கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2006.06

Page 1
Այoմ: 2006
 


Page 2
சிவசத்திய
( egycV6CVár எனக்கு எட்டு வயது அஞ்சாறு பெடியன் றயில் பெட்டி தொடுத்ததுபோ ஒருவர் தோளை ஒருவர் பிடி சுற்றிவருகிறோம்
ஆனைக்குப் பொல்வடி/ சைக்கிளுக்குப் புன்னடி/ 67avasaCVVzi 62uatararajevad/ நாங்கன் அரஞ்ச முதல்தேர்தல் சம்மா சொல்லக்கூடாது, 67arar 4avádvežey/
அடுத்த வருஷம் புள்ளடி பெற்ற சைக்கிள் ിഗ്രിബ്, ഖരമിക്സീഗ് ജൂസ്മെ தொத்திச்சது/ பொன்னர் மந்திரியானார் நாலு ஆண்டு உருண அடுத்த தேர்தல் வந்தது/ வாக்குக்கேட்டு அதேபொன்னர் ഗീബ്&670 ഖഗ്ര&ഗ്ര07 கண்ணில் எத்துப்பட்டோரை எ பேர் சொல்வி அழைக்கிறார் கையை நீட்டி, சத்தியம் கேட் அமைச்சர் கிையல்வவா, சனமும் அடிசிச ஆதரவு தருகு
நாங்கன் நாவைஞ்ச யெடியன் 6ിഗ%് ബ0ിക്രൂ ഗ്രീണു குருநாகுளத்திவை சிட்டி அடி புதினம் பார்த்தபடி сл. 626vavapajao 62сли“zvО4/ 6ിഗണു് ട്രൂ0 മീ0ിക% பெரியப்பு அசையேல்வை/ *நீங்கள் கைக்கூவி வாங்கிறியன் எண்டு கதை அடிபடுகுது/” பரிவாரங்கள் முகத்தில் ஈ ஆடேல்லை!
3°overei%zvoar... பொன்னர் பெரியப்பு தவையில் அடிச்ச சத்தியம் செய்கிறார்/
9yണ്ണ0(/് 67ങ്ങിd_00്ഗമബ அப்பு தவையிவை இப்படி அடிக்கலாமோ/ எண்டு நினைச்சக்கொண்டு திரும்ப கிட்டி அடிக்கப் போயிட்டன் മ്മീ/

Ꮓ2Ꮑ,.
சா.பத்மநாதன்
த்துக்கொண்டு
அது/
raiovaraði
கிறார்/
É/.
06) திசுக்கொண்டு நிக்கிறம்

Page 3
பிரதம ஆசிரியர்: க.தணிகாசலம்
ஆசிரியர் குழு; இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை.ம.சண்முகலிங்கம் சோ.தேவராஜா
அழபகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன் பக்க வடிவமைப்பு: சிவபரதன் வெளியீடு: தேசிய கலை இலக்கிய பேரவை தொடர்பு முகவரி: Søskenestå ஆசிரியர் தாயகம்
ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கு கொக்குவில் மெயில் முகவரி: Thayakam 10 Yahoo.com. அச்சுப்பதிவு: ஜே.எஸ்.பிறின்டேஸ் ඊශේෂාංඛAméතඛතා කjප් பண்டத்தரிப்பு
Z
சோ.பத் சிவசேக
நிவேதன்
கீரன்
ф6vaoе. வேந்தன் சடகோ அழ.பகீர்
வித்யா
(0ለ‛6õ26)ሀ
சிவசேக குழந்தை மணி த (p6.af
666)66. புதூர் செங்குர
කheභ්‍යනඛය ess
 

U6 ாதன்
ம. சண்முகலிங்கம்
தர்ஷா
}ለ ̇ இராசவேல் G866ir
; SOLIT
· 3 · ඝ6)ඟිනIlg|L] 6)_mඛඨ ய நாடுகள்- உஈரோ
லியா- 5 அவுஸ்ரேலிய டொலர்
(b (540
g() (45O ளைகள் அபகீரதன் பெயருக்கு பண்டத்தரிப்பு தில் மாற்றக்கூடியதாக பெறப்படவேண்டும்

Page 4
தாயகம்
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
ÖffrīřsupLİ) சுதந்திரம், விடுதலை, சமத்துவம் என்ற சொற்கள் போக்கில் மனிதனது பொருளாதார, அறிவியல், பண்பாட்( ஒன்று பிரிந்தால் முழுமை பெறமுடியாதவையாக உ படிநிலைகளில் விரிந்து சென்றாலும், அடிப்படையில் உய வாழும் உயிரினங்கள் யாவும் இதனைப் பிரகடனப்படு சூழலில் தனது வாழும் உரிமையை மறுக்கும் சக்திக LDigdairp60T.
மனிதகுலம் சமத்துவமற்று ஆளுவோர் - ஆளப்படு * சுரண்டப்படுவோர் என பிளவுபட்டிருக்கும் ஒரு சூ மட்டுமே உரியது. வரலாற்றில் அரசுகளின் உருவாக்கப் அமைந்தது. அங்கு சமாதானம் என்பது பொய்க்கனவ எழுச்சிகொள்வதற்கான இடைவெளியாகவே அன்றும் முதன்மைப்படுத்தி அடிமைகள் செய்த கிளர்ச்சிகள் சாம்ரா வழி அறியாத மதத்தலைவர்கள் அவர்களின் விடுதலை இதனால் அரசின் ஓர் அங்கமாக மதங்கள் அன்றே மட்டுமல்ல, இன்றுவரை தொடரும் நவீன மத அடிப்படை பலியாகும் நிலை ஏற்பட்டது.
மனிதகுல வரலாற்றில் "சுதந்திரம், சமத்துவம், முன்வைத்து எழுந்தது பிரெஞ்சுப் புரட்சி. ஒடுக்குமுை அகல விரிந்தது. அவர்கள் மனித சிந்தனையை மூடி பகுத்தறிவின் முன் புனிதமாகக் கருதிய அனைத்தையுமே விடுதலை தாகம் மண்ணில் மனிதர்களின் விடுதலைய
"இத்தரை மீதினில், இந்த நாளினில், இப்பொழுதே எல்லைக்குள் நின்றே அக்காலத்தை நினைவு கூர்ந்தா இவ்விடுதலைக் கனவை நனவாக்குவதில் பிரெஞ்சு தொழிலாளர்களது பேரெழுச்சியால் அதிகாரத்துக்கு எடுத்துக்கொண்டு சமத்துவத்தையும், சகோதரத்துவத் கலாசாரக் கவசங்களை மீண்டும் பாதுகாப்புக்காக தா சுதந்திரம், சமத்துவத்துக்கான எழுச்சி மீண்டும் அ மூன்று மாதங்களே நீடித்த அப்புரட்சியின் அனுபவ வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.- வரலாற்றில் சுதந்தி ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான, மானுட விடுதலை நோ கொண்டது. மனிதகுல வரலாற்றில் உலகெங்கும் வி பாரிய பங்கை அளித்தது
இங்கும் வரலாற்றுத் தவறுகளும் பின்னடைவுக பேணப்படுவது மட்டுமல்ல, ஒன்றை ஒன்று பாதிக்காத உணர்வின் வளர்ச்சிப் படியான முதலாளித்துவமும், அ மக்களின் சுதந்திரத்தை, சமூகநலனை மதிப்பதில்லை. தனிமனித சுதந்திரத்தையும், பங்களிப்பையும் பொருட்ப இது வர்க்க அடையாளத்தை முன்னிறுத்தி நி அடையாளங்களைக் கொண்டிருக்கும் அரசுகளுக்கு அனைத்து தேசிய இனங்களின் சமத்துவ உரிமைகளுட6 விட தேசிய இன, மத அடையாளங்களே அரைநூற்ற முனைப்படுத்தப் பட்டுள்ளது. பேரினவாத உருவாக்க மக்களை தள்ளியுள்ளது. இவற்றில் இருந்து மீள இன மதிக்க முன்வருவதொன்றே முன்னுள்ள மார்க்கமாகுட
2

புதிய ஜனநாயகம்
véfu an/nyay yéßFu uecărudf09 இதழ் 55 ஜனவரி- யூன் 2006
gഖ്യti
lன் அர்த்தங்கள் மிக ஆழமானவை. அவை வரலாற்றுப் வளர்ச்சிக்கேற்ப விரிந்து செல்பவை. இவை ஒன்றிலிருந்து ள்ளன. இவற்றில் சுதந்திரம் என்பது இன்று பல்வேறு ர்வாழும் உரிமையிலிருந்தே தொடங்குகிறது. இப்புவியில் த்திக் கொண்டு வாழ முற்படாவிட்டாலும், தான் வாழும் ரூக் கெதிராக அதனை நிலைநிறுத்த முயன்று வாழ்ந்து
Sவோர், ஒடுக்குவோர் . ஒடுக்கப்படுவோர், சுரண்டுவோர் ழலில் சுதந்திரம் என்பது அர்த்தமற்றது. ஆள்பவருக்கு ) கூட ஆளும் வர்க்க சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவே T86,
இருந்தது. மனிதகுல வரலாற்றில் வர்க்க அடையாளத்தை
தாகத்தை விண்ணுலக விடுதலையாக திசைமாற்றினர். மாறின. இதனால் அன்றைய சிலுவை யுத்தங்களில் வாத யுத்தங்களிலும் பலலட்சக்கணக்கானோர் தொடர்ந்து
சகோதரத்துவம்" என்ற பதாகையை வெளிப்படையாக றகளுக்கு எதிராக அன்றைய அறிஞர்களின் மனச்சாட்சி யிருந்த மதப்போர்வையை சற்று விலக்கிப் பார்த்தனர். D அன்று கேள்விக்குள்ளாக்கினர். விண்ணுலகை நோக்கிய ாக மாற்றமடைந்தது. முத்தி சேர்ந்திட நாடும் சுத்த அறிவாக" மதநம்பிக்கையின் ன் பாரதி. ப் புரட்சி தோல்வி கண்டது. பண்ணை அடிமைகள், நகரத் வந்த முதலாளித்துவம் சுதந்திரத்தை தனது கையில் தையும் காலில் இட்டு மிதித்தது. பிரபுத்துவத்தின் மத, ன் அணிந்து கொண்டது. தே மண்ணில் பரிஸ் கம்யூன் புரட்சியாக எழுச்சியுற்றது. ங்களுடன் ருஷ்ய மக்கள் 1917 அக்டேயர் புரட்சியை ரமும் சமத்துவமும் இணைந்த, அனைத்து மனித க்கிய ஒரு அரசமைப்பாக அது தன்னை பிரகடனப்படுத்திக் டுதலைக்கான பேரெழுச்சியைத் தோற்றுவிப்பதில் அது
ளும் ஏற்பட்டன. சுதந்திரமும் சமத்துவமும் ஒன்றாகப்
வகையிலும் பேணப்பட வேண்டும். விலங்கினப் போட்டி ளும் வர்க்கத்தினருக்கான அதீத தனிமனித சுதந்திரமும்
அதுபோன்றே அதிதீவிர சமத்துவ நோக்கும் சமூகத்தில் டுத்துவதில்லை. ற்கும் விடுதலைக்கு மட்டுமல்ல தேசிய, இன, மத, ) பொருந்துவதாகும். இலங்கையின் சுதந்திரம் என்பது * ஒன்றிணைக்கப் படவில்லை. தேசத்தின் அடையாளத்தை ாண்டுக்கு மேலான பாராளுமன்ற ஜனநாயக முறைமூலம் ந்துக்கும் அதுவே காலாகி தீராத போரின் துயருக்குள் ங்களின் சுதந்திரததையும் சமத்துவத்தையும் அரசு ஏற்று ).
த00கம்-55

Page 5
பாவ மன்
நாளை நாளையென்று நாளை நாள் தின்றது விடியலுக்காய் இருளுக்கு வெள்ை வியர்த்துத் தூங்கினோம்! எப்பதான் உரியதை உரியவர் ெ தக்கார் தகவிலார் எப்படி எங்ே சிக்கலை சிக்கல் மேய்ந்தது வடக்கை தெற்கு மேய்ந்தது வடக்கோடு கிழக்கை மோத வை வேடிக்கை பார்த்தது அத்திக்கு மேற்கு மனித உரிமை சிறுவர் வாய்வாசகம் விட்டது அறிக்கையி எல்லாம் பேச்சிலே போனது ஊரெலாம் ஒப்பாரி, ஒலம் கேட் அறியாமையை அச்சம் புணர்ந்தது இருள் மேலும் கறுத்திருண்டது! சூரியன் தானுதிக்க சீஸ் ப(f)யர் வேணும் என்று கேட்டது வேட்டொலி கேட்டதும் அது மீன் மேற்கிலே படுத்துவிட்டது அமாவாசை இருட்டுக்குள் குருட்டு அம்மா! ஐயோ! அழுதன ஊர்க எல்லாமும் எல்லாவற்றையும் மேய் வேவிகள் எங்கே? பயிர்கள் எங் உயிர்களை உயிர்கள் தின்றன உயிர்களைத் தின்ற உயிர்ப்பேய்க் ஊர்களை மேய்ந்தன! சுடலையில் சாவடிகள் போட்டன நடைப்பிணங்கள் வாக்களித்தன நடைப்பிணங்களால் நடைப்பிணங் நடைப்பிணங்களின் பேயாட்சி! கோயிலில்லையா? கடவுளில்லைய பூசைக்கு ஐயர் இல்லையா? கோயிலைக் கடவுள் மேய்ந்தார் கடவுளைக் கோயில் மேய்ந்தது கோயிலோடு கடவுளை ஐயர் தி கர்த்தர் கண்ணிர் விட்டார் பிசப் அறிக்கை விட்டார் Use Jup6irefou Uu606 Uusip64 usf
த00கம்-55

iL
ளயடித்து
சய்வர்
soussfoufflip
த்தது
உரிமை என்று القوات
-தி
ண்டும்
ப்பட்டது
ந்தன GBés?
G86T
களுக்காக
6შrgთიrá
ப் கேட்டது!
நிவேதன்

Page 6
இலிக்குவிம் கூறுலுழி
(ypg5 6dTLb Lumb
அவருக்கு அறுபது வயது . இன்னமும் கற்பிக்கிறார் : ஒரு நாள் வகுப்புக்குள் வந்து கேள்வி கேட்டார்:
ஆசிரியர் வந்தார்’ இதற்கு இலக்கணங்கூறு. பகிடி விடுகிறார் என்று நினைத்தோம். எனவே சிரித்துக் கொண்டே விடை கூறினோம்: “வந்தார்' - வினைச் சொல்
ஆசிரியர் . திடீரென . ஒரு நொடியில் விளங்கியது மெளனமானோம். அவர் முணுமுணுத்தது கேட்டது: “வந்தார்' வினைச்சொல் 'ஆசிரியர் அவர் வரவில்லை! பொலிஸார் அவரைக் கொண்டு வந்தனர்.என்றாலும்
இரண்டாம் பாடம் அவருக்கு எழுபது வயதாகி இன்னமுங் கற்பிக்கும் வரை நாம் ஒன்றாக வளர்ந்தோம் உதாரணமாக ஆசிரியர் சொன்ற ஒன்று
‘ என் எசமான் புரட்சி பற்றிக் கனவு காண் தன்னுள் ஆயிரம் முறை முழுமையான ஒரு அதற்கு இல்க்கணங் கூறினார் நீ ஒரு போர நாம் மெளனமாயிருந்தோம் நாம் எதுவுஞ் சொல்லவில்லை, ஆனாலும் நம் மெளனம் போரிட்டுக் கொண்டிருந்தது.
நமது மெளனம் . ஆனாலும் நம் வகுப்பில் ஊட்டமளித்த ஒரு பையன் இருந்தான் Pfண்ணின் ஒலிங்கனிகள் அவன் வாய்மீதாக ஓடின. அவனுடைய பேர் அட்னானை . காணியில்லாத ஒ அவன் மெளனமாயிருக்கவில்லை. அவன் ஒரு போ!
அவன் இன்று இலக்கணவிதிகளைப் புறக்கித்துத் தெ "என் எசமான் - எழுவாயல்ல "புரட்சி - முன்னிடைச் சொல்லால் ஆளப்படாதது 'கனவு காண்கிறான்' - வினைச் சொல்லல்ல ‘ஆனால் போராட மாட்டான் - அது சரியானது” ፈW°
கடைசிக்கு முந்திய பாடம் ஒரு நாட் பின்னர் தோடம்பழத்தின் சுளை போல உயிரோட்டத்துடனும் எழுபது வயதானாலும் ஒரு சிறுபிள்ளை போல. நட "அவர்கள் அவனைச் சிறையிலிட்டனர் சிறுமியரே அதற்கு இலக்கணங் கூறுங்கள்" நாம் சிலிர்ப்புற்றோம். அழுதோம். கூவினோம்;
'அட்னான்” - எழுவாய் 'சிறை” . செயப்படுபொருள் இலக்கணத்தையும் அதன் விதிகளையும் தீக்கிரைய

b FG Usuð
ஷிட் ஹீஸைன், (பாலஸ்தீனம்) 1936-1977)
அவர் கற்பிப்பார்.
கிறான், ஆனாலும் போராட மாட்டான்'
வாக்கியம். ாளியாவார்!”
) தன் கைகளால் மண்ணுக்கு
ரு விவசாயி ராளி.
ாடர்ந்து கற்பித்தான் :
உற்சாகத்துடனும் ஆசிரியர் வகுப்புக்குள் வந்தார். க்கு வாழ்த்துக் கூறி அவர் சொன்னார்.
க்கிப் போராளிகளாக மாறினோம்
தமிழாக்கம் - சிவசேகரம்
த00கம்-55

Page 7
அன்று காலையில் சிவா தனது வீட்டுக்கு சீற் போட வந்த தொழிலாளர்களுக்கு உதவப்போய் தனது காலை உடைத்துக் கொண்டான். மருத்துவமனைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பிய அவனைப் பார்க்க உறவினர்களும் அயலவர்களும் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
"வீட்டுக் கட்டுக்கு இரத்தப்பலி கொடுத்த மாதிரிஓயாமல் ஒடித்திரியிற சிவா அண்ணரை வீடு இருத்திப்போட்டுது. காயம் பெரிய காயமே. பெரிசாப் பத்துப்போட்டுக் கிடக்கு."
வருத்தம் பார்க்க வந்த அயல்வீட்டுக் கற்பகம் வரும்பொழுதே கேட்டுக் கொண்டுவந்தாள்.
"கால் பாதத்துக்கு மேலைதானே விழுந்தது. விரல் எலும்பிலை வெடிப்பிருக்காம். கால் ஆட்டுப்படாமல் இருக்கத்தான் பெரிசாப் பத்துப்போட்டிருக்கு."
புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் வீட்டுக்கருகே அமைந்திருந்த அந்தச் சிறிய குடிசை இன்றும் அவர்களது வாழ்விடமாக இருந்தது. அக்குடிசையின் வாசலுக்கு வெளியே ஒரு பக்க தாழ்வாரத்தின் கீழ் சீமெந்துக் கற்களை கால்களாக்கிப் போடப்பட்ட சிறிய பலகை வாங்கில் பத்துப்போடப்பட்ட வலக்காலை நீட்டியபடி அமர்ந்திருந்தான் சிவா. அவன் எழுந்து நடப்பதற்கு வசதியாக ஊன்றுகோல்கள் இரண்டு அவனருகே வாங்கில் சாத்திவைக்கப்பட்டிருந்தன.
"கற்பகமக்கா உள்ளுக்கை வந்திருங்கோவன். வெளியிலை புழுதியாய்க் கிடக்கு."
த00கம்-55
 

சிறுகதை
سے سے کسمصبے
"இருந்தால் இருந்திடுவன் பிள்ளை. குடியூரல் பலகாரச் சூட்டுக்கும் போகவேணும். அதுசரி கொன்றாக்கிலை குடுத்த வேலைக்கு இவரேன் தூக்கிமுறியப் போனவர்."
'மழைவந்தால் வெங்காயம் கட்டிவைக்க இடமில்லை. அதுதான் அந்தரப்பட்டு, கூலியாள் வரேல்லை எண்டாப்போலை தானாப்போய் தேடி வைச்சிருக்கிறார்."
"ஓ. இப்ப கூலிக்காறரையும் பிடிக்கேலாது, கூலியளும் கூடிப்போச்சு. இனிமேல் எங்களைப் போலை ஆக்கள் வீடு கட்டுறதை நினைக்கேலாது பிள்ளை. நீங்கள் கெட்டித்தனமா இந்த அளவுக்காதல் ஒப்பேத்திப்போட்டியள்."
அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்த உரையாடல் அவன் காணும் சமூகத்தின் உண்மை நிலையைப் பிரதிபலித்திருந்தாலும் கூலிக்காரரின் நிலையில் உள்ளவர்களே கூலிக்காரர்களைக் குறைப்பட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பது சிவாவுக்கு வியப்பாக இருந்தது.
'நாங்களெல்லாம் கூலிக்கா றரில்லாமல் வசதிபடைத்த ஆக்களே' என்று கேட்கவேண்டும் போல அவனுக்கிருந்தாலும், அவர்களது உரையாடலைக் குழப்பாமல் தனக்கே தெளிவில்லாத அந்த விடயத்தைப் பற்றி சிறிது ஆழமாக சிந்திக்க முற்பட்டான்.
வசதியுள்ளவர்கள் கூலியைக் கொடுத்து தமது வசதிகளையும், வருவாய்களையும் பெருக்கிக்
5

Page 8
கொள்கிறார்கள் என்பதை குத்தகை நிலத்தில் கூலிகொடுத்தும், தானே கூலியாக நின்றும் செய்கின்ற தனது சிறிய விவசாய அனுபவத்துக்கூடாகவே சிவா உணர்ந்திருந்தான். ஆனால் கூலி சற்று உயர்ந்தாலும் வேலை ஒழுங்கீனம், வாழ்க்கை செலவின் உயர்ச்சி இவற்றால் அவர்களது வாழ்வில் அதிக மாற்றம் ஏற்படவில்லை என்பதை அவர்களுள் ஒருவனாகவே இருக்கும் அவனால் நன்றாக உணர முடிந்தது.
அவனது நிலத்தில் நன்கு விளைந்து கிண்டுவதற்கு தயாராக இருந்த வெங்காயத்தை மழைக்காலத்தை சாட்டாக வைத்து குறைந்த விலைக்கே வியாபாரிகள் அவனிடம் வாங்க முனைந்தனர். பிடியாகக் கட்டி மழைபடாமல் பாதுகாப்பாக வைத்து விலை வரும்போது விற்றால் தனது உழைப்பின் பயனை ஓரளவாவது அடையமுடியும் என்ற நம்பிக்கை அவனிடம் இருந்தது. வழமையாக வைத்து பாதுகாக்க உதவிய உறவினர் வீடுகளில் இடவசதியீனம் ஏற்பட்டிருந்தது. அதனால்தான் மப்பும் மந்தாரமுமாக இடையிடையே மேகம் இருள்வதைக் கண்டு அஞ்சி வீட்டுக்கு கூரை போடுவதற்கு அவன் அவசரப்பட்டான். அந்த அவசரமே அவனை காயப்படுத்தி அந்த வாங்கில் அமர்த்திவிட்டது.
'பிள்ளை இந்தாடி, ஊர்க்கோழி முட்டை, நோவுக்கு அவிச்சுக்குடுத்தால் நல்லது. பலகாரச்சூட்டுக்குப் பிந்திப்போனால் நெளிப்பாளவை, நான்வாறன்." ܚ
"என்னக்கா. தண்ணியும் குடிக்கேல்லை"
"இந்த அவிச்சலுக்கை ஒரு தேத்தண்ணி, அங்கை கூல்றிங் கரைப்பாளவை"
சிறிய சீமெந்து பையில் உமிபோட்டு பக்குவமாகக் கொண்டுவந்த முட்டைகளை அவனது மனைவியின் கையில் கொடுத்துவிட்டு பகிடியாகக் கூறிச் சிரித்தபடி சென்றாள் கற்பகம்.
'நீங்களென்னப்பா கடுமையா யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்."
"யோசிக்காமை இருக்கேலுமே. தோட்ட வேலையெல்லாம் அப்பிடியே கிடக்கு"
'அதுக்கு யோசிச்சு என்ன செய்யிறது, அந்தரமாபத்துக்கு சும்மா செய்யவேண்டாம், கூலிக்கு வந்து உதவி செய்யவாதல் ஒருத்தரும் வராயினமே. அதுகும் மற்றவைக்கு ஒண்டெண்டா உங்கடை வேலையையும் விட்டிட்டு நிக்கிற உங்களுக்கு உதவ ஆராவது வருவினம் தானே.
'உலகம் இப்ப மாறிக்கிடக்கப்பா. ஒவ்வொருத்தனும் தன்ரை தன்ரை வேலை. அடுத்தவனைப் பற்றிக் கவலைப்படுறதே மடத்தனம் எண்டு நினைக்கிறாங்கள்.
6

"இப்ப உங்களுக்கு என்ன வேணும். உங்களுக்கு கால் சுகமாகும் வரைக்கும் தோட்டத்தை நான் பாக்கிறன். நீங்கள் கவலைப்படாமல் இருந்தாச்சரி"
"எட பேந்தென்ன. உப்பிடி உசாரான மனிசி இருந்தா எனக்கென்ன கவலை, அது சரி. பலகாரச்சூட்டுக்கு போகேல்லையே. வெளிநாட்டாலை வந்த அந்தப் பெடியன் நான் பாவிக்கிறேல்லை எண்டு சொல்லவும் நோவுக்கு நல்லதெண்டு விஸ்க்கிப் போத்திலையும் தந்திட்டுப்போட்டுது'
'உங்களுக்காண்டித்தான் பாத்துக்கொண் டிருக்கிறன். சரி நான் போட்டு கெதியா வாறன். பிளாஸ்க்கிலை மாக்கரைச்சு வைச்சிருக்கு. வாத்துக்குடியுங்கோ."
"ரகு அங்கைதான் நிக்கிறான்போலை கெதியா வரச்சொல்லும்"
அவனது மனைவியின் அன்பான வார்த்தைகளும், நம்பிக்கையூட்டல்களும் அவனுக்கு தென்பை அளிக்க, இப்பொழுதுதான் அந்த வீட்டை நிமிர்ந்து பார்க்கிறான். காலைக் காயப்படுத்திக் கொண்டபோதும் சீற்போட்டு முடிந்துவிட்ட அந்த வீட்டைப் பார்க்கும்போது அவனது மனம் நிறைவடைந்தது. ஜன்னல் வெளிகள் நிலைக் கதவு வெளிகள் நிரப்பப்படாமல் வெறும் சீமெந்துக் கற்களை அடுக்கி சீற்றால் மூடப்பட்டுவிட்ட வீடு அது. வெளிச்சமும் காற்றும் அதற்குள் தாராளமாக வந்துபோகக் கூடியதாக இருந்தது. இரு சிறிய அறைகள், சமையலறையுடன் நீண்டிருந்த சிறிய விறாந்தையுடன் கூடிய அடக்கமான வீடு. இந்த அளவுக்கு வீட்டை முடிப்பதற்குக் கூட அவன் பட்ட சிரமங்கள்.
மாரிகாலம் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் கடந்த சிலநாட்களாக தெரியத் தொடங்கி இருந்தது. இடையிடையே வானம் கறுத்து அடிவானத்தில் இடியும் மின்னலும் ஏற்பட்டது. மழை வருவதற்குள் அத்திவார மட்டத்துக்கு மண்ணை நிரப்பி சாணகத்தால் மெழுகிக்கொண்டு அதற்குள் குடிபுகுந்துவிடவேண்டும் என்பதுதான் இருவரதும் தீர்மானமாக இருந்தது. வெங்காயத்தைப் பிடிகட்டி குடிசைக்குள் அட்டாளை கட்டி பாதுகாத்து அடுத்தகட்ட வேலைகளை வசதிவரும்போது செய்வதாகவே அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.
சிவா எப்பொழுதும் எளிமையை விரும்புபவன். அவன் இருக்கும் அந்த குடிசையில இருபது ஆண்டுகளாக அவனது குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது. அவன் திருமணம் முடித்த சில மாதங்களுக்குள்ளேயே "எலிவளையானாலும் தனிவளை" என்பதுபோல போடப்பட்ட குடிசை அது. அவனது மனைவியின் பெற்றோர்கள் கொடுத்த
த00கம்-55

Page 9
ஒன்றரைப் பரப்புக் காணிக்குள் குழாய்க் கிணற்றையும் அடித்து அக் குடிசையையும் அன்றே அமைத்திருந்தான். இன்றுவரை இந்த யுத்த அவலங்களுக்குள்ளும் கறையான்- 'செல்'களுக்கு இரையான ஓரிரு கப்புக்கள், தடிகள் மாற்றப்பட்ட போதும், போகம் தவறாது மேய்ந்து மெழுகி அக்குடிசையின் நிழலிலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்தக் குடிசையை அமைத்த அந்த இனிய நாட்களை மீட்டுப் பார்ப்பது சிவாவுக்கு மனமகிழ்வைத் தந்தது. இரவுபகலாக எதுவித கூலியுமின்றி உறவினர்கள் சிலரது உதவியுடன் ஒரு வாரத்துக்குள் அதனை கட்டிமுடித்த அந்தக் காலத்தை எண்ணி அவன் வியந்தான்.
முழுநிலாக் கால இரவொன்றில் கூரைவேலை நடந்துகொண்டிருந்தது. சிவாவுக்கு சித்தப்பா முறையான, அந்த ஊரிலேயே கூத்துக்கும் பாட்டுக்கும் பெயர்போன சடையப்பரும் கூரை வேலைக்காக மேலே ஏறி இருந்தார். பனங்கள்ளுக்காலம். ஓரிரு போத்தல்களை காலியாக்கியதால் ஏறிய அளவான மயக்கநிலை, நிலவொளியின் அழகுக் கோலம். இரவின் அமைதி எல்லாம் சேர்ந்து சடையப்பரின் மனதை கரைய வைத்தது. ராகம் பிசகாமல் கூத்துப் பாட்டுக்களை நன்றாக அனுபவித்து உரத்துப் பாடிக் கொண்டே கம்புகளைக் கட்டிக் கொண்டிருந்தார். அயலவர்கள் பலர் அவரது பாட்டைக் கேட்பதற்கு என்றே அங்கு கூடிவிட்டனர். கட்டுவதற்கு கம்பு காணாதபோதுதான் பாட்டை நிறுத்தினார்.
'டேய் சிவா கம்பு காணாதடா. இனிக் காட்டுக்கே போகப்போறா. தாவாரத்துக்குத்தானே. குஞ்சன்ரை வேலிப் பூவரசிலை முத்தின கம்பா ଗରul' : ('"'
சடையப்பர் வளை மரத்தில் காலை உதைத்து ஊன்றியபடி தோளில் மாட்டப்பட்டிருந்த சால்வையை மரத்தின் மீது விரித்து அதன் மீது சாய்ந்து நிலவைப் பார்த்தபடி கூரையில் நிமிர்ந்து படுத்துக்கொண்டார். சிறிது நேரம் மெளனம் அங்கு நிலவியது. முழுநிலவின் அழகில் அவர் மூழ்கி இருந்திருக்க வேண்டும்.
சிவா விரைவாகச் சென்று கம்பை வெட்டி உரித்துக்கொண்டு வந்து "சித்தப்பு இந்தாங்கோ கம்பு" என்று அவரை எழுப்பினான். நிலவையே பார்த்துக்கொண்டிருந்த அவர் 'கம்பு கொண்டந்திட்டியா" என்று கேட்டுவிட்டு வேலையை மீள ஆரம்பித்தபடி பாடத் தொடங்கினார்.
"அம்புலி மாமா அழகழ சொக்கா
எங்கெங்கை போறா, காட்டுக்குப்போறன்
ശ്രീകb-55

இருப்பு
நிலாமகள்.
சமைத்தோம்
சும்மா எல்லாம் சுகமாய்த் நிகழ அம்மாடி என்று சோம்பிக் கிடந்தோம்
பிடித்த வழிகள் பிழையாய் போக முடிக்க முடியாது
நிக்கின்றோம்
வளர்த்த கடாக்கள் மார்பை நோக்கி வருவது கண்டு
நிகைக்கின்றோம்
சூழல் இழந்து சுகங்கள் சுமர் வாழ்தல் இங்கு ஆகுமோ!
நிறங்கள் மாறும் நீல வானும் குணங்கள் மாறும் பூமிப் பரப்பும் கொண்டு வாழ்தல் கூடுமோ!
பசுமை கொஞ்சம் குளுமை கொஞ்சம்
நெஞ்சம் நி க்கவோம்
இயற்கையோடு கொஞ்சிச் செல்லும் இனிய சூழல் ஆகுவோம்
காட்டுக்கேன், கம்பெடுக்க கம்பேன், வீடுகட்ட
வீடேன், பிள்ளைப்பெற
பிள்ளையேன், தண்ணிக் கிடாரத்துக்கை
துள்ளி விளையாட'
அவரது முதுகுவரை நீண்டிருந்த சடைமயிர் மேலும் கீழுமாக ஆட தலையை ஆட்டியபடி
7

Page 10
இழுத்திழுத்துப் பாடிய பாடலில் என்ன அர்த்தம் இருந்ததோ "டேய் சிவா வீட்டுக்கட்டு முடிஞ்சுது" என்று கொடுப்புக்குள் சிரித்தபடி கூரையை விட்டு இறங்கியபோது சிவா வெட்கத்துடன் தலையை திருப்பிக் கொண்டான். தேனீர் பரிமாறிக் கொண்டிருந்த அவனது மனைவியும் தலையைக் குனிந்து கொண்டாள்.
அவனது இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் அந்தக் குடிசைக்கு முன்னால் நின்றே அதே பாடலைப்பாடி அவனும் மனைவியும் நிலாக்காலங்களில் சோறுட்டியிருக்கிறார்கள். அந்தக் குடிசைவீடு அவர்களது வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது சிவாவுக்கு அதில் வாழ்வதில் திருப்தி இருந்தது. ஆனால் அந்த எளிமையும் அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்வு அந்தக் கிராமத்திலிருந்து மறைந்துவருவதாகவே அவன் உணர்ந்தான்.
பெரும்பாலும் கொட்டில் குடிசைகள் நிறைந்ததாக இருந்த அந்தக் கிராமத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் வீட்டுத் திட்டங்களாலும் சில தனிப்பட்டவர்களின் முயற்சியாலும் குடிசைகளில் இருந்து மீளவேண்டும் என்ற அவா எல்லோரிடமும் தொற்றி இருந்தது. பாதிக்கு மேற்பட்ட வீடுகள் கூரைகளை மாற்றாவிட்டாலும் அடித்தளத்தையாவது சீமெந்தால் நிறுத்திக்கொண்டன. உதவி நிறுவனங்களால் எல்லோருக்கும் வீடுகளைக் அமைத்துக் கொடுக்க முடியாத நிலையில்கல்வீட்டுக்கான ஆவலைத் தூண்டுவதில் மட்டும் அவை வெற்றி பெற்றிருந்தன. இதனால் எனக்கு உனக்கு என்ற போட்டியால் கிராமத்தின் ஒற்றுமை குலைந்து வருவதை சிவா உணர்ந்தான். வீட்டுக்கட்டுக்கான நிதியைப் பங்கீடு செய்யும் நிர்வாக சபையில் ஒரு உறுப்பினராக அவன் இருந்தும் பலர் வற்புறுத்தியபோதும் அந்த உதவி நிதியை தான் பெறுவதற்கு முயற்சிக்கவில்லை. ஆனால் ஊராரின் வளர்ச்சியோடு தனது குடும்பமும் மாற்றமடையவேண்டும் என்ற உணர்வுடன்தான் அந்த வீட்டை அமைப்பதற்கு அவன் தீர்மானித்தான்.
அந்தக் கட்டடத்தை கட்டுவதற்குக்கூட எத்தனை ஆண்டுகளாக அவன் எடுத்த முயற்சி எத்தனை தடவைகள் தடைப்பட்டிருந்தது. ஒருமுறை வெங்காய விளைச்சல் கைகொடுத்து நல்ல விலைக்கும் விற்றபோது அதனை வைத்து அத்திவாரத்தைப்போட்டிருந்தான். பின் இரண்டு மூன்று ஆண்டுகளின் பின் சேர்த்து வைத்த பணத்தில் கல்லரிந்து வைரப்பனை வாங்கி வெட்டிச்சீவி மரங்கள் சிலாகைகளாக கட்டி அடுக்கி வைத்துக்கொண்( கட்டிட வேலையை ஆரம்பிக்க இருந்தபோது இடப்பெயர்வு ஏற்பட்டது. தென்மாராட்சிக்கு சென்

அவர்கள் மீள வந்தபோது அடுக்கிவைத்த சீமெந்துக் கற்களும் மரங்களும் இருந்த அடையாளமே தெரியாமல் மறைந்துபோயின. அவர்களது மூத்த மகன் சசியும் அவர்களுடன் திரும்பி வரவில்லை.
குடிசையின் ஒரு கப்பு மட்டும் செல்பட்டுச் சிதறியிருந்தது. மேச்சல் போகம் ஆகையால் எரிப்பதற்கு எதுவும் இல்லாத வகையில் உக்கி உதிர்ந்த ஒலைகள் போக மரம் தடிகள் மட்டுமே எஞ்சி இருந்தது. அதை செப்பனிட்டு மேய்ந்து தமது வாழ்க்கையை மீண்டும் அதற்குள் அவர்கள் மீளவும் ஆரம்பித்தனர்.
அந்த அளவுக்காவது இம்முறை வீட்டை நிமிர்த்தியது அவனுக்கு நிம்மதியைத் தந்தது. அதற்கு கதவு, ஜன்னல்கள் வைத்து, பூசிப் பெயின்ரடித்து, மின்விளக்கில் பார்க்கின்ற கனவு அவனிடம் எழவில்லை. உரம், மருந்து கூலி விலை உயர்வுகளால் குத்தகை நிலத்தையே கைவிடவேண்டி வரலாம் என எண்ணும் அவனால் அக்கனவுகளில் இருந்து விலகிநிற்க முடிந்தது. ஆனால் அவனது மனைவி பிள்ளைகள்.
அவனது வீட்டிலிருந்து மூன்றாவதாக அமைந்திருக்கும் புதிய வீட்டிலிருந்து 'பொக்ஸ்"க்கூடாக வரும் இசையின் அதிர்வு அந்த வீடுவரை வந்து மோதுகிறது. மூன்று நாட்களில் நடைபெற இருக்கும் குடிபூரல் நிகழ்ச்சிக்காகத்தான் பலகாரச்சூட்டுக்கு அவனது மனைவியும் சென்றிருந்தாள். அங்கிருந்துதான் கைகால்களில் பெயின்ரை அப்பிக்கொண்டு வருகிறான் அவனது இளைய மகன் ரகு,
"உதென்ன ரகு கால்கையெல்லாம் பெயின்ற் அப்பிக்கொண்டு வாறா'
"வீட்டுக்கு பெயின்றடிக்கினம். நல்லவடிவா இருக்கப்பா."
'நாங்களும் கொஞ்ச நாள்போக அடிப்பம்தானே."
எட்டு வயது நிரம்பிய அவனது மகனின் ஆவலைப் பூர்த்திசெய்யும் ஆற்றல் அவனிடம் இல்லாதபோதும் ஒரு நம்பிக்கையூட்டலுக்காக அந்த வார்த்தைகள் சிவாவின் வாயிலிருந்து வெளிவந்தன.
"சண்டை வந்தால் எல்லாம் அழிஞ்சுதானே Gumrub”
அவனது நம்பிக்கையூட்டல், எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் மீறி அந்தப் பிஞ்சுள்ளத்திலிருந்து வந்த அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் திகைத்தான் சிவா.
தாமதம்-55

