கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமர் 1981.05

Page 1
. .
விலங்குகள் நொறுங்குக!
சங்கத் தொட்டில் {ଳ
சிம்மாசனம்ாகிறது உலகரசியாய்த் தமிழ்த்தாய் 晏 உலாவரப் போகிறாள்
உல்கத் தமிழர்களே!
இதுரைக்கு வருக! தேரில் வந்த தாய் கைகளே உயர்த்தினாள் ாடு இரண்டிலும்
*ந்து பங்குகள்
-- LI ITGI-IL-ILJair LingT, L i'r பளபளப்பினலே ’。 கூசிக்கிடந்த
அறிஞர் கண் ரில் அன்னை கை விலங்குகள்
|-
--
மே 8
*
-
 
 
 
 

. .
 ݂ ݂ ݂ܓ݂ܪܶ
நற்றி வியர்வைத் |ளிகளின் ஒளியில்தான் மிழன்னை தனது விழிகளை மலர்த்துவாள்
லத்தில் உழைப்பவன் ரசாளும் போதுதான் ச்சயம் தமிழும் |ங்கு அரசாளுவாள் பூண்டைகள் GLITLLலங்குகள் நொறுங்கும் நாள் ன்னைத் தமிழுக்கு டுதலை விழா நாள்.
- இன்குலாப் . . .
நன்றி-வேள்வி

Page 2
சமர் 2. (யூலை-79ல் வெளிவந்த முற் போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினை களும், என்னும் கட்டுரையின் எதிரொலி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின் றது. சமுத்திரன் (கலாநிதி என். சண்முக G. p 5 S Got th) Lanka Guardian Gat) 15 1981-ல் 'ம்ார்க்சிய வாதிகள் எதிர் உருவ வாதிகள்" என்னும் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை விவாதத்தை புதிய நிலையில் பரவ லாக நகர்த்தியுள்ளது. "மார்க்ஸ் சிஸ்டு கள்" எனத்தம்மை நினைத்துக் கொள்ளும் பலவிமர்சகர்களும் தம் நிலை (ப்பாட்டை) யை வெளிப் படுத்திவருகின்றனர். இதுவும் ஒரு புதிய வரவேற்கத் தகுந்த சூழ லே. பலருடைய "போர்வைகள்? விலக்கப் படு கின்றன. உண்மைத் தோற்றங்கள் கண்டு கொள்ளப்படுகின்றன. றெஜிசிறிவார்த்தன என்னும் விமர்சகர் லங்கா கார்டியன்நவம் 1 - 80-ல் சமுத்திரனுக்கு பதில் தந்' திருந்தார். அதற்கான சமுத்திரனின் பதில் லங்கா கார்டியன் சஞ்சிகையில் மீண்டும் வெளிவந்திருந்தது. அதன் வடிவத்தை சமர்"க்காக தமிழில் தந்தவர் ம்ெள சித்திர லேகா.
சில்லி ‘புரட்சிக்கவி பப்பிளோ நெருடா * பற்றி அனூப்பபானி எழுதிய கட்டுரை (மிர்ரர் மார்ச் 81) யின் தமிழ் வடிவத்தை கவிஞர் இ. முருகையன் இந்த இதழில் தந்
参见

q துள்ளார். தமிழ் வாகனர்களுக்கு பெயர் அளவிலேயே அறியப்பட்டவரான நெருடா வின் பொதுவான வாழ்க்கைக்குறிப்பும், புத்திஜீவியான அக்கவிஞனின் "புரட்சிகர செயல்பாடுகள் எத்தகையனளன்பதும் எமது தமிழ் படைப்பாளிகள் பலரும் தெ ரி ந் து கொள்ளவேண்டியனவே.
க. கைலாசபதியின் "சமூகவியலும் இலக் கியமும்’ என்னும் நூ லின் அறிமுகத்தை க. சண்முகலிங்கம் தந்துள்ளார். இன்றைய இலக்கியச் சூழலில் தீவிரமாகச் fridgii, கப்பட்டு வரும் "விம்ர்சன அணுகுமுறை" பற்றிய சில தகவல்களின் முக்கியத்துவம் கருதி இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.
பொதுவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வேலையிழந்த பலரின் துயரங்கள் சில கதை கவிதைகளின் சாரமாக வெளிப்படுத்தப்பட் டுள்ளன. இது பாரதூரம்ான மனிதாபி மானப் பிரச்சினை, கதை, கவிதைகளோடு நின்றுவிடமுடியாது. நீதி நியாயம் "ே றுக் கொடுப்பதற்கு சகல நியாய பூர்வமான் பிரஜைகளும் முன் வர வேண்டு ம் என *சமர் கேட்டுக்கொள்கிறது.
அடுத்த சம்ர் இதழ் - 7 யூலை அதிக பக்கங்களுடன் வெளிவரும். தகுந்தபடைப் புக்கள் வரவேற்கப்படுகின்றன. சந்தாக்க ளும் ஏற்றுக் கொள்ளப்படும்.
-ஆசிரியர்

Page 3
இரு கவிதைகள்
விலகல் அ. ரவி
மடல் ம்டிந்து . மோனத் தவிப்பில் ஆழ்ந்தபோது, மெதுவாகச் சரியும் தூரத்தில்-மிகத் தூரத்தில் தான்விலகி ஓடும் வெள்ளம் எற்றுண்ட மண் துளிகள் முதுகை நனைக்க ஊற்றெடுத்த வியர்வைக் கட்டிகள் செம்பட்டையாய் மினுங்கும்
மண்வெட்டி 乡,” ஆழப் பதிய-பதிக்க பூமித்தாயின் ஒரோர் கணமும் புதிதாய்ப் பிளக்கும் நீர்த்துளிகள் திவலைகளாய் பாத்திகளை நிறைக்கையில் மனம் நிறையும் நடுவெயில்தீய்ந்து கருக்கி சாம்பராக்கி விடும் நடுவெயில் இடைக்கிடை சோளகமும் உடம்பில் நெருப்பாய்ப் பாயும் மேனி கொதிக்கும் “பொயிலைக்கண்டு" கருகும் சோம்பலுழுர்கள் எத்தனை நடு வெயில்கள் எரிக்கும்-வதக்கும் மண்வெட்டி ஆழப்பதிய-பதிக்ச பூமித்தாயின் ஒரோர் கணமும்

புதிதாய்ம் பிளக்கும் நீண்ட நெடு வீதியில் சிவப்பாய்க் கனலும் ஒரு பஸ் சோம்பலுற்றுச் செல்கிறது
மாதுளம் பிஞ்சுகள் த. ஆனந்தமயில்
இன்றும் ஏன் சூரியன் உதித்தது இப்போதெல்லாம் அப்பா வேலைக்குப் போவதில்லையே . முன்புபோல் காசு கொடுப்பதில்ஜ அம்மா முணுமுணுப்பதும் இல்லை அந்த 'தூக்குப்பை கனநாளாய் மூலையில் கிடக்கிறது அப்பா அதனைத் தொடுவதில்லை
ஒரத்தில படுத்திருக்கிறர் தெருவை நெடுநேரம் பார்க்கிருர் எங்கள் அடுப்பு இனிமேல் எந்நேரம் புகையுமோ அம்மா வெள்ளப்பில் எழுந்து எங்கே போய்விட்டாள் யார் கொடுப்பார்களோ வெறுங்கையுடன்தான் வருவாளோ எங்கள் குடல்களை யார் பிடுங்குகிருர்கள் அந்த விளையாட்டை நாங்கள் விரும்பவில்லை அப்பாவை தேடிவரும். மாமா ஏன் சிரிப்பதில்லை
முன்னர் பேரல் ஏதும் கொண்டுவருவ முற்றத்து மல்லிகைக் கொடியை (தில்ஜலயே பிய்த்து எறிந்தால் என்ன காய்க்காத பலாமரத்தை தறித்து வீழ்த்தினுல் என்ன ம்ாதுளம் பிஞ்சுகளை பிடுங்கிக் கடிக்கிருேம் கயர்வு தெரியவில்லை அப்பா அதற்காக ஏசவில்லையே தம்பி அழுகிருன்
அப்பா சத்தமிடுகிமுர் அவன் அடங்கவில்லை அப்பாவின் கண்களில் நீர் பளபளக்கிறது தம்பியை தோளில் வைத்து சிவந்த கடதாசிப் பூக்களை காட்டினர், அவன் ஓயவில்லையே.

Page 4
கலை இலக்கியத்தில் உள்ளட உருவ உறவும் மாக்சீய விமரிசனமும்
றெஜி சிறிவர்த்தன எழு தி ய உருவ உள்ளடக்க உறவும், மார்க்சிய விமர்சனமும் (லங்கா கார்டியன்; நவ 1) என்ற கட்டுரை யினை மிகுந்த அக்கறையுடன் வாசித்தேன் உருவத்தை விட உள்ள டக் கம் பெறும் முதன்ம்ை பற்றி என்னுல் எழுப்பப்பட்ட வின நிச்சயம்ாக பரந்த தொடர்பு கொண் டதுதான். எனினும் உருவத்தை விட உள்ளடக்கம் முதன்மை பெறுகிறது ' என்ற தொடரை எனது கட்டுரையிலிருந்து தனித் தெடுத்து அதற்கு அவர் தனது சொந்த வியாக்கியானத்தை அளித்து விரிவான ஆய் வுக்கும் உட்படுத்தியுள்ளார் என்பதை ச் சுட்டியாக வேண்டும். அவரது கட்டுரையின் அடியாகத் தோன்றும். முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைத் தத்துவார்த்தப் பிரச் சினைகள் சிலவற்றை ஆராயுமுன்னர், நான் எத்தகைய பின்னணி பற்றிக் கவனமெடுக் கிறேன் எனத் தெளிவுபடுத்துவது அவசிய LòtT(5 b.
எனது கட்டுரையில் (லங்கா கார்டியன்: செப் 15) சம் காலத் தமிழிலக்கியத்தின் பொதுமைப் பண்புகள் பற்றி நான் கூற
வில்லை, ஆனல் அதன் குறிப்பிட்ட ஒரு அம்சத்தைப் பற்றி - எழிச்சியுறும் முற் போக்கு மரபைப் பற்றியே-கூறியிருந்தேன். அறுபதாம் ஆண்டுகள் ஈழத்துத் தமிழ்க்கலை இலக்கியத்தில் ' முன்னேக்கிய பெரும் பாய்ச்சல் ” என்ற எனது கூற்று சிலருடைய
சிந்தையைக் குழப்பியும் விட்டது. அவர் கிள் வரலாற்றைப் பொய்யாக்குமளவுக்கே போய் முற்போக்கு இயக்கத்தைப் பற்றி அவதூறுகளையும், குற்றச்சாட்டுக்களையும் கூறுகின்றனர். சிறிவர்த்தணுவால் எழுப்பப்
2

சமுத்திரன்
பட்ட பொதுப் பிரச்சிகாகள் சிலவற்றுட னும் இது தொடர்புற்றிருப்பதால் இந்தப் "பெரும்பாய்ச்சல்" பற்றி ஒரு கருத்தை அழுத்துவது மிக மிக முக்கியம் எனக் கருது கிறேன். ஒரு வகையில் அறுபது காலப் பகுதி அதற்கு முற்பட்ட கால வரலாற்று இயக்கப் போக்கிற்கு இயைபற்ற, வேறு பாடான ஒரு முன் இயக்கக் காலவெளியின் தோற்றமாய் அம்ைந்தது. புதிய முறையி லான ஆக்கச் செயற்பாடுகள், ஏற்கனவே நிலவிய உறுதி பெற்றுவிட்ட, இது வரை ஆதிக்கிம் செலுத்திய கலை இலக்கிய உற் பத்தி அமைப்புக்குச் சவால் விடுவனவாக அமைந்தன. இந் நிலையில் மார்க்சிய விமர் சகனின் பணி யாது?
இப் புதிய இலக்கியத்தின் கோட்பாட்டு உள்ளடக்கத்தைப் பிரித்தெடுத்து அதனை ஏற்றுக்கொள்வதோ நிராகரிப்பதோ அல்ல விம்ர்சகரின் பணி. அவன் மிகச் சிக்கலான பணியை ஆற்றவேண்டியவனகிருன். முத லாவதாக விமர்சகன் எல்லா மார்க்சிஸ்டுக் களையும் போலவே, ஒரு குறிப்பிட்ட வர லாற்றுச் சூழலில் இடம் பெறும் ஒரு குறிப் பிட்ட போராட்டத்தின் தன் மை களால் சலனப்படத்தக்க உணர்வு நலன் பெற்றிருத் தல் வேண்டும். இரண்டாவதாக ஒரு விமர் சகன் என்ற முறையில் இலக்கியம், நாடகம் முதலியவற்றின் புதிய ஆக்க சக்திகளின் வளர்ச்சி மட்டம் பற்றிய தெளிந்த அறி வைப் பெற்றிருத்தல் வேண்டும். இது குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தை நிர்ண யிக்கும். அவற்றுள் மிகை ஆதிக்கம் செலுத் தும் சக்திகள் பற்றிய த த் து வார்த் தத் தெளிவைக் குறிக்கின்றது. புதிய மரபின்

Page 5
A.
ஆரம்ப கட்ட ஆக்க இலக்கியங்களை மதிப் பிடும்போது, விமர்சகன் நிகழ்காலம் பற்றிய வரலாற்றுணர்வு கொண்டிருத்தல் அவசியம். உதாரணத்திற்கு ஒன்று மெளனகுருவின் சங்காரத்தை ஒரு திருப்பு முனையாக நான் ஏன் கொள்கிறேன்? முதலாவதாக அது, அப்போது நிலவிய நாட் டார் நாடகத் தயாரிப்பு முறைகளிலிருந்து அடிப்படையில் வேறுபட்டிருந்தது. இவ்வகை நாடகங்களில் முதலாவதாக வெளிவந்ததும் அதுவே. நிச் சயம்ாக அது ஒரு புரட்சிகர நாடகம். சமூக முரண்பாடுகளை மாற்றத்திற்கான போராட் டத்தையும் அந் நாடகம் வெளியிட்டது. ஆணுல் இத் தன்ம்ைகளால் அந் நாடகம் எல்லாக் குறைபாடுகளையும் கடந்தது என்று கொள்வதற்கில்லை. உயர்தரமான வளர்ச் சியை இலக்காகக் கொண்டு அதன்பின்னர் மேடையேற்றப்பட்ட நாடகங்களின் வரிசை யில் வைத்துப் பார்க்கும்போது அதன் குறைபாடுகள் தெளிவாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆயினும் இது, சங்காரம் ஒரு திருப்புமுனையாக அமையும் முக்கியத் து வத்தை எவ்வகையிலும் குறைக்க மாட்டா தென்பதையும் நினைவிலிருத்த வேண்டும்.
நான் ஏன் இக்கருத்தை இங்கு அழுத் திக் கூறுகிறேன் என்பதை விளக்குதல் அவ சியம். சில விம்ரிசகர்கள் வேறு சில நாடு களில் பூர்ஷ்வா, பாட்டாளி வர்க்க புரட்சி களின் எழுச்சிகளின்போது ஆக்கப்பட்ட பெரும் இலக்கியங்களின் அடி யாக உரு வான அளவுகோல்களை யாந்திரிகமாகப் பின்பற்றி எழுந்தமானம்ான கிளர்ச்சியூட் டும் தீர்ப்புகளை வழங்குகின்றனர். இது தமது சொந்த நாடு, சூழலுக்குரிய வரலாற் றுணர்வை அவர்கள் இழந்து நிற்பதைக் காட்டுகிறது. இதனல் அவர்கள் சிறந்த படிப்பாளிகளாகத் தென படினும் மோச மான விமர்சகர்களாகவே நடந்து கொள் 637 p37ri, garg Undogmatic Marxismo மேற்கூறியதன் விளைவு எனலாம். இது மிக மிகக் கொச்சைத்தனமானது என்றே நான் கருதுகிறேன்.

