கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.04

Page 1


Page 2

உங்களத பொதவான கவனத்திற்கு.
இந்த நாட்டுப் படைப்பாளிகளின் மீது உண்மையாகவே நீங்கள் பாசமும் நேசமும் கொண்டிருப்பீர்களானால் ஒன்றை மறந்துவிடாதீர்கள்.
அவர்களது நூல்களைப் பரவலாகப் படியுங்கள். சுவைஞர்களுக்குத் தெரியும் வணி ணம் பிரபலப் படுத்த ஒத் து ழையுங்கள்.
இந்த நாட்டின் சகல பிரதேசங் களிலுமிருந்து மாதந் தவறாமல் இந்த மணனையும மக் களையும் . நேசிக் கும் பாளிகளின் புத்தகங்க வண்ணமாகவே இருக்கின்றன.
Lj60) L L’]
இத்தனை பிரசுரங்கள் வெளிவந்தும்
தரமான சுவைஞர்களுக்கு வெளிவரும்
நூல் கள் பார்வைக் கே கிடைத் து விடுவதில்லை.
திருமண பிறந்த நாள் விழாக் களுக்கு நமது எழுத்தாளர்களினது நூல் களைப் பரிசளிக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் முடங்கிப்
போயுள்ள நமது எழுத்தாளர்களது புத்த
கங்கள் விற்பனவுச் சந்தையை எட்டும். மற்றவர்களது பார்வையிலும் படும்.
இறக்குமதித் திமிங்கிலங்கள் நட மாடும் இலக்கியக் கடற்பரப்பில் நமது சிறு மீன்களும் வாழ்ந்து வர இதுவே வழி.
- ஆசிரியர்
அத்துடன் சேர்த்து
ள் வெளிவந்த −
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிளைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நில்ைகண்டு துள்ளுவர்'
38-வது ஆண்டு ஏப்ரல் 2003
tallikai Progressive tlonikly flagazine
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை
எதிர்பார்க்கின்றது.
01 - 1/1, Sri Kathiresan Stree Colombo - 13. Tel: 320721 E-mail: panthalasltnet.lk

Page 3

சமாதானப் பேச்சுக்கள் தொடராதுவிடினும் அமைதிமுயற்சிகள் சீர்குலையக்கூடாது
சமாதனப்பேச்சு வார்த்தைகளைத் தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்திருப்பதாக விடுதலைபுலிகள் தரப்பில் சொல்லப்பட்டதன் விளைவாக ஒருவிதமான யுத்த பயம் தேசம் பூராவும் பரவிவருவதை அவதானிக்கக் கூடிய தாகவுள்ளது.
மக்கள் மனக்கலவரமடைந்துள்ளனர்! பீதி கொண்டுள்ளனர்! பழையபடியும் யுத்தம் ஆரம்பித்துவிடுமோ என அச்சமடைந்துள்ளனர்.
சென்ற ஒராண்டு காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையையொட்டி யுத்த நிகழ்வுகள் ஒய்திருக்கக் கூடிய சூழ்நிலையில் பெருந்தொகையான மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதுடன் தமது தினசரிக் கடமைகளையும் மனக் கிலேசமின்றி நடத்திக்கொண்டு வந்துள்ளதை நாடே நன்கறியும்.
பிறந்து, வாழ்ந்து வந்த மண்ணைத் துறந்து பரதேசங்களில் குடிபெயர்ந்து இருந்த குடும்பத்தினரும் சூழ்நிலை காரணமாகப் பல்வேறு நாடுகளுக்குப் போய் அகதி அந்தஸ்துப் பெற்று வாழும் இந்த மண்ணின் புத்திரர்களும் யுத்தக் கெடுபிடிகள் இல்லாமல் தமது தாய்க் கிராமங்களுக்குச் சென்று வந்துள்ளனர். உறவினர்களைச் சந்தித்து அளவளாவி மகிழ்ந்ததையும் நாம் கண்டோம். அத்துடன் தமது பண்டைய வீடு வளவுகளைச் சீர்திருத்திச் செப்பனிட்டு மகிழ்ந்ததையும் நாம் பார்த்தோம்.
கடந்த ஆண்டில் இந்த மங்கள கரமான நிகழ்வுகள் நமது மண்ணில் நடந்தேறி வந்துள்ளன.
அரசாங்கத்தின் இந்த அதிநுட்ப கிளித்தட்டு விளையாட்டின் பெறுபேறாகப் புலிகள் இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தைகளிலிருந்து தற்காலிகாமாக ஒதுங்கி விடுபட்டுக் கொண்டதாக அறிக்கை விட்டதைத் தொடர்ந்து, பழையபடியும் பதற்ற நிலை மெல்ல மெல்லத் தோன்றி வருகிறது.
இந்த நிலை நீடிக்கவே கூடாது.
சிறுபான்மை இன மக்களின் நீண்ட கால நலன் கருதியும் பொதுவாக முழுநாட்டின் எதிர்காலச் சுபீட்சத்தை மனதிற் கொண்டும் தொடர்ந்து இப்பேச்சு
வார்த்தைகள் நடைபெற்று ஒரு சுமுக நிலை தோன்ற வேண்டும். இது அனைவரது கடமையுமாகும். N

Page 4
-9ւ 62ւ-ւմ Լւ-Lք
மூன்று தலைமுறைகளாக
இடைவிடாது எழுதும் கவிஞர் செ.குணரத்தினம்
அன்புமணி
ஈழத்து இலக்கிய உலகில், கடந்த 50 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் ஒரு எழுத்தாளர் செகுணரத்தினம் தமிழ் இலக்கியத்துறையில் பல்வேறு வடிவங்களான: கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை. சித்திரம், விமர்சனம், நேர்காணல், மெல்லிசைப் பாடல், கவியரங்கு, பத்திரிகைத்துறை முதலியவற்றில் முத்திரை பதித்து நூற்றுக்கு மேற்பட்ட பரிசுகளையும் பெற்ற எழுத்தாளர் இவர்,
இவரது படைப்புகளை ஒரு அண்ணளவாக மதிப்பீடு செய்து பார்த்தால் -
சுமார் 750 கவிதைகள், 300 மெல்லிசைப்பாடல்கள், 150 நகைச்சுவைக் கட்டுரைகள், 25 இலக்கியக் கட்டுரைகள், 50 வானொலி நாடகங்கள், 50 சித்திரங்கள், 10 நாவல்கள். 200 சிறுகதைகள் முதலியன தேறும்.
இப்படி மலைமலையாக எழுதிக் குவித்தாலும் நூலுருப் பெற்றவை சுமார் 10 அளவில்தான் தேறும். அவை - காவடிச்சிந்து (கவிதை), தெய்வதரிசனம் (நாவல்), நெஞ்சில் ஒரு மலர் (கவிதை), ஏழை நிலா (குறுங்காவியம்), இதயப்பூக்கள் (கவிதை), சொந்தம் எப்போதும் (நாவல்), ஒரு கிராமம் தலை நிமிர்கிறது (நாவல்), விடிவுகள் அடிவானில் (சிறுகதை), தியாக இதயம் (குறுங்காவியம்), துன்ப அலைகள் (நாவல்).
இவற்றை வெளியிடுவதில், செ. கு எவ்வித ஒட்டமும் ஒடவில்லை. வெளியீட்டாளர்களே, இவ்வாக்கங்களின் தகுதிகண்டு இவற்றை விரும்பி வெளியிட்ட இவ்வெளியீட்டாளர்களில் ஒரு சிலரையாவது இங்கு குறிப்பிட வேண்டும். இவரது ‘விடிவுகள் அடிவானில்” என்ற சிறுகதைத் தொகுதியை இலங்கை அச்சகக் கூட்டுத்தாபனமும், ‘ஒரு கிராமம் தலைநிமிர்கிறது’ நாவல் லண்டன் அன்பர் ஒருவர் அனுசரணையில், பல நாவல்கள் மத்தியில் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்பட்டு இந்நாவலை சென்னை மணிமேகலை பிரசுரத்தாலும், ‘இதயப்பூக்கள்’ கவிதைத் தொகுதி வடக்குக்கிழக்கு மாகாண சபையினர் பதிப்பகத் திணைக்களத்தினாலும் தெரிவு செய்யப்பட்டு
م.
 
 

வெளியிடப்பட்டது.
’துன்ப அலைகள்’ நாவல் தேசிய கலைஇலக்கியப் பேரவை எழுத்தாளர் சங்கம், சென்னை ‘சுபமங்களா’ சஞ்சிகையுடன் இணைத்து நடாத்திய நாவல் போட்டியில் 1ம் பரிசு பெற்று அச்சங்கத்தாலேயே நூலாக வெளியிடப்பட்டது.
இத்தொடர்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடாத்திய ஒரு இலக்கியக் கருத்தரங்கிற்கு, செ. குவை அழைத்துக் கெளரவித்தமையும் குறிப்பிடலாம். இவ்வாறே யாழ் இலக்கிய வட்டமும் செகுவின் எழுத்துக்களுக்கு உரிய மதிப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் எந்தக் கோஷ்டி வட்டத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ளாது தமது சொந்தக்காலில்
நிலைத்து நின்று தனது எழுத்தாற்றலின் மூலம் தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து நிற்கும் எழுத்தாளர் செகு எனலாம்.
பரிசுகள், பாராட்டுகள், விருதுகள் சர்வதேச மட்டத்திலும் இலங்கையில் தேசிய மட்டம், மாவட்டத்திலும் இடம்பெற்ற இலக்கிய போட்டிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளார். நாவல், நாடகம், கவிதை, கட்டுரை. சிறுகதை எனப் பல்வேறு துறைகளிலும் இவருக்குப் பரிசுகள் கிடைத்துள்ளன.
இவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட வேண்டும்.
(i) துன்ப அலைகள்' - நாவல் (தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்திய
நாவல் போட்டியில் 1ம் பரிசு) (i) ‘துருவங்கள் இணைகின்றன - நாவல் (வீரகேசரி எழுத்தாளர் ஆண்டுப் போட்டியில்
2 is usia,) - (i) ‘தெய்வதரிசனம் - நாவல் (பிரதேச அபிவிருத்தி அமைச்சு நடாத்திய போட்டியில்
2ம் பரிசு) (iv) ‘ஒரு மீனவன் உள்ளம் - சிறுகதை (கொழும்பு பல்கலைக்கழகம் நடாத்திய
சிறுகதைப் போட்டியில் 2ம் பரிசு) (v) நோர்வே தமிழ்ச் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் 2ம் பரிசு (vi) அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் கவிதைப் போட்டியில் 2ம் பரிசு
இவர் பெற்ற பட்டங்களில் ஒரு சில வருமாறு:- கவிமணி, இலக்கியமணி, தமிழ்மணி, ஆளுநர் விருது. இப்படிப் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவருக்குப் பாராட்டு நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு - மட்டக்களப்பில் பழம்பதியாகிய அமிர்தகழியில் 15.0.1942ல் பிறந்த செ.கு. கடந்த 2002 ஜூன் 15ல் 60 வயதைப் பூர்த்தி செய்து மணிவிழா நாயகன் ஆனவர். (60 வயதுப் பூர்த்தியாகாத காரணத்தால் இவருக்குக் கலாபூஷணம் விருது வழங்கப்படவில்லை போலும்) சிறுவயதில் அமிர்தகழியிலும் பின்னர் அரசடி மகா வித்தியாலயத்திலும் கல்விகற்று. எஸ்.எஸ்.சி.
محم

Page 5
சித்தி எய்தியபின், பல்வேறு தொழில்கள் பார்த்து ஈற்றில் வாழைச்சேனை காகித ஆலையில் நீண்ட காலம் இலிகிதராகக் கடமை ஆற்றி ஓய்வு பெற்றார். இங்கு கடமை ஆற்றிய காலத்தில் “காகிதமலர்” என்ற மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
1960களில் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகி இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். மிகவும் இளம் வயதில் கவிதை எழுதி இலக்கிய உலகில் பிரவேசித்து ‘சுதந்திரன்' பண்ணையில் வளர்ந்து ஈழத்தின் இலக்கிய பிதாமகன் எஸ்.டி.சிவநாயகம்
அவர்களால் உருவாக்கப்பட்டவர்.
மூன்று புதல்விகளும் இரு புதல்வர்களும் இவரது வாரிசுகள், மூத்தவரான கு.வாசுகி கி.ப.க. பட்டதாரியாகி எழுத்துலகிலும் பிரகாசிக்கிறார். இரண்டாவது புதல்வி குயாரதி விபுலானந்த இசை நடனக் கல்லூரியிலும் மூன்றாவது புதல்வி உமா கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். புதல்வர்கள் இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பூத்த கவிஞர்கள் பலருள்ளனர். நீலாவணன், ராஜபாரதி, பாண்டியூரான், ஜீவா, திமிலைத்துமிலன், புரட்சிக்கமால், மருதமைந்தன். சாந்திமுகைதீன், எருவில் மூர்த்தி, மு.சோமசுந்தரம்பிள்ளை, மூனாக்கானா எனப்பட்டியல் நீளும். இப்பட்டியிலில் மூத்த கவிஞர் வரிசையில் இடம்பெறுபவர் நமது செ. கு.
இதுவரை இவர் வெளியிட்ட ஐந்து கவிதைத் தொகுதிகளையும் ஒரு சேர நோக்கும் போது, எளிய சமிழில் கவிதைகளை அனாயாசமாக வடிக்கும் இவரது திறமையைக் காணமுடிகிறது.
ஈழத்தில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதுவோர் மிகவும் குறைவு. நகைச்சுவைச் சுவைக் கட்டுரைகளை நமது செ. கு அதிகமாகவே எழுதியுள்ளார். ‘அமிர்தகழியான்’ என்ற புனைபெயரில் இவரது கட்டுரைகள், வாரமஞ்சரிகளில் வெளிவருகின்றன.
இரண்டு பிரபல நகைச்சுவைக் கட்டுரையாளர்களை நாம் இலகுவில் மறக்க முடியாது. ஒருவர் பி. ஜி. வோட்ஹவுஸ் (ஆங்கிலம்) மற்றவர் பேராசிரியர் கல்கி. வாசிக்கும் போதே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ஆற்றல் இவர்களது எழுத்துக்களுக்கு உண்டு. கிட்டத்தட்ட அதே ஆற்றல் அமிர்தகழியான்' நகைச்சுவைக் கட்டுரைகளுக்கும் உண்டு.
செ. கு எழுதும் நாவல், சிறுகதைகளில் அவரது ஊர்ப்பிரச்சினைகள். அவரது அநுபவங்கள் என்பனவும் மற்றும் கதாபாத்திரங்களாக அவரது ஊர்மக்களே அதிகமாக இடம் பெறுவர். மீனவர்கள் வாழும் அமிர்தகழி கிராமத்தில் அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகமாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாததே. இம்மக்களின் வாழ்க்கைதைத் தொழில், படகுச்சேவை, மீன்பிடி முதலிய விடயங்களும் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இவரது கதைகளில் இடம்பெறுகின்றன. பாத்திரங்களும், கதை நிகழிடங்களும் நம் கண் முன்னே அப்படியே நிதர்சனமானத் தோன்றும். ‘தெய்வ தரிசனம்’, ‘ஒரு கிராமம் தலை நிமிர்கிறது’ போன்ற நாவல்களில் இவை சிறப்பாக அமைந்துள்ளன. அவ்வாறே அவரது சிறுகதைகளிலும், குறுநாவல்களிலும் மண் வாசனை விச,
S. pesos .
 
 
 

யதார்த்தம் மிளிர பாத்திரங்கள் உயிருள்ளவர்களாக நடமாடுவார்கள்.
முந்நூறிற்கும் மேற்பட்ட கதைகளை இவர் எழுதியிருந்தாலும் ‘விடிவுகள் அடி வானில்’ என்ற ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பு மட்டுமே நூலாக வெளிவந்துள்ளது. ஏனைய சிறுகதைகளும், தொகுப்புகளாக வெளிவந்தால் இவரது சிறுகதைகளின் சரியான மதிப்பீட்டை அறியலாம்.
நம்முடைய விமர்சகர்கள் வெவ்வேறு அளவு கோல்களைக் கொண்டுள்ளதால், விமர்சகர்களின் سامبر
நாக்கைவிட வாசகர்கள் நோக்கே இச்சிறுகதைகளின் சரியான விமர்சனமாக அமைகிறது.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் வானொலி, தொலைக்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வானொலி நாடகங்கள், வானொலிச் சித்திரங்கள், மெல்லிசைப் பாடல்கள் பற்றித் தனித்தனியாக எழுத வேண்டும். அவ்வாறே நேர்காணல் கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகளும் வித்தியாசமான நோக்கில் இவரால் எழுதப்படுகின்றன. பல இலக்கிய கருத்தரங்குகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு இவர் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளார்.
சில காலம் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'தினக்கதிர்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகக் கடமை ஆற்றிய செ. கு தற்போது மட்டக்களப்பிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘தமிழ் அலை’ பத்திரிகையில் கடமை ஆற்றுகிறார்.
இவரது தனித்துவங்கள் 6): -
இவருடன் எழுத ஆரம்பித்தவர் பலர் ஒதுங்கிக் கொண்ட போதும், இவர் தொடர்ந்து எழுதுகிறார். இவரது படைப்புகள், அவர் வாழும் சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகின்றன. எழுத்துத் துறையில் இத்தனைப் புகழ் பெற்ற பின்னரும் எளிமையும். இனிமையும் கொண்டு அனைவருடனும் கலகலப்புடன் பழகுகிறார். 60 வயதைத் தாண்டிய பின்னரும் 20 வயது இளைஞனின் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார். நாவலோ, சிறுகதையோ, கவிதையேர், கட்டுரையோ, நாடகமோ எதுவானாலும் ஒரே மூச்சில் எழுதி முடித்து விடுவார். காகித ஆலையில் பணியாற்றிய காலத்தில் ஒடும் ரயிலில் இருந்த படி எழுதிய ஆக்கங்கள் ஏராளம் எழுத்தைப் பொறுத்தவரை பழைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கம் பாலமாக அமைபவர் இந்த செ. கு!
மல்லசீகை வாசகர்
அனைவருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களர்
-ஆசிரியர்.

Page 6
UL965IIblist
படிப்பித்த
UTLC6s
உடுவை. தில்லை நடராசா
மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அப்பா வேலை செய்யும் கடைக்குச் சென்றிருந்தேன். சுமார் பத்துப்பதினைந்துபேர் ஒரு பொருளைச் சுற்றவரப் புதினம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆவல் மிகுதியால் நானும் அவர்களுக்கிடையே நுழைந்தபோது மூன்றுபேர் புதிய மின்சாரவிசிறியைக் கூரையில் பொருத்திக் கொண்டிருந்தனர். மூன்று நீளமான சிறகுகள் கொண்ட அழகான விசிறியை மேசைமேல் ஏறிநின்ற இருவர் பிடித்துக் கொண்டிருக்க நிலத்திலிருந்து கூரையைத் தொட்டுக் கொண்டிருந்த ஏணியில் ஏறி நின்றவர் நீளமான குழாயை வளைந்த கொழுக்கியில் கொளுவி மின்சாரவயரை இணைத்தார். சுழல ஆரம்பித்த மின்விசிறியிலிருந்து வந்த காற்றை அனுபவிப்பதற்காக காரணகாரியம் இல்லாமல் அடிக்கடி மின்விசிறிக்குக் கீழே வந்தவர்களுள் நானும் ஒருவன்.
என்னைப் பொறுத்தளவில் மின்விசிறியிலிருந்து வந்த காற்று குளிராகவும் சுகமாகவும் இருந்தது. ஆனால் அப்பாவோ அக்காற்று உஷணமானது எனவும் அதிக நேரம் மின்விசிறிக்குக் கீழ் நிற்பது உடலுக்குக் கூடாது எனவும் தெரிவித்ததை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சிறிது நேரம் நிற்கவே சுகமாயிருந்தால் அதன்கீழ் படுத்திருந்தால் எப்படியிருக்கும் என எண்ணிக் கற்பனைச் சுகம் கண்டேன். என் கற்பனைகேற்றவாறு அன்றிரவு அப்பா இரவு முழுவதும் கண்விழித்துக் குசினியில் வேலை செய்ய வேண்டியிருந்தது. நான் மேசைகளை மின்விசிறிக்குக் கீழேபோட்டுக் கொண்டு விசிறியையும் ஆகக்கூடியளவு வேகத்தில் சுழலவிட்டேன். அதையாரும் பார்க்கக்கூடாது என்ற எண்ணத்துடன் கதவையும் யன்னலையும் இறுக்கிப் பூட்டினேன். நித்திரை என்றால் அப்படியொரு நித்திரை. காலைப்பொழுது விடிவதற்கு சற்றுமுன்பாக அப்பா எழுப்பிய போது என்னால் சரியாகக்கதைக்கக்கூட முடியவில்லை. தொண்டை கட்டியிருந்தது. கண்கள் சிவந்திருந்தது. உடம் பெல்லாம் ஒருமாதிரிக் கணகனவென்றிருந்தது. மின்விசிறியிலிருந்து சூடான காற்றுத் தான் வரும் என்பதை உணர முடிந்தது. அப்பா சொன்னார். “மின்சார விசிறி சுழலும்போது அறைக்கதவு ஜன்னல்களை முடிந்தளவுக்குத் திறந்துவைத்தால் காற்றோட்டம் சீராகி உடல் அலுப்பாவதையும் சூடாவதையும் குறைக்கும்.” அதன்பின்பு மின்சாரவிசிறிக்குக் கீழ் இருக்கும் போது சூடான காற்றை அறையில் குறைப்பதற்காக கதவு ஜன்னல்களை
 

