கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுதந்திரக் காற்று

Page 1
ぐらク K&必家而 忽,?”逐修兹∞ -必径
必 *& B&


Page 2
சுதந்திரக் காற்று ஆசிரியர் முதலாவது பதிப்பு பதிப்புரை அச்சுப் பதிப்பு
அட்டைப்படம் விலை
" SufhCnifhirCi KClOfU” (Air of Freedom) AUfhOr
First Edition Copyright By Printed By
Price
ஆசிரியரின் பிறநூல்கள்
சிறுகதைத் தொகுப்பு சோ. ராமேஸ்வரன் அக்டோபர், 1994 ஆசிரியருக்கு கிரியேட்டிவ் ஹான்ட்ஸ், (பிறைவேற்) லிமிட்றெற், பம்பலப்பிட்டி, கொழும்பு - 4 ஒகஸ்டின் மொறாயஸ் ரூபாய் 50/-
A Collection of Short Stories S. ROrnesWCrCri October, 1994 AufhOr Creotive Honds (PrivCate) Ltd. Bombolopolitiyo Colombo - 4
Rs... 50/-
" யோகராணி கொழும்புக்குப் போகிறாள்(நாவல்)
* இவர்களும் வாழ்கிறார்கள்
* இலட்சியப் பயணம்
(நாவல்) (நாவல்)

சுதந்திரக் காற்று
(சிறு கதைத் தொகுப்பு)
சோ. ராமேஸ்வரன்

Page 3
ஆசிரியர் உரை
எனது கால் நூற்றாண்டு எழுத்துப் பணியில் உருவான சிறு கதைகளில் சிறந்தவை என என்னால் மதிப்பிடப்பட்ட பதி னொரு சிறு கதைகளை இத் தொகுப்பில் இணைத்துள்ளேன். ‘என்று தணியும் இந்தப் போராட்டம்" என்ற சிறு கதையைத் தவிர ஏனைய பத்து சிறு கதைகளும் ‘வீரகேசரி வார வெளியீட் டில்' வெளியிடப்பட்டவைகளாகும். W−
இச் சிறு கதைகளை நான் ‘வீரகேசரி’ ஸ்தாபனத்தில் பணி புரிந்த போதும், அதில் இருந்து வெளியேறிய பின்பும் வெளி யிட்டு எனக்கு உற்சாகம் ஊட்டிய “வார வெளியீட்டு ஆசிரியர் பொன். ராஜகோபால் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இச் சிறு கதைகளைத் தொகுப்பதற்கு முயன்ற போது சில மாற்றங்களைச் செய்து, மெருகூட்ட வேண்டும் என்று எண்ணி னேன். இதன் பொருட்டு சிறு கதைகளை எனது அலுவலக நண் பர்களான ஆராய்ச்சியாளர்களான திரு. மு. பூரீ கெளரி சங்கர், திரு. த. இரவிச்சந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்த போது அவர்கள் காத்திரபூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்.
நாவலின் முகப்புப் படத்தைக் கீறியவர் ‘வீரகேசரி ஒவிய ரும், எனது நண்பனுமான ஒகஸ்டின் மொறாயஸ்.
கையெழுத்துப் பிரதியை செவ்வனே தட்டச்சில் பொறித்துத் தந்தவர் எனது அலுவலகத்தைச் சேர்ந்த செல்வி இரத்தினபூவதி வேலுப்பிள்ளை.
எனது பால்ய நண்பனும், இரட்டைக் கலாநிதிப் பட்டத்தை பெற்றவருமான ஜப்பானில் வாழ்ந்து வரும் கலாநிதி சச்சி பூரீ காந்தா, "லீலா பிரஸ் (பிறைவேற்) லிமிற்றெற்', "லீலா என் ஜினியரிஸ் (பிறைவேற்) லிமிற்றெற்' ஆகியவற்றின் முகாமைத் துவப் பணிப்பாளரும், நண்பருமான திரு. சின்னத்துரை தேச பந்து ஆகியோர் விளம்பரங்களைத் தந்து அச்சுச் செலவைக் குறைக்க உதவியுள்ளார்கள்.
எனது முந்திய இரு நாவல்களைக் குறுகிய காலத்தில், அழ குற அச்சிட்ட பால்ய நண்பன் சிவசுப்பிரமணியம் ஜெகதீசன் இம் முறையும் தனது பணியைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
இவர்கள் யாவருக்கும் எனது உளங் கனிந்த நன்றிகள். இச் சிறு கதைகளைப் புத்தக ரூபத்தில் வெளியிட அனுமதி தந்த "எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிமிற்றெற்றுக் கும்” எனது நன்றி.
41/2, சித்ரா லேன், சோ. ராமேஸ்வரன் கொழும்பு-5.

எனது மதிப்புக்குரிய பொன், ராஜகோபால் அவர்களுக்கு இத் தொகுப்பு
சமர்ப்பணம்

Page 4
எழுத்தாளர் பற்றி.
கால் நூற்றாண்டு காலமாக எழுதி வரும் பருத்தித்துறை, ஆத்தியடி யைச் சொந்த ஊராகக் கொண்ட சோ. ராமேஸ்வரன் வெளியிடும் முதலாவது சிறு கதைத் தொகுப்பு இதுவாகும். இவர் இது வரை பல சிறு கதைகள், நாவல்கள், குறு நாவல்கள், கட்டுரைகள், நகைச் சுவைக் கட்டுரைகள், விமர்சனங் கள், மற்றும் பேட்டிக் கட்டுரைகள் ஆகியனவற்றை எழுதியுள்ளதுடன், அவை இலங்கையில் இருந்து வெளி வரும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எஸ். ராமேஷ், ஆத்தி யடியூரான், புஷ்பா தங்கராஜா, ஆர். பிரசன்னா ஆகிய பெயர் களிலும் இவர் தனது படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே "யோகராணி கொழும்புக்குப் போகி றாள்" (1992), "இவர்களும் வாழ்கிறார்கள்" (1993), "இலட்சியப் பயணம்" (1994) ஆகிய மூன்று நாவல்களை Galeful Gait Grrrri.
‘வீரகேசரி நிறுவனத்தின் உதவி ஆசிரியர், விவரண ஆசிரி யர் ஆகிய பதவிகளை 1974 - 1980 கால கட்டத்தில் வகித்த இவர், 1980 முதல் கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகத்தில் தகவல் வெளியீட்டு உத்தியோகத்தராகக் கடமையாற்றுவ துடன், 'கமநலம்" சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்குகிறார்.
IV
 

ஒரு ஆறு வழி பிரித்து ஒடுகிறது
பெரு மூச்சுக்கள் வெப்பத்துடன் வெளியேற.
நிர்மலா கலங்கிய விழிகளினுரடே வானத்தைப் பார்த்த UL. . . . . . அவள் உள்ளத்தில் இருந்து அமைதி விடை பெற.
காலையில் நடந்த அந்த சம்பவம் - அவள் காதலுக்கு சமாதி கட்டிய சம்பவம் - மீண்டும், மீண்டும் மனதில் கோரமாக நர்த்தனமாடியது. அதை நினைக்கும் போதெல்லாம், மனதை ‘என்னவோ குமட்டியது போன்றதோர் உணர்வு பீடிக்கின்றது. இடையிடையே கோபமும், ஆத்திரமும், எரிச்சலும் மனதுக்குள் புகுந்தன.
எல்லா உணர்ச்சிகளுமே அவளது வேதனையைப் பன்மடங் காக்கின. வேதனையின் விளிம்புக்கே சென்றவள், அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்த நிலையில், குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
மனதில் புகுந்திருந்த வேதனை அகலவே இல்லை. அது மன தில் இறுகிவிட்டது. இனியும் அழுது, தன் உணர்ச்சிகளை வெளிப் படுத்துவதனால், ஒன்றுமே ஆகப்போவதில்லை என்ற உண்மை அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளை ஆறுதல்படுத்த, அவள் மனதுக்கு ஒத்தடம் கொடுக்க, அந்த வீட்டில் ஒருவருக்கும் தைரி யம், தெம்பு இருக்கவில்லை. தகப்பனைத் தவிர, குடும்பத்தின் சகல உறுப்பினர்களுமே, தமது உணர்ச்சிகளை மனதுக்குள் பூட்டி வைத்த நிலையில், ஊமைகளாக, கோழைகளாக வாழ்ந்தார்கள், வாழப் பழகிவிட்டார்கள்.
நிர்மலா கண்களைத் தொடைத்தாள். மனதை அமைதிக்கு வழி நடத்த முயன்றாள். ஆனால், அந்த பாழும் மனதுக்குள், காலை நடந்த சம்பவம் விட்டேற்றியாக புகுந்தது.
முதல் நாள் மாலையே இப்படியானதொரு சம்பவம் நடக்க லாம் என்பதற்கான அறிகுறி தென்பட்டிருந்தது, எந்நேரத்திலும் தகப்பன் தன்னை அழைத்து, விசாரிக்கலாம் என்று நிர்மலா பல தடவைகள் எண்ணியிருந்தாள். கடைசித் தடவையாக அதைப் பற்றி எண்ணிய வேளை, வீடே அதிரும்படி கத்தினார், அவள் தந்தை சுப்பிரமணியம்.
"இடியே "பேபி", இஞ்ச வாடி," சுப்பிரமணியம் தனது அறையில் இருந்து பலமாக குரல் கொடுத்த போது, நிர்மலாவின் சப்த நாடிகளும் அப்படியே ஒடுங்கின.
தந்தையிடம் “பதை, பதைத்த’ உள்ளத்துடன் சென்றாள். அவரை நெருங்கினாள். அவரது முகத்தை அதைரியத்துடன் நோக்கினாள்.
சுப்பிரமணியத்தின் முகம் கோபத்தால் இறுகி இருந்தது.
1

Page 5
மகளை வெறுப்புடன் நோக்கினார். "இந்த "லெட்டரை' ஆர் எழுதினது?" எனக் கேட்டவர், கடித உறையொன்றை மகளிடம் நீட்டினார்.
கடிதத்தின் உறையைப் பார்த்தவுடனேயே நிர்மலாவுக்கு அந்த உண்மை புலப்பட்டது. புத்தகத்துக்குள் ஒளித்து வைத் திருந்த கடிதம் தந்தையிடம் சிக்கி விட்டது. முதல் மாலை அறைக்குள் சென்ற தகப்பன் புத்தகங்களை வாரி இறைத்த போது, இப்படியொரு நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று நிர்மலா எதிர்பார்த்திருந்தாள். ஒன்றுமே தெரியாதது போல முகத்தை வைத்தபடி, கடிதத்தை கை நீட்டி வேண்டி னாள்.
'திறந்து பாரடி. சுப்பிரமணியம் உச்சஸ்தொனியில் கத்தினார்.
நிர்மலா கடிதத்தைப் பிரித்தாள். மோகன் அவளுக்கு கடைசி யாக எழுதிய கடிதம். "நான் உம்மைக் கைவிட மாட்டன்" என்று கடிதத்தின் அடியில் பத்துத் தடவைகள் எழுதி இருந்தான். அந்த வார்த்தைகளை எத்தனை தடவைகள் திருப்பித் திருப்பி வாசித்து நிர்மலா உவகை அடைந்திருப்பாள்?
'உம் சொல்லடி. "லெட்டரை' ஆர் எழுதினது?" நிர்மலா தகப்பனை ஏறெடுத்தும் நோக்கவில்லை. கடிதத்தை வாசிப்பது போல பாசாங்கு காட்டியபடி மெளனமாக நின்றாள். "உம். " சுப்பிரமணியம் உறுமினார். "நேரமாச்சுது.”* நிர்மலா மெளனத்தைத் தொடர்ந்தாள். தந்தையின் முகத் தில் தெரிந்த கொடூரத்தை அவள் அவதானிக்கவில்லை.
சுப்பிரமணியம் அவளை நெருங்கினார். "சொல்லமாட் டியோ?” என அச்சுறுத்தியபடி "பளார்’ என அவள் கன்னத்தில் அறைந்தார். பலமான அறை. "ஆவ்' என்று வலியைத் தாங்க முடியாமல் நிர்மலா கத்தியே விட்டாள்.
"சொல்லடி.** மிரட்டல் தொடர்ந்தது. "மோ. மோகன். ** நிர்மலாவிடம் இருந்து பதில் அசர்தலாக வெளிப்பட்டது.
** யாரடி அவன்?" சமையலறையில் இருந்து வீச்சுடன் வந் தாள், தாய் இலட்சுமிப்பிள்ளை.
*" அவர் எ. . 6 . . . . . . என்னோட படிக்கிறார். "ஓ! அப்படியோ சங்கதி? நீ 'வாஸிட்டிக்கு படிக்கவோ, இல்லாட்டால் காதல் கடதாசி எழுதவோ போறனி?’’ இலட் சுமிப்பிள்ளை காட்டமாக வினாவினாள்.
* யாரடி மோகன்?** சுப்பிரமணியம் தனது கேள்வியை அவ சரத்துடன் நுழைத்தார்.
நிர்மலா பதில் அளிக்காமல் பேமானியாக நின்றாள்.

**சொல்லடி. '' சுப்பிரமணியம் சீறிச் சினந்தார். *கிருஷ்ணபிள்ளையன்ர மேன். என்னோட படிக்கிறார்." "கிட்டிணன்ர மேனோ? சுப்பிரமணியம் அதிர்ச்சியுடன் கூவினார். அவர் முழு உடலும் ஒரு முறை நடுங்கியது.
"கிட்டிணன்ர மேன் . - ம்க்கும். அவன்ர அந்தஸ்து என்ன, குலம் என்ன, கோத்திரம் என்ன. நாங்க மலையெண் டால், அவன் மடு. அது உனக்குத் தெரியாதோ? இலட்சுமிப் பிள்ளை சூடாகக் கேட்டாள்.
நிர்மலா விடை பகிராமல் நின்றாள். ‘சொல்லண்டி. உனக்கு புத்தி பேதவிச்சு போயிட்டுதோ? அவன் உனக்கு ஏதும் மருந்து போட்டு விட்டானோ? நீயும் அவனை விரும்புநியோ?" இலட்சுமிப்பிள்ளை அகசியமாகக் கேட்டாள்.
நிர்மலா கடைசி வினா தொடுக்கப்பட்ட போது, ஒமென்று தலையாட்டினாள்.
இலட்சுமிப்பிள்ளையின் முகம் சட்டென மாறியது. அது சிவந்தது. அவளின் கைகள் பரபரத்தன. நிர்மலாவின் தலைமயி ரைப் பிடித்தாள். நிர்மலாவுக்கு மரணவலியாக இருந்தது. எனி லும், வலியைப் பொருட்படுத்தியபடி, சடமான நிலையில் நின் றாள்.
இலட்சுமிப்பிள்ளையின் ஆவேசம் அதிகரித்தது. நிர்மலா மகள் என்பதை மறந்தவளாக அவளை மாறி, மாறி கன்னத்தில் அறைந்தாள்.
*" கூலிக்காரன்ர மேனை கலியாணம் கட்டப் போறியோ?* என அடிக்கொரு தடவை கேட்டபடி, மகளுடன் தாறுமாறாக நடந்தாள். நிர்மலா ஊமையான நிலையில், தாக்குதலின் தாற் பரியத்தைச் சகித்தாள்.
இலட்சுமிப்பிள்ளைக்கு மேல் மூச்சும், கீழ் மூச்சும் வாங்கி யது. அறைவதை இடை நிறுத்தினாள்.
‘இனி அவனைக் கண்ணெடுத்தும் பார்த்தியெண்டால் உன்ர காலை முறிச்சு கையில தருவன். எங்கட அந்தஸ்து என்ன, அவன்ர அந்தஸ்து என்ன?..." சுப்பிரமணியம் புத்திமதியை உஷ்ணத்துடன் வெளிப்படுத்தினார்.
"அவவுக்கு இப்பத்தான் இருவது வயசு, அதற்கிடையில கண்டறியாத காதல். இடியே, உனக்கு மேல நான்கு அக்காமார் கலியாணம் எண்டால் என்னெண்டு தெரியாமல் இருக்கினம். மூத்த அக்கா முப்பத்தெட்டு வயசாகியும் கலியாணம் கட்டாமல் இருக்கிறா. அவ கூட தன்ர கலியாணத்தைப் பற்றி மூச்சு விடா மல் இருக்கக்கில, நீ இந்த வயசில காதல் களியாட்டத்தில இறங்கி இருக்கிறியோ? உனக்கு என்ன கலியாண ஆசை வந்துட்
3

Page 6
டுதோ?’ இலட்சுமிப்பிள்ளையின் குரல் ஏறியும், இறங்கியும் ஒலித்தது.
தாயின் ஒவ்வொரு சொல்லும் நிர்மலாவின் இதயத்தை இறுக்கமாகத் தைத்தது. அதன் கனத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நெஞ்சைப் பிடித்தபடி நின்றாள். வாயைத் திறக்கவே இல்லை.
**இனி அவனோட கதைச்சியோ தெரியும். உன்ர தோலை உரிச்கப் போடுவன். இண்டைக்கு ஒருக்கால் கிட்டிணன்ர வீட்டுப் பக்கம் போக வேணும். முளைச்சு நாலு இலை விட முந்தி காத லும், கத்தரிக்காயும். * சுப்பிரமணியம் அங்கிருந்து அகன் றார்.
காலையில் நடந்த சம்பவத்தை நினைத்த போதெல்லாம் நிர்மலாவின் இதயம் கனத்தது. தீவிரமாகச் சிந்திக்கும் ஆற்றல் அவளிடம் இருந்து விடைபெற்றிருந்தது.
பெற்றோர் தனது காதலுக்கு சமாதி கட்ட முனைவதை நினைத்து மனம் வெதும்பினாள். மோகனை மறக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேனே என அழுதாள்.
"மோகனை அவ்வளவு லேசாக மறக்க முடியுமா? அவரோட எவ்வளவு “டீப்பாக பழகிறன்? அவர் மேல எவ்வளவு ஆசை வைச்சிருக்கிறன்? அவரை நான் மறந்தாலும், அவர் என்னை மறப்பாரா? பித்துப் பிடிச்சவர் போல என் பின்னால் சுத்திய வர். நிர்மலாவின் மனம் முக்கி முனகியது.
மோகனின் வசீகரத்தோற்றம் அவள் மனத்திரையில் அடிக் கடி நிழலாடியது. ‘நிர்மலா, நான் உம்மை ஒரு நாளுமே மறக்க மாட்டன், கைவிடவும் மாட்டன்" என்று அவன் கூறிய வார்த்தை கள் காதுகளில் எதிரொலித்தன. காளி கோவிலில் வைத்து, "நான் உம்மைத்தான் கலியாணம் கட்டுவன்’ என்று அவளுக்கு செய்த சத்தியம், காட்டாறு வேகத்தில் எல்லாவற்றையும் அமுக்கிய படி மனதுக்குள் ஊடுருவியது.
ஆனால். ஆனால் . கூடவே அவளின் அக்காமாரின் முகங்கள் அவள் நெஞ்சில் நிழலாடின.
மூத்த அக்கா, கமலா அக்கா, "பபா அக்கா, இளைய
அக்கா. சகலரினதும், பாவத்தைப் பரவலாகப் பிரதிபலிக்கும் முகங்கள், தன்னைப் பரிதாபமாகப் பார்ப்பது போன்ற இறுகிய உணர்வு. *பேபி, ஏன்ரி இப்படி எங்கடை முகத்தில எல்லாம்
கரி பூசி விட்டாய்" என்று யாவரும் ஒரே குரலில் தன்னைப் பழிப் பதைப் போன்ற உணர்வு. ر
திருமண வயதை எட்டி, அதைக் கடந்து போன நிலையில் விளங்கும் மூத்த அக்காவும், க்மலா அக்காவும். திருமண வயதைக் கடக்க முற்படும் "பபா அக்காவும், இளைய அக்கா வும். யாவருமே தமது திருமணத்தைப் பற்றி, மணமகன் எப்
4

படி இருக்க வேண்டும் என்பது பற்றி நிர்மலாவுடன் உரையாடி இருக்கிறார்கள். தமது திருமண ஆசையை எவ்வித வெட்கமும் இன்றி வெளியிட்டிருக்கிறார்கள். தனது எதிர்கால கணவன் குறிப்பிட்ட இந்தி நடிகரின் முகச்சாயலை கொண்டிருக்க வேண் டும் என்று "பபா அக்கா வெளிப்படையாகவே கருத்து வெளி யிட்டிருக்கிறாள்.
ஆனால், குறுகிய வட்டத்துக்குள், மட்டுப்படுத்தப்பட்ட சமூக, கலாசார விழுமியங்களுக்குள் கட்டுப்பட்டு வாழும் தனது அக்காமார்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள், கற் பனைகள் யாவற்றையுமே புதைத்து வைக்க வேண்டிய நிலை தான் நிலவுகிறது என்று நிர்மலாவுக்கு தெரியாமல் இல்லை. அவர்களுக்கு மணக்கோலம் காணும் நாள் தூர விலகியே நின் றது. அது எப்போதுமே ஒரு கேள்விக்குறியாகத்தான் விளங்கி Lது. அக்குதொக்கான வாழ்க்கையை மேற்கொள்ளக்கூடிய நிலையிலேயே அவர்கள் யாவருமே விளங்கினார்கள்.
மூத்த அக்கா பவானிக்கு பதினெட்டு வயதை அடைந்ததில் இருந்து இன்று வரை எத்தனை இடங்களில் இருந்து கலியாணம் பேசிவந்தார்கள்? ஒன்றுமே பொருந்தவில்லை. சீதனம் பொருந்தி னால், சாதகம் பொருந்தாது. சாதகம் பொருந்தினால், சீதனம் பொருந்தாது. இரண்டுமே பொருந்தினால், பெண் வடிவு இல்லை என தட்டிக்கழித்தார்கள். மூன்றுமே பொருந்தினால், 'டொனே ஷன்" என்று புதியதொரு பாராங்கல்லைத் தலையில் போட் டார்கள். இப்படியே ஒவ்வொரு கலியாணப் பேச்சும் குழம்பி யது. பவானியின் கழுத்தில் தாலி ஏறவேயில்ல்ை.
'அவளுக்கு செவ்வாய் தோஷமாக்கும்" என ஊரவர்கள் * கிசுகிசுத்தார்கள்.
"அவளுக்கு கலியாணப் பலன் இல்லையாக்கும். சுப்பிரமணி யம் இரண்டாவது மேளுக்கு மாப்பிள்ளை பார்த்தால் என்ன" எனச் சிலர் வெளிப்படையாகப் பேசினர்.
சுப்பிரமணியம் இந்த அபிப்பிராயங்களைச் செவிமடுக்க மறுத்தார். மூத்த மகளின் கலியாணத்தை ஒப்பேற்றி விட்டுத் தான் இரண்டாவது மகளின் கலியாணத்தைப் பற்றி யோசிப்பது என ஆணித்தரமாக யாவரிடமும் கூறிவிட்டார்.
இரண்டாவது மகளுக்கு வலிய வந்த இரண்டு மூன்று சம்பந் தங்களையும் நொண்டிச் சாட்டுக்களைக் கூறி தட்டிக் கழித்து விட்டார். மூன்றாவது மகளை ஒருத்தன் மனதார விரும்பி, நேரில் வந்து தன் எண்ணத்தை சுப்பிரமணியத்திடம் வெளி யிட்ட போதும், காரசாரமாக ஏசி அவனை வீட்டில் இருந்தே துரத்தி விட்டார்.
இவை யாவும் நிர்மலாவின் மனதில் ஊறி இருந்தன. இவற்றை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம், தன் எதிர்காலத்
5

Page 7
தில் மாபெரும் கேள்விக்குறி ஒன்று பயமுறுத்தும் வகையில் எழுப் பப்பட்டுள்ளது என்ற பய உணர்வு அவளுள் பரவலாகியிருந்தது. தனக்கு மேலே உள்ள நான்கு சகோதரிகளின் திருமணம் ஒப் பேறிய பின்னரே தனக்குத் திருமணம் நடக்கும் என்ற உண்மை யும் அவளுள் இடைக்கிடை தோன்றி மறைவதுண்டு. இந்த உண்வையை மனதினுள் ஆராய முற்படும் போதெல்லாம், தன் னைச் சுற்றியுள்ள சமூக அமைப்பில் அவளுக்கு கசப்புணர்ச்சி ஏற் படுவதுண்டு. எத்தனை தடவை அதை எண்ணி சலித்திருப்பாள்? இப்படியான சிந்தனை அவள் மனதின் அடியில் புதையுண் டிருந்த வேளையில் தான், அவளுக்கு மோகனுடன் நட்புறவு ஏற் பட்டது. அந்த நட்பு நாளடைவில் இறுகியபோது, "நிர்மலா , நான் உம்மை லவ்” பண்ணுறன்" என்று மோகன் துணிந்து சொன்ன போது, அவனது காதலை ஏற்கும் நிலையில் தான் இல்லை என அவள் சொல்லி விட்டாள். நட்பு என்ற வரையறை யைத் தவிர, வேறொரு வரையறைக்குள் தன்னை அடக்க முடி யாது என்று அவள் காரணம் காட்டினாள். ஆனால், மோகன் அவள் உறுதிமிக்க மனதைப் படிப்படியாக மாற்றினான். முதலில் அவனது காதலை அரைகுறையாக ஏற்று, இறுதியில் உறுதியாக ஏற்றாள்.
தனது பெற்றோர், அக்கா மார் ஆகியோரின் விருப்பு, வெறுப்புக்களை எதிர்பார்ப்புக்களை மழுங்கச் செய்யும் விதத் தில், மலினப்படுத்தும் விதத்தில் அவள் தீர்மானம் அமைந்து விட் டது. இதையிட்டு ஆரம்பத்தில் கவலைப்பட்டவள், நாள் கடந்து போன போது, மோகனின் வார்த்தைகளில் கட்டுண்டு தன்னை, தன்னைச் சுற்றி குறுகிய வட்டத்தைப் போட்டுள்ள சமூகத்தை மறந்து விட்டாள். தன் எதிர்காலம் தமக்கைமாரின் அடிச்சுவட் டைப் பின்பற்றக்கூடாது என்ற அடிமன எண்ணத்தை நிறை வேற்றுவதற்காக அவள் சுயநல ரீதியில் சிந்தித்து, தீர்மானமும் எடுத்து விட்டாள்.
தன்னுள் வளர்ந்திருந்த காதலை வேருடன் வெட்டிச் சாய்க்க அவளின் பெற்றோர் முயன்ற போது தான், மோக னுடன் ஊரை விட்டே ஓடிப் போவதென்ற ஏகாந்தமான யோசனை ஒன்று அவளுள் உருவாகி, அன்றைய பொழுதுக்குள் ளேயே விசுவரூபமெடுத்தது. ஆனால், மோகனை மறுமுறை சந் தித்த போது, அவள் எண்ணத்தை அவன் அப்படியே கலைத் தான.
திங்கட்கிழமை பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போது நிர் மலாவுக்கு அதிர்ச்சியை உணரும் சந்தர்ப்பம் தான் கிட்டியது. மோகன் அவளைப் பார்த்தும் பார்க்காமல் போய்விட்டான். ஒரு புன்னகையைக் கூட உதிர்க்கவில்லை.
மோகனின் மனதை தனது தந்தை மாற்றி விட்டார் என்று நிர்மலாவுக்குப் புரிந்தது. ஆத்திரம், அழுகை வர முயன்ற

போதும் யாவற்றையும் அடக்கினாள். நேரம் நகர்ந்த போது ஒர் உண்மை அவளுக்கு புலப்பட்டது. சமூகத்தின் குறுகிய வட் டத்தை விட்டு வெளிவர மோகன் தயங்குகிறான் என்பது நிர் மலாவுக்கு விளங்கியது.
விரிவுரை முடிந்து, ஈரமான இதயத்துடன் நிர்மலா வீடு திரும்புகையில், வழியில் மோகன் எதிர்ப்பட்டான். நேரே அவ ளிடம் வந்தவன், ‘நிர்மலா” ஸ்ண்ே உரிமையுடன் அழைத் தான். வாடியிருந்த நிர்மலாவின் இதயத்துள் ஆனந்தம் எட்டிப் பார்த்தது. ஆனால், அவன் முகத்தைப் பார்த்த போது அவள் மகிழ்ச்சி கரைந்தது. மோகனின் முகத்தில் சோகமே தொக்கி இருந்தது.
'நிர்மலா, எனக்கும், உமக்கும் இடையில இருந்த தொடர்பு முறிந்து விட்டுது. இனி நீர் என்னை மறந்து விடும். என்னோட கதைக்கிறதை விட்டு விடும். *’ என மோகன் "பட, பட"வென வார்த்தைகளைப் பொரிந்து தள்ளினான்.
“உங்களை மறக்கிறதுக்காக நான் உங்களை "லவ்" பண்ண இல்ல. '' வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து நிர்மலா சொன்னாள்.
**தெரியும். ஆனால், நான் என்ன செய்ய? உம்மட அப்பா என்ர அப்பா எங்கட "லவ்”வுக்கு குறுக்க நிற்கினம். அதனால காதலை மறக்கிறதைத் தவிர என்னால எதையும் செய்ய முடிய இல்ல.”*
*நீங்க ஒரு கோழை, ஆம்பிளை இல்லை. நிர்மலா ஆத்தி ரத்தில் கத்தினாள்.
“இந்த ஒரு விஷயத்தில நான் ஒரு கோழைதான். ஏனெண் டால் நான் கூலிக்காரன்ர மேன். நீர் கச்சேரியில வேலை செய்யுற “சீர்ஃப் கிளாக்கின்ர* மேள். நீர் மலையாம். நான் மடுவாம். நான் உம்மை விரும்பக் கூடாதாம்.'
* ஒத்துக் கொள்ளுறன். நாங்க இந்த சமூத்தை விட்டே ஒதுங்குவோம். உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த ஊரை விட்டே போவம்.” நிர்மலா உறுதிமிக்க குரலில் கூறினாள்.
மோகன் ஒரடி பின் வாங்கினான். "முடியாது. என்னால அப்படியான ஒரு முடிவை எடுக்க ஏலாது. நான் இரண்டு காலிலை நிற்கிற நிலையில இருந்தால் உமக்கு சாதாகமான ஒரு முடிவை எடுப்பன். ஆனால், இப்பவும் அப்பான்ர நிழலில தான் வாழ்றன். பிளிஸ், என்னை மன்னிச்சுப் போடும்.”*
நிர்மலா சமைந்து போன நிலையில் நிற்க, மோகன் அவ ளிடம் இருந்து தூர தூர விலகிச் சென்றான்.
இரண்டு வருடங்கள் அநாதையாகக் கழிந்தன.
மூத்த அக்கா, கமலா அக்கா, "பபா அக்கா, இளைய
7

Page 8
அக்கா. யாவரும் மிஸ் சுப்பிரமணியமாகவே திகழ்ந்தார்கள். மிஸிஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நிர்மலா? பட்டப்படிப்பை முடித்து, கொழும்புக்கு வேலை கிடைத்து வந்த நிர்மலா, அங்கு பணிபுரிந்த பீட்டரைக் காதலித்து திரு மனம் செய்தாள்.
அதன்பின் அவள் வீட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாள். ‘என்னால் இதைத் தவிர வேறொன்றும் செய்யத்தெரிய வில்லை. நானே எனக்கொரு முடிவைத் தேடிக்கொண்டு விட் டேன்.
எனக்கு மேலே நான்கு அக்காமார். இருவர் திருமண வய தைக் கடந்து விட்டார்கள். மற்ற இருவர் திருமண வயதை கடக்க முற்படுகிறார்கள். நான் திருமண வயதை அடைந்துள் ளேன்.
எனது அக்காமார் திருமணம் செய்த பின்னர் தான் எனக்கு திருமணம். இது அப்பாவின் நியதி. ஆனால், எனது அக்காமார் இப்போதைக்கு திருமணம் செய்வார்களா என்பது ஒரு கேள்விக் குறி.
நாற்பது வயதை எட்டிப் பிடித்திருக்கிற மூத்த அக்கா இனி தனக்கு திருமணம் நடக்காது எனற முடிவில், கடவுள் தியானத் தில் ஊறி விட்டா. அதே நிலையில் தான் இளையக்கா, "பபா’ அக்கா, கமலா அக்கா விளங்குகிறார்கள், விளங்குவார்கள்.
அவர்களது திருமணம் கேள்விக்குறியாக விளங்குவதற்கு எமது சமுதாய அமைப்புத் தான் காரணம் என்பதை ஆணித்தர மாகச் சொல்லுவேன். இந்த சமுதாய அமைப்பு மாறினால் தான் அக்காமார்களைப் போன்ற "ஊமைகளின் கழுத்தில் தாலி ஏறும். இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் மனதை ஊமை யாக்கிக் கொண்டு வாழ வேண்டி இருக்கும். எமது சமூக அமைப்பு மாறுமா, மாறாதா என்பது ஒரு புறமிருக்க, அது இப் போதைக்கு மாற மாட்டாது என்று துணிந்து சொல்லுவேன். இதனால் இந்தப் பாழும் சமூகத்திற்கு எதிராக வாழ்வ தென்று தீர்மானித்தேன். இதனால் தான் என்னை விரும்பிய மோகனை நாடினேன். ஆனால், அவர் சமுதாய அமைப்புக்கு கட்டுட்பட்டவர் என்றதை நிரூபித்து விட்டார். இன்று எங்கள் மத்தியில் எத்தனையோ மோகன்கள் இருக்கிறார்கள். அப்படி யான மோகன்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண் ணத்தில் தான் சாதி, சமயம், அந்தஸ்து யாவற்றையும் உதா சீனம் செய்து விட்டு பீட்டரைத் திருமணம் செய்தேன். எனது இந்த செயல் நானே என் தலையில் மண்ணை வாரியிறைக்கி றேன் என்று நீங்கள் நினைத்தாலும் நான் அதைப்பற்றி கவலைப் படவில்லை. 9
o

நிர்மலாவின் கடிதம் வீட்டில் இருந்த யாவரினதும் கைகளுக் கும் மாறியது. இறுதியில் சுப்பிரமணியத்தை வந்தடைந்தது. அவர் அதை வாசித்து விட்டு அடுப்புக்குள் போட்டார். பின் கிணற்றடிக்குச் சென்று நன்றாகத் தலை முழுகினார்.
பவானி "டேப் ரெக்கோர்டரில் சுப்ரபாதத்தை செவிமடுத்த படி இருந்தாள். அவளின் ஒரவிழிகள் கசிந்திருந்தன.
44 வீரகேசரி வாரவெளியீடு" - 6.8.1978

Page 9
விழித்தெழும் உணர்வுகளுக்குச் சாட்டை
என் வாயில் இருந்து சிகரெட் புகை ஒரே சீராக வெளியேற முற்பட்டும், தோல்வி அடைந்தது. காற்றின் வேகத்திற்கு புகை வாயில் இருந்து வழிந்து, அந்தக் கணமே மறைந்தது.
கடல் அலைகள் மேல் எழுந்து, கரையைத் தொட்டு விடுவ தற்கு முயன்று, தோல்வி அடைந்த நிலையில், பின் வாங்குவதில் கவனம் செலுத்தி இருந்தேன். அலைகள் பொங்கிப் பிரவாகித்து, பெரு இரைச்சலை ஏற்படுத்தி, ஈற்றில் நுரைகளான போது. என் மனதில் இதமான, பசுமையான உணர்ச்சிகளின் வெளிப் பாடு.
அந்த மாலைப் பொழுது ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு உரியது. கிழமை நாட்களின் வெளிச்ச வேளையின் பெரும்பகுதியையும், சனிக்கிழமையின் முக்கால் பகுதியையும், தூசி படிந்த காரியால யத்தில் கழித்து விட்டால், ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே ஒரு நமைச்சல், எரிச்சல் என்னைப் பற்றி விடும். மாலை பிறந்தவுடன், இந்த உணர்வுகளைக் களைய, அறையில் இருந்து வெளியேறி விடுவேன். நடையாகவே, இரண்டு மைல்கள் தூரத் தில் உள்ள, காலிமுகக் கடற்கரைக்குச் சென்று விடுவேன்.
மாலை மெலிதாகி, இருள் ஆக்கிரமிக்கும் வேளை, பல பெரு மூச்சுக்களைப் பரப்பியபடி அங்கிருந்து புறப்பட்டு, நேரே சைவ ஹோட்டலுக்கு நடைபயில்வேன். அங்கு ஏதாவது தின்பண் டத்தை விழுங்கிவிட்டு, நாற்பத்தியெட்டு சதுர அடி கொண்ட எனது அறைக்குள் புகுந்து பழைய பேப்பர்களுக்குள் மூழ்கி விடுவேன்.
கடந்த இரண்டு வருடங்களாக, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், மாலை வேளையில் - மழை தவிர்ந்த நாட்களில் - கொழும்பில் இருந்தால், காலி முகத்திடலில் ஆஜராகும் சனத் தொகையினரில் நானும் ஒருவன்.
காரணம் கற்பிக்க முடியாத வகையில், ஒரு குறிப்பிட்ட வாங்கிவில் அமர்வது என் வழக்கம். அந்த வாங்கிலில் யாரும் அமர்ந்திருந்தால், அது காலியாகும் வரை, ஒர் ஒரமாக நிற்பேன். அந்த வாங்கிலில் அமர்ந்த பின்னரே, இயற்கை அன்னையிடம், என் மனதைப் பறி கொடுக்கும் படலம் ஆரம்பமாகும்.
பொங்கும் அலைகள், நுரைகளாகி மறையும் அலை மிச்சங் கள், கடலில் சங்கமமாகும் சூரியன், குளிர்காற்று போன்ற இயற்கைக் காரணிகளில் மனதைப் புகுத்தி, அதில் ஒரு பரவ சத்தை, கிளர்ச்சியை அனுபவிப்பேன்.
0

