கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புது ஊற்று 1998.04-06

Page 1

::
篷疆

Page 2
புது 2
கல்வி மற்றும் பல்து
கல்வி, !ண்பட்டலுவல்கள்,
வடக்கு - கிழக்கு மாகா
ஊற்று 92 - ஏப்ரல் -
**மெல்லெனப் பாயும் ஒடை
ஊற்றினுள்ளே . . . .
கட்டுரைகள்:
செ. அழகரெத்தினம் இ. இராஜேஸ்வரன் எஸ். எதிர்மன்னசிங்கம் இளமதி வ. அ இராசரெத்தினம் க. நா. தணிகாசலம்பிள்ளை அகளங்கன் யூ. எல். அலியார் கு. பார்த்தீபன் க. ஜெயநாதன்
கவிதைகள்:
எழுவான் அளிலி பிரான்சிஸ் தாமரைத் தீவான் எஸ். எம். றஹீம் நீ. மோகநேஸ்வரி க. நளினி வேட்ஸ் வேர்த் விபுலாநந்தர் கே. எம். இக்பால்
சிறுகதைகள்
எம். வை. ராஜ்கபூர் வல்வை. ந. அனந்தராஜ்
வெளியீடு: கல்வி வெளியீட்டுப்பிரிவு, கல் துறை அமைச்சு, வடக்கு - கிழ
இதழ் ஆசிரியர்: ந. அனந்தராஜ் உதவிச்

ஊற்று . |றைக் காலாண்டிதழ் விளையாட்டுத்துறை அமைச்சு, ணம், திருகோணமலை.
ஜூன், 1998. - கண் 03
கல்லையும் உருட்டிப் பாயும்’
மாற்றம் வேண்டும்
"மாற்றமாம் வையகத்தே வெவ்வேறே வந்தறிவாம்" என்ற மாணிக்கவாசகர் வாக்கிற்கு ஒப்ப, மாற்றம்! எங்கும் மாற் றம்! எல்லாவற்றிலும் மாற்றம துரித மாற்றங்களின் யுகமாகிய இந் நவீன யுகத் தில் மாற்றம்தான் நிரந்தரமான உண்மை என்றாகி விட்டது. எனவே இம் மாற்றங் களின் துரிதகதிக்கேற்ப நாம் எமது கல்விக் கொள்கைகளையும் நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும் மாற்றியமைத்தாக வேண் டிய தேவை உள்ளது. 21ம் நூற்றாண் டின் சவால்களை எதிர்கொள்ளும் கல்வி முறைமை பற்றிய திட்டமிடல்கள், வளர்ச் சியடைந்த நாடுகளில் என்றோ தொடங்கி விட்டன. நாமோ இழுத்துப் பறிக்கிறோம் வளர்ச்சியடைந்த நாடுகள் 20ம் நூற் றாண்டின் முற் பாதியில் எய்திய கல்வி வளர்ச்சியை 20 இன் இறுதிக்குள்ளும் நாம் எய்தவில்லை. குறிப்பாக போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கும், மலை யகமும்.
இதற்குக் காரணம் என்ன? போர்ச் குழலும் போரின் அனர்த்தங்களினால் பல பாடசாலைகள் பாதிப்புற்றதும், இடப் பெயர்வுகளால் வசதியில்லாத இடங்களில் பாடசாலைகளை திறம்பட இயங்க வைக்க முடியாத நிலைமையும், மாணவர்கள் ஆசிரி யர்களின் மனோநிலை சார்ந்த பாதிப்பு களும் முக்கிய காரணங்கள் என்பதை மறுத்துரைக்க முடியாது. ஆயினும் அரசின் பாராமுகமும், பட்ச பாதக நடவடிக்கை
வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் க்கு மாகாணம் திருகோணமலை.
* கல்விப் பணிப்பாளர்.

Page 3
களும் இவற்றைக் கண்டித்துத் தக்க பரிகா ரம் காணவியலாத தமிழ் பேசு க்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவக்காரரின் பலவீனங்களும்தான் கான்பதையும் அதே கனம் மறுக்க முடியாது.
உலசுவங்கி அறிக்கை என்ன கூறு கிறது? சிங்கள மொழி மூல கற்பிக்கும் ஆசிரியர்களின் தொகை 14,001 மலதிக மாகவும். தமிழ் மொழி மூலம் கற்பிக்கும ஆசிரியர்கள் தொகை 10:) பற்றாக் குறையாகவும் உள்ளது என்கிறது.
கல்வி ஆய்வு நிறுவனங்களினதும் கல் வியியலாளர்களினதும் அறிக்கைகள் என்ன கூறுகின்றன?
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு எனப் போரி னால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்பேசும் மக் களின் பிரதேசங்களில் அடிப்படைக் கல்வி யறிவே பாதிக்கப்பட்டுள்ளது. வன்னிப் பிர தேசத்தில் 15,000 மானவர்க்கு மேல் பாட சாலை செல்வதில்லை என்றும் கூறுகின்றன.
இவற்றிற்கான பரிகாரம்? பாதிக்கப் பட்ட பிரதேசத்து மக்களின் குழந்தைகள் கல்விக் குருடர்களாக வேண்டியது தானா? 21ம் நூற்றாண்டை இவர்கள் பார்வை எட்டுமா? 21ம் நூற்றாண்டிலும் குருடர்க ளும், முடவர்களுமே தான் நாட்டின் பிரசை களாயிருக்க வேண்டுமென அரசு விரும்பு கிறதா? உடனடி நிவாரணம் காணப்பட வேண்டியது வயிற்றுக்கு உணவுவில்லா நிலைக்கும்தான் அறிவின் வறுமைக்கும் தான்! அரசு செய்யுமா?
சரி பெற்றோர் ஆசிரியர், கல்வியா எார்கள் கல்விபதிகாரிகளின் பங்கு என்ன? தம்தம் பொறுப்புனர்ந்து பூரணமான உழைப்பை நல்கி எம் கல்வியை மீட்டெ டுக்க வேண்டும் கல்வியில் முன்னேற்றம் என்பது சினனி யுகத்தை நோக்கி விரைவு படுத்துதல் மட்டுமன்று, எமது பாரம்பரி பம் பண்பாட்டு விழுமியங்களைப் பேன வும், பாதுகாக்க முயன்வதும் தான்
செய்வோமா? - ஆசிரியர்

முயல்வு
மாற்றம் எதனால் வருகிறது? எவ்வழி வருகிறது? எப்படி வருகிறது? இந்தக் கேள் விகளைக் கேட்டு விண்டகாண்பதற்கிடை யிலே மாற்றம் எம் கால்களின் கீழாலே புகுந்து வந்து விடுகிறது.
இன்றைய மனித அறிவு சிறுத்துப் போய்நிற்கும் ஒன்றல்ல. புவியில் வந்து மோதவிருக்கின்ற பெரும் ஆபத்தை இடை வெளியிங்வைத்தே உருத் தெரியாமல் சிதைகது விடுமளவிற்கு மனித அறிவு வான்டேவி நிற்கிறது.
அதே மனித அறிவின் கை தன் வளர்ச் சிப் பரிமானம் இவ்விதம்தான் அமைய வேண்டுமெனத் திட்டமிட்டு தன் சிற்ற நிலை பேரறிவுத் தளம் நோக்கிச் செலுத் தும் சாரதியம் வல்லதாகவும் உள்ளது.
அதாவது தனது மாறும் திசையையும், நோக்கையும், வழிகளையும், முடிவிடத்தில் திருப்தி கண்டு விடாமல் மேலும் விரியும் எல்லைகளையும் வகுக்கும் அறிவும், திற gg. In resid. L-ILUSI.
அறிவியல் தொழில்நுட்பம் அனைத் தும் புவிவாழ்விற்கு வேகத்தையும், வளர்ச் சியையும் தந்து நின்றது போலவே சூழலியல் சார்ந்த தீமைகளையும் தந்தே நிற்கிறது. அதையும் நீக்கித் தகைசார் அபிவிருத் திப் பாதையில் நடைபோடுகிறது காலம் பிந்தியேனும், எமது காலம் மேலும் பிந்தி நிற்கிறது. எமது காலில் போரின் விலங்கு கள் முன்தோக்கி நகர விடாமல் தடுத்து நிற்கிறது.
போர்ச்சூழல் எம்சூழலை, அறிவை, பலதள வளர்ச்சியை தன் அசுரப் பற் களால் நறும்பித்தின்று கொண்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி எழ நாம் அறிவெ னும் நெம்புகோலால் நம் விலங்குகளைத் தகர்க்க வேண்டும்.
இருபத்தோராம் நூற்றாண்டின் வாச லைத்தட்டித் திறக்க வேண்டும்.
தட்டுவோமா? திறப்போ மா? திறவாநிலை ஒன்றில்லை முயல்வோம்!
முனைந்து முயல்வோம்:
" ՃIլ էaIIIքն: '
ளற்று

Page 4
அன்னை தெ
J9LDJ
- அவRவமி பி
கடவுளே நின்னருள் ச என்னை ஒரு கருவியா எங்கே வெறுப்பு நிலவு அங்கே அன்பைக் குலவி எங்கே தீங்கு இழைக்க அங்கே மன்னிப்பு வழ எங்கே ஐயம் ஏற்படுகிற அங்கே நம்பிக்கையையு எங்கே ஏமாற்றம் திண் அங்கே நிறைவேறு மெ. இருள் குவிகிறபோது பேரொளிப் பிரகாசமும் வருத்தம் நிகழ்கிறபோது பெருத்த மகிழ்ச்சியும் தேவதேவா என்னிடமி தினமும் எனக்குத் தந்த ஆறுதல் விழைவோர்க்கு புரிந்து கொள்வாரைப் அன்பு பாலிப்பவர்க்கு அன்பு பொழியவும் இவற்றை - இவ்வண்ண அளிப்பதில் தான் - நாட அனைத்தையும் பெறுகி மன்னிப்பதில் மன்னிக்க வாழ்வு நிறையும் போது புதிதாய்ப் பிறந்து, நாட அமர வாழ்வு எய்துகிே
புது ஊற்று

ரசா விரும்பும்
கீதம்
ரான்வமிஸ் -
ாந்திக்கு
க்கு
கிறதோ
டச்செய் ப்படுகிறதோ ங்கிடவும்
தோ
ம் “மையாகிறதோ ன்ற எண்ணமும்
ல்லாததை நருள்க !
| ஆறுதலும் புரிந்துகொள்ளவும்
ዕf¥fá5
b
றோம் ப்படுகிறோம் துதான்
b
pfruh

Page 5
பாரதியும் வி
- செ. அழக
பத்தொன்பதாம் நூற்றாண்டின். பின்ன ரைக் கூற்றிலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைக் கூற்றிலும் தமிழகம், ஈழம் ஆகிய இடங்களில் தோன்றிய தமிழறிஞர் கள், சமூகவுயர் சிந்தனையாளர்கள், புரட் சிப் போக்காளர்கள் வரிசையில் பாரதத்தில் சுப்பிரமணியருக்கும், ஈழத்தில் மயில்வா கனுருக்கும் முதலிடம் உண்டு எனலாம். ஆரம்பத்தில் முருகக் கடவுளின் நாமத் தையே பெற்றோர் இவர்களுக்கு இட்ட ழைத்தனர். எனினும் தத்தம் செயற்கரிய செய்கைகளின் மேன்மையால் சுப்பிரமணி யன் - மகா கவிபாரதி என்றும், ! யில் வாகனன் விபுலாநந்தர் என்னும் சிறப்புப் பெயர்களால் பெருமைப்படுத்தப்பட்டனர்.
பாரதியார் 1882ம் ஆண்டு பிறந்தவர். விபுலாநந்தர் 1892ம் பிறந்தவர். இருவருக் கும் பத்து வருடகால வயது இடைவெளி. இல்லற வாழ்விலிருந்த பாரதி பண்பட்ட இலக்கிய கர்த்தா. புதுக் கவிதையின் தனித் தலைவன். சமூக சமவுடமைப் போக் காளன். விடுதலை வேட்கை மிகுந்த வீரன். துறவறவாழ்வில் திளைத்த விபுலாநந்தர் ஒரு முத்தமிழ்வித்தகர். ஒப்பீட்டு இலக்கிய வுணர்வாளர், மாற்றம் விழை மனப்போக் குடை மாமுனிவர்.
தமிழ்மொழி, அதன்வளர்ச்சி, சமூக சமத்துவம், தேசபக்தி போன்ற பல்வேறு விடயங்களில் இவ்விரு உள்ளங்களும் ஒன்று பட்ட உணர்வினைக் கொண்டிருந்தன. பாரதியார் தம்காலத்தில் சுதேசமித்திரன், இந்தியா, விஜயா, சூர்யோதயம் கர்ம
2

புலாநந்தரும்
ரெத்தினம் -
யோகி போன்ற பல பத்திரிகைகளுக்கு ஆசிரி யராக கடமையாற்றியவர். விபுலாநந்த ரும் தம் காலத்துள் இராமகிருஸ்ண விஜ யம், பிரபுத்த பாரத, விவேகானந் கன் போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். இவ்விருவரும் எழுத்து மூலமும் சமுதாயத்தின் எழுச்சியை ஏற்படுத்துவதற் குத் தம் மை அர்ப்பணித்தவர்களாவர். தமிழ்க் கவிஞர்கள் என்றவகையில் இருவர தும் நோ க்கு களும், போக்குகளும் பல இடங்களில் சமாந்தரமாகச் சென்றுள்ள தை அவதானிக்கலாம்.
பாரதியுடைய சுதேச கீதங்கள், புதிய பாட்டுக்கள், தெய்வீகப் பாடல்கள், வசன கவிதை, சமூகம் , சுயசரிதை போன்ற பல் வகைப் பாடல்கள், கண்ணன்பாட்டு, குயிற்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெரும் பாடல்கள் அதன் உள்ளுறை கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டவர் விபுலாநந்தர். அவற்றைப் பெரிதும் நேசிப் பவராகவும் பாரதியiன் கனவுகளை நிறை வேற்றுவதில் விருப்புணர்வு மிக்கவராகவும் விபுலாநந்தர் இருந்துள்ள ஈரென்பது அவ ரது நடவடிக்கைகr வாயிலாக நன்கு துலாம்பரமாகியுள்ளன.
பாரதியும், விபுலாநந்தரும் தனித்து வம் படைத்த தமிழறிஞர்களாக இருந்த போதும் அவரவரது நாட்டு அரசியல் பொருளாதார சமூக கலாசார சூழல்களின் தாக்கங்கள் இருவரது வாழ்க்கைப் போக்கு களிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளதை மறுக்க வியலாது. பாரதி புரட்சிக்கும் புது
புது ஊற்று

Page 6
மைக்கும் முக்கியத் துவம் கொடுத்தும் பாடிய போதும், பொதுவுடமை அறிவுச் சமூகத்தை நாடிய போதும் விபுலாநந்தரும் அதனை ஏற்பவராகவும் அதே நேரம் பழ மைக்கும் புதுமைக்கும் பாலம் அமைப்ப வராகவும், செயற்பட்டதைக் குறிப்பிட வேண்டும். இவ்விருவரின் தொண்டுகளின் செயற்பாடு சளின் காரணமாக இவர்கள் தமிழ் உலகத்தார் அனைவரதும் இதயங் களில் ஆழப்பதிந்து நன்றியுடன் நிறைந்து நிற்க வேண்டியவர்களாவர்.
விபுலாநந்தர், ஆசிரியராக, பண்டித ராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாட சாலை அதி, ராக, எழுத்தாளராக, பேச் சாளராக, பல்சுவைக் கவிஞராக, தமிழ்த் துறைப் பேராசிரியராக சஞ்சிகை ஆசிரிய ராக, மொழி பெயர்ப்பாளராக விளங்கிய ஒரு மேதை. இவருக்கு மகா கவியாகவும், கட்டுரையாளராகவும், பத்திரிகாசிரியராக வும், பேச்சாளராகவும் சமகாலத்தில் விளங் கிய பாரதிமீதும், அவர்தம் சக்தி மிகு எளிய இனிய கவிதைகள் பாலும், பற்றும் உணர் வும் இயல்பாகவே உள்ளார்ந்திருந்தன வென்பதை விபுலாநந்தர் பல விடயங்களில் குறிப்பிட்டுள்ளார். அந்தளவிற்கு தமிழ கத்துப் பாரதிமீது ஈழத்து விபுலாநந் தருக்கு ஈடுபாடும், மதிப்பும் இருந்ததென் பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
சொந்த நாட்டறிஞர்கள் பாரதியை ஏற்கவும், மதிக்கவும், பெருமைப்படுத்த வும் மறுத்த காலம் அது. அத்தோடு பார தியை கஞ்சாக் கவி, பஞ்சக்கவி என்றும் அவ ரது கவிதைகள் வெள்ளைக் கவிதைகள்" என்றும் கேவலப்படுத்தி விமர்சித்த நேர மும் கூட. தன்நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட சமூக மேம்பாட்டிற்குப் போரா டிய பெரும் கவிஞரான பாரதியை காழ்ப் புணர்வு காரணமாக முன்னிலைப்படுத்த விரும் பாத தமிழ்நாட்டுக் கூட்டத்தினரி டையே, ஈழத்தைச் சேர்ந்த விபுலானந்தர் பாரதிக்கு வழங்கப்படவேண்டிய தனியி டத்தையும், கெளரவத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு மு ய ந் சி க  ைள மேற்
புது ஊற்று

M
கொண்டார். இவ்வாறு செய்தல் ஒரு சாதாரணமான செயலன்று; பாரிய பணி யாகும். எனினும் இதில் துணிந்து முன் னின்று ஈடுபட்டு வெற்றி யும் கண்டார் விபுலாநந்தர். இதற்குத் தமிழ்க்கவி பாரதி யிடத்துக் கொண்டிருந்த பற்று மட்டும் காரணமன்று, மற்றுமொரு காரணமும் உண்டு. அதாவது அண்ணாமலை பல்க லைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரி யராக பதவி வகித்த விபுலாநந்தரின் மனச் சான்றும் பாரதியை முன்னிலைப்படுத்த முழுமுயற்சி தேவையென்று வற்புறுத்தியது மாகுமெனலாம். ஆகவே கிடைக்கும் சந் தர்ப்பங்கள் வாய்ப்புக்கள் அனைத்தையும் பாரதியின் பெருமையின் யதார்த்தத் தன் மையை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தத் தவறவேயில்லை. எடுத்துக் காட்டாக ஒரிரு விடயங்களை இங்கு தரலாம்.
பாரதி மன்றம் அமைத்தல்
1932ல் விபுலாநந்த அடிகள் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் 'பாரதியார் கழகம்' என்ற ஒரு சங்கத்தை அங்கு ரார்ப்பணம் செய்தார். அவர் பாரதியார் தனித்துவச் சிறப்புப்பற்றி பேருரையாற்றி யதுடன், அக்கழகத்தின்மூலம் வாரம் இரு முறை மாணவர்கள் பாரதியார் பாடல் பற்றி சொற்பொழிவாற்றவேண்டுமென்ற ஒழுங்கினையும் நடைமுறைப்படுத்தி வந் தார். 02. 02, 1932 அன்று விபுலாநந்தர் தலைமையில் நடைபெற்ற பாரதிகழக விசேட கூடடமொன்றில் திரு. எஸ். சத்திய மூர்த்தி பி. ஏ. பி. எல் அவர்களினைக் கொண்டு பாரதியின் திருவுருவப்படத்தைத் திறந்து பெருமைப்படுத்தச் செய்தார்.
மதுரைத் தமிழ்ச்சங்கத்திலே பாரதி பற்றித்தெளிவானதொரு விளக்கத்தையும் விபுலாநந்தர் முன்வைக்கத் தவறிவில்லை. பாரதி தமிழருக்கு ஆற்றிய கொண்டு தமிழ் கவிதை புதுப்பொலிவு பெறுவதில் பாரதி யின் பங்கு என்பன குறித்துப் பல இடங் களில் தகுந்த விளக்கங்கள் அளித்த பெரு மையும் விபுலாநந்தருக்குண்டு.

Page 7
விபுலாநந்தர் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவர். பல்வேறு பத்திரிகை கள், சஞ்சிகைகளுக்கு அவர் எழுதும் போது சில கட்டுரைகளில் பாரதி பற்றிக் குறிப் பிட்டுள்ளார். பாரதி பற்றிச் சில சிறப்புக் கட்டுரைகளும் எழுதியதாக அறியமுடிகின்
DBl
விபுலாநந்தர் திருகோணமலைக்கு விஜயம் செய்தபோது 11-09-1938 அன்று திருகோணமலை இந்துக்கல்லூரியில் பாரதி விழா ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு வருகை தந்து, பாரதி குறித்து விசேட உரையாற்றியதுடன் பாரதியின் படத்தை யும் திரைநீக்கம் செய்தும் வைத்தார். இதனைப் பின்பற்றி பின்னர் பல பாடசா லைகளில் பாரதி படத் திறப்பு விழாவும் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பாரதி பாடல்கள் மேலான பற்று
பாரதி கவிதைத்துறையில் புதுமை யைப் புகுத்தியவர். நவ கவிதைகளின் நாயகன் என்று போற்றப்பட்டவர். அவ ரது கவிதைகளின் சொல், பொருள், ஓசை நயங்களிலும் கருத்துக்களிலும் விபுலாநந் தர் ஈர்க்கப்பட்டிருந்தார். பாரதி கவிதை நடை போன்று விபுலாநந்தரின் பல கவி தைகள் இயற்றியுள்ளார். "வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ. அஞ்சினர்க்குச் சத மரணம் அஞ்சாத நெஞ் சத்து ஆடவருக்கு ஒரு மரணம். போன்ற பாடல்கள் விபுலாநந்தரின் கவிதை நடைக் கும் கருத்தாழ நயத்திற்கும் எடுத்துக்காட் டாகும். விபுலாநந்தர் பாரதியின் பாடல் களை இரசித்துப் படிப்பதுடன், இசை கூட் டிப் பாடுவதிலும் ஊக்கம் காட்டியவர். ஆசி ரியர், அதிபர், முகாமையாளர் பதவிகளில் கடமையாற்றிய காலகட்டத்தில் மாணவர் மத்தியில் விபுலாநந்தர் பாரதி பாடல் களைப் பாடுவதிலும், பாடல் நயங்களை மாணவர் இரசிப்பதற்கும் வழிகாட்டியாக அமைந்தார். திரு. அம்பிகைபாகன் அவர் கள் ஓரிடத்தில், " சுவாமிகளுக்கு பாரதி யார் மீதிருந்த ஆர்வம், அவருடன் நெருங் கிப் பழகிய பின்னர்தான் எனக்கு நன்கு புலப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குமுன்
4.

