கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.09

Page 1
3GFLL – 2004
 

| T
■No
|
| ( )
. . .
||||||||||||||-
|
■■
-慧

Page 2
'%e c, റ്റ്ര ത്ര Cർ മ 'Zഗ്ഗ// ീle ി 70 ഠർl(/
IHE DIGITAL SERVICES WE PROVIDE ligital Print I2"X18" Maximum size in I0 Min. Automatic dust and scratch correction. Print to Print services. Contact Cards and Index prints.
Compatible Input & Output Media
DVD-R, DVD-ROM, PC Card, Compact Flash, Smart Digital Camera Card Printing.
OTHER SERVICES
(Floppy Disk, CD-Rom, CD-R,/RW, MO, ZIP, DVI)-
Greeting Cards /Frame Prints/Calender Prints/Album Prints.
RAM, Media)
Colour Negative, Positive, B/W and Sepia Negative Printing.
Developing & Printing of films in 20 Min Einting of Enlargements (5"2X7" to 12"XI8") Passport/Visa photos / B/W photos in I0 Min. Film Rolls / Cameras / Batteries / CD/ Floppy / Album Sales. Οι Framing of Pictures (Imported
raming of Pictures (Imported) ܠܢ Laminating Services. O Wedding Album Binding. لإضي 2کیم
CS తS Ne). FOR ALL YOUR REQUIREMENTS IN རཊC) C) NCO مي ლან
KS KN ხN ܠ ܐܛܘ Out Door Photography & Videography სა: « \NON^کہلا
1・ o ΟN \ Weddings. O QSN Birthday Parties / Puberty Ceremonies ९© Seminars / Any Other Special Functions & Occasions.
 
 

புலம்பெயர்ந்து வாழும் இலக்கியச் சுவைஞர்களுக்கு.
Tெங்களுக்குத் தெளிவாகவே தெரியும், உங்களில் அநேகர் தரமான இலக்கிய ரசிகர் என்பது. இதிலும் பலர் ஆக்க இலக்கிய கர்த்தாக்களாக இந்த மண்ணில் முளைவிட்டவர்கள் என்பதும் நமக்கு ஏற்கனவே நன்கு தெரியும். சூழ் நிலை காரணமாகவும், யுத்த அரக்கனின் கெடுபிடிகளுக்கு ஆளாகித் தவித்ததின் நிமித்தமாகவும் உங்களில் பலர் பிற்ந்த மண்ணை விட்டு அகன்று போயுள்ளீர்கள் என்ற எதார்த்த உண்மையையும் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்.
உங்களில் பலர் ஆரம்ப காலங்களில் கொண்டிருந்த இலக்கிய உற்சாகத்தைப் பசளையாகக் கொண்டு இந்த மண்ணில் முளை விட்ட பல இளம் தளிர்கள் ஆர்வ நிமித்தமாகத் தமது படைப்புகளை நூலுருவில் வெளியிட்டு, அவைகளைச் சந்தைப்படுத்த முடியாமல் கட்டி வைத்துக் கொண்டு காவல் காத்து வருகின்றனர்.
நீங்களோ என்னவென்றால் சென்னைக்கு விஜயம் செய்கிறீர்கள். கொழும்பிற்கும் வருகிறீர்கள். சும்மா கண்களை மருட்டும் நூல்களை வாங்கிச் செல்கின்றீர்களே தவிர, நமது கலைஞர் களின் சிருஷ்டிகளைப் ‘புறத்திக்கிடம்" பண்ணி அலட்சியம் செய்கிறீர்கள். இந்த மண்ணை நம்பி, இங்கு இருந்து கொண்டே தமது படைப்புகளைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களது சகோதரர்களை ஒருதடவை திரும்பிப் பார்த்தால் என்ன?
- ஆசிரியர்
- Maléalo λότοσταβαίνο
| 2OI-II/1, Sri Kathiresan Street,
d மூல்லிகை
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
39-ఎ్క 9ஆண்டு
செப்டெம்பர் 2004
恩G岛
Monthly Maya; ine
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
Colombo- 13.
Tel: 232O721

