கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறப்போர் 1961

Page 1
அறப்போர்
96
இலங்கைத் தமிழரசுக் கட்சி வெள்ளி விழா மலர் மறு பிரசுரம்
1974

காங்கேசன்

Page 2


Page 3
கிளியை விருந்தாக்க முனந்த பருந்து :
வகுப்புவாதத்தின் தலைவாயிலுக்கு நாட்டை அழைத்துச்சென்று, சிங்களத்தில் வாழ்ந்த தமிழரைக் கொன்று குவிக்கும் நிலைக்கு வழிவகுத்து, அதன்மூலம் சிங்க ளத்துக்கு உலக அரங்கிலே நீங்கா வசை யைத் தேடித்தந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1960இல் தமிழர் விடுதலை இயக்க மாம் தமிழரசுக்கட்சிக்கு நேசக்கரம் நீட்டி பது ஐக்கியகேசியக் கட்சியின் ஆட்சியை அகற்றிச் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அர சமைக்க உதவினல் தமிழர்களின் குறைந்த பட்சக் கோரிக்கையை வழங்க அது மன் வ்ந்தது. அரியணை உரை விவாதத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஐ. தே: க், அரசு நீக்கப்பட்டாலும் சிறீலங்கா அரசு பதவியேற்கவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே ஐக்கியம் நிலவிய சூழலில் 1960 ஆம் ஆண்டில் இரண்டாவது பொதுத்தேர்தல் யூலை யில் நடைபெற்றது. ஒப்பந்தத்தை நிறைவேற்ற வாய்ப்பளிக்கும் வகை பில் தந்தை செல்வா தமிழீழத்திற்கு
 

வெளியேயுள்ள தமிழர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக வாக் களிக்க வேண்டுகோள் விடுத்தார்: சுதந்திரக்கட்சி அமோக வெற்றிபெற் றது. தந்கை செல்வாவின் வெற்றி கேட்ட சிங்களம் **ஜெயவேவா செல்வநாயகம் மகாத்மயா" 66 வெடிகொழுத்தி ஆர்ப்பரித்தது. இன வெறிக்குப் பலியாகிய Lv6ðar emrpur plönta Ab காவின் விதவை மனைவியான சிறீமா வின் ஆட்சியில் இலங்கையிலே,
". .ஆடற்பருந்தும் கிளியும்
ஒரு கூட்டில் விாழும் உலகு" என்றபடி சமதர்ம அரசு அமையும் என்று அனைத்துலகும் எதிர்பார்த்தது.
ஆல்ை...? "ஆதிக்கம் மாசுபடுத்தும்; தனியாதிக்கம் முற்றக மாசுபடுத்தும்’ என்றி அரசியற் சித்தாந்தப்படி பெரும்பான்மைப் பணம்பெற்ற அம்மைய்ார் சித்தந் தடுமாறி ஞர்; வாக்குறுதியைக் காற்றிற் பறக்க விட்டார்; வல்லாட்சியின் திருவிளையாடல் களைத் தொடங்கினர். அதன் விளைவு..?
தமிழர்கன் எல்லா முனைகளிலும் தாக் கப்பட்டார்கள்,

Page 4
படிவங்கள் அலுவல்க முத்திரைகள் சம்பளப் பட்டியல்கள் காசோலைகள்
அனைத்தும் தனிச்சிங்களத்தில்
அரசாங்க ஊழியர்கள்
ஆசிரியர்கள்
அதிபர்கள்
Lort 685 Guri asir அனைவருக்கும் சிங்களம் கட்டாய பாட மாக்கப்பட்டது!
l-6voubi turb96vaseir
பதவி உயர்வுகள் சிங்களம் தெரிந்தவர்களுக்கே என விதிக் attu. L-g!
நேசக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கப் பேட்ட அரசு மோசம் செய்தது. கிளியோடு அருகே ஒருங்குண்டு வாழும் என நினைத்த பருந்து கிளியை விருந்தாக்க முனைந்தது.
நீதிமன்ற மொழிச்சட்டம்:
இவற்றின் பயனகவே காந்திய நெறி செல்லும் தந்தை செல்வா தமது பொறு மக்கு எல்லையிட் டு ப் பொறுத்தது போதும் பொங்கி எழு" என்று ஆணை பீட்டார். ஆல்ை, அதிலும் கூட அவர் சத்தியாக்கிரகிக்கே உரிய பொறுமையை 4ம் நேர்மையையும் கடைப்பிடித்தார் !
சந்திப்புக்கள்
1.60prUrt -6863
கோரிக்கைகள்
உறுதிமொழிகள்
ஒப்பந்தங்கள்
அஞ்சல்கள்
வேண்டுகோள்கள்
நினைவூட்டல்கள் என, "மெல்ல மெல்லச் செல்லுகின்ற மேதை செல்வநாயகம்" நியாயமான அனைத்து முறைகளையும் மேற்கொண்டார்.
கடிதம் கிடைத்தது.
நடவடிக்கை எடுக்கப்படுகிறது:
சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்
பப்பட்டுள்ளது;
பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

