்குத் தாருமென யீசுரனா ரப்பொழுது உன்கணவனைக் கண்டாலுனக்கு இரண்டுமுலை
யாமெனவே அன்பாய் வரங்கொடுத்தா ரரனாரு மப்பொழுது அந்தப்படியேதான் அருள்வீம சேனனைத்தான் வந்துதான் கண்டவுடன் மானார்க் கிரண்டுமுலை சிறந்திருக்கக்கண்டு செய்யிளையு மப்பொழுது அறிந்து தன்பத்தா விவர்தா மெனவறிந்து என்சொரூபந்தானு மெனக்கிப்போ பளபளென அன்பான லெட்சுமிபோ லாகநான் வேணுமென்ன அக்கணந்தன்னி லரன்மாது தான்தோன்றி தான்மகிழ்ந்து பூமாத தையலுக்கவ் வரமீந்து கமலவல்லி என்று சொல்லிக் காரிகைக்கு நாமமிட்டுப் போனாளோ.
தடாதகைப் பிராட்டியாரின் நிலையை திருவிளையாடற் புராணம் கீழ்க்கண்டவாறு சித்திரிக்கின்றது-)ே
மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன்
மைந்தற் பேறு தகவிந்த மகஞ்செய்தே னதுவுமொரு பெண்மகவைத்
தந்த தந்தோ முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலை மூன்றாய்
முகிழ்ந்து மாற்றார் நகவந்த தென்னேயோ வென்றுவகை யிலனாகி
105

Page 54
நிவேதினி
நலியு மெல்லை. மன்னவதின் றிருமகட்கு மைந்தர்போற் சடங்கனைத்தும்
வழாது வேதஞ் சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி
சூட்டு வாயிப் பொன்னனை யாள் தனக்கிறைவன் வரும்பொழுதோர்
முலைமறையும் புத்தி மாழ்கேல் என்னவர னருளாலொர் திருவாக்கு விசும்பிடைநின்
றெழுந்த தன்றே.
இவ்வாறாகப் பிறப்பெடுத்து வளர்ந்த தடாதகைப் பிராட்டி யாரிடம் திருமணம் பற்றிய பேச்செடுத்த பொழுது,
அன்னை நீ நினைத்த வெண்ணம் ஆம்பொழு தாகும் வேறு பின்னை நீ யிரங்கல் யான்போய்த் திசைகளும் பெருநீர்
GoÕDolls) என்னது கொற்ற நாட்டி மீள்வலிங் கிருத்தி யென்னாப் பொன்னளிர் மலர்க்கொம் யன்னாள் பொருக்கென வெழுந்து
போந்தாள்.
தேம்பரி கோதை மாதின் றிருவுளச் செய்தி நோக்கி ஆம்பரி சுணர்ந்த வேந்தர் அமைச்சரும் பிறரும் போந்தார் வாம்பரி கடாவித் திண்டேர் வலவனுங் கொணர்ந்தான் வையந்
தாம்பரி வகல வந்தாள் ஏறினாள் சங்க மார்ப்ப.
ஆர்த்தன தடாரி பேரி யார்த்தன முருகு மொந்தை
ஆர்த்தன வுழுக்கை தக்கை யார்த்தன படகம் பம்பை ஆர்த்தன முழவந் தட்டை யார்த்தன சின்னந் தாரை ஆர்த்தன காளந் தாளம் ஆர்த்தன திசைக ளெங்கும்.
மேவி யாகவப் பாரிடைப் பாரிட வீரரை யமராடி
ஓவி லாவலி கவர்ந்தது மன்றினி யுருத்தெவ ரெதிர்த்தாலுங் தாவி லாவலி கவரவு மடங்களின் தனிப்பினா வெனநிற்குந் தேவி யார்திரு வுருமுஞ் சேவகச் செய்கையு மெதிர்கண்டான்.
ஒற்றை வார்கழற் சரணமும் பாம்பசைத் துடுத்தவெம்
106

நிவேதினி
புலித்தோலுங் கொற்ற வான்மழக் கரமும்வெண்ணிறனி கோலமுந்
நூன்மார்புங் கற்றை வேணியுந் தன்னையே நோக்கிய கருணைசெய்
திருநோக்கும் பெற்ற தன்வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டியு
மெதிர்கண்டான்.
கண்ட வெல்லையி லொருமுலை மறைந்தது கருத்தினாண்
மடனச்சங் கொண்ட மைந்திடக் குனிதர மலர்ந்தபூவ் கொம்பரின்
ஒசிந்தொல்கிப் பண்டை யன்புவந் திறைகொளக் கருங்குழற் பாரமும்
பிடர்தாழக் கெண்டை யுண்கணும் புறவடி நோக்கமண் கிளைத்துமின் னெனநின்றாள்.
மேற்படி மூன்று சந்தர்ப்பங்களிலும் ஆணுக்கொப்பான ஆளுமையுடன் மும் முலையுடன் அல்லது முன் றாவது முலையுடன் கூடியவர்களாகச் சித்திரிக்கப்படுகின்ற பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமானவர்கள் என்று சொல்லப்படு கின்றவர்களைக் கண்ணுற்ற கணங்களில் மூன்றாவது முலையின் மறைவையும், மரபு வழியாகச் சித்தரிக்கப்பட்டு வருகின்ற பெண் இயல்புகளான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவற்றின் வெளிப்பாட்டையும் அவதானிக்க முடிகிறது. %
இம்மூன்று சந்தர்ப்பங்களிலும் பெண் என்பவள் மனிதப் பிறவியாக இருந்தாலென்ன, அரக்கியாக இருந்தாலென்ன, கடவுளாகத்தான் இருந்தாலென்ன மூன்றாவது முலையின் மறைவுடன் ஆண் ஆளுமைகளின் நிழலில் வாழ்பவர்களாகவே பார்க்கப்பட்டிருக்கின்றனர்.
பொருத்தமான ஆண் இல்லாத இடத்தில் இந்த இடத்தை நிரப்ப ஆளுமைமிக்க பெண் தேவைப்படுகிறாள். பொருத்த மான ஆண் வாய்க்கப் பெற்றதும் பெண் மரபுரீதியான இயல்பு" வாழ்க்கைக்கே தள்ளப்பட்டு விடுவதையும் இங்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
107