Page 3
தற்போது விற்பனையில்
இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்
(திருத்திய 2ம் பதிப்பு) - சி. அ. யோதிலிங்கம் இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்"என்ற தலைப்புடன் வெளிவரும் இந்நூல், இன்றைய காலகட்டம் எதிர்நோக்கும் ஒரு பிரதான, தலையாய பிரச்சினை பற்றியதாகும். இந்நூலின் உள்ளடக்கத்திற்கான பிரதான அம்சங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்: - இனப்பிரச்சினை பற்றிய ஒரு வரலாற்று
நோக்கு; - முன்வைக்கப்பட்ட தீர்வுகள் பற்றிய ஒரு
விமர்சன நோக்கு; - மலையகத் தமிழர். முஸ்லிம் மக்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய ஆய்வு; - இனப்பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேச அனுபவங்கள்.
- பின்னிணைப்புகள் (பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம்,மாகாணசபைகள்
சட்டம், புதிய தீர்வு யோசனைகள், புரிந்துணர்வு ஒப்பந்தம்)
இந்நான்கு விடயங்களும் மிக விவாக ஆராயப்பட்டு தனித்தனி நூலாக எழுதப்பட வேண்டியவை. ஆயினும் இவ்வம்சங்களின் அடிநாதத்தை, அடிப்படையை 24 பக்கங்களில், யாருக்கும் விளங்கும் மொழி நடையில் நூலாசிரியர் கச்சிதமாக விளக்க முற்பட்டுள்ளார். அரசறிவியல் மாணவர்கள் மட்டுமன்றி தமிழ்மொழி வாசகர்கள் அனைவரும் பயனடையக்கூடிய முறையில் நூலாசிரியர் இந்நூலைத் தொகுத்துள்ளார். அனைவரும் ஊன்றிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய ஒரு நூல் இதுவாகும். (அறிமுகவுரையில் பேரா. சோ. சந்திரசேகரன்)
விலை : ரூபா 250/= ; பக்கங்கள் xi + 212 ISBN 955 -9429 - 62 - 0
குமரன் புத்தக இல்லம்
201 டாம் வீதி, கொழும்பு - 12. 3. மெய்கை விநாயகர் தெரு,
தொ.பேசி : 2421388 சென்னை - 600 026.
 
 

శ్రీ முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
மீண்டும் சீரமைக்கப்பட CGTGoIG to
கிடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக இந்த மண்ணில் ஆரோக்கியமான குறிக்கோள்களுடன் இயங்கி வந்ததுதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
அரசியல் சூழ்நிலை காரணமாகவும் இவைகளுக்கிடையே துவேஷம் பரப்பப்பட்டதன் நிமித்தமாகவும் பரஸ்பரம் இரு இனங்களுக்கிடையே பரவி, இறுகிவிட்ட தப்பபிப்பிராயங்களின் பெறுபேறாகவும் இவ்விலக்கிய இயக்கம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
பொறுப்பான பதவி வகித்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றதன் காரணங்களும் இயங்காமல் போனதன் அடிப்படைக் காரணங்களில் சிலவாகும்.
இன்று சூழ்நிலை படிப்படியாக மாறிவருகின்றது. இந்தத் தேசத்தின் எதிர்கால அறிவுத் தளத்தை அரசியல்வாதிகளின் வாய்ச்
சவடால் தனத்தை நம்பி, நீண்ட காலத்திற்கு அவர்களிடம் ஒப்புக்கொடுத்து விடவும் இயலாது.
அறிவு விசாலமும் இலக்கியத் தேவையும் புதிய இலக்கியப் பரம்பரையொன்றை உருவாக்கிவிட வேண்டுமென்ற தார்மீகத் தேவையும் இன்று இந்த மண்ணில் வாழ்ந்து வரும் முற்போக்கு எழுத்தாளர்களின் தேசியக் கடமையாகின்றது.
முற்போக்கு இயக்கத்தின் ஆரம்ப காலகட்டச் செயற்பாடுகளை விட, இன்றுதான் அவ்வியக்கத்தின் தேவையும் சேவையும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது.
இந்த அமைப்பினால் தங்களைத் தாங்களே நிறுவிக் கொண்ட பிரபலங்களை விட, இன்றைய தலைமுறையின் வளர்ந்து வரும் இளைய தலைமுறைப் படைப்பாளிகளுக்குத்தான் இவ்வியக்கம் உடனடித் தேவை.
ஏனெனில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒர் இயக்கமல்ல. அது ஒரு தத்துவம். வரலாற்றுக் குறியீடு.

