கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.02

Page 1
STIGIF. 200
 


Page 2
  

Page 3

ஏனிந்த அவல நிலை?
கடந்த காலங்களில் உலக வங்கியின் உதவித்திட்டத்தின் கீழ் ஏராளமான நூல்களை உயர்கல்வி அமைச்சு எழுத்தாளர்களிடமிருந்து நேரடியாகவும் புத்தக வெளியீட்டு நிறுவனங்களிடமிருந்து பெருந் தொகையாகவும் கொள் முதல் செய்து வந்துள்ளது.
பிரகர நிறுவனங்களை விட, படைப்பாளிகள் வெகு வெகு உற்சாகமாகத் தத்தமது சொந்த நூல்களை நூற்றுக் கணக்கில் உயர்கல்வி அமைச்சில் சேர்ப்பித்து அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டு அக மகிழ்ந்து போயிருந்தனர்.
அதே உற்சாக உந்துசக்தி காரணமாகக் கடந்த ஆண்டும் தனி நபர்களாகப் பல எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை நூலுருவாக்கி வைத்துக் கொண்டு,
கா.வி.லி.ரு.ந்.த.ண.ர்.
ஏனோ தெரியவில்லை கடந்த ஆண்டில் இந்த எழுத்தாளர்களுக்கு முன்னைய வருடங்களில் கிடைத்து வந்த உற்சாக வரப்பிரசாதம் கிடைக்க மறுக்கப் பட்டு விட்டது.
தகுந்த காரணமும் சொல்லப்படவில்லை. ஆனால், கணிசமான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு விட்டன என்பது இடைக்கேள்வி.
இதனது உட்சூத்திரம் படைப்பாளிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. இது பெரிய சோகம்.
வழக்கத்தை விட, கடந்த ஆண்டு தனிநபர் ஊக்கத்துடனும் பொருளாதாரப் பிண்னணியுடனும் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. விநியோகிக்கப் படக்கூடிய வாய்ப்பு வசதிகள் போதாததால் வெளியிட்டவர்களின் அறைகளெங்கும் தூசி தட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு விடிவு தேடி அங்கலாய்த்துத் திரிகின்றனர், இந்த நாட்டுப் படைப்பாளிகள்.
சிங்கள மொழி எழுத்தாளர்களுக்குக் கடல் கடந்த மொழிப் போட்டிகள் ஏதுமில்லை. அதனால் பிரச்சினையில்லை.
ஆனால், தமிழுக்குக் கடல் கடந்து வரும் வலுவான பொருளாதாரப் பேர்ட்டி உண்டு
இந்தப் பின்னணியையும நம்மவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவே இந்த மண்ணின் வெளியீட்டாளர்கள் ஒருங்கு சேர்ந்து தம்மைத் தாமே ஒரமைப்புக்குள் கட்டுக் கோப்பாக அமைத்துக் கொள்வதன் மூலமாகத் தான் இந்தப் பாரிய நெருக்கடியிலிருந்து தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Page 4
அட்டைப்படம்
அக்கினிக்குஞ்சு.
இ. ஜெயராஜ்
உவப்பான அச்செய்தியைத் தொலை பேசியில் ஜீவா சொன்னார். ‘புதுவையின் படத்தை அட்டையில் போடப்போகிறேன், நீங்கள்தான் எழுதவேணும வேண்டுகோளா, கட்டளையா எனத்தெரியாத ஜீவாவின் அக்கோரிக்கையால் மனம்மகிழ்ந்தது என்னவோ உண்மை. எங்கள் புதுவைதானே எனும் எண்ணத்தில் சாதாரணமாகச் சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால், எழுதத் தொடங்கும்போதுதான் இக்காரியம் என்னால் சாத்தியமா? என்ற பிரமிப்பு உண்டாகிறது.
தலைசிறந்த கவிஞன்,
புரட்சியாளன், போராளி, கலாரசிகன், எனப் பலபரிமாணங்கள்கொண்ட புதுவையை, ஒரு மூன்று பக்கக்கட்டுரைக்குள் முழுமையாய்க் காட்டுதல் முடிந்த சாத்தியமா? கேள்வி திகைப்பு ஏற்படுத்த, மீண்டும் ஜீவாவுடன் தொடர்புகொண்டேன். “ஒன்றும் யோசிக்கவேண்டாம். உங்கள் மனதுக்கு நெருக்கமான புதுவையை எழுதுங்கள் போதும் மலைபோல் நான்நினைத்த பிரச்சினையை ஜீவா கடுகாய் ஊதித்தள்ளினார். ஆசிரியரே அனுமதிதந்த பிறகு எனக்கு என்ன கவலை? என் எண்ண அலைகளை மையாக்கி எழுதத் தொடங்குகிறேன்.
‘ஓசை பெற்றுயர் பாற்கட லுற்றொரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசைபற்றி அறைய லுற்றேன்'
கம்பனின் அவையடக்கமே இக்கட்டுரையின அவையடக்கமுமாம்.
米米米
C4)

இக்கட்டுரையை ஓரிரு ஆண்டுகளுக்குமுன் எழுதும் வாய்ப்புக் கிடைத்திருந்தால், இன்னும் நன்றாய் இருந்திருக்கும். இன்று ஏற்பட்டு இருக்கும் சமாதானச் சூழ்நிலையில், முழுவீச்சோடு புலிகள் இயக்க அலைவீசும்போது, அவ்வியக்கத்தின் கலைபண்பாட்டுக்கழகத் தலைவரைப் பாராட்டி எழுதுவது, இச்சகமாய் இனங்காணப்படுமோ? எனும் எண்ணம் மனதைச் சங்கடப்படுத்துகிறது. எனினும், தேவைகள் ஏதும் இல்லா என்நிலையை, உலகம் அறிகிறதோ, இல்லையோ? உற்ற நட்பினால் புதுவை அறிவார் எனும் தெம்பில் கூச்சம் தவிர்த்து இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.
米米米
வரலாற்றுப்பதிவில் என் அறிவு மிகப்பலவீனமானது. 1985 ஓ, 86 ஒ நினைவில்லை. м யாழ்ப்பாணத்தில் கம்பன் கோட்டம் கட்டும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்த வேளை அது. நம்பிக்கை ஒன்றே பலமாய் நாம் வாழ்ந்த காலம். முதல்த்தளம் கட்டி 'கொங்கிறீற் போட்டு முடித்தபிறகு, அன்றாடம் காலையில் நாங்களே கூலியாட்களாய் அதற்குத் தண்ணிர் ஊற்றுவோம். எத்தனையோ இலக்கியவாதிகள் அக்காட்சியைக் கண்டபடி வீதியில் செல்வர். கூலியாட்களாய் வேலை செய்யும் எங்களை, ‘விசரர்களாய் நினைப்பதை அவர்கள் கண்கள் சொல்லும். மண்ணில் மிதிக்காத அவ்விண்ணர்களைப் பற்றி நாம் கவலைப்பட்டதில்லை. காரியமே கண்ணாய் ஒருநாள் அதிகாலை தண்ணிர் ஊற்றும் பணி நடக்கிறது. படி இடப்படாத அத்தளத்திற்குக் கம்பிகளைப்பிடித்து மிகக்கஷ்ரப்பட்டுத்தான் ஏறவேண்டும். மேலே நின்ற நம்மை, கம்பிகளைப் பிடித்து யாரோ ஏறும் சத்தம் ஈர்க்கத் திரும்பிப் பார்க்கிறோம். வலிமையான ஒரு கரம் இரும்புக் கம்பியைப் பிடித்துத் தொற்றி ஏறுகிறது. யாரென நாம் நினைப்பதற்குள் புதுவை மேலே ஏறுகிறார். அவரோடு நட்பில்லாத காலம் அது. ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கத் தனித்துப் பாடுபடும் இளைஞர்களான எம்மேல், ஈர்ப்புத்தோன்றியிருக்கும் போலும்.
கருணைப்பார்வை, ஒருசில வார்த்தைகள்,
விடைபெறுகிறார். அடுத்த மல்லிகை இதழில் 'கம்பன் கோட்டத்திற்குக் கைகொடுப்போம் எனும் தலைப்பில், புதுவையின் கட்டுரை வெளியாகிறது. தூர இருந்தாலும் எங்கள் உண்மைத் தொண்டை இனங்கண்டு, ஏதோ விதத்தில் கைகொடுக்க வேண்டுமென விரும்பிய புதுவையின்மேல், நம்மையறியாமல் விருப்பு உண்டாகிறது.

Page 5
உறவு முளைவிடத் தொடங்கி, நட்பு மெல்லமெல்ல விரிய, புதுவைஎனும் பெருங்கவிஞனுள், நாம் கரைந்துபோனோம்.
米米米
இதுதான் புதுவையின் இயல்பு.
தூர இருந்து விமர்சித்தல்,
வெற்றி பெற்றபின் உரிமை கொண்டாடுதல்,
மெலியரெனின் மீக்கூறல்,
வலியரெனின் வழிமொழிதல் என, நம் இலக்கிய உலகைப்பற்றிக் கிடக்கும் பல நோய்கள், புதுவையிடம் இல்லாதது புதுமை. கொள்கைக் கண்ணாடிகளைத் துார எறிந்து, எதையும் தன்சொந்தக்கண்ணால் காணும் சுயம் புதுவையின் தனித் தன்மை. பேசவும், எழுதவும் மட்டுமே இலக்கியவாதி எனும் வரையறைகளைத் தகர்த்து, *செயற்படவும்' எனும் புதுஎல்லையை வகுத்துக் கொண்டவர். ஈழத்துக் கவிதை உலகல் புதுவைக்கு ஒரு தனி இடம் உண்டு.
ഖlഖഥ,
இலக்கியத்தரம்,
வற்றாத கற்பனை,
இவை எல்லாவற்றையும் விட, உண்மையைக் கண்டு உளம் கொதிக்கும் தன்மையே, புதுவையின் கவிதைகளின் உயிர்ப்பு. நெஞ்சத்திலிருந்து வார்த்தைகள் பிறப்பதால், • மற்றவர் செவிதாண்டி உளம் சேரும் தன்மை அவர் கவிதைகளுக்கு உண்டு. அவ்வாற்றல்தான் இளைஞர்களைப் புதுவையின் பின் குவியச் செய்தது. கவிதையால் மக்களைத் தொட்டு, மாற்றங்கள் விளைவித்த பெருமை ஈழத்துக் கவிதை உலகில் புதுவை ஒருவர்க்கே உரிய தனிப்பெருமை. மகாகவி கூட இலக்கிய உலகில்தான் பெரிதும் பேசப்பட்டார். சினிமாப் பாடல்களைத் தாண்டி, சாதாரண பாமரனாலும் கவிதை சொல்லப்பட்டதென்றால், அது புதுவையின் தனிச்சாதனை.
米米米
புதுவையில் நான் பொறாமைப்பட்ட ஒரு காலமும் உண்டு. இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட உண்மை இளைஞர் பலர், எங்கள் கழகத்தில் இருந்தனர்.

அவர்களுக்கு என்மேல் எல்லையற்ற விருப்பு. புதுவையுடன் நட்புண்டாகி,
கழகத்தார் அவருடன் உறவுகொண்டதும், என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை இளைஞர்களும், புதுவையின் தாசர்களானது கண்டு நான் பொறாமைப் பட்டிருக்கிறேன். புதுவையைக் காணவென, அதிகாலையில் எழுந்து பல மைல்களுக்கு அப்பாலிருந்து, காதலியைத் தேடும் காதல் ஆர்வத்துடன் ஓடிவந்த அவ்விளைஞர்கள் செயல், என்னைத் திகைக்கச் செய்திருக்கிறது. சுயம், அறிவுக் கூர்மை, ஆற்றல் என்பவற்,ோடு, இறையருளாய்க் கிட்டிய கவித்துவமும் கூடிய அவர் இயல்பு. என்னையும் அவரின் தாசனாக்க, என் பொறாமை மெல்ல மறைந்து போனது. சட்டநாதர் கோயிலடியில் இருந்த புதுவையின் வீட்டு வாசலில், மாமரத்தின் கீழிருந்து புதுவை சிற்பம் செதுக்க, அவரைச் சூழ இருந்து பொழுது போவது தெரியாமல் நாங்கள் மாலை வரை குதூகலித்த காலம் இப்போதும் மனதில் பசுமையாய்ப் பதிந்திருக்கிறது.
>+<>*<>*<
நக்கல், நையாண்டி, கிண்டல் ஆகியவற்றோடு கூடிய கண்டனத்தில், புதுவைக்கு நிகர் புதுவையே. கண்டனத்திற்கு ஆளானவன் நாக்கைப் பிடிங்கிக் கொண்டு சாக வேண்டியதுதான். மாமர நிழல் உரையாடலின் போது ஒருநாள். நவீன நாடகத்துறை சார்ந்த ஓர் அறிஞர், எங்களைக் கிண்டல் செய்த கதை, பேசப்பட்டது.
வந்ததே கோபம் புதுவைக்கு, குந்தியிருந்து வேலைசெய்தவர் துள்ளியெழும்பினார், மோட்டார் சைக்கிள் ஸ்ராட் செய்வதுபோல', இரண்டு தரம் கைகளையும், கால்களையும் அடித்துக் காட்ட, இவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல், எங்களுக்குத் திகைப்பு! திகைத்த எங்களைப் பார்த்து
இதுதானே அவங்களின்ர நடிப்பு, இதை ஒரு பெரிய காரியமாய்ச் செய்து கொண்டு எங்களையோ சொல்லுறாங்கள், முதல் அவங்களைச் சரியாய் நடிக்கப் பழகிப் போட்டு, எங்களைப் பற்றிக் கதைக்கச் சொல்லு,
புதுவையின் அந்த பாவத்தைக் கண்டு, நாங்கள் சிரித்த சிரிப்பு இப்போதும் ஞாபத்தில் இருக்கின்றது.

Page 6
அதே போல் சந்தம் பாடும் ஒரு கவிஞர்,
மக்கள் மன்றுக்கு வர மறுத்த போது, கோபங் கொண்ட புதுவை, ‘என்ன பெரிய சந்தம். அருணகிரிநாதரைப் பிடித்துப் பாடுகிறாங்கள், நானும் தான் பாடுவேன்' என்று சொன்னதோடல்லாமல், ‘முத்தைத்தரு’ எனும் திருப்புகழ்ச் சந்தத்தில்,
தெத்தித் திரி சொத்திச் சரவண முத்துக்கொரு பெட்டை இருக்குது பெரிசாக எனச் சடுதியாய்ப் பாடி, சூழ இருந்த நம்மையெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். புதுவையின் இக்கண்டனக் கணைக்கு
நாங்களும் ஆளாகத் தவறவில்லை. 1995 இல் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பிரபலப்பட்டிருந்த, எங்கள் பட்டி மண்டபத்தையும், பட்டி மண்டபக் குழுவினரையும் நையாண்டி செய்து, நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்திலோடு ஒப்பிட்டு, புதுவை பாடிய, ‘வெட்டிரும்புச் சுப்பர்’ எனும் கவிதை, யாழ்ப்பாணம் முழுவதும் பிரசித்தமானது. தமிழகத்தில் ‘பிரதிவாதி பயங்கரம்' எனும் பட்டத்தோடு, ஒர் அறிஞர் வாழ்ந்ததாய்ச் சொல்வார்கள். நம் மண்ணில் அப்பட்டம் வாங்க முழுத் தகுதி உடையவர் யாரென்றால்? சந்தேகத்திற்கு இடமில்லாமல் துணிந்து புதுவை அண்ணரின் பெயரைச் சொல்லலாம்.
米米米
1985 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். புதுவை எங்களோடு உயிராய்க் கலந்த காலம். ஆதீனத்தில் கம்பன் விழாக் கவியரங்கம். தன்னைப் பற்றிக் கவனிக்காத புதுவைக்கு, புதியதொரு “குர்த்தா' வாங்கிப்போட்டு, ஜீவா அழைத்து வருகிறார். அன்று புதுவையின் கவிதை கேட்டு வியக்காதார் எவரும் இலர். ‘முனியப்பரைக் கண்டவரைக் கண்டு கன காலம், ‘நிம்மதியாய்ச் சற்று நிமிர்ந்து படுத்திருக்கச் சம்மதியாப் பூமி' போன்ற, மக்கள் மத்தியில் பலகாலம் பேசப்பட்ட கவிதை வரிகளை, தன் கம்பீரக் குரலால் புதுவை அள்ளி வீச, சபை ஸ்தம்பித்துப் போனது. வெறும் குரலொலியால் ஒரு பெரும் சபையை, உறை நிலைக்குக் கொண்டு சென்ற அக்கலைஞனின் ஆற்றல், நினைக்கும் போதெல்லாம் தலை சாய்க்க வைக்கிறது. வீச்சான கவிதைகளை எழுதவும்,
下 -C8)

அவ்வீச்சு மக்களைத் தொற்றும் வண்ணம் கவிதைகளை அரங்கங்களில் சொல்லவும், புதுவை ஒருவர்க்கே முடிந்தது.
冰冰米
அக்கவியரங்கப் பாதிப்பால்,
எங்கள் கழகத்தின் இரசிகனான,
அப்பொழுது, யாழ் மாவட்ட விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராய் இருந்த மலரவன்,
பெரிதும் ஈர்க்கப்பட்டதும்,
எங்கள் கம்பன்கோட்டத்தில், சிற்ப வேலையில் ஈடுபட்டிருந்த புதுவையை அடிக்கடி சந்தித்ததும், அச்சந்திப்புக்களால் எங்களிடம் இருந்து புதுவையைக் களவாடியதும், நினைவலைகளில் பதிவான விடயங்கள்.
புதுவை அண்ணன், -- இயக்கத்தில் இணைவதைப் பலமாய் எதிர்த்திருக்கிறேன். புதுவையின் இணைப்பால் இயக்கம் பலம் பெற்றது உண்மை.
அதே வேளை,
இலக்கிய உலகம், பாரதி போல் கொடி கட்டியிருக்க வேண்டிய ஒரு பெரும் கவிஞனை இழந்ததும் உண்மை. இன்றும் அக்கருத்தில் எனக்கு மாற்றம் இல்லை.
இயக்கத்தில் இணையாது,
தனிமனிதனாய் இருந்து,
தேச விடுதலையைப் புதுவை பாடியிருந்தால்,
இன்று பெற்ற பயனை விட, போராட்டம் புதுவையால் அதிக பயனைப் பெற்றிருக்கும் என்பது என் கருத்து
冰冰米
புலிகள் இயக்கத்தில் இணைந்த பின்தான், புதுவையைப் பலரும் போராளி என்கின்றனர். அக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. சில போராளிகள் உருவாக்கப் படுகின்றனர். சில போராளிகள் பிறக்கின்றனர். புதுவை ஒரு பிறவிப்போராளி. பாரதி சொன்ன அக்கினிக்குஞ்சு. நான் அறிந்தவரை
下 ○

Page 7
புதுவையின் அகத்துள் ஒரு போராட்டக் கனல் எப்போதும் இருந்தது. அக்கனல் தான், காலத்துக் காலம் புதுவையைப் பல போராட்டங்களிலும் இணையச் செய்தது. ஒன்றை என்னால் உறுதியாய்ச் சொல்லமுடியும். ஈழ விடுதலைப் போராட்டம் முடிந்த பின்பும், ஒரு போராளியாய்த் தான் புதுவை இருப்பார். அதில் எந்தவித சந்தேகமுமில்லை.
米米米
திலீபன் உண்ணா விரதம் இருக்கிறான். ஏதோ அரசியல் விளையாட்டு என என் உள்ளத்துள் அக்கறையின்மை. அவன் இறப்பதற்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன், புலிகளின் வானொலியில் திலீபன் பற்றிய புதுவையின் கவிதை ஒலிபரப்பாகிறது. கேட்ட நான் திகைத்துப் போகிறேன். t என் அருகிலேயே ஒரு தவம் நடந்திருக்கிறது. அக்கறையின்றி நான் அலட்சியம் செய்து விட்டேனே என்ற குற்றவுணர்வு, என் நெஞ்சைக் கடுமையாய்த் தாக்கத் துவண்டு போகிறேன். புதுவையின் கவிதையால் திலீபன் செய்த வழிபாடு எனக்கு உணர்த்தப்பட, அவ்வழிபாட்டில் நானும் இணைய வேணும் என்னும் விருப்போடு, அன்று தொடக்கம் நானும் உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினேன். இரண்டு நாளில் திலீபன் இறந்து போனான். புதுவையின் கவிதைப் பாதிப்புக்கு உதாரணமான, என் சுய அனுபவச் சம்பவம் இது.
米冰米
புதுவைக்கும் எனக்குமிடையில், பிற்காலத்தில் பல முரண்பாடுகள் வந்திருக்கின்றன. நான் மட்டுமல்ல, கழக இளைஞர்கள் பலரும், அம்முரண்பாடுகளின் விளைவுகளால் கொதித்திருக்கிறோம். ஆனாலும், சத்தியமான ஓர் ஆச்சரியம் எங்கள் யாராலும் புதுவையை வெறுக்க முடியவில்லை. அந்த வடிவத்திலும், குரலிலும் ஏதோ ஒரு மந்திர ஈர்ப்பு இருக்கிறது. எவவளவு பகை உளளவனும, புதுவையைக் கண்டு அவர் குரலைக் கேட்டுவிட்டால், அத்தனை பகையையும் மறந்து, Y. அவரை அணைத்துக் கொள்வான் என்பது சத்தியமான உண்மை. *பண்கண்ட அளவில் பணியச் செய்யும் வல்லமையை, வாணி கொடுத்திருக்கிறாள். அது தெய்வக் கொடை.
冰冰冰
ー
'Co.