திடீரென, மின்னலென என் உணர்வை, “ஏதோவொன்று தட்டியது மாதிரி தோன்றியது. எதிரே ஒர் இளம் ஜோடி என்னை நோக்கி வந்தது. அந்த ஜோடியில் அங்கம் வகிக்கும் பெண்ணை, "எங்கேயோ’ பார்த்த மாதிரி இருந்தது.
"பளிச் சென, பற்கள் தெரிய, சிரிப்பொன்றை ஒசை படாமல் அப்பெண் வெளியிட்டாள். அடையாளச் சிரிப்புக்கு அது அர்த் தம் கூறியது.
யார் அவள்? எடுத்த எடுப்பில் - அந்த அரை இருளில் - அவள் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை.
* சேர்ட் பொக்கட்டில் இருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து கண்களில் பொருத்தினேன்.
மனத்திரை விலகியது.
ஓ! சுபத்திரா...!
ஒரு முறை இதயம் துள்ளியது. உடல் முழுவதும் சிலிர்த்தது. கண்களை ஆச்சரியம் சுவீகரித்தது. சில வினாடிகள் என்ன செய் வது, என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாற.
*மகேன், நான் தான் சுபத்ரா. அதற்கிடையில என்னை மறந்திட்டீங்களா?* ஒசை எழுப்பிச் சிரித்தபடியே, சுபத்திரா வினா தொடுத்தாள்.
“இ. இல்ல." என் நாக்கு புரள தாமதித்தது.
சுபத்ரா முன்னே வர, அவள் மீது மின்கம்பி வெளிச்சம் படர, அவளை அவசரமாக ஆராய்ந்தேன். அவள் முகத்தில் கவிந்திருந்த மலர்ச்சி, பூரிப்பு. அந்தக் கண்களில், இதழ்களில், கன்னங் களில் புது மெருகேறி. என்னுள் புதுவகை மலர்ச்சி தாண்டவ
DfT lg u Joĝ51. ·
நான்கு வருடங்களுக்குள் அவள் தோற்றத்தில் தான் எத் தனை மாற்றம்..!
அடக்க முடியாத, அரைகுறை ஆடைகளை அணிந்தபடி செல்லும் சுபத்ரா, அடக்க ஒடுக்கமாக, சேலையால் தன் உட லைப் போர்த்தபடி.
‘சுபத்ரா. என் அனுமதி இன்றி, பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
**மகேன். 涉 别
* ஊம்."
**உங்களைக் கண்டதில ஒண்டை மறந்து விட்டன், நான் என்ர ‘ஹஸ்பண்டை அறிமுகம் செய்ய இல்ல. "பை த வே, மீட் மை ஹஸ்பண்ட் லசுஷ்மன் சிறிவர்தனா ’’ என்று துடினமாகச் சொன்ன சுபத்ரா, கணவனின் தோளில் தட்டி, "லக்கி, இவர் எனது நண்பன் மகேன் " என ஆங்கிலத்தில் சொல்லி, எங்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

Page 10
"ஓ! சுபத்ரா! நீ கலியாணம் முடிச்சிட்டியா?* மனதில் வியப்பு. அடிமனதில் அகால " சலசலப்பு".
"ஹலோ என்ற லக்ஷமன், கையை நீட்டி நாகரீகமாகக் குலுக்கினான். என்னைக் கண்டதில் தான் மகிழ்ச்சி கொள் வ தாகச் சொன்னான். அதன் பின், அவன் நிறையப் பேசவில்லை. வெறுமனே எம்மைப் பார்த்தபடி, இடையிடையே புன்னகை யைத் தவழ விட்டபடி இருந்தான்.
*மகேன், எப்படி கலியாண வாழ்க்கை?'* சுபத்ரா வினய மாகக் கேட்டாள்.
'ஏதோ போகுது.”* "பிள்ளைகள் எத்தனை?" *" குடும்பக் கட்டுப்பாட்டில எனக்கு நம்பிக்கை இருக்குது. எண்டபடியால. )
சுபத்ரா குறுக்கிட்டாள். "ஒண்டு ஆம்பிளை. மற்றது பொம் பளை, சரிதானே? " "கலகலவென நகைத் தாள். * பிழை இல்ல. இடைவெளி தான் குறைவு. ’’ 'பெஞ்சாதி, பிள்ளைகள் ஊரிலையா?* ‘எப்படி கண்டு பிடிச்சீர்?" 'கோல்பேஸ"சக்கு தனியாக வந்திருக்கிறீங்களே! அது ஒண்டே போதும். கலியாணம் பண்ணியும் பிரமச்சாரிய வாழ்க்கை. ’’ சிரித்தாள். மீண்டும் அதே "கலகல'.
‘சுபத்ரா, நீர் எப்ப கலியாணம் முடிச்சீர்?" 'போன வருஷம், டிசம்பரில. ' ஒரு மெளனம் விழுந்தது. சுபத்ரா அரசியலுக்குத் தாவி னாள். அவள் ஆங்கிலத்தில் பேசியதனால், லசுஷ்மன் தனது கருத்துக்களையும் வெளிப்படுத்தினான். அவனுக்குப் பரந்த மனம் இருப்பதைப் புரிந்தேன்.
‘சந்திரன் இப்ப எங்க இருக்கிறார்?" இருந்தாற் போல சுபத்ரா வினாவினாள்.
‘சவூதிக்குப் போயிட்டான்." 'அவரைக் கண்டு கணவருஷமாகுது. கலியாணம் முடிச்சிட் டாரா?”*
'முடிச்சான். ஆனால், அது சரிவரயில்ல. அவன்ர " வைஃப்" ஆரோ ஒருத்தனோட ஓடிவிட்டாள்.'
'ஒ'' சுபத்ரா என்னை ஆச்சரியம் மிளிர நோக்கினாள். 'சந்திரனைக் கூட ஒருத்தி ஏமாற்றி விட்டாளே!'
** உமக்கு செய்த துரோகத்தின்ர பலன் எண்டு நினைக்கி
fög T?'''
‘மகேன், நான் பழசை எல்லாம் மறந்துட்டன். ஆர் ஆர்
2

பாவம் செய்திருக்கினமோ அவை அவையள் அதுன்ர பலனை அனுபவிப்பினம்.’’
சுபத்ராவின் வார்த்தைகள் பாரமாக விளங்கின. அவை என் நெஞ்சை அழுத்தின.
‘'நானும் உமக்கு துரோகம் செய்தன். '" நான் முணு முணுத்தேன்.
“உங்களைப் போல கன ஆக்கள் துரோகம் செய்திருக்கினம். நான் அதையெல்லாம் நினைக்கிறதில்ல. அதால தான் உங்க ளைக் கண்டவுடன கதைக்க வந்தன்.'"
அதன் மேல் சில வினாடிகள் வரை ஒன்றுமே பேச முடிய வில்லை. நாக்கு வரண்டு விட்டது.
"மகேன், எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?' ** என்ன உதவி?" அவசரத்துடன் வினா தொடுத்தேன். 'எனக்கொரு ‘அனெக்ஸ்’ எடுத்துத்தாlங்களா?" என் மனம் கூம்பிவிட்டது.
※ % 。
அனெக்ஸ்ா ? ? ?" "ஒமோம். இப்ப இருக்கிற அனெக்ஸில இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கலாம். வீட்டுக்காரின்ர மேள் நைஜீரியாவில இருந்து வந்து, இஞ்சயே “செட்டில்" பண்ணப் போறாவாம். அதால அனெக்ஸை தரும்படி நச்சரிக்கிறா. '"
'உம்மட அப்பாவுக்குத்தானே இரண்டு வீடு இருக்குது? அதில ஒண்டுக்கு போகலாம் தானே?*
சுபத்ரா மலினமான புன்னகை ஒன்றை வெளியிட்டாள். 'லசுஷ்மனை கலியாணம் முடிச்ச பிறகு, வீட்டுப் பக்கமே வரக் கூடாது எண்டு டடி சொல்லிப் போட்டார்."
"உம்மட அப்பா தானே இன ஐக்கியத்தைப் பற்றி எல்லாம் பேப்பரில எழுதுறவர்? போன கிழமை கூட அவர்ற்ற "ஆர்ட்டி கல்" "பேப்பரில’ வந்துது. "'
** அது உலகத்துக்கு. ‘லயன்ஸ் கிளப் மெம்பர்கள் கைகுலுக் குறதுக்கு. அப்பா தன்ர வரட்டுக் கெளரவத்தை விட மட்டும், அப்பான்ர வீட்டு வாசல என்னால மிதிக்க ஏலாது. பேர னையோ, பேத்தியையோ கொஞ்சுறதுக்காக வாசலை திறக்க மட்டும் நான் அனெக்ஸ்" தேடத்தான் வேணும்' என்று சுபத்ரா வெகு இயல்பாகக் கூறினாள்.
** "அனெக்ஸ்" ஏதும் அகப்பட்டால் சொல்றன்."" *மகேன், வாடகை நானுாறு அளவில தான் என்னால தர முடியும். ஒரு வருஷ "அட்வான்ஸ்". "'
சுபத்ரா தனது விலாசத்தை பரிமாறினாள். குறிக்கும் போதே மனதில் ஒர் உற்சாகம், புத்துணர்ச்சி.
3

Page 11
விடை பெறும் போது, லக்ஷமன் என் தோளில் தட்டிக் கொடுத்தான்.
* அனெக்ஸை மறந்திடாதீங்கோ. சொல்லியபடி சுபத்ரா இருளில் மறைந்தாள்.
அறையினுள் முடங்கி, பழைய பேப்பருக்குள் மூழ்க முற் பட்ட போதும், மனம் ஒரு நிலையில் நிற்க மறுத்தது. அது பின் னோக்கி, நடந்து முடிந்த சம்பவங்களை மீட்டுப் பார்த்தது. நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சில சம்பவங்கள்.
அச்சமயத்தில் நான் கொழும்பில் உள்ள அரசாங்க திணைக் களமொன்றில் பணி புரிந்தேன். பிரமச்சார்ய வாழ்க்கையில் ஊறி இருந்த வேளை அது. தெகிவளையில் அறையொன்றில் தங்கியிருந்தேன். என்னுடன் சந்திரன் என்பவன் தங்கியிருந் தான்.
சந்திரனைப் பற்றி சுருக்கமாக விபரிப்பதென்றால் அவன் ஒரு ஜொலி டைப் வாழ்க்கையை "வித்தியாசமாக” அனு பவிக்கத் தெரிந்தவன். காலையில் எழுந்தவுடன் இரண்டு சிக ரெட்களை சாம்பலாக்கி விட்டுத் தான், மறுவேலையை ஆரம் பிப்பான்.
தனியார் "கொம்பனி ஒன்றில் “எக்ஸிகியூட்டிவ்'வாக பணி யாற்றினான். உடுப்பு விஷயங்களில், தலை மயிரை வாரி இழுப்ப தில், அறையைச் சுத்தமாக வைத்திருப்பதில் அக்கறை காட்டாத வன். நிறைய அக்கறை காட்டும் விடயம் பெண்கள் பின்னால் சுற்றுவது. அவனது கபடம் கலந்த காதல் மொழிக்கு பல பெண் கள் அடிமையானார்கள். எப்போதும், யாராவது ஒருத்தியின் பெயர், அவன் காதல் "லிஸ்டில் இருக்கும். is
“கீதா வோட படத்திற்கு போயிட்டு வாறன்."" ‘நானும், மஞ்சுளாவும் நாளைக்கு கண்டிக்கு போறம். ** "'இண்டைக்கு எனக்கு ரீட்டா லஞ்ச்" தந்தாள்.' இப்படியெல்லாம் சர்வசாதாரணமாக சொல்லி, என் வாயைப் பிளக்க வைப்பான். மனதை ஏங்க வைப்பான்.
எமது வீட்டுக்குப் பக்கத்தில் தான் சுபத்ராவின் அரண்மனை போன்ற வீடு வீற்றிருந்தது. அவள் தந்தை எந்தக் காரில் ஏறு வது என்று தடுமாறுவதுண்டாம். சுபத்ராவின் இரு அண்ணன் மார் திருமணமாகி திக்கு, திக்காக சென்று விட்டதனால், ஒரே பிள்ளை என்ற சீராட்டலுக்கும், செல்லத்திற்கும் சுபத்ரா உள் ளடக்கப்பட்டு விட்டாள். தந்தை கண்டிப்பை தவிர்த்தார். தாய் இல்லாததினால், புத்திமதி கூறுவதற்கும் எவருமே இருக்க வில்லை. தந்தை அடிக்கடி விமானத்தில் ஏறிவிடுவதனால், சுபத்ரா அளவுக்கு மீறிய சுதந்திரத்தை அனுபவித்தாள். சில வேளை சமூகத்தின் கோட்டு ஒரத்தையும் தாண்டினாள்.
l 4

சுபத்ரா கண்களுக்கு லட்சணமானவள் அல்ல. ஆனால், அந்தக் கண்களில் ஒளி நிறைந்திருந்தது. சிரிப்பிலும் ஒரு கவர்ச்சி மறைந்திருந்தது. நவீன உடைகளும், ஒப்பனையும், நறுமண மூட்டிகளும் அவளில் பலரைக் கிறங்கச் செய்தன.
அவள், விதம் விதமான இளைஞர்களுடன் செல்லும் போதெல்லாம், அவளைப் பற்றி ஆழமாக அறிய வேண்டும் என்ற அவா என்னுள் பிறப்பதுண்டு.
ஒரு காலைப் பொழுது, சுபத்ராவின் பேச்சு எழுந்தது. சான் மகேன், நான் சுபத்ராவை "லவ்" பண்றன். '
சந்திரன் கூறியதைக் கேட்டு 'திக் கென்றிருந்தது. *" என்னடா சொல்லுறாய்?" அதிர்ச்சியில் கூவினேன்.
updf
*"உண்மை தாண்டா. உனக்கு சந்திரனைப்பற்றி தெரி τιμπέι.
*டேய், அவள் பாவமடா. உன்னை நம்பி ஏமாறப் போறாளே."
*நான் அவளை மனதார விரும்புறன். அவளைத் தான் கலி யாணம் கட்டப் போறன்’ என்ற சந்திரன், அட்டகாசமாகச் சிரித்தான்.
சந்திரனுடன் ஆறு மாதங்கள் தான் அறையைப் பங்கு போட்டேன். அந்த சொற்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக் குள் ஒரு முறை படத்திற்கு போன போது, சந்திரனுக்கு அருகில் சுபத்ரா அமர்ந்திருப்பதைக் கண்டேன். இன்னொரு முறை கல் கிசை கடற்கரைக்குச் சென்ற போது, தாழை மரப்பற்றைக்குள் இருந்து சந்திரனும், சுபத்ராவும் வெளிவருதைக் கண்டேன்.
இச்சம்பவங்களின் பின் ஒரு சனிக்கிழமை சந்திரனின் முகம் வாட்டமுற்றிருப்பதைக் கண்டு, அதற்கான காரணத்தைக் கேட் GL Gör.
**சுபத்ரா என்னை மறந்து விட்டாள். தன்னோட கதைக்க
வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டாள்.* சந்திரனின் குர வில் சோகம் மிழிற்றியது.
**ஏன்ரா, உன்னை மறந்தவளாம்?' அசுவாரஷ்யத்துடன்
வினா தொடுத்தேன்.
*நான் குளிக்கிறதில்லையாம். எனக்கு கிட்ட எருமையின்ர நாற்றம் வருதாம்.”*
என்னை அறியாமல் நகைத்தேன். “ டேய், குளிச்சுப் போட்டு, “சென்ட்"டை பூசிக் கொண்டு போனால் என்னவாம்?' * “லவ்” பண்ணுறதுக்கு ‘சென்ட் எதுக்கடா? நான் எத் தனை பெட்டைகளை "லவ்" பண்ணி இருப்பன்? ஒருத்தியாவது என்னற்ற இப்படிச் சொல்லி இருக்க மாட்டாள். அவளுக்கு பணத்திமிர். மச்சான் மகேன், நீ வேண்டுமெண்டால்
15

Page 12
அசனட டை பூசிக் கொண்டு போய், அவளை "லவ்" பண்ணு.' சந்திரனின் கூற்று வேதவாக்கு போல் தோன்றியது. அவன் அறையை விட்டு வெளியேறிய பின், அவன் கூறியவற்றை நீண்ட நேரமாக அலசினேன்.
'நீ வேண்டுமெண்டால் "சென்ட்"டை பூசிக் கொண்டு போய், அவளை "லவ்” பண்ணு."
சபலம் என்னை இறுகத் தழுவியது. கொள்கைகள் என்னை விட்டுப் பறந்தோடின. விளையாட்டுத் தனம் என்னுள் புகுந்தது. எதையும் துலாம்பரமாக யோசிக்காமல் செயல்பட்டேன்.
சுபத்ராவை வேட்டையாடலானேன். என் வலையில் சிக்கி விட்டாள். a.
வீதியில் நேருக்கு நேர் சந்தித்த போது, புன்னகைத்தேன், புன்னகைத்தாள்.
மறுநாள் பற்கள் தெரியச் சிரித்தேன். ' க்ளுக்கென்று நளின மாகச் சிரித்தாள்.
மூன்றாம் நாள் ஒரு கனிவான "குட்மோர்னிங்' கை வெளி யிட்டேன். பதிலுக்கு 'வெரி குட் மோர்னிங்' என்று மலர்ச்சி யுடன், புன்னகை சகிதம் வாழ்த்துக்கிட்டியது.
நான்காம் நாள் "யூ ஆர் எ ஸ்வீட் கேர்ள்’’ என வருணித் தேன். புகழ்சிக்கு மயங்கி விட்டாள். "யூ ஆர் வெரி ஸ்மாட்”* என்றாள்.
மகேன் வானத்தில் மிதந்தான். காதலுக்கு கண் இல்லை, அந்தஸ்து இல்லை, ஏழை - பணக் காரன் என்ற வித்தியாசம் இல்லை என்று செப்பினேன். பேதை என் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி விட்டாள். அவளது "வீக் னஸை" எனக்குச் சாதகமாக்கினேன்.
ஒரு சினிமாப் படம், கல்கிசை கடற்கரை தாழைப்பற்றை, விகாரமகா தேவி பூங்காவின் புதர்.
எங்கள் காதல் வளர்ந்தது. கூடவே, என் பணமும் கரைந் தது. அம்மா நிச்சயம் தலையில் கைகளை வைத்திருக்க வேண் டும்.
நான்கு வாரங்களின் பின் சந்திரன் இல்லாத வேளை, சுபத்ரா அறைக்கு வந்தாள். சில நிமிடங்கள் அவசரம், அவசர மாக உரையாடினாள். "மகேன், உங்கட சாதகத்த என்னற்றை தருவீங்களா?' என வாஞ்சையுடன் கேட்டாள்.
ஏன் என்று வினவினேன். “என்ர சாதகத்தோட ஒத்துப் பார்க்க." "சாதகம் பொருந்தினால் . .?" சுபத்ராவின் முகத்தை நாணம் போர்த்தியது. 'கலியாணம் கட்டுவம்.”*
6

விளையாட்டு வினையாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். *டேய் உன்னை நம்பித்தாண்டா மாற்றுச் சம்பந்தமெண்டாலும் பரவாயில்ல எண்டு சொல்லி இருக்கிறன்' என்று அம்மா அடிக்கடி நினைவூட்டியது செவிப்பறையில் மோதியது. "என்னற்ற சாத கம் இல்ல. ஊரில தான் இருக்குது’’ என்று சுபத்ராவிடம் பொய் சொன்னேன்.
* ஊருக்கு எழுதி எடுங்கோவன்.”*
*“ Tří o "" ヘ நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன், முகத்தில் திருப்தியை நிறைத்த நிலையில் என்னிடம் இருந்து பிரிந்தாள்.
அன்றிரவு முழுவதும் சுபத்ரா மனதினுள் நிரம்பி இருந்தாள். அவளின் கோரிக்கையை நிறைவேற்றுவதா, இல்லையா என்று மனம் தர்க்கத்தில் ஈடுபட்டது.
சுபத்ராவைக் கலியாணம் கட்டினால் என்ன? அவள் ஒழுக்க மற்ற வாழ்க்கை என்னை உறுத்தியது. அவளைப் பலர் “சுவைத் திருக்கிறார்கள்", "எச்சிலான" நிலையில் உள்ளவளைக் கைப்பிடிப் பதா? கைப்பிடித்தால் என்ன? கைப்பிடிக்கலாம். பழையதை மறக்கலாம். அவளுக்கு வாழ்வு கொடுக்கலாம். ஆனால் திரு மணம் ஒப்பேறிய பின் திருந்துவாள் என்று என்ன நிச்சயம்? அப் படியே திருந்தினாலும், எமது வாழ்க்கையில் குறுக்கிடும் ஆண் களைச் சந்தேகிக்காமல் விடும் மனப்பக்குவம் என்னிடம் உள் ளதா?
ஒரு கோணப் பிரச்சனையை பல கோணங்களில் ஆராய்ந் தேன். பல மணி நேரத்தைச் செலவளித்தேன். ஆனால், இறுதி வரை என்னால் சுபத்ராவுக்கு ஆதரவான ஒரு முடிவையும் எடுக்க முடியவில்லை.
இதனிடையே அம்மாவிடம் இருந்து அவசரக்கடிதம் ஒன்று வந்தது. அதில் மாற்றுச் சம்பந்தம் ஒன்று ஒழுங்காகி இருப்ப தாகவும், உடனடியாக வரும்படியும் அம்மா எழுதியிருந்தா.
கடிதத்துடன் சுபத்ராவிடம் சென்றேன். அதை வாசித்த வள், ‘‘மற்ற ஆம்பிளைகளை விட நீங்கள் வித்தியாசமானவர் எண்டு நினைச்சன். ஆனால், நீங்கள் அதற்கு விதிவிலக்கு இல்ல. வாழ்த்துக்கள்" என்றாள்.
அவள் என்னை தாறுமாறாக ஏசாததினால், எனக்கு ஒரே ஏமாற்றம்.
சுபத்ராவிடம் இருந்து ‘விடுதலை பெற்றதில் ஒரே ஆனந்தம். திருமணமாகி கொழும்பு வந்த போது, அறையைக் காலி செய்வது என்ற முடிவுக்கு வந்தேன். இனியும் சுபத்ராவை நேருக்கு நேர் சந்திப்பதற்கான துணிவு என்னிடம் இருக்க வில்லை. நல்ல நாளொன்றில் புது அறையொன்றில் குடி புகுந் தேன்.
7

Page 13
நாட்கள் நகர்ந்து, மாதங்கள் மறைந்த போது சுபத்ராவின் நினைவும் மெல்ல, மெல்ல தேய்ந்தது.
காலிமுகத்திடலில் க பத்ராவைக் கண்ட பின், அவளின் உரு வமே என் கண் முன்னால் நர்த்தனமாடியது. அவளுடன் பழகிய நாட்கள், மீண்டும் மனத்திரையில் வலம் வந்தன. அவள் என் னுடன் நடந்த விதம், பேசியவைகள் யாவும் என்னுள் மீண்டும் புகுந்தன.
‘சுபத்ரா செக்ஸில சரியான “வீக்" என்று சந்திரன் ஒரு முறை கூறியது காதுகளில் எதிரொலித்தது.
நான்கு வருடத்தின் முன்னைய அவளுடனான நெருக் கத்தை மீண்டும் உணர்ந்தேன். என் கைவிரல் நகங்களை சுபத்ரா தன் பற்களால் கடிக்கும் உணர்வை மீண்டும் பெற்றேன். என்னுள் உணர்ச்சிகள் பெரு வெள்ளமாக பொங்கிப் பிர வாகித்தன. சுபத்ராவை மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற வெறி என்னுள் உருவாகியது. நேரம் செல்லச் செல்ல அவளை அடைய வேண்டும் என்ற துடிப்பு, சுயமாகச் சிந்திக்கும் சக்தியை என்னிடம் இருந்து விரட்டியது. என்னுள் அடைந் திருந்த கெளரவமான எண்ணங்கள் மழுங்கின. ஏற்கனவே ஒரு வனைக் கைப்பிடித்திருந்தாலும், என்னுடன் உறவைப் புதுப்பிப் பதில், அவள் தயங்கமாட்டாள் என்றொரு குருட்டு நம்பிக்கை மனதினில் பிறந்தது.
மாலையில் மதுபானசாலையில் மது அருந்தும் போதெல் லாம், சுபத்ரா தான் நினைவில் நின்றா6 எவ்வித சிந்தனையை யும் விஸ்தரிக்க முடியாத வகையில், அவளே மனதை நிரப்பி இருந்தாள்.
இரண்டு நாட்களாக சுபத்ரா மனக்கண்ணில் அடிக்கடி தோன்றினாள். என்னால், என் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. காலையில் - காரியாலய நேரத்தில் - அவள் * அனெக்ஸ் சக்குப் பயணமானேன்.
"அனெக்ஸை அடைகிறேன். கதவைத் தட்டினேன். சுபத்ரா கதவைத் திறந்தாள். என்னைக் கண்டவள் முதலில் துணுக்குற்ற போதும், “வாங்க மகேன் "" என வரவேற்றாள்.
நின்றபடியே 'அனெக்ஸை" பார்வையால் துழாவினேன். அது சிதறியது. படுக்கை அறை, குசினி, ஹோல் என்று யாவுமே ஒரு அறைக்குள் அடங்கி இருந்தது. அங்கு நாற்காலி ஒன்றும் இல் லாதபடியால் கட்டிலில் அமர்ந்தேன். அவள் கதவு நிலையில் சாய்ந்தபடி நின்றாள்.
*மகேன், "அனெக்ஸ் கிடைச்சுதா?** சுபத்ரா எடுத்த எடுப்பில் கேட்டாள்.
"இல்ல. சொல்லி வைச்சிருக்கிறன் " என்று பொய் சொன் னேன்.
8

உடனே அவள் பார்வையில் சிறிது சஞ்சலம் முளைத் ததை அவதானித்தேன். "அவர் இல்லாத, நேரம் வந்திருக்கிறீங்க. s
* வரக் கூடாதா?" ‘வரலாம். ஆனால், தவிர்த்துக் கொள்ளுறது இரண்டு பேருக்கும் நல்லதுதானே?" V
நான் பதிலுக்கு ஒன்றும் பறையவில்லை. என் மனதில் புதைந்திருப்பதை எவ்வாறு வெளியிடுவது என்று யோசித்தேன். எனது மெளனம் அவளைக் கலக்கி இருக்க வேண்டும். என்னை அச்சத்துடன் நோக்கினாள். 'இந்த நேரத்தில. ஏன் வந்தீங்க?"
* 'உம்மைப் பார்க்க.”*
** என்னத்துக்கு?”* ‘எங்கட பழைய உறவை புதுப்பிக்க." சுபத்ராவின் முகம் சுருங்கியது. கண்களில் சினம் பொங்கி யது. நான் இதை துளியளவும் எதிர்பார்க்கவில்லை. என் அடி வயிறு கலங்கியது.
*மகேன், உங்களுக்கு இப்படி கதைக்க வெட்கமில்லையா? முதுகெலும்பு இல்லாத ஆம்பிளையாக உங்களை நிரூபிச்சு விட்டு, இப்ப என்னத்துக்காக என்னைத் தேடி வந்தீங்க?"
“ ‘சுபத்ரா. என்ன சொல்லுநீர்?" *மகேன், நான் ஒரு "ஆட்டக்காரி தான். எத்தனையோ பொடியங்களை "லவ்" பண்ணி இருக்கிறன். எத்தனையோ பொடியங்களின்ர ஆசை வார்த்தைகளுக்கு மயங்கினன். அவை யின்ர சேஷ்டைகளுக்கு விட்டுக் கொடுத்தன். உங்களையும் நம்பி என்னை உங்களுக்கு அர்ப்பணிச்சன். ஆனால், நீங்களும் காற் றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற ஆண் சாதிக்காரர் எண் டதை நிரூபிச்சு விட்டீங்க. நான் கடைசியாக "லவ்” பண்ணின ஆள் நீங்க தான். நீங்க என்னைக் கைவிட்ட பிறகு தான் நான் எங்க பிழை விடுறன் எண்டதை அறிஞ்சன். அந்தப் பிழையை இனியும் விடக்கூடாது எண்டு தீர்மானிச்சன். உண்மையில நீங்க தான் என்ர கண்ணை திறந்து வைச்சீங்க. லக்ஷமனைக் கண்ட போது அவரிட்ட நான் எல்லா உண்மைகளையும் சொன்னன். அவர் என்ர பழைய வாழ்க்கையை தான் மறந்து விடுவதாகக் கூறி என்னைக் கலியாணம் செய்தார். " சுபத்ராவுக்கு மூச்சிரைத்தது. பேசுவதை நிறுத்தினாள்.
“பொய், நான் நம்ப மாட்டன். ' குரலை உயர்த்திப் பேசி னேன்.
*மகேன், உங்களை நம்ப வைக்க வேண்டுமா? நீங்க எனக்கு ஆர்? "பிளிஸ் இஞ்ச இருந்து போங்கோ. இனியும் என்ர வாழ்க்கையை குழப்பாதேங்கோ. சுபத்ராவின் குரலில் கெஞ் சல் மறைந்திருந்த போதும், கோபமும் கலந்திருந்தது.
9

Page 14
“போகமாட்டன். என்ர நோக்கத்தை நிறைவேத்தாமல் போக மாட்டன் "" என்று கத்தினேன்.
சுபத்ராவின் முகம் சிவந்தது. என்னைக் கோபத்துடன் நோக்கினாள். “மகேன், போகமாட்டீங்களா?*
அப்போது - சினிமா படத்தின் திருப்பக் கட்டத்தில் வரு வது போல - லக்ஷமன் அங்கு வந்தான். நான் அவனைத் துளி யளவும் எதிர்பார்க்கவில்லை. ‘வெல, வெலத்துப் போனேன். லசுஷ்மன் என்னை அருவருப்புடன் நோக்கினான். "மிஸ்டர் மகேன், உங்களைப் போன்றவர்களால் தான் நான் இடைக்கிடை காரியாலய நேரத்தில் இங்கு வரவேண்டிய நிலை ஏற்படுகிறது" என லக்ஷமன் சொன்னான்.
மெளனத்தை சாதித்தபடியே, கைகளை பிசைந்த வண்ணம் நின்றேன்.
லசுஷ்மன் தொடர்ந்து பேசினான். 'சுபத்ரா, கலியாணத் திற்கு முன் ஒழுங்கீனமாக நடந்திருக்கலாம். அது எனக்குத் தெரிந்தும் நான் அவளைக் கட்டினேன். ஏன் தெரியுமா? பரிதா பமோ, கருணையோ, காதலோ, காமமோ காரணம் அல்ல. ஆனால், அவளைப் போன்ற பெண்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை நிறைவேற்றத்தான். ஆனால், உங்களைப் போன்றவர்கள், அதாவது, அவளைக் காதலித்து கைவிட்டதன் மூலம் அவளுக்கு ஆட்டக்காரி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள், அவள் கலியாணம் முடிந்த பின் பழைய தொடர்பைப் புதுப்பிக்க இங்கு வருகிறார்கள். பழைய தொடர்பைப் புதுப்பிக்க மனம் இருந்தால் அவளைக் கலியாணம் கட்டி இருக்கலாமே? தொடர்பை ஏற்படுத்துவதில் விருப்பம். ஆனால், அதனை நிரந்தரமாக்குவதில் தான் உங்களுக்கு முது கெலும்பு இருப்பதில்லை. மிஸ்டர் மகேன், நீங்கள் மட்டுமல்ல, பலர் இங்கு வந்து சுபத்ராவுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதனால் தான் நான் இடைக்கிடை காரியாலயத்தில் இருந்து வீடு வந்து அவளைக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. உங்களுக்கு சுபத்ராவை அடைய விருப்பம் என்றால் கலியாணம் முடித்திருக் கலாம் தானே? தயவு செய்து இனியும் எங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என தயவுடன் கேட்கிறேன்."" s
நான் வீட்டை விட்டு தலையைத் தொங்க போட்டபடி வெளி யேறிய போது, சுபத்ரா விம்மும் சத்தம் கேட்டது. என்னைப் பற்றி நினைக்க எனக்கே நாற்றமடித்தது போல் இருந்தது.
வீரகேசரி வாரவெளியீடு” . 24.5.1984
20

தொடரும் சிறுகதை
நீண்ட யோசனையை அறுத்தெறிய முடியாது, வசந்தி தவித்தாள்.
பல மணி நேரமாக, அவள் யோசனை நீண்டிருந்தது. யோசிக்க. யோசிக்க. *சே! அவள் மீண்டும் ஒரு முறை சலித் தாள். "வசந்தி, நாங்க எத்தனை நாளைக்குத்தான் இப்படி கள் ளத்தனமாக சந்திக்கிறதும், கதைக்கிறதும். . " பாஸ்கரன் பேசுவதை நிறுத்திவிட்டு, வசந்தியை நோக்கினான்.
வசந்தி மெளனமாக, எதுவுமே கூறாமல் அவனைப் பார்த் தாள்.
'வசந்தி, இதுக்கு முற்றுப்புள்ளி போடுறதெண்டால், நாங்க கலியாணம் முடிக்க வேணும். எங்கட கலியாணத்திற்கு உம்மட அப்பா “பெர்மிஷன்” தரமாட்டார். எண்டபடியால, நீர் வீட்டை விட்டு வந்து விடும். நான் உம்மை கண்கலங்காமல் காப்பாத்து றன். இதைப்பற்றி நாளைக்கு ஒரு தீர்க்கமான முடிவை சொல்லு வீரா?' பாஸ்கரன் வினயமாகக் கேட்டான்.
வசந்தி பொம்மைபோல், தலையாட்டிவிட்டு வீடு வந்தாள். வீட்டுக்கு வந்து, யோசனையில் மூழ்கிய போது. ‘பாஸ்கரனை நான் கலியாணம் கட்டுறதுக்கு அப்பா ஒருக் காலும் “பெர்மிஷன்” தரமாட்டார். நாங்கள் "றோயல் ஃபமிலி", எங்கட உடம்பில சுத்தமான ரத்தம் ஒடுது. “பெர்மனன்ற் அட் ரஸ்' இல்லாதவங்களுக்கு என்ர மகளை குடுக்கமாட்டன்’ எண்டு கத்துவார். வசந்திக்கு தந்தையைப் பற்றி நன்றாகத் தெரிந் திருந்தது.
உண்மையில் பாஸ்கரனுக்கு "நிரந்தர விலாசம் இல்லை. அவன் அப்பா தூத்துக்குடி என்று கேள்வி. அம்மா அம்பலாங் கொடைப் பக்கம். எப்படியோ இணைந்து விட்டார்கள்.
பாஸ்கரன் படித்துப் பட்டம் பெற்று, கொழும்பில் வேலை செய்யத் தொடங்கிய போது தான் வசந்தியுடன் தொடர்பை ஏற் படுத்தினான்.
'வசந்தி, நானும், நீரும் பல விஷயங்கள்ள மலையும், மடு வும் மாதிரி. நீர் யாழ்ப்பாணத்து 'அரிஸ்டோக்கரட்டிக் ஃபமிலி யை சேர்ந்தனிர் . நான் நிரந்தர விலாசம் இலாதவன். நீர் உயர்ந்த சாதி. நான் என்ன சாதி எண்டு என்னைப் பெற்றவை யளுக்கே தெரியாது. ஆனால், நாங்க "லவ்வர்ஸ்" ஆகிவிட்டம். உண்மையை சொல்லப்போனால், நாங்க இணைவோமா எண் டது பெரிய கேள்விக் குறியாக இருக்குது. இணயுறதெண்டால்
21

Page 15
எத்தனையோ எதிர்ப்புக்களைச் சமாளிக்க வேணும். அந்த எதிர்ப்புச் சக்தி உம்மற்ற இல்ல எண்டால், இப்பவே என்னை மறந்து விடும்.'"
பாஸ்கரனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும், வசந்தியை ஒரு முறைக்கு பல முறையாக சிந்திக்க வைத்தது. இறுதியாக அரை குறையாக முடிவு எடுத்து, ‘‘பாஸ்கர், நாங்க இணைவோம் எண்ட நம்பிக்கை எனக்கு இருக்குது" என்றாள்.
இதைக்கேட்டு பாஸ்கரன் சிரித் தான். ‘நம்பிக்கை மட்டும் போதாது. அதற்கேற்ற தைரியம் உம்மற்ற இருக்குதா?’ எனக் கேட்டபோது, வசந்தி தலை குனிந்தாள்.
* அப்பா, நான் பாஸ்கரனை கலியாணம் கட்டப்போறன். நீங்க சம்மதிக்காவிட்டால் நான் வீட்டை விட்டு அவரோட போறன். மனப்பாடம் செய்து வைத்து தந்தை முன் ஒப்புவிக்க அவள் எத்தனை தடவைகள் முயற்சித்திருப்பாள்? ஆனால், தொண்டைக் குழி வரை வார்த்தைகள் வந்தும், வெளியே வரத் தயங்கின. அவளுக்கு தோல்வி தான் கிட்டியது. தகப்பன் முன் தைரியமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் அவளை விலகியே சென்றன.
குறுக்கு வழியை விட்டுட்டு நேர்வழியில் சென்றால் என்ன? அப்பாவை எப்படி சம்மதிக்க வைக்கிறது? யாரை நாடுவோம்? தாயை நாடினாள். மங்களம் அதிர்ந்தாள். கோபமடைந் தாள். ஏசினாள்.
"உனக்கு விசர் பிடிச்சு விட்டுதா? அப்பா கேள்விப்பட்டால் உன்னைக் கொன்று போடுவார். எங்கட குடும்பத்தில செய்யாத ஒண்டை நீ செய்யப் பார்க்கிறாய்.”* கனமான வார்த்தைகளால் மகளை அபிஷேகம் செய்தாள் மங்களம்.
வசந்தி மன்றாடினாள். கண்ணிர் சொரிந்தாள். தாயின் காலையும் பிடித்தாள்.
தாய் அசையவில்லை. வசந்தியின் அடித்தொண்டை வரண் டது தான் மிச்சம்.
‘'நீ அவனை இண்டைக்கே மறந்து விடணும். ஏதோ ஒரு கெட்ட கனவாக நினைச்சு, இனி நடக்கப் போறதைப் பார். நன் சொல்லுறதை கேட்டு நடக்காமல் உன்ர போக்கில நடக்க நினைச்சால், அதால வாற விளைவுகளையிட்டு என்னால ஒண் டுமே சொல்லத் தெரியாது." மங்களம் மறைமுகமாகப் பய முறுத்தினாள்.
வசந்தி இரவிரவாக பாஸ்கரனை நினைத்து கண்ணிர் சொரிந் தாள். வீடே கதி என்று கிடக்கும் தங்கை சுசிலாவோ, "அட் வான்ஸ் லெவல் படிக்கும் மாலாவோ வசந்தியைத் தேற்ற முன் வரவில்லை. அதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை எண்ணி அவர்கள் இருவரும் வசந்தியை நெருங்கவே இல்லை.
22

