கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.04

Page 1


Page 2
'%രe عZ ഴ്ചല്ലയ ഠർ 9لأtaل ീർe ? 10 ദർl/
THE DIGITAL SERVICES WE PROVII) Digital Print 12"X18" Maximum size in 10 Min. Automatic dust and scratch correction.
Print to Print services.
Contact Cards and Index prints. Greeting Cards/Frame Prints/Calender Prints/Album Prints. Compatible Input & Output Media
(Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia) Digital Camera Card Printing.
Colour Negative, Positive, B/W and Sepia Negative Printing
OTHER SERVICES
Developing & Printing of films in 20 Min Printing of Enlargements (5"2X7" to I2"XI8") Passport / Visa photos / B/W photos in IO Min. Film Rolls / Cameras / Batteries / CD/ Flopру / Album Sales. Framing of Pictures (Imported)
Laminating Services.
Wedding Album Binding.
FOR ALL YOUR REQUIREMENTS IN Out Door Photography & Videography
Weddings.
Birthday Parties / Puberty Ceremonies
Seminars/ Any Other Special Functions & Occasions.
 
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்'
طی) نه را بaل-59
ഗൂർ 2004
Mallikai λοτοσταβαίνο Monthly Mayagine
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை 添 எதிர்பார்க்கின்றது.
2oI-II/II, Sri Kathiresan Street, Colombo - 13. Tes: 232O72I
IDGOTIálapb6IITES இருக்கிறது.
நாற்பதாவது ஆண்டு மல்லிகைச் சிறப்பு மலர் அடுத்த 2005ஆம் ஆண்டு ஜனவரியில் மலரும் என்ற தகவலைப் படித்த பலர் தமது மகிழ்ச்சியையும் நல் லெண்ணத்தையும் எமக்குத் தகவலாகத் தெரிவிப்பதில் குதூகலமடைந்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள நீண்ட நாளைய மல்லிகை அபிமானிகள் தங்களது ஆர் வத்தையும் அக்கறையையும் பாராட்டுக் கடிதங்கள்மூலம் தெரிவித்துமகிழ்ந்தனர்.
ஒரு சிற்றேடு - அது தமிழகத்தி லிருந்து வெளிவந்ததாக அல்லது ஈழத்தி லிருந்து வெளியிடப்பட்டதாக இருந் தாலும் - நாற்பது ஆண்டுகளைத் தாக்குப் பிடித்து, அதுவும் இலங்கையில் நிலவிய இருபதாண்டுக்கால உள்நாட்டுப் போர்ச் சூழலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டி ருக்கிறது என்பதே ஒரு சரித்திரப் பதிவுச்
சம்பவமாகும்.
இந்த நாற்பதாண்டுகள் என்பது வருஷக் கணக்கில் அடங்கும் இலக்கியச் செய்தியல்ல. தினசரி அதன் வரவுக்காகத் தனிமனித உழைப்புப் பசளையிடப் பட்டது. வரலாற்றுப் பதிவுகளில் ஒன் றாகக் கணிக்கப்படும் ஒரு சம்பவமாகும்.
இத்தனை ஆண்டுகளாக இடை யிட்டு, இடைப்பட்டு வந்து தாக்கும் இடையூறுகளைத் தவிர்த்து முன் செல்வதே ஓர் அசுர சாதனையாகும்.
மல்லிகைக்கென ஒரு தத்துவ தரிசனப் பாதை ஒன்றுண்டு. அதன்

Page 3
ஆசிரியர் தமிழ் மண்ணின் முகிழ்ந் தெழும்பிய முற்போக்கு அரசியல்
இயக்கத்தின் முன்னணி உறுப்பினர். கடந்த அரைநூற்றாண்டுக் காலத்திற்கும் அதிக காலமாக அதன் தொடரறா அங் கத்தவன். சில பிரபல இலக்கிய விமரிசகர் களைப் போல, தண்ணிருக்குள் இறங்காம லேயே, மேலில் நீர் படாமலே நீச்சல் கற்பித்த நிபுணத்துவம் வாய்க்கப் பெற்ற வரல்ல.
தனது ஆத்ம அரசியல் நோக்கத்திற் காகத் தெருவில் இயங்கியவர். வீதியில் இலக்கியம் விற்றவர்.
அந்த அர்ப்பணிப்பு உழைப்பின்
உருவம்தான் மொத்த இந்த நாற்பது ஆண்டுக் காலம். ஆண்டு மலரின் வடிவம்.
பல்வேறு வகைப்பட்டவர்கள், மல்லிகையின் கருத்துகளுக்கு முரண் பட்டவர்கள் கூட, கடந்த காலத்தில் மல்லிகை இதழ்களிலும் மலர்களிலும் தமது எழுத்துக்களைப் பதிவு செய்துள் ளனர். எக்காரணங்களைக் கொண்டும் அவர்களது கருத்துக்களிலோ, எண்ணங் களிலோமல்லிகைதலையிட்டதுமில்லை, கத்தரிச்சு ஒட்டு வேலை செய்ததுமில்லை. மல்லிகையில் தமது பெயரைப் பதிவு செய்த ஒவ்வொருவரும் சுயமாகவே தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். மல்லிகைக்கான வெற்றிகளில் இதுவு மொன்று.
அந்த நல்லெண்ணம் மிக்க நண்பர் களை நன்றியுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துக் கொள்ளுகின்றோம்.
சிலர் வேண்டுமென்றே மேதைத் தனம் காட்டிய வண்ணம் கொடுப்புக் குள் சிரித்துக் கொண்டு "மல்லிகைக்கு
நானொண்டும் எழுதுவதில்லை. அதைப் படிப்பது கூட இல்லை!” எனச் சொல் வதைக் கேட்டு, நாம் ஒன்றுமே கருத்துச் சொல்வதுமில்லை.
வரலாறு அதற்கான பதிலை அவர் களுக்குச் சொல்லி வைக்கும் என்பது உறுதி எதிர்காலம் பதில் சொல்லும்.
நாற்பது ஆண்டுக்கால அநுபவம் எமக்குக் கற்றுத் தந்த இலக்கியப் பாடமிது.
மல்லிகை இதழ்களையும் அதனது ஆண்டு மலர்களையும் ஒழுங்காகப் பாது காத்து வைத்திருப்பவர்கள் கவனமாக அவற்றைச் சேமித்து வைத்திருங்கள்.
காரணம், இன்று கிழக்கு மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார், மலையகம், கொழும்பு போன்ற பிரதேசங்களில் உயர் கல்வி கற்கும் மாணவ - மாணவியர் எம்முடன் அடிக்கடி தொடர்பு கொள்ளு கின்றனர்.
தமது பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சைக்குமல்லிகை மலர்கள், இதழ்கள் அத்தியாவசியம் தேவைப்படுவதாக எமக்குச் செய்தி மூலம் தெரிவிக்கின்றனர்.
நாமோ நாடோடிப் பரதேசிகள். புலம்விட்டுப் புலம் பெயர்ந்தவர்கள். எனவே எம்மிடம் அத்தனை இதழ்களும் கைவசம் இருக்கும் என நம்பக்கூடாது. தொடர் இலக்கிய இதழ்ச் சேமிப்பாளர் கள்தான் இதற்கு உதவிபுரியவேண்டும்.
நாற்பதாவது ஆண்டு மலரைத் தயாரிக்கும் இவ்வேளையில் இந்தத் தகவல்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
- ஆசிரியர்.

இலங்கை தமிழ் நூல்
பதிப்பாளர் ஒன்றியம்.
சென்ற மாத நடுப்பகுதியில் இலங்கையில் தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு வைக்கும் நிறுவனங்களும் ஆசிரியப் பதிப்பாளர்களும் ஒருங்கு கூடித் தமது வெளியீட்டுத்துறை சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் மனந்திறந்து விவாதித்ததுடன், தமது வெளியீட்டுத்துறைக்கு ஒரு ஸ்தாபன வடிவம் கொடுக்கச் சம்மதித்து, "இலங்கை தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உத்தியோகப்பூர்வமாக உருவாக்கிக் கொண்டனர்.
இந்தத் தேசத்தில் சகல பிரதேசங்களிலுமிருந்து நாள் ஒன்றுக்கு ஒரு புதிய நூல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி வெளிவரும் பத்திரிகைச் செய்திகள் இதை நிரூபிக்கின்றன.
ஆனால், புத்தகங்களை வெளியிடுபவர்களுக்கு எந்தவிதமான சந்தைப் படுத்தல் அநுபவமும் ஆற்றலும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆர்வத்தையும் ஒருவகையான உத்வேகத்தையும் அடிப்படையாகக் கொண்டே இங்கு வெளிவரும் நூல்களை வெளியிட்டு வைக்கின்றனர். இதில் ஒரு சிலர்தான் தாம் தயாரித்தளிக்கும் அந்த அந்த நூல்களை வெளியிட்டு விழாக்கள் நடத்தி அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
வெளியீட்டு விழாக்களில் வலிந்து திணிக்கப்படும் நூல்களும் இன, சன, நெருங்கிய நண்பர்களுக்கு நேரடியாகக் கொடுத்துப் பயன்படும் சம்பவங்களைத் தவிர, அதன் பிறகு அந்தப் புத்தகங்களைப் பற்றிக் கதைப்பார் யாருமே இல்லை.
இந்த அவலநிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.
தரமான நூல்கள் இங்கு வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
இவற்றைச் சந்தைப்படுத்தும் வழிதுறைகள்தான் இங்கு இருப்பதில்லை.
ஒன்றியம் இந்த அவலநிலையைப் போக்கும் என மனப்பூர்வமாக நம்புகின்றோம். பதிப்புத்துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்.

Page 4
4
9*GODLILILL
இவுத்தலைமுறையினரின் இதில்4சம் கவிஞர் அறின்மதி
- குறிஞ்சி இனந்தென்றல்
நீண்ட நாட்களாகவே எனது மனசில் ஓர் ஆசை குடிகொண்டிருந்தது, தமிழ்நாட்டுக்குப் போய்த்தான் தீரவேண்டுமென்ற அவா நாளுக்கு நாள் என் நெஞ்சின் அடி மட்டத்தில் கனன்று கொண்டேயிருந்தது.
காரணம், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் அபிமானி நான். நீண்ட காலமாகவே அவரது கவிதைகளைப் படித்துப் படித்து உருப்போட்டு வந்துள்ளேன். அத்துடன் எங்கள் கவிஞர் அறிவுமதியின்நவீன கவிதைகளைப் படித்ததினால் அவர் மீதும் அவரது கவிதா நடையின் மீதும் அபாரமான பற்றும் பாசமும் கொண்டிருந்தேன்.
இந்த இரண்டு நீண்டகால மன ஆசைகளும் நிறைவேறக்கூடிய காலமும் சூழ்நிலையும் சமீபத்தில் நான் எதிர்பார்க்காமலே என்னை வந்தடைந்தன.
கடந்த ஜனவரி 10-11ந் திகதிகளில் சென்னையில் நடைபெற இருந்த இலக்கியம் 2004 என்ற இருநாள் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு என்னை யறியாமலே எனக்கு சித்தித்தது.
இந்தத் தமிழகச் சந்திப்பு நிகழ்ச்சியைச் சொல்வதற்கு முன், முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும் இங்கு நான் சொல்லித்தானாக வேண்டும்.
1992ஆம் ஆண்டென நினைக்கிறேன். நான் சிறிது சிறிதாகக் கவிதைகள்
புனைந்து வரக்கூடிய காலகட்டமது.
கையில் அகப்படக் கூடிய அத்தனைக் கவிதைத் தொகுதிகளையும் வாசித்து வாசித்துப் பழக்கப்படுத்திக் கொண்டேன்.

இதனால் தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மேலும் என்னை நானே ஒப்புக் கொடுத்துக் கொண்டு
விட்ட காலம்.
இந்தக் காலத்தில் என்னை எழுத்துலகில் தூண்டி, உற்சாகமூட்டி வந்த எனது இலக்கிய ஆசான் தெளிவத்தை ஜோசப் அவர்கள் ஒரு கவிதைத் தொகுதியை என் கைவசம் தந்தார். அது வெள்ளைத் தாளில் மேலுறை போடப்பட்டிருந்தது. முன்னட்டைப் பக்கம் தெரியவில்லை.
அதைத் தந்துவிட்டு, “நிறைய நிறைய வாசிக்க வேண்டும். தொடர்ந்து வாசிக்க வாசிக்கத்தான் எப்படித் தமிழைக் கையாளலாம், என்கிற பழக்கம் வரும். இந்தக் கவிதைகளை எப்படி எழுதியிருக்காருன்னு பாருங்க. இது நல்லதொரு கவிதைத் தொகுதி!” எனச் சொல்லி சென்றார், தெளிவத்தை.
வீட்டுக்கு அந்நூலை வெகு பத்திர மாகக் கொண்டுவந்து விரித்துப் பார்த்தேன்.
'நிரந்தர மனிதர்கள்’ என்பது அக் கவிதைத் தொகுப்பின் பெயர். அதை எழுதிய கவிஞரின் பெயர் அறிவுமதி என அச்சிடப்பட்டிருந்தது.
கவிஞர் அறிவுமதியின் கவிதை களை வாசிக்க நெஞ்சை ஏதோ செய்தது. அந்த மழை நாட்கள் இன்னமும் என் மனசிலிருந்து மறைய வில்லை.
yet gross তত্ব
முதன் முதலில் நான் படித்த அறிவுமதியின் கவிதைகள் அந்த நூலில் இடம்பெற்ற கவிதைகள்தான்.
கவிஞரின் இதர நூல்களையும் தேட ஆரம்பித்தேன்.
சுமார் 12 வருட காலங்களாக அறிவுமதியைச் சந்திக்க வேண்டும், அவருடன் சிறிது நேரமாவது நேரில் சம்பாஷித்துக் களிக்க வேண்டும் எனப் பேரவாக் கொண்டிருந்தேன்.
எனது நீண்ட நாட் கனவு சென்ற ஜனவரி மாதம் நிறைவேறியது.
முதல் நாள் இலக்கிய விழாவிற்கு வந்திருந்த பலரிடம் விசாரித்துப் பார்த்
தேன். “கவிஞர் அறிவுமதி இன்றைய
விழாவுக்கு நேரில் வந்து கலந்து கொள் வாரா?” எனக் கேட்டுப் பார்த்தேன்.
சரியான தகவல் சொல்வார் யாரு மில்லை.
விழாவின் நிகழ்ச்சி நிரல் வைத்தி ருந்த ஒருவரை அணுகி நிகழ்ச்சிநிரலை வாங்கி வாசித்துப் பார்த்தேன்.
"அறிவுமதிநாளை விழாவில் தான் கலந்துகொள்கிறார். எழுத்தாளர் க. சமுத்திரத்தின் நினைவு நிகழ்வில் அவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்து கிறார்!’ என்றார், நிகழ்ச்சி நிரல் தந்தவர்.
மனம் உற்சாகத்தால் வெம்மித் தணிந்தது.
யாரை நேரில் பார்த்து இரண்டு வார்த்தைகள் பேச வேண்டுமென
5

Page 5
stess)
நீண்ட காலம் ஆசைப்பட்டேனோ, அவர், கவிஞர் அறிவுமதி நாளைக்கு இங்கு வரப்போகிறார். இந்த மேடையி லேயே அவர் உரையாற்றப் போகிறார். நானதை முன்னாலிருந்து கேட்கப்
போகிறேன்!
அடி சக்கை!
இரண்டாம் நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
மண்டபம் நிறைந்த கூட்டம்.
நான் LD Görl-l i வாயிலில் ஆவலுடன் காத்திருந்தேன்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் இளைஞர் சூழ ஒரு கூட்டம் மண்டப வாயிலை நெருக்கியது. கூட்டத்தி லிருந்து ஆர்வக் குரலொன்று பக்கத்தே கேட்டது. "அவர்தான் அறிவுமதி!”
கிட்டே நெருங்கி ஆர்வ மிகுதி யால் உணர்ச்சிவசப்பட்டு, செய்வ தறியாது "அறிவுமதி அண்ணா!” என அவரைத் தழுவிக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். எனது கரங்கள் பாசத் தால் இறுக்கிக் கொண்டன.
“வாடா, தம்பி! நல்லா இருக் கிறாயா?” எனத் தனது அண்ணன் உறவை வலுப்படுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் வளர்ந்து வரும் புதிய தலைமுறையைச் சேர்ந்த பல இளங் கவிஞர்கள் அறிவுமதியைச் சூழ்ந்து கொண்டார்கள்.
முன் அறிமுகமில்லாமல் வெறும்
பாசஅழைப்பான அறிவுமதி அண்ணா! என்ற எனது அன்பழைப்பைச் செவி
6
யுற்றதும் "வாடா, தம்பி!” என என்னைப் பாசம் பொங்க அழைத்ததும் என் மனசை நெகிழ வைத்து விட்டது.
சூழ நின்ற இளங்கவிஞர்கள்
என்னைக் கவனித்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.
எந்தவிதமான, வரவழைத்துக்
கொண்ட பந்தாவுமில்லாமல் அந்தக் கணத்திலிருந்தே கவிஞர் என்னுடன் பழகத் தொடங்கினார்.
இலங்கைக்குத்திரும்பிவரும் வரை அவருடன் நிழல் போல ஒட்டி உற வாடப் பழகினேன்.
இருவரும் சேர்ந்து புகைப்படங் கள் எடுத்துக்கொண்டோம். விழாவில் ஒன்றாகவே இருந்து விருந்து சாப்பிட் டோம். தன்னைச் சந்தித்து உரையாடும் பலரிடம் தனது 'ஈழத்துத் தம்பி!” எனப் புன்முறுவலுடன் என்னை அறிமுகப் படுத்தி வைத்தார்.
என்னால் நெருங்கிக் கதைக்கவே முடியாது எனநான் எனக்குள் எண்ணிக் கொண்டிருந்த கவிஞர், ஒரு நண் பனைப் போல, கூடப் பிறந்த சகோ தரனைப் போல, அன்பு காட்டி, என்னை நடத்தியது என் மனசைப் பரவசப்படுத்தியது.
இருவரும் பக்கம் பக்கமிருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண் டோம். நீண்ட நாள் அபிமானி ஒருவனுக்குக் கிடைத்த பேரானந்தம் எனக்குக் கிடைத்தது. என் முதுகில் திடீரெனச் சிறகு முளைத்து விட்டது போன்தொரு பிரமை.

மறுநாள் காலை தொலைபேசி மூலம் கவிஞர் அறிவுமதி என்னுடன் தொடர்பு கொண்டார். மாலை ஐந்து மணிக்கு தன்னைத் தனது அலுவல கத்தில் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நாலு மணிக்கே புறப்பட்டுச் சென்றுவிட்டேன்.
அபிபுல்லா சாலையிலுள்ள அவரது காரியாலயத்தில் என்னைச் சந்தித்ததும் ரொம்பவும் பூரித்துப் போய்விட்டார். “என்னடா தம்பி, நல்லாத் தூங்கினியா? சென்னை உனக்கு ஒத்து வருகிறதா? உடம்பைக் கவனமாகப்
பார்த்துக் கொள்!” எனச் சொன்னார்.
“சரி தம்பி, வா. இன்றைக்கு புத்தகக் கண்காட்சிக்கு இருவரும் போய் வருவோம்!” என அழைத்தார்.
பின்னர் இருவருமாக ஆட்டோ வொன்றில் புத்தகக் கண்காட்சித் திடலுக்குச் சென்றோம்.
தமிழ் நாட்டில் நான் தங்கியிருந்த அந்த ஒரு மாத காலத்தில் பல தடவை கள் இடையிடையே நான் கவிஞரைச் சந்திக்கத் தவறுவதில்லை.
சினிமாத்துறை சம்பந்தப்பட்ட வர்களிடம் இவருக்கு நிறைய நிறையத் தொடர்புகள் உண்டு. பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், பாலா போன்றவர் களுடன் நெருங்கிப் பழகி வருபவர். தங்கர்பச்சானை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். நக்கீரன் கோபாலி டமும் ‘என்னைக் கூட்டிச் சென்று அறிமுகமாக்கினார்.
5 yages
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யார் மீது அபார மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளநான் இந்தப்பயணத்தில் அவரது சொந்த ஊருக்கே யாத்திரை சென்று மக்கள் கவிஞரின் மனைவியை யும் அவரது அண்ணாவையும் நேரில் தரிசித்து வந்தேன்.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யாரின் ஊருக்குச் சென்று வந்ததையும், பாசமிகு அண்ணன் கவிஞர் அறிவு மதியை நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்ததையும் என்னால் என்றுமே மறக்க முடியாது.
நான் இன்னமும் திருமணம் ஆகாதவன். வருங்காலத்தில் எனது பேரப்பிள்ளைகளைக் கூட்டி வைத்து
இதனைக் கதை கதையாகச் சொல்லி மகிழ்வேன்.

Page 6
சித்சிபர ரகுநாதன் ஒரு முசிேய இலக்கிய0 20ரவி
காலத்திற்குக் காலம், இலக்கியத்துறையில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் பரம்பலுக்கு மாக்சிய உரமிட்டு, செழுமையடையச் செய்துள்ளனர்.
அந்த வரிசையில் தமிழ்நாட்டின் முற்போக்கு கலை இலக்கியப் பெருமன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டபோது அதன் ஓர் அங்கமாக இருந்து இயங்கிய பெருந்தொகை இலக்கியவாதிகளுள் தொ.மு.சிதம்பர ரகுநாதன் மிகவும் சிறப்புப் பெற்றவர்.
முற்போக்குச்சிந்தனைகளை பரப்புவதையே தமது இலட்சியமாகக் கொண்டு
அத்தடத்தை எழுத்தில் பதித்து வாழ்நாட்களைக் கழித்து மறைந்த அன்னாரது நேர்மையும் ஆளுமையும் தனித்தன்மை வாய்ந்தன.
அவரது சொல்லிலும், செயலிலும், நெஞ்சத்திலும் சோசலிச யாதார்த்தவாதக் கொள்கைகளே ஊறிக் கிடந்தது. இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் வறுமை புகுந்து விளையாடியது. பொருளாதாரக் கஷ்டங்களினால் துன்பங்களையே அனுபவித்தார்.
தன்னலம் கருதாத தோழர் என்று இனங்காணப்பட்ட ரகுநாதன் தனது குருவாகவும் வழிகாட்டியாகவும் மகாகவி பாரதியையே கொண்டிருந்தார். 'பாரதி எவ்வழி ரகுநாதன் அவ்வழி” என்று நண்பர்கள் புகழாரம் சூட்டும் அளவுக்கு பாரதியின் கொள்கைகளைப் பின்பற்றினார். அதேநேரத்தில் சிறுகதைத் துறையில் தடம் பதித்த புதுமைப்பித்தனின் எழுத்திலேயே அதீத ஈடுபாடுடையவராகக் காணப்பட்டார்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் புதுமைப்பித்தனின் அதி அற்புதமான சிருஷ்டிகளின் சிறப்புக்களை இலக்கிய உலகிற்கு இனங்காட்டியவர் ரகுநாதன் என்பதே உண்மை.
ரகுநாதன் ஒரு சிறந்த பன்முகப் படைப்பாளி. 2 கவிதைத் தொகுதிகள், 3 சிறுகதைத் தொகுதிகள், 4 புதினங்கள், 2 நாடக நூல்கள், 1 திறனாய்வு நூல், 2 ஒப்பியல் ஆய்வு நூல்கள், 3 தமிழ் இலக்கிய ஆய்வு நூல்கள், 1 புதுமைப் பித்தன் ஆய்வுநூல், 3 பாரதி பற்றிய ஆய்வுநூல்கள், 1 புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு,

3 கட்டுரைத் தொகுதிகள், 1 உடற்கூறு பற்றிய ஆய்வு நூல், 4 தமிழ் மொழி பெயர்ப்பு நூல்கள், 1 தத்துவ நூல் (இலக்கியக் கட்டுரைகள்), 3 பிற நூல் கள், 2 பிற கவிதைத் தொகுதிகள், 4 வேறு சிறுகதைத் தொகுதிகள் என்று
சுமார் 41 நூல்களைப் படைத்துள்ளார்.
திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப் பெயரில் பல புகழ் பெற்ற கவிதைகளைப் படைத்துள்ளார். "சிலம்பு', 'Rயார், "கொட்டாப் புள்ளி, ரகுநாத்" என்று பல பெயர்களிலும் இவர் எழுதியுள்ளார். சோவியத் நாடு சஞ்சிகையின் வெளியீட்டுக் குழுவிலு மிருந்தார்.
1948இல் வெளியான இலக்கிய
விமர்சனம் எனற நூல் Gl)
பதிப்புகளைக் கண்டது. "பஞ்சும் பசியும்" என்ற நாவல் உழைக்கும் மக்களைப் பற்றியது. ஆய்வாளர்கள், விமர்சகர்களால் பட்டது. தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நவசிந்தனையை வளர்த்தது. மேற்
வியந்துரைக்கப்
கூறப்பட்ட அனைத்துத் தகவல்களும் ரகுநாதன் ஒரு சிறந்த மார்க்சிய
இலக்கியப் போராளி என்பதை நிரூபிக்கின்றன.
மறைந்தாலும், எழுத்தாளர்
சிதம்பர ரகுநாதன் தமிழ் எழுத்தாளர் கள், கலை இலக்கிய முன்னோடிகளின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் ஐய மில்லை. அன்னாரது ஈழத்து இலக்கிய விஜயம் இன்றும் பசுமையாகவே
இருக்கிறது.
இலங்கை முற்போக்கு எழுத்தாள சங்கத்தின் நிறுவகர்களிலொருவரான அமரர் சுபைர் இளங்கீரன் “பாரதி கண்ட சமுதாயம்’ என்றொரு அரிய நூலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மகாகவியின் கவிதைச் செழுமையை, இலக்கிய ஆளுமையை சகல மக்களுக்கும்.ரம்பல் செய்ய வேண்டுமென இளங்கீரன் விரும்பினார். இந்த எண்ணத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்குத் தெரியப் படுத்தினார். இப்படிப் பிற ததுதான் இ.மு.எ.ச. 1956 டிசம்பரில் நாடளாவிய ரீதியில் கொண்டாடிய பாதி விழா. இதைக் கண்டு தமிழ் உலகே வியந்தது.
26),
2) ишffөштөрт
இவ்விழாவில் கலந்து (கோள்ள வும், சொற்பொழிவுகள் ஆற்றவும் மிகப் பொருத்தமானவர் என்று தீர்மானித்து, தமிழ் நாட்டிலிருந்து பிரபல எழுத் தாளரும் கவிஞரும், விமர்சகருமான சிதம்பர ரகுநாதன் அவர்களையே அழைத்தனர்.
இ.மு.எ.ச.வின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு இலக்கிய விஜயம் செய்த ரகுநாதன் அவர்கள் 1956 டிசம்பர் தொடக்கம் ஒரு மாத காலம் இலங்கை யில் தங்கியிருந்தார்.
கொழும்பு, கண்டி, குருநாகல், மாத்தளை,திருகோணமலை, அனுராத புரம், யாழ்ப்பாணம் போன்றநாட்டின் பல பாகங்களிலும் நடந்த பாரதி விழாக்களில் கலந்து கொண்டார்.
இ.மு.எ.ச.வின் ஏற்பாட்டில் நடந்த எழுத்தாளர் சந்திப்புகளிலும், கருத்
9

