கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.05

Page 1
「!:sae.|× )∞sae
\\ . ---- |- .: |-'\,|-|-|-
No.
|×|-|-
雪 | - . . ) — ), .|-|
. . .
 
 


Page 2
THE DIGITAL SERVICES WE PROVIDE Digital Print I2"XI8" Maximum size in I0 Min. Automatic dust and scratch correction.
Print to Print services.
Contact Cards and Index prints.
Greeting Cards/Frame Prints/Calender Prints/Album Prints. Compatible Input & Output Media (Floppy Disk, CD-Rom, CD-R,/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, Compact Flash, Smart Media)
Digital Camera Card Printing.
Colour Negative, Positive, B/W and Sepia Negative Printing.
OTHER SERVICES Developing & Printing of films in 20 Min Printing of Enlargements (5"2X7" to I2"ΧΙ8") Passport/Visa photos /B/W photos in I0 Min.
Film Rolls / Cameras / Batteries / CD / Floppy / Album Sales. Οι Framing of Pi I d d§o
raming of Pictures (Imported) NIN Laminating Services. ܙܢO Wedding Album Binding. 8 لإضي نكي
ర' S Nep
FOR ALL YOUR REOUIREMENTS IN (O రో NOSO Qo
SN KN bN «ܛܘ݂ Out Door Photography & Videography ს» w NYA NOX Weddings. o CO (S\\ Birthday Parties / Puberty Ceremonies ९©
Seminars/ Any Other Special Functions & Occasions.
 

மகத்தான கலைஞனே உன்னை நாம் வாழ்த்துகின்றோம்!
S2 codiscSaos
உலகப் புகழ் பெற்றவரும்
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
இலங்கை சினிமாத்துறையில் சர்வதேச
யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
சாதனை நிலைநாட்டியவருமான சாதனையாளர் டாக்டர் லெஸ்டர்
ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள் இந்த மாதம் தனது 85வது பிறந்த தினத்தை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்
un வெகு விமரிசையாகக் கொண்டாடி
சிங்களச் சினிமாத்துறையுடன் சம்பந்தப்பட்ட அநேகர் இந்தப் பிறந்த தின விழாவில் கலந்து கொண்டு சிங்கள
6tD 2004
Mallikai' Aοτοσταδαίνα Monthly Mafay ine
சினிமாத்துறைக்குக் கடந்த காலங்களில் அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டிப் பேசினர்.
நவீன உலக சினிமாத்துறைக்கு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள் செய்துள்ள பாரிய பங்களிப்பைப் பற்றி உலக சினிமா வட்டாரம் நன்கறிந் துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே
படைப்பாளிகளின்
இவரது அட்டைப் படத்தை மல்லிகை
புதிய ஆக்கங்களை மல்லிகை
e e 6 யில் ரிச் C 辻 எதிர்பார்க்கின்றது. ரசுரித்து இந்த சர்வ தேசக்
கலைஞனைத் தமிழ்க் கலைஞர்கள் சார்பில் மல்லிகை கெளரவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
முதிர்ந்த இந்த அற்புதக் கலைஞனை மீண்டும் மல்லிகை வாழ்த்துகின்றது.
| 2oI-II/II, Sri Kathiresan Street,
Colombo - 13. Tel: 232O72I
ஆசிரியர்

Page 3
தற்போது விற்பனையில்
ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் - ஜெயரஞ்சினி இராசதுரை
. தமிழ் அரங்க வரலாறு குறித்த ஆய்வு வரிசையில் இந் நூலாசிரியருக்கு தனித்த இடம் உண்டு. தமிழ் அரங்க வரலாறு பற்றிய நெட்டோட்டமான பதிவு முழுமைபெறாத சூழலிலும்கூட, பெண்நிலை வாதம் என்ற கருத்துநிலையை முன்னெடுத்து ஆய்வு செய்துள்ளமை பாராட்டுக்குரியது. தமிழில் பெண்நிலைவாதம் என்ற கருத்துநிலை சார்ந்து வெளிவரும் முதல் அரங்க வரலாற்று நூலாகவும் இந்நூல் அமைகிறது. '' - பேராசிரியர் வீ. அரசு, தமிழ் இலக்கியத் துறை. சென்னைப் பல்கலைக்கழகம் அரங்கும் பெண்ணும்-கருத்துநிலை அடிப்படைகள், சர்வதேச நிலையில் பெண்நிலைவாத அரங்கின் வளர்ச்சி. தமிழ் அரங்கில் பெண் -ஒரு பெண்நிலைவாத நோக்கு, பெண்நிலைவாத அரங்கின் அரங்கியற் பிரச்சி னைகள், சாத்தியப்பாடும் வளர்ச்சியும் ஆகிய பகுதிகளைக் கொண்டதாய் இந்நூல் அமைகிறது. 8 w
Luis, 56 XX V1 + 285
ரூபா 450/= (சாதாரணப் பதிப்பு) ISBN 955-9429-24-8
நூலகங்களில் தகவல் தொழில்நுட்பம்
- எம்.பீ.எம். பைரூஸ் பிரதம நூலகர், தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம், இலங்கை, கணினி பல்வேறு துறைகளுக்குப் புறம்பாக, நூலகவியற் துறையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. நூலகவியற்துறையில் கணினியின் அறிமுக மானது, அத்துறையில் புதியதொரு துறையையும் அறிமுகப்படுத்தி யுள்ளதோடு, நூலகவியல், தகவற்துறை விஞ்ஞானமாக மாற்றம் பெற்றுள்ள மையினையும் அவதானிக்கலாம். எனவே இந்நூல், தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன? கணினியின் பின்னவிை. தொகுதிப் பகுப்பாய்வு, கணினி வலையமைப்புகள், தகவல் பரிமாற்றம், தரவுத்தள முகாமைத்துவ முறைமை, நூலகங்களும் கணினியும், நூலக நடவடிக்கைகளை கணினிமயப்படுத்தல், இணையச் செயற்பாடும் நூலகங்களில் அதனது அவசியமும், சிடி-ரொம் தொழில் நுட்பத்தை நூலகங்களில் பயன்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பற்றி ஆராய்கிறது. மேலும் கணினி மயப்படுத்துவது பற்றிய போதிய அறிவினைத் தெளிவுற விளக்குகிறது.
பக்கங்கள் XVi + 121 ரூபா 300/= (சாதாரணப் பதிப்பு) ISBN 955.9429-29-9 ரூபா 500/= (விசேடப் பதிப்பு) ISBN 955-9429-30-2
குமரன் புத்தக இல்லம்
201 டாம் வீதி, கொழும்பு -
தொ.பேசி : 2421388
12. 3. மெய்கை விநாயகர் தெரு,
சென்னை - 600 026.
 
 

புதிய வரலாறு படைக்கவேண்டும்
தேசம் பூராவும் மிகமிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பொதுத் தேர்தலும் ஒருவகையாக நடந்தேறி முடிந்துவிட்டது.
இதில் மக்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சியடைந்த ஒரு சம்பவம், இத்தேர்தலில் பாரிய அசம்பாவிதங்களோ வன்முறைகளோ இல்லாமல் அமைதியாக இத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதுதான். இதைப் பார்க்கும்போது மக்கள் அரசியல் ரீதியாகப் பண்பட்டு முதிர்ச்சியடைந்து வருகின்றனர் என்பதை அவர்களது இந்த ஆழ்ந்த நடவடிக்கைகளே எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.
பல ஆண்டுக் காலமாகவே ஒரு தேர்தல் நடந்தால் அதைத் தொடர்ந்து வன்முறை நாடு பூராவும் வியாபிக்கும். அதன் நிமித்தமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அல்லோல கல்லோலப்பட்டு, கஷ்டப்படுவார்கள்.
இப்பொழுது நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில் அப்படியொரு அசம்பாவிதங்களும் நடந்தேறவில்லை. இத்தகைய செயல்களே நமது மக்களின் அரசியல் முதிர்ச்சி நெறிமுறைகளின் வளர்ச்சியையும் ஆழ்ந்த ஈடு பாட்டையும் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன.
மெத்த மகிழ்ச்சி நிரம்பிய சம்பவத் திருப்பங்கள் இவை. புதுப் பிரதமர் தெரிவு செய்யப்பட்டுவிட்டார். அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட்டு விட்டனர்.
ஆனால், நமது மனதை உறுத்தும் ஒரம்சத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நீண்டகாலமாகவே இனங்களுக்கிடையே பரஸ்பரம் நிலவி வந்துள்ள பல்வேறு குறைபாடுகளைக் களைந்து, அரசியலில் தூர் எடுக்கப் பண்ணுவது தான் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க மெய்யாகவே உதவும் எனத் திடமாக நம்புகின்றோம். r
புதிய அரசாங்கம் புதிய வரலாறு படைக்குமா? படைக்கும் என நம்புகின்றோம்.

Page 4
க்குவலீலையின் ஆத்மாவே A வுசெய்த படைட்பாளி
- லெ. முருகபூபதி
இலங்கையில் முஸ்லிம்கள் என்றாலே - அவர்கள் "வர்த்தகச் சமூகத்தினர் என்ற கணிப்பு பொதுவானதாக நிலைபெற்றிருந்த காலமொன்றிருந்தது. அக்கணிப்புப் பின்னாளில் பொய்யானது.
அக்காலப் பகுதியில் 'திக்குவல்லை’ என்ற பெயர் இலக்கியப் பரப்பில் அறிமுகமாகியிருக்கவில்லை. தென்னிலங்கையில் ஒரு கடலோரக் கிராமமாகத் திகழ்ந்த இந்த ஊரை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை மறைந்த, இலக்கிய நண்பர் எம்.எச்.எம். சம்ஸை பெரிதும் சார்ந்திருந்தது. அப்பெருமைக்குப் பங்கம் நேர்ந்துவிடாமல் பேணி
பாதுகாத்தவர் கமால்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, கல்வியில் ஆர்வமுடன் ஈடுபட்டு, சிறுவயதில் புலமைப் பரிசில் சித்தியும் - பின்னர் க.பொ.த. (விஞ்ஞான பிரிவு) சித்தியும் பெற்று பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து ஆசிரியராக வெளியேறி, பின்னாளில் கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சையிலும் சித்தியடைந்து இன்று வவுனியாவில் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றுபவரின் ஆளுமை இவர் நேசித்த இலக்கியத்தில் துலங்குகிறது.
தமது இயற்பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்து, ஊருக்குப் பெருமை சேர்த்தவர்கள் ஏராளம். கலைஞர்கள், கவிஞர்கள், இசை விற்பன்னர்கள், படைப்பாளிகள் பலரை அந்த வரிசையில் நாம் பார்த்து வருகிறோம்.
திக்குவல்லை’ என்றவுடன் எமக்கெல்லாம் மட்டுமல்ல - சாதாரண வாசகனுக்கும் முதலில் நினைவுப் பொறியில் தட்டுப்படுபவர் கமால்தான்.
ஜஹாதை GO

இலக்கிய உலகில் கமால் என்றால் யார்..? திக்குவல்லை கமாலா? என்றுதான் உடனே கேட்பார்கள்.
1968இல் ராதா என்ற பெண் பெயர் கொண்ட இதழில் எழுதத் தொடங்கிய இந்த படைப்பாளிக்கு பெண் குழந்தைகள் இல்லையே என்பது கவலைதான். இவருக்கு மட்டுமல்ல - எங்கள் கரிசல்காட்டு இலக்கிய வேந்தன் கி.ராஜநாரா யணனுக்கும் தனக்கு பெண் குழந்தை இல்லை என்ற கவலை தொடர்கிறது.
“எழுத்தாளர்களுக்கெல்லாம் முதற் குழந்தை பெண்தான் ” என்ற மல்லிகை ஜீவாவின் வாக்கும் கமால் விடயத்தில் பொய்த்துப் போனது துர்பலம்.
கமாலிடம் நல்ல குணமொன் றுண்டு. கடந்து வந்த பாதையை மறக்காத மனிதர். கடந்து வந்த பாதையை மறப்
தான்
போமேயானால் - செல்லும் பாதை இருட்டாகவே இருக்கும் என நம்பு கின்றவர்.
அழுத்கம சாஹிரா கல்லூரியில் கமால் பயின்ற காலத்தில் 'சுவை என்ற கவிதை ஏட்டிற்கு இவரை நியமித்து நெறிப்படுத்திய கவிஞர்
உணர்த்திய ஏ. ஏ. லத்தீபையும், எம். எச். எம். சம்ஸ், பி.ராமநாதன், இர. சந்திரசேகரன், தொடர்ந்தும் களம் கொடுத்து பக்கத் துணையாக விளங்கும் மல்லிகை ஜீவா ஆகி தனது இலக்கிய வாழ்வில் ஆதர்சமாகக் கொண்டு இயங்கி வருபவர்.
யோரையும்
கவிதை, சிறுகதை,நாவல், பத்தி எழுத்துக்கள் எனத் தன்னை விரிவு படுத்திக் கொண்டவர். சாஹித்திய விருது உட்படப் பல இலக்கியப் போட்டி பரிசில்களையும் தமதாக் கிக் கொண்டவர். பத்துக்கும் மேற் பட்ட நூல்கள் இவரது தொடர் பயணத்தில் எமக்குக் கிடைத்தவை.
இலங்கை இதழ்களில் மட்டு மன்றி, தமிழ்நாட்டின் தாமரை, செம்மலர், வானம்பாடி முதலான இதழ்களிலும் தனது படைப்புகளை பதிவு செய்தவர்.
திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதலான அமைப்புகளில் செய லூக்கத்துடன் இயங்கியவர். 3 DTři ஐந்து ஆண்டுகள் (1995 - 2000) தமிழ் இலக்கிய ஆலோசனைக்குழு உறுப்பின ராகவும் செயற்பட்டவர். 'இலக்கிய வேந்தன்', 'கலாபூஷணம்’ முதலானப் பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இவரின் இயற்பெயர் முன்னேநிலைத்
ஏ.இக்பாலையும், இன்ஸான்’ இதழ் திருப்பது ஊர்தான்.
மூலம் இலக்கியத்தில் சமூகப் மார்க்ஸிய சிந்தனைகளை உள்
பொறுப்புணர்வை இவருக்கு வாங்கிக் கொண்ட கமாலுக்கு, வர்க்க
Dat: 65605 )رت «هٔ(

Page 5
பேதமற்ற சமத்துவ சமுதாயம்தான் கனவு. அக்கனவு நனவாகின்றதோ இல்லையோ தனது கனவை எழுத்தில் பதித்து மனநிறைவடைகின்றார்.
பொதுவாகவே முற்போக்கு எண்ணம் கொண்ட படைப்பாளி களைப் போன்றே கமாலும் தனது எழுத்து ஊழியத்திற்கு ஒரு நோக் கத்தைக் கொண்டிருக்கிறார்.
இவரது பெரும்பாலான படைப்பு களில் அந்த நோக்கம் புலனாகும்.
மல்லிகை ஜீவா அடிக்கடி சொல் வார், “சிங்கள மக்களால் சூழப்பட்ட பிரதேசங்களில் தமிழைப் பேசி தமிழைக் காப்பாற்றிக் கொண்டிருப் பவர்கள் முஸ்லிம்கள்தானென்று” . இது நிதர்சனம். வடக்கிலும் கிழக் கிலும் தமிழ் வளர்கிறது, வளர்கிறது என்றால் அது தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்பதே அடிப்படை. ஆனால் சிங்களமக்கள் செறிந்து வாழும் பிரதேசத்திலிருந்து தமிழ் இலக்கியம் படைக்கப்பட்டதென்றால் அது முஸ்லிம் சகோதர சகோதரிகளினால் தான் பெரிதும் சாத்தியமாகிறது.
அந்த வகையில் முன்னணியில் திகழ்பவர்'எங்கள்திக்குவல்லைகமால்,
சமயம் சார்ந்த மூடநம்பிக்கைகள் பொதுவாகவே சகல இனங்களிலும் நீடிக்கின்றன. இவற்றை அம்பலப் படுத்துபவன் படைப்பாளியாகத்தான் இருப்பான். அவன் குறிப்பிட்ட சமூ கத்தின் கோபத்தையும் சந்திக்க நேரும்.
கமால் தான் சார்ந்த சமூகத்தின் மேற்பகுதியை மட்டுமன்றி, அதன் வேரையும் வேரடி மண்ணையும் உற்று நோக்கி யதார்த்தமான கதைகளைத் தந்தவர். அதனால் கோபங்களுக்கும் ஆளானவர்.
திக்குவல்லையின் ஆத்மா - யாழ்ப் பாணத்தில் மலர்ந்த மல்லிகையில் மணம் வீசியது இவரது எழுத்துக் களினால், பிரதேச மொழி வழக்கில் வரவு சேர்த்தவர்கமால்.
கமாலின் படைப்புகள் ஆய்வு செய்யப்பட வேண்டியவை. தென் னிலங்கையின் இலக்கியச்சரித்திரத்தில் இடம் பெறுபவர்களில் திக்குவல்லை கமாலும் ஒருவர். பதட்டத்தில் வாழும் படைப்பாளிகள் கமாலிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிதானம், கமாலிடம் இயல்பாகவே குடியிருக்கும் அந்த நிதானம்தான் அவரது பெரும் பலம். இந்த இலக்கிய நேசனின் ஆளுமையின் இரகசியமும் அந்த நிதானம்தான்.
... " '' ... * சந்தா செலுத்தி *. O விட்டீர்களா? .
தயவுசெய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள். அசட்டை செய்வோருக்கு O முன்னறிவிப்பின்றி O
O நிறுத்தப்படும்.
O
O O
O o o e o O
1Y V། ༧།༡

ஈழத்து இலக்கியத் தடமும் இலக்கியக் கர்த்தாக்களும்
- செங்கை ஆழியான்
க. குணராசா
3. மறுமலர்ச்சி ச. பஞ்சாட்சரசர்மா
நவீன தமிழிலக்கியத்தின் மறுமலர்ச்சிக்குப் பண்டிதர் பஞ்சாட்சரசர்மா ஆற்றிய பணி உண்மையில் இலக்கிய உலகினை அவருக்குக் கடமைப்பட வைத்திருக்கின்றது. பண்டிதராகவிருந்தும், வேத சாஸ்திர ஈடுபாடுள்ள வைதிகராகவிருந்தும், பழமை பில் தீவிரப் பற்று மிக்கவராகவிருந்தும், அவர் நவீன இலக்கியத்தின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் தடையாகவிருக்காது அதனை ஒர் இயக்கமாக வளர்ப்பதில் அயராது முயன்றிருக்கிறார். நாற்பதுகளின் நடுப்பகுதியில் மறுமலர்ச்சி இலக்கியவாதிகளை ஒருங்கிணைந்து புத்திலக்கியம் ஈழத்தில் மலர அவர் காலாகவிருந்துள்ளார். பழமையைச் சரிவரப்புரிந்து கொண்டமையால் புதுமை இலக்கியத்தினைச் சரியான தடத்தில் படைப்பதிலும் வழி காட்டுவதிலும் அவருக்குச் சிரமமிருக்கவில்லை. அவருடைய ஆக்கவிலக்கிய முயற்சிகள் கட்டுரை, புனைகதை, மொழிப்பெயர்ப்பு, நாடகம், சிறுவர் இலக்கியம் எனப் பல்துறை சார்ந்திருந்துள்ளது. அவை அந்தந்தத் துறைக்குரிய வகை மாதிரி இலக்கிய வடிவமாக அமைந்திருப்பதைக் காணலாம்.
1916இல் கோப்பாயில் பிறந்த பஞ்சாட்சரசர்மா பாடசாலைக் கல்வியிலும் பார்க்கக் குருகுல கல்வி மூலம் தன் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டவர். தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி முதலான மொழிகளில் புலமை மிக்கவர். கலை இலக்கிய நாட்டமும் நிறைய வாசிக்கும் ஆ வமும் கொண்டிருந்த இவரின் எழுத்தாற்றலைத் தூண்டும் சக்தியாக மறுமலர்ச்சிச் சங்கம் அமைந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சிச் சஞ்சிகைக்கு இருக்கின்ற இடம் இன்றும் பலராலும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது. வரதர், அ.ந.கந்தசாமி, அ. செ.முருகானந்தன், நாவற்குழியூர் நடராஜன், சாரதா என்போருடன் பஞ்சாட்சரசர்மாவும் இணைந்து மறுமலர்ச்சி எழுத்தாளர் சங்கத்தினை
○

Page 6
உருவாக்கினார். மறுமலர்ச்சிச் சஞ்சிகை யின் இணையாசிரியர்களில் ஒருவராக அவர் இருந்துள்ளார். வேளையில் அவர்தன் எழுத்தாற்றலை
அக்கால
வளர்த்துக் கொண்டார்.
பண்டிதர் பஞ்சாட்சரசர்மா அவர் கள் பஞ்சாஷரம், ச.ப.ச., அசஷரம், ஐயாறன், நச்சினார்க்கினியன், வாத்தி யார், பரம், சர்மா, இரட்டையர்கள், பாரத்வாஜன் முதலான பலப் புனைப் பெயர்களில் மறைந்திருந்து தன் படைப்புக்களை வெளியிட்டுள்ளார். 1936ஆம் ஆண்டு தனது இருபத்து மூன்றாவது வயதில் இலங்கை விகடன்’ என்ற சஞ்சிகை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். அதன் பின்னர் மறு மலர்ச்சியில் தொடர்ந்தும், ஈழகேசரி, கலைச்செல்வி, ஆனந்தன், நவசக்தி, வீரசக்தி,கலாமோகினி, பாரத தேவி, காந்தியம், ஈழநாடு முதலான பத்திரிகை கள்/சஞ்சிகைகள் என்பனவற்றில் எழுதியிருக்கிறார். நவசக்தி,வீரசக்தி, கலாமோகினி, பாரத தேவி, காந்தியம் என்பன தமிழ்நாட்டுச் சஞ்சிகை களாகும். அவையும் பஞ்சாட்சர சர்மாவின் படைப்புக்களை விரும்பி வெளியிட்டிருக்கின்றன. ஈழத்துப் பேனா மன்னர்கள் என ஈழகேசரியில் இரசிகமணி செந்திநாதன் எழுதிய அறிமுக வரிசையில் பஞ்சாட்சரசர்மா தக்கவாறு அறிமுகப்படுத்தப்பட்டிருக் கிறார். மல்லிகை நவம்பர் 1965இல் அவரின் வரதரின் அவர் குறித்த கட்டுரையும்
வெளியிட்டுக் கெளரவித்துள்ளது.
அட்டைப்படத்துடன்
கட்டுரை இலக்கியத்திற்கு பஞ் சாட்சரசர்மா அளித்திருக்கும் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்துறைக் கட்டுரை கள், கண்டனக் கட்டுரைகள், விமர் சனக் கட்டுரைகள் என அவர் எழுதி யிருக்கின்றார். வசனக்கவிதை, வட மொழியும் வள்ளத்தோரும், தமிழில் என்ன இருக்கிறது?, தமிழ்மொழியும் ரோமன் லிபியும், மாறும் இலக்கணம், புத்தரின் தந்தம், மூலங்களும் மொழிப் பெயர்ப்புக்களும், ஈழநாட்டில் தமிழ்க் கவிதையின் வளர்ச்சி, நல்லைக்கு வந்த முருகன் எனப் பல கட்டுரைகளைக் குறிப்பிடலாம். அக்கட்டுரைகள் தெளி வும் ஆற்றொழுக்கான உரைநடையும் கொண்டிருக்கின்றன. நல்லைக்கு வந்த முருகன் என்ற கட்டுரையில், ஆறுமுக நாவலரின் பெருமுயற்சியால் தமிழகத் திலிருந்து வருவிக்கப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சிலை வடிவங்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வரலாற் றினை தெளிவாக்கியுள்ளார். செந் தமிழ்ச் செல்வி சஞ்சிகையில் யாழ்ப் பாணத்திற்கு வந்திருந்த ஒரு செல்வி யாழ்ப்பாணத் தமிழைப் பழித் தெழுதிய கட்டுரைக்குப் பஞ்சாட்சர சர்மா தொடுத்த கண்டனக் கட்டுரை முக்கியமானது. பஞ்சாட்சரசர்மாவிற்கு கட்டுரை இலக்கியம் நன்கு கை வந்திருந்தது.
புனைகதைத்துறையைப் பொறுத் தளவில் பஞ்சாட்சரசர்மா கனவுலகம், வாக்குறுதி, படித்துறை சொன்ன பழங் கதை, கண்ணிர்த்துளிகள், கீதநாதம் ஆகிய சிறுகதைகளைத் தந்துள்ளார்.
VITETETTE
GB)