Page 55
நிவேதினி
யதார்த்த வாழ்க்கையில் ஆளுமைமிக்கவர்களாகக் காணப்பட்ட பெண்கள் பற்றிய தகவல்கள், கதைகள் கட்டுக்கதைகள், ஐதிகங்கள், புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள் என தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும்பொழுது அதுவும் ஆண்நிலைப்பட்ட சமூகத்தில் இந்தப் படைப்பாக்கம் நிகழும் பொழுது அது ஆணாதிக்கக் கருத்தியலை வற்புறுத்துவதாகவே இருக்கும்.
இங்கு எடுத்துக் கையாளப்படுகின்ற மூன்று சந்தர்ப்பங்களிலும் மூன்றாவது முலை மறையும் கணத்திலேயே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்குணங்களும் தோன்றுகின்றன. மேலும் மூன்றாவது முலையுடைய பெண் ஆண்மைக் குணங்களை உடையவளாக இருக்கிறாள். மூன்றாவது முலை மறைந்தவளே பெண்மைக் குணங்களை உடையவளாக இருக்கிறாள என்பதாகவே சித்திரிப்புக்கள் அமைந்திருக்கின்றன.
இந்த நிலையில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு மற்றும் ஆண்மை,பெண்மை என்ற கருத்துருவாக்கங்களின் சூத்திர தாரிகளே மூன்றாவது முலையின் உருவாக்கத்திற்கும் சூத்திர தாரிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
மேலும் ஒரு பிடி மண்ணிலிருந்து மனிதர் படைக்கப்படுவ தாகவும் நம்பிக்கையுள்ளது. இந்தப் பிடிமண்ணில் மிஞ்சியவை உடலின் புறவளரிகளாக காணப்படுகின்றதாகவும் நம்பப் படுகிறது. இப்புறவளரிகள் கிராமிய வழக்கில் 'மிச்சமண்' என்றழைக்கப்படுகிறது. ஆடகசவுந்தரியின் மூன்றாவது முலையும் "மிச்சமண்ணாகக்"(3) கருதப்பட்டால், இவ்வாறான புறவளரிகள் உள்ளவர்களின் உயிரியல் சார்ந்த விளக்கங் களையும் உளவியல் சார்ந்த வியாக்கியானங்களையும் கவனத்திற்கொள்வதும் அவசியமானதாகும்.
இங்கு உயிரியல் சார்ந்த விளக்கங்களும், உளவியல் சார்ந்த வியாக்கியானங்களும் ஆண்நிலைப்பட்ட கருத்தியலைக் கொண்டிருப்பின் அவையும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டி யவையே. ஏனெனில் ஆண் பற்றியதும் பெண் பற்றியதுமான ஆதிக்கநிலையிலுள்ள கருத்துருவங்கள் வரலாற்றோட்டத்தில் ஆதிக்கநிலையை எடுத்துக்கொண்ட ஆண்களது உருவாக்க ங்களேயன்றி சுயாதீனமான வளர்ச்சிப் போக்கன்று.
108

நிவேதினி
ஒரு பிடி மண்ணிலிருந்து மனிதர் படைக்கப்படுவது பற்றிய நம்பிக்கையுடனும், உலகில் பெண்களது அவல வாழ்க்கை யுடனும் தொடர்புடையதான "பெண்ணாய்ப் பிறப்பதைவிட ஒரு பிடி மண்ணாய்ப் பிறக்கலாம்” என்ற பேச்சுவழக்குக் காணப்படுவதும் கவனத்திற்குரியது.
ஆண்நிலைப்பட்ட கருத்துருவாக்கங்களும், அவை வடிவமைத் திருக்கின்ற வாழ்க்கை முறைகளும் இப்பொழுது கேள்விக குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவையுங்கூட சூழல் சார்ந்ததாகவும், சூழலுக்கு அந்நியமானதுமான தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த முரண்பாடுகள் களையப்பட்டு ஆடகசவுந்தரி பற்றிய புதிய பார்வையின் தேவை அவசியமானதாக உணரப்படுகிறது.
தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் மூன்றாவது கண் ஞானத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. மூன்றாவது கண்ணின் திறப்பு அறிவின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. இது பிரபல்யம் மிக்கதாகவும் விளங்குகிறது. ஐதீகங்கள், கட்டுக்கதைகள், புராணங்கள், இதிகாசங்கள் என்பன இவற்றிக்கு ஆதாரங் களாக அமைகின்றன.
இதனைப் போலவே மூன்றாவது முலை பற்றியும் ஐதீகங்கள், கட்டுக்கதைகள், புராணங்கள், இதிகாசங்கள் என்பவற்றில் காண முடிகிறது. ஆனால் அது பிரபல்யம் பெற்றதாக இல்லை. மாறாக மூன்றாவது முலையின் இருப்பு அசாதாரண மாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க முடியும். அதாவது ஐதீகங்கள், கட்டுக்கதைகள், புராணங்கள், இதிசாசங்கள் என்பவற்றில் மூன்றாவது கண் பற்றிய தகவல்கள் ஆண் சார்ந்ததாகவும், மூன்றாவது முலை பற்றிய தகவல்கள் பெண் சார்ந்ததாகவும் இருக்கின்றன.
இந்த இரு வேறுபட்ட நிலை காரணமாகவே, ஆணாதிக்க முடையதாக இயங்கி வந்திருக்கின்ற சமூகத்தில், ஆண் சார்ந்த மூன்றாவது கண் அறிவின் வெளிப்பாடான உன்னதமாகவும், ஆளுமையின் வெளிப்பாடான பெண் சார்ந்த மூன்றாவது முலை அசாதாரணமாகவும் கொள்ளப்பட்டிருக்கிறது.
109