பாரதியார் பெருமையைச் செவ்வனே அறி யாத காலத்தில் சுவாமிகள் பாரதியார் பெருமையைச் செவ்வனே உணர்ந்திருந் தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பாரதி யார் பெருமையைத் தாம் எடுத்துக் காட் டியதாக அவர் எனக்கு கூறியுள்ளார்". ஒரு முறை பாரதி யார் கவிதைகளில் * காட்சி' எனும் பகுதியைப் படித்துக் காட்டி அதில் ஒருவித மந்திரசக்தி இருப் பதை விளக்கினார்." எனக் குறிப்பிடுவது
சிந்திக்கத்தக்தது.
மாணவருக்கு பாரதி பாடல்களில் பயிற்சி யளித்தல்
மாணவரிடத்து சமுக சமவுடமை, மனித நேயம், மனவுறுதி, அன்புடமை, அஞ்சாமை போன்றவை வளர்க்கப்பட வேண்டுமென்று விபுலாநந்தர் விரும்பி னார். பாரதி பாடல்கள் மூலம் ஒரு புதிய சந்ததியினரைக் கட்டியெழுப்ப முடிபு மென்ற எண்ணம் விபுலாந்தருக்கு இருந் தது. மாணவர் மத்தியில் அடிக்கடி,
*பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற disregpi)
Glumrş; GF ” ” .
"நீதிநெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்" *திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் ..", 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்
திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி ہم • ** நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து
விட்டால்."
" . அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே'.
போன்ற பாடல்களை மாணவருடன் தாமும் சேர்ந்து பாடி மகிழ்வுறுவார்கள். இது பாரதி பாடல் மீது கொண்டிருந்த வெறும் கவிதைப் பற்றுமன்று, பித்துமன்று.
புது ஊற்று

Page 8
கல்விக் கூடங்கள் மூலம் பாரதியாரி கருத் துக்கள் செயலாக்கமுற வேண்டும். தேசிய வுணர்வு வளர்த்தெடுக்கப்படவேண்டும். நல்ல சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண் டும், இதற்குக் கல்வி கா லாக அமைய வேண்டும் என்பது விபுலாநந்தர் கொண்டி ருந்த உள்ளார்ந்த நோக்கமேயாகும்.
இராமகிருஷ்ண சங்க பாடசாலை முகாமையாளராக இருந்த காலத்தில் விபுலாநந்தர், பாரதி பாடல்கள்ை பாட சாலைகளில் வகுப்புகளின் தரத்திற்கேற்க மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கு மாறு ஆலோசனை வழங்கியிருந்தார். அதற் கேற்ப அடிகளே சில பாடல்களைத் தெரிந்து கொடுத்துமிருந்தார். எடுத்துக்காட்டாக,
1ம் வகுப்புக்கு: செந்தமிழ் நாடெனும்
போதினிலே. 2ம் 3ம் 4ம் வகுப்புகளுக்கு. -
காக்கைச் சிறகினிலே நந்தலாலா 5ம் வகுப்புக்கு: பகைவனுக்கு கருள்வாய்
நன்நெஞ்சே 6ம் வகுப்புக்கு: வீரசுதந்திரம் வேண்டிநின்
றார் 7ம் வகுப்புக்கு; சொந்த நாட்டிற் பிறர்க்
கடிமை செய்தே . 8ம் வகுப்புக்கு: வாழ்க நிரந்தரம் வாழ்க
தமிழ்மொழி .
இத்தகைய பாடங்களை மாணவருக்கு இசையுணர்வோடு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டுமென்றும் குறிப்பிட அவர் தவறவில்லை. மட்டுநகர் சிவானந்த வித்தியாலய அதிபராகக் கடமை யாற்றிய கால கட்டத்தில், நேரம் கிடைக் கும் போதேல்லாம் கடற்கரைப் பிரதேச மணற்பரப்பிற்கு மாணவர்களை அழைத் துச் சென்று பாரதிபாடல்களை இசை யுடன் மாணவருக்குச் சொல்லிக்கொடுத்து, அப்பாடல்களின் நயத்தையும் சிறப்பையும் மாணவர்கள் இரசிக்குமாறும் செய்வார்கள்
தமிழ் படிக்க விரும்பும் வாலிபர் களுக்கு விபுலாநந்தர் அழுத்திக்கூறும் விட பமொன்றுண்டு. அதாவது ஆரம்பத்திலி
புது ஊற்று

ருந்து பாரதியாரின் கவிதைகளை படித்துச் சுவைக்கவேண்டும், பயன்பெறவேண்டும், அதனால் அவர்களது தமிழ்மொழி வளம் சிறக்கும் என்பதாகும். அத்தோடு வாலிய உள்ளங்களைப் பக்குவப்படுத்தி சமூக நீதிக்கும் உள உயர்வுக்கும் உரிய மருந்து மாத்திரைகளும் பாரதியார் பாடல்களில் உள்ளன என்பதே அடிகளின் எண்ணமு மாகும்.
தமிழ் மொழி, தமிழிலக்கியம் பற்றி
‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்
மொழி வாழிய வாழியவே " எ ன் று
பாடிய பாரதியின் தமிழ்ப் பற்று, விபுலா தந்தரிடத்தும் ஆழமாக வே ரு ன் றி யிருந்தது. அதே சமயத்தில்
* புத்தம் புதிய கலைகள் பஞ்ச
us. செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை"
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
Gց:ր լյլ նրՒ* "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.”
என்ற பாரதியின் பாடல்களின் அர்த் தமும் எதிர்பார்ப்பும் அடிகளைச் செயற்
படச் செய்தன. பலமொழிகளில் பாண்டி
யத்தியம் பெற்றிருந்த விபுலாநந்தர் பிற மொழிச் செல்வங்களைத் தமிழ் மொழிப் படுத்தும் நல்லாக்க முயற்கியில் ஈடுபட் டார். ஏனைய அறிஞர்களும் இதில் ஈடு படவேண்டு மென்று வேண்டுகோள் விடுத் திருந்தார். தமிழ்க் கலைச் சொல்லாக்கம் அவசியமானது என்றும் அதற்கான நட வடிக்கைகளை மேற்கொண்டார். தமிழ் மொழியிலுள்ள அறிவுப் பொக்கிசங்களை பிற மொழிப்படுத்தவும் முயன்றார். மேற் றிசைச் செல்வம் விஞ்ஞானதீபம், மதங்க சூளாமணி, ஆங்கில வாணி போன்ற ஆக் கங்கள் அடிகளால் வெளிக்கி காண ரப்பட்டன.

Page 9
1947 ல் இலங்கைப் பல்கலைக்கழகத் தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பதவி வகித்த காலத்தில் விபுலாநந்தர், இது வரை பட்டப் வரீட்சையில் தமிழ் இலக் கியத்தை ஆங்கில மொழிமூலம் எழுதும் வழக்கத்தை மாற்றி, தமிழ் மொழி, இலக் கியத்தை தமிழ் மொழியிலேயே எழுது வதற்கான ஏற்பாட்டினைச் செய்து வைத்தார்.
"அன்னயாவும் அறிந்திலார் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியில் போகுநர் முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல்கின்றவர்"
என்ற பாரதி பாடல் வரிகளின் விளக் கம் விபுலாநந்தர் இடத்தும் மேலோங்கி யிருந்தது. தமிழர் தமிழ்க் கலாசாரத்து டன் வாழவேண்டுமென்பதில் விபுலாநந் தர் விடாப்பிடியாக நின்றவர், "தொன்னுரல் பலகற்றும் உளத்துண்மை தோற்றா மாந்தர் தொடர்பெதுவோ" என்று நம்மவரைப் பார்த்து விபுலாநந்தர் கேட்பது சிந்திக்கத்தக்கது,
சமூக சமநிலை பற்றி
இரு அறிஞர்களும் சமூகத்தின் சம நிலை, தொழிற் சுதந்திரம் - தொழில் உரிமை, பெண் விடுதலை பற்றி ஒருமித்த கருத்துக்கொண்டிருந்தவர்கள். Go Li sir கல்வி பற்றி லிபுலானந்தர் கூடிய கவனம் காட்டியவர். பெண் பாடசாலை பல நிறு வப் பாடுபட்டதுடன் பெண்களுக்கு அளிக் கப்படவேண்டிய கல்வியின் தன்மை பற்றி யும் குறித்பிட்டுள்ளார்.
"பெண்களுக்கு கல்வி அறிவு மிக அவசியம். முறையான கல்வி பயிற்றப்

படும்போது மாணவ மாணவியர் நாட்டுக் குச் சேவை செய்யத் தக்க நிலையை அடைகிறார்கள்" என காரைக்குடி தேவ கோட்டையில் மகளிர் இல்லத்தில் ஒரு பெண் பாடசாலையைத் திறந்து வைக்கும் போது விபுலாநந்தர் குறிப்பிட்டமை மனம் கொளத் தக்கதாகும்.
பாரதியும் விபுலாநந்தரும் பரந்த நோக்கில் செயற்பட்ட அறிஞர்களாவர். அவர்கள் தாம் வாழும் சமுதாயத்தின தும் சமூகத்தினதும் உயர்வுக்காக உழைக் கும் நோக்கில் தனியாகத் தம் நாட்டுக்கு மட்டும் கட்டுப்படாது சமரசநோக்கில் அனைத்துலக விருத்தியை அடிப்படையா கக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரதும் வாழ்க் கை க் கால வட்டம் மிகக் குறுகியதாக அமைந்து விட்டமை தமிழ் உலகிற்கு துர்ப்பாக்கிய நிலையே. பாரதி தமது 39ம் வயதிலும். விபுலாநந்தர் தமது 55ம் வயதிலும் அகால மரணத்தால் மறையவேண்டியேற்பட்டது. நல்ல உள்ளம் உடையோர் இவ்வுலகில் நெடுநாள் நீடித்து நிற்க இறைவன் இடம் கொடுப்பதில்லைப் போலும்.
எனினும் இவர்களது குறுகிய கால வட்டத்துள் இவர்கள் ஆற்றிய தொண்டு கள் சேவைகள் மிக மகத்துவம் பெற்றவை. அமரத்துவம் அமைந்தவை. இவர் க ள் வாழ்வும் செயலும் மற்றவர்களுக்ரு நல்ல படிப்பினையைத் தருவன; தருதல் வேண் டும். இவர்களது வாழ்க்கைப் போக்கினைப் புரிந்து நல்ல விடயங்களைத் தெரிந்து தெளிந்து நற்பயனையும் பலனையும் பெறு தற்கு நமது மாணவ சமூகம் முன் வருதல் வேண்டும். அவர்கள் காட்டிய முறையில் தம் வாழ்க்கைப் பயணத்தின் வழியை வகுத்துக் கொள்ளுதல் நன்று.
புது ஊற்று

Page 10
நாற்று
-இ. இரா
எதிர்கால சமுதாயம் என்னும் பயிர் களை வளர்த்தெடுத்து அவற்றினூடாக நல்ல அறுவடைகளைப் பெறும் நோக்குடன் போடப்படுகின்ற நாற்று மேடைகளே ஆரம் பக்கல்வி வகுப்பறைகள் ஆகும். இந்த நாற்று மேடைகள் உரிய முறையில் அமைக்
கப்பட்டு, உரிய முறையில் ' பராமரிக்கப்
பட்டால் அன்றி, நல்ல நாற்றுக்களை நாம் பெற இயலாது. நாற்றுக்கள் நல்லவை யாக இருந்தால் தான் பயிர்கள் செழிப் பாக, ஆரோக்கியமாக வளரும். செழிப் பான பயிர்களே நல்ல அறுவடையைத் தரக்கூடியன. கல்வி என்னும் பயிரும் இதே போலத்தான் பராமரிக்கப்பட்டு வளர்த் தெடுக்கப்பட வேண்டும்.
"எந்தக் குழந்தை பும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவர், நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" எனப் பாடினான் ஒரு கவிஞன். குழந்தைப் பருவத்திலேயே அவர் களுக்கு கெட்டிக்காரன், மொக்கன் என்ற பட்டங்களைப் பெரியவர்கள் சூ ட் டி விடுகின்றனர். குழந்தைகளின் ஆர்வங்கள் என்ன? விருப்பங்கள் என்ன? என்பதைப் பெரியவர்கள் கவனத்திற் கொள்வதில்லை. எந்த வகையிலும் தமது வேலைகளை நிறைவேற்றக் குழந்தைகள் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதே பெரியவர்களது எதிர்பார்ப்பு. குழந்தைகளின் சுதந்திரம் இளவயதிலேயே பறிபோகத்தொடங்கிறது.
மூன்று வயது முடிய முன்பே பிள்ளை களை முன்பள்ளியில் சேர்த்துவிடுவார்கள்.
புது ஊற்று

மேடைகள்
ஜேஸ்வரன்
முன்பள்ளியில் சொல்வதெழுதல், கூட்டல், கழித்தல் ஆங்கில "டிக்ரேசன்" அப்பப்பா மீதிச் சுதந்திரமும் பறி போகும் நிலை. பிஞ்சு உள்ளங்கள் பேதலித்துத் தடுமாறி நெருடப்படும் இடமாக முன்பள்ளி அமை கிறது.
iš af Eugl (ypi-Lu LunTL-TV mreo) Giv Jy gy மதி பிரவல்ய பாடசாலைகளைத் தேடி நேரோட்டங்கள். அனுமதிப் பரீட்சை நேர்முகப்பரீட்சை, "டொனேசன்" இன் னும் எத்தனை எத்தனை JegüLIntl- T! ஒருமாதிரிப் பிள்ளையைச் சேர்த்தாச்சு . இது வசதி படைத்த பெற்றோர் விடும் ஆறுதல் பெருமூச்சு. அப்போ வ ச தி குறைந்த பிள்ளைகள்? مسیر
ரீச்சர் நல்ல கெட்டிக்காரி. எப்பிடியும் பிள்ளையை பாஸ்ாக்கி விடுவா. "ஸ்கொ லசிப்” வகுப்பிற்கு ஆண்டு 1 இலேயே அடிக்கல் நாட்டப்படுகின்றது. வீடு, பாட சாலை, ரியூசன்சென்ரர் இந்த மூன்று இடங்களையும் தவிர, பிள்ளைக்கு வேறு எந்த இடங்களும் தெரியாது, பயிற்சிப் புத்தகங்கள், செயல்நூல்கள், மா தி ரி வினாத்தாள்கள் இன்னும் எத்தனை எதி தனை காகித முடிச்சுக்கள் இவையே குழந்தைகளின் விளையாட்டுப் பொருட் கள். விளையாடத் தடை, அக்கம் பக்கத்து கலியாணவீடு. சாமத்தியவீடு, குடிபுகுதல் வீடு, தடை, கோயில் திருவிழா, ரி. வி. படக்காட்சி முற்றாகத்தடை. பிஞ்சு வய திலே எத்தனை சுமைகள், எத்தனை தடைகள், எத்தனை அழுத்தங்கள். சுதந் திரம் பறிக்கப்பட்ட இளம்கைதிகள்.

Page 11
ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்தில் தேர்ச்சி இலக்குகள் ஒன்பது.
1, எழுத்தறிவு. ,ே ஆரோக்கிய வாழ்வு. 3. தொழில் நுட்பமும் வேலைப்.
பயிற்சியும். 4. அருஞ்செல்வங்களைப்பற்றி அறிதல். 5. மதத்தில் ஈடுபாடும் ஒழுக்கமும். 6. சுற்றாடலைப் புரிந்துணர்தல். 7. சிறுவரின் ஆர்வங்களை, விருப்பங்.
களை வளர்த்தல் 8. தேசிய ஒற்றுமை.
9, அறநெறி வளர்ச்சி.
இவை அனைத்தும் ஒருபுறம் பார்த் தேன் மறந்து விட்டேன், கேட்டேன் ஞாபகமில்லை, இசய்துபார்த்தேன் பூரண விளக்கம் பெற்றுக்கொண்டேன். கல்வி உலகில் இவை 18 கா வாக்கியங்கள் மாணவர்கள் இயல்புகள் எவை? அவர்கள் விருப்பங்கள் எவை? அவர்களின் எதிர் பார்ப்புகள் என்ன? என்பவற்றை நாம் சற்றுச் சிந்திக்க வேண்டாமா? மாணவர் களுக்கு நாமாகத் திணிப்பதை விடுத்து அவர்களாக விரும்பி ஏற்கக்கூடிய நிலையை ஏன் உருவாக்கக் கூடாது? அவர்களுடைய சுதந்திரத்தை தடைசெய்யாது அவர்க ளுக்கு உவப்பான கல்வியை ஏன் எம்மால் வழங்க இயலாது? இவை அனைத்திற்கும் நாமே விடை காணவேண்டும்.
இன்னும் வகுப்பறைச் சூழலை மாண் வர்களின் உள்ளங்கள கவரக்கூடியதாக ஆக்குதல், முழுநேரமும் வகுப் பறையி

லேயே கற்பித்தலை விடுத்து வெளிக்களக் கற்றல், விளையாட்டு மூலம் கற்றல், குழு முறையாககற்றல், செவ்விய சோதனை களைச் செய்து பார் க்து நேரடி அனுப வங்களைப் பெறல் .ேஈன்ற வகையில் எமது அன்றாட வழிகாட்டல்கள் அமைத் தாலென்ன?. வகுப்பறைகள் வெறும் விரி வுரை மண்டபங்களாக மட்டும் அமைய லாமா? கரும்பலகையையும் வெண்கட் டியையும் மட்டும் நம்பி எமது பணிகளைத் தொடர்லாமா? இவை போன்று ஆக்க பூர்வமாக நாம் ஒவ்வோருவரும் சிந்தித் தால் என்ன? கவர்ச்சியான உயிர்த்துடிப் புள்ள வழிகாட்டல்களை நாம் ஏ ன் வழங்க இயலாது.? .
எமது நாற்று மேடைகளை நாமே சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும். கல்விப் பயிர் வளர்க்கப் புறப்பட்ட நாம் ஒவ் வொருவரும் தியாக உணர்வுடன் பொறுப் புள்ள வழிகாட்டிகளாக ஆக வேண்டும். அப்பொழுதுதான் எமது நாற்று மேடை கள் பராமரிக்கப்படும். இடைவிலக ல், அடைவுமட்ட வீழ்ச்சி, கல்வி வீண்விரயம், என்ற கொடிய பீடைகளிலிருந்து எமது பயிர்களைப் பாதுகாக்க முடியும். உயர் கல்வி, வேலைவாய்ப்பு கல்வியறிவுடைய சமுதாயம் எனும் நல்ல அறுவடைகளைப் பெற முடியும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் எமது சமுதாய நாற்று மேடைகளைப் பரா மரிக்க ஆத்ம சுத்தி யுடன் சேவை மணப் பாங்கோடு முன்வர வேண்டும். நல்ல அறுவடைக்கான நாற்று மேடைகளை தாமே அமைப்போம்.
புது ஊற்று

Page 12
ஊற்று
- தாமரை
ஊற்று வருகுது
ஊறிவருகுது
ஆற்றும் - தணித்தி ஆதலினாலநி
புத்தம்புது ஊற்று
புனிதமாக்கி
அத்தனை நெஞ்ச ஆங்கதில் மூழ்
காலாண்டிற்கோர்
கண்டதெல்ல நாலாதிசை2உறை
நல்லவைமட்டு
ஆசிரியப்பெருமக்க அக்கறை கொ பேசிடுவீர் இனிப்ட பேசாமல் ஆ
எழுதுகோலிலும்,
இலக்கிப்ப்பெ
எழுதித்தள்ளுங்கள் ஏற்றவளந்தரு
பெற்றோரே உங்க
பெற்றிடவே
மற்றவரும் "இதை மாநிலமெங்கு
போனவை போக புறப்படட்டும் ஆனவை இங்குநா அறிவுச்சிந்தன
கல்வி - பண்பாடு . காணும் வட நல்லறிவுப்பணி ெ நன்றியினுள்ள
புது ஊற்று

விருகுது
ந்தீவான் -
புத்தூற்று, அது மேலிடத்தே! டும் அறிவுத்தாகத்தை ல் மூழ்கிடுவீர்!
ப் புறப்பட்டுள்ளது அழுக்கெடுக்க! மும் புதுப்பிக்கப்படும்
கித் திளைத்தீரேல்
முறை காட்சிகொடுத்திடும் ாம் அள்ளிவாராதே! நாட்டவர்போற்றிட மே கொண்டுவரும்!
ளே, கல்வியில் ாண்டிடும் மாணவரே,
திய ஊற்றினைப் ம்ந்தே பயன்பெறுவீர்!
தாளிலும் தங்கிடும் ரு மன்னர்களே,
ஏலும் வரையிலும் ம் ஆய்வுகளை!
5ளின் பிள்ளைகள் ஊற்றினிப்
வழிகாட்டிடுவீர்!
மறந்திடாமலே மெடுத்துரைப்பீர்!
ட்டும் புதியஊற்றிணிப்
மலையிருந்தே!
ம் அனைத்தும் செய்துமே
ன பெற்றிடுவோம்!
விளையாட்டுதுறை குக் கிழக்ககத்தே சய்ய முயல்வதை ங்கள் வாழ்த்திடுமே!

Page 13
வசந்தன்
- எஸ். எதிர்
ஒரு நாட்டின் பண்பாடு சிறப்புற்று விளங்குவதற்கு காலாக அமைவது அந் நாட்டு மக்களுடைய கலை கலாசார பரிணாம வளர்ச்சியாகும். அந்த வகையில் மட்டக்களப்பு மக்களுடைய பாரம்பரியக் கலைகள் பல சிறந்த கலைத்துவத்தையும் பாரம்பரிய வாழ்க்கைச் சிறப்பினையும் எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. சிறந்த கிராமியக் கலைகளின் உறைவிடமாகவும் மட்டக்களப்பு மாநிலம் விளங்குகின்றது.
கிராமங்கள் தோறும் மக்களால் கைக் கொள்ளப்பட்டுவரும் நாட்டுக்கூத்து, வசந் தன் கூத்து, கொம்பு முறிப்பு விளையாட்டு மகுடிக் கூத்து, குரவை, கும்மி கோலாட் டம், கரகம், காவடி, அம்மானை, தாலாட்டு போன்ற பல கலையம்சங்களில் "வசந்தன் கூத்து" அல்லது வசந்தன் ஆடல் பற்றி இங்கு காண்போம். "வசந்தன்” என்ற சொ ல்லுக்கு நிறைந்த இன்பம் என்னும் கருத்து சில கிராமங்களில் வழங்கி வருகின்றது. வசந்த காலப்பகுதியில் இவ்வாடல் ஆடப் படுவதால் வசந்தன் கூத்து எனப்பெயர் பெற்றதென்பர். இக்கலையாடல் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புள்ள தொன்றாகக் காணப்படுகின்றது. பிரபல்யம் வாய்ந்த கண்ணகி அம்மன் சடங்குகள் வருடந் தோறும் வைகாசி மாதத்தில் ஆரம்பமாகிப் பெளர்ணமி தினத்தன்று நடைபெறும் அம்மன் குளுத்தியுடன் நிறைவு பெறும். இவ்வாறான சடங்கு உற்சவத்தின் போது கோயில் முன்றலில் வசந்தன் கூத்துப் பழங் காலத்தில் நடைபெற்று வந்திருக்க வேண் டும்.
O

ஆடல்
மன்னசிங்கம் -
மட்டக்களப்பு மாநிலம் வாவிசூழ் களனிகள் நிறைந்த விவசாயப் பிரதேச மாக உள்ளதால் மக்கள் தங்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு அறுவடைமுடித்து அடுத்த பருவத்தை எதிர்பார்த்திருக்கும் ஒய்வு காலங்களிலேயே இது போன்ற கிராமியக் கலைகளைப் பழகிப் பொது வைபவங்களான கோயிற்றிருவிழாக்கள், புதுவருடப் பிறப்புக்கள் போன்ற காலங் களில் அரங்கேற்றம் செய்வர்.
இனி இவ் வசந்தன் கூத்தின் சிறப்புக் கள் பற்றிச் சிறிது நோக்குவோம். பன்னிரு வர் வட்டமாக நின்று கோல் கொண்டு தாள அமைதி பிசகாது பாடலுக்கே ஸ்ற வாறு ஆடுதலே வசந்தன் ஆடல் எனப் படும். மத்தளம், சல்லரி, ஆகிய வாத்தி யங்கள் இசைக்கேற்றவாறு அடிக்கப்படும். வெவ்வேறான சந்தங் கொண்ட பாடல் கள் வெவ்வேறு பெயருடன் படிக்கப்படு கின்றன. ஆடல்களின் செயலால் அப்பாடல் கள் பெயர் பெறுகின்றன. எடுத்துக் காட் டாக வேளாண்மை வெட்டு வசந்தன், அனுமார் வசந்தன் போன்றவற்றைக் குறிப் பிடலாம். அதிகமான வசந்தன் பாடல்கள் வேளாண்மைச் செய்கை பற்றிய விளக்கங் களைச் சித்தரிப்பவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு உப்பட்டிகட்டு வசந்தன் வெள்ளாமை அறுவடை வசந்தன் போன் றன குறிப்பிடத்தக்கன. வசந்தன் கவி களைப்பற்றி விபுலாநந்த அடிகளார் குறிப் பிடும் பொழுது சங்ககாலத்து ஒழுக்கங் களும், ஆடலும் பாடலும் ஈழநாட்டிலே இன்றும் நிலவுகின்றன எனக் கூறியுள்
புது ஊற்று

Page 14
ளார் அடிகளார். இசை நாடகத்தமிழ் நூல்களை மறுமலர்ச்சியடைவதற்கு அரும் பணியாற்ற ஆரம்பத்தில் அவருக்கு ஆர் வத்தை உண்டாக்கியவை அவர் சூழலிற் பாடப்பட்ட கொம்பு விளையாட்டுப் பாடல்களும், கண்ணகி வழக்குரையும், நாட்டுக் கூத்துப் பாடல்களும், வசந்தன் பாடல்களுமேயாகும்.
வசந்தன் கூத்துக்களில் இடம்பெறு கின்ற தருக்கள் அல்லது பாட்டுக்கள், உடையணியும் முறை காலில் சதங்கை அணிதல் போன்றவற்றைப் பார்க்குமிடத்து தென்மோடி நாட்டுக்கூத்து வகையினை சார்ந்து இருப்பதைக் கண்டுகொள்ள முடி கின்றது. தற்காலத்தில் இதனை மக்கள் ஒரு கோலாட்டம் போலக் கருத்திற்கொண் டாலும் பண்டைய வழக்கப்படி இதனை நாம் ஒரு கூத்து என்றே கொள்ளுதல் வேண்டும். வசந்தன் கவிகள் பாடப்படு முன் படிக்கப்படும் “தரு’ என்பது பள்ளுப் பாடப்பட வேண்டிய சந்தத்தைத் தந்து நிற்கின்றன. அது அளிக்கின்ற ஓசைப் படியே கவிகள் அமைந்து செல்கின்றன என்று வசந்தன் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றில் திரு. வ. ஞ்ானமாணிக்கம் அவர் கள் குறிப்பிட்டுள்ளார்கள். வசந்தன் இலக்கியத்தில் இடம்பெறுகின்ற கவிகள் மிகவும் படித்து இன்பமடையத்தக்கவை யாக உள்ளன.
பெரும்பாலான வசந்தன் பாடல் களைப் பாடிய புலவர்கள் காரைதீவிலும், தம்பிலுவில்லிலும் வாழ்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். உதாரணமாக சின் னப்புலவர், சின்னவி அண்ணாவியார், வசந்தராயப்பிள்ளை என்ற பெயர்கள் இவ்வூர்களில் பரவலாக வழங்குகின்றன. காரைதீவு, தம்பிலுவில், மண்டூர், வந் தாறுமூலை போன்ற கிராமங்களில் வசந் தன் ஏடுகள் பல இன்னமும் முடங்கிக் கிடக்கின்றன. கூவாய் குயில் போன்ற வசந்தன் பாடல்களில் வரலாறு மட்டு மன்றி கண்ணகி வழிபாட்டின் சிறப்பம் சங்களையும் நலம் கண்டுகொள்ள முடிகின் றது. வசந்தன் பாடல்களுள் நரேந்திரன்
புது ஊற்று

சிங்கன் பள்ளு, இராசசிங்கன் பள்ளு என்ற தலைப்பிலுள்ளவை தாம் எழுந்தகாலத்தை ஒருவாறு காட்டுவனவாக உள்ளன. கி.பி 1706 முதல் 1739 வரை கண்டியை ஆட்சி செய்த நரேந்திரசிங்கன் என்னும் அரசன் மீது பாடப்பட்டதே கண்டிராசன் பள்ளு. இராசசிங்கன் பள்ளு 1739ம் ஆண்டு தொடக்கம் 1741 வரையுள்ள காலப்பகுதி யைப் பற்றியதாகவுள்ளது. எமக்குக்கிடைக் கின்ற வசந்தன் கவிகள் யாவும் 1940ல் தி. சதாசிவஐயர் அவர்களால் தொகுக்கப் பட்டு வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இதில் ஆறு பிரிவுகளாக வசந்தன் கவிகள் வேறுபடுத் தப்பட்டுள்ளன. முதற்பாகம் நூலுக்குத் தோற்றுவாயாகிய கட்டியம், 2ம் பாகம் தோத்திரப்பாடல்கள். 3ம் பாகம் சரித் திர சம்பந்தமானது. 4ம் பாகம் தொழில் பற்றியது. 5ம் பாகம் விநோத சித்திரக் கவிகளும், நகைச்சுவை தரும் கவிகளும் சேர்ந்தவை. 6ம் பாகம் கும்மி, ஊஞ்சல் முத லிய விளையாட்டுக்கள் சேர்ந்தது. 1925-ம் ஆண்டு இலங்கை வந்திருந்த பிரிட்டிஷ் மகா தேசாதிபதி உவில்லியம் மனிங்ஸ் என்பவர் இந்த வசந்தன் கவிகளின் சிறப் பையும், இனிமையையும் நேரிற் கண்டு ஆங்கில நாட்டிற்குப் பல கட்டுரைகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. அக்காலத் தில் இவ் வசந்தன் கவிகளைப் பாடுவதில் காரைதீவு கயிலாயப்பிள்ளை அண்ணாவி யார் மிகவும் சிறந்து விளங்கினார். மட்டக் களப்பு மாநிலம் தோறும் அக்காலத்தில் களனிகள் தோறும் விதைக்கப்பட்ட நெல் லினங்கள் பற்றிய தகவல்களையும் இவ் வசந்தன் கவிகளைப் படிப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. எடுத்துக் காட்டாக,
"பச்சைப் பெருமாள் கறுப்பன், பானை
முகன் - செழும் மாறிக் கூதுன், வெள்ளைவாலன் பச்சைச் & furt
மெச்சியே பலரும் விரும்பும் வெள்ளை வாணன் - இந்த மேதினி எல்லாம் புகழும் முத்துச்சம்பா.

