கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.12

Page 1
  

Page 2
ஹித்திய புத்தக இல்லம் S எம்.டி. குணசேனவின் ஏஜன்ட் I'<
லம் பெயர்ந்த எழுத்தாளுர்களும்,
ாளர்களும் தயவு செய்து
கள் நூல்களை காட்சிக்கு வைத்து
து உதவுவோம்.
ഴ്ച/\്¶
L"ఇషా శ.ఎ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெயகாந்தண் வருகை
எழுத்தாளர் ஜெயகாந்தன் குறுகிய மூன்று நாள் இடைவெளியில் கொழும் பிற்கு வரவிருந்தார். காலஞ் சென்ற விநோதன் குமாரசாமி அவர்களது 8வது ஞாபகார்த்த விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கைக்கு அணினாரது துணைவியார் ஜெயந்தி சென்னைக்குச் சென்று நேரில் அழைத்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மல்லிகைப் பந்தலின் ஆதரவில் எழுத்தாளர் அனை வரையும் அவரைச் சந்திக்க வைக்கும் நோக்கில் ‘ஜெயகாந்தனுடன் ஒர் இலக்கிய மாலைப்பொழுது என்ற சந்திப்புக்
மல்லிகை
! ஆரம்பம்:15.8.1966
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
38-வது ஆண்டு “Mallikal' Progressive Monthly Magazine
.
கலந்துரையாடலை 10-11-2003 அன்று ஒழுங்கு செய்து, அனைத்து எழுத்தாளர்
களுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன்.
திடீரென ஏற்பட்டு விட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக அவரால் இலங்கை வர இயலாமல் போய்விட்டது. இன்னொரு சந்தர்ப்பத்தில் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இலக்கிய நண்பர்களுக்கு ஏற்பட்டு விட்ட தற்காலிக ஏமாற்றத்தை கூடிய விரைவில் நீக்கித் தரலாம் என
எண்ணுகின்றேன்.
- டொமினிக் ஜீவா
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
oቆtbዘዘ 2003
201-11, Sri Kathiresan Street, Colombo - 13. Tel:232O721

Page 3
காலம் காலமாக இவரது பெயர் நிலைத்திருக்கும்.
- டொமினிக் ஜீவா
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களினது மனித உரிமைக்காக வாழ்நாட்கள் பூராவும் தன்னை ஒப்புக் கொடுத்து அந்த மக்களின் சுபீட்சமான எதிர்கால வாழ்வுக்குரிய திட்டங்களோடு இயங்கி வந்த தோழர் எம். சி. என அழைக்கப்பட்ட திரு. எம். சி. சுப்பிரமணியம் அவர்களது மறைந்த ஞாபகதினம் 12-1-2004 ஆகும்.
வட புலத்தினுள்ள ஒவ்வொரு சின்னஞ் சிறு கிராமத்தின் குச்சொழுங்கை களிலும் அவரது சைக்கிளின் சில்லுகள் படாமல் இருந்ததில்லை. அத்தனை தூரம் தன்னைப் பொதுத் தொண்டுக்கு அர்ப்பணித்து உழைத்தவர், எம்.சி.
இன்று தமிழ் மண்ணில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலர் ஆசிரியர் களாகவும் படித்தவர்களாகவும் பல்வேறு துறைகளில் மேம்பட்டு உள்ளவர் களாகவும் விளங்கி வருகின்றனர் என்றால் அதன் பின்னணியில் இவரது அயராத உழைப்பும் இருந்து வந்துள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
ஒடுக்கப்பட்ட தலித்துகளின் பிரதிநிதியாக இவர் பாராளுமன்றத்தில் ஒர் அங்கத்தவராக நியமிக்கப்பட்ட சமயத்தில், சாதிவெறிக் கிறுக்கர்களைத் தவிர, தமிழ் மக்கள் அனைவருமே பெருமிதம் கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
எந்தவ்விதமான பந்தாவுமற்ற இவர், தனது கடைசி காலம் வரை இடதுசாரியாகவே இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகுபாடு இல்லாமல் சகல தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இவர் தொண்டு செய்தவராவார். அரசியல் காழ்ப்புணர்ச்சியற்றவர், இவர். இவரது சமூகக் கண்ணோட்டச் சிந்தனை பல கிராமங்களுக்குக் கல்விச் சாலைகளை உருவாக்க உதவி புரிந்துள்ளது. t
சிலரது இழப்பு திடீர்க் கவலையைத்தான் தரும். வேறு சிலரது இழப்புக்களோ, காலம் போகப் போகத்தான் உழைக்கும் மக்களினது மனசில் உறைக்கும்.
தன் தொண்டினால் தடம் பதித்த தோழரிவர்.
 

உடனடியாகத் தீருங்கள் இல்லாது போனால் நாடே பின்தங்கி விடும்!
வேறெந்த காலத்தையும் விட, இன்று அரசியல் சாசன நெருக்கடி தோன்றி, அரசியல் உலகை அதிரடிக் கலங்கலில் சிக்க வைத்துள்ளது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் மிக நுட்பமான உள்நோக்கம் கொண்டு தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பு, இன்று அவரது கட்சி அரசாங்கத்தின் மீதே பரிசீலிக்கப்பட்டு வரும் கால மாற்றத்தை நாம் கண்டு வருகிறோம்.
சிறுபான்மை இனப்பிரச்சினை நீண்ட காலத் தேசியப் பிரச்சினை. இதை ஒரு குழு அரசாங்கம் நிச்சயம் தீர்த்து வைத்துவிட முடியாது. இந்தப் பகுதியினர் தீர்வுத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், அந்தக் குழுவினர் அதைக் குழப்பி யடிக்கவே அனைத்தையும் செய்வர்.
அடுத்த பொதுத் தேர்தலும் இதற்குச் சரியான மார்க்கமாகாது. இன்றைய அரசியல் யாப்பின்படி கிட்டத்தட்ட முன் பின்னாக இதே பிரதிநிதித்துவப் பாராளுமன்ற ஆசனங்கள்தான் பதிவாகும்.
பின்னரும் இதே அரசியல் சடுகுடு விளையாட்டுத்தான்.
இதே ஜனாதிபதி ஆளுமைச் சர்ச்சைதான் மீண்டும்.
விடுதலைப் புலிகள் இந்தக் காலகட்டத்தில் அரசியல் முதிர்ச்சி நிரம்பிய இராஜ தந்திரத்துடன் நடந்து கொள்வது அவர்களது அரசியல் வளர்ச்சியையும் அநுபவ முதிர்ச்சியினையும்தான் காட்டி நிற்கின்றது. அவர்களினது இந்த இராஜ தந்திர முதிர்ச்சிக்காக அவர்களைப் பாராட்டுகின்றோம்.
ஊர் கூடித் தேர் இழுப்பது என ஊர் தோறும் சொல்வார்கள். இது யதார்த்தம். அப்பொழுதுதான் தேர் நகரும். அதைப் போன்றே அரசியல் அமைப்புகள் தங்கள்
தங்களது சொந்த அரசியல் லாப நஷ்டங்களைப் பாராமல் இந்தத் தேசிய இனப் பிரச்சினை தீர ஒன்றுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இல்லாது போனால் இந்தத் தேசமே பின்தங்கிப் போய்விடும்.

Page 4
வ.ஐ.ச. ஜெயபாலன்
கவிதை சொல்லும் காற்று
- அஷ்ரஃப் சிஹாப்தீன
இரண்டு கவிதைத் தொகுதிகளையும் அகஸ்மாத்தாக அவ்வப்போது நிகழ்ந்த சில நிமிட நேரச் சந்திப்புக்களின் ஞாபகங்களையும் கொண்டு ஒரு முன்னணிக் கவிஞனைப் பற்றி முழுமையாக எழுதிவிட முடியுமா என்ற கேள்வி, இதனை எழுதுமாறு அன்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்ட போது என்னுள் எழுந்தது. ஆனால் ஒரு கவிஞனைப் பற்றிப் பேச ஞாபகங்களும் சந்திப்புக்களும் அவசியம் இல்லை. அவனது கவிதைகளே போதுமானவை. ஆனால் இந்த இடம் கவிதைகளைப் பற்றி மட்டும் பேசும் இடமல்ல என்பதில்தான் எனக்கு இடறல் ஏற்படுகிறது.
ஜெயபாலன் என்ற பெயர் கேட்கும் போதெல்லாம் அவனது லாவண்யம் மிக்க கவிதை வசனங்கள் மாத்திரமன்றி, ஒரு நிழல் மனிதன்தான் என் மனதில் ஊசலாடுகிறான். நான் ஜெயபாலனைக் கண்டு ஆர அமர்ந்து பேச முயன்ற போதெல்லாம் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். எனக்கு மட்டுமன்றி வேறு சிலருக்கும் அப்படியொரு வாய்ப்பு ஏற்படுத்தாத ஜெயபாலனிடம் அதற்கு நிச்சயம் வேறு காரணங்கள் இருக்கும் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு காற்றாக அலையும் கவிஞனாகவே அவரை நான் காண்கிறேன். கவிஞன் ஒருவனை இலகுவில் சிறைப்படுத்திவிட முடியாது. ஜெயபாலன் கவிதை உலகில் மட்டுமன்றி நிஜ வாழ்விலும் அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறார். ஜெயபாலன் வந்திருக்கிறார் என்ற செய்தி அறிந்து தேடிக் கொண்டிருக்கும் போது, ஒன்றில் அவர் இந்தியாவில் அல்லது நோர்வேயில் நிற்கிறார் என்ற பதில்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன.
“நான் பிறந்தது உடுவில் கிராமத்தில். யாழ்ப்பாணக் குடாநாட்டின் செம்மண் புலத்தில் உள்ள அழகிய கிராமம் அது” என்று சொல்லும் ஜெயபாலன் பின்னர் வாழ்ந்ததெல்லாம் நெடுந்தீவில். நெடுந்தீவு மீது அவர் கொண்டிருக்கும் காதல் அவரது ‘நெடுந்தீவு ஆச்சிக்கு’ என்கிற அழகிய கவிதையில் இப்படி வெளிவருகிறது. ‘எந்த அன்னியருக்கும் நிலையில்லை, எனது ஊர் நிலைக்கும் என்பதைத் தவிர.” அக்கவிதையில் வேறொரு இடத்தில் ‘என்னுடன் இளநீர் திருட, தென்யிைல் ஏறிய நிலவையும், என்னுடன் நீர் விளையாட, மழை வெள்ளத்துள் குதித்த
o UCCEEDE
 
 

சூரியனையும், உனது கரைகளில் விட்டு வந்தேனே, எனது சந்ததி களுக்காக..” என்று கரைகிறார்.
“...எனினும் . அவர்கள் இருவரும் (தாய், தந்தை) கவிதையில் காட்டிய ஈடுபாடு எனக்கு ஒரு அதிசயமானதாக, அற்புதமானதாகவே இன்றும் படுகிறது. கவிதைக்கு வாழ்வில் ஒரு இடம் இருந்து வந்திருக்கிறது என்பதற்கு அவர்களே சாட்சி” என்று தனது பின்னணியைச் சொல்லும் ஜெயபாலன், வெறும் காகிதக் கவிஞனாகவே ஒரு போதும் இருந்ததில்லை. அவர் சொல் கிறார். ‘என் தந்தை போன்ற தமிழ்த் தேசியவாதிகள், 4ாதிப் பிரச்சினையில் காந்திய சீர்திருத்தப் போக்கை ஆதரித் தனர். வன்முறை தொட்ட புரட்சிகரப் போராட்டப் போக்கை நிராகரித்தனர். நான் போராட் டத்தை, அல்லது வீட்டைக் கைவிட நேர்ந்தது. வீட்டை நான் கைவிட்டேன்.”
1980இல் இவர் எழுதிய ஆய்வான "தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ என்ற நூல் இவரைக் கவனிக்க வைத்தது. முஸ்லிம் சமூகத் தில் மட்டுமல்லாது நேர் நின்று சிந்திக் கும் பலர் ஜெயபாலனை நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினர். இனப்பிரச் சினை வெடித்தெழுந்த அந்தக் கால கட்டத்தில் அந்நூல் வெளிவந்ததில் அந்நூலுக்கு ஒரு முக்கியத்துவம் இருந் தது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பல மட்டங்களிலும் அந்நூல் பற்றிய வாதப் பிரதிவாதங்களும் அபிப்பிராயங் களும் உரையாடல்களுமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. குறிப்பாக தமிழ் மகன் ஒருவன் இவ்வேளை மற்றொரு சிறு பாண்மை இனமான முஸ்லிம்களை
gases
நினைத்துச் செயல்பட்டிருக்கிறான் என்ற ஆச்சரியமும் வியப்பு மேலீடும் முஸ்லிம் சமூகத்திலிருந்து.
இந்த நூல் வெளிவந்ததிலிருந்தே தமிழ், முஸ்லிம் மக்களது ஐக்கியத்தை யும் மேம்பாட்டையும் விடுதலையையும் ஒரு தவமாக மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறார் ஜெயபாலன். இந்த உணர்வை சாதாரண ஒரு மனிதன் கொண்டு இயங்கியிருந்தால் அது பேசப் பட வாய்ப்பில்லை. ஜெயபாலன் ஒரு கவிஞன். கவிஞனது என்னமும் எழுத் தும் வலிமை மிக்கது. இன்று முஸ்லிம் சமூகத்தைக் பொறுத்தவரை ஜெய பலனை ஒரு சொந்தச் சகோதரனாகப் பார்க்கும் பலர் உள்ளனர். அது அவரது நேர்மைக்குக் கிடைத்த பெரு மதிப்பு. அவரது கவிதையின் வலிமையும் disal-.
போர் நிறுத்தம் இடம் பெற்று இன்றோ நாளையோ சமாதானம் வந்து விடப் போகிறது என்கிற நிலையில் முஸ்லிம் சமூகம் அருகே அமருவ தற்குக் கூட அனுமதிக்கப் படாத நிலை யையும் இருபது வருடங்களுக்கு முன் னரே தமிழ் முஸ்லிம் மக்களது உறவும் விடுதலையும் பற்றிப் பேசிய ஜெய பாலனையும் ஒருகணம் நினைக்கையில் நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில் அவரை ஆரத் தழுவிக் கொள்ள நினைக்கிறது.
ஜெயபாலனின் கவிதைகளைப் G! Ј;Ъ;ъ ытьо» у 3ы: БіьoоењuТыі ;ыflЦр இலக்கிய வரலாற்றில் முன்னணிக் கவிஞர் வரிசையில் நிற்கின்ற எல்லாத் தகுதிகளையும் கொண்டவராக மிளிர் கிறாா. 1986ல சூரியனோடு பேசுதல’ தொகுதியும், 1987ல் நமக்கென்றொரு

Page 5
புல்வெளி’ என்ற கவிதைத் தொகுதியும் வெளியாயின. 'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற அவரது மற்றொரு கவிதைத் தொகுதியும் 1987ல் வெளி யானது. 1990ல் ‘ஒரு அகதியின் பாடல் என்ற தொகுதியும் அதைத் தொடர்ந்து ' உயிர்த்தெழுகிற கவிதை’ என்ற தொகுதி 1998லும் வெளியாயின. அவ ரது அநேக கவிதைகளை உள்ள டக்கிய "வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் - பெருந்தொகை ஏப்ரல் 2002ல் வெளி வந்துள்ளது. 320 பக்கங்கள் கொண்
இத்தொகுதியின் அட்டையில் பேனாச் சித்திரத்தில் ஜெயபாலனின் கலைந்த தலையும் சட்டென்று ஊடறுக்கும் பார்வை கொண்ட முகமும் வரையப் பட்டுள்ளது. நானறிந்த வரை ஜெய பாலன் கவிதை குறித்துப் பேசும் எவரும் அதன் ரசனையில் சொக்கிய வர்களே தவிர, அதில் நொட்ை
நொடிசல் பற்றிப் பேசியது கிடையாது.
தனது சொந்தச் சமூகம் என்றேT முஸ்லிம்கள் என்றோ அவரது கவிதை
களும் அவரும் வேறுபடுத்திப் பார்த்தது
இல்லை. தமிழ் சமூகத்தின் அவலத்தை எப்படித் தனது கவிதைக் கண்களால் நோக்கினாரோ, அதே கண்களாலேயே முஸ்லிம்களின் அவலத்தையும் பார்த்து வந்துள்ளார் ஜெயபாலன். இதற்கு உதாரணமாக பல கவிதைகளைச் சொல்லலாம். ' உயிர்த்தெழு கிற கவிதை' என்ற அவரது தொகுதியில் இடம்பெற்றுள்ள மரியம் வேம்பு என்ற கவிதைப் பின்னணி பற்றிக் கேள்விப் dட்டு நான் வெட்கமடைந்து போனேன். அந்தக் கவிதைக்கான சம்பவம் நடந் தது எனது சொந்தப் பிரதேசத்தில் என்பதுதான் காரணம். நான் அல்லது நாங்கள் எழுதியிருக்க வேண்டிய
கவிதை அது. ஜெயபாலனின் கவிதை மூலமே அச்சம்பவம் பற்றி எனக்குத் தெரியவந்தது. இதுவெல்லாம் ஜெய பாலனின் கவனத்துக்கு உடனடியாகவே வருகிறது என்பதும் அது கவிதையாக மாறிவிடுகிறது என்:தும் எனக்கு ஆச்சரி யத்தைத் தந்த வி பங்கள். வாழைச் சேனைப் பிரச்சினை'யின் போது தமிழ்ப் பிரதேசத்துள் கொல்லப்பட்டு தங்களது தந்தையாரின் கண்முன்னேயே பெற் றே?ல் உளற்றி இயக்கத்தால் எரிக்கப் பட் இரண்டு ஏழைச் சகோதரர்கள் பற்றிய வெட்கத்து ன் ஒரு அஞ்சல் என்ற கவிதையும் இதே போல அவரால் எழுதப்பட்டது.
’கொடுரமும் அவலமும் மலிந்து விட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக் கும் நம்மிடையே நம்பிக்கை தரும் உண்மை மனிதனின் பிரதிநிதி. தனது உயிருக்கு நேரே மரணத்தின் துப்பாக்கி நீட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் அடக்கப்பட் மக்களின் பேரில், அம் மக்களுக்காக, வஞ்சிக்கப்பட்டவர்களுக் காக, நேற்றும். இன்றும் தனது மரணம் வரையிலும் போரா! நெஞ்சுரம் கொண்டவர் என்பதுதான் ஜெயபால ஒடனான எனது நட்பில் நான் கண் உண்மை’ என்கிறார் ‘மூன்றாவது மனிதனி ச ஞ சிகை ஆசிரியர் எம்.பெளஸர்.
மிக அண்மைக் காலமாக ஜெய பலனின் கவிதைகள் எதையும் நம்மால் படிக்க முடியவில்லை என்பது வருத்தத்தைத் தருகிறது. கடந்த வருடம் சகோதரர் எம்.கே.எம்.ஷகீப் சவூதியி லிருந்து 6னக்கு அனுப்பியிருந்த ஒரு மடலில் இவ்வாறு தெரிவித்திருந்தார். ` அண்மையில் லண்டன் 'தீபம்’
3Diego

தொலைக்காட்சியில் ஜெயபாலனின் நேர்முகம் ஒளிபரப்பானது. ஒரு கவிஞ ராகவே எல்லோருக்கும் தெரிந்த
அவரை, அன்று ‘புவிசார் இராணுவ
ஆய்வாளர்’ என்று அடையாளப் படுத்தினார்கள். (இதை அவரின் பெயரின் முன்னால் அவ்வப்போது போட்டுக் கொணி டிருந்தார்கள்) அவரோ அவரைப் பேட்டி கண்டவரோ அவரின் நீண்ட கால அடிப்படை அடை யாளமான கவிஞன் என்ற அடையாளத் தைத் தவறிக் கூடச் சொல்லவில்லை. அவரின் கவிதைகள் பற்றிய எந்த உரையாடல்களுமோ இடம் பெற வில்லை. அதை ஜெயபாலனே துறந்து விட்டார் போலத்தான் எனக்குத் தோன் றியது. இனி ஜெயபாலனை எண்பது களின் கவிஞர் என்று அடையாளப் படுத்துவது மட்டும் போதுமென்று நினைக்கிறேன்.” ஷகீப் சொல்ல வரு வதும் ஜெயபாலனின் அமைதி குறித்த கவலை பற்றித்தான். அவரை நோக்கி அவரது கவிதை வரி ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். களைப் பறித்தீர்?
ஜெயபாலனின் வாழ்க்கையையும் அவரது கவிதையையும் யாராவது ஒருவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது அவசியம் எனப்படுகிறது. முழுமையாகச் செய்யப்படுமானால், மிகச் சுவாரசிய மாக இருக்கப் போகும் அந்த ஆய்வை மேற்கொள்பவர் நெடுந்தீவு, வன்னி, மள் வானை, சென்னை, கோவை, நோர்வே மற்றும் ஜெயபாலன் செல்லப் போகும் இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அவரது கவிதை களே அவற்றை அழகுற எடுத்துச் சொல்கின்றன. ஆனால், அவரைக் கண்டுபிடிப்பதற்கும் அவரைப் பற்றி
3 DSGO
"ஏன் எமது பாடல் | SL Lj 19 Li
மேலும் அறிந்து கொள்ள அவரைப் போன்ற அவரது நண்பர்களைக் கண்டு பிடிப்பதற்கும்தான் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும்.
அகஸ் மாத்தாக அவ்வப்போது நிகழ்ந்த சில நிமிட நேரச் சந்திப்புக் களில் ஒன்றைச் சொல்ல ஆசைப்படு கின்றேன். அந்த முதல் சந்திப்பு விமான நிலையத்தில் நிகழ்ந்தது. என்னுடன் கடமை புரியும் ஒரு தமிழ் நண்பர் “அதோ போகிறாரே. அவரைத் தெரியுமா?’ என்று கேட்டார். “இல்லை” என்றேன். ‘இவர் நோர்வேயில் இருக் கிறார். ஆய்வுக் கட்டுரையெல்லாம் எழுதித் தங்கப் பதக்கம் எல்லாம் பெற்றிருக்கிறார். ஏன் உனக்குத் தெரிய வேணுமே. கவிதை எழுதுகிற ஜெயபாலன்.” அவ்வளவுதான். அடுத்த நொடியில் ஜெயபாலனின் அருகில் நின்றேன். அந்தத் தங்கப் பதக்கம் பெற்ற கதை என்னவென்ற விபரம் எனக்குத் தெரியாது. வேறு யாரும் பெற்றிருந்தால் நமது தினசரிகளில் புழுதி பறந்திருக்கும்.
இரண்டு கவிதை நூல்களின் தரவு களோடு ஒரு பின்னிராப் பொழுதில் இதைச் சரிக்கட்டியிருப்பதற்காக நண்பர் ஜெயபாலன், அவரது இழந்து போன ஜப்பானியக் காதலியான ‘ஆரி மக்சி மோட்டோவின் முத்தத்தைப் போல, என்னை ஞாபகங் கொள்ளட்டும். ஒரு சூறாவளியைப் பிடித்து ஒரு சுண்ணாம்பு டப் பாவுக்குள் அடைக்க முயன்ற என்னை, கவிதை இரசிகர்களும் ஜெயபாலனின் அன்பான நண்பர்களும்
அவரை எதிர்காலத்தில் ஆய்வுக் குட்
படுத்தப் போகும் ஆய்வாளரும் மன்னித்துக் கொள்ளட்டும்.