இவற்றில் கனவுலகமும் வாக்குறுதியும், மலையாளச் சிறுகதைகளின் தமிழாக் கங்கள், படித்துறை சொன்ன பழங்கதை ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதையின் தமிழாக்கமாகும். கண்ணிர்த்துளிகளும், கீதநாதமும் அவரின் சுயபடைப்புக்கள் எனக் கொள்ளலாம். தான் வாசித்து ரசித்தவற்றினை வாசகர்களுடன் பரி மாறிக் கொள்ளும் ஆவல் அவரிட மிருந்துள்ளது. அதனால் பிறமொழி களில் வெளிவந்த சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக் கிறார். வாக்குறுதி என்ற சிறுகதை ஒரு யப்பானியக் கதையாகும். யப்பானியக் கதையை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளனர். அதனைத் தமிழில் மொழிபெயர்த்து பஞ்சாட்சரசர்மா தந்துள்ளார். இச்சிறுகதை கோவை யிலிருந்து வெளிவந்த வீரகத்தி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. படித்துறை சொன்னபழங்கதை 1939இல் இலங்கை விகடன் என்ற சஞ்சிகையில் வெளி வந்துள்ளது. கனவுலகம் என்ற மலை யாளக் கதையின் தமிழாக்கத்தைக் கணக செந்திநாதன் மிகவும் வியந்துள்ளார். மொழிப்பெயர்ப்புச் சிறுகதையை வாசிக்கின்ற உணர்வே ஏற்படாத விதமான மொழிப்பெயர்ப்பு அது வென்பது அவர் கருத்து. மேலும் மலை யாள நாடகம் ஒன்றினை அடிப்படை யாகக் கொண்டு வனதேவதை என் றொரு நாடகத்தினையும் பஞ்சாட்சர சர்மா எழுதியுள்ளார். அது 1947இல் மறுமலர்ச்சியில் வெளிவந்திருக் கின்றது.
பஞ்சாட்சரசர்மாவின். புனை
குறிப்பிடத்தக்கன. வாத்தியார் என்ற புனைப்பெயரில் இவை எழுதப்பட்டி ருக்கின்றன. எலிக்குஞ்சுச் செட்டியார், வேண்டும்? தெரிந்தால் சொல்லுங்கள், பூமி சுழல்கிறதே
என்ன
என்பன சர்மாவின் சிறுவர் கதைகளாம். இவற்றில் முதல் மூன்றும் மறுமலர்ச்சி யில் வெளிவந்துள்ளன. நான்காவது அம்புஜம் என்ற சஞ்சிகையில் வெளி வந்திருக்கின்றது. இவை சிறுவர்களின் உளப்பாங்கினை வளர்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மாவின் இலக்கிய எழுத்துக்கள் ஈழத்திலக் கியத்திற்கு எவ்வாறான பங்களிப்புச் செய்துள்ளன என நோக்கில் பெரும் சாதனைகளாகி ஈழத்திலக்கியத்தின் செல்நெறிக்கு வலுவூட்டினவெனக் கூறமுடியாது விட்டாலும், மறுமலர்ச்சி என்ற ஈழத்திலக்கிய இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக விளங்கி நவீன ஈழத்தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மார்க் கத்திற்குரிய மிட்டவர் என்ற வகையில் நினைவு
பாதையைச் செப்ப
கூரத்தக்கவர்.
மல் லி கையின் அபிமான எழுத்தாளர் திரு. ச. முருகானந்தன் அவர்களின் புத்தம் புதிய சிறுகதைத் தொகுதி தரைமீன்கள் எங்கும் விற்பனையாகின்றது.
இது ஒரு மல்லிகைப் பந்தல்
வெளியீடாகும்.
கதைப் பணியில் சிறுவர் கதைகள் சில
S rees Q9)

Page 7
நினைவுள் மீள்தல்
அனே0ஜ0.uரீகாந்தன்
‘மீளுகை வெளியீட்டகத்தினால் தானா.விஷ்ணு என்பவருடைய கவிதைத் தொகுப்பொன்று ‘நினைவுள் மீள்தல்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நினைவுள் மீள்தல் நூலில் காணப்படும் கவிதைகள் அனைத்தும் அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டே புனையப்பட்டுள்ளன. தன்னைப் பாதித்த விடயங்களை எழுத்துருவாகக் கொண்டுவந்துள்ளார் நூலாசிரியர் தானா.விஷ்ணு.
என் வேர்களை அசைக்க முடியாமல் கிளைகளோடு மட்டும் தனது அசுரத்தனத்தினைக் காட்டிவிட்டுப் போகிறது காற்று
என்ற வரிகளைக் கொண்டமைந்த ‘அசுரத்தனம்’ என்ற முதற்கவிதையிலேயே விழாமையினை மிக அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் கவிஞர். ‘விரும்பா நட்பு, விலக்கமுடியா ஞாபகம்’ என்ற கவிதையில் நட்பு ஞாபகங்களோடு ஏழ்மையையும் சேர்த்து மிக லாவகமாக பல கோணங்களை ஒரு கவிதையூடாக படைத்துள்ளார். எடுத்துக்காட்டாக
ஊனமாகிப் போன என் வாழ்வுடன். இடிந்து போய்க் கிடக்கும் என் வீட்டுச் சுவரில்
ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பல்லி உன்னை ஞாபகமூட்டுவது எனக்குப் போதுமானது. போன்ற வரிகளைக் குறிப்பிடலாம். இவ்வாறான யதார்த்தமான நிலைப்பாடுகள் படைப்புக்களாகும் பொழுது அவை எப்போதுமே படிப்போர் மனதில் தாக்கம் ஒன்றினை உண்டுபண்ணுவதை மறுக்க முடியாது. ‘ஓர் ஜீவனின் பாடல் என்ற கவிதையில் காதலி இறந்தாலும் இறக்காத தன் காதல் பற்றிக் குறிப்பிடுகின்றார் கவிஞர். அவளுடைய பிரிவாற்றாமையை
‘நான் தனிமை வெளியில் தள்ளப்பட்டு உடைந்து போன முட்டைக் கோதின் துணைக்கு அமர்கிறேன்.
என்ற வரிகளின் ஊடாக வெளிப்படுத்துகின்றார். இதே தன்மையைக் கொண்டமைந்த ‘நினைவுள் மீள்தல் கவிதையின்
(10)-

‘என்னில் இருந்து மரணித்துப் போன காலங்களை அசைபோட்டுக் கொண்டு எதில் இருந்துமே பிரிக்க முடியாத ஒரு பூச்சிய வளைவுள் அமிழ்ந்து போகின்றேன்.
என்ற வரிகள் தனிமையின் கொடு ரத்தை ஒரு ஜீவன் ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில் எப்படி யெல்லாம் தவிக்கின்றதென்பதைக் காணமுடிகின்றது.
இந்த ‘நினைவுள் மீள்தல்` கவிதைத் தொகுதியிற் காணப்படும் பெரும்பாலான கவிதைகளில் ‘விரக்தி இழையோடுகின்றது. மனித வாழ்வி யலின் அன்றாட நடப்புக்களை முடிந்த வரை வெவ்வேறு விதமாகக் குறிப் பிடப்பட்டிருந்தாலும் கூட இந்நூலில் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண் டமைந்த கவிதைகளே பெரும்பான்மை வகிக்கின்றன. எடுத்துக் காட்டாக, கோழைகளின் கத்தி அல்லது வீரச்
செயல் , விலங்குகளால் பறிக்கப் பட்டதும் தரப்பட்டதும், குருதிக்கறை படிநி த நில வினி குறிப் பேடு, வண்ணத்துப் பூச்சிகளின் வலியுணர் கிறேன், சூனியத்தில் மறைக்கப்படும் சூரியன், மீட்கப்பட்டுக் கொண்டே யிருக்கும் அந்த அவல நாட்கள், அடையாளப்படுத்தல், இன்னும் உறை யில் இடப்படவில்லை வாள், பலியிடல் அல்லது பலியாடுகள், கால்களின் கீழ் நெளியும் நகரம், ஓர் ஜீவனின் பாடல். போன்ற பல கவிதைகளைக் குறிப் பிடலாம். இக்கவிதைகளை வெறுமனே கற்பனைச் சாயம் பூசிய வரிகளாக ஏனோ எண்ண முடியவில்லை.
அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்படும் படைப்புக் களானவை, படைப்பாளிகளுக்கென ஓர் தனியிடத்தைக் கொடுக்கும். இதே யுக்தியை வெகுலாவகமாகக் கை யாணி டு வெற்றி பெற்றுள்ளார் தானா.விஷ்ணு.
m a
வாழ்த்துகின்றோம்
மல்லிகையின் நீண்டநாள் அனுதாபியும் நெருங்கிய நண்பரும் 'தினக்குரல்' ஆசிரியருமான ஆ.சிவநேசச்செல்வன் தம்பதியின் அருமை மகளான செல்வி வnசுகி அவர்களுக்கும் திரு.திருமதி ஐ.மகேந்திரநாதன் தம்பதியின் மகன் செல்வன் வாகீசன் அவர்களுக்கும் சமீபத்தில் திருமணம் கொழும்பில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
மல்லிகை மணமக்களை மனதார வாழ்த்துகின்றது.
நண்பர் சிவநேசச்செல்வனின் திருமணத்தையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை அப்போது வாழ்த்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியர்
SS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLL LSLS
*ன்ே
الرق الح\

Page 8
5. ஆவிகளுடன் சகவாசம்
இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக் கதையோ அல்ல என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறோன். எனினும் இந்தக் கதை இப்படித்தான் தொடங்குகிறது.
நட்ட நடுநிசி! (இரவு பன்னிரண்டு மணி என்று அர்த்தம்) வாசற் கதவடியில் தடபுட என ஒசைகள்! யாரோ அழைக்கிறார்கள்! வீட்டுக்குள் நின்றபடியே யன்னலூடாகப் பார்த்தேன். கேற்றிற்கு வெளியே ஐந்தாறு பேர் நிற்பது விதி வெளிச்சத்தில் தெரிந்தது. மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே கூப்பிட்டார்கள். ஒருவன் கேற்றைத் திறப்பதற்கு முனைகின்றான். கேற் பூட்டப்பட்டிருக்கிறது.
முன் மின்விளக்குகளைப் போட்டேன். மனதுக்குள் சற்றுத் தயக்கம். துணைவியை (மனைவி) எழுப்பலாமா என்று
யோசித்தேன். இந்தநேரம் வந்து கூப்பிடுகிறார்கள். யாரோ? எவரோ? எதற்கு வந்தார்களோ? போவதா? விடுவதா?
விடாது அழைத்துக் கொண்டிருந்தார்கள். “கொஞ்சம் பொறுங்கோ. வாறன்!” இந்தக் குரலை அவர் களுக்கு எந்த மொழியில் வெளிப்படுத்து வது என்று தெரியாமலி ருந்தது. சிங்க ளமா? தமிழா? வந்தவர்களின் சொந்த மொழி எதுவாயிருக்கும்?
வீட்டுக் கதவைத் திறந்தேன். தயக்கத்துடன்தான். எனினும் நான் இன்னும் அவர்கள் முன்னே போவதற்குத்
முகாJஉரின் (p2/J2^1
- சுதாராஜ்
O O O e O O OSO O O O O O O O O O O O O O O O O O O O
Rčetrict1 – Čí2)
தயாரில்லை.
ஆ ட் க ள் ஆ  ெர ண் டு தெரியாது. போக

வேண்டாம்!' மனைவி கையைப் பிடித்தாள்.
மனைவியைக் கண்டதும் எனக்கு ஒருவித துணிச்சல் வந்துவிட்டது. அல்லது எனது தயக்கத்தை மனைவிக்குக் காட்டிக் கொள்ளக் கூடாது என்ற ஆண்மபலம்!
"என்ன பயம் ? பயப்படாமல் நில்லுங்கோ. போய் பார்த்திட்டு மனைவியிடம் கூறிவிட்டு
நடக்கத் தொடங்கினேன்.
வாறன்!"
உரத்த குரலில் இருமிச் செருமிய வாறு கேற்றடியை நோக்கி நடந்தேன். (நான் மிகவும் நோர்மலாகத்தான் போகி றேனாம்!)
கேற்றிலிருந்து பூட்டைத் திறந்தேன். அவர்களை உள்ளே விடாமல் நான் வெளியே போனேன். முகங்களை நோட்டமிட்டேன். ஒவ்வொரு முகங் களும் ஒவ்வொரு கோணங்களில் தோன்றியது. அல்லது எனக்கு நித்திரைக்
கலக்கமோ. தயக்கமோ?
"சுரேஷ் வந்தவனோ?”
இது அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி. சற்று அதட்டலாகத்தான்.
'இல்லை!"
"இங்கை
போயிருப்பான்' தண்ணி போட்டிருப்
வராமல் எங்கை
பார்கள் போலிருக்கிறது. வாடை அடித்தது.
"சுரேஷ் இங்க இல்ல. லீவிலை
Y DEGGENDE
B
(13) V/
போயிட்டான். என்ன விஷயம்?"
'விஷயத்தைப் பிறகு சொல் லுறம்.! அவனைப் பிடித்து உதைக்க வேணும். விலாசத்தைத் தரமுடியுமா?"
உதை என்றதும் எனக்கு ஒருமுறை உறைத்தது.
“அவன்ர விலாசம் எனக்குத் தெரி
யாது. சொல்லுங்கோ!"
என்ன விஷயம் என்று
“உங்களிடம் வேலை செய்கிற வனின் விலாசம் உங்களுக்குத் தெரியாதா?”
நான் சொல்வதை அவர்கள் நம்ப வில்லை. சுரேஷ் எனது இறால் ஃபாமில் சுமார் மூன்று வருடங்கள் வேலை செய் வது உண்மைதான். ஆனால் உண்மை யிலேயே அவனது இருப்பிட விலாசம் எனக்குத் தெரியாது.
'இந்த இரவு நேரத்தில் வந்து கரைச்சல்படுத்த வேண்டாம். அக்கம் பக்கத்தில் வீடுகள் இருக்கு. சத்தம் போட்டு இடைஞ்சல் குடுக்கக் கூடாது. விஷயம் என்னென்று சொல்லுங்கோ! நீங்கள் ஆர் ஆட்கள்? ஏன் அவனைத்
தேடுறீங்கள்?"
"உங்கட ஃபாமுக்குக்கிட்ட உள்ள ஒரு ஃபாமில்தான் நாங்கள் வேலை செய்யிறம். சுரேஷ் பகல் வந்தவன். இரவு ஏழு மணி போல எங்கட செல் ஃபோனையும் கொண்டு ஒடியிட்டான்."
எனக்கு ஒரே குழப்பமாயிருந்தது. சுரேஷ் அப்படிப்பட்ட ஆளல்ல.

Page 9
இவர்களுடன் ஏன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்?
மோட்டார் சைக்கிள்களுக்கு உதைத்
தார்கள். சர்ர். ர்ர்ரெனக் கிளம்பிப்
போனார்கள்.
"காலமை வாறம். விலாசத்தை
எடுத்து வையுங்கோ!” போய்விட்டார்கள்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் என்னோடு சேர்ந்து கொண் டவன் சுரேஷ். எனது ஃபாமில் வேலை செய்வதற்கு அப்போது ஆள் தேவைப் பட்டது. இறால் பண்ணையில் வேலை செய்த சரியான அனுபவமுள்ள ஆட்கள் பலரிடம் சொல்லி வைத்தும்
யாரும் கிடைக்கவில்லை. விசாரித்தும், பலனில்லை.
ஒருநாள் இவன் வந்தான். அப் போது நான் ஃபாமில் நின்றேன். கடுமையான வெயில் நேரம், காய்ந்து கருவாடு போன்ற கோலத்துடன் வந்து நின்றான். மெலிந்த பொடியன். இருபது இருபத்தொரு வயதிருக்கும். 'என்ன?” என்று கேட்டேன். வேலை ஒன்று தேடி வந்திருப்பதாகக் கூறினான்.
“என்ன மாதிரியான வேலைகள்
செய்வாய்?"
ஏற்கனவே இறால் பண்ணையில் வேலை செய்த அநுபவம் உள்ளதாகக் கூறினான். மேலோட்டமாக பண்ணை வேலைகள் பற்றி விசாரித்தேன். அவனுக்கு நிறையத் தெரிந்திருந்தது. அது எனக்குப் போதுமாயிருந்தது.
கும்பிடப் போகும் தெய்வம் குறுக்கே வரும் என்று சொல்லுவார்கள். இது நேரில் வந்து நின்றது. தெய்வத்தின் பெயர் என்ன என்று கேட்டேன்.
"சுரேஷ்"
அவனது ஊரைக் கேட்டேன். சொன்னான். சிலாபத்துக்கு அப்பாலுள்ள ஒரு சிங்களக் கிராமம்.
அவனைச் சேர்த்துக் கொண்டேன்.
மிகச் சீக்கிரமாகவே அவனது வேலைத் திறமைகளும் நன் நடத்தைகளும் புலப்படத் தொடங்கின. பொடிப்பயல் தான். ஒட்டல் உடம்பு. சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கிறான் என்பது அவனது நடவடிக்கைகளில் தெரிந்தது. சாப்பாடு சரியாக விழுந்தால் சரி. வேறு எந்தக் கவலைகளும் அவனுக்கில்லை. (அப் படித்தான் எண்ணியிருந்தேன்.) வேலை களில் சூரன். மாய்ந்து மாய்ந்து வேலை செய்வான். இறால் பண்ணை வேலைக்கு எப்படியான ஒருவன் தேவையெனக் கருதியிருந்தேனோ அவன் அப்படி யானவனாக இருந்தான். பண்ணையில் வேலை செய்கிற மற்றைய தொழிலாளர் களை விட இறால் வளர்ப்புப் பற்றி நுட்பங்களை துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். இயந்திர வகைகள் தண்ணீர்ப் பம்புகள்
பண்ணையிலுள்ள
போன்றவற்றின் பராமரிப்பு, பாதுகாப்பு போன்ற வேலைகளையும் பொறுப்புடன் கவனித்துக்கொண்டான்.
கூட வேலை செய்பவர்கள்
இவனுக்கு நீர்க்காகம் என்று பட்டப்
pages
-G14)

பெயர் வைத்து விட்டார்கள். நீர்க்காகங் கள் தண்ணிருக்குள்ளே கிடப்பவை. இவனும் சுழியன். இரவு நேரமோ பகலோ, கடும் குளிரோ மழையோ எந்த நேரமென்றின்றி சுழியோடி இறால் வளர்ப்புத் தொட்டியின் அடிப்பாகங் களையும், இறால்களின் ஆரோக்கியத் தன்மையையும் பரிசோதித்து வருவான். நீர்க்காகம் எனப் பெயரிட்டது, சுரேஷ் தண்ணிருக்குள் சுழியோடி வரும் லாவகத்தைப் பார்த்துத்தான்.
உண்மையான நீர்க்காகங்கள் சொற்ப நேரத்திலேயே இறால்களை கிலோக் கணக்கில் விழுங்கிக்கொண்டு போய் விடும். இந்த நீர்க்காகம் அவற்றைப் பராமரித்து வளர்த்தது.
எப்போதாவது இடை சுகம் வீட்டிற்கு லிவில் போய்வர விருப்பமா என்று கேட்டால் மறுத்து விடுவான். “தேவையில்லை’ என்று கூறுவான். அவனுக்கு ஒரு மாறுதலாக இருக் கட்டுமே என்று சில கிழமைகளுக்கு இடையில் ஒரிரு நாட்கள் வீட்டிற்குக் கூட்டி வருவேன். வீட்டுக்கு வந்தாலும் சும்மா இருக்கமாட்டான். புல்வெட்டுதல், தென்னைகளில் தேங்காய் பிடுங்குதல், பூக்கன்றுகளுக்கு நீர்ப்பாய்ச்சுதல், வளவைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவான். பிள்ளை களுடன் ஒரு சகோதரன் போல பழகு வான். அவர்களை சைக்கிளில் ஏற்றி பாடசாலைக்கோ, ரியூசன் வகுப்பு களுக்கோ கொண்டு செல்லும் உதவி களையும் புரிவான். தமிழைப் புரிந்து கொள்ளவும் பேசவும் பழகிவிட்டான்.
ང་།།
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்பது
போன்ற உணர்வுதான் எனக்கு.
ஒருநாள் நான் ஃபாமில் இருந்த போது, சுரேஷ் வழக்கம்போல ஆவி பறக்கத் தேநீர் தயாரித்து வந்து பக்கத்தில் வைத்துவிட்டு என்னிடம் கேட்டான்.
"மஹத்தயா. ஆவிகளைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?"
"ஆவியா!. என்ன ஆவி?”
சுரேஷ் அதிகம் படிக்காதவன். கேற் றலில் தேநீர் தயாரிக்கும்போது மூடி கிடு கிடு என அடித்துக் கொண்டிருக்கிறது. அதைக் கவனித்திருக்கிறான் போலும், விஞ்ஞான பூர்வமான சிந்தனைக ளெல்லாம் இவனிடத்தில் தோன்றுகிறதே என எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. உடனே அதுபற்றி சில விளக்கங்களை அவனுக்குக் கூறத் தொடங்கினேன். தண்ணீர் சூடாகும்போது எப்படி ஆவி யாகிறது. அது மூடியில் பட்டு ஏற் படுத்தும் விசை.
'மஹத்தயா. நான் செத்த ஆக்களுடைய ஆவியைப் பற்றிக் கேட்
கிறேன். அதை நீங்கள் நம்பிறீங்களா?"
பகல் நேரமாயினும், அதைக் கேட்டதும் ஒருகணம் எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. ஃபாம் வெட்டவெளியான தனிமைப்பட்ட இடத்தில் அமைந்திருக் கிறது. இவன் இரவில் எதையாவது கண்டு தொலைத்திருப்பானோ தெரியாது. அல்லது கனவு கினவு கண்டிருப்பானோ?

Page 10
பிள்ளை பயந்திருப்பான் போலிருக் கிறது.
“சீச்சீ. அதெல்லாம் பொய்க்கதை! நம்பாதை!”
"இல்ல மஹத்தயா நான் ஆவியோட பேசியிருக்கிறன்!”
நான் இருந்த இடத்திலிருந்து எழுந்து விட்டேன். நேரகாலத்துடன் வீட்டுக்குப் போய்ச் சேர்வது உத்தமம் போலிருந்தது.
á á
என்ன . . . இங்க வந்ததோ?’ சற்று ஏளனம் போலத் தோன்றும்படிதான் அப்படிக் கேட்டேன். ஆனால் என்னவென்று அறியும் ஆவல் என்னுள் இருந்தது.
ஆவியா?
“இப்ப இல்ல மஹத்தயா! கன காலத்துக்கு முதல்ல பேசியிருக்கிறன்."
இவன் ஏதோ கதை அளக்கிறானோ; என எண்ணி மேற்கொண்டு விசாரித் தேன்.
ஏதோ ஒரு கிராமத்தின் பெயரைக் "அங்கு ஒருவர் இருக்கிறார். அவரிடம் போனால் இறந்தவர்களின் ஆவியுடன் பேசலாம். காலையில் வெள்ளனத்துடன் போக வேண்டும். வெற்றிலையும் ஒரு எலு மிச்சம் பழமும் கொண்டு போக வேண்டும்!"
குறிப்பிட்டுச் சொன்னான்.
காசு அடிப்பதற்காக யாராவது விளையாட்டுக் காட்டுவதாக இருக்கலாம்.
எனக்கு வேடிக்கையாயிருந்தது.
ܝ܀
ஒDEகை
ང།༧།༡
"அவங்க காசுக்காக ஏமாத்துறாங்கள். நம்ப வேண்டாம்!"
"இல்ல மஹத்தயா! நான் உண்மை யாகவே பேசியிருக்கிறேன். ஆனால் அது உண்மையா பொய்யா என்று விளங் கேல்ல. அதுதான் உங்களிடம் கேக் கிறன்!"
"நீ பேசியது எந்த ஆவியுடன்?"
“guildir!"
"அம்மாவா? யாருடைய அம்மா?"
அவன் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டினான். அப்போதுதான் அவன், தாயை இழந்தவன் என்பது எனக்குத் தெரிய வந்தது. கவலை பொங்கியது.
"சுரேஷ்!. அம்மா எப்போது இறந்து போனார்?"
“எனக்கு ஏழெட்டு வயதாயிருக்கும் போது!"
“Gör?”
"தற்கொலை செய்து கொண்டார்’
எனக்கு அதற்கு மேற்கொண்டு எதையும் விளையாட்டுத்தனமாக அவனிடம் கேட்க முடியவில்லை.
"அம்மாவிடம் என்ன பேசினாய்?"
“ஏன் இறந்து போனார் என்று கேட்டேன்."
"ஏன்?" என அவனது முகத்தைப் பார்த்தேன்.

