கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டி 2004.01-03

Page 1
No.
No.No :
#00zos soi-ųjitolooőể
இலக்கியம்
 

懿 # 几 3 厅 历

Page 2
தாவர உலகிலே! விந்தைத் தாவரங்களும்
யார் என்ன சொன்னார்கள்? நீருலகிலே! பாலூட்டிகள் வரிசையிலே தமிழ் வளர்ந்த பெருமக்கள்
முதன் முறையாகத் தமிழில் வெளிவரும் என்சைக்ளோபீடீயோ
நம்மவர் செய்த விந்தைகள் அவர்கள் செய்த விந்தைகள் உலக மகா கொடுங்கோலர்கள் உலகப் புகழ் பெற்ற
சொற்பொழிவுகள்
விந்தை உயிரினங்கள் அரண்மனை ரகஸலியங்கள் உலகப் புகழ் பெற்ற கட்டடங்கள் நம்ப முடியாத உண்மைகள் வியப்பூட்டும் உண்மைகள்
மூலிகைத் தாவரங்களும்
 
 
 
 

நூல்கள் GODGT TCS u தொடர்பு கொள்ள வேண்டி முகவரி:
த. ரவீந்திரன் "கெளரி வTசம்" இணுவில் மத்திய கல்லூரி ஒழுங்கை, இணுவில்.
இலங்கை விலை ரூ. 300/-

Page 3
து
காலாண்டிதழ் மலர் - 3 இதழ் - 7 ஜனவரி - மார்ச்
ஆசிரியர் தி.செல்வமனோகரன்
கலை, வடிவமைப்பு தா.சனாதனன்
அட்டைப்படம் Cola Blosom, 965ib ërë
சகல தொடர்புகட்கும்
தூண்டி, 141. கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இலங்கை
T.P.: 021-2226416
மின்னஞ்சல் முகவரி: thundy magazine Gyahoo.com
விலை: 40 ரூபாய்

உள்ளடக்கம்
03
14
15
16
17
23
26
31
33
35
37
45
க.சட்டநாதன்
கவிதை
அஸ்வகோவி
சு.வில்வரத்தினம் பா.அகிலன்
நந்தினி சேவியர் திசெரா
அசோக ஹந்தகம
Lsjö
அ.யேசுராசா பா.இரகுபரன்
கட்டுரைகள்
K.T.கணேசலிங்கம் R.ஜெயந்தினி
ப.புஸ்பரட்ணம்
க.சட்டநாதன்
566)

Page 4
மீள்பிரவேசம்
ஈழத்தின் இதழியல் வரலாற்றில் வெளியிடப்பட்ட இதழ்களின் எண்ணிக்கை பல ஒரு சில வருடங்களாகவோ அன்றி ஒரு சில மூன்றாவது மனிதன் போன்ற இதழ்கள் ஈழத் இப்பட்டியலில் படி, முனைப்பு, களம், புதுச் கொள்ளலாம். ஆயினும் இவ்விதழ்கள் யாவு கொண்டிருந்தன. இவ்வாறான அவலம் த
இச்சிறுசஞ்சிகைகள் சில விற்பனை ரீதியாகவும் ஓரளவு நின்று பிடிக்கின்றன.
ஈழத்துச்சிற்றிதழ்கள் தனிமனிதனைே நம்பியே உருவாகின்றன. தனிமனிதனுக் கூட்டத்திற்குள் ஏற்படும் சிக்கல்கள் காரணமாகின்றது. குறிப்பாக விற்பனை ரீதிய காரணமாகிறது எனலாம்.
யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் ய சஞ்சிகை தூண்டியே. இயல்பாக இருந்த இல பிரதிகள் செய்த அனுபவமும், அதனால் ஏற்பட காரணங்கள் எனலாம். வழமை போல் தூ காரணங்களால் நின்று போயிற்று.
ஆயினும் 2002ல் "தூண்டி இலக்கிய இ.முருகையன் போன்றோருடனான இலக்கிய சிறுகதை, கவிதை ஆய்வரங்குகளையும் நடா
தூண்டி இதழை மீளக்கொண்டுவரு இலக்கு, தேவை போன்றன பற்றிய உரையாட மையப்படுத்திய ஆய்வுகள் மற்றும் வழமைய வாசகத்தளத்தை நோக்கி நகர்தல், பழைய கொடுத்தல் போன்ற இன்னும் சில அம் மையப்படுத்தி இம்மீள்பிரவேசம் நிகழ் நிறைவேற்றமுடியுமா என்ற வி னாவைத் தா எமக்குண்டு. எழுத்தாள நண்பர்கள் தூண் வாங்கி வாசிக்க வேண்டும்.
ந6

து
காலாண்டிதழ்
குறிப்பாக சிறுசஞ்சிகைகளின் வரலாற்றில் )வேயாயினும் அவற்றின் ஆயுட்காலம் என்பது இதழ்களாகவோதான் இருக்கின்றன. அலை, து சிற்றிதழ்களின் உன்னத அடையாளங்கள். சு போன்ற இன்னும் சிவற்றையும் சேர்த்துக் ம் தத்தம் ஆயுட்காலத்தை மிகக்குறைவாகவே மிழகத்திற்கும் பொருந்தும், எனினும் இன்று ம் வெற்றி பெறுவதால் (காலச்சுவடு, தீராநதி.)
யா அல்லது ஒரு நண்பர் கூட்டத்தையோ கு ஏற்படும் சிக்கல்கள் அல்லது நண்பர் இச்சிறுசஞ்சிகைகள் நின்று போவதற்கு பாக ஏற்படுகின்ற தோல்வியே இதற்கு முக்கிய
பாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த முதற் )க்கிய ஆர்வமும், கல்லூரியில் கையெழுத்துப் ட்ட உந்தலுமே இச்சஞ்சிகை வெளியீட்டிற்கான ண்டியும் ஆறு இதழ்களோடு (1997-1998) சில
வட்டத்தை” ஆரம்பித்து மாவை வரோதயன், அனுபவப் பகிர்வுகளும் பின்னர் (2003) ஈழத்து த்தினோம்.
6hlgi பற்றி ஆலோசிக்கப்பட்டபோது இதன் டல் மிக நீண்டதாகவே அமைந்தது. ஈழத்தை பான இலக்கிய வாசகர்களைத் தாண்டி புதிய ப, புதிய படைப்பாளிகளுக்கு களமமைத்துக் சங்களையும், புதிய உரையாடல்களையும் கிறது. மேற்சொன்ன அம்சங்களை ண்டி நிறைவேற்ற வேண்டும் என்கின்ற ஆசை ாடியில் எழுதவேண்டும். வாசக நண்பர்கள்
ທັງ
ஆசிரியர்.
தூண்.02

Page 5
*இலக்கியத்தின் தீவிரமான எழுத்து வி எழுத்தென்று பாகுபாடு இல்லை”
க.சட்டநாதன் அவர்கள் 22.04.1940ல் வே ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
பத்திரிகையிலும் பணியாற்றியவர். இவருடைய (1992), சட்டநாதன் கதைகள் (1995) என்பன குறிப்பிடத்தக்க குறுநாவலையும் எழுதியுள்ளார் சாகித்திய மண்டலம், வடக்குக்கிழக்கு மாகாண அ உள்ளிட்ட பல்வேறு பரிசில்களைப் பெற்றுள்ள மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தவிர சினிமா, ஓ உள்ளவர். யாழ் திரைப்படவட்டத்தின் செயலி பாராட்டுதல்களைப் பெற்றவர். ஈழத்தின் புனை முக்கிய படைப்பாளியாகக் கருதப்படும் இவருடனா
*உங்களுடைய இளமைக் காலம் பற்றிக் கூறுங்கள அந்தப் பிராயத்தில் இலக்கியத்தின் பால் சாய்வு கொள்ள, ரசிப்புக் கொள்ள உங்களைத்
தூண்டியவர்கள், துணைநிற்றவர்கள் யார்?
இளமைக்காலம் என்பதை - எனது
எழுத்துப் பணி தொடங்குவதற்கு முன்னான
காலமென, ஒரு வசதி கருதி, கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
 

வகுசனத்தன்மை வாய்ந்த
க. சட்டநாதன்.
நேர்கண்டவர் - தி.செல்வமனோகரன்
s
லணையில் பிறந்தவர். B.Sc பட்டதாரியான இவர் அத்தோடு 1967-71 காலப்பகுதிகளில் வீரகேசரி சிறுகதைத் தொகுப்புகளாக மாற்றம் (1980), உலா
வெளிவந்துள்ளன. "நீளும் பாலை” எனும் r. மேலும் இத்தொகுதிகளுக்காக இலங்கை 9ரசின் சாகித்தியம், யாழ் இலக்கிய வட்டம், தகவம் TT. இவரின் சிறுகதைகள் சில ஆங்கிலத்தில் ஓவியம், விமர்சனம் போன்ற துறைகளில் ஆர்வம் பாளராக இருந்தவர். பல்வேறு விமர்சகர்களின் னகதை வரலாற்றில் எழுபதுகளில் எழுச்சி பெற்ற ான நேர்காணல் இது.
நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழு பிள்ளைகளில் நாலாவது பிள்ளை. எனது பாட்டனாரும் தகப்பனாரும் தமிழறிந்த புலவர்கள். அவர்கள், சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில், சிலேடை வெண்பாக்களும் - இஷடதெய்வங்களுக்கு இரட்டைமணி மாலையும் எழுதி மகிழ்ந்த வர்கள். எனது தாயார் கூட ஒரளவு கல்விப் புலமை உடையவர். இந்தச் சூழல், கல்வியிலும் இலக்கியம் சார்ந்த விஷயங்களிலும் எனக்கு
தூண்.03

Page 6
ஆர்வத்தை ஏற்படுத்தின. கல்விக்கு அப்பாற் சென்று, வாசிக்கும் பழக்கத்தை எனக்கு ஊட்டியவர் எனது தாயார்தான். அக்காலத்தில் பிரபல்யமாயிருந்த ஜனரஞ்சக சஞ்சிகைகளான கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் போன்ற வைகளை வாங்கும் பழக்கம் எமக்கு இருந்தது. எனது தாயார் இந்தச் சஞ்சிகைகளின் தீவிர வாசகி, அவற்றைப் படிக்கும் ஆர்வம் எனது குடும்பத்தவர்களுக்கு இருந்தது. எனக்கும் இருந்தது. ஒன்பது அல்லது பத்து வயதில், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தொடராகப் படித்த ஞாபகம் இப்பொழுதும் என் மனதில் நிழலாடுகிறது. தொடர்கதை படிக்கும் ஆர்வத்தை ஜனரஞ்சகப்படுத்திய பெருமை கல்கிக்கு உண்டென்பார்கள். அவரது ஈர்ப்பு வலயத்தினுள் மிக இளம்வயதில் நான் சிறைப் பட்டதுண்டு.
பின்னர், ஓரளவு - வயதளவிலும் மனதள விலும் - முதிர்ச்சி ஏற்பட, பல்வேறு சஞ்சிகை களை வாங்கும் பழக்கம் ஏற்பட்டது. அச்சஞ்சி கைகளில் வந்த கதைகளைச் சேகரிப்பது, தொகுதியாகச் சேர்த்துக் கட்டுவது, அவற்றைத் திரும்பத் திரும்ப வாசிப்பது என்று காலம் கரைந்தது. இவை யாவும் ஒரு பதினைந்து, பதினாறு வயதுக்குட்பட்ட நிகழ்ச்சிகள்தான். அந்தக் காலத்தில், வளரிளம் பருவ மயக்கங் களோடு கவிதைகளும் எழுதியிருக்கிறேன். அவை கவிதைகள் தாமா என்பது வேறு விஷயம். அவை பிரசுரமாகாத எனது குறைப் பிரசவங்கள் என்றுதான் கூறவேண்டும்.
அந்த வயதில் மட்டுமல்ல, அடுத்து வந்த ஓரிரு ஆண்டுகள் ஜனரசிப்புக்குரிய பிரபலங் களான அகிலன், சாண்டில்யன், நா.பா.,ஜெகச் சிற்பியன் - இன்னும், பி.எம். கண்ணன், லஷ்மி போன்றோரையும் படித்தேன். அகிலனின் ‘பாவை விளக்கும்' நா.பாவின் குறிஞ்சி மலரும் அக்காலத்தைய நவீன தமிழின் சிகரங்கள் எனும் கருத்து எனக்கு இருந்தது. காலக் கிரமத்தில் - அகிலனும், நா.பாவும், ஏனையவர் களும் எனது புத்தக அலுமாரியில் இருந்து, சொல்லாமல் கொள்ளாமல் விடைபெற்றுக் கொண்ட விந்தை நடந்தது.
அறுபதுகளின் ஆரம்பத்தில், நான் சென்னையில் கல்வி கற்றபொழுது, நல்லிலக்கி யங்களை இனங்கண்டு, படிக்கும் பக்குவம் ஏற்படுகிறது. ஜெயகாந்தன் சரஸ்வதியில் அல்ல -கல்கி, ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகள் மூலம் அறிமுகமாகின்றார். தி.ஜானகிராமனது

பெயர் தெரிய வருகிறது. கல்கியில் தொடராக வந்த, அவரது ‘அன்பே ஆரமுதே' படிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. மெளனி பற்றி எனது உறவினரும் இலக்கிய நண்பருமான தருமு சிவராம் அவர்கள் சிலாகித்துப் பேசியதோடமை யாது, தன்கைவசமிருந்த அழியாச்சுடர் (ஸ்டார் பிரசுரம்) தொகுதியையும் தந்து, படிக்கும்படி தூண்டினார். அவர் உடன்வர, கா.நா.சுவையும் சி.சு.செல்லப்பாவையும் நேரில் சந்திக்கவும் பேசவும் முடிந்தது. பின்னர், செல்லப்பாவின் எழுத்துப் பிரதிகளுடன் பரிச்சயம் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
ஜனரஞ்சகத் தன்மையற்ற, தமிழ் இலக்கி யத்தின் வீரியம் மிகுந்த பகுதி பற்றிய அக்கறை, அதன் பின்னர் தான் ஏற்படுகிறது. புதுமைப் பித்தன், லா.ச.ரா, கு.ப.ரா, அழகிரிசாமி, சுந்தரராமசாமி அறிமுகமாகிறார்கள். இக்கால கட்டத்தில்தான் ஆங்கிலத்திலும் தமிழ்மொழி மூலமாகவும் மாப்பசான், பால்சாக், ஜொய்ஸ், கட்ப்கா, செக்காவ், கோர்க்கி, தல்ஸ்தோய், தாய்தயேவ்ஸ்கி, துர்கனேவ், டி.எச்.லொறன்ஸ், சிங்கிஸ் ஐத்மாத்தவ்வையும் அற ந்து கொள்ள முடிகிறது. பின்னர், மலையாள இலக்கியத்தின் கொடுமுடிகளையும் கன்னட எழுத்தின் மேதைகளையும் வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களையும தெரிந்து கொள்ளுகிறேன். இன்னும் முல்க்ராஜ் ஆனந், பிரேம்சந்த் என்று பரிச்சயம் விரிவு கொள்கிறது.
இச்சந்தர்ப்பத்தில், எனது தமிழா சிரியர்களான-திரு.க.சிவராமலிங்கம், திரு.கே. எஸ்.சுப்பிரமணியம், பேராசான் ஜெகநாதாச் சா யார் (சென்னைப் பல்கலைக் கழகம்) ஆகி யோரை நினைவு கூர்தல் அவசியம். பாடப் பரப்புக்கு வெளியே சென்று, தமிழின் அழகை, அதன் ஆழத்தை சுவை குன்றாது கற்றுத் தந்தவர்கள் இவர்கள்.
*இலக்கிய ஆர்வம், படைப்பார்வமாக உருவாகக் காரணங்கள் இருந்திருக்கும். அது பற்றியும் - படைப்பு என்பது தவிர்க்க முடியாத ஓர் உந்துதல் என்று கூறுவார்கள், அந்த அனுபவம் பற்றியும்
கூறுங்கள்.
நீங்கள் கூறுவது உண்மைதான். நான் பெற்ற இத்தகைய தேட்டமும் பின்புலமும் - எழுதிப்பார்க்கலாமே என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தவே செய்தது. ஆனாலும், பேனா பிடிக்கும் ஆர்வமும் துணிவும் எனக்கு
தூண்.04

Page 7
உடனடியாக ஏற்படவில்லை. படிப்பதே பரம சுகம். எழுதவேணுமா? வேண்டாமே என்று சும்மா இருந்தேன். இந்த உறங்கு நிலையி லிருந்து என்னை உசுப்பியவர், அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் தொடக்க நாட் களிலும் என்னுடன் வீரகேசரியில் வேலை செய்த, செ. கதிர்காமநாதன் அவர்கள் தான். பழகுவதற்கு இனியவரான அந்த இலக்கிய நண்பரது ஊக்குவிப்பும் எனது முயற்சியும் ஒன்று சேர, எனது முதற்கதையான ‘நாண யம்’ வீரகேசரியில் பிரசுரமாகியது. அதன் பின்னர், தாம்பத்தியம்’ நண்பர் க.செல்வராஜ் அவர்கள் நடத்திய அஞ்சலியில் வெளியாகி யது. ‘பிச்சைப் பெட்டிகள்’ அலையிலும், ஏனையகதைகள் பூரணி, மல்லிகை, திசை, நங்கை, நங்கூரம், வெளிச்சம், தாயகம், கலை முகம் ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்தன. எனது எழுத்துப் பணி இடையீடு இல்லாமல் இன்றுவரை தொடர்கிறது. இவ்விடத்தில் காவலூர் இராசதுரை அவர்களையும் நான் குறிப்பிட வேண்டும். எனது வளர்ச்சியில் அவரது அக்கறையும் முக்கியமானது.
ஒரு நல்ல படைப்பு உருவாக ஒரு Urgeirresistibility வேண்டும் என்பார்கள். நீங்களும் அது பற்றிக் கேட்கிறீர்கள். அத்தகைய உணர்வு, ஒருவகை மெய்ப்பாடு என்னைப் பொறுத்த வரையும் ஏற்படவே செய்கிறது. இத்தகைய மலர்ச்சியால் ஒரே மூச்சில் நான் எழுதிய கதைகளும் உண்டு. சில கதைகள், மனக்குகை யில் பிண்டமாய்க் கிடந்து, உருண்டு திரண்டு, பொலிவு பெற்றுப் பிரசவமானதும் உண்டு.
*உங்கள் படைப்புலக வாழ்வில் ஆதர்சங் களாக சில படைப்பாளிகள் இருந்திருக்கக்கூடும். அவர்கள் யார் யார் எனக் குறிப்பிட முடியுமா? அவர்களது படைப்பாளுமை எவ்வகையில் உங்களைப்
பாதித்தது?
எனக்கு பிரஞ்சு எழுத்தாளரான மாப்ப சானில் ஈடுபாடு உண்டு. அவரது இயல்பான கதை சொல்லும் பாணியும் - சிறிய அளவிலான பாத்திர உருவாக்கமும் எனக்குப் பிடித்தமாயி ருக்கிறது. எனது ஆளுமை விருத்தியில் ஜெயகாந்தனது பங்கு பற்றிக் கூறுவதில் நான் வெக்கப்படுவதில்லை. அவரை, அவர் படைப்புக்

களை நுனிவிரலால் தட்டிவிடும் போக்கு இன்று, இளம் விமர்சகர்கள் மத்தியில் இருக்கிறது. அவர் ஒரு காலத்தின் தவிர்க்க முடியாத குரலாக இருந்தார். அவரது கதைகளில் உள்ள சமூகப் பெறுமானமும் . அவர் பெண்கள் பால் காட்டும் பரிவும் அவர்களைக் கொச்சைப்படுத் தாமல் எழுத்தில் வடிக்கும் பக்குவமும் என்னை வசப்படுத்தவே செய்கின்றன. தி.ஜானகிராமனை நான் திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. தஞ்சை மண்மணக்க, ரசிப்புடன் அவரெழுதும் மொழி, அவரது சுவைமிகுந்த இலகு நடை, அதன் தெளிவு என்று எல்லாமே எனக்கொரு ஏக்கத்தை யும் வியப்பையும் தருவதுண்டு. அடுத்து, எங்களது நாட்டைச் சேர்ந்த எஸ். பொவின் எழுத்துப் பற்றியது. அவருடைய நீண்டகதை UT60 ‘தேர்' அல்லது சிறியகதையான ‘அணி எதிலுமே ஒரு CohesiveneSS- ஒன்றிணைப்பு, இறுக்கம் இருக்கிறது. அது எனக்கு நிரம்பப் பிடிக்கிறது. அவரிடம் இருந்து இதைக் கற்றுக் கொள்ள முயற்சித்ததுண்டு. அவரது பரிசோத னைகளிலும் அக்கப்போர் எழுத்துக்களிலும் எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை இருந்த தில்லை. அவரது இயல்பான நடையில் எழுதப் பட்ட கதைகள் பளிச்சென்று இருக்கின்றன. அவரது படைப்பாளுமையின் வியக்தியைக் காட்டுகின்றன. அவர் மொழியைப் பயன்படுத்தும் விதத்திலும் சில செப்படி வித்தைகள் செய்துள் ளார். அந்தக் கழைக்கூத்தாடிச் சறுக்கல்களும் என்னை மருட்டியதில்லை. அவரது ஆளுமைச் சிறப்புக்கும் வல்லமைக்கும் அவரது நல்ல படைப்புக்கள் எண்ணிக்கையில் போதிய அளவு வரவில்லை என்பதே எனது அபிப்பிராயம்.
குறிப்பாக இவர்கள் எல்லாருமே என்னை ஏதோவகையில் பாதித்திருக்கிறார்கள். அது,
தூண்டி05

Page 8
இவர்களது influence சால் ஏற்பட்டதல்ல, ஒரு வகையில் inspiration ஆக இருக்கலாம். எனக் கேயான ஒரு எழுத்துப் பாணியை, ஒருதனித்து வத்தை, தொனியை உருவாக்கிக்கொள்ள, இவர்கள் எப்பொழுதுமே எனக்கு இடைஞ்சலாக இருந்ததில்லை.
*உங்களுடைய கதையாக்க முறைபற்றி, கதை களில் உள் இழையும் பண்புபற்றி, குறிப்பாக - மனப் பக்குவம் மிக்க, உணர்ச்சி வசப்படாத, வரும் தடைகள் எதுவாயினும் அதை ஒதுக்கி நிமிரும் -
பெண் பாத்திரங்கள் பற்றிக் கூறுங்கள்.
நான் விரும்பும் படைப்புத் துறை சிறுகதைதான். இத்தெரிதலுக்கான காரணம் அதனுடைய குறுகிய வடிவம் தந்த தெம்பாக இருக்கலாம். என்னுடைய எந்தப் படைப்புமே எனது பூரணமான உழைப்பைப் பெற்று உரு வானதென்று கூறிவிடமுடியாது. எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும் போதெல்லாம் படைப் புச் சூழலுக்குத் தோதான ஒரு ஒதுக்கத்தையும் மனம் ஒடுங்கிய நிலையையும் எனதாக்கிக் கொள்வேன். அந்நிலையில் திரளும் எண்ணங் கள், நுண்ணியதிலிருந்து திரட்சி பெற்று, உள்ளடக்கப் பொலிவும் உருவ அழகும் பெற்று விடுகிறது. எழுதிய கதையைத் திரும்பத் திரும்ப வாசித்து, திருத்தங்கள் செய்து, அதன் நேர்த்தியையும் துல்லியத்தையும் உறுதி செய்து கொள்வேன்.
எனது கதைகள், உள்ளடக்க அளவில், சமூகம் பற்றியே அக்கறை கொள்ளுகின்றன.
எந்தப் புறநிகழ்வுமே என்னைப் பாதிக் கிறது. மனதைத் தொட்டு நெருடுகிறது. காயப்படுத்துகிறது. இந்த அனுபவங்களை உள்வாங்கி, உறையவிட்டு எழுத்துருவம் கொடுக்கும் எத்தனந்தான் எனது கதைகள்.
மிச்சிக்கன் மாநில பல்கலைக் கழகத்தின் Journal of South Asian Literature' 616) Lib சஞ்சிகை, தனது வெளியீடொன்றில் எனது எழுத்தை இவ்வாறு மதிப்பீடு செய்கிறது:
சமூக விழுமியங்களின் தன்மை, கூட்டுக்குடும்பவாழ்வின் சிதைவு, சமூகத்தில் பெண்களுக்கான புதிய பங்கு பணி பற்றிய

தன்னுணர்வு உடையவராக சட்டநாதன் இருக்கி
றாா.
இக்கருத்துக்களுடன் எனது வாசகர்கள் உடன்படுவார்கள் என்றே நினைக்கிறேன்.
உங்கள் கேள்வியின் இன்னொரு பகுதிக்கும் நான் பதில் தரவேண்டும். எனது கதைகளில் வரும் பெண்கள் - யாழ்ப்பாணத்து மண்ணில் காலூன்றி நின்றபடி, தலை நிமிர்ந்து பார்ப்பவர்கள். அவர்கள் சரியெனப்படுவதை, தீர்மானமாகச் செய்பவர்கள். இப்பண்பை, பக்குவம் கதையில் வரும் பெயர் தெரியாத சிறுமி தொட்டு அரும்பில் வரும் சிறுகுழந்தை ராஜி, உறவுகள் கமலா, வித்யாசமானவர் களில் வரும் வசந்தி, ஒதுக்கத்தில் வரும் சந்திரா, 'இப்படியும் காதல் வரும் கதையில் வரும் விமலா, ரஞ்சி, சித்திரா என்று எல்லாரிடத்திலும் பார்க்கலாம். எனது எழுத்தின் அடிச்சரடாய், ஒரு தொடரிழையாய் இருப்பது இப்பெண்கள் பற்றிய அக்கறையும் அவர்களது உட்கிடக்கைகளை வெளிக்கொணரும் முயற்சி யும்தான் என நினைக்கிறேன்.
எனது கதைகளில் வரும் ஆண்கள் பலவீனமானவர்கள். நெறிதவறியவர்கள். இருப் பினும், வித்தியாசமானவர்கள் கதையில் வரும் ரகு, நீளும் பாலையில் வரும் செல்வம், இப்படியும் காதல் வரும் கதையில் சிவா ஆகிய அனைவரும் நல்லவர்கள். பெண்களை மதிப்ப வர்கள். சமநோக்கு உடையவர்கள். அதே நேரத்தில், சகஜீவியின் பால் பரிவும் பிரியமும் கொள்ள இவர்களால் முடிகிறது.
*தீவிர வாசகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நீங்கள் முழுமையாக இனங்காணப்பட்டுள்ளதாக உணர்கிறீர்களா? அந்நிலை எந்தவிதத்தில் உங் களை உற்சாகப்படுத்தி உள்ளது?
எனது படைப்புகள், பெரும்பாலும் சிற்றிதழ்களில் பிரசுரமாவதால், தீவிர வாசகர் களையே அவை சென்றடைகின்றன. மனத்தடை கள் ஏதுமில்லாத மதிப்புடன், எனது எழுத்துக் களைப் பாராட்டிய முதன்மை வாசகர்களாக ந.சத்தியபாலனையும், கோ.திருக்கேதார நாதனையும் கூறுவேன். சத்தியபாலன் எனது எழுத்துக்களைப்படித்த ஆரம்பநாட்களில், aWe - reverential wonder ருடன் பேசியது எனக்கு
தூண்டி06

