கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.03

Page 1
LN)6S6Ń
ஆசிரியர்பிLாம்
நிலக்கிளி திரு. அ
DITäF — 2003
 

|6ଥ}} |4|
ញ៉ា ថ្វីត្ប|
I, LIIGIVOLDGGOTIJ5 JG
விலை -20/=

Page 2
VIJAYAGENERAL STORES
Agro Service Centre :- Dealers Jn Agro Chemicals, Vegetable See
erlilizers ≤
: ಟ್ಲಿ: fendhal Street, Colombo - 13.
Tel: (94-1) - 327O11 Telefax ဒြို ဝှို E-mail. vijaya/6
Tel. 066-22425
7a Flavou fLink
لئ&تشغیلمہ . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'ஆடுதல் பாடுதல் சித்திரம் க: யாதியிணைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் தடப்பவர் பிறர் :*ன நிலைகண்டு துள்ளுவர்
%ாa P gressive %nff Ji. መxiz፡e
ty u/wgy
படைப்பாளிகளினர் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
2o1-1/1, Sri Kathiresan Street, Colombo - 13. Te: 32O721 E-mail: panthalGasltnet.dk
மல்லிகைச் சிறுகதைகள் இரணிடாவது தொகுதி.
முல்லிகைச் சிறுகதைகள் என்ற பெயரில் 30 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்துக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதற் தொகுதியை வெளியிட்டிருந்தோம்.
நாம் எதிர்பாராத இடங்களிலி ருந்தெல்லாம் அந்தத் தொகுப்பிற்குப் பேராதரவு கிடைத்துள்ளது.
அந்த உற்சாகத்தில் இரண்டாம் தொகுதியை வெளியிட்டுள்ளோம் பு எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு இது.
ஈழத்து இலக் கசிய கூர்மையாகக் கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெரியும். மல்லிகை இலக்கிய இதழ்களைக் கடந்த 33 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வருவதுடன், 'மல்லிகைப் பந்தல் ' வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் கிட்டத் தட்ட 50 நூல்கள் வரையும் வெளியிட்டுள்ளோம்.
இது இந்த மண்ணில் மல்லிகை செய்து வரும் பாரிய இலக்கியப் பணியாகும்.
நீங்கள் பலி லரிகைப்
மூலம் எமது தோளின் மீது பட்டுள்ள பொருளாதாரப் பாரத்தை ۔مح۔ குறைக்கிறீர்கள் என்பதைட் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் கோரிக்கையை உரிமை கருதி உங்களது கவனத்திற்குச் சமர்ப்பிக்கிறோம்.
آلزاماتیچ -

Page 3

தயவுசெய்து இழுத்து மூடிவிடுங்கள்
இலங்கைத் தேசிய ஒலிபரப்பும் அத்துடன் இணைந்து இயங்கி வந்த வர்த்தக ஒலிபரப்பும் இலங்கைத் தமிழ் வானொலி வரலாற்றிலேயே ஒரு பொற் சகாப்தத்தை உருவாக்கி வைத்திருந்தது. இது நேற்றைய வரலாற்றுச் செய்தியாகும்.
அதனது நிகழ்ச்சிச் செழிப்புக்காகவும் முன்னோடி இயல்புக்காகவும் கடல் கடந்தும் தமிழ் நாட்டில் சுவைஞர்களாலும் பாராட்டப்பட்டு வந்துள்ளது.
அது ஒரு காலம். அது கடந்து சென்று விட்ட காலம்.
அந்தத் தமிழ்ப்பகுதி சேடமிழுக்கத் தொடங்கிவிட்டதாகப் பலரும் பேசிக் கொள்ளுகின்றனர். எம்மால் இதை நம்ப முடியவில்லை.
இப்படியே மக்கள் நம்பிக்கையையும் இழந்து சுவைஞர்கள் தொடர்புகளையும் துண்ைடித்துக் கொண்டு போகவிட்டால் அதன் சென்ற கால மகிமையும் கிாத்தியும் மங்கி மறைந்து போய்விடுமோ? என மனக்கிலேசமடைகின்றோம்.
எத்தனை பெரிய மகா மேதைகள், திறமைசாலிகள், பேராற்றல் மிக்கவர்கள், கலை விற்பன்னர்கள் ஒருங்கு சேர்ந்து கடமையாற்றிய தேசிய பொது நிறுவனம் அது! இன்றைக்கு அதன் நிலை இப்படியாகி விட்டதே!
ஒரு வரலாற்றுச் சாதனையை மேற் கொண்டு இயங்கி வந்த அந்தப் பிரபலம் மிக்க வானொலி நிறுனம் இன்று யுத்த அகதிகள் ஓரங்கட்டப்படுவது போல, சீரழிந்து கொண்டு வருவதைத் தகவல் மூலம் கேள்விப்படும் போது நெஞ்சில் வலி எடுக்கிறது. வேதனையாக இருக்கிறது.
அதன் கடந்த கால ஆவணச் சேமிப்புகள் கட்டம் கட்டமாகச் சீர்குலைந்து போவதைக் கேள்விப்படும் போது, எதிர்காலப் பரம்பரைக்கு முடிவில் எதைத்தான் விட்டு வைக்கப் போகின்றது? என்ற நியாயமான அச்சம் எமது நெஞ்சில் நிழலாடுகின்றது. - -
தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள் எல்லாம் உரத்துக் குரல் கொடுத்துப் பொது மக்கள் நெஞ்சங்களையெல்லாம் வசீகரித்துக் கொண்டு இயங்கி வரும் இந்தக் கால கட்டத்தில், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத் தமிழ்ப்பகுதி மாத்திரம் பின்னடைந்து போய்க் கொண்ருடிருப்பது எதனைக் காட்டுகிறது?
அதன் பாரிய பெருமைகள் முற்றாக சிதைந்தொழிந்து போவதிலும் பார்க்க,
தமிழ்ப்பகுதியை இழுத்து மூடி விடுவதே மிகச் சிறந்த செயலாகும் என்பதே நம் கருத்தாகும்.

Page 4
TGAULT
நிலக்கிளி அ. பாலமனோகரன்
-முல்லைமணி
திரு. அ.பாலமனோகரன் இலங்கையில் மட்டுமன்றி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் அறிமுகமாகியுள்ள பிரபல எழுத்தாளர் ஆவர்.
எழுபதுகளில் வன்னிப் பிரதேசத்தின் மண்வாசனை வீசும் சிறுகதைகளை எழுதிய இவர் வீரகேசரிப் பிரசுரமான நிலக்கிளி நாவல் மூலம் ஒரு தரமான எழுத்தாளராகத் தன்னை இனங்காட்டிக் கொண்டார். வன்னிப் பிரதேச ஆக்க இலக்கியம் பற்றிப் பேசுபவர்கள் முதலில் நிலக்கிளி'யையே சொல்லுமளவிற்கு அந்த நாவல் பிரசித்தமாகி விட்டது.
வன்னி இலக்கிய முயற்சிகளுக்கு ஓர் அடையாளமாக இது திகழ்கின்றது. அன்று தொடக்கம் சிறுகதைகள். நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியதன் மூலம் எழுத்துலகில் தனது முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிரூற்றில் பிறந்த இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் ஆண்டாங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். (1962) 1965-1968 காலப் பகுதியில் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்றார். 1967 இல் மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்பொழுதுதான் முதுபெரும் ள்முத்தாளர் வ.அ.இராசரத்தினம் அவர்களின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவரது அறிமுகமும் ஆலோசனையுமே இவரை எழுத்துலகில் பிரவேசிக்கக் காலாக அமைந்தன.
pas au su ases as as
கிழக்கிலங்கை மண்வாசனையுடன் இலக்கியம் படைத்த

வ.அ.வைக் குருவாகக் கொண்டதனாற் போலும் பாலமனோகரனின் எழுத்துக்களில் மண்வாசனை வீசுகின்றது. 'மலர்கள் நடப்பதில்லை' என்னும் சிந்தாமணியில் பிரசுரமான சிறுகதையே இவரது முதற் படைப்பாகும்.
முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது எழுத்தாளர்களான அப்பச்சி மகாலிங்கம், முல்லைமணி ஆகியோரின் பரிச்சயம் ஏற்பட்டது.அக்காலத்தில் வன்னிமண்ணில் நிலையாகக் காலூன்றி வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பலகதைகளை எழுதியிருந்தார். அந்தக் காலப்பகுதியிலே தான் ஒரு நாவலை எழுதி வைத்திருப்பதாகவும் இன்னும் பெயர் கூட அதற்குச் சூட்டவில்லை என்றும் சொன்னார்.
as as s ay a· s
மண்ணின் மைந்தர்கள்' எனத் தலைப்பிடலாமோ? எனத் தான் யோசிப்பதாகவும் கூறினார். நான் எனது பண்டாரவன்னியன் வரலாற்று நாடக மீள்பதிப்புத் தொடர்பாக வீரகேசரி நூல் வெளியீட்டுத் துறைப் பொறுப்பாளர் பாலச்சந்திரன் அவர்களைச் சந்திக்கவிருந்தேன். தனது நாவலையும் வீரகேசரிப் பிரசுரமாக வெளியிடும் வாய்ப்பு இருக்கிறதா? என விசாரித்து வரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். அப்பொழுதுதான் வீரகேசரி சில நூல்களைப் பிரசுரிக்கத் தொடங்கியிருந்தது. நாவல் பிரதிகளுக்குத் தட்டுப்பாடு நிலவியது. இதனால் எழுத்தாளரை நாவல் பிரதியுடன் அனுப்புமாறு பாலச்சந்திரன் என்னிடம் கேட்டுக்கொண்டார். 1973 இல் அந்த நாவல் நிலக்கிளி' என்னும் தலைப்புடன் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்நது. நாவலை வாசித்து முடித்த பின்புதான் அந்தத் தலைப்பின் தாற்பரியமும், பொருத்தப்பாடும் எனக்குத் தெளிவாகியது.
நிலக்கிளிகள் நிலத்தில் வாழ்பவைதான். உயரப்பறக்க விரும்பாதவை தான், இலகுவில் பிறரிடம் அகப்பட்டுக் கொள்பவைதான். ஆனால் அவை எளிமையானவை, அழகானவை. தம் சின்னச் சொந்த வாழ்க்கை வட்டத்துள்ளே உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையானது ' என்னும் நாவலின் முத்தாய்ப்பு வசனங்கள் வன்னிமண்ணின் மைந்தர்களின்
^کر_

Page 5
வாழ்க்கை நோக்கின் குறியீடாக அமைபவை கதாநாயகி பதஞ்சலியை நிலக்கிளியாக உருவகித்துள்ளார் ஆசிரியர் மண்வாசனை, மண்வாசனை' என்று ஏதோ கூறுவார்கள். அவர்கள் அப்படிக் கூறுவதை விட, இந்த நிலக்கிளி நாவலைக் காட்டியிருந்தால் அந்த மண்வாசனை என்பது என்ன எனப் புரிந்திருக்கும். முன்பின் பழகி அறியாத வன்னி மண்ணைத் தெளிவாக மனக்கண்ணில் கொணர்ந்து நிறுத்தியுள்ள இந்நாவலாசிரியர் பேச்சு மொழியையும் கனதியான இலக்கியச் சொற்களையும் கலந்து காத்திரமான வகையில் நாவலை வடித்துள்ளார்.
MNM MMM MMM dat des and
1973ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசு நிலக்கிளிக்கும் கிடைத்தது. இதனை விட குமாரபுரம், கனவுகள் கலைந்த போது என்னும் நாவல்களும் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தன. தமிழ் நாட்டில் தாய்வழித் தாகம, நந்தாவதி என்னும் நாவல்கள் வெளியாகியுள்ளன. 'தீபதோரணங்கள்' இவரது சிறுகதைத் தொகுதியாகும். மித்திரனில் இவரது வண்ணக் கனவுகள் என்னும் நாவல் தொடராக வெளியிடப்பட்டது. 1984 இல் இவர் புலம்பெயர்ந்து டென்மார்க்கில் குடியேறிய போதும் இவரது இலக்கிய தாகத்தின் வெளிப்பாடுகளாகப் பல ஆக்கங்களைப் பிரசவித்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகள் டேனிஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு நாவல் மரம்' என்னும் பெயரில் நூலுருப் பெற்றுள்ளது. இவர் தயாரித்து வெளியிட்ட டேனிஸ் - தமிழ் அகராதி அந்த நாட்டில் வெளியான 11ஆவது பிறமொழி அகராதியாகும். டென்மார்க்கில் வாழும் தமிழர்கள் டேனிஸ் மொழியைப் பயில்வதற்கு இது பெரும்ப்யன் விளைக்கிறது.
ay au anu as ay ang
டென்மார்க்கிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் வெளியாகும் பிரபல பத்திரிகைகளும். சஞ்சிகைகளும் இவரது ஆக்கங்களை விரும்பிப் பிரசுரித்துள்ளன. ஐரோப்பிய அமெரிக்க வானொளிகளிலும் இவரது கதைகளும் கட்டுரைகளும் ஒளிப்பரப்பாகியுள்ளன. டென்மார்க் அகதிகள் நலன்புரிச் சங்கத்தின் தயாரிப்பாக எமது குடும்பத்தின் கதை' நாற்பத்தைந்து நிமிட திரைப்படமாக வெளியிடப்பட்டது. டெனிஷ் அகதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஆலோசகராகவும். உதவியாளராகவும் பணியாற்றிய பாலமனோகரன்
6

பல கைநூல்களை மொழி பெயர்த்துள்ளார். டென்மார்க்கில் இலங்கையரான கிசெதுரை அவர்கள் பல வருடங்களுக்கு முன் ஆரம்பித்த அலைகள் இணையத்தள சஞ்சிகைக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை என்பனவற்றை ஆக்கியளித்துள்ளார்.
தற்போது 'எங்கள் இனத்தின் கதை'யை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் い பெற்றோரின் பிள்ளைகள் - அந்தந்த நாடுகளில் பிறந்து வளர்ந்துவரும் இளங்குமரப் பருவத்தை அடைந்துவரும் ஒரு வாசக வட்டத்தை மனதிற் கொண்டு இதனைத் தான் எழுதுவதாகக் கூறுகின்றார். இயல்பாகவே ஒவியத்துறையில் நாட்டமுடைய இவர், டென்மார்க்கில் இத்துறையில் பயிற்சி பெற்ற ஒவியராகத் திகழ்கின்றார். நீர்வண்ணச் சித்திரத்திலும், போஸ்ரல் சித்திரமுறையிலும் இவர் தேர்ச்சி பெற்று உருவச் சித்திரங்களை வரையும் ஆற்றலைப் பெற்றுள்ளார். 1990 இல் தொழில் நுட்ப உதவியாளர், பட வரைஞர்கட்கான மூன்று ஆண்டு பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளார். தனது மனைவியினதும் தனதும் உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு ஆண்டுகள் ஒய்வு பெற்றபோதும் 2000 ஆண்டு தொடக்கம் மீண்டும் தன் இலக்கியப் பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றார். வன்னியில் பூத்த மலர் இன்று தன் இதழ்களை விரித்து அகில உலகிற்கும் மணம் வீசிக் கொண்டிருப்பது பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய சங்கதிதான்.
இலக்கிய உலகம் இவரிடம் நிறைய எதிர்பார்க்கிறது.
سمسم نحصہ حصہ۔ سحصہ حصہ سحصء
வாழ்த்துகின்றோம்
கொழும்புப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. மா.கருணாநிதி அவர்கள் சமீபத்தில் கலாநிதியாகப் பட்டம் பெற்றுள்ளதைப் பாராட்டி அவரது நண்பர்கள் சமீபத்தில் கொழும்பில் ஒரு விழா எடுத்து கெளரவித்துள்ளனர்.
இலக்கிய நெஞ்சம் மிக்கவரான அவரது கல்விப் பெருமையில் மல்லிகையும் பங்கு கொண்டு அன்னாரைப் பாராட்டி மகிழ்கின்றது. s
《7 ཡོད།
ஆசிரியர்

Page 6
மல்லிகை 38வது ஆண்டு மலர்
- கெக்கிராவ ஸஹானா
'மல்லிகையின் 38வது ஆண்டு மலர் படித்தேன். அட்டைப் படம் மேலே வானத்தை நோக்கிப் பறக்கின்ற சமாதானப் புறாவையும், அதற்குக் கீழே, பெரும்பான்மைச் சிங்களவவர்களை வட பகுதித் தமிழர்கள் வரவேற்கும் காட்சியையும் தாங்கி வந்துள்ளது. நடுவே, 'மல்லிகையின் சின்னம். அது பிரம்மாண்டமான மல்லிகையாக மலர்ந்து நிற்பது போன்று எனக்கொரு பிரமை, கீழே விலை ரூ 12)]. எனக் குறிக்கப் பட்டுள்ளது. அவ்விலையை விட இதழின் பெறுமதி மிக அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
உள்ளே வழமையான அம்சங்களையும், ஆசிரியரின் தொடர் கட்டுரையையும், தவிர்த்து மொத்தம் பதினைந்து கட்டுரைகளும், எட்டுச் சிறுகதைகளும், ஒரு கவிதையும் காணப்படுகின்றன.
“எப்பொழுதுமே எனக்கான மொழியை நானே உருவாக்கிக் கொள்ளுகிறேன்' என்ற தலைப்பிட்ட ஆசிரியரின் கடிதத்தில் “பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுகின்றேன் நானொரு சாதாரணணன். பட்டப் படிப்புகளேதும் அற்றவன். உண்மை, 'மல்லிகை ஆசிரியராக இன்று மிளிர்கிறேன். எழுத்தாளனாக இன்று விளங்குகிறேன்" என்று கூறியிருக்கிறார் டொமினிக் ஜீவா. 'மல்லிகையின் வளர்ச்சி கண்டு பொல்லாக் கதைகளைக் கூறும் தமிழ்ப் பண்டிதர்களை நெருப்பினாற் சுடுவது போன்று அவரது கருத்துக்கள் ஆவேசமாக வருகின்றன. "தான் நேசிக்கும் மக்கள் புழங்கும் மொழியினூடாக என்னால் எழுத்தில் பதியப் பட்டு வரும் கருத்துக்கள், பின்பொரு காலத்தில் சர்ச்சிக்கப் பட்டு, விவாதிக்கப்படும் என்ற மன நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு” என்று குறிப்பிடும் டொமினிக் ஜீவா அவர்களது கருத்தைப் படிக்கும் போது சில காலமுன்பு 'மல்லிகைப் பந்தல்' வெளியீடாக வந்த அட்டைப் பட ஓவியங்கள்’ என்ற நூலின் தலைப்பைப் பற்றி எழுந்த குற்றச் சாட்டு நினைவில்
வந்து போனது.
《༼8 །

“ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறுமே தனி மனித சுய ஆணவமல்ல. ஒடுக்கப்பட்டோர் பரம் பரை யரில் பிறந்து, சகல இடையூறுகளையும் புறமொதுக் கி நிமிர்ந்து நின்று, நாவலர் பூமியில் தொடர்ந்து சிற்றேடொன்றை நடத்தி வருபவன் என் கற நியாயமான பெருமையில் முகிழ்ந்த, போராட்ட குணம் மிக்க ஒருவனது ஆரோக்கியமான முன்னோடி ஆனவம், அல்லது மனத் திமிர் தான் இது!’ என்ற தனது கடிதத் தில் எழுதியுள் ள 'மல லகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜூவா அவர்களது எண்ணங்கள் தொடர்ந்து வருகின்ற சில ஆக்கங்களிலும் பிரதிபலிக் கன் றன. குறிப் பாக, தெணியானின் ‘இவன் மிச்சம் நல்லவன், செ.குணரத்தினத்தின் தனிவழி, பொ. கருணாகர மூர்த்தியின் ‘என் இனமே என் சனமே." ஆகிய சிறுகதைகளிலும், செ. யோகராசாவின் ‘எதிர்ப்பு இலக்கிய நோக்கில் ஈழத்து நவீன கவிதை, சந்திரகாந்தா முருக்ானந்தனின் 'பெண் விடுதலையும் இன்றைய இலக்கியப் போக்கும், திக்குவல்லைக் கமாலின் 'இஸ்லாமிய இலக்கியமும் முஸ்லிம் இலக்கியமும், மா. பாலசிங்கத்தின் ‘தொண்டின் மறுவுரு தோழர் எம்.சி. சுப்ரமணியம், டொமினிக் ஜீவாவின் ‘அச்சுத் தாளினுடாக ஓர் அநுபவப் பயணம் , எம்.கே.முருகானந்தனின் ’கறுப்பின அடிமையின் வரலாறு ஆகிய கட்டுரைகளிலும் தலித்தியச் சிந்த னைகள் தூக்கலாக உள்ளன. ராஜ பூரீகாந்தனின் முத்தமிழில் நாம் இழந்த இசைத் தமிழ் மீள் கொணரப் பட
ܢ ܠ 26
வேண்டும்’ என்ற கட்டுரையில் தமிழ் இசையை முழுமையாக மரீள் கொணர்வதற்குச் சாதகமான ஆம், சாத்தியமானதுமான சூழல் நமது
நாட்டிலேயே உள்ளது. என்று நிறுவி, அதற்குரிய ஆக் கபூர்வமான வழி வகைளையும் ஆசிரியர் குறிப்பிட்டு ள்ளார். பெண் விடுதலை பற்றி ஏலவே எழுதி வரும் சந்திரகாந்தா முருகானந்தன் தனது கட்டுரை யரிலும் பெணி விடுதலை யை அடைவதற்குத் தேவையான பல நல்ல முற்போக்கான ஆலோசனைகளை முன் வைத்துள்ளார்.
செங்கை ஆழியான் க.குணராசாவின் ‘ஈழத்து முன்னோடி நாவல்கள்(1856-1940), பா.இரகுவரனின் 'ஈழத்தில் நவீன தமிழ் நாடக வளர்ச்சி (வரலாற்றுப் பார்வையில் சில குறிப்புகள்), செ. யோகராசாவின் ‘எதிர்ப்பு இலக்கிய நோக்கில் ஈழத்து நவீன கவிதை, திக்வல்லைக் கமாலின் 'இஸ்லாமிய இலக்கியமும் முஸ்லிம் இலக்கியமும், துரை மனோகரனின் "இலங்கைத் தமிழ்த் தொலைக் காட்சி நாடகங்கள் ஆகிய கட்டுரைகள் ஒட்டு மொத்தமாக ஈழத்து இலக்கிய உலகின் பல்வேறு கூறு களையும் ஆராய்கின்றன.
மு. அநாதரட்சகனின் ‘சிந்தனை உலகன் புதிய அலை 66i நவீனத்துவம்' என்கிற கட்டுரை பின் நவீனத்துவம் பற்றிய முழுமையானதொரு விளக்கத்தை மாணவர்கள் கூடத் தாமாகவே படித்து விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்தில் மிக எளிமையாகத் தருகின்றது. இன்று க.பொ.த. உயர் தர வகுப் பரில் தமிழ் கற் களின் ற மாணவர்களுக்கும் பின் நவீனத்துவம்

Page 7
பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
எனர் மாணவப் பருவத் தி ல 'மல்லிகையின் வாசகியாக நான் இருந்த போது ஒரு முறை தூண்டில் பகுதியில் நான் கேட்ட கேள்வி, "உங்கள் இதழுக்கு ஏன் மல் லfகை என்று பெயர் வைத்தீர்கள்?"
இப்படியொரு கேள்வி நான் கேட்கக் காரணம் உண்டு. அப்போதுதான் 'மல்லிகை" தொடங்கி ஏறக்குறைய பதினேழு வருடங்களின் பின்புதான் - அதனை, எனது பதினைந்தாவது வயதில் வாசிக்கத் தொடங்கயிருந்தேன். அப்போது ஆசிரியர் சொல்லியிருந்த பதில் “இந்தக் கேள்விக்குரிய பதிலை நான் ஏற்கெனவே பலதடவை சொல்லி விட்டேன்!”
இவ்வாறு ஆரம்பத்திலேயே ஆசிரியர் கையால் நறுக்கென குட்டு வாங்கிய (65 ITU85 D இன்று வரை நிலைத்தி ருக்கிறது. கூடவே எனது கேள்விக்கான பதிலையும் வேண்டி, 'அச்சுத் தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் எனது கேள்விக்குரிய பூரணமான பதிலை வழங்கி விட்டது என்று சொல்லலாம்.
நூற்று முப்பத்தாறு பக்கங்களைக் கொண்ட இதழில், நூற்று இருபத் தெட்டாவது பக்கம் படித்து முடிக்கின்ற போதும், இதுவரை ஒரு நல்ல சிறுகதை படிக்கக் கிடைக்க வில்லையே என்ற மனக்குறை தொடர்ந்து கொண்டேயிருக் கின்றது. ஆனாலும், நூற்று இருபத் தொன்பதாவது பக்கத்தில் அக்குறை தீர்கின்றது. ச.முருகானந்தனின் - தாத்தா
/10
மட்டுமல்ல, தமிழ்
சுட்ட மான்' காரணமாக,
இதழில் சிற்சில இடங்களில் அச்சுப் பிழைகள் காணப்படுகின்றன. மேமன் கவியின் ‘போரே உனக்கோர் அஞ்சலி கவிதையைத் தவிர வேறேதும் கவிதைகள் இல்லை. அக் கவிதையில் வரும் இரு அடிகள்:-
தர்மத்தின் கையில் நீ அரசி அதர்மத்தின் கையில் நீ அரக்கி
இது சரியா?
அதர்மத்தின் கையில் நீ அரசி தர்மத்தின் கையில் நீ அரக்கி
என்று தானே இடம் பெற்றிருக்க வேண்டும்? இதுவும் அச்சுப் பிழையா?
"மல்லிகை 38-வது ஆண்டுமலர் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதானால், படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல் இலக் கியம் கற்பிப்பதற்கு வழிகாட் டியாகவும், உதவியாகவும் கொள்ளக்கூடிய ஒரு நூல். இதனை இவ்வளவு காத்திரமாகவும், சிறப்பாகவும் வெளிக் கொணர்ந்த ஆசிரியரது கடின உழைப்புக்குப் பாராட்டு தெரிவிக்கும் முதல் ஆளாக நான் இருக்க விரும்பியே இக்கட்டுரை எழுத எடுத் தேன் , பின் இறும் தொடரும் பாராட்டுக்கள் 'மல்லிகை யின் வெற்றியை j5ä-3uj55 "ApplalISe Wats On SLCCeSSt" கடைசியாக ஒரு வேண்டுகோள். மல்லிகை பெண்கள் மலர் ஒன்றை வெளியிட்டால் என்ன?