Page 56
நிவேதினி
உண்மையில் மூன்றாவது முலை என்பது ஆணாதிக்க சமூகத்தில் ஆளுமைகள் உள்ளுறைய வைக்கப்பட்டு அதுவே இயல்பானதென்று நம்பவைக்கப்பட்டு வாழவிடப்பட்டிருக்கும் பெண்களது உள்ளுறை ஆற்றல்களின் வெளிப்பாடுகளின் குறியீடாகவே கருத முடியும்.
இவ்வாறாக அடக்கு முறைக்குள்ளாகும், அடையாளங்கள் கேள்விக்குள்ளாகும் ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையா ளத்தை நிலைநிறுத்துவதனுTடாக தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்துவது பற்றிய சிந்தனையில் மரபு ரீதியான தளைகளை இனங்காணுதலும், நீக்குவதற்கான நடவடிக் கைகளை முன்னெடுத்தலும் குறிப்பிட்ட அந்தச் சமூகத்தின் அகவயமானதொரு கடமையாகும். இதன்போது மரபு ரீதியான கருத்தியல்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு புதிய பரிமாணத்தைப் பெற்றுக்கொள்ளும்.
இந்த வகையிலேயே பொதுவாக ஈழத்தமிழரதும், குறிப்பாகக் கிழக்கு மாகாணத் தமிழரதும் பண்பாட்டு அடையாளத்தை வலுவாகப் பிரதிநிதிப்படுத்தக் கூடியதொரு பண்பாட்டுக் கூறாக ஆடகசவுந்தரி வரலாறு இருப்பதன் காரணமாகவே அதன் புதிய பரிமாணம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன.
1 1 በ

நிவேதினி
உசாத்துணை நூல்கள்
1. பாரத அம்மானை 2. திருவிளையாடற் புராணம் 3. திருவிளையாடற் புராணம்
குறிப்புகள்
1. பாரத அம்மானையில் மேற்படி ஜதிகம் பற்றிய தகவலைக் கூறி பாடற் குறிப்பினையும் தந்துதவியவர் வித்துவான் சா. இ. கமலநாதன். 2. திருவிளையாடற் புராணத்தில் மேற்படி ஜதிகம் பற்றிய
தகவலைக் கூறியவர் கவிஞர் சு. வில்வரத்தினம். 3. "மிச்சமண்” பற்றிய தகவலைக் கூறியவர் பெ. அருள்நாயகி.
111

Page 57
ஓரினப் பற்கள்
கோகிலா மகேந்திரன்
எனக்கு இப்ப கொஞ்சக் காலமாக எப்பவுமே முகமும் வாயும் கண்ணும் கடுகடு, சிடுசிடு எண்டு தான் இருக்கு. உள்ளுக்கை ஒரு பாம்பு இருந்து கொத்திக் கொத்தி நெஞ்சுச் சுவர்களைப் பிளக்கிற மாதிரி வலிக்குது. எதை நினைச்சாலும் மனம் கசக்குது. இந்த மரங்கள் எல்லாம் என்னை நெருக்கிக் கொண்டு கிட்ட வாற மாதிரிக் கிடக்குது. யாருக்காவது என்ரை கதையைச் சொல்லாட்டி, என்ரை இதயம் வீங்கி வெடிச்சுப் போடும் போலை இருக்குது.
நான் படிச்ச பொம்பிளைதான். ரைப்பிஸ்டா வேலையும் பாத்தனான். கலியாணத்தோடைதான் மாப்பிளை வீட்டார் கேட்டபடி வேலையை விட்டனான்.
அடி வானத்திலை நெருப்புப் பிடிச்ச மாதிரிச் சிவத்தை ஒளி படர்ந்திருந்த ஒரு பின்னேரத்திலை தான் அவன் எனக்குத் தாலி கட்டினவன். தாலி கட்டேக்கை என்ன கண்ணை மூடிக் கொண்டே கட்டினவன்? என்னைப் பிடிக்கேலை எண்டா அந்த நேரமே தாலியையும் கொண்டு எழும்பிப் போயிருக்கலாம். முதுகெலும்புள்ள ஆம்பிளையாப் பிறந்தவன் ஒருத்தன் அப்படித்தான் செய்திருப்பான். அதை விட்டிட்டு
அப்ப என்ரை அண்ணைமார் குடுத்த காசைக் கண்டிட்டுப்
பல்லை இழிச்சுக் கொண்டு வந்தான். நான் எவ்வளவு கனவுகளோடை இருந்தனான் எண்டு சொல்லி விளங்கப்படுத்த ஏலாது. இப்ப. பனி விழுகிற காலமை எண்டாலென்ன
மெல்லிய வெளிச்சம் விழுகிற பின்னேரம் எண்டாலென்ன அழ ஏலும் என்னாலை. உங்கள் ஒருத்தராலையும் ஏலாது.
அவன்ரை மீசை என்ரை நெத்தி நரம்புகளிலை புடைக்குது. அவன்ரை காசு விழுங்கிக் கண் என்ரை கண்ணுக்குள்ளை எரியுது. என்ரை உணர்வுகள் என்ன மாதிரி நார் நாராகக் கிழிஞ்சு போச்செண்டு உங்களுக்கு விளங்காது. ஏன்? எனக்கென்ன வெக்கம். உண்மையைச் சொல்றன். கலியாணஞ்