நன்றாகத்திறந்து விடுவதால் முதல்நாள் ஏற்பட்ட திக்குமுக்காடல் இல்லை.
xxxx
ஆச்சி சொன்ன அப்பாவின் கதை இது:-
தைப்பொங்கலன்று காலை மழை இடையிடையே மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையினால் நிலம் ஈரமாகவே இருந்தது. இருந்தாலும் முற்றத்தில் பொங்க வேண்டும் என்பதற்காக நீள வாங்கொன்றை கதிரை மேல் சாய்வாகப் போட்டு அதன் கீழ் அம்மா பொங்கிக் கொண்டிருந்தார். நிலத்தில் போத்தல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பொங்கல் இறக்குவதற்கு முன்பாக கொழுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்த சீன வெடிகள் சில கதிரையில்,
கிணற்றிலிருந்து தண்ணிர் குடத்துடன் பொங்குமிடம் நோக்கி வந்து கொண்டிருந்த அப்பாவின் பார்வையில் - நிலத்தில் தவழ்ந்து கொண்டிருந்த சிறு குழந்தையாகிய நான் மெதுவாக எழும்ப முயன்று எட்டி கதிரையிலிருந்த வெடியை எடுத்து நிலத்திலிருந்த போத்தல் விளக்கு நெருப்பில் வெடித்திரியைக் கொளுத்தி விட்டேனாம். யாருமே என்னைக் கவனிக்கவில்லை.
ஒரே ஓட்டமாக ஓடி வந்த அப்பா என் முதுகில் ஓங்கி ஓர் அடி. “அம்மா’ என்ற அலறலுடன் விரிந்த என் கையிலிருந்து விழுந்த வெடி வெடித்த போது தான் அம்மாவுக்கு நடந்தது தெரியுமாம். ஒரு பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது. சற்று தாமதித்திருந்தாலும் என் கையிலிருந்து தான் வெடித்திருக்குமாம். சில வேளைகளில் போத்தல் விளக்கு கூட சிதறியிருக்குமாம்.
இந்தக் கதையைத் தந்தையிடம் கேட்ட போது -
“இப்படியான சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு கட்டளையிடாமல் உடன் செயற்பட வேண்டுமெனவும், ஏதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி காரியத்தை சாதிக்க வேண்டும். சில வேளைகளில் தம்பி நல்ல பிள்ளை வெடியைக் கீழே போடு என்று சொல்ல நினைத்தால் - சொல்வதற்கு முன்பாக வெடி வெடித்து விடவும் கூடும்.” எனவும் தெரிவித்தார்.
хx xх хx xх
பாடசாலை நாட்களில் கட்டுரைகள் வாசிப்பதிலும் சொற்பொழிவுகள் கேட்பதிலும் ஆர்வம் அதிகம். அநேகமாக எல்லோரது பேச்சிலும் எழுத்திலும் திருக்குறளும் குறள் கூறும் கருத்துக்களும் முக்கிய இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. திருக்குறள் மாநாடுகளும் தடல்புடலாக நடந்த காலம் அது. திருக்குறளைப்

Page 7
பாடமாக்கினால் எழுத்தும் பேச்சும் பொருள் நிறைந்ததாக அமையும் என எண்ணினேன்.
“கட்டி வீட்டில் இருக்கிற திருக்குறள் கலணர் டரில் தினமும் கலணி டர் திகதியைக் கிழிக்க முன் திருக் குறளையும் அதன் கருத்தையும் படித்துப் பாடமாக்கும். கிழித்த திகதியை அன்று முழுவதும் சட்டைப்பையில் வைத்தி ருந்தால் ஏதாவது மறந்துபோகும் போது திரும்ப எடுத்துப் பார்க்கலாம்," என்றார் அப்பா. கலண்டரில் குறள் படிக்கத் தொடங்கி தினசரிப் பத்திரிகைகள்,
வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக
தனியான நேரமொதுக்காமலே பெரும் பாலான குறள் மனப்பாடம்.
எழுதுவதற்கும் பேசுவதற்கும் மட்டுமல்லாமல் இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட் சையிலும் முகாமைத்துவம் தொடர்பாக கேட்கப் பட்ட கேள்விக்கு.’ இதனை இதனால் இவன் முடிக்கும் என குறளை விளக்கி விரிவாக எழுதி அதிக புள்ளிகள் பெற முடிந்தது.
தினம் ஒரு திருக்குறள் என ஆரம்பமாக குறிப்பாக நேரம் ஒதுக் காமலே பல விடயங்களைப் படிக்கவும் பாடமாக்கவும் பழகிக் கொண்டேன்.
ҳx ҳx ж хx
மாலை ஐந்து ஐந்தரை மணிக்கு முன்பாக இருட்டு பரவும் மழைக் காலத்தில் ஒரு நாள் அரிக்கன் லாம்பைக்
கொளுத்தி வைப்பதற்காகச் சென்ற அம்மா "ஐயோ பூரான்” எனக் கத்தினார். த்டியொன்றைத் தேடி நான் அலைந்த போது அப்பா வீடு கூட்டும் ஈர்க்கில் விளக்குமாற்றினால் அம்மாவை அலற வைத்த புலிமுகச் சிலந்தியின் கதையை முடித்து விட்டார். அது பெரிய விடய மல்ல. - சிறிது நேரத்தின் பின் வீட்டு வாசலுக்கு முன்னால் படமெடுத்தாடிக் கொண்டிருந்த பாம்புக்கு ஒரே போடு. தலைநசிந்து மெல்லிய துடிப்புடன் பாம் டசின் கதையும் முடிந்தது. விஷஜந்துக்களைக் கொல்லுவதற்கும் சில வழிமுறைகள் இருக்குதாம்
எட்டுக்கால் பூச்சியான புலிமுகச்சிலந்தி நிலத்திலோ சுவரிலோ அல்லது மரத்திலோ தத்திப் பாய்ந்து தப்பி விடக்கூடியது. தடியால் அடிக்கும் போது கூட தந்திரமாகத் தப்பி விடக்கூடியது.
சில வேளை ஒரு காலோ அல்லது
இரண்டு காலோ தடிக்கு அகப்படும். பூச்சி தப்பி விடும். ஈர்க்கிலான விளக்குமாற்றால் அமத்தி அடிப்பது சுகம்.
பாம்பை ஒட விடாமல் அடிப்பதானால் முதல் அடி தலையில் ஓங்கி அடிக்க வேண்டும். நடுப்பகுதியில் அல்லது வாலில் விழும் அடி பாடம் பைக் கொல்லாது. உருளை வடிவான தடியால் பாம் பை அடிப்பதுதான் சுகமாம். வேறுவகையான தடி என்றால் கை வலிக்குமாம், விஷபாம்புகள் அதிகமுள்ள இடங்களில் பாரம் குறைந்த உடையாத உருண்ட்ைத்தடியை எளிதாக எடுக்கக் கூடிய இடத்தில் வைத்திருக்க வேண்டு மெனச் சொல்லித் தந்தார், அப்பா,
 
 

xx xK xjK xx
அப்பா வேலை செய்த சாப்பாட்டுக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுள் சிறிது குடித்து விட்டு பெரிதாக மிரட்டிச் சண்டித்தனம் செய்வோரும் அடங்குவர். அப்படிப் பட்டோர் வரும் போது முதலாளியைப் பார்க்கப் பாவமாக இருக்கும். அவர்களையும் பகைக்க விரும்பாமல் வியாபாரத்தையும் கெடுக்க விரும்பாமல் சில தின்பண்டங்களையோ அல்லது சிறிது பணத்தையோ கொடுத்து அவர்களைச் சமாளிப்பதில் அப்பாவுக்கு உடன்பாடில்லை. ஒரு நாள் குடிகார்ச்
சண்டியனொருவன் கடையைக் கலக்கிக்
கொண்டிருந்த போது திடீரொன அந்த
இடத்துக்கு வந்த அப்பா அவன்
கழுத்தெலும் பை இறுக அமத்திக்
கொண்டு காலால் ஒரு பலமான உதை. கணப்பொழுதில் குசினிக்குள் நுழைந்து
வெளியே வந்த அப்பாவின் கையில் எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டையைப் பார்த்ததும் அவன் வெறி முறிந்திருக்க வேண்டும். ஒரே ஓட்டம். அதன் பின்னர் யாராவது கடையில் கலாட்டா செய்யும் வேளை அப்பா அவர்களை முறைத்துப் பார்த்து விட்டு வேகமாக குசினிக்குள் நுழைவார். கலாட்டா செய்ய வருபவர் எப்படிக் கடையைவிட்டு நழுவுகின்றார் என யாருக்கும் தெரியாது.
‘எப்போதும் முந்து கன்ற வணி சண்டிக்காரனாக இருப்பான். வெற்றியும் கிடைக்கும். அதற்காகப் பயக் படக் கூடாது. திடீரென பெரிதாக ஏதாவது செய்து அச்சுறுத்தல் நிலையை
உருவாக்கி, ‘சாதுவுக்கு கோபம் வந்தால் அவ்வளவு தான்.’ என்ற அபிப்பி ராயத்தை ஏற்படுத்திய பின் அமைதியாக இருந்து விட வேண்டும் என்பதும் அப்பா சொல்லித் தந்ததில் ஒன்று
米米米米
1960களின் ஆரம்பத்தில் நாட்டின் தலைவியின் படத்தையும் அவர் காலில் அணிந்து கொள்ளும் சாதாரண இறப்பர் செருப்புகளின் படத்தையும் பல தினசரி பத்திரிகைகள் பிரசுரித்து தலைவி மிக எளிமையானவர். இரண்டு ரூபா எழுபத் தைந்து சதம் பெறுமதியான செருப்பைத் தான் விரும்பி அணிகின்ற்ார் என்ற குறிப்பையும் வெளியிட்டது. செருப்பு வாங்க அப்பா தந்த பத்து ரூபா பணத்தில் ஏழு ரூபாவுக்கு மேல் மிகுதி கொடுத்த போது அவருக்கு கோபம் வந்தது.
‘குளியலறைக் கும் படுக கை யறைக்கும் இடையே போடக்கூடிய செருப்பு தான் இறப்பர் செருப்பு விலை குறைவானதாயிருக்கலாம். காலுக்கு சொகுசானதாயிருக்கலாம். ஆனால் வெய்யிலுக்கோ அல்லது வெளியிடங் களுக்கோ அணிவதற்கேற்ற செருப்பல்ல. ஏனென்றால் சூட்டை உள்ளிழுத்து பின்னர் சூட்டைக் கடத்தும் தன்மை கொண்டதால் அதை வெய்யிலுக்கு அணியக் கூடாது என்றார். அதே செருப்புடன் பள்ளிக்கூடம் சென்ற போது அப்பா சொல்லியதையே ஆசிரியரும் சொன்னார். பகல்பொழுது பள்ளியிலிருந்து வீட்டுக்குச் சென்று திரும்பி வந்த போது

Page 8
கண்கள் சிவந்திருந்ததையும் தொண்டை கரகரத்ததையும் உணர்ந்த போது தான் அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவர் ஆலோசனைப்படியே ஏழுருபா பெறுமதியான தோல் செருப்பு நீண்ட காலம் பயன்பட்டது.
本本来本
எனது அலுவலக அறைக்கு வந்து என்னுடன் உரையாடிய அதிகாரி யொருவரையும் அழைத்துக் கொண்டு கணக்காளரின் அறைக்குச் செல்வதற்கு முன்பாக எனது சிற்றுாழியரிடம் நான் கணக்காளரின் அறைக்குச் செல்வ
தாகவும் சுமார் அரைமணி நேரத்தில்
திரும்பி வருவதாகவும் சொன்னேன். என்னுடன் உரையாடிய அதிகாரி ஏளனமாகச் சிரித்தார் - “என்ன இதே கட்டிடத்தில் இருக்கிற கணக்காளரைச் சந்திக்கிறதுக்கும் பியோனின் பெர்மிஷன் தேவையா? இது அனுமதியல்ல தகவல். அலுவலகத்துக்குக் கடமைக்கு வந்த பின் வெளியே செல்லும் போது எங்கே? என்ன விடயம்? எத்தனை மணிக்கு மீண்டும் திரும்புவேன், என்ற தகவலே தவிர பியோனிடமிருந்து அனுமதியல்ல என்றோன்.
அதிகாரியுடன் கணக்காளரின் அறையில் அறிக்கை தயாரித்துக்
கொணி டிருந்த போது ஒலித் த தொலைபேசியை எடுத்த கணக்காளர் -
“உங்களை அமைச்சர் வரட்டுமாம்” என்று சொல்லி விட்டு, “என்னடைய அறையில் இருப் பது 6I UI LULQ
அமைச்சருக்குத் தெரியும்? எனக் கேட்ட
போது ஐந்தாம் வகுப்பு அனுபவத்தை சொன்னேன்.
அதிகாலையிலேயே எழுந்து விடு வதால அப்பா மாலை இரணி டு மணியிலிருந்து மூன்று மணி வரை
தூங்குவது வழக்கம். அப்பா தூங்கி சில
நிமிடங்களுக்குள் அங்கே கடமையாற்றிய தொழிலாளி திருவலை கத்தி ஆகிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு அவற்றைச் செப்பனிட இரும் புத் தொழிற் சாலை கி குச் செல் ல ஆயத்தமானார். சிறிது நேரத்தில் திரும்பி விடலாம் என்ற அவர் சொல்லை நம்பி நானும் அவருடன் சேர்ந்து சென்றேன். தொழிற்ச ாலையிலிருந்த இயந்தி ரங்களைப் பார்த்ததில் நேரம் போனது தெரியவில்லை. மணி ஐந்தாகி விட்டது. மூன்று மரிைக்கு எழுந்த அப்பா என்னைத் தேடியிருக்கிறார். கடையிலிருந்த யாரும் சரியான பதில் சொல்லவில்லை. பொழுது போக்காக நான் செல்லும் தமிழ்ப் பண்ணை புத்தகசாலை, ஜெஸிமா படக் கடை முன்னாலுள்ள புடவைக்கடை எல்லாவற்றிலும் முதலில் தேடல். அடுத்து வின்ஸர் ராணி என படமாளிகைகளில் தேடல்.
ஐந்து மணி போல் நான் கடைக்குச் சென்றபோது எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அப்பா வெகு சாதாரணமாக சொன்னார் ‘ஆண் பிள்ளை நாலு இடத்துக்குப் போக வேணும் நாலு பேரோடு பழக வேணும். அதற்கெல்லாம் அனுமதி எடுக்கவேண்டுமென்பதில்லை ஆனால் எங்கே போகின்றேன்? எப்போது திரும்பி வருவேன் என்ற தகவலைச்
 
 

சொல் லலிப் போனால் யாரும் பதட்டப்படாமல் பயப்படாமல் இருப் பார்கள். நான் நித்திரையென்றால் வேறொருவரிடம் சொல்லி விட்டுப் போயிருக்கலாம். அல்லது ஒரு கடிதத்தை எழுதி வைத்திட்டுப் போயிருக்கலாம்.”
அன்று முதல் நான் போகுமிடமும் திரும்பி வரும் நேரமும் சிலருக்காவது தெரிந்திருக்கும்.
来来来来
நொவம்பர் மாதக் கடைசியில் வகுப்பேற்றப் பரீட்சையை அடுத்து டிசம்பரில் வரும் நீண்ட பாடசாலை விடுமுறை மகிழ்ச்சியான நாட்கள். ஆழமாகப் படிக்க வேண்டிய விடயங்கள் இருக்காது. ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் தீபாவளி மலர்கள் மகிழ்வைத் தரும். தீபாவளியையொட்டி வெளியான புதுப்புதுத்திரைப்படங்கள் பார்க்கலாம். இந்தியாவில் நடைபெறும் இசைவிழா வானொலி அஞ்சலும் நெஞ்சத்தை மகிழ்விக்கும்.
கடைக்கு விறகு கொத்த வரும் மாமாவின் மகன் என்னை விட உயர்ந்த வகுப் பில் படிப்பதால் மார் கழி விடுதலை யில் அவரின்
வேணி டும் என்பதும் அப்பாவின் ஏற்பாடுகளில் ஒன்று. குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தப்புத்தகங்களை வாசித்து விட்டு திருப்பி கொடுக்க வேண்டுமென்பது கண்டிப்பான கட்டளை.
լ J 6Ն) Ցi 60) 6)] Ա J T 601 பொழுது
LJ TL Lj புத்தகங்களை இரவலாக வாங்கி வாசிக்க
போக்குகளுக்கிடையே பாடப் புத்த கங்களை முழுமையாக வாசித்து முடிக் காததால் “வாசிக்க நேரமில்லாமல் போய் விட்டது” என்று சொல்லி முடிக்கு முன் பாக அப்பா கேட்டார் - “நேரமில்லாததால் வாசிக்கவில்லையா?”
ஆமெனத் தலை அசைந்தது.
அடுத்த கேள்வி- ‘நேற்றிரவு முதல் நாளிரவு சாப்பிட்டதா? -“ஓம் சாப்பிட்டனான்’ இன்னுமொரு கேள்வி. "நேற்றிரவு நித்திரை கொண்டதா? அதற்கு முதல் நாளிரவு நித்திரை கொண்டதா?” எல்லாவற்றுக்கும் பலமாகத் தலையை ஆட்டினேன். அப்பா சிரித்தார் - “கட்டிக்கு சாப்பிட நேரமிருக்கு, நித்திரை கொள்ள நேரமிருக்கு. பாடப்புத்தகம் வாசிக்க நேரமில்லை.” ஒரு கணம் யோசித்தேன். “நேரமில்லை’ என்பது சாட்டு, நேரத்தை சரியாகப் பங்கட்டு முன்னுரிமை அடிப் படையில வேலைகளை நிறைவேற்றப் பழகிவிட்டால் குறுகிய நேரத்துக்குள் எவ்வளவோ காரியங்கள் செய்யக்கூடியதாயிருக்கும். "நேரமில்லை’ என்று கூறி எம்மை நாம் ஏமாற்று கின்றோம். அல்லது வேலைகளையும் கடமைகளையும் சரிவர செய்யா மலிருக்கின்றோம்.
хx xxxx xx
நத்தாருக்கும் புதுவருடத்துக்கும் இடையில் கடைகடையாக ஏறி இறங்குவோருடன் நானும் இணைந்து கொள்வேன். எல்லாம் புதுக் கலண்டர் சேகரிப்புக்காகத்தான். 'ஒரு கலண்டர் போதும்' என்பது அப்பாவின் தீர்மானம்.

Page 9
எத்தனை 'கலண்டர் கிடைத்தாலும் திருப்தி தருவதாகக் காணோம். இரண்டு பெரிய காட்போட் பெட்டிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கலண் டர்களின் பாரம் கழுத்தை நெரித்து துன்பம் தரவும் சாதனை நிலைநாட்டுபவன் என்ற நினைப்புடன் யாழ்ப்பாண நகரிலிருந்து
கிராமமான உடுப்பிட்டிக்குச் சென்றேன்.
ஒவ்வொரு கலண்டருக்கும் நூல் கோர்த்துக்கட்டி சுவரிலும் ஆணிகள் உள்ள இடங்களிலும் மாட்டிப் பார்த்த அழகு அதிக நாள் நிலைக்கவில்லை. ஊரவர் உறவினர் என ஒவ்வொருவரும் அம்மாவுக்கு ஒவ்வொரு தடவையும் வேண்டுகோள் விடுக்க ஒவ்வொரு கலண்டராகக் குறைந்து சென்றது.
பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் ஒரேயொரு கலண்டரைக் காப்பாற்ற முடிந் து. ‘கட்டி நல்லதாக வீட்டுக்கு ஒரு கலண்டர் இருந்தால் போதும். கடை கடையாக ஏறிக் கெஞ்ச வேண்டுமா? இது மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அடுத்த வருடம் முதல் யாரிடமும் கலண்டருக்காக அலைவதில்லை
கலண்டர் தானாக வராவிட்டால் பணம் கொடுத்து ஒரு பெரிய கலண்டர் வாங்கி முன் பக்கச்சுவரில் மாட்டி விடுவேன். எந்தக் கலண்டரைப் பார்த்தாலும் அன்றைய திகதியை அறிவதில் தான் ஆர்வம் காட்டுகின்றோம். எல்லாக் கலண்டரும் ஒரே திகதியைத் தான் காட்டுகின்றது.
>K xK >K XK
தங்கைக்கு பேச்சுக்கால் நடந்த
பயணித்த போது
போது வரன் பார்ப்பதற்காக யாழ்ப் பாணத்திலிருந்து பஸ் வண்டி மூலம் மாங்குளம்வரை அப்பாவின் தலைமை யில் சில உறவினர்களுடன் நானும் பளல் முருகனன்டிப் பிள்ளையார் ஆலயத்தருகே நிறுத்தப் .لقسامالا
வழிபாடு தேநீரின் பின் அப்பா பொதுக்கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார். இது ஒரு தொற்று வியாதி. ஒருவரைப் பார்த்து ஒருவர் தொடர கடைசியாக நானும்,
எதையோ அவதானித்த அப்பா ஓடி வந்து கழிப்பிடத்துக்கு பக்கத்திலிருந்த தொட்டியிலிருந்து வாளியால் தண்ணிரை அள்ளி நாங்கள் அசுத்தப்படுத்திய இடத்துக்கு மேலே ஊற்றினார். தடுத்த என்னையும் விடவில்லை.
“வீட்டில் இப்படிச் செய்தால் அம்மா அல்லது வேறு யாரும் சுத் தம் செய்வார்கள். இது பொது இடம். பாவிக்கும் நாங்கள் தான் சுத்தம் செய்ய வேணி டும் . எங்களுக்கு முனி பாவித்தவர்கள் சுத்தமாக வைத்திருந்த தால்தான் நாங்கள் அருவருக்காமல் போகக் கூடியதாக இருந்தது. எல்லோரும்
உம்மை மாதிரி இருந்தால் இந்த
சுற் றாடலே அசிங்க மாயரிடும் ,' அசிங்கமான இடத்தை அப்பா தண்ணிர் ஊற்றிச் சுத்தமாக்கி விட்டார்.
வெட்கத்தினாலும் வேதனையாலும் என் கண்களிலிருந்து நீர் வருவதற்கு முன்பாக அப்பா பஸ் ஸில் ஏறிக் கொண்டார்.
 