Page 9
இப்பொழுதும் ஞாபகம் வருகிறது. ‘உறவுகள் கதையைப்படித்த கேதாரநாதன், என்னைக் காணும் பொழுதெல்லாம் சப்புக் கொட்டிக் கொட்டிப் பாராட்டியது நினைவில் பசியவை. இவர்கள் இருவரும் பின்நாட்களில் எனது நெருங்கிய இலக்கிய நண்பர்களுமானார்கள். இப்படியும் காதல் வரும் கதையை படித்து விட்டு, அ.யேசுராசா முதன் முதலில் பாராட்டி னார். எனது பெயர், அவரது பத்தி எழுத்துக் களில்-சிறுகதை என்று வரும் போதெல்லாம் தவறாது இடம்பெறுகிறது. இதே கதையை எம்.ஏ.நு.மான் அவர்களும் பாராட்டியுள்ளார். சேரன் அவர்கள் நேரடிச் சந்திப்பொன்றில் இக்கதை பற்றிப்பேசும் போது, நல்ல கதை ஒன்றை எழுதி மோசமான தலைப்பிட்டிருக்கிறீர் கள் என்று கூறினார். இன்னும் மு.புஷ்பராசன், அ.ரவி, குப்பிளான் ஐ.சண்முகன், சோ.தேவராஜா, க.சண்முகலிங்கம், தெளிவத்தை ஜோசப், செ.யோகநாதன்,மு.பொ.,செங்கையாழியான், பேராசிரியர் சண்முகதாஸ், Dr.சிவத்தம்பி, அம்பை, ஜெயமோகன், தகவம் இராசையா, மதுசூதனன் என்று பலர் நேரடிச் சந்திப்புகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் தமது எழுத்துக்களிலும் பாராட் உள்ளனர்.
சற்று விரிவாக, தமது விமர்சனக் குறிப்பு கள் மூலம் எனது எழுத்தை அணுகியவர்கள் எனஎம்.வேதசகாயகுமார், ஏ.ஜெ.கனகரத்தினா, பேராசிரியர் சி.சிவசேகரம், கலாநிதி நா.சுப்பிர மணியன், கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோரைப் பார்க்கிறேன். எனது ஆக்கங்கள் பற்றிய் ஆய்வுக் கட்டுரைகளை யாழ். பல்கலைக் கழக (தமிழ்த்துறை) மாணவிகளான செல்விகள் - ரமணாதேவி, சித்திராதேவி, திருமதி.விமலராணி வேலுதாசன் ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர். செல்விகளது கட்டுரைகள் சம்பிரதாய பூர்வ மானவை. ஆனால், சற்று விரிவாகவும் ஆழமா கவும் விமலராணி எனது படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்துள்ளார். இம்முயற்சிகள், எனது எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தினால் நடந்தவை என்றே நினைக்கின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது எழுத்து, பகுதி பகுதியாகவும் ஓரளவு முழுமையாகவும் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலைமை, நமது ஏனைய படைப்பாளிகளுக்கும் பொருந்தும். எந்த

ஒரு படைப்பாளியும் - முழுமையான வாசிப்புக் கும் விமர்சனத்துக்கும் உட்பட வேண்டும். இங்கு அது நடைபெறுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இப்பணியின் தலையாய தேவையை உணர்ந்து, நமது விமர்சகர்கள் செயல்படுவது, நமது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும்.
*நீளும்பாலை எனும் குறுநாவலை எழுதியி ருக்கும் நீங்கள் ஏன் நாவல் எழுதும் முயற்சியில்
ஈடுபாடுகாட்டவில்லை?
சிறுகதை எனக்குப் பிடித்த கலைவடிவம். இதிலொரு வசதி என்னவென்றால், எடுத்தோம் முடித்தோம் என்ற நிலையை சுலபமாக அடைந்து விடுவதுதான். நான் இப்படிக் கூறுவதைப் பிழையாக அர்த்தப்படுத்திவிடக்கூடாது. கவிதைக்கு மிக அண்மித்த வடிவமான சிறுகதைக்கு வேண்டிய கடின உழைப்பு, சொற்சடைவு இல்லாத மொழி நடை, குறுகிய கால நிர்ணயம், மெளன இடை வெளிகள் என்பன எனக்கும் உடன்பாடானவையே. நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புவது என்ன வென்றால் ஒரு சிறுகதையில் சொல்ல வந்ததை, விரும்பிய விதத்தில் - ஒரு குறிப்பிட்ட கால எல்லையினுள் - சொல்லிவிடமுடியும் என்பதுதான்.
‘சிறுகதையின் நீட்சியாகவோ, நீண்ட கதையாகவோ ஒரு நாவல் இருக்கக் கூடாது. நாவல் என்பது விரிந்து செல்லும் பல்வேறு கேள்விகளின் பெரியவடிவம் அல்லது Artistic discussion of values or Philosophic version of lite, இப்படி எவ்வளவோ இருக்கிறது’ - என்று ஜெயமோகன் அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து சொல்லுவார்: ‘நாவலென்பது இன்னமும் விரிந்து விரிந்து
207

Page 10
ஒட்டுமொத்த வாழ்க்கையையே தன்னுள் அடக்கிவிடும் துடிப்போடு வரக்கூடியது என்று.
எந்த ஒரு இலக்கிய வடிவத்தையும் எக்காலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய விதத்தில் வரையறை செய்து விட முடியுமா? முடியாதென்றே நினைக்கிறேன். நாவலுக்கும் இது பொருந்தும். நாவல் எழுதப்படும் காலம் அக்காலத்துச் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள், ஆசிரியரது நோக்கு நிலை, தரிசன வீச்சு என்பன மாறக்கூடிய தன்மை உடையன. அப்படி இருக்கும் போது, ஜெயமோகன் இது விஷயத்தில் சற்றுக் கறாராக இருப்பது போலத் தெரிகிறது. அவரைப் போல மிகப் பெரிய படுதாவை விரித்து வைத்துக் கொண்டு, நாவலொன்று எழுதுவதென்பது எனக்குச் சுலபமாகத் தெரியவில்லை. அத்தகைய நாவல் கோரி நிற்கும் கால அவகாசமும் கடின முயற்சியும் எனக்குக் கைவசமாகுமா? தெரிய வில்லை. Dr.யூ.ஆர். அனந்தமூர்த்தி, வைக்கம் முகம்மது பஷீர் போல, கையடக்கமாகஅவர்களது உயர்தரத்துக்கு இல்லாவிட்டாலும்ஒருசில நாவல்கள் எழுதிப்பார்க்கலாமே என்ற ஆவல் எனக்கு உண்டு.
*பூரணி எனும் இலக்கியச் சிற்றிதழை வெளிக் கொணர்ந்த அனுபவம் உங்களுக்கு உண்டு. அந்தப் பின்னணியில், ஈழத்துச் சிற்றிலக்கிய ஏடுகள் பற்றிய
மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் பூரணி வெளிவந்தது. அது காலாண்டு இதழ். எட்டு இதழ்கள் வரை வந்தன. நானும் , என்.கே.மகாலிங்கமும் இணை ஆசிரியர்களா கப் பணிபுரிந்தோம். செயற்பாடு ஏதுமில்லாத ஆசிரியர் குழுவும் இருந்தது. முதல் நாலு இதழ்களை நான் - எதுவித தடையும் குறுக்கீடு மில்லாது - பதிப்பித்தேன். அவ்விதழ்கள் நல்ல வடிவமைப்புடன், உள்ளடக்க ரீதியில் ஓரளவு முற்போக்குக் குணாம்சத்தை கொண்டிருந்தன. அடுத்த நான்கு இதழ்களும் என்.கே.மகாலிங்கத் தின் உழைப்பில் வெளிவந்தன. அவ்விதழ்கள் ஆன்மீகத் தேடலுக்கு வலுச் சேர்க்கும் கருத்துக்களை முதன்மைப்படுத்தின. இதனால் எனக்கும் மகாலிங்கத்துக்குமிடையே கருத்து முரண் ஏற்பட்டது. பூரணியின் செயற்பாடுகளில் இருந்து விடுபடவே நான் விரும்பினேன். எனது

எண்ணம் செயல்வடிவம் பெறுமுன், சஞ்சிகை தனது ஆயுளைத் தானாகவே முடித்துக் கொண்டது. ஆன்மீக வாதக் கருத்தியலுடன் நான் முரண்பட்ட போதும், அதன் மனித நேசிப்புக்குரிய கசிவு அன்றும் இன்றும் எனக்கு உவப்பானதாகவே இருந்து வருகிறது.
இலங்கைச் சிற்றிலக்கிய ஏடுகளில், எனது பார்வைக்குக் கிடைத்த இதழ்களைப் பெயர் குறித்துச் சொல்லலாம் என நினைக்கிறேன்: மரகதம், மலர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழமுது, முனைப்பு, விவேகி, நந்தலாலா, தீர்த்தக்கரை, வியூகம், சமர், களனி, அலை, மல்லிகை, மூன்றாவது மனிதன், களம், கற்பகம், கலைமுகம், தூண்டி, அம்பலம், தாயகம் என்று இன்னும் சில இருக்கலாம்.
இந்த இதழ்கள் அனைத்துமே தனிமனித முயற்சியால் அல்லது குழுமுயற்சியால் வெளிவந்தவை. வருபவை. அனேகமான சிற்றிதழ்கள் பொருளாதார பலமற்று, அற்ப ஆயுளில் முடங்கிப் போனமை நாம் அறிந்த ஒன்று. இந்த இதழ்கள் ஏன் தோற்றம் பெறுகின் றன என்று அறிய முற்படுவது பயனுடைய விஷயம் என்றே கருதுகிறேன்.
இச்சஞ்சிகைகள் இலங்கையில் தோற்றம் பெற்றதற்குப் பல காரணங்களைக் கூறலாம். ஜனரஞ்சகத்தன்மைக்கு மாற்றாக, ஒரு மாற்றுக் கலாசாரத்தை தோற்றுவிப்பது. அத்துடன் நவீன இலக்கிய, தத்துவ, சிந்தனைப் போக்குகளைஅவற்றின் சார்புநிலை தொட்டு உரையாடுவது. புனைகதை, கவிதை, விமர்சனம் ஆகியவற்றின் புதிய போக்குகளை வாசகர்களுக்கு இனங் காட்டி, அவர்களை புதிய தள நிலைகளுக்கு இட்டுச் செல்வது என்ற காரணங்களோடு இவை மொழி நடையில் தேர்ச்சி மிகுந்த இலக்கிய நடை ஒன்றை வாசக அனுபவமாக் கவும் முயல்கின்றன. மேலும் சமகால அரசியல் சிக்கல்களை, சிடுக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும் செய்கின்றன.
தனிநபர்களுக்கு இடையிலான முரண் களை, முதன்மைப்படுத்தி, அக்கப்போர் புரிவதற்கென்றே சிற்றிதழ்கள் ஆரம்பிக்கப் படுவதும் உண்டு. இந்நிலை தமிழகத் தைப்போல இலங்கையில் பொதுவாக இல்லை என்றே கூறலாம்.
ဖြ!၏ါး,08

Page 11
எழுபதுகளில் மல்லிகையும், பின்னர் அலையும், அடுத்து மூன்றாவது மனிதனும் - தம்மளவில் தீவிரசெயற்பாட்டின் தொடர்ச்சியை, அவ்வவ் இதழ்களுக்கே உரிய கருத்து நிலைச் சார்புடன் பேணிவந்துள்ளன.
*ஈழத்துப் படைப்புலகில் புலமைகாட்டியவர்களாக
நீங்கள் யார் யாரைக் கருதுகிறீர்கள்?
ஈழத்துப் படைப்புலகம் - பெரிய அளவில், நாம் பெருமைப்படக் கூடிய சாதனைகளைச் செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. சிறப்பான ஆளுமை மிகுந்தவர்கள் ஒருசிலர் இருக்கவே செய்கின்றனர்.
நாவல் என்று வரும்போது, அதிக நம்பிக்கையுடன் பார்க்கக்கூடியவர்கள் இல்லா விட்டாலும் - ஈழத்து நாவல் இலக்கியத்தின் வரலாற்றுப் போக்கை அறிந்து கொள்ள, ஒரு சிலரது பெயர்களைத் தவிர்க்கமுடியாது. கூறவேண்டி உள்ளது. டானியலுடைய பஞ்சமர் (முதலாவது பகுதி), தண்ணிர்; நந்தியின் மலைக்கொழுந்து, நம்பிக்கைகள்; இளங்கீரனின் நீதியே நீ கேள்; எஸ். பொவின் சடங்கு, தீ; மு.தவின் தனி ஒருவீடு; மு.பொவின் நோயி லிருத்தல்; - செ.கணேசலிங்கனின் நீண்ட பய ணம், செவ்வானம்; செ.யோகநாதனின் கிட்டி; கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை; இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ஒரு கோடை விடுமுறை; ஷோபாசக்தியின் கொரில் லா; செங்கையாழியானின் பிரளயம்; தேவகாந்த னின் யுத்தத்தின் முதலாம் அதிகாரம்; தாமரைச் செல்வியின் தாகம்; கோவிந்தனின்; புதிய தோர் உலகம் என்பன படிக்கக்கூடியன.
சிறுகதை என்று வரும் போது ஒரு நீண்டபட்டியலை என்னால் தரமுடியும். அது இங்கு சாத்தியமில்லை. தமது கதைகள் மூலம் எனது மனதைத் தொட்டவர்கள் 66 எஸ்.பொ.மு.த.சண்முகம் சிவலிங்கம், நந்தினி சேவியர், ரஞ்சகுமார், உமாவரதராஜன், பூரீதரன், மு.பொ.வ.அ.இராசரத்தினம், மருதூர்க் கொத்தன், அ.முத்துலிங்கம், தெளிவத்தை ஜோசெப், எம்.எல்.எம்.மன்சூர், செ.யோகநாதன், சாந் தன் , அ. யேசுராசா, குப் பிளான் ஐ.சண்முகன், செம்பியன் செல்வன், கவியுவன், குந்தவை ஆகியோரைக் கூறலாம். நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகளாக ஓட்டமாவடி

அறபாத், நஸிருத்தீன், தாட்சாயணி, இராகவன், ந.சத்தியபாலன் ஆகியோரைக் குறிப்பிட (Մ)ւգեւյլք.
கவிதை என்று வரும் போது, நாம் பெருமைப்படக்கூடிய சாதனையாளர்களாக - மகாகவி, சண்முகம் சிவலிங்கம், முருகையன் ஆகியோரைப் பார்க்கிறேன். தம் கவிதைகளில் நுண்ணுணர்வையும் கவியாற்றலையும் வீச்சை եւյլb காட்டியவர்களாக எம்.ஏ.நு.மான், மு.பொ.சு.வி.,யேசுராசா, சேரன், சோலைக்கிளி, ஜெயபாலன், இளவாலை விஜேந்திரன், சிவசேகரம், பா.அகிலன், புதுவை, கருணாகரன், நிலாந்தன், அஸ்வகோஷ் ஆகியோரைக் குறிப்பிடலாம். மரபுக்கவிதை அளவில் பாராட் டப்பட வேண்டியவர் சோ.ப.பட்டியல் போடுதல் அபாயகரமானது. இந்தப் பட்டியல், விருப்பு வெறுப்பற்ற ஒன்றாக இருந்தபோதும்-நல்ல படைப்பாளிகள் தவறவிடப்பட்டிருத்தல் கூடும் எனும் அச்சம் எனக்கு உண்டு.
இலக்கிய விமர்சனம் என்று வரும் போது. கலாநிதி கைலாசபதி, கலாநிதி கா.சிவத்தம்பி பற்றிக் குறிப்பிடுவது ஒரு மரபும் சம்பிரதாயமும் ஆகிவிட்டது. கைலாசபதி அவர்களுடைய எழுத்துக்கள் ஒரு academic ஆய்வுமுறைக்கு உட்பட்டது. சிவத்தம்பி அவர்களுடையவை - ஆய்வு நிலைப்பட்டவையாகவும் விமர்சன மதிப்பீட்டுக் குறிப்புகளாகவும் வந்துள்ளன. இவரது எழுத்தில் ஒரு ஆளுமை விகசிப்பும் ஒரு படைப்பாற்றல்-தொடுகையும் உண்டு. இவர்கள் இருவருமே படைப்பிலக்கியத்தின் உள்ளடக்கத் துக்கு மட்டுமே முதன்மை கொடுத்தமையால், இலங்கை எழுத்தின் படைப்பாளுமை விருத்திக்கு ஒரு மலட்டுத்தனத்தை, வரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு
தூண்டி09

Page 12
உண்டு. ஆனால், சிவத்தம்பியவர்கள் பெரிய அளவில் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். தமிழில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள புதிய கருத்தியல் வரவுகளை, போக்குகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்து, வரவேற்கும் போக்கை அவரிடம் காணலாம். இப்பண்பினை, சமகால கற்கைகளுடன் - இடைவெளி ஏதும் இல்லாமல் - இணைந்து போகும் வளர்ச்சியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். சில விமர்சகர்கள் இவரது இப்போக்கைக் கண்டிப்பதுடன், இவரது புலமை யையும் தாட்சணியம் ஏதுமின்றி ஓரங்கட்ட முயற்சிப்பதும் இங்கு நடைபெறுகிறது.
இவர்களைத் தவிர எம்.ஏ.நுஃமான், ஏ.ஜே.கனகரத்னா, பேராசிரியர் சிவசேகரம், கலாநிதி.நா.சுப்பிரமணியன், அ.யேசுராசா, சித்திரா, மு.பொ.மு.த, சண்முகம் சிவலிங்கம், செ.யோகராசா, ஆகியோரும் தம்மளவில் இத்துறையில் திறமை காட்டியவர்கள் எனக் கூறலாம்.
*சமீபகாலத்தில் - தமிழ்ப்படைப்புலகில் ஏற்பட் டுள்ள புதிய எழுத்து முயற்சிகள் பற்றி உங்கள் கருத்துக்கள்.
நவீன இலக்கியம் என்பது மாற்றத்தை உள்வாங்கிய ஒன்றுதான். இன்னும் சொல்லப் போனால், அது ஒவ்வொரு காலகட்டத்திலும் - பரிசோதனைகள் மூலமும் முயற்சிகள் மூலமும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்து ள்ளது. உலகளவில் ஏற்பட்டு வரும் சிந்தனை அதிர்வுகள், தமிழையும் தமிழ்வாழ்வையும் தொட்டு அசைப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. தமிழிலக்கியச் சூழலில் தீவிரமானவர்கள் என்று கருதிக் கொள்ளப்படுபவர் மத்தியில் - பெண்ணியம், தலித்தியம், அமைப்பியல், பின்அமைப்பியல், நவீனத்துவம், பின்நவீனத் துவம் பற்றி எல்லாம் பேசப்படுகிறது. இக்கருத்தியல்களை முன்னிலைப்படுத்தும் ஆக்க இலக்கியங்கள் ஒரு சில தோன்றி யுள்ளன. இந்நவீன சிந்தனையாளர்கள் பலதும் பத்தும் பேசுகிறார்கள்: இலக்கியத்தில் தீவிரமான எழுத்து, வெகுஜனத்தன்மை வாய்ந்த எழுத்தென்று பாகுபாடு இல்லை, அப்படித்தர நிர்ணயம் செய்வது தவறு. இலக்கியம் என்பது சமூக, கலாசார, பொருளாதார, அரசியற் காரணிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தால் கட்டமைக்கப்படுவது. நமது செயலை, உழைப்பை நிர்ணயம் செய்யும் வகையில்

அவ்வதிகாரம் கருத்துக்களை உருவாக்கி நம்முன் திணிக்கிறது. மனம் என்பது கூ அவ்வதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டதுதான் மொழி என்பதும் கூட. -
இன்று, இலக்கியத்தைப் பிரதி என்று அர்த்தப்படுத்தி - மூலப்பிரதி என்றொன்றில்லை, வாசக அனுபவத்துக்கு ஏற்றபடி பிரதி மாற்றம் அடையும்' என்கிறார்கள், படைப்பாளி இறந்து விட்டான். அதாவது அவனுக்கு முக்கியத்துவம் இல்லை. ஒருவன் ஏதாவது எழுதுகிறான் என்றால், கலாசாரமும் சமூகமும் தான் தன்னை, அவன் மூலம் மீள எழுதிக் கொள்கிறது என்று கூறுகிறார்கள்.
இவ்விடத்தில் எனக்கு உடன்பாடான சுந்தரராமசாமியின் கருத்தைக் கூறி, எனது பதிலை முடிக்கிறேன். ‘புதிய சிந்தனைகளின் அறிமுகங்களை நான் வரவேற்கிறேன். அந்தச் சிந்தனைகளை, நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவற்றின் பாதிப்பையும் பெற வேண்டும். அந்தச் சிந்தனைகளுக்கு முற்பட்ட வையெல்லாம் காலாவதியாகி விட்டன என்ற பாவனை உண்மையில்லை. சு.ராவின் இக் கூற்று பல அர்த்தங்களை தன்னுள் பொதித்து வைத்துள்ளது என்றே கருதுகிறேன்.
இந்தக் கருத்து நிலைக்கு இலக்கிய வடிவம் கொடுத்தவராக, தமிழவனைக் குறிப் பிடலாம். வேறொரு தளத்தில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்ற வர்களும் இப்புது மோஸ்தர்களால் கவரப்பட்ட வ“களே.
*உங்கள் கலைவாழ்வோடு தொடர்புடைய பிற ஆர்வங்கள் பற்றிக் கூறுங்கள், இத்தகைய கலை ஈடுபாடுகள் உங்கள் எழுத்தைச் செப்பனிட உதவி
உள்ளனவா? W
கலைவாழ்வு என்ற பெரிய வார்தையைப் பயன்படுத்த வேணுமா? லெளகிக அழுத்தங் களோடு நான் ஏதோ எழுதுகிறேன். எனது எழுத்துலக வாழ்க்கை மிகவும் எளிமையானது. தன்முனைப்போ, அகங்காரமோ இல்லாத ஒன்று. எழுத்துக்கு அப்பால், எனது ஆர்வங்கள் என்று பார்த்தால் - நாடகம், சினிமா, சங்கீதம், ஓவியம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டு.
குழந்தை சண்முகலிங்கம் அவர்களது நாடகங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் பிரதியாக்
தூண்.10

Page 13
கம் செய்த, அல்லது நெறியாள்கை செய்த, அனேக நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். இத்துறையில் கணிசமான பங்களிப்புச் செய்த வேறு பலரும் இருக்கிறார்கள். அவர்களில் எனக்கு தாசீசியஸ், சிதம்பரநாதன், மெளனகுரு, சிவயோகன், தேவானந்த், ஜெய்சங்கர் ஆகியோரைப் பிடிக்கும். விசேட கவனத்துக் குரிய இன்னுமொரு நெறியாளர் பாலேந்திரா. பாலேந்திரா ஆனந்தராணி தம்பதியினரது பங்களிப்பு அளப்பரியது. புலம்பெயர்ந்த நிலையிலும் அவர்களது பணி தொடர்கிறது.
சினிமா எனக்கு மிகவும் பிடித்த ஊடகம். உலகத்தரத்திலான உன்னத இயக்குநர்களின் பரிச்சயம் எனக்கு உண்டு. அவர்களது தரமான சில படங்களைப் பார்த்திருக்கிறேன். உதாரணங் கள் சில: போர்க்கப்பல் பொட்டம்கின், வேலை நிறுத்தம், ப்ர்ச் வுட், கோழை, ரோமியோ யூலியட்டும் அந்தகாரமும், பதர்பாஞ்சாலி, அகன்துக், அபராஜிதோ, பியானோ வாசிப்பவன், கம்பெரலியா, பேர்னாட்டா அல்பாவின் வீடு, தபாற்காரன், ரூ மென் இன் த சிற்றி. இன்னும் ક6o.
சங்கீதம் என்று வரும்போது சாஸ்திரீய சங்கீதத்துடன் எனது அனுபவம் மட்டுப் படுத்தப்பட்டு விடுகிறது. நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், வாய்ப்பாட்டு என்று கேட்டு ரசித்திருக்கிறேன். பழைய தலை முறைக் கலைஞர்களான எம்.எஸ்., எம்.எல்.வி., மதுரைசோமு, மதுரைமணி, செம்மங்குடி, செம் பை, அரியக்குடி, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், நமது என்.கே.பி. ஆகியோரது இசையை நேரடியாகக் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. புதிய தலைமுறையினரில் என் னைக் கவர்ந்தவர்கள் என, சுதா இரகுநாதன், ஜேசுதாஸ், நித்தியழரீ, செளமியா, உன்னி ஆகியயோரைக் கூறலாம். ஈழத்தில் பத்மலிங்கம், திலகநாயகம்போல், பரமேஸ்வரி கணேசன் ஆகியோர் நன்றாகப் பாடுகிறார்கள்.
ஓவியமும் எனக்குப் பிடித்த இன்னொரு கலை ஊடகம். எனக்கு ஒவியர்களான மாற்கு, கைலாசநாதன், சனாதனன் ஆகியோரது போர்க்கால ஒவியங்கள் பிடிக்கும். நமது மண்ணும் மக்களும் பட்ட அவலத்தை, தனது தூரிகையின் சுழற்சியில் கொண்டுவந்த, சந்தானத்தின் ஒவியங்களின் தீவிரத் தன்மையும் அழகும் துயரமும் எனது மனதைத் தொட்ட

துண்டு. பிக்காஸோவின் புகழ்பெற்ற ஒவியங் களான குவர்ணிக்கா, ஆவிக்னான் நங்கையர் ஆகியவற்றைப் பார்த்துப் பரவசப்பட்டிருக் கிறேன். கிராமங்களில் இந்திய ஆன்மாவைக் கண்டு, பரவசமடைந்த அம்ரித்ஷேர்கிலின் ஒவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை யாகும். இந்தக் கவர்ச்சிக்கு அவரது ஓவியங்கள் அதிக அளவு distortion இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய மக்களின் ஏழ்மையை, தன்முனைப்பு அழிந்த பணிவை, தனது ஒவியங்களில் இவரால் கொண்டு வரமுடிந்திருக்கிறது. இன்னும் ராம்குமாரின் 'நிழலும் ஒளிக்கும் இடையில்’ எனும் ஓவியம் கலைசார்ந்த ஒரு கிளர்த்தலை எனக்குத் தரவே செய்கிறது.
எந்தக் கலை வெளிப்பாடுமே படிப்ப வனுக்கும், பார்ப்பவனுக்கும், கேட்பவனுக்கும் அனுபவப் பகிர்வையும் உளத்தொடுகை யையும் நுண்ணிதின் நுண்ணிதான புலன்வழி பரவச உணர்வையும் தரும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த வகையில், இக்கலை ஊடகங்களின் கவர்ச்சியும் ஈர்ப்பும் எனது எழுத்தைச் செப்பனிடவே செய்துள்ளன. எந்த ஒரு படைப்பாளியும் இத்தகைய அனுபத் தேட்டம் பெறுதல் அவர்களது படைப்பு ஆளுமை யை வலுப்படுத்த உதவும் என்பது எனது அனுபவம் சார்ந்த உண்மையாகும்.
*தமிழ் சினிமாவின் நிலை பற்றி ஏதாவது
கூறுங்கள்.
தமிழ் சினிமாவைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது. நமது திரைப்படங்கள் வர்த்தக நோக்கையே முதன்மைப்படுத்துவன. நமது சினிமா வியாபாரிகளிடமிருந்து நுட்பமான, தற்புதுமை நிரம்பிய திரைப்படங்களை
தூண்டி1

Page 14
எதிர்பார்க்க முடியுமா? அப்படி எதிர்பார்ப்பது பேதமை.
சினிமாவை ஆக்க ரீதியாக வளர்த் தெடுத்து, அதற்கொரு குணத்தைக் கொடுக்க இந்த வியாபாரிகளால் எப்பொழுதுமே முடிவ தில்லை. கலைஞர்களாகவோ, தீவிர விசாரம் மிக்கவர்களாகவோ இவர்கள் இருந்ததில்லை. சினிமா எனும் கட்புல ஊடகத்தின் முழுமையான புரிதலும் இவர்களுக்கு இல்லை.
இருந்தபோதும், சில மேதைகள் தமிழ் சினிமாவை - அதன் பயன் நோக்குக் கருதி, வளர்த்தவர்கள் என்று கூறமுடியும். அந்த வகையில் கே.ராம்நாத், பி. யூரீதர், பாரதிராஜா ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.
எழுபதுகளின் பிற்கூற்றில்தான், நல்ல திரைப்படங்கள் எனத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட திரைப்படங்கள் சில, தமிழில் வருகின்றன. பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்', ஜெ. மகேந்திரனின் ‘உதிரிப் பூக்கள், ஜி.துரையின் ‘பசி ஆகியன குறிப்பிட்ட கலை நேர்த்தியை அண்மித்த படங்கள் எனலாம்.
பாலுமகேந்திராவின் வருகையோடு, தமிழ்த் திரையுலகம் தரமான கலைஞர் ஒருவரைப் பெற்றுவிடுகிறது.
வாழ்வின் ஒரு பகுதியை - வளரிளம் பருவத்தின் மெல் உணர்வுகளை, அவலங் களை, சபலங்களை, சின்னச்சின்ன சுகங்களை, ஆழமான துக்கங்களை- கிராமியச் சூழலில், மரங்கள் அடர்ந்த, மழை பட்டுக் கசியும் செம்மண்பாதைகளில், பசியதடங்களில், வயல்
வரப்புகளில், புதுப்புனலின் சலசலப்பின் பின்னணியில் - பாலுமகேந்திராவின் கமரா
கவிதையாக்கிவிடுகிறது.
இவரது மூடுபனி, சந்தியாராகம், வீடு, மறுபடியும் ஆகியவற்றையும் நல்ல படங்க ளாகக் குறிப்பிடலாம். இன்னுமொரு நல்ல கலைஞர் ஜெ. மகேந்திரன். சாதாரண மக்கள் தயக்க மேதுமின்றி நெருங்கி வரத்தக்க இடை p566). ULIris6061T (Middle cinema) 3615 எடுத்துள்ளார். s