தெளிவத்தை ஜோசப்.
சின்ன அண்ணாமலைப் பதிப்பகம் 1954-ல் வெளியிட்ட நூல் இது. பதிப்புரை, வெளியீட்டுரை என்று ஏதும் இந்த நூலில் இல்லை. ஆனால் இலங்கைப் பிரயாணம் முன்னுரை என்னும் கல்கியின் முன்னுரைக்கு முதல் பக்கத்தில் சின்ன அண்ணாமலை ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
‘இந்நூலில் வெளிவந்திருக்கும் கதைகள் யாவும் ஆனந்த விகடன் அதிபர் திரு எஸ். எஸ். வாசனுக்கு உரிமையானவை. திரு வாசன் அவர்கள் அன்பு கூர்ந்து
இப்புத்தகத்தின் முதற் பதிப்பை மட்டும் வெளியிட எனக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இந்தக் குறிப்பு சில சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. ஆனந்த விகடன் ஆசிரியராக, கல்கி என்றே தமிழுலகம் அறிந்து கொண்ட ரா. கிருஷ்ண மூர்த்தி இருந்த போது ஆனந்த விகடன் உரிமையாளர் எஸ். எஸ். வாசன் அவர்களுடைய செலவில் வந்துபோன யாத்திரை இது.
*ஆனந்த விகடன் பொன் விழா மலர்’ (1980) குறிப்புகளின் படி வியப்பூட்டும் விளம்பரங்களுடனும் அக்காலத்தில் அதிசயமாக இருந்த ஆகாய மார்க்கமாக இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் படி கல்கியையும் ஒவியர் மாலியையும் வாசன் அனுப்பி வைத்தார். 1938 மே மாதம் மத்தியில் அந்த மரகதத் தீவில் வாழும்
தமிழரிடையே விகடனும் கல்கியும் இவ்வளவு புகழ்பெற்றிருந்தார்கள் என்பதே அந்த விஜயம் புலப்படுத்திற்று.
வந்த விருந்தினர்களுக்கு ஈழகேசரி ஆசிரியராகவிருந்த சோ. சிவபாத சுந்தரம் மற்றும் இலக்கிய நண்பர்கள் வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.
ஒய்வில்லாத சூறாவளிச் சுற்றுப் பயணம் முடிந்து சென்னைக்குத் திரும்பியவுடன் இலங்கை யாத்திரை என்ற கட்டுரைத் தொடரை விகடனில் எழுதினார் கல்கி.

Page 8
‘வாசனின் செலவில், ஆனந்தவிகடனின் செல்வாக்கில் மேற்கொண்ட பயணம் இது. என்று கூறுகிறது பொன் விழா மலர் குறிப்புக்கள்.
1940 கடைசியில் வாசன் கல்கி உறவு. முறிந்தது. 1941 ஆகஸ்டில் கல்கி சதாசிவம் கூட்டுழைப்பில் உதித்த சஞ்சிகையாகக் 'கல்கி" வெளிவந்தது.
அதன் பின் ஆனந்த விகடனுக்கும் கல்கிக்கும் ஏகப்பட்ட போட்டிகள். தகராறுகள்!
கல்கியின் கண் டனங்கள் வெகுவாகவே கல் கியில்
வாசனின் படங்களுக்கு
வெளிவந்தன. ஆனால், சந்திரலேகா வந்தபோது அது பற்றியதொரு நீண்ட விமர்சனத்தையும் எழுதி, வாசனின் படத்தையும் அட்டையில் போட்டு முறிந்த உறவை சரிப்படுத்திக் கொண்டார் கல்கி.
இப்படியானதொரு சூழ்நிலையில் ஆனந்த விகடனில் கல்கி எழுதிய இலங்கை யாத்திரை நூலுருப் பெற்றால் அதன் பலாபலன்களின் முக்கியத்துவம் கல்கிக்கே போய்ச் சேரும் என்பது வாசனுக் குத் ஆகவே ஆனந்தவிகடனில் வெளிவந்த கல்கியின் இலங்கை
தெரியாததல்ல.
யாத்திரைத் தொடரை நூலாக்கும் உரிமையை அவர் யாருக்கும் கொடுக்கவில்லை.
இது பற்றிச் கேட்டபோது மறுக்கவும் முடியாமல் ஒரு பதிப்பு மட்டும் தான். மறுபதிப்புக்கள் வரக்கூடாது
சின்ன அணி னாமலை
என்னும் நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டுள்ளார்
Iss
இந்த நூல் பரவலாக அறிமுகம் பெற்ற மைக்கு இதுவே முக்கிய காரணமாகவும் இருக்கலாம்.
சின்ன அண்ணாமலை வாசனிடம் அனுமதி பெற்று இந்த நூலை வெளியிட்ட அதே 1954-ல் கல்கி அமரர் ஆகிவிட்டார். மே மாதம் நூல் வெளிவந்தது. டிசம்பர் 5-ம் திகதி கல்கி இறந்துபோனார்.
《༼༔་ཀྱི།།
கல்கியின் ஆசிரியரான பின்பும் 1948-ல் கல்கி இலங்கை வந்தார். சுதந்திரன் காரியாலயத்துக்குப் போனார். எஸ்.ஜே.வியுடன் உரையாடினார். எஸ்.டி. சிவநாயகம், கே.கணேஷ் போன்றவர்களை சுதந்திரன் காரியாலயத்தில் சந்தித்து உரையாடினார்.
கல்கியில் வெளிவந்த இலங்கைப் பிரயாணக் கட்டுரைகளில் இவைகள் விரிவாகவே எழுதப் பட்டுள்ளன.
கல்கியில் வெளிவந்த பயணக் கட்டுரைக்கும் இந்த நூலுக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை என்றலும் கல்கியின் எழுத்து வன்மைகளையும் நகைச் சுவை உணர்வையும், நளினமான நடையையும் நன்றாகவே பிரதிபலிக்கிறது இந்த நூல்.
கல்கியின் எழுத்துப் பற்றி இரண்டு விதமான அபிப்பிராயங்கள் எப்போதும் உண்டு.
‘மக்களிடம் அறிவைக் கொண்டு சேர்த்து உள்ளங்களை விரிவடையச் செய்வதற்குப் பதிலாக மக்கள் மனதில் ஒரு போலியான கனவுலகை சிருஷ்டித்து அவர்களை ஒருவித மயக்கத்தில்
ஆழ்த்தி வைத்திருக்கும் பத்திரிகைகளின் ஒரு
புதுப் போக்கிற்கு அத்திரவாரமிட்டு அதை ஓங்காரமாக வளர்த்து விட்டவர் கல்கி’ என்பது அவர்மேல் வைக்கப்படும் முதல் குற்றச் சாட்டு.
‘தமிழில் இலக்கியம் சீரழிந்ததற்குக் காரணமே கல்கி தான்’ என்று
புனைகதை
கூறுகிறவர்களும் உண்டு.
இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றில் கல்கிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ஏறத்தாழ ஒரு முப்பதாண்டு காலம் உரை நடை உலகின் சாம்ராட்டாகத் திகழ்ந்து உயிர்த்துடிப்பான எளிய தமிழால் உலகை அளக்க முடியும் என்பதைக் காட்டியவர்' என்று போற்றுபவர்களும் உண்டு.
இதொன்றையும் மனதில் எடுத்துக் கொள்ளாமல் கல்கியின் இலங்கைப் பயணத்தை வாசிக்க முயல்வோம்.
இலங்கைப் பயணம் ஒரு முன்னுரை என்பது

நூலின் முதல் அத்தியாயம்.
“இலங்கையில் இருந்து நான் திரும்பி வந்த பிறகு ஒரு சிநேகிதர் என்னைச் சந்தித்தார். கொஞ்ச நாளாக ஊரிலே இல்லைப் போலிருக்கிறதே எங்கேயாவது போயிருந்தீர்களா?’ என்று கேட்டார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. நான் இலங்கை போன சங்கதி எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். என்பது எனது ஆசை. எண்ணமும் கூட ஆகவே நண்பரின் கேள்விக்கு எடக்காக “இங்கேதான் கிட்டத்துல போயிருந்தேன் இலங்கைக்கு’ என்றேன்.
‘எங்கே இலங்கைக்கா. இலங்கைக்கா போயிருந்தீர்கள்' என்றவர் ஹாஹ்ஹா என்று சிரிக்கத் தொடங்கி விட்டார்.
நான் இலங்கைக்குப் போய் விட்டு வந்ததில் அப்படி என்ன ஹாஸ்யம் இருக்கிறது என்றேன். இலங்கைக்கா?’ என்று கேட்டபடி மீண்டும் குரலெடுத்துச் சிரித்தவர் எனக்குக் காது குத்துகின்றீர்களா?’ என்றார்.
* காது குத்துகிற வழக்கம் எனக்குப் பிடிக்கிறதேயில்லை. ஆனால் நான் சிலோனுக்குப் போய் விட்டு வந்தது நிஜம்' என்றேன்.
அப்படி வாருங்கள் வழிக்கு. மரியாதையாய் சிலோனுக்குப் போய்விட்டு வந்தேன் என்று சொல்லுங்கள். இலங்கை எங்கே இருக்கிறது இப்போது. அது மழுகிப் போய் எத்தனையோ காலம் ஆயிற்றே" என்றார்.
* இப்போது இருக்கிற சிலோன் வேறு ராமாயணத்தில் சொல்லியிருக்கிற இலங்கை வேறு என்பது அவருடைய தீர்ந்த அபிப்பிராயம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்.
இந்த ஆரம்பமே இந்தப் பயண நூலை வாசிக்கும் ஒரு ஆர்வத்தினை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.
இலங்கைப் பயணம் ஒரு முன்னுரை,
இலங்கையின் தலைநகர்.
சிங்களவரும் தமிழரும்
கண்டியைக் கண்டேன். புத்தரும் காந்தியும். தேயிலைத் தோட்டத்திலே, நுவரேலியா: யாழ்ப்பாண ஞாபகங்கள். யாழ்ப்பாண விசேஷங்கள் என்னும் தலைப்புக்களில் இக்கட்டுரைகள் அமைகின்றன.
தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றிருக்கிற நமது சகோதரர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்”
பிரிக்கலாம் என்றதும் நான் அவர்களைப் பிரிக்கப் போவதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. சகோதரர்களைப் பிரிக்கும் பாவம் நமக்கு வேண்டாம். பிரிப்பது அப்புறம். அவர்களை ஆள்வது. இதெல்லாம் பெரிய ராஜ்ய தந்திரிகளின் வேலை. அவ்வளவு சக்தி நமக்கு ஏது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இதிகாச காலத்தில் போனவர்கள், பிறகு சரித்திர காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து சென்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை, பருத்தித் துறை என்று குடியேறியவர்கள், கடந்த நாற்பது ஐம்பது வருடத்துக்குள் தமிழ் நாட்டிலிருந்து சென்று அங்குள்ள தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறவர்கள் ஆகிய மூன்று பிரிவுகள் பற்றியே
குறிப்பிடுகின்றேன்.
இலங்கைக்குச் சென்றதும் என்னுடைய உள்ளத்தில் ஒரு அடங்காத தாகம் பொங்கி வழிந்தது. விபீஷணனை உடனே பார்த்தாக வேண்டும் என்பதே அது. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஒரு குரல் அழ வேண்டும். "இந்தா விபீஷணா இலங்காபுரி ராஜ்யம், இந்தா இந்தா என்று முக்காலே மூணு வாட்டி சொல்லி, இராமர் இலங்கையை விபீஷணனுக்குக் கொடுத்தாரே. அதற்கு ஒரு காலத் தவணையும் வைத்தாரல்லவா!
‘வேதமுள்ளளவும், வேத கீதமுள்ளளவும் - பஞ்ச பூதமுள்ளளவும், பாரிஜாதமுள்ளளவும்.’ என்றல்லவா சொல்லிக் கொடுத்தார். அப்பேற்பட்ட

Page 9
மூன்று வெள்ளைக்
'காரர்களிடத்திலும் சிங்களவர்களிடத்திலும் ஒப்படைத்து விட்டு நீ எங்கே போனாய் விபீஷணா என்று ஒரு வாாத்தை கேட்டு விட ஆசை உண்டாயிற்று.
இலங் காபுரியை
ஆகவே உடன் இருந்த இலங்கை நண்பர்களிடம் விபீஷணனைப் பார்க்க வேண்டுமே என்றேன்.
பார்த்தால் போயிற்று. இங்கேதான் ஒரு நாலுமைல் தொலைவில் களனியில் இருக்கிறான். நாளைக்கே போவோம். டாக்டர் ரத்தினபாலா அழைத்துப் போவதாக உறுதியளித்திருக்கின்றார் என்றார்கள்’
‘யார் ரத்தினபாலா’ என்றேன். ‘ஒரு சிங்கள டாக்டர்’ என்றார்கள்.
‘மாட்டவே மாட்டேன் என்று மறுத்து விட்டேன். சிங்களவர்கள் தான் தமிழர்களைக் கொன்றழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்களே இவர் என்னை இந்த ரத்தினபாலா கொன்று விட்டால் என்னுடைய ஆகாய விமான ரிட்டன் டிக் கட் அநியாயமாகப் போய்விடுமே என்று மறுத்தேன்.
டாக்டர் ரத்தினபாலாவைச் சந்தித்ததும் தான் நல்ல வர்கள் .
சிங்களவர்கள் (ο 9 πιό υ
அண்ணியோன் யமாகத் தமிழர்களுடன் பழகுகிறவர்கள் . அரசியலில் ஈடுபட்டவர்கள் தான் தமிழர்களைக் கடித்துத் தின்று விடுவோம் என்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டேன்.
களனிக் கோவிலில் நாங்கள் பார்த்தவைகள் தான்.
ஒரு புத்தர்
இன்னொரு புத்தர்
ஒரு பெரிய புத்தர்
ஒரு சின்ன புத்தர்
ஒரு ஆறடி புததா
ஒரு முப்பதடிப் புத்தர்
உட்கார்ந்து நிஷ்டையிலிருக்கும் புத்தர். படுத்துக் கொண்டு நிஷ்டையில் இருக்கும் புத்தர்.
படுத்துக் கொண்டு நிஷ்டையில் இருக்கும்
ܠ 22
இன்னொரு புத்தர் ஆகியவை.
விபீஷணன் எங்கே என்று மனது கேட்டுக் கொண்டே இருந்தது.
கடைசியாகக் கோவிலின் ஒரு மூலையில் பூட்டிக் கிடந்த இருளடைந்த ஒரு சிறிய அறையைக் காட்டி இது தான் விபீஷணன் கோயில் என்றார்கள்.
கண்டியைப் பார்த்தது. தலதா மாளிகையைப் பார்த்தது. தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தது. யாழ்ப்பாணம் சென்றது. அனைத்தும் அருமையான நகைச்சுவையுடன் கிண்டலும் கேலியுமாக மிளிர்கிறது இந்த நூல்.
‘என்ன புத்தரின் பல்லா. நிஜப்பல்லா.?’ என்ற இலங்கை யாத் திரை நூல்கள் எழுதிய வெள்ளைக்காரர்கள் கேட்டிருக்கிறார்கள். புத்தர் வாழ்ந்த அந்தக் காலத்தில் பல் டாக்டர்கள் இருந்ததற்கான சரித்திர சான்றே கிடையாதே. பிறகு எப்படி நிஜப்பல் இல்லாமல் கட்டிக் கொண்ட பொய்ப் பல்லாக இருக்க முடியும். நிஜப் பல்லே தான். எனக்கென்றால் சந்தேகமே இல்லை. இந்த வெள்ளைக்காரர்கள் இன்னொரு அறிவீனமான கேள்வியையும் போடுகின்றார்கள். இந்தப் பல் இரண்டங்குலம் நீளமல்லவா! எங்கேயாவது மனிதனுக்கு இரண்டங்குலப் பல் இருக்குமா? என்பதே அவர்களுடைய அறிவீனமான கேள்வி.
இங்கு தான் பார்க்கிறோமே அறுபது அடி உயரப் புத் தரை, அறுபதடி உயரமுள்ள ஒருவருக்கு இரண்டங்குல நீளமுள்ள பல் இருப்பது ஒரு பெரிய காரியமா. என்றெல்லாம் கூறிச் செல்கிறது இந்த நூல்.
வெறுமனே வந்தேன் போனேன் என்றில்லாமல், வாசிப்பவருக்கு இலங்கையை ஓரளவிற்கேனும் அறிமுகம் செய்து வைக்கும் பண்பால் ஒரு சிறப்பான பயண நூலாக இது அமைகிறது.
இந்த நூலைப் படித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் உங்களுக்கும் எழுகிறதா என்ன செய்யலாம். நூலகங்களில் தேடிப் பார்க்கலாம் ஆனாலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது.

எல்லாக் கதவுகளும் அடைத்திருக்கின்றன
XX XX என்னைச் சுற்றி
XX எத்தனை சுவர்கள்
உயர்ந்து வானை முட்டும் அளவுக்கு
Χα கல்லாலான XX XX கருங்கற் சுவர்களோ?
இருளுங்கூட அத்தனை நெருக்கமாய் அப்பிக்கொண்டிருந்தது
கரங்களை இறுக்கி கம்பிச் சங்கிலியால் கட்டிவிட்டிருந்தனர்
XX XX
கால்களை நகர்த்த முடியுமா என்ற எந்த முயற்சியும் கல்லில் உரித்த நார்களாய்ப் போயின
பெளதிகம் படித்த XX பைத்தியக்காரர்கள் xxx கருந்துணி கொண்டு
கண்களைக் கட்டினர்
சிறையில் அடைத்த சிந்தனைத் திருடர்கள் LD6T66)55 5LLமறந்து போய் விட்டனர்!
-இரா. சடகோuள் -

Page 10
r y
சிறுகதை' என்று ஒரு புத்தகம்
முருகையனர்
'மல்லிகை', தாயகம்', நவமணி', 'தினகரன்' கணையாழி முதலிய ஏடுகளின் வாசகர்களுக்கு நன்கு பழக்கப்பட்டதோர் எழுத்தாளர், சி. சுதந்திரராஜா அவர்கள். அவருடைய சிறுகதைகள், சிற்சில தனித்தன்மைகளைக் கொணர்டவை. இவற்றை நாமெல்லாம் படித்து நயந்துள்ளோம். இப்பொழுது அவர் தாம் எழுதியவற்றுள் நாற்பத்தாறு கதைகளை ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'சிறுகதை', அது வெளிவந்த ஆண்டு 2001.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சிக்கனமான நேரிட வடிவிலே அந்தப் புத்தகம் அமைந்துள்ளது. முன்னுரை, பின்னுரை, அணிந்துரை, துணிந்துரை என்ற சம்பிரமங்கள் எவையும் இன்றி எளிமையாகவும் செவ்வையாகவும் அவர்தம் படைப்புகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. எந்தவிதமான அல்லல் அளப்புகளும் இல்லாமல், அந்தக் கதைகள் நேரடியாக நம்முடன் பேசுகின்றன. சராசரியாக எல்லாக் கதைகளும் மூன்று, மூன்றரைப் பக்கங்களுள் அடங்கிவிடுகின்றன. ஆனால் இவைகள் குட்டிக் கதைகள் அல்ல சிறுகதைகள் தான். சுருக்கமும் செறிவும் இவற்றின் வலிமையாய் உள்ளன. பேசாத பேச்சாகவும் உட்குறிப்பாகவும் நின்று இவை உணர்த்தும் சங்கதிகள் நீள நினைந்து சுவைக்கத்தக்கன. வாசித்து முடித்த பின்னும் இதயங்களிலே பின்-அதிர்வுகளை விட்டுச் செல்லும் வல்லமை உடையன.
2.
சுதந்திரராஜாவின் தனித்தன்மைகளுள் முதன்மையானது, அவர்தம் அனுபவம் பரப்பு-விடய விலாசம். பற்பல வேறுபட்ட களங்களிலே சம்பவங்கள் நடக்கின்றன. இரத்தமும் சதையும் உள்ள உணர்மை மனிதர்கள் இந்தக் களங்களிலே நடமாடுகிறார்கள். இவர்கள் வெறும் நிழல்களோ, பொம்மைகளோ அல்லர். சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்களும் இந்தக் கதைகளிலே படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள். பல்வேறு குணம் படைத்தவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறவர்கள் பலவிதமான இக்கட்டுகளில் மாட்டிக்கொளர்கிறவர்கள் புறச்சூழல்களின் கொடுமைகளுக்கும், வக்கிரப் போக்குள்ள சமூக விரோதிகளின் நெருக்குவாரங்களுக்கும் உட்பட்டாலும், சவால்களை எதிர்கொண்டு துணிந்து நிற்பவர்கள்.
இந்தக் கதைகளிலே யாழ்ப்பாணத்துச் சுருட்டுக் கொட்டில் வரும் தோட்டக்காட்டுத் தொழிற்சாலை வரும் துரைமாரின் சொகுசு மாடங்கள் வரும் கேரளத்துத் தீவண்டியும்
/16N --

(புகை வணர் டியும்) கடுகணிணாவை விதியினர் முகப்புப் பளர் ளமும் கட்டுநாயக்காவின் சுதந்திர வர்த்தக வலயமும் வரும். அவ்வளவு விட்டுவீதியாக நடமாடும் கெட்டித்தனமும் பரந்த வாழ்க்கை அனுபவக் கிரகிப்பும் சுதந்திரராஜாவிடம் காணப் படுகின்றன.
கதை மாந்தர்களும் அப்படிப் பட்டவர்கள் தானி பல்வேறு வர்க்கங்களின் பிரதிநிதிகளாகவும் பல் வகைப்பட்ட வாழ்க்கை நோக்கும் குண விசித்திரங்களும் உடையவர்களாகவும் அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தெம்பிழந்தபடி கட்டாந்தரையிற் கிடக்கும் இரத் தனக் கல் வியாபாரதிதரில் மலை மலையாகக் குவிக்கும் முபாரத் ஹாஜியார், ஏதோ ஒரு கொலையில் சம்பந்தப்பட்ட தடி ஆசாமியான சோமே, குஞ்சுத் தாடியோடு, விறைப்பான பார்வையோடு இருந்த கிளாக் கர்ை வினர் செனர் ற் - இப்படி எத்தனையோ வகைப்பட்ட மனிதர்களைக் கதாசிரியர் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
இந்தக் கதை மாந்தர்களினர் நடத்தைகள் வெறும் வருணனைகளாக சுதந்திரராஜாவின் கதைகளில் வெளிப் படவில்லை. இவர்களினர் புறச சூழல்களையும் இவர்களை உளர்நின்று இயக்கும் காரணிகளையும் ஒரு வகையான பகுப்புணர்வுடன் பரிசீலித்து விமரிசனம் செய்யும் தொனி கதைகளில் விரவியுள்ளது. தம் கதை மாந்தர்களைப் பரிவோடும் பற்றோடும் நெருங்கிச் சென்று நோக்கும் கதாசிரியர், சசில நுணுக்கமான குணவிசேடங்களைக் காட்டுவதுடன் ஒரு வழியிலே, திரைப் படங்களில் வரும் 'குளோசப' போல) அவர்களின் பலவீ
தெய்வானை,
கலைநயத்தோடு, திடமான - உறுதியான - மொழிப் பிரயோகத்தின் உதவியுடன் நம்முன் நிறுத்தும் இலாவகம் வியந்து மெச்சத்தக்கது. 'ஊடுபோய், எதையும் உளர்புகுந்து வெட்டிப்பிளந்து பிரித்து டிரிசக்ற் பண்ணி ஒர் உயிரியலாளன் எவ்வாறு ஒரு கீரைத் தண்டின் வெட்டு முகத்தை நிறமூட்டி ஒளியேற்றிப் பெருப்பித்துப் பார்த்து வரைந்து கொளர் வானோ, அதோபோன்ற நுணர் பார்வையுடனர் சாவதானமாக சில விடயங்களைப் பதிந்து தருகிறார், இந்தக் கதாசசிரியர். இதற்கு, மனித இன்ப துன்பங்களின் உறைப்பு விறைப்புகளையும் அவற்றின் மெலிவு நலிவுகளையும் உற்று நோக்கும் திறமையும் அவதானிப்பும் இன்றியமையாதவை. இந்த அவதானிப்பும் நுண்மாண் நுழைபுலம்' என்று பேசப்படும் உள்ளொளியும் இந்தக் கதைகளிலே துலங்கித் தோன்றுகின்றன.
வகை மாதிரியான எடுத்துக்காட்டுகள் சிலவற்றையும் காண்போம். 'இரும்பயுைம் உருக்கும் அனல்’ என்பது ஒரு கதை. இது நடைபெறும் களம் 5(5 தேயிலைத்தோட்டம். தோட்டத்துரையின் பங்களாவைப் பராமரிப்பதற்கு நான்கு தின கூலியாட்கள் அமர்த்தப்படுவதுண்டு. ஆனால் பங்களாவினர் நிரந்தரக் கூலியாளர் பெரியசாமி. அவனுடைய ஒரே மகனி பாலகிருஷ்ணனர். அவனுக்குப் போலியோ வந்ததால், கால்கள் சற்றே முடங்கிப் போயின. 'ஆடம்பரம் கொடி கட்டிப் பறந்திடும் இடம்' என்பது, பாசறை பங்களா பற்றிக் கதாசிரியர் உதிர்த்து
விட்டிருக்கும் சுருக்கக் குறிப்பு பின்வரும் வசனங்கள் அந்தக் குறிப்பை விளக்கு
கின்றன -
'.பாசறை பங்களாவில் சேர்ந்தது
னங்களையும் தள்ளாட்டங்களையும் தயக்க அதிருஷ்ட தேவதையின் கடாட்சத்திலே
மயக்கங்களையும் தெளிவாக
தானி என்று பாலகிருஷ்ணனுக்குத்