 

முன்னோடி நாவல்
காசிநாதன் நேசமலர்
தெளிவத்தை ஜோசப்
தமிழில் அச்சுப்பொறி உபயோகத்துக்கு வந்து ஏறத்தாழ ஒரு இரு நூற்றாண்டு களுக்குப் பிறகே பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாய்மொழியாக வழங்கி வந்த பல கதைகள் நூல் வடிவில் அச்சிடப்பட்டு வாசிக்கவும் - கேட்கவும் என்கின்ற ஒரு முறைமை உருவானது.
அப்படி முதன் முதலில் அச்சிடப்பட்ட கதை நூலாகக் கருதப்படுவது வீரமாமுனிவர் தந்த ‘பரமார்த்த குருவின் கதை' என்பதே.
உரை நடை மூலமாகவும் கதை சொல்லலாம் என்னும் இந்த எழுத்துச் செயற்பாடு நாவல் என்கின்ற இலக்கிய வடிவமாகப் பரிணமிக்க மேலும் முப்பது நாற்பது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.
காவலப்பன் கதை என்றால் என்ன? (1856), பிரதாப முதலியார் சரித்திரம் என்றால் என்ன? (1876), அஸன்பேயுடைய கதை என்றால் என்ன? (1885) கால வித்தியாசம் அந்த முப்பது - நாற்பது ஆண்டுகள் தான்.
தமிழின் தொன்மை வாய்ந்த செய்யுள் மரபை, புராண காவிய மரபை, புலவர்களும், மேலோர்களும் பண்டிதர்களும், தங்களுக்கு மட்டுமே புரியும்படி எழுதிக் கொண்டும், மக்களுக்குப் போய் விடாமல் மறைத்து வைத்துக் கொண்டும் இருந்த அந்த செய்யுள், காவிய, கவிதா மரபை உடைத்துக் கொண்டு 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோற்றம் கொண்டது நாவல்.
ஆங்கிலேயரின் அரசியல் விஸ்தரிப்பும் ஆக்கிரமிப்பும் கீழைத்தேசத்தவராகிய நமக்குச் செய்துள்ள தீமைகள் அனைத்துக்கும் ஈடு செய்யுமாப்போல் செய்திருக்கும் ஒரே நன்மை இந்த ஆங்கிலக் கல்வி அந்த ஆங்கிலக் கல்வியும் சமுதாயத்தின் சகல மட்டத்தினருக்கும் கிடைக்கவில்லை. மேல் மட்டத்தில் இருந்த சிலருக்கு

Page 10
மட்டுமே ஆங்கிலம் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி முழு மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆங்கில அறிவு பெற்றவர்களின் தொகை மிகவும் சொற்பமே என்றாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு பெரிதாகவே இருந்தது.
வெளி உலகத்தை, மேலை நாடு களின் வளர்ச்சிகளை, புதுப் புது நாகரீ கங்களை, எழுத்தின் உன்னதங்களை, இலக்கியத்தின் உச்சங்களை அது இவர்களுக் குக் கற்றுத் தரத் தொடங்கியது.
‘இங்கிலீஷ்; பிரெஞ்ச் முதலிய பாஷைகளில் இருப்பதைப் போல் தமிழில் வசன காவியங்கள் இல்லாமல் இருப்பது பெருங்குறையே. 68F6 காவி.பங்களால் அன்றி செய்யுள்களால் ஜனங்களைத் திருத்த முடியுமா! ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாதிருந்தால் அந்தத் தேசங்கள் இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்க முடியுமா! அதே போல் தமிழிலும் வசன காவியங்கள் வராத வரை இந்தத் தேசமும் சரியான சீர் திருத்தம் அடையாது என்பது நிச்சயம் என்று தன்னுடைய பிரதாப முதலியார் சரித்திரம்' நாவல் முன்னுரையில் குறிப் பிடுகின்றார் வேதநாயகம்பிள்ளை.
நாட்டின் முன்னேற்றம்; மக்களின் முன்னேற்றம் போன்ற சமூக மாற் றங்கள் உரைநடை வளர்ச்சியால் உண்டாகும் என்னும் கருத்தே இதன் மூலம் முன் வைக்கப்படுகின்றது.
உரைநடை வாசிப்பின் மூலம் மக்களை சீர்திருத்த முடியும் என்பது * எழுத்தை மக்கள் மயப்படுத்தல் என்பதே.
மக்கள் மயப்பட, பரவ்லாக மக்களைச் சென்றடைய, எழுத்து இலகு வாக்கப்படல் வேண்டும்.
‘இக்கதை அற்ப தமிழ்ப் பயிற்சியு டையவர்களும் விளங்கிக் கொள்ளத் தக்கதாய் இயன்றவரையில் இலகுவான தமிழில் எழுதப் பெற்றுள்ளது. என்று இந்த ‘துரை ரத்தினம் - நேசமணி நாவலின் நூன்முகத்தில் ம.வே. திரு ஞானசம்பந்தப்பிள்ளை குறிப்பதுவும் இந்த வாசிப்பைப் பரவலாக்கும் ஒரு செயற்பாடே.
எந்த அளவுக்கு இலகுவான தமிழை நாவலாசிரியர் கையாண்டிருக்கின்றார் என்பது வேறு விஷயம். ஆனாலும் எழுத்து மக்களைச் சென்றடைய வேணி டும் என்னும் அவருடைய நோக்கம், உரைநடை வளர்ச்சிக்குப் பொதுவாகவும் நாவல் வளர்ச்சிக்குக் குறிப் பாகவும் சேவையாற்றும் பாற்பட்டதே.
இந்து சாதனடி பத்திரிகையில் 1927ல் இது தொடர்கதையாக வந்த பிறகே வெளியாகியுள்ளது என்பதுவும் இந்த நூன்முகம் மூலமாகத் தெரியவருகிறது. இவருடைய மூன்று நாவல்களுமே இந்து சாதனம் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தவைகள்தான் என்பதையும் நாம் மனதில் கொள்ளும் போது நாவல்கள் உரைநடை
 
 

எழுத்துக்கள் - மக்களிடையே பரவ லாக்கப்படல் வேண்டும் pabab6iT அவற்றை வாசிக்க வேண்டும் என்னும் சமூக உறவில் இவருக்குள் ள அக்கறை புலனாகின்றது. W
பத்திரிகையின் விற்பனைப் பெருக் கத்துக்காகவே தொடர்கதைகள் எழுதப் LIL L-60 என்கின்ற வரலாறுகளும் நாமறிந்ததே! விற்பனைப் பெருக்கம் என்பது கூடுதலான வாசகர்களைச் செண் றடைதல் எண் பதின் மறை பொருளே.
எல்லாத் தொடர்கதைகளுமே நல்ல நாவல்களாகி விடுவதில்லை என்பதைப் போலவே நல்ல நாவலாகி விடுகின்ற தொடர் கதைகளும் இருக்கவே செய்கின்றன.
நல்ல நாவலான ' கமலாம்பாள் சரித்திரம் சமூக அங்கீகாரம் பெறாமற் போனதையிட்டு குறைபடுகின்றார் UTJgäu JFTst.
தமிழின் இரண்டாவது நாவல் எனவும் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை விடவும் நல்ல நாவல் எனவும் ஆய்வாளர்களால் கருதப்பட்ட டி.ஆர். ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம் (1898) விவேக சிந்தாமணி'யில் தொடர்கதையாக வந்ததுதான்.
நாவல் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுடன் மக்களாகிய அவ் வாசகர்களுக்கும் எழுத்தாளனுக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் . ஒரு
புரிதல் இருக்க வேண்டும் என்பத
னையும் உணர்ந்தவராகவே இருக் கின்றார் இந்த நாவலாசிரியர்.
* இந்த எண் னுடைய வசன காவியத்தில் தவறேதும் இருப்பின் வாசகர்கள் அணி பு கூர் நீ து பொறுத்தருள வேண்டும்’ என்னும் வேதநாயகம் பிள்ளையின் கூற்றுக்கும் (பிரதாப முதலியார் சரித்திரம் . முன் னுரை) இதன் கணினுள்ள குற்றங்களைத் தவிர்த்து குணம் பெய்து வாசித்தல் அறிவுடையோர் கடனாகும் என்னும் மா.வே. திருஞானசம்பந்தப் பிள்ளையின் கூற்றுக்கும் (துரைத்தினம் தேசமணி நூன்முகம்) நிறையக் கருத்தொற்றுமை இருக்கிறது.
ஐரோப்பிய இலக்கிய வடிவமான நாவலை தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் பிரக்ஞையே நாவல் இலக்கிய வகையினைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது. ஆனால் இப் பிரக்ஞை விரைவிலேயே பிழையான வழியில் திசை திருப்பிவிடப்பட்டது. மலி வானதும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வண்ணமும் வெளியான ஐரோப்பிய நாவல்கள் கூடுதலாகத் தமிழில் வெளிவரத் தொடங்கின. தழுவி எழுதப்பட்டன.
மக் களுக்கு எழுத்து மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருந்த அதே கால கட்டத்தில் இம்மொழி பெயர்ப்புகள் அவர்களைக் கனவுலகத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.
றெய்னால்ட்ஸ் என்பனின் கதை
مدیر

Page 11
களையும் அவன் போன்ற ஆசிரியர் களின் கதைகளையும் தமிழில் செய்து படிப்போரின் மனதை தீய வழிகளில் செல்லும்படி செய்யாதிருக்கக் கடவர். தற்காலத்தில் எழுதப்படும் நாவல்கள் பெரும்பாலும் இத்தகையனவாகவே இருக் கினி ற படி யால நமக்கு உண்டாகும் துக்கத்துக்கு அள்வே இல்லை' என்றெழுதுகின்றார் தமிழ்ச் சிறுகதையினி தந்தை என று கருதப்படும் வ.வே.சு.ஐயர். (தமிழ்ச் சிறுகதை வரலாறு எம்.வேதசகாய குமார் பக்:9)
கெட்டுப் போய்விட்ட அல்லது
தவறான வழியில் போய்க் கொண்டிருப்
பதாகக் கருதப்பட்ட தமிழ் நாவல் துறையை அது தமிழுக்குக் கொண்டு வரப்பட்டற்கான அந்த முன்னைய ஆரோக்கியமான வழிக்கே மீண்டும் தடம் மாற்றி விடும் முயற்சிகளில் ஈடுபட்ட ஒரு முன்னோடியாகவே காட்சி தருகின்றார் இந்த திருஞானசம்பந்தப் பிள்ளை.
* ஆண்கள் மாத்திரம் அன்றி பெண்களுள் எப்பருவத்தினரும் கூசாது வாசிக்கத்தக்க விதத்தில் இந்த நூலை எழுதியுள்ளோம் என்று இந்நாவலுக் கான நூன் முகத்தில் எழுதியுள்ளார் இந்நாவலாசிரியர்.
பெண்கள் வாசிக்கக் கூசும் ஒரு மானுட எதிர் நிலையில் தமிழ் நாவல்கள் போய்க் கொண்டு இருக் கின்றன என்கின்ற வரலாற்றுண்மை அறிந்தவராகவும் அதை சரியான திசை
நோக்கித் திருப்பி விடுகின்ற அடுத்த
கட்ட நகர்விற்கான படிகளாகத் தன்னு டைய எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்கின்ற சமூக நோக்கம் கொண்ட வராகவும் திகழ்கின்றார் இவர்.
தன்னுடைய காசிநாதன் நேசமலர்' என்கின்ற முதல் நாவலிலிருந்து (1924) கோபால நேசரத் தினம் (1927) துரை ரத்தினம் நேசமணி (1927) என்கின்ற மூன்றாவது நாவல் வரை இவருடைய நாவல் தலைப்புக்களில் ஒரு ஒற்றுமை நிலவுவதை நாம்
čBIT600 I 6)(Т ().
நேசமலர், நேசரத்தினம்; நேசமணி என்று தன்னுடைய பிரதான பெண் பாத்திரங்களுக்குப் பாசமிகு பெயர் களைச் சூடி மகிழ்ந்து கொள்வதுடன், வாசகர்களுடன் மிகவும் நெருக் கமானவர்களாகவும் ; நேசத்துக் குரியவர்களாகவும் அப்பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
தன்னுடைய பத்திரிகைத் தொடர்கள் மூலம் இப்பெண் பாத்திரங்களை அவர் களது குடும்ப, சமூக உறவின் முக்கி யத்துவத்துடன் மக்கள் மத்தியில் உயர்வாக உலவ விட்டு மகிழ்ந்தவர்
இவர்.
பத்திரிகைத் தொடர்கதைகளும்
'நாவல் அந்தஸ்து பெறக்கூடியவைகளே
என்பதை ராஜமய்யருக்குப் பிறகு ஊர் ஜிதப்படுத்திய பெருமை இவருக்குரியது.
இந்து சாசனம் பத்திரிகையின்
ஆசிரியராக இருந்த காரணமும் இதற்கு ஒரு வாய்ப்பாகவே அமைந்து விட்டது.
 
 

இந்து சாசனம் பத்திராசிரியர் பதவியும்; இந்து சமயப்பிரசாரத்துக் காகப் படைக்கப்பட்ட ‘கோபால நேச ரத்தினம்’ நாவலுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் இவரை ஒரு
இந்துசமயப் பிரசார நாவலாசிரியராக
இனம் காட்டத் தொடங்கியது.
ஒரு சில ஆய்வாளர்களும் இவரை அதற்குள்ளேயே அடைத்து வைக்க முயன்றுள்ளனர்.
கட்சி எழுத்தாளர்களைப் போல் ஒரு எல்லை நோக்கியே கண்ணைக்கட்டிக் கொண்டு செயற்பட முடியாத ஒரு சுதந்திரப் படைப்பாளியாகவே ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையவர்கள்ைக் காட்டுகிறது இந்த நாவல்.
இந்து சமயப் பிரச்சாரம் எதனையும் இந்த நாவல் செய்யவில்லை.
*இதன் கன் சீதனத்தால் வரும் பிணக்கு, மது பானத்தால் வரும் கேடு, தியவர் சக வாசத்தால் நேரும் அனர்த்தம்; பரத்தையர் சேர்க்கையால் வரும் பழி முதலியன உதாரண முகத் தால் விளக்கப்பட்டுள்ளன என்று நூன் முகத்தில் குறிக்கின்றார் இவர்.
இவைகள் மானுட நல் வாழ் விற்கான அறத்தைப் போதிக் கின்றன.
பிரபல ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர் எப்.ஆர்.லீவிஸ் என்பவர் ஆங்கில நாவல் இலக்கியத்தை வரலாற்று ரீதியாக விமர்சனம் செய் கையில் முன்னோடி நாவல்கள் பெரும் பாலும் அறிவியல் கோட்பாட்டைத் தழுவிய மரபை உடையனவாகவே
இருக்கின்றன என்று குறிக்கின்றார். (க.கைலாசபதி - ஈழத்து இலக்கிய முன்னோடிகள் - பக்கம் 87)
தமிழின் ஆரம்ப நாவல்களும் இந்த அறிவியல் பண்பு கொண்டனவாகவே இருந்துள்ளன என்பதற்கு ம.வே.திரு ஞானசம்பந்தப்பிள்ளையின் இந்த துரைரத்தினம் - நேசமணி நாவலும் நல்லதொரு உதாரணமாகவே திகழ் கின்றது.
சீதனப் பிரச்சினையால் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்ட துரை ரத்தினம் ராமன் என்னும் சிறுவனை சமையலுக்காக வைத்துக் கொள்ளு கின்றார். இவருக்கு உப்புமா செய்து கொடுப்பதாக ஒரு இடம் வருகிறது. காற்படி உப்பை மாவாக்கி கறி வேப்பிலைக்குப் பதிலாக ஏதோ ஒரு இலையை உருவிப் போட்டு. என்பவைகள் பரமார்த்த குருவின் சீடர்கள் போல் இவனும் நடந்து கொள்வதாகவே இருக்கிறது. இன்ாெரு இடத்தில் நாவலாசிரியரே குறிப்பிடுதல் போல ‘கோப்பிப்பவுடருடன் சிரட்டைக் கரியைக் கலந்து விற்கும் நாட்களில் உப்புமா கதைகள் நம்பமுடியா தவைகளே!
மனைவியின் துணையில் லாத மனிதன் ஒருவனின் புற இடர்பாடுகளில் இந்த உணவு விடயம் மிக முக்கி
uJD60g.
தாயுடன் அறுசுவைபோம் என்று கூறும் தமிழ் தாய்க்குப் பின் தாரம் என்றும் கூறுகிறது. தாயின் கைகளில் இருந்த மனிதன் சம்சாரம் கைக்கு வரும்

Page 12
நிலை மனித வாழ்வில் நிகழ்கின்ற ஒரு
மகத்தான அற்புதம்! காடு செல்லாமல் தாடி வளர்க்காமல் தொடங்கப்படும் இம்
மாதவம் உடைபடுகின்ற போது எதிர்ப்
படும் முதல் இடர் இந்த உணவுப்
பிரச்சினைதான். அது இந்த நாவலில்
படிப்போரின் நகைப்புணர்வுக்காகப்
பயன்படுத்தப்பட்டதாகவே போய்
விட்டது.
Exc2llgnt
காவலப்பன் கதை அஸன்பேயுடைய கதை: ஊகோன் பாலந்தைக் கதை: என்கின்ற நிலைமைகளில் இருந்து நடைமுறை வாழ்வுடன் தமிழ் நாவல் துறையை இணைத்துவிட்ட பெரு மாற்றத்தின் தலைமகன்களுள் ஒருவரா கவே நம் முன் தெரிகின்றார் ம.வே.திரு ஞானசம்பந்ப்பிள்ளை அவர்கள்.
photographers
fodgrm Computgrizgid
photography
or Wgdding portraits & Child Sittings
*யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில், ஜனங்கள் ரசிக்கக் கூடியதாக, U6) மொழிகள் கூடுதலாகக் கொண்டவை யாக உலகம் பலவிதக் கதைகள் தந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை. இன்று எழுத்தாளன் என்னும் சொல் யார் யாரைக் குறிக்கின்றதோ அவர்களுக் கெல்லாம் ஒரு முன்னோடியாகக் காட்சியளிக்கின்றார்’ என்று கூறுகின்றார் கனக செந்திநாதன் (ஈழத்து இலக்கிய வளர்ச்சி - பக்கம் 161)
இரசிகமணி கனகசெந்திநாதனின் கூற்று வெறும் ரசனைக்கூற்றோ மிகைக் கூற்றோ அல்ல என்பதற்கு இந்த துரை ரத்தினம் - நேசமணி நாவலும் நல்ல தொரு உதாரணமாகவே திகழ்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாரனா கையூம் 'குதுபா’ ஹஜ்ஜி பயான் சோக்கா இரிந்திச்சி” என்று கூறிக் கொண்டு இப்றாகிம் நானா வெளியே வந்தார். -
'அளப்ஸலாமு அலைக்கும், சொகமா இரிக்கிறீங்களா? ஹஜ்ஜிக்கு போகல்லயா? இந்தப் பயணம் ஊரில் மிச்சம் பேர் போறாங்க போல. ? என்று பேச்சை ஆரம்பித்தார் அப்து சமது
'அப்து சமது, ஹஜ்ஜிக்கிப் போறது லேசான வேல இல்ல. அதுக்கு மொதல்ல எவ்வளவு வேல இரிக்கி"
‘என்ன சொல்றீங்க, இப்ப வேல இரிக்கிறவர்களா ஹஜ்ஜிக்கிப் போறாங்க ?” என்று அர்த்தமுள்ள ஒரு வினாவைத் தொடுத்து விட்டு நடந்தார் சமது
வீடு போய்ச் சேருமட்டும் இப்றாகிமுக்கு ஒரே சிந்தனை,
வீட்டிற்குச் சென்றதும் வழக்கத்திற்கு மாறாகக் கதிரையில் சாய்ந்து கொண்டர்.
"எண்ணங்க, யோசிக்கிறீங்க, பசிக்கல்லயா? சொல்ல மறந்து போச்சி செனா முனா ஏஜண்டாம் உங்கள காண வந்தார். ஹஜ்ஜிக்கி ஆள் சேக்கிறவர் போல,
ரண்டுலட்சமாம்; எல்லா வசதியும் இரிக்காம்; மொதலாவது 'பிலைட்டாம் என்று செர்லி இந்த காட்டை தந்தார்.
'நானும் அதப் பத்தித்தான். ரண்டு லட்சம் கய்யிலே இல்லையே.
’ ‘பனத்தை L பதித7 யோசிக்க Gøy6017u7u. அதுக்கும் ஒழுங்கு செய்கிறார்களாம்." என்றாள் மனைவி சபூரா உம்மா,
இப்றாகிம் உசாரானார்.
மறுநாள் காலையில் கார்ட்டில் உள்ள விலாச்த்திற்கு பளப்ளயில் ஏறிப் புறப்பட்டார். பேஸ் லைன் இலக்கத்தைத் தேடி நாய் படாத பாடுபட்டு ஒருவாறு கண்டு பிடித்துக் கொண்டார்.
வாசலில், ‘செனா முனா ஏஜண்ட் ". என்று எழுதப் பெற்ற ஒரு பலகை தொங்கியது. கதவைத் தள்ளிக் கொலன்டு உள்ளே நுழைந்தார். பத்து சதுர

Page 13
அடி அறை. ஒரு மேசை, தொலைபேசி தட்டச்சு, சுழலும் நாற்காலி அதில் டை கட்டி சவூதி ஜரிகைத் தொப்பி அணிந்த ஒருவர், பைலர்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இபறாகம், ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று ஸ்லாம் சொன்னார்.
பதிலுக்கு, 'வஅலைக்கும் ஸ்லாம்”
முனினால் இருந்த கதிரையில் அமரும்படி சமிக்ஞை செய்தார்.
'ஹஜ்ஜிக்கிப் போக ஹாஜத்து. உங்கட ஏஜண்டில் இருந்து விட்டுக்கு வந்து போனதா வீட்ல சொன்னாங்க,
'நீங்க இப்றாகிமா?
தலையை அசைத்தவாறு 'அம்பதா யிரம் போல குறச்சல்.”
'அதுக் கென்ன. பிந்தித் தந்தா போதும்” இப்றாகீமுக்கு தேன் பாய்ந்தது போல் இருந்தது.
'மு ன பணம எL போ கடட வேணும்?” -
, ‘இன்று, திங்கள் - வியாழனர் கட்டினா வசதியாக இருக்கும்.”
'இன்ஷா அல்லாஹர், வியாழன் வாறன ' எனறு புறப்பட்டுப போகுமுபொழுது, சில பத்திரங்களைக் கொடுத்து ‘வரும் போது, இதெல்லாம் நெரப்பி பணத்தோடு வாங்க. அதோட முனு போட்டோவும்’ என்றார்.
‘ஹஜ செயயப் போகினற மகிழ்ச்சியால், இப்றாகிமுக்கு இருப்பு
ਲ
கொள்ளவில்லை.
வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
" என ன/நக, போன விசயம்
நல்லபடியா முடிஞ்சுதா?”
“ ‘ஹரா’ முடிஞ்ச மாதிரி அம்பதை பிந்தி கொடுக்கலாம். எப்படியும் போற அண்டு கொடுப்பது நல்லது.”
'இன ஷா அலலாஹர்' எனறு ஆமோதித்தாள் சபூரா உம்மா.
வியாழக்கிழமை ஒருவாறு பணத்தை எடுத்துக் கொண்டு 'செனா முனா’ ஏஜணர்டைச் சந்திக்கப் போனார்.
முதலில் தரப்பட்ட மரியாதையை விட அலாதியான உபசாரம் எல்லாம் நடந்தது. குளிர்பானம் கொண்டு வந்து தரப்பெற்றது. இப்றாகிமுடைய கலிபே' குளிர்ந்தது போலாகி விட்டது.
அவசரமாக விண்ணப்பப் பத்திரம்
போட்டோ எல்லாம் பரிசீலிக்கப்
பெற்றது.
பணத்தை ஒரு கட்டாக முகவர் கையில கொடுததார். எணணிப் பார்க் காமலே உள்ளே எடுத்து வைத்தார். அவ்வளவு விசுவாசம்
'உங்கள எங்கட குரூப்பரில பத7ஞ சிக கொண டேம். போக வேண்டியதற்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ளுங்க, மிதி பணத்தை போகும் போது தாங்க, ”
'நான் போய் வாறன், அஸ்ஸ்லாமு அலைக்கும். ' வரிடை பெற்றுக
Gas/7600ft stif.
 