என்று ஏகவசனத்தில் செல்வாவுக்குப் பதில்கள் அனுப்பப்பட்டன. சிலவற்றுக்குப் பதில்கூட எழுத மாண்புமிகு பிரதமருக்கு நேரம் இருக்கவில்லை.
இத்தனைக்கும் மத்தியில் அம்மையாரின் பாசிச ஆட்சி தனது கொடிய கரங்களால் தமிழருக்கிருந்த மிகச் சில உரிமைகளையும் பற்றிப்பிடித்து அழித்துக் கோர தாண் t-Gluonfig tugs.
இத்தனை கொந்தளிப்புக்களுக்கும் மத்தி யில், 1960ஆம் ஆண்டின இறுதி மாதத் தின் ஈற்றயல் நாளில்ே (டிசம்பர் 30) நீதிமன்ற மொழிச்சட்டத்தை அரசு நிறை வேற்றியது. அவ்வேளையிலே பேசிய திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் மிக உருக்க மான வேண்டுகோள் ஒன்றை விடுத்தாரி தமிழையும் சரிநிகர் சமானமாக மதிக்கும் படி வேண்டினர். ܗܝ
ஆனல், வெறிபிடித்த வகுப்புவாத அரசு தமிழரசுக்கட்சி, சமசமாசக் கட்சி, கொம்யூனிஸ்டுக்கட்சி ஆகியவற்றின் ஒன்று பட்ட நியாயமான திருத்தங்களை நிரா கரித்தது. இதன்மூலம் தனிச்சிங்கள ஏகாதிபத்தியம் புகாது எஞ்சியிருந்த ஒரே ஒரு துறையாகிய நீதித்துறையிலும் அது புகுந்துகொண்டது.
நெஞ்சை உருக்கிய காட்சிகள்:
நாடெங்கும் சிங்களம் ஆட்சிமொழி யாக்கப்பட்டதனைச் சிங்கள மக்கள் குது கலமாகக் கொண்டாடி விழா எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்-1961ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ஆம் நாள் தமி ழரசுக்கட்சியின் ஏழாவது மாநிலமகாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கிழக் கிலங்கை ஈன்ற நல்முத்தாகிய திரு. சி. மூ. இராசமாணிக்கம் அவர்கள் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மகா நாட்டில் சிங்களத் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதெனத் தீர்மானிக்கப்
-5. இம் முடிவுக்கேற்ப 1961 சனவரி 30ஆம் திகதி தனிச்சிங்களம் நடை முறைப்படுத்துவதை எதிர்த்து அமைதிப்
2

