கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2002.12

Page 1
in
 
 
 
 
 
 
 
 


Page 2
WIJAYA GENERAL STORES
Agro Service Centre Dealers Jn Agro Chemicals, Wegelable Seeds, Sprayers & ferfiligers Ele;
1976
85, Wolfendhal Street, Colombo - 13. Tel: (94-1) - 32701 1 Telefax: (94-1) - 331596 E-mail: vijaya 76@hotmail.com
'V' CARE FOR YOUR CROPS.
Rami Grinding Mills
Clidie Powderu, Curvu Powderu, Cuvy Stub, Tuwetic Powde
219, Main Street, Matale. Tel: O66-22425
3Jße F/avcʻur ef'Canka
 
 

யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
2 JFb Hii 2002
28
'Mallikai' Progressive Monthly Magazine
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
- /l , Sri KOfhireSCn Sf.
ColombO - 13,
Te: 32O72
oil: poCantholGDslitnet
புத்தாண்டில் மலரவுள்ள
38-வது ஆண்டுமலர்
உங்களுக்குத் தானி தெரியுமே, மல்லிகை ஆணர் டு மலர் களினி ஆழ அகலமான இலக்கிய வெளிப்பாடுகள் பற்றி, மலரப் போகும் புத் தாணர் டில்
மல்லிகையின் 38-வது ஆண்டு மலர் கன
கச்சிதமாகவும் அடக்கம் நிரம்பிய் கவர்ச்சி உள்ளடக்கம் கொணர் ட காத்திரமான படைப்புகள் கொணர் டதாகவும் இவ்
ஆண்டு மலர் வெளிவரவுள்ளது.
ஆணர்டு மலர் தேவையானோர் முன்னரே எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.
சந்தாவைப் புதுப்பிக்காதோருக்கு எந்த விதமான காரணத்தைக் கொண்டும் மல்லிகையின் 38-வது ஆணர்டு மலர்
அனுப்பப்பட மாட்டாது.
தனி மலர் தேவைப்பட்டோர் ebu T 100/= அனுப்பி தமது பெயரை முன்னரே பதிவு செய்து கொள்வது விரும்பத் தக்கது.
விற்பனையாளர்களை எம்முடன் வழமைபோலவே ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொள்ளுகின்றோம்.
படைப் பாளிகளினி புதிய அணுகுமுறைச் சிருஷி டிகள் மலருக்கு நேரகாலத்துடன் விரும்பப் படுகின்றன. சகலரினதும் ஒத்துழைப்பு - மலரை இன்னும் இன்னும் சிறப்பானதாக்கப்
பெரிதும் உதவும்.
- ஆசிரியர்

Page 3
umanatissa Mawatha,
(Armour Street),
 

எரித்தழித்த அரசியல் அராஜகக்கும்பல் மீண்டும் Z திறப்புவிழாச் செய்ய முனைகிறது.
1981-ல் யாழ்ப்பாண நகரமும் தென்கிழக்காசியாவிலேயே மிகச் சிறப்புற்றுத் திகழ்ந்த நமது பொது நூலகமும் தென்னிலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட அரசியல் காடையர்களால் தீயிட்டு எரிக்கப் பட்டன.
இதைக் கண்டு நாடே அதிர்ந்தது. சர்வ உலகமுமே இந்தக் * காட்டுமிராண்டித் தனமான செயலைப் பார்த்துத் திகைத்தது.
ேே தென்னிலங்கையிலிருந்து அரசு சார்பு அடியாட்களைக் கொண்டு வந்து, யாழ்ப்பாணப் புகையிரத மேல் மாடியில் **** செளகரியமாக அவர்களைத் தங்க வைத்து இந்தச் சுட்டெரிப்பு வேலையைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் அன்றைய அரசின் அமைச்சு மட்டத்தைச் சேர்ந்த சிலர் என ஊடகங்களே பகிரங்கமாகத் தமது கண்டனத்தைத் தெரிவித்திருந்தன.
இந்த அநாகரிக அறிவு எரிப்புச் செயலைக் கண்டிக்கும் முகமாக 1981 ஜூலை மல்லிகை சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அழிவின் தாக்கத்தைச் சாட்சியம் கூறும் முகமாக 14 புகைப்படங்களைப் பிரசுரித்திருந்தது.
அட்டைப் படமாக - எரிந்து சிதிலமாகிச் சாம்பல் மேடாகிக் காட்சி தந்த அதன் சிதைவுகளை முதுபெரும் அரசியல் தலைவர் தோழர் பீட்டர் கெனமன் பார்வையிடுவதையும், இப்படிச் செய்த அரச பயங்கரவாதத்தையும், மானுட நாச அழிவுச் செயல்களையும் கண்டிப்பதாகவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அட்டூழியச் செயல் இன்னமும் தமிழ் மக்கள் மனதிலிருந்து மறைந்து போய் விடவில்லை. மறந்து போவதற்கு மக்களும் மடையர்களல்ல!
இதில் மகா பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த அழிவு வேலைகளுக்குப் பின்னணி வகித்தவர்களே as: ஆளும் கட்சிப் பின்புலத்துடன் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஈழநாடு பத்திரிகைக் காரியாலம் பொதுசன நூலகத்தைத் திறப்பு விழாச் செய்யப் அச்சகத்தை தோழர் பீட்டர் போகின்றனராம்! கெனமண், வைத்திலிங்கம், −
பொன்.குமாரசாமி ார்வை . ifrith! யிடு இது அந்த அறிவுக் கோயிலுக்கே ஒரு களங்கம்!

Page 4
அட்டைப்படம்
மரபுக் கலைக் காவலர் திரு. செல்லையா மெற்றாளம் மயில்
வண. பிதா பி.எம்.இமானுவேல்
தமிழ்க் கலையைக் காப்பதற்கென்றே அவதாரமெடுத்தவரோவென்று எண்ணுமளவிற்கு கலைக்காகத் தன்னைத் அர்ப்பணித்து, அதற்காகப் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர் தான் திருமெற்றாஸ் மயில் திருமெற்றாஸ் மயில் எல்லோரும் நேசிக்கும் ஒரு கலைஞன். எல்லோரையும் நேசிக்கும் ஒரு கலைஞன். பாரம்பரியக் கலையே தன் மூச்சு, பேச்சு என்று தன் முழு வாழ்வையும் அந்த நற்பணிக்காகவே அர்ப்பணிக்கும் ஒரு கலைப் பித்தன். தமது செல்வாக்காலும், முயற்சியாலும் பரம்பரைக் கலையையும், கலைஞர்களையும் வளர்த்தவர் திரு.மெற்றாஸ் மயில், அவரது அயராத உழைப்பால் எழுந்த பல நூல்கள் மரபுக் கலையில் மகத்துவத்தை - காலமெல்லாம் எடுத்துப் பேசக் கூடியவை.
தமிழ் பேசும் மக்களைப் பெரும் பகுதியினராகக் கொண்டு வாழ்கின்ற எம் வட மாநிலத்தில் பாரம்பரியக் கலைகளை வளர்க்கும் பல கலைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான திருமெற்றாஸ் மயில் பல துறைகளில் கலைப் பணி செய்யும் கலைஞராவார். இவர் ஆற்றுகை நாடகராக மட்டுமன்று ஆவணப்படுத்தும் செயலாளராகவும் திகழ்ந்து வருகிறார். பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப் பட வேண்டுமென்று அசையாத செயற்பாட்டுடன் ஒலி, ஒளி, நாடகப் பதிவுகள் செய்வதிலும் , இளைஞர், முதியவர்கள், கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், அவர்களை கெளரவித்து நல்ல ஸ்தானத்தை வழங்குவதிலும் பாடுபட்டு வருகின்ற கலைஞராவார். இவர் சிறந்த நடிகர், நெறியாளர், தயாரிப்பாளர், கிராமியக் கலைப் பாடகர். எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த 'வேழம் படுத்த வீராங்கனை நாட்டுக் கூத்து மூலமாக வரலாறு படைத்தமை பெருமைக்குரியது.
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கடமையாற்றிய இவர் தற்போது யாழ்ப்பாணக் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றுகின்றார். இவர் தமது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழிக் கை வரலாற்றில் அலுவலக கடமையோடு கலை, பண்பாடு சம்பந்தமான நாடகங்களை தயாரித்து மேடையேற்றியு முள்ளார். யாழ்ப்பாணப் பிதேசத்தில் மட்டுமன்றி, வன்னிப் பிரதேசத்திலும் கலை, பண்பாடு, பாரம்பரியங்களை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதுடன் இதற்குத் தனது பாரிய பங்கினையும் நல்கி வருகிறார்.
புவியியல் சிறப்புப் பட்டதாரியான இவர் ஒரு சிறந்த நிர்வாகியுமாவார். பல்வேறு மாவட்ட தேசிய விருதுகளைப் பெற்ற இவருக்கு தங்கக் கிரீடம் அணிவித்து அதியுயர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. எங்கள் மண்ணில் வாழும் நாட்டுக் கூத்து கலைஞர்களே இவ்வாறான ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
தனது 52வது வயதில் இசை நாடகத் துறையில் பிரவேசித்து சத்தியவான் சாவித்தி நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற முயற்சியாலும் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பை
பாரம்பரிய கலைகள்
அமைத்து அதன் செயலாளராகவும் பணி புரிந்து வருகிறார். வன்னியின் மைந்தனாக இருந்தாலும் தான் வாழும் - கடமை புரியும் பிரதேசங்களின் மைந்தனாகத் தன்னை எண்ணி கலைப்பணி, சமூகப் பணி இவருடைய சிறந்த காட்டுவதாகவும்,
செய்வது நல்லெண்ணத்தைக் கலைகள் ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக மரபு வழி இசை நாடகங்கள் ஒன்பது என்ற நூலினையும் வெளியிட்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 1999ல் வாழ்ந்து கொண்டு இருந்த பெரும்பாலான இசை
நாடகக் கூத்துக் கலைஞர்களின் வரலாற்றைத் தொகுத்து இசை நாடக கூத்து மூத்த கலைஞர் வரலாறு' என்னும் நூலினை 1999 ஜூலை மாதம் வெளியிட்டார். 1999ம் ஆண்டுக்கான அரசின் இலக்கிய விருதினை வடக்கு கிழக்கு கல்வி பணி பாட்டு இலக்கிய விருதினையும் இந்நூல் பெற்றுக்கொண்டது. இவர் எழுதிய மண்வாசனையில். என்னும்
அலுவல்கள் அமைச் சினி
வரலாற்று நாடக நூல் 2000ம் ஆண்டுக்கான இலக்கிய விருதினை வடக்கு கிழக்கு கல்வி பண்பாட்டு அமைச்சிடமிருந்து பெற்றுக் கொண்டது.
தமது வாழ்வில் பெரும் பகுதியை கலைக்காக அர்ப்பணித்து, அக்கலையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இசை நாடகக் கூத்துக் கலைஞருடைய வரலாற்றைத் தனது பல அர்ப்பணிப்புகள் மூலம் வெளிக் கொணிடு வந்து மொத்தமாக தமிழ் சமூகத்திற்கு தொண்டு செய்கிறார்.
மங்கிக் கிடக்கும் கலையையும கலைஞர்களையும் ஊக்குவித்து வழி காட்டியவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் அநேகம். கடும் முயற்சியோடு சிந்தனையில் உதித்ததை செயலாற்றும் கர்மவீரன், எதையும் வழி நடத்தும் தியாகி. இத்துணை தமிழ்க் கலைக் காவலனை நாம் அடைந்து கொண்டது எம் பெரும் பாக்கியம்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
இறைவனி இவர் சேவையை
ஆசீர்வதிப்பாராக!

Page 5
ஈழத்து இலக்கியவுலகில் மூன்றரை தசாப் தங்களுக்கு மேலாகத் தனி படைப்புகளால் அணி சேர்த்திருக்கும் இலக்கியப் படைப்பாளி, தெணியான் க.நடேசன் ஈழத்து இலக்கியப் புனைகதை
U வரலாற்றிலிடம் பெறும் தகைமையுடயவர், சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு நிலைச்
60C சர்ச் சைக் கட்டுரையியல் ஆகிய A. முத்துறைகளில் ஆழமாகக் கால் பதித்தவர். U 1942 -ஆம் ஆண்டு வல்வெட்டித் துறை பொலிகண்டியில் பிறந்த தெணியான், தனது 0በr ஆரம்பக் கல்வியை கரவெட்டி தேவரையாளி ୩f இந்துக்கல்லூரியிலும், உயர் கல்வியை
கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும், A பின்னர் கொழும்புத் துறை ஆசிரிய தெணியானி கலாசாலையிலும் பயின்று, ஆசிரிய சேவையில தனி னை இணைத்துக் கொண்டார். தான் கல்வி கற்ற கல்லூரியில் உப அதிபராகக் கடமை புரிந்து ஓய்வு
பெற்றார்.
1964-ம் ஆண்டு 'விவேகி' சஞ்சிகையில் இவருடைய 'பிணைப்பு' என்ற முதலாவது சிறுகதை வெளிவந்தது. அதன் பிறகு தெணியானின் பேனை இன்னும் மூடி வைக்கப் படவில்லை. இதுவரை நூற்றிப் பதின் மூன்று சிறுகதைகளைப் படைத்துள்ளார். அவற்றில் 'மல்லிகையில் மட்டும் 48 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. 'மல்லிகை சஞ்சிகையின் தளத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட தெணியான், தன்னைத் தரமான சிறுகதைப் படைப்பாளியாக அடையாளங் காட்டிக் கொண்டார். இவரது சிறுகதைகளைக் கலைவாணி, கலைச் செல்வி, வீரசேகரி, ஈழநாடு, செய்தி, ஞான தீபம், சிந்தாமணி, தாமரை, அஞ்சலி, புதுயுகம், மலர், தினகரன், ஈழமுரசு, முரசொலி, நான்காவது பரிமாணம், ஞானம் முதலான பல சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் விரும்பிப் பெற்றுப் பிரசுரித்துள்ளன. இவரது சிறுகதைகளின் தொகுப்புகள் சொத்து, மாத்து வேட்டி, என்பன ஆகும். குறைந்தது எட்டுத் தொகுதிகள் வெளியிடக் கூடியளவிற்கு இவரிடம் படைப்புக்களுள்ளன. ‘மனசோடு பேசு' என்ற தலைப்பில் தெணியானின் அடுத்த சிறுகதைத் தொகுதி வெளிவரவுள்ளதென்ற செய்தி, ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு ஆரோக்கியமான சங்கதி.
 

1970- இன் பின்னர் உருவான படைப் பாளிகளில் முனி னணிச் சிறுகதையாசிரியராகத் தெணியானைக் கொள்ள்லாம். மார்க்சியச் சிந்தனை இலக் கியம் படைக் கும் முற்போக்காளனாகத் தெணியான் உள்ளார். தனக்குச் சரியெனப் பட்ட கருத்தைப் பிடிவாதமாக வலியுறுத்தும் பண்பினை அவரது சிறுகதைகளில் காணலாம். ‘தமது சமூகத்தின் ஒடுக்கு முறைகளை விபரிப்பதன் மூலமே இலக்கியக் கணிப்புப் பெற்று, மனித இன்னல் களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று அவற்றை இலக்கியமாகக் காட்டும் போது ஏற்படும் மனித ஆவேசம் என்னும் கொள்கையை வழிப் படுத் திய முற்போக் குப் பார்வையின் வாரிசான இவர், அந்த மனித இன்னலைக் குறிப்பதாக ஒரு குழுவினரிடத்தே மாத்திரமின்றிப் பாரம்பரியச் சமுதாயம் முழுவதிலுமே காணும் முதிர்ச்சியைப் பெற்றவர்’ எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி இவரைப் பற்றிக் குறித்துள்ளமை ஏற்புடைய தாகும். அடக்கி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக் குரலாக அவரது சிறுகதைகள் பலவும் பேசினாலும், குடும்ப உறவுகளை மென்மையான இறுக்கத்துடன் பிணைத்து எழுதுவதில் வல்லவர். சாதியம், மார்க்சியம் ஆகிய கருத்து நிலை இவரது சிறுகதைகளில் மிகுந்த நிற்கின்றன. எல்லாம் மண் தான், கூற நன்று தான், தன்னிறைவு தேடுகிறார்கள், இவளின் கதை, இனியொரு விதிசெய்வோம், மனிதன், மானங்கெட்டவர்கள், வடுக்கள் அழிய,
மாத்து வேட்டி, உவப்பு, உள் அழுகல், பூதம் முதலான நல்ல சிறுகதைகளைப் படைத்துள்ளார். நானாளப்பட வேண்டும் என்ற சிறுகதை உன்னதமான படைப்பு. இந் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் தனித்து நோக்கத் தக்கன.
தெணியானின் சிறுகதைகள் சமூகத்தின் அடிவேரைச் சுற்றி நிற்கும் சமூக விமர்சனங்கள். அவரது படைப்புக்களுடாக இந்தச் சமூகத்தில் பல்வேறு கோணத்தில் வெட்டு முகத் தோற்றங்களைக் கண்டு கொள்ளலாம். பழமை, பொய்மை, அறியாமை இருளில் மூழ்கியும், அகம்பாவம் புரையோடியும், கிடக்கும் இந்தச் சமுதாயம் மாற்ற முறவேண்டியது தவிர்க்கவியலாத இயங்கியல் நியதியாகும் . மாற்றத்திற்கான இலக்கு எது என்பதையும் அவரது கதைகள் திசை காட்டி நிற்பதற்குத் தவறவில்லை என அவரது மாத்து வேட்டிச் சிறுகதை முன்னுரை குறிப்பிடுகின்றது. எனினும் அவர் தான் கூற விரும்புகின்ற கருத்தை சிலவேளை வலிந்து கதைகளில் முன் வைப்பது இயற் பணி புக்கு மாறாக அவற்றின் கலைத்துவத்தை இழக்க வைத்து விடுகின்றதென்ற கருத்துமுள்ளது.
சமகாலப் பிரச்சினைகளுக்கு வடிவம் தந்த படைப்பென ‘இன்னுமா’ என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம். போராட்டச் சூழலின் விளைவான யுத்த அனர்தி தங்கள் அவரது இச் சிறுகதையில் உள்ளடக்கமாக
7

Page 6
அமைந்தாலும் , சாதியத் தனி பினர் னணியிலேயே தெணியானி அவற்றை எழுதியுள்ளார். வெடிச் சத் தத்தில் ஊரே அலி லோ ல கல்லோலப் படுகின்றது. ஒரு குடும்பம் மாமா வீட்டில் அடைக்கலம் புகுகின்றது. சுற்றி வளைப்பில் இளைஞர்கள் பிடிபடுகின்றனர், செய்தி வருகின்றது. ‘ஒரு ஐம்பது அறுபது பேர் வரையில் இருக் குமாம் . எங்கட வாசிக சாலைக்குள்ளே அடைச்சுப் போட்டுக் குண்டு வைச்சுப் போட்டாங்களாம்”
“அது சரி தம்பி, உங்கை ஆரார் செத்தது?”
“நீங்கள் கவலைப் படாத யுங்கோ,
அண்ணை. எங்கடை ஆக்களில்லை. அது எல்லாம் சமரவாகுப் பள்ளரும், இலந்தைக் காட்டு நளவரும் தானாம்” என்று இச் சிறுகதை முடிகிறது. மனம் வலிக்கின்றது. தெணியானின் இக் கால கட்டக் கதைகளில் இவரின் கதை, உவப்பு, இருளில் நடக்கின்றோம் என்பவை குறிப்பிடத் தக்கவை.
தெணியான், ஈழத்து நாவலா சிரியர்களில் முக்கியமானவர். விடிவை நோக்கி, கழுகுகள், பொற் சிறையில் வாடும் புனிதர்கள், மரக் கொக்கு, காத்திருப்பு, கானலில் மான் முதலான நாவல்களை ஈழத்து இலக்கியத் துறைகளுக் குத் தந்துள்ளார். தெணியானின் கருத்தியல் நிலை. சிறுகதைகளில் உள் ளவாறு நாவல்களிலும், காணப்படுகின்ற போகிலம், நாவல்களில் மிக மிக
நேர்த்தியாக அவை வந்துளளன என்பேன். ஈழத்தில் வாழ்ந்து வரும் பிராமணர்களில் ஒரு பகுதியினர் அனுபவிக் கும் ஏழ் மை யை "பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவல் பேசுகின்றது. ‘காத்திருப்பு ஈழத்து நாவல்களில் ஒரு பரிசோதனை முயற்சி. தெணியானின் நாவல்கள் சமூகத்தில் அதிகம் பேசப்படாத மூலைகளை நன்கு அவதானித்த ஒரு படைப் பாளனினி பார்வையாக அமைந்துள்ளன. நாவல்களை விட சிதைவுகள், பனையின் நிழல், பரம்பரை அகதிகள் எண் பன தெணியானி படைத்தளித்த குறு நாவல்களாம். அவை முறையே தினகரன், ஈழமுரசு, ஈழ நாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. அவை வெளிவந்த வேளை பேசப்பட்ட நாவல்கள். நூலுருவில் வெளிவரில் ஆய்வாளரால் விதந்துரைக்கப் படும் தரத்தினை நிச்சயமுடையவை.
தெணியானைச் சிறுகதை, நாவல் துறைகளுக்கு அப்பால், நல்லதொரு ஆய்வுக் கட்டுரையாளன் என்பது பலரும் அறிந்த விடயமாகும் . மல்லிகையில் பல்வேறு இலக்கிய நிலைகளின் செயற்பாடுகளையும், அவலங்களையும் சுட்டி எழுதிய போது, அவை இலக்கியவுலகில் அளப்பரிய சர்ச்சைகள் உண்டாக்கி நிச்சயமாக ஆரோக் கரிய LD T 6 60) 6. JU T 85 இருந்துள்ளன. நணர் பனாக
இருந்தாலும், அவருடைய எழுத்துல
வாழ் க் கையோடு சம மந் தப்
8

பட்டவர்களாக இருந்தாலும் , அவருடைய பார்வையில் இலக்கியக் கருதி தியல் கணி டன த்திற்கு உள்ளாகாது தப்பிவிடுவதில்லை. கணி டிக் கப்பட வேணி டியதைக் கண்டிப்பார். இவ்விடத்தில் தான் தெணியானை என்னால் புரிந்து கெள்ள முடியவில்லை. எவர்கள் கண்டிக்கப் பட்டார்களோ, அவர்கள் அனைவரும் தெணியானின் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமான்வர்களாக விளங்குகின்றனர்.
தெணியானின் பல படைப்புக்கள் பரிசில்களையும், விருதுகளையும் பெற்றுள்ளன. 1967 இல், யாழ் இலக்கிய நண்பர்கள் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவரின் 'பெண் பாவம்' என்ற சிறுகதை முதற் பரிசினைப் பெற்றுள்ளது. சுப மங்களா, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து நடாத்திய குறுநாவல் போட்டியில் ‘சிதைவுகள்' பரிசு பெற்றது. 'தகவம்' அவருடைய பல சிறுகதைகளுக்குப் பரிசில்கள் வழங்கியுள்ளது. தகவத்தின் முதனி முதல் பரிசுத் தேர்வு தெணியானின் ‘குருகுலம்’ என்ற சிறுகதையாகும். தெணியானின் மரக் கொக்கு என்ற நாவல், 1994 இல் இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் சிறந்த நாவலுக்கான பரிசிலையும், வடக்கு - கிழக்கு மாகாண இலக்கியப் பேரவையின் பரிசினையும் ஒருங்கே சுவீகரித்துக் கொண்டது, ஒரே நாவல் மூன்ற இலக்கிய நிறுவனங்களின் பரிசில்களைப் பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். 'காத்திருப்பு' என்ற
தெணியானினி நாவல் 1999 ஆண்டுக்கான வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசினைப் பெற்றுக் கொண்டது.
தெணியான் - க. நடேசன் பல புனை பெயர்களுள் தன்னை மறைத்துக் கொண்டு எழுதியவர். நிருத்தன், கூத்தன், க.ந, ஐயனார், அம்பலத்தரசன் எனப் பல வடிவங்களை இலக்கியத்தில் அவர் எடுத்துள்ளார். கவிதைகள், வானொலி நாடகங்கள் என்பனவும் அவரால் படைக்கப் பட்டன.
இலங்கை முற்போக்கு எழுத்தளர் சங்கத்தைச் சார்ந்த தெணியானின் இலக் கிய நோக்கு, சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக இலக்கியம் அமைய வேண்டும்; துன்பப் படும் மக்களினி கணிணிரே இலக்கியமாக வேண்டும் என்பதாம். யாழ்ப்பாணத்து அடிநிலை மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் அவலங்களையே தான் இலக்கியம் ஆக்குவதாகக் கூறியுள்ளார். உண்மையில் தெணியான் இலக்கிய நோக்கினை அவரது படைப்புக்கள் நன்கு பிரதிபலிக்கின்றன. படைப்பின் வெற்றியதுவே படைப் பனுபவம் வெளிப்படும் இலக்கியம் என்றும், எப்பொழுதும் பேசப்படும்.
புதியதைச் சொல் புதிதாகச் சொல்