இலக்கிய உலகில் ஒருசிலர், கோபத்தோடு என்னை நோக்கிக் கை நீட்டுவது புரிகிறது. இச்சகம் பேசேன்’ எனச்சொல்லிவிட்டு, இப்படிப் புதுவையைப் புகழ்கிறாயே, இது இச்சகம் இல்லாமல் என்னவாம்? அவர்கள் கேள்வி என் காதில் விழுகிறது.
இது சுபக்கம்.
அன்பு பாராட்ட அது போதுமானது. பரபக்கம் இல்லாமல் இல்லை.
பரபக்கம் சண்டைக்குத் தான். தமிழ்த் தாயின் முழுமையான ஆசி பெற்ற ஒரு புதல்வனோடு, எனக்கு எப்படிச் சண்டைவரும்?
இது என் பதில்.
அவசரப்படல்,
அளவுக்கதிகமாய் ஆத்திரப்படல், அளவிறந்து உணர்ச்சிவசப்படல், ஆத்திரத்தில் நடுவுநிலை தவறுதல், பிடித்த விசயத்தை ஆகாயத்திலும், பிடிக்காத விசயத்தைப் பாதாளத்திலும் தள்ளுதல் இவையெல்லாம் புதுவையின் குறைகள் இல்லையா? அவர்கள் கேள்வி மீண்டும் என்காதில் விழுகிறது. குறைகள் தான்.
ஆனால் ஒன்று, இக்குறைகள் ஒரு நல்ல கவிஞனின் இலக்கணங்களுமாம். இதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு நல்ல கவிஞனை நேசிக்கும் அனைவரும், இக்குறைகளோடு புதுவையை அங்கீகரிக்கத் தயங்கமாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை நிச்சயமாய் ஒன்று சொல்ல முடியும். வரும் பிறவிகளிலும்,
என்னால் மறக்க முடியாதவர்களில் புதுவையின் பெயரும் நிச்சயம் இருக்கும். நீள நினைந்திருப்பேன்.
米冰米

Page 8
சிலுவை சுமக்குமாப் போல் குயீன்ஸ்பெரி கொத்மலைச் சாரலில் தெரிந்திடும். வலது பக்கத்தில் பணியக் கணக்கும், இடது பக்கத்தில் மேற் கணக்கும் நட்ட நடு மலைவளவின் பாதை மருங்கில் இயேசுவின் கல்வாரித் தேவாலயமும் அதன் இலட்ஷணங்கள். இங்கிலிசுக்காரரால் அங்கு அமைக்கப் பட்ட சாலையும் தோட்டங்களும் அவற்றின் சிகரமான இந்தத் தேவாலயமும் ஒரே அடிமைப் பாட்டாளிகளால் நிறைந்திருந்தது. பசுமையை ஆழ அகல விரித்திருந்த
பெயர் பொருந்தும் ராணித் தோட்டமாகிச் சடைத்து
வளரும் தேயிலைச் செடிகளால் நிறைந்திருந்தது.
பனிமூட்டத்தின் விடியாத வேளைகளில் புதுக் கொழுந்து கிள்ளக் கிளம்பிப் போகின்றவரெல்லாம் வரிசையாக மண்ணைத் தொட்டு நெற்றிப் பொட்டுப் போடக் கருமாரி அம்மன் கோயில் கீழே இருக்கிறது. பூச்சிக்கும் அதுவே தினக்கூலியான வாழ்க்கை. இருட்டும் வரை இயந்திரமயமான பல்லும் சில்லும் ஒன்றாகிப் போன இயக்கம். ஆனாலும் பூச்சி கொழுந்து கிள்ளுகிறவளல்ல. கிள்ளி வரும் கொழுந்துகளைப் பாரிய தட்டுக்களில் பரப்பிக் காய வைப்பவள். ரோலர்களில் கொட்டி அரைத்தெடுப்பவள்.
அவளை வேலை நீக்கும்படி பெரிய துரைக்கு ஸோன் டிராக்ரரிடமிருந்து சடுதியான அறிக்கை வந்திருந்தது. பூச்சியின் மண்டையிடி உச்ச நிலையை அடைந்தது ஏதுமே விளங்காதவளுக்குப் பலர் பலப் பல வியாக்கியானங்களைச சொன்னார்கள்.
தாத்தாவின் வியாக்கியானம் வித்தியாசமாயிருந்தது. உலக வங்கி நடைமுறைப்படுத்துகின்ற இயந்திர மயமாக்கல் திட்டத்தின் விளைச்சலே அது என்றார். கைகள் அளைவதினால்
KQ." 6% KS శో ぐ 3.
தணலின்
தேநீர்ச் சுவை கெட்டுப் போகும் என்ற 西山 bIf If 600 նՍ
அபிப்பிராயம் சரிதான் எனவும் வாதிட்டார்.
 
 
 
 

பூச்சி தன்னுடைய கைகளை முகமளவுக்கு உயர்ததக் கண்ணாடியைப் போலப் பார்த்தாள். உள்ளங்கை அவளது நம்பிக்கையை அம்மணமாகப் பிரதிபலித்தது.
பூச்சியின் பூர்வீகம் சைவம் கலந்த
வேதமாயிருந்தது. மத்தியுவின் சுவிஷேசம் சொல்லாத போதிலும் தீபாவளி அவளுக்குக்
கொண்டாட்டமே. பொங்கல் என்றதும் சர்க்கரையாகி இனித்திட லயங்களை வலம் வந்து பால் பானைகளில் வழிவதைப் புார்த்தே பூரிப்பாள்.
பாஸ்ரர் றெயின் கோர்ட்டுப் போட்ட படி அபூர்வமாக ப் பத்தனையிலிருந்தோ பொகவந்தலா வையிலிருந்தோ அங்கே வந்து செபமாலையை உருட்டுவார். அவர் கூடப் பூச்சிக் காகத் தேவனிடம்
மண் றாடிக் கொணர் டார். பர மணி டலத தரில் இருக் கரிற பரம பிதாவின் கரு பையைக்
கோரினார். பூஜாபலன் பூச்சியமாவதை வெகுவிரைவிலே பூச்சியினால் உணர
முடிந்தது.
சுப்பிரமணி மட்டுமே அவளுக்குத் தென்பூட்டி செய்வதறியாமல் நின்ற அவளுக்கு ஆதரவாகினான்.
டஸ்ட் தேயிலைக் குவியல் அவள் கைகளால் கோணிகளுள் நிரம்பிச் செடிகளின் அடியுயரமாகிட அவன் ஒரு வழி காட்டி வைத்தான்.
இரங்காத பெரிய துரையைக் கூட இணங்கிட வைத்து டஸ்ட்
下
வீணாகிப் போகாமல் சுப்பிரமணி ஒரு கல்லில் இரு மாங்கனியை வீழ்த்தி வைத்தான். புல்லுப் பிடுங்கவும் கல்லுக் கட்டவும் ஓயாமல் சுழன்றடித்த சுப்பிரமணி ஒருத்தனால் தான் பூச்சியின் வேதனை விளிம் பு நிலைப்பாட்டை உணரவும் மாற்றீடு காண முனைப்பாகிடவும் முடிந்தது.
கொழுந்து பரவும் வேலை சீமைக்கு கொள்ளை போனாலும் வேரடி மண்ணிற்கு உரமிடுகிற வேலை அவளுக்குக் காத்திருந்தது.
காசுக் கணக்குப் பார்க்காமலேயே அந்தியேட்டி செய்தார். வீட்டுக் கிருத்தியம் பூச்சரங்களின் மத்தியில் பற்பல ரேக்குகளில் எடுத்துத் தள்ள முடிந்தது. அந்த வருவாயில் புதுக்கமிரா வாங்கி பிறந்தநாள் விழாக்கள் எல்லாம் பிடித்துத் தள்ளிடலாம் போலிருந்தது.
கிழடுகளைக் கரியரிலே ஏற்றியறியாத கும்பல் ஒன்று டபிள்ஸ் போட்டபடி தாவணியும்
பின்னல்களுமாக வந்திறங்கியது. சயிக்கிள் வியாபாரிகளாகி சயிக்கிளை மாத்திரம் எடுப்பாகத் தெரிய வைத்து தங்களை அதனுாடு ஐக்கியமாக்கி குடும்பப் படமெடுக்க ஆயத்தமாயினர். பாறில்லாச் சயிக்கிளில் அவர்களது
அந்த வாளிப்பான உடலமைப்பும் தெரிந்தது. ஒரமாகவே சயிக்கிளைச்
சாத்தி வைத்தார்கள்.
கழுத்தில் நாய்ப் பட்டி போல்
கமிராவை மாட்டி சூரபத்மக் கடவுள்
நிலைப்பாட்டிலே அங்குமிங்கும்
-C3)

Page 9
அரக்கியபடி ஆட்களை எல்லாம் அவர் எடை போட்டார். சதைப் பிடிப்பு வெளிப்படும் காற்சட்டையும் தடித்த தோல்பட்டையைக் காட்டும் ரீசேர்ட்டும் அவரை நாயகன் போலக் கா ட டி க கொண டி ரு ந தது. அவருக்குள்ள இலட்சியம் எல்லாம்
மோளை சுவீஸ் மாப்பிள்ளைக்குக்
கட்ட வைக்கிற பெரிய குடும்பங்களை
எல்லாம் குவிமையப் படுத்த புகைப் படச் சுருள் களாக கரிட
வேண்டும் என்பதே தான்.
அதற்கேற்றாப் போல அவருக்கு சகதர்ம பத்தினி வாய்த்திருக்கிறாள். ஒய்வே இல்லாமல் அவரைச் சதா நச்சரிக்கிறதில் இருக்க நிற்க விடாமல் கமிரா காவி ஓட ஓட விரட்டி யடிப்பதும் அவளது வேலை. வீட்டு வேலைக்கு ஊர்க் கோடியிலிருந்து ஒரு பெட்டை பிடித்து வைத்திருக் கிறாள். வளவிலே கொட்டும் சருகுக் குப்பைகளைக் கூட்டி முடிக்கும் முன்னால் கிணற்றடிக் கிடாரங்கள் எல்லாம் தண்ணிரால் நிரப்பிட வேண்டும். என எதிர்பார்ப்பாள். நண்டுக்கறிக்கு ஏற்ற நாலு மரக்கறிகள் போய் வாங்கி வந்திடவும் வேண்டும். படப்பிடிப்பாளரின் கலையாழுமை முழுக்கவுமே மனைவியால் மகுடமிட்டு ஆளப்பட்டது.
முயலும் மயிலும் எத்தனை தத்ரூபமாகப் படங்களிலே வீழ்ந்த விந்தையில் மூழ்கித் திளைத்த அவர் புதல்வன் அதையெல்லாம் அவருக்கே காண்பிப்பான். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியான அவனிடத்தில்
இத்தனை ஈடுபாடு ததும்பி வழிவது அவருக கோ புதுமை யாயப் த தென்படவில்லை. அவர் கண்களில் ஓடும் செம் பொன் போலவே தெரிந்தது. பேதமில்லாக் கலப்பில் மனம் மிதந்தது.
கனடாவுக்கு அனுப்பப் படப் போகின்ற புதுப் பெண ணை வித விதமான அலங் கரிப் பில் பூமரங்களின் மத்தியில் விட்டு 36 ரோலில் எடுத்துத் தள்ளினார். நிகர லாபம் புளிச்சல் ஏப்பமாக வந்தது. அவரது ரசனை தோட்டந் துரவுகளை மேய்ப்பதில் லயித்தது
மேலரிப்பு உபாதையைத் தாங்க முடியாமல் நகத்தால் சொறிந்து கொண்டான் பரமானந்தம். மேலும் கெஞ்சிக் கூத்தாடிப் படம் ஒன்று பிடிக்க அவன் விரும்புவதாயில்லை. தனது காசில்லா நிலைமையை இவரிடம் வெளிப் படுத்தாமல் ஒதுங்கிடவே விரும்பினான்.
‘என்னாலே பிடிக்கேலா ஆமி பிடிச்சாப் பிடிச்செண்டு போகட்டும்’
கிராம சேவையாளன் காதில் கேட்கும் படி உரத்துச் சொல்லியபடி ஒர்மத்தோடு வெளியே வந்தான்.
下

சிறுவர் இலக்கியங்களுள், ஆத்திசூடி இலக்கியமே பழமையானது. சிறுவருக்கு இளம் பருவத்திலேயே அற ஒழுக்கத்தையும், நீதிகளையும் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் எழுந்ததே ஆத்திசூடி இலக்கியமாகும்.
ஆத்தி மலர் மாலையைச் சூடியவர், சிவனார். ஆதலால் அவர் ஆத்திசூடி
எனக்காரணப் பெயர் கொண்டவர் ஆனார். அவர் பெயரில் எழுந்த இவ்விலக்கியம், சிறுவருக்கான நீதி நூலாகவும் அற நூலாகவும் விளங்குகிறது.
இந் நூல், கி.பி 12ம்
நூற்றாண்டளவில் முதன் முதலில்
ஒளவையார் என்ற பெண்பாற்
புலவரால் எழுதப் பெற்றதென
புதிய ஆய்வாளர் கூறுவர்.
- - மரிம ெ ங் கனக ஆத்திசூடிகளில் ఎ*
360) is கிரமப் படி, உலகியல் நீதிகளை
வரிசையாகச் சொல் லும்
வேட்கைகள் இலக்கியமே ஒளவையாரின்
ஆத்திசூடி.
இவ்விதம், தமிழ் நெடுங் அநு. வை. நடராஜன் கணக்குப்படி, திருநாவுக்கரசரும்
(கி.பி. 07-08ம் நூற்றாண்டளவில்) திமது திருமுறைப் பாடல்களுள் 29 பாடல்களை, ஒளவையாருக்கு முன்னரே பாடியிருப்பதைக் காணுகிறோம்.
அறஞ் செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல்
- - - - - - எனத் தொடங்கும் ஒளவையின் ஆத்திசூடி ஈரசை கொண்டு, சிற்றடியாக 108 வரி வரை தொடர்கிறது. இளம் பராயத்தினர் எளிதாய் மனனஞ்செய்து, நினைவிற் கொள்ள, அகரம் முதலிய எழுத்துக்களை முதலில் உடையனவாக, சூத்திரம் (மந்திரம்) போல் சொற்றொடர்களால் அமைந்ததே ஒளவையின் ஆத்திசூடி. சிறுவர் உள்ளத்தில் உயர்ந்த நீதியைப் பதிய வைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடனும், பேரறிவுடனும் ஆக்கம் பெற்ற ஆத்திசூடியின் மாண்பு அளவிடற் பாலதன்று. M
དེ།།།།། 15

Page 10
ஒளவையாருக்குப் பின்னர், 700 ஆண்டுகளுக்குப் பின், சுப்பிரமணிய பாரதியார் ‘புதிய ஆத்திசூடி ' எனும் நுாலை, புதிய கருத்தோட்டத்தில் பாடினார்.இவர்களை அடியொற்றி,
இன்று ஏறக்குறைய 45 கவிஞர்களும்,
பேரறிவாளர்களும் ஆத்திசூடி என்ற
பெயரில எழுதயும் பாடியும் இருக்கிறார்கள்.
ஒளவையாருக்கு அடுத்ததாக, ஆதி திசூடி பறி றி அதிகம் பேசப் படுபவர் களர் பாரதியும்
பாரதிதாசனும் எனின் மிகையாகாது. பின்னைய இருவரதும் ஆத்திசூடிகள், ஒளவையின் ஆத்திசூடியிலும் மிகவும் புதுமையானதும், புரட்சிகரமானதும்
ஆக இருக்கின்றன. ஒளவையின் ஆத்திசூடி தனிமனித அறவொழுக் கத்தை நோக்கி இருக்க, பாரதியின் புதிய ஆத்திசூடி நாட்டின் விடுதலை யையும், பாரதிதாசனின் ஆத்திசூடி தமிழ்ச் சமூக விடுதலையை நோக்க மாகக் கொண்டு புரட்சிக் கருத்துக்களை உள்ள்டாகக் கொண்டும் இருக்கின்றன.
ஒளவையினி ஆதி திசூடி கருத்துகளை பாரதியும் பாரதிதாசனும் முற்றும் முழுவதும் ஏற்கவில்லை. பத் தாம் பசலித் தனமான மூட நம்பிக்கைகளை இவ்விருவரும் தம் நோக்கில விலக் கரிப், புதிய கருத்தியலைக் காட்டினர். பழைமை வாதத்தையும் எண்ணங்களையும்
புறக்கணித்து புத்துலகுக்கு ஏற்ப, தம் புல மைக் கருத துகளை முனி வைத்தனர். இதில பாரதியார் மு னி னோடியாக நின று தனது கருத்துகளைப் புதிய ஆத்திசூடி எனப் Lg560) LD 35600T LITT.
ஒளவைக் கும் பாரதக் கும் இடைப் பட்ட காலம் , 700 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்ச் சமூகம், அரசியல், பொருளாதார, கலாச்சார நிலைகள் என்பவற்றில் பல மாற்றங்களைக் கண்டிருந்தது, இவை காரணமாக தமிழரின் சிந்தனைப் போக்குகளிலும் வாழ்வியல் விழுமியங் களிலும் பல வேறு மாற்றங்கள் உணி டாகி இருந்தன. இவற்றை மனங்கொண்ட பாரதியார் சமூக 6f(pl. Óust 356fi (Social values) u6) மாறி வருவதை உணர்ந்தார். குறிப்பாக
-(6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலை நாட்டுத் தாக்கங்களால், பல வழிகளில சமுதாயப் பழகி க வழக்கங்களிலும் , கலாசார நிலை களிலும் மாற் றங்கள் ஏற்படுவதைக் கண்டார். ஆதலால், 'உலகோடு ஒட்டி வாழ்’ என்ற கருத்தியலுக்கேற்ப, தமிழ்ச் சமூகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஒளவையின் கருத்தியல்களை ஒட்டியும் ஒட்டாமலும் தனது கருத்துகளைப் பாரதியார் புதிய ஆத்திசூடியில் அறிமுகஞ் செய்தார். ஒளவையின் அறிவொ முக்கக் கருத்துகளுக்கு முரணாக, சிறிதும் தயக்கம் இல்லாது புதுமை செய்தார். இதன் பேரில் ஒளவை கூறிய ஆறுவது சினம்’ என்பதை 'ரெளத்திரம் பழகு' என்றும்: * தொன்மை மறவேல்' என்பதைத் ‘தொன்மை அஞ்சேல் என்றும் ‘போர்த் தொழில் புரியேல்' என்பதை 'போர்த் தொழில் பழகு' என்றும் மீதுணி விரும்பேல் என்பதை ஊண்மிக விரும்பு என்றும்; ‘முனை முகத்து நில்லேல்
‘நேர்படப் பேசு' என்றும் பலவாறு ஒளவைக்கு மாறாக பாரதியார் கூறுகிறார்.
மேலும், அவர் ‘அச்சம் தவிர், ஆண்மை தவறேல், 'உடலினை உறுதி செய்’, ‘குன்றென நிமிர்ந்து நில் ஏறு போல் நட', 'கீழோருக்கு அஞ்சேல்", ‘கேட்டிலும் துணிந்து நில்’ ‘தேசத்தை காத்தல் செய்’, ‘சாவதற்கு அஞ்சேல் ‘தேசத்தை காத்தல் செய்’, ‘செய்வது துணிந்து செய்' என்றும் பல புதிய கருத்துகளை இளைஞர் உள்ளத்தில் வைத்து தட்டிக் கொடுத்து ஆணை இடுகிறார்.
இந்த வகையில், பாரதிதாசன் ஒளவைக்கும் பாரதிக்கும் ஒரு படி மேலே சென்று ஒன்று பட்டும் , முரணி பட்டும் இருப்பதைக் காணுகிறோம். எடுத்துக் காட்டாகத் * தையல் சொல் கேளேல்" என்று ஒளவை சொன்னதைப் பாரதி மாற்றி, தையல் உயர்வு செய்' என்கிறார்.
என்பதை 'முனைமுகத்து நில்' என்றும் அதனையே பாரதி தா சனி , ‘வெட்டெனப் பேசேல் என்பதை, 'பெண்ணோடு ஆண் நிகர்’ என்று _ー -----~~~~' f کس سسکس سسرے سے t wo سه மல்லிகை ஆண்டுச் சந்தா འོ།། کامر
ܚܙܖ*
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள் 37வது ஆண்டு மலர் தேவையானோர் தொடர்பு கொள்க. ஆண்டுச் சந்தா 250/- தனிப்பிரதி 20/- தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
201 -1/1, g கதிரேசன்
தொலைபே
வீதி, கொழும்பு-13. if 320721
: FF-GLouîlsù: panthalQsitnet.lk.
(காசுக் கட்டளை அனுப்புவோர் Dominic
下
eeva, Kotahena, P.O எனக் குறிப்பிடவும்)
כGi

Page 11
முன்னைய இருவரையும் மிஞ்சிப் பெணி னிய தி தை (3 LD 6øi 60) LD Li படுத்துகிறார். பாரதி 'நுாலினைப் பகுத்துணர்’ என்றதை பாரதிதாசன், தந்தை பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தின் வழி நின்று புராண நூல்களைப் பழித்துச் சாடி, "பார்ப்புப் பொதுப் பகை' என்றும் 'நுாலும் புளுகும் என்றும் புதுமை வேட்கையில் நிற்கிறார். அதேபோல், 'நால் வகைப் பொய்’ என்று வர்ணாச்சிரமத்தை இகழ்ந்து, ‘மறை என்ற சூழ்ச்சி' என்று பாரதிதாசன் தனது ஆத்திசூடிப் பாடல்கள் மூலம் பகுத்தறிவு புரட்சி செய்கிறார்.
அத்துடன், பாரதி வழியொட்டி அவர் தனது ஆத்திசூடி பாடல்கள் சிலவற்றில் ஒத்தும் போகிறார். எடுத்துக் காட்டுக்கு இங்கு மேல் வருவனவற்றைக் கூறலாம்.
பாரதி மேழி ஏற்று போர்த் தொழில் பழகு. மூப்பினுக்கு இடங்கொடேல்.
பாரதிதாசன திருவென உழுபயன் போர்த் தொழில் பழகு மூப்பினுக்கு இடங் கொடேல்
இவை தவிர, பாரதியை விட, சமூக விடுதலையிலேயே பாரதிதாசன் அதிக அக் கறையும் நாட்டமும் கொண்டிருந்தார். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் இருவரும் வாழ்ந்த காலங்கள் தான். பாரதி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்
下
நாளில்
வாழ்ந்தவர். அதனாலேயே அவர் அடிமை வாழ்விலிருந்து இந்திய விடுதலையை வேண்டி நின்றார். பாரதி, பாரதிதாசன் இந்தியா சுதந்திரம் பெற்ற வாழ் நீ தார் .இநீ தியா சுதந்திரமாகியும், மக்கள் சமூகம் ஒடுக்குமுறை - மதம் சார்ந்த மூட நம்பிக்கையின் மெளடீகம்-மிதவாத சாதியம் போன்ற போன்றவற்றில் மூழ்கி இருந்தது. ஆதலால் அவர், சமூகம் பொதுவுடமை நோ கி கரில் பொதுமையான விழிப்பைக் காண விழைந்து, தனது புரட்சிகர வேட்கையில் வாழ்ந்தார்.அதன் பேரில் தனது கருத்துகளையும் செயல் களையும் கொண்டு விளங்கினார். இதன் பொருட்டுத் தனது ஆத்திசூடியில் *அனைவரும் உறவினர்’ என்றும்: ‘அழுபவன் கோழை' என்றும் "கைம்மை அகற்று ’ என்றும்; நைந்தாருக்கு உதவி செய்' என்றும் பொதுவுடமை வேட்கையுடன் புரட்சி செய்தார். இவற்றோடு, புதுமையுங் காண, சுற்றுச் சூழல் துாயப் மை பேணுத ல , ஆரோக்கியமான மானுடச் சமூக நல்வாழ்வு பேணுதல் போன்றவற்றினுள் அவர் கருத்துகள் விழிப்புடன் நின்றன. இதற்காக தனது ஆத்திசூடியில் - ‘தெருவெல்லாம் மரம் வளர்’ என்றும் ‘துாய நீராடு என்றும் ‘தீங்கனி வகை விளை' என்றும் ‘காற்றினைத் துாய்மை செய்' என்றும் பாடினார்.
மேலும்
பாரதி பாரதிதாசன் எண் போர் மூட்டிய புதுமை வேட்கையில் விளைந்த அண்மைக்காலக் கவிஞர்களும் புதுமை
‘C18)

