கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.10

Page 1
R //
|
|
|
|
|-
No. No. No. No. | ---- |- s= || sae 历 sae.
 
 

| |
கள்
கானும்

Page 2
புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் 2) சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் வஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல. 4, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்) புத்தளம். தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், ப்ாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து
தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து
விற்பனை செய்து உதவுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாற்பது ஆண்டுகள்
எந்தக் கட்டத்திலும் கால் இடறவில்லை!
யாழ் குடாநாட்டுக்குள் இருந்து கொண்டு, அந்தக் குச்சொழுங்கைக்குள் ஒரு புறாக் கூட்டுக் காரியாலயத்திற்குள் குந்தியிருந்த வண்ணம், சகோதரர் சந்திர சேகரம் கையால் அச்சுக் கோத்து, அச்சடிக்கத் தகுந்த பேப்பர் கிடைக்க வழியில்லாத அவலச் சூழ்நிலையில் மாணவர்களின் பள்ளிக்கூடத் தேவைக்குப் பயன்படும் கணக்குச் சதுர ருள் கொப்பித் தாள்களைப் பிரித்தெடுத்து, அச்சடித்து வெளியிட்ட மல்லிகைக் காலத்தை எண்ணிப் பார்க்கின்றோம்.
எத்தகைய பெரிய நெஞ்சு பதைக்
மல்லிகை
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
38-வது ஆண்டு 'Mallikai' Progressive Monthly Magazine
கும் காலமது நினைத்துப் பார்க்கவே இப்பொழுதும் மனசு திடுக்கிடுகிறது.
இத்தகைய பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து மல்லிகை இதழ்களை வெளியிட்டு வந்துள்ளோம் என்பதை இப்போது எண்ணிப் பார்க்கும் இந்த வேளையில் கூட, நெஞ்சு பதறுகின்றது.
இத்தகைய சிரமங்களுக்கு மத்தியில் தானா அந்த உள்நாட்டு யுத்த காலத்தில் மல்லிகை சொந்த அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது என நம்புவதே மற்றவர்களுக்கல்ல, நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
29鲁
201-1/1, Sri Kathresan Street, Colombo - 13.
gilmui aoa
Te:232O721

Page 3
அந்த மகிழ்ச்சியான ஒரு நாள்
மலர் விழா.
- அ.மதிவதனன்
மல்லிகையின் 25வது ஆண்டுமலர் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டபோது நானும் அந்த மகிழ்ச்சியான விழாவில் கலந்து கொண்டேன்.
புலப் பெயர்வு காரணமாக உங்களைப் போலவே நானும் இன்று ஜாஎலையில் வந்து குடியேறி விட்டேன். மல்லிகை இன்று கொழும்பில்.
அந்த வெளியீட்டு விழாவுக்கு தெளிவத்தை ஜோசப் தலைமை தாங்கினார். மற்றும் மேமன்கவி, ஆப்டீன், தர்மசீலன், அன்ரனி ஜீவா, அல் அஸ்மத், திக்குவல்லை கமால் போன்றவர்கள் அவ்விழாவுக்கு வந்து சிறப்பித்ததும், கம்பன் கழகத்தில் விருந்துண்டதும், செங்கை ஆழியான் தனது வாகனத்தில் அவர்களை யாழ்நகரைச் சுற்றிக் காட்டியதும், யாழ் மாநகர சபை அவர்களைக் கெளரவித்துத் தேநீர் உபசாரம் செய்ததையும் இலக்கிய நேசர் டிவகலால தமது இல்லத்திற்கு இவர்களை அழைத்து உபசரித்ததையும் நினைத்துப் பார்க்கும் இந்த வேளயிைல் கனவு போலத் தோன்றுகின்றது. யுத்தச் சூழ்நிலை என்றாலும் மகிழ்சியான காலமது.
மல்லிகை மலர்கள் ஒவ்வொன்றையும் இன்று நான் கவனமாகப் பாதுகாத்து வைத்துள்ளேன். அதன் பெறுமதி இன்று பலருக்கு விளங்காமல் இருக்கலாம். நாளை மல்லிகை மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இலக்கிய ஆவணமாகத் திகழ்ந்து வரும் என்பது திண்ணம். '
எனக்குத் தெரியும், நீங்கள் ஆண்டு மலர் ஒவ்வொன்றுக்கும் செலவிடும் உழைப்பு. உங்களது இந்தச் சலியாத பிரயாசை எப்பொழுதுமே வீண் போனது கிடையாது. வரலாறு இதைச் சொல்லும்,
மல்லிகை மலர்களை ஒருங்கு சேர வைத்து ஒரு தடவை உற்றுக் கவனித்துப் பாருங்கள். எவ்வளவு நிறைவாக இருக்கிறது மனதில்.
உங்களது சலியாத உழைப்பு எதிர்கால வரலாறு படைக்கும். இது திண்ணம்

இந்த மண்ணின் மேன்மைக்குரியவர்களை ஆவணப்படுத்துவது எதிர்காலத் தேவை.
இந்தத் துறையில் நம் மண்ணில் தோன்றிய மூத்த குடி முன்னோடிகள் தகுந்த கவனமும் கரிசனையும் காட்டி வரவில்லையோ என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே நம்
மனதில் நிழலாடி வருவதுண்டு.
ஊடக, தகவல், ஒளி, ஒலிபரப்புத் துறையில் இன்று இப் பூப்பந்து கற்பனைக்குமெட்டாத அதி துரித வளர்ச்சியில் முன்னேறி வளர்ந்து கொண்டிருக்கும் நமது இன்றைய காலகட்டத்தில் நாம் இன்னும் இத்துறையில் மாட்டு வண்டில் காலத்திலேயேதான் பிரயாணப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ என்ற சநதேகம் நம்மிடையே தோன்றாமலுமில்லை.
இதனால் உலக அளவில் நாம் தேங்கிப் போய் விட்டோமோ என்ற சந்தேகமும் நமக்குண்டு.
ஆனால், ஒரு மன ஆறுதல்.
இன்று பல்வேற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்று, அங்கு தமது இருப்பையும், சாதனைகளையும் நிலை நாட்டி வரும் நமது மண்ணின் புதிய தலைமுறைப் புத்திரர்கள் இந்த நவீன சாதனங்களில் தேர்ச்சியும் வளர்ச்சியும் பெற்று வருவதைக் காண நமது மனம் பெருமிதமடைகின்றது.
தாம் பிறந்த பிரதேசத்தைத் தவிர, வேறு உலகத்தையே கண்டறிந்திராத எமது படைப்பாளிகள் இன்று விமானமேறி ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டமெங்கும் இலக்கியச் சுற்றுலாச் சென்று வருவதைக் காணும் போது கற்பனைக்குமெட்டாத இந்த நடைமுறைச் சாதனைகளைக் கண்டு உண்மையிலேயே பூரிப்படைகின்றோம். சம்பந்தப்பட்டவர்களை நெஞ்சார வாழ்த்துகின்றோம். வரவேற்று மகிழ்கிறோம்.
அதேபோல, நமது மண்ணையும் மொழிகளையும் கடந்த காலங்களில் தமது உழைப்பால் மேன்மைப்படுத்தியவர்களை ஆவணப்படுத்தும் முகமாக இவர்கள் உயிருடன் வாழும்போதே இவர்களது வாழும் முறைகளைக் குறும்படங்களாகத் தயாரித்து ‘பாதுகாத்து எதிர்காலத்திற்குரிய சொத்தாகப் பேணப்பட வேண்டும் என்று நமது ஆசையையும் இங்கு பதிவு செய்து கொள்ளுகின்றோம்.
- ஆசிரியர்

Page 4
60LuLLB
‘ஈழத்து இலக்கிய வரலாந்நில் மறக்கப்பட முடியாத பக்கம் 61s.a56aoroatriyasar
- தேவகாந்தன்
ஒரு படைப்பாளியாய் செ.கணேசலிங்கனின் தாக்கம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. அவர் வேறு சில துறைகளிலும் தடம் பதித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாய் தம் எதிர்க் கருத்தாணியாளர்களோடும் சுமுகமான உறவைக் காத்து, இலக்கிய நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறவர் என்பதைக் கூறவேண்டும். கருத்தியல் ரீதியான எதிர்ப்புக்களைச் சரீரார்த்தமாய்க் காட்டி விடுகிற சமகாலத் தமிழிலக்கியப் பரப்பில் இது முக்கியமான அம்சம். தனிநபர் நடத்தைகளாலும் பெரிதும் மதிக்கப்படுகிற செ.க.வின் பவளவிழா ஆண்டு இது.
யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் இவர் பிறந்தது 09 பங்குனி 1928இல். தன் பொதுக் கல்வித்தரப் படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பில் அரசாங்க ஊழியராய் நீண்டகாலம் கடமையாற்றியும் கூட, 1983 ஆடியின் தமிழின அழிப்புக் கலவரத்துக்குப் பின் 1985 அளவில் செ.க.வும் இந்தியாவுக்குப் புலம் பெயருகிறார். இரண்டு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு தாயகம் திரும்புபவருக்கு, சிறு காலத்தின் பின் மறுபடியுமே ஒரு நிர்ப்பந்தப் புலப்பெயர்ச்சி 1991இல் நேர்கிறது. ஓர் எழுத்தாளனுக்கான இந்த அவலம் மகத்தான சரித்திர சோகம். இந்தியா திரும்பிய செ.க. இன்றளவும் புலம்பெயர் ஈழப் படைப்பாளியாய் தமிழகத்திலே வடபழனிப் பகுதியில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர் ஈழப் படைப்பாளி என்கிற இந்த அடையாளம் கூட மேம்போக்கானதே. உண்மையில் அங்கும் ஒரு முற்போக்கு இலக்கியவாதியாய் இருந்து வருகிறார் என்பதே சரியான கூற்றாகும்.
அவரை மேலோட்டமாகவேனும் ஞாபகம் கொள்வது, குறிப்பாக அவரது இந்த பவளவிழா ஆண்டில் அதைச் செய்வது, ஈழத்து இலக்கியவாதிகளின் தவிர்க்கவியலாக் கடமை. அதை அவரது சிறந்த படைப்புக்களின் இனங்காண்டலூடாகவும், அவரது அயராத திட்டமிட்ட உழைப்பு தனிமனித நேர்மைகளுடாகவும், ஒரு சிற்றிதழாளர் பதிப்பாளர் என்ற தளங்களில் வைத்தும் நிறைவேற்றுவது சரியான அணுகு
முறையாகவே இருக்கும்.
4. 665);
 

செ.க. இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் வெளியிட்ட 'குமரன்’ இதழ் களின் எண்ணிக்கை 87 எனத் தெரிகிறது. பத்தாண்டுகளுக்கு இடைவிட்டு மேல் நடந்திருக்க வாய்ப்பு. தமிழ்ப் பரப்பில் சிற்றிதழ் நடத்துவோருக்கு விதிக்கப்பட்ட உத்தரிப்புகளுடன் சம்பந்தம் கொண்டவர் களுக்கு, அவற்றை உணரக் கூடியவர் களுக்கும், தெரியும் 87 இதழ்களை நடத்துவதில் ஆசிரியன் காட்டியிருக்கக் கூடிய தீவிரமும், ஈடுபாடும். என்றாலும் செ.க. ஒரு இதழாளராய் என்றும் எங்கும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. நாவ லாசிரியராகவே காணப்படுவார்.
தன் சிறுகதைகள் மூலம் எழுத்து லகில் பிரவேசித்திருந்த செ.க.வை 1965 இல் வெளிவந்த அவரது நீண்ட பயணம் தான் ஒரு நாவலாசிரியாராக தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து 1966இல் வெளிவந்தது சடங்கு நாவல். ‘செவ்வானம் 1967இல் வெளிவந்தது. மூன்று தனி நூல்களாய் எனினும் பாகங்களான அமைப்பு அவற்றி லிருந்தது. மூன்றும் வடபகுதியில் தலை விரித்தாடிய ஜாதியக் கொடுமைகளுக்கு எதிரானவை மட்டுமில்லை. ஏறக்குறைய முன் பின்னான மூன்று வேறு தலைமுறை களின் கதைகளாகவும் விரிந்து, Trilogy எனப்படும் ஆங்கில வகையின இலக்கிய மாய் ஈழத்தில் படைப்பாக்கம் பெறுகிற முதலாவது தொகுதி இதுதான். பஞ்சமர் பற்றிய கேடானியலின் ஐந்து நாவல்கள் தொகுதி ஏறக்குறையச் சம காலத்த தெனினும், அதற்கும் ஒருவகை யில் முன்னோடி செ.க.வின் Trilogy நாவல் தொகுதியே எனவும் கூறலாம். இத்
தொகுதி நாவல்களினுடாகவே செ.க. இன்றளவும் நாவலுலகில் இனங்காணப் படுவதும் . அதுவொரு சரியான கண்டடைவே.
கிடைத்த தகவல்களின் படி இன்றைய தேதிவரை கடைசியாய் வெளி வந்த அவரது நூல் ‘கூட்டுக்கு வெளியே என்ற நாவலேயாகும். இது அவரது 52 ஆவது நூல். கடிதம், கட்டுரை, நாவல், சிறுகதை என இந்நூல்கள். முன்னர் குறிப்பிடப்பட்ட நாவல் தொகுதிக்குப் பின்னால் இவற்றுள் முக்கியமானதாகக் கருதத் தகுந்தது நவீனத்துவமும் தமிழக மும்’ என்ற கட்டுரைத் தொகுப்பேயென துணிந்து சொல்ல முடியும். படைப் பிலக்கியத்துக்கு வெளியே அவரது ஆளுமையைக் காட்டுகிற நூல் இது. இலக்கியம், அரசியல், கலை, சுற்றுச் சூழல் என்று எதைத்தான் தொடவில்லை? பெண்ணியம், தலித்தியம், நாவல், சிறு கதை, புதுக்கவிதை, நாட்கம், திரைப் படம், தொலைக்காட்சித் தொடர் நாடகம், பரத நாட்டியம், திரையிசை, ஓவியம், சிற்பம், பின்னை நவீனத்துவம், நவீனத் துவம் என்று பல துறைகள் பற்றியும் இப்பகுப்புக்கள் பேசும். நூலுக்காகவே எழுதித் தொகுக்கப்பட்டதாய்த் தெரிகிற போதும், மலர்கள் பத்திரிகைகளின் தேவைகளுக்காக அவ்வப்போது நிதான மாயும் ஆழமாயும் எழுதித் தொகுக்கப் பெற்றது போல் இது கனதியானது. தன்னைச் சூழ ஆர்ப்பரித்தியங்கும் அனைத்து சமூக அரசியல் பொருளாதார இலக்கியப் பிரச்சினைகள் கருத்து நிலைகள் குறித்தும் தன் சார்பு என்ன, எந்தளவு என்பதை ஒரு படைப்பாளி
பதிவு செய்வது மிக்க அவசியமானது.
KNS

Page 5
இதை செ.க.வின் அற்புதமான நூலாகவே நான் காண்கிறேன், அதிலே சில மாறுபா டான கருத்துக்கள் உள்ளபோதும்.
ஒரு மார்க்ஸியராய்த் தன்னை அடை யாளப்படுத்தி எழுதுவது பொதுவாகப் பெரிய விஷயமேயில்லை. தான் அதை இகவாத தனிமனிதராய் வாழ்ந்து காட்டுவதுதான் எல்லாராலும் கூடிவிடுவதில்லை. இந்த வகை மாதிரிக்கு சீரிய எடுத்துக் காட்டாக செ.க. வைச் சொல்ல முடியும். குமரனுக்குக் கடிதங்கள், மான்விழிக்கு கடிதங்கள், குந்தவிக்கு கடிதங்கள் என்கிற நூல் வரிசை ஒரு வகையில் மார்க்ஸியம் தன் கால இளைய தலைமுறையால் சுலபமாக எய்தற் படற் பொருட்டும், உள்வாங்கப்படற் பொருட் டும் வெளிவந்திருப்பதை எவராலும் உணரல் கூடும். பெரும்பாலான மார்க்ஸிய கற்கை யாளருக்கு சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் கிடைத்த மார்க்ஸ் ஏங்கல்ஸினது மொழிபெயர்ப்பு நூல்களே மார்க்ஸியத்தை அறிவதற்கான ஒரே மூலமாய் இருந்த காலமொன்றிருந்தது. சில வருஷங்களுக்கு முன்னர்தான் மார்க்ஸின் மூலதனம் முழு வதும் தியாகுவினால் மொழிபெயர்க்கப் பட்டு தமிழில் வந்தது. அதைத் தொடர்ந்து பின்னால் வேறு ஒருவர் மொழிபெயர்ப்பும் வந்தது. இந்த இடைக்காலத்தில் மார்க்ஸி யத்தை எளிதாய்ப் புரியவைக்க செ.க. எடுத்த முயற்சியின் விளைவாகவே மேலே குறிப்பிடப்பட்ட மூன்று கடித நூல்களும் வெளிவந்தன என்பது மிகையான கூற்றல்ல. இது ஒரு சரியான தரிசனத்தினதும் ஆதங் கத்தினதும் விளைச்சலே, தமிழகத்தில் இவ்வாறு பயன் பெற்ற பலர் நேரிலேயே என்னிடம் கூறி வியந்து நின்றிருக்கிறார்கள்.
சென்னையில் அவர் நடத்தும் குமரன்
புத்தக இல்லம் வேறொரு வகையில் முக்கியமானது. இதுவரை சுமார் 200 நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டி ருக்கிறது. படைப்பிலக்கியத்தை விட ஆய்வு, விமர்சனம் சார்ந்து இது நூல் களை வெளியிட்டு வருவதை முக்கிய மாகச் சொல்ல வேண்டும். பேராசிரி யர்கள் க.கைலாசபதி, க.கணபதிப் பிள்ளை, வி.செல்வநாயகம், சு.வித்தி யானந்தன், சி.பத்மநாதன் என்றும், இன்னும் பல்கலைக்கழகம் சார்ந்த / சாராத பல ஆய்வாளரது நூல் களையும் வெளியிட்டு தீவிர வாசகர் களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் வேண்டும் தகவல்கள் ஆதாரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பினையும் அது செய்து வருகின்றது. மட்டுமில்லை. இதனால் அழிந்துபடும் நிலையிலுள்ள பழம்பெரும் நூல்களும் புத்தாக்கம் அடைகின்றன.
செ.க.வின் ஆளுமை தழுவிய இந்த விஷயங்களுக்கு மேலாக, நான் கண்ட செ.க. பற்றியும் கூறவேண்டி யதில் முழுமை கருதிய அவசியம் உண்டு.
2000இல் ஒருமுறை ஒரு நீண்ட இடைவெளியின் பின் செ.க. வீடு சென்ற நான் அங்கு கண்ட நில பரத்தில் அதிர்ந்து போனேன். செ.க. சில வாரங்கள் முன்புதான் இருதய ரண சிகிச்சை முடிந்து வந்து குண மடைந்து கொண்டிருந்தார். பல்வேறு இலக்கியவாதிகளுக்கும் ஓரளவி லேனும் ஆபத்துதவியாய் இருந்து வரும் செ.க.வின் இதய நோய் பற்றிய தகவல், சத்திர சிகிச்சை நடைபெற
ܢ

விருந்த விஷயம், அது நடந்து முடிந்த சங்கதி எதுவும் பலருக்குத் தெரிந்தி ருக்கவில்லையே. இவ்வாறு இலக்கிய வாதியென்ற அடையாளத்தில் பிறரின் அக் கறைகளையும் ஆதரவுகளையும் இரக்கங் களையும் கூட செ.க. பெற்றுக் கொள்ள பினனின்றிருக்கிறார் என்பது தெரிந்த போது அவரை வியக்காமலிருக்க என்னால் முடியவில்லை.
அதிரப் பேசாத இந்த மனிதர் இலக்கிய உலகில் ஒரு தனிரகம் என்றா லும் காலத்தில் சாகாத படைப்புக்களாக நீண்ட பயணம், சடங்கு, செவ்வானம் ஆகியன ஈழத்து இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும். "ஆண்மையிழந்தவன் செ.க.வின் தொண்ணுறுகளில் வெளிவந்த நல்லதொரு சிறுகதை. அது தமிழ்நாட்டில் வெளிவந்தபோது பலராலும் பேசப்பட்டி ருந்தது. பேரினவாதக் கொடுமை சித்திர வதைகளினால் ஒருவன் தன் ஆண்மை யைப் பறிகொடுக்கும் சம்பவம் அவ்வளவு யதார்த்தமாயும், அதிர்வுகளோடும் அதில் எழுதப்பெற்றிருக்கும்.
இத்தகு படைப்பாளுமையும் தன்மை களும் நிறைந்த செ.க.வின் புலப்பெயர்வு ஏதோ ஒரு வகையிலேனும் ஈழத்து தமிழி லக்கியத்தின் இழப்பாகவே எனக்குத் தோன்றுகின்றது. சமீப காலமாய் வரும் அவரது நூல்களைக் கவனித்தால் அவர் தன் ஈழத்தன்மையை படைப் பில் இழக்கும் அபாயக் கூறுகள் அவற்றில் அதிகரித்து வருவதை ஒருவரால் காணக் கூடும். அது எப்படியாயினும், ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறக்கப்பட முடியாத பக்கம் செ.க. என்பது சரியான வார்த்தையேயாகும்.
r oხ0 କଁr', YDA.
EXCELLENT
FHOTOGRAPHERS
MODERN COMPUTERIZED PHOTOGRAPHY
FOR WEDDING PORTRATS
& CHILD SITTINGS

Page 6
கதை சொல்லிகளின் களம்.
- சி.சுதந்திரராஜா
காக்கை குருவிக்கெல்லாம் தஞ்சம் தந்திட தீவுக்கோவில் முகப்பினிலே பெரிய விருட்சமரக் கிளைகள் விரவியிருக்கின்றன. நகரச் சந்தடியிலிருந்து ஒதுங்கும் பாதையோ ரயிலுக்கும் மேம்பாலமாகிக் கோவில் பிரகாரம் வரை இட்டுச் சொல்கின்றது. அந்தக் கோவிலின் பிள்ளையார் வாசலிலே நீளமான படிகளும் விசாலமான பிரகாரமும் சிறுமண்டபமும் கட்டைப் பிரமச்சாரிகள் கதை சொல்லும் கழகமாகத் திகழ்கின்றது. குருக்கள் வந்து அதட்டும் வரை அவர்களது கதைத்தல் திகட்டாமல் நீண்டிடும்.
வரிசைக் கிரமத்தில் புத்தம் புது வாகனங்கள் வெள்ளோட்ட அபிஷேகத்திற்கு வந்திருக்கின்றன. பிள்ளையார் பூசைக்கு எலுமிச்சை மாலை தரித்து குங்குமம் சந்தனம் திரிபுண்டக விபூதி தரித்தும் நிற்கின்றன. தமயந்தி-துவியந்தி என்கின்ற பெண்பால் பெயர்களை புதிய வாகனங்களிலே அதன் உரிமையாளர்கள் சூட்டி எழுதியிருப்பது நன்கு தெரிகிறது. அவரவர் இச்சைகள் தீர்க்கும் இஷ்ட தெய்வமாய் இந்தப் பெண்பால் பெயர்கள் தொனித்தே விட்டன. வெட்கம் தலைகாட்டாமல் தமயந்தி - துஷியந்தி உடமைக்காரர்கள் சிதறு தேங்காய்களை உடைத்துக் கற்பூரத்தைக் கொழுத்தினார்கள்.
மணிக்கட்டில் நூல் இளைகட்டிட மத வேறுபாடின்றி வந்தவர்கள் ஒரத்தில் பூசை முடியும் வரை காத்திருந்தார்கள். மந்திரிகளே பிரதம குருக்களை அண்டி தெய்வகடாட்சம் கோரிய பின்னரே வெளிநாட்டு விவகாரங்களுக்கு விமானம் ஏறப் போவதுண்டு. அவரவர் வசதி தகுதி அறிந்து நடப்பவர் குருக்கள். சிந்திக்கார முதலாளிக்கும் சகுனம் பார்த்துச் சொல்லுவதில் வல்லவர். அதற்கு ஏற்ற தட்சணை அவருக்கு ஊதியமாகவே கிடைக்கிறது. அதனால் குருக்களின் வாசஸ்தலத்தில் செல்லிடத் தொலைபேசி, கிரைண்டர், மிக்ஸி, சீடிபிளேயர் எல்லாமே உண்டு. வழிப்போக்கர்கள் இதுபற்றி எல்லாம் விசாரித்தால் கடுமையான நச்சரிப்பும் எச்சரிக்கையும் கிடைக்கும். குருக்கள் வெளியிடத்தின் வைபவ விழாக்கள் விசேஷ கருமங்களுக்கு அங்க வஸ்திரம் தரித்தபடி போய் வருவதைக் காணலாம்.
நேரங் காலம் இல்லாமல் தண்டவாளம் அதிர ரயில் ஒடுவதெல்லாம் அங்குள்ள எவருக்கும் நன்கு பழக்கப்பட்டதுதான். உச்சிக்காலப் பூசைக்கு அர்ச்சனை செய்த பூக்களையே சாயங்கால பூசைக்கும் பாவிக்கிறதுண்டு. பூப்பிடுங்கிப் பூசைக்கு உதவிட அங்கேயுள்ள உத்தியோகத்துக் குடியிருப்பாளர் யாருமில்லை. குருக்களே பூத்திருக்கும் செடி கொடிகளை நாடியலைவார். வெறு மேலோடு மழையிலும் வெய்யிலிலும் பிழைப்பாகக் கருதாமல் உழைப்பவர் குருக்கள்தான். தீப விளக்குகளில் மாத்திரம் தொண்டர்கள் திரிகள் வைத்து எண்ணையூற்றி எரிக்கிறதை எவருமே
is gests 8