Page 7
6.
9.
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு ~ புதிய அநபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது)
எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் ~ (யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) நானும் எனத நாவல்களும் ~ செங்கை ஆழியான் கிழக்கிலங்கைக் கிராமியம் ~ ரமீஸ் அப்தல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை) டொமினிக் ஜீவா
முனியப்ப தாசன் கதைகள் ~ முனியப்பதாசன்
10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) ~ பாலரஞ்சனி
II,
I2.
I3.
4
IS.
I6.
.
இப்படியும் ஒருவன் ~ மா. பாலசிங்கம்
அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) சேலை ~முல்லையூரான் மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் (30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) நிலக்கிளி ~ பாலமனோகரன் நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) தயாராகின்றத. தொகுப்பு ~ செங்கை ஆழியான்
மல்லிகைப் பந்தல் சமீபத்தில் ANMOób/V வெளியிட்டுள்ள நூல்கள்
விலை: 250/-
65osu: 14o/F
விலை: 180/=
விலை: 175/=
650so: 11 of F
sou: 8o/F
ωςλου: Ioo/=
65oGu: 110y
விலை 150/= 6fsö)6vo: ébo/=
விலை 150/=
விலை: 175/*
ിജ്ഞ: 150/=
விலை: 275/=
==/t4o :ںهjsoمه ossoso: 1 so/=
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
O
 

-யுகதர்மன்
சந்தி கொண்டு வந்திருந்த பொருட்களை அவளது வீட்டார், அயலவர்கள் எல்லோரும் பார்த்து முடித்து, அவளையும் குசலம் விசாரித்து, ஒரே கேள்வியைப் பலமுறை கேட்டுத் திணறடித்து விட்டார்கள். இவர்களுடைய ஆரவார மெல்லாம் முடிய இரவு பதினொரு மணியாகி விட்டது. முதல் நாள் இரவும் சரியான தூக்கமின்றிப் பிரயாணம் செய்து அதிகாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்தது முதல் இப்போது இந்தப் படுக்கையில் சரியுமட்டும் வசந்திக்கு ஒய்வே இருக்கவில்லை. ‘ராத்திரி நித்திரை முழிச்சு வந்தவள் அவளைக் கொஞ்சம் படுக்க விடுங்கோவன்’ என்ற குரல்கள் அடிக்கொருதரம் கேட்டாலும், அவ்விதம் செய்ய அவளை ஒருவரும் விடவில்லை.
வசந்தி ‘லற்றஸ் போம் மெத்தையில் படுத்திருந்தாள். பக்கத்தில் மின்விசிறி மிதமாகக் காற்றை வீசிக் கொண்டிருந்தது. அம்மாவின் கையால் சமைத்த சாப்பாட்டையும், ஒரு பிடி பிடித்தாயிற்று. இருபத்தைந்து வருடங்களாகச் சாப்பிட்ட வகையறாக்களிலிருந்து கடந்த இருவருடங்களாக ஒய்வெடுத்திருந்த நாக்கு இன்று அவற்றைக் கண்டதும் கோப்பையில் இருந்தவற்றையெல்லாம் பாரபட்சமின்றி வயிற்றினுள் தள்ளி விட்டது. அப்படியிருந்தும் காலையில் நீராடியது முதல் அவளை அணைக்கத் துடித்த நித்திரா தேவி இப்போது எங்கேயோ போய்விட்டாள். வசந்தி புரண்டு, புரண்டு படுத்தாள். அவள் கொண்டு வந்திருந்த அழகிய சுவர்க் கடிகாரம் பன்னிரண்டு முறை இனிமையாக ஒலியெழுப்பி ஓய்ந்தது.
மெல்லிய நீல வர்ணம் பூசியிருந்த அந்த அறை - நீல இர்வு மின் விளக்கில் சற்றுக் கருமையாகத் தெரிந்தது. அவளது கட்டிலுக்கு எதிர்ப்பக்கக் கட்டிலில் அகல்யா நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் போகும் போது ஒடிந்து விழுவது போல் ஒடிசலாக இருந்த அகல்யா வாளிப்பாக வளர்ந்திருந்தாள்.
l

Page 8
அவளைப் பார்த்த போது தன்னுடைய கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது வசந்திக்கு. வசந்தியின் அப்பா சம்பந்தர் ஒரு இளைப்பாறிய பொலிஸ் காரன். அவர் பொலிஸ் சேவையில் தேர்ந்ததிலிருந்தே குடியும் அவரோடு வேண்டும். இதனால் இளைப்பாறும் வயதிற்கு முன்பே வீடு வந்து சேர்ந்து விட்டார். ஆனாலும் மதுவை அவர் கைவிடவில்லை. மூத்த மகன் வரதனுக்கு ஏட்டுக் கல்வி ஏறவில்லை - தொழிற் கல்வி ஏறியது. அதன் பயனாக அவ்வூரில் இன்று அவனொரு தலை சிறந்த கார் மெக்கானிக். வரதனைக் கண்டாலே ஓடாத காரெல்லாம் ஓடும். என்று சொல்லுமளவுக்கு அவனுடைய பெயர் பிரசித்தமாகவிருந்தது. அவனும் குடும்பத்தை நன்றாகக் கவனித்தான். இப்போது கட்டியிருக்கும் இந்த வீட்டுக்கு அத்திவாரம் போட்டதே அவன் தான். ஊரில் சாதாரணப் பரீட்சையை முடித்த வசந்தியை உயர்தர வகுப்பில் சேர்த்தான். வரதன் உழைக்கத் தொடங்கிய பின்னரே அகல்யா, அடுத்த தீபன், அதற்கடுத்த குமுதா ஆகியோருக்கு பாடசாலைப் புத்தகங்களை ஒழுங்காக வாங்க முடிந்தது. அடிக்கடி வரதன் சொல்வான் ‘வசந்தி, எனக்கு இந்த எண்ணை படிந்த சறமும் சேட்டும் தான் நிரந்தர யூனிபோம். உனக்கு இப்ப வெள்ளைக் கவுணி யூனிபோமாயிருக்கலாம். ஆனால் நீ வெள்ளைக் கோட் போடவேணும்’ வரதன் வசந்தியை வைத்தியராக்க ஆசைப்பட்டான்.
அதற்குரிய திறமையும் அவளிடமிருந்தது. மற்றச் சகோதரர்களைப் பற்றியும் வரதன் என்ன மனக்கோட்டைகளைக் கட்டி யிருக்கிறானோ? இவற்றிலெல்லாம் மணிணை அள்ளிப் போட்டாள் கனகம்மா. கனகம் இவர்களுக்கு உறவு என்ற முறையில் போக்குவரத்து இருந்தது. அவளுக்கும் வயது வந்த பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் முத்தவள் வனஜா, இந்தப் பெயரை விட "கணகத்தின்ரை அடங்காப்பிடாரி' என்ற பெயரே ஊரில் அவளுக்கு வழங்கியது. அவள் கிடைக்காத ஊர் வாய்கள் சில வனஜாவின் பெயரை வரதனின் பெயரோடு சேர்த்து மெல்லத் தொடங்கின.
ஒரு நாள் இரவுச் சாப்பாட்டு வேளை வசந்தி பரிமாற வரதன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அம்மா கேட்கிறாள் என்ன வரதன் ஊரிலை கதையெல்லாம் ஒரு மாதிரியாக் கிடக்கு.
‘நீங்களும் உதை நம்புறீங்களோ அம்மா? கனக மக்கா வீட் டை நீங்களெல்லாம் போய் வாற மாதிரித் தான் நானும் போய் வாறன். எனக்கு வேறை ஒரு எண்ணமும் இல்லை'.
‘உன்னை எனக்குத் தெரியாதே, ஆனால் வீண் கதைகளுக்கு ஏன் இடம் வைப்பான்?
‘சரியம்மா. நான் இனிமேல் அந்தப் பக்கமே போகவில்லை. சரிதானே?

‘எங்கடை ஊராக்களுக்கு விசர். கிழக்கும் மேற்கும் போலயிருக்கிற அண்ணாவுக்கும் வனஜாவுக்கும் முடிச் சுப் (3UT (6860T Ló. வேலையில்லாததுகள். அம்மா உந்தக் கதையளை விடுங்கோ. அண்ணா உந்தக் குப் பையளைப் பற்றி யோசிக்காமல் நீ வடிவாய்ச் சாப்பிடு.
கொஞ்ச நாள் கழித்து வசந்தியின் வீட்டுக்கு வந்த கனகம், ‘என்ன தம்பி வரதன் கொஞ்ச நாளா உன்னை எங்கட வீட்டுப் பக்கம் காணயில்லை'
‘நேரமில்லை கனகமக்கா. இப்ப உந்த மினி வான்களும் வந்த பிறகு 'கறாச்சிலை தேத்தண்ணி குடிக்கவே நேரமில்லை.’ இனி வீட்டுக்கு அத்திவாரமும் போடப் போறம். அந்த வேலைகளையும் பாக்க வேணும்'.
வரதன் கூறுவதில் உண்மை யிருந்தாலும் இதனை இப்போது அவன் கூறுவதன் பின்னால் யார் இருக்கக் கூடும் என்பதனைக் கனகம் யோசிக்கத் தொடங்கினாள். அதனால் ஒன்றும் கதைக்கவில்லை. சில நாட்களின் பின் * கறாச்' இற்குத் தேவையான சிலவற்றை வாங்குவதற்காக வரதன் யாழ் நகருக்குப் போவதற்காக மத்தியானத்தோடு வீட்டுக்கு வந்து குளித்துச் சாப்பிட்டான். பின் அணிந்து கொள்வதற்காக சூட்கேசுக்குள் “சேட் தேடினான். சைட் பக்கம் தையல் விட்டுப் போன சேட் ஒன்று தான் கிடைத்தது.
* அம்மா, தம் பி நேற்று
லோண்றியாலை உடுப்பு எடுத்துக் கொண்டு வரயில்லையோ?”
‘‘இனி னமும் வேலை முடியேலையாம். இண்டைக்கு எப்படியும் தாறதெண்டு சொன்னாங்களாம்".
“யாழ்ப்பாணம் அவரசம் போக வேணும். சேட் ஒண்டு கிடக்கு. சைட் பக்கம் தையல் விட்டுப் போச்சு. தங்கச் சியாக்களும் பள்ளிக் கூடத்தாலை வர நாலு மணியாகும். அம்மா வனஜா வீட்டை குடுத்துத் தைப்பிச்சுக் கொண்டு போறன்’
குசினிக்குள் இருந்த அம்மாவின் காதில் இவை விழுந்தனவோ தெரியாது. வரதன் வாசலைத் தாண்டிப் போய் விட்டான். கனகம்மா வீட்டை நோக்கி, வனஜா அறைக்குள் இருந்த மெசினில் சேட்டைத் தைத்துக் கொண்டிருக்கிறாள். அவளை அவசரப் படுத்திக் கொண்டு வரதனும் மெசினின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறான். திடீரென்று வெளியே சத்தம் கனகம்மாவின் குரல்,
“நானும் முதல்லை நம்பேல்லைத் தான், நீங்களே இப்ப பாருங்கோவன். அலுவல் எண்டு வந்தா வெளியிலை இருந்து கதைச்சிட்டுப் போறது. இனி இவளை நான் ஆற்றை கையிலை பிடிச்சுக் குடுக்கிறது”
வரதன் வெளியே வந்தான். கூடவே தைப்பதை விட்டு வனஜாவும் வந்தாள். அயலில் உள்ளவர்களில் ஆணி களும் பெணி களுமாக பதினைந்து இருபது (8 LifI
13

Page 9
கூடியிருந்தனர். வரதன் விடயத்தை ஊகித்து விட்டான். தனது நிலையைத் தெளிவு படுத்த வாயை உன்னினான். அதை மீறிப் பல குரல்கள் எழுந்தன. விடயத்தைக் கேள்விப் பட்டு வரதனின் அம்மா ஓடி வந்தாள். அவளும் கனகம்மாவும் சிறிது நேரம் இரண்டு பெட்டைக் கோழிகளைப் போல் சண்டையிட்டார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று ஒருவருக்குமே புரியவில்லை. சத்தத்தைக் கேட்டு மேலும் பலர் கூடி விட்டனர். கூட்டம் இரணர் டு பட்டது. வாதப் பிரதி வாதங்கள் நடந்தன. முடிவில் * தகப்பனில்லாத பிள்ளை' என்ற அனுதாப முத்திரை வனஜாவிற்குக் குத்தப் பட்டு பதிவுகாரர் வரவழைக்கப் பட்டு திருமணப் பதிவு செய்யப் பட்டது. நாள் , நட்சதி திரம் , சாதகம் பற்றியெல்லாம் அங்கு யாரும் வாய்திறக்கவில்லை. அடுத்த மாதம் வனஜாவின் கழுத்தில் தாலியும் ஏறியது. வரதன் தனது வீட்டாருக்குச் செய்ய வேண்டியவற்றைத் தொடர்ந்தும் செய்து வந்தான். கனகம்மாவின் மகள் தான் தாய்க்குச் சற்றும் சளைத்தவளல்ல என்பதை நிரூபிக்க ஆரம்பித்தாள். விளைவு - வரதனுக்கும் வனஜாவுக்கும் அடிக் கடி சச்சரவுகள் ஏற்படத் தொடங்கின. தந்திரத்தால் ஏற்பட்ட திருமணம் விவாகரத்தை நெருங்கியது. தமது நிலை எப்படிப் போனாலும் பரவாயில்லை மூத்த மகனின் குடும்ப வாழ்வு சீரழியக் கூடாது என்று வரதனின் தாய் எண்ணியதால் விவாகரத்து தவிர்க்கப் பட்டது. வரதனின் வருகையும்
அவனது உதவிகளும் கொஞ்சம் கொஞ்சமாக நிற்கத் தொடங்கின.
இந்தக் கட்டத்தில் குமுதாவும் வயதுக்கு வந்து விட்டாள். செல்லம்மாவும் விழிப்படைத்து விட்டாள். வீட்டில் மூன்று குமர், குடிகாரத் தகப்பன். இன்னமும் மாணவனாகவே இருக்கும் தீபன். ஈழமண்ணில் புதிதாக வீசத் தொடங்கியிருந்த காற்றுச் செல்லம்மா மீதும் பட்டது. ஒரு காலத்தில் துணையின் றித் தம் பெண்பிள்ளைகளை வீட்டிற்கு வெளியே அனுப்பாத தமிழ்ப் பெற்றோரும், பொழுது சாயுமுன் பாடசாலைகள், அலுவலகங்களிலிருந்து வீடு திரும்பத் துடித்த தமிழ் யுவதிகளும் இன்று எவ்வாறு மாறினர்? பொருளைக் கருதி முன்னர் அறியாத நாடுகளுக்குப் போகிறார்கள் என்றால் எமது பண்பாடு மாறிவிட்டதா? அல்லது அதையும் மீறி எமது பொருளாசை வளர்ந்து விட்டதா? அன்றேல் சீதனத்தின் பிடி வர வர இறுகுகிறதா? நெருக் கடிகள் , தேவைகள் வரும் போது கட்டுப்பாடுகள், கொள்கைகள், பண்பாடு ஆகியவற்றை விட்டு விட வேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப் படுகிறானா?
வசந்தியை வெளி நாட்டுக்கு அனுப்பும் அலுவல கள் நடை பெறலாயின. யாரோ ஒரு தனவந்தனின் வீட்டுக்கு ஆயாவாகவோ வேலைக் காரியாகவோ போக வேண்டிய நிலை. ஏற்படக் கனகம்மா தானே காரணம் என வசந்தி அவளைத் தனக்குள் திட்டித் தீர்த்தாள். வேலை ஒரு
4.

புறமிருக்க, அவர்கள் எத்தகைய மனிதர்களோ என்றெண்ணி வசந்தி கலங்கினாள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு இரண்டு அல்லது மூன்று வருடங்களை எப்படியாவது ஒட்டிவிடலாம். ஆனால், அந்த வீட்டு மனிதர்கள் எப்படியிருப்பார்களோ என்ற எண்ணம் வசந்தியை அடிக் கடி குழப்பியது. ஒருவாறு வசந்தி வெளி நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தாள். அத்திவாரத்தோடு விடப் பட்ட வீடு பூர்த்தியாகியது. அகல்யா உயர்தரப் பரீட்சையுடன் படிப்பை நிறுத்திக் கொண்டாள். தீபன் சிறிய அளவில் வியாபாரமொன்றை ஆரம்பித்தான். அது apTJTab நடை பெற்றுக் கொண்டிருந்தது. வசந்தி எதிர்பார்த்துக் கிடைக்காத பல்கலைக் கழக அனுமதி குமுதாவுக்கு கிடைத்தது. அகல்யா புரண்டு படுத்திருக்க வாங்கிய கட்டில் ஓசைப் பட்டது. அவளுக்கென்ன நிம்மதியாகத் தூங்க முடியுந்தானே! விரும்பியவனைக் கைப்பிடிக்கப் போகிறாள். சிவதாசன் அகல்யா விவகாரம் வசந்தி போன பின் தான் ஆரம்பித்தது. அதனை ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டுவரச் செல்லம்மா புறப்பட்ட போது சீதனப் பிரச்சினை குறுக்கிட்டது. சிவா சொந்தமாக லொறி வைத்திருந்தான். அதை விற்றுவிட்டு நல்லதாக ஒன்று வாங்க வேண்டும் என்பதற்காகத் தனது தங்கைக்குரிய காணியை ஈடு வைத்துத் தரும்படி பெற்றோரைக் கேட்டுக் கொணி டிருந்தானி , செல்லம்மா திருமணப் பேச்சைத் தொடங்கியதும்
சிவாவின் பெற்றோருக்குப் புதிதாக ஒரு யோசனை தோன்றியது.
எதற்காக மகளுக்குக் கொடுக் கவிருக்கும் காணியை ஈடுவைக்க வேண்டும்? வசந்தி வெளி நாட்டில் உழைக்கிறாள் தானே சீதனமாகக் காசை வேண்டினால் மகன் லொறியை மாற்றலாந் தானே? காதலுக்கும் மேலாகக் காசு நின்றது. திருமணம் குழம்பி விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. வசந்திக்குத் தகவல் தெரிவிக்கும் கடிதத்தை செல்லம்மா சொல்லச் சொல்ல அகல்யா தான் எழுதினாள். கடிதமுடிவில் ‘அக்கா என்னுடைய வாழ்வு உன்னுடைய கையில் தான் இருக்கிறது” கடிதத்தின் ஏனைய பகுதிகளை விட இந்த வரி வசந்தியை அதிகமாக நெகிழ வைத்தது. கடிதம் கிடைத்த அன்றே "அவர்கள் கேட்டதைத் தருவதாகச் சொல்லுங்கோ’ என்று பதிலெழுதி விட்டாள் . வரதனி செயப் ய வேணி டியதைத் தானி செய்ய வேணி டியேற்பட்டது குறித் து பொறுப்புடன் கூடியதொரு பெருமிதம் ஏற்பட்டது வசந்திக்கு. வரதனுக்கு ஏற்பட்ட கதியில் இருந்து பாடங் கற்றால் தானி தரீபனி தனி பொறுப்புணர்ந்து குமுதாவுக்கு ஒரு வழி பணி னுவான் என்ற நம்பிக்கை வசந்திக்கு எப்படியோ ஏற்பட்டிருந்தது. இந்த வீடு குமுதாவுக்குத் தான். வசந்தி உழைத்த பணத்தில் வீடுகட்டி முடிக்க, அகல்யாவுக்குச் சீதனம் வழங்க எண்றெல்லாம் போக இன்னும்
சொற்பமே எஞ்சியிருந்தது.