Page 4
9yWoUoUVÝ VUNv
நுட்பத் திறனாற்றல் பெற்ற படைப்பாளி
ஐயாத்துறை சாந்தன்
- கே.எஸ். சிவகுமாரன்
1970களில் இளமைத் துடிப்புடன் "புதியதோர் உலகம் சமைப்போம்" என்ற வீறுகொண்ட நோக்குடன், தனியாற்றலும் சமைந்த ஒரு பரம்பரைத் தமிழ் எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள். அவர்களுள் சிலர் இன்றும் என்னுடன் தொடர்பு கொண்டு அளவளாவுகின்றனர். இது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தத்தமளவில் அவர்கள் இன்று பெரிய, ஆக்கபூர்வமான, திறனாற்றல் கொண்ட படைப்பாளிகளாகவும், திறனாய்வாளர்களாகவும் இருந்துவந்த போதிலும், தொடர்ந்தும் என்னுடன் மனமார விவாதித்தும், கனம் பண்ணியும் வருவதனால், நானும் தவிர்க்க முடியாத ஒர் எழுத்துலகப் பிரகிருதி என்பதனை, நானே உணரச் செய்துள்ளனர்.
அத்தகைய இளஞ்செம்மல்கள் இன்று முழு மனிதராய் மனுக்குல மேன்மைக்காகத் தமது எழுது கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுள், என்னைப் பொறுத்த மட்டில், மிகமிக முக்கியமானவர் ஒருவர் - மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ஐயாத்துரை சாந்தன்.
'சாந்தன்' என்ற குறுகிய பெயரே தமிழ் எழுத்துக்குப் புதியதாய் இருந்தது. அதுவும் ஒரு கவர்ச்சிச் சின்னம். அவர் உருவமும் அப்படியொன்றும் பெரிய சரீரமு மல்ல. அவர் எழுத்துக்களும் இறுகத் தறித்த குறள் போன்றவை. அவற்றினூடாக அவர் வெளிப்படுத்தும் மானிட நேயம் அழுத்தமாகவும் ஆழமாகவும் மனதிற் பதிந்து சிறு சிறு சலனங்களை எமது உள்ளத்தில் எழுப்பும் பொழுது வியப்பார்வம் நம்மிடையே பெருகுகிறது. இதுவும் இந்தப் புதுமைச் சிற்பியின் பிரதிமை. புலன்களினால் உணரத்தக்க புலமைத்துவம் அவர் எழுத்தினூடாக வெளிப்பட்டு எம்மை உருக்கமுறச் செய்யும்.

தமிழில் மட்டுமல்ல, உலக மொழி
ஆங்கிலத்தினூடாகவும் அவர் அண்மைக் காலங்களில் எழுதுவதும், பரிசில்களைப் பெறுவதும் இன்னும் பலருக்குத் தெரி யாமல் இருந்து வருகிறது.
மேற்கல்வியானாலும், தொழில் முறை
யானாலும் விஞ்ஞான முறையில் பயிற்சி யும் தேர்ச்சியும் பெற்ற சாந்தன் இயல் பாகவே சிக்கனத்தை நாடும் சிந்தனாவாதி. சிந்தனாவாதி உணர்ச்சிக்கப்பால் நின்று எதனையும் நோக்கினாலும் அவனுக் கென்று ஒர் உள்ளமும் உண்டு. சாந்தனின் உள்ளக் கமலத்தில் வீற்றிருப்பது மனுக் குல நேயம். ஆயினும், அது சிறுமை கண்டு பொங்கியெழும் சாயல் படிந்தது.
சாந்தனின் எழுத்துலகப் படைப்பு களையோ, அவருடைய சாதனைகளையோ திறனாய்வு ரீதியில் பகுப்பாய்வு செய்வது இங்கு எனது நோக்கமல்ல. அவருடைய படைப்புக்கள் யாவை? எங்கு அவை வெளியாகின? அவர் பெற்ற பரிசுகள், பிற மொழிகளில் அவருடைய ஆக்கங்கள் போன்ற விபரங்களை இங்கு தர முன்வர வில்லை. இவை தனித்து, பெட்டி கட்டிச் சேர்க்கப்பட வேண்டியவை.
இங்கு நான் எழுதுவது அவருக்கும் எனக்கும் இருந்துவந்த சந்திப்புகள், தொடர்புகள் பற்றியே.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், மறைந்த கவிஞருமான "ஈழவாணன் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் 'அக்கினிப் பூக்கள்' என்றதோர் கவிதைத் தொகுப்பைக் கொழும்பில் வெளியிட்டார். பல பிரமுகர்கள், ஆய்வறி
战
5 வாளர்கள் மத்தியில் அந்நூல் பற்றி நானும் மதிப்புரை நிகழ்த்த நேர்ந்தது. தமிழ் எழுத்துலகம் முன் பகிரங்கமாக, பலரும் நேரில் அறிய அது வாய்ப்பாய் அமைந்தது.
மேமன்கவி, அருள் சுப்பிர மணியம் போன்றவர்கள் அறிமுக மானார்கள். அவர்கள் ஊடாக மேலும் பல இளைஞர்கள் தொடர்பு கொண் டனர். குப்பிளான் சண்முகம், மாவை நித்தியானந்தன், க.பேரன், அ. யேசுராசா, ஐ.சாந்தன் இன்னும் பலர் அடிக்கடி என்னுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மறைந்த நெல்லை
கொழும்பு ரொறிங்டன் சதுக் கத்தில் உள்ள இலங்கை வானொலி யின் செய்திப் பிரிவில் அப்பொழுது தொழில் பார்த்து வந்தேன். செய்தி யறையின் யன்னலூடாக அடுத்திருந்த கட்டிடத்தைக் காணமுடியும். அங்கு தான் பட வரைஞராக இளைஞர் சாந்தன் பணிபுரிந்தார். நாம் அடிக்கடி சந்தித்து உரையாடி மகிழ்ந்தோம். பின் காலங்கள் உருண்டன. நாடு மோசமான இனப்படுகொலைக்கு உட்பட்டது. நண்பர்கள் எல்லாம் வெவ்வேறு திசை களுக்குச் சென்று இயங்கினர். சாந்தனும் கொழும்பில் இல்லாது யாழ்ப்பாணம் சென்று விட்டார்.
தொடர்புகள் அறுந்தன. இடை யிடையே அத்தி பூத்தாற் போன்று ஒரிரு தொலைபேசித் தொடர்புகள். அவ்வளவே.
சாந்தனின் கொள்கைகள்,
கருத்துக்கள் வேறு சில நண்பர்களுக்கு