வசந்திக்கு யோசித்து, யோசித்து தலை வெடித்து. ‘பாஸ்கரனை மறந்து விடவேண்டுமா?"
* முடியாது" . ‘அப்படியெண்டால் பாஸ்கரனுடன் இந்த ஊரைவிட்டு ஓடி னால் என்ன?”
சீறிச் சினக்கும் தந்தை, கணவனே கண்கண்ட தெய்வம் என்று தந்தையை வழிபடும் தாய், புழுக்களான நிலையில் விளங் கும் தங்கைமார், யாவரும் அவள் கண் முன் தோன்றி, அவளது துணிவைத் தணித்தார்கள்.
காதலுக்காக அவர்கள் யாவரையும் மறந்தால் என்ன? மறக் கலாம். அவளால் குடும்பக் கெளரவம் மழுங்கும் நிலை ஏற்படும். தங்கைமாரின் திருமணத்தில் பாதிப்புக்கள் ஏற்படும்.
"குடும்பக் கெளரவமும், மண்ணாங்கட்டியும். உமக்கு பிடிச்ச ஒருத்தனை கலியாணம் கட்ட உம்மட "பேரன்ட்ஸ்" சம் மதிக்காவிட்டால், நீர் அவனோட போய்விடும். சும்மா குடும்பக் கெளரவம், தங்கச்சிமாரின்ர வாழ்க்கை எண்டு நினைச்சு கோழையாக இருக்காதேயும். பேந்து ஒரு நாளைக்கு இதை நினைச்சு துக்கப்படுவீர். உம்மட எதிர்காலத்தை, நீர் தான் தீர் மானிக்க வேணும். ' பக்கத்து வீட்டு புவனேஸ்வரி ஒரு முறை சொன்னவை, திடீரென வசந்தியின் நினைவுக்கு வந்தன.
பாஸ்கரனுடன் ஒடிப்போனால் என்ன? அந்தத் துணிவு, அவளுடன் ஒட்டிக்கொள்ள மறுத்தது. அதனால் ஏற்படும் தாற் பரியத்தை நினைத்துப் பார்த்த போது, அவள் தேகம் நடுநடுங்கி யது. அடி வயிறு எரிந்தது. தலை கனத்தது.
"அப்படியெண்டால் பாஸ்கரனை மறந்து விடுவதா?” அதை முழுமையாக ஜீரணிக்க முற்பட்டபோது. தன் பாட்டிலேயே தூக்குக் கயிற்றுக்கு கழுத்தை நீட்டியது போன்ற உணர்வு, கெட்டியாகப் பீடித்தது.
இப்படியே தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாமல், அதை ஒத்திப்போட்டால், வருடங்கள் பல கரைந்து, அவள் முதுமை என்னும் இன்னொரு வட்டத்துக்குள் தள்ளப்பட்டு விடுவாள். தலைமயிர் நரைத்து, கண்கள் உட்குழிந்து, கவர்ச்சி கலைந்து, இளமையில் முதுமையாகி. "கவனிப்பாரற்ற" நிலையில் அல்ல லுறும் போது .
வசந்தியின் கண்கள் பனித்தன. பெண்ணாக, அதுவும் மூத்தவளாக, பிறந்து விட்டேனே என வேதனையில் மிதந்தாள்.
'ஆர் அன்ட் ஆர் கொம்பனியில் பணிபுரிந்தபோது, வசந்தி பின்னே, வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன், சுற்றியபடி
23

Page 16
இருந்தான். அவள் போன இடமெல்லாம், அவனும் பின் தொடர்ந்தான்.
"மிஸ். மிஸ்" என்று அவளே கதி எனக்கிடந்தான். ஏனோ, அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை.
"காவாலிப் பயல், என்னை ஒரே சுத்துறானே' என்று வசந்தி, மனதினுள் குமைந்தாள்.
அவ்வாலிபன் அவளைப் பலதடவைகள் பின் தொடர்ந்தான். ஒரு முறை வீடு வரைக்கும் வந்து விட்டான்.
இன்னொரு முறை அவளை நெருங்கி வந்து, "ஐ லவ் யூ" என்று சொல்லிவிட்டு, அவள் முகத்தை ஆர்வத்துடன் நோக்கி னான். 'செருப்பைக் கழற்றுறதோ?" என அவள் கேட்க, அவன் முகம் சுருங்கிவிட்டது.
சில மாதங்களின் பின், பள்ளி நண்பி ரஞ்சிதமலரிடம் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்று வசந்திக்கு கிடைத்தது. கலியாண வீட்டுக்கு வசந்தி சென்றாள். மாப்பிள்ளையைக் கண்டு அதிர்ந்து விட்டாள்.
மாப்பிள்ளை - அவளைப் பின் தொடர்ந்த வாலிபன். ஓ! வீட்டுக்குச் சென்று, திருமண அழைப்பிதழை மீண்டும் பார்த்தபோது -
சந்திரகுமார், பீ.ஏ., எல்.எல்.பீ., சட்ட ஆலோசகர். பல நாட்களாக, சந்திரகுமாரின் முகம் நிர்மலாவின் மனதை விட்டு அகலவில்லை. "ஐ லவ் யூ" என ஒரு முறை அவன் பக்குவ மாகக் கூறியதை மனதில் இருத்தி பெருமூச்சுக்களைப் பல நாட் கள் வெளியிட்டாள்.
சிநேகிதி யோகராணியின் வீட்டுக்குப் போகும் வேளை களில், அவள் வீட்டில் முன் அறையில் குடியிருந்த வாலிபன் வசந்தி யைக் கண்டவுடன், வாயெல்லாம் பற்களாகக் காட்சி அளிப் பான்.
அவ்வாலிபன் நல்ல கறுப்பு நிறமானவன். உடம்பும் சற்றுப் பருமன். தலை அரை மொட்டை. பார்ப்பதற்கு லட்சணமில்லை. ஆனால், வாலிப வயது.
வசந்தி அவனைக் கண்டால் புன்னகை ஒன்றை மிகச் சிரமப் பட்டு வெளியிடுவாள்.
யோகராணியின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம், அவ் வாலிபன் ஏதாவது சாட்டை வைத்து, அங்கு வந்து வசந்தியுடன் கதைக்க முற்படுவான். வசந்தியும் "ஏனோ தானோ" என்று கதைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி விடுவாள்.
**யோகம், ஏன்ரி முன் "ரூம்ல ஒரு கிறுக்கை வைச்சிருக்கி றாய்?" என்று வசந்தி ஒரு தடவை வெளிப்படையாகக் கேட்டு விட்டாள்.
24

**கிறுக்கா? அந்த ‘போய்’ எவ்வளவு நல்லவர். தானுண்டு, தன் வேலை உண்டு எண்டு இருக்கிறவர்.' யோகராணி கூறிய போது, வசந்தி சிநேகிதியை எரிச்சலுடன் நோக்கினாள். ** என் னைப் பார்த்து பல்லை இளிச்சு, ‘சமன்ஸ்' இல்லாமலேயே இஞ்ச நுழைஞ்சு விடும் அந்த கிறுக்குக்கு ஏன்ரி சேர்டிபிக்கேட்" குடுக் கிறாய்?"
"வசந்தி, அவருக்கு உன்னில "லவ்" வாக்கும். அதுதான் சமன்ஸ்" இல்லாமலேயே இஞ்ச வாறார்." யோகராணி அவ் வாலிபனுக்காகப் பரிந்து பேசினாள்.
யோகராணி கூறியதை, வசந்தி துளியளவும் பொருட்படுத்த வில்லை.
ஒரு மாதத்தின் பின், யோகராணி வீட்டுக்கு வசந்தி போன போது, முன் அறையில் வயதான ஒருவர் குடியிருப்பதை கண் t -- mr Gir.
'வசந்தி, முன் அறையில இருந்த தணிகாசலத்திற்கு கலியா ணம் நடந்து, அறையை விட்டுட்டு போயிட்டார். அவர் ஒரு அதிர்ஷ்டசாலி. நல்ல சீதனம். கொழும்பில, அதுவும் வெள்ள வத்தையில, சீதனமாக வீடு குடுத்திருக்கினமாம். பொம்பளை யும் நல்ல வடிவாம். கிளி மாதிரி எண்டு சொல்லினம். பொம் பளை ஒரு டொக்டராம்."
"யாரோ" இதயத்தை அழுத்துவது போன்ற உணர்வு, வசந்தியின் மனதில் பரவி, ஆழமான வடுவொன்றை ஏற்படுத்தி
L5.
"வசந்தி உன்னற்ற ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? தணிகாசலத்திற்கு உன்னில சரியான விருப்பம். உன்னை சீதனம் இல்லாமல் கலியாணம் கட்டுறதுக்குக் கூட அவர் தயாராக இருந் தார். நீ தானே அவரை வேண்டாம் என்ற மாதிரி நடந்து விட்
fT iii. ” ”
வசந்திக்கு பதிலுக்கு வார்த்தைகள் எதுவுமே வெளிவர வில்லை.
வலிய வந்த சந்தர்ப்பங்கள் இரண்டை இழந்த நிலையில், மனம் நொந்து போன நிலையில் இருந்த போதுதான் பாஸ்கர னுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டது.
சந்திரகுமாரை, தணிகாசலத்தை கலியாணம் செய்ய அவள் பெற்றோர் தமது சம்மதத்தை அளித்திருப்பார்கள். ஆனால், பாஸ்கரனைக் கரம் பிடிக்க. வசந்தியின் மனம் அழ முடியாமல் தவித்தது. அழுகைக்கிடையே சொல்லிவிட்டாள்.
"பாஸ்கர், என்னை மறந்து விடுங்க. உங்களோட ஒடி வர எனக்குத் துணிவு இல்ல. எனக்கெண்டு விட்ட வழியில் நான்
25

Page 17
வாழ்றன்.' வசந்தி உறுதியாகக் கூறினாள்.
'இது தான் உம்மட முடிவா?’ பாஸ்கரன் அவள் நாடியை உயர்த்திக் கேட்டான்.
"ஒமோம், என்னால இந்த மாதிரியான முடிவை எடுக் கிறதை தவிர வேறை முடிவை எடுக்க முடியாமல் இருக்குது.”* "என்றோ, எப்பொழுதோ உம்மட முடிவை நினைச்சு துக் கப்படுவீர்.”*
பாஸ்கரன் போய்விட்டான்.
இரவு முழுவதும் வசந்தி நித்திரை இன்றித் தவித்தாள். "என்ர வாழ்க்கை இனி எப்படி போகப் போகுதோ. s நாட்கள் நகர்ந்தன. பாஸ்கரன் ஒமானுக்கு வேலை கிடைத்து போனதாக வசந்திக்கு தகவல் கிட்டியது.
ஆறு மாதங்கள் கழிந்திருக்கும். பாஸ்கரனிடம் இருந்து வசந்திக்கு கடிதம் ஒன்று வந்தது.
"இவ்வளவு காலமும் கடிதம் எழுதாததிற்கு மன்னிக்கவும்" என்று தொடங்கி தனக்கு திருமணமாகி விட்டதாகவும், மனைவியை இலங்கையில் விட்டுட்டு வந்ததாகவும் பாஸ்கரன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
"வசந்தி, நான் உண்மையைத்தான் எழுதுகிறேன். உமக்கு ஆச்சரியமாக இருக்கும். என் மனைவி ஒரு முடம். ஏதோ என் னால் ஒரு முடமான பெண்ணாவது வாழட்டுமே என்ற உணர் வில் தான், அவளைக் கரம் பற்ற சம்மதித்தேன். அவள் உடல் முடமென்றாலும் மனம் முடமல்ல. உம்முடைய மனம்தானே (up-tb .........?'
பாஸ்கரனின் கடிதத்தில் இருந்த ஒவ்வொரு வார்த்தையும் அவனது இயலாமையை குத்திக் காட்டியது.
வசந்தியின் கண்களில் இருந்து நீர் வழிந்து, கடிதத்தின் கீழ் காணப்பட்ட பாஸ்கரனின் கையொப்பத்தில் தெறித்து, அதை அழிக்க முற்பட்டது.
மனமொடிந்த நிலையில் வீடு வந்து சேர்ந்த வசந்திக்கு மங் களம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டாள். அத்தகவல் - கிட்டினன் மகன் வீமனோட சுசிலா வீட்டை விட்டு ஓடி விட் டாள். கிட்டினன் அவ்வூர் கள்ளுத் தவறனை முகாமையாளர். வசந்தி விக்கித்துப் போனாள். 'இக்கனம் அப்பா சுசிலா வைக் கொல்லப் போறாரோ!'
தாய் இல்லையென தலையசைத்தாள். 'முதல்ல அப்படித் தான் கத்திக்கொண்டிருந்தார். ஆனால், பேந்து அவள்ன்ர தலை எழுத்து அப்படி இருந்தால் நான் என்ன செய்யுறது எண்டு
26

சொன்னார். இப்ப என்ன எண்டால் "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதியார் பாட்டை, எனக்குப் பாடிக்காட்டு றார்."
வசந்தி தலையை உயர்த்தினாள். தாயின் குரல் வளையை குதறி எடுக்க வேண்டும் என்ற வெறி, அவளுள் ஏற்பட்டு, விகார மாகியது.
மங்களம் தன்பாட்டில் அங்கிருந்து அகன்றாள்.
*வீரகேசரி வாரவெளியீடு" - 1.8.1982
27

Page 18
O சுதந்திரக் காற்று
பனித்துகள்கள் பூ மழையாகப் பொழிந்து நில மகளை அணைக்க...
கடுங்குளிர் உடலை ஊசிகளாக குத்த. ஹரிச்சந்திரன் ஜன்னலினூடாகப் பார்வையை ஒட விட் டிருந்தான். நீண்ட நேரமாக தூரத்தில் தெரிந்த "வெஸ்ட் மினிஸ்டர் அபே" கட்டிடத்தைப் பார்த்தபடி தன்னை மறந் திருந்தான். அவன் சிந்தனையை அக்கட்டிடத்தின் கம்பீரம் ஈர்த் தெடுக்கவில்லை. அதன் கம்பீரத்தை ரசித்துப் பார்க்கும் மனோ நிலையும் அவனிடமிருந்து விடைபெற்றிருந்தது.
கடந்த மூன்று வருடங்களாக, நாள் தவறாமல், காலையில் எழுந்து அக்கட்டிடத்தின் கம்பீரத்தை சில வினாடிகளாவது ரசிக்க அவன் தவறமாட்டான். இவ்வளவு பிரமாண்டமான கட் டிடத்தை எவ்வாறு இவ்வளவு அழகாக கட்ட முடிந்தது என வியப்புறுவான். கட்டிடக் கலையின் மகத்துவத்தை வியந்த வண் ணம், தன்னை மறந்த நிலையில் பல தடவைகள், பல மணி நேரத்தை ஜன்னலின் அருகே கழித்திருக்கிறான்.
கடந்த மூன்று வருடங்களாக அவன் கண்களுக்குப் பசுமையை ஏற்படுத்திய, அவன் சிந்தனைகளைப் பல வழிகளிலும் துரத்தித் திரிந்த, அக்கட்டிடத்தை அவன் நாளை காலையில் பார்க்க முடி
11.Π.351.
இன்றைய மாலைப் பொழுதில் அவன் இலங்கைக்கு விமானம் ஏறுவான். நாளை கொழும்பை அடைந்து விடுவான். பின் ஒன்றோ அல்லது இரண்டோ நாட்கள் கழிய அவன் சொந்த ஊருக்குப் பயணமாகி விடுவான். அதன் பின் கட்டிடங்களை விஞ்சும் வகையில் உயர்ந்து, நெடிந்து வளர்ந்திருக்கும் பனை களும், தென்னைகளும் தான் அவன் பார்வைக்கும், சிந்தனைக் கும் விருந்து படைக்கும்.
'ம்ஹா. ஹரி நீண்டதொரு பெருமூச்சு விட்டான். ஜன் னல் திரைச்சீலையை இழுத்து மூடியவனின் கண்கள் கலங்கின. இதயம் கனத்தது. கண்களை மூடி கண்ணீரை அடக்க முற்பட் டான். ஆனால், சில துளிகள் வெளியேறி கன்னங்களில் வழித்து, நிலத்தில் தெறித்தன. கைகளால் கண்களைக் கசக்கியவன், எதிரே விநோதினி நிற்பதைப் பார்த்தான்.
ஹரி வலுக்கட்டாய புன்னகை ஒன்றை மெதுவாக வெளி யிட்டு, “ஹலோ விநோ’’ என விளித்தான்.
விநோதினி "ஹலோ" சொல்லவில்லை. கணவனைப் பரிதா பத்துடன் நோக்கினாள். ‘ஹரி, சிலோனுக்கு போறதை நினைக் கக்கில துக்கமா இருக்குதா? 'ஆர் யு ஃபீலிங் இட்"? " விநோதினி யின் வார்த்தைகளில் வாஞ்சை நிறைந்து இருந்தது.
28

ஹரி தலைகுனிந்தான். "நோ." சில வினாடிகள் மெளனத தின் பின், 'நோ, நோ" எனக் குரலை உயர்த்திக் கூறினான்.
“ ‘கமோன் ஹரி, வட்ஸ் த மெட்டர்"? சொல்லுங்க "ஐயாம் யுவர்" விநோ. *’ என்ற விநோதினி, அவன் கைகளை ஆதரவாகப் பற்றினாள்.
ஹரி தலையை உயர்த்தினான். 'விநோ. விநோ. δ . ** "ஹரி யூ ஆர் நொட் எ ஸைல்ட், ஸ்பீக். "' *விநோ, லண்டனை விட்டு சிலோனுக்கு போகப்போறம் என்றவுடன் "ஐ வொஸ் லிட்டில் அப்செட்”, ’’
* 'மை டியர் ஹரி, சிலோனுக்கு திரும்பிப் போறதெண்டு நாங்க இரண்டு பேரும் தானே முடிவு எடுத்தம் ? இப்ப அதை நினைச்சு ஏன் "வொரி பண்ணுறீங்க?"
** "வொறி பண்ண இல்ல. 'ஃபீல்' பண்ணுறன். முதல்ல இஞ்சயே “செட்டில் பண்ணத்தான் விரும்பினன். "பட், ஐ ஹாட் ரூ சேஞ் மை ஐடியா”. லண்டன் "லைஃப்” மஞ்சுவுக்கு ஒத்து வராததால சிலோனுக்கு போறதெண்டு முடிவு எடுத்தம். இதால எங்களுக்கு நஷ்டம் தான். விநோ, பவுண்ட்ஸ்", "ருப்பீஸ்" கணக்கில சொல்லுறதெண்டால் மாசத்துக்கு பத்தாயிரம் ரூபாவை இழக்கப் போறன். ஆனால், நான் இதைப்பற்றி கவலைப்பட இல்ல. காசு எனக்கு பெரிசு இல்ல. மஞ்சுவின்ர மன நிலை தான் எனக்கு முக்கியம்.”* ஹரியின் குரலின் ஏற்ற, இறக் கம் கொஞ்சம், கொஞ்சமாக நலிவடைந்தது.
** ‘ஹரி டூ யூ ரிபென்ற் ஃபோர் திஸ்? ரூ பீ வெரி ஃபிராங் ஐ டோன்ட்". மூன்று வருஷம் இங்க இருந்திட்டம். அது போதாதோ? விநோதினி கேட்டு விட்டு, ஹரியை அழைத்துச் சென்று உட்கார வைத்தாள்.
ஹரி உடனடியாக ஒன்றும் கூறவில்லை. கண்களால் அந்த அறையை வலம் வந்தான். 'விநோ" என அவன் பேச்சை மீண் டும் ஆரம்பிக்க முற்பட்டபோது, “ஹலோ டடி, மம்மி, நீங்கள் இங்கு தானா இருக்கிறீர்கள்?’ என ஆங்கிலத்தில் கேட்டபடி மஞ்சுளா 'பார்த் ரூமில் இருந்து வந்தாள்.
*ஒமோம்.’’ ஹரி தமிழில் விடை பகிர்ந்தான். ‘இன்று மாலை நாம் இலங்கைக்கு போகிறோம் அல்லவா??? மஞ்சுளா ஆங்கிலத்தில் பேச்சைத் தொடர்ந்தாள்.
*ஒமோம். ' மஞ்சுளா தொடர்ந்தும் ஆங்கிலத்திலேயே உரையாடினாள். ""நாளை நாம் கொழும்பை அடைந்து விடுவோம் அல்லவா?’’
ஹரி ஒமென்று தலையசைத்தான்.
"அப்படியென்றால் நான் புதன்கிழமை எனது அம்மப்பா, அம்மம்மா, பாட்டி ஆகியோரைப் பார்க்க முடியும் அல்லவா?"
29

Page 19
ஹரியின் தலை மீண்டும் ஒமென்பதற்குப் பதிலாக மேலும், கீழும் அசைந்தது.
மஞ்சுளாவின் முகத்தில் ஆனந்தம் வியாபித்தது. புன்முறுவல் தோன்றி சிரிப்பாக மாறியது. "ஒ எவ்வளவு நல்லது. அங்கு சுரேஷ் அண்ணா, மைதிலி அக்கா, உமா மச்சாள், கமலா குஞ்சு, வாசு அண்ணா ஆகியோருடன் விளையாட சந்தர்ப்பம் கிடைக் கும்.’’ மஞ்சுளா கட்டிலில் ஏறி ஹரியின் முதுகுப்புறமாக வளைந்து, அவனைக் கட்டிப்பிடித்தாள்.
மூன்று வயதில் நடந்த சில நிகழ்ச்சிகள் மஞ்சுளாவின் மனதில் இன்னும் பசுமரத்தாணிதான்.
பனை வடலி, மாமரங்களைச் சுற்றி ஒடிப்பிடித்து விளை யாடியது . சீனித்தம்பி பெரியப்பாவின் வீட்டுக்கோடியில் இருந்த இலந்தப்பழ மரத்தின் கீழ் இலந்தைப்பழங்களை பொறுக்கியது. முன்வீட்டு கனகசபை மாமா சுவர் கட்டுவதற் காக வேலியில் நின்ற பூவரம் மரங்களை வெட்டி வீழ்த்திய பின் பூவரசம் இலைகளை தெரு ஆடுகளுக்கு நீட்டியது. சுரேஷ் அண்ணாவுடன் கிட்டி விளையாடியபோது கிட்டிக்கம்பு அவள் கண்ணில் பட்டு டொக்டரிடம் காயத்திற்கு கட்டுப்போட்டது. இன்னும் பல நிகழ்ச்சிகள். மஞ்சுளாவின் பிஞ்சு மனத்திரை யில் இடையிடையே தெளிவில்லாமல் தோன்றி மறைவதுண்டு. லண்டனுக்கு வந்த பின் ஐநூறு சதுர அடி "அப்பார்ட்மென் டுக்குள்ளேயே முடங்கிய பின், தலை நீட்டிய பிரச்சினைகளை மஞ்சுளா "நுனிப்புல் மேயும் நிலையில் உணரும் பக்குவத்தை அடைந்திருந்தாள். அந்த வாழ்க்கைக்கும் - தென்றலின் சுகானுபவத்திற்கும், இந்த வாழ்க்கைக்கும் - பாலைவன அனல் காற்றுக்கும் இடையில் தான் எத்தனை வித்தியாசம்?
மஞ்சுளா படுக்கை அறையை நோக்கிச் சென்றபோது, ஹரி கட்டிலில் இருந்து எழுந்தான். விநோதினியிடம் சென்றான். **விநோ, இந்த அப்பார்ட்மென்ட் ஃலைப்பில" இருந்து விடுதலை கிடைச்சு விட்டதில மஞ்சுவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக் குது எண்டதைப் பார்த்தீரோ?*
** "ஸோ', நாங்க எடுத்த 'டிஸிஷன் சரிதானே??? விநோ திணி திருப்பிக் கேட்டாள்.
கண்களை மூடிய ஹரி மேலும், கீழும் தலையைப் பலமாக ஆட்டினான்.
கனமான 'அக்கவுன்டன்ஸி" புத்தகம் ஒன்றில் ஹரி மூழ்கி இருந்தான்.
மறுநாள் இறுதிப் பரீட்சை. சித்தி அடைந்தால் பல அனு கூலங்கள் கிட்டும். லண்டனின் ஒதுக்குப் புறத்தில் உள்ள பெற் றோல் நிலைய பகுதி நேர வேலையை உதறித் தள்ளிவிட்டு முழு நேர, கெளரவமான தொழிலை ஆற்ற முடியும். இரவிரவாக கண்
30

விழித்து படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம். மஞ்சுளா தன படிப்பை லண்டனில் மேற்கொள்ளலாம். கைநிறையப் பணம் உழைக்கலாம். சொகுசு வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஹரியின் கவனம் முழுவதும் புத்தகத்திலேயே பதிந்திருந்தது. அந்தச் சிறிய ஹோலை அடுத்திருந்த சிறிய சமையலறை ! சாப்பாட்டறையில் இருந்தபடி ஊரில் உள்ள தங்கை எழுதிய கடிதத்தை விநோதினி வாசித்தபடி இருந்தாள்.
* பிரஷர் குக்கரில் "சுப்பர் மார்க்கெட்"டில் இருந்து வாங்கி வந்த ஆட்டிறைச்சி வெந்து கொண்டிருந்தது.
: '......... அக்கா, மஞ்சுளா இல்லாமல் அப்பா, அம்மாவுக்கு ஒரளவு கவலைதான். எந்த நேரமும் மஞ்சுவைப் பற்றித்தான் கதை. இனி எப்ப மஞ்சுவைப் பார்ப்பமோ என அம்மா முணு முணுக்கிறா. மற்றது மஞ்சுவின் ஐந்தாவது "பேர்த்டே இக்கடி தம் கிடைக்கும் போது நடக்கும் என நினைக்கிறேன். விநோ தினி கடிதத்தை முழுவதும் வாசித்து முடிக்க முன் “ஏதோ வொன்று விழும் சத்தம் அவள் கவனத்தைக் குழப்பியது. ஹரி திடுக்கிட்டு விட்டான். அந்த கனமான புத்தகம் நழுவி கீழே விழுந்த கையுடன் அவன் எழுந்தான்.
விநோதினி சத்தம் வந்த திக்கை நோக்கி ஓடினாள். சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் நின்ற ஹரியும் விரைந்தான். படுக்கை அறையில் இருந்து தான் சத்தம் வந்ததைப் புரிந்த விநோதினி அங்கு சென்று விட்டாள்.
அறையின் மூலையில் இருந்த அலுமாரி நிலத்தில் சரிந்து கிடந்தது. உள்ளே இருந்த புடவைகள், உடுப்புக்கள் மற்றும் இன்ன பிற சாமான்கள் நிலத்தில் வாரி இறைந்திருந்தன.
அலுமாரிக்குக் கீழே மஞ்சுளாவின் அரைவாசி உடல் அகப் பட்டிருந்தது. வெளியே தெரிந்த முகத்தில் கலவரம் மறைந் திருந்த போதும், குறும்பும் தென்பட்டது. அலுமாரியின் மேற் பகுதி கட்டிலின் விளிம்பின் மேல் சாய்ந்திருந்தபடியால், அதன் கீழ் கிடப்பதில் மஞ்சுளாவுக்கு எவ்வித நோவும் ஏற்பட்டிருக்காது. பார்த்த மாத்திரத்திலேயே என்ன நடந்துள்ளது என்பதை ஹரி உணர்ந்தான்.
மஞ்சுளா அலுமாரியைத் திறந்து, இரண்டாவது தட்டில் ஏறி, அலுமாரியின் மேல் இருந்த "பேசும் பொம்மையை எடுக்க முனைந்திருக்கிறாள். அவளது பாரம் தாங்காமல் அலுமாரி சரிந்து விட்டது.
ஹரி அலுமாரியைத் தூக்கி, மஞ்சுளாவை வெளியேற்ற முனைந்த போது.
கீழ் "அப்பார்ட் மென்டில் குடியிருக்கும் மிஸிஸ் வைட் அங்கு ஆஜராகி விட்டாள்.
3.

Page 20
அதன் பின் அவள் ஹரியையும், விநோதினியையும் கண்ட படி ஏசினாள். இருவரும் வாய் திறவா மெளனிகளாக விளங்கி னர். மிஸிஸ் வைட்டின் பார்வை மஞ்சுளாவைத் துளைத போது அவள் நடுங்கினாள். அவளையும் மிஸிஸ் வைட் வாய்க்கு வந்த படி ஏசிவிட்டு, அங்கிருந்து அகன்றாள்.
அவள் மறையவும் அவமானமும், கோபமும் ஒருங்கே பீடிக் கப்பட்ட விநோதினி விரைந்து சென்று மஞ்சுளாவின் கன்னங்களி லும், உடம்பிலும் செமத்தியாக அறைந்தாள்; அடித்தாள்.
தாக்குதலின் உபாதையை தாங்க முடியாமல் அந்தப் பிஞ்சுக் குழந்தை அலறிய போதும், 'பொத்தடி வாயை’’ என்று சொல் லிய படி விநோதினி தன் செயலைத் தொடர்ந்தாள். 'சனியன். ஒருநேரமாவது சும்மா இருக்குதோ? உன்னைப் பெத்தநேரம். இதை ஏன் தான் இஞ்ச கூட்டிகொண்டு வந்தமோ? பட்டிக்காடு தான் இதுக்கு ஒத்து வரும்."
ஹரியினால் மேலும் பொறுக்க முடியவில்லை. விநோதினியை நெருங்கினான்: "ஸ்டொப் இட்." அடித்தொண்டையில் கத்தி விட்டு, எரித்து விடுவது போல நோக்கினான்.
விநோதினி தனது பேச்சுக்கும், செயலுக்கும் முற்றுப்புள்ளி யிட்டாள். d
படுக்கைக்கு போக முன் விநோதினியை எச்சரிப்பது போல ஹரி நோக்கினான். "விநோ, நீர் மஞ்சுளாவின்ர செயலைக் கண் காணிச்சிருந்தால் அவளை இப்படி போட்டு அடிச்சிருக்கத் தேவையில்ல.”*
விநோதினியின் ஈரமான உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.
ஒரு படுக்கை அறை. சிறிய ஹோல். சிறிய சமைக் கும் | சாப்பாட்டு அறை. மொத்தம் ஐநூறு சதுர அடி கொண்ட ‘அப்பார்ட்மென்ட் இற்குள்தான் விநோதினி, மஞ் சுளாவின் வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்தது. ஹரியின் வாழ்க்கை வெளியில்தான் அதிகம் கழிந்தது.
அந்தப் பெரிய கட்டிடத்தில் இவர்கள் பகுதி மிகச் சிறியது. பனிக்காலத்தில் ஜன்னல் யாவற்றையும் இறுக மூடினல், மூச்சு விடுவதே கஷ்டம்.
இவர்கள் "அப்பார்ட்மென்டைச் சுற்றி வாழ்ந்தவர்கள் யாவ ரும் பிரிட்டிஷ் பிரஜைகள். இவர்களில் யாரும் ஒருவர் சற்றுப் பலத்துப்பேசினால் பிரிட்டிஷ்காரர் ஒருவர் கதவைத்தட்டி "கத்த வேண்டாம்" என்று கறாராகச் சொல்லி விட்டுச் செல்வார்.
மஞ்சுளா நிலத்தில் "தொம்", "தொம்" என்று குதித்து விளை யாடினால், பிரிட்டிஷ் தலைகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். காய்ச்சல் என்று விநோதினியும், மஞ்சுளாவும் படுத்தால் ஒரு தலை கூட எட்டிப்பார்க்காது.
32

அலுமாரி கீழே விழுந்த சம்பவத்தின் பின், மஞ்சுளாவின் நட வடிக்கைகளை விநோதினி சற்று கண்காணிக்கத் தொடங்கி னாள். அதன் விளைவு மஞ்சுளாவை விநோதினி அடிக்கடி வார்த்தைகளால் மிரட்டினாள். "டோன்ட் டு தட்."" **டோன்ட் டு திஸ்." ** டோன்ட் ஸிட் தெயார்." "டோன்ட் கிளைம் ஒன் த டேபிள்." ஆனால், மஞ்சுளாவின் போக்கில் ஒரு முன்னேற்றமும் ஏற் படவில்லை.
மஞ்சுளாவின் ஒவ்வொரு செயலும் விநோதிணிக்கு எரிச்சலை ஊட்டியது. கோபத்தை மிகைப்படுத்தியது. அதை வார்த்தை களால் வெளிப்படுத்தினாள். முகபாவனையால் உணர்த்தினாள். இடையிடையே மஞ்சுளாவின் வாய்க்குள் சீலையை அடைத்து விட்டு பிரம்பினால் விளாசித் தள்ளினாள்.
இதன் தாற்பரியம் மஞ்சுளாவின் பிஞ்சு உள்ளத்தில் தழும்பு களை ஏற்படுத்தியது. தாயைக் காணும் போதெல்லாம் அந்தச் சின்னஞ்சிறுசு எரிச்சல் கொள்ளத்தொடங்கியது.
மஞ்சுளாவின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கவனிக்க ஹரி தவறவில்லை.
புதியதொரு சூழ்நிலையை மஞ்சுளாவிற்கு உருவாக்குவதற்கு ஹரி முனைந்தான். ஆனால், முதல் முயற்சியே தோல்வியில் முடி வடைந்தது.
மாலை வேளைக்குரிய மரியாதை அந்த பூங்காவுக்குக் கிட்டி இருந்தது. −
பனித்துளிகள் படர்ந்திருந்த புற்றரையில் பிஞ்சுப் பாதங்கள் பல பதிந்திருந்தன.
அந்த வெள்ளைக்கார பிஞ்சுகளின் கேலிப் பேச்சுக்கள், கும் மாளங்கள், சிரிப்புக்கள். ஆடி, ஓடி விளையாடுவதும், ஒரு வரை ஒருவர் பிடிப்பதும், நிலத்தில் குத்துக்கரணம் போடுவதும், தம்மை மறந்த நிலையில் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் நீந்தினர்.
ஒரு சீமெந்து 'பெஞ்சில் ஹரியும், விநோதினியும் அமர்ந் திருந்தார்கள். பிஞ்சுகளின் களிப்பில் பங்கெடுத்தபடி, தம்முள் சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளைக்கார சிறுமிகள் இருவர் - வயது பத்துக்குள் தான் அடக்கம் - அளவான நீளமுள்ள கயிறு ஒன்றை ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தனர்.
தாயின் மடியில் அமர்ந்திருந்த மஞ்சுளாவுக்கு இந்நிகழ்ச்சி வேடிக்கையாக இருந்தது, புதுமையாகவும் தோன்றியது.
பலப்பரீட்சை நீடித்தது.