 
 

இப்றாகிமுக்குப் பரம திருப்தி
குடும்பத்தில் ஹஜ்ஜுக்குப் போகின்ற முதலாவது ஆள் என்ற பெருமிதம் இப்றாகிமுக்கு.
'சபூரா,’ என்று குரல் கொடுத்து விட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து சால்வையால் விசிறிக் கொண்டார்.
சபூரா, எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து ஒரு குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தாளர், அது அவருக்குத தேவாமிர்தமாக இருந்தது.
‘‘எப்ப பரிலைட்டாம் ’ விசாரித்தாள்.
எனறு
'ஏழாம் தேதி போல.”
'இனனும் முனு கெழமதான இரிககரி, அதுக்குள்ளே பயணம் சொல்லப் போக வேணும்.
'கோவ தாவங்களை மறந்து ஒருத்தர விடாம சொல்ல வேணும் -
முதல்ல அளுப்பொத்த ஆச்சிய பாததிட்டு வருவோம். ’ என்றார் இப்றாகிம்
தூரத்து பந்துக்கள் நன்பர்கள் அக்கம் பக்கம் எல்லாரிடமும் பயணம் சொல்லி முடிய நாளே கரைந்து விட்டது.
பாக்கி, ஜம்பதை அங்குமிங்கும் கடனர் வாங்கிச் சரிக்கட்டிக் கொணர்டு இரண்டு நாட்களுக்கு முன் ஏஜண்டைக் காணப் புறப்பட்டார்.
செனா முனா ஏஜண்டைத் தேடிக்
கொள்வது சிரமமாக இருந்தது. வியர்த்து விறுவிறுத்துப் போனார். பலரிடம் ‘கார்ட்டை ‘ காட்டி விசாரித்தார். இப்படியொரு ஏஜண்ட இந்தப்பக்கம் இருப்பதாகத் தெரிய வில்லையென்றும் மருதானைப் பக்கம் போய் பார்க்கும்படியும் சொன்னார்கள்.
இப்றாக"மைத் துரக்கி வாரிப் போட்டது. தலை சுழன்றது. விழுந்து விடுபவர் போல தள்ளாடினார்.
ஓர் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்.
‘எங்க போகணும்?”
'மருதானை’
மருதானையை சுற்றிப் பார்த்தாகி விட்டது. தகவல் இல்லை. சிலர், விலாசம் தவறு என்றார்கள்.
'தம்பி பேஸ் லைனர்’ என்றார். மினண்டும் பேஸ் லைன் ஓர் அலசல்,
'நாநா. நீங்க தேடுற ஏஜண்ட் இங்க இல்ல, ஏதும் அவசரமா?’
'ஹஜஐரிக்கி ஆள் அனுப்புற ஏஜனட இநத இடதத?லதான போட்டேல்லர்ம் போட்டு இருந்திச்சி”
'உங்கள யாரோ ஏமாத்தி இரிக்கி கொழும்புல இப்படி வேல நடக்கும். வினா சுத்த வானாம். ஊருக்குப் போங்க. '
அப்பொழுதுதான் இப்றாகமுக்கு அர்த்தமானது முகம் தெரியாத முகவரிடம் மாட்டிக் கொண்ட சங்கதி.
யாவும் கற்பனை,

Page 14
சிம்மனியத்தின் ألأينو
அழகு சுப்பிரமணியத்தைச் சரியாக புரியவேண்டுமாயின் அவரது முரண்பட்ட இரட்டைத்தன்மையுடைய காலப் பின்னணியையும் தொடர்புபடுத்தி முழுமையாகப் பார்க்க வேண்டும். அதிகமான சிறுகதைகள் அவர் எழுதவில்லை என்பது உண்மை. ஆனால் அவரது சிறுகதைகளை ஒட்டு மொத்தமாக நோக்கும் போது யாழ்ப்பாண மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களது அடிப்படை பிரச்சனைகளையும் அவை தொட்டு நிற்பதை இலகுவில் கண்டுகொள்ள முடியும். இங்கிலாந்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் யாழ்ப்பான ஆண் வர்க்கத்தையே கதை மாந்தராகக் கொண்டுள்ளன. அவரது கதைகளில் சமூகப் பிரச்சனைகள் தொடப்படுகின்றன; சாதியம் பேசப்படுகின்றது, எல்லாவற்றிற்கும் மேலாக மனிதம் வ(பிய ரத்தப்படுகின்றது.
அழகு சுப்பிரமணியத்தின் கதைத் தொகுதிகள் இரண்டே இன்று எமக்கு கிடைக்கின்றன. தனது காலத்தில் “பெரிய பிள்ளை” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிடுகின்றார். அவர் இறந்த பின் அவரது மனைவி சில இலக்கிய நண்பர்களது உதவியுடன் ‘முடிவு காலம்” எனும் கதைத் தொகுப்பொன்றை வெளியிடுகின்றார். இவ்விரு தொகுதிகளிலும் 34 ஆக்கங்கள் உள்ளன. மற்றச் சிறுகதைகள் என்னவாகின எனத் தெரியவில்லை.
“புளிய மரம்' எனும் சிறுகதைத் தொகுப்பும், இரண்டு புதினங்களும் அச்சேறக் காத்திருக்கின்றன என்று ஆங்கில பத்திரிகைகளான "நீபியூன்”, “ஒப்சேவர்” என்பன செய்தி வெளியிட்டன. ஆனால் அவை வெளிவந்தமைக்கான ஆதாரங்கள் எமக்கு கிடைக்கவில்லை. அவரது புதினம் "மிஸ்ரர் மூன்” மல்லிகையில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. அதுவும் அச்சேறிப் புத்தக வடிவம் பெறவில்லை என்றே தோன்றுகின்றது. Y
தனது இலக்கிய நண்பர்களுடன் உரையாடும் போது தனக்குப் பிள்ளைகள் இல்லை என்றும் “பெரிய பிள்ளை’ தனது மூத்த பெண் என்றும் மனம் வருந்திக் கூறியுள்ளார். இவற்றைக் கொண்டு பார்க்கும் போது "புளிய மரம்' தொகுதி வெளிவரவில்லை என்றே கொள்ள வேண்டும். அவரது சிறிய நாடகங்கள் பி.பி.சி.இல்
 
 

ஒளி பரப்பப்பட்டன. "முடிவு நேரம்” சிறுகதை (அல்லது குறுநாவல்) பிபி.சி.இல் நாடக வடிவில் ஒலி LI JJ LJLJ LJ U U L- ġbi. இவை களின் பிரதிகள் கூடக் கிடைப்பதென்பது சந்தேகமாகவே படுகின்றது.
அழகுசுப்பிரமணியத்தின் காலம் ஆங்கிலச் சிறுகதை வடிவம் முழுமை பெற்று விளங்கிய பொற்காலம். இவரது காலத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் தமக்கென ஒரு முத்திரை பதித்துச் சிறுகதை வடிவத்திற்குப் புதிய பரி மாணங்களைத் தந்து கொண்டிருந்த காலம். இங்கிலாந்தில் ‘டி.எச்.லோறன்ஸ்' போலந்தில் “கொன்றாட்', அயர்லாந்தில் “யேம்ஸ் கொய்ஸ்', நியூசிலாந்தில் “கதறின் மான்ஸ் லீல்ட்’ அமெரிக்காவில் "வில்லியம் போக்னர்' இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இவ் வரிடத் தல சிறுகதையரின் வளர்ச்சிப் போக்கையும், வடிவம் செம்மைப்படுத்தப்பட்ட வரலாற்றையும் தெரிந்து கொண்டோமாயின் அழகு சுப் பிரமணியத் தன் இலக் கரிய வடிவமைப்பின் செழுமை பற்றி இலகுவில் எடை போட முடியும்.
ஆங்கிலச் சிறுகதை வடிவம் உண்மையில் அமெரிக்க எழுத்தா ளர்களின் கைவண்ணத்திலேயே செழுமை காண்கிறது. ஒரு நூறு வருட சிறுகதை வரலாற்றை எடுத்து நோக்கினால் ஐந்து அல்லது ஆறு சிறுகதை எழுத்தாளர்
களைத் தவிர்ந்த ஏனையோர் நிச்சயமாக
அமெரிக்க எழுத்தாளர்களாகவே இருப்பர்.
வடிவத்தின் அச்சாணியான
கதை 6T 607 LÜ பொதுவாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்த காலத்தில் “றிப் வான் விங்கின்” எனும் கதை புதிய பார்வையைத் தருகின்றது. நிகழ்வுகள் காலக்கிரமத்துக்கமைய இணைக்கப்பட்டு, ஒழுங்கமைந்து மிகவும் வசீகரமானதும், நகைச்சுவையானதும் நாகரிகமானதுமாகிய கதை என எல்லோரும் இதைப் பாராட்டுவர். இவற்றையும் சிறுகதை வடிவத்துள் சேர்க்க முடியாமல் போய் விடுகின்றது.
இதனை அடுத்து 'அலன் போ’ வருகின்றார். “போ’ அவர்களே சிறுகதை ‘தணி விளைவு' எனும் உத்தியைத் தனது சிறு கதையில் புகுத்துகின்றார். அதாவது "ஏற்கனவே மனதில் பிரதிபலித்த தனி எண்ணத்தைச் சிக்கனமான ஆனால் வெளிப்படையான முறைகளால் அதன் செயற்பாடுகள் போக்குகள் என்பவை களைத் தனித்துவமான முறையில் முதலில் இருந்து இறுதி வரையும்’ எடுத்துச் செல்வதாகும். இவர் சிறுகதை என்பது ஒரு மூச்சில் வாசிக்கக் கூடிய இலக்கிய வடிவம் என்பார்.
இவரது கதைகளில் “கோதிக்” (Gothic) விளைவு மிகுந்து காணப் படும் இவ் வுத் தியினுTடாக அக முரண் பாடுகளை வெளிக் கொணர விரும்பினார். அவரது கதைகளில் குரூரத் தன்மை நிறைந்திருந்ததேயல்லாமல் உள்மனக் குமுறல்கள் வெளிவரவில்லை.
"கத்தோன்’ மறுபுறத்தில் "போ'வை அடியொற்றி “கோதிக்' விளைவை ஆத மாவின் வேதனைகளை வெளிக்கொணரப் பயன்படுத்துகின்றார்.

Page 15
இதற்கமையச் சிறுகதை வடிவத்திற்கு அச்சானி போன்ற இன்றும் எல்லாச் சிறுகதை ஆசிரியர்களாலும் பயன் படுத்துகின்ற 'நிகழ்புல வெளிப்பாடு” என்னும் உத்தியைத் தனது கதைகளில் புகுத்திவிடுகின்றார். சிறுகதை வடிவம் இப்பொழுது கதை சொல்லல் எனும் நிலையிலிருந்து விடுபட்டுச் சிக்கல் தீர்க்கும் நிலைக்கு மாற்றம் அடைகிறது.
“போ’ அவர்கள் தொடக்கி வைத்த சிறுகதை வடிவம் “அன்ரன் செக்கோவ்', “ஜேம்ஸ் ஜொய்ஸ்’ ‘கென்றி ஜேம்ஸ்” “மான்ஸ்பீல்ட்' போன்றோர் கைகளில் செம்மையடைவதற்கு ஒரு நூற்றாண்டு எடுத்தது எனில், சிறுகதை உலகில் (8 LJ T 6\f 60 முகி கயத் துவம் புரிகிறதல்லவா?
“கென்றி ஜேம்ஸ்’ சிறுகதை வடிவ த  ைத மேலும் செழுமைப் படுத்துகின்றார். “போ’ போன்றோரின் உத்திகளில் மட்டுப் படுத்தப்பட்ட தன் மைகள் பல இருப் பதைக் காண்கிறார். கதை பூராவும் ஆசிரியர் வியாபித்திருப்பதைப் போக்க எண்ணி ஆசிரியனைக் கதை சொல்வோனாக மாற்றிவிடுகின்றார். சிறுகதை சிறுசிறு நிகழ்வுகளாக இப்பொழுது மாற்றம் காணி கலிறது. ம ன தனி ஓட்டங்களை உணர்வு பூர்வ நிலையில் நின்று உளவியல் நோக்கில் பார்ப்பதற்கு இவ்வுத்தி அவருக்கு இடமளிக்கின்றது. இவ்வுத்தி இவருக்கே கைவந்ததெனக் கூறுவர் உளர்.
“கெமிங்வேய்” “வில்லியம் போக்னர்’
A &
ஒருவகையில் “லோறன்ஸ்’ ‘நிகழ்புலக்
தன் மைகளைக்
ଶ୍ରେt 600if ୭୩
அறிவுலகக்
உத்தியைக் கையாளு கன்றனர். எனவேதான் போக்னரை "நிளோகோதிக்”
மரபின் தந்தை என்பர். கதைகளில் திரிபு
படுத்தப்பட்ட தன்மைகளைப் புகுத்துவதே இவரது நோக்கம், கறுத்த இன மக்களின் பிரச்சினைகளை வெளியே கொண்டு வருவதற்கு இவருக்கு இவ்வுத் தி அவசியமாகின்றது. சமுதாயத்துடன் நெருக்கமாக நின்று அங்கே பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினைகளுக்குப் பெரியபரிமாணம் தந்து, பயங்கரமான காட் டித் தனது கதைகளைப் படைக் கசிறார். நிகழ்ச்சிகளின் துலங்கல் எம்மில் மெதுவாக ஏற்படத் தொடங்குகின்றது. கன் த சொல் வோனி வாசகனை முடிவெடுக்க விட்டுவிட்டுத் தான் மறைந்துவிடுகின்றான்.
“பிரதேசவாடை' இயக்கத்தினரும் சிறுகதைக்கு இக்காலங்களில் மெருகு சேர்க்கின்றனர். இவர்கள் சிறுகதை வடிவத் தற்கு வாழ் வோ டிசைந்த அந்தஸ்த்தைத் தருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு கோணங்க ளிலுமுள்ள சிறுகதை எழுத்தாளர்கள் வடிவமைப் பில் செம்மை கணி டு சிறுகதையை ஒரு வலுவான ஊடகமாகப் பயன்படுத்தும் காலத் திலேயே அழகுசுப்பிரமணியம் தனது சிறுகதைகளைப் படைக்கின்றார். எனவே இவரது சிறுகதைகளிலும் இப்பண்புகள் பிரதிபலிப்பதைக் காணலாம். அன்றியும் "கிறுக்கர்கள்’ கூட்டமாம் “புநேம்ஸ் பெரி” இவருக்கு மேலும் வலிமையைத் தந்தது.
அமெரிக்கச் சிறுகதையின் போக்கை
 

bலது இலக்கை விபரிக்கப் புகுந்த
பலஸ்” என்பவரது கருத்துக்கள் அழகு
ப்பிரமணியத்தின் சிறுகதைகளுடன் உடன் போவதைக்கண்டு கொள்ளமுடியும். அவர் கூறுவார்! 'குறிப்பிட்ட ஒரு சாதாரணமான அமெரிக்கச் சிறுகதை, அது வாசகர்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தும் வேளையிலும் வாழ்வை அதன் பாங்கை, தேசியப்பண்புகளை அல்லது எதிர் பார்ப்புக்களைப் பிரதிபலிப்பதாகவோ அல்லது உளவியல் உள்தேடல்களின் உபகரணமாகவோ விளங்குகின்றதா எனும் கேள்வியைக் கண்டிப்பாகக் கேட்டு நிற்கும்’அவர் மேலும் குறிப்பிடுவார். “ஏதாவது கனவுகள் இவை தவிர்ந்த ஆனால் சாதுரியமாகப் புனைய நாம் சிறுகதைகளாக ஏற்கத் தயாராக இல்லை.”
அமெரிக்கச் சிறுகதையாளர்கள் எவ்வாறு உள்ளடகத்தில் அதிக கவனம் செலுத்தினார்களோ அவ்வாறே அழகு சுப்பிரமணியமும் உள்ளடக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றார்.
சிறிய கதைதான் சிறுகதை, இவ்விலக்கணம் என்றோ மீறப்பட்டு விட்டதாயினும் அழகுசுப்பிரமணியத்தின் அனேக கதைகள் இவ்விலக்கணத்திற்கு உத்தமமாகவே உள்ளன.
அழகுசுப்பிரமணியத்தின் சிறுகதைகள் பலகதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அம்சத்திலிருந்து விலகியும் சிக்கலை முடிச்சவிழ்க்கும் பாங்கைப் புறக்க னித்தும் "கென்றிஜேம்ஸ்’ போன்று 'நிகழ்புலக் கட்டவிழ்த்தல்” எனும் உத்தியை அனுசரிப்பதைக்
விழுமியங்களை,
கூறுவது .
கண்டுகொள்ள முடியும். அவரது “விசிறி” எனும் சிறுகதையை உதாரணத்திற்கு எடுப்பது நன்று. இக்கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் மாதிரிகளே. “மைலன்” மட்டுமே வட்டமான பாத்திரம், மைலன் எல்லாவற்றிலும் கெட்டிக்காரன். தோட்ட வேலையில் பெற்றார், ஆசிரியர் போன்றவர்களைக் கனம் பண்ணுவதில் சகபாடிகளுடன் உறவு பேணுவதில் உதா சீன ம செயப் பவர்களையும் அனுசரிப்பதில அவன் சிறந்து காணப்படுகின்றான். ஆசிரியர் மைலனின் பாத்திரத்தைப் பல நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்துவதையும், பின் அந் நிகழ்வுகளிலிருந்து மைலன் மெதுவாக அந்நியப்படுத்துவதைக் காணலாம்.
இறுதியில் மைலன் பாடசாலைக்குச் செல்ல மறுப்பதற்குரிய காரணம் நியாயமாகப் படுகின்றது. ‘இன்று விசிறிப்பிடி, நாளை பிரப்பந்தடி' எனக் கூறும்போது கதையின் கட்டமைப்பு அவனை இந்நிலைக்கு இட்டுச்சென்றதை மட்டும் காட்டி ஆசிரியர் வாசகனை முடிவெடுக்க விட்டுவிடுகின்றார். இந் நிலையில் மைலனின் அப்பாவித் தனத்தையும் நிர்க்கதியையும் நாம் பெற்று நிற்பதை உணர்கின்றோம். குற்றமற்ற ஒருவன் தண்டிக்கப்படுகின்றான் எனக் கொதிக்கவும் செய்கிறோம்.
எமக்கு இகழ்புலம் பல காரணிகளைச் சுட்டி நிற்கிறது. தலைமை ஆசிரியரின் அதிகார வெறியைப் பார்க்கின்றோம். தனது 'நோயின்’ வேகம் அப்பாவி
ஏழையில் வஞ்சம் தீர்ப்பதையும், அத்துடன் அதிகார வரம்புக்குட்பட்ட தலைமை ஆசிரியரின் அப்பாவித்
ܐ