"அப்பாவுடன் சண்டை. அப்பா கசிப்புக் குடிப்பார். அம்மாவுக்கு அடிப் பாராம். வேறு மனிசிகளுடன் சிநேகிதம். அம்மாவுக்குத் தாங்க முடியவில்லை."
“சுரேஷ்! அந்தச் சாமியார் எதை யாவது கற்பனை செய்து சொல்லி யிருக்கலாம். அதைப் பற்றி நீ மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம்.”
"இல்ல மஹத்தயா. வெற்றிலை யும், தேசிக்காயையும் கொடுத்துவிட்டு, நாங்கள் யாருடன் பேச வேண்டுமோ. அவர்களை நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும். அவரிடம் சொல்லத் தேவை யில்லை. அவர் மாத்திரம் செபித்து கண் களை மூடிக்கொண்டிருப்பார். அவரது குரல் அம்மாவின் குரல் போலவே மாறி எங்களுடன் பேசுவார்"
இதிலுள்ள உண்மை பொய்களை ஊகித்து அவனுக்கு விளக்குவது கஷ்ட மாயிருந்தது. எனினும் ஏழெட்டு வயதுச் சிறுவனாயிருந்தபோது, தாயை இழந்து. பின்னர் அந்த இழப்பு வேதனையிலும் மனத்துடிப்பிலும் அவன் வளர்ந்த காலங்களை நினைத்துப் பார்க்கக் கூடிய தாயிருந்தது. அவனது தந்தையைப் பற்றி விசாரித்தேன். அவர் இப்போதும் கசிப்பு குடித்தே அழிகிறாரென்றும் தன்னைக் கவனிப்பதில்லை என்றும் கூறினான். தான் வேலை பார்க்க வெளிக்கிட்டதே அவரது தொல்லை தாங்கமுடியாமல் தானாம்.
சுரேஷ் மீதிருந்த கருணையும் கரிசனையும் இன்னும் பெருகியது. அவனை எங்கள் விட்டுப்பிள்ளையாகவே
கருதினேன்.
காலம் ஆக ஆக சுரேஷின் நடை யுடை பாவனைகள் மாற்றமடைந்தது. (அல்லது வளர்ச்சியடைந்து வந்தன.) தானும் தன்பாடும் வேலையுமாக ஆரம்ப காலங்களில் ஒதுங்கியிருந்த தன்மைகள் மாறி. மற்றவர்களுடன் கலகலத்துப் பேசவும், சிரிக்கவும் பழகியிருந்தான்.
லிவில் ஊருக்குப் போய் வந்தான். அவனது மாற்றங்கள் முதலில் ஆரோக் கியமானதாகவே இருந்தது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை லிவில் போகும்போது சம்பளப் பணத்தை யெல்லாம் கணக்குப் பார்த்துப் பெற்றுக் கொண்டு போவான். பின்னர் வெறுங் கையுடன் வருவான். பணத்துக்கு என்ன நடந்தது எனக்கேட்டால் 'பாங்க் புத்த கத்தில் போட்டிருப்பதாகக் கூறுவான்.
காலம் ஆக ஆக அவனுக்கு தொலைபேசி அழைப்புகளும் வரத் தொடங்கின. சிலவேளைகளில் ஒரு பெண்ணின் குரல்! அதன் பின்னர் சுரேஷ் லிவில் போகவேண்டுமென அரிக்கத் தொடங்கி விடுவான். நல்ல தொடர்போ கெட்ட சகவாசமோ என எனக்குள் கவலையாயிருக்கும். கேட்டால் சரியாகச் சொல்லமாட்டான்.
நட்ட நடுநிசி கடந்த நேரம். (மீண்டும் கதையின் ஆரம்பத்துக்கு வருகிறோம்.)
நான் உறக்கம் குழம்பிப்போய் படுத்திருந்தேன். வந்தவர்களுக்கும் சுரேஷிற்கும் என்ன தொடர்பாயிருக்கும் என தலையைப் போட்டு உடைத்தேன்.
CD

Page 11
அண்மையில் ஃபாம் வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. சுரேஷ் நீண்ட நாட்கள் லிவில் போயிருந்தான். அந்த ஃபாமில் இருந்த இரண்டு தண்ணீர்ப் பம்புகள் களவு
நாட்களில்
போய்விட்டன. இரண்டினதும் பெறுமதி குறைந்தது ரூபா ஒன்றரை இலட்சம் அளவில் வரும். சுரேஷ் நின்றிருந்தால் இது நடந்திருக்காது. அவன் லிவில் சென்றுவிட்டதை அறிந்துதான் யாராவது அந்த வேலையைச் செய்திருப்பார்கள். இடையில் ஒருமுறை வந்தபோது சுரேஷ் இதுபற்றி அறிந்து கவலைப்பட்டதும் என் நினைவில் உளன்றது.
“மஹத்தயா கவலைப்பட வேண் டாம். நான் எப்படியாவது கள்ளனைப் பிடித்துத் தருவேன். இவ்வளவு பாரமான சாமான் அங்கே, கிட்டே உள்ள எங்காவது ஒரு ஃபாமுக்குத்தான் போயிருக்கும். உள்ளே இருந்தவர்கள் கூட செய்திருக்கலாம். நான் திரும்ப வந்து எப்படியாவது கள்ளனைப் பிடித்துத் தருவேன்.'
வந்தவர்கள், சுரேஷ் இன்று முழு வதும் தங்களுடன் இருந்ததாகக் கூறி னார்கள். ஒருவேளை சுரேஷ் தனது துப் பறியும் வேலைகளைத் தொடங்கி விட்டானோ? உதைக்கப் போவதாக அவர் கள் கூறினார்கள். பாவம் அநியாயமாக வேண்டிக்கட்டப் போகிறானே.
அடுத்தநாட் காலையிலும் அவர்கள் தேடி வந்தார்கள்.
"சுரேஷ் வந்தவனா? அவன்
இருக்கும் இடம் தெரியுமா?"
சுரேஷின் இருப்பிடத்தின் குறிப்பை கூட வேலை செய்யும் மணி அண்ணனி டம் கூறியிருப்பது எனக்குத் தெரியும். மணி அண்ணனை விசாரித்தால் கண்டு பிடிக்கலாம். ஆனால் நான் அதை அவர் களிடம் சொல்லவில்லை.
A. A
என்ன நடந்தது என்று சொல்லுங்கோ' என அவர்களை விசாரித்தேன்.
"சுரேஷ் நேற்று முழுக்க எங்க ளுடன்தான் இருந்தவன். எங்களுடைய செல்போனைக் கண்டு ஆசைப்பட்டான். விலைக்குக் கேட்டான். பத்தாயிரம் ரூபா என்று சொன்னோம். வாங்குவதாக ஒப்புக் கொண்டான். பொழுதுபட பஸ்சிற்குக் கொண்டு வந்து விடச் சொன்னான். மோட்டார் பைக்கில் ரோட்டுக்கு கூட்டிவந்தோம். ஃபோனை ஒருமுறை கேட்டான். உங்களுடைய நம்பருக்குத்தான் ஒரு கோல் எடுத்தான். இரவு ஏழுமணியைப் போல உங்களுக்கு ஒரு கோல் வந்ததுதானே? நாங்கள் எதிர் பார்க்கவில்லை. சட்டென போனையும் கொண்டு ஒடத்தொடங்கிவிட்டான். பிடிக்க முடியவில்லை."
சுரேஷ் ஒரு முயல் குட்டியைப் போல வேகமாக ஓடக்கூடியவன்தான்.
இரவு ஏழு மணிபோல சுரேஷிட மிருந்து ஒரு கோல் எனக்கு வந்ததுதான்.
“மஹத்தயாத கத்தா கறன்னே?" (மஹத்தயாவா கதைக்கிறீங்கள்) எனக் கேட்டான். பதில் சொல்ல முதல் கட்'
G18)

ஆகிவிட்டது.
ஒருவேளை சுரேஷ் களவுபோன பம்ப் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்திருப்பானோ? எனக்குத் தகவல் தர முயன்று, ஃபோனையும் கொண்டு ஒடியிருப்
அவர்களிடம் பிடிபட்டு
L unrGSGOTIT?
நான் வந்தவர்களிடம் கதைவிட்டு கதை பிடுங்கத் தொடங்கினேன்.
இடையில், களவு போன பம்பு களைப் பற்றி ஒரு கேள்வி போட, "பம்ப் இருக்கிறது!’ என வந்தவர்களில் ஒருவன் பதில் கூறினான். உடனே மற்றவன் கதையை மாற்றினான்.
'இல்லை பம்புகள் இரண்டும் சுரேஷிடம்தான் உள்ளது. அவன் ஒரு இடத்தில் வைக்கக் கொடுத்திருக் கிறான்."
அந்த சம்பாஷணையின் பின் அவர்கள் என்னைவிட்டுச் சீக்கிரமாகப்
போய்விட்டார்கள்.
சுரேஷ் எதற்காக இவர்களது கைத்தொலைபேசியை பத்தாயிரம் ரூபா கொடுத்து வாங்கப் போயிருக்க வேண்டுமென யோசித்தேன். இப்
பொழுதுதான் மூலைக்கு மூலை உள்ள கடைகளில் எல்லாம் .கைத்தொலை பேசிகள் மலிவு விலைகளில் குவிந்து கிடக்கிறதே?
ஒருவேளை இப்படியிருக்கலாம்.
சுரேசுடன் சிநேகம் வைத்து, அவனது மனதை மாற்றி அவன் மூலம் பம்புகளை களவாடியிருக்கலாம். அவனுக்கும் தருவதாக ஒப்புக்கொண்ட பணத்தை இவர்கள் கொடுக்கவில்லை போலிருக்கிறது. பணத்தைக் கேட்கப் போய், அது கிடைக்காத ஆத்திரத்தில் சுரேஷ் செல்போனைக் கொண்டு ஓடி யிருக்கலாம்.
நீண்ட நாட்கள் லிவில் போன சுரேஷ் திரும்ப வருவான் அல்லது எங்கிருந்தாவது தொடர்பு கொள்வான் என்று பார்த்திருந்தேன்.
பொருள் களவு போனதை நான் எப்போதோ மறந்து போய்விட்டேன். சுரேசைப் பற்றியதும் அவனது சகவாசங் களைப் பற்றியதுமான கவலை அவ்வப்
போது அழுத்துகிறது.
மிக மிக நீண்ட நாட்களாகிவிட்டது.
அவன் வரவேயில்லை.

Page 12
மல்லிகை ஜீவா ເດ໔ຫບໍu6ດອົງດໍາ
- திக்குவல்லை கமால்
1. மல்லிகை அறிமுகம்
1968இல்தான் நானொரு எழுத்தாளனாக வேண்டுமென்ற இலக்கோடும் வெறியோடும் எழுத ஆரம்பித்தேன். அதற்கு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்டது கற்க ஆரம்பித்திருந்தேன்.
அப்பொழுதெல்லாம் சஞ்சிகை என்ற வகையில் எனக்குக் கிட்டியதெல்லாம் தமிழ்நாட்டு ஜனரஞ்சகச் சஞ்சிகைகள்தான். அக்காலகட்டத்தில் இலங்கையில் சஞ்சிகைகள் வெளிவந்ததோ இல்லையோ என் பார்வைக்கு எட்டவில்லை.
அப்பொழுது நான் தர்காநகர் சாஹிரா கல்லூரியில் படித்துக் கொண்டி ருந்தேன். அங்கு ஆசிரியர்களாகக் கடமையாற்றிய கவிஞர் ஏ. இக்பால், இர.சந்திரசேகரன் ஆகியோர் எனது இலக்கிய ஆர்வத்திற்கு பெரும் உந்துசக்தியாகத் திகழ்ந்தனர்.
அந்நாட்களில் எனது சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்லும்போது, அங்கு எம்.எச்.எம்.சம்ஸ், ஹம்ஸா முகம்மது போன்றோரின் தொடர்பும் ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் நல்ல வாசகர்களாகவும் நல்ல எழுத்தாளர்களாகவும் அப்போது திகழ்ந்தார்கள். இவர்கள்தான் எனக்கு மல்லிகையை அறிமுகப் படுத்தியவர்கள். கூடவே தாமரை, சரஸ்வதி, எழுத்து, தீபம் போன்ற சஞ்சிகை களையும் அறிமுகப்படுத்தினர். பழைய பிரதிகளையும் இவர்கள் மூலமே பெற்றுப் படித்தேன்.
அதுவரை வாசித்த ஜனரஞ்சக சஞ்சிகைகளிலிருந்து மல்லிகை முற்றிலும் வேறுபட்ட உள்ளடக்கம் கொண்டதாகவும் உண்மைத் தன்மையான ஆக்கங்கள் கொண்டதாகவும் எனது வாசிப்பு அறிவுக்குப்பட்டது. அச்சுத் தரத்தில் ஒப்பிட
DGSEE (20)

முடியாவிட்டாலும் உள்ளடக்கரீதியாக எனக்கு
மிகவும் பிடித்துப்போய் விட்டது.
மல்லிகை ஆசிரியரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டு மென்ற ஆவல் எனக்குள் பிரவகித்தது. அந்த தண்ணிரும் கண்ணிரும்’ என்ற அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி எனது கைக் கெட்டியது. அதுவே சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற முதல் சிறு கதைத் தொகுதியுமாகும். அதனைத் திரும்பத்திரும்ப பலமுறை படித்தேன். அக்கதைகள் பற்றி நண்பர்களுடன்
வகையில்,
கலந்துரையாடினேன்.
அதைத் தொடர்ந்து இலங்கை முன்னணி எழுத்தாளர் பலரின் படைப்புக்களை கூர்ந்து வாசித்தேன். ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன் என்று இந்த வாசிப்பு தொடர்ந்தது.
இக்காலப் பின்னணியில் என் கைக்குக் கிடைத்த இன்னொரு இலங்கைச் சஞ்சிகை இளம்பிறை. இது கொழும்பிலிருந்து வெளிவந்துகொண் டிருந்தது. எம். ஏ. ரஹ்மான் இதன் ஆசிரியர். எஸ்.பொன்னுத்துரையின் எழுத்துக்கள் இதில் நிறைய இடம் பிடித்தன. புனைபெயர்களிலும் கூட
இச்சஞ்சிகையில் என் மனதைப் பாதித்த, எனக்குப் பிடிக்காத விடயம் என்னவென்றால் இதில் டொமினிக் ஜீவா அடிக்கடி தாக்கப்பட்டு வந்தது தான். அவருக்கு எழுதவே வராது என்ற அளவுக்கு;
இதென்ன பிரச்சினை? இதென்ன முரண்பாடென்று எனக்குப் புரிய வில்லை. இதைத் தேடவேண்டு மென்ற உந்துதல் வேறு. என்ன செய்வது? எனக்கு வெளித் தொடர்பு களும் இல்லை. ஏ. இக்பாலிடம்தான் கேட்டேன்.
எஸ்.பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா இருவரதும் பூர்வீகம், சமூகநிலை, எழுத்து முயற்சிகள், முற்போக்கு, நற்போக்கு இப்படியெல்லாம் அள்ளிக் கொட்டினார்.
நான் நினைத்தது போல் அல்லாது இலக்கிய உலகமும், பலதும் பத்தும் நிறைந்ததுதான் என்ற முடிவுக்கு வர நேர்ந்தது.
அந்நாட்களில் அவ்வப்போது மல்லிகைக்கு கருத்துக் கடிதங்கள் எழுது வதுண்டு. இளம்பிறை'யின் எழுத்துக் கள் தொடர்பாக நீங்கள் ஏன் பதில் சொல்வதில்லை என்பதே எனது கேள்வியாகவிருந்தது.
மல்லிகை என்ற ஆயுதம் கையிலி ருக்கும் போது தாராளமாகப் பதில் சொல்லலாம்தானே என்பதே எனது எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு அன்றோ அதற்குப்பின்போநிறைவேற வேயில்லை.
அந்த எதிர்பார்ப்பை நானும் கலைந்து மறந்து போய்விட்டேன்.
ஒருநாள் வழமைபோல் அந்த மாதத்துக்குரிய மல்லிகை வந்தது. அட்டையிலே எஸ்.பொ. உள்ளேஅவர் பற்றியக் கட்டுரை.
ty gCGGGD'85
1N (2)

Page 13
இதுதான் மல்லிகை. இதுதான் ஜீவா.
2. சந்தாவும் அன்பளிப்பும்.
மல்லிகை ஆரம்பித்து சில பிரதிகள் வெளிவந்து, இடையில் சிறிது தடைப் பட்டு, மீண்டும் முயன்று வெளிவர ஆரம்பித்திருந்தது. மல்லிகையை வெளிக்கொணர்வதில் ஜீவா கண்ணும் கருத்துமாக இருந்தார்.
எப்படியோ
ஒரு சலூனுக்குள்ளிருந்து ஒரு சஞ்சிகை வெளிவருதென்றால், உலகத் தில் அது மல்லிகையாகத்தான் இருக்க வேண்டுமென்று அவர் சொல்வதில், அர்த்தமும் அதற்கொரு முக்கியத்து வமும் இல்லாமலில்லை.
மல்லிகை மாதாந்த சஞ்சிகை யென்பதை அடிக்கடி நான் மறந்து போவதுண்டு. நினைக்கிற நேர மெல்லாம் அது வந்துசேருமென்ற ஆதங்கம்.
இத்தனைக்கும் நான் மல்லிகைக்கு இரவல் இருந்து வந்தேன். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் இருக்கும் காலம். தனிப் பிரதியாக வாங்குவதற்கு கடைகளில் தொங்கு
வாசகனாகவே
பாரமாக
வதும் கிடையாது.
மல்லிகை வாசிப்பதோடு ஒவ் வொரு பிரதியையும் பாதுகாக்க வேண்டுமென்பது எனக்கு முக்கிய மாகப்பட்டது. எனவே நானும் சந்தா தாரராகுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
E. yettese
அதற்கு சந்தர்ப்பம்
கிடைத்தது.
@@
எனது மூத்த சகோதரர் திஸ்ஸ மகாராமையில் ஊரவர் 560 L யொன்றில், தற்காலிகமாக கணக்கு வேலைகள் செய்து கொண்டிருந்தார். அவருக்கு நேர்முகப் பரீட்சைக்கு கல்வித் திணைக்களத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. இந்தத் தகவலைச் சொல்லி அவரை அழைத்து வர வீட்டி லிருந்து நான்அனுப்பப்பட்டேன்.
அவர் போய்வரும் வரையில் என்னை அந்த வேலைகளைப் பார்க்கு மாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனைத் தட்ட முடியாத நிலையில் இரண்டொரு நாள்தானே என்று ஏற்றுக்கொண்டேன்.
நடந்தது வேறு.
நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற சகோதரனுக்கு கையோடு நியமனக்
கடிதத்தைக் கொடுத்து விட்டார்கள். நான் மாட்டிக் கொண்டேன்.
பரவாயில்லை. கொஞ்சக் காலம் இருப்பதென்று தீர்மானித்து விட் டேன். இரவில் எழுதுவதும் பகலில் அவ்வப்போது வாசிப்பதுமாக காலம்
கடந்துகொண்டிருந்தது.
எனக்கு மாதாந்தச் சம்பள மொன்றும் தந்தார்கள். இந்தச்
சம்பளத்தில்தான் மல்லிகை சந்தாதாரர் என்ற அந்தஸ்து எனக்குக் கிட்டியது. இது 1970இல் நடந்த விடயம்.

அங்கு நான் சுமார் ஒரு வருடம் ,
வேலை செய்த போது முக்கியமான தொரு இலக்கிய அனுபவம் ஏற்பட்டது.
‘எலிக்கூடு" என்ற கவிதையை அங்குதான் எழுதினேன். புதுக்கவிதை யாக எழுதவேண்டுமென்று சிந்திக்கா விட்டாலும் அதன் உள்ளடக்கம் அப்படியொரு உருவத்துக்குள்தான் என்னைக் கொண்டு தள்ளியது. அப் போதெல்லாம் கஸ்தூரிரங்கனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'கணையாழி நிறைய புதுக்கவிதை களைத் தாங்கி வெளிவந்தது. அதன் தாக்கமும் இருந்திருக்கக்கூடும்.
அக்கவிதையை அனுப்பினேன். அடுத்த இதழிலேயே அது பிரசுரமாகியது.
மல்லிகைக்கு
பின்னர் மிக ஆர்வத்துடன் நிறை யப் புதுக்கவிதைகள் எழுதினேன். மானுடம் பாடும் "வானம்பாடி’ கவிதை இதழும் வெளிவந்த காலம். அதிலும் எழுதினேன். சூட்டோடு சூடாக சில புதுக்கவிதைகளைத் தொகுத்து சிறிய
பிரசுரமாக வெளியிட்டபோது
அதற்கும் ‘எலிக்கூடு” என்றே
பெயரிட்டேன்.
ஒருவாறு மல்லிகைச் சந்தா
தாரரானவுடன் எனக்குள்ளே ஒரு உசார். இன்னும் சிலரை மல்லிகை யோடு சம்பந்தப்படுத்த வேண்டு மென்றுதான். அப்போதைக்கே எமது சின்னஞ் சிறு ஊரிலிருந்து ஐந்தாறு பேர்
மல்லிகையை வளர்த்து நிலை நிறுத்த வேண்டுமென்பதில் மல்லிகை ஆசிரியர் எவ்வளவு அக்கறையோடு செயற்பட்டாரோ, அதே அக்கறை யோடு வெளியே இருந்தும் பலர் ஒத்துழைத்து வந்தனர்.
முகம் தெரியாத அல்லது தொலை விலுள்ள தமது உதவியை தபால் மூலம் செலுத்தத் தொடங்கினர். அப்படி உதவுவோரின் பெயர், விபரங்களை மல்லிகை வெளி யிட்டு வந்தது. அந்தப் பட்டியலில் எனது பெயரும் இடம்பெற வேண்டு மென்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்கொரு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அபிமானிகள்
1971இல் எனக்கு ஆசிரியநியமனம் கிடைத்தது. கடையிலிருந்து வெளிப் பட்டு உத்தியோகத்தைப் பொறுப் பெடுத்தேன்.
மாதச் சம்பளம் ஆக இருநூற்றி இருபது ரூபாதான். முதல் சம்பளத்தின் ஒரு பகுதியை பக்திபூர்வமாகச் செலவிட்டு திருப்திகொள்ளும் பழக்கம் எம்மவரிடையே உண்டு.
எனது முதற் சம்பளத்தில் பத்து ரூபாவை மல்லிகைக்கு நான் அன்பளிப் பாக அனுப்பி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மல்லிகைப்பந்தல் இன்று வளர்ந்து சடைத்து, நிலைத்து நிற்கிறதென்றால், இந்தப் பத்து ரூபாவின் பங்கும் அதில்
மல்லிகையோடு சம்பந்தப்பட்டி
உண்டு. ருநதனா.
(பதிவுகள் தொடரும்) essed (23)