Page 10
இனி தன்னைப் பற்றி எண்ண மிட்டாள் வசந்தி. தனக்கொரு துணை பற்றி அவளது சிந்தனை சென்றது. யாரோ ஒருவருடைய பிள்ளையைச் சீராட்டி, அவர்களுடைய உடைகளைக் கழுவி, வீட்டைச் சுத்தப் படுத்தி உழைத்தது போதும். அவளுக்கென்று குழந்தைகள், வீடு வாசல் , இதற்கெல்லாம் அவள் அருகதை உடையவளா? வசந்தி சுமாரான அழகி, குணம் குறைகூற இடமில்லை. ஆனால். ஆனால். வசந்தியின் தேகம் நடுங்கியது. வெளிநாட்டுக்குப் போய் மூன்று மாதங்கள் இருக்கலாம். அந்த வீட்டாரைத் தங்கமான மனிதர்கள் எனிறு கூற முடியாவிட்டாலும் சுமாரானவர்கள். வேலை ஓரளவு கஷ்டமாயிருந்தாலும் சம்பளம், மற்றும் வசதிகள் போது மானதாயிருந்தது. அன்றைய அந்த நாளை மீண்டுமொரு முறை எண்ணிப் பார்க்க வசந்தி விரும்பா விட்டாலும் அதனை மறக்க முடியுமா? நினைவை விட்டு அகலக் Ginquu 6îLuULDT SÐg5!?
மாதமொரு முறை வசந்தியுட்பட அந்த வீட்டார் ’அவுட்டிங் போவது வழக்கம் . நகரிலிருநுது 100 மை லி களுக்கப் பாலி உள் ள இடமொன்றுக்கு மறு நாள் "அவுட்டிங் போவதாக இருந்தது. அன்றிரவு வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான். வசந்தியின் வீட்டாருக்கு மிகவும் வேணி டியவன் . சில வியாபார விடயங்களைக் கவனிப்பதற்காக அங்கு இரண்டொரு தினங்கள் தங்கப் போகிறான். விருந்தாளியும் வீட்டாரும்
பேசினார்கள். முடிவாக விருந்தாளியைக் கவனிப்பதற்காக வசந்தி வீட்டில் நிற்கப் போகின்றாள். வசந்தி துணுக்குற்றாள். முன்னர் அறியாத ஒரு ஆணுடன் தனியே ஒரு
வீட்டில். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் போய் விடுவார்கள். மறுப் புச் சொல் ல முடியாது.
அவர்களுடைய வழக்கத்தில் இப்படித் தங்குவது ஒரு பாரதூரமான விடயமல்ல. ஆன படியா லி அவளுடைய ஆட்சேபனையை அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஆனால் வசந்தி வளர்ந்த கலாச்சாரம் அப்படியானதல்லவே. ஆனாலும் என்ன செய்வது? அவர்கள் "அவுட்டிங்' போய் விட்டார்கள். முதல் நாள் அந்த மனிதன் - பெயர் அவளுக்கு வாயில் நுழைய மறுத்தது பகல் முழுவதும்.வெளியே போய் விட்டு இரவு வந்தான். வசந்தி சாப்பாட்டைக் கொடுத்தாள். வரும் போதே குடித்து விட்டு வந்திருந்தான் போலும் . கண்கள் காட்டிக் கொடுத்தன. சாப்பிட்டவுடன் அவன் தனது அறைக்குப் போய் விட்டான். மறு நாள் வீட்டில் கொண்டு வந்து வைத்துக் குடித்தான். முதல் நாள் போல் சாப்பாட்டைக் கொடுத்து விட்டு வசந்தி தனது அறைக்குத் தூங்கப் போய் விட்டாள். அவன் கதிரையில் உட்கார்ந்து காலின் மேல் கால் போட்டவாறு சிகரட் புகைத்துக் கொண்டிருந்தான்.
நள்ளிரவுக்கு மேல் இருக்கும் அவளது அறைக் கதவை யாரோ தட் டினார்கள் . வீட்டார் வந்து
16

விட் டார்களோ என் றெணி னிக் கொண்டே ‘லைற்றைப் போட்டு விட்டு கதவைத் திறந்தாள். வாசலில் அந்த விருந்தாளி. அவனுடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. வசந்தி தன்னை நிதானிக்கு முன் அவளைத் தள்ளிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் அவன். வசந்தியின் சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டது. அவளுக்கு ஆங்கிலமும் நன்றாகத் தெரியாது, அந்த நாட்டு மொழியும் இன்னமும் பரிச்சயமாகவில்லை. அவனது நோக்கத் தை அவனர் தெளிவாகப் புரிந்து கொண்டான். தனக்குத் தெரிந்த சில ஆங்கில வார்த்தைகளைச் சொல்ல முயன்றான், ‘பிளிஸ் டோன்ட் டு என்றவற்றைத் தவிர வேறொன்றும் வெளிவரவில்லை. அவனோ மரம் மாதிரி நின்று கொண்டிருந்தான். கண்களில் நீர் வழிய அவளைக் கையெடுத்துக் கும்பிட்டாள். அது அவனுக் குப் புரிந்ததோ என்னவோ. அவனோடு போராடவும் முடியாது. நடுத்தர வயதினனாயினும் பல சாலி. என்ன செய்வது? திடீரென்று அவனுடைய காலில் விழுந்து கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கணிணிரை அருவியாகக் கொட்டினாள். அவன் குனிந்து அவளைத் தூக்கினான். வசந்தி பாதி மயக்க மடைந்தாளோ தெரியாது. விழித்தபோது வாடிய மலர்ச் சரம் போல் தான் கட்டிலில் கிடப்பதை உணர்ந்தாள். தன் இச் சையைத் தீர்த்துக் கொண்ட அந்த அந்நிய மிருகம் வெளியே போய் விட்டிருந்தது.
வசந்தி அழுதாள். அது ஒன்றைத தான் அவளால் அப்போது செய்ய முடிந்தது. செவ்வாய் தோறும் துர்க்கையம்மனுக்கு வசந்தி பேரால் அர்ச்சனை செய்வதாக அம்மா ஒருமுறை எழுதியிருந்தாள். அவள் இந்த மிருகத்திடம் சிக்கிச் சீரழிந்த போது துர்க்கை துணைக்கு வரவில்லை.
அவளர் படுக் கையை விட்டெழுந்தபோது தலையணை கணி ணfரால் G g5 Lü u LD T8#5
நனைந்திருந்தது. அவளது உள்ளம்
ஒரே சூன்யமாக விருந்தது. கட்டிலை விட்டெழுந்து யன்னலண்டை போனாள். அதைத் திறந்தபோது குளிர்ந்த காற்று சில் லென்று முகத்தில் பட்டது. இன்னமும் பொழுது புலரவில்லை. யணி ன லுTடாகக் கீழே குதித் து விட்டாலென்ன? அந்த நாலாவது மாடியில் இருந்து விழுந்தால் நிச்சயம் உயிர் தப்பாது, தற்கொலை. உடலை வீட்டுக்கு அனுப்புவார்களே? வீட்டார் அழுது துடிப்பார்கள்ே. அவர்கள் வாழ்வை வளம் படுத்த வந்த நான் அங்கு பிணமாகப் போய்ச் சேர்ந்தால் அவர்களது ஆசைகளில் மணி , இப்படியான நினைவுகள் சாவதற்கான தைரியத் தையும் அவளுக் குத் தரவில்லை. வெகு நேரம் மட்டும் குளிர்ந்த காற்று முகத்தில் பட நின்று கொண்டிருந்தாள். இனி என்ன செய்வது? ஊருக்குத் திரும்புவதா? அங்கு போய் என்ன செய்வது? ஒப்பந்தம் முடியமுன் திரும்புவதாயின் பிரயாணத்திற்கான பணத்திற்கு எங்கே போவது? கண்ணிரால் தலையணையை
17

Page 11
நனைத்தது போதாதென்று தனது உள்ளக் குமுறலை யாரிடமாவது சொல்லி வாய் விட்டுக் கதறி அழ வேண்டும் போலிருந்தது. இந்த அந்நிய தேசத் தில் அத்தகையதொரு ஆனி மாவை எங்கே தேடுவது? அவளோடு ஒன்றாக வந்தவர்கள் எல்லாம் எங்கெங்கோ தொலைந்தி ருந்தனர். வீட்டுக்கார அம்மாள் ஓரளவு நல்லவள். அவர்களது மொழியைச் சரியாகத் தெரியாமல் இப்படியொரு விடயத்தை அவளுக்குப் புரிய வைக்க (UPI9Ussgl.
உடல் தொடர்பு புனிதமானது. மனைவி எண் ற நிலையில் மனதிற்குகந்த கணவனுடன் திருமண அன்பில் அது நிகழும் போதே மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும்
ஏற்படுகிறது. ஒருபெயர் தெரியாத காம வெறியனின் பயமுறுத்தலால் அது தன் வாழ்வில் முதன் முதலாக ஏற்பட்டதை எண்ணும் போது வசந்திக்கு உடம்பு முழுவதும் எரிவது போன்றதொரு உணர்வு. அத்துடன் குமட்டிக் கொண்டு வந்தது. வாந்தி எடுத்தாள். குழாயைத் திறந்தாள். குளிர்ந்த நீர் கொட்டியது. அதன் கீழ் வசந்தி கல்லுப் பிள்ளையார் போல நின்று கொண்டிருந்தாள். குளிரில் உடல் வெட வெடத்தது. குளிருக்கு அஞ்சி இப் படி
அதிகாலையில் நீராடுவதேயில்லை. வெந்நீர் இருந்தபோதும் அவள் குளிர் நீரையே விரும்பினாள். வெந்நீர் அந்தக் குளிர் நேரத்தில் உடலுக்கு இதமாக இருக்கு மாயினும் உள்ளம் வெதும்பிக் கிடக்கையில் உடலுக்கு என்ன சுகம் வேண்டிக் கிடக்கிறது? உள்ளத்தைப்
18
 

போலவே உடலையும் உறைய வைக்கும் குளிர் நீரையே அவள் அந் நேரத்தில் விரும்பினாள். உடல் விறைக்கு மட்டும் நீராடிய வசந்தி வெளியே வந்தாள். அறைக்கு வந்ததும் அறை கழுவுவதற்கென்றே இருந்த குழாயைத் திறந்து அறையைக் கழுவினாள். தன்னுடைய முகத்தையே கணிணாடியில் பார்க்க அவள் விரும்பவில்லை. தலையைத் துவட்டிக் கொண்டே அடுக்களைக்குப் போனாள். சூடாகக் கோப்பி தயாரித் து அருந்தினாள். நொந்துபோன அவளது உடலுக்கும் மனதுக்கும் கோப்பியின் சூடு ஒத்தடம் கொடுப்பது போலிருந்தது. நெருங் கரிய நணர் பி , தாயப் போன்றவர்களின் மடியில் விழுந்து கதறியழுதால் மனச்சுமை குறையும் போலிருந்தது. அந்த ஆறுதலுக்கும் இங்கு வழியில்லை.
வெளியே கார் வரும் சத்தம். வீட்டார் வந்து விட்டார்கள். வசந்தி வாசலுக்குப் போனாள். கடைக்குட்டி ஓடிவந்து அவளைக் கட்டிக் கொண்டது. அந்தப் பிள்ளையையும் கூட்டிக் கொண்டே அடுக்களைக்குப் போனாள். இயந்திர கதியில் காலை ஆகாரத்தைத் தயாரித்து முடித்தாள். சாப்பிடும் போது தான் அந்த விருந்தாளி மிருகம் வெளியே வந்தது. அது வழக்கம் போல யாவருடனும் பேசியது. தான் ஒரு பெண்ணிடம் முறைதவறி நடந்து விட்டேனே என்ற உணர்வு அதனிடம் இருந்ததாகத் தெரியவில் லை. இப்படியான செய்கைகள் அதற்குப் பழக்கமானது போலும். ஆனால், வசந்தி
அப்படி இருக்க முடியுமா? அவர்களது பேச்சிலும் சிரிப்பிலும் வசந்தியிடம் காணப்பட்ட மாறுதலை யாரும் கவனிக்கவில்லை. அந்த மிருகம் கவனித்திருக்கலாம். ஆனால், அதுதான் மிருகமாயிற்றே! சாப்பாடு முடிந்ததும் அந்த மிருகம் புறப்பட்டது. போக முன்னர் வநந்தியின் கையில் சில நோட்டுக்களைத் திணித்து விட்டு “வழி லுக்ட் ஆவ்ர மீ வெறி வெல்” என்று ஆங்கிலம் பேசிவிட்டுக் குழந்தைகளை முத்தமிட்டது. அது வாசலைத் தாண்டியதும் வசந்தி அடுக்களைக்குப் போய் அந்த நோட்டுக் களை * கொட்பிளேற்’ றில் போட்டுச் சாம் பலாக் கினாள். அவற்றினி தொகையைக் θύη . அவள் பார்க்கவில்லை.
நாடுதிரும்புவதா, வாழ்வதா, சாவதா என்றெல்லாம் சிந்தித்தாள் வசந்தி. அவளால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. முதல் நாள் எடுத்த முடிவு மறுநாள் பிழையாகத் தோன்றியது. தற்கொலை செய்து உடல் ஊருக்குப் போனால் ஏன் உயிரை மாய்த்தாள் என்று பலவிதமான பேச்சுக்கள் கிளம்பும். ஆதாரமில்லாத விடயங்களுக்கெல்லாம் கையும் காலும் ஒட்டவைத்துப் பேசுவதில் தமிழர்களை யாரும் மிஞ்ச முடியாதென்பது அவளுக்குத் தெரியும். இரண்டு தங்கைகளினதும் வாழ்வு பாதிக்கப் படலாம். எதற்காக அவள் பிறந்த மண்ணை விட்டு வந்தாளோ அதில் மண் அள்ளிப் போட்டதாக முடியும். உடலை ஊருக்கனுப்பா விட்டாலுங்
19

Page 12
கூட இறப்பிண் கவலை . ஏன் .
இறந்தாள்? இந்த இரண்டுமே போதும் அம்மாவுக்கு. ஏற்கெனவே அண்ணனின் பிரச்சினையால் நொந்து விட்டாள் அகல்யா, குமுதாவின் கதி? குடிகார அப்பாவை நம்பியிருக்க முடியுமா? தீபன் தான் ஆண் பிள்ளை. இப்படியாக தற்கொலை எண்ணம் படிப்படியாக அவளிடமிருந்து அகன்று போனது. தற்கொலைக்கும் ஒரு அசட்டுத் தைரியம் வேண்டுமென்பதை அன்று தானி அவள் உணர்நீ தாளர் . மனப்போராட்டத்தோடு எப்படியோ இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. யோசித்துக் கொண்டே வேலை செய்ததில் எத்தனையோ தரம் ‘கொட்பிளேற்றில் கையைச் சுட்டுக் கொணர் டாளர் . தமி ளர்களை உடைத் திருககிறாள். சாப் பிட
மறந்திருக்கிறாள், நிம்மதியான தூக்கமில்லை.
இப் போது வீட்டிற்கு
வந்தாகிவிட்டது. தனக்கு நடந்ததை மறைத்துத் திருமணம் செய்யலாமா - அது தவறில்லையா? உண்மையைச் சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய பரந்த மனமுள்ள ஆண்பிள்ளை தனக்குக் கிடைப்பானா? இப்படியாக ஒடிக் கொண்டிருந்த வசந்தியின் மனம் அவளுக்கேற்பட்டதை அறிவு பூர்வமாக எண்ணிப் பார்க்கத் தொடங்கியது.
எனது விருப்புக்கு மாறாக ஒருவன் என்னுடன் முறை தவறி நடந்து கொணி டான். அவனை எதிர்க்க என்னிடம் தைரியமில்லை. நான் பெண். துளி கூட விருப்பமின்றி நடந்த அது
ஒரு விபத்து. எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. கால், கை இழந்தவர்கள், வேறு விதமாகக் காயப்பட்டவர்கள். காயப்பட்டவர்களின் தவறினால் ஏற்பட்ட விபத்தாயிருந்தாலும் கூட நாம் அவர்கள் மீது அநுதாபப் படவோ அன்றேல் உதவவோ தயங்குவதில்லை. ஆனால் இப்படியானதொரு விபத்து ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு விட்டால் அதற்கு எத்தனையோ அர்த்தங்கள், வியாக்கியானங்கள். நானாகச் சோரம்
போனால் நான் நெறி கெட்டவள் தான்.
ஆண்கள் தமது உடல் வலிமையைப் பயன்படுத்திப் பல மற்ற பெண்களிடம் முறைதவறி நடந்தால் பெணி கற்பிழந்தவளா? கற்பின் அர்த்தத்தை
நமது சமுதாயம் சரிவரப் புரிந்து
கொள்ள வில்லையா?
ஒரு பெணி ஆணினால் கொலையுண்டால் ஆண் குற்றவாளி - இறந்த உடலுக்கு அநுதாப மரியாதையும் கிடைக்கிறது. ஆனால் ஆணி ஒரு பெண்ணிடம் முறை தவறினால் பழி பெண்மீது மட்டும். இது எவ்வகை நியாயத்தைச் சேர்ந்தது? ஆதி முதலே அதிகாரம் ஆண்களிடம் இருந்து வருவதனால் இப்படியான சம்பவங்களின் போது பெண் மீது மட்டும் வந்து சேர்கிறதா? அல்லது ஆண்களின் இத்தகைய தவறுகள் பெண்ணிடம் மட்டும் வெளியாகுமாறு அவளைப் படைத்தது கடவுளின் தவறா? கற்பு நெறி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என்பது எழுத்தில் மட்டுமே இருக்கிறது. நடைமுறை நிலைமை ஆணுக்கு மட்டுமே
20

சாதகமாக இருக்கிறது. இது சமுதாயத்தின் ஒரவஞ்சனையா? ஒரு காரியம் தவறென்று முழு அறிவுடன் தெரிந்து கொண்டு முழு விருப்புடன் யாருடைய வற்புறுத்தலுமினி ரி அதனைச் செய்யும் போது மட்டுமே ஒருவன் அதி தவறுக் கு முழுப் பொறுப்பாளியாகின்றான். அந்த வகையில் பார்த்தால். வசந்திக்கு உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு - நான் தவறு செய்யவில் லை. நான் சோரம் போகவில்லை. என்னை மீறிய பலத்தை என்னால் மேற்கொள்ள முடியவில்லை. எனக்கும் ஒரு ஆண் பிள்ளையின் பலமிருந்தால் அந்த மிருகத்திடமிருந்து தப்பியிருப்பேன். நான் தவறவில்லை. ஆனால் தவறு நடப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறேன். அது என்னுடைய பிழைதான். முன்னர் அறியாத நாட்டிற்கு, அறியாத மனிதரிடம் தங்கியிருந்து வேலை செய்யப் போனது எவ்வளவு பெரிய தவறு! அந்த விருந்தாளி மிருகத்துடன் தனியே தங்கியிருக்க ஒப்புக் கொண்டது
பிழை. எப்படி ஒப்புக் கொள்ளாமல்
இருக்க முடியும்? அவர்களுக்குப் புரியும்படி சொல்வதற்கு வசந்திக்கு மொழிப் பிரச்சினை. மொழி தெரிந்து சொன்னாலும் ஒப்புக் கொள்ளவா போகிறார்கள்? ஒரு ‘ஹவுஸ் மெயிட் ஐ விட அவர்களுக்கு விருந்தாளி முக்கியம். வீட்டுக்கு வரும் வேற்று மனிதர்கள் தானி இப் படியான காரியங்களில் இறங்குகிறார்கள் என்றில் லை. அவளோடு வந்து நகரத்தின் இன்னொரு மூலையில் Լ160ծք)ւյrflսկ լճ பெணி னுடனர்
வீட்டுரிமையாளனே முறைகேடாக நடக்கவில்லையா? அவள் கருவழிப்பு செய்ய வேணர் டியேற் பட்டது. நல்லவேளை வசந்திக்கு அந்நிலை ஏற்படவில்லை. நாங்கள் நாடு விட்டுத் தொழில் புரிய வந்தால் இவர்கள் எங்களை கி கேவலமாக நினைக்கிறார்கள். நாங்கள் உழைப்பை விற்க வந்தோமேயன்றி உடலை விற்க வரவில்லையென்பதை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அது அவர்கள் தவறல்ல. அப்படி அவர்களை நினைக்க வைத்தது எமது தவறு. ஆண்கள் தான் போகிறார்களென்று பெண்களும் போனால் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பாகிறதே.
தான் தவறு செய்யவில்லை என்பதைப் பலமுறை எண்ணிப் பார்த்தாள் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவளுடைய மனம் லேசாக இருந்தது. அவளது குழப்பங்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது. மகிழ்ச்சியில் வசந்தி அழுதே விட்டாள். துவாயை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டாள். அப்படியென்றால். இனி எனக்கும் ஒரு வாழ்க்கை அமைந்து விடும் , உள் ளம் குளிர்ந்தது. தொடர்ந்து சிந்திக்க முடியாமல் அவளைத் தூக்கம் தழுவியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு வசந்தி நிம்மதியாகத் தூங்கினாள்.
2

Page 13
செங்கை ஆழியான்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளியும் - அவ் வெளியின் இடையிடையே தோட்ட மண்ணிட்டு மேடிறுத்த தரையில் - இளந் தென்னங் கன்றுகளின் கூடலும் தெரிகின்றன. அதற்கு அப்பால் உவர்க் களப்புத் தரையும் அதனையடுத்து கிழக்கு மேற்காக விரையும் வீதியும் ஓடைக் கடலும் ஆளரவமின்றிக் கிடக்கின்றன. அறுவடை முடிந்து நெற் சூடுகள் ஆங்காங்கு குவிந்து கிடக்க வேண்டிய வயல் யாழ்ப்பாணத்தானின் இன்றைய மனம் போல கரடு பற்றி வரண்டு கிடக்கின்றது. வயல் நிலத்தில் ஏர் கீறிப் பல ஆண்டுகளாகியிருக்கும் போலத் தெரிகின்றது.
மனதில் இனந்தெரியாத கவலை படர்ந்து கணக்கின்றது. எப்படி இருந்த பிரதேசம்? ஏழாண்டுகளில் உயிர்ப் பசுமையிழந்து விதவைக் கோலத்தில் வதங்கிக் கிடக்கின்றது. யுத்தத்தின் கொடுரப் பேய்க் கரங்கள் அந்த ஊரைச் சிதைத்து விட்டது. உறவுகளையிழந்து எஞ்சிய மனிதர்களும் - சிதைந்து உருக் குலைந்த கட்டிடங்களும் எங்கும் காட்சியாகின்றனர்.
எவ்வளவு ஆவலாக என் வீட்டினைப் பார்க்க ஓடிவந்தேன். எங்கள் வீடு இருந்த இடத்தில் கற்குவியல் மட்டும் தான் எஞ்சி நிற்கிறது. அடி வயிற்றிலிருந்து குபிரென ஏதோ உச்சிக்கு ஏறியது. அம்மா இந்த வீட்டினை எவ்வளவு அக்கறையாகப் பேணினாள்? கூட்டிக், கழுவி மெழுகி, வளவெல்லாம் பெருக்கி, முற்றத்தில் பூச்செடிகள் வளர்த்து அழகாகப் பார்த்துக் கொண்டாள். இன்று இந்த வீடும் வளவும் இருக்கின்ற கோலத்தைப் பார்த்தால் தாங்கிக் கொள்ள மாட்டாள். அவள் இதயமும் இந்த இல்லத்தைப் போல தகர்ந்து விடும்.
தூரத்தில் நீர்க்காகங்கள் சிலவும் ஒன்றிரண்டு வெண் கொக்குகளும் பறந்து தரிப்பது தெரிகிறது. ஓ, பறவைக்குளம் இன்னும் இருக்கிறது. அதன்
22

அருகில் தான் கனகண்ணையின் குடிசை இருந்தது. இப்பொழுதும் இருக்குமோ? வித் தியாசமான மனிதன். கனகண்ணை குடும்ப பாரமற்ற தனியாள். வயல் வெளியின் ஒரத்தில் குளக் கரையில குடிசையொன்றினைப் போட்டுக் குடியிருக்கிறான். நினைத்த போது ஏதாவது கூலி வேலைக் குப் போவான். ஊரில் எவராவது வீட்டில் விஷேசமென்றால் , ' கனகுவைக் கூப்பிட்டு வாருங் கோ’ என்று அழைப்புப் போகும். நானும் பல தடவைகள் கனகணி ணையை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். அது மட்டுமல்ல நானும் நணர் பர்களும் மாலை நேரங்களில் வயல் வெளிகளில் பட்டம் விட, விளையாட வரும் போதெல லாம் எங்களுடன் பிரியமாகப் பழகிக் கொள்வான். ஊரே இடம் பெயர்ந்து ஓடியபோது எங்க சென்றானோ?
சயிக்கிலில் வந்த ஒருவன் என் அருகில s G3 Jais பிடித் து நிறுத்துகின்றான். திரும்பிப் பார்த்தால் பாலன். என் சிறு வயது நண்பன். வன்னிக்கு ஓடும் போது பத்து வயதில் கடைசியாகக் கண்டது. இனி னு ஏழாணர் டுகளின் பிணி காணி கிறேன் . நன்றாக வளர்ந்திருந்தான். வளர்ச்சிக்கேற்ற உடல வாகு இல  ைல . மெலிந்திருந்தான்.
'சிவா. என்றபடி பாலன் என் கரங்களை அடங்காப் பாசத்துடன் பற்றிக் கொள்கிறான். இருவராலும் சில கணங்கள் பேசிக் கொள்ள முடியவில்லை.
‘எப்படியடா இருக்கிறாய்?
‘ஏதோ இருக்கிறம், சிவா. இடப் பெயர்வில சாவகச்சேரியில் இரண்டு நாள் காய்ச்சலிலை ஐயா செத்துப் போனார். எ ல லோரும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் திரும்பி வந்தம். எங்கட வீடில்லை இப்ப வளவில் கொட்டில் ஒன்று போட்டுக் கொண்டிருக்கிறம். அது சரி நீ எப்ப வன்னியிலிருந்து வந்தாய், சிவா?
‘இன்று தான்.
“யாழ்ப்பாணத்துக்கான தரைப் பாதையைத் திறந்ததும் ஓடி வந்திருக்கிறாய் என்ன? ஏழாண்டுகள் உன் னைக் கணி டு. சினி னப் பொடியனாகப் போனாயப். இப்ப மீசையும் அரும் பி. ஆளும் பருத்து. முற்றிலும் மாறி வந்திருக்கின்றாய். அது சரி நீ வன்னியில் என்ன செய்தாய்?
நான் சிரிக்கிறேன்.
அர்த்தத் துடன்
‘என்னடா செய்தாய்?
‘போர்க்களத்தில் நின்றிருந்தன். சண்டை போட்டன். கால் ஒன்று மிதி வெடியில் காணாமல் போச்சுது. இப்ப பொய்க் காலுடன் வந்திருக்கிறன்
23