Page 6
எனக்கொரு யோசனை தோன்றுகின்றது.
- டொமினிக் ஜீவா
சென்ற இதழில் ஆசிரியர் தலையங்கம் எழுதியதன் பின்னர், பலர் என்னுடன் நேரடியாகவும் தொலைபேசியிலும் கடித மூலமும் தொடர்பு கொண்டனர். கருத்துப் பரிமாறல் செய்து கொண்டனர்.
அதாவது இன்று இந்த மண்ணில் வெளிவரும் நூல்களைச் சந்தைப்படுத்தும் வசதி சம்பந்தமாகத் தனிப்பட்ட எழுத்தாளர்களும் புத்தக வெளியீட்டாளர்களும் தத்தமது அபிப்பிராயங்களைச் சொல்லி, இதற்கு எதிர்காலத் திட்டம் என்ன?’ என்றும் என்னிடம் கேட்டு வைத்தனர்.
தனிப்பட்ட முறையில் என்னால் இவர்களது கேள்விகளுக்கு விடை கூறிவிட முடியாது.
இது ஒரு பொருளாதார, விநியோக, விற்பனைப் பிரச்சினை.
எனவே இந்த மண்ணில் புத்தகங்கள் போட்டு, அதை விநியோகிக்கச் சந்தை வசதிகளற்ற சகலரும் ஒருங்கு கூடித்தான் விவாதித்து, இதற்கொரு சரியான முடிவு காண வேண்டும்.
புத்தகம் வெளியிட்டுக் கையைச் சுட்டுக்கொண்ட ஒவ்வொருவரும் தனித் தனியாக இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட முனைகிறார்களே தவிர, இதற்கொரு ஆக்கபூர்வமான விடிவு கிடைக்க வேண்டும் என இவர்களில் ஒருவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
முன்னர் - சில ஆண்டுகளுக்கு முன்னர் - உலக வங்கி உதவியுடன் நேரடியாகவே தனி எழுத்தாளர் எழுதி வெளியிட்ட கணிசமான தொகை நூல்களைக் கொள்வனவு செய்து படைப்பாளிகளுக்கு உற்சாகமூட்டி உதவி செய்தனர், கல்வித்துறையினர்.
இன்று அதற்கு என்ன நடந்ததோ தெரியவில்லை.
மீண்டும் தமது படைப்புகளைச் சந்தைப்படுத்த எந்த விதமான வசதி
|8് ബം

களுமற்றுத் தேங்கிப் போய்விட்டான், புத்தகம் வெளியிட்ட எழுத்தாளன்.
புத்தக வெளியீட்டு விழாக் களுக்கு விஜயம் செய்து எழுத்தாளர் களுக்குப் புதிய புதிய ஞானோப தேசம் செய்து மேடையையும் பின்னர் பத்திரிகைச் செய்திகளிலும் இடம் பிடிக்கும் எமது பாராளுமன்றப் பிரதி நிதிகள் - நமது அன்பிற்குரிய அஸ்வர் அவர்களைத் தவிர பாராளுமன்றத்தில் இதுபற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை.
நம் முன்னால் ஒரேயொரு வழி தான் உண்டு. நமது உழைப்பினால் வெளிவரும் நூல்களைச் சந்தைப் படுத்துவது சம்பந்தமாக நாமனை வரும் ஒன்றுகூட வேண்டும்.
நமது கோரிக்கையில் ஒன்று படுவதன் மூலம்தான் நாம் நமது நலன்களை வென்றெடுக்க முடியும்.
ஒன்றுபடுவதென்றால் நாமன்ை வரும் ஓர் அமைப்பாக முதலில் எம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒருநாளை நிச்ச யித்து ஓரிடத்தில் நமது கோரிக்கைக்
காக நாம் ஒன்று திரள வேண்டும்.
அதன் பின்னர் உதிரி உதிரியாகவும் தனித் தனியாகவுமுள்ள எமது கோரிக்கைக்கு ஒரு விண்ணப்ப வடிவம் தந்து செயல்பட முனைய வேண்டும். சும்மா வெறும் வியாபார ஆதாயத்திற்காக இந்தச் செயலை
நாம் செய்யக்கூடாது.
இப்படி ஒரமைப்பாக நாம் நம்மை ஒருங்கமைத்த பின்னர், எமது கோரிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பட்டியலிட வேண்டும்.
இப்படி நாம் நம்மை நாமே அணி திரட்டி நமது தெளிவான கோரிக்கை களுக்காக ஓரமைப்பை உருவாக்கு வோமாக இருந்தால் நாளைய இளந்
தலைமுறைப் படைப்பாளிகள் பலரும்
இதனால் பெரும் பயனடைவார்கள்
இந்த ஆலோசனைகளுக்கமைய
நாம் ஒன்று சேர்வதன் மூலம்தான்
எமது படைப்புகளுக்குத் தகுந்த சந்தை தேட முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுவே முக்கியம்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் படித்த சின்னஞ்சிறு கதை.
அமெரிக்க எழுத்தாளர் ஆருவார்ட் u(rámúl.
இருட்டிலே இரு உருவங்கள்
இருட்டிலே இரண்டு உருவங்கள் சந்தித்தன.
69 (5 உருவம் மற் றைய உருவத்தைப் பார்த்துக் கேட்டது, ‘உனக்குப் பேய்களில் நம்பிக்கை இருக்கிறதா?”
’ ‘பேயாவது மணி னாங் கட்டி யாவது!’
உடனே கேள்வி கேட்ட உருவம்
சட்டென்று மறைந்து விட்டது.

Page 7
ଶ୍ରେଣୀ ழும்பு பிரதான வீதியில் கடைக்
குதி தேவையான சாமான் களைப் பேச்சஸ்' பண்ணிக் கொண்டு ஒரு ஆட்டோவுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா ஆட்டோக் களும் பிஸியாக இருந்தபடியால், கொஞ்சம் தாமதிக்க வேண்டியதாயிற்று.
ஒருவாறு, ஒரு ஆட்டோவுக்குக் கையைக் காட்டினேன். ஒரமாக நிறுத்தப்பட்டது. சாரதி ஜிப்பாவும் தாடியும் தொப்பியுமாக ஒரு சாலிஹான ஆள்போல் காணப்பட்டார். அவரது நெற்றியில் 'சுஜூது செய்த அடை யாளம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
'ஹாஜி, எங்கப் போவ?”
“குணசிங்கபுர பஸ் ஸ்டாண்டுக்கு”
‘ஏறுங்க சீதேவி’
சாமான்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் புறப்பட்டேன்.
இடையே வாகன நெருக்கடி. இது கொழும் புத் தெருக்களில் சர்வ சாதாரணம். 'ஆட்டோ பெருகிய பிறகு ரோட்டில் நடமாட முடியாத நிலை.
அப்பிடியும் இப்பிடியுமாக வளைந்து கொண்டு ‘ஆட்டோ சென்றது.
சாரதி ஏனைய வாகனச் சாரதி களுக்கு வசைபாடிக் கொண்டு வந்தார். சில வார்த்தைகள் தூஷணமாகவும் இருந்தது. எனக்கு அவ்வார்த்தைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. 'கலிமா சொன்ன வாய் - இறைவனை 'திக்ர் செய்த வாய் இவ்வாறு பேசுவதைக் கேட்க எனக்குச் சகிக்க முடியவில்லை.
- orgao தையூம்
மெளனமாக இருந்தேன்.
‘* குணசிங்கபுர, இறங்கிக்
கொள்ளுங்க!”
இறங்கி, சாமான்களை இறக்கிக் கொண்டு ஐம்பது ரூபா கொடுத்தேன்.
‘ என்ன சீதேவி, நூறு ரூபா வேணும்!”
“நாற்பதுதானே. ஐம்பது தந்திருக் கிறேன்!”
“அது சரிப்படாது' என்று அடம் பிடிக்கத் தொடங்கினார்.
எனக்குப் பேரம் பேசுவது உசித மாகப் படவில்லை. ஏனைய ஆட்டோக் காரர்கள் வழக்கு விசாரிக்க வந்து விட்டால், நியாயம் கிடைக்காதென்று எனக்குத் தெரியும்.
is 6 GSG)is
 

“இந்தாங்க” என்று பத்து ரூபா சேர்த்துக் கொடுத்தேன்.
‘எங்கட நானாமாரோட இந்த எலவுதான். இனி வரமாட்டேன்’ என்று திட்டிக் கொண்டு மாறிவிட்டார்.
பதுளை பஸ் ஆயத்தமாக இருந்தது. ஏறிக்கொண்டேன். என் மனம் ஒருநிலைப்படவில்லை. 'ஆட்டோ’ சாரதியையே சுற்றி வந்தது. ‘என்னுடன் நடந்து கொண்டதுபோல் பிற சமயத் தவர்களுடன் நடந்து கொண்டால், அவர்கள் என்ன நினைப் பார்கள்? இஸ் லாத் தைப் பற்றித் தவறாக அல்லவா புரிந்து கொள்வார்கள்! என்று எண்ணினேன்.
அப்பொழுது, நான் வாசித்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பி வீடு செல்ல ஆயத்த மாக இருந்த எழுத்தாளர் ஒருவர், அங்கே நின்ற ஆட்டோ சாரதியிடம்
* திருவல்லிக்கேணியில் உள்ள வெங்கடரங்கப்பிள்ளைத் தெருவுக்கு வரமுடியுமா?’ என்று கேட்டார்
‘ஏழு ரூபா கொடுப்பியா?” என்று சாரதி கேட்டான்.
“ரொம்ப அதிகமாகக் கேட்கிறா யே. நியாயம் இல்லையே!’ என்றார்.
‘'வேற ஆட்டோவைப் பாரு’ என்றான்.
சற்று நேரம் கழித்து, மற்றொரு
(ബ
'ஆட்டோ’ வந்தது. அதை நிறுத்தி, போகுமிடத்தைச் சொல்லி, ‘‘ வர முடியுமா?’ என்று கேட்டார்.
“வாங்க போகலாம்” என்று கூறி, மீற்றரைச் சுழற்றிவிட்டுப் புறப்பட்டார், அந்த ஓட்டுநர்.
சேர வேணி டிய இடத்தில் 'ஆட்டோ’ நின்றது. மீற்றர் 3.50 காட்டியது. ஐந்து ரூபா நோட்டைக் கொடுத்துவிட்டு, இறங்கும் முன் மீதியைக் கொடுத்தார் சாரதி.
‘'நீங்க வைத்துக் கொள்ளுங்கள்”
என்று எழுத்தாளர் கூறிய பொழுது,
* ஸார், நான் நோன்பு நோற் கிறேன். மேலதிகமாகப் பெறுவது விரோதமானது. நான் அல்ஹாவுக்கு நேர்மையாக நடந்துகொள்ள விரும்பு கிறேன்’ என்றார்.
எழுத்தாளர், அசந்து போனார்.
ஆச்சரியத்தால்
ஆட்டோ சாரதியின் நேர்மையான போக் கை ஒரு கணம் எண் ணிப் பார்த்தேன். கண்கள் பனித்தன. உள்ளம் பெருமிதங் கொண்டது.
இரண்டு ‘ஆட்டோ’க்காரர்களையும் எடைபோட்டுப் பார்த்தது மனம்.
ஒரே நேரத்தில் பூத்து, காய்த்து பழுத்த பழங்களில் ஒன்று கசப்பு, மற்றொன்று இனிப்பு. ஏன், இப்படி?

Page 8
ஒரு முக்கிய குறிப்பு.
மல்லிகை இத்தனை ஆணி டுக் காலமாக வெளிவந்து கொண்டிருப்பதைச் சுவைஞர்கள் நன்கு அறிவர்.
எந்தச் சூழ்நிலையிலும் - யுத்தக் கெடுபிடிகள் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கூட, மல்லிகையில் வரும் தனிநபர் கருத்துக்களை நாம் இருட்டடிப்புச் செய்ததோ அல்லது “எடிட்' பண்ணி ஆசிரிய ஆதிக்கம் செலுத்தியதோ இல்லை.
கருத்துக்களுக்கு அதை எழுதியவர்களே பொறுப்பானவர்கள்.
இந்தப் பத்திரிகை ஜனநாயகத்தைக் கடந்த நவம்பர் இதழில் கனடாவில் இருந்து மறுப்புக்கட்டுரை எழுதிய நண்பர் மீறி விட்டார். கனக சபேசன் என்பவரின் கட்டுரைத் தொனி தனிநபர் தாக்குதலாகவே இருந்தது. அது எழுத்து நாகரிகமுமல்ல. கருத்துச் சுதந்திரமுமல்ல. கருத்தைக் கருத்தால் வெல்ல வேண்டுமே தவிர, சும்மா வக்கணை பேசுவதால் கருத்தை வளர்த்தெடுக்க இயலாது.
‘வருவோம்! வாய்ப்புள்ள போதெல்லாம் வந்து வாழ வைப்போம்! என்ற அன்னாரது கட்டுரையில் மறை தொனியாக விளங்கிய தனிமனித அவதூறுகளுக்காக மல்லிகை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்
கொள்ளுகின்றது.
- ஆசிரியர்
SS
39-வது ஆண்டு சிறப்பு மலர் தயாராகின்றது.
/ இந்த மலர் வழக்கம் போலவே வரும் ஆண்டு மலர்களின் தரத்திற்கு
தயாராகின்றது.
நீங்கள் எந்தக் காலத்திலுமே பொத்திப் பாதுகாகத்து வைத்திருக்கத்தக்க LD6)f.
பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முக்கியமான இலக்கிய எழுத்தாளர்கள் இம்மலரில் எழுதுகின்றனர்.
மலர் தேவையானோர் முன் கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
L - ஆசிரியர்

நூல் விமர்சனம்
Lu | 60 oflgs gs புகைவண்டி
- ச. முருகானந்தன்
ஆப்டீனின் அண்மைக்கால வெளியீடான 'நாம் பயணித்த புகைவண்டி’ சிறு கதைத் தொகுதியை அண்மையில் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கலையுணர்வோடு, வாசகனின் ரசனைக்குத் தீர்வு கொடுத்த அதேவேளை பல நல்ல கருத்துக்களையும் மனதில் ஆழமாக, வாழைப் பழத் தோலை உரித்துத் தருவதுபோல் பதிய வைத்துள்ளார். ஒரு எழுத்தாளனுக்கு வேறு எதையும் விட மனிதநேயம்தான் முதலில் தேவையானது என்பது இவரது கதைகளில் தூவப் பட்டிருக்கும் மனிதநேய சித்திரிப்புகள் மூலம் புலனாகிறது.
தனது தொகுதி பற்றிக் குறிப்பிடும் ஆப்டீன், சூழல், இலக்கிய நெஞ்சங்களை உருவாக்குகிறது. அந்த வகையில் நான் பிறந்து வளர்ந்த சூழலில் தேயிலைத் தோட்டப் பாட்டாளி வர்க்கத்தின் அவலங்கள் நிறைந்த வாழ்க்கை என் உள்ளத்தை நெகிழ வைத்தது. பின்னர் போகும் இடங்களிலெல்லாம் அவலங்களுக்குள் அகப்பட்டு ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் பிரச்சினைகளையே என் மனம் சுமக்க வைத்தது. இவையே என் புனைகதைகளுக்குத் தொனிப் பொருளாயின என்று குறிப்பிட்டுள்ளமை இங்கு கவனிக்கத் தக்கது. இதையே நாம் ஒவ்வொரு படைப்பிலும் தரிசிக்கின்றோம்.
இவரது படைப்புகள் பற்றிக் குறிப்பிடும் டொமினிக் ஜீவா, தனக்கெனத் தெளிவான நீண்ட கால கொள்கையைக் கைக்கொண்டு ஒழுகி வருவதால்தான் ஆப்டின் இன்று
VINS

Page 9
இலக்கிய உலகில் பேசப்பட்டு வருகிறார்’ என குறிப்பிடுகிறார்.
முன்னுரையில் இவரது கதைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள சுதாராஜ், "பெரிய எடுபாடு எதுவுமின்றி கதைகளை மிக எளிமையாகச் சொல்கிறார் ஆப்டீன். வாசகரின் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டிச் செல்கிறார். ஒவ்வொரு மூலை முடுக் குகளையும் காட் டுகிறார். ஆப்டீனின் கதாபாத்திரங்கள் ஏதோ வகையில் மனதைப் பாதிக்கவே செய்தன. அவர்களை மறக்க முடியவில்லை. ஆப்டீன் படைத்த உயிரோவியங்கள் என அவர்களைக் குறிப்பிடலாம்’ என்று விதந்து கூறியுள்ளார்.
இந்தத் தொகுதியிலே 12 சிறு கதைகள் உள்ளன. இவை ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. ஒரு தாயின் குழந்தைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் இங்கே ஒன்றுக்கு ஒன்று சோடை போகாத கதை வார்ப்புக்களைக் காண முடிகின்றது. ஒரே அமர்விலேயே இவரது கதைகளை வாசித்து முடித்த போதும், பின்னர் ஆறுதலாக வாசித்த போதும் ஒவ்வொரு கதைகளிலுமுள்ள சிறப்புகள் தெட்டத் தெள்வாகின்றன.
இன, மத பேதங்களுக்கு அப்பால் வரையப்பட்டு அற்புதமான மனிதநேய சித்திரமாக இவரது ‘வட்டத்திற்கு வெளியே சிறுகதை பிரகாசிக்கிறது. எழுத்தோட்டமும், பாத்திர வார்ப்புக்களும், சொல்ல வந்த சேதியும் முழுமையாக, பிரசார வாடை எதுவுமின்றி இக்கதையில் நிறைவைத் தருகின்றது. கதாநாயகனான முனாஸ் மாஸ்டரின் பயணத்தில் நாமும் சேர்ந்து ஆப்டீனின் புகைவண்டியில்
பயணிக்கிறோம். கதையோடு கதையாக முனாஸ் மாஸ்டரின் உள்மன அவலங் களையும், குடும்பப் பொருளாதார பின்னணிகளையும் சொல்லி எம்மையும் அவராக மாற்றி விடுகிறார். நாமும் கதையோடு ஊறிப்போகிறோம்.
தமிழ் மொழியைத் தாய் மொழி யாகக் கொள்ளாத, வீட்டு மொழியாக மலாய் மொழியைப் பேசும் ஒரு மலை யகத்து முஸ்லிம் சகோதரன், தமிழ் மொழி மூலம் எழுதியுள்ள இக்கதையில் மனுக்குலத்தை நேசிக்கும் ஒருவனாக, அதுவரை தான் வாழ்ந்த வட்டத்தை நினைத்துப் பார்க்கிறார். அதற்கு வெளி யேயும் மனிதர்கள் எனும் பெரிய வட்டத்தைக் காண்கிறார். மனிதம் அங் கிருப்பதைக் காட்டுகிறார். மானுடத்தை நேசிக்கும் பண்பு இன, மத, மொழி அனைத்தையும் கடந்துள்ளமையை இக் கதை மூலம் உணர்த்தியுள்ள ஆப்டீனின் துணிச்சல் எல்லோருக்கும் வராது. குறிப்பாக தமிழ் பேசும் தமிழ் - முஸ்லிம் இனத்தவரிடையே முறுகல் நிலை நிலவி வரும் இவ்வேளையில் மனித நேயத்தை வலியுறுத்தும் இக்கதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் மிளிர்கிறது.
ஏனைய ஒவ்வொரு கதைகளிலும் மனிதநேயம் முனைப்புடன் ஒலிக்கிறது. மனிதம் இன்னும் வற்றவில்லை' என்னும் கதையில் மனிதாபிமானம் சில கெட்டவர் களிடம் கூட இருப்பதை சுட்டுகிறார். ‘எஞ்சிய நாட்கள்’ என்னும் கதையில் மலையக தோட்டப் புலத்தையும், கேள்விக் குறியாகும் முதுமையையும் அலசியுள்ளார். புதிய ஊற்று' என்னும்
Eg oceae). KNS

கதையில் உழைப்பை வலியுறுத்தி நிற்கிறார். வறுமை நிலையிலும் பிறரிடம் கையேந்தாத சிறுவனின் தன் மான உணர்வு சிந்திக்க வைக்கிறது. வெளி நாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஆட் களின் தில்லுமுல்லுகள் "சொந்தத்தில் ஒரு வீடு' என்ற கதையில் அழகாகச் சித்திரிக்கிறது. அடுத்த கதையான ‘மின்னொளிக்காக ஏங்கும் மினாராக்கள் இளைய தலைமுறையினரின் நிதானமான சிந்தனையை வெளிக் கொணர்கிறது. 'ஜீவ தரிசனம்" கதையில் மீண்டும் இன ஐக்கியமும் மனிதநேயமும் முன்னிலைப் படுத்தப்படுகின்றது.
நாம் பயணித்த புகைவண் டி மென்மையான ஒரு காதல் கதையாகும்.
இன்று நம்முன் தமது முதுமையையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் எழுத்துக் கலைஞர்கள் இருவரைப் பற்றியும் அடிக்கடி யோசித்து
வருகிறேன்.
ஒருவர் மலையகப் படைப்பாளி கே. கணேஷ். இன்னொருவர் யாழ் மண் எழுத்தாளர் வரதர். இவர்கள் இருவரும் இன்று நம்மிடையே வாழ்ந்து
சாதனையாளர்கள்.
இவர்கள் இருவரையும் பற்றி ஒரு முப்பது முப்பத்தைந்து நிமிஷ நேரக் குறும்படங்கள் தயாரித்தால் என்ன?
இதில் ஆர்வச் செறிவு மிக்க நண்பர்கள் இங்கு இருக்கின்றார்கள். அதே சமயம் இதற்கு மெய்யாகவே உதவக் கூடிய நல்லெண்ணம் படைத்த இலக்கியத் தோழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்றனர்.
இந்த ஆக்கபூர்வமான யோசனையை நாம் செயல் வடிவ மாக்குவோமா?
கொண்டிருக்கின்றனர்.
ogsaa s
இப்படியும் யோசிக்கிறேன்.
ஞானம்' சிறுகதையில் மனிதநேயமற்ற சில ஆசிரியர்களை சுட்டி நிற்கிறார். 'குட்டியம்மா’ கதையில் கொழும்பில் தமிழர் படும் அவலம் மனதைத் தொடும் படி காட்டப்பட்டுள்ளது. ‘காப்புக்காக கதையில் காப்புக்கு இருபொருள் முடிவில் தெரிகிறது. பெற்றோர் பிள்ளை உறவு பாசம் யுத்தக் கொடுமையின் அவலங்கள் என்பன தரிசனமாகின்றன. இறுதிக் கதையான 'காயப்பட்டவன்’ எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
ஆப்டீன் மீண்டும் தான் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளன் என்பதை தனது இரணி டாவது தொகுதி மூலம் காட்டியுள்ளார்.
- 26hT

Page 10
நிஜமா. நிழலா..?
S
நீண்ட
- சிநருந்தீவு லக்ஸ்மன்
நாட்களின் பின்
எங்கள் தேசத்து மேனியை இதமாகத் தழுவத துடிககும சமாதானச் சுகந்தமே
நிஜமா. இல்லை நிழலா..?
ஆயுதங்களின் அட்டகாசங்ளை உன். மென்மை
அழித்து விடுமா..?
காரணமின்றி
நீண்ட காலனுடனான பயணங்களில் அங்கங்கள் விடை பெற்றுச் செல்ல "சொத்தி
முடவன்’ என முத்திரைக் குத்திக் கொள்ளும் அப்பாவிகளின் பெருக்கங்கள்
தணிந்து விடுமா..?
அகதிப் பெயரில் உறவுகளை இழந்த சோகங்கள். ஏக்கங்கள். மரணங்கள் மறைந்துவிட இங்கே
வசந்தம் வாய் திறந்து சிரிக்குமா..?
பேச்சுவார்த்தை நல்லிணக்கம் என்ற இதமான சேதிகளைச் சுமந்து இந்தத் தேசத்து மேனியைத்
தழுவத் துடிக்கும்
சமாதானக் காற்றே
p நிஜமா. இல்லை நிழலா..?
o DEEEDE
 
 
 
 
 

༡:ཅིའི་ மல்லிகைப் பந்தல் சமீபத்தில்
ჯ3 sa
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
uoਲਚ வெளியிட்டுள்ள நூல்கள்
(இரண்டாம் பதிப்பு புதிய அநபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளத) விலை: 25o/- 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் - (சிறுகதைத் தொகுதி) சாந்தன் விலை: 140/- 3. அநபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் ഖിഞ്ഞേ 18o/- 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் ഒിഞ്ഞ: [75/= 5. மண்ணின் மலர்கள் -
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரத சிறுகதைகள்) 6ύοO)6υ: 1 Ιο/- 6. நானும் எனது நாவல்களும் - செங்கை ஆழியான் விலை: 80/= 7. கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்தல்லாஹற் விலை; 100/= 8. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா 66oo6o: II o/- 9. முனியப்ப தாசன் கதைகள் முனியப்பதாசன் 636)su: I5o/- 10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) - பாலரஞ்சனி ബിഞ്ഞേ bo/- 11. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - 'சிரித்திரன் சுந்தர்' விலை: 175/= 12. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) ഖിതസെ; 175/=
13. சேலை - முல்லையூரான் ിഞ്ഞേ 15o/=
14 மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் 650s): 275/
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 15. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (இரண்டாவது தொகுப்பு) விலை: 350/=
(41 எழுத்தாளர்களின் படைப்பு) 16. நிலக்கிளி - பாலமனோகரன் 65606): 140/- 17. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் - தொகுப்பு: டொமினிக் ஜீவா 660su: Iso/F 18. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் விலை: 150/= 19. தரை மீன்கள் - ச.முருகானந்தன் ഖിഞ്ഞുണ്ഡ: r5o/= 20. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான் விலை. 150/= 21. அப்புறமென்ன ~ குறிஞ்சி இளந்தென்றல் ofoa): 120/= 22. அப்பா - தில்லை நடராஜா விலை: 130/=
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
27 CCy, UD gasglŷGob85

Page 11
அச்சுத்தாளின் ஊடாக ஓர் அனுபவப் பயணம்
- டொமினிக் ஜீவா
கவிஞர் கண்ணதாசனின் இல்லம் பாண்டிபஜார் பக்கமுள்ள கலைஞன் பதிப்பகத்திற்கு வெகு அருகாமையில்தான் அமைந்திருந்தது. இப்பொழுது அந்த வீட்டில் கண்ணதாசன் பதிப்பகம் இயங்கி வருகிறது.
நானும் இராம.கண்ணப்பனும் வீட்டு நடு அறையில் காத்திருந்தோம்.
"இப்பொழுது கவிஞர் குளித்துக் கொண்டிருக்கிறார்” என ஒரு பணியாளன் எங்கள் இருவருக்கும் தகவல் தந்தார்.
நான் நடு ஹோலில் தொங்கிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை விரும்பிப் பார்த்த வண்ணம் நேரம் கடத்தினேன்.
இப்படியே நேரம் போய்க் கொண்டிருந்தது.
திடீரெனப் பின்பக்க வாசல் கதவைத் திறந்து கொண்டு, இரு கரங்களையும்
கூப்பிய வண்ணம் “வணக்கம்!” என மென்குரலில் சொல்லியவாறு கவிஞர் நடு ஹோலிற்குள் பிரவேசித்தார்.
அந்த அறையில் அவர் வந்ததினால் ஒரு புதுப் பொழிவு பெற்றுத் திகழ்வது போல, எனக்குத் தோன்றியது. சில்க் சட்டை, சரிகைக் கரை வேட்டியில் ஆள் பிரகாசமாகத் தெரிந்தார்.
வந்து ஆசனத்தில் அமர்ந்த உடனேயே மிக நட்புணர்வுடன் சம்பாஷணையை ஆரம்பித்து விட்டார்.
அப்பொழுது கண்ணதாசன்' என்ற இலக்கிய இதழ் ஒன்று வெளிவந்து தற்காலி கமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இலக்கிய இதழ் சிறப்பாகவும் தனிக் கவர்ச்சி யாகவும் வெளிவருவதற்கு அமுதோன் என்ற கவிஞனுடைய சிறப்பு ஓவியங்களும் ஒருவகையில் காரணமாக அமைந்திருந்தன.
எங்களது சம்பாஷணை 'கண்ணதாசன் தற்காலிக நிறுத்தம் பற்றித் திரும்பியது.
t أهد