Page 14
வாழும் சுவடுகள் - கால்நடை அனுபவங்கள் - நூல் அறிமுகம்
ھے- - محہ- aas –ne- === ۔حک# a Gafsafle 5essffadw a geisio
ம்
e. 李 ,录 sesTDSD
- LITഖങ്ങTഞ്ഞബ്
ஒவ்வொருவருடைய மனதிலும் ஒரு படைப்பாளி உறைந்திருக்கிறான் என்று சொல்வதுண்டு. எதிர்ப்படும் ஒவ்வொரு சம்பவத்தையும் உயிர்ப்புடன் எதிர் கொள்வதும் நிதானமாகப் பல கோணங்களில் சீர்தூக்கிப் பார்ப்பதும் அந்த அனுபவத்தைப் பற்பல தளங்களுக்கும் இடம்மாற்றிப் பொருத்திப் பார்த்து அணுகுவதும் படைப்பூக்கம் மிகுந்த மனதின் குணங்கள். அத்தகு மனம் உடனடியாக எல்லாச் செயல்களிலும் முழு அளவில் ஈடுபாடு கொள்கிறது. தன்னையே வழங்கு கிறது. செயல் முழுமையடையும் வரை இடைவிடாமல் முயன்ற வண்ணம் இருக் கிறது. செயலின் முடிவை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. படைப்பூக்கம் மிகுந்த மனம் இரு வழிப் பாதைகள் கொண்டது. வழங்குதலும் ஏற்றுக் கொள்ளுதலும் இடைவிடாது நிகழ்ந்தபடி உள்ளன. எழுத்தாளர்கள் மட்டுமன்றி, படைப்பூக்கம் மிகுந்த பலர் பல்வேறு துறைகளில் இருப்பதுண்டு. பல சுயசரிதைகள் முதல் ஊர்ப் பயணங்கள் மேற்கொள்பவர்களின் பயணக் கட்டுரைகள் வரை பலவற்றை நாம் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவர்களைப் போன்றே கல்வி, விளையாட்டு, மருத்துவம், நாடகம், வேட்டையாடுதல், திரைப்படம் எனப் பல துறை சார்ந்த வல்லுநர்கள் எழுதும் அனுபவக் குறிப்புகளுக்கும் இலக்கிய நூல்களுக்கு இணை யான மதிப்புண்டு. விஸ்வேஸ்வரய்யா என்னும் பொறியியல் வல்லுநர் எழுதிய “வேலையனுபவக் குறிப்புகள்’ என்னும் நூல் படிக்க மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாகும்.
கால்நடை மருத்துவரான என்.எஸ்.நடேசன் இலங்கையில் பிறந்தவர். போர்ச் சூழல் காரணமாக அவுஸ்திரேலியாவில் பணி புரிபவர். பணிக் காலத்தில் தமக்குக் கிடைத்த அனுபவங்களை எளிய மொழியில் திறம்பட எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பை "வாழும் சுவடுகள்’ என்னும் தலைப்பில்நூலாக்கியிருக்கின்றார். நூலில் குறிப்பிட்டுள்ள எல்லாச் சம்பவங்களும் அவரது மருத்துவமனையில் நடந்தவை. எல்லாம் ஆடு, நாய், பூனை, பசு போன்ற பல விலங்குகளுக்கும் மருத்துவம் பார்த்த அனுபவங்கள். ஒருவகை நிதானமும் பக்குவமும் நகைச்சுவை உணர்வும் எல்லாக் கட்டுரைகளிலும் நிறைந்திருக்கின்றன. பல தருணங்களில் தம் இலங்கை வாழ்வின்
թշ ye GSG (24)
 

அனுபவங்களைத் தகுந்த விதத்தில் நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்வது நெகிழ்வைத் தருகிறது.
"கலப்பு உறவுகள்’ என்றொரு கட்டுரையில் கலப்பு மணத்தில் பிறந்த சகோதரர்கள் இருவர் இடம்பெறு கிறார்கள். கலப்பு பற்றிய மேன்மை யான எண்ணம் அவர்களிடம் குடி கொண்டுள்ளது. தம் ஆசையின் உந்துத லால் வீட்டில் உள்ள சிறிய வளர்ப்புப் பசுவைமிகவும் வலிமை மிகுந்த மாற்று இனக் காளையின் மூலம் கருவுறச் செய்து விடுகிறார்கள். கன்றை ஈன்றெ டுக்க முடியாத நிலையில் அவஸ்தைப் படுகிறது பசு. சிக்கலான நிலையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிற பசுவுக்குப்பிரசவம் பார்த்த பிறகுதான் இக்கதையை அவர்கள் மூலம் தெரிந்து கொள்கிறார் மருத்துவர். பசுவுக்கும் தம்மைப் போலவே ஒரு வாழ்க்கையை அமைத்துத் தர விரும்பும் மனித விருப் பத்தின் ரகசியம் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதயம் பேசுகிறது” கட்டுரையில் ரைசன் என்னும் நாயை வளர்க்கும் ஜெனி என்கிற இளம்பெண் இடம் பெறுகிறாள். ஒரு சிக்கலான கட்டத்தில் அவளைச் சில முரடர்கள் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தபோது அவர் களைத் தாக்கி விரட்டியடித்த இதய வலிமையைக் கொண்டது அந்த நாய். அது இரண்டு நாட்களாகச் சரியாகச் சாப்பிடவில்லை என்கிற விஷயத் தோடு மருத்துவரைக் காண வருகிறார் ஜெனி சோதித்துப் பார்க்கும் மருத்து வர் நாயின் இதயம் வீங்கியிருக்கும் அந்த
விஷயத்தைக் தாங்கிக் கொள்ளவே ஜெனியால் முடியவில்லை. அதே சம யத்தில் நெஞ்சறையின் முக்கால்வாசிப் பகுதியை இதயம் பெருத்து அடைத்துக் கொள்ள எந்த மருத்துவமும் பயனற்ற நிலையில் இந்நாய் படும் அவஸ்தை களையும் காண அவளால் இயல வில்லை. இறுதியில் ஊசி மூலம் அதன் அவஸ்தைகளிலிருந்து உயிரைப் பிரிய வைக்கச் சம்மதிக்கிறாள். இச்சித்தரிப்பு ஒரு சிறுகதையைப் போல கச்சிதமாக இருக்கிறது.
மற்றொரு கட்டுரையில் ஒருநாய்க் குச் செய்த மருத்துவத்துக்கு ஒருவர் வழங்கிய காசோலை வங்கியிலிருந்து திரும்பி வந்து விடுகிறது. காசோலை யைக் கொடுத்த நபருக்குத் தகவலைத் தெரிவிக்க முயற்சி செய்தபோது இரு நாளுக்கு முன்னர் அவர் மாரடைப்பால் காலமான செய்தியே கிடைக்கிறது. திரும்பி வந்த காசோலைக்கு ஒரு படைப்பில் இடம்பெறும் தகுதி அமைகிறது.
இரண்டாம் உலகப் போரில் போர்க் கைதிகளாக ஜப்பானியர்களால் சித்திரவதைகளுக்கு ஆளான ஜேம்ஸ் சகோதரர்களைப் பற்றிய குறிப் பொன்று ஒரு கட்டுரையில் இடம்பெறு கிறது. அவர்கள் இருவருமே சித்திர வதைகளின் காரணமாக ஆண்மையை இழந்தவர்கள். இதனால் திருமண் வாழ்வை மேற்கொள்ளாதவர்கள். ஒரு மாட்டுப் பண்ணை அமைத்து காலத் தைக் கழிக்கிறார்கள். பண்ணையில் ஒரு குறிப்பிட்ட பசுவுக்குப் பிரசவ வேதனை. டாக்டர் வருகிறார். தலை
திரும்பிய நிலையில் கன்றால் வெளியே 1N
விஷயத்தைச் சொல்கிறார்.
کرتے

Page 15
வர இயலவில்லை. அறுவை சிகிச்சை நடக்கிறது. பசு பிழைத்து விடுகிறது. கன்று இறக்கிறது. மனித சித்திரவதை களின் கொடுமைகளைப் போர்க் காலத்தில்தாங்கிக் கொண்ட சகோதரர் களால் வாய்பேசாத விலங்கின் அவஸ்தைகளைக் காண முடியவில்லை. 'பிரசவ வேளையில் அந்தநாள் ஞாபகம்’ கட்டுரை நூலில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பிரசவத்துக்காக ஒரு நள்ளிரவில் வந்து அனுமதிக்கப்படும் பூனை சில மாதங்களுக்குப் பிறகு அதே போல நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிப் போய் விடும் சம்பவம் மனிதர்களின் வாழ் வைப் போலவே உள்ளது. தகவல் பரி மாற்றத்தில் நேர்ந்துவிடும் தவறினால் நாயின் விதைக்குப் பத்தாயிரம் டாலர் கள் நஷ்டஈடு கேட்டு வழக்கு மன் றத்தை அணுகுபவரின் குறிப்பு மனித மன இச்சையின் எல்லையின்மையைக் காட்டுகிறது. குறித்தநாள் தாண்டியும் பிரசவிக்காத நாய்க்குச் சுகப் பிரசவம் நிகழ வேண்டுமே என்ற பதற்றத்தோடு நள்ளிரவு வேளைகளில் மருத்துவ மனைக்கு வரும் விலைமகளைப் பற்றிய சித்திரம் நெகிழ்ச்சியூட்டக் கூடியது.
அவுஸ்ரேலியாவில் விலங்குகள் பராமரிப்பு பற்றிய பல விஷயங்கள் இந்த நூல் வழியாக நமக்கு அறியக் கிடைக்கின்றன. விலங்குகள் வீட்டை விட்டுக் காணாமல் போனால் சுவ ரொட்டிகள் மூலம் விளம்பரம் தந்து தேடுகிறார்கள். அடையாளமின்றியும் பராமரிப்பின்றியும் தெருவில் அலையும்
விலங்குகள் மீது பரிதாபம் கொள்ப வர்கள் உடனடியாக அவற்றை அருகி லுள்ள பவுண்டுகளிலோ அல்லது மருத் துவமனைகளிலோ சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். உரியவர்கள் உரிய காலத்தில் வந்து எடுத்துச் செல்லாத போது விருப்பப்பட்டு வருகிறவர்களுக் குக் கொடுத்து விடுகிறார்கள். தவறான மருத்துவத்தால் விலங்குகளுக்கு ஏற்படு கிற பாதகத்துக்கு நஷ்டஈடு கேட்டு வழக்குமன்றம் செல்லாம். விலங்கு களின் ரத்தம் சேமிக்கப்பட்டு மற்ற விலங்குகளுக்கு ரத்த தானம் செய்யப் படுகிறது. புல்வெட்டும் இயந்திரங் களுக்குப்பதிலாகப் பண்ணையில் ஆடு களைத் தின்ன வைப்பது அபராதத்துக் குரியதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மனிதர்களுக்குக் கிட்டாத பல உரிமைகளும் பாதுகாப்பு களும் அவுஸ்திரேலியாவில் விலங்கு களுக்கு இருக்கின்றன. உயிரின் மகத்து வத்தை உணர்ந்த நாட்டில் ஆணென் றும் பெண்ணென்றும் விலங்கென்றும் மனிதனென்றும் பேதங்கள் இல்லை. நம் மண்ணில் ஏன் இப்படி அமைய வில்லை என்கிற கனவை இந்த நூலின் கட்டுரைக் குறிப்புகள் எழ வைக் கின்றன.
நூலின் முன்னுரையில் எஸ்.பொ. நாலுகால் சுவடுகள்’ என்று இந்த நூலைக் குறிப்பிடுகிறார். ஆனால் புத்தகம் ‘வாழும் சுவடுகள்’ என்ற தலைப்பில் உள்ளது. சற்றே கவனமாக இருந்திருப்பின் இப்பிழையைத் தவிர்த் திருக்கலாம். டாக்டர் என்.எஸ்.நடேச னுடைய இனிய தமிழ்நடை நூலுக்கு வலிமை சேர்க்கிறது.
(26)

விசாரணை
முத்தையா போடியாரின் siT656) முள் தைத்து விட்டது. ஊர் அதிர
ஒலமிட்டார்; உறவெல்லாம் கூடி விட்டன.
"என்ன முள் குத்தியது?" என்றொருவர் விசாரித்தார். "எந்த இடத்தில் குத்தியது?" மற்றொருவர் கேட்டார்.
“முள் ஆழமாக பதிந்து விட்டதா? கருவேல், நெருஞ்சி, காக்காய்முள் மிகவும் கூர்மையானது' என்று முள் பற்றிய அறிவுள்ள ஒருவர் சொன்னார்.
'விஷ முட்களும் உண்டு, எதற்கும் இன்னும் கொஞ்சம் விசாரிப்பது நல்லது." என்று பொன்னர் சொன்னார்.
முத்தையா வேதனையால் முகம் சிவந்து போனார். விசாரணை தொடர்கிறது.
| vag995
- சாரணா கையபூம்
"கால் கொஞ்சம் வீங்கியது போல் தெரிகிறது" இது போடியாரின் பெரியப்பாவின் கணிப்பு.
"விஷ முள்தான் குத்தியிருக்கிறது. முழங்காலுடன் காலை வெட்டினால்தான் ஆள் பிழைக்க முடியும்!" என்று ஒரு கிழடு ஆலோசனை கூறியது.
விசாரணை தொடர்கிறது. விஷ முள்ளா? சாதாரண முள்ளா? தீர்மானிக்க முடியவில்லை,
நடைபாதையில் யாராவது போட்டிருக்கக் கூடுமோ? அல்லது பில்லி சூனியத்தால் ஏவப்பட்டதோ? என்ற சந்தேகம் முத்தையனின் மாமனாருக்கு.
ஊரில் நாலும் தெரிந்த ஏகாம்பரம் வந்து சேர்ந்தார்.
Su

Page 16
என்னடா சுத்தி நின்று நாடி பிடித்துப் பார்த்த
செய்யிறீங்க, முத்தையாவுக்கு வைத்தியர்,
என்ன ஆச்சு? பேசுங்கடா' 'ஏனப்பா கட்டையை
கொண்டு வந்தீங்க.
"முத்தையா போடியாரின்
போங்க மற்ற வேலய
காலில் முள் குத்திவிட்டது;
'' 6T6. என்ன முள் என்று தெரியவில்லை. பாருங்க” எனற
விசாரிக்கிறோம்." விசாரணை முடிந்தது.
"அடப் பாவிகளா, இதற்கும் ஒரு விசாரணையா? கொஞ்ச நேரம் போனா, கமிஷனே வைப்பீங்க. முத்தையாவின் தலைக்கு விஷம் ஏறமுன் தூக்குங்கடா வைத்தியரிடம்" என்று அதட்டினார்.
எல்லாரும் சேர்ந்து முத்தையா போடியை வைத்தியரிடம் கொண்டு சென்றனர்.
S og Goo (2B)-
 
 
 

Pab ပ်က္ကံနှမ်းရ முனரtழஈரப்புக்கல்
- மேமன்கவி
1. இலங்கைத் தமிழ்ப் பதிப்புத்துறையும்
அதற்கான அமைப்பும்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் பதிப்பகத்துறை ஒரு கணிசமான வளர்ச்சியினை அடைந்திருக்கிறது. மின் ஊடகங்களின் வளர்ச்சியானது புத்தக கலாசாரத்தை அழித்துவிடும் என்ற ஒரு பயம் மின் ஊடகங்களின் வருகையின் ஆரம்ப காலத்தில் புத்தகக் கலாசாரத்தில் அக்கறை உள்ளவர்களின் மனதில் ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். காலப்போக்கில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் நடைமுறை அனுபவங்களும் புத்தகத்திற்கும் வாசகனுக்குமான அந்தரங்க உறவின் நெருக்கம் புத்தகக் கலாசாரம் அழியக் கூடியதல்ல என்பதை நிரூபித்தது மூலம் அந்தப் பயம் இல்லாமலாகி விட்டது. ஆனால் அதேவேளை இதுவரை காலம் புத்தகக் கலாசாரத்திற்கு போட்டியாக எந்தவொரு சக்தி வாய்ந்த வலைப் பின்னலும் இல்லாத சூழலில், புத்தகப் பதிப்புத்துறையயைச் சார்ந்தவர்கள் தமக்கான வழியில் பணியாற்றிவந்தாலும், இன்று அத்துறைக்குப் போட்டியாக சக்தி வாய்ந்த மின் ஊடகங்களின் வருகையானது புத்தகப் பதிப்புச் சார்ந்தவர்கள் விழிப்படைய வைத்து புத்தகக் கலாசாரத்தை காப்பாற்ற அவர்களைப் பலமாக இயங்க வைத்திருக்கிறது.
அத்தகைய இயக்கத்தின் ஒர் அங்கமாகத்தான்தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ்ப் பதிப்பகத் துறையின் பாரிய வளர்ச்சியினை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தமிழ்ப் பதிப்பகத்துறையைச் சார்ந்தவர்கள் ஓர் இயக்கமாக இணைந்து இயங்கும் வகையிலான ஒர் முயற்சி இலங்கையைச் சார்ந்த தமிழ்ப் புத்தகங்களைப் பதிப்பிப்பவர்கள் ஒர் இயக்கமாக இணைந்து செயல்படும் சூழல் இங்கு உருவாகவே இல்லை. 80களின் மத்தியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒன்றிணைப்பில் அத்தகைய ஒரு முயற்சி அன்று மேற்
sony Tyage (29)

Page 17
கொள்ளப்பட்ட போதும் அன்றைய நம் நாட்டு சமூக அரசியல் சூழலின் காரணமாக மேலும் அம்முயற்சியினை முன் எடுத்துச் செல்ல முடியவில்லை.
இன்று தமிழகத்திலும், இலங்கை யிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நூற்றுக் கணக்கான இலங்கைத் தமிழ்ப் புத்தகங்கள் வெளிவந்த பொழுதும், அப்புத்தகங் களை வெளியிடும் பதிப்பகங்களும் சரி, தனி நபர்களும் சரி, பலவிதமான நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்த நெருக்கடிகளைப் பற்றி அடிக்கடி டொமினிக் ஜீவா போன்றவர்கள் பல மேடைகளில் பிரஸ் தாபித்துக் கொண்டும், தேசிய கலை இலக்கியப் பேரவை போன்ற அமைப்
படைப்பாளிகளின்
பினர் பல புத்தகக் கண்காட்சிகள் நடத்தியும் இலங்கையின் தமிழ்ப் புத்தகப் பதிப்பகத் துறையிட்டு தமது அக்கறையினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இலங்கையில் தமது சகோதர மொழியான சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்கள் ஒன்றிணைந்து செயல் படும் வகையில் தமிழ்ப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களின் ஒர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்மார்ச் மாதம் 13ந் திகதி இலங்கை தமிழ்ப் புத்தகப் பதிப்பாளர் களின் ஒன்றியம் ஒன்று உருவாக்கப் பட்டது. இதுவொரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. இத்தகைய தொரு பலமான அமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என்ற விஷயத்தில்
அக்கறை கொண்ட பலர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
குறிப்பாக இத்தகைய ஒர் அமைப்பை உறுதியான வேலைத் திட்டங்களுடன் எதிர்காலத்தில் காத்திர
மான பின் விளைவுகளை உருவாக்கும்
B()
வகையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் துடிப்பாக இருந்தவர் நம் நாட்டின் மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கம் அவர்களின் மகன் குமரன் அவர்கள்.
அவரது அத்துடிப்பு அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் கடந்தகால புத்தக வெளியீடுகள் சம் பந்தமான அனுபவங்களும் எதிர் காலத்தில் அந்த அமைப்பின் வளர்ச்சி யினைப் பற்றிய நம்பிக்கையை உறுதிப் படுத்தியது.
2. அம்பலம் ஏறிய
சுஜாதாவின் கருத்துக்கள்.
இணையத் தளங்களின் வழியாக அதிலும் குறிப்பாக தமிழ் இணையத் தளங்களின் வழியாக பல சஞ்சிகைகள் வெளிப்படுகின்றன. அவ்வாறான ஒரு இந்த இணைய இதழ் ஐந்து வருடங்களுக்கு மேலாக தளம் ஏறிக்கொண்டிருக்கிறது. சுஜாதா அவர்களின் மேற்பார்வையில்
சஞ்சிகைதான் 'அம்பலம்"
தளம் ஏறும் இச்சஞ்சிகையில் வெளி வந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக் களை அம்பலம் - இணைய இதழ்த் தொகுப்பு’ எனும் தலைப்பில் 2001ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகம் ஒரு நூலாக வெளியிட்டது. அந்தத் தொகுப்பை சமீபத்தில்தான் படிக்கக் கிடைத்தது.
r16n\ ང། ༧༧།༡
 

அத்தொகுப்பில் -
சுஜாதா அவர்கள் எழுதியிருக்கும் ‘மின் ஊடகங்களும் இலக்கியமும்’ எனும் கட்டுரை பல கவனத்திற்குரிய விடயங்களைப் பற்றிப் பேசுகிறது. குறிப்பாக மின் ஊடகங்களின் பின் காகிதத்தின் பயன்பாடு (நம் கவலை புத்தகத்தின் பயன்பாடு என்பதாக) குறைந்து விடுமோ என கவலைப் படுகின்றவர்களுக்கு பல ஆறுதல்களை அக்கட்டுரை வழங்குகிறது. கணினித் திரையில் ப்ரிண்ட் எனும் ஆணை இருக்கும் வரை காகிதம் இருந்து கொண்டே இருக்கும் என்று ஆறுதல் சொல்லுகிறார்.
அதற்கு மேலாக மின் ஊடகங் களின் வருகைக்குப் பின் குறிப்பாக கணினியின் வருகைக்குப் பின் படைப் பாற்றல் மங்கி விடுமோ எனப் பயம் கொள்கின்றவர்களுக்காய் இப்படிச் சொல்லுகிறார்.
“கணினிப் பொறி விசைப் பலகையைப் பயன்படுத்துவதில் எந்த விதத்திலும் படைப்பாற்றல் பாதிக்கப் படுவதில்லை. மாறாக, படைப்பாற்றல் அதிகமாகிறது. மனதின் எண்ணங்களை நேரடியாக எழுத்துக்களுக்கு பதிலாக விரல் தொடுகைகளாக மாற்றுகிறோம். அவ்வளவே!” இணையத்தின் வருகை யால் பாதுகாக்க வேண்டிய பல்வேறு இலக்கியக் பொக்கிஷங்களை மேலும் அதிக காலமும், நவீன வசதிகளுடனும் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும் என்கிறார்.
அதாவது இந்த ஊடகங்களின் வருகையால் இலக்கியம் அழியாது.
மாறாக அது சாசுவாதப்படும் என் கிறார். இணையம் என்பது கலை இலக்கியத்தை வளர்க்கவும், பரவ லாக்கவும் பயன்படும் இன்னுமொரு நவீன ஊடகம் என்பதை சுஜாதா அவர்களின் கட்டுரை நிரூபிக்கிறது.
அதே அம்பலம் தொகுப்பில் கர்நாடக சங்கீதத்தைப் பற்றியும் பேசு கிறார். கர்நாடக சங்கீதத்தை ஜனரஞ் சகப்படுத்தி மக்களுக்கு அதன் மீதான ஒர் ஈர்ப்பை உண்டாக்கலாம் என்று சொல்லுகிறார். அக்கட்டுரையில் கர் நாடக சங்கீதத்தைப் பற்றிய கருத்துக் களையிட்டு கர்நாடக சங்கீத ஆர்வலர் கள் யோசிக்கலாம். அக்கட்டுரையை இறுதியாக அவர் இப்படி முடிக்கிறார்.
"அழியும் கலைக்கு உண்டான அத்தனை அடையாளங்களும் உள்ளன இதைக் காப்பாற்ற டெக்னாலஜியால்தான் முடியும்.”
சுஜாதா அவர்களின்
கர்நாடக சங்கீதத்துக்கு!
இந்தக் கருத்தையிட்டு அந்தக் காலகட்டத்தில் என்ன எதிர்வினைகள் தமிழக ஊடகங் களில் வந்தன என்பதை இப்பொழுது தேடவேண்டி இருக்கிறது.
அதே தொகுப்பில் மின்னிய மூன்று "ஹைக்கூ’க்கள் மனதைத் தைத்தன. உங்கள் வலிக்கும்; i. உடைக்கும் வரை
உயிரோடிருந்தது.
குழந்தையின் பொம்மை
- மு. முருகேஷ்
ஒEகை (3D

