கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.06

Page 1

— ရှား% -20/

Page 2
(94.1)-3315
otra ail. com
CROPS.
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகணர்டு துள்ளுவர்
38-வது ஆண்டு
Fai 2008
29O
Mallikai' Progressive '.
Monthly Magazine
படைப்பாளிகளினர் ய ஆக்காப்களை மல்லிகை
எதிர்பார்க்கினிறது.
201-1/1, Sri Kathirasan Stragt,
ColoIInbo - 13. Tel: 32O721
E-mail: panthalastnet.lk
ஜூர் = 27 எனக்கு வயது - 7
1987ல் தொடங்கியது எனது மணி விழாக்காலம். யாழ்ப்பாணம், மாஸ்கோ என எனது மணிவிழாப் பாராட்டுவிழாக் கள் அன்று அரங்கேறி முடிந்தன. இந்தப் பாராட்டு விழாக்களில் என் மீது பொழியப் பட்ட மந்திர வாழ்த்து ஆசீர்வாதங்கள் தான் இன்று வரைக்கும் என்னை ஆரோக் கியமாகவும் திடகாத்திரமாகவும் வைத் திருக்க உதவிவருகின்றன என உண்மை யாகவே நம்பி வருகின்றேன்.
இதய பூர்வமான வாழ்த்துக்கள் என்றுமே வீண்போவதில்லை!
எனது அர்ப்பண உழைப்பிற்கு g)60)6).4 35/T 6\OLD f T6\OLDIT{{5|} | 13F60)6 TT u UT85Ld பயன்பட்டு வருவதை இன்று தெளிவாக உணருகின்றேன்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டு உழைப்பவர்கள் மீது பல குற்றச் சாட்டுகள் சுமத் தப்படலாம். இது இயல்பானதே. இதைச் சரிவர உணர்ந்து கொண்டவன் நான் . எனவே எந்த விதமான தழம்பலும் இல்லாமல் வெகு நிதானமாக இயங்கி வருகின்றேன்.
அன்றைய தினத்தை ஞாபகம் வைத் திருங்கள். எங்கிருந்தாலும் உங்களது மந்திர வாழ்த்துக்களை என்மீது தூவுங்கள்.
- டொமினிக் ஜீவா

Page 3
4-6 O652
 
 

பொதுக் கோரிக்கைகளுக்காக 7. ஒன்று படுவதே இன்றைய காலகட்டம்!
கடந்த காலங்களில் எழுத்தாளனாகக் கருதப்பட்டவர்கள், ஏதோ ஒரு சிற்றேட்டிலோ அல்லது தினசரிகளின் வார இதழ்களிலோ தமது படைப்பு களில் இரண்டொன்றை வெளியிடச் செய்து விட்டால் அந்தப் படைப்பாளி ஓர் எழுத்தாளனாக வலம்வர அனுமதி பெற்றுக் கொண்டவன் ஆவான்.
நிலைமை இன்று அப்படியல்ல. சூழ்நிலையும் அந்தக் காலத்தைப் போன்னறதல்ல, இன்று.
குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை அவன் எழுதி, வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி நூல் வெளியிட்டவர்களைத்தான் இன்றைய உலகம் எழுத்தாளர்களாக அங்கீகாரம் கொடுத்து வரவேற்று வருகின்றது.
தனது படைப்பொன்றை நூலுருவில் வெளிக்கொணர்வதற்கு எழுத்தாளன் படும் பாரிய சிரமத்தைப் பற்றிப் பலர் முழுமையாகவே அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.
இப்படிப் பல விதமான இடர்களுக்கு மத்தியிலும் தனது நூலொன்றை வெளிக் கொணர்ந்ததன் பின்னர், அந்தப் படைப்பைச் சந்தைப் படுத்துவதற்கு
அவற்றை முற்று முழுதாக விற்றுத் தீர்ப்பதற்கு - அவன் எதிர் நோக்கும் சிரமங்களின் நோக்காடு பற்றி அவனைத் தவிர வேறு யாருமே அறிந்து கொள்வதில்லை. அதுபற்றி யாருமே அக்கறைப்படுவதாகவும் தெரியவில்லை.
படைப்பாளிகளுக்குள் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். தத்துவார்த்த முரண்பாடுகள் இருக்கலாம். இலக்கிய நோக்குப் போக்குப் பற்றிய பார்வை வித்தியாசங்கள் இருக்கலாம். அதே சமயம் தமது படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு இவர்கள் அனைவரும் ஒரே சிரமத்தைத்தானே இதுவரை பட்டு வருகின்றனர்.
தமது படைப்புகளைச் சந்தைப்படுத்த முனைவதற்காகவாவது குறைந்த பட்ச அடிப்படையில் இவர்கள் ஒன்று சேர்ந்து மகாநாடு கூட்டி கோரிக்கை வைப்பதே இன்றைய காலகட்ட அவசர அவசியத் தேவையாகும்.
- ஆசிரியர்

Page 4
இலக்கிய உலகமறிந்த கவிஞன் சு.முரளிதரன்
சாரல்நாடனர்
இன்று கிழக்குப் பல்கலைக்கழக மொழிகள் துறைத் தலைவராக விளங்கும் கலாநிதி. செ.யோகராசா 1977ல் நுவரெலியா மாவட்ட ஹோல் புரூக் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் எட்டாம் வகுப்பில் தமிழார்வமும் படைப்புச் சிந்தனையும் கொண்ட மாணாக்கனாக சு.முரளிதரனை இனங் கண்டார். அவரிடமிருந்து மல்லிகை இதழ்களும், வானம்பாடி இதழ்களும், இலக்கிய நூல்களும் வணிகைதுறை வாரிசாக செல்ல வேண்டிய முரளிதரனை மீட்டெடுத்தது. யோகராசாவின் வழிப்படுத்தல் அவனை புடம் போடுகின்றது. 'இளந்தளிர் எனும் கையெழுத்துப் பத்திரிகையுடன் தொடங்கிய முயற்சி வியர்வை எனும் கவிதைப் படைப்பை 1979ம் ஆண்டு மல்லிகையில் வெளிவரச் செய்கிறது. இன்று அர்ப்பணிப்பும் சமூக பொறுப்பும் கொண்ட இலக்கியவாதியாகவும், கல்வியாளனாகவும் மலையகத்தில் உயர்ந்து நிற்கிறார் சு.முரளிதரன் என்ற கவிஞன்.
கண்டி சில்வஸ்டர் கல்லூரியில் ஏற்றுக்கொண்ட ஆசிரியத் தொழிலில் 1981-83 காலப்பகுதியில் மாணாக்கனாக அறிமுகமான இனி னொருவர் சக விளங்கிய பொழுது திராவிட ஆசிரியரான அகளங்கன். அவருடன் இயக்கத்தில் பூத்த க.ப.சிவம், இலக்கிய இணைந்து ‘சமவெளி மலைகள் நண்பர் அந்தனி ஜீவா ஆகியோருடன் அறுவடையானது. ஏற்பட்ட அறிமுகத்தால், மலையக கலை இலக்கியப் பேரவையின் தீவிர : p உறுப்பினராகச் செயற்பட்டார். உயிரியல் துறை மாணாக்கனான
உயர்தரப் பரீட்சை முடிந்த கையோடு இருந்த காலத்தே, மலையகத்தில் முதல் புதுக் கவிதைத் தொகுதி என
பேராதனை பல்கலைக்கழகத்தில்
 

கருத்தில் கொள்ள வைக் கும் அவருடைய தியாக யந்திரங்கள் மலையகக் கலை இலக் கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதே விழாவில்தான் என்னுடைய சி.வி. சில சிந்தனைகள்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலையக வெளியீட்டகம் என்ற அமைப்பின் மூலம் இந்நூல்களை நாங்கள் அச்சில் கொணர்ந்தோம்.
முரளிதரனின் கவிதை நூலில் காணப்பட்ட கருத்துப் புதுமைகள் அவரை முக்கிய கவிஞனாக இனம் காட்டியது. விஞ்ஞானத் துறை மாணாக்கனாக இருந்தாலும், கலவரங் காரணமாக முடங்கிக் கிடந்த பேராதனை தமிழ்ச்சங்கத்தை மீண்டும் செயற்படுத்த வைத்த குழுவில் சேர்ந்து இயங்கினார். அவரின் தழிழ் வெளிப்பாடுகள் பேராசிரியர் தில் லை நாதனி , பேராசிரியர் அருணாசலம், கலாநிதி துரை மனோகரன், பேராசிரியர் சிவராஜா போனி றோரினர் அரவணைப்பை பெற்றுத் தந்தன.
இந்தக் காலத்தில் அவரின் 'மானுடம் வென்றதம்மா’ என்ற நாடகப் பிரதிக்கு அமைச்சு மட்டத்தில் நடந்த போட்டியில் முதற் பரிசு கிடைத்தது. அதுவே பின்னர் வெள்ளிநிலா கலாலயத்தினால் ‘ஒன்று எங்கள் ஜாதியே' என்ற பேரில் பலமுறை மேடையேற்றப் பட்ட வெற்றி
நுாலுடன் அவர்
பல லைக் கழக
நாடகமாகும். இதே காலப்பகுதியில் அவரினி கூடைக் குள் தேசம் இலங்கையின் ஹைக்கூ கவிதைத் தொகுதியும் வெளிவந்தது. அந்த தமிழகத்திலும் அறிமுகமானார். தமிழகத் துப் பல்கலைக்கழகங்களில் ஹைக்கூ குறித்து ஆய்வு செய்வோரெல்லாம்
அவர் கவிதைகளை எடுத்துக் காட்டுவதல் நாம் பெருமை S960puu6Os TLD.
பல்கலைக் கல்வியை முடித்த பின்னர் சிறிது காலம் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது ஹட்டனில் இயங்கிய மானுடம் கலை இலக்கிய வட்டம், நந்தலாலா இலக்கிய வட்டம் ஆகிவற்றுடன் இணைந்து இலக்கிய விமர்சனத்துறையில் கவனம் செலுத்து பவரானார். அதன்பின் பேராதனை பல் கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் விலங்கியல் துறையில் உதவி விரிவுரையாளராக பணியாற்றச் சென்ற வேளையில் மீண்டும் குன்றின் குரல், கொழுந்து, மலையக்கலை இலக்கியப் பேரவை என்பனவற்றுடன் இணைந்து செயற்படலானார்.
1991 ம் ஆண்டு சிறி பாதக் கல்வியியல் கல்லூரி மலையகத்தில் இயங்கத் தொடங்கிய வேளையில், உதவி விரிவுரையாளராக இணைந்து கொண்டார். அப்போது சிறிபாத கல்வியியல் கல்லூரியில் பீடாதிபதியாக விளங்கிய கலாநிதி செல்வி.சிரோன்

Page 5
மணி ராஜரட்ணத்தின் அன்புக்கு பாத்தி ரமாகி, அவரோடு இணைந்து சிறீபாத காலசாலையை சிங்கள ஆதிக்கம் கபளிகாரம் செய்வதினின்று மீட்டெடுப் பதில் முன்னின்று உழைத்து, தோட்டத் தொழிலாளர் சந்ததியினருக்கே என உறுதி செய்யும் சூழ்நிலை உருவாவதற்கு காரணமானார். இடைக்காலத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீட் சையில் சித்தியெய்தி, யதன்சைட் ஆசிரியர் கலாசாலைக் குச் செனி நூறு விரிவுரையாளராகவும் , பிரதி அதிபராகவும் நான்கு ஆண்டுகள் கடமையாற்றினார். இக்காலம் இவரது இலக்கியவாழ்வின் உச்சக்கட்டமாகும்.
பல்வேறு கவி அரங்குகளில் பங்கு பற்றி மலையகத் திணி இழிநிலையை எடுத்துக் கூறினார்; இலக் கிய ஆய்வரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்தார்; இலக்கிய நுT ல களையும் சிங் கள திரைப்படங்களையும் பத்திரிகைகளில் விமர்சித்தார்; மலையக நாட்டாரியல் பற்றி பத்திரிகைகளில் தொடர்
கட்டுரைகள் எழுதினார், சோம கா நீ தணிணி * அரவணைப் பில் கலைப் பூங் கா நிகழ் ச்சியை
வானொலியில் நடாத்தினார். குன்றின் குரல், கொழுந்து ஆசிரிய பீடங்களை அலங்கரித்தார். இவ்விதம் எழுச்சிப் பெற்ற இவரின் பங்களிப்பால் கலாசார அமைச்சின் கலைக்கழக இலக்கியக் குழுவுக்கும் தெரிவானார்.
விளங்கினார்.
1994ம் ஆண்டு இவரது தலைமைப் பொறுப்பில் காத்திரமான ஒரு சாகித்திய விழா நடை பெறவும், பின் முதல் மத்திய மாகாண சாகித்திய விழா நடைபெறவும் காரணகர்த்தாவாக 1996ல் மலையக தமிழாராயப் சி சி மாநாடு நடை பெறுவதற்கும் பெரும் பங்காற்றினார். இக்காலப்பகுதியில் புலமைப்பரிசில் பெற்று கனடாவுக்கு முதுகல்விமானி கல்வியைப் பெறுவதற்குத் தெரிவான போது இவரது இலக்கியச் சேவையில் தடையேற்பட்டது. என்றாலும் இலங்கை யிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் இயங்கிய சேரன், திருமாவளவன், சக்கரவர்த்தி ஆகியோர்களுடன் இணைந்து இயங்கினார் என்பதை நானறிவேன்.
மீண்டும் இலங்கை வந்து 2000ம் ஆண்டு முதல், சிறியாத தேசியக் கல்வியியற் கல்லூரியில் செயல் நிறைவேற்றும் பீடாதிபதியாக கடமையேற்றார். இளம் வயதிலேயே இவர் மீது சுமத்தப்பட்ட நிர்வாகச் சுமை மிகுந்த பணி இது. இவரின் படைப்பு முயற்சிகளை இது பின்னடைய வைத்து விட்டது. எனினும் இவர் ஏலவே எழுதியிருந்த எழுத்துக்கள் தீவகத்து ஊமைகள் என்ற கவிதைத் தொகுதி யாகவும் மலையக இலக்கியத்தளங்கள் என்ற கட்டுரைத் தொகுதியாகவும் வெளிவந்துள்ளன. கட்டுரைத் தொகுதி மத்தியமாகாண சாகித்யப் பரிசை 2002ம் ஆண்டு பெற்றது.
 

வில் வ ரட்ணம், சோலைக்கிளி, சில்லையூர் செல்வராஜன், மேமன்கவி போன் றோரோடு சேர்ந்து பல மட்டங்களில் கவியரங்கு கண்டவராக மலையகத்தில் முரளிதரனையே காண்கிறோம். இவரது கவிதைகள் பல சிங்களத்தில் மொழி
சேரன், ஜெயபாலன்,
பெயர்க் கப் பட்டு தற்போது இணை யதி தளங் களில் வலம் வருகின்றன.
கொட்டகலை இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகளிலும் , з п J 6ó பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் அவர் இப்போது இ.ைண நீ து செயற் படுகிறார். கவிதைகள் எழுதுபவனாக அறியப்பட்ட நான், பின் மலையக இலக்கிய முயற்சிகள் குறித்து எழுதும் அணியினரோடு நெருக்கமாக இணை நீ து கொணர் டேனர் . எழுதுவதைவிட எழுத்தாளர்களை நேசிப் பவனாகவும் , இலக் கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவனாகவும்
அதிகம் செயற்பட்டிருக்கிறேன்' என்று இவரே குறிப்பிடுகிறார். (மலையக இலக்கியத்தளங்கள்-என்னுரை)
இன்றுவரையிலும் இவருடன் எனக் கு ஏற்பட்ட தொடர்பில் தொய்வில்லை. நேரில் காணும்போது சிரிக்கவும் மற்ற நேரங்களில் நினைக்கவும் தெரிந்த மனம் இவருக்கு.
அழகான குடும்பம் இவருக்கு.
இரண்டு குழந்தைகளின் தந்தையான முரளிதரன் எழுதுவதற்கு எப்படியும்
நேரத்தைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இலக்கிய உலகில் இவரின் பெயரைச் சொல்ல இருப்பவை இவரின் எழுத்துக்கள் தாமே. மலையகத்தில் ஏராளமான கவிஞர்கள் இருக்கிறார்கள். எனினும் , சி.வி.வேலுப்பிள்ளை, தென் ன வன், முரளிதரன் எண் ற சிலரைத் தான் இலக்கிய உலகு அறிந்து வைத்திருக்கிறது.
விலை 275/= கதி0/= SSS ஆசிரியரின் ss Grigor ěratí
க்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி * 30 எழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள் அ

Page 6
தன்வினை.
குறிஞ்சி இளந்தென்றல்
பக்கத்து வீட்டுப்பூனை குட்டிகள் போட்டாலும் போட்டது / ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காது அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருந்தது
நானும் பார்த்து வந்தேன் அதன் குட்டிகளை, மூன்று குட்டிகள்
ஒடிக் கொண்டிருக்கும் பூனை எங்கள் வீட்டிற்கும் வரும் அம்மா ஏதாவது சாப்பிட போடுவாள் அதுவும் தின்று விட்டு சில சமயம் இங்கே படுத்துக் கொள்ளும்
குட்டி போட்ட பூனை ஓடிக் கொண்டிருக்கும் போதெல்லாம் நாற்காலியில் அமர்ந்திருந்து சிரிப்பேன்
“உனக்கு இது தேவையா, இந்த குட்டிகள் வேணுமுன்னு யாரு அடிச்சுகிட்டா”
 

“பேசாம இருக்க வேண்டியது தானே இப்ப பாரு அங்கிட்டும் இங்கிட்டுமுன்னு அலைஞ்சிக்கிட்டு இருக்க”
அதைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே கேட்பேன் என்னைக் கண்டதும் வாலை திருப்பிக் கொண்டு குட்டிகள் கிட்ட ஒடி போய் விடும்.
கால வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
எனக்கும் திருமணம் நடந்தது.
இப்போது நான் ஒடிக்கொண்டிருக்கிறேன்
என் நாற்காலியில் அந்த பூனை
** ** **
மல்லிகை ஆண்டுச் சந்தா சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள் 37வது ஆண்டு மலர் தேவையானோர் தொடர்பு கொள்க. ஆண்டுச் சந்தா 250/- தனிப்பிரதி 20/- தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13. தொலைபேசி: 320721 R -QLouflsö: panthalQsltnet.lk.
(காசுக் கட்டளை அனுப்புவோர் Dominic Jeeva, Kotahena, P.O எனக் குறிப்பிடவும்)
AV

Page 7
மல்லிகைப் பந்தல் சமீபத்தில்
மலிலே வெளியிட்டுள்ள நூல்கள்
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு புதிய அநவவத் தகவல்கள். தகவல்களில் கம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) விலை: 250/= 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் ിതബ: 14o/= 3. அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் 6ზა)6ა: I 8o/= 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் ნიზkთნა: 175/= 5. மண்ணின் மலர்கள் ~
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) 6)?ხ2).svა: I I o/= 6. நானும் எனது நாவல்களும் ~ செங்கை ஆழியான் விலை: 80/= 7. கிழக்கிலங்கைக் கிராமியம் ~ ரமீஸ் அப்தல்லாஹற் விலை; 100/-
முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா விலை: 110/- 9. முனியப்ப தாசன் கதைகள் ~ முனியப்பதாசன் 6גj55(61 :ט SO/= 10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூட) ~ பாலரஞ்சனி விலை: 60/- 11. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ 'சிரித்திரன் சுந்தர்' விலை: 175/= 12. அட்டைப் படங்கள் -
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) விலை: 175/= 13. சேலை ~முல்லையூரான் விலை: 150/= 14 மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் விலை: 275/=
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 15. மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் (இரண்டாவது தொகுப்பு) விலை: 350/=
(41 எழுத்தாளர்களின் படைப்பு)
16. நிலக்கிளி ~ பாலமனோகரன் 17. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா 65)6): 150/- 18. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) வெளிவந்து விட்டது ഖിജ്ഞ: 3So/F
தொகுப்பு ~ ż ஆழியான் 19. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் விலை: 150/= 20. தரை மீன்கள் ~ ச.முருகானந்தன் விலை 150/= 21. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் ~ செங்கை ஆழியான் விலை: 150/=
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
一口で二ー
 
 

தீ ராவிலை
தெணியான்
s
“ஹலோ..!" “ஹலோ. யாரு பேசிக்கிறது?”
“ராதா இருக்குதா?”
"நீங்க யாரு?"
“(pJ6fl”
“முரளின்னா?”
“ராதாவைப் பேசச் சொல்லுங்கோ!” "அம்மா இப்போ பேசிக்க மாட்டாங்க”
“alajia07?”
"ஆமாங்க”
"நான் ஆரெண்டு தெரியுமா!" “முரளின்னு இப்பத்தானே சொன்னிங்க”
“ஒமோம். நான். நான் முரளி பேசிறேன் எண்டு சொல்லு”
“யாரா இருந்தா என்னங்க! ராதா அம்மா வோட் எல்லாம் சுத்திப் பாத்துக் கிட்டு களைச்சு இப்பத்தான் வந்திருக்காங்க. இப்ப அவங்க பேசிக்க மாட்டாங்க. அரைமணி நேரம் சொணங்கி எடுங்க”
ரெலிபோனை பட்டென்று கீழே வைக்கிறான். சினம் பொங்கிக் கொண்டு அவனுக்கு வந்து விட்டது என்று உணர்ந்து மனசுக்குள் மெல்ல நகைத்த வண்ணம் திரும்புகின்ற போது,
—

