கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.11

Page 1
『W----------------W』 『 』 『』 TT |||)|
』,『』|-
|)
『
|[[]]]]]]] //||-|WW』 『W』 『』 "","",""
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|—).T) 『W』『 |-
||- |- .|-|W|||||||||||- |『7.|sss||||||sae |- |- |-|-||- ||│ │༼////////7/ , ) 《韃游。
| |- | sae| -|·||『』『』||-
(),||||||||
----
)

Page 2
TNUlla புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் & சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின்
நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல. 4, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்) L95956 TLD. தொலைபேசி தொலைநகல் : 032-66875 ॐ
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து
தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து
விற்பனை செய்து உதவுவோம்.
 
 
 
 
 
 
 
 
 

AGJEGJulig/LiÝ ALIITILIÚLÚELJafafi
AFEGZI EGITEGULLİkli EU7EGZI/
"ஆண்டு மலருக்கு நாங்கள் என்ன ஆக்கபூர்வமான உதவி செய்து தரவேண்டும்? எனப் பலரும் எம்மைக் கேட்கிறார்கள். குறிப்பாக ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முழு அக்கறை காட்டி வரும் இளைஞர்களிட மிருந்தே இக்கருத்து வெளிப்பாடு வெளி வருகின்றது.
எங்களது உடல் உழைப்பைச் சற்றுப் பொறுப்பேற்க விரும்பினால், நமது தோளின் மீது அழுத்தும் பாரத்தைச் சிறிது தோள் மாற்ற விரும்பினால், இப்படிக் கேட்பவர்கள் மல்லிகை யின் ஆண்டு மலருக்கு விளம்பரம் சேகரித்துத் *ந்துதவலாம்.
மல்லிகை
ஆரம்பம்:15.8.1966
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
38-வது ஆண்டு "Mallikai' Progressive Monthly Magazine
அது தவறினால் மல்லிகை மலரை விரும்பி வரவேற்கக் காத்திருக்கும் தரமான சுவைஞர்களது முகவரிகளைத் தந்துதவலாம். அத்துடன் தமது பிரதேசத்துப் புத்தக வியாபாரி களிடம் மலரை வியாபார ரீதியாகக் கொள்முதல் செய்யும்படி கேட்டுக் கொள்ளலாம்.
உண்மையில் விரும்பினால், செய்வதற்கா வேலையில்லை? நிறைய நிறையச் செய்யலாமே!
எனவே நாம் கேட்டுக் கொள்வது இது தான். கம்மா பேசிப் பேசியே ஈழத்து இலக்கியத்தை வளர்த்தெடுத்துவிட முடியாது. அர்ப்பணிப்புச் செயல்கள் மூலம் தான்
சாதனைகள் புரியலாம்.
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
at 2003
201-1/1, Sri Kathliresan Street, Colombo - 13. Te:2320721
ఖజీఖ

Page 3
அடுத்தடுத்து.
- டொமினிக் ஜீவா
சொற்ப நாட்களுக்குள் அடுத்தடுத்து நமது பாதையில் தொடர்ந்து ஓடிவந்தவர்களான அமரர்கள் ஆர். சிவகுருநாதன், அன்பு முஹையதீன், சோமாஸ்கந்தர், பஞ்சாட்சர சர்மா, ஏ. ரி. பொன்னுத்துரை, வீரமணி அய்யர் போன்ற மக்கள் கலைஞர்களை இழந்து விட்டோம்.
இளந்தலைமுறையினர் பலருக்கு இவர்கள் இந்த மண்ணுக்கு ஆற்றிய கலைப் பணிகள் பற்றி பூராவாகத் தெரியாமல் போகலாம். எங்கேயோ கமரா வெளிச்சத்தில் பல இளம் பெண்களுடன் துள்ளி விளையாடி மரத்தைச் சுற்றி வரும் தலை நரைத்த ஹிரோக்களின் சமீபத்திய விசித்திரத் தகவல்களைப் பற்றி வாயூர வர்ணித்துக் கொண்டு காலத்தைக் கடத்தும் இன்றைய இளவட்டங்களுக்கு இவர்களில் ஒருவருடைய நாமம் கூடத் தெரியாமல் இருக்கலாம்.
எத்தனை மகத்தானவர்கள் இவர்கள்!
தாம் வாழ்ந்த காலத்திலேயே தமது ஆக்கத் திறமைகளால் இந்த மண்ணில் முத்திரை பதித்தவர்கள் இவர்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறப்புத் தகுதி கொண்டவர்கள்.
இவர்கள் நம்மை விட்டு மறைந்து போய் விட்டார்கள் என்ற காரணத்தால் இவர்களது நாமத்தின் அத்தியாயத்தை நாம் முடித்து, ஒதுக்கிவிடக் கூடாது.
இவர்கள் ஒவ்வொருவரும் காலம் காலமாகப் பேசப்படத்தக்க சாதனைகளைத் தாம் வாழும் காலத்திலேயே செய்து, பெயர் பொறித்தவர்கள்.
மணிக்கொடி பரம்பரை என இடைவிடாது சொல்லிச் சொல்லி அந்தப் பரம்பரையின் ஆரம்பகால வீச்சை இன்றுவரையும் நிலைநாட்டி வருபவர்கள் தமிழகப் படைப்பாளிகள். சென்னைக் கடற்கரையில் மரீனா பீச்சில் மணிக்கொடியினர் மாலை வேளைகளில் சந்தித்துக் கொண்ட இடம் என ஒரு மணல் பூமியை எனக்குக் காட்டி மகிழ்ந்தவர் எழுத்துச் சஞ்சிகையின் செல்லப்பா அவர்கள்.
நாமும் நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல நமக்கும் ஒரு மறுமலர்ச்சிப் பரம்பரை ஒன்றுண்டு.
திரும்பத் திரும்ப இதை நினைவூட்டுவதின் மூலம்தான் நமது மண்ணின் இலக்கியத் தனித்துவத்தை நாம் நிலைநாட்டி வரமுடியும்.

ஈழத்துத் தமிழ் நூல் பதிப்புத்துறை - இன்றைய புதிய சவால்கள்.
வேறெந்தக் கால கட்டங்களையும் விட, இன்று இந்த நாட்டில் ஏராளமான புதிய புதிய நூல்கள் வெளிவந்த வண்ணமாயிருக்கின்றன.
இப்புத்தகங்களை வெளியிட்டு வைப்பவர்களிடையே ஒரு பொது இணக்கப்பாடு இல்லை. தனிமனித ஆர்வம் காரணமாகவும் தமது படைப்புகனைத் தாமே நூலுருவில் வெளியிட்டுவிட வேண்டும் என்ற வேட்கை காரணமாகவுமே இங்கு இன்று நிறைய நிறைய நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வெளிவரும் நூல்களைச் சந்தைப்படுத்தி மக்கள் மத்தியில் அவற்றைக் கொண்டு செல்வதற்கு ஆக்கபூர்வமான வழி வகைகள் ஒன்றையுமே விளங்கிக் கொள்ளாமல் தமது படைப்புகளை வெளியிட்டு வைக்கும் படைப்பாளிகள், அடுத்த கட்டமான விநியோக விரிவாக்க விற்பனைச் சந்தை பற்றிய எந்த விதமான திட்டவட்டமான நோக்கமற்றுத் தயங்கிப் போய் செயலற்று மழுங்கி விடுகின்றனர்.
சகல துறைகளிலும் தமிழ் நாட்டின் குப்பைக் கூடையாகவே இன்று நமது நாடு மாறி வருகின்றது.
அறுபதுகளில் நாம் நடத்திய இலக்கிய இயக்கத்தை இலக்கியப் பரிவர்த்தனை என்பது ஒரு வழிப் பாதையல்ல!’ என்ற கோஷத்தின் பின்னால் இந்த நாட்டுப் படைப்பாளிகள் ஒன்று சேர்வதன் மூலம்தான் இன்றைய இந்தச் சவால்களுக்குப் படைப்பாளிகள் முகம் கொடுக்கலாம் என்பதே நமது திடமான கருத்தாகும்.
பல சிரமங்களுக்கும் மத்தியிலும், பொருளாதார நொருக்கடிகளுக்கு ஊடேயும் வெளியிட்டு வைத்த தமது நூல்கள் நாடு பூராவும் பரந்துபட்ட முறையில் சந்தைப்படுத்த படைப்பாளிகள் அவசியம் ஒன்று கூடவேண்டும். அத்துடன் பள்ளிக்கூட நூல் நிலையங்கள், பொது நூலகங்களுக்கும் தமது நூல்கள் சென்றடையத் தக்கதான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியது முக்கியம் தமது நூலைத் தாமே வெளியிட்டு வைத்துள்ள படைப்பாளிகளின் அத்தியவசியக் கடமைகளில் ஒன்றாகும்.

Page 4
p, uമീt
மானுட நேயப் படைப்பாளி
- எம். ஏ. எம். நிலாம்
பஷர் என்ற பெயரைக் கேட்டதும் இலக்கிய உலகின் எண்ணம் நேரடியாகச் செல்வது மலைாள இலக்கிய ஜாம்பவான் வைக்கம் முஹம்மது பஷீரை நோக்கித்தான். அந்த பஷீரின் கேரளப் பரம்பரையில் இருந்து இலங்கை மண்ணுக்குக் கிடைத்த சிறந்த படைப்பிலக்கியவாதிதான் மு. பஷீர்.
சிங்களச் சூழல் நிறைந்த கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடைப் பிரதேசத்தின் கல்லொளுவை என்ற கிராமத்தில் பிறந்த இந்த பஷிர் அன்றைய தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாசறைகளில் வளர்ந்தவர். ஐந்து பெண்பிள்ளைகளுக்கும், ஒரு ஆண்மகனுக்கும் தந்தை.
சிறுகதை, கவிதை, ஆய்வு என முத்திரை பதித்துள்ள இவர் நான்கு தசாப்த காலங்களாக வாழ்வின் இடர் துன்பங்களுக்கு மத்தியில் தொடர்ந்து இலக்கியப் பங்களிப்புச் செய்து வருகின்றார். ஜெயகாந்தனின் சரஸ்வதி காலப் படைப்புளில் ஆகர்ஷிக்கப்பட்ட இவர் மலையாள மண்ணின் எழுத்தாளர்களான வைக்கம் பவrர், தகழி, பொற்றைக்கார்ட், தோப்பில் மீரான் போன்றோரின் எழுத்துக்களை பெரிதும் நேசிப்பவர்.
தந்தை வழி கேரளத்தோடு தொடர்புடைய மு.பவrரது கதைகளில் மலையாள நெடி வீசுவதை நன்றாகவே உணரலாம். மேடைப் பேச்சுக்களில் சிறந்தவரான இவர் நட்புக்கும், பழகுவதற்கும் மிக இனியவர். எவர் மனதையும் புண்படுத்தாத இயல்பு காரணமாக எல்லோராலும் நேசிக்கப்படுபவர். எனது நீண்ட கால இலக்கிய நண்பர். அதையும் விட எனது எழுத்து முயற்சிகளுக்கு தொன்று தொட்டே உறுதுணையாக எனது எழுத்துலக குருநாதராக இருப்பவர்.
நீர்கொழும்பு கலை இலக்கிய வட்டம், மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டம் ஆகியவற்றின் தலைவராக இருந்து பலகாலம் இலக்கியச் சேவை செய்து பிரதேசத்தின் புதிய எழுத்தாள பரிமாணத்திற்கு வித்திட்டவர்.
தொட்டதை அலம்பல் சிலம்பல் இல்லாமல் விஷயச் செறிவோடு நறுக்காககச்
4.

068 2>༧
வெளிவந்துள்ளன.
சொல்லும் படைப்பாற்றலை பஷீரின் கதைகளில் காணலாம். கலைத்துவம் மிக்க நடையில் அழகொழிக்கும் வகை யில் படைக்கப்பட்டிருக்கும் இவர் கதை களில் ஒவ்வொன்றும் உருவச் சிறப்பு மிக்கவை
மறைந்த மூத்த எழுத் தளர் இளங்கீரனின் பஷிர் பற்றிய மதிப்பீடு இது. மு. பஷிர் அறுபதுகளில் எழுத் துலகினுக்குப் பிரவேசித்த போதிலும் 68ஆம் ஆணர் டிலேயே இவரது முதலாவது சிறுகதையான ‘மீறல்கள் வீரகேசரியில் பிரசுரமானது. அந்தக் கதைக்கு சமூகத்தின் சில மேல்மட்ட முஸ்லிம் பிரமுகர்களின் கடும் எதிர்ப்பு வந்தது. சமூகச் சாடலும், முகமூடி கிழித்தமையுமே எதிர்ப்புக்குக் காரணம்.
இதனால் பவழீர் சற்றேனும் மனம் தளர்ந்து சோர்ந்து போய்விடவில்லை. அடுத்து பெண் எப்படி இருப்பாள் என்ற கதை வீரகேசரியில் பிரசுரமானபோது பல மட்டத்திலிருந்தும் பாராட்டுக்கள் வந்தன. அக்கதையை அக்கரைமுத்து என்பவர் வீரகேசரியில் காரண காரியங் களோடு ஆழமாக விமர்சித்து, விதந்து பாராட்டி இருந்தார். முகம் தெரியாத ஒருவரிடமிருந்து வந்த இந்த விதந் துரைப்புகள் பஷருக்கு உற்சாகமூட்டின. அதனையடுத்து புனை கதைத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டார்.
இதுவரையில் மு. பஷீர் சுமார் 50 சிறுகதைகளை வீரகேசரி, மல்லிகை, தினக்குரல், தினகரன் ஆகிய இதழ் களில் எழுதியுள்ளார். கவிதை, கட்டுரை என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள்
தனது வளர்ச்சிப் பாதையில் மல்லிகைக்கு சிறப்பான இடமுண்டு என்று நன்றியறிதலோடு பஷீர் எப் போதும் குறிப்பிட்டுக் காட்டத் தவறிய தில்லை.
இங்கு இன்னொரு முக்கிய விடயத்தை நினைவுக்குக் கொண்டு வந்தே ஆகவேண்டும். 58க்கும் 60க்கும் இடைப்பட்ட காலம் என நினைக்கின் றேன். அன்று இந்திய அரசு காரணம் எதுவுமேயின்றி கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைத்தது. இதனால் இந்தியாவிலும், இலங்கையிலும் இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன.
இலங்கையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்பாக பெரிய அளவிலான எதிர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அன்று மு.பவரீர் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளனாக இருந்தமையால் அந்தப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டார். அது அவரது இளமைக்காலம் என்பதால் எதிர்ப்பு வேகம் சற்றுக் கூடியதாகவே காணப்
பட்டது. இதனால் பஷீர் பொலிசாரின்
கடும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன் ஒருவார காலத் துக்கும் கூடுதலாக வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று இலங்கையில் இந்தியத் தூதுவராக
கண்டேவியா இருந்தது குறிப்பிடத்
தக்கதாகும்.
பவrரைப் பற்றிக் குறிப்பிடும்போது

Page 5
: G8
இதனைக் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும் என்பதாலேயே இங்கு எழுத விரும்பினேன். Q
பஷீரின் படைப்புகள் பல தேசிய ரீதியில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். ‘மீறல்கள்’, ‘தலைமுறை இடைவெளி என இரண்டு சிறுகதை நூல்கள்
வெளியாகியுள்ளன.
1999ஆம் ஆண்டில் அரசின் கலா பூஷண விருதைப் பெற்றுக் கொண்டிருக் கிறார். கடந்த ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிறந்த படைப்பாளிக்கான விருதையும் பொற் கிழியையும் பெற்றார்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாழும் கதைகள் (சிறு கதைகள் மீள் அறிமுக) நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக வழங்கி இருக் கின்றார்.
மானுட நேயப் படைப்பிலக்கிய வாதியான மு. பஷீரின் கதைகள்
தந்துதவலாம்.
39-வது ஆண்டு மலர் மல்லிகையின் ஒவ்வோர் ஆண்டுமலர்களும் மக்களால் வியந்து பேசப்படுவதுண்டு. அப்படியே இம்மலரும் நிச்சயம் பலராலும் பேசப்படும். ஆண்டு மலர் சந்தாவுக்கு உட்பட்டதல்ல. மலருக்குத் தனியாக ரூபா 125/- செலுத்தப்பட வேண்டும் சந்தா தாரர்கள் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.
LL SLL SL SLS S L S L S L S L SL SL SL S L SLL SSLLS S LLL SSLLS SS0LL
6
கலைத்துவம் மிக்கவை. யதார்த்தபூர்வ மானவை. மனித வாழ்வின் ஆழங் களைப் புரிந்து சிருஷ்டிக்கப்படுபவை. சுட்டெரிக் கும் உணர் மைகளை அச்சமோ, தயக்கமோ இன்றி எழுதும் வல்லமை கொண்டவர்.
தற்போது இவர் ‘இது இவர்களின் கதை’ என்ற நாவலொனி றைப் படைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
பஷீருக்கும் எனக்குமிடையிலான சுமார் நாற்பது ஆண்டு கால நட்புறவு சிறிதளவும் சரிவின்றி உறுதியாகவே உள்ளது. எனது தந்தையும் அவரது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். எங்களிருவரைப் பற்றி அன்று அவர்கள் கடுமையாக விமர்சித்தமை மறக்கப்பட முடியாது. இன்று அவர்கள் உயிருடன் இல்லை. வேலை மெனக் கட்டவனுகள் என்று சொனர் ை அவர் களர் இன்றிருந்தால் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்றே நம்பு கின்றேன்.
LDSubi5T è916)jill in Gli bIGIS)G) Dominic Jeeva - Kotahena. P.O. எனவும் குறிப்பிடுவது முக்கியம். மலருக்காகத் தரும் பணத்தை நேரடி பாகவும்
- pÎIi. .

நூல் மதிப்புரை
சிதைவுகள்’
தெணியானின் புதிய குறுநாவல் தொகுதி
- எம்.கே. முருகானந்தன்
அகதிகள், இடம் பெயர்தல் போன்ற சொற்களின் அர்த்தத்தைத் தெரியாத ஈழத்துச் தமிழர்கள் எவருமே இருக்க முடியாது.
அரசியல், மதம், மொழி போன்ற காரணங்களால் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களையே அகதிகள் என்று அகராதிகள் பொருள் கூறும். அகராதிகள் அவ்வாறு கூறியபோதும் எமது நிதர்சன வாழ்வில் அது உணர்த்தும் பொருள் பரந்தது. உணர்வு பூர்வமானது. ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட அனுபவங்களுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக் கூடியது.
உயிரைக் காக்க, உடுத்த உடுப்போடு வீட்டை விட்டு ஓடிச் சென்று மரநிழல்களிலும், கோயில், பாடசாலை அல்லது அறிந்தவர் வீடுகளிலும் தலை சாய்க்க இடந்தேடி அலைந்த துயரத்தை தமது வாழ்வில் குறைந்தது ஒருமுறையாவது அனுபவிக்காத வட கிழக்கு வாழ் மக்கள் இருக்க முடியாது. அகதிகள் என்ற சொல் அவர்களுக்கு கொடுக்கும் அர்த்தம் துன்ப துயரத்தில் தோய்ந்தது. புதிய புதிய அர்த்தங்களுக்கான சாத்தியப்பாடுகளைத் திறந்து விடுவது. அது மாத்திரமன்றி அவர்களது இருப்பையும், தன்மானத்தையும் கேள்விக் குறியாக்குவது. வார்த்தைகளில் புரியவைத்துவிட முடியாத அதன் கனத்த, பரந்த பரிமாணத்தை ஒவ்வொருவரும் தாம் வாழ்வில் பெற்ற அனுபவங்களின் பின்னணியில்தான் காண முடியும். உணர்வுகளின் கூட்டுறவில்தான் புரிய முடியும்.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பாலான, முற்றிலும் வேறுபட்ட இன்னுமொரு பரிமாணம் அகதிகள் என்ற சொல்லுக்கு இருக்கலாம் என்பதை தெணியானின் ‘பரம்பரை அகதிகள்’ என்ற குறுநாவல் எமக்கு உணர்த்துகிறது. அகதி வாழ்வின் அவலத்தை நிதர்சனமாக அனுபவித்த என் போன்றவர்களுக்குக்கூட அர்த்தம் அதிர்ச்சியளிப்பதாக
இருக்கிறது.
காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்தாலும் ‘குடியிருப்பதற்கு ஒரு குளி நிலந்தானும் சொந்தமாக இல்லாத தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த பரிதாபமான வாழ்வு இக்குறுநாவலில் சொல்லப்படுகிறது. கந்தசாமியும் அவனைச் சார்ந்தவர்களும் குடியிருப்பு நிலம் சொந்தமாக இல்லாததால் உயர்சாதி நிலவுடைமையாளனால் பலமுறை குடியெழுப்பப்பட்டு, இடம்பெயர்ந்து அகதிகளாக அழைக்கழிக்கப்பட்ட கண்ணிக் கதைதான் பரம்பரை அகதிகள்.

Page 6
KSNS
அவர்கள் அந்நிய இராணுவத்தால்
விரட்டியடிக்கப்படவில்லை, வேற்று மொழி பேசும் இலங்கையின் சிங்கள இராணுவத் தால் துரத்தியடிக்கப்படவில்லை. தமது சொந்தச் சகோதரர்களால் அகதியாக்கப்படு கிறார்கள். ஒரே மொழியான தமிழ் மொழி பேசுபவர்களால், ஒரே பிரதேசமான வட மராட்சியைத் சார்ந்தவர்களால், ஒரே மதத்தை கடைப்பிடிப்பவர்களால் இந்தக் கொடுரம் இழைக்கப்படுகிறது. அவர்கள் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறார்கள். அடக்கப்படுகிறார்கள். அகதிகளாக விரட்டி யடிக்கப்படுகிறார்கள். இது எமது சமூகத்தின் சாபக்கேடு.
வடமராட்சியின் புலோலி பகுதியைச் சார்ந்த அவன், தான் குடியிருந்த ஒவ்வொரு நிலத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தும்பளை, கரணவாய், கெருடாவில் என குடியிருக்க நிலம் தேடி அலைகிறான். ‘உடலுரமும் முரட்டுத்தனமும் கொண்ட அவன் நாலெழுத்துப் படித்தவன் கூட. தனது சமூகத்திற்கு எதிரான உயர்சாதி மான்களின் கொடுமைகளால் குமுறி, வெடித்து ஆவேசம் கொள்பவன். ஆனால் தனி ஒருவனான அவனால் என்ன செய்ய முடியும்? கொடுரம் நிறைந்த, ஆள் அணி கொண்ட சாதி வெறியர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. பணியவும் முடிய வில்லை. இருக்க இடம் தேடி அலையத்தான் முடிந்தது.
இக்கதையில் சொல்லப்படுவது ஏதோ ஒரு உதிரிச் சம்பவம் அல்ல. காலங்கால மாக எமது யாழ் மண்ணில் கட்டவிழ்த்து விடப்படுகிற சாதீய ஒடுக்குமுறையின் கொடுர முகம். அதிலும் அதன் ஒரு சிறு அத்தியாயம்தான். ஆனால் இன்றுதான்
பதிவாகிறது.
தனது முந்தைய நாவலான 'கானலில்
8
65656):
மான்’க்கு இவ்வருடத்தைய சாஹித்திய பரிசைத் தட்டிக் கொண்ட தெணியானின் புதிய நூல் ‘சிதைவுகள்’. இந்நூலில் இரு குறுநாவல்கள் அடங்குகின்றன. முதல் குறு நாவல் நாம் ஏற்கனவே பேசிய பரம்பரை அகதிகள். இந்நூலில் அடங்கும் அடுத்த குறுநாவல் சிதைவுகள்.
‘பரம்பரை அகதிகள் ஈழநாடு ஞாயிறு மலரில் 1985ல் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. இரண் டாவது குறுநாவலான சிதைவுகள் தேசிய கலை இலக்கியப் பேரவையும் சுபமங்களா வும் இணைந்து நடாத்திய ஈழத்துக் குறுநாவல் பேட்டியில் பரிசு பெற்றது. பின் 1998ல் தினகரன் வாரமஞ்சரியில் வெளி வந்து வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது.
இந்த இரண்டு குறுநாவல்களையும் இணைத்து மீரா பதிப்பகத்தினர் ஒரு நூலாக வெளியிட்டுள்ளனர்.
இரண்டாவது குறுநாவலான சிதைவு கள் போர்க் காலமான 1991ல் களம் கொள்
கிறது. அரசின் திடீர் அறிவித்தல் காரணமாக
இரவோடு இரவாக தமது சொந்த மண்ணை விட்டு வடமராட்சி மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து தென்மராட்சி, வலிகாமம் நோக் கிச் சென்று பட்ட துன்பங்கள் துயரங்களைச் சொல்கிறது. அகதியாகும் பிரச்சினை பற்றி
மட்டுமன்றி போர்ச் சூழலின் அவலங்களை
யும் அதனால் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் யாழ், கொழும்பு, வெளிநாடு எனப் பிரிந்து சிதைவதையும், அக்குடும்பம் எதிர் கொள்ளும் அகால மரணங்களையும் மிக அற்புதமாகச் சித்திரிக்கிறது.
இக்கதை அற்புதமாக அமைந்ததற்குக் காரணம் என்ன? இது தெணியானின் அடி
மனதிலிருந்து பீறிடும் சத்தியமான பதிவாக
இருப்பதுதான். தானும் தன் உறவினரும்