விரும்பிகளும் புதிய ஆத்திசூடிகளைத் தந்திருக்கிறார்கள். இவர்களில், தமிழண்ணலின் 'ஆய்வு சூடி’ எனும் நுால் ஆய்வுத் துறையில் கடைப்படிக்க வேண்டிய நெறி முறைகள் குறித்தும், ந.சஞ்சீவி என்பவர் ‘பொதுவுடமை ஞான அறிவு சூடி’ எனும் நுாலில் ‘அறஞ் செய் என்றும், ‘செல்வம் பொது செய்' என்றும்; லாபம் பொது செய் என றெல லாம் பாடி, நாட்டில் பொருளால் வரும் இலாபத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கருத்திலும் புதிய ஆத்திசூடிகள் பாடியிருக்கிறார்கள். இப் புதுமைப் பிரக்ஞையின் வழி வந்த இன்றைய கவிஞர், சிற்பி என்னும் பல படிகள்
முன்னேறிச் சென்று, கணினி யுகத்தை வரவேற் றுதி தனது புதிய ஆத்திசூடியைத் தருகிறார்.
அவர் பாடலில்
கணிப்பொறி பழகு யந்திரத் தேர்ச்சி கொள் சாதியைத் தகர்த்தெறி சேமிக்கப் பயில் நுாறு பெற முயல், முதல் நிலை விரும்பு மூச்சுப் பயிற்சி செய் மொழி பல கல்
நேரமும் பசும்பொன் வேகமும் மாறும்
ck Ck cK
என்றெல்லாம் கூறி, வேகம் முதல் யாவும் மாற்றத்துக்கு உரியவை என்று புதுமை காட்டி நிற்கிறார்.
மேற்கணி டவாறு, சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கிய ஒளவையின் ஆத்திசூடி, பின் வந்தோரால் கால தேச வர்த்தக மானங்களுக்கேற்ப, 'பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல்ல என்ற கருத்தியலில் புதிய ஆத்திசூடிகள் பல புதுமை வேட் கையுடன் இனி நு நம்மிடையே நின்று நிலவுகின்றன.
米米米

Page 12
புத்துயிர்ப்பு வேண்டி நிற்கும் அழகு சுப்பிரமணியம்
- ஆ. கந்தையர்
அழகு சுப்பிரமணியம் மறைந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. இச் சிறிய கால்ப்பகுதியில் அவரது படைப்புக்கள் இலக்கிய உலகில் - சிறப்பாக யாழ் மண்ணில் - எதுவிதப் பெரிய தாக்கங்களையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏதோ கிணற்றில் போட்ட சிறு கல் போன்று சிறு சலனத்தை ஏற்படுத்தி அழகு சுப்பிரமணியம் என்ற ஆங்கிலச் சிறுகதை ஆக்க கர்த்தா நீரின் அடியில் உறங்குகின்றார்.
உண்மையில் அழகு சுப்பிரமணியத்தின் மறைவு ஈழத்துப் படைப்பாளிகள், வாசகர்கள், விமர்சகர்கள் போன்றோரது மனதை விட்டகலாத நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய ஈழத்து இலக்கியவாதிகளில் எத்தனை பேர் இவரது ஆக்கங்களை வாசித்திருப்பார்கள்? எத்தனை பேர் இவரது பெயரைத்தானும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? ஆகவே அவருக்குப் புத்துயிர் தர வேண்டியது காலத்தின் அவசியமும், எழுத்துலகின் கட்டாயமுமாகும்.
பதினைந்து வருடங்கள் இங்கிலாந்தில் இலக்கியப் பணி புரிந்து நாடு திரும்பும் போது இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளான "உதய தாரகை, ‘ஒப்சேவர் ‘ஹிண்டு ஒர்கன் போன்றவை முகப்புப் படம் போட்டுக் கொட்டை எழுத்துக்களில் 'சிறுகதை எழுத்தாளர் நாடு திம்புகிறார்’ எனப் பாராட்டின. மாறாக அவர் கண்கள் இம் மண்ணில் நிரந்தரமாக மூடியபோது ஏதோ ஒரு பத்திரிகையில் எங்கோ ஒரு மூலையில் அவரது சாவுக்குச் செய்தி பிரசுரமாகியிருந்தது.
ஆங்கில நாட்டில் வாழ்ந்து, ஆங்கில கலாசாரத்தில் அதிக ஈடுபாடு கொண்டு,
 

ஆங்கிலேயனாகத் தன்னை இனங் காட்டிக் கொண்ட போது, தன் மணி னை, மக்களைக் கதைப் பொருளாகக் கொண்டவர். இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ஒரு சில நண்பர்கள் இவரது மறைவுக்குப் பின் * மூடுமி நேரம் ’ எனினும் தொகுதியொன்றை வெளியிட்டனர். ராஜ பூரீகாந்தன் அவர்கள் இவரது சிறுகதைகளின் மொழியாக்கத்தை ‘நீதிபதியின் மகன்’ எனும் புத்தகமாக வெளியிட்டார்.
‘மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அழகு சுப்பிரமணியமணித்தைச் சரியாக எடை போட்டுள்ளார். அழகு சுப் பிரமணியம் இருக் கையில் அவர் எழுதிய கருத்துக் கள் இனி னு எவ்வளவு பொருத்தம் உடையவை. அவர் அன்று ஆவேசத்துடன் கூறினார், ' ஒரு
சர்வதேசப் புகழ் பெற்ற எழுத்தாளன்
இந்த நாட்டில் வாழி நீ து கொண்டிருக்கிறார் என்ற உண்மை எத்தனையோ ரசிகர்களுக்குத் தெரியாது. இங்கிலாந்துப் பத்திரிகைகளிலும், இலஸ்டேட்டர்ட் வீக்லியிலும் தனது சிறுகதைகளைப் பிரசுரித்ததனால் ஈழத்துக் குப் பெருமையைத் தேடித் தந்தவர். நம்மவர் என்ற உண்மைத் தகவல் தெரியாத இளம் தலைமுறையினருக்கு நாம் நமது கடமையைச் சரிவரச் செய்துள்ளோம் என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பதற்காகவாவது இப் பொறுப் பில் நமது பங் கையும் இணைத்து நாம் செயற்பட வேண்டும.
தாக்கமுடையவை.
உயிரோடு
தவறுவோமானால் பிணி னால் நாமனைவருமே வருத்தப்படுவோம்’ அவர் இறந்த பின் எழுதியவை இன்னும் அழகு சுப்பிரமணியம் மறைந்து விட்டார். ஆனால் நமக்குத் தோன்றுவது இது தான். மக்கள் இவரைப் புரிந்து கொள்ள முடியாத உயரத்தில் இவர்கள் வாழ்ந்தார்கள். நீண்ட இடைவெளி இருபாலரையும் பிரித்தது.
சிறுகதை வடிவத் திணி இலக்கணமாக விளங்கியவர் அழகு, எனக் 'கிறீன்" எனும் விமர்சகர் புகழாரம் சூட்டினார். எளிமையான கருப் பொருளைக் கொண்டு வலிமையான பெரிய சிறுகதைகள் படைத்தவர். யாழ்ப்பாணச் சமூக அமைப்பையும், கலாச்சார பின்னணியையும், வர்க்க முரண்பாடுகளையும் எம்முன் வைத்தது
மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்து வேர் அறுந் த
இங்கிலாந்து வாழ் தமிழர்களது அவல, அசிங்க வாழ்வை
அப்படியே படம் பிடித்து காட்டியவர்.
"செக்கோவ்' போன்று நளினமான ஆனால் மென்மையான கிண்டலுடன் அவர் கதை சொல்லும் பாங்கே ஒரு தனி அழகு. இவ்வாறான எழுத்தாளர் எழுத்துலகால் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றால் அது இலக்கிய உலகம்
அவருக்குச் செய்த மிகப் பெரிய
அநீதியாகும்.
இப் பாவச் செயலின் சுமை தாங்கிகளாக நாம் ஏன் ஆனோம் என எண்ணும் போது பல கேள்விகள் எம் முன் நிழலாடுகிறேன்.
C2D- הר

Page 13
1. அழகு சுப் பிரமணயத் தனி ஆக்கங்கள் யாழ்ப்பாணத்தின் பொருளாதார, கலாச்சார சமூக ஏற்றத் தாழ் வுகளையும் s சீர்கேடுகளையும் குறிப்பாக 1950 களின் சமூக அமைப்பையும் வெளிக் கொணர்பவையாக இருக்கையில் அவை பற்றிய ஆய்வுகள் பல மட்டங்களில் ஏன் நிகழவில்லை?
2. அவரது படைப்புக்கள் பிரசுரம்
செய்யப்படாது புதை குழியில் உறங்குவதற்கான காரணங்கள் யாவை? அவரது துணைவியார் 98 சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார் எனக் குறிப்பிடுகின்றார். அவரது சமகால எழுதி தாளர் களாகய ‘ராஜரவோ','முல்க் ராஜ் ஆனந்” போன்றோர் இன்றும் புகழ் ஏணியில் நிற்கையில், அவரை விட ஒரு வகையில் (என்னைப் பொறுத்த வரையில்) உயர்வாகமதிக்கப்பட வேண்டிய இவர் மட்டும் எம் மண்ணில் கூட ஏன் வீழ்ந்து கிடக்க வேண்டும்? **இந்தியன் நயிட்டிங்’ எனும் சஞ்சிகையின் துணை ஆசிரியர் என்பதை நாம் மறந்து விடலாகாது
3. அவரது ஆக்கங்கள் பலவும் ஏன் தமிழில் பெயர்க்கப்படவில்லை? விரல் விட்டு எண்ணத் தக்க ஒரு சில கதைகள் மட்டும் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டமை அவருக்களித்த கெளரவமாகக் கொள்ள முடியுமா?
4. இவரது சம கால எழுத்தாளர்கள் கூட இவரை மறந்தது ஏன்?
下
இவைகளுக்கான பழியை எம்மில் பலர் தமிழ் மக்களில் போட்டு விடுகின்றனர். அவற்றை நாம் ஏற்கத் தயாராக இல்லை. இவர்களைப் போன்று 'அழுகுணித் தத்துவ ஞானிகளாக' நாம் இருக்கத் தயாராக இல்லை. எம்மைப் பொறுத்தவரையில் இக் கேள்விகளுக்கான பதில் இலகுவானதாகும்
முப்பது வருடங்களுக்குள் அழகு சுப்பிரமணியத்தை எழுத்துலகம் மறந்து விட்டதற்கான பிரதான காரணம் அவரது படைப் புக் கள் யாவும் ஆங்கிலத்தில் எழுந்தமையேயாகும்.
ஆங்கிலக் கல்வியில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய இலங்கைத் தமிழர் 1959ம் ஆண்டின் பின் ஆங்கிலக் கல்வியை உதாசீனம் செய்யத் தலைப்பட்டனர். இதற்கான சமூக அரசியல் காரணிகளை ஆராய்வது இங்கு தேவையற்ற தொன்றாகும். இது கூறும் போதனா மொழியாக விளங்கிய ஆங்கிலம் அகற்றப்பட்டுத் தமிழ் போதனா மொழியாகப் புகுத்தப் படுகின்றது. இவற்றால் ஏற்பட்ட மாற்றங்கள் வியக்கத்தக்கவை. ஏழைக் குடியானவன் மகள் பல்கலைக்கழகம் சென்றாள், கிராமவாசி உயர்கல்வி பெற்றான். நகரை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகள் கிராமத்தில் வேர் ஊனர் றின. எழுதப் பேசதி தெரிந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியது. ஆனால் துர் அதிஸ்டவசமாக ஆங்கில மொழி உதாசீனம் செய்யப்பட்டது.
'C22)

யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியம் ஒரு வகையில் கெளரவம் , பொருளாதார மேம்பாடு, உயர் கல்வி என்பவைகளை முதனிமைப் படுத்தியதாகவே இருந்து வந்துள்ளது. எனவேதான் எங்களால் ஒரு பெரிய எழுத்தாளனையோ நாடக ஆசிரிய னையோ, சிந்தனையாளனையோ காணமுடியவில்லை. இன்றும் டாக்டர் பொறியியலாளர் போனர் ற தொழில்களையே இச் சமுதாயம் விரும்பி நிற்கின்றது.
இவ் வகையில் இனி நு அதிகமானவர்களால் விரும்பப்பட்டும் ஆனால் பலரால் புறக்கணிக்கப்பட்டும் விளங்கும் ஒரு ‘*வினோத” மொழியாக ஆங்கிலம் நம் ம வரிடையே காணப்படுகின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அணி மையரில் பொருளியல் மாணவர்களியே மேற் கொணி ட ஆய்வில் ஐந்து விதமான மாணவர்களே ‘* அடிப் படை ஆங் கிலத் தில் ’’ சித் தியடைந்துள்ளனர் என்பது ஆங்கிலத்தின் இன்றைய அவல நிலையைப் புலப்படுத்துகின்றது. இங்கும் udab (3D Tag LD IT 60T பெறுபேறுகளைத் தமிழ் மாணவர்களே பெற்றிருந்தனர்.
கல்வி என்பது நம்மவர்களைப் பொறுத்தவரையில் பட்டம் பெறுவதற்கு பட்டம் உயர் பதவிக்கு. உயர் பதவி அதிக ஊதியம் பெறுவதற்கு இப் ‘‘பெருமை மிகு கோட்பாட்டைச்
下一
“சிக்கெனப் பிடித்து’ நிற்கும் சமுதாயப் பிற மொழிகளில் அசிரதி தை காட்டுவதில் வியப்பொன்றுமில்லை. ஆங்கிலமில்லாமலே உயர் பதவி வகிக்கலாமென்றால் ஆங்கிலத்தை ஏன் முயன்று படிக்க வேண்டும்? ஆங்கிலப் புலமையால் தமது அந்தஸ்த்து, கெளரவம் என்பவை உயரும் என்று
எண்ணுகிறார்களேயல்லாமல் ஆங்கிலப்
புலமையால் எமது அறிவை எமது சிந்தனையை எமது அனுபவத்தை விரிவடையச் செய்வதன் மூலம் எமது மொழியை உலக மொழிக்கு ஈடாக மாற் றுவதற்கான எவ்வித நடவடிக்கைளிலும் இவர்கள் ஈடுபடத் தயாராக இல்லை.
ஏனைய நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் பிற மொழிகளில் புலமை மிகுதியாகக் கொண்டுள்ளதும், எமது நாட்டுப் படைப் பிலக்கிய வாதிகளில் பலர் தமது மொழி தவிர்ந்த வேறு மொழிகள் ஒன்றும் தெரியாமல் இருப்பதும் எமது ஆக்கங்கள் தரம் குன்றுவதற்கான ஏதுவாகி விடுகின்றது.
சுய மொழிக் கல விக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். மாறாக உலக அறிவின் யன்னலாக விளங்கும் ஆங்கிலத்தை ஏன் புறக்கணிக்க வேண்டுமென்பதுதான் எமது கேள்வி. அணி றியும் ஆங்கிலம் புலமை அதிகமாகும் போது எமது மொழியின் பற்று மேலோங்கும் என்பது அனுபவம் தரும் உண்மை.
ஆக ஆங் கிலம் தெரியாத
-Os)

Page 14
எழுத்தாளர்கள், விமர்சகர்கள் அழகு சுப்பிரமணியத்தை அறியாதிருந்ததில் வியப்பொன்றுமில்லை. ஆங்கிலம் தெரிந்த சிலரும் இலக்கியம் வீண் பொழுது போக்கு எனக் கருதி புறக்கணித்து விடுகின்றனர்.
ஈழத்து இலக்கிய வாதிகளில் பலர்
பரந்த இலக்கியப் படைப்புக்குள் தம்மை
ஈடுபடுத்தும் நிலையில் இல்லை. எனவேதான் இவர்களிடம் பரந்த ஒரு இலக்கியப் பார்வை இல்லை எனும் குற்றச் சாட்டு விமர்சகர்களால் முன் வைக் கப்படுகின்றது. ஆக இவர்களும் அழகு சுப்பிரமணியத்தை அறியாதிருப்பது விந்தையில்லை. இதற் கேற்றாற் போல அழகு சுப்பிரமணியமும் டொமினிக் ஜீவா குறிப்பிடுவது போன்று இவர்கள் எட்டமுடியாத உயரத்தில் இருந்து விடுகின்றார்.
அழகுப் சுப்ரமணியத்தின் சமகால எழுத்தாளர்கள் எனக் கூறுமளவிற்கு தமிழர்களிடையே எவரும் இல்லை. இந்திய எழுத்தாளர்கள் இவரை மறந்ததில் வியப்பொன்றுமில்லை. அன்றியும், இலக்கியவாதிகளிடையே பொதுவாகக் காணப்படும் “வித்துவக் காய்ச்சல் இவரை இயற்கை மரணம் அடைய வைத்ததோ என எண்ணவும் இடம் உண்டு.
எமக்கென ஒரு பல்கலைக் கழகம் Ф—60ії (Б. இங்குள் ள விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் அழகு சுப்ரமணியத்தைக் கண்டு
下
கொள்ளாமை வேதனைக்குரியது. அதிர்ஷ்டவசமாக இன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையினர் இவரது இலக்கியப் பணியை மதிப்பீடு செய்கின்றனர். இருப்பினும் இவரது ஒரு சிறுகதை தானும் பாடப் பரப்புக்குள் சேர்க்கப் படவில் லை என்பது வெளிப்படை. அத்துடன் முன்னாள் விரிவுரையாளர், செ.கனகநாயகம் அவர்கள் எழுதிய விமர்சனத்திற்குப் பின் யாரும் அழகு சுப்ரமணியத்தைப் பற்றி எழுதியதாகத் தெரியவில்லை.
UL (6,
இவ்வாறு மறைக் கப்
மறக்கப் பட்ட அழகு சுப்ரமணியத்தை வெளியே கொண்டு வந்து புத்துயிர் கொடுக் க வேணி டியது படைப் பாளிகளது கடமையாகும்.
 

L
தமிழ்த்
தினசரிகள்
- சாரல்நாடன்.
‘'நேரு வந்த போது இங்கு எத்தனையோ பத்திரிகைகள் வந்தன” என்கிற ஒரு குறிப்பை, டி.எஸ்.கனகராஜன் எழுதி இருக்கிறார். இவர் ஒரு வாராந்தரியை நடத்தியவர். இவரது பத்திரிகை சனிக்கிழமை தோறும் வெளி வந்து மூன்று சதத்துக்கு விற்பனையானது. பம்பலப்பிட்டியிலிருந்து வெளிவந்த அந்தப் பத்திரிகையின் பெயர் பொதுஜன சேவை என்பதாகும். நாற்பதுகளில், மிகச் சரியாகச் சொன்னால் 134-1940-ல் இருந்து வெளி வரத் தொடங்கியது ‘பொதுஜன சேவை!
பொது ஜன சேவையின் குறிப்பின்படி ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வருகை தந்த 1930-களில் இலங்கையில் அதிகமான பத்திரிகைகள் வந்திருக்கின்றன என்பது சரியான கரைக்கெடுப்புத்தான். அந்த ஆன்ைடுமாத்திரம் பதினைந்து பத்திரிகைகள் வெளிவந்ததற்கான குறிப்புக்கப் கிடைக்கப் பெறுகின்றன.
இந்திய வம்சாவளியினரின் பத்திரிகை முதலாவது தொடங்கியது 1916-ம் ஆண்டிலாகும். லங்காமித்ரன் என்ற பத்திரிகையை அந்த ஆண்டில் தொடங்கி நடத்தியவர்கள் ஏ.எல்.அபூபக்கர், எம்.ஏ.பீரிஸ் என்ற கொழும்பு வாழ் இந்தியர்கள். கிழமைக்கு இரண்டு முறை புதன், சனி என்று வர ஆரம்பித்துப் பின் நின்று போனது. அதற்கடுத்த முயற்சியாக வாரிமுத்துகிருஷ்ணாவின் ஜனமித்ரன் தினசரியாக வெளி வந்தது. அதன் நிர்வாக ஆசிரியராகவும் செயல்பட்டவர் எம்.ஏ.பீரிஸ் - இலங்கைவாழ் இந்தியர்களின் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் வாரிமுத்துக் கிருஷ்ணா. இலங்கை அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தியவர். 1901-ம் ஆண்டிலிருந்து, 'பொலி டெக்னிக்’ என்ற நிறுவனத்தை

Page 15
அறிமுகப் படுத்தி நல்ல செல் வ நிலையிலிருந்தவர். 'சிலோனிஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகையை ஏற்கெனவே நடத்தி அனுபவம் பெற்றவர். எனவே பத்திரிகை - செய்திப் பத்திரிகையாகவே,
தினசரியாக, இன்றைய தினகரன் பதி திரிகை அளவில் வெளிவர ஆரம்பித்தது. 1918 - லிருந்து மூன்று
ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்தது. மிஸ் டர் வாரிமுத்துக் கிருஷ்ணா ஆங்கிலத்தில் நடத்திவரும் "தி பீப்பிள்' எனும் பத்திரிகையின் தமிழ் பதிப்பு என்று முன் பக்கத்தில் தன்னை அறிவித்துக் கொண்டது. நான்கு பக்கங்களில் வெளியான இந்தப் பத்திரிகை ஐந்து சதத்துக்கு விற்கப் பட்டது. இதில் வெளியாகியிருக்கும் ஆசிரிய தலையங் கங்களும் , செய்திகளும் இன்றும் வாசிப்பதற்கு சுவையானதாகவும், அறிவிட்டுவதாகும் அமைந்துள்ளன. இது நின்றவுடன் தொடங்கப் பட்டது தான் தேசநேசன் பத்திரிகை. 1921-ல் வெளிவர ஆரம்பித்த அதுவும் தினசரியாகவே ஆரம்பிக்கப் பட்டது. இது இன்றைய தினமுரசு’ அள்வில் வெளிவந்தது. நடேசய்யர் இதன் ஆசிரியராக விளங்கினார். வாரிமுத்துக் கிருஷ்ணாவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டாலும், ‘சம் லா’ விசாரணையில் நடேசய்யர் அளித்த வாக்கு மூலத்தாலும் நடேசய்ய்ர் தேசனை விட்டு விலகி தேசபக்தனை ஆரம்பித்தார். தேசநேசன் நின்று போனது. தேசபக் தனி 1924-ல் தொடங்கப் பட்டது. 1929-ல் அதுவும் தினசரியாக வளர்ச்சியடைந்து இரண்டு வருடங்கள் தொடர்ந்து நடந்தது. 1930ல் மீராமுகைதீனின் தினத்தபாலும்,
ப்ரமணிய செட்டியாரின் வீரகேசரியும்
தினசரிகளாக வெளிவந்தன. 1932-ல்
தினகரன் ஆரம்பிக்கப் பட்டது.
பத்திரிகையுலகில் தின்கரன், வீரகேசரி என்ற இரண்டு தினசரிகள் வெளிவரும் முன்னர் ஜனமத்திரன், தேசநேசன், தேசபக்தன், தினத்தபால் தினசரிகளாக வெளிவந்தன. இவை அனைத் தும் தேசிய சுவடி திணைக் களத்தில் பார்வைக் குக் கிடைக் கரின் றன என்பது தானி மகிழ்ச்சியான செய்தியாகும்.
1939-ல் நேருவின் வருகைக்கு முன்னரேயே இலங்கையில். அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்தியருக்கு எதிரான கோஷங்களும் , குணசிங்காவின் யதேச்சதிகாரங்களும் கொழும்பில் தினசரிக் காட்சிகளாக அமைந்தன. இந்தச் சூழலில் தான் இந்தியரை ஒன்றுபட வேண்டியும், அவர்களுக்கு அறிவு, ட் டவும் பத்திரிகைகள் தேவைப்பட்டன. காந்தி,
ஒற்றுமை, பாரத குலதீபம், பரதவீரன்,
பாரத யுவ சக்தரி, காலச் சக் கரம் , காங்கிரஸ், ஜவகர் நவஜோதி, தேசத் தொண்டன், பூகம்பம், தீபம், போர்முரசு,
இந்தியா, இளங்கேசரி என்று 15 பத் தரிகைகள் வந்தன. வந்த பத்திரிகைகளில் பல நேருவின்
வருகையின் போது வெளிவந்தன. அவர் வருகையின் போது நடந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பில் தமது பிரசன்னத்தைக் காட்டிக் கொள்ள வந்தவைகள் அநேகம் . எனினும், காந்தி, காங்கிரஸ், நவஜோதி, இந்தியா என்ற நான்கும் குறிப்பிட்டுக் கூறத் தக்கவைகள் . டி.சாரநாதன் என்ற புகழ்மிக்க எழுத்தாளரை ஆசிரியராகக்
f
-(2)