Page 8
"ஆரம்மா பேசினது?" அறைக்குள் இருந்து ராதாவின் குரல் கேட்கின்றது.
"யாரோ. முரளி இன்னாரு”
“என்னவாம்?”
“உங்க கட்ட மென்னாரு”
பேசிக் கணு
"நீங்கள் என்ன சொன்னனிங்கள்”
“அரை மணி நேரம் சொணங்கி எடுங்கன்னு சொல்லிப்புட்டேன்”
66
ஹா. ஹா. ஹா.”
“ராதா அம்மா என்ன சிரிக்கிறீங்க! தப்பாச் சொல்லிப்புட்டனா?”
"அம்மா சொன்னால் அது தப்பாக இருக்காது. அதுசரி, அதென்ன அரை மணி நேரக் கணக்கு?”
"நீங்க ஒடம்பு கழுவிக்கிட்டு வந்து உடுப்பு மாத்திக்கிட்டு டீ குடிக்க
வேணாம்!”
"அப்பிடியா?” கேட்ட வண்ணம் நேரத்தைக் கவனித்தபின் குளியலறை லயிற்றைப் போட்டுக் கொண்டு உள்ள நுழைகின்றாள்.
இப்ப அம்மாவின் கையிலிருந்து சூடான ஒரு தேநீர் சுவையாகக் கிடைக்கும். காலையில் கோப்பி மதிய உணவில் லிற்ஸ், கோவாப்பூ, உரு ளைக்கிழங்குப் புரட்டல், சலாதுக் கீரை இப்படி நான் விரும்பி உண்ணும் கறி வகைகள் தவறாமல் இருக்கும். காலையில், இரவில் எல்லாம் எனக்கு
12
உவப்பானவற்றைத் தேடித் தேடிச் சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறா. அம்மாவின் கைகளுக்கு என்ன மணம்! என்ன சுவை சேலையைக் கூட சில சமயம் தானே செலெக்ட் பண்ணி
எடுத்து வைத்து உடுத்துக் கொள்ளும்
படி சொல்லுவா, அம்மாவின் செலெக் ஸன் சரியாக, எனக்கும் மனதுக்குப் பிடித்ததாகத்தான் இருக்கும். எப்படித் தான் இந்த அம்மாவால் என்னைப் புரிந்து கொண்டு என் விருப்பத்திற்குத் தகுந்த வண்ணம் காரியங்களைச்
செய்து கொண்டிருக்க முடிகிறது!
அவள் உடையை மாற்றிக் கொண்டு ஹோலுக்குள் வந்து சோபாவில் மெல்ல அமருகின்றாள். அவள் எதிர்பார்த்தது போல ஆவி பறக்கும் தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்து வந்து அவள் முன் வைத்து விட்டு எதிரில் அமர்ந்து கொள்ளுகின்றாள் லட்சுமி
“என்னம்மா இது டீயா? வேண்டு மென்று சீண்டுகிறாள் அவள்.
ஆமா, அந்தியிலே டீ தானே ஒங்களுக்குப் புடிக்கும்”
‘சும்மா கேட்டனானம் மா. சொல்லிக் கொண்டு அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்த வண்ணம், தேநீரைக் கையில் எடுக்கின்றாள்.
லையிற் எரிந்து கொண்டி ருக்கிறது. வெளியே வீசும் குளிர் எதேச்சையாக உள்ளே புகுந்து கொடு கடிக் காத வண்ணம் கணிணாடி
 

யன்னல்களை இறுக மூடி இருக் கின்றாள்.
ஒளிர்ந்து கொணடிருக்கும் இரண்டு வல்ப்புகள் யன்னல் கண்ணா டிகள் ஒவ்வொன்றிலும் விழுந்து பிரதிபலித்து, தனித்தனி வல்ப்புகள் பல வரிசையாக ஒரேசமயம் ஒளிர்வது போல தீப அலங்காரம் செய்து கொண்டிருப்பது கண்டு பரவசமாக இரசித்த வண்ணம் தேநீரை ருசித்து சுவைக்கின்றாள்.
இது என்ன குவாட்டஸ் மாதிரியா இருக்கு சொந்த வீடுபோல. ஏன், சொந்த வீட் டையே இவ்வளவு நேர்த்தியாக வைத்திருக்கமாட்டார்கள். எல்லாம் அம்மாவின்ரை கை ராசி செய் நேர்த்தி
அவள் நினைந்து அனுபவித்து
உள்ளூர மகிழ்ந்து பெருமைப்பட்டுக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக
இதமாகப் பருகிக் கொண்டிருக்க,
‘இனி னைக் கு என னம் மா
சொணக்கம்?” லட்சுமி வினவுகின்றாள். "சீரியஸான ஒரு பேசன் ரை
கவனிக்க வேண்டி இருந்தது”
”அவுகளுக்கு இப்ப கொஞ்சம் சொகம் இல்லீங்களா?
”அம்மாவுக்கு அதெப் பிடித் தெரியும்”
“ராதா அம்மா திரும்பி வந்துக்கிற சமயம் மொகம் சொல்லிக்கிடுமே! இன்னைக்கு நிம்மதியா ஒறங்குவீங்க”
“இல்லையெண்டால்..?”
'உறக்கம் புடிக்காமெ பொறண்டு பொறண்டு படுப்பீங்க”
‘ஒ.! அந்தச் சமயங்களில் எல்லாம் நீயும் கண்ணுறங்காது விழித துக் கிடந்து என் னைக் கவனித்துக் கொள்ளுகிறாயா அம்மா!'
என எண்ணி உள்ளே நெகிழ்ந்த
வண்ணம்,
"இன்னுமொரு தடவை போய்
அந்தப் பேசன்ரை பாத்திட்டு வர வேணும்"
“எத்தனை மணிக்கு?” "ஒரு பத்துப் பத்தரைக்கு"
“ஒத தையாக வா போவப்
போறிங்க!”
"ஆஸ்பத்திரிக்குள்ளே என்னம்மா
பயம்!”
இல ல
வாரேனே’
நானுந் தானி கூட
“சரியம்மா”
தேநீர்க் கோப்பையை அவள் கீழே வைக்கின்றாள். ரெலிபோன் மணி சிணுங்கிச் சிணுங்கி ஓயாது அலறுகிறது. சுவரில் பொருந்திக்
கிடக்கும் மணிக்கூட்டை அவதானிக்
13
கின்றாள்.
அம்மா சொன்னதுபோலச் சரியாக அரைமணி நேரம்.

Page 9
‘எப்படித்தான் இந்த நேரத்தைக் கொஞ்சமும் பிசகாமல் கணக்கிட்டு கணித்து வைத்துக் கொள்ள இந்த அம்மாவுக்கு முடிகிறது என தனக்குள் வியந்து லட்சுமியின் முகத்தைக் கனிவுடன் நோக்குகின்றாள்.
சிரிப்புச் சிரிப்பாக அவளுக்கு வருகிறது முரளியை நினைத்து, அவ்வளவு அவசரம். ஒரு செக்கன் தானும் தாமதிக்க முடியவில்லை அவருக்கு.
ரெலிபோன் தொடர்ந்து சிணுங்கி அலறுகிறது.
லட்சுமி அதை எடுப்பதற்கு மெல்ல எழ எத்தனிக்கின்றாள்.
“வேண்டாம் அம்மா, நீங்கள் இருங்கோ!” சொல்லித் தடுத்துவிட்டு நிதானமாக எழுந்து சென்று கதிரை ஒன்றில் மெல்ல அமர்ந்த வண்ணம் றிஸிவரைக் கையில் எடுக்கின்றாள். “ஹலோ. ராதா பேசுகிறேன்”
“ஹலோ. யார் பேசுகிறது!” "நான் முரளி பேசுகிறேன்”
நான் என்னும் அவன் தொனியில் வந்து விழும் அழுத்தத்தில் அவனுக்கு இன்னும் சினம் தணியவில்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டு ஒசைப்படாமல் மெல்லச் சிரித்த வண்ணம் சாதாரணமாகக் கேட் கின்றாள்:
என்ன விஷயம்
சொல்லுங்கோ!'
“கொஞ்சம் முன்னதாக நான்
கோல் ஒன்று எடுத்தேன்”
“அரை மணித்தியாலத்துக்கு
முன்னம்”
"ஒமோம். அரைமணித்தியாலத்து க்கு முன்னந்தான். அப்ப ராதா என்ன செய்து கொண்டிருந்தீங்க? ஆர் என் னோடை பேசினது?”
'அம்மா”
”அம்மாவா?”
"ஒமோம் அம்மாதான்”
'அம்மா வெள்ளவத்தையில் இல்லையா! இப்ப கண்டியிலையா இருக்கிறா”
"ஹா. ஹா. ஹா.”
“என்ன ராதா சிரிக்கிறியள்!"
“சிரிக்காமல் என்ன செய்கிறது"
“ஏன்?”
“பெற்றால்த்தான் அம்மாவா?”
“வெள்ளவத்தையில் ஒரு அம்மா. கண்டியிலே இன்னொரு அம்மா. ஆரந்த அம்மா?”
"என்னோடை இருக்கிற லட்சுமி அம்மா”
“ஒ. சமையற்காரியா!”
முரளி! அப்பிடிச் சொல்ல
 

வேண்டாம் வீட்டிலே உங்கடை அம்மா சமைச்சுத் தாறத்தில்லையா உங்களு க்கு! சமைக்கிறதனாலே அம்மாவைச் சமையற்காரி எண்டா சொல்லுவியள்! எனக்கு லட்சுமி அம்மாவும் அப்பிடித் தான். எனக்கு நேரமில்லாததினாலே அவ சமைக்கிறா, ஒய்வு நேரத்தில் நானும் சேர்ந்து கொள்வேன். அவ வுக்கு இயலாத வேளையில் நான் சமைத்து இருவரும் சாப்பிடுகிறோம். நான் தங்கி இருக்கிற இந்த குவாட் டஸில் அவதான் அதிகாரி அவ போட்டது தான் சட்டம். அவவின்ரை கட்டளை ஆரும் மீற இயலாது. நானும் ஏற்றுக் கொண்டுதான் நடக்க வேணும். அவ ஒரு விதவை. ஐம்பது வயது எனக்கு இன்னொரு அம்மா."
“ஹலோ, முரளி பேசுங்கோ!” “என்ன பேசுகிறது!”
‘என்ன சொல்ல வந்தீங்க? அதைச் சொல்லுங்கோ’
“எனக்கு மூட் அவுட்டாப் போச்சு” நீங்கள் எப்பவும் இப்படித்தான். இப்ப வவுனியாவில் இருந்துதானே பேசுறியள்! வவுனியா வலு சூடாகத் தான் இப்ப இருக்கும்”
“என்ரை குளிர் கண்டியில்தான்”
“ஹா. ஹா. உங்களுக்கென்ன! அப்பா ஜிஏ. சித்தப்பா நெடுஞ்சாலை அமைச்சில் உயர் அதிகாரி. நீங்கள் ஏ-9 பாதை. சமாதானப் பாதை
போடுகிற பொறுப்பான தலைமை இஞ்சினியர். பெரியாக்கள். பாதை போடுகிறியள். ஏழை எளியதுகளை மறந்து போக வேண்டாம்”
“என்ன செய்ய வேணும் ராதா!
“பாரவிறகு சுமந்து பலமைல்கள் துாரம் மூச் சிறைக் கப் பழைய சயிக்கிள் மிதிச்சுக் கொண்டு போய் அந்த விறகை விற்று கால்வயிறு நனைக்கும் ஏழை எளியதுகளுக்கும் உகந்த பாதையாக அமைய வழி சமைக்க வேணும்.”
“பெரிய முதலாளியின்ரை மகள், ஏழை எளியதுகள் பற்றி என்ன புரட்சி பேசுகிறா"
“ஏழை எளியதுகள் கரிசனை பற்றி ஆர் பேசினாலும் வசதி படைச்சவைக்கு அது புரட்சிதான். முரளி என்ரை குழந்தைப் பருவம் பற்றி உங்களுக்குத் தெரியாது. நான் பிறந்த மண்ணில் வேலணையில் ஆரம்ப வகுப்புப் படிச்ச காலத்தில் மாற்றிப் போடுவதற்கு வேறு சட்டை இல்லாமல் இருந்தவள் எண்டால் நீங்கள் இப்ப நம்புவீங்களா! ஆனால் அதுதான் உண்மை. அப்பிடி ஒரு நிலையில் என்னை வாழ வைத்து என் கண்களைத் திறந்து இந்த உலகத்தை எனக்கு உணர்த்திய இறைவனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.”
‘இதெல்லாம் யார் கேட்டது இப்ப"
“சரி. சரி. என்ன சொல்ல
l5

Page 10
வந்தீங்க, அதைச் சொல்லுங்கோ!”
‘ராதா. ராதா. அம்மா, அப்பாட்டை ஒருமாதிரிச் சொல்லிப் போட்டன்’
“என்ன சொன்னனிங்கள்?”
‘இதென்ன ராதா! எங்கள் இருவருக்குமுள்ள விருப்பம்"
“லைலா-மஜ்னு. அம்பிகாவதி அமராவதி, தேவதாஸ் -பார்வதி இவர்கள் போலத்தான் நாங்கள் என்று
சொல்லி இருப்பீர்கள்”
“ராதா, இதென்ன! நிறைவேறாத காதலர்கள் பற்றி இந்தச் சமயத்தில்.
“முரளி, அவர்கள் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்ட போதும் அவர்கள் கொண்ட காதல் மறையவில்லை. அது அமரத்துவ மானது அவர்களது அன்பு சமுத்திரம் போன்றது. அது வற்றாதது. அதனால் தான் உலகத்தார் உள்ளங்களில்
yy
அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்
கிறார்கள். அது போலத்தான். ஹா.ஹா.’ −
“ராதா சிரிக்க வேண்டாம். எங்களுடைய காதலும் அப்பிடித்தான்’
s
“முரளி பல்கலைக் கழகத்தில்
நான் சந்தித்த பலரில் நீங்களும்
ஒருவர். எதிர்காலத்தில் இணைந்து
வாழ்வதற்குத் தகுந்த ஒரு ஆண் நீங்கள் என்று மனதுக்குத் தோன் றியது. அதனால் பேசிப் பழகினேன்.
அவ்வளவுதான். ரீனேச் கோளாறல்ல
இது”
“ராதாவின் அழகில் மயங்கி ராதா பின்னால் பலர் சுழன்று திரிந்தார்கள். அப்பிடி இருந்தும் உங்களுக்குத் தகுந்தவனாக என்னைத் தெரிவு செய்து கொண்டீர்கள்!”
“நான் அழகாக இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக் குப் பின்னால் அலைந்து திரிந்தவர்கள் என் அழகுக்காக மாத்திரம் சுழன்று திரியவில்லை. இப்ப பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஆண்கள் ஆரைத் தேடித் தேடிக் காதலிக் கிறார்கள் தெரியுமா! வசதியான குடும்பத்துப் பெண்களை இனங்கண்டுதான். வெளிநாடுகளில் அண்ணன் தம்பி இரண்டு மூன்று பேர் இருந்துவிட்டால், அந்தப் பெண்ணைக் காதலிப்பதற்கு போட்டிப் போட்டுக் கொண்டு பலர் முன்னுக்கு நிற் கின்றார்கள். இவர்கள் எல்லாம் பெண்ணையா காலிக்கின்றார்கள்?”
"நான்?
“உங்களுக்கு அந்தத் தேவை யில்லை. சரி சொல்லுங்கோ’
“முதல்ல அப்பா ஒரு மாதிரி முறைச்சார்’ w
“ஏன்?"
“என்ன சாதியோ..!"
‘அம்மாவும் இதலே வலு இறுக்கம். அந்த அம்மா சொன்னது
16
 

தான் எனக்கு அதிசயமாக இருந்தது” "அம்மா என்ன சொன்னவ?”
“என்ரை பிள்ளை ஒருநாளும் அப்பிடி நடக்க மாட்டான். அப்பிடி யான இடத்தில் அவன்ரை மனம் பதியாது. அது அவன்ரை இரத்தத்தில் ஊறின சங்கதி
கொள்ளுவார். எதுக்கும் மறுக்க மாட்டார். நீங்கள் எது கதைக்க
வேண்டுமானாலும் எனக்குச் சொல்
"ஆ. நான் தப்பினேன்! பிறகு”
“வேலணை சொந்த இடமென்று சொல்லி, உங்கடை குடும்ப விவ காரங்களையும் சொன்னேன். அதுக்கு அம்மா என்ன சொன்னா தெரியுமா?”
“என்ன சொன்னவ?”
N
தனக்குத் தூரத்துச் சொந்தமாம். ஒரே கொடிக் கோத்திரமாம். ராதா எண்டு பெயரைச் சொன்னதும் இரண்டு பேருமே ஆச்சரியத்தில் அதிர்ந்து
போச்சினம்”
“முர பொருத்தம்”
"ஒமோம. நாங்கள் பிறக்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விட்டுது.”
ராதா தெய்வீகப்
“பிரச்சினை தீர்ந்தது விடுங்கள். வேறை.”
”ஒரு தடவை உங்கடை அப்பா அம்மா முறைக்கு என்ரை அப்பா அம்மாவை வந்து சந்திக்க வேணு மல்லவா’ V
“அனுப்பலாம். முரளி நான் எது சொன்னாலும் அப்பா கேட்டுக்
7
லுங்கோ. நான் அவரிடம் சொல்லி வைப்பேன். வந்த இடத்தில் அவ ரோடை ஒன்றும் கதைக்க வேண்டாம். அப்பா அதை விரும்பமாட்டார்.”
"சொல்லுறதுக்கு ஒண்டுமில்லை. எல்லாம் உங்களுக்குத் தெரியுங் தானே! வீடு வளவு. நகை நட்டு.” “எனக்கொரு காரும் வாங்கித்
தந்திருக்கிறார். நகை நான் விரும்பிப் பெரிசாகப் போடுகிறதில்லை. வீடு,
வேலணையில் வேணுமா? வெள்ள
வத்தையில் வேணுமா?”
“டொக்டரம்மா வேலணையில் போய் இருக்கவா போகிறா?”
`வெள்ளவத்தை வீடு எனக்குத்தான். சரிதானே?”
“சரிதான். ரா.தா.”
‘சொல்லுங் கோ! ஏன் தயங்குகிறியள்?
“எனக்குச் சீதனம் வாங்கிறது விருப்பமில்லை ராதா! தேவையு
மில்லை. நான் ஒரே பிள்ளைதான்.
ஆனால் கெளரவம் என்றொண்டு இருக்குதல்லவா! சீதனம் வாங்காது விட்டால் பெறுமதி இல்லாத மாப் பிள்ளை எண்டுதான் சமூகம் கணிக் கிறது!”
“எவ்வளவு கேட்கிறியள்?”

Page 11
"நான் கேட்கயில்லை ராதா! என்ரை அப்பா அம்மா."
“அவை எவ்வளவு தரட்டுமாம்?”
“இப்ப ஒரு எஞ்சினியருக்கு எழு பத்தைஞ்சு எண்பதெண்டு சீதனமாம். அவை அப்பிடிக் கேட்கயில்லை.”
“எவ்வளவு கேட்கினம்?”
‘ஆகக் குறைஞ சதுதான் .
நாற்பது.”
"நாற்பது லட்சம்’ "ஒமோம்”
"அப்பாவுக்கு இது பெரிய
காசில்லை. அவர் நானூறு லட்சமும்
தாறதுக்கு தயாராக இருக்கிறார்."
“உங்களுக்கு இரண்டு தங்கைமார் இருக்கிறார்களல்லவா!'
"அவர்களுக்கும் அப்பிடிக் குடுக்க அவருக்கு இயலும்”
"அப்ப. பிரச்சினை இல்லை” “முரளி, இப்ப டொக்ரருக்கு எவ்வளவு வாங்குறான்கள்!" "தொண்ணுறு நூறு."
“தொண்ணுாறு லட்சம். நூறு லட்சம். அப்பிடித்தானே!"
“ஒமோம்”
"ஆகக் குறைஞ்சது?”
“ஐம்பது”
18
“ஆகக் குறைஞ்சது டொக்ரருக்கு ஐம்பது, எஞ்சினியருக்கு நாற்பது. சரிதானே!”
“சரிதான்'
"அப்பிடியானால் நான் டொக்ரர், நீங்கள் எஞ்சினியர். நீங்கள்தான் எனக்குப் பத்து லட்சம் தரவேணும். தருவீங்களா?”
"இதென்ன ராதா?”
'இதுதான் நிச்சயம்”
“ராதா, சும்மா விளையாடாதை யுங்கோ!”
"நான் சீரியஸாகத்தான் சொல்லு கிறேன். இதிலென்ன விளையாட்டு!”
“ராதா”
“என்ன?”
“பகிடியை விட்டிட்டு எல்லாம்
சரிதானே!"
“முடிவைச் சொல்லிப் போட்டு. “எதுக்கு?
"நான் கேட்டதற்கு”
“என்ன பேய்க்கதை பேசுகிறாய்!”
"மிஸ்ரர் முரளி, போனைக் கீழே
60)6
அவள் றிஸிவரை கீழே வைத்து விட்டு, முகம் மலர்ந்து சினந்து சிரித்த
வண்ணம் எழுகின்றாள்.
 