Page 18
i. நாற்பதுஆண்டுகளாய்
உழைத்தும் உயர்வில்லை உழைப்பாளர் சிலை
- மணிமேகலை நாகலிங்கம்
i. உதிர்ந்த இறகு
இறுதி ஊர்வலத்தில் எறும்புகள்
- இளமுருகு
3. உயிர்மையிலிருந்து ஒரு
கவிதை
தமிழகத்திலிருந்து மனுஷ்ய புத்திரனை ஆசிரியராகக் கொண்டு உயிர்மை" எனும் சிறுசஞ்சிகை வெளி வருகிறது. அச்சஞ்சிகை தமிழகத்தி லிருந்து வெளிவரும் காத்திரமான சிறுசஞ்சிகைகளில் ஒன்றாக இருக் கிறது. பெப்ரவரி 2004இல் அதன் ஆறாவது இதழ்.வெளிவந்துள்ளது. அவ் விதழில் செல்வி என்பவர் (இவர் அச் சஞ்சிகையின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார்.) தலைப்பில்லாமல் எழுதியிருக்கும் ஒரு கவிதை என் கவனத்தைக் கவர்ந்தது. அவரது அக் கவிதைப் பிரதியினைப் பெண்ணிய நோக்குடன் வாசிக்கின்ற பொழுது பல செய்திகளை அக்கவிதை எம்மில்
திரைகள் விலகுகின்றன
என்னுடைய புறக்கணிப்பு உன்னுடைய உறவுகளை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
என்னுடைய வெறுப்பு
உன்னுடைய நேசத்தை
பலப்படுத்துகிறது.
என் மெளனங்கள்
உன் மறுமொழிகளை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
நான் ஒரு கதவு திறந்து வெளியேறும்போது இன்னொரு கதவைத் திறந்து நீஉள்ளே வருகிறாய்.
என்னோடு இருந்த நாய் ஒருநாள் ஒநாயாகி என் கதவுகளைப் பிறாண்டியது என்னோடு இருந்த பூனை ஒருநாள் ரத்த ருசி பழகியது என்னோடு இருந்த கிளி ஒருநாள் வேட்டையாடக் கற்றுக்கொண்டது. இறுதியில் என்னோடு இருந்த ஒவ்வொன்றும் என்னை நோக்கி
விதைத்துப் போகிறது. உங்கள் ரசனைக்கு அக்கவிதை - பசித்த விழிகளோடு வரத் தொடங்கின
ற்றச்சாட்டுகள் எல்லா முகங்களும் TT66)LU FFTL956T
g குறற ஒரே முகங்களாய் இருந்தன. உன்னுடைய தவறுகளை நியாயப்படுத்துகின்றன நான் புதிதாக
O e வண்ணத்துப் பூச்சியை என்னுடைய கோபங்களில் H - O
வளர்க்கத் தொடங்கினேன். உன்னுடைய நாடகங்களின்
VM r1 SY 52 раз656p5 \at/

అసనీయామి دخول aင်္လိပáခြုံ&J
CN C 参 O uoਚ (ါဂJ၏ဇ်ဖ-(bénow )2.1 دما
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு - புதிய அநுபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தண்மை பேணப்பட்டுள்ளது) 65605u: 25of2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் ωίου)6υ: I 4ο/- 3. அநுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் விலை: 180/- 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் ിഞ്ഞുണ്ഡ: 175/- 5. மண்ணின் மலர்கள் -
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) 65605u: IIo/- 6. கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்தல்லாஹற் οδού)6υ: Ioo/- 7. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் - (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா 6660)6No: II o/ 8. முனியப்ப தாசன் கதைகள் - முனியப்பதாசன் 6560)su: I5of9. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) - பாலரஞ்சனி விலை: 60/= 10. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்களித்தவர்களின் தொகுப்பு) 666Osu: I75/F 11. சேலை - முல்லையூரான் 6606): 150/= 12. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் 6606): 275/-
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 13. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (இரண்டாவது தொகுப்பு) விலை: 350/=
(41 எழுத்தாளர்களின் படைப்பு) 14. நிலக்கிளி - பாலமனோகரன் 6606): 14o/F 15. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் - தொகுப்பு: டொமினிக் ஜீவா ഖിതസൈ: t5o/- 16. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் 6606): Iso/F 17. தரை மீன்கள் - ச.முருகானந்தன் 6550)5u: Iso/F 18. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான் ഖിതസൈ: 150/- 19. அப்புறமெண்ன ~ குறிஞ்சி இளந்தென்றல் ~ (கவிதைத் தொகுதி) விலை: 120/= 20. அப்பா - தில்லை நடராஜா 65,05u: I30/- 21. ஒரு டாக்டரின் டயறியில் இருந்து - எம்.கே.முருகானந்தன் 65605u; I40/- 22. சிங்களச் சிறுகதைகள் 25 - தொகுத்தவர் செங்கை ஆழியான் 6360)su: Iso/=
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
(33)

Page 19
மூத்த எழுதிதாளர் மறுமலர்ச்சி வரகுருக்குப் Uიუი(Z(6 იჩყდი
- Le8e6
மூத்த எழுத்தாளர் மறுமலர்ச்சி வரதரின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, "ஞானம் கலை இலக்கியப் பண்ணை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாராட்டு விழாவினை நடத்தியது.
"வரதர் 80’ என்னும் மகுடத்தின் கீழ் கடந்த மாதம் நடைபெற்ற இவ்விழாவிற்கு “ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் தலைவர் திரு. என்.சோமகாந்தன் தலைமை வகித்தார். திரு. வேலனை வீரசிங்கம், திருமதி. அன்னலட்சுமி வீரசிங்கம் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்தனர்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருமதி பத்மா சோமகாந்தனின் தமிழ் மொழி வாழ்த்துடன், ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர். தி. ஞான சேகரன் அனைவரையும் வரவேற்றார்.
தலைவர் தமது தலைமையுரையில் நவீன தமிழ் இலக்கியத்தில் வரதர் ஆற்றிய பணிகளைப் பற்றியும், அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சுருக்கமாக ஞாபகப்படுத்தினார்.
"ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வரதரின் வகிபாகம்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பி சிறப்புரை ஆற்றினார். தலைப்புக்கேற்றவாறு வரதரின் சேவைகளையும், பங்களிப்பின் அவசியத்தையும் பல கோணங்களி லிருந்து நீண்டதொரு ஆய்வினை சமர்ப்பித்தார் பேராசிரியர்.
அவ்வாய்வுரைக்குப் பின் "வரதர் 30 என்னும் நூலின் வெளியீட்டுரையை திரு. தெ.மதுசூதனன்நிகழ்த்தினார். இவ்வெளியீட்டுரை பல வித்தியாசமான கோணங்களிலிருந்து ஆராயப்பட்டு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
665); (34)

அடுத்து "வரதர் 80’ என்னும் நூலின் முதற் படியை பொறுப் பாசிரியர், விழா நாயகரிடம் சமர்ப் பித்தார்.
அதைத் தொடர்ந்து விழா நாயகரைப் பாராட்டி கெளரவிக்கும் வைபவம் இடம்பெற்றது.
தமிழ் மூதறிஞர் பண்டிதர் கா.பொ.இரத்தினம், திரு. தெ.ஈஸ் வரன் ஆகியோரின் சிறப்பான பாராட்டுரைகள் இடம்பெற்றன.
திரு. பொன். விம லோந்திரன் விழா நாயகருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்.
வரதர் மிகக் குறைவான சிறு கதைகளையே எழுதியிருக்கக்கூடும். ஆனால் அவை ஒவ்வொன்றும் சிறு கதை இலக்கியத்துறையில் மிகவும் விதந்து பாராட்டப்பட்டது. அந்தக் காலகட்டத்திற்குத் தேவையான கதைப் பொருளைத் தேர்ந்தெடுத்து கவர்ச்சியாக எழுதி முத்திரை பதித் துள்ளார். அதனால் அவை தனித் தன்மை வாய்ந்தனவாக விமர்சகர் களால் பேசப்பட்டன.
பல தசாப்தங்களுக்கு முன்பே இவர் புதுக் கவிதைத் துறையில் அதிக ஈடுபாடுகாட்டியுள்ளார்.
எமது நாட்டின் சிறு சஞ்சிகை வரலாற்றில் முதலிடம் வகிப்பது வரதரின் 'மறுமலர்ச்சி மாத இதழே. நவீன இலக்கிய
ԿÇë Decess)
வளர்ச்சிக்காக
"மறுமலர்ச்சி தனது பங்களிப்பை ஆணித்தரமாக வேரூன்றியுள்ளது.
சிறுகதை, கவிதை, சஞ்சிகை, ஆய்வுக்கட்டுரை என்று இலக்கியத்தின் அனைத்து வடிவங் களிலும் காலூன்றி வெற்றி கண்டவர் வரதர்.
நாவல்,
"வரதர் வெளியீடு" மூலம் தனது சொந்தப் பணத்தை முதலீடு செய்து எமது நாட்டின் பல இலக்கிய கர்த் தாக்களின் படைப்புகளைநூல்களாகப் பதிந்து அவர்களை இலக்கிய உலகில் நடமாட விட்டுள்ளார்.
இலக்கிய உலகில் இவருக்கு நிரந்தரமான ஓரிடத்தை தேடித் தந்தமைக்கு காரணம் இவரது படைப்பாற்றல் மட்டுமல்ல, வாழ்க் கையில் இவர் கடைப்பிடித்து வந்த ஒழுக்கமும் நேர்மையும், இவருக்கே உரிய பரந்த மனமும்தான் காரணமாக அமைகின்றனஎன்று கூறுவதில் எவ்வித ஐயமும் இல்லை.
'சாகித்திய ரத்தினம்’ திரு. தி.ச. வரதராசனின் (வரதர்) ஏற்புரைக்குப் பின், திரு. பூபாலசிங்கம் பூரீதரசிங்கின் நன்றியுரையுடன் விழா நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன.

Page 20
பிப்புறைடில் فالعودoلميدو (28
- வெ.தவராஜா இ.நி.சே.
நமது பலதுறைக் கலைநர் சி.மெளனகுரு அவர்களுக்கு சமீபத்தில் மணிவிழாக்கொண்டாப்பெற்றது. அதன் நாபகார்த்தமாக 'மெளனம்" என்ற நூலும் வெளிவந்துள்ளது. அந்நூலின் முகப்பில் இடம்பெற்றகட்டுரை ஒன்றை இங்குவெளியிடுகின்றோம். பேராசிரியர் அவர்கள் தொடர்ந்தும் சாதனைகள் பல நிகழ்த்துவார் என வாழ்த்தி
மல்லிகையின் பெருமகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
- eafrfusir.
வயது அறுபது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ் காலத்தில் ஒரு கடவுப் புள்ளிதான். ஆனால் அப்புள்ளியை கடக்கும் போது அவர்தம் கடந்த காலத்தை சமூகம் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒரு கோடிட்டுச் செல்வதுதான் மனித வாழ்வினை அர்த்தமுள்ளதாக்கி விடுகிறது.
இவ்வாண்டு ஆணித்திங்களில் மணிவிழாக் காணும் மதிப்பிற்குரிய பேராசிரியர் சின்னையா மெளனகுரு அவர்கள் இவ்வாறு வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய மனிதர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். பேராசிரியர் அவர்கள் பத்தோடு பதினொன்றல்ல. தனக்கென ஒரு தனியிடம் பதித்த அர்த்தமுள்ள மனிதன்.
மரபுக் கலைகளிலே காலூன்றி நவீன கலைகளிலே தடம் பதித்து எதிர்காலச் சந்ததியினர் மரபிலிருந்து நவீனத்துவத்தின் உச்சியைத் தொட தன்னை அர்ப்பணித்த ஒரு கலைஞன்.
நடிகர், எழுத்தாளர், நெறியாளர், ஆய்வாளர், திறனாய்வாளர் என அகலித்து வெற்றியும் கண்டவர். இவற்றுக்கெல்லாம் மேலாக ஒரு தனித்துவமுள்ள மனிதன்.
ஆறு வயதிலே நடிகனாக ஆரம்பித்த பேராசிரியரது கலைப் பயணம் அறுபது வயதையும் தாண்டிச் செல்கிறது.
ஒDகை -ଔg)

மெளனம் எனும் இச்சிறப்பு மலர் அர்த்தமுள்ள ஒரு மனிதனுக்கு அர்ப் பணிப்புள்ள ஒரு கலைஞனுக்கு மட்டகளப்புச் சமூகம் சூட்டும் மகுடம்.
ஈழத்தின் அரங்கியலை ஒரு ஆய்வியலாக்கி கிழக்கின் அரசியலில் ஒரு புதுப் பரம்பரை உருவாவதற்கு பேராசிரியரது உழைப்பு அளப்பரியது.
கலைஞனாக வாழ்வது ஒரு நிலை; கலைக்காகத் தன்னை அர்ப்பணித்து ஒரு கலைப் பாரம்பரியத்தையும் கலைப் பரம் பரையையும் உருவாக்குவது இன்னு மொரு நிலை. இரண்டாவது நிலையில் வெற்றி கண்ட மிகச் சிலரில் ஒருவராக திகழ்பவர்தான் பேராசிரியர் சின்னையா மெளனகுரு அவர்கள்.
கிழக்கு மாகாணம் தன்னகத்தே பல கலைகளது ஆணிவேர்களையும் பல கலைஞர்களையும் கொண்டது. கூத்து, மகுடி, பறைமேளம், வசந்தன் என விரியும் மரபு நாடகங்களையும் நாடகக் கலைஞர்களையும் சமூக அங்கீகாரத்துக்கு கொண்டுவர முதலாவ தாகத் தொழிற்பட்ட கலைஞன் பேராசிரியர் என்பதுதான் உண்மை.
அவர் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கிறார் என்பது தவறு. அவரே ஒரு பல்கலைக்கழகம். அவரிடம் கற்க வேண்டியதுநிறையவே யுள்ளது. அது எம்மால் முடியுமா? நிச்சயமாக முடியும். ஏனேனில் தான் கற்றவற்றை உள்வாங்கி பரிசீலித்து மற்றவர் தெளிவாக விளங்கக் கூடிய வகையில் வழங்கி அத்துறையில் அவரை விற்பன்னராக்குவது பேராசிரியரது
இவரால் இன்ற பலர் நவீன நாடகக்காரராக இருக்கின்றனர். சிலர் மரபு நாடகக் கலைஞராகத் திகழ் கின்றனர். இன்னம் சிலர் நல்ல நாடக எழுத்தாளராக நெறியாளராகத் திகழ் கின்றனர். குறிப்பாக கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு பேராசிரியர் வருகை தந்த பின்னர் மட்டக்களப்பில் ஒரு நாடகப் பரம்பரையே தோன்றியிருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் காரணம் பேராசிரி யரது அர்ப்பணிப்புள்ள ஈடுபாடே.
பேராசிரியர் அறுபதாவது அகவை அடைவதையொட்டி வெளிவரும் இச் சிறப்பு மலர் வெளியீட்டிலே ஆக்கங் களை பெற்று தொகுத்தது மட்டும் தான் எனது பங்கு. ஆனாலும் கடந்த இருபது ஆண்டுகளாக பேராசிரியர் மீது அன்பும் மதிப்பும் கொண்ட எனக்கு இதைத் தொகுப்பது இரட்டித்த மகிழ்ச்சி.
இம்மலரை தொகுக்கும் போது பிரசித்தி பெற்ற சிற்பியைப் போல, உலகப் புகழ் பெற்ற ஒவியனைப் போல, மக்களை நேசிக்கும் கவிஞனைப் போல கிரகித்துப் போனேன், நான்.
இம்மலர் ஐந்து பகுதிகள் கொண்டது. முதற் பகுதி பேராசிரியர் பற்றிய அறிமுகத்தையும் இரண்டாவது பகுதி பேராசிரியர் பற்றிய பிறரது கருத்துக்களையும் மூன்றாவது பகுதி பேராசிரியர் புலமைசார் ஆய்வு களையும் நான்காவது பகுதி அவரது துறைசார் ஆய்வுக் கட்டுரைகளையும் ஐந்தாவது
படைப்புக்களையும் உள்ளடக்கியதாக
பகுதி பேராசிரியரது
தனிச்சிறப்பு. அமைந்துள்ளது. ஐந்தாவது பகுதி
S geese): (3) ༧ V_g” t_/

Page 21
பேராசிரியரது இன்னுமொரு பக் கத்தைக் காட்டும் என எதிர்பார்க் கின்றோம்.
மலரை நான் தொகுத்தாலும் இதன் வரவுக்கு பலரது ஒத்துழைப்பு முக்கியமாக அமைந்துள்ளது. முதலில் நான் நினைவு கூர வேண்டியது இம்மணி விழாக் குழுவின் தலைவ ராயிருந்து துடிப்புடன் செயற்பட்ட செ.சீவரெத்தினம் அவர்களை. இம் மலர் வெளியீட்டுக்கும், மணி விழாவுக் கும் இவரது உழைப்பு அளப்பரியதா யிருந்தது. அன்னாரது மறைவு எமக்கு பேரிழப்பே.
வாழும் போதே கலைஞர்களை வாழ்த்த வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதில் கவனமாயிருந் தவர் அவர். பேராசிரியர் சி. மெளன குரு அவர்களது மணிவிழாவை நடாத்த தீர்மானித்த வேளையிலிருந்து நாம் சந்தித்த தாண்டிச் சிறப்பாக இதனை நடாத்த வழிவகுத்தவரும் இவரே.
மணிவிழாவை நடாத்த எடுத்த
தடைகளையெல்லாம்
முயற்சிகளின் போது ஏற்பட்ட வரவேற்புக்கள், திருப்திகள், அதிருப்தி கள், விமர்சனங்கள் தொடர்பாக தனதுரையில் எழுதுவதாகயிருந்தார். -அனைத்தும் அவருடன் உறங்கிப்
போயிற்று. அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.
இம்மலரின் வருகைக்காக
ஒத்துழைப்பு வழங்கிய இன்னும் பலரை
தன்னுடைய ஆக்கங்களையும் புகைப்படங்களையும் பெறுமதிமிக்க ஆலோசனைகளையும் வழங்கிய சின்னையா மெளனகுரு அவர்களுக் கும் ஆக்கங்களை வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் அட்டை ஓவியத்தை யும் ஏனைய ஓவியங்களையும் வரைந்த நண்பர் கிக்கோ அவர்களுக்கும் நிதி யுதவி வழங்கிய பெருந்தகைகளுக்கும் மலரை சிறப்புற வெளியிட்ட குமரன் அச்சகத்தினருக்கும் இதனோடு ஒத்துழைத்த இன்னம் பலருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.
/2 མཛོད་༽ மல்லிகைப் பந்தல்
வெளியிட்டிருக்கும் புதிய
நூல்கள்
Ay p y
(சிறுகதைத் தொகுதி) J. 9b) to 60
அப்புநரிமண்ண.
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
(வரலாற்று நூல்) தில்லை நடராஜா
நன்றியுடன் நினைவுகூர வேண்டி U யுள்ளது.
S. g 16SN
sta yges ང།༧།༡
 
 

அச்சுத்தாளின் 2ளுடாக
O O O 2n elgiuolu U(
- Chuirósfää deur
ஆரம்ப காலகட்டங்களில் மல்லிகை நாற்பத்தெட்டுப் பக்கங்களில்தான் வெளி வந்து கொண்டிருந்தது. அதன் அப்போதைய விலை முப்பது சதக் காசுகள்தான். நாற்பத்தெட்டுப் பக்கங்கள் என்பதை நமது அச்சகப் பாஷையில் சொல்லப் போனால், ஆறு பாரங்கள். இத்தனை பக்கங்களையும் ஒருங்கு சேர ஒரே தடவையில் எம்மால் அச்சுக்கோர்த்துவிட இயலாது. காரணம், அத்தனை விரிவான பக்கங்களை ஒருங்கு சேர அச்சுக் கோர்த்துவிடக் கூடியதான போதிய அச்செழுத்துக்கள் அந்தச் சமயத்தில் நம்மிடம் போதிய அளவு சைவசம் இல்லை. ஒரு பத்து இருபது பக்கங்கள் ஒரே சமயத்தில் மாத்திரம் தயாரித்து முடிக்கலாம். அதன் பின்னர் இந்த அச்செழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டு, அவ்வெழுத்துக்கள் கேஸில் கலைத் தெடுத்த பின்னர்தான் ஏனைய பக்கங்களைத் தயாரிக்க முடியும்.
இதுவொரு பொறுமையைச் சோதிக்கும் நுட்பமான செயல்.
மல்லிகையின் மீது கொண்டுள்ள ஒப்பற்ற பற்றுதல் காரணமாகவும் அது தொடர்ந்து வெளிவரவேண்டும் என்ற பேரவாக் காரணமாகவும் இந்த வேலைகளைத் தொடர்ந்து செய்து வரலானோம்.
இதன் காரணமாக மிக மிகப் பொறுப்புணர்ச்சியுடனும் இலக்கிய விசுவாசத்துடனும் செயல்பட்டு வரவேண்டியதான கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம்.
ஒருதடவை அச்செழுத்துக்களை நான்கு பக்கங்களாகப் பிரித்துக் கல்லியில் இணைத்து, சைக்கிளில் ஹாண்டில் பகுதியில் சிக்காராக வைத்துப் பிடித்துக் கொண்டு வெகு கவன நிதானத்துடன் சைக்கிளை மெல்லத் தள்ளிக்கொண்டு சற்றுத் தூரத்தேயுள்ள அச்சகத்திற்குச் செல்ல வேண்டும். அதேபோல அச்சடிக்

Page 22
கப்பட்ட எழுத்துக்களைத் திரும்பக் கொணி டுவந்து சேர்ப் பித்துவிட வேண்டும். திரும்பக் கொண்டுவந்து அவ்வெழுத்துக்களை அச்சுப்பெட்டியில் கலைத் துப் போட்ட பின்னர்தான் ஏனைய பக்கங்களைத் தயாரிக்க முடியும். இதுவொரு தொடர் வேலை.
சும்மா இரண்டெழுத்து வார்த்தை களால் இதை இப்படிச் சுலபமாகச் சொற்களில் சொல்லிவைத்து விடலாம். ஆனரல், நடைமுறையில் இதைச் செயப் து பார்த்தால் தானி இதனி சிரமங்கள் தெளிவாகத் தெரியும்.
நாற்பத்தெட்டுப் பக்கங்களையும் அச்சுவாகனமேற்றி அச்சடித்து முடிக்கப் பன்னிரண்டு தடவைகள் சைக்கிளில் நாம் அச்சகத்திற்கு இப்படியே சென்று வந்த பின்னர்தான் மல்லிகையின் முழுப் பக்கங்களும் அச்சியியற்றி முடிந்து விட்டதாகக் கருதலாம்.
பல ஆண்டுக் காலமாகத் தன்னந் தனி மனிதனாக இந்த அச்சடிக்கும் ஆரம்ப வேலைகளைச் செய்துவரத் தொடங்கின்ேன்.
கஸ்தூரியார் வீதியென்பது யாழ்ப் பாண நகரில் மிகவும் பிரபலமான போக்குவரத்து தெருக்களில் ஒன்று. எந்த நேரமும் பஸ், கார், மற்றும் வாக னங்கள் நெருக்கமாக முண்டியடித்துக் கொண்டு ஓடித்திரியும் பிரதான சாலை.
அந்த வீதியிலுள்ள அத்தனை கடைக்காரர்களுக்கும் நான் இத்தனை சிரமங்களுடனும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போவதையும் பின்னர் அதே
கண்டிருப்பார்கள்.
இதுவே எனக்குப் பழக்கப்பட்டுப் போய்விட்டது.
இன்றும் அன்றைய எனது தெருக் கோலத்தை நான் நினைத்துப் பார்த்து மனசுக்குள் சிரித்துக் கொள்வதுண்டு.
ஒரு சஞ்சிகையின் ஆசிரியர் தன்னால் உருவாக்கி வளர்த்தெடுக் கப்பட்டு வரும் ஒரு மாசிகையைத் தெருத் தெருவாகச் சுற்றிச் சுழன்று விற்று வருவதில் அப்படியொன்றும் புதுமையில  ைலதானி . ஆனால் , தன்னால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டி ருக்கும் அதன் தயாரிக் கப்பட்ட அச் சடிக் கும் பக்கங்களை வெகு கவனத் துடன் இப் படியாகக் கொணி டு திரிந்து சஞ்சிகையாக்கி வெளியிட்டு வந்துள்ள ஒரேயொரு சஞ்சிகை ஆசிரியன் நானா கத்தான் இருக்கும் எனப் பெருமையுடன் இப்பொழுதும் நான் திடமாக நம்பி வருகிறேன்.
இது ஒரு வரலாற்றுப் புதுமை. தனியானதொரு சாதனை.
எனினுடைய அந்தக் கால இலக்கிய வாழ்க்கை என்பதே வலு புதுமையானது. வெகு விசித்திரமானது. இன்று ஆறுதலாக இருந்து இரை மீட்டிப் பார்த்தாலும் பிரமிப்பூட்டுவது.
இப்படியே நான் பிரயாணிக்கும் ஹொட்டன் ஹோல்' என என்னால் நாமகரணமிடப்பட்டுப் பாவிக்கப்பட்டு வரும் சைக்கிளின் சக்கரம் உருளுவது போலவே, எனது சஞ்சிகை வெளி
கேரலத்தில் திரும்பி வருவதையும்
(40)