Page 11
tDGolfgs நாகரிகஇம் மண்புழுநாகரிகமுய்
சீரியலுக்கம், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றி லக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜின்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்ஸர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு - கழிவு.
கம்யூனிசத்தின் தோலி வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை.
‘‘வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா? அமெரிக்க ஐரோப்பாவைப் பாருங்கள். விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், 니나 나 வடிவிலான கட்டிடங்கள் , திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள். என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் முன்னேறி" விட்டது. ரசியா, சீனாவிலி இத்தகைய 'முன்னேற்றம் இல்லை."
‘‘மனிதனின் விதவிதமான தேவைகள் எல்லாம் நிறைவு செய்கின்ற, அங்கீகரிக்கின்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சீன ரசிய மக்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்களுக்குத் தெரியவரும் போது அங்கே சோசலிசம் தானே வீழ்ந்துவிடும்” என்பது தான் முதலாளித்துவ எழுத்தாளர்களின் முக்கியமான பிரச்சாரமாக இருந்தது.
த90கம்-55

- இலக்கிய அலசல்
உற்பத்தி - நுகர்வு எனும் சூழலில் அவ்வப்போது ஏற்படு கினிற மலச் சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு யுத்தம் தவிர்க்க முடியாததாகவும் தடுக் க முடியாததாகவும் ஆகி விடுகிறது எனத் தோன்றுகிறது. அமைதிக் காலத்து நுகர்வோனின் பணியை யுத்த காலத்தில் சிப்பாய் மாற்றீடு செய்கிறான். சிப்பாயின் நுகர்வோ அதிதீவிரமாக இருக்கிறது. அதிவேகமானதாக, விதவித மானதாக, பரந்ததாக இருக் கிறது. அமைதிக் காலத்திலி ஒரு ஆண்டில் நுகரப்படுவதைக் காட ட்டிலும் அதிகமாக யுத்த காலத் திலி ஒரே நாளிலி நுகரப்படுகிறது.
இன்று சீனாவிலும் ரசியாவிலும் எங்கு திரும்பினாலும் பெப்சி, கோக், சோனி, மிட்சுபிஷி, 'பொர்டு, டொயோடா ஆகியவற்றுடன் புதிதாகக் கஞ்சித் தொட்டிகள், நடைபாதை வாசிகள், வேலையில்லாதவர்கள், விலை மாதர்கள், கொள்ளைக்காரர்கள், ம.பியா கும் பல்கள் ஆகியவையும் அமெரிக்காவைப் போன்றே உருவாகிவிட்டன.
இந்தத் தற்காலிக வெற்றியின் காரணமாகவே முதலாளித்துவம் நியாயமானதாகிவிட முடியாது. ஒழுக்கமானதாகிவிட முடியாது.
“உலக வாணிபம் அநேகமாக முழுமையாக உற்பத்தியின் தேவைகளைச் சுற்றித்தான் நடக்கிறதேயல்லாமல் தனிநபர் நுகர்வுக்குரிய தேவைகளைச் சுற்றியல்ல" என்று ‘தேவைகள் உருவாக்கப்படும் ரகசியத்தை உடைத்த மார்க்ஸ், நுகர்பவனுடைய மதிப்பீடு அவனது செல்வத்தையும், தேவையையும் சார்ந்திருக்கிறது என்றார்.
‘சல்லாத் துணி வாங்குகிற வைப்பாட்டியும் சரி, (அதே அளவு காசில்) உருளைக்கிழங்கு

Page 12
வாங்குகிற தொழிலாளியும் சரி இருவரும் தத்தம் மதிப்பீட்டைப் பின்பற்றுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களது மதிப்பீடுகளில் உள்ள வேறுபாட்டை அவர்கள் உலகத்தில் வகிக்கும் நிலைகளில் உள்ள வேறுபாடு விளக்குகிறது. இந்த நிலைகளும் சமுதாய அமைப்பின் விளைபொருளே ஆகும்’ (மார்க்ஸ் - மெய்யறிவின் வறுமை)
“சல்லாத்துணியே முன்னேற்றத்தின் சின்னம்” என்று கருதும் மேற்குலகைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் 1960களின் துவக்கத்தில் மாவோவின் சீனத்திற்குச் சென்றார். ஆல்பர்டோ மொராவியா என்ற அந்த எழுத்தாளர் மார்க்சியவாதியோ கம்யூனிச ஆதரவாளரோ அல்ல. “சிவப்பு நூலும் சீனப் பெருஞ் சுவரும்” என்ற அவரது நூலின் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே மொழி பெயர்த்துத் தருகிறோம். :
சமுதாயப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியைத் தீர்மானிக்கும் பொதுவுடமைச் சமூகம் ஒரு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ஊடாக அத்தகையதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கம்யூனிஸ்டு அரசியல்; தேவை - சுதந்திரம் இவற்றுக்கிடையிலான உறவு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் . இவை அவரது முன்னுரையில் இல்லை.
ஆனாலி, மேற்குலக மேட்டுக் குடியின் வாழ்க்கையும் வசதிகளும் தான் முன்னேற்றத்தின் அளவு கோல் என்று கருதும் மாயையை இந்த முன்னுரை கிழித்தெறிகிறது. நுகர் வியம் (ஊழளெரஅநசளைஅ) எனும் பணி பாட்டின் விகாரமான முகத்தை அச்சுறுத்தும் விதத்தில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுகம் புதிய சமூகத்தின் "தேவை குறித்து நிச்சயமாக நம்மைச் சிந்திக்கத் தூண்டும். (சிவப்பு நூலும் சீனப் பெருஞ் சுவரும்' என்ற நூலில் மேற்குலகைச் சேர்ந்த 'ஆல்பர்டோ மொராவியா என்ற எழுத்தாளர் எழுதிய ஒரு உரையாடல் வடிவில் அமைந்துள்ள இந்த முன்னுரை பின்வருமாறு அமைகிறது)
ஆ. அப்போ சீனாவுக்குப் போயிருந்தீர்களோ? அ. ஆமாம், சீனாவுக்குச் சென்றிருந்தேன். ஆ: சீனாவில் உங்களைப் பெரிதும் கவர்ந்த விஷயம் எது?
அ! 6G60) D.
s: 6T6T60ig5), 6 gp60LDuJIT? அ: ஆமாம், வறுமைதான்.
10

ஆ. சீன மக்கள் அவ்வளவு ஏழைகளோ?
அ; மேற்கத்திய நாடுகளின் அளவு கோலில் பார்த்தால், ரொம்பவும் ஏழைதான்.
ஆ. அந்த வறுமையைப் பார்த்த போது உங்ளுக்கு என்ன தோன்றியது?
அ; ஒருவித நிம்மதி. ஆ நிம்மதியா? அடக் கடவுளே.எனக்குத் தெரிந்த வரை வறுமை, ஏழ்மை என்று சொன்னால் சீரழிவும், விரக்தியும் தான். அதெப்படி உங்களுக்கு மட்டும் நிம்மதியாக இருந்தது?
அ: ஆமாம், நிம்மதியாகத்தான் இருந்தது. நான் அப்படித்தான் உணர்ந்தேன். தனது சொந்த மன உணர்வுகளைக் கூட ஒரு மனிதனால் புரிந்து கொள்ள முடியாதா என்ன? சீனாவில் இருந்தவரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அதெப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதைப் பற்றி அப்போது நான் யோசிக்க வில்லை.இப்போது வேண்டுமானால் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முயற் செய்கிறேன்.
ஆ: மேற்கத்திய நாடுகளில் வறுமை நிம்மதி உணர்வைத் தோற்றுவிப்பதில்லை. மாறாக, அடக் கப்படும் உணர்வையும் அதற்கு எதிராக கலக உணர்வையும் தான், தோற்றுவிக்கிறது. உதாரணத 'திற்கு அமெரிக்க நீக்ரோக்களைப் பாருங்கள். கோபம் வந்தால் அவர்களின் சேரியை எரித்து விடுவார்கள்.
அ; அய்யா, அமெரிக்காவிலே ஏழைகளும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கக் காரணம், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கக் காரணம், ஏழைகள். ஆனால் சீனாவிலே ஏழைகள் மட்டுமே இருக்கிறார்கள்.
ஆ ஒ, சீனாவில் எல்லோருமே ஏழைகளா? அப்படி நான் யோசிக்கவில்லை.
அ: ஆமாம், சீனாவில் எல்லோருமே ஏழைகள் தான். அவர்களை ஏழைகள் என்று பெயரிட்டு அழைப்பது பொருத்தமாகவும் இல்லை. வேறு ஏதா வது தான் பெயரிட வேண்டும்.
ஆ: எடுத்துக்காட்டாக, ஏதாவது வார்த்தை சொல் லுங்களேன்.
அ; என்னால் உதாரணம் எல்லாம் சொல்ல முடியவில்லை. பணக்காரனோடு ஒப்பிடாமல் ஒரு ஏழையை அவனது சொந்த நிலைமையை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இதுவரை வார்த்தை எதுவும் உருவாகவில்லை.
ஆ: அப்படியானால் என்னதான் அந்த சீனத்து வறுமை?
த00கம்-55

Page 13
அ; அது செல்வமில்லாத 660 D, சரியாகச் சொன்னால், மனிதனின் இயல்பான நிலை அதுதான்.
ஆ. சரி, உற்பத்தி செய்வது, நுகர்வது. இந்த இரு நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலுமா?
அ:தொழில் துறை நாகரீகம் என்பதே கழிவுத் தன்மை கொண்டது தான் என்று நான் ஏற்கனவே சொன்னேன். அதன் முடிவு கழிவுதான். தனது கழிவை வெளியேற்றும் ஒரு மனிதனின் நடவடிக்கையை நாம் என்னவென்று அழைக் கலாம்? தன்னை வெளிபட்படுத்திக் கொள்வதாகச் Game)606)TLDIT?
ஆ:இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான் என்று வேண்டு மானால் சொல்லலாம்.
அ; சரி. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். அதாவது மறுபடியும் நுகர்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான். இங்கே ஆசுவாசம் என்பதே கழிவை வெளியேற்றும் நடவடிக்கை தான். இன்னொருபுறம் அதீதமாக உற்பத்தி செய்கின்ற, அதீதமாக நுகர்கின்ற மனிதனும் இருக்கின்றான். அவனுக்கு அஜீரணம் ஏற்படுகிறது. அதற்கோ நம்மிடம் பேதி மாத்திரை தயாராக இருக்கிறது - வேறு வார்த்தையில் சொன்னால் போர்.
இந்த உற்பத்தி - நுகர்வு எனும் சூழலில் அவ்வப்போது ஏற்படுகின்ற மலச்சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு யுத்தம் தவிர்க்க முடியாததாகவும் தடுக்க முடியாததாகவும் ஆகிவிடுகிறது எனத் தோன்றுகிறது. அமைதிக் காலத்து நுகர்வோனின் பணியை யுத்த காலத்தில் சிப்பாய் மாற்றீடு செய்கிறான். சிப்பாயின் நுகர்வோ அதிதீவிரமாக இருக்கிறது. அதிவேகமானதாக, விதவிதமானதாக, பரந்ததாக இருக்கிறது. அமைதிக் காலத்தில் ஒரு ஆண்டில் நுகரப்படுவதைக் காட்டிலும் அதிகமாக யுத்த காலத்தில் ஒரே நாளில் நுகரப்படுகிறது.
ஏராளமான பொருட்களையும் செல்வத்தையும் நுகர்ந்த பின்னும் திருப்தியடையாத சிப்பாய் மனித உயிர்களை நுகரத் தொடங்குகிறான். முதலில் எதிரிகளின் உயிரை, பிறகு தன்னுடையதை.
சுந்நதரசாமி இலக்கிய மேட்டிமைத் தனத்தினுள் ஒளிந்திருக்கும் அற்பவாத இதயம் நினைவின் குட்டை கனவு நதி' என்ற நூலில் 'குப்பண்ணன்' எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.
த70கம்-55

நூல்: நினைக்க, சிரிக்க. சிந்திக்க.
நகைச்சுவைக் கட்டுரைகள்) ஆசிரியர் பொ.சண்முகநாதன்
சண் அங்கிள்) பதிப்பு: மணிமேகலை பிரசுரம் விலை: ரூபா 180/-
air
நூல்: வரலாற்றில் வல்வெட்டித்துறை
(ஆவண நூல் ஆசிரியர்: பா.மீனாட்சிசுந்தரம் பின்னிணைப்பு: என்.சிவரட்ணம் பதிப்பு:அரும்பொருள் காப்பகம் V− வல்வெட்டித்துறை, இலங்கை விலை: ரூபா 500/-
11

Page 14
96ýbo pLvího)
இது சிறுகதைகளின் நீட்சியோ, நாவலோ,
ரின் தொகுப்ே bல. உள்நாட்டு யுத்தம் தொடங்கியபின் (ஏறத்தாழ 1977ற்குப் பின்) யாழ் குடா நாட்டில் அவ்வப்போது யுத்த நெருக்கீடுகளுக்கு முகம் கொடுத்து வந்த பிரதேசங்களில் வலிகாமம் வடக்கு மிக முக்கியமானதாகும்.
இதற்கு அது கொண்டிருந்த புவியியல், பொருளாதார காரணிகள் முக்கியமானவை. சுருங்கச் சொல்வதானால் வடக்கே ஆழமற்ற கடல், இயற்கைத் துறைமுகம், சீமெந்துத் தொழிற்சாலை, பலாலி விமான நிலையம், சமதரையான செழிப்பான விவசாய நிலம், நீர் வளம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
1987ல் நடைபெற்ற ‘ஒப்பறேசன் லிபறேசன் இன் போது வலிகாமம் வடக்கு மக்கள் முற்றாக இடம்பெயர நேர்ந்தது. பின் இந்திய ஒப்பந்தம் அமுலாகி இந்தியப் படை வந்து இறங்கியதும் ஓரளவு மக்கள் திரும்ப தம் மண்ணில் கால் பதிக்க முடிந்தது. அந்த அமைதி நின்று நிலைக்கவில்லை. அவ்வப்போது அலை அடிப்பதாய் இராணுவ நகர்வும் மக்கள் இடப்பெயர்வும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
1990ஆம் ஆண்டு ஜுன், அது ஒரு நிரந்தர இடப்பெயர்வாக அமைந்தது. பாண்டவருக்கு 12 ஆண்டுகள், இராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம் என்கிறது இதிகாசம்.
அவற்றை எல்லாம் தாண்டி வனவாசம் அனுபவித்து வரும் வலிகாமம் வடக்கு மண்ணின் மக்களுக்கு இன்னமும் மீட்சி கிடைக்கவில்லை. அந்த மண் மீட்பிற்கான போராட்டங்கள் தனி மனித ரீதியாகவும், குழுக்கள் அணிகளாகவும், அரசியல் நிர்வாக மட்டத்திலும் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஒரு தசாப்த காலத்தைத் தாண்டிய பெயர்வை தராசின் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு மறுதட்டில் பொதுவான யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையை வைத்துப் பார்க்கும் போது பெருத்த வேறுபாட்டை அவதானிக்க முடிகின்றது. அதாவது அரசியல், சமூக, கலாசார மாற்றங்கள் பாரிய இடைவெளியைக் காட்டி நிற்கின்றன.
இந்த இடைவெளி ஒரு நனவிடை தோய்தலுக்கு வழி வகுக்கின்றது. திறந்த பொருளாதாரம், பூகோள மயமாதல் என்பன ஊடறுத்துப் பாயாத அந்த & A வாழ்ந்த மனிதர்களை எண்ணிப் பார்க்க முடிகிறது. அவர்கள் தான் இந்தக் கதைகளின் நாயகர்கள். இவர்களுடைய வாழ்வில் அரசியல், எழுச்சி, சத்தியம்
12

- நடைச் சித்திர
pápafaj avojaĝi
ஒரு முன்னுரை
என்பன பொதிந்து இருக்கின்றன. கூடவே "சமூகம் பற்றிய கட்டுக் கோப்பு, கடப்பாடு, அணுகு முறைகள் இருக்கின்றன. இந்த அசைவியக்கத்தின் சுவையான அனுபவங்கள் ஒரு வரலாற்றைப் பதிவு செய்ய முயல்கின்றது எனலாம்.
இதில் வரும் கதைகள், சம்பவங்கள் ஒரு நடைச் சித்திரமாகவே வரையப்படுகின்றன. இவை யாரையும் படுத்தும் அல் ப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை. அன்றைய சமூக வாழ்வு யதார்த்தத்தில் எமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற தரிசனத்தை புதிய சந்ததியிடம் சுட்டிக் காட்டும் நோக்குடனேயே எழுதப்படுகின்றன.
களப்படுத்தலில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இந்தக் கதை நிகழ் களமாக மாவிட்டபுரம் எனும் கிராமத்தை மையப்படுத்துகிறேன். மாவிட்டபரம் கோயிலுக்குக் கிழக்காகச் செல்லும் வீதியில் இந்த மண்ணின் முகவரி அன்று இருந்தது. “பழை' என்பது அச்சிற்றுார்.
வீமன்காமம் மகா வித்தியாலயம், ஞானவைரவர் கோவில், புளியடி வைரவர் கோவில், புகையிரத நிலையம், காங்கேசன் சீமெந்து ஆலைக்குப் பொருள்களை மாற்றவென பரந்து விரிந்து கிடக்கும் தண்டவாள இரட்டைக் கோடுகள், தோட்ட வெளிகள், பனை வடலிகள், புல் வெளிகள், நாகதாளி, பூநாறி, இக்கிரிப் பற்றைகள், வீதியோரம் வளைந்து கிடக்கும் மூலிகைச் செடிகள் என்று தனக்கொரு அடையாளத்துடன் செழிந்து கிடக்கிற மண் அது. ஆயினும் முற்று முழுதாக அழிந்து போயிருக்கும் அனைத்து வலிகாமம் வடக்கு மண்ணுக்கும் இக்கதைகள் சமர்ப்பணம் ஆகட்டும்.
கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் 1970ற்கும் 1980ற்கும் இடைப்பட்ட கால நிகழ்வுகளையே உருப்படுத்துகின்றன. பிரதான பாத்திரங்கள் உணர்மையானவை. எனினும் அவர் தமி குடும்பத்தவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் புனைவான பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இழக்கப்பட்டுக் கிடக்கின்ற மண்ணின் வாழ்வியல் பதிவுகளை இது ஆவணப்படுத்துமெனில் அதுவே ஒரு வரலாற்றை எழுதக்கிடைத்த மகிழ்வைத் தரும்.
-மாவை வரோதயன்
த00கம்-55

Page 15
‘அக்கா தண்ணியத்தா நேரமாகுது” ரத்த அவசரப்பட்டார். “எப்பன் பொறு, முதுகண்டுப் பால் சு6 காய்ச்சினாத்தான் தேத்தண்ணிக்கு ருசி” ராச தொடர்ந்தாள். “குடுத்தனுப்புற சாமான தலை வா எடுத்து வைச்சிட்டுப் போ; பேந்து அவன் வந்தாப் என்னால தேடேலாது” அது அக்காவின் கட்டை “இண்டைக்கு தக்காளிக் காய் ஆய்வு தான் கிடக் பெரிய கடகம் ரெண்டும் கொண்டு போறன், குஞ்சுக் க ரெண்டு உந்தா கிடக்குது, தேவைப்பட்டாச் செ அனுப்புறன்". "இந்தா தண்ணியப் பிடி”.
மாசிப் பணியை விரட்டும் கொதி நிலையில் பசும் தேநீர் பித்தளை மூக்குப் பேணிக்குள் தளதளக்கிறது. கு குந்தில் இருந்தபடி ரத்தினம் ஒற்றைக் கையால் மூ பேணியை வாங்கி அண்ணாந்து தேநீரை வாய் வார்க்கின்றார்.
தோட்டத்துக்குப் போகும் அவசரத்தில் தேநீ குடித்துவிட்டு, எடுத்த சுருட்டுக் கட்டில் சுருட்டொன் பற்றவைத்துக் கொண்டு, மீதியை மடிக்குள் செருகி வை: ரத்தினம் புறப்படுகின்றார்.
த90கம்-55
h
 

ow ovio bijafjavјој
-மாவை வரோதயன்
Fராகரத்தினம்
ஏற்கனவே மடித்துக் கட்டிய நாலு முழ
" வேட்டி, அது எப்பொழுதும் செம்பாட்டு நிறமாகவே "* இருக்கும். எழுந்து நின்றால் ஆறடி உயரமான " ஆள், பரந்த தேகம், கால் பாதங்கள் செருப்பைக் :லில கண்டது கிடையாது. ஆகக் கறுப்பும் இல்லாமல், பிறகு வெள்ளையும் இல்லாத நிற மேனியில் மயிர்கள் கறுப்பும் வெள்ளையுமாய் படர்ந்து கிடக்கும். குது, தலைமயிர், மீசை, தாடி எல்லாம் அவை స மொத்தமாக மழிக்கப்படும் வரை தொடர்ந்து
வளரும் . இநீத அதிகாலைப் பனிக் குளிருக்குள்ளும் ஒரு மேலாடை இன்றி, ஒரு பால் துண்டுச் சால்லையை தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு இரத்தினம் அண்ணர் தோட்டத்துக்குப் $குப் போகும் அழகே அழகு.
தலைவாசலில் நின்ற சைக்கிளைத் திருப்பி, கடகங்களை கரியரில் வைத்துக் கட்டினார். ரைக் மண்வெட்டியை வலது பக்கத் தோளில் வைத்தபடி றைப் இடது கையால் ஹான்டிலைப் பிடித்து நிலத்தில் தபடி நின்றபடியே சீற்றில் இருந்து சைக்கிளைச் செலுத்தத் தொடங்கினார். அதிகாலை ஐந்து மணி,
13

Page 16
பனி மூட்டத்தில் ஒழுங்கை இருட்டாகி கிடக்கிறது, வெளிச்சம் இல்லை. இரத்தினம் அண்ணர் புகைக்கும் சுருட்டுத்தான் வழிகாட்டிப் போகிறது.
இந்த ஊரில் நாகரத்தினம் அண்ணர்தான் முதன்மையான விவசாயி, விவசாயம் தான் அவரது முழு நேரத் தொழில், அடுத்தது ஊர்விவகாரம், அதற்குள்தான் அரசியலும் அடங்கும்.
நடுத்தர வயதைத் தாண்டிய முதுமையும், அனுபவமும் தான் அவரது ஆளுமையின் ஆதாரங்கள். புகையிரத நிலையத்தின் பின்னால் சூத்திரக் கிணற்றை அண்டி ஐயாயிரம் கண்டுத்தறை தோட்டம் இருக்கிறது. அங்கு தக்காளி, கத்தரி, வெங்காயம், மிளகாய், உருளைக் கிழங்கு, மரவள்ளி என்று போகம் அறிந்து பயிரிடுவார். வீட்டுக் கிணத்தை அண்டி உள்ள ஒரு இருபது பரப்பு நிலத்தில் வாழை வைத்திருக்கிறார். அதைவிட ஒரு இரண்டாயிரம் கண்டுத்தறை கல்லுக் கிளறி, வாய்க்கால் இழுத்து வைத்திருக்கிறார். அதில் மானாவாரியில் மரக்கறி போடுவார்.
எல்லாம் மிசின் இறைப்புத்தான். சொந்தமாய் ஒரு 'வூல்சிலி மெசினும் அல்க்கத்தீன் பைப்பும் இருக்கிறதால யாருடைய உதவியையும் எதிர்பார்க்கிறதில்லை. தனி மனிதனாக உழைக்கிறார். பெரும்படி வேலைகளுக்கு ஆள் பிடித்து கூலி கொடுத்து வேலைகளைச் செய்விப்பார். மற்றும் தொட்டாட்டு வேலைகளுக்குத் தான் நிரந்தரமாக ஆள் அவருக்கு இருக்கு.
இப்போது ஸ்ரேசனடி தோட்டத்தில தக்காளிப்பழம் பறிக்கும் வேலை நடக்கிறது. இதுக்கு ஆள் பிடிக்கிறது வீண் செலவு என்று சரசு சொல்லுவாள். தானே விடிய வந்து பத்து மணி ஆகிறுதுக்குள்ள ஆயிரம் கண்டுத் தறையிலையும் காய் ஆய்ஞ்சு குவிச்சுப் போடுவாள். உதவிக்கு பெடியனும் நிற்பான்.
ரத்தினம் அண்ணர் தோட்டத்தில் போய் இறங்கி, சுருட்டையும் பத்தி முடித்து, கடகக் கட்டை சைக்கிளால் இறக்கும் போது சரசுவும் மகன் சந்திரனும் வந்து விட்டார்கள். ‘சுணங்காமல் ஆய்வம், வெய்யில் ஏறினால் இதுக்குள்ள நிற்கேலாது' சர்சு அவசரப்படுத்தினாள். வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
நேரம் காலை ஏழு மணி தாண்டியிருக்கும் ரத்தினம் அண்ணரின் வீட்டு ஒழுங்கைக்குள் சந்திரன் காரோடு வருகிறான். அவனுக்கு வயது ஏழு இருக்கும். சுறுசுறுப்பான பையன் “ப்ரூம். ப்ரூம். க்றீச்.” படலையடியில் பிறேக் போட்டு நின்றவன் அடுத்த சைகையைக் கொடுக்கிறான். “பீப். பீப்.” உள்ளே ராசு மாமியிடம் இருந்து பதில் கிடைக்காததால் குரல் கொடுக்கிறான்.
14

“பீப். பீப். தேத்தண்ணி கொண்டரட்டாம், நேரம் போச்சுது மாமி பள்ளிக்கூடம் போக வேணும்" "எடேய், ஆரையடா மாமி எண்டனி? கெட்ட கேட்டுக்கு ஒரு பள்ளிக்கூடம் . ஊரைக் கூட்டாம நில்லடா வாரன்." மாமி உள்ளே இருந்து நெருப்பெடுத்தார். சந்திரன் முன்னெச்சரிக்கையாக காரை றிவேர்ஸ் செய்து படலையில் இருந்து இருபதடி தூரம் பின்நோக்கி வந்து நிற்கிறான்.
ராசு மாமி படலையடியில் தரிசனம் ஆகிறாள். பித்தளைச் செம்பு, வட்டக் கோப்பை மூடி, கழுத்திலே பனை நார் சுற்றிக் கட்டிய கைபிடி, அதற்குள் தேநீர். கூடவே ஒரு உமல், பனை ஓலையில் பின்னி ஒரு கைபிடியும் உள்ளது. அதற்குள் குழல் பிட்டும் சம்பலும் மூன்று பேருக்கு; கொண்டு வந்த செம்பையும் உமலையும் படலையடியில் வைத்து மாமி பின் வாங்கிச் செல்கிறாள். சந்திரன் முன்னேறிச் சென்று அவை இரண்டையும் தன் இரண்டு கைகளிலும் எடுத்தபடி, ஸ்ரேறிங்கைப் பிடிக்காமலே காரை ஓட்டிப் போகிறான். இடையில் இருப்பது ஒரு வேட்டித் துண்டு மட்டுமே. இந் நேரம் அது அவிழ்ந்தால் அதோ பாடுதான்.
சரசு வேறு யாருமல்ல, ரத்தினம் அண்ணர் காதலித்துக் கைபிடித்த மனைவிதான் சந்திரன் அவர்களின் ஒரே மகன். சரசு யாழ்ப்பாண சமூகத்தின் சாபக்கேடுகளில் ஒன்றான சாதிய ஒடுக்கு முறைக்கு உட்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். தோட்ட வேலைக்கு வந்த இடத்தில் ரத்தினம் அண்ணருடன் காதல் மலர்ந்தது. ராசக்கா, தம்பி ரத்தினத்தின் திருமணத்தை ஏற்கவில்லை. ரத்தினம் துணிந்து செயற்பட்டார். ஊர் எல்லையில் ஒரு இரண்டு பரப்பு காணியை பழைய வீட்டுடன் வாங்கி அதில் சரசுவை குடியமர்த்தினார். குடும்பமும் நடத்தினார்.
ஆனால் ராசக்கா வலு காரியமான ஆள். தனது தோட்ட வேலைளைக் கவனிப்பதற்காக ரத்தினத்தை அணைத்து நடந்தாள். அவரின் மனைவியை எட்டக் கட்டினாள். ராசக்காவின் கணவன் உயிருடன் இருந்த போதும் அவர்களது தோட்ட வேலைகளை ரத்தினமே கவனிப்பதுண்டு.
ரத்தினம் பயிர் செய்யும் தோட்டக் காணிகளில் முக்கால்வாசியும் அக்காவின் சொத்தாக இருப்பதால் ரத்தினத்தால் தனித்துச் செல்ல முடியவில்லை. அக்காவின் கணவன் இறந்த பிறகு அக்காவுக்குத் துணை இல்லை என்பதால் ரத்தினமும் அக்காவுடனேயே தங்கிவிட நேர்ந்தது. சரசுவும் மகனும் தமது வீட்டில் தனியாகத்தான் இருக்கிறார்கள்.
ரத்தினம் அண்ணருக்கு சனி, ஞாயிறு, போயா நாட்களில் மச்சம் மாமிசம் சாப்பிடும் ஆசை வந்தால்
த00கம்-55

Page 17
சரசு வீட்டுக்குப் போவார். மற்றும்படி செலவுக்குக் காசு கொடுப்பதுடன் சரி.
ரத்தினம் அண்ணருக்கு விவசாயத்தைப் போலவே ஊர் விவகாரமும் மற்றொரு உயிர் மூச்சு. ஊருக்குள் யாரும் சண்டை பிடித்தால் அங்கு நெஞ்சை நுளைந்து விலக்குப் பிடிப்பது முக்கியமான பணி. கை ஓங்குகிற பக்கம் ரத்தினம் அண்ணரிடம் வாங்கிக் கட்டவும் நேரிடும் அதைவிட முக்கியமான விசயம் அவரது அரசியல் ஈடுபாடு. ஊரில் சிலர் இவரை வீ.பி ரத்தினண்ணை என்றும் அன்பாக அழைப்பார்கள். இலங்கை அரசியலில் தழிழரசுக் கட்சி தழிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் செல்வநாயகத்தார் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிடுவார்.
அவரை எதிர்த்து வியொன்னம்பலம் போட்டியிடுவார். அந்த நேரம் வி.பி க்கு மேடை போட்டு ஊருக்குள்ளே கூட்டம் வைத்துக் கொடுத்த பெருமை ரத்தினம் அண்ணரைச் சாரும் தன்னுடைய வாழைத் தோட்டத்தின் வேலி வெட்டி பக்கத்தில் பாதைப் பக்கமாய் இருந்த பூநாறிப் பற்றைக் காணியை துப்பரவாக்கி, லைற் என்ஜின் பிடித்து, ஊர் ஆட்களைக் கூட்டி ஒரு உற்சாகமான கூட்டம் நடந்ததெண்டால் அதற்கு ரத்தினம் அண்ணர்தான் காரணம்.
கூட்டம் போட்டது மட்டுமல்லாமல் அவர் கொம்யுனிசக் கொள்கைகளைப் பரப்புவதிலும் முக்கியமானவர். தோட்ட வேலை முடிந்து வந்தால் வீட்டுக்கு வீடு ரத்தினம் அண்ணரின் அரசியல் வியாக்கியானம் நடக்கும். அவரது கொள்கை விளக்க உரைகள் ஊரவர்க்கு ரீங்கார ஒலியாகக் கேட்கும். தமது தூக்கத்தைக் குலைப்பதாகவும் இருக்கும் ரத்தினம் அண்ணர் கதைக்கும் பாணியும் முணுமுணுப்பதாக அமைவதாலோ என்னவோ ஊரவர் அவரை ‘நுளம்பர் என்றும் செல்லமாக அழைக்கத் தொடங்கி விட்டனர். அதனால் அவர் முன்னிலையில் நோய் காவி நுளம்பு பற்றிக் கதைப்பதும் முடியாத காரியமாகி விட்டது.
விலக்குப் பிடிக்கப் போற இடங்களில், அல்லது வியாக்கியானம் கதைக்கிற இடங்களில் ஏதும் வில்லங்கங்கள் வந்தால் ரத்தினம் அண்ணர் கையை நீட்டிப் போடுவார்.
பின்பு விடயம் பொலிசுக்குப் போய்விடும். பொலிஸ் விசாரணைக்காகத் தேடி வரும். கோயில் முன் வீதியால் வந்து பள்ளிக்கூடம் கழிய தம்பக தம்பி ஒழுங்கை, அதைத் தாண்டி வர புளியடி ஒழுங்கை, அதில் இரண்டு வளைவு கழிய இடது பக்கத்தில் ராசக்காவின் வீடு. ஒழுங்கையில் இருந்து நூறு அடி உள்ளே சென்றாலே படலை வரும். படலையில் இருந்து நூறு அடி தூரம் உள்ளே போனால்தான் தலைவாசல் இருக்கிறது.
த00கம்-55

நூல்: ஆத்மாவின் ராகங்கள்
கவிதைத் தொகுப்பு ஆசிரியர் நெலோமி பதிப்பு: ஸ்ரீனா வெளியீடு விலை: ரூபா 150/-
பொலிஸ் ரத்தினம் அண்ணரைத் தேடி வருவதனால் பள்ளிக்கூடம் கழிய இருக்கிற சந்தியில் விசாரிப்பார்கள். யாரும் பொய் சொல்லமாட்டார்கள். ரத்தினம் அண்ணர் இருக்கும் வீட்டுக்குச் செல்லும் வழியைக் காட்டுவார்கள் வேலிப் பொட்டுக்குள்ளால் ஆள் அனுப்பி ரத்தினம் அண்ணரை உசாராக்கி விடுவார்கள்.
இனி என்ன, பொலிஸ் ஜீப் சுற்றி வளைத்து வந்து பார்க்கும் போது ‘விட்டில் ஆள் இல்லை' என்று எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். ரத்தினம் அண்ணர் அண்டையில்பாட்டுக்கு சரசுவுடன் இரவில் தங்கிவிடுவார்.
பிறகென்ன பழையபடி அக்கா வீடு, தோட்டம், அரசியல், ஊர் விவகாரம் என்று ரத்தினம் அண்ணர் முழுநேர உழைப்பாளி ஆகிவிடுவார்.
தேநீரையும் பிட்டையும் தோட்டத்தில் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, கொஞ்சப் பிட்டையும் சாப்பிட்டு விட்டு சந்திரன் தன் விட்டுக்கு ஓடி விடுவான். உடுப்பை மாற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் போவான். சரசுவும் ரத்தினம் அண்ணரும் தேநீரைக் குடித்துவிட்டு தக்காளிப்பழம் பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடுவார்கள். சரசு கடகத்தில் சேகரித்த பழங்களை ரத்தினம் அண்ணர் கொண்டு போய் குடிலுக்குள் சேகரிப்பார்.
கொழும்புக்குப் போற பழங்கள், செங்காய்ப் பழமாக ஆயவேணும், வெய்யில் ஏறமுதல் சரசு அன்றய இலக்கை எட்டும் அளவிற்கு பழங்களை ஆய்ந்து கொடுத்து விடுவாள். பின் இருவரும் குடிலுக்குள் இருந்து பிட்டும் சம்பலும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பாடு
15

Page 18
முடிய ஆட்டுக்கு ஐந்தாறு முள் முருக்கம் குழைகளை ஒடித்துக் கட்டிக் கொண்டு சரசு தன் வீட்டுக்குப் போவாள் மகன் சந்திரன் பள்ளிக்கூடத்தால் வரமுதல் மதிய உணவு தயாரித்து இதர வேலைகளைக் கவனிப்பாள் இதற்குள் ரத்தினம் அண்ணர் கோயிலடிக்குப் போய் கொழும்பு லொறி அலுவல்களைப் பார்த்து வந்து விட்டில் உள்ள வேலைகளைக் கவனிப்பார்.
மத்தியானச் சாப்பாடு சாப்பிட்ட கைய்ோடு கொஞ்சம் ஆறி இருந்து மீண்டும் தோட்டத்துக்குப் போவார்கள். அப்போது நேரம் மாலை மூன்று மணியைத் தாண்டியிருக்கும். ரத்தினம் அண்ணர் கொழும்பு லொறி வரும் வரைக்கும் காவல் இருப்பார். சரசு மாட்டுக்குத் தீனி தேடும் வேலையாக உழவாரத்தோடு மரக்கறிச் செடிகளுக்குள் புகுந்து விடுவாள்.
சரசு தனது மாட்டுக்கும் ராசக்காவின் மாட்டுக்கும் சேர்த்து புல்லுச் செருக்குவாள். இறுதியில் புல்லுக் கட்டை இரண்டாகப் பிரித்துக் கட்டி ஒன்றைத் தான் தன் தலையில் சுமந்து செல்வாள். மற்றையதை ரத்தினம் அண்ணர், அக்காவின் மாட்டுக்கென சைக்கிளில் எடுத்துச் செல்வார். -
நாக்கை வெளியே நீட்டி, மூக்கில் முட்ட வைத்து கைகளை பின்னால் செலுத்தி, பெருவிரல் இரண்டையும் மடித்துக் கட்டிய வேட்டிக் கட்டுக்குள் செருகியபடி நின்றால் நிச்சயம் ரத்தினத்தார் ஏதோ பலமான யோசனையில் நிற்கிறார் என்பது அர்த்தம். இப்போதும் அப்படித்தான் நிற்கிறார். நல்ல வேளை அவரைச் சோதிக்க வைக்காமல் லொறி வந்து விடுகிறது.
"எஸ்.என் சீல் அடித்த வெற்று கள்ளிப் பெட்டிகள் லொறியில் இருந்து இறங்குகின்றன. சற்று நேரத்திற்கெலி லாம் குவியலாயப் க் கிடந்த தக்காளிப்பழங்கள் கள்ளிப் பலகைப் பெட்டிக்குள் அடைத்து நிறுவை பண்ணப் படுகின்றன. அச்சவாரம் கைமாற பெட்டிகள் லொறிக்குள் ஏறுகின்றன. அலுவல் முடித்து கொழும்பு லொறி புறப்பட ரத்தினம் அண்ணரும் விடை பெறுகிறார்.
“சரசு இந்தா இதில பத்து ரூபா இருக்குது, பொழுது படுமட்டும் நிக்காத, நான் ஒருக்கால் பிரக்கிராசியைப் பார்க்க வேணும்' நான் போட்டு வாறன்.
அக்கா வீடு வந்த ரத்தினண்ணை புல்லுக் கட்டு, கடகம், மண்வெட்டி எல்லாம் இறக்கி வைக்கிறார். குளித்து வேட்டியை மாற்றுகிறார். இப்போது அவர் உடுத்தியிருப்பது நல்ல வெள்ளை வேட்டி, அலுமாரிக்குள் கிடந்த வெள்ளை சேர்ட்டையும் எடுத்துப் போடுகிறார். தலையை சீப்பால் வாரி, தாடியையும் வருடிவிட்டபடி சைக்கிளில் ஏறிப் புறப்படுகிறார்.
16