Page 15
"முத்துச்சம்பா நெல்விளைய முன்னே
விதைப்போம் - நல்ல
முருங்கன் கறுப்பன் களை மேட்டில்
விதைப்போம் சித்தியுடன் நெல்வயல் முற்றும் விதைப் GBumruh - Luuri செழித்த பின்பு வேலிகாவல் செப்
பனிடுவோம்
போன்ற கவிகள் படித்துச் சுவைக்கக் கூடியவையாகவுள்ளன. Lיו מ-L– & & 6T וני# மாநிலத்தில் வழக்கிலுள்ள இவ்வசந்தன் ஆடல் அருகிப் போகாவண்ணம் பாது காக்க வேண்டியது கலையார்வமுடையோ ரின் கடனாகும். இவை தவிர்ந்த, இன்னும் ஏட்டுருவில் பல கிராமங்களில் மறைந்து கிடக்கும் ஏராளமான வசந்தன் கவிகளை ஆங்காங்கு தேடிப்பெற்று அதன் பெருமை யினையும், சிறப்பினையும் தமிழ் உலகிற்கு வெளிப்டுத்த வேண்டியது எம் பணியாகும்.
கிராமிய நடனங்கள் வரிசையில் இவ்வ சிந்தன் ஆடல் இன்றும் முனைக்காடு, மகிழந் தீவு, கொக்கட்டிச்சோலை, தேற்றாத்தீவு, கழுதாவளை போன்ற கிராம மக்களால் வளர்க்கப்பட்டு வருகின்றது. இப்பாடல் களை இனிமையாகப் பாடவல்ல அண்ணா விமார் இன்று மிகவும் அருகிப் போய் விட்டனர்.
வசந்தன் ஆடலைச் செய்கின்றவர்கள் புனைகின்ற ஒப்பனைகள் மிகவும் அழகாக இருக்கும். முஸ்லீம் மக்களுடைய "களிகம்பு" என்னும் கோலாட்டம் ஒரு 4 வகையில் இதனைச் சார்ந்ததாகவே காணப்படுகின் றது. கோல் கொண்டு தாளத்திற்கும் ஒசைக்கும் ஏற்ப அடிக்கும் முறைகள் இரண்டு கலைகளிலும் காணப்படுகின்றன. களிகம்பினைப் பழக்குபவரை முஸ்லீம் மக்கள் அண்ணாவியார் என்றே அழைக் கின்றனர். வசந்தன் ஆடலுக்கும் தமிழ் மக்களிடையே காணப்படும் இன்னுமொரு கலையான கோலாட்டத்திற்கும் வேறு பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.
12

களரிவசந்தன் தரு
தான தன் னாதன தான தன்னாதனா தான தன் னாதன தான தன்னா
சீரணி காஞ்சி தில்லையப்பதி மாறன் திகழும் மதுரைப் பதியமர்ந்த காரணி கண்ணகை யம்மை தன்பேரில் களரி வசந்தன் இசைபாட
வாரணி கொங்கை வலவைக்குரிய மதசலம் ஆறென வேயிழியும் தாரணி தந்திமுகத்தவனும் சரசோதியும் நூலில் தமிழ்புரிய
முயிற்று வசந்தன்
தனம் தனம் தன தானா - தன தான
தனாதன தானின தானா கனந் தருங் குழலாரே - எங்கள்
காரிகையே யொரு கதை சொலக்கேளும் தனத்தனாதன வெனவே - நல்ல
நந்திமுகன்தனை வந்தனை செய்வோம்.
குயில் வசந்தன்
தந்தன்ன தான தன திங்களொரு கங்குலவு கங்கைசடை மீதுலவு தேவாதி தேவரென்று கூவாப் குயிலே துங்கமுறு கொன்றை யுடன் கை மளுவா ளேந்தும் தூய சிவசோதி யென்று கூவாய் குயிலே அண்ட பகிரண்ட நவ கண்ட பிரதாப
னென்று ஆதரவாக நின்று கூவாய் குயிலே
தண்டலை செறித்த சயிலத்தில மாந தற்பரணை நித்தமும் நீ கூவாய் குயிலே கொங்கை மார் மதங்களி வர ரெங்கவேள் மதங் களொடு கூடி விளையாடவே நீ கூவாய்
குயிலே செட்டி நகரத் துலவு தேவி கண்ணகையை நிதம் தேடியே நீ நினைந்து நின்று கூவாய் குயிலே
புது ஊற்று

Page 16
பட்டி நகர் தம்புலு வில் பாடல் புகழ்
பத்தினிக்
காரை நகர்
கண்ணகையென்று கூவாப்
குயிலே
உற்ற பாண்டிருப்பினோடு லாவிய நீலா
G16ð 6ð!'
யும் ஓங்கிய கண்ணகையென்று கூவாய்
குயிலே
6J. L.D
- 6tsi). 6r
(ஆசி
துயிலைக் குறை உடலை வருத்தி அறிவைப் பெரு அவனி போற்று அறிஞனாகத் தி
அறிஞனாகி ஞா அற நெறியில் பேதம் ஒழிய வாழ்வு மலர மேலும் மேலும்
தேசம் எங்கும் நேசம் ஓங்க நேசக் கரம் நீட் பாசம் கொண்டு பலரும் வாழ பண்பை நீயும்
அகிலம் எங்கும் அமைதி வேண்டு ஆண்டவனை வ அமைதி மட்டும் கிடைத்து விட்ட அடுத்து என்ன

மட்டுறு கல்லாறு மகிழு ரெருவில் வாசமுறு மாது பரா சக்தி யென்று கவாப் குயிலே பட்டி வளர் வந்தாறு மூலை காங்குள்ள கண்ணகைத்தாயை பக்தியுடனே நீ நினைந்து கூவாய் குயிலே ஐங் கொணாமைக் கடவை எங்கு
மாய் நிறைந்திருக்கும் ஆதிபராகக்தி என்று கூவாய் குயிலே
னிதா!
. றஹீம் -
ரியர்)
த்து
击岛
ம்
கழு
“னியாகி
வாழு
GTP
13

Page 17
நல்ல ப
amiso இள
கடமையுணர்ச்சியுடைய பெற்றோர் தமக்கு அண்மையில் உள்ள பாடசாலை உலகின் எதிர்காலச் சந்ததியினரான தமது பிள்ளைகளின் வாழ்வுக்கு நன்மைபயக்கக் கூடியதா என்று எப்போதும் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். சக ல பாடசாலைகளிலும் கற்பிக்கும் பொருள் ஒன்றேயாயினும் எப்படியாயினும் சில பாடசாலைகள் ஏனையவற்றிலும் பார்க்க வித்தியாசமானதாகவும் நல்ல பாடசாலை எனப் பெயர் பெறுவதும் கண்கூடு. சில வேளைகளில் பேரறிஞர்கட கே பாடசா லைகளின் வித்தியாசத்தை இனங்காணு வது மிகவும் கடினமானதொன்றாக உள் ளது. பாடசாலையில் அக்கறையுடைய பெற்றோர் ஒருவர் அரும்நிகழ்வு ஒன்றுக் குச் சென்று கபடத்தனமாகப் பாடசா லையைப் பற்றி என்ன எண்ணலாம்?
எனது சுயமதிப்பீடு நான் பாடசாலை விளையாட்டு மைதானத்திற்குச் சென்ற தும் ஆரம்பமாகிவிடும். இடைவேளையின் போது நான் அங்கு சென்றால் மாணவன் ஒருவனை அழைத்து அதிபரின் காரியால யத்திற்கு எப்படிச் செல்வது எனக்கேட் பேன். ‘அங்கே உள்ளது" என மாண வன் தூரத்தே உள்ள கட்டத்தைக் காட் டினால் மாணவருக்கும், அ தி ப ரு க் கும் உள்ள தொடர்பு குறைவாக உள்ளது. எனவே பாடசாலையை அறிவது கடினம் எனலாம். ஆனால் மாணவன் என்னை அதிபரது அறைக்கு அழைத்துச் சென்று இதுதான் அதிபர் அலுவலகம் எனக் கூறின்
14

TSFT66)
மதி
இது சராசரிப் பாடசாலை எ ன ல ஈ ம். இவையிரண்டிலும் பார்க்க மாறுபட்ட நிலையில் ஒரு மாணவன் என்னைத் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று அவரை எனக்கு அறிமுகப்படுததினால் அதுவே சிறந்த பாடசாலை என்பேன். இது எனது 28 வருட அனுபவத்தில் அறிந்த
ఒళితా ஆகும்.
நான் ஆசிரிய சேவையில் சேர்ந்த காலத்தில் பிரபல அவுஸ்திரேலிய சிறுவர் புத்தக எழுத்தாளரு, ஒலிபாப்பாளரும் பல்லாயிரக்கணக்கான பாடசாலைகளைத் தரிசித்து இரண்டு மில்லியன் மாணவர் களை வானொலி. தொலைக்காட்சிக்குப் பேட்டி கண்டவரும் அவுஸ்திரேலிய வானொலிசிறப்பு நிகழ்ச்சியான "அவுஸ் திரேலிய மாணவரிடமிருந்து ஒரு சொல்' என்ற நிகழ்ச்சித் கயா ரிப்பாளருமான * *&&6ơL6)5 (KEITHSMITH) “ ” Greür Lurr(15 டைய சில கதைகளை வாசிக்க நேர்ந்த போது கூறப்பட்டிருந்த சில கருத்துக்களின் தொகுப்பு இது.
பாடசாலையில் நிலவும் அமைதியே அதன் பெறுமதியைத் தரவல்லது எனச் சிலர் எண்ணுவது உண்டு. சில பெற் றோரை இது மனமுறிவடையச் செய்யும். பாடசாலைப் புலத்தில் மா ன வ  ைர க் காணமுடியாமல், கூண்டுக்கிளிபோல மாண வரை அடைத்து வைத்திருத்தல், கதிரை யில் ஒழுங்காக இருந்து விடாமுயற்சியுடன் ஏட்டுக் கல்வியைப் பெறுதல், சுத்தமாக
புது ஊற்று

Page 18
இருத்தல், என்பவற்றைச் சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் விரும்புதல், அது கல்வி யாளரைத் தளர்ச்சியடையச் செய்யும். அதிபர் காலங்கடந்த கட்டுப் பா ட் டு க் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார் என் பதையே இது உணர்த்துகிறது என நான் அனுபவ பூர்வமாக எண்ணுகிறேன்.
குழப்பநிலை, எல்லையற்ற மகிழ்ச்சி நிலை, அமைதியின்மை, பெருஞ்சத்தம் ஆகியன தூரத்தே கேட்காதுவிடின் அது ஒரு சிறந்த நிலையாகும். அதி பரின் அறைக்கு அருகேயுள்ள நடைபாதையில் உயர் கு ர லி ல் ஆசிரியர் விவாதித்துக் கொண்டு இருந்தால், மாணவர் த மது செய்முறைகளில் தரமானவற்றை அதிபர், ஆசிரியர் குழாத்துடன் காட்ட முனைந்து கொண்டிருந்தால் பெற்றோரோ விருந்தி னரோ அதை வரவேற்பர். பாடசாலைத் தொடர்பாடல் சிறந்த முறையில் உள்ளது. அங்குசமூக இணைப்பு வளர்கிறது எனலாம்.
சில பெற்றோர் நவீன பாடசாலைக் கட்டடங்கள் நவீன வர்ணபூச்சுக்கள் தள பாடங்கள் தான், பாடசாலையின் வளர்ச்சி எனத் தப்புக் கணக்குப் போடுகின்றனர். ஆனால் சாதனைகளை வரலாற்றில் இருந்து நாம் அறியமுடியும், நம் நாட் டில் கடந்த சில வருடங்களாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் போர்காலச் சூழலில் மரங்களின் கீழ் நிலத்திலிருந்து வெளிச்சமின்றிப் படித்த பலர் நல்ல நிலை யில் உள்ளதை நாம் காண்கிறோம்.
வளர்முக நாடுகளில் கூட வகுப்பறை களற்ற நிலையிலும் காலங்கடந்த கட்டங் களிலும் கல்விகற்பதை மாணவர் பெற் றோர் மகிழ்ச்சியுடன் விரும்புகின்றனர். காரணம் நம் முன்னோரால் கட்டப்பட்ட கட்டிடங்களும் இது எமது சொத்து என்ற எண்ணமுமேயாகும். சிட்னியில் ஒரு பாட சாலைக்கு கீத்சிமித் அவர்கள் செ ன் ற போது பாடசாலைச் சுவர்கள் இடிபாட டைந்த நிலையும் வர்ணப்பூச்சு பூசப்ப டாது இருந்ததையும் அவதானித்தபோது அதிபர் எமக்குக் கட்டடம் வரும்வரை
YA
til 95mTib9

இதையே பாவிக்கவிரும்புகின்றோம் என் றார், இடைவேளையின்போது அவர் பாட சாலையைச் சுற்றிக் காட்ட என்னைய அழைத்துச் சென்றபோது ஆரம்ப வகுப் புக்களின் மாணவர் குழாம் எம்மைச் சூழ்த்திருந்தது. சிலர் அவரது கையைப் பற்றி குசலம் விசாரித்தார்கள். எனவே இப்பாடசாலையில் பெற்றோர் தமது பிள் ளைகளை இங்கு அனுப்பப் பெரும்பேறு பெற்றவர்கள் என எண்ணினேன்.
வேறு சில பாடசாலைகட்குச் சென்ற போது எங்கும் ஒரே சத்தமாக இருந்தது. ஆசிரியர்கள் ஒன்றாகச் சேர்ந்து அதிபரு டன் தமது விவகாரங்கள் பற்றி விவாதித் துக் கொண்டு இரு ந் த னர். இங்கு பமானவர்கள் கல்வியறிவு குறைந்தவர் கள் படிப்பித்து பிரயோசனமில்லை பெற் றோரும் அக்கறையில்லை என்றனர். ஆர்வ முள்ள அதிபரானால் தாமே ஆசிரியர்க ளைத் தூண்டிகற்பித்தலைச் சரிவரச் செய்ய முடியும். இதேவேளை இன்னொரு பாட சாலையில் மாணவனை அதிபர் அழைத்துத் தலையில் தடவி எங்கே செல்கிறாய் என வினாவினார். மாணவர் சற்றும் தளம் பாது கழிப்பிடம் எனச்சட்டெனப் பதில ளித்தான். எனவே இப்பாடசாலை தல்ல கரத்தினிடம் உள்ளது. என நினைத்துக் கொள்ளலாம்,
ஒரு நாள் பாடசாலையில் மாணவர் களை உடனடியாக வெளிக்கிடுங்கள் ஒரி டம் செல்ல வேண்டுமென்று ஆசிரியை மாணவர்களைக் கூட்டிச் சென் றார். அதிபரிடம் யாரோ ஆசிரியர் திரி வைத் துவிட்டார். அதி பர் ஆசிரியையையும் மாணவர்களையும் தே டி ச் சென்ற போது அவர்கள் சகிக்க முடியாத மணத் தைச் சுற்றிநின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அணுகிய அதிபர் ஆசி ரியர் எலியொன்று பதினொரு குட்டிகள் போட்டதையும் அச்செயலை செயல் மூலமே கற்பித்தலையும் பார்த்து வியந் தார். இப்படியான காணல்நீர் போன்ற நிகழ்ச்சி மாணவர் மனதில் படியும்படி செய்தமை சிறப்பானதாகும்,
S

Page 19
ஒரு பாடசாலைக்கு ஒருநாள் சென்ற போது வெள்ளை எலிகளின் இனப்பெருக்க விகிதம் பற்றிய விலங்கியல் வகுப்ப நடை பெற்றது. அங்கு ஆராய்ச்சிக்காக ஒரு சோடி எலிகள் கொண்டு வரப்பட்ட ன. ஆணுக்கு அந்தோனி என்றும் பெண்ணுக்கு கிளியோபட்ரா எனவும் பெயர் சூட்டப் பட்டு தகவல்கள் பரிமாறப்பட்டன. சந் தோசகரமான சூழலில் தரவுகள் பெறப் பட்டதால் அப்பாடம் நடைபெற்றதான ஒரு மாதத்தின் பின் அங்கு தரிசிக்கச் சென்ற போது அப் பாடத்கில் சகலரும் விளக்கம் பெற்றிருந்தனர்.
செயல் மூலம் நடைபெறும் பாடங் களினால் மாணவர் பலனைக் கூடப் பெறு வதாக ஆராய்ச்சிகள் கூறினர்லும் அளவுக் கதிகமான பாட அலகுகளைக் குறிக்கப் பட்ட காலத்திலும் ஒரே தன்மையற்ற மாணவருக்குத் திணிக்கப் படுவதனால் தான் தரம் குறைவதாக அவதானிப்புகள் கூறுகின்றன.
இதனை நிவர்த்திக்கும் வேலை பாட சாலைச் சமுகத்திடம் இருக்க வேண்டும். மாணவர் பெற்றோர் ஒத்துழைப்பு இன்றி ஆசிரியர் அதிபர் எவற்றையும் சாதிக்க முடியாது. மாணவன் பாடசாலைக்கு ஒழுங் காக சமூகமளிப்பதில் விருப்பம் இருந்தும் சில பெற்றோர் தமது வருமானத்திற்காக பாடசாலைக்குப் பிள்ளைகளைச் சுழற்சி முறையில் அனுப்புவதால் தொடர்ச்சியான கல்வி கிடைக்காமல் போகிறது. இதனைத் தொடர்மதிப்பீடு சிறப்பாக்கும். தனியே ஒரு பரீட்சையில் வைத்து மாணவனை வகுப்பேற்றும் முறை ஒழிக்கப்பட வேண்டும் ஆசிரியர்களை மாணவர்கள், பெற்றோர் கல்வி சமூகத்தினர் நன்நிலையில் கணிப்பது நல்ல பயனைத் தரும். தவறின் அரசியல் செல்வாக்கினாலோ வேறு விதத் தி
16

னாலோ பதவி உயர்வு பெற்ற சில அதி காரிகள் சில நிமிட வேளைகள் ஒரு ஆசிரியரையோ | மாணவனையோ மேற் பார்வை செய்துவிட்டு அவரைக் கண்டனம் செய்வது தமது அறியாமையினாலே ஆகும். கூட்டங்களில் ஆசிரியரை மாணவனைக் கண்டனம் செய்பவர்கள் தாம் மாணவனாக ஆசிரியனாக இருந்த போது இழைத்த தவறுகளை மீள்பரிசிலனை செய்ய வேண் டும். அதை விட்டு சிலரின் கோள்மூட்டுக ளையோ நிருபிக்க முடியாத அவதூறுக் கடிதங்களையோ வைத்து ஆசிரியரை இட மாற்றம் செய்வதன் மூலம் சில உடனடிப் பெறுபேறுகள் குழப்ப நிலை க ைள த் தவிர்த்தாலும் காலப்போக்கில் அதிலும் மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும். சட்டம் ஒரு கழுதை என் பார்கள். அது எவ்விடத்தும் செல்லுபடி யாகும். என்பதும் பிழை. துரும்பைத் துரும்பால் வல்லவனுக்கு வல்லவன் வெல் வான். ஆகவே நல்ல பாடசாலை எப்படி அமையும் என்பது சமூகத்தில் தங்கியுள்ளது.
நல்ல பாடசாலைக்கு சான்றோர். பெற்றோர், ஆசிரியர், அதிபர் கொண்ட சமூகஇணைப்பு இறுக்கமாக வேண்டும்"
1) பெற்றோர் ஆசிரியர் சங்கம். 2) தாய்மார் சங்கம். 3) பழையமாணவர் சங்கம். 4) இணைப்பாடவிதானத் திட்டம். 5) உடற்கல்வித் திட்டம், VK. (இடங்களைப் பொறுத்து) 6) வளர்ந்தோர் கல்வித்திட்டம், 7) இரவுக்கல்வி ஆகியனமூலம் அறிவை வளர்த்து நல்ல பாடசாலைகளை உண்டாக்க முடியும் எனக் கருது கிறேன்.
புது ஊற்று

Page 20
சாகாப் புகழ்ெ
- ஜீ. மோ
מL"ע{L ש- ש-יש6T
எழில்பெ பொட்டொடு பொலிவுறு
வெட்டிடும் வ
விளங்கிடு! கொட்டிடும் ே
கோக்கவி
விடுதலை வே
வீரனே! கெடுதலைப் ட
கேடுறப் அடிமையாய்
அறுத்தவ மிடிமையில் உ மேதினிக் கு
மாதரை அட
மாந்தரைக் ஒதரும் பாக்க உயர்ந்த'மா
சாதனை பை
சக்தியின் “பாரதி” என்
பைந்தமிழ்
lgil 26, Ibn)

பற்ற மாகவி
கநேஸ்வரி -
ாம் மண்ணின் று ஞாயி றன்னான்!
தலையிற் பாகை
தோற்றம்; மீசை maffair giants ம் கண்ணின் பாரிவை! மகம் போன்றே பொழியும் கோமான்
ட்கை மிக்கோன் அஞ்சா நெஞ்சன் புரிவோர் கொட்டம் பொருதும் வீரன்! வாழும் கேட்டை ன் அவனோர் கத்தி ழன்ற போதும் ழைத்த நல்லோன்!
க்கி வாழ்ந்த கடித்த சர்ப்பம்! ள் ஆக்கி
கவி’யாய் நின்றோள்! .த்த நேசன் காதற் தாசன்! னும் அந்தப் - ப் புலவன் வாழ்க!
17