Page 5
போராட்டம் அலுவலகம் தோறும் நடத் தப்பெற்றது. சிங்களத்தில் பணியாற்ற வேண்டாம் என்ற கோரிக்கை தொண்டர்க ளால் தமிழ் அரச ஊழியர்களுக்கு நேரில் விடுக்கப்பட்டது
அரசுக்கு ஒரு மாத இடைவேளை கொடுத்த பின்பே சத்தியாக்கிரக இயக்கம் தொடங்கப்பெற்றது. 1961ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் திங்கட்கிழமை காலை ஏழரை மணிக்குத் தந்தை செல்வா தலைமையில் காங்கேசன்துறையிலிருந்து வந்த தொண்டர்கள் கச்சேரியின் எல்லா வாயில்களின் முன்பும் அமர்ந்து அரச ஊழியர்களை உட்புகவிட மறுக்கும் மறியற் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி னர். "தமது முதிய வயதையும் நோயுற்ற நிலையையும் பொருட்படுத்தாது, தமிழ் விடுதலை இயக்கத்தின் தந்தையாகிய திரு. செல்வநாயகம் கச்சேரி வாயிலில் நீண்டநேரம் அமர்ந்திருந்தது நெஞ்சை உருக்கும் காட்சியாக அமைந்தது" என்று வரலாற்ருசிரியர்ஒருவர்வருணித்துள்ளார்.
நாற்பது ஐம்பது சத்தியாக்கிரகிக ளோடு காட்சியளித்த கச்சேரி வாயிலில் அரைமணி நேரத்துக்குள் மக்கள் வெள்ளம் நிறைந்தது.
மு. ப. 9-00 மணியளவில் காவல்துறை அத்தியட்சகர் சி. ஆர். ஆண்ட் அங்கு வந்து கச்சேரியினுள்ளே புக முயன்ருர் பிரதான வாயிலினுடாகச் செல்லுமாறு அரச ஊழியர்களை அவர் பணித்தார்; ஊழியர்கள் உட்புகமுயன்றபோது தொண் டர்கள் படுத்துக்கொண்டு மறியல் செய் தனர். தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கிக்கொண்டிருந்த தலைவர்களும் மறியல் செய்தனர்
சாதாரண நடைமுறைச் சட்டங்க ளுக்குட்பட்ட முறையில் மறியல்செய்த தொண்டர்களைக் கைதுசெய்து அகற்றும் அதிகாரம் காவல்துறையினருக்கு இருந் தது. ஆனல், அவர்கள் அவ்வாறு செய் யாது தொண்டர்களைத் தூக்கிச்சென்று

எறிந்தனர்; நிலத்தில் இழுத்துச் சென் றனர் அடித்து நொருக்கினர். கச்சேரி வாயில்களைப் பிடித்துக்கொள்ளக் காவலர் சள் முயன்றனர். பிரான்சிஸ் பெரேரா என்ற சிலாபத் தமிழர் முதலில் பலமான தாக்குதலுக்குவிளானர். பல தொண்டர் கள் தொடர்ந்து காயமுற்றனர். அவர்க ளுக்குப் பதிலாகப் புதிய தொண்டர்கள் வந்து சேர்ந்தனர்,
இந்நிலையில், பிரதான வீதியிலிருந்த பழைய பூங்கா வாயிலில் முக்கிய நிகழ்வு சன் ஏற்படத் தொடங்கின. அரசாங்க அதி பர் ம. சிறீகாந்தா அவ்வழியாக மேல்நீதி மன்றத் தொடக்க ஆணையைப் பிறப்பிக்கச் செல்கின்ருர் என்ற செய்தி கிடைத்தது மு. ப. 10-30 மணிக்கு காவல்துறை அத்தி யட்சகர் சி. ஆர். ஆண்ட் மெய்காப்பாள ராக அமர, பூgகாந்தா காவல்துறை வண்டி யில் கச்சேரியிலிருந்து வெளியே வந்தாரி தொண்டர்கள் வாயிலில் படுத்து மறியல் செய்தனர். சாரதி இவற்றைக் கவனிக் காது வண்டியைச் செலுத்த முனேந்தாரி ஆனல் உயிரையும் இழக்கத் துணிந்த தொண்டர்கள் அசையவில்லை 'அடித்து நொருக்கி வழியைத் திறந்துவிடுங்கள்" என ஆண்ட் ஆணையிட்டார். தொண்டரி கள் தாக்கப்பட்டனர். பிரதான வீதியி லிருந்த பா; உக்களான திருவாளர்கள் வி. ஏ. கந்தையா, அ. அமிர்தலிங்கம், வி. தருமலிங்கம், க. துரைரத்தினம் ஆகியோர் வண்டிக்குக் குறுக்கே படுத்தனர். திரு. ஈ. எம். வி. நாகநாதன் முன்னணியில் நின்ருர்: அனைவரும் வெறிகொண்ட காவலரால் தாக்கப்பட்டனர். திரு. நாகநாதன்துே பட்ட குண்டாந்தடி முறிந்தது இக் குழப்பநிலையில் வண்டி எவ்வாருே வெளி யேறியது. ஆத்திரங்கொண்ட சிலர் காவலர் மீது கல்லெறிய முற்பட்டனர். கல்லுக்குக் கல்லு என்று அவர்களும் "நேரடி நட வடிக்கை"யில் இறங்கினர். * காவல் துறையினர்காடையர்கள்போலப் பொறுப் பின்றி, ஒழுக்கமின்றி, பெருந்தன்மை யின்றி நடந்துகொண்டனர்' என வரலாற் முசிரியர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்