கிரன்
உன்னையே நீ அறிவாய் என்றான் ஓர் அறிஞன் உண்மை அது உன்னை அறிந்த உன் சுற்றம் உறவுகள் உண்டெனினும் உன்னை நீயே அறிவாய்.
உள்ளத்தின் ஓரத்தில் எங்கோ ஒர் மூலையில் ஒட்டியிருந்த விலங்குணர்வை ஒட்டிவிரட்ட வகையறியாது அலைந்த இளவயதில் உன் செயல் நன்மை கண்டு சிலர் உனை மனிதன் என்றார்கள் உனக்குள் நீ மனம் நொந்தாய்.
சேற்றுக்குள் நின்றுகொண்டும் சேறுபடா வாழ்வா இதயமிலாச் சமுகமிது இட்டுவைத்த விலங்குகளை உடைத்து மீறி இயன்றவற்றை செயத் துணிந்தீர்.
காலொடித்த வழிக்கல்லை கடந்து நடவாமல் தூக்கி எறிந்து வரும முன துயாதுடைககும வாழ்க்கை முறை மனுக்குலத்தின் புதிய பண்பாடு - ஏற்று நடக்கத் துணிந்தீர்.
போற்றுதலும் தூற்றுதலும் அவரவர்க்குப் பொருந்துகிற அளவைகளுள் போகட்டும் விலக்கு அதை திறந்துவை இதயத்தை வெண்மலராய் என்றும் விரிந்து மலர.
“அக்கா நான் உதில பிரக்கிராசியாரிட்ட போயிட்டு வாறன்" கை மணிக்கூட்டடில் நேரத்தைப் பார்க்கிறார் நேரம் மாலை ஆறுமணி.
(வருவார்கள்)
த90கம்-55

Page 19
சிறுகுகினற்று ஒரு பறவையைப் போல
FOTGvfluu GMTÜLJLLOTGOT இரு பெண்கள் திரைப்பட விமர்சனம்
-மணி தர்ஷா
ஆண்: நான் உன்னைக் கல்யாணம் செய்ய வேண்டுமென்றிருந்தேன். நீ அனுமதிக்கவில்லை. உன் னை சந்தோசமாக வைத் திருக்க வேணி டுமென்று விரும் பினேன் நீ அனுமதிக்கவில்லை. நான் உனக்குரியவனாக இருக்க வேண்டுமென விரும்பினேன். அதற்கும் நீ அனுமதிக்கவில்லை. நீ என்னை அழித்து விட்டாய்.
பெண்; நான் உன்னை அழித்து விட்டேனா? நடிக்காதே! நான் படிக்க வேண்டுமென்று விரும்பினேன் நீ விடவில்லை. நான் என்னுடைய குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினேன். நீ விடவில்லை. நான் வாழ விரும்பினேன் அதுக்கும் நீ விடவில்லை. நீ மட்டுமில்லை. நீ, என்னுடைய அப்பா, என்னுடைய கணவன் நீங்கள் ஒருவருமே என்னை அனுமதிக்கவில்லை. வாழ்க்கை முழுவதும் அச்சுறுத்தலுடனும், அவமானத்துடனும் வாழ்ந்தது போதும் ஏன் தாமதிக்கிறாய். நீ வந்த வேலையை முடி!
தனது காதல் நிறைவேறாததால் தான் ஒரு தலையாகக் காதலித்தவளையே கொல்ல வந்த இளைஞனுக்கும் அவனது காதலை ஏற்றுக் கொள்ளாத, அதே நேரம் தன்னுடைய வாழ்வு
ஈரானிய பெண் திரைப்பட நெறிய Women எனும் திரைப்படத்தினை நிக மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் மார் முன்னிட்டு, கொழும்பு தமிழ்ச்சங்கத்தி
த90கம்-55

ரைப்பட விமர்சனம்
மீது காதல் கொண்ட பெண்ணுக்கும் இடையே நடக்கும் உரையாடல் அது. -
இந்த உரையாடல் மூலமாகவும் அதனைக் காட்சிப்படுத்திய முறைமை மூலமாகவும் மிகத் தெளிவாகவே சமூக யதார்த்தத்தில் பெண்களின் நிலையை, அவர்கள் மீதான ஒடுக்குமுறையின் பல தளங்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஈரானிய பெண் திரைப்பட நெறியாளரான ரக்மினா மிலானி. இந்தக் காட்சி SLib Guibpg, 916 (560Lu TWOWomen (QJ605(6 பெண்கள்) என்ற திரைப்படத்திலாகும்
அவளை அடையத் துடிக்கும் ஆணினுடைய நோக்கம் முழுவதும் தான் அவளைக் கல்யாணம் செய்வது. தன்னுடையவளாக்குவது. அதுவும் தன்னுடைய சந்தோசத்திற்குரிய கருவியாக அவளை ஆக்குவது என்பதை மிகத் தெளிவாக அந்த உரையாடல் வெளிப்படுத்தி விடுகிறது. அவளை தன்னுடைமையாக்குவதைத் தவிர அதில் வேறொன்றுமில்லை. உன்னைச் சந்தோசமாக வைத்திருக்க விரும்பினேன் என்பதில் உள்ள *சந்தோசமாக வைத்திருத்தல்" என்பது கூட அந்த ஆண் தன்னுடைய நிலையிலிருந்து கொண்டு பெண் எதனால் சந்தோசம் கொள்வாளென்று
ாளரான ரக்மினா மிலானியின் Two
游
திரைப்பட வட்டம், விழுது ஆற்றல் 14ஆம் திகதி பெண்கள் தினத்தை
திரையிட்டது.
17

Page 20
கருதுவானோ அந்த சந்தோசத்தை வழங்குவதாக இருக்கிறதே தவிர அவள் எதைச் சந்தோசம் என்று கருதுகிறாளோ அதை வழங்குவதாக இல்லை. தனதும் தான் சார்ந்ததும் என்பதற்கு அப்பால் சிந்தனையில் விரிவு ஏதும் இல்லை ஆணிடம்.
மாறாக பெண் சொல்லும் பதிலில் தான் படிக்க வேண்டும் என்கிறாள், தன்னுடைய குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்கிறாள். சாராம்சமாக தான் விரும்பிய தன்னுடைய வாழ்க்கையை அவள் வாழ வேண்டும் என்கிறாள். இங்கு அவளுடைய வாழ்தலின் நோக்கம் ஆணினுடையதை விட விரிந்து செல்கிறது. அவள் சொல்கிறாள் "அதற்கு நீ அனுமதிக்கவில்லை, என்னுடைய கணவன் அனுமதிக்கவில்லை. என்னுடைய அப்பா அனுமதிக்கவில்லை." சமூகத்தில் ஆண் வகிக்கும் இந்த மூன்று பாத்திரங்களும் மிகத் தெளிவாக ஆண் மேலாதிக்க சிந்தனையைத் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்பவை. அது மட்டுமல்ல ஆணாதிக்க சமூகத்தில தமது பாத்திரத்திற்கான நியாயத் தன்மையையும் அவை கற்பிப்பவை.
தெஹரானி கல் லுாாரியில் படித்துக் கொண்டிருக்கிறாள் ப்ரெஸ்ரியா என்ற மாணவி. மிகுந்த துணிச்சலும் தன்னம் பிக் கையும் புத்திசாலித்தனமும் கொண்டவள். தனக்கான வாழ்க்கை பற்றிய கனவுகள் நிரம்பியவள். தந்தை மிகுந்த சிரமத்தின் மத்தியில் இவளது படிப்புக்காக அனுப்பும் பணத்தையே தான் பிரத்தியேக வகுப்புகள் கொடுப்பதனுாடாக இரண்டு மடங்காகத் திருப்பி அனுப்புபவள். அவளுடைய புற அழகால் கவரப்பட்டு அவளைத் துரத்தத் தொடங்குகிறான் ஒரு இளைஞன். அவளுடைய மறுப்பையும் பொருட்படுத்தாமல் தன்னைக் காதலிக்கும்படி தொடர்ச்சியாக மிரட்டுகிறான். அவளை அடைவதற்கு எத்தகையை வன்முறையையும் பாவிக்க அவன் தயாராகிறான். ஒரு நாள் மோட்டார் சைக்கிளில் தன்னைத் துரத்தி வரும் அவனிடமிருந்து தப்புவதற்காக விரைவாகக் காரைச் செலுத்தும் ப்ரெஸ்ரியா குறுகலான தெரு ஒன்றில விளைாயடிக் கொணி டிருந்த குழந்தைகளை மோதி விடுகிறாள். இதன் விளைவாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டவளின் விடுதலைக்கு அவளை அடைய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் உதவுகிறான் ஒருவன்.
அவன் செய்த உதவிக்கு பிரதியுபகாரமாக இவளது விருப்பத்திற்கு மாறாக அவளை மணம் முடித்துக் கொடுக்க முடிவெடுக்கிறார் தந்தை. ஆனாலும் கல்யாணத்திற்கு முன்பாக தன்னுடைய எதிர்பார்ப்புக்களை அவனிடம் அவள் சொல்லி
18

தனது மறுப்பைத் தெரிவிக்கிறாள். அவனோ இவளைச் சமாதானப்படுத்தி இவள் கல்யாணத்தின் பின்னும் தொடர்ந்து படிப்பதற்கு தான் சம்மதம் என்றும் அதனை வேண்டுமானால் எழுத்தில் தருவதாகவும் சொல்கிறான்.
ஆனால் கல்யாணத்தின் பின்போ அவளுடைய எதிர்பார்ப்புகள் யாவும் சரியத் தொடங்குகின்றன. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அவளை அவன் கல்லுாரிக்குச் சென்று படிக்க அனுமதிக்கவில்லை. சாதாரணமாக வீட்டில் புத்தகங்கள் படிக்கக் கூட அவன் அனுமதிப்பதில்லை. அவள் கவிதையை முணுமுணுப்பதைக் கூட தப்பர்த்தம் காண்கிறான் அவன். அவள் தன்னுடன் படித்த நண்பியுடன் தொலைபேசியில் உரையாடுவது கூட தவறாகக் கற்பிக் கப்படுகிறது. தடுக் கப்படுகிறது. குழந்தைகளை வளர்க்கும் முறையில் கூட கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அவளுடைய அபிப் பிராயங்கள் எதுவும் கணக்கெடுக்கப்படுவதில்லை. அவளுடைய உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை. அவள் ஒரு மனிதஜீவியாக அவனால் நடாத்தப்படவில்லை. அவள் இது குறித்து பலமுறை அவனுடன் விவாதிக்கிறாள். தன்னைப் புரிந்து கொள்ளும்படி கேட்கிறாள்.
தன்னை மனிதஜிவியாகப் பார்க்கும்படி, தன் உணர்வுகளை மதிக்கும்படி வேண்டுகிறாள். இவை எவற்றையும் புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
இவளைக் காதலித்தவன் வன்முறை கொண்டு இவளை ஒடுக்க நினைத்தான். ஆனால் இவளை மணம் முடித்தவனோ வார்த்தை மூலமான வன்முறையால் இவளைக் குதறுகிறான். சாராம் சத்திலி இரணி டும் பெணிணை ஒடுக்குபவைகளே.
இந்த வார்த்தை வன்முறையைத் தாங்க முடியாமல் விவாகரத்துக்குப் போகும் அவளிடம் நீதிபதி கேட்கும் கேள்விகள் பெண் மீதான சட்டத்தின் ஒடுக்குமுறையை இனம் காட்டி விடுகிறது.
நீதிபதி கேட்கிறார்
அவன் உனக்கு காசு தருகிறானா? ஓம்.
உனக்கு புகலிடம் தந்திருக்கிறானா?
ஓம்.
உன்னை அடிக்கிறானா? தீயபழக்கங்கள் உள்ள நண்பர்கள் இருக்கிறார்களா? மது பாவிக்கிறானா? சூதாடுகிறானா?
த00கம்-55

Page 21
இல்லை. அப்படியில்லையெனில் நீ விவாவகரத்துக் கேட்பதன் காரணம்?
அவன் என்னை மதிப்பதில்லை, என்னைச் சந்தேகிக்கிறான், என்னை அவமரியாதை செய்கிறான், எனது செயல்களுக்கு எதிர் மாறானவனாக இருக்கிறான். நான் ஒரு மனிதப் பிறவி, என்னுடைய விருப்பத்திற்கு வாழ விரும்புகிறேன். எனக்கு இந்தத் திருமண வாழ்க்கையில் சமபங்கு வேண்டும் எனக் கேட்கிறேன் என்கிறாள்.
அப்போது நீதிபதி கூறுகிறார், அவை எதுவும் விவாகரத்திற்குப் போதுமான காரணங்கள் இல்லை என்றும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல் வெளியேறும்படியும்.
அவளுக்கு விவாகரத்தும் கிடைக்கவில்லை. சமூகம் என்ன சொல்லுமோ என்று பயந்து பெற்றோரும் அவளை ஏற்க மறுக்கின்றனர். அவளது நிலை கணவனுடன் திரும்பவும் செல்லுதல் மட்டுமே. அதன் பின்னர் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு தன்னைத்தானே அவள் கேட்கும் கேள்வியும் மிக முக்கியமானது. ஆணாதிக்க குடும் பப் பின்னணிக்குள் சிக்குண்டு தவிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டு கழிவிரக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் அனைத்தையும் ப்ர்ெஸ் ரியா மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மிலானி.
"கடவுளே இது என்னுடைய குழந்தையா? எனக்கு என்ன நடந்தது? நான் ஒரு குழந்தையைப் பெறுவதற்குத் இன்னும் தயாராகவில்லையே?
த90கம்-55
 

என்னுடைய வாழ்க்கை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. நான் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். எனக்கு விருப்பங்கள் இருக்கின்றன. என்னிடம் பல திட்டங்கள் இருக்கின்றன. எனக்கு அது நிறைவேறும் என்பதில் நம்பிக்கையில்லை. அதற்குள் அடுத்த குழந்தையும் உருவாகி விட்டது என்று கவலையடையும் காட்சி இன்றைய பெண்களின் அச்சொட்டான பிரதிநிதியாக அவளைக் காட்டி விடுகிறது.
இங்கே ஒரு பெண்ணின் ஆளுமை முற்றாக அழிக்கப்பட்டு, பெண்ணென்றால் பிள்ளை பெறுவதற்கும், சமைப்பதற்கும், கணவனுக்கு பணிவிடை செய்வதற்குமே என்ற ஆணி மேலாதிக்கவாதிகளின் சிந்தனைகள் குறித்து எதிர்வினைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இறுதியாக 13 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து வரும் காதலன் இவளது கணவனைக் கத்தியால் குத்திக் கொன்று விடுகிறான்.
அதன்போது அவள் தனது நண்பியிடம் இப்படிச் சொல்கிறாள். "உண்மையில் அவன் கொல்லப்பட வேணி டும் என நான் நினைக்கவில்லை. நான் அவன் மீது அன்பு செலுத்தியிருக்கிறேன். எப்படியென்றால் ஒரு சிறைக் கைதி சிறைக் காவலர் மீது காதல் கொள்வது போல. நான் அவன் சாகவேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். இப்போது இறக்கையில்லாத ஒரு சுதந்திரமான பறவை போல நான் உணர்கிறேன்.”
தான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஒரு வேலையைத் தேடிக் கொள்ள
19

Page 22
வேண்டும் என்று விரும்புகிறாள்.
பிள்ளைகளைச் சரியானபடி வளர்க்க விரும்புகிறாள். அவளால் இனி ஒரு நிமிடத்தைக் கூட விரயமாக்கி விட முடியாது அவள் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.
மூன்றாம் உலக நாடுகளில் பெண் அடக்கு முறை என்பது மிகவும் உச்சநிலையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு விடயம். இவ்விடயம் சம்பந்தமாக எவ்வளவு எதிர்க்கருத்துக்கள் இருந்த பொழுதிலும் அவை எவற்றையும் ஒரு பொருட்டாக மதிக்காது பெண்ணியவாதிகளையும், பெண்ணியக் கருத்துக்களையும் கேலிக்குரியதாகவே நமது ஆணாதிக்க சமூகம் எதிர் கொள்கிறது. இதைவிட பெண்ணியம் என்பது மேலைத்தேயத்திற்கு மட்டுமே உரித்தானதான சாயம் கூட பூசப்பட்டுள்ளது.
பெண்களைத் தொடர்ந்தும் அடிமை நிலையில் வைத்துக் கொள்ள விரும்புபவர்களே பெண்ணிலைவாதத்தை மேலைத்தேசத்தின்ர்க்குச் சொந்தமான ஒரு விடயமாகக் காட்டி உதாசீனப்படுத்த முயன்று வருகிறார்கள். பெண்ணிலைவாதத்தின் முக்கியத்துவத்தையும், ஆணாதிக்கக் கட்டமைப்புக்களிலிருந்தும், சுரண்டலிலிருந்தும், அடக்குமுறையில் இருந்தும் பெண்களை வெளிக் கொணி டு வரவும் இத்திரைப்படம் முயற்சிக்கிறது.
குறிப்பாக பெண் மீதான காதலின் பேரால் நிகழ்த்தப்படும் வன்முறை (காதலன்), கடமையின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை (தந்தை), உரிமையின் பேரால் நிகழ்த்தப்படும் வன்முறை (கணவன்) என்பவற்றை மிகத் துல்லியமாக அலசுகிறது. அம்பலப்படுத்துகிறது இத்திரைப்படம் அது மட்டுமல்லாமல் வன்முறை என்பது வார்த்தைகளினாலும் மேற்கொள்ளப்படலாம். உடற்காயங்களை ஏற்படுத்தும் வன்முறைகள் போல, மனக் காயங்களை ஏற்படுத்தும் வன்முறைகளும் மிகுந்த ஆபத்தானவை. ஒடுக் குமுறைக்கு கருவியாக வார்த்தை வணி முறைகள் பெருமளவில் பயனர் படுத் தப்படுகின்றன என்பதையும் எம்முடைய சிந் தைக்குக் கொண்டு வருகிறார் ரக்மினா மிலானி. ஈரானிய பெண் திரைப்பட நெறியாளரான giLislaoist L56,om 6fluloi TWO Women 61 golf திரைப்படத்தினை நிகரி திரைப்பட வட்டம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் மார்ச் 14ஆம் திகதி பெண்கள் தினத்தை முன்னிட்டு, கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் திரையிட்டது.
இது நிகரி திரைப்பட வட்டத்தின் இரண்டாவது
திரைப்பட மாதமாகும் . இத் திரைப்படம் திரையிடப்பட்ட பின்னர் நடந்த கலந்துரையாடலில்
20

அதுவும் ஆண்களிடமிருந்து இந்தப் படத்திற்குக் கிடைத்த ஆதரவு இன்னும்
பெண்ணிலைவாதத்திற்கும், அதனை அழகாகத்
தொற்ற வைத்த மிலானிக்கும் கிடைத்த வெற்றியே.
கலந்துரையாடலில் பங்குபற்றிய ஆண் ஒருவர்
கூறினார். இத்திரைப்படம் எனக்குள் பல
அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய
அம்மாவுக்கு இது நேர்ந்ததாகவே நான்
உணர்கிறேன். உண்மையில் எனக்குச் சொல்ல. வார்த்தைகளே வெளிவரவில்லை. என்றார்.
இன்னொருவர் கூறினார்: பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்துவதை உண்மையில் ஒரு
நோயாகக் கொள்ளலாமா? அதனை ஒரு
ஆணியல் நோய் என்று சொல்லலாமா என்று,
இன்னொரு நண்பர் கூறினார் எனது அம்மாவை
பரெஸ்ரியா பாத்திரம் ஞாபகப்படுத்துகிறதென்று.
இவ்வாறு பலதரப்பட்ட ஆக் கபூர்வமான அபிப் பிராயங்கள் அங்கே பகிர்ந்து
கொள்ளப்பட்டன.
என்னைப் பொறுத்தவரையில் பெண்களிடமிருந்து வரும் கருத்துக்களைவிட ஆண்களின் மூலம் வரும் பெண்ணிலைக் கருத்துக்களே உண்மையான பெண்ணியத்தின் வெற்றியென நான் நினைக்கிறேன்.
துருக்கியத் தேசியவாதிகளின் தலைவரான முஸ்தபா கெமாலி கூறுகிறார்: "பெணி ஜீவசக்திமிக்க இயங்காற்றலின் ஊற்றுக்கண். வயல்களை உழுதவர் யார்? அவள் தான். தானியத்தை விதைத்தவர் யார்? அவள் தான். மரம்வெட்டுபவளாகிக் கோடரியைக் கையில் ஏந்தியது யார்?அவள் தான். வீட்டிலே அடுப்பை எரியச் செய்தது யார்? அவள் தான். மழை என்றும், காற்றென்றும் பாராமல் குளிரோ, உஷ்ணமோ என்றும் பாராமல் போர் முனைக்கு ஆயுதங்களைச் சுமந்து சென்றது யார்? அவள் தான்.
எனவே இந்தத் துணிவுமிக்க தன்னலமற்ற பெண்களைக் கெளரவிப்போம். எம்முடைய எல்லாச் சமூகப் பணிகளிலும் எம்முடைய பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளவும், அவளுடன் வாழவும், விஞ்ஞான, தார்மீக, சமூக, பொருளாதார முயற்சிகளில் அவளை எமது தோழியாக்கவும் நாம் உறுதியளித்தாக வேண்டும். இதுதான் நாம் செல்ல வேண்டிய பாதையென நான் நம்புகிறேன்."
இந்தச் சிந்தனையை தனது திரைப்படத்தின் ஊடாகத் துாண்டிவிட்டு துணிந்து எழுந்து நிற்கிறார் ரக்மினா மிலானி.
SSS
த00கம்-55

Page 23
இலங்கையில் முற்போக்கு இலக்கியம் 1950களிலேயே வெளிவெளியாக இடதுசாரி சமூகச் சிந்தனையுடன் தன்னை அடையாளப்படுத்தியது என்றாலும் தமிழ் இலக்கியத்தில் முற்போக்கான சமூகச் சிந்தனைக்கும் அதிலும் முந்திய தொடக்கங்கள் உண்டு. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இந்திய நிகழ்வுகள் நீண்டகாலமாகவே தாக்கம் செலுத்தி வந்துள்ளன. அச்சுப் பதிப்பு முறையின் வருகை இப்போக்கை மேலும் வலுப்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கமும் பாரதியின் எழுத்தும் இலங்கை தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது. பின்னர் பகுத்தறிவு இயக்கமும் பாரதிதாசனும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கண்டோம்.
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் தமிழ் இன உணர்வு நடுத்தர வர்க்கத்தினர் இடையேயும் ஆய்வறிவாளர்கள் (புத்திஜீவிகள்) நடுவிலும் வலு வாயிருந்தது. இதன் தொடக்கங்களை ஒரு புறம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் சீர்திருத்தச் சிந்தனை மரபில் காணலாம். இன்னொருபுறம் மரபுவாதச் சிந்தனையிலும் பழமை வாதத்தினுள்ளுங் கூடக் காணலாம். தமிழகத்தில் பகுத்தறிவு சிந்தனை வலுப்பற்று திராவிட இயக்கம் தமிழ் தேசிய வாதமாக வடிவம் பெற்ற போது அதன் பாதிப்பை இலங்கையிலும் உணரக் கூடியதாய் இருந்தது. நாத் திகம், சாதிமுறைக்கு எதிர்ப்பு, மூடநம்பிக்கைகளின் மறுப்பு போன்ற சிந்தனைகளை ஏற்றோரில் ஒரு பகுதியினர் தமிழ் தேசியவாதத்தின் திசையிலும் இன்னொரு பகுதியினர் இடதுசாரிச் சிந்தனை வழியிலும் பயணம் செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சினிமாப் பாணியிலான அரசியல் சிலரை ஈர்த்தது. இதற்கிடையே, ‘சிங்களம் மட்டுமே” சட்டத்தின் வருகை சமூகச் சீர்திருத்த எண்ணம் உடையோரையும் தமிழ் தேசியத்தின்பால் இழுத்தது.
முருகையன் தனது இளமைப் பருவத்தில் மேற்குறிப்பிட்டவாறான போக்குகளின் சூழலில் அகப்பட்ட பலருள் ஒருவர். எனினும், தமிழ் பற்றிய வெறித்தனமான பற்றில் இருந்து அவர் வேகமாக விடுபட்டமைக்கு இலங்கை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பிற சமூகத்தவருடன் ஏற்பட்ட தொடர்புகள் பங்களித்ததாலும் அவரது திறந்த மனமே அதை இயலுமாக்கிற்று என்பது என் ஊகம். வெறித்தனமான தமிழ்ப் பற்றினின்று அவர் விடுபட்ட போதும், 1956ம் ஆண்டின் அரச கரும மொழிச்
クnののóー55
 

- இலக்கிய ஆய்வுபாடல்கள் வழியே
O O
ாம வளர்ச்சி
- சி. சிவசேகரம் - சட்டம் அவரை தமிழரசுக் கட்சியை நோக்கித் தள்ளியது. 1952 முதல் 1957வரையிலான அல்லது தொடக்கக்காலக் கவிதைகளில் அவரது தமிழ் தேசிய வாதம் தெளிவாகப் புலனாகிறது. தமிழ் தேசியவாத சிந்தனையின் ஆதிக்கம் பல சிந்தனையாளர்களது பார்வையில் தமிழ் சமூகத்தின் அகமுரண்பாடுகள் மீது விழாது மறித்தது. முருகையனும் இதற்கு விலக்காய் இருக்கவில்லை.
தமிழை வழிபாட்டுக்குரிய ஒரு பொருளாகக்
கொண்டு உணர்ச்சி வெள்ளமாக கவிதை வடிப்போரின் மூலவராகப் பாரதிதாசனைக் கூறலாம். தமிழகத்தின் அரசியலில், தமிழ் அடையாளம், தேசிய இன் ஒடுக்கலை ஒரு பரிமாணமாகக் கொண்டிருக்கவில்லை. அங்கே பார்ப்பன விரோதமும், பின்னாளில், வடஇந்தியர் மீதான பகை உணர்வும் தொடர்ந்து பிற தென்னிந்தியத் தேசிய இனங்களுடனான பகைமையும் வலுப்பெற்றன. முதலாளிய, சிறுமுதலாளிய குறுகிய கால நலன் சார்ந்து அவை வளர்ச்சி கண்டனவேயொழியத், தேசிய இன ஒடுக்கலின் அடிப்படையில் அமையவில்லை. இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் தீவிரம் ஒடுங்கியபின் ஏற்பட்ட வர்க்க அடிப்படையிலான சமரசங்களை அடுத்து தமிழ்ப் பற்று என்பதை தமிழக அரசியலில் செல்லாக் காசாகிவிட்டது.
இலங்கையில், பேரினவாதம் மொழியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியபோதும், அதன் இலக்குத் தேசிய இன ஒடுக்கலாக இருந்ததன் விளைவாக, மொழியுணர்வும் இனஉணர்வும் இலக்கியத்தில் வெளிப்பட்ட முறை, நேரடியாகவே சமூக - அரசியல் நோக்கங்களை சார்ந்து அமைந்திருந்தது. எனவே தேசிய இன ஒடுக்கலில் சுரண்டும் வர்க்கப் பரிமாணத்தை உணர்ந்தவர்கள் தேசிய இன ஒடுக்கலை வர்க்கச் சமுதாயம், ஏகாதிபத்தியம், நிலவுடமைச் சிந்தனை ஆகியவற்றுடன் உறவுபடுத்தி நோக்கினர். இதன் பயனாக, அவர்களது அணுகுமுறையில் ஒரு இடதுசாரி முனைப்புத் தோன்றி விருத்தி பெற்றது. முருகையனின் கவிதைகள் அவரில் ஏற்பட்ட படிப்படியான மாற்றத்தை துல்லியமாக காட்டுகின்றன.
“ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்” எனுந் தலைப்பிற் காலந்தாழ்த்தி வெளிவந்த அவரது கவிதைத் தொகுப்பின் முதற்கவிதை 1952ம் ஆண்டு வெளியானது. தமிழின் உயர்வு கூறும் கவிதைகளில் தொடங்கி தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கை, அறப்போர், ‘யூரீஎதிர்ப்பு போன்றவற்றை ஆதரித்து முருகையன் எழுதிய கவிதைகளில் தொடக்கத்தில் இருந்த உணர்ச்சிக்
21

Page 24
கொந்தளிப்பைக் காலப்போக்கில் நகைச்சுவை உணர்வு மேவிவிடுகிறது. தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் போராட்டங்களும் பற்றிய கவிஞரின் நம்பிக்கை தர்க்க ரீதியான ஒரு எழுத்து நடையில் முன்வைக்கப்படுகிறது. எனவே
"தமிழிதன்றோ பெருமை மூச்சு தங்கமன்றோ கவிதை வெள்ளம் தமிழிதன்றோ நெஞ்சின் உண்மைத் தமிழன் கொள்ளும் உயிரின் வேகம்
(உயிரின் வேகம், 1952)
என்பன போன்ற வரிகட்குப் பின்பு பாரதிதாசனின் "கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயலறவே' என்ற போராட்ட அழைப்பின் சந்தத்தில் வரும்
‘அமுதொன்றிய தமிழ் என்பதை அவர் கொன்றிட முனைவார் அதுகண்டுயிர் சுமைகொண்டினி அழியார் தமிழ் மைந்தர்'
(பனவேரற ஒரு போர், 1956) போன்றவை வருகின்றன. பின்னயவற்றுக்கு சமாந்தரமாக ஏளனம் கலந்த கவிதைக் கணைகள் நிறையவே காணக் கிடைக்கின்றன.
கெட்டு வீழும் எம்மினம் கிழிந்து பிய்ந்து பீத்தலாய் விட்ட பின்னும் எம்முள் மொய்த்த வேற்றுமைகள் விட்டிடோம் மட்டிலாத எங்கள் பண்பு மற்புரிந்து இறந்திடல் எட்டிய முனை நாங்களே எதிர்த்து மாய்ந்து சாகுவோம்' (வாரும் எங்களுக்குள்ளே ஓர் மற்புரிந்து சாகுவோம், 1956)
தமிழரசுக் கட்சியின் காந்தியமும் அறப்போரும் பற்றிப் பேசிவந்தாலும் அக்கட்சித் தொண்டர்கள் காலததுக்குக் காலம் அரசியற் காடைத்தனத்தில் இறங்கினர். அதை வன்மையாகக் கண்டித்துக் கவிஞர் முருகையன் எழுதிய ‘வெட்கம் கொள்ளுக' என்ற கவிதை, கவிஞரின் சமூக அரசியல் பார்வையில் ஏற்பட்ட ஒரு திருப்பத்திற்குக் கட்டியங் கூறுகிறது என்று தோன்றுகின்றது.
தமிழ்த்தாய்த் துதிக்குள்ளும் பண்டைப் பெருமைகளைச் சான்று கூறும் வீராவேசப் பிரகட னங்களிலும் தமிழ்த் தேசியக் கவிதை தேங்கி முடங்கத் தென்பட்ட ஒரு சூழலில், அப்போக்கினின்று விடுபட்டு கவிதையின் செயற்பாட்டைத் தளத்தை விரிவுபடுத்திய ஒரு கவிஞராக முருகையனை அடையாளப்படுத்துங் கவிதைகளை அவரது முதலாவது கவிதைத் தொகுதியான ‘நெடும்பகல் அதற்குப் பல காலம் பின்னர் வெளியான 'மாடும் கயிறுகள் அறுக்கும், "நாங்கள் மனிதர் ஆகியவற்றிற் காணலாம். 1950களின் பிற்பகுதி முதல் 1960களின் இடைப்பகுதி வரையில் எழுதப்பட்ட இவ்வாறான கவிதைகள் சமூக நீதி, மனித சமத்துவம் என்பன பற்றிய அக்கறைகளை நோக்கிய நகர்வையும் தொட்டுக் காட்டுகின்றன.
எவ்வாறாயினும் 1960களின் நடுப்பகுதி வரையிலான கவிதைகளின் அழுத்தம் வாழ்வைக் கொண்டாடுதல் மீதானது எனலாம். மனித முயற்சி மூலமும் அறிவு சார்ந்த சிந்தனை மூலமும் மனிதரும் மனித சமுதாயமும்
22

மேன்மை எய்தலாம் என்ற தொனியை இக்காலக் கவிதைகளில் பரவலாக கேட்க இயலுமாயுள்ளது. சமூக விரோத நலிவுச் சிந்தனைகளும் செயல்களும் இக் கவிதைகளிற் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. ஆயுதப் பெருக்கமும் உலக மேலாதிக்க நோக்கிலான போர் முனைப்பும் அவரது கூரிய கண்டனத்தை பெறுகின்றன. இங்கும் ஏளனமும் நகைச்சுவையும் முருகையனின் முக்கியமான ஆயுதங்களாக பயன்படுகின்றன. வேறெங்கோ போயொழியும் விருப்பமுடன் ஒடுபவன் போற வழி இடைமறித்து புறத்தவனை இழுத்தழைத்துச் சேறு வழியானாலும் எங்கள் வழி செலுத்துகிறோம் எங்கே போகின்றோமோ? எனக்குத் தெரியாது எனக்கு மட்டும் என்ன, எவருக்கும் தெரியாது
(தெரியாது) அவரை இலங்கைத் தமிழ் கவிதைப் பரப்பில் ஒரு முக்கியமான கவிஞராக முன்னிறுத்திய ‘நெடும்பகல் என்ற நெடுங்கவிதையும் மேற்குறிப்பிட்ட கால எல்லைக்குட்பட்டதே. ‘விடிவு எனும் துணைத்தலைப்பின்
‘சங்கொலித்தது போலொரு சேவலும் கங்குல் தேய்வதைக் காட்ட ஒலித்தது வெண்கலக்குரலால் மணி நாவுகள் தங்கள் இன்னொலி கிண்ணெனத் தந்தன
புள்ளினங்கள் புலம்பலை விட்டன உள்ளமிதினில் ஊறிய ஆனந்த வெள்ளமான மிகுசுவைத் தேனிசை அள்ளி அள்ளி அளித்திடலாயின’
என்றவாறு கம்பீரமாகத் தொடங்குகிற கவிதை புவியின் தோற்றமும் உயிரினங்களின் எழுச்சியும் பற்றிய ஒரு விஞ்ஞான அறிவு சார்ந்த சித்தரிப்பாக விரிவடைந்து மனிதரது சமுதாய வாழ்வும் மனித உறவுகளும் முகிழ்ச்சி பெறுவதை ஒரு முழு நாளின் விருத்தியோடு சேர்த்துக் காட்சிப்படுத்துகிறது. கவிதையின் இறுதி வரிகள், ஒளிகூட்ட விளக்கமில்லாத போதிலும்,
‘தென்புமிகுந்து நெஞ்சகத்தே மேவி விளக்காய் மின்னியது; அவ் விளக்கின் ஒளியை மங்காமல் காவல் காத்தார் இருபேரும் காலம் மெல்ல நகர்கிறது என மனிதனின் நிலைப்பிற்கும் உயர்விற்கும் அடிப்படை ஆதாரம் மனவுறுதியே என்று உணர்த்தி நிற்கின்றன.
முருகையன் எக்காலத்தும் தன்னுணர்வு சார்ந்த கவிதைகளை எழுதியுள்ளார். எனினும் அவரது காதற்கவிதைகள் தமிழ்க் கவிதை மரபில் வழமையான சில அடையாளங்களை நிராகரிக்கிறது. பெண்ணை ஒரு நுகர் பொருளாக நோக்குவதை அவர் தவிர்க்கிறார். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சமத்துவமான உறவு என்பதில் அவர் மிகத் தெளிவாகவே இருந்து வந்துள்ளார். ‘நெடும்பகல் இந்த நோக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது எனலாம்.
முருகையனுடைய நகைச்சுவை உணர்வு அவரது கவிதையை வளம்படுத்தி செழிப்பூட்டுவதை ‘கூற்றுவன்
த00கம்-55

Page 25
கொலு, ‘ஒரு வரம்' எனுங் கவிதைகளிற் தொடங்கி அவரது பின்னைக் காலக் கவிதைகள் பலவற்றிலுங் காணலாம். −
“கடவுளுக்கு விளையாட்டு கவுண்மேன்ற்றுக்குச் சீவன் போகுது"
(கடவுளுக்கு விளையாட்டு-1984) தன்னை அரசாங்கத்தின் அங்கமாக கருதி அலுத்துக் கொள்ளுகிற அரசாங்க அலுவலர் முதலாக அரசியல் வழிகாட்டல் இல்லாத சமூகப் பொறுப்பற்ற வன்முறையை ஊக்குவித்த யாழ்ப்பாண நடுத்தர வர்க்கச் சமூகத்தை அடையாளப்படுத்துகிற சில கவிதைகள் வரை எதுவுமே தனிப்பட்ட முறையில் எவரையும் இழிவு செய்கிற நோக்கமுடையதல்ல. இங்கு சிரிப்பிற்குரியவை சில சிந்தனை முறைகளும் சமூக நடத்தைகளுமே ஒழியக் குறிப்பான எந்தத் தனி மனிதருமல்ல. அதைவிட முக்கியமாக அவரது நகைச்சுவையில் ஒரு சினேகமான பண்பை நாங்கள் காணலாம். இத்தகைய ஒரு மரபு எம்மிடம் இருந்து வந்து இப்போது இழக்கப்பட்டு வருவது வருந்தத் தக்கது. வழிபடுங் கடவுளுரைக் கூடக் கிண்டல் செய்கிற கவிதை மரபு நமக்குண்டு. இன்று தம்மை எத்தகைய விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டோராகக் கருதுகிறவர்கள் மலிந்து வருவதையும் விமர்சனங்கள் எதிர்கொள்ளப்படுகிற விதத்தையும் கருத்திற் கொள்ளும் போது, முருகையனுடையது போன்ற செழுமையான நகைச்சுவைப் பண்புடைய கவி தைகளின் எதிர்காலம் பற்றியுங் கவலைப் படவேண்டி இருக்கிறது.
முருகையனுடைய கவிதை.தொடக்க நிலையில் அவரது விஞ்ஞான அறிவு, தமிழ்ப் புலமை என்பவற்றால் வளம் பெற்று எழுச்சி கண்டது. எனினும் மாக்ஸிய இயங்கியலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் குரலையும் முருகையன் உள் வாங்கியதையடுத்து அவரது கவிதை புதிய உச்சங்களை எட்டுகிறது. இந்த மாற்றம் முருகையனின் கவிதைகளில் படிப்படியாக ஏற்பட்டு வருவதை 1960களின் பிற்பகுதியிலிருந்து 1980வரையிலான ஆக்கங்களுடு அடையாளம் காண இயலும். இவ் வளர்ச்சியின் உச்சமாக மாக்ஸிய இயங்கியலை உள்வாங்கி அவர் எழுதிய கவிதைகளின் ஆணித்தரமான வரிகள் அமைகின்றன. அவை ஆழமான மாக்ஸியச் சிந்தனையையும் கவித்துவத்தையும் எவ்வாறு அழகியலுணர்வுடன் பின்னி அமைக்கலாம் என்பதற்காக நல்ல உதாரணங்கள்.
“இல்லை என்பதை இல்லை செய்குவோம் எதிர் மறுத்ததை எதிர் மறுப்போமே முன்னர் ஓடிய திசையில் ஒடுவோம் முகிலை நோக்கியே உயர ஏறுவோம்" என்ற வரிகள் ‘புது வரலாறும் நாமே படைப்போம்' என்ற தலைப்பிலான ஒலிப்பேழை மூலம் கவிதையில் நாட்டமற்ற பலரையுங் கூடக் கவர்ந்தவை. அவற்றை உள்ளடக்கியதான ‘ஒவ்வொரு பாகையாய்' என்ற தலைப்பிலான நீண்ட கவிதை மனிதர் தமது வரலாற்றைத் தாமே உருவாக்க வல்லார் என்ற சிந்தனையை வற்புறுத்தும் ஒரு சிறப்பான படைப்பு.
த00கம்-55