நான் சொன்னேன்: "நீங்கள் கவிஞர் எனத் தமிழகத்தவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டீர்கள். ஆனால், கால கதியில் கண்ணதாசன் சஞ்சிகையை இத்தனை இலக்கியக் கனதியுடன் வெளி யிட்டவர் என்ற இலக்கியப் புகழும் காலாதி காலமாக நின்று நிலைக்கும்!” எனச் சொல்லி முடித்தேன்.
அவர் புன்முறுவலுடன் நான் சொல் வதை வெகு அவதானமாகக் கேட்டார்.
மிகமிக அருகாமையில் இருந்து உரையாடிய காரணத்தால் நான் அவரை உற்றுக் கவனிக்க முடிந்தது.
அவரது ஒற்றைக் கண்ணில் செல்ல வாக்குத் தென்பட்டது. இது மாறுகண் போன்றதல்ல. நமது பிரதேசத்தில் இதைச் செல்ல வாக்கு எனக் குறிப்பிடுவார்கள். இது அவருக்குத் தனிக் கவர்ச்சியைத் தந்தது. நெற்றியில் ஜவ்வாது பொட்டு. அவரைச் சுற்றி மெல்லிய சுகந்த
6TF60)60T.
பாகவதருக்கும் இந்தச் செல்ல வாக்கு உண்டு. இதே ஜவ்வாதுப் பொட்டும் சுகந்த வாசனையும் பாக வதருக்கும் சொந்தம்.
தன்னைத் தேடி வந்தவர்களை உப சரிப்பதில் கண்ணதாசன் மன்னன். இதை நேரில் தெரிந்து கொண்டேன்.
முதல் ஒரு தடவை சிலநாட்களில் கொழும்பு வந்துபோனதாகச் சொன்ன அவர், அடுத்த தடவை நிச்சயம் யாழ்ப் பாணம் வந்து, அங்கு வாழும் தமிழ் மக்களைப் பார்க்கப் பிரியப்படுவதாகவும் சொன்னார்.
D&GSG) occo.
என்னவோ தெரியவில்லை. தமிழகம் போனால், அங்கு வதியும் எழுத்தாளர் களை நேரில் சென்று பார்ப்பதில் எனக்கு அப்படிப்பட்டதொரு பெருவிருப்பம்.
தமிழகத்தைக் கடந்து வாழும் எழுத் தாளர் பலரைப் பார்த்துப் பழக்கப் படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காகவே ஒரு தடவை நான் திருவனந்தபுரம் சென்றிருக்கிறேன். அங்குள்ள பிரதான வீதியில் பாத்திரக் கடை நடத்தும் எழுத் தாளர் ஆ.மாதவனைச் சந்தித்திருக் கிறேன். அத்துடன் நீல பத்மநாபன் அவர் களையும் நாகர்கோயிலிலிருந்து திரு வனந்தபுரம் வந்து தங்கியிருந்த சுந்தர ராமசாமி அவர்களையும் போய்ச் சந்தித்து உரையாடியுள்ளேன்.
எனது இளம் வயசில் எழுத்தில் பிரமிப்பூட்டிய எழுத்தாளர் லா.ச.ரா.வை யும் சென்னை ராயப்பேட்டையிலுள்ள தமிழ்ப் புத்தகாலயத்தில் சந்தித்து உரை யாடி இருக்கிறேன். ஒரு தடவை கவிஞர் வைரமுத்துவை அவரது இல்லத்தில் ஒருநாள் காலை சந்தித்து உரையாடிக் களித்திருக்கிறேன். பாற்கஞ்சி தந்து உபசரித்தார். கவிஞர் மேமன்கவியும் உடனிருந்தார்.
இந்தத் தொடர் பயணத்தில்தான் சென்னையில் திருவான்மையூரில் நமது தரும.சிவராமு அவர்களையும் கண்டேன். இதே சிவராமு அவர்களை முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் மல்லிகை அலுவலகத்தில் வைத்துப் பாார்த்திருக் கிறேன். அங்கு என்னைத் தேடி திருகோண மலையிலிருந்து வந்திருந்தார். என்னுடன் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்து பயணம் செய்து, சிரித்திரன் ஆசிரியர்

Page 12
சிவஞானசுந்தரத்தையும் பார்த் து மகிழ்ந்தவர்.
அதைத் தொடர்ந்து கப்பலேறித் தமிழகம் சென்று, பின்னர் தமிழகத் தானாகவே மாறிவிட்டார்.
திருவான்மியூரில் தரும அரூப் சிவ ராமுவைச் சந்தித்தபோது என்னை அவர் இனங்கண்டு உபசரித்தார். என்னுடன் இந்தத் தடவை மேமன்கவியும் உடன் வந்திருந்தார்.
மிகக் காத்திரமான, பிரபலமான சர்ச்சைகளுக்குள் அவர் ஆட்பட்டிருந்த வேளையது. நட்பைப் பேணும் வகையில் நம்மை அழைத்துச் சென்று மதிய போஜனத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஓர் எழுத்தாளனாக இருந்து இயங்குவது வேறு. இலக்கியச் சஞ்சிகை ஒன்றின் ஆசிரியராக இருந்து அதற்கு ஈடுகொடுத்துத் தினசரி இயங்கி வருவது வேறு.
எதிர்பாராத புதுப் புதுப் பிரச்சினை கள் எல்லாம் வந்து வந்து போகும்.
தமிழ் நாட்டுச் சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பி யிருந்தேன்.
ஒரு மாதம் எப்படி ஓடிக் கழிந்தது என்பதே தெரியிவில்லை. தமிழகத்திற்குச் சென்று அங்குள்ள படைப்பாளிகளைச் சந்தித்து அளவளாவி மகிழ்வதே ஒரு சுகானுபவம்தான். புதுப் பலம்தான்!
யுடன் கடமையில் மூழ்கி,
நான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் தங்கியிருந்து காலம் செலவலித்தது எல்லாமே எழுத்தாளன் என்ற ஹோதாவில்தான்.
ஆனால், இன்று யாழ்ப்பாண மண்ணில் காலடி பதித்தவுடன் நானொரு சஞ்சிகை ஆசிரியன். தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்த மல்லிகை ஆசிரியர் என்ற பாரிய பொறுப்புணர்ச்சி என்னை அதற்கு ஒப்புக் கொடுக்கும் மனப்பான்மை யுடன் காரியமாற்ற முனைந்து செயலாற்ற முற்பட்டேன்.
கொழும்பில் மலிபன் வீதியில் அன்று இயங்கி வந்த குறே என்ற அச்சக சாதனத் தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த நிறுவனம் அச்சக சாதனங்களை வலுவாகப் பார்சல் படுத்தி எனது முகவரிக்கு அனுப்பி யிருந்தது.
லொறியில் வந்திருந்த சாதனங் களைக் கஸ்தூரியார் வீதியில் ஒரு கரை யோரப் பக்கமாக நிறுத்தி அதனுள் ளிருந்த பொருட்களை லொறிக் கூலியாட் கள் ஒவ்வொன்றாக இறக்கி, கடை யினுள்ளே கொண்டு சேர்த்துக் கொண்டி ருந்தனர்.
நான் தெருவோரம் நின்று இறங்கும் பொருட்களை நோட்டம் விட்டுக் கொண்டி ருந்தேன்.
பக்கத்தே அணித்தாக பூனைக் கண் சோமுவினுடைய கடை. அவர் அருகே சவப் பெட்டிக் கடை ஆறுமுகம் நின்று கொண்டிருந்தார்.
|စo၊ 4656):

“இந்த அதிசயத்தைப் பாத்தியா, ஆறுமுகம்? சலூனுக்குள்ளே இந்த அம் பட்டப் பிள்ளையும் பேப்பர் நடத்தப் போகிறாராம்! பாத்தியா. இந்த அதி சயத்தை” எனக்குக் கோபம் வரவில்லை. அன்றும் சரி இன்றும் சரி மனித குலத்தில் மக்களால் அண்ட முடியாமல் ஒதுக்கித் தனித்து விடப்பட்ட மகான்கள் தான் உலக இலக்கிய உலகில் இன்றும் விதந்து பேசப்பட்டு வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் வான்மீகி என்ற வேட்டுவன்.
இந்தத் தெளிவான கருத்தை வாழ்க்கையின் கேடயமாக நான் இது வரை கையாண்டு வந்துள்ளேன். எனவே சாதித் தாழ்வு பேசுபவர்கள் மீது எனக்கு வருத்தமில்லை.
தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். V−
எனது சாதியைத் தாழ்த்தியோ குலத் தொழிலை அவமானப்படுத்தும் நோக்கில் கேவலப்படுத்தியோ பேசுகிறவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வது நல்லது.
நான் நீங்கள் நினைக்கும் நிலை களையெல்லாம் விட்டுக் கடந்தவன். எந்த விதமான வம்பு தும்புப் பேச்சுக்கள் ஒன்றுமே என்னையோ எனது கருத்துக் களையோ சிறிது கூடப் பாதித்தது கிடையாது.
ஆனால், வரலாறு நாளை மாறும்.
இன்று நீங்கள் எனக்கெதிராகப் பரப்பும் நச்சுக் கருத்துக்களையெல்லாம் எனது எதிர்கால வளர்ச்சிக்குரிய அடிப் பசளையாக உறிஞ்சி உறுஞ்சியே வளர்ந்து வருவேன்.
DGUGSGoa
என்னுடைய தினசரிக் கடமைதான் எனக்கு அதிமுக்கியம். அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈழத்துத் தமிழ் இலக்கிய
உலகிற்கு பங்குப் பணியாற்றுவதுதான்
எனது வாழ்க்கைக் குறிக்கோள்.
எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு மனக் கருத்து உண்டு.
யாழ்பாணத்தில் யுத்தக் கெடுபிடிகள் காரணமாகச் சஞ்சிகைகள் ஒன்றுமே வெளிவராத சூழல். தினசரிப் பத்திரிகை களும் இடையிடையே நொண்டியடித்தன.
அந்தச் சிரமமான - பெரிதும் நெருக் கடி மிகுந்த கால கட்டத்தில் -
மல்லிகையை வெளியிட்டு விடவேண்டும்
என்ற நோக்கத் துணிச்சலுடன் பள்ளிக் கூட மாணவர்கள் தமது கணக்கு விடை
களுக்குப் பாவித்து வரும் சதுரறுாள்
கொப்பியை டஜன் கணக்கில் வாங்கி, அதன் நடுவே பக்கங்களை இணைத் துள்ள கம்பிப் படிமானங்களை அகற்றி விட்டு, மல்லிகையை வெளியிட்டி ருந்தேன்.
அந்த மல்லிகை இதழ்கள் கூட, பலருடைய சேமிப்பில் இன்றும் இருக்கலாம்.
இன்று கூட 38 ஆண்டுக் காலமாக
மல்லிகையை வெளியிட்டு வருகிறேன்.
ஒரு குழந்தை நான் மல்லிகையை ஆரம்பித்த அதே ஆண்டு வாக்கில் பிறந் திருந்தால் அவர்களுக்குகக் குழந்தை குட்டிகள் பெருகியிருக்கும்.
பெண் குழந்தையானால் இன்று
பேரன், பேத்தி கண்டிருப்பார்.

Page 13
மல்லிகை இதழ்களை வெளியிடத் தொடங்கிய யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியிலமைந்துள்ள நாமகள் என்ற அச்சகத்தில்தான் மல்லிகையை அச்சியற்றி வெளியிட்டு வந்தேன்.
500 பிரதிகள்தான் முதன் முதலில் வெளியிடப் பெற்றன. இந்த இதழ்களை வெளியிடுவதற்கு நான் சகல கை யெழுத்துப் பிரதிகளையும் தயாரித்து ஒழுங்குபடுத்தி, பக்கமிட்டுக் கொடுத்துவிட வேண்டும்.
நாமகள் அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகச் சந்திரசேகரம் என்ற
இளைஞர் இதற்குப் பொறுப்பாக இருந்து செயல்பட்டு வந்தார்.
அங்கு அச் சாகி வெளிவந்த அத்தனை இதழ்களையுமே அவர்தான் தனது மேற்பார்வையில் ஒழுங்கமைத்து, அச்சிட்டு, வெட்டி, கடைசியில் சஞ்சிகை வடிவில் எனது கையில் ஒப்படைத்து விடுவார்.
பணக் கொடுக்கல் வாங்கல்கள் அத்தனையையும் அச்சக அதிபரே மாதா மாதம் கணக்குப் பார்த்துப் பெற்றுக்
கொள் வார். இவை கடந்த கால அநுபவம்.
எனக் கோ இப்பொழுது புதிய பிரச்சினை.
கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்தி, அவைகளை அந்தந்த இடங்களில் பொருத்தி ஒரு அச்சகக் காரியாலயத்தை உருவாக்குவதுடன், அந்த அச்சுச் சாதன வகையறாக் களைக் கொணி டே
மல்லிகையை மாதா மாதம் வெளிக் கொணர வேண்டும்.
இது ஒரு புதிய நிர்வாகச் சிக்கல்.
நல்லதிர்ஷ்டம் என்றே இதைக் கூற வேண்டும். இப்படியாக அச்சக சாதனங் களை ஒவ்வொன்றாக நான் பொருத்தப் பாடு பார்த்து அதைத் தகுந்த தகுந்த இடங்களில் இணைத்துத்தரப் பக்குவப் பட்ட தச்சுத் தொழிலாளர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கும் சமயம், ஒருநாள் காலை பத்து மணியிருக்கும் எனக்கு நாமகள் அச்சகத்தில் அச்சுப் பொருத்தித் தந்த சகோதரர் சந்திரசேகரம் என்னைத் தேடி வந்தார்.
“நான் தொடர்ந்து மல்லிகையை வெளியிடுவதற்கு உதவி செய்கிறேன். இனிமேல் மல்லிகையில்தான் நான் வேலை செய்ய விரும்பி வந்து விட்டன்!” எனச் சொல்லி, அன்று தொடக்கம் மல்லிகையின் அச்சுக் கோப்பு வேலை கள் அனைத்தையுமே அவர் பங்கேற்றுக் கொண்டார்.
நான் யாழ்ப்பாணத்தை விட்டுப் புலம்பெயர்ந்த காலகட்டம் வரைக்கும் இந்தச் சந்திரசேகரமே எனக்கும் மல்லிகைக்கும் வலது கரமாக இருந்து
GeFuj6out LTs.
என்னைத் தெரியாதவர்களுக்கும் சந்திரசேகரம் சகோதரரின் பெயர் விரிவா கத் தெரிந்திருந்தது.
அவரின் மல்லிகைச் சேவையைப்
பாராட்டும் முகமாக மல்லிகையின் 25ம் வருட கொண்டாட்டக் காலகட்டங்களில்
அவருக்கு மல்லிகையின் சார்பில் பொற்
கிழி அளித்து, பொன்னாடை போர்த்தி,
2. gigseo ee.

வெகு கோலாகலமாகவே அவரது விழாவை வெகு சிறப்பாக நிறைவேற்றி வைத்தேன்.
ஒரு சிற்றிலக்கிய ஏடு இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவருவது பெரிய சாதனையல்ல, தனது வரவில் பெரும் பங்கு கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்த ஓர் ஊழியனைத் தனது கால் நூற்றாண்டு வளர்ச்சியைக் கொண்டாடும் சமயத்தில் அன்னாரைக் கனம் பண்ணிக் கெளரவித்தது கூட, யாழ்ப்பாண வரலாற்றில் கவனிப்புப் பெறத் தக்க நிகழ்ச்சியாக அன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சம்பவமாகும்.
இன்றும் இலக் கிய உலகில் மல்லிகை பற்றிப் பேசுவோர் பலர், சகோதரர் சந்திரசேகரத்தின் நாமத்ை மறந்து விடுவதில்லை.
நான் கொழும்பு சென்று கூரே ஸ்தாபனத்தில் கொள்முதல் செய்த அச்சகச் சாதனங்கள், வேலை தொடரும் போது இடையிடையே போதாமல் போயின.
எப்படியும் முக்கித் தக்கி வேலை செய்து ஒப்பேற்றினால் ஒரு பதினைந்து பதினாறு பக்கங்களைத்தான் செய்து முடிக்க முடிந்தது.
அச்சுப் பெட்டிகளைத் தற்காலிக மாகத்தான் முண்டு கொடுத்துச் சாத்தி வைத்து வேலை செய்து கொண்டி ருந்தோம். نم۔
இந்தச் சந்தர்ப்பத்தில் மத்திய கிழக்கிற்குப் போயிருந்த கவிஞர் புதுவை இரத் தினதுரை என் னைத் தேடி வந்திருந்தார்.
மல்லிகை அச்சக அன்றைய நிலை
யின் அவலத்தைப் பார்த்துவிட்டு, அவரே வீடு சென்று அடுத்த நாள், வானில் அச்சகப் பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கும் வண்ணம் செதுக்கப்பட்ட "ஸ்ராண்டுகள் சிலதைக் கொண்டு வந்து பொருத்தி விட்டுச் சென்றார்.
தொழில் நுட்ப கலைஞனவர். தேர்ச் சிற்பங்கள் செதுக்குவதில் நிபுணன்!
அவர் அமைத் துத் தந்துள்ள ஸ்ராண்டுகள் கடைசிவரையும் மல்லிகை யிலேயே இருந்து வந்துள்ளன.
இப்பொழுதுகூட, நான் ஆறுதலாக இருந்து சிந்தித்துப் பார்க்கிறேன். இன்ன மும் ஓராண்டு உருண்டோடி விட்டால் நாற் பதாவது ஆண் டை எட்டப் போகின்றது, ஒரு சிற்றிதழ், அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு இதழ்.
நாற்பதாவது ஆண்டின் ஞாபகார்த்த மாக மிகப் பெரிய இலக்கியத் திட்ட மொன்றைச் செயற்படுத்த எண்ணி யுள்ளேன்.
இந்தக் கட்டத்தில் பின்னோக்கிப் பார்க்கிறேன்.
ஆலய உள் நுழைவுப் போராட்டம், தேநீர்க்கடைப் போராட்டம் போன்ற மனித உரிமைப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த உச்சக் கட்டச் சாதி எதிர்ப் புப் போராட்டங்கள் நடைபெற்ற கால கட்டத்தில் மல்லிகை இதழ் ஒரு சலூனிற் குள் இருந்து வெளிவந்து கொண்டி ருந்தது.
இது உங்களுக்கோர் ஆச்சரிய சம்பவமாகத் தெரியவில்லையா?
(மீண்டும் சந்திக்கின்றேன்)

Page 14
g560)prul Cup6 r(36rng. அமரர். பி.எஸ்.கிருஷ்ணகுமார்
- தம்பிஐயா தேவதாஸ்
இப்பொழுது இலங்கையில் ஒரு தமிழ் தொலைக்காட்சி நாடகத்தை தயாரிப்பது எத்தனை கஷ்டமாக இருக்கிறது! திரைப்படத் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ச்சியடைந்து விட்ட இக்காலத்தில் இங்கு ஒரு தமிழ்த் திரைப்படமாவது தயாரிக்க முடியாமல் இருக்கிறதே, ஏன்?
ஆனால், சுமார் 40 வருடங்களுக்கு முன்பு முழுமூச்சுடன் செயற்பட்டு ஒரு தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்து திரையிட்டிருக்கிறார் ஒரு அசகாய சூரர்.
தயாரிப்பு இயக்கம், பாடல் இயற்றல் என்பவற்றுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ள அந்த மாபெரும் கலைஞன்தான் அண்மையில் காலமான பி.எஸ்.கிருஷ்ணகுமார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த வலப்பாடு புல்லானி சங்கரன் - லக்சுமி தம்பதிகளின் செல்லப் புதல்வனான கிருஷ்ணகுமார் 8-8-1936இல் கொழும்பில் பிறந்தவர். சிறுவயது முதல் இலங்கை வானொலியில் தனது கலையார்வத்தை வளாத்துக் கொண்டவர். 1950ஆம் ஆண்டளவில் நாடகத் தந்தை அமரர் இராஜேந்திரம் மாஸ்டரிடம் ‘மனோ ரஞ்சித கானசபாவில் கலைப்பணி பயின்றவர்.
தி.மு.க. அங்கத்தவர் இராதங்கப்பழம் எழுதிய ‘புரட்சிப் பெண்’ என்ற நாடகத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். 'கலிங்கத்து கைதி’, ‘மார்த்தாண்டபுரி மகாராணி போன்ற புகழ் பெற்ற நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.
இலங்கையில் தமிழ்த் திரைப்படத்துறையை ஆரம்பித்து வைத்த பெருமை பி.எஸ்.கிருஷ்ணகுமாரையே சாரும். பெருந்தோட்டத்துறையை பின்னணியாக வைத்து இவர் தயாரித்த “தோட்டக்காரி' என்னும் திரைப்படம் இலங்கை திரைப்படத்துறையைப் பொறுத்தவரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
அப்பொழுது இருந்த பல முட்டுக்கட்டைகளால் பொருளாதார ரீதியில் தோட்டக்காரி தோற்றுப் போனாலும் முதலாவது முயற்சி என்பதால் பலரின் பாராட்டையும் பெற்றது. உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி தமிழ்த்திரைப்படங்களை இலங்கையிலும் தயாரிக்க முடியும் என இவர் நிரூபித்த பின்பே பலர் தமிழ்த் திரைப்படம் தயாரிக்கத் தொடங்கினர்.
இவர் உருவாக்கிய முதற்படம் தோல்வியடைந்தாலும் தொடர்ந்து தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்ற தாகம் தீரவில்லை. அதனால் 1973ஆம் ஆண்டளவில் தனது இரண்டாவது தயாரிப்பான 'மீனவப் பெண்’ திரைப்படத்தை உருவாக்கினார்.
S. gigsei
 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபாடு காட்டிய பி.எஸ்.கிருஷ்ணகுமார் சிங்களத் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.சிங்களத் திரையுலக முன்னோடி - கிரிபத் கொட நவஜீவன ஸ்ரூடியோ அதிபர் சிறிசேன விமலவிரவை குருவாகக் கொண்டு பட்டாச்சார', 'கெதர புதுன்’, ‘வெதிமிம போன்ற சிங்களத் திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக கடமையாற்றினார்.
எஸ்.எம்.ஏஜபார், சிலோன் சின்னையா மற்றும் காலஞ்சென்ற ரோசரியோ பீஸ், தேவன் அழகர்கோன், லடீஸ் வீரமணி போன்ற கலைஞர் களுடன் பி.எஸ்.கிருஷ்ணகுமாரும் நாடகங் களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாபூஷணம், கலா ஜோதி ஆகிய பட்டங் களைப் பெற்றுள்ள கிருஷ்ணகுமார் இறக்கும் பொழுது அவருக்கு வயது 77 ஆகும் தொடர்பு ஊடகமான சினிமாவுக்கு பிஎஸ்கிருஷ்ணகுமார் ஆற்றிய பணி அதிகமானதாகும். ஆனால், இப்பொழுது பிரபலம் பெற்ற ஊடகங்களான தொலைக்காட்சிகளோ, வானொலிகளோ இவ்வாறான கலைஞர் ஒருவரின் மறைவை பெரிதாக கணிக்கவில்லை என்பதையிட்டு கவலையாக இருக்கிறது.
இவரது சினிமா முயற்சியினால் யாழ்ப் பாணம் ரஞ்சனி, கனகாம்பாள் ஆகியோரையும் கொழும்பு ராஜலக்சுமி, என். தாலிப் போன்ற
சிறந்த கலைஞர்களையும் கலையுலகத்ததுக்கு
அறிமுகப்படுத்தினார்.
1997ஆம் ஆண்டு பி.எஸ்.கிருஷ்ண குமாரை ரூபவாஹினி ‘காதம்பரி' நிகழ்ச்சிக்காக பேட்டி கண்டேன். அவர் அப்பொழுது கூறினார்:-
2S 6696);
“அந்தக்காலத்தில் இலங்கை திமுகவைச் சேர்ந்த மணவைத்தம்பி திரைக்கலை’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் அவர் "இலங்கையில் திரைப்படம் தயாரிக்க முடியாது’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுப்பதற்காகவே "தோட்டக்காரியைத் தயாரித்தேன்’ என்றார்.
அக்காலத் திரைப்படத் தயாரிப்புப் பற்றியும் கேட்டேன்.
‘அக்காலத்தில் திரைப்படத்துறைச்
சாதனங்கள் வசதிகள் என்பன மிகவும் குறைவு.
மக்கள் தென்னிந்தியப் படங்களை விரும்பினர். பட முதலாளிகளும் தியோட்டர் முதலாளிகளும் உள்ளுர் திரைப்படங்களை நசுக்கினர்.
பணத்தை எதிர்பார்க்காமல் ஆத்ம திருப்திக்காகவே படம் தயாரித்தோம். இலங்கை யில் இரண்டு படங்களைத் தயாரித்து விட்டோம் இத்திரைப்படங்களுக்குச் செலவிட்ட பணத்தைக் கொண்டு சிங்களப் படத்தைத் தயாரித்திருந்தால் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், அதை நான் விரும்பவில்லை. தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்று துணிந்து நின்றேன். நான் வழிகாட்டிய பின்பே, பலர் இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்க முன் வந்தனர்” என்று சொன்னார்.
‘தோட்டக்காரி’ படத்தை யுமேற்றிக் (தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக) ரேப்பில் பதிய வைக்க பட ரீல்களை பி.எஸ்.கிருஷ்ண குமாரிடம் அப்பொழுதே கேட்டேன். பல ரீல்கள்
பழுதடைந்துவிட்டன. தப்பிவிட்ட ஒரு ரீலை
மட்டும் தந்தார். இலங்கையின் முதலாவது
(35மிமீ) தமிழ் திரைப்படமான ‘தோட்டக்காரி'
யின் ஒரே ஒரு ரீல் மட்டுமே இப்பொழுது உண்டு. அதுவும் என்னிடம் மட்டுமே உண்டு.