Page 11
தோன்றியது. அங்கு குளிர்ச்ாதனப் பெட்டி நிறையப் பழங் களர் , பட்டர் கட்டி, வெண்ணெயக்கட்டி, ஐஸ்கட்டி. பெட்டி திறந்ததுடன் வெளிர் ஆவி வெளிவந்தது கணர் டெல்லாம் பாலகிருஷணனர் ஆச்சரியம் அடைந்தான். எவ்வளவோ மன ஆசை வந்தாலும் வெணிணெய்க் கட்டியைக் கடித்துத் தின்னும் அவகாசம் அவனுக்குக் கிட்டுவதில்லை. இரவில், தனிமையில், குளிர்சாதனப் பெட்டிமீது கணி போனாலும் நேர்மை அவனைக் கண்காணித்துத் தடை போட்டிடும்
ஏனர் இந்த வர்ணனை எனர் று, கதையை வாசித்துக் கொணர்டு போகும் நாம் ஆச்சரியப்படுகிறோம் . ஆடம் பரங்களை ஏக்கத்துடனர் பார்ப்பது மாத்திரம்தான் சிலருடைய கதியாகவும் விதரியாகவும் இருக்கிறது. இந்த ஆடம்பரங்களின் எசமானர் எவ்வளவு கொடூர சிந்தை படைத்தவர் என்பதைக் கதையின் பிற்பகுதி நமக்கு உணர்த்து கிறது. தோட்டத்திலே கலாட்டா செய்தனர் என்ற முறைப்பாட்டின் பேரில், விராசாமி, வேலு, கருப்பையா ஆகிய தொழிலாளர் மூவரும் விசாரணை எதுவும் இல்லாமல் கொடுரமாகக் கொலை செய்யப் படுகிறார்கள். மூன்று பேரும் கயிற்றாற் கட்டப்பட்டு லொறியில் ஏற்றப்படுகிறார்கள். மலைக்கோயில் அமைந்த கிடுகிடு பள்ளம் வரை லொறி போகிறது. கதை முடிவைக் கதாசிரியர் சொற்களிலேயே காண்போம்
'பாதை விளிம்பில் லொறியை நிறுத்திக் குலுக்கினார், தோட்டத்துரை. கதவு திறந்த நிலையில் கயிற்றாற் கட்டப்பட்ட மூவரும் கிடுகிடு பள்ளத்தில் தலைதெறிக்க விழுத்தப்பட்டனர். வீசி எறிந்த தக்காளிப் பழம்போல் மூவரின் உடலும் சிதறுணர்டன. மலைமுகட்டில் நடப்பன்த நேருக்கு நேராகப் பார்த்துக் கொதிப்படைந்த அனைவரும் வீரியத்தால்
, நெருப்பானார்கள்
இந்தக் கதையில், சுதந்திரராஜா 'அய்றணி என்னும் முரணர் குறிப்பை எவ்வளவு ஆற்றலுடன் கையாளுகிறார் என்பது, கதை முழுவதையும் சேர்த்துப் படிக்கிறவர்களுக்குத்தானி விளங்கும். மூனர்றாம் தரப்பு வியாக்கியானங்கள் அந்தக் கலைத்திறனின் முழுச் சொரூ பத்தையும் சரியாகக் காட்டமாட்டா.
ஆடம்பரங்களுக்கும் சுகபோக சொகுசுகளுக்கும் மறுபுறத்தில், கொடூர சிந்தனையும், ஒற்றை பரிமாணத்திலே தொழிற்படும் அகங்காரமும் மறைந் துறைவதை, இதனைவிடத் துல்லியமாகக் காட்ட முடுடியாதல்லவா? சுதந்திரராஜா படைப்புகளில், இந்த முரண்குறிப்பு உத்தி அடிக்கடி கையாளப்படுகிறது. அது அவருடைய தனித்தன்மையின் பிரதான கூறு எண்பதில் ஐயமில்லை.
'நியாயத்தின் நெருப்பு ', 'பாதார
பிம்பங்கள்', 'மனங்களின் மறுகோலம்',
- "சினினமாய்ச் சனினம் , 'சூத்திரப் பாவைகள முதலான கதைகள்
பலவற்றில் இந்தவிதமான முரணர்குறிப்பும்
எளர் ளலும் முனர் தோன்றி மூத்து y
முழிப்பாக நிற்கின்றன.
இவற்றோடுகூட, மனித நடத்தையின்
போலித்தனங்களைப் புட்டுகாட்டுவன
8
ஆகவும் பெரும்பாலான கதைகள்
உள்ளன. புதுமைப்பித்தன், ரகுநாதன்
ஆகியோரின் ஆக்கங்களில் அதிகமாக
இடம்பெறும் நக் கலையும் , சசில
வேளைகளில், கொடுப்புக்குட் சிரித்தவாறு
கோறைத்தனங்களை வீறுடனர் சாடும் வித்தகத்தையும் நம் கதாசிரியரிடம்
அடையாளம் கண்டுகொள்ளுகிறோம்.
இனி, நம் கதாசிரியரின் பிறிதொரு முக்கிய பணிபு. இவருடைய நிகழ்கால

உலகியல் ஞானம் ஆகும். படித்தோர்படியாதோர், செல்வர்-வறியோர், கபடர்வெகுளிகள், அப்பாவிகள்-அகங்காரிகள், நாகரிகர்-பாமரர் - இவ்வாறெல்லாம் வரும் மனிதர்களின் போக்கு வாக்குகளையும், இருப்பையும் அதனர் v9H Lq uLu T தாரங்களையும் வெறும் வித்துவச் செருக்குச் சார்ந்த சப்பென்ற விவரிப்பாக அல்லாமல், சுவையும் நயமும் விரவக் கையாளர்வதனை இவர் படைப்புகளில் நாம் காண கிறோம். அல்லாமலும் ,
எல்லாக் கதைகளிலும் வர்க்கபேதங்கள்
பற்றிய விழிப்பும் கிரகிப்பும் ஊரும் பாவுமாக ஊடுகின்றன.
3.
இவ்வாறெல்லாம் செப்பமாய் அமைந்த இவரது படைப்புகளில், வசன அமைப்பும் புதைபொருளர்களும் நுணர்ணியமான மொழி ஆட்சிகளும் சற்றுச் சிரமம் தருவனவாக உள்ளன எனபதையும் குறிப்பிட்டுத் தானர் ஆகவேணர் டும் . இதை வேறொரு விதமாகவும் சொல்லலாம் வெளி வெளியான பொருள் உணர்த்து கையை இவரிடம் எதிர்பார்க்க முடியாது. ஒ.வரதராசனையோ, செ.கணேசலிங்க னையோ, கி.வா.ஜகந்நாதனையோ மாத்திரம் படித்து பழகியவர்கள் சுதந்திர ராஜாவுக்கு கிட்டப் போவது அவ்வளவு இலகுவாக இருக்காது. பலாப்பழங்களை வெட்டிச் சுளை பிடுங்கித்தான் சாப்பிட வேணடும் வாழைப்பழங்களைப்போல உரித்து உடனே உட்கொள்ள முடியாதுதானே!
மற்றொரு குறிப்பையும் இங்கு சொல்லி வைக்கலாம். கையினால் ஒவ்வோர் எழுதிதாக எடுத்தெடுத்து அச்சுக் கோத்துத் தானர் இந்தப் புத் தகம் பதியப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும்
இடையிடையே அச்சுப்பிழைகள் சற்று அடிக்கடி தலை காட்டுவது வாசகர்
களுக்குச் சிறிது தொல் லையைத் தரக்கூடும்.
. இருந்தபோதிலும், ஆழமும் அழகும் பயனும் பொருந்தய
இந்தக் கதைகள் தொகுத்துப் புத்தக மாக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வப்போது உதிரிகளாக வந்த ஆக்கங்களை ஒருங்கு வைத்துப் பார்க்கும்போது, அங்கு ஒரு முழுமையும் கூட்டமைவினால் ஏற்படும் மேலதிக பெறுமதியும் நமக்குக் கிடைப்பது அனுபவ 2600 6) O.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில், சுதந்திரராஜாவினர் பங்களிப்பு புறக் கணிக்கப்பட முடியாதது: நம்மவரின் கலை வளத்தை மிகுவிப்பது.
d 2
• ፡ewቇ6WW گلاس اf اف قارgsم آریزg \ தயவுசெய்த
N மல்லிகையுடன்
ܢܠ
N ஒத்தழையுங்கள்.
•íộN__

Page 12
6ዎው பிரதியின் CP62/CP62.2/L/L/454567
மேமன்கவி
O புதிய தூரிகைகளின் புறப்பாடு
சமீபத்தில் ஒரு ஓவியக் கண்காட்சியைப் பார்க்கக் கிடைத்தது. அக்கணிகாட்சியினை ஏற்பாடு செய்தவர் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் காலஞ்சென்ற எனி.எஸ்.எம். ராமையாவின் புதல்வர் கெளசிகன் ராமையா.
ராமையா அவர்கள் உயிர் வாழ்ந்த கால கட்டத்தில், அவரது புதல்வர் கெளசிகனின் உருவப் பட வரைதலுக்கான திறனையும் ஆர்வத்தையும் அறிந்து இருப்பவன் நான். ஒவியத் துறையிலும் கிராபிக் துறையிலும் சுயமாகத் தன்னை வளர்த்துக் கொணர்டவர் கெளசிகன். அந்த சுயதளத்தில் பலருக்கும் ஒவியத்துறை சம்பந்தமான பயிற்சி வகுப்புக்களை நடத்தியதன் பயனாக, உருவாக்கிய அவரது மாணவி - மாணவர்களையும் இணைத்துக் கொண்டு சமீபத்தில் 'லயண்ட் வெண்ட்' அரங்கில் அக்கணிகாட்சியினை ஏற்பாடு செய்து இருந்தார்.
ஈழத்துக் கலை இலக்கியத் துறையைப் பொறுத்த வரை ஒவியத்துறை என்பது பரந்த கவனத்தைப் பெறவில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது. வட-கிழக்குப் பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களின் வாழ்வுச் சூழலில் ஏற்பட்ட அதிர்வுகளின் அனுபவத்தை அவர்கள் ஓவியக் கலையிலும் வெளிப்படுத்தியிருந்தாலும். அப் படைப்புக்களுக்கான பரிச்சயம் வடகிழக்குப் பிரதேசத்தைத் தவிர்ந்த பிரதேசத்தைச் சார்ந்த எம் போன்றவர்களுக்குக் கிட்டுவதில் பல தடைகள் இருந்தன. அதே போன்று புலம் பெயர்ந்த தமிழ்பேசும் மக்களின் ஒவிய முயற்சிகளுக்கான பரிச்சயத்திற்கும் இக் கூற்றுப் பொருந்தும்.
அத்தகைய முயற்சிகளுக்கு அப்பால் வட - கிழக்குப் பிரதேசத்திற்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்களின் ஒவிய முயற்சிகள் பரந்த அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு முயற்சியாகக் கெளசிகன் ஏற்பாடு செய்திருந்த மேற்குறித்த ஓவியக் கணகாட்சி அமைந்தது எனலாம்.
இக்கண்காட்சியில் கெளசிகனின் ஒவியங்கள் உட்பட அவரது ஒவியத் துறை மாணவிகளான MRS, RAMUHUM GOSWAM, திருமதி. ராஜி கொட்வின் செல்வி வாசுகி முருகையா, மற்றும MRS. RAMJHUM GOSWAMold цвајо!i DEBADITYA GOSWAMI 4,53штifici polukisti
20

அக்கணிகாட்சியில் இடம்பெற்றிருந்தன.
அக்கணிகாட்சி மூலம் உருவப்படங்கள் மற்றும் பத்திரிகைகளில் விளக்கப் படங்கள் வரைவதிலும் திறன் மிக்கவராகத் திகழும் கெளசிகன் நவீன ஒவியத்துறையின் பக்கமும் தனது கவனத்தைத் திருப்பி இருந்தமை இவரின் ஒவியத்துறையில் இன்னொரு பரிமாணத்திற்கான அடியை வைத்திருப் பதற்கான தருணமாக இக் கணிகாட்சி அமைந்தது எனலாம். அத்தோடு, இவரது மாணவர்கள் இவர் மூலம் கற்றுக் கொண்ட ஒவியத் துறையின் தொழில் நுட்பத்தை அடித்தளமாக்கிக் கொண்டு. அவர் தமக்கான சுய அனுபவங்களை தமக்கான சுய பாணியுடன் வெளிப்படுத்தியிருந்தமை, கெளசிகனின் வெற்றியினை எனக்கு அக்கணர்காட்சி எடுத்துக் காட்டியது.
அன்று தொடக்கம் உருவப் படங்களை வரைதலுக்கான அவரது திறன் கூடிய வளர்ச்சியுடனும் மெருகு ஊட்டப்பட்ட நிலையில் அக் கணி காட்சியில் இடம் பெற்ற அவரது உருவப்படங்கள் அமைந்து இருந்தன. அத்தோடு, நவீன ஓவியம் பக்கமும் அவர் கவனம் செலுத்தி இருப்பதை இக்கணிகாட்சியில் இடம் பெற்று இருந்த அவரது நவீன ஒவியங்கள் எடுத்து இயம்பின. MRS. RAMHUM GOSWAM 3)iguronsor வங்காளப் பிரதேசத்தைச் சார்ந்தவர். தொழில் நிமித்தம் இலங்கைளில் வசித்து வருபவர். அவரது ஒவியங்களின் உள்ளடக்கங்கள் சிறப்பாகவும் ஆழமாகவும் இருந்தன. அத்தோடு இந்திய ஒவிய மரபின் அம்சங்கள் ஒரு சில ஒவியங்களில் தெரிந்தன. அவரது
15656), if DEBADITY A GOSW AM usai
/2N
ஒவியங்களில் ஓர் இளைய ஓவியரின் ஆர்வம் பளிச்சிட்டது.
திருமதி ராஜி கொட்வினது தூரிகை வழியாக புதிய நோக்கும் எகிப்து ஒவிய மரபினை பின்பற்றிய வெளிப்பாடும் தெரிந்தன.
செல்வி வாசுகி முருகையா எதிர் காலத்தில் நல்லதொரு நவீன ஓவியராக மலரக் கூடிய சமிக்ஞைகள் அவரது அநேக ஒவியங்களில் வெளிப்பட்டன.
கெளசிகன போனற இளைய வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய ஓவிய முயற்சிகள் பற்றி இன்னும் பரவலாக அடையாளம் காட்ட வேணர்டிய அவசியமிருக்கிறது.
தமிழ் பேசும் சூழலைச் சார்ந்த ஒவிய விமர்சகர்கள் இவர்கள் போன்றவர்களின் பக்கமும் தமது ஒவிய விமர்சனப் பார்வையைத் திருப்ப வேண்டும். அதைப் அவரது மாணவர்களும் தமது ஓவிய முயற்சிகளைப் பற்றி அத்தகைய விமர்சகர்களுக்கு பரவலாக அறியத் தர வேணடும்.
கெளசிகனின் இந்த முயற்சியின் மூலம், கெளசிகனும் அவரது ஒவிய மாணவர்களும் ஈழத்து தமிழ் சமூகச் சூழலின் வளர்ச்சியில் இணையக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
போனறு கெளசிகனும்
(2) தாமரையினர் கேள்வி
தமிழகப் பெணி கவிஞர் தாமரையின் ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் எனும் தொகுதியினைப் படிக்கக் கிடைத்தது.
ஒரு பெண் கவிஞர் கவிதைத் தொகுதி

Page 13
ன்ற பார்வையில் அத்தொகுதியின் )ள்ளடக்க கவிதைகள் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள் கவிதைகளாகப் படைக்கப்பட்டு இரு க்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் 西 ாமரையின் அத்தொகுதியினைப் படித்தேன். ன் எதிர்பார்ப்பு அவ்வளவாக வீண் போகாத நிலையில், அவரது படைப்புகள் அமைந்து ፬ፃcፀb ந்தன. ஆனாலும், தாமரையின் இத் தொகுதியில அமைந்த கவிதைகள் துணணின் பிரச்சினைகளைப் பேசினாலும், இபணணியத்திற்கான பெணணிய மொழியினைப் பற்றிய பிரக்ஞையினை அவர் காளி ளவிலலை எனிறே சொல்லத தோன்றுகிறது. அதனையிட்டு தாமரை பூவ்வளவு அக்கறை கொள்ளவில்லை ன்பதை அவரது தொகுதிக்கான தன்னுரை Eሠ* குச் சொல்லி விடுகிறது. அக் ഴത്ഥങ്ങ് கடந்து பெண்ணினத்தின் மீது நடக்கும் அடக்கு முறையைப் பற்றி இவர் முக்கறை கொண்டு இருக்கிறார் என்ற ஆகையில் தாமரையின் கவிதைகளில் மனம் இணைந்துப் போனது.
ஆனாலும் அத்தொகுதியில் அமைந்து இருந்த அத்தனை கவிதைகளிலும் வெளிப்படாத ஆணி இனத்திற்கான எதிரான ரு கலக மொழியின் கையாளுகை. அத்தொகுதியில் அமைந்து இருக்கும் எதிர்வினை' எனும் கவிதையில் என்னால் கிறிதளவுக்கு இனங்காணக் கூடியதாக திருந்தது. அக்கவிதை உங்கள் அதிர்வுக்கு.
எதிர்வினை '6%roove/d 6/4/6/767 ZA2%w۶2.../ கொஞ்சம் இரு முன்னதாக
《༼2ཀྱི།།
நீ என்ன செய்த7ய?
(3) பின் - நவீனத்துவம் பற்றி பேச்சு
பின் - நவீனத்துவத்தைப் பற்றிய பேச்சு தமிழ் நவீன கலை இலக்கியச் சூழலில் ரொம்பவும் உரத்துச் சமீப காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்ச் சிறு சஞ்சிகையின் சூழலினுடாக தான் அதிகமான சந்தர்ப்பங்களில் கேட்கக் கூடியதாக இருக்கிறது. (அதே வேளையில் நமது தேசிய தினசரிகளில் ஒன்றான 'தினக் குரல. பத்திரிகையில் பனுவல்.’ எனும் பேரில் இடம் பெறும் ஒரு பக்க பகுதியில் சமீப காலமாக பினி -நவீனத்துவம் பற்றிய கருத்து பரிமாறல் நிகழுவதைப் பற்றியும் இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்துச் சொல்ல வேணர்டி இருக்கிறது.)
பின்-நவீனத்துவமும் அதற்கு முக்கிய இடங்களான நவீனத்துவம், அந்நியமாக்குதல், அமைப்பியல்வாதம். இன்னபிற இடங்களின் தேவை (மார்க்சியத்தின் பயன்பாடு ஏலவே ஈழத்து நவீன தமிழ் கலை இலக்கியம் கணிசமான அளவில் இருப்பதை நினைவில் வைத்து கொணர்டு) அல்லது பொருத்தப்பாடு ஈழத்து நவீன தமிழ்க் கலை இலக்கியத் தளத்தில் எந்த அளவானது எனபதை மணிவாசனை இலக்கியம். தேசிய இலக்கியம். முற்போக்கு இலக்கியம். புலம் பெயர்வு இலக்கியம், போர்க் கால இலக்கியம். போர்க்கள இலக்கியம் என்ற வகை மாதிரியான இலக்கிப் போக்குகளுடன்
உணரப்பட்டு
இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை அளிக்கின்ற சிந்தனை ஒட்டங்கள்

இன்றைய நமது காலகட்டத்தில் தேவை போல் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் உலக மயமாக்குதல் சூழலின் மத்தியில் மார்க்சியத்தின் தேவை மீள உணரப்பட்டுக் கொணர்டிருக்கும் சூழலில் எனக்குள் இந்த கேள்விகள் எழுந்திருக்கின்றன.
மேற்குறித்த கேள்விகள் எனக்குள் எழ சமீபத்தில் நான் படித்த ஒரு நூலும் காரணியாக அமைந்தது. எண் சிற்றறிவுக்கு எட்டிய வரை. இது வரை காலம் (தமிழில் மட்டும் சொல கிறேனர்) பினர் - நவீனத்துவத்தைப் பற்றிய அறிமுக விமர்சனப் பிரதிகள் மார்க்சிய எதிர்ப்பினை அவை தமக்கென உட்கிடையாக கொணர்டி ருப்பதுமான அல்லது பின்-நவீனத் துவத்தைப் பற்றிய மார்க்சியப் பார்வை யாளர்களின் நோக்கில் பின்-நவீனத்துவ எதிர்ப்பு உட்கிடையாகக் கொணர்டி ருப்பதற்கான போலான அறிதல் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. (எனது அறிதலில் குறை இருக்கலாம் ஏனெனில் இக் கோட்பாடுககைப் பொறுத்த வரை நான் இன்னும் ஆரம்ப நிலை வாசகனாக இருப்பதனால்தான் இத்தகைய விவாதங் களையும் வேண்டி நிற்கிறேன்)
சமீபத்தில் நான் படித்த அந்த புத்தகம் தமிழக மனோன மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1997 மார்ச் மாதம் மூன்று நாட்கள் 'பின்னைய நவீனத்துவம் - கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும்' என்ற தலைப்பில் நடாத்திய கருத்தரங்கில் பல்வேறு ஆய்வார்ளர்களால் வாசிக்கப் பட்ட கட்டுரைகள் திசு. நடராசன். அராமசாமி ஆகியோர்களால் தொகுக்கப்பட்டு 1998ஆம் ஆணர்டு விடியல் பதிப்பக வெளியீடாக
வந்திருக்கும் 'பின்னைய நவீத்துவம் - கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும்' என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகமாகும்.
அப்புத்தகத்தில் அமைந்திருந்த எல்லாக் கட்டுரைகளும் ஏதோ ஒரு விதத்தில் பின்நவீனத்துவத்தைப் பற்றிய கருத்தாடல் பற்றிய அளவில் கவனத்திற்குரியவையாக இருப்பினும் அப்புத்தகத்தில் இடம்பெற்று இருக்கும் நா. முத்துமோகனின் பின்னைய நவீனத்துவமும் தத்து வயியலும்' எனும் கட்டுரை எனது கவனத்தை ஈர்த்தது.
அக்கட்டுரை மார்க்சியத்தின் வளர்ச்சி நிலைகளில் ஒன்றுதான் பின்-நவீனத்துவம் எனற அறிவையும் உணர்வையும் ஏற்படுத்தியது.
மேற்குறித்த அறிவும் உணர்வும் சரியானதா? பிழையானதா? என்பதைக் தெளிவுபடுத்த, மேற் குறித்த நூலில இடம்பெற்று இருக்கும் கட்டுரைகளும், குறிப்பாக நா. முத்துமோகனின் கட்டுரையும் பின்-நவீனத்துவத்தைப் பற்றி எழுப்பி இருக்கும் விடயங்களையிட்டு நமது ஈழத்துக் கலை இலக்கியக் கோட்பாடாளர்கள் தமது எதிர்வினையைத் தெளிவாக வெளிப் படுத்துமிடத்து என்னைப் போன்ற பின்நவீனத்துவத்தைப்பற்றிய அறிதலுக்கான ஆரம்ப நிலையில இருக்கும் வாசகர்களுக்கு தெளிந்த தெளிவு ஏற்பட வழி வகுக்கும் என்பதை நான் மிகவும் ஆவலாக எதிர்பார்கின்றேன்.

Page 14
நாட்டாரியல் ஆய்வுகலுநம் யாழ்ப்பாணத்து நாட்டார் கதைகளும்
aur.Ghegurrarm
நாட்டாரியற் கூறுகளாகிய கலைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள், ஆற்றுகைகள் என்பவை புலமை நிலையில் ஆய்வுக்குரியவையாக்கப் பெற்றமை பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுச்சி கொண்ட தேசியவாதக் கல்விச் சிந்தனைகளுடனும், மனோரீதிய இலக்கிய விசைகளுடனும் தொடர்பு பட்டிருந்தன. 1812ஆம் ஆண்டளவில் ஜே. கிறிம் என்பவர் ஆங்கில மரபில் எழுந்த கதைகள் (HOUSE HOLDTALES) என்ற தொடரை முன் வைத்து நாட்டாரியல் ஆய்வைப் புலமை நிலையில் முன்னெடுத்தார். 1846ஆம் ஆண்டளவில் வில்லியம் தோமஸ் என்ற தொல்கலையியலாளர் நாட்டாரியல் (FOLKLORE) என்ற எண்ணக் கருவை முன்மொழிந்து இத்துறையில் ஆய்வுகளை மேலும் விசைப்படுத்தினார்.
புலமைநோக்கில் நாட்டார் கதைகளை ஆராய முனைந்த ஜேக்கப் கிறிம் (GERMAN MY THOLOGIE,1835) Qg|T6öưoảs (35/Tử LITỉ lọ6öI gọi LJ6)LuJT96 [BIỦ__Tĩ 560)g5560D6II விளக்க முயன்றார். மாக்ஸ்முல்லரால் (MAXMULLER,1872) இக் கோட்பாடு மேலும் விசைப்படுத்தப் பட்டது. சமஸ்கிருத மொழியில் ஆழ்ந்த புலமை கொண்ட மாக்ஸ் முல்லர் கிரேக்க தொன்மங்களையும், இந்தியத் தொன்மங்களையும் ஒப்பியல் நோக்கில் ஆழ்ந்து ஆராய்ந்து தொன்ம ஆக்கச் செயல் முறையில் சிக்கலான தன்மைகளை விளக்கலானார். இயற்கைத் தோற்றப்பாடுகளைப் பூர்விக மனிதர் விளங்கிக் கொண்ட விதமும், பொதுத் தன்மைகளைக் கொண்ட இயற்கைப் பொருட்களை ஒரே பெயர் கொண்டு அழைத்தமையும் மாக்ஸ் முல்லரால் சுட்டிக் காட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக சூரியன், சந்திரன், நட்ஷத்திரங்கள், நீர் முதலியவற்றை ஒளிரும் பொருள் என்றவாறு பொதுப் பெயரால் அழைத்தமை மொழி சார்ந்த குழப்பங்களை ஏற்படுத்தியது. இயற்கையின் யாதார்த்தங்களை இவ்வாறு குழம்பிய மொழியால் (MALADY OFLANGUAGE) சித்திரிக்க முற்பட்டமை தொன்மக் கதைகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. மாக்ஸ் முல்லரின் இந்த ஆய்வுகளின் பின்னர் தீவிர திறனாய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டன.
இந்தியத் தொன்மங்களுக்கும் ஐரோப்பிய தொன்மங்களுக்குமிடையே காணப்படும் பொதுத் தன்மைகள் மாக்ஸ் முல்லர் குறிப்பிடுதல் போன்று இந்திய ஐரோப்பிய மக்களின் இன ஒற்றுமையினால் ஏற்படவில்லை என்ற கருத்தைப் பின் வந்த ஆய்வாளர்கள் நிறுவ முயன்றார்கள். ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமிடையே நிகழ்ந்த வரலாற்றுத் தொடர்புகளும், பண்பாட்டுத் தொடர்புகளும் தொன்மக் கதைகளின் பொதுப்பண்புகளுக்குக் asm J 600Tb 66u6Oog uD6îg5 b535ft6näs (3a5T LLIT (S (MIG ARATIONAL THEORY) விளக்கலாயிற்று. தொன்மங்களின் சிதறல்களும் துணிக்கைகளுமாக நாட்டார் கதைகள்
வளரலாயின.
- ح 23كر