காணலாம். தேவாரம் பாடவும் விக்கிரக வாகனங்கள் காவிக் கொள்ளவும் குடை பிடிக்கவும் குறிப்பிட்ட சிலர் அங்கு குடிய மர்த்தப்பட்ட கட்டைப் பிரமச்சாரிகளே. குடும்ப
வாழ்க்கை என்கிறது அவர்களுக்கெல்லாம் சிம்ம
சொப்பனமே, ஆளுயர மதில்கள் கோயிலின் காவ லரண்கள். உடைந்த கண்ணாடித் துண்டுகள் மதில்களின் மீதினில். கலியாணக் காட்சிகளுக்கு மட்டும் மாவிலை தோரணங்களும் பூச்சரங்களும் கோயில் மண்டபங்களைப் பிரகாசமாக்கிடும்.
வாசல் மண்டபத்தில் காற்றாட மாலை நேரத்தில் உட்காருபவர்கள் ஊர் விவகாரம், நடப்பு அரசியல், கிசுகிசுப்பு எல்லாம் விமர்சன வதந்திகளாக அங்கே பஞ்சாயத்துப் பண்ணப் படும். பகல் பொழுதில் தத்தமது தொழில்கள் பார்க்கப் போய்விடுகிறார்கள். தொட்டில் நிறை வாகத் தண்ணிர் தழும்பி நிற்பது பக்தர்களின் சுவடுகளைக் கழுவிட உதவுகிறது. குதிக் கால்கள் நனைப்பாக்கிட முடிகிறது.
பெருமாள் பிள்ளைக்கு எல்லாம் குமர்ப் பிள்ளைகள். சீதனம் ஆதனம் போதாத பெருந் திண்டாட்டம். அருட்பிரகாசம் அவரிடம்
விடுப்புப் பிடுங்கிடும் விண்ணர், ஜெகோவாவின்
சாட்சிகளைச் சேர்ந்தவரான போதிலும் சைவக் கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் இருப்பிடமும் காவல் கோபுரங்களை விநியோகிப்பதிலும் ஈடு பாடு காண்பிப்பார். காணி பிரிக்கேலாத சிக்கலை பெருமாள் பிள்ளை இவரிடம் சொல்லிச் சொல்லி தன் குடும்பச் சுமையை இறக்கி வைப்பார். யூடிஏயில் உத்தியோகம் பார்க்கிறவனின் சாதகக் குறிப்பை வாங்கிக் கொண்டு வந்தவர் குருக் களிடம் கொடுத்திருக்கிறார். பொருத்தம் பார்த்த குருக்களோ ஆண் குதிரை பெண் குரங்கு
என்றெல்லாம் விளக்கம் வகுத்துச் சிட்டை
போட்டுக் கொடுத்திருந்தார். பெருமாள் பிள்ளைக்குப் புரிகிறதாயில்லை. உத்தமம்
எதுவென்பது தித்திப்பதாயில்லை.
அருட்பிரகாசம் இடைக்கிடை பெருமாள் பிள்ளையின் குடும்பக் கவலைகள் மறக்கச் செய்வதற்காக படம் பார்க்கப் போன கதையைச் சொல்லி வைப்பார். இருந்தாற் போல டிஸ்யூம் டிஸ்யூம் போடுகின்றவனின் சாதுரியத்தை ஹாஸ்யமாகச் சொன்னாலும் பெருமாள் பிள்ளையின் மண்டையில் ஏறுவதாயிராது. நவக்கிரக தோஷம் நீங்கிடக் குருக்கள் சொன்ன வழிகள் மனப்பாடமாகின. புரட்டாதிச் சனியும் எள்ளெண்ணை எரிப்பும் மகத்தான கருமங்கள் போலப் பட்டது.
குருக்கள் தட்சணை வாங்கிக் கொள்ள மறந்திடார். சோழியன் குடுமி சும்மா ஆடிடாதே. அருட்பிரகாசம் தட்சணைப் பிடுங்கலைக் கண்டனம் செய்து போர்க்கொடி பிடிப்பார். அவர் பக்கத்தில் உள்ள தேவாலய ஊதியத்தை ரைத்ஸ் கலக்சன்ஸை இவர் எதிர்ப்பு வாதமாகப் பிரதிவாதம் செய்வார். இப்படியான களமாக கோவில் மாறிப் போயிற்று. குருக்களுக்கு இவர்களை விரட்டியடிப்பதே சோதனையான வேதனை வேலையாகிப் போயிற்று.
தன்னந்தனியான வேளைகளில் அருட் பிரகாசம் திருவாசகம் போல் விவிலிய நூலைத் தூக்கி வைத்திருந்து வாசித்தபடியே பெருமாள் பிள்ளையின் வருகையை தேவன் வருகை போல் எதிர்பார்த்திருப்பார்.
ஆனால் இருவருமே அதீத வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு அங்கே குடி புகுந்தவர்கள். அதே காரணத்தால் அவ்விடத்தை விட்டகன்றிடாமல் நுளம்புக் கடிகளோடும் உறைபவர்கள். தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதுதான்.
a 睿恶邀
ソ 9

Page 7
எனது வேரும் எல்லோரது இருப்பும்
- முல்லை முஸ்ரிபா
p
காற்றென வீசுவாய் சுவாசிக்கவும் மெயப்பட்டு மகிழவுமென பலரிருப்பர்.
கருமேகமெனப் படருவாயப் உன் பொழிதலில் ஈரழித்துச் செழித்தே செடிகளும் அதனிடைக் களைகளுமாய்ப் பெருத்து வளரும்.
விருட்ஷமென்றே விரிவாய் நிழலினில் வசிக்கவும் கனி கொண்டு வேர் நீள உறிஞ்சவும் உறவிருக்கும்.
p5
மெதுவென மலருவாய் முகரவென உதடுகள் துடித்திருக்கும் LDO 85600TLD
நீ வாடுங்கால், உனைக் கொய் தெறியக் கரங்கள் பல நீளும் முரண்பட்டு.
நீ
தாகித்திருக்கையில்
ஒரு மிடர் ஈவாரிலர் அங்கனமே நீ சாகுங்கால், உன் சவத்தின் மீதில் ஒரு சொட்டுக் கண்ணிர் மல்குவார் யாருளர் கூறேன் மனசே.
essed Q

பிந்திய முன்னாள் ஆசிரியரின் தரிசனத்தில் முந்திய முன்னாள் ஆசிரியர்
சிவகுருநாதன்
- ராஜ முறிகாந்தன்
தினகரன் முன்னாள் ஆசிரியர் இ.சிவகுருநாதனை அட்டையில் படமாகப் போட்டு அவர் பற்றிய கட்டுரையொன்றை எழுதவேண்டும் என்று மல்லிகை ஆசிரியர் ஓகஸ்ட் 2ஆந் திகதி சனிக்கிழமை காலையில் கேட்டுக் கொண்டபோது அடுத்த சனிக்கிழமை அவரைச் சந்தித்து உரையாடி எழுதலாம் என்று கூறியிருந்தேன். ஓகஸ்ட் 9ஆந் திகதி காலை அவரை வைத்தியசாலையில் சந்திக்கச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் வானொலிச் செய்தி அவர் மரணத்தை அறிவித்தபோது உறைந்து போனேன். அவரை அட்டைப் படத்தில் போட்டுக் கெளரவிப்பதற்கு மல்லிகை ஆசிரியர் பலமுறை முயற்சித்த போதும் அட்டையில் தனது படம் வெளிவந்தால் தான் இறந்து விடுவேன் என்று கூறி மறுதலித்து வந்துள்ளார். அவர் உயிர் வாழும் போதே கெளரவிக்க மேற் கொள்ளப்பட்ட இந்த முயற்சி அவருடைய இறப்பிற்குப் பின்னரே காரியசாத்தியமாவது கனத்த வேதனையைத் தருகிறது.
ஒரு கல்விமானாக, பத்திரிகையாளராக, சட்ட விரிவுரையாளராக, சைவ சமயியாக, சமூக சேவகராக, மேடைப் பேச்சாளராக சிவகுருநாதனின் பல் பரிமாணத் தோற்றப்பாடுகளைத் தரிசிக்கும்போது தன்னை ஒரு பத்திரிகையாளராக இனங்காட்டிக் கொள்வதிலேயே அவர் பெருமுனைப்புக் காட்டிவந்துள்ளமை புலனாகின்றது. தினகரனில் அவருடைய பணி முடிவுறுத்தப்பட்ட பின்னரும் அதனோடிருந்த ஈடுபாட்டினை இழப்பதற்கு இறுதிக் காலம்வரை அவர் சிறிதும் விரும்பவில்லை.
நவீன கல்விக் கோட்பாடுகளில் ‘வாழ்நாள் வரை நீடித்த கல்வி வலியுறுத்திக்
DGGGSOS 11 MONS

Page 8
கூறப்படுகின்றது. இதற்கு நல்லதொரு உதாரணராக சிவகுருநாதன் திகழ்ந்து வந்துள்ளார். 1931 ஒக்ரோபர் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்துக் கந்தர் மடத்தில் பிறந்த சிவகுருநாதன் ஆரம்பக் கல்வியை பரி.யோவான் கல்லூரியிலும், யாழ். இந்துக்கல்லூரியிலும் பெற்றுக்கொண்டு உயர்கல்வியை பெறுவதற்காக கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் சேர்ந்தார் (19501952). அங்கே ‘தமிழ் ஒளி’ என்னும் மாணவர் சஞ்சிகைக்கு சிவகுருநாதனே ஆசிரியர். ஒரேயொரு இதழே வெளிவந்த இச்சஞ்சிகையின் அன்றைய மாணவப் பிரசுர கர்த்தா இன்றைய பேராசிரியர் கா.சிவத்தம் பி. சிவகுருநாதனினி பத்திரிகைத்துறைக்கான பிள்ளையார்சுழி ஸாஹிராக் கல்லூரியிலேயே இடப்பட்டது.
அங்கிருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குப் பிரவேசித்த சிவகுருநாதன் தமிழ்மன்றம் நடாத்திய ‘இளங்கதிர்’ சஞ்சிகைக்கு 1954ஆம் ஆண்டிற்கான ஆசிரியராகக் கைலாசபதியுடன் போட்டி யிட்டு வாக்களிப்பின் மூலம் தெரிவு செய் யப்பட்டார். பல்கலைக்கழக இந்து மகா சபையில் சஞ்சிகையான “இந்து தர்மத் தின்’ ஆசிரியராகவும் செயற்பட்டார். இங்கு இளங்கலைமாணி பட்டத்தினைப் பெற்றுக் கொண்டு வெளியேறினார்.
இளம்பட்டதாரியான சிவகுருநாதன் 1955இல் எஸ்மன்ட் விக்கிரமசிங்கவினால் பத்திரிகை உலகிற்கு அறிமுகஞ் செய்யப் பட்டார். 'தினகரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த இவர் பாராளுமன்ற நிருபராகவும் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளில் செய்தியாசிரியராகப் பதவி யேற்றார். 1959இல் வீ.கே.பீ.நாதனிட
மிருந்து பிரதம ஆசிரியர் பதவியை கே.கைலாசபதி பொறுப்பேற்றுக் கொண்டபோது அவருக்கு உறு துணையாக நின்று சிவகுருநாதன் பணியாற்றினார்.
இக்காலத்தில் இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட தேசிய இலக்கிய நிர்மாணத்தில் தினகரன் சக்தி மிக்க போராயுதமாக கைலாச பதியினால் உபயோகிக்கப்பட்டது. கைலாசபதி பிரதம ஆசிரியராக இருந்த காலத்தில் (1959-1961) ‘வீரகேசரி’ நிறுவனத்தில் இரண்டு தடவைகள் வேலை நிறுத்தங்கள் இடம்பெற்றன. முதலாவது வேலை நிறுத்தம் ஆறு மாதங்களுக்கு நீடித்தது. எனவே தமிழ் வாசகர்கள் அனைவரும் தினகரனை மட்டுமே வாசிக்கும் நிலை ஏற்பட்டது. கைலாச பதியின் முற்போக்கான கருத்துப் பரம்பல்களுக்கும் தேசிய இலக்கி யத்தின் உறுதியான நிர்மாணத்தி ற்கும் இது பெருவாய்ப்பாக அமைந் தது. இக்காலப்பகுதியில் சிவகுரு நாதன் செய்தி ஆசிரியராகப் பணி யாற்றி உறுதுணை புரிந்தார்.
1961 ஜ" லை மாதத்தில் கைலாசபதி பல்கலைக்கழக விரிவு ரையாளராகச் சென்றதும் சிவகுரு நாதன் பிரதம ஆசிரியராகப் பொறுப் பேற்றார். பல்கலைக்கழகச் சிந்தனை யாளர்கள் பலர் தினரகனில் தொடர்ச்சியாக எழுதினர். கனதி மிக்க கட்டுரைகளைத் தாங்கித் தினகரன் வெளிவந்தது.
yet 636): 2 Q

1969இல் சிவகுருநாதனுடைய தலைமைத்துவத்தில் தினகரன் தமிழ் நாடக விழாவொன்றினை கொழும்பில் நடாத்தி கலைஞர்களைக் கெளர வித்தது. இலங்கைக் கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் பற்றி ஆசிரியத் தலையங்கங்கள் எழுதும் சிறந்த பாரம் பரியத்தை சிவகுருநாதனே தொடக்கி வைத்தார். பெருந் தொகையான முஸ்லிம் கலை இலக்கியவாதிகளுக் கும் இவர் களம் அமைத்துக் கொடுத் தார். டீ.ஆர்.விஜயவர்த்தனா குடும்பத தின் சொத்தாகவிருந்த லேக் ஹவுஸ் 1973 ஜூன் மாதத்தில் தேசிய மயமாக்கப் பட்ட மாற்றுக் காலத்திலும் பின்னர் வெவ்வேறு அரசியற்கட்சிகளினால் மாறி மாறி அமைக்கப்பட்ட அரசாங்கங் களின் ஆட்சிக் காலங்களிலும் சிவகுரு நாதன் தொடர்ந்து ஆசிரியராக இருந்தார்.
தினகரனில் பணியாற்றிக் கொண்டே சட்டக்கல்லூரியிற் கற்றுத் தேறினார். சட்டவரலாறு, சட்டமுறைமை கள், முஸ்லிம் சட்டம் என்பவற்றைப் போதிக்கும் சட்டவிரிவுரையாளராகவும், பத்திரிகைத்துறை விரிவுரையாளரா கவும் பணியாற்றினார். எண்பதுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முது கலைமாணிப் பட்டப் பரீட்சைக்குத் தோற்றினார். இதன் பொருட்டு இவர் எழுதிய “இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி' என்ற ஆய்வுக் கட்டுரையை சில தனவந்தர் களின் அனுசரணையுடன் 1993 டிசம்பரில் தமிழ்நாட்டில் அச்சிட்டு நூலாக வெளியிட்டார். இத்துடன் கலா
VANS
நிதிப்பட்டம் பெறுவதற்கான தயாரிப்புக் களையும் மேற்கொண்டார். ‘வாழ்நாள் வரை நீடித்த கல்வி’ என்னும் கல்விக் கோட்பாட்டிற்கு இவர் ஓர் உதாரண மனிதராகத் திகழ்ந்தார்.
மும்மொழிகளிலும் சிவகுருநாதனு க்கு இருந்த ஆற்றலும் சிறந்த பொது சனத் தொடர்புத் திறனும் மூன்றாண்டு காலம் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராகப் பணியாற்றும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தன.
தினகரன் ஆசிரிய பீடத்தில் ஆறாண்டு காலம் பணியாற்றிய சிவ குருநாதன் முப்பதிநான்கு ஆண்டுகள் அதன் பிரமத ஆசிரியராகப் பணியாற்றி 1995 டிசம்பர் மாதத்தில் பணி நிறுத்தஞ் செய்யப்பட்டார். இலங்கைப் பத்திரிகைத் துறையில் மிக நீண்ட காலம் பிரதம ஆசிரியராக இவரே பணியாற்றி யுள்ளார்.
பின்னர் கொட்டாஞ்சேனையி லிருந்து ஒரு சில மாதங்களே வெளி யிடப்பட்ட 'தினத்தந்தி’ என்ற பத்திரிகை யின் பிரதான ஆசிரியராக சிவகுரு நாதன் பணியாற்றினார். ஆனால் இப் பத்திரிகை குறைப் பிரசவக் குழந்தை யாக முடிவினைத் தழுவிக் கொண்டது.
எந்த இடத்திலும் எந்நேரமும் தன்னை ஒரு சைவத் தமிழனாக அடை யாளங் காட்டும் வகையில் நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் காட்சி தந்த சிவ குருநாதன் எவ்விதத் தயாரிப்புகளு மின்றி நீண்ட மேடைப் பேச்சுக்களை நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவர். இவற்றின் போது சபையில் பிரசன்ன
Yr 13
AZUL 6656):

Page 9
மாயிருக்கும் பிரமுகர்களின் பெயர்கள் இடையிடையே குறிப்பிட்டு அவர்களைப் புழகாங்கிதமடையச் செய்வார். சிலபோது பாலியல் விகடங்களையும் ஊடே தெளித்து சபையோரைக் கிளுகிளுப் பூட்டுவார்.
சங்கீதத்திலும் கவின் கலைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரான சிவகுரு நாதன் எளிமையாகப் பழகும் பண்பு கொண்டவர். பல பட்டங்களையும் விருது களையும் பெற்றவர். சிறப்பு மிக்க பல பதவிகளை வகித்தவர். அவை அனை த்தையும் இச்சிறு குறிப்பில் அடக்குவது காரண சாத்தியமற்றது.
ஆற்றலும் வினைத்திறனும் வாய்ந்த அற்புதமான செயற்குழுவினைக் கொண்ட கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவ ராகத் தெரிவு செய்யப்பட்ட சிவகுருநாதன் சமூக சேவைகளை ஆற்றும் களமாக கொழும்புத் தமிழ்ச் சங்கத்தைத் தலைமை தாங்கி நடாத்திச் சென்ற வேளையில் கொடிய நோய்கள் அவரைக் காவு
கொண்டன. குடும்பப் பற்றுமிக்க வரான சிவகுருநாதன் மனைவி தனரஞ்சிதமணி பிள்ளைகள் மாலதி, கீதா, விஷ்ணுவர்த்தனி , உற வினர்கள், நண்பர்களை நிரந்தர மாகப் பிரிந்து சென்றுவிட்டார்.
சிவகுருநாதன் தனது ஒரே யொரு நூலான ஆய்வுக் கட்டுரை யின் முன்னுரையில் ஆழமாகப் பதித் துச் செனி ற வேணவா கருத்தூண்றி நோக்கத் தக்கது.
“ஒன்றுபட்ட நாடாக, சகல இனத்தவர்க்கும் சொந்தமான நாடாக, பல்வேறு இனங்கள் வாழ்ந்தாலும் எல்லோரையும் தன் பிள்ளைகள் என்று ஏற்கும்
p5 IT LIT 85 இலங்கை என்றென்றும் திகழ வேண்டும்.”
எழுதப்படாத கவிதைக்கு
வரையய்படாத சித்திரம்
NSAg22
S Tyggsges ー
 

uሮሶጫዳቃ ஆச்சி
பார்வதி ஆச்சி இவளை அன்புடன் பலரும் இப்படி அழைப்பத வழக்கம்! வயத எண்பத முதகு கூனி கேள்விக்குறியாய்
ஆகி உளத
லொக்கு லொக்கென பொல்லையூண்டி விசரிபோல ஆச்சி திரிவாள்! பல்லுக் கில்லு ஒன்றுமே இல்லை! மல்லுக் கட்டியே சோற்றை மெல்லுவாள்!
பெற்ற பிள்ளைகள் ஏழு ஆச்சிக்கு பேரக் குழந்தைகள் முப்பத்தெட்டு பாட்டி மட்டுமா? பூட்டியும் ஆயிற்றாள்!
ஒலையால் வேய்ந்த சிண்னக் குடிசையில் ஒண்டிக் கட்டையாய் ஆச்சி வாழ்கிறாள்!
esses
- ஆலையூரன்

Page 10
ஆச்சியின் மாத வருமானம் என்றால் பிச்சைச் சம்பளம் இருநாறு மட்டுமே! கூழோ கஞ்சியோ எதவோ ஆயினும் ஆச்சி கையால் ஆக்கியே உண்பாள்.
ஒவ்வொரு நாளும் ஒருவேளை உணவுதான்! மாற்றிக் கட்டவும் சேலைகள் இரண்டுதான் காற்றைப் போல உழைத்தவள் ஆச்சி காய்ச்சல் தலையிடி
கண்டதுமில்லை!
பெற்ற பிள்ளைகள் பேரக் குழந்தைகள் மருமக்கள் உட்பட உற்றார் உறவினர்
அனைவரும் ஆச்சியை முகத்தால் பார்க்கும் பார்வை மட்டுமே!
மண்ணைக் கிளறி காய்கள் பிஞ்சுகள் விளைவித்தம் ஆச்சியின் பிழைப்பு ஓடும்!
வறுமை நிலையிலும் ஆச்சியின் தொங்கல் சேலை முடிச்சில் சில்லறைக்காசு தொங்கிக் கொள்ளும்! அதனை அவிழ்க்கவே ஆட்கள் அதிகம்! ஆச்சியுங் கொடுப்பா!
வயத ஆனாலும் ரோசம், மானம் வீரிய மனமும் கொண்டவள். ஆச்சி ஆச்சியின் அப்புவும் அப்படித்தானாம்!
665);
শুরুত্ৰ

தா.பாணர்டியன் அவர்களின் இலக்கியச் சொற்பொழிவிலிருந்து.
- ப. ஆப்டீன்
இலக்கியவாதியும், முன்னாள் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரும், தாமரை இலக்கியச் சஞ்சிகையைச் சார்ந்தவருமான மதிப்பிற்குரிய தா.பாண்டியன் அவர்களின் இலக்கியச் சொற்பொழிவு கடந்த 08.09.2003 மாலை, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம் பெற்றது.
இவ்விலக்கியக் கூட்டத்தை மல்லிகைப் பந்தல் ஏற்பாடு செய்திருந்தது. திரு. எஸ்.ஆர்.பாலச்சந்திரன் தலைமை வகித்தார். முதலில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் இந்தியாவில் தமிழ் மொழி உட்பட பதினாறு தேசிய மொழிகள் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. இருந்தாலும் இலங்கையிலிருந்து வெளியாகும் நூல்களோ சஞ்சிகைகளோ தமிழ் நாட்டில் இறக்குமதி செய்யப்படுவதில்லை. இந்திய மத்திய அரசினால் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இங்கே கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கும் 'மல்லிகை" சஞ்சிகையை தமிழ்நாட்டு வாசகர்களால் நுகர முடியாத துரதிர்ஷ்ட நிலைமை அங்கு நீடித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தரமற்ற நூல்களும் சஞ்சிகைகளும் எமது நாட்டில் எவ்விதத் தடையுமின்றி வந்து குவிகின்றன.
நாம் எமது நாட்டின் சஞ்சிகைகளையோ நூல்களையோ அங்கு அனுப்ப விரும்புவது எமது கருத்துக்களையும் சிந்தனைகளையும் தமிழ்நாட்டு வாசகர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உயர் நோக்கத்திற்காகவன்றி வியாபாரத்திற்காக அல்ல.
எமது இந்த புனிதமான நோக்கத்தை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று தோழர் பாண்டியன் அவர்களை வேண்டிக் கொண்டார்.
GUGGE 17

Page 11
இது தவறினால் இந்தியாவிலிருந்து இங்கு குவியும் தரமற்ற நூல்களையும் சஞ்சிகைகளையும் தடை செய்வதற்கான ஒரு பெரும் போராட்டத்தை ஆரம்பிக்க நாம் ஆயத்தமாக இருக் கிறோம் என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார் மல்லிகை ஆசிரியர்.
அதைத் தொடர்ந்து "சமீப காலங்களில் தமிழிலக்கியப் போக்குகள் என்ற தலைப்பில் திரு. தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றும் போது, ‘இலங்கையில் வெளியாகும் சஞ்சிகைகளும், நூல்களும் தமிழ்நாட்டில் ஆயுதக் கலாசாரத்தை தோற்றுவிக்கலாம் என்ற ஐயப்பாட்டின் காரணமாகவே அவை அங்கு இறக்குமதியாவதில்லை இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார்.
இன்று இவ்வுலகம் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நல்ல சிந்தனைகளை விதைப்பதன் மூலம் மக்கள் விழிப்படைய வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். ஆகவேதான் பிற விடயங்களை விட்டு விட்டு மக்களை எவ்வாறு இவ்விபத்துக்களிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதை படைப்பாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும்.
கூர்ந்து கவனித்தால் அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க
மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்
கலாம். வானத்தை நோக்கி மாடிக் கட்டிடங் களைக் கட்டிக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள் இன்று ஐந்து மாடிக் கட்டிடங் களுக்கு மேல் கட்டிடங்கள் கட்டுவதில்லை.
அடுத்ததாக , அவர் அணுகுண்டு விடயமாக கருத்துத் தெரிவித்த போது, எந்த
விதத்திலும் அணுகுண்டை அழிப்பது சாத்தியமில்லை. அணுகுண்டை அழிப்பதென்பது முழு அமெரிக்காவை யும் அழிக்கும் முயற்சியாகும். அணு குண்டை எங்கு கொண்டு போய் அழித் தாலும் முடிவில் அது மக்களையே சாகடித்துவிடும். எனவே தான் அமெரிக்க மக்கள் ஒவ்வொரு விநாடியும் மரண பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இனி படைப்பிலக்கியம் பற்றி பேசும் போது புதுக் கவிதைகள் செய்யும் மகத்தான பணியைப் பாராட் டினார். ஆக்கபூர்வமான கருத்துக்கள் புதுக்கவிதைகள் மூலம் வெளிப்படு கின்றன. ஏனைய இலக்கிய வடிவங் களைப் போல் அல்லாது பாரதியும், பாரதிதாசனும் வகுத்த வழியில் புதுக் கவிதைகள் மிகவும் திறமையாக இலக்கியப் பணி செய்கின்றன என்று குறிப்பிட்டார்.
மதிப்பிற்குரிய தா.பாண்டியன் அவர்கள், இலங்கை பொதுவுடமைக் கட்சியின் அழைப்பை ஏற்று பருத்தித் துறை தொகுதி முன்னாள் பாராளு மன்றப் பிரதிநிதியும் (1956-1960) பொதுவுடமைவாதியுமான தோழர் பொன்.கந்தையா அவர்களின் 43வது ஞாபகார்த்த விழாவிற்கு சிறப்பு அதிதியாக வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணிசமான அளவு இலக்கிய வாதிகளும், ஆர்வலர்களும் இக் கூட்டத்திற்கு வருகை தந்தனர்.
068 8