சிறிவர்த்தணு என் ஆன ஒரு பரிசோதனை செய்ய வரும்படி சிழைத்துள்ளார்.
}வ் அழைப்பை ஏற்பது பற்றிச் இந்திக். முதல் அவரது கட்டுரையில் இழையோடும் தத்து
வார்த்த தவறுகளை எடுத்துக்காட்ட விரும்பு கிறேன். உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய எனது கருத்து பற்றிய அவ ர து விமர்சனத்தின் தத்துவார்த்த அடித்தளத் தில் நான் காணும் குறைபாடுகள், ஒரு ஆக்க இலக்கியத்தின் உள்ளடக்கத்தை வ்ரை யறுப்பதுடன் தொடர்பான அறிவு ஆய்வியல் முறைமையிலிருந்து எழுந்தவையாகும்.
'உருவத்தை விட உள்ளடக்கம் பெறும் முக்கியமானது. * எவ்வகையிலும் அவ்விரண் டினதும் ஒற்றுமையையோ ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையையே மறுதலிக்க வில்லை உள்ளடக்க முதன்மையானது பிரிக்கமுடியாத கூறுகளின் இயக்கவியல் ஒருமைப்பாட்டின் செயற்பாட்டு முதன்ம்ை யைக் குறிப்பதாக அமைகிறது; சிறிவர்த் தனவின் கட்டுரையில் காணப்படும் அறிவு ஆய்வியல் ரீதியான குறைபாடுகளைச் சுட் டும் அதே நேரம் ம்ேற்கூறியதையே நான் விரிவாக விளக்க விரும்புகிறேன்,
நான் உருவத்தைவிட உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை அழுத்தியது, ஆ க்க இலக்கியத்தின் உள்ளடக்கத்தைப் பிரித்தெ டுத்து அதை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராக்ரித்தல் என்ற முறையில் செயற்படும் சோஷலிச யதார்த்தவாத வைதிகத்தின் மேலுள்ள பற்றுதலினல் எனச் சிறிவர்த்தணு சந்தேகிக்கிருர், ஷெல்லியின் "இங்கிலாந் தின் மச்க்ளுக்கு ஒரு பாடல்" என்ற கவிதை யின் உள்ளடக்கத்தை இனம் காண்பதில் சிறிவர்த்தனவும் இதே முறையைக் கை யாண்டிருக்கிருர் என்றே எனக்குத் தோன் றுகிறது. Gerry: 33 யதார்த்தவாதிகளுக் கெதிரான சிறிவர்த்தனவின் குற்றச்சாட்டு அவர்கள் ஆக்க இலக்கியத்தின் பொருளை வரையறுக்கும், அதன் பிரிக்க முடி யா த கூறு என்ற வகையில் பாணி, உருவம் ஆகி
3.

Page 6
யவற்றுக்கு உள்ளடக்கிமளவு சம்ாந்த்ர முக் கியத்துவம் கொடுக்கிருர்களில்லை என்பதே யாகும் ,
கோட்பாட்டு ரீதியாக உள்ளடக்கத் தைப் பிரித்தெடுத்து அதனை ஏற்றுக்கொள் வதோ நிராகரிப்பதோ சோசலிச யதார்த்த இலக்கிய விமர்சன முறையன்று என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். கலைப்படைப் புகளை மதிப்பிடுவதற்கு இதுவே போதுமா னது எனக் கருதுவோர் கொச்சைத்தன மான மார்க்சிஸ்டுகளே! இப்படியானவர் கள் பலர் உள்ளனர். சோசலிச யதார்த்த வாதம் மாத்திரமன்று, சோசலிசமே பல தரப்பினராலும், பல எழுத்தாளர்களாலும் மன்னிக்க முடியாத, மோசமான கொச் சைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளது. ஆனல் இத்தகைய கொச்சைப்படுத்தலை நிராகரிக் கும் அதேவேளை சிறிவர்த்தன அதைவிடச் சிறந்த முறையொன்றை மா ற் ৫ கத் தர வில்லை தான் களைய வந்த அதே பிழையை அவரும் விடுவதைக் காணக்கூடியதாயுள் ளது. உள்ளடக்கம், உருவம் ஆகியவற்றின் சேதன ஒருமைப்பாடு, ஒன்றிலொன்று தங் கியிருக்கும் தன்மை ஆகியவற்றை அவர் அழுத்துவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனல் அவரும் கூட யாந்திரீக ரீதியான உருவ உள்ள டக் க இரும்ை வாதத்தைத் தோற்றுவிக்காத விமரிசன முறையை முன் வைக்கவில்லை. சிறிவர்த்தனவின் விமரிசன முறையில் காணப்படும் அடிப்படைத் தவறு தல், அவர் கண்டிக்கும் சோசலிச யதார்த்த வாதிகளின் விமர்சன முறையிலே காணப் படுவதாகும். இத்தவறு யதார்த்தத்தின் கலைத்துவப் பிரதிபலிப் பின் ஒரு விளை பொருளாக உள்ளடக்கத்தை வரைவு செய் ய்த் தவறுதலால் ஏற்படுவதாகும்.
பூர்ஷ்வாக்களாக இருந்தா லென்ன, மார்க்சிஸ்டுகளாக இருந்தாலென்ன எல்லாக் காத்திரமான விமர்சகர்களும் தமது வரிக் கச் சார்பைக் காட்டிக்கொள்ளும் வகையில் கலைப் படைப்புக்களின் சமூக சாரத்தைப் (அதுதான் கோட்பாட்டுக் கூறை உள்ளடக் கியது) பிரித்தெடுக்கின்றனர். பல பூர்ஷ்வா
4

விமர்சகர்கள் இதனை உணர்வற்றுச் செய் யினும் அவர்களது வர் க்க உணர்வுதான் இதனை அவர்கள் செய்யுமாறு உந்துகிறது. இவ்வாறு படைப்பின் சமூகசாரத்தை அரூ பப்படுத்திப் பிரித்தெடுத்தல் தேவையான நடைமுறை என நான் கருது கிறேன். ஆனல் இவ்வகையில் அரூபப் படுத்தப்பட்ட சமூகசாரம் மாத்திரம் கலைப்படைப்பின் உள்ளடக்கம் எ ன் பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. உளளடக்கம் அதைவிட உயர்ந்தது. ஏனெனில் கலைப்படைப்பின் உள்ளடக்கம்ென்பது விஞ்ஞான முறையில் மைந்த அரசியல் பொருளாதார ஆய்வின் விளைபொருளல்ல. அது கலைஞன் தன் அக உல &air ul Lasi,Sibes (Prism of the Innerworld of the Artist) 267 LITs L9 D & 60) (5 பூர்வமாய் செயற்படுத்தும் கலைத்துவப்பிரதி பலிப்பின் விளைவாகும். இது அரசியல் பொருளாதார ஆய்வின் மறுபதிப்பு முறை யிலிருந்து வேறுபட்டதாகும்.
எனது இக்கருத்தை, இலக்கியத்தில் வகைமாதிரி - தனிநபர் மாதிரி உறவின் இயக்கவியல் மூலம் விளக்க முற்படுகிறேன்" ஒரு நாவலில் எந்தக் குறிப்பிட்ட பாத்தி ரமும்-அப்பாத்திரம் ஒரு குறிப்பிட்ட சமூ கப் பிரிவை (வர்க்கம், சாதி, சமயம்) பிரதி பலிக்கின்றது என்ற வகையில் ஒரு வகை மாதிரியாகவே அமையும். ஆனல் அதே நேரம் அப்பாத்திரம் "இவர் எனக் குறிப் பிடக்கூடிய, குறிப்பிட்ட ஆளுமையுடைய ஒரு தனிநபர் என்பதையும் மனதிலிருத்த் வேண்டும். உணர்வும், உயிருமுள்ள தனி நபர் தனது உணர்ச்சிகள், தனித் தன்ம்ை கள் ஆகியவற்றுடன் வகைம்ாதிரியுடன் இணையும் கலைத்துவப் படிமமே பாத்திரம் என்பதாகும். இதனையே மார்க்சிஸ் விமர் சகர்கள் பொதுமையினதும் சிறப்பினதும் இணைவு, ஒருமை எனக் கூறுகின்றனர். பெரும்பாலும் உருவரீதியான குறைபாடுகள் என முற்போக்கு இலக்கியத்தில் கூறப்படு பவை, தனி நபரின் தனித்தன்மைகளைக் கலத்துவ ரீதியாகச் சரிவரப் பிரதிபலிக்கா , ம்ையால் ஏற்படுபவையாகும்.

Page 7
சரியான விமரிசன அணுகுமுறை என் பது இக்குறைபாடுகளின் வேர்களை உள்ள டக்கத்திலே கண்டறிவதாகும். ஆணு ல் , விமர்சகனுக்கு இது இலகுவான வேலையல்ல. எந்தப் படைப்பை விமர்சனம் செய்ய முயற் சிக்கிருனே அப்படைப்பின் ஆசிரியனைவிட விமர்சகனுக்கு அப்படைப்புத் தொடர்பான கலைத்துறை வன்ம்ை இருந்தாலே மேற்கூறிய முயற்சியில் அவன் வெற்றியடையலாம். ஒரு கலைப்படைப்பை மதிப்பீடு செய்யமுன் நல்ல விமர்சகன் ஒருவன் தனது எல்லைக்ளை அறிந்திருத்தல் வேண்டும். ஆனல் துரதிஷ்ட வசமாகப் பல மார்க்சிஸ் விமரிசகர்கள் தம் மைத் தாமே மிகைமதிப்பீடு செய்வது மாத் திரமன்றித் தமது எல்லைகளையும் கடந்து விடுகின்றனர். மூலத்தைக் கண்டறிய முடி யாதபோது கலைப்படைப்பின் உள் ள டக் கத்தை மூடியிருக்கும் வெளிக்கோதாகக் கொள்ளப்படும் உருவத்தைக் குறைகூறுவ தில் ஈடுபடுகின்றனர். மார்க்ஸ் கூறியது போல புரட்சிகரமாயிருப்பதெனில் விஷ யங்களை அவற்றின் வேரிற் பிடித்தல் வேண் டும், மானுடத்தின் வேர் மனிதனே' கலை ஞனின் பொருளான இந்த மனிதன்தான் கலைஞனின் நோக்காலும், கலைத்துவ ஆற் றலாலும் உள்ளடக்கம் என்ற ம்ட்டத்திற்கு உயர்த்தப்படுகிறன்.
உள்ளடக்கத்திற்கு இத்தகைய பரந்த கருத்தைக் கொடுப்பதன் மூலந்தான் உருவத் திற்கும் உள்ளடக்கத்திற்குமிடையில் இயக்க வியல் ரீதியான, பிரிக்கமுடியாத ஒருமை யைப் பேணமுடியும். இந்த ஒருமையில் படைப்பின் பூரணத்துவத்தைப் பேணும் கூட்டு உறவை ம்ட்டுமல்ல, உருவத்தை விட உள்ளடக்கம் முதன்மை பெறும் ஒரு அதிகார முதன்மையையும் அவதானிக்கலாம்.
இவ்விடத்தில் உருவம் என்பதற்குச் சிறிய விளக்கம் ஒன்றைத் தருவது அவசியமாகும். உள்ளடக்கத்தின் உள்ளமைப்பை உருவம் வெளிப்படுத்தும். அது கலைத்துவப் பிரதி பலிப்பால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு கூறுகளை ஒழுங்குபடுத்துவதுடன் தொடர்பு

நிலைமைகள்|நல்லே அமிழ்தன்
பதின் மூன்று மாதங்களில் புதிய மின் மினிகள் போல் முப்பதினுயிரம் கார்கள் முழுசாக 45 கோடி ரூபாயை வெளியாலே எடுத்துச் செல்லும் போது அழகு வான் தென்ற லோடும் கொழும்பு அபிவிருத்தி வலயத்துள் இரவிலும் வேலைகள் இளம் பெண்கள் செய்யவேண்டும். எங்கள் செலாவணியை எழுப்பவந்த தொழிற்சாலைக்கு தையல் இயந்திரங்க்ள் நாலரைக் கோடி ரூபாய்க்கு நமக்காக இறக்கப்படுகின்றன. விலைவாசி கூடினுலும் நிலையாக சீமெந்து வீடுகள் ஒவ்வொரு நாளும் புதுப் படங்களாய். தொகுதிகள் தோறும். டப்பிக(ளால்) எடுக்கப் படுகின்றன 300 ரூபா சம்பள உயர்வுகேட்டால் எந்நாளும் வீட்டில் நிற்க, முள்ளு ரோஜாக்கள் வானெலியில் மணக்கின்றன இந்த நிலைமைகள் குடியியல் உரிம்ைகளையும் பறிக்கும் போது இடது பக்கங்களில் இரத்த அமுக்கம் கூடுகின்றன,
கொண்டது. இத்தகைய கலைத்துவ ஒழுங்கு படுத்தல், கலைஞனின் சிந்தனையில் அவன் கலைப் படைப்பை இறுதிப் பொருளாக வெளிப்படுத்தும்வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே உருவத்தை விட உள்ளடக்கத்திற்கு முதன்மை கொடுத்த லென்பது உருவத்தை குறைந்த முக்கியத்து வம் பெறச் செய்யவில்லை. ஆனல் கருத்து கலைத்தரம் ஆகியவற்றை நிர்ணயிப்பதில்

Page 8
உருவம் உள்ளடக்கம் ஆகிய இணைபிரியா இரண்டுக்குமுள்ள முடிவான தன்மையை இனங்காட்டுகின்றன. உருவ உள்ளடக்க உற வுகள் இம்முறையில் விளங்கப்படும்போது யாந்திரீகமான இருமைவாதம் மறைந்து விடு கிறது. எனினும் பூர்ஷ்வா அறிவியல் ஆய்வு முறைம்ை உருவம் சுதந்திரம்ானது, தனித் தியங்குவது என்ற கருத் தை க் கொடுத்து இருமை வாதத்திற்கு இட்டுச் செல்கிறது. உருவ வாதமும் இவ்விருமை வாதத்திவிருந்து தோன்றுவதாகும். ம்ார்க்கிசம், உருவவாதம் ஆகியவற்றுக்கிடையிலான விவாதம் இரு எதிரெதிர் வர்க்கங்களைச் சார்ந்த இணைத்து வைக்க முடியாத முரண்பாடுள்ள வேறு வேழுன அறிவியல் ஆய்வு முறைமைகளின் விளைவாகும்
மார்க்சிசம், உருவவாதம் ஆகியவற்றுக் கிடையே நான் காட்டும் எதிர்த்தன்மைகள் அரை தூற்ருண்டுக்கு முன்பே ஏனைய நாடு களில் மீறிச் செல்லப்பட்டு விட்டன என்கிருர் ரெஜி சிறிவர்த்தன. ஆனல் இங்கு அவதா னிக்கவேண்டியது என்னவென்ருல் தமிழிலக் கிய உலகில் காணப்படும் பிரதான முரண் பாடு மார்க்ஸியம், உருவவாதம் ஆகியவற் றுக்கு இடையிலுள்ளதாகும். அதுமட்டுமன் றித் தம்ம்ை மார்க்சிஸ்டுகள் எனச் சொல்லிக் கொள்வோர் சிலர், கலைத்துவச் செயற்பாடு களால் உருவாக்கப்படும் முழுமையே உள்ள டக்க முழுமை என்பதைச் சரிவர விளங்கிக் கொள்ளாமையினுல் உருவவாதிகளின் தடத் தில் வீழ்ந்து விடுகின்றன்ர்.
ஷெல்லியினது 'இங்கிலாந்தின் ம்க்க ளுக்கு ஒரு பாடல்' என்ற பிரபலமான கவி தைக்கு எனது விமரிசன விதிகளைப் பிரயோ கிக்கும்படி சிறிவர்த்தணு அவர்கள் கூறியது குறித் து ஒரு வாரி த் தை; உருவ உள் ளடக்க உறவு பற்றிய எனது வியாக்கியா னத்தின் ஒளியில் அக்கவிதையை அணுகும் படி நான் சிறிவர்த்தணுவுக்கு ஆலோசனை கூறுகிறேன். எனது விளக்கம், மார்க்விஸ் இயங்கியலின்படி உருவம், உள்ளடக்கம் என்
6