Terrorist:
ഴിഞ്ഞിt; ടി സ്ഥഞ്ഞിട്ടിക്കി.
க.சட்டநாதனி
சந்தோஷ் சிவன் ஒரு மலையாள இயக்குநர். இருந்த போதும் இவர், அசோகா, Terrorist ஆகிய திரைப் படங்களைத் தமிழில் தந்துள்ளார்.
அவரது அபயம் எனும் சிறுவர்களுக்கான திரைப்படமும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்றாகும்.
பெற்றோர்களால் - படிப்பு, ஒழுக்கம், நேரந்தவறாமை என்று வதைப்படும் சிறுவனொருவனைப் பற்றிய திரைப்படம் அபயம். ஒவியம் வரைவதிலான அவனது நாட்டம், புலக்காட்சிகளில் மங்கிப் போகும் அவனது மனோபாவம், எதுவுமே பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அவனது - பத்திரமான எதிர்கால - வாழ்வுக்கு உகந்தது, கற்கும் கல்வி மட்டுமே என மயங்குபவர்களுக்கு, உண்மையில் அவனது உளச் சார்பும் மனக்கிளர்ச்சியும் புரிவதில்லை. கிராமத்தில் உள்ள தாத்தாவே அவனைப் புரிந்து கொண்ட ஒரே மனிதர். அவர்கூட, அவனது சிறகு விரிக்கும் கற்பனைகளுக்கு மாறாக நடந்து கொள்ள முற்படும்போது அவன் இடிந்து போய்விடுகின்றான். பார்க்கக் 5.L9uu B66u uLLö.
ஷாருகானும் கரீனாகபூரும் நடித்த திரைப்படம் அசோகா. இப்படம் பல சமரசங்களுடன், வர்த்தக நோக்கை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட போதும்
சிவன் தேர்ந்த ஒளிப்பதிவாளர் Terrorist என்பதை நிரூபிக்கிறது.
இவரது பிரதான படமாக Terroristரைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம்
പ-- ̄

Page 12
Visual மூலமே நகர்த்தப்படுகிறது. சினிமா ன்ன்பது கட்புல விருந்து எனும் புரிதலுடன் எடுக்கப்பட்ட இப்படத்தில், ஒவ்வொரு Frameழும் பல அர்த்தங்களின் சாரத்தைப் பிழிவாகத் தருகிறது.
இத்திரையாக்கத்தின் கதை இப்படி விரிகிறது. மல்லி என்னும் பெண் போராளி 14வது முகாமைச்
வேண்டும். அதற்கு LotuS அல்லது சூரியா என்று அழைக்கப்படும் fi J FT LD 60GT aý சிறுவ னொருவன உதவுகின்றான். அவனும் யுத்தத்தின் கொடுமையால் பெற்றோர்களை இழந்தவன். அவன் கண் முன்னா
லேயே எதிரி ஒருவனை மீன்
சேர்ந்தவள். மிகுந்த அர்ப்பணிப்புடன்
செயற்படும் அவள் களத்தில் மிகுந்த துணிச்சலுடன் போராடும் இயல்புடையவள். அவளது குடும்பப் பின்னணியே தீவிரமான போராட்ட உணர்வு உடையது. அப்பா புரட்சிகர கவிதை எழுதுபவர். அணி னன் ராமு வீரச்சாவடைந்த போராளி. உறவுகளற்ற அவளுக்கு உயிர்ப் பாயிருப்பதும் அர்த்தம் தருவதும் விடுதலைப் போராட்டமும் அதை நடத்தும் இயக்கமும்தான்.
விடுதலைப் போராட்டத்துக்குப் பல வழிகளிலும் தடையாக இருக்கும் VIP ஒருவரை அழிப்பதற்கு, மனித வெடிகுணர் டாகச் செயற் படத் தலைமை அவளைத் தேர்வு செய்கிறது. இப் பணி தொடர, தலைவரது புரண ஆசியும் அவளுக்கு உண்டு.
தலைமையினி தர்மானதி திற்கமைய, படையினரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காவலரண் ஒன்றை அவள் கடந்து செல்ல
20
வெட்டும் கத்தியால் மல்லி கொலை செய்கிறாள். அதைப் பார்த்துப் பதறும் சூரியா - கொலை, இரத்தம், மரணம் என்பனவறறை வெறுப்பவனாகவே உருவாக்கப்பட்டுள்ளான். இத்தகைய பயந்தாங் கொள்ளியான அவன், போராளிக்கு உதவுவது, ஒர் அழகிய குணநல முரணாகும். மல்லிக்கும்
இச்சிறுவனுக்குமிடையே மிளிரும்
பிரியமும் பரிவும் படத்தில் ரம்மி யமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், சூரியா படையினரால் அழிக் கப் படுவது - கலங்கிய பிம்பமாக, பின்புலத்தில் உருக் கொள்ள, படகில இருக்கும் மல்லியின் பதட்டமும் துடிப்பும் திரையை ஆக்கிரமிப்பது, படத்தில் நெஞ்சைத் தொடும் காட்சிப் படிமமாகும்.
தியா கு, பெருமாள் எனும் போராளிகளால் VI.Pயின் சொந்த நாட்டுக்கு கடல் கடந்து அழைத்துச் செல்லப்படும் மல்லி - வாசுதேவன் எனும், விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடுடைய ஒருவரது இல்லத்தில் - ஆராய்ச்சி மாணவி என்ற போர்வையில் தங்க வைக்கப்படு
 

கிறாள். வாசுதேவன் நல்லவர். ஆனால் , விசித் திரப் பிற வி. சிலசமயம் மனம் பேதலித்தவர் போல நடந்து கொள்ளவும் செய்கிறார். அவரது பரிதாபமான இந்நிலைக்கு புகைப்படக் கலை ஞனான அவரது மகனின் மறைவு; அதனால் பாதிப் படைந்து ஏழு ஆணர்டுகளாக கோமா (Coma) நிலையில் இருக்கும் மனைவியின் நிலை என்பன காரணங்களாய் அமைந்து விடுகின்றன.
தியாகு, பெருமாள் ஆகியோரது உதவியுடன் VI.Pஐ அழிப்பதற்காக - ஆரம்ப நிலையில் பயிற்சியில் ஈடுபடும் மல்லி, பின்னர் தயங்குவதும் சுணங்குவதும் நமக்குத் தெரியவருகிறது. இதற்கான காரணம் அவள் கருவுற்றிருக்கிறாள் என்ற உண்மையை வாசுதேவன் உணர்த்தியதுதான். வித்தொன்றை அவளது கையில் தந்து, மண்ணில் இடவை கி கும் வாசுதேவனி - நம்பிக்கை, அவநம்பிக்கை விதை பற்றி எல்லாம் பேசுகிறார். நம்பிக்கை விதை முகை நெகிழ்த்தி, அரும்பாய், பின் செடியாய் வளர்ந்து - மலர் முகிழ்த்தி, விகசிப்புக் கொள்கிறது எனப் பரவசங் கொள்வதுடன், கருவுற்ற பெண் வதை தாங்கிய பூமித்தாய் எனப் புளகம் அடையவும் செய்கிறார்.
நாளில்
குறித்த குறித்த
தீவிர
நேரத்தில் மல்லி VIPஐ - மனித குண்டாக இயங்கி, அழிப்பதற்குத் தயங்கி, ஒதுக்கம் கொள்ளுகிறாள். இது அழுத்தமான அரசியற் சார்புள்ள பார்வையாளனுக்கு - அவனது எதிர் பார்ப்புகளுக்குச் சற்று அதிர்ச்சி தருவதாயும் பிற்போக்குத்தனமான gb(Tuqub (Reactionary) UL döğan (BLİb.
இவ்வகையில், உணர்ச்சிவசப் படுபவர்கள் ஒர் ஆரோக்கியமான கருத்துப் பரிமாறலுக்கு முகம் கொடுப்பது, இப்படம் பற்றிய அதிக புரிதலைப் பெறுவதற்கு பெரிதும் உதவும் என நான் நம்புகிறேன்.
மல் லி இம் முடிவை எடுப்ப தற்கான வலுவான காரணங்கள் இத்திரைப்படத்தில் நல்ல முறையில் கட்டி எழுப்பப்படுகின்றன. அவள்
கருவுற்ற நிலையில் - அநாதரவாக, அவல நிலையில இருக்கும்
வாசுதேவனது குடும்பத்துடனான அவளது உறவு, வயிற்றில் வளரும் கருவின் உயிர்ப்பில் அவள் கொண்ட கனிவு என்று எல்லாமே அவளை இம்முடிவுக்கு இட்டுச் செல்கிறது.
மல லி தனித் து ஒதுக்கம் கொள்ளும் வேளைகளில், அவள் கருவுற்றதற்கான பின்புலம், அவளது i5606016) T35 ULgg56) Flash back 36) சொல்லப்படுகிறது.
7வது முகாம், படையினரால் தாக்கி அழிக்கப்பட்ட வேளையில்,
2.
--T

Page 13
காயப்பட்டுக் கிடந்த சக போராளி ஒருவனுக்கு இவள் உதவுகிறாள். அவளது அண்மையும் நெருக்கமும் வெதவெதப் பும் அவர்கள் இருவரையும் மெயப் மறக் க வைக்கின்றன. அவன் கூறுவான்: ஒரு பெணர் னை இவி வளவு நெருக்கத்தில் நான் பார்த்ததில்லை’ என்று. அவளது கூந்தலை வருடியபடி வியப்புறுவான்: ‘இவ்வளவு நீளமான உனது கூந்தல். என்று. இருவரும் நெருங்கி முத்தமிட்டுக் கொள்ளவும் செய்கிறார்கள் . இயற்கையின் வெற்றிக் கோ ஷரிப்பில் அவர்க ளிருவரும் இணைவது இயல்பாகி விடுகிறது. இந்தக் காட்சியும் பார்வையாளரது புருவம் உயரக கூடிய ஏதுக் களைக் கொணி டி ருக்கிறதென்றே நம்புகின்றேன்.
நமது தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய Parallels சை அதாவது ஒத்த தன் மைகளை இத்திரைப்படம் பல இடங்களில் கொண்டுள்ள போதும், போராளி களோ அவர்தம் நடை முறைகளோ எந்த சந்தர்ப்பத்திலும் கொச்சைப் படுத்தப்படவில்லை. அதே சமயம், பார்வையாளனுக்குச் சில கருத்து முரண்கள் ஏற்படுத்து வதற்கு இப்படம் வாய்ப்பளிக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
சிக்கென எழுதப்பட்ட திரைக் கதையைக் கொணர் ட இத்திரை
யாக்கத்தில் ஆழ்மனதைத் தொடு,
கின்ற - உளம் உருகக்கூடிய காட்சிப் படிமங்கள் நிரம் பவே உணி டு. அவை, அணி மைக் காட்சிகள், (33-u60)LDE 35|Tidi,6ft, Tight close shots, 6ù di 35 Tl fla56fi6o u5i 60)D, ஈரலிப்பு, கரையும் நிழலுருவங்கள், உறை நிலை உருவங்கள் , நிசப்தமான காட்சிகள் என்று பலதரத்தன. இக்காட்சி ரூபங்கள் சக மனிதனின் சுகதுக்கங்களை ஈர்ப்புடன் வெளிப்படுத்தி, நம்மில் அவ்வுணர்வு களைத் தொற் ற வைப் பதில் பெரும்பங்கினை வகிக்கின்றன.
*நல்ல திரைப்படமெனத் தன்னை அடையாளப்படுத்திக் கொணர் ட இப்படத்தைப் பார்த்து வைப்பதில் தவறில்லை.
சந்தா செலுத்தி விட்டீர்களா ?
தயவுசெய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 

dp.LI62'f
மைமுன் ஆச்சியை அறியாதவர்கள் கிராமத்தில் யாரும் இருக்க முடியாது. எனது உம்மம்மா ஊரில் அத்தனை பிரசித்தம். இந்தப் பிரபலத்தின் ஆதாரசுருதியே அவளது மனித நேயம்தான் என்பதை என்னால் அறுதியிட்டு கூறி விடலாம். யாருக்கு சுகக்கேடு, யார் வீட்டில் ஜனாஸா, எங்கெல்லாம் கலியாணவீடு, அத்தனை இடங்களுக்கும் திடீர் பிரசன்னம் தந்து, ஒரு விசைக் கருவியாகச் சுழன்று இயங்குவாள். நோய் கண்டவருக்கு மூலிகை வைத்தியம் பார்ப்பதில் மிகக் கெட்டிக்காரி. நோயினால் உழன்ற பலர், இவளது சிகிட்சையால் தேறியிருக்கிறார்கள்.
எங்களூர் எம்பி-பிஎஸ், டாக்டரைவிட, இவளது கைராசியின் மகத்துவம் குறித்து ஊர் விதந்து பேசுவதுண்டு. அத்துறையில் அதீத நுட்பம் நிறைந்தவள். உம்மம்மாவின் வாப்பா அந்நாட்களில் கீர்த்தி பெற்ற நாட்டு வைத்தியராகத் திகழ்ந்தாராம். அந்தப் பரம்பரை ஞானம் இவளையும் ஒட்டிக் கொண்டிருக்கலாம். இவளைப் பொறுத்த மட்டில் எல்லா சேவைகளும் இலவசம்தான்.
இந்த கைங்கரியங்களுக்காக யாரிடமும் வெகுமதி பெறுவதை தவிர்ப்பாள். தன் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்பதில், மிக உறுதியானவள். இதனால் இவள்பால் ஊராருக்கு நேசம் கலந்த ஈடுபாடு. இத்தனைக்கும் வாழ்வில் பெரிய வசதிகள் எதனையும் பெற்றவள் இல்லை. பிறர்மீது கருணை கொண்டவர்கள் தன்சுய முன்னேற்றங்களை கோட்டை விட்டவர்கள்தான். மைமுன் ஆச்சியும் இந்த ரகத்தைச் சேர்ந்தவள். எவருக்காவது துன்பமென்றால், இவளது கால்கள் ஒரு இடத்தில் தரித்து நிற்காது. உம்மம்மாவுக்கு இப்போது வயது எழுபதுக்கு மேலிருக்கும்.
மெல்லிய தேகம், மேனியெங்கும் தசைச் சுருக்கங்கள் தென்பட்ட போதிலும், பார்வை, கேள்வி ஞானங்களில் பிசகில்லை. கடினமான எந்த வேலைகளையும் திறமையாகச் செய்யும் உடல் ஆரோக்கியமுண்டு. உம்மம்மாவின் கணவர் சுல்தான் அப்பா கண்ணை மூடி ஏழாண்டுகள், உருண்டு போயின. அவர் அரச ஊழியராக

Page 14
பலகாலம் சேவை புரிந்து, மரணித்த பின் பெண் சன் பணம் மாதந்தோறும் உம்மம்மாவின் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளைச் சேர்த்துக் கொண்டு பெரிய மாதச்சீட்டு போட்டு வருவதினால் இவள் கையில் எப்போதும் பணம் புரளும் பண விடயத்தில் நேர்மை காரணமாக சீட்டு விவகாரம் பல காலமாக நிலைத்து நிற்கிறது.
ரம்ளான் மாத நோன்பு துவங்கி விட்டால் இவளது காட்டில் பிரமாதமாக மழை பெய்யும். உறவினர், ஊரார், அறிந் தவரென்று எல்லா வள்ளல் மனமும் உம்மம்மாவுக்கு வாரிக் கொடுப்பதில் அதீத திருப்தி கொள்ளும். எவ்வளவு தான் மறுத்து வேண்டாம் என்றபோதும், முந்திக் கொண்டு அவர்கள் ஸ்க்காத் வழங்குவார்கள்.
ரம்ளான் மாதம் முடிய இவள் திறைசேரி ஐந்து இலக்கங்களால் நிறைந்து வழியும். ஊதாரிச் செலவு என்று எதையும் செய்துவிட மாட்டாள். அவலப்படுவோருக்காக மனமிரங்கி அந்தரங்கமாய் பண உதவிகள் செய்து ஆன்மத் திருப்பதியடைவாள். தன் கணவர் சுல்தான் அப்பா மீது அதிகமான வாஞ்சை மிக்கவள். அவரது நல்லி யல்புகளை அடிக்கடி நினைவு கூர்ந்து ஆற்றாமைப்படுவாள்.
‘அந்த நல்ல மனுசனுக்கு அல்லாஹற் நாயன் சொர்க்கத்தைக் கொடுக்கோணும்!” என்று, சேலைத் தலைப்பை இழுத்து தலையிலிட்டவாறு உருகிப் பிரார்த்திப்பாள். எழுபது
(k*namus
வயதாகியும் அவளிடம் முனைப்புப்
பெற்றிருந்த அசாத்திய சுறுசுறுப்புக் கண்டு நான் அதிசயித்ததுண்டு. எங்கள் தெருவிலேயே காலைக் கருக்கலின் ஒளி பாய்ச்சு முன்னே முதலில் எழுந்து, முற் றத்தைப் பெருக்கி வீட்டு வ்ேலைகளைச் செய்பவள் மைமூன் ஆச்சிதான். மற்றவர் களின் கண் விழிப்புக்கு சூரிய ஒளி உறைக்க வேண்டுமே, இவள் நோய் நொடியென்று ஒரு நாளில் சுருண்டு படுத்ததை நான் பார்த்ததே இல்லை! ஐவேளைத் தொழுகையை ஒருபோதும்
தவறவிட்டதுமில்லை.
24
பக்கத்துவிட்டுப் பரீதா தாத்தா ஒரு நாள் கேட்டாள்.
‘ஆச்சி ! இப்ப ஒங்களுக்கு எத்தனையேன் வயசு?”
“எனக்கிப்ப ஒரு அறுபது வய சென்றாலும் இரிக்கும் புள்ள’
“அதெப்பிடி உம்மம்மா, இப்ப எங்கட உம்மாவுக்கே, ஐம்பது பிந்தி. அப்ப நீங்க ஒங்கட மகள, பத்து வய சிலயா பெத்தீங்க?"
எனது சிலேடையை ரசித்து பரீதா தாத்தா உடல் குலுங்கச் சிரிப்பாள். உடனே உம்மம்மாவுக்குச் சட்டெனக் கோபம் பொத்துக் கொண்டு வரும்.
“அடே போடா! இங்கயிந்து, பெரிய மணிசர் பேசச்செல்ல, வருவான் அரப்ப டிக்க!”
உம்மம்மாவை அடிக்கடி சீண்டிப் பார்ப்பது எனது வழக்கமான பொழுது
 

போக்கு. உம்மம்மாவுக்கு மூக்கு நுனியில் கோபம் பிரவகித்துக் கொண்டு வரும். காரசாரமாக உரத்த தொனியில் திட்டித் தீர்ப்பாள். சில நிமிடங்களில் அக்னி தணிந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
'கோழி மிதிச்சி குஞ்சி சாகாது', என்று பழமொழி கூறி சமரசம் செய்வாள். யாரும் தன் கருத்துக்கு எதிர் மறைாயக பேசக்கூடாது, என்பதில் விட்டுக் கொடுக் காத பிடிவாதம். தன்பக்கமே நியாயம் இருப்பதாக சூளுரைப் பு திளைத் துப் (8 L T 60 6T 6ð GÒT முதியோரினதும் யதார்த்த நிலையும் இது தான்!)
சிறுவயது தொட்டு என்மீது அபார வாஞ்சை காட்டி வருகிறாள். இவள் கூறும் பழங்காலக் கதைகளை ரசித்து அசைபோடுவதில், எனக்கு அலாதிப் பிரியம். மேலுதட்டில் ரோமம். கறுக்கத் துவங்கிய இந்த யவ்வனப் பருவத்திலும் நான் அவளுடைய கணிப்பில் சிறு பிள்ளைதான். மடியிலிட்டு என் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுப்பதில் தான் எத்தனை சுகம்! உம்மம்மாவன் பாசவிகசிப்பில், நான் கரைந்து போவேன்.
இவள் பெற்ற வாரிசுகள் ஆறு. இரு ஆண்கள், நான்கு பெண்கள். பேரப் பிள்ளைகள் ஒரு டசின் தேறும் எல்லோர் மீதும் பாசமும் கருணையும் இருந்த போதிலும் என் உம்மாவின் மீதுதான் மேலதிகப்பற்று. மூத்தபிள்ளை என்பதி னாலோ, தெரியவில்லை த்ாய்க்கும் மக ளுக்குமிடையில் அபூர்வமாக மன முறிவுகள் ஏற்படுவதுண்டு. பலத்த
(மூப்பில்
25
வாக்குத் தர்க்கங்கள் கிளர்ந்தெழும். எண்ணெயிலிட்ட கடுகாகப் படபடத்து உம்மம்மா சில வேளைகளில் வெளி நடப்பு செய்வதுண்டு. இந்த இராஜரீக உறவின் முறிவை இவளால் இரண்டு நாளைக்குக் கூட தாக்குப் பிடிக்க இயலாது போய்விடும். மூன்றாம் நாள் காலையில் மீண்டும் வீட்டை நோக்கிய பிரவேசம் நிகழும். எதுவும் நடக் காததைப் போன்ற தணிந்த சுபாவம் தலைகாட்டும். பிறகு எல்லோர் மீதும் அணி பரினை ஊற்றுச் சுரப் பாயப் வர்ஷிப்பாள். உம்மம்மாவின் அடிமனம் மென்மை கொண்டது. அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு அவள் கேள்விக் குறியே." எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் மனம் கலங்கிப் போன சம்பவமது.
ခွံ့ - 6f6Ü , பரீட் சை எழுதக் கிளம்புகிறேன். எனது பரீட்சை சிலவுக்கு கொடுத்தனுப்ப அன்று யாரிடமும் காசு இருக்கவில்லை. நேரம் ஆக ஆக ஆற் றாமையால் என் விழிகள் கசிகின்றன. உம்மா பக்கத்து வீடுகளில் காசு புரட்ட எடுத்த முயற்சி சாத்தியமற்றுப் போனது. இறுதியில் உம்மம்மாதான் பணம் தந்து பரீட்சைக்கு அனுப்பி வைத்தாள்.
“ஏண்ட புள்ளக்கி, நான் உதவி செய்யாமப் போவேனா? இவளுகள் என்ன செய்யப் போறெண்டு பாக்கத்தான். பேசாம ஈந்த”
என்று என் தலையைத் தடவி தேறுதல் சொன்னாள். அவளது ஆசியினால் பரீட்சையில் சிறப்பாக சித்தி
யெய்தினேன். எங்கள் குடும்பழ பெரியது.