குப்பிழான் சண்முகனின்
அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் (பத்தி எழுத்துக்களின் திரட்டு)
- பா.இரகுவரன்
நூல் பற்றிய திறனாய்வு
ஈழத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற கணிப்பிற்குள் பலராலும் அடிக்கடி குறிப்பிடப்படுபவர் குப்பிழான் ஐ.சண்முகன். “கோடுகளும் கோலங்களும்’ (1976),
“சாதாரணங்களும் அசாதரணங்களும் (1982) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் இவரது படைப்பாக்கத் திறனுக்கு உரைகற்களாக உள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிருஷ்டி இலக்கியத்துறையில் அவர் அஞ்ஞானவாசத்தை மேற்கொண்டிருந்தாலும், கலை இலக்கியத்துறையுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருக்கிறார்.
நூல்கள், சினிமா, நாடகம், கவிதை, ஓவியம் பற்றியும், கலைஞர்கள் பற்றியும் மற்றும் இலக்கியப் பதிவுகளாகவும் அவ்வப்போது எழுதியவை 2003இல் நிகரி வெளியீடாக நூலுருப் பெற்றுள்ளன.
அறிமுகங்கள் பகுதியில் சாந்தன், பேரன் ஜனகன், ராஜேஸ் கண்ணன், குந்தவை, ஜானகிராமன் மற்றும் 12 இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கியதாக மொத்தம் 07 நூல்கள் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் ஒரு பக்கம், அரைப் பக்கம் என மிகவும் குறுகலான அறிமுகங்கள் முழுமையை எடுத்துரைக்க அல்லது நெருங்க விடாமல் தடுக்கின்றன. ஆயினும், ராஜேஸ் கண்ணா, தி.ஜனகன் மற்றும் 12 இளம் எழுத்தாளர்கள் குப்பிழான் ஐ.சண்முகனின் அங்கீகாரம் பெற்று நிச்சயம் புதுத்தெம்பு பெற்றிருப்பார்கள்.
குந்தவையின் “யோகம் இருக்கிறது, இங்கிருந்து 12 சிறுகதைகள் (கலைஞர்களாக)
S D GGGG 19 তত্ত্ব

Page 12
ஆகியவற்றுக்கான அறிமுகங்கள் சற்று விரிவாக உள்ளன. அவற்றின் மீதான தன் கருத்தை மிக நேர்த்தியாக எடுத்துரைத் துள்ளார்.
‘இவரின் கதைகளில் வரும் பாத்தி ரங்கள் ஏராளம், தனது அவதானிப்புகள் மூலம் இவற்றையெல்லாம் இணைத்து ஒரு முழுமையை ஏற்படுத்துகின்ற திறமை அபாரமானது”.
* சாதாரண மனிதரும், சாதாரண சம்பவங்களும் இவரின் படைப்புகளைக் கட்டி எழுப்புகின்றன. ஆனால் படைப்புகள் தரும் தரிசன வீச்சு அசாதாரணமானது”.
“அனுபவத்தளம் விரிய விரிய கலாபூர்வமான வீச்சோடு கூடிய கதைகளைப் படைத் துள்ளார்". (குந்தவையின் யோகம் இருக்கிறது சிறுகதைத் தொகுதி.(பக்- 11,12)
பன்னிருவரின் சிறுகதைத் தொகுதிக்கான அறிமுகம் சிறப்பாக அமைந்திருக்கிறது. தனித் தனியே 12 பேரின் சிறுகதைகளின் கரு, கலா பூர்வ வெளிப்பாடு பற்றிய கருத்துக்கள் குறளின் வலிமை பெற்று நிமிர்கின்றன. அத் துடன் ஒட்டு மொத்தமாக இவர் இத்தொகுதி பற்றி பின்வருமாறு குறிப்பிகிறார். (பக்-14)
‘இவர்கள் இப்போது முதிரா இளைஞர் கள். படைப்பின் முழுமையை அடைய அவாவி நிற்பவர்கள். இவர்களில் சிலருக்கு முழுமை எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது, சிலருக்கு கையெட்டும் தூரத்திலிருந்து போக்குக் காட்டிக் குட்டுகின்றது. சிலர் முழுமையை எட்டி விட்டோ மென தம்மளவில் நம்பி, ஆனால் முழுமையின் வசீகரக் கவர்ச்சியைக் காணாதவர்களாய் வேறு திசையில் பயணிக்கின்றார்கள் தமிழ் நாட்டின் கோணங்கி போல”. (இத் தொகுதி யில் தாட்சாயினி, இயல்வாணன், கோகுல" ராகவன், சிவராணி, ச.இராகவன், ச.சாரங்கா,
சி.கதிர்காமநாதன், உடுவில் அரவிந்தன்,
ந.சத்தியபாலன், பிரபாகரன், ரவீந்திரன், ச.குமுதினி ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.)
சினிமா, புகைப்படம் போன்ற தொழில் நுட்பக் கலைகளின் மீதான அபரிமிதமான இவரின் ஈடுபாடு சிறுகதை அறிமுகங்களிலும் வெளிப்படுகிறது.
“தான் காணும் உலகின் வேசங் களையும், பலவீனங்களையும் ஒரு வித (அடக்கப்பட்ட) வெறியுடன், அதேவேளை ஒரு புகைப்படக் கலைஞனின் அவ தானத்துடன் படமாக்கியுள்ளார்.’ (சாந்தனின் கடுகுக் கதைகள். பக்-3)
“இந்த வகையில் இவரது கதை கள் நவீன திரைப்படங்களை ஞாப கப்படுத்துகின்றன.’(குந்தவையின் யோகம் இருக்கிறது. பக்-11)
“இந்த நாவல் ஒரு சிறந்த திரைப படமாகலாம்.” (செங்கை ஆழியானின் வாடைக்காற்று. பக்-23)
நெல்லை க.பேரனின் விமானங்கள் மீண்டும் வரும் நாவலின் அறிமுகத் திலும் சரி, 1991இல் பேரன் குடும்பத் துடன் ஷெல் தாக்குதலால் மரணித்த நினைவுக் குறிப்புகளிலும் சரி, பேரனின் பரந்துபட்ட கருப்பொருள் பற்றி கூறி விட்டு, அவரின் எழுத்துக்களின் கலா பூர்வ வெளிப்பாடு பற்றிக் கூறாமல் விட்டது ஒரு வகையில் வரலாற்றுத் தவறு என்றே கூறுவேன்.
நெல்லை க. பேரண் பற்றிய நினைவுக் குறிப்புகள் பேரனுடன் எம்மை ஐக்கியமாய் வாழ வைக்கும் சக்தி கொண்ட மந்திர எழுத்துக்களாக மட்டு
08ബ8 20 SAp22

மன்றி ஒரு கால கட்டத்தின் கலை இலக்கிய செயற்பாடுகளின் பெறுமானங்களாக ஆவணம் பெற்று மிளிர்கின்றன.
இந்நூலின் மிகவும் சத்தான பகுதி
யாக விமர்சனப் பகுதி அமைந்துள்ளது.
இபபகுதியை 2 நிலையில வகைப்பாடு செய்துள்ளார்.
1. நூல்களுக்கான விமர்சனங்கள் 2. திரைப்படம், நாடகம், ஓவியங் களுக்கான விமர்சனங்கள்
விமர்சனங்களிலும் எழுத்துச் சிக்க னத்தை அதிகம் பேணி இருந்தாலும், குறை, நிறைகளை லாவகமாகக் கூறும் மொழி யாட்சி சிலிர்க்கவும். சிந்திக்கவும் வைக் கின்றன. கரு (Theme), கதைப் பின்னல் (Plot) பற்றி கலாபூர்வமான பார்வையுடன் எழுதப்பட்ட இந்நூலில் உத்திகள் பற்றிய பார்வை போகாமல் உள்ளது.
செங்கை ஆழியான் , சிற் பி. லோகேந்திரலிங்கம், யோகேஸ்வரன். செம்பியன் செல்வன். பெனடிற் பாலன். பார்த்திபன், தெணியான், அ.யேசுராசா ஆகிய 9 பேரின் நூல்கள் விமர்சனங் களுக்குள்ளாகி இருக்கின்றன.
செங்கை ஆழியானின் 'வாடைக் காற்று நாவல் பற்ற பின்வருமாறு கூறுகிறார். (பக்-21.23)
“இதையொரு நாவல் என்று சொல்ல எனக்கு ஏனோ தோன்றவிலலை. ஒரு மகத்தான நாவல் தரும் முழுமையை - பூரணமான நிறைவை என்னால் இதில் அனுபவிக்க முடியவில்லை. ஒரு தொடர் கதையின் தன்மையே இதில் மேலோங் கியிருப்பதாக எனக்குப்பட்டது.
Gla bisжњ ஆழியானின் பாத்திரங்களின்
உரையாடல்களும், கதை சொல்லும் கவர்ச்சியும் அலாதியானவை தான். இவரின் வெற்றிக்கு இதுவே முழு முதற் காரண மென்றும் சொல்வேன். வாடைக் காற்றும் இந்த வகையில் சோடை போகவில்லை.
முழுமையான ஒரு கலைத்துவ நிறைவுக்கு அப்பால் ஆயிரம் ஆயிரம் நெஞ்சங்களை உருக்கும் தன்மை இந் நாவலுக்கு உண்டென்று சொன்னால், அக்கருத்தோடு நான் முரண்பட மாட்டேன்.”
சிற்பியின் ‘உனக்காகவே கண்ணே நாவல் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப் படுகிறது. கருப்பொருள். சம்பவங்கள். எழுத்து நடையில் இறுக்கத் தன்மை, நடப்பியல்புடன் ஒட்டாத கதாபாத்திர இயக் கங்கள் அனைத்தும் கேலி தொனிக்கும் படியாக கேள்விக்குள்ளாக்கப் பட்ட விதம், குப்பை இலக்கியங்களைத் தூக்கியெறிய வேண்டும் என்ற இவரின் மன அவாவை நன்கு வெளிப்படுத்து கின்றன.
“மு.வே.யோகேஸ்வரனின் “பயணம் சிறுகதைத் தொகுதியும். மேற்படி கடும் விமர்சனத்ததுக்குள்ளாகினாலும், வளரும் எழுத்தாளனுக்குரிய சில குறைபாடுகள் இவரின் கதைகளில் இருந்த போதிலும், இவரின் பார்வை அடித்த61 மக்களின் பிரச்சினைகளை அணுகுவதினால் இவரின் மேல் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது” என்ற வரிகள் யோகேஸ்வரனுக்கு நம்பிக்கை யூட்டுவன. வளரும் எழுத்தாளாகளைத் தட்டி விடும் பண்பு நூல் முழுவதும் காணப்படும் பெருந்தன்மையான வழிகாட்டல். இது சண்முகனின் வழமையான இயல்பும் கூட பனிையாக உள்ளது.
激 பர்த்தீபனின் ‘ஆர்ைகள் விற்ப6ை0க்கு நாவலும் கடும் விமர்சனத்துடன் ஊக்கு
配送エー「E画

Page 13
விப்புப் பெறுவதைக் காணலாம்.
லோகேந்திரலிங்கத்தின் ‘போலிகள்’ புதுக்கவிதை தொகுதியிலும் ‘போலிகள் மூலம் இந்த இளம் எழுத்தாளரை நான் சரியாகவே இனம் கண்டுள்ளேன் என நினைக்கின்றேன். இவரை உந்தும் ஆர்வங்களும், முனைப்பு களும் அலாதியானவை, வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் அந்த வெளிப்பாடுகள் சரியான கலையுருவம் பெற்றுள்ளனவென்று என்னால் கூறமுடியவில்லை’ என கூறிய சண்முகன் தற்போதைய புதுக்கவிதைகளின் பொதுவான நிலையையும் குறிப்பிடுகிறார்.
‘புதுக்கவிதைகள் என்று வருவன எல்லாமே நல்ல கவிதைகளாகி விடுவ தில்லை. உடைக்கப்பட்ட வசனங்களும், வாக்கியக் கோர்வைகளும், புதிர் போடும் நொடிகளும் புதுக்கவிதை என்ற பெயரில் வெளி வருகின்றன. இத்தொகுதியின் ஆசிரியர் இவற்றை இனம் கண்டுகொள்வாரேயானால் அவரது உன்னதமான நோக்கங்களுடனும், சரியான கலைப் பிரஞ்ஞையுடனும் எழுது வாரேயானால் அவரின் பணி மென் மேலும் சிறக்குமென நினைக்கிறேன். (பக்-33)
பெனடிற் பாலனின் தனிச் சொத்து குட்டிக் கதைகளுக்கான விமர்சனம் நல்ல முறையில் குட்டிக் கதைகள் என்றால் என்ன என்பதை எமக்கு உணர்த்துகின்றன. இடது சாரித் தன்மை கொண்ட பலரின் வரட்டுத் தனமான பிரச்சார எழுத்துக்களை நயம்பட தோலுரித்து வைக்கிறார். வாசித்துப் பாருங்கள்.
செம்பியன் செல்வனின் ஈழத்து தமிழ் சிறுகதை ‘மணிகள்’ சிறு கதைகளும் விமர்சனமும், அ.யேசு ராசாவின் "தூவானம் பத்தி எழுத்துக்கள்’, தெணியானின் ‘காத்திருப்பு நாவல் என்பன பாராட்டுப் பெறுகின்றன.
அயேசுராசா திசை பத்திரிகையில் எழுதிய பத்தி எழுத்துகள், தூவானம் என்ற நூலாக வெளி வந்துள்ளது. இவரின் தீவிரமான தேடல், விமர்சனப் பார்வை, பன்முகப் பட்ட கலை ஆளுமை, சமூக அக்கறை என்பன 'பத்தி எழுத்துக் களும் காத்திரமாக அமையலாம் என்பதற்கு தூவானம் சிறந்ததோர் எடுத்துக் காட்டு. இந் நூலின் கனதி, காத்திரம் என்பனவற்றை புள்ளி விபரங்களோடு எடுத்துக் கூறுகிறார் சண்முகன்.
தெணியானுக்கு இந்த வருடம் மணிவிழா ஆண்டு. தெணியானின் கலைத்துவம் பற்றி நீண்ட காலமாக முகத்தைச் சுழித்த பலர். அண்மைக் காலமாக ஒருவித மாற்றத்தை இவர் எழுத்துக்களில் காண்கின்றனர்.
ஈழத்து இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானவர் தெணியான். அவரது நான்கு நாவல்களும் இரண்டு சிறு
கதைத் தொகுதிகளும் ஏற்கனவே நூலுருப் பெற்றுள்ளன. அவருடைய
வழமையான கதைப் பதிவுகளிலிருந்து ஒரு வகையில் ஒரு வித்தியாசமான நாவலாக வெளிவந்தது "மரக்கொக்கு. மேலும் வித்தியாசமான விதத்தில் ‘காத்திருப்பு’ எனும் இந்நாவல் வெளி வந்துள்ளது. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான - நதி போன்ற கதை யோட்டத்தில் இயல்பான சித்தரிக்கும் பாங்கில் தெணியான் கலையின் முழுமையை, அவாவி நிற்பதை காத்திருப்பு காட்டுகின்றது.
தெணியானின் இடைவிடாத முயற்சிக்கு மணிவிழா ஆண்டில் குப்பிழான் ஐ.சண்முகனின் இந்தக்
F U-GE 1 22
豊功

கருத்துகள் மணிவிழாவில் பரிசாகவே அமைந்துள்ளது. தொடர்ந்த வெற்றிக்கு உற்சாகமூட்டுவதாகவும் உள்ளது. இனி தெணியான் கலைச் சித்திரிப்பில் தவிர்க்க முடியாமல் மிகுந்த நிதானத்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
. சண்முகனின் திரைப்பட ரசனையை சித்தார்த்த, கடலில் இருந்து ஒரு வீடு, அழகி, ஆரன்யா போன்ற திரைப்படங்களின் நயப்பு ஊடாகவும், புதிய காற்று படத்தின் மீதான கேலிப் பார்வை மூலமும் நன்கு வெளிப்படுகிறது. எனினும் கமராப் பார்வையை விட இலக்கியப் பார்வையே மேலோங்கி நிற்கிறது.
நாடகங்கள் பற்றிய விமர்சனம் அரங்கியல் பார்வையூடாக எழுதப் படாததும், ஓவியங்கள் பற்றிய விமர்சனம் கோடு, வெளி, வர்ண ஒத்திசைவு போன்ற
V திருமணம் நடைபெற்றது.
O வாழ்த்தங்கின்றோம்
மல்லிகையின் நீண்ட கால அபிமானியும் படைப்பாளிகள் மீது பேரபிமானம் கொண்டவருமான மாத்தளை ஹமீட் ஹாஜியார் தம்பதியின் மகள் சப்னா அவர்களுக்கும், ஹாஷிம் தம்பதியின் D856 பல்லுல் இருமைட் அவர்களுக்கும் சமீபத்தில்
O மணமக்கள் நீடுழி வாழ்க என மல்லிகை வாழ்த்துகின்றது.
O
வற்றின் மீதான பார்வையூடாக வெளிப் படாததும் நன்கு தெரிகின்றது.
மொத்தத்தில் இந்நூல் கலாபூர்வமான சிருஷ்டியை படித்த திருப்தியை எம்மில் ஏற்படுத்துகிறது. எம்மை புதிய திசையில் நெறிப்படுத்த முயல்கிறது. ஆயினும். சண்முகனின் 40 வருட கலை அனுபவங் களின் வெளிப்பாடு. இன்னும். இன்னும். சொல்லப்போனால் ‘உன்னதமான ஒரு நாவலைப் படித்த உணர்வு மேலிட்டது. வாழ்க்கையின் மகோன்னதம் புலப்பட்டது. ஏதாவது மகத்தான காரியத்தைச் செய் என்று ஏதோ தூண்டிக் கொண்டே இருக்கிறது (uis-78)
சண்முகனின் இவ்வரிகள் அவரின் அஞ்ஞானவாசத்துக்குச் சமர்ப்பண
மாகட்டும்.
- ஆசிரியர் ,
o' O
GSG) 23

Page 14
ஒரு பிரதியின்
மூணுமுணுப்புக்கள்
- மேமன்கவி
1. தோழர் பாண்டியனின் உரையும்
அணுகுண்டும்
கடந்த 8092003 அன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் சின்ன மண்டபத்தில் மல்லிகைப் பந்தலின் ஏற்பாட்டில் இந்தியப் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழகத்தின் முற்போக்கு இலக்கிய இயக்கத்துடன் நெருக்கமானவருமான தோழர். தா.பாண்டியன் அவர்களின் ஓர் அருமையான உரையினை கேட்க முடிந்தது. வழமையாக இலங்கை வரும் தமிழக போச்சாளர்களின் உரைகளை விட, தோழர் தா.பாண்டியன் அவர்களின் உரை மிகவும் ஆழமாக அமைந்து இருந்தது. இன்றைய மார்க்ஸியவாதிகளின் பார்வை எத்தகைய அணுகுமுறையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என எதிர்ப் பார்க்கப்படுகிறதோ அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலான ஓர் உரையாக தோழர் பாண்டியனின் உரை அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.
அவரது உரையில், செப்டம்பர் - 1ற்குப் பிறகான அமெரிக்க மக்களின் வாழ்வு பற்றிய மனோநிலையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை பற்றியும், இன்றைய உலக சண்டியனாகவும். வல்லரசாகவும் தன்னை நிலை நிறுத்தப் பார்க்கும் அமெரிக்கா போன்ற சக்திகள், மனித குலத்திற்கு தீங்கு விளைக்கவும். பிறரை பயமுறுத்துவதற்காகவும். பயன்படுத்தி கொண்டிருந்த அணு ஆயுதங்களை பிறர் வைத்திருக்கக் கூடாது. தான் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பது நியாயம் என உலக நியாயம் பேசியது போக இனியும் அவ்வாயுதங்களை பாதுகாப்பது ஆபத்தானது என அச்சக்திகள் உணர்ந்து கொண்டிருப்பதையும். அவ்வாயுதங்களை அழிக்கப் போனால் அவர்களே அழிந்து விடும் பேராபத்திற்கு அச்சக்திகள் ஆளாகி இருப்பதை பல ஆதாரங்களுடன் அவர் உரையில் விளக்கிய பொழுது அவரது ஆழ்ந்த சிந்தனைப்போக்கு சபையினருக்கு அடையாளம் ஆனது.
yet Ger): 24 ܓ

மேலும் அவர் உரையில், இந்த பூலோகத்தைப் காப்பாற்றுவதே ஒவ்வொரு தனி மனிதனினதும் ஒவ்வொரு கலை இலக்கியவாதியினதும் முக்கிய கடமை என வலியுறுத்தியது. இன்றைய உலகளாவிய மனித சமூகம் எல்லா பிரச்சினைகளுக்கும் மேலாக, மாசுபட்டு
வகையிலான
கிடக்கும் எதிர் காலத்தில் பாரிய முறையில் பாதிக்கப்படும் அழிவுகளிலிருந்து இந்த பூலோகத்தின் சூழலை காப்பாற்ற வேண்டியதைப் பற்றி நாம் பிரக்ஞை பூர்வமாக சிந்திக்க தவறி விட்டோமானால் இயற்கை வழியாக எதிர் காலத்தில் மனித குலத்திற்கு வரப் போகும் ஆபத்து பாரியது என்பதையும் அவர் வலியுறுத்தினார். மனித இனம் தோன்றிய காலகட்டம் தொடக்கம் இயற்கை அனர்த்தங்களாலும், கொடிய மிருகங்களாலும் ஜந்துகளாலும் கொல்லப்பட்ட மனிதர்களை விட, மனிதர் களால் கொல்லப்பட்ட மனிதர்களின் தொகை அதிகம் என குறிப்பட்டு இன்று மனிதனை மனிதனிடமிருந்து காப்பற்று வதே அவசர அவசிய கடமையாகி விட்டது என்றார். அவரது அக்கூற்றை கேட்ட பொழுது இந்த மனித குலம் தனக்கு வாய்க்கப் பெற்ற ஆறாம் அறிவை சக மனிதனை அழிக்கின்ற ஆயுதமாய் பயன்படுத்தும் அவல நிலையினை மனம் எண்ணிப் பார்த்தது.
மார்க் ஸியவாதிகள் வெறுமனே வரட்டுத்தனமாய் சிந்தித்து கொண்டி ருக்கிறார்கள் என கதை அளந்து திரிந்து கொண்டிருப்பவர்களுக்கு, தோழர் தா.பாண்டியன் போன்றோர்களின் இத்தகைய உரைகள் கேட்க கிடைத்தால் நிச்சயமாக அவர்கள் வாயை மூடி கொள்வார்கள் என்பது நிச்சயம்.
2. ஊடகவியலாளர் ,
அன்ரனி இராசையாவின மறைவு
சமீப காலமாக ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று கொண்டிருக்கிறார்கள். கலாசூரி சிவகுருநாதன் அவர்கள். கார்ட்டூனிஸ்ட் யூனூஸ், அந்த வரிசையில் ஊடகவி யலாளர் அன்ரனி இராசையாவும் எம்மை விட்டுப் போய் விட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றி அனுபவம் பெற்ற அன்ரனி இராசையா அவர்களின் மறைவு எனக்கும் குறிப்பாக நண்பர் மு.பவிருக்கும் பெரும் அதிர்ச் சியினை ஏற்படுத்தியது.
கடந்த காலத்தில் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் கலை இலக்கியச் சம்பந்தமான நிகழ்ச்சி களில் பங்கேற்ற பொழுது, அந்த நிகழ்ச்சி களின் தயாரிப்பாளராக இராசையா அவர்கள் இருந்து இருக்கிறார்கள். அந்த நேரங்களிலும், மறைந்த ஈழவாணன் அவர்களுடன் இணைந்து அக்னி சஞ்சிகை நடத்திய காலத்திலும் இராசையா அவர்களுடன் பழக சந்தர்ப்பம் கிடைத்தது. இனிமையான தோழமையுடன் பழகுபவர். வானொலியில் பராளுமன்றத்தில் இன்று எனும் நிகழ்ச்சியினை தயாரித்து மக்களின் கவனத்தை கவர்ந்தவர். நண்பர் பஷீர் தனது ஆரம்ப கால இலக்கியப் பயணத்தைப் பற்றி குறிப்பிடும் பொழு தெல்லாம் அன்ரனி இராசையாவைப் பற்றி குறிப்பிடுவார்.
25 6; GSG):

Page 15
அவரது மறைவுக்கு இரண்டு நாட் களுக்கு முன் நடந்த மானா மக்கீனின் நூல் வெளியீட்டு விழாவின் பொழுது. இராசையா அவர்களுடன் நான் பவீர். நிலாம். கே.விஜயன், த.மணி எல்லோரும் அமர்ந்து நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தோம். அவரது மறைவுச் செய்தி கேள்விப்பட்டு பவிருக்கு போன் செய்தபோது அதிர்ந்து போனார். அந்த விழாவில் பேசிய தோப்பில் மீரானின் பேச்சால் மிகவும் கவரப்பட்டார். அதன் காரணமாக இரண்டு நாள் கழித்து பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகமான தாருஸ்ஸலாம் மண்டபத்தில் தோப்பில் மீரானுடன் நடந்த கலந்துரையாடலின் பொழுதும் வந்து இருந்தார். அதுவே அவரை நான் கடைசியாகக் கண்டது.
ஊடகத்துறையில் பல வருடங்களாக
பணியாற்றிய அன்ரனி இராசையாவின் பங்களிப்புக்களைப் பற்றியப் பதிவுகள் அவசியமாகிறது. காற்றில் கலந்து போகும் அவரைப் போன்றவர்களின் பங்களிப்பு களைப் பற்றிய பதிவுகள் நிரந்தர பதிவு களாக்குவது. அவர்களுக்கு செய்கின்ற கெள ரவமாவதுடன், எதிர்கால ஊடகத்துறை ஆர்வலருக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும்.
3. தோப்பில் முஹம்மத மீரானின்
இலங்கை வருகையும்
அவர் சிக்கிய சிறையும்
தமிழகத்து இன்றைய காலத்து கவனத்திற்குரிய நாவலாசிரியர்களில் ஒருவரான தோப்பில் முஹம்மது மீரான் இலங்கை வந்து இருந்தார். ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை, கூனன்தோப்பு துறைமுகம், சாய்வு நாற்காலி போன்ற நாவல்கள் மூலம்
நவீன தமிழ் நாவல் இலக்கியத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் பங்கு அளப் பரியது. அப்பணியின் மூலம் இதுவரை காலமும் நவீன தமிழ் கலை இலக்கி யத்தில் களத்தினை, புதிய மொழியினை, நவீன தமிழ் கலை இலக்கிய வாசக உலகம்
இனங் காட்டப்படாத புதிய
அறிந்து கொண்டது எனலாம்.
கொழும்பில் அவர் தங்கி இருந்த குறுகிய காலத்தில் அவர் பங்கு பற்றிய சந்திப்புக்களில் அவரது பல்விதமான கருத்துக்கள் புதிய நோக்குடன் அமைந்து இருந்தன. அத்தகையக் கருத்துக்களின் சுருக்கங்களை முதலில் தந்து விடுகிறேன்.
* படைப்பாளி வேறு
எழுத்தாளன் வேறு.
* படைப்பாளியாக ஒருவன் படிக்கத் தேவையில்லை. வேண்டுமானால் தகவல்கள் அறிய படிக்கலாம். ஆனால், படைப்பாளியாக படிக்க வேண்டிய தில்லை. அவனை, அவன் சார்ந்தி ருக்கும் சமூகத்தை, அச்சமூகத்தின் மக்களை, அவர் தம் மொழியைப் படித்தால் போதும். அவன் படைப்பாளி யாகலாம்.
* நான் ஒரு முஸ்லிம் எழுத்தாளன்
அல்ல. ஏன்? தமிழ் எழுத்தாளனும் அல்லன். எழுத்தாளன் மட்டுமே. எனக்கான மொழியில் நான் எழுதுகிறேன். அந்த மொழி -மீரானின் மொழி.
26 yet 656)