புலமையாளர்கள் நாட்டார் கதைகளை ஆழ்ந்து அறியும் நோக்கில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தகவல்களைத் திரட்டத் தொடங்கியமை இத்துறையில் மேலும் ஆழ்ந்த ஆயப் வுகளை மேற்கொள்வதற்கு வழியமைத்தது. இந்த ஆய்வுகள் பல வியப்பூட்டும் தகவல்களைத் தரலாயின. அதாவது பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழி பேசுவோரிடத்தும், பல்வேறு பணி பாட்டுப் பின் புலங் களில் வாழ்வோரிடத்தும் காணப்பட்ட நாட்டார் கதைகளிலும், தொன்மங்களிலும் , நம்பிக்கைகளிலும் பல பொதுத் தன்மைகள் காணப்பட்டன. இந்த யதார்த்தத்தை விளக்குவதற்குப் புதிய கோட்பாடுகளை நோக்கி நகர வேண்டியிருந்தது. அதாவது, வேறுபட்ட சூழலில் மனிதர்கள் தனித்துப் பிரிந்து வாழ்ந்தாலும் உலகில் வாழும் அனைத்து மானிடர்களிடத்தும் சில பொது உளப்பாங்குகள், பொது உணர்வுப் பாங்குகள், பொதுவான நடத்தைக் கோலங்கள் நிலவுதலை உய்த்துணரக் கூடியதாக இருந்தது. ரெயிலர் மற்றும் பிறேசர் போன்ற ஆய்வாளர்கள் (TYLOR, PRIMITIVE CULTURE, 1871), (FRAZER, THE GOLDEN BOUGH, 1980) இவற்றின் பின்புலத்தில் புதிய விளக்கங்களை நோக்கி நகரலானார்கள். உலகின் அனைத்து மக்களும் சில குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சிப் பாதையினுTாடாக வந்தமையால் இவ்வாறான பொதுத்தன்மைகள் ஏற்பட்டன என்ற கருத்து வலியுறுத்தப் படலாயிற்று.
இவற்றைத் தொடர்ந்து பின்லாந்து. ஸ்கண்டினேவியா முதலிய நாடுகளில் ஒப்பியல் நோக்கில் நாட்டார் கதைகளை ஆராயும் மரபு வளராலாயிற்று. கதைகள் உருவான வரலாற்றுப் பின்புலத்தையும்,
/%sN
கதைகள் நாட்டு எல்லைகளைக் கடந்து பரவிய புவியியற் பின்புலத்தையும் இணைத்து வரலாறு மற்றும் புவியியல் நிலைப்பட்ட ஆய்வு முறையினை பின்லாந்து, ஸ்கண்டினேவிய நாட்டாரியல் அறிஞர்கள் உருவாக்கினர். கதைப் பொருளை ஆராய்வதன் வாயிலாக அது எங்கு எவ்வாறு தோற்றம் பெற்றதென்ற முடிவுக்கு வரலாம். அதைத் தொடர்ந்து புவியியல் தொடர்புகளை ஆராய்வதன் வாயிலாக அதன் பரவலை விளக்கமுடியும். G5IT6b6633606muub (ARCHETYPES) அவை பரவிய பிரயாணப் பாதைகளையும் ஆராய்தல் இங்கு சிறப்பிடம் பெற்றது கதைகள் பண்புக் கூறுகளின் (TRAITS) அடிப் படையிலும் , துணைப் பண்புக்கூறுகளின் அடிப்படையிலும், உடைத்துப் பிரித்து ஆராயப்பட்டன.
பணி புக் கூறுகளும் , துணைப் பணி புக் கூறுகளும் எவ வாறு ஒன்றிணைக் கப்பட்டன என்பது
ஆராயப்பட்டது.
ஐரோப்பாவில் வளர்ச்சியுற்ற உளப் பகுப்பு உளவியல் தொன்மங்கள், மற்றும் நாட்டார் கதைகள் பற்றிய ஆய்வுகளிலும் செல்வாக்கை ஏற்படுத்தியது. தொன்மங்கள் நனவிலி மனமாகிய ஆழ்மனதில் உறைந்த பாலியல் சார்ந்த விசைகளின் புனைவுகள் என உளப்பகுப்பு உளவியலாளர் விளக்கலாயினர். சிக்மன்ட் பிராய்ட் தொணி மங்களையும் 5 T L L T if கதைகளையும், அவற்றில் இடம் பெற்ற கனவுகள் பற்றியும் விரிவாக ஆராய pilstir. (FREUD, AND OPENHEIM, DEAMS IN FOLKLORE, 1958) * கனவுகள் தனிமனிதரின் தொன்மங்கள் என்ற கருத்தும் வளரலாயிற்று. கனவுகள் குறித்த ஒரு பண்பாட்டின் தொன்மங்கள் என்று குறிப்பிட்ட உளப் பகுப் பு ஆய்வாளர்கள் கனவுகளில் நிகழும்

Page 15
உளவியல் தொழிற்பாடு போன்றே தொன்மங்களின் ஆக்கத்திலும் உளவியல் தொழிற்பாடு உட்பொதிந்துள்ளது என்று குறிப்பிட்டார்கள். குறித்த ஒரு மக்கள் தவட்டத்தினர் அல்லது பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் தமது நனவிலி மனங்களிலே தேக்கி வைத்த அழுத்தங்களின், புனைவுதான் தொன்மங்களாக உருவாக்கம் பெற்றன என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதனை மேலும் வலியுறுத்த வந்த யுங் தொன்மங்கள் கூட்டு நனவிலின் (COLLECTIVE UNCONSCIOUS) Gausf பாடு என்று குறிப்பிட்டார்.
நாட்டார் கதைகள் பற்றிய ஆய்வில் எழுந்த பிறிதொரு புலமை விசையாக அமைந்த நிகழ்ச்சி வாய்மொழி மூலமான (gify so (b6JTdslid (ORAL FORMULA) தழுவி எழுந்த கோட்பாடாகும். அதாவது. எழுத்து வடிவில் எழுந்த காவியங்களை வாய் மொழி மூலமாகச் சொல்லும் பொழுது ஒருவகையான உரைச் சூத்திரமாக்கலை உரைப்போர் மேற்கொண்ட நிகழ்ச்சி நாட்டார் கதையாக்கத்துக்குத் தளமாக அமைந்ததென்ற சிந்தனை 1935 ஆம் ஆண்டளவில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இந்தச் சிந்தனைகளின் வளர்ச் சிக்கு ருசியாவில் எழுந்த ÉuJLDou6DLDU QuJáa5(pub (FORMALIST MOVEMENT) அரணாக அமைந்தது. 1940 ஆம் ஆண்டளவில் இதற்கு ஒப்புமையான ஒரு நிகழ்ச்சி தமிழகத்திலும் நிகழ்ந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எழுத்திலமைந்த காவியங் களையும் புராணங்களையும் கதாப் பிரசங்கமாகப் பொது மக்களுக்கு வழங்கிய பொழுது வாய்மொழியாகப் பல கதையா க்கங்களையும் பாடல் ஆக்கங்களையும் தாமே மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
^ہ تر کر
கிருபானந்த வாரியார் உருவாக்கிய கதைகள் தமிழகத்திலும், யாழ்ப் பாணத் தி லும் வாயப் மொழியாக பரவியமையும் இச்சந்தர்ப்பத்திலே நினைவிற் கொள்ளத்தக்கது.
இதே காலப் பகுதியில் யாழ்ப் பாணத்தில் மேடையேற்றப் பட்ட நாடகங்களில் பபூன் வேடம் தாங்கியோர் பல்வேறு வாய்மொழிக் கதைகளையும் பாடல்களையும் தாமே உருவாக்கினர்.
நாட்டார் கலைகள் பற்றிய ஆய்வில் எழுந்த பிறிதொரு புலமை விசையாக அமைவது அமைப்பியற்கோட்பாடாகும். தொன்மங்களிலும் நாட்டார் கதைகளிலும் அமைந்த அமைப்பு வடிவிலான கருத்துக்கள் பற்றிய ஆய்வுகள் முனைப் புக ளினி ஆழ் நீத கட்டமைப்புக்களையும், ஆராய்தலும், அவற்றில் அமைந்த கருத்துக்களை நிரல் படுத்திப் பொருண்மை கொண்ட ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவருதலும் சிறப்பிடம் பெறலாயின. கட்டமைப்புக்களை ஆராய்வதற்கும் மொழியியல், தகவற் கோட்பாடுகள், உயிர்ப் பாரம்பரியவியல், விஞ்ஞானம் முதலாம் துறைகளில் உருவாக்கப்பட்ட கருத்துக்களைப் பயன்படுத்தினர்.
தொன்ம ஆக்கத்தின் தருக்க செயல் முறையை இவற்றின் வழியாக விரிவாக ஆராயப்பட்டது. தொன்மங்களின் மொழி மிகவும் உயர்ந்த நிலையான தொடர்பாடல் நிரலமைப்பைக் கொண்டது. கட்டமைப்பு நிலைப்பட்ட மொழியும் அத்தகைய நிரலமைப்பைக் கொண்டது. கட்டமைப்பு நிலைப்பட்ட மொழியுடன் கொண்டுள்ள தொடர்பும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொன்மங்களின்

சுருக்கிய தனிமம் மித்தீம் (MITHEME) எனப்பட்டது. இந்த மித்தீம்கள் பொருண்மை கொண்ட வகையில் ஒழுங்கமைக்கப்படும் பொழுது தொன்மங்கள் தரும் செய்தி வெளிப்படுகின்றது. இந்தச் செய்தி மனித வாழ்வின் முரண்பாடுகளை விட்டு மேலோங்கும் வகையில் நேர்-எதிர் என்றவாறு இருமை நிலை கொண்டவாறு அமைந்துள்ளது. அதாவது மனித வாழ்விலும், உணர்வுகளிலும் காணப்படும் முரண்பாடுகளைச் சமாதானம் செய்யும் வகையில் தொன்மங்கள் ஆக்கப்படுகின்றன. ஒரு பண்பாட்டின் முழுத்தொடர்பாடலையும் விளங்கிக் கொள்வதன் வாயிலாகவே தொன்மங்களை விளங்கிக் கொள்ள (piņD (LEVISTRATUSS, 1955)
தொன்மங்கள் மற்றும் நாட்டார் கதைகளின் ஆக்கத்தில் அடுத்து முக்கியத்துவம் பெறுவது சூழமைவுக் (335 T L LufTLT (guió. (CONTEXTUAL THEORY) Qbgbé GaffLuffG ush) விளக்குவதற்கு முன்னதாக, நாட்டார் கதைகள் பற்றிய சில இறுகிய உறைந்த (FOSSILNATURE) g(bg.gis6i, uijld, குறிப்பிட வேண்டியுள்ளது. நாட்டார் கதைகள் குறிப்பிட்ட ஒரு பொற்காலத்தில் தோன் றியவை என்றும் , மேலும் தோன்றுதல் அரிதென்றும் கூறும் இறுகி உறைந்த கருத்துக்கள் நாட்டார் கதைகளின் ஆளுமையைச் சுருக்கி விடுகின்றன. நாட்டார் கதைகளின் ஆக்கம் இயங்கியல் நிலைப்பட்டது. எக்காலத்திலும் எச் சந்தர்ப்பத்திலும் அவை தோன்றக் கூடியவை. சமூகச் சூழல், மாற்றமுறும் பொழுது, புதிய உணர்வுகள் வாய்மொழிப் புனைவை ஊடகமாக்கும் பொழுது, புதிய நாட்டார் கதைகள் தோற்றம் புெற முடியும். இந்த வளர்ச்சியை உள்வாங்கி உருவாக்கப் பட்டதே சூழமைவுக்
《27 །
கோட்பாடாகும்.
தொழிற்பாட்டு நிலை மானிடவியல், உளவியல் நிலை நடத்தை மாற்றங்கள். சமூகவியல் நிலை, நடிபங்கு ஆற்றுகை செய்தல் முதலியவற்றை உள்வாங்கி நாட்டார் கதைகள் தொடர்பான சூழமைவுக் கோட்பாடு உருவாக்கப் பட்டது. நாட்டார் கதைகளை மட்டும் அச்சொட்டாகத் தொகுப்பது முக்கியமன்று. அது உருவான சூழல், அது ஆற்றுகை செய்யப்படும் தொடர்பாடல் நிலை, அந்நிலையில் நிகழும் உணர்ச்சிப் பரிமாற்றம் வெளியீட்டு நடையியல், முதலிய அனைத்தும் தொகுக்கப் படவேண்டும். ஆனால் தமிழில் நாட்டார் கதைகளையும் பாடல்களையும் தொகுத்தோர் இந்தப் பண்புகளைப் பெரும்பாலும் நழுவவிட்டுள்ளனர். இந் நிலையில் நாட்டார் கதைகளைத் தொகுத்தல் எத் துணை கடினமான பணியென்பதும் தெரிய வருகின்றது. சூழமைவுக் கோட்பாட்டாளர்கள் நாட்டார் கதையை முழுநிலைத் (HOLISTC) தரவுகளின் தொகுப்பின் அடிப்படையில் நோக்குகின்றனர்.
வெறுமனே நாட்டார் கதைகளை மட்டும் தளமாக வைத்து உருவாக்கப் பட்ட கோட் பாடுகளைச் சூழமைவுக் கோட்பாட்டாளர்கள் நிராகரித்து விடுகின்றனர்.
எங்கள் நாட்டைப் பொறுத்த வரை வளமான நாட்டார் கலை மரபுகள் காணப்பட்டாலும், ஆங்கிலக் கல்வியின் நேர்ப்பண்புகளும் எதிர்ப்பண்புகளும் அவற் றரின் ஆய் வையும் அணுகுமுறைகளையும் பாதித்தன. எதிர்ப்பண்பு என்று கூறும் பொழுது ஆங்கிலக் கல்வி முறையிலும் , கலைத் திட்டத் தரிலும் , சுதேசக் கலைகளுக்கும், நாட்டார் மரபுகளுக்கும் உரிய இடம் தரப்படவில்லை. மறுபுறம்

Page 16
ஆங்கிலக் கல வரியின் நேர்ப் பரிமாணங்களில் ஒன்று, ஆங்கிலம் கற்ற ஒரு சாராரிடத்து முகிழ்ந்த தேசிய உணர்வும் நாட்டார் கலைகளை நோக்கிய வளமான அணுகு முறைகளுமாகும்,
எமது பாரம்பரியத்தில் உருவான நாட்டார் கலைகளையும் இலக்கி யங் களையும் அடியொற்றிய கோட்பாட்டாக்கங்கள் இடம் பெறாமை ஒரு பெரும் அறிகை இடைவெளியை எமது சூழலில் ஏற்படுத்தியுள்ளது. மேலை நாடுகளில் உருவாக்கப் பட்ட நாட்டாரியற் கோட்பாடுகளைக் கண்மூடித்தனமாக எமது நாட் டார் இலக் கரியங்கள் மீது பிரயோகித்தலும் சில சந்தர்ப்பங்களிற் பொருண்மையற்றதாகி விடுகின்றது.
யாழ்ப்பாணத்து நாட்டார் கதைகளை மாத்திரம் நுணுகி நோக்கும் பொழுது, தனித்துவமான நாட் டாரியலில் கோட்பாட்டினை உருவாக்குவதற்குரிய சாத்தியப்பாடுகள் புலப்படுகின்றன. அக் கோட்பாட்டுக்கு 'இருவீச்சுக் கோட்பாடு' என்று பெயர் குறிப்பிடலாம். இதன் விரிவு என்னவெனில் யாழ்ப்பாணத்து நாட்டார் கதைகளில் பழமையான அறிபரப்புக்களை (TEXT) அடிப்படையாக வைத்துப் புதியன
சொல்வதும், புதிய அறிபரப்புகளைப் பயன்படுத்திப் பழையன சொல்வதுமான இரு வீச்சுக்கள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத து வாழ்க் கை முறையிலும் இந்த இரு நிலை வீச்சுக்கள் காணப்படுகின்றன. பழையனவற்றைப் பயன்படுத்திப் பழையன கொள்ளலும், காணப்படுகின்றன. எடுத்துக் காட்டு ஒன்று சொல்வதானால் பழைய மனையடி நூலை அடிப்படையாகக் கொண்டு புதிய வீடமைப்புக்கள் பேசப்படுகின்றன. புதியன செய்வதற்குப் பழைய சடங்கு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக மாட்டுப் பொங்கலில் மாடுகளுக்குச் செய்யப்படும் சடங்குகள் இன்று உழவு இயந்திரங்களுக்குச் செய்யப்படுகின்றன.
இவ் வகையான இருவீச்சு நிலைகள் ஐரோப்பிய நாடுகளில் இல்லையென்றே கூறவேணி டியுள்ளது. உலகளாவிய நாட்டாரியல் ஆய்வாளர்களுக்கு யாழ்ப்பாணத்துச் சூழல் வித்தியாசமான அனுபவங்களைக் கொடுக்கும்.
.."
orang
மல்லிகை ஆண்டுச் சந்தா சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள் 37வது ஆண்டு மலர் தேவையானோர் தொடர்பு கொள்க. ஆண்டுச் சந்தா 250/- தனிப்பிரதி 20/- தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13. தொலைபேசி: 320721 FE-Quouflsû: panthalQsltnet.lk. (காசுக் கட்டளை அனுப்புவோர் Dominic Jeeva Kotahena, P.O எனக் குறிப்பிடவும்)
ഗ്

அச்சுத்தாளின்
9SZILITáb
ஓர்
அநுபவப் பயணம்
டொமினிக் ஜீவா
மல்லிகையின் ஆரம்பக் கால கட்டங்களில் பொருளாதார ரீதியாக நான் ரொம்பவும் பாதிக்கப்பட்டு, நொந்து போய்விட்டேன்.
இருந்தும் மன ஓர்மம் என்னை அயராது செயற்பட வைத்தது.
தினசரி எனது பரம்பரைக் கைத்தொழில் முயற்சியின் மூலம் அந்தக் காலத்திலேயே நாற்பது ரூபா அளவுக்கு மேல் வீட்டுச் செலவுகளுக்கும் எனது தனிப்பட்ட தேவைகளுக்குமாகவும் சம்பாதிக்கக் கூடிய வருமானம் வந்து கொண்டிருந்தது.
இந்தத் தினசரி இயல்பான வருமானம் எனது சஞ்சிகை முயற்சியால் சுருங்கிப் போய் தடைப்பட்டுப் போனது.
சில தினங்களில் வீட்டுச் செலவுகளுக்குக் கூடப் பணம் இருப்பதில்லை.
எனது நெருங்கிய இனத்தவன் ஒருநாள் கச்சேரியடியில் என்னை நேருக்கு நேர் சந்தித்த சமயம் கேள்வியே கேட்டுவிட்டான்: "இப்படித் தெருத் தெருவாகப் பிச்சைக் காரன் மாதிரிப் பிச்சை கேட்டுத் திரிவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? எனக் கேலி கலந்த தொனியில் கேட்டு வைத்தான்.
"இதெல்லாம் இப்போ எங்கே உனக்கு உறைக்கப் போகிறது? காலா காலமாக எங்கட ஆமான தொழிலை நடுவிலே விட்டுப் போட்டு, சும்மா விசரன் கணக்காய் தெருத் தெருவா அலைஞ்சு திரிவது தான் கடைசியிலை உனக்கு மிஞ்சப் போகுது’
நான் என்னை அர்ப்பணித்து, போராடி இயங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சுய வாழ்வு இலக்கிய வேள்வி பற்றி எனது இன சன சுற்றத்தவர்களிடம் கூட, அந்தக் கால கட்டத்தில் இப்படியொரு அபிப்பிராயமே மேலோங்கியிருந்தது.
நான் செய்து கொண்டு வருவது அத்தனையுமே பைத்தியக்காரனது வேலை என்பது அவர்களினது கூட்டு மொத்த அபிப்பிராயமாகும்.
“வெறும் கையாலாகாத விசரன், காலம் காலமாக வயித்துக்குச் சோறு போட்ட தொழிலை விட்டுப் போட்டுச் சும்மா தெருத் தெருவா பேப்பர் வித்துக் கொண்டு
《༼2ཉེ།།

Page 17
திரியிறான். அங்கையெண்டால் இவனை நம்பி இருக்கிறதுகள் வயித்துக்கில்லாமல் செத்துக் கொண்டு கிடக்குதுகள்!”
இப்படியான விமரிசனங்கள் எனது காது படச் சொல்லப் பட்டன.
இரணி டு பெண் குழந்தைகள். அப்பொழுது எனது ஒரே மகன் திலீபன் பிறந் தருக்கவில் லை. மனைவி குழந்தைகளைக் கூட கவனித்து அவர்களது சுக சேமங்களை விசாரிக்கக் கூட நேரம் ஒதுக்காமல் எந்த நேரமும் மலி லிகை பற்றியும் அதன் பொருளாதாரச் சரிவுகளை எப்படி எப்படி நேர் செய்து நிமிர்த்தலாம் என்பது பற்றியுமே சதா சிந்தித்த வண்ணம் திரிந்து கொண்டிருந்தேன்.
இரவில் தூக்கமே வருவதில்லை பல இரவுகள் படுக் கையரில் புரண் டு எழுவதுதான் நடந்தேறின. கனவுகள் அடிக்கடி வந்து என்னைப் பயமுறுத்தின.
வளரிளம் பருவத்தில் நான் பல கனவுகளுக்கு ஆட்பட்டிருந்தேன். அந்தக் கனவுகளில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுமிருந்தது. கனவுகள் இல்லையென்றால் எனது பிற்கால வாழ்க் கையே திசை திரும் பிப் போயிருக்கும்.
அந்த இலட்சியக் கனவல்ல இது.
இது யதார்த்தத்தின் பிசாசு வடி வத்தைப் பூடகமாகக் காட்சிப் படுத்தும் கனவுகள் இவை.
பாறாங் கற்களின் இணி டு இடுக்குகளுக்கிடையே துளிர் விட்டு முளைக்கும் ஒற்றைச் செடியைப் போல
3O
இந்த வரட்டு மண்ணில் முகிழ்ந்திருக்கும் மல்லிகைக்கு தினசரி எனது அசுர உழைப்பால் பசளையிட்டு நீர் ஊற்றிக் காமாந்து பண்ணி வந்தேன்.
மல்லிகைச் சுவைஞர்கள் அதன் தொடர் எழுத்தாளர்களை விட, மேலானவர்கள் . வெகு வெகு கூர்மையானவர்கள். வாசிப்புக் கிரகிப்பு நுட்பம் வாய்க்கப் பெற்றவர்கள்.
இந்தப் பேரறிவைத் தெளிவாகப் புரிந்து கொண்ட காரணத்தினாலேயே அவர்களது தார்மீக பலத்தை வெகுவாக நம்பி நான் மல்லிகை இதழ்கள் ஒவ்வொன் றையும் வெளியிட்டு வந்துள்ளேன்.
மல்லிகையின் முகப்பில் ஆரம்ப காலம் தொட்டே எனது பெயரை ஆசிரியராகப் பதிவு செய்து வந்திருந்த போதிலும் கூட, அதன் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பலர் பங்கு கொண்டு எனக்கு ஒத்தாசையும் ஒத்துழைப்பும் இன்று வரை நல க அதைச் செழுமைப்படுத்தி வருகின்றனர்.
இந்த நம்பகத் தன்மை தான் upsosô60pasulsöT Ljsoub.
எழுத்தை எனது போராட் டக் கருவியாக நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட காலத்திலிருந்தே ஏதோ ஒரு வெறி என்னை ஆட்கொண்டு இதுவரை வழிநடத்தி வந்துள்ளது.
என் நெஞ்சுக்குள் ஏதோ ஓர் ஓர்ம உணர்வு என் னைத் துTணர் டிக் கொண்டேயிருந்தது.
நான் சரியான திசை வழியில் தான்,

வழித் தடத் தில் தான் போயப் க் கொண்டிருக்கிறேன் என்பதாக அந்த உள்ளுணர்வு தினசரி எனக்குக் கட்டியம் கூறியது.
ஓராண்டு காலத்தை எப்படித்தான் கடந்து முடித்தேனோ என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
அரசியல் கருத்தாலும் தத்துவார்த்த நோக்கினாலும் மாறுபட்டிருந்த பல தோழர்களை நான் அண்டியனைத்துச் சென்று கொண்டிருந்தேன். கருத்தாலும் பார்வையாலும் மாறுபட்டவர்களின் கருத்துக்களையும் எழுத்துக்களையும் மல்லிகை இதழ்களில் பதிவு செய்து வந்ததுடன், கணிசமாக அவர்களது உருவங்களை அட்டையிலும் பதிந்து ஆவணப்படுத்தியுமிருக்கிறேன்.
ஒரு தடவை மல்லிகைக் காரியால யத்திற்குப் பேராசிரியர் கைலாசபதி நேரில் வந்திருந்தார். கட்டுரை ஒன்றும் நேரடியாகத் தந்தார். 'ஜீவா. ஒரு காலத்தில் 'தினகரன் ஆசிரியருக்கு என முகவரியிட் டு எனக் கு நீங்கள் ஆக்கங்களை அனுப்பியிருந்தீர்கள். இன்று நான் மல்லிகை ஆசிரியர் என விலாசமிட்டு உங்களிடம் கட்டுரை தருக றேன் . இதை நினைத் து உண்மையாகவே நான் பெருமைப் படுகின்றேன். யாழ்ப்பாணச் சமூக மாறுதல்களின் ஒரு கால கட்டக் குறியீடு இது!’ என்றார்.
நணி பர் ஏ.ஜே. கனக ரெட் னா என்னையும் மல்லிகையையும் வழி நடத்துவதில். முக்கிய பங்கு வகித்து வந்தவர்.
3.
அச் சுப் படிவங்களை வெகு கூர்குறிப்பாகத் திருத்தித் தருவார். அதன் குறை நிறைகளையும் நேரடியாக விமரிசனம் செய்வார்.
கனக செந்திநாதன் வராத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் என்னைத் தேடி மல்லிகைக்கு வந்து விடுவார். நான் ஏதோ ஒரு கட்டத்தில் எழுத்தில் குறிப்பிட்டது போல, காலை பத்து மணிக்கு ரசிகமணி, பண்டித மணியுடன் இருப்பார். பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் மல்லிகைக் கந்தோரில் காட்சி தருவார். சாயங்காலம் மூன்று மணிக்கு அவர் புல்லுக் குளத் துக்கருகே உள்ள றிகல் தியேட்டரில் இங்லிஷ் படம் பார்க்க வரிசையில் நின்று கொண்டிருப்பார்!
இதைப் போலப் பலர் மல்லிகையைத் தேடி வந்த வண்ணமேயிருப்பார்கள்.
நாட்கள் இலக்கியச் சுவையுடன் நகர்ந்து கொண்டேயிருந்தன.
ஒரு நாள் காலை ஒன்பதரை மணி இருக்கும். ஒன்பதாவது ஆண்டு மலரை முடிப்பதில் வெகுமும்முரமாக வேலை செயப் து கொணர் டிருந் தேனி , அச்சுக்கோப்பவர் தம்பி சந்திரசேகரம் வெற்றிலை மென்று கொண்டே தனது சிம்மாசனத்தில் வீற்றிருப்பார். நான்தான் மற்ற வேலைகளை கவனிக்க வேண்டிய சிற்றுாழியன். ஆக இரண்டு பேர்கள்தான் மல்லகையை நிர்வாகித்த உழைப்பாளி ஊழியர்கள்.
வேலை மும் முரத்தில் காலைச் சாப்பாடு உண்ண மறந்து போய். காலையில் பருகிய பிளேன் டியுடன் வேலை செய்து கொண்டிருந்தேன்.