நிவேதினி
செய்து மூண்டு வரியம் . நான் ஒரு நாளும் ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்கேல்லை. அவனுக்கு ஆண்மையே இல்லை. அதைச் சொல்லாமல் ஒழிச்சுப் போட்டினம். கொஞ்சம் பொறுங்கோ. எனக்குக் கண் நிறைஞ்சு கொதி தண்ணி வடிது கன்னத்திலை. அவசரப்படுத்தாதேங்கோ. கொஞ்சம் பொறுத்துச் சொல்லுறன்.
மெளனம் ஒரு சோக்கான போர்வை இல்லையே! எனக்குள்ளை முறிஞ்சு போய்க்கிடக்கிற மனத்துண்டுகளைப் பொறுக்கி எடுத்துத்தர உங்கள் ஒருத்தராலையும் ஏலாது. முக்கியமான விஷயத்தைச் சொல்லாமல் ஒழிச்சு என்னைக் கட்டி ஏமாத்தி னதைக் கூட நான் மன்னிச்சிருப்பன். நான் அவனோடை ஒரு நல்ல சகோதரி போலை இருந்திருப்பன். ஆனால் அவன் என்ன சொல்றான் தெரியுமோ! நான் காகக் கறுப்பாம். வடிவில்லையாம், முகமெல்லாம் பருவாம், சொண்டு தடிப்பாம், கட்டையாம் அதைப் பார்க்கத் தனக்கு வாற வெறுப்பிலைதானாம் தனக்கு ஒண்டும் விருப்பமில்லாமல் இருக்காம். இல்லாட்டித் தான் திறமான ஆம்பிளையாம். இப்படி அவன் சொல்றதைக் கேக்க. எனக்குச் சும்மா கண்ணுக்குத் தெரியாத சாட்டையாலை எனக்குள்ளை ஆரோ பளிர் பளிர் எண்டு அடிக்கிற மாதிரிக் கிடக்கு. அதுதான் கேட்டனான், இவன் எனக்குத் தாலி கட்டேக்கை ஏன் கண்ணை மூடிக் கொண்டு கட்டினவன் எண்டு! வீடியோக் காறன்ரை வெளிச்சத்துக்குப் பயந்து கண்ணை மூடினவனாமே?
எத்தனையோ காட்சிகள் என்ரை மனதிலை ஒரே நேரத்திலை 6) (Ug . . . . . . . . . அல்லது ஒரே காட்சி கண நேரமா ஸ்ரில் போட்டது போல் நிக்குது. எனக்கு ஒரு வேளை விசர் வந்திட்டுதோ எண்டு யோசிக்கிறன். அப்படியும் தெரியேல்லை. இப்ப கொஞ்ச நேரம் நான் ஒண்டும் கதைக்காமல் சூனியத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தன் தானே, அப்ப. இந்த இடத்தைச் சுத்தி ஒரு நிசப்பதம் தானே இருந்ததுP அந்த நிசப்பதமே பெரிய குண்டுச் சத்தம் போலை என்னைத் தாக்குது!
மனைவி எண்ட இடத்திலை எனக்கு ஒரு சந்தோஷமும் தராத அவன் என்னை ஒரு வேலைக்காரி மாதிரி வைச்சிருந்தான். அவன் வேலைக்குப் போய்வர நான் நேரத்துக்கு நேரம் சமைச்சுப் போடவேணும். அந்தச் சமையலையாவது அவன்
113

Page 58
நிவேதினி
சந்தோசமாய்ச் சாப்பிட்டிருக்கலாம். 'நல்லாயிருக்கு’ எண்டு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். ஒரு நாள் "உப்பில்லை" எண்டான். மற்ற நாள் "உறைப்புக் கூடிப் போச்சு" எண்டான். தன்ரை குறைபாட்டை மறைக்கப் பல முக மூடியளைப் போட்டுக் கொண்டு என்னிலை எதுக்கும் குறை பிடிச்சான். என்னாலை தாங்க முடியேல்லை. நானும் அவனும் சாதாரண தொனியிலை கதைக்கிறதே இல்லை எண்ட மாதிரி நிலை வந்திட்டுது. கனவுத் தண்ணி எல்லாம் வெளிலை வழிஞ்சு இறுகிப் போன என்ரை மனநிலத்திலை எப்படி இனிய சொல்லுப் பயிர் முளைக்கிறது? இயற்கையின்ரை ஒவ்வொரு கூறும் தனக்குத் தானே இரக்கம் பார்க்க முடியாமல் திணறிறது மாதிரித்தான் எனக்குத் தெரிது!
நான் ஒரு வீட்டுக்கு வேலைக்காறியாப் போறெதண்டால், எனக்குச் சம்பளம் தரவேணும் அவன். வேலைக்காறி உத்தியோகம் வேணுமெண்டு நான் ரைப்பிஸ்ட் உத்தியோகத்தை விடேல்லை. அவன்ரை "சேல்ஸ்மன் உத்தியோக மண்ணாங் கட்டிக்கு இரண்டு லட்சம் சீதனம் குடுத்துப் பிறகு அதுக்கு வட்டியா வேலையும் செய்ய வேணுமோ நான்? மயிர்!
எனக்குள்ளை சரியான கோவம் . சரியான கவலை. சொல்ல ஏலாத விரக்தி எழுச்சிகளின்ரை அலைமோதலை என்னாலை தாங்க முடியேல்லை. இரவிலை சுவருக்குள்ளை போக முயற்சிக்கிறது மாதிரி, சுவரை உதைஞ்சு கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளுவன்.
ஆரிட்டைச் சொல்லுறது நான்? பெத்த தாய் எண்டு அம்மாட்டை ஒரு நாள் எல்லாத்தையும் சொல்லி அழுதன்.
கல்லெண்டாலும் கணவன் புல்லெண்டாலும் புருஷன் பிள்ளை நீ படிச்ச பிள்ளை, மற்றவை சிரிக்கத்தக்கதாக நடக்கப்பிடாது. தொட்டுத்தாலி கட்டின ஆம்பிளையை விட்டிட்டு ஒண்டும் செய்ய ஏலாது. நீ ஒரு மாதிரிச் சரிக்கட்டி நட
எண்டு அவ சொல்லிட்டா சுகமா! "ஐயோ தொட்டுத் தாலி கட்டினவன் ஆம்பிளையா இல்லையே அம்மா” எண்டு கத்த நினைச்சன் கத்தேல்லை. அம்மா ஆறு பிள்ளைப் பெத்தவ. அப்பர் அவவை "ராசாத்தி மாதிரி வைச்சிருந்தவர். அவக்கு
114