* தமிழின் உச்சமான கலை இலக்கியம் தலித்களிடமிருந்தோ அல்லது ஈழத்து எழுத்தாளனிடமிருந்தோதான் வரும். தமிழகத்திலிருந்து அது வருவதற்கான சாத்தியமில்லை.
* இலங்கை புனைக்கதை இலக்கியம் இன்னும் போதிய அளவு வளர்ச்சி பெற வில்லை. ஆனால் இலங்கையின் கவிதை உச்சமாக வளர்ந்து இருக்கிறது. அதில் தான் இலங்கை தமிழ் பேசும் மக்களின் ஆத்ம உணர்ச்சி தெரிகிறது.
* தமிழில் விமர்சனம் வளரவில்லை. புத்தக மதிப்புரைகள் விமர்சனங்கள் அல்ல.
* குமரி மாவாட்ட மக்களிடம்தான் தமிழ் வாழ்கிறது. சங்க கால செய்யுகளில் கையாளப்பட்டுள்ள பல சொற்கள் அம் மாவட்ட மக்களின் பேச்சு வழக்குச் சொற் களாக இருக்கின்றன.
இவ்வாறான பல விவாதத்துக்குரிய கருத்துக்களை அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் முன் வைத்தார். மலையாள மொழியின் வாடை கலந்த இயல்பான பேச்சு நடையில் பல ஆழமான கருத்துக் களாக இருந்தன. பலருக்கு அவரது சில கருத்துக்கள் கசப்பை தந்ததையும் நாம் அறிவோம்.
அதேவேளை இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். தோப்பில் மீரான் அவர்களின் எல்லா எழுத்துக்களும் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. அத்தோடு பல படைப்புக்கள் இந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு. இந்தி,
ஆங்கிலம் என பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதோடு, சாகித்திய மண்டல பரிசு உட்பட பல பரிசுகளை அவரது படைப்புக்கள் பெற்று இருக்கின்றன.
இதையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இப்படியான பல சாதனைகள் செய்த வேறு தமிழக எழுத்தாளர் யாராவது வந்து இருந்தால் பன்னூலாசிரியர் என்றும் இலக்கிய வித்தக மணி போன்ற பந்தா பட்டங்களுடன் தம்மைத் தம்பட்டம் அடித்து கொண்டு நட்சத்திர டாம்பீ கத்துடன் திரிந்து இருப்பார்கள். ஆனால், தோப்பில் முஹம்மது மீரான் ரொம்பவும் எளிமை யாகவும் அடக்கமாகவும் எந்த விதமான ஆர்பாட்டமுமின்றி காட்சி அளித்தார். அந்த அடக்கமே அவரது ஆளுமையின் ஆழத்தை நமக்கு எடுத்துக் காட்டியது.
இவரைப் போன்ற ஆளுமை மிக்க படைப்பாளிகளை இங்கு வர உழைத்த அல்ஹாஜ் எம்.எம்.எம். ஃபாயிக் போன்ற வர்களுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். அதே வேளை, அவரைப் போன்ற புரவலர்களுக்கு தோன்றாத் துணைகளாக நின்று மீரான் போன்ற படைப் பாளிகளை இங்கு கொண்டுவர பங்கு வகிக்கும் தனி நபர்கள் சிலர் காட்டும் பந்தாவும் செய்யும் ஆர்பாட்டமும் போடும் கட்டுபாடும், மீரான் போன்ற படைப் பாளிகளின் ஆளுமையை இலங்கை மக்கள் அறியத் தடையாக இருக்கின்றன.
அத்தோடு அக்கட்டுப்பாடுகள் மூலம் அத்தனி நபர்கள் அழைத்து வந்த படைப்பாளியின் படிமத்தையும் கெடுத்து அவர்களுக்கு துரோகம் செய்தவர்களாக
665); 27 y

Page 16
ஆகி விடுகிறார்கள். இப்படிதான் கவிஞர் மு.மேத்தாவும் ஒருமுறை இப்படியான சூழலில் வந்து தனது படிமத்தை கெடுத்துக் கொண்டு போனார்)
எதிர் காலத்தில், மேத்தா, மீரான் போன்ற ஆளுமைமிக்கப் படைப்பாளிகளை கலை இலக்கிய சார்ந்த நிறுவனங்களோ அல்லது கல்வி நிறுவனங்களோ அழைத்து அவர் தம் ஆளுமைகளை பரவலாக அறிய செய்ய வேண்டும்.
அதை போல் மேத்தா, மீரான் போன்ற சிறப்பான படைப்பாளிகள் தங்களை அழைக்கும் தனிநபர்களின் தராதரத்தையும்
4.
மறைந்து விட்டார்.
கொள்ளுகின்றோம்.
ஆழ்ந்த தயரங்கள்
மல்லிகையின் நேசத்திற்கும் நெருக்கத்திற்கும் உரியவரான கவிஞர் அன்பு முகையதின் அவர்கள் திடீரென நம்மை விட்டு அன்னாரது திடீர் இழப்பை எண்ணிச் சோகமுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய சகபாடிகளுக்கும் நமது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்
இவரது உருவத்தை மல்லிகை அட்டையில் 2002 ஆகஸ்டில் வெளியிட்டிருந்தோம். அவரது மணிவிழாவை மல்லிகைப்
பந்தலில் வெகு சிறப்பாகக் கொண்டாடினோம்.
நடத்தைகளையும் அறிந்து கொண்டு இங்கு வருவது நல்லது. அப்படி அறியாமல் வருவது வந்த இடத்தை பற்றிய பரவலான செய்திகளை அறிய முடியாத நிலையில். தங்களுக்கு தாங்களே கைவிலங்குகளையும். சிறைக் கம்பிகளையும் போட்டு கொண்டவர் களாக தாய் நாடு திரும்ப வேண்டியது தான்.
தோப்பில் முஹம்மது மீரான் அவர்களுக்கும் நடந்ததும் அப்படிதான். என நான் நினைக்கிறேன்.அவரும் அதனை உணர்ந்த நிலையில்தான் நாடு திரும்பி இருப்பார் என்றும் நான் நம்புகிறேன்.
()
ÉGuated 28
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழாயடியும் குறசூறக்கும் நினைவுகளும்
Up.Lushf( - ܐ-ܢܠ
உறக்கம் கலைந்து வெகு நேரமாகியும் ஜன்னலினூடே தெரிந்த, அதை, வெறித்துப் பார்த்து புன்முறுவல் பூத்தேன். மின்சாரம் செத்த இரவுகளிலும், காலை, மாலை எப்போதுமே, அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுப்பேயில்லை. எதை? என்று நீங்கள் அறிந்துவிட துடிப்பதை என்னால் அனுமானிக்க முடிகிறது. உங்கள் சங்கடத்தைக் கலைத்து, ஒரே போடாய் போட்டு உடைத்து விடலாம்தான்.
சற்றே பொறுமை காக்க!
இருளின் திட்டுக்குள்ளும், வெளிச்ச விகசிப்பிலும், காட்சிகள் மின்னலடிக்கும். இதைக் கண் இமைக்காது பார்த்து ரசிப்பதில், என் அலாதி கவனம். அந்தரங்கம் எங்குமே புனிதமில்லைதான். மார்புக் கட்டுடன் அரைகுறை ஆடையுடன், நீர்பட்டு பளபளக்கும், இளமேனித் திட்டுக்கள். பெண்பாலர் குளிக்கும் காட்சி, உற்சாக மூட்டும் இரசனைக்குரிய விடயம்தான். அதே போன்று அவர்களைப் பொறுத்த மட்டில் சங்கடமான நிலையும்தான். பட்டு மேனி பிற ஆண்கள் கண் பட்டுவிடக் கூடாது என்பதில், இவர்கள் எச்சரிக்கை உடையவர்கள்.
கொழும்பு போன்ற நகரச் சூழலில், சாலையோரக் குழாயடிகளில், அங்கங்கள் பளபளக்க நின்று குளிப்பது, பழகிப் போன சங்கதி. மேனி மறைத்தல் என்பதெல்லாம் நாகரிக யுகத்தில் நிராகரிக்கப்பட்டவை. ஒழுக்கம், விழுமியம் என்பதெல்லாம் நாகரிகக் கரையான் அரித்த பழம் புடவைகள் என்றாகி விட்டது. எங்கும் கவர்ச்சி, எதிலும் விரசம், ஆண்களை வெறி கொள்ளச் செய்யும் ஆபாச நடையுடை நர்த்தனங்களால், மானபங்க செய்திகள் ஊடகங்களை நிறைக்கின்றன.
ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளம் பெண்கள், பேருந்துகளில், நெருக்கி முண்டியடித்துக் கொண்டு, ஆண்களோடு இரண்டறக் கலந்து, வெளவால் களாய் மூச்சுமுட்டும் கெடுபிடியில்தான் பயணிக்க வேண்டுமா? இதைப் பழக்க தோஷம் எனலாமா? எந்த ஒரு காரியமும் பழக்கத்தில் வர பிரச்சினை பெரிதாய் தோன்றாது. சாராயத்தை முதலில் குடிக்கும் போதுதான் கசப்பு. பிறகு பழகப்
29

Page 17
பழக தேனாமிர்தமாகிவிடும்.
பஸ் பிரயாணம் எவருக்கும் எப்பவும் சங்கடமானதுதான். அதற்காக ஆண், பெண் பேதமேயின்றி பேருந்துகளில் ஒட்டிக் கொண்டு பிரயாணம் செய்ய வேண்டுமா, உரசற்கலை மன்னர்களின் வக்கிரங்களுக்கு ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் விலை போவதா? இதில் வேறு இடம், பொருள், ஏவல் தெரியாமல் கண்ட இடத்திலெல்லாம் நெருக்கக் காதல். இவர் கள் பணி முடித்து இல்லம் திரும்புகையில்,
‘என்ன இது, மார்பெல்லாம் மோச மாய் கசங்கிப் போயிருக்கிறதே?’ என்று எவராவது இவர்களைப் பார்த்து கேள்விக் கணையா தொடுக்கப் போகிறார்கள்.
பிறரின் நடவடிக்கைகளை, அறை யிலிருந்தவாறு என்னால் துல்லியமாகப் பார்த்து ரசிக்க முடிகிறது. என்னை யாரும் இனங் காணாதவாறு, கச்சிதமாக ஜன்னல் கதவுகள் பாதுகாக்கும். உணர்ச்சிகளை கிளர்ந்தெழ வைக்கும் காட்சிகள், இங்கு சென்சாரின்றி அற்புதமாக அரங்கேறும் அந்த அதை, ஆளுகை புரிவார்கள், பெரும்பாலும் இளவட்ட கதாநாயகிகள் தான்.
எத்தனை வித வித்தியாசமான கால்கள்!
பூப்போன்ற மென்மையான பாதங்கள். மஞ்சள், கறுப்பு, சிகப்பு நிறங்களில், வழ வழப்பான கட்டுமஸ்தான பாதங்கள்.
பித்த வெடிப்பு கண்ட இறுகிய கால் கள், விரல்கள் நீண்டு தடித்து, ஆளை அச்சுறுத்தும் அழகான கால்கள். பாத லட்சணங்களை வைத்தே வைத்தீஸ்வரன்
பாணியில் படிமக் கவிதை எழுதி விடலாம். ஜனசந்தடி மிகுந்த கொழும்பு நகர, நெருக்கடி வாழ்வில், எல்லாமே சகஜமாகிப் போன நிலை. எனது சொந்த ஊரான நாவல் நகரின் இயற்கை சூழலை எண்ணும் போது, நெஞ்சு இனிக்கிறது. அந்த இயற்கையெழிலை எத்தனை முறை பார்த்தாலும் ஆன்மா விகச்சிக்கும். அந்த வனப்புகளைப் பார்த்து பரவச மடைய இரு விழிகள் போதாது என்ற நினைவு மேலோங்கும்.
உத்தியோக நிமித்தமாக கொழும்பு வந்து, இந்த சிறு அறை யில் தங்கி, வெப்பத்தில் புழுங்கி வாசம் புரிவது சங்கடத்திற்கு உரியதுதான்.
அந்த அதுமட்டும் இல்லாதி ருந்தால் உற்சாகம் இழந்திருப்பேன்.
இங்கு எங்கு பார்த்தாலும் இயந்திர
தனத்தின் வேகமான மனித சுழற்சி. நகர மேனா மினுக் கி போலி வாழ்க்கை, எதனையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
அதுசரி மறந்துதான் போனேன். அந்த அதை, அறிய ஆவல் கொண்டி ருப்பீர்கள். நீட்டிக் கொண்டு போகா மல் முடிச்சவிழ்க்க விழைகிறேன்.
எனது அறைக்கு நேர் எதிரே எழுந்தருளியிருக்கும், நகரசபைப் பைப்படியைத்தான் பூடகமாக அது, என நாமமிட்டேன்.
அதற்கென்ன உலகின் பேரதி சயம் கொட்டிக் கிடக்கிறதா? கேள்வி நியாயமானதுதான். அப்படி எதுவும்
665); 30 অত্ব

இல்லை. பின் தண்ணிருக்குப் பதிலாக பன்னீர் கொட்டும், அற்புதம் நிகழ் கிறதா?
ஹ. ம். ஹா. ம், அதுவுமில்லை. அப்படியென்றால் ஏனிந்த குழாயடி விரிவுரை? விஷயமே அங்குதான் இருக்கிறது. இரசனைக்குரிய நிகழ்வு கள் இனிமேல்தான் வரப்போகிறது. மீண்டும் பொறுமை காக்க குழாயைத் திருகியதும், குபுகுபுவென நீர் வந்து பாயும். சில நேரங்களில் அதன் கழுத்து உடைக்கப்பட்டு, நீர்த்தடை பட்டு, வெறிச்சோடிப் போயிருக்கும். என் கற்பனை ஊற்று சுரக்க இந்தக் குழா யடிதான் காரணமாக அமைகிறது. ஒய் வாக இருக்கும் பொழுது, அது கவிதை எழுதும் உந்துதலை எனக் களிக்கிறது.
ஒ. கவிஞனா? அப்ப இது வித்தியா சமான கேஸ்தான் என நீங்கள் தீர் மானித்துவிட வேண்டாம்.
மன உளைச்சல்களை வடிகட்டி கவிதையாக்கி விடுகிறேன் நான். அது பிரமாதமாக இல்லாது இருந்தபோதும், ஊடகங்களில் வெளிவந்து உயிர்ப்பு பெறுகிறது. நான் கவிஞனா? என்பது குறித்து, என்னுள் தீர்க்கமான நிர்ணயம் ஏதுமில்லை. அப்படியென்னை பிறர் அழைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்துவிட இயலும்?
எழுதுவதற்கு அமைதியான சூழலும் உந்தும் மனதும் வேண்டும் என்பார்கள். சிலருக்கு பேரிரைச்சலிலும் சிருஷ்டி சாத்தியம். தகழி என்ற உலகப் புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர், தன் மனைவி காத்தம்மாவின் கைகளி
னால் அடிக்கடி நீராகாரம் வாங்கி அருந்திவிட்டு, நீண்டநேரம் எழுதிக் கொண்டே இருப்பாராம். அவருக்கு மனைவியின் கைப்பட்ட நீர், தீர்த்தமா கவோ, அல்லது தேவர்கள் அருந்தும் சோமபாணமாகவோ இருந்திருக்கலாம். யார் கண்டது? அந்த தீர்த்தத்தின் மகிமையினால்தான், செம்மீன், கயிறு, தோட்டியின் மகன் போன்ற பிரசித்தி பெற்ற நாவல்களையெல்லாம் தகழி,
எழுதிக் குவித்தாரோ? எங்கள் பாரதி
மட்டும் எவ்வகையில் குறைச்சல்!
‘பாட்டுக் கலந்திடவே
அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
கூட்டுக் களிப்பினிலே
கவிதைகள்
கொண்டு தர வேண்டும்’ என்று காதல் வயப்பட்டு கசிந்து உருகினான். பாரதிக்குத்தான் எத்தனை எளிமையான எதிர்பார்ப்பு.
அது ஒரு சோர்ந்துபோன விடி காலைப் பொழுது. என் கவிதைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும், தெருக் குழாயடியை பிரியத்தோடு பார்த்தேன். மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. குழாயிலிருந்து சொட்டுச் சொட்டாய் நீர் வடிந்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த காக மொன்று பைப்படி சீமெந்துத் தரையில் வந்தமர்ந்தது. கழுத்தை வளைத்து சுற்றுச் சூழலை நோட்டமிட்டபடி, கா காவென்று குரல் எழுப்பியது. படியில் தேங்கி நின்ற நீரை கூரிய அலகு களால் மொண்டு குடித்தது.
அதற்கு உற்சாகம் பிறந்திருக்க
31

Page 18
வேண்டும். பக்கவாட்டில் திரும்பி, உட லசைத்து, தத்தி நடந்து, தேங்கி நின்ற நீர்விளிம்பில் சிறகு தாழ்த்தி படபடவெனக் குளியல் நடத்தியது.
காகம் தினமும், குளிப்பதினால் தானோ அதன் மேனியும், நிறமும் துல்லிய மாய் பளிச்சிடுகிறது. அடுக்கி வைத்த பிட்டுத் துண்டுகளாய், அடுத்தடுத்து நெருக்குதலாய் சிறுசிறு வீடுகள் - பின்புற மாக ஒதுக்கத்திலிருக்கும், எனதறை. சந்தடியும் பேச்சொலியும் சன்னமாக எப் போதும் கேட்ட வண்ணமிருக்கும். ஒவ் வொரு இடுக்கு முடுக்குக்குள்ளும் , குருவிக்கூடு போன்ற சின்னச் சின்ன இல்லங்கள், நகரின் குடியிருப்பு நெருக்கு தல் களை பறைசாற்றிக் கொண்டேயி ருக்கும்.
தண்ணிர் தட்டுப்பாடு, மலசலகூட நெருக்கடி, சுகாதாரமின்மை, அடிக்கடி வெடிக்கும் சண்டை இத்தனை களேபரத் திற்குள்ளும்தான், குடித்தனம், குடும்பம், திருமணம், மரணம் எல்லாம். இங்கு மூலை முடுக்குகளுக்குக்கெல்லாம் கார ணப் பெயர்கள் உணர்டு. ஜாவாத் தோட்டம், பாய் தோட்டம், மரிக்கார் தோட்டம் என நாமமிட்டு அழைப்பார்கள். தோட்டத்திற்குத் தோட்டம் சண்டியர்கள் இருப்பார்கள். எந்தப் பிரச்சினைகள் நிகழ் ந்தாலும் இவர்களே இங்கு ஹிரோக்களாக முன்வந்து காரியமாற்றுவார்கள். தோட்ட மென்று இங்கு இடுகுறியிடுவது சற்றும் பொருத்தமில்லை - இங்கெல்லாம்,
தோட்டமும் கிடையாது, ஒரு மணி னும் கிடையாது. இடிபாடுகள் நிறைந்த முடுக்கு ஜீவிதங்கள்தான் உண்டு. இயற்கை சூழலில் அமைந்த
தோட்டங்களை கிராமத்தில் கண்ணாறக் கண்டுகளிக்கலாம். கொழும்பு நகரின் கொரியாக்களில், பரபரப்பு நெருக்கித் தள்ளும்
குடியிருப்புகளும், மிகுந்த ஜனசந்தடி
யுமே காணப்படும். இங்கு உறவு, பிரச்சினை, காதல், சண்டை, வன் முறை எல்லாமே பழகிப்போன ஜீவித நியாயங்கள். பழக்கதோஷம் என்பது சூழலைப் பொறுத்தது மட்டுமல்ல அட்டையைப் போன்று இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண் டது. இங்கு ஒருவித சேரிக் கலா சாரமே ஆட்சி செய்யும். இதுவே சாமானிய மக்களின் வாழ்வும் இருப்பு மாக பரிமாணம் பெற்றுள்ளது.
எனது அறைக்கு முன்புறத்தி லுள்ள இந்தக் குழாயடிப் பைப் குடி யிருப்பாளருக்கு நிறையவே சேவை செய்கிறது என்ற வகையில் நகர சபையினரைப் புகழலாம். ஆனால், சில நேரங்களில் பைப்பை உடைத் துப் போட்டுவிட்டு, நீருக்குத் திண் டாடி, நகரசபையை கெட்ட வார் த்தைகளால் தூவிப்பவரும் இல்லா மலில்லை. குளிப்பது, நீர் அள்ளு வது, துணி துவைப்பது, பாத்திர ங்கள் சுத்தம் செய்வது போன்ற கிரியைகளால் திருவாளர் பைப் கடும் பிஸி. இந்தச் சந்தடியில் ஒதுக் குப் புறத்தில் அமைந்துள்ள எனது அறை ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
வரிசையாக நிற்கும் வீடு
களைக் கொஞ்சம் தள்ளி, ஒரு
ஒரத்தில் அமைந்திருப்பதால் பெரிய சங்கடங்கள் ஏதுமில்லை. உள் - வெளி ஓசைகளைக் கேட்டவாறு
● 32 ye GSG)

கவிதை எழுதுவது சுகமாக இருக்கும். அறையிலிருந்து பார்க்கும் போது எல்லா நிகழ்வுகளும் துல்லியமாகத் தெரியும். இளம் பெண்கள் குடங்களில் தண்ணிர் ஏந்தி வித்தியாசமாக இடுப்பை வளைத்து பிருஷ்டம் குலுங்க தத்தித் தத்தி நடந்து செல்வது ரசனைக்குரிய விடயம்.
மூக்குத்தி மின்ன, ஒரு கறுப்பு நிற தேவதை குழாயடிக்கு அடிக்கடி வந்து போவது வழக்கம். அவள் கண்களில் மின்னும் காந்த சக்தியால் எனது கவிதை களுக்கு சிறகு முளைக்கும். நீராடும் பொழுதுகளில் அவள் மேனி வனப்பில் சித்தம் உருகிப் போவேன். பல சந்தர்ப் பங்களில் வாஞ்சை கலந்த பார்வை வீச்சுகளை பரிமாறிக் கொண்டோம்.
பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டாதா என ஏங்கினேன். ஒருநாள் அவள் நீரை யள்ளி இடுப்பில் வைக்கும் போது, மண் குடம் கைநழுவி கீழே விழுந்துவிட சுக்கு நூறாக உடைந்து விட்டது. அந்நிலையில் அவளது ஏமாற்றத்தையும், அதிருப்தியான முகப் பாவத்தையும் பார்த்து அவள் பால் நான் இரக்கம் கொண்டேன். நல்ல காலம் குழாயடியில் யாரும் இருக்கவில்லை. மின்னலாய் ஒரு யோசனை மூளையில் படர்ந்தது. அறையில் கேட்பாரற்றுக் கிடந்த எவர்சில்வர் குடமொன்றினை எடுத்து அவள் கையில் கொடுத்தேன்.
முதலில் நாணம் மேவ மறுத்து விட்டு, பின்னர் அதைப் பெற்றுக் கொண்டாள். அந்த விழிகளுக்குத்தான் எத்தனை ஈர்ப்புச் சக்தி. நன்றி கூறி பிருஷ்டம் குலுங்க நடந்து சென்றாள். மூக்குத்தி தேவதை பற்றிய தகவல்களை அறிய பெரிதும் ஆவலுற்றேன். அவளைப் பற்றிய நினைவுகள் அலை
ஓசையாக ஆர்பரித்த வண்ணமிருந்தன.
நான்காவது விட்டுத் தொடரில் அவள் வாசம் செய்வதாகவும், மிக வறிய சூழலில் வாழ் வதாகவும், இரு பிள்ளைகளுக்குத் தாய் என்றும், கணவன் விட்டு விட்டுப் போய் மூன்றாண்டுகள் ஆகி விட்டதாகவும், பாட்டியின் பராமரிப்பில் உள்ளதாகவும் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொண்டேன்.
காலைக் கருக்கலில் விடியலின் விகசிப்பு மண்ணில் கவியுமுன் - நாள் தோறும் விடிய ஐந்து மணிக்கு குழாயடி யில் அவள் காட்சி தருவாள். நாளடைவில் பார்வை பரிமாறல்களின் பின், கடிதங்களை கைமாறிக் கொண்டோம். பரஸ்பரம் ஒரு வரை ஒருவர் நேசித்தோம். அடிக்கடி ஏற் படும் பொருளாதாரக் கஷ்டங்களுக்காய் நான் அவளுக்கு உதவி வந்தேன். நமக்குள் இறுகிப்போன வாஞ்சையும், காதலும் பிறர் கண்ணுக்குத் தெரியாதவாறு சூட்சுமமாய் மறைத்து வந்தோம்.
அவளை ஒரு முறை என் அறைக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தேன். பதிலேதும் சொல்லாமல் புன்னகை சிந்தி மறைந்து விட்டாள். வருவாளா, வர மாட்டாளா என்ற ஏக்கம் நாளுக்கு நாள் மனதிற்குள் நெருடலாயிற்று. அன்று கிழக்கு வெறிப்பதற்கு முன் அதிகாலையில் சந்தோஷித்த முகத்துடன் காட்சி தந்தாள். கப்பியிருந்த விடியலிருளை மெல்லக் கலைத்து விடுமாப் போல - சிறு தூறலும், லேசான மழையும் வீசவாரம்பித்தது.
நான் அதிசயித்து மலைத்து நின்றேன்.
வெட்கம் கவிய தலை குனிந்தவாறு என் அருகில் வந்து நின்றாள். என் தேகாந் . திரமெல்லாம் மகிழ்ச்சிக் குவியலில்
DGGEDB 33