Page 14
பதறிப் போன பாலன் என் கால்களைப் பார்த்தான். பொய்க்கால் அவன் கண்களை உறுத்தியது.
'சிவா. என்றபடி என்னை அணைத்துக் கொண்டான்.
‘அதை விடு. வா முதலில் என்
வீட்டிற்குப் போவம்'
சயிக்கிளின் முன் பாரில் ஏறிக் கொள்ளுகிறேன். வறட்சியான வயற் காற்று சயிக்கிளை ஒரு பக்கத்திற்கு உந்தித் தள்ளுகிறது. தலைக்கு மேலாக காகங்கள் தாழப் பறந்தன.
தலையைச் சற்று உயர்த்திப் பார்த்த போது தெனி னங் கீற்றொன்றில் செம் பருந்து ஒன்று வந்தமர்வது தெரிகிறது.அது தன் கணிகளால் வயல் வெளியை ஊடுருவிப் பார்க் கும் . நான நினைத்தது சரியானது. தென்னங் கீற்றிலிருந்து சடாரென காற்றில் சரிந்து இறங்கிய செம்பருந்து வயல் தரையில் எலியொன் றினைக் கால்களின் கூரிய நகங்களால் பற்றியபடி விர்ரென மேலெழுந்தது.
வயல் எலிகளைப் பிடிப்பதில் கனகண்ணை மிகவும் கெட்டிக்காரன். ஒரு முறை பெரும் வேட்டை ஒன்றினைக் கணகண்ணை அவர்கள் இருவருக்கும் நிகழ்த்திக் காட்டினான்.
Ls 859 60) D போர்த் திருந்த மானாவரித் தரையில் நெல் மணிகள் முற்றிக் கபிலமாயின. அறுவடை
செய்து வயல் வரப்புகளில் சூடுகள் வைக்கப் பட்டிருந்தன. ஒரு மம்மல் பொழுதில் நானும் பாலனும் கனகண்ணையுடன் வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தோம். மேற்கு வானில் சூரியன் சரிந்து கொண்டிருந்தான். இருந்தாற் போல பாலன், 'கனகண்ணை, அங்க பார் முயல் குட்டியள்.’ என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான். பார்க்கும் பொழுது இரணர் டு குணி டு உருவங்கள் முனி னே விரைநீ தோடி வளையொன் றினுள் புக அவற்றினைத் தொடர்ந்து ஐந்தாறு சிறியவை வளையினுள் புகுந்து கொண்டன.
அது முயல்களல்ல தம்பி. வயல் எலிகள்.
‘இந்த சைசிலயோ?
நெல் மணிகளைத் திண்று தின்று நல்லாக் கொழுத்திருக்கினம். வளையுக் குளர்  ைள வரட் சிப் பருவத்தில் சாப்பிட ஒரு நெற் களஞ சியத்தையும் சேமிச்சு வைச்சிருப்பினம் தெரியுமே? ருசியான இறைச்சி தம்பிமார், இண்டைக்குப் பிடிப்பம் , தம் பிமார் இங்கயே நில்லுங்கோ. நான் உடனை குடிசைக்குப் போயிட்டு வாறன். s
சற்று நேரத்தில் கனகண்ணை தேங்காய் பொச்சு மட்டைகளை ஒரு உரச்சாக்குப் பையினுள் நிரப்பிக் கொண்டு வந்தான்.
24

'வயல் எலிகள் நுழைந்த வளை வாயில் இது. அப்பிடியெண்டால் அவை வெளியே அவசர காலத்தில் வர இன்னொரு வழியுமிருக்கும்.
அதைக் கண்டு பிடிக்க வேணும்.'
கனகசபை வரம்பு முழுவதும் அவதானத்துடன் நடந்து வளையின் மற்ற வாயிலைக் கண்டு பிடித்தான்.
அவன் முகம் மகிழ்ச்சியால் விரிந்தது.
அவனி துரிதமாகச் செயற்பட்டான்.
‘நான் இந்த வாசலில் புகை போட்டு வளைக்குள்ள ஊதிவிடுவன் நீங்க ரெணி டு பேரும் இந்த உரப்பையை வெளி வாசலில பொத் திப் பிடிக் க வேணும் . வளைக்குள்ள புகை போனதும் எலிகள் வேகமாக வெளியில ஓடி வருவினம். வந்த வேகத்திலை சாக் குள் ள புகுநீ திடுவினம் . உரச் சாக் கினி வாயைத் தானி பக் குவமாக வளை வாசலில வைத் துப் பிடிக்க வேணும் சரியே. y
கனகண்ணை ஒரு வாசலில் புகை ஊத, அவசரப் பட்டு வெளியேறிய எலிகள் உரச்சாக்கினுள் வேகமாகப் பாய்ந்து வெளியேற முடியாது அகப்பட்டுக் கொண்டன. பத்துவயல் எலிகளாவது அகப்பட்டிருக்கும்.
அன்று வயல் எலி இறைச்சியும் பாணும் சாப்பிட்ட நினைவு இன்றும் இருக்கிறது.
‘ என்ன சிவா. எதுவும் பேசாமல் வாறாய்?
கன கணிணை வயல
எலிகளைப் பிடிச்சதை எண்ணிக் கொண்டன்’
பாலன் சயிக்கிளை ஓரிடத்தில் நிறுத்தினான்.
‘இந்த இடத்தைத் தெரியுதா பார்
சிவா.
இது சின்னையரின் தென்னந் தோட்டமில்லை? என்னடா வெட்ட வெளியாகவிருக்குது? தென்னை மரங்களைக் காணவில்லை.
‘எல்லாத்தையும் ஆமிக்காரர் செனி நரி போடத் தறிச் சுக் குத்தியாக்கிப் போட்டாங்கள்’
தென் னை மரங்கள் அவ் விட தீ தில் நினி றிருந்தன என்பதற்குச் அடையாளமாக அடிமரக் கொட்டுகள் மாத்திரம் தான் சாட்சியாக நின்றிருக்கின்றன. எவ்வளவு அருமையான தோட்டம்! இளங் கன்றுகள் எப்பொழுதும் சிலிர்த்துத் தென்னங் குலைகளைத் தள்ளி நிற்கும் . எனக் குமி பாலனுக்கும் தண்ணிர்த் தாகம் எடுக்கும் போது சின்னையரின் பின் பக்க முள் வேலிக்குள்ளால் ஆடுகள் மாதிரிக் கீறலின்றி நுழைவோம்.
25

Page 15
அடிவளவு. எவரும் கவனிக்க வாய்ப்பில்லை. பாலன் தென்னை மரத்தில் குரங்கு போல வேகமாக ஏறுவான். வட்டையடைந்ததும் ஒரு கரத்தால் மரத்தையணைத்தபடி இரண்டு இளநீர்க் காய்களைப் பற்றிக் கொள்வான். பறித்தவற்றைக் கீழே எறிய மாட்டான். சில வேளைகளில் மண்ணில் விழுந்து மோதி அவை உடைந்து விடலாம். அதே வேளை சத்தமெழுப்பிச் சின்னையரை உசுப்பி விடலாம். சின்னையர் அவ்வளவு மேசமானவரல்லர். ஆனால் களவை அவர் மன்னிக்க மாட்டார். ஐயாவிடம் சொல்லிவிடுவார்.
வாயில் பற்களால் பற்றியபடி ஒரு காயையும் வலக் கரத் தில மறுகாயையும் பற்றியபடி பாலன் இறங்கி வருவான். ஏறுவதிலும் பார்க்க இறங்குவதில் அவன் விண்ணன். வேகமாகச் சறுக்கியபடி வேலிப்பொட்டால் வயல் வெளியில்
குடிசைக் குப் (8 LI m (8 6), Mír LD . இளநீர்களைக் குளக் கரையில் பறி றையொன்றினுள் மறைத் து வைத்து விட்டு கணகண்ணையிடம் கொடுவாக் கத்தி கேட்போம்.
ஒரு தடவை இளநீருடன் குடிசைக்குச் சென்று வெட்டித் தரும்படி கேட்டோம்.
களவாப் பிடுங்கிய காய்களை அரிந்து தர மாட்டன்.' என்று கனகண்ணை மறுத்து விட்டான்.
கன கணிணையின்
அதற்குப் பிறகு அவனிடம் கத்தி வாங்கி நாங்களே வெட்டிக் கொள் வோம் . இப்பொழுது நினைத்தால் கனகண்ணையின் சில நல்ல குணங்கள் தெரிகின்றன.
சயிக்கிலில் செல்லும் போது மீண்டும் மீண்டும் கனகண்ணையின் நினைவே மேலெழுகிறது. எங்கள் சிறு வயதுக் குறும்புகள் எல்லாம் கனகண்ணையுடன் இணைந்தன வாகத் தான் இருந்துள்ளது. எங்கள் மாலைப் பொழுதுகள் வயலி வெளியில் தான் கழிந்திருக்கின்றன. வயல் காற்றும் பறவைக் குளமும் அதன் அருகில ஏகாந்தமாக அமைந்திருக்கும் கனகண்ணையின் குடிசையும் இயற்கையின் எழிற் சூழலாக எங்களுக்குத் தெரிந்தன. மாலையில் சூரியன் கடலில் சரியும் வரை காத்திருந்து, வானத்தில் வெளவால் கள் சஞ்சரிக் கத் தொடங்கிய மம்மல் பொழுதில் வீடு
திரும்புவோம்.
ஒரு தடவை இளநீருடன் நாங்கள் வந்த போது குளக்கரையில் கனகண்ணை கெற்ற போலுடன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
குளத்தில் இரண்டு கொக்குகள்
ஒற்றைக் கால களில் நின்று கொண்டிருந்தன.
* பாவம் கொக்கு இனி று
சரி.
நாங்கள் வருவதைக் கண்ட
26

கனகண்ணை சப்தமில்லாமல் வந்து அருகில் அமரும்படி சைகையால் அழைத்தான். நாங்கள் சற்று தள்ளி அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டோம் . மேற்கு வானில் இறங்கும் சூரியனின் பகைப் புலத்தில் ஒடைக் கடலில் பாய் வள்ளமொன்று வருவது தெரிகிறது. வேலணை தீவுக்கரையில் இராணுவம் நிலை கொண்டிருந்ததால் கடலில் மீன்
பிடிக்க வள்ளங்கள் அதிகம்
இறங்குவதில்லை.
வள்ளத்துடன் காணாமல் போக யாருக்குத் தான் பிடித்தம்,
கெற்ற போலில றப் பர் இணைப்பின் தோல் பட்டையில் சிறிய கல லொனி றை வைத் துக் கனகண்ணை இழுத்தான். மறுகணம் துப் பாக்கிச் சனி னம் போல காற்றினைக் கிழித்துக் கொண்டு சென்று அக்கல் கொக்கொன்றின் தலையைத் தாக்கியது. கீச்சிட்டபடி அது தணி னிரில் சரிந்தது. கன கணிணை நீரில் இறங் கி அதனைத் தூக்கியபோது அது தன் உடலை ஒரு தடவை சிலிர்த்து அடங்கியது. கொக்கின் உடலைத் தூக்கிக் கொண்டு கரையேறிய போது நான், ‘இப்படிச் செய்யிறது பாவம ணிணை. எனிறேன் . கனகண்ணையின் சிரிப்பு வயல் வெளியெங்கும் பரவியது.
'இது தான் நியதி தம்பி. கொக்கு மீன்களைப் பிடித்துச்
கருத்து.
சாப்பிடுவது எப்படி நியாயமோ அதைப் போல அதைப் பிடித்து நான் சாப்பிடுவதும். தம்பி, உலகத்தில படைக் கப் பட்டதெல லாம் மணிசருக்குத் தான் என்பது என்
s
கனகண்ணை வயல் வெளியில் வயற் பறவைகள் அகப்படாத வேளைகளில் அணில்களை அடித்து வீழ்த்தி எடுத்துச் செல்வதைக் கண்டிருக்கிறேன்.
*இதுவும் சாப்பிடவா?
‘நல்ல ருசி தம்பி.
* நீ ஒரு வேடுவச் சாதி
அண்ணை.
பாம்பிறைச்சியும் சாப்பிடலா மென்கினம். வயலுக்க கனக்க இருக்குது. ஒரு நாளைக்குக் கறி வைச்சுப் பார்க்க வேணும்.
நான் கன கணி  ைண யை
அருவருப்புடன் பார்த்தேன்.
சயிக்கிலில் மடத்தைக் கடக்கும்
போது, 'கனகண்ணை இப்ப எங்கை,
பாலா? என்று கேட்டேன்.
பாலன், சயிக்கிலின் வேகத்தைக் குறைக்கிறான்.
é SP
நீ இனி னமும் அவனை மறக்கவில்லைப் போல.
‘எப்படி மறக்கிறது? இப்ப அவன் எங்கை பாலா?

Page 16
தொணி னுTற்றியை நீ தி ல நாங்கள் எல்லாரும் இடம் பெயர்ந்து ஆமிக்குப் பயந்து தென்மராட்சிக்கு ஒடியபோது அவர் தன் குடிசையை விட்டு வெளிக் கிடவில் லை. வரமாட்டன் என்றிட்டான். சாப்பாடு இல்லாமல் சாகவா போகிறாய் அண்ணை என்றான். சிரித்து விட்டு குடிசைக்குள் போய் விட்டான். நாங்க தான் இடம் பெயர்ந்து சாப்பாட்டிற்குக் கஷடப் பட்டம். அவன் கஷ்டப்பட வில்லை. தொண்ணுாற்றியாறில் திரும்பி வந்த போது அவனைப் போய் பார்த்தன். இடையில் நிறுத்தி விட்டு பாலன் மெதுவாகச் சிரிக்கிறான்.
‘என்னடா?
“நீ நம்பமாட்டாய். என்றாலும் நம்பத்தான் முடியவில்லை. அவன் குடிசையில ஒரு பெணி னும் அவருடைய இரண்டு பிள்ளைகளும் தங்கியிருக்கினம். அப்பெண்ணின் புரிசன் சூடுபட்டு இறந்துவிட்டானாம். அராலிப் பக்கமிருந்து கடைசியாக இடம் பெயர்ந்து வந்திருக்கினம். அதற்கிடையில் தென்மராட்சிக்குப்
போகிற நாவற் குழிப் பாதை அடைபட்டு விட்டது. ஆமி பிடிச் சிட்டுது. போக இடநீ தெரியாமல் தவித்த போது
கனகணி னை யைச் ருக்கினம். அவன் இரக்கப் பட்டு தன் குடிசையில் தங்க வைச்சிருக்கிறான். இப்ப ஏழு வருசமாக அங்கதான் இருக்கினம்.
சநீதித் தி
எனக் கு இச் வியப்பாகவிருக்கிறது.
செய்தி
‘அப்ப அந்தப் பெண்ணைக் கன கணிணை கலியாணம் செய்திட்டான் என்கிறாய்..?
* அப் படியிருந்தாலி தான் பரவாயில்லையே? ஏற்றிருக்கலாம். அவன் தனி குடிசையை அவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் சுடலை மடத்தில் தங்கியிருக்கிறான் என்றால் பாரேன். விசரன். எனக்கு அவன் போக்கே விளங்கவில்லை.
பாலா தன் வீட்டுப் படலையில் சயிக்கிலை நிறுத்துகிறான். சயிக்கில் பாரிலிருந்து இறங்கியபோது என் தொடைகள் விறைப் புதி தட்டியிருந்தன. அழுத் திப் பிடித்துவிட்டுக் கொள்கிறேன்.
வறுமையினி அறிகுறிகள் அக் குடிசையிலும் அங்கிருந்த வர்களிலும் தெரிந்தன. கூரையின் தென்னங் கீற்றுக்கள் உக்கி ஒளியையும் , வெயிலையும் , மழையையும் உள்வர வழிவிட்டபடி ஆயிரம் பொட்டல்களுடன் காட்சி தந்தது.
திணி ணைக் குநீ தில் அமர்ந்திருந்த பாலனின் தாய் எண் னை அடையாளம் கணி டு கொண்டாள்.
உதார். நம்மட செல்வராசின்ர (8LDG36012

‘ஓமோம் அம்மா.
பாலனின் தாயார் வழங்கிய தேநீரை வாங்கி அருந்தினோம். பல்வேறு விடயங்களை அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
‘நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. சுதந்திரமாக ஊடாட முடியாது. தெருவெல்லாம் ஆமிச் சென்றிகள். ஆறுமணிக்குப் பிறகு நாங்க வீதியில் இறங்குவதே யில்லை. மாலைக் கருக்கலுடன் பறவைகள் போல குடிசைகளுள் அடங்கி விடுவோம். இரவுகளை மறந் திட்டம் . ஆமான கூலித் தொழிலில்லை. ஏதோ கிடைக்கிற நிவாரணம் உசிரைத் தங்க வைச்சிருக்குது. பொருட்களின் விலைகள் ஆனைவிலை, குதிரை விலை.விதிகள் தோறும் வீடியோக் கடைகளும், சாராயக் கடைகளும். ஊரெல்லாம் கசிப்புக் காய்ச்சுகினம். பெண் புரசுகளுக்கு ஆமிக்காரர் மட்டும் தொல் லை இல் லை. எங் கடை ரோட் அளக் கும் பொடியளும் பெருந் தொல்லை. ஊரே மொத்தத்தில் கெட்டுப் போச்சுது. சமாதானம் வந்திட்டுது என கினம் . ஒரளவு நிம் ம் தி பிறந்திருக்குது. நிலைக்க வேணும்'
'இராவில யாழ்ப்பாணத்தில
கன பேருக்கு நிதி திர வருகுதில்லையாம்' என்றான் பாலன்.
"ஏன்ரா'
வயல வெளிப்
* குண்டுச் சத்தமும் துப்பாக்கிச் சத்தமும் இல்லாமல் இருக்குதாம். பழகிப் போன சத்தம் இல்லாமல் தூங்கவே முடியவில்லையாம்.’ என
அவன் சிரிக்கிறான்.
எங்களின் பேச்சு மீண்டும் கனகண்ணையில் வந்து நிற்கிறது.
க ன க ச  ைப  ைய யு ம’ அவனோடிருக்கிற பெண்ணையும் பிள் ளைகளையும் நாங் களர் தென் மராட்சியில் இருக்கைக்க ராணுவம் ஒருக் காப் பிடிச் சுக் கொணி டு போனதாம் . பத் து நாட்களுக்குப் பிறகு தான் விட்டவையாம்' என்கிறாள் பாலனின் SLölDs.
‘ஏன் பிடிச்சவை
“இங்கே ஆமி பிடிக்கிறதுக்குக் காரணம் இருக் குதே.
சனங்களெல்லாம் வெளிக்கிட்டுத்
தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் ஓடிவிட்ட பிறகு ராணுவம் இங்கே எங்கட ஊருக்கு வந்திருக்குது. அவங்களைக் கணி டதும் கனகசபையும் அந்தப் பெண்ணும் பிள்ளைகளும் ஓடிப் போயப் பங் கருக்கை
புகுந்திட்டினம். அதுதான் அவை செய்த பிழை.
அது பொடியளினி ர
பங்கரல்லோ? அரைமைல் நீளமான பங்கர். ஒரு பக்கத்தால போனால்
29

Page 17
மறு பக்கத்தால வெளி வரலாம். எலி வளை மாதிரி. அதுக்குள்ள இவங்கள் ஏன் போனவங்கள்.
ஆருக் குத் தெரியும் ? பயத்திலை என்ன செய்வதென்று Glg5 flu Tud 65 பங் கருகி குளிர் ள புகுந்திருப்பினம். ஆமி கண்டிட்டுது. ஒரு பக்க வாயிலில ஒரு கைக் குண்டை வீசியிருக்கிறான்கள். நல்ல காலம் , ஆமி சுடவில் லை. பிள்ளைகள் கத்திக் குழறினதால வெடிவைக்கவில்லை போலும் . அப்படியே அமுக்கி டிரக் கில போட்டுக் கொண்டு போட்டான்கள். பத்து நாட்களுக்குப் பின்னர் தான் விட்டினமாம்.
கனகண்ணையை ஒருக்காப் பார்க்க வேணும், பாலா.
'சரி போவம்.
மதி தியானம் 3F Tü f வாருங்கோ’ என்கிறாள் அம்மா.
நாங்கள் சயிக்கிலை விட்டு வயலி வரம் புகளால் நடந்து கன கணிணையினர் குடிசையை அடைந்த போது, அவனி அங்கிருக்கவில்லை. அந்தப் பெண் தானி திணி ணையில அமர்ந்திருக்கிறாள். மடியில் ஐந்து வயதுப்  ைபயனர் ஒரு வணி அமர்ந்திருக்கிறான்.
இருங்கோ தம்பிமார். அவர் தண்ணியள்ள வயற் கிணற்றுக்குப்
போட்டார். இப்ப வந்திடுவார். அவள் குடிசைக்குள் நுழைய இரண்டு பிள்ளைகள் குடிசைக்குள்ளிருந்து வெளியில் வருகின்றன.
நான் பாலாவை வியப்புடன் பார்க்கிறேன்.
'இரண்டு பிள்ளைகள் என்றாய்?
‘மூன்றாவது இங்க வந்த பிறகு பிறந்ததாம்.
G y
elUld........
துTரத் தலி கன கணி ணை தண்ணிர் நிரம்பிய பிளாஸ் ரிக்
கானுடன் வந்து கொண்டிருப்பது தெரிகிறது. பறவைக் குளக்கரைப் பக்கமாக வந்து கொண்டிருக்கிறான். குளத்தில் பாதம் மறையும் அளவில் நீர் கலங்கிக் கிடக்கின்றது. சிறு பறவைகள் குளத்தில் நடை பயின்று கொண்டிருக்கின்றன. இக் குளத்தில் கொக்கு வேட்டையாடியது என் நினைவில் வருகின்றது.
தண்ணிர் கானுடன் வந்தவன் எங்களைப் பார்த்து வியப்படைந்தான் என்பது விழிகளின் திறப்பிலும் முகத்தின் மாற்றத்திலும் தெரிகிறது.
'சிவாத் தம்பி, பத்து வயதில (3 u mt 607 m uj . இப்ப (Մ) (Լք இளநீ தாரியாகத் திருமி பி வநீ திருக்கிறாயப் பார்க் கச் சந்தோசமாக இருக்குது.’ என்றவன் குடிசைக்குள் பார்த்து, ‘தங்கம்மா, தம் பரிமார் வந் திருக்கினம் .
30

தேத் தணிணி ஊத்தும் ' எனப்
பெருங்குரலில் பணிக்கிறான்.
‘நீங்க அண்ணை எப்படி என்று கேட்கிறேன்.
அவன் வானத்தை அண்ணாந்து பார்க்கிறான். நீண்டதொரு பெருமூச்சு வெளிப்படுகிறது. மெளனம் சில நிமிடம் அவ்விடத்தில் ஆட்சி.
இருக்கிறம் எவ்வளவோ நடந்து போச்சுது சிவா.
பறவைக் குளதி தை ஏக்கத்தோடு பார்க்கிறான். முகத்தில் கவலை அப்பிப் படர்ந்து கொள்கிறது. கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு 6(3LC360TIT?
கனகண்ணை, இப்ப வயல் எலி பிடிக்கிறதில்லையோ?” எனப் பேச்சை மாற்றினேன்.
'இப்ப பிடிக்கிறதில்லை’ எனக் கனகணி ணை அவசரமாகக் குறுக்கிட்டான். ‘விட்டிட்டன். எலி வளையின்ர ஒரு வாயில புகை ஊதுவதும் மறு வாசலில சாக்குப் பையின் வாயை வைச்சு அமுக்கிப் பிடிக்கிறதும் பெருங் கொடுமை எண்டு அப்ப தெரியவில்லை. ஆமி வந்த போது நானும் தங்கம்மாவும் பிள்ளைகளும் பயந்து போய் பங்கருக்கள்ளை போய் ஒளித்து. அவங்கள் ஒரு பக்கத் தில கைக் குணி டு போட நாங்கள் பயத்தில மூச்சுத் திணறி மறு
வாயிலால வெளி வர அவங்கள் எங்களை ஒரே அமுக்காகப் பிடித்துக்
கொண்டு போனாங்கள். வயல் எலி
பிடித்த கொடுமை அப்பத் தான் புரிஞ்சுது. இப்ப நான் எதையும் பிடிக்கிறதில்லை’.
நான் கனகண்ணையை அடங்கா வியப்புடன் ஏறிட்டுப் பார்க்கிறேன்.
அவன் முகத்தில் கலக்கம் இன்னமும் தீரவில்லை.
தங்கம் மா தேநீர் கிளாஸ் களுடனி வெளியில வருகிறாள். இருபத்தெட்டு வயது மதிக் கலாம். கயிறு போன்ற மெல்லிய உடல் வாகு. மறுபடி அவளைப் பார்க்கத் தூண்டும்.
தேநீரைப் பருகிவிட்டு எழுந்த போது, கனகண்ணையும் எங்களுடன் வரம்பில் நடந்து வந்தான். பறவைக் குளத்தின் கரையில் சற்றுத் தரித்து நின்ற போது, கனகண்ணை, ஒன்று கேப்பன். கோபிக்க மாட்டியளே? என்றேன் தயக்கத்துடன்.
கனகணி ணை திரும்பிப் பார்க்கிறான்.
என் னைத்
‘ என்ன கேட்கப் போகிறாய் என்பது எனக்குத் தெரியும் தம்பி சிவா. உனக்குச் சொல்லாமல் வேறு யாருக்குச் சொல்லப் போகிறன்.
தங்கம் மா தனி இரணர் டு பிள்  ைளகளுடன் எனினிடம் அடைக் கலம் புகுநீ தாள் .
... 1
3.