Page 21
2 L, Ll III
- தமிழொளி. வ.
என் ஆசிரியப் பணியின் தொடக்க காலத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி புகட்டப்பட்ட (ஆங்கிலக்) கல்லூரிகளிற் தமிழ் படிப்பிக்க நேரிட்டது. ஏறத்தாழப் பதினொரு ஆண்டுகளாக இதேபணி.
நான் படிப்பித்த மூன்று கல்லூரிகளி அலுமே நல்ல நூல் நிலையங்கள் இருந்தன. அந்நூல் நிலையங்களில் எல்லாவற்றிலும் உலகப் புகழ்வாய்ந்த பல்வேறு நாட் டுப் பேரிலக்கியங்கள் எல்லாம் இலகுவான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுருக்கப் பதிப்பு DITá)56 Tirai (abriged Edition) atop is திருந்தன. அந்நூல்களைப் படிக்கும்படி ஆசிரியர்கள் மாணவர்களைத் தூண்டினர். கதை படிக்கும் அவாவில் மாணவர்களும் அந்நூல்களை வாசித்தனர். அந்த வாசிப் பின் காரணமாக அவர்களின் மொழியறிவு விருத்தியடைந்தது. கற்பனா வளம் பெரு கியது. அத்தோடு உலகப் பேரிலக்கியங் களை எல்லாம் அறிந்து கொளஞம் வாய்ப்பும் அவர்களுக்குண்டானது. நானுங் கூட அந்தச் சுருக்கப் பதிப்புகளின் மூல மாகத்தான் உலகப் பேரிலக்கியங்களை அறிந்து கொண்டேன்.
அந்தக் கால கட்டத்தில் சுன்னாகம் தனலக்குமி புத்தக நிலையத்தினர் இராமா யணம் மகாபாரதம் போன்ற இதிகாசங் களிலிருந்து இடைநிலை மாணவருக்கேற் றதான இலகு தமிழிற் சுருக்கி எழுதப் பட்ட கதை நூல்களைத் தக்காரைக் கொண்டு எழுதிப் பதிப்பித்து வெளியிட் டனர். குசேலரி சரிதம், நளன் கதை, சாவித்திரி சரிதம் என்பன அவைகளிற்கில.
18

நூல்கள்
பு. இராசரத்தினம் -
Sysł35&š s6n3556ör avs5 Lüssflåio e Lu, Lurruநூல்களாக இருந்தன. மாணவர்கள் கதை வாசிக்கும் ஆர்வத்தால் அவைகளை விருப் போடு வாசித்தனர். வித்தியா பகுதியின ரும் அந்நூல்களை உப பாட நூல்களாக அங்கீகரித்தனர். அரசாங்கப் பாடசாலை களுக்கு அந்நூல்கள் வாசிகசாலை நூல் களாக வழங்கப்பட்டன.
தற்போது அரசாங்கமே பாடப் புத் தகங்கள் சகல வற்றையும் அச்சிட்டு வழங் குவதால், தனியார் துறையினர் அத்தகைய நூல்களைப் பதிப்பிப்பது முற்றாக இல்லை என்று ஆகிவிட்டது. மாணவர்களும் தமிழ் பாடப் புத்தகத்தில் வரும் கதைகளையும் பாடல்களையும தவிர வேறு நூல்களைப் படிப்பதையும் விட்டு விட்டார்கள். அதன் காரணமாக மாணவர்களின் மொழியறிவு குன்றிவிட்டது. ஏன்? கற்பனாவளம் கூடக் குறைந்து விட்டது.
மொழியறிவு குன்றியதன் காரணமாக" வாசித்து, வாசித்ததை விளக்கிக் கொள் ளும் ஆற்றல் குன்றியதன் காரணமாகமாணவர்கள் தமிழ் மொழிப் பாடத்தில் மட்டுமன்றி, எல்லாப் பாடங்களிலுமே திறமையைக் காட்ட முடியாதவராயிருக் கிறார்கள். மாணவர் பலர் இலக்கங்களால் எழுதப்பட்ட கூட்டல், கழித்தல், பெருக் கல். பிரித்தல் என்ற கணக்குகளைச் சரி யாகச் செய்கிறார்கள். அப்படிச் செய்யும் மாணவர்கள், அதே கணக்குகளை வச னத்தில் எழுதிக்கொடுத்துச் "செய்' என்று சொன்னாற் திண்டாடுகிறார்கள். வசனத் தில் எழுதிப்பட்ட கணக்குகளை வாசிக்க
புது ஊற்று

Page 22
வும், வாசித்ததை விளங்கிக் கொள்ளவும் முடியாமையே அவர்கள் திண்டாட்டத் தின் காரணம் என்பதை நாம் அனுபவத் தில் கண்டிருக்கிறோம். "சொற் சோர் வுடமையின் எச்சோர்வும் அறிப" என்ற முதுமொழிக் காஞ்சியடிகள், அம்மாண வகர்ளுக்கு அச்சாவாகப் பொருந்துவதை நாம் அவதானித்தே இருக்கிறோம்.
இந்த நிலையிற்தான் நம் மாணவர் கள் வாசிப்பதேயில்லை. வாசிப்புப்பழக்கம் இல்லாததினால் மொழியறிவும் இல்லை என நாம் ஆதங்கப்படுகிறோம்.
ஆனால் இடைநிலை வகுப்பிற் படிக் கும் சிறுவர்கள், வாசிப்பதற்குக் கதைப் புத்தகம் கேட்கிறார்கள். அவர்களுக்குக் கொடுப்பதற்கு நம்மிடம் தற்போது புத் தங்கள் உள்ளனவா? என்று நாம் சிந்தித் திருக்கிறோமா? என் பேரக்குழந்தைகள் என்னிடம் கேட்டபோது, எ ன் னா ல் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்தையும் கிறிஸ்தவ சபையினர் சிறுவர்களுக்காக எழுதிய பைபிள் கதைகளையும் தான் சிபார்சு பண்ண முடிந்தது. கோகுலம் போன்ற ஒரிரு சஞசிகைகளும் ந ம து வாராந்திரிகளில் வரும் பாலர் பகு தியும் தான் அவர்கள் வாசிக்கக் கூடிய தான பிறவாகும்.
ஏன்? சிறுவர்கள் படிக்கக் கூடியதாக நம்மிடம் பஞ்சதந்திரக் கதைகள் இல் லையா? நவாலியூர் சோ. நடராசா அவர் கள் மொழிபெயர்த்த இதோபதேசம் இல்லையா? அவரது மற்றொரு மொழி பெயர்ப்பான மண்ணியற் சிறு தேர் இல் லையா? விக்கிரமாதித்தன் கதைகள், அபூ ர்வசிந்தாமணி, மதனகாமராசன் கதை கள், நம்மிடையே இருக்கின்றனவே, அவை களை யெல்லாம் ஏன் சிபார்சு பண்ணக் கூடாது? எனச் சிலர் கேட்கலாம்.
பஞ்சதந்திரத்தைக் கொடுத்தோம் என்று வைத்துக் கொள்வோம்.
*அவாசிக் கண்ணதாய பைடனபுரி வாசியாகிய மணிபத்ரன் என்போன் நன் னெறி பற்றி யொழுகலாற் பரிபவமுற்று "
புது ஊற்று

எனப் பஞ்சதந்திரக் கதையை வாசித்த சிறுவன் அதைத் தலையைச் சுழற்றி எறிந்துவிடமாட்டானா? இத்தப் பண்டி தத் தமிழ் அவனுக்குக் கதைகள் மேலேயே வெறுப்பையுண்டாக்கிவிடுமே
விக்கிரமாதித்தன், அபூர்வசிந்தாமணி மதனகாமராசன் கதைகள் கூட அப்படித் தான். அத்தோடு அவைகளை எங்கே தேடிப்பிடிப்பது?
முடிபாகச் சொன்னால் சிறுவர்களுக்கு வாசிக்கக் கொடுக்கக் கூடியதாக நம்மி டம் தமிழ் நூல்களே இல்லை, தமி ழிலே சிறுவர் இலக்கியம் அந்த அளவுக் குத்தான் “வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
எழுத்தாளர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் சிறுவர்களுக்காகக் கதை எழுதவேண்டிய தேவையும் கடமையும் இக்கால கட்டத் தில் மிகவும் அதிகமாக வேண்டப்படுகிறது: சிறுவர்களின் இயல்பான கதை கேட்கும் ஆர்வத்தையும் கதை படிக்கும் ஆசையை யும் பூர்த்தி செய்வதற்காக இராமாய ணம், மகாபாரதம் போன்ற இதிகாசங் களும் புராணங்களும், பஞ்சதந்திரம் இதோபதேசம், விக்கிரமாதித்தன், மதன காமராசன், முதலான நம் நாட்டுக்கதை களும், கிராமியக் கதைகளும் அரபிக்கதை களும், றொபின் ஹ"ட், டெக்கமரான் போன்ற பிற நாட்டுக் கதைகளும், உல கப்பேரிலக்கியங்களும் சிறுவர்களின் தேவை கருதி இலகு தமிழில் எழுதப்படவேண்டும். எழுதப்பட்டவைகள் அழகான கவர்ச்சி கரமான படங்களோடு வழவழப்பான தாளிற் புத்தகங்களாக்கப்படவும் வேண் டும். இது இன்றைய காலகட்டத்தின் அவ சியத்தேவையாகும்.
அதேபோலவே சிறுவர்க்கான பாடல் நூல்களும் வெளிவரவேண்டும். சிறுவர்க் கான கதை இலக்கிய நூல்களைவிடப் பாடல் நூல்கள் சில உள்ளன என்ற நிலையிருப்பினும், மொத்தமாக சிறுவர்க் கான இலக்கியத்தை வளர்ப்பதற்கு வட கிழக்கு மாகாணக் கல்வி கலாச்சார விளை யாட்டுத்துறை அமைச்சு கரிசனை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
19

Page 23
ஆலா ஆலா
மாரிகால வானவில் மாலைநேர அடி வானில் ஏழு வர்ணங்களில் அழகு காட்டி மழைவரும் என்பதைக் கட்டியம் கூறியது. குமரன் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலசிப் பரீட்சைக்காக மாலைநேர வகுப்பில் கலந்து கொண்டு வீடு நோக்கி வீதியால் வகுப்பு மாணவர்களுடன் நடந்து வந்து கொண் டிருந்தான்.
அந்தச் சின்னஞ்சிறார்கள் சீருடையின் றிப் பல வண்ண ஆடைகள் அணிந்தவர் களாக வந்து கொண்டிருப்பது. கதிர்காம யாத்திரைக் காலத்து பல வண்ண வண் ணாத்திப் பூச்சுக்கள் பறப்பதை நினை வுக்குக் கொண்டு வந்தது.
திடீரெனக் கல்லொன்று வீதியில் வந்து விழுந்து பட்டுத்தெறித்து நின்றது. புளிய மரத்தில் கல்லெறியும் மாணவர்களுக்கு அப்படிக் கல் வந்து விழுந்தது ஒன்றும் ஆச் சர்யத்தைத் தரவில்லை. ஆயினும் தம்மை நோக்கி வீசப்பட்ட அந்தக் கல் தப்பித் தவறித் தம் தலை மீது பட்டிருந்தால் செவ் விரத்தம் தலையிலிருந்து தண்ணிர் போன்று பாய்ந்தோடும் என்பதையும் வலியெடுக கும் காயம் ஆற நாளெடுக்கும் வருத்தம் தாளமுடியாத அழுகை வரும் என்பதை அறிவர். இதனால் ஆத்திரம் ஆத்திர மாகக் பற்றிக் கொண்டு வந்தது.
கல் வந்த திசைநோக்கி பார்வையை எறிந்தனர். பற்களை நறநறவெனக் சடித் தனர். கெட்ட வார்த்தைகள் தெரியாத தினால் தங்களின் அகராதியிலுள்ள கடின வார்த்தைகளை அவர்கள் சத்தம் போட்டு உக்கிரமாக ஆத்திரத்துடன் உச்சரித்தனர்.
20

பூப்போடு
வ. ராஜ்கபூர் -
** gGuti”
** Lo68plu urt” o
* எங்களுக்கு ஏண்டா கல்லால்
அடிக்கிறாய்?’’
பண்டி’
* பறையா"
நாய்”*
பூனை”
e S 6T66
**குப்பை”
** ஊத்தையன்” எதிரே அழுக்கடைந்த அரைக் கால்ச்
சட்டையுடன் கறுத்த வெறும் மேனியும் பரட்டைத் தலையுமாக அவர் களின் வயதை ஒத்த ஒரு சிறுவன் நின்று கொண் டிருந்தான். அவனைப் பார்க்க இவர்க ளுக்குத் தாங்கள் படிக்கும் அம்புலிமாமா புத்தகத்தில் படம் போட்ட அரக்கன் ஞாபகத்துக்கு வந்தான். இவர்களின் ஆவே சம் எதுவும் அவனைக் கிலிகொள்ள வைக்க வில்லை. அவன் பயம் என்பது ஏதும் அறி யாத காட்டானாகத் தெரிந்தான்.
'டேய் குமரன் மார்க்கண்டு வீட்டில மாடு பார்க்கிற பொடியண்டா"
*"திமிர் பிடிச்சுப் போச்சுது”*
"அடி குடுக்க வேணும்"
அந்தப் பெயர் தெரியாதமாடு மேய்க் கும் சிறுவன் தன் காலருகே கிடந்த மற்று மொரு கல்லை எடுத்து அவர்களை நோக்கி குறிவைத்து எறிந்தான். தொலை தூரத் தில் நின்றதினால் கல் அவர்களின் முன்பு நிலத்தில் பட்டுத் தெறித்தது.
புது ஊற்று

Page 24
பாடசாலை மைதானத்தில் உதைபந் தாட்டத்தில் மோதி விளையாடும் அவர் களுக்கு அவன் ஒருவன் பன்னிரெண்டு பேராகத் தெரிந்தான். கைகளில் வைத்தி ருந்த புத்தகங்களை நிலத்தில் விட்டெ றிந்து அவனை நோக்கி ஓடினார்கள்.
கோல் போட பந்து கிடைத்த வீரர்க ளுக்கு அவன் பந்தானான்.
கை கால்கள் எங்கணும் சிராய்ப்பு கடை வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
"அடேய் பேரன்ெனடா?" "அகத்தியன்" “ஏண்டா கல்லடித்தாய்?’’
"எனக்குக் கோபம்’ முணகினான் வலி தாங்க முடியவில்லை அவனுக்கு அழுகை வரவில்லை. அவர்களுக்கு அது ஆச்சர்ய மாக இருந்தது. பாடசாலையில் ஆசிரியர் பிரம்பு எடுக்கு முன்னமே அழுகை வரும் தங்களுக்கு இவன் விசித்திரமாகத் தெரிந் தான். இவனுக்கும் தங்களுக்கும் இடை யில் என்ன கோபம்? இவன் பள்ளிக்கூடம் போகாதவன். தாங்கள் எப்போதுமே இவ னுடன் சேர்ந்ததே இல்லையே! அதுவும் அழுக்கானவன். இவனுக்கு எங்களின் மீது எப்படிக் கோபம் வரும்?
"என்னடா கோவம்?’ அதட்டலுடன் கேடடனர். விபத்து நேர்ந்தவிடத்தில் கூடி நிற்கும் சனம் போல இவர்கள் அவனைச் சூழ நின்றனர். காற்றில் முறிந்து விழுந்த வாழை போல அவன் நிலத்தில் கிடந்தான். 'நீங்கள் படிக்கிறது கோவம்" அவன்
முணகினான்.
"நீயும் படியன்’
*என்னைப் பள்ளிக் கூடத்திலே சேத்து விடுங்க” நிலத்தில் வீழ்ந்து கிடந்த அகத் தியன் கண்ணிர்மல்க அவர்களிடம் வேண் டினான்.
அவர்கள் அனைவரும் விபரம் புரியா மலேயே உள்ளுணர்வுகளினால் தாக்குண் டவர்களாக அவனைத் தூக்கி நிமித்தினர்.
புது ஊற்று

ஆறுதல் சொல்லி அவனைத் தேற்ற முயன் றனர்.
ஒருவன் தன் கால்ச்சட்டைப் பாக் கட்டிலிருந்து ஒரு நெல்லிக்காயை எடுத்து அவனுக்குக் கொடுத்தான், குமரன் தன் கைலேஞ்சியை எடுத்து அகத்தியனின் கடை வாயில் வழிந்த இரத்தத்தைத் துடைத்து விட்டான். இன்னொருவன் தன்னிடமிருந்த ஸ்டிக்கர் ஒன்றினை அவனுக்குக் கொடுத் தான்.
அகத்தியன் மீண்டும் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.
"எப்ப என்னைப் பள்ளிக்கூடத்தில சேர்க்கப் போறிங்க???
அந்தச் சிறுவர்களுக்கு என்ன சொல்லி அகத்தியனைத் தேற்றுவது என்று தெரி யாது. அழுக்சடைந்த அடிவாங்கிய அவன் முதுகில் கை வைத்துத் தடவிக் கொடுத் தனா.
தொலைதூரத்தில் வெள்ளையடிக்கப் பட்ட தங்களின் பாடசாலை மூன்றுமாடிக் கட்டங்களுடன் அவர்களைப் பார்த்துச் சிரிப்பது போன்ற பிரமை
அவர்கள் அகத்தியனையும் பாடசா லைக் கட்டடத்தையும் மாறிமாறிப் பார்த் தார்கள்.
அவர் அவனை அடிச்கு முன் விட் டெறிந்த புத்தகங்கள் வீதியில் கிடந்து பொறுக்கி எடுத்தபோது அகத்தியன் மாத் திரம் தனித்து நின்றான்.
அகத்தியனைப் பார்க்க அவர்களுக்கு பாவமாக இருந்தது. ஏன் அடித்தோம் என்று நினைத்த போது அழுகை வந்தது. தங்களின் பெற்றோரிடம் அகத்தியனைப் பற்றி எப்படிச் சொல்வது என யோசிக்கத் தொடங்கினர்.
அகத்தியன் வலியினூடே அவர்களின், அன்பளிப்புகளினால் முகம் மலர்ந்து சிரித் தான். அவர்களுக்கு அழுகை வந்தது.
2

Page 25
கல்வி வேறு
பாடப்புத்தகம் கையிலே ந்தும் பள்ளிமாணவர் இலட்சியமே பரீட்சையிலே சித்திபெற்று பல்கலைக்கழகம் நுழைதலேயாம்
உற்றவரும் பெற்றவரும் ஊட்டிவளர்த்த ஆசையிதால் பரீட்சையிலே தோல்விகானும் பாலகரோ துவண்டிடுவார்
திறமைவேறு படிப்புவேறு உணரும்நிலை வரவேண்டும் பெறுகின்ற சித்திகளால் திறமையது வளர்வதில்லை
திறமைதனை அளவிட பட்டம் புள்ளிதருவதில்லை பெறுகின்ற பட்டமதால் வாழ்வுவளம் காண்பதில்லை
கல்வியிலே தோல்விவரின் கலையென்றும் விளையாட்டென்றும் விருப்புடனே ஈடுபட பலதுறைகள் இங்குண்டு
எத்துறையில் கால்பதித்தும் இகத்தினிலே முன்னேறிடலாம் பிறர்வியந்து நோக்கும்வண்ணம் புகழோடு வாழ்ந்திடலாம்
22

திறமை வேறு”
நளினி -
திறமையின் துணைகொண்டு அனுபவங்கள் பெற்றிடலாம் அறிவை வளர்த்துப்பல உயர்வுகளும் கண்டிடலாம்
நன்மைஎது தீமைஎது உணர்ந்தே செயல்பட்டிடலாம் துன்பமதை இன்பமாக்கும் மனநிலையும் கொண்டிடலாம்
வாழ்க்கையிலே வந்துபோகும் சோதனைகட் கஞ்சாமல் விரக்தியிலே துவளாமல் நிமிர்ந்துவாழப் பழகிடலாம்
நேர்மைவழி தெரிவுசெய்து நியாயம்வாழ உதவிடலாம் தவறுதனை சுட்டிக்காட்டி திருந்தவழி சமைத்திடலாம்
நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவழி பின்பற்றி சீரோடும் சிறப்போடும் வாழும்வழி காட்டிடலாம்
சமூகத்தில் டிரையோடும் அழுக்கதனை அகற்றியே நற்சமூகம் உருவாக நல்லவழி கண்டிடலாம்.
புது ஊற்று

Page 26
கல்வியும் அதன்
- கலாநிதி ச. நா.
கல்வியானது நுண்மதியாற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளை யும் வளர்க்கவேண்டும். நற்பண்புகளை வளர்ப்பதன்மூலமே வாழ்க்கையின் குறிக் கோள்களை கல்வியால் பெற்றுக்கொடுக்க முடியும். வாழ்க்கைக்கும் கல்விக்கும் நெருங் கிய தொடர்பு காணப்படுகின்றது. வாழ்க் கைக் குறிக்கோள்களை அடையும் வழி கல்வியாகும். கல்வியே வாழ்க்கை, வாழ்க் கையே கல்வி. இதனையே ஆங்கிலக் கவி வாணர் வில்லியம் வேட்ஸ்வர்த் **மனிதத் தன்மையினை மனிதர் பெறத் துணையாக விளங்குவது கல்வி" என்று கல்விக்கு வரையறை கண்டார்,
கல்வி என்பது விண்ணில் நின்றும் தோன்றியதன்று. ஏனைய மனித செயல் களிலும் சமுதாய அமைப்புக்களிலுமிருந்து வேறுபட்டு தனியே வளர்ச்சி அடைந்தது மன்று. அது இயற்கையுடன் இணைந்து நிகழ்ந்த மனித இனத்தின் நுண்ணறிவுச் செயற்பாடுகளினூடாகத் தோற்றமளித்த ஒர் அமைப்பு.
பெரும்பாலான நாடுகளில் கல்வி சமு தாயத்தோற்றத்துடன் அதனை அடிப்ப யாக்கொண்டே தொடங்கியது, தொடக்க காலக்கல்வி முறையானது சமயக்கோட் பாடுகளையும், வழிபாட்டு முறைகளையும் கொண்டதாகவும், பாரம்பரி யங் கண் ப் பேனிப்பாதுகாப்பதாகவும் அ  ைமந்து விளங்கின.
புது ஊற்று

முக்கியத்துவமும்
தணிகாசலம்பிள்ளை -
* கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே'
என்பது ஒல்காப் பெருமைத் தொல்காப்பி யனார் வாக்கு. மக்களுக்குரிய பெருமித வாழ்க்கையைக் கொடுக்கும் நான்கினுள் கல்வியும் ஒன்று. மனித சமுதாயத்தின் மாற்றத்துக்கும் பொருளாதார மேம்பாட் டுக்கும் சமூகஅசைவுக்கும் கல்வியே சிறந்த கருவி. ஒருவனது வாழ்க்கையில் படிப் படியாக மாற்றத்தை ஏ ற் படுத் தி அவனைச் சமூகத்தோடு ஒட்ட வாழவைப் பதும் கல்வியே. இத்தகைய கல் வி யி ன் மேன்மையைப்பற்றிப்ல தத்துவஞானிகள் பல்வேறு கருத்துக்களை தத்தம் காலச் குழ லு க் கே ற் ப வெளியிட்டுள்ளனர். * உண்மை, நன்மை, அழகு இம்மூன்றி னையும் உணர்த்தும் கல்வியே கல்வி" என்றார் கிரேக்க த த் துவ ஞா னி பிளேட்டோ, **உடன், உளம், ஆன்மா போன்றவற்றின் இயற்கைத் தன்மைகளை வெளிக்கொணர்ந்து விளக்கம் பெறத்துரண் டுவதே கல்வி’’ என்றார் காந்தி அடிகள். மேலும் கல்வி பற்றி விளக்கமளித்த காந்தி அடிகள் கல்வியானது மக்களது வாழ்க்கை யுடன் இணைந்ததாகவும் அதனை உயர்த் துவதாகவும் அமையவேண்டும் என்று கரு தினார். அத்துடன் குழந்தைகளின் ஆளு மைக் கூறுகளின் சிறந்தபண்புகளை வெளிக் கொணரும் கெயல்முறையென்றும் விளக்க மளித்தார்’’. பண்பாடுள்ள இலட்சிய வாழ்க்கை வாழ்வதற்கு கல்வியேஅடிப்படை என்று தாகூர் விளக்கினார். கல்வியானது குழந்தைக்கு முழுச் சுதந்திரம் என்றவழி
23