நிவேதினி
எப்பிடி நான் சொல்றது விளங்கும்?
என்ரை பயங்கரத் தனிமையிலை, ஏக்கங்களும், அவமான ங்களும் துக்கங்களுந்தான் எனக்குத் துணையாய் இருந்தது. அறணை ஒண்டு என்ரை கால்லை விழுந்து விழுந்தடிச்சு ஓடினாக் கூட ஒரு உயிர் என்னைத் தொடுது எண்டு நான் சந்தோஷப்படுகிற நிலை வந்திட்டுது. நான் நிக்கிற இடம், இருக்கிற இடம், படுக்கிற இடமெல்லாம் நெருஞ்சி முள்ளுத் தைக்கிற மாதிரி ஒரு உணர்வு. பொம்மர் அடிச்சுக் கட்டிடங்கள் விழுறது என்னை அதிகம் பாதிக் கேல்லை. ஏனென்டால், என்ரை மனதின் ரை உட்சுவரிலை இருந்து கல்லுகள் ஒண்டொண்டா விழத் தொடங்கிட்டுது.
இந்த நேரத்திலை தான் அந்த நாய்க்குட்டியைப் பக்கத்து வீட்டு அன்ரிட்டை வாங்கி வளர்த்தனான். கறுப்பும் வெள்ளையும் மரணத்தைத் தழுவுற ஒரு அந்தி நேரத்திலைதான் அந்தக் கறுப்பு, வெள்ளை நாய்க்குட்டி எங்கடை வீட்டை வந்தது. வந்த உடனமே இருளைப் பிய்த்துக் கொண்டு ஒற்றையா ஒரு அழுகை ஒலம் போட்டு உட்கார்ந்திருந்திது. மொசு மொசு வெண்ட மயிரும் பிரகாசமான கண்களுமாய் நிண்ட அந்த நாய்க் குட்டியைப் பார்க்க. அதைத்தடவிக் கொடுக்க வேணும் எண்ட எண்ணம் வராதவன் மரக்குத்தி!
நான் பால் கரைச்சு வந்து சிரட்டையில் வார்த்துக் கொடுத்தேன். இரக்கம் நனைஞ்ச ஒரு பார்வையாலை என்னைப் பாத்திது. பிறகு வாலை ஆட்டிச்சுது. அது பால் குடிக்கிறதைப் பார்க்க எனக்கு இதயம் நனைஞ்சு போச்சு. அந்தக் கணத்திலை இருந்து அது என்ர பிள்ளை போலை வந்திட்டுது. அருமையான ஆம்பிளைப் பிள்ளை. ஒரு மனிசக் குழந்தைக்குத் தாயாக இருக்க முடியாட்டியும் ஒரு நாய்க் குழந்தைக்குத் தாயாக இருக்கிறது எனக்குள்ளை இருந்த உள்மனப் புகைச்சலை எவ்வளவோ ஆறுதல் படுத்திச்சுது.
ஒரு வெறியோடை வந்து முகத்திலை வாடைக்காத்துப்படுற மார்கழி மாதத்து முன்னிரவு நேரங்களிலை நானும் ஜிம்மியும். அதுதான் என்ரை பிள்ளை போட்டிக்கோக் கட்டிலை படுத்திருப்பம்! அது வெள்ளையும் கறுப்பும். கூடுதலான இடம் பால் போலை வெள்ளை . நான் முழு இடமும் கறுப்பு. ஆனா அது என்னை வெறுக்கேல்லை. நான்
115

Page 59
நிவேதினி
எங்கையும் வெளிலை போயிட்டு வந்தா.. என்னைச் சுத்திச் சுத்தி ஓடி முகம் நிறைஞ்சு சிரிச்சு, காதை உயர்த்தி, காலை நக்கு நக்கெண்டு நக்கி, வால் ஒடியும் வரைக்கும் ஆட்டி . அது போடுற அட்டகாசத்திலை நான் அப்படியே திகைச்சுப் போய் நிண்டிடுவன். நான் இந்த நாய்க் குட்டிக்கு ஒரு சதமும் காசு குடுக்கேல்லை. நான் சாப்பிட்ட மிச்சச் சாப்பாடு தான் குடுக்கிறன். அதுக்காண்டி அது எவ்வளவு அன்பு காட்டுதுP அதுக்காண்டி எண்டு கூடச் சொல்றது பிழை! ஏனெண்டால்.
ஒரே மூச்சிலை சொல்லிக் கொண்டு வந்து களைச்சுப்போனன். ஓ..! அண்டைக்கு ஊரெல்லாம் அடங்கிப் போன ஒரு நரைச்ச இரவு! ஒமோம்.எனக்கு மயிர் பச்சையாய் இருக்கு
வாழ்க்கை தான் நரைச்சு போச்சு! இருண்டு போனது என்ன நேரமோP அல்லாட்டி என் ரை கண்ணோP அண்டைக்குப் பகல் முழுதும் எனக்குச் சரியான காய்ச்சல். அந்தப் போட்டிக்கோக் கட்டில்லையே எழும்பாமல் படுத்திட்டன். ஜிம்மியும் என்னோடையே பட்டினியாக் கிடந்தது. ஒருக்கா நான் எழும்பிக் கக்கூசுக்குப் போகவும், நான் விழுந்தால் தான் ஏதோ துரக்கி விட்டிடுவன் எண்டமாதிரி என்ரை காலோடை நடந்து, என்னோடை உரசி உரசி வந்து, திருப்பிக் கொணந்து விட்டுது. அண்டைக்கு அதுகும் சாப்பிடல்லை. அப்ப. சாப்பாட்டுக்காண்டி எண்டு நான் சொன்னது பிழைதானே!
நிலவும் தனிச்சுப் போய் ஒளியில்லாமல் ஊந்து ஊந்து கொஞ்சம் மேலை வந்த நேரம் தான் அவன் வீட்டை வந்தான்.
"ஏன் சமைக்கேல்லைP” ராசா மாதிரிக் கேட்டான். "எனக்கு சுகமில்லை, காய்ச்சல்” சாதாரணமாகச் சொன்னன். காத்து வேகமாக வீசிச்சுது. இலைகளுக்கிடையாலை வந்த காத்துக் கத்திக் கத்தியே தன்ரை காமத்தைத் தீக்கப் போற மாதிரி ஊளையிட்டுது.
"எளிய நாய்க்கு உந்தச் சொறி நாயோடை படுக்க மட்டும் வருத்தம் இல்லையோ” எண்டு கத்தினான். நான் கண்களை மூடிக் கொண்டு விட்டேன். ஜிம்மி திடீரெண்டு ஈனமாய் ஊளையிட்டுது. அந்தரப்பட்டுக் கொண்டு முழிச்சுப் பார்த்தன். அந்தப் பெரிய கொட்டான் பொல்லாலை எனக்கு விழுந்திருக்க வேண்டிய அடியை ஜிம்மி தன்ரை கழுத்திலை வாங்கி. ஒரு மாவீரன் போலை செத்துப் போச்சு. இடம் மாறின
16