Page 5
உடன்பாடானவையாக இருக்காமல் இருக்கலாம். ஆயினும் சாந்தனின் நேர்மை நெஞ்சம் உணர்வுக்குப் புலனாகாத ஒன்றல்ல.
சாந்தனுக்குத் தெரியும் நமக்குள்ளே பழங்கதைகள் பேசி மகிழ்வதல்ல ? முக்கியம். தமிழுக்கும் வெளியே சென்று, குறைந்தது ஆங்கிலத்திலாகுதல் நமது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என் பதில் எனக்கும் அவருக்கும் ஒரே எதிர் பார்ப்பு. இப்படியிருக்கையில், திடீரெனத் g5udgi (Gurposer) SPARKS Greip Spy தொகுப்பொன்றை அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டார். முகவுரை/அறிமுகம் என்னுடையதாக இருக்க வேண்டுமென "நாண்டுகொண்டு நின்றார். எனக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்க முன்வந்தார். உடன்பட்டேன். நூலும் வெளியாகியது. இதற்கு முன்னரே அவருடைய சிறு கதைகள் சில ஆங்கிலத்தில் ஓர் இந்தியத் தமிழரால் பெயர்க்கப்பட்டு இலஸ்ரேட்டட் வீக்லி என்ற சஞ்சிகையில் வெளியாகி யிருந்தன.
ஊக்கம் பெற்ற சாந்தன் தன்னந் தனியனாய் நின்று இலங்கை ஆங்கில இலக்கியப் புலமையாளர்களுடன் தொர்டபு கொண்டு, பென்கு வின் (இந்தியா) நிறுவனத்தினரின் ஈழத்துச் சிறுகதைத் தொகுப்பில் தமது கதைகளும் இடம்பெறச் செய்தார்.
பின்பு கொழும்பு கொடகே (GODAGE) நிறுவனத்தினர் ஊடாகத் தமது செம்மையான ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இது தமிழ் மொழி தெரியாத பலரின் கவனத்தையும் பெற்ற நூலாகப் பிரபல்யம் பெற்று. தலை
சிறந்தோரின் மதிப்புரைகளையும் பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகவும் பரிசு பெற்றமை வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்தது. தமிழர் ஒருவர் ஆங்கில மொழிப் படைப்புக்குப் பரிசு பெற்றமை இதுவே முதற் தடவை. அண்மைக்கால இலங்கை சாஹித்திய பரிசளிப்பு வரலாற்றிலே இது ஒரு மைல்கல்.
சாந்தன் மின்னஞ்சல் மூலம் என்னுடன் தொடர்பு கொள்வார். நான் அமெரிக்காவில் கடந்த இரு வருடங் களாக வசித்து வந்தபொழுது, தமது சொந்தச் செலவில் விமானத் தபால் மூலம், எனது ஆங்கில எழுத்துக்களின் நிழற் பிரதிகளை அனுப்பி வைப்பார். நான்
கொழும்பில் பிரசுரமாகும்
கொழும்பு வந்திறங்கியவுடனேயே நான் சுகமாக வந்து சேர்ந்தேனா? என்று யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி கொண்டு குசலம் இவை எல்லாம் என்
மூலம் தொடர்பு விசாரித்தார். மனதைக் கசியச் செய்கின்றன.
(என்னை மறக்காது, பூபாலசிங்கம்
பூரீதரசிங், எஸ்.எம். ஹனிபா ஆகியோரும் என்
தம்பிஐயா தேவதாஸ்,
னுடன் தொடர்புகொண்டிருந்தனர்.)
சாந்தன் போன்ற மிக முக்கியமான எழுத்தாளர்கள் இன்றும் என்னைக் கெளரவிப்பது எனக்குச் சங்கடமாயிருந் தாலும், உள்ளூரக் கண்ணீர் சிந்த வைக்கிறது. வாழ்க சாந்தன். உங்கள் ஆக்கங்கள் உலகின் ஈர்த்தே தீரும்.
கவனத்தை