பவற்றின் பூரண இணைவு, ஒரும்ை ஆகிய வற்றை நோக்குவதற்கான ஒரு சிறந்த முறைமையைத் தருகிறது. சிறி வர்த்த ஞ எனக்கு விளக்க முனைந்தது அவரது முறை ம்ையை விட எனது முறைமையாலேயே நிறைவு பெற்றுள்ளது.
பிரெஷ்டினுடைய காவிய அரங்குபற்றி சிறுவர்த்தன குறிப்பிட்டுள்ளார். பிரெஷ்ட் ஒரு சோசலிச யதார்த்தவாதி என்பது எனது கருத்து, லூகாஸ் போன்ற மார்க்சிச சிந் தனை யாளருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்தது. (லூகாஸ் தனது பிற்காலத்தில் பிரெஷ்டை அவரது காலத்தின் மிகச் சிறந்த சோசலிச யதார்த்த நாடகாசிரியராக அங்கீ கரித்தார்.) புதியதோர் அரங்க வடிவத்தை உருவாக்கும் பிரெஷ்டின் முயற்சி சோசலிச யதார்த்தவாதத்தின் அகன்ற சட்ட வரைவி னுள் அடங்கக்கூடியதே. பிரெஷ்டினதும் ஏனைய சோசலிச யதார்த்த வாதிகளினதும் முயற்சிகளைப் பின்வரும் வார்த்தைகளால் விளக்கலாம் "நாம் எமது ஒழுக்கவியலைப் போலவே, எமது அழகி யலை யும் எம்து போராட்டங்களின் தேவையின் அடிப்படை யில் உருவாக்குகிருேம். பிரெஷ்ட் கலை, அறி வூட்டல் ஆகியவற்றில் பிரிக்கமுடியாம்ை பற்றி உறுதியாக இருந்தார். உருவம் உள் ளடக்கம் ஆகியவற்றின் உச்சக் கூட்டுறவை காவிய அரங்கின் மூலம் உணர்ந்ததாலேயே அவர் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத் தார். உருவத்தின் இயக்கப்பாட்டினை விட உள்ளடக்கத்தின் இயக்கம் வலுவானதென் பதைக் காட்டுவனவாகவும், போராட்ட கட் டங்களில் உள்ளடக்கம் உருவத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தைக் காட்டுவனவாக வும் அவரது பரிசோதனைகள் அமைந்
துள்ளன.

Page 9
Sagasangs வசதி படைத்தவன் தரமாட்ட வயிறு பசித்தவன் விடமாட்ட
பெரு வியாதியஸ்தர்கள் உள்ளே வரக் கூடாது! ரங்கநாதக் கிழவர் அந்த அறிவிப் புப் பலகையை எரிச்சலோடு தான் பார்த் தார். குடையைச் சுருக்கித் தன்னுடைய வழுக்கை விழுந்த தலை ம்ண்டையைத் தட விக் கொடுத்தார். விஷ்ணு காஞ்சியில் தான் எத்தனை வெயில்: அப்பப்பா! கண்ணில் எண்ணை உருகியோடும் வெயில், லக்சுமித் தியேட்டரில் காலை ம்ெட்னியில் ம்ட்டுமே ஓடுகிற தெலுங்குடப்பிங் மாயாஜாலப் படத் தைப் பார்த்துவிட்டு வேலைவெட்டியில்லா மல்லிகைப்பூங் கொண்டைக்காரிகள் க்ைக னில் குழந்தைகள் சகிதம் வீடு நோக்கிக் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள். வெயில் அவர்களைக் கொடும்ைப் படுத்துவ தாகத் தெரியவேயில்லை. v−
கேப்பு உள்ளே வந்த வ்ா சி யிலிருந்து வந்த பக்தகோடிகளின் படுர கிளை, சர்வர் சர்க்க்ஸ் சாகசக்காரணுகி சாம்பார்த் தட்டு களிலே மிதக்கிற ஈரிரு இட்டிலிக் கைகளோ டும் பூரி செட்டுகளோடும் பேப்பர் ருேஸ்ட் டுத் தோசைகளோடும் வலம் வந்து சுழன் முடிக்கொண்டிருந்தான். தண்ணீர்த் தொட் டியடியில் கையலம்பப் போன கிழ வரை ஐயங்கார்ப் பையன் ஒருத்தன் தாமதப்படுத் தினுன். சூள் கொட்டி த்கு. த்கு. என் ரூர். காலியான சேர் ஒன்றையுமே காணக் கிடைக்கவில்லை. சிலர் சேர் காலியாவதை எதிர்பார்த்தபடியே கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்க்ள்.
கிழவர் பல்லி தோஷம் ஷேமமே நீங்கு வ்தற்காக பூரீ வரதராசப் பெருமாள் அருள் மிகு கோயிலில் முகட்டிலுள்ள பித் தளை வெள்ளரிப் பல்லிகளைத் தரிசனம் செய்திட வந்தவர் திண்டிவனத்தில் ஸ்வாஸ்டிக் தியேட்

சி. சுதந்திரராஜா
டரடியில் கில காலம் ம்ளிகை மண்டி நடத் திப் பெரு நட்டப்பட்ட கிழவர் பின் னர் பாலக்கரை தாவி வந்துவிட்டார். காரணம் பல்லி தோஷம் என்றே ஜோஸ்யர் சொன் ஞராம். பாலக் கரையினில் மண்டி நடத்திய படி மண்ணிற மயமான அந்த முழு அழுக் குக் குட்டை நீரோடையில் சிறுவரும் பாட்டி மாரும் மூழ்கிக் குளிப்பதை அருவருப்பில்லா லாமல் பார்த்தபடி இருந்தார். ரியூப் பில் மிதந்து நீச்சல் பழகும் வாய்ப்பு பாலக்கரை சிறுவருக்கு வேறு எங்கேதான் கிடைக்கும்? காவிரி பாயும் நகரம். பாலக்கரை நீரில் மனிதர்களின் மலக்கழிவும் மிதந்து வருவ துண்டு. எதிர்காலத் தலைவர்கள் அங்கே குளித்தபடி "டே சந்தனக்கட்டை மிதக்கு. தடா, கண்டுக்காதை" என்றெல்லாம் அசிங் கீத்தைப் பாராட்டுவதை கிழவர் கேட்டபடி இரு ப் பார். பீம்ா நகர்ப் பெருச்சாளிகள் பாலக்கரையில் இந்தக் குட்டையில் மூத்திர நாற்றத்தில் சுகவாசம் செய்கின்றன. அவர் கூட இடையிடை பாலக்கரையில் தான், குளிப்பது.
பட்டை நாம்ம் தீட்டிய ஆலயப் பூசாரி இன்றைய தினம் சுளை சுளையாகத் தட் சணையை அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டே விட்டான். மந்திரங்களை பாவாலா செய்த படி விஷ்ணு காஞ்சிக் கலை யைச் கிாட்டி ஏமாற்றிக்கொண்டே விட்டான். ரங்கநாதர் பல்லி பீடை நீங்குவதற்காகவே அத்தனையை யும் தாங்கிக்கொண்டார்.
"என்னேடு எந்தானு நிங்கள் சோதிச் சது??
“அயாள் குட்டியெ வடிகொண்டானு அடிச்சது" *M மலையாளம் கேப்புக்குள் ம் ணத்தது. சாம்பார் கடையோரத்தில் வழிந்தொழுக
7

Page 10
தூரத்து . நல்லை அமிழ்தன் விளக்குகள்
எரிமலை பூமி
திருமலையில் அதன் கடற்கரையில் மரப் பொம்மைகள் உடைகளின்றி மிதக்கின்றன மணல் தரையில் சில மனித உருவங்கள் இடைக் கச்சைகளுமின்றி எழுந்து நிமிர்ந்து படுத்து தழுவுகின்றன >கடல் நடுவே
உடல் பெருத்த மீனினங்கள் ம்ேலெழுந்து துள்ளுகின்றன உடல் சிறுத்த மானிடர்கள் கடற்கரையில் உடையிழந்து ஐரோப்பிய நாகரீகத்தை ஆசிய மானிடத்துக்கு அர்ப்பணிக்க மேலெழுந்து தழுவுகின்றனர் இந்த மானிடர்கள் எந்த மாறுதலுக்காக * இங்கு ஊர்வலம் வந்தார்கள் வந்த வெள்ளைத் தோல்களால் வளமான திரும்லைக் கடல் நொந்து நொந்து அழுகின்றது நோவு போக்க பதிவாய் தூர ஒரு விளக்கு தெரிகின்றது.
நக்கித் தின்றுகொண்டிருந்த இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
குட்டிச் சுவரொன்றில் "கடவுள் இல்லை? சோறு போடு இல்லையெனில் வேலை கொடு" என்றெல்லாம் சிவப்பு எழுத்து பளிச்சென மினுமினுப்புக் காட்டிக்கொண்டிருந்தது. கேப்பு வசலுTடு தெரிந்தது. ரங்கநாதருக்கு இடங் கிடைக்கவில்லை. ஆதங்கப்பட்டார்"

ரங்கநாதர் சிலவேனைகளில் அசாதார ணப் பொறுமையைக் கடைப்பிடிப்பார். பூரீ ரங்கத்தில் பாதாள கிருஷ்ணரைக் கூட இதேபோல் பார்த்தபடி பொறுமையாக் நிற்பார். புறத் தே பார்க்கிறவர்களுக்கு அவர் பக்திப் பிரக்ஞையில் மூழ்கித் திணறு கிருர் என்றே தோன்றலாம். அ வ ரு க் கென்ன? பிள்ளையா குட்டியா? ம்ளிகை மண்டி மூலம் சுாசு மழை கொட் டோ கொட்டொன்று கொட்டிக்கொண்டிருக்கின் றது. ஐந்து விரல்களிலும் வைர ம்ோதிரம். இாதுகளில் கூட ஏதோ குண்டு குண்டா கித் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
வரதராசப் பெருமாளின் விசாலமான வீதிச் சுவரில் கறுப்புச் சட் டைக்கா ரன் ஒருத்தன்” கரிக் கட்டி கொண்டு ' வசதி படைத்தவன் தரவே மாட்டான், வயிறு பசித்தவன் விடவே மாட்டான்.' என்று எழுதிக்கொண்டிருந்தான். இவங்களுக்கு என்ன பகுத்தறிவு வேண்டிக் கிடக்கிறது இவையெல்லாமே ரங்கநாதருக்குப் பிடிக் கவே பிடிக்காது. அவனைச் சபித்தார்.
* சார் இங்கிட்டு வ்ந்து உக்காருங்க”*
சர்வர் வாஞ்சையோடு அழைத்தான். சேர் காலி. ஆனல் மூலை. ரங் கநாதர் போய் உட்கார்ந்தார். முக்ட்டிலிருந்த பல்லியொன்று அவரது வலக்கைத் தோள் பட்டையில் பொத்தென்று வீழ்ந்த து.
ரங்கநாதர் அதிர்ந்து போனர். மரன பயம் கவ்விக்கொண்டது. குலை நடுக்கம் கண்டது.
மறுமடியும் வரதராசப் பெரும்ாளிடம் முறையிட ஒடிஞர். பதட்டத்தில் கைக்குட் டையைக்கூட கேப்பில் தவறவிட்டுவிட்டார். வலது கையிலே பல்லி விழுதல் மரணத்தின் முன்னுரை என்பதை கிழவர் எப்பவோ அறிந்திருக்கிறர். அதுவே சர்வத்துக்கும் esmpJ6807 fro.
சுற்றுப் பிரகாரத்தில் - அதே கறுப்புப் பட்டிக்காரன் நின்று கொண்டிருந்தான். ஓர் இயக்கம் அவனுக்குள் இயங்கிக்கொண்

Page 11
டிருப்பது ரங்கநாதருக்குப் புரியாது. புரிந் தாலும் பிடிப்பு ஏற்படாது. ஏராளமான வேலையற்ற பட்டதாரிகளும், ட்ட்டினிப் பர ராரிகளும் அந்தக் கறுப்புப் பட்டிக்காரனின் ரத்தத்தின் ரத் கமாகித் தேரடியில் திரளு வதை ரங்கநாதர் எங்கே அறியப் போகின் முர்? மளிகை மண்டியால் பெருகும் செல் வத்தை வரதராசப் பெருமாளின் அனு க் கிரகம் என்றே நியாயப்படுத்துவதை எங்கே விடப்போகிருர்?
ஆரவாரமே இல்லை.
ரங்கநாதர் அண்மித் ததும், பனங் குற்றியை எடுத்து வீசினன், ரங்கநாதர் தடுக்கி விழுந்தார். அவுருடைய கையில் இலைப்பொட்டலமாகக் கிடந்த அறுப து பைசா விலையின் 100 கிராம் கருந்திராட்சை கொட்டுண்டு சிதறிக் கொண்டது. மரண பீதியில் இருந்த ரங்கநாதருக்கு திடீர் மர ணம் தந்துகொண்டான் வரதராஜப் பெரு
657,
பிணத்திலிருந்த அத்தனை வைர மோதி ரங்களையும் கழற்றி உருவிக் கொண்டான் கறுப்புப் பட்டிக்காரன்.
கண்டவரே கிடையாது.
ஒரு கலை ஞ ன் தனது எண்ணங்களை செம்மையான கலைவடிவில் வெளியிட முடிந் தால்தான் கலைக்கு செல்வாக்கு செலுத் தும் வலிமை ஏற்படும். ஆக உன்னதமான கருத்துக் கூட மோசமாக வெளிப்படுத்தப் பட்டால் யாரையும், அசைக்க்ாது யாரை பும்நம்பவைக்க முடியாது, கலையின் சிகரத் தை நோக்கிய இயக்க்த்திற்கு கலை நுட் பத் கை க் கற்றுக் கரை காண வேண்டுவ தம் அத்தியாவசியம்.