நிவேதினி
கோவம்! நான் வாயை இறுக்கி மூடிப் போட்டன். ஆனால் என்ரை மனதுக்குள்ளை ஒரு வசனம் ஓடிச்சுது
"துலைஞ்சிது சனியன்” எண்டு முணுமுணுத்துக் கொண்ட அவன் உள்ளை போனான். அந்த வீட்டிலை முந்தியே இருந்த அசுத்தமான காத்து இந்தக் குரலாலை இன்னும் கேவலமா அசுத்தமாப் போனதா நான் நினைச்சன்.
வெள்ளைப் பஞ்சிலை சிவத்தை மை ஊத்தினது மாதிரிச் செத்துக் கிடந்த ஜிம்மியைப் பார்க்க எனக்குத் திடீரெண்டு ஒரு பயம் வந்திட்டுது. "துலைஞ்சிது சனியன்” எண்டதுக்குத் துலைஞ்சு போ சனியன் எண்டது தான் அர்த்தம் எண்டு எனக்குள்ளை புரிஞ்சுது. இரண்டு லட்சம் காசும் கரைச்சு முடிச்சாச்சு. இனியேன் சனியனை?
போட்டிக்கோ முழுதும் ஒரு விவரிக்க முடியாத அச்சத்திலை உறைஞ்சு போய்க் கிடக்க நான் வெளிக்கிட்டன். போர்ச் சூழல் குழப்பத்தைக் காட்டி ஆரும் ஆரையும் எப்படியும் ஏமாத்தலாம் எண்டு நினைக்கிறான். காவல்துறையிலை முறைப்பாடு குடுக்கத்தான் வேணும் எண்டு நினைச்சன். ஆனா . அதுக்குப் பிறகு எங்கை போறதெண்டு எனக்கே தெரியேல்லை. ஒரு காகம் ஏதோ பேசிக் கொண்டு மரத்தை விட்டுக் கிளம்பிப் பறந்து போச்சுது. எதிரிலை ஒரு ஒற்றை யடிப்பாதை கால் போற வழியிலை வழி போகுது!
என்னை விலத்திக் கொண்டு போறவை, எனக்கு முன்னாலை வாறவை எல்லாம் ஆத்மாவிலை கரைப்பான ஆக்களோ எண்டு நினைக்கிறன். என்ரை தழும்பை என்ரை மனதாலை அடிக்கடி தொட்டுப் பார்த்துத் தடவிக் கொண்டு நான் நடக்கேக்கைதான் வன் மற்றவன் முன்னாலை வந்தான். என்ரை சின்ன வயதிலை என்னைக் காதலிப்பதாய் ச் சொன்னவன் . தொண்டைக்குள்ளை உட்சுவர் ஒட்டிட்டுது போலை கிடக்குது. கொஞ்சம் தண்ணி தாஹிங்களா?
என்ரை வாழ்க்கைக்கு வெக்கம் இல்லை. என்ரை குரலை நானே கேட்டுக் கொண்டு பேசிக்கொண்டு வந்த நான் இவனோடை நடந்து நடந்து என்ரை கதையைச் சொன்னன் வழியெங்கும் கோலங்களை மண்ணிலை கொட்டினது போலை மர நிழல் விழுந்து கிடந்தது. என்னோடை வந்து கொண்டே
117