Page 7
í ウ geese):
தாடல்களிலும் சிறப்பித்தார்.
யாழ் மாநாகர சபை ஒரு பெரும் வரவேற்பளித்தது.
பாரதியை தமிழ் அபிமானிகளுக்கு முழுமையாகக் காட்ட வேண்டும் என்னும் திட்டம்
நிறைவேறியது.
இ.மு. எ.ச.வின்
“தொ.மு. சிதம்பர ரகுநாதனை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாறு மறக்க, ஒதுக்க, புறக் கணிக்க முடியாததற்கான வலுவான நியாயங்கள் உண்டு.” என்று பேரா சிரியர் கா.சிவத்தம்பி கூறியுள்ளார்.
“சமுதாய இயக்க விதிகளையும், எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக் கொண்டு அவ்வுணர் வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்ம்மையுடன் சித்திரிப்பவனே யதார்த்தவாதி. இத்தகைய சிறப்பு மிக்க யதார்த்த இலக்கிய நெறி தமிழ் நாவலுலகில் பெருவழக்குப் பெற் றுள்ளதெனக் கூறமுடியாது.
10
இந்த வகையில் ரகுநாதனுடைய "பஞ்சும் பசியும்" என்றுதான் விதந்து கூறத்தக்கது." இது ரகுநாதனின் நாவலைப் பற்றி பேராசிரியர் க.கைலாச பதியின் கூற்று.
சிதம்பர ரகுநாதன் 1923ஆம் ஆண்டு பிறந்தார். 2001ஆம் ஆண்டு தமது 78வது வயதில் காலமானார்.
காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும் தாமரை ஜனவரி - பெப்ரவரி 2004 இணைந்த இதழை ரகுநாதன் சிறப்பு மலராக வெளியிட்டு இலக்கிய வரலாற்றில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரவேற்கத்தக்கது. பல தரப்பட்டவர்களும் பல்வேறு
கோணங்களிலிருந்து ஆய்வுக்
கட்டுரைகள் எழுதி மலரைச்
சிறப்பித்துள்ளனர்.
தமிழ் இலக்கியத்தில் முற்
போக்குச் சிந்தனைகள் தேயாதிருக்க சிதம்பர ரகுநாதனின் படைப்புகள் என்றும் கட்டியம் கூறும்!
/
ஆண்டுகளாகத்
ஒத்துழைப்புத் தேவை.
40-வது ஆண்டு மலர் தயாராகின்றது.
தமிழ் சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றிலேயே நாற்பது தொடர்ந்து இடையறாது வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகை மல்லிகை ஒன்றேதான்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இலக்கியப் பதிவைத் தமிழ் மொழியில் பதிப்பித்து, இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகை இதழின் 40-வது ஆண்டு மலர் தயாராகின்றது. உங்களது
N
6Arflայri )யா ت

தாமரை மலர்களில் ஈக்கள் மொய்ப்பதில்லையே!
ஏன்? ஈக்களுக்குத் தேனருந்த விருப்பே இல்லையா? நறுமண மலர்களில் மொய்ப்பவை
வண்டுகளும் தேனீக்களுமே. Y Cyne كdمع ‰›ጭ7
ஈக்கள் மடீடுமே
- - UTAJub6a T கரன நாற்றமடிக்கும் பொருட்களை நாடுவதேன்?
ஈக்கள்தான் சுத்திகரிப்புச் சேவையாளரா?
மரணம் நெருங்குவது மணி இலையான்களுக்குத் தெரியும் இறந்த உடல்கள், அழுகிய பொருட்கள் சூழலை மாசுபடுத்தி நோயை வருவிக்கும். அவற்றை உண்பதுடன் நிற்காது அவற்றின் மேல் தமது முட்டைகளையும் இடுவார்கள் இந்தச் சுகாதாரச் சேவகர்கள். இந்த முட்டைகளிலிருந்து தோன்றும் புழக்களும் அழுகியவற்றை உண்டு இயற்கைச் சுத்தம் செய்யும்.
பெண்களைப் பூக்கள் என்றும் அவற்றில் தேன் குடிக்கும் வண்டுகளை, வண்ணத்துப் பூச்சிகளை ஆண்களென்றும் பாடினார் புலவர்கள்! ஆரோக்கியமாக நாம் வாழ அன்றாடம் பாருபரும்
இந்த ஈக்கள் மட்டும் இன்றுமேன் பாடவில்லை?
1

Page 8
12
நூல் அறிமுகம்
விடியலுக்கு முன்
- எம்.கே.முருகானந்தன்
‘விடியலுக்கு முன் இது புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே அவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இது அவரது நான்காவது தொகுப்பு. உண்மையில் இது அவரது தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பாக அமைகிறது. அவர் எழுதியுள்ள சிறுகதைகளின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து நான்கு. அவர் எழுதிய அனைத்துக் கதைகளையும் அலசி ஆராய்ந்து பதினொரு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருப்பவர் ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை அழுந்தப் பதித்த எழுத்தாளரான எஸ்.ரஞ்சகுமார்.
ஈழத்து இலக்கியப் பரப்பில் ‘விடியலுக்கு முன் ஒரு வித்தியாசமான தொகுப்பாக அமைந்திருக்கிறது. காரணம் இத்தொகுப்புக்கான முன்னுரை யில் ரஞ்சகுமார் குறிப்பிடுவது போல “இத்தொகுதியில் காணப்படும் கதை களில் பெரும்பாலானவை ஆசிரியரின் மெய்யனுபவங்களிருந்து பிறந்தவை." உண்மையில் இதிலுள்ள அனைத்துக் கதைகளும் அவரது நேரடியான மெய்யான அனுபவங்களாகவே தெரிகின்றன. கற்பனைகளாக அல்ல.
இரத்திரவேலோன் ஏன் எழுதுகிறார்? இரத்தினவேலோன் மட்டுமன்றி மற்றவர்களும் ஏன் படைப்பாளி ஆகிறார்கள்? அடிப்படைக் காரணம் ஒன்றுதான். ஒரு தனிமனிதனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் இடையே எந்நேரமும் முரண்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தான் வாழும் சமூகத்தோடு முரண்படும் ஒருவன் அதனை கருத்து ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் விமர்சிப்பதோடு அதனைப் பதிவு செய்ய முனையும்போது ஒ
படைப்பாளியாகக் கூர்ப்படைகிறான்.

புலோலியூர் இரத்தினவேலோ னும் அவ்வாறான ஒருவர்தான். ஒரு பெரிய அண்டாவிற்குள் fi கொதித்துக் கொண்டிருப்பது போல அவர் தனக்குள் கொதிக்தூக் கொண் டிருக்கிறார். தனது குடும்பம், தனது உறவினர்கள், நண்பர்கள், அலு
ஊழியர்கள் நாளாந்தம் பல மட்டங்களில் செயற் படும்போது அவரது பழகு சூழலில் நடக்கிற பல சம்பவங்கள் அவரை உறுத்துகின்றன, முகம் சுழிக்கச் செய்கின்றன.
வலகச் சக 66
போ லித் த ன ங் களு ட ன் அவரால் சமரசம் செய்ய முடிய வில்லை. ஏமாற்றித் தட்டிச் சுற்று பவனுடன் உடன்பட முடிய வில்லை. சாதியைக் காட்டிச் சிலரை ஒதுக்குவதை அவரால் சீரணிக்க முடியவில்லை. பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படும் போது அவரால் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
இவ்வாறெல்லாம் நடக்கும் போது அவரால் வெறும் பார்வை யாளனாக இருக்க முடிவதில்லை. ஆனால் அதே நேரம் அவரொரு அமைதியான மனிதர். முரண்களுக் குள் தலை நுழைத்து பட்டுக் கொள்ளவோ பங்கெடுக்கவோ முடி யாதவர். நேரடியாக எதிர்த்துப் பேச மாட்டார், கோபம் கொள்ள மாட் டார், சண்டை பிடிக்க மாட்டார். உடலால் போராளியல்ல அவர்
உள்ளத்துள் போராளி. மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாத மென் மனம் கொண்ட அதேநேரம் அநீதி கண்டு அவரது கொதித்து எழும். எங்காவது தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்த முனையும். பேனா மூடி திறக்கும். சிறுகதை பிறக்கும். இதனைத் தான் அவரது புதிய சிறுகதைத் தொகுப் பில் பார்க்கிறோம்.
உள்ளுணர்வு
இக்கதைகளில் அவர் தன்னை நேரடியாகவே வேலோனாகவே வெளிப்படுத்துகிறார். அவரது கதை களில் அவரது மனைவி சாந்தி வரு கிறார், மகள் மீரா வருகிறாள், மகன் துவாரகன் வருகிறான். இவர்கள் யாவரும் தங்கள் பெயர் உட்பட்ட சொந்த அடையாளங்களுடனேயே எங்கள் முன் நடமாடுகின்றனர். தன் மனதுக்குள் பூட்டி வைத்து சுய ரசிப்பில் லயிப்பவற்றைக் கூட வாச கர்களுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறார். இது ஒரு சிறப்பு மாத்திரம் அல்ல, அதற்கு அசாத்தியத் துணிவும் வேண்டும்.
இன்னும் அவரது உறவினர் களும், பள்ளிப் பருவத் தோழர் களும், அலுவலக நண்பர்களும் கூடவே வருகிறார்கள். ஆனால் அவர்களது சுய முகங்களுடன் அல்ல. இத்தொகுப்பில் உள்ளவை மெய்யனுபவக் கதைகளான போதும் மற்றவர் இரகசியங்களை பகிரங்கப்படுத்தாத சமூகக் கடப்
13

Page 9
JY 65656):
பாடு முதிர்ச்சியையும் இப்படைப்பு களில் காண்கிறோம்.
இக்கதைகள் தன்னனுபவம் என்பதால் உண்மையானவை, யதார்த்தமானவை. உணர்வு பூர்வ மாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதிலும் பள்ளி அனுபவங்களைப் மற்றும் திக்கற்றவர்கள் ஆகியன மிகச்
பேசும் நிலாக் காலம்"
சுவையான படைப்புகள். முக்கிய மாகச் சொல்வதானால் 2002இல் எழுதப்பட்ட நிலாக்காலம் அவரது படைப்பனுபவத் தேர்ச்சிக்கு சாட்சி யாக நிற்கிறது.
அதில் ஒரு காட்சி. அவரது "ரீச்சரின்ரை பெயரையும், கந்தசாமி சேரின்ரை பெயரையும் சேர்த்து ஆரோ கண்டபடியெல்லாம் எழுதி யிருக்கிறாங்கள்” என ஒரு நண்பன் வேலோனிடம் கூறுகிறான்.
“ராசேந்தி அது புன்னரைக் காயாலை எழுதினதோ அல்லது பூவரசம் இலையாலை எழுதினதோ வென்டு நீநினைக்கிறாய்” என இவர் வினா எழுப்புகிறார்.
புன்னரைக் காயாலை எழுது வதற்கும் பூவரசம் இலையால் எழுது வதற்குமிடையில் உள்ள வித்தி யாசம் நகரங்களில் வசிப்பவர் களுக்கு எங்கே புரியப் போகிறது? கிராமப்புறத்தின் போலி முகம் காட் டாத அப்பாவித்தனத்தையும், பண் பாட்டுக் கோலங்களையும் குழைத்
தெடுத்து கலையம்சத்துடன் பதிவு
14
செய்கிறார். அத்துடன் இக்கதை எம் மனதிலும் எமது இளமைப் பிராய பசுமை உணர்வுகளையும் கிளைத் தெழச் செய்கிறது. நல்லதோர் படைப்பு. ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பின் மிகச் சிறந்த சிறுகதை களுக்குள் இதற்கும் இடமுண்டு. பிள்ளைப் பருவத்தின் நினைவு களாகப் படரும் நீர்வை பொன்னை யனின் புரியவில்லை, முத்துலிங்கத் தின் அக்கா, புலோலியூர் சதா சிவத்தின் அக்கா ஏன் அழுகிறாள்' ஆகிய சிறுகதைகளுடன் ஒப்பு நோக்கி ரசிக்கத்தக்கப் படைப்பு.
இத்தொகுப்பின் இன்னுமொரு சுவாராசியமான அம்சம் கதைகள் புத்தம் புதிய கோணத்தில் தொகுக்கப் பட்டுள்ளமையாகும். பொதுவாகச் சிறுகதைகளைத் தொகுக்கும் போது அவை எழுதப்பட்ட கால ரீதியாக ஏறுநிரைப்படுத்துவார்கள், அல்லது வெளிவந்த காலரீதியாக வரிசைப் படுத்துவார்கள், வேறுசில தொகுதிகள் வெளியான இதழ்களின் அடிப் படையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக் கும். ஆனால் இத்தொகுப்பில் இவரோ அவற்றை கதைக்கான அனுபவத்தை தான் பெற்றுக் கொண்ட காலரீதியாக ஒழுங்குபடுத்தியுள்ளார். தொகுப்பின் முதற்கதை 1970 இல் ஏழாம் வகுப்பு மாணவனாகத்தான் பெற்ற அனுபவப் பகிர்வாக அமைய, கடைசிக் கதையோ 2002 ஆம் ஆண்டில் நடுத்தர வயதை எட்டிவிட்ட ஒருவனின் அனுபவமாக இழையோடுகிறது.

இந்நூலைப் படிக்கும்போது வேலோனின் வாழ்க்கைக்கூடாக தமிழ்த் தேசியத்தில் ஏற்பட்ட மாற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் கீற்றுக்களையும் காணக்கூடியதாக இருக்கிறது. இன்னொரு கோணத் தில் பார்த்தால் ஒரு மனித வாழ்வின் முழுமையை உள்வாங்கும் நாவலுக் கான முதல் வரைவாகவும் இத் தொகுப்பை இனம் காணலாம்.
இரத்தினவேலோனின் எழுத்து நடை எளிமையானது. ஆற்றொழுக் கானது. இனிமையும் தெளிவும் கொண்டது, களையும் குறியீடுகளையும் காட்டி
சாதாரண வாசகனைப் பயமுறுத்து
சிக்கலான படிமங்
வதில்லை. கதைகளை (நிலாக்காலம் நீங்கலாக) நேரடியாவே வாசகன் முன் வைக்கிறது. இதனால் எல்லா மட்டத்திலுமுள்ள வாசகர்களையும் சுலபமாக எட்டக் வுள்ளது. அத்துடன் மிக இயல்பான மென்மையான அங்கதச் சுவையும்
கூடியதாக
அவரது கதைகளில் ஆர்ப்பாட்ட மின்றி நுழைந்து விடுவதை பல தருணங்களில் சுவைத்து ரசிக்கி றோம். உதாரணத்திற்கு பாரதி கதை யில் ஓரிடம், அவளைச் சந்திப்பதற் காக அவள் வீட்டில் காத்திருக்கிறார். “இவனது காற்சட்டைப் பொக் கெட்டிற்குள் இருந்த சீப்பு ஒரு தடவை வந்து தலையில் அமர்ந்து விட்டு மீண்டும் மறைந்து கொண் டது” எனக் கிண்டலாகச் சொல் கிறார். மனதுக்குள் முறுவலிக் கிறோம்.
இவரது கதைகளில் வரும் இறுதி வசனங்கள் மிகவும் அழுத்த மானவை. பெரும்பாலும் குறியீடு களாக அமைந்து, அவர் தனது படைப்புகளுக்கு கொடுக்கும் முடிவு களுக்கு அழுத்தம் கொடுப்பதாக அமைகின்றன என்பதும் இன்னு மொரு கவனிக்கத்தக்க அம்சம்.
திக்கற்றவர்கள் என்ற சிறுகதை "இருளினுள் மூவரும் வேகமாக நுளைகின்றனர்” என முடிகிறது. “வர.வர. முருகேசனாரின் உருவம் செல்லனின் கண்களில் குறுகிக் செல்கிறது!” இது தானத்தின் கடைசி வாக்கியம்.
கொண்டே
அந்த மைதானம், குச்சொழுங்கை எதையும் இனங்காண முடியாத வாறு சகலதும் இருளில் மூழ்கிப் போய்க் கிடந்தது’ என ‘பாரதியை முடிக்கிறார். இத்தகைய குறியீட்டுப் பாணியிலான நுட்பத்தை நாம் சில தருணங்களில் இரசிக்கத்தக்கதாக இருந்தபோதும், வாசகனின் கற் பனைச் சிறகடிப்புக்கும், சுயசிந் தனைக்கும் ஆப்பு வைத்து விடு கின்றன என்பதையும் மறுப்பதற் கில்லை.
"400 சிறுகதைப் படைப்பாளி களையும், 274 சிறுகதைத் தொகுதி களையும், சுமார் 8000 வரையிலான பத்திரிகைகள், வெளிவந்த கொண்ட குறுகிய வரலாறுதான் ஈழத்துச் சிறுகதை வரலாறு” என் கிறார் செங்கை ஆழியான் தனது
15
சஞ்சிகைகளில் சிறுகதைகளையும்

Page 10
ge:GSG
நூல் ஒன்றில். இந்த வரலாற்றுப் பின்னணிக்குள் பார்க்கும் போது புலோலியூர் இரத்தினவேலோனின் ‘விடியலுக்கு முன் என்ற சிறுகதைத் தொகுப்பும் கணிப்புக்குரிய ஒரு தெரிவாக அமையக்கூடிய தகமை பதினொரு தேர்ந் தெடுத்த சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் குறைந்தது நான்கு கதைகளாவது நிறைவான வாச கானுபவத்தை அளிக்கக் கூடியவை என்பது கவனிக்கத்தக்கது.
கொண்டது.
எஸ்.ரஞ்சகுமாரின் சுருக்கமான ஆனால் நிதானமும் கூர்மையும் கூடிய முன்னுரை நுணுகி வாசிக்க வேண்டியதாகும். அது இந்நூலுக் கும் நூலாசிரியருக்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
அட்டைப்படம் வடபுலத்தின் குறியீடாக விளங்கும் பனை மரங் குறிப்பாகச் சொல்வதாயின் இரு வடலிப் பனை களின் போட்டோ. முருகைக் கற்
களின் போட்டோ.
பாறையை அணையாகக் கொண்ட வடமராட்சிக் கடற் பின்னணியில் நீல வெளியாக அமைதியாகச் சிற் றலை வீசிக் கிடக்கிறது. இந்த மக்களின் வாழ்வு, வளம், தொழில், செழிப்பு யாவுமே அந்தக் கடலோடு தான் சங்கமம் என்பது நினைவி லோடுகிறது. அவர்கள் இறுதியில் ஒரு பிடிச் சாம்பலாகக் கரைவதும் அந்தக் கடலில்தான். இன்று வடபுல மக்கள் அடக்கப்படுவதற்கு அடை யாளமாக விளங்குவதும் அதே கடல்
16
தான். காரணம் அது மக்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. படையினர் தங்களைப் பாதுகாப்பதற்காக பாது காப்பு வலையம் அமைத்து, தாங்கள் சிக்காராக ஊன்றி நின்றுகொண்டு, அம்மண்ணின் உரிமையாளர்களை அப்புறப்படுத்தி விட்டனர்.
இந்த மேலும் நுணுகிப் பார்த்தால் அந்த அடக்குமுறையின் அடையாளமான
அட்டைப்படத்தை
முட்கம்பி வேலி கடற்கரை ஓரமாக சுருள் சுருளாகக் குறுக்கிட்டு நிற் பதும் தெரிகிறது. திறந்த வெளிச் சிறைக் கூடத்தை நினைவூட்டும் இந்த அற்புதமான போட்டோவை எடுத்த சிவதாஸ் பாராட்டுக்குரியவர்.
டாக்டர்
படைப்பிலக்கியத்தோடு நின்று விடாது நலவியல், அழகியல், சினிமா, ஆன்மீகம் எனப் பல்துறை சார்ந்த நூல்களுடன் கிளை பரப்பும் மீரா பதிப்பகத்தின் 41வது வெளியீடு இந்நூல் என்பதும் குறிப்பிடத் தக்கது. மீரா பதிப்பகம் இரத்தின வேலோனின் அசுர உழைப்பிற்கு மற்றுமொரு சான்று. ஈழத் தமிழ் வெளியீட்டுத்துறை அரச அர வணைப்போ, நூல் விற்பனையாளர் களின் ஊக்குவிப்போ, வாசக ஆதர வோ இன்றித் தத்தளித்துக் கொண் டிருக்கும் இன்றைய நிலையில் மல்லிகைப் பந்தல், மீரா பதிப்பகம் ஆகியவற்றின் தளராத முயற்சி ஆச்சரியப்பட வைக்கிறது.