Page 15
அடிக்கடி வறுமை ஈவிரக்கமின்றி தாக்கும். அதுபோன்ற சந்தர்ப்பங் களில் வீட்டில் எல்லோருடைய கஜானாக் களும் காலியாக இருக்கும். சமையலறையும் விடும் வெறிச்சோடிப் போய் இருக்கும். இப்படியான தருணங்களில் உம்மம்மா தான் கை கொடுப்பாள்.
கடைக்குப் போய் அரிசி, சீனி, காய் கறியென்று வாங்கிக் கொடுப்பாள். உம்மாவின் கையில் காசு தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களில் தாராளமாக உதவுவாள். மற்றவரின் அவலங்கள் எல்லை மீறிப் போகும் போது, இடுப்பில் சொருகியுள்ள கசங்கிய கைக்குட்டை திடீரென வெளியே வரும். அந்தக் கைக் குட்டையையும், சாவிக் கொத்தையும் இவளது Թ6 մ է: கச் சிதமாகப் பாதுகாக்கும்.
உம்மம்மா மகாத்மியம் பற்றி நிறை யவே கூறிவிட்டேன். அதி முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி உங்களிடம் இதுவரை கூறமறந்து விட்டேனே! எங்கள் இல்லத்தில் ஒரு பழங்கால தேக்கமர பெட்டி ஒன்று உண்டு. அதன் தனி ஆளுமை, மைமுன் ஆச்சியினுடையது தான். எத்தருணத்திலும், யாரும் திறக்கவோ, உரிமை கோரவே அனு மதிக்க மாட்டாள். சாவிக் கொத்து பத்தி ரமாக அவளிடமே இருக்கும்.
உம்மம்மாவின் கருங்காலிப் பெட்டி அவளது தீவிர கண்காணிப்பிலேயே இருந்தது. எல்லோரும் உறங்கிய பின் - பாதி ராத்திரியில் எழுந்து திறப்பதும், மூடுவதுமான ஓசை சன்னமாக எங்கள்
உம்மம்மாவின் கருங்காலிப் பெட்டி பற்றிய சந்தேகமொன்று எல்லோருக்கும் இருந்தது. அதுபற்றிய விமர்சனங்கள் கிழவியின் காதில் விழாவண்ணம் ரகசியமாக ஒலிக்கும்.
அன்று அவளது பெட்டிச் &#f6f காணாமல் போய் விட்டது. பத்திர காளியா உருமாரி, வீட்டை இரண்டாக்கி ரகளை பண்ணி, எல்லோரையும் திட்டித் தீர்த்தாள். திறப்பை யாரும் கண்டெடுத்து மறைத்து வைத்துள்ளனரோ என்ற சந்தேகமும் வலுத்திருந்தது.
“ஏண்ட சாவிக் கொத்தைக் கள வெடுத்தவங்கள நல்ல வேல செய் வேன்!”
கோபாவேசமாகச் சூளுரைத்தாள். சோறு, தண்ணி இல்லாது, எதையோ பெறுமதியான பொருளொன்றை இழந் ததைப் போன்று முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். இப்படித் தான் ஒருநாள், சாவிக் கொத்தை தொலைத்து விட்டு, ரகளை பண்ணிக் கொண்டு இருக்கும் போது, கிணற்றடியில் நான் எதேச்சையாக கண்டெடுத்து கையில் கொடுத்தேன். மகிழ்ச்சி தாங்க வில்லை அவளுக்கு!
இச்சம்பவங்களினால், எங்களுக்கு பெட்டகம் குறித்த சந்தேகமும் மர்மமும் வலுத்துக் கொண்டே இருந்தது. ஊகங் களும் எம் மத்தியில் எழுந்தன. அதனுள் நிறைய காசு சேர்த்து வைத்திருக்கலாம். அடமானம் பிடித்த காணியுருதிகள்கூட இருக்கலாம். நிறைய தங்க நகைகள் சேர்த்து வுைத்திருக்கலாம் இல்லை
களில் விழும். இச் செயல்களினால், ----
 

யென்றால் புதையல் காப்பதைப் போன்று கிழவி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?
இவ்வாறாக கிழவியின் பெட்டகம் பற்றிய அலசல் உள்ளுக்குள் தொடர் கிறது. ஒருநாளைக்கு பெட்டியை திறந்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் எல்லோ ருக்கும் இருந்தது.
சரிதான்! பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதே பிரச்சினை. வாப்பா சொன்னார்.
“சொத்துப் பணமிருந்தா, அவக்குப் பொறகு நாங்கதானே அனுபவிக்கப் போறோம் என்னத்துக்கேன் பதறோணும்?
ஒளு, செய்ய கிணற்றடிக்குப் போன உம்மம்மா திடீரென கால்வழுக்கி கிணற் றடியில் விழுந்து விட்டாள். உடலெங் கும் பலமான காயங்கள். எங்களால் திடீர் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள Su i Ho6)f 6\} 60), 6) . Oly LJ 6QLD T 5 Lj பட்டதினால் நடக்க முடியாது. பல மாதங்கள் வேதனையோடு படுக்கையில் கிடந்தாள். தொடர்ந்து மருத்துவங்கள் செய்தும், அவளால் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை.
பம்பரமாகச் சுழன்று மற்றவருக்கு வைத்தியம் பார்த்த மைமுன் ஆச்சி, பாயில் முடங்கிப் போனது குறித்து ஊர் விசனித்தது. நெஞ்சுவலியும், சுவாச முட்டும் அடிக்கடி அவளைத் துன்பத் திலாழ்த்தின. நோய் பார்க்க வருவோரின் தொகை விசாலித்துக் கொண்டிருந்தது.
மைமுன் ஆச்சியைப் பற்றி கவலை எல்லோரையும் வருந்த வைத்தது. —
27
உம்மா அவளை விழுந்து விழுந்து உப சரித்தாள்.
ஒருநாள் விடியல் சுபஹில் எங்கள் உம்மம்மாவின் சரித்திரம் முடிந்து போனது.
ஏராளமானோர் மையத்து வீட்டில் குழுமி விட்டனர். அவளின் சிறந்த குணவியல்புகளை பலரும் போற்றினர். பெண்கள் துயரம் தாளாது கதறி யழுதனர். மைமுன் ஆச்சியின் ஏழாம் கத்தம் நிறைவேறிய தருணத்தில் குடும்பத்தார் கூடி ஏகமனதாக ஒரு தீர்வை எடுத்தார்கள்.
பெட்டியைத் திறந்து பார்த்து
விடுவது, என்ற தீர்வே அது. தேர்தல்
முடிவுகளை செவிமடுக்க வானொலிப் பெட்டியின் அருகே காத்திருக்கும் வாக்காளர்களின் ஆர்வம் எங்களில் குடி கொண்டது.
பெட்டி திறக்கப்பட்டது, கூடவே ஆச் சரியமும் காத்திருந்தது. பெட்டிக்குள் பெறுமதியான பொருட்கள் இருக்குமென அங்கலாய்த்தவர்கள், வாய்மூடி மெளனி ஆனார்கள். பெட்டிக்குள் உம்மம்மாவின் பழைய புதிய ஆடைகளும், தஸ்பீஹற், பிரார்த்தனை மாலைகளும், சிதறிக் கிடந்தன. புதையல் கண்டெடுக்க நினைத்தவர்களின் முகங்களில் கருமை படர்ந்த சலிப்பு.
சல்லடை போட்டுத் தேடியும் பெட்டிக்குள்ளிருந்து எதனையும் கண் டெடுக்க இயலவில்லை. அந்தப் பெட்ட கத்தினுள் கைக்கடக்கமான சிறிய தகரப்

Page 16
பெட்டியொன்று இருந்தது. இப்போது பரவலான உற்சாகம் பிரவகித்தது. இந்தச் சிறிய பெட்டிக்குள் பணம், நகை கூடுதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிர்மூலமானது. அதனுள் பழைய, பழுப்பேறிய கறுப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று மட்டுமே இருந்தது.
ஒரு அழகான இளைஞனி , புகைப்படத்தில் புன்முறுவல் பூத்தவாறு காட்சி கொடுத்தான்.
எல்லோர் முகங்களிலும் ஆச்சரியக் குறி! “யார் இந்த இளைஞன்?”
இந்தப் புகைப்படத்தைப் போய் உம்மம்மா பெரிய சொத்தாக நினைத்து ஏன் பாதுகாத்தாள்? அந்தப் புகைப்படம் நிச்சயமாக அவள் கணவர் சுல்தான் அப்பாவின் சாயலிலும் இல்லை! அவளது பிள்ளைகள் ஒருவருனேதும் உருவத் திலும் இல்லை! அப்படியானால் இவன் uJITit?
கேள்விக் கணைகள், யாவரையும் துளைக்கவாரம்பித்தன. சிக்கலைத் தீர்க்க எவராலும் முடிய வில்லை. நான் தர்க்கமாக யோசித்து விட்டுச் சொன்னேன்.
“இந்த நொடியை அவிழ்க்க நாங்க, இறந்த காலத்திற்கு போனாலும் முடியாது. உம்மம்மாவின் இளமைக் காலங்களை அறிவதற்கு, அப்போது நாங்கள் யாரும் உயிர் தரித்திருக்க வில்லை.
இதுபற்றி தகவல் தரக் கூடிய ஒருவர் மட்டும் தான் உயிரோடு
28
இருக்கிறார். உம்மம்மாவின் சகோதரர் ரசீத் அப்பா. அவர் இப்போது நோயிலும் மூப்பிலும் மாமி வீட்டில் அல்லாடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் படத்தைக் காட்டி கேட்பதுதான் சரி!” ரசீது அப்பா படத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு கூறத் தொடங்கினார்.
அந்த இளைஞன் ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளையாம். மைமுன் ஆச்சியின் இளமைக் கால அழகில் லயித் து அவளைத் திருமணம் செய்ய விரும்பி னானாம். ஏழை விட்டில் திருமணம் செய்ய அவனது தந்தை தடையாக இருந்தாராம். இவர் களர் சிநேகம் ஊரில் கசியத்துவங்கியதும் மைமுன் ஆச்சியின் வாப்பா அவசரமாக சுல்தான் அப்பாவுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். இதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்த இளைஞன் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டான்.
* ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையினை ரசீது அப்பா நினைவு கூர்ந்து விளக்கினார். ஒரு நல்ல தாயாக, தாரமாக, பாட்டியாக வாழ்ந்துவிட்ட மைமுன் ஆச்சி மனசாட்சிக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாள். உம்மம்மா என்ற புத்தகத்தை என்னால் விமர்சிக்க முடியவில்லை. எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து மறைந்துவிட்ட 2–üD|DDLDT.
‘ஒரு புரியாத புதிர்!’
 

கழதநர்கள்
மல்லிகை ஏப்ரல் - 2003 இதழ் அட்டையில் கவிஞர் செ. குணரத்தினம் திருமுகம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீண்ட காலமாக தொடர்ந்து எழுதி வருகின்ற மண்ணின் மைந்தனின் - முகம் - மல்லிகையில் பதியப்பட்டது சிறப்பானதாகும்.
மல்லிகை கண்ட புதிய களம் என்ற குறிப்பு - மிக முக்கியமானது. கம்பன் விழாவில் கடை விரித்தவர்கள் - ஈழத்து படைப்பாளிகளின்ஒரு சிலரின் நூல்கள் இருந்தது. ஆனால் மல்லிகைப் பந்தலில் அனைத்தும் நம்மவர்களின் படைப்பு . நாவல் நகர் பொன்னுத்துரை என்ற அன்பர் துரைவி வெளியிட்ட சாரல் நாடனின் மலையகம் வளர்த்த தமிழ் - எனது மலையக மாணிக்கம் இரண்டு நூல்களையும் வாங்கி உயர்தர வகுப்பில் படிக்கும் தன் மகனுக்கு படிக்கக் கொடுத்த காட்சியை நேரில் கன்டேன்.
அது மாத்திரமல்ல, சுழற் பந்து வீச்சாளர் முரளிதரனின் தந்தை திரு.முத்தையா மல்லிகை ஆண்டு மலரை வாங்கி - அதனை கண்டிக்கு போகும் பொழுது வாசித்துக் கொண்டு வந்தார். அவருடன் பயணம் செய்த என்னிடம் இது போன்ற சஞ்சிகைகளை நாம் ஆதரிக்க வேண்டும் என்றார்.
அந்தனி ஜீவா
எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் சமய சமூக சேவையாளர்கள் போன்றோர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கெளரவிக்கும் வகையில் அவர்களின் படங்களை தொடர்ந்து மல்லிகை அட்டைப் படங்களாகப் போட்டு வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் கவிஞர் செ.குணரத்தினம் அவர்களுடைய படம் மல்லிகையை அலங்கரித்தது.
60வது அகவை பூர்த்தி செய்த கவிஞரைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பை மல்லிகை
வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன். 1967களில் தினபதி பத்திரிகை
இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘கவிதா மண்டலம்' என்ற ஒரு
பகுதியை ஆரம்பித்து ஈழத்தில் உள்ள பிரபல கவிஞர்களின் பெயர்பட்டியலை 29

Page 17
வெளியிட்டு கவிதை எழுத ஆர்வம் உள்ள இளங் கவிஞர்கள் தமது ஆக்கங்களை குறித்த கவிஞர்களிடம் காட் டித் திருத்தக் கழிவகற்றி பரிர சுரத துக கேற்ற வகையில் கவிதைகளை ஆக்கி அனுப்பும்படி இளங்கவிஞர்களை வேண்டி நின்றது தினபதி, குறித்த பத்திரிகையின் நோக்கம் இளக் கவிஞர்களை ஊக்குவிப்பதே ஆகும்.
தினபதி வெளியிட்ட அந்தப் பிரபல
கவிஞர்கள் பட்டியலில் செ. குணரத்தினம் அவர்களுடைய பெயரும் இடம் பெற்றிருந்தது. இவருக்கு அப்போது வயது 27 ஆகும். இளங்கவிஞரான இவரின் பெயர் பிரபல கவிஞர்களின் பட்டியலில் சேர்ந்து கொண் டமை பிறிதொரு கவிஞருக்குப் பொறுக்கவில்லை. அந்தக் கவிஞர் பொறுமை இழந்து தினபதி ‘க விதா மணி டல த தல தமது ஆவேசத்தைக் கொட்டித் தீர்த்திருந்தார். மனசில் ஞாபகத்தில் உள்ள அந்த ஆவே சக கவிதை சிலவற்றைத் தருகிறேன்.
காலத்தால் மூத்த கவிஞர் வரிசையில் ஏலத்தில் பிஞ்சு பழமானார் ஆள் ஏற்றம் கண்டு பிறந்துள்ள கோளாறு. கந்தையா வித்துவான் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஐயா வரிசையில் எழுதிப் பழகுகின்ற சேனாக் குணரத்தினம் சேர்தல் முறையோ?
30
என்று பொருள் படவே தமது வெறுப்பைக் காட்டியிருந்தார் அந்தக் கவிஞர்.
எந்தச் சலசலப்புக்கும் தலை சாய்க்காமல் தமது எழுத்தாற்றலால் மூன்று தலைமுறைகளாக இடைவிடாது எழுதிவரும் செ.கு மட்டக் களப்பு மாவட்டத்தில் புகழ்பூத்த கவிஞர்களுள் மூத்த கவிஞராகத் திகழ்கிறார் என்று அன்புமணி குறிப்பிடும்போது இதயம் பூரிப்படைகின்றது.
க.இரத்தினசிங்கம் கிளிநொச்சி
முருகபூபதியின் தாயார் காலமான செய்தி காலம் தாழ்த்தியே என்னை வந்தடைந்தது. இறுதிநாள் அந்திமக் கிரியைகளில் கலந்து கொனன்டேன்.
தாங்களும், மேமன்கவியும் இரு தடவைகள் வந்து துக்கம் விசாரித்துப் போனதாக முருகபூபதியின் தங்கை ஜெயந்தி கூறினார். நண்பர் பூபதிக்கு பேரதிர்வாய் இருக்கும். ஒன்று தாயின் மறைவு, மற்றையது கடுமையான மார்பு அறுவைச் சிகிச்சை. அவ் அறுவைச் சிகிச்சை ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம் பெற்றதாக அஞ்சல் வரைந்திருந்தார்.
மு.பவிர்
மல்லிகையின் 38-வது ஆண்டுமலர் தேவையாயரின் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளவும்.
 

“நின்பிரிவினும் சுடுமோ.”
பிறந்து. வளர்ந்து. வாழ்ந்த. நம் பாரம் தாங்கிய
எம் மண்ணே.
உனக்கு வணக்கம்! நலம் விசாரிப்புக்கள் நமக்குள் எதற்கு? எனக்குத் தெரியும் என்றும்.
நீயேதான்!
நான்தான் மாறிவிட்டேன் இல்லையில்லை மாற்றப்பட்டுவிட்டேன்! நாடுதாண்டித் தகிக்கும் பாலையில். நிகழ்காலத்தைச் சிதைத்து. எதிர்காலத்தைச் செதுக்க முனைகிறேன்! இறந்தகால இனிய நினைவுகள் இருப்பதால் இன்னும் உடற்கூட்டில் உயிர்இருக்கிறது! உறவினர்க்குப் பணம் காய்க்கும் மரமாய், சுடு பாலையில் விதைக்காமலே முளைத்திருக்கிறேன்! பாலை வெப்பம் உடலை மட்டும்தான் சுடுகிறது. நின்பிரிவு சுடுகிறதே மனதை
ஆற்ற,
பதிலனுப்பு காத்திருக்கிறேன்.
3.

Page 18
மண்ணின்
மைந்தர்கள்
ಕ್ முருகானந்தனர்.
முகத்தாருக்கு மூன்று நான்கு நாட்களாக காய்ச்சல்!
இந்த அறுபது வருட வாழ்வில் காய்ச்சல் என்று அவர் படுத்ததில்லை. ஆஸ்பத்திரிப் பக்கம் தலை வைத்துப் படுத்த சம்பவம் அவர் வாழ்க்கை வரலாற்றில் கிடையாது. அவர் பிறந்ததுகூட வீட்டில் தானாம்.
முகத்தார் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற சண்முகத்தார், எப்போ தாவது காய்ச்சல், தலையிடி என்று வந்தால் தூதுவளையும் கொத்தமல்லியும் குடிநீர் போட்டுக் குடிப்பார். நோய் பறந்துவிடும். வயிற்றுக் கோளாறு என்று வந்துவிட்டால் தேன் கைகண்ட மருந்து.
இம்முறையும், நான்கு நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் வந்தபோது இதே கைமருந்துதான்! ஆனால் இம்முறை மூன்று நான்கு முறை குடிநீர் போட்டுக் குடித்தும் கேட்கவில்லை. காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. ‘இதென்ன புதுமையான காய்ச்சலாகக் கிடக்குது என்று இலட்சுமியிடம் அலுத்துக் கொண்டார்.
‘இஞ்சாருங்கோ. சொல்லுறனெண்டு கோவிக்காதையுங்கோ. ஒருக்கால் ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து எடுத்து வருவமே' கணவனை நோக்கிப் பரிவோடு கேட்டாள் இலட்சுமி.
‘உனக்கென்ன விசரேயப்பா? நான் என்ரை வாழ்க்கையிலை இங்கிலீசு மருந்து பாவிச்சிருப்பனே.? எனக்கிந்த ஆஸ்பத்திரி மருந்துகள் சரிப்பட்டு வராது.” என்று சீறிவிழுந்தார்.
32 −

உண்மைதான். அவர் பனடோல் கூடப் பாவிப்பதில்லை. 'வெளிநாட்டி லிருந்து போத்தல், போத்தலாகப் பிள்ளைகள் அனுப்புகின்ற விலை யுயர்ந்த விற்றமின் குளிசைகளைக் கூடப் பாவிக்கமாட்டார். ' என் ரை பொடியள் அனுப்பினது என்று பிறரிடம் காட்டி பெருமைப்படுவதோடு சரி.
நான்கு நாட்களாகியும் காய்ச்சல் விடவில்லை என்ற தவிப்பு இலட்சுமிக்கு. அவரைப் பரிவோடு நோக்கினாள். உடல் மெலிந்து, வெளிறிப் போயிருந் தார். காலையிலிருந்து தண்ணி வெந்நீர் கூட இல்லாமல் இருப்பதைக்கண்டு அவள் கலங்கினாள். இந்த மனிசன் சொல்லுக் கேட்காது.
முகத்தாருக்குப் படுக்கையில் படுத்திருப்பதே கடினமாக இருந்தது. கைகால் எல்லாம் குத்தி முறித்துக் கொண்டு வந்தது. நாரியும், கழுத்தும், பிடரியும் பிடிப்பது போல படுக்க முடியாமல் ஒருக்களித்தார். உண்மை யிலேயே இந்தக் காய்ச்சல் அவரை ஒரு பாட்டம், பிடித்து வாட்டிவிட்டது. கண்கள் குழிவிழுந்து சோர்ந்து காணப் பட்டார்.
‘இஞ்சாருங்கோ. வீண் பிடிவா தத்தை விட்டுட்டு எழும்புங்கோ. இதென்ன யாழ்ப்பாணமே?. இடம் பெயர்ந்து வன்னிக் காட்டுக் கிராமங் களை வந்தடைந்த எல்லாரையும்தான் இந்தப் பொல்லாத காய்ச்சல் போட்ட லைக்குது. காய்ச்சல் வராத ஆக்களே யில்லை. இந்தக் காய்ச்சல் எத்தனைக்
குழந்தையள், முதியவர், கர்ப்பிணித் தாய்மார் எல்லாம் செத்துப் போச்சு துகள் தெரியுமே!. மருந்தில்லாமல் சனம் படாதபாடுபடுகுதுகள். நீங்கள் செல்லம் கொட்டுறியள்.”
‘இந்த ஊர் ஆஸ்பத்திரியளிலை நல்ல டாக்குத்தர்மார் இருக்கினமே?” இடைமறித்த முகத்தரைக் கடுப்புடன் பார்த்தபடி இலட்சுமி, ‘நல்ல கைராசிக் கார டாக்குத்தர் இந்த ஆஸ்பத்திரி
யிலை இருக்கிறாராம். இருபது
வருஷமாய் இங்க வேலை செய்யுறார். ஒருக்கால் மருந்தெடுத்தால் சுகம் வரு மாம். கிராஞ்சி, ஜெயபுரம், ஸ்கந்தபுரம் என்று தூர இடங்களிலை இருந் தெல்லாம் வாகனம் பிடிச்சுக் கொண்டு வருகுதுகள். கனக்க ஏன், பொடியள் கூட மருந்தெடுக்க வருகுதுகள்.” என்று ஆதங்கத்துடன் கூறினாள்.
முகத்தார் பதிலேதும் சொல்ல வில்லை.
கட்டில் பலகை முதுகை அண் டவே சினத்துடன் கண் விழித்துப் பார்த் தார். முகட்டுக் கூரையில் பொத்தல் தெரிந்தது. முகத்தாரின் மனதிலே சலிப்பு!
உண்மைதான்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை யாழ்ப்பாணத்தில் சுகபோகம் அனுபவித்தார், இப்படியெல்லாம் வரும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். கல் வீடும் வளவும், மெத்தை தளபாடமும், மின் விசிறியும்
33

Page 19
என்று வாழ்ந்தவர்கள், இன்று தறப்பாள் கட்டிய ஒலைக்குடிசையில் நுளம்புக் கடியுடனும், பாம்புப் பயத்துடனும். சொந்த நாட்டுக்குள்ளேயே ஒரே இரவில் இடம் பெயர்ந்து அகதி வாழ்வு வாழவேண்டி ஏற்பட்டு விட்டதே!
முகத்தார் என்றால் கரணவாய், கரவெட்டி, நெல்லியடிப் பகுதியில் அறியாதார் இல்லை. செல்வச் செழிப்பு ஒருபுறம், தலைமை வாத்தியார் என்ற மமதை மறுபுறம், ஊரிலே எந்த அமைப் பென்றாலும் தலைவராகவோ, செயலா ளராகவோ இருந்து மிடுக்கோடு செயற் பட்ட வாழ்வு எல்லாம் ஒரு இரவில் இல்லை என்றாகிவிட்டது.
முகத்தாருக்கு இரண்டு ஆண், இரணர் டு பெணி என்று நான்கு பிள்ளைகள். எல்லோரையும் நன்றாகப் படிக்க வைத்தார். மூத்தவன் மகப்பேறு நிபுணராக ரியூப் பேபிப் பிரிவில் நியூ யோக்கில் பணியாற்றுகிறான். அடுத்த வன் பெண் நோய் மருத்துவ நிபுண னாகி குளோனிங் முறையில் குழந்தை உருவாக்கும் விஞ்ஞானியாகி இலண் டன் ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் பணிபுரிகிறான். இரண்டு மகள்மாரும் டாக்டர்களைக் கைப்பிடித்து கனடா விலும், அவுஸ்ரேலியாவிலும் பணி புரிகிறார்கள்.
பிள்ளைகள் படித்து பிரபலமான
டாக்டர்களாக இருப்பது பற்றி முகத்
தாருக்கு அளவில்லாத பெருமை. வரு வோர் போவோரிடமெல்லாம் தமது பிள்ளைகளிடம் சிகிச்சை பெற வெள்
ஊக்காரர் எல்லாம் கொக்குத் தவ
மிருப்பதாகப் பீற்றிக் கொள்வார்.
கரணவாயில் முகத் தாரும் , இலட்சுமியும் தனியே இருந்தாலும் உற
வினர்கள் நண்பர்கள் என்று அயலட்
டையில் உதவி ஒத்தாசைக்குக் குறை வேயில்லை.
யுத்தபூமியிலிருந்து ஏன் கஷ்டப்பட வேண்டும் என்றும், தம்மோடு வெளி நாட்டில் வந்திருக்கும்படியும் பிள்ளை கள் மாறி மாறிக் கடிதம் எழுதினார் கள். ஏனோ முகத்தாருக்குப் போக மனம்
வரவில்லை. பேரப்பிள்ளைகளுடன்
கொஞ்சி விளையாட முடியவில்லையே
என்ற ஏமாற்றம் இலட்சுமிக்கு.
முகத்தாருக்கு மண் பற்றைவிட, தனது சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டுப் போவதுதான் முடியாமலிருந்தது. இங்கு வன்னிக்கு இடம் பெயர்ந்து வந்த பின்னரும் யாழ்ப்பாணத்திலுள்ள தனது காணி பூமிகள் பற்றியும், அதன் வரும்படி பற்றியும், அவை எல்லாம் வீணாவது பற்றியுமே அரற்றிக் கொண் 19(5ÚUTÍ.
இன்று காய்ச்சல் அகோரத்தில் கூட யாழ்ப்பாணத்துக் காணியில் மாங்காய் எல்லாம் முத்தியிருக்கிற நேரமிது என்று பிதற்றிக் கொண்டிருந்தார்.
இன்று காலையிலிருந்தே எதை
முகத்துக்கருகே கொண்டு சென்றாலும்
34
முகத்தாருக்குப் பிரட்டிக் கொண்டு வந்தது. இலட்சுமி கரைத்துக் கொண்டு வந்த பால், தேசிக்காய்த் தண்ணியைக் கூட நிராகரித்து விட்டார்.
 