Page 27
யில் அமைய வேண்டும் என்றும், கல்வி ஆன்மீகத்தோடர்புடைய தென்றும் விருதி னார். அத்துடன் கல்விக்கொள்கைகளில் இசை, ஓவியம், நடனம் ஆகிய நுண்கணினி களின் முக்கியத்துவம் சிறப்பாக அவரா: வற்புறுத்தப்பட்டது. மனித குலத்தின் மேம்பாட்டிற்கான கருவியாகக் கல்வி செயற்பட வேண்டுமென்பதும் மனிதப்பண் புகளெனப்படும் சிறப்புப்பண்புகளை ஒவ் வொருவரும் பெறச்செய்தல் கல்வியின் இலக்காகத் திகழ்தல் வேண்டுமென்பதும் தாகூரின் கருத்துக்களாகும்.
இம்மனித விழுமியங்கள் மேம்பாடடை பபும் விதத்தில் கல்வி அமையவேண்டும் என்று பூஞரீ சத்தியசாயி அவர்கள் கூறுகி நார்கள். " கீல்வி என்பது ஒருவரது நுண் பதியாற்றல்களையும் திற ன் க ைள பும் விருத்தி செய்வதோடு மட்டும் நின்று விடாது அவனது உலக நோக்கை விரிவடை பச் செய்யவேண்டும். சமூக த் தி ற் கும் பரந்த உலகத்திற்கும் அவரது பணிகள் பயன்படும் வண்ணம் கல்வி நடவடிக்கைகள் அமைதல் வேண்டும் அறக்கல்வியும் தெய் வீகக்கல்வியும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையை நோக்கி ஒருவர் செல்வதற்குரிய பயிற்சி ஈயத்தரும்"
ஆத்மீக ரீதியாகக் கல்வியை நோக்கிய சுவாமி விவேகானந்தர் அவர்கள் "மனித எனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழு மைபெற்ற நிறைவினை (Perfertin மல தச் செய்வது கல்வியாகும்" என்றார்
கல்வி என்பதற்கு ஆங்கில ரீதியாக வரையறுத்தவர்கள் "கல்வியைக் குறிக் கும் ஆங்கிலச் சொல்லான Education என்பதன் வேர்க்கருத்து "வெளிக்கொணர் தல்' என்பதாகும். கல்வி எனப்படுவது குழந்தைகளிடம் உள்ளமைந்து கிடைக்கும் பல்துறை ஆற்றல்களையும் நிறன்களையும் வ்ெளிக்கொணர உதவும் செயல்முறையா கும். உயர்த்துதல் (Tr Raise) என்று கற் பித்தலுச்குப்பொருள் கொள்வது சிறந்த தாகக்கப்படுகின்றது"

கல்விக்கு விளக்கமளிக்கையில் "கல்வி யானது ஆதிகாலந்தொட்டு இன்றுவரை ால்லோராலும் போற்றப்பட்டுவருகின்றது. "கல்" என்பதன் வினை அடிபாகப் பிறந் தது கல்வி என்பர் வி எடு" அல்லது "தோண்டு என்னும் பொருளைக் கொண் டது "கல்' என்னு சொல். ஒருவனிடம் மறைந்து கிடக்கும் ஆற்றலைத் தோண்டி வெளி கானர்கே கல்வியின் இலக்காக அமைதல் வேண்டு " " கல்வி மனித வரிடம் மறைந்து கிடைக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து அவனது வாழ்க்கையை ஒளி பெறச் செய்கிறது
கல்வியூடாகவே பண்பாடு வளர்கின் றது. அத்துடன் கல்வியூடாகவே பண்பாடு பண்டுதொட்டு பாரம்பரிய மாசுப் பேணப் பட்டு 6 வருகின்றது "கல்வியைத் தன் மூச்சா ஈக்கொண்டு இயங்கி வருவது எமது சமுதாயம். "கேடிங் விழச்செல்வம் ਨ என்றும் சுற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் சுற்கைதன்றே" என்றும் கல்வியை உயர்த்தி மதித்தது தமிழர் பண்பாடு. இமனம 1றுமை ஆகிய இருமை களிலும் ரமாப் டையதாகக் கல்வி கருதிப் பட்டது"
இங்கு பாரம்பரிய சமுதாயங்கள் கல் வியின் பேறாகிய அறிவுக்கு முதலிடம் கொடுத்த த ன் 31ம காட்டப்படுகின்றது. சமூக மேம்பாடு கல்வி மேம்பாடு எனலாம்.
கல்வி தற்போது மூன்றாக எனக்கிப்பு டுத்தப்படுகின்றது. 1. Ipsa so son LD YFormal) # 15 iki Giáo. 2. முறையில் (In Formal) கல்வி 3. முறைசாரா (Nun Fபாm:11) க் கல்வி முறைமைக் கல்வி என்பது பள்ளி என்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்தில் !p isā? I — பெறும் கல்வி:யும், மு ன்ற மை யான கவைத் திட்டத்திற்குட்பட்டுப் பயிலப்படும் கல்வியையும் குறிக்கும். இங்கு கற்றல். கற்பித்தல் முறைமைக்குட்பட்டு Elsall பெறும் கல்வி வகைகள் பற்றி பேராசிரி பர் சோ. சந்திரசேகரம் அவர் கி ஆள் கு றி டு  ைசுயி ல் " முறைசார்ந்த கல்வி என்பது ஆரம்பப் பள்ளி தொடக்கம்
"נדו ותזו1+5 ודן זי

Page 28
பல்கலைக்கழகம் வரையில் உள்ள கல்வி முறையைக் குறிக்கும். இவ்வாறான கல்வி முறையில் உள்ளடங்கும் ஏனைய முழு நேரத் தொழில் நுட்ப உயர் தொழில் கல்வி நிறுவனங்களும் முறைசார்ந்த கல்வி என்ற பாகுபாட்டில் அடங்குவனவாகும்".
"முறையில் கல்வி என்பது பள்ளி சாராத அனைத்துப்பட்டறிவுக் கல்வியை யும் குறிப்பிடும். அதாவது சமூக அல்லது தனிப்பட்ட வழமை, மரபு ஈர்ந்த சமூ கத்தின் குணநலன்களாற் பெறப்படும் கல்வியைக் குறிக்கும். "மூறையில் கல்வி என்பது ஒவ்வொருவரும் நாள் முழுவதும் தனது சூழல், குடும்பம் அயலவர்கள், நூல் நிலையம், பொதுத்தொடர்பு சாதனங்கள் என்வற்றுக்கூடாகப் பெறுகின்ற திறன்கள் உளப்பாங்குகள் வாழ்க்கை என்பவற்றைக் சருதும். அதாவது வாழ்நாள் முழுதும் பெறு கின்ற நாளாந்தம் வழங்குகின்ற கல்விமுறை யில் கல்வி என அழைக்கப்படுகின்றது." .
முறை சாராக்கல்வி என்பது பள்ளி போன்று ஒழுங்குபடுத்தப்படாத நிறுவ னங்கள் மூலம் முறைமைக்குட்படாது பெறப்படும் கல்வியைக்குறிக்கும். "முறை சாராக்கல்வி என்பது நன்கு நிறுவப்பட் டுள்ள முறைசார்ந்த பாடசாலை அமைப் புக்கு அமைப்புக்கு அப்பால் இடம்பெறும் ஒழுங்படுத்தப்பட்ட கல்விச் செயற்பாடு - களைக் கருதுகின்றது. முறைசார்ந்த கல்வி யின் ஒரு அங்கமாக அமையாத கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் யாவும் முறைசாரக் கல்வியின் பாற்படும்."
கல்வியை இவ்வாறு வகைப்படுத்தினா லும் கல்வி எங்கும், எப்போதும், எந்நிலை யிலும் பெறக்கூடிய ஒன்று என்றும் கூறப் படுகின்றது. "எல்லாருக்கும் வாழ்நாள் முழுவதும் கல்வியாக அமையும் கல்வி முறைமை, முறைமைசாரா முறை யில் உள்ளார்ந்த வெளியார்ந்த ரீ தி யாக வினைத்திறனைக் கூட்ட இயன்றவரை செயற்படும். தேசிய கல்விமுறையில் கிராம மேம்பாட்டுக்கான கல்வியே அடிப்படை யானது. நாட்டின் கல்வித் தத்துவ அடிப் படையில் கிராம மேம்பாட்டுக்கல்வி இடம் பெற வேண்டும் என்று மேற்காட்டிய கருத்து வலியுறுத்தப்படுகின்றது.
புது ஊற்று

வாழ்க்கைக்கு வழிகாட்டும் உண்மைத் தன்மை, தெய்வீகப்பண்புகள் நிறைந்த மேன்மைகள் கொண்ட கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று, கல்வி எல்லோருக்கும், எங்கும், 'எப்போதும் கிடைக்குமளவிற்குப் பெருக்கெடுத்தோட வல்லது. “மாந்தர் தம் கற்றனைத்தூறும் அறிவு" என்பது வள்ளுவன் கூற்று. நாட் டில் கிராமம், நகரம் என்ற வேறுபா டின்றி மக்கள் அனைவரும் கற்றுக்கனிந்து களிப்புறும் கல்வி மானுடரின் பொதுச் சொத்தாகும்.
கல்வியின் முக்கியத்துவம்
கல்வியே வாழ்க்கை; வாழ்க் கையே கல்வி என்ற அடிப்படையில் மனித மேம் பாட்டிற்குக் கல்வி முக்கியத்துவம் பெறு கின்றது. வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது; மனிதனை வாழ்வாங்கு வாழ வைக்கின் றது. சூழலை நன்கறிந்து அதற்கேற்ற விதத்தில் அவன் தன்னை ஆக்கிக்கொள்ள கல்வி உதவுகின்றது. தொடர்ச்சியான உலக வாழ்க்கையில் நீண்ட ஓர் மரபை. பண்பாட்டு விழுமியங்களைக் கல்வி யே ஒரு தலைமுறையிலிருந்து இன்னோர் தலை முறைக்குக் கையளித்து வருகின்றது. இந்த அடிப்படையில் கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது.
"சமுதாயத்தில் பண்பாட்டு uש מ" பினைக் கல்வி இளம் தலைமுறையினர்க்கு உணர்த்துகின்றது. புதுக்கருத்துக்கள், புத் தாக்கங்கள் (Innovatdeions) ஆகியவற்றின் வளர்ச்சிக்குத் தூண்டு த ல ளிக்கின்றது. தொழில் புரிந்து வாழ்க்கை நடத்தப்பயிற்சி அளிக்கின்றது. சமுதாயத்தில் பிறருடன் பொருந்தி வாழத்துணை செய்கின்றது. பயனுள்ள முறையில் ஓய்வு நேரத்தைக் கழிக்க உதவுகின்றது. அறிவுப் பெருக்கத் திற்கும், ஒழுக்க வளர்ச்சிக்கும் கல்வி உதவு கின்றது. ஆன்மீக உணர்வு முழுமை பெறு வதற்கும் கல்வி துணை செய்கின்றது. மனித இனம் பல்லாண்டு காலம் முயன்று உருவாக்கிய பண்பாட்டை மங் காம ல் பாதுகாத்து அதனை மேலும் சிறப்பாக்க கல்வி உதவுகின்றது. கல்வி இவ்வாறு முக்
25

Page 29
கியத்துவம் பெறுவது மட்டுமன்றி பல்வேறு பட்ட அறிவுகளைக் கையளித்து நடத்தை முறைகளை மாற்றியமைத்தலுடன் சூழ் நிலையுடன் பொருத்தப்பாட்டினைப் பெற வும் உதவுகின்றது. கல்வி ஒர் இலக்கினை அடையவைப்பதனால் முக்கியத் துவம் பெறுகின்றது. குறிக்கோளை உணரவைக் கின்றது. உணர்ந்த குறிக்கோளை அடை யும் வழியை கல்விமூலம் மனிதன் காண் கின்றான். அவற்றைப் பகுப்பாய்வு செய்து நல்லவற்றையும், தீயவற்றையும் கண்டு கொள்கின்றான். நல்ல வற்றை தான் கடைப்பிடிப்பது மட்டும் அல்லாமல் மற்ற வர்களுக்கும் காட்டி நிற்கின்றான்.
கல்வி மனிதனின் அடிப்படையாகும். ஒருவன் நல்ல அறிவைப் பெற்றுவிட்டால் அவனது குடும்பம் அதன் செல்வாக்குக் குட்படுகின்றது. அதுவும் அறிவைப்பெற்ற குடும்பத்தைப் பிரதிபலிப்பதாக மனிதப் பண்பாடு ஒழுக்கம் அமைந்துவிடும்.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண்விடல்" என்ற வள்ளுவக் குறட்பா கல்வியினால் பெற்ற அறிவு கொண்டு ஆய்வு செய்யாது விட்டால் அதனை அவன்கண்விட முடி யாது. அதற்குக் கல்வியே உதவுகின்றது. கல்வி அந்தவகையில் முக்கியத்துவம் பெறு கின்றது எனக்காட்டுகின்றார். "கல்வி அறிவை வளர்ப்பது ஆற்றல்களை வளர்ப் பது உணர்ச்சிகளைப் பயன்படுத்துவது மக் கள் வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வது
26

மனிதனின் சமூகநடத்தையை மாற் றி அமைப்பது மக்களில் உள்ளடங்கியிருக்கும் ஆன்மப்பண்புகளைப் படிப்படியாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்துவதாகும். "சமூகத்தில் சாதி வே ற் று மைகளையும் உடையவர், இல்லாதவர் என்னும் சீர் கேட்  ைட யும் பெரும்பான்மையோர் வாழ்க்கை வசதியற்றோராயும் சிறு பான்மையோர் வசதியுள்ளவராயும் இருக் கும் சிறுமையினையும் கிராமங்கள் நலிவுற் றுப் போவதையும் கல்வியால் எழுந்த சர்வோதய சமுதாயம் அகற்ற வேண்டும். எனக் காந்தியடிகள் குறிப்பிடுவதன் மூலம் கல்வியின் முக்கியத்துவம் புலனாகும்" “பல்வேறு கோணங்களில் கல்வியின் முக் கியத்துவம் பற்றி ப் பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்." "கல்வி என்பது சமுதாயம் அழியாமல் பேணிக்கொள்வ தற்கு வேண்டிய கருவியாகும். சமுதாய அனுபவங்கள் கல்விமூலம் பரிமாற்றம் செய்யப்பட்டு, எல்லோரும் பங்குபெறும் அனுபவங்களாக இருக்கவேண்டும். எனவே கல்வி தனியாள் ஆளுமையை வளர்ப்ப தோடு, சமூக வாழ்வையும் தொடர்பு படுத்துவதாக உள்ளது. தனியாள் சிறப் புற சமுதாயம் சிறப்புறும். எனவே கல்வி வாழ்க்கையையும் சமூக முன்னேற்றத்தை யும் ஏற்படுத்தக்கூடியது. சமூக முன்னேற் றமே சமூக நிறுவனங்களின் முக் கிய இலக்கு. அச்சமூகமுன்னேற்றத்தை கல்வி என்ற சாதனமே அளித்து வருகின்ற தன்மையில் கல்வி முக்கியத்துவமடை கின்றது.
புது ஊற்று

Page 30
மநு - மநுநீதி கண்ட
- தமிழ்மணி
க. பொ. த. சாதாரணதர, தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்திற்கான பாடத்திட்டத்தில், தமிழ் இலக்கியப் பகு தியில், “பெரிய புராணம் - திருநகரச் சிறப்பு" என்ற பகுதியும் ஒன்று.
தமிழ் இலக்கியம் ஆண்டு 10 - 11 என்ற நூலில் எட்டாவது பகுதியாக இது இடம் பெற்றுள்ளது. இப்பகுதியில் "நில மகட்கழகார் திரு என்ற பாடல் முதல் "போற்றிசைத்துப் புரந்தரன் மால் " என்ற பாடல் வரை முப்பது (30) பாடல் கள் காணப்படுகின்றன.
உண்மையில் பெரிய புராணம் என வழங்கப்படுகின்ற திருத்தொண்டர் புரா ணத்தில், "திரு நகரச் சிறப்பு" என்னும் இப்பகுதியில் "சொன்ன நாட்டி ைட த் தொன்மையில் மிக்கது " என்ற பாடல் ழுதல் "இணையவகை அறநெறியில் எண் இறந்தோர்க்கு ' என்ற பாடல் வரை ஐம்பது (50) பாடல் கள் கா ண ப் படுகின்றன.
இவ் ஐம்பது பாடல்சளுக்குள் மூதல் பதினொரு பாடல்களும். இறுதி ஒன்பது பாடல்களும் ஆக, மொத்தம் இருபது பாடல்க: சேர்த்துக் கொள்ளப்படாமல் தவிர்க்கபபட்டுள்ளன.
இருப்பினும் இக்கட்டுரைக்கு விடுபட்ட இருபது பாடல்களும் அவசியமானவை அல்ல என்பதால் வழங்கப்பட்டுள்ள முப் பது பாடல்களின் அடிப்படையிலேயே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
புது ஊற்று

சோழன் - அநபாயன்
அகளங்கன் -
மது-மநுநீதி கண்ட சோழன் (மநு மநுநீதிச் சோழன், மனுச் சோழன்) அத பாயன், ஆகிய மூவரும் ஒருவரே என்ற வகையில் பல ஆசிரியர்களுக்கும் குழப்பமும் மயக்கமும் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தி னாலே, அந்தக் குழப்பத்தை விடுவித்து. உண்மையை நிலை நிறுத்தித் தெளிய வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இந்தக் குழப்பத்திற்கு முக்கிய காரண வாக அமைந்தது, பாடநூலில் இடம் பெற்றிருக்கின்ற நான்காவது பாடலாகிய "கொற்ற ஆழி " எனத் தொடங்குகின்ற பாடலுக்குக் கொ டு க் கப் பட் டு ஸ் ள விளக்கமே ஆகும். முதலில் அப்பாடலைப் பார்ப்போம்.
**கொற்ற ஆழி குவலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச் செற்றம் நீக்கிய செம்மையின் மெய்மனுப் பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான்'
விளக்கக் குறிப்புகள் என்ற பகுதியில் இந்த நான்காவது பாடலுக்கு கொடுக்கப் பட்டிருக்கின்ற விளக்கத்தில் "அநபாயன் பண்டைமனுவின் வழிநின்று ஆட்சி செய்து மனுநீதிச் சோழன் எனப் பெயர்பெற்றான் என்பது' எனக் காணப்படுகின்றது. இக் கூற்று அநபாயனே மநுநீதிச் சோழன் என உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
விடைத்தாள் திருத்தி புள்ளி வழங்கு வதற்காகத் தயாரிக்கப்படுகின்ற "புள்ளி வழங்கும் திட்டம்' கைநூலில், பலதட
27

Page 31
வைகள் இதே கூற்று கொடுக்கப்பட்டுள் ளது. 1996ம் ஆண்டுக்கான புள்ளி வழங்கும் திட்டத் துணை நூலில் சந்தர்ப்பம் கூறல் பகுதியில் "மாநிலங் காவலனாவான்.' என்ற பாடலுக்கான சந்தர்ப்பங் கூற லுக்கு வழங்கப் பட்டுள்ள விடையில் யாரால்:- மனுச் சோழனால் / அநபாயச் சோழனால் / மனுநீதி கண்ட சோழனால், எனக் கொடுக்கப்பட்டுளதை விடைத் தாள் மதிப்பீட்டிற்குச் சென்ற அனைவரும் பார்த்திருப்பார்கள் .
இக் கூற்று முழுக்க முழுக்கத் தவறான ஒரு கூற்று ஆகும். சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தைப் பாடிய காலத்தில் சோழ நாட்டை ஆட்சி செய்த மன்னனே அநபாயச் சோழன் ஆவான். சேக்கிழார் அநபாயச் சோழனின் முதன் மந்திரியாக இருந்தவர் என்பதும் பலரும் கண்டறிந்த முடிபு. சேக்கிழார் சுவாமிகள் தன் காலத் தில் சோழப்பேரரசைக் குறைவின்றி ஆட்சி செய்த அநபாயச் சோழனைப் பற்றிப் பெரிய புராணத்தில் பல இடங்களில் சிறப் பாகப் பாடியிருக்கிறார்.
குறிப்பாக, பாயிரம் என்ற பகுதியில் வரும் எட்டாவது பாடலில் அநபாயச் சோழனின் அவை தன் பெரியபுராணத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்ற பொரு ளில்
மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம் சேயவன் திருப்பேரம் பலம் செய்ய தூய பொன்அணி சோழன் நீடூழிபார் ஆயசிர் அநபாயன் அரசவை.
எனக்குறிப்பிடுகிறார். இப்பாடலுக் குத் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் ( திரு. வி. க ) உரைஎழுதும் பொழுது இம் மன்னனைச் சேக்கிழார் பெருமான்' பலவிடங்களில் பலவாறு புகழ்ந்து கூறு கிறார். இவனைக் கங்கை கொண் ட சோழன் (இராசேந்திர சோழன்) என் றும், இரண்டாவது குலோத்துங்கன் என்
றும் ஆராயச்சிக்காரர் கூறுப." எனக் கூறிமுடிக்கிறார்.
28

இதன்படி அநபாய சோழன் இராஜ ராஜசோழனின் பின் ஆட்சி செய்த ஒருவன் என்பது தெளிவாகிறது. அதனால் இவனது காலம் கி பி. 10 ம் நூற்றாண் டுக்குப் பிற்பட்டதே என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
இவ் அநபாயனே பொன்னம்பல ஆல யத்தின் கூரையைப் பொன் ஒடுகளாலே வேய்ந்து, "பொன் வேய்ந்த சோழன்" எனப் பெயர் பெற்றவன் என்றும் அறிஞர் கள் கருதுகின்றனர்.
மேலே குறித்த பாடலும் இக்கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம் "தான் பாடிய இப்பாடல்களினை, சிவந்த திரு மேனியையுடைய தில்லைக் கூத்தன் எழுந் தருளியிருக்ரும் திருப்பேரம் பலத்திற்கு, நீடூழிக் காலம் புகழ் நிலைத்திருக்கும் சிறப்புமிக்க அதயாயனது அரச அவை விரும்பும் என்பதே இப்பாடலின் திரண்ட பொருள்.
அநபாய சோழனின் அரச அவையி னர் தன் பெரிய புராணத்தை விரும்பு வார்கள் என்று கூறுவதிலிருந்து சேக்கி ழாரின் காலமும், அநபாயனின் காலமும் ஒன்றே என்பது தெளிவாகின்றது. தம்சம காலத்தில் வாழ்ந்து தம்மை ஆதரித்து, காவியம் பாட உதவி செய்த மன்னர் களைப் புலவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், நினைவு கூர்ந்து, பாராட் டிப் பாடுவது உலக வழக்கம். அவ்வழக் கப்படி சேக்கிழார் சுவாமிகள் அநபாய சோழனைப் பல இடங்களிலும் பாராட்டி யுள்ளார்.
பெரிய புராண ஆராய்ச்சியில் பெரி தும் ஈடுபட்ட பேராசிரியர் அ. ச. ஞனா சம்பந்தன் அவர்கள் தமது நூல்கள் பல வற்றில் சேக்கிழாரையும் அநபர்யனையும் சம காலத்தவர்களாகவே குறிப் பி டு கின்றார்.
"பெரிய புராணம் என வழங்கப் பெறும் திருத்தொண்டர் புராணத்தை அருளிச் செய்தவர் சென்னையை அடுத்த
புது ஊற்று

Page 32
குன்றத்தூரில் பிறந்த சேக்கிழார் பெரு மான் ஆவார். இவர் மாபெரும் கவிஞ ராக, புலவராக, அறிஞராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சோழப் பேர ரசின் தலைமை அமைச்சராகவும் பல்லாண்டுக் காலம் பணிபுரிந்தார். சோழப் பேரரசன் இரண்டாம் குலோத்துங்கனுடைய காலத் தில் அவனுக்குத் தலைமை அமைச்சராக இருந்து பணியாற்றிய பெருமை சேக்கி ழாருக்கு உண்டு.” என்று குறிப்பிடுகிறார்.
திரு சீ. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் பெரிய புராண வரலாறு எழு தும் போது ஆசிரியர் வாழ்ந்த க்ாலம் குலோத்துங்க சோழர் 11 (அநபாயர்) காலம் என்பது இப்போது ஆராய்ச்சி யாளர் பலரும் கொள்ளும் கொள்கை யாம். அஃது இப்போதைக்கு. எண்ணுறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்" எனக் குறிப்பிடுகிறார்.
எனவே அநபாய சோழனும், சேக்கி ழார் சுவாமிகளும் சமகாலத்தவர் என்பதி லும் இவர்கள் காலம் கி.பி. 19 ம் நூற் றாண்டின் பின் என்பதிலும் எவருக்கும் சந்தேகமில்லை.
மனுநீதி கண்ட சோழனின் கதை, அநபாய சோழனின் ஆட்சிக் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பலராலும் பாடப்பட்ட ஒரு சுதையாகும்.
ஐம்பெரும் காப்பியங்களில் முதல் எழுந்த காப்பியமாகவும், சங்க மருவிய காலம் என்று அழைக்கப்படுகின்ற, கி.பி 6-4 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத் தில் பாடப்பட்ட காப்பியமாகவும் சொல் லப்படுகின்ற சிலப்பதிகாரத்திலே மநுநீதி கண்ட சோழனின் கதை சொல்லப்பட் டிருக்கின்றது.
கோவலனைக் கள்வன் என்று குற்றம் சாட்டி, பாண்டியன் நெடுங் செழியனின் ஊர்காப்பாளர்கள் கொன்றுவிட, கொலை யுண்ட கோவலனின் மனைவி கண்ணகி கொதித் தெழுந்து, பாண்டியன் நெடுஞ் செழியனிடம் சென்று வழக்குரைக்கும்
புது ஊற்று