Page 18
ஒருவர் என்னைத் தேடி வந்தார். என்னதான் தலைதெறிக்கிற வேயைாக இருந்த போதிலும் கூட, மல்லிகையைத் தேடி வருபவர்களை நான் வெகு பெருமையாகவும் மரியாதையாகவும் வரவேற்பது வழக்கம்.
வருபவர்களைக் கனம் பண் ணி வரவேற்பது வியாபார தந் தரம் மாத்திரமல்ல, அந்த அமைப் பின் முக்கியஸ்தர்கன் சுயமதிப்பையும் அது மேன்மைப்படுத்தி விடும் என்ற உண்மை பலருடன் பழகியதால் என்னுள் படிந்து விட்ட பழக்கமாகும்.
எனவே வந்தவரை உட்கார வைத்து
வெகு ஆறுதலாகப் பேசிக கொணி டிருந்தேன். அவரோ இலக் கரியத் தைத் தவிர, வேறு
எதெல்லாமோ புகுத்தி விஸ்தாரமாகக் கதையளந்து கொண்டிருந்தார்.
எனக்கோ வேலை நெருக்கடி.
அரட்டை யடிக் க (Լp լգ Աl It 5 வேலைப்பளு. தம்பி சந்திரசேகரம் எனது மன அவஸ்தையைப் புரிந்து கொண்டு. கண்களால் சைகை செய்கிறார்.
தேடிவந்தவரை எப்படிப் புறக்கணித்து விரட்டுவது என்ற தர்மசங்கட நிலை எனக்கு. ஒரு கட்டத்தில் பெறுமையிழந்து, வந்தவரிடம் “சரி, பாருங்கோ! நீண்ட நேரமாப் பேசிக்கொண்டிருந்து விட்டோம். இப்ப சொல்லுங்கோ, என்ன காரியமா என்னைத் தேடி வந்தனிங்க? ”
அவர் ஆசனத்தில் காலை நீட்டி உட் கார்ந்து வெகு ஆறுதலாக
·Z3ဂဲ`လျှာ
சொன்னார்! “இல்லைப் பாருங்கோ. வின்ஸர் தியேட்டரில் இண்டைக்குப் புதுப் படம் பார்க்க வந்தனான். படம் துவங்க நேரம் கிடக்கு. அதுதான் உங்களையும்
ஒருக்கா பார்த்துக் கொஞ்ச நேரம்
கதைச்சுப் போட்டு போகலாம் எண்டு உங்களைத் தேடி வந்தனான்!”
சொல்லப் போனால் இப்படியாக பல அநுபவங்களை எடுத் தெடுத்துச் சொல்லலாம்.
(up 356) T6) göl ஆணர் டு tᏝ 6Ꭰ 60Ꭰ Ꭻ
வெளியிட்டு வைத்தேன்.
மல்லிகையின் தொடர் வரவும் அதன் வளர்ச்சியும் மல்லிகையின் வரவை விரும் பாத பலரினது tᎠ 6ᏡᎢ 60Ꭰ 8Ꭶ உறுத்துவது மாதிரித் தெரிந்தது.
மலரினப் பட்டு விடாத எளிமை. உள்ளடக்கம், புதிய அணுகுமுறை. பார்வை வீச்சு அத்தனையும் சேர்ந்து சிற்றிலக்கிய ஏடுகளில் மல்லிகை புது
இரத் தம் பாய் ச் சி முன்னேறத் தொடங்கியது.
ஓராணி டு காலம் எப்படியோ
உருண்டோடி விட்டது.
இந்த ஒரு வருஷ காலத்திற்குள் நான் பட்டுவிட்ட பாரிய சிரமங்களை இன்று நினைத்துப் பார்த்தால் கூட, நெஞ்சு சிலிர்க்கின்றது.
இலக்கியச் சஞ்சிகை ஒன்றுக்கு இந்த முதல் ஓராண்டுக் கால கட்டப் பால பருவம் முக் கயமானது. இந் தக் காலகட்டத்தை இழுத்துப் பிடித்து நிலை நிறுத்தி நின்று பிடித்துவிட்டால் அப்புறம்

சமாளித்து நிலைத்துவிடலாம் என்பது அனுபவ உண்மையாகும்.
கைக் குழந்தைப் பருவத்தில் சின்னஞ் சிறுவர்களைத் தாக்கும் நோய்க்கு ஒரு குழந்தை எப்படித் தாக்குப் பிடித்து உயிர் பிழைத்து நின்ற பிடிக்கின்றதோ அப்படியே தான் ஒரு சிற்றிலக்கிய ஏடும் தனது குழந்தைப் பருவத்தைக் கஷ்டப் பட்டுக் கடந்து வந்துவிட்டால், ஓரளவு நின்று நிலைக் கக் கூடும் என்ற ஆரோக்கியமான கட்டத்திற்கு நாம் வந்துவிடலாம்.
இந்த மூன்று த ஸாப் த கால மல்லிகையின் அன்றைய கால கட்டம் இருந்தது.
இந்த நூற்றாண்டுக் கால கட்டங்களில் எனக் கேற் பட்ட மறக் க முடியாத அநுபவங்கள் வெகு சுவாரஸ்யமானவை.
மல் லீகை முடிந்ததும் யாழ் ப் பாணத்திலுள்ள ஒரு பிரபல புத்தகக் கடைக்கு நேரே நானே கொண்டு சென்று, கல்லாவில் உட்கார்ந்திருக்கும் அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வருவேன்.
யாழ்ப்பாணத்தில் அந்தக் காலத்தில் கல்கி, கலைமகள் போன்ற பிரபல சஞ்சிகைகளுக்கு அந்த நிறுவனம்தான் வட மாகாணம் பூராவுக் கும் ஏக விநியோகஸ்தர்.
எனவே பத்தோடு பதினொன்றாக மல்லிகை இதழ்களிலும் சில பிரதிகள் விற்பனையாக ட் டும் என்ற கர்வ நினைவுடன் தான் பத்தே பத்துப் பிரதிகளை அவரிடம் சேர்ப்பித்து வந்தேன்.
·Z3၆`Q
அடுத்த இதழ் கொண்டு செல்லும் பொழுது முன் னர் கொடுத் து வைத்திருந்த பத்துப் பிரதிகளையும் வெகு பவ்வியமாகத் திருப்பித் தந்தார் முதலாளி. திருப்பித் தந்ததுடன் நில்லாமல், "இதெல்லாம் மினைக் கெட்ட வேலை. ஆராவது சினிமாக்காரிகளின் படத்தை அட் டையில் போட்டு அவையளைப் பற்றி கிசுகிசு எழுதிப் போட்டால் நல்லா விக்கும்!” என இலவச ஆலோசனையும் தந்துதவினார்.
அடுத்த மாத இதழை அவரிடம் சேர்ப்பிக்கும் பொழுது சஞ்சிகையை நூலால் சுருக்கு முடிச்சுப் போட்டுக் கொடுத்துவிட்டேன்.
அதற்கடுத்த மாதம் புதுப்பிரதிகளுடன் சென்ற பொழுது "இதிலை ஒனடு கூட விக் கேல் லை. இடத்தை மரினக் கெடுத்தினது தான் மிச்சம்!” எனப் புறுபுறுத்தபடி திருப்பித் தந்தார்.
நான் வாங்கி உற்றுப் பார்த்தேன். நான் நூலால் போட்டு வைத்திருந்த சுருக்கு முடிச்சு அவிழ்க்கப் படாமலே கட்டினது கட்டின மாதிரியே இருந்தது.
எனக்கு நெஞ்சு பதறியது. திருப்பித் தந்தது கோபமல்ல. இப்படியாக மாதக் கணக்காக ஏமாற்றப் பட்டு வந்த ஆவேசம் மனசுக்குள்.
“இனிமேல் நான் மல்லிகையைக் கொண்டு வந்து தரமாட்டன். நீங்கள் ஒரு நாளைக் குக் கணிகளை மூடலாம். அப்போ அந்தக் கல்கி ஆசிரியரோ, கலைமகள் ஆசிரியரோ உங்கட வீடு தேடி வரமாட்டார்கள். இந்த மல்லிகை

Page 19
ஆசிரியர் தான் உங்கள் வீட்டுப் படிக்கட்டில் ஏறி வருவான்’
எண்ணி ஒரு வருஷமாகவில்லை. எனது வாக்குப் படிதான் நிகழ்ந்தது.
ஈழத்து இலக் கரியச் சஞ்சிகை களையெல் லாம் நிராகரித்து, இருட்டடிப்புச் செய்து வந்த அந்த விநியோகஸ்தரின் இறுதிச் சடங்கில் நான் கலந்து கொணர் டேன் , இறுதி அஞ்சலியைத் தெரிவித்தேன்.
சுடலையை விட்டுத் திரும்பும் போது அவரது மகனிடம் “நீங்க இந்த மண்ணில வேரூனி ட வைச் ச சென்னைப் பத்திரிகைக்காரன் ஒருவன் கூட இங்கே வரவில்லை. இந்த மண்ணிலை வேர்விட்டு வளருற மல்லிகையின் ஆசிரியர் தான் உங்கட அப்பருடைய கடைசி வழிய னுப்புதலிலை பங்கு கொள்ளுறான்!”
இப்படியொரு அநுபவம் எனக்குக் கொழும்பு மாநகரத்திலும் நிகழ்ந்தது.
முதலாவது ஆண்டு மலர் 100 பிரத களைக் கொழும் பரிலுள்ள இலங்கைக்கான பிரதிகளை இறக்குமதி செய்யும் விநியோகக் கம்பெனிக்கு அவசர அவசரமாக அனுப்பி வைக்கும் படி குருசுவாமி அண்ணாச்சி தொலைபேசியில் தகவல் தந்தார். இவர் உணவுப் பண்டங்கள் இறக்குமதி செய்யும் வியாபாரச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இலக் கய நெஞ் சம் கொண்டவர். அற்புதமான மனிதர். கொழும் பு வந்தால் மெலிபன் வீதியிலுள்ள இவரது நிறுவனத்தின் மேல் மாடியில் தங்குவது தான் என் வழக்கம்.
நானும் சூழ்நிலைக்குத் தக்க மாதிரி 100 மலர்களை லொறியில் அனுப்பி வைத்தேன்.
ஒரு வாரத்திற்குப் பின்னர் வழமைப்
பf ரகாரம் கொழும் புக் கு நான் பிரயாணப்பட்டேன்.
அங்கு சென்றதன் பின்னர் தான்
எனக்குத் தகவல் தெரிந்தது. மகன் தான் குருசுவாமி அணி னாச் சியரின் வேண்டுகோளுக்கமைய மல்லிகை இதழ்களைப் பெற்றுக் கொண்டு கொழும்பில் விநியோகித்து விட்டானே தவிர, உரிமையாளரான தகப்பன் சென்னையிலிருந்து திரும்பியதும் கடைக்குக் கடை விநியோகித்திருந்த அத்தனை மல்லிகை இதழ்களையும் திரும்பப் பெற்று குருசுவாமி அண்ணாச்சி கடையில் சேர்ப்பித்து விட்டான்.
குருசுவாமி அண்ணாச்சி கடையில் சஞ்சிகை அனுப்பி வைத்த பார்சல் பொதிதான் என்னை வரவேற்றது.
இந்த அனுபவத்திலிருந்து ஒன்றைப் புரிந்து கொணர் டேன் . சுரணர் டிக் கொழுப்பவன் எங்கிருந்தாலும் சுரன்டித் தின்னுபவன் தான்!
அவன் தமிழ் நாட்டானானாலும் சரி. ஈழத்துத் தமிழனாக இருந்தாலும் சரி எல்லோரும் ஒரே இனத்தவரே!
இந்தக் கசப்பான அநுபவத்தின் பின்னர் புத்தகக் கடைக்காரர்களை நான் நம்புவதில்லை. எனது உடல் உழைப்பை நம் u யே தனசரி செயற் படத் தொடங்கினேன்.
(மீண்டும் சந்திக்கிறேன்)

Kà கடிதங்கள் வருடந்தோறும் உறுதியாகும் வாடா மல்லிகை.
பாணி டிய மன்னன் ஒருவனுக்குத் தன் மனையாளின் கூந்தலின் மணம் இயற்கையானதா? செயற்கையானதா? என்பது குறித்துச் சந்தேகம் எழுந்தமை தமிழிலக்கியக் காட்சி. ‘அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு வாடைக்குள் மாறிவிடும்’ என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள்.
ஆனால் - நம் நாட்டில் மாதாந்தம் மலரும் 'மல்லிகையோ சந்தேகத்திற்கிடமின்றி என்றும் மணம் வீசிக் கொண்டேயிருக்கும் வாடா மல்லிகையாக வரலாறு படைத்து வருகின்றது. இதனை வருடந்தோறும் வெளியாகும் ஆண்டு மலர்கள் உறுதி செய்து கொண்டேயிருக்கின்றன. இப்போது வந்திருக்கும் 38வது ஆண்டு மலர், இவ்வருடமும் இன்னொரு முறை ஊர்ஜிதம் செய்யப் போகிறது.
"மல்லிகை இலங்கைத் தமிழிலக்கிய - பத்திரிகை - சஞ்சிகை வரலாற்றில் தனியிடத்தைத் தனதாக்கிக் கொண்ட ஒர் இலட்சிய மாசிகையாகும். பக்கத்தேயிருக்கும் பென்னம்பெரிய நாடொன்றின் கலை - இலக்கிய மேலாதிக்கத்தின் முன்னே "மல்லிகை" தொடர்ந்து 37 வருடங்களைப் பூர்த்தி செய்து, இவ்வருடம் 38வது ஆண்டு மலரினை சான்றோரின் சங்கப் பலகையில் சமர்ப்பிக்கப் படும் என்றால் அது விதந்தேற்றத் தக்க சாதனையாகும்.
‘மல்லிகை" - நம் நாட்டில் தனக்கென்றொரு இலக்கியப் பாரம்பரியத்தை ஏற்படுத்திக் கொண்டமை மட்டுமன்றி ஒரு பரம்பரையையும் உருவாக்கியிருப்பது இலக்கிய உலகிற்கு ஓர் நிரந்தரத் தகவலாகும். இந்த வளர்ச்சியின் வடிகாலாய், உயர்ச்சியின் உந்து விசையாய்த் திகழ்பவர் யார் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. "மல்லிகை’ என்றாலே அப்பெயர்ச் சொல்லின் அர்த்தமாக இருப்பவர் மூத்த இலக்கியவாதியான அன்பர் டொமினிக் ஜீவா என்ற தனி மனிதரே என்றால் அது பொய்யோ - புரட்டோ அல்ல.
மிகவும் இக்கட்டான - நெருக்கடியான - பயங்கரமான சூழல்களில் எல்லாம் ஜீவா ஒரு தவமாகவும் - வெறியாகவும் இந்த மல்லிகையை வெளிக் கொணர்ந்த விடா முயற்சி, பிறர் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கது.
"குன்றா உழைப்பும் குறையா முயற்சியும் என்றும் எதையும் சாதிக்கும்’ என்ற வரிகளுக்கு நம் காலத்தில் நாமறிந்த உதாரண புருஷர் சகோதரர் ஜீவா தான்.
இன்னொரு விடயத்தையும் இங்கு தொட்டுக் காட்டுவது சாலவும் நன்றாகும். சம கால இலக்கியத்தை சந்தன மனமாகக் கமனச் செய்யும் இந்த மல்லிகை அதன் தரத்தைப் பேணி வருவது சிறப்பம்சமாகும். இந்தத் தரமும் - அதற்கு வாசகர் வட்டம் வழங்கிவரும் உரமுமே மல்லிகையை ஒரு வாடைக்குள் வாடிவிடாமல், நாளாவட்டத்தில் நலிந்து போய்விடச் செய்யாமல், மாதங்களின் மடிப்பில் மறைந்து போகச் செய்யாமல் ஆண்டுகளின் ஆரவாரத்தில் அமிழ்ந்து பொய்விடச் செய்யாமல் -
35

Page 20
வருடங்கள் தோறும் 6 TU மல்லிகையாகக் காத்து வருகிறது எனலாம்.
இப்பணி சிறக்க வேண்டும்; சீர்பெற வேண்டும்; அதற்கு இலக்கிய உலகின் இலட்சிய இதயங்கள் என்றும் பிரார்த் திக்கவே செய்யும்.
அல்ஹாஜ்.ஏ.எச்.எம்.அஸ்வர். (si suo di si) LS
தங்களது மல்லிகை பெப்ரவரி மாத
இதழ் என் கரங்களை வந்ததடைந்தது. இம்முறை எனக்கு இவ்விதழில் அடங்கிய விடயங்கள் பலமுறை திருப்பித் திருப்பி வாசிக்க தூண்டிக் கொண்டிருக்கிறது.
இலங்கையிலே தற்பொழுது எழுதுபவர்கள் தொகை மிக அதிகம். ஆனால், வாசிப்பவர்கள் தொகை மிக அருகிவிட்டது. தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மட்டத்தில் தரக்குறைவான சினிமாப்படம் பார்ப்பது, ஆபாச சஞ்சிகைகளை வாசிப்பது
பழக்கமாகிவிட்டது. இவர்களது எதிர்காலம்
எங்கே போய் முடியும் என்பதும் ஒரு கேள்விக் குறி.
கம்பவாரிதி இ. ஜெயராஜ் தங்கள் மல்லிகை அட்டைப் படத்தைச் சித்தரிக்கும் வகையிலே ஈழத்தின் தலைசிறந்த புரட்சிக் கவிஞர் புதுவை இரத்தினதுரை தம்மை அறியாதவர்கள் அறியும் வகையிலே காலத்தின் தேவை அறிந்து அவரைப் புதியவர்களுக்கு அறியத்தந்துள்ளார்.
தாம் பிறந்த மண்ணின் நலன் காத்து வரும் புரட்சிக் கவிஞர் புதுவை படிக்காதவர்கள் படிப்பித்த பக்கங்கள் என்னும் தலைப்பிலே உடுவை எஸ். தில்லை நடராஜா தனது தந்தையாரின் அன்பு அரவணைப்பில் வளர்ந்து தான் கற்றுக் கொணி ட பாடங்கள் பலவற்றை
தங்கள்
܂ܠܘ23
நினைவுகூர்ந்து மல்லிகை வாசகர்களுடன் பகிர்த்திருக்கின்றார். இதிலே வயது முதிர்ந்த காலத்திலே எம்போன்றவர்கள் கற்றுக் கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அம்சங்கள் பல பொதிந்து நிற்கின்றன. இதனை இளந்தலைமுறைகள் கற்றுத்தெளிந்து மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
தங்கள் அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப்பயணம் எனும் விடயத்தையும் வாசித்துத் தெளிந்து கொள்ளும் வருங்காலச் சமுதாயம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் எனும் விதத்திலே தங்கள் வாழ்க்கையைத் தொடர நெறிப்படுத்தி நிற்கின்றது. தங்கள் கடின உழைப்பையும் இளமைக் கால முதல எழுத்தார்வத்தையும், நன்கு எனது இளமைக்காலம் முதல் அறிந்தவன் யான்.
ஜாதிக் கொடுமையினாலே தான் எங்கள்
தமிழ் சமுதாயம் சீரழிந்தது. இவைகள் எம்
மத்தியில் அழித்தொழித்து பிறந்த மண்ணின் புகழ்பாடிக் காத்து நிற்க இன்னும் பல புதுவை இரத்தினதுரைகளும் டொமினிக் ஜீவாக்களும் தோன்றிட மல்லிகை தாங்கி வரும் செய்திகள் வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாழ்க தங்கள் மல்லிகையின் தமிழ்ப் பணி இலக்கியப் பணி என வாழ்த்துகின்றேன். மல்லிகையை வாழ்த்துவது மறத்தமிழன் கடமையன்றோ!
-வேலணை வேணியன
தொண்டைமானாறு
25 - 2 - O3 மல்லிகை ஆசிரியர் அவர்களுக்கு
மலர் கனதியாக உள்ளது. அதில்
வெளிவந்த கட்டுரைகள் ஒவ்வொன்றும்
தத்தம் பாங்கில் பல விஷயங்களைச்

சொல் லின. சில மேலோட் டமாக எழுதப் பட்டிருந்தாலும் U6) அருமையானவை. நாடக வளர்ச்சி பற்றிய கட்டுரையும் M.C பற்றிய கட்டுரையும் விரிவாக இருந்தன. தாமரைச் செல்வியின் விடை கொடுக்கும் விலங்குகளும், வீடு திரும் பும் மனிதர்கள் மனதை நெகிழ்த்தியது. இவ்வனுபவங்களை மேலும் தன் படைப் பாக்கத்தில் வெளிப் படுத்துவாரென எதிர்பார்க்கின்றேன்.
கதைகளைப் பற்றி ஒன்று சொல்லலாம். (பெண்,முஸ்லிம் எழுத்தாளர்களுடையதைத் தவிர்த்தால்) வெளியான நாலு கதைகளில் மூன்று 'சாதியத்தை கூறுகின்றன. இது சற்று - அளவு ரீதியில் மிகை என்றே எனக்குப்படுகிறது. "மல்லிகைக்கு எழுத வேண்டும் என்றால் இதைத் தான் எழுத வேண்டும் என நம் எழுத்தாளர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ?
மலர் பல விடயங் கல) எாயும்
உயிர்த் துளிகளை அள்ளி வழங்கிவிட்டிருந்தது வானம் சோமாலியமாய்க் கிடந்த புவிக்கு.
உள்ளடக்கியிருந்தது (கட்டுரைகளில்) வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள்.
அன்புடன்
சடாட்சரதேவி - குந்தவை
மாசிஇதழில் இந்தியாவில் நடந்த கொடுமை (தலித்மக்களுக்குமலம், சிறுநீர் ஊட்டியது) குறித்து எழுதியிருந்தீர்கள். எமது சொந்த மண்ணில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடிவதை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகsi அதைவிடக் கேவலமானது. வாயால் பிசால்ல முடியாது. எழுத முடியாது. கேட்டால் நம்பமுடியாது. இது தேவையா?
தமிழ் சகோதரர்கவே இப்படிச் செய்வது எமக்கு தலைகுணிவு. இதை படைப்பாளிகள் பகிரங்கமாக எதிர்த்து பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் அறை கூவல் விடுக்கவேண்டும் - இது எனது வேண்டுகோள்.
எஸ். ஆர். பாலச்சந்திரன
ரீட்டில் களி
குணர்டெறிந்து விளையாட சில்லிட்டு ஒரு சிறு தளம் சிலிர்த்தது நீட்டில் இன்று நாங்கள்
8Gd ஒருமிந்து எனக்கு இது வரைதல் நாணி பாட்டிக்கும் இது எதிர்த்துத் தோற்றோம் கியூசையோடு குந்தி தேவையாகிட்டு மணிவெட்டியும் இரேகை ஓவியம் வரைய பனி உலர்க்க. மாங்கள்ாறுமாய் வந்த 女 * நாத்தாவை
紫
எண் தம்பிக்கு 8னைவருக்கும் அது ஒரு 'சிலேட்' இடபயோகமுற முடியாமல் ສີບໍນີ້ມnຫຼັງ
நிகைந்த நிட்டில் தாக்கா இங்கில்லை
நகர்ந்தது நிழலிலிருந்து இயலத்துச் சிரார்களுக்கும் எங்களின் வெஞ்சினத்தில் பழங்கள் இடணிகிறோம் பலகை வைத்து நாங்கள் தான்!
《༨༼3ཏེ།།

Page 21
JD665Dis 38ஆவது ஆண்டுமலர்
"லக்ஷ்மி’
2003 ஆம் ஆண்டு ஜனவரி இதழ் மல்லிகையின் 38ஆவது ஆண்டு மலராக மலர்ந்துள்ளது. பொதுவாக இலக்கிய சிற்றேடுகளின் சீவிய காலம் மிகச் சொற்ப ஆண்டுகளே. ஆயின் இம்மண்ணின் மல்லிகை மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து முப்பத்தெட்டு ஆண்டுளைக் கடந்து வந்துள்ளது ஒரு சாதனை என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. இவ்வகையில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் உறுதிப் பாடும் , 26ll 35 35 (up L5, உழைப்பும் விதந்துரைக்கத்தக்கதே. தவிரவும் இவர் ஒரு மல்லிகைப் பந்தல் போடடு நமது எழுத்தானர்களின் படைப்புகளை நூலுருவாக்கி வெளியிட்டுவருவதும் யாவரும் அறிந்த விடயமே.
' ~.
மல்லிகை ஆசிரியர் தமது சாதனைகளையிட்டுத் தாமே பகிரங்கமாக அடிக்கடி மார் தட்டிக் கொள்வார் என்று கூறப்பட்டாலும் அதன் பின்னணியைப் புரிந்துள்ளவர்களுக்கு ஒர் இலக்கிய நெஞ்சத்தில் ஊறும் புளகாங்கிதம் 7 புரியாமலா போகும்? 'எப்பொழுதுமே எனக்கான மொழியை நானே உருவாக்கி எழுதுகிறேன்' என்ற அவரது ஆசிரியத் தலையங்கம் இதனைத்தான் புரிய வைக்க முனைகிறது.
தவிரவும் அச்சுத் தாளின் ஊடாக ஓர் அனுபவப் பயணம் என்ற டொமினிக் ஜீவா அவர்களது மற்றுமொரு கட்டுரை அவருக்குள்ள மொழியின் மற்றுமொரு பிரதிபலிப்பாக அமைகிறது. ལོ་
^.
வழமைபோல் இந்த 38ஆவது ஆண்டு மலரும் நமது படைப்பாளிகளின் காத்திரமான சிந்தனைச் செறிவுள்ள கட்டுரைகளையும், சிறுகதைகளையும் கொண்டு கவர்ச்சியோடு மலர்கின்றது.
Z3ဒဲ`လျှာ
 

சமாதானப் பறவையினி பிரசன்னமும், வடக்கும் தெற்கும் கைகளை முன் நீட்டி சந்திக்க முனைகின்ற காட்சியும், அட்டைப் படத்தில் ரமணியின் கைவண்ணம் இக்கால கட்டத்தின் பரதிபலிப்பு.
கட்டுரைகள், இயல், இசை, நாடகம் என்ற பாங்கில் அமைந்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு இலக்கிய நோக்கில் ஈழத்து நவீன கவிதை என்னும் தலைப்பில் கட்டுரை வரைந்துள்ள செ.யோகராஜா, 1930களில் ஈழகேசரி மற்றும் கோ.நடேசய்யர் காலம் முதல் இன்று விடுதலை இயக்கத்தை சார்ந்த பெணி போராளிகள் வரை ஆராய்ந்துள்ளார்.
ராஜ ரீகாந்தன் முத்தமிழில் நாம் இழந்த இசைச்தமிழ் மீள கொண்டு வரப்பட வேண்டும் என வலியு றுத்துகிறார். அற்காக சில ஆலோ சனைகளையும் முன் வைத்திருக்கிறார். இவை பரிசீலிக்கப்பட வேண்டிய வையேயாகும்.
பெண் விடுதலையும் இன்றைய இலக்கிய போட்டியும் குறித்து கட்டுரை வரைந்துள்ள சந்திரகாந்தா முருகா ன நீ தனி பெணி விடுதலையினி அவசியத் தை ஆராய் கினி றார். இலக்கியத் துறையினால் மட்டும் இவ்விடயத்தை எட்டிவிட முடியாது. மனித உரிமை ஆய்வாளர்கள், பெணி னிலை வாதிகள் , சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல்வாதிகள் ஆகிய அனைவரும் இணைந்து
《༼3)།
செயற்பட்டாலே பூரண பெண்விடுதலை கிட்டும் என்ற இவரது கருத்து வரவேற்கத்தக்கதே.
பா.இரகுவரன் ஈழத்தில் நவீன தமிழ் நாடக வளர்ச்சி (வரலாற்றுப் பார்வையில் சில குறிப்புகள்) குறித்து ஆராய நடிகவேள் லடீஸ் வீரமணி ஒர் ‘அறிமுகக் குறிப்பு என்னும் தலைப்பில் அந்தனி ஜீவா எழுதியிருக்கிறார். இலங்கையில் தொலைக்காட்சி நாடகங் களுக்கு போதிய விளம்பர அனுசரணை கிடைக் காத நிலை மை யைச் சுட்டிக்காட்டி இருப்பதோடு அதே வேளை விளம்பரக்காரர்களும் விரும்பும் வகையில் தரமான தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்படவேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
என். சோமகாந்தன் எழுதியுள்ள ‘தமிழ் எங்கே போகிறது? காலத்திற்கு ஏற்ற ஒரு கட்டுரை. இலகு வாசிப்புக்கு இனிமையான ஒன்றெனினும் உள்ள டக்கம் தருவதோ எச்சரிக்கை. அறிஞர்களும் இன்றைய சமுதாயமும் இதையிட்டு நிச்சயம் சிந்திக்க வேண்டும்.
செங்கை ஆழியான் க.குணராசா ஈழத்து முன்னோடி நாவல்கள் (18561940) குறித் து விரிவான ஆய்வுக்கட்டுரையை வரைந்துள்ளார். இலக் கிய மாணவர்களுக்கும் வருங்கால ஆய்வாளர்களுக்கும் இது மிகவும் பயன் தரும் என்பதைக் குறிப்பிடவேண்டியதில்லை.
தொணி டின் மறுவுரு எம்.சி. சுப்பிரமணியம் என்ற கட்டுரையை மா.பாலசிங்கம் எழுதியுள்ளார். பஞ்சமர்களுக்காக அவர் புரிந்த சேவைகளை சாங் கோபாங்கமாக