Col.
சுற்றத்தாரும் நண்பர்களும் நேரிடையாக சித்திரித்துள்ளார்.
அனுபவித்த நிஜமான துன்பங்களின் மறு வார்ப்பு இது. மிகவும் உணர்வுபூர்வமாகச் சொல்கிறார். அவர் சொல்வது வாசகர் களான ஒவ்வொரு தமிழனதும் சொந்த அனுபவமாக இருக்கிறது. எங்கள் அனு பவம் அவரது அனுபவத்துடன் கலவியறும் போது அற்புதமான உணர்வலைகளை எம்மில் கிளர வைக்கிறது.
இதில் வரும் பாத்திரங்கள் யார்? அப்பா, அம்மா. மூத்தவன், மூத்தவள் நடு விலான், சின்னவள் இப்படித்தான். எல்லாமே பெயரற்ற பாத்திரங்கள். இவர்கள் யாவரும் எவரோ அல்லர். எம்மவர்கள். எமது குடும் பத்தினர் என்ற உணர்வே ஏற்படுகிறது. இத னால் இது எமது கதை போல உணர் கிறோம். இதனால் நாவலோடு உணர்வு பூர்வமாக ஒன்றிவிட முடிகிறது. பாத்திரங் களுக்கு பெயர் கொடுக்காத உத்தியைப் பயன்படுத்திய தெணியான் வெற்றி பெறு கிறார். :
இன்று முதுமை பற்றி அதிகம் பேசப் படுகிறது. அரசுகள் அக்கறை எடுக்கின்றன. Lp(big)6 liff of Geriatrics b. 216third முக்கியத்துவம் பெறுகிறது. தெனியாலும் தனது பங்காக இந்நாவலில் முதுமைக்கு இலக்கிய அந்தஸ்து கொடுக்கிறார். இந்த நாவலின் பிரதான பாத்திரம், அப்பா. இளைப்பாறிய அதிபர். முதியவர். அப் பாத்திரம் ஊடாக முதியவர்களின் எண்ணங் கள், உணர்வுகள், செயற்பாடுகள் யாவற் றையும் நுணுக்கமாக அவதானித்து பதிவு செய்துள்ளமை மருத்துவனான எனக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. உறவுகளின் நெருக்கமும், நேர அவகாசமும் நிறைந்தது மான கிராமச் சமுதாயத்தில் கூட வெளி விறாந்தையில் இரு கதிரைகள் போட்ட மர்ந்து பேசுவதற்கு யாராவது வருவார்களா என காத்திருக்கும் அப்பா மூலம் முதுமை யின் தனிமையுணர்வை அற்புதமாக
9
கள் எழுதுவதையே
ஈழத் தமிழ்ச் சமுதாயத்தின் மிகத் துன்பமான, இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத் தின் அற்புதமான பதிவாக சிதைவுகள் குறுநாவல் அமைகிறது. செய்தித் தணிக்கை களாலும், இனவாத ஊடகங்களினாலும் வெளி உலகுக்கு மறைக்கப்பட்டு. இன்று சமாதானக் கேளிக்கையால் மறக்கப்படும் ஒரு சமூகத்தின் இருண்ட சோகமான காலகட்டம் தெணியானின் எழுத்தில் காவியமாக உயர்ந்து எழுகிறது. ஆனால் கடைசி இரு அத்தியாயங்களும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒடி கதையை நிறைவ செய்ய முனைகின்றனவே அன்றி அனுபவப் பகிர் வாக அமையவில்லை என்பதையும் குறிப் பிட்டே ஆகவேண்டும்.
இந்த இரண்டு குறுநாவல்களும் சிறப் பாக இருந்தபோதும் வெவ்வேறு விதத்தில் தனிச் சிறப்புப் பெறுகின்றன. யாராலும் பேசப் படாத ஒரு விடயத்தைப் பேசி, அகதி என்ற
சொல்லுக்கே புது அர்த்தம் தேடும் ‘பரம்
பரை அகதிகள் தனது கதையின் கருவால் உயர்ந்து நிற்கிறது. மறுபுறம் சிதைவு களானது தமிழ் மக்களது இன்றைய எரியும் பிரச்சினையைப் பேசினாலும் தெணியானின் சித்திரிப்பு நேர்த்தியால் தரமுயர்ந்த இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது.
தெணியான் தனது அறுபது வயதிலும் வளர்ந்து வருகிறார். பல மூத்த எழுத்தாளர் கைவிட்டு ஒய்ந்த நிலையிலும், இன்னும் சிலா தொடர்ந்து எழுதினாலும் அவர்களது எழுத்தாற்றல்
நீர்த்துப் போய் சுவை கெட்டுப் புளிததுப
போன நிலையிலும் இவரோ தனது கலாரீதி யான தேடலை விரிவாக்குகிறார். தனது கற்பனைத் திறனை சமூகம் சார்ந்த வெளி யில் பறக்க விடுகிறார். தனது சொல்லும் திறனை தினம் தினம் புதுப்பித்து மெருகேற்றி
வருகிறார். இந்த இரு குறுநாவல்க6ை1ம்
ஒன்று சேர்த்துப் படிக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. ஒரு பதினைந்து

Page 7
ஒEை
கால வித்தியாசத்தில் தெணியான் தனது படைப்பாற்றலை உன்னதங்களை நோக்கி எப்படி வளர்த்து வருகிறார் என்பது ஆச்சரிய மூட்டுகிறது. அவதானிப்பின் கூர்மை, சித்திரிப்பு முறைமை, மொழியாற்றல் யாவும் கைகோர்த்து வர இந்நாவலை அற்புதமாகச் செதுக்கியுள்ளார்.
ஒரு எழுத்தாளனின் சிறப்பு என்பது, தான் பெற்ற அனுபவங்களையும், தான் அவதானித்ததும் கேட்டறிந்ததுமான மற்றவர்களது அனுபவங்களையும் எழுத்து வழியாக வாசகர்களுக்கு கைமாற்றுச் செய்யும் ஆற்றலில்தான் தங்கியிருக்கிறது. மொழி வழியாக தனது அனுபவங்களை எளிதாக வாசகனுக்குக் கைமாற்றுச் செய்யக்கூடிய எழுத்தாளனே உச்சநிலை எழுத்தாளனாகப் பரிணமிக்க முடியும்.
தெணியானும் இதையே எட்ட முயல் கிறார். பல இடங்களில் அவரது வார்த்தை கள் கருத்து ஊடாடலுக்கான வெற்று வார்த்தைகளாக அல்லாது கவிதைகளாக உள்ளத்தோடு பேசுகின்றன. நுண்ணு ணர்வைப் பகிர்ந்து கொள்கின்றன. சித்திரங் களாக எமது எண்ணங்களைத் தோகை விரித்து ஆடச் செய்கின்றன. சில உதார ணங்களாக இவற்றைச் சொல்லலாம்.
'மரமும் கொடுகும் மார்கழி மாதத்துக் கடும் குளிர்;
'அடிப்பதற்கு கை நீட்ட வேண்டுமா? ஒவ்வொரு அசைவிலும் இன்னொருவர் இதயத்தில் ஓங்கி அடிக்கலாம்.'
'திசைகள் எங்கும் மரணம் சூழ்ந்து நிற்கிறது. மரணத்தை மறித்துத் தப்பி ஒடு வது.. இவைபோல் இன்னும் எவ்வளவோ
இதே போல வடமராட்சி மண்ணின் வாசனையை உணவை ஒறுத்து நடப்பது, ‘பத்தாள்மைக்காரர்' போன்ற பல பாரம் பரியச் சொற்களை பொருத்தமறிந்து கையாள்வதன் மூலம் செய்நேர்த்தியுடன்
பதிவு செய்கிறார்.
தெணியான் ஒரு நல்ல சிறுகதையா சிரியர். அதேநேரம் இலங்கையின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவரும் கூட. நாவல் என்பது சிறுகதையுடைய நீட்சியாகவோ, நீண்ட கதையாகவோ இருக்கக் கூடாது
என்பதை நன்கு புரிந்து கொண்டவர்.
இதனால்தான் அந்த இரு துறைகளிலும் அவரால் வெற்றி பெற முடிந்தது.
இருந்தபோதும் தெணியான் பிரதான மாக ஒரு நாவலாசிரியரே என பேராசிரியர் சிவத்தம்பி ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதுவும் இன்னொரு வகையில் உண்மை தான். ஏனெனில் அவர் தனது படைப்புகளை நாவல் என்ற பிரமாண்ட வடிவத்தின் விஸ்வ ரூப தரிசனத்தை நோக்கி நகர்த்திக் கொண்டி ருக்கிறார். பிரமாண்டம் என்பதை படைப்பின் கன அளவைக் கொண்டோ, பக்கங்களின் நீட்சியைக் கொண்டோ, பாத்திரங்களின் எண்ைணிக்கையை வைத்தோ மதிப்பிட வில்லை. மாறாக அதன் உள்ளடக்கத்தை பும் கலைப் பெறுமானத்தையும் வைத்துச் சொல்கிறேன்.
தெணியானின் சிதைவுகள் 60 பக்கங் களைக் கூடத் தாண்டாத சிறிய படைப்பு. ஆனால் இந்தக் குறுகிய பக்க அளவுக்குள் வாழ்ளின் விசாலத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்க முனை கிறார். முக்கிய பாத்திரங்கள் மாத்திரமன்றி
பக்கத்து வீட்டுக்காரத் தம்பி, அம்மாவை
ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் செல்ல உதவிய வண்டில்காரன், தானும் இடம் பெயர்ந் திருந்த போதும் ஆபத்துக்கு உதவிய வைத்தியர் போன்ற உதிரிப் பாத்திரங்களும் கூட உயிர்த்துடிப்போடு படைக்கப் பட்டிருந்தனர். இதனால் வெறும் கதை சொல்வது என்ற வழமையான பரி மாணத்தைக் கடந்து ஒரு சமுகத்தின் சிதைவை ஆழமாகவும், அகலமாகவும் இந் நாவலில் தரிசிக்க முடிகிறது.

ε υ-ύι பெரி.சோமாஸ்கந்தர்
- விரசொக்கன்
உடப்பு தமிழ் கிராமத்தில் பிறந்த கலாபூஷணம் அமரர் பெரி.சோமாஸ்கந்தர் இக்கிராமத்தின் பெருமைகளை, சிறப்புக்களை கலை உலகுக்கு வெளிப்படுத்தி, தான் பிறந்த மண்ணை அடையாளப்படுத்தினார்.
‘வில்லுப்பாட்டு கலைக்கு 48ல் உரம் பாய்ச்சிய அமரர் பெரி.சோமாஸ்கந்தர் கடந்த நான்கு தசாப்த காலமாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீதியாக நடாத்தி புகழ் பெற்றார்.
ஓர் தமிழ் ஆசிரியரான இவர், இராகலையில் முதன் முதலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அடக்கத்துடன் ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்று வரையும் 2000ற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த நாடுகளுக்கும் சென்று வில்லிசை மூலம் தனது கற்றலை, திறமைகளை வெளிப்படுத்தினார்.
வில்லிசைக்கலை என்பது வேடிக்கை விநோத கலை இல்லை. அது தெய்வாம்சம் நிறைந்தது. இக்கலைக்கு உரம் சேர்த்த, புதிய பாரம்பரியத்தை ஏற்படுத்தி அக்கலையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிக் கலைஞர் கலாபூஷணம் பெரி.சோமாஸ்கந்தர்.
சொல்வன்மையும், அபூர்வ ஆற்றலும், கவிதை உணர்வும் கொண்ட அன்னாரிடம் திறமைகளைப் பாராட்டி 1997ஆம் ஆண்டு அரசு 'கலாபூஷணம்' பட்டத்தை வழங்கி கெளரவித்தது. அன்னாருக்கு பொது மன்றங்களும் 'வில்லிசை வித்தகன், வில்லிசை மாமணி'. 'வில்லிசைத் தென்றல்', 'வில்லிசை வாரிதி’, ‘கருத்தோவியன், வில்லிசை கலாபவன்', 'தெய்வீக இசைச் சித்தர், போன்ற பட்டடங்களை அளித்து கெளரவித்தது. இந்து கலாசார அமைச்சர் 1993இல் பக்தி பெருவிழாவில் “அருட்கலை திலகம்', வடமேல் மாகாண கலாசார ஒன்றியம் பல்கலை வேந்தன்' போன்ற பட்டங்களை
1

Page 8
سی
S. gigs
அளித்து கெளரவித்துள்ளன.
இலக் கரியத் தரில நிறைந்த ஆளுமையும், ஆர்வமும் கொண்ட சோமாஸ் கந்தரிடம் இலக் கரியப் பேச்சுக்கலையை உணர்ந்து இராகலை இலங்கை தொழிலாளர் கழகம் பெரு விழா எடுத்து 1965இல் சொல்லிசைச். செல்வன்' என்ற பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது.
உடப்பின் பாரம்பரிய கலைகளான தெம்மாங்குப் பாடல் கதை, பழைய நாடகப் பாடல்கள், கிராமிய பொக்கி ஷங்களை வெளி உலகுக்கு அறிமுகப் படுத்திய பன்முகக் கலைஞர் இவர்.
உடப்பின் நாடக மேடைகளில் தோன்றி நாடகக் கலைக்கு 48ல் உரம் பாய்ச்சிய கலைஞர் சோமாஸ்கந்தர் தான் கடமையாற்றிய பாடசாலைகளில் நாடக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
ஆசிரியர் பணியை தனது தெய்வீகப் பணியாக மேற்கொண்ட அன்னார் ஓய்வு பெற்ற போதும்கூட தன்னை அர்ப்பணித்து சமூக, சமுதாயப் பணிகளில் தன்னை இனங்காட்டி செயற்படுத்தினார்.
அர்ப்பணித்துக் கொண்டு செய்யும் நல்லுள்ளம் படைத்தவர்தான் சோமாஸ் கந்தர்.
நடிகராக, நாடக ஆசிரியராக, திறமை மிக்கப் பேச்சாளராக, இசைக் கலைஞராக, வில்லிசை கலைஞராக தன்னை இனங்காட்டி அடையாளப் படுத்திய அமரர் மோமாஸ்கந்தர், தான் பிறந்த கிராமத்தின் பெருமைக்கு அடித்தளமிட்ட முன்னோடிக் கலைஞர்.
அபார ஆற்றலும், ஞான சக்தியும் கொண்ட அமரர் கலாபூஷணம் பெரி. சோமாஸ்கந்தரின் மறைவு கலை உலகு க்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். /三 —N
மல்லிகைப் பந்தலின் இம்மாதப் புதிய நூல்கள்
அப்புறமென்ன. (கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
நாம் பயணித்த புகை வண்டி (சிறுகதைத் தொகுதி)
உடப்பின் ஆயப்பணியை ஆர்ப் ப. ஆப்டீன் பாட்டத்துடன் மேற்கொண்டவர். தன்னை | VNS ク
nچی-------------------------------------------- س--
" இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி
கொள்ளுகின்றோம். | l - ஆசிரியர் له ش- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - خاقا

தெருதினம்
வெளியே
6
d 6bsib unTÜ
கவனம் கவனம்
கணனிகள் உலகம்
stetroTTLD6) போய்விடாதே
தனித்துவம் பேணு பிழைகளை விடு
இலட்சியம் கொள்
உறுதியாக நில்
பொய்களைத் &lւնւ
a 6060LD60)uds
(59
இறல்கு
- குறிஞ்சி இனந்தென்றல்
கடல்
வணங்கு
காற்று வணங்கு
நெருப்பு ഖഞ്ഞഭദ്ര
LD60T வணங்கு
6inter வணங்கு
கிழக்கு ஒளி
Lumrj
மேற்கின் அழகை ரசி
புற்களின் அழகை ரசி
வேர்களின்
வேதனை உணர்
13

Page 9
பூக்களை நேசி
இசை
ரசி
இயற்கையைக் கும்பிடு அரிதாரம்
ES506
சுயத்தோடு இரு
ஏழைகளை நேசி
ஆயுதம் தவிர்
அன்பினால் அனை
வன்முறை
LSLSSkS LSLSLS LSLSS LSLSLSS LS LS LSSS LSLS LSLSLSLSLSLS LSSkLSLSkLSSLL LLLBBBLS LS LkSkkSLLSS LSLSLS LSLS LSLkLSkLSS LSL LSSSkLSLS LSLSLS LSLLLSLSLSSTSS
மல்லிகை வாழ்த்துகின்றது
திரு. திருமதி தயானந்தனர் அவர்களுக்கும் திரு. திருமதி சதாசிவமூர்த்தி தம்பதியின் புதல்வியும், குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளருமான
3 Decessors
NeT
புதிது
(ԼpԼԳ6ւ செய்
2-60oр 60oup- פ:
உழைப்பில்
-UCB
மதம்
அழி
மனிதம்
மரங்கள்
BG
மழையில்
[5ഞ്ഞ
5
நீயாக இரு
வந்த வழி நோக்கு.
6u6пЈ
அரசநாதன் தம்பதியின் புதல்வன் செல்வன்
திருணம் நடைபெற்றது.
எழுத்தாளர்களின் சார்பாக மல்லிகை வாழ்த்துகின்றது.
சாரங்கா (குணாளினி)வுக்கும் சமீபத்தில் சாவகச்சேரியில் இனிதே
d-60s unreogs

புத்தக உருவாக்கமும் ஈழத்த எழுத்தாளர் பிரச்சினைகளும்!
- ப. ஆப்டீன்
ஈழத்து எழுத்தாளனுக்கு ஏனைய எழுத்தாளர்களை விட ஒரு தனித்துவம் இருக்கிறது. அதுதான் அவனது மகத்துவம். இது சகல கலை இலக்கியவாதிகளுக்கும் பிரசித்தம்!
எழுத்துத்துறையில் அவன் காலடி எடுத்து வைத்த நாட் தொடக்கம் இறுதிவரைக்கும் அவனது எழுதுகோல் சமூக மேம்பாட்டிற்கும் உலக ஒருமைப்பாட்டிற்கும்தான் மை சிந்துகின்றது பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல். இளைய எழுத்தாளன் தொடக்கம் மூத்த எழுத்தாளர் வரைக்கும் கொள்கை இலட்சியங்களுடன்தான் அவனது எழுத்து ஆரம்பமாகிறது. ஈழத்து எழுத்தாளனுக்கு வியாபார நோக்குத் துளிகூட கிடையாது. அவனுடைய எழுத்து வலிமை மிக்கதாக இருப்பதற்கும் அதுதான் காரணம்.
ஒரு பக்குவ நிலைக்கு அவன் வளர்ச்சியடைந்த பிறகு தனது ஆக்கங்களை நூலுருவமாகக் காண விளைவது இயற்கை. அது அவனது உரிமையும் கூட. தனது ஜீவனோபாயத்திற்கு எழுத்தை அவன் பயன்படுத்துவதில்லை. அதற்காக அவனது கல்வித் தகைமைகளுக்கேற்பத் தொழில்களையும், உத்தியோகங்களையும் அவன் காலா காலத்தில் பெற்றுக் கொள்கிறான்.
இந்நிலையில் அவன் தன் ஆக்கங்களை நூலுருவமாகக் கொண்டுவர பற்பல பிரச்சினைகள் அவனுக்கு முன்னே தடைக்கற்களாய் நிற்கின்றன. புத்தகங்கள் வெளியிட விரும்பும் அவனுக்கு எவ்வித தாட்சணியமும் இல்லாமல் அச்சுச் செலவுகள் அச்சுறுத்தலாய்க் காட்சி தருகின்றன. எனினும் உரிய காலத்தில் அவனது படைப்புகள் நூலுருவம் பெற வேண்டுமே என்ற ஆதங்கம் அவனை நெருக்க, ஏதோ ஒரு வழியில் பெருந் தொகையான பணத்தை முதலீடு செய்து படைப்புகளை அச்சு வாகனமேற்றி புத்தகங்களாகக் காண்கின்றான். இதற்கிடையில் அவன் எதிர் நோக்கும் பிரச்சினைகள் ஒவ்வொரு எழுத்தாளனையும் ஒவ்வொரு விதமாக நெருக்கும்.
எழுதுகோல் ஏந்தும் ஒவ்வொரு எழுத்தாளனும் புத்தகம் வெளியிட வேண்டுமென்பது அவனது நியாயமான எதிர்பார்ப்பு அவனது இச்சைக்கமைய ஆக்கங்கள் நூலுருவம் பெற்று விடும். புத்தகங்களை வெளியிட்டால் மட்டும் போதுமா..? அவை நாடளாவிய ரீதியில் வாசகர்களை சென்றடைய வேண்டாமா? அச்சாகிய புத்தகப் பொதிகளின் சுமை முதுகை அழுத்துகிறது. இதை தவிர்க்க இங்கு என்னென்ன வசதி வாய்ப்புகள் இருக்கின்றன?
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். எழுத்தாளன் வீட்டு மூலைகளில் முடங்கிக் கிடக்கும் நூல்கள் கால்கள் முளைத்து நகருமா..? மனம் வெதும்புகிறது.
15

Page 10
S. 665
அழகிய அட்டைப்படங்களுடன் புத்தகங்
களை மிகப் பிரமாதமாக அச்சடித்து விட்டு அவற்றைச் சந்தைப்படுத்தும் போது அழுத்தும் - பிரச்சினைகள் நூலாசிரியனின் தலையைச் சுற்ற வைக்கின்றது.
எப்படியும் வாரத்திற்கு மூன்றென்ற
விகிதத்தில் நமது நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் அச்சாகிக் குவிகின்றன. கடந்த
ஓரிரு தசாப்தங்களாக நூல்களின் உற்பத்தி
வெகுவாக அதிகரித்திருக்கிறது. ஆனால் விற்பனை.?
ஒரு புத்தகத்தை கையில் எடுத்தவுடன் அது தென்னிந்தியத் தயாரிப்பின் தரத்திற்கும் சிலவேளைகளில் அதைவிட இன்னும் தர மாகவும் கலையம்சத்துடனும் உருவாக்கம் பெற்றிருப்பதை அவதானிக்கலாம். இன்னும் சில வருடங்களில் இன்னும் மிக அற்புதமாக வெளிவரக் கூடிய நம்பிக்கைக் கீற்றுக்கள் தென்படுகின்றன.
எமது எழுத்தாளர்களின் நூல் விற்பனை மந்தகதியில் செல்கின்றன. விற்பனைக்கு ஒழுங்கான வசதி வாய்ப்புகள் இல்லாமையே காரணமெனினும், தென்னிந்தியாவின் நூல் களும் விற்பனைக்குத் தடையாக நிற்கின்றன. பாரபட்சமில்லாமல் எமது நாட்டு எழுத்தாளர் களின் நூல்களையும் வாங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.
எமது நாட்டு எழுத்தாளர்களின் தரமான படைப்புகளை ஆய்ந்து அறிய திராணியற்று எமது பாடசாலை நூலகங்களும், பல பொது நூலகங்களும் தென்னிந்திய நூல்களையே கொள்வனவு செய்யும் மோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
எனினும் அண்மையில் ஒரு விழிப் புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அது எழுத் தாளனின் பொருளாதாரப் பிரச்சினையை ஓரளவு தீர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இங்கு சில அமைப்புகளால்
16
சேர்ப்பது என்பதுதான்!
கொள்வனவு செய்யப்படும் நூல்கள் அவ்வமைப்புகளின் களஞ்சியங்களில் தேங்கிக் கிடக்கின்றன என்று ஒரு சந்தேகம்
நிலவுகின்றது. எழுத்தாளனின் பொருளாதாரப்
பிரச்சினையை தீர்க்க முயன்றாலும், வியாபார நோக்கமற்ற ஈழத்து எழுத்தாளனின் அபிலாஷை அவனது படைப்புகள் வாசகரைச் சென்றடைய வேண்டுமென்பதே! வாசகரின் கருத்துக்கள்தான் எழுத்தாளனுக்கு மகிழ்ச்சியைத் தரவல்லது.
இறுதியில் நூல் வெளியிடும் ஒவ்வொரு எழுத்தாள வெளியீட்டாளனுக்கும் எதிர் கொள்ள வேண்டிய ஒரேயொரு பிரச்சினை
அதைச் சினிமாப்பட நோட்டீஸ் கொடுப்பது
போல் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் விநியோகத்துக் கையைக் கடித்துக் கொள்ளாமல் ஈடுபடுத்திய பணத்தை எப்படிச் மற்றவர்களது தலையில் கட்டிவிட அவை என்னவோ நாறல் மீன்களல்ல என்பது தெரிந்த விஷயம்தான்! இருந்தாலும் துரிதமான விற்பனை வெளி யீட்டாளனின் கடன் பளுவைக் குறைக்கு மென்பதே யதார்த்தமாகும்! எழுத்தாளனின் உற்ற நண்பன் வறுமைதானென்பது இந்த விடயத்தில் கவனிக்கப்பட வேண்டிய தொன்றாகும். மானுடத்தை எதிர் நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் தரவொன்றிருப்பது உண்மையே! ..
புத்தக வெளியீட்டால் ஏற்படும் நிதிச் சிக்கலைத் துடைக்க ‘புத்தக நம்பிக்கை pÉg5ujib' (Book Trust Fund) 6T6örgQ6)|T(5 அமைப்பு எழுத்தாளர் மத்தியில் உயதமாவது இன்றைய தேவைகளிலொன்றாக இருக் கின்றது. இதற்கு இலக்கிய அபிமானிகளும், நண்பர்களும், எழுத்தாளர்களும் உந்து சக்தியாக இருக்கலாம்.
எமது நாட்டு எழுத்தாளர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களது நூல்கள் இலங்கை மண்ணிலேயே அச்சாக வேண்டும். அவற்றையே சாஹித்திய
மண்டலப் பரிசுத் தேர்வுக்கு அனுட்ப வேண்டும்
என்று முன்னர் இருந்த சட்டவிதியை மீண்டும் மீள் பரிசீலனை செய்து நடைமுறைப் படுத்தினால் அது ஈழத்து எழுத்தாளனுக்கு அநுகூலமாக இருக்கும்.