Page 16
தனத்தையும் கானன்கிறோம்.
இன்னுமொரு படி மேலே சென்றால் அன்றைய கல்விக் கொள்கையிலுள்ள குறைபாடுகள் தெரிய வருகின்றன: மாணவனைச் சற்றும் கருத்திற்கெடுக்காது அடக்கி ஆளும் முட்டாள்த்தனமான கல்வி அமைப்பைப் பார்க்கிறோம். கல்விக் கூடங்களில் கல்விசால் காரணிகள் யாவும் மேல் ஆதிக்க மக்களுக்காகவா என அங்கலாய்க்கிறோம்.
இன் னும் சற்றுக் கூர்ந்து நோக்குவோமாயின் கீழ்மட்ட மக்கள்படும் இன்னல்கள், அவர்களுக்குக் கல்வி மறுக் கப்படுவதற்கான உபாயங்கள் இங்கே சட்டம் என்ற போர்வையில் அரங்கேற்றப்படுவதைக் காண்கிறோம். பாடசாலையிலிருந்து பிள்ளைகள் இடைவிலகுவதற்கான காரணம் தெள் ளெனப்புரிகிறது.
அழகு சுப் பிரமணியம் தனது நிகழ்புலக்கட்டவிழ்த்தல் உத்தியைக் கையாண் டு எம் மை முடிவெடுக்க விட்டுவிடுகின்றார்.
மைலனின் சக் மாணவர்கள் கூட அவனைப் புறக்கணிப்பது அவன் மனதில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? ஆனால் எந்தவொரு இடத்திலும் கதை சொல் வோன் தன் மனக் குமுறலைக் காட்டியதாகத் தெரியவில்லை.
கதை இயல பாக அசைந்து செல்வதும், மொழியும் மென்மையான, இலகுவான சொற்களால் எழுதப் பட்டமையும் ஒரு வலிமையைத் தந்து நிற்கின்றன. அமைதியாக இருந்து கருட்பொருளை جو
சைபோடும் போது )
எம்மனதில் பலவிதமான துன்பஅலைகள் ஓடுவதைக் கண்டுகொள்ள முடிகிறது.
‘கூலிக்கு மாரடிப் போர்’ ஒரு மென்மையான கிண்டலுடன் ஆழமாகப் புரையோடிக் கிடக்கும் சமூகக்கேட்டை எம் முன் வைக்கிறது. “வைபவ நாயகன்" ஒரு கோமாளியாக வலம் வருவதைக் கானன்கிறோம். இங்கும் ஒரு வேடிக்கை என்னவெனில் இவ் வைபவ நாயகன்” கூட “சாதி”யில் குறைந்தவனே!
ஒப்பாரி வைப்பவர்கள் மரத்துப்போன ஒரு பிரிவு மக்களின் பிரதிநிதிகளாகக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அனுமதி தந்த பின்பும் போக மறுத்து ஒப்பரிவைப்பது எத் துணை உணர் வலை களை ஏற் படுத் தும் . இக் கதைக்குள்தான் எத்தனை கதைகள்?
மாதிரிக்காக ஒரு சில கதைகளைப் பார்த்தோம். உண்மையில் அவரது சிறுகதைகள் பலவற்றிலும் நாம் எம்மைக் காண்கிறோம். அவரது படைப்புக்கள் எமக்கு ஆயிரம் கண்களைத் தருகின்றன.
அவரது கதைகள் யாவும் தலை சிறந்தவை என நாம் கூறவரவில்லை. அவ்வாறே அவரது கதைகள் எல்லாம் வியந்து பாராட்டத் தக்கவையும் அல்ல. அவர் மிகவும் மட்டமான கதைகளையும் எழுதியுள்ளார். இவைகளால் நாம் அவரைக் குறைவாக மதிப்பிடுவதாகவும் கருதிவிடக்கூடாது.
ஆக்க இலக்கியவாதி தன்னுள் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகள் அவனை ஆழமாகப் பாதக் கும் . அப்பொழுது அவனில் ஏற்படும் ஆவேசம்
 
 
 

அவன் படைப்பில் புகும்போது அவன் படைப்புப் பெறும் அர்த்தம் எல்லா நேரங்களிலும் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே "பெரிய” எழுத்தாளர்கள் கூட “சிறிய” படைப்புக்களைத் தர முடியும். இவைகளை முழுமையாகப் பார்த்து எடைபோடும் போதே ஆசிரியன் சரியான மதிப்பீட்டுக்கிடப்படுகின்றான்.
அழகுசுப்ரமணியத்தின் மொழி தனித் துவமானது. சிறிய சொற்களாலான எளிய நடை “சிறியது அழகானது' என்பது
இவருக் குப் பொருந்தும் . நாமும் எழுதிவிடாலம் என எல்லோரையும்
எண்ணவைக்கும். ஆனால் எவரும் எழுத
முடியாத ஒரு வலிமை, செறிவு அவரது மொழிக்குண்டு.
அவரது மொழியினுாடே ஆங்காங்கே மென்மையான கிண்டல் எட்டிப்பார்க்கும். "செக்கோவ்' போன்று ஒரு சிறு அதிர்ச்சி. உதட்டளவில் ஒரு சிரிப்பு எட்டிப் பார்க்கும்.
சுந்தரராமசாமி கூறுவார். “கதையும் ஒரு கலை என நம்புகின்ற கலைஞன் தன் ஆத்மாவைப் பிரதிபலிக்கத் தோதான உடைந்த கண்ணாடித் துண்டுகள் எங்காவது கிடைக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டே போகின்றான். அதில் ஒரு துண்டைப் பொறுக்கித் தன்னுடைய கலை ஆத்மாவின் ரசத்தைக் கொஞ்சம் அதன் பின்னால் பூசிவைக்கிறான். அப்பொழுது நமக்கு நம்முடைய முகத்தை அதில் பார்க்கக் கிடைக் கிறது.’ இக்கூற்று எவ்வளவு உண்மை யானது என் பதை அழகு சுப்பிரமணியத்தின் கதைகள் புலப் படுத்துகின்றன.

Page 17
روی ஒரு பிரதியின் சவமுணுப்புக்கள்
மேமனர்கவி
1. போர்க்கள இலக்கியம் குறித்து.
இன்றைய காலகட்டத்தில் ஈழத்து தமிழ் இலக்கியப் வளர்ச்சிப் போக்குகளில் அதி உத்வேகத்துடன் பிரவேசித்து இருக்கும் போர்க்கள இலக்கியத்தைப் பற்றி நமது அவதானத்தை பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.
ாேர்க்கள இலக்கியம் என்ற போக்குக்கான ஆதார ஆவணங்களாக சமீபத்தில் வடசிழக்கு போர்க்களத்தில் நின்று இயங்கியப் போராளிகளின் இலக்கியப் படைப்புக்கள் நூல் உருவம் பெற்று இருப்பதைச் சொல்லலாம்.
இவ்வகையான இலக்கியங்களை அங்கீகரித்து அடையாளப்படுத்தும் முயற்சியின் பொழுது, நாம் ஒரு விடயத்தைத் தெளிவாக மனதில் நிலை நிறுத்திக் கொள்வது நல்லது.
அதாவது, இற்றைவரையிலான ஈழத்து இலக்கியப் படைப்பும் உருவாக்கம் பெறுகின்ற பொழுது அதற்கான விமர்சன அழகியல் கூறுகளையும் அளவுகோல்களையும் அவை உருவாக்கம் செய்து விடுகின்றன என்பது நாம் அறிந்த உண்மை.
எப்பொழுதுமே எந்தவொரு கலை இலக்கியப் படைப்பை விமர்சிக்க அதன் தராதரத்தை கணிப்பிட அப்படைப்பு தரும் சூழலோடு. அப்படைப்பை விமர்சிக்க முன்வரும் விமர்சகருக்கு ஆழ்ந்த அனுபவமும், நெருங்கியத் தொடர்பும் இருந்தால் மட்டுமே, அப்படைப்பை சரியான முறையில் கணிக்க முடியும்.
அந்தவகையில், போர்க்கள இலக்கியப் படைப்புகளை விமர்சிக்கத் தேவையான விமர்சன அளவுகோல்களை அப்படைப்புகள் உருவாகிய சூழலில் உள் நின்று இயங்குபவர்கள் மட்டுமே உருவாக்ககித் தரமுடியும். தரவேண்டும்.
 
 

மற்றபடி போர்க்கள கலை இலக்கியப்
மடப்புக்கள் தரும் அனுபவங் களிருந்தும்
உணர்வுகளிலிருந்தும் வெளியே நிற்பவர்கள் அப்படைப்புக்களைப் பற்றி வெறுமனே கருத்துச் சொல்ல மட்டுமே முடியும் என்பதுதான் உண்மை.
2. நஞ்சாகிக் கொண்டிருக்கும்
பிஞ்சுகளின் உலகிலிருந்து.
இன்று நமது வாசற்படித் தொடக்கம் இன்று தொடர்ந்து கொண்டிருக்கும் இரண்டாம் வளைகுடா யுத்தம் வரையிலான நிகழ்வுகளின் மூலம் சிறுவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சகல விதமான வன்முறைகளும், எதிர்கால உலகச் சந்ததிகளுக்கு மனித குலம் செய்யும் பர்ரிய கொடுரம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
அந்தப் பிஞ்சு உலகங்கள் மீது இந்த உலகம் நஞ்சாய் தூவிக் கொண்டிருக்கும் அந்த கொடுரங்களை எணினி மனம் குமுறுகிறது.
இன்றைய நிலையில் -
நம்மிடம் இவர்களுக்கென வழங்கு வதற்கு நல்லது ஒன்றுமே இல்லாத நிலையில் வன்முறையை மட்டுமே வன்ம மாக வழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த பிஞ்சுகளின் உலகின் தூய்மையை எடுத்துச் சொல்லும் பழனிபாரதியின் `இன்று பிறந்த குழந்தைக்கு” எனும் இக்கவிதை மனசை இழுத்தது.
உங்கள் மனப்பிடிப்புக்கும் அந்தக் கவிதை
உனக்காக வைத்திருந்த முத்தத்தில் ஃப்ளோரைட் வாசம்
உனக்காப் பறித்த பூவில் டீசல் தூசி
உனக்காக வாங்கிய வாழ்த்து அட்டையில் மரத்தின் இரத்தம்
எனது உலகத்திலிருந்து ஏதுமில்லை உனக்கு
காற்றை அழுக்குப்படுத்தாமல் ஒடும் உனது குட்டிக்கார்
வன்முறை அறியாத இராணுவ வீரன்
சிரிக்கக் கற்றுக் கொடுக்கும்
சீனத் தங்கை
விபத்துகளைச் சந்திக்காத விமானம் guທີ6)
மதங்களற்ற உனது பொம்மைகளின் உலகத்திலிருந்து முடிந்தால் கொடு எனக்கொரு சிரிப்பை,
நிகழ்கலையும் அதன் பார்வையாளர்களும்
சமீபத்தில் கொழும்பில் இரு நாடகங்

Page 18
களைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்த வேளை எனக்கொரு சிந்தனை தோன்றியது.
எந்தவெர்ரு நிகழ் கலையினதும் பார்வையாளர்களின் நடத்தையானது அந்த நிகழ் கலையை நிகழ்த்த பங்கேற்கும் பங்காளர்களின் வெளிப்பாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் . அதனால் நிகழ்கலையை நிகழ்த்துவதில் பங்கேற்கும் சகல பங்காளர்களும் பார்வையாளர்களின் எதிர்வினைப் பற்றிய பிரக்ஞையுடன் செயற் பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
நாடகம், இசைக் கச்சேரி, மேடைப் பேச்சு, கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ் கலைகள் அவை பார்வையாளர்களின் எதிர்வினை உடனுக்
தமக் கான
குடன் பெறக்கூடியவை.
"றித்த சுவைஞர்களை மனங்கொண்டு மட்டுமே அதாவது, தாம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிகழ்கலையைப் பற்றிய சரியான தெளிவுடனும் சமூகப் பிரக்ஞை யுடனும் நிகழ்த்தப்படும் நிகழ்கலைகளின் பார்வையாளர்களிடம் காணப்படும் நாகரி
கமும் பணிபும், வெறுமனே ஜனரஞ் சகத்தன்மையுடனான நிகழ்கலைகவின் பார்வையாளர்களிடம் காணப்படுவதில்லை. மாறாக கேலிக் கடத்தும் ஆரவாரமுமே அதிகரித்து காணப்படும்.
ஆகவே, நிகழ்த்துவோர் அவர் தம் நிகழ்கலைக்கான பார்வையாளர் யார் என்பதையும் அடையாளப் படுத்திக் கொள்வது நல்லது.
நிகழ்கலைகளை
இந்த சிந்தனையிட்டு அதாவது நிகழ் கலைகளும் அதன் பார்வையாளர்களின் நடத்தையும் என்ற சிந்தனையிட்டு இன்னும் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் போல் தோன்றுகிறது.
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
எழுதப்படாத கவிதைக்கு
வரையய்படாத
சித்திரம்
டொமினிக் ஜீவாவின் சுய வரலாறு
(இரண்டாம் பதிப்பு ~ புதிய தகவல்களுடன்.)
 

மல்லிகைப்பந்தல் கண்ட புதிய களம்
டொமினிக் ஜீவா
சென்ற ஆண்டே நானிதைச் செய்திருக்க வேண்டும். அப்பொழுது நான் இதன் காத்திரத்தைத் தெரிந்து கொள்ளத் தவறிவிட்டதை இப்போது புரிந்து கொள்ளுகின்றேன்.
இந்த ஆண்டு ஏப்ரல் 16-17-18-19 திகதிகளில் ராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் முதற் தடவையாக மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைக் காட்சிக்கு வைப்பதற்கும் விற்பனைக்குமான ஒரு 'புக் ஸ்டா’லை ஏற்பாடு செய்திருந்தேன். ッ
இது எனது வெளியீட்டுத்துறை அநுபவத்தில் இது தனியான புதிய முயற்சி. செய்துதான் பார்க்கலாமே என்றொரு ஆவல். வாய்வழி விளம்பரம் மூலம் புதிய புதிய சுவைஞர்களைச் சேகரித்துக் கொள்ள முயன்றுழைத்தேன்.
நான்கு நாட்களும் நானே இருந்து கவனித்தேன். எனக்கு உதவியாக நண்பர் ஆப்டீன் பங்கு கொண்டார். இடையிடையே கவிஞர் மேமன்கவியும் ஒத்துழைப்புத் தந்தார். கவிஞர் குறிஞ்சி இளந்தென்றலும் உற்சாகமாக உதவிகள் புரிந்தார்.
மல்லிகைப் பந்தல் வெளியீடுகளுடன் சகோதர நிறுவனமான 'துரைவி பதிப்பகத்தின் பத்து நூல்களையும் இணைத்து வைத்திருந்தேன்.
'கம்பன் விழாவுக்கு வந்து போகும் சுவைஞர்கள் நவீன இலக்கியத்திற்கு எத்தனை தூரம் ஆதரவு தருவார்கள்? என்ற சந்தேகம் என் நெஞ்சில் எழாமலும் இல்லை. செய்துதான் பார்ப்போமே என்ற மனத் துணிவு.
"மல்லிகைப் பந்தல்' விளம்பரப் பதாகையின் கீழ், அதன் வெளியீடுகளை
影 من مريم
༣མ་ ஜ்

Page 19
அழகாக அடுக்கி வைத்திருந்தேன். துரைவி பதிப்பகத்தின் நூல்களையும்
இடையிடையே ஆப்டீன் வைத்து
அழகுபடுத்தியிருந்தார்.
உணி மை யைச் சொல் லப் போனால், விற்பனை செய்வது எனது நோக்கமல்ல. ஒரு சிறு சஞ்சிகை நிறுவனம், அந்த மாசிகையைக் கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருவதுடன் 50க்கு மேற்பட்ட பல்வேறு தரமான இலக்கிய நூல்களையும் வெற்றிகரமாக வெளியிட் டுக் கொண்டுவருகிறது என்பதை இந்த மண்ணின் வாழ் மக்களுக்குப் புரிய வைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனைக் கருதினேன். அதையொட்டிச் செயலில் இயங்கினேன்.
முன்னால் விரித்து நிறைத்துள்ள
மேசையைப் பார்க்கும் பொழுது என்
நெஞ்சே பெருமிதத்தால் நிறைந்து பொங்கியது.
ஏராளமானவர்கள் புத்தகங்களைப் புரட் டிப் பார்த்தார்கள் . அதில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே இருந்தனர். அதிலும் யுவதிகள்.
என்னைத் தெரிந்தவர்கள் புதிய வெளியீடுகளை வாங்கிச் சென்றனர். சில புதிய முகங்கள் மல்லிகை உதிரி இதழ்களை வாங்கியதுடன் 38வது
ஆண்டு மலரையும் விருப்புடன் வாங்கிச்
சென்றனர். மலர் வாங்கிய பலர் பழைய மல்லிகை மலர்கள் பற்றி விரிவாக விசாரித்ததுடன் சந்தாவும் செலுத்திச் சென்றனர்.
இதில் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. கம்பன் கழகப் பெருந்தலைவரும் நீதியரசருமான கெளரவ சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வநது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்ற எனது சுயவரலாற்று நூலை வாங்கிச் சென்றார்.
விழாவுக்கு முக்கிய பேச்சாளராக வந் திருந்த முனைவர் ஒளவை நடராசன் விழாவுக்கு அடுத்த நாள் சாயங்காலம் புத்தகங்களைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கோ ஒரே ஆச்சரியம்! ‘தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் ஒரு சிற்றிலக்கிய ஏட்டை வெளியிடுவதுடன் எப்படி இத்தனை நூல்களையும் வெளிக் கொணரக் கட்டுப் படியாகினி றது? இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தை எப்படித் திரும்பப் பெற்றுக் கொள் கிறீர்கள்? என வியப்புடள் கேட்டார்: ‘'வேறு வருமான மி ஏதாவது உணர் டா, உங்களுக்கு?’ எனத் தொடர்ந்தார்.
‘’ எனக் கென தி தனியான
ஓய்வூதியமோ வேறு எந்த விதமான
வருமானங்களோ ஒன்றுமே இல்லை!” என்றேன்.
‘‘அப்படியானால் இது எப்படி கட்டுப்படியாகிறது?”
‘நான் இதைப் பற்றி என்றுமே கவலைப்பட்டது கிடையாது. மக்களை முற்று முழுதாக நம்பித் தினசரி இயங்கி வருபவன், நான். என்னையும் எனது அர்ப் பணிப்பு உழைப் பையும்
 
 

தெளிவாகப் புரிந்து கொண்ட இந்த நாட்டு மக்கள் எனக்கு கைதந்து
உதவுகிறார்கள்!” என்று சிரித்த வணி னம் அவருகி குப் பதில சொன்னேன்.
அப்படியே வியந்து போய் விட்டார், ഷഖf.
விழா நடந்த நான்கு நாட்களும் எனக்குக் கொண்டாட்ட்ம்தான் எத்தனை எத்தனை வகை வகையான மக்கள் என னை தி தாணி டிச் செனி நு கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு
பகுதியினர் சற்றே நின்று, மல்லிகைப் பந்தல் பதாதையை உற்றுப் பார்த்து
விட்டு, புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துத் தலைப்புகளை வாசித்து விட்டுப் போன காட்சியைக் கண்டு நான் அப் படியே மலை த துப் போய் இருந்தேன்.
பக்கத்தே பூபாலசிங்கம் புத்தக
சாலையினர் புத்தகக் கடல் பரப்பி யிருந்தனர். அடுத்ததாக மணிமேகய்ை பிரசுரத்தினர் புத்தகங்களை அடுக்கி யிருந்தனர். இந்த இரு நிறுவனங்களின் புத்தகக் குவியல்களுக்கு முன்னர் மல்லிகைப் பந்தல் ஒரு ஒரமாக ஒதுங்கியிருந்தது. ஒதுங்கியிருந்தாலும் அதன் ஈர்ப்பு சக்தி மக்களைக் கவரத்தான் செய்தது.
நான்கு நாட்களும் எப்படிப் போனதோ தெரியவில்லை. அத்தனை சடுதியாக நாட்கள் ஒடிப்போய் விட்டன.
எனக் கு இதுவொரு புதிய
அநுபவம்.
நான்காம் நாள் விழா முடிவ டையும்போது என் நெஞ்சு கவலையால் கனத்ததுத் தவித்தது.
‘இன்னமும் இரண்டு நாட்கள் கூடுதலாக இந்த விழா நடை பெற்றிருந்தால் எவ்வளவு நல்லா யிருக்கும்!
மல்லிகை ஆண்டுச் சந்தா சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள் 37வது ஆண்டு மலர் தேவையானோர் தொடர்பு கொள்க. ஆண்டுச் சந்தா 250/- தனிப்பிரதி 20/- தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13. தொலைபேசி: 320721 FF -QLouîlsó : panthalQsltnet.lk.
(காசுக் கட்டளை அனுப்புவோர் Dominic Jeeva Kotahena, P.O எனக் குறிப்பிடவும்)

Page 20
b.
I 0.
II.
I2.
I3.
I4.
I5.
16.
II.
18.
I9.
2O.
LANTMONõLJõāsV)
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு புதிய அந11வத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளத) விலை: எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் விலை: அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் விலை: கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் விலை: மண்ணின் மலர்கள் ~ (யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) 6fs)so: நானும் எனது நாவல்களும் ~ செங்கை ஆழியான் விலை: கிழக்கிலங்கைக் கிராமியம் ~ ரமீஸ் அப்துல்லாஹற் ബിൻെ. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை) டொமினிக் ஜீவா விலை: முனியப்ப தாசன் கதைகள் ~ முனியப்பதாசன் விலை: மனசின் பிடிக்குள் (ஹைக்கூட) ~ பாலரஞ்சனி விலை: கார்ட்டுண் ஒவிய உலகில் நான் ~ 'சிரித்திரன் சுந்தர்' விலை: அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) விலை: சேலை ~ முல்லையூரான் 6ט6(%ג: மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் 6553)6): (30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) நிலக்கிளி > பாலமனோகரன் விலை: நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா விலை: மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) வெளிவந்து விட்டது விலை: தொகுப்பு ~ செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் விலை: தரை மீன்கள் ~ ச.முருகானந்தன் விலை
கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும் ~ செங்கை ஆழியான் விலை
மல்லிகைப் பந்தல் சமீபத்தில் வெளியிட்டுள்ள நூல்கள் 27/ܛܵܠܓܠ
2so/
Ι 4ο/-
180/-.
=/5ך 1
I 1 off 80/=
I oo/=
I I o/=
1so/= 60/=
I 75/-
175/= ISO/r
275/=
14 of
1so/F
3so/F
15o/=
: Iso/F
: 1so/F
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
 