Page 19
திளைத்துச் சிலிர்த்தது. குழாயடி ஓய்ந்து போயிருந்தது. விடிகாலைக் குளிர்காற்று உடலுக்கு இதமளித்தது. சேவலொன்று பெருங் குரலெடுத்து கூவித் தொலைத்தது. இருவரும் நெருக்கமான சுகத் தழுவலில் காலம் மறந்து, ஆன்மா களித்து குதூகலித்தோம். அநுபவ உலகின் ஆழங்களைத் தழுவி வெப்ப மூச்சுக்களைப் பரிமாறினோம்.
மூன்று நாட்களாக என் அன்பிற்குரியவள் குழாயடிப் பக்கமே வராமல் போனது என்னுள் ஆச்சரியமான அதிர்வுகளை எழுப்பின. நமது தொடர்பு பற்றி யாரும் அறிந்து ரகளைக்கு வரப்போகிறார்களா? அல்லது அவளுக்கு ஏதும் திடீர் சுகயினமா?
நெஞ்சுக்குள் ஆதங்கம் பூதாகரமாய் எழுந்தது. அவள் நினைவுகளை எவ்வளவு முயன்றும் தவிர்க்க இயலாமல் இருந்தது. நெஞ்சு இனம் புரியாத நெருடலில் இறுகிக் கனத்தது. அந்த எழில் பிம்பம் அடிக்கடி வந்து நினைவுகளை வருடியது. எட்டாமல் போன ஒன்றுக்காய் மனம் வெறுமையில் கிடந்து தவித்தது.
அவளுக்குப் பதிலாக குழாயடிக்கு பாட்டி
நீரள்ள வந்தாள். அவளைப் பற்றிய விபரங் களை பாட்டியிடம் சிநேகயூர்வமாகக் கேட்டறிந் தேன். ஆச்சி சொன்ன தகவல்கள் அதிர்ச்சி தருவனவாய் இருந்தன. நேற்று முன்தினம் நீண்டகால இடைவெளிக்குப் பின் அவளது கணவன் வந்தானாம். இருவரும் சமாதானமாகி பிள்ளைகளோடு நேற்று ஊருக்குப் போய் விட்டார்களாம். மீண்டும் இருப்புக்கு இங்கு வரும் சாத்தியம் இல்லையாம்!
இவ்வளவு நேசமாய் பழகி, என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இப்படி பறந்து போய் விட்டாளே! என்று துடி யாய்த் துடித்தேன் நான்.
பெண்களின் நேசமெல்லாம் புல் இதழ் பணித் துளிதானா? கேள்விக் குறியாய் அதிர்ந்து நின்றேன் நான். குழாயடி வெறுமை தட்டிய மயான மாய் காட்சி தந்தது.
அலுவலகம் விட்டு ஆயாசமாய் அறைக்குத் திரும்புகிறேன். பக்கத்து வீட்டுச் சிறுவன் கடிதமொன்றை நீட்டி விட்டு விரைகிறான்.
கடிதம் என் அன்புக்குரியவளிட மிருந்தா? ஆர்வத்தோடு பிரித்துப் படிக்கிறேன். இல்லை!
அன்பான கணவருக்கு எங் களை அடியோடு மறந்துதான்
போனீர்களா, நீங்கள் ஊருக்கு வந்து
இரண்டு மாதங்கள். கொழும்பு வாழ்க்கை உங்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை தருவதாய் இருக்கும்.
இங்கு சின்ன மகனுக்கு கடுமையான
காய்ச்சல் மருந்துக்கு குணமே யில்லை. இரவெல் லாம் உங்களைத் தேடி அரட்டுகிறான். உடன் புறப் பட்டு வரவும். அவசரம்.
இப்படிக்கு உங்கள் மனைவி
துயரம் செறிந்த மனதுடன் ஊருக்குப் போக மினிபஸ்ஸில் இடம் பிடித்து அமர்கிறேன். மனைவியும் பிள்ளைகளும் சோக பிம்பங்களாக நெஞ்சை அழுத்துகிறார்கள். பஸ் புறப்படுகிறது.
இப்போது கொழும்பு நகரின் பேய் வெப்பம் ஏ.ஸிக்குள் பெரிதாய் உறைக்கவில்லை.
ബ8 34

அச்சுத்தாளின் ஊடாக
ஓர் அனுபவப் பயணம்
- டொமினிக் ஜீவா
நண்பர் ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் நிறைய நிறையச் செய்திகளும் நேரடி அநுபவங்களும் உண்டு. ஈழத்து எழுத்தாளர்களில் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் தொடர்ந்து நட்பைப் பேணி வருபவர்களில் நான் முக்கியமானவன் என்ற கருத்து ஏற்கனவே எனக்கு உண்டு.
நேரடியாக இருவரும் சந்தித்துக் கொள்ளாத காலமது. அந்தக் காலகட்டத்தில் விஜயபாஸ்கரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ‘சரஸ்வதி என்ற மாசிகை சென்னையிலிருந்து மாதா மாதம் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தச் சஞ்சிகையில் ஜெயகாந்தன் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தார். அந்தக் காலகட்டத்தில் நானும் யாழ்ப்பாணத்திலிருந்து சரஸ்வதிக்குச் சிறுகதைகள் எழுதி அனுப்பி வந்தேன்.
அந்தத் தொடர்பை அடிநாதமாகக் கொண்டு நாமிருவரும் கடிதத் தொடர்பு கொண்டு நெருங்கி வந்து நட்புக் கொண்டோம். அந்த நெருக்கம் முகத்தை முகம் பார்த்தறியாத அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டதொன்று.
தொடர்ந்து சரஸ்வதியில் எழுதி வந்ததன் பின்னணியின் காரணமாகவும் இருவருக்கும் இணைவாக இருந்த இலக்கிய கோட்பாட்டு ஒன்றிணைவின் மூலமாகவும் ஏற்பட்டிருந்த பெரும் நட்புத் தொடர்பு அது. இந்தத் தொடர்பை வளர்த்துச் செழிக்கச் செய்தவர் சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரன் அவர்கள். எங்களது இறுக்கமான நட்பு வளர்ச்சிக்கு இவரது இயல்பான ஒத்துழைப்பும் பெரும் பங்கு வகித்தது.
சரஸ்வதி ஆசிரியர் எப்படியும் வாரம் ஒரு தடவை என்னுடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்வார். நானும் அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதுவேன். அநேகமாக அக்கடித வரிகளிளெல்லாம் நண்பர் ஜெயகாந்தனை விசாரித்துக் குறிப்புகள் எழுதியிருப்பேன்.
35 エロー回

Page 20
ஜெயகாந்தனும் வாரம் இரண்டு தடவைகள் சரஸ்வதி காரியாலத்திற்குப் போய் வருவார். அப்பொழுது சரஸ்வதி இராயப்பேட்டையிலுள்ள தமிழ்ப் புத்தகாலயத்தில் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. அங்கு சென்று வரும் அவரிடம் அவரது சுகசேம விசாரிப்புக் கடித வரிகளை வாசித்துக் காட்டுவார் சரஸ்வதி ஆசிரியர்.
இந்த உறவின் மூலம்தான் தமிழ்ப் புத்தகாலய அதிபர் கணமுத்தையா அவர்களினது நட்பும் உறவும் எனக்குக் கிட்டின. பின்னர் சென்னையில் எனது சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளியிடுவதற்கு இந்த நட்பு நெருக்கம் பெரிதும் உதவியது. இவருடைய கடைசி மகளைத்தான் அகிலனின் மகன் கண்ணன் பிற்காலத்தில் திருமணம் செய்து கொண்டார். தமிழ்ப் புத்தககாலயத்தை இப்பொழுது கண்ணனே தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார். பாண்டிபஜாரில் அந்த வெளியீட்டு நிறுவனம் இன்று விஸ்தரிக்கப்பட்டு தகைமை வாய்ந்த நூல்களை வெளியிட்டு வருகின்றது.
தமிழகத்திற்குச் செல்லாமலேயே எனது சென்னை உறவுகள் இப்படியே விரிவடைந்து கொண்டு வளர்ந்து வந்தன.
இந்தக் காலக் கட்டத்தில்தான் ஜெயகாந்தன் சரஸ்வதி இதழ் ஒன்றில் எழுதியிருந்த ‘போர்வை என்ற சிறுகதையை நண்பர் கனகரெட்னா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். நான் அந்த மொழி பெயர்ப்பின் டைப் அச்சுப் பிரதியை ஜெயகாந்தனுக்கு அனுப்பி வைத்தேன்.
அம்மொழி பெயர்ப்பின் இலாவகத்தையும் உயிரோட்டத்தையும் தனக்குத் தெரிந்த பல ஆங்கிலப் புலமையாளர்கள் வெகுவாகச் சிலாகித்துப் பேசியதாகவும் சிரமப்பட்டு மொழி பெயர்த்த கனகரட்னா நண்பருக்குத் தனது நன்றியைச் சொல்வதாகவும் ஜெயகாந்தன் எனக்கெழுதிய ஒரு கடிதத்தில்
எழுதியிருந்தார்.
கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கும் ஜெயகாந்தனுக்குமிடையே உள்ள ஆத்மார்த்திகமான நட்புப் பற்றி எழுத்தில் ஆவணப்படுத்தி வைக்க நான் அதிகம் விருப்பம் காட்டியவனல்ல.
ஆனால், இப்படியொரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டப் போவதில்லை. எனவே இந்தத் தளத்தை துஷ்பிரயோகம் பண்ணாமல் எனக்குச் சரியெனப் பட்ட தகவல்களை எதிர் காலச் சந்ததியினருக்கு எழுத்தில் ஆவணப் படுத்தி வைக்க வேண்டியது எனது இலக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.
இந்த நாட்பின் ஆழம் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதாகும் என்பதே எனது இன்றைய கருத்தாகும்.
சில எதார்த்த உண்மைகளை எழுத்தில் ஆவணப்படுத்தும் போது, அது பிற்காலத் தில் புதிய வடிவம் பெறும் என்பதும் எனது கருத்தேயாகும்.
நான் பல தடவைகள் தமிழகம் போய் வந்துள்ளேன். 1987-ல் சோவியத் யூனியனுக்கும் சென்று திரும்பியிருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாரிஸ், லண்டன். பேர்லின் போன்ற தலைநகரங்களுக்கும் சென்று இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறேன். அதன் பெறுபேறாக முப் பொரும் தலைநகரங்களில் முப்பது நாட்கள்!” என்ற பிரயாண நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.
என்னதான் உலகம் சுற்றி ஊர் சுற்றிப் பார்த்தாலும் ஒருதடவை தமிழகம் சென்று, ஒரு மாதம் நின்று, அங்கு நண்பர்கள் பலரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்து அந்த
36

மகிழ்ச்சியையே திரும்பத் திரும்ப இரை மீட்டிப் பார்க்கும் பரம சந்தோஷம் இந்த ஐரோப்பிய நெடுந்துாரப் பயணங்களில் சித்திக்காது’ என மெய்யாகவே நான் கருதுகின்றேன்.
அன்று நான் தமிழகம் சென்ற திரும்பி வந்து கொண்டிருந்த காலத்தில் திருச்சிக்கும் யாழ்ப்பாணம் பலாலிக்கும் விமானப் போக்வரத்து வெகு ஒழுங்காக நடைபெற்று வந்தது. அது அந்தக் காலம். கொழும்பிலிருந்து திருச்சிக்குப் போக விரும்பும் பல பயணிகள் யாழ்தேவி மூலம் யாழ்ப்பாணம் வந்து பின்னர் விமானமெடுத்துத் திருச்சி சென்று திரும்புவதை நான் அவதானித்து வந்திருக்கிறேன்.
பலாலியிலிருந்து திருச்சி சென்று விட்டுப் பின்னர் பலாலிக்கு திரும்ப வருவதற்குத் தொண்ணுறு ரூபாதான் விமானக் கட்டணம்.
கொழும்பில் இன்று நானிருக்கும் இடத்திலிருந்து நான் தங்கும் வீட்டுக்கு தினசரி சாயங்காலம் செலவிடும் ஆட்டோ ரிக்ஷாவின் கட்டணம் இது.
இன்று இதைச் சொன்னால் யாருமே நம்பத் தயங்குவார்கள்.
முதன் முதலில் நான் தலைமன்னார் ஊடாக ராமானுஜம் கப்பலில் தனுஷ்கோடிக்குச் சென்று பின்னர் ரயிலில் மதுரையூடாகச் சென்னைக்குச் சென்றுள்ளேன்.
போய்ச் சேர்ந்த அன்று ஒய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாள் காலை விஜயபாஸ்கரனை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு ஜெய காந்தனை அவரது இல்லத்தில் சென்று பார்த்தேன். அப்பொழுது அவர் எழும்பூர் நூதன சாலைக்கு அண்மையிலுள்ள பல குடும்பங்கள் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்ப வீடொன்றில் குடியிருந்து வந்தார்.
நான் போன நேரம் காலை. எனவே வீட்டில் இருந்தார். என்னைக் கண்டதும் விஜயபாஸ்கரன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே என்னை இன்னார்தான் என மனதில் அனுமானித்துக் கொண்டு வாரியணைத்து வரவேற்றார். கட்டியணைத்தார்.
வாரக் கடைசியில் என்னை பஸ்ஸில் அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் சென்றார். சுற்றிக் காட்டினார். அங்கு கடற்கரை ஓரமாக வைத்து என்னைப் புகைப்படமெடுத்துக் கொண்டார்.
சமீபத்தில்தான் கல்கத்தா போயிருந்தார். அங்கு தாகூர் நூற்றாண்டு விழாவில் ஞாபகார்த்த மாக வாங்கிய போர்வையைப் போர்த்திப் பட மெடுத்தார். கருங்காலிச் சிலையொன்றை கொண்டு வந்திருந்தார். தனது ஞாபகார்த்தமாக அந்தச் சிலையை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
பிறிதொரு நாள் பிராட்வே பக்கமாகக் கூட்டிச் சென்று அங்குள்ள பூங்கா ஒன்றைக் காட்டி, தனது கதை ஒன்றில் வரும் களம் என அந்த இடத்தை விவரித்துச் சொன்னார்.
வேறொரு நாள் மரீனா கடற்கரைகரைக்குக் கூட்டிச் சென்று மணலில் நீண்டநேரம் இருக்க வைத்து, தனது யெல்லாம் விவரித்துச் சொன்னார். திரும்பும்
எதிர்காலத் திட்டங்களை
வேளையில் கடற்கரையில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த அழகழகான சங்குகளை வேண்டிய மட்டும் வாங்கித் தந்தார்.
திருவல்லிக்கேணி பஸ் தரிப்பில் கடைசி பஸ் போகும்வரை என்னுடன் உரையாடினார்.
பிற்காலங்களில் அவரது பழக்க வழக்கங் களில், பழகும் முறைகளில் ஒரு வகையான முரட்டுச் சுபாவம் மேலோங்கியிருப்பதாகப் பலர்
ബ8 37
2>

Page 21
எழுத்திலும் நேர்ப் பேச்சிலும் குற்றஞ் சாட்டுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்துமிருக்கிறேன்.
இன்று வரைக்கும் பல சந்தர்ப்பங்களில் பல கட்டங்களில் நானவரைச் சந்தித்துமிருக்கிறேன். பழகியுமிருக்கிறேன்.
பலர் சொல்லும் இந்தக் குற்றச்சாட்டுகளை என்னால் சீரணிக்கக் கூட இயலவில்லை.
கடைசியாக நானவரைச் சந்தித்தது அவரது ஒரே மகனின் திருமண விழாவின் வரவேற்பு வைபவத்தில்தான்.
வந்திருந்த பலருக்கு முகமலர்ச்சியுடன் என்னை அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்கு முதல் ஆண்டு எனது 73வது பிறந்த நாள் விழாவை எனது சுயவரலாற்று நூலான ‘எழுதப் படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை நர்மதா பதிப்பக அதிபர் ராமலிங்கம் அவர்களது அனு சரணையுடன் அதே நர்மதா புத்தக நிலையத்தில் கொண்டாடினேன். இலக்கிய நண்பர்கள் குழுமி யிருந்தனர்.
இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமை தாங்கினார். அசோகமித்திரன், சாகந்தசாமி போன்றோர் வாழ்த்துரை நல்கினர்.
திடீரெனப் பார்த்தால் அதே ராஜகம்பீரத்துடன் ஜெயகாந்தன் கூட்ட மண்டபத்திற்குள் நுழைந்தார். என்னைக் கண்டதும் முதன்முறை நான் அறிமுகப் படுத்தபட்டபோது எத்தகைய ஆர்வ நேசிப்புடன் கட்டியணைத்துப் பாராட்டினாரோ, அத்தகைய வேகத்தில் என்னைக் கட்டியணைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
வெளியீட்டு விழாவிலும் ஓர் அருமையான
சொற்பொழிவை நிகழ்த்தினார். ஆழமான சொற் பொழிவு அது.
கூட்ட முடிவில் நர்மதா ராமலிங்கம் என்னைத் தனியாக அழைத்து, “நான் கற்பனை கூடப் பண்ணவில்லை இந்தக் கூட்டத்திற்கு ஜெயகாந்தன் ஸார் வருவா ரென்று. அவர் உங்கள் மீது வைத்திருக்கும் நட்பு மரியாதைக்கு இது ஒரு கண் கண்ட சாட்சியாகும்!” என்றார்.
ஜெயகாந்தனைப் பற்றி இத்தனை விரிவாகவும் சரஸ்வதியையும் அந்தச் சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ள விஜயபாஸ்கரனைப் பற்றியும் இத்தனை விரிவாகவும் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு.
கொழும்பில் ‘சுதந்திரன்’ வாரப் பேப்பரும் சென்னையில் ‘சரஸ்வதி' என்ற மாதச்
இல்லாது போயிருந்தால் ‘டொமினிக் ஜீவா’ என்ற இந்த எழுத்தாளன்
சஞ்சிகையும்
இந்த மண்ணில் உருவாகி இருக்கவே முடியாது என்பது நிச்சயம்.
அதிலும் சரஸ்வதி என்ற மாத இதழும் அதை வெளியிட்டு வந்ததுடன் என்னைப் போன்றவர்களை அடிக்கடி ஊக்கப்படுத்தி, உற்சாகமூட்டி எழுத வைத்த விஜயபாஸ்கர னும் அந்தச் சஞ்சிகையில் தனது முத்திரைப் பெயரைப் பதிய வைத்து தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தித் தந்த ஜெயகாந்தனின் உந்துதலும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயமாக நானொரு சஞ்சிகையின் - மல்லிகையின் வெளியீட்டாள னாகவும் ஆசிரியராகவும் இத்தனை காலமும் நின்று நிலைத்திருப்பேனோ சந்தேகம்தான்.
என்பது
நான் சென்னைக்கு வந்தால் தியாகராஜ நகரிலுள்ள போக் ரோட் இன்று சிவாஜி
ബ8 38
VN

கணேசன் வீதி என அழைக்கப்படும் தெருவில் அமைந்துள்ள ‘பாலன் இல்லத்தில் தான் பெரும் பாலும் தங்குவது வழக்கம்.
இந்தக் கலையில்லம் பிரபல நாட்டியக் கலைஞர் உதயசங்கர் உருவாக்கிய கலைப் பீட இல்லம். அதன் வாசலில் உதயசங்கர், அவரது துணைவியார், அவர்களது மகள் ஆகியோரின் நடன பாத அடையாளங்கள் அடை யாளத்திற்காகப் பதியப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டைத் துறந்து அவரது குடும்பத்தினர் தமது பிறந்த மண்ணுக்குப் போகக் கூடிய சூழ்நிலை வந்த சமயம், அந்தக் கலைக் கோட்டத்தைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது பிரபல நர்த்தகர் உதய சங்கருக்கு.
பலர் அந்த நிலையத்தைக் கையகப்படுத்த முயற்சித்த சமயம், மக்களுக்கு உழைக்கும் வர்க்கத்திற்கு உண்மையான தொண்டு செய்யும் நிறுவனத்திற்கே அடக்க விலையில் அந்த இல் லத்தைக் கையளிக்க விரும்பினார், உதயசங்கர்.
முடிவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு கிளையின் தலைமையகமாகச் செயற்பட தனது கையாலேயே உருவாக்கி மகிழ்ந்த அந்த நாட்டிய மஹாலைக் கையளித்துச் சென்றார் உதயசங்கர்.
ஒவ்வொரு தடவையும் நான் அந்தப் பாலன் இல்லத்திற்குள் நுழைந்து காலடி வைக்கும் போதும் அந்தக் கலைக் குடும்பத்தி னரது பாதங்கள் என்னை வரவேற்பது போல ஒரு மனப் பிராந்தி எனக்கு ஏற்படும்.
எத்தனை மகத்தானவர்களையெல்லாம் இந்த மன்றத்தில் நான் தரிசித்திருக்கிறேன். மறைந்த தோழர்கள் கலியாணசுந்தரம், பாமாணிக்கம் இன்று உழைக்கும் வர்க்கத்தின்
உன்னத நேசர்களான நல்லகண்ணு, பாண்டியன், தாமரை மகேந்திரன் எஸ்.எஸ்.தியாகராஜன் போன்ற
ஆற்றல் மிக்க தோழர்களையெல்லாம் கண்டு, கதைத்துப் பழகியிருக்கிறேன். விருந்துண்டி ருக்கிறேன்.
அந்தப் பாலன் இல்லம் தமிழகத்தில் எனது இலக்கியத் தொட்டிலாகவே திகழ்ந்து வந்
துள்ளது.
ஒருநாள் இலேசாக மழை தூறிக் கொண்டி ருந்தது. மாலை வேளை. குடை பிடித்த வண்ணம் ஒருவர் வந்து கொண்டிருந்தார். நான் ஒய்வாகப் பேப்பர் படித்துக் கொண்டி ருந்தேன்.
வந்தவர் குடையை ஓர் ஒரமாக வைத்துவிட்டு முன் பகுதியில் இருந்த என்னை நெருங்கி விசாரித்தார். ‘சிலோனிலிருந்து ஒருவர் இங்கு வந்து தங்கியுள்ளாராமே, அவரைப் பார்க்க வேண்டும்” என்றார்.
அவர் சந்திக்க விரும்பி வந்தவர பெயரைக் கேட்டேன்.
அவர் எனது பெயரையே உச்சரித்தார்.
அவர் தேடிவந்த நபர் நான்தான் என நான் சொன்னதும் வந்தவர் மெத்தச் சந்தோஷப்பட்டார்.
‘உங்களைக் கவிஞர் ஒருதடவை பார்த்துப் பேச ரொம்பவும் விரும்புகிறார். கவிஞர் ஊரில்தான் இப்பொழுது இருக்கிறார். நாளைக் காலை அவரைச் சந்திக்க உங்களுக்குச் சம்மத மென்றால் காலையில் வந்து நான் உங்களை அழைத்துக் கொண்டு போவேன்!” என்றார்.
எனக்கு முதலில் கவிஞர். கவிஞர். என எவரைக் குறிப்பிடுகிறார் என்பது புரியவேயில்லை. கேட்கவும் ஒரு மாதிரிக் கூச்சமாக இருந்தது.
GSG): 39 অস্ত্ৰ

Page 22
தமிழ் நாட்டில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்குப் பல பரிபாஷைகள் உண்டு. இயல்பான பெயர்களையே பகிரங்கமாக உச்சரிப்பதில் பலர் தயக்கம் காட்டுவார்கள். சிலருக்கு அவர்களது இயற்பெயர்களே மறந்து போய்க் கனகாலமாகி விட்டது. புனைப் பெயர்களே நிலைத்துப் போய் விட்டன.
உள்ளே வேலையாக இருந்த ஒரு தோழர் வெளியே பேச்சரவம் கேட்டு எட்டி வந்து பார்த்தார். ‘ஓ! இராம கண்ணப்பனா! வாங்க. வாங்க.” என வரவேற்ற வண்ணம் எம்மை நெருங்கி வந்தார்.
இராம கணினப்பண் என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு அவர் ‘கவிஞர். கவிஞர். எனச் சொன்னது ஓரளவு புரிந்து கொண்டதுமாப் போல இருந்தது.
இந்தப் பெயரை நான் முன்னரே கேள்விப் பட்டிருக்கிறேன் என்ற உணர்வு என் புத்தியில் பட்டது. இராம.கண்ணப்பன் என்ற பெயரை 'கண்ணதாசன்’ சஞ்சிகையில் படித்துத் தெரிந்திருந்தது எனது புத்தியில் பட்டது.
என்ற தரமான இலக்கியச்
'கவிஞர் கண்ணதாசன் உங்களைப் பார்த்து பேச விரும்புகிறார்’ என அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இராம.கண்ணப்பன் என்னைக் கேட்டுக் கொண்டதும் இதன் பின்னணி என்னதாக இருக்கும்?’ என எனக்குள் நானே யோசித்துக் கொள்ளத் தொடங்கினேன்.
கவிஞருக்கு ஜெயகாந்தன் மிக்க நெருங்கிய நண்பன், ஜெயகாந்தன் மூலம் நான் தமிழகம் வந்து பாலன் இல்லத்தில் தங்கியிருக்கும் தகவல் தெரிந்திருக்கலாம், கவிஞருக்கு.
அதன் பெறுபேறாகவே என்னை நேரில்
சந்தித்துப் பேச கண்ணதாசன் விரும்பியிருக்கலாம்
V
என அந்த வேளையில் மட்டிட்டுக் கொண்டேன்.
அடுத்த நாள் காலை பத்து மணிக்குத் தான் என்னை அழைத்துப் போக நேரில் வருவதாகவும் “கவிஞரின் இல்லம் இதே பகுதியில் பாண்டி பஜார் பக்கம் திரும்பினால் வந்து விடும்” எனச் சொல்லி விடைபெற்றுச்
சென்றார் இராம.கண்ணப்பன்.
எனக்கு வாக்களித்தபடியே அடுத்த நாள் காலை என்னைக் கண்ணதாசன் கவிஞர் இல்லத்திற்கு அழைத்துப் போக நண்பர் இராம.கண்ணப்பன் பாலன் இல்லத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினார்.
வெளியே நல்ல வெய்யில். சென்னை வெய்யில். இருவரும் புறப்பட்டோம்.
பாணி டிபஜார் கடைத் தெருவைக் கடந்து தியாகராஜ நகர் தபால் காரியால யத்திற்குத் திரும்பும் முடக்கில் வண்டியை நிறுத்தச் சொல்லி, இறங்கி ஒரு குளிர்பானக் கடைக்குள் என்னை அழைத்துச் சென்றார், இராம.கண்ணப்பன்.
அங்கே இருந்து ஆர அமர இரு வரும் குளிர்பானம் அருந்திக் கொண்டே, ஈழத்தின் இன்றைய நிலை பற்றியும் கண்ண தாசன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பற்றியும் வெகு விஸ்தாரமாகக் கருத்துப் பரிமாறல் செய்து கொண்டோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மல்லிகைக்குத் தற்காலிக ஓய்வு கொடுத்துள்ளதைப் பற்றியும் ஊர் திரும்பியதும் மீண்டும் மல்லிகையைச் சொந்த அச்சு சாதன வசதிகளுடன் வெளிக் கொண்டு வரும் முயற்சி பற்றியும் அவருடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டேன்.
(மீண்டும் சந்திக்கின்றேன்)
4 yet geot O