– მuPupofრraხ6)
I. €błLon|ň "gleopJ66h"uSlečT
73வது பிறந்தநாள் நிகழ்வு
கடந்த 28.02.2004 அன்று அமரர் துரைவியின் 73வது பிறந்தநாள் நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்க குமாரசுவாமி விநோதன் மண்டபத்தி ல் நடை பெற்றது.
வருஷம் தவறாமல் ஏதோ ஒரு வகையில் அமரர் துரைவி அவர்களை நினைவு கூர்வதில் அவரது மகன் பின்நிற்காமல் பணியாற்றிக் கொண்டிருப் பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது.
இம்முறை அமரர்துரைவியின் 73வது பிறந்த நாள் நினைவு நிகழ்வை சற்று வித்தியாசமான முறையில் நிகழ்த்துவது என்பதை துரைவி அவர்களின் மகன் ராஜ்பிரசாத்துடன் கலந்துரையாடிய பொழுது தீர்மானித்தோம். அதன்படி ஒரு கவிதா நிகழ்வும், கனதியான தலைப்பில் ஒரு நினைவுப் பேருரையும் அந்த நிகழ்வில் இடம்பெறச் செய்வது என தீர்மானித்தோம். இந்த யோசனையை தெளிவத்தை ஜோசப் அவர்களும் வரவேற்றார்.
அந்த வகையில்,
அருமையான இரு கவிதைகளை இளையதம்பி தயானந்தாவும், சிதம்பரப்பிள்ளை சிவகுமாரும் பொழிந்தார்கள். தயானந்தா முன் வைத்த கவிதை ஏலவே கம்பன் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதையாக இருப்பினும் மீண்டும் ஒருமுறை அக்கவிதையைக் கேட்கக் கிடைத்தது இக் காலகட்டத்திற்கு பொருத்தமாக இருந்தது.
சிதம்பரப்பிள்ளை சிவகுமாரின் கவிதை மாறாத அவரது தனித்துவ மிடுக்குடன் ஒலித்தது. அவர் கவிதையை முன்வைக்கும் பாணியே தனி
என்றே சொல்ல வேண்டும்.
17

Page 11
S yeSighs
அடியேனும் இந்த கவிதா நிகழ்வில் பங்கு கொண்டேன்.
அடியேனின் கவிதையால் சபை யோருக்கு தலைவலி வந்திருக்கும் என்று தோன்றியது.
இவற்றுடன் இந்த விழாவின் இன்னொரு சிறப்பம்சமாக அமைந்தது பி.பி. தேவராஜ் அவர்
கள் நிகழ்த்திய துரைவி நினைவுப் பேருரையாகும்.
"இலங்கைத் தமிழர்களின் தாயகக் இந்திய வம்சாவழித் தமிழர்களின் நிலைப்பாடும்’ எனும் நிகழ்த்திய நினைவுப் பேருரையானது முக்கிய
கோட்பாடும்,
தலைப்பில் அவர்
மான பல சிந்தனைகளை முன் வைத்தது. நீண்ட கட்டுரைக்கான தலைப்பானப் பொழுதும் தேவராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்ட நேரத் திற்குள் சுருக்க குறிப்புக்கள் மூலம் சில தெளிவுகளை அவர் முன் வைத்
தது பாராட்டக்கூடியதாயிருந்தது.
அதேவேளை மலையக மண்ணை நேசித்த ஒருவர் என்ற வகையில் துரைவி அவர்களின் பிறந்தநாள் நினைவு நிகழ்வுக்கான நினைவுப் பேருரைக்காக தேவராஜ் எடுத்துக்கொண்ட
73வது
அவர்கள் விடயம் மிகவும் பொருத்தமாக அமைந்தது.
இன்றைய நமது தேசியச் சூழலில் மிகவும் தேவையான ஒரு சிந்தனை என்ற வகையில் இன்றைய
சமாதான தீர்வு காலகட்டத்தில்
18
மனங்கொள்ள பல விடயங்களை தேவராஜ் அவர்கள் முன் வைத்தார்.
இம்முறை அமரர் துரைவியின் பிறந்தநாள் நிகழ்வு சற்று வித்தியாச மாக வடிவமைக்கப்பட்டமை பயன் மிக்கதாக இருந்தது. 2. இளம் ஆய்வாளர்
பிரசாந்தி சேகர்
ஜெர்மனிக்கு தனது ஏழு வயதில் புலம்பெயர்ந்து சென்று இன்று அங்கு தனது உயர் கல்விக் காக ஆய்வு ஒன்றினை மேற் கொள்ளும் பிரசாந்தி சேகர் அவர் களை சமீபத்தில் சந்திக்கக் கிடைத் தது. தமிழ்ச்சங்கத்தில் நடந்த ஜின்னாஹ் அவர்களின் நூல்கள் வெளியீட்டின் பொழுது நண்பர்
ராஜபூரீகாந்தன் அறிமுகப்படுத் தினார்.
சிறுவயதிலே அங்கு புலம்
பெயர்ந்து போய்விட்டாலும் அவர் தமிழை மறவாது அதன் உயிர்ப் புடன் பேசியது தோஷத்தை ஏற்படுத்தியது. அத் தோடு, அந்த இளம் வயதில் தனது மேற்படிப்பு பட்டத்திற்காக தேர்ந்தெடுத்திருந்த தலைப்பும் வியப்பைத் தந்தது. அவரது ஆய்வாக தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு பின்வருமாறான அடிப்
எனக்கு சந்
படையைக் கொண்டது.
“காலனித்துவ சிந்தனையும் அச்
சிந்தனை பின் காலனித்துவ

படைப்பாளிகளிடம் செலுத்திய செல்வாக்கும்’ என்ற ரீதியிலான ஒரு நோக்கில் அவரது ஆய்வுப் பார்வை அமையப் போகிறது.
அவ்வாய்வுக்கான தரவுகளைச் சேகரிக்கும் வண்ணம் இலங்கை வந்திருக்கும் பிரசாந்தி அவர்கள் அதற்காக இலங்கையின் பல தமிழ், சிங்கள படைப்பாளிகளையும், பல கல்விமான்களையும் சந்தித்து வரு கிறார். மேலும் பலரை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார். பிரசாந்தி யின் உத்வேகமான, உற்சாகமான ஆய்வு முயற்சிக்கு அவரது தந்தை சேகர் அவர்கள் பக்கபலமாக இருக் கிறார். அவர் கலை இலக்கியத்துறை யைச் சார்ந்தவர் அல்ல. ஆனால், எல்லா கலை இலக்கியப் படைப் பாளிகளையும் அறிந்து வைத்திருக் கிறார். சேகர் அவர்களினது இந்தப் பண்பானது அவரது மகளின் ஆய்வு முயற்சிக்கு ரொம்பவும் உதவக் இருக்கிறது என்றே நமக்குப்பட்டது. ஏனெனில் பிர சாந்தி அவர்கள் தமது ஆய்வுக்கான தேவையான தரவுகளை இலங்கை
கூடியதாக
படைப்பாளிகளினது படைப்பு களினூடாக பெறுகின்ற முயற்சியில் இருப்பதனால், அவரது தந்தையின் கலை இலக்கியப் படைப்பாளியின் பரிச்சயம் அவருக்கு உதவக்கூடிய தாக இருக்கிறது.
அவரது ஆய்வு தலைப்பை யிட்டு அவருடன் உரையாடிக் கொண்டிருந்ததன்
Կ*ワ ygees
காரணமாக
எனக்குள் சில கருத்துக்கள்
தோன்றின.
காலனித்துவமானது நம்மை நீண்ட காலமாக தனது ஆதிக்கத்திற் குள் வைத்திருந்ததன் காரணமாக சுதந்திரத்திற்குப் பின்னும் அதாவது பின்-காலனித்துவ காலகட்டத் திலும், விட்டுச் சென்ற எச்ச சொச்சங்களின்
அக்காலனித்துவிட்டானது
காரணமாக அதன் தாக்கம் நமது வாழ்வுச் சூழலில் இருந்துகொண்டே இருக்கிறது. அதாவது காலனித்துவாட்சி முறைமை முடிவுக்கு வந்த பின்னும், சுதந்திரம் அடைந்த ந1 டுகளின் சமூகங்கள் தமக்கான சுதே `ய சமூக கலாசாரச் சூழலுக்கு முற்றும் முழுதுமாக தம்மை மாற்றிக்
தொடர்ந்து
அரசியல்
கொண்டன என்று சொ: லிவிட
முடியாது. பின் காலனித்துவ கால கட்டத்தில் அந்த நாடுகள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளுக்கு கால னித்துவம் விட்டுச் சென்ற பல மட்டத்திலான எச்ச சொச்சங்கள் மறைமுகமான காரணிகளாக அமைந்திருக்கின்றன என்பதை நாம் வரலாற்று ரீதியாக கண்டு கொண்டதே உண்மையாகும்.
அத்தகைய வரலாற்று அனு பவங்களை பதிவு செய்கின்ற படைப் பற்றியத் தேடலும் பிரசாந்தியிடம் அதிக அளவுக்கு இருப்பது தெரிந்தது. அத்தகையத் தடத்தில் நின்று இளம் ஆய்வாளர் பிரசாந்தி சேகர் தனது ஆய்வுக்கான
19
புகளைப்

Page 12
t
தேடலைத் தொடரும் பொழுது பல புதிய அவருக்குக் கிட்டும்.
கருத்துக்களின் தரிசனம்
அத்தரிசனத்தினூடாக அவரது ஆய்வுக்கான முடிவுகள் காலனித் துவ பின்-காலனித்துவ காலகட்டத் திற்கான உறவுகளையிட்டு பல புதிய வரலாற்று உண்மைகளை நமக்க கொண்டுவரும் என நம்பலாம்.
3 866OT6D66 ਪੁp6D நூல்களும், பண்டிதர் உமா மகேஸ்வரனும், புத்தக வெளியீட்டு விழாக்களும்,
துரைவியின் 73வது பிறந்தநாள் நினைவு நிகழ்வு முடிந்த மறுநாள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஜின்னாஹ்வின் இரு சிறுவர் இலக்கிய நூல்களும் அவரது சிறு கதைகளின் தொகுதி ஒன்றுமாக மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அழகிய முறையில் வெளியிடப் பட்டு இருக்கும் நூல்கள் மூலம் சிறுவர் இலக்கியத்தில் ஜின்னாஹ் வின் பங்களிப்பை எடுத்துக்காட்டி இருப்பதோடு, அவரது சிறுகதைத் தொகுதியின் மூலம் அவரது சிறு கதையிட்ட அவரது ஆற்றலை காணக்கூடியதாக உள்ளது.
பொதுவாக புத்தக வெளியீட்டு விழாக்களில் தொகையில் கூடியள வில் பேச்சாளர்களை வரவழைப்பது மூலம், கடைசிப் பேச்சாளராக வரும்
20
அந்த நூலை எழுதிய படைப்பாளி குறைந்த குறைந்த நிலையில் அதாவது சுருக்க மாக பேசவேண்டிய அவலத்திற்கு இட்டுச் செல்கிறது. அத்தோடு சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற
அழைக்கப்பட்டவர் சுருக்கமாக
கூட்டத்தினரிடையே
பேசவேண்டிய நிலைக்கு ஆளாகு கிறார். நண்பர் ஜின்னாஹ் அவர் களின் இந்த விழாவும் அந்த ஒரு நிலைமையில் நடந்து முடிந்தமை மனசை வருடியது.
ஆகவே, இனிமேல் நூல் வெளியீட்டு விழாக்களை ஏற்பாடு செய்பவர்கள் குறைந்த பேச்
சாளர்கள் கொண்ட விழாக்களாய் ஏற்பாடு செய்தல் நல்லது. அப்படி யும் தவிர்க்க முடியாத நிலையில் நிறைய பேச்சாளர்களை அழைக்கத் தான் வேண்டிய நிர்ப்பந்தத்தி லுள்ள படைப்பாளிகள் புத்திசாலித் தனமாகவும் பாதுகாப்பும் கருதி கூட்டம் ஆரம்பிக்கும் பொழுதே அவர்கள் பேசி முடித்துவிடுவதோடு சிறப்புச் சொற்பொழிவுக்காக அழைக்கப்பட்ட அதிதியையும் பேச வைத்துவிட வேண்டும்.
ஆனாலும், நண்பர் ஜின்னாஹ் அவர்களின் அவ்விழாவில் பேசியவர் களில் ஒருவர்
கவர்ந்தார். அவர்தான் பண்டிதர்
என் LD øð øð) SF
உமா மகேஸ்வரன் அவர்கள்.
அவரைப் பற்றி பெயரளவில் நான் கேள்விபட்டு இருந்தாலும்,

அவரது பேச்சையோ அவரது எழுத்துக்களையோ கேட்கவோ, படிக்கவோ எனக்குச் சந்தர்ப்பம் கிட்டியதில்லை. (ஆனால் அவர் படித்து வருகிறார் என்று அவர் என்னிடம்
நம்ம எழுத்துக்களைப்
சொன்ன பொழுது எனக்கு வெட்க மாகப் போய்விட்டது.
அவ்விழாவில் அவர் ஆற்றிய தலைமையுரை அவர் ஒரு சிறந்த அடக்கமான அறிஞர் என எடுத்துக் காட்டியது. அத்தலைமையுரையில் அவர் எடுத்துப் பேசிய விடயங் களை கேட்டபொழுது, பண்டிதர் களுக்கெல்லாம் நவீன விடயங்களில் அக்கறையோ தெளிவோ இல்லை என்று எண்ணிக் கொண்டிருப்பவர் கள் ஏமாற்றம் அடைந்து இருப்பார் கள் என்பது நிச்சயம்.
நவீன உளவியல் கோட்பாடு கள் முதல் இன்றைய சினிமாப் பாடல்களின் சீரழிவுகள் வரையி லான அவரது பரிச்சயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
அத்தோடு. அவரது குறிப்பிட்ட இன்னொரு கருத்தும் என் மனதை கவர்ந்தது. அதாவது பட்டங்கள் விருதுகள் ஒரு படைப்பாளிக்கு முக்கியம் இல்லை என்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன்னர் பல்கலைக்கழகம் அளித்த விருதை ஆசிரியர் நிராகரித்த
சம்பவங்களையும் அவர் சுட்டிக்
யாழ்.
மல்லிகை
காட்டினார். மேலும் சமகால தமிழ்
கலை இலக்கியத்தைப் பற்றிய பரிச்சயமும் அதனிட்ட ரசனையும் அவரிடம் நிறையவே இருப்பது
தெரிந்தது.
அவரைப் போன்ற அடக்கமான அறிஞரை நம் படைப்பாளிகள் தமது நூல் வெளியீட்டு விழாக்களில் அழைத்து பேச வைக்க வேண்டும். அப்படி அழைப்பது நமக்கு சிறப்பாக இருக்கும். ஆனால் அப்படி அழைக்கும் பொழுது அவ்விழாவில் அவரைப் போன்றவர்களை முதலில் பேச வைத்துவிட வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
/2 NY மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
நாம் பயணித்த
gabas againg
(சிறுகதைத் தொகுதி) ப. ஆப்டீன்
ზჭ-29%fჯ A. цв4lрді As భళ్ల
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
(வரலாற்று நூல்) தில்லை நடராஜா
21

Page 13
22
தற்போது விற்பனையில்
**
இலங்கையில் வன்னியர் - பேராசிரியர் சி. பத்மநாதன்
வரலாற்றுத்துறை பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்.
இலங்கையிலே தமிழர் வாழும் பிரதேசங்களில் யாழ்ப்பாணம். கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் முற்காலங்களில் வன்னியர் என்னும் சிற்றரசரின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தன. எனவே, இலங்கைத் தமிழரின் வரலாற்றில் வன்னியர் கொண்டிருந்த பங்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த உணர்வின் அடிப்படையில் உருப்பெற்றதே இலங்கையில் வன்னியர் என்னும் இந்நூலாகும். தனது சேவைக்காலம் முழுவதும் பல இடர்ப்பாடுகளின் மத்தியில் இலங்கைத் தமிழர் வரலாற்றை ஆராய்வதிலும் அதனைத் தெளிவுபடுத்துவதிலும் தனிமையாகவும் அபிமான உணர்வோடும் ஈடுபட்ட இந்நூலாசிரியர் தனது நீண்டகால முயற்சிகளின் விளைவாக இந்நூைைல உருவாக்கியுள்ளார். இலங்கைத் தமிழரின் வரலாற்றில் இருந்து வந்த ஒரு வெற்றிடத்தை நிரப்பும் வண்ணமாக இந்நூல் அமைந்துள்ளது. பக்கங்கள் x + 177
விலை 350/= (சாதாரணப் பதிப்பு) ISBN 955-9429-43-4
600/= (6)(84u uálůu) , ISBN 955-9429-45-0
Tsubas
s ry.
யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்கள்
- கலாநிதி எஸ். சிவலிங்கராஜா
தமிழ்த்துறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
"யாழ்ப்பாணச் சமூகம் : கனகி புராணம் முதல் கானல் நாவல் வரை எனும் கட்டுரை தொடங்கி யாழ்ப்பாணத்துக் கும்மிப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், உறவுமுறைச் சொற்கள், பெயர் வழக்குகள், குறியீட்டுப் பேச்சு வழக்குகள், மரபு வழிச் சீர்மியங்கள். அப்பிரதேச மக்களிடையே வழங்கும் திட்டுகள், புகைப்படக்கலை என 13 கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் யாழ்ப்பாணத்து அரிகைப் பாரம்பரியங்கள் தொடர்பான திடமான யதார்த்தங்களின் தரிசனமாய் அமைகின்றது. வாய்மொழி மரபுகள் யாழ்ப்பாணத்து மக்கள் வாழ்வியலின் உள்ளடக்க உறுதியை எவ்வளவு துரம் தாங்கியுள்ளன என்பதைத் துள்ளியமாக அறிவதற்கு இந்நூல் வழிகாட்டுகின்றது.
பக்கங்கள் X + 117
விலை 225/=(சாதாரணப் பதிப்பு) ISBN 955-9429-22-1
குமரன் புத்தக இல்லம்
201 டாம் வீதி, கொழும்பு - 12 3. மெய்கை விநாயகர் தெரு,
தொ.பேசி : 2421388
சென்னை - 600 026,
 
 
 
 
 
 
 

முகுநி3ள்
([[0(მენI[i][მნCნmს
கூசுதாராஜ்
4. ஆண்களும் பூதமும்
ஒர் ஆண் எவ்வாறான தேவைகளுக்கெல்லாம் (அல்லது சேவைகளுக்கு) லாயக்கானவன் என்பது சில சந்தர்ப்பங்களில் வேடிக்கைக்குரிய விஷயமாயிருக்கிறது. ஆண் என்பவன் ஆணாக மட்டுமன்றி மனைவிக்குக் கணவன்ாகவும், பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் இருக்கிறான்.
சரி, அப்பாவின் கதைக்குப் பிறகு வரலாம். உங்களை இப்போது நேரடியாக கதை மையத்துக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது.
கொழும்பிலுள்ள அந்த வைத்தியசாலையின் குறிப்பிட்ட ‘வார்ட்"டிற்கு போய்ச் சேர்ந்த போது மாலை ஐந்து மணியாகியிருந்தது. வெளியார், நோயாளரைப் பார்வையிடும் நேரமாகையால் பரபரப்பாகவும். கலகலப்பாகவும் இருந்தது. (பொதுவாக வைத்தியசாலைகளில் நோயாளரைப் பார்வையிடும் நேரங்கள் கலகலப்பாகி விடுகின்றன என்பதும் என்னவோ உண்மைதான்) நான் வைத்தியசாலைக்கு எந்த நோயாளரையும் பார்ப்பதற்காகப் போயிருக்கவில்லை. என் மகனை அந்த வார்ட்டில் அட்மிட்' பண்ண வேண்டியிருந்தது. பத்து வயது மகன். முதல் நாள் இரவிலிருந்து வயிற்று நோவினால் துடித்துச் சோர்ந்து போயிருந்தான். பிள்ளையின் வேதனையைத் தாங்க முடியாது அவனைவிட நான் அதிகம் சோர்ந்து போயிருந்தேன்.
அரச வைத்தியசாலையாயினும் அதன் தோற்றம் ஆச்சரியப்படும் வகையில் தூய்மையாயிருந்தது. மருந்து மணங்கள் இல்லை. குழந்தைகளுக்கான அந்த வார்ட் பலவிதமான விளையாட்டுப் பொம்மைகளால் நிறைந்திருந்தது. குழந்தைகள் பலர் தம் நோய் மறந்து, விளையாட்டுப் பொருட்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
நான் என் மகனின் முகத்தைப் பார்த்தேன். மலர்ச்சியான ஒரு புன்முறுவல் அவ னிடத்தில் தோன்றியது. அவனது மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்கள் மட்டுமல்ல, ஆஸ்பத்திரியின் தூய்மையான தோற்றமும் ஒரு காரணம் என்பது எனக்குத் தெரியும்.
முதல் நாள் இரவு ஒன்பது மணியைப் போல் வயிற்றைக் கைகளால் அழுத்திக் கொண்டு அழத் தொடங்கினான். அடிவயிற்றில் வலி. முதலுதவியாக பனடோல் கொடுத்துப் பார்த்தோம். மனைவி, வேறு விதமான கை வைத்தியங்களையும் செய்து பார்த்தாள். அதற்கும் கேட்கவில்லை. படுக்கையில் சுருண்டு சுருண்டு துடித்துக் கொண்டிருந்தான், மகன். பதினொரு மணியளவில் அண்மையிலிருந்த வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றேன்.
23

Page 14
Կ UQ:ಸರಾಜ
மகனைப் பரிசோதித்த வைத்தியர், முதலிற் கேட்ட கேள்வி, "பிள்ளையின் அம்மா வரவில்லையா?" என்பதுதான். “இல்லை நான் அவரது அப்பா!” "இவரை வார்ட்டில் தங்க வைத்து, பரிசோதிக்க கூடத் தங்குவதற்கு அம்மா தேவை!"
நான் பக்கத்தில் இல்லாது மகனை
வேண்டும் .
ஆஸ்பத்திரியில் விட்டுப்போக எனக்கோ மனச்சம்மதம் இல்லை.
"கிட்டத்தான் இருக்கிறோம். தேவையானால் கொண்டு வருகிறேன். இப்போது ஏதாவது மருந்து கொடுங்கள். போதும்!"
டொக்டர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். பிறகு சில குளிசைகளைத் தந்தார். "இது வலியைப் போக்க உதவும். இது பிள்ளையை உறங்க வைக்கும்."
வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்தில் மகன் உறங்கி விட்டான். அவ்வளவு நேரமும் துடித்துக் கொண்டிருந்த என் மனதும் சற்று ஆறுதலடைந்தது. எனி னும் உறங்காமல் விழித்திருந்தேன். மகன் நிம்மதியாக உறங்குகிறானா, வயிற்று வலி அவனது உறக்கத்தைக் கெடுக்குமா என்று கவனித்துக் கொண்டிருந்தேன். மெதுவாக அவனது அடிவயிற்றை அழுத்திப் பார்த்தேன். அழுத்தும்போது அவனுக்கு வலிக்கிறது. உறக்கத்திலும் முறுவலித்தான்.
அதிகாலை திரும்பவும் மகனை வைத்தியசாலைக்கு கொண்டோட வேண்டியிருந்தது. உறக்கத்திலிருந்து விழித்ததும் அல்லது வலி தாங்க முடி யாது விழித்து அழத் தொடங்கிவிட்டான்.
உடனடியாக 'வார்ட்"டில் அனுமதிக்கப்
24
பட வேண்டும் என வைத்தியர் கூறினார். சிறிய சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படலாம். மகனைத் தள்ளு கதிரையில் இருத்தி வார்ட்டிற்கு கொண்டு சென்றோம்.
வார்ட்டை அடைந்ததும், உள் நுழை வது கஷ்டமாயிருந்தது. நடைபாதையில் பலர் நின்றுகொண்டிருந்தனர். உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த அதிகாலையில் நோயாளரைப் பார்க்க இவ்வளவு பேர் வந்திருக்
பலர்
கிறார்களா?. அவர்களையெல்லாம் உள்ளே வர விட்டிருக்கிறார்களே என்றெல்லாம் யோசித்தேன். ஒருவரிடம் இதுபற்றி விசாரித்தேன்.
"எங்களுக்கு படுக்கை. கட்டில்
இல்லை. சிகிச்சைக்காக இந்த வார்ட்டிற்கு அனுமதிக்கப்பட்டு இப்படி உட்கார்ந்திருக்கிறோம்."
எல்லாக் கட்டில்களையும் ஒரு கண்ணோட்டம் விட்டேன். சில கட்டில் களில் இருவர் படுத்திருந்தார்கள்.
மகனுக்கு சேலைன் ஏற்ற வேண்டும் என டொக்டர் குறிப்பிட்டிருந்தார். என்ன செய்யப் போகிறார்களோ என எனக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண் டிருந்தேன். அங்கிருந்த தாதிமார்களிடம் விசாரித்தேன்.
‘‘கொஞ்சம் பொறுங்கள். . . வார்ட்டைக் கவனிக்கும் டொக்டர் வந்ததும் முடிவெடுக்கலாம்!"
பொறுத்தேன். மகன் பொறுமை இழந்து கொண்டிருந்தான். வெளியே மழை பெய்யத் தொடங்கியது. அரைச் சுவரூடாக வார்ட்டிற்குள்ளும் தூவானம்
அடித்தது. நோயாளிகள் மழைக்கு

ஒதுங்கினார்கள். இன்னும் இடைஞ்சல் ஏற்பட்டது.
டொக்டர் வந்ததும் நோயாளிக ளெல்லாம் பரபரத்து ஒரு வரிசையில் (கியூ) நின்றனர். வரிசைக் கிரமமாக ஒவ் வொருவராக அவர் முன் சென்று பரி சோதிக்கப்படுவது வழமையான ஒழுங்கு போலிருந்தது. இவ்வளவு அடிப்படை வசதிகள் போதாத ஒரு வைத்திய சாலையில், அவர்கள் பெரிய மனதுடன் பணி புரிவதை மனதிற் பாராட்டினேன். நோயாளரின் கஷ்ட நிலைமை பற்றிய இரக்க உணர்வும் ஒரு பக்கம்,
டொக்டரின் பணிப்பின் பேரில் ஒரளவுக்கு இயலுமான ஒரு நோயாளியை (அப்படி நான் நினைத்துக் கொண்டேன்.) இறக்கி விட்டு அந்தக் மகனைக் கிடத்தினார்கள். இலையான்கள்
கட்டிலில்
(ஈக்கள்) அங்குமிங்குமாகக் கட்டில் களிலும் மொய்த்துக்கொண்டிருந்தன.
இந்தக் களேபரங்களில் மகனுக்கு வலி மறந்துவிட்டது போலிருந்தது.
அவன் வேறு விதமாக அழத் தொடங்கினான்.
'இங்கை இருக்க மாட்டன்.
வெளியே கொண்டு போங்கோ!...”
நான் அவனது கையைத் தடவி, காலைத் தடவி, தலையைத் தடவி. தாக் காட்டிக் கொண்டிருந்தேன். ஒரிரு மணித்
தியாலங்கள் போய்க்கொண்டிருந்தன.
இடையிடையே தாதிகளிடம் விசாரித் தேன்.
'அவருக்கு இரத்த சோதனை செய்யுமாறு டொக்டர் எழுதியிருக்கிறார். அதற்காக வெயிட் பண்ணை வேண்டி யிருக்கிறது."
எனக்கு வெயிட் பண்ண இயல வில்லை.
"அதைச் சீக்கிரம் பண்ண முடியாதா?”
"அது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக் கிறார்கள்." அந்த விளக்கம் எரிச்சலை ஊட்டியது. "இப்ப என்ன செய்வது?"
“தெரியவில்லை. அதுதான் யோசிக் கிறோம்."
நாளாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பராமரிப்பவர்களுக்கு ஒரு தந்தையின் துடிப்பை விளங்கிக் கொள்வது முடியாமலிருக்கலாம். எனக்குக் கொதி ஏறியது.
"மகனை இங்கிருந்து, விடுவித்து விடுங்கள். நான் கொழும்புக்குக் கொண்டு போய்க் காட்டுகிறேன்.”
"அதற்கு டொக்டரிடம் கேளுங்கள். நாங்கள் முடிவெடுக்க முடியாது.”
டொக்டரும் இனங்கவில்லை. நான் வற்புறுத்தலாயும் தயவுடனும் கேட்டேன். "உங்களுடைய சுயவிருப்பத்தின் பேரில் மகனைக் கூட்டிக் கொண்டு போவதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போகலாம்."
அப்படியே செய்தேன். கதையின் மையத்துக்கு உங்களைக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு, பிறகும் வெளியே சென்று விட்டேன் போலிருக் கிறது.
சரி, இதோ வந்தாயிற்று! கொழும்பு வைத்தியசாலைக்கு வர நேர்ந்தது இவ்வாறுதான். கொழும்பு
25