Page 15
ஒலுவில் அமுதனின்
6 a 9
66)DJAbg5 (ULLID சிறுகதைத் தொகுப்பு ஓர் அறிமுகம்.
- ப.ஆப்டீன் எழுத்தாளரும் கவிஞருமான 'ஒலுவில் அமுதன் (ஆ. அலாவுதீன்) அவர்களின் ‘நூலறுந்த பட்டம் சிறுகதைத் தொகுப்பு 2003 செப்டெம்பரில்
s வெளியாகியுள்ளது. அக்கரைப்பற்று 5, ரக்ஷானா வெளியீட்டகம் இதனை வெளியிட்டுள்ளது.
102 பக்கங்களைக் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பில், ‘நெருப்பு சாம்பலாகும் ‘முடிவுரையான முன்னுரை' (நவமணி 2002), ‘நேர்மை தவறியபோது - (நவமணி 2003) 'தீர்ப்புகள் - (நவமணி 2002), பாதை மாறிய பயணங்கள்’, ‘புரியாத நெஞ்சங்கள்’, ‘இனவெறிகளுக்கு அப்பால்...!’, ‘நெருப்போடு நெருப்பு - (மல்லிகை 2003), தென்னம்பிள்ளையும் பிள்ளையும்', 'தாயின் வழியில்.’, ‘எண்ணமெல்லாம் எழுத்தாகுமா..?’, ‘நூலறுந்த பட்டம்’, ‘அற்புத விளக்கும் மெழுகுதிரியும்' என்ற தலைப்புகளில் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
‘என் பார்வையில் ஒலுவில் அமுதன்.” தலைப்பில் முன்னுரை வழங்கியுள்ள கவிஞர் ஏ. இக்பால் (கலாபூஷணம்) எழுத்தாளர்களை 5 வகைகளாகப் பிரித்துள்ளார். 1. வாசிப்பதற்கு இலக்கியமே இல்லையென தாமே எழுதி, தாமே வாசிப்பதற்கு
எழுதுபவர்கள்.
2. அற்புதமான கருக்களை வைத்து அவர்களைத் தவிர, மற்றவர்களை திணற
வைக்கக் கடும் பதங்களைச் சேர்த்து எழுதுபவர்கள்.
3. சாதாரண மொழிநடையில் கவர்ச்சியாக எழுதி வாசகர்களைக் கவர
எழுதுபவர்கள்.
4. மக்கள் வாழ்க்கையோடு இணைந்து மனித வாழ்க்கையை மனிதர்கள்
அறியவேண்டுமென எழுதுபவர்கள்.
5. பிராந்திய பேச்சு வழக்கில் மக்கள் வாழ்க்கையை புலப்படுத்த எழுதுபவர்கள்
ད།
 

இவப் வகைகளில அமுதன்' எவ்வகையைச் சேர்ந்தவர் என்றறிய, இத்தொகுப்பில் அடங்கி யுள்ள 13 சிறுகதைகளை வாசிப்பதோடு, பிற நூல்களான மனக் கோலம் (கவிதைத் தொகுதி 1988), மரணம் வரும்வரை (கவிதைத் தொகுதி 1999), கலையாத மேகங்கள் (சிறுகதைத் தொகுதி 1999), நாம் ஒன்று நினைக்க (நாவல் 2000), மனங்களிலே நிறங்கள் (சிறுகதைத் தொகுதி 2001), கரையைத் தொடாத அலைகள் (நாவல் 2002), கூடிலி லா குருவிகள் (சிறுவர் இலக்கியம் 2002) ஆகிய நூல்கள் அனைத்தையும் வாசித்தால்தான் அறிய முடியும் என்று கூறியுள்ளார்.
* ஒலுவில்
இச் சிறுகதைத் தொகுப் பின் ஆசிரியர் ‘ஒலுவில் அமுதன்’ உலக இஸ் லாமிய தமிழ் இலக் கிய மகாநாட்டில் பாராட்டப் பட்டவர். ‘கூடில்லா குருவிகள் சிறுவர் இலக்கிய நூல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தால்
நுT ல நயம் காணப் பட்டு பாராட்டப்பட்டது.
சிறுகதைப் போட்டிகளில்
பரிசில்கள் பெற்ற ஒலுவில் அமுதன், ‘இலக்கியச் சுடர் மணி’ என்ற கெளரவப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
‘நல்லதையும் நல்லவரையும் வார்த் தையால் வாழி தீதுவேன் . தீயதையும் தீயவரையும் எழுத்தால் எரிப் பேணி ...” என்பது ஒலுவில் அமுதனின் எழுத்துலக இலட்சியம்.
Cole, DEEE)
EXCELLENT
PHOTOGRAPHERS
MoDERN COMPUTERIZED
FHOTOGRAPHY
OR WEDDING FORTRAITS,
8 CHILD SITTINGS

Page 16
கடிதங்கள் e da?Lee
மல்லிகை செப்டெம்பர் 03 இதழில் கம்பவாரிதி எழுதிய 'வாராதே வரவல்லாய்' என்ற கட்டுரையை வாசித்துப் பார்த்தபோதே நினைத்தேன் - இது ஒரு பிரச்சினையைக் கிளப்பப் போகிறதென்று. பிரச்சினை எழுத்தில் அக்டோபர் இதழில் முளைகொண்டு விட்டது. அதற்குப் பதில் சொல்லும் முகமாக கனக சபேசன் நவம்பர் இதழில்’ ‘வருவோம்! வாய்ப்புள்ள போதெல்லாம் வந்து வாழ வைப்போம்!” என்ற கட்டுரையை வரைந்திருந்தார். மல்லிகை மணம் வீசுவதுடன் நல்ல சூடாகவும் இருக்கிறது.
மேலும், ம.அரவிந்தன் கோலங்கள் விடயத்தில் படிக்காதவர்கள் படிப்பித்த பாடங்கள் தவறு என்று கூறியிருந்தார். அழகான கோலங்கள் போடுவது ஜீவராசிகளின் உணவுத் தேவைக்குத்தானா? ஏன்? விரும்பினால் கொஞ்சம் தேங்காய்ப்பூ, அரிசி மா முதலியவைகளை ஒரு பக்கத்தில் போட்டுவிட்டால் அதுபாட்டில் தின்றுவிட்டுப் போகிறது. அரிசி மா, தேங்காய்ப்பூவுக்கு சாயம் இட்டு, மணிக்கணக்கில் உட்கார்ந்து அழகிய கோலம் போட்டு எறும்புக்குக் கொடுப்பது என்பது எத்தனை அபத்தம். அவர் வீட்டில் அழகான பூங்கன்றுகளை நட்டு, நீர் ஊற்றி வளர்த்து, அந்த வழியாக ஆடுகள் போகும் போது தலைவாசலை விரியத் திறந்து வைக்கட்டுமே பார்ப்போம்.
- ஏ.என்.எஸ்.நியாஸ் Destit*TTír
மல்லிகை இதழ்களில் கடிதங் களைப் பெரிதும் பிரசுரியுங்கள். கடிதங்கள் மூலம்தான் சராசரி வாசகர் களின் உணர்வுகளை எம்மைப் போன்றவர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் கடிதம் எழுதுபவர்கள் தமது பெயர் அச்சில் வரவேண்டும் என ஆசைப்பட்டு எழுத்தில் அலம்பாமல், வெகு பொறுப் புணர்ச்சியுடன் தமது கருத்துக்களைப் பதிய வைப்பது முக்கியம். இன்று
சந்தோஷப்படும் செய்தி என்ன வென்றால் இந்த மண்ணில் வெளி வரும் சஞ்சிகைகளைப் பலரும் வாங்கி ஆதரவு தருவதுதான்.
உங்களுக்குத்தான் அனுபவம் இருக்குமே. நீங்கள் மல்லிகையை ஆரம்பித்த காலத்தில் எத்தகைய இடர்பாடுகளைக் கண்டிருப்பீர்கள். இதையெல்லாம் கடந்து வந்துள்ளிர்
கள். ஒரு சிற்றேட்டின் வரலாற்றில்
38 ஆணர்டுகள் என்பது கம்மா
VN

லேசுப்பட்ட காலங்களல்ல.
எனவே தொடர்ந்து வருங்கால
இளந் தலைமுறையினரை மனதில்
கொண்டு மல்லிகையின் இலக்கியப் பணியைத் தொடருங்கள்.
ச.நடனசிவம்
கோப்பாய
நான் மல்லிகையின் தொடர் வாசகர்களில் ஒருவன். இந்த இதழை யாழ்ப்பாணத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் நன்கு அறிவேன்.
கஸ்தூரியார் வீதி ஒழுங்கைக்குள் வந்து கூட நான் மல்லிகையை வாங்கி யிருக்கிறேன். மல்லிகையுடன் நீங்கள் புலம்பெயர்ந்து கொழும்புக்குச் சென்று கூட, எனக்குச் சம்மதமில்லை.
நமது மணி னில் மீண்டும் மல்லிகை மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதே எனது ஆசை. உங்களுக்குக் கொழும்பில் இன்று நவீன வசதி வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம். வளர்ந்துள்ள நவீன அச்சுச் சாதனங்களை வாலாயமாகப் பெற்று உங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
ஆனால், நமது மண் தனித்துப் போகக் கூடாதே!
நான் உங்களுக்கு ஆலோசனை மாத்திரம்தான் கூறமுடியும். இதன் சாதக பாதகங்களை என்னால் அறுதி யிட்டுக் கூறமுடியாது. யுத்த நாசத்தால் நாசமாக்கப்பட்டுவிட்ட எமது மண்ணை உங்களைப் போன்றவர்கள் அகன்று
DCEO
போனதும் இழப்புக்களில் ஒன்றுதான். எம்.சற்சுகன் கொக்குவில். மல்லிகையின் 39-வது ஆண்டு மலர் தயாராகின்றது என மல்லிகை யில் படித்துப் பார்த்தேன்.
எப்பொழுதுமே நீங்கள் மலர்கள் தயாரிக்கும் போது வெகு கவன மெடுத்து மலரை வெளியிடுவீர்கள். மல்லிகையிலுள்ள சிறப்பம்சம் என்ன வென்றால் மல்லிகை ஒன்றில்தான் இந்தத் தேசத்தின் சகல பகுதிகளை யும் சேர்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் பிரசுரமாகி வருகின்றன.
இத்தனை அர்ப்பணிப்பு உழைப் பிற்கும் உங்கள் பின்னால் இருந்து வரும் சக்தி என்ன? பிரமிப்பாக இருக் கிறது, உங்களது கடந்த காலச் செயல் களை நோக்கும் போது.
இன்று மல்லிகை இந்த மண்ணை யும் கடந்து வெளித் தேசங்களில் பேசப்பட்டு வருகின்றது. எனது தம்பி ஒருவர் கனடாவில் கடந்த 12 வருடங் களாக வசித்து வருகின்றான். அவன் கடிதம் எழுதியுள்ளான். மல்லிகை தொடர்ந்து தனக்குக் கிடைக்க வேண்டுமெனக் கேட்டுள்ளான். நான் மல்லிகையின் முகவரியைக் கொடுத் துள்ளேன். தொடர்பு கொள்வான்.
இதை மனசுக்குள் நினைக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது. எம். கணேசன் மூளாய்.

Page 17
39-வது ஆண்டு மலர் தயாராகி வருவதாக மல்லிகையில் படித்து எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தேன். மல்லிகை மலர் கையில் கிடைப்பதே ஒரு கொண்டாட்டம்தானே!"
நீங்கள் வெளியிட்ட மலர்கள் எல்லாமே எனது கைவசம் உள்ளன. காலம் செல்லச் செல்லத்தான் அதனது இலக்கியக் கனதி தெரிய வருகின்றது.
ஆரம்ப காலத்து ஆண்டு மலர் களில் எழுதிய பலர் இன்று மல்லிகை உலகில் இருந்து காணாமலே போய் விட்டார்கள். பொதுப்படையாகச் சொன்னால் இலக்கிய உலகில் இருந்தும் மறக்கப்பட்டு விட்டார்கள்.
இது மணிக்கொடியிலும் நடந்தது. மறுமலர்ச்சியிலும் தொடர்ந்தது.
இருந்தும் காலத்திற்குக் காலம் மல்லிகையின் உள்ளடக்கத்தைப் புதுப்பித்துக் கொள்வதுடன் புதுப் புது எழுத்தாளர்களையும் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து வருகின்ற பணி காலத்திற்குத் தேவையான ஒன்றாகவே கருது கிறேன்.
கிழடு தட்டிப் போன - கருத்தால் இடைநின்று விட்ட எழுத்தாளர் களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் வளர்ந்து விட்டவர்கள் என்ற இறுமாப்பு அவர்களுக்கு உண்டு. அதைப் பற்றி இன் O) யாருமே கவலைப் பட்டதில்லை.
புதிய புதிய இலக்கியத் தேடல்
முயற்சிகளில் ஈடுபட்டு, மெய்யாகவே இலக்கிய அக்கறை கொண்டவர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.
மல்லிகை மலர்களின் இன்றைய இலக்கியப் பலம் உங்களுக்கு இன்று விளங்காமல் போகலாம். தரமான சமையல்காரனுக்குத் தனது தயாரிப் பின் உயர்தரமான பண்டங்களின் சுவை தெரிவதில்லை. அதைச் சுவைத்து ரசித்து உண்பவர்கள்தான் புரிந்து கொள்வார்கள்.
அதைப் போலவே நீங்களும் ஓர் இலக்கியச் சமையல் காரன்தான், என்னைப் பொறுத்தவரை!
இன்று இங்கு ஒர் இலக்கிய அதிசயம் நடைபெறுகிறது உங்களுக் குத் தெரியுமா?
மல்லிகையின் ஆரம்ப காலங் களில் நீங்கள் மல்லிகையின் அட்டை யில் சகோதர சிங்கள எழுத்தாளர் களது உருவங்களைப் பதிவுசெய்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வந்தீர்கள். அது அந்தக் காலத்தில் பெரிய சாதனைகளில் ஒன்று.
அந்தச் சிங்கள சகோதரக் கலை ஞர்களை அந்நியராகவும், விரோதிக ளாகவும் பாவித்து இளம் தலைமுறை யினரின் இரத்தத்தில் நஞ்சைக் கலந்த காரணத்தால் யாழ்ப்பாணம் முற்ற வெளித் தெருவொன்றில் மல்லிகை இதழை வாங்கி, மாணவன் ஒருவன் அதைக் கிழித்து உங்களது முகத்தில் அடித்த சம்பவம் உங்களது எழுத்துப் பதிவில் இடம் பெற்ற ஒன்று.

இன்று கொழும்பில் தமிழ் எழுத் தாளர்களும், சிங்கள எழுத்தாளர்களும் ஒன்று கூடி தேசிய இனப்பிரச்சினை தீர இந்த நாட்டு எழுத்தாளர்களினது தீர்வுத் திட்டத்தை மக்கள் முன் சமர்ப்பித்துள்ளனர்.
இநத ஒற்றுமையைக் காணச் சகிக்காத சிங்கள இனவெறிக் கூட்டம் இக் கூட்டத்தைக் குழப்பியடிக்கப் பலாத்காரப் பிரயோகம் செய்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டது.
அன்று புதிய நகர மண்டபத்தில் நடந்த சிங்கள - தமிழ் எழுத்தாளர்கள் நடத்திய கலைக் கூடலில் நாடு பூராவும் இருந்த சிங்கள - தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு இந்தத் தேசத்தின் பொதுப் பிரச்சினை தீர ஒரே குரலில் திரண்டிருந்தார்களே, அதைப் பார்த்து, அன்று முற்றவெளித் தெருவில் நீங்கள் முகம் கொடுத்த அவமானத்திற்குச் சரியான எதிர்காலப் பிரயோசனம் கிடைத்து விட்டது என நான் எனக் குள் நினைத்துக் கொண்டேன்.
இதனைச் சாதிக்க நாம் முப் பத்தைந்து வருஷகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மல்லிகையின் வரலாற்றில் இது பதியப்படும்.
உங்களிடத்திலுள்ள மெச்சத் தகுந்த குணம் என்னவென்று என்னைக் கேட்டால் சகோதர எழுத்தாளர்கள் எவர் மீதும் பகைமை பாராட்டாத குணம். அத்துடன் இந்த நாட்டிலுள்ள
ÉSocesca
சகல எழுத்தாளர்களையும் அண்டி அரவணைத்துக் கொண்டு செல்லும் போக்கு பல எழுத்தாளர்களை அவர் களது உருவப் படங்களை அட்டையில் பிரசுரித்து ஆவணப்படுத்திய பெரும் நோக்கு எதிர்கால பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கு உங்களது இந்த ஆவணப் பதிவு முறை பெரும் உதவியாக அமைந்துவிடும் என்பது எனது திடமான நம்பிக்கை.
மல்லிகையின் 39-வது ஆண்டு மலர் தயாரிக்கும் பெரும் பொறுப்பில் உங்களது தினசரிக் கடமைகள் அமைந்திருக்குமென நம்புகின்றேன். உங்களை நேரில் தெரிந்திருக்காமலே பல இலக்கிய இளம் நெஞ்சங்கள் உங்களைத் தம் மனதுக்குள் ஆரா தித்து வருகின்றனர் என்பது திண்ணம். ப. மகிழ்ராஜா
நீர்கொழும்பு.
மானுட விடுதலைக்காக அவர் செய்த காத்திரமான பணிகளைப் பாராட்டி மலர் ஒன்றும் விழா ஒன்றும் நடைபெறவுள்ளது' என கடந்த மாதம் மல்லிகையில் ஒருவரின் கேள்விக்கு பதிலாக எழுதினிர்கள். அதைப் படித்ததும் எனக்குள்ளே ஆயிரம் நினைவுகள் . பல முகங்கள் அவற்றினூடே தோன்றி மறைந்தன. எனக்கு தந்தை போல் வயதான ஒருவரை தோழர் என குறிப்பிட விரும்பவில்லை. எம்.சி. அவர்களைப் பற்றிய அறிவுரைகள் கூடவே என் தந்தை - அவரோடு படித்த, ஒன்றாக வேலை செய்த, ஒரே வாரத்தில்

Page 18
திருமணமான நிகழ்வுகள் பற்றியும் கூறியவை நினைவுக்கு வந்தன.
இது தனிப்பட்ட நோக்கோடு அன்றி, உறவைப் பற்றியன்றி அதை யும் மீறி பொது நோக்கோடு சிந்தித்த தன் விளைவே உங்கள் கையில் இத்துடன் இருக்கும் யாழ்ப்பாணமும் தாலமும் போல.’ எனும் கவிதை.
ஈழப்போராட்ட நிகழ்வுகளை, அதில் விளைந்த சோகங்களை, கண்ணிரை, இழப்புகளை, வெற்றியை இன்றும் யாவற்றையும் பதிவு செய்ய” வேண்டும் என்ற குரல் அழுத்தமாக எங்கும் ஒலிக்கக் காண்போம். அது நியாயமே! ஏனெனில் ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கு முறைக்கு உதிரான போராட்டத்தை, அதன் விளைவுகளை பதிவு செய்ய வேண்டாமா?
நிறையவே எழுத வேண்டும் போல் தோன்றுகின்றது. நிறுத்திக்
கொள்கிறேன்.
சிறுபான்மைத் தமிழர் போராட்ட வரலாறு நீண்டது. அதுபற்றி எழுதப் புகின் நீளம் என்பதும் அறிந்ததே. எனவே இக்கவிதையை வார்ப்பதில் வியப்பில்லை. முழுதாகவே பிரசுரி யுங்கள். கொழும்புப் பத்திரிகைகள் இது மாதிரி கவிதையை பிரசுரிக்கப் போவதில்லை.
உங்கள் முயற்சி மிகவும் பாராட் டத்தக்கது. ஒரு விடயம். மல்லிகை உங்களுக்குப் பிறகும் ஓங்கி செழித்து வளர்ந்து, மணம் வீச வேண்டும். இது எனது பேரவா. அது ஒரு களம். ‘போர்க்களம்'
- தமிழாண்டான்.
எழுதப்படாத கவிதைக்கு வரையய்படாத சித்திரம்
பாமினிக் ஜீவாவின்
, död 6W6DM. இரண்டாம் பதிப்பு - புதிய தகவல்களுடன்
is pegsgei S
 

படிக்காதவர் படிப்பித்த ז6כֹבIIIIfi உடுவை. தில்லை நடராசா
பாடசாலை நாட்களில் நெல்லிக்காய், தோடம்பழம் போன்றவற்றில் விற்றமின் 'C' இருப்பதாகப் படித்ததும் இவற்றைத் தேடியலைந்தேன்.
எளிதாக எப்போதும் பெறக்கூடிய பொருள் தேசிக்காய் என்பதால் தேசிக் காயைப் பிழிந்து குடித்தால் விற்றமின் 'C' கிடைக்கும் என ஆசிரியர் சொல்லி யதைக் கேட்டு, பழுத்த எலுமிச்சம் பழங்கள் மூன்றை வாங்கி வந்து அவற்றைப் பிழிந்து பின்னர் நீரூற்றி சீனி போட்டுக் கலக்கிய போது அப்பா தெரிவித்த தகவல்:-
‘' எல்லோரும் வழமையாக முதலில் சாற்றைப் பிழிந்து சீனியோ சர்க்கரையோ போட்டு கலக்கிய பின் அல்லது இரண்டு பாத்திரங்களை எடுத்து மாற்றி மாற்றி ஆற்றி தேசிக்காய் நீரைத் தயாரித்துப் பருகுவார்கள். இப்படிக் கலக்கும் போதும், ஆற்றும் போதும் விற்றமின் சத்து வெளியேறி விடும் எனவும் உண்மையான விற்றமின் சத்து தேவையானால் தண்ணிரில் சீனியையோ அல்லது சர்க்கரையையோ சேர்த்துக் கரைத்து சரியான பக்கு வத்திற்கு வந்த பின் தேசிக்காயைப்
Q
பிழிந்து சீனிக்கரைசலில் ஊற்றி அதிகம் கலக்காமலோ ஆற்றாமலோ பருகும் போதுதான் விற்றமின் 'C'யைப் பெறக் கூடியதாயிருக்கும்” என்றார்.
ஆரம்பத்தில் அப்பாவின் இக்கருத் துடன் உடன்படத் தயங்கினாலும், சற்று வளர்ந்த பின் காய்கறிகளை சட்டியால் மூடி அவிக்காவிட்டால் விற்றமின் வெளியேறிவிடுமென வைத்திய நிபுணர் களின் கருத்துக்களைப் பத்திரிகை களில் படித்தபோது அப்பாவுடன் உடன் பட முடிந்தது. உயிர்ச் சத்தான விற்ற மின் இருப்பதாக நாங்கள் வாங்கும் பொருட்களைத் தவறாகப் பதப்படுத்துவ தாலும் பக்குவப்படுத்துவதாலும் உயிர்ச் சத்திழந்த உணவுப் பொருட்களையே உட்கொள்கின்றோம்.
2ス VIS るク 葵xx
கிராமத்துச் சூழலில் அமைந்த மண்வீட்டில் சிறிய மேசையொன்றின் மத்தியில் வைக் கப்பட்டிருக்கும் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் இரவு ஆறுமணியிலிருந்து, அம்மா சாப்பிடு வதற்காகக் கூப்பிடும் வரை நானும் தங்கையும் படிக்க வேண்டும் என்பது அப்பாவின் கட்டளை.
அம்மா சாப்பிடுவதற்காக் கூப்பிடும் வரை எட்டு எட்டரை மணிவரை அமைதி நிலவும். அப்பாவும் அம்மாவும் கூட ஒருவரோடொருவர் பேசமாட்டார் கள். அப்பாவுடன் அல்லது அம்மாவுடன் கதைப்பதற்கு யாராவது வந்தால் வெகு தந்திரமாக அவர்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று மெல்லிய

Page 19
குரலில் சுருக்கமாகக் கதைத்து அனுப்பி விடுவார்கள். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளான எங்கள் படிப்பும் கவனமும் கதைகளால் குழம்பி விடக் கூடாது என்பதில் அப்பா கவனமாக இருந்ததுடன் அம்மாவையும் அதற் கேற்ப தயார்படுத்தி வைத்திருந்தார்.
சில வீடுகளில் இரவில் நடை பெறும் உரையாடல்களும் வாக்கு வாதங்களும் நான்கைந்து வீடுகளுக் காவது வெகுதெளிவாகக் கேட்கும் என்பது வேறுகதை.
ܐܰs%zܟ * x x
மாணவப் பருவத்தில் திடீரென
ஒரு சந்தேகம். May மாதத்தில் முப்பது நாட்களா? முப்பத்தொரு நாட்களா? என்பதுதான் சந்தேகம். இந்த சந்தேகம் வருடத்தின் கடைசிப் பகுதியில் வந்த தாலும் நாட்காட்டி திகதிகள் கிழிக்கப் பட்டதாலும் வேறு சாதனங்களைத் தேடவேண்டிய சூழ்நிலையில் அப்பா இடதுகை விரல்களை மடித்து வலது கை விரல்களால் விரல்களின் இறுதி மொழியைத் தடவி விட்டு முப்பத்தொரு நாட்கள் என்றார். பின்புதான் நாட் காட்டி, நாட்குறிப்பு இல்லாமல் எளிதாக ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் என்பதை அறியக் கூடிய வழியைச் சொல்லித் தந்தார்.
இடதுகையின் பெருவிரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்களும் உள்ளங் கையைத் தொடும் வண்ணம் பொத்திப் பிடிக்க வேண்டும். பின்னர் மறுகையி லுள்ள ஆட்காட்டி விரலால் பொத்திப்
பிடித்த கையில் விரல்கள் ஆரம்பமாகும் மொழியையும் விரல்களுக்கு மத்தி யிலுள்ள பள்ளப் பகுதியையும் ஆட் காட்டி விரல் மொழியிலிருந்து தொட்டு ஜனவரி, பெப்பிரவரி, மார்ச் என பன்னிரெண்டு மாதங்களையும் சொல்ல வேண்டும். அப்போது ஆட்காட்டி விரல் ஜனவரி மாதத்திலுள்ள முப்பத்தொரு நாளையும், மோதிர விரல் மே மாதத்தி லுள்ள முப்பத்தொரு நாளையும் நினைவுக்குக் கொண்டுவரும். சிறிய விரல் மொழியை முதல் தடவை ஜ" லை எனவும், மீண்டும் அதே மொழியை இரண்டாவது தடவை தொட்டு ஓகஸ்ட் எனவும் சொல்லி, அதாவது சிறுவிரல் மொழியை அடுத்தடுத்து இரண்டுதரம் தொட்டு ஜ"லை, ஓகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களிலும் முப்பத்தொரு நாள் என்பதை நினைவுக்குக் கொண்டு வரலாம். பின்னர் மோதிர விரல் மொழியைத் தொட்டு ஒக்டோபரிலுள்ள முப்பத்தொரு நாளையும், நடுவிரல் மொழியைத் தொட்டு டிசம்பர் மாதத்தி லுள்ள முப்பத்தொரு நாளையும் நினைவுக்குக் கொண்டு வரலாம். மொழிகளைத் தொடும்போது வரும் மாதங்கள் முப்பத்தொரு நாளைக் கொண்டதாகவும் இருவிரல்களுக்கும் இடையிலுள்ள பள்ளப் பகுதியைத் தொடும் போது வரும் மாதங்கள் அதாவது ஏப்ரல், ஜன், செப்டெம்பர், நவம்பர் மாதங்கள் முப்பது நாளைக் கொண்டதாகவும் இருக்கும். ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையி லுள்ள பள்ளத்தைத் தொடும் போது பெப்பிரவரி எனச் சொல்வோம். பெப்பிர
് ബ VN