இவர்காட்டும் திரைமாந்தர்கள் ஏதோ ஒருவகையில் குறைப்பட்டவர்கள். முழுமையற்ற வர்கள். கைநழுவிப் போன பூரணமின்மையை தீவிரமாக உணர்பவர்கள். முழுமையை நாடும் இவர்களது முயற்சி பொதுவாகத் தோல்வி யையே இவர்களுக்குத் தருகிறது. இருந்த போதும், வாழ்க்கை மீதான ஓர் ஆத்மார்த்த பிரீதி, தளர்ச்சியற்ற பிடிப்பு இவர்களுக்கு என்றும் மாறுவதில்லை.
உதிரிப்பூக்கள் எனும் மிகச் சிறந்த படத்தைத் தந்த இவரது ஏனைய நல்ல படங்களாக - பூட்டாத பூட்டுக்கள், நண்டு ஆகிய வற்றைக் கூறலாம்.
சினிமா மொழியைக் கையாள்வதில் பூரண ஞானமுள்ளவர் மணிரத்தினம். இவர் நாயகன், அஞ்சலி போன்ற நல்ல படங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார். இவர் தவறான அரசியல் உள்ளடக்கங்களைக் கொண்ட Bombay, ரோஜா, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், இருவர் போன்ற படங்களையும் உருவாக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு மிக அண்மையில் கிடைத்த இயக்குநர் தங்கர்பச்சான். இவர் தேர்ந்த ஒளிப்பதிவாளரும் கூட. கிராமிய அழகையெல்லாம் மிகுந்த பொச்சடிப்புடன் சொல்ல விரும்பும் இவரது படங்கள் அழகி, சொல்லமறந்த கதை என்பனவாகும்.
அழகி திரைப்படம் - சண்முகம், தனலட்சுமி ஆகியோரது வளரிளம் பருவக் காதலின் வெண்சூட்டை, இதத்தை கவிதையாக் கித் தருகிறது.
பிராமண சமூக ஆதர் சங்களைக் கேள்விக்கு உட்படுத்தும் பரதனின் ‘சாவித்திரி’, இந்தச் சமூக அமைப்பில், பெண் என்பவள் ஒடுக்கப்பட்டவள், இரண்டாம்பட்சமானவள் எனும் கருத்தியலை உடைக்கும் ருத்ரையாவின் அவள் அப்படித் தான், அரசியல்வாதிகளின் ஆசாடயூதித்தனத்தையும் மக்களின் வாழ்நிலை அவலத்தையும் தத்ரூபமாய்த் தரும் கே.பாலச் சந்தரின் ‘தண்ணிர் தண்ணிர்’, அழகிய கட்புலவிருந்து படைத்தபடி, அரசியல் பேசும் சந்தோஷ்சிவனின் "பயங்கரவாதி' (terrorist), ஜெயகாந்தனின் ‘சிலநேரங்களில் சில
தூண்.12

Page 15
மனிதர்கள்', பத்திராஜாவின் பொன்மணி ஞானரதனின் ‘முகங்கள்’, ‘காற்றுவெளி, என்பனவும் தமிழில் வந்த நல்லபடங்கள். .
12. சமகால இலங்கை அரசியல் பற்றிய
உங்களுடைய அவதானிப்புகளைக் கூறுங்கள்.
மரணம் கொடுமையானது. மரணம் நமது வீடு தேடி வந்து தட்டிய காலம் ஒன்றுண்டு. இன்று சற்று அமைதிபோல. ஏதோ ஒன்று. இது அமைதிக்கான பூபாளமாயின் அந்த சங்கீதம் சாஸ்வதமாக வேண்டும்.
உள்நாட்டுப் போரால், பலநிலைகளில் சீரழிந்து போன நாம், அமைதியை, சமாதான சகவாழ்வை விரும்புவது வியப்பான விஷய மல்ல.
பல வழிகளில் இப்போரினால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். சிங்கள, முஸ்லீம் மக்களும் தான். உயிர் இழப்பு, உறவினர் இழப்பு, பொருள் இழப்பு - இதனடியான துயரம், மன அழுத்தம் சொல்லி மாளாது.
இந்த அழிவுகளுக்கெல்லாம் - மாறி மாறி வரும் சிங்கள பேரினவாத அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். தேச நலனிலும் பார்க்க, மக்களது சுபிட்ச விாழ்விலும் பார்க்க, தமது சுயநல அபிலாசைகளையே அரசியலார் முதன்மைப்படுத்துகின்றனர். அதன் வழி, தேசம் மூளியாகி நிற்கிறது. இந்தியப் பூதம் பூச்சாண்டி காட்டுகிறது. அதன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நலன்களில் அக்கறை கொள்வதில் தவறேதுமில்லை. அப்பேணுகை, நமது தேசியத்தையே அழித்து விட முனைப்புக் கொள்வது தான் நமக்குக் கவலை தருகிறது. திறந்த பொருளாதாரத்தின் அபரிமித பொருளிட் டலையும் பொருளாதார நலன்களையும் முழுமையாக பெற்றுவிடத் துடிக்கும் வல்லரசு களினதும் பணம் படைத்த நாடுகளினதும் பிணந்தின்னிப் போக்கும் பார்வையும் நமது வாழ்வுக்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத் தலாகவும் உள்ளன. இவை எல்லாவற்றையும் மீறி, நமது தேசியம் வாழ வேண்டும். வாழும்ா?

சமாதானம் பற்றிய பேச்சுக்களும் அதனை நோக்கிய நகர்த்தல்களும் சந்தோஷம் தருவதாக இருந்த போதும்-இலங்கையில், அண்மைக் காலத்தில் ஜனாதிபதி அவர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் சவடால் தனங்களும் பிரதமரின் சறுக்கல்களும் பழைய குருடி கதவைத் திறவடி என்ற பாணியிலேயே நடைபெற்று வருகிறது.
தமிழர் தேசிய நலன்கள், தாயகக் கோட்பாடு, சுயநிர்ணய உரிமையோடு கூடிய பூரணசுயாட்சி என்பனவற்றைத் தமிழர்கள் அவாவி நிற்கிறார்கள். புலிகளின் தேசியத் தலைமை இதனை அரசுக்கும் சர்வதேச அரசியல் வல்லூறுகளுக்கும் தீர்க்கமாகப் பல சந்தர்ப்பங்களில் உணர்த்தியுள்ளது. உணர்த்தி வருகிறது. சிதைந்து போன தமிழர் தேசத்தைக் கட்டி எழுப்ப, புலிகள் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கான வரைவை அரசின் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்தத் தேசத்தின் வாழ்வு, அந்த வரைவு செயல்வடிவம் பெறு வதில் ஓரளவு தங்கி உள்ளது. நிரந்தர சமாதானமும் சுபிட்சமும் ஏற்படுவதற்கு முன்னோடியாக இந்த வரைவு அரசால் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.
சிங்கள மக்களும் - குறிப்பாக முஸ்லிம் மக்களும் தங்கள் நலன்கள் பேணப்படுவதை உறுதி செய்து கொண்டு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெண்ணை திரண்டுவரும் போது தாழி உடையும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. வெண்ணை திரளுமா? பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர எமக்கு வேறு வழி இல்லை.
தூண்:13

Page 16
வார்த்தை
- அஸ்வகோஷ்
ஆதியில் வார்த்தை இருந்தது ஜலத்தில் அலைந்தபடி,
கருத்தை முந்தும் கதைகளிருந்தன
பரம்பரை யலகுகளைச் சுமந்தபடி,
திசைகளுக்குப் புலம் பெயர்ந்த பறவைகளின் அவல வார்த்தை பாழ்வெளியிற் படர்ந்திருந்தது பேச்சுரைக்க வார்த்தையற்று தோற்ற முகங்கள் தொங்கின வீட்டுச்சுவர்களில்,
தலைமக்கள் வழி வந்த வார்த்தை முதுசொமாய் வந்தது வழக்கிழந்த மொழி போல். மலிந்ததும் சந்தைக்கு வந்தன.
ஆதியில் இருந்த ஜயம் அழுக்கடைந்து போனதால் வார்த்தையின் ஜீவன் அடங்கிப் போனது.
சாரமற்ற வார்த்தையுடன்
சரிதை தொடர்கிறது.

箕裘 படம் - தாசனாதனன்
தூண்.14

Page 17
வென்முத்துக் காய்கின்ற நீலா முற்ற
சு.வில்வரத்தினம்
நீராடு துறைகள் குறித்து நீயும் நானும் அடிபட்டுக் கொண்ட காலத்தில் காய்ந்து வற்றிக் காணாமல் போனதொரு பேராறு இயல்பில் திரிந்து மேலும் பாலையானது
நிலமும் தான், மனமும் தான் ܝ
முட்செடி சப்பும் ஒட்டகம் ஆயிற்று வாழ்வு.
முட்செடி சப்பியபடி நடந்த பாலையெங்கும் வாழ்வின் உதிரம் வழித்தோடிற்று புதுப்புனலது வெனக் குதூகலித்தோம்: கூவினோம் : குளியலிட்டோம் குளியலிட்டெழுந்ததெல்லாம் அவரவர் முள்ளுண்ட வாழ்வின் செந்நீர்ப் பெருக்கென்பதை எவருமே அறியவில்லை.
ஆயினும், முள்வழி நடந்த களைப்பில் அமர்ந்து ஓய்வுறும் போதிதில் காண்க,
நாம் இனிதாடிய நீர்த்துறை, நீயும் நானும் காதலர் தம்மொடும்
ஆடிக்களித்த அன்பின் அகத்துறை, காதல் நீர் வற்றிப் போயினதே
கலகலத்த மென் பறவைகள் காணோம்.
 
 

படம் - தாசனாதனனி
துயர்ப்படுவோம் அன்ப, அவரவர் நீர்த்துறையில் நீர்ாடும் சுதந்திர ஏற்பாட்டை அநுமதிக்காத 'பெரு நீரோட்டம்,நிகழ்த்திய பிரளயத்தில் இருகரைகளும் சேதப்பட்டன அல்லவா
எல்லாம் வழிந்தோடஎஞ்சியதென்ன? இரத்தப் பாலைமட்டுமே. பாலைவெளியின் சிறுநெருஞ்சிக் காட்டினிடை நானழுத கண்ணிரை உனது கைகளில் தருகிறேன். நீயழுதது நிஜமானால் உன் க்ண்ணீர்த் திவலை முத்துகளை எனது கைகளில் தா. இவை கால வெயிலில் ஆவியாகிப் போகக் கூடாதவை.
தேசத்தின் நேச முன்றிலிலே பரப்பி வைப்போம். கண்ணிர்ப் பரல்கள் நாளடைவில் நம்பிக்கைப் பரல்களாகி விடும்
வெண் முத்துக்காய்கிற நிலா முற்றம் போல,
வெண் பரல்களை தாலாட்டும் நீரோட்டம் போல எமக்குள் ஏதோ பெருக்கெடுப்பது போலிருக்கிறதல்லவா? மலை முகட்டில் பெய்யும் மழை நீர் வழி கிழித்துப் பாய்வதெனப் பாயாதா பேரன்பின் பெருக்கு நம் இருகரையும் சிலிர்ப்பெய்த,
தூண்.15

Page 18
பா. அகிலன்
மிதுனம் -O
பற்களி ன் விஷ வாயில்கள் திறந்தன
சிதைந்த விலங்கின் முற்றிய பித்தாகினேன்
தேகச் சலாகைகளிடையே பிரித்துருவ முடியாத வெறுப்பு
ரத்தச் சீழாய் கரைந்தொழுகியது உனது இதழ் தோலோடு கிழிந்து
பிடுங்குண்ட மயிர்கொண்டது எனதுகை
கோமாளிகளும், வில்லன்களும் கதாநாயகர்களும் உள்நுழைகிறார்கள் ஒருவருக்குள் ஒருவர்
தேர்ந்த நடிகனிலும் சிறந்த நடிகனானேன்
மோகம் கண்டிப் பழுத்து புழுத்து மக்கிய படுக்கையின் கீழ் அரவாய் ஊர்ந்து சுருண்டது கடிகாரம்
 

மிதுனம்- 03
ஞாபகத் தினுசுகளை உக்கிரமாய் அரிக்கிறது பூச்சி
சிதம்பி வேறுபடுத்த முடியாமல் ஒட்டி முட்டுகின்றன சொற்கள்
கிண்ணங்களை நிரப்புகிறேன் பொய்களால்
புன்னகையில் நச்சுப்புற்கள்
நீயறியாது உனது நரம்புகளை உருவி அரியும் கத்தி வேறுயாருடையதும் அல்ல
அன்பு ஒரு பொய் வாழ்க்கை
ஒரு முட்டாளின் கோடைக்கனவு
மழையில் அவிழ்கிறேன்
ဖြ!éနှံ့..16
பித்தனாக.

Page 19
வீட்டின் முன் சடைத்து, பரந்து கிளைவிட்டிருந்த மாமரம் பிஞ்சும் காயுமாக நின்ற அந்த நாட்களில் நவுக்கிரி, மா சாக் காய்ச்சல் காய்த்ததாக அம்மம்மாவின் மரணத்திற்கு வந்தவர்கள் பேசிக் கொண்டதை அம்மா அடிக்கடி நினைவு கூர்ந்திருக்கிறார்.
வேதக்கோவில் சூழலை நிறைத்திருந்த
நாவல் மரங்களும், தாமரைக் குளத்தடி மருத
மரங்களும், நெல்லிமரம் சாட்சியாக நினைவில் நிற்கும் பள்ளிக் கூடமும் இவனுக்கு ஞாபகம்.
முனியப்பர் கோவிலில் விழுதோடு பரவி நிற்கும் ஆலமரம். பணிக்கர் கோயிலடி வாகை மரங்கள், நாச்சிமார் கோயிலடி அரசமரம், இவை யாவும் இவனுக்கு காலகாலம் இளைப்பாற்றி கொடுத்த விருட்சங்கள்.
வீட்டின் மேற்குப்புற ஒழுங்கையும், வெள்ள வாய்க்கால் சந்தியும் இணையும் மூலையில் ஒரு பெரிய இலுப்பை மரம் நின்றதுவும் அந்த மரத்தின் கீழ் ஏதோ ஒரு குடும்பப் பகைமை காரணமாக கடைக்காரத் துரைச்சாமி உலக்கையால் பிடரியில் அடித்து கொல்லப்பட்டுக் கிடந்தமையும் இவனுக்கு மெல்லிய சலனமாக அடிக்கடி நினைவில் தென்படும்.
கேரளத்து மனிதர் ஒருவர் இவனது வளரிளம் பருவத்து பாடசாலை ஆசிரியராக இருந்திருக்கிறார். பல கணித பாடநூல்களும் இரசாயன நூல்களும் எழுதிய அவ்வாசிரியர் இவனுக்கும் இவனது சகமாணவர்களுக்கும் விஞ்ஞானம் கற்பிக்க பாடசாலைக்கு அருகில் இருந்த வேப்பமரத்தின் கீழ். “ஞான் இப்பொழுது கேள்வி கேட்கும். நீங்கள் சரியாக சொல்லாமல் விட்டால் ஞான் உங்களுக்கு அடிக்கும்” என்று கூறிக்கூறி விஞ்ஞான பாடத்தை ஊட்டியமை

பற்றியும் இவன் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.
மரங்களின் தொடர்பு இவனுக்கு எப்போதும் இருந்திருக்கிறது. மரங்களைப் பார்க்கும்போது இவனுக்கு ஏற்படும் ஏதோ ஒருவகை பரவசம் தனக்கு மட்டும்தானா, அல்லது எல்லோருக்கும் இப்படித்தானா என்று இவன் யோசிப்பான்.
விருட்சங்களின் பெயர்களே ഉണ് களுக்கும், இடங்களுக்குமாக நுட்பமாக நிலைத்து விட்டமை பற்றியெல்லாம் இவன் சிந்திப்பதுண்டு. அரசடி, புளியடி, நெல்லியடி, பூநாறிமரத்தடி இப்படிக் கணக்கற்ற அடை யாளங்கள்.
பெயரே இல்லாத மரம் ஒன்றுக்கு பெயரில்லா - மரம்' என்ற பெயர் வந்து. பஸ்பிரயாணிகள் இறங்குகின்ற தரிப்பிடத்திற்கு பெயரில்லா மரத்தடி' என்கின்ற பிரபல்யமான ஒரு பெயராக நிலைத்து விட்ட தன்மையும் இவனறிவான்.
சந்நிதி கோவில் சுற்றாடல் மரங்கள், வல்லிபுரக்கோயில் சூழலை செழுமைப் படுத்துகின்ற பெருவிருட்சங்கள் சுட்டிபுரத்து அம்மன் கோயில் மரங்கள், கரிக்கோப்புச் சுடலையின் சவுக்குமரங்கள் யாவுமே இவனுக்கு அற்புதமானவை. Îà
நண்பர்களின் உறவு போல தனிமையின் சுகானுபவத் திளைப்பிற்கு மரங்களே இவனுக்கு தஞ்சமாகின காலம் ஒன்று முன்பு இருந்தது.
வாழ்வின் சலிப்பு சில வேளைகளில் தன்னையே அன்னியமாக்கி பிறரால் அன்னியமாக்கப்பட்டு சர்வமும் ஒடுங்கி தனிமைப்பட்டுப் போன காலங்களில் மரங்களின் நிழல்களே இவனுக்கு ஆதரவு தந்திருக்கின்றன.
தூண்.17

Page 20
பெரும் புயலொன்றில் மாறம்புலப் பிள்ளையார் கோவில் முன்றலில் நின்ற ஆலமரம் வேரோடு சரிந்தமை இவனுக்குள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
s அந்த ஆலமரத்தின் கீழ் புதுவருடப் பிறப்பன்று போர்த்தேங்காயடியில் எத்தனையோ காலிக்கையான்கள் சிதறுண்டமையும் இவனுக்கு ஞாபகத்திலிருக்கிறது.
பூமாஞ் சோலையிலிருந்து வரும் வெடிப் பொன்னப்பா தன் கைபடச் செய்த பீரங்கி வெடி ஒன்றைக் கொழுத்தி போர்த்தேங்காய் அடியை ஆரம்பித்து வைப்பதுவும், அதே வெடிப் பொன் னப்பா விபத்தொன்றில் தனது வெடிகளினாலேயே போர்த்தேங்காய் போல சிதறுண்டு போனமையும் இவனுக்கு நினைவிலுண்டு.
ஷெல்லடி, ஆட்டிலறித்தாக்குதல், ஹெலித் தாக்குதல் போன்ற சம்பவங்கள் சாஸ்வதமாகிப் போய்விட்ட இன்றைய சூழலில் வெடிப் பொன்னப்பாவின் விபத்து மரணம் மிகமிகச் சாதாரணமாகிப் போய்விட்டாலும் அன்று அது மிக ஒரு ஆச்சரியமானதும் அதிசயமானதுமான ஒரு நிகழ்வேதான்.
வெடிப் பொன்னப்பாவின் வீட்டின் வாசலில் பெரியதொரு கொய்யா மரம்
 

படம் - சா.சிவரூபன்
நின்றதுவும் வெடி விபத்தோடு அந்த மரம் செத்துப் போனமையும் பெரியதொரு துன்பியல்
நிகழ்வாகவே இவனுக்குத் தெரிந்தது.
இவனும் செல்வம், நவம், ராசமூர்த்தி ஆகியோரும் அந்தக் கொய்யா மரத்தில் பல நாட்கள் பல மணித்தியாலங்கள் செலவிட்ட மையும் இவனால் மறக்க முடியாதிருந்தது.
இவனது பாலிய கால நண்பன் ஜெயக் .ொடி மூன்று நாள் காய்ச்சலில் மரணித்துப் பேனமைக்கு பொடுங்கர் வளவு விளாத்தி மரத்தில் குடி கொண்டிருந்த ஊத்தைகுடியன் பேயின் வேலைதான் காரணம் என்ற கசமுசப்பு. கேட்ட காலமொன்றும் இவனுக்கு சித்தித் திருந்தது.
காலா காலம் மரங்களோடு சம்பந் தப்பட்டதாகவே இவனது வாழ்வு கழிந்திருந்தது.
விசுவமடு காணிப்பட்டாளத்துக் காம்பில் கடமையாற்றிய போது தான் வீரை மரங்களும் பாலை மரங்களும் அறிமுகமாகின.
நண்பனொருவனின் பிரிவாற்றாமை யைத் தாங்கிக் கொள்ள முடியாமலேயே இவன் காணிப்பட்டாளத்தில் தன்னை இணைத்துக் கொண்டான்.
தூண்.18

Page 21
கல்லூரிப் படிப்பின் முற்றுப் பெறுகையின் வெறுமை, தொழில் தேடலில் காணிப்பட்டாளமே கைகொடுத்தது. ஒட்டுச் சுட்டான், விசுவமடு என இரு காம்புகளில் பல நண்பர்கள் இணைந்து கொள்ள ஒரு மழை நேரத்து மதிய வேளையில் கூப்பன் அடிக்கட்டையுடன் பஸ்சேறி பரந்தன் சந்தியால் திரும்பி கண்டாவளை கடந்து கட்டிமுடிக்கப்படாத நெத்தலியாற்றுப் பாலத்தின் கீழாக பெருமரங்கள் சூழப் பெற்ற விசுவமடு காம்ப் வாசலில் இறங்கி. பைஜாமா போட்ட ஒ.ஐ.சி.யின் முன் நின்றது இப்போதும் நினைவில் பசுமையாக உள்ளது.
ஒரு காலம் கல்லூரியின் சாரணர் படையில் சேர்ந்து காக்கி உடுப்புப் போட்டதன் பின்னர் காணிப்பட்டாளத்திலே தான் காக்கி அணியும் சந்தர்ப்பம் கிட்டியது. சிவப்பு நிற கன்வஸ் சப்பாத்து. இரண்டு கால் சட்டை, கோல்டர் வைத்த இரண்டு சேட், ஒருபிரம்புக் கூடை, மண் அள்ளும் தாச்சி, மண்வெட்டி ஒன்று, சாப்பாட்டுத் தட்டு ஒன்று, தேநீர் குடிக்கும் கைபிடி அலுமினியக் குவளை ஒன்று என்பன கையொப்பமிட்டு இவனால் பொறுப்பேற்கப் ملقـال الا
அதிகாலை எழுந்து தேநீருக்கான வரிசையில் காத்து நின்று புறப்படும் உழவு இயந்திரத்தில் தொற்றி ஏறி தொலைவில் கீப் கணக்கில் மண், வெட்டி கைகளில் கண்டல், கொப்புளங்கள் ஏற்பட்டு மாணிக்கப் பிள்ளையார் ஆற்றில் குளித்து, சிவப்பு நிறப் பீற்றுட்டுடன் சோறும் பானும் சாப்பிட்டு. இந்த வாழ்க்கை ஒரு மூன்று மாதங்களே நீடித்தது.
இன்று காப்டன், மேஜர், லெப்ரினற் கேர்னல் என்று பல மாவீரர்களைப் புதைத்தாகி விட்டது. இவனோடு இருந்த காணிப்பட்டாளக் காரர்கள் சிலரும் இதில் அடங்கலாம்.
பாலை மரங்களின் கீழ். வீரை மரங்களின் கீழ். பெயர் தெரியாத பெரு விருட்சங்களின் கீழ். சிநேகித பாவத்துடன் இவனோடு. உணவருந்திய. பட்டாளத்துப் பொடியள் பலரை போர்க்கோலத்தில் இவன் கண்டிருக்கிறான். தென்பகுதியிலும் ‘71’ன் ஆரம்ப காலத்தில் கிளர்ந்த ஒரு சம்பவத்தில் கணிசமாக இணைந்தவர்களும், இறந்தவர்களும் இவனைப் போல் காணிப்பட்டாளத்தைச் சேர்ந்த வர்கள்தான் என்பதையும் இவன் அறிவான்.

அப்போது வன்னியின் பெருவிருட் சங்கள் எதிர்காலத்தில் போர்க்கருவிகளாக மாறும் சாத்தியம் ஏற்படும் என்பதை இவன் கிஞ்சித்தும் யோசித்திருக்கவில்லை. பெரும் பெரும் விருட்சங்கள் நிழல் தந்த காலம் போய் இளையோர்களைத் தாங்கி நின்று போர் புரிந்தமை உண்மையில் அதிசயமான ஒன்று தான்.
அமைதியும் சாந்தமும் சிநேகமும். மனிதமும். நிறைந்த மக்கள். தமது குணாதிசயங்களிலிருந்து விடுபட்டுப் போக ஏதுவான நிர்ப்பந்தம் போலவே, விருட்சங் களுக்கும் நேர்ந்தமை தவிர்க்க முடியாத துன்பமாக இருந்தது.
யாழ்ப்பாணத்தின் பழைய பஸ் நிலைய சூழலும் பெருவிருட்சங்களும் இளைப்பாற்று மண்டபமும். சிவசக்தி கூல்பாரும். சருகுத் தாளில் சுற்றப்பட்டு அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் அப்பிள் பழங்களும், கொத்துக் கொத்தாக தொங்கும் முந்திரிப்பழங்களும், ‘குருவிச் சாத்திரக்காரரும், வடைவிற்போரும், நாய்க்குட்டி விசரியும் இவனுக்கு ஞாபகம் வருவதுண்டு.
புதிய பஸ் நிலையம் இடம் பெயர்ந்த பின் கொழுத்தும் வெயிலும், தகரக் கொட்டகையும், அக்காலத்திலேயே பழைய பஸ் நிலையத்தின் நிறைவை அடிக்கடி நினைக்கத் தூண்டுவதுண்டு.
இப்படியேதான் பருத்தித்துறை பஸ் நிலையமும், மார்க்காற்றும், புளியமரங்களின், நிழலும், சடுதியென ஏக்கத்துடன் மாறிப்போனமை கவலை தருவதாய் நிகழ்ந்தது. காணிப்பட்டாளக் காலம் போய் சிவப்பு அரசியல் சிந்தனைக்காட்ப டுவதற்கு சிலகாலம் முன்னர் விரும்பியோ விரும்பாமலோ நண்பர் சிலருடன் போதை வஸ்துவைப் பரிசோதிக்க விளைந்து துன்னாலை மண்பிட்டி அரசமரம், புத்தரின் ஞான தீட்சையை நினைவு கூரத் தக்க அனுபவத்தை ஏற்படுத்தி யமையும் இவனால் மறக்கமுடியவில்லை.
வாழ்வனுபவ விரக்தியின் எல்லை தொட்டு தற்கொலை செய்யும் மனோபாவத்தை நிராகரித்து ஒரு துறவு வாழ்வுச் சூழலில் கழிந்த காலங்களில் ஆனை விழுந்தான் சுடலையின் சவுக்கு மரங்களும் கிளைப்பனைகளும்,
தூண்.19

Page 22
மணற்குன்றுகளும் உறவுகளாகியமையும் இவனுக்கு நினைவிலுண்டு.
பனிகொட்டும் இரவில் போர்வையற்று வெற்றுடம்புடன் மரங்களின் கீழ் மெய் மறந்து இவன் தூங்கியிருக்கிறான். அந்த நாட்கள் என்றும் இனிமையானவை. இன்று போல் அல்லாது அன்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனம் மட்டுமே மனதை நிறைத்திருந்த தருணங்கள் அவை.
“கந்தையற்றை பொடியனுக்கு மூளை மாறாட்டம்”
ஊரில் இப்படி ஒரு கிசுகிசுப்பு அப்போது இருந்தது. அதையும் மீறி அவனது தீவிர சிந்தனைத் தெளிவு பின்னர் அவனுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்பட ஏதுவாகியது.
போர்க்குணாம்சம், எதையும் தீவிரத்து டன் சீர்தூக்கிப் பார்த்தல், தவறு கண்டு கொதிக்கும் போக்கு, இவை இவனுக்கு எதிரிகளை விட தோழர்களையே கூடுதலாக் கியது.
கஸ்தூரியர் வீதியில் ஒரு வானொலிப் பெட்டித் திருத்தகத்தில், இருபாலையில் ஒரு மில்லில், மட்டக்களப்பில் ஒரு தனியார் நிறுவனத்தில், மன்னாரில் ஒரு மீன் வாடியில், கொழும்பில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் என மூன்று மாதம், நான்கு மாதம் என - நிலைத்திருக்காமைக்கு இவனது நேர்மையும் விட்டுக் கொடுக்காத்தன்மையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
மன்னார் பழைய பாலத்தில் ஒரு மீன் வாடியில் இருந்தபோது வள்ளங்களில் ஏறிப் பயிற்சி பெறச் சென்றவர்களை இவனே வழியனுப்பி வைத்திருக்கிறான். ஒரு விருட் சத்தின் கிளைகள் இவையென இவன் எண்ணிய எண்ணம் பின்னர் பொய்த்துப் போயிற்று.
அம்மாவும் அப்பரும் இறந்துபட்ட பின்னர் ஏதோ ஒரு விபத்துப் போல திருமலை வந்து திருமணமாகி அமைதிப்படை, அதிரடிப்படை யாகி, பின்னர் அக்பர் கப்பலில் அவர்கள் இந்தியா திரும்பிய பின்னர், திருமலையில் நிகழ்ந்த குழப்பத்தில் கால் நடையாக மனைவி யுடன் நடந்து பெருவிருட்சங்களின் கீழ்