Page 15
*Uை
வந்து, முதலில் ஒரு குழந்தை ஸ்பெஷ லிஸ்ட் டொக்டரிடம் காட்டியபோது, அவர் பரிசோதித்த பின் இந்த வைத்திய சாலைக்குக் கொண்டு போகுமாறு கூறினார்.
இங்கேயும் அதே மாதிரியான ஒரு பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி யிருந்தது. Għalib grop Groutur?''
"பிள்ளையின் அம்மா வர வார்ட்டிற்குப் பொறுப் பான தாதி கேட்டார்.
'இல்லை அவசரத்தில் வந்தது. வீட்டில் மற்றப் பிள்ளைகளுடன் தாயாரை விட்டு, நான் மட்டும் மகனோடு வந்தேன்.”
“பிள்ளையுடன் இரவு வார்ட்டில் தங்குவதற்கு அவரது அம்மா அல்லது யாராவது பெண்கள்தான் அனுமதிக்கப் படுவார்கள்."
அந்தத் தாதியம்மா மிகவும் கடுமை யாகக் கூறினார்.
புத்தளத்திலிருந்து வந்திருக்கிறேன். உடனடியாக அம்மா
á
நான
வைக் கூப்பிட முடியாது. நான் பிள்ளை
இன்று இரவு மட்டும் என்னை அனுமதியுங்கள். காலையில்
யின் அப்பா.
தாயாரைக் கூப்பிட்டு விடலாம்!"
'இங்கு நோயாளருடன் தங்கு வதற்கு ஆண்களை அனுமதிப்ப தில்லை!"
நான் ஒரு பாசத்துக்குரிய அப்பா வின் முகத்துடன் அவ்விடத்தில் நின் றேன். ஆனாலும் நான் ஒர் ஆணின் முகத்தைக் கொண்டிருந்தேன். அந்த ஒரு காரணத்துக்காக, பிள்ளைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமை (அல்லது உரிமை) மறுக்கப்படுவது போலிருந்தது.
26
பிள்ளைகளுக்கு தாயிடமிருந்து கிடைக் கக்கூடிய பரிவு, பணிவிடை, ஆதரவு, அரவணைப்பு அனைத்தையும் என்னாலும் தரமுடியும்.
எனக்குள் படபடப்பு ஏற்பட்டி ருந்தது. பிள்ளையை மட்டும் "வார்ட்"டில் மறித்து வைத்துக் கொண்டு, ஆண் என்ற காரணத்துக்காக எனக்கு அனுமதி கிடைக் காமற் போய்விடுமோ? இப்படிக் கடுமை திட்டங்கள் இருப்பது எனக்கு ஏற்கனவே தெரியாது. இந்த நிலைமையில் மகனைத் தனிய விட்டுப் போக எனக்குச் சம்மதமுமில்லை.
யான சட்ட
இயன்றவரை அவர்களிடம் தயவு டன் கேட்டேன். வார்ட்டிற்குப் பொறுப் பான டொக்டரிடம் கேட்டுப் பார்க்கு மாறு கூறினார்கள். இவற்றையெல்லாம் ஒரு பக்கத்திலிருந்து அவர் கவனித்துக் கொண்டுதாணிருந்தார். ஆரோக்கியமான இதயத்துடன் பல டொக்டர்கள் உள்ளனர் என்பதற்கு டொக்டராகியிருந்த அந்த இளம் பெண்ணும் ஒரு சான்று!
அவருக்கு முன்னால் போய் மிகவும் மரியாதையுடன் நின்றேன். இன்னொரு முறை அவருக்கு விளக்கம் கூறினேன்.
“இன்று இரவு நில்லுங்கள். காலை யில் தாயாரை அழைத்துவிட வேண்டும். சரியா...???
''f''
நமஸ்காரம் தாயே!)
(உங்களுக்கு பலகோடி
வார்ட் அரைச் சுவர்களினால் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிக்குள்ளும் ஆறு படுக்கைகள். ஒரு பக்கமாக எல்லாப் பாதைகளையும் தொடர்பு படுத்தும் நடைபாதை.

நடைபாதையின் அரைச்சுவர் ஒரமாக உள்ள ஒரு படுக்கையை மகனுக்குக் கொடுக்குமாறு டொக்டர் பணித்தார். அப்படியானால் நான் வார்ட்டிற்குள் நுழையாமல் சுவர் ஒரமாக நின்றபடியே மகனைக் கவனித்துக் கொள்ளலாமாம். சட்டதிட்டங்களை மீறாமலும், எனது உதவும் முகமாகவும் டொக்டர் இப்படியான ஒரு ஒழுங்கு முறையை மேற்கொண்டிருந்தார். W இரவெல்லாம் நான் சுவர் ஒரமாகவே நின்றேன். மகனுக்கு சேலைன் ஏற்றி னார்கள். அரைச் சுவருக்கு மேலாக
இக்கட்டான நில மைக்கு
கையை வார்ட்டிற்குள் செலுத்தி மகனைத் தடவிக் கொடுத்தேன்.
எனக்கு அசதியாகவும், களைப்பாக வும் இருந்தது. முதல்நாள் இரவிலிருந்து நித்திரையில்லை. நெஞ்சுப் படபடப்பு. மனதுக்குள் மகனுக்காகப் பிரார்த்தனை. நித்திரைத் தூக்கம், சுவருடன் தலையை அடித்தது.
நடைபாதையில் ஒரு சில வாங்கு
சிலவேளைகளில்
களும், சில கதிரைகளும் போடப்பட்டி ருந்தன. இரவுப் பணிக்காக வந்திருந்த தாதிமார்களில் சிலர் என்னிடம் வந்து; 'அந்தக் கதிரையில் அமர்ந்து தூங்கலாமே!” எனப் பரிந்துரைத்தனர்.
நான் பெரிய மனதுடன், அவர்களது பரிந்துரையை நன்றி கூறி நிராகரித்தேன். இந்தளவு வாய்ப்பே எனக்குப் போது மென்றிருந்தது. அதைவிடவும் மேலான ஒரு காரணம் எனக்கு மகனை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போக விருப்பமில்லை.
ஒவ்வொரு விதமான நோய்களுடன் ஒவ்வொரு குழந்தைகளும் இருந்தார்கள். உபாதை தாங்காத சில குழந்தைகளின்
f
Y.
UGUGSGDE
அழுகைச் சத்தங்களும் கேட்டன. அவர் களைத் தாய்மார் தேற்றி உறங்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சில தாய்மார்கள் அங்கும் இங்குமாகத் திரிந்து தேவையான சுடுநீர் போன்றவற்றை எடுத்தார்கள். பக்கத்துப் படுக்கையில் குழந்தையை வைத்திருந்த தாயார் எனக்குத் தேநீர் தயாரித்துத் தந்தார்.
இரவாக ஆக, குழந்தைகள் உறக்க மடைந்து கொண்டிருந்தார்கள். அழுகைச் சத்தங்கள் குறைந்து கெர்ண் டிருந்தன.
ஒரு கட்டத்தில் என்னாலும் தாங்க முடியவில்லை. தூக்கம் அந்த அளவுக்கு கண்ணுக்குள் முட்டிப் பேய் விருந்தது. கண்கள் மூடி மூடிச் சொருகிக் கொண்டிருந்தன. மகனும் உ க்கத்தில்
ஆழ்ந்து போயிருந்தான்.
காலாற அமர வேண்டும் போலி
ருந்தது. பக்கத்திலிருந்த கதிரையில் போய்
அமர்ந்து விட்டேன். கண்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று தாமாக மூடிக் கொண்டன. ஒரு குழந்தையின் வீரிட்ட அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டி ருந்தது. உறக்கத்திலும் அந்தச் சத்தம் எனக்குக் கேட்டது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட ஒரு நிலை.
எனினும் நான் அந்தச் சத்தத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. நோய் வாய்ப்பட்ட குழந்தைகள் உபாதையில் அழுகின்றன. அவற்றைக் கவனிப்பதற்கு தாய்மாரும், தாதிமாரும் இருக்கிறார்கள். நான், எனது மகனைப் பற்றி மட்டும் (உறக்கத்திலும்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
27

Page 16
ウ 6696)
நித்திரை இன்னுமின்னும் என்னைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது.
யாரோ என்னைத் தட்டினார்கள். திடுக்குற்று விழித்தேன். என் முன்னே இரவு பணிபுரியும் தாதி ஒருவர் நின்றார். 'ஒ'வெனக் குளறும் ஒரு குழந்தையின் சத்தம் கேட்டுக் கொண்டி ருந்தது. மற்றப்படி அவரவர் பாட்டில் அரைத் தூக்கத்திலோ, முழுத் தூக்கத் திலோ அமைதியாயிருந்தார்கள்.
எனத் தாதியிடம்
‘'என்ன ???
கேட்டேன்.
ஒரு உதவி செய்ய முடியுமா?"
நான் தடுமாறினேன். 'என்ன
உதவி???
'என்னோடு கொஞ்சம் வர முடியுமா?. குழந்தையொன்று அழுது குளறிக் கொண்டிருக்கிறது. அழுது அழுது களைத்து விட்டது. என்ன செய்தும் அடக்க முடியாமலிருக்கிறது.”
"நான் வந்து என்ன செய்வது?" (எனக்கு எவ்வித மந்திர மாய வித்தை களும் தெரியாதே!)
"அழுகையை நிறுத்தாவிட்டால் பூதம் வந்து உன்னைப் பிடிச்சுக் கொண்டு போய் விடும் என்ற குழந்தைக் குச் சொல்லியிருக்கிறோம். நீங்கள் வந்து கொஞ்சம் பயமுறுத்தி விடுங்கள்!"
அட கடவுளே! என்னைப் பார்க்கப் பூதம் மாதிரியா இருக்கிறது? என்னைப் பார்க்க அவ்வளவு விகாரமாக வா தோன்றுகிறது? இரண்டு நாட்களாக நித்திரையில்லை, அலைச்சல். ஒரு வேளை அப்படித்தான் தோன்றுகிறதோ என்னவோ! அந்தப் பெண்ணின் முன்
28
எனது முகத்தைக் காட்டிக் கொண்டு நிற்பதற்குக் கூச்சமாகக்கூட இருந்தது. தலைமுடியைக் கையினால் கோதிவிட்டு சரி செய்தேன். கண்களைத் துடைத்தேன்.
"வரமுடியுமா?. ஒரு சின்ன உதவி தானே?"
சங்கடமாயிருந்தது. குழந்தைகளைப் பயமுறுத்துவது எவ்வாறு என்பது எனக்குத் தெரியாது. அதில் சம்மதமும் இல்லை. அதிலும் நோய்வாய்ப்பட்டி ருக்கும் ஒரு குழந்தையைப் பயமுறுத்து வது என்பது எவ்வளவு மோசமான ରଥFuଜd?
'வாருங்கள்! " என்ற வாறு நடந்தாள். செய்வதறியாது தாதியின் பின்னே மெல்ல நடந்து பேனேன்.
போகிற போக்கில் கேட்டேன்.
"குழந்தை ஏன் அழுகிறது?"
"அப்பா வேண்டுமாம்!. இந்த நேரத்தில் அப்பாவை எப்படிக் கொண்டு வருவது?...”
குழந்தை அழுது கொண்டிருந்த பகுதிக்குள் போனோம். தாயார் குழந்தையைத் தூக்கி வைத்திருந்தார். குழந்தை அழுது அழுது மாய்ந்து கொண்டிருந்தது. முகம் முழுதும் கண்ணீர். மூக்கும் வடிந்திருந்தது.
“புத்தே!” (மகன்!) எனது அழைப் புக் குரல் கேட்டதும் குழந்தையின் அழுகை சட்டென நின்றது. ஒர் அதிர்ச்சி போலவும் ஆச்சரியத்துடனும் அதன் பார்வை திரும்பியது.
நான் முகத்தைச் சற்று மறுபக்க மாய்த் திருப்பிக்கொண்டு கைளை நீட்டி னேன். அது என்னிடத்தில் வந்து
விட்டது.

இந்தத் தேசத்தின் அற்புதக் கவிஞர்களில் ஒருவரான புதுவை இரத்தினதுரை அவர்களது தந்தை யார் கந்தையா வரத லிங்கம் அவர்கள் சமீபத்தில் யாழ்ப் பாணத்தில் காலமானார். இவரது பிரிவால் துயருற்றுத் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு மல்லிகை தனது ஆழ்ந்த
துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது. மறைந்த முதியவரின் ஞாபகார்த்தமாக வரதம்" என்ற கவிதைக் கல்வெட்டு ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது.
- ஆசிரியர்
yettee
FOR WEDDING PORTRAITs
EXCELLENT
PHOTOGRAPHERS
MoDERN COMPUTERIZED
FHOTOGRAPHY
& CHILD SITTINGs
300, Modera Street
29

Page 17
30
மைையக இக்ைகியத்தில்
துரைவி ஒரு வரரைற்றுத்
திருப்புமுனை
- ப. ஆப்டீன்
மலையக நூல் வெளியீட்டுத்துறையில் முத்திரை பதித்து ஈழத்து இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய துரைவி" என்னும் துரைவிஸ்வ நாதனின் 73வது பிறந்தநாள் நினைவு நிகழ்வுகள் கடந்த 28.02.2004 சனிக் கிழமை மாலை, கொழும்பு தமிழ்ச் சங்கம் குமாரசுவாமி விநோதன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நினைவு தினநிகழ்வுகளுக்கு மலையக எழுத்தாளர் திரு.தெளிவத்தை
ஜோசப் அவர்கள் தலைமை வகித்தார்.
புகழையும் விளம்பரத்தையும் விரும்பாமல் மலையக நூல் வெளியீட்டுத் துறைக்கு அரும்பணியாற்றி, மலையக இலக்கிய நெஞ்சங்களில் வர்ழ்ந்து கொண்டிருக்கும் அமரர் துரை விஸ்வநாதன் அவர்களைப் பற்றி மிகவும் ஆழமாகவும் விரிவாகவும், திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் தமது தலைமை உரையை நிகழ்த்தினார்.
"துரைவி அவர்கள் ஒரு தொழில் அதிபராக இருந்தாலும், அவர் இலக்கிய ஆர்வலர். பல்துறை சார்ந்த நூல்களைப் படிப்பவர். மலையக இலக்கியத்தை நேசித்தவர். அதற்காகத் தனது சொந்தப் பணத்தையே முதலீடு செய்தவர்.
துரைவி பதிப்பகம் மூலம் மலையக எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை நூலுருவம் பெறச் செய்ததினால் பெருமைக்கும் பெரும் மதிப்புக்கும் உரியவராகத் திகழ்ந்தார்; துரைவி.
ஒரு குறுகிய கால கட்டத்திற்குள் பல முன்னோடி மலையக எழுத்தாளர்களின் ஆக்கங்களைச் சிறந்த நூல்களாக வெளியிட்டு மலையக
 
 
 
 
 
 

நூல் வெளியீட்டுத் துறையை மேம் படுத்தியதற்காக மலையக இலக்கிய உலகம் அமரர் துரை விஸ்வநாதன் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
முதன் முதலாக மலையகச் சிறுகதைத் தொகுதியை வெளி யிடத் தீர்மானித்த போது அது மிகவும் தரமாக வெளியாக வேண்டும் என்பதில்துரைவி மிகவும் கவனம் செலுத்தினார். சிறந்த சிறு கதைகளைத் தெரிவு செய்வதோடு மலையகத்தில் முதன் முதலாக பிரசுரமான சிறுகதை இத்தொகுதி யில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்.”
இவ்வாறு திரு. தெளிவத்தை ஜோசப் தமது நீண்ட தலைமை யுரையில் குறிப்பிட்டார்.
முன்னாள் இந்து இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவ ராஜ் அவர்கள் இலங்கைத் தமிழர் களின் தாயகக் கோட்பாடும் இந்திய வம்சாவளித் தமிழர் களின் நிலைப்பாடும்" என்ற தலைப்பில் துணரவி நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
கலாசார
தமது உரையைத் தொடங்கு வதற்கு முன் அமரர் துரை விஸ்வநாதன் அவர்கள் ஆற்றிய இலக்கியப் பணியை
வெகுவாகப் பாராட்டினார்.
3 6) G6) LI 5
ஒரு தொழிலதிபராக இருந்து
سمبر
ஒDை
இலக்கியத்துறையில் ஈடுபட்டு பெரும் பணியாற்றியமை குறிப் பிடத்தக்கது என்றும், மலையகம் சாராத பல எழுத்தாளர்களும் மலையகத்தை அடிப்படையாகக் கொண்டு அற்புதமான இலக்கியம் படைத்துள்ளனர் என்றும் குறிப் பிட்டார்.
முன்னாள் அமைச்சரின் ஆய் வுரையைத் தொடர்ந்து இடம் பெற்ற கலந்துரையாடலில் முன் னாள் தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ராஜபூரீகாந்தனும், எழுத் தாளரும், சட்டத்தரணியுமான நாவல் நகர் சடகோபன் அவர்களும் தத்தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
இளையதம்பி
மேமன்கவி,
தயானந்தா, சிதம்பரப்பிள்ளை சிவகுமார் ஆகியோர் நிகழ்த்திய கவிதாஞ்சலி சபையோரின் நெஞ்சங் களை ஈர்த்தது. திருமதி துரை விஸ்வநாதன் அவர்கள் சமூக மளித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. திரு. ராஜ்பிரசாத் நன்றியுரை
வழங்கினார்.
39-வது ஆண்டுமலர் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
பாதுகாக்கத் தக்கதான எழுத்துப்படைப்பு இது.
31

Page 18
32
சூடிேதல்கள்
மல்லிகையின் 298ஆம் இதழில் (பெப் 2004) அன்பர் மேமன்கவியின் பத்தியில் பிரசுரமான சில குறிப்புகள் குறித்து எனது அபிப்பிராயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு இக்கடிதத்தை வரைகிறேன்.
"ஒரு படிைப்பில், அப்படைப்பைப் படைத்த படைப்பாளியின் பெயரை அழித்து, ஒரு தீவிரமான வாசகனுக்குக் கொடுத்து அது யாருடைய படைப்பு என்று சொல்லச் சொன்னால், அவனால் சொல்ல முடியுமா? முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.”
இப்படியானதொரு கருத்தியலை அன்பர் மேமன் கவி கொண்டிருப்பது தவறெனவே எனக்குப் படுகிறது. அதுவுமொரு தீவிர வாசகனுக்கு ஒரு படைப்பின் படைப்பாளியை காலந்தாழ்த்தியேனும் அடையாளப்படுத்த முடியாதாகில் இத்தகைய தீவிரவாசகர்நிச்சயமாக வெறும் நுனிப்புல் மேய்ச்சல் காரராகத்தான் இருக்க முடியும்! இலக்கிய அக்கறையோடு படைப்புகளைகருத்தூன்றி வாசிக்கும் ஒரு தீவிரவாசகனுக்கு இந்த விடயத்தில் சிரமமிருக்க முடியாது!
நாவல், சிறுகதை என்ற புனைக்கதை இலக்கியக் கூறுகளில் முத்திரை பதித்த மெளனி, மு.வரதராசன், அகிலன், எஸ்.பொன்னுத்துரை, சட்டநாதன், சாந்தன், முனியப்பதாசன் ஆகியோரது எழுத்துக்களை வாசிக்கும் பொழுது அவைகள் சட்டென படைத்த பிரம்மாவை இனங்காட்டும். இது அவர்கள் தமது எழுத்தின் சுயத்தைக் கலையாமல் காப்பாற்றி வருவதால், வந்ததால் உண்டான தனித்துவம்!
இந்த வகையில் கவிஞர்களான மகாகவி, விக்ரமாதித்தன், கலாப்பிரியா ஆகியோரது கவிதைகளுக்கும் இத்தகைய சிறப்புண்டு! இதை எந்தவொரு தீவிர வாசகனும் நியாயப்படுத்துவான்.
அப்பத்தியில் இன்னோரிடத்தில். “படைப்பாளியின் பெயரை மட்டும் கொடுத்துப் படிக்கச் சொன்னால் மதம் சார்ந்த கருத்தியலை மட்டும் ஒரு வாசகன் அறியக் கூடியதாக இருக்கும்” என அன்பர் மேமன்கவி சுட்டுவதும் சர்ச்சைக்குரிய செய்தியாகும்! ஒர் எழுத்தாளரின் எழுத்தைக் கொண்டு அவரது இலக்கிய அறிவின்தளம்சார்ந்த கொள்கை, வாழும் சூழல் என்பவற்றையும் அறிதல் செய்ய முடியும். இதை மனோதத்துவ நிபுணர்கள் பெரும்பாலும் சாதிப்பார்கள்! இந்தளவிற்கு எமது தமிழ் இலக்கியத் தேடல் இன்னமும் அகலக்கால் ஊன்றவில்லையென்பது விசனத்திற்குரியதே! எழுத்தாளனொருவன் பாவிக்கும் சொற் கூட்டங்கள் அவன் தீவிரவாதியா, அகிம்சைவாதிக்காரனா

என்பதையும் அடையாளப்படுத்தும். இதற்கு மேமன்கவியும் விதிவிலக்கல்ல. குமுதம் வாசிப்பவன்நிச்சயமாகத்தாமரை யில் பிரசுரமாவதை ரசிக்க மாட்டான். தீராநதி’யின் அட்டையில் குமுதம்" என்ற பதிவும் வெள்ளெழுத்தில் உண்டு. குழந்தைகளை அங்குமிங்கும் ஏய்த்துச் சாப்பிட வைக்கும் உத்தியைத்தான் குமுதம் கையாளுகின்றது. குமுதம் தனக் குரித்தான இலட்சக் கணக்கான வாசகர் களை தீராநதி"யின் பக்கமும் இழுப் பதற்கு வலை விரிக்கின்றதென அன்பர் மேமன்கவி கருதுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம், சாத்தியப்படுமாவென் பதை சிறுசஞ்சிகையை வாசிக்கும் வாசகனுக்கு மட்டுமே தீராநதி உவப்பாக இருக்குமென்பதையும் ஒளிவுமறைவின்றி சுட்ட வேண்டியே இருக்கின்றது!
இலக்கிய நலனை ஒட்டி மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை பண்பான முறையில் ஏற்று அன்பர் மேமன் கவிதனது கருதுகோளோடு ஒப்புநோக்கி இலக்கிய உலகிற்கு ஒரு தெளிவான கருத் தினை முன்வைப்பாரெனநம்புகிறேன்.
G85 T.DaseTirt frt தெஹிவளை.
சிற்றே டொன்றின் நாற்பதாவது ஆண்டு மலர் வருகின்ற ஜனவரி 2005-ல் வெளிவரவுள்ளது என்ற மல்லிகை இத ழொன்றின் அறிவித்தலைப் பார்த்த போது, எனக்கு அதற்கான வாழ்வுப் பசளையை நல்கிய உங்களினுடைய இடையறாத உழைப்பை எண்ணியேநான் புளகாங்கிதம் எய்துகின்றேன்.
இங்கும் சரி, தமிழகத்திலும் சரி ஒர் இலக்கியச் சிற்றோடு ஒரிரு ஆண்டு
yeese). অন্ম
களைத் தாங்கிப் பிடித்து வெளிவருவ தென்பதே அரிய சாதனைகளில் ஒன்று தான். அதைச் சாதனையாக்கிக் காட்டி யது தமிழ் கூறும் நல்லுலகில் மல்லிகை மாத்திரம்தான்.
சிற்றிலக்கிய ஏடொன்றைத் தொடர் ந்து நான்கு தஸாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடத்தி வந்ததுடன் "மல்லிகைப் பந்தல்" புத்தக வெளியீட்டு நிறுவனத்தையும் பக்க பலமாக நிறுவி இது வரையும்ஐம்பதுக்கு மேற்பட்டநூல்களை அதனது வெளியீடாகப் பரவலாக வெளி யிட்டு வைத்துள்ளீர்கள். வேறெந்தச் சிற்றேடொன்றும் முனைந்து சாதிக்காத வேலைத்திட்டமிது.
இன்று உங்களைப் பற்றியும் மல்லிகை பற்றியும் பல்வேறு தரப்பினரும் பல வகையான விமர்சனங்களை முன் வைக்கலாம். இது இயல்பாகவே நடை
பெற்றுவரும் ஒன்றுதான்.
உங்களினதும் மல்லிகையினதும் இந்தச் சரித்திர சாதனை, நீங்கள் எம்மை விட்டு மறைந்து போன பின்னர்தான் விதந்து போற்றப்படும்.
வாழும் காலத்திலேயே உங்களது அர்ப்பணிப்பு உழைப்பின்தகைமைகளை மெய்யாகவே உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்.
நீங்கள் செய்யும் இந்த இலக்கிய வேள்வியின் பெறுபேறுகளை நாளைய சந்ததி நேரடியாக அறுவடை செய்யத் தான் போகிறது.
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
நா. அருனகிரிநாதன் (85 mủurr từ
33