665);
நாடகத்தில் நாளுமீடுபாடு கொண்டோன்
- கனகசபாபதி நாகேஸ்வரனர்
முதுமையிலும் கலையுணர்வு கொண்ட நெஞ்சன் முத்தமிழும் கைவந்த முதன்மையாளன் புதுமையெது அதனையவர் உணரவல் லோன் புகழ்பூத்த நாடகத்திற் புதுமை செய்வோன் பதுமமலர்ப் பிரமனெனப் படைத்தல் செய்தோன் பாப்பாடி நாடகத்தில் பாத்திரமேற்று சதுரதுதான் தாளக் காவடியோடாடும் தன்மையினைக் கொண்ட கலைப் பேரரசே!
கல்லூரி விழாவெனினுங் கலைகள் செய்வோன் கம்பனது விழாவெனினுங் கலைகள் செய்வோன் நல்லூரில் விழாவெனினுங் கலைகள் செய்வோன் நயினையிலே விழாவெனினுங் கலைகள் செய்வோன் பல்லோரும் வாழ்த்துகின்ற குரும்பசிட்டி(ச்) சன்மார்க்க சபைதனிலே கலைகள் செய்வோன் வல்லோர்கள் பலரோடு வாழ்ந்த கலைப் பேரரசர் பணிகளென்றும் வாழும் வாழும்!
நாடகத்தில் நாளுமீடுபாடு கொண்டார் நாவினிற்க நற்கவிதை பாடிநின்றார் பீடுபெறு தாளத்துறு காவடிகள் பெற்றியது அற்புதமாய்ப் பாடி நின்றார்
7

Page 11
ஒடுமிந்த உலகத்தின் வாழ்வு பற்றி ஒர்ந்துண்மை யறிந்து பணி தெரிந்து கொண்டார் சாடுகின்ற போதுமவர் தலை நிமிர்ந்தார் சாதுவாய்க் கலைப்பணிகளாற்றி வென்றார்.
மாநாடு கருத்தரங்கு பலவுங்கண்டார் மாதர்பலர் அறிவுப்பெற பணிகள் விண்டார் வாணாளிற் துடிப்புடனே இயங்கி நின்றார்
வானுயரக் கலைப் புகழை நிறுவிக் கொண்டார்
தேனுாறக் கதைகள் பல புகன்று நின்றார்
தெவிட்டாத நாடகத்தின் உத்தியூடே மேநாட்டிலுள்ள கலை விளக்கங் கண்டார் மேவுதமிழ் முழக்கமது செய்து வென்றார்.
நாடகத்தை மேடைதனில் நடித்த மேதை நாடறிந்த ஆசிரிய அதிபர் மேன்மை பாடறிந்து பணியாற்றி நின்ற மேலோன் பாடுவோமே அவர் புகழை நித்தம் நித்தம்.
མཛོད་
〜
2 எமது ஆழந்த துயரங்கள் 9
தனிப்பெரும் கலை மணிகள் நால்வர் நம்மை விட்டுப் பிரிந்து போய்விட்டன.
வில்லிசைக் கலைஞர் உடப்பு சோமாஸ்கந்தர், இலக்கிய முன்னோடி மறுமலர்ச்சிக் கால கோப்பாய் பஞ்சாட்சர சர்மா, கலைஞர் சாஹித்திய கர்த்தா இணுவில் வீரமணி அய்யர், நாடகப் பேராசான் குரும்பசிட்டி ஏ.ரி.பொனர்னுத்துரை ஆகிய நால்வரின் இழப்புக்காக வருந்தும் குடும்பத்தினருக்கும், கலை இலக்கிய உலகைச் சார்ந்தோருக்கும் எமது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
-ܢܠ
- அசிரியர்
محل سے۔ ک 18

மதத்தங்கள்
உயரப் பறக்கும் சிறகுப் பூக்கள் சில elusiaystavapau 6var தம்மை உணர்த்தும்.
உனக்கும் எனக்கும் 2 — რსიანბრუნuD(ruth 42ύgίωγυριμιτιύ δισδυστώ όσύμ{ώ
வாழ்வில் வேதங்களை சப்தம் செய்து நமக்குள் நிம்மதியை வலியுறுத்தும்
நாம்
வாழத் தவறிய υαστι(αδωνόττύ υύριμαίδύο பழியை எம்மீது உரைக்கும்
- ஏ. எஸ். எம். நவாஸ்
é20laí áir ar நம்மில் ஒலிக்காததெல்லாம் இங்கே
இன்னும் நிஜயப்பருத்தும்,
சில மிச்சம் άξου ότά συρτιά. நம்மில் விழுந்து சிதைந்த சிந்தனைகள்
56@paragüuüb
எங்கோ
ஒரு ஞானமாய் நமக்குள்
மெளனிக்கும்
வாழ்வியல் யதார்த்தம்,

Page 12
அச்சுத்தாளின் ஊடாக
ஓர் அனுபவப் பயணம்
- டொமினிக் ஜீவா
கவிஞர் கண்ணதாசனை நான் சந்திக்கச் சென்றது அவரொரு பிரபலமான சினிமாப் பாடலாசிரியர் என்பதற்காகவல்ல. நண்பர் ஜெயகாந்தனை ஆத்ம சுத்தமாக நேசித்தவர், கவிஞர். அத்துடன் திராவிடக் கருத்துக்களால் கலை இலக்கிய உலகில் ஆதிக்கமும் அட்டகாசமும் வெருட்டல்களும் மலிந்திருந்த காலத்தில் கவிஞரும், எழுத்தாளரும் இடதுசாரி அரசியல் தலைவருமான தோழர் பாலதண்டாயுதம் ஆகிய மூவரும் முக்கூட்டுப் பலத்துடனும் நாக்கு ஆயுதத்துடனும் தமிழ்நாட்டு மேடைகளைக் கருத்துப் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஒரு புதிய விழிப்புணர்ச்சி இவர்களது முக்கூட்டு இணைப்பால் தமிழகமெங்கும் பரவிக் கொண்டிருந்தது. சிந்திக்கத் தெரிந்த இளஞ் சமூகத்தினர் இவர்களது வாழ்வியல் கருத்துக்களால் வசீகரிக்கப்பட்டு, புதுப்பாதை தேட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த காலகட்டமது. தோழர் பாலதண்டாயுதத்தைத் தமிழகத்தில் பல தடவைகள் நான் சந்தித்து உரையாடி இருக்கிறேன். ஈழத்து இலக்கியவாதிகள் மீது பேரன்பும் பேரபிமானமும் கொண்டிருந்தவர் தோழர்
UT6)60T.
ஒரு சர்வதேச மகாநாடு கண்டி மாநகரில் நடைபெற்றது. அதற்குத் தொழிற் சங்கப் பிரதிநிதியாக இந்த மண்ணுக்குத் தோழர் பாலன் வந்திருந்தார். எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தோழர் பாலனைச் சந்திப்பதற்காக நாங்கள் சில தோழர்கள் காரில் கண்டிக்குச் சென்று கண்டி குயின்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த பாலனைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தோம்.
இரவு நடுநிசி வரை நமது உரையாடல் தொடர்ந்து நடைபெற்றது.
2O

ܕܐܝ2 YS passes ஒDகை
நான் கைவசம் கொண்டு சென்ற மல்லிகை இதழ்களை அவருக்குக் கொடுத்து விட்டேன். முன்னரே
மல்லிகை இதழ் பற்றிய செய்திகளையும்
அதன் சில ஏடுகளையும் படித்துத் தெரிந்து வைத்திருந்த தோழர் பாலன், மகிழ்ச்சியுடன் இதழ்களைப் பெற்றுக் கொண்டார்.
அடுத்த நாளுக்கு அடுத்த நாள்.
யாழ்ப்பாணம் திரும்பி மல்லிகை வேலைகளைத் தொடர முற்பட்ட வேளையில் ஒரு யாழப்பாணத்துத் தோழர் மல்லிகைக் காரியாலயத்திற்கு என்னைத் தேடி வந்தார்.
‘‘சங் கதி தெரியுமா? ஆல் இந்தியா ரேடியோவில் சொன்னார்கள். பாலதண்டாயுதம் டில்லிக்குச் சென்று கொண்டிருந்த வழியில் விமான விபத்தில் இறந்து போய் விட்டாராம்!”
என்னால் அவர் நேரடியாகச் சொன்ன இந்தத் தகவலைச் சீரணிக் கவே இயலவில்லை.
மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞரும் எழுத்தாளரும் அரசியல் வாதியுமான இந்த முக் கூட்டணி தோழர் பாலனின் இழப்பால் பின் இழுக்கப்பட்டு விட்டது. இதுதான் எதார்த்தம்.
சினிமாக் கலைஞர்களின் பிர பலமும் புகழும் எந்தக் காலத்திலுமே என் மனதைப் பெரிதும் ஆகர்ஜித்த தில்லை. ஒரு காலத்தில் தமிழகத்தில்
ஏன் நமது நாட்டிலும் கூட, நாடகக் கலைஞர்கள் தற்காலிகமாகத் தங்கு வதற்குக் கூட வீடுகளை வாடகைக்குக் கொடுக்க மறுத்துள்ளனர், மக்கள்.
நாடகத்துறையின் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிதான் சினிமா.
இந்தச் சினிமா நடிகர்களுக்கு இளந்தலைமுறைத் தமிழர்கள் காட்டி வரும் வெறித்தனமான ஆதரவைக் கண்டு நான் பல சமயங்களில் பிரமித்துப் போனதுண்டு. எரிச்சல் பட்டதுமுண்டு.
தியாகராஜ பாகவதர் உச்சத்தில்
இருந்த காலகட்டத்தில் யாழ்ப்
பாணத்திற்கு ஒரு தடவை வந்திருந் தார். வந்திருந்தார் என்பது கூடத் தவறு.
விஜயம் செய்திருந்தார்.
யாழ்பாணம் வின்ஸர் பட மாளிகை யில் அவருக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடு செயப் யப் பட்டிருந்தது. அந் தத் தியேட்டரின் மனேஜர் கதிரித்தம்பி எனது நண்பர். வரவேற்பில் கலந்து கொள்ள என்னையும் அழைத்திருந்தார்.
கூட்டம் உயர்தரச் சீமான்களாலும் சீமாட்டிகளாலும் நிரம்பி வழிந்தது. இதில் நான் மாத்திரம்தான் சாமானியன். ஒரு மூலையில் அடங்கியிருந்து பார்வையாளனாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
பாகவதர் உணர்மையிலேயே ஒப்பனைகள் இல்லாமலும் நல்ல | அழகன். அவரது தலைமுடி அவருக் குத் தனிச் சிறப்பைத் தந்ததை நான்
2

Page 13
Successors
நேரில் மட்டிட்டுக் கொண்டேன்.
பாகவதர் இருக்கையில் உட்காராமல், இங்குமங்கும் உலாத்திய வண்ணம் உரையாடிக் கொணி டிருந்தார். பக்கத்தே அவரது சொந்த ஊழியன் ஒருவன், வெற்றிலைப் பெட்டியை ஒரு கையிலும், துப்பல் படிகத்தை மற்றொரு கையிலும் ஏந்திய வண்ணம் பாகவதர் நடைக்கேற்ப அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டி ருந்தான்.
நமது கவர்ச்சி மிகு சீமாட்டிகளில் சிலர், அவரது பார்வை தங்கள் மீது படியாதா? என்ற ஏக்கத்தில் கண்களைத் தூது விட்டுக் கொண்டு ஏங்கிய போய்க் காட்சி தந்தனர்.
இது நடந்து ஒரு குறிப்பிட்ட காலம் சென்றிருக்கும். நான் சென்னைக்குச் சென்றிருந்தேன். ‘தமிழ் சினிமா” என்ற வார சினிமா ஏட்டின் ஆசிரியர் ஏ. எம். கரீம் என்பவரை அவரது காரியால யத்தில் சந்தித்து உரையாடிக் கொண்டி ருந்தேன்.
சினிமாப் பிரபலம் பற்றி அவர் சொன்ன ஒரு தகவல், என் தலையைக் கிறுகிறுக்க வைத்து விட்டது.
ஒருநாள் காரில் மவுண்ட் ரோடு பக்கமாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் முன்னால் கறுப்புக் கண்ணாடி அணிந்த நபரொருவர் பக்கமாகப் போன டாக்ஸியைக் கை காட்டி நிறுத்த முயற்சித்தாராம்.
வேகத்தைத் தணித்த காரோட்டி,
நிறுத்தச் சொன்னவரின் முகத்தை
22
உற்றுப் பார்த்துவிட்டு, வண்டியை நிறுத் தாமலே ஒட்டிச் சென்று விட்டானாம்.
தான் தனது வண்டியை முன்னால் செலுத்தி ஆளை அடையாளம் கண்டதும் தானே பெரிதும் திகைத்துப் போய் விட்டாராம். அந்தக் கறுப்புக் கண்ணாடிக்காரர் பாகவதராம்!
பின்னர் அவரை ஏற்றிக் கொண்டு அவர் குறிப்பிட்ட இடத்தில் விட்டு விட்டுச் சென்றாராம். அதுவும் கூட யாரோ ஒருவரிடம் உதவி யாசிக்கச் சென்ற வீடாம்!
இதுதான் சினிமாப் பிரபலம்!
எம்.ஜி.ஆரை ஒரு தடவை யாழ்ப்பாணத்திலும் பின்னர் மதுரைத் தமிழாராயப் சிசி மகாநாட்டிலும் இலங்கைப் பேராளர்களைக் கை குலுக்கி வரவேற்ற வேளையிலும் சநீதித் திருக் கிறேனர் . சிவாஜி கணேசனை கவிஞர் கண்ணதாசனின் துணைவியார் மறைந்தபோது கவிஞரின் தியாகராஜ நகர் வீட்டில் கண்டு உரையாடியிருக்கிறேன்.
LT60)6)ust, டைரக்டர் Liupālrtku, சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்றவர்களைப் பார்த்திருக்கிறேன்.
- இப்படியே நீண்ட பட்டியல் சொல்லலாம். நல்ல சினிமாவை ரசித்துச் சுவைப்பேனே தவிர, அதன் கமராச் சூட்சுமத்தில் மயங்கிப் போய் யாருக்குமே ரசிகனாக என்னை நானே இழந்து விடவில்லை.

്യങ്ങ ཨ་མ་མ་།
நான் ரொம்பவும் மதிக்கும் பாலுமகேந்திராவை சென்னைக்குச்
சென்றால் பார்த்துப் பேசுவதில்
எனக்கொரு தனிமகிழ்ச்சி.
அவரது ‘வீடு' படத்தை நான்
ரொம்பவும் சுவைத்து ரசித்தவன்.
அந்தக் கால கட்டத்தில் நான் சென்னைக்குச் சென்றிருந்த சமயம் ‘வீடு' படத்திற்குத் தயாரான சுயமான வீட்டை எனக்குக் காண்பிக்கும்படி கவிஞர் அறிவுமதியை என்னுடன் அனுப்பி என்னைக் கவனித்துக் கணம் பணிணிக் கெளரவித்தவர் பாலு மகேந்திரா. மல்லிகையின் தொடர் வாசகர்களில் அவரும் ஒருவர்.
இத்தனைக்கும் மத்தியிலும் நடிகர் கமலஹாசனின் மீது எனக்கொரு தனிப் பிடிப்பு. அபிமானம்.
ஒருதடவை ஒரு விழாவில் கவிஞர் புவியரசு அவர்களைச் சந்தித்தேன். ‘’ எப்படியாவது இந்தத் தடவை கமலைச் சந்திக்க ஏற்பாடு செய்ய இயலுமா?’ என அவரைக் கேட்டுக் கொண்டேன்.
கவிஞர் புவியரசு இதைக்
கேட்டதும் என்னை ஒருதடவை
ஆழமாகப் பார்த்தார்.
கமலை நான் சினிமாக கலைஞனாக மாத்திரம் பார்க்கவில்லை. அவரொரு பல்துறை சார்ந்த கலைத் துறைச் சாதனையாளர். என்னை தனது ஆளுமையாலும் தனித் துவப் போக்காலும் கவர்ந்து கொண்டவர்.
23
எனவே சென்னைக்கு வந்துவிட்டு அவரை ஒருதடவையேனும் பார்க்காமல் திரும்புவது எனக்கு மனச் சங்கடத்தைத் தந்தது. முன்னைப் போல, வெறும் எழுத்தாளன் என்றால் பரவாயில்லை. இப்பொழுது நானொரு இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியப் பொறுப்பை வகித்து வருபவன். இந்தத் தொடர்பு அல்லது பாரீட் சியம் நாளை மல்லிகைக்கு உதவலாம். அத்துடன் கமல் சிற்றேடுகளின் நிரந்தரச் சிநேகிதன். வித்தியாசமாகச் சிந்திக்கப் பழக்கப்பட்டவர். இளந்தலைமுறைக் கலைஞர்.
இதன் காரணப் பின்னணிச் சிந்தனையுடனேயே கமலஹாசனை எப்படியாவது இந்த முறை சந்திக்க விரும்பினேன். எனது அபிலாஷையை வார்த்தைகளின் வடிவில் கவிஞர் புவியரசிடம் கொட்டித் தீர்த்தேன்.
“உங்களுடைய இந்தச் சந்திப்பு ஆசை மெச்சத் தக்கதுதான். ஆனால், உங்களுடைய நெருங்கிய நண்பன் என் கினி ற முறையில இநீத ஆலோசனையை உங்களுக்குச் சொல்லி வைப்பது எனக்கு முக்கிய மாகப்படுகிறது. அத்துடன் நீங்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர். உங்களுடன் ஒழிக்காமல் உண்மையைச் சொல்வது எனக்கு முக்கியமாகப்படுகிறது. இத்தனை சிறப்புத் தகுதிகளையும் கொண்டிருப்பவர் அவர் என நீங்கள் நிச்சயமாக நம்பினால், அவரை நேரடி யாகச் சந்திப்பதைத் தயவுசெய்து தவிர்த்துக் கொள்ளுங்கள். காரணம்

Page 14
{ steel
என்னவென்று நீங்கள் கேட்டால் அவரைச் சந்தித்த அடுத்த கணமே அவரைப் பற்றிய உங்களது ஆழமான மன அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்வீர்கள்!” ^ 2
நான் விக்கித்துப் போய்விட்டேன்.
மேற்கொண்டு நான் இந்தச் சந்திப்புச் சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து பேச விரும்பவில்லை. கவிஞர் புவியரசும் இதை விபரித்துக் கூற விரும்பவில்லை.
இப்படியொரு அதிர்ச்சி அநுபவம் எனக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாக ஞாபகம்.
1953ம் ஆண்டு உலகத் தமிழ் விழா யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி முன்றலில் அமைக்கப் பட்டிருந்த பிரமாண்டமான மேடையில் மிகக் கோலாகலமாக நடைபெற்று
முடிந்தது.
கல்கி டி.கே.சி, ரா. பி. சேதுப்
பிள்ளை, டாக்டர் மு.வ, "இந்து ரீனிவாசன், சோம.லெ, பெரியசாமி தூரன் போன்ற தமிழ் நாட்டுப் பிர பலங்களெல்லாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்பொழுது நான் இளைஞன். நானும் தமிழ் விழாக் காணப் போயிருந்தேன்.
மத்தியானச் சாப்பாட்டு இடை
வேளையில் மகாநாட்டு மண்டப மேடை
யில் வீற்றிருந்த டாக்டர் மு.வ. அவர் களை நண்பன் கணேசலிங்கன் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
24
கணேசலிங்கனுக்கும் டாக்டர் மு. வ. வுக்கும் அப்பொழுதிலிருந்தே இலக்கிய நட்புத் தொடர்பிருந்தது.
வாலிபக் குறும்புத்தனம் மிளிரும் வயது அது. நான் டாக்டர் மு. வ. அவர்களிடம் “கவிஞர் பாரதிதாசனைப் பற்றி - அவருடைய கவிதை மேதா விலாசம் பற்றி - என்ன கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ எனக் கேட்டு வைத்தேன்.
அதற்கு அவர் என்னை அரு கழைத்து ஒரு கையால் என் தோளைத் தொட்டு அனைத்த வணினம் ‘உணவு விடுதி ஒன்றுக்கு நல்ல பசியுடன் போகிறீர்கள். தரமான சுவை
யான உணவு வகைகளை வகை யறிந்து உண்கிறீர்கள். அத்துடன் உங்களது வயிற்றுப்பசி அடங்கிவிடும். அதை விடுத்து உணவு உட்கொண்ட பின்னர் இந்தச் சுவை நிரம்பிய உணவு வகைகளைத் தயாரித்த சமையல் காரனை ஒருதடவை பார்த்துவிட வேணி டுமெனத் தயவு செய்து எப்பொழுதுமே முயற்சிக்காதீர்கள்! இது தான் நான் சுருக்கமாகச் சொல்லும் பதிலாகும்.” என்றார், மு.வ.
இந்தப் பழைய அநுபவத்தை உள்வாங்கிக் கொணிட நான் , கமலஹாசனைச் சந்திப்பதற்கான மன விருப்பத்தை அந்தக் கணமே
விட்டொழித்து விட்டேன்.
பாண்டி பஜார் கடைத் தெருத்
திருப்பத்திலுள்ள ஒரு குளிர்பானக்
கடையில் குளிர்பானம் அருந்திக்

ES” T.
STZ கொண்டே நேரத்தைக் கடத்தினார், நண்பர் இராம. கண்ணப்பன்.
இந்த நேரக் கடத்தல் ஆரம்பத்தில் என் எண்ணத்தில் உறைக்கவில்லை.
என  ைன
பின் னர் நானே
சுதாரித்துக் கொண்டு “நீண்ட நேரமாக
இங்கு தாமதித்து விட்டோமே. கவிஞர் கோபித்துக் கொள்ள மாட்டாரா, கண்ணப்பன்?’ என நண்பரைப் பார்த்துக் கேட்டு வைத்தேன்.
‘இந்த நேரத்தைப் போக்கடிக்கும் நோக்கத்திற்கும் அடிப்படையான ஒரு காரணம் உண்டு. கவிஞர் காலையில் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க மாட்டார். இரவுகளில் பொதுக் கூட்டம் என்றும், பாடல் பதிவு என்றும் ஓயாத அலைச்சல் அவருக்கு. எனவே விடி காலையில்தான் தூங்கச் செல்வார். இது பழக்கமாகிப் போனது. அவர் எழும்பிக் குளித்து உடைமாற்றி, காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுத் தயாராக நேரம் பிடிக் கும். அதற்காகத் தானி உங்களையும் இங்கு தாமதிக்க வைத்துள்ளேன்’ என்றார் அவர்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசப் பட்டு வரும் ஊடகங்களின் கவனிப்புப் பெற்றவர்களுக்கு, ஏற்பட்டு வரும் நெருக்கடிச் சிரமங்களில் இதுவு மொன்று. சிலர் வீடுகளுக்கே வாரக்
கணக்கில் போகாமல் ஹோட்டல்
ரூம்களிலும், கார்களின் இருக்கை களிலும் இருந்து தூங்கி வழிந்து விழிப்பதுமான சூழ்நிலையில்தான்
இன்று கூட, வாழ்ந்து கொண்டிருக்
கிறார்கள்.
வெகுசனச் செல்வாக்கிற்கும், பொதுசனப் பிரபலத்திற்கும் அவர்கள் கொடுக்க வேண்டிய விலைகளில் இதுவுமொன்று.
எங்களைப் போன்றவர்களுக்கு அன்னாரது வெளிச்சப் பகுதிகள்தான் பிரகாசமாகத் தெரியும். அவர்களின் மற்ற இருண்ட பக்கங்கள் தெரியவே தெரியாது. எந்தப் பிரபலமானவனும் தன்னுடைய இருண்ட பக்கங்களைக் கூடிய வரை பொதுசனங்களின் கண்களில் படாமல் மறைத்து வாழவே இந்தச் சமூக அமைப்பில் பழக்கப் படுத்திக் கொள்வான்.
அதிலும் இலட்சக் கணக்கான பணம் ஊடாடும் சினிமாத்துறையில் ஈடுபட்டுழைப்பவர்களின் சங்கடங்கள் பற்றியும் அவர்கள் தினசரி சந்திக்கும் சிரமங்களைப் பற்றியும் எனக்கு நன்கு தெரியும்.
அந்தந்தத் துறையில் நீண்ட காலமாகத் தனது தனித்துவ முத்திரைப் பாடல வரிகளினால் தமிழ் மொழியையே புதுப்பித்துக் கொண்டு, ஊடகங்களின் தனிக் கவனத்தைப் பெற்று, மக்கள் நெஞ்சங்களில் தனது பெயரைப் பதிய வைத்துள்ள கவிஞர் முகம் கொடுத்து வரும் தினசரிச் சிரமங்களை என்னால் தெளிவாக
விளங்கிக் கொள்ள முடிந்தது.
(மீண்டும் சந்திக்கின்றேன்)

Page 15
39-வது ஆண்டு மலர் விளம்பரம் பார்த்தவுடன் அடுத்த ஆண்டு மல்லிகைக்கு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைத்து உண்மையிலேயே பெருமிதமடை கின்றேன்.
சமீபத்தில் ஓர் இலக்கிய நண்பனுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அவன் வெளியிட்ட கருத்து எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
மல்லிகை ஒன்றும் சிற்றிலக்கிய ஏடல்ல. அது சிற்றிலக்கிய ஏடெனச் சொன்னால் அது தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக வெளிவந்திருக்க முடியுமா? என்றான்.
எனக்கிது ஆச்சரியத்தைத் தந்தது.
ஒரு தனிமனிதன் தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்து இத்தனை வருட காலம் தொடர்ந்து ஓர் இலக்கிய ஏட்டை வெளியிட்டு வருவதை இப்படியானவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே உங்களது இடையறாத உழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதற்கும் வக்கணை பேசித் திருப்தியடைகின்றனர்.
இங்கும் பல சிற்றேடுகள் வெளிவந்து மடிந்து போய் விட்டன. தமிழகத்திலும் காலத்திற்குக் காலம் இலக்கியச் சிற்றேடுகள் மலர்வதும் பின்னர் மறைவதுமாகத்தான் வரலாறு படைத்துள்ளன.
உங்களுடைய வெற்றி எங்கிருந்து பிறந்தது என நான் எண்ணிப் பார்ப்பதுண்டு
கவிஞர் ஜெயபாலன் வெளிநாட்டில் ஒரு வெளிநாட்டு நண்பருக்குச் சொல்லிப் பெருமைப்பட்டாராம், "இன்று நாம் பேசப்படும் கவிஞராக மிளிரலாம். ஆனால், நாம் ஆரம்பக் காலக் குட்டிக் கவிஞராகத் திகழ்ந்த பொழுது எமது படைப்புகளைப் பிரசுரித்தது மாத்திர மல்ல, பிரசுரித்த இதழ்களைத் தெருத் தெருவாகச் சென்று விற்று வந்த மனுஷன் அந்த ஜீவா இப்படியான வரலாற்றை உருவாக்கியவர்கள் உலகத்தில் சொற்பப் பேர்தான் உண்டு அதில் மல்லிகை ஜீவாவின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்!” எனச் சொல்லிப் பெருமைப்பட்டாராம்
26
 