1977ம் ஆண்டுக்குப் பிறகு அடுக்கடுக்காக அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட பேரினவாத வன்முறை முருகையனை அதிர வைத்தது. ‘வாயடைத்துப் போனோம்’ என்ற கவிதை, 1977ம் ஆண்டின் வன்முறைக்கு அவரது எதிர் வினையாக மட்டுமன்றி முழுச் சமூகத்தினதும் உணர்வையும் அடையாளப் படுத்துவதாக அமைந்திருந்தது. 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதையொட்டி அவர் எழுதிய ‘இருட்டிலே தோன்றும் எண்ணங்கள், ‘அதொன்றும் தெரியாது’ ஆகிய கவிதைகள் அரசாங்கத்தின் வஞ்சக நோக்கத்தின் மீதான காட்டமான விமர்சனங்களாகும். அந்த இரு தசாப்தங்களிலும் யாழ் குடா நாடு பல வேறு அரசியல் நெருக்கடிகளை எதிர் நோக்கியது. அச் சூழலின்
சிக்கலான அரசியல் நிலமைகளுள் விடுதலையின்
பேரில் அராஜகப் போக்குகள் தலையெடுத்தன. இயக்கங்களிற்கிடையிலான மோதலும் குடா நாட்டை வாட்டிப் பணியவைக்கும் இலங்கை அரசின் கடும் போக்கும் இந்தியக் குறுக்கீட்டின் உச்சக்கட்டமாக இந்தியப் படைகளின் வரவும் மேலும் அழிவுக்கு வழி செய்தன. இக் காலங்களிலெல்லாம் முருகையனுடைய கவிதை வீச்சு சமுதாயக் கொடுமைகளைக் கண்டித்தும் ஏளனஞ் செய்தும் கடுமையாகச் சாடியது. VYr
தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்துகிற கவிதைகள் 1980களின் இடைப் பகுதியிலிருந்து முருகைய னிடமிருந்து வருகின்றன. அவை 1990களில் உக்கிரம் பெறுகின்றன. உக்கிரம் பெறுகின்றன எனினும் முருகையனுக்கும் தமிழ்த் தேசியவாதக் கவிஞர
'களாகத் தம்மை அடையாளப்படுத்திய பலருக்கும்
இடையில் ஒரு அடிப்படையான வேறுபாடுண்டு. அது முருகையனின் சொற்களில் எவ்விதமான இனத்துவேசமும் இல்லாமையாகும். 1991க்குப் பின்பு மீளவும் முனைப்புப் பெற்ற போர்ச் சூழல் முருகையனின் அக்காலக் கவிதைகள் மீதும்
நெருக்குவாரங்களைச் செலுத்துவதை நாம் காணலாம்.
அப்பாதிப்பினின்று முருகையன் படிப்படியாக மீண்டு தமது சமதருமக் கொள்கைக்கும் தேசிய இன விடுதலைக்குமிடையே சமநிலை காணுவதை அவரது “ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு பிள்ளையும் தொகுதியின் பிற்பகுதியிலுள்ள கவிதைகள் தெரியத்தருகின்றன.
முருகையனின் கவிதையின் முக்கியமான சில அடையாளங்களை இனிக் கவனிப்போம்.
அவரது தொடக்க காலக் கவிதைகளில் இருந்த தமிழ்த் தேசிய உணர்ச்சிப் பிரவாகம் பின்னர் வடிந்து போகின்றது. இந்தப் போக்கையொட்டி இன்னொரு முக்கியமான மாற்றமும் நிகழுகிறது.அவரது மொழி நடை நிதானமாக அமைவதோடு சேர்ந்து பேச்சு மொழியின் வலுவான சில பண்புகள் அவரது கவிதையில் தமக்கான ஒரு இடத்தை பெற்றுக்கொள்கின்றன.
23

Page 26
வெளிவெளியான கருத்துப் பிரகடனங்கள் தவறானவை என்பது முருகையனின் கவிதைக் கோட்பாடல்ல. எனினும் தனது கருத்துக்களை தேவைக் கேற்ப நேரடியாகவும் குறிப் பாலும் எதிர்மறையாகவும் உணர்த்தும் வாகனமாகக் கவிதையைப் பயன்படுத்தும் முருகையன், எந்த நிலையிலும் தனது நிலைப்பாடு பற்றிய மாற்று வியாக்கியானங்கட்கு இடமளிக்கவில்லை என்பது முக்கியமானது. கவிதை என்பது முரண்பட்ட வாசிப்புக்கட்கு இடமளிக்க வேண்டுமென்கிற குழப்பமான ஒரு விமர்சனக் கோட்பாட்டிற்கு உரிய பதிலாகவே முருகையனின் கவிதை மொழி உள்ளது. அதே வேளை, அவரது கவிதை நேரடியான ஒரு கூற்றாக நின்று விடாமல் அதற்கப்பால், ஆழமான தேடல்களைத் தூண்டிவிடுகிற வகையில் விரிவான பல்வேறு வாசிப்புத் தளங்களுக்கு வாசகரைக் கொண்டு செல்கிறுது என்பது இன்னொரு விடயம். இது எல்லா வகையான கவிதைகட்கும் அடையாளமான ஒரு பண்பு.
மரபுச் செய்யுள் மீது முருகையனுக்கு ஈடுபாடு மிகுதி என்பதால் அவருக்குப் புதுக்கவிதை மீது நாட்டம் இருந்ததில்லை எனலாம். புதுக்கவிதை தமிழகத்தில் உருவாகி விருத்தி பெற்ற சூழலில் அதன் உருவமும் உள்ளடக்கமுங் காரணமாக முருயைன், கைலாசபதி, மகாகவி ஆகியோர் உட்படப் பலரும் அதை நிராகரித்தனர். வடிவிலும் உள்ளடக்கத்திலுமி புதுக்கவிதை பொலிவு பெறத் தொடங்கிய சூழ்நிலையில், முருகையனால் அதை ஏற்க முடிந்தது. ஆனால்: அவ் வகையாக எழுதும் ஆர்வம் அவருக்கு ஏற்படவில்லை.
மொழி என்பது பயிற்சியின் பாற்பட்டது. கவிதை பயிற்சியுடனுடம் பழக்கப்படுவதுடனும் தொடர்புடையது. நாம் கவிதையை எவ்வாறு அறிகிறோம் என்பது நமக்கு விருப்பமான செய்யுள் வடிவங்களைத் தீர்மானிக்கிறது. மரபுச் செய்யுள் வடிவங்களை வரையறைகளாகவும் வரம்புகளாகவும் சிலர் நோக்குகின்றனர். மாறாக, மரபுடன் பரீட்சயமுள்ள ஒரு படைப்பாளிக்கு முன் அவை பல வகையான தெரிவுகளை அடையாளங் காட்டுகின்றன. அவற்றினின்று மேலும் புதிய வடிவங்களை உருவாக்க இயலும் என்பதை நாம் மறக்கலாகாது. மரபுச் செய்யுள் வடிவங்களுள் யாப்ப விதிகட்கமைய எழுதுவது செயற்கையானது, வலிந்து சொற்களைத் திணிக்கும்படி செய்கிறது என்ற விதமான விமர்சனங்கள், தமிழ்க் கவிதை வரலாற்றில் இரண்டாயிரமாண்டு வரலாற்றின் செழுமையான பல பக்கங்களை முற்றாகவே புறக்கணிக்கின்றன.
முருகையன் ஒசைநயங் கருதி கருத்தையோ கவித்துவத்தையோ இரண்டாமிடத்துக்கு தள்ளியவர் என்கிற குற்றச்சாட்டு சிலரால் தங்களது சொந்த இயலாமையை மூடிக் கட்டும் நோக்கிலி முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் முருகையனுடைய சொற் தெரிவை ஊன்றிக் கவனித்தால் பாநாடகங்கள் போன்றவற்றில் அன்றாட உரைநடைப்பாங்கான சொற்களும் சொற்றொடர்களும் முக்கியத்துவம் பெறுவதையும் காவியப்பாங்கான படைப்புக்களில்
24

செம்மொழிக்கு முக்கியத்துவம் உள்ளமையையும் தனிப்பாடல்களின் தன்மைக்கேற்ப சொற்களின் தெரிவு வேறுபடுவதையும் காணலாம். ஆங்கிலச் சொற்களைக் கூட அவர் தேவையறிந்து பயன்படுத்தியுள்ளமையை நாம் உணரலாம்.
முருகையனுடைய நகைச்சுவை உணர்வு அவரது கவிதைகளின் முக்கியமான ஒரு அம்சமாகும். தனது மனக் கொதிப்பை வெளிப்படுத்துவதற்கும் அவர் நகைச்சுவையை நாடுவதைப் பல இடங்களிற் காணலாம். ஏளனம் எதிரியைத் தாக்குகிற அளவு வன்மையுடன் சுடு சொற்களால் இயலாமற் போகலாம் என்பதற்கு முருகையனின் நகைச்சுவை நல்ல எடுத்துக்காட்டு. இன்று அவருடையது போன்ற நகைச்சுவையை நம்மால் உரையாடல்களிற் கூட காண இயலாதுள்ளது. ஆழமான நகைச்சுவையுணர்வே இவருக்கும் மகாகவிக்கும் சில்லையூர் செல்வராசனுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தியது என்பதை அவர்களிடையிலான கவிதைச் சமர்கள் மூலம் காணலாம்.
முருகையனுடைய தெளிவான மொழிநடையும் சொற் சிக்கனமும் அவரது கவிதைக்கு மிகுந்த வளஞ் சேர்த்துள்ளன. தமிழின் அதி சிறந்த கவிதை மரபுடனான பரிச்சயம் அவரது கவிதைகட்கு ஊட்டமளித்தது. சிலேடையில் அவருக்கு நாட் டமிலி லாமை ஐயத்திற்கிடமின்றி எழுதுவதில் உள்ள அக்கறையின் துணை விளைவாக இருக்கலாம். தமிழகத்தில் எழுச்சி பெற்று இன்று நலிந்து வருகிற புதிர்த்தன்மையுடைய உள்மனத் தேடற்பாங்கான கவிதைகளை அவர் விரும்பியதில்லை. அவரது கவிதைகள் மேற்படி கவிதைப் போக்குகளின் மறுதலிப்பாகவும் அமைந்தன என்பேன். இன்று தமிழில் புதுக்கவிதையே கோலோச்சுகிறது. இது இன்னும் நீண்ட காலத்திற்கு தொடரும் என்பது என்பது என் மதிப்பீடு. எனினும் புதுக்கவிதையை எவரும் தெரிவதற்குக் காரணம் அது பற்றிய புரிதல் என்று சொலி வது கடினம் . பரவலாகவே தமிழ் க் கவிதைகளுடனும் கவிதை மரபுடனுமான பழக்கமின்மையும் மரபை அறிவதில் உள்ள சோம்பலும் அதைவிட மோசமாக, எந்த விதமான சந்த உணர்வுமே இல்லாமையும் பலருக்கு புதுக்கவிதையை ஒரு குறுக்குப் பாதையாக்கியுள்ளன. முறையான ஒரு கட்டுரையையோ தெளிவான ஒரு விளக்கக் குறிப்பையோ கூட எழுத இயலாதவர்கள் புதுக்கவிதை மூலம் தங்களைக் கவிஞர்களாகக் காட்டிக் கொள்ளுகின்றனர் என்பது இன்றைய தமிழ் எழுத்துலகின் அவலத்தின் அடையாளம்.
முருகையன் சென்ற நூற்றாண்டின் மரபுக் கவிஞர்களில் அதி முக்கியமான ஒருவர் என்பது பற்றி எனக்கு ஐயமில்லை அதிலுஞ் சிறப்பாக நவீன சிந்தனைக்குக் கவிதையை வாகனமாக்கியவர்களிடையே அவருக்கு உன்னதமான இடமொன்றுண்டு. சுருங்கச் சொல்லுவதாயின் பாரதியின் கவிதை மரபின் முற்போக்கானதும் சமூகப் பிடிப்பானதும் விருத்தியை அதி சிறப்பாக அடையாளப்படுத்துகிற ஒரு பெருங் கவிஞராக நாம் முருகையனைக் கூறலாம்.
த00கம்-55

Page 27
பூமி மனிதனுக்குச் சொந் மனிதன்தான் பூமிக்குச் செ
செவ்விந்திய தலைவன் 1851ல் எழுதிய மொழியாக்கம் புதூர் இராசவேல்
கி. பி. 1851- இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அ அதிபர், சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்க சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் ே அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சிய அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிர கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அ முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க'வொ6 பண்டைப் பொதுவுடமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அ பூர்வமான பொதுவுடமை முதலாளித்துவத்திற்கு சாவுமனி தொடங்கிய அதேவேளையில் மனித குலத்தின் முதலாளித்துவத்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது இ உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில்
நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி வி வாங்க முடியும்? எப்படி விற்க முடியும்? நல்ல வே காற்றின் தூய்மையும், தண்ணிரின் ஒளியும், எங்க தனிச்சொத்துகளல்ல. பிறகு அவற்றை எப்படி நீ வாங்க ( பூமியின் ஒவ்வொரு துகளும் எங்களின் மக்க புனிதமானது.
பளபளக்கும் ஊசி இலைகளும், மணல் கடற்கரைகளும், இருண்ட காடுகளுக்குள்ளே பரவிய காடு திருத்திய நிலங்களும், ரீங்கரிக்கும் பூச்சி இன எங்கள் மக்களின் நினைவுகள் வழியாகப் புை நிலைத்திருக்கின்றன. மரங்களுக்குள்ளே செல்லும் நடு சிவப்பு இந்தியனின் நினைவுகளை பல தலைமுறைகளாக
நாம் பூமியின் அங்கம், பூமியும் நம்மில் ஓர் அங் எனவேதான், வாஷிங்டனிலிருந்து அதன் தலைவர் "நிலத்தை வாங்கப் போவதாக"ச் சொல்லி அனுப்பி எங்களை அவர் அதிகம் விலை கொடுத்து வா நினைப்பதாகவே தோன்றியது, நிலங்களை வாங்கிய
த90கம்-55

- சுற்றுச்சூழல்
தமல்ல
ாந்தம்! பிறந்தவர்களும் உல
கடிதம் லாப் பழங்குடியினரை
மெரிக்க
ளூக்குச்
கட்டார். ாட்டில்,
6)ds றிக்கை
அதே ண்ணாத றிவியல் அடிக்கத் மழலை á. என்னும்
டிக்கை.
560Lu முடியும்?
ளுக்குப்
பரந்த பனியும், ங்களும் ரிதமாக ந்தண்டு க் தாங்கி
எங்கள் யபோது ங்கிவிட பிறகும்
வெள்ளையர்களாகப்
கைவிட்டு நீங்கத்தான் வேண்டும். மற்ற எல்
விடச் சீக்கிரமாகவே மறைந்தும் போகலாம். நீ படுதி துறங்கும் நிலத்தை p(3u அசுத்தப்படுத் தினால் ஓரிரவில் உன் குப்பை களுக்குள் ளேயே மூச்சு முட்டி நீ செத் துப் போகலாம்.
*ቫ',}}ቫ -£ ;
நமக்கென்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுப்பதாகவும், அங்கே நாம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் சொல்லி அனுப்பினார் அவர்.
நமக்கு அவர் தந்தை போல ஆகிவிடுவார், நாம் அவருக்குக் குழந்தைகளாகி விடுவோம், அதனாலேயே நம் நிலங்களை அவர் வாங்க அனுமதித்துக் கொள்வோமாம்.
ஆனால் அது அப்படி எளிதாக முடிகிற விசயமல்ல, காரணம், எங்களுக்கு எங்கள் நிலங்கள் புனிதமானவை.
அருவிகளிலும் ஆறுகளிலும் ஓடுகிறது தூய்மையின் தண்ணிர் வெறும் நீரல்ல, அவை எங்களது ரத்தம். உங்களுக்கு எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால் அது முதலில் புனிதமானதென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அதேபோல உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நிலம்
25

Page 28
புனிதமானதென்பதை நீங்கள் கற்றுக் கொடுங்கள், படிகம் போன்ற ஏரிகளின் தெளிந்த நீரில் தெரியும் பிம்பங்கள் எங்களது மக்களின் வாழ்வில் நடந்த பலவிதமான சம்பவங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொண்டேயிருக்கம்.
ஓடுகின்ற நீரில் நீங்கள் கேட்கும் முணுமுணுப்பு எங்கள் பாட்டனின் குரல்.
வெள்ளைக்காரன் இருக்கிறானே, அவனுக்கு எங்களின் பழக்கவழக்கங்கள் தெரியாது, எங்கள் நிலத்தின் எல்லாப் பகுதிகளுமே அவனைப் பொறுத்த அளவில் ஒன்றுதான். இரவிலே திருடன் போல உள்ளே நுழைந்து தான் ஆசைப்பட்ட பொருளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போவதுதான் அவன் பழக்கம். கல்லறையில் தந்தையைப் புதைப்பான், மறுகணம் மறந்து போவான், அவனுக்குக் கவலையில்லை. பிள்ளைகளிடமிருந்தே கூட நிலத்தைப் பறித்துக் கொள்வான். அவர்களின் எதிர்காலம் பற்றி அவனுக்கு அக்கறையில்லை.
தந்தையின் ஆன்மா இருந்த கல்லறை சந்ததியின் உரிமை இரண்டையுமே அவன் வெகு சுலபமாக மறந்து போகிறான். தாயாகிய பூமியை சகோதரனாகிய வானத்தை ஆடுமாடுகளைப் ப்ோல விற்கக்கூடிய வாங்ககூடிய கொள்ளையடிக்கக் கூடிய பொருள்களாக மட்டுமே அவன் பார்க்கிறான்.
பச்சைப் பூமியை எடுத்து விழுங்கி எல்லாவற்றையுமே வறண்ட பாலைவனமாக்கி விடுகிற அகோரப்பசி அவனுக்கு.
எப்படிப் பார்த்தாலும் எங்கள் பாதைகள் வேறு, உனது பாதைகள் வேறுதான். எங்களுக்கு உங்கள் நகரங்களைப் பார்க்கும் போதே எரிகிறது. வேதனை வாட்டி எடுக்கிறது. காட்டுமிராண்டிகளுக்கு நகரங்களை விளங்கிக் கொள்ள முடியாடிதென்கிறாய்.
வெள்ளையனின் நகரங்களில் அமைதியான ஒரே ஒரு இடத்தைக் கூட உன்னால் காட்ட முடியாது. வசந்த காலத்தில் இலைகள் விரியும் ஓசைகளை அங்கே கேட்க முடியாது, ஒரு பூச்சியின் சிறகுகள் அசையும்
ஓசையைக் கூடக் கேட்க முடியாது. ஒருவேளை நான் காட்டுமிராண்டி என்பதால் எனக்குப் புரியாது என்பாய்.
உனது நகரங்களின் இரைச்சல் காதைக் கிழிக்கிறது. இரவில் ஒற்றைப்பறவையின் ஏக்கம் தொனிக்கும் குரலோ, குளத்தின் அருகே தவளைகளின் சுவையான விவாதங்களோ கேளாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? நான் ஒரு செவ்விந்தியன். எனக்கு விளங்கவில்லை.
26

குளத்தின் மேல் தடவிச் செல்லும் காற்றின் ஒலியை விரும்புகிறான் ஒரு செவ்விந்தியன். பகலில் பெய்யும் மழை சுத்தப்படுத்திய காற்றின், ஊசி இலையில் பரவி வந்த காற்றின் வாசனையே அவன் விரும்பும் வாசனை.
காற்று அவனது பொக்ஷிம். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என்று எல்லா சீவராசிகளுமே ஒரே மூச்சுக் காற்றைத்தான் சுவாசிக்கின்றன.
ஒரு வெள்ளையன் தான் சுவாசிக்கும் காற்றை என்றைக்காவது நின்று கவனித்திருப்பானா?
பல நாட்களாகவே மரணப் படுக்கையில் விழுந்து விட்டவனைப் போல அல்லவோ நாறும் காற்றில் அவன் மூச்சிறுகிக் கிடக்கிறான்.
உங்களுக்கு நிலத்தை விற்கிறோம் என்றால் காற்று எங்களின் பொக்கிஷம் என்று அறிந்து கொள்ளுங்கள். எல்லா உயிருக்கும் காற்றே ஆதாரம் அவற்றில் எல்லாம் காற்றின் ஆன்மா பாய்ந்து ஓடுகிறது. எங்கள் பாட்டனுக்கு எது முதன்முதலில் உயிரான மூச்சைக் கொடுத்ததோ, அதே காற்றுத்தான் அவருக்கு மரணத்தின் போது பெருமூச்சையும் கொடுத்தது.
எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால். தனியே அதை நீ புனிதமாகக் கருதவேண்டும். பாதுகாக்க வேண்டும் அங்கே போகிற வெள்ளையன் கூட பூக்களின் இனிய மணம் நிறைந்த காற்றைச் சுவாசிக்கலாம்.
நானொரு காட்டுமிராண்டி, எனக்கு வேறு விதமாகப் புரிந்து கொள்ளவும் தெரியவில்லை.
புல் வெளியில் ஆயிரம் எருதுகளின் சடலங்கள் அழுகிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன். அவை அருகே ரயிலிலிருந்து வெள்ளையர்களால் பொழுதுபோக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டவை. புகை விட்டுச் செல்லும் உன் ரயில் எங்கள் எருதுகளை விட எந்த விதத்தில் உயர்ந்தது? எனக்கு விளங்கவில்லை - நானொரு காட்டு மிராண்டி.
விலங்குகள் இல்லை என்றால் மனிதன் ஏது? விலங்குகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டால் ஆன்மாவை விட்டு விட்ட கூடுபோல மனிதன் செத்துப் போவான்.
விலங்குகளுக்கு என்னவெல்லாம் நேர்ந்ததோ, மனிதனுக்கு அவை சீக்கிரத்திலேயே நடக்கும் எல்லாமே ஒன்றோடுடொன்று சம்மந்தப்பட்டவை.
உன் குழந்தைகளுக்கு நீ கற்றுத்தா அவர்களின் காலடியில் உள்ள மண் பாட்டன்மாரை எரித்த சாம்பல் என்று. அதனால்தான் அவர்கள் நிலத்தைப் போற்ற வேண்டும் என்கிறேன். எங்கள் சுற்றத்தாரின் வாழ்க்கையால் நிரம்பிய பொக்கிஷமே இந்தப் பூமி என்பதை உன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்.
த00கம்-55

Page 29
பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம், அதை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.
பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தம்- இது எங்களுக்குத் தெரியும்.
பொருள்கள் எல்லாம் உள்ளே இணைந்தவை. ஒரு குடும்பத்தை ரத்தச் சம்பந்தம் பிணைப்பது போல. எல்லாப் பொருள்களும் உள்ளுக்குள்ளே இணைந்தவை. பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.
மனிதன் வாழ்க்கை என்ற வலையைப் பின்னவில்லை. அவன் அதில் ஓர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவன் எத்தனைகேடுகள் செய்தாலும் அவற்றையெல்லாம் தனக்கே செய்து கொண்டவனாகிறான். கடவுளே வந்து அந்த வெள்ளையனோடு தோளோடு தோள் சேர்ந்து நடக்கலாம். நண்பர்களைப் போலக் கலந்து பேசலாம். ஆனால் அவனுக்கும் இறுதித் தீர்ப்பிலிருந்து விதிவிலக்கு இல்லை.
என்ன இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்கள் தானே இதோ பார்.
வெள்ளையர்களாகப் பிறந்தவர்களும் உலகைவிட்டு நீங்கத்தான் வேண்டும். மற்ற எல்லாப் பழங்குடியினரை விடச் சீக்கிரமாகவே மறைந்தும் போகலாம். நீ படுத்துறங்கும் நிலத்தை நீயே அசுத்தப்படுத்தினால் ஓரிரவில் உன் குப்பைகளுக்குள்ளேயே மூச்சு முட்டி நீ செத்துப் போகலாம்.
அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர்போல. எருதுகள் படுகொலையையும். காட்டுக் குதிரைகளைப் பழக்கி விடுவதையும், காடுகளுக்குள்ளே எங்கு பார்த்தாலும் மனித நடமாட்டம் அதிகரிப்பதையும் பழைய பூர்விகமான மலைகளை மறைத்து தொலை பேசிக் கம்பிகள் பெருகி வருவதையும் நாம் விளங்கிக் கொள்ளாமலேயே இருக்கிறோம். வரப்போகிற அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர்போல.
புதர்க்காடுகள் எங்கே? எல்லாம் போயிற்று
மலைக்கழுகுகள் எங்கே? அவையும் மறைந்தன.
விரைவாக ஓடும் மட்டக்
മൃ?Dകb-55

ல் நினைவுச்சுவடுகள் டுMT ே த் தொகுதி ஆசிரியர்: சோபத்மநாதன் பதிப்பு: தூண்டி கேணியடி திருநெல்வேலி, இலங்கை விலை: ரூபா 180/-
குதிரைகளையும் வேட்டையாடி அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன நடக்கிறது?
இப்படி வாழவேண்டும் என்ற அவர்களின் வாழ்க்கை முடிந்து விட்டது.
எப்படியோ மீதமிச்ச வாழ்க்கை மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக கொள்வோம்- எங்கள் நிலத்தை நாங்கள்-நேசித்தது போலவே நீங்களும் நேசியுங்கள், நாங்கள் எப்படிக்
ப்பற்றி த்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள், எங்களிடமிருந்து நிலம் பெறுகின்றபோது எப்படி இருந்தது என்பதை மட்டும் நினைவில் வைத்திருந்திருங்கள், எல்லா உறுதியுடனும், எல்லா வலிமையோடும் முழுமையான விருப்பத்தோடும் உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிச் காப்பாற்றுங்கள். இந்நிலத்தை நேசியுங்கள். கடவுள் நம் எல்லோரையும் நேசிப்பது போல.
நன்றி. புதிய காலச்சாரம்
27

Page 30
தலித்தியம் பற்றிய ஒரு தே
செங்குரலோன்
மாக்சிசத்தையும் சோசலிஷத்தையும் மறுத்து மழுங்கடிப்பதற்கு மேற்குலகில் இருந்து பின் நவீனத்துவக் கருத்தியல் தோற்றுவிக்கப்பட்டு பரப்பப்பட்டது. மாக்சிய இயங்கியல் வரலாற்றுப் பொருள் முதல் வாத்த்தையும் அதன் வழியிலான வர்க்கப் போராட்டத்தையும் நவீன சொல்லாடல்கள் மூலம் பின் நவீனத்துவம் கொச்சைப்படுத்தி நிராகரித்தது. ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் இப் பின் நவீனத்துவக் கருத்தியலின் வீச்சினால் மாக்சிசம் பேசிய சில புத்திஜீவிகள் நிலைதடுமாறிக் கொண்டனர். இவர்களிடம் மாக்சிசம் பற்றிய ஆழமான தத்துவார்த்த அடிப்படை இல்லாதிருந்து வந்த பலவீனத்தைப் பின் நவீனத்துவப் பார்வை என்பது குழப்பமடைய வைத்தது. மாக்சிசமும் சோசலிசமும் பின்னடைவும் வீழ்ச்சியும் கண்ட சூழலில் பின் வாங்கிய இப் புத்திஜீவிகள் தம்மை நவ மாக்சியர்கள் என்று கூறி புதிய வேடமணிந்தும் கொண்டனர். அதே வேளை பல மாக்சிசப் புத்திஜீவிகள் மிகத் தெளிவாகவே பின் நவீனத்துவத்தின் சாரமற்றதும் மாக்சிச விரோதமானதும் ஏகாதிபத்திய சேவைக்குரியதுமான போக்கினை அடையாளம் கண்டு நிராகரித்துக் கொண்டனர். அத்துடன் இப் பின் நவீனத்துவக் கருத்தியல் விரைவாகவே கரைந்து மறையக் கூடியது என்பதனை அம்பலப்படுத்தி எதிர்வு கூறியும் கொண்டனர். அவ்வாறே அக் குரல்கள் இன்று அடங்கிக் கொண்டதையும் காணமுடிகிறது.
ஒரு புயற் காற்றுப் போன்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த இப் பின் நவீனத்துவமானது மாக்சிசத்திற்கும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த சக்திகளுக்கும் அதிக சேதங்ளை ஏற்படுத்திக் கொண்டது. தேசியம் தலித்தியம் பெண்ணியம் விளிம்பு நிலை என்பனவற்றுக்கு விளக்கமளித்த பின் நவீனத்துவம் அவை ஒவ்வொன்றையும் தனித்தனிக் கூறுகளாக்கி ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவைகளாக்கி வர்க்கப் போராட்டத்திலிருந்து இவற்றைத் தூர விலகி நிற்குமாறு செய்தும் கொண்டது.
இத்தகைய பின் நவீனத்திற்கு பலியாகிக் கொண்டதே இந்தியாவில் உருவாகி தலித்திய எழுச்சியாகும். மகாராஷ்த்திரத்தில் அடிநிலை தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உருவாகி வந்த போராட்ட
28

- சமூகப்பார்வை
ğağğlul) Galip Guufldü Waite Frgsung panarillai as
| கப்படும் எந்தவொரு இயக்கமும் சமூகத் தளத்தில் வெற்றி பெற முடியாது என்பதை கடந்த காலத் தில் காணமுடிந்தது. அதே வேளை தலித்திய விடுதலையை Guildi. BunyTILLğgeri čingTáidlá Gč5IT6ň6uje 2GILITáš சாதிய தீணடாமை ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடி குறிப்பிடத் தக்கவாறு ஜனநாயக 2 GOLD5EDST plena) TIL
pigub.
எழுச்சியானது தலித் என்ற சொல் மூலம் சாதிய தீண்டாமைக்கும் ஏனைய ஒடுக்கு முறைகளுக்குமான பொது அடையாளச் சொல்லாக்கிக் கொண்டது. தலித் இயக்கம் என அறிமுகமாகி முழு இந்திய அளவிலும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சுட்டம் நவீன பொதுச் சொல்லாகியது. தேசியத்தால் சாதியத்தில் சுரண்ணடலால் பெண் அடிமைத்தனத்தால் ஒடுக்கப்படும் எவரும் அவற்றைக் கடந்து கமியூனிஸ்ட் பொதுவுடமைவாதி என்ற பொது அடையாளத்தாலும் பெயராலும் ஒன்றுபட்டு சகல வகை அடிமை விலங்குகளையும் உடைக்க எழுந்து வருவதை தனித்தனி அடையாளங்களுக்குள் ஒடுக்கப்படும் மக்களை முடக்கி வைப்பதையே பின் நவீனத்துவம் நிறைவேற்ற முற்பட்டது. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுக் கொண்டது. அந்த வெற்றி ஏகாதிபத்தியத்தின் தற்காலிக வெற்றியாகவும்.அமைந்து கொண்டது.
ஆனால் தலித்திய எழுச்சி அல்லது இயக்கம் என்பதன் ஊடாகக் கட்ந்த மூன்றரை தசாப்தங்களில் கண்ட அனுபவங்களும் படிப்பினைகளும் யாவை என்பது பரிசீலிக்கப்பட வேண்டியவையாகும். தலித்தியம் என உச்சக் குரல் கொடுத்தவர்களால் தலித்தியக் கோட்பாடு என்ற ஒன்றை முழு இந்திய அளவில் உருவாக்க முடியவில்லை. மாக்சியத்தைக் கடந்து தலித்தியத்தை முன்னெடுக்க முனைந்தவர்களால் சிறு அளவில்தானும் நகர முடியவில்லை. நமக்கு மாக்சிசம் சரிவராது வர்க்கப் போராட்டத்திற்குள் தலித்தியத்தை உள்ளடக்க முடியாது
த00கம்-55

Page 31
என்றனர். ஜோதிபால் பூலே, அம்பேத்கார், ஈவொரா பெரியார் நம்மிடையே இருக்கும் போது மாக்ஸ்சும் லெனினும் மாஓவும் எமக்குத் தேவை இல்லை என்று கூறி தமது வழி தலித்தியத் தனி வழி என்றனர். அதேவேளை மாக்சிசத்திற்கு அப்பாலான தலித்திய விடுதலை சாத்தியமற்றதென வாதிட்டு வந்தவர்களும் இந்திய மாநிலங்களில் இருந்தும் வந்தனர். இந்தியாவில் வர்க்கம் சாதியம் என்பவற்றுக்கான உறவில் விசேஷ நிலைமைகள் காணப்படுவதைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அவ்வாறே தேசியம் பெண் ணடிமை ஆகியவற்றுக்கும் உண்டு. இவைய னைத்திலும் இந்துத்துவம் வகிக்கும் பாத்திரம் மேலும் அதி கவனத்துடன் நோக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் மாக்சிசம் லெனினிசம் காட்டும் வர்க்கப் போராட்ட அடிப்படையிலும் அணுகு முறையிலுமே தலித்திய விடுதலை தங்கியுள்ளது என்பதே நடைமுறைச் சாத்தியமானதாக இருக்க முடியும். எழுபதுகளில் முன்னெடுக்கப்பட்ட தலித் எழுச்சி என்பது பல தளங்களில் பிரதிபலித்தது. அனால் இதனை எத்தகைய சக்திகள் தத்தமது சுய ஈடேற்றங்களுக்கு பயன்படுத்தினர் என்பது விரித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு தலித் எழுச்சியைப் பயணி படுத்தியவர்களில் இரு பிரிவினர் முக்கியமான வர்களாகக் காணப்பட்டனர். ஒரு பிரிவினர் தலித்தியத்தின் பேரிலான அரசு சார்பற்ற நிறுவனங்களை நடாத்தி வந்தவர்கள். இவர்கள் தமது இந்திய பண வருவாயைப் பெருமளவில் பெறுவதற்கான ஒரு வழி முறையாக தலித் இயக்கம் எனக் கூறிச் செயற்பட்டனர். இவர்களது செயற்பாட்டில் அந்நிய சக்திகளது உள்ளார்ந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டதே அன்றி தலித் மக்களின் விடுதலை என்பது வெறும் கானல் நீராகிக் கொண்டது. அரசு சார்பற்ற நிறுவனங்களும் அவற்றின் நிர்வாகிகளும் அவ்வப்போது தம்முள் பிளவடைந்து புதிய புதிய நிறுவனங்களைக் குட்டிபோட வைத்து தமது பிரதான இலக்கான பணவருவாயை மையப்படுத்திக் கொண்டனரே தவிர தலித் விடுதலையை பற்றிய அக்க றையற்றவர்களாயினர். அதே நேரம் மாக்சிச வர்க்கப் போராட்டத்தின் பக்கம் தலித் விடுதலை வேண்டிச் சிந்திக்க முற்பட்ட இளந்தலைமுறையினரைத் திசை திருப்ப பல்வேறு சிந்தனைச் சீரழிவுகளையும் ஏற்படுத்தினர். அத்தகையோர் அன்று தம்மை முற்று முழுதாக அம்பலமாக்கிக் கொண்ட ஒரு சூழலிலேயே இருந்து வருவதையும் காண முடிகின்றது.
இரண்டாவது பிரிவினர் தேர்தல் அரசியலுக்கு தலித்திய எழுச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். சாதிய அடிப்படையில் இந்தியாவின் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகம் மேன்மேலும் செழித்து வளர்வதற்கு தலித்திய எழுச்சியானது உரமாக்கப்பட்டது. தொல். திருமாவளவன், ப.கிருஸ்ணசாமி முதல்
த00கம்-55

மாயாவதி, பஸ்வான் வரை தலித்தியத்தின் பெயரால் தேர்தல் அரசியல் நடத்துபவர்களேயாவார். இவர்களது குறிக்கோள் மாநில சட்டசபை மத்திய பாராளுமன்றம் மத்திய மேல் சபை போன்றவற்றில் உறுப்பினர் அமைச்சர் பதவிகள் பெறுவதேயாகும். அவ்வாறு ஏற்கனவே பலநிலைப் பதவிகளில் பல தலித் தலைவர்கள் எனப்பட்டவர்கள் இருந்து வந்துள்ளனர். அதி உயர் பதவி எனப்படும் ஜனாதிபதிப் பதவியில் கூட நாராயணன் என்பவர் இருந்து சென்றார். இவையனைத்திற்குப் பின்பும் இந்திய அளவில் மாநிலங்களில் சாதியமும் தீண்டாமையும் இருபது கோடிக்கு மேற்பட்ட தலித் துக்களான தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப் படுத்தியவாறே இருந்து வருகின்றன. இவற்றை நாளாந்தம் இடம்பெறும் சாதிய தீண்டாமை ஒடுக்குமுறைச் சம்பவங்கள் வெளிக்காட்டி வருகின்றன. ஆனால் தலித்திய விடுதலை என்பது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பிரிக்கப்பட முடியாத கூறு என்பதைக் கடந்த கால் நூற்றாண்டில் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் நிரூபித்து வந்துள்ளன. இந்திய மாநிலங்களில் மாக்சிச லெனினிச மாஓவிய போராட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல நிலைப் போராட்டங்களில் தலித் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். இத்தகைய அணிதிரள்வானது வெகுஜனப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டம் என்பவற்றைச் சக்திப்படுத்தியும் வருகின்றன. இன்று ஆந்திரா, பீகார், ஜாக்கண்ட் மாநிலங்களில் மற்றும் வர்க்கப் போராட்ட சக்கிகளான பொதுவுடமை இயக்கங்களில் தலித் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். தமிழ் நாட்டிலும் அதே பாதையிலான புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்கும் மாக்சிச லெனினிச சக்திகளுடன் தலித் மக்கள் அணி திரண்டும் வருகின்றனர். A.
பேசிய பலரை இன்று காண முடியவில்லை. பின் நவீனத்துவத்தின் சேவகர்களாகி நின்ற அந்தக் கனவான்கள் இன்று ஏன் மெளனமாகிக் கொண்டனர். தலித்தியம் என்ற பெயரில் சாதிவாத முனைப்புடன் எடுக்கப்படும் எந்தவொரு இயக்கமும் சமூகத் தளத்தில் வெற்றி பெற முடியாது என்பதை கடந்த காலத்தில் காணமுடிந்தது. அதே வேளை தலித்திய விடுதலையை வர்க்கப் போராட்டத்தின் ஒரு கூறாக்கிக் கொள்வதன் ஊடாகச் சாதிய தீண்டாமை ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடி குறிப்பிடத்தக்கவாறு ஜனநாயக உரிமைகளை நிலை நாட்ட முடியும். இதனை அறுபதுகளில் இலங்கையின் வடபுலத்தில் இடம்பெற்ற புரட்சிகர வெகுஜனப் போராட்டங்கள் அனுபவங்களாக்கித் தந்தன என்பது நினைவு கொள்ளப்பட வேண்டியதாகும். மேலும் இன்று நோயாள நாட்டில் இடம்பெறும் விடுதலைப் போராட்டத்திலும் விடுதலைப் பிரதேசங்களிலும் தலித் விடுதலை எவ்வாறு வர்க்கப் போராட்ட வழிமுறைகளின் ஊடாகச் சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது என்பதும் நோக்கப்படவேண்டியதாகும்.
29