“காலையிலிருந்து வெறும் வயிறு. என்னெண்டாலும் குடியுங்கோ. என்ன விருப்பமாக இருக்கு?’ இலட்சுமி அன்போடு வற்புறுத்தினாள்.
‘செவ்விளணி எண்டா குடிக்க 6) Tib....'
இலட்சுமி உடனே அருகிலுள்ள கடையிலிருந்து இளநீர் வாங்கி வந்து கொடுத்தாள். அவளது அன்பான அரவணைப்பில் எழுந்தமர்ந்திருந்து இளநீர் குடித்ததும் முகத்தாருக்கு உடலில் புத் துணர்வு ஏற்படுவது போலிருந்தது.
‘‘செவ்விளணி என்ன விலை யப்பா?”
'முப்பது ரூபா.”
முகத்தாருக்கு குடித்த இளநீரே வெளியே வந்துவிடும் போலிருந்தது. எவ்வளவு பணமிருந்தாலும் இளம் வயதில் ஏற்பட்ட சிக்கன எண்ணம் முகத்தாருக்கு ஊரில், வீட்டில் கிணற் றடியில் குலை குலையாகக் காய்த் திருக்கும் செவ்விளநீர்ப் பிள்ளைகள் நினைவுக்கு வந்தது.
நாங்கள் எல்லாத்தையும் இழந் திட்டம். சனங்கள் பாடுபட்டுத் தேடிய சொத்துக்களைக் குண்டு போட்டும், செல் அடிச்சும் அழிச்சுப் போட்டாங் கள். இந்த இழப்புகைைளக் கணக்கில அடக்க முடியாது. ம். இங்க இடம் பெயர்ந்து வந்த பிறகும் நிம்மதியாக இருக்க விடுறாங்களில்லை. ஒரே செல் லடியும், குண்டு வீச்சும் தொடருது.
இயக்கப் பொடியள் இல் லாட்டில் வன்னியையும் முடிச்சுப் போடுவான்கள் முகத்தார் யோசித்த வணினம் படுத்திருந்தார்.
யோசனையில் ஆழ்ந்திருந்தவர், இலட்சுமியின் குரல் கேட்டு விழித்தார்.
; : என்னங்கோ,. ஆஸ்பத்திரிக்குப் போலமே?.”
‘' எனக்கு இப்ப காய்ச்சல் குறைஞ்சிருக்கு. இங்கே இருக்கிற டாக்குத்தர்மார் எப்படிப்பட்டவையோ..? அரை குறைப் படிப்பு. பொடியளும் வைத்தியம் செய்யுறாங்களாம். என்ர பிள்ளையளைப் போல இவங்கள் மேல் படிப்பெல்லாம் படிச்சவங்களே?. ஒரு ஸ்பெசலிஸ்ட் கூட இல்லாத ஊர் இது. நீ குடிநீர் போடு. இந்த முறை காய்ச்சல் விட்டவுடனை கொழும்போட போவம் ...' என்று வாத்தியார் தோரணையில் சிடுசிடுப்புடன் பெருமை
யடித்தார்.
* காய்ச்சல் அகோரத்திலையும் மனிசனுக்குத் திமிர் குறையவில்லை. என்று நினைத்துக் கொண்டாள் இலட்சுமி.
ஆனால் பிற்பகலில் காய்ச்சல் இன்னும் உக்கிரமானது. பேய் பிடித்த வரைப் போல் முகத்தாரை உலுப்பி ஆட்டியது. ’ எடியே. நான் சாகப்
போறன். ஐயோ. இஞ்சாலை வாடி.
y
கைகாலைப் பிடியடி.’ நோயின் வேதனை தாங்கமுடியாமல் முகத்தார் புலம்பினார்.
35

Page 20
இலட்சுமி அருகே வந்தாள். *’ என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போ. இனித் தாங்கேலாது. நான் சாகப் போறன்.” என்று அவளது கையைக் பிடித்தபடி குளறினார்.
வைத்தியசாலைக்கு அவர்கள் சென்றபோது அங்கே ஏற்கனவே எக்கச் சக்கமாக கூட்டம் நிரம்பி வழிந்தது.
‘‘மருந்துகளும் அனுப்புறாங்க ளில்லையாம். மருந்துகள் எல்லாம் தட்டுப்பாடாம். இரண்டு பனடோல்தான் கொடுக்கினமாம்.” - ஒருவர்.
* காலையிலிருந்து இந்த டாக்குத்தர் ஒய்வில்லாமல் பார்த்துக்
கொண்டு இருக்கிறாராம்.” - இன்னொ
ருவா.
‘ஒமோம். ஒரு சினப்பு சிடுப்பு இல்லாமல் தனி ஒராளாக இருந்து இவ்வளவு பேரைப் பாக்கிறார். அவருக்கும் காய்ச்சலாம். மருந்து போட்டுக் கொண்டு வேலை செய்யுறார். கடவுள் மாதிரி.” வேறொருவர் கூறுகிறார்.
‘உவர் எந்த ஊராம்?”
‘யாழ்ப்பாணம் தானாம். இங்கே வன்னியிலிருந்து படிச்சு பாஸ் பண்ணி கம்பஸ் போய் டாக்குத்தரானவை இந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்காமல் சொகுசு தேடி கொழும்பு, கண்டி யிலையும், வெளிநாட்டிலையும் பணம் தேடுகினம். இதுதான் எங்கட ஆக்க வின்ரை மண் பற்று.”
கியூவரிசையில் காத்திருந்த முகத் தாரின் மனதை நெருடியது.
“இங்கே பிறைவேற் டாக்குத்தர் மாரும் இல்லையோ?” என்று இலட்சுமி யிடம் கேட்டார். ‘‘கொஞ்சம் பொறுங் கோ. கிட்ட வந்திட்டம். இன்னும் ஐஞ்
சாறு பேர் தானே முன்னுக்கு.”
இலட்சுமி கணவனைச் சாந்தப்படுத் தினாள்.
முகத்தாரின் முறை வந்தது. களைத்துப் போயிருந்த மருத்துவரிடம் தனது வருத்தம் பற்றி ஆதியிலிருந்து அந்தம் வரை கூறினார். அவர் சொல் வதையெல்லாம் பொறுமையுடன் கேட்டு, அவரைப் பரிசோதித்து மருந்து கொடுத்தார் டாக்டர்.
‘‘ என்ரை இரண்டு மக்களும் டொக்ரர்மார். மருமகன்மாரும் டொக்ரர் தான்.” எழும்பும் போது பெருமிதமாகக் கூறினார் முகத்தார்.
‘எங்கே வேலை செய்யினம்?”
‘இலண்டனிலை. கனடாவிலை, அமெரிக்காவிலை, அவுஸ்ரேலியா விலை.” என்று அடுக்கிக் கொண்டு போன முகத்தாரை சிரித்தபடி நோக்கிய டாக்டர் 'அப்பாவுக்கு மருந்து தர ஆரும் அருகில் இல்லை.” என்றார்.
முகத்தாருக்கு சுரீர் என்று நெஞ் சில் முள்ளுக் குத்தியது போலிருந்தது. மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் பிறந்தன.
வீட்டிற்கு வந்து மருந்துகளை
 

ஒழுங்காகப் போட்டார். மூன்றாவது நாளில் காய்ச்சல் தணிந்து உடல் லேசாகியது.
அப்பாவுக்கு மருந்து தர அருகில் ஆருமில்லை என்ற டாக்டரின் வார்த்தை கள் மீண்டும் மீண்டும் காதோடு ஒலித்தது. ‘அருகில் இருந்து அம்மா, அப்பா, சொந்தம், சுற்றம் என்று பழகி இருப்பது சிறப்பா? வெளிநாடுகளிலி ருந்து பொன்முட்டை இடுவது சிறப்பா?. என்று முகத்தார் பலமாக யோசித்தார்.
b. எல்லாம் தடம்புரண்டு போலித்தனமாகப் போச்சு. எங்கட பண்பாடு கலாச்சாரம் இனம், மொழி எதையும் பற்றிச் சிந்திக்காமல்..ம். முகத்தாருக்கு முழிப்பு ஏற்பட்டது.
* பொடியண் கெட்டிக் காரணி தானப்பா.”
‘ஆருங்கோ..?” என்று நிமிர்ந்து பார்த்த இலட்சுமியிடம், 'அதுதான். இந்த டாக்குத்தர்தான்.” என்றார், முகத்தார். به
*’ ஒம் பாருங்கோ. இங்கே சனம் படுற கஷ்டத்திற்கு, இப்பிடி ஒரு சிலராவது இல்லாமல் போயிருந் தால்.ம். இங்கே நிலைச்சு நின்று பணி செய்யுறதாலைதான் இவரைத் தெய்வ மென்று சனம் கதைக்குது.”
“இது பணி மட்டுமில்லையப்பா. சேவை. பாராட்டப்பட வேண்டிய சேவை.”
எங்கட வாழ்க்கை முறை
சுகமாகி எழுந்த முகத்தார் தனது பிள்ளைகளுக்கு கடிதம் எழுதினார்.
: நானும் என்ர பிள்ளையஸ் வெளிநாட்டிலை பெரிய டொக்ரர் என்று பெருமையடிச்சுத் திரிஞ்சன். ஆனால் இப்ப விளங்குது. இந்த மண்ணில நிலைத்து நின்று சேவை புரிகிற வைத்தியர்கள் உண்மையிலேயே தெய்வப் பிறவிகள். நீங்கள் பெரிய
பெரிய டொக்ரர்களாக இருக்கலாம்.
37
ஆனால் இங்கே. இந்த மண்ணிலே
கஷடப்படுகின்ற மக்களோட மக்களாக
நி ைலத்து நினி னு, போரினி கொடுமைகளுக்கெல்லாம் முகம்
கொடுத்து வாழ்ந்து, இரவு பகல் எனறு
பாராமல் , தம்முடைய சுகபோக வாழ்வைச் சிந்திக்காமல் சேவையாற்றி வருகிற இவர்களின் முன்னே நீங்கள் சிற்றெறும்பாக எனக்குத் தெரிகிறீர்கள். முடிந்தால் எங்கள் நாட்டிற்கு வந்து, எங்கள் மக்களுக்குக் கொஞ்சக் காலமாவது சேவை செய்யுங்கள்.
நீங்கள் எனக்கு மட்டும்தான் மைந்தர்கள். எனக்கு வருத்தம் வந்த போதுகூட மருந்துதர நீங்கள் யாரும் அருகிலில்லை. ஆறுதல் சொல்லக் கூட அருகிலில்லை. ஆனால் இங்கே சேவை செய்கிற டொக்ரர்களோ இந்த மண்ணில் வாழ்கின்ற அனைவருக்கும் மைந்தர்கள்.
ஆம்! இவர்கள்.
மண்ணின் மைந்தர்கள்!

Page 21
ஈழத்துப் படைப்பாளி
தேவகாந்தனுடன்
ஓர் இலக்கியச் சந்திப்பு
- ப. ஆப்டீன்
கடந்த பன்னிரண்டு வருட காலமாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஈழத்துப் படைப்பாளி தேவகாந்தன் அவர்கள் தற்பொழுது நாடு திரும்பியுள்ளார்.
அமைதியான சுபாவமும், அடக்கமும் நிரம்பிய எழுத்தாளர் தேவகாந்தன் அவர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் ஆக்க இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பல நாவல்களையும் சிறுகதைகளையும் படைத்துள்ளார்.
கணையாழி, சூர்யோதயா, கல்கி பயணம், அம்பலம், சதங்கை, இந்தியா டுடே, தினமணி கதிர் ஆகிய சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகள் காலக் கனா’ என்னும் அவரது சிறுகதைத் தொகுதியில் வெளியாகியுள்ளன.
'மல்லிகைப் பந்தல்" ஒழுங்கு செய்திருந்த தேவகாந்தன் இலக்கியச் சந்திப்பு கொழும்பு-13, ழரீ கதிரேசன் வீதி 200ம் இலக்கத்தில் இலக்கிய ஆர்வலர் உதயகுமார் அவர்களின் வீட்டு மேல்மாடியில் இடம் பெற்றது.
பல இலக்கிய அபிமானிகளும் எழுத்தாளர்களும் சமூகமளித்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு மேமன்கவி தலைமை வகித்தார்.
எழுத்தாளர் தேவகாந்தன் அவர்களைப் பற்றியும் அவரது இலக்கியப் பங்களிப்பு பற்றியும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அறிமுகம் செய்துவைத்தார். இந்தச் சந்திப்புக்காக தமது வீட்டு மேல்மாடியை கொடுத்துதவிய உதயகுமார் அவர்களின் இலக்கிய ஆர்வத்தைப் பாராட்டினார்.
தலைமையுரை நிகழ்த்திய மேமன்கவி அவர்கள் தமது உரையில், தீவிரமான
38
 
 
 
 
 

கருத்துக் களை உள்ள டக் கய படைப்புகள் பிரதான பத்திரிகை சஞ்சிகைகளில் வெளியாவதில்லை. அவை எப்பொழுதும் சிறுசஞ்சிகைகளில் மட்டுமே வெளியாகின்றன என்று இவற்றிற்கான காரணத்தை வினவினார்.
இது தொடர்பான கருத்துப் பரிமாறல்களுக்குப் பின், எழுத்தாளர் தேவகாந்தனின் உரை இடம் பெற்றது.
தமிழ்நாட்டில் பெரிய பத்திரிகைகள் சஞ்சிகை நிறுவனங்கள் இலக்கியப் படைப்புகளின் தரங்களைப் பார்ப்ப தில்லை. அவை பண வசூலையும், விற்பனை அதிகரிப்பையும் மட்டுந்தான் பரிசீலிக்கும் பத்திரிகை காரியாலயத்தில் மிகப்பிரபல எழுத்தாளர் பதவி வகித் தாலும் அவ்ரால் விற்பனை வீழ்ச்சி யடைந்தால், அவர் உடன் பதவி நீக்கம் செய்யப்படுவதுடன், அவரது படைப்பு களுக்கும் இடம் இராது போகிறது.
கன தியான புத் தகம் வெளி யிடுவதிலும் விற்பனை செய்வதிலும் பல பிரச்சினைகளுக்கு ஒருவர் அங்கே முகம் கொடுக்க வேண்டிய நிலைமையுண்டு. தமிழ் நாட்டில் பெருந்தொகையான வாசகர்கள் இருப்பினும் , தரமான வாச்கர்கள் கணிசமானவர்களே. இந்தச் சூழ்நிலையில் வெளிநாட்டுத் தமிழர் ஒருவருக்கு அங்கே நூல் வெளியீடும் சிற்றிதழ் நடத்துகையும் மகா சிரம மானவை. எனினும் குறிப்பிட்ட காலம் இலக்கு வெளியீட்டையும், இலக்கு காலாண்டிதழையும் எனக்கு நடத்த முடிந்தது. இப்போது நினைக்க திருப்தி
யாகவே இருக்கிறது.
சாதாரண மாதாந்த பத்திரிகைத் தொடர்கதைகளே நூலுருவம் பெற்று இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் தேவகாந்தன். அவர்கள்.
இது தொடர்பாக எழுத்தாளர் ராஜ பூரீகாந்தன் அவர்கள் கருத்துத் தெரி விக்கும் போது, தமிழகத்தோடு ஒப்பிடும் போது, குறைந்த வாசகர் கூட்டத்தைக் கொண்ட எமது சிறிய நாட்டில் புத்தக விற்பனை நன்றாக இருக்கிறது.
நீதிபதியின் மகன் என்ற தலைப்பில் நான் அழகு சுப்பிரமணியம் அவர்களின் பன்னிரண்டு சிறுகதைகளை மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டேன். விற்பனை பெரும் வெற்றி விட்டு விட்டு மூன்று பதிப்புகள் வெளியிட்டும் விற் பனையில் எனக்குத் தோல்வி ஏற்பட வில்லை என்றார்.
ஒரு மாலைப் பொழுதின் இனிய இலக்கிய சந்திப்பில் எஸ்.தேவராஜ், உதயகுமார், பூபாலசிங்கம் பூரீதர்சிங், ழரீதர் பிச்சையப்பா ஆகியோரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.
எழுத் தாளர் தேவ காந் தனி தமிழகத்தில் பல நூல்கள்ை வெளி யிட்டுள்ளார்.
39

Page 22
படிக்காதவர்
படிப்பித்த
பாடங்கள்
உடுவை.தில்லை நடராசா
உடுப்பிட்டி அ.மி.கல்லுாரி மாணவனான என் வயது 15. மாணவர்களுக்காக ‘மாணவன்' என்ற சஞ்சிகையை அச்சிட்டு வெளியிடும் நோக்கத்தோடு சிறிது சிறிதாக சேமித்த சுமார் முன்னூறு ரூபா பணத்தோடு யாழ். நாவலர் அச்சகத்தில் வேலைகளை ஆரம்பித்தேன். அப்பாவுக்குத் தெரியாமல் அச்சிட விரும்பியது - யாழ்.நகர பஸ் தரிப்பிடத்துக்கு வராமல் ஆனைப்பந்தி சந்தியில் இறங்கி நாவலர் அச்சகம் போய் வரக்கூடிய வசதி - குறைந்த அச்சுக்கட்டணம் - இதனால் நாவலர் அச்சகத்தைத் தெரிவு செய்தேன். 1962ம் ஆண்டு 115 ரூபா கொடுத்து 1000 மாணவன் பிரதிகளை அச்சிட்டேன். பிரதியொன்றின் விலை 15 சதம். வீட்டில் மூடி வைத்த இரகசியம் பாடசாலை மட்டத்தில் பரகசியமாகி - சஞ்சிகைக்கு ஆசிரியனான கத்ை தங்கையால் வீட்டுக்குத் தெரிய வர அப்பாவும் பணம் கொடுத்து மாணவன் வாங்கிப்படித்து விட்டு என்னிடத்தில் பல கேள்விகள்.
'அப்பாவின் பெயரைச் சொல்லி ஒரு விளம்பரமும் எடுக்க முடிந்ததால் ஒரு பிரதி அச்சிட 10 சதம் செலவு. 12 சதப்படி கடைகளுக்கு விற்கலாம். முதலாவது இதழ் விற்பனைக்காக கடைகளுக்குக் கொடுத்துள்ளேன். இரண்டாவது இதழ் அச்சு வேலைகள் நடக்கிறது. முதலாம் இதழ் விற்பனைக் காசில் மூன்றாம் ' இதழ் அச்சடிக்கலாம். இரண்டாம் இதழ் விற்பனைக்காசில் நாலாம் இதழ். என் கதையை நிறுத்தியது அப்பாவின் அர்த்தம் நிறைந்த சிரிப்பு
“எந்த விஷயத்தையும் ஆரம்பிக்க ஒரு தெளிவான நோக்கம் இருக்க வேணும். என்ன இலக்குகள் என்பது தீர்மானிக்கப்பட வேணும் - காசும் மற்ற விஷயங்களும் போதியளவு இருக்குதா? எல்லாம் செய்யிறது சாத்தியப்படுமா ? பலன்களும் இலாபமும் வருமா ? எல்லாம் கவனிக்காவிட்டால் அரைகுறையிலை அம்போ’ என்றார்.
இரண்டாவது ‘மாணவன் இதழே இறுதி இதழானது. முன்னுாறு ரூபா புத்தக
வெளியீட்டில் மூழ்கியது. புதிதாக ஏதாவது செய்ய முனையும் போது - அப்பா சொல்லிய அரைகுறையிலை அம்போ அடிக்கடி மனதில் தோன்றி பலவாறும் சிந்திக்க
— 40