போது, தனது சோழ நாட்டு மன்னர் ஆட்சிச் சிறப்புப் பற்றிக் குறிப்பிடுகையில் இரண்டு மன்னர்களின் நீதி நெறியைக் குறிப்பிடுகிறாள்.
அடைக்கலமாக வந்த புறா வின் உயிரைக் காப்பதற்காகத் தன் உடலை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியை யும், ஆராய்ச்சி மணி அடித்து நீதிகோரிய பசுவிற்கு நீதி வழங்குவதற்காக, தன் மகனைத் தேர்ச்சக் கரத்தினால் நெரித் துக் கொன்ற மனு நீதி கண்ட சோழனை யும் குறிப்பிடுகிறாள்.
எள்ளது சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் திர்த்தோன்,
எனச் சிபிச் சக்கர வர்த்தியைக் குறிப் பிட்டுவிட்டு
வாயிற் கடைமணி நடு நா நடுங்க ஆவின் கட்ைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெற்ற புதல்வனை ஆழியின்
மடித்தோன்
என மநுநீதி கண்ட சோழனைக் குறிப்பிடுகிறாள். சிலப்பதிகாரத்தில் வரு கின்ற கதாநாயகியாகிய கண்ணகி இச் செய்தியைக் கூறுவதால் இச் செய்தி ஒன் றில் கண்ணகியின் காலத்துச் செய்தியாக இருக்கவேண்டும் அல்லது கண்ணகிக்கு முந்திய காலத்துச் செய்தியாக இருத்தல் வேண்டும்.
சிலப்பதிகாரம் பாடப்பட்ட காலம் கண்ணகி தெய்வமாகிய சிறிது நாட்களும் குப்பின் என்பதற்குச் சிலப்பதிகாரத்திலே சான்றுகள் உண்டு.
சேரநாட்டிலே தேவவிமானம் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றதைக் குன்றக் குறவர்கள் தாம் கண்டதாகச் சேர மன்னன் செங்குட்டுவனிடம் கூற, ஆச்ச ரியமடைந்த சேரன் செங்குட்டுவனுக்கு கண்ணகியின் வரலாற்றைச் சீத்தலைச் சாத்தனார் எடுத்துக் கூறுகிறார். அக்
29

Page 33
கதையே பின்பு இளங்கோ அடிகளால் சிலப்பதிகாரமாகப் பாடப்பட்டது.
எனவே இளங்கோ அடிகளுக்கு, மநு நீதி கண்ட சோழன் முற்பட்டவன் என் பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமா கின்றது
அப்படியிருக்க, இளங்கோ அடிகளுக் குப் பல நூற்றாண்டுகள் பின்ன லே வாழ்ந்த அநபாயச் சோழனை மநுநீதி கண்ட சோழன் அல்லது மநுநீதிச் சோழன் என்று சொல்வது எவ்வித த் தி லும் பொருந்தாது.
சிலப்பதிகாரத்தில் மட்டுமன்றி, மணி மேகலை என்ற காவியத்திலும், மநுநீதி கண்ட சோழன் பற்றிய தகவல் உண்டு.
தனது மகனாகிய உதயகுமாரன் ஒழுக்கமுறை தவறிய காரணத்தினால் கொலை செய்யப்பட்டான், என்று கேள் விப் பட்ட சோழமன்னன் தனது பரம் பரைப் பெருமையைத் தனது மகன் இழிவு படுத்தி விட்டான் என்று கவலைப் படுகை
“மகனை முறை செய்த மன்னவன் வழிஓர்
துயர்வினை யாளன் தோன்றினன்’’
என்று குறிப்பிடுகின்றான், இங்கு 'மகனை முறை செய்த மன்னவன்'" என்று குறிப்பிடப்படுபவன் மனுநீதிகண்ட சோழனே என்பர் உரைகாரர்.
எனவே, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்சளில் மனுநீதி கண்ட சோழன் பற்றிய தகவல்கள் இருப்பதனால் இக் காப்பியங்கள் பாடப்பட்ட காலத்தின் பின் பல நூற்றாண்டுகள் கடந்து ஆட்சி செய்த அநபாயச் சோழன், மநுநீதி கண்ட சோழன் ஆகமுடியாது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறிய மநுநீதி கண்ட சோழனின் கதை யைத்தான் அநபாய சோழனின் சமகாலத்த வரான அவனது முதன் மந்திரியாக இருந்த
30

சேக்கிழார் பெரிய புராணத்தில் விரிவாகத் திருநகரச் சிறப்பில் பாடினார் என்பது கவனிக்கத் தக்கது.
அடுத்த மநு என்பவனும் மநுநீதி கண்ட சோழன் என்பவனும் ஒருவனே என்று மயக்கம் பலரிடம் இருக்கின்றது. மநு என் பவன் இராமரின் மூதாதையர்களில் ஒரு வன். மது சிறப்பாக ஆட்சி செய்த சூரிய் குலத்து மன்னன். அவனால் வகுக்கப்பட் டதே மநுதர்ம சாத்திரம்,
இப்பொழுது இருப்பது உருக்குலைந்து திரிவுபட்டு இருக்கின்ற மநுஸ்மிருதி என்பர் திரு. வி. க. உண்மையான மநுதர்ம சாத் திரம், மநுவுக்கும் அநபாய சோழனுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்த்த ம்நுநீதி கண்ட சோழனின் ஆட்சிக் காலத்திற்கு முன்பே மாறுபட்டு விட்டது. உண்மை மது தர்ம சாஸ்திரத்தைக் கடைப்பிடித்துக் காட்டியதன் காரணத்தினால் இச் சோழ மன்னனுக்கு மனுநீதி கண்ட் சோழன் என்ற பெயர் ஏற்பட்டது என்பர் திரு. வி. க.
கொற்ற ஆழி குவலயஞ் சூழ்ந்திடச் சுற்று மன்னர் திறைகண்ட சூழ்ந்திடச் செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப் பெற்ற நீதியுந் தன்பெயர் ஆக்கினான்.
என்ற பாடலில் மநுவகுத்த நீதியைச் சரிவரப் புரிந்து கொண்டு தன் ஆட்சியில் கடைப்பிடித்துக் காட்டிய காரணத்தால் இவனுக்கு மநுநீதிகண்ட சோழன் என்ற பெயர் காரணப் பெயராக வந்தது என இப்பாடல் தெரிவிக்கின்றது . இவனது உண்மைப் பெயர் என்ன என்பது பெரிய புராணத்திலோ அன்றி வேறெந்த இலக் கியத்திலோ குறிப்பிடப்படவில்லை. இவ னுக்கு அநபாயன் என்ற இயற்பெயர் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. '
இராமபிரானின் குலமும், சோழர் களின் குலமும் சூரியகுலமே என்பதால்,வட நாட்டு மநுவேந்தனையும் அவன் வகுத்த மநுநீதிப்படி வாழ்ந்த மநுநீதி கண்ட சோழன் எனப் பெயர் பெற்ற சோழவேந் தனையும் ஒருவராகச் சிலர் கருதியிருக்
புது ஊற்று

Page 34
கலாம் போல் தெரிகிறது. மது வட நாட் டைச் சேர்ந்த ஆரிய மன்னன். மநுநீதி கண்ட சோழன் தமிழ் நாட்டை ஆண்ட ஒரு தமிழ்ச் சோழமன்னன்.
இம் மநுநீதிகண்ட சோழமன்னன் பற் றிப் பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப் பிடுகையில், இவன் சூரியகுலத்திலே தோன் றியவன் என்றும் நிலையான புகழ் பொருந் திய அநபாயச் சோழனது பரம்பரைக்கு முதல்வன் என்றும் குறிப்பிடுகிறார்.
அன்ன தொல் நக ருக்கர சாயினான் துன்னு செங்கதிரோன் வழித் தோன்றி
னான் மன்னு சீர்அந பாயன் வழிமுதல் மின்னு மாமணிப் பூண் மனு வேந்தனே,
என்ற பாடலில் வரும் "மன்னுசீர் அநபாயன் வழிமுதல்" என்ற அடியின் பொருளை விளங்கிக் கொள்ளாத பலர் வழிமுதல் என்பதை பரம்பரை என்று அர்த்தப்படுத்தி அநபாயனது பரம்பரை யிலே அவனுக்குப் பின் வந்தவன் மநுநீதி கண்ட சோழன் என்று பிழையாக விளங் கிக் கொண்டனர்.
எப்படி, அநபாயனுக்குப் பின்னாலே நிகழவிருந்த நிகழ்ச்சியை அத பாயன் காலத் தில் வாழ்ந்த சேக் கிழார் பாடியிருக்க முடியும் என்ற தர்க்க வாதம் அவர்கள் சிற்றறிவுக்கு எட்டவில்லைப் போலும்.
மநுநீதிகண்ட சோழன் என்பவன் சூரிய குலத்தில் தோன்றியவன் என்பதும் அநபாயனின் வழிக்கு முதல்வன் என்பதும் அதாவது அநபாய சோழனின் பரம்பரை யில் அவனுக்கு முன் வாழ்ந்த ஒரு முதல் வன் என்பதும் இப்பாடலில் தெளிவாகின்
D5.
இவனை மநுவேந்தன் என்றே சேக் கிழார் அடிக்கடி குறிப்பிடுவதனால் பலருக் கும் இவனே மநுதர்மசாத்திரம் வகுத்த மநுவேந்தனோ என்ற ஐயம் எழுந்திருக் கிறது.
புது ஊற்று

இவ்வகையில் நோக்கும் பொழுது, சூரிய குலத்தில் மிகச் சிறப்புமிக்க ஒரு மன்னன் வகுத்த நீதியே மநுதர்ம சாஸ் திரம் என்பதும், அவன் வடநாட்டு மன்ன னாக இருக்கலாம் என்பதும், அவனுக்குப் பின் வாழ்ந்த ஒரு சோழ மன்னன், அம் மநு வகுத்த மநுநீதிப்படி வாழ்ந்துகாட்டி மநுச் சோழன், மநுநீதிச்சோழன் மநுநீதி கண்ட சோழன் என்ற பெயர்சளால் அழைக்கப்பட்டான் என்பதும், அவன் அவன் வழியில் வந்த ஒருவனே அநபாயச் சே ழன் என்பதும் பெறப்படும்.
மநுவின் காலம் இராமனுக்கு முந்கி யது என்பதற்கு இராமாயணத்திலே சான் றுண்டு. விரிவஞ்சி இ க்கு விளக்கப்பட வில்லை. மநுநீதி கண்ட சோழனின் காலம் இலப்பதிகாரம் பாடப்பட்ட காலத்திற்கு முந்திய காலமாக, இராமனின் காலத்திற் குப் பிந்திய காலமாக, இரண்டுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என் பதும், அதபாய சோழனின் காலம் கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பட்ட காலம் என்பதும் தெளிவாகின்றது.
எனவே மநு, மநுநீதிகண்ட சோழன் அநபாயச் சோழன் ஆகியோர் சூரியகுலத் துதித்த மூன்று வேந்தர்கள் என்பதும், மநு வடநாட்டு இராமரின் மூதாதையர்களில் ஒருவன் என்பதும், மநுநீதிகண்ட சோழன் அநபாயச் சோழன் ஆகியோர் தமிழ்நாட் டுச் சோழபரம்பரையில் வந்தவர்கள் என்
பதும் பெறப்படும்.
குறிப்பு- மநு என்னும் பெயரை மனு என்றும் எழுதுகின்றனர். பெரிய புராணத்திலேயே மனு என்றும் எழுதும் வழக்கம் உண்டு.
உசாத்துணை நூல்கள்:-
பெரிய புராணம்:- திரு. வி. க. உரை பெரிய புராணம். திரு. சி. கே. சுப்பிர
- -மணிய முதலியார் சிலப்பதிகாரம்:- மணிமேகலை :- பெரியபுராணம் ஒர் ஆய்வு:- பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
... 3

Page 35
அண்ணல் எ
- கே. எம்
கவிவாணர் உலகினிலே தனி கீர்த்தி பெறும் பெருங்க புவிமீதில் ஹயாத்தும்மா ஈ: பாங்கான கவியரசே அ
வங்காள கடலலையின் ஒசை வரிசைமிகு கிண்ணியாவி பாங்கான பிதாவாம் முகம்
பக்குவமாய்க் கவிக்குயிை
பயிற்சி பெற்ற, ஆசிரியராய்
பள்ளிகளில் தமிழ் மழை
வயிற்றுக்கு உணவில்லா ஏழ் வாடாத பாமாலை புன
மஹஈ கவியின் கவிதையிலே மனக்கறையைப் Gusté மஹாத்மாவின் நெறிகளிலே
மனித இன விழுமியத்ை
கவிதையிலே உணர்வுகளைத் "காதலுக்கோர் அண்ண புவிமீது உடல்சாயும் நாள்ள பைந்தமிழின் நிலை உ
மண்ணகத்தின் இருளகற்றி
முழுநிலவின் பேரழகைக்
கண்ணில்லா குருடருமே ப காசினியில் செழித்தொா
மதம்மீது பற்றுள்ள அண்ை மதவெறியை தம் கவிய
இதமுடனே தம்மண்ணைப்
இழிவாக பிறர் பதியை
மலையினிலே சுரந்து வரும் மனத்தினிலே கற்பனை சிலையினிலே கலைவண்ணம் சிந்தனைகள் அவர் கவி

னும் கவிஞன்
. இக்பால் -
ஒளியாய் வியே எங்கள் அண்ணல் ன்றெடுத்த
ண்ணல் சாலிஹ்
கேட்கும் ல் அவதரித்தார் மது சுல்தான் ல வளர்த்தெடுத்தார்
பதவி பேற்று pயைப் பெய்து நின்றார் மையிலும் மணந்து நின்றார்
வாஞ்சை கொண்டு குகின்ற கவிபடைத்தார்
காதல் கொண்டு தப் பாடி நின்றார்
தூண்டி நின்று ல்’ எனும் நாமம் பெற்றார் பரையும்
பர்த்தப் பாடுபட்டார் .
ஒளியைப் பாய்ச்சும்
கவியில் தேக்கி
ார்வை பெற்று
பகப் பாடிநின்றார்
ால் சாலிஹ்
பில் கலக்கவில்லை
புகழ்ந்த போதும்
ச் சாடவில்லை
ஊற்றைப் போல கள் ஊற்றெடுக்கும் தெரிவது போல் யில் தேங்கி நிற்கும்
புது ஊற்று

Page 36
கல்வி மூலம் ‘சமாதானப் ப
- g. 6T6). M. A. (Ed.) E
விழுமியங்களின் முதல் பாடம் சமா தான மனப்பாங்குகளின் அறிமுகமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தர்க்க ரீதியாகப் பார்க்கும்போது இது குடும்பத்தின் பொறுப்பாக இருக்க வேண் டும். ஆனால் பெற்றாரின் இயலாமை காரணமாக இப்பாரிய பொறுப்பு ஆசிரிய ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவருக்கும் சமுதாயத்துக்கும் இடையி லான பிணைப்பின் அத்திவாரம் சமாதான மனப்பாங்கிலேயே தங்கியுள்ளது.
*உயர் விழுமியங்கள் மங்கி மறைந்து கொண்டு செல்லும் - குழப்பமும், கெடு பிடியும் நிறைந்த - இவ்வுலகில், சந்தேக மின்றி கல்வி மட்டுமே படிப்படியாக ஆன் மீக ஒழுக்க விழுமியங்களை வளர்த்து நிகழ்கால எதிர்கால அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க எமக்கு உதவியாக அமையக் கூடியது எனலாம்" என 1994இல் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச கல்வி மகாநாட்டின் தவிசாளர்
இவான் பிலிப் கூறினார்.
நூற்றாண்டுகளாகவும், ஆயிரமாண்டு களாகவும் பழைமை வாய்ந்த எமது பண் பாட்டு மரபுகள் கூறும் விழுமியங்களும், மனப்பாங்குகளும் காலத்தின் கோலத் தினால் பழுது பட்டு காலாவதியாகிவிட வில்லை. நவீன சூழலில் அவற்றை மீள மைப்புச் செய்து உயிர்ப்பிக்க முடியும். கெளரவம், பிறரை மதித்தல், அஹிம் சை, குடியுரிமை, உண்மை, பொறுப்புணர்வு,
புது ஊற்று

GoofurtG' (CULTURE OF PEACE)
அலியார் -
MS (Sydney)
பங்கேற்றல், ஒற்றுமை, நல்லிணக்கம், நீதி என்பன அவ்வப்போது செயலிழந்துகானப் பட்ட போதிலும் அவை காலங்காலமாக போற்றப்பட்டு வந்த விழுமியங்களாகும். 1939க்கும் 1945க்குமிடையில் (2ம் உலகப் போர்) 5 கோடி மக்கள் கொல்லப்பட்ட
போதும் விழுமியங்கள் செயலிழந்திருந்தன
உலக சமாதானத்துக்கான அச்சுறுத் தல்களும், தடைகளும் ஆயுதப் போரினால் மட்டும் ஏற்படுவதில்லை. மனிதனைச் சிறுமைப்படுத்தும் போக்கு - பலவந்த உழைப்பு, பலவந்த விபசாரம், ஆட்கடத் தல், சிறுவர் உழைப்பு, சிறுவர் பாலியல் துஷ் பிரயோகம், போரில் சிறுவரை ஈடு படுத்தல் ஆகிய நவீன அடிமைத்துவ அம் சங்கள் இந்நிலைமைக்குக் காரணங்களிா கும். விழுமியங்களின் சிதைவு, சர்வதேச புரிந்துணர்வுக்கான கல்விப்பரப்பில் எடுக் கப்படும் முயற்சிகளுக்குச் சவால்களாக அமைந்துள்ளன.
யுனஸ்கோ பணிப்பாளர் நாயகக் "ெ டறிகோ மேயர், மனித குலத்தின் அறிவு ரீதியான ஒழுக்க ஒருமைப்பாட்டின் தேவையையும், சகலருக்கும் கல்வி என்ற கோட்பாட்டையும் வலியுறுத்தினர். இதன் படி உலகளாவிய லிழுமியங்கள் அனைத் தையும் கற்றற் செயற்பாட்டின் சக ல மட்டங்களிலும் வழங்கக்கூடிய வகையில் பாட விதானத்தில் அவை பிரதிபலிக்க வேண்டும் என பட்டது. ‘நாம் எமது முழு மையான மரபுரிமையை அதாவது ஆன்மீக
33

Page 37
ஒழுக்க மரபுரிமைகளைக் கட்டாயம் பாது காக்க வேண்டும்."
உண்மையான சமாதானப் பண் Lu TL (60) l - (Culture of Peace) 65 L "liq-GN Lu(uplo பும் முன் நிபந்தனையாக பொருளாதாரம் சமூக அபிவிருத்தி என்பவற்றைக் கவனத் திற்கொண்டு சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை உயிர் பெறச் செய்ய வேண்டும்,
**சகல மனிதரும் சுதந்திரமாகவும், அந்தஸ்திலும், உரிமையிலும் சமத்துவ மாகவும் பிறக்கிறார்கள். அவர்கள் நியா யம் உணர்வு என்பனவற்றைக் கொண்டுள் ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சகோதரத்துவ உணர்வுடன் செயல்பட வேண்டும்.”*
சமாதானத்துக்கு புதிய அரசியல், பொருளாதார, சமூக, கலாசார சூழ்நிலை கள் பொதுவான தடைகளாக உள்ளன, வன்முறைகள், இதுவரை மக்களிடையே புரிந்துணர்வில் ஏற்பட்டுவந்த முன்னேற் றங்களை அழிப்பனவாக உள்ளன. இன்று சமுதாயத்தைப் பீடித்துள்ள பெரும் நோய் கr , இனம், கலாசாரம், சமயம், மொழி, பால் வேறுபாடுகளிலும், பொருளாதார அசமத்துவத்திலும் நன்கு வேர் பிடித்துள் சிTது.
முக்கியமான விடயம் பெற்றாரின் பொருளாதார நிலை. இது குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தையும் பிள்ளைகளின் கல்வியையும் வெகுவாகப் பாதிக்கின்றது. நவீன சூழலில் தலை கீழாக வாழுகின்ற குடும்ப அலகுகளிலதான் பிள்ளைகளும் வாழ்கிறார்கள். இங்குதான் வன்முறைகள் நிகழுகின்றன. வன்முறைகள் உடல் சார்ந்த தாகவோ, ஒழுக்கம் சார்ந்ததாகவோ, மனவெழுச்சி சார்ந்ததாகவோ நிகழுகின் றன. உடலிற் காயம் ஏற்படுத்தல் உள்ளத் தைப் புண்படுத்தல், குடும்பத்தால் ஒதுக் கப்படல் போன்ற கொடுமைகளால் உடல் ஆரோக்கியத்தை இழப்பது ஒரு தனிநப
ரின் உரிமைகளில் பாரமான தாக்கங்களை
ஏற்படுத்துகின்றன. இத்தகைய வன்முறை
34

கள் குடும்பத்தில் ஆரம்பித்தாலும் பின் பாடசாலைக்குள் பிரவேசித்து பின்னர் சுற்றாடல், கிராமம், பிரதேசம், நகரம் நாடு, உலகம் என விரிவடைகின்றது.
ஒரு பிரிவு மக்கள். தம் கலாசார தனித் துவத்துக்கு மித மிஞ்சிய அழுத்தம் கொடுக் கும்போது பொருளாதார, சமூக அசமத்துவ நிலைகள் தோன்றி வன்முறைக்குச் சாதக மான சூழலை ஏற்படுத்தி சமூகங்களுக்குள் பீதியைத் தோற்றுவிக்கின்றது.
1994 இல் கொப்பனேக்கனில் நடை பெற்ற அபிவிருத்தி பற்றிய ஐ. நா. உலக உச்சிமாநாட்டில் கல்வி - அபிவிருத்தி சமா தானம் என்ற தொடர்புக்கு முக்கிய கவ னம் செலுத்தப்பட்டு, மேலும் வன்முறை யின்றி பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பிள் ளைகள் இளமையிலிருந்தே இது பற்றிக் கற்பிக்கப்பட வேண்டும் என கருத்துக் கொள்ளப்பட்டது.
யுனிசெப் பணிப்பாளர் ஜேம்ஸ் கிராண்ட், " உலக சனத்தொகையில் 4 பங்கினர் எழுத்தறிவற்றவர்கள். இவர் களில் ; பங்கினர் பெண்கள். பாடசாலை செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளில் 130 மில். பிள்ளைகள் பாடசாலை செல்ல வில்லை. இவர்களிலும் * பங்கினர் பெண் கள் என்ற புள்ளி விபரங்களின் அடிப் பகடையில், சகலருக்கும் கல்வி, கல்வி வசதி யளித்தல் என்பன பரஸ்பர புரிந்துணர் வுக்கும் சகிப்புத்தன்மைக்குமான கல்வி என்ற வகையில் முதலாவது முன்னுரிமை யாக இருக்க வேண்டும்' எனக் கூறினார்
சர்வதேச கல்விக்கழகம் (IBE) மேற் கொண்ட கணிப்பீட்டின்படி 90% சதவீத பதில்கள் சமாதானத்தின் வித்து முதலில் கீழ் மட்டத்திலேயே விதைக்கப்பட வேண் டும் என்று வலியுறுத்தின. சர்வதேச சமா தானத்தை எவ்வாறு கல்வி மூலம் சகல மட்டங்களிலும் அடையலாம்? என்ற வினா அடிக்கடி முன் வைக்கப்பட்ட ஒன்றாகும். இதற்குத் தீர்வாக முதலில் ஆசிரியர் பயிற் சியும், கற்பித்தல் சாதனங்களை தயாரிப் தும் முன் வைக்கப்பட்டது. விழுமியங்களை
புது ஊற்று

Page 38
வழங்கும் கல்வி அதனை வழங்குபவரின் தரத்திலும் ஆற்றலிலும் அதிகஅளவு தங்கி யுள்ளது என்பது வெளிப்படை. பாட விட யத்தை எவ்வாறு கையளிக்க வேண்டும் என்பதில் பயிற்சி வழங்கப்படவேண்டும்.
இன்று பாடசான்லகள் முன்பைவிட அதிகம் சனநாயகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்வி முறையின் கீழ் 'நம்பிக்கைப் பொறுப்பும் பொறுப்பைப் பங்கேற்றலும்" என்ற உணர்வு நியமமான கல்வியை சமா தானத்துக்கான ஆய்வுகூடமாக மாற்றி யுள்ளது. மாணவர்கள் தம் பொறுப்புக் களை நிறைவேற்றுவதற்காக தாமே சட் டங்களை ஆக்கிக்கொள்கிறார்கள். தமக் குள் கலந்துரையாடி திட்டமிட்டு ஆக்கும் கூட்டங்களை ஏற்று மதித்தும் நடக்கி றார்கள். இத்தகைய பரிசோதனைகள் சுய கட்டுப்பாடு. சுய முகாமைத்துவம், பொது நலனை மதித்தல் ஆகிய பண்புகளை உரு வாக்குகின்றன. இதனால் அடக்கு முறை யில் மானவரை நடத்தும் ஆசிரியர்களின் நிழலுக்கே இங்கு இடமில்லை. அதிக சுதந்திரம் நிலவுவதால் அறிவு, திறன், மனப்பாங்கு, நடத்தை என்பன தூண்டப் படுகின்றன. இந்த நடைமுறையால் மாண வர் சிறந்த சனநாயகப் பயிற்சியைப் பெற முடிகிறது.
மாணவர் மத்தியில் ஆளுநர் சபை போன்ற அமைப்புகளுக்கான தேர்தல் நடை பெறுகிறது, இத் தேர்தல்களில் பங்கு கொள்வதோடு, தம் பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடுகிறார்கள். சாத்தியமான எதிர்கால பிரச்சளைகளைப் பற்றியும் சிந்திக்கிறார்கள். இத்தகைய சனநாயகப் பாடசாலையை விட்டு விலகும் போது, சமுதாயத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க சிறந்த மூன் பயிற்சியாக அமைகிறது. மேலும் இந்த நடைமுறை யால் மாணவரிடையே கட்டுப்பாட்டைப்
பேணும் சுமையிலிருந்து ஆசிரியர் ஆறுதல் பெறுகின்றனர்.
, கோஸ்டாறிகாவில் வருடாந்தம் பாட சாலையில் மாணவர் அரசாங்கம் தேர்ந் தெடுக்கப்படுகின்றன. தேர்தல் நடைமுறை
புது ஊற்று