Page 32
பெரியம்மா வளவு இரண்டு ஒழுங்கைகளை இணைக்கும் நீட்டுக்கா மாமா வீட்டில் இருந்து மச்சாள் வீட்டுக்குப்போக எனக்குக் குறுக்குவழி பெரியம்மா வளவுதான் பத்துப் பன்னிரண்டு வயதில் , இவ்வழியே நான் போகும் பொழுதெல்லாம் பெரிய விட்டில்
எனக்கென நல்லது நறியதுகள் காத்திருக்கும்
தேநீர்
பாற்பிட்டு
பனங்கிழங்குத் துவையல் நாளைக்கொன்று, வேளைக்கொன்று
பள்ளிவிடுமுறைக் காலத்தில் எனக்குப் பலபணிகள் முக்கியம்மானது
சுருட்டுக் கொட்டிலில்
பத்திரிகை வாசித்தல்
அல்லது
"கேளும் ஜெனமேஜெயமகாராசனே என்ற் வைசம்பாயனர் சொல்லத்தொடங்கினர்"
fa' அனுமார் வால்போல நீளும் வசனத்தில் பாரதக் கதை படிப்பது என்வாசிப்பைக் கேட்கும் தொழிலாளர்களுள் மூத்தவர் பெரியப்பு
ஆளை உச்ச ஏலாது மனிசனுக்குத் தான் கதை முழுதும் தெரியுமே! பிற்பகலிலை பெரியப்புவுக்கு ஒரு சோட்டைவரும்
மோனை ஒரு வாய்வெத்திலை இடிச்சுக் கொண் இந்த விடுதலைக்காக காத்திருந்தவன்போல அம்புருவிக் கொண்டு போவன் பெரியம்மா கண்ணயரும் நேரம் தட்டத்திலிருந்து
30
 

டுவா’
வெற்றிலை, சீவல், கண்டம்பு- ண்ம்
கணக்காக எடுத்து ۔۔۔۔۔۔ பக்குவமாக இடித்து பூவரசம் இலையில் இறக்கி மடித்துவிண்கூவிக்கொண்பேன் பெரியப்பூட்டைக்குடுத்திட்டு கிட்டி அடிக்கப்போயிடுவன்.
எட, இவளவுபக்குவமா இடிச்சுக்குடுத்தும் நல்லா இருக்கு எண்டு பெரியப்பு சொல்லேல்லை எண்மு எனக்குத் தீராத கவலை. என்னடா செய்வமெண்டு யோசிச்சன் அன்றைக்கு வெள்ளிக்கிழமை பெரியம்மா கோயிலுக்குப் போயிட்டா வழமையான வெத்திலை ஒடர் வந்தது நான் கற்பனை செய்திருந்த மாதிரி இடித்துக் கொண்டுபோய்க் கொடுத்தன் எட்ட நிண்டு ஒரக்கண்ணலை பார்க்கிறன் பெரியப்புமுகத்தில்
நவரசங்கள் மாறிமாறிவந்துபோயினர் வேறொன்றுமில்லை ஒரு கறண்டி சீனியும் சேர்த்திருந்தன் நான் பன்னிரண்டு வயதில் செய்த பரிசோதனையே பிற்காலத்தில் பீடாவாக வந்தது என்று உரிேைகார முடியுமா என்ன?
த90கம்-55

Page 33
1986-88SINE llEgio IgLVO 99g5/N5bBBINS De
சி.சி
தி.ஞானசேகரன் சிறுதைகள் (முதல் தொகுதி)
ஞானம் பதிப்பகம், கொழும்பு-06 யூன் 2005 i : 214 + XXX court. 100/-
ஏற்கனவே இரு தொகுதிகளாக வநீத சிறுகதைகளதும் வராத சிலவற்றினதும் தொகுப்பாக முப்பது கதைகளைக் கொண்ட இந்த நூலின் முன் னுரையைப் பேராசிரியர் அருணாசலம் எழுதியுள்ளார். நமது பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறையில் திறனாய்வு ஆற்றலுடையோரை எண்ண ஒரு கையிலுள்ள விரல்களே அதிகம் என்று நினைத்திருந்த காலம் போய் கையில் விரல்களே தேவையில்லை என்கிற நிலையை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை முன்னுரை எனக்கு வலியுறுத்தியது. அருணாசலம் இந் நூலில் எழுதியுள்ளது ஒரு வகையான விவரணமே ஒழியத் திறனாய்வல்ல. புகழ்ச்சியாகச் சில சொற்களை ஒருவர் கூறுவதற்கும் துணுகி ஆராய்ந்து மதிப்பிடுவதற்கும் பெரும் வேறுபாடு உண்டு.
நூலாசிரியர் தன்னுடைய சிறுகதைகள் இதுகாறும் விமர்சகர்களால் மெச்சப்படாமை குறித்து மிகுந்த ஆதங்கத்துடன் இருந்து வந்ததை அவரது அறிமுகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புக்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்பன போன்ற மாக்ஸியர்களது பரிந்துரைகள் எல்லோருக்கு மானவையல்ல. அவை இடதுசாரி எழுத்தாளர ‘களுக்கானவை. அதற்குக் கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம் பிறருக்கு இருக்கவில்லை. கட்டுப்படாத எல்லா எழுத்துக்களையும் இடதுசாரி விமர்சகர்கள் நிராகரித்ததுமில்லை. ஞானசேகரன் மாகி ஸிய இலக்கியக் குறிக் கோள் கட் குக் கட்டுப்படாமைக்கு நியாயம் அப்படிக் கட்டுப்படுவது அவரது எழுத்தின் “கலாபூர்வமான" வெளிப்பாடு குன்றிப் பிரசாரம் ஆகும் என்ற அச்சத்தால் என்று கூறுவது உண்மையல்ல. அவர் அவ்வாறு கட்டுப்படாததால் அவரது எழுத்துக் கலையுணர்வில் உயர்ந்து நிற்கவுமில்லை, அதைவிட முக்கியமாக அவர் பிரசாரம் செய்யாமலும் இல்லை. ஞானசேகரனை மாக்ஸிய விமர்சகர்கள் அடையாளங் காணாததற்கு அவருக்கு ஒரு ஆறுதல் தரும் விளக்கமாக முற்குறிப்பிட்ட மாக்ஸிய நிலைப்பாடு இருந்துவிட்டுப் போகட்டும். தூய அழகியல் வாதிகள், நற்போக்குக்காரர்கள், தளையசிங்கத்தின் வாரிசுகள், இப்படி எத்தனையோ புனிதர்கள் இருந்தும் ஞானசேகரனை யாருமே ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாளியாகக் கருதாதது ஏன்? அழகியலை
த00கம்-55

முன்நிறுத்தும் அவர்களது ஏடுகளில் அவரது கதைகள் ஏன் வெளிவரவில்லை.
சிவத்தம்பியை இப்போது யாரும் தங்களுக்கு வசதியாக மேற்கோள் காட்டக்கூடிய அளவுக்கு அவர் எல்லாருக்கும் நல்லமாய்த் தோற்றங்காட்டிப் பழகி விட்டார். மாக்ஸிய விமர்சனம் முழுவதும் சமூகவியல் விமர்சனமே என்ற கருத்தியல் மயக்கம் பலரிடை இருந்தது என்றும் இன்னுஞ் சிலர் அதிலிருந்து விடுபடவில்லை என்றும் அவர் எங்கோ சொன்னதை ஞானசேகரன் தனக்கு வசதியாக்கியுள்ளார். சிவத்தம்பி தன்னைச் சுய விமர்சனஞ் செய்வது பற்றி ஒரு மறுப்பும் எனக்கில்லை. ஆனால் அதற்காக மற்றவர்களையும் தன்னோடு சேர்த்துக்காட்ட வேண்டியதில்லை. மாக்ஸிய விமர்சனத்தின் அடிநாதமாயுள்ளது சமூக நோக்கு. அதை விலக்கினால் மாக்ஸிய விமர்சனம் அடையாளம் இழந்துவிடுகிறது. அழகியல் பற்றி மாஓ தெளிவாகப் பலமுறை வற்புறுத்தியுள்ளார். சிவத்தம்பிக்கு அதொன்றும் தெரிய வேண்டிய விடயமாக இருக்கவில்லை. சமுத்திரன் மாதிரி உருவமும் உள்ளடக்கமும் பற்றிக் குழம்பியிருந்த சிலர் இருந்தார்கள். அவர்கள் இப்போது தலைகீழாக மாறிவிட்டார்கள். மற்றப்படி கைலாசபதி முதலாகப் பேர் சொல்லத்தக்க எந்த மாக்ஸிய விமர்சகரும் சிவத்தம்பி சொன்ன விதமாகத் தமது திறனாய் வை மேற்கொண்டதில்லை.
ஞானசேகரனின் கதைகளிற் பல நீதிக்கதைகள் மாதிரியும் கதையின் முடிவில் ஒரு திடீர்த் திருப்பத்தை கொண்டும் இருக்கக் காணலாம். இவ்விதமான கதை கூறும் பாணி அவர் கதை எழுதத் தொடங்கிய காலத்திலேயே பழமைப்பட்டுப் போனதென்பேன். பல சமூக அநீதிகட்கு எதிராக அவர் பேசுகிறார். ஆனால் அந்த அநீதிகளை அவர் தனிமனிதக் குறை பாடுகளாகவே காணுகிறார். இதனாலேயே சாதியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்திப் போராடிச் சில முக்கிய வெற்றிகளைப் பெற்ற பிறகும் சாதியால் தாழ்த்தப்பட்டாலும் ஒருவன் நல்லவன் என்று சான்றிதழ் வழங்குகிற விதமான கதைகளையும் ஒடுக்கப்பட்டவர்கள் தமது நன்நடத்தையால் உயர்ந்தோரின் கருணையை
31

Page 34
பெற இயலும் என்னுமாறான கதைகளையும் அவர் எழுத நேருகிறது. சமுதாயம் இயல்பாகவே மாறும் என்பதால் எதையும் போராடி வெலிவதற்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்த பலருக்கும் தேசிய இனப்பிரச்சினை மட்டும் இப்போது ஒரு விலக்காகத் தெரிவது பற்றி முன்னரும் குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது ஞானசேகரனிலும் அதே பண்பு அவரது அண்மைய சிறுகதைகளிற் காணப்பட்டுள்ளது.
அவர் வித்தியாசமான முறையில் எழுதியுள்ள இரண்டு கதைகளில் கதை சொல்லும் உத்தி அவரது பிற கதைகளினுங் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அவர் சில விடயங்களை வலிந்து கூறியதன் மூலம் கதை செயற்கையாகவும் பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது. rick: .
"அல்ஷேசனும் பூனைக்குட்டியும்" என்ற கதை ஒரு அல்ஷேசன் நாயால் மிரட்டி மூலைக்கு ஒதுக்கப்பட்ட பூனை திருப்பித் தாக்கியதை தமது தேசிய இனப்பிரச்சினைக்கு உருவகமாக்குகிறது. கதையில் வரும் அல்ஷேசன் இலங்கைக்கு விடுமுறையில் வந்துள்ள ஒரு குடும்பத்தின் பெண் குழந்தையுடன் ஒட்டிக் கொண்டுள்ளது. ஆனால் அச் சிறுமியின் தகப்பன் பூனைக் கு உணவு கொடுப்பதையிட்டும் பொறாமையடைகிறது. கதாசிரியருக்கு அல்ஷேசன் நாய்கள் பற்றி எவ்வளவு தெரியுமோ அறியேன். அல்ஷேசன் பெண் நாய்க்கு"ஒரே ஒருவர்தான் எசமான். மற்ற யாரிடமும் நெருங்கிய உறவு பாராட்டாது. ஆண் நாய் குடும்பத்துடன் நட்புப் பாராட்டப்படக் கூடியது. ஆனால் வெகு எளிதில் அதனுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த இயலாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது சரியோ பிழையோ, சிறுமியுடன் புதிதாக நட்புப் பூண்ட அல்ஷேசன் ஏன் சிறுமியின் தகப்பன் பூனைக்குப் பரிவு காட்டுவதையிட்டுப் பொறாமைப்பட வேண்டும்? பூனையை அது வெறுத்தால் அதைக் கண்ட மாத்திரத்திலேயே துரத்தித் தாக்கும் கதைக்கு வலிமை சேர்க்க எண்ணிக் கதையிற் சேர்த்த ஒரு விடயம் கதையின் நம்பகத் தன்மைக்கு ஊறு செய்துள்ளது.
இது போலவே “காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் கதையில் ஒரு காட்டுப் பூனைக்கு ஒரு கிளி இரையாவது படையினர் ஒரு பாடசாலை மாணவியை வன்கலவிக்குட்படுத்தி அம் மாணவியின் புத்தி பேதலிப்பதன் உருவகமாகிறது. கதையில் வரும் ளியின் குதறப்பட்ட உடலில் அடிவயிற்றின் கீழ் காட்டுப் பூனை கோரச் சுவடுகள் பற்றி ஆசிரியர் கூறுகிறார். காட்டுப் பூனை குதறிய கிளியின் அடிவயிற்றின் கீழ் தன் கோரச் சுவடுகளைப் பதித்த காட்டுப் பூனைக்கு கலைத்துவமாகக் குதறும் ஆற்றல் இருந்திருக்குமென்று நாம் நம்பலாமா?
பொன்னி என்ற கதை ஒரு நாயைப் பற்றியது. அது நாய் என்பதைக் கதை முடிவு வரை அறியாதபடி எழுதியமை சுவாரசியமானது. ஆனால் மின்சாரக் கம்பியிலேயே சிக்கிய குருட்டு எசமானைக் கம்பியைக் கடித்து அறுத்து நாய் விடுவித்து விட்டு இறந்தது என்பது மின்சாரம் பற்றிச் சிறிது அறிந்த எவருக்கும் ஒரு நூதனமான தகவல்.
இப்படிப்பட்ட பலவீனமான புனைவுகள் வெகு சராசரியான கதைகளிலும் உள்ளன. இதற்கான காரணம் சிறுகதை பற்றிப் பலரும் தமக்குள் ஏற்படுத்திக்
32

கொண்டுள்ள மயக்கமான ஒரு கருத்தாக்கமாக இருக்கலாம். இப்போது, செய்திகளே சுவைபட எழுதும் தேவையால் யதார்த்தத்தினின்று விலகி நிற்கிற போது, சிறுகதைகளைச் சொல்லி என்ன பயன்!.
இதுவரையிலான விமர்சனம் கதைகளின் அமைப்பும் அழகியல் பற்றியுமானது. நூலாசிரியரின் சமூகப் பார்வையைப் பற்றி இனிச் சில கூறவேண்டியுள்ளன. சமூக ஒடுக்கு முறைகள் எல்லாம் காலப் போக்கில் மாறுகின்றன என்ற அடிப்படையிலேயே உலகை விளக்க முற்படுகிற நூலாசிரியர் நாய், பூனை தம்மைக் காத்துக் கொள்ளப் போராடுகிற அளவுக்குக் கூட அவரது கதாபாத்திரங்கள் போராடாமல் கவனித்துக் கொள்கிறார். போராடுகிற சூழ்நிலைகளில் கூடத் தோல்வியே ஏற்படுகிறது. புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையின் மாற்றத்தின் பண்பாட்டுச் சீரழிவாகத் தெரிகிற அளவுக்குத் தவிர்க்க இயலாத மாற்றங்களாகத் தெரியாததன் காரணம் ஆசிரியரின் மன ஆழத்திலுள்ள பழமை வாதமே என்று நினைக்கிறேன். அந்தப் பழமையின் மேன்மைக்கான ஏக்கமே.
சமூகத்திலும் அடிப்படையான மாற்றங்கள் பற்றிய தயங்கட்குக் காரணமாகிறது என்றும் சொல்லுவேன். நூலாசிரியர் ஈழத்து இலக்கியத்தின் ஒரு சிந்தனை மரபுடன் தன்னைத் தெளிவாகவே அடையாளங் காட்டிக் கொள்கிறார். அவர் வலிந்து இடதுசாரிகளைத் தாக்க முனையவில்லை என்பது குறிப்படத்தக்க விடய மாயினும் நூலாசிரியரிடம் இடதுசாரிச் சமூகச் சிந்தனை இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இக் கதைகளில் இல்லை. கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழரான ஒரு பேராசிரியர் சென்ற நூற்றாண்டில் தொடக்கி வைத்த பகிடிவதை இன்று ஒரு கொடிய் சமூக நோயாகி பாடசாலைகளிலும் தொற்றியுள்ளது. பகடிவதை என்ற பேரிலி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நூலாசிரியருக்கும் பகிடிவதையில் ஈடுபடுவோரை உரிய முறையில் தண்டிப்பது பற்றித் தயக்கங்கள் உள்ளன. இது என்ன வியக்கச் செய்கிறது. பகிடிவதை நமது மரபிற் பேணப்பட வேண்டிய ஒரு அம்சமா? பெண்மை பற்றிய அவரது பார்வையும் மரபு சார்ந்தே அமைந்துள்ளதை இங்கு நினைவு கூர வேண்டும்.
எந்தவொரு படைப்பையும் எவரும் மெச்ச அழகியற் சிறப்புக்கள் மட்டுமே போதுமானதாக இருந்ததில்லை. ஒரு படைப்புக் கூறுகிற செய்தியுடன் ஒருவருக்குள்ள உடன்பாடோ அவ்விடயத்துடன் உள்ள ஈடுபாடோ அரவது மதிப்பீட்டைப் பாதிக்காமல் விடாது. அதையும் மீறிச் சிறப்பான படைப்பாற்றலை ஒருவர் மெச்சலாம். ஆனால் எந்த இலக்கியத்தினது பெறுமதியும் வெறுமனே அழகியலின் பாற்பட்டதல்ல.
ஞானசேகரனின் கதைகள் அழகியல் அடிப்படையில் போற்றத்தக்களவு வளர்ந்து நிற்காத போதும் அவரது எளிமையான, தெளிவான, இலக்கணப் பிழைகள் குறைவான நடை பாராட்டத்தக்கது. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை அவர் தன்னைச் சூழவுள்ள சிந்தனை வேலிகளைச் சிறிது விலக்கிப் பார்த்தால் அவரது படைப்புலகம் விரிவடையும்.நூலின் அச்சுப் பதிவும் தயாரிப்பும் மெச்சத்தக்க நேர்த்தியுடையன.
த00கம்-55

Page 35
琶G○○
LfMỹ)?
ஹரொல்ட் பின்டர் தமிழில் குழந்தை ம. சண்முகலிங்
இலக்கியத்துக்கான நெபெல் பரிசினைப் பெற்ற பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஹரொல்ட் பின்டர், பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றுவதற்காகத் தயாரித்த, ‘கலை, உண்மை மற்றும் அரசியல்' என்ற தலைப்பிலான பேச்சின் சாரம் இங்கு கட்டு ரையாக்கப்பட்டுள்ளது. அவர் நோயுற்றி ருந்ததால் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளமுடியவில்லை. அதனால், தனது உரையை ஒளிநாடாவில் பதிவு செய்து அனுப்பியிருந்தார். மனிதநேயம் மிக்கதொரு கலைஞனின் ஆத்மாவை இவ்வுரையில் தரிசிக்க முடிகிறது)
'நிஜமானது, போலியானது எனப்படும் விஷயங்களுக்கிடையிலும் சரியானது, தவறானது எனப்படுகின்றவற்றுக்கிடையிலும் வலுவான வேறுபாடுகள் இருப்பதில்லை. ஒரு விஷயம் ஒன்றில் நிஜமானதாக இருக்கவேண்டும் அல்லது போலியானதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; அது ஒரே வேளையில் இரண்டுமாக, அதாவது நிஜமானதாகவும் போலியானதாகவும் இருக்கலாம்.
"மேற்கண்ட கூற்றுக்கள். கலையினூடாக யதார்த்தத்தை ஆய்வு செய்தல் எனப்படுவதோடு பொருந்தி நிற்கிறது என நான் நம்புகிறேன். எனவே, எழுத்தாளன் என்ற வகையில் அவற்றை நான் ஏற்கிறேன். ஆயினும், ஒரு குடிமகன் என்ற வகையில் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. ஒரு குடிமகன் என்ற வகையில் எது சரியானது? எது தவறானது? என நான் கட்டாயம் கேட்டே ஆகவேண்டும்."
த00கம்-55
 

immmmmmmmmm மொழிபெயர்ப்பு
ಗಿರಿ @_6ÖÖಾ_ಗಿ rಗಿ ಇ-@ನ್ತತೆ'r_dು
. . . . 'மு மு வீ ச் சி ல ள ன மேலாதிக்கம்” என்பதே β) ύ பொழுது Sy 6) do so é as ar 6nu ar 6io உத்தியோக பூர்வமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள கொள்கை யாகும். நிலம், கடல், ஆகாயம், வெளி மற்றும் அவற்றோடு சேர்ந்த மூலவளங்கள் tU (T 6u g) 60) g) uy tỏ கட்டுப்படுத்துதல் என்பதே இதன் பொருளாகும். இப்பொழுது அமெரிக்கா உலகம் முழுவதிலும் 132 நாடுகளில் 702 இராணுவ நிலைகளை வைத்திருக்கிறது.
Биb
"நாடகத்தில் 'உண்மை' என்பது என்றென்றுமே பிடிபடாது நழுவிச் செல்கின்ற ஒன்றாக உள்ளது. உங்களால் அதைக் கண்டுகொள்ளமுடிவதில்லை; ஆயினும் அதற்கான தேடல் என்பது வலுக் கட்டாயமானதொன்றாகவுள்ளது. அந்தத் தேடலே முயற்சிக்கான தெளிவான உந்தலாகவுள்ளது. தேடல் உங்களது பணியாகவுள்ளது. உங்கள்ை அறியாது, நீங்கள் உணராது சிலசமயம் உண்மையின்மீது தடக்குப்படுவீர்கள்; அல்லது உண்மையை ஒத்திருக்கும் ஒரு படிமத்தையோ சாயலையோ நீங்கள் அரை குறையாகக் காண்பீர்கள். ஆயினும், நாடகக்கலையில் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும் எனக்கூறக்கூடிய தனியொரு உண்மை என்று ஒன்றிருக்காது என்பதே மெய்யான உண்மையாகும். அங்கு பல உண்மைகள் உள்ளன. அந்த உண்மைகள் ஒன்றுக்கொன்று சவால் விடும். ஒன்றுடன் ஒன்று மோதும், ஒன்றையொன்று பொருட்படுத்தாது புறக்கணிக்கும், ஒன்றையொன்று நையாண்டி பண்ணும். ஒன்றையொன்று கண்டு கொள்ளாதிருக்கும். உண்மை உங்கள் கையில் கிடைத்துவிட்டதான உணர்வை நீங்கள் ஒரு கணப்பொழுது உணர்வீர்கள். ஆயினும், அது உங்களது விரல்களுக்கிடையால் வழுக்கிக் காணாமற்
போய்விடும்."
33

Page 36
இதனையடுத்து தான் நாடகங்களை எழுதும் முறை பற்றிப் பின்டர் தனதுரையில் சுருக்கமாகக் கூறுகிறார். தனது பெரும்பாலான நாடகங்கள் ஒரு வார்த்தை, ஒரு வரி அல்லது ஒரு படிமத்திலிருந்தே முளைவிட்டு வளர்ந்து கிளைவிட்டுப் படர்கிறது என்கிறார், பாத்திரங்கள் தன்னை வழிநடத்துவது பற்றியும், பாத்திரங்கள்தான் முதலில் தோற்றம் பெறுகின்றன என்பது பற்றியும் விளக்குகிறார். பாத்திரங்களோடு சேர்ந்து வாழ்வதென்பது சுலபமான ஒன்றல்ல, அவற்றை வரையறைக்குள் நிறுத்துவது இயலாத ஒன்று. நிச்சயமாக உங்களால் அவற்றுக்குக் கட்டளையிட முடியாது என்றும் கூறுகிறார். கலையில் "மொழி' என்பது மிகவும் தெளிவற்றதொரு தொழில் முறை நடவடிக்கையாகவே உள்ளது என்பார். "ஆயினும். உண்மைக்கான தேட்ல் என்ப்து ஒருபோதுமே நிறுத்தப்பட முடியாத ஒன்று. அதனை ஒத்திப்போட முடியாது. பிற்போட முடியாது. அதனை அங்கு, அவ்விடத்திலேயே எதிர்கொண்டு அதற்கு முகங்கொடுத்து நிற்கவேண்டும்" என்கிறார்.
"முற்றுமுழுக்க வேறான பிரச்சினைகளை 'அரசியல் அரங்கு" தந்து நிற்கும். ஒழுக்கப் பேருரையாற்றுதல் என்பது நிச்சயமாகத் தடுக்கப்படவேண்டிய ஒன்று. புறவயப் பண்பு அத்தியாவசியமானது. தத்தம் சொந்த மூச்சைச் சுவாசிக்கப் பாத்திரங்களை விட்டுவிடவேண்டும். படைப்பாசிரியர் தனது சொந்த விருப்பு, சார்புநிலை, முற்கற்பிதம் என்பவற்றைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காகப் பாத்திரங்களைக் கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ கூடாது. இவ்வொழுங்கு விதிகள் எவற்றையுமே 'அரசியல் அங்கதம்' கடைப்பிடிப்பதில்லை. இவற்றுக்கு நேர் எதிர்மாறாகவே அது நடந்துகொள்ளும்; அதுதான் அதன் சரியான பணியாகும்."
இதையடுத்து, பின்டரின் உரை நடைமுறை அரசியலின் தடத்தில் இறங்கி நீண்டு செல்கிறது. அங்கு தரிசித்தவற்றை முழுவதுமாக எடுத்துக்காட்டக் காகிதவெளி இங்கு இடம்தராது. எனவே, அவரது கருத்துக்கள் சிதைவுறாவண்ணம் சுருக்கித்தர முயற்சி எடுக்கப்படுகிறது.
"அரசியல் வாதிகளால் பயன்படுத்தப்படுகின்ற அரசியல் மொழி இங்கு குறிப்பிடப்பட்ட எல்லைகள் எவற்றுள்ளும் வர முயற்சிப்பதில்லை; ஏனெனில், எமக்குக் கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடியாகப் பார்க்குமிடத்து, அவர்கள் உண்மையின் மீது ஆர்வம் கொள்ளாது அதிகாரத்திலும் அந்த அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதிலுமே ஆர்வமாக உள்ளனர். அந்த அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதானால், மக்கள் உண்மை பற்றி எதையும் அறியாதவர்களாக, தமது வாழ்வு பற்றிய உண்மையையும் அறியா தவர்களாக இருக்கவேண்டும். எனவே, பரந்த அளவிலான பொய்களின் சித்திரத் தொங்கு திரைகளால் சூழப்பட்டவர்களாக நாம் இருக்கிறோம்; அவற்றையே உண்டு வாழ்கிறோம்."
"பேரழிவை ஏற்படுத்தவல்ல மிகவும்
34

பயங்கரமான ஆயுதங்களை சதாம்ஹ"செயின் வைத்திருக்கிறார். ஈராக்குக்கு அல்கெய்டாவுடன் தொடர்பிருப்பதோடு, 11 செப்டெம்பர் 2001இல் நியுயோர்க் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பொறுப்பினை ஈராக்கும் பகிர்ந்துகொண்டுள்ளது. ஈராக் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இவை gd 6ööT 665) LD GT 60 எம்மிடம் வலியுறுத்திக் கூறப்பட்டது. ஆயினும், அவை உண்மையாக இருக்கவில்லை."
"முற்றிலும் வேறான ஒன்றாக உண்மை இருக்கிறது. உலகில் தனது வகிபாகம் என்ன என்பதை ஐக்கிய அமெரிக்கா எவ்வாறு விளங்கி வைத்திருக்கிறதோ, அதனை எவ்வாறு. செயலுருப்படுத்தத் தீர்மானித் திருக்கிறதோ, அதனோடு சம்பந்தப்பட்டதாகவே உண்மை என்பது இருக்கிறது."
". இறைமையுள்ள அரசொன்றின்மீது நேரடியாக ஆக்கிரமிப்பை மேற்கொள்வதென்பது அமெரிக்காவுக்கு விருப்பமானதொரு முறைமையாக ஒருபோதும் இருந்ததில்லை. "முனைப்புக்குறைந்த மோதல்' என அமெரிக்கா விபரித்துள்ள முறைமையையே அது 'பிரதானமாகத் தெரிவுசெய்துள்ளது. முனைப்புக் குறைவான மோதல் என்பதன் அர்த்தம் யாதெனில், அதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள்; இருப்பினும் ஒரு தொடர் குண்டுத் தாக்குதலின்போது ஒரேயடியாகப் பெருந்தொகையில் இறப்பதைப் போலல்லாது, சிறு சிறு தொகையினராக, ஆறுதலாக இறப்பார்கள். இதன் பொருள் யாதெனில், நாட்டின் இதயத்தில் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும்; வெறுப்புமிக்கதோர் நோய்நிலையின் வளர்ச்சி நிலைநிறுத்தப்படும்; பின்னர் உடற்கூறு உள்ளாக அழுகிச் செல்வது அவதானிக்கப்படும். மக்கள் அடக்கப்பட்டதும்- இல்லையேல் அடித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர்- இரண்டும் ஒன்றுதான்உங்களது நெருக்கமான நண்பர்கள்- அதாவது இராணுவமும் பெரிய கூட்டுத்தாபனங்களும் செளகரியமாக அதிகாரத்தில் அமர்ந்திருப்பர்; நீங்கள் ஒளிப்படக் கருவிகளின் முன்னால் நின்று ஜனநாயகம் மேலோங்கியுள்ளது என்று சொல்வீர்கள்.நான் குறிப்பிடும் இந்தக் காலப்பகுதியில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இந்தவாறே பொதுவாக இருந்துள்ளது."
"நிக்கரகுவாவின் அவலம் இதற்கானதொரு சிறந்த உதாரணமாக உள்ளது.'அன்றும் இன்றும் உலகில் தனது வகிபாகம் பற்றிய அமெரிக்கக் கருத்துக்கு மிகப்பொருத்தமான உதாரணமாக நிக்கரகுவா வை நான் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்."
இதனைத் தொடர்ந்து 1980களில் லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த கூட்டமொன்று பற்றி விபரிக்கின்றார். அதில், அருட்தந்தை மெட்காங் பேசும்போது, 'ஐயா, வட நிக்கர குவா வின் வடபகுதியில் நான் ஒரு வட்டாரத்தின் பங்குத்
മൃ9Dകb-55

Page 37
தந்தையாகவுள்ளேன். எனது பங்குமக்கள் ஒரு பாடசாலை, சுகாதார நிலையம், கலாசார மையம் என்பவற்றை அமைத்துள்ளனர். நாங்கள் அமைதியாக வாழ்ந்து வந்தோம். சில மாதங்களுக்கு முன்னர் கொண்ட்ரா படையொன்று எமது பங்கைத் தாக்கியது. அவர்கள் பாடசாலை, சுகாதார நிலையம், கலாசார மையம் என அனைத்தையுமே அழித்துவிட்டனர். அவர்கள் தாதியரையும் ஆசிரியைகளையும் மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட் படுத்தினர்; வைத்தியர்களை வெட்டிக் கொன்றனர். அவர்கள் காட்டு மிராண்டிகளைப் போல நடந்துகொண்டனர். இத்தகைய அதிர்ச்சி தரும் பயங்கரவாத செயற்பாட்டுகளுக்கான ஆதரவை அளிக்கும் செயலிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தைத் தயவுசெய்து கோருங்கள்" என்றார்.
"இதனைச் செவிமடுத்துக்கொண்டிருந்த அமெரிக்கத்தூதுவர், ஓரளவு கனமான தொனியில், 'அருட்தந்தையே, உங்களிடம் 'நான் ஒரு விஷயத்தைக் கூறலாம். யுத்தத்தின்போது ஏதுமறியாத மக்கள்தான் எப்பவுமே அல்லற்படுவார்கள்." என்றார். அங்கு அமைதி உறைந்தது. கடைசியாக யாரோ சொன்னார்க்ள்: "ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் பலரோடு சேர்ந்து உங்களது அரசாங்கம் ஒருவராக நின்று நிதி உதவி வழங்கியதன் விளைவாகவே ஏதும் அறியாத மக்கள் பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளானார்கள். கொண்ட் ராஸ்காரருக்கு மேலும் கூடுதலான பணத்தைக் கொடுத்தால் இத்தகைய கொடுமைகள் பல மேலும் இடம்பெறும். இது வல்லவா பிரச்சினை? ஆகவே, இறைமை கொண்ட அரசொன்றின் மக்கள் மீது கொலைகளையும் அழிவுகளையும் நிகழ்த்துவதற்கான ஆதரவை வழங்கிய குற்றத்துக்கு உங்கள் அரசாங்கம் ஆளாகவில்லையா?
நிலை தளரவைக்கமுடியாதவராக அமெரிக் கத்தூதுவர் நின்றார். எமக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களுக்கு அமையப் பார்க்கும்போது 'உங்களது கூற்றுக்களை எந்த வகையிலும் அவை ஆதரித்து நிற்கவில்லை என்றே கூறுவேன்.' என்றார்."
இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ரீகன் பின்வருமாறு கூறியிருந்தார் என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் நடத்தை ஒழுக்க நிலையில் நோக்குமிடத்து எமது தேசபிதாக்களுக்குச் சரிசமமாக வைத்து மதிக்கப்படக்கூடியவரே கொண்ட்ராஸ்காரர்."
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நிக்கரகுவாவில் கொடிய சொமோசா வல்லாதிக்க ஆட்சியை அமெரிக்கா ஆதரித்து வந்தது. சன்டனிஸ்டாக்களால் வழிநடத்தப்பட்ட நிக்கரகுவா மக்கள் 1979இல் ஆட்சியை அகற்றினர். அது
த00கம்-55

நூல்: யாழ்ப்பாணத்து
வாழ்வியற் கோலங்கள் ஆசிரியர்: கலாநிதி எல்.சிவலிங்கராஜா பதிப்பு: விலை: ரூபா 150/-
அதிர்ச்சி தரும் மக்கள் புரட்சியாக அமைந்திருந்தது. சன்டனிஸ்ட்ாக்களின். அரசியற் சித்தாந்தத்தில் முரண்பாடான மூலகங்கள் பல இருந்தன. ஆயினும் அவர்களிடம் விவேகம், பகுத்தறிவு, நாகரிகம் என்பன இருந்தன. அவர்கள் நிலையான, பண்பான, பன்மைச் சமூகமொன்றை நிறுவப் புறப்பட்டனர். மரணதண்டனை ஒழிக்கப்பட்டது. வறுமையில் கிடந்த பல்லாயிரக் கணக்கான உழவோர் மரணத்திலிருந்து மீட்டெடுக் கப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உரிமைப் பத்திரத்தோடு கூடிய நிலம் வழங்கப்பட்டது. 2000 பாடசாலைகள் கட்டப்பட்டன. கல்வியறிவின்மை பெருமளவில் குறைக்கப்பட்டது. இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையும் அமுல்படுத்தப்பட்டது. சிசு மரணம் குறைக்கப்பட்டது. போலியோ முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டடது.
இந்தச் சாதனைகளை மாக்சிச/லெனினிசச் சீரழிவு என அமெரிக்கா கண்டித்தது. ஆபத்தானதொரு உதாரணம் இங்கு அமைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் அமெரிக்காவின் கருத்து நோக்காக இருந்தது. சமூக பொருளாதார நீதி சார்ந்த அடிப்படை நியமங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் சமூக ஒருமைப்பாட்டையும் தேசிய சுய கெளரவத்தையும் அடைவதற்கும் நிக்கரகுவாவை அனுமதித்தால் அயல் நாடுகளும் இதே விஷயங்களைக் கேட்க ஆரம்பித்துத் தாமும் அவற்றைச் செய்யத் தொடங்கிவிடுவர். உண்மையில் இக்காலகட்டத்தில் எல்சல்வடோரின் அந்தஸ்து சம்பந்தமாகக் கடும் எதிர்ப்பு இருந்தது.
8 A . இறுதியாக அமெரிக்கா சண்டினிஸ்டா அரசாங்கத்தை அடிபணியவைத்தது. கடும் எதிர்ப்பு இருந்தது; பல ஆண்டுகள் கடந்தன; ஆயினும் தொடர்ச்சியான பொருளாதார அடக்குமுறையும் 30,000 மக்களின் இறப்பும் இறுதியாக நிக்கரகுவா
35

Page 38
மக்களின் உற்சாகத்தைக் கருவறுத்தது. அவர்கள் அனைத்தையும் இழந்து சோர்வுற்று மீண்டும் வறுமையுள் சிக்குண்டனர். சூதாட்ட நிலையங்கள் திரும்பவும் நாட்டினுள் புகுந்தன. இலவச சுகாதாரமும் இலவசக் கல்வியும் முடிவுற்றன. பழிவாங்கும் வேகத்தோடு பெரு வர்த்தகங்கள் திரும்ப வந்தன. "ஜனநாயகம்" வெற்றி கண்டு நிலைநிறுத்தப்பட்டது. இந்தக் "கொள்கை' எந்தவகையிலும் மத்திய அமெரிக்காவுக்கென மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. உலகம் முழுவதற்கும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அது முடிவுறாத ஒன்றாக இருந்தது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் ஒவ்வொரு வலதுசாரி இராணுவ சர்வாதிகாரத்துக்கும் அமெரிக்கா ஆதரவளித்து வந்துள்ளதோடு பல சந்தர்ப்பங்களில் அவை தோற்றம் பெறக் காரணமாகவும் இருந்து வந்துள்ளது. இங்கு நான் இந்தோனேசியா, கிறீஸ், உறுகுவே, பிறேசில், பரகுவே, ஹெயிட்டி, துருக்கி, பிலிப்பீன்ஸ், கெளத்தமாலா, எல்சல்வடோர் என்பவற்றோடு உண்மையில் சிலியையும்தான் குறிப்பிடுகிறேன். 1973 இல் அமெரிக்கா சிலிமீது கட்டவிழ்த்துவிட்ட பயங்கரத்தை ஒருபோதும் துப்பரவாக்கித் தூய்மைப்படுத்தவோ மன்னித்து விடவோ முடியாது.
இந்த நாடுகள் யாவற்றிலும் பல்லாயிரக்கணக்கான மரணங்கள் விளைந்தன. அவை நடந்தனவா? எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவற்றை அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையின் விளைவுகள் எனக் கூற முடியுமா? "ஆம்" என்பதே விடை, அவை உண்மையாகவே இடம்பெற்றன; அவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையால் விளைந்தவைதான். ஆயினும், நீங்கள் அதை அறிந்து கொள்ள மாட்டீர்கள்.
. அமெரிக்காவின் குற்றச் செயல்கள் திட்டமிட்டுச் செய்யப்பட்டவையாகவும், மாற்றம் ஏதும் இல்லாதவையாகவும், கேடு விளைப்பனவாகவும், இரக்கமற்றவையாகவும் இருந்துவந்துள்ளன; ஆயினும் மிகச்சிலரே அவை பற்றிப் பேசியுள்ளனர். உலகம் முழுவதிலும் அமெரிக்கா, உலகளாவிய நலனுக்கானதொரு சக்தியாக மாறுவேடம் புனைந்து கொண்டு அதிகாரத்தை நுட்பமாகப் பயன்படுத்தி வந்துள்ளது. அது மிகவும் திறமைவாய்ந்த, கூரறிவு மிக்க, வெற்றிகரமான உறக்கத்தைத் தூண்டுமொரு செயலாகும்.
தெருவில் காணக்கூடியதாகவுள்ள மிகச்சிறந்த தொரு பகட்டணி ஆரவாரமாக அமெரிக்கா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்பேன். அது மிகவும் கொடியதாக,
பாரா முகமானதாக, வெறுப்பு மிக்கதாக, இரக்கமற்றதாக இருக்கின்ற அதேவேளையில் மிகவும் புத்திசாலித்தனமுடையதாகவும் உள்ளது.
விற்பனையாளன் என்ற வகையில் மிகவும் அதிக அளவில் விற்பனையாகும் அதன் பண்டமாகத்
36