கொண்டு வெளிவந்த காந்தி ஒரு தினசரி. ஒரு சதவிலையில் கொழும்பு ஜம் பட்டாத தெருவிலிருந்து வெளிவந்தது. சுடச் சுட அரசியல் செய்திகளைத் தாங்கி வெளிவந்த பத்திரிகை இது.
இந்த ஆணி டு வெளிவந்த * காங்கிரஸ்' பத்திரிகை ஒரு வாரந்தரி. இதன் விலையும் ஒரு சதம் தான். கதர் ராட்டைச் சின்னத்தை முன் பக்கம் அச்சடித்து வெளிவந்த இந்தப் பத்திரிகைக்கும், பின்னால் வெளிவந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் - காங்கிரஸ் பத்திரிகைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இலங்கை இந்திய காங்கிரஸ்
ஆரம்பிக் கப் பட்டது. 25-7-39-ல் காங் கிரஸ் ஸரினர் முதல் இதழ்வெளிவந்தது. 25-6-39-ல் இதன்
ஆசிரியராக விளங்கியவர் பி.நடராஜன் என பவர் . முதல் இதழில் ரீவிக் கிரமராஜசிங்கன் நாடகம் வெளியாகி உள்ளது. ஜவகர்லால் நேரு, அவரது மனைவி கமலா நேரு, அவர்களின் புதல வரி இந் தரா ஆகியோரின் அட்டைப் படத்துடன் ஒரு வரிசேட அனுபந்தத் தையும் வெளியிட்டது. இலங்கையில் உள்ள இந் தயர்களுக்கு உழைக் கும் சங்கங்களும் தலைவர்களும் என்ற பொருளில், காலத்துக்கேற்ற ஒரு கட்டுரையும் இதில் வெளியாகி உள்ளன. இது தனது பதினேழாவது இதழை வெளியிட்டதுடன் 22-10-39-ல் நின்று போனது. நின்று போனதற்குக் காரணம் செப்டம்பர் 39-ல் ஆரம்பமான இரண்டாவது மகாயுத்தம்.
இது
இருக்கின்றன. தமிழ் தினசரிகள் வந்திருக்கின்றன
இளங்கேசரி என்ற பெயரில் ஒரு தினசரி ஏடும் வெளிவந்துள்ளது. 10-7- 39. முதல் 23-8-39 வரை மொத்தம் 40 இதழ்கள் வெளியாகியுள்ளன. ‘எங்கும் சுதந்திரச் சங்கு முழங்கும், என்றும் மங்கள கோஷம் விளங்கும்’ என்ற நெறியுரையும், கதர் ராட்டைச்சின்னமும் முன்பக்கத்தில் பொறிக்கப் பட்டுள்ளன.
எம் .பெருமாள் என் பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இன்னொரு தினசரி 'இந்தியா'வாகும்.
1939-ல் வெளிவந்த தினசரிகளான
இளங்கேசரி, காந்தி, இந் தரியா என் ப ைவகள் சூழ்நிலையின் தாக் கதி தால் வெளிவந்தன
என்பதைவிட வெளியிடும் செய்திகளின்
முக் கசியத் துவதி தைக் கருத வெளிவந்தன என்பதே சரி.
இதே ஆணி டு வெளிவரத்
தொடங்கிய நவஜோதியின் ஆசிரியராக விளங்கியவர் ஆர். கணிணையா என்பவர். இதன் முதல் இதழ் 16-7-39ல் வெளிவந்தது. இரண்டு சதத்துக்கு விற்கப்பட்ட இது, இருபத்திரண்டு பக்கங்களில் ஒரு காத்திரமான சிற்றேடாக வெளிவந்திருக்கிறது. இதன் எட்டாவது இதழில் ‘பாரதி நாமம் வாழ்க’ ன்னும் கட்டுரையும், 33-வது இதழில் ‘கோவிந்தன் கோவிந்தா’ என்று முள்ளோயா கோவிந்தன் பற்றிய ஆசிரியத் தலையங் கமும் எழுதப்பட்டுள்ளது. இவை அத்தனையும் சுவடிகள் திணைக் களத் தரில் 1940க்கு முன்னர் ஏழு
என் பது இப் போது நினைத் துப்
பார்க்கையில் மலைப்பைத் தருகிறது.
כךC2

Page 16
бтботели இலக்கியப் பயணத்தினர்
பிள்ளையார் சுழி
-பத்மா. சோமகாந்தன்
நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் சுமார் அரை நுாற்றாண்டு ஆரம்ப காலத் தை நினைத் துப் பார்க்கிறேன்.
ஊரில் எத்தனை அமைதி!
ஆலயங்களின் மணியோசைகளும் மங்கல வாத்தியங்களின் இன்னி சைகளும் மசூதியின் பாங்கொலியும் தவிர.
ஆலயத் திருவிழா கி களில் வகை வகையான வர் னங்கள் நிலத் திலிருந்து எழுந்து வால் நட்சத்திரங்கள் போல் எரிவதும் கீழே இருந்து சீறிக்கொண்டு மேல் நோக்கி எழும் கொட்டு வானங்கள், பட்டென
ஆகாயத்தில் வெடித்து வெள்ளி, மஞ்சள், பச்சை, குங்கும நிறங்களில்
..... ஆஹா! எத்தனை அழகு!
ஹெலியின் உறுமல கள் - குடிமனைகளை நோக்கி காட்டேரிப் பேய் போலச் சீறி வந்து உயிர்களைக் குடிக் கும் ஷெல் லடிகள் , யுத்த விமானங்களிலிருந்து வீழ்ந்து வெடித்து, கட்டிடங்கள் அழிந்து, பூ, பிஞ்சு, காய், கனி என ற பருவத்து மனுஷ உயிர்களை யெல்லாம் கண்மூடித் திறப்பதற்கு இடையில் குடும்பத்தோடும் சுற்றத்தோடும் 'சொர்க்க லோகத்துக்கு அனுப் பிவைக் கும் செயல் களை அக்காலத்தில் செய்திகளாகப் படித்துக் கற்பனைக் கதைகளாகவே நாம் எண்ணிக் கொண்டிருந்த காலம் அது.
அன்று தைப் பொங்கல் திருநாள்,
சூரியனி நிதி திரை விட்டு எழும்புவதற்கு சில மணித்தியாலத்திற்கு முன்பே நாம் விழித்தெழுந்து பணி என்றும் பார்க்காமல் உற்சாகமாகக் குளித்து முழுகிப் புத்தாடை அணிந்து வாசலில் மஞ்சள் நீர் தெளித்து,
கோல பரிட் டு. நடுவில சாணிப் பிள்ளையாரைப் பிடித்து வைத்து.
என் அம்மா முதல் நாளே பொங்கலுக்கான இடத்தைத் துப்பரவு செய்து, சாணியால் அழுத்தமாகத் தேய்த்து, அடுப்பு மூட்டுவதற்கென கற்களைத் தெரிவு செய்து கழுவி எடுத்து வைத்திருந்தார்.
வீட்டு வாசலில் முற்றம் தெருவை தட்டியிருந்ததால், வீட்டின் பின்புறமாக
一○

உள்ள விஸ்தாரமான இடத்தில்தான் எமது வீட்டில் பொங்குவது வழக்கம். அதங்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. நாம் பொங்குவதையும் சாப்பிடுவதையும் தெருவால் போவோர் வருவோர் பார்த்து விடுவதைத் தவிர்ப்பதற்காகவும் நானறிந்த காலம் முதல் பின்புறமாகப் பொங்குவதே எங்கள் குடும்ப வழக்கம். நாம் ஆசாரமான வைதிகப் குடும்பம். அப்பா பஞ்சநாதீஸ்வரக் குருக்கள் - பிரபல கோவில் குருக்கள்.
சூரியன் கண் விழித்து குளித்து முழுகித் தன் பொன் நிறக் கதிர்களை மெல்ல மெல்லப் பரப்பிக் கொண்டு
மரக் கிளைகளின் ஊடாக எட்டிப்
பார்த்தான்.
ஒற்றைச் சில தேரில் சூரிய பகவான் எழுந்தருளும் வடிவிலான கோலத்தை என் மூத்த அக்கா பொங்கல் அடுப்பு வைத் திருந்த இடத்தில் அழகாக இட்டிருந்தாள். அவ் இடத்தைச் சுற்றி மேலே கயிறு கட்டி மாவிலை, வாழைப் பூச்சரங்களென நானும் சின்னக்காவும் அலங்கரித் திருந்தோம். அடுப்புத் தணல் விட்டு எரிந்தது. இஞ்சி மஞ்சள், மாவிலை கட்டி திருநீற்றுக் குறிதீட்டிப் பொட்டிட்ட பொங்கல் பானையில் போட்டிருந்த பாசம் வெல்லமும் புத்தரிசியும் எப்போது பொங்கியெழும் என்ற ஆவலில் நானும் சகோதரிகளும் சீன வெடிக் கோர்வைகளுடன் காத்து நின்றோம். அம்மா ஈரத்தலை முடிக்குத் துணி
சேர்த்து முடிந்து, பூச்சூடி, நெற்றியில்
குங்குமமும் மனதில் பூரிப்புமாக,
下
பிராமண
பொங்கலோ பொங்கல்...!
கையினால் விறகுகளை அடுப்பினுள் தள்ளிக் கொண்டிருந்தார். குத்து விளக்குகளிரண்டும் மெல்லிய சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தன. ஊதுபத்தி வாசனை உள்ளத்துக்குச் சிலிர்ப்பு ஊட்டியது. மல்லிகை, முல்லை, செவ்வரத்தை எனப் பூக்களை கொய்து தாம்பாளத்தில் வைத்து விட்டு மற்றொரு தாம்பாளத்தில் முக்கனிகள், பாக்குவெற்றிலை, சூடம், சாம்பிராணி என்பவற்றை ஒழுங்கு செய்து சூரிய பகவானினி பூஜைக்காக அப்பா தயாராகிக் கொண்டிருந்தார்.
பால பொங் கி எழு நீ து சூரியனைப் பார்த்து நமஸ்கரித்தது. நானும் தங்கையும் கொழுத்தியெறிந்த பட்டசுகள் சட பட வென்று. எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ஊரெங்கும்.
குதுாகலமான ஆரவாரிப்பு!
பானையை இறக்கி வைத்து, பெரிய தலை வாழையிலையில் கரண்டியினால் பொங்கல் அள்ளி எடுத்துப் படைத்து முக்கனிகளையும் பரப்பி பூஜை புனஸ்காரங்களை அப்பா செய்து கொண்டிருந்த போது நாம் சகோதரிகள் நால்வரும் பக்திப் பூர்வமாகத் தேவாரங்களை இசைத்தோம். அந்த வயதிலேயே சங்கீத வகுப்புக்குப் போய்ப் படித்ததால் எமக்கு நல்ல இசை ஞானமுண்டு.
'வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றமிழ் வேள்விமல்க..” என வாழ்த்துப்
פC29"ר

Page 17
U Tọ 5 IT LĎ முடிப்பதற்கிடையில் வாசலில் தகரப்படலையைத் தட்டி யாரோ கூப்பிடுங்குரல் கேட்டது.
‘சிவ பூஜையில் கரடி போல். சாப் பிடக் கூட விடாமல் ...... பொங்கலைச் சுவைக்கத் துடித்துக் கொண்டிருந்த தங்கை சினந்தாள்.
‘அப்படிச் சொல்லக் கூடாது பிள்ளை நல்ல நாளும் வேளையுமாக வீட்டுக்கு வரும் விருந்தினரை அப்படிச் சொல்லாதே. போய் யாரென்று பார்த்து
9.
வா’- அம்மா அவளிடம் கூறினார்.
சினந்து கொண்டு சிலும் பிக் கொண்டு போனவள் உடனே திரும்பி வந்து சொனி னாள் ‘’ ஆரோ பத்திரிகைக் காரர்களாம். அக்காவைப் பார்க்க வந்திருக்கினம்.”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னைத் தேடி யார் எதற்காக?
‘சரி அவர்களை விறாந்தைக் கதிரையில் இருக்கச் சொல்லு, போய் விசாரிப் பம்’ அப்பா சொல் லி அனுப்பினார். அவள் ஒடிப் போய்ச் சொல்லிவிட்டு வந்தாள். பூஜையை முடித்து, எமது நெற்றியில் திருநீறு இட்டு எம்மை ஆசீர்வதித்த தந்தையார் அவர்களைச் சந்திக்கச் சென்றார்.
நானும் சகோதரிகளும் அம்மாவும் பொங்கல் பானை பூஜைப் பொருட்கள் யாவற்றையும் உள்ளே எடுத்துச் G36(3DTub.
யார் அவர்கள் என்றறிய எனக்கு ஆவலாக இருந்தது. கால்களைத்
下
பத்மா
தடக்கிக் கொண்டிருந்ததால் துாக்கி இடுப்பில் சொருகியிருந்த புதுப் பாவாடையை இழுத்துச் சரி செய்துகொண்டு வெளிவிறாந்தைக் கதவருகில் வந்து நின்றேன் அம்மாவும் என் பின்னால் வந்து விட்டார். அப்பா முனர் பினி தெரியாத அநீத இளைஞர்களுடன் சந்தோசமாக அளவலாவிக் கொண்டிருந்தார்.
பொங் கல பூஜை முடிந்த வேளையில் அந்தப் புதியவர்களின் வரவு அம் மாவுக் கு மிகவும் மகிழ்ச்சியூட்டியது. வணக்கம் கூறி வரவேற் று, வந்தவர்களுக் குப் பொங்கல் பறிமாறுவதற்காக எடுத்து வர உள்ளே சென்று விட்டார்.
இவதான் நீங்கள் விசாரித்து வந்த பத்மா. எனது மூன்றாவது மகள். இந்து லேடிஸ்கல்லாரியில் படிக்கிறாள்.” ஏன் என் னை அவர்களுக்கு அப்பா அறிமுகப் படுத் தினார் . நாணி அவர்களுக்கு வணக்கம் சொன்னேன்.
“நாங்கள் சுதந்திரனில் இருந்து வந்திருக்கிறோம். நான் ஞான சுந்தரம், இவர் கணேசலிங்கம், அடுத்தவர் துரைசாமரி’. அந்த இளைஞர் அறிமுகப்படுத்தினார்.
அம்மா ஒவ்வொரு தட்டுகளிலும் வாழை இலை விரித்து பொங்கல், வடை, பழங்கள் என ஒவ்வொரு வருக்கும் கொடுத்துவிட்டுக் கதிரை யொன்றில் உட்கார்ந்து அவர்களை
உபசரித்துக் கொண்டிருந்தார்.
அவர் களர் பொங் கலைச் சுவைத்துக் கொண்டிருக்க என் அப்பா
30

தான் ஆர்வத்தோடு வாசிக்கும் பத்திரிகைகளான வீரகேசரி, சுதந்திரன், ஆனந் தவிகடன் பற்றிய அபிப் பிராயங்களைக் கூறி, தனது மைத்துனர் - அம்மாவின் மூத்த சகோதரர் பிரம்மறி சபாரத்தின ஐயர் காரை நகரிலிருந்து * கலிகால தீபம்’ என்ற பத்திரிகையை நடத்தியதையும், இப்பத்திரிகைக்கார இளைஞர்களிடம் தெரிவித்தார்.
கைகளைக் கழுவிவிட்டு இருக்கைகளில் உட்கார்ந்த அவர்களில் ஒருவர் என்னிடம் கேட்டார்.
* வளர்ந்து தொழில் பார்க்கிற பெரிய பெண்ணாக பத்மா நீங்கள் இருப்பீர்களென எண்ணியிருந்தோம். நீங்கள் பாடசாலை மாணவியாக இருக்கிறீர்கள். பத்திரிகைகளில் அடிக்கடி எழுதுவதுண்டோ?”.
'கல்கி, சுதந்திரன் ஈழகேசரி போன்ற பத்திரிகைகளை நேரங் கிடைக்கும் போது படிப்பேன். அவற்றில் சிறுவர் பகுதிகளை ஆர்வத்தோடு வாசிப்பேன். டாக்டர் மு.வ, கல்கி, அணி னாதி துரை, ரா. பி. சேதுப் பிள்ளையின் எழுத்து நடை மிகவும் பிடிக் கும் . அகிலனினி தொடர் கதைகளை வாராவாரம் கல்கியில்
விடாமல் படிப்பேன். வீரகேசரி சிறுவர்
பகுதிக்கு எப்பவாவது எழுதுவதுண்டு. வகுப்பில் எனது கட்டுரைகளுக்கு உச்சமான மாக்ஸ் கிடைக்கும்.
**அண்மையில் சுதந்திரனுக்கு ஏதாவது எழுதி அனுப்பினிர்களா?”
8
ஓம்! 'இரத்த பாசம்' என ஒரு
கதை எழுதினேன். அந்தச் சிறுகதை என் முதல் முயற்சி. அப்பத்திரிகை நடத்திய அகில இலங்கைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்’.
‘ஆச்சரியப் படப்போகிறீர்கள்! உங்கள் கதை முதற் பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற் குரிய எங்கள் பரிசையும், பாராட்டு தல்களைம் ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னும் அடிக்கடி எழுதுங்கள். புதுமைப்பித்தன், முல்க்ராஜ் ஆனந்த் போன்றோரின் படைப்புக்களை நிறையப் படியுங்கள்.”
எனக்கேர் உண்மையிலேயே நம்ப முடியாத வியப்பும் ஆச்சரியமும் கலந்த உணர்ச்சியில் கால்கள் நிலத்தில் பதியாமல் ஆகாயாத்தில் பறப்பது போன்ற ஆனந்தம்!
‘‘ எங்கள் பிள்ளைகளிலேயே இவள் மிகவும் கெட்டிக்காரி!” எனது பெற்றோரும் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். அப்போது எனக்கு தமிழ் கற்பிக்கும் எனது வகுப்பாசிரியைச் செல்வி பத்மா இராமநாதனும், என்னை உற்சாகப் படுத்தி ஊக்குவிக்கும் எனது &F&B மாணவிகளும் என் மனக் கண்ணில் தோன்றி மகிழ்வது போல என் மனதில் அவர்களபைப் பற்றிய எண்ணமும் நன்றியுணர்வும் நிறைந்தன!
என்னைப் பற்றிய விபரம் விருப்பு வெறுப்புகள் எதிர்காலத் திட்டங்கள் என்பவற்றைப் பற்றி வந்தவர்களில் ஒருவர் துருவித்துருவி ஏன் விசாரித்தாா
(தொடர்ச்சி. 34)

Page 18
Uலஸ்தீன் எங்கள் பாதங்கள் பட்டமண் மண்ணுக்கு என்றுசில , மகத்தவங்கள் உண்டுகாண். மண்ணிலே சமாதனம் மலர்ந்தவிட வேண்டுமென்ற எண்ணிநாம் தடிக்கிறோம் இதுவரையில் கிடைக்கவில்லை!
என்றாலும் இம்மண்ணை இதயத்தால் போற்றுகிறோம்!
செங்குருதி சொட்டுமிந்தச் சீமையிலே உங்களை நாம் அன்புக்கரம் நீட்டி அணைத்து வரவேற்றோம்!
வசந்தத்தில் உங்கள் வரவை எதிர்பார்த்த வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்தப்பா சொரிகின்றோம்!
மனித குலத்தின் மகத்தான சாதனையை இலக்கியங்கள் மட்டுமா இனங்காட்டப் போகிறத எழுத்தாளர் சமுதாய எழுச்சிக்கு வித்தாவார். இரத்தாற பாயுமிந்த இனிய பூமியிலே
下
 
 

சொற்பெருக்கு எதற்கு சோபனங்கள் இனி எதற்கு?
எங்கள் கவிதைகள் இதயத்தை மீட்பவை.
எங்கள் உரிமைக்காய் ஏங்கி அழுகின்றோம் ஆக்கிரமித்த ளங்களை அடக்கிவிட முடியாதது. பந்தைக் கிணற்றுக்குள் பதக்கிவைக்க இயலாது நம்பிக்கை யோடுதான் நடக்கத் தொடங்கியுள்ளோம்.
படைகள் மட்டுமல்ல பலமிக்க குண்டுகளும் எங்களை அழித்தவிட இயலாத முடியாது. நம்பிக்கை இழக்கவில்லை நடக்கத் தொடங்கியுள்ளோம்!
பாலஸ்தீன் எங்கள் பரம்பரைகள் ஆண்டமண் மண்ணை நாம் காதலித்து மறுமலர்ச்சி பூக்கவைப்போம்!
தன்மானத்தோடு தலைநிமிர்ந்த வாழவைப்போம்! எங்கள் மண்ணை இனி நாங்கள் காத்தெடுப்போம்!
பூமியிலே சமாதான
பூக்கள் சொரிய வைப்போம்
குண்டு மழைக்குள்ளும் குறிக்கோளை அடைவதற்கு நின்ற உழைப்போரின் நெஞ்சுரத்தை போற்றவேண்டும்!
கைதந்து எங்கள் ܫ
கரங்களைப் பலப்படுத்த வந்திருக்கும் உங்களை வாஞ்சையுடன் வரவேற்றோம்!
சத்தியத்தை ஒருபோதும் சாகடிக்க முடியாத புத்திரரே! நீங்கள் புறப்பட்டு வாருங்கள்!
நிச்சயமாய் இந்த நிலத்தை இனி வென்றெடுப்போம்!
3
3