Page 18
அடைக்கலம் கொடுத்தன். அவ்வளவு தான் எங்கள் உறவு. ஆனால் இப்ப எனக்கு மூன்று பிள்ளைகள். இந்த சமூகம் எப்படி எனினைப் பார்க் கிறதோ எனக் குத் தெரியவில்லை. எனக்கு அதில கரிசனையுமில்லை. பத்து நாட்கள் இராணுவ முகாமில் இருந்து விட்டு வந்தம். நான் ஓரிடத்தில். தங்கம்மாவும் பிள்ளைகள் இரண்டும் இன்னோரிடத்தில். அங்கு தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. கன கணிணை தொடர்கிறார். வீட்டிற்கு வந்ததும் தங்கம்மா பேயறைந்த மாதிரி இருந்தாள். ஒரு நாள் அரளி விதைகளை அரைத்துக் குடித்து விட்டாள். தக்க நேரத்தில ஆசுப் பத்திரியில் சேர்த்த்தாலி காப்பாற்றப் பட்டாள். என்னைச் சாக விட்டிருக்கலாமே என்று அழுதாள். அப்ப ரெண்டு பிள்ளையஞக்கும் சேர்த்து விசத்தைக் கொடுத்து விட்டுச் செத்துப் போ என்றன். விசரி, என்ன பைத்தியக் காரத் தனம் செய்யப் பார்த்தாய்? அந்த இரண்டு பிள்ளைகளும் என்ன பாவம் செயப் தன? அவளை எனினால்
சந்தா
செலுத்தி விட்டீர்களா p தயவு செய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள்.
சமாதானப் படுத்த முடியவில்லை. அதற்கு நெடு நாள் எடுத்தது. மூன றாவது குழநீ தையைப் பெற்றெடுத்தாள். விதைத்தவன் யார்? கொள்பவன் யார்?
கனகணிணை வானத் தைப் பார்க்கிறான். முகத்தினை அழுத்தித்
துடைத்துக் கொள்கிறான்.
‘நான் இப்ப சுடலை மடத்திலை படுப்பதில்லை. குடிசையில் தான் எலி லாருடனும் படுக்கிறனான். அவளுடைய குழநி தைகளை என்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டன். எனக்கு அதில ஒரு சந்தோசம் இருக்குது. அதுகளுக்கு உழைச் சுக் கொடுப் பதில் நிம்மதியிருக்குது. அதுகள் வயிறார உணர்டு சிரிக் கும் போது வாழ்க்கையின் அர்த்தம் புரியுது
தங்கம் மாவையும் ஏற்றுக் கொள்ளலாம் தானே அண்ணை' என்று கேட்க என் நா எழுகிறது. அடக்கிக் கொண்டேன். வானமென உயர்ந்து நிற்கும் அந்த மனிதனின் தன்னலமில்லாத வாழ்க்கையை அந்தக் கேள்வி சில வேளை காயப் படுத்திவிடலாம்,
 
 
 
 
 
 
 
 

1. அமெரிக்கச் சிறுமியின் கவிதை அண்மையில் எனது மலேசிய மின்னஞ்சல் நண்பி ஜெகதீஸ்வரி மகாலிங்கம் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அம்மின்னஞ்சல் அவருக்கு கண்ணபிரான் என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அம்மின்னஞ்சலில் அமெரிக்கச் சிறுமி ஒருத்தி எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. அத்தோடு கண்ணபிரான் அவர்கள் ஒரு செய்தியினையும் சொல்லி இருந்தார். அச்செய்தி இதுதான்
'ப்ரிய நண்பர்களே! உங்கள் சில கணங்களை இதிலே செலவழிக்க நான் உங்களை வேண்டி நிற்கிறேன். நியுயோர்க் வைத்திய சாலையொன்றில்
தன் இறுதிக்
கணங்களை
69Q5
பிரதியின்
முணுமுணுப்பு
மேமன் கவி
எதிர்ப் பார்த்திருக்கிற ஒரு நோயாளிச் சிறுமியால் எழுதப்பட்ட இக்கவிதை ஒரு வைத்தியரூடாக அனுப்பப்பட்டது. நன்றியுடன்'
அச்சிறுமியின் அந்த ஆங்கிலக் கவிதையினை ஒரு தரம் படித்த பொழுது, மனிதர்கள் மீதான அவளது அக்கறை அவளது நிலையினைக் கடந்து பளிச்சிட்டது. உடனடியாக அந்த ஆங்கிலக் கவிதையினை கெக்கிராவ ஸஹானாவின் சகோதரி கெக்கிராவ ஸ9லைஹா அவர்களுக்கு அனுப்பி தமிழில் மொழிபெயர்த்து எடுத்தேன். அந்ந கவிதை உங்கள் பார்வைக்கு.

Page 19
மெது நடனம்
'மெரி-கோ-ரவுன்டில்" சுற்றிவரும் சின்னஞ் சிறுசுகளை என்றேனும், நீ
நின்று அவதானித்ததுண்டா..? அல்லது தரையை அறைகின்ற, மழைத்துளியின் - சப்தம் தனை கேட்டதுண்டா? படபடத்துச் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியை
என்றேனும் பின்தொடர்ந்ததுண்டா? அல்லது பகலின் நிறம் மங்கி, வாடிச் செல்லும் இரவுக்குள் சென்று நுழைகின்ற,
சூர்யச் சிவப்பை சற்றேனும் நின்று இமையாது நோக்கியதுண்டா?
நீ சற்று தாமதிப்பது நன்று.
அத்தனை வேகமான நர்த்தனம் வேண்டாம்! காலம் குறுகியது: இந்த இசை நெடுநேரம் நீடிக்காது.
ஒவ்வொரு நாளும் பறந்து பறந்து ஓடுகிறாயா 産? எப்படியிருக்கிறாய் என யாரையேனும்
நீ நலம் விசாரித்து அதற்காய் கிடைக்கப் பெறும் பதிலை நீ கேட்டதுண்டா என்றேனும்?
தொடரவிருக்கும் நூறாயிரம் கடமைகளின் நினைவை
sed esöIT
மண்டையோட்டுக்குள் சுழல விட்டபடிதான்
நாளின் இறுதியில் உன் படுக்கையில் நீ சாய்ந்து கிடக்கிறாயா?
நீ சற்று தாமதிப்பது நன்று. அத்தனை வேகமான நர்த்தனம் வேண்டாம்! காலம் குறுகியது: இந்த இசை நெடுநேரம் நீடிக்காது.
அதை நாளை GesFu u CS es u nt CS Lro என்று உன் குழந்தையிடம் 虚 எதையேனும் என்றேனும் சொன்னதுண்டா? துரிதமாய் இயங்க அவன் Lu GCS Lfb
துயர்தனை நீ பார்த்ததே இல்லையா?
உன் நேரமின்மைகளின்
சாபத்தால்
மெல்லிய ஸ்பரிசங்களை சதாவும் இழந்து
'ஹய்' என்று அழைக்கவும்
சொல்லவுமான

நல்ல நேச பகிர்தல்களை Gl 35 TaöTp) நீ வாழ்ந்திருக்கிறாய்!
நீ சற்று தாமதிப்பது நன்று.
அத்தனை வேகமான நர்த்தனம் வேண்டாம்! காலம் குறுகியது: இந்த இசை நெடுநேரம் நீடிக்காது.
எங்கேனும் வேகமாக GogFesö T D God L-ulu GT66Tggll b 2-6it அவசரங்களால் அந்த கூஷணங்களில் நீ பெறவிருந்த சந்தோஷங்களின் சிலிர்ப்புகளில் பாதியை எப்போதும் நீ இழந்தே வந்திருக்கிறாய்! உன் நாட்களுக்குள் பிரவேசிக்கவும், அவை பற்றியே சதாவும் நீ பதறுதல் ஆனது. வீசியெறியப்பட்ட என்றுமே திறந்து பார்க்கப் படாத பரிசுப் பொருளுக்கு ஒப்பானது.
வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயமன்று. மெதுவாய் நிதானித்து அடியெடுத்து வை. அந்த அழகிய இசையை GlerøSlLD G பாடல் முடியுமுன்னே!
அந்த சிறுமியின் அக்கவிதையோடு கண்ணபிரான் அவர்களுக்கு அக்கவிதையை அனுப்பி New york கைச் சேர்ந்த Dr. Dennis shields, 96.155(Glbub அச்சிறுமிக்காக சகலருக்குமான ஒரு செய்தியினையும் அனுப்பி இருந்தார். அச்செய்தி பின்வருமாறு அமைந்து இருந்தது
'சகலருக்கும், உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் இதனை தபாலிடுங்கள். புற்று நோயின் காரணமாக விரைவில் உலகை விட்டு செல்லவிருக்கிற ஒரு சின்னஞ் சிறுமியின் வேண்டுகோள் இது. வாழ்வதற்கு இன்னும் ஆறு மாதங்களே உத்திரவாதம் இருக்கும் நிலையில், தனது இறுதி நேர ஆசையாக, இதை உங்களுக்குத் தெரிந்தோருக்கும், தெரியாதோருக்கும் அனுப்பப் பணிக்கும் அச்சிறுமி, தத்தம் வாழ்க்கையை முழுதுமாக வாழுமாறு உங்களை வேண்டுகிறாள். ஏனெனில் அது அவளால் முடியாமல் போன ஒன்று. வாழ்க்கையை முன் நகர்த்தி சென்று, உயர் பாடசாலையில் பட்டம் பெற்று அல்லது திருமணம் முடித்து
35

Page 20
தனக்கென ஒரு குடும்பம் அமைத்து கொள்ள முடியாமல் போன அவளது கனவு இது. "
அச்சிறுமியின் அக்கவிதையைப் படித்த பொழுது, அச்சிறுமிக்கு அனுப்பும் ஒரு செய்தியினை கவிதையாய் அனுப்ப மனம் விழைந்தது. உடனடியாக அக் கவிதையினை எழுதி அச்சிறுமிக்கு, அனுப்ப கெக்கிராவ ஸ9லைஹா அவர்களுக்கு அக்கவிதையினை அனுப்பி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புமாறு வேண்டியுள்ளேன். நான் அச்சிறுமிக்காக எழுதிய அக்கவிதை உங்கள் பார்வைக்கு
சிறுமியே! மெழுகுவர்த்தியின் திரி காற்றோடு போராடும் வேளையிலும் காற்றாய் உலகைத் தழுவும் கவிதை வரிகளால்-எங்கள் இதயம் கவர்ந்தவள் நீ!
虚一 இந்த உலகின் பிரஜை என்பதை நாங்கள் ஆழமாக நம்புகிறோம்.
நோய் எனும் அரக்கன் உன்னை மெல்ல மெல்ல் விழுங்கும் அவலத்தை அறிந்த பின் -966īL-b
நாங்கள் மன்றாடுகிறோம் 'உலகச் சிறார்களை உன் கோரப் பசிக்கு இரையாக்குவதை நிறுத்தி விடு'
என்று
உலகப் பிரஜையாய் Gotho Desir GTL b கவர்ந்தவளே! உலக வல்லரசுகளிடம் உன் தீராத ஆசையாய்,
"உங்கள் கொடிய போர்களால் sole) sát éFDTijaseodort
அழிப்பதை நிறுத்துங்கள்
எனும் பிரகடனத்தை அறிவித்து விடு!
நாங்கள் தொடர்கிறோம் நன்றிக் கடனாய் உனக்கான எங்களது கண்ணிர் அஞ்சலியை:
நான் அச்சிறுமிக்கு அனுப்பிய செய்தி சரியானதுதான் என்பதை
நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என
நம்புகிறேன்.
2. தயாபரனின் கடிதக் குறிப்பு.
கடந்த மல்லிகை இதழின்
கடிதங்கள் பகுதியில் ஒரு பிரதியின்
முணுமுணுப்புக்கள் ஒன்றில்
36

நான் தெணியான் அவர்களைப் பற்றி எழுதிய குறிப்பினையிட்டு தயாபரன் என்பவர் தனது கருத்தைத் தெரிவித்து இருந்தார்.
தெணியான் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் முன் வைத்த தேசிய ஒருமைப் பாடுதான் இன்று நடைமுறைப் படுகிறது என்றும் தெணியான் போன்றவர்களின் கருத்தியல் ரீதியான பங்களிப்பு மிகத் தேவையாக உள்ளது என்ற வகையில் நான் எழுதிய குறிப்பினை படித்த ப்ொழுது அவருக்கு சிரிப்பு வந்ததாக தயாபரன் எழுதி இருந்தார். (ஒரு கருத்தியல் சம்பந்தமான குறிப்பைப் படித்தால் சிரிப்பு வருமா? அழுகை வருமா?
வெறுப்பு வருமா? கோபம் வருமா?
என்பதெலாம் அக்குறிப்பைப் படிக்கின்றவர்களின் மனோநிலையைப் பொறுத்தது என்பதனால் எனது அக்குறிப்பைபை படித்ததும் தயாபரனுக்கு சிரிப்பு வந்ததையிட்டு நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை)
அன்று முற்போக்காளர்களால் பேசப்பட்ட தேசிய ஒருமைப்பாடு
வேறு. இன்று பேணப்படுகின்ற தேசிய
ஒருமைப்பாடு வேறு. என்ற தொனியில் தயாபரனின் கருத்து அமைந்து இருந்தது.
அவரது அக்கருத்தை நான் Cup Clg)60ol du unt&95 Golgifflogpl கொள்ளா விட்டாலும், இன்றைய இலங்கையின் சமூக அரசியல் போக்கில் விவாதிக்க வேண்டிய ஒரு கருத்து என்பதை நானும் எண்ணுகிறேன்.
ஆனால், ஒரு விவாதத்துக்குரிய தளத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் தயாபரன் அக்கருத்தை முன் வைக்காமல் அக்குறிப்பின்
மூலம் அன்றைய
முற்போக்காளர் மீதான
தனது காழ்ப்புணர்சியை
மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது மட்டும் தெட்டத் தெளிவாக எனக்குப் புரிந்தது.
அன்று முன் வைக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கும். இன்று பேணப்படும் தேசிய ஒருமைப்பாட்டுபிடையிலான வேறுபாட்டியினை தயாபரன் சமூக அரசியல் காரணிகளோடு விரிவாக தந்து இருக்க வேண்டும். மாறாக, விவாத்திற்குரிய ஒரு விடயத்தை வீண் பழி சுமத்தும் ஒரு விடயமாக தயாபரன் மாற்றி விட்டார் என்பதுதான் எனது மனவருத்தம்.
37

Page 21
இது போக, நான் ஏலவே குறித்தது போல அன்றைய முற்போக்காளர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை கொட்டுவதற்காகவே அவர் அக்குறிப்பை எழுதி இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக கருதுவது, இந்த
Buu Tu Tesö T uuTÚ? GT6TD கேள்விக்கு எனக்கு கிடைக்கின்ற பதிலேயாகும்.
அதாவது தன்னை se GOL-urt GIT Ltd S5r L-taகொள்ள விரும்பாத, தனது விலாசத்தை தெரிவிக்க விரும்பாத தயாபரன் போன்றோருக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்றைய அல்லது இன்றைய முற்போக்காளர்களை விமர்சிக்க? இந்த ஜனநாயக உலகில் பொதுத் தளத்திற்கு வந்து விட்டால் யாரும் யாரையும் விமர்சிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் இந்த 'யார்'களுக்கும் விலாசம் இருந்தே ஆகவேண்டும். அப்படி இல்லை என்றால் அவை விமர்சனங்களாக கருதாமல் கிசுகிசுக்களாகவே
கருத வேண்டி இருக்கிறது.)
தன்னை அடையாளப் ட்படுத்த விரும்பாத ஒருவரின் கருத்து நேர்மையின்மைக்கு முன்னால்
தம்மை அடையாளப்படுத்தி சமூகத்தில் தங்களை பகிரங்கப்படுத்தி இயக்க ỞřSuum 35 QGFuu Giolu "L அன்றைய முற்போக்காளார்களின் C8Þú GOLDu | fo G (f). இன்று தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக உயிர் நீத்த, களட் போராளிகளான முற்போக்காளர்களின் நேர்மையும் சரி மதிக்கத் தக்கதும் போற்றற் குரியதுமான விடயம் என்பதை தயாபரன் போன்றோர் உணர்ந்து கொண்டால் நல்லது.
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
6 торьішLпт5 கவிதைக்கு வரையய்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின்
6L 696DSD
(இரண்டாம் பதிப்பு - புதிய தகவல்களுடன்.)
38
 

வேட்டை
ச. முருகானந்தன்
இடப் பெயர்ச்சி எத்தனை குடும்பங்களின் இயல்பு நிலையைக் கலைத்து விட்டது!
சிவராசன் மனம் ஒடிந்து போய் அமர்ந்திருந்தான். அடுத்த நேரம் அடுப்பு எரிய வேண்டுமானால் அவன் ஏதாவது வேலை செய்தாக வேண்டும்.
வேலை.?
இந்த நான்கு வருடங்களாக அவன் பார்க்காத தொழிலில்லை. இடம் பெயர்ந்து வந்த ஆரம்ப நாட்களில் கூலி வேலை குறைவின்றிக் கிடைத்ததால் வயிற்றுப்பாடு பிரச்சனையின்றி நிறைவேறியது.
அவன், மனைவி புவனம், மூன்று குழந்தைகள் - இத்தனை வயிற்றுக்கும் உழைக்க வேண்டுமே! இந்த நிலையில் புவனம் வாயும் வயிறுமாக இருக்கிறாள்.
போன முறையே கர்ப்பத்தடை செய்து கொள்ள அவன் விரும்பினான். ஐந்து குழந்தைகள் இல்லாமல் சத்திர சிகிச்சை செய்ய முடியாது என்று வைத்தியசாலையில் மறுத்து விட்டார்கள். ஊசியும், குளிசையும் அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
சிவராசன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான். மூத்தவன் பசியில் அழுது கொண்டிருந்தான்.இளையவள் பாலில்லாத தாயின் முலைக்காம்புகளைச் சூப்பி, பின் சினத்துடன் சிணுங்கிக் கொண்டிருந்தாள்.
“என்னங்க வரதன் கடையிலை அரிசி எண்டாலும் வாங்கி வாங்க. இலைக் கஞ்சியாவது காய்ச்சுவம்.” புவனம் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள்.
அவனது எக்கி ஒட்டிய வயிற்றிலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளியேறியது.
39

Page 22
பசியால் வாடிய கண்களால் அவளை முறைத்துப் பார்த்தான். “கடன் காசு கட்டாமல் இனி ஒரு மண்ணும் தர மாட்டானாம்.”
சிவராசன் நல்ல உழைப்பாளி. யாழ்ப்பாணத்திலிருந்த போது தொழில் குறைவின் றிக் கரிடைத்ததால் வறுமையிலும் செம் மையாகக் குடும்பத்தை வைத்திருந்தான்.
இங்கு வந்த பின் எத்தனையோ
தொழில் கள் செய்து விட் டான் .
கடைசியாகச் சில நாட்கள் காட்டில் விறகு வெட்டிச் சயிக்கிளில் சுமையாகக் கொண்டு வந்து விற்றுப் பிழைத்தான்.
இப்போது சயிக்கிள் ரயரும் தேய்ந்து, சயிக்கிளும் பழுதாகி விட்டது. ரயர் வாங்கிப் போடலாம் என்றால் அது யானை விலை குதிரை விலையாக இருப்பதால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
பொருளாதாரத் தடை - அதுவும் மிக அத்தியாவசியமான பொருட்களுக்குக் கூட தடை என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
ஏன் ஏழை மக்களின் வயிற்றோடு விளையாடுகின்றார்கள்? யுத்தம் போராளிகளுடனா? மக்களுடனா? மக்களைப் பசி பட்டினிக்குள்ளாக்கி போராளிகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வைக்கவா? - சிவராசன் பல தடவைகள் யோசித்துப் பார்ப்பதுண்டு.
ஆயுதத்தால் கொல்ல முடியாத தமிழ் மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல நினைக்கிறதா அரசு? ஆனால் இதனால்
வெடிச் சிருக் கு.
மக்கள் போராளிகள் பக்கம் அல்லவா இன்னும் இன்னும் சாய்கிறார்கள். மக்கள் முட்டாள்கள் அல்ல என்பது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் வாகனம் இரைந்தபடி செல்லவே சிவராசன் நிமிர்ந்து பார்த்தான். மக்களின் அன்றாட வாழ்க் கையின் கஸ் ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ளாத இவர்கள் வெறும் பாய்களையும், பிளாஸ்ரிக் பொருட்களையும் காட்டி எம்மை ஏமாற்றுகின்றார்களா? எமக்கு எரிக்க மண்ணெண்ணை வேண்டுமென்பது
இவர்களுக்குமா புரியவில்லை?
அவன் உமிழ்ந்தான்.
வெறுப் போடு காறி
பசியில் துடிக்கும் பிள்ளைகளின் வேதனையைத் தாங்க முடியாமல் எழுந்து சென்றான் சிவராசன். அவனுக்கு நடக்கக் கூட இயக்கமில்லை.
செல்வராசாக் கமக்காரன் வீட்டுக்குச் சென்று "கொஞ்ச நெல்லாவது தாருங்கள்” என்று கேட்டான். ஆனால் அங்கும் ஏமாற்றமே!
“போன முறையும் மழை சீரில்லை உரத்திற்கும் தடை நெல்லு விளையவில்லை. விளைஞ சாலும் விலையில்லை நான் என்னத்தைத் தான் செய்யிறது, உனக்குத் தெரியாதா? பாத்துக் கொண்டு தானே இருக்கிறாய். வானம் பார்த்த கமம் மழையில்லை. வயல் எல்லாம் பாளம் பாளமாக மழையெல் லோ
பெய்யோணும். மழை துளி கூட
40

ஒணடுக்கும்
yy
இல் லை. இப்ப வழியில்லாமல் தவிக்கிறம்.
செல் வரா சாவும் GUIT u ( சொல்லவில்லை.
அவன் ஏமாற் றத் துடனும்
விரக்தியுடனும் திரும்பிக் கொண்டிருந்த போது இரத்தினம் எதிர்ப் பட்டான். அவனும் சிவராசனைப் போலவே தொழிலின் றி அலைந்து கொண்டிருப்பதாகக் கூறினான். வறுமை யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறது?
"இப்ப என்ன செய்யுறது இரத்தினம்”
66
.b......... ஒரு தொழிலும் இல்லைا LD........ ஈசன் வேட்டைக்குப் போறான். ஆள் துணை தேவையெண் டவன். போவமே.” இரத்தினம் சிவராசனை நோக்கினான்.
"என்னெண்டாலும் செய்யத் தானே வேணும் களவு பொய் யில் லாத தொழிலெண் டால் சரி. வீட்டிலை ஒருக்கால் சொல்லிப் போட்டு வாறன்.”
சிவராசன் வெறுங் கையோடு வந்ததைக் கண்ட புவனத்திற்கு ஏமாற்றமாக இருந்தது.
"ஒண்டும் அம்பிடேல்லையப்பா. ராவைக்கு வேட்டைக் கெண்டாலும் போவமெண்டிருக்கிறன்.”
"நான் வயித்துப் பிள்ளையோடை இருக்கிறன் . மிருகத்தைச் சுட்டுப் பாவத்தைத் தேடிக் கொள்ளாதையுங்கோ. வேற ஏதும் வேலை.?’ புவனம் பயத்தோடு கேட்டாள். வறுமையிலும் செழுமை குன்றாத தன் அழகு
பாதையரினுTடாகக்
மனைவியை அன்போடு நோக்கியபடி “வேலை எங்கை இருக்கு. நான் போறன். நான் சுட மாட்டன் தானே?. துணைக்குத் தானே போறன் பங்கு இறைச்சி கிடைக்கும். நல்ல விலை போகுது. வித்துப் போட்டு நாங்களும் சமைக்கலாம். வாய்க்கு ருசியாச் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு.’ என்று சொல்லியபடி அவன் புறப்பட்டான்.
ஈசனும், இரத்தினமும், சிவராசனும் மாலைப் பொழுதில் ஒற்றையடிப் காட் டுக் குள் நுழைந்தனர். ஈசனின் தோளில் இடியன் துவக்கு ஒன்றும், ரோச் லைட், உணவு என்பன பையிலும் இருந்தன. இரண்டு மூன்று பழக்கப் பட்ட நாய்களும் கூடவே வந்தன.
இதற்கு முன்னரும் ஓரிரு தடவை இவர்களுடன் சிவராசன் வேட்டைக்கு வந்திருக்கிறான். ஒரு தடவை அங்கு வேட்டைக்குச் சென்று மரை ஒன்றையும், குழுவன் ஒன்றையும் சுட்ட அனுபவம் உண்டு. இன்னும் சில தடவைகள் பகலில் தேன் எடுக்க வந்திருக்கிறான். காடு, காட் டான் என்று ஒதுக் கி வைத்திருந்த வன்னி தான் இன்று வந்தவர்களுக்குத் தஞ்சமளித்திருக்கிறது எனப் புவனம் அடிக்கடி கூறுவாள்.
காட்டுப் பாதை எல்லாம் ஈசனுக்கு
அத்துப் படி, அவனது தொழிலே வேட்டைதான். அவனைப் பின் தொடர்ந்து
சிவராசனும் , இரத் தினமும் புதர்களினுTடாக நடந்து கொண்டிருந்தார்கள்.
காட்டின் நடுவே ஒரு வெளி - அந்த
4.