'தற்காதல்' என்ற ஒன்று மட்டுமே உள்ளது. எப்பொழுதுமே அது வெற்றியாளனாகவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதிகள் எல்லோரும் தொலைக் காட்சியில் நிகழ்த்தும் உரைகளைச் செவிமடுத்துப் பாருங்கள், "அமெரிக்க மக்கள்" என்ற வார்த்தைகளை அவர்கள் நிச்சயம் கூறுவார்கள். பின்வரும் வாக்கியத்தைப் பாருங்கள் "இறைவனை வழிபட்டு அமெரிக்க மக்களின் உரிமைகளைப் போராடிப் பாதுகாத்துக் கொள்ளும் வேளைவந்துவிட்டதென நான் அமெரிக்க மக்களிடம் கூறுகிறேன்; மேலும், அமெரிக்க மக்களின் சார்பில் அவர்களது ஜனாதிபதி மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை மீது நம்பிக்கை வைக்குமாறு நான் கேட்டுகொள்கிறேன்."
இது மினுமினுப்பானதொரு தந்திரோபாயம். சிந்தனையை மடக்கி நிறுத்துவதற்காகவே இங்கு உண்மையில் மொழி பயன்புடுத்தப்படுகிறது. "அமெரிக்க மக்கள்" என்ற வார்த்தைகள் நிஜமாகவே நம்பிக்கையை ஊட்டுகின்ற இன்ப கிளர்ச்சி நிறைந்த மெத்தை போன்றுள்ளது. சிந்திக்கவேண்டிய எந்தத் தேவையும் உங்களுக்கு இருக்காது. மெத்தையில் வெறுமனே கிடக்க வேண்டியதுதான். அந்த மெத்தை உங்களது அறிவுக் கூர்மையையும் நுண்ணாய்வுத் திறனையும் மழுங்கடித்துவிடும்; ஆயினும் அது மிகவும் மகிழ்வாறுதலைத் தரும் ஒன்றாக இருக்கும். ஐக்கிய அமெரிக்கா முழுவதிலும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் 40 மில்லியன் மக்களுக்கும், நாடெங்கிலும் பரந்து கிடக்கும் சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு மில்லியன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது பொருந்தாது. "செறிவு குறைந்த மோதல்" எனும் விஷயம் பற்றி இப்பொழுது அமெரிக்கா அக்கறை கொள்வதில்லை. நாவடக்கமாக இருப்பதையோ தூர விலகி நிற்பதையோ இப்பொழுது அது அர்த்தமுள்ளதாகக் கருதுவதில்லை. எதுவித அச்சமும் இல்லாது அது தனது சீட்டுக்களை மேசையில் பரப்பி வைக்கும். ஐ.நா. சபைக்கோ, சர்வதேச சட்டங்களுக்கோ, விமர்சனப்பாங்கான மாற்றுக்கருத்துக்கோ எந்த வகையான மதிப்பும் கொடுப்பதில்லை. அவற்றை அது ஆற்றலற்றவை யாகவும், பொருத்தமற்றவையாகவும் கருதுகிறது. மெல்லக் கத்தியவாறு பிடி கயிற்றைப் பின்தொடர்ந்து செல்லும் ஆட்டுக்குட்டியான பரிதாபத்துக்குரிய, கையாலாகாத பிரித்தானியாவும் அமெரிக்காவுடன் உள்ளது.
அறமுறை சார்ந்த எமது உணர்திறத்துக்கு என்ன நடந்தது? இத்தகைய உணர்திறம் எம்மிடம் எப்பொழுதேனும் இருந்ததா? இந்த வார்த்தையின் * பொருளென்ன? இன்று மிக அரிதாகவே பயன்படுத்தப்படும் "மனச்சாட்சி என்ற பதத்தை இவை குறிக்கின்றனவா? எமது செயல்களோடு சம்பந்தப்படும் மனச்சாட்சி மட்டுமல்லாது, மற் றையோரது செயல்களுடனும் நாம் பங்கேற்றுப் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு சார்ந்த மனச்சாட்சி யாவும் செத்து விட்டனவா? குவான்டனமோ குடாவில்
த00கம்-55

Page 39
அமெரிக்கா நூற்றுக்கணக்கானவர்களைச் சிறையில் அடைத்துச் சர்வதேசச் சட்டங்களுக்கு மாறாகச் சித்திரவதை செய்கிறது. அங்கு உண்ணாவிரதமிருக்கும் சிலருக்கு மனிதாபிமானமற்ற முறையில் உணவை ஊட்டுகிறது. "சுதந்திர உலகின் தலைவன்" எனத் தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் நாடு இதைச் செய்கிறது. இது பற்றிப் பிரித்தானியப் பிரதமர் என்ன சொல்கிறார்? எதுவுமே சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை? 'குவாண்டனமோக்குடாவில் எங்களது நடத்தை பற்றி விமர்சிப்பதென்பது நட்புறவுப்பாங்கான செயலாக அமையாது" என்று அமெரிக்கா கூறிவிட்டது. எனவே, பிளெயர் வாய்பொத்தி நிற்கிறார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஒரு கொள்ளை நடவடிக்கை. தொடர்ச்சியான பொய்களின் பின்னணியில் புரியப்பட்ட ஆக்கிரமிப்பு. மத்திய கிழக்கின் இராணுவ மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசமாக்க நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு. நாம் சித்திரவதை, கொத்துக்கொத்தாகக் குண்டு பொழிதல், செறிவு குறைந்த யுரேனியத்தைப் பயன்படுத்துதல், எண்ணிலடங்காத கண்மூடித்தனமான கொலைகள், துயரம், இழிநிலை, மரணம் என்பவற்றை ஈராக்கிய மக்கள் மீது திணித்துவிட்டு, "மத்திய கிழக்கிற்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கொணர்கிறோம்" என்று கூறிக்கொள்கிறோம்.
s 0 ஈராக்கிய தீவிரவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னர் குறைந்தது 100000 ஈராக்கியர் அமெரிக்கக் குண்டு வீச்சுக்களாலும் எறிகணைகளாலும் கொல்லப்பட்டனர். அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற பதிவுகூட இல்லை. 'நாங்கள் உடல்களைக் கணக்கெடுப்பதில்லை" என்று அமெரிக்க படை அதிகாரி கூறினார்.
ஆக்கிரமிப்பின் ஆரம்ப காலத்தில் ஈராக்கிய சிறுவனொருவனது கன்னத்தில் டோனிபிளேயர் முத்தமிட்டுவதைக் காட்டும் ஒளிப்படமொன்று பிரித்தானியச் செய்தித்தாளொன்றில் வெளிவந்தது. "நன்றியறிதலுள்ள பிள்ளையொன்று" என அதனடியில் போடப்பட்டிருந்தது. சில நாட்களின் பின்னர் கைகளற்ற சிறுவனொருவனது ஒளிப்படம் வெளிவந்தது. ஏவுகணைத் தாக்குதலால் அவனது குடும்பம் அழிந்து போனது. "நான் எப்போ என் கைகளைத் திரும்பப் பெறுவேன்?" என அவன் கேட்கிறான். நல்லது, டொனி பிளேயர் அச்சிறுவனைத் தனது கைகளில் தூக்கி வைத்திருக்கவில்லை; அங்கம் சிதைக் கப்பட்டதொரு பிள்ளையின் உடலையோ, இரத்தம் பெருகும் சடலமொன்றினையோ அவர் தூக்கி வைத்திருக்கவில்லை. இரத்தம் அழுக்கானது. நீங்கள் தொலைக்காட்சியில் ஒரு பேச்சினை மனமார நிகழ்த்தும்போது அது உங்களது சட்டையையும் கழுத்துப்பட்டியையும் அழுக்காக்கிவிடும்.
2000 அமெரிக்கர் இறந்தமை ஒரு மன உளைவுதான். அவர்களில் இறந்தவர், உடல்
த00கம்-55

சிதைந்தவர் இருசாராரும் அழுகிக்கொண்டி ருக்கிறார்கள். இருவேறு வகையான புதைகுளிகளில்.
. "நான் ஒரு சிலவற்றை விளக்குகிறேன்" என்ற பப்லோ நெருடாவின் கவிதையிலிருந்து ஒரு பகுதி இதோ: ஒருநாட்காலை அனைத்தும் எரிந்தன. ஒருநாட்காலை நிலத்திலிருந்து தாவி எழுந்தன சொக்கப்பானைகள். மனிதரை அழித்தன; அன்றிலிருந்து தீ, அன்றிலிருந்து வெடிமருந்து, அன்றிலிருந்து குருதி. விமானங்கள் கப்பல்களோடு கொள்ளையர், மோதிரங்கள் கோமாட்டிகளோடு கொள்ளையர்கள் ஆசீர்வதிக்கும் கருமேலாடைத் துறவிகளோடு கொள்ளையர் வான்வழி வந்தனர் சிறுவரைக் கொல்ல; சிறுவர்தம்குருதி சிறுவரின் குருதிபோல ஆர்ப்பரிப்பேதுமில்லாது தெருவழி பெருகியது.
நரிகள் இகழும் நரிகள் காய்ந்த முட்செடிகள் கடித்துத்துப்பும் கற்கள் நச்சுவிரியன்கள் வெறுத்தொதுக்கும் நச்சுவிரியன்கள்.
பொங்குகடலென ஸ்பானியக் குருதி எழுந்து தற்பெருமை மற்றும் கத்திகள் எனுமோர் அலையில் உம்மை மூழ்கடித்திட வந்ததை நேருக்குநேர் உம்மோடு நின்று
பார்த்துளேன்.
வஞ்சனைமிக்க படை முதல்வர்களே இறந்து கிடக்கும் என் வீ(நா)ட்டைப் பாருங்கள் நொறுங்கிக் கிடக்கும் ஸ்பானியாவைப் பாருங்கள்; ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மலர்களுக்குப் பதிலாக கொதித்தெரியும் உலோகம் பெருக்கெடுக்கிறது; ஒவ்வொரு குழியிலிருந்தும் ஸ்பானியா மேற்கிழம்புகிறது. இறந்த ஒவ்வொரு பிள்ளையிலிருந்தும் கண்களோடு ஒரு றைபிள் ஒவ்வொரு குற்றத்திலிருந்தும் சன்னங்கள் பிறக்கின்றன,
அவை ஒருநாள் உங்கள் இதயங்களின் இலக்குமையத்தைக் கண்டு கொள்ளும்,
எதற்காக அவனது கவிதை கனவுகள், இலைகள் சொந்த நாட்டின் எரிமலைகள் பற்றிப் பேசுவதில்லை என நீங்கள் கேட்பீர்கள்
தெருக்கள் தோறும் பெருகிக் கிடக்கும் குருதியை வந்து பாருங்கள் தெருக்கள்தோறும் பெருகிக்கிடக்கும் குருதியை வந்து பாருங்கள்
"முழுவீச்சிலான மேலாதிக்கம்" என்பதே இப்பொழுது அமெரிக்காவால் உத்தியோக
37

Page 40
பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொள்கையாகும். நிலம், கடல், ஆகாயம், வெளி மற்றும் அவற்றோடு சேர்ந்த மூலவளங்கள் யாவற்றையும் கட்டுப்படுத்துதல் என்பதே இதன் பொருளாகும். இப்பொழுது அமெரிக்கா உலகம் முழுவதிலும் 132 நாடுகளில் 702 இராணுவ நிலைகளை வைத்திருக்கிறது. இயங்கு நிலையிலுள்ள 8000 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. அவற்றில் 2000, 15நிமிட எச்சரிக்கையில் ஏவக்கூடிய தயார்நிலையிலுள்ளன. பதுங்குகுழி விந்தை' எனும் புதிய முறைமையில் அமைந்த அணுவலுவை அது விருத்தி செய்துள்ளது. என்றென்றும் ஒத்துழைக்கும் பிரிட்டன், ட்ரைடெஸ்ட் எனப்படும் தனது அணு ஏவுகணைகளை மாற்றியமைக்கக் கருதியுள்ளது. இவர்கள் யாரைக் குறிவைக்கிறார்கள்? ஒசாமா பின்லேடனையா? உங்களை யா? என்னையா? ஜோடோக்சையா? சீனாவையா? பரிசையா?யாருக்குத் தெரியும்? எமக்குத் தெரிந்தது ஒன்றுமட்டும்தான்; சிறுபிள்ளைத்தனமான இந்தச் சித்தப்பிரமை, அதாவது அணுவாயுதங்களை வைத்திருப்பதும் அவை பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவதும் தான் இன்றைய அமெரிக்க அரசியற் சித்தாந்தத்தின் இதயமையமாக உள்ளது. நிரந்தர இராணுவத்தயார் நிலையில் அமெரிக்கா உள்ளது என்பதையும் அதைத் தளர்த்தும் எந்த அறிகுறியும் அதில் தென்படவில்லை என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தனது பேச்சுக்களை எழுதுவதற்கு அதிபர் புஷ் தகுதிமிக்க பலரை வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் அப்பணியினைச் செய்ய நானாக முன்வர விரும்புவேன். பின்வரும் பேச்சை அவர் மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் நிகழ்த்தலாம். F.
"கடவுள் நல்லவர். கடவுள் பெரியவர். கடவுள் நல்லவர். எனது கடவுள் நல்லவர்.பின்லேடனின் கடவுள் கூடாதவர்; அவர் ஒரு கூடாத கடவுள். சதாமின் கடவுளும் கெட்டவராகத் தான் இருந்தார்; ஆனாலும் அவருக்கென்றொரு கடவுள் இருக்கவில்லை. அவர் ஒரு காட்டுமிராண்டி, நாங்கள் காட்டுமிராண்டிகளல்ல. நாங்கள் மக்களின் தலைகளைத் தறித்தெறிவதில்லை. நாங்கள் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். கடவுளும் அப்படித்தான். நான் காட்டுமிராண்டியல்ல. சுதந்திரத்தை நேசிக்கின்றதொரு ஜனநாயக நாட்டால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவன் தான் நான், நாங்கள் இரக்கம் மிக்க முறையில்,மின்திற மரணதண்டனை கொடுப்போம்; இரக்கம் மிக்க முறையில் கொல்லும் திறமுள்ள ஊசியை உட்செலுத்துவோம். நாம் பெருமை மிக்கதொரு பெரிய தேசத்தவர். நான் ஒரு சர்வாதிகாரியல்ல. ஆனால், அவர் அப்படிப்பட்ட ஒருவர். நான் காட்டு மிராண்டி யல்ல. அவர் அப்பிடிப்பட்டவர். அவர் அப்படிப்பட்டவர்தான். அவர்கள் எல்லாருமே அப்படிப்பட்டவர்கள்தான். என்னிடம் அறநெறிமுறை சார்ந்த ஆணை அதிகாரம் இருக்கிறது. இந்த முஷ்டி
38

உங்களுக்குத் தெரிகிறதா? இதுதான் எனது அறநெறிமுறைசார் ஆணையதிகாரம். இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது."
எழுத்தாளனின் வாழ்வு ஆபத்துமிக்கது. பலவித துயர்கள், ஆபத்துக்கள் நிறைந்தது. நீங்கள் பொய் சொன்னாலன்றி உங்களுக்குப் பாதுகாப்புக் கிடையாது. அவ்வாறு உங்களைப் பாதுகாத்துக் கொள்வதானால் அரசியல்வாதியாகுங்கள்.
இன்று ud J 600T Lb பற்றிப் பலதடவை குறிப்பட்டுவிட்டேன். மரணம் எனப் பெயரிடப்பட்ட எனது கவிதை ஒன்றினை இப்போ மேற்கோள் காட்டுவேன். இறந்த உடல் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது? இறந்த உடலைக் கண்டுபிடித்தவர் யார்? இறந்த உடலைக் கண்டுபிடித்தபோது - அது இறந்து கிடந்ததா? இறந்த உடலை எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?
யார் அந்த இறந்த உடல்? இறந்து கைவிடப்பட்ட அந்த உடலின் தந்தையோ மகளோ சகோதரனோ மாமனோ சகோதரியோ தாயோ மகளோ யார்?
கைவிடப்பட்ட போது உடல் இறந்து கிடந்ததா? அந்த உடல் கைவிடப்பட்டதா? யாரால் அது கைவிடப்பட்டது?
இறந்த உடல் பிறந்த மேனியாகக் கிடந்ததா? : இல்லையேல் பயணமொன்றுக்காக உடையணிந்திருந்ததா?
இறந்த உடலை இறந்துவிட்டது எனப் பிரகடனப்படுத்த உம்மைத் தூண்டியது எது? இறந்த உடலை இறந்துவிட்டது என நீங்கள் பிரகடனப்படுத்தினிர்களா? இறந்த உடலை எந்த அளவுக்கு நீங்கள் அறிந்திருந்தீர்கள்? இறந்த உடல் இறந்துவிட்டது என்று எப்படி நீங்கள் அறிந்துகொண்டீர்கள்?
இறந்த உடலைக் குளிப்பாட்டினிர்களா அதன் கண்களிரண்டையும் மூடிவிட்டீர்களா உடலைப் புதைத்தீர்களா அதைக் கைவிட்டுவிட்டீர்களா இறந்த உடலை முத்தமிட்டீர்களா
மிகப்பெரிய சிக்கல்கள் எம்மை எதிர்நோக்கியவாறு இருக்கின்ற போதிலும் பிரஜைகள் என்ற வகையில் எமது வாழ்வு மற்றும் எமது சமூகங்களது வாழ்வு பற்றிய உறுதியான அறிவுநிலைப்பட்ட தீர்மானத்தை எடுக்கவேண்டிய கடப்பாடுடையவர்களாக நாமனைவரும் இருக்கிறோம்.
. எமது அரசியல் தரிசனம் அத்தகையதொரு உறுதியான தீர்மானத்தைக் கொண்டதாக இல்லாதிருக்குமானால், இன்று ஏறக்குறைய நாம் இழந்திருக்கும், மனித கெளரவத்தை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள முடியாதவர்களாக ஆகிவிடுவோம்.
த00கம்-55

Page 41
சிறு
கலாநிதி முறிராமுக்குச் சட்டத்திலும் நீதி நிருவாகத்திலும் உள்ள நம்பிக்கை அவருடைய கடவுள் நம்பிக்கைக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல. எனவே சின்னத்தம்பியைப் பொலிஸ் பிடித்துக் கொண்டு போய் றரிமாணி டி லி வைத் திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன், சின்னத்தம்பியின் தாயாரான சரசுவதி சொன்ன விவரங்களை விசாரித்து அறிந்து, தானே போய்ச் சின்னத்தம்பியை மீட்டுக் கொண்டு வருகிறேன் என்று புறப்பட்டுவிட்டார். என்றாலும் அதிலே சில பிரச்சினைகள் இருந்தன. முதலாவது, சின்னத்தம்பியை ரீராமுக்கு முன்னே பின்னே தெரியாது என்பது, இரண்டாவது, ரீராமுக்கு இலங்கை பொலிஸைப் பற்றி எதுவும் தெரியாது என்பது. மூன்றாவது, முறிராமுக்குச் சிங்களமோ தமிழோ பேசவே இயலாது என்பது. பூரீராம் எப்படி இந்த ஊரில் வாழுகிறார் என்று கேட்கிறீர்களா? அவர் ஸ்கொட்டாந்தில் உள்ள அபர்டீன் நகரிலிருந்து முதல் நாள் இரவு தான் கொழும்புக்கு வந்தார். அவருக்கு இங்கே சொந்தம் உறவு என்று யாரும் இல்லை. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் லண்டனில், பிறகு வடக்கே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பதினைந்து வருடங்களாக உத்தியோகம். Uராமின் தகப்பனார், 1958 கலவரத்தோடு, தன்னுடைய மனைவியோடும் மகளோடும் வெளியேறியவர். ரீராம் பிறந்தது லண்டனில். தகப்பன் இரண்டு முறை இலங்கைக்கு வந்து போனார். 1983க்குப் பிறகு, வருகிற எண்ணமே விட்டுப்போய்விட்டது. ஒரு சராசரியான படித்த ஆங்கிலேயருக்கு இலங்கையைப் பற்றி உள்ள அறிவிற்குக் கொஞ்சம் மேலாக ரீராமுக்கு இலங்கையில் உள்ள பிரச்சினைகள் பற்றித் தெரியும். புண்ணிமூர்த்தி என்கிற கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தன்னுடைய ஸபாற்றிக்கல் லீவை (அதாவது ஏழு வருஷத்திற்கு ஒரு முறை கிடைக்கிற ஒரு வருஷ விடுப்பை) அபர்டினிஸ் செலவிட்ட போது ரீராமுடன் பழக கிடைத்தது. இரண்டு பேருக்கும் நன்றாக ஒத்துப் போனது. அதன் விளைவாக, ரீராம் 2006ம் ஆண்டு
த90கம்-55

டம்
'பரீ”
தொடக்கத்தில் இரணி டு வாரங்களை புண்ணியமூர்த்தியுடன் கழிப்பதற்கு ஏற்பாடானது.
புண்ணியமூர்த்தி கொழும்பில் கொஞ்சம் வசதியானதும் கொஞ்சம் வசதியில்லாததும் என்று சொல்லக் கூடிய பகுதியான நாரஹென்பிட்டவில் இடவசதியான ஒரு வீட்டில் வாழுகிறவர். மூத்தமகன் அவுஸ்ரேலியாவில் மேற்படிப்புக்குப் போய்விட்டார். மகள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில், இளையமகன் பாபு என்கிற சுரேஸ்குமார் இன்னமும் பாடசாலையில். வீட்டில் மனைவி சந்திராவுக்கு உதவியாக இடையிடையே வேலை செய்து போகிறவர் தான் சரசுவதி. சரசுவதியின் இளையமகன் குட்டியான் என்கிற சின்னத்தம்பி கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டதால் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டான். கொஞ்சம் விளையாட்டுப் புத்தி என்று சொல்லலாம். அவனுக்கு நல்ல சிநேகிதர்களும் இருந்தார்கள். அப்படியில்லாதவர்களும் இருந்தார்கள். என்றாலும் பொதுவாக தொந்தரவில் மாட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தான். வயது 15 என்றாலும் 17, 18 என்று மதிக்கக் கூடிய உயரமும் தோற்றமும்,
தொந்தரவில் மாட்டிக் கொள்ளாமல் என்றா சொன்னேன். அது ரீராம் இலங்கையில் காலடி எடுத்து வைத்த நாள்வரை. யூரீராம் அதில் எதற்கும் காரணம் என்று அவசரப்பட்டு யாரும் நினைத்துவிடக் கூடாது. பொலிசில் அகப்பட்ட அன்றைக்குக் கூட அவன் ஒரு வம்புதும்புக்கும் போகவில்லை - இது பின்பு சரசுவதியின் மூலம் தெளிவுபடுத்தப்பட்ட தகவல். எல்லோரையும் போல சரசுவதியும் தேவையற்று பொய் சொல்ல மாட்டார். அவரின்படி குட்டியான் ஒசமா என்கிற பையனுடன் கொழும்பு புறக்கோட்டையில் தெருவழியே போய்க் கொண்டிருந்த போது பொலிஸ்காரர் ஒருவர் விசில் ஊதி இரண்டுபேரையும் நிற்கச் சொன்னபோது குட்டியான் நின்றான். ஒசாமா கேட்காதமாதிரி நடந்தான். பொலிஸ் காரர் அவனை துரத்திப் பிடித்து அடையாள அட்டையைக் கேட்டார். அவனிடம்
39

Page 42
அடையாள அட்டை இல்லை. எனவே ஒசமாவை வா என்று பொலிஸ் ஸ்ரேசனுக்கு இழுத்துக்கொண்டு போக குட்டடியான் தன் நட்பைப் பிரகடனம் செய்கிற நோக்கத்துடன் அவனைப் பொலிஸ்காரர் “போடா” (உணர்மையாக ** உம்ப பளையாங்) என்று விரட்டியதையும் மீறி நண்பனுடன் போனதாக சரசுவதியின் வாக்குமூலம்.
ஒசாமாவின் உண்மையான பேர் குட்டியானுக்குத் தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். ஒசாமா முஸ்லிமில்லை. அவனுடைய அப்பா கோட்டையில் ஒரு சிறிய கடை முதலாளி. அவருடைய உண்மை, நிச்சயமாக குட்டியானுக்குத் துணையாக ஒசாமா போய் அகப்பட்டான் என்றே அமையும் என்றும் , பொலிஸ்காரருடைய உண்மை, பொலிஸ் ஸ்டேஷனில் உள்ள பதிவுப் புத்தகத்தில் இரண்டு பேருமே சந்தேகத்துக்கு இடமளிக்கிற விதமாக நடந்து கொண்டார்கள் என்றும் அவர்களிடம் அடையாள அட்டைகள் இல்லை என்றும் தாங்கள் நியாயமாக ஊகிக்கலாம்.
சரசுவதி பதறியபடி வந்து சந்திராவிடம் உதவி கேட்டபோது புண்ணியமூர்த்தி வீட்டில் இல்லை. அதனாலே தான் முறிராம் தானாகவே உதவ முன்வர நேர்ந்தது. சந்திரா, நான் தொடக்கத்தில் சொன்ன மூன்று காரணங்களையும் அவரிடம் சொலி லி விளங்கப்படுத்தியும், அவர் அவற்றில் எதையுமே ஏற்க மறுத்துவிட்டார். அவரும் போய் றிமாண்டில மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற யோசனையில் சந்திரா, ‘நானும் வருகிறேன்' என்று வெளிக்கிட ஆயத்தமானார். ஆங்கில சிங்கள மொழிகளில் தனது புலமை பற்றி சந்திராவுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாவிட்டாலும், இதுவரை ரீராமைச் சமாளிக்க உதவிய ஆங்கில அறிவும் கடைகளில் போய் பேரம் பேசக் கூடியளவு சிங்கள அறிவும் இருந்த தைரியத்தில் புறப்பட்ட சந்திராவை இறுதி நேரத்தில் பாபு வந்து தனது ரியூஷன் வகுப்பைத் தியாகம் செய்து தடுத்தாட் கொண்டான். பாபுவுக்குச் சிங் களத்திலலும் ஆங்கிலத்திலும் பேச முடியும். கடைசியாக சரசுவதியையும் பாபுவையும் Uராமையும் சந்திரா கோட்டைப் பொலிஸ் ஸ்ரேஷனுக்கு கூட்டிக் கொண்டு போய் விடுவதாகவும் அலுவல் சுணங்கினால் புண்ணியமூர்த்தி வீடு திரும்பிய பிறகு அவர் வந்து பாபுவையும் ஹிராமையும் வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
போகிற வழியில், சரசுவதி, தான் வேலை செய்கிற இன்னொரு வீட்டில் உள்ள பல் வைத்தியருக்குக் கோட்டைப் பொலிஸ் நிலையத்தின் மேலதிகாரியைத் தெரியும் என்பதால் பல்வைத்தியருடைய மனைவி ஒரு கடிதம் தந்து விட்டிருப்பதாகச் சொன்னார். அந்தக்
40

நூல்: கேடானியல் படைப்புகள்
(பாகம் ) ஆசிரியர் கேட்ானியல் பதிப்பாசிரியர்: டானியல் வசந்தன் U3Üu: 960LUTGİTLİ) இந்திய விலை: ரூபா 480/-
கடிதத்தால் பயனில்லை என்பது சந்திராவின் மதிப்பீடு. அது தேவையில்லை என்பது யூரீராமின் மதிப்பீடு. பாபுவுக்கு அதுபற்றி ஒரு அபிப்பிராயமும் இல்லை. சரசுவதிக்கு ஒரு சுவீப் றீறிக்கற் மீதுள்ள நம்பிக்கையிலும் சிறிது அதிகமான நம்பிக்கை அதன் மீது இருந்தது.
பொலிஸ் ஸ்ரேசனுக்கு போனபோது மாலை 3.30 இருக்கும். பெரும்பாலான பொலிஸ்காரர்கள் தேனிர் அருந்தப் போய்விட்டார்கள். யாரிடம் விசாரிப்பது என்றே யூரீராமுக்குத் தெரியவில்லை. சரசுவதி ஒரு மாதிரியாக, பொறுப்பான அலுவலகர் (ஒ.ஐ.சி) எங்கே இருப்பார் என்றும் அவர் எப்போது தேனிர் அருந்தி முடிப்பார் என்றும் விசாரித்து அறிந்து பாபு மூலமாக ரீராமுக்குத் தெரியப்படுத்தினார். ரீராமுக்கு, குட்டியானை விடுவிப்பதைவிட முக்கியமான பிரச்சனையாக பொலிஸ் அலுவலகர்களது நடத்தை தோன்றியது. பொலிஸ் மேலதிகாரியிடம் முறைப்படுவதற்கு அவரது அறையை நோக்கி நடந்தார். ஆனால் அவரும் அவருடைய அறையில் இருக்கவில்லை. எனவே வேறு வழியில்லாமல் திரும்பி வந்து பாபுவுக்கு அருகாக அமர்ந்து கொண்டார். கொஞ்சத் தொலைவிலுள்ள றிமான்ட் காம்பறையில் கம்பி கதவுகளுக்கு அப்பால் நின்ற குட்டியானை சரசுவதியை அடையாளம் கண்டு, பாபுவிடம் காட்டினார். அங்கே குட்டியானும் இன்னும் மூன்று பேரும் நின்றார்கள். அவனுக்கு அருகாக நின்றவன் ஒசாமாவாக இருக்க வேண்டும் என்று சரசுவதி ஊகித்தார். யாராவது பொலிஸ்காரருடைய அனுமதியில்லாமல் பேசப் போவது
த00கம்-55

Page 43
தாலியம்
கடந்த மார்ச்சு மாதம் 8ந்திகதி ெ தமிழ்ச்சங்கத்தில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழையமாணவர் சங்கத் (கொழும்புகிளை) மகளிர் தினவிழா இடம்ெ அவ்விழாவில் பெண் விடுதலைச் சி அமைப்பின் தாலியம் (சுய விசார னை அரங்கு) நாடகம் மேடையேறியது. பிரதியாக்கம் அன்னலட்சுமி குண: நெறியாள்கை ஏ.எஸ்.பாஸ்கரன். நாட இரு காட்சிகளையும் விழாவில் கல்ந்துெ பார்வையாளர்களில் ஒரு பகுதியின படங்களில் காணலாம்
ܢܠ
நல்லதல்ல என்று சரசுவதிக்குத் தெரியும். தயக்கத்துடன் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு உயர்த்தி மெல் அசைத்தார். குட்டியானும் தாயை அடையாளம் கண்டு, முறுவலிப்பதா இல்லையா என்று நிச்சயமில்லாமல் கையை அசைத்தான். அப்போது ஒரு நடுத்தர வயதுப் பொலிஸ்காரர் றிமாண்ட் காம்பறையை தாண்டி நடந்தார். குட்டியான் அவரை நோக்கி சுட்டு விரலை நீட்டியபடி முன்னும் பின்னுமாக வலது கையை அசைத்தான். அவர் தான் அவனைப்பிடித்த பொலிஸ்காரர் என்று சரசுவதி
த00கம்-55
 

iாழும்பு a0Ꮿ6iᎴᎹ
தினால் பற்றது. ந்தனை க்கான
நாடக நங்கம். கத்தில் காண்ட 60)0ιμώ
ஊகித்து அவரிடம் போய் பேசலாமா என்று பாபு மூலமாக ரீராமைக் கேட்கிறதற்கிடையில், பொலிஸ் மேலதிகாரி தன் அறைக்குள் நுழைவதைக் கண்ட ரீராம் அவருடைய அறையை நோக்கி நடந்தார். வேறு வழியில்லாமல், சரசுவதி பல்வைத்தியரின் மனைவி எழுதிக் கொடுத்த கடிதத்தை முறிராமின் கையில் கொடுத்து அதை காண்பிக்கும்படி கேட்டார். பாபுவின் மொழிபெயர்ப்பு இல்லாமலே ஹரீராமுக்கு அது
41

Page 44
விளங்கியிருக்க வேண்டும். அதை வாங்கிக் கொண்டு பொலிஸ் மேலதிகாரியுடைய அறைக்குள் போனார்.
ஒரு பதினைந்து நிமிட நேர உரையாடல் நடந்தது. பொலிஸ் மேலதிகாரி சிரித்த முகத்துடனேயே முரீராமுடன் பேசினார். அந்த விபரம் எல்லாம் இந்தக் கதைக்கு முக்கியம் இல்லை. முடிவு இவ்வளவு தான்; றிமான்டில் வைத்த ஒருவரை விடுப்பதானால் ஓ.ஐ.சி வரவேண்டும். பொலிஸ் மேலதிகாரிக்கு அவசரமாக ஒரு அலுவல் இருந்தது. (அனேகமாக மகளை சங்கீத வகுப்புக்குக் கூட்டிக் கொண்டு போவது போல முக்கியமான ஒரு கடமையாகத் தான் இருக்கும்). எனவே ஒ.ஐ.சிக்கு தகவல் வைத்துவிட்டுப் போவதாகச் சொல்லி ரீராமை சந்தித்ததில் தனது பெருமகிழ்ச்சியையும் அறிவித்துவிட்டு சிறிது நேரத்தில் போய்விட்டார். சரசுவதி கொண்டு போன கடிதத்தை என்ன செய்தார் என்று சொல்ல முடியவில்லை. அநேகமாக மேசை மீதே விட்டுவிட்டுப் போயிருப்பார் என்றே நினைக்கிறேன்.
ரீராம் இலங்கை காவல் துறை மீது வேகமாக இழக்கத் தொடங்கிய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மீளத்தொடங்கியது. ஓ.ஐ.சி வருவதற்கு இன்னும் சிறிது நேரம் போகும் போலத் தெரிந்தது. அதற்குள் புண்ணியமூர்த்தி வந்துவிட்டார். தானே மிகுதியை கவனிப்பதாகவும் பாபுவையும் றிராமையும் சரசுவதியையும் போகுமாறும் சொல்லிப் பார்த்ததில் அவருக்கு மூன்றிலொரு பங்கு வெற்றி கிட்டியது. ரீராமும் சரசுவதியும் குட்டியானை விடுவிக்காமல் புறப்பட மறுத்துவிட்டனர். எனவே பாபுவின் இடத்துக்கு புண்ணியமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து கொண்டார். புண்ணியமூர்த்திக்கும் பொலிஸ் ஸ்ற்றேஷன் அனுபவம் குறைவு. இரண்டு தடவை ஆட்பதிவுப் படிவங்களை கொடுக்க நாரஹன்பிட்ட பொலிஸ் ஸ்ரேசனுக்கு போயிருக்கிறார். அதுவே அவருக்கு அதிகம்.
ஓ.ஐ.சி வரமுன்பு இன்னொன்றும் நடந்தது. இருபது இருபத்தைந்து இளைஞர்களை கூட்டிக் கொண்டு முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் வந்தான். அவனோடு கூடச் சில பொலிஸ்காரர்களும் வந்தார்கள். பொலிஸ்காரர்கள் அவனை மொஹமட் என்று அழைத்தார்கள். மொஹமட் இளைஞர்களுடன் பேசிய அசல் யாழ்ப்பாணத் தமிழ் உச்சரிப்பும் அவனுடைய சிங்கள உச்சரிப்பில் இருந்த தமிழ்ச் சாடையும் முகச் சாயலும் நிச்சயமாக மொஹமட் ஒசாமாவைவிட எள்ளளவேணும் கூடவோ குறையவோ முஸ்லிம் இல்லை என்றே புண்ணியமூர்த்திக்கு உணர்த்தியது. என்றாலும் அவனை மொஹமட் மொஹமட் என்று கொஞ்சம் அதிகமாகவே பொலிஸ்காரர்கள் உரத்த குரலில் அழைத்தார்கள்.
ஒ.ஐ.சி வந்ததும் அத்தனை இளைஞர்களதும் பெயர்களும் விபரங்களும் பதியப்பட்டு அவர்களில் ஒரு
42

பகுதியினர் குட்டியானும் ஒசாமாவும் இருந்த அறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் இன்னொரு அறையில் அடைக்கப்பட்டனர். இப்பொழுது குட்டியானைப் பார்க்க முடியாமல் றிமான்ட் அறைக்குள் அவனுக்கு முன்னால் ஆட்கள் நின்று கொண்டிருந்தனர். குட்டியான் தன் கால் நுனி விரல்களில் நின்றபடி இடையிடை தாயை எட்டிப்பார்த்தான். சரசுவதிக்கு கண்கள் கலங்கத் தொடங்கிவிட்டன. யாரும் பார்க்காத விதமாக விரல் நுனியால் கண்ணிரை வழித்து எடுத்துக் கொண்டார்.
அடுத்து ஓ.ஐ.சியோடு பேசுவதற்கு ரீராமும் புண்ணியமூர்த்தியும் எடுத்த முயற்சிகள் இவர்களைப் பதிந்ததை சரிபார்த்த பின்பு என்ற விதமான ஓ.ஐ.சியின் கைச்சாடையால் முறியடிக்கப்பட்டன. அதற்கிடையில் வேட்டி சட்டையுடன் ஒரு வயது மூத்தவர் வந்து ஒ.ஐ.சியுடன் பேசத் தொடங்கினார். மொஹமட்டும் உரையாடலில் பங்குபற்றினான். மொஹமட் பொலிஸ் உதவியுடன் வளைத்துப் பிடித்தவர்கள் ஒரு லொட்ஜில் இருந்தவர்கள் என்றும் வயது மூத்தவர் அதன் சொந்தக்காரராக இருக்கலாம் என்றும் சரசுவதியும் புண்ணியமூர்த்தியும் ஊகித்துக் கொண்டார்கள். லொட்ஜ் சொந்தக்காரரின் தேவை இளைஞர்களை றிமான்ட்டில் இருந்து வெளியே அனுப்புவதா? லொட்ஜில் இருந்து வெளியே அனுப்புவதா என்று சரசுவதிக்கு நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவருக்கும் ஒஐசிக்குமிடையே நடந்த உரையாடலில் எந்தவிதமான காரசாரமும் இருந்ததாக தெரியவில்லை. மாறாக மிகவும் நட்புரிமையே இருந்தது போலத் தெரிந்தது. பிடிக்கப்பட்ட ஓரிரு இளைஞர்களிடம் ஆறுதலாக ஏதோ சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். மொஹமட்டையும் அதன்பின்பு காணவில்லை.
புண்ணியமூர்த்தியும் Uராமும் இந்தப் பராக்கில் இருந்த போது, நேரம் இரவு 8.30யை தாண்டிவிட்டது. அங்கே நின்ற பொலிஸ்காரிடம் விசாரித்த போது ஓ.ஐ.சி சாப்பிடப் போய்விட்டார் என்று சொன்னார்கள். குட்டியனை விடுவிக்கச் சொல்லி மேலதிகாரி தகவல் சொல்லியிருக்கிறார் என்று புண்ணியமூர்த்தி மூலம் யூரீராம் சொன்னபோது பொலிஸ்காரர்கள் எப்படியும் ஒ.ஐ.சி வந்துதான் எதுவும் நடக்கும் என்றார்கள். ஆனாலும் ஒ.ஐ.சி கட்டாயம் வந்து விடுவார் என்று அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். இப்பொழுது பொலிஸ் ஸ்ரேசனில் நான்கு பொலிஸ்காரர்களையும், கம்பிக் கதவுகளுக்குப் பின்னால் நின்றவர்களையும் விட்டால் இவர்கள் மூவரும் இன்னும் ஒரு ஒல்லியான தலை சிறிது நரைத்த ஒருவரும் மட்டுமே இருந்தார்கள். அவர் அனேகமாக ஒசாமாவின் தகப்பனாராக இருக்க வேண்டும் என்று சரசுவதி ஊகித்து அவருடன் போய் பேசத்தொடங்கினார். முதலிற் கொஞ்சம் முறுகலாகத் தொடங்கிய உரையாடல் பிறகு சிறிது நெகிழ்வாகியது. ஒசாமாவின்
த00கம்-55