சமைத்துச் சாப்பிட்டு உறங்கி, வள்ளத்தில் ஏறி செம்மலையில் இறங்கி கிட்டத் தட்ட முப்பது இரவுகளையும் பகலையும் மரங்களின் கீழேயே கழித்திருக்கிறான்.
இன்று இவனுக்கு ஒரு மகனும் மகளும். மகன் பிறந்தகாலத்தில் திருமலையில் இருந்து வன்னிப் பாதையூடாக யாழ் சென்று கிளாலி யூடாக திரும்ப தாமதப்பட்டு வேலையிழந்த நாட்களில் வல்லிபுரக் கோவில் விருட்சங்களே இவனுக்கு ஆறுதலாயிற்று. ஆகாயத் தாக்குதல் கள் வலுப் பெற்றிருந்த அந்த நாட்களில் வைரவர் கோவில் வேப்பமரத்தின் கீழ் உள்ள பதுங்கு குழியுள் இவனது மனைவியும், மகனும், இவனுமாக பல தடவைகள் வியர்த்து விறு விறுத்தமையும் இவனுக்கு நினைவிலில்லா மலில்லை.
"இனிக்காணும் எப்படியாவது ஊருக்குப் போக வேணும்"
மனைவியின் பிடிவாதம் வென்று திருமலை திரும்பிய அந்த நாட்களும். வேலையற்று வீதியில் திரிந்த அந்த நிலமையும் இன்று மீள வேலை பெற்று இயந்திரமாகிவிட்ட நிலையும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட தொடர் நிகழ்ச்சியாக இவனுக்குள் இன்னும் இருக்கிறது. திருகோணமலை 3ம் கட்டை திருச்சிலுவை வயோதிபர் மடமும் அதன் மருங்கில் நிற்கும் அரச மரங்களும் பழைய எழுத்தாளர் ஒருவர் அங்கு அகதியாக மரித்ததுவும் பெருஞ் சோகமாக அவனுள் இன்னமும் கலந்து கிடக்கிறது. பின்னர் அடித்த புயலொன்றில் சர்வோதய நிலைய வெளிவாயிலுக்கு அருகாமையில் நின்று ஆல விருட்சம் வேரோ டும், வேரடி மண்ணோடும் சரிந்து விழுந்தமையும் இவனால் மறக்கமுடியாதது. யாழ்ப்பாணத் துக்காக பயணிக்கும் பலர் இவனிடம் இளைப்பாற்றி பெற்று பயணப்பட்ட காலம் போய் இன்று அரை நாள் பயணத்தில் யாழ் செல்லும் காலம் கனிந்திருக்கிறது. சகபயணிகளை ஒற்றராக கருதிப் பயணப்படும் போது பயறுமுறுத்தி நின்ற விருட்சங்கள் இன்று இலை அசைத்து வரவேற்பதுவும் விடை கொடுத்தனுப்பு வதுமான நல்நிலையும் சித்தித்திருக்கும் சூழ்நிலை ஏதோ ஒரு வகை உடன்பாடும் இசைவும் கொண்டு பேசி உறவுகொண்ட
20

Page 23
நண்பர்கள். இரத்த உருத்துக்கள் வித்தாகிப் போய் விதைக்கப்பட்ட சூழ்நிலையில் இன்னது தான் என எதிர்பார்க்காத ஒரு பேரமைதி. இது நிலைக்குமா. நிலைக்க வேண்டும்.
- இவனது திருகோணமலை வீட்டின் பின் புறமான வேலியின் நடுவே பெரியதொரு மாமரம்
நின்றது இவனுக்குத் தெரியும்.
மூன்று வருட அகதி வாழ்க்கை முடிந்து திரும்பிய போது. நிழலும். காயும் கனியும். எல்லையுமாக நின்ற அந்த மரம் இருந்த இடமே தெரியாது அயலகத்தவரால் வேரோடு பிடுங்கப்பட்டு. எல்லையும். காணியும். அபகரிக்கப்பட்டிருந்தது.
வீட்டின் முன்பக்கமாக நின்ற கத்தாப்பு LDIJ Líb மட்டும். தனித்து விடப்பட்டது. சிதைந்தழிந்து விட்ட வீடும். வளவும் அடையாளம் காணப்பட. கத்தாப்பு ஒன்றே. காரணமாயிற்று.
போர்காலத்திற்கு முன்னர். ஊரின் பெருவிருட்சங்கள் பல. சிறு கோயில்களாக சூலங்களுடன். நின்ற. நிலமை மாறி. ஆக்கிரமிப்பின். இன அடையாளங்களாக அரசமரங்களும் அதன் கீழ். புத்தர் சிலைகளும். உருவாகி விட்டமையை இவன் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.
விருட்சங்களே. இன அடையாளங் களா..? Y
இவனது காரியாலய களஞ்சியத்தின் முன்பாக பெரும் அரசமரம் ஒன்றும். சிவப்புக் காவிக்கோடு போட்ட சிறு பிள்ளையார் கோவிலொன்றும். வெய்யிற் காலத்தின் மதியவேளைகளில் அவை இரண்டுமே ஊழியர்களுக்கு ஆறுதல் தருவதும் இவனுக்குத் தெரியும்.
ஏதோ ஒரு ஏதேச்சையான துரித நடவடிக்கை மூலம். காரியாலய ஊழியர்களே. அப்பிள்ளையார் கோவிலை உருவாக்கியதாக இவன் பின்னர் அறிந்து கொண்டான்.
சுற்றிலும் உள்ள பெளத்தர்கள் கூட பிள்ளையாரை கும்பிட்டுப் போவதை இவன் அவதானித்துள்ளான்.

அரசமரம். காப்பாற்றப்பட்ட ஆச்சரி யம் . எப்போதுமே. இவனுக்குள் இருந்துள்ளது.
அந்த விருட்சத்தின். கிளைகளில் வெசாக் கூடுகள். வருடத்தில் ஒரு முறை. தொங்குவதும். பின்னர் அகல்வதும். பிள்ளையாரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அவரது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது மில்லை.
திருகோணமலையின். வெம்மைக்கு ஆறுதலாக இவ்வகை விருட்சங்களே இருந் துள்ளன.
நண்பர்களோடு சந்தோசமாக உரையாடு வதற்கு. இம்மரங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தோப்பாக விரிய வேண்டிய உணர்வு கள். சுருங்கி தனிமைப்பட்டுப் போய். நத்தையாக ஊரும். உணர்வுகள். ஆயி னும். அவற்றையெல்லாம் மீறி.எங்கெங்கோ தனிமைப்பட்டுப் போனாலும். நோக்கத்தில் ஒன்றுபட்டுப்போன. எண்ணங்களுடைய இளைய தலைமுறை வேரும். விருட்சமுமாக.
காரியாலய முன் வாயில் அரசமர இலைகள் மென் கற்றிலி. சலசலத்து ஒய்கின்றன.
புகை போக்கிகளுடன் கம்பீரமாக சூழலை மாசுபடுத்தி நிற்கும் தனியார் நிறுவனம் சூழலைப் பாதுகாப்பதற்கு மரங்களை நாட்டுங்கள். என விளித்து எழுதிய ஸ்ரிக்கர். இவனது காரியாலய மேசைக்கு எதிர்ப்புற கண்ணாடியில்.
இவனுக்குள் மெல்லிய புன்னகையும் எரிச்சலும்.
சமீப நாட்களாக காரியாலயம் கைமாறப்
போவதாகவும், இடமாற்றம் வரப் போவதாகவும், எழும் சர்ச்சைகள்.
காரியாலயத்தைப் பொறுப்பேற்பவர் கள். பிள்ளையாரையும் அரசமரத்தையும். இவர்கள் போல் பேணுவார்கள.?
விடைகாண ஏங்கும் பல வித. கேள்விகள். ?
21

Page 24
இடம்மாறிப்போகும் காரியாலயத்தைச் சுற்றி பெருவிருட்சங்கள் நிற்குமா..?
இதேபோல் அரசமரம். ஒன்று நிற்ப தற்கு பாத்தியதை இல்லை. வேப்பமரங்கள். நிற்கலாம்.? நிற்காதும் போகலாம்.
ஆயினும் என்ன..? விருட்சங்கள். எங்குமே உள்ளன. அவற்றின் கீழ் இளைப்பாற யார் தடுப்பார்.?
இவனின் அம்மாவின் அப்புவின் சடலம். அடக்கம் பண்ணப்பட்ட சவக்காலை நாவல் மரங்கள் சூழப்பட்டது. வேதக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தது.
இவனின் அம்மாவும். அப்புவும். அடக்கம் பண்ணப்பட்ட சவக்காலை. பழங்கோவிலடி என்னும். வேப்பமரங்கள்
சூழப்பட்ட ஒரு ஒதுக்குப்புறக் கிராமத்தைச்
சேர்ந்தது.
இவனது அண்ணன் மின்சாரம் தாக்கி
மரணப்பட்டபோது அடக்கம் பண்ணப்பட்டதும்
பழங்கோவிலடியில் தான்.
ஒப்பிரேசன் லிபரேசன் காலத்தில்.
எத்தனையோ வீட்டின் பின்புறங்களும், வீதிகளும்
மயானங்களாகின.
பூவரச மர விறகுகள் தேவைப்படாது. பழைய ரயர்களில் எரிந்தவர்கள். எத்தனையோ பேர்.
இப்போது இவனுள் ஒரு பெரு விருப்பு.
அம்மாவின், அப்புவின். அண்ணா வின். பக்கத்தில். தானும் புதைக்கப்பட வேண்டும்.
பெரு விருட்சங்கள் சூழப்பெற்ற பழங்கோவிலடிச் சவக்கலையில் அடக்கம் பெறவேண்டும்.
இவனுள். எப்போதும் போல. சலனமற்ற சிந்தனைகள்.
மகன் இயக்கதுக்குப் போய் விட்டதாக எழுதும் தங்கையின் கடிதம்.
மகன் வெள்ளைக்காரியைக் கல்யாணம் முடித்து விட்டமைக்காக கவலைப்படும் நண்பனொருவனின் தொலைபேசி. முனகல்.

ஊர்திரும்பும் ஆசையில் ஏக்கப்படும் வெளிநாட்டுவாசியாகிவிட்ட ஆசிரியர் ஒருவரின் புலம்பல்.
விரும்பாமலேயே வலிந்து விமான மேற்றி அனுப்பப்படும் அகதிப் புலம்பெயர் குடும்பங்கள்.
நண்பர்களாய். தோழர்களாய் அன்
போடு பழகியவர்களின் இழப்புகளும். பிரிவுகளும்.
தோழர். சிவராசா, தோழர் சிவஞானம்.
ஆயினும் வாழ்வு, நம்பிக்கை வேரூன்றி கிளைத்து விருட்சமாகவே நிற்கிறது.
காலம் மாறிப் பெய்யப் போகும் மழை நேரத்து அறிகுறி.
துளிர்விட்டிருக்கும் அரசமரத்தின். இலை. அசைவு.
சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம் வீசிய புயலில் வேரோடும் வேரடி மண்ணோடும் புரட்டப்பட்ட விருட்சங்கள் போல் . இவ்வருட மும் புயல் வீசுமா. மரம். சரியுமா..?
நிகழலாம். நிகழாதும் விடலாம்.
இவன் மனம். இலேசாகியது. யாழ்ப்பாணம். புலம் பெயர்ந்து வன்னிக்கு வந்தபோது. மனிதர்களுக்கு ஆறுதல்
தந்தவை. விருட்சங்கள் மட்டுமே.
மழை. வெய்யில். பனி. குளிர் மனிதர்களுக்கு. ஆறுதல். இளைப்பாற்றி. எல்லாமே. விருட்சங்கள், விருட்சங்கள் மட்டுமே. நெஞ்சுக்குள். இனம் தெரியாத. சுகம்.
பழங்கோவிலடியின் வேப்ப மரங்கள்., முனியப்பர் கோவில்., ஆலமரம். ஆனை விழுந்தான். கிளைப்பனைகள். வீட்டின் மேற்குப்புற இலுப்பைமரம். வேதக் கோவில் நாவல் மரங்கள். பணிக்கர் கோவிலடி வாகை மரங்கள், பூதாத்தை வெட்டையின் புளியமரம்.
விருட்சம் என்னவோ இங்கு தான். வேர்கள் மட்டும்.
தூண்22

Page 25
Cl.
大
இது நான் தங்கி இருக்கின்ற வீட்டின் வரைபடம். நீங்கள் என்னுடன் வரநேரும் வேளைகளில் முன்னெப்போதோ வந்தவர் போல இயல் பாயப் திரிந்து கொள்ள இது உதவியளிக்கும். தங்கி இருக்கின்ற வீடு என்பதிலிருந்து இன்னொருவருடன் தேவையின் பொருட்டு தங்கி இருக்கின்றேன் என்றோ, ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருக்கின்றேன் என்றோ எண்ணி விட்டிருந்தால் அது உங்களின் சிந்தனையில் ஏற்பட்ட கோளாறாய் எண்ணப் பட்டுவிடும். எனது சகோதரனுடன் தங்கி இருந்ததற்காக வீடு அவனுடையது, என அர்த்தப்படுத்திக் கொண்டுவிட வேண்டாம். ஒருவீட்டை வாங்கி விடக் கூடியளவு சேமிப்பை அவனோ அவனுடையதும், என்னுடையதுமான தந்தையோ மேற்கொள்ளவில்லை. என்னிடம் சேமிப்பென்பது நிகழ்ந்து விடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடவில்லை. அதற்கான அவசியம் உணரப்படும் போதெல்லாம் எடுக்கும் முடிவு தூங்கி எழுந்து முகம் கழுவும் போது தளர்ந்து போய்விடும்.
இந்த வீட்டிற்கு மாதத்திற்கென மதிப்பிடப்பட்ட தொகை அவன் ஊதியத்தி லிருந்து கழிக்கப்பட்டு விடுவதால் வாடகைக்கு இருக்கின்றான் எனக் கூறிக்கொள்ளமுடியும்.

രീജം, Géမှwဇံဃ ثم يدخوته
ஆனாலும் எனது இருக்குமனை பற்றி அது தெளிபடுத்த முடியாது.
காலையில் பிரதான வாசலூடு பரவிக் கொள்ளும் ஒளிக்கதிர்கள் உள்நுழையா வண்ணம் எனது அறைக் கதவு மற்றொரு திசை பார்த்ததாக இருக்கும். இதனால் நீண்ட நேரம் தூங்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்பிருக்கும். பகலைத் தாண்டி மாலையில்தான் ஒளி யன்னலூடு உள்நுழையும்.
நீங்கள் குறிக்கப்பட்ட என் அறைக்குள் வந்து சுதந்திரமாய் இருந்தாலும் தாராளமாய் நடமாடக் கூடியளவில் அறையினுள் இடவசதி போதுமானதாயிருக்காது. மேசை ஒன்றும் , புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள அலுமாரிகள் மூன்றும், உடைகள் அடுக்கப்பட்ட அலுமாரி ஒன்றும் கட்டில் ஒன்றுமாக அறை நிறைந் திருக்கும். மேசையில் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். நீங்கள் ஒரு வாசிப்பாளராக இருந் தால் இவைகள் உங்களுக்கு எவ்விதத்திலும் சங்கடங்களை ஏற்படுத்தாமல் அமைதி பேணும். புத்தகத்துள் மூழ்கிப் போக அறை சாந்தி காப்பதுடன் அதை ஊக்கப்படுத்தி அறிவை வளர்க்கும்படி கூறும் வாசகங்கள் படங்களுடன் ஆங்காங்கு சுவரில் தொங்கும். என்னைத் தேடி வரும் நீங்கள் நான் இல்லாத போது கூட அறையை நூலகம் போல பாவித்துக்கொள்ள முடியும் இதற்கு முன்னெப்போதாவது வருகை தந்திருப்பது அவசியம்.
இந்தப் புத்தகங்கள் தான் என்னை அதிகமும் வழிப்படுத்தி இருந்தது என்பதையும், குழப்பத்துள் ஆழ்த்தியது என்பதையும் நீங்கள் நம்பிக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப் படலாம். அப்பாவின் கண்டிப்புடனும் பாடசாலை விடுதியின் இறுக்கத்துடனும் சிறு வயது முதல் இருக்க நேர்ந்ததால், இருக்கும் இடத்துக்கும், பழகும் நபருக்கும் ஏற்றாற் போல் என்னை
23

Page 26
வளைத்துக் கொள்ள முடிந்திருந்தது-உளவிய லாளரின் கருத்துப்படி இதைவிட நான் பிறந்தி ருந்த தேதிக்குரிய எண்ணும் இதைத்தான் வலியுறுத்துகின்றதாம்.
இந்த அறையில் என்னுடன் வந்து தங்கியிருந்த நபர்களைக் கணக்கிட்டு விரல் களுள் அடக்கிவிடலாம். வீடு நோக்கிய எனது வருகை மிகக்குறைவாகவே இருந்தது. அத் தனை பளு என் மீது இருந்தது என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.வேலைக்காலம் குறைவாக இருந்தாலும் அத்தளத்தில் நின்று செயற்படவும் சிந்திக்கவும் அதிகமிருந்தாலும் அடுத்த நாளைய வரவை இலகுபடுத்துவதற்காகவும் வீட்டுக்கும் வேலைத்தளத்திற்குமான தூரம் அதிகமாக இருந்ததனாலும்? அங்கு தங்கிக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
இப்படியாக திடீர் விஜயம் செய்யும் நாட்களில் மேசை மீது சில புத்தகங்கள் புதிதாக இருக்கும். நான் அவற்றை நேசிப்பவனாக இருந்தேன்.
அன்று என் விஜயம் வீடு நோக்கி நிகழ்ந்தது. மேசை மீது சில புத்தகங்கள் கிடந்தன. மண் வாசனை அறையினுள் நிறைந்திருந்தது. யாரோ ஆக்கிரமிப்பாளர்கள் என் தேசத்துள் நுழைந்துவிட்ட உணர்வு. மேசைமீது கிடந்த புத்தகங்களுள் ஒன்றுதான் அதை உண்டு பண்ணியது. அது என்னை "பாட்டி வடை சுட்ட” காலத்திற்கு கொண்டு செல்வதா கவோ, தன்னுள் இழந்து எனை அமிழ்த்தி விடுவதாகவோபட்டது. கூர்ந்து நோக்குகின்றேன்.
புத்தகத்திலிருந்து வெள்ளைத் தோல் வீரர்கள் இறங்கி வந்து கொண்டி ருந்தார்கள். அவர்களின் ஆயுதம் உடலுடன் பிணைக்கப் பட்டே இருந்தது. இதற்காகவே பிறந்திருக் கலாம் என ஊகிக்க இடமும் அவகாசமும் இருந்தது. என்னைக் கண்டு எவ்வித எச்சரிக்கையும் அடையாமல் வழியைத்திருப்பி போய் கொண்டே இருந்தார்கள். இந்தக் நட வடிக்கை குறித்து எந்த அபிப்பராயத்தையும் சொல்லிக்கொள்ள முடியாமல் எனது வாய் அடைத்துப் போய் இருந்தது.
# அவர்களுக்கு மிகப்பெரிய வல்லமை இருந்தது. மிகுந்த பலமும், எதையும் தாங்கிக்

கொள்ளக் கூடிய வகையிலும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான பயிற்சியானது எதையும் தன் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களா லேயே முடியும். எங்கள் சிந்தனைகளை களவாடிக் கொண்டு போய் மூடநம்பிக் கையாக்கிவிடக் கூடிய வல்லமை அவர்களிடம் இருந்ததை நான் கண்டேன்.
“நீ நினைத்துக்கொள்வது போல எதுவுமே இங்கு நடக்கவில்லை. நாம் எச்சரிக்கையுடன் இருக்கும் போது அவ்வாறானதொன்று நிகழ்ந்து விடக்கூடிய தாக ஏற்பட்டுவிடாது.” அண்ணாவின் கூற்றிலும் உண்மை இருக்கலாம்.
"உனக்குத் தெரியாமல் இருக்க நியாய மில்லை. ஒரு காலகட்டத்தில் இவைகள் அடக்கப்பட்டிருந்தன. அப்போது இவைகளை விட மிகப் பெரும்சக்தி இருந்தது. அதனால் அப்போது இருந்த ஆதங்கத்தை அதிகாரமாக்க முனைந்து கொண்டிருக்கின்றன. வெள்ளைத் தோல் வீரர்களால் எமது புத்தகங்கள் அனைத்தும் அழிபடப் போகின்றன.”
எச்சரிக்கை உணர்வுடன் அவற்றை அகற்றவும்,கூட்டத்தோடு அழிக்கவுமாக என் அறையினுள் அவைகளின் இருப்பிடத்தை அறியும் முயற்சியில் இறங்கி இருந்தேன். இதற்கெலி லாம் முன்னோடியாக எண் நிலைப்பாட்டினை அவைகளுக்கு தெளிவு படுத்தினேன்.
“எனக்கு உங்களை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அதுதான் சரியென்றால் செய்துவிடுவேன்”
"நீ புரியாத மனிதன் என்பதை விடவும் எனக்கு அடங்க மறுக்கின்றாய் என்பதுதான் முக்கியமானது. உன்னை அழிக்கும் வரை ஓயப்
இ24

Page 27
போவதில்லை.” அதன் கூற்று எரிச்சலைத் தான் உண்டுபண்ணியது. அவற்றை நசித்துவிட கண்கள் சிவப்பாயின.
என்னறைக்குள் அத்துமீறி நுழைந்த வெள்ளைத் தோல் வீரர்கள் பற்றி எல்லோரும் அதிருப்தியை தெரிவித்தார்கள்.-ஆனால் யாரும் துணைக்கு வரவில்லை. பகல் முழுவதுமாக போராடி கொஞ்சங்கொஞ்சமாய் அகற்றினேன். புத்தக அலுமாரியினுள் இருப்பிடம் அமைத்து தங்கியிருந்த கூட்டை உடைத்து வெளியில் அள்ளிப்போடும் வேளையில் இருட்டிவிட்டது. காலைக் கீழே வைக்கவே அருவருப்பாக இருந்தது. அவற்றை அழிக்கத்தக்க மருந்து இருப்பின் தூவிவிட்டு மறுநாள் துப்பரவு பண்ணி இருக்கலாம். அது இல்லை என்பது அவற்றுக்கும் தெரிந்ததால் தான் பயமின்றித் திரிந்தார்கள். மிக நல்ல புத்தகங்கள் என என்னால் மதிக்கப்பட்ட வற்றைக் கூட துளைத்துக் கொண்டு முன்னேறி இருந்தார்கள் என்பதை அலுமாரியைத் திறக்கும் போது அறிந்துக் கொள்ள முடிந்தது.
அழிந்துவிடக்கூடிய உபாயம் வேண்டி கனவுகளுள் நுழையத் தலைவரை போர்த்தி யிருப்பினும் மின்மினி போலவும், நுளம்புகள் போலவும் ஒளிவிட்டு விட்டும், சத்தம் எழுப்பியும் குழப்பிக் கொண்டிருந்தன. அவற்றின் வெள்ளையுடல்கள் இருட்டிலும் தெரிந்ததால் அவைகள் என்பதில் சந்தேகமில்லை. சகித்துக் கொண்டுதான் நித்திரையுள் அமிழ்ந்து போனேன்.
கால்களை அசைக்க முடியவில்லை.கட்டி இருக்கக் கூடியமாதிரி இல்லை. கால்களை உயிருடன் வைத்து கல்லறை கட்டப்பட்டது போல. ஆம், அப்படித்தான் நடந்திருந்தது. கால்களின் மேலால் புற்றைக் கட்டிக் கொண்டிருந்தன.அது மண் போல தெரிந்தாலும் அதைவிடவும் இறுக்கமாக இருந்தது. கிட்டத் தட்ட முழங்கால் வரை இது வந்திருந்தது. முற்றாக மூடிவிட வேண்டிய எண்ணத்துடன் வீரர்கள் மும்முரமாக மண்ணை உமிழ்நீருடன் கலந்து துப்பி ஒட்டிக் கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். கட்டில் முழுவதும் அவர்களின் ஆக்கிரமிப்பாகவே இருந்தது. மற்றைய புறம் இரு கைகளையும் அடக்கிவிடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டி

ருந்தது. மணிக்கட்டைத் தாண்டி அவைகளின் வேலை தொடர்ந்து கொண்டே இருந்தது. கைகளையும் கால்களையும் மீட்டுக் கொள்ள வழியின்றித் திணறிக் கொண்டிருந்தேன்.
அவைகளிடமிருந்து இவ்வாறானதொரு நடவடிக்கையைக் கொஞ்சமும் எதிர்பார்த்தி ருக்கவில்லை. அவைகளுக்கான வழிநடத்தல் சரியாவே இயங்கிக் கொண்டிருந்தது.
மார்பின் மயிர்க;டு நுழைந்து வந்த ஒருசிப்பாய் எச்சிலைத் துப்பிவிட்டுக் கத்தினான். "உன் விருப்பப்படி - நீ நடந்து திரிய முடியாது. உன் கால்களை மடக்கி என்னிடம் மண்டியிடு, எங்களை வல்லவர் களாக உன்னால் ஏற்றுக்கொள்ள முடியு மானால் உனது அங்கங்களை விடுவிக்க எங்களால் முடியும். இவை மட்டும்தான் எங்கள் திட்டத்துள் அடங்குகின்றது என நினைத்துக்கொள்ளலாம். அதையும் தாண்டி இன்னமும் உள்ளன. ஒருபோது உன் மூளை சிதைவடையப்பட்டி ருக்கும். இவற்றிலிருந்து விடுபடுதல் என்பது உன் காலாக மட்டுமே இருக்கும் மறந்துவிடாதே மண்டியிடுதலை.”
அதைக் கொன்று வீசி விட வேண்டும் என்ற எண்ணத்தை தவிர எதுவும் எழவில்லை வாயால் காற்றை இழுத்து தள்ளினேன். வீசப் பட்ட அது காலைக் கட்டும் பணியாட்களுடன் கலந்து போனது.
மீட்பார்களே ஓடிவாருங்கள் தெய்வங் களே-ஒவ்வொரு பெயராக அழைத்து - இறங்கி வாருங்கள். இன்னமும் பல பெயர்களைச் சொல்லி அரற்றிய போது தான் நான் யன்னலில் எட்டிப் பார்த்தேன் அவனைவிட யாரும் அங்கு இருப்பதாக தெரியவில்லை. அவனின் சகோதரன் பற்றி எதுவும் தெரியாது. கேட்கவும் இல்லை. அவற்றை எதிர்கொள்ளக் கூடிய தைரியம் என்னிடம் இல்லாததனால் இதையும் சேர்த்துக்
’கொள்ளக் கூறினான்.
இப்போதும் நீங்கள் வரலாம். வரைபடம் உங்கள் வசம் இருப்பது ஞாபகம் இருக்கும் - முழு எச்சரிக்கையும் பாதுகாப்பும் உங்களிடம் இருத்தல் வேண்டும் என்பதையும் புரிந்திருப்பீர் கள். - வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய தைரியமும் கூட முடிந்தால் என்னைக்
காப்பாற்றும் எண்ணம் இருக்கட்டும்.
25

Page 28
சுமனதில்ல வீட்டிற்குதி
சிங்கள மூலம் - அசோஹ ஹந்தகம தமிழில் :-சாமிநாதன் விமல்
சுமனதிஸ்ஸ வீட்டிற்கு திரும்பி வந்தார். தனது இடது காலை முழுமையாகவே இழந்திருந்தாலும் ஒரு வீரனாக, கெளரவத்துடன் சுமனதிஸ்ஸ வீட்டிற்கு வந்திருந்தார். ஒரே போர் முனையில் தன்னோடு சேர்ந்து போராடிய சக படை வீரர் களுடனும், இனப்பற்றுடனும், மகிழ்ச்சியடைந்த ஊர்ச் சனங்களையும், விகாரையின் தலைமைப் பிக்குவையும் அழைத்துக் கொண்டுதான் சுமனதிஸ்ஸ வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
யசோவின் கண்களில் கண்ணிர் துளி யொன்று தோன்றியது. கண்களில் இருந்து வழிந்த கண்ணிர்த்துளி அவளது சட்டைக்கும் முலைகளுக்கும் இடையில் வீழ்ந்து மறைந்தது. தன்னையும், தான் வயிற்றில் சுமந்திருந்த சஞ்சீவாவையும் வாழவைப்பதற்காகத்தான் சுமனதிஸ்ஸா இராணுத்திற் போய் சேர்ந்தான் என்பது அவளுக்குத் தெரியும். தவகளிடம் வாழ்க்கையோடு இழக்கக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன என்று சுமனதிஸ்ஸா இராணுவத் தில் சேர்ந்த நாளில் யசோ தெரிந்துக் கொண்
LT 6.
கொடுரமான யுத்தம் சுமனதிஸ்ஸவின் ஒரு காலைப் பறித்தது. அதற்கு பதிலாக “வீரன்ன" என்ற கெளரவப்பட்டமொன்றுடன் அவர் வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார். அவரை கட்டியணைத்து முத்தமிட வேண்டும் என்ற உணர்வொன்று யசோவிற்கு ஏற்பட்டாலும் அவளை அவ்வாறு செய்ய விடாமல் ஆயிரக்கணக்கான பண்பாட்டுத் தடைகள் இருந்தன. தலைமைப் பிக்குவிற்கு துட்டகாமினியோடு போர் முனைக்கு சென்ற தசவித வீரர்களில் ஒருவராகத்தான் சுமனதிஸ்ஸ தெரிந்தார்.
‘வரலாற்றுப் புகழ்பெற்ற வீரர்கள் பிறந்த இடம் தான் இந்த ஊர்” தலைமைப் பிக்கு போதித்துக் கொண்டே இருக்கிறார்.