கீறல்கள் ‘அன்பு நெஞ்சன்’
பசுமை குறைந்த பாலைவன் முகங்களில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் "வேதனைக் கீறல்கள் "* மின்னி மறையும்! சோஷலிஸப் போர்வை போர்த்த- . * முதலாளித்துவ முட்கள்? பொருளாதார வரைபடத்தில் *காரணம் காட்டும்! வெதும்பும் மனங்கள் *விரக்தி' மறைக்க சந்திகளில்
நின்று"சமதர்மம' பேசும்!. அக்காள் தரும் "தண்டச்சோறு? தண்டனைச் சோருகி குடல்சுவர்களை சித்திரவதை செய்யும்! மீண்டும்-- மேனிக் கிணற்றுநீர் விலைவாசி வெப்பத்தில்
2. GOUT . . .
**தேர்தல் கானல்’ விழிகளைக் கவ்வும்!.
ஒவ்வொரு சகாப்தமும் தனக்கே உரிய கலையைச் சிருஷ்டிக்கிறது. மனிதர்கள் குறிப் பாயும். பரபரப்பான செறிவான வாழ்க்கை நடத்திவர லட்சோபு லட்சம் மக்களை ச் செயல்புரியக் கிளர்த்திவிடும் பரந்த சமுதாய இயக்கங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாபெரும் சகாப்தமும் மாபெரும் மிக்குவ யர் கலையினை உருவாக்குகிறது.
- பவல்கோரின்

Page 12
பப்ளோ நெருடா
- அனுப் பபானி
நமது காலத்திலே போர்கள் நிகழ்ந் துள்ளன; புரட்சிகளும் சமுதாயப் பேரெ ழுச்சிகளும் இடம் பெற்றுள்ளன. ஆகை யால் முன் எப்போதும் இல் லா த அளவு பெருவாரியான கவிதைகளும், கவிஞர்களும் தோன்றும் வாய்ப்பு இக்காலத்தில் உண்டா யிற்று. பப்ளோ நெருடா போன்ற கவிஞ னெருவனைக் காணும்பேறு நம் காலத்தவர் பெற்ற தனிப்பெரும் பேருகும்.
நஃப்தாலி றிக்காடோ றெயிஸ் பசோ எயிற்றே என்னும் கவிஞரின் புனைப்பெயரே பப்ளோ நெருடா என் ப து. அவர் சிலி நாட்டின் நடுப்பகுதியாகிய பர்ரல் என்னும் இடத்தில் 1904-ம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி பிறந்தார். அவர் தந்தை ஒரு புகைவண்டிப் பகுதித் தொழிலாளி. பிறந்து ஒரு மாதம் கூட ஆகுமுன் அவர் தாயை இழந்தார். அவர் தம் ம்ாற்ருந் தாயினல் வளர்க்கப்பட்டார், *அளவில்லா இரக்கமும், அன்பும் நிரம்பியவர்" என ப் பிற்காலத்தில் அவர் தம் மாற்ருந்தாயை வருணித்துள்ளார்.
இலக்கியப் பாரம்பரியம்
ஒரு கவிஞரின் பிறப்புப் பற்றிப் பேசும் போது அவரது இலக்கிய பாரம்பரியம் பற் றிக் கூறுவதும் வழக்கமாகும். பப்ளோ நெருடோ தமது பழம்பெரும் மரபி ஆன க் கிரகித்துக்கொண்ட பிரான்சின் தலை աոա கவிஞர்களாகிய போட்லெயர், ஆதர் நிம்போட் என்போரின் ஆன்மீக முதிசத் தையும் அவர் தம்தாக்கினர். சிலி நாட் டுக் கிராமிய கவிதையின் ஊக்க உணர்வை պւծ அவர் உள்வாங்கினர்.
ஆயினும் பப்ளோ நெருடாவைக் கலை குராக்கும் பணியில், வே று நாட்டவரான
o

தமிழில் : இ முருகையன்
வேறிரு கவிஞர்கள் பங்கு கொண்டனர்.
மாயக் கோவ்ஸ்கியும் உவிற்மனுமே அவர்
கள். ஒரு தடவை பப்ளோ நெருடா எழு
தினர்-"கிழடு தட்டிப்போன கவிதை முறை
களின் நடுவே சம்மட்டி அடி போன்று ஒரு குரல் முழங்கிற்று: கவிஞர்கன் மக்கள் கூட்
டத்தை நோக்கிக் கைகளை நீட்டினர்; தமது
புதிய இராகங்களுக்கு வேண்டிய வலிம்ையை
அங்கே பெற்றனர்.* மறுபுறத்தில், அவர்
தம் பள்ளி நாட்களில் தோல்ஸ்தோய்,
டொஸ்தோவெஸ்கி, செகோவ் என்னும்
றஷ்ய நாவலாசிரியர்களின் இருண்ட பயங் கர தரிசனங்களிலும் மூழ்கினர்.
1923இல் பப்ளோ நெருடாவின் முத லாவது நூல் வெளிவந்தது. அதிகம் அறி முகமாகாத அச் சிலிய கவிஞரின் 'கிறெஸ் புக்குலாரியோ’ என்னும் அப் புத்தகம் கவி தைச் சுவைஞர் யாவரின் கவனத்தையும் உடனடியாகக் கவர்ந்தது. தம் நூலின் முதற் பதிப்புக்கு ஆன செலவைச் சமாளிப் பதிலே அவர் நாளுக்கு நாள் சிற் சில இடைஞ்சல்களுக்கும் உள்ளானர். ୯୬ରuff தம் வீட்டுத் தளபாடங்கள் சிலவற்றையும், உடைகளையும், கைக்கடிகாரத்தையும் கூட விற்கவேண்டியவரானர். У
தம் எழுத்துத் திறனல், தாம் செல்வர் ஆகலாம் என்று நம் புவது இளங்கலைஞர் களுக்கு இயல்பு. பப்ளோவும் அப்படித் தான் நம்பினர். 1924 இல் அவர் தமது முதல் நூலின் உரிமை முழுவதையுமே சிலி நாட்டுப் பிரசுரகருத்தர் ஒருவருக்கு விற்ருர், அவ்விற்பனையினுற் பெருந்தொகை பணம் வரும் என அவர் எண்ணினர். ஆ ன ல் அவருக்குக் கிடைத்ததோ ஐந்நூறு பீசோ (40 ரூபாவை விடக் குறைவான தொகை) மட்டுந்தான். தம் நண்பர் நால்வருடன்

Page 13
விருந்துண்டு இப்பணத்தை அவர் செலவளித் தார். பிரசுரகருத்தரும் உணவகம நடக் தியவரும் இலாபம் அடைந்தனர். கவிஞர். என்னவோ பழைய கவிஞர்தான். செல்வர் ஆகவில்லை. இதுதான் கண்ட பலன்.
மக்கள் இயக்கம்
இதற்கிடையில், சிலி நாட்டில் வாழ்க்கை மாறிக்கொண்டிருந்தது. சிலி மக்கள் இயக் கம் உருவாகி வளர்ந்தது. LDrr 600r 6), rio, எழுத்தாளர் என்போரின் உரமான ஆதர வினை அது வேண்டி நின்றது. மாணவரான பப்ளோ நெருடா மக்கள் உரிமையை ஆத ரித்தார். சந்தி கோ நகரத்தெருக்களிற் பொலிசாரிடம் அடி வாங்கினர். அன்று தொட்டு, மனிதநேயம் அவர் கவிதையிலும் வாழ்க்கையிலும் ஒரு பகுதியாயிற்று. மக் கட் சார்பான இலட்சியங்களைத் தம் கவிதை களினின்றும் ஒதுக்கி வைக்க அவரால் இயல வில்லை. தம் இதயத்தில் எழும் அன்பு, ஆனந்தம், துக்கம் எ ன் பவை போலவே மனித நேய உணர்வுகளும் அவரை ஆட் கொண்டன. "மக்கள்’ என்னும் கவிதை இதனைக் காட்டுகிறது
'அவன் நெடுந்துாரம் கடந்தான்,
வாளோ படைக்கலமோ ஏந்தி அல்ல. தோள்களில் வலைகளைச் சுமந்தான் கோடரியோ சம்மட்டியோ மண்வெட் -டியோ சுமந்தான் அவன் நீரிடனே மண்ணுடனே உழைத் Israår கோதுமையைப் பானக்க உழைத்தான் ஓங்கி உயர்ந்த மரங்களைப் பலகையாக்க உழைத்தான் சுவருடன் போரிட்டுக் கதவுகள் திறந் (தான் மணலுடன் போரிட்டுச் சுவர்களை எழுப் 物 பினன்?
1925 இல் அவர் "கபலோ டி பஸ்தோஸ்” என்னும் பிரபல இலக்கிய ஏட்டின் ஆசிரி பர் ஆனர். பல்வேறு கட்டுரைகளையும்,

மேலும் பல கவிதைகளையும் எழுதி ஞர். இக்காலந்தொட்டு, அவரை ப் பொறுத்த வரை கவிதை எ ன் பது தனிமையிலிருந்து தமது சொந்த விருப்பு வெறுப்புகளை வெளிப் படுத்தும் வெறும் பொழுது போக் காக அமையவில்லை. கவிதையை ஒரு வரலாற் றுக் கடமையாக அவர் கொண் டார். 'கவிதை புரட்சிகரமானது; நடுத் தெரு வரை போய் அங்கு நடக்கும் சச்சரவுகளி லும் பங்கு கொள்வதே கவிதையின் பண் பாகும்’ என்று அவர் கருதினர். அவர் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இவைகவிதை நம் அயலவர்க்குப் பணி புரிய இயலுமா? மனிதரின் போராட்டங்களில் அதற்கு இடம் உண்டா? அறியாமையை யும் தீமையையும் மோதி மிதிப்பதில் அவர் பெரிதும் ஈடுபட்டார். அவர் இப்போது நின்று நிதானித்து மனித நேய நெறியைத் தேடவேண்டியவர் ஆஞர். நிகழ்கால இலக் கியத்தினின்றும் ஒதுங்கியிருந்தாலும், மனித குலத்தின் வேட்கைகளில் வேரூன்றியதாக அத்தேடல் அமைந்தது.
இலங்கையிலும் இந்தியாவிலும்
1927 இல் அவர் சிலியின் தூதுவராகப் பர்மா சென்றர். பின்னர் 1928 இல் இலங்கை சென்ழுர், 1929 இல் இந்திய தேசிய காங்கிரசு கல்கத்தாவில் நடத்திய மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இந்தியாவுக் கும் போயிருந்தார். இந்திய சுதந்திரம்பற்றி அவர் பின்வருமாறு எழுதினர் - **இந்தியா வில் இளங் க்விஞர் பலரைச் சந்தித்தேன். இவர்களுட் பலர் சிறையிலிருதது மீண்ட வர்கள், ஒரு வேளை நாளைக்கே மீண்டு ம் சிறைக்கூடஞ் செல்லக்கூடியவர்கள். ஏனென் முல் அவர்கள் ஏழ்மைக்கு எதிராக எழுச்சி பெற்றவர்கள். இலட்சக்கணக்கான மக் கள் வீதியோரங்களில் உறங்குகின்ருர்கள். பம்பாயின் புற எல்லை யில், தொடர்ந்து இரவு தோறும் அவர்கள் உறங்குகிறர்கள். அவர் கள் பிறக்கிருர்கள்; சாகிருர்கள்; அவர் களுக்கு வீடு இல்லை; உணவு இல்லை; ம்ருந் தில்லை. நாகரீகப் பெருமைமிக்க இங்கிலாந்து

Page 14
தான் ஆண்ட சாம்ராச்சியத்தை இப்படித் தான் விட்டுச் சென்றது. இந்தியா வில் மிஞ்சிக் கிடந்த வை, சிறைக்கூடங்களும் மலைகளும் வெறுமையான விஸ்கிப் போத் தல்களும்தான்."
இந்தியாவில் அவர் காந்தியைச் சந்தித் தார். “ஒருபோதும் சோராத முனிவர்" என்று காந்தியடிகளை அவர் வருணித்தார். "இந்தியப் புரட்சியை நிகழ்த்திய புத்திசாலி" என நேருவையும் 'அந்த நாட்டின் கவர்ச்சி கரம்ான அரசியற் பெருமகன் ' என ச் சுபாஸ் சந்திரபோசையும் அவர் குறிப்பிட் Gait 6Trri
நெருடா 1932 இல் சிலிக்கு மீண்டார். இதற்கு இரண்டு ஆண்டுகளின்முன் ஜாவா வில் வாழ்ந்த அன்ரோனியெற்ரு ஹகென் னர் என்னும் ஒல்லாந்த யுவதியை அவர் மணமுடித்தார். 1934 இல் அவர் சிலியின் தூதுவராக ஸ்பெயின் சென்ருர், அங்கு அவருக்கு ஒரு மகள் பிறந்தாள். இப்போ தெல்லாம் அவர் ஒரு பிரபல கவிஞராய்த் திகழ்ந்தார். லத் தீன் அமெரிக்காவிலும், ஸ்பெயினிலும் அவர் பாராட்டுப் பெற்ருர், அரச தூதுவராகிய அவருக்கு நிறைய ஓய்வு கிடைத்தது. கவிதை எழுதவும், நகரத்துத் அதருக்களில் உலாவி வரவும், நண்பர்களு பட்ன் உரையாடயும் அவருக்கு நேரம் இருந் தது. இக்காலத்திலே தான் பிராங்கோவின் பாசிச ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஸ்பெ யின் மக்கள் நிகழ்த்திய வீரப்போர் தொடங் கிற்று சிலியின் துர து வரான நெருடா தலையிடாமைக் கொள்கையைக் கடைப் பிடித்திருக்கலாம், கவிதையின் தத்துவ நுட் பங்களைப் பற்றிப் பேசியவாறே இருந்திருக் கலாம். ஆனல் பப்ளோ நெருடா அவ் வாறு செய்யவில்லை. அவர் ஸ்பெயின் மக் களின் தரப்பிலேயே நின்று கொண்டார். தம்மாலான பணிகளைச் செய்தார், இறுதி யில், சிலி அரசாங்கம் அவரைத் தூதுவர் பதவியினின்றும் நீக்கிவிடுவதென்றும் தீர் மானித்தது.
2

"என் இதயத்தில் ஸ்பெயின்" என்னும் அவரது நூல், ஸ்பெயினில் அச்சாகிய முறை ஈடிணை இல்லாதது. விசித்திரமான பிறப் பையும் வரலாற்றையும் உடையது. அப் புத்தகத்தை, போர்முனை வீரர்களே அச்சுக் கோத்தனர். கடதாசி கிடையாதபடியால், கைக்கு எட்டியன எல்லாவற்றையும்- எதிரி களின் கொடி தொடக்கம், போராளிகளின் இரத்தம் தோய்ந்த சட்டைவரையுள்ள சுக்ல வற்றையும் - தேடிச் சேர்த்து ஒரு பெரிய ஆலையிலே அப்புத்தகத்துக்கு வேண்டிய கட தாசியைத் தயாரித்தனர். அனுபவம் இல் வாதவர்களால் விசித்திரமான பொருள்களி லிருந்து ஆக்கப்பட்டாலும் கட தா சிகள் அழகியனவாகவே அ மைந்து விட் டன, நேர்த்தியான அச்சம்ைப்புள்ள அந்நூலின் பிரதிகள் சில இன்றும் வியப்பைத் தருவன வாக்வே விளங்குகின்றன. உவாஷிங்டனி லுள்ள காங்கிரசு நூலகத்தில், இந்நூலின் பிரதியொன்று ஓர் சிரும்பொருளாக இன்று வரை பேணி வைக்கப்பட்டுள்ளது.
மதிப்பும் கணிப்பும்
இதன்பின் வெகு விரைவிலேயே உலகம் இவரை இனங்கண்டுகொண்டது. "ஆழங் காணமுடியாத புரட்சிப் பாவலர் என ப் பாராட்டியது. 1945 இல், சிலியின் தேசிய இலக்கியப் பரிசு அவருக்குக் கிடைத்தது. ஓராண்டின் பின்னர் மெக்சிகோ அரசாங்கம் "அஸ்தெக் கழுகு' விருதினை அவருக்கு வழங் கிற்று. 1949 இல் அவர் கவிதைகளும், நூல் களும் ஜெர்மனி, செக்கோசிலாவாகியா, டென்மார்க், இத்தாலி, சீன, ஐக்கிய அமெரிக்க இராச்சியம், றஷயா, மெக்சிகோ ஹங்கேரி, கியூபா கொலம்பியா, கெள த மாலா, ஆஜெண்டைன என்னும் நாடுகளிற் பிரசுரமாயின. லண்டனில் வெளியான "அடாம் இன்டநாஷனல்" என்னும் ஏட்டின் ஓர் இதழ் முழுவதும் நெருடாவுக்கே அர்ப் பணிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின் பின் உட னடியாகித் தொடர்ந்த இக்காலப்பகுதி, இக்