Page 45
தகப்பன் பின்பு புண்ணிமூர்த்தியிடம் தன்னை ஆறுமுகம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஒ.ஐ.சி இன்னும் வரவில்லை. மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆறுமுகம் கழிப்பறைக்கு போய் வருகிறேன் என்று வெளியே போனார். வர சிறிது நேரம் எடுத்தது. அதற்குள் ஒ.ஐ.சி திரும்பி வந்துவிட்டார். அவருடன் புண்ணியமூர்த்தி போய்ப் பேசியபோது, மேலதிகாரி எந்தவிதமான தகவலும் எனக்குத் தரவில்லை என்றும் ஒருவேளை அங்கே யாரோ அதைத் தவறவிட்டிருக்கலாம் என்றும் நீண்டநேரமாக விளக்கம் அளித்தார். அடையாஅட்டை, வயது என்றெல்லாம் திரும்பத் திரும்பச் சொன்னார். குட்டியானை வெளியே விடுகிற நோக்கம் மட்டும் இல்லைப்போலவே தெரிந்தது. இதற்கிடையில் சந்திராவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஓ.ஐ.சி மேலதிக வருமானத்தை எதிர்பார்ப்பார் என்று நினைக்கிறதாக சந்திரா சொன்னார். அதைப் புண்ணிய மூர்த்தி ரீராமிடம் சொல்ல முறிராம் இரவு முழுவதும் இங்கேயே கழிக்க நேர்ந்தாலும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்றும்
விட்டுக்குப் போகும்படியும் சொன்னார். யூரீராமை அங்கே தனியே விட்டுச் செல்வதன் அபாயங்கள் அவர்கள் இருவருக்கும் தெரிந்ததாலி அவருடைய சத்தியாக்கிரகத்தில் அவர்களும் வேறு வழியில்லாமல் இணைந்து கொண்டார்கள்.
-5-
வெளியே போன ஆறுமுகம் திரும்ப வந்து ஒ.ஐ.சியிடம் சிறிது பேசினார். ஒ.ஐ.சி எழுந்து வெளியே போய் திரும்பினார். பிறகு வேலைகள் சிறிது துரிதமாகின. ஒசாமாவும் குட்டியானும் புத்தகத்தில் ஒப்பம் இட்ட பிறகு எல்லோரும் வெளியே வரும்போது நேரம் பதினொன்றை நெருங்கிவிட்டது.
ரீராமுக்கு இந்த ஏழரை மணிநேர போராட்டத்தில் லஞ்சத்துக்கு இடமில்லாமல் வெற்றிபெற்றதில் ஒருவிதமான பெருமை. புண்ணியமூர்த்தி வந்த போது கொண்டு வந்த குளிர் பானத்தை விட எதுவுமே வாயில் படாமல் பசிகிடந்தது கூட அவருக்கு ஒரு அற்ப விசயமாகத் தெரிந்தது. தன்னுடைய பெருமிதத்தைப் புண்ணிய மூர்த்தியுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆறுமுகம் புண்ணிமூர்த்தியிடம் ஐயா இங்கிலிஸில் என்ன சொல்லறாங்க? என்று கேட்டார். புண்ணியமூர்த்தி தாங்கள் பிடிவாதமாக நின்று இரண்டு பேரையும் விடுவித்துவிட்ட பெருமையில் ஆறுமுகத்தையும் பங்காளியாக்கினார்.
"ஐயா நான் அறுநூறை அவங் கைமேல வெச்சிக்காட்டி, நாளைக்குக் கூட பையனை வெளிய
ക്രിക-55

அடுத்தவள் பற்றி.
அழ.பகிரதன்
அடுத்தவளுக்குள் நுழை துருவித் துருவி அவளை ஆராய் அவளது நினைப்புகளை அந்தரங்கங்களை
அவாக்களை
எதிர்பார்ப்புக்களை எதிர் உணர்வை எல்லாவற்றையும் விமர்சி தேடித்திரிந்து நாலு 0பேருக்குச் சொல்லு கவலைப்படு அவள் கெட்டுப் போவதாய் அழிவதாய் அவளால் சமூகம் கெடுவதாய் உரத்துச் சொல்லு நாலுபேர் தலையாட்ட தவறியும் உன்னப்பற்றி உனது அந்தரங்கம் உனது அவாக்கள் எதிர் பார்ப்புகள்
எதிர் உணர்வு
எது பற்றியும்
விமர்சிக்காதே யாருக்கும் சொல்லாதே அடுத்தவளால் மட்டுமே சமூகம் கெடும் ஆதலால் அவளைப்பற்றி அலசு.
مجمہ ܥܐ
விட்டிருக்க மாட்டாங்க! என்று ஏளனமாகச் சொன்னார். பின்னாலே குட்டியானை அணைத்தபடி வந்து கொண்டிருந்த சரசுவதிக்குக் கண்ணிரின் நடுவிலும் சிரிப்பு விரிந்தது. ஆனாலும் ஓசையை அடக்கிக் கொண்டார்.
ஆறுமுகம் கொடுத்த லஞ்சத்தில் தானும் தனது பங்கைச் செலுத்துவதா என்று புண்ணிய மூர்த்தி முடிவு செய்ய இயலாமல் இரண்டு தடங்கல்கள் ஏற்பட்டன. என்று ரீராமின் வெற்றிக் களிப்பைச் சிதைக்காமல் எப்படிப் பணத்தைக் கொடுப்பது என்ற பிரச்சினை. மற்றது, சந்திராவும் பாபுவும் அதற்கிடையில் அவர்களை அழைத்துச் செல்லக் கார் கொண்டு வந்துவிட்டார்கள். அவர்கள் காரில் ஏறிய கையோடு, ஆறுமுகம் ஒசாமாவின் முதுகில் ஓங்கி இரண்டு முறை அறைந்த ஓசையும் பதிலுக்கு ஒசாமா ‘அப்பா, ஒன்னைவிட பொலிஸ்காரன் பரவாயில்லேப்பா” என்று சொன்னதும் தெருவைக் கடந்து கொண்டிருந்த சரசுவதியின் காதிற் கேட்டது. குட்டியனை இறுகத் தழுவியபடி பஸ்தரிப்பை நோக்கி நடந்தாள்.
43

Page 46
சேரனின்
5@ID
L
தமிழகத்தின் தமிழ் சினிமாவை நாற்றமெடுக்கும் குப்பை மேட்டுக்கு ஒப்பிடலாம். ஆனால் குப்பை மேட்டுக் குண்டு மணிகள் போன்று அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் என்று கூறக் கூடியவை வெளிவரவே செய்கின்றன. அவை விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவைகளே.
அத்தகைய நல்ல திரைப்படங்கள் என்ற வரிசையில் வைக்கக் கூடிய ஒருதரமான திரைப்படமாக வெளிவந்திருப்பது தான் சேரனின் தவமாய் தவமிருந்து படமாகும். ஏற்கனவே சேரனின் ஆட்டோ கிரா.வ் ஒரு தரமான திரைப்படமாக வெற்றி பெற்றது மட்டுமன்றி இந்திய அளவில் விருதுகளையும் பெற்றது. அந்த மகிழ்ச்சியும் துணிவும் சேர்ந்துதான் சேரனை தவமாய் தவமிருந்து படத்தைப் படைக்க வைத்துள்ளது. இப்படத்திற்கு தேர்ந்தெடுத்த கதையும் காட்சிக் களங்களும் பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களும் இவர்கள் இயல்பிலமைந்த நடிப்புத் திறன்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. தந்தை தாயாக நடித்த ராஜ்கிரன் சரணியா நடிப் பின் உச்சங் ளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சேரனின் சமூகத் துன்பங்களைச் சுமக்கும் வழமையான நடிப்பும் எவ்வகையிலும் குறைந்து விடவில்லை. பாலியல் விசாரங்களோ வன்முறை வக்கிரங்களோ கிளு கிளு காட்சிகளோ நம்ப முடியாத கற்பனைக் காட்சிகளோ படத்தில் பெருமளவும் இருக்கவில்லை. எதிர் மறையான படிப்பினைகளைத் தருவதற்காகவே பார்க்கக் கண்கூசும் காட்சிகளைக் காட்டுகிறோம் என்ற பெயரில் சமூகத்தையே சீரழிவுத் திசைக்கு இட்டுச் செல்லும் தமிழ் சினிமாக் குப்பை மேட்டின் நடுவே தவமாய் தவமிருந்து திரைப்படம் ஒரு குண்டு மணியாகவே காணப்படுகின்றது.
கிராமத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ள திரைப்படம் கிராமத்திற்குள் முடங்கி விடாது நகரத்திற்கும் சென்று திரும்புகிறது. கிராமத்தின் அச்சகத் தொழிலாளியான முத்தையாவின் குடும்பத்தைச் சுற்றியே
44
 

- திரைவிமர்சனம்
ாய் தவமிருந்து. ர்க்க வேண்டிய ஒரு திரைப்படம்
-шо60ofl
கதை பின்னப்பட்டுள்ளது. முதலில் அச்சகத் தொழிலாளியாக இருந்து பின் கிராமம் சார்ந்த நகரத்தில் ஒரு சிறிய அச்சுக்கூடத்தை தானே நடாத்துகிறார் முத்தையா. வேறு இருவர் அச்சகத்தில் வேலை பார்க்கிறார்கள். கடுமையான உடல் உழைப்பும் சிக்கனமான குடும்ப வாழ்வும் ஒரு கீழ் நடுத்தர வர்க்க நிலையினை வெளிப்படுத்துகிறது. குறைந்த வருமானம், போதாமை நான்கு பேர் கொண்ட குடுபத்தைப் பாடுபடுத்துகிறது. முத்தையாவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள். முத்தையாவிற்கு கிடைத்த மனைவி நல்லதொரு குடும்பப் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறாள். வழி வழியாக வந்த மரபுகளுடன் ஒரு குடும்பமாக மேல் நோக்கிய பாதையில் உருவெடுக்கும் போது தந்தை தாய் என்போர் யாவற்றையும் விடத் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர்களது கல்வி ஒழுக்கம் உள்ளிட்ட எதிர்காலம் பற்றிய அக்கறையிலுமே தங்களை முற்றாக ஈடுபடுத்திக் கொள்வர் என்பதைப் படம் மையப்படுத்துகிறது.
அத்தகைய குடும்பமாகவே முத்தையாவின் குடும்பம் தமது பிள்ளைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் குறியாகவே இருந்து வருகிறார்கள். இதில் ஒரு தந்தை என்ற நிலையில் இருந்து எப்படி எப்படியெல்லாம் வாழ்க்கையை எதிர் நீச்சலிட்டு பிள்ளைகள் இரண்டு பேரையும் படிக்க வைப்பதில் முத்தையா படும் அன்றாட அனுபவங்ளைப் படம் இயல்பாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறது.
தந்தையின் இரண்டு மகன்கள் மீதான அதீத அக்கறை; அதேவைளை படிக்கும் போது இளமைக் கோளாறினால் ஆட்பட்ட அவர்களின் திசைமாறிய போக்குகள்; அவற்றால் கவலையடையும் தாய், தந்தையர் வட்டிக்கு கடன்பட்டு எப்படியும் கல்வியில் முன்னேற்றி விடவேண்டும் என்ற வேகம் போன்றவற்றை தவமாய் தவமிருந்து படத்தில் தாராளமாகவே தரிசிக்க முடிகிறது.
த00கம்-55

Page 47
மூத்த மகன், திருமணம் செய்தபின் தந்தை தாயோடு கூட்டுக் குடும்பமாய் இருக்க மறுத்து மனைவியோடு சேர்ந்து வெளியேறி தனிக் குடித்தனம் நடாத்துவதும் அதனைத் தாங்கிக் கொள்வதில் தந்தை என்பவர் காட்டும் நிதானமும் கவலையும், மிகுந்த இயல்போடு படத்தில் வெளிப்படுகின்றன. படிப்பிற்குட் பட்ட கடனை திருப்பிக் கொடுக்க கஷ்டப்படும் தந்தை, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டும் தந்தையிடம் கொடுக்கும் மூத்த மகன், அவ்வேளை தந்தை படும் வேதனையை முத்தையா பாத்திரம் மூலம் ராஜ்கிரன் தனது அமைதியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். அதே மூத்த மகன், “தம்பியை பெரிய படிப்பு படிக்க வைத்தீர்கள், எனக்கு என்ன செய்தீர்கள்” என்று தந்தையைக் கேட்ட சந்தர்ப்பத்தில் ஒரு நேர்மையான தந்தை படும் அதிர்ச்சியுடன் கூடிய நெஞ்சத்து துயரத்தினை அக்காட்சி மனதைத் தொடும்படி வெளிப்படுத்தியது. மூத்த மகனிடம் கேள்வியாக வந்த அச் சுடுசொல் எவ்வளவிற்கு தந்தையைப் பாதித்திருந்தது என்பதை தனது மரணப் படுக்கையில் வைத்தியசாலைக் கட்டிலில் கிடந்த படியே தனது இளைய மகனிடம் ‘உனக்கேதும் குறை வைத்தேனா?” என்று முத்தையா கேட்கும் காட்சி பார்வையாளர்களின் கண்களையே குளமாக்கி கொள்ள வைத்துள்ளது.
இளைய மகன், தான் விரும்பிய கல்லூரி சக மாணவியை வீட்டாருக்குத் தெரியாமலே கூட்டிச் சென்று நகரத்தில் வேலையின்றிப் படும் துயரக் காட்சிகள் படிப்பினைகள் என்று கூறக்கூடியவாறு அமைந்துள்ளன. நகரத்தில் குழந்தை பிறந்து மகன் கஷ்டப்படும் செய்தியறிந்து அத் தந்தை தேடி வந்து மகனைச் சந்தித்துக் கொண்ட காட்சியும் “ஏனப்பா இப்படி பண்ணினாய்’என்று தந்தை மிகுந்த உரிமை உருக்கத்தோடு கேட்க, மகன் அவரது மடியில் தலை புதைத்து விம்மியளும் காட்சியும் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தது.
த90கம்-55
 

இளைய மகன், மருமகளுக்கு நகரத்தில் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைத்து ஒரு நடுத்தர வர்க்க வீடு வசதிகள் கிடைக்கின்ற போது தாய் தந்தையரைக் கூட்டி வந்து தம்முடன் வைத்திருக்கின்றனர். இருப்பினும் இத்தகைய இடையிட்டு வந்த நகர வாழ்வை கிராமத்து மனிதர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை முத்தையா குடும்பம் மூலம் படம் காட்டுகின்றது. தாய் இறந்து போக முத்தையா தன்னம் தனியே கிராமத்து வீட்டில் முத்தையா இருந்து வருவதும் வயதாகி நோயால் வைத்தியசாலையில் படுத்திருப்பதும் மூத்தமகன் சற்று தூர நிற்பதும் இளைய மகன் தந்தைக்கு பக்கத்திலிருந்து பணிகள் செய்வதும் பொறுப்புள்ள தந்தை மகன் உறவில் சித்தரிக்கப் போதுமான காட்சிகளாகி நிற்கின்றன.
தந்தையின் பக்கத்திலிருந்து அசைவற்றுக் கிடக்கும் கால்களை வருடிக் கொண்டு வந்த மகனின் கைகள் வலது பாதத்தை பிடித்து விடும் போது நாற்பது வருடங்களுக்கு மேல் காலால் உழக்கி அடிக்கும் பழைய அச்சு இயந்திரத்தின் இரும்புச் சட்டம் அழுத்தி அழுத்தி காய்ந்து மரத்துப் போன அந்தப் பாதத்தை மகன் பிடித்து தன்னுக்குள் அழும் காட்சி கண்ணிரை வரவழைப்பதுடன் அந்த தந்தையின் அயராத உழைப்பின் கடுமையையும் வெளிப்படுத்துகிறது.
இறுதியாக தந்தையின் இறப்பு அக் குடும்பத்தில் ஏற்படுத்தும் ஒரு உழைக்கும் குடும்பத்தின் வரலாற்றுச் சோகத்தை வெளிப்படுத்துகிறது. முத்தையாவின் நினைவாக அவரது அச்சகத்தில் இளைய மகன் காலால் உழக்கி தந்தை அச்சடித்த யந்திரத்திலேயே கல்வெட்டு அடிப்பதும் பேரக் குழந்தைகள் முத்தையாவின் வாழ்க்கைச் சுருக்கத்தைப் படிப்பதும் நிறைவான காட்சிகளாகி படத்தை மேலும் உயர்த்தி வைக்கிறது.
தந்தையின் இறப்பிற்குப் பின் அவர் வாழ்ந்து வந்த வீட்டை விற்றுவிட்டு நகரத்திற்குச் சென்றுவிடும் நோக்கமற்று தமையனுக்கு ஒரு லட்சம் பணம்

Page 48
தருவதாகக் கூறி நாம் எல்லோரும் அப்பாவின் நினைவாக இவ் வீட்டைப் பேணி இருப்போம் எனக் கூறப்படுகிறது. இது கிராமத்தை துறந்து நகரத்தில் மேல்நிலையாக்கத்திற்குப் பலியாகும் கீழ் நடுத்தர வர்க்க கிராமக் குடும்பங்களுக்கு ஒரு படிப்பினைச் செய்தியாகவும் அமைகிறது.
ஒரு கிராமிய நடுத்தரவர்க்க உழைக்கும் குடும்பத்தின் கதையாக அமைந்துள்ள தவமாய் தவமிருந்து திரைப்படம் தந்தை தாய் பிள்ளைகள் மருமக்கள் பேரக்குழந்தைகள் என்ற வட்டத்திற்குள்ளே ஏற்படும் அன்பு பாசம் முரணி பாடுகள் பிரச்சினைகளையே வெளிக்காட்டி நிற்கிறது. ஒரு சாதாரண உழைப்பாளிக் குடும்பம் இந்தியக் கிராமங்களில் வர்க்க நிலையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், துன்பம், வேதனை, முன்னேற முற்படும் முயற்சிகள் படத்தில் நல்ல முறையில் பதிவாகியுள்ளன. அதேவேளை இன்றைய உலக மயமாதலின் மாயமான் வாழ்வுச் சூழலில் ஒரு கிராமக் குடும்பம் சிக்கிக் கொள்ளாதிருப்பதையும் படம் எடுத்துக் காட்டுகிறது. முத்தையா தனது பிள்ளைகளுக்கு வைத்த பெயர்களும் மூத்த மகனின் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஏற்படும் மாமன் - மருமகள் முரண்பாடுகள் கிராம வாழ்வு நவீனத்தின் பெயரால் நாசமாகிப் போகக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. இது இன்றைய அர்த்தமற்ற பெயர் வைப்புக்களுக்கு ஒரு அடியாகவும் விழுகின்றது.
பெரும்பாலான படங்களில் ஒரு குடும்பத்தின் தாய்க்குரிய அதீத பொறுப்பைத் தியாகமாகவும் அர்ப்பணிப்பாகவும் கண்டு வந்த தமிழ்ச் சினிமாச் சூழலில் ஒரு பொறுப்புள்ள தந்தையையும் தனயர்களின் போக்குகளையும் சேரன் பயன்தரும் வகையில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்று கூறலாம். இன்றைய சமூகச் சீரழிவுச் சூழலில் சிக்கியுள்ள இளந்தலைமுறையினருக்கு படிப்பினை காட்டும் படமாகவும் எடுத்துக் கொள்ள முடியும். இப்படத்தில் பிரதான பாத்திரமான தந்தை முத்தையாவாக நடித்துள்ள நடிகர் ராஜ்கிரன் தனது நடிப்பின் முழு முத்திரையையும் பதித்துள்ளார். 35 வயதுக்கார இரண்டு குழந்தைகளின் தந்தையாக படத்தின் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கி 70 வயது முதியவராக இறக்கும் வரை ராஜ்கிரன் அப்பாத்திரத்தை அற்புதமாகவே நடித்துள்ளார். அதுவே அப்படத்தின் வெற்றிக்கு அடிப்படை என்றும் கூறலாம்.
இவற்றுக்கும் மேலாகக் கூறுவதானால் சமூக விமர்சனத்தையோ அல்லது சமூக மீறலையோ இப்படத்தில் நேரடியாகக் காண இயலாது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அவை இலைமறை காயாக இருந்து வருவதைக் காண முடியுமாயினும் சராசரி
46

நூல். ஒலை-29
(மாதாந்தசஞ்சிகை)
பதிப்பு: கொழும்பு தமிழ்ச் சங்கம்
விலை: ரூபா 30/-
பார்வையாளர்களால் அதனைக் கண்டறிய முடியாது. மூன்று மணி இருபத்திரண்டு நிமிட நேரப் படமாகவே தவமாய் தவமிருந்து படம் அமைந்துள்ளது. நேரம் நீடித்து விட்டதே என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட ஒரு கேள்விக்கு “ஒரு நாள் பூராவும் இருந்து கிரிக்கெட் பார்க்கும் சூழலில் மூன்று மணி நேரத்தை செலவிடுவது அப்படி ஒன்றும் பெரிய விடயமில்லை” என்று இயக்குனர் நடிகன் சேரன் கூறிய பதிலை பத்திரிகையில் பார்க்க முடிந்தது.
இன்றைய ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பிற்குள் எந்தவொரு கீழ் நடுத்தர வர்க்க குடும்பமும் பிரச்சினைகள் முரண்டுகள் துன்ப அலைகள் இன்றி வாழ முடியாது என்பதை தவமாய் தவமிருந்து துல்லியமாகப் புரிய வைத்துள்ளது. ஆனால் அதற்குரிய தீர்வோ மாற்று வழிகளோ படத்தில் சிறு செய்தியாகக் கூட வாசிக்கப்படவில்லை. அதனைச் சேரன் போன்ற ஒருவரிடரிருந்து எதிர்பார்க்கவும் முடியாது. இருப்பினும் அத் திரைப்படம் கூறும் செய்திகள் விரித்து நோக்கி விவாதிக் கப்படுவது இன்றைய சூழலில் தேவையானதாகும். ஆரோக்கியமான குடும்ப வாழ்வை ஒழுங்கமைக்க விரும்புவோர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று துணிந்து கூறலாம்.
த00கம்-55

Page 49
L
"சர்வதேச ஏகபோகங்கள்" எனவும் எதை லெனினி குறிப்பிட்டாரோ அவை தான் இந்த அரசு சாரா நிறுவனங்கள் ஆகும் . காலனிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காலனிய மக்களின் எதிர்ப்புக்கு ஏகாதிபத்தியங்கள் பதிலைத் தேடிக் கொண்டிருந்த நேரம் அவற்றுக்கும் பரிகாரமாக அவர்களாலி வெற்றிகரமாக முன்வைக்கப்பட்ட நிறுவனங்கள் தான் இவை
"தாங்கள் என்னென்ன காரியங்களை எல்லாம் செய்வதாக வெளியே சொல்லிக் கொள்கிறார்களோ, என்னென்ன காரி யங்களை செய்வதாக சொல்லிக் கொண்டு நாட்டுக்குள் வந்தார்களோ அந்தந்த விடயங்களை மட்டுமே செய்யவேண்டும். இதைத் தவிர நாட்டின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களில் செய்வதாக கண்டறியப் பட்டால் கடுமையான தண்ட னைகளை அனுபவிப்பதுடன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்"
இது ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் அரசு சாரா நிறுவனங்களுக்கு அண்மையில் விடுத்த எச்சரிக்கை, புட்டின் இவற்றுக்கு எச்சரிக்கையிடுவது இது முதல் முறையல்ல. 2004 மேயில் தனது நாட்டு மக்களுக்கு கூறுகையில் இதே மாதிரியான எச்சரிக்கையை புட்டின் விடுத்திருந்தார். அதில் வெவ்வேறு தேவைகளுக்காக மக்கள் நலன் என்ற பெயரில் பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை வெளிநாட்டுக் கைக்கூலிகளாக செயற்பட்டுவந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் புேழுக்கள் தங்களுக்கும் உரிய கடமையை மட்டும் செய்யவேண்டும் எனக் கூறியிருந்தார். புட்டினின்
என்ற அமைப்பின் மொஸ்கோ இயக்குனர் அன்னா நெய்சஸ்ட் (AnnaNeistet) "ரஷ்ய அரசாங்கம் மிகவும் கவலைக்குரிய போக்கை கடைப்பிடிக்கிறது” என்றார்.
த00கம்-55

ஏகலைவா
ஒரு வரலாற்றுச் சுருக்கம்
19ம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியிலேயே அரசு சாரா நிறுவனங்கள் என அழைக்கப்பட்ட அமைப்புக்கள் காணப்பட்டிருக்கின்றன. தொடக்கத்தில் தன்னார்வ உதவிகள் மறுவாழ்வுச் செயற்பாடுகள் மனித நேயப் பணிகள் என தனது பங்களிப்பை ஆற்றத் தொடங்கின. அவை சில தனி மனிதரின் முயற்சியாலும், சில பொது நேயச் செயற்பாட்டாளர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புக்களாய் இருந்தன. சில காலம் செல்ல மக்கள் புரட்சியை ஏற்படுத்தாமல் தடைசெய்யக்கூடிய ஒரு உன்னத அமைப்பாக இவற்றை ஏகாதிபத்தியங்கள் கண்டன. நடைமுறையில் இருந்த சில அமைப்புகளையும் தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்ததுமட்டுமல்லாமல் புதிய பல குழுக்களையும், நிறுவனங்களையும் உருவாக்கின.
இதனை வலுப்படுத்தும் நோக்குடன் மக்கள் மத்தியிலான பொதுநலக் கொள்கையின் விளைவே அரச சாரா நிறுவனங்கள் என்ற பொய்யான பிரச்சாரம் உலகெங்கும் செய்யப்பட்டன. 19ம் நுாற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மறைமுகமான கட்டுப்பாட்டையும், சுரண்டலையும் தொடரும்வகையில் காலனிய ஆட்சிகளால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு, இயக்கப்பட்ட நிறுவனங்கள் தான் இவை.
"ஏகாதிபத்தியத்தின் சிறப்பான அம்சம் கொண்டவை" எனவும், "சர்வதேச ஏகபோகங்கள்" எனவும் எதை லெனின் குறிப்பிட்டாரோ அவை தான் இந்த அரசு சாரா நிறுவனங்கள் ஆகும். காலனிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக காலனிய மக்களின் எதிர்ப்புக்கு ஏகாதிபத்தியங்கள் பதிலைத் தேடிக்கொண்டிருந்த நேரம் அவற்றுக்குப் பரிகாரமாக அவர்களால் வெற்றிகரமாக முன்வைக்கப்பட்ட நிறுவனங்கள் தான் இவை. இதன்மூலம் மக்களை மனிதாபிமான உதவி, உதவித்தொகை, மருத்துவ வசதிகள், உட்கட்டமைப்பு போன்றவெல்லாம் இவ் அமைப்புக்களால் வழங்கப்படுவதன்மூலம் மக்களின் போராட்ட உணர்வுக்கு தடைகள் போடப்பட்டன. மக்கள் உரிமைகளை மறந்து கிடைப்பதுடன் மகிழ்வாய் வாழ்வது பற்றி இவை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல், எல்லாவகையான சுரண்டலுக்கும் வெற்றிகரமாக இலகுவான பாதையை அமைத்தும் கொடுத்தன.
47

Page 50
ஏகாதிபத்தியங்களும், கிறிஸ்தவ திருச்சபையும் அரச சாரா நிறுவனங்களை எப்படி கம்யூனிசத்துக்கு எதிராகப் பயன்படுத்துவது என்று சிந்தித்துக கொண்டிருக்கையில் மாபெரும் அக்டோபர் புரட்சி நடந்தது. உடனே உலக திருச்சபை கவுன்சில் உருவாக்கப்பட்டு புதிய முகமூடியுடன் மிகப்பெரிய நிதி உதவி அமைப்பாக அதுமாறி உலகெங்கும் கம்யூனிசம் பரவுவதை தடுக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டது.
internationales
2ம் உலகப் போரின் பின்னர் புதிய ஏகாதிபத்திய சுரண்டல் வடிவமான நவ காலனித்துவம் உருப்பெற்றது. இதற்குப் புதிதான வேறுபட்ட திட்டங்கள் செயல்முறைகள் தேவைப்பட்டன. இதற்குப் பெரிய உதவியாய் இவற்றுக்கு அமைந்தது ஐக்கிய நாடுகள் சபை, ஏகாதிபத்தியங்கள் ஐ.நாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு மிகப்பெரிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை உருவாக்கத் தொடங்கின. அவற்றில் முக்கியமானவை சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி இவை இரண்டின் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை தாங்களே தீர்மானக்கலாம் என முடிவு செய்தன. இக்கட்டத்தில் மக்களை எழுச்சியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் எகாதிபத்தியத்துக்கு இருந்தது. இதனால் g60p6 UNICEF, UNHCR, UNESCO (SuTeip sepals அமைப்புகளையும் ஐ.நா வினி பெயராலி உருவாக்கிக்கொண்டன. இதில் கவனிக்க வேண்டிய விடயமென்னவெனில் ஐ.நாவின் நிறுவனங்கள் என்றபோது உலக நாடுகளில் அவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரமும், சிறப்புரிமைகளும், urg Lipm sityLissbib (Privilleges and Immunities) கிடைக்கும். இதன்மூலம் ஒரு நாட்டில் விரும்பிய வாறெல்லாம் அவர்கள் செயற்பட முழு சுதந்திரமும் உரிமையும் கிடைக்கிறது. இன்றும் 3ம் உலகப்போர் ஏன் மூளவில்லை என்பதற்கான காரணங்களை ஆராய்கின்றபோது மக்களின் அடிப்படைத் தேவைகளை ஐ.நாவின் துணை நிறுவனங்கள் பாரியளவு நிறைவேற்றியதால் மக்கள் போராட்டம் எழவில்லை எனவும், இதனால் 3ஆம் உலகப் போர் ஏற்படவில்லை எனவும் சொல்லப்படுவதுண்டு. இதிலிருந்து இரண்டு விடயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் அல்லது மக்கள் விழிப்புணர்வு ஏற்படாமல் இருப்பதை ஓரளவு
48
 

வெற்றிகரமாக இந்த நிறுவனங்கள் செய்திருக்கின்றன. இரண்டாவது இவர்கள் சொல்வதற்கும் மக்கள் போராட்டத்திற்கும் 3ம்உலகப் போருக்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. இன்றைய நிலையில் ஏதோ ஒரு வகையில், ஏகாதிபத்தியங்களின் யுத்தமாகவே 3ஆம் உலக யுத்தம் அமைய முடியும்.
- 2ஆம் உலகப்போரின் முடிவில் உருவான போர்ட் sepá al L6p6T (Fort Foundation) Gasurti (Care) (36ts (6 66.96T (WorldVision) siu Guibo) soils வரவு செலவுத் திட்டம் பல இலட்சம் மில்லியன் டொலர்கள். இவ்வளவு பணத்தை இவை ஏன் செலவு செய்கின்றன? மனித நேய அடிப்படையிலா? மானிட மீட்சிக்கா?
"போர்ட்டின் உதவியானது எங்களுக்கு அவை செலவழிக்கும் பல இலட்சம் டொலர்களை விட மிகவும் பெறுமதியானவை” என்கிறது அமெரிக்க அரச துறை.
1960களில் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர ஜெனிவாவை தலைமையகமாகக் கொண்டு சர்வதேச தன்னார்வக் குழுக்களின் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. ஒருநிலைப்படுத்தப்பட்ட ஒரு வலைப்பின்னலை திட்டமிட்டுச் செயற்படுத்த இது ஏகாதிபத்தியங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
இந்த அரசு சாரா நிறுவனங்கள் வேறு பல வடிவங்களில் மக்கள் போராட்டங்கள் வெற்றிய டையாமல் பார்த்துக்கொண்டன. அம்முறைகளில் முக்கியமானது மக்கள் போராட்டங்களை தொழிலாளர் இயக்கங்களால் முன்னெடுக்க அனுமதியாமல் இந்நிறுவனங்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன. இதன்மூலம் மக்கள் எழுச்சிகள் திசைமாறின, சிதைந்து போயின, பல சமரசங்களுடன் முடிவுக்கு வந்தன. மக்களின் பழைய வாழ்க்கை முறையே தொடர்ந்தது. நிறுவனங்கள் மக்களை தங்களின் கீழ் ஒன்றிணையச் செய்ய மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக, ஆபிரிக்கா இலத்தீன் அமெரிக்கா ஆசியப் பகுதிகளிலிருந்து வந்து இட்டு நிரப்பப்பட்டு வேறு வகைகளில் மக்களுக்கு பரிமாறப்பட்டது. போலோ பிரேரியின் "சுரண்டப்படுவோருக்கான கல்வி சூமேக்கரின் "சிறியதே அழகு" பவுல் அவின்ஸ்கியின் "அதிகாரத்தின் தத்துவம்", கிட் டியர்சியின் “விடுதலை இறையியல்" ஆபிரிக்காவில் “கறுப்பின விழிப்புணர்ச்சி இயக்கம்" ஆசியாவில் "காந்தியம்" என்பன இவற்றுள் சில.
த00கம்-55

Page 51
இவ்வாறு சிந்தனையாளர்களை துணைக்கு இழுத்துக்கொண்ட இந்த நிறுவனங்களில் சில பல சமயங்களிலி சேகுவேராவையும் துணைக்கு வைத்துக்கொண்டன. குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நிறுவனங்கள் இதை பாரிய பிரச்சாரமாகவே மேற்கொண்டன. இதனால் இவற்றுக்கு இடதுசாரி முகம் கூடக் கிடைத்தது. பலர் இதனாலி குழம்பிப்போனர்கள். இதனை சாதகமாக்கி பல அறிஞர்களையும், திறமைசாலிகளையும் தம் பக்கம் இழுத்து "மக்களை அணி திரட்டல்" "ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்வு" என்ற வாய் ஜாலங்கள் மூலம் மக்களைக் கவர்ந்து மக்கள் புரட்சிகள் பலவற்றை திசைமாற்றி தோல்வியடைய வைத்திருக்கின்றன இவ்அமைப்புக்கள். அக் காலப்பகுதியில் குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் குழப்பத்தினால் இதனுள் இணைந்து அழிந்து போனவர்கள் ஏராளம்.
இவ்வாறான பலவகைப்பட்ட முயற்சிகளாலும், செயற்பாடுகளாலும் மக்கள் போராட்டங்களை திசைமாற்றுவதிலும் தோல்வியடையச் செய்வதிலும் வெற்றிபெற்றிருந்தபோது மார்க்சியம் என்ற தெளிவான தத்துவம் பல இலட்சக்கணக்கானோரை இந்த அரச சார்பற்ற நிறுவன நோயிலிருந்து தற்காத்து வைத்திருந்தது. இதற்கு மாற்றுவழியாக "மார்க் சியத்தின் போதாமைகளுக்கு தீர்வு", "மார்க் சியத்திலிருந்து விடுதலை" போன்ற கோஷங்களுடன் நவீனத்துவம் அதன் தொடர்ச்சியாக பின் நவீனத்துவம் என்ற கருத்தோட்டங்கள் உருவாகி..உருவாக்கப்பட்டு ஏகாதிபத்தியங்களால் பரப்பப்பட்டன.
“பகுத்தறிவே பயங்கரம்" "தருக்கமே வன்முறை" "மொழியே ஆயுதம்" "அறிவியலே ஆபத்து" "அறிவு அதிகாரத்தையே கட்டமைக்கும்" "ஒழுங்கமைவு கருத்தொருமிப்பு என்பது அடிமைத் தளம்" போன்ற கருத்துக்களை முன்நிலைப்படுத்திய பின்நவீனத்துவம், “கோட்பாடு என்ற ஒன்றே இல்லை" என்றது. கவர்ச்சிகரமான சொல்லாடல்களுடன் வந்த பின்நவீனத்தை பலர் பின்பற்றத் தொடங்கினர். உண்மையில் படுகுழியில் விழுந்தனர் என்றே சொல்லவேண்டும். விழுந்தவர் இன்றுவரை மீளவேயில்லை. கோட்பாடு என்ற ஒன்றே இல்லை என்று சொல்கின்ற பின் நவீனத்துவமே ஒரு கோட்பாடுதான். 1970களிலும் 1980 களிலும் தொடக்கத்தில் பின் நவீனத்துவம் படுபயங்கரமான தோல்விகளை சந்தித்தது. பல ஐரோப்பிய நாடுகளில் குடும்பக் கட்டமைப்பே சிதைந்து போனது. ஒரு கட்டத்தில் ஐரோப்பாவில் சனத்தொகை குறைந்த நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் மாறியது. அம்மக்கள் குடும்பமாக வாழத் தேவையில்லை என்ற பின்நவீனத்துவ கோட்பாடுகளைப் பின்பற்றி "வாழ்ந்துவிட்டுப் போவதே" வாழ்க்கையானது. பலர் எயிட்ஸ் முதலான பாலியல் நோய்களுக்கு உள்ளானர்கள். குழந்தை பிறப்பு வீதம் மிகவும் குறைந்தது. அது தொடர்ந்தால் பிரான்ஸ் என்றவொரு நாடே இருக்காது என்று புள்ளிவிபரங்கள் கூறின. தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் பிரான்ஸ் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட “பிரான்சோ மித்ரோன்"
த90கம்-55