Page 6
இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஐந்தாம்படை வேல்:
ஜே. ஆர். ஜயவர்த்தணு, பீற்றர் கெனமன் பேணுட் சொய்சா, தகநாயக்கா, எஸ். டீ. பண்டாரநாயக்கா உட்படச் சிங்களத்தலைவர்கள் பெரும்பாலாளுேர் அன்றுநிகழ்ந்த தாக்குதல் களை வன்மையாகக் கண்டித்தனர். ஆணுலும் ஆட்சி அதிகாரம் அவர்களுடைய கையிலே வந்தபோது அவர்களும் அதே அடக்குமுறை யையே மேற்கொண்டதனை வரலாறு காட்டு கிறது. சிங்கள ஆளும் கணத்தைப் பொறுத்த வரையில் தமிழர் பிரச்சினையில் அனைவரும் சிங்களாரே,
தமிழரசுக் கட்சியினரால் ஆரம்பிக்கப் பட்ட சத்தியாக்கிரக இயக்கம் தமிழ் பேசும் மக்களின் போராட்டமாக விரி வடைந்தது. தமிழ்க்காங்கிரசு, சமசமாகக் கட்சி என்பனவும் போராட்டத்தில் முழுமை யாகக் கலந்துகொண்டன. கொம்யூனிஸ்டுக் கட்சி மட்டும் கலந்துகொள்ளவில்லை. சத்தியாக் கிரகத்தை முறியடிக்கும் ஐந்தாம்படை வேலை யில் அவர்கள் ஈடுபட்டனர். பங்கீட்டரிசி விநியோகத்தை நிறுத்தி அரசு தமிழ் மக்களைப் பணியவைக்க முயன்றபோது பொது வு  ைட மை வாதிகள் பங்கீட் டரிசியைத் தவருண பலவழிகளில் விநி யோகிக்கத் திட்டம் வகுத்துத் தந்தனர். இவர்கள்து ஐந்தாம் படைப் பணியைப் பாராட்டிப் பிரதமர் சிறீமா இராணுவத் தளபதி சேனல் உடுகமவுக்கு எழுதிய கடிதத்தில், “உங்கள் சாமர்த்தியமான திட்டம்களைச் செயல்படுத்தும் பணியில் யாழ்ப் பாணப் பொதுவுடைமை வாதிகளும், திருவா ளருள்: அல்பிறெட் துரையப்பா, சு. நடேச பிள்ளை, எஸ். யூ.சோமசேகரம் ஆகியோரும் முழுமனதோடு ஒத்துழைத்திருக்கிறர்கள். எனது மனமார்ந்த நன்றியை அக்கனவான்க ளான ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டமுறை யில் தெரிவித்திருக்கிறேன்." என்று எழுதி ஞர். இந்தியாவிலிருந்து பொதுவுடைமை பி. இராமமூர்த்தியை அழைத்து அறிக்கை விடச் செய்து உலகின் கண்ணில் மண்தூவ இலங்கைக் கம்யூனிஸ்டுகள் முயன்றனர். மக்களின் உறுதி; அம்மையார் கலக்கம்:
மாணவர்கள், ஆசிரியர்கள், சட்டத் தரணிகள், வணிகர்கள், உழவர்கள் பட்
A.