 
 

め Q §§ 脅 %
x:
Κ.
இ
S
8 缀

Page 21
வீட்டில நிலவி வநீத கடும் வறுமையும், மன அழுத்தங்களும், இவனுக்கு கசப்பானவையாகவே இருந்தன. கடற் காற்று சீதளக் குளுமையை முகத்தில் அழுத்திப் பார்த்துவிட்டு விலகிச் சென்றது. ஒவ்வொரு முறையும், புதிய பிறப் பெடுத்து, வந்து தழுவிக் குதூகலிக்கும் காற்று மனதிற்கு இதமளிக்கும். அதன் பிரக்ஞையை உணர்தலில் இவனுக்கு அலாதிப் பிரியமுண்டு. wr
பாதை நெடுகளிலும் நணர் டு
வளர்ந்திருந்த மரங்கள் அழகு காட்டின. தெருவின் முன்விழுந்து நீந்தும் மர நிழலசைவுகளை பீட்டர் விழியினால் கூர்ந்து நோக்கினான். நிழல்கள் எவ்வாறு வெறுமனே அசையும்? ஆடியசைந்து பிம்பம் காட்டும் மரங்களின் நர்த்தனமின்றி மரத் திற்கு ஆடியசையும் பலம் தன்னிச்சையாக வர, எவ்வாறு சாத்தியம்?
ஆட் டுவிக் கும் மூல சகி தியே காற்றுத்தானே? காற்றையேன் யாரும் பெரிதாய்க் கணக்கிலெடுப்பதில்லை.
வாயுவை உள்வாங்க மறுத்த எந்தத்தளத்திலும் மனிதனால், உயிர் வாழ்ந்திடல் இயலுமா? காற்றும் , மின்சாரமும் மனிதனது அன்றாட வாழ்வில், எத்தனை நெருக்கமாய் இரண்டறக் கலந்துவிட்டன.
ஒட்டியே வாழும் மனைவி, மக்கள் உறவினைப்போல் - இடைவிடாது வீசிய காற்றின் எதிர்வேகத்தில், பீட்டர் மேனி சிலிர்த்தான். ஒரு ஆனந்த அனுபூதி
همجي
உடலெங்கும் தழுவிப்பரவிய சுகம்.
தலை நிமிர்த்தி, நீளும் நேர்
கோட்டை தரிசித்தான். இடப் புறத்தே,
பழைய ரெஸ்ட்ஹவுசும், கொட்டு பிட்டிய, விஸ்தாரமான, விளையாட்டு மைதனமும், பாதை யெங்கும் அடர்ந்து வளர்ந்த குளிர்மை கொட்டும் மரங்களும் , வலப்புறம், ஹைதர் கால, பழைய கட்டிடமான, மீபுர, தியேட்டரும் மேட்டுநிலத்தில் உயர்ந்து தெரிந்த, மாவட்ட நீதிமன்றமும், தொலைவில். நீர் கொழும்புச் சிறைச் சாலையின் பிறைவடிவ வாயிலும், இவனுக்குப் பரிச்சயமான காட்சிகள்தான்!
என்பது மட்டுமல்ல! தினமும் காலாறச் சுற்றித்திரியும், நகரின் கேந்திரப் பிரசித்தி பெற்ற தளங்களும் தான். முன் னக் கரை களப் புக் கருகல் எழுந்தருளியுள்ள, தனது இல்லமாகிய ஓலைக்குடியை ஒருகணம் எண்ணித் துயருற்றான். கறையான் அரித்து இற்றுப் போயிருக்கும் ஒலைக்குடிலின் ஆயுள் நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கப் போவதில்லை, என்ற உண்மையை இவன் அறியாமலில்லை.
மழைக் காலங்களில் களப்பு நீர் பெருக கெடுத் தோடும் இடுப் பளவு தண்ணீரில், வந்தது ஆபத் தென. அந்தரத்தில் குடிசை தள்ளாடும். அதைத் திருத்திக் கட்டுவதற்கு ஏது பண்ம்? பதினான்கு வயதுச் சிறுவனான பீட்டரின் தலையில், குடும்பச் சுமை புகுந்து பூதாகரமாய் சங்கடப்படுத்தின.
இவன் அவ்வப்போது செய்து வந்த
 
 

நிரந் தர மற்ற உப தொழில் களர் , குடும்பத்தின் வயிற்று அக்கினியை தவிர்ப்பதற்குப் போதுமானதாயப் இருக்கவில்லை. வயதுக்கு வந்த அக்காள், அம்மா, தம்பி, பாட்டி, இவன் என ஐந்து ஜீவன்களின் அன்றாட வாழ்வு ஆட்டங்கண்டு கொண்டிருந்தது.
இவர்களை நிர்கி கதரிக் கு ஆளாக்கிவிட்டு எவளோ ஒருத்தியோடு ஓடிப் போன தந்தை ஜோசப் பை, மனங்கசிந்து திட்டித்திர்த்தான். அவன்
இவர்களொடு ஒன்றியிருந்து உழைத்த
காலங்களில், சாப்பாட்டுக்குப் பஞ்ச மில்லாது இருந்தது. அவன் அன்றாடம் கடலுக்குப்போய் வந்ததில் வீட்டுக் கஷ்டம் விலகியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன், ஜோசப் கற் பிட்டிக்குத் தொழிலுக்குப் போனவன்.
இன்று வரை வீடு திரும்பவே இல்லை. எல்லா இடங்களிலும் விசாரித்துப் பார்த்ததில், எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை. மிகச்
சமீபத்தில் கிடைத்த செய்தி, மூன்று
பிள்ளைகளுக்குத் தாயான ஒருத்தியோடு, மணி னாரில் களர் ளக் குடும் பம் நடாத்துவதாக.
“சேமால மாதாவே, எண்ட சிறுக்கி, சிறுக கனி களுக் கு வஞ சக மி செஞ்சிபோட்டு, இந்த நாய் ஒரு வேசைத் தோரையோடை ஓடிப் பெயித்திட்டான்! எண்டை கைக்கு அவள் கிடைச்சா, உத தமயாத தானே பாற மணி வெட்றாப்போல அரிஞ்சு போடுவன், நாசமாப்போனவன், அவளை நக்கிக்
கொண்டு கிடக்கிறான்!”
கடுமையான கஷ்டங்களை எதிர் கொள்ளும்போது, மனம் வெதும்பி, தனது கணவன் ஜோசப்பைத் திட்டித் தீர்ப்பாள் தெரேசா. துடிக்கத் துடிக்கப் பிடித்த பென்னம் பெரிய சுறா மீனைப் போல, பளபளத்துப் பொலிவு காட்டி நின்றாள் மகள் மேரி. அவளுக்குப் பேசி வந்த திருமண ஏற்பாடுகள் கூட, இவர்களது பொருளாதாரக் கஷடத்தில் தூர விலகிப்போயின.
இந்த அவலங்களையெல்லாம் எணர் னி நெஞ்சு கி குளிர் காயப் பட்டவனாகத் தலையைக் குனிந்து பீட்டர் பெருமூச்சுவிட்டான்.
தடீரென அவ னருகல ஒரு
நிழலசைவு! “ஹலோ! ஹவ்ஆர் யூ?, ஐ, ஆம், ஜோன்சன் ட்பிரம் சுவிஸ்!”
இவன் தலைநிமிர்த்தி ஆச்சரி
யத்தோடு ஏறிட்டுப்பார்த்தான். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளையன்
புன்முறுவல் பூத்தவாறு அருகில் நின்றான்.
தோற்றத்தில் கனிவு துலங்கியது. கையில்
கெமராவும், தோளில் பையுமாக சிநேக புர்வமாக இவனுடன் உரையாடினான்.
“நீ ஏன் மகிழ்ச்சியாயில்லை?, என்னால் உனக்கு உதவ முடியும். சுவிசில் நான் ஒரு பிரசித்தி பெற்ற நட்சத்திர ஹோட்டலுக்கு உரிமை யாளன். அதோ இருக்கும் பழைய ரெஸ்ட் ஹவுசில் ஒன்பதாம் இலக்க அறையில் தங்கியிருக்கிறேன். நீ எப்போது வேண்டு
سمتی

Page 22
மானாலும் என்னை வந்து சந்திக்கலாம். பூரீலங்காவில் இரண்டு மாதம் மட்டுமே தங்கியிருப்பேன்’ இவன் தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் விடை பகன்றான். தன் குடும்பம் மிகுந்த
கஷ்டத்திலிருப்பதாகவும், ஏதாவது ஒரு
கொள்
தொழிலைத் தேடிக் வேண்டுமென்றும் தன் ஆதங்கத்திை அவனிடம் வெளியிட்டான்.
வெள்ளையன் மிக அனுதாபப் பட்டவனாக, பையைத்தடவி, சொக்லேட், பிஸ்கட் பக்கட்டுக்களை அன்பளிப்பாக வழங்கிவிட்டு பர்ஸைத் திறந்து ஐநூறு
ரூபாய் நோட்டையெடுத்து இவன் கையில்
திணித்தான்.
பீட்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. வெள்ளையர்களில் இத்தனை இரக்க சுபாவமுள்ளவர்களும இருக்கிறார்களா? என வியந்தான்.
“டியர் 'பிரண்ட் டோண்ட் ஒரி. இரண்டு மாதங்களுக்கு உனக்கு என்னிடம் வேலையிருக்கிறது. என்ன வேலையென்று தெரியுமா?’ உதட் டோரத்தில் புன்னகையைத் தவழ விட்டவாறு, பீட்டரின் தோற்றத்தை அர்த்த சிரத்தையுடன் கூர்ந்து பார்த்தான். அழுக்கேறிய கட்டைக் காற்சட்டை, டீ சேர்ட், மேலுதட்டில் படர்ந்திருக்கும், மெல்லிய பூனைரோமம், கூர்மையான தீட்சண்யமிக்க கண்கள், குழந்தைத் தனமான முகலாவண்யம், மீனவச் சிறுவர்களிடம், அபூர்வமாகக் காணப்படும் சிவந்த மேனி, இத்யாதி. அனைத்தும் அவனை வெகுவாகக் கவர்ந்தது.
“உன்னுடைய வேலை என்னோடு தினமும் ஊரைச் சுற்ற வருவதுதான். சாப்பாடு, சம்பளம், உடைகள் எல்லாம் வழங்குவேன். நாளை தவறாமல் வந்து என்னைச் சந்திக்கிறாய். சம்மதம் தானே? இவன் திருப்தியடைந்தவனாக 'ஓ - கே’, சொல்லி கைகுலுக்கி விடை பெறு கின்றான். மறுநாட்காலை சந்திப்பு நிகழ்ந்தது. இருவரும் நண்பர்களாக, ஒன்றாக அமர்ந்து ஹோட்டலில் காலை உணவு முடித்து, ஊர் சுற்றப் புறப்பட்டார்கள். வெள்ளைக் காரனோடு பீட்டர் வீட்டுக்கு வருவதைக் கண்டு,
இவனது தாயும், சகோதரியும், பூரித்துப் போனார்கள். பீட்டருக்கு இனி நல்ல காலம் பிறந்துவிட்டதாய் நம்பினார்கள் . அந்த ஓட் டைக் குடிசையைக் கண்ணுற்ற ஜோன்சன், புஜங்களை அசைத்து, நெற்றியை உயர்த்தி, வெள்ளைக்காரப் பாவனையில் ஆச்சரியம் காட்டினான். வீட்டைத் திருத்த உதவி செய்வதாக வாக்குறுதியளித்தான்.
திரேசா அவனுக்குப் பப்பாளிப் பழம் கொடுத்து அன்புடன் உபசரித்தாள். நாளடைவில் இவர்கள் இருவருக் கிடையில் ஆத்மார்த்த நட்பு இறுகிப் போயிருந்தது. எல்லா உல்லாசப் பிரயான ஸ்தலங்களுக்கும் சென்று மகிழ்ச்சிக் களிப்பில் சுற்றித் திரிந்தார்கள்.
இப் போதெல்லாம் பரீட்டரின் நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. வாசனைக் கொலோனை சதா உடம்பெங்கும் பூசிக் கொண்டான். விஸ்கி பியர், போதைப் பொருள்
 
 

பாவனையில் , மூழ்கப் போனாண் சிகரெட்டும் கையுமாக ஆங்கிலம் சரளமாகப் பேசக்கற்றுக் கொண்டான். யாவும் ஜோன்சன் என்ற வெள்ளையனின்
கடாட்சத்தில் தான். பீட்டரின் தாய்
தெரேசாவின் கைகளிலும் இப்போது நோட்டுக்கள் தாராளமாகப் புளங்க வாரம்பித்தன. அவள் சந்தைக்குச் சென்று அன்றாடம் மீன் விற்று வந்தாள்.
இவர்களது குடிசையும் சிறிது சிறிதாக கற்களால் எழும்பி நின்றது. ஜோன்சன் வாக்குக் கொடுத்தபடி, வீடுகட்ட ஒரு தொகைப் பணத்தை யளித்து உதவினான். அவன் சுவிசுக்குத் தரும் பரிச் செல லும் நாளும் அண்மித்திருந்தது. ஓரிரு மாதங்களில் இவனை சுவிசுக்கு அழைப்பித்துத் தன் ஹோட்டலில் தொழில் தருவதாக
உறுதியாகக் கூறிவிட்டு, செலவுக்குப்
பணத்தையும் கொடுத்துவிட்டு அவன் விமானமேறினான்.
நண்பரின் பிரிவு பீட்டருக்கு
கவலையளித்தாலும், சுவிஸ் பற்றிய கனவுகள், உணர்வுகளில் இனித்தன. மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஜோன்சனிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாமலிருந்தது. இவனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவன் கொடுத்திருந்த தொலைபேசி நம்பரில் பலமுறை தொடர்பு கொண்டான். அவனைப் பற்றிய எந்தத்தகவலும் அறிய முடியாமலிருந்தது.
நீலப் போர்வையில் சமுத்திரம்
படர்ந்து கிடந்தது. அலைகள் வெறி
கொண்டு ஒன்றையொன்று துரத்தி ஆர்ப்பரித்தன. படகுகள் தூரத்தே கரும் புள்ளிகளாய்த் தேய்ந்து தொலை திசையில் மறைந்தன. பறவைகள் அடிவானுக்கும் ஆழிக்குமிடையில், சிறகடித்து கிழ்நோக்கியும் மேல் நோக்கியும் அந்தரத்தில் பறந்தன.
இவன் ஆழியின் அற்புத வினோ
தங்களை எண்ணியவாறு, உடல் சோர்ந்து
கரையில் அமர்ந்திருந்தான். ஜோன்சன் ஏன் ஏமாற்றினான்? என்பது இவனுக்கு விடை கடைக காத கேள்விக குறியாயிருந்தது. கற்பனைக் கோட்டை இடிந்து தரைமட்டமாகிப் போனதில் பாதி இளைத்துப் போயிருந்தான். வேளைக்குச் சாப்பிடாமல் யாருடனும் கதைக்காமல் தனிமையிலிருந்து நீணி ட நேரம் சிந்திப்பவனாக மாறிப்போயிருந்த மகனின் நிலைகண்டு, தாய் பதறிப்போனாள்.
ஆறுதல கூறி இவனுக் குத் தன்னம்பிக் கையூட்ட அவள் பல முயற்சிகள் செய்தும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வருடங்கள் சில உருண்டோடிப் போயிற்று. பீட்டர் நோய் வாய்ப் பட்டுப் படுக் கையில் கிட்ந்தான். அடிக்கடி வாந்தி, தலைசுற்று நினைவிழத்தல் போன்றவையால் துவண்டு போனான். திரேசர வைத்தியர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சைகள் பல செய்தாள். இவனைப் பீடித்துள்ள நோய் என்னவென்று அறியாமல் மனம் நொந்தாள்.
கோயில்களுக்குச் சென்று நேர்த்தி, பூசைகள், பலவும் செய்து இறைஞ்

Page 23
சினாள். எதுவும் மாற்றமில்லை ஒருநாள் நடு இரவில் கடுமையான வருத்தம் ஏற்பட்டுப் பீட்டர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டான். குருதிப் பரிசோதனையில் இவனுக்கு எச்.ஐ.வி வைரஸ் கடுமையாகத் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தனியறைக்குள் அப்புறப்படுத்தித் தீவிர சிகிச்சைகள் நடைபெற்றன. இவன்
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். நோய் எத்தகையது என்பது, நோயாளிக்கு அறிவுறுத் தப்பட்டது. அதிர்ச்சியினால் மேலும் துவண்டு போனான். ஜோன்சன் ஒரு எயிட்ஸ் நோயாளியா? என்ற, கேள்வி மூளைக்குள் பொறிதட்டியது. அவனோடு கூடிக்கழித்திருந்த நாட்கள், பயங்கரக்
*மித்ர பதிப்பகம்
கனவுகளாய், அச்சமூட்டின. டாக்டர்கள் கையை விரித்தனர்.
மேல் சொருகின பொலிவிழந்த விழிகளால், தன் தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தபடி, இறுதிமூச்சை இழுத்தான் பீட்டர். தாயின் நெக்குருகும் ஒப்பாரிச்சத்தம், மருத்துவமனைச் சுவர்களில் மோதி எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.
வருந்துகின்றோம்
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களினது கனதியான நூல்களைச் சென்னையில் வெகு அழகாக வெளியிட்டு வந்துள்ள மித்ர பதிப்பகத்தின் நிர்வாக இயக்குனரும் பிரபல எழுத்தாளர் எஸ். பொவின் மைந்தருமான திரு. P.புத்ர அவர்கள் 5-4-2003 அன்று சென்னையில் காலமானார்.
அன்னாரது திடீர் இழப்பால் துயருற்று இருக்கும் குடும்பத்தி னருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மல்லிகையின் சார்பாக எமது ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
حسیم
ஆசிரியர் ட
 
 
 

கலந்த
கலகக்காரன்
சமுத்திரம்
அவுஸ்திரேலியாவிலிருந்து
முருகபூபதி
மாரடைப்பு வந்து BY PASS (பை பாஸ்) சத்திர சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடந்து ஒரு வார காலம் அங்கே இருந்து விட்டு வீடு திரும்பியதும் எனக்குக் கிடைத்த முதலாவது அதிர்ச்சியான கவலையூட்டும் தகவல் எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் மரணம் ஆகும்.
எதிர்பாராத விதமாக ஒரு வாகன விபத்தில் அவர் கொல்லப்பட்டார் என்ற துயரமான செய்தியை அவுஸ்திரேலியாவில் “உதயம்” மாத இதழை வெளியிடும் நண்பர் டொக்டர் நடேசன் சொன்னார்.
சு.சமுத்திரத்தை எனக்கு 1990 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தி வைத்தவர் மல்லிகை ஆசிரியர் ஜீவா. 1990 ஆண்டு ஏப்ரல் மாதம் நாம் சென்னையில் சந்தித்துக் கொண்ட பொழுது “சிவகாமியின் பழையன கழிதல்” நூல் வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தோம். அங்கே கவிஞர் இன்குலாப், கவிஞர் மேத்தா, இராஜம் கிருஷ்ணன் ஆகியோருடன் சு.சமுத்திரத்தையும் சந்தித்தேன்.
இலங்கையில் இந்திய அமைதிப்படை பிரவேசித்திருந்த காலப்பகுதியில் இந்திய மத்திய அரசின் செய்தித்துறை சார்பாகத் தகவல்கள் சேகரிப்பதற்காக சமுத்திரம் அவர்களும் சென்றவர் என்ற தகவலையும் அவருடனான கலந்துரையாடலில் இருந்து அறிந்து கொண்டேன்.
இவருடன் பேசிப் பழகிய குறுகிய நேரத்திலேயே அவர் எழுத்திலும், வாழ்விலும் ஓர் கலகக்காரனாகவே இனங்கண்டு கொள்ள முடிந்தது. பல நாவல்களையும் சில குறு நாவல்களையும் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புக்களையும் “லியோ டால்ஸ்டாய்” என்ற நாடக நூலையும், எனது
$:مرہ:مصر

Page 24
“கதைகளின் கதைகள்’ (கட்டுரை) என்ற நூலையும் எழுதியுள்ளார்.
சமுத்திரத்தின் படைப்புகள் தமிழ் நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகியுள்ளன. அதே சமயம் முனைவர், (M.Phil) பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்
இலக் கரிய உல கனி மிகுநீ த கவனத்தைப் பெற்றது. பாரதி, புதுமைப் பித்தன், இரகுநாதன், கி.இராஜ
நாராயணன், ஜெயகாந்தண் தி.க.சி என்று பலரை இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென்று நாம் அறிந்தி ருக் கரின் றோ மி , சு. சமுத்திரம் அவர்களும் திருநெல்வேலி மாவட் டத்தில் ‘திம் மனம் பட் டி’யில் பிறந்தவராவார்.
அமைதியாக இருந்து சிந்தித்த பொழுது ஏற்கனவே வாகன விபத்துக்களில் கொல்லப்பட்டுவிட்ட இரண்டு படைப்பாளிகள் நினைவுக்கு வந்தார்கள். ஒருவர் சுப்ரமணிய ராஜ" மற்றவர் கவிஞர் மேத்தா தாசன். அந்த வரிசையில் இன்று, சு.சமுத்திரம் அவர்களும் இணைந்து கொண்டார்.
சமுத்திரம் குறித்த நினைவுகளை மல்லிகை இதழில் நான் பகிர்ந்து கொள்வதற்கு மற்றுமொரு முக்கிய
காரணமுண்டு.
1990ம் ஆணி டு தமிழ் நாடு அடையாறில் நண்பர் ரங்கநாதன் இல் லத்தின் மொட்டை மாடியில் அமைந்திருந்த கீற்றுக் கொட்டகையில்
| " با
மல்லிகை 25ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா தி. க. சியரினர் தலைமையில் நடந்த பொழுது சு சமுத்திரம் கலந்து கொணர் டு உரையாற்றினார்.
அவர் தாம் இலங்கை சென்றிருந்த போது செய்திகளை மட்டும் சேகரிப் பதோடு நின்று விடாது நீண்ட கால இலக்கியத் தோழன் மல்லிகை ஜீவாவையும் சந்தித்ததையும் நினைவு கூர்ந்து பேசினார். ጳ
இவர் தனிப் பட்ட முறையில் நேரில் பேசும் போதும் சரி, மேடைகளில் பேசும் போதும் சரி மிகவும் உணாச்சி வசப்பட்ட நிலையில் கருத்துக்களைச் சொல்வதை அவதானிக்க முடியும்.
தர் மாவேச மெனர் பது இவரது இரத்தத்திலேயே ஊறிவிட்டதோ என்று கூட நினைக்கத் துண்டும். நான் அறிந்த மட்டில் தர்மாவேசம் கொண்ட பல படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழகினால் அவர்களிடம் ஆழமாகக் குடியிருக்கும் மென்மையான மனித நேய உணர்வுகளையும் இனங்கண்டு கொள்ள முடிந்திருக்கிறது.
பாரதியே சொல்லியிருக்கிறார் “ரெளத்ரம் பழகு” ஜெயகாந்தன்
சொல்வார் “கோபம் சிறந்த குணம்” என்று.
கோபம் உள் ள இடத்தில்
குணமும் இருக்கும் என்று பொதுவாகச் சொல்வதையும் கேட்டிருக்கிறேன். சமுத்திரமும் ஒரு கோபக்காரன். தமது படைப் புக ளின் மூலம் , சமூக
 