অৰ
நான் நினைக்கிறேன், உங்களது. மல்லிகையினதும் இலக்கியப் பெறுமதி1ே1 இதுதான்.
மல்லிகை இத்தனை காலமும் தொடர்ந்து வருவதற்கான காரணம் அது சிற் றேடல்ல, எனச் சொல்லிக் குதூகலிப்பவர்கள் மாற்றாக இந்த மண்ணில் எந்த ஏட்டைப் சொல்லிக் குதுகலிக்கப் போகின்றார்கள்?
இத்தனை ஆண்டுக் காலத்தில் உங்களது இலக்கிய வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றிருக்க லாம். பலதும் பத்துமானவர்கள் வந்து வந்து போயிருக்கலாம். நீங்கள் குழப்பமடைந்து விடாதீர்கள். உங்களது உடையைப் போலவே எப்பொழுதுமே வெள்ளையாக இருங்கள். எளிமையாகவும் இருங்கள்.
இந்த மண்ணில் உங்களுக்கென்றே ஒரு நட்புக் கூட்டமொன்று உண்டு மல்லிகை க்கென ஒரு ரசிகர் வட்டாரமொன்றும் இருக்கிறது. அதன் ஆழ அகலம் சம காலத்தில் உங்களுக்குக் கூடத் தெரியாமல் இருக்கலாம்.
தெரியவரும் காலத்தில் நீங்கள் உயி ருடன்கூட இருக்க முடியாமல் இருக்கலாம்.
எந்தப் பல்கலைக் கழகங்கள் உங்களது அயராத இலக்கிய உழைப் ை அசட்டை செய்து ஒதுக்க நினைத்தனவோ அந்தப் பல்கலைக் கழகங்களில் உங் களுடைய சுய வரலாறு மாணவர்களுக்குப் பாடப் புத்தகமாக அமையும் என் து திண்ணம்.
புத்திஜீவிகள் எனச் சொல்லப்படு
பவர்கள் அமெரிக்காவைப் பார், ஜப்பானைப்
பார், இங்கிலாந்தைப் பார் எனச் சொல்லிச் சொல்லி மேலை நாட்டினரின் திறமையை
வியப்பதை இளம் வயதில் நான் கேட்டுச்.
|
27
முறபோக்குவாதிகள் பவர்கள் தோழர் பாண்டியனின் கருத்தை
கேட்டுப் பழகிiருக்கிறேன்.
இன்று இந்த அந்நிய மண்ணில் இருந்து போசிக்கும் வேளையில் 1ாழ்ப்ாணத்தில்
கஸ்தூரியார் மூத்திர ஒழுங்கையைப் பார்.
ஜீவா என்ற மனிதனின் அசாதாரண  ைழைப்பைப் பற்றிப் கொஞ்சம் யோசித்துப் பார்!’ எனச் சொன்னால் என்ன என நான்
அடிக்கடி நிலைத்துப் பliப்பதுண்டு.
தொடருங்கள். நன்னைப் போன்றவர்கள் உங்கள் அருகில்.
எம்.நகுலேஸ்வரன் பாரிஸ் .
அக்டோபர் 2003 மல்லிகை சஞ்சிகை யில் திரு. 1. ஆட்சன் அவர்களும், திரு. மேமன் கவி அவர்களும் தோழர் தா. டாண்டியன் அவர்களின் இலக்கியச் சொற் பொழிவைப் பற்றி மிகவும் தெளிவாகவும இரத்தினச சுருக்கமாகவும் தெரிவித்திருந் தமைக்கு மிக்க நன்றி.
தோழர் பாண்டியன் அவர்கள இனறைய மனிதகுலம் முகம் கொடுக்கும் மிக முக்மிய விடயத்தையும் தமது :ெ 1ற்பொழிவில தெளிவுபடுத்தியுள்ளதாக ஆறிப்பிடப்ப்ட்டுத் தேரிவித்திருந்தார்கள். இந்த விடயம சமபந்த LI 11 : J JU LILösjö (Gl» i lui: 2)... si ontbuiid bli மிகவும் ஆழமாக சிந்தித்து மனித ஆலததை காப்பாற்ற முன்வரவேண்டும். அதைவிடுத்து 61ணக் கூறிககொள
கொச்சைப் படுத்துவது அவர்களின் சிறு பள்ளைத்தனமான செயல் மல்லிகை நல்லதோர் விளக்கம், கொடுத தமைக்கு மிக்க நன்றி.
என்பதற்g)
ஆ. முத்துலிங்கம்
பதுளை,

Page 16
ஒக்டோபர் 2003 மல்லிகையில் படிக்காதவர் படிப்பித்த பாடங்கள் என்ற தலைப்பில் உடுவை. தில்லைநடராசா எழுதிய கட்டுரையில் கோலம் போடுவதற்கு சுண்ணாம்புக் கற்களை இடித்து மாவிற்குப் பதிலாகப் பயன்படுத்தியதை தந்தையார் விளக்கியதாக எழுதியிருந்தார். உண்மையில் அரிசிமா, தானியங்களைப் பயன்படுத்தி கோலம் போடுவதன் காரணம் வாயில்லா ஜீவராசிகளின் உணவுக்குப் பயன்படும் என்ற நோக்கமே. அன்று படிக்காதவர் தனது படிக் காத தன் மையால் அவ் வாறு கூறியிருக்கலாம் . ஆனால் இன்று பல்வகையிலும் தேர்ச்சிப் பெற்ற உடுவை. தில்லை நடராசா அவர்கள் இத்தகவலை எழுதியது தவறான விடயமாகும் என நினைக்கிறேன். அவரின் தந்தையார் தனது மகளுக்கு செங்கட்டி சுண்ணக்கல்லிற்குப் பதிலாக அரிசிமா, தானியம், தேங்காய்பழ பயன்படுத்துமாறு கூறியிருந்தால் அது Ug 35 35 T g5 6) fi ug Li Ling5 g5 UTLDT 5 அமைந்திருக்கும் என நினைத்து தங்களது கவனத்திற்கு அறியத்தருகின்றேன்;
ம. அரவிந்தன் வவுனியா
மல்லிகை இதழ்களைத் தொடர்ந்து பெற்று வாசித்து வரமுடியாத சூழ்நிலையில் ஆரம்ப காலத்தில் நான் ஒதுங்கிப் போயிருந்தேன்.
இருந்தாலும் மல்லிகை ஆண்டு மலர்களை எப்படியாவது பலமுறை முயற்சி செய்து கூட பெற்றுப் படித்து மகிழ்ந்தேன்.
மல்லிகை ஆண்டு மலர்களின் உள்ளடக்கம் காலம் போகத்தான் பேசப்படும்.
D665.63
28
என் அறிவுக்கு எட்டிய வரை ஒரு சிற்றிலக்கிய ஏடு நாற்பது ஆண்டுகளைத் தொட்டு வெளிவருவது என்பது நினைத்துப் பார்த் திருக்க கூட முடியாத அரிய சாதனைகளில் ஒன்றாகும். பணம் இருந்தால் கூட, இப்படியான சாதனையைத் தொட்டிருக்க முடியாது.
இந்தக் காலகட்டத்திற்குள் எத்தனை வகை வகையான தகைமையாளர்களை அட்டைப்படமாக பிரசுரித்து ஈழத்து இலக்கிய முன்னோடிகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள். இனவாத, பிரதேச வட்டங்களைக் கடந்து நீங்கள் சிந்தித்துச் செயலாற்றி வருவதைக் கண்டு உண்மையான மலையின் மைந்தன் என்பதில் பூரிப்படைகின்றேன்.
இன்றும் இத்தனை உறுதியுடனும்
உற்சாகத்துடனும் தீர்க்கதிருஷ்டி வாய்ந்த எதிர்காலப் பார்வையுடனும் நீங்கள்
செயலாற்றி வருவதைக் கண்டு இந்த மண்ணே எதிர்காலத்தில் உங்களைப் பற்றி விதந்து பேசும். இது சர்வ நிச்சயம்.
ஒரு மல்லிகையின் பக்கங்களைக் கடந்த காலத்தில் ஒரு வகையில் ஆக்கிரமித்து, தொடர்ந்து சொந்தங் கொண்டாடி வந்தவர்களை ஒருபுறம் சற்றே ஒதுக் கி புதிய தலைமுறையினரை வளர்த்தெடுக்க முயலுங்கள். மல்லிகைப் பரம்பரை ஒன்று வருங்காலத்தில் இலக்கிய உலகில் உருவாகி வரவேண்டும் என்பது எனது பெருவிருப்பமாகும்.
வெகு கவனமாக மல்லிகையின்
செயற்பாடுகளையும் அதனது ஆக்கச்
செழுமைகளையும் கவனித்துக் கொண்டு வருபவர்களில் நானும் ஒருவன்.
ம. சற்குணநாதன்
ஹட்டன்.
 
 

குறுக்குவழி
- சி. சுதந்திரராஜா
ஒடிக்கொண்டிருந்த படம் மனத்தோடு ஒன்றிக் கொள்ளுவதாயில்லை. காலைக் காட்சியானதால் இருட்டை உருவாக்க முடியாத அரங்க அமைப்பும் அதன் வெடிப்புகளும் வெய்யில் வெளிச்சக கீற்றுகளை உள்ளேயெல்லாம் இழுத்தது. தோட்டாதரணியின் மிக லாவண்யமான கைவண்ணத்திலே கோஷ்டி கான இடுப்பு நெளிப்பு திரையின் முக்கால் பக்கத்தில் சுவையேற்றினாலும் சீலனின் மனம் எங்கேயோ அலைபாய்ந்து நிலை குலைந்து கொண்டிருந்தது.
வத்தளை முழுவதுமே வீடு வாடகை எடுத்திட வக்கில்லாமல் அல்லாடிய ஆறுமுகத்தார் கொளுத்த சீதனம் பேசி வந்திருந்தார். அதுதான் சீலனைக் குழப்பிக் கொண்டிருந்தது. திரையின் பாடலிசைகள் காது வழியே போக மறுத்து எதிர் விசையில் அடிபடுவதாயிருந்தது. பெரிய முல்லையில் புதிதாக வேலையில் சீலன் சேர்ந்த கையோடு சம்பந்தமும் நாடி வந்திருக்கிறது. ஒற்றைத் திறப்பிலே இரட்டைக் குதுாகலம் வானத்திலிருந்து கீழிறங்கி வந்தது போலத்தானிருந்தது. இருபத்தேழு வயசுக்காரன் அவனைத் தேடிப் போட்டி போட்டபடி நாகலிங்கத்தாரும் திருமணச் சம்பந்தங்கள் கொண்டு வந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது. நெற்றியிலே வழிந்து விழும் கருமயிர்க் கற்றையை நொடிக்கொரு தரம் ஒதுக்கிக் கொண்டான். ஒருவார லீவில் நின்று சுன்னாகப் பட்டினச்சந்தைக் கலகலப்பைக் பார்த்துச் சந்தோசப்பட்டவனுக்கு சம்பந்தம் சரிவரும் முனைப்பில் ஆறுமுகத்தார் பல்முனைக் கண்காணிப்புகளை ஏற்படுத்தினார்.
பெருந்தொகைப் பணத்தை முதலிட்டு சிறு வீட்டை வாடகைக்குப் பெறுவதை விட சீதனமாகவே ஒரு மாப்பிள்ளையை வாங்கிப் போடுவது புத்திசாலித்தனமான செய்கை போல ஆறுமுகத்தாருக்குப் பட்டது. நாகலிங்கத்தார் அப்படியல்ல. சுருட்டு வியாபாரி. போட்டி போடும் லாயக்கில்லாத செயல் திறனால் தோற்றுப் போவார் போலிருந்தது.
விதம் விதமான லஞ்சங்கள் கையூட்டல்கள் பழகிப் போனவர் ஆறுமுகத்தார். பெயருக்கு மதுவரித் திணைக்கள உத்தியோகத்தவர். இளக்கமாய் கருதுவதற்கு அவருக்கு தனியார்துறை ஊழியர்கள் எடுபிடி வேலைக்காரர் நிறைய உண்டு. அவரோ எட்டுமணி நேரத் திணைக்கள ஊழியத்தில் எட்டு நிமிடங்கள் கூட வேலை செய்த சரித்திரமே கிடையாது. திணைக்களமேயான காரணமேயான காரணத்தால் அவரைத் தண்டிக்க எந்த நிர்வாகியும் பிறந்ததுமில்லை. நாள் முழுக்க அயராமல் உழைக்கிறவரெல்லாம் கேவலமான பிறப்புக்கள் என்பது அவரது கணிப்பீடு. அரசு ஊழியர் மாத்திரமே வெள்ளிக் கரண்டியைச் சொண்டுகளில் வைத்தபடி பிறந்தவர்கள் என்பது அவரது நிலைப்பாட்டுச் சித்தாந்தம். சீலன் போன்றோரால் &fn-L- ஆறுமுகத்தாரின் சிந்தனைத் தடத்தை அப்படி மாற்றிடவும் முடியாது.
29

Page 17
சுழல் மின்விசிறி தேடி இருக்கையை எடுத்துக் கொண்டதால் வெளியே தணலாய்த் தகித்த உஷ்ணம் சீலனின் உடலில் படராதி ருந்தது. இதமும் கொடுத்தது. மிகத் துல்லியமான கவிதைச் சட்டங்களாகச் சலனச் சித்திரங்கள் திரையில் மாறிமாறி ஒளிர்ந்தபடி இருந்தது.
சீலன் தனியார் துறையுள்ளே தவிர்க்க முடியா திணிப்பில் நுழைந்து கொண்டவன். உத்தரிப்பை தனது தலையெழுத்தாக்கி விட்டவன். விட்டகலா வேலையில் ஆறுமாதப் பயிற்சி கழிந்திடும் வரையில் லீவின்றித் தத்தளிப்புக் காட்டி ஆறுமாதமும் கழிந்த பின்னரே லீவில் வந்தவன். அரசு வேலை தேனாக இனிப்பதில் வியப்பில்லை. சீலனுக்கு வாய்க்காத வாழ்க்கையாக ஆறு முகத்தார் வாழ்ந்து தள்ளியதே முனை மின்காந்தப் புலமாகிப் போயிருக்கிறது.
பண்டாரவளையிலுள்ள ஏழெட்டு மதுச் சாலைகளுக்கு லைசன்ஸ் வழங்காமல் சாதுரிய மாக இழுத்தடிப்புச் செய்து ஏழெட்டு லட்சம் சுருட்டிக் கொண்டவர் ஆறுமுகத்தார். மதுச் சாலை முதலாளிகள் ஆறுமுகத்தாரைச் சமாளிக்க ஏழெட்டு கணக்குப் பதிவாளர்களை நியமித்ததே மிச்சம். ஆறுமுகத்தார் தலை யெடுத்து மகளுக் கான நிதிவளத்தை நிர்ணயம் செய்து கொள்ளலானார்.
மதுச்சாலைகளின் நிர்வாகம் ஆறுமுகத்
நாரின் இறுக்கத்தால் தடுமாறியதே உண்மை.
கணக்குப் பதிவில் அமர்ந்த சில்லறை ஊழியர்கள் இருப்புச் சரக்கை மதிப்பீடு செய்வதில் மகா வ்தைப்பட்டே போனார்கள். அதுபற்றி ஆறுமுகத் தீார் அக்கறைப்பட்டதே கிடையாது. மகளின் வரதட்சனை நேர் செய்வதில் முழு ஈடுபாடும் அவருக்குள்ளே தொக்கி நின்றதால் இரவு பகலாக சரக்கை அளந்து தள்ளி மதிப்பீடு செய்தவர்களின் நரக வதை புரியவில்லை. எல்லா இடங்களிலும்
புறநடையாக சும்மா இருந்து சுகம் காணவே முடிகிறதே. கணக்குப் பதிவில் ஈடுபடும் ஊழியர் களுக்கு விசேட வேதனம் தாரை வார்ப்பதோடு மதுச்சாலை நிர்வாகம் முற்றுப் பெறுவதில்லை. கணக்கு அறிக்கை ஒன்றைத் தயார் செய்தபின் தான் லைசன்ஸ் விண்ணப்பமே செய்திடும் நடபடி முறையை அரசு தனியார் துறைமீது சிலந்தி வலை விரிப்பாக விரித்து விட்டிருக்கிறது. எல்லா வகை வரியிறுப்பையும் அதன் ஊடாக நன்கு அறுவடை செய்கிற தாற்பரியம் சிற்றுாழியர் படு கின்ற மூளைவதை தெரியாமல் பார்த்துக் கொள்ள திணைக்களம் அமைத்துச் செயற்படுகின்றது. ஆறுமுகத்தாரின் சும்மா இருந்து சுகம் காணுதல் போதாமைக்கு இலவச ரயில் இரண்டாம் வகுப்புச் சீட்டும் வாரி வழங்கி சுகப்படுத்துகின்றது. அத்தனைக்கும் மேலாக சமூக அந்தஸ்தும் அமைகின்றது. .
தேன்குழல் ஏழெட்டு வாங்கி அடுக்கியபடி தன் மகள் மேனகாவிடம் ஆறுமுகத்தார் தந்திட் டார். நல்ல இடத்தில் சம்பந்தம் அமைய வேண்டி டல் கருதி அவள் கண்டபடி சயிக்கிளில் சுற்றித் திரிவதை தடுத்திட்டார். ஆயிரம் கல்லுக் குத்துக் கள் வாங்கி அவளின் வாழ்வும் சீரழிந்திடாமல் சீரணிக் கோயில் நேர்த்திக் கடனோடும் மாப்பிள்ளை யைத் தேடினார்.
தூண்டிலின் மீனாகச் சீலன் அகப்படலா னான். சீலனின் ரசனை அறிந்து ஏழெட்டு குறுந் தகடுகள் அடுக்கும் ஒளியமைவு ஒன்றை கஷ்டப் பட்டு கட்டி முடித்த வீட்டிலே ஏற்படுத்தினார். கலியாணம் ஒப்பேறி கரைசேர்ந்த நிம்மதியையே ஒளியமைவு கொடுக்குமாற் போலிருந்தது. வீட்டுச் சுவர் வெடிப்புக்களை மறைத்து பூசி மொழுகி விட்டாலே போதும் பளிச்சென்று துலங்கும் போலிருந்தது.
குடும்பச் சிறையில் அகப்படுவார் தவிக்கிற பாடபோதத்தைத் திரையில் இதுவரை
வெளி வரத்
இப்படி நடப்பதால் புறநடையல்லத் தான் கண்டறியாத சீலன் கம்மாவே விலை போனான். என்றெல்லாம் அவரே வாதிடுவார். அவருக்குத் தான் மீளாத வழி. போகுந் திசை தெரியாத பயணம்.
30

டொக்டர். எம்.கே.முருகானந்தனின் மருத்துவ நூல் பற்றிய ஒரு பார்வை
எளடயைக் காற்று II) Lണ്ണിf
பா. இரகுவரன்
விஞ்ஞான மேதை ஜன்ஸ்ரீன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகின்றார், "விஞ்ஞான அறிவியலை ஒருசிலர் அறிந்து ஆய்வாளராகவோ, மேதையாகவோ இருப்பது ஒன்றும் பெரியவிடயமல்ல. இவற்றை சாதாரண மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைப்பதும், எழுத்தில் வடிப்பதுதான் மிகப்பெரிய சிரமமான விடயங்களாகும்.
இந்த வகையில் டொக்டர் எம்.கே.முருகானந்தன் கடந்த 20 வருடங்களாக சிரமமானதொரு பணியில் நடைமுறை வெற்றிகள் பலகண்டு மருத்துவ விஞ்ஞானத் துறைக்கு அரும்பணியாற்றி வருகின்றார்.
எடையைக் குறைத்து நலத்தைப் பேணுங்கள் என்னும் நூல் இவரின் ஒன்பதாவது மருத்துவ நூலாகும். இவரின் பல நூல்கள் பல பதிப்புகளாகி பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பெரும் பயனுற வைத்துள்ளன. தமிழகத்திலும் இவரது நூல்கள் மீள்பதிப்புக்குள்ளகியுள்ளன.
இவர் ஒரு பிரபல்யமான, சிறந்த மருத்துவராக மட்டுமன்றி, கலை இலக்கிய எழுத்தாளராகவும் இருப்பதால், மருத்துவ நூல்களை எழுதுவதில் 'திறன் மாற்றீடு இயல்பான முறையில் அவருக்கு இசைந்து கொடுக்கிறது போலும்.
நூலின் தலைப்பு, ஒவ்வொரு அத்தியாயத்தையும் தொடங்குதல், தொடருதல், முடிவு கூறல் என்பன அலாதியானவை, கலாபூர்வமானவை. எம் முன்னால் நின்று
31

Page 18
எடுத்துக் கூறுதல் முறையை இவர் கையாளுகிறார். இவரது எடுத்துக் கூறல் எடுத்த எடுப்பிலேயே நூலுடன் எம்மை ஐக்கியமாக்கும் சக்தி வாய்ந்தது. சொற் சிக்கனத்துடன் கூடிய எளிய மொழி நடையில் பிரச்சினையை எம்முன் அவிழ்த்தல் அப்பிரச்சினையின் விளைவு களை அழுத்துதல், தெம்பு ஊட்டுதல், பிரச்சினையிலிருந்து விடுபடும் மார்க்கங் களை கூறல், மேலதிக ஆலோசனைகள் வழங்கல் என்பன டொக்டர். எம். கே. முருகானந்தன் தனக்கே உரிய தனித்து வத்துடன் எழுத்தில் வடித்துள்ளார்.
உடற் பருமனையும், வயிற்றுப் பருமனையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எம்மில் வலுவாகப் பாதிக்கப் படுகின்றது. உடற் பருமனால் ஏற்படக் கூடிய ஆபத்தான் நோய்களைச் சட்டக மிட்டு எமக்கு அழுத்திக் கூறியுள்ளார். (Ljds - 40)
உடற் பருமன், எடைக்குறைப்பில் முதலாவதும் முக்கியமானதுமான நடை முறையாக உணவுமுறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றமே என வலியுறுத்தப் படுகின்றது.
கொழுப்பு, இனிப்பு உணவுகளை அதிகம் குறைத்தல்.
மாப்பொருள் உணவுகளை ஒரளவு குறைத்தல்.
நார்ப்பொருள் உணவுகளை அதிகழ் சேர்த்தல் என்பன எமது உணவு Ꭸ: மாற்ற முறையில் முக்கியமானவை.
நார்ப்பொருள் அதிகம் அடங்கிய
32
Фазбо85
உணவு வகைகள் பற்றிய விபரம் (பக் - 19,20) இவற்றைத் தெரிவு செய்து உண்ண எமக்குப் பெரும் பயனளிக்கும்.
வருமானம் அதிகரித்து, வசதிகள் பெருக, குறைந்த உடல் உழைப்பும், மேலதிக உணவும், எமது உடல், வயிறு என்பனவற்றின் பருமன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உடற் பருமனை உடல் எடையைக் காக்க அவர் மூன்று முறைகளை குறிப் பிடுகிறார்.
உணவு முறையில் மாற்றம் உடற்பயிற்சி வாழ்க்கை முறையில் மாற்றம்
எமக்கு விளக்கத்தை ஏற்படுத்த ஒவ்வொரு தலைப்புகள், உபதலைப்புகள், அட்டவணைகள், படங்கள், கோட்டுச் சித்திரங்கள் என்பவற்றை மிகுந்த பொருத்தப்பாட்டுடன் இணைத்துள்ளார்.
எமது உடல்வாகு எப்படியானது? மெலிந்தவர்களா, சாதாரண எடையுள்ள வர்களா? பருமனானவர்களா, அதீத பருமனானவர்களா என்பதை அறிந்து செயற்பட ஒருவரின் உயரத்திற்கும், நிறைக்கும் இடையிலான தொடர்பை எமக்கு ஆரம்பத்திலேயே தெளிவாக்கு கின்றார்.
2.-u | U LĎ, நிறை என்பவற்றுக் கிடையிலான உடற்திணிவுக் குறியீட்டு அட்டவணை (பக் -7) மிகுந்த பயன் அளிப்பதாகும். இந்த அட்டவணையின் விரிவாக்கம் இறுதிப் பக்கத்தில் (பக் - 71) கொடுக்கப்பட்டுள்ளது. பக். 7ஸில் உயரம் சென்றிமீற்றரிலும், பக். 71ல்

E. 665); ང་། ཁང་
உயரம் மீற்றரிலும் குறிக்கப்பட்டிருப்பது பொதுமக் களுக்கு சிரமத் தை ஏற்படுத் தண் லாம் . எலி லோரும் அளவுத் திட்ட மாற்ற முறைகளை அறிந்திருப்பார்கள் என்றும் கூறமுடியாது.
உண்ணும் உணவின் அளவைக் குறைப்பதில் பயனில்லை. உணவின் கலோரி (சக்தி)ப் பெறுமானத்தை அறிந்து, உணவுகளை தெரிவு செய்து உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையை உணர்கின்றோம். இதற்காக உணவுகளின் கலோரிக் பெறு மானங்கள் விபரமாகத் தரப்பட்டுள்ளன. (பக் - 68,6970)
விரதங்கள், உபவாசங்கள் என்பன எடையைக் குறைக்க உதவாமல் எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை விஞ்ஞான பூர்வமாக விளங்க வைக்கின்றார். தினமும் 6 தடவைகளுக்கு மேல் உணவின் சக்திப் பெறுமானத்தைக் கணக்கிற் கொண்டு உணவு உண்பது கொலஸ்ரோல் குறைப்பிற்கும், இதய நோய் தவிர்ப்பிற்கும் ஏற்றது என்பது விளங்கவைக்கப்படுகின்றது.
விலங்கு இறைச்சியுடன் தொடர்புடைய தகவல்கள் பெரும் பயனளிப்பன
• விலங்கு இறைச்சியில் அதிக புரதமும், கொழுப்பும் உள்ளது.
* கோழி போன்ற பறவை இறைச்சி
களில் கொழுப்பு மிகவும் குறைவு.
• விலங்கு இறைச்சியின் புரதத்தில் இருக்கும் லியூசின் என்ற அமினோ அமிலம் எமது தசை கரைவதை
33
தடுக்கும், கொழுப்பைக் குறைக்க உதவும்.
• லியூசின் மனித உடலில் உற்பத்தி யாவதில்லை
• லியூசின் மிருக இறைச்சி, மீன், முட்டை, பால் என்பவற்றில் அதிகமுண்டு.
இந்தக் கருத்துக்கள் முற்றாக
இறைச்சியை தவிர்த்து விடாமல்
சிறிதளவிலேனும் உள் ளெடுக் க
வேண்டிய அவசியத்தை உணர்த்து
கின்றன. அத்துடன் கொழுப்பு நீக்கிய பால் அனைவருக்கும் சிறந்த உணவாக
கொள்ள முடிகிறது.
நன்கு மெலிந்த, எலும்பும் தோலு மாய் இருக்கிறோமே என வருந்துபவர்கள் கொழுப்பு, இனிப்பு உணவுகளை அதிகம் உள்ளெடுப்பதால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி கூறியிருக்கலாம். எனினும் போதிய சக்திப் பெறுமான உணவைத் தெரிவு செய்து உடற் பயிற்சியும் தொடர்ந்தால் உடல் மெலிவை நீக்கலாம் என நூல் உணர்த்துகிறது.
உடற்பயிற்சிகள் எடைக்குறைப்பில் பத்து சதவீதமளவே உதவுகின்றது. (பக் -37) என்பது பருமனைக் குறைக்க உடற்பயிற்சி செய்வோருக்கு கவலை யூட்டும் விடயமானாலும், உடற்பயிற்சியி னால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்
எனவும், எடை அதிகமானவர் ஒழுங்காக உடற் பயிற்சி செய்வதால் அவர் நோயுறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு
என்பதும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.
பொருத்தமான உடற்பயிற்சிகள் பற்றி

Page 19
N
விளக்கியுள்ளார். உடற்பயிற்சிகள் உடற்
பருமன், வயிற்றுப் பருமன் என்பவற்றை குறைக்கின்றன என்றாலும், வயிற்றுப் பருமனைக் குறைப்பதற்குரிய விசேட உடற்பயிற்சிகள் விசேட உடற்பயிற்சிகள் சிலவற்றையும் கூறியிருக்கலாம்.
குழந்தைகளின் எடைபற்றி அதிக கவனம் செலுத்தி விளக்கமளிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் மிகவும் கவனத்திலெடுத்து குழந்தைப் பருவத்திலிருந்தே ஆரோக்கிய வாழ்வை திட்டமிட வாய்ப்பளிக்கின்றது.
பல்வேறு மருத்துவ ஆய்வாளர்க ளின் உணவுமுறைகள் பற்றிக் குறிப்பிட்டு, அதுபற்றிய தனது கருத்துக்களைக் எடுத்துக் கூறுவதில் முருகானந்தனின் தனித்துவத் தன்மை வெளிப்படுகிறது.
புரத ஊணவுகள் பற்றிக் குறிப்பிடும் போது டொக்டர். எம்.கே.முருகானந்தனின் சமூக அக்கறை, மனிதநேயம என்பவை வெளிப்படுகின்றன.
‘மேலதிகமான புரதம் உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. கழிவுப் பொருட்களாக வீணே வெளியேறுகின்றன. எனவே முட்டை, பால், இறைச்சி, மீன் போன்ற புரதம் செறிந்த உணவுகளை தேவைக்கு அதிகமாக உட்கொள்ளுவது அவசியமற்றது. இவற்றின் அளவுக்கு மீறிய உபயோகம், அவற்றின் விலை அதிகரிப்பிற்கும், பற்றாக்குறைக்கும் காரணமாகின்றது. இது ஏழை மக்களை வஞ்சிக்கும் துரோகச் செயல் என்பதனை மனதில் இருத்தல் வேண்டும். (பக் - 24)
இந்நூலில் மருத்துவ விஞ்ஞானக்
yet 636);
கலைச் சொற்களைத் தவிர்த்து சாதாரண மக்களின் வாழ்வில் புரியக் கூடிய சொற்பிரயோகங்களை பெருமளவில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு சிரமம் கொடுப்பதைத் தவிர்த்துள்ளார்.
கோட்டுச் சித்திரங்கள் உணர்வு பூர்வமான கருத்துப் புலப்பாடுகளை எம்மில் தொற்ற வைக்கின்றன. இச சித்திரங்களின் கோடுகள் காட்டுன் ஓவியத்துக்குரிய வலிமை பெற்று நூலுக்கு வலுவூட்டுகின்றன. இவற்றை வரைந்த இளந்தளிர்களான ஹவழிதா, ஹஜிலா என் போர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அட்டைப்பட அமைப்பு, நூலின் வடிவமைப்பு, எழுத்துக்களின் கனபரிமாண அளவு என்பன சிறப்புற அமைக்கப்பட்டு மீரா பதிப்பகத்தாரின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
இனமொன்றின் பண்பாட்டுப் பெறு மானம் ஆரோக்கிய வாழ்வு சம்பந்தப்பட்ட சொயற்பாடுகளிலும் தங்கியுள்ளது. டொக்டர். எம். கே. முருகானந்தனின் எழுத்துக் கள் எமது பண்பாட்டின் ஆரோக்கியத்தையும் நிமிர வைக்கின்றன.
இலக்கிய வளமும், மனிதநேயமும், மருத்துவ அறிவும், அனுபவமும் கொண்ட சிறந்த குடும்ப வைத்திய நிபுணர் என்பதை இவரது எழுத்துக்கள் நிலை நிறுத்துகின்றன. மருத்துவ வரலாற்றில் டொக்டர். எம். கே. முருகானந்தனின் பங்களிப்புகள் மகத்தான பதிவுகளாக இடம் பெற்று வருகின்றன.