Page 15
கவிஞரின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்ததி தளராத சமாதான வேட்கை அவரைப் பற்றிக்கொண்டது.
“வரவிருக்கும் வைகறைகளுக்காய்ச்
Z சம்ாதானம் «s se se es பூமி முழுவதையும் எண்ணி அன்பினை மேசையெங்கும் பூசுவோம். சோறும் கறியும் இசையும் மீண்டும் குருதியால் நிரம்புவதை
விரும்பேன்" - இவ்வாறு எழுதினர்.
சிநம் எல்லாரின் தலைக்கு ம்ேலே குண் டின் அபாயம் தொங்கிக் கொண்டிருந்தர் லும் ஒரு பெரும்பொது மென்மையை நோக்கி மனித குல வரலாறு சென்றுகொண்டிருக் கிறது" என அவர் முழுமையாய் நிம்பினர். கவிதை என்பது ஒரு சமாதானச் செயற் பாடு என்று கிருதினர். பாண் உருவாவ தற்கு மா வேண்டும்; அது போலவே கவி ஞன் உருவாவதற்கு சமாதானம் வேண்டும் என்பது அவர் கொள்கை. கவிஞரின் சமா தான வேட்கைக்கு அஞ்சலியாக 1950 இல் அவருக்குச் சர்வதேச சமாதானப் பரிசு வழங் கப் பட்டது. பப்ளோ பிகாசோவும் இதே பரிசைப் பகிர்ந்து கொண்டார்.
கசப்பான கண்டனம்
1945 இல், சிலி நாட்டுப் பாராளும்ன் றத்தின் செனெற்றராய்த் தெரிவு பெற்ருர் பப்ளோ நெருடா. ஆனல் அவர் ஆட்சிப் பீடத்திலிருந்த அரசினைக் கண் டி க்க த் தொடங்கினர். அனல் 1949-ல், சுப்ஹீம் கோடு அவரைச் செனெற் சபையினன்றும் நீக்கியது. அவரைக் கைது செய்யுமாறும் கட்டளை இட்டது. அவர் தலைமறைவாகி மெல்ல மெல்லப் பிரான்சை அடைந்தார். அப்போது அங்கு சமாதானக் காங் கி ர சொன்றின் கூட்டம் நடந்தது. அங்கு அவர் தம் கவிதைகளில் ஒன்றை வாசித்தார். கூட்டத்தின் பின் ஒரு பிரெஞ்சுச் செய்தி நிருபர் நெருடாவைப் பேட்டி கண்டார். "நீங்கள் பாரிசில் இருக்கிறீர்கள் எள்று பத்

திரிகைகளிலே செய்தி வ்ந்தபோது சிலி அர சாங்கம் அதனைக் கடுமையாய் ம்றுத்தது. இங்கு நாம் காண்பது தங்களைப் போன்ற வேருெரு மனிதரா?’ என்று நிருபர் கேட் டார். இதற்கு நெருடா தந்த பதில் சுவை யானது. "நான் பப்ளோ நெருடா அல்ல; வேருெரு சிலி நாட்டான்; கவிதை எழுதுவ துண்டு சுதந்திரப் போராளி; என் பெய ரும் பப்ளோ நெருடா தான்" என்ரு ர். மாக் ந்வெயின் ஒரு சமயம் ஷேக்ஸ்பியர் பற்றியும் இதுபோலத் தான் குறிப்பிட்டா pr rrud
இப்பொழுது பேரும் புகழும் பெருமள விலே கவிஞரை நாடி வந்தன. 1957 இல் சிலி எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானர். 1960 இல், கவிஞரின் தேரோ " என்னும் கவிதைக்கு ஒ வியந் தீட்டினர் பப்ளோ பிகாசோ. 1965 இல் ஒக்ஸ்ஃபோட் பல்கலைக் கழகம் நெருடாவுக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிற்று. பண்பாட்டுக்கும், சர்வதேச நல்விளக்கத்துக்கும் பாரிய பங் களிப்புச் செய்து உலகப் புகழ் பெற்ருேருக்கு வழங்கவெனத் தொடங்கப்பட்ட ‘வியறெக் கியோ - வேசிலியா' என்னும் பரிசு 1967-ல் நெருடாவுக்குக் கிடைத்தது.
இவை எல்லாவற்றையும்விடப் பெரிய கெளரவம் 1969 இல் அவருக்குக் கிடைத் தது. சிலிப் பொலுவுடமைக் கட்சி ஜனதி பதி வேட்பாளராக்கிற்று. கட்சியின் தனி யொரு வேட்பளராக சல்வடோர் அலன்டே அவர்கள் இருக்க வேண்டுமென எண்ணிய நெருடா வேட்பாளர் நிலையினின்றும் வில கிக் கொண்டார். அலண்டே தேர்தலில் வென்முர்; பப்ளோ நெருடா சிலியின் தூது வராகப் பிரான்சுக்கு அனுப்பப்பட்டார்.
1971 இல் பப்ளோ நெரு டா வுக்கு நோபல் பரிசு கிடைத்தது. அப்பரிசைப் பெற்ற ஆருவது ஸ்பானிய மொழி எழுத் தாளரும் மூன்ருவது லத்தீன் அமெரிக்கிரும் அவரே.
I3

Page 16
இரண்டாண்டுகளே ஆகியிருக்கும் - 1973 செத் தெம்பர் 23 இல் பப்ளோ நெருடா சந்திக்கோவிற் காலமானர். இரா ணுவச் சதிப்புரட்சியினல் அலண்டே வீழ்ச் சியடைந்து 15 நாட்களுக்கிடையிலே கவிஞர் நெருடா மறைந்தார், அத்துடன் லத்தீன் அமெரிக்கக் கவிதையின் ஒரு சகாப்தம் முடி வடைந்தது; பொதுவாகச் சொல்வதானுல் புரட்சிக் கவிதையின் ஒரு சகாப்தம் முடி’ வடைந்தது.
மகிழ்ச்சிமிக்க வாழ்வு
பப்ளோ நெருடாவின் வாழ்வு பரபரப் பானது; ம் ன க் கிளர்ச் சி நிறைந்தது; தொண்டு நிரம்பியது; அத்துடன் மகிழ்ச்சி மிக்கது என்றுஞ் சொல்லப்படுகிறது. நெரு டாவைப் பொறுத்தவரை கவிதை வேறு, போராட்டம் வேறு அல்ல. . “ தூய கலை என்பது வெறுஞ் செய் வினை சூனியமே.”* என்று அவர் ஒரு தடவை குறிப்பிட்டார். ஓர் ஊக்கமுள்ள கவிஞர் என்ற வகையில், 'தன்னுள் ஒடுங்கும் தன்மையை எதிர்த்து வென்ருர்; தம் அகத்துக்கும் புறத்துக்கு மிடையே நிகழ்ந்த போராட்டத்தைத் தகுந்தவாறு தீர்த்துக் கொண்டார். "மக்க ளுக்காகவே நான் எழுதுகிறேன்; அவர்கள் படிக்க முடியாதே என்ருலும் பரவாயில்லை . மர்மமான நிழல்களோ ஆவிகளோ இல்லை; உலகெல்லாம் ன்ன்னுடன் பேசு கிறது."
அவர் நாற்பதுக்கும் அதிகம்ான நூல் களை எழுதினர். பூமியில் வதிதல், பொது மைக் காண்டம், சிலியின் கல்லுகள், பய ணங்கள், இருபது காதற் கவிதைகள், ஒரு கையறுநிலைப் பாட்டு என்பன அவற்றுட் சில அத்துடன் எதார்த்தத்தின் தத்துவ விளக்கத்தை மூன்று தொகுதி கொண்ட ஆய்வு நூலாக ஆக்கினர்.
அறிவாளிகளுள் மிகச் சிலரே தம் இந்தனக்கும் செயலுக்குமிடையே அம்ைதிக் கும் ஆரவாரத்துக்குமிடையே, கொள்கைக் கும் நடைமுறைக்குமிடையே ஒரு நுட்ப மான இசைவினைத் தோற்றுவிக்க வல்லவர்
l4

கள். அந்தச் சிலருள் ஒருவராய் நெருடா திகழ்ந்தார். ஒவ்வொரு கலைஞனும் தன் கலைக்கும் சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய க்ட்மைப்பொறுப்பு யாதென்பதை நினைப் பூட்டி வைக்கும் ஒருவராக நெருடா விளங் குகிருர், ஒருமுறை அவர் வெளியிட்ட கருத்துப் பின்வருமாறு - "இக்காலக் கவி ஞர்களாகிய நாம் தெரிந்தெடுக்க வேண்டிய தொன்று உண்டு. அது ஒரு பூம் படுக்கை அல்ல. பயங்கரமான அநியாயமான போர் கள் இடையருது நசுக்குகின்றன. அநீதிக ளெல்லாம் கடுமையாய் வருத்துகின்றன. கவிதை என்பது மனிதனின் அடியாளத்தி லிருந்து எழுவது, அதனிடமிருந்தே துதி களும் தோத்திரங்களும் சமயங்களின் உட் பொருளும் வந்தன. இன்றைய சமூகக் கவிஞனும் பண்டைய குருநாதர்களும் ஒரே வரிசையைச் சேர்ந்தவர்களே, அன்று அவன் இருளுடன் சமரசஞ் செய்துகொண்டான், இனி அவன் ஒளியை வியா க் கியான ஞ் செய்ய வேண்டும்."
அவரது க்விதை தான் தாங்கிச் செல் லக்கூடிய எதனையும் விலக்கி வைக்கவில்லை. அது எழுச்சியை ஏற்றுக்கொண்டது; ԼDO5 மங்களைத் துலக்கிற்று; மக்களின் இதயங் களுள் நுளைந்தது. இதைவிட வேறு எது வேண்டும், ஒரு கவிஞனுக்கு? மனிதனின் விருப்புகள், கண்ணீர்கள், முத் தங்கள், தனிமைகள், பாசங்கள் - இவையெல்லாம் அவர் கவிதைகளிற் புத்துயிர் பெறுகின்றன. அவரே கூறுகிருர், பின்வருமாறு - " என் மக்களின் கவிஞன் ஆவதற்குக் கடுமையான , பயிற்சியும், நெடு மையான தேடலும் எனக்கு அவசியம்ாயின. அதன் பேருன பரிசு இது. ஒரு நாள் லோதா நிலக்கரிச் சுரங்கத்தின் இருளுலிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டான். தனது கையை நீட்டிய படியே வெட்ட வெளிச்சத்தில் அவன் என்னை நோக்கி வந்தான். அவன் கண்கள் மின்னின. அவன் சொன்னன் - தம்பி உன்னை நெடுங்காலமாய் நான் அறிவேன்." என் வாழ்வின் பயனை நான் உணர்ந் &ラ தருணம் அது."

Page 17
நூல் அறிமும்
சமூகவியலும், இலக்கியமும்
நவீன தமிழ் இலக்கிய விமர்சனத்தில் இரசனை வாதம், சமுதாய விமர்சனம் என் னும் இருவகைப் போக்குகள் உள்ளன. இர சண் வாதம் இலக்கியத்தின் இரசனை அம்சங்களை "நயங்களை எடுத்துக் கூறு வது. சமுதாய விமர்சனம் இலக்கியத்தின் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள தொடர்பையும், இலக்கியம் தோன்றிய சமூ கப்பின்னணியையும் விளக்கிக்கூறும் இப் போக்குகள் இரண்டும் ஒன்றிற்கு ஒன்று எதிரானவை அல்ல. எனினும் இரசனை வாதிகள் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவை சிலவேளைகளில் முற்ருகவே மறுப்பதும், அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறுவதும் காரணமாகவே முரண் பாடு தோன்றுகிறது.
இரசனைவாதிகளுள் டீ. கே. சி. பிரபல மானவர் ஆ. முத்துசிவன், லெ. சண்முக சுந்தரம், வி. செல்வநாயகம், கனக. செந்தி நாதன், அ. சீனிவாசராகவன், கு. அழகிரி சாமி ஆகியோரும் இத்தகைய விமர்சனங் களையே எழுதினர். இவர்கள் போக்குக்கு மாருக இன்று சமுதாய விமர்சனம் செல் வாக்குப் பெற்றுவருகிறது. இதற்குப் பிர தான காரணம் ஒன்று உண்டு. செய்யுள் தான் இலக்கியம் என்றும் வசனத்தில் 6τ(ιρ தப்படும் நாவல் சிறுகதை இலக்கியம் அந் தஸ்து உடையன அல்லவென்றும் கருதப் பட்ட காலத்தில் கவிதைகளின் நயம் கூறும் முறை ஏற்றதாக இருந்தது. உரை நடை இலக்கியங்களான நாவல் சிறுகதைக்கு மதிப்பு ஏற்பட்டபின்னர் இவைபற்றிய விமர் சனங்களை எழுதுவோர் ‘நயம் கூறும் முறை பின் போதாமையை உணர்ந்தனர். நாவல்,

க. சண்முகலிங்கம்,
சிறுகதை நூல்கள சமூகப் பின்னணியுடன் இணைந்து ஆராயாமல் விமர்சனம் எழுத முடியாத நிலையே உண்டாகியது எனலாம். காலப்போக்கில் பழைய செய்யுள் இலக்கி யங்களையும் நவீன கவிதையையும் கூட சமு தாய விமர்சனத்திற்கு உட்படுத்தும் நூல் கள் பெருகின. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சமூகவியலுக்கும் இலக் கி ய த் திற்கும் உள்ள உறவு தெளிவாக உணரப் பட்டது.
சமுதாய விமர்சனத்தின் அவசியத்தை ஆரம்ப முதலே வலியுறுத்தி வந்த விமர் சகர்களுள் ஒருவரான கலாநிதி க. கைலாச பதியின் 'சமூகவியலும் இலக்கியமும்" என். னும் நூலை மேற்கூறிய பின்னணியில் நோக் கும் பொழுதுதான் இந்நூலின் சிறப்பை யும் முக்கியத்துவத்தையும் அறிதல் கூடும். கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு சந்தர்ப் பங்களில் எழுதப்பட்டவற்றைத் தொகுத்து ஐந்து கட்டுரைகளாக இந்நூல் தருகிறது. வெவ்வேறு விடயங்களைப் பற்றிய ஐந்து கட்டுரைகளிலும் விரவி நிற்கும் பொதுத் தன்மையான "சமூகவியலும் இலக்கியமும்" என்னும் தலைப்பு இடைப்பட்டுள்ளது.
சமூகவியல் ஆய்வுமுறையை இலக்கியத் துறையில் ஆரம்பகாலம் முதல் முற்போக்கு இலக்கியவாதிகளே வற்புறுத்தி வந்துள்ள னர். இலக்கியத்தின் சமூகப்பயன், சமூகத் தொடர்பு பற்றிய அக்கறையற்றவர்களான முற்போக்கு எதிர்ப்பாளர்கள் சமூகவியல் ஆய்வைப் புறக்கணித்ததில் வியப்பில்லை. ஆனல் இன்ருே முற்போக்காளர் அல்லா தோரும் சமூகவியலைத் துணைக்கு அழைக்கும்
游5