Page 21
தாயின் மடியில் மஞ்சுளாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. மடியில் இருந்து கீழே இறங்கினாள். கயிறு இழுக்கும் "அக்காமார் களின்" செயல்களை அருகில் போய்ப் பார்க்க வேண்டும் என்ற அவாவும், ஆசையும் ஏற்பட்டன.
மஞ்சுளா அச்சிறுமிகளை நோக்கி நடந்தாள்.
கயிறு இழுத்தபடி இருந்த சிறுமிகள் அவளைக் கண்டு விட்ட னர். இருவரது கைகளிலும் இருந்து கயிறு நழுவியது.
" "யூ டேர்டி பிளாக்ஸ். கோ ஃபுரம் ஹியர்”. '' ஒருத்தி சீறினாள்.
"" "பிளாடி இன்டியன். கெட் அவுட்". " மற்றவள் அர்ச்சித்
தாள.
இருவர் முகங்களிலும் மிகுந்த வெறுப்பு, க்ோபம். மஞ்சுளா சமைந்து போனாள். கலவரம் அவளைக் கெட்டி யாகப் பீடித்தது. கைவிரல்கள் நடுங்கின. விழிகள் மருண்டன. விநோதினி அதிர்ச்சியினால் சில வினாடிகள் சமைந்து போனாள். நெஞ்சு பிளப்பது போன்ற ஓர் உணர்வைத் திடீரென அடைந்தாள்.
ஹரியின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் தென்படவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு அவன் மனம் மரத்து விட்டது.
விநோதினி ஒடிச்சென்று மஞ்சுளா வை அணைத்தாள். பின் அந்த வெள்ளைக்கார சிறுமிகளை நோக்கி 'போங்கடி மடைச்சி கள்" என்று தமிழில் கத்திவிட்டு கணவனைப் பார்த்து, "ஹரி "ஷல் வீ கோ ஹோம்? “ என்றவள், மஞ்சுளாவை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள்.
ஹரியின் நெஞ்சில் விநோதினி கொடியாகப் படர்ந்திருந் தாள். மஞ்சுளா தன்னை மறந்த நிலையில் உறக்கத்தில் ஆழ்ந் திருந்தாள்.
**விநோ, உம்மோட ஒரு விஷயத்தை "ஒபனாகப்" பேச லாமா?' என்ற பீடிகையுடன், ஹரி பேச்சை ஆரம்பித்தான்.
'யெஸ் ஹரி.* "நாங்க சிலோனுக்கு திரும்பிப் போவமா?" ஹரியின் பேச்சினால் துணுக்குற்ற விநோதினி, தலையைத் தூக்கி, அவனை ஆச்சயரிமாக நோக்கினாள். 'ஹரி, ‘வட் ஆர் யூ டோக்கிங்"? ”*
**விநோ, மஞ்சுளாவின்ர எதிர்காலத்தை நினைச்சு நாங்க அங்க போகத்தான் வேணும்."
ஹரியின் பேச்சின் உட்கருத்தை விநோதினியினால் புரிய முடியவில்லை. "ஹரி, விளக்கமாகச் சொல்லுங்களேன். "வட் இஸ் ஹைடிங் இன் யுவர் ஹாட்"? "
34

“மஞ்சுளாவோட எங்கட "அப்ரோச்” எல்லாம் ‘நெகடி வாகத் தான் இருக்குது. அவள்ன்ர செயல்கள் எல்லாம் எங்களால் தடுக்கப்படுது. அவள்ள்ர எல்லா செயல்களும் எங்களுக்கு குழப் படி போலத் தெரியுது. அவள் சின்னஞ்சிறுசு. இந்த சின்ன ‘அப் பார்ட்மென்ட்”டுக்குள்ள மற்றப் பிள்ளைகளைப் போல விளை யாட விரும்புறாள். ஆனா, நாங்க அதைத் தடுக்கிறம். எத் தனை நாளைக் குத்தான் எங்கட "நெகடிவ்"வான "அப்ரோச்'சில
அவள் வாழ்றது? "டோன்ட்", "டோன்ட்" எண்ட சொல்லை கேட்டே அவளுக்கு வாழ்க்கை மீது இருக்கும் பற்று தளர்ந்து விடுமோ எண்டு பயப்படுறன். ஊரில எண்டால் எல்லாமே
“பொஸிடிவ்" வாக இருக்கும் எண்டு நம்புறன். "வட் டூ யூ ஸே’? ' “ ‘பட் ஹரி, நாங்க இன்னும் கொஞ்சக் காலத்தில இந்த " அப்பார்ட்மென்டை விட்டு விடுவம் தானே? பெரிய வீடு எடுத் தால்.
ஹரி அவள் பேச்சை இடைமறித்தான். 'விநோ, நான் *ஃபைனல் சோதனையில ஃபெயில் விட்டுட்டன். இனி அதை ‘பாஸ்" பண்ண எவ்வளவு காலம் எடுக்குமோ எண்டு தெரியாது. ஒரு வருஷம் எடுக்கலாம். அல்லது இரண்டு வருஷம் எடுக்கலாம். ஆனால், அதற்கிடையில நிலைமை மோசமாகி விடும். விநோ, * ரூ பீ ஃபிராங்" மஞ்சுவுக்கு வயசு ஏற ஏற உம்மை முழுமையாக வெறுக்கத் தொடங்கி விடுவாள். நீர் அவள்ண்ர செயலுக்கெல் லாம் தடை விதிக்கக்கில நான் அவளைக் கவனித்துக் கொண்டு தான் வாறன். அதனால தான் இந்த முடிவை எடுத்தன்."" விநோதினி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். ஹரி கூறுவது சரி என்ற முடிவுக்கு இறுதியில் வந்தாள்.
மூன்று வயது வரை ஊரில் உள்ள வீட்டில் சுதந்திரப் பறவை யாகப் பறந்து திரிந்த மஞ்சுளா, இங்கு சிறைப் பறவையாகி விட் டாள். சிறிய ‘அப்பார்ட்மென்டில் நாள் முழுவதும் அடைந்து கிடப்பதென்றால்.
வெளியே சென்றாலும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடி யாத நிலை, லண்டன் சமூக அமைப்பு அப்படி. இதே நிலை நாளை மஞ்சுளா பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் போதும் ஏற்பட 67) r/ լֆ .
**விநோ, மஞ்சுவுக்கு புதியதொரு சூழ்நிலையை ஏற்படுத் தத் தான் 'ஹைட் பார்க் குக்கு கூட்டிக்கொண்டு போனம். ஆனால், அங்கை வேற பிரச்சினை உருவாகி விட்டுது. "பிளக்ஸ் பிளக்ஸ்” தான், 'வைட்ஸ் வைட்ஸ் தான். அதை இங்க மாத்த முடியாது. மாத்திற நிலை வந்தால் தான் அவள் வெளிக்காற்றை சுவாசிக்க ஏலும். அந்த நிலை வருமா?’’
ஹரியின் கரத்தை விநோதினி கெட்டியாகப் பிடித்தாள். * 'மஞ்சுளாவின்ா வாழ்க்கை தான் முக்கியம். காசு, சுகம், நிம்மதி எல்லாம் பிற்பாடு தான். ஹரி, சிலோனுக்கு போவம். '
35

Page 22
நள்ளிரவில் விழித்தெழுந்த ஹரி அரைத் தூக்கத்தில் இருந்த விநோதினியைத் தட்டி எழுப்பினான். 'விநோ, நாங்க லண் டன்ல இன்னும் மூன்று, நாலு வருஷம் இருந்தால் நிறைய உழைக்கலாம். காச்ம் மிச்சம் பிடிக்கலாம். ஊரில மாளிகை போல வீடு கட்டலாம். ஆனால், அதற்கிடையில மஞ்சுளா வின்ர வாழ்க்கை வெறுமை அடைஞ்சு விடும் எண்டு பயப்படுறன். நீர் என்ன சொல்லுறீர்?"
'ஹரி, "யூ ஆர் கரெக்ட்'. ' விநோதினி வார்த்தைகளில் உறுதி மலிந்திருந்தது.
“எயர் லங்கா’ விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத் தில் இறங்குவதற்கு பிரயத்தனம் செய்தது.
இன்னும் சிறிது நேரத்தில் தாய் நாட்டு மண்ணில் காலை ஊன்றப் போகிறோமே என்று நினைக்கும் போது ஹரியின் மன தில் புத்துணர்ச்சி பரவியது. இது நாள் வரை வாட்டிய பிரச் சனைக்கு தீர்வு கிடைக்கப் போகிறதே என்பதில் அவனுக்கு மட் டற்ற மகிழ்ச்சி.
ஹரியின் நிலையிலேயே மஞ்சுளா திகழ்ந்தாள்.
மூன்று வருடங்களுக்கு முன் ஒடி, ஆடித் திரிந்த வீட்டுக்கு மஞ்சுளா போகப் போகிறாள். அங்கு நிலவிய சூழ்நிலையை அனுபவிக்க போகிறாள். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கப் போகி றாள.
'வீரகேசரி வார வெளியீடு' - 5.8.1984
(இக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு "Sunday
Island" gai) 15.12, 1985-lb glas Suigi) “The Air of Freedom" Greip தலைப்பில் வெளியாகியது.)
3 6

என்று தணியும் இந்தப் போராட்டம்?
(இக்கதையில் இடம்பெறும் சகல சம்பாஷணைகளும் சிங்க ளத்திலேயே உரையாடப்படுகின்றன என்பதை வாசகர்கள் நினைவுருத்திக் கொள்வார்களாக.)
மழைத்தூறல் கண்டி மாநகரை "பிசு, பிசு"க்க வைத்தது.
பனிப்புகார் அப்பிரதேசத்தை அரைகுறையாகப் போர்த்தி இருந்தது.
சில்லென்ற குளிர்காற்று விமலரத்னாவைத் தழுவிச் செல்ல . .
உடம்பை ஒரு முறை சிலிர்த்தவன், பார்வையை ஜன்னலி னுாடாக வெளியே செலுத்தி, மேய விட்டான்.
பார்வையை எதுவுமே கவரவில்லை. விழிகளைச் சுழற்றி னான். அவை சுழன்று வர, திடீரென நிலைகுத்தி நின்றன.
எண்ணி ஐந்து இளைஞர்கள் வீதியில் விரைந்து செல்வது தெரிந்தது. வெள்ளை வெளேரென்ற அவர்களது உடுப்புக்கள், அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதைப் பறைசாட்டின. அவர்கள் முகங்கள் துணியினால் மூடப்பட்டிருந்தன. கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தன. ஒருவனின் கையில் நீண்ட, கடித்த, கைக்களவான தடியொன்று காணப்பட்டது.
அவர்கள் நடையில் வேகம். அவர்கள் முகங்களில் தமது இலக்கை விரைவில் அடைந்து விடவேண்டுமென்ற அவதி.
**விமலே, என்ன பார்க்கிறீங்க?' வினா தொடுத்தபடி வந்த பல்காந்தி, அவன் அருகில் நின்றபடி, பார்வையை வெளியே விசிறினாள். − ت ,
“பாடசாலை மாணவர்கள் ஐவர் முகத்தை மறைத்தபடி "எங்கேயோ’ விரைந்து போகிறார்கள். ** விழிகளை மாணவர் களிடம் இருந்து எடுக்காமல், விமலரத்ன சொன்னான்.
"அப்படியா? அப்படியென்றால் இன்றைக்கு போராட்டம் நடக்கப்போகிறது." மல்காந்தி திரும்பி விமலரத்னவைப் பார்த்தபோது, அவன் கண்களில் அச்சமும், தயக்கமும் உள் ாடங்கி இருந்தன.
"மாணவர்கள் தமது எதிர்காலத்தையே வீணாக்குகிறார் கள். நான் சொல்லுறது சரிதானே?" விமலரத்ன வெறுப்புடன் கேள்வி எழுப்பினான்.
**சரி அல்ல. பிழை. மாணவர்களைக் கேட்டால் உரிமைப் பாராட்டம் நடத்துகிறோம் என்கிறார்கள்." மல்காந்தி சிந்
37

Page 23
த்னையோடு, நிதானமாக பதில் அளித்தாள்.
'உரிமைப்போராட்டம்?' விமலரத்ன கடை வாயினால், கேலியாகப் புன்னகைத்தான். "இவர்கள் உரிமைப் போராட்டம் நடத்தி, எதனைச் சாதிக்கப் போகிறார்கள்? யானையை எறும்பு கடித்தால், யானைக்கு வலிக்குமா?** உதட்டில் சுழியோடிய சிரிப்புடன் கேட்டான்.
** மாணவர் போராட்டத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட வில்லையா? எத்தனையோ போராட்டங்கள் வெற்றி பெற்றுள் ளன. ”*
மல்காந்தி சொன்ன விதம், அவனுக்கு எரிச்சலை ஊட்டியது. "முட்டாள் போல கதைக்காதே. சீனாவில் நடந்ததைப் பத்தி ரிகைகளில் நீ படிக்கவில்லையா? எத்தனையோ நூற்றுக்கணக் கான மாணவர்களை, அரசாங்கப் படைகள் சுட்டுக்கொன்றன’’ என விமலரத்ன சீறினான்.
** உண்மை தான். நான் அதை ஒத்துக்கொள்ளுறன். ஆனால், அந்தப் போராட்டம் இன்னும் ஓயவில்லையே. மாண வர்களின் போராட்டம், மக்கள் போராட்டமாக விசுவரூப மெடுக்கப் போகிறது:"
“சீனாவிலும், இரத்த வெள்ளம் ஓடப்போகிறது என்பது தான் அதன் அர்த்தம். சீனா ஒரு பெரிய நாடு. அங்கு ஒரு லட் சம் பேர் செத்தாலும், அது பெரிய விஷயமில்லை. ஆனால், இலங்கை ஒரு சிறிய நாடு. இப்படியான போராட்டங்களில், நூறு பேர் சாவதைக் கூட அதனால் தாங்க முடியாது.” விமலரத்ன வின் குரல் உடைந்து, ஒலித்தது.
"விமலே, அப்படியென்றால் மாணவர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்பது தான் உங்கள் வாதமா?'
விமலரத்ன உணர்ச்சியற்ற பார்வையோடு மனைவியை நோக்கினான். பின் ஏளனம் மலிந்த சிரிப்பொன்றை உதிர்த் தான். 'மல்காந்தி, நீயும் மாணவர்கள் பக்கம் சாய்ந்து விட் L_frufu T?” ”
‘இல்லை. நான் நியாயத்தைப் பற்றி கதைக்கிறேன். அவர் கள் போராட்டம் நடத்துவதில் என்ன தவறு? சொல்லுங்" 'நடத்தலாம்.' விமலரத்ன தலையைப் பலமாக ஆட்டி னான். 'ஆனால், எந்தக் கோரிக்கையை வைத்து அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தியப் படையை வெளியேற்று, பாராளுமன்றத்தைக் கலைத்து புதிதாக தேர்தலை நடத்து என்று கோஷம் எழுப்புகிறார்கள். இப்படியான போராட்டம் மாணவர்களுக்கு அவசியமா? தமது போராட்டத்தை வென் றெடுப்பதற்காக, அரசாங்கத்திற்குச் சொந்தமான பஸ்களை எரிக்கிறார்கள். அரசாங்கத்தைச் சொத்தை அழிக்கிறார்கள்:
38

இதெல்லாவற்றையும் எமது சின்னஞ்சிறு நாட்டினால் ஜீரணிக்க முடியுமா?" விமலரத்ன உதடும், முகமும் கோண இரைந்தான். மல்காந்தி கலவரப்படவில்லை. தணிவான குரலில், நிதான மாக தன்பக்க நியாயத்தை வெளியிட்டாள். ‘தமது எதிர்ப்பை அரசாங்கத் திடம் காட்டுவதற்காக, கோரிக்கையை வென்றெடுப் பதற்காக இப்படிப் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் என்ன தவறு?’’
“இந்தப் போராட்டம் வெற்றி அளிக்கும் என்று நீ நம்பு கிறாயா?"
** அதைப்பற்றி என்னால் இப்போதைக்கு ஒன்றுமே சொல்ல முடியாது. வெற்றி அளித்தாலும், சந்தேகப்படுவதற்கு ஒன்றுமே இல்லை." மெல்லிய, தயங்கிய குரலில் மல்காந்தி பதில் சொன் னாள்.
‘'இப்படியான ஒரு போராட்டம், அறவே வெற்றி அளிக் காது. தமது அன்புக்குரிய, அல்லது கடமையுணர்ச்சியுள்ள ஒரு அதிபர் வேறு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டால், அதைத் தடுத்து நிறுத்த மாணவர்கள் போராட்டம் நடத்தலாம். அதை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், இப்படியானதொரு போராட்டம் நடத்துவதை, என்னால் ஆதரிக்க முடியாது, அனு மதிக்கவும் முடியாது. அரசாங்கத்தை மாற்ற, இந்தியப் படையை வெளியேற்ற இவர்களுக்கு என்ன அருகதை, உரிமை இருக்கின் றன?*
“மாணவர்களும், இந்நாட்டு மக்களில் அடங்குபவர்கள். இதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.'
விமலரத்ன உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்தான். திடீரென நின்றான். சிக ரெட் ஒன்றைப் பற்ற வைத்து, இரு தடவைகள் புகையை வெளியே ஊதித்தள்ளினான். "மல்காந்தி, வாக்குரிமை அற்ற மாணவர்கள் அரசியல் போராட்டம் நடத்தக் கூடாது. உனக்கு இதைப்பற்றி எல்லாம் விளங்காது. இந்த மாணவர்களின் போராட்டம் எங்கே போய் முடியப்போகிறது என்பதை ஆராய்ந்து விட்டு, என்னுடன் வாதம் புரி. ''
மல்காந்தி அவனை நெருங்கினாள். அவன் கைகளை பக்குவ மாக தன் கைக்குள் அடக்கினாள்.
"நீங்கள் பல்கலைக்கழகத்தில் நடத்தின போராட்டங்கள் பற்றி எனக்குத் தெரியும். எத்தனையோ போராட்டங்களை அங்கு நடத்திவிட்டு, இப்போது இராணுவத்தில் சேர்ந்திருக்கிற படியால், மாணவர்களின் போராட்டத்துக்கு எதிராக கதைக் கிறீங்க."
‘மல்காந்தி, பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தி னோம். நானே தலைமை தாங்கினேன். சிற்றுண்டிச்சாலையில்
39

Page 24
நல்ல சாப்பாடு கிடைக்காததினால் போராட்டம் நடத்தினோம். எமது மதிப்புக்குரிய பேராசிரியர் எட்மன்ட் சில்வாவை காரண மின்றி இடை நிறுத்தம் செய்ததற்காக, போராட்டம் நடத்தி னோம். இப்படி பல்கலைக்கழக மாணவர்களின் வரையறைக்குள் உட்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவே போராட்டம் நடத்தி னோம். அந்த எம்.பி.யை பதவிநீக்கு, அரசியலமைப்பை மாற்று, இந்தியாவுடன் பொருளாதாரத் தடையை ஏற்படுத்து என்று போராட்டம் நடத்தவில்லையே." . .
“உங்கள் காலத்தில், நீங்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள், போராட்டம் நடத்தினீர்கள். இது "கம்பியூட்டர் யுகம். மாண வர்கள் தமது போராட்டத்தை அரசியல் வரை விஸ்தரிக்கிறார் கள். ’’
'உன் கருத்துப்படி நமது பேரப்பிள்ளை மொன்டசொரிக் குப் போகும் போது, அரசியல் போராட்டத்தை நடத்த வேண் டுமா, அல்லது, அதில் ஈடுபட வேண்டுமா?*
மல்காந்தி "கட, கட" வென சிரித்தாள். 'உங்களுடன் கதைத்து என்னால் வெல்ல முடியாது."
‘மல்காந்தி, இந்தப் போராட்டம் எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. மாணவர்களின் படிப்பு வீணாகி றது. அவர்கள் யாரோ ஒரு சக்தியின் பகடைக் காயாகி விட் டார்கள். அந்த "யாரோ அவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இந்த சின்ன வயதிலேயே கொலை வெறியில் திரிகிறார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதிவதற்குப் பதிலாக, குரூர எண்ணங்கள் தான் பதிகின்றன. குத்த வேண்டும், குதற வேண்டும், கொல்ல வேண்டும், எரிக்க வேண்டும், அழிக்க வேண் டும் என்ற எண்ணங்கள் அவர்களை இந்நாட்டின் வெறுக்கும் பிரஜைகளாகத்தான் மாற்றப் போகிறது. நீ இருந்து பார். இன் னும் பத்து வருடங்களில் இந்த நாடு குட்டிச் சுவராகி விடும். ஏன் தெரியுமா? இன்றைய மாணவர்கள் தான் நாளைய பிரஜைகள். இம்மாதிரியான பிரஜைகள் எப்படி நடப்பார்கள் என்று நான் உனக்கு விளக்கமாக கூற வேண்டுமா?*
மல்காந்தி சில வினாடிகள் மெளனத்திற்கு அடிமையானாள். இந்த வாதப் பிரதிவாதங்களை மேலும் நிகழ்த்துவதனால், எவ் வித பிரயோசனமும் கிட்டப் போவதில்லை என்பதை உணர்ந் தாள். நேரமும், சக்தியும் வீண் விரயமாகும். மன உளைச்சலி னால் அநாவசியமாக பீடிக்கப்படவேண்டும். இவ்வாறு நினைத் தவள் சம்பாஷணையின் இலக்கைத் திசை திருப்பினாள். **விமலே, நேரம் வந்து விட்டது. நீங்கள் கடமைக்குப் போக வேண்டும்." s
விமலரத்ன மனைவியை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினான். * 'இன்று எனக்கு நிறைய வேலை இருக்குது. மாணவர்களின்
40

போராட்டம் நடக்கப் போகிறது. அதை அடக்கும் பொறுப்பு, எங்களிடம் சுமத்தப்படும். நாங்கள் வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.*" விமலரத்ன தொப்பியை அணிந்தான். மேசையில் இருந்த துப்பாக்கியை இடைப்பட்டியில் செருகினான்.
மல்காந்தி அவன் முன்னால் வந்து நின்றாள். அவன் தொப்பியை சரி செய்தாள். "விமலே , உங்கள் மகனும் ஒரு மாணவன் என்பதை மறந்து, கண்மூடித்தனமாக காரியங்களை செய்து விடாதீர்கள்."
விமலரத்னவின் முகம் * சட்டென மாறுதலடைந்தது. "பாலித பாடசாலைக்கு போய்விட்டானா?”*
"ஒமோம். வழமையை விட இன்றைக்கு "டியூஷன்" இருக் குது என்று சொல்லியபடியே காலைச் சாப்பாட்டைக் கூட சாப் பிடாமல் போய்விட்டான்.”*
"அவனுக்கு அப்படி என்ன அவசரம்? கொஞ்சம் நின்றிருந் தால் நானே அவனை இறக்கி விட்டிருப்பன்."
"அதை மாலையில் அவனிடம் கேளுங்கள்." *புத்தகங்கள் கொண்டு போனானா?" “வழமையாகக் கொண்டு செல்லும் பையைத் தான் கொண்டு சென்றான்.""
விமலரத்னவின் இடது கண்ணின் கீழே இருந்த நரம்பு துடித் தது. அவன் சிந்தனையில் ஏதோ ஒரு படிமம் "பளிச் சிட்டது. ப் கண்டி நகரின் குறுகலான வீதிகளின் ஊடாக மெல்லிய வேகத்தில் முன்னேறியது.
ஒரு கனரக "ட்ரக்கும், இரு கவச வாகனங்களும் அணி வகுத் தாற் போல ஜீப்பைப் பின் தொடர்ந்தன.
ஜீப்பின் முன் ஆசனத்தில் விமலரத்ன அமர்ந்திருந்தான். அவன் மனதில் அலை, அலையாக எண்ணங்கள் நிரம்பி இருந் தன. பாலித பற்றிய நினைவு அடிக்கடி மனதை மேய்ந்தது. போராட்டங்கள் நடத்தும் மாணவர்கள் பற்றிய சிந்தனையும் எழுந்தது.
காலைச் சாப்பாட்டை சாப்பிடாமல் வீட்டை விட்டுப் போகும் அளவுக்கு அவனுக்கு அப்படி என்ன அவசரம்? அவனும் போராட்டத்தில் அங்கம் வகிக்கப் போகிறானா? பல கேள்விகள், பல ரூபங்களில் மனதை அரித்தன.
மனத் தடுமாற்றத்தைத் தவிர்க்க சிகரெட் ஒன்றை விமல ரத்ன பற்ற வைத் தான்.
அங்கு நிலவிய அமைதியை சாரதி விஜேநாயக்க குலைத் தான். ‘சேர், கேகாலை மாவட்டத்தில் வெள்ளத்தினாலும், மண்சரிவி னாலும் முன்னுாறுக்கு மேற்பட்டோர் அநியாயமாக பலியாகி விட்டார்கள். பாவம்."
4.

Page 25
*" தெரியும். பத்திரிகைகளில் செய்திகளும், படங்களும் வந் தன. இயற்கை அன்னையின் சீற்றத்துக்கு முன்னூறு பேர் பலி.' "சேர் இது மட்டுமா? ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து விட்டார்கள். இந்தியா நிவாரணப் பொருட்களை இந்த மக்களுக்கு அனுப்பப் போகிறதாம்.”*
விமலரத்ன கேலியாகச் சிரித்தான். அவன் சிரிப்பின் அர்த் தம் ஐம்பது வயதைத் தாண்டிய விஜேநாயக்காவுக்குப் புரிந்தது. ஆனால், அதைப்பற்றி தன் பேச்சில் அவன் அடக்கவில்லை. மெளனத்தைக் கடைப்பிடித்தான்.
'விஜேநாயக்கா, நீ மாணவர்களின் போராட்டத்தை ஆத ரிக்கிறாயா?*
ஒரு சில வினாடிக தனது உயர் அதிகாரியை நோக்கிய விஜேநாயக்கா, தலை குனிந்த படி, "ஓம் சேர்' எனத் தாழ்ந்த குரலில் சொன்னான்.
''66r?' ' . * எமது நாட்டில் அந்நியப்படை இருக்கவேண்டுமா?" 'அதற்காக மாணவர்கள் போராட்டம் நடத்த வேண் GorT?” ”
**இந்த விடயத்தில், மாணவர்களின் பங்கும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். அடி மட்டத்தில் இருந்து, உயர்மட்டம் வரை போராட்டம் நடக்க வேண்டும்.'
“ ‘பஸ்களை எரிப்பது, அரங்சாங்கச் சொத்தை அழிப்பது தான் போராட்டத்தின் சித்தாந்தமா?' விமலரத்னவின் சொற் கள் சூடாக வெளிப்பட்டன. "
"போராட்டங்கள் பல ரூபங்களில், பல கோணங்களில் நடத்தப்படலாம். அதற்கு வரையறை இல்லை. தமது எதிர்ப் பைத் தெரிவிக்க அவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரிக்கலாம். அர சாங்க உடமைகளை அழிக்கலாம். சம்பந்தப்பட்டவர்களை உணர வைக்கத்தான் மாணவர்கள் இப்படி நடக்கிறார்கள். *
திடீரென ஜீப் நின்றது. விமலரத்ன பார்வையைக் கூர்மையாக்கினான். ஜீப்பின் முன் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நின்றன. ஒரு வாகனத்தால் கூட நகர முடியவில்லை.
“சமீபத்தில் ஒரு பாடசாலை இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்கள், வாகனங்களை நிறுத்தி சுவரொட்டிகளை ஒவ் வொரு வாகனத்திலும் ஒட்டுகிறார்கள்’’ என்றான் விஜே நாயக்கா. :
விமலரத்ன உடனடியாக ஜீப்பில் இருந்து இறங்கினான். கையில் துப்பாக்கியை எடுத்தான். ஒவ்வொரு வாகனத்தையும் கடந்து கொண்டு முன்னேறினான்.
42

சில யார் தூரத்தில், அவன் பின்னே சில இராணுவ வீரர்கள் வந்தார்கள்.
வாகனமொன்றில் மாணவர்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதை விமலரத்ன கண்டான். அவன் நடைவேகம் அதிகரித்தது.
முன்னே செல்லச் செல்ல அந்தப் பாடசாலைக்கு முன்புற மாக இரு அரசுடமை பஸ்கள் எரிக்கப்பட்டிருப்பதைக் கண்டான்.
இதயம் துடிதுடித்த நிலையில் முன்னேறினான். மாணவர் கூட்டமொன்று பாடசாலைக்கு முன்புறமாக அணிவகுத்த நிலையில் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தது.
"இந்தியப் படையே, உடனே இலங்கையை விட்டு வெளி யேறு.
“பாராளுமன்றத்தை உடனே கலைத்து தேர்தலை நடத்து.
'தெல்தெனியா மாணவனுக்கு நடந்தது என்ன...?" கோஷம் காதைப் பிளந்தது. பத்து பதினைந்து மாணவர்கள், யாவரும் முகமூடி அணிந்த நிலையில் விமலரத்னவை நோக்கி வந்தனர்.
விமலரத்னவின் நரம்புகள் புடைத்தெழுந்தன. கோபம் தலைக்கேறியது.
"இராணுவ நாயே ஒடு" எனக் கத்தினான் மாணவன் ஒரு வன். பின்னால் நின்றவர்களும் அதையே கூறினார்கள்.
விமலரத்ன அசையவில்லை. "இங்கிருந்து கலைந்து போகப் போகிறீர்களா? இல்லாவிட்டால் எனது துப்பாக்கிக்குப் பலி யாகப் போகிறீர்களா?' விமலரத்ன கர்ஜித்தான்.
அவன் வாய் மூடவில்லை. கற்கள் அவனை நோக்கி வீசப்பட் டன. ஒரு கல் அவன் மூக்கைப் பதம் பார்த்தது. இரத்தம் கசிந் திது.
விமலரத்ன துப்பாக்கியை அவர்களை நோக்கி உயர்த்தி னான். ஒரு மாணவனை குறி வைத்தான்.
மீண்டும் அவன் மீது கற்கள் எறியப்பட்டன. விமலரத்ன துப்பாக்கியின் குதிரையை அழுத்தினான். ‘டுமீல் , டுமீல்" என்ற இரைச்சலுடன் ரவைகளைத் துப் பாக்கி கக்கியது.
ஒரு மாணவன் நெஞ்சைப் பிடித்தபடி கீழே சரிந்தான். கண் இமைக்கும் நேரத்தில் மாணவர்களின் சுவடு அங்கு தென்படவில்லை. எல்லோரும் ஓடிவிட்டார்கள்.
வீதியின் இரு மருங்கிலும் செழித்திருந்த மரங்களில் இருந்த பறவைகள், இறகுகளை அடித்தபடி பறந்து சென்றன.
கீழே சரிந்த மாணவன் கால்களையும், கைகளையும் நிலத் தில் அடித்தான்.
43

Page 26
விமலரத்ன அம்மாணவனை நோக்கி நடந்தான். அவன் பின்னே வந்த இராணுவ வீரர்கள், ஸ்தம்பிதமான நிலையில் நின்றனர்.
விமலரத்ன குனிந்து அம்மாணவனை நோக்கினான். மாண வன் சடலமாகி விட்டான். அவனது முகமூடியைக் கழற்றினான்.
பாவித! விமலரத்னவின் இரத்தமே உறைந்தது. பார்வை நிலைக் குத்தி நின்றது.
துப்பாக்கி அவன் கையில் இருந்து நழுவியது. மகனின் உயி ரற்ற உடலை, உணர்ச்சியற்ற பார்வையோடு பார்த்தான்.
ட்ஸ்களின் ஒலி கேட்டபோது, மல்காந்தி தலையை உயர்த்தினாள்.
விமலரத்ன தலையைத் தொங்கப் போட்டபடி நின்றான். ‘மாணவர்களின் போராட்டம் அடங்கி விட்டதாக
வானொலியில் அறிவித்தார்கள்." மல்காந்தி சுரத்தின்றி சொன் କ୪T [[Tଙr . .
'உண்மைதான். மாணவர்களின் போராட்டத்தை அடக்கி விட்டேன். ஆனால், எமது மகனைச் சுட்டுவிட்டேன். சடலம் அரசாங்க செலவில் அடக்கம் செய்யப்படும்" என்ற விமலரத்ன, தேம்பித் தேம்பி அழுதான்.
தமது வகுப்பு மாணவன் பா வித கொல்லப்பட்டதை கண் டிக்கு முகமாக, அந்தப் பாடசாலை மாணவர்கள் போராட்டம்
ஒன்றை மறுநாள் பாரிய அளவில் நடத்துவதற்கான ஆயுத்தங் களில் ஈடுபட்டிருந்தனர்.
ー 1989
44

டில்ருக்ஷியும், ஒரு பாலன் 'அய்யாவும் (இக்கதையில் இடம்பெறும் உரையாடல்கள் யாவும் ஆங்கி
லத்தில் இடம் பெறுகின்றன என்பதை வாசகர்கள் நினை வுறுத்திக் கொள்வார்களாக.)
அப்படியான கேள்வி ஒன்றைத் தொடுப்பேன் என்று நான் எண்ணி இருக்கவில்லை. என்னைப் பொறுத்தளவில் அது ஒரு “கனமான’ கேள்வி. திக்கு முக்காடி, பதில் சொல்லத் தத்தளித்து, வெறுமனே என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து விட்டு, தலை குணிவாள் என்று தான் நம்பி இருந்தேன். ஆனால், தெளிவான பதிலை வெளியிட்டு, தன் மனதைத் திறந்து காட்டியதன் மூலம் டில்ருக்ஷி என் பலவீனத்திற்கு ஒரு அடி கொடுத்து விட்டாள்.
எப்போது அவளை முதல் முதலாகச் சந்தித்தேன் என்ற ஞாபகம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. சரியாக ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ஏப்ரல் மாதத்தின் பதினெட்டாம் திகதி அவளைச் சந்தித்தேன். எனது நல்ல நண்பர்களில் ஒருவ னான சுனில் பெர்னாண்டோ, தனது மகளின் பிறந்த தினத்தைச் சற்று எடுப்புடன் தனது வீட்டில் நடத்தினான். அழைக்கப்பட்ட வர்களில் நானும் ஒருவன். போனேன். அங்கு தான் டில் ருக்ஷியை, சுனில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
"மச்சான், இவள் என்னுடைய சின்னம்மாவின் மகள். பெயர் டில்ருக்ஷி. பட்டதாரி. நாலைந்து இடங்களில் வேலை செய்து விட்டு, இப்போது வீட்டில் சும்மா இருக்கிறாள். வாழ்க்கையின் மீது இவளுக்கு ஒரு பற்றும் இல்லை. வெறுப்புத் தான் அதிகம். இவ்வளவு வயது வந்தும் தனக்கு கல்யாணம் நடக்கவில்லையே என்பது அவளின் வெறுப்புக்குக் காரணம். என்னைப் பொறுத்தளவில் அவளால் ஆண்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஆணை நன்கு புரிந்து கொண் டால், அவள் வாழ்க்கையில் பிடிப்புடன் வாழலாம். எரிச்சல், பொறாமை, கோபம், ஆத்திரம், சினம் ஆகிய உணர்வுகளை அடக்கலாம்."
சுனில் பாடமாக்கிவிட்டு ஒப்புவிப்பது போல் பேசிய போது,
டில்ருக்ஷியை கவனித்தேன். அந்த முகத்தில் - பற்றற்ற வாழ்க்கையின் அழுத்தத்தினால் ஏமாற்றம் அப்பிப் போயிருந் தமையினால் - உணர்வலைகளின் போராட்டம் நெளிந்து, வளைந்தது.
"சுனில் "அய்யா'வுக்கு நல்லவெறி. அதுதான் இப்படி முட் டாள் போல, பேய் போல கத்துகிறார். அவரது கதையைக்
45

Page 27
கணக்கில் எடுக்க வேண்டாம்." டில்ருக்ஷி கரகரப்புக் குரலில் கத்தினாள். V
டில்ருக்ஷியை போதையேறிய கண்களூடாக அளந்தேன். முப்பத்தைந்தைத் தாண்டி நாற்பதை அடைய முற்படும் வயதுக்குள் டில்ருக்ஷியை அடக்கலாம். மெல்லிய தோற்றம், பொதுநிறம், சரிவர வாரப்படாத தலைமயிர், அசட்டையான ஆடை அலங்கரிப்பு. ஆனால், கண்களில் மட்டும் ஓர் ஒளி வெள்ளம்.
பிறிதொரு 'சந்தர்ப்பத்தில், பஸ் நிலையத்தில், உச்சி வெயி லில் பஸ்சுக்காக காத்திருந்த போது, யதேச்சையாக என்னைக் கண்டவள், அடையாள புன்சிரிப்புடன் வந்தாள். குசலம் விசா ரித்தாள். வெயிலைத் திட்டினாள். போக்குவரத்துச் சேவையை நடத்தும் சபையின் உத்தியோகத்தர்களை "பிளாடிகளை" உப
யோகித்து ஏசினாள். பின் என்னைப் பார்த்து கனிவாகச் சிரித்தாள். a
"பாலன் "அய்யா" நீங்கள் யாழ்ப்பாணமா?" என வினவி னTள்.
ஒமென்று தலையாட்டினேன்.
“எனக்கு யாழ்ப்பாணம் தெரியும். ஒரு தடவை நயினா தீவுக்குப் போயிருந்தேன். கஷ"ரினா கடற்கரைக்குப் போயிருக் கிறேன். சின்ன வயதில் போனதால் இடங்கள் ஞாபகத்திற்கு வரவில்லை. இன்னொரு முறை போகவிருந்தேன். ஆனால், போக முடியவில்லை. இப்போதைக்கு அங்கு போக உங்கள்
பையன்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது. அப்படித் தானே?"
நமுட்டுச் சிரிப்பொன்றை சாதாரணத்துடன் வெளியிட் டேன். "கதிர்காமத்திற்குப் போக எனக்கும் ஆசை. ஆனால்,
பயமாகவும் இருக்குது. என் பயம் அகலும் போது நீ யாழ்ப்பா ணத்திற்குப் போகலாம்" என்றேன். بری
‘கட, கடவென சற்றுப் பலமாகச் சிரித்தாள். பஸ் நிலையத் தில் நின்ற பலரின் பார்வை அவள் மீது படிந்தது. அதைக் கண் டவள் நாக்கை ஒரு முறை கடித்துவிட்டு, என்னை நகைச்
சுவை உணர்வுடன் நோக்கினாள். "உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?"
ஒரு முறை கனைத்தேன். 'கல்யாணம் கட்டி விட்டீங்களா
என்று கேட்காமல் ஏன் பிள்ளைகள் விஷயத்துக்கு தாவினாய்?" டில்ருக்ஷியின் கண்களில் ஒரு நக்கல் தென்பட்டது. "உங்க ளைப் பார்த்து அப்படியொரு கேள்வி கேட்டிருந்தால், நான் ஒரு முட்டாளாகத் தான் இருக்க வேண்டும். உங்கள் நரைத்த தலை மயிர்களும், இடிந்த கன்னங்களும் உங்களுக்கு நிச்சயம் திருமணம் நடந்தேறியுள்ளது என்பதைப் பறை சாற்றுகின்றன."
全6

அவள் புத்திசாலித் த்னத்தை மனதில் மெச்சினேன். எதிர் கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிக்க விரும்பாமல், “எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் நீ நம்பு வாயா?" என்றொரு கேள்வியைப் பதிலாகத் தொடுத்தேன். “ஆறு பிள்ளைகளா?" அவள் இமைகள் நெளிந்து, வளைந் தன. "உங்கள் கூற்றை அலசும் போது, "பெண்கள் பிள்ளை பெறுகின்ற இயந்திரம் அல்ல" என்று அண்மையில் எங்கள் மகளிர் இயக்கம் நடத்திய கோஷம் சரி என்ற தீர்மானத்துக்கு வர வேண் டிய நிலையில் தான் நான் இருக்கிறேன்.""
'டில்ருக்ஷி, ஒன்றை மட்டும் உனக்கு ஆணித்தரமாக சொல்ல விரும்புகிறேன். என் மனைவி ஒவ்வொரு குழந்தையை யும் ஆசையுடன், அன்புடன் தான் பெற்றெடுத்தாள்."
‘ஆஸ்பத்திரியில் அவள் புலம்பியதை, அரற்றியதை, அழு ததை, ஒப்பாரி வைத்ததை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அறிந்திருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்."
'டில்ருக்ஷி, ஆமை ஆயிரம் முட்டைகளை இட்டாலும், எவ் வித ஒலியையும் எழுப்புவதில்லை. என் மனைவியை ஒரு ஆமை யுடன் ஒப்பிட நான் விரும்பவில்லை.""
*ஆமை முட்டை இடும் போது அதன் கண்களில் இருந்து நீர் வழிவதை நீங்கள் காணவில்லையா? பாலன் "அய்யா", பெண் இனத்தை இயந்திரமாக, மிருகமாக, உணர்ச்சியற்றவர்களாக மதிக்க வேண்டாம்.”*
எதிர்வாதம் புரிய முனைந்த போது, பஸ் வந்தது. ஏறி னாள். ** மீண்டும் சந்திப்போம்’ என்றாள். பஸ் பயணமாகி யது. r.
அன்றிரவு டில்ருக்ஷி என் மனதில் நிறைந்திருந்தாள். அவ ளுடனான சம்பாஷணையை மீண்டும், மீண்டும் மனதிற்குள் புகுத்தி, அதில் ஒர் ஆராய்ச்சி நடத்தினேன்.
அவளைச் சந்தித்தது பற்றியும், அவளுடன் பேசிய விஷயங் கள் பற்றியும் மறுநாள் சுனிலிடம் விபரித்தேன்.
'அவளுக்கு வாழ்க்கை அலுத்து விட்டது. வேதாந்தம் பேசு கிறாள். போற போக்கைப் பார்த்தால் பைத்தியமாகி விடு வாளோ என்று பயமாக இருக்குது ”” என்று சுனில் சிரித்தபடியே Gynrairast Tait.
* அப்படி சொல்லாதே சுனில், அவள் மூளைசாலி போல பேசுகிறாள்."
**ஆனால், அவளது கோலத்தை நீ பார்க்கவில்லையோ? பைத்தியக்காரி மாதிரி. நிறைய நேரம் அவளுடன் பேசி இருந் தால், நீயும் எனது முடிவுக்கு கட்டுப்படுவாய்."
“அவள் இந்த நிலைக்கு வரக் காரணம் என்ன?"
47