வருவோம் - வாய்ப்புள்ள போதெல்லாம் வந்து வாழ வைப்போம்!
கனக சபேசன்
உங்களின் செப்டெம்பர் மாத வெளியீட்டில் “வாராதே! வர வல்லாய்.” என்று கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன். s
புலம் பெயர்ந்து வாழ்பவர்களைப் புண்படுத்தும் வகையில் அது அமைந்திருந்தது. உங்களின் சொந்தங்களும் பந்தங்களும் புலம் பெயர்ந்து வாழ்வதால் நீங்களும் அக்கட்டுரையின் தாக்கத்தை மனம் கொண்டிருப்பீர்கள்.
என்னைப் பொறுத்தவரையில் "மல்லிகை”யின் மணத்தை அக்கட்டுரை மாசுபடுத்தியிருப்பதாகவே நினைக்கிறேன். அதற்கு மறுப்பாக இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையை நடுநிலை பிறழா உங்களின் அடுத்த மலரில் வெளியிட வேண்டுகின்றேன்.
‘தூயன துணிந்த போது அது சாதனையாக மாறும் நான் கனடாவில் வாழும் ஒரு புலம் பெயர்ந்த தமிழீழ மகன். விடுமுறையி ன் பொருட்டுச் சொந்த மண்ணிற்கு வந்திருந்த போது அக் கட்டுரையை வாசித்தேன்.
இந்தக் கட்டுரையை எல்லோரும் படியுங்கள். உங்கள் வாசிப்புச் சுதந்திரத்தைப் பறிக்க நான் யார்? நான் நடுநிலையாகச் சிந்திப்பவன். 'போற்றுவார் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் ‘தீதும் நன்றும் பிறர் தரவாரா எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை. லூசன் என்ற ஆங்கிலச் சொல்லையும் நான் பயன்படுத்த விரும்பவில்லை. கண்டது கற்கப் பண்டிதன் ஆவீர்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்வது நம்மினம் என்று சொன்ன புலவர்கள் பைத்தியக்காரர்களல்ல. அப்படிச் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். அந்தப் புலவர்களின் படைப்புகளை வைத்துக் கொண்டு பட்டி மன்றங்கள் நடத்துபவர்களும் பைத்தியங்களோ! பத்திரிகைகள் படிப்பதும் அறிவுதானே! விமர்சிப்பவர்கள் அவரவர் விருப்பங்களைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றாமலிருந்தால் சரி. "கெடுகுடி சொற் கேளாது என்பது மட்டுமல்ல, சொல்வழி கோளாதவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். உங்களுக்குச் சில உண்மைகளைச் சொல்லத்தான் இதை எழுதுகின்றேன். மல்லிகை மணம் போல் இச்செய்தி உங்களை வந்தடையும் என்றும் நம்புகின்றேன்.
35

Page 20
t D6656) is
நம் ஈழமண்ணில் செம்பாடும் இருக்கு, மணற்பாடு, களிப்பாடு, கற் பாடு என்பனவும் இருக்கு. தம்பாட்டில் ஆங்காங்கே வாழ்ந்து, போரின் கெடு பிடிகளால் புலம் பெயர்ந்த நம்மவர் இன்று பல நாடுகளிலும் வாழ்வது ஒன்றும் புதிய செய்திகளல்ல. தனித்துச் செம்பாட்டு மண்ணில் வாழ்ந்தவர்கள் அப்படிச் சென்றுள்ளார்களென்று நான் சொன்னால் அது முட்டாள்தனமாகும்.
வாரிதியார் ஏன் அப்படிக் குத்திக்
காட்டுகிறார்?
புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் தாம்
வாழும் நாடுகளின் தட்ப, வெப்ப நிலை
களுக்கேற்பவும், கலை பண்பாடு களுக்கு ஏற்பவும், அதே நேரம் தங்கள் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமலும் வாழ வேண்டியுள்ளது. இந்த வகையில் ஆங் காங் கே வாழும் தமிழர், தமிழையோ, தம் பண்பாடுகளையோ மறந்து விடாமல் இருக்கிறார்கள் என்பதை அந்த நாடுகளுக்கு வந்து மீண்ட நம்மவர் அறிவர். அதுமட்டுமன்றி அவர்கள் விதந்துரைத்துமுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வநீத எம்மவரின் குழந்தையொன்று வாழைப் பழத்தை ‘உரித்துத் தா” என்பதற்குப் பதிலாகக் “கழட்டித் தா” என்று கேட்டு விட்டதாம். ஊர் சிரித்ததாம், மாமா பதறி அடித்தாராம் என்பதெல்லாம் கூட்டத்தில் கைதட்டு வாங்குவதற்காக வேண்டுமானால் கூறலாம். ஆனால் மடல் விரித்து மக்குத்தனமாக உழறக் கூடாது. ‘கல்லா மழலை கலந்து கொஞ்சும் சொல்லால் உருக்கும் சுவையை அறியாத கட்டைப் பிரம்மச் சாரிகளுக்கு மழலைச் சொல்லின் சுவை எப்படிப் புரியப் போகிறது. “கழட்டித் தாருங்கள்’ என்பதும் தமிழ்ச்
சொல்தானே! ஐயா! (t)பொறின் வாரிசு
என்பதை பிறநாட்டு வாரிசு என்று நீங்கள் சொல்லியிருக்கலாமே! சீதையைப் பற்றிய நினைவிலேயே இருப்பதால் ‘திகைத்தனை போலும் சிந்தை”
வெளிநாட்டில் இருக்கும் தமிழீழ மக்கள் தமிழுக்கு எதிரானவர்கள் என்று தப்புக்கணக்குப் போடாதீர்கள். ‘விடிய விடிய இராமர் கதையும், ஆடல் வேள்விகளும் நடத்திப் பட்டணத்தில் டொல்லாப் போட்டுக் கொட்டி முழக்கிக் கோடி கோடியாகக் குவிப்பவர்களுக்கு எங்களைப் பார்த்தால் குறும்பாகத்தான் இருக்கும். நாங்கள் "தேமதுரத் தமி ழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்” அடுத்த சந்ததி இதனை நிச்சயம் அனுபவிக்கும். உங்களுக்குச் சந்ததியும் இருக்காதே. அதுவும் நல்லது தான.
நாங்கள் புலம் பெயர்ந்து சென்ற காரணங்கள் வெளிப்படையான மட்டு மல்ல. மறுக்கப்பட முடியாதவையுங்கூட. நீங்கள் அவற்றைக் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். 'பாம்பிற்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டி ஈஸ்வரன் கிருபையில் இருந்து கொண்டு ‘கருடா சவுக்கியமா’ என்று கேட்கிறீர் கள். கொழும்புத் தமிழர்களை ஏமாற்றி வேடம் போட்டுச் சூடம் கொழுத்தும் பெரிய பூசாரி ஆகிவிட்டீர்கள். 'ஆலை இல் லா ஊருக்கு இலுப்பைப் பூச் சக்கரை ஆகிவிட்டிகள்.
நீங்களும் புலம் பெயர்ந்திருந்தால் குடுமியை வெட்டிக் கோட்டணிந்து 'குடிகுடி ஈசற்கு ஆட்கொள்ளப்படாமல் போயிருப்பீர்கள். உங்களைப் போன்ற தமிழர்களை விட பிறநாட்டவர்கள்
| பெருந்தன்மையுடையவர்களே. எங்கள்
36
கள்ளங்கள் விலை போகவில்லை.

ICCE
உள்ளங்கள்தான் உந்துசக்தியாக
இருந்தன.
‘தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க் கோர் குண முண்டு என்பதை நாம் காட்டியதால் எம்மை நம்பி எமக்குக் கை கொடுத்தார் கள் வெளிநாட்டவர்கள். வெளிநாடு களில் வாழும் தமிழர்களைவிடத் தலை நகர் கொழும்பில் வாழும் உங்களைப் போன்றவர்களுக்குத்தான் கள்ளங்கள் விலை போகின்றன. யாழ்ப்பாணத்தவ ரால் விரட்டப்பட்டு. இனிமேல் மேடை யேறக் கூடாது என்று சொன்னதால், பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடந்து விட்டுக் கொழும்பிற்குச் சென்று சொற் சிலம்பமாடிப் பொழுதுபோக்கிற்காக வாழும் மேற்தரமட்ட மேலோங்கி களுக்குப் பூச்சாண்டி காட்டிப் பொருள் சேர்க்கிறீர்கள்.
நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் களை நாடிப் பிச்சைப் பத்திரமேந்தி அந்தவிழா, இந்தவிழாவிற்கென்று பணம் சேகரித்ததை மறந்து விட்டீர்களா? இது ஒரு பரதேசி வாழ்வல்லவா? நீங்கள் எங்களைப் பகைத்துக் கொள்ளTதிருப் பதற்காகச் சில இடங்களில் பூசி மெழுகியும் இருக்கின்றீர்கள். பச்சோந்தி கள் இடத்திற்கிடம் நிறம் மாறுபவை தானே. நீங்கள் ஒரு பாசாங்குக்காரன். ஈழத் தமிழினத்திற்கு எழுச்சி ஏற் படுத்திய இயக்கத்தைப் பற்றிச் சொல் வதற்கு உங்களுக்கு என்ன அருகதை யிருக்கிறது? எங்களுக்குச் சுயபுத்தி இருக்கிறது. உங்களுக்கு மேல் அனு தாபப்படுகின்றோம். கூட்டம் கூட்டுவ தும், ஆட்டம் ஆடுவதும், நோட்டம் பார்த்து நோட்டுச் சேர்ப்பதும் ஆத்தா தவன் செய்யும் செயல்.
யாழ் இளைஞர்கள்தான் வெளி
37
நாடு செல்கின்றார்களென்றில்லை. எல்லா இடத்திலிருந்தும் செல்கிறார்கள் தானே! உங்களோடு இருந்த கம்பன் கழக உறுப்பினர்கள் எத்தனைபேர் சென்றுவிட்டார்கள்? வஞ்சம் தீர்க்காமல் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் புகைப்படம் எடுப்பதில்லையா? உளடகவியலாளர்களுக்குப் பின்னால் வால்பிடித்துப் படங்களெடுத்து, பத்திரி கைகளில் கொட்டை எழுத்தில் போடச் சொல்வதுதான் உங்கள் வழக்க மாச்சே! நாங்கள் படமெடுத்தால் ஏன் உங்களுக்கு வயிறு எரிகிறது?
யாழ் மண்ணின் அடிப்படையை நாங்கள் ஆட்டங்காண வைக்கவில்லை. ஆனால் அதன் அன்பை ஆழமாக்கித் தென்பு தர வைத்திருக்கின்றேTம் என்பதுதான் உண்மை. பணம் பத்தும் செய்யும்' என்பது மட்டுமல்ல, அது பாதாளம் மட்டும் பாயும், பலவழிகளி லும் பணம் சேர்த்தும் பல்லிளித்தும், பல்லவி பாடியும் கோடி ரூபாவிற்குக்
கொழும்பில் விடு வாங்கியுள்ளிர்கள். s9 gól6č 61 (5 856If I aň GI ) 1) | | 5331 tň
எத்தனை வீதமென்று கனக் குப் போட்டுப் பாருங்கள் தெரியும். எந்த விழாவிற்கு நீங்கள் கணக்குக் காட்டி 63f - óf '? GN. 6 of C3 Lc 6, 6 "bü , öfl - Lư வராதீர்கள். இது முதலும் கடைசியுமான ыіј у іizј,60одь!
பிடி குடிப்பதைவிட நீங்கள் செய்த, செய்கின்ற தப்புத்தாளங்கள் பருபாதக மானவை. களவில் ஒழுகி இளககளில் பழகுபவர்களைவி - பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவது நாகரிகம்’தானே. நாங்கள் நயக்கத்தக்க நாகரிகம் பேணு வர்களாவோம். ‘புதியன கண்ட போதும் I 160pu16) h60) spi, H, uDT (SL-ff Lf யாழ்ப்பாணப் பெடியன்கள் விசரன்களு மல்ல, நீங்கள், புத்திசாலியுமல்ல.

Page 21
Se og 6663)
இப்பவும் அவர்கள் சாதனை வீரர்கள் தான். வெளிநாடுகளில் படிக்கும் யாழ்ப் பாணப் பெடியன்களின் சாதனைகளைப் பார்த்து வெளிநாட்டவரே அசந்து போய் விடுகிறார்களென்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா? நீங்கள் கம்பன் குவித்த கவிதைகளை மட்டும் கிழறி உழறுபவர்தானே! ஏதோ அதைமட்டும் இட்டு விட்டுக் கொக்கரிக்கிறீர்கள்.
சாணி விற்று, நகை விற்று, கடன் பட்டு நாங்கள் வெளிநாடுகளுக்குப் போகப் பட்டபாடு உங்களுக்குத் தெரிந்திருந்தும், எம்மை நக்கலடிக் கிறீர்கள்! இந்தப் பதினைந்து, இருபது ஆண்டுகளில், எம் இனபந்துக்களுக்கும், ஆலயங்களுக்கும், அறநிலையங் களுக்கும் எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கின்றோம். இது அவரவருக் குத்தான் தெரியும். உங்கள் உற வினராய் வெளிநாட்டிலிருப்பவர்கள் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர் களுக்கும் செய்தவவை கொஞ்ச நஞ்ச மல் ல. 'கொன்றயைன இனி னா செய்யினும் ஒருவர் செய்த ஒன்று நன்றுள்ளக் கெடும்' என்றார் வள்ளுவர். இதையும் மறந்து விடாதீர்கள். உங்கள் கட்டுரையை அவர்கள் படித்தால் கொதித்தெழுவார்கள். ‘குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பென்று. எனவே ' குறுமு னி டி வேலை பார்க்காதீர்.
தவப் பயனால் நீங்கள் வந்து எங்களைப் பார்த்தது அவப்பயணாய்ப் போய் விட்டதோ, 'ஆத்மீகவாதி’ என்று நீங்களே உங்களுக்குப் பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஆத்மீகத் தின் வரைவிலக்கணத்தைச் சற்றுக் கம்பனிடம் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஊரில் ஏட்டிக்குப் போட்டியாகக் கோயில் கள் கட்டியதை நீங்கள்
38
கேள்விப்பட்டதில்லையா? எத்தனை அறங்காவலர்கள் உங்கள் ஊரில் நீதிமன்றங்களில் நிற்கிறார்கள். நீங்கள் தான் ஊரை மறந்து வெகுநாட்க ளாச்சே. வேற்றுமைகளை விதைக் காதீர். அவற்றை நீங்களே அறுக்க வேண்டி வரும். "தூயவன் இராமன் கதையைச் சொல்லித் திரியும் நீங்கள் வாய்மையையும் மரபையும் காக்க வேண்டுமல்லவா? உண்மையான ஆத் மீகவாதி போல் எழுதப் பழகுங்கள். கடவுள் எங்கும் இருப்பார். அவரைப் பார்த்து நீங்கள் ஏன் அழுதீர்கள். உங்கள் தண்டலில் அதிகம் சேர வில்லையோ! -
எங்கள் வீட்டு நிலை நன்றாகத் தானிருக்கிறது. கம்பனை ஈடுவைத்துக் கடன் பட்டுக் காக்க பிடிக்கும் கம்சன் களாக நாங்களில்லை. எங்கள் கடனை நாங்களே அடைப்போம். நீங்கள் கவலைப்படாதீர்கள். பொறாமையில் புழுங்காதீர்கள். அவிந்து போவீர்கள். எங்களுக்குக் கடமைகள்தான் முதன்மை யானது. களியாட்டம் பின்னர்தான் உண்டு. அதுதான் எங்கள் பூட்கை. ‘எங்கள் குழந்தைகள் விபத்திலே பிறந்தவர்கள்’ என்று எப்படி வாய் கூசாமல் சொன்னீர்கள், கள்ளத்தில் பூத்த மலர்கள் போன்றோர்தான் விபத் திலே பிறந்தவர்கள். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள். நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பாருங்கள் ஐயா! எங்களுக்குப் போகம் தேவையில்லை. போகம் எங்களோடு தான் இருக்கிறது. போகத்தில் புரண்டு கொண்டிருக்கும் உங்களை ரோகம் துரத்தத் தொடங்கிய பின்னும1 உங்களுக்கு இன்னும் புத்தி வர வில்லை. அட இராமா! மன்னித்துவிடு இவரை.
தலைநகர் கொழும்பில் நீங்கள்

By 666):
l
அடிக்கும் குத்துக்கரணங்களைவிட விட உங்களின் வசூல்தானே அதிகம்.
எங்களுடைய கூத்து என்று நீங்கள் கூறுவது பெரிதல்ல. படலையில் பாது காப்பிற்கு ஆளும், பத்திரிகையாளரின் அனுசரணையும் வைத்துக் கொண்டு நித்தம் நித்தம் பயப்பீதியோடு வாழு பவர்களல்ல நாம். தமிழர் தமிழராகத் தான் வாழுகின்றோம். ‘நாம் யார்க்கும் குடியல்லோம்.” மலர்தலும் கூம்பலு மின்றி மனநிறைவோடுதான் இருக் கின்றோம்.
யார் அர்தநாரீஸ் வரர் என்று நிலைக்கண்ணாடிக்கு முன் போய் நின்று நீங்களே ஒருதரம் உங்களைப் பாருங்கள். மேலே பெண் - கீழே ஆண். புரிகிறதா? கொழும்புக் கடற்கரை ஓரங்களுக்கு அடிக் கடி சென்று பார்க்கும் நீங்கள், இங்குள்ளவர்களை விட நவநாகரிகப் பெண் களைப் பார்த்திருப்பீர்கள்!
நாளாந்தம் நீங்கள் எத்தனை ஆங்கில, சிங்கள சொற்களை உதிர்க் கிறீர்கள். உங்களுடைய கட்டுரை யையே திரும்பப் படித்துப் பாருங்கள். சிங்களவருக்குப் பயந்து தமிழனென்று காட்டிக் கொள்ளாமல் நீங்கள் இருந்த நாட்கள் எத்தனை என்று எண்ணிப் பாருங்கள். எங்களைப் பார்த்து ஏன் குழம்பினிர்கள்? 1
போர் நிறுத்தத்தால் நாங்கள் சொந்த மண்ணிற்கு வந்தது உண்மை தான். இல்லையானால் நீங்களும் காக்கை வன்னியராய் மாறியிருப்பீர்கள். போர் நிறுத் தத்தின் பின் தானே நீங்களும் யாழ்ப்பாணம் போனிர்கள். போனாலும் நீங்கள் பேச்சு மூச்சுக் காட்ட முடியாதே குடும்பி தப்பியது குல தெய்வத்தின் புண்ணியம்.
நாங்கள் உழைக்கும் உழைப்பை
அந்த வசூலிற்தானே உங்கள் குடும்பம் கொலுவிருக்கிறது. மச் சாண் மார், பெடியன்கள், உறவினர்களுக்கு பட்டம் பதவிகள் பெற்றுக் கொடுத்தீர்கள்.
நீங்கள் உங்களை விளம்பரப்படுத்து
வதைவிடவா நாங்கள் எங்களை விளம் பரப்படுத்துகின்றோம். கேவலப் புத்தி யால் புரியும் படிப்பினாலும், ஏதுவான விவாதங்கள் புரிவதனாலும் , கெளரவங்கள் பெறுவதனாலும் ஒருவிதப் பயனுமில்லை. இவை மற்றவர்கள் மனதில் குழப்பத்தைத் தருமேயன்றித் தெளிவு காண முடியாது. ஊடகங்க ளும் சிலவேளைகளில் உங்களோடு ஒத்துாதுகின்றன. சுதி பிழைத்தால் உங்களுக்குச் சுழுக்குப் பிடித்து மாட்டியுங் கொள்கிறீர்கள்.
‘நண்பன் ஒருவன் குற்றம் சொல்லு கிறான்' என்று ஏன் பிறர் மேல் பழி போடுகின்றிர்கள். அவனி உங்களுக்குள்ளே தானே உறங்கு கின்றான். ஆபத்து வரும் போது 'ஆபத்வாந்தவனாக' அவன் விழித்துக் கொள்ளுகின்றான்.
நகைச்சுவைாயகத்தான் எழுதி யிருக்கிறீர்கள். 'நக்கிற நாய்க்கு செக் கென்ன, சிவலிங் கமெண் ன
நன்றாகத் தான் எங்களை நக்கி
யிருக்கிறீர்கள். நாத்தமும் பேறி யிருக்குமே. ‘ஆறாதே நாவினாற் சுட்ட வடு. நக்கும் போது சில இடங்களில் விக்கியும் இருக்கிறீர்கள். எங்களிடம் வந்தால் இனி நீங்கள் நாற நாறக் கக்க வேண்டித்தான் வரும்.
ஆன்மீகவாதி என்றும் கூறும் நீங்கள், வெளிநாட்டிலிருந்து வந்த பெண்களின் உடையலங்காரங்களி னுாடே அவயங்களையெல்லாம் அக்கு வேறு ஆணிவேராக இரசித்த அலங்

Page 22
5 yet gees
مربع
கோலங்களை எழுதித்தள்ளியிருக்கிறீர் களே! கண்டறியாதன கண்ட போது சூரிய நமஸ்காரம் எதற்கோ! நாங்கள் கொண்டுவந்த பொதிகளையும் பார்த் திருக்கிறீர்கள். பாவம் உங்களுக் கொன்றும் கொண்டு வருவதற்கு அளவு போதாமலிருக்கும். அதனால் இளவு கொண்டாடியிருக்கிறீர்கள். *அருண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் தானே. ஏதாவது 'சில்லறையாவது கிடைத்திருக்குமே. "மல்லிகை”யின் மணத்தைக் கெட வைத்த உங்கள் துர்நாற்றக் கட்டுரை யைப் புலம் பெயர்ந்தவர்கள் வாசிக்க வாசிக்க நன்றாக இன்னும் வாங்கிக் கட்டுவீர்கள். வாங்கிக் கட்டுவது உங்களுக்குக் கைவந்த கலைதானே.
‘சால்பு' என்ற சொல்லைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
'பிறர் தீமை சொல்லா நல்த்தது சால்பு என்பதைப் புரிந்து கொள்ளுங் கள். அதுதான் அறம். உங்கள் குற்றங் களைச் சொல்ல வேண்டிய தேவையும், அதனை மற்றவர்கள் அறிய வேண்டிய தேவையும் எனக்கு இருப்பதால் இங்கு நான் சொல்லியிருக்கிறேன்.
‘அன்பு, நாண், ஒப்புரவு, கண் ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்து டனும் நின்று சொல்லியிருக்கிறேன்.
நீங்கள் கொட்டியிருப்பதெல்லாம் அங்கலாய்ப்புகளும், கையாலாகாத் தனங்களும்தான். பனியால் நனைந்து, வெயிலால் உலர்ந்து நாங்கள் பாடு பட்டு உழைப்பதை அறியும் எங்கள்
மக்கள் எங்களைப் புரிந்துணர்வோடும்,
பரிந்துணர்வோடும் தானி பார்க் கின்றார்கள். ஏதோ அதுகள் தருகுது களோ இல்லையோ, சுகமாக இருக் கட்டும் என்றுதான் எங்களை ஆசீர் வதிக்கிறார்கள். உங்கள் ஆசீர்
AO
வாதங்களை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. நீங்கள் அதற்குத் தகுதி up D6hi T.
உங்களுடைய எழுத்துக்களை அவர்கள் வாசித்தால், கொள்ளையில் போவான், கோதாரியில போவான், அம்மை விளையாட்டில போவான், அறுப்பான், இப்படி எங்கள் பிள்ளை களைப் பற்றி எழுதியிருக்கிறானே என்றதான் சொல்லுவார்கள்.
எழுதுகிறதெல்லாம் எழுதிவிட்டு, “உங்களை இழிவுபடுத்த நான் இக் கட்டுரையை எழுதவில்லை” என்று கூறி வம்பை விலை கொடுத்து நீங்கள்தான் வாங்கியிருக்கிறீர்கள். உண்மையை நீங்கள்தான் தரிசிக்க வேண்டும்.
எங்களை '' வாராதே! வர வல்லாய்.” என்று சொல்ல நீங்கள் யார்? கம்பனின் கவியைப் பிழையாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் வரிகளுக்கிடையாக அவற்றை வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள். “மீண்டும் வாருங்கள். வாழ்க வளமெல்லாம் பெற்று” என்று கூறித்தான் எங்களை வழியனுப்புகிறார்கள் எங்கள் மக்கள்.
ஒன்று மட்டும் உங்களுக்கு உறுதி யாகச் சொல்லி வைக்க விரும்புகிறேன். எங்கள் செலவில் விழாக்கள் நடத்த இனிமேல் எங்களிடம் ‘வாராதே! வர வலி லாயப் . . . . ’ என்பதுவே அச் செய்தியாகும்.
* தக்கது இன்னது தகாதது இன்னது என ஒக்க உன்னலராயின் உயர்ள்துள மக்களும் விலங்கே’’
- கம்பன்.