நம்பிவந்தார்.
இப்போதனைகளைப் புரிந்துகொள்ளுகின்ற நிலையில் யசோ இப்போழுது இல்லை. கணப்பொழுதில் தன் கணவனை வீரனாக்கிய யுத்தம், அக்கணப்பொழுதிலேயே அவரை அங்கவீனவனாக்கியது என்பது யசோவிற்கு தெரியும், யசோ வந்திருந்த ஊர்ச் சனங்களுக்கு தேநீர் வழங்கினாள்.
‘என்ன நடந்தது? 'இரத்னா வினாவினாள்.
* மிதி வெடி ஒன்றில் சிக்கிவிட்டார்” யசோ பதிலளித்தாள்.
6 & 9s
எந்தஇடத்தில?. என்று சுமனா
வினாவினாள்.
6
களுவாஞ்சிக்குடியில்” என்று யசோ பதில் சொன்னாள்.
ஒரே கேள்வியை ஒரேவிதமாகப் பலர் கேட்கிறார்கள். அது யசோவிற்கு தலையிடியைக் கொடுத்தது. ஒரே பதிலை பலமுறை கூறியதனால் அவள் களைத்துப் போனாள். ஆனால் சஞ்சீவா தன் தந்தையின் வீரத்தால் உற்சாகம் அடைந்து சின்னப் பையன்களோடு சேர்ந்து வீர நாடகமொன்றில் நடித்துக்கொண்டு இருந்தான்.
‘களுவாஞ்சிக்குடி எண்டது பெரிய புலிக்கோட்டையாம். எங்கட அப்பாவும் சேர்ந்துதான் இந்தக் கோட்டையைப் பிடிச்சவை. புலியள் உடனே சுடத் தொடங்கி விட்டனர். அவையளட்ட நல்ல சாமான்கள் இருக்குது தானே. தப்பிறது சரியான கஸ்டம். அப்பாவையும் படார் படார் என்று கட்டவையாம். ஐநூறுக்கு மேல் புலிகள் அங்கெயே சரியாம். பேந்துதான் அப்பா மிதிவெடியில் சிக்கினவராம். கால் தூரத்துக்கு வீசப்பட்டதால் அப்பா நிலத்தில சரிஞ்சுகொண்டு வெடி வைத்தவராம். அப்பாவின் வெடியில புலி பங்கர்கள் சிதறிட்டதாம்.”
தூண்.26

Page 29
உம் - தா.சனாதனனி
“பங்கர் எண்டால் என்னடா?” “ அய்யோ . உனக்கு பங்கர் கூட தெரியாதா? பங்கர் எண்டால்
“பங்கர் எண்டால்.”
சஞ்சீவா தடுமாறினான். அக்கம் பக்கம் பார்த்தான். பங்கர் என்றால் என்ன என சுமனதிஸ்ஸவிடம் கேட்க வேண்டும் என எண்ணி னான். ஆனால் தகப்பனோடு கதைத்துக் கொண்டு நின்ற படை வீரர்களை கண்டு அவன் பயந்தான்.
“இஞ்சை வா தம்பி.”
யசோ சஞ்சீவாவை அழைத்தாள். அது அவனுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. இல்லாவிடில் பங்கர் என்றால் என்ன என்றதிற்கு பொருத்தமான பதிலைத் தர முடியாமல் அவன் சக கூட்டாளிகளுக்கிடையில் அந்தரப்பட வேண்டி வந்திருக்கும்.
“ அம்மா, பங்கர் எண்டால் என்ன அம்மா?”
 

6 6.
தேவை இல்லாத கதை கதைக்காம வேறொரு ஸேர்ட் போட்டுக் கொண்டு வாங்கோ, ஊத்த ஸேர்ட்டுடன் இவ்வளவு சனம் நிக்கேக்க"
சஞ்சீவா வெறுப்புணர்வுடன் அம்மாவை நோக்கி விட்டு, வீட்டிற்குள் நுழைந்தான்.
தம் வாழ்க்கையின் எதிர்காலம் தொடர் பான தெளிவான சமிக்ஞையுடன் தான் அன்றைய இரவு தொடங்கியுள்ளது என்பது யசோவிற்கு நன்றாகத் தெரியும். அது மிகவும் கடுமையான இருளுடைய ஒரு இரவு வீரனை தரிசிக்க காலை - தொடக்கம் வந்த சனங்க ளெல்லாம் ஒரு வீரனோடு பழகிய மகிழ்ச்சியுடன் திரும்பிப் போய்விட்டிருந்தது. இருள் சுமனதிஸ்ஸ வையும், யசோவையும், சஞ்சீவாவையும் தன்னுள் அணைத்துக் கொண்டது. யசோவிற்கு நித்திரை வரவில்லை. சஞ்சீவா நல்ல நித்திரையில் இருந்தான். போர் முனையில் கூடத் தெரிந்திராத பயமொன்றினால் சுமனதிஸ்ஸவும் நித்திரையின்றியே இருந்தார். இந்தக் கடும் இருள் தமது எதிர்காலத்தின் அறிகுறியாகவே இருவருக்கும் தோன்றியது.
*சுமனே, எனக்குச் சரியான பயமா க்க” என்று யசோ மெகவாகக் கூறினாள். ருககு
"பயப்பிட வேண்டாம் யசோ, கிட்டடியில் யுத்தம் முடிஞ்சிடும்”.
“ அதனால் தான் எனக்குப் பயம்.”
யசோவின் பயம் நியாயமானது தான். யுத்தம் இருக்கும் வரையில் யுத்தத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு யுத்தம் மகிழ்ச்சி கரமானதாகும். யுத்தத்தால் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் யாவரும் வீரர்களாவர். ஆனால் யுத்தம் முடிந்த பின்? ஒரு தரமற்ற திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர்கள் போல அவர்கள் சகலத்தையும் மறந்துவிடுவார்கள்.
அப்பொழுது தான் யுத்தத்தின் உண்மை யான நிலைமை வெளிப்படுகிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்குத் தான் இந்தக் கொடுரமான அனுபவம் கிடைக்கிறது.
யசோ பயந்த காரணங்களை நினைத்தே சுமனதிஸ்ஸவும் பயப்பிட்டார். ஒரு கால் இழந்த சவாரிக் குதிரையொன்றின் கதிக்கும், தன்
தூண்டி27

Page 30
நிலைமைக்கும் என்ன வித்தியாசம்?. ஒரு கால் இழந்தாலும் தான் இப்பொழுது ஒரு வீரன், தாயகத்திற்காக போராடிய ஒரு வீரன் அங்கவீனனாகி அனாதையாகியது எப்படி என்பதை சுமனதிஸ்ஸவிற்குப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அவர் யசோவை நோக்கினார். அவள் கன்னத்தில் கண்ணிர்த் துளி, கடும் இருளிற் கூட அது பிரகாசிக்கிறது. எங்கோ தெரியாத ஒரு இடத்தில் இருந்து வந்த வெளிச்சத்தால் அது பிரகாசிக்கிறது.
களுவாஞ்சிக்குடி போர் முனையில் வைத்த மிதிவெடியொன்றில் சிக்கத் தன் காலை இழந்தப்போது யசோவும், சஞ்சீவாவும் தான் முதன் முதலில் சுமனதிஸ்ஸவின் மனதில் தோன்றினார்கள். அதற்கு அடுத்ததாகத் தான் தாயகந் தொடர்பான உணர்வு, அதுவும் வெளியில் இருந்து சாற்றியதொன்று. யுத்தத்தில், ஈடுபட்ட முதல் நாளிலேயே யுத்தந் தொடர்பான ஏதோ ஒரு புரியாத வெறுப்புணர்வு சுமனதிஸ்ஸா வின் மனதில் குடிகொண்டுவிட்டது.
மட்டக்களப்பு நகர மத்தியில் வைத்துப் பிடிக்கப்பட்ட ஒரு புலிப் பெடியன் கூறியவை சுமனதிஸ்ஸாவின் வெறுப்புணர்வை மேலும் கூர்மையடைய வைப்பனவாகத் தான் இருந்தன. அந்தப் பெடியனுக்கு பதின்னான்கு வயது இருக்கலாம். அதாவது சஞ்சீவாவை விட ஐந்து 6 Jug கூடியவனாகலாம். தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியாத அளவிலான ஒரு ஆயுதத்துடன் பிடிபட்ட அப்பெடியன் தொடர்பாக சுமனதிஸ்ஸவின் மனதில் பரிதாப உணர்வு தான் தோன்றியது.
"ஏனடா, சனியன், ஆயுதம் எடுத்து அநியாயமாக நீ சாகிறாய்?.”
தேவையற்று வீசப்படும் வெறும் துப்பாகி றவுன்ட் அளவிலாவது சுமனதிஸ்ஸரவின் மிரட்டலை அந்தப் பெடியன் கவனத்தில் எடுக்கவில்லை.
‘எங்கட தாயகத்திற்காக."
சுமனதிஸ்ஸவின் ஆத்திரத்தை உச்சக் கட்டத்திற்குக் கொண்டு வருவதாகப் பெடியனு டைய பதில் இருந்தது. சுமனதிஸ்ஸா தனது துப்பாக்கியை இயக்க முன்பே கழுத்தில்

தொங்கிக்கொண்டிருந்த மரணத்தை கடித்த அந்தப் பெடியன் பூமியை அணைத்துக் கொண்டான். அந்தப் பெடியன் கூறியது தொடர் பாக நினைக்க வேண்டிய தேவையோ நேரமோ அன்று சுமனதிஸ்ஸவிற்கு இருக்கவில்லை. ஆனாலும் இப்பொழுது தன்னைச் சுற்றியுள்ள கடும் இருளும், யசோவின் கன்னத்திலுள்ள கண்ணிர்த் துளியும். யசோவின் அருகில் நித்திரை கொண்டிருக்கும் சஞ்சீவாவும், அந்தப் பெடியன் கூறியவற்றை வற்புறுத்தி நினைக்கச் செய்வது போல சுமனதிஸ்ஸவிற்கு தோன்றியது இப்பொழுது. இந்த நிமிடத்தில் இருந்து தன் மரணம் வரைக்கும் சிந்திக்கக்கூடியளவு ஆழமான கருத்துள்ள ஒரு கூற்றாக அந்தப் பெடியனுடைய பேச்சு சுமனதிஸ்ஸவிற்கு இப்போது புரிந்தது. அந்தப் பெடியன் தாயகத்திற்காக உயிர் கொடுத்தான். தாயகத்திற்காகத்தான் சுமனதிஸ ’ஸவும் காலை இழந்தான். ஒரே நோக்கத்திற்காக, ஒரே பூமியில், ஒரே வர்க்கத்துக்குரியவர் களுக்கிடையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து யுத்தமொன்று ஏற்படக் காரணங்கள் என்ன? தாயகத்திற்காக போராடுவதை விட வேறொரு வீரச் செயலும் இல்லை; தாயகத்திற்காக உயிரை அர்ப்பணித்ததை விட வேறொரு தியாகமும் இல்லை.அப்படியானால் அந்தப் பெடியனும் ஒரு வீரன் தான். கால் இழந்து வீட்டிற்கு வந்த தன்னையும் ஒரு வீரனாகத் தான் பலர் கருதுகின்றனர். ஒரே யுத்தத்தில் சிக்கிக் கொண்ட இரு பிரிவினரையும் வீரர்கள் என்றால் துரோகிகள் யார் என புரிந்துக் கொள்ளக் கூடிய ஞனம் சுமனதிஸ்ஸவிற்கு இல்லை: இப்பொழுது யசோவின் கன்னத்தில் கண்ணிர்த் துளியை காணவில்லை. அவள் அழவில்லைப் போலும். தகப்பனுடைய வீரத்தினால் மகிழ்ச்சியடைந்து சக கூட்டாளிக்கிடையில் வீரனாக நடித்த சஞ்சீவாவும் நல்ல நித்திரையில் இருக்கிறான். இருளை ஊடுருவக் கூடிய கூர்மையுள்ள கண்கள் யுத்தத்தினால் சுமனதிஸ்ஸவிற்குக் கிடைத் துள்ளன. ஆனால் அக்கண்களுக்கு வாழ்க்கை முடியாது என சுமனதிஸ்ஸவிற்கு தெரியும். கால்க் காயத்திலிருந்து தோன்றும் நோவு உடல் முழுக்க பரவித்தலைக்குள் சென்றது. தான் ஒரு வீரன் என்று தலையில் முளைந்துக் கொண்டிருந்த பெருமை சிதறிப்போகும் அளவிற்கு அந்த நோவு கடுமையாகிவிட்டது.
தூண்.28

Page 31
வீட்டு முற்றத்திலுள்ள மரமொன்றில் ஆந்தையொன்றின் குரல் கேட்கிறது. சுமனதிஸ்ஸவின் காலிலுள்ள காயத்தின் நோவை மறைக்க அந்த மூதேவித்தனமான குரல் உதவியது.
சுமனதிஸ்ஸ விடிவதற்குக் கிட்டத்தில் கொடுரமான ஒரு கனவு கண்டான். அக் கனவில் சுமனதிஸ்ஸவை மீண்டும் போர் முனைக்கு அழைத்து இருந்தார்கள்.
அப்போர் முனையில் சுமனதிஸ்ஸ மாத்திரமல்ல, சஞ்சீவாவும் போராடிக் கொண்டி ருந்தான். இரு பக்கங்களுக்கும் வெடிகுண்டுகள் பறந்துக் கொண்டிருந்தன. சரமாரியாக வெடி வைத்துக்கொண்டிருந்த சஞ்சீவா திடீரென நிறுத்தினான்.
"அப்பா, எனக்குப் பசி. ” என்று சஞ்சீவா சத்தமிட்டான். மகனின் இக்குரலைக் கேட்டு சுமனதிஸ்ஸ நிலக் கண்ணி வெடியில் சிக்கின கவச வாகனம் போல ஆனான்.
99
“பேசாம இரு தம்பி, இப்ப என்ன சாப்பாடு”
“நான் செத்துப்போயிடுவேன், அப்பா” என்றான் சஞ்சீவா. சாவு என்றால் என்ன எனத் தெரியாத தன் மகன் ஏன் சாகப் பயப்பிடுகிறான் என சுமனதிஸ்ஸவிற்கு புரியவில்லை.
* கரைச்சல் செய்யாம வெடிவை. தெரியாதா அவர்கள் ஓயாம வெடி வைக்கிறார்கள். கொஞ்சம் மிஸ் பண்ணால் எல்லாஞ் சரி. ” என்று சுமனதிஸ்ஸ கூறியதால் சஞ்சீவா சரமாரியாக வெடிவைக்கத் தொடங்கினான். சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அவன் களைத்துப்போனான்.
'அய்யோ, பசியில் வெடி வைக்க முடியாது.அப்பா.எனக்கு.”
சஞ்சீவாவுடன் பேச சுமனதிஸ்ஸவிற்கு நேரமில்லை. இருவருடைய வாழ்க்கையும் கணப்பொழுதில் நிகழும் தவறினால் முடிந்துவிடும்.
சகல திசைகளிலும் வெடிக்கும் வெடிச் சத்தங்களுக்குப் பயந்துகொண்டு வந்த தும்பியொன்று சஞ்சீவாவின் தோளில் வந்து அமர்ந்தது. சஞ்சீவா அதனுடன் சிரித்தான். தும்பியைக் கண்ட சஞ்சீவாவின் பசி அவனை

விட்டு விலகியது. தும்பி சஞ்சீவாவின் தோளில் இருந்து சுமனதிஸ்ஸாவின் கெல்மட்ற்குப் பறந்து வந்தது. படபட என்ற சத்ததுடன் சுட்டுக்கொண்டி ருக்கும் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டிருந்த சுமனதிஸ்ஸவின் முழு உடலும் நடுங்கிக் கொண்டிருக்கின்றது. தும்பிக்கு அது வசதியாக இருக்கவில்லை. எனவே அது திரும்பவும் சஞ்சீவாவின் தோளிற்குப் பறந்து போனது.
சஞ்சீவா மிக மகிழ்ச்சியுடன் கவனமாகத் தும்பியைத் தன் கைக்குள் எடுத்துக் கொண்டான்.
“சின்னத்தும்பியே, இந்த யுத்தத்தின் மத்தியில் நீ எங்கே தான் போகிறாய்? சுட்டா இந்த அழகான உனது செட்டைகள் எல்லாம் அகற்றி வீசப்படுமே.”
சஞ்சீவாவுற்கு இப்போது பசி இல்லை: அப்பாவித் தும்பியால் சஞ்சீவா பசியை மறந்து விட்டான். சுமனதிஸ்ஸவிற்கு அது ஆறுதலா கவே இருந்தது. தன்னை நோக்கி வரும் வெடி குண்டுகள் எல்லாம் தன் முன்னால் உள்ள ஒலை வீடுகளில் இருந்து தான் வருகின்றன என களைத்துப்போன சுமனதிஸ்ஸவிற்குப் புரிந்தது. உடல்கள் எரியும் பொழுது வரும் துர்நாற்றம் அவன் முக்கூடாக நெஞ்சினுள் புகுந்தது. வீடுகளுக்குள் இருந்து இயங்கிக் கொண்டிருக் கும் துப்பாக்கிகளுக்குத் தானும் தன் மகனும் எந்த நேரத்திலும் பலியாகக்கூடும் என நினைத்த பொழுது சுமனதிஸ்ஸ உசாராகினான்.
சஞ்சிவாவின் தோளில் இருந்த தும்பி திடீரென பறந்துப் போக முயன்றது. அதைத் தடுக்க சஞ்சீவா முயன்றான். எவ்வளவு கொடுரமான யுத்தத்திற்கு மத்தியிலும் கூட அது தன் தேவைகளை பூர்த்திசெய்யப் புறப்பட வேண்டும்.
தும்பி முன் வீட்டை நோக்கி பறந்தது. அதன் செட்டைகள் போலவே சஞ்சீவாவின் உலகமும் எளிமையானதாகும். அவனும் தும்பியின் பின்னால் ஓடத் தொடங்கினான். தாக்குதல்கள் கூர்மையடைந்து கொண்டு இருந்தது. இரு முனைகளுக்கும் பறந்துக் கொண்டிருக்கும் வெடி குண்டுகளின் இடைவெளி குறுகியளவினதாகவே இருந்தது. சுமனதிஸ்ஸ வின் துப்பாக்கியும் இதயமும் ஒரே நேரத்தில்
நின்று விட்டன.
தூண்ட29

Page 32
‘மகனே, போக வேண்டாம்!”
வானத்தை அதிரவைக்கும் வெடி சத்தம் சுமனதிஸ்ஸவின் குரல் சஞ்சீவாவிற்கு வந்து சேர்வதை தடுத்தது. குடிசையில் இருந்து திடீரென ஒடிவந்த ஒரு தமிழ்ப்பெண் சஞ்சீவாவை நோக்கி வந்தாள். குடிசையில் இருந்து கேட்ட வெடிச் சத்தம் சற்று ஓய்ந்தது. அப்பெண் சஞ்சீவாவைத் தூக்கிக் கொண்டாள். அவலக் குரலுடன் வந்த ஒரு மோட்டக் குண்டால் தனக்கு முன் கிடந்த குடிசையும் அவர்களும் வெடித்துச் சிதறியது சுமனதிஸ்ஸவின் கண்களில் தெளிவற்ற வடிவத்தில். சூரியனும், சந்திரனும் முழுப்பிரபஞ்சமே திடீரென கல்லாகியது போல வெட்டி, துண்டிக்கப்பட்ட ஒரு வாழை மரம் போல அப்பெண் விழுந்தாள். ஆயினும் தனது மடியில் இருந்து சஞ்சீவாவை விழாமல் தடுக்க அவளிடம் பலமும் கருணையும் இருந்தது. நடந்தது என்ன என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்த சுமனதிஸ்ஸ அவர்களிடம் ஒடிப்போனார். மணலான நிலத்தை அணைத்துக் கொண்டு அப்பெண் இறந்து கிடந்தாள். அவளின் மார்ப்பின் நடுவில் இருந்து இரத்தம் கசியும் ஒரு காயம். சஞ்சீவா அப்பெண்னுடைய இடது பக்க மார்பகத்தைப் பிடித்து உறிஞ்சிக் கொண்டு இருக்கிறான். தும்பி தொடர்பான நினைவு சஞ்சீவாவிடம் தற்போது இல்லை. அது சஞ்சீவாவின் தலைக்கு மேல் ஹெலிகொப்டர் போல சுற்றிக்கொண்டு உள்ளது. அவளுடைய காயத்தில் இருந்து கசியும் இரத்தம் இரு மார்பகங்களுக்கிடையி லான வெளியில் நகர்ந்துக் கொண்டு இருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு சஞ்சீவா தலை நிமிர்ந்து சுமனதிஸ்ஸவைப் பார்த்தான்.
“எனக்குப் பசியில்லை அப்பா.
மணல் நிலத்தை அணைத்துக்கொண்டு இறந்த பெண்ணும், எரிந்து கொண்டு உள்ள குடிசையும், இன்னும் சிற்சில இடங்களில் இருந்து எழும்பும் துப்பாக்கிகளின் கோர ஓசைகளுக்கும் இடையில் சஞ்சீவாவின்
(அசோக ஹந்தகம மேடை நாடகங்கள், தொை துறைகளில் சர்வதேசப் புகழ் பெற்றவர் ஆவர். அே கொண்டவர் ஆவர். இச்சிறுகதையானது அவருடைய
1990) என்றதொகுதலில் வெளிவந்த ஒன்றாகும்.)

திருப்திகரமான புன்னகை சுமனதிஸ்ஸவை உண்மையான உலகத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தது. சுமனதிஸ்ஸ இன்னொரு நாளுக்கு விழித்தார் .
வீட்டுத்தோட்டத்தின் தேக்கு மரங்களுக்கு மேல் உதயமாகும் சூரியனின் கதிர்கள் அறைக்குள் வருகிறது. அயலில் நித்திரை கொண்டிருந்த யசோவின் வெப்பம் இன்னும் படுக்கையில் இருந்தது.
நாட்டையும் இனத்தையும் பாதுகாத்துக் கொள்ளப் போய்விட்டு, காயப்பட்ட சுமனதிஸ் ஸக்களுக்கும், வடக்கில் போராடிக்கொண்டு இருக்கும் படை வீரர்களுக்கும் ஆரோக்கியத்தை பிரார்த்தித்துக் கொண்டு சாந்திக் கவிதைகள் வாசிக்கும் தலைமைப்பிக்குவின் ஆழமான குரல் கண்டாமணிக் கோபுரத்திற்கு மேல் வானத்தை நோக்கிச் சென்று கடவுளின் சுவர்க்கம் வரை பரவுகிறது. சிறு பையன்களோடு கூடிக்கொண்டு மரத்துப்பாக்கிகளுடன் வசாவிளான் பெரும் போரில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் சஞ்சீவா வின் பலா இலையிலான தலைக்கவசம் எதிரிகளின் துப்பாக்கி வெடியில் சரிந்துப் போவதை சுமனதிஸ்ஸ யன்னலால் கண்டார்.
லக்காட்சி நாடகங்கள், மற்றும் திரைப்படங்கள் என்ற
த போல உள்நாட்டில் கடும் எதிர்ப்புகள் சம்பாதித்துக்
அம்மா சஹ சந்த எளிய (அம்மாவும் சந்திர வெளிச்சமும்
தூண்.30

Page 33
உள்வெளி
திரைப்படம் பொதுவில் எல்லாரையும் கவரும் ஊடகமாகவே உள்ளது. எம்மைச் சூழவுள்ள பெரும்பாலார் தமிழ்த் திரைப்படங்க ளைப் பெரும் ஈடுபாட்டுடன் பார்த்து இரசிக்கின்றனர்; இதனால், திரும்புமிடமெல்லாம் வீடியோப் பிரதிகளை வாடகைக்குக் கொடுக்கும் கடைகள் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன!
பொதுப்புத்தியை அவமதிக்கும் கதை, சம்பவங்கள்: வலிந்து புகுத்தப்படும் நகைச் சுவை அலட்டல்கள், ஆபாசமான கோஷ்டி நடனங்கள் - பாடல்கள் என்பன நிறைந்து வழிவதான ‘மசாலாப் படங்களின் மாயையில், வெகுஜனத்திரள் நன்கு மூழ்கிப் போயுள்ளது.
மாறாக, நல்ல கலைப்படைப்புக்களை உணர்ந்து இரசிப்பவர் தொகை மிகமிகக் குறைவுதான்; அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பும் எமது பிரதேசத்தில் அரிதாகவேயுள்ளது.
திரைப்படக் கழகங்கள்தான் ஓரளவு இதற்குத் தீர்வாகலாம். எழுபதுகளின் பிற்கூறில், “யாழ். திரைப்பட வட்டம் இயங்கியது பின்னர் யாழ். பல்கலைக் கழகத்தில் திரைப்படக் கழக மொன்று சிறிதுகாலம் இயங்கித் தமிழ்ப்படங் களைக் காட்டியது. நீண்ட இடைவெளியின் பின்னர், கடந்த மூன்று மூன்றரை ஆண்டுகளாக, பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகினால், ஞாயிறுதோறும் நல்ல திரைப் படங்கள் வீடியோக் காட்சியாக - இலவசமாக - காட்டப்பட்டு வருகின்றன் அண்மைக்காலமாக திரைப்படக் காட்சியின் பின்னர் கலந்துரையாட லும் நடைபெறுகிறது.
பேராசிரியர் .இரா.சிவச் சந்திரனின் அக்கறை மிக்க ஒத்துழைப்பு இந்தச் செயற் பாட்டின் ஆதாரசக்தியாக உள்ளது, இராமரூபன், அ.யேசுராசா ஆகியோர் அவருடன் இணைந்து செயற்படுகின்றனர்.
பல்வேறு சிரமங்களின் மத்தியில் சேகரிக்கப்பட்ட நல்ல திரைப்படங்கள்