வரியில் 28 நாட்களும் லீப் வருடத்தில் 29 நாட்களும் வரும்.
葵>密x
கிராமப்புறங்களில் இரவுத் திரு விழா, நாடகம், கலைவிழா முதலியன இரவு எட்டு ஒன்பது மணிக்கு ஆரம்ப மாகி அதிகாலைவரை நடைபெறும். சுமார் இரவு ஏழு மணியளவில் நாடகம் பார்க்கப் புறப்பட்டபோது, ‘கட்டி, டோர்ச் லைட் டையும் கொணர் டு போங்க. பின்னிருட்டு. லைட்டைக் கொண்டு போனால் திரும்பி வாறதுக்கு சுகமாயிருக்கும்’ என்றார் அப்பா. வானத்தில் நிலவு இருந்ததால் வெளிச்சம் தேவையில்லை என்ற எண்ணத்துடன் சென்றுவிட்டேன்.
நாடகம் முடிந்து அதிகாலை மூன்று மணியளவில் இருட்டில் தட்டுத் தடுமாறி வீட்டை வந்தடைந்தபோது அப்பா ஏசுவார் என எதிர்பார்த்தேன். அவர் இன்னுமொரு விடயத்தைச் சொல்லித் தந்தார்.
‘இரவுக் காலம் பன்னிரெண்டு மணித்தியாலம் கொண்ட பகுதி. முழு இருட்டான அமாவாசை நாளிலிருந்து பதினைந்து நாளில் பூரண நிலவு தோன்றும். பின்னர் பதினைந்து நாளில் நிலவு தேய்ந்து தேய்ந்து அமாவாசை தோன்றும். மழையில்லாவிட்டால் அமாவாசையின் பின் தோன்றும் நிலவு ஒவ்வொரு நாளும் 45 நிமிடம் என
வானில் தோனிறும் நேரதி தை அதிகரித்துச் சென்று பதினைந்து நாளில் முழு வளர்ச்சி பெற்று முழு
তত্ব
நிலவாக பூரணைச் சந்திரனாக பறுவத் தன்று பவனி வரும். பின்னர் ஒவ்வொரு நாளும் இருள்காலம் 45 நிமிடங்களால் அதிகரித்துச் செல்லும். மாலையானதும் ஆரம்பமாகும் இருட்டு முன்னிருட்டு எனவும், அதிகாலைக்கு முன்பு காணப் படும் இருட்டு பின்னிருட்டு’ எனவும் அழைக்கப்படுகிறது.
வெளிச்ச வசதி இல்லாத காலத் தில் கிராம மக்கள் போக்குவரத்துச் செய்யும் போது 'முன்னிருட்டு’, ‘பின்னிருட்டு வேளைகளைக் கவனத் தில் கொண்டு காரியமாற்றினார்கள்.
xxx
எழுதுவினைஞன் பதவியிலிருந்து நிருவாகச் சேவைக்கு தெரிவு செய்யப் பட்டதும், கடமைகளைச் சரியாகச் செய்வதற்காக பல விடயங்களைப் படிக்க வேண்டியிருந்தது. விடுதலை யில் செல்லும் போது அரசாங்க நிதிப் பிரமாணங்கள், தாபன விதிக்கோவை என சிலவற்றை காவிச் சென்று படித் தேன், பாடமாக்கினேன்.
அப்போது அப்பா வெகு சாதாரண மாகச் சொன்னார், “கட்டி, இவையும் பார்க்கத்தான் வேணும். படிக்கத்தான் வேணும். இன்னுமொரு முக்கிய விடயம். எப்போதும் உங்களுக்கு சில மேலதி காரிகள் இருப்பாங்கள். சிலர் உங்கடை மட்டத்திலே வேலை செய்யிற உத்தி யோகத்தராக இருப்பாங்கள். சிலர் டிரைவர், பியோன் என்று உங்களுக்கு கீழை வேலை செய்யிறவங்களாக இருப்பாங்கள். அவங்களை எடை

Page 20
போட்டு யார் எப்பிடியிருப்பாங்க. அவங் களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது. எப்ப ஒத்துப் போகலாம், எப்ப வெட்டி விடலாம், எப்ப நழுவலாம் என்பதை படிச்சிட்டால் சுகமாக வேலை செய்ய லாம்” என்றார்.
ஆட்களைப் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய அப்பா, ’ மற்றவர்கள் உன்னைப் படிக்கி றளவுக்கு நீ நடந்து விடாதே’ என்றும் சொல்லி வைத்தார்.
x
s
VIS &ܟ އި 3~ *އި
நாலாம் வகுப்பில் படிபித்துக் கொண்டிருந்த ஆசிரியர் சில நாடு களைக் குறிப்பிட்டு, அங்கேயுள்ள கிணறுகளிலிருந்து ‘மண்எண்ணெய் எடுக்கப்படுகிறது என்று சொல்லியதும், நான் அவசரப்பட்டு ‘தெரியும், யாழ்ப் பாணத்தில் பெற்றோல் செட் சந்தி யிலிருக்கும் கிணறுகளிலையிருந்தும் மண்எண்ணெய் எடுக்கினம்’ என்று சொல்லியதும் ஆசிரியர் கேலியாகச் சிரிக்க ஆரம்பித்தார். சக மாணவர்கள் என்னைப் பார்த்தனர்.
'ஓம் சேர். பஸ் ஸ்ரான்டிலை யிலிருந்து கஸ்தூரியார் றோட்டாலை போறபோது, வின்ஸர் தியேட்டர் சந்தி யிலை மூண்டு பக்கமும் பெற்றோல் செட் இருக்குது. அந்த பெற்றோல் செட் டிலை மண்எண்ணெய் குடுக்கிறதுக்கு பிறம்பாக ஒரு பைப் வைச்ச டாங் இருக்கு. அதுக்குப் பக்கத்திலை மண் எண்ணெய்க் கிணறு இருக்குது’ என்றேன்.
ஆசிரியர் சிரிப்பை அடக்கிக் கொண்டு “அது மண்எண்ணெய் கிணறு கள் இல்லை. தண்ணிர்க் கிணறுகள். இலங்கையில் எண்ணெய்க் கிணறுகள்
இல்லை” என்றார்.
அப்பாவுக்கு இந்த சம்பவத்தைச் சொன்னதும், அப்பா கஸ்தூரியார் றோட்டும் , ஸ்ராண் லி றோட்டும் சந்திக்கும் வின்ஸர் தியேட்டர் சந்திக்கு என்னை அழைத்துச் சென்றார். மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் தனித்தனியாக மண்எண்ணெய் வழங்கு வதற்கான பகுதிகள் இருந்தன. அவற் றுக்கருகே தண்ணிர் எடுப்பதற்காக கிணறுகள் கட்டப்பட்டிருந்தன. அவற் றைத்தான் தவறுதலாக மண் எண் ணெய்க் கிணறுகள் என எண்ணி யதையும் உணர்ந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.
அப்பா சொன்னார், "எல்லா விடயங்களையும் நன்கு அவதானிக்க வேண்டும். சரியாக ஒரு விடயத்தை அறிந்த பின்புதான் பதில் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையாவது உளறிக்கொட்டி முட்டாள் பட்டம் எடுக்கக் கூடாது. சந்தேகம் ஏற்பட்டால் தகுந்தவர்களிடம் கேட்டுச் சந்தேகத் துக்குத் தெளிவு பெறவேண்டும்.
xxx
மிகச் சிறிய வயதிலேயே அரசாங்க வேலைபெற்று கொழும்புக்கு
வந்தபோது வழிபடுவதற்காக சிறிய அளவிலான முருகன் சிலையொன்றை

யும் எடுத்துக் கொண்டு வந்தேன். சைவ GFLDu ut D6d6dT5 (36nu LDg5g560og5ėF (33FsTb5 மூதாட்டியொவருக்குச் சொந்தமான கூட்டு விடுதியில் தங்குவதற்கு ஒழுங்கு கள் செய்து கொண்டேன்.
ஹோலில் வைக்கப்பட்டிருந்த மேசையில் எனது படிப்பு, எழுத்து வேலைகள் செய்தேன். அந்த மேசை மீது முருகன் சிலையை வைத்து தினமும் வழிபட்டு வந்தேன். அந்தக் கூட்டு விடுதியில் எனது அறைவாசி யான ஜெறோம் வேறு மதத்தைச் சேர்ந் தவன். ஆனாலும் ஓரளவுக்கு சைவ சமயம் பற்றிய அறிவும் உள்ளவன்.
ஒருநாள் மாலை நான் கந்தோரி லிருந்து திரும்பி வந்ததும், “நடராசா. உன்னுடைய பிள்ளையார் சிலைக்கு நான் பூ வைத்தனான்’ என்றார் வீட்டு ரிமையாளரான மூதாட்டி.
நான் மெதுவாகச் சிரித்தேன். ‘அம்மாச்சி இது பிள்ளையார் சிலை யில்லை. முருகன் சிலை’
மூதாட்டி தனது குரலை உயர்த் தினார், ‘இல்லையில்லை நடராசா. யானை மாதிரியிருக்கிறதுதான் முருகன். இது பிள்ளையார்’ என்றார்.
தொடர்ந்து நான் மறுத்தேன், ‘அம்மாச்சி ஊரிலை இருக்கிறபோது ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோவிலுக்குப் போறனான். இது முருகன் சிலை. யானை முகத் துடன் இருப்பவர்தான் பிள்ளையார்” என்றேன்.
37 a. 6696) 37
மணி னாகி கா திருக் கப்
மூதாட்டி, “நடராசா, நீ சின்னப் பெடியன். உனக்கு ஒண்டும் தெரியாது. இது பிள்ளையார்” என்றதும்
“ஓம் அம்மாச்சி. நீங்க சொன்னது சரி” என்ற சரணாகதியடைந்ததும் எனது அறைவாசி ஜெறோம் கேட்டான்,
‘என்ன மச்சான், சரண்டராகி யிட்டாய். இது முருகன் சிலையெல்லே?” என்றான்.
என்றோ ஒருநாள் அப்பா சொன் னதை ஜெறோமுக்குச் சொன்னேன்.
“நின்று தர்க்கிப்பதில் பலனில்லை. சைவசமய அறிவில்லாதவருடன் ஏன் இவ்விடயத்தை விவாதப் பொருளாக்கி நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டும். ஏதாவது பலன் ஏற்படு மென்றால் விவாதிக்கலாம். விளக்கம் கொடுக்கலாம். இப்போ எனக்கு நேரம் மிச்சம். வீண் வாக்குவாதம் இல்லை. வீட்டு மூதாட்டியும் சிலவேளை திருப்திப் பட்டிருப்பார், தனக்கு எல்லாம் தெரியும் என்று.”
இது போன்ற விடயங்களில், விதண்டாவாதம், குதர்க்கம் ஆகிய வற்றில பொன் னான நேரத்தை பழகிக் கொண்டேன்.
- முற்றும் -

Page 21
ஒரு பிரதியின் முறுைமுறுைப்புக்கள்
ஜெயகாந் தனி ன் இலங்கை விஜயம்
- மேமன்கவி
a
விநோதன் குமாரசுவாமி அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவையொட்டி வினோதன் நினைவாலயம் ஏற்பாடு செய்து இருந்த கலா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஜெயகாந்தன் அவர்கள். அக்காலகட்டத்தில் நம் நாட்டில் தோன்றிய அரசியல் நெருக்கடியின் காரணமாக தனது இலங்கை விஜயத்தை பிற்போட்டது வினோதன் கலா நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த திருமதி ஜெயந்தி வினோதனுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அத்தோடு, ஜெயகாந்தன் அவர்களை சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ஜெயகாந்தன் அவர்களின் வாசகர்கள் அபிமானிகள் அதை விட பெருத்த ஏமாற்றத்தை அடைந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜெயகாந்தன் அவர்களுக்கும் இலங்கைக்குமான தொடர்பு நீண்ட கால நீட்சி கொண்டது. இந்த தொடர்பு அவரது எழுத்துக்கள் மூலம் மட்டுமல்லாமல் தனிப் பட்ட நமது இலங்கைப் படைப்பாளி களுடனான நேசத்தின் காரணமாகவும் ஏற்பட்ட ஓர் உறவாகும். இந்த உறவின் காரணமாக ஜெயகாந்தன் அவர்கள் இலங்கைக்கு முதல் முதலாக வர முழு
aஞ்மனை
ஜெயகாந்தன் அவர்களின் வருகைக் காக திருமதி ஜெயந்தி வினோநன் அவர்கள் உழைத்த உழைப்பு அளப்பரியது என்பதை ஜெயகாந்தன் அவர்களின் இலங்கை விஜயத்தை முன்னிட்ட பணி களுக்காக அவருடன் இணைந்து பணி யாற்றியவன் என்ற வகையில் நான் நன்றாக அறிவேன்.
 

மனத்துடன் ஒத்துக் கொண்ட பொழுதும். தவிர்க்க முடியாத காரணத்தால் அவரால் அக்காலகட்டத்தில் வரமுடியாமல் டோனது.
ஜெயகாந்தன் அவர்களைப் பொறுத்த வரை. அவர்களின் எழுத்துக்களின் தாக்கம் நவீன தமிழ் கலை இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்டடுத்தி யவை, அத்தாக்கத்திற்கு இலங்கை கலை இலக்கிய உலகமும் தப்பவில்லை. இன்று அவர் சார்ந்து நிற்கும் கருத்து நிலைக்கு முரண்பட்டு நிற்டவர்கள் கூட இக்கூற்றை மறுக்க மாட்டார்கள் என்பது எமது எண்ணம். நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சிப் பாதையில் அவர் ஒரு 'பக சந்தி" என்பது இலங்கை விமர்சகர் பலரால் அடையாளப்டடுத்தப்பட்ட ஓர் உண்1ை) யாகும்.
ஜெயகாந்தன் அவர்கள் இலங்கை விஜயம், குறுகிய கால விஜய0ாக திட் மிட்டிருந்தபடியால், தனிநபர். சங்கங்கள் கலை இலக்கிய நிறுவனங்கள் ஊடாக அவரை தனித்தனியாக கெளரவம் வழங்காமல், நம் நாட்டின் சகல வெகுசன ஊடகங்களினூடாக அவரது கருத்துக் களைப் பரவலாக இந்த நாட்டு மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக அவர் பங்கு பெறும்வகையில் ஊடகங்களின் நிகழ்ச்சிகளுக்காக விரிவான, பரவலான ஒரு நிகழ்ச்சி நிரலை திருமதி ஜெயந்த் வினோதன் அவர்கள் சிரமப்பட்டு உருவாக்கி வைத்திருந்தார். அவ்வாறு அவர் உருவாக்கி இருந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு இநத நாடடின எலலா வெகுசன ஊடகங்களும் மிகவும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்க தயாராக
இருந்தன என்பதையும் இங்கு நாம் அழுத்திச் சொல்லத்தான் வேண்டும்.
கான்னதான் வெகுசன கலாசாரத்திற் குரிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கினாலும். கனதியான காத்திர usect
X a v Ma இலக்கிபப் படைப் I விகளுக்கும் இந்த நாட்டின் அரச, தனியார் வெகுசன
ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுட்: தில் முன் நிற்கின்றன என்பதை அந்த ஒத்துழைப்பு நமக்கு நிரூபித்தது. ஜெய காந்தன் அவர்கள் வந்திருந்தால் இந்த நாட்டின் வெகுசன ஊடகங்கள் எழுத்தாளர் ஒருவருக்குக் கொடுக்க முன் வருகின்ற கெளரவத்தை அறிந்து கொள்ள அவருக்கு ஒரு வாய்ட்பு கிட்டியிருக்கும்.
இவைக்கு மத்தியில் ஜெயகாநதன அவர்களின் வருகையை இங்குள்ள பல இலக்கிய ஆர்வலர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள். அவர் பங்கு பெற போகும் நிகழ்வுகள் சம்பந்தமாக விபரங்க%ை
என்னு லும் திருமதி ஜெயந்தி வினோதன் அE!ர்களுடனும் தொலை பேசியில் வண்ணம் இருநதாரகள எழுததr) நண்பர்கள் மட்டுமல்லாமல் இந்த நாட்டு மக்களும் மிகவும் ஆவலுடன் எதிரபாரதது கொண்டிருந்ததை எடுத்துக் கFட்டும்
1).j
தொடர் கொண்டு அறிந்த
முகமாக அக்க லகட்டத்தில் நடந்த இரு சம்பவங்களைச் சொல்லலாம் என நினைக் கிறேன். ஜெயகாந்தன் அவர்களின் வருகை பிற்போடப்பட்டுள்ளது என்ற சேத்யி: திருமதி. ஜெயந்தி வினோதன் அவர்கள் மூலம் அறிந்து கொண்ே அன்று மIEல ஸ்ஸில் வீடு திரும்பி கெ18ண்டிருந்தேன்.

Page 22
கையில் ஜீவா அவர்கள் மல்லிகைப்பந்தல் மூலம் ஏற்பாடு செய்திருந்த ஜெயகாந்தன் அவர்களுடன் ஓர் இலக்கிய மாலைப் பொழுதிற்கான அழைப்பிதழ் இருந்தது. "எக்ஸ்யூஸ் மீ ஜெயகாந்தன் இலங்கைக்கு வந்து விட்டாரா?' என்ற குரல் கேட்டது. திரும்பிப் ப்ார்த்தேன். எனது பக்கத்து ஆசனத்தில் இருந்த மத்திய வயதுடைய ஓர் அன்பர்தான் அந்த கேள்வியினை கேட்டவர். உடனடியாக அவரின் வருகை பிற்போடப்பட்டுள்ளது என்பதை சொல்லாமல், ஜெயகாந்தனை படித்தி ருக்கிறிர்களா? என கேட்டேன். "ஒ. அந்த காலத்திலே பார்த்தசாரதி, சாண்டில்யன், அகிலன், மு.வ.ஜெயகாந்தன் எல்லோரை யும் படித்திருக்கிறேன். ஆனால், ஜெய காந்தனின் கதைகள் ரொம்பவும் வித்தியாச மானவை என பொருள்படும் வகையில் தனக்கான மொழியில் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்கள் மீதான தனது தீவிர அபிமானத்தை சொன்னதோடு, ஜெயகாந்தன் பங்கு கொள்ளும் கூட்டத்திற்கு நாங்களும் வரலாமா? என்பதையும் கேட்டார். இதற்கு மேலேயும் அவரை ஏமாற்றக் கூடாது என்ற முடிவுடன் ஜெயகாந்தன் அவர்களின் பயணம் பிற்போடப்பட்டுள்ளது என்பதை சொல்லி விட்டேன். அச்சேதியினை கேட்டதும் அவரது முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகள் படர்ந்ததைக் கண்டேன். பின் அவர் இறங்கும் தரிப்பு வரும்வரை இலக்கியங் கள் சம்பந்தமாக பேசியதோடு, ஜெய காந்தன் அவர்கள் பயணம் பிற் போடப் பட்டதற்கான காரணத்தையும் சொன்ன தோடு, விரைவில் அவர் வருவார் என்றதையும் சொல்லி வைத்தேன்.
ஆறுதல் அடைந்தார். அவர் இறங்க வேண்டிய தரிப்பு நெருங்கியதும் தான். தனது விலாத்தையும் கூறி ஜெயகாந்தன் வரும் பொழுது தனக்கு அறிவிக்குமாறு
வேண்டி இறங்கிப் போனார். இந்த சம்பவத்தினை மனதில் அசைப் போட்ட
வண்ணம் வீட்டில் காலடி வைத்தவுடன் மனைவி, உங்கள் நண்பர் ரவியின் அம்மா
உங்களை கேட்டு இரண்டுத் தடவை
போன் பண்ணினார். என்றாள். ரவியின்
அம்மா ஏன் இவ்வளவு அவசரமாகத்
தேடினார் என்பது புரியாமல் ரவியின் வீட்டுக்கு தொலைபேசித் தொடர்பு கொண்டேன். மறுமுனையில், ரவியின் தாயார்தான் பேசினார். ஜெயகாந்தன் இலங்கைக்கு வரப்போகிறார் என்ற
சேதியைப் பத்திரிகையில் பார்த்தேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று
சொன்னேன். அவன் உங்களிடம் பேச சொன்னான். ஜெயகாந்தன் என்றால் எனக்கு சரியான பைத்தியம். அவரது சில நேரங்களில் சில மனிதர்கள் பல தடவை படித்திருக்கிறேன். அவரைப் பார்க்க
விரும்புகிறேன் மகன். நீங்கள்தான் அதற்கொரு வழிச் சொல்ல வேண்டும்
என ஒரே மூச்சில் சொன்னார். மனசுக்கு
கஷ்டமாக இருந்தது. வேறு வழியில்லாமல்
அவருக்கும் அந்த சேதியினை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சேதியினை சொன்ன மறுகணம் மறு முனையிருந்து ஐய்யோ என ஒலித்தது. ஐயோ என்ற ஒற்றைச் சொல் அவர் அடைந்த ஏமாற்றத்தை பிரதிபலித்தது. உடனடியாக, அவர் ஆறுதல்படும் வகை
யிலான சேதியினையும் சொன்னேன். சரி மகனே அப்போ வரும் பொழுது
668

பார்ப்போம் எனச் சொல்லி தொலை பேசியினை வைத்து விட்டார். அச் சொல்லில் சலிப்பு வெளிப்பட்டது.
இவ்வாறாக பலரால் மிகவும் ஆவலுடன் ஜெயகாந்தன் அவர்களின் இலங்கை வருகை எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஜெயகாந்தன் அவர்களுடனான பல வருடங்கள் தொடர்பு கொண்டிருந்த பொழுதும் அவரை இலங்கைக்கு அழைத்து வரமுடியாமல் போன சந்தர்ப் பத்தில் திருமதி ஜெயந்தி வினோதன் அவர்கள் தனது அயராத முயற்சியினால் ஜெயகாந்தன் அவர்கள் இலங்கைக்கு வர சம்மதம் தெரிவித்ததே ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சாதனையின் பெரு மிதத்தில், இந்தக் காலகட்டத்தில் ஜெயகாந்தன் அவர்கள்
வருகை தராததினால் அடைந்த ஏமாற்றத்தை கடந்து திருமதி ஜெயந்தி வினோதன் அவர்கள் ஆறுதலும் சந்தோஷமும் அடையலாம். அதே வேளை, வெகு விரைவில் தான் இலங்கை வருவேன் என்ற சேதியினை ஜெயகாந்தன் அவர்கள் தனக்கு தொலைபேசியில் உறுதி அளித்திருக்கிறார் என்றும் திருமதி ஜெயந்தி வினோதன் அவர்கள் என்னிடம் கூறினார். இந்த உறுதி மூலம் இலங்கையின் ஜெயகாந்தன் அவர்களின் அபிமானி களும் வாசகர்களும் ஆறுதலும் சந்தோஷமும் அடைவார்கள் என நம்பலாம்.
2. இணைய தளத்தில் ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் அவர்களின் இலங்கை விஜயம் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஈடுபட்டு கொண்டிருந்த எனக்கு அவரைப் பற்றி பயின்றதை மீண்டும் ஒரு முறை மீட்டிப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் சந்தர்ப்ப வசமாக அவரது அத்தனை நூல்களை வாங்கி சேமித்து படித்திருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் அந்த நூல்களில் ஒரு சில மட்டுமே என் வசம் இருக்க, மற்ற நூல்கள் எல்லாமே நண்பர்களுக்குக் கொடுத்து திரும்பி வராமலே போய் விட்டன. இதுவொரு கவலைதான். அதாவது புத்தகங்கள் சேமிக்கும் பழக்கம் இருந்தும் நண்பர்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற கடுமையான போக்குடன் இருக்க முடியவில்லை. ஒரு நல்ல வாசகனால் ஓர் இலக்கிய ஆர்வம்
ബ8