டின, நகர கிராம சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் அளவரும் சத்தியாக்கிர கத்தில் கலந்துகொண்டனர். இந்துக்கள் கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் நாள்தோறும் சத்தியாக்கிரகத்தை ஆத ரித்து ஊர்வலம் நடத்தியதுடன் நேரடி யாகவும் பங்குகொண்டனர். தமிழரசுக் சட்சி, சாங்கிரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஐ. தே. கட்சி உறுப்பினரும் மட்டுநசரி இரண்டாவது பா.உ. உம் ஆன ஜனுப் மாக்கான் மாக்கார் அவர்களும், பொத்துவில் பா. உ. ஜம்ை மஜீத். நிந்தாவூர் பா. உ. ஜஞப் மஜீத் ஆகிய சுயேச்சை உறுப்பினர்களும், வவுனியா பா. உ. திரு. தா. சிவசிதம்பரம் அவர்களும் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டனர். திரு. தா. சிவசிதம்பரம் வவுனியாவில் சத்தியாக்கிரக இயக்கத் தைத் தலைமைதாங்கி நடத்திச் சிறையும் சென்று பெருமை பெற்ருர், ஆரம்பத்தில் ஆதரவு நல்கிய யாழ்ப்பாணத் தொகுதிப் பா. உ. அல்பிறெட் துரையப்பா படிப்படியாக அம்மையாரின் வலையில் விழுந்தது இரங்கத் தக்கதாகும். -
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் படிப்படியாக மட்டக் களப்பு, திருகோணமலை, வவுனியா, their ஞர் ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவாக் கப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் ஒவ்வொரு வரும் எவ்வித வேறுபாடுமின்றி மொழி யுரிமைப் போ ரிலே கலந்துகொண்டனர் என அரசும் ஏனைய சிங்காக் கட்சிகளும் அறிக்கைகள்மூலம் உறுதிசெய்தன.
அரசாங்கத் தலைமைசி செயலகமாகிய கச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக் கிரகம் ஏனைய அரச அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. சில நாட்களில் தமி ழர்கள் வாழும் ஐந்து மாவட்டங்களிலும் அரசின் ஆட்சி நடைபெருது நின்றுவிட் டது. இதனுல் அரசு நாள்தோறும் கோடிக் கணக்கில் நட்டம் அடைந்தது. ஒரு மாதம் இடைவிடாது சத்தியாக்கிரகம் நடை பெற்ற நிலையில், சர்வ வல்லமைகளும் படைத்த பிரதமராகிய சிறீமா அம்மையாரே *" வட, கிழக்கு மாகாணங்களில் எனது ஆட்சி நடைபெறவில்லை " என்று ஒப்புக்கொள்ள

Page 7
நேர்ந்தது: எனினும் மக்களின் நியாய மான உரிமைகளை வழங்காது பொலிஸ், இராணுவ, கடற்படை வீரர்களது பய முறுத்தல்களாலும் உணவுப் பொருள்கள் முதலியவற்றை விநியோகிக்காது விடுவ தாலும் சத்தியாக்கிரகிசளுக்கு உணவு நீர் முதலியன கொடுக்காது தடுப்பதன் மூல மும் முறியடிக்க முயன்றர். ஆளுல் மக்கள் உறுதியாக நின்றதால் அவர்களைப் பணிய வைக்க முடியவில்லை,
இதற்கிடையில் இன ஒடுக்கலில் ஈடு படும் ஆபிரிக்க நாடுகளுக்கு அறிவுரை கூற அம்மையார் வெளிநாடு சென்ருர், செல்லும்போது சத்தியாக்கிரகத்தைக் கைவிடாதவரை சமரசத்துக்கு இடமில்லை என்றும் விளைவுகளுக்குச் சத்தியாக்கிரகி களே பொறுப்பேற்க நேரிடும் என்றும் பயமுறுத்திச் சென்ருர், மீண்டுவந்த பிரத மர் சத்தியாக்கிரகம் தொடர்ந்தும் நடப் பது கண்டு வியப்பும் கவலையும் அடைந் தார். இறுதியில் நீதியமைச்சர் சாம் பீ சி. பெர்ணுள்டோ சமரசத் தூதுவ ராக அனுப்பப்பட்டார். சமரசத்திற்கு எதிரானவர் என என். எம். பெரேராவால் பாராளுமன்ற த்தில் விபரிக்கப்பட்ட
அமைச்சர், அம்மையார் எதிர்பார்த்தபடி
அதிருப்தியை அதிகமாக்கிஞர்
தமிழரசு அஞ்சற் சேவை மூலம் தனியரசு பிரகடனம்?:
தமிழ்பேசும் விடுதலைப் போராட்ட இயக்கத்தினர் தமது போராட்டத்தை விரிவாக்கத் திட்டமிட்டனர். இதன் பய ஞக 1961 ஏப்பிரல் 14 ஆம் நாள் அஞ்சற் சேவைச் சட்டம்களை மறுக்கும் சட்டமறுப்பாகத் தமிழரசு அஞ்சற்சேவை ஆரம்பிக்கப்பட்டது. தந்தை செல்வா, இந்த அஞ்சற் சேவையை ஆரம்பித்தார். சட்டத்தரணி சு. நடராசா அஞ்சற்சேவை நாயகமாகப் பணியாற்றி ஞர். பாராளுமன்ற உறுப்பினர்களாகிய திரு.அ.அமிர்தலிங்கம்,திரு.வி தர்மலிங்கம், திரு. மு. சிவசிதம்பரம் ஆகியோர் அஞ்சற் சேவகர்களாக அமர்ந்து முதற் கடிதங் களைக் காவல்துறை அத்தியட்சகர், அர சாங்க அதிபர் ஆகியோருக்கு வழங்கினர்.
s