Page 23
வெளியில் ஒரு குளம், மங்கலான நிலவொளியில் அது சம தரைபோல் காட்சியளித்தது.
அவர்கள் தங்கள் சுமைகளைக் குளக் கரையோரமாகப் புற்றரைமீது இறக்கி வைத்தார்கள்.
பசி வயிற்றைக் கிள்ளியது.
சாப்பிடுவமா..? ஈசன் தான் கொண்டு வந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தான்.
வட்டமான தடித்த நாலைந்து கோதுமை மா ரொட்டிகள். சிவராசன் வெட்கத்தைப் பாராமல் தன்ன ஆரம்பித்தான். பசி கிடந்த வயிறு விக்கலெடுத்தது. இரத்தினம் தண்ணிர்ப் போத்தலை நீட்டினான்.
தண்ணிர் நெஞ்சைப் பிளந்து கொண்டு போவதைப் போல் இருந்தது. 'பிள்ளையன் பசி கிடக்குதுகள். மனது அழுதது.
சாப்பாடு முடிந்ததும் காட்டுக் கரையோரமாக'ஒழி' கட்டினார்கள். இலைகள் நிறைந்த கிளைகளை வெட்டி ஒரு செயற்கையான காடு போன்ற மறைவிடத்தைக் குளத்தை அண்டிய பகுதிகளில் அமைத்து முடித்ததும், மூவரும் அங்கு ஒதுங்கினர்.
‘தணி னி மரைவரும்.”
குடிக் க மான்
“பண்டி அம்பிட்டாலும் பரவாயில்லை. நல்ல விலை போகுது. yy
சிறிது நேரம் கதைத் துக் கொண்டிருந்து விட்டு ஒருவர் விழிக்க,
இருவர் உறங்க என மாறிமாறிச் செயற் LILL-60Ts.
நடு நிசியின் போது சலசலப்பு கேட்கவே சிவராசன் ஈசனையும், இரத்தினத்தையும் தட்டி எழுப்பினான்.
பற்றைகளை முறித்துக் கொண்டு விலங்குகள் வரும் ஒலிதான் என்பதை துல் லியமாக நிச் சயித்துக் கொண்டார்கள். “பண்டிக் கூட்டம் போலிருக்கு.”
ஈசன் ரோச்சை அடித்தான். கூட்டமாகச் சில பண் றரிகள் குளக்கரைக்கு வந்து புற்றரையைக் கிளறிக் கொண்டிருந்தன.
ரோச்சை இர ரீசனத் திடம் கொடுத்து விட்டுத் துவக்கை எடுத்துக் குறிவைத்தான் ஈசன். குறிதப்பாது என்று நிர்ணயம் செய்து கொண்டு வெடி வைத்தான். AO
பன்றிகள் சிதறி ஓடின. எனினும்
ஒன்றிற்கும் படவில்லை.
தம்மைச் சுதாகரித்துக் கொண்ட பன்றிக் கூட்டம் இவர்களை நோக்கி ஆக்ரோசத்துடன் வந்தது. சிவராசன் விறைத்துப் போனான்.
பயப்படாதீர்கள். என்று ஈசன் அவர்களுக்குத் தைரியம் கூறிவிட்டு துணிப்பந்தொன்றில் எண்ணையை ஊற்றி கொழுத்திப் பன்றிகளை நோக்க எறிந்தான் . g வந்துகொண்டிருந்த பன்றிகள் சிதறி ஓடின.
42

“ஓடிப் போயப்
மரங்களிலை ஏறுங்கோ.”
எல்லோரும் மரங்களில் ஏறித் தற்காப்பாக இருந்தனர். சிறிது நேரத்தில் பன்றிகள் கலைந்த பின்னர் தான் சிவராசனுக்கு மூச்சு வந்தது.
y
“பயந்திட்டீர் போல.” இரத்தினம் தான் பயப்படாதது போல் பாவனை செய்து கொண் டு சிவராசனை நோக்கினான்.
“இணி டைக்கு பரணி கட்டி ஏறியிருந்து இரண்டு மூன்று இடியனும் கொண்டு வந்திருந்தால் நல்ல வேட்டை
கிடைத்திருக்கும்.” ஈசன் ஏமாற்றத்துடன் கூறினான்.
“போன முறை சிறாம்பியில முழு இரவும் காத் திருந்தும் LJ 6o 6oi கிடைக்கவில்லை.”
“இனி காடு கலைப்பட்டுப் போச்சு. மிருகம் வரும் எண்டிறது சந்தேகம்
s
தான.
“எதுக்கும் இடியனை அடைச்சு வைப்பம்" என்ற படி ஈசன் நெருப்புப் பெட்டிகள், சைக்கிள் போல்ஸ்கள் என்பவற்றை எடுத்து லாவகமாகத் துவக்கை அடைக்க ஆரம்பித்தான்.
“இது லேசான வேலையில்லை. என்ரை அண்ணன்ர இரண்டு விரலையும் ஒரு கண்ணையும் கொண்டு போட்டுது. கவனமாக அடைக்க வேணும்.”
அனுபவப் பட்ட ஈசன் கச்சிதமாக அடைத்து முடித்தான்.
"ஏதும் வந்தால் எங்கடை அதிஸ்டம். நடந்து போவம். எதிர்ப்படும்.”
இருளிலும் பாதை தவறாமல் செல்லும் ஈசனையும், இரத்தினத்தையும் வியந்தபடி சிவராசன் பின் தொடர்ந்தான்.
நடந்த அல்லோல கல்லோலத்தினால், தூக்கக் கலக்கம் போய்விட்டது. .
"விடியிற நேரமாச்சு. இந்தப் பக்கம் மான் மரை உலாவுறது. கொஞ்சம் தங்கிப் பாப்பம்.”
அவர்களது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
ஒரு பெரிய மான்!
இம்முறை ஈசனின் குறி தப்பவில்லை.
“கி. கி. கி.’ என்று அலறியபடி சிறிது
தூரம் ஓடி விழுந்தது புள்ளி மான்.
பறவைகளின் ரீங்காரம் விடிவை அறிவித்தது. அடி பார்த்துச் சென்று விழுந்த மானை எடுத்து உரப்பையில் வைத்து காவிக் கொண்டு திரும்பினார்கள்.
அவர்கள் காட்டின் எல்லையை நெருங்கிய போது ஊரவர்கள் சிலர் காட்டினுள் வந்திருந்தார்கள். எதுவும் புரியாமல் F乐6前 அவர்களை நோக்கரினான் . ‘என் ன ஏதும் பிரச்சினையோ?”
“ஓம். கிராமத்தைச் சுற்றி வளைச் சிருக்கிறாங்கள். இரவோடு இரவாக வந்ததால கனபேர் அகப் பட்டிட்டினம்.”
“எங்கட பக்கம் இயக்கப் பொடியள் இல்லத்தானே. ஒண்டும் நடவாது.”
43

Page 24
"இளம் பொடியளை எல்லாம் பிடிச்சிட்டாங்களாம்.”
சிவராசனுக்கு பதற்றம் எடுத்தது. புவனம் வீட் டிலை தனிய. பயந்திருப்பாள்.'
அன்று மாலை வரை ஊருக்குள் போகமுடியவில்லை. இளைஞர்கள் சிலரைப் பிடித் துக் கொண் டு போய்விட்டார்களாம், என்ற தகவல் கிடைத்த பின்னர் தான் காட்டை விட்டு அனைவரும் வெளியே வந்தார்கள்.
ஊரோ ஒப் பாரி வைத் துக் கொண்டிருந்தது. "அப்பாவிப் பொடியளை எல்லாம் தலையாட்டி முன்னாலை விட்டு பிடிச்சுக் கொண்டு போய்விட்டான்கள்.”
'ஐயர் பொடியனை சுட்டுப் போட்டாங்கள். பாவம் கோயிலும் தன்ர பாடுமாய் இருந்த பிள்ளை.'
சிவராசன் வீட்டை நோக்கி விரைந்தான். மனம் பதை பதைத்தது. ‘கடவுளே. தெய்வமே. அவன் வீட்டை அடைந்தான்.
“புவனம். எங்கே
புவனம்.?
புவனம்.'
அறையுள் அவள் அலங்கோலமாக.
தொடையெல்லாம் ரத்தமாக, உடலெல்லாம் ö5 fT ULI LD T E5 . . . . . குறைப்பிரசவமாகி.
'8 (8u T 616 J u6), 60T Lb ..... 9 9
சிவராசனின் காலடியில் பூமி விலகியது.
வாழ்த்துகின்றோம்
ஈழத்து எழுத்தாளர்களினது நன்மதிப்பைப் பெற்றுவரும் சென்னை நர்மதா பதிப்பக உரிமையாளருமான திருமிகு ராமலிங்கம் தம்பதியின் அருமை மகள் திருநிறைச் செல்வி ரேணுகா அவர்களுக்கும், கடலூர் திருமிகு எஸ். இராஜதுரை தம்பதியின் மகன் திருநிறைச் செல்வன் ராஜேஸ் பாபு அவர்களுக்கும்
கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் ஏராளமானோர் திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களை வாழ்த்தினர்.
மல்லிகையும் அவர்களுடன் ஒருமித்த மணமக்களை வாழ்த்தி
மகிழ்கின்றத.
| சென்னையில் சமீபத்தில் வெகு விமரிசையாகத் திருமணம் நடந்தேறியது. |

கிணறடியில் ஒரு வளைந்த தென்னை நின்றிருந்தது. அதிலே பொன்மாரி குத்துக் கால் கொண்டு உதைத்தபடி முழுவளவை நோட்டமடிப்பதுணி டு. மணப் பெண் பார்க்கிறதற்கு வந்தவர்கள் சிறாப்பரின் அந்தப் பெருவளவைக் காணி உலாந்தாவாக அளநீ து
தள்ளினார்கள் . கக் கூசு
முற்றமணல் - தோடை - வாழை தென் னை பனைநுங்கு என எண்ணித் தள்ளினார்கள். பின் சுவர் இன்னும் சீமேந்து பூசாமல் தோலுரிந்து தெரிந்ததை ஏக்கமும் பெருமூச்சும் சொரிந்தபடி செறிவாகப் பார்த்தார்கள். பொன்மாரி இதனைப் புரிந்து கொள்ளக் கூடிய வனல் லண் . அவன் கொஸ்லந்தையிலிருந்து இடம் பெயர்ந்து சிறாப்பர் வீட்டின் கூலியாளாகி விட்டவன். தியலும நீர்வீழ்ச்சியைத் தொலை தூர வளைவுகளில் நின்றபடி களித்த அதே பாணியிலே வளைந்த தென்னை தந்த தெம்பில் இவற்றைக் கவனித்தான். சூழ்நிலைக்கேற்ப அவன் இப்போதெல்லாம் வெறும் மேலுடலுடனும் அரையிலான வேட்டியுடனும் காணப்பட்டான். அவன் அங்கே வந்து சேர்ந்ததெல்லாம் அஞ்சல் சேமிப்புப் புத்தகத்தின் வைப்பீட்டை நிரப்புவதற்கும் வயிற்றை நிரப்புவதற்குமே
தான.
ԳլճՖճԱհՖ
USãጨፍùነፍስጦ°ጫ
சி.சுதந்திரராஜா
முறிந்த பனையின் பிரதியை சிறாப்பரின் மூத்தமகன் மர மேசை மீதில் விரித்திருந்தான். கரு மஞ்சள் பிரம்புக்கூடை பொருந்திய றலியில் ஊர் சுழலுவதே அவன் போக்கு. பொன்மாரி கூட அவன் பேசியதே வெகு குறைவு. அழகு ரதியான அவனது தங்கைக்கே பெண்பார்க்க வந்தவர்கள் இப்படியான அளப்பெடுப்பு தொடுத்திருந்தார்கள், சிறாப்பரின் சீதனச் சுளைக்காகவே இவர்கள் இங்கு இறங்குகிற விஷயம் தரகனால் சிறாப்பருக்கும் எட்டியிருந்தது. சீதனம் ஆதனம் பற்றியெல்லாம் பொன்மாரி அறிந்திருக்கவில்லை. சூதுவாது அவன் உள்ளத்துள் புகுவதாயில்லை. லயக் காம்பராவில் தேயிலைக் கூடைகளிடை வளர்ந்தவன் தான். வட புலம் அவன் வந்து சேர்ந்து கொண்டதே விந்தையானதொன்று. அவனது கழுத்தோரம் வரை சடைத்த தேயிலைச் செடிகளை அவன் இங்கெல்லாம் மருந்துக்குக் கூடிக் காண்பதுமில்லை. அதே தோற்றம் தரும் குரோட்டன் - மணிவாழை - கோழிச்சென்டுச் செடிகளைப் பேணிப் பராமரிப்பான்.
45

Page 25
எட்டு மணிநேரம் என்றில்லாமல் பொன்மாரியைத் திட்டுவதில் கழிப்பாள் சிறார்ப்பரின் வீட்டுக்காரி. 'வடக்கத்தைக் குணம்’ ‘தோட்டக் காட்டுப் புத்தி’ என்றெல்லாம் வசைமாரி வீழும். அலட்டிக் கொள்ள மாட்டான். தானும் தன்பாடும் என்றிருப்பான். சொல்கிற வேலை செய்து முடிப்பான். செய்வன திருந்தச் செய்யாத போதிலும் சலிப்பும் எதிர்ப்பும் காட்டாதிருந்தான். இவை சிறாப்பருக்கு பிடித்திருந்த பழக்க வழக்கமாயிற்று.
அடிமை குடிமை என்பதெல்லாம் பொன்மாரி கேட்ட்றியாத பதங்கள். உரலை நாற்சார் வாசற்படி வரை உருட்டிக் கொண்டு வந்து வைப்பான். கறுப்பி மாவிடிக்கவுந் துாளிடிக்கவும் வரும் வேளை விசித்திரமான பிரமையில் ஒன்றிப் போய்விடுவான். கொஸ்லாந்தை பற்றியெல்லாம் ஆர்வத்தோடு கறுப்பி கேட்டறிவாள். பெயருக்குப் பொருத்தமே இல்லாத சிகப்பு மேனி, பொன்மாரியின் தாயையும் மீறிய வயசுக்காரி.
“கட்டாடி வராட்டி நீ தோய்க்கிறது தான்’ என்பார் சிறாப்பர். கிணறு காவியாகி அழுக்குத் துணிமணிகளை அலம்பித் துவைப்பான். கடைக்கனுப்பி வைப்பார் சிறாப்பர். கடன் கொப்பியை கக்கத்தில் வைத்தபடி நிறை குறையாத சாமான்களுடன் மீளுவதே நித்திய கருமம் என்றாகிப் போய்விட்டது.
“டாக்குத்தருக்கெல்லே மோளைப் படிப்பிக்க இருந்தனாங்கள் கண்டியளோ”
சிறாப்பர் கண்ணாகினார்.
தன் அந்தஸ்த்தில்
சினைப் பிடிப்பதை வந்தவர்கள்
எளிதில் விடப் போவதில்லை என்பது தெளிவாகத் தொனித்தது. வளைந்த தென் னையை அண்ணாந்தும் பார்த்தார்கள். தேங்காய் ருசி கூட வந்திருந்த மாப்பிளை வீட்டாருக்கத் தேவைப் பட்டது. வழக்கமாக தென் னைகளில் ஏறித் தேங்காய் பிடுங்குபவன் இல லாதபடியால வீட்டுக்காரி பொன்மாரியை ஏவினாள். பழக்கமோ முன் அனுபவ முதிர்வோ
இல்லாத அவனும் மறுப்பை மனசுக்குள்
புதைத்தபடி குந்திக் குந்தி எழும்பும் பாணியில் தென்னையில் ஏறியேறிப் போனான்.
நெஞ்சுக் கூட்டில் சிராய்ப்பு. நாசிக்குள் தும்புத் துகள் நுழைந்தது. அரிப்பெடுத்தது. அரை துTரத் தென் னையில் இருந்தபடி கரீழே நோக்கினான். கிறங்கடிக்குமாற் போல் கிணற்றின் வட்டமிருந்தது. ஒரு தென்னை அளவு ஆழத்தில் கிணற்று அடிமட்டம் நன்கு தெரிந்தது. இனம் புரியாத பயம் இப்போது தான் அவனுக்குள் விரியத் தொடங்கியது. முக்கின் அரிப்பைச் சரி செய்ய கையை மரத்தின் பிடியிலிருந்து விலக்கவே கால்கள் சறுக்கியது. தொபுக்கடித்தபடி நிலத்தில் வீழ்ந்தான். வலியின் உபாதை தாங்காது அலறிக் குளறினான்.
“வளர முந்தி மாறிப்போம்" சிறாப்பர் சொல்லால் ஒத்தடம் கொடுத்தார்.
வேடிக்கை பார்ப்பதற்கானவன் பொன்மாரி ஆகினான். விநோதமான பிராணி போல அவர்களுக்கெல்லாம் அவன் காட்சியானான்

ஈழத்து இலக்கிய உலகிலும் இலக்கிய நூல்கள் வெளியீட்டுத் துறையிலும் இம்மாதம் 10-ம் திகதி ஒரு சாதனை நிகழ்ந்திருக்கின்றது. ஈழத்தின் மிகப் பெரிய சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கின்றது. அத்துடன் ஒரே மேடையில் ஏனைய ஒன்பது படைப்பாளிகளின் நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கைலாசபதி அரங்கில் யாழ் இலக்கிய வட்டம் இவ்வாறான சாதனையைச் செய்திருக்கின்றது. கடந்த நான்கு தசாப்தங்களாக ஈழத்தின் இலக்கியத்திற்குக் கணிசமான பங்களிப்பினை யாழ் இலக்கிய வட்டம் ஆற்றி வருகின்றது. இரசிகமணி கனக செந்திநாதனால் உருவாக்கப் பட்ட இந்த அமைப்பு, இன்று பிரபல படைப்பாளி செங்கை ஆழியான் தலைமையில் இந்தப் பத்து நூல்களின் வெளியீட்டினைச் செய்திருக்கின்றது. யாழ் இலக்கிய வட்டம் ஏற்கெனவே தன் கடந்த காலங்களில் எழுபத்திரண்டு இலக்கியப் படைப்புக்களை நூல்களாகத் தந்துள்ளது.
சுதந்திரன் சிறுகதைகள் தொகுப்பில் 109 சிறுகதைப் படைப்பாளிகளின் சிறுகதைகளுள்ளன. 740 பக்கங்களுடன் கனதியான கட்டமைப்புடன் வெளியிடப் பட்டிருக்கின்றது. இதில் உள்ள முக்கிய அம்சம் இது. பெரியதொரு தொகுதியாக இருப்பது மட்டுமன்று, இதில் இலங்கையின் பல பகுதி எழுத்தாளர்களின் படைப்புக்களும் இடம் பிடித்திருப்பதாகும். யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, தென்னிலங்கை, மலையகம் என நாடளாவிய படைப் பாளிகளின் "ܙܐ 明 ک66
றுகதைகள் இதிலுள்ளன. அவ்வகையில் இது ஒரு தேசியப் படைப்பாளிகளின் தொகுதி. இவ்விழாவில் பாற்காவடி (சு.வே.) O O சிறுகதைத் தொகுதி, ஈழத்துச் சிறுகதை சுதந்திரன் வரலாறு (கலாநிதி க.குணராசா), ஒரு காதலின் b ഞb (அராலியுர் ந.சுந்தரம்பிள்ளை), சர்ப்பவியூகம் (செம்பியன் O செல்வன்), குயில்கள் (கோகிலா மகேந்திரன்), சிறுகதைகள் ஊரும் உலகமும் (கே.வி.நடராஜன்), சத்திய தரிசனம் (சிற்பி), ஐயாத்துரை கவிதைகள் (கவிஞர் ஐயாத்துரை), வெண்சங்கு (கனக o செந்திநாதன்) முதலான நூல்கள் வெளியிடப் வெளியீட்டு பட்டுள்ளன. இவற்றில் பாற்காவடி, சத்திய தரிசனம் சர்ப்பவியூகம், ஊரும் உலகமும், வெண் சங்கு என்பன சிறுகதைத் வி தொகுதிகளாகும். குயில்கள் நாடகத் தொகுதி. T ஒரு காதலின் கதை நாவல். ஈழத்துச்
47