கடிதங்கள்
நலம். நலமுடன் வாழ்க. மல்லிகை நறுமணம் வீசிட மல்லிகை மலர் திங்கள் தோறும் மலர வேண்டும்.
திங்கள் தவறாது தங்கள் மல்லிகை மலர் கிடைக்கின்றது. இரவுவேளை கிடைக்கும் போது தவறாமல் படிக்கின்றேன்.
'மல்லிகை மலர்ந்திட மணம் பரப்பிட இத்தனை ஆண்டுகள் தங்களின் அர்ப்பணிப்பை ஒரளவுக்கேனும் அறிந்திருக்கிறேன். வாழ்க, வளர்க.
அன்புடன் மாவை. சோ.சேனாதிராசா (பாராளுமன்ற உறுப்பினர்)
மல்லிகையின் வளர்ச்சியையும் அதன் இலக்கியப் பங்களிப்பையும் வெகு கூர் குறிப்பாக அவதானித்து வருபவன், நான். நீண்டகால வாசகன்.
கொழும்பில் மல்லிகை மறு ஸ்தாபிதமானதன் பின்னர் பல ஆண்டு மலர்களை மல்லிகை இதுவரை வெளியிட்டு வந்துள்ளது.
அந்த அந்த மலர்களை ஒரு தடவை கண்ணோட்டமிட்டுப் படித்தாலே போதும் அதன் தற்போதைய வளர்ச்சியை மட்டிட்டுக் கொள்வதற்கு
யாழ்ப்பாணச் சூழ்நிலையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த மல்லிகையல்ல, இன்று கொழும்பிலிருந்து வெளிவரும் மல்லிகை. இரண்டினதும் உள்ளடக்கங்களே வேறு வேறு.
இந்த உள்ளடக்க மாற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது. குடாநாட்டு மனப்பான்மையைக் கடந்து, ஒரு விரிந்த, பரந்த பிரதேசத்திற்கு வந்துள்ளது இன்றைய மல்லிகை. இது வரவேற்கத் தக்க முன்னேற்றமே.
தொடர்ந்து புதுப் புது எழுத்தாளர்களை எழுத வைக்க வேண்டும். எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கே இடம் கொடுக்கக் கூடாது.
தலையங்கங்கள் ஒருபக்க அடக்கத்திற்குள் உட்படுத்தப்பட்டிருந்தாலும் காரமும் ஆணித்தரமும்
3 Decesco: 41

Page 23
நிரம்பிவையாக இருப்பது வரவேற்கத் தக்கது.
தூண்டில் வெகு சுவாரஸ்யமாகப் போகின்றது. தூண்டிலில் மாணவர்களைப் பங்கு கொள்ளச் செய்யுங்கள் வளரும் இளந் தலைமுறையைச் சேர்ந்த அவர்கள் இப்பகுதியில் பங்கு கொண்டால்தான் புதிய தகவல்கள் வெளிவரும்.
39வது ஆண்டு மலர்த் தயாரிப்புத் தகவல்களைக் கடந்த இதழில் தந்துள்ளீர்கள். அதற்கு அடுத்து நாற்பதாவது ஆண்டு மலர். எனது அறிவுக்குத் தெரிந்தவரை நமது மண்ணில் ஒரு சிற்றிலக்கிய ஏடு நாற்பது ஆண்டுகளைத் தொட்டு நிற்பது மகா அதிசயங்களில் ஒன்றாகும். அந்தப் பெரும் சாதனையை இந்த நாட்டில் மல்லிகை சாதிக்கின்றதென்றால் அதற்குப் பசளையிட்ட உழைப்பு எத்தகையதானது என நான் பிரமிக்கின்றேன்.
நாற்பது என்பது ஒரு பெரிசா? நூறாண்டுகள் மல்லிகை தாக்குப் பிடிக்கும் என்பதே எனது திடமான நம்பிக்கை.
எஸ்.எம்.ராமதுரை
பதுளை
நீங்கள் அனுப்பிய புத்தகப் பார்சல் கிடைத்தது. பிரித்துப் பார்த்தபோது சந்தோஷம் இரட்டிப்பாக இருந்தது. மிகவும் நன்றி.
அட்டைப் படத்திற்கு உரியவர்களை நீங்கள் பேட்டியெடுத்தோ, அல்லது வேறு ஒருவர் பேட்டியெடுத்தோ போட்டால் பல விசயங்களை நாம் அறிவதுடன், புதுமையாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் உங்களுக்கு சில அசெளகரியப் பிரச்சினையும், நேரம் போதாக் குறையும் இருப்பதையும் என்னால் உணர முடிகிறது.
மல்லிகைச் சிறுகதைகள் தொகுதி 2 மிகவும் நன்றாக இருந்தது. பல கால கட்டத்து. பல வகையான எழுத்துக்களை ஒரு சேரப் படிக்க முடிந்தது. எழுத்தாளர்களைப் பற்றி ஒரு குறிப்புக்களும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாகவும் ஒரு வரலாற்றுப் பதிவாகவும் இருக்கும் என்று கருதுகிறேன். எதிர்காலத் தொகுப்புகளுக்கு முயற்சி பண்ணிப் பார்க்கவும்.
கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட விட்டல்ராவ் தொகுத்த 'இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்’ போல் உங்கள் பணியும் ஈழத்தில் அவசியமானதொன்றாகும்.
இத்துடன் ஒரு கதை முயற்சி பண்ணி இருக்கிறேன். பல காலம் எழுதும் ஆர்வம் இருந்தும்
சோம்பேறித்தனமாகவும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகவும் முயற்சி பண்ணவில்லை. இப்போது
நல்லதொரு சூழல் காரணமாக தேக்கி வைத்த பல சம்பவங்களை இரை மீட்டுப் பார்க்கிறேன். அதில் இதுவும் ஒன்று.
அனபுடன
சி.வைத்தீஸ்வரன்
அவுஸ்திரேலியா.
a AP 42
666):

வாழ்க! நோபல் பரிசு
தணர்னியைவிட
இரத்தம் தடிப்போ. இல்லையோ. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் இரத்தமும் புதிய, சிறிய கண்டங்களின் இரத்தமும் ஒரெ தடிப்பு! இந்த. நோர்வே வெள்ளைக் காகங்களின் இரத்தமும் தடிப்பா..?
வெப்பவலய வெள்ளாடுகளின் இரத்தத்தைவிட, இடைவெப்ப வலய பன்றிகளின் இரத்தம் கடும் தடிப்பு! ஆய்வுகூட பரிசோதனை அவசியமில்லை! இந்த. நோர்வே கடற்காகங்களுக்கு அவசியமா?
ང་། །
- மருதூர்க்கனி
“பாராளுமன்றங்களின் தாய்’
சோரம்போய்
தன், தறுதலைகளுக்கு தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதித்தாள்! தன்மீது,
சனியன்களின் நிழல்கூட
விழக்கூடாது! என்றுதான். புதிய கண்டத்திற்கும் சிறிய கண்டத்திற்கும் நாடு கடத்தினாள்! தானாடா விட்டாலும் தசை ஆடியது!
கூடவே, ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி, டென்மார்க்கின் தசைகளும் ஆடின! இந்த நாடுகளின் ஆதிக்கப் பிரபுகளுக்கு வரலாற்று விதிகளில்
(Dಐಟಿಐಜಿ 43

Page 24
வைன் ஷொப்பும் விடுதிகளும் இருந்தன! இந்த, நோர்வே. கொக்குகளுக்கும் இருந்ததா?
ஆசிய, ஆபிரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுகளில் வேட்டையாடிய, சுதேச ஆட்டுக்கிடாய்களிலிருந்து வடிந்த, வெள்ளை இரத்தத்தைவிட நாடுபிடிக்க நாயாய் அலைந்த கடலோடிகளின் இரத்தம் கடும் கறுப்பு! அதைவிட, அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வழியனுப்பி வைத்த அரக்கர்களின் இரத்தம் கடும் கறுப்பிலும் கறுப்பு! இந்த. நோர்வே கடற்புட்களின் இரத்தமும் கறுப்பிலும் கறுப்பா?
தானாடா விட்டாலும் தசை ஆடினால் ஆடட்டும்! இரத்தம், துடித்தாலும் துடிக்கட்டும்! இந்த. நோர்வே கடல் ஆமைகளின் இரத்தம் ஏன் வடிக்கவேனும்? பூர்வீக பந்தமோ? இருக்கும்! அல்லது,
U6656ಶ
உலக சமாதானத்திற்கு இரத்தம் பாய்ச்சவென்று பறந்து திரிகின்ற இறுமாப்போ?
ஊர்வாயை முட உலைமுடி இல்லையே..! அதனால், ஆவி பறக்கிறது; "பலஸ்தீன் மண்ணில் உன் அப்பன் செய்து வைத்த அந்தச் சமாதானம் என்னாச்சு?” இலங்கைக்கும் அதே கதியா? ஒகோ..! அமெரிக்க கடவுள் காப்பாற்றுவாராக்கும்!? எல்லாருக்கும் தெரியும்! சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை!
மனிதகுலத்தின் மனசாட்சியில் ‘அளயிட்’ அடித்துவிட்டு, சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்றவர்களை நோயாளிகளாக்கிவிட்டு, நாயகன் மனர்டேலாவை நையாண்டி செய்துவிட்டு, பரிசுத்த பாப்பரசருக்கு "பேப்பே' காட்டிவிட்டு, உலகத்தின் ஐ.நா'வை ஊர்ச் சங்கக்கடையாக்கிவிட்டு, முன்று வல்லரசுகளின் முகத்திலும் கரியை பூசி உலக அமைதிக்கு சமாதி கட்டிவிட்டு, ஈராக் போருக்கு நியாயம் கூறி’
44

பெற்றோல் அழகியை அடைவதில் ‘வெற்றி பெற்று' புளுகினாற்போல்., பேரழிவு ஆயுதப் பேய்களுடன் புணர முடியாமல். தலை குனிந்து, உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவ நினைத்து.
நீண்ட தாடிக்கும்’ 'கம்பளி மீசைக்கும்’ போட்ட முடுச்சு பிசகி.
அமெரிக்க அனோபிளஸ் நுளம்புகள், ஐரோப்பிய டெங்குடன் வர்க்க சமரசம் செய்தபோதும் உலகம், மலேரியா கண்டு நடுங்கும்! மரணம் மலியும்! நச்சுப்புகை, நுளம்புத்திரி. எதுவுமே சரிவராது! குயினைன் வில்லைகள்தான் சரிவரும் அவற்றை. அனோபிளஸ் நுளம்புகளிடமும் டெங்குகளிடமும் எப்படி எதிர்பார்க்க முடியும்? உலகத் தொழிலாளர்களே உற்பத்தி செய்து விநியோகிப்பார்கள்!
ஐ.நா. சங்கக்கடை மனேஜர் கோபி அனான்,
மனங் கேட்காமல்
Q
உதவ ஓடிவருவார்! ஆனால். அவர் கால்களுக்கு விலங்கிடப்படும்! முன்று வல்லரசுகளும் முன்னர் முகத்தில் பூசிய கரியை மெள்ள, துடைத்துவிட்டுக் கொண்டு பெற்றோல் அழகியை படுக்கையறையில் பங்குபோட்டுக் கொண்டபோது உலகத்தின் மனச்சாட்சி காறித்துப்பியது!
இவை. எதையுமே அறியாத பிறவி ஊமையன் போல், பேசாமல் இருந்துவிட்டு. திடீரென்று,
மழைக்கு முளைத்த காளான்போல் குடை பிடித்து, 'நோபல் பரிசுக்கு முற்றிலும் பொருத்தமான’ ஹிட்லரும் முசோலினியும் இருக்கத் தக்கதாக "புஷ்ஷ"க்கும் பிளேயருக்கும் உலக சமாதானத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்!” என்று, சிபார்சு செய்திருக்கும் நோர்வேயின்
கடற் சுறாக்களுக்கு “பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்!’ 'வளர்க! உலக சமாதானம்! வாழ்க, நோபல் பரிசு!"
geese): 45

Page 25
குறிஞ்சி மலர்களும்
சிநருஞ்சி முட்களும்.
- திக்குவல்லை ஸப்வான்
காரிலிருந்து இறங்கிய ராஸிக் அந்தக் காட்சியைக் கண்டதும், அப்படியே அதிர்ந்து போய் நின்றான். எது நடக்கக் கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பானோ, அது மீண்டும் கண் முன்னே அரங்கேறுவதைக் கண்டதும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அவனது பார்வையில் அமிலத்தின் வீரியம் தெரிந்தது.காரின் கதவை படார்’ என்று அறைந்து சாத்தினான். விசையாய் வீட்டுக்கு ஓடினான்.
“சரீனா. ஏய் சரீனா. எங்க போயிட்டீங்க..? அவசரமா இங்க வாங்க."
குரலில் கோபம் முகாம் அடித்திருந்தது.
உள்ளே ஏதோ வேலையாக இருந்த சரீனா பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.
“என்னங்க. என்னங்க? என்ன விஷயம். ஏதாச்சும்.” ஒன்றும் புரியாதவளாக விழித்தாள்.
“அந்தா பாத்தீங்களா. ஒங்கட ஆச மகன் போடுற கூத்த நல்லா பாருங்க. நான் ஒரு நிமிஷம் இந்த வீட்டில இல்லாட்டா போதும். எல்லாமே நாசம்தான். பாருங்க.”
கணவன் காட்டிய திசையிலே சரீனா கண்களை ஒட்டினாள். அங்கே ஓரிடத்தில் அவளது பார்வை நிலை குத்தி நின்றது.
46 yettese)
 
 
 
 
 
 

மகன் ரமீஸ் கம்பி வேலிக்கு அப் பால் புகுந்து அந்தப் பையன்களுடன் தன்னை மறந்து விளையாடிக் கொண்டி ருந்தான்.
“அந்த அசிங்கம் புடிச்ச அகதிப் பொடியன்மாரோட இவன சேர விடாதீங்க என்று எத்தன தடவ சொல்லி இருப்பன். கவனிக்கிறீங்களா. எவ்வளவு சொல்லி யும். அடிச்சும். இவன் கேட்குறானா.
இண்டைக்கு இவனச் சும்மா விடப்
போறதில்ல. ராஸ்கல்.”
கையிலிருந்த ஒபிஸ் பேக்கை நாற் காலியில் தொப்பெனப் போட்டான். மகன் இருந்த திக்கை நோக்கி விரைந்தான்.
அங்கே ரமீஸ் தனது வயதை யொத்த நண்பர்களுடன் மண்ணில் புரண்டு கொண்டிருந்தான். அவனது முகத்தில் அலாதியானதொரு மலர்ச்சி! புதுச்சட்டையில் புழுதி அப்பிக் கிடந்தது. அதைப் பற்றித் துளியும் சட்டை செய்த தாகவே தெரியவில்லை. கலைந்த பரட்டைத் தலைகளுடன், வியர்வை நிறைந்த முகங்களுடன், பொத்தல் காற் சட்டையுடன், கிழிந்த சாரனுடன் அந்த அகதிச் சிறுவர்கள் அழுக்குத் தீவாய் நின்றார்கள். ரமீஸைச் சுற்றிச் சுற்றி ஓடினார்கள். கைகளைக் கோர்த்து ஆடி னார்கள்; பாடினார்கள்; எங்கும் இரைச் சல் ஆரவாரம். வெள்ளி நாணயங்களைக் கொட்டி விட்டாற் போல கலகலப்பு.
"(BLTui... JLS6)... grisleb 6JTLIT'
ராஸிக்கின் குரலில் கொள்ளை கொள்ளையாய் கடுரம். பெரும் ஆரவாரம் ஓய்ந்தது போல எங்கும் திடீர் அமைதி.
“இந்த அசிங்கம் புடிச்சவனுகளோட சேராதேன்னு எத்தன தடவ சொல்றது. கேட்டியா?. இங்க வாடா தடிமாடு.”
ரமீஸ் பயத்தால் வெலவெலத்த படியே அருகே வந்தான். அவசரமாய் வியர்த்து, அவஸ்தையுடன் எச்சில் விழுங் கினான்.
“என்னடா. வாயில கொழுப்பா. பேசேண்டா. இந்தப் பஞ்சப் பரதேசிக ளோட என் னடா சங் காட்டம் . சொல்லுடா.”
வார்த்தைகள் குத்தலாக வெடித்தன. அவனுடைய "ஷேர்ட் கொலரில் தூக்கிப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினான்.
”வாப்பா. வாப்பா. அடிக்காதீங்க. எனக்கு வீட்டுக்குள்ள தனியா இருக்க சோம்பலா இருக்கு. அதுதான் வந்தன். இனிமே வரமாட்டன்.”
அவனது நாக்கு நொண்டியடித்தது. வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி வெளியே வர மறுத்தன.
“அதுக்காக. இந்த விலாசம் இல் லாதவனுகளோடா விளையாடுறது. எங்கட மானம். மருவாதி. எல்லாத்தை யும் கெடுக்கப் பார்க்கிறியே. வாடா இங்கால.”
மகனைத் தரதரவொன்று இழுத்துக் கொண்டு போனான் ராஸிக்.
ரமீஸின் அகதித் தோழர்களான ஜவாது, அமீன், அமீரலி, நியாஸ், நவாஸ், அந்தக் காட்சியை கம்பி வேலிக்கூடாக கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
DeGSe: 47 VNS

Page 26
ரமீஸ் திரும்பித் திரும்பி பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். அது அடிக்கடி நடக்கிற நிகழ்ச்சிதான்!
*紫安
ராஸிக் நிறுவனமொன்றின் உயர் அதிகாரி, உயர் பதவி என்று தலையில் சூட்டப்பட்ட கீரிடத்தால் தலை கனத்துப் போனன்; மீசையின் அடிவாரத்தில் புன்னகையை மறந்த உதடுகள்; எடுத் தெறிந்த பார்வை; உம்மணா மூஞ்சி. அவனுக்கேற்ற ஜோடு மனைவி.
அப்பகுதியின் அமைதியான சூழல் அவனை அங்கு குடியேற வைத்தது. சிலு சிலுவொன்ற காற்று, சலசலத்துப் பாயும் நீரோடை, நூற்றுக் கணக்கான குருவிகள் கீச்சுக் கீச்சு தாம்பாளம் பாடும் மரங்கள்; எங்கும் இயற்கையின் செழுமை. வீடுகள் அதிகம் முளைக்காத பகுதி. வெளிநாட்டில் படித்துப் பட்டம் பெற்ற ராஸிக் கட்டுப்பாடுக ளோடு வளர்ந்தவன். தனக்குள் சில வரம்பு முறைகளை போட்டுக் கொண்டவன். தனது மனைவி, ஒரே மகன்; அதே போக்கில் வாழ் வதிலேயே கரிசனை காட்டினான்.
அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது அவர்களது வாழ்க்கை.
அன்று ராஸிக் மேல்மாடியில் பத்தி ரிகை வாசித்துக் கொண்டிருந்தான். கீழே வாகனங்கள் நிறுத்தும் சத்தம். இரைச்சல். பேச்சுக் குரல்கள் கேட்டன. அவன்து அகல மான கண்களில் அமோக திகில் பயிராகி இருந்தது. அவசரமாக எட்டிப் பார்த்தான். கைகளில் 'பைல்களுடன் சிலர் மும்முரமாக வேலை. அப்பகுதியின் கிராம சேவகர் எதையோ சுட்டிக் காட்டிப் பேச, வந்தவர்
கள் குறித்துக் கொண்டிருந்தார்கள். என்னவாயிருக்கும்? எண்ணம் மேளம் வாசித்தது. இதயப் பிரதேசத்தில் ஒரு போர்க்களப் பதட்டம் பரவ கீழே தாவி னான். அதிகாரிகள் போன்று தோற்ற
மளித்தவர்களிடம் தன்னை அறிமுகப்
படுத்திக் கொண்டான். காரணத்தை வினவினான்.
"மிஸ்டர் ராஸிக். இந்த இடத் தில ஒரு அகதி முகாம் அமைக்கும் படி மேலிடத்து உத்தரவு. முகாம் களில இருக்கிற நெருக்கடியைத் தீர்க்க எடுத்த முடிவு. இடம் பொருத்த மானதா என்று பார்க்க வந்தம். வேறொன்றுமில்ல.”
உச்சந்தலையில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல ராஸிக்
துடித்துப் போனான். அமைதியான
சூழல்; ஒதுங்கி வாழும் வாழ்க்கை; எல்லாம் காற்றில் பறப்பது போன்ற உணர்வு.
“இந்தப் பக்கத்தில நாங்க ஏழெட்டுக் குடும்பங்கள் ரொம்ப கெளர வமா வாழுறம். இந்த அகதிகளக் கொண்டு வந்து போட்டு சூழல அசுத் தப்படுத்தாதீங்க. "மெனர்ஸ்’ என்றால் என்னென்றே தெரியாத அந்தக் கும்பல இங்கே வரவழைச்சி எங்கட நிம் மதியை குலைக்காதீங்க. நாம கோபு ரங்கள். இந்தக் கோபுரங்களிட நிழல்ல கூட குடிசை கட்ட நாம அணு மதிக்க மாட்டோம்.”
ராஸிக் சூடு பறக்கப் பேசினான்.
தமது கடமையை முடித்த அதி காரிகள் ஜிப்பில் ஏறினார்கள். புழுதி
48 ye GSG);

யைக் கிளப்பிக் கொண்டு அது பறந்தது.
ராஸிக் சோர்ந்து போகவில்லை. இதற்கு சந்து பொந்துகள் இல்லாமலா இருக்கும்? எடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் எடுத்தான். தேவையான ஊசிகளை அந் தந்த இடத்தில் ஏற்றினான்.
பத்து நாட்கள் பறந்து போயின.
பிற்பகல் வேளை. இருபது முப்பது லொறிகள் ராஸிக்கின் வீட்டு முன்னால் இருந்த மைதானத்தில் கிறிச்சிட்டு நின்றன. தொப். தொப். என்று அவற்றிலிருந்து குதித்த அகதிகளைக் கண்டதும் ராஸிக் ஆடிப்போய் விட்டான். அனைத்து முயற்சி களும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டனவே என்று குமுறினான்.
நாலைந்து நாட்களுக்குள் அந்த மைதானத்தில் நூற்றுக் கணக்கான கொட்டில்கள் முளைத்து விட்டன. அவர் களுக்கான நிவாரணப் பொருட்கள், மற்றும் உதவிப் பொருட்களை வழங்க அடிக்கடி வாகனங்கள் வருவதும் போவது மாக இருந்தன. அவர்களின் கசமுசா என்ற உரத்த குரல்கள், பாலுக்காக ஏங்கும் குழந்தைகளின் ஒலம், சின்னஞ் சிறுசுகளின் வெடிச் சிரிப்பு. மொத்தத்தில் அந்தப் பகுதியின் அமைதியே குலைந்து
விட்டது. ராஸிக் காதைப் பொத்திக் கொள்வான்.
“ச்சே. மனுசங்களா. அமைதி
யைக் கெடுக்க வந்த கோட்டான்கள்’ பற்களை நறநறவென்று கடிப்பான். அவர்களைப் பற்றி நினைத்தாலேயே மனம் உஷ்ணமாய் தகிக்கும். அவர்கள்
மீது வெறுப்பை கொப்பும் கிளையுமாக, வேரும் விழுதுமாக பெரும் ஆல மரமா கவே வளர்த்துக் கொண்டான்.
தான் வெறுக்கும் அகதிக் கும்பலு டன் மகன் நெருங்கிப் பழகுவது நெருப்
பாய் எரித்தது. ஆயிரம் கட்டுப்பாட்டினைப் போட்டான். அந்தப் பூட்டை அடிக்கடி
உடைக்கும் மகனைப் போட்டு செம்மை யாய் விளாசினான். என்றாலும் அந்தப் பிணைப்பை இலேசில் துண்டிக்க முடியா மல் தவித்தான்.
அவனது மனதில் சிந்தனை ஒட்டம் விலாங்கு மீன் மாதிரி வழுக்கியும், வளைந்தும், நெளிந்தும் ஓடிக் கொண்டி ருந்தது.
அன்று ராஸிக்கின் வீடு கலகல கப்பில் மிதந்தது. எங்கும் பிரமாதமான அலங்காரம். தோட்டத்து மலர்களும், வீட்டின் முகப்பும் நகைகள் அணிந்த மாதிரி கலர் கலர் "பல்புக்களில் மின் னின. வீட்டின் தரை கண்ணாடி போல் பளபளத்தது.
ரமீஸ் டிப்டொப்பாக உடுத்து இங்கு மங்குமாக வளைய வந்து கொண்டி ருந்தான். அன்று அவனது பிறந்தநாள். என்றாலும் அவனது கண்களின் ஒளிப் புள்ளியில் சந்தோஷமே இல்லை.
பிரமுகர்கள், முதலாளிமார், உயர் அதிகாரிகள், ஆடம்பர வாகனங்களில் வந்து அட்டகாசமாய் இறங்கினர். ஒவ் வொருவர் கையிலும் பெரிய பரிசுப் பொதிகள்!
6696DE 49