10 சத முத்திரை, முத்திரையிட்ட கடித உறை, அஞ்சலட்டை என்பன வெளியிடப் பட்டன. இந்தச் சட்டமறுப்பில் ஈடுபட் டவர்களைக் கைது செய்து அரசு தண்டித் திருக்கமுடியும். ஆனல் அரசு அவ்வாறு செய்யவில்லை. -
நான்கு நாட்கள் அஞ்சல் சேவை மக்களின் பேராதரவோடு நட்ைபெற்றது. தமிழரசுக்கட்கி தமிழரசு அஞ்சல் சேவை மூலம் தனியரசைப் பிரகடனம் செய்துவிட்டதாக அரசு அறிவித்தது.
"முத்திரை வெளியிடுவதால் தனிநாடு அமைத்தற்கு உலகில் எங்காவது ஆதார முண்டா?" எனப் பாராளுமன்றத்தில் பின்னர் ஆளுங் கட்சி ஆதரவாளராக மாறிய அல்பிறட் துரையப்பா எழுப்பிய விஞவே அரசின் உள்நோக்கத்தை விளக் கப் போதியதாகும்,
விலங்கினும் கீழான நிலயில் தமிழன் :
வான்வழியாகவும் தரைவழியாகவும் அரசு படைவீரர்களே வடகிழக்கு மாநிலம் களுக்கு அனுப்பியது. 1961 ஏப்பிரல் மாதம் 17ஆம் திகதியின் பின்னிரவில் முப் படையும் சத்தியாக்கிரக நிலையங்களை முற்றுகை யிட்டன. 56 நாட்கள் ஈ எறும்புக்குக்கூட இன்னுசெய்யாத முறையில் நடைபெற்ற சத்தி யாக்கிரகம் பலாத்காரத்தின் மூலம் கண நேரத்தில் முறியடிக்கப்பட்டது. தேவாரமும் திருவாசகமும் ஏனைய மதப் பிரார்த்தனைப் பாடல்களும் ஒலித்த அறப்போர்க்களம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டக் களமாக மாறியது. எங்கும் செங்குருதி நீர் turtlis 5.
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தொன் டர்களும் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு கோமகம தடுப்புக்காவல் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களது பட்டியலை இறுதியில் காணலாம்
" இத் தொந்தரவுக்கு ஒரு முடிவு ஏற்படும் வரை நாம் சலிப்பு அடையக் கூடாது. ஒவ்வோர் அதிகாரியும் ஒவ் வொரு படையினரும் தன்னுடைய முழுத் திறமையையும் காட்டவேண்டும்; இராணுவ நடவடிக்கைகள் உணர்ச்சி வேகத்தை மிகவும் உயர்ந்த நிலையில்