வைக்கும். அதனால் நல்ல தீர்வுகளைப் பெறாத சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதில்லை.
நிர்வாக சேவை அதிகாரியாக வந்தபின் இலங்கையிலும் வெளிநாடு களிலும் கலந்து கொண்ட பயிற்சி நெறி களில் ஆங்கிலத்தில் படித்ததை அப்பா வின் அம்போ புத்திமதியுடன் ஒப்பிட வேண்டி ஏற்பட்டது. ஆங்கிலத்தில் படித்தவை
PURPOSE- TARGET. GOALSFEASIBILITNY REPORT-BENEFITRETURNS
அப்பா மட்டுமல்ல - முகாமைத்துவ நிர்வாக நுட்பம் தெரிந்த பலர் சாதாரணமாக வாழ்வதால் நாங்கள் அவர்களையும் அவர்களின் அறிவுரை களையும் கணக்கில் எடுப்பதில்லை.
洪洪$托
யாழ். தமிழ்ப்பண்ணை புத்தக சாலைக்கு அண்மையில் அப்பா வேலை செய்த கடை அமைந்திருந்ததாலும் முதலாளி அப்பாவின் நண்பர் என்பதாலும் என் விருப்பம் போல புத்தககங்களை எடுத்துப்படிக்கலாம். 12 வயது மாணவ னாக இருந்தபோது மர்மநாவல்களையும் சினிமா தொடர்பான நூல்களையும் சுவாரஸ்யமாக வாசிப்பேன். ஒரு நாளில் சாதாரணமாக ஆறு புத்தககங்களை வாசித்து முடித்து விடுவேன். இந்த விடயம் அப்பாவுக்கும் தெரியும். சுமார் ஒரு வருடத்துக்குப் பிறகு அத்தகைய வாசிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொன்னார்.
4l
'சின்னக் குழந்தை நடக்கிறதுக்கு முதல் நடைவண்டியைக் கொடுத்து நடை பழக்கிறம் - ஓரளவுக்கு பழக்கம் வந்தால் நடைவண்டி இல்லாமல் நடக்க வேணும். வாசிக்கிறதிலை ஒரு விருப்பத்தை ஏற் படுத்திறதுக்காக துப்பறியும் நாவலும் பேசும்படமும் வாசித்தது போதும், விரை வாக வாசிக்கப் பழகியாச்சு. இனி நல்ல எழுத்தாளர் யார்? நல்ல புத்தகம் என்ன? எல்லாம் தேடி வாசிக்கப்பழக வேணும். இவ்வளவு நாளும் வாசித்த மர்மநாவலும் சினிமாவும் ஒண்டுக்குமே பயன்படாது. இப்படி நூறு புத்தகம் வாசிக்கிறதைவிட சும்மா ஒரு சின்னப்புத்தகம் வாசித்தாலும் வாழ்க்கைக்கும் சோதனைக்கும் பயன்பட வேணும்.
அப்பா சில நாட்களாக சில நூல் களைத்தெரிந்து வாசிக்க வழி காட்டினார். பின்னர் நடைவண்டி இல்லாமல் நடப்பது
போலவே அப்பா இல்லாமல் புத்தகத்
தெரிவு வாசிப்பு, நல்லதைத்தான் தேடி வாசிக்கின்றேன். ஆரம்பத்தில் சிறிது விட்டுப்பிடித்த அப்பா தருணமறிந்து நிறுத்தி சரியான வழியைக் காட்டித் தொடர வைத்திருக்கிறார்.
路供供
நல்லவற்றைத் தேடி வாசிக்க வழி காட்டியவர் எழுதவும் துாண்டிவிட்டார். 1961 டிசம்பர் விடுமுறை ஆரம்பமானதும் தைப்பொங்கலைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி ஈழநாடு காரியாலயத்தல் கொடுக்கும்படி சொன்னார். பல முறை சொன்ன பின் வெட்டி வெட்டி திருத்தி எழுதிக் கொண்டு ஈழநாடு அலுவல
spanyo

Page 23
* கத்துக்கு ஜனவரி முதல் வாரம் சென்று
கட்டுரையைக் கொடுத்த போது - Too
late எங்கடை பொங்கல் முடிஞ்சு போச்சு என்று சொல்லிக் கொண்டு அச்சு இயந் திரங்கள் இருந்த பகுதிக்கு கூட்டிச்சென்று காட்டினார்கள், ஈழநாடு பொங்கல் சிறப்பிதழ் என்னைப் பார்த்துச் சிரித்தது. அதற்குப்பின்தான் பத்திரிகையின் சில பகுதிகள் பல நாட்களுக்கே முன் தயாராகும் இரகசியத்தைத் தெரிந்து கொண்டேன்.
邻并洪
அப்பாவுடன் வேலை செய்த ஏனைய
தொழிலாளிகளுக்கும் அப்பாவுக்கு மிடையே கெளரவமான நட்புறவு நிலவியது. யாரையும் கடமைப்படுத்தாத வகையில் தனது நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வார். நான் சிறியவ னாக இருந்த காலத்திலேயே யாரிட மிருந்தும் சிறிய தின்பண்டங்கள் விளை யாட்டுப்பொருட்கள் உடுப்பு போன்றவை
கூட அன்பளிப்பு என வாங்காமல் இருப்
பதைக் கவனித்துக்கொள்வார்.அப்பா பத்திரிகை வானொலி வாயிலாக தகவல் கள் சேகரிக்கும் போது திரைப்படங்கள் சினிமாக் கலைஞர்கள் பற்றிய தகவல் களும் சேர்ந்துவிடும். ஆனால் அவர் சினிமா பார்க்கப்போனதில்லை.
வகுப்புகளில் நான் படித்த போது என் னையும் அழைத்துச்செல்லும் போது
F&5 தொழிலாளிகள் அனுமதியுடன் சிறிய
மாத்திரம் அவர்கள் வாங்கித் தரும் குளிர்
பானங்களைக் குடிப்பேன். டொபி கடலை போன்றவற்றை சாப்பிடுவேன். படம் பார்க்கக் கிளம்புவதற்கு முன்பாக டிக்கட்
42
காசை மிகத் தந்திரமாக கூட்டிக்கொண்டு போகும் தொழிலாளியின் கையில் திணித்து விடுவார். திரைப்படமாளிகை களில் பாட்டுப்புத்தகங்களும் சினிமா
நடிகர்களின் படங்களும் விற்கப்படும்.
பாட்டுப்புத்தகங்களை விட சினிமா நடிகர் களின் படங்கள் தான் என் னைக் கவர்ந்தன. என்னைக் கவர்ந்த படங் களையும் படம் பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற மாமாவையும் மாறி மாறிப் பார்த்தேன். பார்வையின் அர்த்தம் புரிந்த மாமா என்னை ஏமாற்ற விரும்பவில்லை.
'மாப்பிளை (கடையில் வேலை செய் வோர் மட்டுமல்ல வேறு வேலைகளுக்கு வருவோரையும் மாமா என்றழைக்க அப்பா பழக்கியிருந்தார். அவர்கள் என்னை மாப்பிள்ளை - மருமகன் என கூப்பிடுவார்கள்) உங்களுக்கு இந்த மாதிரி படங்கள் வாங்கிக் கொடுத்தா நம்ம வேலை இல்லாமப் போயிடும்' என்றவர் முன்பு நடந்த சம்பவங்களை விளக்கிச்சொன்னார்.
கடையின் சுவர்களில் தெய்வப் படங்களும் வள்ளுவர் பாரதியார் போன்ற அறிஞர்க்ளின் படம் மாத்திரமே இடம் பெறுவதற்கு அப்பா தான் காரணமாம். சினிமா நடிகர்கள் அரசியல்வாதிகளின் படங்களோடு வரும் கலண்டர்களைக்கூட கடையில் மாட்டுவதற்கு முதலாளி சம்மதிக்காததற்குக் காரணம் - அப்பாவின் கண்டிப்பான வேண்டுகோளே. யாழ். வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலய
சஞ்சிகையொன்றிலும் கடைக்கு சிறப்பு
தரும் படங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம் பெற்றிருநததை வாசித்த நினைவும் இருக்கிறது.
 

யாரோடு எந்தளவுக்குச் சேரலாம்? யாரோடு சேரக்கூடாது? எங்கே எப்படி நழுவ வேண்டும்? என்பதெல்லாம் மட்டு மல்ல - நான் வேலைக்குச் சேரும் வரை என்னோடு சேர்ந்து பழகுபவர்கள் எனது நடவடிக்கைகள் ஆகியவற்றை தந்தை கண்காணித்துக் கொண்டிருந்தார்.
洪邦共
அந்த நாட்களில் வருடத்தின் இரண் டாவது காலாண்டுக் காலத்தில் 'தினகரன் பத்திரிகையின் ஆதரவில் யாழ்ப்பாணத் தில் மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி களுடன் கூடிய விளையாட்டு விழா நடை பெறும். சைக்கிளோட்ட வீரர்களை உற் சாகப்படுத்த பார்வையாளர்கள் தண் ணிரை வாளியோடு ஊற்றுவார்கள். கடை யில் வேலை செய்த இளவட்டங்கள் சில ஒன்று சேர்ந்து குறும்பு வேலைக்குத் திட்டமிட்டு ஒரு வாளியையும் கொண்டு சமையலறைக் குள் புகுந்து வெளி யேறியதை அப்பாவின் கழுகுக் கண்கள் கவனித்து விட்டன: சமையலறை யிலிருந்து இளவட்டங்களைப் பின் தொடர்ந்த அப்பாவின் கைகளில் பெரிய வாளியொன்றில் நிரம்பியிருந்த நீரிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது.
விரைந்து வந்து கொண்டிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கியின் அறிவிப்பு 'சைக்கிளோட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் பெண் வீராங்கனைகள் வேகமாக வருகின்றனர்.
இளவட்டங்களிலொன்று தண்ணிர் நிரம்பிய வாளியைத் துாக்க மற்ற இள வட்டங்கள் வேடிக்கை பார்க்க முண்டி ത്ത -
43
களுக்கு சுடுதண்ணிர் இளவட்டங்கள் தங்கள் தவற்றை
யடித்தன. அப்பாவும் பெரிய வாளியைத் துாக்கினார். அவர் கண்கள் சிவந் திருந்தன.
"அடே தண்ணியைக் கொட்டிட்டு உள்ள போ - இல்லே இந்த வாளியில இருக்கிற தண்ணியை உன் தலையில ஊத்துவன்.” -
இளவட்டத்தின் கையிலிருந்த வாளி
கீழே விழ வாளியிலிருந்த கொதிநீர்
நிலமெங்கும் சிதறியது. சைக்கிளோட்டப் போட்டியில் கலந்து கொண்ட பெண் ஊற்ற முயன்ற
உணர்ந்து தலைகளைத் தாழ்த்திக் கொண்டன.
சமையலறையை நோக் கலித் திரும்பிய அப்பாவின் கையிலிருந்த வாளித் தண்ணிர்சூடு ஆறியிருந்தது. அப்பாவின் சாதுர்யத்தால் அந்த இடத்தில் பெண்களுக்கு நேர இருந்த விபத்தும் ஆண்களுக்கு நேர இருந்த அவமானமும் தவிர்க்கப்பட்டது.
能供供
சாதாரணமாக இரவு ஒன்பது மணிக் குப்பின் கடைக்கு வருவோரின் எண் னிக்கை குறைவு - வியாபாரமும் குறைவு. கடையின் பின் புறமுள்ள கொட்டில் ஒன்பது மணிக்குப்பின் சுறு சுறுப்பாகக் காணப்படும். வாழையிலை வெட்டுதல் - தேங்காய் துருவுதல் - காய் கறி நறுக்குதல் முதலியன வெகு வேக மாக நடைபெறும். அந்தக்களத்தில் நடைபெறும் வேலைகளைப் பார்ப்பதிலும் அவர்களின் கதைகளைக் கேட்பதிலும்

Page 24
எனக்கு நாட்டமதிகம். நடுப்பகுதியில் பிரபலமான பில்டர் சிகரட் ஒன்று வாங்கினால் மாறி மாறி தம் இழுக்கும் நாலைந்து பேர் வாய்களைச் சுற்றி வரும். அப்படிச் சுற்றிக்கொண்டி ருந்த சிகரெட்டை தீடிரென நீண்ட அப்பா வின் கரம் பற்றிப் பறித்தது. மற்றக் கரத் தில் ஒரு புதிய சிகரெட் சிலரைப்போல நானும் அப்பா சிகரெட் புகைப்பாரோ என சந்தேகப்பட்டேன்.
அப்பா புதிய சிகரெட்டின்
பில்டரை எல்லோருக்கும் காட்டினார். அது தூய வெள்ளை நிறமாக இருந்தது. புகைத்த குறைச்சிகரெட்டின் பில்டர் பழுப்பு நிற மஞ்சளாக மாறியிருந்தது. அப்பா தனக்குத் தெரிந்த வகையில் விளக்கினர். ‘சிகரட் புகையால் பில்ட ருக்கே இந்தக்கதியென்றால் இருதயம் எவ்வளவு பாதிக்கப்படும்? இரத்தம் அழுக்காகும்? காசு கொடுத்து வருத் தத்தை வாங்க வேண்டுமா? உற்சாகமாக வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு கப் பால் குடிச்சிட்டு கம்மெண்டு வேலை GeFu Juj6)ff'
எல்லாத் தொழிலாளர்களையும் தன் பக்கம் திருப்ப முடியாதது அப்பாவுக்கு தோல்வியாக இருந்தாலும் இரண்டொரு வரைத் திருத்த முடிந்தது வெற்றி யில்லையா? தன் மகன் தவறான பாதை யில் செல்வதைத் தடுத்து விட்டார்.
சம்பவம் எனக்குச் சொன்ன செய்தி
"சாதாரணமானவர்களுக்கு புள்ளி விபரங்
கள் விகிதாசாரங்கள் எளிதில் விளங்காத சொற்களைச் சொல்லி குழப்பியடிக்காமல் விளங்கத்தக்க வகையில் நினைவில்
அறுபதுகளின்
நிற்கத்தக்க வகையில் உதாரணங்களை Gay uJuJ353an LņųU LDTgŚf Practical GOTE ở சொல்லி காரியத்தைச் சாதிக்க வேண்டும்.
跳供供
2002 ஆண்டின் ஆரம்பத்தில் கலா சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிரித்துப் பாராட்டிக்கொண்டு அமைச்சரின் கையொப்பமிடப்பட்ட நியமனக் கடித மொன்றைத் தந்தார். சகஊழியர்கள் நண் பர்கள் வாழ்த்த நானும் மகிழ்ச்சி யடைந்தேன்.
வழமையான கடமைகளுக்கு மேலதி கமாக தணிக்கைச்சபையில் உறுப்பி னராக நியமனம் கிடைத்தது. கண்டிப்பாக தமிழ் மொழியிலான நாடகப்பிரதிகளைப் பார்வையிட்டு தணிக்கை செய்ய
வேண்டும். வசதியைப் பொறுத்து ஏனைய
மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதி களையும் பார்வையிடுவேன். ஒரு பிரதி யைப் பார்வையிட்டுத் தணிக்கை செய்ய 250 ரூபா தருவார்கள். எல்லாத்திரைப் படங்களையும் மற்றவர்கள் பார்வையிடு வதற்காக திரையரங்குகளுக்கு அனுப்புவதற்கு முன்பாகப் பார்வையிட்டு தணிக்கை செய்ய வேண்டும்.
சாதாரணமாக கியூ வரிசையில் நின்று பணம் கொடுத்து டிக்கட் வாங்கி மணியடிக்கும் வரை காத்திருந்து வியர் வைக்கும் விசிலடிக்கும் மத்தியில் படம் , பார்த்த நிலை மாறியது. தகவல் திணைக்கள படமாளிகையில் உள்ளே நுழைந்ததும் படம் ஆரம்பமாகும். தேவை யான இடத்தில் நிறுத்தலாம். சில காட்சி களைத் திரும்பவும் காட்டச் சொல்லிக் கேட்கலாம்.
പT
 

তােক
போக்கு வரத்துக்கு வாகன ஒழுங்கு மாத்திரமல்ல - படம் பார்க்கும் போது சிற்றுண்டியும் குளிர்பானமும் கிடைக்கும். ஒரு படம் பார்த்து தணிக்கை செய்வதற்கு 400 ரூபா தருவார்கள். விடுமுறை நாட் களில் நான்கு படங்கள் பார்த்ததும் உண்டு.
ஆரம்பத்தில் விருப்பத்துடன் ஆரம் பித்த கடமை போகப்போக வேண்டா வெறுப்பாகி ராஜினாமாக் கடிதத்துடன் அமைச்சரைச் சந்திக்கும் நிலையை உருவாக்கியது.
அமைச்சர் ராஜினாமாக் கடிதத்தைப் படித்துக்கொண்டே என்னைப்பார்த்தார்.
அப்பாவை அதிக சம்பளம் தருவ தாக மது பானக்கடை உரிமையாளர் ஒருவர் தனது விற்பனைச்சாலையில் உறைப்புத் தின்பண்டங்கள் தயாரிக்க அழைத்த போது - பனம் தேவை உழைக்க வேண்டும் - எப்படியும் உழைக்க விருப்பமில்லை - கஷடமெண் டாலும் காணாதெண்டாலும் இந்த உழைப் பிலை சந்தோஷம் அது போதுமென்ற கருத்தைச் சொல்லி வாழ்ந்த அப்பாவின் கதையைச் சொன்னேன்.
ஓரளவுக்கு மேல் வசதியாக வாழும் நான் மனச்சாட்சியை மறைத்து சமூகத் தைக்கெடுக்கும் படங்கள் தணிக்கைக் கத்தரிக்கோலுக்கப்பாலும் திரையரங்கு செல்ல நானும் உடந்தையாக இருக்க விரும்பவில்லை. மாதந்தோறும் எளிதாகச் சம்பாதிக்கக் கூடிய ஆயிரக்கணக்கான
b, L , ഞ ഖ இழந் தாலும் மனச்
சந்தோஷத்தை இழக்கவில்லை.
exegillent
photography
photographers
Odørn Computerizgd
r Wgdding Portraits
& Child sitting
S

Page 25
ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள்
மேமன்கவி
1. அயல்நாட்டு சிறுகதைகளுக்கான ஆய்வு
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகம் அயல்நாட்டுக் கல்வித்துறை ஆய்வு நோக்கில் தமிழ்ச் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு முனைவர் ஆ.கார்த்திகேயன் முனைவர் சா.உதயசூரியன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு நூலாக வெளிவந்துள்ளது.
இத்தொகுப்பில் இலங்கையில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களினதும், ஈழத்திலிருந்து பிற நாடுகளில் புலம் பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளினதும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சார்ந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பற்றிய ஆய்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.
தொகை அளவில் ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பற்றிய ஆய்வு கள் அதிகமாய் இருப்பது முதற் பார்வையில் நமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கைப் படைப்பாளர்களான டொமினிக் ஜீவா, நந்தி, நீர்வை பொன்னை யன், மறைந்த நகேசு தர்மலிங்கம், மு.பஷர், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், திக்குவல்லை கமால், கெக்கிராவ ஸஹானா, சுதாராஜ் ஆகியோரின் சிறுகதை களைப் பற்றியும் புலம் பெயர்ந்த இலங்கைப் படைப்பாளிகளான செ.கணேச லிங்கன், கருணாகாரமூர்த்தி, மாத்தளை சோமு, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், சித்தார்த்த சே குவேரா ஆகியோர்களின் சிறுகதைப் பற்றிய ஆய்வுகளும் இடம் பெற்றுள்ளன. r
இவ்வாய்வுக் கருத்தரங்கில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்தவர்களான மாத்தளை சோமு, வ.மகேஸ்வரன் ஆகிய இருவரும் இருந்தமையால் அவர்கள் இருவரும் சமர்ப்பித்து இருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் விளக்கமாகவும் ஆழமான நோக்கில் எழுதப்பட்டு இருக்கின்றன. இதற்கு காரணம் டொமினிக் ஜீவாவின் — 46
–-一*

சிறுகதைகளைப் பற்றி ஆய்வு செய்த மகேஸ்வரனுக்கு ஜிவாவைப் பற்றிய சகல விடயங்களுடன் பரிச்சயம் இருப்பதனாலும் புலம் பெயர்ந்தாலும் மாத தளை சோமு வுக் கு அவர் இலங்கையர் என ற தகுதியும் இருப்பதனாலும் அவர்களது ஆய்வுகள் தரமாய் அமைந்து இருக்கின்றன.
ஆனால், மற்ற அத்தனை ஈழத்து,
புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பற்றிய ஆய்வுகளைச் சமர்ப்பித்த அத்தனை ஆய்வாளர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தனாலோ என்னவோ ஈழத்துப் படைப் பாளிகள் பற்றிய அவர்களது ஆய்வுகள் வெறுமனே மேம்போக்கான் ஆய்வு களாக இருப்பதோடு, ஈழத்து தமிழ் மக்களின் வாழ்வுச் சூழலைப் பற்றியே சரியான தகவல்கள் தெரியாத வர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக, இலங்கையின் பிரதேச அமைப்பைப் பற்றியோ அவ்வமைப்பு களிடையே நிலவும் பேச்சு மொழி க்ளிடையே நிலவும் வேறுபாடுகளைப் பற்றிய தகவல களை அறியாத வர்களாக இருக்கிறார்கள் என்பதை அவ்வாய்வுகள் நமக்குப் புலப்படுத்து கின்றன. உதாரணத்திற்கு கெக்கிராவ ஸ்ஹானா யாழ்ப்பாணத்தைச் சார்ந் தவர் என்றும் அவரது கதைகளில் யாழ்ப்பான வழக்குச் சொற்கள் காணப்படுவதாக அவரது சிறுகதை களைப் பற்றிய ஆய்வைச் சமர்ப்பித்த ஆய்வாளர் குறிப்பிடுவதை நாம் மேலே
குறிப்பிட்ட அவர்களின் அறியாமைக்
கான ஒர் உதாரணமாகக் குறிப்
பிடலாம்.
மேலும், அவர்களுது ஆய்வுகளில் காலவதியாகிவிட்ட இலக்கியம்/ சிறுகதைச் சம்பந்தப்பட்ட மேற்கோள் களையும் விளக்கங்களையும் கையாண் டிருப்பது அவர்களுக்கான ஒரு கருத் தியல் தளம் இல்லை என்பதை நிரூபிக் கிறது. வெறுமனே, ஆய்வுக்கு எடுத்த படைப்பாளிகளைப் பற்றி அறிமுக குறிப்பு எழுதியும் , அப் படைப் பாளிகளின் சிறுகதைகளிலிருந்து சில மேற்கோள்கள் காட்டி எந்தவொரு ஆழமான கருத்தையும் அப்படைப் பாளியை பற்றி வைக்காத நிலை யிலேயே அவ்வாய்வுகள் முடிந்து இருக்கின்றன.
உதாரணமாக திக் குவல்லை கமாலின் சிறுகதைகளில் தென்னி லங்கை மக்களின் வாழ்வு முறை என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் கடைசி வரை கமாலின் சிறுகதைகளில் தென்னிலங்கை வாழ்வு முறை எப்படி வெளிப்படுகிறது, அந்த வாழ்வு முறையை அவ்வாய்வாளர் எப்படி புரிந்து கொண்டார் என்பதைக் கடைசி வரை கூறாமலே கமாலின்
ட்விடைப் பிழைத்த கணக்கு எனும்
தொகுதியில் உள்ள கதைகளின் பட்டியலுடன் ஆய்வை முடித்து விடு கிறார்.
இப் படியாக ஈழத்து எழுத தாளர்களின் படைப்பாளிகளைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்ட தமிழக ஆய்வாளர்களின் பலஹரீனங்களை அடுக் கிக் கொண்டே போகலாம்.