கள் அனைத்தும் தேசிய தேர்தல் போன்று அமைந்துள்ளன. விவாதங்கள், தேர்தல் நீதிமன்ற ரகசிய வாக்கெடுப்பு என்பன பிள்ளைகளுக்கு சனநாயகப் பண்புகளைக் கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளன.
தகவலுக்கான கல்வி என்பதும் இன் றைய தேவையாக உள்ளது. அனைத்து வய நிலும், தரத்திலும் வாழுகின்ற மக்களுக்கும் தகவல் என்பது இன்றியமையாத இடத்தை வகிக்கின்றது. புதிய தொழில் நுட்பங்கள் மூலம் கிடைக்கின்ற கடல் போன்ற தகவல் களை பாகுபடுத்துவதும், வேறுபடுத்துவதும் விளங்கிக்கொள்வதும், மதிப்பிடுவதும் இன்று ஒரு கடினமான விடயமாகும். எனவே மக் கள் தேவையானதும் சரியானதுமான தக வல்களைப் பெற்றுக்கொள்ளவும் சொந்த அபிப்பிராயங்களை உருவாக்கவும் கற்பிக் கப்பட வேண்டியது அவசியமாகும் என உணரப்பட்டுள்ளது. சனநாயகப் பண்பு கள் வளர இது அவசியமாகும் எனவே பாடசாலைகளில் செய்திப் பத்திரிகை நிறுவி முகாமைத்துவம் செய்தல், அச்சகம் நிறுவல், விவரணப்படங்கள் தயாரித்தல் படங்களை நெறிப்படுத்தல் போன்றவை பிள்ளைகளுக்கு சனநாயகத்தைக் கற்பிப் பதற்கான சிறந்த வழிகள் என முன் வைக் கப்படுகின்றது.
மாணவர் தகவல்களை விளங்கிக் கொள்வதற்கு மட்டுமன்றி மனித உரிமைதகவல் பெறும் உரிமை - மனித நேயக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவற்றை மற்றவர் நலனுக்காக வெளியிடவும் கற் பிக்கப்படுகிறார்கள்.
சில நாடுகளில் மனித உரிமைகள், சமாதானம், சனநாயகம் அடிப்படைச் சுதந்திரம் ஆகியவற்றை கல்வி மூலம் கட்டியெழுப்பும் பணிகள் ஆசிரியரின் சுய விருப்புக்கு விடப்பட்டுள்ளது. அவர்கள் குடிமைக்கல்வி, சமயக்கல்வி, விளையாட்டு கல்விச்சுற்றுலா, புறப்பாடவிதான செயற் பாடுகள், பாடசாலைத் தொடர்புகள் என் பவற்றின் மூலம் அதனைச் செயல்படுத் துகிறார்கள். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகன் தொழிற் பயிற்சி நிறுவனங்கள், பல்கலைச்
35

Page 39
கழகங்களின் கல்வி, மானிடவியல் பீடங் கள் என்பவற்றில் மனித உரிமைகள் பற் றிய அம்சங்கள் அவர்களின் பாடவிதானத் தில் இடம்பெற்றுள்ளன. இன்று முறை சார்ந்த கல்வி நெறிகள் மூலம் மனித ரிடையே புரிந்துணர்வை உருவாக்கும் செயல்முறைகள் போதாதவை எனப் பொது வாக கூறப்படுகின்றது. இதனால் முறை சாராக் கல்வி முறையை இணைப்பதன் மூலம் சமாதானக் கல்வியை சமூக தாப னங்கள் அனைத்தும் விஸ்தரிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
தொழிற்சங்கங்கள் அரசியற் கட்சிகள் போன்றவை தம் உறுப்பினர்களுக்கு அடிப் படை சுதந்திரங்கள் பற்றி விளக்கங்களை வழங்கவேண்டும். வன்முறையற்ற தீர்வுகள பற்றிய ஒரு பயிற்சியை பொலிஸ் படை பினருக்கு வழங்கலாம். என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. எனெனில் அவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துப வர்கள், சில நாடுகளில் "சமாதானத்தின் பாதுகாவலர்கள்" என்றே அவர் க ள் அழைக்கப்படுகிறார்கள்.
சமயம் ஆதிக்கம் செலுத்து கின்ற நாடுகளில் ஒப்பீட்டுச் சமயம், மானிடவி யல், ஒழுக்கவியல் போன்ற துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படடு உலகின் பல சமயங்களிலும் காணப்படும் பொது வான கோட்பாடுகளைத் தொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, சம யப் பாடநூல்களில் வழங்கப்படும் சமயக் கருத்துக்கள், மனித உரிமைப் பிரகடனம் சிறுவர் உரிமை சாசனம் ஆகியவற்றின் வாசகங்கள் அடுத்தடுத்து வைக்கப் பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன, உதாரண மாக சகிப்புத்தன்மை என்ற வாசகத்தை அடுத்து மற்றவர் சமய நம்பிக்கைகளை அங்கீகரித்தல் என்ற விடயம் வைக்கப் படுகின்றது.
பல கலாசாரங்களைக் கொண்ட நாடு களில் மொழிக்கல்வி தேசிய ஒற்றுமைக் கான ஊடகமாகத் தொழிற்படுகின்றது. பொது மொழிக்கல்வி மூலம் 56) TF mr pT உறவுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. சில நாடுகளில் தாய்மொழியைப் பார்க்கிலும்
36

மற்றமொழிகளுக்கு முக்கியத்துவம் வழங் கும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. மற்ற மொழிகள் "அந்நிய மொழி என குறிப்பிடப்படாது ம் மொழி, 3ம் மொழி என அழைக்கப்படு கின்றன.
பிற மொழிகளைக் கற்பிக்கும்போது வெறுமனே இலக்கணம், சொற்களஞ்கியம் என்பன கற்பிக்கப்படுவதில்லை. பிற மொழி களிலுள்ள அல்லது பிற மொழி பேசு வோரின் கலாசார அம்சங்களை மாண வர் அறிந்துகொள்ளும் வகை யிலே யே மொழி பயன்படுத்தப்படுகின்றது, இலக்கி யம், நாகரீக வரலாறு என்பன பாட விடயங்களாக உள்ளன. இந்த நுட்பமுறை கலாசாரத் தடைகளை வெற்றி கொள்வ வதற்கும் ஒருவரின் கலாசாரப் பெரு மிதத்தை தணிப்பதற்கும் உத வியாக அமைகிறது மாணவர் ஆரம்ப வகுப்புகளி லிருந்தே 2ம் மொழி கற்பிக்கப்படுகிறார்கள்.
பின்லாந்திலும் சுவீடனிலும் கூட்டு மொழிப் பாடசாலைகள் திட்டம் 1987 இலிருந்து நடைமுறையில் உள்ளது. நட்பு, பரஸ்பரம் கலாசார சாதனைகளை மதித் தல், சுற்றாடல் விடயங்களில் பொது வான பொறுப்புணர்வு என்பவற்றைப் பயன்படுத்துவதற்கு இந்த இருமொழிக் கோட்பாடு பயன்படுகிறது.
இலங்கையில் மும்மொழிப் போத னைத் திட்டம் நடைமுறையில் உள்ளது. சிங்கள மாணவர்க்கு தமிழும், தமிழ் மான வர்க்கு சிங்களமும் இருவருக்கும் பொது வாக ஆங்கிலமும் கற்பிக்கப்படுகின்றது, அது சர்வதேச மொழி என்றும், இணைப்பு மொழி என்றும் அவ்வப்போது அழைக்கப் படுகின்றது. எதிர்காலத்தில் ஆண்டு ஒன்றி லிருந்தே தாய்மொழியுடன் மற்ற வர் மொழிகளையும் கற்கும் வாய்ப்பு மாண வர்க்கு வழங்கப்படவுள்ளது. இத்தகைய மொழிக் கற்கைச் செயற்பாடுகள் மூலம் இன, மத, கலாசார வேறுபாடுகளின் வக் கிரத் தன்மை நீங்கி இன ஐக்கியம், சமா தானம், புரிந்துணர்வு என்பன உருவாகும். என எதிர்பார்க்கப்படுகின்றது.
புது ஊற்று

Page 40
மாணவர்கள் ஏன் பி (TUTION) Gì
- செல்வன். கு.
பொதுவாக இலங்கை முழுவதிலும் மாணவர்கள் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 13 வரை பிரத்தியேக வகுப்புக்கு செல்கின் றனர். பெற்றார்களும் பெரும் பண ம் செலவு செய்கின்றனர். பாடசாலைக்கல்வி தோற்றுவிட்டதா? இது பாடசாலைக்கும் அரசாங்கத்திற்கும் சவால் விடக்கூடிய அள வுக்கு ஒரு நிழல்கல்வி முறையாக இணை யான சக்தியாக உருவெடுத்துள்ளது. பிரத் தியேகக்கல்வி செல்வது காரணமாக பின் வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. பாட சாலைகளில் பெருந்தொகையான அலகுகள் முடிபடாமை; சில பாடங்களுக்கு ஆசிரியர் கள் கற்பித்தல் விளங்காமை என் பன போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன,
இதனைப்பற்றி நாடளாவியரீதியில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, எனினும் பல்கலைக்கழகம் தெளிவான மாணவ மாண விகளிலிருந்து சில தகவல்கள் பெற்று அவர் கள் ஏன் பிரத்தியேகக் கல்விக்கு சென்றார் கள் என்பதிலிருந்து சில முடிவுகளை பெற லாம் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சிறிய அளவிலான ஆய்வு இது வா கும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 30 பேர் கள் விடையளித்தோர் 27 பேர்.
ஆண்கள்: 19
பெண்கள்; 08 கல்முனையை சார்ந்தவர்கள் : 25 மட்டக்களப்பை சார்ந்தவர்கள் t 02
புது ஊற்று

ரத்தியேக வகுப்புக்கு
சல்கின்றனர்?
பார்த்தீபன் -
கிராமபுறப்பாடசாலையில் கல்வி
கற்றவர்கள், 6
தகர்ப்புறப் பாடசாலையில் கல்வி
கற்றவர்கள்: 21
மேலும் பின்வரும் புள்ளி விபரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாதிரிகள் தெரிவு செய்த பாடத்துறைகளை விளக்குகின்றன.
பொறியியல் O7 பொறியியல் 11 65 மருத்துவம் 05 பல் மருத்துவம் 03 மிருக வைத்தியம் 0ዷ
உயிரியல் விஞ்ஞானம். 04 பெளதீகவிஞ்ஞானம்; 01
விளாக்கொத்தில் கேட்கப்பட்ட விபரங்கள்
மாணவர்களின் பொது விபரம், ஆசிரி யர்கள் குறிப்பிட்ட பாடசாலைகளில் இருந் தனரா? பரீட்சை காலங்கள், சந்தர்ப்பங் கள், மாணவர்களுக்கு வழங்கிய ஒப்படை கள், செயற்திட்டங்கள் மாணவரின் வீட் டுச்சூழல், பெற்றாரின் வருமான மட்டம். மாணவன் பிரத்தியேகக்கல்விக்கு செல வளித்த காலம் பிரத்தியேகக் கல்விபற்றிய
பரீட்சைகள்,

Page 41
முக்கியமான வினா:ொக மாணவர் தத்தம் பரீட்சைப்பெறுபேற்றின் முக்கிய காரணிகள் யாவை என முன்னுரிமை அடிப்படையில் கேட்கப்பட்டது.
இந்த ஆய்வின்மூலம் கிடைத்த தகவல்
பொதுவாக பாடசாலைகளில் பெரும் பாலும் எல்லாப்பாடங்களுக்கும் ஆசிரிiர் கள் இருந்தனர். அவர் கன் தங்கள் அலகு க்ளை முடித்தும் உள்ளனர். அவர் க ள் பரீட்சைகளையும் ஒழுங்காக நடாத்தியுள் ளனர். மாணவர்களுக்கு ஒப்படைகள், செயற்திட்டங்கள், அறிவு று த் த ல் கள் போன்றவற்றை அவ்வப்போது வழங்கி யுள்ளனா .
பிரத்தியேகக் கல்வி பற்றியும் அக் கல்விக்கும் பரீட்சைக்கும் நேர டி த் தொடர்பு இருந்ததா என்பது பற்றி அறி யும் நோக்கில் வினாவப்பட்டவினாவுக்கு விடையளித்த 23 பேரும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், டெற்றாருக் க முதன்மை இடத்தை அளித்துள்ளனர். பிரத்தியேகக்கல்விக்கு 5/6 ஆம் இடத் தையே வழங்கியுள்ளனர் 2 தேசிய பாபூ சாலைகளைச் சார்ந்த மாணவிகள் மாத்தி ரமே பிரத்தியேக கல்விக்கு (P356Ö 63'LDu ளிக்கும் வேளையில் 90% மானோர் பாட சாலைக் கல்வி க் கே முதன்மையளித் துள்ளனர்.
தகவல்களின் பகுப்பாய்வு
மேற்கூறிய தகவல்களை பகுப்பாய்வு செய்வதன்மூலம் நாம் அறிந்துகொள்வது மாணவர்கள் பொதுவாக பிரத்திச்யகக் கல்விக்கு அதி கூடிய முக்கியத்துவம் அளிக் கவில்லை என்பதாகு: அகாவது அவர் களின் பரீட்சைப் பெறுபேற்றிற்கும் பிரத் யேகக் கல் விக்கும் நேரடித்தொடர்பு இல்லை என்பதாகும்.
அப்படியானால் ஏன் பிரத்தியேக வகுப்புக்கு செல்கின்றனர் எ ல் லோ ரு ம் செல்லும் காரணத்தால் ஆவல், அங்க லாய்பு, தன்நம்பிக்கை இன்மை காரண
38

மாக பிரத்தியேக வகுப்புக்கு செல்கி றார்கள் எனலாம் அல்லது தமது சகபாடி கள் இவ் வகுப்பிற்கு செல்வதால் தாமும் ஈர்க்கப்பட்டு செல்லலாம்.
எது எவ்வாறாயினும் பிரத்தியேக வகுப்புகள் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் அதி முக்கியம் வாய்ந்ததாக தென்பட் டாலும் பின் பாடசாலைக்கல்வியின் முக் கியத்துவத்தை உணர்த்துகிறார்கள் என்ப தாகும்.
குறைபாடுகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர் களுக்கு கொடுக் கப்பட்டது. மூவர் விடையளிக்சவில்லை. பிரத்தியேக வகுப் பிற்கு அவர்கள் ஏன் சென்றார்கள் என் பது பற்றிய வினாக்கள் கொடுக்கப்பட வில்லை. இது பின்னரே புலப் பட்டது. மேலும் பெற்றார் பிரத்தியேகவகுப்பு, ஆசிரியர்கள் போன்றோருக்கும் 6ílaormái கொத்து வழங்கப்பட்டால் மேலும் விளக் கங்கள் பெற்றிருக்கலாம்,
முடிவுரை
மாணவர்கள் ஏன் பிரத்தியேக வகுப் புக்கு செல்கிறார்கள் என்பது ஒர் பிரச்ச னைக்குரிய வினாவாகும். உளவியல் ரீதியாக இலவசமாகக் கிடைக்கும் எதனையும் மக் கள் பொருட்படுத்தவில்லையா. பாடசா லைக் கல்வியைவிட பிரத்தியேக வகுப்பு கல்வி நன்கு திட்டமிட்டபடி நடைபெறு இன்றதா? என்பது பற்றி மேலும் விளக்கங் கள் தேவை. அடுத்கதாக பிரத்தியேக வகுப் பசளில் அதிகம் பரீட்சைக , ஆசிரி யர் வற்புறுத்ததல்கள் இல்லாமையும் மாண வர்கள் தம்மை சுதாகரித்து கொள்வதற்கு உளவியல் காரணியாக அமைகின்றதா என்பதை நாம் ஆராயவேண்டியுள்ளது.
முடிவாக இவ்வாய்வின்படி 30 பேர் கொண்ட மாதிரியில் 27 பேர் வினாக் கொத்தை பூரணப்படுத்திய அதேவேளை யில் 3 பேரை தவிர 24 பேர் அதாவது 80% மானோர் பிரத்தியேகக்கல்விக்கு
புது ஊற்று

Page 42
அதிகூடிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இலங்கைமுழுவதிலும் பொதுவாக பிரத்தி யேகக்கல்வி ஒர் கலாச்சாரமாக, ஒர் கெளரவமாக அமைந்துவிட்டது. அதற் கான காரணிகளும் ஆராயப்படவேண்டிய தொன்றாகும்.
பிரத்தியேகக்கல்வி குறித்து சில பெரியார் களின் கருத்துகள்
டியுசன் முறை இலவசக் கல்வித்திட் டத்திற்குப் பெருந்தக்கூடியதல்ல; மாண வர்கள் தமது ஆசிரியர்களை மதிக்க தவறி விடுகின்றனர்.
பேராசிரியர். கே. தர்மசேன களனிப் பல்கலைக் கழகம்
புது ஊற்று

தற்போதைய பரீட்சைமுறை மிகக்கடு மையான போட்டி இயல்பினைக் கொண்ட தாக இருந்து வருகின்றது, இ த னா ல் பெற்றோர் தமது பிள்ளைகளை தனியார் கல்விமுறைக்கு அனுப்புவதற்கு நிர்ப்பந்திக் கப்படுகிறார்கள்.
G_grm Síflurf g. sráð. 11lífsiv
பிரத்தியேக வகுப்புக்களை தூற்று வதை விட்டு விட்டு தனியார் வகுப்பு களுக்குப் பதிலாக மாற்று முறைகளை முன்வைக்க வேண்டும். இவ்வகுப்புக்களால் பிள்ளைகள் நாள் முழுவதும் படிப்பதற்கு நிர்பந்திக்கபடுகிறார்கள்.
எச். எம், சிரிசேன கல்விப்பணிப்பாளர், மேல் மாகாணம்
ஆக்கம்:
செல்வன். கு. பார்த்தீபன் ஆண்டு 13 உயிரியல்பிரிவு கார்மேல் பாத்திமா தேசியகல்லூரி assivgripesar.
39

Page 43
குருத்!
-வல்வை. ந.
"ஹாய் . .திவா y
யாழ்ப்பாணத்தின் இந்துப் பாரம்பரி யத்தை நிலை நாட்டும் ஒரு சின்னமாக அந்தக் கல்லூரி விளங்கிக்கொண்டிருந்தது, அந்தக் கல்லூரியின் அருகே இருந்த விளை யாட்டு மைதானத்தில் சுவர் ஒரமாக ஓங்கி வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் கீழ் இருந்த என்னை நோக்கி வந்து கொண்டிருந்த சுதாகரனின் குரல் என்னைத் திடுக்கிட வைத்தது.
"டேய் epGS356 - ஏனடா இப்பிடிக் கழுதை மாதிரிக் கத்திக் கொண்டு
வாறாய்
எனக்குள் எழுந்த எரிச்சலை வார்த் தைகளால் கொட்டித் தீர்த்துக் கொண்டி ருந்தேன். s
"'என்ன மச்சான் . ? இப்பிடிக் கொதிக்கிறாய் ?
இண்டைக்குத்தானை எங்கட சோத னைக்கு விண்ணப்பம் முடிவுத் திகதி " ,
எதை நினைத்துத் தனக்குள் இருந்து குமுறிக் கொண்டிருந்தானோ, அந்தச் சம் பவத்தை நினைவூட்டியதும் அவனுடைய இதயம் ஒரு தடவை குலுங்கியது.
ஆம் எச். எஸ். சி பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் ஐம்பது ரூபா முத்திரை ஒட்டிக் கையெழுத்து வைக்க வேண்டும்
40

துவம்
அனந்தராஜ் -
**Gւ- սն 5)am grsia l-n sl. பிடியே மலைச்சுப் நிற்கிறாய் . ஒ , கூடப் படிச்சதாலை மண்டையெல்லாம் கலங்கிப் போச்சுது போல @ 發
"நீ போய்க் கையெழுத்தை வை ந7 ன் இன்னும் கொஞ்சத்தாலைவாறன்
ஆம், ஐம்பது ரூபா என்றால் சும்மா என்னுடைய குடும்ப வறுமையும் சூழலும் என்னை மேலும் படிக்கக் கூடிய வாய்ப்பைத் தருமா? என்பதை நினைக் கும் பொழுதே அச்சமாக இருந்தது
அந்த மரத்தின் கீழ் இருந்தபடியே வானளாவ உயர்ந்து நிற்கும் எங்கள் கல்லூரியின் கட்டிடங்களைப் பார்த்துக் ல்ொண்டிருந்த என்னுடைய உள்ளத்தில் எழுந்த மன நிறைவும் ஒரு அர்த்தமுள்ளது போல் தான் இருந்தது.
ஒருவருடைய அருமையையும், நடத் தையையும் தீர்மானிப்பதில் அவன் கற்ற கல்லூரியின் பங்கும் அவன் வாழும் சூழ
களுடைய ஆசிரியர் சொல்லிக் கொள்வார். அந்தத் தத்துவார்த்தம், எவ்வளவு யதார்த் தமானது?
அந்தக் கல்லூரி எனக்கு ஒரு பல்க லைக்கழகம்தான். ஆம் அன்று அன்னிய ஏகாதிபத்திய வாதிகளின் ஆக் கிரமிப்பின் கீழ் யாழ்ப்பாணம் இருந்த வேளையில், அவர்கள் எங்களுடைய மண்ணை மட்டுமா சிதைத்தவர்கள?
புது ஊற்று

Page 44
காலங் காலமாக எமது மக்களிடைவே இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள்
சிதைக்கப்பட்டன...!
இந்து ஆலயங்களும், இந்தப் பாரம் பரியங்களும் அல்லவா சிதைக்கப்பட்டன . அதற்கும் மேலாகத் தமிழருக்கு ஆங்கிலக் கல்வியை வழங்குதல் என்ற போர்வையில் 'மதமாற்றம்" சாதாரண மாகவே மேற்கொள்ளப்பட்டன. கிறிஸ்த வத்தைத் தழுவியவர்களுக்கே அரச உயர் பதவிகள் வழங்கப்படும் என்ற பிரித்தானி பரின் கொள்கையினால் கவர்ந்திழுக்கப் பட்ட எத்தனை பேர் கிறிஸ்தவர்களாக மாறியிருந்தனர். இவையெல்லாம், அன்று அன்னிய ஆட்சியாளரின் கீழ் தொடர்ச்சி யாக அமைதியுடன் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் தான் யாழ்ப்பாணத்தின் இந் துப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை நிலை தாட்டி, அன்னிய ஏகாதிபத்திய முற்று கைக்குச் சாவு மணி அடித்த அந்தக் கல் லூரியை நிமிர்ந்து பார்த்ததும் எனது உள் ளம் பெருமிதத்தால், குதூகலித்தது.
அத்தகைய வரலாற்றுப் புகழ் பெற்ற கல்லூரிக்குத் தற்செயலாக வந்து சேர்ந்த என்னால், அந்தக் கல்லூரியின் பாரம்பரி யத்துக்கேற்ப நின்று பிடிக்கமுடியவில்லை என்று நினைக்க கவலையாக வந்தது !
பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்ற படியால் எச். எஸ். சி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் எல்லோரும் கலகலப்பாக அங்குமிங்குமாக ஓடிக்கொண்டு திரிந்தனர் ஒவ்வொருவரும் ஐம்பது ரூபா முத்தி ரையும் கையில் வைத்துக்கொண்டு, கை யெழுத்துக்களை வைப்பதற்காக முண்டி படித்துக்கொண்டு நின்றனர்.
"சேக். நான் ஏன் என்ரை அம்மா வின்ரை வயிற்றிலை பிறந்தனோ? ஒன் டுக்கும் வழியில்லாதவனாய் இருக்கிறதை விட ."
என்னை நானே வெறுத்துக்கொள் வதை தவிர, வேறு எதைத்தான் செய்ய முடியும்.?
புது ஊற்று

நேற்றுக் கூட ஒரு பென்சில் வாங்கு வதற்கு ஐம்பது சதம் கேட்குது, வெறும் குட்டானைத் தூக்கிக் காட்டிய அம்மா விடம் போய் இன்றைக்கு ஐம்பது ரூபாளை எப்படிக் கேட்பது.?
என்னுடைய அம்மாவோ நிழலுக்கு கூடபள்ளிக்கூடத்திலை ஒதுங்காதவர் எழுத்து வாசனையே மருந்துக்குக் கூட அவளிடம் காணமுடியாது. ஆனால், தன் னுடைய முதிர்ந்த அனுபவத்தாலேயே தன்னை வளர்த்துப் பெரிய மனுசியாக ஊருக்கே இன்று அவர் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறதை நினைத் துப் பார்க்க எனக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கும்.
நான் இண்டைக்கு இவ்வளவு படிப்பு படிச்சதே அவவைப் பொறுத்த வரையில் பெரிய படிப்பாகத் நினைக்கிறா.
இந்த நிலையில் போய் சோதனைக்கு ஐம்பது ரூபா தா என்று கேட்டால், அந்த மனுசியின் மனம் எவ்வளவு பாடுபடும்?
*சரி . சரி உன் ர படிப்பை இத் தோடை நிற்பாட்டு ' என்று சொல்வி விட்டால், அதற்குப் பிறகு என்ர எதிர் காலம் எப்பிடிப் போகும்? அதை நினைத் துப் பார்க்கவே பயமாக இருந்தது.
'டேய் திவா! எல்லோரும் முத் திரை ஒட்டிக் கையெழுத்து வைத்து விட் டாங்கள் நீ தான் இன்னும் கையெழுத்து வைக்கவில்லை. '
கல்லூரியின் அலுவலகத் தி b குச் சென்று, விண்ணப்பப் படிவத்தில் கை யொப்பத்தை வைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சுதாகரன், உரத்துச் சத்த மிட்டபடியே என்னை நோக்கி வந்தான். "சுதா நான் இந்த முறை சோதனை எடுக்கேல்லை.
என்னைத் தொந்தரவு செய்யாதை ". என்னட்டைக் காசில்லை ولانا(ga
எனக்குள் எழுந்த துயரத்தை அடக் கிக் கொண்டே, மெதுவாக அந்த இடத் தில் இருந்தும் எழும்பினேன்.
4.