யீட்டுக் காலமும் உருண்டோடிக் கொண்டிருந்தது.
இப் படியான உருணி டோடிக் கொணி டிருந்த கால கட்டத்தில இப்படியும் ஒருநாள் நடந்தது.
அச்சியற்றக் கூடிய நான்கு அச் செழுத்துப் பக்கங்களை இரும்புக் கல்லியில் வைத்து, வெகு ஜாக்கிரதை யாகச் சைக்கிளை மெதுவாகத் தள்ளிக் கொண்டு அச்சகம் போகும் முகமாகக் கஸ்தூரியார் வீதி வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தேன்.
கிட்டத் தட்ட அச் சகதி தை அடைந்துவிடக்கூடிய தூரம்.
நாற்சந்தி முனையைக் கடந்து, வின் ஸர் தியேட்டர் ப் பக்கமாக சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்லும் அந்தச் சமயத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் சைக்கிளில் வந்து என்னைக் கடந்தார்கள். கடந்த வர்கள் முன்னால் வந்ததொரு வாகனத் திற்கு வழிவிட்டு ஒதுங்கும் பாவனையில் சட்டென்று தமது வாகனத்தை வெட்டித் திருப்பினார்கள். அவர்கள் திடீரெனத் தமது பக்கக் கவனத்தை வெட்டித் திருப்பியதால் எனது சைக்கிளின் முன்
சில்லுப் பகுதியில் மோதிக் கொண்டார்.
356]] .
இந்தத் திடீர்த் தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. எனது கவனம் நிலை குலைந்தது. வெகு நிதானமாக நான் சைக்கிளில் கொண்டு சென்ற ஈயனழுத்து அச்சுச் சாதனப் பாரம் ஒரு பக்கம் சாய்ந்தது. அது சாயப் போகின்
நான் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டேன். இந்தப் பக்கம் வழுகிச் சாய்ந்தது. நிலை குலைந்தது. அப் படியே அத்தனை எழுத்துக்களும் பெரும் சத்தத்துடன் வீதியெங்கும் சிதறிச் சிதைந்தன.
நான் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றேன்.
வீதியில் போவோர் வருவோ ரெல்லாம் இந்த அருங்காட்சியை இலவசமாகவே பார்த்துக் களித்தனர். வேறு சிலரோ இலவச ஆலோசனை களும் சொல்லிச் சென்றனர்.
தொடர்ந்து வெளிவரும் ஒரு சஞ்சிகையின் ஆசிரியர், கடந்த காலங் களில் அந்த மாசிகையை யாழ்ப்பாணத் துத் தெருக்களில் வீதி வீதியாக விற்றுத் திரிந்த ஓர் இலக்கியப் பற்றாளர், தனது சஞ்சிகையின் எழுத்துப் பக்கங்களை அச்சகத்தில் அச்சியற்றுவதற்காக வீதி வழியாகக் கொண்டு சென்று வருகை யில் ஓர் இடையூறு காரணமாக அத்தனை ஈய எழுத்துக்களும் வீதி யெங்கும் சிதறிக் கொட்டப்பட்ட நிலை யில், தலை கழன்ற பைத்தியக் காரனைப் போலப் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்ற நிகழ்ச்சியை யாராவது ஒரு புகைப்படக்காரர் பட மெடுத்திருக்க வேண்டும். அத்தனை யொரு அவலமான தெருக்காட்சிகளில் அதுவுமொன்று.
மெதுவாகக் குனிந் திருந்து இரும்புக் கல்லியில் எழுத்துக்களை இரு கைகளினாலும் கூட்டி அள்ளுகின்றேன். பக்கமாக்கப்பட்டு விட்ட அச்செழுத்துக் கள் பார்த்தால் அடக்கமாக இருக்கும்.
றது என்பதையறிந்து அந்தப் பக்கத்தை
1N س (4)

Page 23
ஆனால் கொட்டப்பட்டுச் சிந்திச் சிதறிப் போய்விட்டால் அதைக் கண்கொண்டு பார்க்கவே வெகு பயங்கரமாகக் காட்சி தரும்.
இந்த அவலமான சூழ்நிலையில் மிகவும் பொறுமை காத்துச் சிதறிப் போயுள்ள எழுத்துக்களை அள்ளி அள்ளிப் போட்டுச் சேமித்துக் கொண் டேன். எத்தனை என்று அள்ளுவது? மணல், சிறுசிறு கற்கள், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் வீதியில் கிடந்த
பண்டங்கள் எனது கைகளுக்கு வந்து
குவிந்தன. கூடுமான வரை எழுத்துக் களாக எனது கவனத்தில் தென் பட்டவைகளை அள்ளிக் குமித்துக் கொண்டு, திரும்பவும் அதே சைக்கிளில்
எனது இருப்பிடத்திற்குத் திரும்பி வந்து
சேர்ந்தேன்.
இதில் மகா கஷடமான, ரொம் பவும் சிரமமான வேலை என்னவென் றால் இப்படியாகக் கொட்டுண்டு சிதறிப் போன தனித்தனி அச்செழுத்துக்களை இன மறிந்து திரும் பவும் அச்சுப் பெட்டிக்குள் போட்டு முடிப்பதுதான்!
உதவியாளர் சந்திரசேகரம் ஒரு வார காலம் பொறுமையாக இருந்து உதிரியாகத் தனித்தனியாகிப் போன, குறுணிக் கற்களும் மணலும் சேர்ந்து ஒன்று கூடிப்போயிருந்த ஈய எழுத்துக் களை இனங்கண்டு மறுபடியும் அச்சுப் பெட்டிக்குள் சேர்த்து முடித்தார்.
கடந்த ஒருகிழமை காலம் நான் எந்தவிதமான வேலைகளையும் Gl3Fui untuD6b diubuDir (8g Tubuili (8uruh வாளாவிருந்தேன்.
অ
«، رام \tal/
மனம் மரத்துப் போயிருந்தது.
ஒன்றிலுமே விருப்பமற்று, எந்த வேலைகளையுமே செய்யாமல் பேப்பர் படிப்பதிலும், புத்தகங்கள் வாசிப்பதிலும் நேரங் கிடைத்தால் வெளியே சுற்றித் திரிவதுமாகவே நான் நாட்களைக் கடத்தி வந்தேன்.
ஒரு கட்டத்தில் மல்லிகைக்காக அச்சுக் கோர்க்கும் இந்த வழிமுறை களை முற்றாகவே விட்டுவிட்டு, பழைய படியே அச்சுக்கூடமொன்றில் பொறுப்புக் களை ஒப்படைத்து மல்லிகையை வெளியிடுவோமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இப்படியே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். எந்த வேலையிலும் ஈடுபடும் மனநிலை அப்போது எனக் கில்லை. சோம்பிப் போய்க்கிடந்தேன்.
பிரபலமான முச்சந்தித் தெருவில் நான் அன்று பட்டுத் தெளிந்த மன அவஸ் தை பற்றியே யோசித் து யோசித்து மனவெறுப்பின் உச்சிக்கே சென்றிருந்தேன். அத்தனை மனச் சோர்வு.
இப்படியானதொரு சூழ்நிலையில் நான் தவித்துத் தள்ளாடிக் கொண்டி ருந்த வேளையில் ஒருநாள் பூரீலங்கா அச்சகத்திலிருந்து ஓராள் என்னைத் தேடி வந்து ஒரு தகவலை என்னிடம் சொல்லிச் சென்றார்.
பூரீலங்கா புத்தகசாலை அதிபர் என் னை ஒருதடவை தனி னைச் சந்திக்கும் வண்ணம் கேட்டுக் கொண்ட

தாக என்னைத் தேடி வந்தவர் தக வலைத் தந்து சென்றார்.
அன்று சாயங்காலம் பூரீலங்கா புத்தகசாலை மற்றும் அச்சக அதிபரைத் தேடிச் சென்று அவரைச் சந்தித்தேன்.
என்னைக் கண்டதும் பக்கத்தே உள்ள வெற்றிலைப் பணிக்கத்தில் வெற்றிலை எச்சிலைத் துப்பி வாயைத் துடைத்து விட்டுக்கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தார்.
நான் ‘இவர் என்ன சொல்லப் போகிறார்?’ என்ற எதிர்பார்ப்பில் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் தெரிந்தவர். மாதா மாதம் மல்லிகை யைத் தொடர்ந்து படித்து வருபவர். என்மீதும் எனது தனிமனித அயரா உழைப் பின் மீதும் பேரபிமானம் கொணி டவர். அதிகம் கதைக் க மாட்டார். என்னைக் கண்டதும் ஒரு புன்முறுவல். தலையசைப்பு. இதுதான் அவரது அன்புப் பாஷை, தெய்வேந்திரம் என்பது அவரது பெயர். யாழ்ப்பாணம் றிலங்கா புத்தகசாலை அதிபர் என்பது அவரது விலாசம்.
‘' என்னடாப்பா! அண்டைக்குத் தியேட்டர் முன்னாலை நிண்டு பகிரங்க மாக டான்ஸ் ஆடினியாம்! ஆட்கள் சொல்லக் கேட்டன். என்ன விசர் வேலையப்பா, இது? இந்தப் பெரிய ஈயப் பாரத்தைச் சுமந்து திரிந்து எத்தனை நாளைக்குத்தான் இப்பிடி றோட்டிலை நிண்டு டான்ஸ் ஆடப் போறே? இனிமேல் என்ன செய்ய உத் தேசம்?’ என ஒரு நண்பனைப் போல, ஒரு தகப்பனின் பேச்சுத் தொனியில்
ty scies: SEA
ஏற்கனவே எண் னைத்
என்னைக் கடிந்து கொண்டு கேட்டார், அவர்.
நான் என்ன சொல்வதென்றே தெரியாமல் மெளனமாக வாய்மூடி நின்றுகொண்டிருந்தேன்.
‘என்னப்பா! இப்படியே வாய்மூடிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? இனி மேல் என்ன செய்ய உத்தேசம்?”
அதற்கும் நான் ஒன்றுமே பேசாமல் நின்றேன்.
‘அவர் ஏன் என்னை அழைத்தார்? ஏன் என்னை அழைத்து இத்தனை வாஞ்சையுடன் பேசிக் கொண்டிருக் கிறார்?’ என என் மனத் தராசில் இந்தச் சம்பவதி தை எடை போட்டு கி கொண்டிருந்தேன்.
‘இனி நீ இப்பிடித் தெருத் தெரு வாப் பாரத்துடன் அலைந்து திரியக் கூடாது! அண்டைக்கு நடந்ததைப் போல, ஒரு கார், பஸ்ஸ"க்கு முன்னை நடந்திருந்தால் என் நடந்திருக்கும்? என்ன மடத்தனமான வேலை பார்க் கிறாய்! நீ? உனக்கெண்டொரு வழி பார்த்து வைச்சிருக்கிறன். அண்டைக் குத் தெருவில் நடந்ததை முழுவதும் கேள்விப்பட்ட உடனை நான் செய்த முதல் வேலை இதுதான்.”
சொல்லிக் கொண்டே போனார், அவர்.
இவர் என்னத்தைச் சொல் ல வருகிறார் என ஒன்றுமே புரியாமல் நான் அவரது வாயிலிருந்து வெளிவரும் உணி மையான தகவலுக்காகவே காத்திருந்தேன்.
r1 SY \tov

Page 24
‘அச்சுக்கூடத்துக்குப் பின்னாலை ஒரு சின்ன இடம் கிடந்தது. அந்தச் சின்ன இடத்தை ஒருமாதிரி உனக்காக ஒழுங்குபடுத்தி வைச்சிருக்கிறன். போ. போய் அதை ஒருக்காப் பாத்திடு. உனக்கு விருப்பமெண்டால் அந்த அறையை உனக்கு வாடைக் குத் தாறன். போக வர பக்கத்திலுள்ள ஒழுங்கையை வழியாகப் பாவிச்சுக் கொள்ளலாம். அண்டைக்குத் தெரு விலை நாலுபேருக்கு முன்னாலை நீ பட்ட கண்றாவியைக் கேட்டவுடனே
இப்பிடி யோசித்து முடிவெடுத்தனான்,
நான.
அவர் தொடர்ந்து சொன்னது எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.
என்னைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் தொண்டு செய்யும் மனப்பான்மையுடன் வெகுசன ஊழியம் புரிபவர்களுக்கு இடையிடையே நடைபெற்று வரும் இத்தகைய அவலங்கள் கூட, முடிவில் நல்ல பலனையே கிட்டச் செய்துவிடும் என்ற யதார்த்த உண்மைக்கு இந்தச் செயல் எதார்த்தமான ஒரு அறிகுறியாகவே என் மனதிற்குத் தென்பட்டது.
அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்தச் சின்ன அறையைப் போய்ப் பார்த்தேன். நாற்சதுர அறை.
சிறிய அறைதான். நல்ல காற் றோட்டமாக இருந்தது. மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. பின்னால் கிணறு, கக்கூஸ், சிறுவெளி ஆகியன கூட இருந்தன. முன்னால் சிற்றொழுங்கை. முத்திர ஒழுங்கை என முன்னர் அதற்குப் பெயர்.
என் மனசுக்குப் பிடித்துப்போன இடமாக அது திகழ்ந்தது.
மூத்திர ஒழுங் கைக் குளிர் மல்லிகைச் செடி நடப்பட்டு விட்டது.
ஒரு நல்ல நாளில் இதுவரை காலமும் ஜோசப் சலுானுடன் ஒட்டுக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த மல்லிகைக் காரியாலயம் தனக்குத் தனக்கென ஒரு சொந்த இடத்தில் குடியமர்ந்து கொண்டது.
ஒழுங்கையில் மூத்திர நாற்றத் திற்குப் பதிலாக மல்லிகை மணம் வீசத் தொடங்கிவிட்டது. இதுவரையும் கஸ்தூரியார் விதி என முகவரியிடப் பட்ட மல்லிகையின் இருப்பிடம் காங் கேசன்துறை வீதி என அச்சிடப் பெற்றது.
இந்த குறு ஒழுங்கையில் இயங்கி வந்த மல்லிகைக் காரியாலத்தைத் தேடி, தேசத்தின் எல்லாத் திசைகளி லுமிருந்த ஆக்க இலக்கிய கர்த்தாக் கள், விமரிசனத் தகைமை பெற்றவர் கள், மக்களிடம் வேர் பாய்ச்சி வளர்ந்து வந்ததால் மதிக்கப்பட்ட படைப்பாளி கள், தரமான இலக்கியச் சுவைஞர்கள், பத்திரிகைத்துறையாளர்கள், கல்விமான் கள் என பல்வேறு வகைப்பட்டவர்கள் எல்லாம் இலக்கிய ஸ்தலம் தேடி வரத்தலைப்பட்டனர்.
சிறு சஞ்சிகை வரலாற்றில் தனக்குத் தனக்கேயான ஒரு இலக்கியப் பீடத்தை, இருப்பிடத்தை நிறுவிக் கொண்டது அன்று மல்லிகை.
மீண்டும் சந்திக்கிறேனே.
3 sease):
(AY (449

சிங்களச் சினிமா விமர்சனம்
பகுத்தறிவின் குரலாக சோமரத்ன திஸநாயக்காவின்
“ablu இறன?
- ஏ.எஸ்.எம். நவாஸ்
மானுடதரிசிப்புகளின் பல்வேறுபட்ட குணக்கோலங்கள் அவரவர் வாழ்கின்ற சூழலுக்கேற்ப வேறுபடுகின்றன.
எவ்வளவுதான் பகுத்தறிவுப் பிரஜைகளாக மனிதர்கள் இருக்கின்ற போதும், மிருகவதை, மிருக மாமிச புசிப்பு என அவனுக்குள் விழித்துக் கொள்கின்ற மிருக வெறித்தனத்தை ஒருபோதும் உறங்க வைக்க முடியாது.
மிருகங்களை விடவும் கொடியவனாக மனிதன் வாழ்ந்து வருகிறான். அதிலும், வனத்தில் வாழ்கிறவன் மிருகங்களை நம்பியே வாழ்கிறான். மிருகங்களை வேட்டையாடுவதைக் கொண்டு தற்போது இலங்தைத் திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கும் படம்தான் சூரிய அரண" m
வனப்பகுதி ஒன்றில் மிருகங்களை வேட்டையாடி உணவாகப் புசித்து பிழைக்கின்ற மனிதக் கூட்டத்தின் மத்தியில் ஒரு பெளத்த குருவும், அவரது சீடச் சிறுவனும் சந்திக்கின்ற சம்பவங்களைக் கொண்டு சிந்திக்கத் தக்க சினிமாவாகப் படைக்கப்பட்டதே 'சூரிய அரண’ என்ற சிங்களப்படமாகும்.
யதார்த்த வாழ்வு நிலைக்கு அப்பால் நின்றுகொண்டு வெறும் கற்பனைக் கலவையால் பாட்டு, நடனம், பாலியல் என்று படைக்கப்படுவதே சினிமா என தமிழ் ரசிகர்களாகிய நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
சில மேலைநாட்டுப் படங்களையும், வங்காளம், மலையாளத்தில் வருகின்ற சில நல்ல தரமான சினிமாக்களையும் தவறவிட்டிருக்கிறோம்! (பார்க்க முடியாமல்) ஆனால், நமது இலங்கை சினிமா என்று குறிப்பிடுகின்ற அதேவேளை சிங்கள மொழியில் வருகின்ற அதி தரமான சினிமாப் படைப்புக்களையாவது சந்தர்ப்பம்
D6565603 Q15»

Page 25
இழந்து விடாமல் பார்த்து ரசிக்க வேண்டும். 'வித்தியாசமாக உள்ளதே? என சிந்திக்கத் தோன்றும். அவ்வாறு சிலாகிக்கத்தக்க ஒரு சிறந்த படைப்பாக சூரிய அரணவும் மிளிர்கிறது.
இப்படத்தின் வனக்காட்சிகள் மிக அழகாகவும், மனதுக்குள் மாறுபட்ட உணர்வுகளையும் உண்டு பண்ணு கிறது. சோமரத்னவின் படம் என்றால் சிறுவர்களுக்கான விஷயங்கள் அடங்கி யிருக்கும். இப்படத்திலும் இருக்கிறது.
குருவின் சீடச் வேட்டையாடியின்
பெளத்த சிறுவனுக்கும், மகன்டிக்கிராவுக்குமிடையிலான படிப் படியான சிநேகிதத் தொடர்பு, அதனுடனான சந்தோஷங்கள் மிக அழுத்தமாக சித்தரிக்கப்பட்டுள்ள துடன், பாம்பு, புலி, யானை, மான் கூட்டம், குரங்குகள், பறவைகள், நதி கள் என சிறுவர் வட்டங்களை கவர்ந் திடும் விஷயங்கள் இப்படத்தில் அநேகம் வருகிறது.
முதலில் பெளத்த குருவையும், அவரது சீடரையும் வனத்தில் காணும் காட்டுவாசிகள் ஒருவகை அச்சம் கொள்ளுகின்றனர். அவர்களது கண் களுக்கு குருவும், சீடனும் பேயாகவோ, பிசாசாகவோ அதனால் பெளத்த குருவைத்தாக்கவும் செய்கின்றனர். மதகுரு போதிக்கும் நெறியை எதிர்க்
தென்படுகின்றனர்.
ஜீவகாருண்ய கின்றனர்.
"மிருகங்களை கொல்வது நல்ல தல்ல” என்று மதகுரு சொல்லும்போது "அப்படியானால் நாங்கள் எதைச்
சாப்பிடுவது” என்று பெளத்த குரு விடம் திருப்பிக் கேட்கின்றனர்.
"உங்களை வளர்க்க மிருகங்களை அழிப்பதுநியாயமில்லை; அதற்கு வேறு மார்க்கம் உள்ளது.!” என்றும் அந்தத் துறவி போதிக்க, வேட்டையாடிகள் தூசிக்கின்றனர்.
மெல்ல, மெல்ல பெளத்த குருவின் பக்கம் சிலர் சேர்ந்து விடுகின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். அதில் டிக்கிரா வின் தந்தையும் ஒருவன்.
இறுதியிலே பெளத்த குருவை அழிப்பதற்கு தீப்பந்தங்களுடன் சிலர் இரவில் வருகின்றனர். எனினும் மதகுருவுக்கு ஆதரவான காட்டுவாசி களால் அவர் காப்பாற்றப்படுகிறார். இதற்கு காரணமான டிக்கிராவின் தந்தையை அந்த வாசிகள் தேடித் துரத்த. அவன் ஒடும்போது மிருகங் களை கொல்வதற்கென புதைக்கப் பட்ட வெடி ஒன்று வெடித்து அவன் கால் ஒன்றையும் இழக்க நேரிடுகிறது.
கால் இழந்து கவலையில் கிடக்கும் டிக்கிராவின் தந்தையை கனிவாக சமாதானப்படுத்துகிறார் பெளத்த குரு. காலை இழந்த தான் எப்படி வேட்டையாட முடியும். எவ்வாறு குடும்பத்துக்கு உணவு கொடுக்க முடியும் என வினவுகிறான்.
அந்தத் துறவி; "உனக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் வா. உணவு தருகிறேன்..!" என்று ஒரு மூட்டை உணவுப் பொருட்களை அவனிடம் கொடுக்கிறார் துறவி.
ஒE-ைடு)

பெளத்த தர்ம போதனைகள் இக் காட்சிகளில் வெளிப்படுகிறது. மானுட தர்ம தத்துவங்கள் உணர்த்தப்படு கின்ற இக்காட்சிகள் நம் கண்களை pல் கசிய வைக்கிறது. YA ap
பெளத்தம் இன்ற நம் நாட்டில் அதே மதகுருமார்களால் அரசியல் வேடம் பூண்டுள்ளது. போராட்டங் களுக்காகவே அவை இங்கு பிரயோகப்
படுத்தப்படுகிறது. சமாதான எதிர்ப்பு EXCELLENT களுக்காக பிரயோசனப்படுத்தப் படுகிறது. (அதை விடுவோம்) FHOTOGRAPHERS
L(c1565i/56061T G.5IT66.5l luntailb. MODERN COMPUTERIZED
அவைகளை வேட்டையாடுவதை
விட்டு விலகி மனிதனாக வாழ என்ன - FHOTOGRAPHY
வழி என்பதைக் காட்டும் முகமாக Qngà4am : ệuga, grazcoc... Qpkg . FOR WEDDING PORTRAITS
& CHILD SITTINGs
அந்தக் காட்டுவாசியின் மகன் டிக்கிரா பெளத்த துறவியாகி விடுகிறான்.
இப்படத்தை ரேணுகா பால சூரியா தயாரித்துள்ளார். ஏற்கனவே “சரோஜா', 'புஞ்சி சுரங்கனாவி’ என்ற சர்வதேசத் தரத்திலான சித்திரங்களை இயக்கிய சோமரத்தின திஸாநாயக்க சூரிய அரணவை இயக்கியுள்ளார்.
படத்தின் முக்கிய பங்குகளாக
ᎧᏡ ᏪF, ளிப்ப s லிப்ப s
ஒ 6ւյ, 9ք வு ஒப்பனைநுட்பங்கள் வெளிப்படுகிறது.
மொத்தத்தில் மனித நேயத்தை யும், மனிதாபிமானத்தையும் போதிக் கின்ற படமாக சூரிய அரண விளங்கு கின்றது.
சிறுவர், பெரியவர் என்று குடும்பமாகச் சென்று குதூகலமாகப் பார்க்க வேண்டிய அசல் சினிமாப் படைப்பு இது!
Q17D