Page 19
34
சமூக தேவைக்கான அரங்கச் செயற்திட்டமாக
'நெஞ்சுறுத்தும் கானல் நாடகம்
- தே.தேவானந்த்
செயல்திறன் அரங்க இயக்கம் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து மிதிவெடி கல்வியூட்டல் செயற் திட்டத்தை 2000ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்காக பாடசாலைகளில் மேடையேற்றுவதற்காக 'நெஞ்சுறுத்தும் கானல்’ என்னும் நாடகம் தயாரிக் கப்பட்டது. இந்நாடகம் இதுவரை 147 பாடசாலைகளில் மேடையேற்றப் பட்டுள்ளது. இதனை 65000இற்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பார்த்துப் பயன் பெற்றுள்ளார்கள். இந்நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்தவர் திரு.தே.தேவானந்த். சிறுவர் அரங்க உத்திகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகத்தின் படைப்பாக்க படிமுறை, அளிக்கை முறைமைகள் பற்றிய செயல் அனுபவம் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
எழுத்துருப் படைப்பாக்கம்
'நெஞ்சுறுத்தும் கானல் நாடகத்தைத் தயாரிக்க ஆரம்பித்தபோது எழுத்துரு வொன்று எனது கையில் இருக்கவில்லை. பேசப்பட வேண்டிய விடயங்கள் பற்றிய அறிவு மட்டுமே என்னிடம் காணப்பட்டது. நடிகர்களைச் சந்தித்து அவர்களுக்கு பத்து நாட்கள் நாடகக் களப்பயிற்சி நடத்தினேன். அவர்கள் ஒவ்வொருவரினதும் ஆற்றல்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தெரிந்த வெடிபொருள் பாதிப்புத் தொடர்பான கதைகளைக் கேட்டறிந்து கொண்டேன். மேலதிகமாக வெடிபொருட்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துக் கதைத்தேன். பலரது கதைகளை பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டேன்.
வெடிபொருட்களால் கை, கால்களை இழந்து சிறுவர்கள் படும் துயர்களை அவர்களின் மனஉளைச்சல்களை பெற்றோரின் மனஅவஸ்தைகளைப் பேசுவது என்று தீர்மானித்து எம்மிடமிருந்த கதைகளை நடிகர்களை குழுக்களாகப் பிரித்து அவர்களிடம் கொடுத்தோம். அவர்கள் அந்தக் கதைகளை பல தடவைகள் தமக்குள் மீள மீள வாசித்தார்கள். இதன்பின் அந்தக் கதைகளைக் காட்சிப்படுத்துமாறு

கேட்டோம். ஒவ்வொரு குழுவும் காட்சிப் படுத்தியது. அதன் மூலம் காட்சியாக மேலதிக சிந்தனையைப் பெற்றுக் கொண்டேன். சில கதைகளை புத்தாக்க முறை மூலம் காட்சித் தொகுதிகளாக் கிப் பார்த்தோம். இந்த வகையான செயற் பாடுகள் மூலம் எனக்கு நாடகத்தின் பரு வறையான வடிவம் மனதுள் உருப் பெற்றது. அதனை எழுதிக் கொண்டேன். எழுதியவற்றை நடிகர்களுக்கு வாசித்துக் கட்டி அவர்களின் ஆலோசனைகளை யும் கேட்டு மீள எழுதிக் கொண்டேன்.
இப்போது எழுத்துருவின்படி காட்சி களை ஒழுங்குபடுத்திக் கொண்டோம். நாடகத்தின் சில இடங்களுக்கு பாடல்கள் தேவைப்பட்டன. கவித்துவமான வரி களுக்கு கலாநிதி இ.முருகையனை நாடி லேIம். மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். நாம் - 600 اhi أم) وأنه أزرارزه 15 ارزم الداليا فيون اl B | 1 أ5ل ᏧᏏ f↑ [ " Ꮷf Ꮠ6Ꮌ) ol↑ [Ꭲ இடங்களுக்குப் பாடல்கள் எழுதித் தரு வதாகச் சொன்ன 1. அவ்வாறே செயற் LJA (BIL) (o ","i")) (31 liv. Abdilbi (ypy bo0): யன் வந்தபோது இசையமைப்பாளர் த.றொபேட்டும் எம்முடன் இணைந்திருந் தார். கவிஞர் இ.முருகையன் பாடல்கள் போ 1ெ} பேட் உடனுக்குடன் இசை யமைத்துக் கொடுத்தார். சில சந்தர்ப்பங் களில் பாடல் தருக்களை றொபேட் கொடுக்க கவிஞர் முருகையன் பாடல் வரிகளைப் போட்டுக் கொடுத்தார். சில வேளைகளில் நடிகர்களின் நடிப்பு அசை வியக்கம்
Llflt , ᎦᎳᏕᎯ56il
1i த்து தேவையான
என்பனவற்றைப் பார்த்தும்
ht:பூதப்பட்டன.
இதன் பின் கவிஞர் முருகையனின்
பIடல்க6ையும் இ60000த்து ஒரு 61ழுத்
துருவை எழுதிக்கொண்டேன். நான் 6ழுத் துருவை எழுதுகின்றபோது நெறியாள்கை செய்யும் நினைவு அதிகமாக முன நிற்கும். இது எழுத்துருவை சில வேளை களில் பலவீனப்படுத்துவதாகவும் சில வேளைகளில் பலப்படுத்துவதாகவும் அமைந்துவிடும். எனது எழுத்துருவில் மேடைக் குறிப்புக்கள் காட்சிக் குறிப்புக் கள் அதிகமாகக் காணப்படும்.
'நெஞ்சுறுத்தும் கானல் நாடக 6ழுத்துருவை அதனது இறுதி ஆற்றுகை வரை திருத்திக் கொண்டிருந்தேன். இடங் களுக்கு ஏற்றதாக வெவ்வேறு விடயங் களை முன்னிறுத்த வேண்டி இருந்தது. பார்ப்போரின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப தாக வெவ்வேறு சில மாற்றங்களை உள் வாங்க வேண்டியிருந்தது. இவற்றிற்கான விட்டுக்கெடுப்புக்களைக் கொண்டத
கவே 'நெஞ்சுறுத்தும் கானல்’ நாடக 6 KLÇEbblb H T 6307 LULU HJ. i 3t) .SE,ốFAJT
நாடக மேடையேற்றத்திற்கு பினபுதான நாடக எழுத்துருவை பூர்த்தியாக்கினேன்.
அளிக்கை முறைமை
நெஞ்சுறுத்தும் blobல் நாடகம் நாb பது நிமிட நேர அளிக்கை நேரத்தைக் கொண்டது. இதனோடு நாடகத்தைப் பார்ப்பதற்கு வரும் சிறுவர்களை தயார் படுத்தல், சிறுவர்களுக்கான விளக்கsயுரை என்பனவும் ஆற்றுகையில் உள்ளடக்கி யிருக்கும். மொத்தமாக நாடக அளிக் கைக்கான நேரம் ஒரு மணித்தியாலமாக இருக்கும்.
3.
5

Page 20
UD GUSGSGOQEE
1. பார்வையாளர்களான சிறுவர்களை தயார்படுத்துதல்
நாம் நாடகத்தை அளிக்கை செய் வதற்காக பாடசாலைக்குச் செல்லும்போது அதிகமான பாடசாலைகளில் ஆசிரியர் களும் அதிபர்களும் பிரம்பும் கையுமாக நாடகம் நடைபெறும் மண்டபத்துக்குள் நின்று பிள்ளைகளை உறுக்கியபடி நிற் பார்கள். வரிசையாகப் போ, சத்தம் போடாதே, வாயில் கைவை என்ற சத்தங் களைக் கேட்கக் கூடியதாக இருக்கும். சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு பிரம்பினால் அடிப்பார்கள். பயம் நிறைந்த பீதி மாணவர்கள் மத்தியில் நிலவும்.
மாணவர்கள் மத்தியில் காணப்படும் இந்த வகையான இறுக் கமான நிலைமையை வென்று நாடகம் போட வேண்டியவர்களாகவே நாம் இருந்தோம். இதனால் நாம் மாணவர்களை தளர் நிலைக்குக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம். இதில முதலில் மாணவர்களுக்கு நாம் யார்? ஏன் பாடசாலை வந்திருக்கின்றோம்? என்ன செய்யப் போகின்றோம்? போன்ற விபரங்களைத் தெரிவிப்போம். பிள்ளை களிடம் ஏன் இந்த மண்டபத்தில் கூடி பிருக்கின்றீர்கள் என்று கேட்போம். பிள்ளைகள் பதில் சொல்லத் தயங்கு வார்கள். நாம் மீண்டும் மீண்டும் கேட் போம். பின் மெல்ல மெல்ல பதில் சொல்ல ஆரம்பித்து மிகச் சத்தமாக தில் சொல்லத் தயாராகி விடுவார்கள். இதனைத் தொடர்ந்து நாடகம் பார்க்க வந்த அனைத்து மாணவர்களையும் இணைத்து சில விளையாட்டுக்களை விளைu Tடுவோம். விளையாட்டுக்கள்
36
மண்டபத்தினுள் இருந்து விளையாடு வதாகவும், மண்டபத்திற்கு வெளியே காணப்படும் பாடசாலை முற்றத்தில் விளையாடுவதாகவும் இருக்கும். உள்ளும் வெளியும் என்பது பாடசாலை அதிபர் களைப் பொறுத்து வேறுபடும்.
மண்டபத்திற்குள் விளையாடுவதாக இருந்தால் புகையிரதம் ஓடுதல் என்ற விளையாட்டை விளையாடுவோம். மான வர்களை இரண்டாகப் பிரித்து நடுவில் ஒருவர் நின்று இரண்டு கைகளையும் மேலே உயர்த்திப் பிடித்து கைகளை மாறி மாறி உயர்த்தி தாழ்த்தி அசைப் பதினூடாக இரண்டு பிரிவினரையும் மாறி மாறி கைதட்டச் சொல்லுவார். முதலில் குறைந்த வேகத்தில் ஆரம்பித்து கூடிய வேகத்திற்கு கையசைவு செல்லும். அப்பே புகையிரதத்தின் சத்தம் கேட்கும். புகையிரதத்தின் சத்தத்தை உணர்ந்ததும் மாணவர்கள் சந்தோஷமடைவார்கள். அவர்கள் முகம் மலர்ந்து சிரிப்போடு 36f6ÖÖTÜBU(Bub.
மண்டபத்திற்கு வெளியே விளையாடு வதாயின் கிராமிய விளையாட்டான 'பசுவும் புலியும் விளையாட்டை விளை யாடுவோம். சிறுவர்கள் வட்டமாகக் கை கோர்த்து நிற்பார்கள். இது வேலியாகக் கருதப்படும். வட்டத்தினுள் ஒரு சிறுவன் பகவாகவும், வட்டத்துக்கு வெளியே இன் னொரு சிறுவன் புலியாகவும் நிற்பான். புலி வட்டத்தைச் சுற்றி சுற்றி வந்து 'சங்கிலி புங்கிலி கதவைத் திற' என்று கத்தும். வேலிகள் நான் மாட்டேன் தேங்காய் புலி என்று பதில் சொல்லும். பின் புலி பசுவைப் படிப்பதற்காகத் துரத்தும். பசு ஒடும். வேலிகள் மறிக்கும்.

இப்படி விளையாட்டு கலகலப்பாக அமை யும். இந்த விளையாட்டை விளையாடும் போது பிள்ளைகள் உற்சாகமாகவும், சுறு சுறுப் பாகவும் காணப் படுவார்கள் . தொடர்ந்து விளையாட ஆர்வமாக இருப் பார்கள். முன்பு காணப்பட்ட இறுக்கத் திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான ஒரு சூழலுக்குள் வந்துவிடுவார்கள். இதன்பின் பிள்ளைகளுக்கு ஒரு பாடல் சொல்லிக் 'கொடுப்போம். பாடலை எல்லாப் பிள்ளை களும் பாடுவார்கள். இதில் அனேகமாக குழந்தை ம.சண்முகலிங்கம் 'யாரொடு நோகேன்’ என்ற நாடகத்தில் எழுதிய ‘சுக்குப்பக்கு ரப்பர் தோட்டம்' என்ற பாடல் பாடப்படும். இப்பாடலை பிள்ளைகள் மிகவும் விருப்புடனும் ஆர்வத்துடனும் படிப்பார்கள்.
6) சுக்குப் பக்கு றப்பர்
தோட்டம் சுத்தி சுத்தி சுப்பர்ர கொல்லை அம்புலி மாமா அழகழ சொக்கா எங்கே போறாய்? காட்டுக்குப் போறேன் காட்டுக்கு ஏன்? கம்பு வெட்ட கம்பு ஏன்? மாடு சாய்க்க மாடு ஏன்? சாணி போட சாணி ஏன்? வீடு மெழுக வீடு ஏன்? பிள்ளை வளர பிள்ளை ஏன்? பள்ளிக்குப் போக பள்ளி ஏன்? பாடம் படிக்க LITLID 6Ј6' LJU LID 6ЈТЊlab பட்டம் ஏன்? மனிசரா வாழ
சிறுவர்களைத் தயார்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவோம். ஏனெனில் நாடக ஆற்றுகை பிள்ளைகளும் பங்கு கொள்வதாக இருப்பதனால் ஆகும். பிள்ளைகளின் பங்குபற்றலை தூண்டு
ITLE
ཅ།
வதற்கு தயார்ப்படுத்தல் பணி மிக முக்கியமானது.
பாடல் முடிய சிறுவர்களுக்கு வெடி பொருட்கள் தொடர்பான விளக்கமொன்று வழங்கப்படும். இதற்கு மிதிவெடிகளின் வடிவங்கள் அவற்றினால் பாதிக்கப்பட் டோர், வெடிபொருட்கள் காணப்படும் இடங்கள் என்பவற்றை வரைந்த பெரிய காட்சித் திரைகளைப் பயன்படுத்தி விளக்குவோம். காட்சித் திரைகள் மூலம் சிறுவர்கள் வெடிபொருட்கள் பற்றிய அறிவை ஓரளவு பெற்று விடுவார்கள். இதன் பின்பு நாடகம் ஆரம்பமாகும்.
2. நாடக அளிக்கை
'நெஞ்சுறுத்தும் கானல் நாடகத்தைத் தயாரிக்கின்ற போது பாடசாலையில் ஆண்டு 1 முதல் ஆண்டு 13 வரையான வயது வேறுபாடுள்ள சிறுவர்கள் ஒன்றாக இருந்து பார்ப்பதற்குரியதான அம்சங் களை, விடயங்களை உள்ளடக்க வேண் டிய நிலையில் நாம் இருந்தோம்.
மாணவர்களுககு வெடிபொருட்கள் தொடர்பாக கற்பிக்கப் போகிறோம். இதற்கு எவ்வாறு அரங்கை ஒரு ஊடக மாகப் பாவிக்கலாம்? இதனை எவ்வாறு மகிழ்ந்து கற்பதற்குரியதான ஒன்றாக கொடுக்க முடியும்? எந்த வகையான அரங்க உத்திகளைப் பயன்படுத்த முடியும்? போன்ற கேள்விகள் நாடகத் தயாரிப்பின்போது எழுந்தன. அதிகமாக சிறுவர் அரங்க அளிக்கையில் காணப் படும் பல்வகைத் தன்மைகளை நாம் பயன்படுத்திக் கொண்டோம். இடையி டையே கட்டிளமைப் பருவத்தினருக்
37

Page 21
lyses
குரியதான பண்புகளையும் நாடக அளிக்கையில் உள்வாங்கி உள்ளோம்.
சிறுவர்களுக்கு மிக அருகில் இருக் கக் கூடியதான உண்மைக் கதை யொன்றை நாடகத்தின் பிரதான கதை யாக நகர்த்திச் செல்கின்றோம். மிதிவெடி யால் கால் பறிபோன சிறுமியின் கதை பார்வையாளர்களான சிறுவர்கள் புரிந்துக் கொள்ளக் கூடியதாக எடுத்துரைக்கப்படு கின்றது. சிறுமியின் நினைவுக் காட்சிகள் அளிக்கை செய்யப்படும்போது கதை பின் னோக்கி நகரும் அதேவேளை யதார்த்த வாழ்வின் சம்பவங்கள் முன்னோக்கியும் நகரும் பொதுவில் நாடகத்தின் அளிக்கைக் கோடுகள் நேர்கோடாகவும் கிடைக்கோடாகவும் காணப்படுகின்றன.
நாடகத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளை யின் கனவில் தோன்றுவதாக மிருகங் களைப் பாத்திரமாகக் கொண்ட சிறுவர் நாடகம் ஒன்று அளிக்கை செய்யப்படு கின்றது. நாடகத்திற்குள் நாடகம் என்ற உத்திமுறை பயன்படுத்துகின்றது. பத்து நிமிட நேரம் எடுக்கின்ற இந்தப் பகுதி அனைத்து வயது மாணவர்களையும் வெகுவாகக் கவர்வதையும் அவர்கள் நினைவில் அதிகமாக நிற்பதையும் காண முடிகிறது.
மாணவர்களுக்கு விருப்பமான கிராமிய விளையாட்டுக்கள், விளையாட் டுக் களுடன் இணைந்த பாடல்கள் அளிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுக்கள் இரண்டு வகையில் காணப்படுகின்றன. நடிகர்கள் மேடையில் தமக்குள் விளையாடுதல். இதில் பார்வை யாளர்கள் பங்கு கொள்ள மாட்டார்கள். நடிகர்களும் பார்வையாளர்களில் சிலரும்
38
இணைந்து மேடையிலும் மேடைக்குக் கீழ் உள்ள பகுதிகளிலும் விளையாடுதல்.
பார்வையாளர்களான சிறுவர்கள் நடிகர்களுடன் இங்கு நடிகர்கள் பெரியவர் களாக இருப்பதால் அவர்களுடன் கூடி விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி யடைவார்கள். இவ்வாறான செயற்பாடுகள் நடிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும்
இடையில் நெருங்கிய உறவை ஏற்படுத்
தத் துணை நிற்கின்றன. இங்கு பயன் படுத்தப்படும் விளையாட்டுக்கள் இலகு வானவையாக பல சிறார்கள் இணைந்து விளையாடக் கூடியதாக, வெற்றி தோல்வி அற்றதாக காணப்படுகின்றன.
இசை, இசைப்பாடல்கள் என்பன எப் போதும் சிறுவர்களை மிகவும் ஈர்க்
கின்றவைகளாகக் காணப்படுகின்றன.
சிறுவர் நாடகங்களில் அதிகமாக பாடல் கள் பயன்படுத்தப்படுவது வழமை. இங்கு இலகுவான மெட்டுக்கள், பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறார்கள் திருப் பிப் பாடக்கூடியதாக, நினைவில் வைத் திருக்கக்கூடியதாக பாடல்கள் காட்சிப்
படுத்தப்பட்டுள்ளன. பாடல்களுக்கு ஏற்ற
தாக இலகுவான நடனங்களும் அளிக் கையில் இணைக்கப்பட்டுள்ளன. அதிக மான நடனங்கள் பார்த்துக் கொண்டிருக் கின்ற சிறார்களும் பங்குகொண்டு ஆடக் கூடியதாகவே அமைந்திருக்கும். அளிக் கையின் சிலகணங்களில் பார்வையாளர் கள் ஒரு தாள அமைவுக்குள் நின்று
தன்னெழுச்சியான நடனக் கோலத்தை தருவதற்குமான வாய்ப்பையும் அதற்கான வெளியையும் 'நெஞ்சுறுத்தும் கானல்
நாடக அளிக்கை கொண்டுள்ளது.

நாடக முடிவில் பார்வையாளர் களுடன் கலந்துரையாடல் ஒன்று நடை பெறும். அதில் மிதிவெடிப் பாதிப்புக்கள், அவர்களது பிரதேசத்தில் காணப்படும் மிதிவெடிப் பிரதேசங்கள் போன்ற விடயங் கள் கலந்துரையாடப்படும். நாடகத்தில் பேசிய விடயங்கள் தொடர்பாகவும் கேட் கப்படும். இதன் பின் மாணவர்கள் நாட கத்தில் சொல்லப்பட்ட அறிவுறுத்தல்களை எவ்வளவு தூரம் புரிந்துள்ளார்கள் என் பதை அறிவதற்காக நாடகத்தில் நடந்த ஒரு காட்சி மீளச் செய்யப்படும். அனேக மாக அந்தக் காட்சி தவறான, ஆபத்தான செயற்பாடாக அமையும். அதனைச் சரி யான செயற்பாட்டுக்கு வழிநடத்துமாறு மாணவர்கள் கேட்கப்படுவார்கள். அதன் போது அனேகமாக மாணவர்கள் மேடையில் ஏறி செயற்பட்டு அல்லது இருந்தபடி சத்தம் போட்டு சரியான செயற்பாட்டுக்கு வழிவகுப்பார்கள். அதிகமாக பின் வரும் காட்சி மீள நிகழ்த்தப்படும். அதனை சிறுவர்கள் சரியானதாக வழிப்படுத்துவார்கள்.
மாமா ஒருவர் மிதிவெடிப் பிரதேசத் துக்குள் மாடு ஒன்றைக் கட்டுவதற்காக மாட்டைக் கூட்டி வருவார். பார்வையாளர் களான பிள்ளைகள் மாமாவைப் போக வேண்டாம் என்று மறிப்பார்கள். மாமா தான் வழமையாகப் போற பாதை என்று கூறுவார். பிள்ளைகள், மிதிவெடிப் பலகை இருப்பதால் அதற்குள் போக வேண்டாம். மிதிவெடி வெடிக்கும் என்று சொல்லி மாமாவை மேடையில் ஏறி மாறிப்பார்கள். மாமா நன்றி சொல்லி வெளியேறுவார். பின் அனைவரும் பார்வையாளர்களும் நடிகர்களும் இணைந்து பாடலொன்றைப் பாடி மகிழ்வாக முடிப்பார்கள்.
மாணவர்கள் மேடைக்கு ஏறி செயற் படும் செயல் ஆசிரியர்களையும், அதிபர் களையும் ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தி யிருக்கிறது. சர்வதேச நிறுவனங்களில் இருந்து வந்த வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் அதனைப் பார்த்து வியந்திருக் கிறார்கள். இந்த நிலை வருவதற்கு நாடக அளிக்கையின் சீரான வளர்ச்சி நிலையே காரணம்.
peers ஆசிரியரின் பவள விழா ஞாபகார்த்தமாக வெளியிட்டு
வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி
எேழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 41 சிறுகதைகளை உள்ளடக்கிய இரண்டாம் பாகம்
விற்பனையாகின்றது.
நூலகங்களில் இருக்க வேண்டியத் தொகுப்புகள்
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளுங்கள்
#
صمم
N22 yet get
3.

Page 22
40
பீரியந்த சுஜித் அத்தநாயக்க
மல்லிகைப் பூ மணம்
தமிழாக்கம்: இப்னு அஸ"மத்
“இருபத்தி ஒன்பதாம் திகதி எனக்குக் கல்யாணம். றோயல் ஹோட்டலில் நடைபெறுகிறது, முடிந்தால் வாருங்கள்” எனக் கூறியவாறு பிரேமகுமார தனது திருமண அழைப்பிதழை தாயின் மடியில் போட்டான். ஆழப் புதைந்து போயிருந்த தாயின் விழிகளிலிருந்து தீப்பொறிகள் பறந்தன. என்றாலும் எதுவுமே செய்ய முடியாத நிலையில் கஷடப்பட்டவாறு மூச்சுக்களை வெளியே விட்டவாறு அவள் உட்கார்ந்திருந்த கயிற்றுக் கட்டிலின் நுனியில் வந்தமர்ந்தாள்.
தாயின் நெஞ்சுக்குக் குறுக்காக மூச்சலை அங்கும் இங்குமாக ஓடியது. அவளது முகம் முழுவதும் சோகத்தால் மூழ்கிப் போய்க் கிடந்தது. ‘மகன் எங்களை வெறுத்து விட்டான் போல...!” மிகுந்த வேதனையுடன் கூறினாள்.
இது உனக்கு வேண்டும்’ எனக் கூறுமாப்போல் பிரேமகுமார தாயைப் பார்த்தான். தோல்வியைத் தழுவிய உணர்வுகளை வெளிப்படுத்துமாப்போல் தாய் அவனின் பார்வையை எதிர்கொண்டாள்.
தகப்பனார் உள் அறையில் இருந்தவாறு வெற்றிலை இடிக்கும் சத்தம் அவளது சிந்தனைகளை அலைக்கழித்தன. மகனின் புதிய நாடகத்தைப் பற்றி அவருக்குக் கூற அவள் எண்ணிய போது உதடுகள் அசையவில்லை.
தாயின் சோகம் கூடிய முகத்தைப் பார்த்த பிரேமகுமார பார்வையைத் திருப்பி முற்றத்திலிருந்த காய்ந்த மல்லிகைக் கொடியின் மீது வீசிப் புன்னகைத்தான். பூக்கயே இல்லாத, இலைகளும் உதிர்ந்த போன முதிர்ந்த அந்த மல்லிகைக் கொடி பிரேமகுமாரவையே பார்த்துக் கொண்டிருந்தது.
 