Page 19
( 31ம் பக்கத் தொடர்ச்சி) என எனக்கு அப்போது விளங்க வில்லை. அதற்கான விளக்கத்தை அடுத்தவாரச் சுதந்திரன் வெளிப் படுத்தியது.
- எனது புகைப்படம், பரபரப்பான பேட்டி, பரிசுப் பெற்ற சிறுகதை என்பவற்றை வெளியிட்டு அமர்க்களப் படுத்தியிருந்தனர்! அடுத்தவாரம் இரணி டாவது பரிசுப் பெற்ற கே.டானியலின் கதை வெளிவரும் என்ற குறிப்பு இடம்பெற்றிருந்து.
அமரர் டானியல தலிதி இலக்கியத்தின் முன்னோடி என இன்று தமிழகத்திலும் இலங்கையிலும் விமர்சகர்களால் போற்றிக் கொண்டாடப் படும் பிரபல எழுத்தாளர்.
அந்தப் பொங்கல் நன்நாளில் பரிசு பெற்ற செய்தியைக் கொண்டு வந்திருந் தவர்கள் யாரென்பதைப் பினி னாளில் அறிந்த போது பெருமையாக இருந்தது.
ஈழத்து இலக் கியம் என ற கோட்பாட்டை முன் வைத்து, அதை நிறுவியதில் சாதனை புரிந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அச்சானியாக விளங்கிய பிரேம்
ح--------------------سسسسسسسسس
சந்தா செலுத்தி விட்டீர்களா p
حسنى
தயவு செய்த ്ഗ്
( மல்லிகையுடன் <ဖါးj
மாநாடுகள் ,
ஜி.ஞானசுந்தரன் ஒருவர். அடுத்தவர் இன்று தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் புகழ் பூத்த முற்போக்கு நவலாசிரியராகப போற்றப்படும் செ.கணேசலிங்கன், மூன்றாமவர் , நீணி ட காலம் சுதந்திரனில் பணியாற்றி அச்சக மேலாளராக ஒய்வுபெற்ற பின்னரும்
கொள்ளுப்பிட்டி இந்து கலாச்சார ம ன ற தி தை
நிறுவி, அதன் வெளியீடாகிய “இந்து கலாச்சாரம் இதழின் ஆசிரியராக விளங்கி, அதன் மூலம் உலக சைவப் பேரவைக்கு வித்திட்ட பெரியார் துரைசாமி!
எனது இல்க்கியப் பயணத்தில் மூன்று சிறுகதைத் தொகுதிகளை
வெளியிட்டு விட்டேன். வேறு பல்வேறு
நுால்கள் அச்சுருவம் பெற்று விட்டன. நான் எழுதியுள்ள கட்டுரைகளைத் திரட்டினால் 3,4 தொகுதிகளாக அமைக்கலாம். இலக்கிய விழாக்கள், கருத தரங் குகள் : என பவற்றில் என கருத துகள் முன்வைக்கக் கிடைத்த வாய்ப்புகள் பல மூன்று பல்கலைக்கழகங்களில் எனது எழுத்து முயற்சிகள் பற்றி ஆய்வு செயப்து அம் மாணவர்கள் கலை மாமணிப் பட்டத்தில் சிறப்புச் சித்தி பெற்றுள்ளனர். இனி நாவல் துறையில் கால பதிக் குமாறு மூதி த எழுத்தாளர்களான வரதர், நந்தி, செ.கணேசலிங்கன், வல்லிக் கண்ணன் முதலியோர் வற்புறுத்திக் கொண்டிருக் கினி றனர். அதுவும் விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.
பிரபல எழுத்தாளர் 'செங்கை ஆழியான்’ சிறுகதை, நாவல், ஆய்வு

எனப் பலத்துறைகளில் சாதனையிட்டி வருபவர். தன்னைப்போல மற்றவர்களும் முன்னேற வேண்டுமென மனதாரத் துடித் துத் துாணி டி வருபவர் . ஈழத்திலக்கியத்தின் மூலவர்களை புதிய தலைமுறையினர் அறிய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத் தோடு 'மறுமலர்ச்சி சிறுகதைகள்', 'ஈழகேசரி சிறு கதைகள்,
மல்லிகைச் வெளியிட்டு, அண்மையில் ‘சுதந்திரன் சிறுகதைகள்' என்ற பெரிய தொகுப்பை வெளிக்கொணர்ந்தமை எத்தனை பெரிய சாதனை!
அணி மையில கொழும் பில அந்நூலின் அறிமுக விழாவை நடத்திய போது, முதலில் எனது துணைவரையும் என்னையும் மேடைக்கு அழைத்துக் கெளரவித்து நூலின் பிரதிகளைத் தந்த போது அம்முயற்சியின் கனத்தை உணர்ந்து கொண்டேன்.
சுதந்திரனில் எழுதிய எழுத் தாளர்களின் பெயர்களையும் அவர்களின் படைப்புகளையும், நுால் வடிவமாகப் பார்த்த போது மலைப்பு ஒரு புறம்! மகிழ்ச்சி ஒரு புறம்!
இவர்களில் பலர் இ.மு.ச.வில் இணைந்து, இலக்கிய ரீதியாகச் செயல் பட்ட காலத்தில் எண் கணவருடன் சேர்ந்து நானும் எனது பங்களிப்பைச் செய்தபோது பலர் எமது குடும்ப
நண்பர்களாக இன்றும் திகழ்ந்து
வருவது பெருமையைத் தருகின்றது.
இந்நூலினைப் பார்த்த போது என் நினைவுகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மு னி எண் வீட்டில் பொங் கல நன்நாளன்று நடந்த இனிய சம்பவமும
சிறுகதைகள்’ என
அதனைத் தொடர்ந்த இலக்கிய நிகழ்வுகள் பலவும் என் மனதில் பூப்பூவாகத் தூவுகின்றன.
என் இலக்கியப் பயணத்துக்காக அன்று இடப்பட்ட பிள்ளையார் சுழி, அத்துறையில் நான் சிறிதளவாவது
சாதிப்பாதற்கும் முன்னேறுவதற்கும் துணையாக இருந்தது.

Page 20
DE மாற்றத்தினால் வாழும் மொழியில் நிகழும் பொருள் மாற்றம்
- கந்தையா நடேசன்
வளர்ந்து கொண்டிருப்பதென்பது வாழும் ஒரு மொழியின் சிறப்பான இயல்புகளில் ஒன்று. வளர்ச்சி என்பது குறித்த ஒரு மொழிக்குள் வந்து சேரும் புதிய வரவுகளும், அந்த மொழிக்குள் நிகழும் மாற்றங்களும் என இரு நிலைப்பட்டதாக அமையும். தமிழ் மொழியிற் காலத்துக்கு காலம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வந்திருக்கின்றன. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க இயலாது மொழியிலும் மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகின்றன. தமிழில் வழக்கில் இருந்த சொற்கள் சில காலப் போக்கில் வழக்கிழந்து போயின. குறித்த கருப்பொருளில் வழங்கி வந்த சொற்கள், சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் காரணமாகக் குறித்த அந்தப் பொருளை விடுத்து இன்னொரு பொருளில் இன்று கொள்ளுகின்றன.
தமிழில் வழங்கிவரும் நாற்றம் என்னும் சொல்லை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் அதன் பொருள் மாற்றத்தை இலகுவில் உணர்ந்து கொள்ளலாம். “கருப்பூரம் நாறுமோ! கமலப் பூ நாறுமோ!’ எனப் பாடலில் வருமிடத்து நாற்றம் என்னும் சொல் நறுமணத்தைக் குறித்து நிற்பதாகக் காணப்படுகிறது. ஆனால் நாற்றம் என்னும் சொல்லானது நறுமணம் என்னும் பொருளில் இன்று வழங்குவதில்லை. துர்நாற்றம் அல்லது கெட்ட மணம் என்னும் பொருளில் வழங்குவதே இன்றைய வழக்கு.
இத்தகைய மாற்றங்கள் அண்மைக்காலத்தில் தமிழ் மொழியில் மிகத் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. போர்க் காலச் சூழ்நிலைகள் காரணமாக, முன்னைய சமூக கட்டமைப்புக்கள் பல சிதைந்து சமூகத்திலும் குறிப்பிட்ட சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் தவிர்க்க இயலாது தமிழ் மொழியிலும் பொருள் மாற்றல்களை உருவாக்கி இருக்கின்றன. அத்தகைய மாற்றங்கள் சிலவற்றை இனி நோக்குவோம்.'
‘சிறுபான்மைத் தமிழர்’ என்றால் யார்? இந்த வினாவினை அறுபதுகளில் எடுத்து
下 36

இருந்தால், தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் என்னும் விடை எவ்விதக் குழப்பமுமின்றித் தெளிவாகப் பெறப்படும். இந்த மக்களின் உரிமைக்காகப் போராடி வந்த சங்கத்தின் பெயரும் 'அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபை' ஆகவே அக்காலத்தில் இருந்து வந்தது.
ஆனால் இன்று பத்திரிகைகளில் இடம்பெறும் சிறுபான்மைத் தமிழர்கள்’ அல்லது சிறுபான்மையினரான தமிழர்கள் என்பது ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சொற்றொடர்களாக வழக்கில் இல்லை.
இலங்கைத் தமிழர்கள் அனைவரையும்
பொருள் சுட்டி நிற்பதாக இச்சொற்றொட ரானது பொருளில் மாற்றம் பெற்றுள்ளது.
ஆலயங்களை வழிபாட்டுக்காகத் திறந்து விடுங்கள்! என்ற குரல் வடபகுதியில் மிகத் தீவிரமாக அண்மைக் காலத்தில் எழுந்து கொண்டிருக்கின்றது. அறுபதுகளில் இக் குரலானது மிக வலுவாக வட பிரதேசத்தில் ஒலித்தது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து ஆலயங்களுக்குள் கெளரவத்துடன் சுதந்திரமாகச் சென்று வழிபடுவதற்காக ஆலயக் கதவுகளை சகலருக்கும் திறந்து விடுதல் என்பதுதான் இதன் பொருளாக அப் போது அமைந்திருந்தது, ஒடுக்கப்பட்ட மக்களும்
முற்போக்குச் சக்திகளும் அதற்காகக் குரல்
கொடுத்தனர். அதனால் கணிசமான வெற்றிகளையும் பெற்றுக் கொண்டனர். அதே வேளையில் இன்னும் இந்த மக்களுக்காகத் திறந்து விடப்படாத ஆலயங்கள் நூற்றுக்கணக்கானவை வட பிரதேசத்தில் இருந்து வருகின்றன.
இந்த ஆலயங்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் திறந்து விடும் வண்ணம்
下
கோருகின்ற குரலல்ல இன்றைய குரல். குரலால் மொழி மாற்றம், அதாவது
பொருள்மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்து
மகாசபைகளும், இந்து மா மன்றங்களுமே
அன்றைய தாழ்த்தப்பட்டோர் போல இன்று
குரல் கொடுக்கிறார்கள். ஆலயங்களைத்
திறந்து விடுங்கள் என்பதன் இன்றைய
பொருள், இலங்கை இராணுவம் கைப்பற்றி
முகாமிட்டுத் தங் கரியிருக் கும்
ஆலயங்களைக் கைவிட்டு வெளியேறி வழிபாட்டுக்காகத் திறந்து விடுங்கள்
என்பதாகும்.
திருமண விளம்பரங்களைப் பத்திரிகைகளில் நோக்கும் போது தமிழ் மொழியில் உருவாகியிருக்கும் மாற்றத்தை இனங்காணமுடிகிறது. முன்ன்ர் ஒரு காலத்தில் தமது சாதியைக் குறிப்பிடுமிடத்து, அதி உத்தம சைவ இருமரபும் துய்ய உயர் வேளான் குலத்திலகர் என விளம்பரப் படுத்தினார்கள். பின்னர் இதன் பழமை கருதியோ என்னவோ இவ்வாறு நீட்டி முழங்காது வேளான் குலம் எனக் குறிப்பிட்டார்கள். இன்று இவர்கள் கெளரவக் குடும் பத் தைச் சேர்ந்தவரென்றே விளம்பரங்கள் இடம் பெறுகின்றது. கெளரவம் என்பது மேன்மை, உயர்ச்சி, அந்தஸ்து எனும் பொருள்களைத் தரும் சொல்லாகவே வழங்கி வந்திருக்கின்றது. ஆனால் இன்றைய வழக்கில் வெள்ளாளர் என்னும் பொருள் தருவதாக விளம்பரத்தில் மாற்றம் பெற்றுள்ளது.
இவ்வாறு பல சொற்கள் சமூக மாற்றத்தினால் மொழியில், பொருளில் மாற்றம் பெற்று விளங்குகின்றன. இத்தகைய மாற் றம் நிகழ்வது வளர்ந்துவரும் மொழிக்குத் தவிர்க்க இயலாது எனலாம்.
-G7)

Page 21
'கறுப்பும் வெள்ளையும்’
அ.பாலமனோகரன்
அந்த வெள்ளைக் கூடாரத்தினுள் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர்வரை, ஆண்களும் பெண்களுமாய், கையில் பானக் கிண்ணங்களுடன், பாறும் நகரபிதாவின் பாராட்டுரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய முகங்களில் பெருமிதம் கலந்ததோடு மகிழ்ச்சி, நான் மட்டும், அந்தக் கூடாரத்தின் உள் வட்ட விழிம்பில் நின்றவாறு, அவர்களுடைய பெருமையிலும் மகிழ்ச்சியிலும் கலந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். அது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நான் ஈழத்திலிருந்து டென்மார்க்குக்கு அகதியாக வந்திருந்த போது எனது குடும்பத்தை இந்த பாறுாம் நகரத்தில்தான் குடியமர்த்தினார்கள். இப்போது இந்த உள்ளுராட்சி மன்றப் பிரதேசத்தில் ஏறத்தாழ ஐம்பத்தைந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியிருக்கின்றனர். இவர்களில் பலர் என்னைப் போன்று அகதிகள் தான். இது பாறுாம் நகர மக்களின், வெளிநாட்டவரை வரவேற்கும் பரந்த மனப்பான்மையைப் பிரதிபலிக்கும் விடயம் எனப் பேசப்பட்டது.
இப்போது இங்கே நடந்துகொண்டிருந்த, சிற்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் விழாக் கூட, பாறுாம் நகர மக்கள் பிற நாட்டவர்களையும் அவர்களுடைய திறமைகளையும் எவ்வளவுக்கு மதிக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு செயல் எனச் சொல்லப்பட்டது. எட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களை ஒரு மாதத்துக்கு முன் அழைத்து, அவர்களைக் கொண்டு இக் கூடாரம் போடப்பட்டிருந்த புல்வெளியில், எட்டுக் கருங்கற் சிற்பங்களை உருவாக்கும் ஒரு திட்டத்தை பாறுாம் உள்ளுராட்சி மன்றம் ஆரம்பித்து வைத்திருந்தது.

இத்தாலி, யப்பான், சுவீடன், துருக்கி, இஸ்ரேல். என்ற எட்டுத் தேசங்களைச் சேர்ந்த சிற்பிகள் வந்திருந்தனர். இவர்களில் இருவர் பெண்களாகவும் இருந்தனர். இந்தக் கலைஞர்கள், கடந்த ஒரு மாதமாக, இரவுபகல், வெயில் மழை எனப் பாராமல், மைதானத் தில் கொணி டு வந்து இறக் கப்பட்டிருந்த பொரிய கற்பாளங்களிலிருந்து நவீனக் கலை வடிவங்களைச் செதுக்கியிருந்தனர். சித்திரக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்த நான், அமைதிப் பூங்கா என அழைக்கப்படும் இந்தப் புல்வெளிக்கு இடையிடை வந்து,
கற் பாளங்களிலிருந்து கலைவடிவங்கள்
உருவாகும் வித் தையை மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வந்திருந்தேன்.
நகரபிதா பீற்றர், கலைஞர்களை அறிமுகப்படுத்தி பாராட்டுரை நிகழ்த்து வதைக் கேட்டுக்கொண்டிருந்த டெனிஷ் மக்களில் அனேகமானவரை எனக்குத் தெரியும். தெரியம் என்றால் ஏதோ நான்
அவர்களுக்கெல்லாம் நன்கு அறிமுக
மானவன் என்ற அர்த்தத்தில் அல்ல. தெரிந்த முகங்கள், அவ்வளவுதான். அவர்களுக்கும் எனது முகம் பரிச்சயமான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், கடந்த ஒரு மணிநேரமாக அவர்களுடன் நான் நின்றுக் கொண்டிருந்தும், அவர்களில் எவரும் என்னைக் கண்டுக்கொள்ளாதது எனக்குச் சங்கடமாக இருந்தது. அந்த வைபவம் ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்துங் கூட அழைப்பில்லாமலே உள்ளே நுழைந்துவிட்டதைப் போன்றதொரு தவிப்பு என்னைப் பற்றிக் கொண்டிருந்தது. அவர்களில் பலர் அங்கு வருகை தந்திருந்த வெளி நாட்டுத் துாதுவர்கள், அவர்களுடன் வந்திருந்தவர்கள் சிற்பிகள் என்போருடன்
தாமாகச் சென்று பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றங்களும், நடையுடை பாவனைகளும் அவர் கள் பாறுாம் நகரத் திணி உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் புலப்படுத்தின.
ஒவ்வொரு கலைஞரையும் அழைத்து அறிமுகப்படுத்தி நன்றி கூறிய நகரபிதா, அவர்களுக்குத் தனது வணக்கத்தையும் வாழ்த் தையும் அவரவர் சொந்த மொழியிலேயே கூறியதை யாவரும் மலர்ந்து சிரித்து வரவேற்றுக் கொண்டனர். இந்த அளவுக்கு பிறநாட்டவரையும் அவர்களது மொழியையும் மதிக்கும் இந்தக் கூட்டம் என்னை மட்டும் எதற்காக ஒரு அந்நியனாகக் காண்கிறது? இதே பாறுாம் நகரத்தில், ஆறேழு வருடங்களுக்கு முன்னர் அகதிகள் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு,
‘இந்தியர் என்பவர் வேறு யாருமல்ல. அவர்
நீங்கள் இதுவரை சந்திக்காத ஒரு நண்பரே!’ என்ற வாசகம் பிரச்சார சுலோகமாக பயன்படுத்தப்பட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கலைஞர்களைக் கெளரவிக்கும் இந் நிகழ்ச்சியில் * இவனுக் கென் ன வேலை’ என அங்கிருந்தவர்கள் கருதுவது போல எனக்கு ஒர் உணர்வு தோன்றி அலைக்கழித்துக் கொணி டிருந்தது. வேணி டப்படாத, விரும்பப்படாத, ஒதுக்கப்பட வேண்டிய ஒருவனாக நான் பார்க்கப்படுவதாக உணர்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
ஏன் இந்தத் தாழ்வுணர்ச்சி? அத்தனை பேரிலும் நான் மட்டுமே அகதி என்பதாலா? நான் மட்டுந் தான் வெள்ளையண் அல்லாமல், அந்நியரை வெறுக்கும்

Page 22
டெனிஷ் மக்கள் அழைப்பது போல், ஒரு ’கறுப்புப் பன்றி யாக இருப்பதனாலா? எவ்வளவுதான் புறவயமாகச் சிந்திக்க முயன்ற போதும், நான் ஒதுக்கப்படுகிறேன் என்ற உணர்வே என்னுள் மேலோங்கி
நின்று வருத்தியது. அக் கூடாரத்தை உணர்த்தி முண்டு கொடுக்கப்பட்டிருந்த மரத்துாண்களில் ஒன்றைப்போல் நான் அங்கு நிற்க, அவர்கள் என்னை விடுத்து விலகி, சுற்றிவளைத்து கடந்து நடந்து மற்றவர்களுடன் கல கலப் பாக உரையாடியது என் உள்ளத்தை உறுத்தியது.
அத்தனை மனிதர் மத்தியிலும் நான் மட்டும் தனித்து நின்றேன். மனப் புழுக்கத்தை ஆற்றிக்கொள்ள எண்ணி, அருகில் நின்ற அந்த மரத்தடிக்குச் சென்றேன்.
அந்த இடம், என் மனதுள் நான் மறந்து போனதான ஒரு ரணத்தைத் தாக்கி மறுபடியும் வலியெடுக்கச் செய்தது. ஏற்கப்படாத ஒருவனாக ஒதுங்கி நிற்கும் இவ்வேளையில், தாத்தா! தாத்தா!' என எனது பேரன் ஷயன் அன்று கதறியது இப்போதும் கேட்பது போல் நெஞ்சைப் பிசைந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு, ஒரு காலை வேளையில், நானும் எனது மனைவியும் , மரத்தடியினில்தான் நின்றிருந்தோம்.
அன்றுதான் ஷயன் முதன் முதலாகக் குழந்தைகள் இல் லத்தில் சேர்க்கப் பட்டிருந்தான். பிறந்தது முதல் வீட்டிலேயே வளர்ந்த குழந்தை. தனது பெற்றோரையும், எம்மையும் தவிர வேறு எவருடனும் அவன் இருந்ததே கிடையாது. அவனை அங்கு ஒப்படைத்து விட்டு நாம் புறப்பட் முயன்ற போது, அவன் என்னைக் கட்டிப்பிடித்தவாறே
下
இதயம் வேக இந்த
அழ ஆரம்பித்துவிட்டான். குறைந்த பட்சம் அவனை ஒரு மணி நேரமாவது தம்முடன் இருக்கச் செய்தால்தான் அவன் அந்தச் சூழலுக்குப் பழக்கப்படுவான் என அவர்கள் கூறியதை ஒத்துக் கொண்டு, அவனை வலுக்கட்டாயமாகப் பிய்த்துக் கொடுத்து விட்டு, சுமார் ஐம்பது மீற்றருக்கு அப்பாலிருந்த இந்த மரத்தடியில் நாம் , மறைவாகக் காத்திருந்தோம்.
அந்த ஒரு மணிநேரமும், ஒரு நிமிடந்தானும் இடைவெளியின்றி அவன் தாத்தா! தாத்தா! எனக் கதறியழைப்பது கேட்டுக் கொண்டேயிருந்தது. ஆரம்பத்தில் பயமும், கோபமுமாக ஒலித்த அந்த அழுகுரல் பின்னர் ஆற்றாமையுடனும், ஏக்கத்துடனும் காற்றில் கேட்டவாறே இருந்தது. அத்தனை முகங்களும் அவனுக்கு அறிமுகமற்ற வெள்ளை முகங்கள், அன்புடன் மலர்ந்து சிரிக்கும் முகங்களாக இருந்தும், அவை அவனுக்கு புறத்தி முகங்கள்.
இந்தப் புல் வெளிக்கு நான் அடிக்கடி வருவதுண்டு. இதன் ஓரமாக ஒரு முதியோர் இல்லம் இருந்தது, அந்த முகப்பில் பொருத்தப்பட்டிருந்த ஒரு சித்திர வடிவம் என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது,
மாட்டுவண்டிச் சக்கரத்துக்குப் போடப் படும் இரும்பு வளையம் போன்றதொரு பெரிய வட்டம். அதனுள் பதின்மூன்று மழைக்கண்ணிர்ப் பறவைகள் கூட்டமாகப் பறந்துகொண்டிருந்தன. தொடர்ந்து அவதானித்தால் அவை அந்த வட்டாரத்தினுள்ளேயே சுற்றிச் சுற்றிப் பறப்பது போல ஒரு பிரமையை உண்டாக்கும். இனத்தோடு இனமாக ஒன்று சேர்ந்து, ஒத்திசைத்து, ஒழுங்கமைதியுடன் பறந்து கொண்டிருந்தன. அந்தக் கறுப்புப்
GOD