Page 26
எங்கள் கிராமத்து எல்லையின் இழந்த பரப்பில் - முற்றத்து மல்லிகை மலர்கிறது. சுற்றுப் புறத்தில் சனங்களோ இல்லை.
முற்றத்து முன்னால் முழங்கிய தெருவில் அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் காவடி செல்லும், கரகாட்டம் செல்லும், ஏறு குதிரையில் அம்மன் உலாவரும் -
சித்திரை மாதச் சிறுதுாறல் கொப்பளிக்க அந்த நினைவு அலைவீசும் பொம்மை1 எத்தனை காலம் இந்தச் சோளகம் அப்படி இப்படி என்றுதலையசைக்கும் -
அந்த நினைவும் அழகான வேலிகளும் பொன் பூச்சொரியும் பொன்னொச்சி வரிசையும் பந்தெறிந்தாடிய பவளமணல்திடலும் செல்ல முடியா அரண்களாயின
அந்தக் குறுந்திரை அரண்களுக்கு அப்பால் பனைகளின் ஒலப்பாட்டு கேட்குது. புல்லாங்குழல் ஊதும் புதுக்காட்டுக் குருவி சின்னக்குரல் எழுப்பல் தூரக் கேட்குது -
யாருமில்லா செம்புலத்தில் 8) புதர் அடர்ந்த பொன்னிலத்தில் ు முற்றத்து மல்லிகை பூத்துக் குலுங்க ど)
அதன் வாசம்- 9قي எத்தனை காதம் கடந்தாலும் GÒ - நிச்சயம் மணக்கும்! ზარ? - சபா ஜெயராசா நினைவுப் பறவை G
இரவிழந்து நிற்கும்!
Q11RD

கடிதங்கள்
15 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்தபோதுமல்லிகையின் ஒரு தொடர் வாசகனான இளைஞனாக இருந்தேன். கூடு கலைந்து சிதறிய தேனீக்கள் போல், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வீசப்பட்டோம். சுவீடன் எனக்குத் தஞ்சமளித்தநாடு.
இயந்திரமயப்பட்ட, பணம் தேடும் வாழ்வின் ஒட்டத்தில் நாம் பலவற்றை இழந்து விட்டோம். மல்லிகை கூட மறந்த பொருள் போன்றதாயிற்று.
அண்மையில் தங்கள் மல்லிகை இதழ் ஒன்றையும், மல்லிகைப் பந்தல் வெளியீடான சமுருகானந்தனின் தரை மீன்கள் சிறுகதைத் தொகுதியையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. மல்லிகை, மல்லிகைப் பந்தல் முதலியவற்றின் வளர்ச்சி பிரம்மிப்பூட்டியது. பாராட்டுக்கள்.
தரைமீன்கள் அட்டைப்படமும், புத்தக வடிவமைப்பும் சர்வதேசதரத்திற்கு ஒப்பாக இருக்கிறது. கதைகளுக்குள் புகுந்தபோது இரட்டிப்புப் பிரமிப்பு ஏற்பட்டது. ஒரே மூச்சில் அனைத்துக் கதைகளையும் படித்து முடித்தேன். ஒவ்வொரு கதைகளையும் ரசித்துப் படித்தேன். கதைகளின் முடிவில் நீண்ட நேரம் மனதில் ஏதோ செய்தது.
கதைகளைப் படிக்கும்போதுதாயகத்தில் இருப்பது போன்று உணர்ந்தேன். அதற்குப் பின்னரும் ஒரு வாரம் என் மனமும் நினைவும் என் மண்ணில் பதிந்து நின்றது. கதைகள் இயல்பாக எழுதப்பட்டிருந்தன. நிறைய வளர்ச்சியைக் காண முடிந்தது. நிகழ்வுகள், உரையாடல்கள், மனித சமூகத்தின் மீதான பார்வையும், அவதானிப்பும் எழுத்தினுாடே அழகாக வடிக்கப்பட்டிருந்தன. சமகால நிகழ்வுகளையும், மனித அவலங்களையும், கதையாசிரியரின் வன்னி வாழ்வில் போர்க்கால அனுபவங்களையும் எழுத்தாளரின் நுண்ணிய பார்வையினுரடாக
தரிசிக்க முடிந்தது.
பேச்சு வழக்குத் தமிழ் மிக அழகாகப் பயன்பட்டிருப்பதும், மக்களின் பிரச்சினைகளைத் தொட்டுநிற்பதும் கதைகளுக்கு வலுச்சேர்க்கின்றன.

Page 27
சில கதைகள் நெஞ்சை நெகிழ வைக்கின்றன. குறிப்பாக அப்பாவும் நானும் கதையைப் படித்துக் கொண்டி ருந்தபோது என்னையும் மீறிக்கண்ணிர் சுரந்தது.
"வேட்டை" கதையின்
முடிவிலும் அப்படியே. இன்னும் சில
கதைகளில் சமகால அவலங்கள், துயரங்களைப் படித்தபோது நெஞ்சில் ஈரம் கசிந்தது.
நேரமாச்சு கதைக்கரு அடிக்கடி மீண்டும் மீண்டும் வந்தது. இடப் பெயர்வுக்கு முன்னான எனது இளமைக்கால மனநிலையும் இப் படியே இருந்ததை உணர்ந்தேன். அக் கதையில் இடம்பெற்றிருந்த பொற் கோவின் கவிதையும் அற்புதம். இப்படி இத்தொகுதியைப் பற்றி நிறையவே எழுதிக்கொண்டு போகலாம்.
சிறுகதைகளில் இரண்டு தளங் களுக்கிடையே ஒரு தொடர்பைக் கொண்டு வரும் ஜெயகாந்தனின் புதுச்செருப்பு கடிக்கும்’கதை போன்று உருவகப்படுத்தப்பட்டுள்ள தாத்தா சுட்ட மான் சிறுகதை நான் அண்மை யில் வாசித்த கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு கதையாகும். கதை நிகழும் வன்னிக் களமும், காடும் கண்முன்னே போன்றிருந்தது.
தரிசனமாவது
முடிவு சிறப்பாக, அழுத்தமாக அமைந்த சிறுகதைகளாக முரண் பாடுகள், நேரமாச்சு, தாத்தா சுட்ட மான் போன்ற கதைகள் குறிப்பிடும்
சமகால நிகழ்வுகளை எழுதும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் நம்நாட்டில் இன்ன மும் வெறும் கோசங்கள்தான். எத் தரப்புக் கொடுமைகளையும் யாரும் இதய சுத்தியோடு எழுதவோ முடியாது. குமார் பொன் னம்பலம், நிமலராஜன், அற்புதராஜா போன்றோர் உதாரணம்.
பேசவோ,
நான் சமீபத்தில் படித்த ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் ஒரு வாசகம் இருந்தது. நாம் வாழும் போது நல்ல புத்தக மொன்றை எழுதியிருக்க வேண்டும். அல்லது எமது வாழ்க்கை, எம்மைப் பற்றி புத்தகம் எழும்படியாக அமைந் திருக்க வேண்டும். நீங்களும், கதாசிரியர் முருகானந்தனும் இரண் டையுமே ஓரளவு வெற்றிகரமாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்கிறீர்கள் என்பதை உங்கள் படைப்புகளினுள் டாகவும், உங்களைப் பற்றிய பிறரின் விமர்சனங்களினூடாகவும் உணர முடிகிறது.
எனக்குப் பொதுவாகப் பிடித் துள்ள தரைமீன்கள்’ சிறுகதைத் தொகுதிக்குப் பின்னர், கதாசிரியரின் கதைகளைத் தேடிப் படிக்கும் ஒரு வாசகனாக மாறியுள்ளேன் என்பதைத்
தெரிவிப்பதில் மகிழ்ச்சியே.
ஜெ. சண்முகம்
(சுவீடன்)
எழுத்தாளர் முருகபூபதி அவரு
படியாக உள்ளன. டைய ஒரேகதை வீரகேசரியிலும்

மல்லிகையிலும் வெளிவந்தமை குறித்து ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் உள்ளது. காரணம். 21.11.82இல் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த சீத்துவக் கேடு என்ற சிறுகதை 81ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத மல்லிகையில் “பெற்ற தாயும் பிறந்த நாடும்’ என்ற வேறெரு தலைப்பில் வெளிவந்துள்ளதை அந் நாட்களில் வீரகேசரிவாரவெளியீட்டில் வாசகர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
“வளர்ந்து கொண்டிருக்கும் சிலர் தான் இந்தப் பெயர் மாற்றத் திரு விளையாடல்களைச் செய்கிறார்கள் என்றால் வளர்ந்துவிட்ட அகஸ்தி யருமா இப்படிச் செய்ய வேண்டும்? ஈழத்து இலக்கிய வாசகர்கள் உறங்கு வதாக எவரும் நினைக்க வேண்டாம். அவர்கள் விழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று அப்போது வீரகேசரிவார வெளியீட்டில் இலக்கிய உலகு" என்னும் பகுதியைத் தயாரித் தளித்து வந்த ரஸஞானி குறிப்பிட்டி ருந்தார். ரஸஞானிதான் முருகபூபதி என்பதை ஈழத்து இலக்கிய உலகு நன் கறியும். அவரே ஒரு கதையை இப் போது இரு பிரசரத்தளங்களுக்கு அனுப்பியுள்ளார் என்றால்.
ஒரு கதையை இரு பிரசுரத் தளங்களுக்கு அனுப்பி வாசகர்களின் அவமதிப்பைப் பெற்ற பல எழுத் தாளர்கள் எம்மிடையே உள்ளனர். கடந்தகால இலக்கியத் தவறுகளை நினைவு கூரும்போது மேலும் எழும் தவறுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்பது எனது எண்ணம். கதைகள்
இங்கு குறிப்பிட்டு அவர்களுக்கு மன உளைச்சலை உண்டுபண்ண விரும்ப வில்லை. கதையின் பெயரையும் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளைக் குறிப்பிடுகின்றேன்.
1. அகத்தின் அழகு..! என்ற சிறுகதை விவேகியிலும் பின் சுதந்திரனிலும் வெளிவந்தது. இது சம்பந்தமாக வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டியபோதுகுறித்த கதையின் ஆசிரியர் வாசகருக்கு நன்றியும் சுதந்திரனிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். மலையக எழுத்தாள ரான இவரின் மனப்பக்குவத்தை பலர் பாராட்டியது இன்றும் மனசில் பசமையாக இருக்கிறது.
2 சவால்” என்ற சிறுகதை விவேகி யிலும் பின் வீரகேசரியிலும் வெளி வந்தது. ஈழத்தின் சிறந்த கவிஞரான இவர் இப்போது எம்மிடையே இல்லை.
3. "பட்ட கடன்" என்ற சிறுகதை கலைச்செல்வியிலும் பின் "கடன் தீர்ந்தது" என்ற வேறொரு பெயரில் தினகரனிலும் வெளிவந்தது. விரிவுரை யாளரான இவர் நாவல், சிறுகதை, கவிதை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்.
4 "செயலாளர் தேவை” என்ற சிறு கதை தமிழின்பத்திலும், பின் வீரகேசரியிலும் வெளிவந்தது. ஈழத்தின் தலைசிறந்த கவிஞரான இவரின் கவிதைகளில் காணப்படும் சிறப்பு கதைகளில் இல்லை என்பது இலக்கிய
ஆர்வலர்களின் கணிப்பு. எழுதியவர்களின் பெயர்களை நான்

Page 28
5 ‘என் மன வீணா என்ற சிறுகதை வீரகேசரியிலும் பின் தினகரனிலும் வெளிவந்தது. பெண் எழுத்தாளரான இவர் அதிகமாக எழுதாவிட்டாலும் எழுத்தாளர் என்ற அந்தஸ்தில் வாசகர் இதயங்களில்நிறைந்து வாழ்கின்றார்.
6 "காட்டுத் தேன்’ என்ற சிறுகதை வீரகேசரியிலும், பின் தமிழகத்தின் பிரபல பத்திரிகையான குமுதத்தில் ‘தேன் ஒரு போத்தல்" என்ற வேறு பெயரிலும் வெளிவந்தது. நாவல். சிறுகதை. இலக்கிய ஆராய்சிக் கட்டுரைகள் போன்றவற்றில் சிறந்து விளங்கும் இவர் இன்றைய முன்னணி எழுத்தாளருமாவார். "காட்டுத் தேன்தேன் ஒரு போத்தல் பற்றிய தடுமாற்றத்தை அந்நாளில் வீரகேசரி யில் வாசகர் ஒருவர் சுட்டிக் காட்டியபோது மெளனம் சாதித்து Gill "Listri.
நான் இங்கு வெளிக்காட்டி இருக்கும் தகவல்கள் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. அண்மையில் முது பெரும் எழுத்தாளர் "வரதர் அவர்கள் ஒரு கருத்தை முன் வைத்திருந்தார். அவருடைய அந்தக் கருத்து எனது மனசில் ஆழமாகப் பதிந்ததினால் மேற் காட்டிய தகவல்களை வெளிப்படுத்தி யுள்ளேன்.
15.2.2004 வீரகேசரியில் "வரதர்" இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "உங்களு டைய70 வயதுக்கு முன்னரே உங்களின் அனுபவங்களை வரப்போகும் எழுத்
விடுங்கள். முதுமை பொல்லாதது. அது
உங்களின்சக்தியின் பெரும்பகுதியைப் பாதித்துவிடும்.”
க.இரத்தினசிங்கம்
கிளிநொச்சி
தொடர்ந்து மல்லிகையைப் படித்து வருபவன், நான். மல்லிகையை நீங்கள் எத்தனை சிரமங்களுக்கு மத்தி யில் இடைவிடாது வெளியிட்டு வருகிறீர்கள் என்பதை இந்த நாடே
இருந்தும் இந்த மண்ணில் நீங்கள் கடந்த காலத்தில் பட்ட துன்ப துயர அனுபவங்களை என்னைப் போன்றவர் கள்நன்கு தெரிந்து வைத்துள்ளோம்.
தொடர்ந்து மல்லிகையில் எழுதி வருபவர்களைத் தவிர்த்து புதிய புதிய எழுத்தாளர்களை உருவாக்க முயற்சி யுங்கள். சிலர் மல்லிகையை குத் தகைக்கு எடுத்துள்ளார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. இதைத் தவிர்க்க முயலுங்கள்.
கடந்த காலங்களில் பல பிரதேசச் சிறப்புமலர்களை வெளியிட்டு வந்துள் ளிர்கள். அதுபோலவே இன்னும் விடுபட்டுள்ள பிரதேச மலர்களை வெளியிட முயற்சியுங்கள்.
நாற்பதாவது ஆண்டு மலர் வெளிவரவுள்ளதாக விளம்பரம் பார்த்தேன். ரொம்ப நல்ல முயற்சி. கூடியவரை நாடு தழுவிய ரீதியிலான மலராகவும் அம்மலரை வெளியிட
முயலுங்கள்.
de LoCarrascir தாளர்களுக்காக எழுதி வைத்து UsJGUnamt.

மல்லிகை ஏப்ரல் இதழ் கிடைத்தது. நண்பனும், கவிஞனுமான அறிவுமதியை முகப்பில் கண்டது மகிழ்வாக இருந்தது. ஆளுமை மிக்க கவிஞனை அட்டையில் பிரசுரித்தது சிறப்பானதாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் இலக்கியம் என்ற கருத்தரங்கில் அக்கினிப்புத்திரன் அறிவுமதியை
"எண்பதுகளில்
அறிமுகப்படுத்தினார். பின்னர் உரையாடலின் போது அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டது. அவர்ஒரு கோபக்காரராகத்
தென்பட்டார்.
பின்னர் தமிழ் இனி நிகழ்வுக்கு
சென்று பாலன் இல்லத்தில் தங்கி
மகேந்திரன் அழைப்பின் பேரில் என்னையும் சாரல்நாடானையும் சந்தித்து, அருகிலுள்ள அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று சுவையான காலை உணவு வழங்கினார். பின்னர் எங்களை தியாகராஜ நகரில் உள்ள அவரது அலுவலகமான குயில் தோப்புக்கு அழைத்துச் சென்றார். அவரது கவிதா படைப்பின் சில பிரதிகளை ஈழத்து நண்பர்களுக்கு வழங்கும்படிதந்தார்.
அன்று ஒருநாளை எங்களுக்காக உடனிருந்து பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
அறிவுமதி ஓர் அற்புதமான கவிஞர் மட்டுமல்ல. மனிதர்களை நேசிக்கும் மானுடப்பிரியன்.
அந்தனி ஜீவா
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் சுய வரலாறு இரண்டாம் பதிப்பு புதிய தகவல்களு
(5:3)
6656);
།ཅུཚོ་བ་2 ༡

Page 29
- தமிழோவியன்
தங்கமலைத் தோட்டமே தலையில் கைவைத்துக் கொண்டு அழுதது.
முகத்தைப்பார்த்தாலே பசி ஆறிப் போய்விடும். பச்சைக் கிளிமாதிரிஅழகாய் இருந்த இளவரசியைப் பற்றித்தான் எங்கும் பேச்சு.
தாயில்லாப்பிள்ளைக்கு இப்படி ஒருநிலையா?
முடிந்தளவுபடிக்கவைச்சான்திருமன் முடியாத கட்டம். ஒருத்தன் உழைப்பை
நம்பி மூன்று பேர் பிழைக்கனுமே. புதுசா வந்திருக்கும் தங்கமலைத் தோட்ட பெரியதுரைநல்ல அனுபவசாலி மனச்சாட்சிக்கு மதிப்பளித்துநடப்பவர்.
"அவர் புகைபிடிக்காதவர்!”
இது அந்த தோட்டத்துசனங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
துரைச்சானி, பிள்ளைகள் இருவரோடும் பொழுதைப் போக்க, விளையாடி மகிழ, பேச்சாடுதுணைக்கு ஒரு பிள்ளை தேவை.
மலைக் காட்டைச் சுற்றச் சென்ற பெரியதுரை, இந்தக் கவலையில் மனதை அலைய விட்டார்.
இன்று காலையில்கூட, தொலைபேசியில்துரைச்சானி எப்படியாவது ஒரு பிள்ளையைப் பார்த்து, சனிக்கிழமை கொழும்பிற்கு வரும்போது கண்டிப்பாகக் கூட்டி வரச்சொன்னது, அவரைபடாத பாடு படுத்தியது. மலைக்காடு சுற்றி வந்த பெரியதுரை, ஒட்டுநரிடம் நல்லமுத்துகங்காணியைக் கண்டதும் காரைநிறுத்தச்
Gafftaiöraiort Tiff. t
 

காரைவிட்டு இறங்கி வந்த பெரிய துரை. “எப்படி கங்காணி கொழுந்து? நிறைய இருக்குத்தானே?”
"மட்டக் கொழுந்துமலைதானே? அதனால் எல்லோருடைய கூடை
யிலும் கொழுந்து நெறைஞ்சி இருக்கு
GBFris”
கையிலே நிறைஞ்சி இருந்த ஒரு பிடிக் கொழுந்தை அன்னக்கொடி கூடையிலே போட்டபடி துரைக்குப் பதில் சொன்னாள்.
“எப்படியாவது ஏக்கருக்குத்தகுந்த மாதிரி, கில்லோவைக் குறைக்காமல் எடுத்துக்கிட்டு வாங்க. போனமாத்தை யக் காட்டிலும் இந்த மாதம் ஐஞ்சு அல்லது பத்துக்கில்லோ கூடவே இருக் கணும். இதுதான் முக்கியம்நல்லமுத்து”
பெரியதுரையின் பேச்சு நல்ல முத்து கங்காணியை முகம் மலர
வைச்சது.
"ஒரு மூன்று மணியைப் போல, கங்காணி பங்களாப் பக்கம் வாங்க. முக்கியமான கதை ஒண்ணு இருக்கு. கண்டிப்பாக வந்திடுங்க."
கொஞ்சதூரம்நடந்த பெரியதுரை காரில் ஏறி உட்காரப் போனவர், “நல்லமுத்து கங்காணி! கையோட திருமனையும் கூட்டிக்கிட்டு வாங்க." என்று சொன்னார்.
கார் தோட்ட அலுவலகப் பக்கம் பறந்தது.
துரை மகனாய்ப்பார்த்து விரும்பி அழைக்கின்றார். போகாமல் இருக்க (Մ)ւգ-պւDIT?
நல்லமுத்து கங்காணி தோட்டத் திற்குதலைவர். அதனால் இருவருக்கும் நெருக்கம் அதிகம்.நல்லமுத்துகங்காணி என்னா சொன்னாலும், மறுபேச் சில்லை. பெரியதுரைக்கு அவ்வளவு நம்பிக்கை அவரின் வார்த்தையிலே.
பங்களாவின்முகப்புப் பக்கம் வந்த பெரியதுரைக்கு, நல்லமுத்துகங்காணி யைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் முகம் LDariiggil.
திருமன்எப்படிஅப்பா. சுகமா..?
அன்பா ஆதரவா பெரியதுரை பேசியது, திருமனை இதமாகப் பதப் படுத்தியது.
“ஏதோ உங்க உதவியிலேதாயில் லாப் பிள்ளைகளை வளர்த்துக்கிட்டு வாரேன் சேர்!”
திருமனின் பதில் பெரியதுரைக்கு தைரியமூட்டியது.
நல்லமுத்து கங்காணியைப் பார்த்து,
“மாதம் இரண்டாயிரம் திருமனி டம்தாரேன். கொழும்பிற்குப் போய், நம்ம தொரைச்சானி, பிள்ளைகளோடு இருக்கணும். அது சொல்ற வேலைகளை செஞ்சி கொடுக்கணும். வேறொண் ணும் வேலை செய்ய வேண்டி இருக் காது. சம்மதம்தானேகங்காணி.?”