மல்லிகைப்பூ மணம் வீசத் தொடங் கியது. ஒரோயொரு மல லிகைப் பூவேனும் அருகாமையில் இல்லாத போதும் மல்லிகைக் கொடியின் பக்கமிருந்து மல்லிகைப் பூ மணம் விசத் தொடங்கியது.
பிரேமகுமாரவின் மனம் வேதனை யில் ஆழ்ந்தது. பெருமூச்சுக்கள் அவனிடம் இருந்து வெளியேறின.
தாய் குறித்து மெல்லிய வைராக் கியம் இருந்த போதும் தாய்ப்பாசம் கருதி தாய்குச் சாபமிடாமல் அவள் மீது அனுதாபம் செலுத்த முயன்றான்.
‘இவனுக்குப் பேயடித்து விட்டதோ தெரியாது. ஒரே திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்துத் தாய் நினைத்துக் கொண் டாள். என்றாலும் வாய் திறந்து அவள் எதனையுமே கூறவில்லை.
குடும்பத்துக்குப் பொருத்தமான நல்ல மருமகளைத் தனது மகனுக்கு விவாகஞ் செய்து வைப்பதே தாயின் ஆசையாக இருந்தது. என்றாலும் அந்த ஆசை நிராசையாக மாறும் காலம் நெருங்கி விட்டது.
女女★
பிரேமகுமாரவின் தலை முழுவது மாக கனன்று கொண்டிருந்த கடந்த காலத்தின் காதல், தீச்சுவாலையாக பற்றி எரிய ஆரம்பித்தது.
அன்று ஓர் பெளர்ணமி தினமாகும். நாலாபுறமும் நிலவொளி வீழிந்தி ருந்தது. நகரில் பெரஹெரா பார்த்து
விட்டு வீடு திரும்பும் போது குறுகிய வழி என்பதால் லயன்களினுடாக வந்து கொண்டிருந்தபோதுதான் அவன் முதன் முதலில் பார்வதியைக் கண்டான்.
பிரேமகுமாரவால் நினைத்துப்
பார்க்க முடியாமற் போயிற்று. தனது
நினைவில் நிறுத்தி வைத்திருந்த தேவதை, லயன்களின் மத்தியில் தமிழ் யுவதிகளுடன் - நெற்றியில் பொட்டுடன், இதோ வெள்ளை நிறத்தில் பெளர்ணமி யைப் போன்ற பிரகாசத்துடன்.
'பெஹெர பார்க்கச் சென்றீர் களாக்கும்” பிரேமகுமார பார்வதியைப் பார்த்து மெதுவாக முணுமுணுத்தான்.
‘ஆமாம்” அவள் பதிலளித்தாள். அவளைச் சூழ விருந்த வாயாடி யுவதிகள் சிரித்துப் பரிகாசம் செய்தனர்.
女女★
மிக விரைவில் வசந்த காலம் ஓடி வந்தது. சுக்கிரன் பிரேமகுமாரவின் நெற்றியில் அவதரித்தான். ஆகையி னால் ஏனைய வாயாடிப் பெண்களின் கேலிகள் அதிகரித்த போதும் பார்வதி யின் நெஞ்சுக்கு அம்பு எய்த அவன் வெட்கத்தை ஒரு தடையாக எடுத்துக் கொள்ளவில்லை. கித்துள் பூவைச் சுற்றி வண்டுகள் வட்டமிடுவதைப் போன்று காலை முதல் மாலை வரை யில் பிரேமகுமாரவின் கடமை பார்வதி யின் பின்னால் சுற்றுவதாகவே இருந்து வந்தது. குப்பை மேடு என இதுவரை நினைத்துக் கொண்டிருந்த லயன்கள் இப்போது அவனுக்கு சுவர்க்க பூமி யாகத்தான் தெரிந்தது.
41

Page 23
6696)
‘‘தரையில் கூட சோற்றைப் போட்டுக் கொண்டு சாப்பிட முடியும். அந்த அளவுக்கு இந்த மக்கள் லயன்களைச் சுத்தமாக வைத்திருக் கின்றார்கள்.” என மிகுந்த மகிழ்ச்சி யுடன் பிரேமகுமார தனது நண்பர் களிடம் கூறுவான்.
மல்லிகைப் பூவை அவள் தலை
யில் வைத்துக் கொள்வதற்காக பிரேம குமார அவளது தலைமயிர்களுக்கு மிகுந்த விருப்புடன் வாசனைப் புகை பிடிப்பதுண்டு. இதற்கான அனுமதியை அவளது வீட்டார் அவனுக்கு வழங்கி யிருந்தனர்.
பார்வதியின் தலையில் மல்லிகைப் பூக்களைச் சூடி அதன் அழகைப் பார்க் கும் போதுதான் ‘காதல் மல்லிகைப் பூவைப் போல் பரிசுத்தமானது' என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.
女女★
கறுப்பு ஜுலை வந்தது. இனவாதத் தால் வெறி கொண்டிருந்த அனைத்துப் பெண்களும் அனைத்து ஆண்களும் பேய் பிடித்துத் திரிந்தனர்.
அப்பாவி மக்களை அவர்கள் உயிருடன் வைத்து வெட்டினார்கள். வீடுகளுக்குத் தீ வைத்தனர். சொத்துக் களைச் சூறையாடினர்.
இச்சந்தர்ப்பத்தில்தான் பார்வதி வாழ்ந்து வந்த லயன் பகுதியிலும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றன.
முழு நிலா வானேறியிருந்தது. நில வொளியில் வெறி பிடித்திருந்த ஊர்
42
மக்கள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனக் கூறிக் கொண்டிருந்த அப்பாவி பார்வதியின் லயனைச் சேர்ந்தவர்களுடன் பாரிய மோதலில் ஈடுபடலாயினர்.
பொலிஸார் அங்கு வந்தபோது நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்து முடிந்திருந்தன. தீப்பிடித்த லயன்கள் அனைத்தும் பாழடைந்த மயான பூமியைப் போல் புகை மண்டலத்தால் மூடப்பட்டிருந்தன.
லயன் களில் இருங் தவர்கள் தோட்டப் பக்கமாகத் தப் பியோடி யிருந்தனர்.
女女★
சில காலம் கழிந்த பின்னர் பயங்கர நிலையகன்று, அமைதி தென்றலைப் போன்று மெது மெதுவாக வர ஆரம்பித்தது.
பிரேமகுமாரவின் பாதுகாப்பில்
இருந்து வந்து பார்வதியும் அவளது
பெற்றோரும் லயன்கள் அமைந்திருந்த பகுதிக்கு வந்து குடிசையொன்றை அமைத்துக் கொண்டனர்.
எனினும் அக்குடிசை மறுநாட் காலையில் தீக்கிரையாகிக் கிடந்தது. பார்வதியின் தாயினதும் தந்தையினதும் சடலங்கள் இனங் காண முடியா தளவுக்கு தீக்கிரையாகிக் கிடந்தன.
ஊரிலும், ஊருக்கப்பால் ஏனைய பகுதிகளிலும் நடந்த மிருகத்தனமான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கி யவன் பிரேமகுமாரவின் மூத்த

சகோதரன் என அவன் அறிந்து கொண்ட போது அனைத்துமே நடந்து முடிந்திருந்தன.
பிரேமகுமார ஒரே ஓட்டமாக லயன் கள் அமைந்திருந்த பகுதிக் குச் சென்றான். அவன் கண்களின் முன் பாகவே அவனது தாயார் பார்வதியின் முதுகைப் பார்த்து வெட்டுக் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்தாள்.
女女★
மழைக் காலம் வந்தது. பூக்கள் செறிந்து காணப்பட்ட தோட்டங்கள் யாவும் நனைந்திருந்தன. மழைத் துளிகள் வீடுகளின், கூரைகளின் ஒடு களையும், தகரங்களையும் தாண்டி வந்து பூமியில் விழ, புதுமையானதொரு காலநிலை உருவாகலாயிற்று.
மல்லிகைக் கொடியின் மீது மழைத் துளிகள் விழுவதை பிரேமகுமார பார்த்துக் கொண்டிருந்தான்.
உனது திருட்டுத் தனமான நடத்தைகள் அனைத்தையும் நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டி ருந்தேன். அதனால்தான் நல்ல தருணம் பார்த்து அந்த கேடுகெட்டவளுக்கு வெட்டுக் கத்தியால் தாக்க முடிந்தது.” தாய் முனு முணுத்தாள்.
女女★
ஜன்னல் மீது வைத்திருந்த பிரேம குமாரவின் திருமண அழைப்பிதழ் காற்றுடன் சேர்ந்து அறையை விட்டு வெளியே அடித்துக் கொண்டு வந்தது.
5 yeages
'நீங்கள் செய்தவற்றை பார்வதி பொலிஸாரிடம் கூறியிருந்தால் நடப்பதே வேறு. அப்பாவிப் பெண் அனைத்தும் இழந்த பின்பும் எனக்காக அவள் பேசாமல் இருந்து விட்டாள்’ என பிரேமகுமார தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
女女★
தாயாரும் தந்தையும் பிரேம குமாரவின் திருமணத்துக்குச் செல்வ தில்லையென முடிவு செய்திருந்த போதும், திருமண நாளன்று தாமாகவே ரோயல் ஹோட்டலுக்குச் செனி றார்கள்.
‘சொல் பேச்சு கேளாத சனியன், திரும்பவும் அதேமாதிரி கேடுகெட்ட ஒருத்தியுடன் சகவாசம் வைத்துக் கொண்டிருக்கிறானோ தெரியாது.” என அவனது தாய், தன் கணவனைப் பார்த்த வாறு வேதனையுடன் முணுமுணுத் தாள். *
G
‘மகன் இப்போது திருந்தியிருப் பான். பன்றி கூட எப்போதுமே சேற்றில் இருக்காதுதானே!” என அவனது தந்தை நம்பிக்கையுடன் கூறினார்.
ரோயல் ஹோட்டலினுள் நுழையும் போதே மீண்டும் அவளது அடிவயிறு புகைய ஆரம்பித்தது. பார்வதியின் தோற்றத்தை ஒத்த, தீயப் பேய் ஒன்று தனது மகனின் கரங்களைப் பற்றிக் கொண்டு நிற்பதைப் போன்றதொரு மாயைத் தோற்றம் அவளின் முன்பாகத் தோன்றித் தோன்றி மறைந்தது.
43

Page 24
女女★
தனது பெற்றோர்கள் வந்திருப் பதை அறிந்து கொண்ட பிரேமகுமார, குழுமியிருந்தவர்களிடையே விடுபட்டு தனது பெற்றோர்களிடம் வந்து அவர் களது பாதங்களைத் தொட்டு வணங் கினான். தாயினதும் தந்தையினதும் முகங்களில் முத்தமிடும் போது அவனது கண்கள் நனைந்திருந்தன.
மருமகள், கண்களுக்கு எட்டக் கூடியதாக இல்லாததன் காரணமாக பிரேமகுமாரவின் தாய் மிகுந்த எதிர் பார்ப்புடன் அங்குமிங்குமாக தனது பார்வையை ஒடவிட்டாள்.
ஹோட்டல் அறை முழுவதுமாக கூடியிருந்த ஆயிரக் கணக் கான மக்களிடையே தனது மருமகள் யாராக இருக்கக்கூடுமென இனங்காண அவ ளால் முடியாமற் போயிற்று.
* மகன் இந்தளவுக்குப் பிரபல மானவனா? என என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை” என அங்கு நின்ற பல்வேறு வகையிலான ஆண் களையும், பெண்களையும் பார்த்த வாறே பிரேமகுமாரவின் தந்தை கூறினார். அப்போது பிரேமகுமார அங் கிருந்த விருந்தினர்களிடையே காணா மற் போயிருந்தான்.
முற்றத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த திருமண வைபவத்துக்கு வருகை தந்திருந்தவர்களது நவீன ரக வாகனங் கள் பிரேமகுமார வினி தகுதியை அவனது பெற்றோர்களுக்கு உணர்த்தி நின்றன.
44
` மகன் கெட்டுப் போகவில்லை” மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனது தந்தை கூறினார்.
பிரேமகுமார, மணமகளின் கரங் களைப் பற்றியபடி குழுமியிருந்தவர் களிடையே மெது மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவனது தாயும் தந்தையும் கண்கள் சிமிட்டாமல் மண மகளையே உற்றுப் பார்த்துக் கொண்டி ருந்தனர்.
கறுப்படித்து காய்ந்து போன நிறத் தில் விகாரமாகிப் போன முகத்துடன் இருந்த மணமகளைக் கண்டதும் பிரேம குமாரவின் பெற்றோர்களது எதிர்பார்ப்பு கள் சுக்கு நூறாகிப் போயின.
‘மகன், திரும்பவும் ஒரு பேய்க்கே வாழ்க்கைப் பட்டுவிட்டான்’ தாயப் உணர்ச்சி பொங்கக் கூறினாள்.
தனது மனைவியை அழைத்து வந்து தனது பெற்றோர்களை வணங்கும்படி செய்த பிரேமகுமார, ‘இந்த சந்தோஷமான நாளில் ஏன் வேதனையுடன் இருக்கிறாய்?’ என தனது தாயைப் பார்த்துக் கேட்டான்.
அவள் எதையுமே கூறாமல் வேறு பக்கமாக தனது முகத்தை திருப்பிக் கொண்டாள். அவனது தந்தை அவனை யும் மணமகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.
&
உங்களுக்கு எல்லா வகை யிலுமே பொருந்துவாள் என்றுதான் நான் பவித் திரா வை திருமணஞ் செய்தேன். ஏன் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள்?’ பிரேமகுமார தனது

பெற்றோர்களை நோக்கிக் கேட்டபோது அவனது மனைவி அங்கிருந்து தனது நண்பர்களை நோக்கிச் சென்றிருந் தாள். -
‘எந்த வகையில் பொருந்துவாள்?” கோபத்துடன் கேட்டாள் தாய்.
‘குலம், சொத்து, அதிகாரம் என் பன எங்களை விட பத்து பதினைந்து மடங்கு அவர்களிடம் இருக்கிறது” என பதில் கூறிய பிரேமகுமார தனது மனைவியை நோக்கி நகர்ந்தான்.
அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தவாறு நின்றி
ருந்தனர். அவர்களது இதயங்களை எல்லையில லா வேதனை வந்து தாக்கியது.
பார்வதியின் முகம் அவள் முன் பாகத் தோன்றியது. அவளைப் போல் வடிவானதொரு தோற்றம் கொண்ட பெண் வேறு இல்லை என சிலநேரம் அவள் எண்ணிக் கொண்டாள். பரும னான, அவலட்சணம் கொண்ட பவித்தி ராவைவிட தனது மகனுக்கு பார்வதியே மிகவும் பொருத்தமானவள் என அவளுள் நினைத்துக் கொண்டாள்.
女女★
பிரேமகுமாரவின் தாயின் வெட்டுக் கத்தி தாக்குதலுக்கு உள்ளாகி காய மடைந்த பார்வதியை பொலிஸார் அரசாங் க மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையறிந்த பிரேம குமாரவின் தாயும், சகோரனும் மிகுந்த
yages
~.
பதட்டத்தை அடைந்தனர். நினைவு திரும்பியவுடன் பார்வதி தங்களைக் காட்டி கொடுத்து விடுவாள் என அவர்கள் பயந்தனர். அவர்கள் இருவரும் கூடி என்ன கதைத்துக் கொள் கிறார்கள் என்பதை பிரேமகுமார அறியவில்லை. அன்றைய தினம் இரவே பார்வதி காணாமற் போயிருந் தாள். தான் வெகு தொலைவில் இருக் கும் தனது உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதாக அவள் கடிதம் எழுதி யிருந்தாள். என்றாலும் அவள் ஒரு பாழடைந்த வீதியில் வைத் து உயிருடன் எரிக்கப்பட்டாள் என்பதை பிரேமகுமாரவின் தாயும் சகோதரனும் மருத்துவமனையில் இருந்த சிலருமே அறிவார்கள்.
மல லி கையினர் அபிமான எழுத்தாளர் திரு. ச.முருகானந்தன் அவர்களின் புத்தம் புதிய சிறுகதைத் தொகுதி தரைமீன்கள் எங்கும் விற்பனையாகின்றது.
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடாகும்.
o O o O O O O * சந்தா செலுத்தி ". O விட்டீர்களா ? o தயவுசெய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள். அசட்டை செய்வோருக்கு
முன்னறிவிப்பின்றி ܘ*
நிறுத்தப்படும். O O O O o e o . O O

Page 25
46
இருமை
- வ.ஐ.ச.ஜெயபாலன்
நான் சிறுசாய் இருக்கையில் உலகம் தட்டையாய் இருந்தது. எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன் ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி ஒளித்து விட்டானாம்.
அப்போதெல்லாம் பகல்தொறும் பகல்தொறும் ஏழு வண்ணக் குதிரைத் தேரில் சூரியன் வருகிற வழி பார்த்திருந்து பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்.
ஒருநாள் வகுப்பறையில் நான் அழகான ஆசிரியை உலகை உருண்டையாய் வனைந்து பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள். சூரியனை தேரினால் இறக்கி பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள். பின்னர் கல்லூரியிலோ ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள் கோடி கோடி சூரியன் வைத்தார்.
இப்படியாக என்
பாட்டியின் மானச உலகில் வாழ்வு மனசிலாகியது.

கற்ற உலகிலோ எனது அறிவு கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது. இந்த இருவேறு உலகும் என் இருப்பு நதியின் எதிர் புதிர்க் கரைகள்.
நதியின் அக்கரையோ முன்பொரு காலத்தில், அங்கு உண்மை பேசியதால் ஏழை விறகுவெட்டிக்கு பொற் கோடாரியும் தருகிறாள் வனதேவதை. இக்கரையோ எதிர்காலத்தில், அங்கு மனிதனையே பிரதிமை செய்கிறார் விஞ்ஞானியர்கள்.
காற்றரனாய் தீபத்தில் கூப்பிய கரம்போல், அலைப்புறும் என்மீது நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களும்.
sー -----
O O O O வாழ்த்துகின்றோம் ஊர்காவற்துறையைச் சேர்ந்த செல்வன் சந்தியாப்பிள்ளை ஸ்ரீபன் அவர்களுக்கும், மல்லிகையைக் கணினி மூலம் மாதா மாதம் அழகுற வடிவமைத்துத் தரும் செல்வி இம்மானுவேல் லிகோரின் றோசி அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பில் இனிதே திருமணம் நடந்தேறியது.
மணமக்களை மல்லிகை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றது.
- ஆசிரியர்
لئے
ܠܠ
47

Page 26
48
injyessä 9.LA ei அதுபறும் பலவும்
- durcßsfü so
நடைமுறை இலக்கிய வாழ்வு என்னைச் சிரமப்படுத்தியதைவிட, தினசரி வாழ்வு என்னைத் தின்று துப்பிச் சேதப்படுத்தியது.
இத்தனை இடைக்காலச் சிரமங்களையும் ஏற்றுக் கடந்து, எப்படி நான் இத்தனைத் தூரம் ஆரோக்கியமாக வழிநடந்து வந்தேன் என்பதை இன்று ஆறுதலாக இருந்து சிந்திக்கும் வேளைகளில் நானே ஆச்சரியப்படுவதுண்டு.
இலக்கிய, பொது வாழ்க்கையின் பாரிய சிரமங்களைவிட, எனது மூத்த மகளுக்கு ஏற்பட்ட நோய் என்னைத் திக்கு முக்காடவே செய்து விட்டது.
நிலமானியச் சமூகத்தில் தமது சொத்துப் பத்துத் தேட்டங்கள் சீர்குலைந்து போகாதிருக்கவும் அவைகள் பரம்பரை பரம்பரையாகக் கொடி கொடியாகக் காப்பாற்றப்பட்டு வருவதற்காகவும் குடும்பத் திருமணக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் ஒண்டுக்குள்ளை ஒண்டு' என்ற சமூக யதார்த்தத்தை நீண்ட காலமாகவே பின்பற்றி வருகின்றன.
யாழ்ப்பாணச் சமூகம் இந்தப் பிரச்சினையை மிகக் கெட்டியாகக் காலம் காலமாகப் பின்பற்றிக் கொண்டு வருகின்றது.
இதற்கு அமைந்தாற் போல, சிறு சிறு சமூக, சாதிக் குழுக்களும் தமது இறுக்கமான கட்டுக்கோப்புச் சீர்குலைந்து போகக் கூடாது என்ற காரணத்திலும் அப்படிச் சீர்குலைந்து போனால் தமது பரம்பரை அடிகொடியே அழிந்தொழிந்து போய்விடும் என்ற அநுபவ ஞானம் காரணமாகவும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு!’ என்ற ரீதியில் தமக்குள் தானே கொள்வன - கொடுப்பனவுகளைச் செய்துகொண்டு வந்திருக்கின்றன.
இந்தக் ‘ஒண்டுக்குள்ளை ஒண்டு' என்ற திருமணத் தத்துவம் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும்

இயல்பான புத்தி சாதுர்யம் இல்லாத வர்களாகவும் கல்வி அறிவில் பின்தங்கிய வர்களாகவும் வந்து பிறப்பார்கள் என்பதை இன்றைய விஞ்ஞானம் ஒப்புக் கொள்ளு கின்றது.
இந்த விஞ்ஞானக் கருத்தை ஏற் கனவே தெரிந்து வைத்திருந்தவன், நான்.
எனவேதான் சொந்த மச்சாளை அதாவது எனது தாய் மாமனின் ஒரேயொரு மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆரம்பத்தில் சம்மதம் தெரிவிப்பதில் பின்வாங்கிக் கொண்டேன்.
இந்த விஞ்ஞானக் கருத்தையெல்லாம் எனது அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கமைவான கல்விப் பக்குவ நெறி அவரிடம் சிறிது கூட இல்லை.
எனது அம்மா அந்தக் கால மனுவழி!
சகோதர பாசம், தாய் தகப்பனைத் தின்னியான தன்னைச் சிறுவயது முதலே தனது முத்த அண்ணன் தன்னை வளர்த் தெடுக்கப் பட்டக் கஷட நஷ்டங்களை மனதாரத் தெரிந்திருந்தவர். அதற்கு நன்றிக் கடனாக என்னைத் தனது அண்ணன் மகளுக்குக் கட்டிக் கொடுப்பதன் மூலம்தான் தான்பட்ட பிறவிக் கடனை அடைத்திட முடியும் என நெஞ்சார நம்பியவர்.
நான் விஞ்ஞான ரீதியாகச் சிந்தித்து எடுத்த ஆரம்ப முடிவை மறந்து வெகு காலமாகிவிட்டது.
எனது மூத்த மகள் பக்கத்தேயுள்ள பள்ளிக்கூடத்திற்கு ஆரம்ப வகுப்புகளுக்குப் போய்வரத் தொடங்கினாள்.
முதலாம், இரண்டாம் வகுப்புகள் ஒரு வழியாக ஒப்பேற்றி முடிந்து விட்டன.
f
-...A
yettese:
வாழப் பழகிக் கொண்டேன். இலக்கிய பிரக்ஞை, நண்பர்களின் தொடர்பு ஆகியவை ஊடாக என்னை நானே ஏமாற்றி வாழப் பழக்கப்படுத்திக் கொண்டேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஏ.ஜே. கனகரட்னாவின் தொடர்பும் பரபல எழுத்தாளர் அழகு சுப்பிரமணியத்தின் தொடர் நட்பும் எனக்குக் கிடைத்த காலம்.
யாழ்ப்பாணம் பறங்கித் தெருவிலுள்ள 'பிரீமியர் கபேயில் தினசரி நாங்கள் ஒரு சிறுகுழுவாகச் சந்தித்து உரையாடி மகிழ்வோம்.
இப் படியாகக் காலம்
கொண்டிருந்தது.
ஓடிக்
இந்தச் சூழ்நிலையிலும் நான் மன உறுதி வாய்க்கப் பெற்றவனாகவே வாழ்ந்து வந்தேன்.
எனக்கிருந்த மனநிலையிலும் சூழ் நிலையிலும் மன அழுத்தம் காரண மாகவும் நானொரு நித்தக் குடிகாரனாகவே மாறியிருக்க வேண்டும். மாறவில்லை.
அப்படியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி வந்தன. சூழ்நிலையும் நட்பு வட்டாரமும் என்னை அந்த நிலைக்குத் தள்ளிக் கொண்டு போக முற்பட்டன.
சிறுபராயத்தில் எனது தகப்பனாரின் குடிப்பழக்கத்தால் நானும் எனது தாயாரும் பட்ட தினசரி அவஸ்தை காரணமாகவும் எனது தனிப்பட்ட மனத் துணிவு காரண மாகவும் நான் குடிகாரன் என்ற பெய ரெடுக்காமல் காப்பாற்றப்பட்டு விட்டேன்.
இப்படியே காலமோடிக் கொண்டி ருந்த கால கட்டத்தில் ஒருநாள் எனது மகள் படித்த பள்ளிக்கூடத்திலிருந்து அங்கு
49

Page 27
Վե2 6696)
கல்வி கற்பிக்கும் சிஸ்டர் ஆசிரியை ஒருவர் கடிதம் ஒன்றை எனது மகளிடம் கொடுத் தனுப்பியிருந்தார். திங்கட்கிழமை பள்ளிக் கூடத்தில் வந்து தன்னை அவசியம் சந்திக்கும் வண்ணம் அக்கடித வாசகம் அமைந்திருந்தது.
மகள் பள்ளிக்கூடம் போனதன் பின்னர் கடிதத்தில் கண்டபடி திங்கட்கிழமை காலை கடிதத்தைக் கொண்டு ஆசிரியையைக் காணப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன்.
இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் நான் படித்தவன். எனது மனைவியும் இங்குதான் கல்வி கற்றவர். எனது மகனும் படித்த பள்ளிக்கூடமும் இதுவேதான். இன்று இந்த மகளின் மக்கள் படித்துக் கொண்டிருப்பதும் இதே பள்ளிக்கூடத்தில்தான்!
என்னுடைய இலக்கியப் பரபரப்பு வாழ்க்கையில் நான் எனது சொந்தக் குடும்பத் தினசரி வாழ்வில் அதிக அக்கறை காட்டாதவனாகவே தினம் தினம் வாழ்வைக் கழித்துக் கொண்டிருந்தேன்.
வீட்டில் இயல்பாகவே குழந்தைகள் இருக்கக்கூடிய மனநிலையில் எனது மகள் இருக்கவில்லை. சிறுவர்களுக்கே இருக்க வேண்டிய குறும்புத்தனம், சுட்டித்தனமற்ற மந்த நிலையிலேயே அவள் காணப் பட்டாள். சோர்வு சூழ்ந்திருந்தது.
இதைக் கூர்குறிப்பாகக் கவனத்தில் கொள்ளத்தான் எனக்கு நேர கால மில்லையே!
காலையில் எழும்பி, குளித்து, உடை உடுத்திக் கொண்டு சைக்கிளில் புறப்பட்டே னென்றால் இரவு வீடு திரும்புவது சில சமயங்களில் நடுச் சாமமாகக் கூட இருக்கும்.
50
வீட்டுக்கு நேர காலத்துடன் வந்து சேர மனப்பயம். மருத்துவ ஆய்வுகளுக்கே கண்டறிய முடியாத மனைவியின் நோய், தினசரி தொடர் வருமானத்தை இழந்துவிட்ட பொருளாதார மந்த நிலை, இவைகளில் மறைந்து வெளி உலகில் நடமாடி வந்தேன்.
இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் எனது இலக்கியப் பங்களிப்புகளை நான் சுருக்கி உள்வாங்கிக் கொள்ளவில்லை.
தொடர்ந்து, இடையறாது இயங்கி வந்தேன்.
மல்லிகை இதழ்கள் பரபரப்பில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தன. மாதா மாதம் கொழும்பு சென்று விற்பனை, மற்றும் விளம்பர விவகாரங்களைக் கவனித்து வந்தேன்.
பள்ளிக்கூட சிஸ்டர் ஆசிரியையின் கடிதத்திற்கமைய அவரைக் கண்டு கதைப்பதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு ஒருநாள் காலை நேரம் புறப்பட்டுச் சென்றேன்.
கொண்டு சென்ற கடிதத்தைக் காட்டி, நான் விசாரித்துக் கொண்டிருக்கும் அந்தச் சமயத்திலேயே நான் தேடிப் போன ஆசிரியை ஏதோ அலுவல் காரணமாக முன்பக்கம் வந்தவர் என்னை இனங்கண்டு கூட்டிச் சென்றார்.
‘என்ன இந்தப் பிள்ளையை நீங்க ளெவரும் வீட்டில் ஒழுங்காகக் கவனஞ் செலுத்திப் பார்க்கிறதில்லையா? வகுப்பில் ஒரே மந்தம், படிப்பிலும் கவனமில்லை. சுணக்கம். ஞாபக சக்தியோ ரொம்பக் குறைவு. நீங்கள் ஒரு நல்ல டாக்டரைப் பாத்து இந்தக் குழந்தையை ஒருக்காக் காட்டிப் பாருங்கள்!” என்றார்.