பறவைகள், அந்தப் பறப்பில் அவற்றின் உவகைத் தெரிந்தது. அக்கூட்டத்தின் முன்னரங்கப் பட்சிகளில் ஒன்று. வட்டத்தின் ஒரமாக, வெளியே பறந்து கொண்டிருந்தது. அதன் வெளிப்பரப்பு அச் சித்திரவடிவத்தின் ஒழுங் கமை தரிக் கு முரணாக இருக்கவில்லை.
ஆமாம், டென்மார்க்கில் இராணுவ ஆக்கிரமிப்போ, உயிர்வதையோ கிடையாது. அதனால் தான் இந்த பறவைகள் குஞ்சுகளாக இருக்கும் போதும், குமரப்பருவத்திலும் ஏன் முதுமையிலுங் கூடி அகாலமாய்க் கொல்லப்படுவதில்லை. காலம் வரும் போது அவை எவ்வித நெருடலும் இன்றி வாழ்க்கை வட்டத்தை விட்டு விலகிச் செல்கின்றன’ என நான் அச் சித்திரவடிவைப் பார்க் கையில் எண்ணுவதுண்டு.
இந்தச் சமயம். சற்று அப்பால், நிறுவப்பட்டிருந்த நவீன சிற்பங்களுக்கருகில் ஒரு முதிர்வயதுப் பெண். வெள்ளைப் பெண், தனியே நிற்பது எனக்குத் தெரிந்தது. உற்றுக் கவனித்த போது நான் நினைத்தது போல அவர் எனக்குத் தெரிந்தவராகவே இருந்தார்.
ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் இந்த மைதானத்தில் நான் இவரையும் இவரது கணவரையும் சந்தித்திருந்தேன். கோடை விடுமுறைகளின் போது டென்மார்க்கில் 'லொப்ப மாக்கற் என அழைக்கப்படும் திறந்த வெளிச் சந்தைகளை நடத்துவார்கள். இவற்றின் தனித்துவம் என்னவெனில், இங்கு விற்பனைக்கு வைக்கப்படுபவை அனைத்தும் பெரும்பாலும் உபயோகித்தவையாக இருப்பதும், அவற்றுக்கான விலை மிகமிகக் குறைவாக இருப்பதுமேயாகும். ஊசி முதல் மின்சார உபகரணங்கள் வரையில் எல்லா
下
வகையான பொருட்களுமே அங்கு கடை பரப்பப படுவதும் சுவாரஷ்யமான விசயமே!
இந்த மூதாட்டியும் அவரது கணவரும், தாம் வரைந்த சித்திரங்கள், உருவாக்கிய சிறு சிலைகள் என்பவற்றை ஒரு மேசைமேல் பரப்பி வைத்துக்கொண்டு, சந்தோசமாக பியர் அருந் தரிக் கொண்டிருந்தனர். அவற்றின் மத்தியில் இருந்ததொரு சிறிய மரச் சிற்பம் மற்றவற்றைவிட மிக வித்தியாசமாகத் தெரிந்தது,
நடராஜர் சிலைபோன்று, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் புத்தரைப் போன்று, கீழைத்தேயக் கலைவடிவங்களுக்குரிய
தனித்துவமான வடிவமைதி கொண்டதாக
அது காணப்பட்டது. நான் எப்போதோ கண்டதொரு பதினைந்தாம் நுாற்றாண்டு ஒவியத்தையும் அது எனக்கு நினைவுப் படுத்தியது. பரமசிவனுடைய மடியிலே அமர்ந்து கொணி டு, கைகளாலும் கால்களினாலும் அவனை இறுகக் கட்டிக்கொண்டு மோகன முயக்கத்தில் முத்தமிடும் பார்வதி தேவி, சக்திசிவம் இரண்டறக் கலக்கும் நிலையைச் சித்தரிக்கும் அற்புதமான ஒவியமாக இருந்தது அது.
டெனிஷ் கலைஞர் உருவாக்கியிருந்த இந்தச் சிற்பம், எத்திசையில் இருந்து பார்த்தாலும் வடிவப்பழு தற்ற ஒரு கோளத்தினுள், ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து உட்கார்ந்திருப்பது போன்று அமைந்திருந்தது. வலிமை மிக்க தனது உடலின் பாதுகாப்பினுள் அவளைப் பத்திரமாய்ப் பொத்தி வைத்திருப்பது போன்ற ஆணும் அவனுக்குள்ளே அடங்கி அமைதி
காணும் அதே சமயம், அவனை அவனது
முழு வீரியத்துடனும் தனக்குள்ளே
-GD

Page 23
அடக்கிக்கொண்டேன் என்ற மோனக் களிப்பில் முகம் விகச்சிக்கும் பெண்ணும் இணை நீ திருக் கும் வடிவத் தரில் செதுக் கப்பட்டிருந்த இச் சிலையின் விலையைக் கவனித்தேன். மிகமிக அதிகமானதொரு தொகை குறிப்பிடப்பட்டிருந்தது!
வியப்பை அடக்க முடியாது அவரிடம் விளக்கம் கேட்டபோது, குறும்புச் சிரிப்புடன் இதை யாரும் வாங்கி விடக்கூடாது என்பதற்காகத் தான்' என்று சொன்ன அந்த முதியவர், மற்றைய பொருட்கள் ஏன் இத்தனை குப்பை மலிவாக இருக்கின்றது என்ற எனது வினாவுக்கும் விடையைக் கூறியிருந்தார். ‘நாம் அவ்வப்போது ஆசையாக வாங்கியவை, உருவாக் கியவை, எமக்கு அன்பளிப்பாகக் கிடைத்தவை, எம் மூத்தோர் எமக்கு விட்டுச் சென்றவை, என்றெல்லாம் எமது வீடுகளில் பொருட்கள் நிறைந்து விடும்போது அவற்றை எறிந்துவிட மனதில்லாமல் யாருக்காவது அவற்றைக் கொடுப்பதே இந்தச் சந்தைகளின் நோக்கமே யொழிய, பணஞ் சம்பாதிப்பதல்ல! இவற்றைப் பெறுபவர்களுக்கும், ‘நாம் இவற்றை இலவ சமாய் ப் பணங்கொடுத்தே வாங்கினோம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். அதனால் தான் இந்த ஏற்பாடு' என்று விளக்கியிருந்தார்
அந்த முதிய தம் பதியினரின் அன்னியோன்யத்தைப் பார்க்கையில், அவருடையப் படைப்பைப் போலவே அவர்களிருவரும் இரண்டல்ல, ஒன்றே என்பதை மகிழ்ச்சியுடன் உணர்ந்து கொண்டேன். இதன் பின்னர் என்னை அத்தம்பதிகள் காண நேர்ந்தால் புன்னகை செயப் வது வழக் க ம . இரணர் டு
ー
பெற வரி ல  ைல,
வருடங்களுக்கு முன்னர், இந்த மூதாட்டி மட்டும், தனியே, பாறுாம் ஸ்டேஷன் பக்கமாக, நடைபாதையில் எனக்கு நேரெதிரே வந்து கொண்டிருந்தார். அவரது விழிகள் எனது கண்களைச் சந்தித்த போதும் அவர் என்னைத் தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ளாதது எனக்கு வியப்பாக இருந்தது. எதையோ தொலைத்து விட்டு அதைக்காணாது தேடித் திரியும் ஒரு ஆத்மாவின் தவிப்பைதான் அந்த விழிகளில் நான் கண்டேன். ஏன் இப்படி? இவருடைய கணவர் எங்கே? என்ற வினாக்கள் என்னுள் எழுந்த போதுதான் ‘அவர் காலமாகியிருக்க வேண்டும்!’ என்ற விடையும் தோன்றியது.
அங்கே கூடாரத்தினுள் குழுமி யிருக் கும் தனது இனத் தாருடன் சேர்ந்திருக்காது இவர் மட்டும் இங்கே ஏன் தனியாக நின்று கொண்டிருக்கின்றார்? கணவனையிழந்த சோகத்திலிருந்து இவர் இன்னமும் மீளவில்லையா?
நான் அருகிற் சென்றபோதுகூட அவர் எனது வருகையை உணர்ந்த தாகவோ, பொருட் படுத்தியதாகவோ தெரியவில்லை. அவருடைய முகம் அமைதியானதோர் சோகத்தில் உறைந்து போய்க் கிடந்தது.
அங்கு மேலும் நின்று கொண்டிருக்கப் பிடிக்காமல் நான் எனது இருப்பிடத்தை நோக்கிச் சென்றேன்.
ஏன் இந்த மூதாட்டியினால், தனது இனம், தனது மக்கள் என்று ஒன்று சேர்ந்து, கலந்து பேசித் தனது கவலையை மறக் கமுடியவில் லை? அவருக்கு அவருடைய கணவன் மட்டுமே தனது இனமாக, ஒரேயொரு உறவாக இருந்திருக்க வேண்டும். எமது உறவினர், நண்பர்கள், ஊரவர் என எம்மை நன்றாக
-G2)

அறிந்தவர்கள் இல்லாவிட்டால், எமது பிரத்தியேக அடையாளத்தை நாம் இழந்து, இறந்தவர்கள் போலாகி விடுகின்றோமோ? எனது பேரன் அன்று பயந்து அழுததும் இதன் காரணமாகவா? எனப் பல வேறு எண்ணங்களில் மூழ்கியவாறே எனது வசிப்பிடத்தை நான் அடைந்தேன்.
எனது மாடி மனை இருந்த கட்டிடத்தின் பிரதான வாசற்கதவை நான் திறக்கும் போது எனக்குப் பின்னே யாரோ வருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒரு டெனிஷ் பெண்மணி வந்து கொண்டிருந்தார். அவர் முதலில் செல்லட்டுமென நான் கதவைத் திறந்து பிடித்தபடி காத்திருந்த போது, நன்றியுடன் முகம் மலரச் சிரித்த அந்த மாது, *ஆயிரம் நன்றிகள்! இன்று அருமையான காலநிலையல்லவா!' என்று என்னிடம் மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு உள்ளே பிரவேசித்தார். f
வெ நீ துபோயிருந்த எனது உள்ளத்துக்கு அவருடைய இதமான வார்த்தைகள் இளந்தென்றலாக இருந்தன. முதல் மாடியில் இருந்த எனது மனைக்குச் செல்லும் படிக்கட்டுகளிலேயே அப் பெண்மணியும் ஏறிக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து சென்ற நான், எனது வீட்டுக் கதவைத் திறக்கும் போதுதான், அவர் எனது பக்கத்து மனைக் கதவைத் திறந்து உள்ளே செல்வதைக் கவனித்தேன்.
‘அட! இந்தப் பெண்தான் எனது பக்கத்துவீட்டு வாசியா! நான் வியந்து போனேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர், பக்கத்து வீட்டில் குடியிருந்த வர்கள் விட்டுப்போக புதிதாகக் குடி வந்தவர்கள் இவர்களா?
இதமாக இரண்டு வார்த்தைகள், இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள்!;
அந்தப் பெண் அவற்றைக் கூறியபோது அவரின் நிறம் எனக்குத் தெரியவில்லை. என் னை அடையாளங் கணி டு, அங்கீகரிப்பதைப் போன்று அவர் பேசியது மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.
அவருக்கு என் னைத் நண் கு தெரிந்திருந்தது என்பதை இப்போது உணர்ந்தேன்.
இரண்டு வருடங்களாக அயல் வீட்டில் இருப்பவரைத் தெரியாமல் இருக்கின்றேனே!
நிச்சயமாக அவர் எனது பார்வையில் பல
தடவைகள பட்டிருக்கத்தான் வேண்டும். ஆனர் ல நான் ஏன் அவரைக் காணவில்லை?
நிறக்குருடு என்ற வார்த்தை சட்டென நினைவுக்கு வந்தது.
இந்த நோய் பற்றி நாணி டென்மார்க்குக்கு வந்தபின்தான் கேள்விப் பட்டிருந்தேன். இவ்வியாதி உள்ளவர்களுக்கு நிறங்கள் தெரிவதில்லையாம் யாவும் கருப்பு வெள்ளையாகவே தெரியுமாம்!
O
ல்லிகைப் பந்தல் வெளியீடு
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத
சித்திரம்
QA LIGGA ஜீவாவின் சுய வரலாறு N
இரண்டாம் Hệử s புதிய ඝණ්ෂණ
下

Page 24
தியாகத்தரின் சுவடு வைப்போம்
எர்தவன் இருக்க அப்பை நோதலும் முறைய தாமோ?
கைமிவே வெண்ணைய் வைத்து கடவதன் நீரை உண்டு நெய்தனைக் கலை வார் உணர்டோ? öTGöGDödb ötöbb GJELEDIT? பொய்மிவே திளைத்த புல்வர் புடவில் நேர்மை கொண்று போவிபாய்க் காவி பூண்டால் புனிதராய் உவவ வாமோ? மெய்யடி யாரே என்ற சLவத்தின் வாழ்வு வேண்டாம் Ensis)slö6Í söÚUG|BOs? சரித்திரம் காவம் போற்றும்
dÓLOGOTÁ DABI BIBĪGODIO சிந்தனை அறிற கல்வி திராகத்தின் சுவடு வைப்போம்
சீரிய பயன் வழங்கா
சிந்திக்கக் கல்வி இன்றேல்
சிந்தனை சிறக்கு மாமோ?
எந்த ஓர் நிவைக்கும் அறிவு
ஏற்ற நல்ஞானம் வேண்டும்
அந்தப் பேரின்ப விட்டை - நெடுந்தீவு லக்ஸ்மன் அணுகிடப் பக்தி வேண்டும்.

so)6OLLITGITD
- வே. சாரங்கன்
வெள்ளவத்தையின் 42வது ஒழுங்கையிலிருந்து காலி வீதியில் ஏறி நடந்து கொண்டிருந்தான் தமிழவன். புறக் கோட்டை போயாக வேண்டும். தூரத்தில் வரும் பொழுதே ‘பஸ்" ஐ இனங்கண்டு மறிப்பது சிரமமாக இருந்தது. பெரும்பாலான பஸ்கள் தனிச் சிங்களப் பெயர்ப் பலகையுடனேயே வந்தன. இடம் புதியது. வழி இலக்கமும் சரியாகத் தெரியவில்லை. யாராவது மறித்தால் தானும் ஏறிக் கொள்ளலாம் என்ற துணிவு தான் இருந்தது. பயணத்திற்காய் நின்ற ஒரு சிலரோடு நின்று கொண்டான். ‘சி. ரி. பி’ ஒன்று வந்தது. அவர்கள் யாராவது மறிப்பார்கள், ஏறலாம் என நின்றபோது அவர்கள் மறிக்கவுமில்லை - பஸ் நிற்கவுமில்லை. சில பஸ்கள் கடந்து செல்வதையும் இவன் ஏறாது நிற்பதையும் அவன் அவதானித்திருக்க வேண்டும். அருகில் வந்து ஏதோ சிங்களத்தில் கேட்டான். வேற்று மொழிக் கேள்வி விளங்கிவிட்ட மகிழ்ச்சியில் போக வேண்டிய இடத்தின் சிங்களப் பெயர் நினைவில் வர மறுத்தது. வந்தாலும் நாக்கில் சரியாகப் பொருந்தப் போவதில்லை. பொருந்தினாலும் தன்னை இனங் காட்டக் கூடும். “பெற்றா’ என்றான். உடனே வந்தவன் மொழியை மாற்றி 'ஏன் மினிபஸ்ல ஏறல்லை மல்லி’ என்றான். அவன் எப்படித் தன்னை இனங்கண்டான் என்று அப்போது சிந்திக்கத் தோன்றவில்லை. ‘நான் சி. ரி. பி ஐப் பார்க்கிறன்’ என்றான். அனுதாபமாக அவன் சொன்னான் ‘இது மினி பஸ் ஹோல்ட், இதில சி. ரி. பி நிக்காது அப்போது தான் நிமிர்ந்து அந்தப் பலகையைப் பார்த்தான். ‘அட நான் அதக் கவனிக்கேல்லை, தாங்ஸ்’ என்று விட்டு நகரும் போது தான் பொறி தட்டியது. இவன் எப்படி இனங்கண்டான்? ,
அம்மா சொன்னது நினைவில் வந்தது. ‘அப்ப 83இலை தம்பி நாங்கள்
下 W 45

Page 25
பொட்டும் வைக்கிறேல் லை பூவும்
வைக்கிறேல்லை. இப்ப எங்கை பார்த்தாலும் எங்கடை சனந்தான்'இந்த மாற் றத் தை அவனும்
அவதானித் திருந்தான் . கடையில் நுழைந்து தனக்கேயுரிய சிங்களத்தில் கேட்ட போது கடைக்காரன் தமிழில் பதில் சொல வ ைதயும் கவனித்திருக்கிறான். அதோடு இந்தச் சம்பவத்தையும் இணைத்துப் பார்த்தான். அது தமிழ்க் கடை, தமிழன் தமிழனை இனங் கணி டா னிர் . இவண் சிங்களவனாய்த்தான் இருக்க வேண்டும். இவனால் எப்படி. என்று யோசித்த போது, தான் பெற்றா’ என்றது ஞாபகத்திற்கு வந்தது. சிங்களத்தில் சொல்லியிருக்கலாம் என்று பட்டது.
புறக் கோட்டையில் இறங்கி
நடந்து கொணி டிருந் தான் . அதிஷ்டலாபச் சீட்டு விற்பவனின் சத் தமும் நடைபாதை
விற்பனையாளனினர் சதி தமும் போட்டியாய் கேட்டன. நடை பாதையில் அமைதியாய், வேகமாய், - தான் ஒரு சிங்களவன் எனக் காட்டும் மிடுக் கோடு - நடந்து கொண்டிருந்த போது தான் அது நடந்தது.
மூன்று பேனாக்களைக் கையில் வைத்து 'தகயாய் தகயாய்’ எனக் கத்திக் கொண்டிருந்தவன் இவன் அருகில் சென்றதும் இவனுக்கு நேரே கையை நீட்டிப் பத்து ரூபா பத்து ரூபா என்றான். −
இனியொரு ‘83’ வந்தால் என்று நினைக்கத் தலை சுற்றியது. இன்னும் வேகமாய் நடக்கத் தொடங்கினான்.
下
 

2001ஜூன் மாத ‘மல்லிகையில் படிக்காதவர் படிப்பித்த பாடங்கள்’
விடயத்தைப் படித்த சிலர் நேரிலும் தொலைபேசியிலும் தெரிவித்த பாராட்டு, விடுத்த வேண்டுகோள் - தந்தையாரைப் பற்றிய சிந்தனைகளை மீண்டும் எழுத வைத்தது.
அரசாங்க வேலையில் சேர்ந்த பின் விடுதலையில் ஊருக்குச் சென்று மீண்டும் புறப்பட ஆயத்தமான போது, தந்தையார் பல்விளக்கும் தூரிகையையும் சவர அலகையும் கொண்டு வந்து தந்தார். அவை குளியலறையில் நான் எடுத்து வர மறந்த பொருட்கள். அப்போது அவர் சொன்ன அறிவுரை -
‘ஓரிடத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக - அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டதாகக் கற்பனை செய்து என்ன செய்யப் போகிறோம் என்பதை
two A-...- *ം.
படிக்காதவர் படிப்பித்த
"ع
".
பாடங்கள்
உடுவை. எஸ். தில்லை நடராஜா
எண்ணித் தேவையான பொருட்களைப் பட்டியல் போட்டு அவற்றை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்' என்று சொன்னார்.
பற்பசையிலிருந்து உத்தியோக பூர்வக் கூட்டத்துக்குத் தேவையான சகல பொருட்களையும் - அதாவது காலையில் எழுந்து பல் துலக்குத்ல், முகச்சவரம், குளியல், உத்தியோக உடை எனப் பட்டியல் போட்டு எடுத்து வைத்து விடுவேன். காலையில் எழுந்து சவர அலகு தேடித்திரியும் உத்தியோகத்தர்கள், கூட்டத்துக்கு முன்பாக கழுத்துப் பட்டி (டை) தேடும் உத்தியோகத்தர்கள் போன்றோரின் நிலை எனக்கு ஏற்படாததற்குக் காரணம் தந்தையின் வழிகாட்டுதலேயாகும். அது மட்டுமல்ல பிரயாணப்பையில் முகச்சவரம் செய்வதற்குரிய பிளேட்டைத் தீப்பெட்டிக்குள் வைக்க வேண்டும் என்பது போன்ற சின்னச் சின்ன விடயங்களைக் கூடச் சொல்லித் தந்ததை, ஒரு முறை நண்பர் ஒருவர் பிளேட் தேட பையில் கையை விட்டுத் துளாவி இரத்தம்சிந்தும் கையுடன் துடித்ததும், உடுப்புக்களில் இரத்தக் கறை படிந்ததும் நினைவுக்கு வர எப்படித் தந்தையாரால் சிறு
下 一○

Page 26
விடயங்களையும் அவதானித் து
அறிவுரை வழங்க முடிகிறது என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
米米米
பொருட்களைப் வேண்டும், சிந்தக் கூடாது என்று சொல்வார். பாடசாலை நாட்களில் பற் பசையில் லை. பற் பொடிதானி பாவனையில் இருந்தது. ஒரு சிறு துகள் கூட வீணாகக் கூடாது என்பதற்காக முகப்பவுடர் பயன்படுத்திய பின் எறியும் சிறு தகரப் பேணியைத் துப்பரவாக்கி அதனுள் பற் பொடியைப் போட்டு வைக் கச் சொல் லுவார். மூடித் துவாரங்களுடாக வரும் பற்பொடியின்
பயனர் படுத்த
அளவு போதுமானதாக இருக்கும்.
அப்போது பற்பொடியின் விலை பத்துச் சதம் தான். ஆனாலும் அதையும் வீணாக்கக் கூடாது என்பதே தந்தையின் கொள்கை.
米米米
இப் போதுள்ளது போல குமிழ்முனைப் பேனாவும், பிளாஸ்டிக் போதிதலும் இல் லாத காலம் . எழுதுவதற்கு மையும் தலை
அலங் காரத்துக் கு எணர் ணையும் கொணி டு செல் லக் கணினா டிப் போத்தல் பயன்படுத்தப் பட்ட காலம். அதற்காக அளவில் சிறிய நன்கு மூடத்தக்க போத்தல்களை சிறிய அட் டைப் பெட்டியில் பழைய சீலைகளைச் சுற்றி வைக்கும் படி சொல்லித்தந்தார். அதனால் போத்தல்
அண்டைய நாட்டுக்கு
உடைந்து ப்ொருள்
வாய்ப்பில்லை.
LI (Lg ġ5 IT CE
冰米米
வெளியே ஓரிடத்தில்தங்கியிருந்து புறப்படுவதற்கு முன்பாக எல்லாப் பொருட்களையும் மேசையில் அல்லது கட்டிலில் அடுக்கிவைத்துப் பின்னர் இவற்றைப் பையில் எடுக்க வேண்டும். குளியலறை, அலுமாரி போன்றவற்றில் பொருட்கள் ஏதாவது வைத் து விட் டோமா என்று சரி பார்க்க வேண்டுமென்றும் சொல்லுவார்.
அண்மையில் மிகமிக முக்கிய இடத்தில் இருக்கும் ஒரு பிரமுகர் மனைவியுடன் சென்று உத்தியோக பூர்வ விடயத்தை முடித்துக் கொண்டு திரும்பிய போது விமான நிலையம் வரை வந்து அவசரம் அவசரமாகத் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பிச் சென்றதற்குக் காரணம் குறிக்கும் போது கழற்றி
வைத்த சங் கிலியை எடுக் க மறந்ததேயாகும்.
>*<>*<>*<
ஓரிடத் திற்குப் போவதற்கு
முன்பாக இட அமைவு பற்றியும் தெளிவான தகவல்களைப் பெற வேணி டுமென்று வற்புறுத்துவார். தந்தையாரின் இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்காததால் இரண்டு முறை தடுமாறியிருக்கிறேன்.
-Gs)