Page 30
நல்லமுத்துகங்காணியைப் பார்த்து பெரியதுரை பங்களாவிற்கு வரச் சொன்னது இதற்குத்தான் என்பதை வார்த்தைகள் தெரியப்படுத்தின.
தலைவர் நல்லமுத்து கங்காணி பெரியதுரைக்கு “என்னா திருமன் யோசிக்கிறீங்க..? பெரியவர் இவ்வளவு கனிவாகக்
ஒத்தாசையாக
கேட்கும்போது ஒத்துக்கிறத்தானே வேணும். நாளைக்கு நமக்கு வேண்டிய உதவிகளை நிச்சயம் செய்யத்தானே போறார்.”
நல்லமுத்துதலைவரின் வார்த்தை கள் அப்படியே திருமனின் மனதை இளகவைத்தது.
“மகள் இளவரசிக்கு இப்போது வயது பதின்மூன்றுக்கு மேலே. எங்கேயும் புள்ளையை அனுப்பியது
கிடையாது.”
திருமன் கவலையாகச் சொன் னதைக் கேட்டநல்லமுத்துகங்காணி,
"நம்ம பெரியவர் இருக்கின்ற போது பயப்பட வேண்டியதில்லை” என்றார்.
“நம்ம துரைச்சானி இருக்குத் தானே. ஒரு குறையும் வராது. சனிக் கிழமை காலையிலே ஆறுமணிக் கெல்லாம் தோட்டத்திலே இருந்து புறப்படனும். இன்னும் இரண்டுநாள் தான் இருக்கு. போய் இளவரசியை ஆயத்தமாக்குங்க. திருமன்!” என்ற பெரியவர், பணம் ஐந்நூறு ரூபாயை
தேவையானதை வாங்கிக் கொடுக்கச் சொன்னார்.
“சீக்கிரம்நீங்க வீட்டுக்குப் போய், வேண்டியதை சேகரிங்க.நான்சின்னத் தொரையைக் கண்டு, மாட்டுப் பட்டிக்கு தகரம் கொஞ்சம் கேட்டேன். அதை லொறியிலே ஏத்திக்கிட்டு வாரேன்." இப்படிச் சொல்லிவிட்டு நல்லமுத்து தலைவர் சின்னத்துரை பங்களாவிற்கு ஓடினார்.
வேகமாக
திருமன்மகளிடம் கொழும்பிற்குச் செல்லவேண்டியதைப்பற்றிவிபரமாக எடுத்துச் சொன்னான்.
சனிக்கிழமை விடியும் முன்னமே, இளவரசியை ஏற்றிக் கொண்டு ஒட்டு நருடன் பெரியதுரையின் கார் வேக மாகப் பறந்தது, கொழும்பை நோக்கி
காலம் மிக மிக வேகமாக ஓடியது.
பண்டாரவளை பொலிஸ் நிலை யத்திலிருந்து, திருமனை உடனே வரச் சொல்லி ஒருநாள்தந்தி வந்து, அவனும் “என்னமோ? ஏதோ?’ என்று ஓடினான்.
தலைவர்நல்லமுத்துகங்காணியும் செய்தி அறிந்து அவன் பின்னாலேயே ஓடினார்.
“நீ பிள்ளையை கொழும்பிலே வேலை செய்ய அனுப்பினியா? அதன் இன்ஸ்பெக்டர் திருமனைக் கேட்டார்.
பேரென்னா?”
"புள்ளையின் பேர் இளவரசிங்க
எடுத்துக் கொடுத்து, மகளுக்குத் Ggirit
/Y р:Восств. (56)

“எத்தனை வயசு?”
“வயசு பதின்மூன்று, பதினாலு இருக்கும் சேர்!”
"கொழும்பிலே எங்கே வேலைக்கு நிற்பாட்டினது?”
தோட்டத்துப் பெரியதொரை பங்களாவிலே...! யிலேதான், வேலை செஞ்சிச்சி”
வெள்ளவத்தை
“உங்க புள்ளைக்கு நெருப்புப் பிடிச்சி, காயப்பட்டு ரொம்ப வருத்தம். நீங்க சுணங்காமே உடனே கொழும் பிற்குப் போங்க. பைத்தியக்காரன் மாதிரி இருக்கிறே.”
இன்ஸ்பெக்டர் சத்தம் போட்ட திலே நல்லமுத்துதலைவரும் பேசாமல் நின்றுவிட்டார்.
‘என் செல்வத்திற்கு என்னா நடந் துச்சோ கடவுளே.!’ மலைத்து நின்ற திருமனை இழுத்துக் கொண்டு தங்க மலைத் தோட்டத்திற்கு வந்தார், நல்ல முத்து தலைவர்.
காட்டுத்தீபோல் செய்திபரவியது.
"இளவரசி உடம்பிலே நெருப்பு பிடிச்சிருச்சாமே”
“பிழைக்கிறதைப் பற்றிச் சொல்ல முடியாதாமே.”
"இளவரசியின் கதையே முடிஞ் சிருச்சாமே.”தோட்டமே இதே கதை
“பெரியதுரையும் அவசரமாக மாலை ஆறுமணியைப் போல கொழும் பிற்குப் போயிட்டாராம். அவசரமாக ஓடுகின்றார்” என்று பங்களாவிற்கு மேலதிகமாக இன்னொரு காவற்கார ஆள்போடச் சொல்லிவிட்டுச் சென்ற தாக, அப்பு சொன்னதாக ஒரே பேச்சாக அடிபட்டது.
தங்கமலையில் தாயில்லாப்
பிள்ளை இளவரசியைப் பற்றிய பேச்
சாகப் பரவியது.
தலைவர்நல்லமுத்துகங்காணியும், திருமனும் தேநீர்கூட பருகாமல், கொழும்பு வந்தடைந்தனர். பண்டார வளையில் இன்ஸ்பெக்டர் கொடுத்த
முகவரியோடு அலைந்து, கொழும்பு
பெரியாசுபத்திரிக்குள் தேடி நுழைந்
தனர், இருவரும்.
இளவரசி அடையாளங் கண்டு
கொள்ள முடியாத நிலையில் கிடப்
பதை, அவளது “அப்பா!” என்ற குரல் மூலம் அறிந்து, "அம்மா!” என்று
அலறினான்திருமன்.
பட்டுப்போனதளிர்போல முகத் திலே கட்டுப்போட்டு, பேசமுடியாத படி கண்ணிர் இளவரசியைப் பார்த்து,
மல்கும் மகள் பதறிப் போனான்தகப்பன்.
பக்கத்திலே துணையாக நின்ற நல்லமுத்து தலைவருக்கு ஒன்றும் பேசவே முடியவில்லை. ரதிக் கிளியான இளவரசியின் அழகு முகமாஇது?நம்ப
யாக இருந்தது. முடியாமல் தடுமாறினார்.
Vo4V''

Page 31
டொக்டர் சொன்னபடி, இரு வரும் வெள்ளவத்தை பொலிஸ் நிலை யத்திற்குச் சென்றனர். வாக்குமூலம் கொடுத்துக் கொண்டு இருக்கின்ற போது, பெரியதுரையும் காரைவிட்டு இறங்கி வந்தார்.
வியப்பும் வேதனையும் அவர் களிடம் குடிகொண்டது. தாங்க முடி யாத சோகத்தால், தலையிலடித்துக் கொண்டு அழுதான்,திருமன்.
“நானோதுரைச்சானியோநல்லது தான் உன் பிள்ளைக்குச் செய்தோம். எங்களை சந்தேகப்படாதீங்க!”
பெரியதுரையின் பேச்சு தகப் பனின் தாளாத் துயரத்தை சற்று அகற்றியது.
"பிணைப் பணம் ஐம்பதாயிரம் கட்டித்தான்துரைச்சானியை வெளியே எடுத்திருக்கின்றோம். வழக்கு விசாரணையில் உங்களுடைய வாக்கு மூலம்தான் பாதிக்காத வகையில்
இருக்க வேண்டும்.”
பெரியதுரையின் அமைதியான பேச்சு அவனை அசைக்கவே இல்லை.
பிள்ளைகள் பாலர் பாடசாலைக் குப் போன பின்பு, துரைச்சானி தனது நண்பர்களைப் பார்க்கப் போய், வீடு திரும்புவதுநாளுக்குநாள்மாறுபடும்.
காரணம், புரியாத இளவரசி, தோட்டத்திலிருந்து பெரியதுரை பேசும் போது துரைச்சானியைக் கேட்டால், அவர் நண்பர் இல்லத்
Ge.
திற்குச் சென்றுவிட்டதை அப்படியே சொல்லிவிடுவது வழக்கம். வெள்ளை உள்ளம். கள்ளமின்றி வெகுளித்தன மாக நடந்து கொள்வது இளவரசியின் கபடமில்லாத செயல்.
பெரியதுரையின் பேச்சில், செய லில் வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து, குட்டு வெளிப்பட்டு விட்டது என்ற அச்சம்
காணப்படுவது
துரைச்சானியை ஆட்டிப்படைத்தது.
காரணம் இளவரசிதான் என்று கனன்றது துரைச்சானியின் கள்ள உள்ளம்.
அதனால் தொட்டதற்கெல்லாம் இளவரசியை சாடினாள். பிடித்து "கேஸ்” அடுப்பின் மேல் தள்ளுவதும், மின்சார அயன் பொக்ஸினால் சுடு வதும் கொடுமையிலும் கொடூரமாகக் கூடியது. நடந்த இந்த நயவஞ்சகச் செயலை எந்த நீதிமன்றம் எடுத்துக் கூறும்.
ஏழைக்குநீதி எப்போது கிட்டும்?
கொழும்பு சென்ற பெரியதுரை சுகமற்ற விடுமுறையில் தோட்டத் திற்கு வராமலே இருக்கின்றார். தோட்டத் தலைவர் நல்லமுத்து கங் இளவரசியின் தந்தை திருமனும் தங்கமலைக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது.
காணியும்,
"அந்தத்துரையை இனியும் இந்தத் தோட்டத்தில் இருக்கவிடக் கூடாது”

"சங்கத்தின் மூலம் எல்லோரும், துரை வேண்டாமென்று நாளையி லிருந்து வேலைநிறுத்தம் செய்வோம்! இளவரசிக்கு கொடுக்கப் போகும் இழப்பீடு என்னா? உடனே விபரம் தேவை.”
தோட்டத்து இளையோர்கள், பொதுமக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு அறைகூவல் விடுத்தார்கள். ஆவேச மாக குமுறினார்கள்.
தோட்ட நிறுவனத்தின் பணிப் பாளர் நாயகம், தங்கமலைக்கு திடீரென வருகை தந்தார். தோட்ட அலுவலகத்தில் சங்கத்தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
"தாயற்ற தொழிலாளியின் பிள்ளையை இப்படிக் கொடுமைப் படுத்தலாமா? இந்தப் பிள்ளை இனி உயிர் பிழைத்து நடமாடுமா? இது நியாயமா சேர். ?” என்று தோட்
"டத்துத் தொழிற் சங்கத் தலைவர்கள்
கேட்டார்கள்.
அனைத்தையும் அமைதியாக
செவிமடுத்த பணிப்பாளர் நாயகம்,
தலைவர்முதல் பொதுமக்கள் வரையும்
அனைவரையும் சமாதானப்
படுத்தினார்.
“பெரியதுரை இனி இங்கே
வேலைக்கு வரமாட்டார். நீங்கள் எல்
லோரும்நாளையிலிருந்து வேலைக்குப் போங்கள்.”
கரங்குவித்து மன்றாடிக் கேட்டுக் கொண்டார், பணிப்பாளர்நாயகம்.
எவரும் தங்கள் பிள்ளைகளை இனிமேல் கொழும்பு, கண்டி, காலி, இரத்தினபுரி என்று துரைமார்களின் குடும்ப வீட்டுக்கு வேலைக்கு அனுப் பாதீர்கள். கைவேலையும் வேண்டாம். காசும் வேண்டாம்.நமது பிள்ளைகளே முக்கியம்.
-
நடந்தேறியது.
\S-
togesp85
வாழ்த்துகின்றோம் கொழும்பு கம்பன் கழகப் பொருளாளரும் மல்லிகையின் பேரபிமானியமான திரு. ச.ஆ.பாலேந்திரன் தம்பதியர்களின் புத்திரியான திருநிறைச் செல்வி அருள்தேவி அவர்களுக்கும், காரைநகர் களபூமியைச் சேர்ந்த குலசேகரம் தம்பதியினரின் புதல்வன் திருநிறைச் செல்வன் சிவஞானசுந்தரம் அவர் களுக்கும் சமீபத்தில் கொழும்பில் வெகுசிறப்பாக திருமணம்
மணமக்களை மல்லிகை மனங்குளிர வாழ்த்துகின்றது.
ཡོད།
ஆசிரியர்
/d\ N22 . ردودي

Page 32
விதை முளைத்துமூன்று இலை முதல் நிழல்.
சின்னகுண்டுசி குத்திய காசோலை பத்துலட்சம்!
நின்றது மனம்
எதிரே
சுழலும் பம்பரம்.
வீரியமற்ற மின்விசிறி ஓடவில்லையே
“கொக"
இலை தாண்டி கிளை தாண்டி
சிறைக்குள்திருட்டு காணவில்லை
கைதிக்கு வந்த புத்தகம்!
பணிக்கட்டியை விரும்புகிறேன் அது உருகும்.
உள்ளே இறங்கும் வாளி
கிணற்றில் கலங்கும் நிலா.
திறப்பு விழா
காக்கைக்கு வசதியாய் தலைவர் சிலை.
தரையில் சிதறினான்
சூரியன்.
சாப்பாட்டு மேஜை
உணவுண்ணவந்தாயிற்று
.
தெரியவில்லை தேர்
திருவிழாவில் தேடும் பெற்றோர்
தொலைந்த குழந்தை.
நீமிமன்ற வளாகம் புதிய பயணம
அலையும் மனிதர்கள் புறப்படும்
ஆனந்தமாய் அணில்கள். உதிரும் சருகு.
தின்று முடித்தாயிற்று - இமூத பாரதி மிஞ்சிய கொட்டையில்
எத்தனை கனிகள்! ஒEை (60)
 

- 6ιcατώδοξίεο εξωρα
இங்கு நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் பற்றி உங்களது கருத்து என்ன?
நீர்கொழும்பு கருவசோதி
2 மக்களின் தீர்ப்பு இது. மகேசன் தீர்ப்பு!
நடக்கப் போகும் இந்தியத் தேர்தலில் தமிழகம் சம்பந்தமாக நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துள்ளாரே, இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
Lusjaunct எஸ்.நாகராஜன்
23 ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நடிகன் நடிகனாக இருக்க வேண்டும். அரசியல்வாதி அரசியல்வாதியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் என்ன புதுமைவயன்றால் அரசியல்வாதியே நடிகனாக மாறிவிடுவான். எம்.ஜி.ஆர். அரசியல் பேசித் தமிழகத்தின் முதலமைச்சராகவே பின்னர் வந்தார். அதற்காக அவர் பாரிய விலை கொடுக்க வேண்டி வந்தது. ரஜினிசும்மாவிளையாட்டுக் காட்டி அரசியலில் கிளித்தட்டாடுகிறார். அரசியலுக்கு இந்த வருகிறேன். இந்தா வருகிறேன் எனச் சொல்லி அவரது ரசிகர்களைப் பேய்க் காட்டுகிறார். துணிச்சல் இருந்தால் அரசியலுக்கு வந்து பார்க்கலாம்தானே?
நாடக மேடையில் கிட்டப்பா கொடி கட்டிப் பறந்தார். பின்னர் சினிமாத்துறையில் பாகவதர் காலமொன்று பேசப்பட்டது. இன்று அவையெல்லாம் எங்கே? ஆவணமாகப் பதியப்பட்டுள்ளது. இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் இந்த ரஜினி சகாப்தம் எப்படி ஆகப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாருங்களேன்.
ΣΚ. தெளிவாகச் சொல்லுங்கள், நீங்கள் யார்?
DEಜರಾಜ GGD

Page 33
ஜாஎல எம்.நகுலேஸ்வரன்
23 கடந்த பத்து ஆண்டுகளாக வீதிவீதியாகச் சுற்றித் திரிந்து இலக்கியக் கனவுகளை விற்று வயிறு வளர்த்து வந்த
தெருப்பிச்சைக்காரன்!
நல்ல
தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நண்பர்களை எப்படித்
நல்லூர் стцib.afсuгЈгтшocüт
இ அவர்களது இலக்கிய நேசிப்பைக்
கவனத்தில் கொண்டு.
தொடர்ந்து மல்லிகைப் பந்தல் மூலம் இத்தனை நூல்களை வெளியிட்டு இவை யாவும் விற்பனையாகி விடுகின்றனவா?
வருகிறீர்களே,
கண்டி எஸ்.எம்.ராகுலன் * என்னை எழுத்துக்குஒப்புக்கொடுத்து அசுர முயற்சியுடன் வவளியிட்டு வருகிறேன். என்னையும் என்னுடன் சேர்த்து
நூல்களை
மல்லிகையையும் மனதார நேசிக்கும் இனிக்கும் இலக்கிய வநஞ்சங்கள் மல்லிகைக் காரியாலயம் தேடியே வந்து வாங்குகின்றனர். பலர் தபாலில் நூல்களைப் பெற்றுக் கொள் கின்றனர். பிறிதொரு சாரார் புத்தக நிலையங் களில் நாம் வெளியிடும் நூல்களின் வபயரைச் esmebsóGu வாங்கிச் செல்கின்றனர். உண்மையைச் சொல்லுகிறேன். இந்தத் தொழில் ஆத்மார்த்திகத் தொண்டு இது. மகிழ்ச்சி நிரம்பிய வேலை.
வெறும் வியாபாரமல்ல.
665);
சென்ற இதழில் உருவம் பதிக்கப்பட்ட கவிஞர் அறிவு மதியை பற்றி இன்னமும் தகவல்களைத்
அட்டையில்
தெரிந்து கொள்ளலாமா?
கொழும்பு 5. ஆர்.ராஜேஸ்வரன்
23 ஒப்பற்ற ஒரு கலைஞனைப் பற்றிக் கோடி காட்டத்தான் எம்மால் முடியும். தேடிக்
கண்டுபிடிப்பது உங்களது வேலை.
"ஞானம் சிற்றேட்டின் கேள்வி பதிலில் அதன் ஆசிரியர் உங்களை மிகப் பெரிய உயரத்தில் தூக்கி வைத்துப் பாராட்டியுள்ளாரே, இதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
கண்டி க.நகுலன்
2 வாழும்போதே வாழ்த்தப்படுவதை வாழும் கலைஞன் ஒருவன் எத்தகைய மனநிலையில் வரவேற்பானோ அதே மகிழ்ச்சியுடன் அந்தத் தகவலைப் படித்துப் பார்த்தேன். அதன் ஆசிரியர் எனது நீண்ட நாளைய நண்பர். இலக் கியத்திற்காகத் தனது பணத்தையும் நேரத்தை யும் செலவிட்டு வருபவர்.
இப்படிப் புகழ்வதால் சில சங்கடங்களும் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு. இப்படியான புகழ் மொழிகளினால் தலை கனத்து இடறி விழுந்து விடாமல் என்னைப் பாதுகாப்பதற்கு விமரிசனச் சுட்டிக் காட்டல்கள் எனக்கு அடிக்கடி தேவை. என் ஆசை என்னவென்றால், என் மரணத்திற்குப் பின்னர் இத்தகைய புகழாரங்கள் எனது
நாமத்திற்குச் சூட்டப்பட வேண்டுளமன்பதுதான்.
i

凶 உங்களைக் கொழும்பு வீதிகளில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். எப்போது பார்த்தாலும் ஏதோ யோசனையுடன் தெரிகிறது. என்னதான் யோசனை உங்களுக்கு?
நடமாடுவதாகத் தான்
கொழும்பு 1. ஆர்.செந்திவேல்
25 தெருவில் நான் அமைதியாக நடந்து
செல்லும் சமயங்களில்தான் நான் மல்லிகைக்காக (6ap 6 செய்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் சென்னையில் இவ்வாண்டு ஆரம்பத்தில் நடந்த இலக்கிய விழாவில் நிகழ்த்திய உரையைப் பற்றி எனது நெருங்கிய நண்பன் சிலாகித்து எனக்குக் கடிதம் எழுதியுள்ளான். அவனொரு இலக்கியப் பித்தன். விழாவுக்கு வந்திருந் இரண்டு நாளும் கலந்து கொண்டானாம். அந்தச் சிறப்பான உரையை நாங்களும் அறிய மல்லிகை
g5 T 60T IT b.
யில் அதைப் பிரசுரித்தால் என்ன?
Loterrencur eherl-Gehnri ucür
இலி உண்மையைச் சொல்லட்டுமா? நான் சொல்லும் இதனை நம்புவீர்களோ தெரியாது. அங்கு என்ன உரை நிகழ்த்தினேன் என்பதை அதே மேடையை விட்டு இறங்கிய அந்தக் கணமே மறந்துபோய் விட்டேன். அது அடி நெஞ்சிலிருந்து வெளிவந்த மொழி ஊற்று. சிந்தனைப் பாஷை, கருத்து மின்னல். அதைத்
நீங்கள் சமீபத்தில் மல்லிகைப் பந்தல் மூலம் வெளியிட்ட சிங்களச் சிறுகதைகள் விளம்பரம் பார்த்தேன். அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?
வத்தளை செல்விதமயந்தி
2 மல்லிகையில் லமாழிபெயர்ப்பில் வெளி வந்த 25 சிங்களச் சிறுகதைகளின் தொகுப்பே தான் அது. செங்கை ஆழியான் அதனைத் லதாகுத்தளித்துள்ளார். பல சிங்கள எழுத்தாளர் களின் பல்வேறு கதைகள் அந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பல பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பலர் அந்த அந்தக் காலகட்டங்களில் அக்கதைகளை வமாழி பெயர்த்து உதவியுள்ளனர். நானறிந்தவரை இத்தனை கதைகளும் அடங்கிய வமாழி எபயர்ப்புச் சிறுகதை நூல் இதுவரையும் தமிழில் வரவேயில்லை.
X மல்லிகையின் 40வது ஆண்டு மலர் பற்றிப் படித்தேன். மலர் எப்படி இருக்கும்?
வெள்ளவத்தை ஆர்.குலேந்திரன்
2 நாலினப்படி அதை இப்போதே சொல்வது? மலர் வந்ததன் பின்னர் நீங்களல்லவா அதுபற்றி அபிப்பிராயம் சொல்ல வேண்டும்.
X இதுவரை வாக்குப் பண்ண முடியா மல் முடங்கிப் போயிருந்த ராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேச மக்களின் வாக்குப் பதிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திரும்ப எண்ணிப் பார்ப்பதோ எழுத்தில் வடிப்பதோ இயலாத காரியம். இதை CnuCnucufurt Crciu.debfr.sáLDCucüT மெய்யாகவே நம்புங்கள்.
2 தொலைக்காட்சியில் இதைக் கண்டபோது aas /17 SY р:90сств. (63)-

Page 34
உண்மையாகவே நான் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். அந்த மக்களின் சந்தோஷத்தைப் பார்த்து என்தேகம் ஓடிப்புல்லரித்துவிட்டது. அந்த மக்களின் முகங்களில் எதிர்காலச் சுபீட்சத்தைத் தரிசித்தேன்.
X-3 நாற்பதாவது ஆண்டு மலர் மல்லி கையின் விளம்பரம் பார்த்தேன். வெளிவர வுள்ள அம்மலரில் என்ன புதுமையான விஷய அடக்கம் இடம்பெறப் போகின் றது? முன் கூட்டியே நமக்கெல்லாம் சொல்லக் கூடாதா?
LocircuTTrr ஜே.எஸ்.ரீவகன்
Ars சிற்றேடொன்று இங்கும் சரி. தமிழகத் திலும் சரி நாற்பது ஆண்டுகளைத் தொட்டுத் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருப்பது ஒரு சாதனை. அத்துடன் இந்த மண்ணில் இலக்கிய சாதனைகளின் சகாப்தமொன்றை உருவாக்கித் தந்துள்ள அதன் நாற்பதாவது ஆண்டு மலரின் உள்ளடக்கம் பற்றி இப்போதே ஒன்றையும் முழுமையாகக் கூறி வைக்க இயலாது. கொஞ்சம் பொறுத்து இருங்கள். மலரைப் படித்ததன் பின்னர் உங்களினது
அபிப்பிராயத்தை
மெய்யான எமக்கு
எழுதுங்கள்.
凶 புலம்பெயர்ந்து சென்று Lu6v) bIT O6 களில் வாழ்ந்துவரும் நமது இலக்கியச் சுவைஞர்களுக்கு மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் ஒழுங்காகக் கிடைத்து வருகின்றனவா?
முல்லைத்தீவு Girib.esFracuUrcür
25 சகலருக்கும் கிடைத்து வருகின்றது எனச் சொல்ல இயலாது. ஆர்வமும் அக்கறையும் நிரம்பிய இலக்கியப்பித்தர்கள் எப்படியோ நமது வெளியீடுகளைப் பெற்று வருகின்றனர். ஆர்வ மும் அக்கறையும் நிரம்பப் பெற்ற அவர்களில் பலர் இங்கு வந்து போகும் தமது இனசனத்த வர்களிடம் சொல்லித் தாம் விரும்பிய நூல் களைப் பெற்றுக் கொள்ளுகின்றனர். இதில் வபரிய சங்கடம் என்னவென்றால் நூல்களின் மொத்த விலையைவிட, அவற்றைப் பொதியாக அனுப்பும் தபாற் செலவுதான் கட்டுக்கடங் காதவை. இருந்தாலும் இதில் ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது.
29 ஒரு கட்டத்தில் யுத்த நெருக்கடி, அவலம், கொழும்பு வருகை, பொருளா தார முடக்கம் காரணமாக மல்லி கையை நிறுத்திவிட யோசனை தோன்ற 686io606 ourt?
உரும்பிராய் எஸ்.தானகுமாரன்
23 நீங்கள் எனது மன ஓர்மத்தைத் தெரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். எனது சிறு வயசு வாழ்க்கையே மிகப் பெரிய போராட்டத் துடன்தான் கழிந்தது. அதுதான் என்னைப் பதப் படுத்தியது. பண்படுத்தி உருவாக்கி அமைத்தது. இந்தக் கட்டத்தில் ஒன்றை மனந்திறந்து ஒப்புக்கொள்கிறேன். அத்தனை சிரமங்களும் மகா கஷ்டங்களும்தான் மல்லிகையின் தொடர் வரவுக்குப் பசளையாகப் பயன்பட்டன.
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு .
13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும்
வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U.K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
guese
54
ད། ཅུང་ཟླ་ ༡

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் 垒 சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல. 4, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்) புததளம. தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து
தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து
விற்பனை செய்து உதவுவோம்.

Page 35
Maliikai
2A
EXPO PRODUC
Export Non Tra
Sri Lanka
30, SeCl
COOml Te: 25
 
 
 
 
 
 
 

May 2004
TS (PVT) LTD.
ters of aditional
an Foods
AVenue, OO – O3, 7377