Page 45
““Cù திவா" . என்னடா". . என்ன சொல்கிறாய்?
உனக்கு என்ன விசள் பிடிச்சிட்டுதே இவ்வளவு கெட்டிக்காரனாப் படிச்சுக் கொண்டிருக்கிறாய் . அதுவும் எல்லா ஆசிரியர்மாரிட்டையும் நல்ல பெயரைப் பெற்றுவிட்டு சோதனை எடுக்கவில்லை என்று சொல்லுறாய் , !
என்னுடைய அந்த பதிலைக் கேட்ட தும், சுதாகரன் அதிர்த்து போய் நின்ற தைக்காண எனக்கு இன்னும் துயரம் பெருக் கெடுத்தது . எனது கண்களை நீர்த் திவலைகள் மறைத்துக் கொண்டிருந்தன. அவன் ஆச்சரியத்தால் என்னுடைய தோள் களைப் பிடித்து உலுப்பினான்.
"சுதா. என்ரை நிலைமை உனக்கும் தெரியும் தானை
உன்னாலையும் இதிலை,உதவி செய்ய முடியாது என்றதும் எனக்குத் தெரியும். . . பரவாயில்லை ஒரு வருடம் தானை அடுத்தமுறை இன்னும் நல்லாச் செய்ய லாம். .'"
என்னுடைய கண்களில் இருந்தும் கண்ணிர் முட்டிக்கொண்டு வந்தது,
"டேய் , மூதேவி . திவாகரன் TerrorLT ? இங்கை வந்து நிற்கிறாய்? . உன்னை எங்கையெல்லாம் ஆள்விட்டுத்
தேடுறது . ?"
எங்களுடைய அந்தச் சொற்ப நேர மெளனத்தையே குலைத்து விடுவது போல், எழுந்த அந்தக் குரல், எங்களை ஒரு கணம் நடுநடுங்க வைத்து விட்டது.
ஆம். நாங்கள் எல்லோருமே "பிஎஸ் என்று செல்லமாக அழைக்கின்ற சுவாமி நாதன் சேர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
'பிஎஸ்" சேர், என்றால் எங்கள் எல்லோருக்குமே தனி மரியாதையும் மதிப்பும் இருக்கும். V
அவர் வழமையாகவே எங்களைக் கண்டு, செல்லமாக ஏதாவது பேச வேண்டு
42

மென்றால் 'மூதேவி" என்ற சொல்லை அவரை அறியாமலேயே பயன்படுத்தி விடுவார்.
எங்களுக்கும் அவருடைய அந்தக்குரல் ஏதோ ஒரு இனிமையைக் கொடுப்பது போல் இருக்கும். அவருடைய வாயில் இருந்து வரும் போது, எங்களுக்கே அது ஒரு கூடாத சொல் போல் தெரிவதில்லை.
**டேய் மூதேவி ஏன் கையொப்பம் போட வரேல்லை?" எனக்கு அருகில் மீண்டும் அதட்டினார்.
**சேர் இந்த முறை நான் சோதனை எடுக்கவில்லை அடுத்த முறை எடுக்க போறன்’
கைகளைக் கட்டியபடி அவருக்கு முன் னால், கூனிக்குறுகியபடி நின்றேன். எனது சர்வாங்கமும் ஒரு கணம் ஒடுங்கிக் கொண் வந்தது. ر . :
* *Ꮳt ·ufl திவாகரன். உனக்கு என் னடா விசர் பிடிச்சிட்டுதோ?’ போடா போய்க் கையெழுத்து வை "
Gøri- என்னை மன்னிச்சுக் கொள் ளுங்கோ சேர் என்னட்டை காசில்ல. . இப்ப அம்மா இருக்கிற நிலையிலை அவ விட்டைப் போய்க் கேட்க ஏலாது."
எனக்கு அந்த இடத்தில் நின்று "ஓ வென்று’ கதறி அழ வேண்டும் போல்
இருந்தது.
டேய் . விசர்ப்பொடியன். உன்ரை பேருக்கு நேரே முத்திரை ஒட்டி வைத் திருக்கு என்ரை மேசையிலைதான் அந் தப் படிவங்கள் இருக்கு, போய்க் கையெ ழுத்து வைச்சிட்டு பேசாமல் வீட்டை Gunt..."
என்னுடைய பதிலுக்கு கூடக் காத்தி ருக்காது, அப்படியே திரும்பி நடக்கத் தொடங்கினார்’
அந்த மாமனிதனின் அடிச்சுவடுகளை, எங்கள் நீர் நிறைந்த விழிகள் தொட்டு வணங்கிக் கொண்டிருந்தன."
புது ஊற்று

Page 46
வழக்கொழிந்து செல்லும்
- திரு. க. ெ
திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குவது மூதூர். முன்னர் முத்துக் குளித்த இடமாதலால் முத்தூர் எனவும் மூதூர் எனவும் அழைக்கப்பட்டது. முத்தூரில் இருந்து ஐந்துமைல் தென்கிழக் காக அமைந்திருப்பது சம்பூர் என்னும் பழமையான பூர்வீகக் கிராமம். இங்கு வாழும் மக்கள் விவசாயத்தையே தமது தொழிலாகக் கொண்டவர்கள் அதிலும் நெற் செய்கையே முக்கியமானது.
இக் கிராமத்தையண்டி வயல்வெளி களும் தொன்னூறுக்கும் மேற்பட்ட சிறு குளங்களும் நிறைந்து காணப்படுகின்றன. ஊரின் நடுவே பெரிய வில்லுக்குளம். அத னுள் நிறைந்து காணப்படும் வெண்தாமரை யும் செந்தாமரையும் எழில் பரப்பும் செல் வங்களாக அமைந்துள்ளன. வில்லுக் குளத் தின் குளிர்ச்சியான தென்றல் காற்றிலே ஊரைக் காக்கும் தேவதையாக அமைந்து காணப்படுவது சம்பூர் பூரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்.
குளக்கோட்ட மன்னன் கொண்டு வந்த ஏழு குடி மக்கள்.
இக் கிராமம் குளக்கோட்ட மன்னனின் செல்வாக்கைப் பெற்றதென்பதை யாரும் அப்பகுதியிலிருந்து அறியாமல் இருக்க முடியாது. இந்த ஏழு குடி மக்களையும் திருக்கோண நாயருக்குப் பணிகள் செய் யவே குளக்கோட்டன் கொண்டு வந்தான் என்று வரலாறுகள் கூறுகின்றன. இந்த ஏழு குடி மக்களுக்கும் காரியப்பர் குடியி லிருந்து வரும் ஒருவரே தலைவராக இன் றும் இருந்து வருவதையும் காணலாம்.
புது ஊற்று

கிராமிய பாரம்பரியங்கள்
ஜயநாதன் -
கிராம தேவதை மடைகளும் வணக்க மூறை களும்
கிராமங்களில் நோய், பிணி, துன்பம் ஏற்படாது பாதுகாப்பதற்காக கிராம தேவதைகளை நிறுவி அத் தேவதைகளுக்கு ஒன்று விட்டு ஒரு வருடத்தில் பெரிய மடைகள் போட்டும் கோழிகள் நேந்தும் பலி கொடுத்தும் தமது கடமைகளைச் செய்து வருவதைக் காணலாம். தற்காலத் தில் இவை அருகி வருவதையும் காணக் கூடியதாக உள்ளது. அது மாத்திரமின்றி நெல் வயல்களில் பூச்சித் தாக்கங்கள் காணப்பட்டால் நாகதம் பிரானுக்குப்பூசை செய்து தீர்த்தம் கொண்டு வயலில் எறிந்து விடுவார்கள். இதுவும் ஒரு நம்பிக்கையே, தீர்த்தம் எறிந்தால் ஏழு நாட்களுக்கு வயலுக்கு செல்லக் கூடாது. அதன் பின் னரே வயலுக்குச் செல்வார்கள். நெல் கதிர்ப் பருவமாகப் பூக்கும் காலத்திலேயே இவ்வாறு தெய்வத்தின் வழியில் நின்று வாய் கட்டிப் பூசை செய்து தீர்த்தம், இளநீர்க் குரும்பையில் கொண்டு சென்று விசுறுவர். இந்த நம்பிக்கை வீண் போன தாக யாரும் கூறுவதில்லை; அப்படி நம் பிக்கை வீண் போயிருந்தால், முற்காலத் தில் ஈழத்திலிருந்து நெல்லுணவு வெளி நாடுகளுக்கு ஏற்றியிருக்கவும் முடியாது.
"ஈழத்து உணவும் காழகத்து ஆக்க மும்' என்று "பட்டினப் பாலை நூலில் கூறியிருக்கவும் முடியாது. பண்டமாற்று நடைபெற்றிருக்கவும் முடியாது என்பதை நாம் நாகரீக விஞஞான உலகிற்கு நவிலு தல் சாலப் பொருந்தும்.
43

Page 47
பத்தினி அம்மனுக்கு மடையும் பூசையும்
அரசு மரம் இந்து மதத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது என்பதை நிரு பிக்க எமது முன்னோர் பத்தினியம்மனுக்கு மடையெடுக்கும் மறைவான இடமாகவும், சூழ உள்ள பகுதிகள் மரச் சோலைகள் நடுவே சூலங்களை வைத்து வழிபட்ட காலங்களை இன்றும் நினைவுறுத்த வேண்டி யிருக்கின்றது. கடல்நீரை மொண்டு அதன் மேல் எண்ணெய் ஊற்றி தீபமேற்றி மடை வைத்துப் பூசைகள் நடைபெறும். இந்த நேரத்தில் கோழிப் பலிகளும் கொடுப்பார் கள், பின்னர் கிராமத்தில் அம்மைநோய் வராது தடுக்க அம்மனுக்கு குளிர்த்திப் பாடல்கள் பாடுவார்.
" மனங்குளிரப் பாடுகிறேன் தாயே குளிர்ந்தருள்வாய்' என்று அம்மனை வேண்டி மனமுருகப் பாடுகின்ற பொழுது பயபக்தி ஏற்படாமல் இருக்க முடியுமா? என்பது சிந்திக்கற்பாலது.
5 Tuu säTLDT ữ LD SOM L
நாயன்மாருக்கு மடைவைத்தல் என் பது எமது 63 நாயன்மார்களை குறிக்காது இது நெல்வயல் செய்பவர்கள் மழை இல்லை என்றால் நாயன்மாருக்குக் கயிறு நேந்து வைப்பார்கள் இவ்விதம் பக்தியுடன் கயிறு நேந்து மழையைக் கேட்க மழை பெய்யும். இந்த மழை பெய்சலும் நேந்து வைத்த கயிற்றுடன் ஏழு பேரை பூசாரி காட்டுக்கு அனுப்புவார். காட்டுக்குச் சென் றவர்கள் குழு எருமை மாடுகளைத் துரத் திப் பிடித்து வந்து ‘நாயன்மார் வைரம்" எனப்படும் மடை வைக்கும் இடத்தில் கட்டு வார்கள், பின் பூசகர் மாட்டின் ஒரு காதின் துண்டை வெட்டிப் பலி கொடுப்பதோடு பழம், பாக்கு, வெற்றிலையுடன் மடை யிட்டு வர்ண பகவானை மகிழ்விப்பதான ஒரு நம்பிக்கை இன்றும் கிராமியப் பாரம் பரிய வழிபாடுகளில் ஒன்றாக விளங்கு கின்றது. வன்னியத் தெய்வம்
Lul DTO), எருமைமாடு போன்ற வற்றை வளர்ப்பவர்கள் இந்தத் தெய்வத் திற்குப் பூசை செய்வார்கள். பொங்கு
44

கின்ற பானையால் ஒரு பானை நெல் எடுத்து அதனைக் குற்றி அதில் வருகின்ற அரிசியையே பாலமுது செய்வார்கள். இந்த நிகழ்வுகளில் பெண்கள் பங்கு பற்றுவ தில்லை. அவர்கள் நெல் குற்றுவதோ அமுது உண்பதோ குற்றமாகும்.வீட்டிற்கும் அமுது கொண்டு வரக்கூடாது. இத் தெய்வத்திற்கு பொங்குபவர்கள் யாருக்கும் சொல்லாது ஒரு குறிப்பிட்டவர்களுடன் பழம் தேங்காய் அரிசி நீர் அனைத்தையும் கொண்டு சென்று நடுக்காட்டில் பாலை மரம் ஒன்றின் கீழ் பந்தல் போட்டு மடையிட்டுப் பொங்கிய பானையை முக்காலியில் வைத்து பூசை செய்வார்கள். பானைக்குள் அகப்பை போடாமலும் பால் பொங்கி வழியாது பன்னை மரக் குழைகளால் நீரைத்தொட் டுத்தடவிப் பொங்கி முடிப்பார்கள். பொகி கிய பால் அமுது மணம் நிறைந்து காணப் படும். பூசை முடிந்து அமுது இலையில் வைத்துச் சாப்பிட்டதும் பன்னை மர இடுக்குகளுக்குள் இலைகளை மடித்து வைத்துவிடுவார்கள் தரையில்.வீசக்கூடாது இப்படியான பூசையைத் தெய்வம் ஏற்றுக் கொண்டால், தேனீக்கள் இவ்விடத்தில் நடமாடுவதைக் காணலாம். இவ்வாறான பாரம்பரிய வணக்கமுறைகள் காலத்தின் கோலங்களால் கரைந்து வழக்கொழிந்து போவதோடு புதியசந்ததியினர் அதனைக் கைக்கொள்ளாது போவதும் வருந்தக் கூடிய நிகழ்வுகளே.
கிராமிய விளையாட்டுக்கள்
கிளித்தட்டு, கிட்டியும் புள்ளும் பாண்டி சில்லுக்கோடு போன்றவையும் எல்லே எனப்படுகின்ற விளையாட்டுக்களும் கிரா மப்புற விளையாட்டுகளில் மிகச் சிறந்த சுதேச விளையாட்டுக்களாகும். அது மாத் திரமன்றி பூப்பறித்தல் எனப்படும் விளை யாட்டும் நல்ல இன்பத்தை அளிக்கச் கூடியது.
* பூப்பறிக்க வருகின்றோம் வருகி றோம். இந்த மாசத்தில்" இதனை ஒரு பகுதியார் சொல்லிக் கொண்டு கையில் கோத்தவாறு வர அடுத்த பக்கம் நிற்ப வர்கள். தமது குழுவுடன் கைகோத்தபடி
புது ஊற்று

Page 48
"என்ன பூவைப் பறிக்கிறீர் இந்த மாசத் தில்’ எனப் பாடிவர முதற் குழுவினர் தாம் இரகசியமாகப் பூப் பெயர் வைத்த ஒரு வரை எதிர்ப்பக்கத்தாருடன் நின்று இழுப் பதற்காக " "ரோசாப் பூவைக் கொண்டு பறிக்கிறோம் பறிக்கிறோம். இந்த மாசத் தில்' எனப் பாடி வர எதிர்த்தரப்பார் தாம் இரகசியமாகப் பூப் பெயர் வைத்த ஒருவரைக் கொண்டு இழுப்பார்கள். இவ் வாறு இழுப்பதற்கு முன் மல்லிகைப் பூவைக் கொண்டு பறிக்கிறோம் பறிக்கிறோம் இந்த மாசத்தில்"
எனப் பாடிவருவார்கள். இரு பகுதி யைச் சேர்ந்த அந்த இருவரும் நடுக்கோட்டு எல்லையில் நின்று யாரை யார் இழுக்கி றார்களோ அந்தப் பக்கம் அவர் சேர்த்து கொள்வார். அதன் பின் அவருக்கு வேறு பூப் பெயர் வைக்கப்படும். இவ்வாறான மகிழ்ச்சியும் ஆண்ணறிவும் ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுக்கள் முற்றாக எமது கிராமங்களை விட்டுச்
சென்றுள்ளமை பாரம்பரிய
செல்வங்களுக்கு ஏற்பட்ட
***sa
வடபுலத்து நல்யாழே எழுந்திரு வடபுலத்து நல்யாழே! நீரூற்றினுக்கு நி தங்கினை இலையொலியும் அருவி நீெ இசையின்றித் துயிலுதல் முறையாகுமா இசையமிழ்தத்தை உகுத்தனையே! நின் படர்ந்து, நின் நரம்புகளை ஒவ்வொன் திருக்கின்றனையா? வீரர் முகத்திலே டங்களிலிருந்து உவகைக்கண்ணீர்கலுழ லாகாதா? முன்னாளிலே, கலிடோனியா
லே, நீ மெளனஞ் சாதித்ததில்லையே அச்சத்தையும் பெருமிதத்தையும் அளவு ருகும் வண்ணம் காவலரும் காரிகை f வீரரது தீரச்செயலும் காரிகையாரது பாடற் பொருளாக அமைந்தன. நல்
ஆங்கிலத்தில்; வேட்ஸ் வேர்த்

பாரிய நஷ்டமென்றே நாம் கருதக்கூடிய தாக உள்ளது.
ஊஞ்சற் பாட்டு
சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி என்றால் ஊஞ்சல் கட்டி ஆடத் தொடங் குவர். எம் கிராமிய மக்கள் ஊஞ்சலில் ஏறினால் பாட வேண்டும். "காய்ஞ்சுண்டி" எனப்படும் சுனைச்செடியால் பூசுவார்கள் அது தாங்கமுடியாத கடி கடிக்கும், ஊஞ் சல் ஏறியதும்
"" தனதனதானின தான தனானினம்
தனனா தந்தோம் தனனானா' என்று
பாடத் தொடங்குவதையும் சந்தோஷமாக கேட்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு இன்னோரன்ன கிராமிய வழக்குகள் இன்று காணப்படா மையும் வழக் கொழிந்து சென்று கொண்டிருப்பதையும் பார்த்துக் கலங்காமல் சும்மா வெறுமனே இருப்பது எமக்கு உகந்ததாக இருக்க மாட்டாது என்பது எனது கூற்று.
ழலளிக்கும் இம்மரக்கிளைமீது நெடிது ரொலியும் இசையியம்ப, நின்னரம்புகள் ? முன்னாளிலே வீசுகின்ற காற்றிலே ாபாற் பொறாமையுற்ற பசுங்கொடி றாகக் கட்டிவிட்டமையினாலே பேசா புன்னகை தவழவும், அரிவையர் நாட் வும் நினது இனிய குரலினாலே பேச விலே, விழாக்கொண்டாடுவார் மத்தி ப. காதலையும் வெற்றியையும் பாடி படுத்தினையே. நினது இசை கேட்டு நல்லாரும் சூழ்ந்து நின்றனரன்றோ? ஒப்பற்ற கண்ணிணைகளுமே நினது யாழே துயிலொழிந் தெழுவாயாக.
தமிழில்: விபுலானந்த அடிகள்
புது ஊற்று
ors

Page 49
ஓ! மானுடனே! உன் ஜ6
- செல்வி. ரா
மண்ணதனில் ஐணித்தவுடன் மழலை மானுடத்துயரெலாம் துய்ப்பதற்கண்ே பெருங்குரலெடுத்தழும் பாலகனின் இ பெருந்தத்துவம் இதுவென்றே அறிந்: மரணவீடதனில் ஓலமிட்டு அலறுகின் மரணமது மனிதனுக்கு அளிப்பது ெ முதுமையை நோக்கியே மீண்டுமொரு மூடமானுடனே! விழாவெடுத்து மகி வாழ்விதுவோ வெறும் மாயை - வ வாசல்தோறும் வேதனை நிறை சான் ஜனனத்தின்போது மனிதா! நீ அழு மரணத்தின்போது கைகொட்டி நகை
ஒ. மானுடனே உன் ஜனனம் மகிழ்ச் பொன்னாலையம்பதி கிருஷ்ணனைே பொன்னாலே தொட்டிலளித்து பெற் பின்னோக்கி ஓர் கனம் சிந்தித்தேன் பிள்ளைப்பராயத்துப் பிறந்தநாள் வ வெறும்பகட்டில் கடந்துவிட்ட காலமி வெட்கத்தால், வேதனையால் என்ம குதப்பியின், இனிய குளிர்களியின் சு குவலயத்தில் வாடிநிற்குக் குழந்தைக பாணுக்கும் வெறும் தேநீருக்கும் வன வெதும்பி நிற்கும் பிஞ்சுகள்தான் கே போரின் அவலத்தால் தினம் தினமே ஊட்டமின்றி மடிகின்ற நம் உதிரங்
ஓ! மானுடனே உன் ஜனனம் மகிழ் குண்டுமாரியிலே சொந்தங்களைப் ப குடும்பமெலாம் சிதறுண்டு குழம்பிநி சமாதானப்பறவைதனை பெரும் சங் *சமர்’ தானென நிதமும் சன்னதம4 தாயகத்து மண்ணிலேயே அகதிகளா தாய்பெற்ற உடன் பிறப்புகளின் அ இத்தனையும் நித்தமும் கண்ணாரக் இன்னுமா . மானுடனே! உன்
46

னனம் மகிழ்ச்சிக்குரியதா?
தா முருகேசு -
ஏன் அழுகின்றது? - ஐயகோ ற வந்துதித்தேன் என்றன்றோ இன்னொலியில் பொதிந்து நிற்கும் திடுவீர் ற பேதைகளே! பரும் சாந்தியென்றே புரிந்திடுவீரி
அடி எடுத்துவைப்பதற்கா ழ்கின்றாய்! ரும்
;)Q} வதற்கும் ப்பதற்கும் பழகிவிடு
சிக்குரியதா? ப முந்தித்தவமிருந்தெனப் பெற்றதற்காய் றவரும் மகிழ்ந்தது ஒர்காலம்
ாஃரினை யானும் தை எண்ணியே னமும் துவள்கின்றதே
வையறியாது ள் தான் எத்தனை எத்தனை கயற்றே
ாடி கோடி!
களங்கே வன்னியிலே
ச்சிக்குரியதா?
றிகொடுத்தே கும் சோதரர்கள் எத்தனை! கிலியால் விலங்கிட்டே டுகின்றார் ஒர் புறம்
அல்லலுறும் - எம் வலக்குரலதுவும் கேட்கலையோ? கண்டபின்பும் ஜனனம் மகிழ்ச்சிக்குரியது!
புது ஊற்று

Page 50
வடக்கு - கிழ கல்வி, பண்பாட்டலுவல்கள், வி கல்வி வெளி
”ே மாணவர்களின்
"ே ஆசிரியர்கள்
"ே கல்
தேவைகளைப் பூர்த்த நூல்கள், ஆய்வுநூல்கள், என்பவற்றை வெளியிடுகின்ற
இவை தொடர்பான கல்லூரிகள், கல்வி அலுவல பல்கலைக்கழகங்கள், கலி முகவரியுடன் தொடர்பு கொ
செயல கல்வி, பண்பாட்டலுவல்கள், 6 வடக்கு -கிழக்
திருகோல்
D. ఇ* 0ܠܳܟ݂ܢܼ
ぶ
சி - EAS

க்கு மாகாண
ளையாட்டுத்துறை அமைச்சின் யீட்டுப் பிரிவு
flóT
வியியலாளர்களின்
தி செய்ய வாசிப்புத் துணை பண்டைய இலக்கியங்கள் 1臣l...
விபரங்களைப் பெற விரும்பும் Uகங்கள், "பொது நூலகங்கள், ல்வியியலாளர்கள் பின்வரும் ள்ளவும்.
ாளர், விளையாட்டுத்துறை அமைச்சு, கு மாகாணம்,
MԼTնÉնի ել) -
%
TPROWN CE
"تمي ==="