Page 22
விபரித்துள்ளார். ப.ஆப்டீன் நாவலப் பிட்டியினி கலை இலக் கரிய முன்னோடிகள் குறித்து விபரித்து பெருமிதம் கொள்கிறார்.
'ஈழத்துச் சிறுகதைகள் குறித்து சிற்பி எழுதியிருக்கிறார். எழுத் தாளர்களின் தரமான சிறுகதைகளுடன் வெளியான முதலாவது தொகுதியான ஈழத்துச் சிறுகதைகளின் உதயம் குறித்து தமது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.
மற்றும் கறுப்பின அடிமையின் வரலாறு குறித்து எம்.கே. முருகா னந்தனும் சிந்தனை உலகின் புதிய அலை-யின் நவீனத்துவமும் என்ற தலைப்பில் மு.அநாதரட்சகனும் அழகு. சுப்பிரமணியத்தின் சமூகப் பார்வை குறித்து ஆ.கந்தையாவும் எழுதிய கட்டுரைகளும் மலரை அலங்கரித் திருக்கின்றன.
இம் மலரில் சிறுகதைகளை தெணியான்.செ.குணரத்தினம், மு.பஷர், அணி ன லட் சுமரி இராசதுரை, தாமரைச் செல்வி, ச.முரகானந்தன் ஆகியோர் படைத் து அணி சேர்த்துள்ளனர். பொ.கருணாகர மூர்த்தியின்(ஜெர்மனி) சுய அனுபவம் சார்ந்த நினைவோட்டச் சிறுகதையும் மணமூட்டுகிறது.
இம்மலரில் மலர்ந்துள்ள ஒரே கவிதைக்குச் சொந்தக்காரர் மேமன்கவி (போரே உனக்கோர் அஞ்சலி) மேலும் ஒரு சில கவிதைகள் சேர்க்கப் பட்டிருக்கலாம். அத்துடன் கூடவே பொருளடக்கத்தையும் சேர்த்திருப்பின் நனி றாக இருந் திருக் குமெனத் தோன்றுகிறது.
மொத்தத்தில் பாதுகாத்து வைத்து வாசிக்கப்படத்தக்க ஒரு பொக்கிஷமாக மிளிர்கிறது மல்லிகை 38ஆவது ஆண்டு மலர் என்றால் அதில் மிகை ஏதுமில்லை.
14-03-2003
 

நீண்ட பதினைந்து வருடங்கள்!
இந்த மண்ணில் மறுபடியும் கால் பதித்தபோது மனதில் ஒருவித பரவசம். . ஒ. இது நான் பிறந்த மண். வெறும் மேலோடும் அரைக்களிசானோடும் உருண்டு புரண்டு விளிையாடிய மண்.
சுற்று முற்றும் பார்க்கிறேன்.
இடிந்த கட்டடங்கள், குன்றும் குழியுமாகிவிட்ட தெருக்கள். செடி படர்ந்து காடுபத்திப் போன காணிகள். மாட மாளிகைகளாய் வீடு வாசல்கள் இருந்த இடமெல்லாம் கற்குவியல்களும்,
இடையிடையே குடிசை வீடுகளுமாய்.
விதவைக் கோலமாய் என்னை வரவேற்ற மணற்பாதிக் கிராமத்தின் சிதிலங்கள் மனதை நெருடிய அதே வேளையில், வீட்டிலும் விதவையாள் என் தங்கை சாந்தாவைத் தரிசிக்கப் போகின்ற, வரப்போகும் சோகமான கணங்கள் முள்ளாய் நெஞ்சில் வலிக்க, மெல்ல அடி பதித்து வீட்டை நோக்கி நடந்தேன்.
எங்கும் ஒரு சோகமான அமைதி அந்தச் சோகத்தின் மத்தியிலும் நம்பிக்கையோடும், உறுதியோடும் எதிர்படுகின்ற தெரிந்த, தெரியாத, மறந்த முகங்கள்!
இப்போது வந்துள்ள சமாதானச் சூழலினால் ஏற்பட்ட மலர்ச்சியா?
இருக்காது, இத்தனை வருடங்களாய் சுதேசிய, விதேசிய அராஜகங்களுக் கெல்லாம்
/介へ

Page 23
முகம் கொடுத்து, நின்று நிலைத்ததனால் ஏற்பட்ட உறுதியாகத் தானி இருக்க வேண்டும்.
பாதையால் பிரிந்து பனங்கூடல் ஊடாக ஒற்றையடிப் பாதையில் நடந்தால் வீடு விரைவில் வந்து விடும். இறங்கி நடக்கின்றேன். வானுயர்ந்த சோலையென உறுதியாய் நிற்கும் பனை மரங்கள் - எங்கள் மக்களின் மனவுறுதியைப் போல! விழுந்து பிரிந்துபோய் மணம் வீசும் பணம் பழங்கள்.
ஆச்சி பிணைந்த பனாட்டு, அப்பு கிழித்துப் போட்ட புழுக்கொடியல், அம்மா சுட்டுத்தந்த பனங்காயப் பணியாரம். ம். எமது மக்களைப்போல், இந்த மரங்களைக் கூட சென்றி போடுவதற்காக அழித்திருக்கிறார்கள். பூட்டன் வைத்த விதையில் முளைத்த மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டாலும், பாட்டன் போட்டு வைத்த மரங்களுடன் போட்டி போட்டுக் கொணி டு அப்பு வைத்த விதைகளிலிருந்து முளைத்த வடலிகளும் வானை நோக்கிக் கொண்டு நின்றன. 'எங்கட மணிணிலிருந்து பனைமரங்களை முற்றாக அழித்தொழிக்க முடியாது. அதைப்போல் தானி எங்களையும். யோகேந்திர நாதண்ணை நேற்று கிளிநொச்சியில் கூறியது இப்பொழுதும் காதோடு ஒலித்துக் கொண்டிருந்தது.
உண்மைதான். எத்தனை இழப்புக்கள்!
ஒரு மானைக் கொன்றாலும் சிறைத் தண்டனை வழங்கும் நாட்டில் எத்தனை மானுட உயிர்கள் மனிதாபிமானமற்ற முறையில்
《༼ཀྱི།།
கொன்று புதைக்கப்பட்டு விட்டன.
மீண்டும் யோகேந்திரநாதண்ணையின் நினைவுகள்!
'தம்பி நீர் வெளிநாட்டில இருந்திட்டு வாரீர். இங்க என்ன நடந்தது என்று தொடர்பு சாதனங்கள் மூலம் கேட்டிருப்பியள். இங்கே நிருபர்களுக்கு அனுமதி இருக்கவில்லை. கசிஞ்சு வந்தவை தான் நீங்கள் அறிந்தவை. உங்களுக்குச் சிறுதுளி தான் தெரியும், இங்கேயோ நடந்தது பெரு வெள்ளம்! உங்களுக்குத் தெரியும் ஆனால் வீட்டுக்கு வீடு மலக்குழி எல்லாம் புதைக்குழிதான். வாழவேண்டிய எத்தனை இளம் உயிர்களை
செம்மணிப் புதைக்குழிதான்
- அப்பாவிகளை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகத் கொன்று குவிச்சாங்க. இணி டைக்கு ஆயுதமேந்தாட்டிலி முடிஞ்சிருக்கும்."
எங்கட பொடியள்
எலி லா மே
பதினைந்து வருடங்களுக்கு முன் நான் நாட்டை விட்டு வெளியேறிய காலத்தை நினைத்துப் பாக்கிறேன். வடமராட்சியிலை லிபரேசன் ஒப்பரேசன்' என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒ. கொடூரம் எனது பள்ளித் தோழன் ஜெகன், பிரபா இளைஞர்களை இழுத்துப் போட்டுச் சுட்டார்கள். "ஷெல்' அடி, விமானக் குண்டு
எத்தனை
இப்படி எத்தனை அப்பாவி
வீச்சு. பங்கருக்குள்ள பாதுகாப்புத்தேடி இருந்தவையைக் கூட சுட்டுத் தள்ளிய கொடுரம்!
கப்புதுப் பக்கமாக ஓடி, இரவிரவாக

உயிரைக்கையிலை பிடிச்சுக் கொண்டு வரணியை அடைந்து.
தம்பி. நாங்க சமாளிப்பம். நீ இளந்தாரி. உன்னைக் கண்டால் சுட்டுப் போடுவாங்கள். நீ ஒடித்தப்பு. எங்கேயாவது வெளிநாடு போய்ச்சேர்." கையிலும் கழுத்திலும் காதிலுமிருந்த நகையைக் கழட்டித் தந்த மங்களக்கா, "மேனை இவி வளவு இருக் கு.
கொழும்பிலை மாமாவட்டைப் போய்ச் சேர்.
காசு தானி
அவர் எப்படியும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பார்." கதறி அழுது அனுப்பி வைத்த அம்மா. ம். இவர்கள் யாருமே இப்ப இல்லை. குருதி தோய்ந்த இந்த மண்ணுக்கு உரமாயிட்டினம். அம்மா ஷெல் விழுந்து செத்துப்போனா. இராணுவம் சுற்றிவளைத்த ஒருநாளை அடுத்து அக்காவும் தூக்குப் போட்டு செத்திட்டா.
நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சை அடைக்கிறது. கண்களில் ஈரம். ஒ. அம்மா. அக்கா. உங்கட இறுதிச் சடங்குக்கூட வரமுடியேல்லை. நீங்கள் செத்துப்போன தகவல்சுட்ட எத்தனை மாதம் கழித்து எனக்குக் கிடைத்தது
அன்று நீங்கள் தந்த பணத்துடனும், நகையுடனும் கொழும்புக்கு நானும் சிறியும் வந்தம். சின்னமாமா உதவி செய்யாட்டிலும் பரவாயில்லைளு தங்கட வீட்டில தங்கிறது தங்களுக்கு ஆபத்து எனறு கை விரிச்சதுதான் பெருங்கவலை அம்மாவுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. கடிதங்களை எல்லாம் அப்ப ஆமிக்காரர் கிழிச்சுச் சோதிக்கிறவை. ம். என்ன நடந்ததோ!
/43N
நினைத்துப் பார்க்கிறேன்.
நட்பு என்பது எவ்வளவு உயர்ந்தது? வீணாகச் செலவு செய்து கொணி டு லொட்ஜில் நின்ற அந்தக் கால கட்டம் மிகவும் ஆபத்தானது. அடிக்கடி செக்கிங். எமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நானும் சிறியும் ஒரு முடிவுக்கு வந்தோம். இருவரிடமிருந்த பணத்தைச் சேர்த்தால் ஒருவர் வெளிநாடு போவதற்குப் போதுமானது. 'நீ போ மச்சான்' என்று நான் பணத்தை அவனிடம் நீட்டினேன். சிறியோ மறுத்தான். நீ போ மச்சான் முதல்ல. போய் உழைத்து என்னைக் கூப்பிடு' என்று வற்புறுத்தி தன்னிடமிருந்த பணத்தை என்னிடம் கொடுத்தான்.
அதிர்ஷ்டவசமாக எமக்குக் கிடைத்த முகவர் நேர்மையானவராக இருந்ததால் அடுத்த மாதமே நான் சுவிஸ் சென்றேன். சிறி விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினான். கண்கள் கலங்க விடை பெற்ற போது, அதுதான் எமது கடைசி சந்திப்பு என்று நான் நினைக்கவில்லை.
சுவிஸ் சென்ற நான் சீக்கிரமே பணம் சம்பாதிக்கும் மெசின் ஆனேன். இதற்கிடையில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக தொடர்புகள் விட்டுப் போயின. சிறி கொழும்பிலிருந்து ஒரிரு கடிதங்கள் பரிமாறினான். அப்புறம் தொடர்பு அற்றுப் போனது.
பின்னர் வந்த செய்திகள் மன வேதனையைத் தந்தது. சிறி கைது

Page 24
செய்யப்பட்டு பூசா சிறைச்சாலையில் இருப்பதாக அறிந்தேனி. செலவானாலும் அவனை வெளியே எடுக்க வேண்டுமென முயன்றேன். பணம் பத்தும் செய்வார்கள், ஓரிருவர் ஏமாற்றினாலும் கூட இறுதியில் சிறியை வெளியே எடுத்திட முடிந்தது. வெளியே வந்த சிறி சிறைச்சாலைக் கொடுமைகள் பற்றி எல்லாம் கண்ணிர் மல்கக் கூறினான். அவனுக்கு போனில் ஆறுதல் கூறி உடனடியாள சுவிசுக்கு வரும்படி கூறினேன்.
"இல்லை மச்சான். நான் வரேல்லை. ஊருக்கு போகப் போறன்."
"என்ன சிறி உனக்கு விசரே? .
அங்கை போய் மறுபடியும் இந்த யுத்த பூமியில கஸ்ரப்படப்போறியே?"
"இல்லை ஆனந்தன். கஸ்டமும் சுகமும் நிகழ்வுகளிலை தங்கியிருக்க கேலி லை. தங்கியிருக்கு. எனக்கென்னவோ இந்த மண்ணில இருக்கிறதுதான் மேல் என்று தோன்றுது."
நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சிறி கேட்கவில்லை.
"நான் கொஞ்சம் காசு அனுப்புறன் மச்சான்."
"என்னை வெளியிலை எடுக்க நீ எவ்வளவோ செலவளிச்சுப் போட்டாய். எனக்கு இப்ப காசு அதிகம் வேண்டாம். வீட்டுக்கு அனுப்பு. எங்கட வீட்டுக்கும்
எவி வளவு
நினைப்புகளிலை தான
ܓܠ222
அனுப்ப முடியுமெண்டா."
அதற்குப் பின் சிறியின் தொடர்பும் இல்லை.
சிறியினி தங்கை இடைக்கிடை இவனுக்கு எழுதுவாள். காசு கிடைத்ததாக நன்றி தெரிவிப்பதுடன் நாட்டு நிலைமைகளைப் பற்றியும் எழுதுவாள். அவளது கடிதமூலம் சிறி போராளியாகி விட்டதை அறிய முடிந்தது.
ரஞசி தானி
ஏற்பட்ட ரஞ்சியின்
தொணி நுாற்றியாறிலி இடப்பெயர்ச்சியின் பின்னர் கடிதமும் வருவதில்லை. அவர்களுக்கு எங்கே பணம் அனுப்புவது என்று தெரியாமல் தவித்தேன்.
சுவிசில் பாஸ்போட் கிடைக்கவும், இலங்கையில் புரிந்துணர்வு உடன் படிக்கை ஏற்படவும் சரியாக இருந்தது. என் மனதில் ஊர்த் தவனம் பிறந்தது. சின்னஞ்சிறு பாதம் பதித்து விளையாடி பதினெட்டு வயதுவரை வாழ்ந்த பூமியல்லவா?
உச்சில் அம்மன் கோயிலும், ஆலமரமும், மாணிக்கவளைக் குளமும் மனதில் இளமை நினைவுகளை மீட்டின. சிறியும், குகனும், பிரபாவும், ஜெகனும் நானும் நீச்சலடித்துக் கும்மாளமடிக்கும் மாரிகாலகுளத்து நினை
ஊரினர்
வுகளில் நினைவலைகள்
முட்டிமோதின.
கண்ணகி அம்மன் பொங்கல், மாதா கோயில் கூடு சுத்தல், நாச்சிமார் கோயில் பூசாரியின் சாமியாட்டம், உச்சில் அம்மன்

கோயில் மானம்பூ வாழைவெட்டு, மூத்தநாள் கோயில் தவில் கச்சேரி, இசைக்குழு, முதலைக்குழி முருகன் கோயில் சூரன் போர், கீரிமலைக் கேணி - கடல் குளிப்பு, கூவில் கள்ளு
குளிப்பை நினைக்கும் போது உச்சில் குள மாரிக் குளிப்பும் நணர் பர்களினி கும்மாளமும் நினைவுக்கு வரும். ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு நீச்சலடித்து, மீண்டும் திரும்பி வந்து போட்டி போட்டு. எனக்கு நீந்தத் தெரியும். ஆனால் பயம் ஒல்லித் தேங்காய் கட்டி மார்பில் அணைத்தே நீந்துவேன். சிவம் வம்பன். நடுக்குளத்தில்
ஒல்லித் தேங்காய் மிதப்பைப் பறித்து விடுவான்.
நான் முக்குளித்து திக்குத் திணறிக் கரைக்கு வருவேன். எல்லோரும் கெக்கலித்துச் நடேசு மாமாவும் சில
எங்களோடு வந்து மணிக்கணக்கில் நீச்சலடிப்பார். சுழியோடி வந்து எங்களது உடுப்புளைக் கழற்றி விடுவார். நாங்கள் உடுப்பில்லாமல் குளத்தை
சிரிப் பார்கள். வேளைகளில
விட்டு வெளியேற முடியாமல் தவிப்போம்.
ஒரு பலத்த மாரியில் சுழியோடிய நடேசு சுழியில சிக்கி மூண்று மணித்தியாளங்களின் பின்னர் மீட்கப்பட்டார். அதன் பின்னர் பலநாட்கள்
fry T
பிணமாக
யாரும் குளப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை.
வீடுகளில் பலத்த கட்டுப்பாடு
சில நாட்களின் பின் பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏறியது. நீச்சலும், குளிப்பும், கும்மாளமும் மீண்டும் தொடர்ந்தன. ஒருநாள் சத்தியமூர்த்தி சுழியோடி வந்து
/4SN
எனது உடுப்பைக் கழறிவிட்டான். நான்
நடுக்குளத்திலிருக்கும் போது திட்டமிட்டு
எல்லோருமாக வெளியேறி எனது மாற்று உடுப்பையும் தூக்கி கொண்டு போய் விட்டார்கள். நண்பர்கள் போனபின்னரும் குளத்தில் ஆணும் பெண்ணுமாகப் பலர் குளித்துக் கொண்டிருந்ததால் என்னால் வெளியேற முடியவில்லை. குளிரடிக்கும் வரை குளத்திலேயே இருந்தேன். சனநடமாட்டம் குறைந்தது. பரிமளம் அக்கா கரையில் உடுப்புத் தோய்த்துக் கொண்டிருந்தார்.
நீணட நேர தயக்கத்தினி பின் அக்காவிடம் வியசத்தைக் கூறினேன். அக்கா சிரித்துக்கொண்டே தனது பாவாடையை எடுத்து குளத்துள் எண்ணிடம் வீசினார். அன்று பாவாடையோடு வீடு வந்து சேர்ந்ததை நினைக்கையில் இப்பவும் சிரிப்பு வருகிறது.
அந்தப் பரிமளாக்காவும் இன்றில்லை. இந்தியன் ஆமி அமைதி காத்த காலத்தில் ஓரிரவில் வீட்டில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் பின்னாளில் அறிந்தேன்.
எங்கள் மணற்பாதிக் கிராமத்தில் இன்று முன்பிருந்தவர்களில் கால்வாசிப் பேர் கூட இப்போது இல்லை எனிறு சாந்தா எழுதியிருந்தாள். உண்மைதான். இப்போது தெருவில் அதிக சன சந்தடியைக் காணோம். சனசக்தி சனசமூக நிலையத்தில் ஒரே ஒரு பத்திரிகையை, ஒரேயொரு முதியவர் படித்துக்கொண்டிருக்கிறார். யாரொன்று தெரியவில்லை. புதுமுகம்.

Page 25
சாந்தா வரும்படி எழுதியிருந்ததால் தானி இப்போது தாய் மணி னுக்கு வருகிறேன். நண்பன் சிறியின் தங்கை ரஞ்சியைத் திருமணம் செய்யும் எண்ணம் என் மனதில் இருந்தது. சாந்தா எண் திருமணம் பற்றி முன்னர் எழுதியபோது இதையே அவளுக்கு எழுதினேன். ரஞ்சியைச் சுவிசுக்கு அனுப்பும்படி நான் எழுதிய கடிதம் இங்கு வரமுன்னரே என்னவெல்லாமோ நடந்து முடிந்து விட்டது.
ஆனையிறவு வெற்றிச் சமரில், ஒயாத அலை மூன்றின் வெற்றிக்காக கரும் புலியாகித் தன் உயிரைச் சிறி ஈகம் செய்த செய்தி முதலில் வந்த போது மனது வெடித்துச் சிதறியது. சிறியின் மரணத்தைத் தொடர்ந்து ரஞ்சியும் போராளியாகப் போய்விட்ட சேதி பின்னர் வந்தபோதுநான் முற்று முழுதாக உடைந்து போனேன்.
அதன் பின் திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை. சுவிசில் இயந்திர மயமான வாழ்வில் பணம் மட்டும் குவிந்த வணிணமிருந்தது. சொந்தங்களினி உயர்வுக்காய் என் உழைப்பைப் பகிர்ந்தேன். கணவனை இராணுவ வேட்டுக்குப் பலிகொடுத்து விட்டு தனுசன், கீக் என்ற இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்துவரும் சாந்தாதான் இந்த மண்ணில் இப்போது எனக்குப் பற்றுக்கோடு.
சாந்தா போன மாதம் உருக்கமாக வேண்டி எழுதியிருந்தாள் 'தம்பி. இன்னும் எவ்வளவு காலம்தான் தனிமரமாக இருக்கப் போறாய்? வயதும் முப்பத்திமூன்று தாண்டி
ܢܠܘܶ22
யிட்டுது. கலியாணம்தான் ஒரு மனிதனின் வாழ்வை முழுமையாக்குகிறது. பல இடங்களிலிருந்தும் கேட்டு வருகினம். மாணிக்க வாத்தியாரின்ற மகள் சந்திரா இப்ப ரிச்சராக இருகக்கிறாள். வலு கெட்டிக்காரி. ஆளும் நல்ல வடிவு. தாயைப் போல வடிவான கணி. நல்ல குடும்பம். ஒரே பிள்ளை. சொத்து சுகம் போதியளவு இருக்கு. இரத்த உருத்தான இடம்."
தங்கையின் கடிதம் என்மனதை அதிகம் குழப்பாவிட்டாலும், ஊர்போகும் ஆசை மனதில் எழுந்து விட்டது. பலவித நினைவுகளுடனே முயற்சியில் இறங்கினேன்.
'இனிறு எங்கள் மணி எப்படி இருக்கும்? அந்நியன் காலடி பட்டு கற்பிழந்த பூமி’ என்று கவிஞன் பாடியது போல் எல்லாம் தலை கீழாகப் போயிருக்குமோ?
திட்டமிட்டபடி சுவிசிலிருந்து தாயகம் வந்தாகிவிட்டது. இதோ கூப்பிடு தூரத்தில் வீடு. எதிர்த்திசையில் ஒரு இளம் பெண் சயிக்கிளில் வருகிறாள். என்னருகே வந்ததும் சயிக்கிளை சிலோவாக்கி, என்னைப் பார்த்து பின் நாணிச் செல்கிறாள். யாராக இருக்கும்.
அந்தக் கண்கள். அந்தக் கண்கள் புத்தகப்பையுடன் புதுக்குளத்தடியில் சிறுமியாகப் பார்த்த - குருக்கள் பள்ளிக்கூடத்தில் அதிக புள்ளியுடன் புலமைப் பரிசில் பாஸ் பணிணியதாகக் கேள்விப் பட்டபோது சிறுமியாகப் பார்த்த சந்திரா. ஓ. என்னமாய் வளர்ந்து பூரித்திருக்கிறாள்'
வீடு வந்துவிட்டது.

சிதைந்து போன வீட்டின் பாதிப்புற்றிராத ஒரு பகுதியைக் கிடுகால் வேய்ந்து. சோபை இழந்த மூதாட்டி போல காட்சியளிக்கிறது.
வாசல் கதவைத் தட்டுகிறேன்.
தங்கை சாந்தா கதவைத் திறக்கிறாள். கண்கள் பனித்திட "அண்ணா!" என்று ஆவலோடு அழைக்கிறாள். தயாளசிங்க அத்தானின் படம் சுவரில் மாலையுடன் தொங்குகிறது. தனுசனும், கீச்கம் நான் யாரென்று தெரியாமல் விழிக்கிறார்கள். "மாமா. உங்கட சுவிஸ் மாமா." சாந்தா சொல்ல, நான் பெட்டியைத் திறந்து விளையாட்டுச் சாமானி களையும் , சொக்கிளேட்டையும் எடுத்து நீட்டுகிறேன்.
ரோபோ பொம்மையை வாங்கிக்கொண்டு "துவக்கு இல்லையோ
மாமா?" என்கிறான் தனுசன்.
ஏன்.?" வியப்போடு கேட்கிறேன்.
Ꭵ Ꮴ o P
s9H LJ LJ T 6Ö) 6). «9F «$i L. L. 6) AbY «95 6O) 6IT «ğ#
கடுறதுக்கு."
நான் அவனை ஆழமாக நிமிர்ந்து பார்க்கின்றேன்.
பனைகள் தறிக்கப்பட்டாலும், வடலிகள் வளர்ந்து வைரம் பெற்று வானுயர்ந்த மரங்களாய். ܚ
ஒ. இந்த மண்.
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின்
aff of JG)/TSD
(இரண்டாம் பதிப்பு ~ புதிய தகவல்களுடன்.)