Page 27
ராஸிக்கும், மனைவியும் வாய் நிறையச் சிரிப்புடன் அவர்களை வரவேற்றுக் கொண்டி ருந்தனர். அங்கே அமர்ந்திருந்த பெண்கள் ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டி ருந்தனர்.
“ராஸிக். "டைம் ஆயிடுச்சி. அப்போ கேக்க வெட்டி பார்ட்டிய தொடங்குவம். மகன் ரமீஸக் கூப்பிடுங்க.”
நெருங்கிய உறவினர் ஒருவரின் வேண்டுகோளை அமுலாக்கப் பெற்றோர் தயாராகினர்.
பிறந்தநாள் "கேக்’ அலங்காரமாய் செய்யப்பட்டு அட்டகாசமாய் மேசையில் அமர்ந்திருந்தது. எட்டு மெழுகுவர்த்திகளும் எப்போது தலையைக் கொளுத்துவார்களோ என்பது போல் காத்திருந்தன. ரமீஸின் வயதை ஒத்த மொழு மொழுவென்ற பணக் காரச் சிறுவர்கள் ஹெப்பி பேர்த்டே டுயூ பாடக் காத்திருந்தனர்.
“பையனைக் காணோம். இவ்வளவு நேரமும் இங்கதான் இருந்தான். எங்க போனானோ தெரியல்ல.”
ராஸிக்கும், சரீனாவும் பதறிக் கொண்டே சொன்னார்கள். அவர்களின் முகத்தில் ஏகப்
Lis 8566).JJ b.
செய்தி எங்கும் பரவ ஆளுக்காள் ரமீஸைத் தேடத் தொடங்கினார்கள்.
"டோர்ச் லைட்டை எடுத்துக் கொண்டு அகதி முகாம் பக்கமாக விரைந்தான் ராஸிக். முகாமுக்குள் சிம்னி விளக்குகள் சில முணுக் முணுக்' என சிலம்பாடிக் கொண்டிருந்தன.
குழந்தைகள் வீரிட்டு அலறும் குரல்கள்.
அதைத் தவிர எங்கும் அமைதி. எங்கும் இருட்டு, போர்வையாய்ப் போர்த்தியிருந்தது. சாக்கடையில் வரி செலுத்தாமல் வீடு கட்டிக் குடி யிருக்கும் நுளம்புகள் நொய்ய்ங். என்று பறந்தன.
எங்கும் பார்வையைப் பாய்ச்சி னான் ராஸிக்.
திடீரென்று கேட்ட பேச்சுக் குரல் அவனை "பிறேக் போட்டாற் போல் நிற்க வைத்தது.
6 :
அமீன். ஜவாது. பயப்படாம எடுங்க. இண்டைக்கு என்ட பேர்த்டே. இந்த டொபி, சொக்கலேட் எல்லாம் ஒங்களுக்குத்தான். பிடியுங்க.”
ரமீஸின் குரல்தான்!
“ஐயோ. வேண்டாம் ரமீஸ், ஒங்கட வாப்பாவப் பத்தித் தெரியும் தானே. அகதிங்க என்றாலேயே அவருக்கு இளக்காரம். புழுவப் பார்க் கிற மாதிரி ஒதுக்குறாரு. நீங்க எங்க ளோட சேருவதே அவருக்குப் பிடிக் கல்ல. இதையெல்லாம் கொண்டு வந்து தந்தத அறிஞ்சாரெண்டா நொறு க்கிடுவாரு. வேண்டாம். எடுத்திட்டுப் போங்க.”
அந்தப் பையன் தளதளத்த குரலில் சொன்னான். நெஞ்சிலே நெருப்பைக் கொட்டியது போன்ற வார்த்தைகள்.
"ஆமாம் ரமீஸ். நீங்க ஒவ்வொரு தடவையும் எங்களுக்காக அடிபடு வீங்க. அப்போ எங்கட மனசு என்ன
50

மாய் வலிக்கும் தெரியுமா. நாங்களும் முந்தி ஓங்களப் போல வசதியாய் வாழ்ந்தவங்கதான். திடீர்னு இப்பிடி நடக்கும் என்று எதிர் பார்த்தோமா. எல்லாம் இழந்து வந்த எங்கள ஏன் இப்பிடி நடத்துறாங்க. நாங்க என்ன குத்தம் செஞ்சம். வித்தி யாசம் பார்க்காமல் பழகுற ஒங்களக் கூட பிரிக்கப் பார்க்கிறாங்களே.”
மற்றுமொரு அகதிப் பையன் சொல்லிக் கொண்டே போனான். அவனின் கண்கள் ஈரத்தோடு மினுமினுத்தன. அதைக் கேட்டதும் ரமீஸின் மனம் தரையில் விழுந்த மீனாகத் துடித்தது.
“இந்தாங்க. யார் எது சொன்னா லும். என்னை அடிச்சி நொறுக்கினாலும். நான் ஒங்கட பக்கம்தான். எங்கள யாராலும் பிரிக்க முடியாது. அகதிகள, அநாதைகள சமமா நடத்த வேணும் என்று சொல்றாங்க. ஆனா. ஆனா. இங்க மட்டும் ஏன் இந்த வேறு பாடு. எங்களை எல்லாம் ஏன் ஒதுக்குறாங்க. விளையாட விடாமல் ஏன் தடுக்குறாங்க."
மகனின் கம்மிய குரலில் ராஸிக்கின் இதயத்துள் தைப்பது போல வலித்தது. நெஞ்சுக்கு மேலே யாரோ ஏறிக் குதித்து துவம்சம் பண்ணுவதுபோல வேதனை. தான் இதுவரை உணராத ஏதோ ஒன்று நீருக்கு மேலே தலையைத் தூக்கும் மீனாய் எட்டிப் பார்த்தது. குற்றமுள் நெருடியது.
"அப்போ. எல்லோரும் என்னைத் தேடிக்கிட்டு இருப்பாங்க. இதப் பிடி யுங்க. இல்லாட்டா நான் இங்கேயே
இருந்திடுவன்.”
படிச்சவங்கதான்.
ரமீஸ் இனிப்புப் பண்டங்களை அவர்களின் கைகளுக்குள் திணித்துக் கொண்டிருந்தான்.
“ரமீஸ்” ராஸிக்கின் குரல் இருளைக் கிழித்துக் கொண்டு பாய்ந்தது.
ரமீஸ் உடம்பில் நெருப்புப் பட்ட மாதிரி வியர்த்துப் போனான். ஏற்கனவே படபடத்த நெஞ்சுக்குள் பந்தயக் குதிரையை ஒட வைத்தான் ராஸிக்.
மனசுக்குள் பயம் தலைதுாக்க அகதிப் பையன்கள் மெதுவாக நழுவப் பார்த்தார்கள்.
“எல்லோரும் நில்லுங்க. ஒருத்தரும் போகாதீங்க. இண்டைக்கு ரமீஸ்ட பிறந்த நாள். நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரணும். வாங்க போகலாம். ஹ"ம். பயப் ULATUD 6JTÉlab.”
அவர்களின் முதுகைத் தடவிக் கொண்டே அழைப்பு விடுத்தான் ராஸிக்.
ரமீஸின் உள்ளத்தில் ஒரு சந் தோஷக் குறுகுறுப்பு ஊர்வது போன்ற உணர்வு. முகத்தில் நன்றி நிறைய, வியப்புடன் வாப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான் ரமீஸ்,
புதிய நூல் ‘கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத
ஆமைகளும் செங்கை ஆழியானின்
சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
ബ8 51
N

Page 28
படிக்காதவர் படிப்பித்த `-- YA u srusiasani ޗ ދ†
- உடுவை. தில்லை நடராசா
முற்றத்தை அலங்கரிக்கும் அழகான கோலங்களைப் போடுவது அம்மாவுக்கு கை வந்த கலை. தங்கை அம்மாவிடம் பயின்ற கலையை மேலும் மெருகுபடுத்தி தினமும் விதவிதமாகவும் வித்தியாசமான பொருட்களாலும் கோலம் போட்டு வீட்டைப் பொலிவாக்கி எங்களையும் மகிழ்வித்தாள். தங்கையின் முயற்சியையும் கலையார்வத்தையும் பாராட்டிய தந்தை இந்தியா சென்ற அவர் நண்பரிடம் சொல்லி கோலம் தொடர்பான புத்தகமொன்றை வாங்கிப் பரிசளித்தார்.
தங்கை சில நாட்களாக பலவிதமான பொருட்களைச் சேகரித்து ஒரு நாள் மாலை வீட்டு விறாந்தையையும் முற்றத்தையும் வண்ணக் கோலங்களால் நிரப்பினாள். பெரும்பாலும் மாவையும் தேங்காய்பூவையும் பயன்படுத்தியே கோலம் போடப்படும் தங்கை போட்ட கோலங்கள் வித்தியாசமானது - பல வடிவங்கள் நிறங்கள் உள்ள இலைகளைப் பயன்படுத்தி ‘இலைக்கோலம் அழகான அமைப்பும் கண் கவர் வண்ணமும் கொண்ட பூக்களைப் பயன்படுத்தி 'மலர்க்கோலம்' அரிசி உழுந்து பயறு பருப்பு போன்றவற்றால் தானியக்கோலம் மாலை கோர்க்கப் பயன்படும் மணி போன்ற அலங்காரப் பொருட்களை வைத்து 'மணிக்கோலம் இப்படிப் பல பல. இவற்றுடன் தேங்காய்ப்பூவுக்கு வர்ணம் சேர்த்து செய்யப்பட்ட கோலமும் இருந்தது.
காரணமில்லாமல் விழாக்கோலம் கொண்ட வீடு என்னை வியப்பில் ஆழ்த்த அம்மா வியப்பை விடுவித்தார்: “நாளைக்குக் காலமை சிநேகிதப் பிள்ளையஸ் வருகினமாம். அவைக்குக் காட்டுறதுக்கா பிள்ளை கோலம் போட்டிருக்கு.”
“எந்தக்கோலம் வடிவு?" என்று தங்கை கேட்டபோது - “வீட்டின் பிரதான முற்றத்தில் போட்டிருந்த கோலம் தான் வடிவு” என்றேன். அதிகம் செலவில்லாமல்
52 芭 GSGI):
 
 
 

சிரமமில்லாமல் அரிசிமாவினால் வரையப் பட்ட சாதாரணமான கோடுகளைக் கொண்ட கோலமானாலும் கலை யழகையும் தனித்துவத்தையும் கொண்டி ருந்த அக்கோலமே வடிவான கோலம் என்ற எனது கருத்தை அம்மாவும் அப்பாவும் ஏற்றுக் கொண்டனர்.
அடுத்த நாள் காலை தங்கையின் சிணுங்கல் சத்தத்தில் விழித்துக் கொண்டோம். வடிவான மாக்கோலத் தையும் தேங்காய்ப்பூக் கோலத்தையும் எறும்புகள் சுவைத்துப் பார்த்திருக்க வேண்டும். அலங் காரக் கோலம் சிதைந்தும் அழிந்தும் உருமாறி அலங் கோலமாயிருந்தது.
கோலம் போடுவதற்கான மாவைப் பக்குவப்படுத்தி கோலம் போடுவதற்குள் சிநேகிதிகள் வந்து விடுவார்கள் என்பது தான் தங்கையின் கவலைக்குக் காரணம். அப்பா ஒரு சிறு ஒலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் குனிந்து நிலத்திலிருந்து எதையோ எடுத்து ஓலைப் பெட்டிக்குள் போடுவதை அவதானித்தோம். அப்பா கல்லுரலை நிமிர்த்தி அலவாங்கைக் கொண்டு வரும்படி சொன்னார். அப்போது தான் பெட்டியில் சேகரித்துக் கொண்டு வந்த பொருட்களைப் பார்த்தோம்.
சாதாரணமாக நிலத்தில் காணப்படும் சிறு சுண்ணாம்புக் கற்கள். அப்பா கற்களை உரலில் போட்டு அலவாங்கால் இடித்தார். உரலில் இடித்தவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டே "கோலப்பொடி ரெடி' என்றார்.
என்ஜினியர்
என்றனர்.
“சாதாரணமா ஒரு பிரயோசனமு மில்லாம இருக்கிற இந்த மாதிரிக் கல்லை
பொறுக்கி மாவாக்கி தகர டப்பாவிலை
போட்டு வைச்சா தேவையான போது (851T6AdLib (BLJITL6MOITb. 5 Taguib (866OOTTb.
எறும்பும் தின்னாது’ - அப்பா சொன்னது
என் காதில் விழுந்து மனதில் பதிவானது.
O O. O.
ஆறாம் வகுப்பில் ஒருநாள் மாலை நடைபெற்ற ஆங்கிலப் பாடம் என்னை
மிகவும் பாதித்தது. ஆசிரியர் வெகு
FITg5Tj600TLDITEs "What is your father?” எனக் கேட்க மாணவர்கள் சிலர் டொக்டர், என பெருமைப்பட பலர் கிளார்க் ரீச்சர் என்றனர். கிராமப்புற பாடசாலையாதலால் சிலர் farmar எனது முறை வந்த போது நானும் farmer என்றேன். எனது பின்னணியை நன்கறிந்த ஆசிரியர் “கொப்பர் எங்கை கமம் செய்யிறவர்? எத்தினை ஏக்கர் காணி வைச்சிருக் கிறார்?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்க தடுமாற்றமும் வெட்கமும் என்னைப் பிடுங்கித் தின்றன.
ஆசிரியர் அத்துடன் நிறுத்தி விட வில்லை. “கொப்பர் சமையல் வேலை Gauju BITst. My father is a Cook 6160GTL தலைப்பிலை ஒரு பக்க கட்டுரை எழுதிக் கொண்டு வர வேணும்' என்றார்
ஒவ்வொரு மாணவனும் அடுத்த நாள் அவர்களுடைய தகப்பனின் தொழிலைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பக்க கட்டுரை எழுதி வர வேண்டுமென்பது ஆசிரியரின் கட்டளை. எல்லா மாணவர்களினதும்
கேலிப் பொருளான நான் அன்றுதான் st; GS6): 53

Page 29
முதன் முதலாக Cook என்ற ஆங்கிலச் சொல்லைக் கேள்விப்பட்டேன். வெட்கம் ஒரு புறமிருக்க ஒரு வசனம் கூட எழுத முடியாத நிலையில் ஒரு பக்கக் கட்டுரை.
எப்படி எழுதப் போகின்றேன் என்ற பயம். எனது வேதனைக்கான காரணமறிய அம் மா கையாணி ட த நீ தரங்கள் தோல்வியைத் தழுவ எனது நல்ல காலம் திடீரென அப்பா வீட்டுக்கு வந்தார். அடக்கி வைத்திருந்த வெட்கம் வேதனை எல்லாம் அலறியழும் கண்ணிராக மாறியது. எனது கன்னங்களில் வழிந்தோடிய கண்ணிரை அப்பாவின் கைகள் துடைத்தன.
“கட் டி சாப் பிட்ட பிறகு நான் சொல்றன். ஒரு பக்கமல் ல இரண்டு பக்கத்துக்கு சொல்றன் எழுதினாச் சரி”
எனது சந்தேகம் - “அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியுமா? - Cook என்ற சொல்லையே முதன் முதலாகக் கேள்விப் படும் என்னால் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் எழுத முடியுமா?”
அப்பாவின் பக்கத்தில் கொப்பி
பென்சிலுடன் அமர்ந்து புதிய பக்கமொன்றில் My father is a Cook 61601 assifloog.g56) எழுதினேன். அப்பா கொப்பியைப் பார்த்து விட்டு Cook என்ற சொல்லுக்குப் பதிலாக sweet maker என்று எழுதச் சொன்னார்.
ஆச்சரியத்துடன் பார்த்த எனக்கு அப்பா சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
“கட்டி நான் செய்யிறது சாதாரண சமையலில்லை - அல்வா, கேசரி, போளி, பூந்தி, ஒமப்பொடி, காராசேவு, மைசூர்பாகு. அதில பல item ரெம்ப sweet ஆக இருக்கும். அதனால நான் சுவீட் மேக்கர்’
அப்பா தான் தயாரிக்கும் பதார்த் தங்கள் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள் உத்தேச விலை பதார்த்தங்களின் உணவுப் பெறுமானம் UJuJ6öUTL (Beb BĐsT6IDD 66D6DT6B60DBUD மிக தெளிவாக சிம்பிள் இங்கிலிசில் சொல்லியதால் சுமார் மூன்று பக்கம் எழுத முடிந்தது. அடுத்த நாள் சில நண்பர்கள் தகப்பன்மாரின் பெரிய உத்தியோகங்களை உச்சரித்த பின் வார்த்தைகளின்றித் தடுமாற எனது கட்டுரை ஆங்கில ஆசிரியரைத் தடு மாற வைத்தது. பல சொற்கள் அவருக்குப் புதிது என்பதை அவரே ஒத்துக்கொண்டார்.
அப்பா கடைகளில் உள்ள விளம்பரப் பலகைகள், லொறி, வான் போன்ற வாகனங்களில் எழுதியுள்ள ஆங்கில எழுத்துக்களை பார்த்து எழுத்துக்களை அறிந்து கொண்ட தாகவும் பொருட்கள் பொதி செய்து வரும் பெட்டி தகரம் ஆகியவற்றிலுள்ள லேபிள்கள் சிட்டைகள் ஆகியவற் றிலிருந்து அநேக தகவல்களைப் பெற்றுக் கொண்டதாகக் கூறுவார். "வெட்கப்படாமல் பயப்படாமல் ஆங்கி லத்திலும் சிங்களத்திலும் பேச வேண்டும் எழுத வேண்டும்” என்று சொல்லுவார். இதனால் என்னைப் பற்றி எனது தொழிலைப் பற்றி எனது ஊரைப் பற்றி எனது நாட்டைப் பற்றி சமகால நிகழ்வுகளைப் பற்றி ஆங்கி லத்திலும் சிங்களத்திலும் சரளமாகக் கதைக்கவும் இதே விடயங்களை இன்னொருவரிடமிருந்து அறிந்து கொள்ள எத்தகைய கேள்விகளைக்
666): 54 VN

கேட்க வேண்டுமென்பதும் தெரிந்து கொண்டேன். அவ்வளவுதான். ஆனால் நான் கடமையாற்றும் இடத்தில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் தெரியுமென பிறர் நினைப் பதற்கு sweetmakerஇன் வழி காட்டல் தான் காரணம்.
O O. O.
பொதுவாக யாழ்ப்பாணத்தில் பொருட்களை உடமையாக்கும் போது பொருட்களின் விளம்பரத்திலும் அழகிலும் மயங்காமல் நீடித்த காலம் பயன்படக் கூடிய பொருட்களைத் தேடி வாங்கிய காலம் ஒன்றிருந்தது. ஏ போர்டி கார், றலி சைக்கிள், சிங்கர் தையல் மெஷின் என்ற வரிசையில் பிக் பென் மணிக்கூடும் சேர்த்துக் கொள்ளப்படும். எங்கள் வீட்டில் பிக்பென் மணிக்கூடு பிழையில்லாமல் நீண்டகாலம் உழைத்ததற்கு ஒரு காரணமும் இருந்தது.
அந்தக் காலத்தில் பிரபலமான மணிக்கூடு திருத்தும் கடையொன்றி ருந்தது. அக்கடையில் இரண்டு மூன்று நாட்களில் ஐந்து ரூபா கட்டணத்தில் மணிக்கூடு சேர்விஸ் செய்து தருவார்கள். அந்தக் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்பட்டிருப்பதால் அங்கே வேலை செய்பவர் தனிப்பட்டவகையில் சில இடங் களுக்குச் சென்று திருத்த வேலைகளைச் செய்வார். அவர் அப்பா வேலை செய்யும் கடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவார். இரண்டு ருபாவும் ஒரு போத்தல் மண்ணெண்ணை (அப்போது சுமார் இருபத்தைந்து சதம்)யும் கொடுத்தால் சிறிது நேரத்துக்குள் மணிக்கூட்டை
சேர்விஸ் செய்து தருவார். இதில் லாபம் உடனடியாக எங்களுக்கு முன்பாக மணிக்கூடு சேர்வீஸ் செய்யப்படுவதால் களவு வேலைகளுக்கிடமிருக்காது எனப் பலர் நம்பினார்கள். காலத்துக் காலம் அவரால் எங்கள் மணிக்கூடும் சேர்விஸ் செய்யப்பட்டதால் மணிக்கூடு சரியான நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஏதாவது உதிரிப் பாகங்கள் மாற்ற வேண்டியிருந்தால் அவர் குறிப்பிடும் உதிரிப் பாகங்களை வாங்கி வந்தால் எங்கள் முன்னிலையில் மாற்றி பழைய பாகங்களை மணிக் கூட்டு உரிமை யாளரிடம் கொடுத்து விடுவார். உதிரிப் பாகங்கள் பொருத்துவதற்கென வேறு கட்டணம் வாங்கமாட்டார். இதனால் யாழ் நகரமெங்கும் அவருக்குப் பல வாடிக்கை யாளர். நல்ல வருமானம். கடையில் மாதச் glibu6Tib.
ஒரு ஞாயிற்றுக்கிழமை கடையில் சில மணிக்கூடுகள் சேர்விஸ் செய்ய ஆரம்பித்த போது நானும் அவருக்கு தவியாக நட்டுகளைக் கழற்றி சில பாகங்களை மண்ணெண்ணையில் கழுவி உதவி செய்தேன். அவரும் மணிக்கூடு திருத்தும் முறைகள் சிலவற்றைச் சொல்லித் தந்தார். அவரது மாதச் சம்பளம் ஞாயிற்றுக்கிழமை வருமானம் இவற்றை மனதில் கூட்டிப்பார்த்தேன்.
அப்பா சிரித்தார்: “வேணுமிண்ணா மணிக்கூடு ரிப்பயர் செய்யிற வேலை யைப் பழகலாம். ஆனா ஒரு கடையில வேலை செய்து கொண்டு ஞாயிற்றுக் கிழமை வருமானத்துக்காக வேறை இடத்துக்கு போறது சரியில்ல. எப்பவும் நமக்குத் தொழில் தாறவங்க சம்பளம்
st GS6): 55 VN

Page 30
தாறவங்கட்ட விசுவாசமாயிருக்கணும். அவங்களுக்கு துரோகம் செய்யக்கூடாது.”
“அப்படியெண்டால் அவரிடம் நாங்கள் மணிக்கூடு சேர்விஸ் செய்யச் சொல்லிக் கொடுக்கிறதும் பிழை” என்றேன் நான்.
“பிழை தான். அவர் குடும்பம் பெரிசு. இப்படியப்படி உழைச்சாதான் குடும்பத்த காப்பாத்தலாம். அதுக்கு நாம செய்யிற
பங்கு தான் இது. இது சரியில்ல. இப்படி
நாம உழைக்கக் கூடாது.”
இந்த சம்பவம் மனதில் நன்றாகப் பதிந்துள்ளதால் எனது மேலதிகாரிகளுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து வருகின்றேன். அதனால் எனது தொழிலிலும் அலுவலக விடயங்களிலும் யாரும் இதுவரை குற்றம் குறை காண முடியவில்லை.
O O
ஆரம்பத்தில் மற்றவர்கள் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சிகளில்தான் கலந்து கொண்டேன். பெரும்பாலும் நாடகங்களில் நடித்ததோடு நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிவிப்பு வேலைகளையும் செய்தேன். சொந்தமாக ஒரு சைக்கிள் வண்டி கூட இல்லாத நாட்களில் சைக்கிளில் அழைத்துச் செல்வதாக இருந்தால் மேடை நிகழ்ச்சி களுக்கு சம்மதம் கொடுத்து பங்கு பற்றினேன்.
திடீரென ஒரு திருப்பம். 1972ல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வவுனியாவில் காப்புறுதி இரவு கலை விழாவை நடாத்திய போது நிகழ்ச்சித் தொகுத் தளிக்க என்னை அழைத்தி ருந்தார்கள். கொழும்பிலிருந்து வந்த கூட்டுத்
தாபன விளம்பர முகாமையாளர் டாபரேக்கு எனது அறிவிப்பு நன்கு பிடித்துக் கொண்டது. அவர் என்னைப் பாராட்டியதோடு வவுனியாக் கிளை முகாமையாளரிடம் ஏதோ இரகசிய மாக சொன்னார். அடுத்த நாள் வவுனியாக் கிளை முகாமையாளர் நவரத்தினம் அறிவிப்பு செய்ததற்கான பாராட்டுக் கடிதத்துடன் 250 ரூபா தந்தபோது தான் விளம்பர முகாமையாளர் கிளை முகாமை யாளருக்குச் சொன்ன இரகசியம் புரிந்தது. மாதம் முழுவதும் வேலை செய்யும் கிளாக்கனுக்கு 300 ரூபா சம்பளம் - ஓரிரவு அறிவிப்புக்கு 250 ரூபா. பின்னர் மன்னார் கிளி நொச்சி, திருகோணமலை போன்ற இடங்களில் அறிவிப்பு வேலைக்கு 250 ரூபாவுடன் போக்குவரத்து தங்குமிட வசதிகள் எனவும் கவனித்தார்கள். காணிவல் பொப்பிசை ஆகியனவும் அறிவிப்பு செய்ய அழைத்தன.
கையில் நல்ல பசை, இடை யிடையே சில மணிநேரம் மேடை யைக் கலகலப்பாக்கி பெறும் பல நூறு ரூபா பெரிதா? அல்லது மாதம் முழுக்க உழைத்து பெறும் 300 ரூபா பெரிதா? அப்பாவின் அறிவுரை - "அரசனை நம்பி புருஷனைக் கை விடக் கூடாது” பெரிய நெருக்கடி யிலிருந்து தப்பி நிரந்தர வருமானம் தரும் அரச உத்தியோகத்தைக் காப்பாற்றி உயர்வும் பெற முடிந்தது.
70களின் நடுப் பகுதிகளில்
இடையிடையே மேடைக் கவர்ச்சி எனக்கு வலை வீசியது. புகழ் என்பதை
ye GSG) 56