கவிஞர் நாவண்ணன் அவர்களுக்கு அஞ்சலி
தமிழ்த் தேசிய, சமூக சீர்திருத்தக்கருத்துக்கள் பொதிந்த ஆக்கங்கள் எழுதியவர் கவிஞர் நாவண்ணன் அவர்கள். கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள், விவரணக் கட்டுரைகள் என இவரது பங்களிப்புகள் விரிந்துள்ளன. ஒலிபரப்பு, பத்திரிகைத்துறை ஈடுபாடு கொண்ட இவர் நல்ல அரங்கக் கவிஞராகதிகழ்ந்தவர்.
நாவண்ணன் அவர்களுக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையும் தாயகம் சஞ்சிகையும் தமது அஞ்சலியை செலுத்துகிறது
குடும்பக் கட்டமைப்பைச் சீரமைப்பதையே தனது முதலாவதும், பிரதானதுமான கொள்கையாக வைத்தார். தேர்தலில் வெற்றிபெற்றதும் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு குறிப்பிட்ட தொகை பணம் வழங்கும் என்றும், குழந்தைகளின் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் சட்டமாக்கியே பிரான்ஸை பழைய நிலைக்குக் கொண்டுவந்தார். இவ்வாறு ஐரோப்பாவெங்கும் மார்க்சியத்துக்கு தீர்வாக ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்பட்ட பின்நவீனத்துவம் பலத்த தோல்வியை சந்தித்தது. இப்போது இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த நிறுவனங்களின் உதவியுடன் பின்நவீனத்தைப் பரப்பும் முயற்சிகள் பரவலாக நடைபெறுகின்றன என்பதும் கவனிக்கப்படவேண்டும்.
இன்றைய பொழுதுகளில்
ஜனநாயகம், மனித உரிமைகள், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என்ற புதிய கோணங்களுடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் வலம் வரத் தொடங்கியிருந்தன. இவர்களது கல்வியியல் மற்றும் விழிப்பூட்டல் போன்ற செயற்பாடுகள் எல்லாம் மேலைத்தேய பாணியினை அணைத்து நிற்கின்றன. இதன்மூலம் மேலைத்தேயமே சிறந்தது, அவர்களை நம்பியே வாழமுடியும் போன்றவற்றை மக்களிடம் நுழைக்கின்றார்கள். மேலைத்தேய மோகங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.
இதனால் ஒவ்வொருவரும் தனது அடையாளத்தை
49

Page 52
இழக்க ஆரம்பிக்கின்றார்கள். பண்பாட்டு ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் ஒவ்வொருவரும் சுயமிழந்து போகிறார்கள். ஒரு மக்கள் புரட்சிக்கான பலத்த அடி இதிலேயே விழுந்துவிடுகிறது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் தொழில்முறைப் பொருளியல் (Professional Economics) 6T6ip Guu(5L6i ஆலோசகர்களாக உள்நுழைந்து விடுகின்றார்கள். இவர்கள் "செலவு மீட்புத் திட்டங்கள்" "சுயநிதி உதவித் திட்டங்கள்" எனவெல்லாம் சொல்லிச் சொல்லி உலகமய மாக்கலையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சுரணி டல் எவ்வித தடையுமின்றி தொடர வழிவகுக்கின்றார்கள்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டவுடன் விமானம் விமானமாக உதவிகளும், புதிய புதிய அமைப்புக்களும் வந்திறங்கின உதவி, மனிதாபிமானம் என்ற பெயரோடு. கதரீனா அடித்துப்போட்ட மக்கள் கிழமைக்கணக்கில் உணவுக்கு அவதிப்பட்டபோது எங்கே போயின இந்த அரசசாரா நிறுவனங்கள்? உலகெங்கும் படியளக்கும் அமெரிக்கக் கடவுள் ஏன் தன் மக்களுக்கு படி அளக்கவில்லை உண்மைதான் என்ன?
சில பதிவுகள்
“உலகப் பட்டினியை போக்கிக்கொண்டிக்கிறோம்" மக்களின் சுகாதார வாழ்வுக்கு பெருமளவு வழி செய்துவிட்டோம்", "மக்களின் நலமான வாழ்வை சாத்திமாக்கியதே அரச சாரா நிறுவனங்கள் தான்" இவை இந்த அமைப்புக்கள் தங்கள் வெற்றிகளாக 1980களில் போட்ட கோஷங்களும் மேலைத்தேய பத்திரிகைத் தலைப்புகளும். 70களில் இறுதியிலும் 80களில் தொடக்கத்திலும் இலத்தின் அமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் ஏராளமான அரச சார்பற்ற நிறுவனங்கள் மும்முரமாக இயங்கி வந்தன ஆனால்0
1980களில் பொலிவியாவில் 20,000 பேருக்கு 1 டாக்டர். பிறக்கும் குழந்தைகளில் 10 இல் 4 பேர் 5வது வயதைக்கூட தாண்டமாட்டார்கள். 10இல் 6 பேர் வறுமையில் வாடுகின்றனர். அதில் 4 பேர் பரம ஏழைகள் பிரேசிலில் உணவின்றி பழைய காகிதங்களை கூழாக்கி, கேக்காக்கி உண்கின்றன குழந்தைகள்.
பெரு, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் மரணத்தின் வாயிலில் நின்றன. ஆபிரிக்க நாடுகளான சயர்,
50
 

தன்சானியா, கென்யா, மொரக்கோ போன்றன பெரும் நெருக்கடிக்குள் வாழ்ந்தன. இவை எல்லா வற்றையும்விட சோமாலியா, எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை தடுக்கவோ குறைக்கவோ எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனங்களாலும் முடியவில்லை.
இந்தக் கொடுமையை ஊடகங்கள் தொலைக்காட்சியில் தினம் தினம் காட்டின. பத்திரிகைகள் அரசியல், பொருளாதாரம், சமூகவியல் என எல்லாக் கோணங்களிலும் ஆராய்ச்சி செய்தன. இதனைக்கண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் சும்மாயிருக்கவில்லை. தங்கள் பங்குக்கு பல அறிக்கைகளையும், ஆய்வுகளையும் பக்கம் பக்கமாக அடித்து வெளியிட்டன. இதை உண்டா அவர்கள் பிழைப்பது? அப்படி என்னதான் நடக்கிறது?
1988 ஜூனில் மேற்கு ஜேர்மனியின் கான்ராட் அடினார் அறக்கட்டளையின் நிதி உதவியை பெற்று நிகரகுவாவில் இயங்கிவரும் "சமூக மற்றும் பொருளாதார ஆய்வுக்கழகம்" சிஐஏயின் வலைப்பின்னலை இயக்கி வந்தது தெரியவந்தது. இந்த ஆய்வுக் கழகத்தை நடாத்திய ஜோஸ் அலெக்கியா ஊஐயு யின் கட்டளைப்படி 1985 முதல் சாண்டினிஸ்டா அரசைப்பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளார் எனத் தெரியவந்துள்ளதாக நிகராகுவா அரசு தெரிவித்தது.
1969இல் ரிச்சர்ட் கிப்லெர் என்பவன் கியூபாவில் சதி, சீர்குலைவு நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்றான். இவன் பிரைட்ரிச் எவாட் அறக்கட்டளையுடன் நெருங்கிய தொடர்புடையவன். விசாரணைகளின்போது இவ் அறக்கட்டளை ஜேர்மன் மைய உளவு நிறுவனத்துக்காக கியூபா அரசின் அனைத்து விபரங்களையும் பெறப் பயன்படுத்தப்பட்டது என தெரிய வந்தது.
அநேகமாக மூன்றாமுலக நாடுகள் பரிசோதனைக்கூடங்களே. புதியவகை மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்போது அவை இந்த அமைப்புகளின் ஊடாக மூன்றாவது உலக நாடுகளின் மக்களுக்கு "இலவசம்" என்ற பெயருடன் வழங்கப்படுகின்றன. இதன் விளைவுகள் குறித்த ஆய்வறிக்கை சேரவேண்டிய இடத்திற்குப் பத்திரமாக அவர்களால் சேர்க்கப்படுகின்றது.
புதுவகை விதைகள் என்று கொண்டுவந்து பல அரச சார்பற்ற நிறுவனங்கள் கிராமப் புற மக்களுக்கு வழங்கின. அது மண் வளத்தைக் கெடுத்தது. உரங்கள் பின்னர் விநியோகிக்கப்பட்டன. இயற்கையான மண் பாதிக்கப்பட்டது. பின்னர் விவசாயத்திற்கு புதிய விதைகள், புதிய உரங்கள் சுழற்சிமுறையில் விற்பனை தொடங்கியது. தங்கி வாழ்தல் கட்டாயமாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் விவசாய நிலங்கள் பாழ் நிலங்களாக மாறின. மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்களைத் தேடின. அவர்களையோ காண முடியவில்லை. விவசாயம் படுத்தது. இனியென்ன இறக்குமதிதான். வருகின்றது வெளிநாட்டு அரிசி பாஸ்மதி புகழ் வாழ்க!
த00கம்-55

Page 53
鼩拿影 புத்திஜீவிகளின் பங்கு கோட்பாட்டு அடிப்படையில் மனித நேயமுடன் இருக்கின்ற அமைப்பில் பல புத்திஜீவிகள் சேர்ந்து கொள்கிறார்கள். புகழ்பெற்ற தத்துவவாதிகள், கவிஞர்கள், செயல்வீரர் என திறமையான பலரை இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்வாங்கி வைத்துக்கொள்கின்றன. இதனால் இரண்டு விளைவுகள் செயற்படுத்தப்படுகின்றன. தங்களுள் வைத்திருப்பதன் மூலம் அவர்களைக் கட்டுப்படுத்தவும், தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்பது மற்றையது அவர்களின் சுதந்திரமான செயற்பாடு தடைப்படுவதால் அவர்களால் உண்மையாக சமூகத்திற்கு விளைய வேண்டிய பலன்கள் தடுக்கப்படுகின்றன. இவை “கொள்கைப் பிடிப்புள்ள அறிவு ஜீவிகளையும்", "ஜனநாயக உயிரிகளையும்" (அவர்களது மொழியில்) உருவாக்கி விடுகிறது. இதனால் நவகாலனிய நாடுகளில் சீரழிவு நிகழ்ச்சித்திட்டம் சரிவரச் செயற்படுத்தப்படுகின்றது. போதாக்குறைக்கு இந்த புத்திஜீவிகள் அரசு சாரா நிறுவனங்களின் தத்துவவாதிகளாகி இந்த நிறுவனங்களை புதிய சமூகப் புரட்சியின் முன்னோடிகளாகவும், இது பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு எதிராக நிகழ்ந்துள்ள புரட்சிகரமான மாற்றம் என்றும் செல்லிக் கொள்கின்றார்கள்.
"வரலாற்றில் எதிர்ப்பிலக்கியங்கள் பற்றிய இரண்டு எதிரெதிரான பார்வைகள் புரட்சிகர இலக்கிய நோக்கின் பெயரிலி பரிந ’துரைக்கப்படுகின்றன. ஒரு பார்வை சமகால சமூக நிலைமைகளையும், அரசியலையும், போராட்டத் தேவைகளையும் மனதில் கொண்டு தனது குறைந்தபட்ச தகுதிகளை நிறைவுசெய்யாத அனைத்தையும் பிற் போக்கானவை என்று நிராகரிப்பது. மற்றது ஒரு காலத்தில் புரட்சிகரமாக தோன்றிய வற்றை இன்றைய சூழலிலும் செல்லுபடியான புரட்சிகரத் தன்மையுடையனவாகக் கருதி அவற்றை அப்படியே எடுத்தாளுமாறு பரிந ‘துரைக்கின்றது, இந்த இரண்டுமே வரலாற்றைத் தவற விட்ட சமூகப் பார்வைகளாகும்"
சி.சிவசேகரம் . புட்டின் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கும் இக்காலகட்டத்தில் உலக நாடுகளில் நடைபெற்ற சில
ശ്ര9ഠകb-55
 

ජූනියෝතෙතt’(ර්) {
அழ.பகீரதன்
தெருவில் நீள மருளும் முகங்கள் கருவில் உணர்வை வெளியில் கொட்டா நிலைமை நிசமாய். கனவு மெய்படும் என எதிர்வு கூறலில் கருமம் தொடரும். இனம் தெரியா வகையில் இனம் புரியாக் கலைகள் உருளும் தலைகள் அருளும் மொழிகள் அனுபவம் புதிதிலாப் பனுவல் தினமும் எனிலும் யாராய் இலையெனிலும் மனிதன் யானென குனித்த புருவம் நிமிர்த்தி நினைப்பு எனக்குள் இனம் குலம் கடந்த எண்ணப்பெருக்கில் மக்கள் எழுவர் 6T6ar 6T6ar
உள்ளுணர்வு கூவும்.
நிகழ்வுகளை இங்கே பார்ப்பது மிகவும் தேவைப்பாடானது. இந்த நிறுவனங்களின் வேறும் பல முகங்களை தெளிவாக தெரிய இவை உதவியாக இருக்கும். -
2003 இலி ஜோர்ஜியாவிலி எட்வேட் செவார்ட்நாட்சேயின் (Edward Shevardnadza) ஆட்சி கவிழ்க்கப்பட்டு அமெரிக்க உதவியுடனான பொம்மை அரசாங்கம் ஆட்சியில் அமர்த்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜோர்ஜிய அரசு சாரா நிறுவனங்கள் "ஆங்கிலம் பேசுகின்ற இளைய அறிவுஜீவிகள் மேற்கத்திய தாகத்தின் விளைவால் ஏற்படுத்திய இரத்தம் சிந்தாப் புரட்சி" என்றன. இதன் பின்புலத்தில் மிகப்பெரிய
51

Page 54
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு நிறைந்திருக்கின்றது. இதனை ருளு யுஜணு என்ற அமைப்பே முன்நின்று திட்டமிட்டு நடத்தியிருக்கிறது. ஏனைய எல்லா அமைப்புகளுக்கும் "மக்கள் மாபெரும் மக்களாட்சியை விரும்புகின்றனர்" என அழைக்கப்படும் (siGLDíläbast6lsi) (3gmig (85TJ6vü (George Soros) என்ற கோடீஸ்வரர் பணஉதவி வழங்கியிருக்கின்றார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஊஐயு இல் திட்டமிட்ட pipiLDés6ssi (Color Revolution) Qg5TlisDITs அமைந்தது ஜோர்ஜியா, "நாங்கள் ஜனநாயக சீர்திருத்தங்களை ஜோர்ஜியாவில் எதிர்பார்க்கிறோம்." என 2002இல் வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஜோர்ஜியாவில் முளைத்தன. உருவாக்கப்பட்ட அமைப்புகள் சுதந்திரத்தை பொதுமைப்படுத்தல், வேலைவாயப் ப்பை அதிகரித்தலி போன்ற வேண்டுகோள்களை முன் வைத்தன. பாரிய மக்கள் கூட்டங்களை ஒழுங்குசெய்து அதில் விலைக்கு வாங்கப்பட்ட புகழ்பெற்ற ஜோர்ஜிய பிரமுகர்களை பேசவைத்து ஆட்சியை கவிழ்த்தார்கள். இதை இவர்கள் "G6116)06." Jida" (Velvet Revoluation) 6T6irp அழைக்கின்றார்கள். ருளு யுஜனுஉடன் "விடுதலைக் கழகம்", "மக்கள் புரட்சிகர முன்னணி" என்பனவும் எதிர்க் கட்சிக்குத் துணை போயின. சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் உதவியுடன் தேர்தல் குழறுபடிகள் இவ் அமைப்புக்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. தேர்தல் குழறுபடிகள் பற்றிக் குரல்கள் எழுந்தபோது சோரஸின் கைகளில் இருந்த "ஜோர்சிய மக்கள் அறக்கட்டளை" தனது நட்பு ஊடகங்களின் மூலம் தேர்தல்கள் மிகச் சரியாக நடத்தப்பட்டதாக காட்டியது. இதையே உலக ஊடகங்களும் ஒலிபரப்பின. அமெரிக்க தூதரகதத்தின் உதவியுடன் USAID இன் வழி காட்டலிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கச்சிதமாக சதியை நிறைவேற்றி முடிந்தன.
இதே போலவே நிறப்புரட்சியின் தொடர்ச்சியாக பெலருஸ் மற்றும் உக்ரேயினிலும் ஆட்சிக் கவிழ்ப்புக்கள் அரச சார்பற்ற நிறுவனங்களால் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக உக்ரேனில் தேர்தல்கள் முடிந்ததும் தேர்தலில் குழறுபடிகள் நடந்துள்ளன எனச் சொல்லி மக்கள் போராட்டங்களில் இறங்கினர். பாராளுமன்றைச் சூழ்ந்துகொண்டு தேர்தல்களை ரத்துச் செய்யக்கோரி வேண்டினர். தொடர்ச்சியாகப் பல நாட்கள் மக்கள் இரவு பகலாக அங்கேயே இருந்தனர். அவர்களுக்கு மூன்றுவேளையும் உயர்தர உணவு உடை வசதிகளுடன், பணமும் வேறு தேவைகளும் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டே இருந்தது. இதைச் செய்தவர்கள் "போரா" என்ற இளைஞர் குழு. இவர்கள் பல அமெரிக்க அரச சார்ந்த நிறுவனங்களின் உறுப்பினர்கள். இவர்களால் தொடர்ச்சியாக மக்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்க முடிந்தது. இறுதியில் அமெரிக்கா விரும்பியவரே மீள் தேர்தலில் பதவிக்கு வந்தார். "ஒரேஞ்சுப் புரட்சி" (Orange Revolution) G6) isfasjLDITE BL-553).
2005 டிசெம்பரில் வெனிசுவேவா தேர்தலிலும் இந்நிறுவனங்கள் இதையே கையாண்டனர். முதலில்
52

எழுத்தாளர் சோமகாந்தன் அவர்களுக்கு அஞ்சலி
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரான சோமகாந்தன் (ஈழத்துசோமு) ஆகுதி, விடிவெள்ளி பூத்தது ஆகிய தொகுதியால் ஈழத்து இலக்கிய உலகில் தடம் பதித்தவர். கட்டு ரைகள், சி , நாவல், பயணக் கட்டுரைகள் வானொலி உரைகள் என இவரது பங்களிப்புகள் விரிந்துள்ளன. 55வருடத்திற்கும் மேலாக ஈழத்து இலக்கிய உலகிற்கு பங்களிப்பு செய்து மறைந்த சோமகாந்தன் அவர்களுக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையும் தாயகம் சஞ்சிகையும் தமது அஞ்சலியை செலுத்துகிறது
இதனடிப்படையில் அப்போதைய ஜனாதிபதி Hugo Chavez மீண்டும் நிச்சயம் வெற்றிபெறுவார் என தெரிந்து கொண்டனர். உடனேயே இங்கே ஜனநாயகம் இல்லை. அராஜக ஆட்சி நடக்கிறது. தேர்தல்களை மக்கள் புறக்கணியுங்கள் என எதிர்க்கட்சிகளையும் கூட்டுச் சேர்ந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் கூக்குரலிடத் தொடங்கின. தேர்தல்கள் நடைபெற்றபொழுது மக்கள் வாக்களிக்கப் போகவில்லை. 10 வீதத்துக்கு குறைவானவர்களே வாக்களித்துள்ளதாக அமெரிக்கா ஊடகங்கள் தெரிவித்தன. ஏனைய ஊடகங்கள் மக்கள் வரிசை வரிசையாக வாக்களிக்க நிற்பதை ஒளிபரப்பின. இதனால் அமெரிக்காவின் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களில் முயற்சி தோல்வியடைந்தது.
இதேபோன்ற தோல்விகளை வெளிநாடுகளில் மட்டுமல்ல. அண்மையில் பொலிவியாவிலும், சிலியிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அடைந்திருக்கின்றன. அனைத்துக்கும் பக்க பலமாக இருந்து பல மில்லியன் டொலர்களை CIA செலவழிக்கின்றது.
மெக்சிக்கோவில் சுற்றுப்புற ஆர்வலர்களைக் GasT6Sri Loresencia Ciudadaha Meuicana 676 gp அமைப்பு ஆண்டொன்று 455, 000 அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசிடமிருந்து பெறுகிறது
த00கம்-55

Page 55
6passiggs. . .
ஒடி உலவும் நெட்டு உயர் மகிழ் விழந்த பனை மரத்த ஓர் ஒற்றைப் பொழுதில் என்னருகே? நுனி விரலும் உகிர் விழியும் கறுப்பினத்தன் வெடித்துச் சிதறி குருதி பனிக்கும் இவன் இவன் காலுறையுள் ஒழிந்த பாதம் நிலம் காதுள உறை தழுவித் துடிக்கும் செய்திகள் உ விழிரெண்டே தெரிய கடல்கோள் el-6i ept-ou முழவின் ஒலி பத்தாடைக் குள்ளாக கரகங்கள ஆ ஊடறுத்து மனதுள் உயிர் குடிக்கும் கடும் பனிக்குள் இறப்பும் துடி
400 நினைவில். இலைகள் இழந்த தீயின் நாவும் தனிமரத்தின் அடியில் வாழின் மு6ை நடுநிசி வேளை துமுக்கித் துை மூவாறு மணிகளைக் போர்ப்புலத்தில் கொன்று தொலைத்த ஏர் கிளந்த வேலைச் சிறை விடுதலை வி விட்டு விடுதலையாகி ஓர் இமைப் எதிர்ப்படைக் கெறிந்த குண்டின் வேகத்தில் விழி இருண்டு மனை நோக்கிய செவிகள் அ6 செலவில் முதற் ஒற்றை மூச்ச களை கரையும் இறப்பின் ஒ பேருந்துத் தரிப்பு உழன்று மிர
நலிந்து நடுங்
ஒற்றைத் தரிப்பிருக்கை மீண்டெழு மு அதுவும் விறைத்துப் பனி பிளந்து கரும்பனைமரத் தனையிழந்து கிட்ட நெருங் 6365ustly முட்ட நின்ற
என்கிறது மெக்சிகோ அரசாங்கம். இப்போது அங்கே தேசிய ஜனநாயகத்துக்கான மக்கள் அமையம், தேசிய வேலைவாய்ப்புக்கள் நிதியம் போன்ற அமைப்புக்கள் அங்கு தோற்றம்பெற்று மக்களை கவர பகீரதப் பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஏன்? இந்த ஆண்டு தேர்தல் வருகிறது மெக்சிகோவில்.
2004 பெப்ரவரியில் கெயிட்டியில் துப்பாக்கி முனையில் மக்களால் தெரியப்பட்ட ஜனாதிபதி ஜீன் பென்டராண்ட அரிஸ்டேட் அமெரிக்காவால் நீக்கப்பட்டு புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. இக்கட்டத்தில்
த90கம்-55

வேந்தன்
ந்த விழி பிதுங்க
ன் நிமிர் பார்வை
விட்டெறிந்தேன்
கிட்ட நின்ற கருமுகிலன் சிரித்தபடி
9 பாதை மாறி போனதனால்
ரந்த வழி கேட்டு
ருக மடிந்து நின்றான்.
யெடுத்து நாணிக் குனிந்தேன்
ങ്ങ്
மறைந்தொழியும் நினைவில்
ப்பும் மீண்டு நகைத்து
முரண்டு நின்றது
30Tuydö நாம் தானை
)ளயும் வீதிக்கொரு சாதியும்
y - அயலவர்கே
அழுக்காய்
த்துக்களும் ஒரு வெளிப்பேணியும்
பொழுதில் வைத்தோம்.
S நிறம் மதம்
டைத்து மொழி குலம்
தொழில் இன்னும்,
த்திகையில் இன்னும்.
9 மனிதருக்குள்,
ரன் சி. சீ.
என்ன மனிதம்.(?)
தன
கி நன்றி. பண்-ஒளி
6. st
ஐ.நாவின் கண்காணிப்பு படைகளும், கண்காணிப்புக் குழுவும் (MINUSTAH) அங்கே இருந்தது. இந்த சதிப்புரட்சி பற்றி கேட்கப்பட்டபோது ஐநா கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி கார்லோஸ் சேகாஸ் பிராகா (Carlos Chagas Braga) "66i Gump Go Guaias 6i நடக்கும் போது அமைதியாகப் பார்த்துக்கொணி டிருக்கும் படியே பணிக்கப ’பட்டிருக்கின்றோம்" என்று சொன்னார். சதியைத் தொடர்ந்து பல கொலைகள் நடந்தன. மக்கள் இன்று பசியால் வாடுகின்றனர். தங்களுக்குரிய பணியை கச்சிதமாக முடித்துவிட்டு ஐ.நாவிடம் பொறுப்பு விட்டு
53

Page 56
விட்டு எல்லா அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளியேறிவிட்டன.
ஐ.நா.பற்றிப் பேசியதால் இன்னொரு விடயமும் நினைவுக்கு வருகிறது. 2003இல் ஐநாவின் ஈராக்கிற்கான அணு ஆயுத பரிசோதனைக் குழுவின் தலைவர் கான்ஸ் பிலிக்ஸ் (Hans Flix) தன்னுடன் அனுப்பப்பட்ட குழுவில் XIA உறுப்பினர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஈராக்கை மட்டுமன்றி தன்னையும் வேவு பார்த்ததாகச் சொல்லி பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் உலகளாவிய செயற்பாடுகளை பார்க்கும்போது அவை குறித்த ஒரு தெளிவை எம்மால் பெற்றுக்கொள்ளமுடியும். அனேகமானவை மனித நேய உதவி, ஜனநாயகம், முன்னேற்றம் என்ற சொல்லாடல்களின் ஊடே செய்யப்படுகின்றன என்பது வெளிச்சம்.
உலகம் முழுவதிலும் மக்களின் மேம்பாட்டுக்காக மக்களின் புரட்சிக்காக உண்மையாக செயற்படுகின்ற அமைப்புகளும் இல்லாமல் இல்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளல் வேண்டும். மக்களின் நல நோக்குடன்
தொடங்கப்படுகின்ற பல அமைப்புக்கள் காலப்போக்கில்
ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகள் ஆவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இந்த இடத்தில ஒரு சரியான புரிதல் ஒவ்வொருவருக்கும் அவசியம். இங்கே தான் மார்க்சியம் என்ற பெருந் தத்துவம் கைகொடுக்கின்றது. உண்மையான மக்கள் மயப்பட்ட அமைப்புகளையும் போலிகளையும் இனங்காண வேறுபிரித்து உணர்ந்துகொள்ளத் தேவையான அனைத்தையும் வழிகளுடன் கோட்பாடாக மார்க்சியம் முன்வைக்கிறது. லெனின் சொன்னதுபோல் "ஸ்தூல நிலைமைகள் பற்றிய அறிவு" எல்லோருக்கும் அவசியமாகிறது.
இறுதியாக நாம் என்னசெய்யவேண்டும் என்பது குறித்த தெளிவு நிச்சயமாக எங்களுக்குத் தேவை. எவ்வகையான அரச சாரா நிறுவனங்களாய் இருந்தாலும் சரி அவற்றை முற்று முழுதாய் புறக்கணிப்பதன் மூலமே மக்களை இந்நோயிலிருந்து விடுவிக்க முடியும்.
ஃபிடல் காஸ்ட்ரோ சொன்னது போல
"பேசுவது, கேள்வி கேட்பது, சிந்திப்பது, விளக்கமளிப்பது, உண்மையை நிரூபிப்பது இவை யாவுமே உணர்மையிலேயே உலகளாவிய அச்சுறுத்தல்கள் தர்ன்"
தாயகம் இதழ் பற்றிய உங்கள் குறைபாடுகளை களைந்து ஆக்கபூர்வ உங்கள் விமர்சனங்கள் உதவும். தொட வருவதையிட்டு மனம் வருந்துகிறோம்.
தாயகம் உறுதிபூணுகிறது. செப்டம்ட ஆக்கங்கள் 10,082006க்குள் எழுத்தாள
54

வாசகர் கடிதம்
கண்டி
28-02-2006
ஆசிரியர் / தாயகம் அன்புடையீர்,
சென்ற தாயகம் இதழில் வந்துள்ள ஆட்கள் பற்றிய ஒரு விவரணம் என்ற தலைப்பிலுள்ள கதை மிகவும் மட்ட ரகமானது. வடிவில் அதையொத்த (ஆனாலும் ஓரளவு தரமுள்ள) கதைகள் வந்துள்ளதாக நினைவு. மேற் குறிப்பிட்ட கதையில் இலக்கியப் பெறுமதி இல்லை என்றே சொல்வேன். புதுப் புதுப் பேர்களில் இலக்கியக் கொள்கை என்று தங்களையே குழப்பிக் கொள்ளுகிறவர்கள் போல பரீட்சார்த்த எழுத்து என்று தங்கள் குழப்பமான சிந்தனையை மற்றவர்கள் மீது சுமத்துகிறவர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக அப்படிப்பட்ட எழுத்துக்களுக்குக் களம் உண்டு. அது தாயமாக இருக்க வேண்டாம். தாயகத்திற்கு ஒரு தரமும் உள்ளடக்கக் கனதியும் இருந்து வந்துள்ளது. அண்மைக் காலத்தில் வந்த ஒரிரு போலி இலக்கியக் குப்பைகளால் அந்தப் பேர் கெடும் அபாயம் பற்றிக் கவனமாக இருங்கள்.
ரீயின் “நிவாரணம்" அவரது முந்திய சில கதைகள் போலில்லாமல் நடுவழியில் நிற்கிறது போலத் தெரிகிறது. அந்தக் கதையின் கதையும் முந்திக் குறிப்பிட்ட கதையின் கதையைப் போலவா என்று தெரியவில்லை.
எஸ்.வி.ராஜதுரையின் தில்லு முல்லுப் பற்றிய குறிப்பில் “ஸபானிய” என்று வருகிறது. அது ".. பாஸிஸ’ என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மூன்று மாதங்கட்கும் மேற்பட்ட இடைவெளியில் கொண்டு வருகிற ஒரு சஞ்சிகைக்கு அச்சுப் பிழைகள் மிகவும் அதிகம்.
சிறிய அளவிலென்றாலும் பல ஆண்டுகள் முன்பு போல மாத ஏடாகக் கொண்டு வருவீர்களென்றால் தாயகத்தில் நல்ல படைப்பாளிகள் பலர் எழுதும் வாய்ப்யு உண்டு.
அன்புடன் சிஜெகேந்திரன்
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. ான இதழாக தாயகம் வெளிவருவதற்கு டர்ச்சியாக இரு இதழ்கள் காலதாமதமாக தொடர்ந்தும் காலாண்டிதழாக வெளிவர ரில் வெளிவரும் அடுத்த இதழுக்கான ர்களிடம் இருந்து அது எதிர்பார்க்கிறது.
த90கம்-55

Page 57
எதை எடுத்த
எதை எடுத்துச் சொல்ல விதை விழுத்தி விரைந்தெழுந்து விருட்சமாகி கிளைபரப்பி
துளிர் உயிர்க்கும் உணர்வுகளாய் மானிடன் என் மனதின் எழுகையை எடுத்து வரும் ஒரு பொழுதாய் இப் பொழுதை நா
நீர் நீட்டி நிமிர்ந்து
பின்னாடி தலைசாய்த்து பிளாஸ்டிக் கதிரையின் பலம் பார்த்து அயர்ந்து ஆறுதலாய் கண் மூடி ஓய்ந்து கிடவும்.
முடிந்தால் நான் எழுப்பிப் பார்க்கிறேன்
நித்திரையாய்க் கிடந்தால் எழும்புவீர் உடனே தெரியும் எனக்கு நித்திரை போல் கிடந்தால்.
எழும்பினால் போச்சு புத்தகம் ஏதும் தருவான் படித்துப்பாரென்பான் பரவாயில்லை பிறகெடுப்பம் காசென்பான் கடமைப்படுவான் ஏனென்று காசு கொடுக்கவும் நே பேசாமல் கண்மூடி நித்திரை போல் கிடப்பம்!
நாங்களும் முந்தி புத்தகங்கள் படிச்சனாங்கள் தா படிச்சுப் படிச்சுத் தானே எழுதத் தொடங்கினாங்கள்
எத்தனை புத்தகம் இப்ப எழுதிப் போட்டம் இப்பபோய் ஆற்றயன் புத்தகத்தை நாங்கள் படிக் வெக்கம் கெட்ட அலுவல் எல்லோ. ஆற்றயன் புத்தகத்தை நாங்கள் படிக்கிறதோ. அப்பிடி படிக்க வேணுமெண்டால் நாங்களே ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுப் படிப்பு
இன்னும் படிபடியென்று படிக்க நாங்கள் என்ன படிப்பறிவில்லாப் பாமரமக்களோ சும்மா படிபடியென்று!!
தேசிய கலை இலக்கிய பேரவைக் காரரோட பே மூசி மூசி முதுகில சுமந்து காலகாலமாய் சேர்த்து வைச்சு வருசத்திற்கொருக்க அவிட்டு விடுவினம். தேசிய கலை இலக்கிய பேரவைக் காரரோட பேசி
விழிசுரந்து பழிசுமந்து நிற்கும் என் அன்னை பூமி நிலை எடுத்துச் சொல்லவா! «Y அமைதியாய்ப் பேசவந்த அரச உத்தியோகத்தனை என்னவர் வாழும் அந்தப் பூமியில் விதையாய் வி முளைத்தெழுந்த பயிர்நான் மனிதாபிமானத்தின் முன் மண்டியிட்டு மன்னிப்புக்
நான் முதலில் மனிதன் அடுத்துத்தான் தமிழன் அதனால்தான் மரணங்களை மனிதனே நிர்ணயிக்கும் போதெல்லாம் ஒருமுறை மரணித்து மறுபடி உயிர்க்கிறேன்
த90கம்-55

அரங்கக் கவிதை
ச் சொல்ல.
- FLIrasmus
னெடுக்க.
ಙ್ಞಇಂಗ್ಲಿಷ್ಗ புத்தகப் பண்பாட்டுத் ஆவணிப்பௌர்ணமியில் (19082005) ஃடுத்து జిల్ల
நிகழ்த்திய அரங்கக் கவிதையின் ஒரு பகுதி
jჩ08ub
க்கிறதோ.
சிப் பலனில்லை
ாய்
பலனில்லை
பின்
அடித்துக் கொன்ற Pந்து
கட்கிறேன்.
55

Page 58
செத்துப்போன மனித உரிமையின் காத்திருந்த கணங்கள் காலங்களா
ஐம்பத்தி எட்டு எழுபத்தியேழு
எண்பத்தியொண்டு எண்பத்தி மூண்( எண்பத்தியேழு எண்பத்தியொன்பது தொண்ணுற்றஞ்சு தொண்ணுாற்றா இன்று இரண்டாயிரத்தைஞ்சு இழப்பு
மார்கழிப் பெளர்ணமியை மண்ணில்
ஆழிப் பேரலை ஊருக்குள் உலாவி
அள்ளிப் போனதன் எச்சங்கள்
இன்றும் அப்படியே ஒன்பது மாசமா
பொதுக்கட்டமைப்பு எங்கோ ஒரு ப எட்டிப் பார்க்குமோ மூச்சுமுட்டிச் சாகுமோ தகவல் ஏதும் இன்றுவரை இல்லை
கையுயர்த்தி கையுயர்த்தி வாலாட்டி நன்றியை உணர்த்த காத்துக்கிடந்த காலம் வந்தது
நேற்று உயர்த்தி ஒரு மாதம் நீடித்த
அடையாள அட்டை ஆட்சிக்கு வ பட்சிகளும் பறவைகளும் பூச்சிகளும் இனிப் பொந்துக்குள் தான்
எதை நான் எடுத்துச் சொல்ல
விதிப் புழுதியில் விழுந்து கிடந்த து வேலிக் கருக்கில் மாட்டிக் கிழிந்த பனங்கூடலிற்குள் அடங்கிப்போன ச வெண்மணல் ஒழுங்கையில் சிதறிப் நீலக் கடலிற்குள் மூச்சிழந்த நட்சத் பச்சைப் பயிர்நிலங்களில் பதிந்து கி எங்கள் வளவுக்குள் வண்ணம் போ இறக்கையிழந்த தும்பிகள்
இராகம் மாறிய குயில்களின் குரல்
உடைந்து நொருங்கிய கண்ணாடி
துளிர்களை உதிர்க்கும் பூவரச மரா
இழப்புகள். இழப்புகள். இழப்புகள்
எதை எடுத்துச் சொல்ல இழப்புகள் இறங்கி இறங்கி இதய இறுக்கி. இறுகி இறுகி ஒரு நாள் வெடித்துச் சிதறி விலங்கு கைகள் கால்கள் உதடு உள்ளம் விரல்கள் எல்லாம் விடுபட்டெழும்
எங்கள் விதியை நாமே வகுப்போம்!
நிம்மதி எங்கும் நிரந்தரம் பெற்று புற்களாய் முளைத்து பூக்களாய் அப்போது நான் மீண்டும் வருவேன் அதை எடுத்துச் சொல்ல.
56

மார்புத் துடிப்புக்காய் ய் உருண்டோட
S
று தொண்ணுாற்றேழு
கள் இழப்புகள்
புதைத்து
ய் ஒன்றுமேயில்லை
துங்கு குழிக்குள்
டிக் கால்நக்கி நாய்களிற்கு
நாச்சு
ருகிறது b எல்லாம்
விச்சக்கரவண்டிகள். வேட்டித் துண்டுகள் ரசரப்புக்கள் போன நிலவுத்துண்டுகள் திரங்ஸ் டக்கும் சப்பாத்துச் சுவடுகள் ான வண்ணாத்திப்பூச்சிகள்
கள்
வளையல்கள் ங்கள்
நீதை அழுத்தி
556, DGoldestb.........
மலர்வோம்
த00கம்-55

Page 59
வேட்டுவர்
புயற்காற்றின் அதைப் இலைகள் சிதறுகின்றன மரத் தண்டுகள் வளை வழிப்போக்கர்களின் ெ வேட்டுவர்களின் நெஞ் சிறிது சஞ்சலப்படுகிற "வீசு, காற்றே, வீசு,”
இலைகளை சிதறு, ம வழிப்போக்கர் அனைவு நெடுஞ்சாலைகளினின் நெடுமலைகள் வழியே மாண்களையும் ஆடுகள் எங்கள் வேட்டுவரை
gr
(தாய் வான் தீவிலுள்ள மக்களிடையே வழங்கு
S6)/60/70/725
சிலி வண்டின் பாட்டு நீ கவனமாயிராவிட்ட அது கட்டாயம் உன் வண்ணப் பாம்பின் தே அதனிடம் வாய்நிறை தமது இருக்கைகளினி இனிதாயும் பண்பாயும் அவர்களது உடைகளு கவனமாயிரு
அடிமைகளே இப்போ இனி உங்கள் கண்க
(பாய் ஹோ திபெத்த

ჩ6)
7, கின்றன தாப்பிகள் பறக்கின்றன, ታuù
2/,
என்கிறார்கள் 7ங்களை வளை வரதும் தொப்பிகளை எடு. றும் விலகி
காட்டு நிலங்களில் ளையும் வேட்டையாடும் ரீ மிரட்ட இயலாது
ா காஒ ஷான் பழங்குடி ம் ஒரு நாட்டார் பாடல் இது)
இருப்பது பற்றி
உயிரோட்டமானது 7ல் னை அடித்துவிடும் ால் அழகானது, ஆனால் ப நஞ்சுள்ளது ன்று கீழிறக்கப்பட்ட துரைமார்
இருப்பர்.
1ள் மறைந்துள்ள கட்டாரி பற்றிக்
து எழுந்து நிற்கிறீர், ர் அகலத் திறந்திருக்கட்டும்.
யரது நாட்டார் பாடல் இது)

Page 60