ஒரு முறை வவுனியாவிலிருந்து கொழும்புக்கு வந்து கொண்டிருந்த போது இலங்கையில் தயாரான இதய ராகம்' படத்தைப் பார்க்க வேண்டு மென்ற எண்ணத்துடன் விரைந்து வந்த போது வழியில் சிறிது தாமதம். இரவு ஏழு மணிக்கு தியேட்டருக்குள் நுழைந்து சில நிமிடங்கள் சென்ற பின் தான் வேறு ஒரு தியேட்டருக்கு மாறி வந்துவிட்டதையும் , இதய ராகம் படத்துக்குப் பதிலாக ஏற்கனவே பார்த்த ஒளி விளக் கு’ படம் ஓடிக் கொண்டிருப்பதையும் அறிய முடிந்தது.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மணி டபதி தில் எனது Li 60) p Ulu
கல்லூரியான உடுப்பிட்டி அமெரிக்கன்
மிஷன் கல்லூயின் வருடாந்த பொதுக்
கூட்டம் நடப்பது வழக்கம். திகதியையும்
நேரத்தையும் மட்டும் குறித்துக் கொண்டு வழக்கம் போல சென்ற பின்னர் தான் கூட்டம் நடைபெற்ற இடம்வேறு ஓரிடம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
米米米
சாப்பாட்டுக் கடையில் இளைஞ ரொருவர் இடையிடையே தும் மிக் கொணர் டு மிளகாயப் வெட் டும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்வையிட்ட தந்தை இருமல் - தும்மல் வருவது போலத் தோன்றும் போது ஆயுதங்களைப் பாவித்து எந்த வேலையையும் செய்யக் கூடாது. இருமல் தும்மல் அடக்க முடியா விட்டால் கையிலுள்ள ஆயுதங்களைத் தரையில் வைக்க வேண்டும் என்று
下
சொல்லுவார். தந்தையின் சொல்லை, ‘சும்மா போங்கய்யா' என்று எள்ளி நகையாடிக் கொண்டு இளைஞர் மிளகாய் வெட்டும் வேலையைத் தொடர்ந்தும் செய்தார். திடீரென்று ஒரு பெரிய தும்மல், மிளகாய் வெட்டிக் கொண்டிருந்த வலது கை இடது கை விரலை வெட்ட வலி பொறுக்காது கையிலிருந்து விழுந்த கத்தி அவர் காலையும் பதம் பார்த்தது.
米米米
ஐம்பதுகளில் ஒரு சதம் இரண்டு சதம் போனி ற சில லறைக் காசுகளுக்கும் பெறுமதி இருந்தது. ஒரு தடவை அப பா பதது ரூபா பெறுமதியான ஒரு சதம் இரண்டு சதம் அடங்கிய நாணயங்களை ஒரு சிறு அட்டைப் பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். ஏதாவது உண்டியல் உடைத்தீங்களா? என்று உறவினர் கேலி செய்த போது பள்ளிக் கூட மாணவனாக இருந்த எனக்கும் ஏதோ போலத் தெரிந்தது. ஒரு பத்து ரூபா தாள் கொண்டு வந்திருந்தால் அம்மாவும் சந்தேஷப் பட்டிருப்பா போலத் தோன் றியது. ஆனால் அப்பாவோ இதன் உண்மையான பெறுமதி பத்துரூபாவை விடப் பல மடங்கு. பெறுமதி என்பதை விடச் சில்லறையால் வரும் திருப்திக்கு அளவில்லை என்றார்.
அடுத்த நாள் தந்தையுடனி யாழ் ப் பாணத்துக் கு பஸ் சில புறப்பட்டேன். தந்தையார் தந்த ஒரு
-G9)

Page 27
ரூபா வை பஸ் கொணர் டக் ராரிடம் கொடுத்து ஒனர் றரை ty 5 5 L வாங்கினேன். முழுடிக்கட் 55சதம் - அரை டிக்கட் 28 சதம். மிச்சக் காசு மிச்ச்க்காக என்று பல முறை கத்தி அழாக்குறையாகக் கெஞ்சி 10 சதம் தான் கொண்டக்ரரிடமிருந்து வாங்க முடிந்தது. 6J (LR சதம் கிடைக்கவேயில் லை. எனக் கோ. சரியான கவலை. yo
35 L9. மூனர் று சதம் சில்லறையிருந்திருந்தால் ஏழுசதத்தை இழக்க வேண்டியிருக்காது. இதைத்தான் சில்லறையின் பெறுமதி அதிகம் என றேனர் . சிறு இழப் புக் கூட இல்லர்விட்டால், அது திருப்திதானே என்றார். உண்மைதான். இதனால் இப்போது கூட எப்போதும் வீட்டில் சில்லறைக் காசு வைத்திருப்பேன்.
அதனால் காலையில் பத்திரிகை, வாங்கும்போது கூட பிரச்சினையில்லை. சரி ல ல  ைற ய ல  ைல யெ ன று விற்பனையாளரிடம் பணத்தை இழக்கும் நெருக்கடியும் இல்லை.
>*<>*<>*
‘கட்டி!' இப்படித்தான் அப்பா என்னை அழைப் பார். அம்மாவை ‘ராசா” என்று அழைப்பார். வீட்டிலும் க ைடயரிலும் எல்லோருடனும் மரியாதையாக பழகுவார். எடேய். எடியே! வாடா....... போடா. و சொற்கள் ஊர் முழுவதும் கேட்டாலும் எங்கள் வீட்டு அகராதியில் இல்லை.
།། >༦ >༡༦༢༦
கோவில் திருவிழாவில் பகல் நேரத்தில் எல்லோரையும் தன்பால் கவரும் கடை ‘சர்பத் கடை, சிவப்பு, ஒரேஞ், பச்சை, மஞ்சள், ஊதா என பல வர்ணங்களில் சர்பத் கடையில் வைத்திருப்பார்கள். நிறமும் மணமும் கலரும். பாடசால்ை மாணவனான நான் எப்படியோ காசை திரட்டிக் கொண்டு அடுத்தடுத்து ஒவ்வொரு நிறங்களில் சர்பத் குடிப்பதை அப்பா கவனித்து 6. Tir.
அனர் பாக அழைத்து ‘சர்பத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஒன்றுதான். நிறத்தில் ஒன்றுமில்லை. ஏறக்குறைய எல்லாம் ஒரு வகையான சுவைதான். ஆனால் எல்லாவற்றிலும் இரசாயனப் பொருள் இருக்கும் . சுத்தமான தண்ணீர் தான், தாகத்தைப் G8 u r ë (5 LË . உடம் புக் கும் விக்கினமில்லை' என்றார்.
இன்றும் கூட பல விருந்துகளில் பல வகையான குளிர்பானங்கள் பரிமாறப் படும் போது எனக் கு விருப்பமானது 'மினரல் வோட்டரே'
米米米
ஒரு தடவை அம்மாவுக்கு வருத்தம். நெஸ்பிறே பால்மாவைக் கரைத்தேன். பால்மா கட்டி கட்டியாக மிதந்து கொண்டிருந்தது. அதைப் பக்குவமாகக் கரைக்க தந்தைதான் சொல்லிக் கொடுத்தார்.
கிளாஸில் முதலில் சீனியைப் போட்டு பின்னர் மாவைப் போட்டு
-GD

இரண்டையும் நன்கு கலக்கிய பின் சுடு தண்ணிர் ஊற்றிக் கலக்கினால் பால் கட்டிபடாது. -
di 6) 6l UU NT 5 இருக்க வேண்டுமானால் இன்னொரு கிளாஸை எடுத்து சற்று உயரத்திலிருந்து மறு கிளாஸ"க்கு ஊற்ற வேண்டும். இரண்டு தரம் ஊற்றி ஆற்றினால் சூடு குறைந்து சுவை பெருகுமாம். காற்றத் தேநீருடன் சேர்ந்து விடுமாம். அதுதான் கடையில் பருகும் தேநீர் சிலவேளையில் சுவையாக இருக்கிறதோ?
冰冰米
சித்திரை வருடப் பிறப்பன்று இரவு சாமி கும்பிடும் அறையில் குத்து விளக் கை ஏற்றி வைத்து அப்பா அம்மாவுக்கும் எங்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் கை விசேடம் தருவார். வெற்றிலையில் நெல்மணி, மஞ்சள், தாள்காசு, சில்லறைக்காசு வைத்துத் தருவார். அம்மா மட்டும் காசோ டு நெல் லு, மஞ சள் எல்லாவற்றையும் எண்ணிப்பார்ப்பார். எனினும் போது உருப் படிகளின் எண்ணிக்கை ஒற்றை எண் உடையதாக இருக் க வேணர் டுமென நு அவர் எதிர்பார்ப்பு.
நான் சிறுவனாக இருந்தபோது அம்மா கை விசேடம் வாங் கசி உருப்படிகளை எண்ணி இருபத்தியெட்டு என்று சொல்லிக் கொண்டே என்னையும் எண்ணிப் பார்க்கச் சொன்னார். நானும் எண்ணியபோது இருபத்தியெட்டு தான் இருந்தது. ஆனால் அவற்றை அப்பா
下
அதற்காக ፴9 ([b
வாங் கி எணர் ஒனும் இருபத்தியொன்பது இருந்தது.
போது
எனக் குத் திருமணமாகிய பின்னரும் சிலகாலம் அப்பாவிடம் கைவிசேடம் வாங்கினேன். அப்போது ஒரு நாள் அம்மா உருப்படிகளை எண்ணியபோது இருபத்தியெட்டு. நானும் எனினினேன் இருபத்தியெட்டு. ஆனால், அப்பா அவற்றை வாங்கி எண்ணும் போது இருபத்தொன்பது. அப் பா ઉો 6ો! (g) இலாவகமாக விரல்களிடையே மறைத்து வதிைதிருந்த ஒரு நெல் மணியையும் சேர்த் து இரு ப த தொன பதாக கரிய  ைதக கண்டுவிட்டேன்.
‘ என்ன செய்வது. ஒற்றை விழத்தக்கதாக இருந்தால் அதிஷ்டம் என்பது அம்மாவின் எதிாபார்ப்பு.
அவரைத் திருப்திப் படுத்த வேண்டும்.
இந்த விஷயத்தில் மட்டும் அம்மாவை ஏமாற்றியிருக்கிறேன்’ என்றார்.
‘ஏன்! ஒரு நெல்லை சுகமாக மறைத்து விடலாம் தானே' என்றேன் - இந்த விடயத்தில் ஒரு உருப்படி குறைந்தாலும் அம்மாவின் யோசனை கூடும. கூடினால சந்தோஷமாயிருப்பார். நெல்  ைல விரல்களுக் கிடையே தந்திரமாக வைத்திருப்பேன்’ என்றார்.
米>*<>*く
அப்பா சாப்பாட்டுக் கடையில் சமையல் வேலை செய்தாலும் எனக்கு
-G5)

Page 28
அத்தொழிலை பழக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்தார். வீட்டுக்கு வரும் நாளிலும் சும்மா இருக்கமாட்டார். மணி வெட் டி, கோ டா ரி, கதி தி, அலவாங்கு என்று ஏதாவது ஒரு ஆயுதத் தைப் பயனர் படுத்திக் கொண்டிருப்பார்.
வேலைக் குச் சேர்ந்த பின் விடுதலையில் செல்லும் நான் வீட்டு வேலைகள் செய்யப் பின்வாங்கி வாசிப்பு, எழுத்து என்று பொழுது போக்கும் போது அப்பா சொல்லுவார் ‘'பேனாவை மட்டும் பிடித்தால் போதாது. மண்வெட்டி, கோடாரியும் பிடித்துப் பழக வேண்டும். குனிந்து நிமிர்ந்து வேலை செய்யப் பழகினால் வருத்தம் வராது. வீட்டு வேலைகளை நாங்களே செய்ய வேண்டும்” என்று சொல்லுவார்.
* கொத்தும் போதும் வெட்டும் போதும் சிந்திக்கலாம். பிறகு அந்தச் சிந்தனையை எழுதலாம்' என்பார்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் ஒரு போட்டி. அப்பா இறப்பதற்கு முன்பாக தான் இறக்க வேண்டும் என்பார் அப்பா. இறப்பதற்கு முன்பாக தான் மஞ்சள் குங்குமத்துடன் போக வேண்டும் என்பார் அம்மா. அம்மா இறந்தபோது அப் பா வால் எ ப் படி அநீததி துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடிந்தது என்பது ஆச்சரியமே!
இறுதிக் கிரியைகள் - பல வேலைகள் - அந் தியேட்டிக்கான
下
அப்பா
ஆயத்தங்கள். எனக்கு பெருமளவில் நண்பர்கள். எனவே சமையலுக்கு விறகுக் காக லொறியில் பெரிய மரங்களைக் கொண்டு வந்தேன்.
கூலி ஆட்களைக் கொண்டு வந்து கொத்தக் கூடாது அப்பாவின் உத்தரவு.
தானே கொத்தத் தொடங்கினார். எனக்கு மனம் கேட்கவில்லை.
‘பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக கூலி ஆட்கள் வேணி டாமெனி று அம் மாவோடு வாழ்ந்த வாழ்க்கை நல்ல வாழ்க்கை.
சொல் லவில் லை.
பிள்ளைகளாகிய நீங்கள் பணத்தைச் செலவழிப்பீர்கள். என்னிடம் உடல் வலு இருக்கிறது. மனம் சோர்வடையவில்லை. அம்மாவுக் கும் எனக் கும் நடந்த போட்டிகளிலெல்லாம் நானே வெற்றி பெற்றிருக்கிறேன். முதலில் யார் போவார்கள் என்ற போட்டியில் நான் தோத்துப் போயிட்டேன். ஆனபடியால் அம்மாவின் நினைவுச் சமையலுக்கு நானே விறகு கொத்துவேன்.”
அப்பாவை யாராலும் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் பேனா பிடிக்கும் எனக்கு மணி வெட்டியோ கோடாரியோ பிடிக்கத் தெரியாது.
ー○

f.வே.ரா. பெரியார் ஒரு சமயம் தமிழ்நாட்டை விட்டு மலாயா சென்றிருந்தார். அந்த நாட்டில் சில நாட்களாகத் தங்கியிருந்தார்.
பல பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு, தனது கருத்துக்களையும் கொள்கைகளையும் அங்கு செறிவாக வாழ்ந்து கொண்டிருக்கும் மலேசியா வாழ் தமிழக மக்களுக்குப் பிரசாரப்படுத்திக் கொண்டிருந்தார்.
அங்கு சிரம்பான் என்ற ஊரில் வசித்துக் கொண்டிருந்தவர் எனது நண்பர். உரும்பராயைச் சேர்ந்தவர். தம்பையா என அன்புடன் அழைக்கப்படுபவர்.
இவரது தமையனார் இராசையா என்பவருக்குச் சிராம்பனில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்று e 60i (S. அந்த | O O O நிலையத்தில் மதுரை அச்சுத் தாளிள் ஜில்லாவைச் சேர்ந்த \ கறுப்பையா என்பவர் Χ O தொழில புரிந்து N 9)GILITČi) եքII வந்தார். அவருடன் །། O சேர்ந்து தம்பையாவும் அந்தச் LJILJElЦ சலூனில் தொழில் செய்து வந்தார்.
பெரியார் சிரம் பானுக்கு வந்து, அங்கே LILLIGULIT Iħ தங்கியுள்ள செய்தியைப் பத்திரிகை மூலம் தெரிந்து கொண்ட இவர்கள் இருவரும், ஓய்வு நாள் ஒன்றில் பெரியாரை நேரில் தரிசிக்கச் சென்றிருந்தனர். நடந்து \ போகும் தூரந்தான். \ தம்பையா பெரியாரை வணங்கிவிட்டு ஒதுங்க, மதுரை ஜில்லாக்காரர் தான் மதுரைக்காரன் என்ற உரிமையுடன் ༄།
பெரியார் அருகே சென்று மதுரைக்காரர்களுக்கே 〉། உரித்தான மொழியில் பெரியாருடன் உரையாட ~പ முயன்றுள்ளார். - டொமினிக் ஜீவா
மதுரை ஜில்லாக்காரர் என விசாரித்துத் தெரிந்து கொண்டதும் பெரியார், 'தம்பீ! நீங்க எங்கே வேலை பாக்கிறீங்க?' என இயல்பாகவே கேட்டு வைத்தார். பெரியார் ரொம்ப மரியாதையாகச் சகலரிடமும் உரையாடுவார். மற்றவர்களுக்கும் கெளரவம் கொடுத்துப் பழகுவார்.
அது. வந்து. ’ எனக் கறுப்பையா தனது தொழில் மூலத்தைச் சொல்லத் தயங்கி, வார்த்தைகளை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார். பராக்குப் பார்த்தபடி நின்றார். தலையைச் சொறிந்தார்.
53

Page 29
கூட்டிக் கொணர் டு போன தம்பையாவுக்கு ரோஷம் வந்துவிட்டது. ‘ என்னையா கூச் சப் படுகிறாயப் ? சொல்லுமையா நானொரு முடிதிருத்தும் கலைஞன் என்று!. எனக் குரல் கொடுத்தார். பெரியார் இருக் கையில் இருந்து உடனே எழுந்துவிட்டார். அருகே நின்று கொணி டிருந்த கறுப் பையா  ைவ இருகரங்களாலும் இறுக அணைத்துக் கொண்டார். ‘அட!. 31L........ நம்ம தம்பிங்களா? இவங்களெல்லாம் நம்ம ஊரிலே நம்ம புள்ளைங்களாச்சே!’ எனப் புளங்காங்கிதப் பட்டு கொண்ட பெரியார் கறுப் பையா வையும் தம்பையாவையும் தனது இருக்கையில் அருகருகே இருத் திக் கொண்டு உரையாடத் தொடங்கினார்.
பெரியாரின் திராவிட, சமூகக் கருத்துக்கள், மதக் கொள்கைகள் அந்தக் கால கட்டத்தில் ரொம்ப ரொம்பப் புரட்சிகரமானவை. அவரது கடவுள் மறுப்புக் கொள்கை வெகு பிரசித்தமானது. *?$.
தனது கருத்துக் களையும் கொள்கைகளையும் வெகுசன மக்கள் மட்டத்தில் பிரசித்தப் படுத்த குடியரசு என்றொரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். ஊறிப்போன சனாதனக் கருத்துக்களால் மூடுண்டு போயிருந்த தமிழகத்தாருக்கு இவரது கருத்துக் களில் உடன்பாடேதுமில்லை. எனவே குடியரசுப் பத்திரிகையும் ஈடாட்டம் கண்டுகொண்டிருந்தது. பத்திரிகையைப் பலமாக எதிர்த்து எதிர்ப் பிரச்சாரமும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பெரியார் பல அநுபவங்களையும்
下
இதைச் செவிமடுத்த
நேரடியாகப் பெற்றுத் திகழ்ந்தவர். நெருக்கடிகளுக்கு அஞ்சாதவர். முகம் கொடுத்துப் பழக்கப் பட்டவர்.
அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது.
இந்த யுக்தியை நடைமுறைப் படுத்தச்
சொல்லிக் கொடுத்தவர் கூட, ஒரு சிகை அலங் கரிப்பு நிலையச் சிப்பந்தியாகக் கூட இருக்கலாம்.
தமிழகத்தில் வளர்ந்து வரும் பட்டினங்களில் பரந்து பட்டுத் தோன்றி வரும் சலூன்களின் முகவரிகளை சேகரிக்க உத்தரவிட்டார். அந்த உத் தரவுக் கமைய சந் தாப் பணம் வருகிறதோ இல்லையோ குடியரசுப் பத்திரிகையைத் தொடர்ந்து சில காலம் அந்தந்த முகவரிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.
நஷ்டத்தோடு நஷ்டம்! போகட்டுமே - வெங்காயம்!
இந்த உத்தி வேலை செய்தது.
கொஞ சம் கொஞ சமாகப் பெரியாரின் கருத்துக்கள் தமிழகத்தில் வேர் பரப்பியது. குடியரசுப் பத்திரி கையின் கருத்துக் கள் அறிவு மட்டத்தையும் கடந்து, பாமர மக்கள் கவனத்திற்கும் எட்டத் தொடங்கியது.
எனக் குக்
5Lö6ouu T
இந்தத் தகவலை கொழும்பில் சொன்னவர் அண்ணர்.
அப்பொழுது நான் ஒவ்வொரு மாதக் கடைசியிலும் கொழும்புக்கு வந்து செல்வது வழக்கம். ஒருவாரம் தங்கியிருப்பேன். விளம்பரம், சந்தாச் சேர்ப்பு, விற்பனை சம்பந்தமான பிரயாணம் அது. மணி, செல்வம் என இருவர் கதிரேசன் வீதியில் "லீலா
-GSO

சலூன்’ என்ற சிகை அலங்கரிப்பு நிலையமொன்றை நடத்தி வந்தனர். இது வெறுமே சலூன் மாத்திரமல்ல, சலூன்களுக்குத் தேவையான அத்தனை முழுச் சாதனங்களையும் கொழும்பில் விற்பனை செய்யும் நிலையமாகவும் அது தொழிற்பட்டது.
இலங்கையிலுள்ள கணிசமான
சலுTண் உரிமையாளர்கள் இந்த
விற்பனை நிலையத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்தனர். பலர் அடிக்கடி இங்கு நேரடியாகவும் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
இந்த அத் தனை சலுTணி உரிமையாளர்களது நிறுவனங்களின் முகவரிகளையும் ஒன்று விடாமல் சேகரித் தேன். பத்திரப் படுத்திக் கொண்டேன். வகைப்படுத்தினேன்.
ஆரம்ப காலங்களில் மல்லிகையின் வரிலை முப்பது சதம் . அதனை வரி லா சமிட் டு அனுப் பதி தபால முத்திரைச் செலவு பத்துச் சதம்.
எனவே நானே இரவிரவாக முகவரி
எழுதி, நானே நேரில் கொண்டு சென்று
தபால பெட் டியில் சேர்ப் பித் து விடுவேன்.
நன்றியுள்ள பலர் - என் உழைப்பு நேர்மையின் மீது நம்பிக்கை உள்ள பலர் - நேரடியாகச் சந்தாப் பணத்தைச் செலுத் தாது போனாலும் சாதனங்களைக் கொள்முதல் செய்யக் கொழும்புக்கு வரும் போது லீலா சலுT னிலேயே மல லரிகைக் குச் சேரவேண்டிய சந்தாப் பணத்தைச் செலுத்திவிட்டுச் செல்வர்.
இலங்கையின் வடபிரதேசமல்லாத
下
ஏனைய பிரதேசங்களில் இனி று மல் லிகை தெரிந்து வைக் கப் பட்டுள்ளதென்றால் அதன் விற்பனைப் பெருக்கம் காரணமல்ல. நான் வெகு
நுட்பமாகக் கையாண்ட இந்த உத்தி
அணுகுமுறையே காரணம்.
இதில் எனக்கு அனுகூலமான ஓர் அம் சமு முண்டு. இதையும் நான் கணக்கில் எடுத்துச் செயற்பட்டேன்.
பெரியார் உட்பட இந்தப் பிரபல விளம்பர உத்திமுறையைக் கையாள முனைந்தவர்கள் இந்தச் சமூக மட் ட த தறி குட் பட் டவர்களல ல. மாற்றார்கள், வெளியார்கள்.
ஆனால், நான் உள் வட்டத்தைச் சேர்ந்த சொந்தச் சகோதரனல்லவா!
சொந்தச் சமூகத்தைச் சேர்ந்த வனல்லவா? இது ஒரு வசதி.
அதுவும் எங்களைப் போல
முடிதிருத்தும் கலைக் கூடத்திற்குள் இருந்து கொண்டு ஓர் இலக்கியச் சஞ்சிகையை நடத்தும் துணிச்சற்காரன் அல்லவா?
என்னுடைய புத் தி சாதுரியம் எனினவென்றால் இந்தச் சமூக உணர்வின் ஆரோக் கரியமான பங்களிப்பைத் திசை திருப்பி ஓர் இலக்கியப் பொதுப் பிரச்சினைக்கு ஆற்றுப்படுத்தியது தான். நானறிந்த வரைக்கும் வேறெந்தப் படைப்பாளியுமே, சிற்றிலக்கிய ஏட்டுக் காரர்களுமே இப்படியாகச் சிந்தித்துச் செயற்பட்டிருக்க முடியாது என உறுதியாக நம்புகிறேன்.
இனி றைய மல லி கையினி அசாதாரண பிரபலத்தின் அடிப்படைக் காரணங்களில் இதுவுமொன்று.
一○