Page 18
நிலையில் புதுவகையான நிலைமை ஒன்றைக் கிாண்கிருேம். அதுயாதெனில் முற்போக்கு எதிர்ப்பாளர்கள் புரட்சிகர சமூக வியலை நிராகரிக்கும் பிற்போக்குவாத சமூகவியல் கருத்துக்களை தமது விமர்சனங்களில் புகுத்து வதுதான். இத்தகைய விமர்சனங்களுக்கு தகுந்த உதாரணங்களாக தமிழ் நாட்டில் வெ. சாமிநாதனின் எழுத்துக்களையும் ஈழத் தில் மு. தளையசிங்கத்தினதும். அவரது சீடர்களது எழுத்துக்களையும் குறிப்பிடலாம். ஆகவே இலக்கியத்தில் சமூகவியல் ஆய்வு முறையை ஒரு வ ர் கைக்கொண்டுள்ளார் என்பதால் மட் டு ம் ஒருவரது விமர்சனம் உயர்ந்ததாக விஞ்ஞான பூர்வமானதாக அமைவதில்லை. அவர் எத்தகைய சமூகவி யலை ஆதரிக்கிருர் என்பதே முக்கியகேள்வி.
*சமூகவியலும் இலக்கியமும் என்னும் முதலாவது கட்டு  ைர சமூகவியலுக்கும் இலக்கியத்திற்கும் உள்ள இன்றியமையாத பிணைப்பையும், மேற்கு நாட்டு முதலாளித் துவ சமூகவியலின் முக்கிய போக்குக்களை யும் மார்க்சீய சமூகவியல் எங்ஙனம் விஞ் ஞான பூர்வமானது என்பதையும் விளக்கு கிறது. கட்டுரையின் இறுதிப் பகுதியில் சமூகவியல் கோட்பாடுகள் எப்படி இலக்கிய ஆசிரியன் கையாளும் பொருள், உத்திமுறை, நடை என்பனவற்றைப் பாதிக் கின்றது என்பதனைச் சில உதாரணங்களையும், ஆசிரி யர் தந்துள்ளார்.
இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவுகள் மிக நுட்பமானவை. ம்ாந்திரீக முறையில் இத் தொடர்புகளை வாய்ப்பாடு கள் போல் ஒப்புவித்தல் விமர்சனம்ாகாது. "தன்னுணர்ச்சி பாடல்களும் தனி ம னி த வாதமும்’ என்னும் கட்டுரை இந்தநாளில் உள்ள கட்டுரைகளில் தனிச்சிறப்புடையது, நவீன கவிதை யின் அடிப்படைகளையும். அதன் பரிணுமத்தையும் விளக்கிக்கொள்வ தற்கு இக்கட்டுரையும் கைலாசபதி எழுதிய ஒப்பியல் இலக்கியம் என்னும் நூலில் உள்ள *சிந்துக்குத் தந்தை” என்னும் கட்டுரையும் சிறந்த அறிமுகம்ாக அமைவன. “தனது
6

அனுபவம், எண்ணம், கருத்து, சிந் த னை என்பன் மதிப்புக்குரியவை. குறிப்பிடத் தக்கவை, வெளியிடக்கூடியலவ எனக் கவி ஞன் நம்பும்போதே, தன்னுணர்ச்சிப் பாட் டுத் தோன்றுகிறது.’ (பக் 50) எனத் தன் னுணர்ச்சிப் பாடலின் இயல்பை விளக்கும் ஆசிரியர் சங்கப் பாடல்கள் முதல் நவீன கவிதை வரையான வரலாற்று முறையான உதாரணங்களைக் காட்டித் தன்னுணர்ச்சிப் பாடல்களிற்கும் தனிமனித வாதத்திற்கும் முனைப்புப் பெற்றுள்ள சமூகத்திற்கும் உள்ள நுட்பமான உறவுகளை விளக்குகிருர்,
"தமிழிலக்கிய மரபில் வளர்ந்த பொதுமைச் சிந்தனைகள் சங்க காலம் முதல் இன்று வரையான பொதுமைச் சிந்த னை களைத் தொகுத்துக் கூறுகிறது. நவீனகால உரைநடை இலக் கி யங் களில் வளர்ந்த பொதும்ைச் சிந்தனைகளை ஆசிரியர் விரிவஞ் சித் தவிர்த்துள்ளார் போலும். இந் தி ய வரலாற்றை ஆராய்ந்த டி. டி. கோசாபி என்னும் மார்க்சிஸ்ட் அறிஞர் ஐரோப்பிய சமூகங்களில் நிலவியது போன்ற பலாத்கார ஒடுக்குமுறை இந்திய சமூகத்தில் தீவிரம்ான தாக இருக்கவில்லை என்கிருர். இதற்குக் காரணம் வர்க்கச் சுரண்டலை நியாயப்படுத் தத் தத்துவமும், சமயமும் பெரு ந் துணை புரிந்தமையே என்றும் அதன் மூலம் பலாத் காரம் ஒப்பீட்டளவில் குறைந்த அளவே தேவைப்பட்டதென்றும் அவர் கூறு வார். அத்தகைய ஒரு சமூகத்தில் ஆளும் வகுப் புக்கு எதிரான எதிர்ப்பு அறிவுலகில் தத்து வம், சமயம், இலக்கியம் என்பனவற்றில் பிரதிபலித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நவீன சோஷலிசத்தில் இந்தப் பாரம்பரியத் தைப் புனர்நிர்மாணம் செய்தல் அவசியம். தமிழின் லோகாயுத தத்துவ பாரம்பரியத்தை நா. வானமாமலை சிறப்பாக, ஆராய்ந்து எழுதியுள்ளார் (பரபக்கலோகாயுதம் என் னும் ஆய்வுக்கட்டுரை) சாமி. சிதம்பரனர், ம. பொ. சி. ஆகியோர் தமிழ் இலக்கியத் தில் பொதும்ைக்கருத்துக்கள் பற்றி எழுதி யுள்ளனராயினும் தமிழ் இலக்கியம் முழு வதையும் பற்றி ஓரளவு விரிவாக ஆராய

Page 19
முன்வந்துள்ள கட்டுரை இதுவெனலாம். அத்தோடு முன்கூறிய இருவரையும் விடக் கைலாசபதியின் ஆய்வுமுறை ஆழமானதும் நுட்பமானதும் என்பதைக் கூறவேண்டிய தில்லை. சங்கப் பாடல் களி ல் வரும் "பாத்தூண்” என்னும் கருத்து மறைந்து போன பொற்காலம் பற்றிய ஏக்கத்தையே பிரதிபலிக்கிறது என்கிருர், பிற்காலத்தில் "பாத்துரண்' எனும் இப் பொதுமை அறம் ஈதல், பகுத்துண்ணல், பழியஞ்சுதல் என்ற கருத்துக்களாக வள்ளுவரால் இலட்சியப் படுத்தப்படுகின்றன. வள்ளுவர் கூறும் பொதுமை அறம் வர்க்க சமூகத்தின் அடிப் படைகளைத் தட்டிக் கேட்கும் கோட்பாடாக அமைந்ததா என்ற பொருத்தமான கேள்வி யினை எழுப்பும் ஆசிரியர் இது வெறும் சம ரசவாதமே என விளக்குகிருர், ஈ த ல், பகுத்துண்ணல், பழி யஞ் சு த ல் என்பன சுரண்டல் எதிர்ப்பு உள்ளடக்கத்தைக் கொண்ட போராட்டக் கருத்துக்களாக அம்ையவில்லை என்பதே உண்ம்ை, அரr பிய நாடுகளின் சமய தத்துவம் வட்டி அற விடுதலைக் கண்டித்தது. ஏழைகளுக்குத் தானம் கொடுத்தல் கடமையாகப் பணித் தது. எனினும் இவை இரண்டும் நடை முறையில் வணிக சமூகத்தின் கரண்டை எதிர்க்கும் கருத்துக் களாகச் செயல்பட வில்லை என்பதை மக்சிமி ரொடின்சன் என் னும் ஆய்வாளர் "இஸ்லாம் அன்ட் கரட லிசம்" என்னும் தமது நூலில் ஆதாரபூர்வ மாக ஆராய்ந்து காட்டுகிருர், இது போன் றதே வள்ளுவமும் என்பதை இக் கட்டுரை தெளிவாக்குகிறது.
சித்தர் தத்துவம் தமிழ் இலக்கிய மர பில் தனித்துவமானது. சித்தர் தத்துவத் தின் முற்போக்கு அம்சங்களே ஆசிரியர் இக் கட்டுரையில் குறிப்பிட்டுச் சொல்கிருர், இந்திய தத்துவங்களில் முற்போக்கான கருத் துக்களை முன்வைத்த பொருள் முதல்வாதிக ளான லோகாயுதர், சாங்கியர், நியாய வைசேடிகர் ஆகியோரை ஏனைய கருத்து முதல்வாதிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட் டு ம் தனித்துவமான பண்புகளாகப்
* பேராசிரியர் டி.சட்டோபாத்யாய மூன்றைக்

குறிப்பிட்டுள்ளார். அ வை யா வரை. 1. சம்யச் சார்பின்மை 2. பகுத்தறிவு வாத்ம் 3 விஞ்ஞானம். சித்தர்களும் இம் மூன்று கருத்துக்களையும் வற்புறுத்தி களாய் விளங்குவதை நாம் காண்கிருேம். m இவர்கள் சமூக ஒடுக்குமுறையை ஆட்சே
பித்த புரட்சிவாதிகளாவர். சமூக ஒடுக்கு முறைக்குச் சார்பாக விளங்கிய கிருத் து முதல் வாதம் சமயச்சார்பு, மூடநம்பிக்கை, விஞ்ஞான மறுப்பு என்ற மூன்றையும் பற் றுக்கோடுகளாகக் கொண்டது. எவ்வாறி ருப்பினும் சித்தர்களாலும் ஏனைய பொது மைவிரும்பிகளாலும் *மூக மாற் றத் துை ஏற்படுத்தும் தத்துவம் ஒன்றை உருவாக்கும் குழல் அன்று இருக்கவில்ஆல என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகிருர், உற்பத்திச் சக்தி களின் வளர்ச்சிக் குறைவு தத்துவத்திலும் விஞ்ஞானத்தினதும் வளர்ச்ச்ெ குறை வில் தன்னை வெளிப்படுத்தியது.
பத்தொன்பதாம் நூற்றண்டில் வாழ்ந்த இ ரா ம் லிங் கர், கோபாலகிருஷ்ணபாரதி ஆகிய இருவர் கருத்துக்களும் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. இராமலிங்க சுவாமிகள் பெயர் ஒரிடத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. பின்னவர் பெயர் இக்கட்டுரை யில் குறிப்பிடப்படவில்லை. பள்ளுப் பிரபந் தங்களின் தன்மை எத்தகையது என்பது பற்றியும் இக்கட்டுரையில் குறிப்பு எதுவும் தரப்படவில்லை. .
இருபதாம் நூற்றண்டு இலக்கியத்தில் பொதுமைச் சிந்தனைகள் பற்றி ரகுநாதன், ஆர். கே. கிண்ணன், நா. வானம்ாம்லை ஆகி யோரும் கைலாசபதியும் பிற நூல்களில் Grifflanurrs எழுதியுள்ளார்களாதலால் இந்தக் கட்டுரையில் இடம் பெறும் பொதுக் குறிப் புகள் பற்றி விசேடமாகிக் குறிப்பிடுவதற் கில்லை.
இசைத்தமிழ் வளர்ச்சியில் நாட்டார் பாடல்களின் பங்கு என்னும் கட்டுரை சங்கி காலம் முதல் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் வரை நாட்டார் இலக் கியம் இசைத் தமிழ் வளர்ச்சிக்கு உதவியதை
(21-ம் பக்கம் பார்க்க) 17

Page 20
சிறுகதை
நண்பனும் ஒரு புளியமரமும்
ஒரு மாலேநேரத்தில் நண்பன் வந்தான். " மஞ்சள் வெய்யில் மாலேயிலே " எ ன் ற பாட்டைப் பாடிக்கொண்டே திண்ஃரையில் அமர்ந்தான். நானும் அமைதியாகக் கேட் டிருந்தேன். அவன் ஒரு விசித்திரப்பிறவி,
அவன் ஒரு முரட்டுத்தன்மை வாய்ந்த வன் என்று ஊரில் விலாசம். த னக் கு நியாயமெண்டால் கை நீட்டவுந் தயங்கான் பாலியகாலத்து குறும்புத்தனங்களால் குடி பரசுச் சட்டத்தின் கீழ் இராசாங்க விருந் திண்ணுகக்கூடச் சென்று வந்தவன். அதனுல் ஊரவர் அவனுக்குச் சரியான மரியாதைஅவனேக் கண்டால் பலர் தா னு ம் த ன் பாடும் என்று போவர். சிலர் உதட்டள வில் மாத்திரம் சிரித்துத் தலேயசைப்பர். ஆணுல் அவனும் மனிதன்-அவனுக்கும் எல் லாரையும்போல வாழ ஆசையுண்டு என் பதை சிலரே உணர்வர்.
இவ்வளவிற்கும் அவன் நல்லவன். மற் றவரின் துன்பத்தைக் கண்டு கொதிப்பவன். அதற்காக பல அசெளகரியங்களே தானே ஏற்றுக்கொண்டவன். இந்த நிலேயின் தான் அவனும் மற்றவரைப்போல் திருமணம்காதல் திருமணம் சேர்ந்தவளும் நல்லவன். சொத்துச் சுகம் ஏதும் இ ல் லா த வ ள். வாழ்க்கை திண்டாட்டந்தான்.
இப்போதெல்லாம் என க்கு ம் வேலே இல், வேலே போய்விட்டது, அவனுடைய
|LTL Li ਘਰਸ਼ அந்தப்பாடவின் அடி உரத்துப் பாடிவிட்டு நிறுத்திக்கொண்டான். எனது மெளனத்திற்கும் அவனே முற்றுப்புள்ளி வைத்து பேச்சைத் தொடங்கினுள்.
IE

点, ஆனந்தமயில்
" என்ன நடா, எத்தினை நாளேக்கெண்டு பொறுக்கிறது. இந்தச் சன ங் தள் யோசிக்குதுகளில்ஃயே. ப ட் டி னி பி , நீ யும் சாகப்போகிருய், நானும் சாகப் போறன். எப்ப புரட்சி வரப்போகுது."
* முட்டை சரியான நாள் வரேக்கைதான் குஞ்சு பொரிக்கிறது. அதுமாதிரி சமுதா யமும் பக்குவப்படேக்கைதான் புரட்சி வெடிக்கும். அதுக்கு இ ன் னு ம் நாள் வரேல்வேப்போதுே. ச
நான் சிரித்துக் கொண்டேன்.
" உந்த கோழிக்குஞ்சுக் கதை கன 画Tār厅 அடிபடுகுது. இப்ப உதைவிடு. எப்பிடி உன்ரை இந்த நாளே பச் சி வியம் போகுது."
" எதோ ஒரு விதமா மூண்டுமாதம் கட னில் ஒடி விட்டுது. இனியும் கன்நாளேக்கு ஒடேலாது. தொடர்ந்தும் என்னே நம்பி ஆர் சுடன் தரப்போருங்சள், தொழில் செய்ய வேணுமெண்டல், என்ன செய்யிறதெண்டுதான் தெரிய us & C SIT UIT:”... " "
மூலாதாரம் இல்லாட்டி ஒண்டுஞ் செப் யேலாது நடா. மூலாதாரம் ਪਾ தான் ஒருவிதமா காலத்தைக் கழிக்கிருன், என்னப் பாரன்-நான் பர்ற பாட்டை, ஒரு தொழிலும் நியோர் விடக்குதில்லை.
। ਪੈ। | ਸੰਘ ਘ பயம்ாக்கிடக்கு."
அவனுடைய குரல் கம்மியது. அதில் துயரம் கலந்திருந்தது. ஆணுல் அவ ன்