 

அநீதிகளுக்கு எதிராகக் குரல எழுப் பரிய ஒரு கலகக் காரணி , சமுத்திரத் தினர் பாத் தரங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட அடிநிலை மக்களாகவே இருப்பர்.
இவருடைய பல படைப்புகள் தமிழக அரசின் பரிசில் களையும் பெற்றுள்ளன.
“ஒரு கோட்டுக்கு வெளியே” என்ற
நாவல் பதினான்கு இந்திய மொழிகளில்
மொழி பெயர்க்கப்பட்டது.
“சோற்றுப்பட்டாளம்” என்ற நாவல் சென்னைத் தொலைக்காட்சி நிலை யத்தால் முழு நீள நாடகமாக ஒளி பரப்பப்பட்டது.
“வேரில் பழுத்த பலா’ நாவல் இந்திய சாகித்திய அகடமிப் பரிசைப் பெற்றது.
இவருக்கு இப் பரிசு கிடைத்த பொழுது 'கணையாழி' இதழ் சீன டியது. இட ஒதுக் கட்டுக்குக் கிடைக்கப்பட்ட பரிசு என எள்ளி நகை
եւ IT tÇ եւ 135l.
சமுத்திரம் வெகுண்டார். கார சாரமாகத் தமது கருத்துக்களை முன் வைத்தார். சிறிது காலம் இலக்கிய உலக ல இந்த விவகாரம் சர்ச்சையாகப் பேசப்பட்டது.
எனினும் பரிணி நா ட் களி ல
சமுத்திரத்தின் நியாயமான கோபம் சற்றுத் தணிந்து தன்னை விமர் சித்தவர்களைக் கூட அன்பு பாராட்டிக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
காக்கிச் சட்டைக்காரர்களுக்கும், காவிச் சட் டைக் காரர்களுக்கும் மத்தியில் மனிதர் மதம், இனம், மொழி, சமூகம், சமுதாயம், தேசம், அரசியல், பண்பாடு, மனித விழுமியங்கள் எவ்வாறு சீர்குலைந்து போகின்றன என்பதை நாம்
அனர் றாடம் கனர் 3ôn L. T  L Ü பார்க்கின்றோம்.
இநீ தியாவில் பாபர் மசூதி
இடித்துத் தகர்க்கப்பட்டுப் பாரத கண்டத்தின் மானமே கப்பலேறியது. அந்த வரலாற்றுக் கறையைப் பின்னணியாகக் கொண்டு கதைகளும், திரைப்படங்களும் வந்திருக்கின்றன.
சு. சமுத் தரம் நெல லை மாவட்டத்தில் மேலைப் பாளையம் என்ற கிராமத்தில் பெரும் பாண்மையாக வாழும் முஸ்லிம் மக்கள் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அங்கு நடைபெற்ற கொடுமையைச் சித்தரித்து “மூட்டம்' என்ற நாவலை எழுதியிருக்கிறார்.
சமுத்திரம் தமிழ் படைப்பிலக்கிய உலகிலும் ஒரு சமுத்திரம் தான். அவரின் விதி வீதியில் முடிவு செய்யப் பட்டிருக் கறது. சமுத்திரத்தின் குடும்பத்தினரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனினும் அவரது குடும்பத்தினரும் அவரது இலக்கிய நண்பர்களும் எதிர்பாராத விதமாக சுமந்து கொண்டிருக்கும் துயரத்தில் நானும் பங்கு கொள்கின்றேன்.

Page 25
இலக்கியக் களத்தின் போர்ச் சேவல்
சமுத்திரத்தின் பெயரை உச்சரித்தாலே நெஞ்சு நிமிரும். ஒடுக்கப்பட்ட மக்களின் மனித உரிமை களுக்காக உரக்கக் குரல் கொடுத்த செயல்வீரன்! சாகித்திய அகடமிப் பரிசை இவர் பெற்றுக் கொண்ட வேளையில் தம் முகங்களைக் கோணிக் கொண்டவர்பலர். சுஜாதா அவர்கள் விகிதாசாரப் பிரதி நிதிதுத்துவப் பரிசு எனக் கிண்டல செய்ததும் உண்டு. சகல அவதூறுகளையும் துடைத்தெறிந்து நிமிர்ந்து நின்ற பேனாப் போராளி இவர்.
நாம், நமது உணர்வுகளைப் புரிந்து கொண்ட இந்த எழுத்தாளனது பிரிவால் பெருந் துயரடைகின்றோம்.' அவரது இழப் பாலி சோகமுற்றுத் தவிக்கும் குடும் பத்தினர், குறிப்பாகத் தமிழகத்து முற்போக்கு எழுத்தாளர்கள் அனை வருக்கும் ஜ் எமது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். :::::::
லிகை சிறுகதைகள் 1 - 2 ... : 1 1 alladao 275/= r 350/= . மல்லிகை ஆசிரியரின் பவள விழா ஞாபகா வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி. : . كمة
30 எழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள் erfau தொகுப்
4 சிறுகதைகளை உள்ளடக்கிய இரண்பாம்பாகம் தயாராகின்றது
 
 
 
 
 
 

*lädtффл6ыilól 26ш1 лdъ ஒர் அநுபவய் பயணம்
GPL // Ifá0ff; goffa II
மல்லிகையைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த அந்த ஓராண்டுக் காலகட்டம் மிக்க சிரமமான காலமாகும். தலை போகின்ற நெருக்கடியான கால கட்டம்.
இலக்கிய மட்டத்தில் மாத்திரமல்ல, அரசியல் வட்டத்திலும் நான் விலை கொடுக்க வேண்டியேற்பட்டது.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு தோன்றியது. பெரும் பிரிவுகள் பிரிந்து நின்றன. மாஸ்கோ சார்புக் குழு ஒன்று. அடுத்தது பீகிங் குழு. இந்த இரண்டு சார்பு நிலைக்குட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் நிறையக் காணப்பட்டனர்.
நான் சார்பு நிலை எடுத்ததைவிட, ஆரம்ப ஸ்தாபனமான தாய் அமைப்பில் நிலையாக என்னை நிறுவிக் கொண்டு செயல்பட்டு வந்தேன்.
எமது தாய் ஸ்தாபனத்திற்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் தம்மைத் தனியாக்கிக் கொண்டு இயங்கி வந்தனர்.
பிரிந்து சென்றவர்களில் அநேகமானோர் எழுத்தாளர்களாகவே இருந்தனர். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நானும் அகஸ்தியரும் தெணியானும்தான் மிஞ்சி நின்றோம்.
இந்த அரசியல் பிளவு காலகட்டத்தின் பின்னணியில்தான் மல்லிகை இலக்கிய உலகில் காலடி வைத்துத் துளிர் விட்டு வளர்ந்தது, அல்லது வளர்க்கப்பட்டது.
23:زیمبیہ

Page 26
எனக்கும் மல்லிகைக்கும் எதிராக ஒரு வழமையான எதிர்ப் பிரசாரம் தொடங்கப் பட்டது. அதாவது ரஷ்யாக்காரனிடம் ஒழுங்காகப் பணம் பெற்றுக் கொண்டுதான் மல்லிகை வெளிவருகிறது என்ற நச்சுப் பிரசாரமே அதுவாகும்.
அதற்கு ஏதுவாக அந்த ஆரம்பக் காலகட்டத்தில் மல் லிகையில் வெளிவந்த கட்டுரைகள்கூட, சோவியத் சார்புக் கட்டுரைகளாகவே பெற்றிருந்தன.
இது சம்பந்தமாகவே அ b மித்திரம்கூட 'கணையாழி இதழில் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். ‘என்ன காரணமோ தெரியவில்லை. மல்லிகை இதழ்களில் சோவியத் கட்டுரைகள் அதிகம் இடம் பெற்று வருகின்றன’ என்று சாரப்பட அக் கட்டுரைகளில் அவர் குறிப்பிட்டிருந்தார்
“அவனுக்கென்னப்பா; ரஷ்யாக் காரனுடைய காசிலை அவன் மல்லி கையை வெளியிடுகிறான்!”
வைத்து அடித்தனர் பலர்.
ரவர் ய சார்புக் கட்டுரைகள் மல்லிகையில் பெரிதும் இடம் பெற்று வந்துள்ளது உண்மைதான். ஊன்றி அவதானித்துப் பார்த்தால் அவை யொன்றுமே அரசியல் கட்டுரைகள் அல்ல. வெளி வந்த அனைத்து கட்டுரைகளும் விஞ்ஞான, தொழில்
என்ற அஸ்திரத்தை என் காதைக் குறி
நுட்ப, விமரிசன, இலக்கியக் கட்டுரை
களாகவே விளங்கின.
இதற்கு அடிப்படையான காரணம்
ஒன்றுண்டு. மல்லிகையின் ஆரம்ப
வருடங்களில் கவிதை, கதைகள் நம்மைத் தேடி வந்தனவே தவிர,
ஆமானதொரு கட்டுரை கூட வந்து
சேரவில்லை.
நான் தவியாய்த் தவித்துப் போனேன். நல்லதொரு கட்டுரைக்காக தபால் காரனைத் தினசரி எதிர்
- பார்த்திருந்தேன்.
சில வகைக் கட்டுரைகள் வந்து சேரும். அதில் நாம் எதிர்பார்த்த உட் சரக்கு இருக்கமாட்டாது.
சிறு சஞ்சிகைகளைத் தொடர்ந்து நடத்தி வருபவர்களுக்குத்தான் இந்த கஷ்ட நஷ்டம் விளங்கும். இது
பெரியதொரு இலக்கியச் சங்கடம்.
மாதங்கள் வெகு வேகமாக நம்மை முந்திக் கொண்டு உருண் டோடும். தரமான விஷயதானங்கள் வந்து சேரப் பஞ்சிப்பட்டு பின் நிற்கும்.
சென்னை தியாகராஜ நகரில்
சோவியத் கலாசார மையம் ஒன்று
அந்தக் காலத்தில் இயங்கி வந்தது. அந்த அமைப்பின் தலைவராக நமது சரஸ்வதி சஞ்சிகையின் ஆசிரியர் விஜயபாஸ்கரன் இயக்கி வந்தார். ரகுநாதன், தி.க.சிவசங்கரன் போன்ற இலக்கியத் தோழர்கள் அங்கு கடமை
 
 

புரிந்து வந்தனர்
அந்த நிறுவனத்திடமிருந்து வாரா
வாரம் ஏராளமான கட்டுரைகள் தபாலில் வந்து கொண்டேயிருக்கும்.
எனக்கோ கட்டுரைப் பஞ்சம். எனவே வந்து குவிந்துள்ளவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மல்லிகை யில் பிரசுரித்து வந்தேன்.
இது ஒரு காரணம், அந்த அவ தூறு வதந்திக்கு.
அடுத்ததாக கொம்பனித்தெரு விலுள்ள பீப்பிள் பப்ளிஸிங் ஹவுஸ் புத்தக நிறுவனத்தின் முழுப்பக்க விளம்பரத்தைத் தேடிப் போட்டேன். அந்த முழுப்பக்க விளம்பரத்திற்குக் கிடைத்த பணம் ரூபா இருநூறு. இந்தப் பணத்தைப் பெறுவதற்குக் கூட, கொழும்பிற்கு வந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் பிரயாணச் சிரமம் வேறு.
இந்த இரண்டு. நிலைபாடுகளாலும் நான் என்னையறியாமலே குற்றஞ் சாட்டப்பட்டேன்.
ஒரு தடவை மிக நெருங்கிய நண்பனொருவன் தெருவில் இந்தக் குற்றச் சாட்டுக்குச் சொல் வடிவம் கொடுத்து என்னைச் சீண்டினான்.
“சரியப்பா! இந்த குற்றச் சாட்டு உண்மையானால் இந்த என்பது ரூபாய் சைக்கிளில்தான் இந்த மத்தியான வெய்யிலில்
நான் அலைந்துதிரிய
வேணுமா? ஒரு ஸ்கூட்டராவது நான் வாங்கியிருக்கலாமல்லவா?’ என நானவனைத் திருப்பிக் கேட்டேன்.
இப்படிப் பல கோணங்களில் என்னுடைய அர்ப்பணிப்பு உழைப்புக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, கேலி பேசப்பட்டது. அவதூறு பொழியப் பட்டது.
நான் மிக நிதானமாக பொறுமை காத்தேன்.
இப் பொழுது யோசிக் கும் வேளைகளில் இந்தத் தாக்குதல்கள் எனக் குச் சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான வழி நடத்தல் ஆலோசனைகளோ என நினைத்துப் பார்க்கிறேன்.
பொது வாழ்க்கையில் ஈடுபடும் போது ஒருவனுக்குப் பல வழிகளிலும் இடையூறு வந்து சேரும். இத்தனை பரிகசிப்புகளையும் தாங்கி அவன் நிமிர்ந்து நிற்கக்கூடிய பரிசோதனை வடிவங்கள்தான் இவை என இப்போது நன்கு உணர்ந்து கொள்ளுகிறேன்.
என்னை இலக்கிய உலகிலும் சஞ்சிகை வட்டத்திலும் நின்று நிலைக்க வைக்க இந்த அவ தூறுகளும் தூஷணைகளும் பெரிதும் உதவி வந்துள்ளன என்பதை உணருகிறேன்.
ஆரம்பக் காலகட்டங்களில் இதைப் போன்ற சங்கடங்களெல்லாம்

Page 27
ஒரு சிறு சஞ்சிகையாளனுக்கு ஏற்படுவது இயல்பு இயற்கை.
இதைப் பார்த்து மனங் கலங்கி விடக்கூடாது. இந்த விமரிசனங்களை மனங் கொண்டு, இதன் சரி பிழைகளை உள் வாங்கி, சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது நம்மைப் போன்றவர்களின் தலையாய கடமை யாகும்.
இப்படியான சங்கடங்கள் ஆரம்ப கால கட்டங்களில் மனசுக் குக் கஷடங்களைத் தந்தாலும், காலப் போக்கில் அதில் நின்று நிமிர்ந்து தலை தூக்கும் பெருமிதம் இருக்கின்றதே, அது நினைக்க நினைக்க நெஞ்சை நிறைப்பதாக அமைந்து விடும்
இப் படியாக மல் லி கையின் ஓராண்டு முடிந்து பதிமூன்றாவது இதழ் சோவியத் புரட்சியின் 50வது ஆண்டு நிறைவு நினைவு இதழாக வெளி வந்தது.
மனிதனது விஞ்ஞான சாதனை யின் ஒரம்சமாகத் திகழ்ந்த நிலவில் தடம் பதித்த “ஸ்புட்நிக் காட்சியை அட்டைப்படமாக வெளியிட்டிருந்தேன்.
வழமையான வடிவத் தரில்
அல்லாமல் மல்லிகை ஆண்டு மலர்களின் சைஸில், பக்கங்கள்
அதிகரிப்புடன் மிகப் பொறுப்புணர்ச் சியுடன் அந்த நினைவு மலரை வெளிக் கொணர்ந்தேன்.
ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி!’ எனப் பொங்கும் நெஞ்சத்து மகிழ்ச்சியுடன் பாரதி பதினேழாம் ஆண்டு ரஷ்யப் புரட்சியை வாழ்த்தி வரவேற்றுப் பாடினானே அந்தப் புரட்சியின் ஐம்பதாவது ஆண்டைக் கொணர் டாடும் நமித் தமாக மல்லிகையின் இந்தச் சிறப்பு மலரை வெளியிட்டு வைத்தேன்.
அந்த மலர் பலராலும் வரவேற் கப்பட்டது. விதந்துரைக்கப்பட்டது.
இந்த மலர் வெளி வந்ததன் பின்னர், எனக்குப் பொருளாதாரச் சிக்கலொன்று ஏற்பட்டு விட்டது.
நாமகள் அச்சக அதிபர் நல்ல மனம் படைத்தவர் தான். என்னுடைய இலக்கிய ஆர்வத்தைத் தெளிவுறப் புரிந்து கொண்டவர் தான். இருந்தும் அவருக்குப் பணமுடை. நானவருக்கு மூவாயிரத் து ஐநீ நுாறு ரூபாயப் தரவேணி டியிருந்தது. அந் தத் தொகையை நேர் செய்துவிட்டுத் தொடர்ந்து சஞ்சிகையை அச்சடித்துக் கொள்ளும்படி அவர் ஒரு கட்டத்தில் கறாராகச் சொல்லிவிட்டார்.
சஞ்சிகை நடத்தும் நம்மைப் போன் றவர்களுக்கு இயல் பான சங்கடமொன்று இன்றுவரை உள்ளது. தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். சூழ்நிலைக்குட்பட்டு நிற்க வேண்டியேற்பட்டால் வீழ்ந்து போய் விடுவோம். இடையே நின்றுவிடுவது வீழ்ந்து விடுவதற்குச் சமம்.
 
 

அதாவது சக் கரம் சுழன்று கொணி டேயிருக்க வேணி டும் . அப்பொழுதுான் இயங்க முடியும். சஞ்சிகைகயின் விற்பனவுப் பணம், விளம்பரக் காசு, சந்தாப் பணம் போன்ற ஆதார பின் பலம் அனைத்துமே தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருந் தால்தான் நம்மை வந்தடையும்.
இல்லையென்றால் இல்லைத்தான்.
உண்மையில் நான் வெருண்டு போய்விட்டேன். - ,
அச்சகக் கடன் பணத்தை விட, நான்கு மடங்கு பணம் எனக்கு வெளியே முடக்கப்பட்டு போயிருந்தது. முடக்கப்பட்டுப் போயுள்ள அந்தப்பணம் திரும்ப என் கைக்கு வரவேண்டுமாக இருந்தால், மல்லிகை தொடர்ந்து வெளிவந்தேயாக வேண்டும். அது தொடர்வதற்கு அச் சக உரிமை யாளரின் அனுசரணையான பங்களிப்பு அத்தியாவசியம் தேவைப் படும் ஒன்றாகும்.
அனேகமாகச் சிற்றிலக் கிய ஏடுகளுக்கு ஏற்படும் சடுதி நெருக்கடி இதுவாகத்தான் இன்றுவரை இருந்து வந்துள்ளது.
இந்தத் திடீர் நெருக்கடி என்னைப் புதிதாகச் செயல்படத் தூண்டியது.
ஓராண்டுக் காலத்திற்கும் மேலாக
சிந்திக்க வைத்தது.
அத் தனை துTரம் உழைத்தும் மல்லிகைக்கென மிஞ்சியதோ ஒரு. சில இதழ்களின் விற்பனையாகாத பிரதிகள் மட்டும்தான்.
எனவே தற்காலிகமாக மல்லிகை
வெளியிடுவதை நிறுத்திக் கொண்டேன்.
“பாத்தீங்களா? இவ்வளவுதான் அவருடைய வாய்ச் சவடால்தனம்! எமக்கு எப்போவோ தெரியும். இவரால்
தொடர்ந்து நடத்த முடியாதெண்டு
எனக்கு எப்போவோ நல்லாத் தெரியும்!” இப்படி சாக்குருவி தத்துவார்த்தம் பேசிப் பலர் தமக்குத் தாமே சபாஷ் போட்டுக் குதுTகலித்துக் கொண் LIT faisei.
இந்த இடைக்கால நெருக்கடியில் நான் தளர்ந்து போய் விடவில்லை.
நம்பிக்கையையும் இழக்கவில்லை.
ஒரு நாள் காலை என்னைச் சந்திக்க ரசிகமணி கனக செந்திநாதன் வந்திருந்தார். “அட சொக்கா! எடுத்த காரியத்தை அந்தரத்தில் மாத்திரம் நீ விட்டு விடக் கூடாது. சொந்தப் பணமும் உன்னிடத்திலே இல்லை. இனித் தொடர்ந்து அச்சுக் கூடங்களை நம்பியும் பிரயோசனம் இல்லை. வேற வழிகள் பற்றித்தான் இனிமேல் யோசிக்க வேண்டும். நம்ம அலுமீனியக் கம்பெனி திருநாவுக்கரசுவை ஒரு தடவை கொழும்பிலை போய்ப் பார். அந்த ஆள் நீதி நேர்மையான மனுசன். இலக்கிய ஆர்வமும் உள்ளவர். நீ
கேட்டால் கட்டாயம் உதவி செய்யக்