Page 26
2003 பெப்ரவரி அட்டைப்படம
‘புதுவை'
- அன்புடின்
38% ஆண்டு மலருக்காகக் காத்திருந்தேன. 2003 பெப்ரவரி 286* இதழ்தான் கிடைத்தது. அட்டையில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் படத்தைப் பார்த்ததும் 38% ஆண்டுமலர் கிடைக்கவில்லையே என்ற துயரம் மாறி, மகிழ்ச்சி தலை தூக்கிற்று.
‘புதுவை'யைப் பற்றி புதுசுகளுக்கு மாத்திரமல்ல, பழசுகளுக்கும் நிறையவே தெரியவரப்போகிறது என்ற எண்ணத்தில் அவரைப்பற்றிய குறிப்புக்களை யார் எழுதி இருப்பார்? என்று அறியும் ஆவலில் பக்கங்களை புரட்டினேன். மகிழ்ச்சி இரட்டிப்பானது. எமது பழம் பணி டிதர் (பழைய தினக் குரல’கள் பார்க்க. ) இ.ஜெயராஜ ‘புதுவையை 'அக்கினிக் குஞ்சு'வாக்கி இருந்தார். மிகப் பொருத்தமான தலைப் புத் தானி எனர் று முணுமுணுத்துக் கொண்டு மொத்தம் 8 பக்கங்களில் எழுதப்பட்டிருந்த கட்டுரையை ஒரே வீச்சில் வாசித்து முடித்தேன். என்னுடைய எதிர்பார்ப்புக்கு தீனி போதாது என்பதைப்போல இருந்தது அது. கட்டுரையை மீண்டும் ஆரம்பம் இருந்து வாசித்தேன். “உங்கள் மனதுக்கு நெருக்கமான புதுவையை எழுதுங்கள் போதும்” - என்று ஜிவா அவர்கள் சொன்னதாக ஜெயராஜ் ஓரிடத்தில் சொல்லுகிறார். அப்போதுதான் இது ஜெயராஜ் அறிந்த ‘புதுவை' என்று ஆறுதல் பட்டுக் கொண்டேன.
கவிஞர் புதுவை இரத்தினதுரையை நான் 1972"ஆண்டு தொடக்கம் அறிவேன். 'குமரனில் அவர் வரதபாக்கியனாக ஒளிர்ந்த காலத்தில் அவர் கவிதைகளுக்காக ஏங்கிய குமரன்’ வாசகர்களையும் அறிவேன் நாண் . எமக்குள் கடிதத் தொடர்புகளும் இருக்கிறது.
எமது இலக்கிய உறவின் இறுக்கத்தில்தான் 1974இல் திருகோணமலையில் 'எழுத்தாளர், கலைஞர் மாநாடு ஒன்றை நாம் ஒன்று கூட்டினோம. திருகோணமலை முன்னோடிகள், கல்முனை புதிய பறவைகள், மன்னார் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ்ப்பாணம் புதுமைப் பித்தர்கள், கொழும்பு நவகலா மன்றம் ஆகிய அமைப்புகளின் கூட்டுறவில் அம்மாநாடு இருநாட்கள் நடைபெற்றது. இம் மாநாட்டினர் முதல்வராக விளங்கியவர் புதுவை இரத்தினதுரைதான திருகோணமலை முன்னோடிகளும், கல்முனை புதிய பறவைகளும் அம்மாநாட்டின் முக்கிய பங்காளிகளாக இருந்தனர். நான் புதிய பறவைகளின் மண்டலத்தின்
48
 

பொதுச் செ usrst Tita இருந்த காரணத்தால் ஒருநாள் முன் கூட்டியே 21-06-1974 இல் திருகோணமலைக்கு சென்று விட்டேன். என் கூடவே பாலமுனை பாரூக் இருந்தார்.
திருகோணமலை புகையிரத நிலையத்தில 6T LD5) காத்திருந்தார் நமது புதுவை புகையிரத நிலையத்திலிருந்து புதுவையின் துவிச்சக்கர
வரவுக்காக
வண்டியில் என்னை ஏற்றிக் கொண்டார் அவர், முதலில் அவரது வீட்டுக்கும், பின்னர் மாநாடு பெற்ற திருமலை இந்துகல்லூரிக்கும் சென்றோம். அன்று
மதிய உணவும்
நடை
காலை ஆகாரமும் ,
புதுவை'யின் இல்லத்தில்தான் நடந்தது. அன்று இரவுச் சாப்பாடு திருகோணமலை பிரதர் அருட்திரு மலர்வேந்தன் (அவரும் ஒரு கவிஞர்) அவர்களது இல லத்தில நடைபெற்றது, இரவு 10 மணிக் குப் பிறகுதான் நாம் மலர்வேந்தன் அவர்களது இல்லத்திற்கு போய் இருந்தோம். அதற்குப் பிறகுதான் சாப்பாடு ஏற்பாடே நடந்தது. மலர்வேந்தன் அவர்களது வீட்டு கோழிக் கூணர்டுக்குள் நின ற இரணர்டு கோழிகள் பிடிக்கப்பட்டன. நானும், பாலமுனை பாரூக்கும் தானி முஸ்லிம்கள். கோழியை இஸ்லாமிய முறைப்படி அறுக்க வேண்டிய கடமைப்பாடு, அந்த ராத்திரியில் கோழி அறுப்பதற்கு யாரைத் தேடுவது? ஆகையால் நான் அல்லது பாரூக் தானி கோழியினர் கழுத்தில கத்தி வைக்க வேணர் டும் ,
‘வெட்டுவோம், குத்துவோம், கொல்லு வோம்” என்றெல்லாம் அக்காலத்தில் நாம் எழுதினாலும் (அதுதானர் அக் காலத்தில பா ஷ ன ) உணர்மையில் நாங்கள் அஹிம்சாமூர்த்தி
கவிதை எழுதுவோம் .
மகாத்மா காந்தியினர் அடிச் சுவட்டைப்
பின்பற்றும் பக்தர்கள். இந்த கோழி, குருவி, குஞ்சு இவைகள் அறுக்கப்படுவதை சும்மா பார்த்துக்கொணர் டு நின ற அனுபவமும் இல்லை. என்ன செய்வது, ஒரு சந்தர்ப்பத்தில் ‘ஒரு ஆட் டுக் குட்டியினர் மரணத்துக்கு மகாத் மாக் காந்தியும் இருந்திருக்கிறாரே என று மனதுக்குள் ஆறுதல்பட்டு, தைரியத்தை வரவழைத்துக் கொணர் டு, பாலமுனை பாரூக்கும், மறுகோழியை பாரூக் பிடிக்க நானுமாக அறுத்துச் சாதனை படைத்தோம் (ஆரம்பத்தில் கோழியை அறுக்கும் விசயத்தில் நானும், பாரூக்கும் இழு பறிப்பட்டோம். "நான் பிடிக்கிறேன் நீதான் அறு' - என்று நாங்கள் இருவரும் ஆளுக்காள் சொல்லிக் கொணர்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த புதுவை, “நீங்கள் இருவரும் அறுக்கத் தேவையில்லை. நானே கோழியை
s ír J. 60T LD T g
கோழியை நானர் பிடிக்க
காலால் அழுத்தி, கையால் அறுப்பேனி ஆனால் உங்கள் சமயச் சடங்கு அல்லவா பேணப் படவேணர் டும் அதற்காகத் தானி உங்களைக் கொணர் டே இக்கோழிகளை அறுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்” என று அணி னு சொனி ன புதுவையினர் வார்த்தைகளின் பெறுமதியை இன்றும் நினைத்து மெய் சிலிர்க்கின்றேன்.
1974 ஜூனி 22,23 இருநாட்கள் நடைபெற்ற திருகோணமலை மாநாடு, கலையரங்கம் , கவியரங்கம் என பல பிரிவுகளாக நடைபெற்றது. 'பூதலத்துக் கேற்றதினி புதிய ஜனநாயகம் தலைப் பில சில லையூர் செலவராசனர்
- ଶtୋt g)
அவர்களது தலைமையில நடைபெற்ற கவியரங்கில் புதுவை பாடிய கவிதை தனி முத்திரையாகப் பளிச்சிட்டதை ஒருபோதும் மறக்க முடியாது. இலங்கையில் மேடை

Page 27
கவியரங்குகளில் பிரகாசித்தவர்கள் என்று ஒரு பட்டியலிடும் சில்லையூர் செல்வராசனர், நாவற் குழியூர்
போது, மகாகவி,
நடராசன், நீலாவணனர் புரட்சிக்க மால், முருகையன், நுஃமான் முதலான இன்னும் சிலரோடு புதுவை இரத் தின துரையும் முக்கியமாக குறிப் பிட வேணர் டியவர் என பதை அவர் கவிதை சொல லும் அழகையும், ஆளுமையையும் அறிந்தவர்கள் அறிவர்.
“இலக்கியம் நேற்று, இன்று, நாளை, சமுதாய மாற்றத்தில் புரட்சிகர இலக்கியம், இலக்கியத்தில் வரையறுக்கப்பட்ட கொள்கை, இலக்கியத் தி ல விஞ்ஞானக்
கணி னோட்டம் , தமிழ், சிங் கள கலை
S 55) 6u)
இலக்கிய பரிவர்த்தனை” - இப்படி பல்வேறு தலைப் புகளெடுத்து எனர் .கே.ரகுநாதனர், செ.கணேசலிங்கன், சிவசேகரம், அ.சண்முக தாஸ், இளங்கீரன், சில்லையூர் செல்வராசன், இராஜ தர்மராசா, அருள் சுப்ரமணியம் போனர் ற பிரபல கலை இலக்கிய வாதி களையெல்லாம் அம் மாநாட்டில் பங்கு கொள்ளச் செய்த பெருமை புதுவை இரத்தின துரையையே சாரும். 'நல்லை அமிழ்தனும் அவருக்கு துணை நின்றார் என்று நிறைக்கின்றேன்.
இது மட்டுமல்லாது, மணி னார் முற் போக்கு எழுத்தாளர் சங்கம், யாழ்ப்பாணம் புதுமைப் பித்தர்கள், மாத்தளை வடக்கு மக்கள் இலக்கிய கலை வட்டம், திருமலை மு னி னோடிகள், அனுராதபுரம் மக்கள் எழுத்தாளர் முண்ணனி ஆகிய அமைப்புக்கள் ஒன்றுகூடி 1975 செப்டம்பர் 6ஆம் 7ஆம் திகதிகளில் மன்னார் அல் அஸ்கர் மகா வித்தியாலயத்தில் நடத்திய இளம்
கவிஞர்கள் மாநாட்டிலும் புதுவை இரத்தினதுரை வகித்த பங்கு குறிப்பிடத் தக்கது. மாநாட்டின் நோக்கம் பற்றி அன்று கருத்துரைத்த புதுவை - புதிய தலைமுறை எழுத்தா ளர்களை வழி நடத்துதல தொடர்பாக வழங்கிய கருத்துரைகள் மிகக் காத்திரமானவை, அம் மாநாட்டை நடத்தி முடிப்பதில் கலைவாதி கலில் எடுத்துக் கொண்ட செயற்பாடுகள் மறப்பதற்கில்லை.
“புத் தம் புதுயுகத்தில் புலருகினி ற வைகறையின் சத்தம் மிகத் தெளிவாய்” – எனர் ற தலைப் பரில புதுவை இரத்தின துரையின் தலைமையில் நடைப் பெற்ற கவியரங்கில் நான் கவிதை பாடியதும், அவ்வரங்கில் புதுவை என்னை அறிமுகம் செய்த அழகும், முடிவில் கே. டானியல், சில்லையூர் செல்வராசன் இருவரும் என்னை அழைத்து என் கவிதை பிரதிகளை வாங்கி
வாசித்து கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த
பாங்கும் புதுவையோடு கூடிய எனக்கு மறக்க முடியாத அனுபவங்களாகும்.
புதுவையினர் 30 முந்திய இருக்கிறது. ஆனால் இன்று இவர் தான் புதுவை இரத்தினதுரை என்று தினசரிகளில் அவரது புகைப்படத்தை பார்க்கின்ற போது நம்ப முடியவிலலை. முற்றுமுழுதா ன வெள்ளை தலைமுடி, பருத்த உடல , காற்சட்டை இத்தியாதி, இத்தியாதி.
வருடங்களுக்கு முகம் தானி எனக்கு ஞபகம்
துரியான கறுத்த தலைமுயிர், ஒல்லியான உருவம், சுற்றி சுற்றி உடுத்தாமல் ஒரே வீச்சில் வளைத்துக்கட்டும் வேட்டி, வேட்டிக்கு மேலால் புஃள்கை சேர்ட் இந்த இளைஞர் புதுவை இரத்தினதுரைதான

மனசிற்குள் நிற்கிறார்.
‘மல லி கை' முகப் பில புதுவைக்கு கணர் னாடி வேறு. கால மாற்றத்தினர் கோலங்கள். சரி. சரி. மல்லிகை சொன்னால் நம் பத்தானே வேணர் டும். இருந்தாலும் நேரில இனி புதுவை'யை சந்திக்க அறிமுகம் செய்தால்தானி அடையாளம் தெரியுமோ
நேர்ந்தால யாராவது
என்னவோ?
சுப்ரமணியபாரதியின் "காணி நிலம்
வேணர் டும் ,
வேணர் டும்” கவிதையை படிக்க நேரும்
Lu J mr SF iš காணி நிலம்
ע",
போதும், ஜெயராமனின் குரலில் அக்கவிதை வரிகளை வானொலியில் பாடலாகக் கேட்க நேரும்போதும், புதுவை இரத்தினதுரையின் பின்வரும் கவிதை வரிகள் எனக்கு ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
தென்னைமரத் தோப்பசைய வேண்டும் - இளம் தென்றலதன் ஊடுவர வேண்டும் வண்ணமலர் வாய்விரிக்க வேண்டும் அதன் வாசமெனை
வந்தடைய வேண்டும்.
வெள்ளியெங்கும் பூத்திருக்க வேண்டும் வான் வீதியிலே பூச்சொரிய வேண்டும் நள்ளிரவு வேளைவர வேண்டும் அப்போ நானிருந்து பாட்டெழுத வேண்டும்
சித்திரம்போ லென்னியத வாணி என் சிந்தையெல்லாம் நிறைந்த கலை வாணி முத்துகளை விட்டெறிய வேண்டும் அவள் முன்னிருக்க நானெழுத வேண்டும்
/6N
பால்நிலவுக் கதிர் சிதற வேண்டும் - என் பள்ளியறைக்குள் விழுதல் வேண்டும் கால்நகர்த்தி, நடை நடந்து தென்றல் வந்து கை விளக்கை
நூர்த்து விடவேண்டும்
விளக்கனைய இருள் பரவ வேண்டும் - நான் விரித்தகவி
நின்றுவிட வேண்டும் கலகலத்து அவள் சிரிக்க வேண்டும் - எண் கையனைப்பில்
துடி துடிக்க வேண்டும்
போதுமென அவள் துடிக்க வேண்டும் - நான் பூமகளை போட்டுலுப்ப வேண்டும் கோதையவள் மெய்மறக்க வேண்டும் - நான் கோலமவள்
மேனியிட வேண்டும்
கையினைத்து கால் பிணைய வேண்டும் என் கா துடனே அவள் கதைக்க வேண்டும் மெய்முழுதும் நீர்த்துளிர்க்க வேண்டும் - அவள் மேனியிலே பாட்டெழுத வேண்டும்.
புதுவையின் எத்தனையோ புரட்சிக் கவிதைகள், விடுதலைக் கீதங்க ளெல்லாம் இருக்க, இந்த காதல் கவிதையைத்தானா இங்கே கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று யாரும் கேட்கக் கூடாது? இக் கவிதை அக் காலத்தில எத்தனை காதலர்களை திருப்திபடுத் தி இருக்கிறது என பது தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும்,

Page 28
o,
O.
II.
2.
I 3.
4
IS,
6.
1.
I 8.
IS,
20.
ఇసిపిణి అభినూ,
do os$xygèse.
o数なる。傘
Vy4M LANIANíOôĽ|LIřôNy
மல்லிகைப் பந்தல் சமீபத்தில்
வெளியிட்டுள்ள நூல்கள்
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு - புதிய அநபாயத் தகவல்கள். தகவல்களில் கம்பகத்தன்மை லோப் ட்யூர்ாத) விலை:
எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் விலை: அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் விலை:
கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இர
மண்ணின் மலர்கள் ~
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) விலை: நானும் எனது நாவல்களும் ~ செங்கை ஆழியான் விலை: கிழக்கிலங்கைக் கிராமியம் ~ ரமீஸ் அப்துல்லாஹற் விலை: முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா விலை:
முனியப்ப தாசன் கதைகள் முனியப்பதாசன் ബിഞ്ഞുബ: மனசின் பிடிக்குள் (ஹைக்கூட) ~ பாலரஞ்சனி விலை: கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ 'சிரித்திரன் சுந்தர்' விலை:
அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) 6ਹ60: சேலை ~ முல்லையூரான் விலை: மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் விலை: (30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு)
நிலக்கிளி ~ பாலமனோகரன் 6.5ຽ6):
நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா விலை: மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) வெளிவந்து விட்டது விலை: தொகுப்பு ~ செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் விலை: தரை மீன்கள் ~ ச.முருகானந்தன் விலை:
கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும் செங்கை ஆழியான் விலை:
ண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் விலை:
2Sof
Ι 4ο/-
I80/-
175/-
II of
8o/at
I oo/=
II of
1so/=
oo/τ.
IIS/-
175/F
Isoft
275/=
14o/=
Iso/F
35o/=
Iso/
Iso/-
Iso/r
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
·Z3ဖဲ့`လျှာ
 

யோகம் இருக்கிறது.
பொ. கருணாகரமூர்த்தி.
* தமிழில் பெண்கள் மிகக்குறைவாகவே எழுத முன்வரும் * இக்கால கட்டத்தில் தொடர்ந்து எழுத முயல்பவரும் பல பத்திரிகைகளிலும் அவ்வப்போது தான் எழுதிய 12 * கதைகளைத் தொகுத்து ‘யோகம் இருக்கிறது என்ற தலைப்பில் மித்ர வெளியீடாக வெளியிட்டுள்ள குந்தவை பாராட்டுதலுக்குரியவர்.
இந்நூலுக்குரிய முன்னிட்டை கச்சிதமாகத் தோழர் எஸ்.பொன்னுத்துரை அவர்கள் வழங்கியுள்ளார். பொதுவாகப் புதிதாகக் கதை எழுத ஆரம்பிப்பவர்களின் படைப்புக்களை விமர்சனஞ் செய்வதில் எனக்குத் தயக்கம் அதிகம். சிலர் விமர்சனங் கண்டதும் திடுப்பென நத்தையைப் போல தம்மைச் சுருட்டிக் கொண்டுவிடுவார்கள். சிலர் தம்முயற்சிகளுக்கு விமர்சனம் வேண்டுமென்பார்கள், விமர்சித்தால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுவிடுவார்கள். ஒரு படைப்பாளி என்ற வகையில் குறைவாகவே எழுதியிருப்பினும் குந்த வைக் கு படைப்பிலக்கியங்களின் மீதான நீண்ட கால அவதானங்கள் இருக்கும்.
ஒரு சிறுகதையோ கவிதையோ இப்படித்தானிருக்க வேண்டுமென்ற நியதியொன்றுமில்லை. எவருக்கு எப்படி வருகிறதோ அப்படி எழுதலாம். ஆனாலும் ஒரு படைப்பைப் பிரசவித்ததன் பின் வாசகனுக்கு அதன் கருத்தியல் - பலம் - பலவீனம் - அழகியல் - எதிர் அழகியல் - என்ற அம்சங்கள் புரியவே செய்யும்.
ஒரு விமர்சகன் ஒரு தொகுப்புக்கு இல்லாத அர்த்தங்கள் இருப்பதாகச் சொல்வதோ இருப்பதைக் கண்டு கொள்ளாமல் விடுவதோ சரியல்ல.
இந் நூலின் வெளியீட்டு விழாவில் கூட தோழர் மு.பொன்னம்பலம் ஒரு காத்திரமான விமர்சனத்தை வைப்பாரென எதிர்பார்த்தேன். அவர் எஸ்.பொ. வை வாருவதில் பிரயோகித்த சக்தியை நுால் மேல் வையாது விட்டு விட்டார்.
குந்தவையின் படைப்புப்பாணி யதார்த்த இலக்கிய வகையைச் சேர்ந்தது. அதாவது கற்பனைகள் வர்ணனைகளைக் குறைத்து உள்ளதை உள்ளபடியே எழுதிவிட்டுப் போதல். யாதார்த்தப் பாணியிலான படைப்புக்களில் அதை எவர் தான் எழுதினாலும் நளினம் குறைவாகவே இருக்கும். உள்ளதை உள்ளபடியே எழுதுவதாயின் ஒரு கமரா போதுமே எழுத்தாளன் எதற்கு என்றொரு கேள்வியும்
·Z6၆`~

Page 29
வெகுகாலமாகவே உள்ளது.
ஒரு உதாரணத்தைச் சொல்லாம். ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்' கதை முழுவதும் யதார்த்தம். அதற்கு அவர் கடைசி வரியில் கொடுக்கிறாரே ‘டிறிட்டென்ட் அது அவரது கற்பனை. அதனாலே தானி அக் கதை ஹைலைட் டானது. ஊரைக் கூட்டி வைத்து அச் சிறுமியின் பாட்டி குளறினாள் என்று முடித்திருந்தாராயின் அக்கதையும் பத்தோடு பதினொன்றாய் போயிருந்திருக்கும்.
எனவே ஒரு படைப்பால் நாம் சொல்ல விரும்புவதை எம் ஆசையோ கனவோ விஷயத்துக்கு வாசகனை இட்டு வர கற்பனையும் மிக அவசியம். ஒரு நல்ல சிறுகதை கற்பனையையும் யதார்த தத  ைதயும் சேர்த் துப் புனைவதாலேயே பெறப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனல் அவற்றை எநத விகிதத்தில் கலப்பதென்பது படைப் பாளியின் தொழில்நுட்பம் சார்ந்த விஷயமாகிறது.
இவரது சில கதைகளில் தொடர்பு ஊடுபாவாக உள்ளது என்று எஸ்.பொ குறிப்பிடுவதும் அதனால் தானி , இறுக்கம், வல்லைவெளி, பெயர்வு, வீடு நோக்கி ஆகிய கதைகளின் பகைப்புலம் அநேகமாக ஒன்றாகவே இருக்கிறது. ஆசிரியர் யதார்த்த ரீதியில் அப்பகைப் புலத்தை வரையம் போது கதைகளின் பகைப்புலம் ஒன்றேயாக வாசகனுக்குத்
தோற்றந்தரும். ஒரு கதையைப் போல
இன்னொரு கதை இருப்பதாகப் பிரமை தருவதும் இந்த ஸ்டீரியோ ரைப் விபரிப்பால் தான்.
54
மற்றொரு முக்கியமான விஷயம்: இவரது படைப்புக்கள் அனைத்துமே நேர் கோட்டமைப்பிலும் சிக்கலற்றும் ஒற்றைப் படையானதாகவும் உள்ளன. மாற்றங்கள் அதிக மிராத ஒரே மாதிரியான ஒரு நீண்ட தரவையில் நீண்ட நேரம் வண்டிச் சவாரி செய்வது யாருக் கும் உற்சாக நீ தராது. காட்சிகளின் மாற்றம் பாதையிலொரு பள்ளம் வளைவு நெளிவு சுளிவு வந்தாலே சுவாரஸ்யம், கதைகளைப் புனைவதில் மிகக் குறைவான தொழில் நுட்பமே பிரயோகிக்கப்படுவதால் அநேகம் படைப்புக்கள் கட்டுரைக்கு அனுக்கம் காட்டுகின்றன.
கதையின் பகைப் புலங்களை அளவுககு மிஞ சி விபரிப்பது சிறுகதைக்கு அதன் கட்டுமானத்தைப் பாதிக்கும், கச்சிதத்தைக் குறைக்கும். அளவான விபரிப்பே சிறுகதைக்கு கிறிஸ்ப்பைத் தரும். சொற்செட்டென்பது கவிதைக்கு மாத்திரம் வேண்டிய தில்லை. சிறுகதைக் குந்தான். "வீடு நோக்கி கதை கூட மிக விஸ்தாரமாகச் சொல்லப்படுகையில் முடிவில் ஒரு பத்திரிகைச் செய்தியைப் படித்தது போன ற உணர்வையே தந து விடுகின்றது.
ஆக கதைப்பின்னலில் விபரிப்புக் களுக்கு அப்பாலானதைக் கலாசார ரீதியாகப் பண்ண வேறொன்றையும் சேர்க்க வேண்டியேயுள்ளது. அது கற்பனையேயன்றி வேறென்ன? கதை பேசும் விஷயத்தின் அழுத்தத்தை அதிகரிக் க கற்பனை வேனி டி யேயுள் ளது. மேலும் இவர்

படைப் புக் களில் பாதி திரங்கள் கச் சிதமாக கலாரீதியாக வார்க்கப் படாமைக் கும் இக் கற்பனைப் பின்னடைவே காரணமென்பேன். ஒரு படைப் பின் கூட்டு விளைவாகவே வெறும் செய்தி மாத்திரமேயெனில் அதற்கு ஒரு பத்திரிகை எழுத்தாளர் போதுமே? கதாசிரியர் வேண்டுமா?
முதற் கதையின் முதற்பந்தியில் றோட்டினி நடுப் பகுதியிலிருந்து சரிவாகச் சென்ற அந்த மோட்டார் சைக்கிள் என்று எழுதுகிறார் EFLE) தரையில் சரிவாக ஒட்டுவதெங்கனம்? எனவே ஒரமாகச் சென்ற என்று எழுதினாலே அவ் வாக்கியம் அர்த்தப் படும். இது எஸ்.பொவின் கண்களுக்குத் தப்பியது எங்ங்னம்?
120ம் பக்கத்திலும் வேறொரு இடத்திலும் லான்ட் மாஸ்டரில் படையினர் வந்தனர் என்று வருகிறது. அது சிறு உழவு இயந்திரமல்லவா? வேகமாக ஓடவும் ஒடாது. அது ஜிப் வகையைச் சேர்ந்த லான்ட் றோவராக இருக கலா மோவென எனக் குச் சந்தேகம்.
நான் இதுவரையில் இப்போது வல்லிபுரக் கோவில் இருக்கும் இடம் மற்றும் நாகர் கோவில் பிரதேசங்களில் தான தமிழ் அரசுகளும் சமஸ் தானங்களும் இருந்ததாக அறிந்து ள்ளேன். வல்லைவெளி என்ற கதை யில் கரையார் தலைவனொருவன் வல்லையில் நாடு பிடிக்க வந்த போர்த்துக்கீசருடன் சமர் புரிந்து விரட்டியதாக வருகின்றது. அதற்கும் காலத்தால் எவ்வளவோ பிந்தியது
55
போர்த்துக்கேயர் காலம். அக்காலத்தில் ᏭᏂ 600 Ꭻ ᏓL] [Ꭲ fr சமூகம் தனியரசு கண்டிருந்ததாகவோ அல்லது போர்த்து க் கீசரை விரட்ட வல்ல போர்க் குழுமங்கள் இருந்ததாகவோ வரலா ற்றில் அறியப்படவில்லை. எனவே செவிவழித் தகவல்களை படைப்புகளுள் தரும் போது அத்துறை போந்த வர்களுடன் ஆசிரியர் கலந் தா லோசனை செய்ய வேண்டும். அல்லது ஆதாரங்களையும் கூடவே தர வேண்டும்.
94ம் பக்கத்தில் வல்லை வீதியில் 750ம் 751ம் தட இலக்க பஸ்வண்டிகள் இரண்டும் வரும் என்றால் விஷயம் வாசகனுக்கு விளங்கிவிடும். அவர் அதைத் தொடர்ந்தும் ஒரு நீண்ட வசனத்தை எழுதுகிறார். அது வாசகன் பொறுமையைச் சோதிப்பதாகும். ஒரு படைப்பில் நாலு வார்த்தைகளில் சொல்லக்கூடிய விஷயத்துக்கு ஐந்து வார்த்தைகளைப் பயன்படுத்தினால் படைப்புச் சேதாரமாகுமென்பார் சுந்தர JTLDS Tf).
மேலும் படைப்புகளுள் ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே எழுதுவது அழகல்ல. நானும் அத் தவறை முன்பு பல கட்டங்களில் விட்டு ள்ளேன். இங்கே எனது அனுபவ மொன்றைச் சொல்ல விழைகிறேன்.
ஒருமுறை சுரங்க ரயிலில் 'அம்மா’ என்றொரு புகலிடச் சஞ்சிகையை வாசித் தபடி பயணித்துக் கொண்டிருந்தேன். விநோதமான எமது மொழியின் வரிவடிவை அவதானித்த ஆர்வமிக்க சக பயணியொருவர் அது