Page 21
சமாளித்துக் கொண்டான். நான் நேரடி யாகவே விஷயத்துக்கு வந்தேன்.
* உன்ரை சீவியப்பாடு எப்பிடி. மத்தியா னம் சாப்பிட்டாச்சோ. தலையாட்டாம்ல் சொல்லடாப்பா. *
* நேற்றும் இண் டும் கல் கலப் பா நடக்குது. முந்தநாள் ஒரு ஐம் பது ரூவா கிடைச்சுது. அது ஒரு சுவையான கதை நடா.
என்று சொல்லிக்கொண்டே சிரித்துக் கொண்டான். மெல்ல எழுந்து போய் வேலிக்கரையில் துப்பிவிட்டு வந்து சம்மாலி கட்டி அமர்ந்து கொண்டான், நானும் ஆவலுடன் அவன் கதையில் லயிக்கலா னேன்;
* முந்தநாள் வெள்ளிக்கிழமை. நித்திரை
யாலை எழும்ப பிள்ளை அழுது கேக்குது மனிசியும் பஜனை வைச்சுக் கே க் கி து எனக்குத் தெரியும் ள்ல்லாம் "பசி? செய் கிற வேலை எண்டு, இனியும் வீட்டிலை , இருக்கேலாதெண்டு நினைச்சன். துவாய்த் துண்டை எடுத்துக்கொண்டு நேரா எரிஞ்ச வைரவ கோயிலுக்கு நடந்தன். அதுக்கு இடைச் கிடை கூட்டித் தண்ணி தெளிக்கிற ஞன். அது தனியிடம் - சனசந்தடியும் குறைவு. வைரவரே.இண்டைக்கு என்ன செய்யப்போறன். ஏதேனும் நீ தான் வழியைக் காட்டு எண்டு வைரவ சுவா மியை நினைச்சுக்கொண்டே கூட் டி க் கொண்டு நிண்டன். அப்பளண்ண் நீலா மேத்திரியார் வாழுர், வந்தவர் என்ன தம்பி. அங்காலை கிடக் கிற காணி ஆற்றை எண்டார். m
* ஏன் மேத்திரியார் என்ன விஷயம் சொல்லுங்கோ’ எண்டு ஆவலாய்க் கேட் டன், "இல்லை தம்பி - அதிலை நிக் கிற புளியமரம் சோக்கான புளியமரம்; வள்ளத் துக்கு முண்டிக்குத் தேவைப்படுகுது. * எண்டார். வைரவர் இண்டைக்கு வழி

விட்டுட்டார். எண்டு நிாைச்சன் ம்ேந் திரியாரும் அவ்வளவு சன ஊடாட்டம் இல்லாதவர் எண்டதும் எனக்குத் தெரி யும். விஷய த் தை க் கெட்டித்தனமா முடிக்கவேணுமெல்லே.
-? இதென்ன உங்களுக்கில்லாததே!. உந்'
தக் காணி ஆச்சியாக்கடைதான். அவை யள் தங்களுக்கு தூரமெண்டு உதைப் பாக்க இத்தப்பக்கம் வாறேல்லை. நான் தான் உதின் ரை வேலியை, பனங்காயை பாக்கிறனன். உங்கடை அந்தரத்துக்குத வாட்டி உந்தப் புளி யை என்னத்துக்கு மேத்திரியார். கோடாலியையும் வண்டி லையும் கொண்டாங்கோ. இப்பவே தறிச் சுக்கொண்டு போகலாம்' எண்டன்.
மேத்திரியாருக்கு முகமெல்லாம் பல் லாத் தெரிஞ்சுது. எதுக்குத் தம்பி விலையைக்கிலை யை பேசிப்போட்டெல்லோ தறிக்கவே ணும் எண்டார். 'எனக்கு மணிசர் தான் வேணும் மேத்திரியார். சரிஎன்ன விலைக்கு எடுக்கப்போறியள் எண்டன். "நான் அநி யாயம் செய்யல்லைத் தம்பி. எழுபத்தைஞ்சு ரூவா தாறன்’ எண்டார். "பொருள்பெரி சோ-மணிசர் பெரிசோ ஐம்பதையும் தாங் கோ. எண்டன்.
மேத்திரியாருக்கு வலு புழுகம். உடனே வண்டிலை கொண்டந்தார்" உந்த பிள்ளைப் பிலா மாதிரி அதுவும் ஒரு சின்னப் புளிய மரம்நானே தறிச்சு வண்டில்லை ஏற்றி விட் டிட்டன், “மேத்திரியார் நான் ஒரு அலு வலா ஊர்மனைப்பக்கம் போற ன் காசை ஒருக்கா வீட்டிலை கூப்பிட்டுக்குடுங்கோ எண் டிட்டு பெருங்கோயிலடி மடத்திலை போய் படுத்திட்டன்" .
என்னுல் சிரிப்பை அடக்க முடியவில்லை அவனும் தொடர்ந்து சிரித்துக் கொண்டே கதையைத் தொடர்ந்தான்.
9

Page 22
*" கேளன். பிறகுதான் ஆகலும் பகுடி. நான் மடத்திலை படுத்திட்டு வீட்டை போறன் - மனிசி சிரிக்கிருள். நான் ஒண் டும் நடக்காதமாதிரி என்னெண்டு கேட் டன். மேத்திரியார் காசுகொண்டு வரேக் கை மாமியும் நிண்டவவாம் மேத்திரியார் என்னைக் கூட்பிடேக்க முதல்லை மாமிதான் வந்திருக்கிரு. மருமேனெட்டை ஒரு புளி யமரம் வாங்கின்னுன் பாருங்கோ, அந்தக் காசைக் குடுக்கக் கொண்டந்தனன் எண் டாவாம். மாமி மனிசியை கூப் பி ட் டு, பிள் ஸா மரு மேன் ஒரு புளி வித்தவராம் மேத்திரியார் காசு கொண்டந்திருக்கிருர் எண்டாவாம். ம்னிசி வாயை முந்தானைச்
சீலை யாலை மறைச்சுக்கொண்டு கா சை வாங்கியிருக்கு. அவர் போனுப்பிறகு, மாமி கேட்டாவாம் மனிசியை, ஏன் பிள்ளை ம்ரு மோன் ரை தாய்வழியிலை ஏதும் காணி எரிஞ்ச வைரவர் கோயிலடியிலை கிடக் கோவெண்டு. ம் னி சி சொல்லியிருக்கு.
அவைக்கு குடியிருக்கிற காணியை விட வேறைகாணி கிடக்கிறதா அவர் சொல்லை யில்லை எண்டு. நாக்மறுப்பான் ஆற்றை புளியைத்தறிச்சு வித்தானே. இக்காலம் வழக்கு கணக்கெண்டு ஆர்வாருனே எண்டு மாமி தலையிலை அடிச்சாவாம்'
நான் வயிற்றைப் பிடித்துக்கொண்டே சிரித்தேன்' அவனும் சிரித்தான். சி ரிப் பு ஓய்ந்து பழைய நிலைக்குவர அதிக நேரம் பிடித்தது. ** கோபால். ஆர் அந்த காணிக்காரன். அவனுக்கும் அது தெரிஞ்சிட்டுதோ. சிரிப் புடன்தான் கேட்டேன்.
** நாவலடி நாக்முத்துவின்ரை காணிதான் அது. இப்ப வரேக்கையும் கண்டனுன். முகத்தை ஒருமாதிரி வைச்சுக்கொண்டு போனர். விசயம் தெரியும்போலை. ஆன ஒண்டும் பேசேல்லை.”
கதைக்கும்போது சிரிப்பு வந்ததாலும் அதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் போல எனக்குத் தோன்றியது. நான் ஒரு "நியாயவான்’ மாதிரி கேட்டேன்.
20

** கோபால் இப்படியெல்லாஞ் செய்யிறது
சரியெண்டு நினைக்கிறியே..??
அவனுடைய முகத்தில் சிரிப்புக்களை போய் கோபக்களை தெரிந்தது. முகம் சிவந் திருந்தது. -
* இந்த சமூக அமைப்பிலை இது பிழை தான் நடா...ஒண்டையோ சித்துப்பார். 'இந்த சமூக அமைப்பிலைதான் கடைவச்சு கொள்ளை அடிக்கிறவன் இருக்கிருன். வட்டி வாங்கிறவன்-அதிலும் அறவட்டி வாங்கிறவன் இருக்கிருன். ஊர்முழுக்க கோவில் கிா னியை வைச்சுக்கொண்டு ஒருதனே அனுபவிக்கிருன். இன்னும் இஞ்சைதான் எத்தனையோ தேசவிரோத செயல்களை செய்யிறவங்களெல்லாம் இருக் கிருங்கள். அதையெல்லாம் சரியெண்ட மாதிரி மதிச்சு, பலரும் அவங்களை யெல் லாம் கெளரவிச்சு அவங்களுக்கு அடி பணிஞ்சு போறதையும் ம்ரியாதை செய் கிறதையும் காணிறம் ஆன இதை.
"ஆத்திரப்படாதை கோபால். அவை யெல்லாம்பிழைதான். அதுக்கா நாங்களும் பிழை செய்யிறதே. 5 s
* ஆற்றையோ புளிய மரத்தை தறித்தது பிழைதான். என்ன செய்கிறது. வயித் துக் கொடும்ை. அதனுலைதான் பாரதி யார் கூட “தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில் இச்சுகத்தினை அழித்திடுவோம்"
என்ருர் போலை. - இவ்வளவுக்கும் தான் என்ன ஒரு சின்ன புளியம்ரத்தைதானே தறிச்சு வித்தன்." சொல்லிவிட்டு சிரித்தான்.
"உதை நியாயப்படுத்த பாரதியாரை இழுக் காதை . அவர்பாவம், நாங்க ள் ஒரு கோட்பாட்டிலை நம்பிக்கை வைத்திருக்" கிறஞங்கள். முடிஞ்சளவு மற்றவை க் கு எடுத்துக்காட்ட வாழப்பழக்வேணும் அப்ப தான் அதை வளக்கலாம். எதிர்பாப் பை வெல்லலாம்.

Page 23
நான் ஏதோ "பெரிய" போதனை செய் தவன் மாதிரி நிமிர்ந்து உட் கார்ந்தும் கொண்டேன்.
** ị5L-rr gỗ சொல்லிறதெல்லாம் சரி. ஆன
நான் என்ன செய்ய."
*"சரி புளியமரத்தோடை ர ண் டு நாள்
போயிட்டுது. நாளைக்கு என்ன செய்யப்
போருய். இனியும் வைரவகோயிலடிக்கு போறயோசினை இருக்கோ...?? '
*? ஏனில்லை. வாறவெள்ளியும் போவேன். அந்த புளி நிண்டதுக்குப் பக்கத்திலை ஒரு நாவல் மரமும் நிக்கிது. "பசிக்கு கண் தெரியாமல் வரேக்கை அதுவும் உதவும். ஒரு அடை ம்  ைழ க் கை தா ன் அ தை வெட்டவேணுமாம். வெய்யில் நேரத்தில்ை வெட்டினுல் வெடிச்சுப்போம்ாம். அடை மழைக் கை வெட்டிப்போட்ட்ாத்தான் பால்வத்தி, இறுகிக் காயுமாம், மேத்திரி யார் சொன்னவர்." -
அவன்பலமாக சிரித்துக் கொண் டான். எனக்கு எரிச்சலாக இருக்கிறது.
அதையும் மேத்திரியாரெட்டை விலபே சிப் போட்டாய்போலை. சும்மா பகிடி யை விட்டிட்டு மற்றவையோடை அண்டி ஏதுந் தொழிலை தொண்டைச் செய்துநாளாந்தம் அஞ்சைப்பத்தை உழைச்சு, இண்டையுக் காலத்தை போக்கப் பழக வேணும் கோபால்.’
நான் இப்படி ஒன்றை உடனே கூறி யிருக்கக் கூடாது அவ னு  ைடய முகம் கறுத்துவிட்டது. ஆனல் சொற்ப நேரம் இடைவெளிவிட்டு, பேசத்தொடங்கினன்.
"நீ சொல்கிறது சரிதான் நடா. முழுக்க முழுக்கசரி. ஆன நான் நெடுக் கம்மாவே இருந்தன். ஒருநாள் போன ஒருநாள் கையை காலை அடிச்சு சீவித்துத்தான் வாறன், ஆன மழைபணியெண்டா சனி யன் இந்த "தொய்வு வேறை வத்திடுது.

தலையை நிமித்தி ஒண்டும் செய்யேலாமல் வந்திடும். எனக்கும் எல்லாரையும் ப்ோலை வாழ ஆசையில்லையே நடா.ஆன என்ரை நிலை மை உனக் குந் தெரியுந் தானே! இனசனம்ே என்னை அண்டின தங்களுக்கு கரைச்சல் எண்டு ‘யோசிச்சு விலத்தி நடக்குது. அப்பமற்றக் கிட்டை ஏதும் எதிர்பார்க்கிறதெப்படி. எல்லாரும் தாங்களும் தங்கள் குடும்பமும் எண்டி ருக்கிருர்கள். வாழ்க்கையை நினைச் சா கசப்பாகத்தான் இருக்கு. சிலநேரத்திலை தற்கொலை செய்ய லா ம்ெ ன் டு கூட யோசினை வரும். ஆணு அது கோ  ைழ த் தனம் எண்டும் எனக்குத் தெரியும்.ம். நாலு நாளைக்கு கட்டு வேலை க்கு ஆள் தேவையெண்டு வேலாயுதப்பா சொன்ன வர். நாளை க்கு அவரோடைதான்
போகலாம்ென்டு இருக்கிறன்.*?
அவன் மெளனம்ானன் பின்னர் என் ஞல் ஒன்றுமே சொல்ல முடியவில் லை. மெளனத்திரை நீண்டுகொண்டே சென்றது. அவன் தென்னை இடுக்கு களு க் கிடையே தெரிந்த ம்ேற்கின் செவ்வானத்தைப் பார்த் துக் கொண்டிருந்தான். அதுவரை என்ன யோசித்துக் கொண்டிருந்தானே எனக்குத் தெரியாது. சிறிதுநேரத்தில் 'நடா நான் வரப்போறன்’ எ ன் று சொல்லியபடியே எழுந்து போய்விட்டான்.
(17-ம் பக்கத் தொடர்ச்சி) ஆராய்கிறது. இ லக் கியத் திறனுய்வும் உணர்வு நலனும் எ ன் னும் கட்டுரையில் திறனுய்வு பற்றியும் உணர்வு நலன் பற்றி யும் சில விளக்கங்கள். தரப்பட்டுள்ளன. கட்டுரையின் பிற்பகுதி பொது சனத் தொடர்பு சாதனங்கள் பற்றிய ஆய்வாக உள்ளது. கட்டுரைத் தலைப்புடன் தொடர் பற்றதுபோல் காணப்படுகிறது.
சென்னை என். சி. பி. ஏச். நிறுவனத் தால் செப்டெம்பர் 1979 ல் வெளியிடப் பட்ட இந்நூல் இலங்கையில் விற்பனைக்கு இதுவரை தருவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2