Page 23
மிக்கவனால் அப்படி இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அதனால் இப்போதைய காலகட்டத்தில் ஜெய காந்தனின் படைப்புக்கள் என் கைவச மிலலை என்ற கவலையைப் போக்கும் வகையில் நூலகங்களைப் பயன்படுத்தலா மென்றால் இன்று கொழும்பில் ஒட்டு மொத்தமாக நவீன கலை இலக்கிய நூல்கள் அடங்கிய ஒரு நூலகம் என்றால் அது கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் பரா மரிக்கப்படும் நூலகம் தான். அந்த நூலகத்தில் ஜெயகாந்தன் அவர்கள் சம்பந்தமாக பல நூல்கள் இருப்பினும் கால நேர அவகாசம் இல்லாத நிலையில் எனக்கு கொடுத்து உதவியது இணையத்தளம்தான்.
கடந்த மாதம் ஓர் இரவில் இணையத் தொடர்பு ஏற்படுத்தி தேடல் பொறியின் உதவியுடன் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி தகவல்கள் கிடைக்குமா என்று இணையத் தளத்தில் உலாவிய பொழுது அகப்பட்டது தான் "ஜெயகாந்தன் பக்கம்" எனும் இணையப் பக்கம். இந்த இணையத் த்ள பக்கத்தை பி. கே. சிவகுமார் என்பவர் வடிவமைத்து இருந்தார். இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் கிடைக்க வில்லை. ஆனால் ஜெயகாந்தன் அவர் களைப் பற்றி பல அரிய தகவல்கள் அந்த இணையத் தள பக்கத்தில் குவிந்து இருந்தன.
ஜெயகாந்தனைப் பற்றி ஜெயகாந்தனின் படைப்புக்கள் ஜெயகாந்தன் பேசுகிறார் ஜெயகாந்தன் பதிவுகள் என பல்வேறு தலைப்புக்களில் ஜெயகாந்தனைப் பற்றிய பிறரின் கருத்துக்கள். ஜெயகாந்தன்
திண்ணை எனும் இணைய சஞ்சிகைக்கு வழங்கிய நீண்ட பேட்டி, ஜெயகாந்தன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களைப் பற்றிச் சொன்ன கருத்துக் கள் என அப்பக்கம் தொகுக்கப் பட்டிருந்தது. உண்மையில் அது பி.கே யின் அந்த ஒரு பாரிய முயற்சி என்றே சொல்ல வேண்டும். அதற்காக அவரை பாராட்டத் தான் வேண்டும். ஜெய காந்தனின் எழுத்துக்களில் அபிமானம் கொண்ட இணையத் தொடர்புடன் பரிச் சயம் கொண்டவர்களுக்கு "ஜெயகாந்தன் பக்கம்' எனும் இந்த இணையத் தள பக்கம் ரொம்பவும் பயன் உள்ளதாக இருக் கிறது. இணையத் தளத்தில் இப்பக்கத்தை பார்த்திராதப் அப்பக்கத்தை பார்க்க, படிக்க விரும்பும் ஜெயகாந்தனின் அபிமானி களுக்காக அப்பக்கத்திற்கான இணையத் தள முகவரியை கீழே தந்துள்ளேன்.
w/tamil.net/people/pksivakumar
7- S)
s மல்லிகைப் பந்தலின்
இம்மாதப் புதிய நூல்கள்
நாம் பயணித்த புகை வண்டி (சிறுகதைத் தொகுதி) ப. ஆப்டீன்
அப்புறமென்ன. (கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
ܓܠ\
് ബ;

பணச்சடங்குகளைத்தாண் எதிர்காலத்தில் நடத்தப் போகிண்நோமா?
~ டொமினிக் ஜீவா
இன்று இந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வாரா வாரம் இந்த நாட்டு எழுத்தாளர்களினது புத்தம் புதிய நூல்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
இந்த நூல்கள் பல்வேறு வடிவில், அமைப்பில் வடிவமைக்கப்பெற்று மிக அழகாக வெளி வருகின்றன.
இந்தத் தேசத்தில் பெரிய துரதிரஷ்டம் என்னவென்றால் ஒருங்கமைக்கப்பட்ட ஒழுங்கான தமிழ்ப் புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றும் இங்கு இல்லாத குறைதான்.
கலை இலக்கியம் அனைத்துக்குமே நமது மூத்த பரம்பரையினர் தமிழகத்தைப் பார்த்துப் பார்த்துக் கையேந்தி நின்ற காரணத்தாலும், இங்கு என்னதான் இருக்கிறது?’ என்ற வெகுசன அலட்சியப் புத்தியினாலும் நமது பதிப்புத்துறை முடங்கிப் போய்விட்டது.
அல்ஹாஜ் ஹாஸிம் உமர் என்ற கனவான் வெளியீட்டு விழாக்களுக்கு வந்து முதற் பிரதியை வாங்கி ஆதரிக்காது போனால், பல புத்தக வெளியீட்டு விழாக்களே கொழும்பில் நடைபெறாது.
அன்னாரை எழுத்தாளர் சார்பாகப் பாராட்டுகின்றோம். அவரது நாமத்தை எழுத்தாளர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.
இந்த நாட்டின் எதார்த்த உண்மை என்னவென்றால் எழுதுபவன்தான் தனது நூலை வெளியிட்டு வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.
தனது சொந்தக் கைப்பணத்தை முதலீடு செய்து தான் எழுதிய புத்தகத்தைக் கோலாகலமாக வெளியிட்டு, வெளியீட்டு விழாவையும் தானே நடத்தி மகிழ்கிறான்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்தப் புத்தக வெளியீட்டு விழாக்கள் ஒவ்வொன்றுமே பணச் சடங்குகள்'தான். தனக்கு வாலாயமான சில முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கெளரவப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ள வைத்து, முடிவில் பணச்சடங்கை நேரம் கழித்துக்கூட நிறைவேற்றிக் கொள்வதுதான் இந்தப் புத்தக வெளியீட்டு விழாப் பணச் சடங்கின் நோக்கமாகும்.
புத்தகம் வெளியிடும் ஓர் எழுத்தாளன் தனது முதல் வெளியீட்டுக்கு இந்தப் பண வசூல் உத்தியைக் கையாண்டு அச்சகக் கடனை ஓரளவு அடைத்து விடலாம்.
سمي
665);

Page 24
தொடர்ந்து இந்த உத்தி தற்செய்யாதே
எனவேதான் புதிய கோணத்தில் நாம் சித்திக்க முற்படுவோம். இந்த நாட்டிலுள்ள அச்ச கங்களுக்கு, அதில் வேலை செய்யும் ஊழியர் களுக்கு எமது உழைப்புப் பணம் செல்லு கின்றது. ஆனால், எமக்கு இந்த நாட்டில் ஆதரவு தேட இனிமேலும் பணச் சடங்குகளைத் தான் நடத்திப் பணம் திரட்டப் போகின்றோமா? ஆனால் எங்கோ இருந்து வரும் இறக்குமதிச் சரக்குகள்தான் புத்தகச் சந்தையில் மலிந்து போய்க் கிடக்கின்றன.
நமது நாட்டு நூலகங்களும் கல்லூரிகளும் அரசாங்க உதவியால் இயங்கும் நூல் கொள் வனவு செய்யும் நிறுவனங்களும் மூன்றரை அல்லது நான்கு மடங்கு அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கி நிரப்புவது மல்லாமல், நமது இளம் தலைமுறையின் மண்டைக்குள்ளும் மெல்ல மெல்லச் செலுத்தி விடுகின்றன.
உலக மயமாகுதல் என்ற திட்டம் ஏனைய தேசங்களுக்கு மட்டும்தானா உரியது. ஏன் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் நமது நூல்களையும் சஞ்சிகைகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாமல் இருக்கிறது?
மல்லிகையை இத்தனை ஆண்டுக்
காலமாக வெளியிட்டு வருகிறேன். வெளியே சொன்னால் வெட்கக் கேடு. இத்தனை வருஷ காலத்தில் இதுவரை ஒரேயொரு சந்தா கூடத் தமிழகத்திலிருந்து சட்ட ரீதியாக எனக்குக் கிடைக்கவில்லை.
இந்த நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களினது தலையில் இதுவரை மிளகாய் அரைத்தது போதும். விகிதாசார ரீதியிலாவது நமது படைப்புகளைத் தமிழகத்தில் பெற்றுக் கொள்ள இந்திய மத்திய சர்க்கார் ஆவன செய்ய
வேண்டும்.
இல்லையென முடிவானால் அங்கிருந்து வரும் நூல்களும் எமக்குத் தேவையில்லை!
எமது இனத்தைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லப்படும் எந்த ஒரு பிரதிநிதியாவது இந்த மண்ணில் நமது சகோதர படைப்பாளிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பைப் பற்றி இதுவரை வாயே
திறந்தது கூடக் கிடையாது.
அதே சமயம் நமது சகோதரர்கள் வெளி யிடும் நூல் வெளியீட்டு விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு எமக்கு உபதேசம் செய்து, அடுத்த நாள் பத்திரிகையில் செய்திகளில் ஊர்வலம் வரும் இவர்களது கருத்துக்கள்.
எத்தனை விசித்திரமான கிளித்தட்டு விளையாட்டு இது
எத்தனையோ சிரமங்களுக்கும் பொருளா தார முடைகளுக்கும் மத்தியில் இந்த மண்ணில் தமது படைப்புகள்ை வெளியிட்டு வைத்து விட்டு, வெளியிட்ட தமது புத்தகங்களைச் சந்தைப்படுத்த எந்த விதமான வசதி வாய்ப்பு களுமற்ற சகோதர எழுத்தாளர்களிடம் ஒன்றே ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்!
இந்த அடிப்படையில் புத்தக வெளியீட் டாளர்களான தனிநபர் எழுத்தாளர்களான நீங்கள் நமது பொதுக் கோரிக்கைகளுக்காக ஒன்று திரளப் போகிறீர்களா, இல்லையா?
கல்கத்தாவில் வதியும் பொது மகளிர் ஒன்று திரண்டு நெடுந் தெருக்களில் தமது நியாயமான கோரிக்கைகளுக்காக ஊர்வலம் போன செய்தி. உங்களில் எத்தனை பேர் களுக்குத் தெரியும்?
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்!
6,656);
S

முனியப்பதாசன் கதைகள்
- (BJ goldo I gogolorbdobgbll
முன்பப்பதாசன் என்ற புனைபெயருக்குள் ைேறந்துள்ள இலங்கைத் தமிழ் எழுத்தாளரின் பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். இவர் LI til LJ i S30 til by o05 b03 i Lupoš o0) o00 bolt It) பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இருபது சிறுகதைகள் வரையில் எழுதியள்ளார். மல்லிகைப் பந்தல் வெளியீடாக மலர்ந்த முனிபட்டதாசன் கதைகள் கான்ற தொகுதி யாழ். மக்களின் வாழ்க்கையை, இந்துமத, கிறிஸ்தவமத ஆன்மீக மக்களின் துயரங்ளை, பிரபஞ்ச சிருஷ்டித் தத்துவத்தை, மனித மன அழகை, சிருஷ்டியின் வினோதங்களை எந்தவிதமான பொய்மை பின் சுவடு I எது சிறந்த இலக்கிய நயத்து நன், கவிதைக்கு ஒப்பான சரளமான இன்பத் தமிழ்நடையில் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறது. இவரது கதைகள் உலகியல் சம்பந்த II து. •
யாழ்ப்பான மக்களின் விழுமியங்களைத் தழுவிட்டது. மனித வாழ்வின், அகத்தின் [ IᏯᏙX பரிமாணங்களை. நேர்மையுடன் ஆரய்கிறது. இந்தப் படைப்பணி இன்று நம்மிடையே இல்லை. அவரது மறைவு எமக்குப் பெரிய இழப்பாகும். இவருக்கு ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயம் உண்டு என்பதை இவரது சிறுகதைகள் துல்லியமாகக காட்டுகின்றன. இவரது கதைகளில் வெளிப்படும் துன்பியல் 'Anton Checkove'ன் கதை மாந்தரின் துரத்திறகும: நிராசைக்கும் ஒட் 11%னது. உவமைகள், 2) முைைடப்புகள் 1).H.1awrence இன் கதைகளில் சிறப்பம்சமான Symbolism ற்கு ஒப்பிடக் கூடியதாக மேன்மை பெற்றுள்ளன.
புனலாட்ச சொரிகிற பார்கழி மாதத்தின் நடுட் குதி, பலநூறு ஆண்டுwாக கருக்கு மேல் கருமையை நாள்தோறும் பூசி வந்தால் முடிவில் பூசிய இடத்தில் கிளரும் பேய்க் கறுப்புப் படைபோல வானமெங்கும் கருமை பூத்துக் கிடந்தது. அவை நிமிர்த்திய தலையில் முட்டுகிறாற் போன்றொரு அழகு. (வெறியும் பலியம்) வறுமைக் கோட்டுக்குள் சீவிக்கும் பரதவர் குடும் பங்கள் உயிரைப் பணயம் வைத்து கடற்றொழிலுக்குப் போகும் ஆண்கள் மனதுக்குப் பிடித்த அத்தை மகவை 1,3ணந்து கொண்டதனால் லுசியனை எதிரியாகப் UPT6îläbodbili tuluiťqip til.
ܚܝ
gaggio ܓ

Page 25
கொல் லன் உலைக் களத் துத் துரித்தியில் இருந்து கிளம்பும் உஷ்ணமான காற்றைப் போல நீண்டதொரு பெரு மூச்சுடன் லூசியன் கூறினான் "சம்மாட்டி யாரே இந்த நேரத்திலே கடலிலே போய் என்ன செய்ய முடியும்?"
புறவீதியின் கிழக்கே அலை எற்றிக் கொண்டிருந்த கடலையும் - கருங்குழல் என்று கிளர்ந்தெழுகிற வானத்தையும் மாறி, மாறி அவள் விரல்கள் சுட்டிக் காட்டின.
"பாவம் லூசியன்! சம்மாட்டியார் மனம் மாறவேயில்லை. பழைய சம்பவங்கள், ஏமாற்றங்கள் அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்த வெறி இன்றைக்கும் மந்தாரைச் சூழ்நிலையில் ஒரு பலியை உண்டாக்கி ஒன்றை ஏங்கப் பண்ண வேண்டுமென்றே வந்திருந்தால் தன்னிடம் என்பதை அவள் உணர நியாய மில்லை. அவன் நல்லவன்.”
ஆசிரியரின் உவமைகள் "கனல் போல் பட்டென்று நெற்றியில் உறைக்கின்றன. வானம் அபிலாஷை, இலட்சியத்தைக் குறிக்கிறது. லூசியன் இயேசு போன்ற இலட்சியக் கதாநாயகன். செஞ்சோற்றுக் கடனுக்காக உயிர் கொடுத்து அமரனாகிறான் லூசியன்.
"யேசு என்னை மன்னிக்கவே மாட்டார். சமய நம்பிக்கை இங்கு மனிதனை ஈடேற்று கிறது. தேவனாக்குகிறது.
'சந்திரிகை’ என்ற சிறுகதை ஒரு ஆணுக்கும் அவன் மச்சாளுக்கும் இடை யேயான அன்பைச் சித்திரிக்கிறது. பேதைப் பருவத்தில் உள்ள சந்திராவின் அன்று ‘calf 10ve' என நினைத்து அவளைக் குழந்தை யாகப் பாவித்து அவள் இதயத்தில் காதல் உணர்வுகளைத் தூண்ட விரும்பாத
இளைஞனின் மன உணர்வுகள் இக்கதையின் கருவாகும்.
அழகாகத் தன் மனமுதிர்ச்சியைத் தெரிவிக்கும் சந்திரா "அப்பா சாப்பிடாமல் எங்கள் அம்மா சாப்பிடுவதில்லை” மொத் தத்தில் நுண்மையான உணர்வுகளால் நெய்யப்பட்ட அழகான, இயற்கையான கதை
ஆத்மீகத் தேர்தல் என்ற கதை இறைக் கோட்பாடு, சமய நம்பிக்கை, மக்களை நல் வழிப்படுத்தும் என்ற ஆசிரியரின் நம்பிக்கையைப் பிரதி பலிக்கிறது. 'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என்று கதை தொடங்குகிறது. பாதுகாப்பு இலாகாவில் கனகரத்தினம் வேலை செய்தபோது "கீதை போதிக்கும் மரண பயமற்ற வலிமை மிக்க ஆத்மாவை நான் இங்கே இந்தப் பதவியில் இந்தச் சூழ்நிலையில் பெற்றேன்."
கீதை சொன்ன ஆத்மா அழிவற்றது. சர்வமும் நானே என்ற கண்ணனின் கோட் பாடு, ஆதிசங்கரின் அத்வைதக் கோட் பாடுகள். இக்கதையை காந்தியின் ராம ராஜ்யத்தை நிறுவப் பாடுபடுகிறார். உலக இயல்பை நன்கு புரிந்துகொண்ட மனைவி சொல்கிறாள்.
"உங்களை எனக்குத் தெரியும் உங்கள் புனிதமான உணர்ச்சிகளையும் எனக்குத் தெரியும். அவை இந்த உலகத்தை எட்டாது என்றுதான் தடுத்தேன்.” இலட்சியக் கனவு நிறை வேறாத சோகத்திலும் கனகரத்தினம் ஆத்ம ஈடேற்றத்தின்பால் கொண்ட நம்பிக்கை குறையவில்லை.
'விழிப்புற்ற தூய ஆத்மாவின் முன்னால் வஞ்சனையில்லை, பொய் இல்லை, கயமை இல்லை. சின்னத்தனங்கள் இல்லை.
கதை இப்படி உருவங்களுடன்
ES U698

முடிகிறது.
"செளந்தர்யத்தின் பிறப்பிடமாய், மெய்ஞானத்தின் உறைவிடமாய் அவருக்கு அந்த நேரத்தில் பிள்ளையார் தென்பட்டார். பாம்பைப் பார்த்தார். அது விம்மிச் சுருண்டு கிடந்தது.
நுட்பமாக எதையும் கவனிக்கின்ற பாங்கு, பரிச உணர்வுகளை ஏற்படுத்தும் வர்ணனைகள், இனிய இலக்கிய நடை, அமுது என சுவைக்கும் நல்ல தமிழ் என்ற அத்தனை சிறப்பம்சங்களையும் கொண்ட கதை 'அம்மா' ஒரு மனிதன் உலகத் துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது இக்கதையின் கரு. ஆங்கிலத்தில் 360) g5 'positive approach' 6 6öi OB) கூறுவார்கள்.
'உலகத்துத் துன்பங்களை மறந்து கொண்டு ஓடுவதிலேதான் என்ன சுகம் பெறமுடியும் அம்மா?
ஆத்ம தரிசனம் காணும் எழுத்தாளர் மிக மிகச் சாதாரண உணர்வுகளை மதிக்கவும், காக்கவும் - அவற்றின் வாயி லாகப் பிரபஞ்ச தத்துவத்தை உணர முடியாத சாதாரண மனிதனுக்கும், கூட ஏதோ ஒரு சிறு நிகழ்ச்சிப் பொறியில் அவனுள் அடங்கியிருக்கும் ஆத்மா விழிப்படைந்து விடுகிறது. அந்த ஆத்மீக விழிப்பில் - அவன் உடனே மகாத்மாவாகவோ டோல்ஸ் ரோயாகவோ மாறி விடுகிறார் என்பதில்லை. 'உள்ளுணர்வுகளின் விழிப்பில் - ஆத்மீக விழிப்பில் அவன் அவர்களுக்குச் சமான மாகிறான்.
ஆசிரியரின் நுட்பமான பார்வை இங்கே வெளித்தோன்றுகின்றது.அரச மரத்தின் அடி யில் நெளிந்தோடும் பருத்த வேர்க் கம்புகளின் இடையே எப்போதோ ஒரு பக்தன் அவதியாய்
to st; GSG);
நட்ட வயிரவ சூலம் காலத்தின் மகத்துவமான அவசரத்தில் அதுவும் துருப்பிடித்தும் - தேய்ந்தும் - தீய்ந்தும் மங்கிக் கரையத் தொடங்கி வெகு காலமாகி விட்டிருந்தது.
எழுத்தாளின் ஆன்மீக நம்பிக்கை யைக் கொண்டு நெய்யப்பட்ட கதை ஆணிவேர். ஆத்மீக அத்திவாரத்தில் எழும்பும் மனித சமூக, உலக முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம் என்பது இக்கதையின் கரு.
துறவியென்ற கதை சுவாமி விவே கானந்தர்பால் முனியப்பதாசன் கொண்டிருந்த ஈடுபாட்டை வெள்ளிடை மலையென விளக்குகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தத்துவம் சொல்லப்படுகிறது. "மகனே - உலக நினைப்பற்று. உள்நாட்டு நினைப்பற்று உன் மொழியின் நினைப்பற்று நீ மோனத்தவம் இருக்க ஆசைப்படாதே. நல்லவர்கள் எல்லாம் சுற்றுப் புறத்தின் மோசமான 'வாடைக்குப் பயந்து அன்றும் இன்றும் ஆச்சிரமங்களிலும் - தனி யிடங்களிலும் ‘சமாதிச் சுகம் கண்டார்கள்.
எங்கோ எனக்கெட்டிய வரையில் விவேகானந்த துறவி மட்டும் "மாஸஸ் மாஸஸ்' என்று கீழ்மக்களுக்காய் கண்ணிர் விட்டார். மகனே - தன் மொழி - தன் நாடு - பிறகு உலகம் என்ற பற்றற்று வாழ்வது ஒரு வாழ்க்கையா? நெற்றிக்கு நேரே தெரிகிற இந்தத் தெய்வங்களை (பற்றுக்களை) விட்டுத் துறவி ஓட வேண்டுமா?
"போ - மகனே - லெளகீகத் துறவி யாய் வாழ்ந்துவிடு.
"மேவுவர் தீக்கொண்டு தோழரே!' என்ற கதை இந்துமத தத்துவத்தின் அடிப் படைகள், இன்றைய சமூக வாழ்வினை பல பிரச்சினைகளுக்கு விடிவுகாண முடியாமல் இருப்பதற்குக் காரணம் சமயத்தில் பலவீனம் அன்று. வாழ்வின் பல பிரச்சினைகளுக்கும்

Page 26
சமயத்தை முன்னிறுத்திப் பார்க்க முடியாத தன்மை. அதைப் பின்பற்றிய மனித மனங் களின் பலவீனம் என்று உரைக்கிறது.
சமயத்தை சாம்ராஜ்யங்களோடும் கோர யுத்தங்களோடும் இணைத்து புனிதத் தன்மையை மாசுபடுத்திவிட்ட மந்தைகளின் கூட்டம்' என்று சாடுகிறது.
அவரது வருணனை வாசகனை அக் களத்துக்கு இட்டுச் செல்கிறது. "ஆவணி மாதத்து வேப்பமரம் அது. இலை கொள் ளாமல் வேப்பம் பழம் தொங்கிக் கொண்டி ருந்தது. வேப்ப மரத்தின் இலை களிலும், கொம்பர்களிலும், அதன் சகல அரை வட்டத்திலுமே குழந்தையின்ற முதல் பிரசவப் பெண்ணின் தாய்மைப் பொலிவும்.
'வயதையும் அழகையும் முன் நகர்த்தி வளர்ந்த ஒரு பெண்
‘வரையறை விலைமகள்பால், இத் தொழிலுக்குத் தள்ளப்பட்ட அவளது இயலாமைபால் கொண்ட மானுட நேயம் இதில் தொனிக்கிறது. 'வயிறு மட்டும் சும்மா இருந்து விடுகிறதா பசித்தது. ஆண் வர்க்கத்தின் அடக்குமுறை சாடப்படுகிறது. 'உயிரின் பிறப்பின் முன்னால் சின்னதும் பெரியதுமாய் அறிவும் அறிவற்றதுமான பெண் வர்க்கம் - ஆடோ, மாடோ, கோழியோ, நாயோ, மனிதப் பெண்ணோ எவ்வளவு தேய்ந்து போகின்றனர். அந்தத் தேய்வைப் பயன்படுத்தி இறுமாந்து நிற்கிற ஆண் களுக்குள் மிருக ஜாதிக் கழுகுகள்..!!
பிரபஞ்ச சிருஷ்டித் தத்துவம், ஆன்மா அழிவில்லாதது, பலதடவை பிறப்பெடுக் கிறது என்னும் ஆன்மீகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கதை ‘பிரபஞ்சப்பூ
நானே அவள். அவளே நான். நானும்
நீயும் தேய்ந்து பிறந்தது குழந்தை. புதிய உயிர் அதில் நீயில்லை. நான் இல்லை. இக்கதையில் சங்கரர், இராம கிருஷ்னர், விவேகானந்தர், வினோபாவின் பாதிப்புத் தெரிகிறது.
"அழிவும் தேய்வும்’ என்ற கதை மரணத்தை ‘அழகிய மரணம்’ என்று வர்ணிக்கிறது.
John Keats 6163 E65 'ode to a Nightingale’ என்ற கவிதையில்
"Darkling listen, and for many a
time,
have been half in love with easeful Death, Call'd him soft names in many mused rhyme, To take into the air my quiet berath, Now more than ever seems it rich do die, To cease upon the midnight with no pain.'
மரணத்தை இப்படி வருணிக்கிறார் முனியப்பதாசன்.
மரணத்தின் - யாரும் கணிக்க முடியாத அடி பெயர்த்துப் பார்க்காத அதன் கம்பீரம். மரணம் என்பது தனக்கு நெருக்கமான உயிரின் பிரிவை உணர்ந்தவன் மட்டும் உணரும் ரகசியமோ என்று இக்கதை முடிகிறது.
விவேகானந்தரின் பிரம்மச்சரியத்தின் மேல் ஆசிரியர் கொண்ட ஈர்ப்புக் காரணமாக உருவாக்கப்பட்ட கதை நிமிடப் பூக்கள்.
"காற்றே நீ கேட்டிலையோ' என்ற சிறுகதை முதன் முதலாக கடற்றொழிலுக்கு போகும் பரதவச் சிறுவனைக் குறித்து முதிய பரதவக் கிழவன் இரக்கம், பயம் போன்ற பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்படுவதை
CGC