Page 30
என்ன மொழியிலான புத்தகம் என்று கேட்டார். நான் தமிழ் என்றேன். ஏன் சில இடங்களில் லத்தீன் (ஆங்கில) வரிவடிவில் எழுதப்பட்டிருக்கிறதே அவி வார்த்தைகள் ஏன் தமிழில் இல்லையா அல்லது அவ்வெழு த்துக்களே இல்லையா என்று கேட்டார். எனக் கு ஒடும் ரயிலிருந்து குதிக்கவேண்டும் போலிருந்தது. அன்றிலிருந்து படைப்புக்களிடையே ஆங்கிலத்தைப் பாவிப் பதில்லை யென்று இருக்கிறேன்.
இணக்கம்’ என்ற படைப்பின் பகைப்புலத்தை உடனே ஊகித்துவிட முடியவில்லை. காரணம் அதில் குறிப்பிடப்படும் வீதிகள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல், வவுனியா ஆகிய நாலு இடங்களிலுமே உள்ளன. மேலும் அக்கதையின் விளைச்சல் இறுதிப் பகுதியிலேயே வருவதால் விமானம் பறக்க முதல் மிக அதிகமான தூரத்தைத் தரையிலே ஒடியே வானில் ஏறுவது போன்ற அனுபவத்தைத் தருகினி றது. இதே அனுபவம் பயன்படல் கதையிலும் கிடைத்தது.
'திருவோடு கதையில் பரதேசம் போயும் திருந்தாத எமது சனங்களின் பழக்க வழக்கங்கள் அர்த்தமற்ற சடங்குகள் சாமத்தியங்கள் படா டோ பங்கள் ஜம் பங்கள் பட்டு உடுத்துவதும் பவுண் நகை பூணுவதுந் தான் ஜன்ம சாபல்யம் என்பது போல வாழும் பகுத்தறிவற்ற மக்களின் மூடத் தனங்கள் அழகாகப் பதிவு செய்யப் படுகிறது.
ஆனால் கனடாவிலோ அல்லது
56
வசதியான ஐரோப்பிய நாடொன்றிலோ தமிழ் அகதிகள் இவற்றை அங்கே கிடைக்கும் உதவிப்பணத்தால்தான் செய்கிறார்களென்று ஒரு பாத்திரம் மூலம் பேச வைத்திருப்பது தவறு.
எனது ஏறத்தாழ இருப்பத்தைந்து ஆண்டுகள் பரதேச வாழ்வு அனுபவத் திலிருந்து இவ்விஷயத்தை மேலும் இங்கு சற்றே தெளிவு படுத்தலாம். அது என் கடமையும் கூட.
எந்த ஒரு பொருளாதார வலுவுள்ள நாடும் அதன் பிரஜைகளுக்கும் அங்கு வாழநேர்பவர்களுக்கும் நலிவான பொருண்மிய வாய்ப்புகளுள்ள எம் தேசங்களைவிட சமூகப் பாதுகாப்பை அதிகமாக வழங்குவது இயல்பு. எமது நாட்டில் விதவைகள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு அரசு (மிகக் குறைந்தளவேயெனினும்) உதவிப்பணம் தருவதுண்டு. அவ்வுதவி ஏதோ பிரதமர் வீட்டுக் கல்லாப் பெட்டியிலிருந்து வருவதைப் போல அதை முன்பு நம்மவர் ‘பிச்சைச் சம்பளம்' என்றனர். அது எமது வரிப் பணத்தின் ஒதுக்கிடேயல்லாமல் எவர் வீட்டுப் பிச்சையுமல்ல.
குறைவோ கூடவோ இடம் பெயர்ந்தோருக்கான நிவாரணப் பொருட்களை ஏதலிகளாகிய
நம்மவர்கள் அரசிடமிருந்து பெற்ற துண்டு, சில இடங்களில் இன்னும் பெற்றுவருகிறார்கள்.
வேலையற்ற இளைஞர்களுக்கு
உதவிப் படி வழங் குவே னென் று சந்திரிகா அம்மையார் முன்னொரு

முறை தேர்தல் காலத்தில் சொன்ன துண்டு. (இப்போது அப்படியேதும் வழங்கப்படுகிறதா தெரியவில்லை.) இவ்வாறாக அனைத்துப் பிரஜைகளும் சாப் பிட்டு உயிர் பிழைத் திருக்க வே ணி டிய ஒரு குறைநத பட்ச உதவியை வேலை வாய்ப்பற்றிருப் போர், சிறுவர்கள், மாணவர்கள், அகதி வினி னப் பம் செயப் திருப் போர் ஆகியோருக்கும் அந்தந்த நாடுகளின் சமூக சேவைகள் திணைக் களம் வேலை செய்வோரின் வரிப்பணத்
திலிருந்தே வழங்குகிறது.
குளிர்நாடுகளில் இவர்களுக்கு ஒதுங்க ஒரு கூரையும் உயிர்தரிக்க உடையும் உயர்வுக்கான பொருளா. தார உதவியும் வழங்குவது அடிப்படையில் ஒரு மனிதாபிமான செயல். அவ்வுதவிகளின் பரிமாணம் அவ்வகதிகளை ஏற்றுக்கொண்ட அவ்வவி வர சுகளினி பொருளாதார வளத் தைப் பொறுத்த விடயம். எம்மவரில் ஒரு பத்து விதமானவர்கள் அவ் வுதவிகளை துஷபிரயோகம் செய் கிறார்களெனின் மீதி தொண்ணுாறு வீத மானவர்களுக்கு அது ஜீவனோபாயம். குந்தவை கிண்டல் பண்ணுகிறாரென்று அவ்வரசுகள் இவ்வுதவியை ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைத்தால் ஒரு குளிர்காலத்திலேயே அனைவரும் இறந்துவிட நேரும். பூச்சியத்துக்கும் கீழே குளிருள்ள ஒரு நாட்டில் வேலை வருமானம் இல்லாதபோது என்ன வீதியில் வித்தை காட்டியா பிழைக்க (Փգեւյմ)?
அகதிகளும் வேலை வாய்ப்
பற்றோரும் மாணவர்களும் வேலை வாய்ப்பு கிடைத்து வேலை செய்யும் போது அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியிலிருந்து (அது ஜெர்மனியில் வருமான தி தரினி 15 சதவீதம்) இதர மக்களுக்கும் உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. எங்குமே அகதிகளுக்கென்று எதுவுமே
விஷேசமாக வழங்கப்படுவதில்லை
என்பதை அறிக. செயற்பாடுதான்.
ஊரோடு ஒத்த வதிவிடங்களை
உணவுப்பொருட்களை வழங்குவதில்
சுதேசிகளுக்கு ஒன்றையும் கறுப்பர்கள்
ஆசியர்களுக்கு மட்டமானதையும்
வழங்கும் மாற்றாந் தாயப் மனப்
பாங்குள்ள நாடுகளும் உண்டு. எனவே
சமூக உதவியைப் பெறுவதென்பதை
திருவோடேந்துதலுக்கு ஒப்பிடுதல்
தவறு. கண்டிக்கிறேன்.
இவ்விஷயத்தை அவர் வேறு யாருடனும் கலந்து தெளிவாக்கிய பின் பதிவு செய்திருக்கலாம். அப்படித் திருவோடேந்துவதாகவே இருந்தாற் கூட அவர் குடும்பத்தில், சமூகத்தில், இனத் தி ல ஒருவர் கனடாவில திருவோடு ஏந்தும் மிடிமை மீதான எள்ளல் நகைப்பு குந்தவையையும் அடக்கியதுதான்.
‘யோகம் இருக்கிறது தொகுப்பின் தலைப்புக்கதை. இங்கே லஞ்சம் வாங்கிப்பிழைப்பு நடத்துகின்ற அரசு உயரதிகாரி ஒருவர் கையும் மெய்யு மாகப் பிடிபட நேர்கையில் அவருக்கு உத்தியோகம் பறி போய்விடுகிறது. பந்தாவுடன் வலம் வந்து கொண்டிருந்த அதிகாரி தன் உறவினர்களையோ

Page 31
நண்பர்களையோ கூட நேராகச் சந்திக்கக் கூசிக்கொண்டு ஒதுங்கித் திரிகிறான். பின்னர் ஒருநாள் அவன் அரசியல் செல்வாக்குள்ள தன் பழைய நண்பன் ஒருவனைத் தற்செயலாகக் S5T 600 நேர்ந்தபோது தன் பிரச்சி னையை முறையிட அவனும் தன் செல்வாக்கைப் பிரயோகித்து அதே குறுக்குவழியில் போய் அரசாங்க மந்திரி ஒரு வருக்கு லஞ் சம் வழங்குவதன் மூலமி அவனது உத்தியோகத்தை மீளப்பெற வாய்ப் பிருக்கிறது என்று ஊறுதியளிக்கிறான். உணர் மையில் மக்கள் யோகம் வாய்ந்தவர்களாக இருந்தால் தான் அவர்களுக்கு லஞ்சலாவண்யங்களற்ற ஒரு சுத்தமான அதிகாரியே கிடைப்பார். இங்கோ தேள் கொட்டிய திருடன் ஒருவனுக்கு இன்னொரு திருடன் புளியைத் தடவ வருகிறான். அதாவது இனி னொரு திருடனின் தயவில் கிடைக்கும் மீள் பதவி இவனுக்கு யோகமாகிறது. நோயும் நோய் முறிவு இரன்டுமே அறஞ்சார்ந்த வழிகள லல்ல! தலைப்பின் மிகை வர்ணம் சற்று நெருடலையே தருகிறது. சரிதான்
குந்தவை தனக்குத் தெரிந்தவர் எவருடையதாவது அனுபவத்தை மனதில் போட் டுக் கொணி டு எழுதியிருப்பாரோ?
குந்தவை மேலும் கற்பனையும் உழைப் பும் சேர்த்து இனி னும் படைப் புக் களை கலாரீதியாகத் தருவாராயின் ஈழத்துத் தமிழ் இலக்கியத் தடத்தில் தன் சுவடுகளை இன்னும் அழுத்தமாகப் பதிதது மு னி செல்வாரென்பதில் ஐயமில்லை.
பெர்லின், 25.01.2003
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுத்த பூமியின் வரலாற்றுப் பதிவுகள்
-ப. ஆப்டீன
ஆக்க இலக்கியம் பற்றி கருத்துக்கள் கூற முற்படும்போது, கருத்துரைப்பவர் குழுச்சார்பற்று நோக்க வேண்டும்.
: தான் வரித்துக்கொண்ட இலக்கியக் கொள்கை கோட்பாடுகளை
வைத்து உரசிப்பார்த்தல் விரும்பத்தக்கதல்ல.
நல்ல இலக்கியங்களை நானிலம் போற்றச் செய்வோம். எள்ற ரீதியில் கருத்துரைப்பவரின்
கண்ணோட்டம் அமைந்தால் இருட்டடிப்புகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.
தாமரைச்செல்வி அவர்களின் யுத்தபூமிக் கதைகளைப் படிக்கும்போது எனக்கு ஆங்கிலப் பெண் எழுத்தாளர் ஜேன் ஒஸ்ரனின் ஞாபகம் வருகிறது. ஆயிரத்து எண்ணுாறுகளில் அவள் எமா என்னும் நாவலை எழுத முற்பட்டபோது உலகின் பெரும் பகுதிகளில் கைத்தொழில் புரட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டம். ஆயினும் அந்தச் சூழலிருந்து ஒரு சொல்லேனும் அவளது அந்த கிராமிய நாவலில் இடம் பெறவில்லை.
ஆனால் தாமரைச்செல்வியின் கதைகள் அனைத்தும் சூழலில் நடந்த யுத்தத்தைப் பற்றியே பேசுகின்றன.
இது எதனைக் காட்டுகிறது? இலக்கியத்தில் படிப்படியாகத்தான் சமூகப்பார்வை வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
who moved my cheese 6167 g) b assass) BT616) Fepasy Ligdi,60)(65uj6ór உச்சக்கட்டத்தையே காட்டுகிறது.
ஒவ்வொரு சமயமும் பாற்கட்டியைக் கொஞ்சம் கொஞ்சமாக உணவாக்கிக் கொண்டிருந்த எலிக்கு பாற்கட்டி முடிந்ததும் உணவும் தீர்ந்து விடுகிறது. ஆனால் எலி உணவு தேட எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. உணவில்லாமல் பட்டினியிருந்தே உயிரை விடுகிறது. ஓரிடத்தை மட்டுமே நம்பியிராமல் தேடல் முயற்சி இருக்க வேண்டும் என்னும் செய்தியை உணர்த்துகிறது இந்நாவல்.
காந்த சக்திபோல் கவர்ந்திழுக்கும் வசன நடையில் தாமரைச்செல்வி பல கோணங்களிலிருந்தும் சமகாலத்தைப் படம் பிடித்திருக்கிறார்.
யுத்த பூமியில் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்னும் வினாவுக்கு பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தாமரைச்செல்வி அவர்களின் "அழுவதற்கு நேரமில்லை’ என்னும் சிறுகதைத் தொகுப்பு விடையளிக்கிறது.
/6N

Page 32
யுத்த பூமியில் சாதாரண மக்கள் படும் அவலங்களின் சித்தரிப்புகள் என்பதை விட அனைத்துக்கதைகளும் சமகால வரலாற்றுப் பதிவுகள் என்று கூறுவதே பொருத்தம்.
இதன் மூலம் யுத்த பூமியில் வாழும் ஒரு படைப்பாளி தம் தார்மீகக் கடமையை செவ்வனே நிறை வேற்றியுள்ளார்.
அழுவதற்கு நேரமில்லை சிறுகதையில் இருபத் தாறு வயதிலேயே வேணி மரணத்தைத் தழுவ நேர்கிறது. ஒழுங்கான கவனிப்பு இல்லாததே காரணம். வறுமையில் தவிக்கும் கணவன் அடிக்கடி இடப் பெயர்வுகள் நிகழ்வதால் அன்றாடம் தொழில் செய்து சீவிப்பவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் இல்லை.
மனைவியன் இறுதிக் கிரியை களைக்கூட செய்யமுடியாத நிலையில் குழந்தையின் சுகவீனம் வேறு வைத்தியம் பார்ப்பதா, ஈமக் கிரிகைகளுக்கு ஓடித்திரிவதா..? எப்படியோ அவற்றை நிறை வேற்றினாலும். மீண்டும் இடப் பெயர்வு.
கதை வாசகனின் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
தொழிலின்மையும் அதனால் வறுமையின் கோரப் பிடியும். அன்றாடப் பிரச்சினைகளும் யதார்த்தபூர்வமாக கோடிட்டுக் காட்டப் பட்டிருக்கின்றன.
நாளைய செய்தி சிறுகதையும் விறு விறுப்பாக நகர்கிறது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு. இறுதியில் வியட்னாமிய கிராமம் மீட்கப்படுகிறது. ரிச்சி து வான். எமி ஜோ.பப்புல் கங் பாத்திரங்கள் நல்ல வார்ப்புகள். மனதை ஈர்க்கின்றன.
இதுவும் ஒரு போராட்டக் கதைதான்.
கதாசிரியையின் பரந்த மானுட நேயம் இதன் மூலம் வெளிப்படுகிறது.
/66
"முற்றுகை சிறுகதையில் இருபத்து நான்கு வயது பூவணி னன் யுத்த பூமியிலிருந்து வெளியேறி கொழும்பில் ஒரு புத்தகக்கடையில் தொழில் செய்கிறான். ஓரிரவு வாடகை அறைகளை பரிசோதிக்க வந்த இராணுவத்தினரும் பொலீசாரும் அவனைக் கைது செய்துகொண் டு போகிறார்கள்.
இவ்வாறாக உறவு பாதை "சுயம் பாதணி ஊர்வலம் 'அக்கா 'ஓட்டம் 'சிறை நிழல் 'அடையாளம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் யுத்தம் காரணமாக இடப்பெயர்வுகளினால், அமைதியற்ற வாழ் க் கையையும் , குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றவும் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப் படுவதால் பாரிய இழப்புகள் தோன்றுவதையும் யதார்த்த பூர்வமாக காட்டப்பட்டிருக்கின்றன.
இவை வெறுமனே பதிவுகளாக மட்டும் இல்லாமல், சிறுகதைக்குரிய பண்புகளுடன் கலைத்துவம் மிளிர படைக்கப்பட்டி ருக்கின்றன.
இலக்கிய உலகில் இனங்காணப்பட்ட சிறுகதை எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களின் பல்லாண்டு அனுபவமும், வாழ்க்கையை மிகவும் கூர்மையாக அவதானிக்கும் தன்மையும், வசனங்களின் ஈர்ப்பும், இலாவகமான நடையும் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகளின் வெற்றிக்குக் காரணமாகும் என்று கூறுவதில் மிகையில்லை.

... " eve துண்டில்
- مس -نسه -سست سست -سسته سه سست -سس- -سسه -سست سر /۷ * ܠ . . . %۔ -۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ --.- کہ ۔۔ இந்தத் தாண்டில் பக்கம் பலராலும் விரும்பிப் N محبر / படிக்கப்படும் பகுதியாகும். உயர்கல்வி மாணவர்கள், N
தரமான சுவைஞர்கள் இந்தத் தூணர்டிலுக்கு கேள்வி N / எடுதுவது வரவேற்கத்தக்கது. Y
^ இந்தக் பகுதிக்கு கேள்விகள் கேட்பதன் முலடும் அக்கேள்விகளுக்கும் Y. R பதில் சொல்வதின் பெறுபேறாகவும் அறிவுத் தேடல் முயற்சி தொடரப்படுகிறது. /
N எனவே இந்தத் தளத்தை இளந்தலைடுறையினர் சரிவரம்
N பயன்படுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கது.
/ ಶ್ರೀಗಿ]]ಗೆ - ܠ N ٫۷ر
N
/ டொமினிக ஜீவா- 7- -- -- -- -ܚܘ ܚܘܚܝ ܚܘܗ- -- -- - ܚ - ܚܠ
360TL க.நடனசிவம்
நானும் இக்கருத்துப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இசை ஏதோ ஒரு உயர்ஜாதிக்கோ குலத்துக்கோ உரிய பரம்பரைச் சொத்தல்ல. காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் இப்படிச் சொல்லியிருக்கலாம். விட்டுத்தள்ளுங்கள். இசைஞானி இசைஞானியேதான். யாராலுமே அந்த இடத்தைப் பிடித்து விட முடியாது.
'மதுரை மணியின் பாட்டா? பலே ரொம்பப் பிரமாதமாகப் பாடுவார். மதுரை சோமுவா? ஏதோ பாடுகிறான்!’ என ஒரவஞ்சகமாகக் கதையளக்கும் மயிலாப்பூர் குப்பலின் விமரிசனக் கருத்துக்களும் மக்களுக்குத் தெரியாததல்ல.
நமது மணர்ணில் கூட கர்நாடக இசைக்துறையில் முவர் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஒருவர் கருணாகரன், மற்றவர் திலகநாயகம் போல் பிறிதொருவர் பத்மலிங்கம் இவ்ர்களில் இருவரது உருவங்களை முன்னரே மல்லிகை அட்டையில் முகப்புப் படமாக வெளியிட்டுள்ளேனர். தமிழகத்தைப் போலவே, இங்கும் இசைத்துறை உலகில் பல பொச்சரிப்புகள்உண்டு. எங்குமே தூய திறமைகள் எப்பொழுதுமே மதிக்கப்பட்டுப் போற்றப்படவே செய்யும், அந்த அந்தத் துறையில
6

Page 33
தாம் தாம் 8 մ) ստ எனக கொக கரிப்பவர்கள் கடைசியரிலி மக்களால் நிராகரிக்கப்பட்டு முடிவில் மறக்கப்பட்டு விடுவார்கள் என்பது தினர்ணம்,
ச.திருப்பதி
கோப்பாய்
சிறந்த மேடைப் பேச்சாளனிடம் இருக்க வேண்டிய தகுதிகள் ஐந்து. அவையாவன. முதலாவது தோற்றப் பொலிவு. இரணர்டாவது சரளமான மொழிப்புலமை, முன்றாவது தெளிவான சிந்தனையின் மொழி வெளிப்பாடு. நானகாவது ஆழமான கருத்து. ஐந்தாவது அதை வெளிப்படுத்தும் நயம்
Seumelo
ம.மரியதாஸ்
எந்த அதி உன்னத சிறுகதை எழுத்தாளனாலும் தற்காலச் சிறு கதைக்கு வரைவிலக்கணம் சொல்லி விளங்கப்படுத்தி விட முடியாது. அவள் அபூர்வமான அழகி எனச் சொல்லப் பட்டு வருகின்றது. பேரழகி என்பதற்கு வரைவிலக்கணம் சொல்ல முடியா
ததைப் போலவே சிறுகதைக்கும் வரை விலக்கணம் சொல்ல இயலாது.
^62 کر
வல்வெட்டி நா.கணேசன்.
இன்றைக்கு இந்த மண்ணில் பல பிரதேச மட்டங்களில் இருந்தெல்லாம் வாரா வாரம் புதுப்புது நூல்கள் வெளி வந்து பாமர மக்களிடம் உலவி வருக?னற தே, அது அதனர் சாதனைகளிலர் ஒன்று. ஈழத்து இலக கரியம் எனத தனியாகப் பேசப்படுகினர்றதே அது அடுத்த சாதனை. பரவலாக இனறு பல
பிரதேசங்களிலிருந்து புதுப் புதுப் படைப்பாளிகள் உதயமாகி வருகின் றனரே. அதற்கு அடிப் பசளையிட்டதே இ.மு.எ. சங்கமாகும்.
கொக்குவில் ச. சகாதேவன்
அப்படிச் சொல்லிவிட முடியாது. மலர் லரிகை 69 (D5 (35Ոf7ւj մlւ ւ
பகுதியரினரைத் தான திருப்தரிப் படுத்துகின்றது என்பதே உண்மை. ஓர் உணர்மை உங்களுக்குத் தெரியுமா? சகலரையும் திருப்திப் படுத்துகின்ற இலக்கியச் சஞ்சிகை உலகில் எங்குமே
இதுவரைக்கும் வெளிவந்ததில்லை.
புதுக்குளம் சி. அருண்மொழி
இரண்டுமே இரண்டு வகையைச் சேர்ந்த பத்திரிகைகள், இரண்டும் இரணடு வரிதமான நோக கமர் கொண்டவை. அந்தக் காலகட்டத்தில்
 
 
 
 
 

இரண்டினதும் தமிழ்ச்சேவை காலத்தால் அழிக்க முடியாதவை. கவனத்தில் கொள்ளத் தக்கவை.
கலட்டி
ர. ரஞ்சிதா.
இருவரையும் இப்படி எடை போடக் கேட்பதே தப்பு. புதுமைப்பித்தனர் தமிழ்ச்சிறுகதையரின முனர்னோடி. அவரது தோள்களில் நின்று கொண்டு தானர் ஜெயகாநதன தனது
படைப்புக்களைச் செய்துள்ளார். புதுமைப்பித்தனை நானர் நேரில் பார்த்ததில்லை. ஆனால், ஜெயகாந்தன் நண்பன், நாற்பது வருஷ நட்பு. எனவே இயல்பாக நான் ஜெயகாந்தன் சார்பு நிலை எடுப்பது யதார்த்தமானது,
நெல்லண்டை க. விஜயராணி
புதுக்கவிதையாளர் மேமன்கவி. யார் ஏற்றக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாது போனாலும் புதுக்கவிதை இன்றைய இலக்கிய வளர்ச்சியில் அத்தியாவசியமான ஒரு கவிதா வடிவம் - நான்கு புதுக்கவிதை நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். நரிச சயமாக நம்புங்கள். வருங்காலத்தில் கவிதைத் துறை பற்றிப் பேசப்படும் இலக்கிய
அரங்குகளில் அவரது பெயரும் இடம் பெறும், விமரிசிக்கப்படும்.
இளவாலை. கதிரவியம்
உழைப்பு! தேர்ந்தெடுத்துக கொண்டுள்ள துறையில் இடையறாத உழைப்பு. உலகபிலர் முனர் னேறி வநதுள்ளவர்களைக கேட்டுப் பாருங்கள். அவர்களும் நான் சொன்ன பதிலையே சொல்வார்கள்.
ஆனைக்கோட்டை ஆ.தேவராஜன்.
"மல்லிகை ஜீவா நினைவுகள் என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது. பூபதியின் முகுந்தன் பதிப்பகம் அந்த நூலை 2001 ஐ"லையரில வெளியிட்டுள்ளது. 136 பக்கங்களைக் கொண்ட அந்த நூலின் இந்திய விலை (IBLJIT -45/=
ம. மயில்வாகனன்
கோப்பாய்
ஃ தினைத்துப் பார்ப்பதுடன் நின்று
விடுவதில்லை. அதை எழுத்தில் கூட
ஆவணப்படுத்தி வருகின்றேன். எனது
^63 کر

Page 34
எழுத்துக்களே அதற்குச் சாட்சி
6 babaul. க.தவயோகம்
எந்த விதமான எதிர்பார்ப்புக் களையும் உத தேசித்து இவளம் தலைமுறைப் படைப்பாளிகளை நான் உருவாக்கி விடவில்லை. மல்லிகைக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? என்பது முக்கியமல்ல, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு விசுவாசமாக இருக கிறார்களா? என்பதே எனது கவலை. தடம் மாறுவார்களேயானால் கூடிய சீக்கிரம் இலக்கிய உலகிலிருந்து காணாமலே போய விடுவார்கள். பின்னர் அவர்களைப் பற்றி நாமேன் கவலைப்பட வேண்டும்?
கட்டுவன்
ச. சந்திரதாஸ்
வரகேசரி வெள்ளி கலைக கேசரியில் சகோதரி லஷர்மி மல்லிகை யைப் பற்றி வெகு விரிவாக ஓர் அறி முகம் எழுதினார். அந்தனிஜூவா தினகரன் வாரமஞ்சரியில் குறிப்பிட்டு
ள்ளார். மற்றும் இரண்டு தினசரிகளும் எழுதின. ரூபவாஹினி சக்தி ஒளிபரப்பி உற்சாகமுட்டின. ஒரே உற்சாக முடில் நான் திளைக்கிறேன்.
வி. பரமேஸ்வரன்
வளலாய்
நீங்கள் எந்த ஊரிலிருந்து இப்படிக் கதை பேசுகிறீர்கள்? வட புலத்தில் உங்களைச் சுநர்நரியுள்ள கிராமங்களைச் சற்று கவனித்துப் பாருங்கள். ஒடுக கப் L/ւ ւபஞசமர்களுக்கு இந்த மணினில் என்னென்ன மானுடக் கொடுமைகள் நடைபெறுகினறன என்பது வெகு துல்லியமாகப் புரியும், தயவு செய்து கண்களைத் திறந்த படி சுற்று முற்றும் பாருங்கள்! நம்மவர்கள் தமது ஊர் அழுக்குத் தனங்களைக் கூட, இன்று பலம் பெயர்ந்த நாடுகளில் கூடக் கடைப்பிடிக்கிறார்களே.!
201 - 1/1, பூர் கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த பேடு, 98A இலக்கத்திலுள்ள U.K. பிரிக9ர்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
《༼6འི།།
 
 
 
 

மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் த்தையும் இங்கு பெற்றுக் கொள்ள

Page 35
~ ä MALKA ー。
N
PA
EXPO PRODUC
Expor
|
I Non Tra
s Siri Lank:
,
30, sea Colom Tel: 5

MARCH gooB
மல்லிகைக்கு бf Z/223 ó/ாழ்த் துக்கள்
RA TS (PVT)ITD,
ters of ditional an Foods
Avenue
bo - 03. 73717