Page 28
கூடியவர். ஒரு க் கா அவரைக் கொழும்பிலை வைச்சுப் பார்!’ என ஆலோசனை சொன்னார்.
அப்பொழுது திருநாவுக் கரசு அவர்கள் வட்டுக் கோட்டைப் பாராளுமன்றப் பிரதிநிதியாகக் கூட இல்லை. தமிழ்க் காங்கிரஸ் தலை வர்களில் ஒருவர். திரு.ஜீ.ஜீ.பொன் னம் பலத்தின் நம்பிக்கைக்குரிய முக்கியமானவர். அவரைப் பற்றிச் சொல்லி அவரது கொழும்பு முகவரியும் எனக்குத் தந்துதவினார், ரசிகமணி அவர்கள்.
இன்றுவரை நான் ரசிகமணியிடம் நன்றி பாராட்டுவதற்குக் காரணமே
இந்தப் பெருந்தன்மையான நடத்தை ஒன்றுக்காகத்தான். இதற்கு எப்படிப் பட்ட பரந்த நெஞ்சு வேண்டும்!
நான் அன்றே கொழும் பில் பாங்ஷால் வீதியில் அமைந்துள்ள அவரது அலுமீனியக் கம்பெனியின் முகவரிக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். அதில் என்னுடைய இலக்கிய ஆர்வ்த்தையும் தொடர்ந்து ஓடிவந்ததால் ஏற்பட்ட கவர் ட நஷ்டங்களையும் விவரித்து எழுதிய துடன் எண் ணுடைய அரசியல் போக் கைப் பற்றியும் ஒளிவு மறைவில்லாமல் குறிப்பிட்டிருந்தேன்.
(மீண்டும் சந்திக்கிறேன்)
அன்றைய நாளில் யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர்களை ஒருங்கு
திரட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர் டாக்டர் ஏ.எஸ்.மகாலிங்கம் அவர்கள்.
தேவாம்பிகை y அவர்களுக்கும் சமீபத்தில் தெஹிவளை பூரீ விஷ்ணு முர்த்தி
மகாலிங்கம் தம்பதியினரின் முத்த மகன் அரவிந்தன அவர்களுக்கும் திரு.திருமதி தணிகாசலம் அவர்களின் புதல்வி
கோயிலில் இனிதே திருமணம் நடந்தேறியது. மணமக்கள் இனிதே நீடுழி வாழ்கவென மல்லிகை
வாழ்த்து
கின்றது.
- ஆசிரியர்
۔ محخ*T
 
 

கவிஞர் நீலாவணனுக்கு
ஒரு நினைவுச் சிறப்பிதழ்
ச.முருகானநதன
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த வெளியீடான ஒலை 2வது இதழ் நீலாவணனி நினைவுச் சிறப் பிதழாக வெளிவந்துள்ளது. கிழக்கிலங்கை தந்த அற்புதமான படைப்பாளியான நீலாவணனின் உருவப்படத்தை அட்டையில் தாங்கி வந்துள்ள இவ்விதழில் நீலாவணன் பற்றிய குறிப்புகள், நவீனன், பாண்டியூரான், ஜிவா ஜீவரத்தினம், மு.சடாட்சரன், ! மணிவாசகன், மருதூர்க்கனி முதலானோரால் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் கவிஞரின் சில படைப்புகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இவ்விதழ் மூலம் கவிஞர் நீலாவணனைப் பற்றி இன்றைய தலைமுறையினர் ஒரளவு அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இவ்விதழ் மல்லிகையில் மருதூர்க்கனி, கவிஞர் நீலாவணனைப்பற்றி எழுதிய கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மல்லிகை, எழுத்தாளர்கைைள , அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே அட்டைப்படமாக வெளியிட்டு, அவர்கள் பற்றி அறிமுகக் கட்டுரையும் வரைந்து வருவது அனைவரும் அறிந்ததே. மே 1970 மல்லிகை இதழில் கவிஞர் நீலாவணனின் உருவப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு இவரைப் பற்றிய குறிப்புகளை சி.பி.சத்தியநாதன் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 29
இதழில் கவிஞர் நீலாவணனின் உருவப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு இவரைப் பற்றிய குறிப்புகளை சி.பி.சத்தியநாதன் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1960களில் ஈழத்து இலக்கிய முகாமில் முற்போக்கு என்றும் , பிற்போக்கு என்றும் சொற்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தனது இலக்கியக் கொள்கை நற்போக்கு என்று நாடிய அணிசேராத் தனித் துவக் கவிஞனான நீலா வணனின் கவித்திறனை உணர்ந்த முற்போக்கு இலக்கிய சஞ்சிகையான மல்லிகை இவரைக் கெளரவித்தமை ஜீவாவின் இலக்கிய நேர்மையையும் வெளிக் காட்டுகிறது.
கவிஞர் நீலாவணன் 31-6-1931ல் கிழக்கிலங்கையிலுள்ள பெரிய நீலாவணையில் பிறந்தார். இவரது இயற் பெயர் சினி னத் துரை. பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் ஆரம்ப காலத்தில் பல பெயர்களில் பல துறைகளில் எழுதினார். தனது பதினேழாவது வயதFல சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்த இவரது முதற் படைப்பு 'பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் வெளிவந்தது. நீலாவணன், நீலா சின்னத்துரை, மானாபருணன், இராமபாணம், எழில் காந்தன், சின்னாண் கவிராயர், எறிகுண்டு கவிராயர், கொழுவு துறட்டி, அம்மாக்கி ஆறுமுகம்,
-
வேதாந்தன், சங்கு சக்கரன் என பலப் புனைப் பெயர்களில் கவிதை, சிறுகதை, உருவகக்கதை, கட்டுரை, காவியம் , கவிதா நாடகம் ,
விருத்தாந்த சித் திரம் ஆகிய
வடிவங் களில் ஆக்கங்களைப் படைத்தார். எனினும், கவிதைத் துறையே அவரைப் புகழ் பூக்க வைத்தது என்பதாலும், கவிஞர் பிறந்த ஊர் மீது கொணி ட பற்றுதலினாலும் நீலாவணன் என்ற கவிஞராகவே இலக்கிய உலகில் இடம் பிடித்தார்.
லேகமும் தீவிரமும், முனி கோபமும் இவரது இயல்பான குணங்கள். எனினும் மனித நேயப் பண்புகளும், நகைச்சுவை உணர்வும் நீலாவணனிடம் நிறைந்திருந்தன. இதனால் சாதாரண மக்களின் வாழ்வு இவர் கவிப் பொருளானது.
நீலாவணனின் கவிதைகள் ஒசை நயம் சிந்தும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இன்பம் தரும் லயமும் தா ளமும் அமைநி த சநீ தக கவிதைகளை அவர் ஆக்கினார். மட்டக்களப்பிலே வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தனி கவிதைகளில் கையாண்டுமுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வு (up 60 s), பழக கவழக்கங்கள் , சடங்குகளை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொணர் டளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் பதிவு செய்து
 
 

கொள்ளவில்லை. கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலை ஆராய முற்படும் எவருக்கும் இவரது கவிதைகள் நிறையத் தகவல்கள் வழங்கக் கூடியவை.
நீலாவணனினி F DE 6) படைப்பாளிகளில் எஸ்.பொ.இளம் பிறை, நு.மான், இலங்கையர்கோன், வ.அ.இராசரத்தினம், கனக செந்தி நாதன், மகாகவி முதலானோரைக் குறிப்பிடலாம். வடக்கிலே மகாகவி போல் கிழக்கிலிருந்து நீலாவணன் அற்புதக் கவிஞராக இனங் காணப் பட்டார். பாரதிக்குப் பிந்திய தமிழக் கவிதைகளை ஆராயும் எவரும் நீலாவணனை குறிப்பிட்டேயாக வேண்டும்.
நீலாவணன் 1975 ல் தனது நாறி பத் திநா லாவது வயதல அமரத்துவமடைந்தார். எனினும் நூற் றுக்கணக்கான அவரது கவிதைகள் சாகாவரம் பெற்றுள்ளன. நீலாவணன் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர் (p. 60) Dust 35 வெளிப் படுத்தப் படவில்லை என்ற விடயம் மிகவும் விசனிக்கத்தக்கது. ஒரு காலத்தில், பல்கலைக் கழகப் பின்புலத்தில் LLLub 6660 அங்குசத்தை வைத்துக் கொண்டு ஈழத்து இலக்கிய உலகின் விமர்சனத் துறையை ஆக்கிரமித்துக் கொணி ட பேராசிரியர்களும் , அவர்களது மாணவ சகாக்களும் தாங்கள் வரித்துக் கொண்ட கலை, இலக்கிய, அரசியல் கோட்பாட்டு
துள்ளது.
முகாம்களுக்குள் முடங்காதவர்களை ஈழத்து இலக் கரிய உலகில இருட்டடிப்புச் செய்தார்கள் என்ற பலமான குற்றச் சாட் டை எதிர் கொள்கிறார்கள். இன்று நிலமையில் படிப்படியான மாற்றங்கள் தரிசன மாகின்றன.
நீலாவணனின் ' மழைக் கை’ கவிதை நாடகம் 1963ல் முதல் முறையாக மேடையேற்றப்பட்டது. பின்னர் 1964ல் வீரகேசரியிலும் எழுத்துருவில் வந்தது. இவரது பலகளிப்புடன் வெளியான ’பாடும் மீன் சிற்றிலக்கிய ஏடு இரண்டு
இதழ் களுடன் பொருளாதார ச்
சிக் கலில் அமிழ் நீதது. கிழக் கிலங்கையிலிருந்து அதிக இதழகள் வெளிய்ான (14) தாரகை என்ற கண மகேஸ் வர னை ஆசிரியராகக் கொணி ட சிற்றிலக் கிய ஏடு, நீலாவணனின் பணியைச் சரியாக எடை போட்டதுடன், இன்று விருட்ச மாகிவிட்ட போதிலும் நீலாவணனை நினைவு கூர்ந்துள்ளது சிறப்பம்
GFLDT (G5 Lò.
1976ல் நீலாவணனின் மரணத் தின் பின்னரே அவரது முதலாவது கவிதை நூல் வழி வெளியாகி சாகித்திய மண்டலப் பரிசிலையும் வென்றது. 1982ல் வேளாணிமை காவியம் நூலுருவில் வந்தது. 2001ம் ஆண்டில் நீலாவணனின் ஒத்திகை கவிதைத் தொகுப்பு வெளி வந்

Page 30
நீலாவணன் பற்றி தற்போது ஆய்வு நூல் களாக வெளிவந்துள்ளன. அந்த வகையில் 'கால ஓட்டத்திநூடே ஒரு கவிஞன்நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும் என்னும் நூலை கலாநிதி சி.மெளனகுரு வெளியிட்டுள்ளார். 'நீலாவணன்-எஸ்.பொ.நினைவுகள் என்ற நூல் அடுத்து.
மருதுார்க்கணி நீலாவணனின்
படைப்புகளைப் பற்றி குறிப்பிடுவதை
நோக்குவோம்.
நீலாவணன் தமிழில் எழுதிய தாலோ, அல்லது கிழக்கிலங் கை யரில் பிறந்து வாழ் நீ து
எழுதியதாலோ அவர் நின்று வாழப்
போவதில்லை. நீலாவணன் ஒரு கவிஞன். சமுதாயத்தில் நிலவிய கொடுமைகளுக்கு எதிராக , கஷடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் விமோசனத் திற்காக க் குரல கொடுத்தவன். உயர்ந்த மனிதா பிமானி. அதனால் தான் நீலாவணன் வாழப் போகிறான்.
உடணி மைதானி மக் களை நேசிக்கும் ஆக்கங்களைத் தராத
படைப்பாளிகள் நிலைத்து நிற்க
மாட்டார்கள். மக்கள் விடிவுக்காக, சுபிட்சத்திற்காக எழுதிய படைப்பு களே சாகாவரம் பெற்றவை.
நீலாவணனின் கவிதைகள் நிலைத்து நிற்கக் கூடியவை. அவை
நூல்கள்
/柔イ
காலத்தின் போக்கோடு சமுதாய நோக்கில் விமர்சிக்கப்பட வேண்டும். ஈழத்துக்கவிதையை வளப்படுத்திய
கவிஞர் வரிசையில் நிச்சயமாகவே
நீலாவணனுக்கு ஒரு இடம் உண்டு.
நீலாவணனின் கவிதா சாமர்த் தியத் தை தமிழ் என றும் , மட்டக்களப்பு - கிழக்கு என்றும்
குறுகிய வட்டத்திற்குள் நோக்குகின்ற மனப்பான்மை களைந்தெறியப்பட்டு, ‘ஓர் ஆற்றல் மிக்க கவிஞன் என்ற நோக்கில் ஆராயப்பட வேண்டும்.
நீலாவணன் பற்றி சரியான ஆராய்வுக்கு வழி வகுக்க ஏதுவாக எஞ்சியுள்ள அவரது கவிதைகளும் நூலுருப் பெற வேண்டும். இதுவே அதற்கு ஏதுவான காலமாகும்.
(கம்பிக் கூண்டுக்குள்
ஆண்டவன் சொரூபம் வெளியே - உணர்டியற்பெட்டி
*ンク /キ A M
 
 

காரை செ. சுந்தரம்பிள்ளை.
ஒடும் பஸ்ஸில் பாடும் யாசகன் ஓங்கிய குரலில் ஏங்கிய வண்ணம் றபாணிசை முழங்க இனிய பாடல்
நாட்டில் சமாதானம் நமக்கு வேண்டும். வீட்டில் சகோதரர் சண்டையிடுவது போல. நாட்டில் நாங்களும் கலவரம் புரிந்தோம். கணிரெனும் குரலில் அவனது இனிய கருத்துக்கள்
யாவரும் மகிழ்ந்தனர் சில்லறை ஒரு சில சேரத் தொடங்கின கொள்ளுப்பிட்டியில் குதித்தவன் ஏறினான் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை தெகிவளை, கல்கிசை
அதுவரை பாடலின் சுருதி மாறவேயில்லை இரத்மலானையை பஸ்சும் தாண்ட குரலில் கடுமை, கருத்தில் மாற்றம் ஆரியர் நாங்கள் அடிமையாவதா? கூரிய வார்த்தைகள் கொப்பளிக்கின்றன
அருகில் இருந்தவர் அமைதியாய்ச் சொன்னார் வருங்கால அரசியல்வாதி ஒருவன் வளரத் தொடங்கிறான் நாளை எம்மை ஆளப்போறவன் இவனாய் இருக்கலாம்!

Page 31
கல்வயல் வே.குமாரசாமி
போர் விழுங்கிக் கக்கிய
பூமியைப் போர்த்து
தம் வேர்விட்டு நின்ற பற்றை r). வேலி எல்லை ஏதும் அற்று
தலை இழந்த தென்னை பனை என்னை வரவேற்கும். நிலை இழந்து ஆடாமல் நிற்கும் இதயம் படபடக்கும்
பூழைவடி கணிணோடு தேவாங்கு வேலிகளில் ஆளை அடையாளம் காட்டிவிட ஒலமிடும் ஆள்காட்டி வானில் பறந்து குரல் கொடுக்கும் தாய் பிரித்த குஞ்சுகளாய் வந்த குடிமக்கள் கூடு விட்டு ஓடச் சிதைந்த சிறு கூடாய் மாடிமனை, மணர்குடிசை யாவும் சமமாகி மேடுகளாய்
குட்டை நாய்க் கூட்டம் பின் தொடர துப்பாக்கிக் கட்டை சுமந்த கட்டை கணிணோட்டம் ஆங்காங்கே பாலைப் பிராந்தாக பாசியைப் போல் புல் அடர்ந்து
 
 

மூடிப் படர்ந்து . . . . மிதி வெடிக்குக் காப்புப் படிக்கும் பயன் சொல்ல நன்கு இதமான ஆளின்றி
தெருவில் நசிந்து போய்
பற்றை அலம்பலிலே கொவ்வைக் கொடி படரச்
அணிடங்காகங்கள் இங்கு ஆர் வீட்டில் கொண்டாட்டம் சோறுணர்ட வட்டில்
சேறுணர்டு காய்ந்து செடிக்கடியில்.
சற்றும் பொறாத கொடி நெருஞ்சி முள்பரப்பி மஞ்சள்ப் பூச்சூடி மயக்கி, மிதிச்சவரைக் கொஞ்சம் உசுப்பிவிடக் கணர்கள் மணிதிரட்டும்
பெற்றதாய் தோளில், மடியில் (-)
பெரும் பொழுதை முற்றத்து மணணில் தவழ்ந்து. விளையாடிக் கற்றதும் கற்பிக்கப்பட்டதுமான புதுக்கதிர்கள் ஆறி அடங்கி அலுப்போ அச்சாம்பலுக்குள் நீறாய்க் கிடந்த நெருப்புப் பொறி ஒன்று உள்ளங்கால் பட்டு உச்சிவரை பிளந்து
அதை அடுத்துக் கொண்டு வந்தார் கூச்சல் குழறல்
() பாறி அடிசரியப் பார்வை நிலைகுத்தி
அணிடம் சிதற எழும் "ஐயோ
V
r
வீடடடைய வந்தவனின்
(-) கால் உடைந்து போயிற்று
மூடிக்கிடந்த மிதிவெடி மேல் மிதித்து
O ... עד
C) சிதைந்து கரையாத எச்ச எலும்புகள்
புதைந்தோ எரிந்தோ போகாததனால் கதைக்க முனையும் மவுனமாய்
முசுமுசுக்கை வீடிடிந்த முற்றத்துக் கற்குவியல்

Page 32
மூடிச் செழித்துப் பழுத்த பழம் பொறுக்க சிவந்த விழிக் குயில்கள் ')
கூடி இருக்கின்ற "தாட்டாண்’ குரங்குகள் நைக் காட்டிப் பல்லிளிக்க ஓடி ஒரு கல்லெடுத்து வீச வெடிச்சத்தம் தூசு கிளம்ப மணர், கல் அள்ளி மேல் வீசும் நேசித்த மணிணே நம்
கணிகளிலே மணியோடும் பாசங்கள் கால் இழந்து பச்சை இரத்தம் பாய்ச்சி பலிப்பீட முன் ஆடாய் நின்று பதறுகிறார்
வேலி, மதில். கதியால் வேம்பு, பனி என்றெல்லாம் காலை தொடங்கி கலகம் அயலோடு ”Oi ஓயாமல் வாழ்ந்த நாம் ஊமைகளாய் செய்வதறியாச் சின்னஞ்சிறு சிறுவர்போல் எய்தவர்கள் யாரோ!
இறந்தவர்கள் யாரோ?
செய்தவர்கள் யாரோ? வேலிக்கு வேலி நிறம் மாறிப் பச்சோந்தி கால் இடுக்குள் ஒடிக் களேபரத்தை உணர்டாக்கக் கறையாண் குவியலிலே ஓணான் தலையாட்டி நிறைய வயிறு. முயலொன்று வெடிகேட்டுத் தட்டழிந்து ஒடும் தலைதெறிக்க இடிபாட்டுக்குள் ஒர் புடையணி சீறிப் புரள்கிறது!
 

ിഗ്'്' ഇതു9
* அமெரிக்கா ஈராக்கில் செய்யும் யுத்த அட்டுழியங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அளவெட்டி ச.சந்திரதாஸ்

Page 33
இன்று ஈராக் நாளை இலங்கை யாகக் கூட இருக்கலாம்!
2 தமிழ் ச்
சினிமாவின் எதிர்
காலம் எப்படியாக இருக்கும்?
மருதானை
ப.தவராஜா
2 அரசியல் உலகில் இத்தனை ஏற்ற இறக்கங்கள் தென்படுகின்ற னவே, இவைகள் சுமுகமாகத் திரு வது எப்போது?
முல்லைத்தீவு எம்.சரவணன்
சி உண்மையைச் சொல்லுங்கள் கம் பண் கழகத்திற்கும் உங்க ளுக்கும் என்ன உறவு?
கண்டி க.ஞானதேசிகன்
 
 
 
 
 
 
 

எனக் கருதக் ந்தம், எஸ்.இராம
கள், இ
எனவே, எனது வழிமுறைகளைத்தான் வருகிறேன்.
சி முறி போக கு எழுத தாளர் சங்கம் இன்று செயலிழந்து போய் விட்டதா?
வெள்ளவத்தை எம்.ராஜநாயகம்
G3LD60'LÜ சகலரும்
பங்கு வகிக்கும் சிலர்
சேர்நது
உணவு
உண்ணும் வேளைகளில் அந்த விருந்தோம்பலைப் புறக்கணித்துத் தனித து ஒதுக் கதி தமது தனித்துவத்தை நிலை நிறுத்த முனைகின் றனரே, இது பற்றி உங்கள் கருத்தென்ன?
எம்.மோகனதாஸ்
இபி சமீபத் தல நல ல படம் ஏதாவது பார்த்தீர்களா?
யாழ்ப்பாணம் க.வயிரவன்.

Page 34
இ மல்லிகைப் பந்தல் புதிய வெளியீடுகள் அடிக்கடி வெளி யிடுவதாகச் செய்திகள் அடிபடு கின்றன. நான் மல்லிகையின் அபி இனி புலம் பெயர்ந்து வெளிநாடு மானி. ஓரளவு பொருளாதார
சென்ற இலக்கிய ஆர்வமுள்ளவர் வசதி வாய்க்கப் பெற்றவன். கணி களுடன தொடர்ந்து தொடர் SFD66 புத்தகங்களை உங்களிட போதும் உண்டா? மிருந்து பெற்றுக் கொள்ள விரும்
புகிறேன் . நானென்ன செயப்ய வவுனியா ச.சக்திவேல் வேண்டும்?
திருகோணமலை. எஸ்.தருமசீலன்
آف#في النوQg
sibi
\ தயவுசெய்த
x மல்லிகையுடன் f
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A இலக்கத்திலுள்ள U. K. பிரின்டர்ஸில் ஆக்சிட்டு வெளியிடப் பெற்றது.
 
 
 
 
 
 
 
 

**ழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாட நூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.
空

Page 35
Export Von la Sri Lanka
3o, Sca
Colo
Te:
 

April 2003
மல்லிகைக்கு
6 TLD வாழ்த்துக்கள்
ers of ditional in Foods
AVeMMc, alboy — ტჯ.
57377