யற்றி
ஆங்கிலத் துணைத் தலைப்புக்களுடன் காட்டப் பட்டுள்ளன.
இந்தியமொழிப் படங்களில் - வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மணிப்புரி, அஸ்ஸாம், தெலுங்கு, ஒரிய மொழிகளில் புகழ்பெற்ற நெறியாளர்களின் படங்கள் காட்டப்பட்டுள்ளன. சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ',"அகன்துக்’, ‘சதுரங்க ஆட்டக்கார', மிரினாள் சென்னின் ‘ஏக்தின் அச்சனக்; புத்ததேவ் தாஸ்குப்தாவின் 'உத்தர் அபர்ணா சென்னின் பராமா', "மிஸ்ரர் அன்ட் மிஸிஸ் ஐயா, ஷியாம் பெனகலின் "மம்மூ", ‘மந்த்தன்', 'சுபைதா’ கிரீஸ் காசரவல்லியின் ‘கதை சொல்லியின் கதை; குருதத்தின் “காகித மலர்கள்'; கே.சி.ஜோர்ஜின் ‘ஆதாமின்ட வாரியலு'; ஹரிஹரனின் ‘ஒரு வடக்கன் வீரகதா" கோவிந்த் நிஹலானியின் பார்ட்டி ராஜன் கோஷாவின் ‘டான்ஸ் ஒஃவ் த வின்ட்; ஜெயராஜின் தேசாடனம் முதலிய படங்கள் காட்டப்பட்டன.
சிங்கள மொழிப் படங்களாக லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் கம்பெரலிய, வசந்த ஒபேசேகரவின் ‘தீர்த்தயாத்ரா', சுனில் ஆரியரத்னவின் ‘சறுங்கலே, பெனற் ரத்நாயக் கவின் ‘அஸ் வசும’, அசோக ஹந்தகமவின் ‘மே மகே சந்த, சுதேஸ் த சில்வாவின் ‘சமணல விலாபய ஆகியன காட்டப்பட்டன.
பிரான்ஸ், இத்தாலி, ஈரான், ஸ்பெயின், செக்கோசிலவேக்கியா, ரஷ்யா, யப்பான் ஆகிய நாடுகளின் படங்களோடு ஆங்கிலமொழிப் படங்களுமாக - ‘போஸ்ற்மன் (மைக்கல் றெட்.வோட்), “கிரான்ட் இலூசன்ஸ்(ரெணுவார்), "பியானிஸ்ற் (றோமன் பொலன்ஸ்கி), ‘த லாஸ்ற் ரெம்ப்ரேஷன் ஒஃவ் கிறைஸ்ற் (மார்ட்டின் ஸ்கோர்சி), "ஷொப் இன் த ஹைஸ்றிற்’ (ஜன் கடார்), "குளோஸ் - அப் (அப்பாஸ் கிரட்டஸ்ஸமி), “பிளக் போர்ட்ஸ்
தூண்.31

Page 34
சத்யஜித்
(சமீரா மக்மல்ப.வ்), ஹவுஸ் ஒ.வ் பெர்னாடா அல்பா’, ‘லரீஷா’, ‘.’.வார் எவே சண் செற்" முதலிய முக்கிய படங்கள் காட்டப்பட்டன.
தமிழில் வெளியாகிக் கவனங் கொள்ளத்தக்கதாய் அமைந்த உதிரிப் பூக்கள், நண்டு, அவள் அப்படித்தான், சில நேரங்களில் சில மனிதர்கள், அழியாத கோலங்கள், முகம், பாரதி, அந்தநாள், மூடுபனி. தேவதை, நதிக்கரையினில்ே நம்நாட்டுக் கலைஞர்க ளான ஞானரதனின் ‘முகங்கள், அருந்ததியின் ‘முகம் முதலிய படங்கள் காட்டப்பட்டன.
வெவ்வெறு மொழிபேசும் மனிதர் களின் வாழ்க்கைக் கோலங்கள் தரும் விதம் விதமான அனுபவங்கள், கலைத்தன்மையில் பல்வேறு பரிமாண வெளிப்பாடுகளாய் - புரிதல்களாய் - கேள்வி எழுப்புதல்களாய் - பார்வையாளரிடை தாக்கங்களை ஏற்படுத்திய நல்ல திரைப்படங் கள் இவை. தமிழிலும் அதற்கு அப்பாலும் இருக்கும் திரைக்கலை வளர்ச்சிப்போக்கு களுடன் - எமது மண்ணில் - தொடர்பை வைத்திருக்க முயலும் இந்த நல்முயற்சியில் இணைந்துகொள்வோரின் எண்ணிக்கை, ஏமாற்றந்தருவதாக உள்ளது ஏறக்குறைய 20-25 பேர்மட்டிலேயே ஒவ்வொரு காட்சிக்கும் வருகின்றனர். இந்த நிலைமை ஏன்? இது, நல்ல திரைப்பட இரசனை பற்றிய எமது சூழலின் ‘மந்த நிலைமையின் குறிகாட்டியா?
யாழ்ப்பாணத்தில் வெளிவரும் நாளேடு கள், காட்சிபற்றிய விபரங்களைச் செய்தியாக வெளியிட்டு உதவுகின்றன் இலவசமாகவே படம் காட்டப்படுகிறது; ஆயினும் இந்த நிலை!
 

கவிஞர், சிறுகதை எழுதுவோர், நாவலாசிரியர் என எவ்வளவு இலக்கியக்காரர்! அரங்கச் செயற்பாடுகளிலும் கற்கை நெறியிலும் ஈடுபடுவோர்! நுண்கலைத்துறை மாணவர்கள்! பல்கலைக்கழகச் சமூகம் என இருப்போரின் “இரசனை’ கேள்விக்குறியாகின்றதா?
அவசியமான ஒரு நல்ல முயற்சியில் பங்கேற்று - கருத்துக்களைப் பகிர்ந்து - திரைப் பட இரசனையை நமது மண்ணிலும் உயிர்ப்புடன் பேணிப் பரவலாக்கும் தார்மீகப் பொறுப்பை, - இவர்கள் எப்போது வெளிக்காட்டப் போகிறார்
கள்?
இத்திரைப்பட நிகழ்ச்சிகளினால் தூண்டு தல் பெற்று, 'நெல்லியடி - கட்டைவேலி ப.நோ.கூ.ச. அனுசரணையுடன், ஒரு திரைப்படக் கழகம் இயங்கத் தொடங்கியுள்ளது; அக்கழகத்திற்கு எனது மகிழ்ச்சியான வாழ்த் துக்கள்!

Page 35
மருத்துவிச்சியும் அந்தக்கால
-பா. இரகுவரன்
வைத்தியசாலை வசதியற்ற அந்த நாளில் பிரசவங்கள் வீட்டிலேயே நிகழ்ந்தன. இன்றும் கிராமப்புறங்களில் இந்த நிலை தொடருகின்றது. வீடுகளில் நடைபெறும் பிரசவங்களுக்கு வைத்தியராக, தாதியாக செயற்படும் பெண்மணி மருத்துவிச்சி எனப்படு வாள் . v |
துணிச்சலும், பதட்டப்படாத தன்மையும், அனுபவமும் கொண்ட மருத்துவிச்சிகள் எல்லா சமுகப்பிரிவுகளிலும் இருந்தாலும், வடமராட்சி யில் நளவர்சமுக மருந்துவிச்சிகள் பிரபல்யம் வாய்ந்தவர்களாக இருந்தனர். இந்தச் சமுகம் துணிச்சல் மிக்க வீரமறவர் பரம்பரையைச் சேர்ந்தது என வரலாறு தெரிந்தவர்கள் கூறுவர்.
நோக்காடு பெண்ணுக்கு ஏற்பட்டவுடன் அயலவர்கள் பிரசவ வீட்டிற்குள் கூடிவிடுவர். இவ் வேளை பொதுவாக கணவனுக்கு உரியகடமைகளாவன,
1) மருத்துவிச்சியை கூட்டிக் கொண்டு வருதல். 2) கட்டாடிச்சியை கூட்டிக்கொண்டு வருதல்.
கட்டாடிச்சி “மாத்துச்சேலை”களுடன் வந்துவிடுவாள். பிரசவத்துக்குத் துணிகளும், சேலைகளும் அதிகம் தேவைப்படும்.
“நாரி உளைவு கண்டதும் கறிமுருங்
கைப்பூவை அவித்துக் கொடுப்பர். பிள்ளை பிறப்பதற்குரிய நோவாயின் நோ அதிகரித்தும் குழந்தை பிறக்கும். இல்லையெனில் நோ மறையும். (வடமராட்சி கரையோரமக்க ளிடையே நிலவும் பிறப்புச்சடங்கு - அம்மன்கிளி முருகதாஸ், பண்பாடு, 1994 - மார்கழி)
பொதுவாக பிரசவம் நடக்கும் இடமாக அடுப்படி இருந்தது. ஒலையால் வேயப்பட்ட சிறிய மண்குடிசை வீடுகளுக்கு இது பெரிதும் பொருந்தும். அடுப்படியை ஏன் தெரிவு செய்தனர் என்பதற்கு பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
1) வீட்டுடன் இணைக்கப்படாமல் அதிகமாக முன்நிலத்தில் தனியாக மச்சமாமிசம் பாவிக்கக்

பிரசவங்களும்
கூடியவாறு அடுப்படி இருந்தமையால் ஓரளவு தீட்டுக்களை அனுமதித்தமை.
2) மருத்துவிச்சி தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவளாக இருப்பதால் வீட்டுக்குள் நுழையவிட உரிமை மறுக்கப்பட்டமை.
ஆனால் வசதியான பெரிய வீடுகளில் பிரசவம் தனியான வீட்டு அறைகளில் நிகழ்ந்துள் ளதும் குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்களில் பிரசவம், அதுவும் தலைப்பிரசவமென்றால் உயிராபத்து நிறைந்த நிகழ்வாகவே இருந்தது. மருத்துவிச்சி அந்நேரம் தெய்வத்துக்கு சமனாக நம்பப்படுவாள். உபகரணங்கள் ஏதுமின்றி மருத்துவிச்சியின் கைகளின் செயற்திறனில் உயிர்களின் பிழைப்பு தங்கியிருந்தது.
மருத்துவிச்சி பிரசவத்துக்குரிய நோக் காடு தான் என உறுதிப்படுத்தியதும் நிறைநாளி நெல்லுள் சத்தகக்காம்பை குற்றி வைத்து, வெற்றிலை, பாக்கு, தேங்காய் என்பவற்றை வைத்து, பிள்ளையாரை நினைத்து வழிபடுவாள், பின்கொத்திப் பேயையும் வேண்டித் துதிப்பாள்.
பெண்ணின் இடுப்புப்பகுதிக்கு நல்லெண் ணையும், ஜனன உறுப்பிற்கு கற்றாளைச் சாறும் பூசப்படும். சில மருத்துவிச்சிகள் மதுபானம் அருந்துவதும் உண்டு.
அடிவயிறு, ஜனன உறுப்பு என்பவற்று டன் மருத்துவிச்சியின் கைகள் அழுத்தியும்,
ဗြွစ္သစ္ကို;_ဍ3

Page 36
விரித்தும் பிரசவத்தை இலகுவாக்க பிராயத் தனங்கள் தொடரும்.
பிரசவிக்கும் பெண்ணுக்கு வசதியாக கூரையின் பலமான கைமரத்தில் சேலை தொங்க விடப்பட்டு அவள் தனது வேதனையை சேலையை இழுத்தும், முறுக்கியும் அதனோடு படுத்திருந்தபடியே பகிர்ந்து கொள்வாள்.
அகட்டிய கால்களின் தொடைப் பகு தியை உரசியபடி வரும் குழந்தையை மருத்துவிச்சி கையிலெடுப்பாள். வெளியில் நிற்பவர்களுக்கு ஆணா, பெண்ணா என்பதை அறிவிக்க உதவிக்கு நிற்பவர் ஆண்பிள்ளை யெனின் உலக்கையால் வெளிக் கூரையில் தட்டுவர், மற்றவர் அறிந்து கொள்வர் “இதனால் கூரையில் காத்திருந்த பிதிர்கள் தங்களுக்கு பிதிர்க்காரியம் செய்வதற்கு ஆண் வாரிசு வந்து விட்டதென்று மகிழ்வார்கள். (வடபுல நாட்டார் வழக்கு. வல்லை ந.அனந்தராஜ் - 2002)
பெண்பிள்ளையெனின் அடவி விளக்கு மாறால் கூரையில் தட்டுவர். உலக்கை, அடவி இரண்டிற்கும் இடையில் உள்ள உறுதித் தன்மை, வேறுபாடு, மதிப்பு, நிலை என்பவற்றை உணர்ந்து கொள்ளலாம். இது ஒரு சங்கேதமான பாஷையாகும்.
வீடுகளில் கடிகாரமில்லாத அந்தக் காலத்தில் பகல் பிரசவமெனின் சூரிய நிழல் அடி மூலமும் (நிழலில் நீளத்தை காலடியால் அளத்தல்) இராப்பிரசவமெனின் நிலவடி நீளம், வெள்ளிக்குறிப்பு என்பவற்றின் மூலம் பிறந்த நேரத்தை அறிந்து சாதகம் குறிக்க வைத்துக் கொள்வர்.
மருத்துவிச்சி, கொப்புள்கொடியை சத்தகத்தால் வெட்டி தாயிடமிருந்து குழந்தை யை தனித்தெடுப்பாள். அளவான சுடுநீரால் குழந்தையை குளிப்பாட்டித் துடைத்து, வறுத்த திருநீறு, மஞ்சள் என்பவற்றை குழந்தையின் உடல் முழுவதும் பூசி குளிர் பாதியாமல் செய்வாள்.
தாயின் இடுப்புப்பகுதியை உடன் வெந்நீரால் கழுவி துப்பரவாக்கித் துடைத்து விடுவாள். உடன் வெந்நீர் பட சூடும், வேதனை யும் தாங்கமுடியாது தாய் கத்திக்குளறுவாள். குளிர்நீர் பாவித்தால் புண்ணாக்கி சீழ் வைத்துவிடும் எனக் கூறுவர்.

இந்த பிரசவத்தின் போது தாயின் பிறப்பு வாசல் சிறிது கிழிபடவும், நலியவும் வாய்ப்புண்டு. இதனால் பிறப்பு வாசலின் சுற்றளவு கூடும். கிருமிதொற்றுதல் ஏற்பட வாய்ப்புண்டு, நலிந்த இப்பகுதியூடு குடலிறக்கம் ஏற்படுவது சாதாரணமான தொன்றாக இருந்தது.
தற்போது வைத்தியசாலைகளில் பிறப்பு வாசலை வெட்டிப் பெருப்பித்து பிரசவத்தை இலகுவாக்கி பின்னர் சரியான அளவில் தைத்து விடுவர்.வெட்டிய பிறப்பு வாசல் ஊடாக கையால் நஞ்சுக்கொடியை வெளியே எடுப்பதும் இலகுவா னதாக உள்ளது.
வீட்டில் குழந்தை பிறந்தவுடன் வெளி யில் நிற்கும் பெண்ணொருத்தி சுளகில், நெல், அரிசிப்பொரி, எள்ளுப் பொரி, மஞ்சள், உள்ளி, பஞ்சு போன்றவற்றை பொதிகளாக வைத்துக் கொடுக்க மருத்துவிச்சி பொருட்கள் ஒவ்வொன் றையும் பார்த்துப் பார்த்து பாடல் பாடுவாள். அரிசிப்பொதியோடு வந்திரோ தம்பி
அரிசி மாலைநாடும் க்ண்டீரோ தம்பி நெல்லுப்பொதியோடுவந்தீரோதம்பி
நெல்லுமலைநாடும் கண்டீரோ தம்பி மஞ்சள்ப்பொதியோடு வந்தீரோ தம்பி
மஞ்சள் மலைநாடும் கண்டீரோ தம்பி வேந்தர்க்கு வேந்தராய் வந்தீரோ தம்பி
வேந்தர்தம் மணியும் கண்டீரோ தம்பி
பிறந்தது பெண் பிள்ளையெனின் தம்பிக்குப்பதிலாக தங்காள் எனப்பாடுவாள். (இறுதியாக தாய், தந்தை, சுற்றம் நல்நாடு எ6,பன வாழ வாழ்த்திப் பாடுவாள்.
அயலும் புடையும் வாழ வேண்டும் அன்னமும் சுற்றமும் வாழ வேண்டும் ஆச்சியும் அப்புவும் வாழ வேண்டும் அம்மாவும் மாமியும் வாழ வேண்டும்
பிள்ளை பிறந்தபின் அடுப்படி வாசலில் வேப்பிலை தொங்கவிடுவர். அடுப்படியுள் வேப்பங்கொட்டை எரிப்பர். வேப்பெண்ணை விளக்கை மரப்பீடத்தில் ஏற்றிவைப்பர். சிறிதளவு வேப்பெண்ணையை குழந்தையின் நாவில் தடவுவர். வேம்பு கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது.
பணத்துடன் அரிசி, நெல் போன்ற தானியங்களை மருத்துவிச்சிக்கு சந்தோசமாகக் கொடுத்து வழி அனுப்பிவைப்பர்.
தூண்.34

Page 37
г. игији (јобаја, - 002.Jги ി ില്ക്ക് ബ്രിഗ്ഗീകരി
அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையில் முனைப்புப் பெற்றிருந்த பனிப்போர் முடிவடைந்த பின்னர் ஓர் உலக ஒழுங்கு வரையறுக் கப்பட்டது. அத்தகைய புதிய உலக ஒழுங்கினை (New world order) அரசியல், பொருளாதார, பரிமாணமாக அமெரிக்கா விரிவாக்கிக் கொண்டது. இப்புதிய உலக ஒழுங்கானது அமெரிக்கா தலைமையில் அதன் ஒத்துழைப்பு நாடுகளின் பக்கபலத்துடன் சீர்ப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வொழுங்கு படுத்தல் பனிப்போர் முடிந்த ஒரு தசாப்த காலத்தில் நெருக்கடிகள் எதனையும் பெரிதாக எதிர் கொள்ளாது. செயல்பட்டு வந்தது. ஆனால் அதன் பின்னர் பல எதிர்ப்புவாத அரசுகளாலும், அமைப்புகளாலும் நெருக்கடிக்குள்ளானது. அந்நெருக்கடியை முறியடிக்க புதிய சித்தாந்தத்தினை உருவாக்க வேண்டிய கடப்பாட்டில் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள் தள்ளப்பட்டன. அவற்றின் மிகப் பிந்திய கண்டுபிடிப்பே பயங்கரவாதமாகும். அர்த்தமற்ற நலிந்து போன ஒரு சொற்பதத்தை முதன்மைப்படுத்தி சித்தாந்தமாக சிருஷ்டிக்கும் முயற்சியில் மேற்கு ஈடுபட்டுவருகிறது. மேற்கின் அத்தகைய ஈடுபாட்டுக்கு உள்ளார்ந்த நலனும் அதன் பிரதிபலிப்புக்களுமே காரணமாகும்.
அமெரிக்கா உட்பட்ட மேற்கின் பிரதான நலன் உலகமயவாக்கத்தில் (Globaliரution) தங்கியுள்ளது. அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாசார, அர்த்தத்தில் விரிவடைந்து வரும் உலகமயவாக்கம் ஒரு பிரிவினரின் எதிர்புணர்வினால் நெருக்கடிக்குள்ளாகியது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய, மற்றும் மத அடிப்படைவாதத்தை கொண்ட இனப்பிரிவாலும், அவை சார்ந்த அரசுகளாலுமே அத்தகைய நெருக்கடி தீவிரமடைந்தது. ஏனெனில் உலகமயவாக்கம் நீண்ட காலத்துக்கு முன்பே உருவாகிய ஒர் அம்சம். ஏறக்குறைய கீழைத் தேசம் மீது ஐரோப்பிய ஆதிக்க விஸ்தரிப்பு வாதம் தொடங்கிய காலப்பகுதியிலேயே

afı98ug
റ്റ്ര0 - 2.മിമിഗ്രിധി
கே.ரீ.கணேசலிங்கம்.
உலகமயப்படுத்தலுக்கான ஆரம்பம் தோற்றம் பெற்றுவிட்டது. அதனால் அரசியல், பொருளா தார, வர்த்தக, அர்த்தத்தில் உலகமயவாதம் சாத்தியப்பாட்டை அண்மித்து விட்டது. ஆனால் கலாசார அல்லது பண்பாட்டு அர்த்தத்தில் அத்தகைய சாத்தியப்பாடு எதனையும் உலக மயப்படுத்தல் அண்மிக்கவில்லை. அரசியலிலும்
கணிசமான அடைவு இஸ்லாமிய நாடுகளில் நிகழவில்லை. இங்கே தான் பிரச்சினையின் ஆரம்பமே காணப்படுகின்றது. கலாசாரத்தின் பெயரால் மேற்குலகம் மறுதலிக்கப்பட்டால் மேற்குலகத்தால் கட்டி வளர்க்கப்பட்ட அரசியல், பொருளாதார, வர்த்தமயப்படுத்தல்கள் கேள்விக் குள்ளாகும். அது முழு உலகத்திலும் மாற்றத் தை சாத்தியப் படுத்திவிடும் என்பதே மேற்கின் அச்சமாகும். இவ்வச்சத்தை தீர்த்துக் கொள்வ தற்கு மேற்கு எடுத்துக் கொண்ட ஆயுதமே பயங்கரவாதமாகும்.
பயங்கரவாதம் என்பது நிர்பந்தத்தின் ஊடாக, அரசியல் விதிமுறைக்கு இணங்காது வன்முறையை வெளிப்படுத்தி விளைவு களையும், இலக்குகளையும் அடைய முயலு கின்ற அம்சமே பயங்கரவாதமாகும். அதுமட்டு மல்லாது நியாயமற்ற, நீதிக்குப் புறம்பான இலக்குகளை இலட்சியமாக கொண்டு இயங்கு கின்ற தன்மையை பயங்கரவாதமெனலாம். பயங்கரவாதத்தின் நடவடிக்கைகளாக அரசியல் மற்றும் இராஜதந்திரத் தலைவர்களை கடத்து தல், கொலைசெய்தல், விமானங்களை விபத்துக் குள்ளாக்கி அழித்தல், கடத்துதல், பொதுத், தனியார் சொத்துக்களை அழிவுக்குள்ளாக்குதல் மற்றும் பிரஜைகளை அவமதித்தல், கொலை செய்தல், காயப்படுத்தல் என்பனவற்றை பயங்கர வாத நடவடிக்கையாகக் கொள்ளமுடியும், இவையனைத்தும் உலகமயப்படுத்தலுக்கு ஆபத்தானவை. ஏனெனில் ஒரே வகையான அல்லது சீரிய ஆட்சி முறையைப் பாதிக்கக்கூடி யதாக அமையவல்லன. உலகம் பொருளாதார அர்த்தத்தில் ஒன்றிணைவது மட்டுமன்றி ஒரே
தூண்.35

Page 38
தன்மைக்குட்பட்ட, ஒரே அலகுக்குட்பட்ட போக்கையுடைய ஆட்சிமுறைமையும், கலாசார அல்லது பண்பாட்டுத்தன்மைகளின் இயல்புகள் ஒன்றித்தில்லாதுவிடினும் இசைந்து போகுகின்ற போக்கும் அவசியமானதாக உள்ளது. உலக மயபபடுத்தல் பயங்கர வாதத்தை இனங்கண்டது போல் தேசங்களை கூறுபோடும் சுயநிர்ணத் திற்கான தேசிய விடுதலைப் போராட்டங்களை கையாளுவதற்கு உள்ளகச் சுயநிர்ணயத் திற்கான ஆட்சி முறைகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது சுயநிர்ணயத்திற்கான போராட்ட சக்திகளுடன் மட்டும் நின்று விடாது முழு உலகத்தின் அரசுகளையும், அவற்றின்
புத்தக அறிமுகம் சொல்லினால் ஒரு மாளிகை /ஆசிரியர்- கலாநிதி.சி.சிவலிங்
3.
శజ్య
சாதாரண்வமாழிவேறு, கவிதைமொழி வேறு தகவல் பரிமாறுவதற்குப் பயன்படும் சாதாரண மொழி ஒற்றைப் பரிமாணம் உடையது. ஆனால் கவிதை மொழி பல்பரிமாணம் உடையது. கவிதையை உரத்து வாசிக்கும் போதே நாம் அதற்கென்று ஒரு குரலை - தொனியைத் தெரிந்தெடுக்கிறோம். மானிட வாய்க்கு ஏதோ விதத்தில் மேம்பட்டு நின்றுதான் கவிதை பேசுகிறது என்று Ben Jonson சொல்லியிருக்கிறார்.
வழமையாக நாம் பயன்படுத்தும் வமாழி தருக்க ரீதியானது; அறிவுபூர்வமானது, ஆனால் கவிதைவமாழி ஆக இருந்து கொண்டும் அதிகபட்ச பொருளை உணர்த்திவிடும்.
"வசந்தழலின்சாற்றைப்பிழிந்துசெழுஞ்சீதச்
சந்தனவமன்றாரோ தடவினார்”
என்பதோ,
சுருக்குவிழுந்தகடல்தவழுகிறது"
என்பதோ,
 
 

ஆட்சி முறைகளையும் புதிய கோணத்தில் ஒழுங்குபடுத்த திட்டமிட்டுவருகின்றது. அத்த கைய திட்டமிடல் ஒரே இயங்கு விசையை காட்டுவதுடன் பெரிய அரசுகளையும், பிராந்தி யங்களையும் இலகுவில் அரண் செய்துவிடும்.
எனவே உலகமயப்படுத்தல் - பயங்கர வாதம் உள்ளகச் சுயநிர்ணயம் - என்ற மூன்றும் ஒரே தளத்தில் சர்வதேச அரசியலை சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களுக்கு சமமானவை ஒன்றிலிருந்து இன்னொன்று விலகமுடியாத முடிச்சுகளைக் கொண்டவையாக இயங்கு கின்றன.
கராஜா/வான்முகில் பதிப்பகம் /பக்கங்கள்- 70 /விலை -115/=
“பூனைக்காலால்நடந்துபுகார்வருகிறது”
என்பதோmonsense அன்றி வேஹன்ன?
'தலைசிறந்த சொற்களைத் தலைசிறந்த ஒழுங்கில் அமைப்பது தான் கவிதை" என்று Coleridge சொன்னதை இக்காலத்தில் யாரும் வபரிதுபடுத்து வதில்லை. ஆனால் அக்கூற்றில் ஓர் உண்மை வபாதிந்துள்ளது. ஒரு சொல் கவிதையில் உரிய இடத்தில் அமையும் போது அதற்கு அசாதாரன வலு வந்து விடுகிறது. ஒரு மகாகவி தம்மை இடமறிந்து வைப்பத னால் தமக்கு வலுவும் பொலிவும் வாய்க்கும் எனநம்பி சொற்கள் அவன்முன்நின்று இரக்குமாம்
*எனைவைத்தி எனைவைத்தி எனப்பதங்கள்
இடையிடைநின்றிரந்து வேண்ட இனிவைப்பாம் இனிவைப்பாம் வயாறுத்திடுமின்
என்று கூறி.”
இதனாலோ என்னவோ, சொல்லைமந்திரமாக, அஸ்திர மாகக் கவிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
சொல்லினால் ஒரு மாளிகை எழுப்பியுள்ளார் கவிஞர் சிவலிங்கராசா. கவிதைக்குரிய சிறப்பியல்பு களக நான் மேலேகுறிப்பிட்டுள்ள பல அம்சங்களை இக்கவிதைகளிற் காணலாம். இவற்றுள் தலையாயது கவிஞருடைய மொழியாட்சி.
*சந்தனத்தின் மேலே சாத்தியதோர்குங்குமத்தில் வாங்கும் கவின் கலையின்வயாலிவுவகாலுவிருக்கும்”
“நீறிருந்தவநற்றிநிலவெறித்த குங்குமத்தை
நூறுதரம் உள்ளும் உளம்" என்பன இதற்கு உதாரணங்கள். இந்த வீச்சுக்குக் காரணம் செந்நெறிப்பாங்கான சொல்லாட்சி மட்டு மல்ல; தமிழ் மரபுவழிப்பட்ட கவிதை ஓட்டமும்தான். இது ஒருபரிமாணம்.
GaFMT. LU (முன்னுரையில் இருந்து)
தூண்:36