ஒரு பிரதியின்
முனுைமுனுைப்புக்கள்
- மேமன் கவி 1. ஈழத்து தமிழ் சினிமாத்துறையும் அதையிட்ட அக்கறையும்.
ஈழத்து தமிழ் சினிமாத்துறையின் வளர்ச்சியைப் பற்றிய அக்கறை மிகுந்த குரல்கள் அடிக்கடி நமது வெகுசனத் தொடர்புத்துறையில் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. அத்தகைய அக்கறை தேவையான ஒன்று என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், சினிமா என்றதும் நம்மவர்களின் மனக்கண்ணில் தோன்றுவது என்னவோ நடிகர் நடிகைகளின் கோடிக்கணக்கான வருமானத்தில் தங்கி இருக்கும் பெரும் தொழிற்துறையாக இந்தியாவில் வளர்ச்சியடைந்து இருக்கும் சினிமா என்பதுதான் உண்மை. அந்த எண்ணத்தின் காரணமாகத்தான் ஈழத்து தமிழ் சினிமாத்துறை வளர்ச்சி அடையவில்லை என்பதுதான் எமது எண்ணம்.
ஈழத்து தமிழ் சினிமா கடந்த காலங்களில் வளர்ச்சி அடையாதததற்கு மேற்சொன்ன காரணத்துடன் ஈழத்துக்குரிய தமிழ் சினிமா என அடையாளப்படுத்தும் வகையில் அது வளர்ச்சி அடையாததற்கு மேலும் சில விடயங்களும் நமக்குப் புலப்படுகின்றன. கடந்த காலங்களில் ஈழத்து தமிழ் மக்கள் மீது இருந்த சமூக, அரசியல் கெடுபிடிகளும் உரிமை சார்ந்த பிரச்சினைகளும் ஈழத்து தமிழ் சினிமா வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தடைக் காரணியாக இருப்பினும் கூட, நமது சகோதர மொழியான சிங்கள மொழிச் சூழலில், அம்மொழிச் சூழலில் வரும் வணிக சினிமாக்களைத் தவிர்த்துப் பார்க்குமிடத்து சினிமா என்ற ஊடகத்தைப் பற்றி இருந்த அளவான பிரக்ஞை ஈழத்தில் கடந்த காலங்களில், தமிழ் சினிமாத்துறையில் ஈடுபட்டவர்களுக்கு இருக்கவில்லை என்பதும் ஒத்துக்கொள்ள வேண்டிய ஓர் உண்மையாகும் அதனால்தான் தேசீய, சர்வதேசீய மட்டத்தில் சிங்கள மொழியிலான ஈழத்துக்குரிய சினிமா எனும் வகையில் உருவாக்கப்பட்ட சிங்கள சினிமா படைப்புக்கள் பெற்ற வரவேற்பையும், அவதானத்தையும் ஈழத்து தமிழ் சினிமா முயற்சிகள் பெறமுடியாமல் போனது. ஓரளவுக்கு 车1

Page 23
PS ty g6SG)is
ஆறுதல் அளித்த அபூர்வமான நிகழ்வுகளாக பொன்மணியையும், வாடைக்காற்றையும் சொல்லலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஈழத்துக் குரிய தமிழ் சினிமா என அடையாளப்படுத்தும் வகையிலான முன்னிலை முயற்சிகளுக்கான நம்பிக்கை கீற்றுக்கள் வடபகுதியில் நடக்கும் சமீபகால சினிமா முயற்சிகளில் தெரிகின்றன.
எதிர்காலத்தில், ஈழத்து தமிழ் சினிமாத் துறை திருப்திகரமான வளர்ச்சியினை அடைய வேண்டுமானால் முதற்கட்டமாக, நவீன சினிமாவைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்க, அதற்கான தேடலுக்கும், பரிச்சியத் திற்குமான ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும். சர்வதேசீயத் தளத்திலும், சிங்கள மொழிச் சூழலில் உருவாக்கப்படும் சிறப்பான சினிமாக்கள் பரவலாக மக்களினதும், தமிழ் சினிமாத்துறையைச் சார்ந்தவர்க ளினதும் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். அதே வேளை, பிரமாண்டமான சினிமாத் தயாரிப்புக் களின் கனவுகளில் மிதக்காமல், குறுந்திரைப் படங்கள், ஆவணப் படங்கள் போன்ற வகை யிலான முயற்சிகளில், நமது ஈழத்து தமிழ் சினிமா முயற்சியாளர்கள் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் சினிமா என்ற ஊடகத்தின் தனித்தன்மையை அதாவது நாடகத்திலி ருந்து சினிமா எவ்வாறு வேறுபடுகிறது. அந்த ஊடகம் தன்னளவில் எவ்வாறு மொழியாக செயற்படுகிறது போன்ற அறிவுத் தெளிவுகளை ஏற்படுத்த வேண்டும்.
அதைவிட்டு, இந்தியாவில் பெரும் தொழிற்துறையாக சார்ந்த சினிமா மனங்
կ. 2
கொண்டு ஈழத்து தமிழ் சினிமாக்களை உரு வாக்க நாம் முயற்சி செய்து கொண்டிருந் தோமானால், நிச்சயமாக ஒரு பொழுதும் ஈழத்து தமிழ் சினிமா வளர்ச்சி அடையாது என்பது திண்ணம்.
2. நினைவுகூரும் வேளையில்.
ஈழவாணனை
ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகில் நூற்றுக்கணக்கான ஆற்றல் வாய்ந்த படைப்பாளிகள் கலைஞர்கள் வாழ்ந்து மறைந்து போய் இருக்கிறார்கள். சரீர ரீதியாக அவர்கள் மறைந்து போனாலும், அவர்களது தனித்துவ ஆக்கங்களால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும், இன்று எழுதப்படும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளில் சமகாலத்தில் பங்களிப்புச் செய்து கொண்டிருப்பவர்களில் பட்டியல் கொடுக்கப்படுகிறதே ஒழிய, ஏனோ கடந்த காலத்தில் பணி செய்தவர்களை நாம் மறந்து விடுகின்றோம். அவர்கள் இல்லை என்றால் சமகாலத்தில் கலை இலக்கியப் பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர்கள் இல்லை என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.
அவ்வாறான ஒருவராக கவிஞர் ஈழவாணனைக் குறிப்பிடலாம். அவர் மறைந்த காலகட்டத்தில் மல்லிகை அவரை அட்டையில் போட்டு கெளரவித்தது.
70களில் ஈழத்து புதுக்கவிதை பற்றிய பிரக்ஞையும் ஈடுபாடும் ஏற்பட ஈழவாணன்
நடாத்திய ‘அக்னி சஞ்சிகை பெரும் பங்கு
வகித்தது. தினபதி பத்திரிகையில் அவர்

VANS
பணியாற்றிய காலத்தில் பல புதுக் கவிதை பட்டியலில் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள்.
யாளர்களை உருவாக்குவதில் திரைக்குப் பின்னால் நின்று உதவினார். நவீன ஓவியம், சினிமா, இசை, கவிதை இப்படியாக பல்துறைச் சார்ந்ா தேடலும், பரிச்சயமும் அவருக்கு நிறைய இருந்தது.
அதேவேளை, ஈழத்து மரபுக் கவிதை வளர்ச்சியில் அவரது படைப்புக்கள் தனித்துவமான போக்கு கொண்டவையாக இருந்தன. அதற்கு அவரது ‘அக்கினிப் பூக்கள் தொகுதியினைச் சொல்லலாம். அவர் ஒரு மனோரதியப் படைப்பாளி என்ற ஓர் அடையாளமும் இருந்தது.
பணம், புகழ், விருதுகள் போன்ற ஆடம்பரங்கள் கெளரவங்களைப் பற்றிய எந்த விதமான எதிர்பார்ப்புகளுமின்றி மிகவும் அடக்கமாக வாழ்ந்தவர். சதா நேரமும் கலா சிந்தனையில் சஞ்சாரித்துக் கொண்டே இருப்பார். ஈழவாணன் போன்ற படைப்பாளி களை இன்றைய நமது புதிய படைப்பாளிகள் பரவலாக அறிய நாம் வழி செய்ய வேண்டும். கவிஞர் ஈழவாணன் அவர்களை நினைவுக் கூரும் இவ்வேளை அவரைப் போன்ற பல படைப்பாளிகளை நாம் மறந்து போயிருக் கின்றோம். அவர்களை அப்படைப்பாளி களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி அவர்களை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
அந்த வகையில்:
கவிஞர் பசுபதி, கவிஞர் சு. அமிர்த நாதர், சிறுகதையாளர் நகுலன் இப்படி யாக நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய
43
3. ஆச்சிகளைப் பற்றிய
கவிதைகள்
ஏனோ தெரியவில்லை சமீப காலமாக 'ஆச்சிகளைப் பற்றிய கவிதைகள் அடிக்கடி படிக்கக் கிடைக்கின்றன.அவ்வாறு படித்த ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வகை யாக "ஆச்சிகளை நமக்கு படம் பிடித்துக் காட்டி அந்த ஆச்சிகளை நம் மனதில் உட்கார வைத்து இருக்கின்றன.
அவ்வாறான ஒரு கவிதையாக மல்லிகை ஒக்டோபர் இதழில் இடம்பெற்ற ஆலையூரான் எழுதிய 'பார்வதி ஆச்சி எனும் கவிதை அமைந்தது. ஆலையூரான் கண்ட ஆச்சியைப் படித்த வேளை, சமீபத்தில் படித்த இன்னொரு ஆச்சியினைப் பற்றிய கவிதை நினைவுக்கு வந்தது.
2002ஆம் ஆண்டு வெளிவந்த
நெடுந்தீவு மகேஷ் எழுதிய 'மனிதனைத் தேடி' என்னும் தொகுதியில் அமைந்து
இருக்கும் ஒரு கவிதை.
அக்கவிதைப் பற்றி சொல்வதற்கு முன்னதாக நெடுந்தீவு மகேஷின் அத் தொகுதிக்கான அட்டைப்படத்தைப் பற்றி கட்டாயம் நான் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரியில் பணிபுரியும் ம. பார்த்தீபன் அவர் களால் செதுக்கப்பட்ட சவர்க்காரச் சிற்பங்கள் அட்டைப்படமாக அலங்காரம் செய்துள்ளன. வித்தியாசமான முயற்சி.

Page 24
பஜ்ருகை
நாம் அறிந்தவரை சவர்க்காரச் சிற்பங்கள் ஒரு புத்தகத்தின் அட்டைப்படமாகி இருப்பது தமிழின் முதற் முயற்சி என்றே சொல்லலாம். −
சிற்பக் கலைக்கான இன்னுமொரு மூலப்பொருளாக சவர்க்காரம் பரிமாணம் பெற்று இருக்கிறது என்ற செய்தியினையும் அந்த அட்டைப்படம் சொன்னது. இத்தகைய புதுமை செய்த நெடுந்தீவு மகேஷ~ம் பார்த்தீபனும் பாராட்டுக்குரியவர்கள்.
சரி இனி நெடுந் தீவு மகேஷின் ஆச்சியைப் பற்றிய அந்த கவிதைக்கு வருகிறேன்.
அக்கவிதையின் தலைப்பு ஆச்சியின் திறப்புக் கோர்வை'
"ஆச்சி திறப்புக் கோர்வை அதிலோ மிகக் கவனம் மூச்சிருக்கும் வரை அதனை மூடி வைத்துக் காத்திருந்து ஆச்சி திறப்புக் கோர்வை அதிலோ மிகக் கவனம்
பூட்டிப் பலமுறைதன் பூசை அறைக் கதவை தள்ளி இழுத்துச் சரிபார்த்து வந்த கதை சொல்லிப் பெருமையுறும் ஆச்சி திறப்புக் கோர்வை அதிலோ மிகக் கவனம்
மூச்சு விடவில்லை மூடி வைத்த வீடு அங்கே காணாமற் போன கதை கடைசிவரை இங்கெவரும் மூச்சு விடவில்லை ஆச்சி திறப்புக் கோர்வை அதிலோ மிகக் கவனம’
இக்கவிதை வெறும் ஆச்சியைப் பற்றிய கவிதை அல்ல. அதற்கு மேலாக அக்கவிதை நமது இருப்பின் கதை இல்லை. காணாமல் போன நமது இருப்பின் கதையும் கூட.
|/~ പ്ര
4V محے
N
N
N
N
N
N
N
N
ܓܢ ܠܪ
N
மல்லிகையின் வளர்ச்சிக்குத் தார்மீக ரீதியாக உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் உங்களிடம் இயல்
பாகவே தோன்றுமானால் தயவுசெய்து
வெளியfடுகளைத் தொடர்நீது வாங்கி
பந்தல ஆதரியுங்கள்.
* மல்லிகைப்
- ஆசிரியர்
44

QLIG0öi GIGöigpI QafTI6üöC6QITILDI2
- சந்திரகாந்தா முருகானந்தன்
அக்டோபர் 10
தமிழர் தாயக பெண்கள் எழுச்சி நாள்!
வீடு, குடும்பம், கணவன், பிள்ளைகள் என வாழ்ந்து பழகிவிட்ட எமது தமிழ்ச் சமூகத்திலிருந்து பண்பாட்டுப் போலிகளை உடைத்துக் கொண்டு மென்மையானவள், வீரமற்றவள் என்ற கவசங்களை தகர்த்துக் கொண்டு வெளியேறி போராட்டத்தில் தன்னைப் போராளியாக இணைத்துக் கொண்ட பெண்னொருத்தி, மரணித்த நாளே இந்த அக்டோபர் பத்து. இந்த நாளையே தாயகப் பெண்கள் எழுச்சி நாளாக தமிழர்கள் அனுஷ்டிக்கிறார்கள்.
ஆம், இது மிகப் பொருத்தமான நாள்தான். இந்த நாளில் எழுச்சி ஊர்வலங்கள் கருத்தரங்குகள் விழாக்கள் என மகளிர் பல்வேறு பிரதேசங்களிலும் கூடிக் கொண்டாடுவர். வீட்டுக்குள் சிறைப்பறவை போலிருந்த ஈழத் தமிழ்ப் பெண்களின் எழுச்சியும், எமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் நகர்வோடு பரிணமித்துதான். இன்று பெண் விடுதலையை நோக்கி அடியெடுத்து வைக்க இவ்வெழுச்சி பெரிதும் உந்து சக்தியாக விளங்குகிறது.
இந்தக் காலக்கட்டத்தில்தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வீடு, குடும்பம், உறவு என்ற வரையறைக்குள் ஒரு அடிமைபோல், அந்த நிலையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த பெண்கள் இந்த வரையறைகளை உடைத்துக் கொண்டு புற்றீசல் போல் வெளியே வந்து தம்மை உணர்ந்ததோடு தம்மை உணரவும் வைத்துள்ளார்கள். இப்போராட்ட இணைவோடு பெண்களின் முன்னேற்றம் வலுவடைந்திருப்பதை பல துறைகளிலும் அவதானிக்க முடிகிறது. ف
எமது பெண்களின் வாழ்வு இப்போது முன் போலில்லை. வடகிழக்கில் மட்டுமல்ல, மலையகத்திலும் கூட இந்த ஆரோக்கியமான எழுச்சியைக் காண முடிகிறது. வீட்டுத் தலைவி என்ற பெயரில் ஒரு வேலைக்காரியாகவோ, அந்தப்புறத்து மகாராணி என்ற மகுடத்தின் போர்வையில் போகப் பொருளாகவோ, கற்பு என்ற மாயையினால் அடிமையாகவோ இல்லை. கல்வியில், வேலை வாய்ப்பில், சாதனைகளில், போராட்டத்தில், அரசியலில் கணிசமான அளவு பங்கேற்பவர்களாக இருக்கிறார்கள்.
எனினும் ஆற்றலும், அறிவும், ஆளுமையும் கொண்ட் இப்பெண்களைத் தலையெடுக்க
45

Page 25
6696);
விடாமல் ஆணாதிக்க சமூகம் ஏதோ ஒரு வகையில் அவர்களைப் பின் தள்ளிக் கொண்டு இருக்கிறது. ஆணாதிக்க சமூகமென்பதை வெறும் ஆண்கள்
மட்டும்தான் என்று தப்புக் கணக்கு போட்டுவிட
(36603TLTup.
இத்தனை தடங்கல்களையும் மீறி பெண்களின் ஆற்றல் அறிவு துணிச்சல் தன்னம்பிக்கை எல்லாமே இன்று சகல துறைகளிலும் பரிணமிக்கின்றன. உடல் வலுவிலும் சரி மனவலுவிலும் சரி பெண்கள் தம்மை நிலைநிறுத்தி இருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
பெண் என்றால் மென்மையானவள், கடினமான வேலைகள் செய்ய மாட்டாள் என்ற நிலை மாற்றம் கண்டுள்ளது. எந்தத் துறையிலும் பணியாற்ற முடியும் என்பதைப் பெண்கள் இன்று நிரூபித்துள்ளனர்.
சட்டம், நிர்வாகம், விஞ்ஞானம், வணிகவியல், மருத்துவம், பொறியியல் என எல்லாத் துறைகளிலும் பெண்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர். உயர்ந்த மலைகளில் அதிகாலைப் பனியையும் பொருட்படுத்தாமல் கொழுந்து பிடுங்குவது முதலான பல கடின மான வேலைகளைக் காலம் காலமாகச் செய்துவரும் பெண்கள், வீட்டிலும் அயராது உழைக்கின்றனர். ஆனாலும் அவளது பணி கள் பாராட்டப்படாமல் இது அவளது கடமை என ஆணாதிக்க சமூகத்தால் குறிப்பிடப்படு கின்றது. மேலும் ஆளுமை மிக்க பெண் களை மனம் நோகும்படி இச்சமூகம் விமர்சிக் கிறது. இதனால் அவர்களில் பலர் மனச் சுமையோடுதான் வாழ வேண்டியுள்ளது. அவளது முகத்திற்கு முன்னாலும் மறை முகமாகவும் அவள் தரக்குறைவாக விமர் சிக்கப்படுகிறாள். அடங்காப்பிடாரியாக நடத்தைக் கெட்டவளாக மூர்க்கம் பிடித்த
A6
வளாக அவளை விமர்சிப்பதனால் பல பெண்
களின் மனம் உடைந்து போகிறது.
வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்து
வெறும் பிள்ளைபெறும் இயந்திரமாக வாழ்ந்து
வந்த பெண், இன்று பெருமைக்கும் புகழுக்
கும் பாராட்டுதல்களுக்கும் உரியவளாய் மாற்றம் கண்டு விட்டதைப் பொறுக்க முடியாத இக்கேடுகெட்ட சமூகத்தின் எதிர் வினைகளினால் பல துணிச்சலான பெண்க ளிடம் கூட ஆதங்கமும், வேதனையும், விரக்தியும், ஒட்டிக் கிடக்கின்றன.
உடற் கூற்று மாற்றங்களைத் தவிர ஆணும் பெண்ணும் சமமான மனிதப் பிறவி தான். உடற்கூற்றோடு இணைந்த உடற் தொழில் வேறுபாடுகள் - குறிப்பாக பிள்ளையைப் பெறல் என்ற புனிதப் பணியை இயற்கை பெண்ணுக்கு வழங்கியுள்ளது. தாய்மை என்ற உயர் ஸ்தானம் இதனால் கிடைக்கிறது. எனினும் இந்தப் புனிதப் பணியை நடத்தையோடு சம்பந்தப்படுத்தி, போலித்தனமான ஒரு பக்கச் சார்பான கற்பெனும் மாயையினால் பல பெண்களின் வாழ்வையே இருளடையச் செய்து விடு கின்றது இந்த ஆணாதிக்க சமூகம்.
பெண் விடுதலையின் ஒரு அம்சமாக கருச்சிதைவு செய்து கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆண்களின் பாலியல் வக்கிர பார்வையில் இருந்து தப்பிட இது பெரிதும் உறுதுணை புரியும்.
பெண்ணும் ஒரு மனிதப் பிறவிதான். அவளுக்கும் ஒரு அற்புதமான இதயம் உண்டு. அது ஆண்களுக்கு இருப்பது போன்ற உள்ளம்தான் என்பதை நாம் முதலில் புரிந்து கொண்டு, முன்னேறும் பெண்களுக்குக் கை கொடுப்பதோடு, பெண் விடுதலையையும் முன்னெடுப்போம்.

অস্পৰ
6.
0.
II.
I2.
13.
I 4
S.
I6.
I.
8.
9.
20.
2I.
22.
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
* இரண்டாம் பதிப்பு - புதிய அநயவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது)
எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் - (யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) நானும் எனது நாவல்களும் - செங்கை ஆழியான் கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாஹ் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை) டொமினிக் ஜீவா
முனியப்ப தாசன் கதைகள் - முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் (ஹைக்கூட) - பாலரஞ்சனி கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ 'சிரித்திரன் சுந்தர்' அட்டைப் படங்கள் மெல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு)
சேலை - முல்லையூரான் மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (இரண்டாவத தொகுப்பு) (41 எழுத்தாளர்களின் படைப்பு)
நிலக்கிளி - பாலமனோகரன் நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) - பஆப்டீன் தரை மீன்கள் ~ சமுருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான் அப்புறமென்ன - குறிஞ்சி இளந்தென்றல்
அப்பா - தில்லை நடராஜா
விலை:
விலை:
விலை:
ിഞ്ഞു:
விலை:
விலை:
விலை:
விலை:
606): விலை:
விலை:
ഖങ്ങബ:
விலை:
梁母戏种类 மல்லிகைப் பந்தல் சமீபத்தில்
இதில் வெளியிட்டுள்ள நூல்கள்
25off Ι4ο/-- 18ο/-
17S/=
II of
8of
Ioo/==
Iofar 5.of
ébo/=F 175/r
: 175/= : Isoft : 275/-
: 35off
: I4ο/= : I5o/F : Isofar : I5ofs : I5ofs
120/= Iჯo/=
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
4ጎ

Page 26
பெண் என்றால்.
- கெக்கிராவ ஸ்ஹானா
மக்கள் பரபரப்புடனும், வேகத்துடனும் இயங்கிக் கொண்டிருந்த கெக்கிராவ பஸ் நிலையத்தில் அந்த சந்தடிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவளே போன்று அந்தப் பெண் நின்றிருந்தாள்.
தூய வெள்ளை நிற சல்வார் கமீஸ”ம், துப்பட்டாவும் ரோஜா நிறத்தவளான அவளுக்கு எடுப்பாக இல்லை. என்றாலும் அவன் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி சற்று எடுப்பாக இருந்தது.
அனுராதபுரம் செல்லும் பஸ்ஸில் ஏறியவள், பின் என்ன காரணத்தாலோ இறங்கி, அதே நாக மரத்தடியில் நின்று கொண்டாள். அவளுக்கு ஏறத்தாள முப்பத்தைந்து வயதிருக்கும். ஆனால், பத்து வயது குறைந்தவள் போன்று தோற்றமளித்தாள்.
தனது அலுவலக வாகனத்தை மெதுவாக ஒட்டிக் கொண்டு வந்த அவன் அவளை அவதானித்துக் கொண்டிருந்தான். இன்னும் முப்பது நிமிடங்களில் அவன் ஒரு விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள வேண்டும். என்றாலும் அவளுக்கு உதவி செய்ய வேண்டும் போலிருந்தது.
"கெக்கிராவ பிரதேச சபை' என குறிக்கப்பட்ட அந்த வாகனம் தன்னருகில் வந்து நிற்கும்போது அவள் எவ்வித சலனமுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் வாகனத்தின் யன்னலுக்கு அப்பால் எட்டிப் பார்த்து “Please, come in’ என்றான். அந்த அழைப்புத் தனக்கானது இல்லை என்று நினைத்து அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவன் மீண்டும் சிங்களத்தில் “உள்ளே வாருங்கள்” என்றபோது சற்று நிதானித்து பின் ஏறிக்கொண்டாள்.
48

G8
தனது துப்பட்டாவைச் சரி செய்து கொண்டே அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அவன் புன்னகைத்தபடி வாகனத்தை இயக்கத் தொடங்கினான்.
அவள் தன்னைப் பற்றி விசாரிப்பாள் என்று நினைத்ததிற்கு மாறாக அவள் ‘நான் அவசரமாக அனுராதபுரம் போகணும்’ என்றாள். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
“நானும் அங்குதான் போகிறேன்” என்று பொய் சொல்லியபடி அவன் வாகனத்தின் வேகத்தைக் கூட்டத் தொடங்கினான்.
அவள் எதுவும் பேசாதிருப்பது கண்டு அவனே பேசத் தொடங்கினான். “நான் இந்த ஊர் பிரதேச சபையின் தலைவர். என் பெயர் குணவர்தன. நீங்கள் ஏன் பஸ்ஸை விட்டு இறங்கினிர்கள்.”
இவள் இதழ்களைக் குவித்துச் சிரித்தாள். “அதையும் அவதானித் தீர்களா?” என்று ஒருகணம் நிறுத்தி, ”ரொம்பவும் கூட்டமாக இருந்தது' என்றாள்.
ஒரு நிமிட மெளனத்திற்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்தாள். “இந்த நாட்டில் பஸ்ஸில் பயணம் செய்வது போல வெட்கக்கேடான காரியம் வேறொன்று மில்லை. கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் ஆண் மக்கள் ஏதும் திரும்பிச் சொல்லி விட்டால், நீயெல்லாம் ஏன் பஸ்ஸில் ஏறுகிறாய், சொந்த வாகனத்தில் போக வேண்டியது தானே என்கிறார்கள். ஒரு நாட்டின் பொதுத்துறை நிர்வாகம் என்பது எல்லா
49
பிரஜைகளுக்குமானது என்பதை இந்த ஆண்கள் முதலில் உணர வேண்டும்” என்றாள் உணர்ச்சி மயமாக.
“பஸ் சாரதிகள் சரியாக இருந்தால் எல்லாம் சரி’ அவன் ஒப்புக்குச் சொல்லி வைத்தான்.
"ஆமாம். அவர்களும் ஆண்களாக இருப்பதால் பெண்களின் பிரச்சினைகளை உணர்கிறார்கள் இல்லை.”
“நீங்கள் யாரென்று சொல்ல வில்லையே.?”
"நான் ஒரு கவிஞை.”
இவளுக்கு லி.'ப்ட் கொடுக்காமலே விட்டிருக்கலாமோ என்று அவனுக்குத் தோன்றிற்று.
R R R R R
சந்தடிகள் குறைந்த ஒரு மங்கிய மாலைப் பொழுதில் மீண்டும் அவன் அவளைச் சந்திக்க நேர்ந்தது.
ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த சிறுவர் பூங்காவில் அவள் தரையில் ஜமுக்காளம் விரித்து அமர்ந்திருந்தாள். சுற்றிலும் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.
அவன் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். ஞாயிற்றுக்கிழமை ஆயினும் சனநட மாட்டம் குறைவாக இருந்தது. கார்த்திகை மாத வெய்யில் இதமாகக் காய்ந்து கொண் டிருந்தது.
அவன் முதலில் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