என் நெஞ்சுக் கூட்டுக்குள் ஏதோ ஊர்ந்தது.
டாக்டர் நற்குணம் என்பவர் எனது இலக்கிய நண்பர். என் மீதும் எனது எழுத்தின் மீதும் பேரபிமானம் கொண்டவர். அப்பொழுது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சத்திர சிகிச்சை மருத்துவராகக் கடமை புரிந்து வந்தவர். உரும்பிராயைச் பிறப்பிட மாகக் கொண்டவர்.
அவரிடம் மகளைக் கூட்டிச் சென்ற போது, ஆரம்ப மருத்துவப் பரிசோதனை களைச் செய்தார், டாக்டர் நற்குணம்.
ஒரு வாரம் கடந்த பின்னர் என்னை நேரடியாக அழைத்து ‘உமது மகளுக்கு இதயத்தில் ஒரு வால்வ் அடைத்துப்போய் விட்டது. அதனால் இரத்தோட்டம் தடைப் பட்டுள்ளது. இதைக் கொழும்பில்தான் சரி செய்ய முடியும். சாதனங்கள் அங்குதான் வசதி. நான் அடுத்த மாதம் கொழும்பிற்கு மாற்றலாகிச் செல்லுகிறன். உமது மகளை அங்கு கூட்டி வந்தால், நான் சகல உதவி களையும் செய்து தருவன்!” என்றார், நற்குணம்.
இந்தத் தகவலை வீட்டாருக்கு விவரித்துச் சொன்னால் அப்பொழுதி லிருந்தே துக்கம் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே நேரடியாக இந்த நோய்க்கான அறுவை சிகிச்சை சம்பந்தமான தகவலைக் கூறாமல், மகளின் நோய் சம்பந்தமாக ஒருதடவை கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போய்வர உத்தேசம் எனப் பட்டும் படாமலும் வீட்டாருக்குச் சொல்லி வைத்தேன்.
டாக்டர் நற்குணத்தின் தகவலின் அடிப்படையில் அடுத்த மாதம் மகளையும் அழைத்துக் கொண் டு கொழும் பு புறப்பட்டேன்.
ÈF yet set
உண்மையைச் சொல்லுகிறேன். கொழும்புக்குக் குழந்தையுடன் புறப்பட்டு விட்ட அந்தச் சமயத்தில் என்னிடம் ஆமான பணம் காசு ஒன்றுமே கைவசம் இல்லை.
இருந்தும் ஏதோவொரு அசாத்திய நம்பிக்கை அந்தச் சமயத்தில் என்னை வழி நடத்திச் சென்றது.
கொழும்பில் அப்பொழுது பெரியாஸ் பத்திரிக்கு வெகு அண்மையில் டாக்டர் வாமதேவனுடைய இல்லம் இருந்தது. எனது மகளின் நோய்த் தகவலின் தீவிரத்தை யார் மூலமோ கேள்விப்பட்ட அவரது மூத்த மகள் ஜெயந்தி ஆஸ்பத்திரியில் மகளைச் சேர்க்கும் வரை தனது வீட்டிலேயே எனது மகள் செளகரியமாத் தங்கியிருக்கலாம் என அழைப்பு விடுத்தார்.
ஹபரணைப் பொன்னம்மா என்ற எனது தாயாரின் சகோதரி முறையானவர் மகள் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வரும் வரை தான் உதவுவதாகச் சொல்லிக் கொழும்பு வந்து சேர்ந்து விட்டார்.
எழுத்தாளச் சகோதரன் சாந்தன் “ஜிவா ஒன்றுக்கும் பயப்படாதையுங்கோ. ரத்தம் அவசியம் தேவையெண்டால் நான் ரத்தம் தரத் தயார்!’ என மனத்தைரியம் தந்தார். நீர்கொழும்பிலிருந்து முருகபூபதி தொலைபேசியில் “ஜீவா இப்ப இதெல்லாம் பெரிய சங்கதியில்லை. விஞ்ஞானம், தொழில் நுட்பமெல்லாம் பெருகி விட்டது.
பயப்பட வேண்டாம். எல்லாத்துக்கும் நானிருக்கிறன்!” எனத் தைரியமேற்றினார்.
‘ஐயோ! என்ரை பிள்ளைக்கு
இப்பிடியெண்டால் நான் அவவின்ரை கட்டிலை விட்டு அக்கம் பக்கம் போகவே மாட்டன்!” என்று துயரக் குரலில் நேரில்
5

Page 28
6; GSG)
சொல்லி ஆறுதல்படுத்தினார், சிவத்தம்பியின் துணைவியார்.
நண்பர்
மேமன்கவியோ காலை மாலை என் இடம் தேடி வந்து வந்து விசாரித்துப் போவார்.
இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்தோடி விட்டன.
நான் வெள்ளி யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு, கொழும்பு வந்து, பின்னர் திங்கள் காலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து விடுவேன்.
‘' ஜீவா ஒண்டுக் கும் வேண்டாம். ரத்தம் தேவையெண்டால் நான் ரத்தம் தரத் தயார்!’ என வெள்ளவத்தையில் வீதியோரம் வைத்துச் சாந்தன் சொன்ன அந்தத் தைரிய வார்த்தைகள்தான் மல்லிகை ஆசிரியர் என்ற முறையில் நான் இதுவரை பெற்றுக் கொண்ட பொன் மொழிகளில் சிறந்த தங்கமொழி என இன்றுவரை கருதி வருகிறேன்.
பயப்பட
இத்தனைக்கும் ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் ஆசிரியர் என்ற வருமானமற்ற இலக்கிய வேள்விக் காலத்திலேயே நடைபெற்றன என இன்று நிதானமாக இருந்து யோசிக்கும் வேளைகளில் நினைக்க நினைக்க நம்பவே முடியாமல் இருக்கின்றது.
நான் எந்தக் காலத்திலுமே பிரச்சினை களைக் கண்டு அஞ்சிப் பதுங்கிக் கொள்பவனல்ல.
எனது இன்றைய வாழ்க்கையின்
இடைப்பட்ட காலத்தில் மூன்று மரண கட்டங்களைத் தாண்டி வந்துள்ளேன்.
எனக்கு ஒன்பது பத்து வயதா கியிருக்கும் வேளையில் அந்தக் கால
52
கட்டத்தில் ஏதோ பெயர் தெரியாத நோயினால் தாக்கிக் குதறப்பட்டவன் நான்.
என்னை அந்த நோய் தாக்கிய சமயம் எனக்கு மருத்துவம் பார்த்த அந்த டாக்டர் என் உயிர் இருப்புக்கு இருபத்திநாலு மணி நேரக் கெடு வைத்து எனது தாயாருக்குச் சொல்லி வைத்தவர்.
என்னைப் பார்க்க வந்த எனது தகப்பனாரின் தாயார் அன்னப்பிள்ளைக் கிழவியும் பக்கத்து வீட்டு அம்மம்மாவும் எனது தலைமாட்டில் குந்தி இருந்து கொண்டு குசுகுசுப் பாஷையில் “இப்பவே சேடமிழுக்கத் தொடங்கிப் போட்டுது. இக்கணம் இண்ைடைக்கு நடுச்சாமம் கூடத் தங்காது போலக் கிடக்கிது!’ என என் மரணத்தை நிர்ணயித்து நடுச் சாம நேரத்தைக் கெடு வைத்துப் பேசிய இரகசியப் பேச்சைக் கூர்ந்து கேட்டு, ‘நான் சாகமாட்டேன்! உலகமழிந்தாலும் நான் சாகவே மாட்டேன்’ என மன வைராக்கியத் துடன் உறுதியாக இருந்து, எனக்கு வைத்தியம் பார்த்த வைத்தியரின் கணிப்பீட்டையே கவிழ்த்துப் பொய்யாக்கி வாழ்ந்து காட்டியவன், நான்.
அடுத்துச் சில்லையூர்ச் செல்வ ராசனின் புதுக்காரில் பயணிக்கப் போய், காலிமுகக் கடற்கரையில் வெறிகாரக் காரோட்டியின் அலட்சியத்தாலும் கவனக் குறைவினாலும் நட்ட நடுத் தெருவில் காருடன் கார் மோதப்பட்டு அந்த மோசமான விபத்திலிருந்தும் என் உயிர் பாது காக்கப்பட்டு, உயிர்த் தெழுந்தவன், நான்.
அடுத்ததுச் சாதி வெறியர்களின் அட்டுழிய அழிவுத் தாக்குதல் காரணமாக மகாசபைத் தலைவர் தோழர் எம்.சி.சுப்பிர மணியம் அவர்களினுடைய மக்கள்

அன்பாக அளித்த காரில் பயணம் செய்த ஒருநாள் நடுச்சாம வேளையில், வல்லை வெளியில் வைத்துக் கையெறி குண்டுத் தாக்குதல் காரணமாக அந்தக் கார் முடமாகிப் போன வேளையிலும் தப்பிப் பிழைத்த நான்கு பேரில் நானுமொருவன்.
எனவே மரணத்தைக் கண்டு நான்
கலங்கித் தவிப்பவனல்ல. கடமையைச்
செய்து வருபவன்.
பிரச்சினைகள் மலிந்த கால கட்டத்தில் ஒருநாள் காலை நான் மல்லிகைக் கந்தோருக்குச் சைக்கிளில் புறப்பட்டு வந்தேன்.
ரெயில் பாதை அருகாமையாகப்
பிரதான வீதிக்கு ஏறும் தனிவழியில் நான் வந்து கொண்டிருந்த சமயம் கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை அந்த ஒழுங்கை வழியால் சைக்கிளில் அதிவேகமாக வந்தார். என்னைக் கண்டதும் சடாரெனப் பிரேக் போட்டு அவசரமாகக் குதித்து இறங்கினார். படுவேகமாகக் குதித்து இறங்கிய அவர், என்னைக் கட்டிப்பிடித்த வண்ணம் குரல் தளதளக்கக் கேவிக் கேவி அழத் தொடங்கி விட்டார்.
ஒரு கல்விமான், உயர்தரக் கல்லூரி ஒன்றின் அன்றைய அதிபர், கவிஞர் நடுத்தெருவில் நின்று என்னைக் கட்டிப் பிடித்து அழுவதைக் கண்டதும் நான் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டேன்.
ஏதோ அவரது குடும்பத்திற்குப் பாரிய இழப் பொன்று ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது கருதினேன்.
"மாஸ்டர்! - மாஸ்டர்! ஏன் அழு கிறீங்க? ஏன் இவ்வளவு பதட்டப் படுறிங்க? கொஞ்சம் ஆறுதல் படுங்க. சொல்லுங்க? ஏன் இத்தனை கவலைப்படுறிங்க. ஆறுதலாகச் சொல்லுங்க..!” என அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
“எடேய், ஜீவா! உன்னை ஆரோச் சுட்டுப் போட்டாங்களெண்டு எங்க கரை யூரெல்லாம் பேச்சாக் கிடக்கு! அதைக் கேட்டுட்டுத்தான் உண்மையறிய உன்ரை வீட்டை நோக்கி அவசரமாக ஓடி வந்தனான்!”
(மீண்டும் சந்திக்கிறேனே.)
இது ஒரு கைப் பந்தல் வெளியீடு
எழுதப்படாத கவிதைக்கு வரையய்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின்
t geese):
53

Page 29
54
ఆ | έ అసినీరాజు دخشاں aဗ်ပံခံ့ခြုံ&ယ
C 拳 uoਚ یl2.1 دما) ۱) تکلم
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு - புதிய அநபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) ബിഞ്ഞ: 25o/- 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் விலை: 140/= 3. அநபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் ിഞ്ഞേ 180/- 4. கார்ட்டூன் ஓவிய உல்கில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் விலை: 175/= 5. மண்ணின் மலர்கள் -
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) 66DD6o: II o/** 6. கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்தல்லாஹற் விலை; 100/= 7. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் - (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா 605u: I off8. முனியப்ப தாசன் கதைகள் - முனியப்பதாசன் s 6ზით6ზ: ISO/= 9. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) - பாலரஞ்சனி விலை: 60/- 10. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) ഒിഞ്ഞുണ്ഡ: [75/= 11. சேலை - முல்லையூரான் விலை: 150/- 12. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் விலை: 275/=
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 13. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (இரண்டாவது தொகுப்பு) விலை: 350/=
(41 எழுத்தாளர்களின் படைப்பு)
14. நிலக்கிளி - பாலமனோகரன் விலை: 140/= 15. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் - தொகுப்பு: டொமினிக் ஜீவா விலை: 150/= 16. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் விலை: 150/= 17. தரை மீன்கள் - ச.முருகானந்தன் விலை: 150/= 18. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான் 6,606u: Isof19. அப்புறமெண்ன - குறிஞ்சி இளந்தென்றல் ~ (கவிதைத் தொகுதி) விலை: 120/- 20. அப்பா - தில்லை நடராஜா விலை: 130/= 21. ஒரு டாக்டரின் டயறியில் இருந்து ~ எம்.கே.முருகானந்தன் 650so: 140/- 22. சிங்களச் சிறுகதைகள் - தொகுத்தவர் செங்கை ஆழியான் ഖിഞ്ഞേ 15o/-
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
 
 

கனடாவின்
வாழும் குமிழ்
- தெளிவத்தை ஜோசப்
என்னை வரவேற்று உபசரித்த சில தமிழ்க் குடும்பத்தினர் - செல்வம் அவர்களின் குடும்பம் உட்பட ‘எங்கள் சிறிசுகள் வானத்தின் நட்சத்திரங்களைக் கண்டு மகிழ்ந்தார்கள். நிலாவினைப் பார்த்துப் பரவசித்தார்கள்’ என்று கூறி சந்தோஷித்ததைக் கேட்டேன்.
‘ஊரில் நிலவு எல்லா நாளும் தெரியும்” என்று தனது மகளுக்குக் கூறிய தாகவும், “ஊருக்கே போய்விடுவோம் அம்மா’ என்று பிள்ளை அடம்பிடிக்கத் தொடங்கி விட்டதாகவும் என்று ஒரு அம்மா கூறினார்.
வானமே தெரியாமல் வாழுகின்ற மக்கள் இவர்கள். கனடா இருட்டுக்குள் மாட்டிக்கொண்ட அந்த இரவில்தான் வானமும், நிலவும், நட்சத்திரங்களும் தெரிந் திருக்கின்றன.
ஏறத்தாழ ஒரு 38, 40 ஆண்டுகளுக்கு முன் 1965இல் கனடா ஒருதடவை இப்படி இருளில் மூழ்கியதாம். அதன் பிறகு இப்போதுதான் 2003 ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்தப் பாரிய மின்சாரத்தடை கனடாவை மிக மோசமாகப் பாதித் திருக்கிறது.
நமது நாட்டைப் போல் அடிக்கடி மின்சாரத்தடை வந்தாலாவது வானமும், நிலாவும், நட்சத்திரங்களும் அடிக்கடி தெரிந்திருக்கலாம். 38 வருடங்களுக்கு முன்புதான் என்கையில் இந்தச் சிறார்களுக்கெங்கே வானம் தெரிய வாய்ப்பிருக்கப் போகிறது.
செல்வம் அவர்கள் ஒரு அருமையான கதை சொன்னார்.
செல்வத்தின் சின்ன மகளுக்கும் வானத்து நிலாவைக் காட்டியாகி விட்டது. ஆனால் நிலாவிலே ஒரு துண்டைக் காணவில்லை. பிள்ளை கவலையுடன் அப்பாவிடம் கேட்கிறது, “யாரப்பா நிலவை வெட்டியது! தமிழர்களா?”
55

Page 30
ウ 6696)
செல்வத்துக்கு திக்கென்றிருக் கிறது.
வானத்து நிலவைக்கூட வெட்டித் துண்டெடுக்கின்ற அந்தத் தமிழர்கள் uff?
சில நாட்களின் முன் செல்வம் அவர்களும் குடும்பத்தினரும் வெளியே சென்றிருக்கின்றனர். அவர்கள் ஓய்வாக அமர்ந்திருந்த இடத்துக்கு அண்மையில் கத்தியும் இரத்தமுமாக நாலைந்து இளைஞர்கள்.
‘வெட்டினேன் மச்சான் துண்டு விழுந்ததுதான். ஆள் மேலே போயிருப் பானோ தெரியலை. சிலநேரம் புளைச்சிடலாம்.”
அவர்கள் தமிழில் பேசிக் கொண்டது இவர்கள் காதுகளிலும் விழுகின்றது. சின்னதின் காது உட்பட.
அந்தச் சின்னஞ் சிறிசின் காது களில் மட்டுமல்ல, நெஞ்சிலும் கூட அது விழுந்திருக்கிறது என்பது நில வினை வெட்டியவர்களும் அவர்களா என்னும் இந்தக் கேள்வியில் தொனிக் கிறது.
திடீரென இருளாகி, மின்சாரத் தடைக்கான காரணங்களும் அதிகாரி களால், அரசால் அறிவிக்கப்படாமல் இருந்து விட்டதால் மீண்டும் ஒரு பின்லாடன் தாக்குதலோ. பயங்கர வாதிகளால் மின் நிலையம் தாக்கப் பட்டிருந்தால் என்னவாகும்! இனி எப்போது லைட் வரும். என்னும் அச்சமே மக்களின் மனக் குழப்ப நிலைக்குக் காரணம்.
56
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே மின்தடைக்கான காரணம். அதிவிரை வில் நிலைமை சீரடைந்து விடும் என்னும் அறிவித் தல கள் வரத் தொடங்கின.
கனேடியப் பிரதமரையும், மின்சக்தி அமைச்சரையும் பதவி விலகும்படி குரல்கள் எழுந்தன.
மின்சாரம் இல்லாமல் போய் சரியாக 29 மணித்தியாலங்களின் பின் 15ஆம் திகதி முற்பகல் மீண்டும் கனடாவில் மின்விளக்குகள் பளிச்சிடத் தொடங்கின.
அதே 15ஆம் திகதி (15/8/2003) மாலை 4.00 மணிக்குத்தான் நான் கனடாவில் காலடி வைத்தேன். அதைத் தான் செல்வம் குறிப்பிட்டிருக்கின்றார், எங்கே ஓரிரண்டு நாள் முந்தி வந்து விடுவீர்களோ என்று பயந்து விட்டதாக.
அடுத்தநாள் 16.8.2003 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை ‘வாழும் தமிழ்’ தமிழ் நூல்களின் கண்காட்சி.
ஸ்காபரோ சென்.கிளயர் வீதியில் உள்ள கொலம் பியா தேவாலய மண்டபத்தில்.
அதிகாலை ஐந்து மணி இருக்கும். நான் தங்கியிருந்த அறைக் கதவை மெதுவாகத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே வந்தார் செல்வம்.
'நீங்கள் படுத்திருங்கள். நண்பர் கள் வந்திருக்கின்றனர். நான் புத்தகப் பெட்டிகளைக் கொண்டு சேர்க்க

வேண்டும். புத்தகங்களை ஏற்றிக் கொண்டிருக்கும் நண்பர்களிடம் நீங்கள் உறங்குவதாகவும் குழப்ப வேண்டாம், மண்டபத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளேன். கோப்பியோ, டீயோ சீனி எப்படி என்பது தெரிந்தால். மனைவி பிள்ளைகள் எல்லாம் வீட்டில் தான். 6 மணிக்கு கோப்பி தரச் சொல் லியிருக்கிறேன். நீங்கள் ஆறுக்கும் ஏழுக்குமிடையில் ரெடியாக இருந்தால் போதும். வந்து கூட்டிப் போவேன்” என்று கூறிவிட்டு செல்வம் (3u 6Tr.
அதன் பிறகு எங்கே தூக்கம் வரப் போகிறது. எழுந்து மெதுவாக ஜன்னலைத் திறந்தேன்.
“ஒளிந்து கொண்டா இருக்கின் றாய்” என்று குசலம் விசாரித்தபடி ஓடி வந்த கனேடியக் காலைக் காற்று முகத் தில் விளையாடி விட்டு கழுத்துடன் கீழிறங்கியது. முகத்திலும், கழுத்திலும், உடலிலும் ஐஸ் வைத்தது போலி ருந்தது.
ஜன்னலை மூடிவிட்டு சட்டையைப் போட்டுக் கொண்டேன். அது ஒரு மாடி அறை. மெதுவாகக் கீழிறங்கி வீட்டின் பின்புறம் சென்றேன்.
அழகான சிறிய தோட்டம். புல் தரை. வேலியைச் சுற்றி ஆறேழு அடிக் கொன்றாக வளர்ந்து நிற்கும் சைப் பிரஸ் மரங்கள் (கிறிஸ்மஸ் மரங்கள்).
வெளியே வந்துவிட்டாயா என்று சுதந்திரமாக என்னை சில்லிட வைக்கும் பூங்காற்று.
மெதுவாக உள்ளே வந்து விட்டேன். உள்ளே நுழையும்போதுதான் கவனித்தேன். சுவரோரத்தில் ஒரு கத்தரிச் செடி. பெரிய பெரிய இலை களுடன். ஆளாக அதோ இதோ என்றி ருக்கும் ஒரு பெண்ணின் சங்கோஜத் துடன் ஊதா நிறத்தில் இரண்டொரு பூக்களுடன், அதன் அருகே ஒரு இலைக்கோசா, மதாளிப்புடன் பக்கத் தில் ஒரு தக்காளிச் செடி. குண்டு குண்டாய் சிவப்புப் பழங்களுடன்,
கனடாவையும் நம்மூர் ஆக்கிவிட முயலும் கைங்கரியங்கள்!
விட்டின் முன்னேயும் புல்தரையுடன் கூடிய அழகான இடம் இருக்கிறது. சுவரோரத்தில் பூஞ்செடிகள். பூஞ்செடி களுக்கிடையில் வணனவண்மைை மரவாத்துக்கள். தரையை சீய்ப்பது (3ւII16ծiյI) LII16ւI6ծ)6ծlպւ6ծl.
புல்தரையில் வளர்ந்து நிற்கும் ‘மேப்பிள் மரத்தைச் சுற்றி செங்கற் களாலான இலங்கை. வடக்கு கிழக்கில் தமிழர் பரம்பரிய நிலத்தைப் பotரெ60 வேறுபடுத்திக் காட்டும் சின்னச்சின்ன சிவப்பு இலைகள் கொண்ட பூஞ செடிகள். கனடாவின் பூஞ்செடிகள்!
தாய் மண்ணில் நெஞ்சும், புகுந்த மண்ணில் வாழ்வுமாக: என்று கூறுவது இதைததான்.
‘’ வரணுக் கும , குமாருக கும் பேராசைதான் பாருங்கள். முக்கால்வாசி ğÈ buJI b5i 60) db b0) u I H*ypuDI 1 cib eÉSéb (ol35 fT 600Tuç ருக்கின்றனர்” என்று சிரித்தபடி என்னிடம் கூறினார் திருமதி. செல்வம். வரனும், குமாரும் செல்வத்தின் குடும்ப நண்பர்
57

Page 31
3
Є о6565608
கள். 'காலம் செல்வத்தின் இலக்கிய நண்பர்கள்.
செல்வம் கூறிச் சென்றபடியே ஏழு க் கெல் லாம் நான் தயாராயப் இருந்தேன். எட்டே கால்போல் செல்வம் வந்தார்.
புத்தகக் கண்காட்சி நடக்கும் மண்டபம் நோக்கிக் கார் ஓடுகிறது.
எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருக்கிறது.
செல்வம் முக்கியமான இடங் களைக் காட்டியபடி காரோட்டுகின்றார். தமிழில் பெரியதாக ஒரு பெயர்ப்பலகை தெரிகிறது.
கனடா கந்தசாமிக் கோவில். நான் பலமாகவே வாசிக்கின்றேன். செல்வம் கூறுகின்றார், `தாண்டி வந்து விட டோம். சற்று உள்ளே இருக்கிறது கனடாவின் நல்லூர்க் கந்தசாமிக் கோவில். இன்னும் பத்து நாளில் தேர். யாழ்ப்பாண நல்லூர்க் கந்தன் தோற் றான் போங்கள்.”
கனடாவின் இந்த மின் சாரத் தடங்கல் களேபரத்தில்; மக்கள் கதி கலங்கி நிற்கின்றதொரு சூழல். வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி எப்படி இருந் திருக்கும்! எதிர்பார்த்தபடியே மக்களின் வரவு மிகவும் குறைவானதாகவே இருந்தது.
காலை ஒன்பதரை மணிக்கு ஒரு
சம் பிரதாயபூர்வமான உரையுடன் புத்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தேன்.
மல்லிகை ஆண்டு மலர்கள்
58
வரிசை வரிசையாக நிறைய நூல்கள். அத்தனையத்தனையும் தர மான இலக்கிய நூல்கள். சங்க காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான தமிழப் புத்தகங்கள்.
தமிழகத்திலிருந்து நமக்கே வராத பல நூல்கள் பார்வைக்கே கிடைக்காத பல நூல்கள் கண்காட்சியை அலங் கரித்தன.
புலம் பெயர் நாடுகளின் தமிழ் நூல்கள், ஈழத்து வெளியீடுகள் என்று
ஏராளமான நூல்கள்.
மல்லிகைப் பந்தல் நூல்கள், - 2000, 2001, பூபாலசிங்கம் வெளியீடுகள், துரைவியின் நூல்கள், குமரன் வெளி யீடுகள், மூன்றாவது மனிதன் வெளி யீடுகள், சுதந்திரன் சிறுகதைகள், மல்லிகைச் சிறுகதைகள், ஈழத்து முன் னோடிச் சிறுகதைகள், விபுலானந்தரின் யாழ் நூல். என்று.
கனடாவின் பொருளாதார மகிமை கொண்ட ஒண்டாரியோ நகரில் இருக்கின்றோம் என்கின்ற நினைவே இல்லாமல் போய் விடுகின்றது.
யாழ் நூல் கனடாவின் ஒல்கார் அமைப்பு வெளியிட்டுள்ள நூல் . அமைப்பு, அச்சு அத்தனையும் அற்புத மாக வந்திருக்கிறது.
பண்டைக்காலத்தில் சிறப்புற்றி ருந்து, பேணுகையற்று இடைக்காலத் தில் இல்லாமல் போய்விட்ட தமிழரின் இசைமரபு தொடர்பான ஒரு மீள் கண்டு பிடிப்பு முயற்சி இது. டாம்சிவதாசனின் துணையுடன்.