Page 30
சில பிரபல எழுத்தாளர்களின் பெயர் வடபுலத்தில் தெரிந்திருக்கலாம். இலக் கியப் படைப் பாளிகளினது பெயரும் அந்தந்தப் பிரதேசத்தில் பேசப்பட்டிருக்கலாம். அதைப் போலவே மலையகச் சிருஷ்டியாளரது பெயரும் அவர்களது பிரதேச மட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒலித்திருக்கலாம்.
ஆனால் , மல் லிகை தாளர்களது பெயர் பிரபலமானவர்களோ, இளந் தலை முறையைச் சேர்ந்தவர்களோ - இவர்களது பெயர் இன்று நாட்டு எல்லைகளையும் கடந்து, தமிழகத்தி னுாடாகக் கடல் கடந்து கண்டம் கடந்து, இன்று பேசப் படுகின்றதென்றால் அது அவர்களது எழுத்தின் வல்லமையைக் கொண்டு நிர்ணயிக்கப் பட்டதல்ல.
எழுதி அவர்கள்
மூன்றரைத் தசாப்தங்களுக்கு
மேலாக, முன்னர் யாழ்ப்பாணத்திலும்,
கொழும்புத் தெருக்களிலும் எந்த விதமான முகமூடிகளுமற்று விற்றுத் திரிந்த அந்த இலக்கிய அர்ப்பணிப்பு உழைப்புத் தான் இதற்கெல் லாம் அடிப்படைக் காரணங்கள் என்பதை நெஞ்சார இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்ந்து கொள்ளுகின்றேன்.
இந்த அர்ப் பண உழைப்புப் பயிற்சியை எனக்கு நான் நேசிக்கும் இலக்கியம் கற்றுத் தந்ததில்லை. இயக்கமே கற்றுத் தந்துள்ளது.
நான் இளம் பராயத் தரில் தேர்ந்தெடுத்து ஒழுகி வந்த சர்வதேச மானுடத் தத்துவம் தான் எனக்கு இந்த ஞானோபதேசத்தைக் கற்றுத் தந்தது. ‘தேசாபிமானி' என்றொரு வாரப்
下
பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவந்து
கொண்டிருந்தது. இலங்கைக் கம்யூனிஸ்ட்
கட்சியின் தமிழ் வார வெளியீடு. அதன்
முதல் ஆசிரியர் தோழர் ராமநாதன்.
தமிழகத்தைச் சேர்ந்தவர். கொத்த லாவல ஆட்சிக் காலத்தில் தொழிற்சங்க விழாவுக்குத் தமிழகம் சென்றவரைத்
திரும் பிவர அனுமதிக்கவில்லை,
அன்றைய அரசு.
பின்னர் அதன் ஆசிரிய பீடத்தை
அலங்கரித்தவர் தோழர் ஏச். எம். பி.
முஹைதீன். நாமவரை ஏச். எம். பி
என அழைப்போம்.
அந்தத் தேசாபிமானி வாரவெளியீடு யாழ்ப்பாணக் கோட்டா கணக்கில் ஒரு தொகை இதழ்கள் வார இறுதியில் வந்து சேரும்.
வந்த பேப்பர்களை விற்பனை செய்வது தோழர்களான எங்களது வாரந் தப் பொறுப்பு. கட்சிக் கடமைகளில் இதுவும் ஒன்று.
* கறாணி ட் L1 g Tf’ 661 அழைக்கப்படும் வியாபாரச் சந்தைப் பகுதியில் எல்லை பிரித்துக் கொண்டு, சிறு சிறு குழுக்களாக அமைத்துக் கொண்டு விற்பனையை ஆரம்பிப்போம்.
ஓரளவு விற்பனை செய்து முடித்துவிட்டாலும் சில தேங்கிவிடும். கடைசியாக ஓரிடத்தில் முன்னரே ஏற்பாடு செய்திருந்தமைக்கு அமையச் சந்தித்துக் கொள்வோம்.
மிஞ்சிப் போயுள்ள விற்க முடியாமல் தேங்கியிருந்த எல்லாப் பேப்பர்களையும் அள்ளிக் கட்டிக் கொண் ட u Typ i Lu T 600T பஸ் நிலையத்தைச் சென்றடைவோம்.
-G56)

அதற்கு அணித் தாக மாத்தறையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர்களின் சிற்றி பேக் கரி' என்றொரு தேநீாக் கடையுண்டு. அங்கு தேநீர் அருந்துவோம். தேநீருடன் சிகரெட் எடுத்துக் கொள்பவர்கள் சிகரெட்டுக்குரிய பணத்தை அவரவரே செலுத்த வேண்டும்.
தேநீர்க்கடை வாசலில் இன்னமும் வந்து சேராதவர்களுக்காகச் சற்று நேரம் காவல் நிற்போம்.
வந்து சேர்ந்த தோழர்களையும் அழைத்துக் கொணி டு, Lu 6mů நிலையத்தை அண்மித்து, உரக்கக் குரல் கொடுத்துப் பிரச்சாரப்படுத்தி, தேங்கிப் போயிருந்த பெரும்பாலான பேப்பர்களையெல்லாம் ஒரு வழியாக விற்று முடிப்போம். ஆர்வமும் துடிப்பும் இளமைச் செறிவுமுள்ள தோழர்கள் பஸ்ஸஉக்குள் நுழைந்து பிரயாணிகளை வற்புறுத்தி தேசாபிமானியை விற்பனவு செய்துவிடுவார்கள்.
இந்த விற்பனவுப் போட்டியில் தோழமை கனிந்த உற்சாகமும் உத்வேகமுமே நிரம்பியிருக்கும்.
இந்த விற்பனவுக்குழுவில் வட புலத்தின் அன்றைய மிகச் சிறந்த கல்விமான்கள் எங்களுடன் சேர்ந்து தெருத் தெருவாகச் சுற்றி அலைந்து திரிவார்கள். மக்கள் செல்வாக்குப் பெற்றவர்கள் எம் கூட வருவார்கள்.
கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள்,
உயர் உத்தியோகம் பார்ப்பவர்கள் எனக் கூட்டு முயற்சி அங்கே இடம் பெற்றுத் திகழும். உயர் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியரே பேப்பர்
འོ།། །།
விற்பார். காலையில் பள்ளி. பின்னேரம் தொண்டு.
மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் அந்தக் கூட்டுக் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். ஐந்து சதப் பேப்பரை மக்களிடம் கொணி டு சென்று பரப்புவதற்கு ஓர் அறிவுப்படையே தெருவெங் கும் இயங் கரிக் கொண்டிருக்கும்.
இந் நிகழ்ச்சி வாரா வாரம் இடம் பெறும்.
தோழர்களான வைத்திலிங்கம், பொன்.கந்தையா, ராமசாமி ஐயர், எம்.சி. சுப் பிரமணியம் , கார்த்திகேசன் , இளங்கீரன், டானியல், எஸ்.பி. நடராஜா, கே. ஏ. சுப்பிரமணியம், நவரத்தினம், உஷா நடராஜா, விஜயானந்தன், ராசையா, நீர்வை பொன்னையன், வி. பொன்னம்பலம், அரியரத் தினம் , பூபாலசிங்கம், டாக்டர் சீனிவாசகம், அன்ரனி மாஸ்டர். இப்படியே
இன்னும் பல தோழர்களும் களத்தில்
நின்று செயற்படுவார்கள்.
ஈழத்து இலக்கிய, ஆரோக்கியமான வளர்ச்சிக்காக, என்னை மல்லிகையைச் சுமந்து கொண்டு தெருத்தெருவாகச் சுற்றி வர வைத்ததின் ஆதர் ஸ மூலவர்களாகத் திகழ்ந்தவர்களின் பெயர்களையே மேலே நான் விவரித்துள்ளேன். இவர்களில் பல தோழர்கள் இன்று நம் மிடையே இல்லை.
(மேலும் சந்திக்கிறேன்)
ー○

Page 31
ஒரு கடிதம்
38வது ஆண்டுமலர் மல்லிகை கிடைத்தது! பாதுகாத்து வைத்திருக்கும் வண்ணம் மலர்ந்திருக்கும் பண்பு மன மகிழ்வைத் தருகிறது.
கலாநிதி க. குணராசா - செங்கை ஆழியான் - அவர்களின் ஈழத்து முன்னோடி நாவல்கள் - 1856 - 1940 பற்றிய கட்டுரை இலக்கியக் கரிசனையுடன் கூடிய ஒரு தேடுதல் முயற்சி! கடும் உழைப்பு யாராவது செய்து தான் ஆக வேண்டும் என்கிற இலக்கிய நிர்ப்பந்தங்கள் இவை.
என்னுடைய உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் அன்னாருக்கு உரித்தாகின்றது.
காவலப்பன் கதையில் இருந்து (1856) சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1940) வரையிலான ஒரு 45 நாவல்களின் பட்டியல் ஒன்றினையும் தந்திருக்கிறார் திரு. செங்கை ஆழியான்.
மலையகத்தில் இருந்து வெளி வந்த முதல் இரண்டு நாவல்களும் இந்தப் பட்டியலுக்குள் இடம் பெற வேண்டும் என்பது முக்கியமானது.
条
தரமீனாள் அல்லது காதலின் வெற்றி -1937 கொழும்பு யூனியன் பிரஸ். சிரியர் - ஸ்கெ - (A. Paul)
கண்ணனின் காதலி - 1940.
இரத்தினபுரி வித்தியாலோக அச்சுக் கூடம் ஆசிரியர்: இரத்தினபுரி இதியல்லையைச் சேர்ந்தவரான G.S.M.சாமுவேல்.
நமது நாவல்கள் பற்றிய விபரங்கள் தரும் 3 பட்டியல் பற்றியும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
 

紫
கனக செந்தினாதனின் ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டியில் முன்னோடி நாவல்கள் பற்றிய தகவல்கள் இல்லை என்பதை கட்டுரையாளரே ஒத்துக் கொள்ளுகிறார். A.
* கைலாசபதியும், எஸ். எம். கமாலுதினும் தொகுத்து வெளியிட்ட (1947 1970) நுாற் பட்டியல் அனைத்துலகத் தமிழாராயப் சி சிக் கழகத்தின் இலங்கைக் கிளை 1971ல் நடத்திய நூற்கண்காட்சியினையொட்டி வெளியிட்ட ஒன்று. சமயம் , சமூகவிஞ்ஞானம், மெய்யியல், பொது நூல்கள், வரலாறு, இலக்கியம் என்னும் தலைப்புக்களில் ஒரு 500 நூல் போல் பட்டியலிடப்பட்டிருக்கும் இவ் விபரக் கொத்து 1947க்கு முந்தைய நாவல்கள் பற்றி ஏதும் கூறும் என்று எதிர்பார்க்க
முடியாது.
நா. சுப்பிரமணியன் தொகுத் துள்ள ஈழத்துத் தமிழ் நாவல்கள் 1885 1976. நூல் விபரப்பட்டியல் மிகவும்
முக்கியமானது என்பதை ஒத்துக் கொள்ளும் அதே வேளையில் இப் பட்டியல் அகர வரிசையில் தொடங்குவதால் அகஸ்தியர் எழுதிய நாவல்கள் பற்றிய விபரங்களுடன் ஆரம்பிக்கின்றது. றோணியோப் பிரதி பட்டியல் நூல் என்பதால் 1885 ஆம் ஆணி டைத் தேடுவது இன்னொரு தேடல் முயற்சியாகி விடுகிறது.
ஆகவே முந்திய இப்பட்டியல்களை விட முக்கியமானதும் முதன்மையான துமான பட்டியல் மல்லிகை 38ஆவது ஆண்டு மலர் தந்திருக்கும் செங்கை ஆழியான் அவர்களின் இந்தப் பட்டியலே
என்பது பெருமையுடன் குறிப்பிடப் பட
வேண்டியதே.
- தெளிவத்தை ஜோசப்

Page 32
கண்மூடிப் பால் குடிக்கும் பூனைக் குட்டிகள் உலகைப் பார்ப்பதில்லை!
தனக்குள் வகுத்துக் கொண்ட உலகையே வீற்றரிச் சுற்றரி வருவதால் இப் பரிரபஞ்சமே ஒரு வட்டத்துக்குள் இருப்பதாக அறுை எண்ணிக் கொள்கின்றன
egoஒரு வகையில் நிம்மதம் சுடட ஒன்பது முறை உதைந்தாலும்
ரேண்டையாத பூனைகள்
னைத இனத்தைafட உயர்ந்தrைy தான். ஒரு வகையில்,
புல்லைத் திண்ாாத இப் பூனைகள்
பாலை விரும்பிக் குடித்தாலும்,
9o
ை ഴ്ത്തി
曙 - கலைவாதி கலீல்'
ராசிச பட்சணி என்பதை மறந்து விடுவதற்கில்லை.
காற்றுக்கும் நோவிண்றி அருகில் வந்து உரசிக் கொண்டு நிற்பதால் தாம் வந்திருப்பதைப் பறைசாற்றும் பூனைகள்
சந்தர்ப்பு வாரிகள் பூனை போற் சிவரும் பூனையாய்ச் சிலரும் பூனையே சிலருமாய் உலா வருவதால் பூனை இனம் மதப்பழந்து போய்விடுமோ? சி) வேளைகளில் - இவை ராதனைnfட, உயர்ந்துவிடுகின்றன.
-Co)

தூண்டில்
- டொமினிக் ஜிலு?
காலாதி காலமாகப் பெண்கள் தான் குழந்தைகளைப் பிரசவிக்க வேண்டியிருக்கிறது. இதை மாற்றி ஆண்களையும் குழந்தை பெற வைக்க இன்றைய விஞ்ஞானம் உதவுமா?
8ᎦllᏏLᏝᎦlbᎦᏓl மாலதி, சுபேந்திரன்
SLSLSSESLSLSJ LLS S L J LSLSSL L L LLLLLS SSSLLL L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SJA S S S ASA S0Sr § දෘඪ ද්ඨ ද දෘදී දෘඪ දී ද?"............................................................ දිඝ දී ع======================================================================================== 83:XXXXXᎼfifi:āfᎼli:iᎮᎮᎮᎥ:Ꭾ;:iᎦᎥ**Ꮌi; yYLSYeyyyyZSyLYLETSMTLTLlTLSBlyySSY పశ* 3عڈقعيلتقيم প্ত لبنانينية III. தி: :ات:لايم ಥ್ರಿ! : 'ನ್ತಿ!ಿಫiಘ್ರಿ - - - {3. 3. ပြိုး||ဗွီဗွီဗွီ:&;!!!င္ငံ၊ = ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ஐஇxxஇ' 8XᏕᎼᎼX :ᏨᎼᏕᏨᎼX***ᏯᎮ** : *****Ꮌ Ꮌ 88ᏯᏨ8 ఛఫ్టే'స్త్ర పళ#ళ్లడ్డళ 2 ﷽ነቭm 11:3 3ցիէն: - - s
ंंं --- s --------------- 0 -----------------
❖ ﷽ Š ----
3. ఛళ్ల

Page 33
இந்த முறை 38வது ஆண்டு மலரின் விற்பனை
நீங்கள் விடா முயற்சியடனர் மல்லிகையை நடத்தி வருகின்றீர்கள். இந்த முயற்சி தொடர்ந்தும் தொடர நீங்கள் ஏதாவது வாரிசை உருவாக்கி யுள்ளிர்களா? அதற்கான ஆளைத் தயார் பண்ணி விட்டீர்களா? மல்லிகை ஓர் ஆலமரம். இது எமக்குப் புரியும். இதற்கான உங்கள் பதில் என்ன?
கொழும்பு-6 எஸ்.ஆர்.பாலச்சந்திரன்
...I.'s
X3.32-3., 2-3-2 3-3, 3; 3, 3; ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ
ర్గళ
s ------- s ---- ତୂ . ------------- ჯერჯჯ2:34:23:X 33XX3Fo:33
----
岑 ရှို့ငှါ
இன்னர் பதில்
ಜ್ನಿ! థ్రోళ్లభభx 33 ஒஇரர்கள்: :ன்றவர்ஜ் ----- - - - ------------ ----
--- -- - --- -- - --
ጆ.. 33.3 33-ჯერ ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. XX ____-----
ଢଁଢଁ 錢 పళడ్ట్
888 -------
3 X 3-3 332-33.32-33* భ
ಜಿಜ್ಜಿ
కళన్దే
::::::::::::
୍ଞ::::::::
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் சினிமாவைப் பற்றி அல்லது நடிகர்களைப் பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல் உங்களது நெஞ்சில் இடம் பெற்றதில்லையா?
நல்லூர் ஆர்.சிவமோகன்
ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ბ.
SeSeSzzSezeTSBSBSBSBS0S0k0S0Sk0S00S0000S00S0S ჯჯჯ. ჯ.: భ*ష్ట 線 *i:3:ன் ※ ጇዕ፻፵፬:: இத்ஜ்தீர்ர்ன்
':::: ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ
----- 3:... - - - - - ------- JSBrOSOOSeSOSOSOs eOeSeOeOeOeS (ဖါးမ္ဟန္တိပျို့ငှါ 强, 3., 33.323,3 -3, 3-33*3: 3-5; 3
::::::: * '::::::::::
ঠুঃf: SLeTTcceu u S SeyyeeihSS000SheySyyAyAeAySy kłಿಳ್ತಿಳ್ದಿ భ
---------------------------------------୍
1.23.2.12. -5 3. F. ჯ. ჯ. -.
ಜ್ಞೇ ଝୁଟ୍ରୁ
-- ஒ ళ్ల
3 32-3-3-3-3-3-3-3-3-ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ3:3:3:
& & ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. 53-8 3. 3. :
உ(Rவில்
டுவில்
:
ஜ இரண்டுமென விரும் yeyymTmTTyyS eeeS yyymyS STTyy
--- ဎွိဒ္ဒိိင္ခ္ယိန္တိတ္ထိဝှို
−3 - 53 ----------------- fix:::::::: ---- *ಿಸ್ಡಿಟ್ತಿ:jiji
నీళజిభళ్లమ్డాగ్స్:స్టెన్ష్యా
|- --- ---- | ဗွီီ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိိဝှိုင္ငံရွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိ ဎွိಫ್ಲಿಫ್ಟ್ಬ:*:॰:33
IE II եւ IT եւ քl J If திப்ே வியப் பிரபந்தங்களை அருளிச் செய்த பன்னிரு ஆழ்வார்களைப் பற்றிச் சொல்ல முடியமா?
வட்டுக் கோட்டை ச.ஜெயதேவன்
உங்களை அதிர்ச்சியடைய வைத்த சமீபத்தைய பத்திரிகைச் செய்தி ஒன்றைக் கூற முடியமா? -
எளல்.செல்வத்துரை

Page 34
சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் Jge, L’ L Lü (8Lu fT lʼ 19 எந்தெந்த அணிகளுக்கிடையே, எப்போது முதன் முதலில் ஆடப்பட்டது?
கொழும்பு- 9 எம்.சரவணன்.
க. பொ. த. (உ.த) பிரிவில் தமிழைக் கற்கும் மாணவர் பலர், இலங்கைத் தமிழ் அறிஞர்களைக் கற் கினர் றனர். ஆசிரியர் பலர் கற்பிக்கின்றனர். இவ்விருசாரருக்கும்
- . .
அவ்வறிஞர்
பற்றிய கற்பனைப் படமாகவே அவரவரது முகங்கள் தெரிகின்றன. எனவே மல்லிகையில் பினர் வருவோரினது புகைப் படப் பிரதிகளைப் பிரசுரிக்கலாமல்லவா?
இலங்கையர் கோன், சி. வைத்திய லிங்கம் , டானியல் , சம்பந்தன், பேராசிரியர் கணபதிப் பிள்ளை, இளங் கிரன், உவைஸ் , நல் லுTர் சினி னத் தம் பிப் புலவர், பாவலர் துரையப்பா பிள்ளை, அ.செ.முருகா னந்தன், பண்டிதமணி, நீலாவணன், கனக செந்திநாதன், யாழ்ப்பாணம் பதுறுதீன் புலவர், மகாகவி ஆகியோரே
இவர்களாவர்.
வாழைச்சேனை
எ.ஜெயரஞ்சித்
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U.K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
سمبر لار»-
 
 
 
 

- ۰ - "" سس--س-----. --- -- " " "سمسسسسسسس---- ས་། ཚངས་གསོག་ལ། ། ། ། །ཁོ་ཁ། V ZD புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம்
டி) சாஹித்திய புத்தக இல்லம் *)
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட் (5 ノ
っ一ー - مس ------- جسم "س-مم-سسسسسسسسس ہا۔ “ #:م----------
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள் பா நூல்கள். அகராதிகள், உபகரணங்கள், இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் ಹಗCಶೌub LIGUJUTub
சாஹித்திய புத்தக இல்லம் இல, 4,குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்) புத்தளம். . தொலைபேசி/தொலைநகல் : 032-66875
- っ一ー・ -- - - ۔۔۔۔۔۔۔۔۔ --سســــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ--۔۔۔ ノー・ ழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும்.) | பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்>
உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம். ) N- - SSSSSSSSqqS qqSq SSqqSSMSS -
T--

Page 35
šKEMALLIKAI
மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள்
PARA EXPOP
Expor NOn Tra Sri Lank,
N 30, Sea Colom Tel: 5

FEBRUARY 2008
RODUCTS (PVT) LTD,
ters of
diti Onal an FOOCS