Page 60
நிவேதினி
இருந்தவன் என்ரை மனதுக்கு இதமான ஒத்துணர்வுப் பதில்களையும் தந்து கொண்டே வந்தான். நான் என்ரை மனத்தையே கழுவி இவனுக்கு முன்னாலை கொட்டிப் போட்டன்.
நான் சாதி குறைவெண்டு நீயும் உன் ரை கொண்ணன்மாரும் அப்ப வேண்டாம் என்ட னிங்கள், ஆனா நான் இப்பவும் உன்னை அதே மாதிரி காதலிக்கிறன். இல்லாட்டி ஏன் இன்னும், உன்ரை நினைவோடை கலியானம் செய்யாமல் இருக்கிறன்?
எண்டு இவன் கேக்க, நொந்து போய்க் கிடந்த நான் இரண்டாம் முறையாயும் ஏமாந்திட்டன்.
இப்ப மார்கழி மாதம் தாலி கட்டப்பிடாது. நீ அவன்ரை எழுத்தைத் தள்ளிப் போட்டு வா நான் உன்னைக் கண்கலங்காமல் வைச்சிருக்கிறன்
எண்டான் நான் நம்பிட்டன். அந்த நம்பிக்கை எனக்குத் தேவையாயுமிருந்தது.
இப்ப. ஒரு பட்சி வழி தப்பி எங்கையோ அலைஞ்சு கொண்டிருக்கு. அதின்ரை கூவலிலை ஏக்கம் மட்டும் கேக்குது. காத்துக்கு மூச்சு நிண்டு போச்சு.ஏனெண்டால் இலை ஒண்டும் அசையேல்லை.
அன்பு, மகிழ்ச்சி, அமைதி இதெல்லாம் அடையாளம் கூடக் காண முடியாத சொல்லுகளாய்ப் போச்சு என் ரை வாழ்க்கையிலை!
இப்ப. கர்ப்பமுற்ற மேகங்களைக் கொண்ட வானம் மீண்டும் கண்ணிர் சிந்துது. இவன் அந்தக் கண்ணிருக்குத் தான் காரணமில்லை என்றான். நான் ஜிம்மியைப் போலை இன்னொரு நாய்க் குட்டியைத் தேடிக்கொண்டிருக்கிறன்.
கடித்த பல்லுக்குள்ளை சொல்லக் கூடாத சொல்லுகள் நாக்கு நுனியிலை எனக்குத் தவிக்குது.லூ. கன்னங்களிலை எரிநீர் ஓடுது. பற்றி எரியிறனா? எரி நீரிலை மூழ்கிறனாP மண்டை கிர். Ť....... ff. . . . . . . . . Ť......

அக்னி சாட்சி
வத்ஸலா
பணத்திற்கு பதவிக்கு அழகிற்கு பாவிற்கு நிர்ணயிக்கப் படும் விலைகளுக்கு அந்த அக்னி சாட்சி
ஜாதிமதம் ஜாதகம் பொருத்தி மனப் பொருத்தத்தைப் பற்றி எழும் கேள்வியை நாதத்தின் ஒலியில் அமுக்கும் சாமர்த்தியத்திற்கு அந்த அக்னி சாட்சி
சிலரின் வாழ்நாள் சேமிப்பை புளியோ தரையாய் புடவையாய் பூவாய் தங்கத்தோடாய் வெள்ளிக் கிண்ணமாய் குறை கூறிக் கொண்டே மற்றவர் அனுபவிப்பதற்கு அந்த அக்னி சாட்சி
முகமற்ற 'நாலு பேருக்கு முதலிடம் மணம் நடத்துவோருக்கு இரண்டாமிடம் மணமக்களுக்கு கடைசி இடம் என ஒதுக்கிவிட்டு மணம் மணமக்களுக்காக என கெட்டிமேளத்துடன் பறைசாற்றப்படும் பெருத்த பொய்யிற்கு கோடானு கோடி முறை அந்த அக்னி சாட்சி
நன்றி கணையாழி (ஏப்ரல் 1997)
119

Page 61
சிதை ஏறிய சீதையே பேசு!
பீனாஅகர்வால்
சீதா! உன் கட்சிச் சேதியை எடுத்துரை! போதவே நாம் மறு புறக் கதை அறிவோம்!
“வில்லாய்க் கணவன் கை விரல்களில் வளை” எனச் சொல்லித் தந்து, உனைத் துணைவியாய்க் கொடுக்க, உன்
தந்தை வில் ஒடித்த தசரதன் மகனிடம், விந்தை வில் ஒப்ப நீ விநயமாய்ப் பணிந்து, பின் சென்றனை என்னும் செகம்!
வரித்தவனுடனே, வனத்தில் தனித்துத் தரித்ததும், தவித்ததும் கடத்தப்பட்டதும், பின்
அக்கினிப் பரீட்சைக்கு ஆளானதுவும், ஒ! திக்கற்றவளே ! சிறை உனக்கு இரு முறை!
மனம் வேகாமல் மலராய் மாறுமோ அனலால் ? நீயோ அப்படி ஆனதால் கற்புக்கரசியாம், காசினி கொண்டவன் சொற் தவறாத சுடராம்! அண்ணனுக்காய் உயிர் அனலாய்த் துடிக்கும் கார் வண்ணனின் தம்பி, உன் மைத்துனன், கர்ப்பிணி
என்பதும் நோக்காது இருள் வனத்திடை உனை, இன் சொல்லோ தேற்றமோ இயம்பிடாது, அண்ணலும்
சிற்சில மக்களும் செப்பிய கட்டளைக்கு உட்பட்டு விடுத்ததும் ஒண்ணுமோ? நீதியோ?
率 (பீனா அகர்வால், “எக்ஸ்பிரஸ் மகசீன்" என்னும் சஞ்சிகையில் எழுதிய கவிதை (சில்லையூர் செல்வராசனால்) தமிழாக்கம் செய்யப்பட்டது 12.03.86).

நிவேதினி
ஆயினும் அன்புறும் அண்ணி நீ மெளனித்தாய்; வாய்இலாள் ஆன மகள்!
இருட் கானகத்திடை இயற்கைச் செழிப்பில் அருட் காதல் மிகுத்து அன்புடன் ஓம்பித்
தந்தையின் சேனைக்குச் சவால் விடும் தகைமையில் விந்தையாய் வளர்த்த உன் விடலைப் புதல்வர்கள்
இருவரும், வெறும் ஓர் இன் சொல் கேட்டு வருங் காலத்து மகிபராய் ஈர்க்கப்
பட்டனர் தந்தையின் பக்கம்! நீ பின்பும் பட்ட பூ! கற்பினில் பங்கப் பட்டவள் ! இரும் பொறை அன்னையே இரு கரம் கூப்பித் திரும்பவும் அக்கினிச் சிட்சைக்கு உள்ளாகிப்
பெரும் பூப்பிளவிற்கு அர்ப்பணம்!
காவியம், உன் கதை, " காரிகைமார் அதை மேவிக் கேட்பதோ மிகப் பவம் ” என்று அதை
t r எழுதியோர் தாமே இயற்றினர் விதி ; எனின் கழுதை போல் உரியள் பெண் கசையடிக்கென்று தான்
கருதினர்; மாதரின் காவிய மகிமைகள், பெருமைகள், உரிமைகள் பேசும் எம் பாரம் பரியங்கள் எல்லாம் பதர்!
சிதையில் ஏறிய சீதையே பேசு! கதாயுதம் போல் ஒரே கையால் மந்திர
வில்லையும் மடக்கிய வித்தகி ஒரே ஒரு சொல்லால் உலகைச் சொடுக்கிய வல்லவி!
எப்படி வாய் இழந்தாயடி? தயவாய்ச் செப்படி இவ் வையத்தின் தேவி!
121