Page 8
வைத்திருக்கவேண்டும் வெற்றிகரமான பலாபலன் கிட்டும் என நான் முழுக்க முழுக்க நம்புகிறேன். காரியம் கைகூடும் வரை எவருமே கணமேனும் தளர்ந்து விடலாகாது. உங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டம் அடிக்கட்டும் " என்ற பிரத மரின் ஆணைப்படி இராணுவ வீரர்கள், வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசத்தில் இராணுவம் எவ்வாறு நடக்குமோ அவ் வாறு நடத்துகொண்டனர். ஏறத்தாழ 170 நாட்கள் அவசரகால ஆட்சியில் தமிழன் விலங்கிலும் கீழாக நடத்தப் பட்டான். ஆனல் அவசரகாலநிலை அகற்றப்பட்ட மறுநாளே தமிழன் மீண்டும் தமிழஞகத் தலைநிமிர்ந்து நிவ்ருள்.
ஞான ஒளி:
170 நாட்கள் தலைவர்கள் சிறையிலே சித்திரவதைசெய்யப்பட்டபோது, உடுப்பிட்டிப்
பா. உ. திரு. மு. சிவசிதம்பரம் தமிழருக்குத் தலைமைதாங்கி வழிநடத்திஞர். இனத் தெரி
பின்னிணைப்பு
1961ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் தடுத் திரு சா; ஜே. வே. செல்வநாயகம் (கியூ
SCg5 GTL.b. 8o. Jeyasuor (umri al.) (13-7-61இல் தமிழரசுக் கட்சியிலிருந்து
கோமகம இராணுவ முக
திரு வி; தருமலிங்கம் (பா. உ.) திரு. வீ. ஏ. கந்தையா (பா. உ.) திரு அ. அமிர்தலிங்கம் (பா. உ.) திரு. க. துரைரத்தினம் (பா. உ.) திரு. ஏ. சிவசுந்தரம் (பா. உ.) திரு. செ. இராசதுரை (பா. உ.)
Sôqy. 6a. (yp. GQgr mraPuonr6asßdi4Sub (umr. a2-)
6

யாத பலர் தமிழனது உணர்ச்சியை வெளி நாட்டுக்கும் அரசுக்கும் எடுத்துக்காட்டும் வகையில் பல நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்தினர். ‘தமிழன் கண்ணீர்", "சத்தி undssus' (Satyagraha) Guit divo Gass மக்களே இருளிலிருந்து ஒளியைக் கான உதவின.
*அறப்போரி என்றும் தோற்பதில்லை" என்றபடி தமிழர்கள் தமது போராட்டத் தில் ஒரு வெற்றியான கட்டத்தை நடத்தி முடித்தனர். உயிர் இழப்பு, அவமானம் முதலிய பல்வேறு துன்பங்களை அவர்கள் அனுபவித்தாலும் அடிமைத்தனமே மேலான துன்பம் என்ற ஞான ஒளி பெற இப் போராட்டம் உதவியது. தந்தை செல்வா வழியை நாடிநின்றவர்கள் தனித் தமிழ் ஈழமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற உறுதியான இறுதியான முடிவுக்கு வர வழிகாட்டிய போராட்டம் என்ற வகை யில் 1961ஆம் ஆண்டின் அறப்போர் மிகப் பெரிய வெற்றியே.
游
* சத்தியாக்கிரகம்
துவைக்கப்பட்டோர்:
Gnó. Luar. 2.)
விலகி அரசுடன் சங்கமம்) ாமில் தடுப்புக்காவல்:
திரு. பொ. மாணிக்கவாசகர் (பா. உ.) திரு. ந. இ. இராசவரோதயம் (பா உ} திரு. வீ. ஏ. அழகக்கோன் (பா. உ.) திரு. இ. மு. வி. நாகநாதன் (பா. உ.) திரு. மு. பாலசுந்தரம் (பா. உ.) Y. திரு. வ. ந. நவரத்தினம் (பா. உ.) SG - str. Fassburd (umr: D-)