Page 24
இலங்கை இலக்கியச் (35 pS) விவாதமும் - படிகள்
இலங்கை இலக்கியச் சூழலில் நடை பெறும் ‘அழகியல் பற்றிய விவாதங்கள் தொடர்பாக தமிழக சஞ்சிகையான படிகள் தனது 9-வது இதழில் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது 'சமர் - 2" இல் வெளி வந்த "முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும் என்னும் கட்டுரையே இந்த முயற்சிகளுக்கு கால்கோளாக அமைந்தது என்பது தெரிந்ததே. அந்த வகை யி ல் "படிகள்" வெளியிட்ட கட்டுரை சம்பந்த ம்ாக மேலும் சில விளக்கங்களை த ரு த ல் நன்று எனக் கருதுகிருேம்.
ஈழத்து இலக் கி யப் பரப்பில் கோட் பாட்டு ரீதியாகவும் சமூக அணுகு முறைச்கு அழுத்தம் த ந் து 60 வாக்கி லே யே கைலாசபதி போன்றேரின் உ ரத் த குரல் கவனிப்பைப் பெற்றது, "மரபு வாதிகளுக் கெதிராக எழுந்த இந்தக் குரலுக்கு அனு Frč307 u urtG *போர் ருன"மிக்க படைப் பாளிகள் பலர் இருந்தனர். இன்றளவும் அந்தக்குரல் அந்த முக்கியத்துவ்த்தை இழந் துவிடவில்லை. அவர்களது கோட்பாட்டு ரீதியான கருத்துக்களும் காலாவதியாகிவிட வில்லை, முன் எப்போதையும்விட இன்று இன்னும் அவசியமானதாகத் த்ென்படுகிறது. அவர்களது விமர்சனக் கோட்பாட்டை இன்றைய இலக்கியத்தின் நவீன போக்கு களுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து விரிவுபடுத்த வேண்டியதே இன்றைய தேவை. இன்றைய இளம் தலைமுறையினரான கி.சண்முகலிங் கம், எம். ஏ. நுஃமான், சமுத்திரன், சித்திர லேகா மெளனகுரு இன்னும் பெயர் குறிப் பிடப்படாத பலர் உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இன்றைய ஈழத்து கலை இலக்கியத் தளத்தில் விவாதம் எல்லாம் மார்க்சிஸ்ட்டு களுக்கும் உருவவாதி (FORMALIST) களுக் கும் என்பதே உண்மையாகும். 60 வாக்கில் தளைக்க முனைந்த மரபு வாதிகளின் சி ந் தனக் கோட்பாட்டின் இன்னெரு பரிம்ா ணமே இவர்கள். மார்க்சிஸ்டுகள் இவர்கி ளுக்கு எதிராக வைக்கும் நியாயத் "தொப்பி" கள். சில இடதுசாரி இலக்கிய விமர்சகர் கள் எனத்தம்மை "நினைத்துக் கொள்பவர் களின்’ தலைகளுக்கும் அளவாக இருப்பதி னல் அவர்களும் அதை எடுத்து அணிந்து கொள்கிருர்கள், அவ்வளவே. உள்ளடக்கம் வடிவம் இரண்டும் கலந்ததுதான் மார்க்சீ

D
யப்பார்வை என்ற எளிமையான உண்மை புரியப்படாமல் இல்லை. இதையே சண்முக ரெத்தினம் "உருவத்திற்கும் உள்ளடக்கத் திற்குமிடையே இயக்கவியல் ரீதியான பிரிக்க முடியாத ஒருமையை. இந்த ஒருமையிலேயே படைப்பின் பூரணத்துவத்தை காணமுடியும் என வேறு வார்த்தைகளில் கூறுகின்றர். *இலக்கிய நயத்தில் வடிவத்தை முக்கிய மாக கவனிப்பது' என்பது கைலாசபதிக்கும் உடன்பாடான கருத்து என படிகள் குறிப் பிட்டதும் மனங்கொள்ளத்தக்கதே. ‘வரட்டு வாதிகள் எ ன நாம்ம் இவர்களுக்கு இடப்படுவது எவ்விதத்தில் பொருத்தமா
னது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
“கதையில் கரு" (உள்ளடக்கம்) அவ சியமே இல்லை. கதை (உருவம்) விளங் கவும் தேவையில்லை, எனவாதிடும் இந்த "உருவாதிகள்" மெளனியை வழிபட்டுக் கொண்டே அருப் சிவாராமு தான் உன்னத கவிஞன் எனவும் ‘குருதிப்புனல் வெண் மணி பற்றிய சிறந்த க லா பூர் வ மா ன நா வல். இதை எ முதி ய து ஒரு கம்யூனிஸ்ட் அல்லாத இந்திரா பார்த்த சாரதி என் 'மனக்குதூகலம்" கொள்ளுகிருர் கள். இவர்களது "ரிஜிமூலம் * தென்இந்திய வெங்கட் சாமிநாதனே என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். (படிகளும் இதை லேசாக உணர்ந்திருப்பதா கத் தெரிகிறது) • மார்க்சிய அணுகுமுறை ஒன்றுதான் சரியான அணுகுமுறை என்று கூறமுடியாது ' எனக்குறிப்பிடும் கே. எஸ். சிவகுமாரனின் கூற்று நிலைக்கேற்ற புதிய கண்டுபிடிப்பு. இது இன்றுவரை இருந்த இவரது நிலை ப் பா ட் டை மு ற் ரு க நிராகரிப்பதாகும். மேல் எழுந்தமானம்ான இவரது விமர்சன அணுகுமுறை போலவே இந்தக் கூற்றையும் நாம் "தீவிரமாக கவ னிக்காம்ல் விட்டுவிடலாம். "நம்மூர் விமர் சகர்கள் தென் இந்திய விமர்சகர்களிடம் இருந்து பயன்பெறுவதற்கான நிறைய அம் சங்கள் உள்ளன" என்ற இவரது இன் னுெருகூற்றை நாமும் ஏற்றுக்கொள்ளு. கிருேம். நவீன சிந்தனை உலகில் ‘பிரபலம்" அடைந்து வரும் அந்நியமாதல் (ALIENA TION) got Sugi) autsib (EXISTENTIA LISM) சர்ர்ரியலிசம் மற்றும் நவீன புதுக்கவி தைகள் பற்றிய மார்க்சிய ரீதியான விளக்கங் கள் இன்னும் தமிழ் இலக்கியச் சூழலில் இங்கு பெருமளவு முன்வைக்கப்படவில்லை என் பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,
ஓர் அவசர குறிப்பு

Page 25
அன்பளிப்பு
来
பிள்ளையார் லேனர்ஸ்
966 கொம்பனி லிமிட்டட் ܫ
கோப்பாய் தெற்கு, கோப்பாய்
| ஸ்ரண்டட் செய்தி Uff jS2:II jät (II STANDARD INFORMATION EXCHANGE CENTRE ュ ஒருவர் தன்னிடம் இருக்கும் பொருளை
விற்பதற்கோ அல்லது தனக்குத் தேவையான பொருளை வாங்கிக் கொள்வதற்கோ விரும்பின் எம்முடன் தொடர்பு கொள்க, TRADE & M. NAGEMENT SERVICES
- A SPVCS 72, KARANAGER ROAD, W NAVANT HURAI --- JAFFNA
50, RECLAMATION ROAD, COLOMBO- 11 — T. Phonę: 21814

இலங்கை - இந்திய முற்போக்கு கலை, இலக்கிய சஞ்சிகைகள் பெற்றுக்கொள்ள.
தொடர்பு கொள்க:
சுந்தரம் புத்தகசாலை 290, கொழும்புத்துறை வீதி, யாழ்ப்பாணம்,
: 60%ir i பாரதி புத்தகசாலை 4/6, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
அன்பளிப்பு:
DAJAN : DERS நெல்லியடி - கரவெட்டி - Prop: 3. திருத்துவராசா
"wn

Page 26
女 திரையிசை
Ar Gorum i'r 1560nar
* பக்திப் பாடல்
* திரைக்கதை வசனம்
* இசைக் கச்சேரி
இவைகளை இனிமைய ஒலிப்பதிவு செய்
'றேடியே 58, assig
யாழ்ப்
தொலைடே
தரத்தில் உயர்ந்த
அதிக பாற்சுவை கொண்டது
ஒமெக்ஸ்
ஐஸ் கிறீம், ஐஸ் பழம், ஐஸ் சொக்
ஐஸ் கிறீம் பார்
ஒமெக்ஸ் கிறீம் ஹவுஸ் 100, காதி அபூபக்கர் ருேட், யாழ்ப்பாணம்.
24

y as Gyth தெளிவாகவும் து கொடுக்கப்படும்
ாஸ் பதி நூரியார் வீதி, பாணம்.
ਸੇ: 7805
கடைச்சல், திருத்தல், ஒட்டு வேலைகட்கு
சிறந்ததோர் ஸ்தாபனம் سسس
நாதன்ஸ் வேக் சொப்
TURNERS OF WEHICLE PARTS ELECTRIC GAS WELDERS
AND EXPERTS IN LAUNCH de HOUSING
WORKS
"llathans 09rks Shop
93. MANIPAY ROAD, JAFFNA.
அத்துடன்:
உங்கள் இல்லங்களுக்குத் தேவையான தளபாடங்களுக்கு ஏற்ற தரம்ான மர வகைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
፶

Page 27
அதிர்வுகள்
சி. ம்ெளனகுருவின் "சங்காரம்" தாசிசிய சின் "பொறுத்தது போதும்" அம்பலத்தாடி களின் "கந்தன்கருணை" என். சுந்தரலிங்க்த் தின் “விழிப்பு" போன்ற நாடகங்களைப்பற் றிய மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்களின் ரசனைக்கும், வர்க்க உணர்வு நிலைகளுக்கும், தரமான கலைக்கும் இடையே கா ன ப் படும் ஒத்திசைவற்ற தன்மை இன்றளவும் பரிசீலனை நிலையிலேயே உள்ளது. குறிப்பாக புரட்சிகரமான சமூக ம்ாறுதல்களை விரும்பும் கலைஞர்களுக்கு இது ஒரு தத்துவார்த்த பிரச்சினை. கனவு நிலைப் பட்ட கும்பல் கலாச் சார சூழலிலிருந்து மீட்புக்கொள்ளல், வாழ்வின் உண்  ைமத் தோற்றங்களை கண்டு கொள்ளுதல் கலைஞன் பணியாக வேண்டும். இதற்கு தத்துவம் செயல்வடிவம் எனும் இருதள இணைப் பு அவசியமாகிறது. கற்றல், ந  ைட முறை ப் பிரயோகம், அனுபவம் பெறல் மீண்டும் கற்றல். எனும் முப்பரிமாண நிலை யின் பெறுபேறுகளே சாத்தியமான தீர்வு களா கும். இது கலை இலக்கியங்களுக்கு மாத்தி திரம் பொருந்துவனவல்ல. பிற சமூகவியல் சார்ந்த துறைகளுக்கும் கூட உடன்பாடா னதே. நிலவுகின்ற சமூக நிலைம்ைகளை விமர் சனம் செய்யும் கருத்துக்கள் எத்தகைய கலை வடிவத்தில் தரப்படும் பொழுது - தன் தரத் தை இழக்காத க்லை மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு சில "கவனிப்பு"க் கொள்ளக்கூடிய வகை மாதிரிகளே மேற் குறிப்பிட்ட நா ட கங்கள். வெகு ஜனங் களுக்கு நெருக்கிம்ான நாட்டுக்கூத்து மர போடு கூடிய நவீன உத்திமுறைகளும் கை யாளப்பட்ட 'சங்காரம் நாடகத்தை மீண் டும் சமீபத்தில் பார்க்க நேர்ந்தபோது இந்த எண்ணம் மேலும் வலுப்பட்டது. புத் தி ஜி விகளும், மாணவர்களும், சாதாரண பொதுமக்களும்ாக நிறைந்திருந்த மண் ட பம், சகல தரப்பினரும் *ம்னக்கிழர்ச்சி புடன் ஒன்றித்து ரசித்ததை அவதானிக்க முடிந்தது, 'சங்காரம் நாடகம் சமூக மாறு தல்கள் பற்றிய மிக எளிமைப் படுத் த ப்

நிஜ நாடகங்கள். நிஜ சினிமா.
பட்ட கருத்துருவமாகும்’ என சிலர் குறிப் பிடுவது வேடிக்கையானதே. "எளிமைப்
படுத்தல்கூட இவர்களுக்கு குற் sD Dnr 5 h போலும்!
"முள்ளும் மலரும் (மகேந்திரன்) புதிய வார்ப்புகள் (பாரதிராஜா) அழியாத கோலங்கள் (பாலுமகேந்திரா) ஆகிய புதிய தமிழ்த்திரைப்படங்கள் சமீபத்தில் தா ன் இங்கு திரையிடப்பட்டுள்ளன. தென் இந் திய தமிழ் சினிமாவில் நிகழ்ந்துவரும் மாறு தல்களை அவதானிக்கமுடிந்தது. பிரபல மற்ற நடிகர்கள். மட்டுப் படுத்தப் பட்ட உரையாடல்கள் மிகைப்படாத ந டி ப் պ - நேர்த்தியான ஒளிப்பதிவு - கதை நிகழும் சூழல், உரிய யதார்த்தத்தில் பெறப்பட ல் (ஸ்ரூடியோக்களில் போடப்படும் 'செட்” குடிசைகள் அல்ல) பெரும்பாலும் கிராமப் புறம். இவைகள் நிச்சயமாக ம் (ா று த ல் களுக்கான சில அடித்தளங்களே. குறி ப் பாக "சினிமா ஒரு கமெரா மீடியம்” என் னும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் சினிமா கதைச் சூழலுக்கு முற்றிலும் மாறு பட்ட *அழியாத கோலங்கள் இ ன்னும் அவதானிக்கத்தக்கது. கிராமப்புற விடலைப் பருவத்து இளைஞர்களின் "கோணல்கள்ே' கோலங்களாகியிருக்கின்றன, அதே வேளை நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்கள் மனித முரண்பாடுகள், உணர்வு நிலைகள் கிராமிய சமூக ஏதார்த்தங்களுக்கு ஏற்ப நிலை கொள்ளாமல் பின் ஒதுக்கப்பட்டுள் ளன. பிரக்ஞை பூர்வமான சமூக நல ஈடு பாடுள்ள கலைஞனுக்கே அத்தகைய அழுத்த லான பார்வை சாத்தியம். சி யாம் பென கல், மிர்ணுள்சென் போன்ருேரின் வெற்றி யின் ரகசியமும் அதுவே.
ன்னும்ொரு கருத்து ம் ன ங் கொள்ள வேே ற பிரபலம் பெறுகின்ற எது கலையிலும், அதன் பல வீனங்களை இனம்கண்டு அம்பலப்படுத்து வதுடன் சரியான கண்ணுேட்டத்தை முன் வைப்பதும் முற்போக்கானதே. தமிழ்த் திரைப்படங்களை விமர்சனத்துக்கு உட்படுத் தாமல் மனுேபவத்துடன் மெளனம் சாதிப் பதும் ஒருவித மேதமைத்தனம்,

Page 28
யாழ். நகரில் முன்னணி
* G. C. E. A|L
长 G。C。E。〔
A. G. A. Q.
J. G. S.
| HORS
| 39/17 FOwEF | ΑΕΠ
米
SEbeCa ev
CHEN
V
இப்பத்திரிகை 72, 2-ம் குறுக்கு தைச் சேர்ந்த டானியல் அன்ரனி அவ வினருக்காக, மட்டுவில் திருக்கணித அது நிர்வாக ஆசிரியர் டாரியல் அன்ரரி
 

B. A. Q, (STARTS)
SITES
R HOUSE ROAD,
높
vision Classes
lor ATRY
ly
| BK
வீதி, நாவாந்துறை வடக்கு யாழ்ப்பாரைத் ர் கிளால் சம ரி இலக்கிய வட்டக் 岛
சகத்தில் அச் சிட்டு வெளியிடப்பட்டது