Page 26
இந்நூலில் மாத்தளை சோமு, மகேஸ் வரன் ஆகிய இருவரது ஆய்வுகளுக்கு அடுத்து சற்று திருப்தி அளிக்கின்றன. கட்டுரை என்றால் முளைக்க மண் தேடி’ எனும் தலைப்பில் அமைந்துள்ள த.வெற்றிச் செல்வனின் கட்டுரையினைச் சொல்லலாம். அக்கட்டுரையில் ஒரள வுக்காவது புகலிட இலக்கியத்தைப் பற்றிய அறிமுகத்தை முன்வைக்கிறார்.
சமீப காலமாக ஈழத்து படைப் பாளியைப் பற்றிய பரவலான அக்கறை தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற் பட்டு இருப்பதற்கு காரணம் நம் மீதான கரிசனையா? அல்லது அவர்கள் அதன் மூலம் ஏதோ வகையிலான லாபத்தை அடைவதற்காக? என்ற சந்தேகம் எழத் தான் செய்கிறது.
அன்றையக் காலம் தொடக்கம்
இன்று வரை தமிழகப் படைப்பாளி
களும், விமர்சகர்களும் தாங்கள்தான் இலக்கியத்தின் முன் உரிமையாளர்கள் என்ற மேலாண்மை மனப்பான்மை யுடன்தான் செயற்பட்டு வந்துள்ளார் கள். இன்றும் கூட ஏதோ ஒரு நோக் கத்துடன் ஈழத்து மற்றும் ஈழத்து புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி எழுதும் எழுத்துக்களில் மேற்கூறிய மனப் பான்மை இழையோடுவதை காணக் கூடியதாக இருக்கிறது.
ஈழத்து, மற்றும் ஈழத்து புலம் பெயர்ந்தவர்களின் எழுத்துக்களால் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் சர்வதேசத் தளத்தையும், தரத்தையும் அடைந்து இருப்பதை எந்தவொரு தமிழக ஆய்வாளர்கள்/எழுத்தாளர்கள்
*Namunum
48
எவருமே பகிரங்கமாக ஒத்துக் கொள் ளவே இல்லை என்ற கருத்தை மேற் குறித்த மேலாண்மை மனப்பான்மை யுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒரு கருத்தாகும்.
ஆய்வு நோக்கில் அயல்நாட்டுத் தமிழ்ச் சிறுகதைகள் எனும் இத் தொகுதியில் நம் நாட்டு, நம் நாட்டிலி ருந்து புலம் பெயர்ந்தப் படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகள் செய்ய எத்தகைய ஆழமான ஆய்வு நெறிகள் தேவை என் பதையிட்ட சிறிதளவான தெளிவும் அத் தமிழக ஆய்வாளர்களுக்கு இல்லை என்பது இத்தொகுதி மூலம் தெரிகிறது.
மேற்குறித்த குறைகளை கடந்து இத்தொகுதியினை பார்க்குமிடத்து, பின்வரும் இரண்டு விஷயங்களையிட்டு நமக்கு ஆறுதலும் சந்தோஷமும் ஏற்படுகிறது.
1. இவ்வாய்வுகள் மேற்கொண்டது மூலம் தமிழக இலக்கிய உலகுக்கு பரவலாக ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறப் புக் களை அறிமுகப் படுத் தியது என்பதும்,
2. அயல நாட்டு சிறுகதைப் படைப் பாளிகள் என்று நோக்கு மிடத்து நமது படைப் பாளிகள் தொகை அளவில் அதகமாக இருக்கிறார்கள் என்பதும்
நமக்கு ஆறுதலும் சந்தோஷத்தை அளிக்கின்ற விஷயங்களாக இருப்ப தனால், அதற்கு காரணமாக அமைந்த இத்தொகுதியுடன் சம்பந்தப்பட்ட சகல
 

ஆய்வாளர்களுக்கும் தமிழகத் தமிழ்ப் பல்கலைக் கழத்திற்கும் அதன் அயல் நாட்டுத தமிழ் கல விதி துறையினருக்கும் நாம் நன்றியினைச் சொல்லத்தான் வேண்டும்.
2. சுல்பிகாவின்
‘உரத்துப் பேசும் உள் மனம்
சுல்பிகாவின் ‘உரத்துப் பேசும் உள்மனம் தொகுதிக்கான வெயியீட்டு விழா அணி மையில் கொழும்பில் நடந்தது. சுல்பிகாவின் மூன்றாவது தொகுதி இது. ஏற்கனவே வெளிவந்த இவரது இரணி து தொகுதிகளான விலங்கிடப்பட்ட மானுடம்’, ‘உயிர்த் தெழுதல்’ ஆகியவையில் இல்லாத அளவான கவித்துவமும் உக்கிரமும் இத்தொகுதியில் நிறையவே.
ஈழத்து கவிதைப் படைப் பாளிகளில் முஸ்லிம் படைப்பாளிகளில் சுல்பிகா குறித்து சொல்லக் கூடியவர். அவரது உரத்துப் பேசும் உள்மனம் தொகுதிக்கான வெளியீட்டு விழா ரொம்பவும் எளிமையாக நடந்தது. சம்பிரதாயமான பணச் சடங்கு வடிவி லான வெளியீட்டு விழாக்களை நடத்து வதில் சுல்பிகா நம்பிக்கை இல்லாதவர். அதனால் இத்தொகுதி வெளியீட்டு விழாவில் அந்த எளிமையாகும். விழா வுக்கு கொஞ்சப் பேர் வருகை தந்து இருப்பினும், அந்தக் கொஞ்சப் பேர் களில் அதிகமானவர்கள் பெண்கள் அதிலும் அதிகமானவர்கள் முஸ்லிம் பெண்கள்.
மான முறையில
அத்தொகுதிக்கான கருத்துரை வழங்கியவர்களில் கவிஞர் ஒளவை நல்லதொரு காத்திரமான தனதுப் பார்வையை முன் வைத்தார். குறிப் பாக, படைப்பாளிகள் தங்கள் படைப் பாளிகள் சுய தணிக்கை செய்ய முற் படும் பொழுது ஏற்படும் கருத்து பிழை களிட்ட ஒரு கவனத்தை முன் வைத் தார். கலந்துரையாடலுக்கு அவ் விழாவில் அவர்கள் நேரம் ஒதுக் காததனால் படைப்பாளியின் சுய தணிக்கைப் பற்றி நிலையில் உரையாட முடியாமல் போய்விட்டது.
அடுத்து, கருத்துரைகள் வழங்கிய இரு முஸ்லிம் பெண்மணிகளின் கருத் துரைகள் சுல்பிகாவின் கவிதைகளில் ஆணி ஆதிக் கத்திற்கு எதிரான உக்கிரமான குரலையும், பெண்ணுக் குரிய தனி னுணர்வு நிலையான கருத்துக்களை அவ்விருவர்கள் எவ் வாறு எதிர் கொண்டார்கள் என்று சொல்வதை தவிர்த்துக் கொண்டது போல் எனக்குப் பட்டது. அவ்வாறான அவர்களது தவிர்ப்புக்கு பெண்கள் குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் தமக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் சக்தி க்ளையிட்ட பயத்திலிருந்து உணர்வு நிலையிலிருந்து அவர்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. மிகவும் ஆழ பெனி ரிையச் சிந்தனை வயப்பட்ட கவிதைக்கான மொழியை கையாள்வதில் கூர்ந்த கவனத்தைச் சொலுத்துவதில் தயங்காத சுல்பிகா கூட அவர் கூறியது பூோல் தனது படைப்புகளை சுய தணிக்
49

Page 27
கைக்கு உட்படுத்தியதும் அச்சக்தி களிட்ட எச்சரிக்கை உணர்வுடன்தான் என்பது எமக்கு புரியத்தான் செய்கிறது. இருந்தும் தயக்கத்திற்கும் தவிர்ப்புக்கும் அப்பால் பார்த்தால் அவ்விரு முஸ்லிம் பெண்மணிகள் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி போன்ற அமைப்புகளுடன் இணை நீ து செயல்படுவதே ஒரு பெரிய விஷயம். அந்த வகையில் அவ்விரு முஸ்லிம் பெண்மணிகள் பாராட்டுக்குரியவர்கள்.
மொழியினுTடாக வெளிப்படும் ஆணாதிக்கச் சிந்தனைப் பற்றிய ஒரு தெளிவை முஸ்லிம் பெண் கள் ஆராய்ச்சி செயல் முன்னணி போன்ற பெணி னியச் சிந தனை யை அடிப்படையாகக் கொண்டு இயக்கங்கள் சகல பெண்களுக்கும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்றை மட்டும் என்னால் உறுதி யாக நம்ப முடிந்தது. அதாவது சுல் பிகா வெளியிட்டு இருக்கும் உரத்துப் பேசும் உள்மனம்’ என்ற இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதை களை எதிர் கொள்ள போகும் ஆனா திக்க சக்திகள் காட்டப் போகும் எதிர்
வினை கள் கார சாரமாக த தானி இருக்கும் என்பதுதான்.
3. சர்வதேச போர் சூழலும்
கட்டிட கலையின்
பரிதாபமும
நான் போர் சூழல் நிறைந்த காலத்தில் யோசிக்கின்றேன். என் வசம் இருக்கின்ற எழுத்துப் பிரதிகளை வேறு
50
ஒரு போர்ச் சூழல் இல்லாத இடத்திற்கு மாற்றி விடுகின் றேன். அல்லது அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு பல்வகையான வடிவங்களில் அவைகளை பிரதிகளாக்கி இடம் மாற்றி விடுகின்றேன்.
இது எழுத்து நூல் வடிவம் சார்ந்த ஓர் இலக்கிய கலைஞனுக்கு சாத்தி யமான விடயங்கள். அவன் வரும் முன் காப்பேன் என்ற நிலையில் சிந்திக் கின்றவனாக இருக்கும் பட்சத்தில்.
இவை அசையாச் சொத்துகள் என்ற வடிவில் அமைந்த கலை வடிவங்களாக அதாவது ஸ்திர ஸ்தூல கலை வடிவங்களாக அவை இல்லை என்ற காரணத்தால் அவையின் இடப்பெயர்ச்சி சாத்தியமாகிறது. கட்டிட கலைஞர்களின் சிருஷ்டித் திறன்களால் உருவாக்கப்பட்ட பெரும் நகர்களின் பெரும் கட்டிடங்களை தரை மட்டமாக்க முடியும் என்று நிலவும் இன்றைய யதார்த்தத்தின் பொழுது உலகத்தைச் சேர்ந்த கட்டிட கலைஞர்களின்
மனோநிலை நெருக்கடிக்கு ஆளாகிறது
என் றே நினைக் கிறேனர் . இந்த நெருக்கடிக்கும் கவலைக்கும் காரணம் மற்ற கலை வடிவங்களுக்கு இருக்கின்ற பிரதி பண்ண முடிகின்ற யதார்த்தமும் இடப் பெயர்ச்சி செய்ய முடிகின்ற சாத்தியமும் கட்டிட கலைக்கு இல்லை என்பதுதான். அழிக்கப்படும் கட்டிடத்தின் வரை படத்தை கொணி டு அந்த மாதிரியான கட்டிடத்தை உருவாக்கி விடலாம் என்று சிலர் கருதக்கூடும். உண்மைதான் அதே மாதிரியான
−
 

கட்டிடத்தை உருவாக்கலாம்தான். ஆனால், அழிக்கப்பட்ட அதே கட்டி டத்தை அல்ல. இதே வேளை நூதனச் சாலையில் உள்ள பொருட்கள் அசைகின்ற சொத்துக்களாய் இருப் பினும்கூட அதனை வரும் ஆபத்தையும் ஆக்கிரமிப்பை பற்றி அறிந்து இருந்தும் அவைகளை அவ்விடத்திலிருந்து அகற்றச் செய்யாது, அழிவுக்கும், கொள்ளை அடிப்புக்கும் ஆளாக்கி விடும் பொழுது வரலாற் றை நினைக்கும் ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளரின் சோகமும் அந்த கட்டிட கலைஞனின் சோகத்திற்கு ஒப்பானது.
வாழ்த்துகினிறோம்
மல்லிகை இடைக்கால கட்டத்தில் யாழ்பாணம் பூரீலங்கா
இன்று மனித உயிர்கள் ஆயிரக் கணக்கில் இறந்து கொண்டிருக்கும் சூழலில் கட்டிடங்களைப் பற்றிய நமது அக்கறை சிலருக்கு வெறுப்பைத் தரலாம். மனித அழிவுகளை வெறுக்
"கின்ற நம்மால்தான் மனித குலத்தின்
வரலாற்றை எடுத்து கூறும் கட்டிடங் களின் அழிவையிட்டு கவலைப்பட (Մ)tԳեւյւb.
அச்சகத்தில் அச்சிடப் பெற்று வந்தது. அந்தக் கால கட்டத்தில் அந்த அச்சகத்தில் பிரதான அச்சுக் கோப்பாளராக விளங்கியவர் ‘சாமி
என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த திரு.
க.அரியநாயகம் என்பவர். பல வழிகளிலும் மல்லிகையின் வரவுக்கு
உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் இவர்,
இவரது மூத்த மகள் கோசலா அவர்களுக்கும், திரு.திருமதி
முத்தையா
அவர்களின் புதல்வர்
ஞானவேல் அவர்களுக்கும்
சமீபத்தில் கொழும்பில் இனிதே திருமணம் நடந்தேறியது. மணமக்கள்
நீடூழி வாழ மல்லிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
-ஆசிரியர்
പ-- ̄

Page 28
கவிதையின் ஒளிநகல்
d.Öigidiyymen
குளுமை கோலோச்சும் கிரகெரிஸ்சாலை. ஆகாயம் தெரியாமல் பெரியகுடை விரித்தது போல் படர்ந்து விரிந்து கிளை பரப்பிய விரிசடை விருட்சமரங்கள் சாலையின் இருமருங்கிலும் வரிசை பிசகாமல் மின்கம்பங்களை மறைத்து நின்றன. வயசுந் தெரியாமல் வாழும் மரங்கள், குமாருக்கு ஜேர்மன் கலாச்சார நிலையம் வரை அலுவலிருந்தது. ரோயின் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி அன்றைய அக்கோதே மண்டப நிகழ்ச்சி நிரலில் வசப்பட்டிருந்தது. குமாரைப் போன்றவர்களுக்கு எல்லாம் குளிரூட்டிய சலனமற்ற பசுஞ்சோலை அடர்ந்து விட்ட இதமான சூழல் எப்போதுமே வசீகரிப்பதில் பின் நிற்பதுமில்லை. என்றைக்கோ துப்பாக்கிக்கு இரையாகிய ரோஸா லக்ஸம்பேர்க் கூட அறிமுகமாகியது ஒரு திரைப்பட வடிவத்தில் அந்த எழிலார்ந்த மண்டபத்திலேதான். அதற்கு முன் குமாருக்கு அவளைப் பற்றி சிறிதேனும் அறிந்திட முடிந்ததில்லை. அதனால் குமாரின் சிந்தனையில் கோதே மண்டபம் ஓர் உயர்வான இடத்தைக் கொண்டதாயிற்று.எல்லா வேலைகளையும் விட்டு விட்டபடி வந்திடுவான். அங்கே நிகழும் அத்தனையும் உயர்வானதொன்றையும் போயிருந்தது.
சுப்பிறிண்டென்ரரின் வீடு-வளவு கூட தரிசனம் கிடைத்ததுவோ என்னவோ இதே சாலையில் இருக்கிறது. குமார் அவர் திரும்பிவர நாளாயின. அதி அலுவலக வேலை காரணமாக அவரிடம் முக்கிய நிகர விற்பனை பற்றிய அலைந்திருக்கின்றான். அவருடைய அங்கீகரிப்பை குமாரினால் பெற்றுக் மாருதிக் காரின் ஸ்ரியரிங்கிலும் கொள்ள முடியாதிருந்தது. உற்பத்தி சாயிபாபா ரூபம் மிளிருவதை அவதா யிலேயே எவ்விதப் பங்கும் ஏற்காத னித்திருக்கிறான். சுப்பிறின் டென்ரன் ஊதாரித்தன மனிதரால் உற்பத்தியை எஸ்ரேற் அலுவல்களை எல்லாம் கிடப்பில் நிர்ணயிக்கிற குரூரம் குமாருக்கு போட்டு விட்டு புட்டபர்த்தி போயிருந்தார். நியாயமான கசப்பை ஊட்டியது. தகவல் பிறப்பில் பெளத்தவரான அவருக்கு சேகரிக்கும் பணியிலிருந்த குமார் வெறும்
52 se

மாசச் சம்பளத்தில் மட்டுமே வாழ்பவன். அறையை மூடிக் கொள்ள முன்னால் றுTமேற்றின் ஸ்பிறேயைத் திருட்டுத் தனமாக தன் மீது தெளித்திருந்தான். அந்த நறுமணம் அவனுக்கு மணக்கிறதா யில்லை. அண்மித்து வருபவர்கள் முகர்ந்தறிவதை அவனால் அறிந்திடவே முடிந்தது.
கோழி முட்டை முகம். ரோயின் கலகக்கார நாடக வேஷம் குமாருக்கு அலாதியான இலயிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை எடுத்தது. நாடகம் அதிகம் பார்க்காதவனுக்கு கலகக்கார வேஷமும் கச்சிதமாக ரோய் நடித்ததும் பிடித்தே போனது. யார் இவர் தேர்தல் பத்திரிகை விளம்பரத்தை நக்கலடித்து முழுமை யான அங்கதச்சுவை நாடகம் போட்ட துணிச்சல் ரோயின் எக்கச்சக்கமான உச்சக்கட்ட ஆளுமையாகித் தெரிந்தது. தீக்குள் இறங்குகிற நிலைப்பாடாகித் தெரிந்தது.
போயிருந்த குமாருக்கு கவிதை வரிகளைக் காது கொடுத்துக் கேட்க முடியாமலிருந்தது. ரெளத்திரம் ஓங்காரம் எல்லாமே கொப்பளிக்கிற ஷெல்லித்தன கவிதையேயாயினும் குமாருக்கு மனம் படியவில்லை. ஆணி அறைவது போல் ரோயின் முகம் மாத்திரமே மனதுள் புதைந்தது. பல்லாயிரம் விநாடிகள் தொலைக் காட்சிச் செய்தி வாசிப்புகளில் பார்த்த நட்சத்திரத்தை நேரினில் கண்டதுமே அத்தனை விறைப்பு. உணர்வலைகள் உறைந்ததில் கவிதை மொழிகள் புரியாமலேயே போயிற்று.
கவிதை மழை ஓய்ந்ததுவே தெரியாமல்
போயிற்று.
அடுத்த நாட்காலை குமாரின்
காதுகளில் சம்மட்டியடிச் சேதி கேட்டது. ஏனெனில் லால் பெரேராவின் தலைமை யில் எஸ்ரிஎப் குழு பஜிரோவில் ரோயின் கல்கிசை வீட்டிற்குச் சென்று நள்ளிரவில் கதவைத் தட்டி தாயாருக்குச் செம்மை யான அடியும் உதையும் கொடுத்தபின் ரோயை லுனாவைக் கடலோரத்தில் துப் பாக்கிச் சன்னங்களை வாரி யிறைத்து, வெற்றுடலை வளர்த்தி விட்டி ருந்தது. யார் எவர் இக்கொடுரத்தைச் செய்தார்கள் என்கிற விபரம் வெளித் தெரியாதபடி ஓயாத அலையிரைச்சலும் இடையிட்டு ஓடிய ரயில் கடகடப்பும் அங்கு களிநர்த்தனம் புரிந்தன.
ரோயின் மென்மையான அதரங்கள் ஓய்வின்றி உச்சரித்த கவிதையை இரசிக்க மறந்த குமாருக்கு துடிப்படங்கி விரியாத பூவாகிக் கிடந்த அதரங்கள் ஒன்றே என்றும் நிலைக்கிற காட்சிப்
பொருளாய் அடிமனதில் விரிந்தது.
நெடுநாட் செய்தி வாசிக்கிற நித்திய செய்தியானான்.
அமோக வாக்குகள் தேர்தல் பிரமுகரிணி அரசியல் கொலை வெறியைச் சலசலப் பின்றி மூடி மறைத்தது. சீற்றம் ரோயைப் பெற்ற வளிடம் சர்வசாதாரணமாக மையம் கொண்டது.
53

Page 29
அச்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப்பயணம்
- டொமினிக் ஜீவா
கொழும்பிலிருந்து அன்பர் திருநாவக்கரசு அவர்களிடமிருந்து அங்கு வந்து நேரில் சந்தித்துப் பேசிக்கொள்ளலாம் என நம்பிக்கையூட்டும் கடிதம் கிடைக்கப் பெற்றதும் நான் புதிய உற்சாகத்தை அடைந்தேன். அது எனக்குப் புது உந்துதல்களையும் தந்திருந்தது. ஊக்கமுடன் செயற்படத் தொடங்கினேன்.
இந்த நம்பிக்கையூட்டும் மகிழ்ச்சியான சமயத்தில் கூட, எனது அடி நெஞ்சில் மெல்லியதொரு பயமும் இடம் பெறாமலில்லை.
எப்போவோ ஒருநாள், மல்லிகை யின் ஆரம்ப காலகட்டத்தில் கொழும் பில் ஒரு சந்தர்ப்பத்தில் சுதந்திரன் ஆசிரியர் சிவ நாயகம் அவர்களை ஒர் இலக்கிய விழாவில் சந்திக்க வேண்டிய வாய்ப் பொன்று கிடைத்தது.
மல்லிகையின் தொடர் வாசகர் களில் அவரும் ஒருவர்.
மல்லிகையின் வளர்ச்சி, எதிர் காலத் திட்டங்கள் பற்றி என்னுடன் மனம் விட்டுச் சம்பாவழிப்பார். இப்படி யான சந்தர்ப்பத்தில் அவர் இடை மறித்து ஒன்றைச் சொன்னார், 'ஜீவா, எந்தக் காரணத்தைக் கொண்டும் சொந்தமாக அச்சகத்தை நிறுவிக்க கொள்ள வேண்டாம். அப்படிச் சொந்த மாக அச்சகத்தை நிறுவ ஆசை கொண்டால் அதைத் தொடர்ந்து பல்
வேறு ஆசைகள் உள்மனதில் முளை விடும். வசதி வாய்ப்புகளைத் தேடி ஒடிக் கொண்டிருக்கும் நிலை வரும். மல்லிகை அச்சாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் வேறு பண வசதியுள்ள தரமான கலியான அழைப்பிதழ்கள் அச்சடிக்க வந்தால் மனது லாப நஷ்டக் கணக்கில் நேரத்தை செலவிடுவதுடன் உடனடிப் பண் வருவாயை குறிக் கோளாகக் கொண்டு செயல்படும். எந்த siq j u 6) L. நோக் கதி தற்காக மல்லிகையை நீ ஆரம்பித்தாயோ அதை ஒதுக்கித் தள்ளி தற்காலிக லாபம் உடனடியாக வெற்றி பெற்றுவிடும். கவனம். கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து இந்த உலகத்தில் நடந்து கொள்ளப் பழகு!” இப்படியாக அவரது ஞான உபதேச வார்த்தைகள் அமைந்திருந்தன.
54