Page 27
See22 மஞ்சள் மஞ்சேரென்ற ஒரே நிறத் து
யிலான சல்வார் கமீஸ் அவனுக்கு அவளை ஞாபகமூட்டவே, அவள்தான் என்பதை இனங்கண்டு, ஏலவே இறுகிப் போயிருந்த ஏதோ ஓர் உணர்வைத் தளர்த்திக் கொள்ள வேண்டும் போலிருந்த ஒரு உந்தலில் அவளை நெருங்கினான்.
அவள் ரொம்ப குதூகலமாகக் காணப்பட்டாள். அவனை அருகே அமரும்படி வேண்டிக் கொண்டாள். அவன் சற்றும் தயக்கமின்றி, அந்த அழைப்புக் காக நீண்டநாள் காத்திருந்தது போன்று, அவளோடு நெருங்கியபடி அமர்ந்தான். அவள் தள்ளிச் செல்ல எத்தனிக்க வில்லை.
குழந்தைகளை அழைத்து “இவர் எனது நண்பர் வந்தனம் சொல்லுங்கள்.” என்றாள். அவை ஓடிவந்து அவன் முன்னால் பவ்யமாக நின்று வந்தனம் சொல்லின, “இவை எனது குழந்தைகள்” என்று அந்தப் பத்துப் பதினைந்து குழந்தைகளையும் சுட்டிக் காட்டிச் சிரித்தாள். அவனது குழந்தையை அவளது குழந்தைகளுடன் இணைத்து விட்டாள். அவனுக்குள் லேசாக எரிச்சல் முண்டது. அவள் ஒரு கவிஞை என்ப தற்கும் மேலாக ஒரு பாலர் பாடசாலை ஆசிரியையாக இருக்கக்கூடும் என்று அனுமானங் கொண்டான்.
ஓர் அரசியல்வாதியாக இருந்து பலரையும் ஆட்டி வைத்த அதிகார உணர்வு, ஆதிக்க மனோபாவம், அலட் டல்கள், அடிதடிகள், உருட்டல் பிரட்டல் கள் யாவும் அவளைக் கண்ட மாத்திரத் தில் பணியாய் உருகிக் கீழே வடிந்து
50
அவள் காலடியில் சங்கமமாவது போலவும், அவள் சூரியப் பிரகாசத்துடன் கம்பீரமாக நிற்பது போலவும் அவனுக்குத் தோன்றிற்று.
“என் குழந்தைக்கு மூனரை வயது. உங்கள் பாடசாலையில் எப்போது சேர்க்கலாம்?” என்று அவளைப் பற்றி எல்லாம் தெரிந்தவன் போலக் கேட்டான்.
“நான்கு வயதின் பின்பே சேர்க்க லாம். என்றாலும் அனிட்டாவிடம் பேசிப் பார்த்து உங்களுக்கு உதவலாம்’ என்றாள்.
இந்த விடயத்திலும் தனது அணு மானம் பிழைத்துப் போனது உள்ளுக்குள் உறைக் கவே, சற்று காரமாகவே கேட்டான்.
'நீங்கள் யாரென்றுதான்
சொல்லுங்களேன்.”
“நான் சுமித்ரா என் பெற்றோர் சிங்கள பாலர் பாடசாலையின் நிர் வாகிகள். நான் அவர்களது உதவி யாளரும், ஒரே வாரிசும். இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். என் காதலர் பெயர் அல்பிரட்.’
அவள் சிரிப்பு மாறாமலே சொல்லி முடித்தாள். அந்தச் சிரிப்பு அவனை ஏளனப்படுத்துவது போல் இருந்தது. ஏதோ ஒரு ஏமாற்றம் அவனைத் தழுவிற்று.
இந்த இரண்டாவது சந்திப்பிலும்கூட அவள் அவளைப் பற்றி ஏதும் விசாரிக் காதது அவனுக்குக் கசப்பாக இருந்தது.
 
 
 
 
 

‘உஸ் . அப்பாடா...' என்று பெருமூச்சு விட்படி சொன்னான். “இந்த தவிசாளர் பதவிதான் எத்தனை பிஸி! எந்த நேரமும் பார்ட்டிகள், விவாதங்கள், பட்ஜெட் கெடுபிடிகள், சந்திப்புகள். ஒய்வே கிடைப்பதில்லை. என் மனைவி யுடன் சந்தோஷம் அனுபவிக்கக்கூட நேர மில்லாமல் போகிறது சில நாட்களில்.”
அவள் எந்தப் பிரக்ஞ்யுமின்றி நிஷகளங்கமாக அவனைப் பார்த்துச் சிரித்தாள். தனது வசனங்களைக் கேட்ட பின்னும் கூட அவள் சிறிதும் நாணம் கொள்ளாதிருப்பதை அவன் கூர்ந்து அவதானித்தான். மீண்டும் சொன்னான்.
"இப்போது நான் இங்கே வந்ததுகூட இந்த சிறுவர் பூங்கா சிலவேளைகளில் துஷ்பிரயோகம் பண்ணப்படுகின்றது என்ற புகாரின் மீதுதான்.”
அவள் விழிகளை மலர்த்தி “ஓ. நல்லது” என்று மீண்டும் புன்னகைத்தாள். பின்னர் எதிர்பாராத விதமாக இப்படிச் சொன்னாள்.
“உங்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம். உங்கள் மனைவிக்குமா நேரமில்லாது போனது? எப்போதாவது உங்களுடன் சந்தோஷம் அனுபவிக்க வேண்டும் என்று அவர்கள் உங்களிடம் வந்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடுமே. இப்போதுகூட அவர்கள் வர வில்லையே.”
அவனால் பதில் சொல்ல முடிய வில்லை.
வீதியோரத்தில் வந்து நின்ற ஒரு
4 pr
66,563
| வேனைக் கண்டதும் குழந்தைகள் சட்
5.
டென்று விளையாட்டை நிறுத்தின. அவளும் எழுந்து கொண்டாள்.
“வாருங்கள். எங்கள் வீட்டுக்குப் போய் வரலாம்." அவனது குழந்தையைத் தூக்கி முத்தமிட்டபடி சொன்னாள். அதற் குள் அவனது குழந்தைகள் வேனை நோக்க அணிவகுத் து நிற் கத் தொடங்கின.
எழுந்து ஜமுக்காளத்தை உதறி மடித்தபடி மீண்டும் அவனைப் பார்த்து நெஞ்சை இழுத்துப் பிடிக்கின்ற ஒரு புன்னகையை விடுத்தாள்.
"நீங்கள் எங்களது Chairman என்பதற்காக அல்ல இந்த அழைப்பு. எனது நண்பர் என்பதற்காக..!”
அவனுக்குச் சுரீரென்றது. முதல் தடவையாக ஓர் அழகிய பெண் அழகான சிரிப்புடன் அவனது அகத்தை வம்புக் கிழுக்கிறாள்.
ஒரு கவிஞையிடமிருந்து இதெல்லாம் எதிர்பார்க்கத்தக்கதுதான் என்று அவன் நினைத்துக் கொண்டான். எனினும், மறுக்க முடியாமல் வேனில் ஏறிக் கொண்டான்.
双双双双双
மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவளை அவன் சந்திக்க நேர்ந்தது.
கொட்டும் மழையில் ஒரே ஒரு குடையைப் பிடித்தபடி அவள் ஓர் இளைஞனுடன் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தாள், நகரத்தில் பிரமாண்ட

Page 28
t gest
மான ஆடையகத்தின் முன்னால் நின்று.
உள்ளிருந்து ஆடைகளைக் கொள் வனவு செய்துவிட்டு இரண்டு பெரிய பைகளைச் சுமந்தவனாக வாடகை ஆட்டோவை நோக் கரிச் செல்ல எத்தனிக்கையில் அவளைக் கண்டான். 8LJ{F II ưD6ủ • 8LJTuỦ 6)fìL (86u 60ốĩ (6 tô போலிருந்தது. ஆனால் முடியவில்லை.
அவனுடன் எப்படி புன்னகை மாறாமல் பேசிக் கொண்டிருந்தாளோ அதே போலத்தான் இப்போதும். ஆனால் அந்தச் சிரிப்பில் ஒரு சிலிர்ப்பும், ஈரமும் தொனிப்பதாக அவனுக்குத் தோன்றிற்று.
ஆட்டோவினுள் புதுத்துணிமணிகள்
அடங்கிய பையை வைத்து விட்டுத் திரும்பி வந்து மீண்டும் கடைக்குள் போனான். அவன் அருகே கடந்து சென்ற
போதும் கூட அவள் கவனிக்கவில்லை.
இந்தப் பெண் வேண்டுமென்றே என்னை அலட்சியம் செய்கிறாளோ என்ற கேள்வி எழுந்தது அவனுக்கு. அன்று வீட்டில் வைத்தும் அப்படித் தான் செய்தாள்.
அவனை வலிந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் தன் பெற்றோரிடம் அறிமுகம் செய்துவிட்டு, அவனது குழந்தையைக் கூட்டிக் கொண்டு சமயலறைக்குள் சென்று விட்டாள். நீண்ட நேரத்துக்குப் பின் கையில் தேநீருடன் வந்து அவனிடம் சிரிப்புடன் கொடுத்து விட்டு மீண்டும் உள்ளே போனவள்தான். அவன் பெற்றோரிடம் விடைப் பெற்றுப் போகும் வரை திரும்பியும் பார்க்க வில்லை.
52
இன்றும் இவள் இந்த பாழாய்ப் போன தனி ரோஸா நிறத்தில் சல்வார் கமீஸ் அணியாமல் நின்றிருந்தால் அவன் கவனியாமல் சென்றுவிட்டிருக்கக் கூடும்.
இந்த ஒரு மாத காலத்துள் தனி நிறத்தில் எந்தப் பெண்ணாவது உடை அணிந்திருந்தால் அவள் சுமித்ராதானா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக அவன் ஒவ்வொருதரமும் திரும்பிப் பார்க்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் அவனது பதவியும், பொருத்தமில்லா விட்டாலும் கழுத்தில் வந்து விழுந்த புகழ் மாலைகளும் தன்னைக் கேலி செய்வ
தாக அவமானங் கொள்வான்.
பெண் என்றால் மென்மையானவள் என்பது எவ்வளவு பொய். எனது மனைவி எவ்வளவு கடியவளோ, அவ்வளவு கடுமையானவள் இவளும். இந்தச் சிரிப்பு ஒரு கவசம். இதை வைத்துக் கொண்டு இந்தப் பெண்கள் ஏன் ஆண்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.?
சிந்தனை தோய்ந்து மீண்டும் கடை யருகே சுற்றி வந்தபோது திடுக்கிட்டான். அவர்கள் இருவரையும் காணவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் திரும்பி அவள் தனியே போய்க்கொண்டிருந்தாள்.
அவன் விரைந்து ஆட்டோவுக்குள் சென்று சாரதியை துரிதப்படுத்தினான். இந்த மழையில் கரைந்து விடாமல் அவளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
ஆட்டோ அருகே வந்து நின்றதும் தான் அவள் அவனை அவதானித்தாள். அவன் உள்ளிருந்தபடியே தலையை

UygieSatos
நீட்டி அவளை அழைத்தான். வீட்டில் கொண்டுபோய் விடுவதாகக் கூறினான்.
அவள் அவனது அழைப் பை புன்னகை மாறாமலே மறுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தாள். “என்னால் தனியே போக முடியும்” என்று மட்டும் சொன்னாள். மழைத் துளிகளைத் தாங்கிய கருவிழிகள் ஒளி வீசின.
||0 କଁp', VDA.
அந்த மறுப் பு அவனது EXCELLENT அதிகாரத்தின் மீதும், ஆணவத்தின் மீதும், அதட்டல்களின் மீதுமான மறுப்பாயிற்று. PHOTOGRAPHERS ஒருகணம் திகைத்து நின்றான். MODERN COMPUTERIZED
ஒரே ஒருகணம்தான். FHOTOGRAPHY
பின்னர் -
66 FOR WEDDING FORTRAITS "நான் இந்த நகரத்தின் பிரதேச சபையின் தலைவன். ஒரு பெண்ணிடம் 8 CHILD SITTINGS இப்படித் தோற்றுப் போவதா?’ என்ற கேள்வி உள்ளுக்குள் அரிக் கத் தொடங்கிற்று.
ஆட்டோவை பக்கத்திலிருக்கும் ஓய்வு விடுதியை நோக்கிச் சொல்லப் பணித்தான்.
சிறிது நேரமாவது ஓய்ந்திருக்க வேண்டும். எனது தன்மானத்தின் மீது, பதவியின் மீது ஒரு பெண் வீசிய அவமானத்தைக் களைய வேண்டும்.
இனி அந்தப் பெண்ணை எக் காரணங் கொண்டும் கண்டு கொள்வ தில்லை என்ற முடிவுக்கு இப்போது அவன் வந்திருந்தான்.
53

Page 29
படிக்காதவர்
usettijs)
usliisa) as
உடுவை. தில்லை நடராசா
வீட்டுத் தோட்டத்தில் ஈடுபாடு அதிகரித்ததை அவதானித்த தந்தை 'இந்த வருடம் நல்ல மாங்கன்று கொஞ்சம் வாங்கி வைக்க வேணும்’ என்றார்.
தந்தையின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட தாயார் ஒருநாள் கிராமத்துச் சந்தையிலிருந்து பத்து சிறிய ஒட்டு மாங்கன்றுகளை வாங்கி வந்தார். மூங்கில் குழாய்களில் மண் நிரப்பி மாங்கொட்டை விதைப்பார்கள். பின்னர் மாங் கொட்டையிலிருந்து செடி முளைத்து சிறு மரமானதும், நுனிப்பகுதியை வெட்டி ஏற்கனவே முதிர்ச்சி பெற்ற நல்ல இன மாமரத்தின் கிளைகளை வெட்டி ஒட்ட வைத்திருப்பார்கள். இப்பிடி ஒட்ட வைத்த மாமரத்தை யாழ்ப்பாணப் பகுதியில் 'ஒட்டுமா என்றழைப்பர்.
விதையிலிருந்து முளைத்து வரும் மாமரம் வேறு வகையானதாக இருந்தாலும், சுவை நிறைந்த கனி தரும் மரத்தின் கிளையை ஒட்டி, அந்த மரத்தின் பழங்கள் எல்லாவற்றையும் சுவையானதாக அமையும்படி தோட்டக்காரன் மாற்றி விடுவான். குறுகிய காலத்துக்குள் நல்ல இனிப்பான கனி தரும் 'ஒட்டுமா'வைத் தேடி வாங்கி வைக்கும் வழக்கம் இருந்தாலும், சிலர் போலியான ஒட்டுமாவை உற்பத்தி செய்து ஏமாற்றும் வழக்கமும் இருந்தது.
அம்மா ஆவலுடன் வாங்கி வந்த ‘ஒட்டுமா போலியானது. சுவையான பழத்துக்குப் பதில் புளிப்பான மாம்பழங்களையே நான்கு வருடங்களுக்குப் பிறகு பெறமுடிந்தது. மாமர விடயத்தில் வியாபாரி ஒருவனால் ஏமாற்றப்பட்ட கவலை அம்மாவுக்கிருந்தது.
54

3 Decescoe
S2
அப்பா அம்மாவுக்கு ஆறுதலளித் தார், ‘பரவாயில்லை. இது ஒரு பாடம். திருநெல்வேலி விவசாயப் பண்ணை யிலோ அல்லது நன்றாகத் தெரிந்தவர் களிடமோ ஒட்டுமா வாங்கி வைத்தி ருந்தால் ஏமாற வேண்டியிருக்காது. பொருட்களை வாங்குவதற்கு முதல் விற்பவர் பற்றியும் பொருட்களின் தன்மை, விற்பவரின் குணநலன் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.”
பினி பு சற்று விபரமாகச் சொன்னார்: "நிரந்தர முகவரியைக் கொண்ட நிறுவனங்கள், நன்மதிப்பைத் தேடி வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்வதில் எப்போதும் கவனமாக இருப்பார்கள். மலிவான பொருட்கள் எல்லாம் தரமான பொருட்கள் எனச் சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்தளவு நிலப்பரப்பை தோட்டச் செய்கைக்குப் பயன்படுத்தினாலும் சிறந்த முறை களைக் கையாள்வதிலேயே பயன் பெறுகிறார்கள். உதாரணமாக மாமரம், பலாமரம் போன்றவற்றை வைப்பதற்கு முன் பலன் தரக்கூடிய மரமா என்பதை அவற்றின் தாய் மரம் அல்லது விதை பெற பயன்படுத்தப்பட்ட மரம் என்பதிலி ருந்து அறிந்து கொள் வார்கள் என்பதையும், ஒட்டு மரமானால், ஒட்ட வைப்பதற்காக கிளை எடுக்கப்பட்ட மரத்தைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அக்கறை காட்டுவார்கள். மரத்தை நாட்டும் போது இடத்தை தேர்ந் தெடுப்பதிலும் கவனமாக இருப்பார்கள். மரம் வளரும் காலத்தில் விலங்கு களால் பாதிக்கப்படாதிருப்பதற்கு நட
55
வடிக்கை எடுப்பதுடன் பிடுங்கப்படாத இடத்தில் மரம் வைக்கப்பட்டு வளர் வதையும் உறுதிப்படுத்திக் கொள்வார் கள். செடி வளர்ந்த பின் தவறான மரம் என்றோ அல்லது வைத்த இடம் தவறான இடம் என்றோ கருதக் கூடாது. முனி னெச்சரிக் கையாக நடக்க வேண்டும் என்பதில் யாழ்ப்பாணத் தோட்டக்காரர் கரிசனையானவர்கள்’ என்றார்.
எரு, இலை குழை போனி ற இயற்கைப் பசளைகளோடு தோட்டப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்ட எங்கள் கிராமவாசிகளுக்கு செயற்கை உரம் விற்கும் கடையின் அறிமுகம் 50-களின் பிற்பகுதியில் கிடைத்தது.
இந்த அறிமுகத்தினால் இயற்கைப் பசளைகள் பயன்படுத்தப்படாமல் வீணா னது ஒருபுறமிருக்க ஏழ்மை நிலையில் வாழ்ந்த கிராமத்துத் தோட்டக்காரர்கள் செயற்கை உரக் கொள்வனவிற்கு பெரு மளவு பணம் செலவிட்டு, உற்பத்திச் செலவை அதிகரித்தனர். அப்போது எங்கள் கிராமத்து தோட்டக்காரர் இரண்டொருவருடன் அடிக்கடி அப்பா பரிமாறியக் கருத்துக்கள் 90-களின் நடுப் பகுதிகளில் அரசாங்க அதிபராக கடமையாற்றிபோது விவசாயிகள், தோட்டக்காரர் மத்தியில் என்னை வளத் g5(b.5J Ta, RESOURCE PERSONges
அறிமுகம் செய்தது.
உதாரணமாக வீட்டுக் கூரை களுக்கு வேய்ந்த ஒலைகள் ஓரிரு

Page 30
5 yet 6535
வருடங்களின் பின் அகற்றப்பட்டு, தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப் படுகின்றது. அந்த ஒலைகள் உரமாக நிலத்தில் தாழ்க்கப்படும் போது, அதே ஒலைகள் பசளையாக மட்டும் பயன் படாமல் , அடி நிலத்திலிருந்து களைகள் முளைத்து மேலே வராமல் தடுக்கும் தடுப்பெல்லையாகவும், பயிர்களுக்காக ஊற்றப்படும் நீர்
தரையின் கீழ்ப் பக்கத்தை நோக்கிச்
செல்வதைத் தடுக்கும் தன்மை GassTsoil grasob WATER HOLDING CAPACITY ஒலைகள் இருக்கின்றன என அப்பா சொன்ன கருத்து என் மனதில் ஆழ மாகப் பதிந்திருந்தது.
器器器
தொழில் காரணமாக கொழும்புக் கும் பிற மாவட்டங்களுக்கும் சென்றபோது உணவுத் தேவைகளுக் காக சாப் பாட்டுக் நாடினேன். பிளாஸ்டிக் வகைகளைச்
சேர்ந்த கோப்பைகள், கிளாஸ் ,
பொலித்தீன் வகையைச் சேர்ந்த கண்ணாடிப் பேப்பர்கள் ஒருவகைக் கவர்ச்சியை ஏற்படுத்தின.
எழுபதுகளில் அவற் றை தில்லைப்பிள்ளை கிளப்பிலும் அறி முகம் செய்ய வேண்டுமென்று அப்பா விடம் எடுத்துச் சொன்னபோது அவர் தடுத்துவிட்டார். 'வாழையிலையும் வாழைத்தடலும் இல்லாத காலத்தில் பொலித்தீனைப் பற்றி யோசிப்போம். அலுமினியப் பாத்திரங்கள் பழசா னாலும் அவற்றை உருக்கி இன்னொரு பொருளாக்குவார்கள். பிளாஸ்டிக்கை
கடைகளை
56
எரித்தால் வரும் புகை மனிதனுக்குக் கூடாது. மண்ணில் தாழ்த்தாலும் அது
மண்ணுக்காகாது. கடலில் எறிந்தாலும்
அது தாழாமல் மிதக்கும்’ இப்படி பல சொல்லி தடுத்துவிட்டார்.
ஏறக்குறைய முப்பது ஆண்டு களுக்குப் பிறகு ‘பொலித்தீன் பாவ னைக்குத் தடை, பிளாஸ்டிக்கால் ஏற் படும் தீங்குகள்’ என்ற தலைப்பில் வரும் செய்திகளை படிக்கும்போது தில்லைப் பிள்ளை கிளப் பசியைப் போக்க மட்டு மில்லாமல் சூழலைப் பாதுகாக்கவும்
நடவடிக்கை மேற்கொண்டது போல
என்னால் உணர முடிகின்றது.
器器器
கிராமத்தின் மத்தியில் மூன்று வீதிகளும் இணையும் சந்திக்கருகே பல விதமான பொருட்களையும் விற்பனை செய்யும் சில கடைகள் இருந்தன. சந்திக்குச் சிறிது தூரம் தள்ளி தார் வீதியுடன் ஓர் ஒழுங்கை இணையும் இடத்தில் இருந்த கடைக்குப் பெயர் மூலைக்கடை. ‘மூலைக்கடை’ என விளம்பரப்பலகை இல்லாத போதும், தார்வீதி வழியாகப் போவோர் வரு வோர் வீதியோரம் நின்று பொருட் களைக் கொள்வனவு செய்யும் அதே வேளை ஒழுங்கை வழியாக வருவோர்
தார்வீதிக்கு வராமல் ஒழுங்கையோரம்
நின்று பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வசதியும் இருந்தது.
எங்கள் வீட்டிலிருந்து பல கடை களைத் தாண்டித்தான் மூலைக்கடைக் குச் செல்ல வேண்டியிருந்தாலும்,

மூலைக்கடையிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என்பது அப்பாவின் உத்தரவு. அதற்கான காரணத்தை அப்பாவே சொன்னார்.
சில ஆசிரியர்கள், பல பெரியவர் கள் சிகரெட், சுருட்டு போன்றவற்றைப் புகைப்பதால் மாணவர்களையும் குழந் தைகளையும் கடைகளுக்கு அனுப்பி புகைத்தல் பொருட்களை வாங்குவது வழக்கம். மூலைக்கடை உரிமையாளர் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகரெட், சுருட்டு போன்றவற்றை விற்பனை செய்தார். அவரிடம் ஆசிரியர்களின் பெயர் சொல்லியோ பெற்றோர்களைச் சொல் லியோ பணம் கொடுத்தும் சிகரெட், பீடி, சுருட்டு வாங்க முடியாது. இலாபம் கிடைக்காவிட்டாலும் பரவா யில்லை. தன்னால் சமூகம் நட்டப்படக் கூடாது என்ற மூலைக்கடைக்காரரின் இலட்சியம் அப்பாவுக்குப் பிடித்துக் கொண்டது.
அந்த மூலைக் கடைக்காரரும் அப்பாவும் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டது தெரியும். ஒரு தடவை மனித சமுதாயத்துக்குச் செய்யும் நன்மை யாகக் கருதி விற்பனை கூடிய வாரப் பத்திரிகை சிகரெட் விளம்பரங்களைத் தனது சஞ்சிகையில் இடம் பெறாது எனப் பகிரங்கப்படுத்தியபோது, மூலைக் கடை வியாபாரியும் இலாபம் தரக்கூடிய சிகரெட் விற்பனையை நிறுத்திவிட்டார்.
மாணவனாக இருந்த காலத்தில் சமுதாயச் சிந்தனையைப் பற்றி நான் பெரிதாக கருதாத போது ஓரளவுக்கு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்துள்ள இன்றைய நிலையில் அப்பாவின்
சிந்தனையையும், மூலைக்கடைக்கார முதலாளியின் சிந்தனையையும் பல தடவை எண்ணியுள்ளேன். இலாபத்தை மட்டும் நோக்காகக் கொண்டு முதலாளி கள் செயற்படவில்லை.
தீபாவளி வருஷம் என பெரு நாட்கள் வரும்போது கடையிலுள்ள தொழிலாளிகள் சட்டை, சாரம், வேட்டி போன்ற புது உடுப்புகள் வாங்கு வார்கள். வாங்கிய புது உடுப்புகளை இரவு கடை பூட்டியதும் மற்றவர்களுக் குக் காட்டி மகிழ்வார்கள்.
Qas 警
Ø 曾,
அந்த இளம் தொழிலாளி அதிகம் படிக்காத போதும் அழகான ஆடை களுக்காக அதிக பணம் செலவழித்த தோடு தன்னைப் படித்தவன் என்று மற்றோருக்கு காட்டுவதற்காக இரண் டொரு சஞ்சிகைகளையும் கையில் வைத்திருப்பான். சில படங்களைப் பார்ப்பதற்காகவும் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவும் ஆங்கில சஞ்சிகை யையும் வைத்திருப்பான். அவன் புதி தாக வாங்கி வந்த சேட் மிக நன்றாக இருந்தது.
‘சேட் பிரமாதம்” என அப்பாவும் ஒரு பாராட்டு கொடுத்தார்.
பாராட்டுகளினால் மனம் நிறைந்த தொழிலாளி சொன்னான், ‘இது நல்ல திறமான துணி. சாயம் போனாலும் துணி கிழியாது. தையலும் அறாது.”
‘அப்படியா?” வேறு சில தொழி லாளரின் ஆச்சரியம்.