Page 28
‘எல்லாமே காதல் தோல்விதான். அழகான பையன் ஒரு வன் அவளைக் காதலித்தான். இருவரும் திருமணமும் செய்ய விருந்தார்கள். தமது எதிர்கால வாழ்க்கை பற்றி டில்ருக்ஷி என் னிடம் நிறையக் கூறி இருந்தாள். ஆனால், வசந்த அவளை ஏமாற்றி விட்டான். எட்டு வருஷ பல்கலைக்கழக காதல் ஒரு சில நிமிடங்களில் கரைந்து விட்டது. அது மட்டுமா? அவளுடைய வயிற்றில் வளர்ந்த சிசுவையும் கரைக்க வேண்டிய நிலை ஏற்பட் டது. அதன் பின அவள் அடைந்த துயரம், துன்பம் . . உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நன்கு பாதிக்கப்பட்டு விட்டாள். இப்போது தெளிந்து விட்டாள். ஆனால், மனதில் எங்கோ ஒரு இடத்தில் இந்த ஆண் வர்க்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணமற்ற வெறி ஒளிந்திருக்கிறது. ஆனால், அதே வேளை, அவள் பாலியல் உணர்ச்சியினால் அவதிப்படுகிறாள்.' * அப்படியென்றால் அவளுக்கு கல்யாணம் செய்து வைத் திருக்கலாம் தானே?"
"அவள் அதை விரும்பவில்லை." மீண்டும் ஒரு முறை டில்ருக்ஷியின் நினைவு இரவிரவாக என் நித்திரையைக் குழப்பியது.
ன்று மாதங்களின் பின் சிங்களப் படமொன்று பார்க்கச் சென்ற போது டில்ருக்ஷியைக் கண்டேன். இருவரும் அருகருகாக அமர்ந்து படம் பார்த்தோம். W− 'டில்ருக்ஷி, உங்கள் படத் தயாரிப்பாளர்கள் ஏன் இந்திய மசலாப் படங்களின் சாயலில் படம் தயாரிக்கிறார்கள்? உங்கள் சமூகத்திற்கு என்று கலை, கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் இருக்கின்றனவே அவற்றைச் சித்தரிக்கும் படங்களைத் தயாரிக் கலாம் தானே? " எனக் கேட்டேன்.
"அந்நிய நாட்டு மோகம் பொருட்களில் மட்டுமல்ல சினிமா படத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த மோகம் அக லும் மட்டும் மசாலா படங்களை தயாரித்துக் கொண்டே இருப் பார்கள்’’ என்று டில்ருக்ஷி விளக்கமளித்தாள்.
அதன் பின் காதல் பற்றி நாம் அளவளாவினோம். எனது கருத்துக்கள் பலவற்றுக்கு அவள் முரண்பட்டு, என்னுடன் வாதம் புரிந்தாள். நான் விட்டுக் கொடுக்காமல் பேசிய போதெல்லாம், அவள் தனது மனதில் இருந்த கருத்துக்களை அப் படியே வார்த்தைகளில் வடித்தாள்.
சிறிது நேர மெளனம் விழுந்த போது எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்டாள். “பாலன் "அய்யா நீங்க எத்தனை நாட்களுக்கு ஒரு முறை யாழ்ப்பாணத்திற்கு போவீர்கள்?"
‘‘ஒரு மாதத்திற்கு ஒரு முறை.' 'அங்கு எத்தனை நாட்கள் இருப்பீர்கள்?" ‘ஐந்தாறு.
ቋ $
48

"உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பூர்த்தி செய்ய இது போதுமா?"
நெஞ்சை 'ஏதோ அழுத்தியது போல் இருந்தது. வார்த்தை கள் தொண்டைக் குழிக்குள் சரசமாடின. சொற்கள் வெளியே வரவில்லை. V
"சொல்லுங்க."
"போதாது. s
"மீதிக்கு என்ன செய்வீங்க?"
"ஆசைகளை அடக்குகிறேன். இயந்திர நிலையை அடைகி றேன்.""
"விலை மாதர்களை நாடுவதில்லையா?"
"விருப்பம் இருக்கிறது. பணம் இல்லை. பயம் இன்னொரு பக்கம். ' .
டில்ருக்ஷி மிருதுவாகச் சிரித்தாள்.
தியேட்டரின் வெளிச்சம் மங்கிக் கொண்டு வருகையில், அவள் என் கரத்தைப் பற்றினாள். 'பாலன் "அய்யா" என்னைப் போன்ற பெண்களை நாட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வருவதில்லையா? பஸ்சில் போகும் போது பெண்களுடன் முட்டு வதுடன் உங்கள் ஆசைகளை அடக்கி விடுவீர்களா?"
தியேட்டரில் இருந்து வெளியேறிய போது எனக்குள் ஒரு புளங்காகிதம். டில்ருக்ஷி என்னவள் என்ற மமதை என்னுள் புகுந்து, என் நாளங்களைத் திமிர வைத்தது.
டில்ருக்ஷியை அடிக்கடி காண வேண்டும் என்ற வெறி என் னுள் உருவாகி, நாட்கள் மறைய விசுவரூபமெடுத்தது. ஆனால், என்னுள் படிந்திருந்த வெறியை என்னால் தணிக்க முடியவில்லை. ஏனெனில் நிரந்தரமற்ற வாழ்க்கையை டில்ருக்ஷி வாழ்ந்த தாலோ என்னவோ, நான் விரும்பும் வேளையில் அவளைக் காண முடியவில்லை.
என் ஆசையைத் தணிக்கும் வகையில் டில்ருக்ஷியைச் சந்தித் தேன். அதுவும் ஒரு "பார்ட்டி"யில் தான். என்னைக் கண்டதில் அவளுக்கு சந்தோஷம் ஏற்பட்டிருக்க வேண்டும் என நினைக்கி றேன். என்னுடனேயே அமர்ந்திருந்தாள்.
தன் பழைய வாழ்க்கையைப் பற்றி பிரஸ்தாபித்தாள். வசந்தவுடன் தொடர்பு கொண்ட நாட்களை நினைவு கூர்ந் தாள். வசந்தவைப் பற்றி அளவளாவும் போது அவள் முகம் நன்றாக இறுகி விட்டது. "வசந்த ஒரு முட்டாள், மடையன், ஒரு பேயை விடக் கொடியவன்' எனக் கத்தினாள்.
"அரைப் போத்தல் பியர் குடித்தவுடன் உனக்கு வெறி வந்து விட்டதா?’ எனக் கேட்டேன்.
"இல்லை. இது கொலை வெறி."
எனது கையை எடுத்து தனது கைகளுக்குள் அடக்கினாள்.
49

Page 29
"பாலியலில் நீங்கள் கெட்டிக்காரரா?"
‘என் மனைவியின் கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந் தால் அவற்றை நான் உனக்கு காட்டுவேன். அவற்றை வாசித் தால் நீ இப்படி ஒரு கேள்வி கேட்கமாட்டாய்." "உங்களுக்கு இப்பொழுது எத்தனை வயது?" "நாற்பத்தைந்து.' ** மனைவிக்கு?" "நாற்பத்தி நான்கு." 'எனக்கும், உங்களுக்கும் இடையில் ஏழு வருட வித்தியாசம் இருக்கிறது."
"உனக்கு முப்பத்தியெட்டு வயதா?" "முட்டாள் போல கேள்வி கேட்க வேண்டாம். நான் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன்.'"
"வசந்த உனக்கு "பூட்" கொடுத்த பின் நீ இன்னொரு னைக் காதலித்திருக்கலாம் தானே?"
"வசந்தவை மறந்தபோது என் தலை மயிர் ஓரளவு நரைத்து விட்டது. என்னை ஒருவரும் நாடவில்லை. உலகத்தை நான் வெறுத்தபடியால் அவர்கள் என்னை நாடப் பயப்பட்டார்கள். என்னைப் பைத்தியக்காரி என்றார்கள்.""
"உன்னை நான் விரும்புகிறேன் என்று நீ நினைக்கிறாயா?" "'உங்கள் சாராயத்தில் கொஞ்சம் தருவீர் 6 * * 'நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்?’’ "எனக்கு வெறி என்று நீங்கள் நினைத்தால் சரி.”* லக்ஷமன் தன் காரில் எங்கள் இருவருக்கும் "லிப்ட்' தந்தான். என் அறையில் "ரூம் மேட் இல்லாதபடியால் டில்ருக்ஷி என் அறைக்குள் தள்ளப்பட்டாள்.
காலையில் விழித்தவள் என்னை விசித்திரமாகப் பார்த்தாள். பின் தன்னை முழுமையாக நோட்டம் விட்டாள். முகத்தில் மெல்லிய நாணம் போர்த்தியது.
"நீங்கள் பாலியலில் கெட்டிக்காரர்தான். கண்களை மூடி இருந்தபடியால் எனக்கு வெறி என்று நினைத்தீர்களா?' எனக் கேட்டாள்.
'நான் அனுபவஸ்தன். நீ முனகும் போது உணர்ச்சியுடன் போராடுகிறாய் என்று எனக்கு புரிய அவ்வளவு நேரம் எடுக்க வில்லை.”*
அவள் சம்பாஷணைக்கு முற்றுப்புள்ளி இட்டாள். டில்ருக்ஷியின் பிறந்த தினம் வந்தது. சுனில் ஒரு பெரிய "பார்ட்டியை ஒழுங்கு செய்திருந்தான்.
அழைப்பு எனக்கு ‘விசேஷ ரீதியில் கிடைத்தது. ஒவ்வொரு
50

நாளாக எண்ணி வந்தவன், சரியான நாளன்று சென்றேன்.
டில்ருக்ஷி மிக அழகாக உடை அணிந்து, நாகரீகத்தின் ஒரு பக்கம் தன்னிடமே சரண் அடைந்திருக்கிறது என்ற தோரணை யில் திகழ்ந்தாள். கனிவாக சிரித்தபடி என்னிடம் வந்தாள். நறு மணம் என் மூக்கைத் தடவியபடி சென்றது.
*எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று சொல்லியபடி அவளுடன் கைகுலுக்கினேன்.
'பிறந்த நாள் முத்தம் தரமாட்டீங்களா?" என வினவி e6
கொடுத்தேன். பற்கள் தெரியச் சிரித்தாள். ஒதுக்குப் புறத்திற்கு கூட்டிச் சென்றாள். ‘பாலன் அய்யா" எனக்கு எத்தனையோ பிறந்த தினங்கள் வந்துள்ளன. ஆனால், இந்த பிறந்த தினத்தை என்னால் மறக்க முடியாது.”*
**இந்த முறை தான் நான் அதைக் கொண்டாடுகிறேன். இப்பொழுது தான் வாழ்க்கையின் செழுமையை உணர்கிறேன். இந்த முறை எனக்கு நிறைய பரிசுகள் கிடைத்துள்ளன. . பாலன் "அய்யா " நீங்கள் எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?" எனது "சேர்ட் பொக்கட்டுக்குள் இருந்த தங்கச் சங்கிலியை எடுத்து அவள் முகத்திற்கு நேரே பிடித்தேன். வியப்பு அவள் முகத்தில் தாராளமாகப் பரவியது.
"எனக்கா இந்தப் பரிசு?' என ஆச்சரியம் மிக்க குரலில் கேட்டாள். "தங்கமா?"
"அசல் தங்கம். இருபத்திரண்டு கரட்." "எத்தனை பவுண்?" - 'இரண்டு. ஒரு மஞ்சாடி கூட இருக்கலாம்." * "இதை வாங்க எவ்வளவு செலவழித்தீர்கள்?" 'ஏழாயிரம் சொச்சம் , ** அவள் கண்களில் விசனம் கோடிட்டது. ‘நான் உங்களுக்கு அவ்வளவு முக்கியமானவள் என்று நினைக்கிறீர்களா?"
"ஒமோம்.' “உங்களுக்கு வெறி இல்லை தானே? உங்கள் மனைவிக்கு வாங்கியதை எனக்கு என்று சொல்லிவிட்டு காட்டுகிறீர்களா?" "எனக்கு வெறி இல்லை. உனக்காக, நாலைந்து கடைகள் ஏறி வாங்கினேன். உனக்கு பிடித்திருக்கிறதா?*
அவள் ஏதோ கூற வாயெடுத்தாள். நான் முந்திக் கொண் டேன். 'டில்ருக்ஷி, நான் உன்னைக் காதலிக்கிறேன். அதன் அடையாளமாகத்தான் இந்தத் தங்கச் சங்கிலியைத் தந்தேன். நீ என்னைக் காதலிக்கிறாயா?" ※

Page 30
அப்படியான கேள்வி ஒன்றைத் தொடுப்பேன் என நான் எண்ணியிருக்கவில்லை. என்னைப் பொறுத் தளவில் அது ஒரு “கனமான கேள்வி. திக்கு முக்காடி பதில் சொல்லத் தத்தளித்து வெறுமனே என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து விட்டு தலை குனிவாள் என நான் நம்பி இருந்தேன். ஆனால், அவள் தெளி வாகப் பதில் அளித்தாள்.
"பாலன் "அய்யா", காதல், திருமணம் என்ற வரையறைக் குள் வாழ முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் திருமணமானவர். ஆறு பிள்ளைகளுக்குத் த்ந்தை. என் உடலை அனுபவித்ததற்கு, அனுபவிக்க இருப்பதற்கு பிரதி உபகாரமாக இந்தச் சங்கிலியைத் தந்திருக்கிறீர்கள். இதை வேண்டினால் உங்கள் காதலை நான் அனுமதிக்கிறேன் என்று பொருள்படும். அதை நான் விரும்பவில்லை. எனவே, அதை உங்களிடம் தருகி றேன். உங்கள் மனைவியின் கழுத்தில் அலங்கரியுங்கள். என்னை உங்களுக்கு தேவைப்பட்டால் என்னிடம் வாங்க. உங்களுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும். நான் தருகிறேன்."
மறுமுறை ஊருக்குப் போனபோது தங்கச் சங்கிலியை மனைவியின் கழுத்தில் அலங்கரித்தபோது, "நீங்கள் சாப்பிடா மல் அரை வயிறும், பட்டினியுமாகக் கிடந்து மிச்சம் பிடிச்சு எனக்கு சங்கிலி வாங்காதேங்கோ’’ என்று கண் கலங்கினாள்.
வீரகேசரி வாரவெளியீடு" - 16.08.92

மிவRஸ் சமரக்கொடியின் *அனெக்ஸ்”
மிஸிஸ் சமரக்கொடியின் "அனெக்ஸில் இருந்து வெளியேறி, இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால், அங்கு நடந்த சம்பவங்களை விட, அங்கு நடந்த, நடக்கக் கூடாத ஒரு சம்பவம் இடையிடையே என் மனதுள் புகுந்து, என் அமைதியை குலைக்க முற்படுவதுண்டு. ஆனால், நான் அதை எண்ணி, "அது எப்படி நடந்தது" என்று என்னையே கேட்பேன்,
குடிகாரனாக, வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் புரிந்த வனாக வாழ்ந்தவன், மிஸிஸ் சமரக்கொடியின் நடத்தையினா லும், நான் விட்ட தவறினாலும், என்னை என்னால் திருத்திக் கொள்ள முடிந்தது. ஏதோ அகத்மாத்தாக நடந்த அந்த ஒரு சம்பவம், என்னைத் திருத்துவதற்கு எப்படி வழி சமைத்தது என்று எண்ணி நான் விந்தையுறுவதுண்டு.
மிஸிஸ் சமரக்கொடியின் "அனெக்ஸ்" . கண்களை மூடியபடி "அனெக்ஸை" மனதில் பரப்பினால் . அந்த சம்ப வம் மனதை ஆக்கிரமித்துவிடும்.
தெகிவளையில், சார்ளிமென்ட் வீதியில், மிஸிஸ் சமரக் கொடியின் வீடு இருக்கிறது. அதில் பின்புறத்தில் ஒர் அறை. அதை ஒட்டினாற் போலிருக்கும் சமையலறை | சாப்பாட்டறை. பொதுவான "பாத் ரூம்" .
யாழ்ப்பாணத்தில், அம்மாவின் நிழலில் இருந்தபடியே வேலை செய்த போது, திடீரென என்னை கொழும்புக்கு இட மாற்றம் செய்தார்கள். முதலில் அங்கு செல்ல முகம் சுளித்த போதும், கொழும்பின் 'உன்மத்தங்களை அறிவதற்கு நல்ல தொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என பின்னய அறிவு எடுத்துச் சொல்லவே, கொழும்புக்கு போவதற்கான ஆயுத்தங்களைச் சுறு சுறுப்பாகச் செய்தேன். முதல் வேலையாக கொழும்பு வாழ்க்கை யில் ஊறி இருந்த வேலுப்பிள்ளைக்கு நல்ல, வசதியான அறை யொன்றை வாடகைக்கு எடுக்கும்படி கோரி கடிதம் அனுப்பி வைத்தேன்.
இரு வாரங்களின் பின் வேலுப்பிள்ளையிடம் இருந்து ‘சோம் பேறித்தனமான" பதில் கடிதம் வந்தது. "அறை தேடி களைத்து விட்டேன். எனது செருப்பும் தேய்ந்து விட்டது. வசதியாக ஒரு "அனெக்ஸ்' கிடைத்தது. வேறு வழியின்றி அதை 'புக்" பண்ணி விட்டேன். வாடகை நூற்றி ஐம்பது ரூபாய். மூன்று மாத அட் வான் ஸ்" என்ற வரிகளை வாசித்த போதே தலையில் கை வைத் தேன்.
53

Page 31
"என்ர சம்பளத்திற்கு நூற்றி ஐம்பது ரூபாய் கட்டுப்படி யாகாது. வேலுப்பிள்ளை ஒரு மடையன், பேயன்' என திட்டித் தீர்த்த போது, அம்மா முதுகில் ஆறுதலாகத் தடவிக் கொடுத் தாள். "பரவாயில்லடா, எடு. நாளைக்கு கலியாணம் முடிச்சால் பெஞ்சாதியை கூட்டிக் கொண்டு போய் வைச்சிருக்கலாம் தானே?’ என்று அம்மா யோசனை சொன்ன போது, அவ கூறுவ தில் உண்மை பொதிந்திருந்த படியால் அனெக்ஸை உடனடி யாக 'புக்" பண்ணு' என வேலுப்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி னேன்"
மாத முடிவில், நல்ல நாளில் அத்தியாவசியமான சாமான் களுடன், ஊருக்கு விடை கொடுத்து, கொழும்புக்குப் பயண மானேன். அம்மா விட்ட கண்ணீர் தான் ரயில் பயணம் முழுவ தும் மனதினுள் தேங்கிக் கிடந்தது. Dw
கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் வேலுப்பிள்ளை என்னை எதிர்கொண்டு வரவேற்றான். நேரே அவனது "ஷமரிக்குப் போனேன். அன்று மாலையே "அனெக்ஸை" பார்ப்பதற்கு வேலுப்பிள்ளையுடன் கிளம்பினேன்.
துப்பரவான வீதி அது. அழகான வீடுகள் பல வீதியின் இரு மருங்கிலும் வீற்றிருந்தன. அழுக்கான வீடு ஒன்றின் "கேட்" டை வேலுப்பிள்ளை திறந்தபோது என்னுள் வளர்ந்திருந்த திடீர் கற்பனை ஒன்று அழிந்தது. அந்த வீடு இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முன் கட்டப்பட்டிருப்பதை அதன் கட்டிடக் கலை உணர்த்தியது. வீடு கட்டப்பட்ட பின் ஒரே ஒரு முறைதான் வெள்ளை அடித்திருக்க வேண்டும் என்பதை சுவர்கள் எடுத்துக் கூறின.
கூச்ச உணர்வுடன் உள்ளே சென்றேன். வேலுப்பிள்ளை இயல்பாக நடந்து சென்று முன் கதவில் தட்டினான். சிறிது நேரத்தில் கதவு திறந்து கொண்டது. ஒரு பெண்! நரைத்துப் போன “கிமோனா அணிந்திருந்தாள். மிஸிஸ் சமரக்கொடி எனற பெயருக்கு உரியவள் அவள்தான் என்பதை அனுமானித் தேன். இது சரி என்பதை பின்னர் அறிந்தேன்.
முதுமையின் இளமைக்கு அர்த்தத்தை மிஸிஸ் சமரக்கொடி பகிர்ந்தாள். அவளை நாற்பத்தைந்து வயதுக்குள் அடக்கலாம். முக தில் களை அறவே இல்லை. ஒல்லியான உடற்கட்டு. உயரம் ஐந்தடி ஆறு அங்குலம் இருக்கும். அகலமான நெற்றி, பரட்டைத் தலை. மொத்தத்தில் நோயாளி போன்றதொரு தோற்றம். ஆனால், அவள் விழிகளில் ஒரு பளபளப்பு. அதில் ஓர் ஏக்கமும் குடிபுகுந்திருந்தது.
முகத்தைச் சுளித்தபடி கதவைத் திறந்த மிஸிஸ் சமரக் கொடி, வேலுப்பிள்ளையைப் பார்த்து ஓர் அரை குறைப் புன் னகையை வெளியிட்டாள். அதில் மலர்ச்சி அறவே இல்லை.
54

என்னைப் பார்த்ததாக அவள் காட்டிக் கொள்ளவே இல்லை. சில வினாடிகள் வரை வேலுப்பிள்ளையின் முகத்தில் ஒரு தவிப்பு தள்ளாடியதை அவதானித்தேன். தொண்டையை இரு தடவைகள் செருமிய பின், என்னை மிஸிஸ் சமரக்கொடிக்கு அறி முகப்படுத்தினான். அதன் பின்னரே அங்கு நான் ஒருத்தன் இருக்கிறேன் என்பதைக் கண்டவள் போல் மிஸிஸ் சமரக்கொடி பழைய அரைகுறை புன்னகையை உதிர விட்டாள்.
மூவரும் வராந்தாவில் கிடந்த பழைய காலத்து நாற்காலி யில் அமர்ந்தோம். அதன்பின் அவள் என்னைப் பற்றி விசாரித் தாள்.
9pt LDistrtrf, எழுது வினைஞராகக் கடமைபுரிகிறேன். இடைக்கிடை சுருட்டுப் புகைப்பேன். பெண் சிநேகிதர்கள் இல்லை. ஊரில் "லொக்கு', 'லொக்கு" என்று இருமும் அம்மா வும், விதவை அக்காவும் தான் இருக்கிறார்கள். வாழ்க்கையில் பெரிய குறிக்கோள்கள் இல்லை. "சீர்ஃப் கிளார்க்காக" பதவி உயர்வு பெற வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள். ஊரில் கலியாணம் பேசுகிறார்கள். மாதக் கடைசியில் வாடகையை நீட்டி விட்டே ஊருக்கு ‘மணியோர்டர்’ அனுப்புவேன். நேர்மை யில் இருந்து வழுவ விரும்பாதவன். உணர்வுகளுக்கு மதிப்பளிப்ப வன். இந்த விபரங்களை அவளது பல குறுக்கு கேள்விகளுக்குப் பின் வெளியிட்டேன்.
மிளிஸ் சமரக்கொடிக்கு என்னைப் பிடித்து விட்டது. எனக்கு "அனெக்ஸை" தருவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றாள். சம்பிரதாயத்துக்காக ‘அனெக்ஸை சுற்றிப் பார்த் தேன். பிடித்தது. சொன்னேன். மூன்று மாத ‘அட்வான்ஸ்’ வேண்டும் என்று கை நீட்டினாள். குறைக்க முடியா தா எனக் கேட்டேன்.
"அப்படியென்றால் வேறை "அனெக்ஸ் பாருங்கோ. 'முகத் தில் அறைந்தாற் போல சொன்னவள், முகத்தைத் திருப்பி விட் டாள்.
வேலுப்பிள்ளை என்னைத் தமிழில் திட்டினான். எனக்கு வேறு வழி இருக்கவில்லை. மூன்று மாத அட் வான்ஸ்"க்கு சம் மதித்தேன். நானுாற்றி ஐம்பது ரூபாவை கஷ்டப்பட்டு நீட்டி னேன். மூன்று தடவைகள் எண்ணியவள் "கிமோனா பொக்கட் டுக்குள் செருகினாள்.
மிஸிஸ் சமரக்கொடி மூன்று கட்டளைகளை விதித்தாள். ஒன்று - இரவு பத்து மணிக்குள் "லைட்"டை அனைத்து விட வேண்டும். இரண்டு - சிநேகிதிகள் அனெக்ஸுக்கு வரக் கூடாது. மூன்று - விறகு அடுப்பின் சுவாலை தெரியக் கூடாது. அவளது கட்டளைகளை ஏற்றுக்கொண்டேன்.
மறுநாள் மூட்டை முடிச்சுக்களுடன் வருவதாகக் கூறியபடி
55

Page 32
விடைபெற்றோம்.
'மச்சான், மிஸிஸ் சமரக்கொடிக்கு விசரோ?” என்று வழி யில் வேலுப்பிள்ளையிடம் கேட்டேன்,
‘இல்லடா. அவள் ஒரு போக்கு." **தனியாகவோ இருக்கிறாள்??? "ஒடிோம்." ** அப்படியெண்டால் புருஷன், பிள்ளைக ' . y y 'பிள்ளைகள் இல்ல. கலியாணம் முடிச்சு இரண்டு வருஷங் களுக்கு பிறகு புருஷன் இவளை விட்டுட்டு போயிட்டானாம்.”*
'இருவருக்குள்ளும் என்ன பிணக்காம்?’’ “தெரியாது. ஏதும் காசுப் பிரச்சனையாக இருக்குமாக்கும். இவள் ஒரு காசுப்பேய்."
“வீட்டில தனியாக இருக்கிறாளே. பயமில்லையோ?" "அதற்குத்தான் "அனெக்ஸை" ஆம்பிளைகளுக்கு குடுக்கி றாள்.'"
‘ஓ’’ யோசனையைத் தேக்கியபடி நடந்தேன்.
மிஸிஸ் சமரக்கொடியின் அனெக்ஸுக்கு வந்து ஒரு மாதம் மெதுவாக மறைந்தது. இந்த ஒரு மாதமும் காரியாலயத்திற்குப் போவதும், வருவதுமாக நாட்களை கழித்தேன். வீட்டில் இருந்த சில மணித்தியாலங்களை சோம்பேறித்தனமாகக் கழித்தேன். "பாத்ரூமுக்கு" போகும் போது, சில வேளைகளில் மிஸிஸ் சமரக் கொடி எதிர்ப்படுவாள். "குட்மோர்னிங்", "குட் ஈவினிங்" என்று மட்டும் கூறிவிட்டு போய் விடுவாள். அவ்வளவு தான். "ஹெளவ் ஆர் யூ" என்ற பேச்சுக்கு இடமேயில்லை.
இந்த ஒரு மாதத்திற்குள் மிஸிஸ் சமரக்கொடியைப் பற்றிய சில விடயங்களை கிரகித்தேன். அவள் ஏன் கணவனைப் பிரிந்து வாழ்கிறாள்? அவள் தனியாக வாழ்வதற்குக் காரணம் என்ன? வாழ்க்கையை ஒட்ட அவளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? அவளைப் பார்க்க ஏன் உறவினர்கள் வருவதில்லை? அவள், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கான காரணம் என்ன? போன்ற “கனமான" கேள்விகளுக்கு விடைகளை என்னால் அறிய முடியவில்லை. அவை பற்றி அவளிடம் சாடைமாடையாகக் கேட் டறிய வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் ஒளிந்திருந்தது. ஆனால், அவள் என்னுடன் இந்த ஒரு மாதமும் அந்நியோன்னிய மாக பழகாததினால், எனது கேள்விகளை அவிழ்ப்பதை ஒத்தி வைத்தேன். ஆனால், நாளாந்த வாழ்க்கையைப் பற்றி ஒரளவு அறிந்தேன்.
மிஸிஸ் சமரக்கொடி காலையில், எட்டு மணிக்குப் பின்னரே கண் விழிப்பாள். பூளைக் கண்களுடன், காறித் துப்பியபடி
56

"பாத்ரூமுக்கு" "நைட்டியில்” போவாள். காலைச் சாப்பாடு பாணும், பட்டரும், முட்டையும் தான். முட்டையை வேண்டா வெறுப்புடன் பொரிப்பாள். மதியம் சமைக்க மாட்டாள். பக் கத்து வீட்டு வேலைக்காரியிடம் காசு கொடுத்து ஒரு லஞ்ச் பக் கெற்றை வாங்கிச் சாப்பிடுவாள்.
மதியம் சாப்பிட்ட பின் ஒரு தூக்கம் போடுவது மிஸிஸ் சம ரக்கொடியின் வழக்கங்களில் ஒன்றாகும். பின் நான்கு மணியள வில் எழும்புவாள். அதன் பின்னரே முன் கதவைத் திறப்பாள். அழுக்கான "கிமோனாவை கழற்றி வைத்து விட்டு சேலையை அணிந்து கொண்டு முற்றத்தில் நின்றபடி வருவோர், போவோரை அசுவாரஷ்யத்துடன் நோட்டம் விடுவாள். அண்டை அயலவர் கள் வீதியில் போனால் முகத்தை மறுபக்கம் திருப்பிவிடுவாள். அப்படி முடியாத பட்சத்தில் ஒரு மலர்ச்சியற்ற புன்னகையை உதிர விடுவாள். ஒருவருடனும் பேச்சுக் கொடுக்கமாட்டாள்.
இரவில் ஏழு மணியளவில் "பூரீ கிருஷ்ண்ா லொட்ஜ" க்கு நான் போவதை அறிந்தவள், இரவு சாப்பாடு கொண்டு வரும் பணியை என் தலையில் சுமத்தினாள். அறையை பூட்டி விட்டு புறப்படும் வேளை மிஸிஸ் சமரக்கொடி என்னிடம் வருவாள். "நாலு தோசை', 'இரண்டு இட்லியும் ஒரு தோசையும்’, ‘மூன்று இட்டலி’, ‘இரண்டு தோசையும் ஒரு மசாலா வடையும்" என்று இரண்டு ரூபா நோட்டை நீட்டிய படி வேண்டுகோள் விடுப்பாள். சாப்பிட்டுவிட்டு வரும் போது முன்வாசலில் நிற்பாள். "பார் சலை நீட்டி விட்டு நான் உடுப்புக்களை மாற்றுவதற்குள், அவள் கைகழுவி விடுவாள்.
பின்னர் சிறிது நேரம் "பியானோ'வில் இசை எழுப்புவாள். சகிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ஒரே மெட்டையே அரை குறையாக இசைவடிவம் கொடுப்பாள். இந்நேரங்களில் எல்லாம் நான் சுருட்டைப் புகைத்தபடி கடற்கரைப்பக்கம் போய் விடு வேன். محس۔ع۔
கடற்கரையில் இருந்து திரும்பி வரும் போது வீடு இருளில் மூழ்கியிருக்கும். தட்டுத் தடுமாறி இருட்டில் நடந்து சென்று அறைக்குள் போய் முடங்கி விடுவேன்.
மிஸிஸ் சமரக்கொடியின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவ தானித்த போது என்னால் ஓர் இறுதியானதும், உறுதியானது மான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் என் னால் உணரமுடிந்தது. அவள் நாட்களை வெறுமையாக - எவ் வித குறிக்கோளும் இன்றி - பற்றுதல் இன்றி கழிக்கிறாள் அவள் வாழ்க்கையில் எவ்வித இலக்கும் இருக்கவில்லை. எல்லோ ருடனுமே நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தாள். உறவினர்கள் கூட அவளைத் தேடி வருவதில்லை. மீன்காரி, மரக்கறிக்காரன் தபால்காரன், பக்கத்து வீட்டு வேலைக்காரி ஆகியோருடனேயே முகம் கொடுத்துப் பேசினாள்.
57

Page 33
என்னை உதாசீனம் செய்ததை நான் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை.
அந்த சம்பவம் நடந்த தினம், ஒரு சனிக்கிழமை என்று ஞாபகம். , ,
முதல் நாள் சம்பளத்னித நீட்டி இருந்தார்கள். எனவே தாராளமாக செலவளிக்கலாம் என்ற உணர்வு என்னுள் அடிக்கடி தோன்றி மறைந்தது. கூடவே வாழ்க்கையை அனுபவிக்க வேண் டும் என்ற வேட்கை இடை இடையே மனதை எட்டிப் பார்த்தது. நான் அதன் மேல் ஒன்றையும் துலாம்பரமாக யோசிக்க வில்லை. வெளியே புறப்பட்டுச் சென்றேன். வரும்போது ஓர் அரைப் போத்தல் சாராயம், "வாப்பா" ஹோட்டல் "சிக்கன் ரோஸ்ட்", ஒரு போத்தல் சோட்ா, அரை டசின் சுருட்டுக்கள் ஆகியவற்றை ஒளித்துக் கொண்டு வந்தேன்.
வீட்டை அடைந்தேன். "கேட்"டின் அருகில் மிஸிஸ் சமரக் ' கொடி ஏகாந்தமான பார்வை ஒன்றை வீசியபடி நின்றாள். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. சில வினாடிகள் வரை என் னால் இயல்பு நிலையில் திகழ முடியவில்லை.
மிஸிஸ் சமரக்கொடி சாராயப் போத்தலைக் கண்டு விட் டாள். அர்த்தீபுஷ்டியான புன்னகை ஒன்றை வெளியிட்டாள். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அசட்டுப் புன்னகை ஒன்றை கஷ்டப்பட்டு வரவழைத்து, உதிர்த்து விட்டு சென்று அறைக்குள் என்னை மூடினேன்.
குடிப்போமா, விடுவோமா என்ற எண்ணம் திடீரென மனதி னுள் முளைத்தது. மிஸிஸ் சமரக்கொடியின் அர்த்த புஷ்டியான புன்னகை கண்முன் தோன்றி என்னுள் ஒரு வித கிலேசத்தையும், குற்ற உணர்வையும் செருகின. சாராயப் போத்தலை அவள் கண்ட பின், அதைக் குடிப்பது ஏதோ தவறு என்று எண்ணினேன். சில நிமிடங்களைப் போராட்டமாகக் கழித்தவன், குடித்தே தீருவது என்ற முடிவுக்கு இறுதியில் வத்தேன்.
அறை ஜன்னலை மூடினேன். போத்தலைத் திறந்தேன். குடிக்கத் தொடங்கினேன். சில நிமிடங்களுக்குள் கால் போத்தல் சாராயம் முடிந்தது.
நிமிடங்கள் நகர, நகர சாராயமும் தனது வலிமையை வெளிப்படுத்தியது. தலை சற்று கிறு, கிறுத்தது. கண்ணில் ஒரு வித மயக்கம். சுயநினைவில் கால்பங்கு பறந்தோடி விட்டது. பல வித அதீத கற்பனைகள் தோன்றி மறைந்தன. பாடசாலை நாட் களில் ஆசை வைத்திருந்த புனிதவதியின் நினைப்பு நெஞ்சைத் தட்டியது. அலுவலக "ஸ்டெனோ டெயிஸி முதுகில் தட்டுவது போன்ற உணர்வு. இன்பமயமான சுகானுபவத்தில் மிதந் திருந்த வேளை கதவு தட்டப்பட்டது. V−
யாராக இருக்கும்? வேலுப்பிள்ளையோ? சனிக்கிழமை ஒரு
58