‘‘இன்னும் வெளியீட்டு விழா நடைபெறவில்லை. மாத இறுதியில்தான் வெளியிட ஏற்பாடுகள் செய்துள்ளோம். எல்லைகள் தாணி டியும் விரியும் எங்களது சிறகுகள்.” என்று கூறு கின்றார் ஒல்கார் அமைப்பின் சிவா தாட்சாயினி.
பார்வைக்கு மட்டும். விற்பனைக் கல்ல என்னும் அறிவிப்பு இந்த யாழ் நூலிலும், இன்னும் ஒரு சில நூல் களிலும் வைக் கப்பட்டிருந்தமை ‘நோக்கம் விற்பனை மட்டுமே அல்ல. நூல்களை பற்றிய அறிதலும் அறிமுக மும் முக்கியம் என்பதையும் உணர்த்து வதாக இருந்தது.
ஒரு பத்து பதினொரு மணிக் கெல்லாம் பார்வையாளர் தொகை அதிகரிக்கத் தொடங்கியது. புத்தகக் கண்காட்சியும் களைகட்டத் தொடங் கியது.
என்.கே. மகாலிங்கம், அ.முத்து லிங்கம், திருமதி.பார்வதி கந்தசாமி, பிரேம்ஜி, என்.கே.ரகுநாதன், கவிஞர் கந்தவனம், உதயன் லோகேந்திர லிங்கம், செழியன், திலீப்குமார், வரன், ஜயகரன், சூ.மாாக்கு, நெல்லியடி சிவம்,
ஞானம் லம் பர்ட் (தா ஸரீய சினி மைத்துனர்), டானியல் ஜீவா (சமர் டானியல் அன்ரனியின் சகோதரர்),
பரமு சிவசுப்பிரமணியம் (சு.ப.தமிழ்ச் செல்வனின் மூத்த சகோதரர் - கனடா TAMIL GUARDIAN 35.66, GList pu பாசிரியர்), லோகநாதன், முருகதாஸ், கே. ஜானகி (அமரர். தோழர் கம் யூனிஸ்ட் மு.கார்த்திகேசனின் புதல்வி), எஸ்.வி.ராஜேந்திரன் (அமரர். எஸ்.வி. தம்பையாவின் சகோதரர்), எஸ்.சந்திர
ar yet Get
சேகரன், சிவானந்தநாதன், ஓவியர் கருணா, திருமாவளவன், சக்கரவர்த்தி, கற்சுறா, ஒல்கார் அமைப்பின் நண்பர் கள், தேடலகம் நண்பர்கள், சாம்பசிவம் கோணேஸ்வரன், ராதாகிருஷ்ணன். என்று காலம் செல்வத்தின் இலக்கிய நட்பு நிமித்தமும் என்னைக் காண வென்றும் எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் ஒன்று கூடத் தொடங்கினர்.
டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர் செல்வ.கனக நாயகம் அவர்கள் கண்ணில் ஒரு ஆப்பரேசன் காரணமாக வரமுடிய வில்லை என்றும் பிறகு ஒருநாள் வந்து என்னை சந்திப்பதாகவும் தகவல் அனுப்பியிருந்தார்.
கனக நாயகம் அவர்கள் “LUTESONG AND LAMENT sisigoud ஈழத்துச் சிறுகதைகள்; கவிதைகள் உள்ளடக்கிய ஆங்கிலத் தொகுதி ஒன்றினை 2002இல் வெளியிட்டவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஆறு நூல்களின் ஆசிரியர். என்னுடைய கனடா விஜயத்துக்கான விசா ஒழுங்கு களுக்கு முழுமனதுடன் உதவியவர். இந்த இலக்கிய இதழ் மல்லிகை மூலம் அவருக்கு எனது நன்றியை தெரி வித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடை கின்றேன்.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர் சுரேஷ் ab 601 ab J Tg T SÐ 6nu si ab 6ři (STATE UNIVERSITY OF NEW YORK) கூட்டம் முடியும்வரை இருந்து கை குலுக்கிப் பாராட்டிச் சென்றார்.
59

Page 32
Ugly GSGDS
மண்டப வாயிலில் ஒரு சிறு மேசை யில் மூன்று அறிவித்தல்கள் வைக்கப் பட்டிருந்தன. * மறைந்த தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின் 25வது ஆண்டு ஞாப கார்த்த நூல் வெளியீடு ஸ்காபரோ சிவிக் சென்டரில் 24-8-2003 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு. தொடர்புகளுக்கு ஜானகி - சூ.மார்க்
* கேடானியல் நினைவும் மலர் வெளியீடும் . கனேடிய இலங்கை ஆய்வாளர்களின் கருத்துரைகள் . செப்டெம்பர்.6.2003 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கெனடி வீதி எஹற்லிங்டன் (KENNEDY - EGLINTON) 700 இலக்கத்தில் . தொடர்புகளுக்கு சூ.மார்க் - நெல்லியடி சிவம். * ரீராம ஜெயம். நோய் தீர்க்கும் நோக்கத்தோடு கொழும்பு தெஹிவளை ஜெயவீர ஆஞ்சனேயர் ஆலயத்தி லிருந்து இங்கு வருகை தந்திருக்கும் பூரீ சந்திரசேகர சுவாமிகள் நிகழ்த்த விருக்கும் பூஜை வழிபாடுகள் பற்றிய விபரம்:- 14.8.2003 வியாழன் மாலை 4.00 மணிமுதல் 10 மணிவரை 15.8.2003 வெள்ளி மாலை 4.00 மணிமுதல் 10 மணிவரை 18.8.2003 திங்கள் மாலை 4.00 மணிமுதல் 10 மணிவரை 19.8.2003 செவ்வாய் மாலை 4.00 மணிமுதல் 10 மணிவரை ஸ்காபரோ ஒண்டாரியோ. 3330 பார்மசி அவெனியு, மெகா பார்டி ஹால்.
60
தீராத நோயினாலும் தீவிர சிந்தனையினாலும் நோய்வாய்ப்பட்டு அவஸ்தைபடுவோர் சுவாமிகளை சந்திக்கலாம். கொழும்பில் ஆஞ்ச னேயர் ஆலயம் அமைந்திட பொருளு தவி செய்த மக்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க எண்ணி அனுமானிடம் மன்றாடி அறிந்துகொண்ட அற்புத மூலிகை கொண்டு தயாரித்த மருந்தினால் நோய் தீர்க்க வந்துள்ளார் சுவாமிகள்.
வாழும் தமிழ் நூல் கண்காட்சிக் காக வரும் தமிழ் அன்பர்களுக்கான அழைப்பு அறிவித்தல்கள் இவை.
முழுநாள் நிகழ்வு என்பதால் வந்திருந்த இலக்கிய நேசர்களுக்கும், தமிழ் அபிமானிகளுக்கும் பகல் உணவு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நான்கு மணியளவில் என்.கே.மகா லிங்கம் தலைமையில் குமார்மூர்த்தி நினைவுப் பேருரையும், அதன் பிறகு சபையோர் கலந்துரையாடலும் இடம் பெற்றது.
நூறு அல்லது நூற்றி ஐம்பதுக்குக் குறையாத தமிழ் இலக்கிய அன்பர்கள், மலையக இலக்கியம் பற்றிய எனது உரையை அமைதியாகக் கேட்டதும், கலந்துரையாடலின் போது ஆர்வத் துடன் பங்கு பற்றி கேள்விகள் கேட்டதும் மிகவும் மகிழ்வாக இருந்தது.
இரவு பத்து மணிக்குக்கூட பகல் போல் இருக்கும் கனடாவில் தமிழ் வாழும் என்கின்ற உள்ளுணர்வும் இனிமையாக இருந்தது.
(முற்றும்)

نام اختلوی
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக
- 6)cατώδοξία, έξωα
அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறீர்களே, இதில் நீங்கள் கண்டு அதிசயித்த சம்பவங்கள் என்ன?
அனுராதபுரம் V எம்.முகம்மதுபவரீர்
23 யாழ் மாநகர சபைக்குள் உட்பட்ட இரண்டே இரண்டு வட்டாரங்களில் வசித்து வந்த முஸ்லிம் சகோதரர்களிடமிருந்து இளங்கீரன் என்றொரு நாவலாசிரியரை உருவாக்கித் தந்துள்ளது யாழ்ப்பாணம். யாழ். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அவலச் ஆழ்நிலையிலும் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தமிழர் - முஸ்லிம்கள் வெட்டுப்பகை, குத்துப்பகை ஆழ்நிலையிலும் இந்த மண்ணில் இலக்கியத்தை நேசித்த உண்மையான தமிழ், முஸ்லிம் இலக்கியவாதிகள் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுமற்று சகோதர பாசத்துடன் இயங்கி வந்துள்ளனர். மல்லிகை, திக்வெல்லை, மாத்தளை, நீர்கொழும்புச்சிறப்புமலர்களை வெளியிட்டு வழிகாட்டியுள்ளது. அட்டையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இலக்கியத் தகைமையாளர்களின் உருவங்களைப் பதித்து வரலாற்றுக்குப் பங்களிப்புச் செய்துள்ளது.
இந்த நாட்டில் பகைமை பாராட்டாமல் ஒருவர் கலாசாரத்தை இன்னொருவர் புரிந்துகொண்டு கனம் பண்ணிக் கெளரவிக்கத் தக்க வகைகளில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த மண்ணின் இலக்கிய உலகம் ஒரு நவ இலங்கைக்கான ஒற்றுமைக்கோஷத்தைமுன்வைத்துமக்களனைவரையும் ஒன்று சேர்க்க முனைந்து உழைத்து வந்துள்ளது.
அரசியல்வாதிகள் தலைமை தாங்கி வழிநடத்துவதைத் தவிர்த்து இலக்கியவாதிகள் தலைமை தாங்கியிருந்தால் எப்போவோ நமது நாடு சுமீட்சம் பெற்றிருக்கும்.
X சில எழுத்தாளர்களைக் கவனித்துப் பார்த்திருக்கிறேன், சகோதர எழுத்தாளர்களினது புத்தக வெளியீடுகளுக்கோ, இலக்கியக் கூட்டங் களுக்கோ வருகை தரமாட்டார்கள். ஆனால், தமது நூல் வெளியீட்டு விழாக்களுக்கு மாத்திரம் அழைப்பனுப்பி ஏனையோரைக் கலந்துகொள்ள
61

Page 33
அழைப்பு விடுப்பார்கள். இதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
வெள்ளவத்தை எஸ்.தமயந்தி
இS இதை நானும் அவதானித்து வந்துள் ளேன். இப்படியான எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் நின்று நிலைத்திருக்க மாட்டார்கள். வருவார்கள். வந்த சுவடு மறைவதற்குள்ளே மறக்கப்பட்டு விடுவார்கள். நான் சொல்லக் கூடியது இதுதான். இப்படியானவர்கள் அழைப்பு விடுத்தால் ஒட்டு மொத்தமாக எழுத்தாளர்கள் அவ்விழாவைப் பகிஷ்கரித்து விடுவதுதான் சரியான வழியாகும்.
எஸ். பொ. சென்னை இலக்கிய விழாவில் கலந்து கொண்டிருக்கக் கூடாது என்றொரு கருத்து இங்கு நிலவு கின்றதே, அது பற்றி உங்களது கருத்து என்ன?
அவர்களினது
கோப்பாய் எம்.மணிகரன்
23 ஒன்றைச் சிலர் புரிந்து கொள்ளத் தவறு கிறார்கள். நான் முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கியஸ்தன்மாத்திரமல்ல, இடதுசாரி இயக்கத் தொடர் அங்கத்தவன் மாத்திரமல்ல, மல்லிகை என்றொரு சிற்றேட்டின் ஆசிரியரும் கூட! வெறும் பகையைமாத்திரமே விதைத்துவிதைத்து அதையே அறுவடை செய்து வந்திருப்பேனாக இருந்திருந்தால் மல்லிகை இத்தனை ஆண்டுக் காலம் இலக்கிய உலகில் கால் பதித்திருக்காது ஆசிரியர் என்கின்ற முறையில் புதுப் புதுப் பிரச்சினைகள் இடைக்கிடையே தோன்றும் மறையும்.
கனடாவிலிருந்து வந்திருந்த அந்த இளங்கவிஞன் என்னை நேரிடையாக இப்படிக்
62
கேட்டான். "மல்லிகைக்கான அட்டைப்படத்தை எஸ்.வா.விடமிருந்து பெற்றுக்கொண்டு அதற் கான கட்டுரையை நீங்களே எழுதி மல்லிகையில் வெளியிட்டிருந்தீர்களே அப்பொழுதும் உங் களையும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை யும் திட்டிக் கொண்டிருந்தவர்தானே இந்த ersio.6LUIT.
உங்களது பத்திரிகை நேர்மையை எஸ்.பொ.கனம்பண்ணிக் கெளரவித்ததுபோல, அவரது இவ்விழாக் கெளரவத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வதுதான் இலக்கிய நேர்மை"
என்றார், அவர் நடந்தது இதுவேதான்.
X உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள். நீங்கள் தபாலில் அனுப்பும் மல்லிகைக்கான சந்தா தாரர்கள் சந்தாப் பணங்களை ஒழுங் காக அனுப்புகிறார்களா?
வறட்டன். எஸ்.ஜிவசோதி
Aer6 இது 05 (pleLTsirst LDTaw Gas sires. சந்தாதாரர்கள் இத்தனை ஆண்டுக் காலமாக ஒத்துழைப்புத் தராமல் இருந்திருந்தால் மல்லிகையே வதாடர்ந்து வந்திருக்காது. நான் ஆரம்ப காலங்களில் தெருக்களில் திரிந்து திரிந்து மல்லிகையை விற்று வந்த காரணமோ, என்னமோ இன்றும் பலர் வீதியில் வைத்தே சந்தாப் பணத்தை ஒப்படைத்து விடுகிறார்கள். இதில் புதுமை என்னவென்றால் உலகத்திலேயே தெருவீதிகளில் சந்தாப் பணத்தை அறவிட்டு, இத்தனை ஆண்டுக் காலமாக வவளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாசிகை மல்லிகை ஒன்றேதான். இலக்கியக் கூட்டங்களில் சந்திக்கின்ற போதும் கணக்கை முடிப்பார்கள்.
இது அவசர யுகம். நேரம் பணத்தை விட, முக்கியம். இதைப் புரிந்துகொண்டு ஒழுகி

வருபவன், நான். மல்லிகையின் சந்தாதாரர் களை இனங்கண்டு வைத்திருக்கிறேன். சும்மா வாய்ச்சவடால் டூப்படிப்பவர்களை இனங்கண்டு மெல்ல மெல்லக் கடத்தி, அவர்கள் அறியாம லேயே உறவை முறித்துக் கொண்டு விடுவேன்.
இத்தனை ஆண்டுகள் மல் லிகையுடன் ஒடிக்கொண்டிருக்கிறீர் களே, என்னத்தைக் கண்டீர்கள்?
Cauca CorfuLurr ச.அமிர்தநாதன்
* இந்தத் தேசத்தில் நாலா திசைகளிலும் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் பலரை மல்லிகை உருவாக்கித் தந்துள்ளது. சிங்கள மக்களால் சூழப்பட்ட முஸ்லிம் கிராமமான திக்வெல்லையை தமிழ் கூறும் நல்லுலக விமங்கும் இலக்கியக் கிராமமாகக் கால் நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னரே ஊரறியப் பிரகடனப்படுத்தியது மல்லிகை. மலையக மாத்தளைக்குச் சிறப்பு மலர் வெளியிட்டது. நீர் கொழும்பு மலரை அறிமுகம் செய்ததுடன் முருகபூபதி என்ற அற்புதமான எழுத்துக் கலைஞனை இலக்கிய உலகத்திற்குத் தந் துள்ளது. அதைவிட முக்கியம் மல்லிகைக் கந்தோருக்கு வந்து ஆசனத்தில் குந்தி யிருக்கும்போது ஏற்படும் ஆத்ம திருப்தி இருக் சிறதே. அப்பாடா, சுவர்க்க சுகமது.
சமீபத்தில் திரையரங்கில் ஏதா வது தமிழ்ப்படம் பார்த்தீர்களா?
Chagarfanswm Yr LID. Uair Lug
23 தங்கர் பச்சானினுடைய தென்றல் படம்
LTfšodi, 6drp Abu TPLDTd Abigš தரமான தமிழ்ப்படங்களை எடுப்பவர் அவர் என்பது மகிழ்ச்சிக்குரியது.
GG)
உங்களுடைய சுயவரலாறு நூலைப் படித்துவிட்டு, உங்களது விடாமுயற்சியையும் அர்ப்பணிப்பு உணர்வையும் புரிந்துகொண்டேன். இப்பொழுது தொடர்ந்து நீங்கள் மல்லிகையில் எழுதிவரும் சஞ்சிகை அனுபவங்களைப் படித்துப் பார்க் கும் பொழுது அப்படியே அசந்து போய்விட்டேன். பல வாழ்க்கை உண்மைகளை அப்படி அப்படியே சொல்லி வைக்கிறீர்களே இந்த இலக்கிய நேர்மை என் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
acйтсэлтптевыib стib.arгTсucuлcüт
இS ஒரு மக்கள் கலைஞன் தன்னைப் பற்றிய அடிப்படை உண்மைகளை மக்கள் முன் பகிரங்கமாகச் சொல்ல வேண்டியது முக்கியம். நாளை அவனைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான தகவல்களை அது தடுக்கக்கூடும்.
ΣΚ. நடைபெறப் போகும் இந்தத் தேர்தலில் யார் வெல்லுவார்கள் என நினைக்கிறீர்கள்?
கண்டி எம்.அருணாசலம்
இ8 யார் வெல்லுவார்கள் அல்லது தோற் பார்கள் என்பது முக்கியமல்ல. யார் பிரச்சினைகளை - குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களினது கடந்தகாலக் கசப்பான பிரச்சினை களைச் சுமுகமானத் தீர்த்து வைப்பார்கள் என்பதே கேள்வி. அதற்குத் தமிழ், முஸ்லிம் மக்களினது பிரதிநிதிகளின் கருத்தைவிட, பெரும்பான்மையான சிங்கள மக்களின் நல்லெண்ணத்தைக் கொண்டவர்கள் ஆட்சி
63

Page 34
st GSG)
அதிகாரத்திற்கு வருவதே பிரச்சினைகளின் தீர்வுக்கு நல் வழியாகும். X சென்ற இதழில் மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் பற்றி விளம்பரம் போட்டிருக்கிறீர்கள். மலர் எப்படியாக அமைய வேண்டு மென விரும்புகிறீர்கள்?
தெவறிவளை எஸ்.எம்.ராகுலன்
23 சிற்றிலக்கிய ஏடுகளின் வரவு வரிசையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு இது. எனவே வெளிவரவுள்ள ஆண்டு மலரும் அதற்கமைவான தாக இருக்க வேண்டும் என ஆசைப்படு கின்றேன்.
முன்னைய காலங்களில் ரொம் பவும் அருந்தலாக இடையிடையே புத்தகங்கள் வெளிவரும், வெளி யீட்டு விழாக்கள் நடைபெறும். இன்றோ ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாகப் புத்தகங்களங்கள் வந்து கொண்டிருக்கின்றனவே. இவைகள் அனைத்தையும் விற்பனவு செய்து விட முடிகின்றதா? மல்லிகைப் பந்த லின் வெளியீடுகளின் விற்பனை நிலை என்படி உள்ளது?
பதுளை crib.arrioCascarcir
23 இங்கு பல எழுத்தாளர்கள் சொந்தப் பணத்தை முதலீடு செய்தே தத்தமது நூல்களை வெளியிட்டு வைக்கின்றனர். அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்படு Beirpeñ. ascurrayrry del con Lode, escucó அமைச்சு முன்னர் படைப்பாளிகளுக்குக்
64
கைதந்து உதவி வந்துள்ளது. இன்று அது அருந்தலாகிவிட்டது. மல்லிகைப்பந்தலின் ц5icüтсuтrтdo шociocuбсолвъ стсürп0 argѣфсилаһu5icйт பின்பலம் உண்டு. இருந்தாலும் மக்கள் நமது படைப்புகளுக்கு முழு உற்சாகமளித் தால் இதற்கான விடிவு கிடைக்கும்
X சென்னை இலக்கிய விழாவில் பெரியவர் வல்லிக்கண்ணன், சரஸ்வதி விஜயபாஸ்கரன், தி.க.சி. சிட்டி சுந்தரராஜன் போன்றோரு டன் வீற்றிருந்து விருதைப் பெறும் பொழுது என்ன நினைத்தீர்கள்?
நீர்கொழும்பு கே.எம்.கண்ணன்
2 உண்மையை சொல்
மனந்திறந்து லட்டுமா? நான் மனசால் விசுவசிக்கும் ஓர் ஈழத்து எழுத்தாளன் அந்த மேடையில் விருதைப் பெறும் காட்சியை நான் நேரில் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கலாமே என்ற எண்ணம்தான் அந்தச் சந்தர்ப்பத்தில் என் வநஞ்சிற்குள் நிழலாடியது. X எங்களது நாட்டுத் தினசரிப் பத்திரிகைகளைப் போல, தமிழ கத்துத் தினசரிகள் இலக்கியவாதி களுக்கு, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனவா?
நீர்கொழும்பு கே.எம்.கண்ணன்
இ வஜயலலிதாவுக்குப் பின்னாலும், ரவினி காந்துக்குப் பின்னாலும் ஓடி ஒடிச் செய்தி சேகரிக்கத்தான் அவர்களுக்கு நேரம் போதாமல் கிடக்கின்றதே, இலக்கியமாவது புடலங்காயாவது!
201 - 1/1, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு .
13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும்
வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

TNUl புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் சாஹித்திய புத்தக இல்லம் ہتھی۔
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல. 4, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்)
புததளம. தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து
தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து
விற்பனை செய்து உதவுவோம்.

Page 35
EXPO PRODU
DCXpOr O) Ti Sri Lan)
30 Sea Colom
Tel: 2
 

April 2(X)
RA
CTS (PVT) LTD.
CrS Of raditiOr)a||
○「) 「○○○S
Avenue, bo - 03. | 57.37.17 ||