Page 31
அவன் தொடர்ந்தான். கிழிந்தாலும் சாயம் போகாது. நிறம் மாறாது”
மீண்டும் சில தொழிலாளர் ஆச்சரியப்பட்டனர். ‘அப்படியா?”
அவனின் அசட்டுச் சிரிப்பு, “இது ஒரே ஒரு சேர்ட்தான் இருந்தது. நிறம் மாறினாலும் சேட் கிழியாது. சேட் கிழிஞ்சாலும் நிறம் மாறாது. எனக்காக புடவைக் கடை முதலாளி விலை குறைச்சுத் தந்தவர்”
அப்போதுதான் அப்பா பெரிதாகச் சிரித்தார், ‘என்னய்யா சொன்னே! நிறம் மாறினாலும் துணி கிழியாது. துணி கிழிந்தாலும் நிறம் மாறாது. ஒரே ஒரு சேர்ட்தான் இருந்தது. அதையும் முதலாளி விலை கொறைச்சுக் கொடுத் தார். இது வழக்கமாக எல்லா முதலாளி மாரும் சொல்லுறது. செய்யிறது. நாம ஏமாறக் கூடாது.”
அப்பா சொல்லிய பின் தான் முன்னுக்குப் பின் முரணாக தொழிலாளி சொல்லியதும், சேட் விற்பனை செய் பவரால் அவன் ஏமாற்றப்பட்டதையும் உணர முடிந்தது. :
இன்றும் கூட, ஊடகங்கள் சில வற்றின் ஊடாக காதில் விழுபவை, கண்ணில் படுபவை முன்னுக்குப் பின் முரணாக அடுத்தடுத்த வரிகளில் விளம் பரங்களை தரும்போது நினைவுக்கு வருவது ‘நல்லதுணி. சாயம் போனாலும் துணி கிழியாது. துணி கிழிந்தாலும் நிறம் மாறாது. தரமான துணி.”
|
58
(్మ
ඉගි
്
臀
ஏப்ரல் மாத விடுமுறையில் அப்பா வுடன் நிற்கும்போது, அப்பாவுடன் நெருங்கிப் பழகும் ஒருவர் கைமாற்றாக ஐந்து ரூபா கேட்டார். அவரை வெளி யில் நிற்க வைத்துவிட்டு, அப்பா தனது பெட்டியிலிருந்து பத்து ரூபா நோட்டைக் கொடுத்து, ‘மாத்தின காசில்ல. சாவ காசமா திருப்பித்தா” எனக் கொடுத்தார்.
பெட்டியில் ஐந்து ரூபா நோட்டு இருக்கத்தக்கதாக அப்பா பத்து ரூபா கொடுத்ததால் காரணத்தை அறிய முயன்றேன்.
‘பத்து ரூபா நட்டம்தான்! ஆனா பழகிட்டான். பத்து ரூபாவுக்கு மேல நட்டம் வராமல் பாதுகாக்க முடியும்’ என்றார்.
இரண்டு நாள் கழித்து அவர் பத்து ரூபாவுடன் அப்பாவைச் சந்தித்தார்.
“அவசரமில்ல. பிறகுத் திருப்பித்
தரலாம்” என்று அப்பா சொல்லியதும்
அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக் காமல் சென்று விட்டார்.
மீண்டும் இரண்டு நாள் கழித்து அப்பா சம்பளம் எடுத்த சில நிமிடங் களுக்குள் வந்தார், பத்து ரூபா கடன் காரர். இப்போது அவர் கடனாகக் கேட்ட தொகை ஐம்பது ரூபா.
அப்பா சிரித்தார், ‘‘கொஞ்சம் முன் னாடி வந் திருக் கப்படாது. ஊர்லேயிருந்து வந்தவரிடம் சம்பளத்தைக் கொடுத் திட்டேன். காசிருந்தா ஐம்பது இல்லே நூறுகூடத்
 

666):
2
தருவேனே’.
இந்த சம்பவத்தைப் பற்றி அப்பா கூறும்போது ‘சில ஆட்களுடன் பழக வேணும். பகைக்கக் கூடாது. பணக் கொடுக்கல் வாங்கல் செய்து பகைக்கக் கூடாது. அஞ்சு கேட்கிறபோது பத்தைக் கொடுத்து கொடுக்கல் வாங்கலுக்கும் பத்தோடே முற்றுப்புள்ளி போட்டால் பத்து ரூபா மட்டும் நட்டம்” என்பார்.
இந்தச் சம்பவம் தந்த படிப்பினை யால் ஆயிரக் கணக்கில் ஏற்படவேண் டிய எனது நட்டம் தவிர்க்கப்பட்டிருக் கிறது.
இன்னுமொரு சம்பவம் -
சுமாரான சம்பளம் வருமானம் என்று எனது நிலை உயர்ந்த பின்
ஊரில் நிதிச்சேகரிப்பு பட்டியலுடன்
தெரிந்தவர்கள் வந்திருந்த போது விறாந்தையில் அப்பாவும் இருந்தார்.
சம்பிரதாயபூர்வமான உரையாடல் களைத் தொடர்ந்து எனது பங்களிப்பை வழங்கும் எண்ணத்துடன் பணம் எடுப் பதற்கு அறைக்குள் நுழைந்தபோது பின் தொடர்ந்த தந்தை கேட்டார்,
‘கட்டி எவ்வளவு பணம் என்று கேட்டீர்களா?”
நான் இல் லையென்று தலை அசைத்து “ஒரு 250/- ரூபா கொடுக் கலாம்” என்றேன். தந்தை 100/- ரூபா போதுமென்றார்.
அவர் விருப்பப்படியே வெளியே சென்ற நான் மீண்டும் நிதி சேகரிப்பு
59
பட்டியலை வாங்கி ‘’ எவ்வளவு பணம்
எதிர்பார்க்கிறீங்கள்’ என்றேன்.
என்ன ஆச்சரியம், "100/- ரூபா
எண்டாலும் நீங்கள் போடவேணும்’
என்றவர்களிடம் 100/- ரூபாவைக்
கொடுத்து நிதிசேகரிக்கும் பட்டியலிலும் பதிவு செய்தேன்.
அப்பா தந்த விளக்கம், “பாத்திர
மறிந்து பிச்சை இடு. அவர்கள் குறைய
எதிர்பார்க்கிறபோது கூடக் கொடுக்கக் கூடாது. அவங்கள் அதிகமாக கேட்டு உனது பொருளாதார நிலை இடம் கொடுக்காவிட்டால் அதிகம் கொடுத்து நீ நட்டப்படக் கூடுடாது. தனக்கு மிஞ் சியதுதான் தானம். ஆகவே தண்ட
லுக்கு வருவோரிடம் என்ன எதிர்
பார்க்கிறீங்க என்று கேட்டு அளவாகக் கொடுக்க வேண்டும். கேட்கும் அளவு
அதிகமானால் இருப்பு அறிந்து
கொடுக்க வேண்டும்”.
இதனால் அன்று 150/- ரூபா மீதப்படுத்த முடிந்தது போல பின்னரும் பல சந்தர்ப்பங்களில் சிலவற்றை மீதப் படுத்த முடிந்தது.
♔
ஆங்கிலப் பாடம் படிக்கும்போது AN APPLE A DAY KEEPS THE DOCTOR AWAY 616 pi upg5glub வீட்டுக்குச் சென்று அம்மாவுடன் போராட்டம்.
* ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பிள் பழம் சாப்பிட்டால் வருத்தம் வராது என்று பிடிவாதம் பிடித்தேன்.

Page 32
அப்பா அமைதியாகச் சொன்னார், விலை 150/- ரூபாவிலிருந்து 250/- ‘‘அது இங்கிலிஸ் புத்தகமானதால ரூபாவரை.
அப்பிள். பொதுவாக ஒரு பழம் சாப்பிட் டால் நல்லது. அப்பிளை விட வாழைப் பழம் நல்லது. நம்ம ஊர்ல வருஷம் முழுவதும் வாழைப்பழமும் கிடைக்கும். பப்பாசிப்பழமும் கிடைக்கும். சீசனுக்கு மாம்பழமும் பலாப்பழமும் கிடைக்கும். இதைவிட நல்ல பழம் வேறையில்லை.”
வேலைக்குச் சென்ற புதிதில் கொழும்பிலிருந்து அன்னாசி, இறம் புட்டான், மங்குஸ்தான் என யாழ்ப் பாணத்துக்குக் கொண்டு வந்தாலும் முக்கனியான மா பலா வாழைக்கு மற்ற பழங்கள் ஈடு கொடுக்க முடியாது என தெரிந்து கொண்டேன்.
கடமை தொடர்பாக வெளிநாடு களுக்குச் சென்றபோது அப்பிள் திராட் சையை விட அதிக விலை கொடுத்து வாழைப்பழம் வாங்கிச் சாப் பிட்டிருக்கிறேன். அப்படியொன்றும் அதிக விலையல்ல. ஒரு பழத்தின்
எனவே அப்பிள் பழத்தின் சத்து மட்டுமல்ல வாழைப்பழத்தில் இருக் கிறது ஒப்பீட்டளவில் எங்கள் நாட்டில் மிக மலிவான வாழைப்பழம் அப்பிள் ஏற்றுமதியாகும் நாடுகளில் EXPENSIVE TEM ST6.
எங்கள் மண்ணின் பெருமையை யும், மண்ணில் விளையும் பொருட்களின் அருமையையும் அப்பா உணர்த்தியும் பல வருடங்களின் பின் பாகவே என்னால் உணர முடிந்தது.
சந்தா செலுத்தி 6)) test d56ITT 2 தயவுசெய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள். அசட்டை செய்வோருக்கு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும்.
4 சிறுகதைகை விற்பனையாகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரண்டினம்
- டொமினிக் ஜீவா
8 எமது தமிழ்ச் சமுகம் எத்தனையோ துன்ப துயரங்களைக் கடந்த காலத்தில் பட்டிருக்கின்றது. இத்தனைக்கும் இவர்களது இழப்பை மூலதனமாக்கி, இன்னும் ஒரு கூட்டம் அவர்களைச் சுரண்டிக் கொழுத்து வருகின்றதே, இது எப்போது நீங்கும்?
கொழும்பு 6. எஸ். ஆர். பாலச்சந்திரன்
குடாநாட்டில் வெறும் தரையைப் பார்த்து மெளனமாக நடை நடந்த மக்களல்ல, இன்று பரந்து வாழும் தமிழ் மக்கள். அவர்கள் எத்தனையோ புதுப் புது அநுபவங்களைப் பெற்று இன்று நிமிர்ந்து நிற்கப் பழகிக் கொண்டவர்கள். இவர்களில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, தம்மைச் சுரண்டிக் கொடுக்க நினைப்பவர்களையும் முடிவில் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள் என்பது சர்வ நிச்சயம்.
8 உண்மையைச் சொல்லுங்கள், இந்தப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் கல்விமான்கள் மல்லிகையையும் அதன் ஆசிரியரான உங்களையும் தகுந்த முறையில் கனம் பண்ணி மதிப்புக் காட்டி வருகின்றனரா?
சுன்னாகம். ம. சகாதேவன்
எவருடைய முதல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டும் நான் மல்லிகையை ஆரம்பிக்கவில்லை. என்னுடைய உள்ளுணர்வின் உந்து சக்தியின் ஆக்கினை பொறுக்காமல்தான் இதழை ஆரம்பித்தேன்.
எனக்கென்றொரு அரை நூற்றாண்டுக் கொள்கையுண்டு. அதைப் போலவே மற்றவர்களுக்கும் ஒவ்வொரு கொள்கையுண்டு. பரஸ்பரம் இதைப் புரிந்து கொண்டு செயல்பட்டு வருபவன், நான். நான் கல்விக்குத் தலை வணங்குபவன். அதே சமயம் படைப்பாளி கல்வியறிவினால் மாத்திரம் உருவாக்கப்பட்டு விடுவதில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டவன். எனவே யாரும் என்னைக் கனம் பண்ண வேண்டும் என இயல்பாகவே விரும்பாதவன், நான்.
61

Page 33
:068
9 எனது கேள்வி விசித்திரமாக உங்களுக்குத் தெரியலாம். இந்தத் தேசம் ஜப்பான்காரனின் நாடாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
மானிப்பாய். எம். ராஜவேல்
இதை நினைத்துப் பார்க்கவே சுகமாக இருக்கிறது. ‘இந்துமா சமுத்திரத்தின் முத்து ள்னப் புகழப்படும் இந்த வளங்கள் நிரம்பிய தேசத்து மண்ணில் பொன்னை விளை வித்திருப்பான், அவன். உலகப் பூப்பந்தின் சகல நாடுகளில் இருந்தெல்லாம் இந்தப் புதுமையைத் தரிசிக்கவென்றே மக்கள் கூட்டம் இந்த நாட்டிற்கு வந்து வந்து போகும். இதைக் கண்டு உலகமே வியப்பால் இந்த நாட்டைத் திரும்பிப் பார்த்துத் திருப்தி கொள்ளும்.
இதைத் திருப்பி இப்படிப் பாருங்கள். ஜப்பான் என்றொரு தேசத்துக்கு நாங்கள் சொந்தக்காரர்களாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அடிக்கடி அங்கு நடைபெறும் பூமி நடுக்கம், பூமியதிர்ச்சி காரணமாக நாம் நமக்குள் சண்டை போட்டுக் கொக்கரிப் பதுடன் அழுதழுது உலகத்திடம் பிச்சை கேட்டுத் திரிவோம். நமது ஜப்பான் தேசத்துப் பிரதமர் டோக்கியோவில் தங்கியிருக்க மாட்டார். நிதி உதவிக்காக அலைந்து திரிவார். நாமோ பட்டிமன்றம் நடத்துவோம். ‘நமது ஜப்பான் தேசத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை நாசத்துக்கு உதவி கேட்பது எந்தெந்த நாட்டவரிடம்! இதுவே பட்டி மன்றக் கருப்பொருளாக இருக்கும்.
8 சமீபத்தில் நீங்கள் படித்து வியந்த செய்தி ஒன்றைச் சொல்ல முடியுமா?
மன்னார். கா. தனபாலன்
முன்னாள் பிரபல குத்துச் சண்டை
வீரன் (காளியியஸ் கிளே) முகம்மது அலி என்பவரின் சுயசரிதை வரலாறு ‘கிரேட் ஒவ் ஒல் மைம்ஸ்’ என்ற பெயரில் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த நூலின் முதற் பிரதிகளை ஆயிரம் பேர் பெற்றுக் கொண்டனர். ஒரு நூலின் விலை 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். அன்று நடந்த இந்த நூலின் வெளியீட்டு விழாவில் இதே விலைக்கு ஆயிரம் பிரதிகள் விற்றுப் போய்விட்டன. அன்று வெளியிடப் பட்ட பத்தாயிரம் பிரதிகளும் அவ்விழா விலேயே விற்றுத் தீர்ந்து போய்விட்டன.
இதைப் படித்து விட்டு வாய் பிளக்கும் சகோதர எழுத்தாளனே, உலகம் எங்கே போகிறது, பார்த்தாயா?
9 ஒரு குழந்தை பிறந்து, தாய் தந்தை யருடன் குலாவி வரும்போதுதான் சத்தங் களைப் புரிந்து கொண்டு பேசப் பழகுகின்றதா?
உரும்பிராய். எம். சரவணன்
அப்படிச் சொல்லிவிட முடியாது. ஒரு குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் பொழுதே தாயின் குரலைப் புரிந்து கொள்ளுகின்றது. ஏழுமாதக் கருவாக இருக்கும் சமயத்திலேயே தாயினது குரலைத் தெளிவாகப் புரிந்து கொள்ளு கின்றது. அதேகால கட்டத்தில் தாயினதும் ஏனையவர்களினதும் குரல்களை இனம் பிரித்துத் தெரிந்து கொள்ளுகின்றது.
8 மல்லிகையில் இப்பொழுது தொடர்ந்து நீங்கள் எழுதிவரும் தொடர் கட்டுரையின்
62
நோக்கம்தான் என்ன?
US 60). எஸ். கேசவதேவன்
நாளைக்கு என்னைப் பற்றி வெளி வரும் தகவல்களில் இடைச் செருகல்கள்

இடம் பெற்றுவிடக் கூடாது என்பது முதற் காரணம் அடுத்தது இந்தக் க | ல கட்டத்தைப் பிந்தளிக் கூடாது அடுத்த காரணம். ஒரு சாதாரண தொழிலாளியாக யாழ்ப்பானக் கடைத் தெருவுக்குள் உட் பிரவேசித்த தகுந்த கல்வியறிவோ சமூகப் பின்புலமோ இல்லாத ஒர் ஒடுக்கப்பட்! சமூகத்திலிருந்து முகிழ்ந்து வந்த இளைஞன் ஒருவன், ஓர் எழுத்தாளனாக, ஒரு தொடர் சஞ்சிகையின் ஆசிரியiனாக உருவாகி மலர் வதற்கு அந்த மனிதன் இந்தச் சமூகத் துக்குக் கொடுத்த விலையின் பட்டியலே இந்தத் தொடர் கட்டுரை. நாளை இக் கட்டுரைத் தொடர் நூல் வடிவம் பெறும். நூலுருவம் பெறும் சமயம் இக்கட்டுரையின் உள்ளடக்கம் மீள் பரிசீலனைக்கு 2 படுத்தப்பட்டு, நேர் சீர்திருத்தம் பெறும் இந்த வெறும் களிமண்ணைப் பிசைந்து செப்பனிட்டுச் செப்பனிட்டுச் சிலை.பாக்கி மிளிரச் செய்த மகத்தானவர்களின் பெயர் கள் அந்த நூல் நிலைத்திருக்கும் வரை நிலைத்திருக்கச் செய்யும் ஒரு படைப் பாளியின் சிறுமுயற்சிதான் இக் கட்டுரைத் தொடரின் ஆரம்ப நோக்கமாகும்.
9 ஆணவம் மீக்கவர் நீங்கள் என்றொரு துற்றச்சாட்டு உண்டே, அதன் காரணமாகத் தான் யாழ். பல்கலைக்கழகம் தந்த பட்டத்தை நிராகரித்தீர்கள் எனச் சொல்லப் tj bijro%d), golgi 2_5Ojismusujii?
கோப்பாய். 6ம். சிலபோதி
உண்மையைச் சொல்லுங்கள், இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் மனதார நம்பு கிறீர்களா? அதிகமதிகமான மக்களுடன் தினசரி உறவாடி வருபவன். சுருக்கமாகச் சொன்னால் இதழ் விற்றுப் பிழைப்பவன், ஆணவம் என்ற சொல்லை என் அருகில்கூட நான் அண்ட விடுவதில்லை. பட்டம் நிர
கரிப்புப் பிரச்சினை யாரையுமே நோகடிக்க நானெடுத்த முடிவுமல்ல. மனப்பணிவுதான் நானெடுத்த இந்த முடிவின் ஆதாரமே. பொறுத்திருந்து பாருங்கள். வரலாறு உண்மை சொல்லும், மறைக்காது.
9 நீங்கள் திரைப்படங்கள், தொலைக் bůj bubbliby si u EliůujoiLI?
புத்தளம்.
ஆர். மணிய' சன்
இளம் வயசுக் காலத்தில் யாழ்ப் பாணத்தில் இரண்டு திரையரங்குகளில் புதுத் தமிழ்ப் படங்கள் வெளியாகும். ஒன்று வின்ஸர். இன்னொன்று றிகல். பாகவதர். சின்னப்பா படம் என்றால் முதல் நாள் முதற் காட்சி பார்த்து விடுவேன். மற்றவர்கள் பார்த்து விட்டு வந்து கதை சொல்லக் கூடாது என்ற எண்ணம்.
நான் பாகவதர் ரசிகன். அதற்காகச் சின்னப்பா விரோதியில்லை. இரண்டு பேர்களது படங்களும் விரும்பிப் பார்த்து ரசிப்பேன். அசோக்குமார் என்ற பாகவதர் படம் வின்ஸர் தியேட்டரில் வெளியிட்டபோது கலரி டிக்கட் பெற டிக்கட் கவுலன்டரில் கையை ஒட்டி இழுத்தெடுக்க இயலாமல் கை ம5ணிக் கட்டில் புக்கை கட்டித் திரிந்த ரசிகன் நான்.
இன்று தொலைக்காட்சி நாடகங்களை வார நாட்களில் தொடர்ந்து பார்ப்பது ölçÉSSELÊ.
சக்தி ஒளிபரப்பாளர்களுக்கு ஒன்றைச் சோல்லி வைக்க விரும்புகின்றேன். ரசிகர் களைத் தயவு செய்து பேய்க் காட்ட வேண்டாம். தொடர்ல் ஐந்து நிமிஷம் முன்லே!ட்டம். பின்னர் 10 நிமிஷங்கள் இருக்கும் போதே காட்ச் முடிந்து விடு கின்றது. இதற்குள் இடையிடையே விளம்

Page 34
பரக் குறுக்கீடுகள். ஆணோ பெண்ணோ இந்த நாட்டில் தரமான சுவைஞர்கள் உங் களது காட்சிகளைச் சுவைத்து மகிழ் கின்றனர். விளம்பரம் இல்லாமல் காட்சி களை இலவசமாகக் காட்ட முடியாது. உண்மை. ‘இலவசமாகத்தானே உங்களுக் குக் காட்சிகளைப் பார்க்கத் தருகின்றோம் என்ற மிதப்பில் பின்வரும் பத்து நிமிஷங் களை விழுங்கி ஏமாற்றுவது சுவைஞர்களை எரிச்சல்பட வைத்து விடுகின்றது. கவனம். மக்கள் உங்களை விடப் புத்திசாலிகள். ரிமோட் கன்ரோலை நிரந்தரமாகவே கைக் கொண்டு விடுவார்கள். அப்புறம் உங்களது விளம்பரத்தின் கதி என்னாவது? அப்புறம், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர்கள் வேறொரு யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். மக்களை மந்தைகளாக்கி விடக் கூடாது.
9 தமிழ்த் தேசிய கோவமெழுப்பிகள் பற்றி உங்களது நிலைப்பாடு என்ன?
ஊரெழு. க. மயில்சாமி
இந்தக் கோஷத்திற்குப் பின்னால் ஆரோக்கியமான அம்சமுமுண்டு. படு நாச மான எண்ணமும் உண்டு. இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வேறெந்த இனத்தவர் களுக்கும் கீழ்ப்பட்ட இரண்டாம் தரப் பிரஜைகள் அல்ல. சகலவற்றிலும் சம உரிமை கொண்டவர்கள் என்ற கருத்து. அடுத்தது தான் அபாயகரமானது. ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைக்கிறது!’ என்ற கோஷத்திற்குப் பின்னால் உயர் குலத்தினரின் ஆணவ நினைப்பு. மீண்டும் தலித்துக்களை அடிமை குடிமைகளாக வைத்து அடக்கி ஆள அரசியல் அதிகாரம் வேண்டும் என்ற உயர்சாதி அகம்பாவக்
201 - 1/1, பூர் கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்ரி: , , ,சீர்;
கருத்தோட்டம், இலக்கிய உலகை உன்னிப் பாகக் கவனித்து வாருங்கள் இந்த இரண்டாம் கட்டக்கார கழுத்தாளர்கள்தான் வேண்டுமென்றே என்னையும் டானியலை யும் அவதுறு செய்து கருத்துரைப்பவர்கள். இவர்களது பரம்பரையின் மரபணுக் கூறு இன்றும் இவர்களது இரத்தத்தில் கலந்து போயிருப்பதே எதார்த்த உண்மையாகும்.
9 உயர்கல்வி கிடைக்கப் பெருவில்லையே
என்ற மன ஆதங்கம் உங்களுக்கு ஏற்படுவதுண்டா?
கண்டி. எஸ். ரமணன்
உண்டு. நிச்சயம் நானொரு உயர் கல்விமானாக உருக் கொண்டிருப்பேன். என்னுடைய சாதியை முன்வைத்து ஒரு யாழ்ப்பாணத்துச் சாதி வெறித் தமிழ் சட்டம்பி செய்த வாழ்வைச் சிதைத்த வெண் கொடுமை என் ஆற்றலை வேறு திசையில்
திருப்பி விட்டது. இந்தச் சாதிவெறிச் சட்டம்பிமார் இன்று இல்லாமல் போய் விட்டார்கள் என நீங்கள் நம்பினால்
உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டவர் களாவீர்கள். வேறு வேறு உருவங்களில் நமது பிரதேசத்தில் பள்ளிக் கூடங்களில் இன்றும் உலாவருகின்றனர். இந்தச் சாதி வெறியர்கள்.
திருத்தம்
கடந்த மாதக் கேள்வி பதிலில் “இதோ என் முன்னால் இருக்கின்றாரே டொமினிக் ஜீவா. அவரது சுயசரிதையைப் படித்த உணர்வில்தான் நான் இந்த நூலை எழுதினேன்” என மேடையில் பேசியவர் பேராசிரியர் வி.கே.கணேசவேல் எனத் தவறாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கருத்தை வெளியிட்டவர் பேராசிரியர் வி. கே. கணேசலிங்கம் அவர்கள்.
| : ,هٔ ۴.f . . . " . 1: ، نیایی: ، i نوا
அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A இலக்கத்திலுள்ள U. K. பிரிீர் ጎ,rታ „%if; f; **წ. 7., f’fi, No ”ჰ: „ზოგჯ.J.
64
 
 
 

Professional Colour Lab & Studio
* Jindoor & Ouldoor Pholography * Quality colour ailm Processing & Printing * Pholosaminaling Covering Album * Quality & lormal Pichure framing * tided 3ilming
Quick Photo Service Systems
64, Sumanatissa Mawatha, (Armour Street), Colombo - 12. Tel: O74-61O652

Page 35
nே
PA
EXPO PRODU
 

NOWember 2003
RA
JCTS (PVT) LTD.
orters o/ Jaditiona/
unkan Člod
:a Avenue, bo — O3. . 2573717