வேளை வருவதாகக் கூறியிருந்தான். அவன் தான். அந்த, நினைப்பில் "கொஞ்சம் பொறு மச்சான்' என்று கூறியபடி கதவைத் திறந்தேன்.
எதிரே - நான் துளியளவும் எதிர் பார்க்கவில்லை. மிஸிஸ் சமரக்கொடி! அவள் முகத்தில் வழக்கத்தில் குடியிருக்கும் அரை குறை புன்னகை.
என் இதயம் ஒரு முறை துள்ளிக் குதித்தது. பின் விரைவாகப் பணி புரிந்தது. இரத்தத்தில் ஒரு குளிர்மை சேர்ந்து விட்டது. பிடரி மயிர்களில் ஒரு சிலிர்ப்பு. நெற்றியில் வியர்வை அரும்ப முயற்சிக்க.
ஒன்றுமே செய்யத் தோன்றாது 9 F அனாதைத்தனமான நிலையில் நின்றேன்.
'உள்ளே வரலாமா?" என மிஸிஸ் சமரக்கொடி முணு முணுத்த குரலில் கேட்டாள்.
' 's '' 6rac. முக்கினேன். அப்பொழுதே வெறும் மேலுடன் இருக்கிறேன் என்ற நினைவு வந்தது. கட்டிலில் கிடந்த “சேர்ட்"டை எடுத்து அணிந்தேன்;
மிஸிஸ் சமரக்கொடி அறையினுள் பிரவேசித்தாள். சுற்றும், முற்றும் அசுவாரஷ்யத்துடன் நோக்கினாள். அவள் பார்வை இறுதியில் கட்டிலின் கீழ் தெறித்தது. அங்குதான் சாராயப் போத்தல் கிடந்தது. அதன் அருகில் நாலைந்து குறைச் சுருட்டுத் துண்டுகள் கிடந்தன. அவற்றின் அருகில் "சிக்கன் ரோஸ்ட்". *"மிளிஸ் சமரக்கொடி உட்காருங்கள் " என்று கட்டிலைக் காட்டினேன். f
அவள் அமரவில்லை. போத்தலை வெறித்துப் பார்த்தாள். என்னுள் குற்ற உணர்வு பெருகியது. கைகளைக் குழைந்தபடி, நாணிக் கோணினேன்.
மிஸிஸ் சமரக்கொடியின் பார்வை என் முகத்திற்கு தாவியது. பார்வையில் ஒர் அளந்தெடுப்பு" மறைந்திருந்தது. என் உள் ளத்தை அளக்க முற்படுகிறாளா?
இதே வேளை அவளை நான் அளக்க முற்பட்டேன். அந்த வரட்சியான முகத்தில் உணர்ச்சியின் வெளிப்பாடு வற்றியிருந் தது. "எதையும்" என்னால் கிரகிக்க முடியவில்லை.
படீரென அவள் முகத்தில் ஒரு வ்ெளிப்பு தென்பட்டது. பிரகாசமான புன்னகை ஒன்று பூத்தது.
அந்தக் கணமே என்னுள் புத்துணர்வு அடிமையாகியது. இத யத்தில், உடலில் பற்றியிருந்த பல்வேறு உணர்ச்சிகள் மறைந்து, புத்துணர்ச்சி குடியேறியது. −
ஆண்மகனான நின்லயில் அவள் முன்னே நின்றேன். மிஸிஸ் சமரக்கொடி என்னை நோக்கி வந்தாள். என்னை உராசியபடி சென்று, கட்டிலில் அமர்ந்தாள். 'நீங்கள் குடி
59

Page 34
யுங்கோ. நான் சும்மா தான் வந்தேன்."
மிஸிஸ் சமரக்கொடியின் நடத்தை என்னுள் ஆச்சரியத்தை புகுத்தியது. அவளின் வரவுக்கு எவ்வாறு காரணம் கற்பிப்பது? மனதினுள் அதை உருட்டினேன். ஏதோ ஒருவித "உண்மை" எட்டிப் பார்த்தது. அந்த "உண்மை" என் நாளங்களைத் தட்டி எழுப்பியது.
சிந்தனை குழப்பம் அடங்கியது. ஆனால், மதுவின் மயக்கம் மனதை ஆட்டுவித்தது. வினோத உணர்வில் சில நிமிடங்கள் மிதந்தேன்.
மிஸிஸ் சமரக்கொடி என்னுடன் பேச்சுக் கொடுத்தாள். என் சரித்திரத்தின் சில அத்தியாயங்களை அவளிடம் ஒப்படைத்தேன். அந்தரங்க வாழ்க்கை பற்றி அநாகரீகமாக அலசினேன். புன் னகைத்தபடி செவிமடுத்தாள். எனக்கு வரவேண்டிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று பச்சையாக வருணித்தேன். புன் னகையை ஒத்தி வைத்து விட்டு, சிரிப்பைக் கொண்டு வந்தாள். அதன் பின் இருவரும் சிரித்துச் சிரித்து பேசினோம். காதல் என்றால் என்ன, காமம் என்றால் என்ன போன்ற விடயங்கள் குறித்து விவாதித்தோம்.
அரைப் போத்தல் சாராயம் அகன்று விட்டது. நேரம் பத்து மணியில் தத்தளித்தது. மிஸிஸ் சமரக்கொடிக்கும், எனக்கும் இடையிலான நெருக் கம் அதிகரித்து விட்டது. மூளையைக் கிறங்க வைக்கும் என் பொன் மொழிகளைக் கேட்டு அவள் என் தோளில் தட்டி, "மிக நன்றாக இருக்கிறது" என்று சொன்னாள்.
புனிதவதியைப் பற்றி பிரஸ்தாபித்தேன். பனந்தோப்பில் இருவரும் ஒடியாடியதை, கற்பனையைப் புகுத்தி காவியமாக வடித்தேன். நுணுக்கமாக செவிமடுத்தாள்.
அவள் வாழ்க்கைக்கு சம்பாஷணை திசை திரும்பியது. "மிஸ் டர் சாம்பமூர்த்தி, தயவு செய்து என்னை ஆழமாக நோக்க வேண்டாம். என்னுடன் ஆழமாக பழகாதீங்க. என்னை தற் காலிகமாக நேசியுங்க. நான் ஒரு உதிர்ந்த பூ." மிக அவசரமாகச் சொன்னாள்.
அப்போது அறை இருளில் மூழ்கியது. மதுவின் வெறி. இருளின் ஆக்கிரமிப்பு. தனிமையான சூழ் நிலை. எல்லா காரணிகளும் என் உணர்வுகளை மழுங்கடித்தன. மிஸிஸ் சமரக்கொடியின் பெரு மூச்சுக்கள். கடிகாரத்தின் "டிக்", "டிக்" ஒலி. இரவு நன்றாக மயங்கி விட்டிருந்தது. மிஸிஸ் சமரக்கொடியை நெருங்குவது போன்ற உணர்வு. அவள்பாற் ‘யாரோ’ என்னைத் தள்ளுவது போன்ற உணர்வு.
நான் என்னை மறந்தேன். மிஸிஸ் சமரக்கொடி அங்கு வந்த
60

எண்ணத்தை நிறைவேற்றினாள். நான் உபயோகப்படுத்தப் பட்டேன்.
காலை கண் விழித்தபோது ஞாயிற்றுக்கிழமைகளில் தோன் றாத ஓர் அசதி உடம்பில் ஒட்டியிருந்தது. எலும்புகள் முறிந்து விட்டன போன்ற ஒர் "இன்ப வலி.
கட்டிலில் கிடந்த படி பின்னிரவுக்கு மனதை தாவ வைத் தேன். ஒவ்வொன்று ஒவ்வொன்றாக காட்சிகள் தோன்றி மறைந் தன. ஆனால், ஒரு காட்சி மட்டும் சலனமடையாமல் மனத்திரை யில் தொக்கி நின்றது.
மிஸிஸ் சமரக்கொடி. அந்த முழு இருளில், அவள் முதல் பெயரை நான் எத்தனை தடவைகள் உச்சரித்திருப்பேன்? மிஸ் டர் சாம்பமூர்த்தி, சாம்பமூர்த்தியாகி, மூர்த்தியாகி.
எழுந்தேன். காலைக் கடன்களை சோம்பேறியான நிலையில் நிறைவேற்றினேன்.
எட்டு மணியாகியது. மிஸிஸ் சமரக்கொடி எழுந்தாள். வழக் கம் போல பாணை வாங்கினாள். முட்டை பொரித்தாள். என்னை கண்டபோது, வழமையான மலர்ச்சியற்ற "குட்மோர் னிங்". 金
நண்பகலான போது பக்கத்து வீட்டு வேலைக்காரியிடம் பணத்தைக் கொடுத்து மதிய சாப்பாட்டை வாங்கினாள். இரவு நான் வாங்கிக் கொடுத்த இட்டிலியை சாப்பிட்டாள். பியா னோவை இசைத்தாள். ஒன்பது மணிக்கு படுக்கைக்குப் போய் விட்டாள்.
சுருட்டைப் புகைக்காமல், அவளுக்காக அறையில் காத் திருந்து ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம் என்னுடன் அந்நி யோன்னியத்திற்கு இடம் வைக்காமல் முழுநாளும் நடந்து விட்டாள்.
மறு நாளும் அவள் வழமையான மிஸிஸ் சமரக்கொடியாகத் தான் திகழ்ந்தாள்.
அடுத்த சனிக்கிழமையும் என் செய்கை மூலம் முதல் சனிக் கிழமையை மிஸிஸ் சமரக்கொடிக்கு உணர்த்தினேன். எனக்கு தோல்விதான் கிட்டியது. இரவு ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை சகிக்க முடியாதஇசையை பியோனாவில் இசைத்து விட்டு அவள் படுத்து விட்டாள்.
அதில் இருந்து மிஸிஸ் சமரக்கொடி என்னிடம் இருந்து அந் நியமாகி விட்டாள்.
ான் மிஸிஸ் சமரக்கொடியின் அனெக்ஸில் ஆறு மாதங்கள் தான் தங்கி இருந்தேன். அதற்குள் புத் தளத்திற்கு இடமாற்றம் கிடைத்தது.
அனெக்ஸை காலி செய்ய வேண்டியிருந்தது. இதைப்பற்றி அவளிடம் பிரஸ்தாபித்த போது, "அப்படியா, நல்லது. எப்
6.

Page 35
பொழுது ‘அனெக்ஸை" காலி செய்யப்போற்ங்க? அட்வான்ஸை" வாடகையிலேயே கழிக்கட்டுமா? அல்லது அப்படியே தரட் டுமா?" என பல வினாக்களைத் தொடுத்தாள்.
நான் "அனெக்ஸை காலி செய்யப் போகிறேனே என்ற வருத் தம் அவள் குரலில் கொஞ்சமாவது சேர்ந்திருக்காதது என்னுள் வருத்தத்தை நிரம்ப வரவழைத்தது.
*அனெக்ஸை" காலி செய்து, புத்தளத்திற்குப் பயண மானேன். அப்போது மிஸிஸ் சமரக்கொடி அறைக்கு வந்தாள். எனது அறைக்குள் அவள் அடி எடுத்து வைத்தது அது இரண்டா வது முறையாகும். கையில் ஒரு கோப்பை தேநீர். அதை என் னிடம் நீட்டினாள். வேண்டிப் பருகினேன். நமுட்டுப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டுச் சென்றாள். ஒன்றுமே பேசவில்லை. அவளிடம் விடைபெற்றேன். தலையை மட்டும் ஆட்டினாள். புத்தளத்திற்கு வந்த பின்னரும் மிஸிஸ் சமரக்கொடியை என்னால் மறக்க முடியவில்ல்ை. கடிதம் ஒன்றை எழுதினேன். காதல் வார்த்தைகளை இடையிடையே செருகி இருந்தேன். ஆனால், அவளிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை.
அடுத்த முறை கொழும்புக்குச் சென்ற போது அவளைத் தேடி ஆர்வத்துடன் சென்றேன்.
வீட்டை அடைந்தேன். வீடு இருளில் மூழ்கியிருந்தது. நான் இருந்த அறையில் மட்டும் வெளிச்சம் சற்று தென்பட்டது.
நடந்தேன். அறை ஜன்னலுக்குச் சென்றேன். உள்ளே இரு வர் சம்பா ஷிப்பது கேட்டது. ஒரு குரலுக்குரியவள் மிஸிஸ் சமரக் கொடி. மற்றக் குரலுக்குரிய ஆள் யார் என்று தெரியவில்லை. என்னைப் போன்ற "வழிப் போக்கனோ??
சில நிமிடங்களுக்குள்ளேயே, முன்கதவைத் தட்டாமல் வந்த வழியே சென்று விட்டேன். -
இரு வருடங்களுக்குள் என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட் டது. மணவாழ்க்கையில் என்னைப் புகுத்தி விட்டார்கள். அதே நேரம் கொழும்புக்கு இடமாற்றமும் கிடைத்தது. மனைவியும் கொழும்பிலேயே என்னுடன் இருப்பதற்குத் தயாரானாள்.
முதலில் 'அனெக்ஸ்’ ஒன்றைத் தேட வேண்டும். அதுவரை மனைவியின் சிநேகிதியின் வீட்டில் தங்கியிருப்பது என்று முடிவு செய்தோம்.
இரண்டு நாட்கள் கழிந்த பின் மனைவி ஓடோடி வந்தாள். "இஞ்சருங்கோ, தெகிவளையில் ஒரு அனெக்ஸ்" இருக்குது. போய் பார்த்திட்டு வாங்களேன்' என்றவள் அன்றைய பத்தி ரிகையை என்னிடம் நீட்டினாள். W *அனெக்ஸின் விலாசத்தை பத்திரிகையில் நோட்டம் விட் டேன். அது மிஸிஸ் சமரக்கொடியின் அனெக்ஸ்’ விலாசம்.
62

*உமா, அந்த "அனெக்ஸ்’ வேண்டாம். அது சரிப்பட்டு வராது. *
"ஏன்?" என வினாவினாள்.
அந்தக் காரணத்தை இது வரை நான் உமாவுக்குச் சொல்ல வில்லை.
அடுத்து வந்த சில நாட்களில் சிற்சில வேளைகளில் மிஸிஸ் 'சமரக்கொடி என் மனதினுள் அடங்கியிருந்தாள்.
வீரகேசரி வாரவெளியீடு" - 21.3.76

Page 36
ஒர் ஆச்சரியக் குறி கேள்விக் குறியாகிறது
விஞ்ஞான தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் பயனாக உருவான விதம், விதமான வாகனங்கள் வீதியில் ஊர்கின்றன. என் கவனம் அவற்றின் மீது படிந்திருக்கவில்லை.
விதம், விதமான அலங்காரங்களில் பெண்கள் என்னைக் கடந்து செல்கிறார்கள். என் கவனம் அவர்கள் பாற் செல்ல வில்லை.
பரதேசியின் நிலையில் - நன்றாகக் குடித்து விட்டு மணிக் கணக்கில் படுத்தெழும்பியவனின் நிலையில் - வீதி ஒரத்தில் நிற்கிறேன்.
ஏன் நிற்கிறேன், எதற்கு நிற்கிறேன், யாருக்காக நிற்கிறேன் என்று சிந்திக்க முடியாத நிலையில்.
மனக் கண்ணில் மனைவி, பிள்ளைகளின் முகங்கள் பட்டும், படாமலும் செல்ல.
சே! தேவையற்ற சிந்தனை. ஊருக்குப் போக முடியாத போது அவர்கள் சிந்தனை எதற்கு?
ஒரு "அரையை எடுத்து அப்படியே சோடா கலக்காமல், நாக்கில் படாதவாறு, தொண்டைக்குள் செலுத்தி.
வெறியில் அங்கும், இங்கும் உழன்றபடி படுத்தால் மனைவி யின் சுகம், பிள்ளைகளின் மழலைக் குரல்கள், "இந்தா, இப்பவே சாகப் போறன்" என்ற அம்மாவின் "லொக்கு", "லொக்கு" இரு மல் சத்தம்.
பைத்தியக்கார சிந்தனை "பட்டென்று தேய்ந்தது. என் னத்ை தாண்டிச் சென்ற 'ஸ்கூட்டர் ஜோடி" தான் சிந்தனை யைக் கரைத்தது.
அந்த ஜோடி விசுவலிங்கமும், தீபாவும் என்பதை அவர்கள் என்னைத் தாண்டிச் சென்ற சில வினாடிக்குள் அனுமானித் தேன். கீழே விழாமல் இருப்பதற்காக விசுவை, தீபா அனைத் திருப்பதை "ஏதோ ஒன்று மனதுக்குள் தள்ளியது.
என்னுள் ஆச்சரியம், அதிர்ச்சி. சிறுகதைகளில் வழமையாக எழுதப்படும், "என் கண்களையே என்னால் நம்ப முடியாமல் இருந்தது" என்ற நிலையில் நான். "அன்டர் த சன் எனிதிங் கன் ஹப்பன்" (சூரியனின் கீழ் எது வுமே நடக்கலாம்) என்று நண்பன் ரவிகுமார் கூறும் வார்த்தை கள் நெஞ்சில் ஒரு முறை மோதி விட்டு, மறைந்தன.
விசு என்று சுருக்கமாக அழைக்கப்படும் விசுவலிங்கமும், சுருக்க முடியாத பெயரைக் கொண்ட தீபாவும் என் பல்கலைக்
64

கழக நண்பர்கள். அவர்களை நீண்ட காலத்திற்கு பின் கண்ட தில், பழைய நினைவுகள் - சில சம்பவங்கள், சூன்ய நிலையில் விளங்கிய மனதினுள் புகுந்தன.
விசுவலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்த போது சில வேளைகளில் கேள்விக்குறி. வேறு சில வேளைகளில் ஆச்சரியக்குறி. ஒரு போதுமே முற்றுப்புள்ளியாகத் திகழவில்லை. அந்தச் சின்னச் சம்பவம். ஐந்து நிமிடங்கள் நடந்த சம் பாஷணை. மல்லிகாவின் வார்த்தைகள். மனதில் இருந்து பூதம் போல வெளிக்கிளம்பியது.
‘விசு இஸ் எ பிளாடி வுமனைசர்" (விசு ஒரு பெண் பித்தன்). மல்லிகாவின் சீற்றத்தின் அர்த்தம் எனக்கு புரியும் அளவுக்கு என் அறிவு வளர்ந்திருந்தது.
எனது அறையின் "ரூம் மேட்" என்ற அந்தஸ்துடன் இருக்கும் விசுவைப் பற்றி எனக்கு ஐம்பது வீதமாவது தெரிந்திருக்கள்தா? "மல்லிகா, என்ன நடந்தது எண்டு சொல்லுமன்.' என் குரலில் சோகம் இழையோடி இருக்க வேண்டும். மல் லிகா தன் உள்ளத்தில் பதுங்கி இருந்ததை வார்த்தைகளாக உஷ் ணத்துடன் வெளிப்படுத்தினாள். "அந்த கெட்ட "ராஸ்கல்" என்னை ஏமாத்தி விட்டான். அவனைத் துண்டு துண்டாக வெட்டி மகாவலியில் போட்டால் தான் என்ர ஆத்திரம் தீரும்.' மல்லிகாவின் முன் வரிசைப் பற்கள் தாளமிடுவதை அவதானித் தேன். முகத்தில் கேத்தலை வைத்திருந்தால் பத்து நிமிடங்களில் ஆவி வந்திருக்கும்.
விசுவும், மல்லிகாவும் "ஈவினிங் வோக்" போறதை சாடை மாடையாக அவதானித்திருக்கிறேன். "லவ்வர்ஸ் லேனில்" மணிக் கணக்காக கிடப்பதைக் கண்டும் இருக்கிறேன். கேள்விப்பட்டும் இருக்கிறேன். "கொம்பைன் ஸ்டடீஸ்" என்று சினிமாவுக்கு போறதை விசு சொல்லவும் கேட்டிருக்கிறேன்.
காய்ந்த புற்கள் விசுவின் களுசான் பின்புறத்தில் ஒட்டியிருப் பதைக் கண்டு பகிடியும் பண்ணியிருக்கிறேன். −
"மச்சான் விசு, மல்லிகாவை சுழட்டி எடுத்திட்டாய் போல? ஏதோ ஒரு நாள் அகத்மாத்தாக கேட்டேன். Y
விசு கபடமாகச் சிரித்தான். அதில் ஹாஸ்யமும் கலந்திருந் தது. “ஓமடா. இந்த "வாஸிட்டியில’ எத்தனைபேர் அவளை சுழட்டி இருப்பினம் எண்டு தெரியுமோ? "எக்கனமிக்ஸ் லெக்ஷ ரர்" "நோட்ஸ்" எழுதித் தரட்டுமா எண்டு எத்தனை தரம் அவ ளைக் கேட்டிருப்பார். ஆனால், அவள் மசியவில்லை . ஏதோ என்னில விழுந்து விட்டாள்.' விசு தன் "சேர்ட் கொலரை உயர்த்தி விட்டான்.
ஒரு வருடம் வரை இருவரும் "பின்னிப் பிணைந்து நடந்து செல்வதைக் கண்டு, கூசித்தேன். விசு கூறும் "கதைகளைக்"
65

Page 37
கேட்டு, காதுகளைப் பொத்தினேன்.
* டேய், தென்னிந்திய சினிமாக்காரங்கள் காதல் காட்சி கள எப்படி படமாக்கிறது எண்டு உன்னற்ற தான் "டியூஷன்" எடுக்க வேணும்' என்று ஒரு முறை சொல்லிச் சிரித்தேன்.
இருந்தாற் போல, இருவரும் தனித் தனியாக செல்வதைக் கண்டேன். “கண்டீனில்" விசுவைக் கண்டால், தீபா முகத்தைச் சுளித்து விட்டு போவதையும் கண்டேன்.
"உங்கள் புனிதமான காதலுக்கு என்னே நடந்தது?" விசு விடம் தொடுக்க வேண்டிய கேள்வியை தீபாவிடம் 'அரசபாணி யில் தொடுத்தேன், அவள் எரிந்து விழுந்தாள்.
"சுந்தரம், அந்த "ராஸ்கல்" விசு என்னை மறந்திட்டு ஷார் மினியைப் பிடிச்சு விட்டான். கழுதை, பண்டி. "" அதன் பின் அகராதியில் இல்லாத ஆங்கில தூஷண வார்த்தைகள் தீபா விடம் இருந்து வெளிப்பட்டன.
காதுகளை கழுவ வேண்டும் என்று நினைத்த போதும், மறந்து விட்டேன். V
"மல்லிகாவே, உனக்காக பரிதாபப்படுறன். அடுத்த பிறவி எண்ட ஒண்டு இருந்தால் நீ ஆம்பிளையாக பிறந்து, விசு பொம் பளையாக பிறந்திருந்தால் அவனைப் பழி வாங்கு" என்று சொல்ல இருந்தேன். ஆனால், பெண் மனதை புண்படுத்தக் கூடாது என்பதால், வார்த்தைகளை மனதுக்குள் சமாதி கட்டி னேன். A.
*வாளிட்டியில் படித்த பொடியங்களில் "ஹீ இஸ் எ வெரி இனசன்ட் டைப்' (அவன் ஒரு அப்பாவி ரகம்) ன்ன்று பெட்டை கள் கூறும் அளவுக்கு விளங்கியவன் சூரி. மீசை வளர்வதற்கு முன் வாஸிட்டியில் சேர்ந்த பிஞ்சு முகத்தினன். "ஷேவ் எடுப்பதற் காக துடிதுடித்து, தோல்வியும் அடைந்தவன்.
'ஹே சூரி, இந்த 'புக்"கை மல்காந்தியிட்ட குடுத்து விடு வீரோ" என்று கேட்டாலும், "சூரி, நான் இண்டைக்கு ஊருக்கு போறன். கண்டியில ஒரு "சீட் பிடிச்சீர் எண்டால், சரசவி உயன வில் நான் ஏறி நீர் பிடிச்ச "சீட்டில இருக்கலாம்" என்று சொன் னாலும், "சூரி, ஊருக்குப் போனால் அம்மா பனங்கிழங்கும், ராச வள்ளிக் கிழங்கும் தருவா. குறை நினைக்காமல் கொண்டு வந்து தருவீரோ” எனக் கேட்டாலும் சூரியின் முகம் கறுக்காது. 'அதற் கென்ன செய்யுறன். இட்ஸ் எ பிளஷர்" என்று சொல்லிப் புன் னகைப்பான். அப்படி ஒரு 'இனசன்ட் டைப்'.
ஒரு நாள் "பொட்னி விரிவுரை முடிந்து, "லவ்வர்ஸ் லேன்" ஊடாக வந்த போது சூரியும், தீபாவும் புற்றரையில்.
"படிரென" யாரோ கன்னத்தில் அறைந்தது போன்ற உணர்ச்சி என்னைக் கெட்டியாகத் தழுவியது.
66

*சூரி "இஸ் நொட் அன் இனசன்ட் டைப்" என்று பீதுறு தாலகால மலை மீது ஏறி நின்று கத்த வேண்டும் என்று ஒரு வெறி.
அதன் பின் சூரியின் நடவடிக்கையில் ஒரு "கண்" வைத்தேன். பல இடங்களில் இருவரையும் காதல் வயப்பட்ட நிலையில் கண்டேன். -
சூரியும், தீபாவும் காதலுற்ற பின் "அதைச் செய்", "இதைச் செய்" என்ற நச்சரிப்பு சூரியிடமிருந்து தூர விலகி இருந்தது. " "லெட் தெம் என்ஜோய் த லைஃப் "" (அவர்கள் வாழ்க் கையை சந்தோஷமர்க கழிக்கட்டும்) என்று சூரியைக் கொண்டு பனங்கிழங்கும், ராசவள்ளிக் கிழங்கும் வரவழைக்கும் ராசாத்தி சொன்னாள்.
பேராதனை பூங்கா, சரசவி உயன ஸ்டேஷன், ரீகல் தியேட் டர், கண்டி ஏரி என்று பல இடங்களில் சூரியையும், தீபாவையும் கண்டேன். ஒன்றில் சூரியின் மடியில் தீபா, அல்லது தீபாவின் மடி யில் சூரி, அல்லது இருவரும் ஏதோ விதமான அணைப்பில். சூரி - தீபா தொடர்பு நான்கு மாதங்கள் வரை தான் நீடித் திருக்கும் என்பது என் அனுமானம்.
** "வை? வட் ஹப்பன்ட்"? "" (ஏன்? என்ன நடந்தது?) என் முன்னால் வைத்து ஒருத்தி தீபாவிடம் கேட்டாள்.
தீபாவின் முகத்தில் ஒரு கோணங்கிச் சிரிப்பு. "சூரி, "இஸ் எ வெரி, வெரி இனசன்ட் டைப்' "
**யெஸ், ஹி இஸ் எ சைல்ட்" (ஆம், அவன் ஒரு குழந்தை). அவனுக்கு ஒண்டுமே செய்யத் தெரியாது."
கடைசி மூன்று சொற்களைச் சற்று அழுத்தி இருந்தாள் தீபா. எனக்குப் புரிந்தது. தீபாவும். மற்றவளும் "க்ளுக்", "க்ளுக்" என்று சிரித்த போது, நாக்கைக் கடித்தபடி புன்னகைத்தேன்.
ஒரு முறை நானும், தியாகுவும் பந்தயம் ஒன்று கட்டினோம்.
மகாவலி கங்கையை குறுக்காக நீந்திக் கடக்க வேண்டும்.
முடியும் என்றேன். முடியாது என்றான். தியாகு. நூறு ரூபாய் பந்தயம். விடுவேனா? மகாவலியில் பாய்ந்தேன்.
நீந்தி விட்டேன். அடுத்த கரையை அடைந்தபோது புதர்கள் " சலசலத்தன.
LDSO6vL LmbGun?
கண்கள் விரிந்தன.
என் விழிகளை ஒர் அபூர்வகாட்சி இழுத்தெடுத்தது.
புதர்களிடையே விசுவும், சுவர்ணாவும். இருவர் நிலையும் முதல் நாள் பார்த்த ஆங்கிலப் படக்காட்சி ஒன்றை நினைவூட்டி யது.
67

Page 38
வெட்கம் என்னை பிடுங்கித் தின்றது. மீண்டும் மகாவலியில் பாய்ந்தேன். மீனின் நிலை ஆனேன். ஆரம்பித்த கரையை அடைந்தேன். கண்டதை தியாகுவிடம் சுவைபட செப்பினேன். 'ப்பூ: இதுதானா? தியா குவின் துப்பல் என் முகத்தில் சித றியது. ‘டேய் மொக்கா, சுவர்ணாவை "லவ்” பண்ண தொடங் கின நாள் தொடக்கம் விசு ஒரே பார்மஸிக்குப் போறானாம்.”*
* "ஏனாம்??? தியாகு என் தலையில் குட்டினான். "நீ ஒரு கிணற்று தவளை. புத்தகப் பூச்சி. உலக அனுபவம் போதாது. ’’ தியாகு சென்ற பின் தான் ‘அந்த உண்மை புரிந்தது.
மணியத்திற்கு ஊரில் இருந்து தந்தி வந்தது. "வாஸிட்டி" முழுவதும் ஒரே ‘கசமுசா".
என்ன விஷயம்? காதைக் கூர்மையாக்கினேன். அவனுடைய அம்மா நிரந்தரமாக கண்களை மூடப் போகி றாவாம். குத்து விளக்கு கூட ஏற்றி விட்டார்களாம். ஆனால், சாக முந்தி அந்த கிழவிக்கு ஒர் அற்ப ஆசை மூளைக்குள் புகுந்து விட்டுதாம். மணியமும், அவன் மச்சாள் மங்களமும் மாலையும், கழுத்துமாக அவள் முன்னால் நிற்க, வாழ்த்தியபடியே சாக வேண்டுமாம்.
('மணியத்தின்ர அம்மா கனக்க தமிழ் சினிமா பார்த்திருக்கா போல” என்று ஒருவன் “ஜோக் அடித்திருந்தான்.)
தாயின் கடைசி ஆசையில் மணியம் மண்ணை வாரி இறைத் தான்.
‘தீபாவை மறந்துட்டு எப்படிடா மச்சாளைக் கட்டுறது?’ மணியம் புலம்பினான்,
அப்பொழுதே பலருக்கு ஓர் உண்மை புரிந்தது. " மணியம் இஸ் இன் லவ் வித் தீபா. ”* w
மணியம் தாயைப் பார்க்கப் போகவில்லை. கிழவியும் ‘மணி யம்", "மணியம்" என்று சொல்லியபடி கண்களை மூடியதாக பின் னர் வந்த செய்தி சொல்லியது.
'அம்மான்ர ஆசைக்காக நான் என்ர வாழ்க்கையை தியாகம் செய்ய ஏலுமோ?** மணியம் எல்லோரிடமும் சொல்லித் திரிந் தான்.
மணியம் -> தீபா காதல் முறிந்தது. காரணம் வெளியே வர வில்லை.
மணியம் மச்சாளைத் தேடி ஊருக்கு ஓடினான். மச்சாளோ வேறொருவனைக் கட்டி வெளிநாட்டுக்கு போவதற்கு "பாஸ் போர்ட் எடுக்க கொழும்புக்கு போய்விட்டாளாம்.
அதற்குப் பின் வாஸிட்டியை விட்டு வெளியேறும் வரை மணியம் தாடி, மீசை வெட்டாமல் பரதேசிக் கோலத்தில்
68

உலாவினான்.
தீபாவின் "கலகலப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. புதிதாக ஒரு "பொட்னி விரிவுரையாளர் வந்தாள். எங்க ளுக்கு மூன்று வருஷம் "சீனியர்”, “ஃபஸ்ட் கிளாஸில் பாஸ்" செய்தவுள். பெயர் தமயந்தி சீனிவாசகம்.
மூக்குக் கண்ணாடி ஊடாக உள்ளே தெரியும் அவள் விழிகள் பல விஷமத்தனமான கதைகள் பேசும்.
மிகவும் நளினமாக நடப்பாள். மேனியில் ஒரு புதுமை, மெதுமை மறைந்திருந்தன. அவள் மேனியா அல்லது நளினமா அவளுக்கு அழகைக் கொடுக்கிறது என்று ஜோர்ஜ் கிறிஸ்தோபர் ஒரு 'தீசிஸ் எழுதி விட்டான். அவனது முடிவுரை முற்றுப்பெற வில்லை.
"வீ இஸ் எ பியூட்டி இன் எவ்ரி அஸ்பெக்ட்ஸ்". (அவள் எல்லா அம்சங்களிலும் ஓர் அழகி). இந்த வரியை எழுதிய பின் ஜோர்ஜ் கிறிஸ்தோபரினால் மேலும் எழுத முடியவில்லை.
"மச்சான், மிஸ் சீனிவாசகம் எப்படி?’ ‘கண்டீனில்" வைத்து விசு வினவினான்.
"நல்ல வடிவு' என்றேன். "அவளை சுழட்டலாம் எண்டு நினைக்கிறன்' என்று ஒரு குண்டைத் தூக்கி தலையில் போட்டான்.
* அப்படியெண் டால் டெயிஸி?" (டெயிஸி தான் விசுவின் கடைசிக் காதலி).
"டெயிஸி?' விசு எக்காளமிட்டான். "அவள் கூடாது."
"ஏன்ரா?" "அவள்ன்ர வாய் எந்த நேரமும் நாற்றம் அடிக்குது." ** அவ்வளவு தானே?" ""ஊம். ** **அதுக்காக காதலை கைவிடுறதா?" "நான் விட யோசிக்கக்கில ஒரு பல்லு டாக்குத்தர் அவளுக்கு “லவ்லெட்டர் எழுதி இருக்கிறன். எண்டபடியால அவளை கைவிடுறது பாவம் இல்ல எண்டு நினைச்சன்.""
மூன்று நாட்களுக்குப் பின் விசுவுடன், மிஸ் சீனிவாசகம் சிரித்தபடி கதைத்துக் கொண்டு வருவதைக் கண்டேன்.
ஐந்தாம் நாள் இருவரின் கைகளும் இணைந்திருப்பதை கண்டேன்.
எட்டாம் நாள் ரீகலில் ஒரு “போர்’ அடிக்கும் படத்திற்குப் போனேன். படம் முடிந்து வெளியே வரும் போது விசுவும், மிஸ் சீனிவாசகமும் என்னைக் கடந்து செல்வதைக் கண்டேன்.
விசு - மிஸ் சீனிவாசகம் காதல் மூன்று மாதங்கள் தான் நீடித்தது. அது திடீரென முறிந்து விட்டது. ஒருவருக்கும்
69

Page 39
காரணம் தெரியவில்லை. நானும் விசுவிடம் கேட்கவில்லை.
மிஸ் சீனிவாசகத்தினால் மாணவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. ஒரு மாதம் அளவில் தலை குனிந்தபடி நடந்தவள், ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் நைஜீரியா வுக்கு ஆசிரியைத் தொழில் கிடைத்துப் பறந்துவிட்டாள்.
"தட் ஃபெலோ இஸ் எ ரெளடி" (அவன் ஒரு காவாலி) என்று புரொபஸர் கிருஸ்ணராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் விசு வைப் பற்றி தமயந்தி ஒரு வரி எழுதி இருந்தாளாம்.
விசு ஏமாற்றிய பெண்களின் வரிசை பில் எட்டாவதாக விளங்கியவள் ஏழு வருடங்களாக "பைனல்ஸ்’ செய்த பொன் மணி.
விசுவுக்காக எழுநூறு ரூபாய் கொடுத்து தேங்காய் துருவ லைப் போல் விளங்கிய முன்னிரு பற்களை கழற்றி பொய்ப் பற் களை பொருத்தியது தான் மிச்சம்.
‘ஹீ இஸ் எ யூஸ்லஸ் ஃபெலோ" (அவன் ஒரு பயனற்றவன்) என பொன்மணி எத்தனை தடவைகள் கூறியிருப்பாள்?
தீபா ஏமாற்றிய ஆண்களின் வரிசையில் ஆறாவது இடத் தில் முரளியை நிறுத்தலாம்.
அவளுடன் அவன் ஆறு படங்கள், இரண்டு சிங்கள நாடகங்
கள், ஒரு "கார்ணிவல்". புற்தரையில் ஒரு முறை புரண் -Sil. . . . . . . . . ஆடு பாலத்தில் கட்டிப் பிடித்தது . அவ்வளவு தான்.
** ஏ பிரேக் இன் மை ரோமன்ஸ்" " (எனது காதலில் ஒரு உடைவு) என்று முரளி சிரித்துக் கொண்டே சொன்னான்.
ஈரோஸ் தியேட்டரில் ஒரு படம். அறையில் ஒரே புழுக்கம். ஊருக்குப் போகாததினால் சினம் சினமாக வந்தது. கையிலும் காசில்லை. சில்லறைக் காசுகளை பொறுக்கியபடி தியேட்டருக்கு பயணமானேன.
தியேட்டரை அடைந்தேன். வரிசையில் தீபாவைக் கண்டேன். இதயத்தின் ஒட்டம் சற்று விரைந்தது. சற்றுத் தூரத்தில் விசு யாரோ ஒருவனின் காரில் சாய்ந்தபடி, சிகரெட் புகையில் இன்பம் கண்டிருந்தான். 1
தீபாவுக்கு ஒரு "ஹாய்". விசுவை நெருங்கினேன். முதுகில் தட்டினேன். என்னைக் கண்டு அவன் புருவங்கள் வளைந்து நிமிர்ந்தன.
"என்னடா படத்துக்கு வந்தியா?" இது என் கேள்வி. "இல்ல மீன் வாங்க வந்தனான்' என்று சொல்லி "ஜோக்” அடித்தான்.
‘'நீ இன்னும் மாற இல்ல."
70

“நான் ஒரு நாளும் மாற மாட்டன்." "எங்க வேலை செய்யுறாய்? என்ன வேலை செய்யுறாய்? எங்க இருக்கிறாய்?" என்று வழமையான கேள்விகளைக் கேட்டு விட்டு தீபாவை ஒரக் கண்ணால் பார்த்தபடி தயக்கமான கேள்வி ஒன்றை மனதினுள் தயார் படுத்தினேன். “ டேய் விசு, தீபாவை எப்படா கலியாணம் கட்டினாய்?"
* எட்டு மாசம் வரும். ‘நெ ஷி இஸ். *" என்றவன் வெகுளிச் சிரிப்பொன்றை வெளியிட்டு, கண் சிமிட்டினான்.
"அப்பாவாகப் போறியா?" ʻʻ6? LDL—fT. ' ʼ **டேய், சொல்லுறனெண்டு குறை நினைக்காதை . தீபாவை விட உனக்கு வேறை பொம்பளை கிடைக்க இல்லையோ?"
"அவளுக்கு என்னடா குறை? படிச்சிருக்கிறாள். உத்தி யோகம் பார்க்கிறாள். இங்கிலிசும் கதைப்பாள். வடிவுக்கும் குறை இல்ல."
* டேய் விசு, அவள் "வாஸிட்டியில ஆடின ஆட்டத்தை மறந்துட்டியா?"
என் கேள்வி அவன் இதயத்தை முள்ளாக தைத்திருக்கும். அவன் முகம் வெளுறுவது போலிருந்தது. "'நானும் தான் st
னன். '"
‘'நீ ஆம்பிளை, அவள் பொம்பளை."
விசு என்னை ஏளனமாக நோக்கினான். “பொம்பளைக்கு கற்பு தேவை. ஆம்பளைக்கு தேவை இல்ல எண்டது தான் உன்ர கருத்தா?"
நான் "ஓம்" என்று தலையாட்டினேன்.
விசு இகழ்வாக ஒரு சிரிப்பை வெளியிட்டான். "மச்சான், கற்பு எண்டது ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்க வேணும். பெண்ணுக்கு மட்டும் இருக்க வேணும் என்ற வாதத்தை என் னால ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கும் கற்பில்லை. அவ ளுக்கும் இல்லை. அவைைள நான் கலியாணம் கட்டினால் என்
GT L-Ir?'' '
9
"ஆனால் ...
'நீ என்ன சொல்லப் போறாய் எண்டு எனக்குத் தெரியும். அதை ஏத்துக் கொள்ளமாட்டன். என்ர கருத்தை ஒருவருமே ஏத்துக் கொள்ள மாட்டினம். எங்கட சமூகமும் அதை ஒத்துக் கொள்ளாது. அதை விளங்கிக்கொள்ள எத்தைைன யுகங்கள் செல்லுமோ எண்டு என்னால சொல்லத் தெரியாது.""
"நீ ஒரு கையாலாகாதவன்.""
71