Page 39
தொலைக்காடீசியும் சுய மெய்யு (Television and Selfportrayal)
நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது ஊடகமயப்படுத்தப்பட்ட உலகத்திலாகும். (MaSS mediatedSociety) நீண்டு செல்லும் ஊடகங்களின் நிரையில் தொலைக்காட்சி என்பது கேட்கக் கூடியதாகவும் பார்க்கக் கூடியதாகவும் உள்ள sp6IIL35lb (Audio visual medium) 6T66 gT6) நுகர்பவரின் மீதான ஊடுருவல் அல்லது செல்வாக்கு என்பது அறிகை சார் வழியில் பலமானது. இந்த ஊடகத்தினை பொழுது போக்கு ஊடகமாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கருத்தியல், பொதுஜனங்களின் மனதில் பதிந்து விட்டது. அதேபோலத் தான் படைப்புக்களின் தரமும் சூத்திரப்பாங்கில் நிர்ணயம் செய்யப்பட்ட கோவைகளாக மாற்றம் கண்டுவிட்டன. இதனைப் பிறிதொரு மொழியில் கூறுவதாயின் 'ரசனை உருவாக்கம் என்பதில் எங்கோ தப்பு நேர்ந்திருப்பது தெரிய வரும். இது சமூகவியல் பார்வையில் ‘சமூகமயமாக்கல்'; எவ்வழியில் நின்று நோக்கினாலும் தனிமனித னின் உருவாக்கத்தில் தொலைக்காட்சி தவிர்க்க முடியாதபடி இணைந்து விட்டது என்பது தெரிய வருகிறது. தொலைக் காட்சியிடமிருந்து, ஒருவரது கற்றல் என்பது எவ்வாறு நிகழ்கிறது என்பதை பின்வரும் குறிப்பு படிமுறையாக விளக்கும்.
“கற்றுக்கொள்ளல் என்பது அதிகம் முக்கியமற்றதாக வெளித்தெரியினும் தொலைக் காட்சி உள்ளடக்கம், அதன் வடிவம், செய்திகள் ஒரு கோலத்தை ஆக்கும். அது தனியன்கள் பயன்படுத்தும் பாதையாகும். அதனை ஒரு தனியனது தூண்டி, காலம் காலமாக நினைவில் வைக்கும் உண்மையில் இப்படியான ஞாபச் சிந்தனை முக்கியமானது. இது நுகர்ச்சிக்கும் உலகு பற்றிய நம்பிக்கைக்கும் இடையிலான உறவு நிலையின் தாக்கத்தை பிரதி பலிக்கும்” (RobertPHawkins, SuzannePingree, 1990)
இந்தக் கற்றல்கள் தனிமனிதர்களது உளப்
பாங்கில் பதிந்து நடத்தை மாற்றமாக இந்த பதிவு நீளும்.ஆக உளப்பாங்கு, உணர்வு நிலை,

R.ஜெயந்தினி
நம்பிக்கைகள் இவற்றை வடிவமைத்துக் கொள்ளலில் தொலைக்காட்சி பிரதானமானது.
இங்கு முக்கியமாக மூன்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.
1.நிகழ்வுகள் படைப்புக்களில் ஒரே வார்ப்பிலான மனதுடன் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
2.குழந்தை தொலைக்காட்சி உள்ளடக்கத்தை
அதிகம் விரும்பிப் பார்க்கிறது.
3.அந்தக் குழந்தைக்கு இங்கு உருக் காட்டப்படும் நம்பிக்கைகளுக்கு எதிரான
மாற்றீட்டுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
குழந்தைகளைப் பொறுத்தவரை இவர்கள் நலிவுற்ற பார்வையாளர்கள் (Vulnerable aமdiences) எனக்கருதப்படுபவர்கள். ஆகவே இது அவர்களை அதிகம் செல்வாக்குக்கு உட்படுத்தும். ஏனெனில் உலகுக்கும், (World) தொலைக்காட்சியில் உருக்காட்டப்படும் உலகுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியாதவர்களான இவர்களை அதிகம் ஊடுருவும்.
தொலைக்காட்சியில் இன்று அதிக பாகத்தினை ஈர்த்து வைத்திருப்பது தொலைக் காட்சித் தொடர்களாகும். பொதுவாகவே எந்த அலைவரிசை எனினும் அவை சுய ஆர்வத்தின்
ဖြ!အဲ့ဒါ့), 37

Page 40
அடிப்படையிலேயே இயங்குகின்றன. எந்த எந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பர அனுசரணையா ளர்கள் அதிகமோ அந்த நிகழ்ச்சிகளுக்கே அந்தக் களத்தில் இடம். அந்த நிகழ்ச்சிகள் ஜனரஞ்சக சுவைக்குகேற்ப வடிவமைக்கப்படு வதாகவும் கூறப்படுகிறது. படைப்பவர்கள் நுகர்பவர்களில் கூட குறிப்பிட்ட இலக்குக் Qa5160iiL (950p606) (Target group) 60LDu JLDITEsds கொண்டது. தொலைக்காட்சித் தொடர்கள் மத்திய தர வர்க்கத்தினரை சென்றடைவதை இலக்காக கொண்டு செயற்படுவன. அவர்களி லும் குறிப்பாக பெண்களுக்கு இதனுடன் உள்ள உறவு என்பது காத்திரமானது. இவர்கள் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை அதிகம் தொட்டு நிற்பதால் அதன்பால் ஈர்க்கப்பட்டு அந்தப் பாத்திரங்களினூடாகத் தம்மை இனம் காண்கின்றனர். பிள்ளைகளை பாடசாலைக்கும், கணவனை வேலைக்கும் அனுப்பி விட்டு, அவசர அவசரமாக வேலைகளை முடித்து விட்டு வீட்டிலிருக்கும் பெண்களின் பார்வையில் இவை பெறுமதியாகத் தெரிகின்றன.
தொடர்களை உள்ளடக்கப் பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது,
“பெண்கள் வேலைத்தளத்தில் எசிர்கொள் ளும் சிக்கல்கள், கொடுமைக்காரக் கணவனிடம் சிக்கி சீரழியும் நிலை, கணவனை இழந்த பெண்களின் பிரச்சினைகள், காதலில் தொடங்கி கல்யாணம் வரை படும் இடர்கள், குடும்ப முரண்பாடுகளிடை பெண்ணின் நடிபங்கு, சமூகத்தின் குற்றம் சாட்டும் பார்வையில் பெண் கள், பெண்கள் கடத்தப்படல், கற்பழிக்கப்படல், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகல், பெண்ணே பெண்ணுக்கு எதிரியாதல்” என்பன போன்ற கருக்களில் இவைவெளிப்படுகின்றன. பெண்களை இலக்கு வைத்தே தொலைக் காட்சித் தொடர்களை எடுக்கின்றனர் என்பதற்கு இன்னொரு சான்று அவர்களது பெயர்களையும் அவர்களுக்கு முதன்மையாகக் கருதப்படும் பொருட்களையும் மையமாக வைத்தே தொடர் களுக்கு பெயர்கள் இடப்படும். அது 'அத்தை யாகவோ அல்லது "குங்குமம்' ஆகவோ அமையலாம்.
இந்தப்படைப்புக்களை விமர்சனரீதியில்
ஆய்வுக்குட்படுத்தும் போது அவை உட் பொருள்கள் பலவற்றை வெளிச்சப்படுத்தும்.

பொதுவாக தொடரில் பெண்கள் இரண்டு விதமாக காட்சிப்படுத்தப்படுவர்.
1.அடக்கு முறைக்கு அடங்குபவள்.
2.அடங்காப் பிடாரி.
இந்த இரண்டு முகங்களுக்கும் அப்பாலான அவளது ஐதார்த்தமான முகம் எது என்பதை யாரும் சொல்ல விரும்புவதுமில்லை.
தொடர்களை பார்க்கின்ற போது தமிழ் நாட்டுப் பெண்கள் காலையிலிருந்து இரவு வரை அழுதுகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அடுத்தது தமிழ் நாட்டில் ஆண்கள் இரண்டிற்கு மேற்பட்ட தாரங்களைக் கொண்டுள்ளனர். இவை ஜதார்த் துடன் எவ்வளவுக்கு ஒத்துப்போகக் கூடியவை? என்று சிந்தித்தால் பிரச்சினை எழும். பணத் தேட்டத்தில் 'ஒழுக்கம்' பற்றிய மதிப்பீடுகள் கூட மாறுகின்றமை முரண் நகையானது.
ப்ெண்கள் எப்பொழுதுமே அழுது கொண்டி ருப்பதற்கு அப்பால் நோக்குவார்களாயின் அது மாயையானது அல்லது ஐதார்த்தத்திற்கு அகப்படாதது. அவர்கள் பெளதீக ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது பலவீனமா னவர்களாக மெய்யுருப்படுத்தப்படுவர். ஆனால் இறந்த பின்னர் ஆவி உருவில் வந்து நீதி கேட்டு பலம்பெற்றவர்களாக மாற்றப்படுவர். அத்துடன் பழிக்குப் பழியும் தீர்த்துக் கொள்வர். இது மறைமுகமாக சொல்ல வரும் கருத்து பெளதீக ரீதியில் வாழும்போது அடங்கிப் போகவேண்டிய வர்கள் இறந்த பின்னர் நினைத்ததை முடிக்கலாம் என்பதாகும். ஆக, இப்போது துன்பப்படுவதில் கவலை இல்லை எனும் கருத்தியல் நிலைநாட்டப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விடயம் அறிவுக்கு முரணான அதீத சக்திகளில் நம்பிக்கை கொள்ள வைப்பதாக தொடர்கள் அமைந்து மனிதர்களை செயலற்றவர்களாக மாற்றிவிடுதல். சமயம் சார்ந்த நம்பிக்கைகள் சார்பாக ஒரு சாராரிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பில் இவை படைக்கப்படுகின்றன. அற்புதங்கள். காண்பிய மாயைகளின் வழி பெரியவர்களுடன் சிறியவர்களையும் கவர்கிறது. இவை சிலசமயம் எந்தத் தவறைச் செய்தாலும் இறைவனிடம் சரணடைந்தால் தண்டனை நீங்கிவிடும் என்ற
தூண்.38

Page 41
கருத்தாக்கத்தைச் சொல்லித் தருகிறது.
இறுதியில் இந்தியாவின் ஏகாதிபத்தி யத்தையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்த மானது. பெரும்பான்மை தொடர்கள் இந்தியாவி லிருந்து தரப்படுபவை. சொந்த நாட்டுத் தொலைக்காட்சிகள் கூட இந்தியத் தொடர்களை மீளப்பதிவு செய்து ஒளிபரப்பு கின்றன.
இவற்றின் வழி யாழ்ப்பாணம் குட்டி இந்தியாவாக மாறிக் கொண்டிருக்கிறதோ எனும் ஐயம் பலர் மத்தியில் உள்ளது. இதன் வழி எம்மைப் பற்றிய அடையாளக் கட்டுமானத்தில் இன்னொரு நாட்டின் ஊடுருவல் பெரும் சவா லாகிறது. உலகமயமாக்கம் உடைபடுவதாகக் கூறப்பட்டாலும் அறிந்துகொள்ளுதல், தொடர்பு கொள்ளுதல் பரிமாறிக்கொள்ளுதல் என்ப வற்றிற்கு மேலாக ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது.
இவற்றிலிருந்து எம்மை நாமே மீளக் கட்டியமைத்துக்கொள்ளுதல் என்று வரும் போது LDITsibort Labib (Alternative media) 6T6trugs65 அவசியம் விளங்கும். அடையாளங்கள் மாறி எமது மெய்யுருக்கள் எம்மாலேயே வரையப்படும் சுயமெய்யுருவாகித் (Self portraiture) தனித்து வம் பேணப்பட வேண்டிய அவசர தேவை உணரப்படுகிறது. இப்படி உருவாக்கப்படும் மாற்றுத் தொலைக்காட்சிப் படைப்பாக்கக் கலை (Created art) என்பதுடன் இணைந்து செல்ல வேண்டும். போலிகளை இனம் கண்டு வியாபாரப் பண்டம் எனும் நிலையிலிருந்து ‘கலைப்பண்டம் எனும் ஸ்தானம் எய்தப்பட வேண்டும். சமூகப் பிரக்ஞை அது நுகர்பவரை சென்றடையுமா? என்ற ஐயப்பாட்டை நீக்கி உருவ, உள்ளடக்கம் சார்பாக சமனிலை பேண்ப்படுவதாக வர வேண்டும்.
விமர்சன ரீதியாக சிந்திக்கும் பாங்கினை வளர்த்துக் கொள்ளல் என்பதும் முக்கியம் பரவலான விழிப்புணர்வு என்பதில் கூட இந்த தொலைக்காட்சி ஊடகம் அதிக பயனுடையது 6ildf&GOT furtGOT LITs6061 (Critical Approach என்பது சமூகத்தில் வளர்க்கப்படும் போது ஐதார்த்தத்தை இனம் கண்டு போலிகளை நுகர்பவர் தாமே நிராகரிக்க வழியுமாகும். இது ரசனை உருவாக்கத்தின் செம்மையாக்க அல்லது மீள் உருவாக்கம் என்பதாக மாற்ற

காணும் தரமான படைப்புக்களைக் கூட நிராகரிக்கும் இழிநிலையை இது உடைக்கும். 956060T 9|L9LDL p5606)uis Sobis(85 (Grass root level) மேற்கொள்வதற்காக விமர்சன ரீதியான கற்கை நெறிகளை இளம் சந்ததியினருக்கு அறிமுகமாக்கல் பலன் தரும்.
நாளாந்தம் மக்கள் பல்வேறு சிக்கல் களுக்குள் இருந்து மீட்சி பெறுவதற்காக (Escapism) தொலைக்காட்சியை நாடுகின்றனர். ஆனால் உண்மையில் இவை போலியான SúllgöS6ö (Pseudo - Escapism) Éæþérô (ylgsögð பின்னர் எவ்வித தீர்வும் இன்றி பெறுகை எதுவும் எட்டப்படாமல் அது அதுவாகவே இருக்கும். ஆக, எம்மை நோக்கிய மேம்பாட்டிற்காக அதனைப் பயன்படுத்த, செழுமையான பாரம் பரியமாக எம்மை நீட்சி பெறவைக்க, கலைப் படைப்பாக்கி அவற்றினுள்ளால் எம்மை இனம் காண விளைவதாகவும் மாற்றூடகம் அமைய முடியும்.
போலி, இனம் காணப்பட்டு நிஜம் உணரப்பட்டால், ஒவ்வொரு தனியனும் சமூக இயக்கத்தினுள் அணி திரள முடியும். இந்த நிலை எய்தப்பட்டால் எந்த அலைவரிசை நிகழ்ச்சியைக் கொண்டு வந்தாலும் சலனம் இல்லை. ஏனெனில் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் அல்லது படைக்க வேண்டும் என்ற வரிசைப் படுத்தல்கள் தனிமனிதனில் சேமிக்கப் பட்டிருக்கும். அதுவே அவனை காத்துக் கொள்ளும் காப்பாகவும் மாறும்.
தூண்:39

Page 42
இலங்கையின் பண்டையகால கடல்சார் வர்த்தகத்தில் கப்பல்கள் - சில தொல்லியல் சான்றுகள்
ܬܚ
2300 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட மீன் உருவ
இலங்கையின் நீண்டகால வரலாறு கடல்சார் வர்த்தகத்துடன் தொடர்புடையது. இதற்கு இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் தமிழகத்திற்கு அண்மையில் அமைந்திருப்பது, பாண்டிநாட்டுக்கும் வடமேற் கிலங்கைக்கும் இடையே நடைபெற்ற முத்து, சங்கு குழித்தல், இயற்கையான துறைமுங்கள், மேற்கு நாட்டு வணிகர்கள் பெரிதும் விரும்பிய ஏலம், கறுவா, கராம்பு போன்ற வாசனைப் பொருட்களை இங்கு இலகுவாகப் பெறக்கூடிய தாக இருந்தமை என்பன முக்கிய காரணங்க ளாக இருந்தன. இதில் பண்டைய கால வர்த்தகம் இந்தியாவுடனும், சிறப்பாக தமிழகத்து டன் இணைந்த நிலையில் பெரும்பாலும் மேற்கே கிரேக்க, ரோம, அரேபிய நாடுகளுடனும், கிழக்கே தென்கிழக்காசிய மற்றும் சீன நாடுகளுடனும் நடைபெற்றதை இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், தொல்லியற் சான்றுகள் மற்றும் வெளிநாட்டார் குறிப்புக்கள் என்பன சுட்டிக்காட்டுகின்றன. இவ்வர்த்தகம் கடல் வழியாக நடந்ததால் இதற்குப் பலவகை கலன்கள் பயன்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை யின் பண்டைய காலக் கலன்கள் பற்றி சரிவர
 

கலாநிதி. பரமு. புஷ்பரட்ணம்
" وفي عهده
பரதவர் என்ற பெயருடன் ம் பொறித்த காணயம் (அக்குறுகொட)
2.’ --- *** * * * - s 3: : -3:...
யாரும் ஆராய்ந்தாகத் தெரியவில்லை. இருப்பி னும் அக்காலத்தில் வழக்கிலிருந்த பலவகைக் கலன்கள் பற்றியும், அதன் உருவ அமைப்புப் பற்றியும் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் மட்பாண்ட ஓடுகளில் சிலவகைச் சான்றுகள் உள்ளன. அவை பற்றிய ஆரம்ப அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது.
இலங்கை மற்றும் அயல் நாடுகளுட னான வர்த்தக உறவு பற்றிக் கூறும் சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, கோணி, பட்றி, திமில் எனப்பலவகைக் கலன்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் திமில், அம்பி என்பன மீன் பிடித்தலுக்கும், பெரிய கப்பலிலிருந்து பொருட்களைத் துறைமுகங் களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப் பட்டதாகக் கருதப்படுகின்றது. வங்கம், நாவாய் நீண்ட கடற்பயணத்திற்கும், வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன (சுப்பராயலு 1983: 161. 162). வட இலங்கையின் வரலாற்றுப் பழமை வாய்ந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மாதோட்டத்திற்கு வந்தடைந்த கிரேக்க, ரோம மற்றும் இந்திய நாட்டுக் கப்பல் பற்றியும் இங்கிருந்து அயல் நாடுகளுக்குச் சென்ற கப்பல் கள் பற்றியும் பாளி, சிங்கள இலக்கியங்கள்
தூண்.40

Page 43
கூறுகின்றன. நாயன்மார் பாடல்கள் வங்கம் நிறைந்த துறைமுகமாக இதைச் சிறப்பித்துக் கூறுகின்றன (மயினை கிளார் 1953). பாளி நூல்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற் போக்குவரத்திற்குப் பயன் படுத்தப்பட்ட முக்கிய கடற்கலமாக நாவாயைக் குறிப்பிட்டு அக்கப்பல் தலைவனின் பிள்ளை களான சேன, குத்தக என்போர் தமிழகத்திலி ருந்து வந்து இலங்கையில் ஆட்சிபுரிந்த முதல் தமிழ் மன்னர்கள் எனக் கூறுகின்றன. (M.VXX1:10)
அநூராதபுரத்தில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு தமிழ் நாட்டு வணிகர்கள் கூட்டாக வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றிக் கூறுகின்றது. அதில் கப்பல் தலைவன் b|T6 is 35J6, 6T6iru66 (Navika-Karava) வணிகக் குழுவின் தலைவனாக இருந்து செயல்ப்பட்டான் எனக் கூறுகின்றது. இங்கு கிடைத்த கி.மு. 1ஆம் நூற்றாண்டிற்குரிய இன்னொரு கல்வெட்டு இந்தியாவில் உள்ள ‘போஜகட' என்ற இடத்தைச் சேர்ந்த ‘நாவிகன்’ (Bojakata Navika) шрjрjld, anplašlp5. 'கண்டக்கல' என்ற இடத்தில் கிடைத்த இதே காலகட்டத்திற்குரிய மேலும் ஒரு கல்வெட்டு கப்பற் தலைவியான ‘சமண’ என்பவள் பெளத்த சங்கத்திற்களித்த கற்குகை பற்றிக் கூறுகிறது (Navikaha Mataya Upasika - Samaniya lane - Catu (disa Patihapita). SQ6Ausból6ólbög பண்டைய காலத்தில் பெண்களும் கப்பல் சொந்தக்காரர்களாக இலங்கையில் இருந்தமை தெரிகிறது.
மேற்கூறப்பட்ட காலப்பகுதிக்குரிய கல்வெட்டுக்கள் பலவற்றில் தொட (tota), படக, படகே, படந போன்ற பெயர்கள் கடல்சார் வர்த்தகத்தோடு தொடர்புடையனவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘போராசிரியர் பரண விதானா’, ‘தொட' என்ற சொல் கடற்போக்கு வரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட போக்குவரத் துச் சாதனங்களில் ஒன்று எனக் கூறுகிறார் (1970 XCIX). இது தமிழில் தோணியென அழைக் கப்படும் கடற்கலத்திற்குரிய இன்னொரு பெயரா கக் கருத இடமுண்டு. வடமேற்கிழங்கையில் முத்துக்குளித்தலுக்குப் பெயர் போன ஒரு இடம் பண்டைய காலம் தொட்டு ‘தோணிக்கல்' என அழைக்கப்பட்டு வருவதை இங்கு நினைவு

கூரலாம். இவ்வட்டாரத்தில் கிடைத்த கி.மு.1ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று அயல்நாட்டு வணிகர்களிடம் வரிவசூலித்தமை பற்றிக் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல் படக, படகே போன்ற சொற்கள் தமிழில் படகை குறிப்பதாகக் கருத இடமுண்டு. இப்பெயரே இலங்கைத் தமிழரிடையே பெரும்பாலும் இன்றும் வழக்கிலிருப்பதுடன் இதை நினைவு படுத்தும் வகையில் பண்டைய கால இடப் பெயர்கள் சில படகுகிராமம், படகுத் துறை என்ற பெயரைப் பெற்றுள்ளன.
மேற்கூறப்பட்ட வரலாற்றுச் சான்றா தாரங்களிருந்து பண்டைய கால இலங்கையில் L6)66086 கலன்கள் பயன்படுத்தப்பட்டமை தெரிகிறது. ஆயினும் இவற்றின் தன்மை, உருவமைதி, தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றை அறிவதற்குரிய சான்றுகள் இதுவரை சரிவரக் கிடைக்கவில்லை. உலகில் காலத்தால் முந்திய கப்பல் உருவங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்களில் இருந்து அறியப்படுகின்றன. தமிழகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட இடங்களில் பழையகால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றிலே சிலவற்றில் ஆரம்பகால கப்பல் உருவங்கள் அறியப்பட்டுள்ள்ன. (செயக்குமார் 1999). இலங்கையில் இவ்வகையான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்த காலத்தால் முந்திய கப்பல் உருவங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் மட்பாண்டங்களிலேயே பெறப்பட்டுள்ளன.
பொலநறுவை மாவட்டத்தில் உள்ள கி.மு 2ஆம், 1ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட் டொன்றில் ‘பரத' என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. இது ஆரம்பகால கடற்கலமாக இருக்கலாம். இதில் நின்று கொண்டு கடலில் பயணம் செய்வது போல் மனித உருவம் வரையப்பட்டுள்ளது. இதனால் இதைக் கட்டுமரவகையைச் சார்ந்தது எனக் கூறலாம். இவ்வகையான கப்பல்கள் கடலில் குறுகிய தூரம் பயணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப்பாதை மிகக் குறுகியதாக இருப்பதால் இரு நாடு களுக்கும் இடையிலான கடல் வழிப்பாதைக்கும் இக்கப்பல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
தூண்.41

Page 44
இக்கப்பல் உருவத்துடன் கடல்சார் நடவடிக்கைகளுடன் பெரிதும் தொடர்புடைய பரதவ சமூகத்தைக் குறிக்கும் ‘பரத'என்ற பெயர் இடம்பெற்றிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத 'தக்கது. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் இருபத்தியொன்றில் ‘பரத' என்ற பெயர் காணப் படுகின்றது. இவையனைத்தும் ஏறத்தாழ கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாகும். சங்க இலக்கியத்தில் பரதவரின் முக்கிய தொழிலாச் சங்கு, முத்துக்குளித்தல், மீன்பிடித் தல், வர்த்தகம் என்பன குறிக்கப்படுகின்றன. இவ்வகைத் தொழில்களையே இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் ‘பரத' என்ற பெயருக்குரியவர்கள் ஆற்றியுள்ளனர். பெரிய புளியங்குளத்தில் உள்ள கல்வெட்டில் பரத என்ற பெருடன் 'ம' என்ற பிராமி எழுத்தை ஒத்த குறியீடும், நந்திபாதம், சுவஸ்திகா, நேர்கோட்டு டன் கூடிய முக்கோணம் என்பனவும் காணப்படு கின்றன. (I.C.1970 No.368). இக்குறியீடுகள் மெளரியர்கால அச்சு, குத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் சங்ககாலப் பாண்டிய நாணயங்கள் என்பவற்றில் காணப்படுகின்றன. நாணயங்களில் பயன்படுத்தப்பட்ட இக்குறியீடுகள் ‘பரத பற்றிக் கூறும் கல்வெட்டில் இடம் பெற்றிருப்பது வர்த்தகத் தோடு பரதவ சமூகத்திற்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது எனலாம். மேலும் தென்னிலங்கை யில் கிடைத்த கி.மு.2,1ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றின் முன்புறத்தில் இரு மீன் சின்னமும் பின்புறத்தில் பரத என்ற பெயரும் காணப்படுகின்றன. இவை மீன்பிடித் தொழிலுடன் பரதவ சமூகத்திற்குள்ள ஈடுபாட்டைக் காட்டு கிறது.
குருந்ாகல் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டில் வரும் ‘பரத'என்ற கப்பல் தலைவன் அரசதுாதுவனாகக் கடமையாற்றியமை கூறப் பட்டுள்ளது. (I.C.1970: No 1049). நாடுகளுக்கி டையே நடைபெற்ற வர்த்தகத்தில் அதன் தலைவன் இரு அரசுகளுக்கும் இடையே இராஜதந்திரியாகச் செயற்பட்டதை வரலாற்றி லக்கியங்களிலிருந்து காண முடிகிறது. இதனால் இக்கல்வெட்டில் வரும் ‘பரத' என்ற கப்பல் தலைவனே அரச தூதுவனாகவும் செயற்பட்டான் எனக் கூறலாம். வணிகனாகச் செயற்பட்ட ஒருவன் அரச தூதுவனாகவும் இருந்தான் என்பதற்கு ‘பரமன்கண்ட' என்ற இடத்தில் உள்ள இன்னொரு கல்வெட்டு மேலும் ஆதாரமாக

அமைகின்றது. (I.C.1970: Nos 1053,1055). இக்கல் வெட்டு கப்பல் தலைவனான் “திஸ்’ என்பவன் அரச தூதுவனாக (Duta Navika) செயற்பட்டா னெனக் கூறுகிறது. இக் கல்வெட்டில் காணக்கூடிய இன்னொரு சிறப்பு ‘பரத' என்ற பெயர் பொறித்த கல்வெட்டுக்களில் வரும் சில குறியீடுகளைக் கொண்டிருப்பதாகும். இதிலி ருந்து கல்வெட்டுக்களில் வரும் பரத(வ) என்ற சமூகம் தமிழகத்தைப் போல் இலங்கையிலும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தெரிகி றது. இதையே 'பரத என்ற பெயருக்கு முன்னால் உள்ள கப்பல் உருவமும் உறுதிப்படுத்துகிறது எனலாம்.
அண்மையில் பிரித்தானிய, ஜெர்மன் ஆய்வுக் குழுவினர் இலங்கையில் அநுராதபுரப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது தென்னிந்தியாவை ஒத்த பெருங்கற்கால கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகளுடன் குதிரை எலும்புகள், விலையுயர்ந்த கற்கள், மணிகள் மற்றும் சங்ககால நாணயங்கள் என்பவற்றுடன் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கப்பல் உருவம் பொறித்த நரைநிற மட்பாண்ட ஒட்டையும் கண்டுபிடித்துள்ளனர் (Coningham 1996: 92). இக்கப்பலின் மத்தியில் கொடி மரமும் (Mast) அதைத் தாங்கி நிற்பது போன்ற நிலையில் இரு கோடுகளும் வரையப் பட்டுள்ளன. இது காற்றடிக்கும் திசையில் கப்பல் செலுத்துவதற்கான பாயாக (Sail) இருக்கலாம். கப் பலின் வலப்புறத்தில் இரு கோடுகள் இடப்பட்டுள்ளன. இதைச் சுக்கானாக (rudder) அல்லது கப்பலைச் செலுத்துவதற்கான துடுப்பாக (oar) எடுத்துக்கொள்ளலாம். இதில் முன்புறத்தில் உள்ள அணியம் (Stem) பின் புறத்தில் உள் அட்டி (stem) என்பன தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இவ்வகைக் கப்பல் கேரள நாட்டில் உபயோகத்தில் இருப்பதால் அந்நாட்டுச் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது (செயக்குமார் உரையாடலின் போது கூறிய கருத்து அடிக்குறிப்புக்குரியது). இக்கப்பலின் உருவமைப்பு Li 6) மரத் துணி டங்களை ஒன்றிணைத்து கட்டப்பட்டது போன்று காட்டப் பட்டிருப்பதால் இதை நீண்டதூரம் பயணம் செய்யப்பயன்படுத்திய கப்பல் எனக் கூறலாம். இக்கப்பல் உருவம் பொறித்த மட்பாண்டம்
தூண்:42