கருவாகக் கொண்டுள்ளது. மானுட நேயம் அதில் பிரதான உணர்ச்சியாகும். "முருகா, பொஸ்தகத்தைக் காவிக் கொண்டு நேத்து வரையும் திரிஞ்ச பெடியன், எங்களைப் போல் அனுபவமே இல்லாதவன். நீதான் காட்பாத்த வேணும்.”
முனியப்பதாசனின் எல்லாக் கதை களுமே ஆன்மீகக் கோட்பாட்டை மைய மாகக் கொண்டவை. அவர் உலகை மாயை என்று ஒதுக்கவில்லை. அழகை ஆராதிக் கிறார். 'ஆயிரவித அழகுகள் எல்லா இடங் களிலும் பிறக்கின்றன. (உரிமை)
சமூகப் பிரச்சினைகளுக்கும் தனி மனித துயரங்களுக்கும் மதம் வழி சொல்கிறது என்று நம்புகிறார்.
"ஆத்மா என்பது அழிவில்லாதது. என் உள் வழிமுறையாய் வந்த ஆத்மாவின் பலம் இருக்கிறது. மனிதனும் அவனால் தோற்று விக்கப்பட்டனவும் எதுவும் தொடர முடியாத ஆத்மா. நான் அழிவில்லாதவன். நான் SąġS DIT..."
கோடானு கோடி வருஷங்களாக மக்கள் அறிய அவாவுற்று நிற்பது சிருஷ்டித் தத்துவம். கர்மவினைகள் என்பன பற்றிய இரகசியங்களாகும். 'முதல் குரல் இல்லை. இது பழைய குரல் தப்பித் தட்பி எங்கெங்கோ பிறந்து எதனாலோ ஆண்டும் ஆளப்பட்டும் அனுபவித்ததும் அனுபவிக்கப்பட்டும் நிற்கிற ஒரு சக்தியின் பழைய குரல் மனிதனின் குரல்.’ (பிரபஞ்சப் பூ)
'பெண்ணே, உன் முகத்தில் காவி யங்களின் அழகுகளைக் காணுகின்றேன் என்று காதல் வசப்படும் இளைஞன் மக்கள் மேம்பாட்டிற்காக அந்தப் பரிசுத்த அன்பைத் தியாகம் செய்கின்றான்.
"இலட்சியவாதியின் மனதிலும் ஒரு சமயம் காதல் அரும்புகள் அரும்புகின்றன.
6696);
ஆனால் அவை ஒரு நிமிடம் மட்டுமே வாழ்கின்றன. அவன் வரையில் காதல் நிமிடப் பூக்கள்தான்.
தனித்துவமான இவரது சிறுகதைகள் அன்னியமாக்கப்பட்டவையோ அல்லது அதிகப்பிரசங்கித்தனமானவையோ அல்ல. தனிமனித துயரங்களும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள்பால் கொண்ட அனு தாபமும் வாசகர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. “Pure realisation, வாசகனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எதுவும் இலக்கியம் அன்று. மலசலகூடத் தொழிலாளி நசிகேசனாகச் சித்திரிக்கப்படுகிறான். விலைமகள் சமூகத் தின் குறைபாடுகள் காரணமாக உருவாக்கப் படுகிறாள். நித்தம் மரணத்தை சவாலாக எதிர் கொள்ளும் பரதவரிடையே மானுடம் வானத்தை எட்டுகிறது. அழியாத ஆன்மா என்ற சாசுவதமான கொள்கையுடன் மரணம் பல பரிமாணங்களில் ஆராயப் படுகிறது.
நல்ல மொழிவளமும், சரளமான வார்த்தைப் பிரவாகமும் கொண்டுள்ள முனியப்பதாசன் கதைகள் அடிப்படை ஆத்மீக உணர்ச்சிகளை வெளிக் கொணர்ந்து மானுட புத்திபூர்வமான தேடுதல்களுக்கு விடை யளிக்கின்றன. இத்தொகுதியில் கோர்க்கப் பட்ட ஒவ்வொரு முத்தும் 21ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்துறையில் இடம் பிடிக்கும் தகுதி பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.
புதிய நூல் ‘கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத
ஆமைகளும் செங்கை ஆழியானின்
சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

Page 27
இவரைத் தெரிகிறதா?
இந்தப் படத்தில் இருப்பது யார் என்று தெரிகின்றதா? எல்லா இலக்கிய கூட்டங்களில் பங்கு பெறுபவர்களுக்கு இவர் யார் என்று தெரிந்திருக்க வேண்டும். கொழும்பா? மாவனலையா? பேருவளையா? உக்கு வலையா? நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நடக்கும்
இலக்கியக் கூட்டங்களிலும் பெரும்பாலாக இவரைப் பார்த்திருப்பீர்களே.
ஆம்! அவரே தான்.
கோவை அன்சாரேதான். வயதில் பெரியவராக இருப்பினும் இளைய படைப்பாளிகள் எல்லோருடனும் மிகவும் நெருக்கமாக பழகுபவதிலும். அவர் தம் நடத்தும் இலக்கியக் கூட்டங்களுக் கெல்லாம் தனது வயது தரும் களைப்பை மீறியும் இவர் போவது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
1955ம் ஆண்டு தொடக்கம் அமரர் கலைதாசனின் தொடர்பும் அதற்கு பிற்பட்ட காலத்தில் மானா மக்கீனின் தொடர்பி னாலும் நாடகத்துறை தொடர்பும். பல இலக்கியவாதிகளினது பரிச்சயமும் இவருக்கு ஏற்பட்டது. ஈழ கணேஷ் நடத்திய கோவை எனும் பேனா நண்பர் சஞ்சிகை அன்சார் நானாவாக இருந்த இவரை கோவை அன்சாராக மாற்றியது. வலம்புரி கவிதா வட்டம் திறந்தவெளி கவியரங்குகள் கவிதையிட்ட இவரது இளமையை எடுத்துக் காட்டியதோடு, இவரது எளிமையை அடையாளப் படுத்தியது. பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள்
வெளிவந்துள்ளன. இவரே 'வதனம்' என்ற பெயரில் ஒரு றோனியோ சஞ்சிகை நடத்தி இருக்கிறார்.
இவரது இலக்கிய ஆர்வத்தைக் கண்டு 1996ம் ஆண்டு இரத்தினபுரியில் அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியம் நடத்திய சாமயூரீ விருது விழாவில் இவருக்கு "இலக்கிய ஆர்வலர்' என்ற பட்டம் வழங்கபட்டது.
சலிக்காது தொடர்ச்சியாக எல்லா இலக்கியக் கூட்டங்களில் இவர் பார்வை யாளராகக் கலந்து கொள்வதே இவரது தனித்துவம் எனலாம்.
எதிர்காலத்திலும் கோவை அன்சார் அவர்கள் தொடர்ந்தும் எல்லா இலக்கியக் கூட்டங்களில் பங்கு பெற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.
இலக்கியக் கூட்டங்கள் நடத்துபவர் களின் சார்பாகவும், பல இலக்கியக் கூட்டங்களில் கோவை அன்சார் அவர்களை கண்டவர்களின் சார்பாகவும்,
- மேமன்கவி
|sာ 6696)
 

கணவன் ஒரு கயவன்
ஏ. எண். எஸ். நியாணம்
சவுதியில் உள்ள அந்த பெரிய வீட்டிற்கு பானுவும் காமிலும் அன்றுதான் வந்து சேர்ந்தார்கள். மெடமும் பொஸ்ஸ"ம் அந்த அறையில் அவர்களை இருக்க வைத்துவிட்டுப் போனவர்கள்தான் - ஒரு மணி நேரமாகியும் காணோம்.
பானுவிற்கு வீட்டு நினைவு இன்னும் போனபாடில்லை. கடந்த கால சம்பவங்கள் அவள் உள்ளத்தை அரித்து ரணமாக்கி விட்டிருந்தன. அவளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு அவளுடைய கணவன் பாட்சா செய்த உத்திகள் எவ்வளவு. எத்தனை அடி. எத்தனை உதை.
ஒருநாள் மாலை. குடிபோதையில் வந்த பாட்சாவின் கண்கள் கோவைப் பழங்களாக சிவந்திருந்தன. உள்ளே நுழைந்தவன் பானுவின் கழுத்தைத் தன் முரட்டுக் கரங்களால் நெரித்தான். அதே வேகத்தில் தள்ளி விட்டதில் சுவரில் தலை மோதி விழுந்தாள். 'சீ! நாயே! என் பேச்சையா தட்டுகிறாய்?’ என்று காலால் எட்டி உதைத்தான்.
“வாப்பா! உம்மாவை அடிக்காதீங்க” என்று ஆறு வயது ரஜினா கால்களை வந்து கட்டிக் கொண்டாள். நாலு வயது ரோஷன் தாயின் மடியில் வந்து அமர்ந்து கொண்டான்.
துயர் தாங்காமல் இப்போது இங்கே வந்து சேர்ந்துவிட்டாள். குழந்தைகள் நினைவு மேலிட்டது. ‘என் அன்புச் செல்வங்களே! உங்களுக்காகத்தான் இத்தனை நாள் பொறுத்தேன். உங்களை விட்டு எப்படி என்னால் வரமுடிந்தது. நான் பாவி’ என்று தன் தலையில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டாள். அவள் விழிகளில் நிரம்பிய நீர் கன்னங்களில் மோதிச் சொரிந்தது.

Page 28
இதைப் பார்த்துக் கொண்டிருந்த காமிலுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. தேற்ற ஆரம்பித்தான்.
“இதோ பார் பானு நாம வந் திட்டோம். எப்படியோ இருந்து உழைச் சிக்கிட்டுப் போவோம்!”
மெடம் முதல் முறையாக வந்து அழைத்தாள். பானு கண்ணிரைத் துடைத்து விட்டு எழுந்தாள்.
வீட்டைச் சுற்றிக் காட்டி அவள் செய்ய வேண்டிய வேலைகளை யெல்லாம் பட்டியலிட்டாள். இறுதியாக சமையலறைக்குக் கூட்டிச் சென்றாள். உள்ளே நுழைந்த பானுவின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. சலவைக்கல் பதிக்கப்பட்டு 'பளபள’ வென்றிருந்தது. அவள் வாழ்நாளிலேயே கண்டிராத எத்தனையோ வகையான மின்சார உபகரணங்கள், மின்னல் போல் பளிச்சிட்டபடி சுவரில் பல வகைக் கத்திகள், தொங்கிக் கொண்டி ருந்தவைகளை ஆச்சரியத் தோடு நோக்கினாள் சுண்டு விரல் தொடக்கம் ஒன்றரை முழம்வரை அளவில் பத்து ஜெர்மன் கத்திகள். மெடம் அதில் ஒன்றை சடக்கெனப் பிடுங்கி பானுவின் கையில் கொடுத்தாள். ஒரு வெங் காயத்தையும் போர்டையும் கொடுத்து நறுக்கும்படி சைகை செய்தாள். பானு போர்ட்டில் வெங்காயத்தை நிறுத்தி கத்தியை வைத்ததுதான் தாமதம்; சடாரென வெங்காயம் இரண்டாகப் பிளந்தது, அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. மீண்டும் கத்தியை சுவரை நோக்கி நீட்ட அது திடீரென கவ்விக்
கொண்டது. அப்போதுதான் அங்கே காந்தம் இருப்பது புரிந்தது.
அவள் சிறுமியாக இருக்கும் போது ஒரு பெரியவர் சைக்கிள் நிறைய பால்வடி, கத்தி, கரண்டி போன்றவை களை நிரப்பிக் கொண்டு, “ஜர்மன். ஜர்மன்.” என்று கூவிக் கொண்டு போவார். அவையெல்லாம் ஜெர்மனி யின் உற்பத்திப் பொருட்கள். விலை யுயர்ந்தவை. அவைகளுக்காக அவள் எத்தனையோ நாட்கள் ஏங்கி இருக் கிறாள். இப்போது ஒன்றுக்குப் பத்து, கண் முன்னே அவைகளை வைத்து தினம் தினம் வேலை செயப்யப் போகிறாள். அவளுக்குப் புளகாங் கிதமாக இருந்தது.
மீண்டும் அவள் அறைக் குத் திரும்பிய போது காமில் குளித்து விட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அறையெங்கும் சென்ட் வாசம் . அவளுக்கு என்ன செய்வது, எங்கே உட்காருவது என்று புரியவில்லை. ஒரு அந்நியன் இருக்கும் அறையில் ஒரு பெண் எவ்விதம் சாவகாசமாக சாய்ந்து கொள்வது?
“காமில் நானா! பொஸ் உங்க ளிட்ட என்னமாவது சொன்னாரா? உங்க அறை எது? என் அறை எது?”
காமில் இலேசாகப் புன்னகைத் தான்.
‘‘நாம இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சப்போ, ஒரு காகிதத்தை கையில் வச்சுக்கிட்டு நம்மைப் பார்த்து எத்தனை புள்ளைங்கன்னு கேட்டாங்

களே, ஒனக்கு வெளங்கல்லியா? நீ அந்தக் காகிதத்தை என்னான்னு நெனைக் கிறே?’ என்று காமில் கூறிவிட்டு சற்று நிறுத்தினான்.
பானு பதிலேதும் பேசவில்லை.
‘அந்தக் காகிதம் வேறு எதுவு மில்லை. திருமண அத்தாட்சிப் பத்திரம். அவங்க பார்வையில நாம ரெண்டு பேரும் புருஷன், பொஞ்சாதி. நம்ம இரண்டு பேருக்கும் இந்த ஒரே ரூம்தான்’
அவன் பேச்சைக் கேட்ட பானு வுக்கு அணைத்து லோகமும் ஒட்டு மொத்தமாக சுழன்றது. கொஞ்ச நஞ்சம் இருந்த மகிழ்ச்சியும் கீழே விழுந்த பளிங்குப் பாத்திரம் போல் உடைந்து சுக்கு நூறாகியது.
அவள் மெலிந்த குரலில், “ஏன் எங்கிட்ட முன்னமே சொல்லலே’ என்றாள்.
* உன் புருஷன்தான் வாயைத் திறந்திடாதே என்று என்கிட்ட சத்தியம் வாங்கிட்டான். அந்த ஏஜன்ட்காரனும் உன் புருஷனும் சேர்ந்து இப்படி ஒண்ண செஞ்சு போட்டாங்க. அவன், பாட்சாவுக்கு ஒரு சாராய போத்தலும் கொஞ்ச பணமும் கொடுத்து சரிகட்டிப் Gun LLIT6t.'
ஒரு சொற்ப லாபத்துக்காகவும் மது போத்தலுக்காகவும் மனைவியை விற்றவனை கணவன் என்பதா? கயவன் என்பதா. ‘பாவி ஒரு வேற்று மனித னோடு என்னை ஒரே அறையில் வாழ
வைத்து விட்டாயே, நீயும் ஒரு மனிதனா? என்று அவள் உள்ளம் புலம்பியது. ஒரு அந்நியனை தன் கணவன் என்று கூறி, காலமெல்லாம் நடிக்கப் போகிறோமே என அவள்
மனம் துன்பத்தில் ஆழ்ந்தது.
‘பானு! நீ என்னை நம்பு. நா ஒன்ன தொடமாட்டேன். சீ ஒரு பக்கம், நா ஒரு பக்கம் இருந்துக்குவம்” என்று காமில ஆறுதல் வார்த்தைகள் கூறினான்.
‘நா மெடத்திட்ட சொல்லி வேற ரூம் எடுக்கப் போறேன்’ என்று சொல்லியபடி எழுந்தாள்.
‘'வேண்டாம் பானு வேண்டாம். நாம புருஷன் பொஞ்சாதி இல்லைன்னு தெரிஞ் சா அடுத்த நிமிஷ மே பொலிஸில அடைச் சிடுவாங் க. அப்புறம் வருஷக் கணக்கில் அங்கேயே கெடக்கணும்” என்று எதை எதையோ சொல்லி அவளை ஒருவழிக்குக் கொண்டு வந்தான்.
ஒரு மாதம் கழிந்தது. முதல் சம்பளம் ஊர் போய்ச் சேர்ந்தது. பிள்ளைகளின் பசிக் கொடுமை தீரும், வீட்டின் தரம் உயரும் என்று அவள் எண்ணியதெல்லாம் வெறும் கனவுதான் எண் பதை அவளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. பணத்தை மொத்தமாகக் கண்ட பாட்சா சோம் பேறியாகித் தொழிலைக் கை விட்டான். மது போதைக்கு மேலும் மேலும் அடிமையானான். காமிலின் மனைவி
பேகத்துக்குப் பணிவிடை செய்வதி

Page 29
லேயே நாளும் பொழுதும் கழிந்தது. அந்த வீடே கதி என்று கிடந்ததால் குழந்தைகள் பாடு. பாவம் . . . கவனிப்பாரற்றுப் பசியால் அங்கும் இங்கும் அலைந்தனர். அயல் வீடு களில் எத்தனை நாட்களுக்குத்தான் கவனிப்பார்கள். இரண்டு, மூன்று என்று அப்படியே நாலு மாதங்கள் கழிந்து விட்டன.
ரோஷன் பசியால் துடித்தான். * வாப் பா. வாப் பா.’’ என்று கதறினான். ரஜினா தந்தையைத் தேடிக் கொண்டு பேகம் வீட்டுக்கு ஓடினாள். ** போ. போ. வாப்பா இங்கே இல்லை’ பேகம் விரட்டி விட்டாள். ரஜினா கைகள் இரண்டையும் உதறிக் கொணர் டு திரும்ப ஓடிவந்தாள். தம்பியைத் தேற்ற வழிதெரியாமல் தவித்தாள். இருவரும் பசியால் துடித்தார்கள். விரக்தியின் விளிம்புக்கே வந்து விட்டார்கள். குழந்தைகள் “உம்மா. உம்மா. நீங்க எங்க போனிங்க..” என்று கதறின. உருண்டு புரண்டு துடித்தனர்.
இருட்டில் கிடந்து குழந்தைகளைப் பார்க்க சகிக்காமல் ஒரு கிழவி சிறிது உணவு கொடுத்துவிட்டு, குப்பி விளக்கையும் ஏற்றிவிட்டுப் போனாள்.
அன்று இரவு, மெடம் குடும்பத் துடன் ஒரு வைபவத்துக்காக வெளியே
செல்வதாகக் கூறி, பானுவை சீக்கிர
மாக வேலையை முடிக்கச் செய்தாள். மாலை ஆறுமணிக்கெல்லாம் அவர்கள் புறப்படத் தயாரானார்கள். நடு இரவு கழிந்தே தாங்கள் திரும்பி வருவதாக
கூறி எல்லோரும் கிளம்பிப் போய்
விட்டார்கள்.
குளித்து விட்டுத் திரும்பிய பானு, அறை இருண்டு கிடந்ததால் சுவிட்சைப் போட்டாள். காமில் கட்டிலில் அமர்ந்
திருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள்.
சட் டெனர் று தனது அரைகுறை ஆடையைச் சரிசெய்து கொண்டாள்.
** நீங்க அவங்களோட போகல் லியா?’ அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“பொஸ் தானே காரைக் கொண்டு போறதா சொல்லி என்ன இங்க நிக்கச் GgFr6ö65ILLTs'
ஒருகணம், ஒரே கணம் காமிலின் கண்கள் பானுவின் பொன் போன்ற வெற்றுடலைப் பார்த்து விட்டன. அதைப் போர்த்தியிருந்த நீர்த் துளிகள் முத்துக் களாய் ஒளிர்ந்தன. இத்தனை நாள் இந்த அழகு எங்கே ஒளிந்திருந்தது? நான்கு மாதங்களாக அவனுள் கனன்று கொண்டிருந்த செந்தணல் தகதகவென கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதற்குள் தனிமை' என்ற அரக்கன் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி மேலும் வளர்த்து விட்டிருந்தான். எதற்கும் அடங்காத முரட்டுக் குதிரை முனி னங் கால களைத் துT க்கிப் பாய்வதைப் போன்று உணர்ச்சி வெள்ளம் மடை திறந்து பாய்ந்தது.
காமிலின் குரல் கேட்டுத் திரும்பிப்
பார்த்தாள்.
yg;656) STZ

ஆ. என்ன இது. காமில் எழுந்து நின்று கொண்டிருந்தான். இதுவரை காணாத தோற்றம். ஆதிவாசியை நினைவூட்டியது. உன்மத்தம் பிடித்த விலங்கு ஒன்று அவளை நோக்கிக் காலெடுத்து வைத்தது.
“காமில் நானா! வேணாம் விட்டு டுங்க” அந்தப் பிரதேசமே அதிரும்படிக் கத்தினாலும், அவளைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். செவிடன் காதில் ஊதிய சங்கு என்று சொல் வார்களே, அது இதுதானோ?
பானுவின் குரலுக்கு எந்த மதிப்பும் கிடைக்கவில்லை. அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் பதிலாக அவள் இரண்டு கைகளையும் பிரித்த படியே பின்நோக்கி அடி வைத்தாள். அவனுக்கும் அவளுக்குமிடையில் இன்னும் ஆறு அடித் தூரமே இருந்தது.
ரோஷனுக்கும் குப்பி விளக்குக் குமிடையில் இன்னும் ஆறடித் தூரமே இருந்தது. கிழவி கொடுத்த சிறிதள வான உணவை உணர் ட இரு குழந்தைகளும் 10 மணிக்கு அப்படியே கண்ணயர்ந்தன. தாயின் பிரிவைத் தாங்க முடியாத சிறுவன், 'உம்மா. உம்மா..” என்று தூக்கத்தில் அரற்றிக் கொண்டிருந்தான். அவன் உருண்டு உருண்டு கிடந்த போது, அவனுக்கும் விளக்குக்கும் இடையில் ஒரு ஆட்டுக் குட்டி போகக் கூடிய இடம் தான் இருந்தது.
காமில் பானுவை நோக்கி நகர,
É3 (Dascsaba:
சிட்டது.
அவள் முதுகுப் புறமாக நகர்ந்து செல்ல, சமையல் அறைக் குளிர் நுழைந்து விட்டதை அப்போதுதான்
உணர்ந்து கொண்டாள். அதைத் தாண்டி மேலும் போக முடியாது என்பதை உணர்ந்து பல விதமாகக் கெஞ்சினாள். ஆனால், வேட்கை
கொண்டவனின் காதுகள் செவிடாகி இருந்தன. கண்களில் குரூரம் பளிச் சுவர் அவளைத் தடுத்து நிறுத்தியபோது அவளுக்கும் அவனுக் கும் இடையில் ஒரு ஆட்டுக் குட்டி நுழையக் கூடிய இடமே எஞ்சி யிருந்தது. சில விநாடிகளில். பெருங் கடலின் பேரலைகள் கரையைத் தழுவு வதுபோல். அது நடந்து விடும். சரணா கதி அடைந்தவளைப் போல் சுவரோடு சாய் நீ த படி மேலே கையைத் தூக்கினாள்.
தன் மனைவியும் குழந்தைகளும் அனுபவிக்கும் அவலங்களை அறவே அறிந்திராத, ஏன்? அறியக் கூடிய சக்தி அற்ற பாட்சா எதை எதையோ உளறிக் கொண்டு ஆடி ஆடி வந்து கொண்டி ருந்தான். பாதை இருளடைந்திருந்தது. பாதை நடுவில் நட்டிருந்த சில கம்புகள் அவனை வழி மறித்தன. "யார்டா அது?” கோபாவேசத்துடன் காலால் கம்புகளை உதைத்து விட்டு இரண்டடி முன்னே வைத்தான். அவ்வளவுதான். தோண்டப்பட்டிருந்த ஆழமான குழிக் குள் தலைகுப்புற கவிழ்ந்து வீழ்ந்தான். செம்மணலும் நீரும் சேர்ந்து கூழ்போல் ஆன சகதிக்குள் நச். தலைபோய்ச் சொருகிக் கொண்டது. ஆகாயத்தை நோக்கிக் கொண்டிருந்த அவனது கால் களின் அசைவுகள் சிறிது நேரத்தில்

Page 30
அடங்கி விட்டன.
ரோஷன் மேலும் புரண்டு உருண்ட போது அவன் கால்கள் விளக்கைத் தட்டி விட்டன. குபீர். எண்ணெய் கவிழ்ந்து எங்கும் தீப்பிடித்துக் கொண்டது. தீயின் செந்நாக்குகள் குடிசையை முழுதாகப் பதம் பார்க்கத் தொடங்கிய போதுதான் கண் விழித்த அந்தப் பிஞ்சுகள் வெளியேறத் துடித்தன. அந்தோ. பரிதாபம். ஊரார் வந்து தீயை அணைத்து வெளியே எடுப் பதற்குள் அந்த மலர்கள் இரண்டும் கருகி சாம்பலாகி விட்டன.
பானு கைகளை மேலே தூக்கிய போது வலது கையில் ஏதோ சிக்கியது. கையோடு வந்தது ஒன்றரை முழ ஜர்மன் கத்தி. விசுக். ஒரே வீச்சில் காமிலின் தலை தொங்கியது.
சிர்ர்ர்ர். குழாயில் தண்ணிர் வீறிட்டு எழுந்து வருவதைப் பார்த்திருக்கிறாள். இப்போது. ஒரு மனித உடலிலிருந்து இரத்தம் சீறிப்
ඝණ්ඨි ፳::8wj
arianao i 2751 =
பாய்ந்து, தனி
உடலையும் நனைப்பதைக் காண்கிறாள்.
சுவரில் சாய்ந்தபடியே, கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள். சுயநினைவு வந்து கண் விழித்துப்
பார்த்த போது, மெடமும் பொஸ்ஸ"ம்
அவளை உற்றுப் பார்த்துக் கொண்டி ருந்தார்கள்.
“எனக்கு மரண தண்டனையே தந்து விடுங்கள்” அவள் வாய் லேசாக உசும்பியது.
o O o O es o சந்தா செலுத்தி
. விட்மர்களா ? o
தயவுசெய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள். O அசட்டை செய்வோருக்கு
o முன்னறிவிப்பின்றி O
• நிறுத்தப்படும். O O
'O o
ဦးဦးအနှီး
250
oeð sleða sérfufis s விழா ஞாபகா Gausthacht:6 வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி
:30 எழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள்:அடங்கிய தொகுப்பு. 豎。皺 リエリエ
41 ás sages eos 26Í GATLŠafu இரண்டாம் பாகம் விற்பனையாகின்றது. - ! ",’ ' ।
நூலகங்களில் இருக்க வேண்டியத் தொகுப்புகள்
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளுங்கள்
S. passe) 35
 
 

பாம்பு திண்டி0
U) 060D))
- தமிழோவியன்
முழங்காலுக்கு மேல் வளர்ந்துவிட்ட முட்செடியை. புல்லுகளை w பலங்கொண்ட மட்டும் பாதணியால் நெரித்தபடி, நிரையில் இறங்கிய பஞ்சவர்ணம் கொழுந்து கிள்ள, வரிசையாய் நின்ற மாதர் “பொலியோ! பொலி” என்றார்.
அரும்பொதுக்கி முத்திலையின்றி பார்ப்பதற்கு அழகாக, சுருக்கமாய் மலை முடிச்சு “சுறுசுறுப்பாய் கை போடுங்கள். பேருக்கு இருபந்தைந்து கிலோ பறிக்காவிடில் பேரில்லை! யாரும் தலைவர்மாரை கூட்டிவர வேண்டா’மென
மேற்பார்வையாளர் மிகக் கடுமையாக எச்சரித்தார். நாற்புறமும் தங்களுக்குள் நாசுக்காய் குசுகுசுத்தார்.
எ ye;656) is
காலெங்கும் கடித்த அட்டைகளை கையாலே பறித்தெறிந்தார். “காலத்தின் கோலமிதோ? கடவுளே!” என்றார்.
கணிடபடி புற்கள் காடாக வளர்ந்திருக்கு என்றபடி பஞ்சவர்ணம் இறங்கினாள் நிரையினிலே. விரியன் பாம்பின் பற்கள் பதிந்த இடம் தெரியும்படி காலைக்காட்டி, சத்தமும் போட்டாள்.
தேம்பி யழுதவளாய் திடீரென மயக்கமுற்றாள்.
லொறியில் தூக்கிப் போட்டபடி
ஆசுபத்திரிக்கு ஓடினார்கள்.
குறிவைத்து விரியன் பாம்பை கூடியே தேடினார்கள். நஞ்சு உடல் முழுதும் நன்றாகப் பரவியதால் பஞ்சவர்ணம் சாய்ந்தாள். பரிதாபமாய் உயிர் விட்டாள்.
கரணர்டி பாவிக்காமல்
கணிடபடி பாம்பினமும் திரணர்டு கடிப்பதனால் தினமும் மாதர் மடிகின்றாரே! இன்றும் பல சோதனைக்கு இலக்கான தாய்மார்கள் என்றும் கவலையின்றி எப்போது வாழ்வாரோ?