Page 40
விசுவின் முகத்தில் ஒரு மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை.
வீரகேசரி வார வெளியீடு" - 24.0.1982
(இக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு I 0.5. I 9 & 5-th S5SLU “ “Sun” p5rr6f5f6iv “An Episode of Love ” i GT Gör sp தலைப்பில் வெளியானது. )
f

சொந்த மண்
நெற்றியை சுவீகரித்திருந்த வியர்வையை அழுத்தித் தொடைத்து விட்டு, “டையை கழற்றிய மனோகரன் களு சான் 'பொக்கட்டுக்குள் அதைச் செருகினான். பின் "பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். அவன் நடையில் தொய்வே மலிந்திருந்தது. மனதில் வெறுப்பு மிகைந்திருந்தது.
"ஆட்டோ ரிக்ஷாக்காரன்" ஒருவன் மெல்ல வந்து, அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்து, ‘வாlங்களா?" என கண்களால் அழைப்பு விடுத்தான். "பிளாடி பாஸ்டர்ட்" என மனதில் அவ னைச் சபித்தவன், "வேண்டாம்" என்று தலையை ஆட்டி விட்டு, நடையைத் தொடர்ந்தான்.
மனோகரனுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது. "சே! அதிர்ஷ் டம் கெட்டவனாகப் பிறந்து விட்டேனே' என தன்னை மீண்டும் ஒரு முறை நொந்தான். w
காலையில் வீட்டில் இருந்து புறப்பட முன் "டை" கட்டுவதில் திண்டாடிய போது, "இண்டைக்காவது "விசா" கிடைச்சால் எங்கட கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும். பிள்ளைகளும் எப்படா கனடாவுக்கு போவம் எண்டு நாள் எல்லாம் எண்ணுதுகள்' என மனைவி வசந்தி நச்சரிப்புக் குரலில் கூறினாள்.
"வசந்தி, கடவுள் எங்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு வார் எண்ட நம்பிக்கை எனக்கு இருக்குது" என்று மனோகரன் தைரியமாகப் பதில் அளித்தான்.
வீட்டை விட்டு புறப்படும் போது இரு பிள்ளைகளான மஞ் சுளாவும், ஆரணியும் அகடவிகடம் மிழிற்ற விடை அளித்த போது, நிரம்பிய நம்பிக்கையை மனதில் தேக்கிய வண்ணம், கனடா தூதரகத்தை நோக்கி மனோகரன் பயணமானான்.
அந்த "விசா அதிகாரி சிரித்துப் பேசியதையும், "மனோ. மனோ.. என விளித்துப் பேசியதையும் தனக்கு சாதகமாக முடிவு அமையும் என முழுமையாக மனோகரன் நம்பியிருந்தான். மனோகரன் நன்றாக ஆங்கிலம் பேசியதையும், கெளரவமான தொழில் புரிவதையும் தனது சமயோசிதமான கேள்விகளால் மடக்கிக் கேட்ட ‘விசா அதிகாரி அவனது 'பைலை மூடினார். * மிஸ்டர் மனோகரன், உங்களுக்கு "விசா" தர முடியாததை யிட்டு நான் மனவருத்தப்படுகிறேன்" என ‘விசா அதிகாரி மென்முறுவலுடன், செயற்கையான வருத்தத்துடன் கூறினார். அதைக்கேட்டு அவன் அடி வயிறு பகீரென்றது. தனது எதிர் பார்ப்புகள், கற்பனைகள், கனவுகள் யாவும் தன் கண் முன்னா லேயே தவிடு பொடியாவதை உணர்ந்து கலங்கினான். கண்களில் திவலைகள் துளும்பின. ஒருவாறு தன் உணர்ச்சிகளை அடக்கிய
73

Page 41
வன், "விசா" அதிகாரியை கெஞ்சுமாப் போல் பார்த்து, "சேர், தயவு செய்து, என் நிலையை உணர்ந்து "விசா" தாருங்கள்" என்று மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்தான்.
** என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் "ஃபைலை நான் மூடி விட்டேன்’ என்று ‘விசா அதிகாரி சற்று கறாராகக் கூறி 6οτ π ή".
தூதரகத்தை விட்டு வெளியே ஏமாற்றத்தை மனதில் நிறைய தேக்கி வைத்து வந்தவனுக்கு வாழ்க்கையே அர்த்தமற் றது போல் விளங்கியது. ஏதாவது அசங்கதமான தகவல்களை வெளியிட்டு, அந்த ‘விசா அதிகாரியின் காலையோ, கையையோ பிடித்துக் கெஞ்சி இருந்தால் ‘விசா" கிடைத்திருக்கும் என்ற எண்ணம் திடீரென அவனுள் முளைத்து, அவனை தூதரகத் திற்கு விரட்டியது. ஆனால், அதனால் எவ்வித பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்தவனாக நடந்தான்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பலவிதக் கஷ்டங்களுக்கு மத்தி யில் - கிளாலி கடல் பரப்பை உயிரைக் கையில் பிடித்தபடி கடந்து, வசந்தியுடனும் மஞ்சுளா, ஆரணியுடனும் கொழும்புக்கு வந்ததையும், "இன்டர்வியூ" நாள் வரை "லொட்ஜ்", "ஹோட் டல்" என்று பல இடங்களில் அக்குதொக்கின்றி வாழ்ந்ததையும், அது வரை மனைவியும், பிள்ளைகளும் என்றுமே இல்லாதவாறு அந்தரித்ததையும் எண்ணிய மனோகரனுக்கு மறுபடியும் கண் களில் நீர் துளித்தது. "ஒ"வென்று வாய்விட்டு அழ வேண்டும் போலிருந்தது.
"வசந்தி, ‘விசா வந்த பிறகு நாங்க இந்த நரகத்தையே விட்டு போய் விடலாம். அதற்குப் பிறகு எங்கட மனசுக்குள்ல அடக்கி வைச்சிருக்கிற ஆசைகளை எல்லாம் நிறைவேத்தலாம்' என முதல் நரளிரவு மனோகரன் கூறி இருந்தான்.
“ ‘விசா" கிடைக்கும் எண்ட நம்பிக்கை உங்களுக்கு இருக் குதா?" என வசந்தி கேட்டாள்.
"ஊம், நம்பிக்கை தானே வாழ்க்கையின்ர அத்திவாரம்??? மனோகரன் பொதுப்படையாக கேட்டான்.
"அப்பா, "விசா கிடைச்சால் நாங்க திரும்பி யாழ்ப்பாணத் திற்கு போகத் தேவையில்ல தானே' என்று கேட்டபடி பத்து வயதான மஞ்சுளா ஆர்வத்துடன் வந்தாள். மனோகரன் ஒமென்று தலையாட்டினான்.
'ஹய்யா "வெரிகுட்". யாழ்ப்பாணத்தை நினைச்சாலே எனக்கு இன்னும் பயமாக இருக்குது. எத்தனை குண்டுகளை போட்டிருப்பாங்க? எத்தனை தரம் "பங்கருக்குள்ள நாங்க போய் பதுங்கி இருப்பம்? எத்தனை நாள் அதுக்குள்ள படுத்திருப் பம். அது சரியான நரக வாழ்க்கை' என்று மஞ்சுளா வெடித் தாள.
74

"ஒமப்பா, அங்கை "லைட்" இல்லை. ரி.வி. , ரேடியோ போட ஏலாது. "டோர்ச் லைட்" கூட ஏத்த முடியாது. இர வெண்டால் எங்களுக்கெல்லாம் ஒரே பயம். பின்னேரம் ஆறு மணி எண்டால் போதும். அம்மா முன் கதவை பூட்டி விடுவா. அதுக்குப் பிறகு கை விளக்கை வைச்சுத்தான் நாங்க படிப்போம். ஏழு மணிக்கே சாப்பிட்டு விட்டு படுப்பம். பேந்து அடுத்த நாள் காலமை வரைக்கும் ஒருவரும் மூச்சு காட்ட மாட்டம்." இப்படி ஆரணி கூறிய போது, அந்த ஏழு வயது மகளை மனோகரன் கட்டி அணைத்தான்.
"என்ர குஞ்சு, இனி எல்லாம் அப்படி பயந்து, பயந்து வாழத் தேவையில்ல. சுதந்திரமாக வாழலாம்' என்று கூறிய மனோ கரன் மனைவியை நோக்கி, "நாங்க இனித் தான் சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறம்' என்றான்.
கொழும்பில் அவன் தனியனாகவும், வசந்தி, இரு பிள்ளை கள் ஊரில் குடும்பமாகவும் வாழ்க்கையை பரப்பி இருந்தனர். திருமணமானதில் இருந்து இவர்களது வாழ்க்கையில் இருவரும் ஒன்றாக, மாதத்திற்கு சராசரியாக ஒரு ஐந்தாறு நாட்கள் தான் கூடியிருந்தனர். இந்த ஒரு மாத இடைவெளி, 1990 ஜ"னில் கல வரம் ஆரம்பித்த போது குறுகியது. அந்த வருடம் மே மாதத் தில் ஊருக்கு வந்து போன பின் டிசம்பரிலேயே மனோகரனால் ஊருக்குப் போக முடிந்தது. அங்கு சென்ற பின்னரே இந்த மண்ணை மறந்து கனடாவுக்கு போவதென்ற தீர்மானத்திற்கு அவனும், வசந்தியும் வந்தனர்.
வசந்தியும், இரு பிள்ளைகளும் ஊரில் படும் பாட்டை நேரில் கண்ட பின்னரும், அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக அனு பவித்த வேதனையை, அவர்கள் மூலமே அறிந்த பின்னரும் இனி யும் சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற ஆசை மனோ கரனை விட்டு தூரப்பறந்தது.
'வசந்தி, இஞ்ச இனியும் வாழ முடியாத ஒரு நிலை நிலவுது. இஞ்ச வாழ்றது அர்த்தமற்றது எண்டு தோண்டுது. இப்பவே எங்களை "ஸ்பொன்ஸர்' செய்யும்படி உம்மட அண்ணனுக்கு உட னடியாக கடிதம் எழுதும். உம்மட அண்ணன் கனடா "சிட்டிஸன்’ என்றபடியால எங்களை "ஸ்பொன்ஸர்' செய்யுறதுக்கு அவருக்கு கஷ்டமிருக்காது." மனோகரன் தெட்டத்தெளிவாக, உறுதிமிக்க குரலில் கூறினான்.
‘என்ன, கனடாவுக்கு போறதெண்டு முடிவு எடுத்திட்டீங் களா?' வசந்தி திடுக்கிட்ட நிலையில் கேட்டு விட்டு, அவனை அவசரத்துடன் நோக்கினாள்.
'ஒமோம். நாங்க மனுஷராக வாழ வேணும். மிருகங்களாக GNU FT p (plus mig. ’ ”
"இஞ்சருங்கோ, எங்கட ஊரை மறந்து விட்டு எப்படி போறது? இஞ்ச இருக்கிற இனம், சனத்தை விட்டு எப்படி
75

Page 42
போறது?' வசந்தியின் குரலில் துன்பத்தின் வாடை வீசியது. "அப்படி எண்டால் இஞ்ச இருந்து போக உமக்கு இஷ்ட மில்லையா? இஞ்சயே இருந்து பிள்ளைகளின்ர படிப்பை கெடுத்து, அதுகளின்ர வாழ்க்கையை பாழாக்கி, வாழ்க்கையில எந்த லட்சியமும் இல்லாமல் வாழ்றது தான் உம்மட விருப் LitDT? * *
இப்படி மனோகரன் வினவவே வசந்தி அவனைக் கெஞ்சலாக நோக்கினாள். "இஞ்சருங்கோ, எவ்வளவு ஆசையாக இந்த வீட்டை கட்டினம்? இந்த வீட்டின்ர ஒவ்வொரு கொங்கிரீட் கல் லும் அடுக்கப்பட்டு, சீமெந்து பூசப்பட்டதை பார்த்து பரவசப் பட்டிருக்கிறன். இந்த வீட்டை விட்டு எப்படி போறது?"
*" வீடு முக்கியமா? உயிர் முக்கியமா? ஏதோ எங்கட நல்ல காலம் இதுவரைக்கும் நாங்க அதிர்ஷ்ட சாலியாக இருந்திருக்கி றம். இண்டைக்கு நீங்கள் எல்லாம் உயிரோடு இருக்கிறதெண் டால் அதுக்கு காரணம் நாங்க கும்பிடுற கடவுள் தான். ஆனால், எத்தனை நாளைக்கு நாங்க அதிர்ஷ்டசாலியாக இருக்கப் போறம்?' மனோகரன் வினா எழுப்பி விட்டு வசந்தியை பார்த் தான். அவள் ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்தபடி அங் கிருந்து அகன்றாள்.
அடுத்த இரு நாட்களும் ஊரைவிட்டு பிரிவதையிட்டு இருவ ரும் அளவளாவவில்லை. மூன்றாம் நாள் மனோகரனிடம் வசந்தி சென்றாள். w
"நாங்க தான் வாழ்ந்து விட்டம். எங்கட பிள்ளைகள் நிம் மதியாக வாழ வேணும். அதுக்காக எங்கட ஊரைவிட்டுப் போறதை விட வேறு வழியில்ல" என்று வசந்தி கண்கலங்கி னாள்.
"நான் உம்மை கட்டாயப்படுத்த இல்ல. உம்மட முடிவுக்கு கட்டுப்படுவன்.” மனோகரனின் தொனியில் உடைசல் ஒன்று மறைந்திருந்தது.
“என்ர முடிவில இனியும் ஒரு மாற்றமும் செய்யமாட்டன். கனடாவுக்கு போறதுக்கு வழி பாருங்கோ" என வசந்தி உறுதி utasák கூறினாள்.
மனோகரன் ஒன்றும் கூறவில்லை. அவன் கண்கள் குள lofr65)6oT.
"இஞ்சருங்கோ அழுறிங்களா? அல்லது ஆனந்தக் கண் s:fgrt?'''
'வசந்தி, எங்கட ஊர் மண் வாசனையை இனியும் நுகர முடி யாதே எண்டு நினைக்கக்கில அழுகை வந்து விட்டுது. நீர் முற் றத்தை பெருக்கக்கில நான் உமக்கு கிட்ட வந்து நிற்கிறது ஏன் தெரியுமா? எங்கட ஊர் மண் வாசனையை முகர்ந்து பார்க்கத் தான். எனக்கு உம்மைவிட எங்கட ஊரில பற்று இருக்குது.
76

ஆனால், இப்போதைய நிலையில ஊரை மறக்கிறதைத் தவிர வேற வழியில்ல."
கொழும்புக்கு திரும்பி வந்த மனோகரன் உடனடியாக வசந்தி தனது தமையனுக்கு எழுதிக் கொடுத்த தபாலை அனுப்பி வைத்தான். அதன் பின் காரியங்கள் ஒவ்வொன்றாக ஆனால், இரண்டு வருடங்களை விழுங்கிய நிலையில் ஒப்பேறின.
கனடிய தாதரகத்தில் இருந்து "இன்டர்வியூ" கடிதம் வந்தது. மனோகரன் அடைந்த மகிழ்ச்சி. ஊருக்குப் பறந்தான். மனைவி, பிள்ளைகளைக் கூட்டி வந்தான். "இன்டர்வியூவுக்கு" மனைவி, மக்களுடன் சென்றான். இறுதியில் அவனை மட்டும் "இன்டர்வியூ" செய்த ‘விசா அதிகாரி அவன் 'பைலை மூடி போது a a o is 8 o 8
மனோகரனின் ஆசைகள் நிராசைகளாகி விட்டன. எதிர் பார்ப்புகள் தவிடு பொடியாகி விட்டன. கற்பனைக் கோட்டை கள் தரைமட்டமாகி விட்டன. காலமும், பணமும் வீண் விரய மாகி விட்டன. அலைச்சல்கள், கஷ்டங்கள் தான் எஞ்சி நின்றன. வசந்தியையும், பிள்ளைகளையும் ஊருக்கு அனுப்ப வேண் டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு மனோகரன் தள்ளப்பட்டான். "அப்பா, எனக்கெண்டால் ஊருக்கு திரும்பிப் போக ஏலாது. ஊரில இருக்கிற "பிரென்ட்ஸ்” எல்லாம் கேலி செய்வி னம்' என மஞ்சுளா சொன்னாள். அவள் கண்களில் அச்சமும், தயக்கமும் நிறைந்து விளங்கின.
'அப்பா, இஞ்சயே ஒரு வீடு எடுத்து இருப்பம். எனக்கெண் டால் ஊருக்கு போக பயமாக இருக்குது' என ஆரணி கண்ணிர் வடித்தாள்.
மனோகரனின் அடிமனம் ஒரு கணம் அதிர்ந்தது. உணர்ச்சி யற்ற பார்வையோட வசந்தியை நோக்கினான்.
"பிள்ளைகள், சுதந்திரக் காற்றை சுவாசிக்க துடிக்குதுகள். நாங்க இஞ்சயே "செட்டில்” பண்ணுவம்' வசந்தி சிந்தனை யோடு, நிதானமாக யோசனை வெளியிட்டாள்.
"என்ர சம்பளத்தில கொழும்பில அதுவும் ஒரு பாதுகாப் பான இடத்தில ஒரு "அனெக்ஸ்’ எடுக்க ஏலுமோ?' என்று மனோகரன் தனது இயலாமையை வெளிப்படுத்தினான்.
"அண்ணனுக்கு கடிதம் எழுதி எங்களுக்கு உதவி செய்யும் படி சொல்லுறன்.""
கனடாவில் இருந்து பணம் வந்தது. இரு வாரங்களுக்குள் மனோகரன் "அனெக்ஸ்’ ஒன்றை வெள்ளவத்தையில், ஆனால், சேரிப்புறத்தில் எடுத்தான். நல்ல நாள் ஒன்றில் அதில் குடியேறி னான். அத்தியாவசியமான பொருட்களையும் "ரேடியோ", ரி.வி., "ரேப் ரெக்கோடர்" போன்ற தகவல் சாதனங்களையும் வாங்கிப் போட்டான், −
77

Page 43
இன்வகளைக் கண்டு மஞ்சுளாவும், ஆரணியும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
'அப்பா இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு இண்டைக்குத் தான் எங்கட வீட்டில் ரி.வி. பார்க்கப் போறம்' என்று மஞ்சுளா ரி.வி.யை தடவிக் கொடுக்தாள். −
"ஓம் அப்பா' என் ஆரணி ஒத்துப்பாடினாள். "நீங்க நாளைக்கு ஒபிஸால வரக்கில பாட்டுக் "கசெட்” வாங்கிக் கொண்டு வாங்கோ. "கசெட்டில பாட்டு கேட்டும் இரண்டரை வருஷமாகிறது."
மஞ்சுளா உடனடியாக ரி.வி.யைப் போட்டாள். அதன் பின் இரு பிள்ளைகளும் ரி.வி. பார்த்தபடி இருந்தனர். இருவரின் முகங்களிலும் தெரிந்த மகிழ்ச்சி ரி.வி.யில் "டார்ஸன்" செய்யும் சாகஸங்களைப் பார்த்து மஞ்சுளாவும், ஆரணியும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
திடீரென வீட்டுச் சொந்தக்காரி மிஸிஸ் குணசேகர அங்கு தோன்றினாள். மஞ்சுளாவையும், ஆரணியையும் எரித்து விடு வது போல் பார்த்தாள். பின் மனோகரனை கர்ண கடூரமாகப் பார்த்தாள். "மிஸ்டர் மனோகரன், உங்கள் ரி.வி.யை உடனடி யாக நிறுத்துங்க. அது போடுற சத்தத் தர்ல் என் பிள்ளைகள் படிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். மற்றது ரேடியோ, கசெட் போட்டும் எங்களுக்கு கரைச்சல் கொடுக்க வேண்டாம். இரவிலும் மின்சார வெளிச்சம் எல்லாவற்றையும் ஒன்பது மணிக் குள் அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் மின்சாரக் கட்ட ணம்தான் ஏறும். உங்களுக்கு நான் தந்திருக்கிற சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்துவிடாதீர்கள். *" என மிஸிஸ் குண சேகர இரைந்து விட்டு தன்பாட்டில் சென்றாள்.
சுதந்திரக்காற்றை சுவாசிக்க மனோகரன், வசந்தி, மஞ்சுளா,
ஆரணி இன்னும் துடிக்கின்றார்கள்.
'வீரகேசரி வார வெளியீடு" - 5.08.93
78

“டிராபிக் புளொக்"
மனதின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில், காரின் வேகம் இருக்கவில்லை.
ராமநாதனுக்கு எரிச்சலும், கோபமும் ஒருங்கே ஏற்பட்டன. 'சே' என அலுத்தவர், கைக்குட்டையை எடுத்து முகத்தை ஒருமுறை அழுத்தித் தொடைத்து விட்டு, சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார்.
'டிரைவர், கொஞ்சம் “ஆக்ஸிலேட்டரை அமத்து. நேரம் போச்சுது." ராமநாதனின் அவசரம் வார்த்தைகளில் மறைந் திருந்தது.
கோபால் பக்கக் கண்ணாடி ஊடாக, பின்புறம் பார்வையை ஒடவிட்டான். நிறைய கார்கள், அணிவகுத்தாற் போல, நீண்ட வரிசையில் நிற்பது தெரிந்தது. முன்னாலும் கார்கள் நின்றிருந் தன. காரைக் கொஞ்சமேனும் நகர்த்த முடியாது.
*" "சேர்", "டிராபிக் புளொக்" . கானர அசைக்க முடியாது.”* கோபால் சலிப்புடன் சொன்னான்.
*ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில எவ்வளவு நேரம் நிற்க வேண்டி இருக்குது? எண்டைக்குத்தான் இந்த "டிராபிக் புளொக்" அகலப் போகுதோ தெரிய இல்ல. ' ராமநாதன் ஏகாந்தமாகப் பார்த்த வண்ணம் கூறுகிறார்.
கோபால் வாயைத் திறக்கவில்லை. ராமநாதனின் எரிச்சல் பன்மடங்காகியது. அவர் நெற்றியில் வியர்வை பெருகியது. உடல் வியர்வையினால் நனைந்தது. "டையை சற்று இளக்கி விட்டார்.
'அப்பப்பா! புழுக்கம் ஒரு பக்கம். "டிராபிக் புளொக் இன் னொரு பக்கம்' ராமநாதன் பார்வையை வெளியே ஒடவிட்
L-fTfT .
பொலிஸ்காரன் ஒருவன் வாகனப் போக்குவரத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான். கொழும்பு நோக்கிப் போகும் வாக னங்களையும், காலி நோக்கிப் போகும் வாகனங்களையும் நிறுத்தி விட்டு, கடற்கரைப்பக்கம் இருந்து வந்த வாகனங்களை காலி நோக்கிப் போகும் வீதிக்கு திசை திருப்பினான். ஒரு கலி யாண வீட்டுக்கு செல்பவையாக இருக்க வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக பல வாகனங்கள் சென்றன.
வாகனங்கள் எல்லாம் சென்ற பின், இரு பக்கமும் உள்ள வாகனங்களைப் போகும்படி பெர்லிஸ்காரன் உத்தரவிட்டான். வாகனங்கள் மீண்டும் ஊர்ந்தன.
பொலிஸ்காரனின் விசில் சத்தம் கேட்டது.
79

Page 44
ராமநாதனின் காரின் முன்பாக சென்ற ஸ்கூட்டரில் இருந்த வன், "ஹெல்மட்" போட்டிருக்கவில்லை. பொலிஸ்காரனின் விசில் சத்தம் கேட்டவுடன் அவன் அப்படியே நின்று விட்டான். ராமநாதனின் காரை நகர்த்த முடியவில்லை. அவருக்கு பொலிஸ் காரன் மீது எரிச்சல் வந்தது. அந்த குறிப்பிட்ட பொலிஸ் காரனை ஒவ்வொரு நாளும் காணும் போது ராமநாதனுக்கு ஆத் திரம் வரும். "டிராபிக்கை கண்ட்ரோல் பண்ண முடியாத பொலிஸ்காரன்" என்பதே அவர் அபிப்பிராயம்.
பார்வையை அவனிடமிருந்து எடுத்த ராமநாதன் "பேவ் மண்ட்" பக்கம் ஒட விடுகிறார். திடீரென அவர் பார்வை நிலை குத்தி நிற்கின்றது. பற்கள் ஆத்திரத்தால் தாளமிட்டன. யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தாரோ. அவன் நடந்து கொண்டிருந்தான். உடனேயே காரில் இருந்து இறங்கி, அவனை நையப்புடைத்தால்.
"பாஸ்கரன் கெட்டவன். என்ர மகளுன்ர வாழ்க்கையை கெடுக்க வந்த நாய். கழுதை . . படுவா ராஸ்கல்..... ராமநாதனின் மனம் திட்டித் தீர்த்தது.
பாஸ்கரன் தன்பாட்டில் நடந்தான். அவன் ராமநாதனைக் காணவேயில்லை. ۔
"பாஸ்கர், நீ என்ர மகளை கட்டுறது அப்படியொண்டும் லேசு எண்டு நினையாதை. சுட்டுப் போடுவன். எஸ்டேட்டில இருக்கக்கில சுடப் பழகினனான். g w ராமநாதனின் மகள் உஷா "வாஸிட்டி பியூட்டி குயின்", 'ஒத்தடொக்ஸ் ஃபமிலியை" சேர்ந்தவள்', "ஐக்யூ வெரி ஃபைன்", “எக்ஸ்சட்ரா". . "எக்ஸ்சட்ரா".
பாஸ்கரனைப் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்த போது உஷா காதலிக்கத் தொடங்கினாள். மூன்று நிமிட உரை யாடல், மூன்று வருடத் தொடர்பாக நீடித்திருந்தது.
"நான் அவரை "லவ்" பண்ணுறன். பாஸ்கர் இல்லாமல் என் னால வாழ முடியாது." உஷா தோழியிடம் கூறுகிறாள். - "பாஸ்கரை கலியாணம் முடிக்க உம்மட அப்பா விடமாட்
Tr”. ” ”
"லலிதா, நான் எப்படியும் பாஸ்கரை கலியாணம் முடிப் u Gör. ””
என்றோ ஒரு நாள், பாஸ்கரனுடன் கைகோர்த்தபடி உஷா செல்வதை ராமநாதன் கண்டு விட்டார். அன்று வீட்டில் ஒரு எரிமலையே வெடித்தது.
"அவன் ஆர்? அவன்ர சாதி என்ன? போயும், போயும் அவனையா "லவ்" பண்ணுறாய்? உனக்கு வேற யாரும் கிடைக்க இல்லையா? "வட் எபவுட் யுவர் கசின்" வசந்த்?"
80

*" "டடி”, நான் சாதியையோ, அந்தஸ்தையோ கலியாணம் முடிக்க விரும்ப இல்ல. நல்ல குணமுள்ள, என்னை காலமெல் லாம் சந்தோஷமாக வைத்திருக்கக் கூடிய, ஒருவரைத்தான் கலி யாணம் முடிக்க விரும்புறன். வசந்த் "இஸ் எ வுமனைஸர்". "'
“பேய்க்கதை கதையாதை . பாஸ்கரை உடன மறந்து விடு. இல்லாவிட்டால் நான் கெட்டவனாகி விடுவன்.""
உஷா தன் முடிவை மாற்றத் தயாராக இருக்கவில்லை. அவள் உறுதியான முடிவைக் கொண்டிருந்தாள்.
* அப்பா, கலியாணம் கட்டினால் பாஸ்கரைத் தான் கட்டு வன். இல்லாவிட்டால். ps
/ ராமநாதன் குறுக்கிட்டார். **நான் கொலைகாரனாவதை நீ விரும்புநியா?" t
** அப்பா, ஏன் சினிமா வசனம் பேசுறிங்க. யதார்த்தமாக பேசுங்க. 'டோக் சென்ஸ்”, ’’
உஷாவின் சூடான வார்த்தைகள் ராமநாதனை திக்கு முக் காடச் செய்தன. w
"உங்க அந்தஸ்துக்காக பாஸ்கரை மறந்து விட்டு, வேறொரு வரைக் கலியாணம் கட்ட நான் தயாரில்லை. பாஸ்கரைக் கட்டுற தற்கு நீங்க "பெர்மிஷன்” தராவிட்டால் 'ஐடோன்ற் கெயார் . வீட்டை விட்டு அவரோட போகவும் நான் "ரெடி'. ஐ அம் உஷா. சொன்னதைச் செய்வன்.""
உஷா இறுதியாகக் கூறிய வார்த்தைகள் ராமநாதனின் காதில் நீண்ட நாட்களாக எதிரொலித்தன.
உஷாவின் மனதை மாற்ற அவர் அவளுக்கு காரொன்றை வாங்கிக் கொடுத்து "டிரைவிங் பழக்கினார். சிங்கப்பூருக்கு *ஹொலிடேக்கு அனுப்பினார். ஆனால், உஷாவின் மனம் மாற வில்லை.
சிங்கப்பூரில் இருந்து அவள் வந்த போது, கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு ராமநாதன் அரை மணி நேரம் தாம தித்துச் சென்றார். அவர் உள்ளே செல்லவும், உஷாவும், பாஸ் கரனும் கைகோர்த்தபடி வெளியேறவும் சரியாக இருந்தது. ராம நாதன் அவனை அடையாளம் கண்டார். அவர் நாளங்கள் புடைத்தெழுந்தன. சர்வதேச விமான நிலையம் என்று பாரா மல் பாஸ்கரனை கண்டபடி திட்டினார். "பிளாடிகளை தாராள மாக உபயோகித்து ஏசினார்.
"பிளாடி பாஸ்ட்ர்ட். நீ என்ர D956) கலியாணம் முடிச் சால் ஒரு கொலை விழும்.'
பாஸ்கரன் ஒன்றுமே கூறாமல் சென்று விட்டான். அவன் பார்வையில் இருந்து மறைந்த பின்னரும் ராமநாதன் திட்டிய படியே இருந்தார்.
8 Ι

Page 45
கார் சிறிது தூரம் முன்னேறியது. பின் அப்படியே நின்றது. *" சேர். ஒரே நேரத்தில இங்க இருக்கிற மூன்று பள்ளிக் கூடங்களும் தொடங்குகிதால தான், இந்த "டிராபிக் புளொக்" ** என கோபால் கூறுகிறான்.
** அப்படியெண்டால் பள்ளிக்கூடங்கள் தொடங்குற நேரத்தை மாற்றினால் "புளொக்" இருக்காதே." ராமநாதன் "எதையும் துலாம்பரமாக யோசிக்காமல் கூறுகிறார்.
"சேர், அதை எப்படி மாற்ற முடியும்? எல்லாப் பள்ளிக் கூடங்களும் காலமை ஏழரைக்கு தொடங்கி ஒன்றரைக்கு முடியக் கல இந்தப் பள்ளிக்கூடங்களின்ர தொடங்கிற, மூடுற நேரங்களை மாற்றினால் பல பிரச்சினைகள் ஏற்படும்.”*
*" என்ன பிரச்சனைகள்?" "இங்கை இருக்கிற பள்ளிக்கூடங்களில ஒண்டு எட்டு மணிக்கு தொடங்கி இரண்டு மணிக்கு விடுகுது எண்டு வைப் போம். மத்தப் பள்ளிக்கூடத்தில படிக்கிற ஒரு பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வாற பெற்றோர் அரை மணி நேரத்தை வீணாக செலவளிக்க வேண்டி வரும். இரண்டு மணிக்கு பள்ளிக் கூடம் விட்டால், எத்தனை மணிக்கு மதியம் சாப்பிடுறது?" என்று கோபால் அடுக்கிக் கொண்டு போனான்.
அவற்றை முழுமையாக கேட்கும் நிலையில் ராமநாதன் இருக்கவில்லை. ༤།
எப்போது அலுவலகத்தை அடைவோம் என்று மனம் தவித் தது.
கார் ஊர்ந்தது. மறுநாள். ராமநாதனின் கார் கொழும்பை நோக்கிச் சென்று கொண் டிருந்தது.
முதல்நாள் இருந்த "டிராபிக் புளொக்" இருக்கவில்லை. வாகனங்கள் எல்லாம் வேகமாக செல்லக்கூடியதாக இருந் தது.
*கோபால், இண்டைக்கு "டிராபிக் புளொக்" இல்லையே! என்ன விஷயம்?' ராமநாதன் கேட்டார்.
"பொலிஸ்காரன் இல்ல. அதுதான் "டிராபிக் புளொக்" இல்ல." கோபால் சொன்னான். 'நீ என்ன சொல்லுறாய்?" "சேர், பொலிஸ்காரன் இருக்கிறதால தான் "டிராபிக் புளொாக்" இருக்குது. எண்டைக்கு பொலிஸ்காரன் இல்லாமல் இருக்குதோ, அண்டைக்கு காரை ஒட்டுறது "ஈஸியாக இருக் குது. சேர், இதற்கு என்ன அர்த்தமென்றால், கார்காரங்களை அவங்க பாட்டுக்கு சுயமாக சிந்திச்சு காரையோட்டுறதுக்கும்,
82

வீதியை 'க்ரொஸ்” பண்ணுறதுக்கும் விட்டால் கார்கள் எல்லாம் எந்தவித "புளொக்" இல்லாமல் போகும். பொலிஸ்காரன் நிண்டு தடை விதிக்கக்கில, எல்லாமே 'அப்செட் ஆகுது."
டிரைவரின் ஒவ்வொரு வார்த்தையும் ராமநாதனின் மனதை உறுத்தியது. *
வாழ்க்கையை ஒட்டுவதும், காரை ஒட்டுவது போலாகும். அதாவசியமாகத் தடைகள் வாழ்க்கையை சுமூகமாக செல்ல விடாது. இப்படியொரு எண்ணம் ராமநாதனின் மனதிற்குள் புகுந்தது. V
அவரது மருமகன் வசந்தை அவருக்கு நன்றாகத் தெரியும். எத்தனையோ தடவைகள் அவன் பெண்களுடன் சுற்றுவதை அவர் கண்டிருக்கிறார். அப்படியான ஒருவனைத் தான் அவர் தனது மகளுக்கு கணவனாக்க விரும்பினார். அது தவறு என்று அடி மனதில் ஏதோ ஒன்று ஓங்கி அடித்தது. பாஸ்கரனை உஷா கரம்பற்ற தடை விதிப்பதும் தவறு என்று அவர் உணர்ந்தார். பொலிஸ்காரனின் நிலையிலேயே தானும் இருப்பதாக அவ ருக்குத் தோன்றியது. V
வீடு சென்றவர் உஷாவைக் கூப்பிட்டார். அவளைப் பார்த்து
குறும்பாகச் சிரித்தார். " "எ குட் நியூஸ் ஃபோர் யூ". "'
"நீ பாஸ்கரனை கலியாணம் கட்டலாம். 'ஃபெர்மிஷன் 35g fr Gior - L ' ... ” ”
உஷாவுக்கு சில கணங்கள் எதுவுமே புரியவில்லை.
வீரகேசரி வார வெளியீடு" . 12.6.1983

Page 46
மண்ணை நம்பி.
தகிக்கும் வெயில் சுட்டெரித்தது. வியர்வையை அந்த வெயில், உடலில் வழிய வைத்தது. கானல் நீருடன் முன்னால் நீண்டு கிடந்த தார் வீதி தீப்பள்ளயமாக காட்சி அளித்தது. வீதி வழியே அலையாகப் பாய்ந்து வந்த அனல் காற்றின் அகோர சுருதியில் அவனுடம்பு பட்ட மரத்தின் இலைகளாகப் படபடத் தது. கோடை கால மூடுபனியாக அவனைச் சூழ்ந்த தூசி மண்ட லம் விசனத்தைத் தூண்டியது. பல்வேறு இரைச்சல்களும், ஒலிக ளும் இரு காதுகளையும் நீரினால் நிரப்பியது போலிருந்தது.
அரவிந்தனுக்கு களைத்தது. இதயத்தின் வேகம் விரைந்து செயல்பட்டது. நின்றவன், திரும்பி பின்னே பார்வையைப் படர விட்டான். நூற்றுக் கணக்கான மக்கள் மந்தைகளான நிலையில் நடந்து வருவது தெரிந்தது. யாவரது முகங்களிலும் தமது இலக்கை - கொழும்பு மாநகரை அடைந்து விட வேண்டும் என்ற உத்வேகம் - ஒரு விதத்தில் வெறி மறைந்திருப்பது அவனுக்கு புலனாகியது.
சற்று முன், கடைசி "செக் பொயின்டில்" இராணுவ வீரன் ஒருவன் காரசாரமாக கூறிய வார்த்தைகள் அரவிந்தனின் மன தில் அடிக்கடி கிளர்ந்தெழுந்தன. "நீங்கள் எல்லாம் ஏன் கொழும்புக்கு படை எடுக்கிறீங்களோ என்று எனக்குத் தெரிய இல்ல. கொழும்பு நகரம் சனப்பெருக்கத்தால் நிரம்பி வழிகிறது . நீங்களும் போனால் அங்கு உள்ள ஆட்கள் பாடுதான் திண்டாட் டம். இப்பொழுதே வீட்டு வாடகை, வீட்டின் பெறுமதி, சாமான் களின் விலை எல்லாமே மலை போல ஏறிவிட்டன. நீங்களும் போனால் என்ன நடக்குமோ..!"
அந்த இராணுவ வீரன் கூறியதில் தவறு இல்லை. அவன் உண்மையைத் தான் வார்த்தைகளில் காட்டமாக வெளியிட் டான்.
நான்கு வருடங்களுக்கு முன் ஈழ யுத்தத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பித்த பின் எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் தமது மண்ணை மறந்து, பெறுமதி மிக்க குடியிருப்புக்களை மறந்து கொழும்புக்கு பயணம் செய்தார்கள்? இவர்களது குடி யேற்றத்தின் பின் கொழும்பு நகரம் சனத்தொகை அடர்த்தியி னால் "முக்கிமுனகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் என்ற எண்ணம் அரவிந்தனுள் புகுந்திருந்தது. ஏற்கனவே நெருக்கமாக கட்டப்பட்டிருந்த குடியிருப்புக்குள் "புதிய விருந்தினர்களின் வர வின் பின் ஏற்பட்டிருக்கும் அந்த மாற்றங்களை அனுமானிக்கக் கூடிய சக்தி அரவிந்தனிடம் நிரம்ப இருந்தது. புதுப்புது நோய் கள், வியாதிகள் மக்களை அரவணைத்திருக்கும். கலாசார சீரழிவுகள் இடம் பெற்றிருக்கும். பாரம்பரிய பழக்க வழக்கங்கள்
84