விட பணத்தையும் விரும்பியது மனம். வானொலி மேடைக் கலைஞர்களை வளைத்து கலை நிகழ்ச்சி செய்யக்கூடிய திறமையிருந்தது. வேலை செய்த இடத் தால் பெற்ற செல்வாக்கு விளம்பரத் துக்கும் டிக்கட் விற்பனைக்கும் உதவி செய்தது. ஒரிரவுக்குள் பெரிய புகழ் மட்டு மல்ல - பல ஆயிரக்கணக்கான ரூபா பணமும் சேர்ந்து விட்டது.
ஒரு வித மயக்கத்தோடு ஒலிவாங்கி யில் நான்: “பல சிரமங்களுக்கு மத்தியில் தான் இந்தக் கலை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தேன். கடந்த சில நாட்களாக அங்கு மிங்கும் அலைந்து திரிந்ததில் சரியான உறக்கமின்றி சாப்பாடில்லாமல் இந்த நிகழ்ச்சியை உங்களுக்காக ஒழுங்கு செய்தேன். இன்னும் சொல்வதானால் இரண்டு நாட்கள் ஒரு கண்ணுறக்க மில்லை. இன்று ஒன்றுமே சாப்பிட வில்லை.”
எதுவோ சாதனை நிகழ்தியவன் போல நான் சொன்னதும் எனது நண்பர் சிலர் என்னை அலாக்காகத் தூக்கிக் கொண்டு மேடைக்கு முன்னால் ஊர்வலம் வந்தனர்.
அன்றிரவு அப்பாவிடம் வாங்கிக் கட்டினேன். “கட்டியை யாராவது இப்படி யொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லிக் கேட்டாங்களா? எதுக்குப் பொய் சொல்ல வேணும்? கெஞ்சி மண்டாடி டிக்கட் வித்திட்டு சாப்பிடயில்ல - தூங்க யில்ல ஏன் பொய் சொல்லணும்? காசு கொடுத்து டிக்கட் எடுத்து program பார்க்க வந்திருப்பாங்களே தவிர கட்டியின்ர பேச்சைக் கேட்க வந்திருக்க
மாட்டாங்க. பேச்சில எந்தக் கலையழகும்
இல்லை. பொருத்தமுமில்லை. ஒரே
அறுவை. நீங்க ஒழுங்கு செய்யிற நிகழ்ச்சியில நீங்களே உங்களப் பாராட்டக் கூடாது. வேற நிகழ்சியில
மற்றவங்க உங்களப் பாராட்டணும்.
அதுதான் உண்மையான பாராட்டு”
இதைவிட இன்னொரு முக்கிய
விடயம் சொன்னார்: “இப்போ கொஞ்ச
பணம் வந்திருக்கலாம். இது நிலைக்காது. இப்படியே வாற பணம் இப்படியே போயிடும் கொஞ்சமெண்டாலும் நிரந்தர தொழில் முலம் தேட முயற்சிக்க வேணும். கொடி கட்டிப் பறந்து இலட்சக் கணக்கில சம்பாதித்த சினிமாக் காரங்களே றோட்ல நிக்கிறாங்க.”
இரவுக் கலை நிகழ்ச்சியில் பலரிடம் டிக்கட் மூலம் பெற்ற பணத்தை இரவுக் கலை நிகழ்ச்சியே என்னிடமிருந்து பறித்துக் கொண்டது. இருந்தாலும் என்னை நான் பாராட்டக் கூடாது என்பதுடன் பேசும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் சிலவற்றையும் தெரிந்து கொண்டேன்.
O O. O.
அப்பாவுடன் நட்பைப் பேணிய பணக்காரக் குடும்பங்களில் அதுவு மொன்று. இரண்டு குடும்பங்களும் வாசிப் பதில் ஆர்வமுள்ளதால் புத்தகங்கள் கை மாறும். தொலைக்காட்சிப் பெட்டிகள் வருவதற்கு முன் வானொலிப் பெட்டிகள் செல்வாக்கு செலுத்திய காலம். ட்ரான் ஸிஸ்டர்கள் கண்டு பிடிப்பதற்கு முன்பாக வால்வுகள் இணைக்கப்பட்ட வானொலிப் பெட்டிகளின் இயக்கத்துக்கு ஏரியல் வயர்
6696) 57 তন্ম

Page 31
கட்டுவது அவசியம். வாசிப்பில் ஆர்வம் மிக்க குடும்பம் வானொலி வாங்கிய போதும் மரத்திலும் கூரையிலும் ஏறி ஏரியல் வயர் கட்டுவதில் வெற்றி பெறவில்லை.
புத்தகத்துடன் சென்ற என்னை மரத்தில் ஏற்ற முயன்று தோல்வி கண்டதற்குக் காரணம் எனக்கிருந்த பயமே! ஏரியல் வயர் கட்டும் போது பத்து ரூபா கூலி கொடுக்கக் காட்டிய தயக் கம் வானொலியின் இயக்கத்தைத் தாமதித்தது. அப்பாவிடம் அவர்கள் கதையைச் சொன்னேன்.
“செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை - பத்து ரூபாதானே - ஏறத் தெரிந்த வங்க கிட்ட சொல்லிக் கட்டிடுங்க. எல்லா ருக்கும் அந்த வேல சரிப்பட்டுவராது” என்றார்.
வீட்டுக்கார ஐயா நானுாறு ரூபா கொடுத்து வாங்கிய வானொலிக்கு ஏரியல் வயர் இணைப்புக்கு பத்து ரூபா செலவழிக்க தாமதித்ததை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் மாலை சுமார் ஏழு மணி. மெல்லிய இருட்டு. யாரும் வரமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு முற்றத்தில் நின்ற மரத்தினருகே மேசையை இழுத்துக் கொண்டு வந்து வைத்து மேசையின் மேலே கதிரையொன்றை வைத்து கதிரைக்கு மேல் ஸ்ருல் ஒன்றை வைத்து ஏரியல் வயரையும் எடுத்துக் கொண்டு கால் பாதம் வரை நீண்டிருந்த சேலையை உயர்த்தி உள்ளே சொருகிக் கொண்டு சிரமத்தோடு மேலே ஏறியவேளை பார்த்து வந்த காரின் வெளிச்சம் அம்மாவை நிலை குலையச் செய்ய குப்புற விழுந்து விட்டார். ஒட்டகப் புலத்தில் புக்கை கட்டி நோவெண்ணை
வாங்கும் செலவு பத்து ரூபாவைப் (3UT6) L16) LDLIB (5.
O O. O.
புதிதாக வியாபாரம் ஆரம்பிக்கும் கடையொன்றில் அப்பாவையும் அழைத்திருந்தார்கள். பால் காய்ச்சு வதற்கு முன்பாக அப்பாவின் கேள்விக்கு “சுத்தமான பால்” என்று யாரோ பதில் சொன்னார்கள். "பாத்திரம் சுத்தமாகக் கழுவியதா?” எனக் கேட்ட போது - "இது ஹோட்டலில் பாவிச்ச கரிப்பிடிச்ச பாத்திரமில்லை. புதிசா வாங்கினது” என்று யாரோ பதில் சொன்னார்கள்.
அடுப்பில் சூடாகிக் கொண்டிருந்த வெள்ளை நிறப்பால் சிவப்பு நிறமாக மாறிக் கொண்டிருந்த போது ஒவ்வொரு வரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்தனர்.
எல்லோர் முகத்திலும் கேள்விக் குறி -
அப்பா அமைதியாகச் சொன்னார்: "பயப்படாதீங்க. பாத்திரம் புதிசு. மெழுகு பூசியிருக்காங்க ( sealing Wax) நீங்க சுத்தமாகக் கழுவயில்ல.”
சந்தா செலுத்தி விட்டீர்களா ? தயவுசெய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள். அசட்டை செய்வோருக்கு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும்.
58 تحصحتس---۔
 
 
 
 
 
 
 
 
 

பவளவிழாக் கானும் கணேசலிங்கன்
- ரஸஞானி
இலங்கை இலக்கிய முன்னோடி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் தமது வாழ்வில் 75 வயதை பூர்த்தி செய்து கொண்ட பவளவிழா, படைப்பாளி. தற்பொழுது தமிழ்நாட்டில் 'குமரன் பதிப்பகம் - என்ற பதிப்பகத்தையும் நடத்திக் கொண்டு - FrontLine சஞ்சிகையிலும் பத்திரிகையாளராக பணியாற்றுகின்றார்.
தமிழில் அரசியல் சார்ந்த நாவல்களை எழுதும் ஆற்றல் மிக்கவராக இவர் இனம் காணப்பட்டவர். மாக்ஸிய சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்பட்ட கணேசலிங்கன் சிறந்த மனிதநேயவாதி எனவும் விதந்து பேசப்படுபவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை மிக்க கணேசலிங்கன் சிறுகதை, நாவல், விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் ஏராளமான நூல்களை எழுதியவர்.
இவரது ‘நீண்ட பயணம்' - என்ற முதலாவது நாவல் வடமாகாண சாதி ஒடுக்குமுறையை சித்தரித்த்து. செவ்வானம் நாவலுக்கு பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய நீண்ட முன்னுரையே - பின்னர் அவரால் விரிவாக எழுதப்பட்டு வெளிவந்த ‘தமிழ் நாவல் இலக்கியம்' - என்ற பிரபல்யமான நூலாகும்.
கணேசலிங்கனின் மற்றுமொரு பிரசித்தி பெற்ற நாவலான சடங்கு - பேராசிரியர் கா.சிவத்தம்பியின் முன்னுரையுடன் வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றது.
நிலமானிய சமூக ஒடுக்குமுறையைச் சித்தரிக்கிறது, ‘மண்ணும் மக்களும் - என்ற நாவலை எழுதினார். இலங்கையில் - புரட்சி ஏதோ ஒரு வடிவத்தில் தோன்றும் வாய்ப்பு நேரலாம் என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நாவலாக எழுதிக் காண்பித்தவர்.
பெரும்பாலும் இவரது கருத்துக்கள் மிகவும் ஆழ - அகல பரிமாணங்கள் கொண்டவை. சுருக்கமாகச் சொல்வதாயின் சீரியஸான எழுத்தாளர். ஆனால் - மிகவும் மென்மையான சுபாவம் மிக்கவர். மிகவும் அமைதியாக அடக்கமாக பலருக்கும் உதவும் மனப்பாங்கு கொண்டவர்.
சென்னையில் இவரது இலக்கிய நண்பர்கள், பவளவிழாக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொண்டு ஒரு குழுவும் நியமித்து செயல்படத் தொடங்கிய வேளையில் - தமக்கு அப்படியொரு வைபவம் - மலர் வெளியீடு அவசியமில்லை எனக் கூறி மறுத்தவர்.
| DGGOS 59 অস্ত্ৰ

Page 32
இலங்கையில் வெள்ளவத்தையில் இயங்கிய இவரது விஜயலகூடிமி புத்தக சாலை 1983 ஆடிக்கலவரத்தில் முற்றாக எரிந்து நாசமாகியது. இலங்கையில் எழுத் தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெரிதும் உதவிய இந்த புத்தகசாலையை கொடிய வர்களிடம் இழந்த போதிலும் - சென்னை யில் புகலிடம் கொண்டு ஈழத்து படைப் பாளிகளின் நூல்கள் தொடர்ந்து வெளி வருவதற்கு அயராமல் உழைத்தார்.
தென்னிந்திய சினிமா உலகத்தின் பன்முகத் தோற்றத்தை சித்தரித்து இவர் எழுதிய ‘கவர்ச்சிக் கலையின் மறுபக்கம் நாவலும், பெண்ணடிமைத்தனம் தொடர்பாக இவரால் எழுதப்பட்ட பல நாவல்களும் குறிப்பிடத் தகுந்தன.
திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா கூட இவரை தனது மூத்த சகோதரர் என்று வர்ணித்துக் கூறிய பேட்டி அண்மையில் தினக்குரலில் வெளியானது.
கொழும்பில் நீண்டகாலம் 'குமரன் மாத இதழை நடத்தினார். அவ்விதழ் - கலை, இலக்கிய, அரசியல், அறிவியல் ஏடாக வெளியானது. இன்று - இலங்கையில் மிகுந்த கவனத்தைப் பெற்ற கவிஞரான புதுவை இரத்தினதுரை ஒரு காலத்தில் வரத பாக்கியன் - என்ற புனைப் பெயரில் ஏராளமான கவிதைகளை எழுதியதும் இந்தக் குமரன் இதழில் தான். ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் - 'தான் குமரன் இதழ்களைத் தொடர்ந்து படித்தே அரசியல் அறிவு பெற்றதாக ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அந்திம காலத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த வேளையில் அவருக்கு
அருகே இருந்து பலவிதத்திலும் பணிவிடை புரிந்த முன் மாதிரியாளர் இந்த கணேசலிங்கம் தான்.
இலங்கையில் கார்ல் மாக்ஸ் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட பொழுது கணேசலிங்கன் வழங்கிய ஆக்கபூர்வ மான உதவிகளையும் ஒத்துழைப்பு களையும் நேரடியாக கண்ட என்.சண்முக தாஸன் - இவரை மனம் திறந்து பாராட்டி யுள்ளார்.
பெண்ணடிமைத் தனத்திற்கு - திருக் குறள் விமோசனம் அளிக்கவில்லை என்பதை ஆய்வு மூலம் நிரூபிக்கும் நூல் ஒன்றையும் எழுதி விமர்சகர்களின்
கவனத்தை ஈர்த்தவர்.
பேராசிரியர்கள் க.கைலாசபதி, இந்திரபாலா உட்பட பல முன்னணி விமர்சகர்கள், ஆக்க இலக்கிய கர்த் தாக்களின் நூல்களை பதிப்பித்துமுள்ள கணேசலிங்கனின் மிகப் பெரிய பலம் - அவரிடம் இயல்பாகவே குடி கொண் டுள்ள அமைதியும் அடக்கமும்தான். ஒருவகையில் இவர் ஒரு நிறைகுடம்.
‘கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக் கொண்டு முற்போக்கு, பிற்போக்கு பேதமற்ற நட்புறவை சகல எழுத்தாளரோடும் கொண்டுள்ள ஒரு - சிலவேளை ஒரே - ஈழத்து எழுத்தாளர் இவர் - என்று ‘இலக்கு சஞ்சிகை செ.கணேசலிங்கனைப் பற்றி 1996 மே இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலமும் கணேசலிங்கனின் பரிமாணம் வெளிச்சமாகிறது.
நன்றி : உதயம் அவுஸ்திரேலியா.
60 3 ygged:

தூண்டில்
- டொமினிக் ஜீவா
L L L L L L L L L L L L L S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L தூண்டில் பகுதிக்கென ஏராளமான கேள்விகள் வருகின்றன. இதில் சோகம் என்னவென்றால் பல கேள்விகள் தரமற்றவையாகத் திகழ்கின்றன. மல்லிகையில் தொடர்ந்து படிக்கப்படும் பக்கங்கள் : அந்தக் காலத்திலிருந்தே இந்தத் தூண்டில் பகுதிதான். இது வெறும் கேள்வி-பதில் பக்கங்களல்ல. இது பரஸ்பரம் அறிவை விருத்திசெய்யத் தக்கதான பகுதி என்பதைப் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே கேட்கும் கேள்விகளைச் சும்மாப் போக்கடி போக்கில் கேட்காமல் பொறுப்புணர்ச்சியுடன் கேட்பது நல்லது. நாளை ஒருநாள் நூலுருவில் தொகுக்கப்படும் தூண்டில் கேள்விகளில் உங்களுடைய கேள்விகளும் கூட இடம் பெறலாம்.
- ஆசிரியர்
A.
☆ உங்களது மனதைக் கிளர்ச்சியுறச் செய்த சம்பவம் ஏதாவது சமீபத்தில் நடந்ததுணர்டா?
பதுளை எம்.பரமேஸ்வரன்
சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு நான் பம்பலப்பிட்டிக்குச் சென்றிருந்தேன். ‘ஒரு பேராசிரியரின் வாழ்க்கையும் கல்விச் சிந்தனைகளும் என்பது நூலின் பெயர். கூட்ட முடிவில் ஏற்புரை நல்கிய பேராசிரியர் வி.கே.கணேசவேல் அவர்கள் பலரும் கூடியிருந்த இந்த விழா மேடையில் பேசும் போது, “இதோ என் முன்னால் நண்பர் டொமினிக் ஜிவா இருக்கிறார். அவரது
சுய சரித நூலைப் படித்ததன் உத்வேகத்தால்தான் நான் இந்த நூலை எழுதத் தொடங்கினேன்!” என மிக உணர்ச்சியுடன் தனது சொற்பொழிவில் இத்தகவலை வெளியிட்டார். கேட்டுக் கொண்டிருந்த நான் அப்படியே உறைந்து போய் விட்டேன்.
* உங்களைப் பலர் தாக்கி எழுதுகின்றனரே என்ன காரணமாக இருக்கும்?
LD66OTTf r ச.முருகேசன்
நான் பிரபலமாகப் பேசப்படுவதற்கான கூலி இது.
peggio 61 Q

Page 33
* இநீதியாவில முதன் முதலிலி அச்சடிக்கப் பெற்று வெளிவந்த முதல் நூல் எது? எந்த மொழியில் அந்தப் புத்தகம் வெளிவந்தது?
குருநாகல் ஆர்.சிவகுரு
இந்தியா முழுவதுமே இருந்து அச்சில் வெளிவந்த முதல் நூல் தமிழிலதான் வெளிவந்தது. அதன் பெயர் 'தம்பிரான் வணக்கம் 1578-ம் ஆண்டு கேரளத்துக் கடற்கரை நகர மான கொல்லத்திலிருந்து இந்த முதல் அச்சுப் புத்தகமாக வெளிவந்தது. போர்த்துக்கல்லில் பிறந்து கேரளத் திற்கு மதம் பரப்ப வருகை தந்த பாதர் அண்டிருக்கி என்பவரே இந்த தமிழ் நூலை மொழிபெயர்த்துப் பதிப்பித்த வராவார்.
* தொடர்ந்து எனக்கு வந்து கொணடிருந்த மல்லிகை இப்போது என்னைத் தேடி வருவதில்லையே. என்ன காரணம்?
பதுளை எஸ்.ராமதாஸன்
மல்லிகை ஒன்றும் ஆயுள் சந்தா வசூலித்து நடைபெறும் சஞ்சிகையல்ல. அந்த நோக்கமும் அதற்கில்லை. உங் களது இக்கேள்வி கிடைக்கப் பெற்றதும் சந்தா முகவரிகளை ஒருமுறை எடுத்து ஆராய்ந்து பார்த்தேன். நீங்கள் சந்தா செலுத்தி இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டன. ஒரு தடவை சந்தா செலுத்தி விட்டாலே போதும், ஆயுள் முழுவதும் சஞ்சிகை வந்து கொண்டே யிருக்கும் எனப் பலர் நினைத்துக்
கொண்டேயிருக்கிறார்கள். அப்படி ஒரு நினைப்பு மற்றும் மலர்கள் தமக்கேன் அனுப்புவதில்லை எனவும் கேட்கிறார் கள். மலரின் விலையே நூற்றியி ருபத்தைந்து ரூபா. தபால் செலவு தனி. தனி மனித அர்ப்பணிப்பு உழைப்பில் மலர்வது மல்லிகை. நிர்வாக ஒழுங்கு கள் மட்டுப்பட்டவை. தொடர்ந்து சந்தா செலுத்தாதவர்களுக்கு மல்லிகை அனுப்புவது முன்னெச்சரிக்கை இல்லா மல் நிறுத்தப்படும் என்று மல்லிகையில் தொடர்ந்து வந்த விளம்பரங்களையும் நீங்கள் கண்ணுற்றிருப்பீர்கள். மல்லிகை யின் ஆத்மார்த்திக நண்பர்களை நான் நன்கறிந்து வைத்துள்ளேன். அவர்கள் சந்தா என மட்டுப்படுத்தி உதவுவ தில்லை. கையிலுள்ளதைத் தந்துதவு வார்கள். சந்தா எனக் கேட்கும் ஏனைய வர்களுக்கே இந்தத் தகவலைச் சொல்ல வேண்டியுள்ளது. உங்களது முகவரிக்கு மல்லிகை வரவில்லையா? சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இக்கூற்றே இதற்கு அர்த்தமாகும்.
மலிலிகைக்கு எந்த விதமான
கேள்விகளையும் கேட்கலாமா? நாணி
அதிகம் படிக்காதவனி. எனவேதானி இ8:தக் கேட்கின்றேன்?
கல்முனை ம.சிங்காரம்
நான் ஏதோ பெரிய படிப்பாளி என நினைக்கிறீர்களா? உங்களைப் போன்ற வன்தான் நானும், பயப்படாமல் கேளுங் கள். அது சரி; இது மட்டுந்தானா, உங்களுடைய கேள்வி?
* 89-ఎ து மலர் தயாரிப்புப் பற்றிச்
62
Q

சென்ற இதழுக்கு முன் வந்த இதழில் தகவல் தந்திருக்கிறீர்கள். எம்மைப் போன்ற ஊர்களில் உள்ளவர்களுக்கும் மல்லிகை மலர் கிடைப்பது எப்படி என்று கூறுங்கள்?
கெக்கராவ எம்.ஆர்.செல்லையா
மல்லிகை மலர் வெளிவந்த தகவல் கிடைத்ததும் அதற்குரிய பணத்தைக் காசுக் கட்டளையாக அனுப்புங்கள். மலர் சும்மா சீறிக் கொண்டு உங்களது கரங்களை வந்தடைந்துவிடும்.
* நீங்களி தொடர்ந்து செய்திப் பத்திரிகைகள் படித்து வருவதுணர்டா? உங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கிய செய்தி ஒன்றைச் சொல்ல முடியுமா?
கிளிநொச்சி த.கணேசநாதன்
பாலித் தீவில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் கைதான நபர் அம்ரோஸி என்பவர். நீதிபதிகள் அவருக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்கியபோது ஆர்ப்பாட்டமாகப் புன் னகைத்ததுடன் அந்தத் தண்டனையை வரவேற்றுக் குதூகலித்தாராம்.
இறந்த தலைமுறையின் மனோ பாவம் இன்று எப்படிப் போகின்றது என நான் மனசுக்குள் விம்மிக் குமைந்து கொண்டேன்.
* முன்னர் மல்லிகையின் அட்டைப் படமாக இந்த மணர்ணில் வாழ்ந்து கொணர்டிருக்கும் கலைஞர்கள். கவிஞர் கள். படைப்பாளிகளின் உருவங்களை மாதிதிரம் அட்டையில் பிரசுரித்து
வந்துள்ளீர்கள். ஆனால், இன்று உலக மட்டம் வரையில் நமது புலம் பெயர்ந்த பதிவு செய்து வருகிறீர்கள். இதற்கு என்ன காரணம் சொல்வீர்களா?
வர்களினி உருவங்களையும்
இணுவில் எஸ்.தவயோகம்
ஒரு கால கட்டத்தில் மல்லிகை குடாநாட்டுச் சஞ சிகையாகவே மிளிர்ந்து வந்தது. பின்னர் அது ஒரு பிரதேசப் பத்திரிகையாகி, நாடு தழுவிய ரீதியில் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டது. அந்தச் சமயத் தில் நாம் நமது மண்ணில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தவர்களின் உருவங்களை மல்லிகையின் அட்டை யின் மூலம் ஆவணப்படுத்தி வந்தோம், இன்று மல்லிகை சர்வதேசத் தமிழ்ச் சுவைஞர்களின் கரங்களைச் சென் றடைந்து கொண்டிருக்கிறது. எனவே ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி முகிழ்ந்து வரும்போது நமது கலை இலக்கியச் சர்வதேசப் பங்களிப்பாளரை தேடிப் பிரசுரிக்கிறது. இதுதான் யதார்த்தம்.
* போகிற போக்கைப் பார்த்தாலி இனிறைய சினிமா அழிந்து விடும் போலத் தெரிகிறதே. இது உணர்மையில் நடக்குமா?
மன்னார் எஸ்கரிகாலன்
சினிமாவுக்கும் மேடை நாடகங் களுக்கும் இப்படியான நெருக்கடிகளும் சங்கடங்களும் வந்து வந்து போவது இயல்புதான். ஆனால் மனுக்குலம் இருக்கும் வரை, அதன் ரசனைச் சிந்தனை இருக்கும் காலம் வரை
6; GSG) 63 Q

Page 34
சினிமா அழியவே அழியாது. ஆனால், புனர்நிர்மாணம் எடுக்கும். சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, காதலனும் காதலியும் விதம் விதமான உடைகளை மாற்றிய வணி ணம் , வெளியில் மரத்தை மரத்தையே சுற்றி ஓடியவாறு விதம் விதமான ராகங்களில் பாட்டுகள் பாடி, காதல் செய்வதுதான் வாழ்க்கையில் ஒரேயொரு இலட்சியம் என்ற சினிமா வின் பார்முலா நிச்சயம் புதிய புதிய பார்வையாளர்களால் ஓரங்கட்டப்பட்டு, இன்றைய சினிமா இத்து மடியும். அதன் வித்திலிருந்து நாளைய சினிமா தன் னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். எனவே அழியாது. புனர் ஜென்மமெடுக்கும்.
* நீங்கள் சீர்திருத்தவாதியா? கலகக் காரனா? போராட்டக்காரனா? இல்லை, புரட்சிக்காரனா?
கொக்குவில் ம.செந்திவேல்
இல்லை. நானொரு பேனாக்காரன்!
☆ ஒரு பழைய சைக்கிளை வைத்துக் கொண்டு. அதில் இரவு பகலாகச் சவாரி செய்த வணர்ணம் வடபுலப் பிரதேச மெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களினது விடுதலைக்காகதி தனது வாழ்நாளி பூராவையும் அர்ப்பணித்துச் சேவை செய்து வந்தரே தோழர் எம்.ஸி.சுப்பிர மணியம் அவர்களை இன்று முற்றாக மறந்து போய் விட்டனரே அவரால்
உரிமை பெற்ற புத்தி ஜீவிகள். இதற் கென்ன சொல்லுகிறீர்கள்?
பெர்லின் எம்.பார்த்திபன்
அவரது நாமத்தை மறந்து விட்டார் கள் என்பது தப்பான கணிப்பு. அன்று அவரை வல்லைவெளியில் காருடன் சேர்த்து எரித்துக் கொலை செய்ய எத்தனித்தவர்கள் சாதிவெறி மிலேச்சர் கள். அந்தக் காரில் நானும் இருந்தேன். உயிர் தப்பினோம். தோழர் எம்.ஸி.யால் உரிமை பெற்று இன்று உயர்ந்து நிற்கும் எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்து மனிதனும் மறந்து போய்விடவில்லை. அடுத்த வருடம் ஆரம்ப மாதங்களில் அன்னாரது ஒடுக்கப்பட்ட மக்களினது மானுட விடுதலைக்காக அவர் செய்த காத்திரமான பணிகளைப் பாராட்டி மலர் ஒன்றும் விழா ஒன்றும் நடை பெறவுள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அப்படியொன்றும் நன்றி மறந்தவர் களல்ல!
女 உங்களுடைய சுயவரலாற்று நூலான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ’ பலராலும் விதந்து பாராட்டப்படுகின்றதே, அந்த நூல் எனக்கு அவசியம் தேவை. அந்தப்
புத்தகம் கிடைக்க எண்ன செய்ய வேணர்டும்?
நெல்லியடி கா.சிவயோகன்
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளுங்கள். 250/- ரூபா காசுக் கட்டளை (கொட்டாஞ்சேனை) எனக் குறிப்பிட்டு அனுப்பினால் அடுத்த கிழமை உங்களது கைகளில் அப்புத்தகம்.
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
64 6696DE

Professional Colour Lab & Studio
* 2ndoor & Outdoor Pholography * Quality Colour film Processing & Printing
Photo slaminaling Covering Album * Quality & hormal Picture 3raming
tided ailming
Quick Photo Service Systems
64, Sumanatissa Mawatha, (Armour Street), Colombo - 12. Te: O74-61 O652

Page 35
Á alla
下
PA)
EXPO PRODUC
と。 Ο Μ. W. * S al
30 Sea
Colombc Te: 25
 
 

October 2003
RA
TS (PVT) LTD.
terá o/
staf
an s
Avenue, - O3.
737.17