Page 31
வீதேச விசித்திரம்
- சி. சுதந்திரராஜா
திறந்தேயிருந்த யன்னல். வெளிப் படலையடியால் உள்ளே நுழைந்து வந்த நடுத்தர வயசுக்காரி நூதன மிருகமொன்றைப் பார்க்கிற பிஞ்சுக் குழந்தை போல மிருகக் காட்சி யன்னல் மாதிரி அந்த யன்னலைப் பார்த்தாள் சருகாயிருந்த மண்ணிற வொயில் சேலையும் நிறம் மங்கிய பச்சை மேற்சட்டையுமே போட்டிருந்தாள். விய்ப்பு மீறலினால் நாடியில் வலதுகை பொருந்திப் போனது. அவள் வேறு யாருமேயல்ல. அதே வீட்டில் எலும்புந் தோலுமாக ஒட்டிய கன்னத்தோடு உலவுகின்றவளின் சிநேகிதிதான். இருவருக்கும் உருவ ஒற்றுமை நிறைய உண்டு. சிநேகிதத்திலும் இறுக்கம் உண்டு.
சின்ன வெங்கயம் கடன் கேட்டு வாங்கிக் கறி சமைக்கிறவள். பால் பிழிந்திடப் போதாதென்று கண்டவுடன் பாதித் தேங்காய்ச் சிரட்டையை வைத்துவிட்டு மீதிப் பாதியைக் கடன் வாங்கக் கூடக் கூசாமல் வருகின்றவள் இன்று அதிசய பூமியில் கால் வைக்கிறவள் மாதிரிக் கால் வைக்கிறாள். சீனிச்சரையும் மிளகாய்த் தூளும் பக்குவமாய் இரவல் வாங்கினாலும் தப்பாமல் திருப்பித் தருபவள். அப்படியானவள் இப்போது வான்வெளியிலிருந்து ஒரு வால் நட்சத்திரம் வந்து வீழ்ந்து கொண்ட பேரதிசய அதிர்ச்சி மிரள மிரள மிரண்டு பதுமையாகிப் பார்க்கிறாள்.
ஏனாகில் வாசல் பள்ளத்தில் வெள்ளை வெளேரென்ற பிரத்தியோக வாகனம் நிறுத்தமாயிருந்தது. எல்லாமே சொகுசான இருக்கைகள். பத்துப் பன்னிரண்டு பேர் வரையில் உள்ளுக்குள் புகுந்து மடித்து விட்டு இருந்திடப் பக்கவாட்டுச் செட்டைகளுமிருந்தன. பதின்மூன்றே நாள் விசாவில் பதினேழு வருசங்கள் கழித்து அவன் அங்கு தோன்றியிருக்கிறான். அந்தப் புதுமைதான் அவளையும் பிரமிப்புப் பிரமிட்டில் இட்டு வைத்திருக்கிறது. இன்னாரென்று அடையாளம் காணமுடியாத பேய் வளர்ச்சியில் அவன் உருமாறிப் போயிருந்தான் பதினேழு வருச காலம் பதினேழு ஆயிரங்கள் அடி உயரத்திற்கு வித்தியாசப்படவே வைத்தது. எட்ட முடியாத உயரம்.
ஒஸ்ரியாவில் பிறந்து உடற்கட்டுப் பேணப் போனவனைப் ஆதர்ஷப் புருஷனாக்கிய அமெரிக்கா வின் ஆர்ணல்ட் ஸ்வஸ்நேகர் மாதிரியே புஜங்கள்
is guese) STIM

அவனுக்குப் பலமாகியிருந்தது. அவளும் அதைப் பார்த்தே வியந்தாள். ஓயாமலே விஸ்கியும் அதற்கேற்ற மாமிசங்களும் விழுங்கி வளர்ந்த திமிரான திமிங்கிலமாக அவளுக்கு அவன் புரிபட்டான். அவன் உடுபுடவை களே அட்டகாசமாயிருந்தது. ஏழேழு வருச காலத்தின் பாவிப்புக்களை அவன் ஆறேழு நிமிஷங்களில் உடுத்து வீசுபவன் போல் தெரிந்தான். வீரதீரச் சாகசச் செயல்கள் செய்து திரும்பி வந்தவனாகவே அவளுக்கு அவன் காட்சியாகிக் கொண்டிருந்தான்.
இயந்திரத்தின் ஒருபகுதி இடுங் குண்டு சிதறி வீழ்ந்து விட்டது மாதிரி அவன் கிராமத்திற்கு வந்திருக்கிறான். நிறைய குவாட்ஸ் கடிகாரமெல்லாம் அன்பளிப்பாகப் பார்க்க வருகிறவர் களுக்குக் கொடுக்கிறான். கொடை யாளி வள்ளல் நாட்டிலிருந்து வந்தவ னாகவே நடித்தான். தனக்கேதான் உலகத்தின் ஐசுவரியம் எல்லாம் கொட் டப்பட்டது என்கிற திமிர்த் தலைக் கணமே அதில் தெரிந்தது.
எல்லாவற்றிலும் உச்சாணி யாகவே அது நடந்தது.
பேத்தி கோமா நிலையில் உழன்று கொண்டிருந்தாள். இவன் பதின்மூன்று நாள் போனதுமே வெளி நாடு திரும்பிச் சென்றிட முன்னால் ஒரு இழவு வீட்டைச் செய்திட எல்லோருமே பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டனர். அக்கறை கிழவி
யிலா இவனிலா என்கிற பேதம்
எவருக்குமே தெரியாமல் பராமரிப்பு
ബs?| ༼༧
பலமாகிப் போனது. தேடுவாரற்றுக் கிடந்தவளுக்கு இவன் வருகை அண்டசராசரத்தைக் கொண்டு வந்து கொட்டிக் கொடுத்து அவளை எளிதில் மீளாத் துயிலுக்கு இட்டுச் செல்ல முயற்சித்தது. படையெடுப்புச் சுற்றத் தார் தெரிந்தவர் அதிகமாகிற்று. மாத்திரைக் கட்டு வாங்கி வந்தெல்லாம் கடைசிப் பருக்குதலாகப் பருக்கிப் பார்த்தார்கள். அவளில் மாற்றமில்லை. கைகால்கள் அசைப்பின்றி விறைத்த படியேதானிருந்தன. அனைவரும் அவளை அடிக்கொரு தரம் பேர் சொல்லிக் கூப்பிட்டதுதான் கண்ட
மிச்சம்
கீரிமலைக்கு இவனோடு திவாகரன் போனான். இருவரும் வயது வித்தியாசம் இல்லாமல் பழகியவரா யிருந்தனர். ஐரோப்பிய வாசனை இருவரிலும் சுமாராக வீசியடித்தது. செல்லிட வீடியோ மூலம் தன் கை வண்ணத்திலான ஒரு கலியாணக் காட்சியை இவனுக்குத் தூக்கிப் பிடித்துக் காண்பித்தான். மணமகளிலி ருந்த ஆபரணங்கள் விளம்பரப் படமாக விரிந்தது. காதிலே சதுர வடிவில் தோடுகள் தெரிந்தன. புது மோஸ்தரில் நகை நாகரீகக் கண்டுபிடிப்பைப் பறை சாற்றி குவிமையப்பட்டது. ஒட்ட வெட்டிய மயிரில் சாம்பல் நிற சூற்றிங்ஸ"டன் தமிழ்மகன் என்கிற அடையாளமே இல்லாதவனாக மண மகன் புன்னகைகள் செய்து தள்ளிக் கொண்டிருந்தான்.
துர்க்கை அம்மன் கோவில கடந்ததும் வந்த சோதனைச் சாவடி

Page 32
யில் இவர்களது வெள்ளை வாகனம் நிறுத்தப்பட்டது.
மூலையில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் ஆளரவ - ஒசையால் பேச்சை நிறுத்தலானார்கள். அழகு ஒழுகும் வீராங்கனையின் முக வசீகரம் மற்றைய இருவரையும் மயங்கித் திளைத்து பேசிக் கொண்டிருக்க வைத்தது போலவே தெரிந்தது. வாளிப்பான உடலமைப்பு இராணுவச் சீருடையால் வீரர்கள் இருவரையும் மெய்மறந்து பேச வைத்தது அவளின் சிரிப்பினால் தெரிந்தது. முல்லையாகிய பற்கள் தான்.
அதற்கப்பால் காடு மண்டிக் குடி சனமே இல்லாத பிரதேசம். வீடு வளவுகள் தூர்ந்து காண்டை காட்டுச் செடிகள் நிரம்பிய சுற்றுச் சூழல்.
“டிவாகரன்’
திவாகரன் தன் பெயரை அப்படித்
தான் உச்சரித்தான். உச்சரிப்பில் ஐரோப்பிய வாடையும் வீசிற்று. இராணுவப் பதிவில் அவனி பெயரையும் சுத்தமாக எழுதி வைத்தனர்.
அவர்கள் சென்ற அதே வண்டி யில் இராணுவ வீரன் ஒருவனும் தொற்றிக் கொண்டு வந்தான். அவர்கள் அதே சாவடிச் சோதனை நிலையம் திரும்பும் வரை கூட இருப்பதுதான் அவனது பணி ஆயுதம் அவன் கையிலேயே இருந்தது.
சட்டியிலிருந்து நெருப்புக்குள் வீழ்ந்தது போல் புதர் மண்டிய
ஆளரவமற்ற இடத்துள் வாகனம்
விரைந்தது. அவர்களால் ஆடு மாடு களைக் கூடக் காண முடியவில்லை. கடல் வெளியோ வெப்பத்தையும் சூன்யத்தையும் ஒன்றாக்கி கலக்கிக் கொண்டிருந்தது. உல்லாசந் தேடிய இருவரையுமே திகில் ஆட் கொண்டது. வெறுமை வரவேற்றது.
- செலுத்திவிட வேண்டும்.
மாட்டாது.
39வது மல்லிகை சிறப்பு மலர்
இது சந்தாவுக்குள் உள்ளடக்கப் பட்ட மலரல்ல. எனவே மல்லிகைச் சுவைஞர்கள், அபிமானிகள் தனியாக ரூபா 125/
மலருக்குத் தனியாகப் பணம் செலுத்தாதவர்களுக்கு மலர் அனுப்பப்பட
பணத்தை காசோலையாகவும், காசுக்கட்டளையை - KOTAHENA என்ற P.O. மூலமாகவும் தெரிந்தவர்கள் நேரிலும் தரலாம்.
- ஆசிரியர் )
tips; GSG); ૦િ
 
 
 

لیہہ ہکا آئی لیٹ
- டொமினிக் ஜீவா
* தமிழ்ச் சிறு சஞ்சிகை உலகில் இங்கும் சரி, தமிழகத்திலும் சரி பிரபலமான எழுத்தாளர்களெல்லாம் சஞ்சிகை நடத்தி, மிகக் குறுகிய காலத்திலேயே மூடு விழாச் செய்யும் இந்தக் காலகட்டத்தில் எப்படி மல்லிகையைத் தொடர்ந்து நீண்ட காலமாக வெளியிட முடிகின்றது? அத்துடன் மல்லிகைப் பந்தல் என்ற பதிப்பகத்தினால் பல்வேறு நூல்களை எப்படி வெளிக்கொணர முடிகின்ற ரகசியம் என்ன?
கேகாலை, பா. ஜெயசீலன்
* பல சிறு சஞ்சிகையாளர் வெட்கப்பட்டு ஒதுக்கிய வேலையைச் செய்ய நான் துணிந்து புறப்பட்டேன். புத்தகப் பையுடன் தெருவில் இறங்கினேன்.
* வயது முதிர முதிர, நீங்கள் பலருடன் சமரசம் செய்ய நினைக்கிறீர்களா?
மானிப்பாயப், எம். சரவணன்
நான் ஒர் அரசியல் இடதுசாரி இயக்கத்தின் தொடர் அங்கத்தவன், கடந்த ஐம்பது ஆண்டுகளாக. எந்தக் கஷ்ட நெருக்கடிக் காலத்திலும் கூட, நான் அரசியல் தடம் புரண்டவனல்ல. எனக்கு ஒரு நோக்கமுண்டு. இலக்கியக் கொள்கையுமுன்டு. அதே சமயம் பரந்துபட்ட இலக்கியக் களத்தில் வலுவாகக் காலூன்றி நிற்பவன். ஒரு போராளி. எனது சகோதர எழுத்தாளன் கெளரவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நான் பெருமகிழ்ச்சி அடைவதுண்டு. அதன் அறிகுறியாகத்தான் மல்லிகையின் முகப்பு அட்டையில் இந்த நாட்டுக் கனதி மிக்க கலைஞர்களைப் பதித்து எதிர்காலச் சந்ததிக்கு ஆவணப்படுத்தி
S 66968

Page 33
வருகின்றேன். சகோதர எழுத்தாளர் ஒருவர் மீது பகைமை பாராட்டி அவதூறு பொழிந்து வந்தால் எதிர் கால வளரும் சமூகம் அவர்களை மன்னிக் காது. எனது முக்கிய நோக்கம் என்ன வென்றால் எந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் எங்கள் மண்ணின் கலைஞர்கள் எமது மக்களால் கனம் பண்ணப்பட வேண்டும். இது சமரசமல்ல. சந்தர்ப்ப வாதமுமல்ல. நீண்ட கால நோக்கு.
资 இலங்கைத் தினசரிப் பத்திரிகை
களில் நீங்கள் படித்துப் பெருமைப்
படும் செய்திகள் என்ன?
நெல்லியடி, சி.க.தவசீலன்
இந்த நாட்டுப் படைப்பாளிகளின் கருத்துக்களை, மேடைப் பேச்சுக் களை, அவர்கள் வெளியிடும் நூல்
களின் வெளியீட்டுச் செய்திகளைத்
தனி முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கின்றனவே இது மிக மிகப் பாராட்டப் படத்தக்க சம்பவமாகும். தமிழ் நாட்டுச் செய்திப் பத்திரிகை களில் எழுத் தாளர்களுக்கு இத்தகைய முக்கியத்துவம் தரத் தயங்குவார்கள். அதற்கு ஒரு காரணமும் உண்டு. இந்த நாட்டுத் தினசரிப் பேப்பர்களில் கடமை புரிபவர்கள் பலர் பத்திரிகையாளர் மாத்திரமல்ல, இவர்களில் பலர் படைப்பாளிகளுமாகும். இதுவொரு பெருமை நமக்கு.
* நீங்கள் இத்தனை ஆண்டுக்
காலமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறீர்களே, நீங்கள் இதுவரை சாதித்ததுதான் என்ன?
நெல்லியடி ம. இராஜகோபால
‘সুর இதை இன்று நானோ நீங்களே
கணிப்பிட்டு விட இயலாது. வருங் காலத் தலை முறைதான் இதற்கான தகுந்த விடையைச் சொல்லும். என்னைப் பொறுத்தவரை பொறுப் பாக இயங்கரி வருவதுதானர் என்னுடைய வேலை.
* இன்றைய சினிமாப் பார்ப்ப
துண்டா, நீங்கள்? அவை பற்றிய
உங்களது கணிப்பீடு என்ன?
கிளிநொச்சி, ம.தணிகாசலம்
. உத்திகளும் கமரா நுட்பப் படப் பிடிப்புகளும் வளர்ந்திருக்கும்
அளவிற்குக் கதையில் யாருமே கவனத்தைச் செலுத்தியதாகத்
தெரியவில்லை. நீண்ட நாட்களுக்கு
இந்த நிலை தொடரப் போவதில்லை. சினிமாத் தயாரிப்பாளர் மக்களின் உணர்வுகளையும் அபிலாஷை
களையும் புரிந்து கொண்டு செய லாற்றாது போனால், அந்த உலகில் இருந்தே காணாமல் போயப்
விடுவார்கள். இப்படிப் பலர் தலை மறைவாகிப் போயுள்ளது எதார்த்த
உண்மையாகும்.

* திரு எம்.சி சுப்பிரமணியத்தோடு காரில் வைத்துக் குண்டெறிந்து உங்களையும் படுகொலை செய்யச் சில சாதிவெறியர்கள் முன்னர் ஒருதடவை முனைந்தார்கள் என்ற செய்தியைத் தூண்டில் பகுதியில் படித்துவிட்டுப் பதறிப் போய் விட்டேன். அக்காரில் நீங்களும் பிரயாணப்பட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் தெரிந்திருந்தார்களா? அல்லது எம்.சி அவர்களைக் கொல்லும் நோக்கில் குண்டெறிந்
தார்களா? கொழும்பு5, எஸ்.ஆர்.பாலச்சந்திரன்
* வல்லைவெளியில் நட்ட நடுச் சாமத்தில் தோழர் எம்.சி. உட்பட நாங்கள் நால்வர் பருத்தித் துறையில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் எங்களது வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்தவர்கள்தான் எமது காரின் மீது கைக்குண்டு எறிந்தார்கள்.
வெறிப்பிடித்த கும்பலுக்குச் செக்கென்ன - சிவலிங்கமென்ன? புனித இலக்கியம் பேசும் புண்ணிய வான்களுக்கு நாம் கொடுத்த இந்த விலைகள் புரியப் போவதில்லை.
* மல்லிகை ஆரம்பித்த கால கட்டத்தில் நீங்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருப்பீர்களே? உண்மை
ബ8
நிலை என்ன?
பசறை, எஸ்.சந்திரன் * சிரமத்தைவிட அவதூறுகளைச் சுமந்து சுமந்துதான் செயல்பட வேண்டிய நிலை அன்று நிலவியது. அதைவிடச் சாதி வெறியர்களின் வக்கனைப் புலம்பல்களைக் கேட்டுச் சகித்துக் கொண்டே செயலாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நான் அன்று இருந்தேன். மல்லிகைக் குப் பின்புலமாக நல்ல நண்பர்கள் இருந்தார்கள். மல்லிகையில் இப்
பொழுது தொடர்ந்து வெளிவந்து
கொண்டிருக்கும் எனது கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து படித்து வாருங்கள். அதில் பல தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கக் கூடும்.
资 நல்ல நண்பர்களை வாழ்க்கை யில் பெற்றுக் கொள்ள நானென்ன செய்ய வேண்டும்?
சுன்னாகம், ம.த. அருள் நேசன்
☆ ஒன்றும் சிரமப்பட வேண்டாம்.
நீங்கள் ஒரு நல்ல நண்பனாக
நண்பர்களுக்கு நடந்து காட்டுங்கள்.
食 நீங்கள் போய் வந்த ஐரோப்பிய பயணத்தால் விளைந்த பெறுபேறுகள்
என்னென்ன?
சாவகச்சேரி, ச. குமாரசாமி
* ஒவ்வொரு ஐரோப்பிய நாடு

Page 34
களிலும் வதியும் நமது இலக்கியச் சுவைஞர்கள் அடிக்கடி தொலை பேசியில் தொடர்பு கொண்டு கதைக் கின்றனர். வேறு சிலரோ இங்கு வந்து போகும் தமது உறவினர், நண்பர்கள் மூலம் மல்லிகைப் பந்தல் வெளியீடு களை வாங்கிக் கொள்ளுகின்றனர். அங்கு வெளிவரும் பேப்பர்களில் என்னைப் பற்றியும் மல்லிகை பற்றியும் அடிக்கடி தகவல்கள் இடம் பெறுகின்றன. வானொலியும் என் சம்பந்தமாகத் தகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் கேள்வி.
எனது ஐரோப்பியப் பயண ஞாபகமாக நான் எழுதி வெளியிட் டுள்ள 'முப்பெரும் தலைநகரங்களில் முப்பது நாட்கள் நூல் தகவல்களைச் சுமந்து கொண்டு சென்று அங் கெல்லாம் பேசப்பட்டு வருகிறது. எழுத்தாளன் என்கின்ற முறையிலும் சஞ்சிகை ஆசிரியர் என்ற ஹோதா விலும் நான் அங்கு நேசிக்கப்படும் ஒரு ஆளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளேன். இது பெரிய பதவி
* இளைஞர்களுக்கு ஏதாவது சொல்லுங்களேன்!
af6uomo Lu Lô , ஆர். கேசவன்
கனவு காணுங்கள் அக்கனவு கள் ஆக்கபூர்வமாக இருக்கட்டும். உங்களது வாழ்க்கையே மாறிப்
* வரப்போகும் 39வது மலருக்கு அடுத்த ஆண்டு மலர் 40-வது ஆண்டு மலர். சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் தொடர்ந்து இடைவிடாது வெளிவரும் மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் பற்றி என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
யாழ்ப்பாணம், எம்.எஸ்.ரகுநாதன்
இன்னமும் ஒராண்டு காலம் இருக்கிறது, இந்தக் காலகட்ட மலர் மலர்வதற்கு. எனவே பொறுமையாக இருந்து திட்டங்களைப் போட்டு வருகின்றேன். 40வது ஆண்டு மலருக்கு ஆக்கபூர்வமான யோசனை களைச் சொல்பவர்களின் ஆலோ சனையை இன்றிலிருந்தே எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
* இளம் வயதில் யாருக்காவது
காதல் கடிதம் எழுதிய அநுபவம் உண்டா?
மல்லாகம், ச. ஜெயந்தி * கடிதம் எழுதுவது ஒர் ஆரம்பக் கட்டம் தான். அதையும் மீறிய அநுபவம் உண்டு. எனது சுயசரிதை யான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரங்கள்' நூலைப் படித்துப் பார்த்தால் உங்களது கேள்விக்கு மேலாலும் விடைகள்
போயுள்ளதைக் காலக்கிரமத்தில் கிடைக்கலாம். கண்டு கொள்வீர்கள்!
201 - 1/1, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியிட்டாளருமான
டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98யஇ இலக்கத்திலுள்ள U.K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
6696):

'%e dz, ഗ്ഗർ വേ Ολαβε α ബ്രർ  ീle ); /0 ഠർദ്ധി' . '
THE 1)||0||||Др. SERUICES (UE PR001)E Digita Pitit 2"X8” laxinuut size i 0 i. Aaisitatic dust aid scualck covlectis.
Pitt Pitseuice. Cetact Cauds ad liudex þits. Greeting Cands/Funte Pitts/Calendet Picts/Albulat Pitts. Corpatille liput 8 0uiput ledia
Floppy Disk, CD-Rom, CD-R,/RW, M0, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, Compact Flash, Smart Media) Digital Capua Catud Pitig. Colozvit Megatiue, Positive, B/U apud Sepia Megative Puiutiug.
OTERSERUCES Developing & Pitting ost hits i 20 Migt Pitig e Euaugeteguts (5”?X7” te 2”X8”) Passpott / Uisa pletes / B/Upkatos is 0 (i. Filt Robes / Cauetas / Batteries / CD / Feppy / Aebut Sales. Faiting of Pictutes (lipoltted) Latitutig Seuipg8. 3&
Ueddiyag A2buai 1Biyudiyug.
FOR ACC YOUR REQUIREKRETS Out Dog Potograpkg & Uideagtaply
Ueddings. Bitlikday Paties / Puhetty Celeteties Semiuປu / Aug 0ket Special Fudiu8 & 0cu8u8.