ஒரு மூத்த எழுத்தாளர் எப்போவோ எனக்குச் சொன்ன இந்த அநுபவ வார்த்தைகள் என் நெஞ்சில் ஒரு மூலையில் சிக்காராகக் குந்தியிருந்தன. இதன் பசுமையான நினைவுகள் எனது ஞாபகத்தில் எப்பொழுதுமே நிழலாடிக் கொண்டிருந்தன.
ஒரு நிரந்தரமான வருமானமுள்ள குலத்தொழிலை நீண்ட காலம் செய்து வந்தவன், நான். அதனால் பெற்ற பண
வருமானம் எனக்கும் எனது குடும்பத்
திற்கும் போதுமெண்ணப் போதும்.
நான் அதிகம் சம்பாதிக்க ஆசைப் பட்டவனுமல்ல. எனது தினசரித் தேவை களைக்கூட, மட்டுப்படுத்தி வாழக் கற்றுக் கொண்டு விட்டேன். அதற்கு அத்தாட்சியாக எனது உடைகளைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
இப்படித் திட்டமிட்டு வாழ்ந்து பழக்கப்பட்ட என்னை, இலக்கியச் சூழல் தன்வயப்படுத்தி விட்டது. எந்த விலை கொடுத்தேனும் மல்லிகையைத் தொடர்ந்து நடத்தி வர வேண்டும் என அசையாத தன்னம்பிக்கையுடன் இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்து உழைத்து வந்துள்ள எனக்குத் தற் காலிக இந்தப் பின்னடைவு அவ்வளவு பெரிய அதிர்ச்சியொன்றையும் தந்து விடவில்லை.
இடையே எந்த விதமான உச்சக் கட்ட நெருக்கடிகள் வந்து இடை மறித்தாலும் எத்தகைய பெருஞ்சங்க டங்கள் வந்து குறுக் கிட்டாலும் மல்லிகை அச்சகம் ஆரம்பிக்கப்பட்டால்
säma
55
அந்தத் தொழிலை நான் வியாபாரமாக ஆக்கிப் பணம் சம் பாதிக்க முற்படப் போவதில்லை என்று அன்றைய கால கட்டத்திலேயே ஒரு முடிவுக்கு வந்து செயலாற்றி வந்துள்ளேன்.
எனவே நானெடுத்த உறுதியான நிலையிலிருந்து எந்தக் கட்டத்திலுமே தடம் புரண்டு போகமாட்டேன், என்ற உத்தரவாத உறுதி, என்னிடமிருந்தது.
இந்தப் பின்னணி உணர்வுகளுடன் இருந்த நான், வாரக் கடைசியில் கொழும்பு செல்ல உத்தேசித்து இருந் தேன். ஆயத்தப்படுத்தினேன்.
அந்த வார முடிவில் கொழும்பிற் குச் செல்லலாம் என எண்ணியிருந்த எனக்கு, திடுகூறாக நண்பர் குருசுவாமி அவர்களிடமிருந்து கடிதமொன்று வந்து சேர்ந்தது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த அவரது நண்பர் ஒருவர் என்னைத் தேடிவந்து கடிதத்தை என் னிடம் சேர்ப்பித்தார்.
மூத்த மகன் ஆறுமுகத்தின் திரு மணம் பாளையங் கோட்டையில் நடை பெற இருப்பதாகவும் அடுத்த மாதம் முற்பகுதியில் நடைபெற இருக்கும் மகனது திருமணத்தில் என்னை அவ சியம் கலந்து கொள்ளும்படியும் அக் கடிதத்தில் கேட்டிருந்தார், நண்பர் குரு சுவாமி அவர்கள்.
நட்பை நான் வெறும் பழக்கமாகக் கொண்டவனல்ல. பழகும் எல்லாரை யுமே நட்புக் கொண்டவர்கள் என நான்

Page 30
கருதிக் கொண்டவனுமல்ல. பொது வாழ்க்கையில் அதிலும், இலக்கியத் துறையில் முன்பின் தெரியாத பலர் அறிமுகமாவார்கள். அறிமுகமான வர்கள் எல்லாருமே நண்பர்களுமல்ல.
பழக்கம் வேறு. நட்பு வேறு. அதிலும் ஆத்ம நட்பு இனியது.
என்னுடைய நட்புலகில் தமிழ கத்தைச் சேர்ந்த கொழும்பில் வியாபாரி களாக மிளிர்ந்த நான்கு பேரை மறக்கவே முடியாது. இந்த நால்வரில் மூவர் இன்று உயிரோடு கூட இல்லை.
ஒருவர் குருசுவாமி அண்ணாச்சி, அடுத்தவர் ரெங்கநாதன், மூன்றாமவர் எம்.ஏ.கிஸார், மற்றவர் து ைரவி விஸ்வநாதன்.
இந்த நால்வரிடமிருந்தும் மல்லி கைக்கு எத்தனையோ உதவிகளையும் நல்லாதரவுகளையும் பெற்று வந்துள் ளேன் என்பதை நன்றியுடன் இந்தக் கட்டத்தில் நினைவு கூருகின்றேன்.
குருசுவாமி அண்ணாச்சியினுடைய மூத்த மகனினி திருமணத தில் பாளையங் கோட்டைக்கு சென்று கலந்து கொண்ட ஒரோயொரு ஈழத்து எழுத்தாளன் நானாகத்தான் இருந்துள் ளேன். அதே போல ரெங்கநாதனின் இரண்டாவது மகன் மகேந்திரனின் திரு மணம் சென்னையில் நடைபெற்ற சமயம் எழுத்தாளர் பிரதிநிதியாக நானே கலந்து கொண்டேன். இப்படி யாகத் துரைவியின் மூத்த மகள் ஆனந்தியின் திருமணம் திருச்சியில்
நடைபெற்ற போதும் இந்த நாட்டு
56
எழுத்தாளர்களின் ஏகப் பிரதிநிதியாக நானே கலந்து கொண்டுள்ளேன். கிஸார் அவர்களைக் கொழும்பு வரும் சமயங்களிலெல்லாம் அவரைத் தேடிச் சென்று அவருடன் உணவுண்டு களித் திருக்கிறேன்.
இவற்றை ஏன் இங்கே எழுத்தில் பதிவு செய்கின்றேன் என்றால், நான் ஒருவரிடம் நட்புப் பூண்டு ஒழுகி வந்தே னென்றால் அந்த நட்பு நட்பிற்கு இலக் கணமாகத் திகழவேண்டும் எனக் கருதிச் செயல்பட்டு வந்தவன் நான் என்பதை உறுதி செய்வதற்காகவே.
எனவேதான் எத்தனை தூரமாக இருந்தாலும் கடல் கடந்து பயணம் செய்து போய் எனது நட்புக்குரிய வர்களது விட்டு மகிழ்ச்சியில் கலந்து கொண்டு நானும் மகிழ்ந்திருக்கிறேன்.
ஒட்டப்பிடாரம் குருசுவாமி அவர் கள் மலிபன் வீதியிலுள்ள மிகப் பெரிய வியாபார மண்டியின் உரிமையாளர். உணவு வகைகளைப் பெருந்தொகை யாக இந்தியாவிலிருந்து தோணிகள் மூலம் இறக்குமதி செய்து பெருந் தொகையாக விற்பனை செய்து வரும் வணிக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்.
அத்துடன் இப்படி இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வரும் வணிகர்களின் சங்கத் தலைவராகவும் கொழும்பிலிருந்து இயங்கி வந்தவரும்
sh.
நான் மல்லிகை வெளியீடு சம்பந்த
மாக மாதம் ஒரு தடவை கொழும்பு
வந்து 69(Ib வாரம் தங்கிப் போவது
 

வழக்கீம். இவரது க ையின் மேல் மாடியில்தான் நான் தங்கியிருந்து இயங்கி வருவேன்.
நான் வரும் மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் தனது கடையின் நடுப்பகுதியை இலக்கியச் சந்திப்பின் முக்கிய இடமாக மாற்றி, அன்று கொழும்பிலிருந்து இயங்கி வந்த இளம் எழுத்தாளர்களில் முக்கியமானவர் களை ஒருங்கு சேர்த்து இலக்கியக்
கலந்துரையாடல் நடத்தி முடிப்பதில் ,
தனி மகிழ்ச்சி கொள்பவர், அவர்.
ஒருநாள் காலை இவரது நிறுவனத்திலிருந்து வெளியே புறப்படும் பொழுது காசுப் பட்டறையில வீற்றிருந்தார்.
அன்று வெள்ளிக்கிழமை,
அவரது முகத்தைப் பார்த்தேன். முகம் பிரகாசமாக இருந்தது. திருநீறு பூசிய நெற்றியுடன் புதுப் பொழிவு திகழ அவர் ஆசனத்தில் வீற்றிருந்தார்.
நான் அவரது முகத்தைப் பார்த்துச் சிரித்து வைத்தேன்.
‘என்ன? என்ன காரணத்துக்காகச் சிரிக்கிறீர்கள்?’ எனக் கேட்டுவிட்டு என்னைக் கூர்மையாகப் பார்த்தார்.
‘இல்லை. இண்டைக்கு வெள்ளிக் கிழமை. பாயாசம் சாப்பிட்ட்ால் அப் படியே கம்மென்று இருக்கும்” பகிடி போலச் சொல்லி முடித்தேன்.
இதைச் சொன்ன நான் இப்படிச் சொன்னதையே அடுத்த கணம் மறந்து
எனப்
விட்டு, எனது பயணத்தைத் தொடங்கி விட்டேன். நடையைக் கட்டினேன்.
பொரளைக்குப் போய் நீண்ட கால மல்லிகை ரசிகர் ஒருவரைச் சந்தித்து விட்டு, ஐந்து லாம்புச் சந்திக்கருகாமை யிலுள்ள ஒரு நண்பரின் கடைக்குத் திரும்பி வந்து ஒய்வெடுத்துக் கொண்டி ருந்தேன்.
‘மலிபன் வீதி அண்ணாச்சி கடை யிலிருந்து தாவூத் என்பவர் உங்களை அவசர அவசரமாகத் தேடி வந்து விசாரித்தார். நீங்கள் போகும் இட மெல்லாம் போய் விசாரித்து விட்டு வந்தாராம். வந்ததும் உடனடியாக அங்கு வரச் சொல்லிச் சொல்லிவிட்டுப் போனார், வந்து விசாரித்த தாவூத்!”
நான் ஓய்வை உதறித் தள்ளி
விட்டுக் குறுக்குப் பாதை பிடித்து மலிபன் வீதியைச் சென்றடைந்தேன்.
என்னைக் கண்டதும் ‘வாய்யா! எங்கெங்கெல்லாம் உன்னைத் தேடி அலைவது? உள்ளே போய் முகத்தை கிகத்தை ஒருவாட்டி அலம்பிப் போட்டு
y
வா’ என்றார், குருசுவாமி.
இத்தனை அவசர அவசியமாக என்னைத் தேடி, எனது வரவை எதிர் பார்த்தவர், இத்தனை குசாலாக இருக் கிறாரே என மனசுக்குள் நினைத்துக் கொண்டு உள்ளே போய் முகத்தை அலம்பித் துடைத்த வண்ணம் வந்து என்னை அவசரமாகத் தேடியலைந்தது ஏன்? என்பது போல, அவரது முகத்தை வினாக் குறியிட்டு ஏறிட்டுப் பார்த்தேன்.
─

Page 31
'வீட்டிலை இருந்து பால்பாயாசம் கொண்டாந்திருக்கிறேனையா. காலை யிலைதான் ஆசையோடு சொல்லிட்டுப் போனியே. இப்ப வா! ரெண்டு பேரும் UITuurT ğFLíb 8FFTi`ILiALʼ(B6 (ypLQÜI(3U (TLíb!ʼ
என் தேகமோடிப் புல்லரித்தது. அப்படியே சிலிர்த்துப் போய் அவரைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டி ருந்தேன்.
இத்தகைய அன்புள்ளங்களைத் தான் மல்லிகை இதழ் எனக்கு நண்பர் களாகப் பெற்றுத் தந்துதவிக்கொண் டுள்ளதில் நான் இன்றுவரைக்கும் பெருமிதம் கொள்ளு கின்றேன்.
ஒட்டப் பரிடாரம் குரு சுவாமி அண்ணாச்சியை நம்மைப் போன்ற வர்கள் இன்று வரை ஏன் நினைவு கூருகின்றோம் என்றால், அதற்கு அநேக காரணங்கள் உண்டு. அவர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த வராயிருந்த போதிலும் கூட, அவர் மனமறிய ஈழத்து எழுத்தாளர்களை மதித்தவர். நேசித்தவர்.
முதலாவது ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு கொழும் பு சகிராக் கல்லூரியில் வெகு கோலா கலமாக நடந்தேறி, சரித்திரத்திலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு விட்டது.
முதல் நாள் விழா.
மதிய உணவுக்காக இடைநேரம் வழங்கப்பட்ட சமயம் மேடையிலிருந்து ஒலிபெருக்கியில் ஓர் அறிவித்தல் செய்
யப்பட்டது. 'மதிய உணவுக்கான ஆயத்தங்கள் இம்மண்டபத்திலேயே செயப்யப்பட்டுள்ளன. எனவே நாம் வழங்கும் உணவை ஏற்றுக் கொள்ளும் படி பேராளர்களைக் கேட்டுக் கொள்ளு கிறோம்!” என அந்த அறிவித்தல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த உப சாரத்தைச் செய்து தருபவர் குருசுவாமி அவர்கள் என ஒலித்து முடித்தது.
ஒருபக்கம் நின்று நானும் அவரும் கதைத்துக் கொண்டிருந்தோம்.
இந்த அறிவித்தலைச் செவி மடுத்ததும் குருசுவாமி அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டார்.
மகாநாட்டுக் குழுவினர் இந்தத் திட்டத்தைக் குருசுவாமி அவர்களுக்குச் சொல் லும் படி நணர் பர் கணேச லிங்கனிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். அவரோ வேலைப் பராக்கில் சொல்ல மறந்து விட்டார்.
இப்பொழுது ஒலிபெருக்கியில் இந்த அறிவித்தல் செய்யப்பட்டு விட்டது.
திகைத்துப் போய் நின்ற அவர் உடனடியாகச் செயல்பட்டார். பலரும் அவசர ஒத்துழைப்பு நல்கினர்.
சற்று நேரம் பிந்தினாலும் பேரா ளர்கள் வெகு திருப்தியுடன் உண வுண்டு மகிழ்ந்தனர்.
குருசுவாமி அண்ணாச்சியின் செல் வாக்கையும் சமயோசித புத்தியையும் அன்றுதான் அறிந்து கொண்டேன்.
(மேலும் சந்திக்கிறேன்.)
58
 

35683. ID ID
எழுத்தாளர் செங்கை ஆழியானின் அயராத முயற்சியின் அரிய அறுவடை இது ஏற்கனவே முதலாவது தொகுதி வெளியானது. அதுவும் செங்கை ஆழியானின் நெறியாள்கையில் மலர்ந்ததுவே. முதலாம் தொகுதியைப் பார்க்கவும் இல்லை. வாசிக்கவும் இல்லை. ஏனெனில் அது கைக்கு கிட்டவில்லை.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தொகுதி வெளிவந்தது என்றும் அதில் முப்பது எழுத்தாளர்களின் LЈ60)LLJцањ6T 9 616TI 85&БU LJU 19 (Бањ கின்றன என்பதையும் அறிய முடிகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் மலர்ந்த இரணர் டாம் தொகுதி 41 - படைப் பாளிகளின் ஆக்கங்களுடன் வெளி வந்திருக்கிறது. தொடர்ந்தும் மல்லிகைச் சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்கள் நூலுருவில் வெளி வரும் என இரண்டாம் பகுதியின் பின் அட்டை தகவல் தருகிறது.
இதுவரை வெளிவந்துள்ள மல்லி கைப் பந்தல் வெளியீடுகளில் இந்த மல்லி கைச் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி மிகப் பெரியது. அதிக பக்கங்களைக்
59
கொண்டது என ஜீவா முன்னுரையில் கூறுகிறார்.
41-படைப்பாளிகளின் கதைகள்
இதில் இருக்கின்றன என குறிப்பிடுகின்ற
போது அந்த எழுத்தாளர்களின் பெயர் களை குறிப்பிட வேண்டியது அவசிய மாகும். கதை குறிப்புகளைவிட அது ஓர் ஆவ்ணப்படுத்தலாகிறது.
ராஜபூரீகாந்தன், கே.எஸ் சிவ குமாரன், மு.கனகராஜன், மருதூர் கொத்தன், பெரி.சண்முகநாதன், சிதம்பரச் செந்திநாதன், யோகா பாலச்சந்திரன், கே.விஜயன், சி.சுதந்திரராஜா, அ.பால மனோகரன், மல்லிகை சி.குமார், மு.புஸ்ப ராஜன், செந்தராகை, க.ஆனந்தமயில், மாத்தளை வடிவேலன், மு.பொன்னம்பலம்,
மாவை நித்தியானந்தன், துரை மனோ -- A-T

Page 32
கரன், எஸ்.ஜோன்ராஜன், வே.தனபால சிங்கம், இநவம் மருதூர் ஏ. மஜித், மலரன்பன், த.கலாமணி, புலோலியூர் க.சதாசிவம், நற்பட்டிமுனை பளில், அருணன்விஜயராணி, வடகோவை வரத ராஜன், அல் அஷ"மத், ஆ.இரத்தினவே லோன், எஸ்.எச்.நி.மத், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், எம்.எம்.நெள வடிாத், பன்னீரன், மு.பவரீர், நெல்லை க.பேரன், கெக்கிராவ ஸஹானா, மாத்தளை சோமு, எஸ்.முத்துமீரான், செளமினி ஓரிருவரைத் தவிர இப்படைப்பாளிகளில் பெரும் பாலானவர்கள் இலக்கிய எழுத்துலகில் துடிப்புடன் செயல்படுவதை விட்டு விட்டார்கள் போல் தெரிகிறது. ஈழத்து படைப்பிலக்கியத் துறைக்கு சிற்றிலக்கிய ஏடுகளே பெரும் பங்களிப்புச் செய் துள்ளன. அதில் மல்லிகை சஞ்சிகையின் பங்களிப்பு உன்னதமானது. கடந்த 38 வருடங்களாக டொமினிக் ஜிவா இதனை வெளியிட்டு வருகிறார். யாழ்ப்பாணத்தில் முளைவிட்ட மல்லிகை இன்று கொழும் பையும் தளமாக்கி முகைவிரித்து பவனி வருகிறது. இத்தொகுதியில் உள்ள கதை கள் ஒவ்வொன்றும் சஞ்சிகையின் மகத்து வத்தை வெளிப்படுத்துகின்றன. நூலின் அமைப்பும் அட்டைப்படமும் கண் களுக்கு விருந்தாக இருக்கின்ற போதும் தொகுதி என உருவாக்கப்படுகின்ற போது சில அடிப்படைக் கூறுகளை அது கொண்டிருத்தல் அவசியம்.
41 - கதைகள் உள்ளடக்கப்பட்டிருக் கின்றன. ஆனால் அவற்றை படைத் தவர்கள் பற்றிய இலக்கியக் குறிப்புகள் இல்லை. பல எழுத்தாளர்கள் இன்று நம் மோடு இல்லை. சிலர் எழுத்துலகிலி
ருந்தே காணாமல் போய்விட்டார்கள். இவர்களைப் பற்றிய விபரங்களை சிரமப் பட்டு தேடி இருக்கலாம். அக்குறிப்பு களுடன் கதைகள் பிரசுரிக்கப்பட்டிருந் தால் தொகுதியின் சிறப்பு இன்னும் ஒரு
படி உயர்ந்திருக்கும்.
இது காலத்தின் தேவை கருதி
எழுதப்படுகின்ற குறிப்பாகும். தொகுப்பு
மிகவும் சிரமத்தின் மத்தியில் உருவாகி யுள்ள ஒன்றாகும். அதனை மறுப்பதற் கில்லை. நூல் பதிப்பில் ஓர் அவசரம் தெரிகிறது. எனினும் அதன் பெருமையை அந்த அவசரம் கெடுத்துவிடவில்லை.
மல்லிகை சஞ்சிகைக்கும், மல்லி கைப் பந்தல் வெளியீடுகளுக்கும், இன்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய ஆர்வ லர்கள் அதனோடு தொடர்பு கொண்டுள் ளார்கள் என ஜீவா அடிக்கடி குறிப் பிடுவார்.
இத்தொகுதியின் முன்னுரையிலும் அதனை கூறுகிறார். ஒரு சிற்றிலக்கிய ஏடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி யடைவதற்கு இது வழிகோலுவதாக அமையலாம். ஆனால் ஆரோக்கியமான இலக்கியம் கண்மூடிப்போகாமலிருப் பதற்கு இத்தகையதொரு நிலையில் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
3 O 5, 2003
 

ീ
- - - - - - - - - - - - - - -
/gst ങ്ങ 9. ல்/
- 1 - F - - - - - - - -
«Х» இதுவரை நீங்கள் படைத்துத் தந்துள்ள சிருஷ்டிகளில் அதி சிறந்த படைப்பு எதுவெனக் கருதுகிறீர்
எஸ். நந்தகோபால்
கோண்டாவில்
X- கலைஞர் கருணாநிதியின் இன்றைய நிலை என்ன?
UD601 60T Tiff ச.சடகோபன்

Page 33
* சமீபத்தில் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளக் கொடுமை பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
ஹட்டன் ப.சிவபாதம்
 

«Х» *காலச் சுவடு இதழிலி சல்மா எழுதிய ‘இலக்கியமும் வாழ்க்கையும் கட்டுரையைப் படித்துப் பார்த் தர்களா? இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
எம்.கோபிநாத்
குருநாகல்
* நீங்கள் இப் படி உருக
63
உருகித் தமிழ்நாட்டுப் படைப் பாளிகளின் பிரிவுக்காக துயரக் கண்ணிர் வடிக் கசிறீர்களே, மன மறியச் சொல்லுங்கள், தமிழ்நாட்டு ஊடகங்கள், அல்லது மானுடம் பேசும் எழுதி தாளர்கள் நமது படைப்பாளிகள் மறைந்த போது இப்படி உருகியிருக்கிறார்களா?
எம். வருணகுணன்
சண்டிலிப்பாய்

Page 34
0X கொழும் பில் மாத்திரமல்ல, பொதுவாக நாடுதழுவிய ரீதியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா கி கள் எல லாம் பணச் சடங்கு' விழாக்களாக நடைபெறு வதாக குற்றச் சாட் டொன் று நிலவுகிறதே, இதுபற்றி என்ன நினைக் கிறீர்கள்?
வெள்ளவத்தை க.மணிவாசகன்
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U.K. பினர்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
下エコー
 
 
 

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக
சாஹித்திய புத்தக இல்ல
மல்லிகைப் பந்தல் வெளி

Page 35
2.
 
 
 
 
 
 

:::::::
ters of
alloods
Avenue,
■o-o3