Page 26
சிறுகதை வரலாற்று ஆய்வு நூல்.
இந்த வெளியீட்டு விழாவிற்கு யாழ் இலக்கிய வட்டத் தலைவர் செங்கை ஆழியான் தலைமை வகித்தார். அவர் தனதுரையில், சுதந்திரன் ஒரு கட்சி சார்பான அரசியல் பத்திரிகையாக விளங்கினாலும் அதன் ஆசிரியர்களாக விளங்கிய நடேசையர், சிவநாயகம், இராமசாமி, சங்கர், கோவை மகேசன் முதலானோர் இலக் கரியத் தைப் பொறுத்தளவில் அதனை ஒரு தேசியப் பத்திரிகையாக வெளியிட்டுள்ளனர். பிரதேச வேறுபாடின்றி எழுத்தாளர்களை ஒருங்கினைத்த பத்திரிகை அதுவாகும்.
அப்பத்திரிகையில் வெளிவந்த 780
வரையிலான சிறு கதைகளிலிருந்து 109 சிறுகதைகள் இத்தொகுதிக்காககத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இப்பணியை ஆற்ற இப்பாரிய தொகுதியையும் ஏனைய பத்து நூல்களையும் (கவிஞர் குமாரசாமியின் ஒரு ஊர் நினைப்பு இன்னமும் வெளிவரவில்லை) வெளியிட முன்னைய அரசின் வடக்கு கிழக்குப் புனர்வாழ்வு தம்மொழி அமுலாக்கல் அமைச்சின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன் அமைச்சின் மூலம் எட்டு இலட்சம் ரூபாய் யாழ் இலக்கிய வட்டத்திற்கு வழங்கியிருந்தார். அதில் இரண்டரை இலட்சத்திற்கச் சுதந்திரன் சிறுகதைகள் நூலும், இரண்டரை இலட்சங்களுக்கு யாழ்ப்பான எழுத்தாளர்களின் வெளிவந்த நூல்களும், மூன்று இலட்சத்தினை பத்துப் படைப்பாளிகளுக்குப் பகிர்ந்து 30 ஆயிரம் ரூபா வீதம் வழங்கிப் பத்து நூல்களும் யாழ் இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது. இலக்கிய வரலாற்றில்
மூன்றாண்டுகள் எடுத்துள்ளன.
இவ்வாறான எட்டு இலட்ச ரூபாய் நன்கொடை இலக் கியத் திற்காக வழங்கிய அமைச் சு முன்னர் எதுவுமில்லை. இதுவும் ஒரு வரலாற்றுப் பதிவே' எனக் குறிப்பிட்டார்.
இவ்விழாவின் பிரதம விருந்தனராகப் பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் 'நந்தி'
கலந்து கொண்டார். அவர் தனதுரையில்,
‘இலக் கசிய வரலாற்றில் பதியப் படவிருக்கும் இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியுண்டாகிறது. ஒரு காலத்தில் ஈழத்தின் பல திக்குப் படைப்பாளிகளின் சிறுகதைகளை ஒருங்கே வாசிக்கும் சந்தர்ப்பத்தினை அதன் தொகுப்பாசிரியர் செங்கை ஆழியான் தந்துள்ளார். அவர் ஏற்கெனவே இவ்வாறான தொகுதிகளை மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுக்தைகள், ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள், சிரித்திரன் சுந்தரின் கார்ட்டூன்கள், முனியப்பதாசன் சிறுகதைகள், g560) D. லோலன் சிறுகதைகள், சம்பந்தர் சிறுகதைகள் எனத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். அவை நமது இலக்கிய இருப் பினை அறிய உதவுகின்றது. ஒரு படைப்பாளி தனது படைப் பரிலக் கிய நேரத் தரில் பெரும்பகுதியை இவ்வாறு பிறரின் படைப்புகள் வெளிவர ஒதுக்குவதென்பது சாதாரண சங்கதரியல் ல’ எனக் குறிப்பிட்டார்.
சுதந்திரன் சிறுகதைகள் நூலின் வெளியீட்டுரையைப் பிரபல சிறுகதைப் படைப்பாளியும், கலைச் செல்விச் சஞ்சிகையின் ஆசிரியருமான சிற்பி
48

சரவணபவன் நிகழ்த்தினார். அவர் சுதந்திரன் கட்சிப் பத்திரிகையல்ல. அது தமிழ் இனத்தின் தேசியப் பத்திரிகை என்றார். அதனால் தான் இலக்கியத்திலும் தேசத் தன் 6) பகுதிப் படைப்பாளிகளையும் இணைத்து நாடறிய வைக்க முடிந்தது' எனக் குறிப்பிட்டார். ஏனைய ஒன்பது நுால களின் வெளியீட்டுரையினை பல்கலைக் கழகத்தின் முடிநிலை விரிவுரையாளர் எஸ்.சிவலிங்கராசா வழங்கினார். ஏனைய ஒன்பது நூல்களையும் சுருக்கமாக விமர்சித்தார். சாதனை படைக்கும் இந்த விழாவில் ஒன்பது நூல்களை அறிமுகம் செயப் கன்ற வாயப் ப் புத் தனக்கு ஏற்பட்டமையை வியந்தார்.
முதற் பிரதிகளை இலக்கிய ஆர்வலரும் கட்டைவேலி நெல்லியடி பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான திரு. த. சிதம்பரப் பரிள்ளை பெற்றுக் கொணி டார். இலங்கையில் வெளிவருகின்ற தமிழ் நூல்களில் பத்துத் தொட்டு இருபது வரையிலான படைப் புக் களைத் தொடர்ந்து வாங்கிவருபவர், இவர், தனது உரையில், நூல்களைப் பதிப்பித்து வெளியிடுபவர்கள் அவற்றினை எங்கு வாங்கலாமெனவும் அறியத் தரவேண்டும். பத்திரிகையில் வெளிவருகின்ற மதிப்புரைக் குறிப்புகளிலும் வாங்குமிடம் குறிக்கப் பட்டிருப்பதில்லை' என்றார். யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச சபைச் செயலாளர்களும், நகராட்சி மன்றச் செயலாளர்களும், மாநகராட்சி நூலகரும் முன் வந்து தமது நூல்நிலையங்களுக்கு மூன்று தொட்டு ஆறுவரையிலான தொகுதி நுால களை வாங் கிக்
கொண்டமையானது ஈழத்து நூல்களுக்கு உளளுராட்சிச் சபைகள் அளிக்க முன்வந்திருக்கும் நல்ல அறிகுறியாகப் பட்டது.
கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ் மாநகராட்சி முதல்வர் உயர் திரு.செல்லன் கந்தையன், ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வாங்கி நூல்நிலையங்களில் இட சனசமூக நிலையங்களைத் தூண்டுவேன் என உரைத் தார். பதலுரையையும் நன்றியுரையையும் செம்பியன் ஆற்றினார். இவ் விழாவில படைப் பாளிகள் கெளரவிக்கப் பட்டார்கள். கெளரவிக்கப் பட்ட ஒழுங்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
சுதந்திரன் சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழா 16-11-2002 சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும், 17-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியிலும், 18-ம் திகதி திருகோணமலையிலும், 19ம் திகதி மட்டக்களப்பிலும் நடை பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து படைப்பாளிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். கொழும்பில் நிகழ்ந்த் விழாவினை பொ.ஆனந்தலிங்கமும், கண்டி விழாவை ஞானம் ஆசிரியர் த.ஞானசேகரனும், திருகோணமலை விழாவை திருமதி பூரீதேவியும் , மட்டக்களப்பு விழாவை அன்புமணி, இரா நாகலிங்கமும் பொறுப்பேற்று நடாத்தி முடித்தனர். எனவே சுதந்திரன் சிறுகதைகள் அறிமுகவிழா நாடளாவிய தேசிய விழாவாகவும் அமைந்துவிட்டது.
49

Page 27
அமரர் மு. கார்த்திகேசன் நினைவு நூல் வெளியீடு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் 17. 11. 2002 - ஞாயிறு - மாலை 4.30
தலைமை : கலாநிதி, வி. அம்பலவாணர். வரவேற்புரை : ஜானகி பாலகிருஷ்ணன். வெளியீட்டுரை: எம். குமாரசாமி. ஆய்வுரை : பேராசிரியர் எம். ஏ. நுஃமான். நன்றியுரை : சுமதி குகதாசன்.
மல்லிகை நூலகம்
நூல்: கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்.
அறிமுகக் குறிப்பு : மா. பாலசிங்கம்
மார்க்சிஸ், லெனினிஸ், மாவோவிஸச் சிந்தனைகளைச் சில பொதுவுடமைக் கட்சியினர் மேடைகளில் முழங்க அவைகளைத் தனது நடைமுறை வாழ்வில் காட்சிப்படுத்தியவர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன். வறுமைக் கோட்டின் கீழ் தமது வாழ்க்கையை நிலைப் படுத்தி, அதனின்றும் நிமிர முடியாது திமிறிக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தை - அடிமட்ட மக்களை - அந்த அவல
வாழ்வினின்றும் மீட்கப் பெரும் கரிசனை காட்டியவர் - இவர்.
வீட்டு முற்றம் வெள்ளக் காடாகவிருக்கும் - ஒழுக்கால் வீட்டு நிலம் ஊறிப் போயிருக்கும். இத்தகைய சூழலில் அந்த வீட்டின் சொந்தக்காரனான கந்தனோ, சுப்பனோ விரிக்கும் கிழிந்த பாயில் சம்மாணமிட்டிருந்து அவர்களது துயர்களைக் கேட்டுத் தனது மனித நேயத்தைப் புலப்படுத்தும் இவரது இந்த மனப் போக்கை எவருமே வாக்கு வேட்டையென முடிவு கொள்ள முடியாது.
பஞ்சப் பட்ட மக்களின் இல்லங்களில் கார்ல்மாக்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோரின் புத்தகங்களை நடமாட விட்டவர். அவர்களது புரட்சிகரமான சிந்தனை வித்துகளை இந்த மக்களினி மனங்களில் ஊனர் றியவர். யாழ்ப் பாணத்தினர் எந்தவொரு பினர் தங்கிய கிராமத்திலும் தோழர் மு.கார்த்திகேசனின் பங்களிப்பின்றி சனசமூக நிலையங்களோ, வாசிகசாலைகளோ திறக்கப் படவில்லையெனத் துணிந்து கூறலாம். மக்களை அறிவுமயப் படுத்துவதில் அயராது பாடுபட்டவர். பொதுவுடமைச் சித்தாந்தங்களைப் படிக்க
வைத்ததோடு நின்று விடாமல் அவைகளைக் கற்பிப்பதிலும் ஊக்கம் காட்டியவர்.
50

கட்சியினர் அடையாளம் கார்த்திகேசனென்றால்
அது வாழ்க்கையை வெறுத்து எளிமையான
பொதுவுடமைக்
மிகையாகாது. பகட்டு
வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர். காற்றாடி, தொலைபேசி இணைப்பு ஆகிய செளகரியங்களோடு விசாலமான தனி அறையில் இருந்து நிருவாகம் நடத்த வேண்டிய இந்தப் பட்டதாரி, கொட்டா(கொழும்பு) றோட்டிலுள்ள ஒரு சிறு அறையினுள் இருந்து கொண்டு கட்சிப் பணி செய்தார்.
குறள் படித்த தமிழனுக்கு கறள் பேணியா? என வெகுணர் டெழுந்து தேநீர் கடைப் பிரவேசத்தில் தாழ்த்தப் தமிழர்களோடு தானும் இணைந்து கொம் யூனிஸ் ட் கட்சியையும் இணைத்து சாதியத்திற்கு எதிரான போராளியாகத் தன்னை
Ull
இனங் காட்டினார்.
பஞ்சமர் ப் பேராளிகளோடு இணைந்து அவர்களை வளர்த்தெடுத்த கார்த்திகேசன், வண்ணார் பண்ணை வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டு, யாழ் சபையினர் உறுப் பினரானது ஒரு வரலாற்றுத் திருப் பந்தானி . இதே திருப்பம் பருத்தித் துறையிலும் நிறுவப் பட்டது. கொம்யூனிஸ்ட்டான பொன்
மாநகர
கந்தையா பாராளுமனி றப்
பிரதிநிதியானார். இதே தேர்தலில்
கார்த்திகேசனர் யாழ்ப்பாணத் தொகுதியில் வேட்பாளராக நின்று தோல்வி கண்டார். அவரது தோல்வி அறிவிக்கப் பட்ட அதே மேடையில் பொனி கந்தையா வினர் வெற்றி அறிவிக்கப் பட்டது. அப்பொழுது கார்த்திகேசன் பேரானந்தத்தோடு நிமிர்ந்து நின்று ‘பருத்தித்துறையில் செங்கொடியை நாட்டி விட்டோம். வெற்றிகள் இன்னும் தொடரும்' என அவரது ஆதரவாளர் களினர் மெய் சிலிர்க்கச் தனது தோல்வியைக் கணிடு துவளாதவர் அந்தக் இன்னமும் கார்த்திகேசனின் ஆதாரவாளர்களின் மனதில்
உலாவருகின்றது.
சொனர் னார் .
காட்சி
பசுமையோடு
பஞ்சமர்கள் மத்தியில் அன்று புத் தி சிவிகளாக வெடித்தெழுந்த எஸ்.பொன்னுத்துரை, கே.டானியல், எண்.கே.ரகுநாதன், டொமினிக் ஜிவா, எஸ். பசுபதி என்பவர்களை மார்க்ஸிச கோட்பாடுகளில நெறிப் படுத்தி அவர்களைச் சமூக விடுதலைக்கான போராளிகளாக்கினார். இவர்கள் பிற்காலத்தில் நாடறிந்த முற்போக்கு சிந்தனைகளைப் பரப்பும் எழுத்தாளர்களாகவும் கவிஞராகவும், பேச்சாளராகவும் உருவாகியிருப்பதை தமிழ் இலக்கிய உலகு நன்கறியும்.
5

Page 28
மற்றவர்களின் பொன் மொழிகளைப் பிதற்றாதீர்கள் உங்களுடைய பித்தளை மொழிகளை இயற்றுங்கள்!' - எனக் கோவிரித்து பஞ்சமர்களைச் சிந்தனை யாளர்களாக்கத் தோழர் கார்த்திகேசன - அவர்களைக் கூவி அழைத்தார். அவரது நோக்கம் பிழை போகவில்லை.
மத்தியில கோப்பான நிலையை ஏற்படுத்த வல்ல
பஞ்சமர்கள் கட்டுக்
எம்.சி.சுப்ரமணியம் போனர் ற தலைவர்கள் தோனி றினார்கள் . சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்ற பொது அமைப்பு - மரபுவாதிகளுக்கு அளலைக் கொடுக்குமளவிற்கு யாழ் மணர் ணரில் வேர் விட்டது. அதனர் வளர்ச்சிக்குக் கார்த்திகேசன் தனி கட்சியோடு
பங்களிப்புச் செய்தார்.
சேர்ந்து பெரும்
சாதியத் தேமல் யாழ்ப்பாணத் தமிழனின் முகத்தை மறைத்திருந்த காலத்தில் தாண் - கொம்யூனிஸ்ட் கட்சி யாழ் மண்ணில் வேர் விட்டது. அதனி வளர்ச்சியையும் தாம் எதிர் பார்க் காத வட்டாரங்களில புத்தெழுச்சி சூல் கொண்டு, ஒரு சமூகப் புரட்சிக்கான இயக்கம் உருவாகியதையும் பொறுக் காத சாதியக் காப்பாளர்கள் கொம்யூனிஸ்ட் கட்சியை, வாள், கிறிஸ் , கத்தி, பொல்லு எடுப்போரின் கட்சியென்றும்,
பள்ளர், நளவரின் கட்சியென்றும்
பங்களிப்புச்
அக்கட்சியின் முகத்தில் சேற்றைப் Ա* எத்தனித்தனர். ஆனால், கார்த்திகேசன் - எம். சி. சுப்ரமணியம் , போணி றோரினர் ஒத்தாசையோடு எதிரிகளின் பாசறையில் அக்கட்சியை வளர்த்தெடுத்தார் . ஒட்டுவது போன்ற கட்சிப் பணிகளில்
நோட்டீஸ்
பஞ்சமர்கள் இரவு
களைப் படைந்த
பெருவாரியான
செய்தனர். நேரங்களில
இவர்களுக்கு தேநீர் அருந்துவதும்
சிரமம். தேநீர்க் கடைகள் அனைத்தும் பஞ்சம விரோதிகளுடையது. இதனால், தாகம் எடுத்தால் கார்த்திகேசனுக்கும் அதைத் தீர்த்துக் முடியாதிருந்தது. இதனால், இவர்கள் இத்தகைய சமயங்களில் தேநீர் அருந்துவதற்கு ஒரு சிங் களச் சகோதரனினி 'சிற்றி - பேக்கரி - கடையைப் பாவித்ததாகத் தகவல்.
கொள்ள
இத்தகைய மனித நேயமற்ற தமிழரது போக்குத் தானி கார்த்திகேசனை திணர் டாமை ஒழிப்பிற்கான வெகுஜன இயக்கம் நடத்திய - தேநீர் கடைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம் எண் பவற்றில் இணைய வைத்தது. கே.டானியல், எஸ்.ரி.நாகரெத்தினம் ஆகிய பஞ்சமப் போராளிகளுக்கு ஒத்தாசையாக இருந்தார். மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசத்தைப் பஞ்சமருக்கு எதிராக
52

நின்று எதிர்த்தவர் பிரபல கணித இவர் பல்கலைக் கழகத்தில் கார்த்திகேசனின் கணித ஆசிரியர். இருந்தும், இந்தப் போராட்டத்தில் தனது குருவுக்கு எதிராக நினர் று கார்த்திகேசனர் பஞ்சமருக்கு உதவினார். இது தான் அவரது இதய சுத்தி!
மேதை.சி.சுந்தரலிங்கம் ,
இன்றைய சூழலைப் பொருத்திப் பார்த்து, - இன, மத, மொழி எனர் பவற்றிற்கான ஒருமைப் பாடு காலாவதியாகி விட்டதென முடிவுக்கு வருவது ஒருதலைப் பட்சமானதாகும். உலகளாவிய செல்வாக்கைப் பெற்ற பெரியார்களால் முன்மொழியப் பட்ட இந்த ஒருமைப் பாடு ஒம்பிகளால் பிசக்கப் பட்டிருக்கலாம்! அதற்கு இன்றைய சமூக அமைப்பே பொறுப்பை ஏற்க வேண்டும். எனவே,
தனி ன ல
ஒருமைப் பாடு மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லையெண் பதை வெறும் போலியான நரித் துறவு என்பதை விட வேறு எப்படித்தான் கூற முடியும்!
இலங்கையில். இனவாத அடிப்படையில் தொழிற்சங்கங்கள் முழைக்கத் தொடங்கின. இந்த வைரஸ் ஆசிரியர் சமூகத்தையும் தாக்கியது. இந்தச் சாபக்கேட்டிலிருந்து ஆசிரியர் சமூகத்தை மீட்க ஜாதிக குரு சங்கமய என்ற தொழிற் சங்கம் நாடளாவிய
ரீதியில் இயங்க ஆரம்பித்தது. இதன் கிளையான தேசிய ஆசிரியர் சங்கத்தை வடபுலத்தில் நிறுவி வழிநடத்தியவர் கார்த்திகேசன்.
கார்த்திகேசனினர் ஊக்கத்தால் கைகூடிய - அவரை என்றும் மறக்க முடியாத ஒரு சம்பவம் யாழ். மாநகர சபையில் நடந்தது. யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களினி செறிவு உள்ளங்கையளவு தான்! இருந்தும், யாழ்ப் பாணத்தார் மர் ஹ"ம்ெ எம்.எம்.சுல்தானை யாழ் நகரினர் மேயராக்கினர். இதற்கான விதையை ஊன்றி அதை விருட்சமாகக் கண்டவர் கார்த்திகேசன் தான்! அதை இன்றும் முஸ்லிம் சகோதரர்கள் மறக்காது நினைவில் வைத்திருக்கின்றனர். இது அவரது இன ஒருமைப் பாட்டு நெஞ்சை அனைவருக்கும் திறந்து காட்டியது.
இதே தடத்தை ஆசிரியர்கள் மட்டுமன்றி, ஏனைய தொழில் சார் சமூகங்களும் பின்பற்ற உழைத்தார். இதில் தனது இணைத்தார். இப் படியாகக் கள் இறக்கும் தொழிலாளர் காங்கேசனர் துறை
தொழிற்சாலை ஊழியர் சங்கம் ,
கட்சியையும்
சங்கம் , சிமேந்து
ஆனையிறவு உப்பளத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை அமைப்பதில் முன்னின்றார்.
53

Page 29
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் சிறந்த குடும்பஸ்தனாக, விசுவாசமான கட்சி அமைப்பாளராக, நாடு"போற்றும் அதிபர், ஆசிரியராக தனது வாழ்வைப் பனி முகப் படுத்தி மானுடத்துக்குத் தனது வாழ்வை அர்ப்பணித்தார். அத்தோடு இதழியல் துறையிலும் தனது முத்திரையைப் பதித்தார். ForWard, Student NewS géu இதழ்களின் ஆசிரியராகவும் தனது சேவையை விரிவுபடுத்தினார்.
கொம் யூனிஸ்ட் கார்த்திகேசனி
பற்றிய பொனி றை
இத்தகைய மீள் வாசிப் “கம்யூனிஸ்ட் கார்த்திகேசனி' என ற நூலைப் படிக்கும் அவரது அபிமானிகள் நிச்சயமாகப் பெறுவர். ஒரு மனிதனின் வாழ்வில் சம்பவிக்கும் அற்புதமான நிகழ்வுகள் அவரது வாழ் வியலை வாசிக்கத் துணர் டும். அத்தகைய துணிடுதலை இந்நூல் தருகின்றது. தோழர் மு.கார்த்திகேசன் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் - அவரது நினைவாக 433 பக்கங்களையுடைய ஒரு நூல் வெளியிடப்படுகின்ற தென்றால் உணர்மையில் அவரொரு மாண்புமிகு மனிதர் தான்!
நூலாக்கத்தில் பெருந் தேடலொன்று நடைபெற்றிருக்கின்ற
இடம் ஆக்கங்களை நோக்கும் பொழுது
தெனி பது, பெற்றுள்ள
புரிகின்றது. தோழர் மு.கார்த்திகேசன் சம்மந்தமான பூரணமான அறிதலைச் செய்வதற்கு இந் நூல் உசாத்துணையாக இருக்கக் கூடியது இந்த அரிய பணிக்காக ஜானகி பால கிருஷ னணி வாசகனின் நெஞ்சில் நிறைவார்.
கார்த்திகேசனோடு நகமும் சதையுமாகவிருந்த கட்சித் தோழர்கள் இலக்கிய வாதிகள், தொழிற்சங்க வாதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், வேற்றினத் தோழர்கள் நூலில் இடம் பிடித்துள்ளனர். ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் இடம் ஆக்கப் பட்டுள்ளன. அமரர் கார்த்திகேசனின் பிரபல கட்டுரைகளும் இளைய
தலைமுறைக்காகத் தரப்பட்டுள்ளது.
நூலில் அமரர் கார்த்திகேசனர் பற்றிச் சொல் பவர்கள் : நீர் வை பொன்னையன், டொமினிக் ஜிவா, சி.கா.செந்திவேல், என்.கே.ரகுநாதன், வீ.சின்னத் தம்பி, எம்.குமாரசாமி, கலாநிதி வி.அம்பலவாணர், ஈழத்தச் சிவானந்தன், காவலூர் எஸ்.ஜெகநாதன், கலாநிதி கசொக்கலிங்கம், AO.ராமையா, கி.மகான், சுசீலாஜோன், வி.ரட்டாய் சுந்தரம் டிவகலாலா, ஐஆர்.அரியரத்தினம், கே.கணேஷ், வி.ரி.இளங்கோவன், எஸ்.டிபண்டாரநாயக்க, எல்.ஏ.சி.இக்பால், மருதுர்க்கனி இன்னும் பலர்.