Page 9
யாழ்ப்பாணம்
திரு. என். நவரத்தினம் திரு மு. திருச்செல்வம் திரு. வ. நவரத்தினம் திரு. சு. நடராசா திரு. சி, கதிரவேலுப்பிள்ளை திரு. சி. சின்னத்துரை திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் திரு. க. ஜெயக்கொடி திரு. இ. நவரத்தினம் திரு. ஏ. ஆர் ஆசீர்வாதம் திரு. ஏ. அந்தோனி திரு. வி.கே. கந்தசாமி(புதுமைலோலன்) திரு: எஸ். நவரத்தினம் (கரிகாலன்) திரு எஸ். அழகையா திரு. தி. க. இராசசேகரன் திரு. ரீ. எஸ். துரைராசா திரு. ஞா. லூக்காஸ்
வவுனியா
திரு. சபா. சுப்பிரமணியம் திரு. வே. த. சுப்பிரமணியம் திரு. ஜி. பி. வின்சன்ட் திரு. த . ஐயாத்துரை திரு. இ. வ. வில்வராசா திரு. வை. சிற்றம்பலம் திரு. கு. மரியாம் பிள்ளை திரு. சி. சிதம்பரப்பிள்ளை திரு. செ. ஞானசேகரம் திரு. சி. ஐ. குலசேகரம பிள்ளை திரு. கோ. நடேசபிள்ளை திரு பொ. பரராசசிங்கம் திரு. த. நல்லையா திரு. க. செ. கதிரேசு திரு. கே. கைலாயபிள்ளை
பின்னிணைப்பு-11
உசாத்துணை
Satyagraha & Freedom Movement of
- S. Pomniah, B. A., Ad:
தடுப்புக்காவலில் நாம் (மடல்கள்)
1.
e
பாராளுமன்ற விவாதங்கள் (அஞ்சாட தமிழன் கண்ணீர் (வார இதழ்)
Satyagraha (A Weekly News Bulletin) தமிழ் எங்கள் ஆயுதம்-கவிதைத் தெ ஈழத்து அறப்போரும் உரிமை மறுப்ே இலங்கைத்தமிழர் அவலநிலைபற்றிய

திருகோணமலை திரு. பா. நேமிநாதன் திரு. ஜே. ஏ. பி. துரைநாயகம் திரு. கே.சி.பாலச்சந்திரன் (இடிமுழக்கம்) திரு. க. சிவகுரு திரு. நா. தம்பிராசா திரு. சு. ஜெகராசசிங்கம் திரு. ம கிருபைராசா திரு. த. சின்னையா திரு. கே. பி. சீதாராமன் திரு. சி. இராசதுரை (ராஜூ) திரு. செ. மகாலிங்கம் திரு. இரா. சம்பந்தன் திரு. பி. இரங்கநாதன் திரு. ஆர். சந்திரபாலன் மட்டக்களப்பு o(5. p. Dr60ä asub திரு. சீ. எஸ். பூபாலரத்தினம் திரு சாம். தம்பிமுத்து திரு. ஆர். டபிள்யூ.வி. அரியநாயகம் திரு. பி. இராசன் செல்வநாயகம் திரு. மசூர் மெளலாஞ திரு. சா. கு. கணேசநாதன் *திரு. கே. வி. கிருஷ்ணகுட்டி திரு. ஜே. திசைவீரசிங்கம் திரு. சா. கோபாலரத்தினம்
மன்னுர் திரு. ம. சி. பொன்னுக்கோன்
திரு. க. வைத்திலிங்கம்
திரு. எம். அருளப்பு திரு. வே. கைலாசபிள்ளை
திரு. கே. எஸ். ஏ. கபூர் சேர் கந்தையா வைத்தியநாதன்
*பொதுவுடைமையாளர் தீவறுதலாகக் கைதுசெய்ய
பட்டு விடுதலையானர்.
நூல்கள், ஏடுகள்
the Tamils in Ceylon
vocate (1963)
- புதுமைலோலன் (1969)
G) (1961)
ாகுப்பு - தமிழ் எழுத்தாளர் சங்கம் (1962) போரும் -Gus. 96tyun T く வெளிநாடுகளின் கண்டனக் குரல்
7

Page 10


Page 11
திருமகள் அழு

2த்தகம், சுன்னகம்

Page 12