Page 45
தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட பொருட்களுக்குரிய சான்றுகளுடன் கிடைத்திருப்பதால் பெருங்கற் காலப் பண்பாடு நிலவிய காலகட்டத்திலேயே இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் கடல்சார் வர்த்தகத்திற்கு இது போன்ற கப்பல் பயன் படுத்தப்பட்டதெனக் கூறலாம். மேற்கூறப் பட்டவற்றில் இருந்து இலங்கையின் பண்டைய காலக் கப்பல்களின் பெயர்களையும், அவற்றின் உருவங்களையும், அயல் நாடுகளுடனான தொடர்புகளையும் ஒரளவு அறிய முடிகிறது.
2300 ஆண்டுகளுக்கு முன் பரதவ 280 கப்பல் உருவத்துடன் வெளியிட்ட கல்வெட்டு (பொலநறுவை)
இலங்கையின் ஆரம்பகால கடல்சார் தொடர்புகள் அயல்நாடுகளுடன் பரந்துபட்ட அளவில் இருந்தாலும் அவற்றுள் தென்னிந்தியா வுடன் சிறப்பாகத் தமிழ் நாட்டுடன் நெருக்கமாக இருந்ததெனக் கூறலாம். கி.பி 1ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'தொலமி என்ற வெளிநாட்டு யாத்திரிகள் தென்னிந்திய வர்த்தகம் பற்றிக் கூறும்போது அந்நாட்டுக் கப்பல்கள் பலவும் பாண்டி நாட்டுக் கடற்கரையை அண்டித் தரித்து நின்றதாகக் கூறுகிறார். ஏறத்தாழ இதே காலகட்டத்திற்குரிய “பெரிபுளஸ்' என்ற நூல் ரோம் வர்த்தகர் இலங்கை செல்லாமலே அந்நாட்டுப் பொருட்களை தென்னிந்தியத் துறைமுகங்களில் பெற்றதாகவும், அதே போல் இலங்கை வணிகர் தமக்குத் தேவையான ரோம நாட்டுப் பொருட்களை தென்னிந்தியத் துறைமுகங்களில் பெற்றதாகவும் கூறுகிறது. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் சமுட, சமுத போன்ற பெயர்கள் தனிமனித பெயரின் முன்னொட்டுச் சொல்லாக அல்லது பட்டமாக வருகிறது. இது வடமொழியில் சமுத்திரத்தைக் குறிக்கிறது. இதனால் இப்பட்டப் பெயருக்குரிய வனைக் கடலோடு தொடர்புடையவன் எனக்
 

கூறலாம். இது தமிழில் கடலன்' என்ற பட்டப் பெயருக்கு ஒப்பானதாகும். இப்பெயர் இலங்கை யில் வழக்கிலிருந்ததை 'அக்குறுகொட என்ற இடத்தில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்கு ரிய நாணயத்தில் வரும் கபதி கடலன் என்ற பெயர் உறுதிப்படுத்துகிறது. அண்மையில் பாண்டிநாட்டில் ‘அழகன்குளம்' என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கி.மு. 2,1ஆம் நூற்றாண்டுக்குரிய மட்பாண்ட ஒடுகளில் இலங்கைப் பிராமிக்கல்வெட்டுக்களில் வரும் சமுத, சமுட போன்ற பெயர்கள் பெறப்
ஆண்டுகளுக்கு முற்பட்ட கப்பல் உருவம் பொறித்த மட்பாண்டம் (அநுராதபுரம்)
பட்டுள்ளன. அதேபோல பாண்டிநாட்டில் மாங்குளம் என்ற இடத்தில் கிடைத்த சமகாலப் பிராமிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கடல்அணி என்ற பெயர் இலங்கை நாணயத்தில் வரும் 'கடல அன்என்ற பெயரை நினைவுபடுத்து கிறது. வட இலங்கைப் பெரியபுளியங்குளத்தில் உள்ள கி.மு.2ஆம், 1ஆம் நூற்றாண்டுக்குரிய் இருகல்வெட்டுக்கள் விஸாகே' என்ற தமிழ்
நாட்டு வணிகன் பற்றிக் கூறுகின்றன. கொடு
மணல் அகழாய்வில் பெறப்பட்ட ஏறத்தாழச் சமகாலப் பெருங்கற்கால மட்பாண்ட ஒட்டில் ‘விஸகீ’ என்ற பெயர் பெறப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டிப்பாலை ஈழத்திலிருந்து தமிழகத்திலுள்ள காவிரிப்பூம் பட்டினத் துறைமுகத்திற்கு வந்திறங்கிய உணவு பற்றிக் கூறுகிறது. தமிழ்நாடு திருப்பரங்குன்றப் பிராமிக் கல்வெட்டு ஈழத்து ‘குடும்பிகன்’ சமணத்துறவிகளுக்காக அமைத்துக் கொடுத்த கற்படுக்கை பற்றிக் கூறுகிறது. இச்சான்றுகளை யாவும் தென்னிந்தியா குறிப்பாக தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் சார் தொடர்பை உறுதிசெய்வதாக உள்ளன.
தூண்.43

Page 46
தேவகாந்தனின் யுத்தத்தின் முதலாம் !
தேவகாந்தன் எழுதிய, "யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' எனும் இந்நாவல் எனக்குப் பிடித்திருக்கிறது. ஈழத்தில் நாவல் இலக்கியம் என்று வரும்போது, பெருத்த ஏமாற்ாத்துக்கு உட்படும் நாம், சற்று நிமிர்ந்து உட்காரக்கூடிய வகையில் இந்நாவல் உருவாகி உள்ளது.
இந்நாவல் மிகவும் இயல்பாக எழுதப்பட்டுள்ளது. அத்துடன் வாசக நம்பகத் தன்மை உடையதாகவும் இருக்கிறது. நாவலில் வரும் கதா மாந்தர், நமது மண்ணில் நாம் அன்றாடம் கண்டு பழகிய மனிதர்கள்தான். அவர்களது உணர்ச்சி நிலைப்பட்ட கதையை இந்நாவல் விரிக்கிறது. இதன் ஊடுபாவாக இழையும் சமூகபலமும் துல்லியமான சித்தாந்த பலமும் நாவலை ஓரளவு கனதியான தளத்துக்கு உயர்த்துகிறது.
நாவல் காட்டும் சித்தாந்தச் செறிவும் சார்புநிலையும் நாவலில் துருத்திக் கொண்டு நிற்கவில்லை. ஆசிரியரது மனதால் உள்வாங் கப்பட்டு, பதனிடப்பட்டு, நாவலில் இழையவிடட் பட்டுள்ளது. எமது முற்போக்கு நாவல்களில் காணக்கிடக்கும் - முன்முடிவுகளுடனான மலினப்படுத்தப்பட்ட, கழைக்கூத்தாடித்தனப் சிறிதளவு கூட இந்நாவலில் இல்லை. லெளகீக
 

grib dīDiarib
அதிகாரம் - நாவல்
க. சட்டநாதன்
பிடிமானத்துள் அழுந்தும் மனிதர்களது வாழ் வியக்கத்தோடு கூடிய முற்போக்குத்தனமும் சித்தாந்தப் பற்றுமே நாவலில் ஊறலிப்பாய் இருக்கிறது. நாவலின் இத்தன்மை, இங்கு வெளிவந்த எந்த ஒரு நாவலிலும் இல்லை. இப்பண்புதான் இந்நாவலின் கூடுதல் தகுதி எனக் கூறலாம்.
இந்நாவல், இருநூறு வருடப் பின்ன ணியை - நமது மக்களின் வாழ்வுடனும் ஐதீகங் களுடனும் - ஓரளவு பதிவு செய்கின்றபொழுதும் - சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளிலும், அதற்குப் பின்னர் நடந்தவை பற்றியுமே அதிகம் பேசுகிறது.
தென்மராட்சி மண்ணை, அதன் மணத்தோடு கொண்டுவரும் இந்நாவல், சரளமான- புரியும் மொழியில் - எதுவித மயக்கங்களுமில்லாமல் எழுதப்பட்டுள்ளது. எழுத்து நடையில் ஒரு வீச்சும் அழகும் ஒரு புத்தம் புதுத்தன்மையும் நிரம்பி வழிகிறது.
இந்நாவல் நேர்கோட்டுப் பாங்கில் தான் சொல்லப்படுகிறது. இருந்த போதும், நாவலின் மையம், அழிந்த நிலையை அல்லது அற்றநிலையை நாம் அவதானங் கொள்ள முடியும். இது ஆசிரியருக்குத் தற்செயலாக வாய்த்ததா? அல்லது, இவ்வுத்தியை அவர் பிரக்ஞை பூர்வமாகப் பயன்படுத்தியுள்ளாரா? என்பது தெரியவில்லை.
அழகாக வெளியிடப்பட்டுள்ள இந்நாவ லில் எழுத்துப் பிழைகள் இருப்பது மனதை உறுத்துகிறது.
வரட்சியாக, செயற்கைத்தனங்களுடன், ஒரே தடத்தில் பதிவு கொள்ளும் நமது பெரும்பான்மையான நாவல்களிடையே, இது சற்று வித்தியாசமானது. அந்த வகையில் இது படிக்கப்படவேண்டிய நாவல் என்றுதான்
நினைக்கிறேன்.
.44

Page 47
மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரைய
கொற்றவை எனும் புனைபெயரில் கவிதை எழுதி வருகின்ற மைதிலியின் முதலாவது கவிதைத் தொகுதியாக இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. காலச் சுவடு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ள இத்தொகுதியில் 1989ம் ஆண்டிலிருந்து இற்றை வரையான 41 கவிதைகள் உள்ளடக் கப்பட்டுள்ளன.
ஈழத்தின் பெண் கவிஞைகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர் கொற்றவை. இவர் 90களில் கவிதை எழுதிய பெண் கவிஞைகளில் பல நல்ல கவிதைகளைப் படைத்தவரும் பலராலும் அறியப்பட்டவரும் கூட. அவரின் பெரும்பாலான கவிதைகள் ஆரம்ப காலங்களில் எழுதப்பட்டவையே. ஒரு வகையில் இக்கவிதைத் தொகுதி கூட காலம் தாழ்த்தியே வெளிவந்திருக்கின்றது.
பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடையே தோன்றுகின்ற ஒரு வினோதக் கணத்தில் வாழ்விற்கான அர்த்தம் கிடைத்துவிடுகிறது என்று தனது புத்தகத்திற்கான முன்னுரையில் குறிப்பிடும் கொற்றவை இதற்கு முரணாக தனது ஆரம்ப காலக் கவிதைகளில் வாழ்தலிற்கான அர்த்தத்தினை நம்பிக்கையுடனும், துணிவுடனும்
 

ம் மனிதர்கள் - கவிதை
56)
ஐதார்த்தபூர்வமாக எல்லாவற்றையும் எதிர் கொள்ளலிலுமே வெளிக்காட்டி நிற்கின்றார். இந்த வாழ்தலிற்கான முரண் எல்லாரையும் போல அவரிலும் ஏற்பட்டுவிட்டது ஒரு அபத்தமான விடயம் தான். சில வேளைகளில் இந்த முரண் தான் வாழ்வியல் ஜதார்த்தமோ என்னவோ?
இவற்றிற்கு அப்பால் அவரது கவிதைத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள சில கவிதைகள் பற்றி பகிர்ந்து கொள்வது சிறந்தது என நினைக்கிறேன்.
வாழ்தல் ஒரு வகையில் போராட்டம் தான் என்பதை ஏற்றுக் கொண்ட பின் அதை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளல் என்பது தான் அதன் முன்னால் உள்ள ஒரே வெற்றி. அதை தனது கவிதைகளில் அனேக இடங்களில் தொனிக்கச் செய்திருக்கின்றார் இவர் வலி - 1 என்ற கவிதையில் (வரி - 16 -22)
இக்கவிதையில். வலியைப் புணர், முள்ளை அகற்று எனும் வரிகள் ஒரு சம்பவம் தொடர்பான எதிர்கொள்ளலில் நம்பிக்கையின் வெளிப்பாடு. இதில் மொழி கையாளப்படும் விதமும் கவனிக்கத்தக்கது.
அதேபோல் ‘உனது கதவு எனும் கவிதையில் தனது இருத்தலை உணர்த்த அழுவதை விட கதவைத் தட்டுவதோ அல்லது நகங்களால் சுரண்டியாயினும் தனது இருப்பை உணர்த்துவதற்கான போராட்டமும் அதை எதிர் கொள்ளலில் உள்ள நம்பிக்கையும் தான் கவிதையின் உயிர். வெறும் கோஷங்களாக அல்லாமல் வாழ்விற்கான போராட்டமாக உணர வைப்பது இதன் சிறப்பம்சம். அதுவும் திறக்கப்டுவதற்கான அறிகுறிகள் எதுவுமற்ற கதவின் மீதான பாய்ச்சல். அதே போல் அவரது காதல் பற்றிய அனேக கவிதைகளும் சமரசத்திற்கும் சரணாகதிக்கும் அப்பாற் பட்டவை. காதலைக் கூட ஜதார்த்தபூர்வமாக எதிர்கொள்ளும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு
தூண்.45

Page 48
ஒரு வகை வீறாப்பா, திமிரா, அல்லது இதுதான் நேர்மையான எதிர்கொள்ளலா தெரியவில்லை. அந்த மனப்பாங்கு அதிசயிக்கத்தக்கது.
அது உண்மை தான் என்ற கவிதை, ஒரு வகையில் பெண் விடுதலை தொடர்பான விமர்சனமாகவே முன்வைக்கப்படுகின்றது. அதே நேரம் எதிர்நிலையில் நின்றும் கேள்வி கேட்கின்றது.
இவரது குறிப்பிடத்தக்க கவிதைகள் கவிதையின் அரசியல் என்கின்ற அளவில் மிகுந்த ஆளுமை கொண்டவை. ஒப்பாரியோ அழுகையோ இல்லாமல் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் துணிவான மனப்பங்கு தான் கவிதையின் உயிரோட்டம். இன்றும் இவை உயிருள்ள கவிதைகளாக பரிமளிப்பதற்கு அவரது நேர்த்தியான மொழி நடையும் முக்கிய காரணம். தேவையற்ற சொற்களுக்கும் வளவளப்புகளுக்கும் இடம் கொடாமல் கவின்த யின் கருவிற்கு தேவையான சொற்களுடன் உணர்வை பகிர்ந்து கொள்ளும் அவரது மொழி ஆளுமை கவனிக்கப்படத்தக்கது.
இவரது கவிதையின் பேசு பொருள் அனேகமாக பெண் என்ற தனது நிலையில் இருந்தே வருகின்றது. அதில் காதலும் பெண் என்பதால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளும் தான் அனேக கவிதைகளின் கருப் பொருள். யுத்த சூழலின் பிரதிநிதி என்ற அளவில் அவரின் ஓரிரு கவிதைகளே அது தொடர்பாக
(47ம் பக்க தொடர்ச்சி)
பெளத்த வர்த்தகர்களின் உடல்மொழி" என்ற தலைப்பில் ‘பெஸ்மண்ட் மல்லிகாரச்சி' எழுதிய கட்டுரையினை ‘சாமிநாதன் விமல் மொழியாக் கம் செய்துள்ள விரிவானதொரு ஆய்வுக் கட்டுரை. அழகான சமூகவியல் பார்வை. 155 பக்கங்களில் 40 பக்கங்கள் கட்டுரை 9 பக்கங் கள், அடிக்குறிப்புகள் 6 பக்கங்கள், உசாத் துணைகள் கோட்பாட்டிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு'ஒஸ்மண்ட் போபெ ஆரச்சியின் "புராதன காலத்து இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்குமிடையில் நிலவிய கலாசார மற்றும் வணிகத் தொடர்புகள் பற்றிய புதிய சான்றுகள்" என்ற கட்டுரையும், ‘ஷெரின் பெல்'லின் "குடும்பத்தின் பாணி, இலங்கையில் வன்முறை யும், கலையும் தொடர்பான ஓர் ஆய்வு” என்ற

பேசுகின்றது. ஒரு காலகட்டத்தினை பிரதி பலித்தல் எனும் வகையில் இது இத்தொகுதியின் பலவீனமே. அதேபோல் இரு வெவ்வேறு அரசியல் தளங்களைக் கொண்ட கருத்தை ஒரே தளத்தில் வைத்துப் பார்க்கும் தன்மையும் இவரது கவிதைக்கான பலவீனம் என்றே சொல்லத் தோன்றுகின்றது. உதாரணமாக அவரது கவிதை ஒன்றில், 'காக்கியாய் கறுப்பாய் உடைகொண்டு கனத்த இரவுகளில் திரியும் பேய்கள் பற்றி. காதல் என்று சொல்லி கட்டிலில் கட்டியழுத்தும் பேய்கள் பற்றி . நாய்களின் குரைத்தல் பின்னணியில் பாழ்போயின
எம் அமைதி இரவுகள்
இது மாதிரியான பல சம்பவங்களின் அல்லது அரசியல் கருத்தளங்களை ஒரேகவிதையில் கொண்டு வருவதானது கவிதையின் வீச்சினை மழுங்கடிக்கவே செய் யும். இதை இவர் தனது கவிதைகளில் கவனிக்கவில்லைப் போலும். அதே நேரம் இவரது கவிதைகள் உணர்வு ரீதியான தொற்று தலை ஏற்படுத்துதலில் தவறிவிடுகின்றன என்று தான் சொல்ல வேண்டும். கதை சொல்லி போல் வெறுமனே எல்லாவற்றையும் சொல்லிச் செல்கின்றன சில கவிதைகள். இந்தப் பலவீனங்களுக்கு அப்பால் கொற்றவை எனும் சிறந்த கவிஞையிடம் இருந்து இன்னும் நல்ல கவிதைகளை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
கட்டுரையும் அடங்கியுள்ளன. ‘வெடினின் டி.சசூரின் “மொழிக்குறியின் இயல்பு" என்ற கட்டுரை ‘இ.முருகையனால் மொழியாக்கப்பட் டுள்ளது. “இலங்கைத் தமிழ் தேசவழமை களும், சமூக வழமைகளும்” என்ற "பேராசிரியர் சி.பத்மநாதனின் நூலை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் ஒரு மதிப்பீட்டுக் குறிப்பினை *கே.ரீ.கணேசலிங்கம் எழுதியுள்ளார். "தொல்லி யல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்” என்ற 'கலாநிதி பரமு புஷ்பரட்ணத்தின் நூலை ‘பா.அகிலன் மதிப்பீட செய்துள்ளார். இந்தக் கட்டுரைகள் யாவும் சிறந்த ஆய்வுகளாகவும் மேலும் பல ஆய்வுக்குரிய தூண்டல்களாகவும் விளங்கு கின்றன.
இ.இராஜேஸ்கண்ணன்.
தூண்.46

Page 49
'பனுவல் - 2003
சமுக பண்பாட்டு விசாரணை
ஆய்வேடுகளின் வரிசையில் “பனுவல்” ஒரு வீறான பாய்ச்சலாகவும், சற்றுத் தூக்கலா கவும் வந்துள்ளது. சமூக பண்பாட்டு விசாரணைக் கூட்டிணைப்பினால் (கொழும்பு) வருடம் ஒரு இதழாக வெளியிடப்படவுள்ளது. சிங்களத்தில் “பட்ஹித” என்ற பெயரிலும் தமிழில் "பனுவல்” என்ற பெயரிலும் மொழியாக்கம் பெற்ற ஒத்த விடய உள்ளடக்கங்களுடன் வெளிவரும் சமூக பண்பாட்டு விசாரணை கொண்ட இந்த இதழ் விஞ்ஞான பூர்வமான ஒரு ஆய்வேயாகும்.
முகப்பில் 3 பக்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளுடன் 155 பக்கங்களும் கொண்டு டொமினிக் சன்சோனியின் முகப்புப் படத்துடன் அழகான அடக்கமான அட்டையுடன் வெளி வந்துள்ளது. கீவோஸ் நிறுவன நிதி அனு சரணையுடன் வந்துள்ள இவ்விதழின் முற்புற உள்ளட்டை "சர்வதேச கலைஞர்களின் கூட்டிணைப்பின் வெளியீட்டுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும்” என்று இவ்விதழ் பற்றிக் கூறுகிறது.
"பனுவல்” ஆசிரியர் குழுவின் முன்னுரை பிளிசாறகப் பல செய்திகளைச் சொல்கிறது. இந்த இதழ் வெளியீட்டின் நோக்கம் பற்றி சிலாகிக்கப்படும் விடயங்கள் அர்த்தபுஷ்டியான வையாகும்.
1) அறிவுசார் உற்பத்திகளையும், பண்பாட்டுப் புலமை உற்பத்திகள் சார் செயற்பாடு களையும் தற்போதுள்ள விளிம்பு அடை யாள நிலையிலிருந்து மிகக்குறைந்த
 

நூல் அறிமுகம்
முதலாவது இதழ் - 2003,பனுவல், சமுக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு,கொழும்பு - 08/afogo: 150/-
அளவிலாவது புலமை அறிவுசார் மையத் திற்கு கொண்டு செல்வது. (பக்:02)
2) சுதேசிய மொழிகளில் புலமைசார் கலந்து ரையாடல்களை நடத்துவதும், பிறமொழி ஆய்வுகளை உள்ளூர் மொழிகளில் அறிமு கம் செய்வது. (பக்.02)
3) படைப்பிலக்கியம், காண்பியக்கலைகள், ஆற்றுகைக்கலைகள், தொல்லியல், வர லாறு, சமூகவியல், சமூக மானுடவியல் ஆகிய பரந்த ஆய்வுத்துறைகளை பகுப் பாய்வு ரீதியிலான பண்பாட்டு நிலை வாசிப் பிற்கு உட்படுத்த முயற்சிக்கின்றது. (பக்.03)
4) இலங்கைக்குள் பண்பாட்டு தொடர்பான கலந்துரையாடலை உருவாக்குதல்.(பக்.03).
5) கலாசார மற்றும் அறிவு தொடர்பான வெளிகளை முறையாக ஆய்வுக்குட்படுத்த லுக்கும், அந்த அறிவை மட்டுப்படுத்தப் பட்ட சூழல்களில் இருந்து விஸ்தரித்தல். (பக்.03).
போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும் என
பனுவல் ஆசிரியர் குழு கூறுகின்றது.
சிங்களத்தில் வெளியாகும் பட்ஹிதவின் தொகுப்பாசியராக சசங்க பெரேராவும் (கொழும்பு) தமிழில் வெளிவரும் "பனுவல்” தொகுப்பாசிரியராக தா.சனாதனன் (யாழ் பல்கலைக்கழகம்) விளங்குகின்றனர்.
ஐந்து ஆய்வுக் கட்டுரைகளும் இரண்டு நூல் விமர்சனங்களுமாக மொத்தம் ஏழு கட்டுரைகள் உள்ளது. “அடையாளத்தின் கட்டமைப்பு முறைகள் அரசியல், நடை, குழப்பம்” என்ற தலைப்பிலான ‘சசங்க பெரேரா'வின் கட்டுரை தா.சனாதனனால் மொழியாக்கம் (Transcrea tion) செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்புத் தமிழ் மீனவரின் பண்பாட்டு அடையாள இழப்பினை புலப்படுத்தும் ஒரு கட்டுரையாகும். "வர்த்தகர் களின் கடவுளாக முருகக்கடவுள் - சிங்கள (46ம் பக்கம் பார்க்க)
தூண்; 47

Page 50
நினைவுள்மீஸ்தல்
தானா விஷ்ணுவின் கவிதைகள்
தானா.விஷ்ணு இன்றைய இளம் தலை முறையினது இன்னொரு அடையாளம். போரின் மூலமாக போருக்குள் இருந்து முகிழ்ந்த கவிஞன். போரே வாழ்வாகவும் வாழ்வே போராகவும் இருந்த காலத்திலும் தனது கவிதையை போர்க்கால மனச்சாட்சியுடனும் கவிஞனின் கடப்பாடுடனும் எழுதிய கவிஞன். அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளிலிருந்து விலகி யதார்த்தமான மொழியுடன் அவனது கவிதைகள் இயங்குகின்றன.
யுத்தத்தை வெறும் அழிவாகவோ சிதிலங்களாவோ காணாது அதனைப் பற்றிய ஆழமான தீர்க்கம் நோக்கிய பார்வை இவரது கவிதைகளில் உண்டு.
கவிதை துயர் சார்ந்த மொழியினோடு நிகழ்ந்தாலும் அதன்பின் நிகழும் நம்பிக்கை என்பது துயர் சார்ந்ததல்ல. தன்னுடைய அடையாளங்கள் மறுக்கப்படுகின்ற போதும் இரும்பின் மீது தீயிடப்படுகின்றபோது எழுகின்ற நியாயமான கோபக்குரலை அவனது கவிதை களில் காணமுடியும். இது கவிஞனின் மனம் சார்ந்த தன்னுணர்வு எனக்கூறி பின் தள்ளிவிட முடியாது. சம காலத்தில் எல்லா மனிதர்களும் சந்தித்த, சிந்திக்கின்ற உணர்வுகள்தான் இவை.
 

வெளியீடு மீள்கை 2, உடுப்பிட்டி / விலை ரூபா 75.
விஷ்ணு 90களின் தொடக்கத்தில் தனது
இடப்பெயர்வு வாழ்க்கையை ஆரம்பித்தவர். இன்றுவரையும் (சமாதானம் பற்றி பேசப்படும் இக்காலத்திலும்) தனது சொந்த ஊரான பலாலிக்கு இன்னும் திரும்பவில்லை. யுத்த காலத்தைப் போலவே இந்தச் சமாதான காலமும் நம்பிக்கையைத் தராத இந்தச் சூழலில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அலைக்கழிந்த வாழ்க்கையின் அனுபவம் இந்த கவிதை களிலுண்டு. அவரது மொழியில் சொல்வது என்றால் பட்டாம்பூச்சி பிடிக்கும் காலம் முதல் அவரது இன்றைய பல்கலைக்கழகம் வரையான அனுபவங்கள் இந்தக் கவிதைகளிலுண்டு.
விஷ்ணுவின் கவிதைகளில் அவரது அனுபவங்கள் அறிவுசார்ந்த மொழியோடு அரைக் காற்சட்டையுடனும் புத்தகப் பையுடனும் ஊரை விட்டு துயரோடு வெளியேறிய விஷ்ணு இயங்குவது பெரும் பலமாக உள்ளது. கவிதை மொழி அனுபவம் சார்ந்ததா? அல்லது அறிவு சார்ந்ததா என்ற கேள்வி சிலரிடம் உண்டு. கவிதை இவை இரண்டையும் உள்ளடக்கிய உணர்வின் மொழி, அறிவையும் அனுபவத்தை யும் இரண்டு வேறுபட்ட கூறுகளாகக் காண முடியாது. ஏனெனில் அறிவு என்பது ஒருவிதம் அனுபவம் சார்ந்து பெறப்படுவதே. இதனால் தான் இரண்டையும் கூறுபோட்டுப் பார்க்க முடியாது என்கின்றேன். வாசகர்கள் விஷ்ணுவின் கவிதைகளுடன் பயணிக்கும் போது இந்த அறிவு அநுபவம் எனும் இரண்டும் உள்ளடங்கிய உணர்வின் மொழியினைக் காணமுடியும்.
நினைவுள் மீள்தல் விஷ்ணுவினுடைய முதலாவது கவிதைத் தொகுதி 2001 முதல் 2003 வரையான காலப்பகுதியில் எழுதிய கவிதைகள் இவை. எழுதப்பட்ட காலத்திலேயே தொகுப்பாக வருவதையிட்டு விஷ்ணுவுடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சியுற வேண்டும்.
சித்தாந்தன் (முன்னுரையிலிருந்து)
தூண்.48

Page 51
രമ്പര്ബദ്രിത്ര
பொன். கணே
1Día-11o-1
 

ஷமூர்த்தியின்
ஜேநிகர்
» Droplets

Page 52
■。 , , ਮੈ।
NINT
Mtuity CeNLeR &
KERNIADY, THIR
JAFFN, T.P. O21-22
Harikaar Printers,424. K.K.S. Ro,
 
 

MCA
CoMMUNICALION
UNELEVELY,
A. 26416
Jd, Jaffna. T.P-021-2222717
-