ஆக்கங்கள் 125 அடங்குகின்றன.
இந்த நினைவு கிடைக்கும் அன்பளிப்புத் தொகையை அமரர். தோழர் மு. கார்த்திகேசன் கற்ற அல்லது கற்பித்த ஏதாவதொரு பாடசாலைக் குக் கொடுக்க வேணர் டுமென ற மலர் க் குழுவினர் தீர்மானம் சந்ததியால் வேணர் டியது. தனர் முன்னுதாரணமாக்கித் தந்த இந்த அற்புத மனிதனின் ஆக்கப் பணிகளின்
தொடரப் போகும் பினர் பற்றப் பட
வாழ்வை
பரம் பலுக்காக உழைக்கும் இக்
அமரரினர் தடத்தில் இத் தீர்மானம் அடையாளப் படுத்துகிறது.
குழுவினர் பயணிப்பதை
அமரர் கார்த்திகேசனிடம் “நீங்கள் எளியவர்களை நேசிப் பவர் , தொழிலாளர்களின் துன்ப துயரை
அறிந்தவர்” என அவரது அபிமானிகள்
மலருக்கு
சொனி னால் அவர் சொல் வார்
“எனர் னை அப் படியான ஒருவாராக்கியது கொம் யூனிஸ் ட் கட்சிதான்’ எனவே “கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என புத்தகத்திற்குப் பெயரிட்டது வரவேற்கத் தக்கதே!
கவிஞர் எஸ். ஜி. கணேசவேல் அமரரை இப்படி விழிக்கிறார்:-
“கார்த்திகேசன் நம்மவர் தான் கட்சி கூடாதென” ஏத்துவார் மொழி கேட்டு எடுபட்டுப் போகாமல் “நல்ல மனிசனென்றும் நல்லிடத்தில் தான் இருப்பார்” என்றவர் உரைக்கும் பதில் இன்றைக்கும் கனக்கிறது!
மல்லிகை சிறுகதைகள்
Sapao 275/
மல்லிகை ஆசிரியரின் பவள விழா ஞாபகார்த்தமாக வெளியிட்டு வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி
30 எழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
0 சிறுகதைகளை உள்ளக்கிய இரண்டாம் பாகம் தயாராகின்றது
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
55

Page 30
உறவுகள் எங்கே முதலில் அறுகின்றன?
மரங்கள் எங்கே முதலில் படுகின்றன? வேர்களிலா கிளைகளிலா? இவைகள் உதிர்வது வேறு விஷயம்! அவையில்லா மரங்கள் அனைத்துமே இறந்து போனவை அல்ல!
கிளைகளின்றியும் மரங்கள் வாழமுடியும். அடியோடு வெட்டப்பட்ட மரங்கள் கூட
துளிர்த்துக்கிளைப்பது புதினமன்று வேர்கள் இறக்கும் போது தான் மரமொன்றுக்கு மரணம் நேர்கின்றது!
வேர்கள் வித்தியாசமானவைதான் மரத்துக்கு மண்ணிலிருந்து உணவைக் கொடுப்பது மட்டுமே வேர்களின் வேலையல்ல!
にダó)の2/ நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமே வேர்கள்தான்
அ.பாலமனோகரன் (டென்மார்க்)
ཉདེ་ཞད་ཆེ་ཚོའི་ gጨwአöማ'
மரங்களுக்கு வேர்கள் போன்று தான்
மனிதர்களுக்கு உறவுகள் உறவுகள் எங்கே முதலில் அறுகின்றன?
உண்மை அன்Uன்றி உள்ளங்கள் வறளும் போது உறவென்ற வேர்கள்
அற ஆரம்பிக்கின்றன. இந்த வேர்கள் அறுகின்ற போது தான் மணிதன் மரணிக்கத் தொடங்குகின்றான்.
உறவுகள் மட்டும் உறுதியாக இருந்தால் அவனால் வெட்ட வெட்டத் தழைக்கமுடியும்
56

02-01-2003 அன்று மோதரை பிரதிபா மண்டபத்தில் எஸ்.வீதம்பையா அவர்களினது ஓராண்டு நினைவு விழா நடைபெறவுள்ளது.
sO)6OTsila) fusif
டொமினிக் ஜீவா
ஓராண்டு கடந்துபோய் விட்டது. திரு. எஸ். வீ. தம்பையா அவர்கள் நம்மை விட்டு மறைந்து ஓராண்டாகிவிட்டது. அவரைப் பற்றி நினைக்கும் போது மனசுக்கு நிறைவாகவே இருக்கிறது.
சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த இவர், தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் ஆதாரமாகக் கொண்டு உழைத்து முன்னேறியவர். தான் வாழ்ந்த அச்செழு மண்ணைக் கிழறிக் கிழறி அந்த ஊரைச் செழுமைப் படுத்தியவர். ஊர்ப்பாசம் கொண்டவர்.
எனக்கும் அவருக்குமுள்ள தொடர்பு நீண்ட ஆண்டுகளைக் கொண்டது. மிக நெருக்கமாக நாம் பழகத் தொடங்கியது நாற்பது ஆண்டுகள்.
'தண்ணிரும் கண்ணிரும் நூலுக்குப் பரிசு பெறக் கண்டிக்குப் போவதற்காக நான்
கொழும்பு வந்த சமயம், அவருடனான பழக்கம் நெருக்கமானது. அவரது கடையின்
மேல் மாடியிலேயே மாதா மாதம் கொழும்பு வரும் சமயங்களில் நான் தங்கத்
தொடங்கினேன். s
எவருடைய புத்தக வெளியீட்டு விழாவென்றாலும் அவ் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்து அப் புத்தகப் பிரதியை வாங்கிச் செல்பவர்.
சகல எழுத்தாளர்களையும் அறிந்து வைத்திருந்தார். சில முக்கியமான எழுத்தாளர் மீது தனி அபிமானமே கொண்டிருந்தவர்.
எனக் குத் தெரியும் அவருடனர் நெருக்கமான படைப்பாளிகளுக்கு நெருக்கடியான கால கட்டங்களில் பொருளாதார உதவிகள் கூடச் செய்திருக்கிறார். தப்பித் தவறிக் கூட, அவர்களது
57

Page 31
பெயர்களையோ, அல்லது உதவி செய்ததற்கான பணப் பெறுமதியையோ என்னிடம் கூடச் சென்னதில்லை.
எனக்குத் தெரிய ஒரு எழுத்தாளருக்கு அவரது புதல்விகளுக்குத் திருமணம் நடந்த
சமயம் தந்தை என்கிற முறையில் அவர்
அவசர அவசரமாக இரவு வேளையில் நண்பர் தம்பையாவை அணுகி உதவி வேண்டினார். அவரும் ஒரு கணிசமான தொகையைக் கைமாற்றுக் கொடுத்து உதவினார்.
அப்படி நெருக்கடியான வேளைகளில் மற்றவாகளுக்கும் அவசர உதவிகள் பல செய்திருக்கிறார்.
இதில் விசித்திரம் என்னவென்றால் அந்த எழுதி தாளர் தம் பையா அண்ணருடைய இறுதிச் சடங்கில் இறுதி வேளையில் கூடக் கலந்து கொள்ளவில்லை.
தம்பையா அவர்களுடைய பண உதவியால் திருமண வாழ்வு பெற்ற அந்த இரு சகோதரிகளும் இன்று ஜப்பானிலும் அவுஸ்திரேலியாவிலும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
என் மூலமாகத் தான் அந்த எழுத்தாளர் தம்பையா அண்ணருக்கு நண்பரானார். அப்படிப் பட்ட அந்த மனிதன் கொழும்பு நகரில் இருந்து கொண்டே இந்த மாபெரும் இழப்பில் இறுதி வேளையில் கூடக் கலந்து கொள்ளாதது என்னை ரொம்பவும் பாதித்தது.
இன்று அவர் பிரம்ம, ஷத்திரிய, வைஷ்ய, சூத்ர வருணாசிரம தர்மம் பேசிக் கொண்டு கலியாணம், கருமாதிகளுக்குச் சென்று வருவதாக இடைக்கேள்வி.
இப்படிப்பட்ட தரக் குறைவான நட்பை அப்போதே நான் துண்டித்துக் கொண்டு
சந்தேகிக்கின்றேன்.
விட்டேன். நட்புறவை முறித்துக் கொண்டுவிட்டேன்.
மல்லிகை ஆரம்பித்து முப்பத்தேழு ஆண்டுகள் முடிந்துவிட்டன. பிறக்கப் போவது 38வது ஆண்டு. இந்த இடைக்கால கட்டத்தில் தெருத் தெருவாக நான் மல்லிகையைச் சுமந்து கொண்டு விற்று வந்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, தேசம் பூராவும் சுற்றி வந்துள்ளேனர் . இதழ் விற்பனையாளனானேன்.
மல்லிகையில் எழுதுபவர்களுக்காக அவர்களை நாடு பூராவும் தெரிந்து கொள்வதற்காக என்னுடைய உடல் உழைப்பை மாதா மாதம் மனமுவந்து நல்கியிருக்கிறேன். மல்லிகையில் எழுதுவதே ஒரு இலக்கிய அங்கீகரிப்பு என்ற மனப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளேன். இப்படியாக உழைக்கக் கற்றுத் தந்தவர் தம்பையா அவர்கள் தான் என நினைக்கும் பொழுது அவருடைய இழப்பை அவர் உயிரோடு இருந்த காலத்தை விட, இன்று அதிகதிகமாக உணருகின்றேன்.
என்னுடைய அர்ப்பணிப்பு உழைப்பால் பெயர் பதித்தவர்களில் சிலர் இன்று அதைத் துஷ்பிரயோகம் செய்கின்றனரோ என இன்று எச்சரிக்கையாக இருக்கிறேன்.
இப்படியானவர்களில் நான் மேலே குறிப்பிட்ட அந்த நபரும் அடங்குகின்றார்
என்பது தான் பெரிய சோகம்.
என்னதான் இழப்புகள் ஏற்பட்டு விட்ட போதிலும் தம்பையா அண்ணர் கற்றுத் தந்த பாடமொன்று உண்டு. மக்களிடம் குறைபாடுகள் என்ன தான் இருந்தாலும் அவர் மக்களை நேசிக்கக் கற்றுத் தந்தவர். O
58

பேராசிரியர் க. கைலாசபதியின்
நூல்கள்
1. இலக்கியமும் திறனாய்வும் 135.00/- 2. திறனாய்வுப் பிரச்சினைகள் 120,00/- 3, நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் 120.00/- 4. ஈழத்து இலக்கிய முன்னோடிகள் 150,00/- 5. ஒப்பியல் இலக்கியம் 195.00/- 6. சமூகவியலும் இலக்கியமும் 195.00/- 7. தமிழ் நாவல் இலக்கியம் 210.00/- 8. இரு மகாகவிகள் 90.00/- 9. கவிதை நயம் 105.00/- 10. 9IIգեւյւb (լքIգԱյլք 270.00/- 11. பாரதி ஆய்வுகள் 240,00/- 12. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் 144.00/- 13. இலக்கியச் சிந்தனைகள் 175.00/- 14. Tamil Heroic Poetry - (FITg5ITU600TL LugtiL) 540.00/-
(விசேடப் பதிப்பு) 940.00/-
இலங்கை விற்பனையாளர்கள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11
வெளியீடு: குமரன் புத்தக இல்லம் 201, டாம் வீதி, 3. மெய்கை விநாயகர் தெரு, கொழும்பு - 12. குமரன் காலனி, வடபழனி, தொ.பே: 421388 சென்னை-600 028. ル
59

Page 32
LDIL IDIT60Í!
கிழ்க்கில். 'கரையோர மானை'க் கண்ட தாய்ச் சொல்ல ஈமான் கொண்டனர் சிலரும்:
'இந்தப் பகுதியின் தலைநகர் போன்றத
எங்கள் ஊரே, இதனால் எங்கள் ஊரில் இடத்தை அமைத்த இதனை வைப்போம்' என்று சிலரும் "எங்கள் ஊரே இந்தப் பகுதியின் மத்தி
எனபதால
எங்கள் ஊரில் இடத்தை அமைப்போம்' என்று சிலரும்
முன்னர் மானை வளர்த்த அனுபவம் எங்களுக்குமுள்ளதால் எங்களுரில் அதனை வைப்போம் என்று சிலரும் ஊர் ஊராகப் பிரிந்து நின்றனர் ஒரு கொடியின் கீழ் இணைவதான உம்மத்தக்கள் - மோதிக் கொண்டனர்!
பாலமுனை பாறுாக்

இந்தத் தூண்டில் கேள்வி - பதில் சகலராலும் விரும்பிப் படிக்கப் படும் பக்கங்களாகும். இந்தப் பக்கங்களை நான் ரொம்பவும் கவனத்துடனும் நிதானத்துடனும் கையாண்டு வருகின்றேன். காரணம் இளந் தலைமுறையினரை மாத்திரமல்ல, இந்தத் தேடல் முயற்சியால் என்னை நானே வளர்த்துக் கொள்ளவும், எனது அறிவை விசாலித்துக் கொள்ளவும்
முடியும் என நம்புகின்ற படியால் வெகு கரிசனையுடன் கேள்விகளுக்குப் பதில் சொல்லி
வருகின்றேன். இளந் தலைமுறையினர் - குறிப்பாக உயர்கல்வி மாணவர்கள் -
இந்தப் பகுதியைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். என மனப்பூர்வமாக
விரும்புகிறேன். எழுதுங்கள்.
தூண்டில்
லகில் மிகச் சிறிய பத்திரிகை எது? உலகத்தில் ஆகப் பழமை வாய்ந்த திரிகையின் பெயர் என்ன?
கண்டி எஸ்.ரமணன்
உலகத்திலேயே ஆக மிகச் சிறிய பத்திரிகை பிரேஸிலிலிருந்து வெளி வரும் ஹோஸா' என்ற பத்திரிகையே. பத்து பக்கங்களைக் கொண்டு வெளி வரும் அந்தப் பத்திரிகையின் உயரம் ஓரங்குலமே. உலகத்திலேயே மிகப் பழமை வாய்ந்த பத்திரிகை ஜெர்மனியிலிருந்து வெளியான 'கோலோமா' என்ற பத்திரிகையே. இந்தப் பத்திரிகை 1470ல் வெளி வந்தது.
எஸ். ஆர். பாலச்சந்திரன்
தமிழ்நாட்டில் இன்று எரியும் பிரச்சினை இதுவே தான். இந்து மதத்திலிருந்து
தான் பலர் மதம் மாறுகின்றனரே தவிர, ஏனைய மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு யாருமே தாவி வருதாகத் தெரியவில்லையே, ஏன்? 'அன்பே சிவம்' என்ற தத்துவத்தை
6

Page 33
உயிா நிலையாகக் கொண்ட இந்து மதத்திலிருந்து மானுட சமத்துவமே அற்ற மதம் எனச் சொல்லி தலித்துகள் பலர் மதம் மாறுகின்றனர் என்றால் வெறும் வசதி வாய்ப்புக் கருதித்தான் என்ற கருத்தை நான் ஒப்புக் கொள்ளத் தயாராகவில்லை. இந்து மதத்தில் அடிப் படையாக அமைந்துள்ள சாதிப் படிமுறைகள் தான் இந்த மதமாற்றத்திற்கு அடிப்படைக் காரணம். மதம் மாறுவதால் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி ஒடுக்கு முறை அற்றுப் போய் விடுவதில்லை. ‘இக் கரைக்கு அக்கரை பச்சை' என்ற நிலையே. சட்டம் போட்டுத் தடுத்துவிடவும் முடியாது. உண்மையாகவே இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் சாதி என்ற நச்சரக்கன் ஒதுக்கப் பட வேண்டும், ஒழிக்கப் பட வேண்டும். இதைச் செயலில் நடைமுறைப் படுத்தாத வரைக்கும் எந்தச் சட்டத்தாலும் மத மாற்றத்தைத் தடுத்து விட இயலாது. ஒடுக்கப் பட்ட மக்கள் காலாதிகாலமாகத் தங்களது பாரம்பரியப் பண்பாடு, உறவு முறைகளை ஒரங்கட்டி விட்டு மதம் மாறிப் பிரச்சனையைத் தீர்க்கக் குறுக்கு வழி தேடுவதும் சரியான மார்க்கமல்ல. வாழும் தளத்தில் சிக் காராகக் காலூன்றிக் கொண்டே தங்களது மத, மனித உரிமைகளைப் போராடி வெண் றெடுப்பதே முறையாகும்.
பல அனுபவங்களில் தலை நிமிர்ந்து முன்னேறி வரும் தலித் மக்கள் நிச்சயம் எதிர்காலத்தில் தங்களது உரிமைகளை வென்றெடுப்பார்கள் என உறுதியான நம்பிக்கை எனக்குண்டு.
சரியான வழி
வரிகளிலி
ச.ஜெயச்சந்திரன்.
dfl60TLüb
மல்லிகையின் சாதனைகளில் பிரதான சாதனை என்னவென்றால் இலக்கியக்கரர்களில் அதிகமானோரை எதிரிகள் ஆக்காதது தான். பெரும்பாலா னோரை மல்லிகை ஆக்கபூர்வமாக அரவணைத்தது. அன்பு பாராட்டிக் கெளரவித்து மகிழ்ந்தது. அதுதான் பெரிய சாதனை.
ॐ४४४
"உங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமெ
ச.தனராஜன்
எனது வாழ்க்கை முழுவதுமே இலக்கியமாக இருக்கவே பிரியப் படுகிறேன். நானே ஒரு வாழும் இலக்கியம் தான்.
ឍgsវិស្ណុ ព្រោaff, អូ៎,
ல்லப்படுகிறதே. அந்த ஏழு பேரும்
ut uff?
தெஹிவளை, க.சக்திபாலன்.
காஸ்யபர், அத்திரி, பரத்வாஜர்,
விஸ்வாமித்திரர், கெளதமர், ஜமதக்னி, வசிட்டர் ஆகிய இந்த ஏழு பேருமே சப்த ரிஷிகள் எனப்படுவர்.
நீங்கள் தொடர்ந்து மல்லிகையை நடத்தி வருவதன் நோக்கமென்ன?
எம்.ரோஹிணி
வவுனியா
இந்த மண்ணிலும் மகத்தானவர்கள்
62
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்ந்து வருகின்றனர் என்பதை மெய்ப்பிக்கவே. அத்துடன் என்னிடமும் என்னைச் சார்ந்தவர்களிடமும் மற்றவர்களுக்குச் சொல்லத் தக்கதாக ஏராளமான கருத்துக் கள் உணர்டு என்பதை நிரூபிப்பதற்காகவுமே.
நீங்கள் சமீபத்தில் செய்திகளில் ü磅 豁 அதைப் பற்றிச் சிந்தித்த சம்பவம் ஒன்றைக்கூறமுடியுமா?லு:
எம். ஆர். நாதன்
கல்முனை
முன் னை நாள் &s! uDU sT gsf அமைச்சரவையைச் சேர்ந்தவர் கக்கன். காமராஜராலேயே அந்தக் காலத்தில் வியந்து பாராட்டப் பெற்றவர். மிக மிக எளிமையானவர். தலித் தலைவர். இவர் தும்பைப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய மூதாதையருக் கச் சொந்தமானது ஊரில் வீரமாகாளியம்மன் கோயில். அங்கு சென்று பூசையில் கலந்து கொண்டு தலித் சமூகப் பூசாரியிடம் பிரசாதமும் வாங்கிக் கொண்டார், காஞ்சி பூரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
மரபுகள் கேள்விக்குள்ளாக்கப்படும் போது தான் மானுடம் தலை நிமிர்ந்து சிந்திக்கிறது. ஆரோக்கிய திசை வழித் திருப்பமிது.
*強ā
பாடுவதன் உள்ளார்ந்த தத்துவம் என்ன?
556. ஆர். கே. மோகன்
திருமண விழாவில் இந்த மூன்று முடிச்சுகளுக்கு மிக மிக முக்கியத்துவம்
தரப்படுகின்றது. மூன்று பேரினுடைய ஆசியும் நல லா சீர் வாதமும் கோரப்படுகின்றன. முதலாவது தாய், பாட்டி போன்ற உறவினர், மூன்றாவது மணமகளுக்குச் சம வயதுள்ள நண்பி. முதலி முடிச்சு ஒழுக்கத்தின் உயர்வுக்காக, இரண்டாவது முடிச்சு, கணவனின் உயர்வுக் கு வழி சமைப்பதற்காக. மூன்றாவது, நல்ல குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்காக, அவர்களை வளர்த்தெடுப்பதற்காக.
காலி
எம். ஏ. சமீம்
15-3-1932-6b gJubuh disasli ulL பத்திரிகை அது.
滚
மூளாய்
தன்னை அர்ப்பணித்து உழைக்க வேணி டும் . பிரபலமடைவது
முக்கியமல்ல. மற்றவர்களால் இவன் தனித்துவமானவன், வித்தியாசமானவன் எனக் கணிக்கப் பட்டு, விதந்தேற்றப் பட வேண்டும்.
LD(bg5|T60)60T
இதற்கு ஏன் மண்டையைப் போட்டுக் குழப் பரிக் கொள்ளுகிறீர்கள் . அரசியல்வாதிகள் தான் அவர்கள்.
63

Page 34
முடியுமா?
கல்கிசை எம். காந்தராஜா
தவறு. இப்படிப் பார்ப்பதே பிழை. கல்வித் தகைமையாளன் உருவாக்கப் படுகிறான் உயர் கலைஞன் பிறவி எடுக்கிறான். கல்வி அளவு கோல்கள் இவனிடம் செல்லாது.
பேசாலை
நாங்கள் இருவரும் நண்பர்கள்
என்பதை விடவும் தோழர்களாகவே இறுதி வரை பழகி வந்தோம் . நாமிருவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அதிகம் உயர் கல்வி பெறாத சாதாரணர்கள். இருவருமே கத்தோலிக்கக் கிறிஸ்தவர். நான யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அவர் யாழ்ப்பாணத்தை அண்டிய ஆனைக் கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். என்னை விட, தலித் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர். இருவரும் முன் பின்னாக இடதுசாரி இயக்கத்தில் எம் மை ஒப்புக் கொடுத்துக் கொண்டவர்கள். இன்று புத்திஜீவிகளில் பலர் அடிக்கடி தம்மை மார்க்ஸிஸ்டுகள் எனப் பிரகடனப் படுத்துவதைப் போல,
ச.திரவியநாதன்
(8 gö -, இடதுசாரித் தனம் பேசியவர்களுமல்ல, நாமிருவரும். களத்தில் நின்று போராடியவர்கள்.
பிற்காலத்தில் சர்வதேச இயக்கத்தில்
விரிசல் வந்தபோது அவர் ஒரு கன்னையிலும் நான் மறு கன்னையிலும் நின்று செயலாற்றியவர்கள். அவரது இலக் கரிய அநுபவங்கள் வேறு. என்னுடைய வரலாற்று அநுபவங்கள் வேறு. இருவரையும் அன்றைய இலக்கிய உலகம் 'இரட் டையர்கள் ' என அழைத்தது. தலித் இலக் கியப் பார்வையில் அவர் வெகு உக்கிரம் காட்டி நின்றவர், ஆக்கங்களைப் படைத்தவர். நான் எனது இலக்கிய, சஞ சிகை அநுபவங்களின் செழுமையினுTடாக தலித் இலக்கியத்தையும் வாழ்க்கையையும் விளங்கிக் கொண்டவன். அரசியல், சமுதாயக் கருத்து முரணி பாடு கொண்டவர்களாக நாமிருவரும் இருந்த போதிலும் கூட, அவரின் ஆளுமையை நான் மதித்து வந்தவன். அவரும் என்னுடைய இலக்கிய நேர்மையை நண்பர்களிடம் சிலாகித்துப் பேசி மகிழ்ந்தவர். இன்னும் நூறு ஆண்டுகள் செல்லட்டுமே. நம் இருவரது பெயரும் காலாகாலமாகப் பிரகாசிக்கவே செய்யும். நம் இருவரது பெயரும் சிலருக்கு இலக்கிய உலகில் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் வரலாறை இவர்களால் மாத்திரம் தடுத்து நிறுத்திவிட முடியாது.
வாய்ச் சொல்லில் சமுதாயக் கெளரவம்
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
64
 
 
 
 

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம்
śk சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள். அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹறித்திய புத்தக இல்லம் இல. பு, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்) L), so I'LD.
தொலைபேசி/ தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 35
MALL | SV
C. W.
 

फूMB। 보()()로 .
NIKOVNO VIII).
ελες,
Aca/
A. 一r
Avenue,
to O3. 匾
༽༼༦།།
༽ཡོད།
يــاك"