மறுக்கப்பட்டிருக்கும். முறைகேடான குணங்கள் அளவுக்கு மீறி இருக்கும். பல தசாப்தங்களாக பேணப்பட்ட ஒழுக்கங்கள் ஒரிரவிலேயே தன்னிச்சையாக, பலாத்காரமாகப் பறிக்கப்பட் டிருக்கும்.
அரவிந்தனுக்கு தன் இன மக்களை பற்றி எண்ணும்போது வேதனையாக, பரிதாபமாக, ஆத்திரமாக, எரிச்சலாக. எல்லா உணர்ச்சிகளுமே அவன் இதயத்தை ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்து, இறுதியில் வேதனையின் விழுமிய உணர்ச்சிக்கே அவனை இட்டுச் சென்றது.
மக்களின் புலம் பெயர்வுக்கு என்ன காரணம் என்று அவ னுக்குத் தெரியும். அது அரசியல்வாதிகள் முதல் பாமர மக்கள் வரை தெரிந்த உள்ளம். ஆனால், அதைத் தடுக்கும் சக்தி எவ ருக்குமே இருக்கவில்லை. இடையிடையே இது பற்றி பாராளு மன்றத்தில், அரசியல் மேடைககளில், பொதுக்கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும், அதைத் தவிர்ப்பதற்கு, தடுப்ப தற்கு எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மூலப் பிரச்சினை தீர்ந்தால் தான், உதிரிப் பிரச்சினைகள் - மக்கள் புலம் பெயர்வு, சூழல் அசுத்தமடைதல். போன் றவை தம்பாட்டிலேயே தீர்வுக்கு வரும்.
ஊரில் - யாழ்ப்பாணத்தில் ஓர் 'உறங்கு நிலையிலான கிராமத்தில் அக்கு தொக்கின்றி - சீவியத்திற்கு வானத்தையும், மண்ணையும் நம்பி வாழும் பல அழுந்திப் பிழைக்கும் பிரஜை களுள் , துரதிர்ஷ்டத்தின் பக்கமே எந்நாளும் உழன்று தவிக்கும் ஒரு சீவனாக, கமக்காரன் என்ற பதத்துக்குள் அடங்குபவனாக அரவிந்தன் விளங்கினான்.
அவனது வாழ்க்கை, விதவைத் தாயின் பராமரிப்பில், களி மண்ணிலான சுவர், தென்னோலையிலான கூரை ஆகியவற்றின் மத்தியில் வியாபிக்க முடியாத நிலையில், முடங்கிக் கிடந்தது. அந்த வாழ்க்கையின் அவலத்தினால் துன்பங்களின் சுமைதாங்கி யாக வாழ்ந்து, வாழ்க்கையை அலுத்து, வெறுத்த அரவிந்தன், தன் வாழ்க்கையை மாற்ற நினைத்த போது, வெளிநாட்டில் தன் னொத்த வயதினர் வாழும் "சொர்க்க வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் அரவணைக்கப்பட் டான். ஆனால், அந்த ஆசையைப் பூர்த்தி செய்ய அவனிடம் பணம் இருக்கவில்லை. விற்பதற்கு காணியும் இருக்கவில்லை. மனதினுள் பெருக்கெடுத்த ஆசையைப் பொதியாக கட்டி தூக்கி எறிந்தவன், கொழும்பில் ஒரு தொழில் பார்க்க வேண்டும் என்ற பிறிதொரு ஆசைக்கு தன் மனதைப் பறிகொடுத்தான்.
தெரிந்தோர், உறவினர்களிடம் தன் உள்ளார்ந்த ஆசையை அரவிந்தன் வெளியிட்ட போது அவனைத் தேடி - அவ்விடயத் தில் அவன் அதிர்ஷ்டசாலியே - தொழில் ஒன்று வந்தது. பல சரக்கு கடையில் சிப்பந்தியாகும் தொழில் அது. நியாயமான
85

Page 47
சம்பளம், கடையின் மேலேயே தங்கும் வசதி, புது வருஷத்திற்கு ஊருக்குச் செல்ல இரு வார லீவு, ஞாயிற்றுக் கிழமைகளில் விடு (p60s). . . . . . . . . இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட நியதிக்குள் அவன் தொழில் அமைந்தது.
விதவைத் தாயையும், அந்த ஒலைக் கொட்டிலையும், முப் பது வருடங்களாக ஒடித்திரிந்து உருண்டு, பிரண்ட மண்ணையும் விட்டுப் பிரிவது எனத் தீர்மானித்தான். ஊரில் இருந்து மூன்று நாட்களுக்கு முன் காலை பத்து மணி அளவில் தாயையும், தாய் மண்ணையும் விட்டு பிரிந்த போது இனம் புரியா சோக உணர்ச்சி பெரும் பாறாங் கல்லாக அவன் மனதில் குடிபுகுந்து வேதனைப் படுத்தியது.
அடர்ந்து வளர்ந்திருந்த பனை மர தோப்புக்குள்ளால் ஒற்றையடிப்பாதையூடாக, பல கொட்டில்களைத் தாண்டி வீதி யில் ஏறி. இடிந்தும், இடியாததுமாக காட்சியளித்த குடி யிருப்புக்களைத் தாண்டி நடந்து வந்து பருத்தித்துறை நகரை அடைந்தான். சந்தையைத் தாண்டி பஸ் நிலையமாக காட்சி யளித்த ஓர் ஒதுக்குப் புறத்திற்குச் சென்றபோது, அங்கு குழுமி நின்ற சனக்கூட்டத்தைக் கண்டு துணுக்குற்று விட்டான். நெற்றிப் பொட்டைத் திடீரென தாக்கும் உணர்ச்சி பெற்றவ னாக நடையைக் கட்டுப்படுத்தி அதிர்ந்த நிலையில் விளங்கி. மக்கள், மக்கள். எங்கும் மக்கள். அந்த குறுகிய பிர தேசத்தில் மக்களின் தலைக்கறுப்புத்தான் சமுத்திரமாக நீண்டு, பெருகி, பரந்திருந்தது. தேர்த்திருவிழாவில், பொதுக்கூட்டத்தில் காணமுடியாத ஒரு மக்கள் வெள்ளம் அங்கு அலை மோதியது. கொழும்புக்கு, கிளாலி ஊடாக பயணமாவதற்கு, பயணி களை ஏற்றுவதற்கு, விடுப்பு பார்ப்பதற்கு மாபெரும் மக்கள் கூட்டமொன்று அங்கு பிரசன்னமாகி இருந்தது. அங்கு நின்றவர் களில் அரைவாசிப் பேராவது பிரயாணிகளாகும் அந்தஸ்தில் திகழ்ந்தனர்.
திடீரென அவன் முகத்தில் ஒர் உற்சாகம் பரவியது. ஓர் அறிமுகமான முகம் அவன் கண்களுக்குச் சிக்கியது. அது அவனது ஆசிரியர் கனகசபை. அவர் அருகில் மனைவி, இரு பெண் பிள்ளை கள், நிறைய “சூட்கேஸ்கள்", "கார்ட்போர்ட் பெட்டிகள். *"மாஸ்டர் கொழும்புக்கோ?" அரவிந்தன் வினயத்துடன் கேட்டான்.
'ஒமோம்." உற்சாகமான தொனியில் மாஸ்டர் சொன் 6arnt ii.
"கொழும்புக்கு போய் வெளியில எங்கயும் போற "பிளானோ?" அரவிந்தன் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கேட்டான்.
"இல்ல, கொழும்பில "செட்டில் பண்ற யோசனை."
86

"மாஸ்டர், ஊரை விட்டுட்டு போறியளே. p. "என்ன செய்யுறது? போறம். கனகசபை மாஸ்டர் சொல்ல, அரவிந்தன் மனதுக்குள் நமுட்டுச் சிரிப்பைப் பூத்தான். இறுதியில் கிளாலி பஸ் வந்தது. சண்வெள்ளத்தினுள் ஒரு மாபெரும் சலசலப்பு. பஸ் நிற்கும் முன் குஞ்சு, குருமன், கிழவி என்ற பேதமின்றி பெரும்பாலானோர் முண்டி அடித்து ஏறு வதைக் கண்டு அரவிந்தனின் உள்ளத்தில் பரிதாபம் முளைத்தது. அந்த களேபரத்தில் இரு கிழவிகள் தலைகுப்புற விழ, ஒரு குழந்தை தாயின் அணைப்பில் இருந்து விடுபட்டு கீழே புரள, ஓர் இளம் பெண் வாய்க்காலுக்குள் தடக்கி கீழே விழ. . பல இள வட்டங்கள் அங்கு குழுமி நின்ற போதும் ஒருவருமே தமது உதவியை நல்க முன்வரவில்லை.
யுத்தம் வந்த பின் எல்லோரது உணர்ச்சிகளும் மரத்து விட் டனவா, இல்லாவிட்டால் நமக்கேன் வீண் வம்பு என்று அவர்கள் நினைக்கின்றனரா, இல்லாவிட்டால் நாம் எப்படியும் பஸ்சினுள் நுழைந்து விடவேண்டும் என்ற எண்ணத்தால் யார் எப்படி போனால் என்ன என்ற மனப்பான்மையா அவர்களின் அசமந்தப் போக்குக்கு காரணம் என்பதை சிந்திக்கும் நிலையில் அரவிந்தன் திகழவில்லை.
கொழும்புக்கு விரைவிலேயே போய் விட வேண்டும் என்ற உத்வேகத்திற்கு ஈடு செய்யும் வகையில் அவனும் காட்டு மிராண்டித் தனமாக ஆட்களை இடித்து, தள்ளியபடி பஸ்சில் ஏறினான். பஸ்சுக்குள் நுழைவதற்குள் அவன் LDLT 6807 வேதனையை அனுபவித்தான். ஒரிருவர் அவன் கால்களை வேண்டுமென்றே மிதித்து அவனைக் கடந்து சென்றனர்.
பஸ்சின் சன நெருக்கம் வரம்பை மீறியது. கால்களுக்குள் பைகள், "சூட்கேஸ்கள்", முழு உடலைச் சுற்றி மனிதப் பிண்டங் கள். வியர்வையின் நாற்றம், அழுக்குடைகளின் நாற்றம். அரவிந்தனுக்கு மூச்சு விடவே கஷ்டமாக இருந்தது.
அந்த பஸ் புறப்படும் வரை கைக்குழந்தைகளின் அழுகைக் குரல். கிழவிகளின் தொணதொணப்புகள். பஸ்சில் இருந்த யாவரும் ஏதோ வகையில் கத்திக் கதைத்து ஒரு சந்தை சூழ்நிலையை அங்கு தோற்றுவிக்க. அரவிந்தனுக்கு தலை வெடித்து விடும் போலிருந்தது. அமைதியான சூழ்நிலைக்கு பழக் கப்பட்டவனுக்கு பஸ்சில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை மனதை வெகுவாகக் குழப்பியது. அந்த பஸ்சினுள் நரக வேதனையில் துவண்ட அவன் மனதை கீற்றாக ஊடுருவிய எண்ண அலைகள் அவனை பசுமையான அந்த நாட்களை நோக்கி அடித்துச் சென் ይወጫr.
கமம் செய்யும் குத்தகைக் காணியில் நண்பகல் சாப்பிட்ட பின் வேப்ப மர நிழலில் படுத்திருக்கும் போது அனுபவிக்கும்
87

Page 48
சுகம். மிருதுவான மெதுமையுடன் தாலாட்டிடும் வயற்காற் றும், வாய்க்காலில் பள்ளி சிறார்கள் போல ‘கல, கலவென ஒடிக் கொண்டிருக்கும் வயல் நீரும் . உல்லாசமாக பறந்து திரி யும் அந்த சின்னஞ்சிறு பறவைக்கூட்டங்களின் ரீங்கார சங்கீத மும், காற்றின் வேகத்துடன் ஊடல் புரிந்திடும் இலைகளின் "சவ, சல"ப்பும், ஒ!. ஏகாந்தத்தில் திளத்திருந்த அந்த இனிய நாட்கள். . பசுமையான நினைவலைகளில் சுழன்ற அரவிந் தனை முன்னால் வந்த கிழவி முட்டி அவனை இந்த யதார்த்த உலகிற்கு மீட்டெடுத்தாள். பசுமை மின்னலென மறைய, நாற்ற மும், புழுக்கமும், நெரிசல்களும், கூச்சமும் மீண்டும் அவனை ஆட்கொண்டன. மீண்டும் நினைக்கவே சோகம் அவன் இதயத் தின் ஜன்னல்களைத் தட்டியது.
முழுச்சனமும் ஏறி, பஸ் புறப்படுவதற்கு அரைமணித்தி யாலம் சென்றது. அதுவரை அந்த நரக வேதனையில் உழன்ற அரவிந்தன் பொறுமையை இழந்தான். "அண்ணே, பஸ்சை எடுங்கோவன்." அரவிந்தன் உச்சத்தொனியில் கத்தினான்.
"ஆரடா அவன்?" என்று கண்டக்டர் அதட்டவே, பலரும் அரந்தனைப் பார்க்க. கீழே நின்ற இரு வாலிபர்கள் அவனைக் கூர்மையாக நோக்க, தனது மனவெழுச்சியை தணித்தவன், தலைகுனிந்தான்.
ஒரு மாதிரி பஸ் உறுமலுடன் புறப்பட்டது. பள்ளம், திட்டி என்று பாராமல் யாவற்றிலும் சில்லுகளைப் பதித்தபடி பஸ் முன்னேறியது. சாரதி ஒவ்வொரு முறையும் "பிரேக்" அடித்த போது எல்லாம், பின்னால் நின்ற பலரும் முன்னால் தள்ளுப் படவே ஒரு மலைப்பாரம் தன் முதுகில் ஏறி, வலியை ஏற்படுத்த அரவிந்தன் இரண்டு, மூன்று முறைகள் பின்புறம் பார்த்து முறைத்தும், அதனால் ஒரு பிரயோசனமும் ஏற்படவில்லை. பின்னால் நிற்பவர்கள் தான் என்ன செய்வார்கள்?
அதன் பின் அரவிந்தன் பார்வையை பின்னால் திருப்ப வில்லை. முன்னால் செலுத்தி இருந்தான். ஓர் இளம் பெண்ணைச் சுற்றி நான்கைந்து ஆட்கள் நின்றபடி அவளுடன் சேஷ்டையில் ஈடுபடுவதை அரவிந்தன் காண்கிறான். அவனுள் ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது. அந்தப் பெண் தன் உடலை அப்படியும், இப் படியும் நெளித்து அவர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அரவிந்தனால் ஒன்றும் செய்ய முடி யாத நிலை. அவளுக்காகப் பரிதாபப்பட்டபடி, விழிகளை வெளி யில் செலுத்தினான்.
பஸ் தன்பாட்டில் முன்னேறியது. இறுதியாக கிளாலியை அடைந்த போது, மதியம் ஒன்றரை மணியாகி இருந்தது. இரண்டு மணி நேர பிரயாணத்தில் அவன் அனுபவித்த கஷ்டம், வேதனை, எரிச்சல், கோபம்.
பஸ்சில் ஏறும் போது நிலவிய "இழுபறி நிலை, இறங்கும் போதும் நிலவியது. "நான் முந்தி", "நீ பிந்தி’ என்ற தோரணை
88

யில் மூட்டை முடிச்சுக்களுடன் எல்லோரும் வெளியே பாய்ந்து ஒட்டமும், நடையுமாக விரைந்தனர். அந்த அவசரத்தில் கீழே ஒரிருவர் விழுந்தும் விட்டனர். அவர்களை எவருமே கவனிக்காத நிலையில் செயல்பட்டனர். அனைவரது செயல்களில் ஒர் அசுர வேகம்.
அரவிந்தனுக்கு ஒடுவதற்கோ, நடப்பதற்கோ தெம்பு இருக்க வில்லை. பசி அவன் வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட்டு விட்டே மீதிப் பயணத்தை மேற்கொள்வது என்று எண்ணியவனாக ஒதுக்குப் புறமொன்றுக்குச் சென்று, மர நிழலில் அமர்ந்திருந்த வன், தாய் கட்டிக் கொடுத்த சோற்றுப் பார்சலைத் திறந்தான். ஒரு கவளம் தான் சாப்பிட்டிருப்பான். மேலே இருந்து கரகம் எச் சம் போடவே, அது நேராக அவன் சோற்று "பார்சலின் மத்தி யில் விழுந்தது.
அரவிந்தன் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றான். சோற்றுப் "பார்சலை” வீசி எறிந்தான். மனம் குமைந்த நிலையில் அங் கிருந்து அகன்று, படகு ஏறுவதற்கான "டிக்கெட்டைப் பெறுவ தற்கு விரைந்தான். "டிக்கெட்" பெறுவதற்கு வரிசையாக நின்ற கூட்டத்தின் நீளத்தைக் கண்டு திகைப்படைந்து விட்டான். ஓர் அழகிய பெண்ணின் பருவத்தின் ஒரங்களைப் போல வளைந்தும், நெளிந்தும், நேராகவும் மக்கள் கூட்டம் ஒன்று நீண்டிருந்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றிருப்பார் கள். அரவிந்தன் இயந்திரகதியான நிலையில் வரிசையில் நின் றான். மூன்று மணிநேரம் கால்கடுக்க நின்றபின் படகு "டிக்கெட்" கிடைத்தது. அவன் உடல் இப்போது நன்றாகக் களைத்து விட் டது. மனமும் மரத்து விட்டது. வெறுப்புத்தான் மிகைந்திருந் தது.
அங்கிருந்து அகன்று, கிளாலி படகுத் துறைக்கு விரைந் தான். அங்கொரு மக்கள் வெள்ளம்! அரவிந்தனின் கண்கள் பிர மிப்பில் இருந்து விடுபட பல வினாடிகள் சென்றன. இரண்டாயி ரம் பேர் உயிரைத் துச்சமென மதித்த நிலையில் படகுகளில் பய ணத்தைத் தொடர நின்றதைக் கண்டபோது. அங்கு கூடி நின்ற மக்களையிட்டு அவன் அனுதாபப்பட்டான். “சே!". மாலைப் பொழுதை இரவு முழுமையாக கட்டித் தழுவி இருளை விசிறியது.
படகுப் பயணத்திற்கு தன்னை ஆயுத்தப்படுத்திய நிலையில் அரவிந்தன் நின்றான்.
நீண்ட நேரத்தின் பின் படகுக்காரனுடன் பதினைந்து பேருள் ஒருவனாக, முழங்கால் தண்ணீரில் நடந்து சென்று படகில் ஏறினான்.
படகு இருளையும், நீரையும் கிழித்தபடி பயணத்தை ஆரம் பித்தது. எல்லோரும் கடவுள் நாமங்களைப் பல்வேறு விதங்களில்
89

Page 49
மெலிதாக உச்சரித்தனர். கொஞ்சம், கொஞ்சமாக படகு முன் னேற, குளிர் காற்று உடலைப் போர்த்த உடல் உஷ்ணம் அகன் றது. உடலில் ஒர் ஆறுதற் தன்மை ஒட்டியது. எரிச்சல் நீங்கியது. வெறுப்பு அகன்றது.
படகில் சுருண்டு, நெருங்கிக் கிடந்த மனித உருவங்களை அரவிந்தன் அளந்தான். ஒவ்வொரு பராயத்தையும் பிரதிநிதிப் படுத்தும் வகையில் மனிதக் கூட்டங்களின் வழித்தோன்றல்கள் பின்னிப் பிணைந்து கிடந்தன.
அவலங்கள், ஒலங்கள், அவதிகள், ஆரவாரங்கள் இன்றி பய ணம் மூன்று மணித்தியாலத்தில் நிறைவேறியது.
படகு கரை தட்டியது தான் தாமதம் இடியோசை போன்ற ஒலி. அடுத்த வினாடி பாய்ச்சல், ஒட்டம், கூச்சல், குமுறல். அவற்றின் செயல்பாடுகளுக்குள் மனித ஒலங்கள் திடீரென எங் கிருந்தோ சீறின. அரவிந்தனுக்கு முன்னால் - நூறு மீட்டர் தூரத்தில் "ஷெல்" ஒன்று விழுந்து வெடித்துச் சிதறியது. புகை மண்டலம் அப்பிரதேசத்தில் தங்கு தடையின்றி பரம்பியது. அணை உடைந்து வெள்ளம் பீரிட்டுப் பாய்ந்து ஒடுவது போல் மக்கள் வெள்ளம் நான்கு திசைகளிலும் கண்மூடித்தனமாக பாய்ந்து ஒடிய போது . . குருஷேத்திரத்தின் ஒரு பகுதியை நினைவூட்டிய மாதிரி, அந்தப் பிரதேசம் மாறி, குழந்தைகள், சின்னஞ் சிறுசுகளின் அழு குரல் அங்கு எதிரொலிக்க. அந்த அவதிக்குள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஓடிவந்து அரவிந்தனைக் கட்டி அணைத்துக் குழறினான். ‘மாமா, என் னைக் காப்பாத்துங்கோ. அம்மாவையும், தங்கச்சியையும் எங் கேயோ விட்டுட்டன்.'
மீண்டும் காதை அடைக்கும் சத்தம். இரண்டாவது "ஷெல் லடி", "ஐயோ’’ என சிறுவன் குழறினான். அரவிந்தன் பல மெல்லாவற்றையும் திரட்டி, சிறுவனைத் தோளில் போட்டான். யோசித்துக் கொண்டிருக்க நேரமில்லை என்றுணர்ந்தவன் திடீர் முடிவுக்கு வந்தான். சுாட்டாற்றின் வேகத்திற்கு சிக்கிய துரும்பு போல, மக்கள் வெள்ளத்தினுள் இரண்டறக் கலந்து, அந்த வெள் ளத்தில் அள்ளுண்ட நிலையில் ஒடினான். நீண்ட தூரம் ஓடிய பின்னரே அவன் நின்றான், அவனுக்கு நன்றாகக் களைத்தது. வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்தோடியது. சிறுவனை இறக்கி னான். இனிப் பயமில்லை என்று எண்ணினான். ஒரு கண்டத்தி லிருந்து தப்பி விட்டோமே என்று ஆறுதல்பட்டான்.
மக்கள் இன்னும் குழறிக்கொண்டே அவனைத் தாண்டி ஓடி ests.
'இரண்டு பேர் செத்திட்டினம் போல’ என்று ஒருவர் கூறிக்கொண்டே ஓடினார்.
*ஷெல்லடி சத்தம் ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்தது, அதன் பின் ஒய்ந்தது.
90

அமைதி தோன்றியபோது மக்களின் ஆரவாரங்கள் தான் எங்கும் ஒலித்தது.
அரவிந்தன் பிரமை பிடித்த நிலையில் விளங்கினான். இது அவனுக்கு முதல் அனுபவம். இவ்வாறான ஒரு சிக்கலான, அவதியான, ஆத்திரமூட்டும் நிலைக்கு அவன் ஒரு நாளுமே முகம் கொடுக்கவில்லை. விமான குண்டு வீச்சுகளின் போது "பங்கருக் குள்’ பதுங்கியதை தவிர இப்படி உயிரைக் கையில் பிடித்தபடி அவன் என்றுமே ஓடியதில்லை.
அரவிந்தனுக்கு இப்போது பசி உணர்வு எல்லை கடந்திருந் தது. பசியைத் தணித்தால் தான் பயணத்தைத் தொடரலாம் என்ற நிலை துலங்கியது. அருகில் ஒரு கடை விளக்கு வெளிச் சத்தை உமிழ்ந்தது. அதற்குள் - அந்த ஒலைக் கொட்டிலுக்குள் நுழைவதற்கு அவன் பட்டபாடு . . பெருவாரியான சனம் அங்கு குழுமியிருந்தது. அரவிந்தன் உள்ளே சென்றபோது தின்பண்டங் கள் யாவுமே முடிவடைந்து விட்டன. அங்கிருந்து வெளியேறி அக்கம், பக்கத்திலுள்ள கடைகளில் எல்லாம் நுழைந்த போதும் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியில் ஒரு கடையில் தேநீர் மட்டும் கிடைக்கக் கூடியதாக இருந்தது. அதை வாங்கி சிறுவனுக்கு கொடுத்து, தானும் பருகினான். உடலை சில நிமிடங்கள் அசு வாசப்படுத்தியவன், சிந்திக்கும் பக்குவத்திற்கு திரும்பினான்.
அரவிந்தனின் அடுத்த நடவடிக்கைக்கு சிறுவன் ஒரு முட்டுக் கட்டையாக விளங்கினான். ஆனால், அவனை அனாதரவாக விட்டுட்டு போக முடியாது. அனாதையாகும் நிலைக்கு அவனைத் தள்ளக்கூடாது. அவசரமாக முடிவெடுக்காமல், ஆறுதலாக முடி வெடுக்க வேண்டும். என்ன செய்வோம்? அரவிந்தன் சிறுவனை நோக்கினான்.
அப்பாவியான அந்தச் சிறுவனின் முகத்தில் பயமும், நடுக்க மும் தாராளமாகப் படிந்திருந்தன.
அரவிந்தனைக் கடந்து பலரும் சென்றனர். யாவரது நடை யிலும் வேகம். சிறுவனுடன் நின்றால் பின்னே விடப்படும் பிரயாணிகளில் அரவிந்தனும் ஒருவனாக விளங்கலாம். அவன் அங்கிருந்து அகல வேண்டும். மக்களின் வேகத்திற்கு அவன் செய லும் அமைய வேண்டும். சிறுவனின் கரத்தை இறுகப்பற்றினான். 'வா' என்றவன் நடந்தான். சிறுவன் எவ்வித சிந்தனையும் இன்றி நடந்தான். இடைக்கிடை 'அம்மாவைக் காண இல்ல எங்க போயிருப்பா' என்று அரவிந்தனை கேட்க, அரவிந்தன் ஒன்றுமே கூறாமல் மெளனமாக நடந்தான்.
இனி "டிரக்டரில் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. “டிரக்டர்கள்’ நிற்பாட்ட இடத்தை அடைந்தபோது . டிரக் டர்களில் ஏறுவதற்கும் மக்களிடையே ஒரு போர்ர்ட்டம் நிகழ்ந் தது. உயிரைத் துச்சமென மதித்த அந்த மனிதப் பிரகிருதிகள்
9

Page 50
"டிரக்டர்களில் ஏறுவதற்கு எடுத்த பகீரதன முயற்சியைக் கண்ட போது, அரவிந்தனுக்கு நெஞ்சு வலித்தது. முப்பது வயதுக்குள் அடங்கும் அவன் டிரக்டரில் ஏறுவதற்கு கவனம் செலுத்திய போது, ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் கண்மண் தெரியா மல் செயல்பட்டு டிரக்டரில் ஏறுவதை காணுகையில் அவனுக்கு நெஞ்சு வலித்தது.
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. "டிரக்டரின் குலுக் கலில் சிறுவன் அரவிந்தனின் மடியில் துரங்கி விட்டான்.
ஆலங்கேணி சந்தியை "டிரக்டர் அடைந்தது. எல்லோரும் அதில் இருந்து குதித்தனர். பைகளை எடுத்தது தான் தாம்தம் ‘பஸ்ஸை" நோக்கி ஓட்டம் பிடித்தனர். அரவிந்தன் மெதுவாக இறங்கினான். நல்ல வேளையாக சிறுவனுக்குத் தெரிந்த ஒருவர் சிறுவனைக் கண்டுவிட்டார். அவர் சிறுவனை தாயிடம் சேர்ப்பிப் பதாக வாக்குறுதி அளிக்கவே, சிறுவன் அரவிந்தனின் அன்பு விலங்கை உடைத்தபடி அகன்றான். சிறிது நேரம் தன் பாதுகாவ லனாக இருந்த அரவிந்தனை அவன் நன்றியுணர்வுடன் பார்த்த படி சென்றது, அரவிந்தனுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது.
பஸ்சில் தன்முறை வந்தபோது ஏறினான். பஸ் புறப்பட்டது. அரைகுறை நித்திரையில் உழன்று, விடிகாலை ஓமந்தையை அடைந்த போது, அரவிந்தன் நன்றாகக் களைத்து விட்டான். ஆனால், மனம் களைக்கும்படியாக அங்கு ஒரு தகவல் தெரிவிக் கப்பட்டது. 'வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் போட்டிருக்கி றார்களாம்" என்று ஒருவர் தெரிவிக்கவே, கொழும்பை அன் றிரவே அடைந்து விடலாம் என்ற எண்ணம் அரவிந்தனின் மனதி னுள்ளேயே கருகியது.
அடுத்த இரண்டு நாட்களிலும் அந்தக் காட்டுப் பிரதேசத் தில் பல திக்குகளிலும் இருந்து படையெடுத்த நூற்றுக் கணக் கான மக்கள் மத்தியில் எல்லா கடன்களையும் ஒளிவு மறைவின்றி நிறைவேற்றினான். மலம் கழிக்கும் போது ஒரிருவர் அருகில் குந்தி இருப்பதைக் கண்டும் காணாமல். கழுவுவதற்கு நீர் இல்லா மல் கொழும்பு சித்தப்பாவுக்காக கொண்டு வந்த புதினப் பத்தி ரிகைகளைக் கிழித்துப் பாவித்து. முகத்தை முழுவதும் கழுவா மல். பல் துலக்காமல். நுளம்புக் கடிக்கு மத்தியில் அரை குறையாக புல்தரையில் நித்திரை கொண்டு. பணம் இருந்தும் சாப்பாட்டுக் கடைகளுக்குள் புகுந்து சாப்பிட முடியாத அளவுக்கு சனம் நிரம்பி இருந்ததினால் அரைப்பட்டினியும், முழுப்பட்டினி யுமாகக் கிடந்து. X
அரவிந்தனின் வயிறு காய்ந்து விட்டது. உடல் வலிமையும் விலகி விட்டது. மனத் தைரியம் மட்டுமே ஓரளவு ஒட்டியிருந்தது.
மூன்றாம் நாள் "லைன் கிளியர்" என்ற தகவல் வரவே யாவ ரும் பரபரப்புடன் பஸ்சில் ஏறினர். அரவிந்தன் அரை உயிரான
92

நிலையில் பஸ்சில் ஏறினான். அதன்பின் பல "செக் பொயின்ற்” களைத் தாண்டிய போது ஏதோ விடுதலை கிடைத்து விட்ட தற்காலிக உணர்வு.
நொச்சிமோட்டையைத் தாண்டினான். வெயிலைப் பொருட்படுத்தவில்லை. வியர்வை பெருகி ஒடு வதையிட்டு கவலைப்படவில்லை. முன்னேற்றத்திலேயே எல்லா கவனமும். 'கொழும்புக்கு போக ‘பாஸ்’ எடுக்க வேணும்' என்று சொல்லியபடி ஒருவர் வரிசையில் நிற்கவே, அவர் பின்னால் அர விந்தனும் நின்றான். அவன் முன்னால் ஆயிரம் பேராவது நின் றார்கள். வரிசை மெல்ல மெல்ல முன்னேறியது.
அகோரம் நாக்கை வரட்டியது. நீர் இல்லாத நிலை. தலை சுழல்வது போன்ற ஒரு பிரமை.
‘'எத்தனை மணித்தியாலம் நிற்க வேணும்?" முன்னால் நின்றவரிடம் கேட்டான் அரவிந்தன்.
'மூன்று மணித்தியாலமாவது எடுக்கும்.'
ஆத்திரத்தை மீறிய நிலையில் துக்கம் மனதுக்குள் அத்து மீறிப் புகுந்தது. சே! என அடிக்கொரு தரம் அங்கலாயித்தான்.
சரியாக நாலரை மணி நேரம் நின்று "பாஸ் எடுத்து வவு னியா ரயில் நிலையத்திற்குச் சென்ற போது பிரயாணிகள் கூட் டம் அங்கு அலை மோதியது. டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நின்ற போது அரவிந்தனின் மனத்திரையில் பல பின்னோக்கிய காட்சிகள் பதிந்து ஒட. கொழும்புக்கு நான்கு வருடங்க ளுக்கு முன் தாயுடன் மஹரகம ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறுவ தற்காக சென்று தெமட்டகொடையில் ஒரு சேரிப்புறத்தில் - சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்தான். அங்கு மேற்கொண்ட நாளாந்த பஸ் பிரயாணங்களின் போது சனநெரிசலில் அகப்பட்டு வியர்வை வழிய மற்றவர்களின் வியர்வை ஒட்டி உடலுடன் உராய்ந்தபடி சென்றது, பன்னிரண்டு குடியிருப்புக்களுக்காக கட் டப்பட்ட ஒரு மல்சலகூடத்திற்கு முன்னால் தன் முறை வரும் வரை வரிசையில் நின்றது, நுளம்புக் கடியினால் அவதியுற்றது, இலையான்கள் மொய்த்த சாப்பாட்டை சாப்பிட்டு இரண்டு நாட்கள் வயிற்றுளைவினால் அவதியுற்றது, ஊர் திரும்பி வந்த போது கால்களில் சொறிச்சல் ஏற்பட ஆறுமாதம் வரை பரியாரி யிடம் மருந்து எடுத்தது. இப்போது - நான்கு வருடங்களின் பின் வடக்கு, கிழக்கு மக்களின் புலம் பெயர்வை அடுத்து சனப் பெருக்கம் கட்டுப்பாட்டை மீறி. அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார, கலாசார பழக்க வழக்கங்கள் தலைகீழாகி. அவற்றின் தாற்பரியம் எவ்வாறு சீரழிவுக்கு இட்டுச் செல்லும் என எண்ணிப் பார்க்கையில்.
புது வருட லீவுக்காக ஊருக்கு வரும் போதும், திரும்பி கொழும்புக்கு போகும் போதும் பிரயாணத்தின் போது அனு
93

Page 51
பவிக்கும் மானங்கெட்ட பிரச்சினைகளை நினைத்துப் பார்க்கை யில். ஒரு நாளுக்கு ஒரு வேளைக்கு சாப்பிட்டாலும் ஊரில் இருக்கும் அந்த அமைதியான சூழ்நிலை, அங்கு வீசும் சுதந்திரக் காற்று, சைக்கிளில் நெல்மூட்டைகளை கட்டியபடி "பெடலை மிதிக்கும் போது கஷ்டத்தின் மத்தியிலும் நிலவும் ஒர் ஆனந்தத் ğ560r60)Lf0.........
கொழும்புக்கு, அதன் "உன் மத்தவங்களை" பார்க்க வேண் டும் என்ற ஆசை கொஞ்சம் கொஞ்சமாக கருக. வான் பொய்த்து, மழை பிழைத்து, மண் பலனைத் தராவிட்டாலும் வயலில் உழைக்கும் போது - அது வியர்வையை வழித்தாலும் அதில் கிடைக்கும் ஒரு சந்தோஷத் தன்மை.
அரவிந்தன் தன் சிந்தனைக்கு முற்றுப் புள்ளியிட்டான். ரயில் புறப்பட்டுச் சென்று பத்து நிமிடங்களின் பின் அரவிந் தன் வவுனியா சந்தியில் நின்றான். மீண்டும் ஊருக்குப் போகும் எண்ணம் அவன் இதயத்தை நிரப்பி இருந்தது,
வீரகேசரி வார வெளியீடு" - 21.08.94
94

காலங் கடந்தாலும் கேட்கும் போது எழுச்சியுணர்வைத் தூண்டும் ஆயிரக்கணக்கான தத்துவ முத்துக்களை வழங்கி தமிழர்களைச் சிந்திக்க வைத்த
கவியரசு கண்ணதாசனின் நினைவாக
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு
உலகத்தில் திருடர்கள் சரிபாதி ஊமைகள், குருடர்கள் அதிற்பாதி கலகத்தில் பிறப்பதுதான் நீதி கலங்காதே மனம் மயங்காதே
-கவியரசு கண்ணதாசன் (எம்.ஜி. ஆரின் பணத்தோட்டம்' திரைப்படத்துக்காக எழுதிய 'கருத்து முத்துக்கள்)
சச்சி சிறிகாந்தா ஒசாகா, ஜப்பான்

Page 52
லி
அரைநுாற்றாண் அநுபவமும் செய முந்நுாற்று அறுபத்ை சித்திரங்களை
லீலா பங்சாங்க சி
அறிஞர்க்ள், மதப்ெ உலகத் த6 இந்து, இஸ்லாமிய, தின விழ *சுபநேரம், ராகுகா யோகம், விர குறிப்பிட கண்ணைக் கவி தயாரிக்கப்
தயாரிப்பாளர்கள், ! லீல அச்சகம் பி. 182, QLOd
கொழும் தொலைபேசி:

டுக்கு மேற்பட்ட
ல்திறனும் உள்ள
)தந்திற்கு மேற்பட்ட
உள்ளடக்கிய
த்திரக் கலண்டர்
பரியார்கள், மேலும் லைவர்கள்,
கிறிஸ்தவ, பெளத்த க்களும் லம், நட்சத்திரம், தநாட்களும் டப்பட்டு பரும் வண்ணம் பட்டுள்ளன.
விநியோகித்தர்கள்: 0றவெற் லிமிட்டட் இந்சர் வீதி
L - 12 325,930, 334332