Page 62
நிவேதினி
நிவேதிணிக்கு வேண்டப்படும் கட்டுரைகள்
பெண்கள் தொடர்பான ஆய்வு, களதுரல்,சினிமா தொடர்பான விமர்சனங்கள்.
பெண்கள் தொடர்பான கருத்தியல் (ஆய்வு) பகுப்பாய்வு கட்டுரைகள்.
அவை அமையும் விதி
* ஆய்வுக்கட்டுரைகள் 20 - 25 பக்கங்கள் அமைதல்
வேண்டும்.
* விமர்சனங்கள் ஏறக்குறைய 500-600 சொற்களுக்குள்
அடங்குவது நன்று.
* கட்டுரை க்கு பொருத்தமான வரைபடங்கள்
புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
* கட்டுரைகள் தட்டச்சில்- கணணி டிஸ்கட்றில் அமைதல் நன்று வசதியில்லாவிடின் தாளுக்கு ஒரு பக்கம் என்ற அடிப்படையில் தெளிவான கையெழுத்தில் அமைதல்
வேண்டும்.
宽
150 சொற்கள் கொண்ட கட்டுரைச் சுருக்கம் தனியாக இணைப்பது வரவேற்கப்படும்.
食
கட்டுரைகள் ஆசிரியர் பற்றிய - தகவற் குறிப்பு ஒன்று தனியாக இணைக்கப்படவேண்டும்.
கட்டுரை எழுதுவோருக்கு ஒரு சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
122

வருடாந்த சந்தா - நிவேதினி
North America : US $ 30 UK & Europe : US $ 20 India, S. Asia : USS 10 Sri Lanka SLR 200
சந்தா விண்ணப்பம் 19. . . . . . . . . .
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
இத்துடன் காசோலை/ மணிஒடரை பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
Women's Education and Research Centre 58. Dharmarama Road, Colombo-06 Sri Lanka.

Page 63
எமது வெ
නන්දමිත්‍රී - ඌරාස්ලින්ඩ් මැන්ඩිස් වෙඩිධාරීන් වික්‍රමසිංහ - (ශ්‍රී ලංකාවේ බීටීහිර න්: } ලුහ්යු-ගේ පතිවත ඉබ්සන්ගේ වෙබ්
- 5 { ඇගේ ලෝකය - ප්‍රේමී:1කිකයා රුවන් ස්ත්‍රීවාදී දර්ශන කෝණයෙන් සමාJ. பேண்விடுதலை வாதத்தின் பிரச்சி அது ஒரு மே:ைத்தேய கோட்பட பெர்ப்புகள்
இந்தியர்களது இலங்கை வாழ்க்ை
பெண்களின் ஆவடிகளில் இருந்து
டெர்ந்திரர் சிந்ததை ஆள் பெண்ணடிமையின் பரிசானங்களு
பிளக்ஸ்முய் கடவுளரும் DEfதரும்
சிறு:தத்தோதி தமிழ் வரலாற்றுப் படி பங்கள் சின் ஒரு பெண்நிலை நேரத்து சக்தி பிறக்குது Th: political of gcdcran women's A - blir hil Sri L.:Link;
Fic: Iminis 11 in Sri Lankal in thic Decalle IFr:ıg I11:I1[:s (if 3:1 Jo LIrT1e:y Solic Litcrary Women of Sri Lanka
li 1:1 ges;
I.İİL: lüler Milk yılı| : W'lı TTLL:TI Wçırk
Plini II - AI verwiL. ldell gy, C.LSI Class III GCI der
0HTLLLLLLLLM LLL LLL L MLGLLGMMT AT
LHEEFT membanismu af gyı Lün el
ISSN - 39 - 353
Pririct by Kiirunaratic & Sons Ltd.

ளியீடுகள்
2. ජනතා අරගලයෙහි පූරෝගාමී වූ ත්තාවක්) - කුෂාරී ජයවර්ධන }:1:Հ:: රැෂිසිරී ජයසේක.අඩි
ఆరలై ජ න්‍යායයන් විග්‍රහ කිරීමක් '୍le: ...}} fility if:
-IIF - செவ்வி திருச்சந்திரன்
fill நிலைமை
மீனாட்சி அம்மாள் சிஸ் அடிகள்
-ாந்தி சச்சிதானந்தன் -சித்திரவேக மெளனகுரு டென்னுரிமையின்
- செவ்வி திருச்சந்திரன்
பவானி ஆவப்பிள்ளை
iற்றி
- செவ்வி திருச்சந்திரன்
fi. மேளனதுரு gency in Post
-Sclwy Thiruchandran - Ku Tari Jaya ward:Inc - lcan Arasinayagarn - Eat W: RELIEIwccTL - Edited hy Selwy
This child:
Ti; il Rubb{CT
- By Dr. Jayade wa Uya Ingoda - Selwy Thiruchandran
el riu i ng TD DTILL I LITLu su
lLI i II. I či jela: T - питаш пита -
R. W5.)