ஏன் பெண்ணென்று.
- இணுவையூர் உத்திரன்
<్వ>
ஞ்சிபுரம் சேலை, கழுத்தில் கல்லட்டியில், பதக்கஞ்சங்கிலி, பாசிமணி"]ئر மாலை, கையில் விதம் விதமான வளையல்கள், விரல்களில் வைர மோதிரம் அணிந்து தங்கச் சிலையாக மின்னிக் கொண்டிருந்தாள் ராதா. நெற்றியில் உச்சிப்பட்டம் வைத்து, கொண்டை மாலையைச் சரிசெய்த போது அவளுடைய அலங்காரம் நிறைவு பெற்றிருந்தது.
“முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்கு, அலங்காரம் முடிஞ்சுதா?” என்று கேட்டுவிட்டுப் போனான் ராதாவின் மூத்த சகோதரன் அனுசன். முன்பந்தலில் நாதஸ்வர இசையோடு தவிலும் முழங்கிக்கொண்டிருந்தது.
இது இந்திரலோகமோ! என்று வியக்கும்படி சொக்கட்டான் பந்தல் ஒன்று சுமார் எண்பதடி நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்தது. பந்தலுக்குள் இரண்டு மண வறைகள் வைக்கப்பட்டிருந்தன. பந்தல் நிறைய விதம் விதமான மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பந்தலின் முகப்பில் இரண்டு பெரிய பழுத்த வாழைக் குலைகள் கட்டப்பட்டிருந்தன. வீட்டு வாசலிலே குத்துவிளக்கு, நிறைகுடம் வைக்கப் பட்டிருந்தன. அதன் அருகே அங்கு வருபவர்களை முகமலர்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருந்தார், ராதாவின் அப்பா கைலாசம்.
மறுபுறத்தில் சமையல் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. உருளைக் கிழங்கில் இருந்து பாயாசம் வரை எதையுமே விட்டுவைக்கவில்லை. அதுமட்டுமில்லை விதம் விதமான பலகாரங்கள், தின்பண்டங்களையெல்லாம் ஏற்கனவே செய்து வைத் திருந்தார்கள். கிடாரத்தில் இருந்த சோற்றைப் பாயில் பரவிக்கொண்டிருந்தான் சசியன். வாழையிலையைக் கழுவி அடுக்கிக்கொண்டிருந்தார்கள் அருணகிரியும், சிறியும். குளிர்பானத் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் பார்த்திபனும், ரூபனும்.

Page 6
இவர்களெல்லாம் அனுசனின் நண்பர்கள். கடந்த ஒரு வாரமாகவே இந்தக் கலியாணத் திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சின்னஞ் சிறுசுகளெல்லாம் புதுப்புதுச் சட்டைகளுடன் குறுக்கும் நெடுக்குமாக ஒடிக்கொண்டிருந்தார்கள். விடே அமர்க் களப்பட்டுக் கொண்டிருந்தது. ஆம்! தன் தங்கையின் திருமணத்தை 'இந்த ஊரே மெச்சும் படியாக நடாத்த வேண்டும்" என்பது அவனது நீண்டநாள் கனவு அல்லவா? அது இப்போது நிறைவேறிக் கொண்டிருந்தது.
கைலாசத்தின் மூத்த மகன்தான் அனுசன். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே குடும்பக் கஷ்டம் காரணமாக வெளிநாட்டிற்கு ஓடினான். அங்கு பனி, குளிர் என்று பாராமல் உழைத்தான். நிறை யவே சம்பாதித்தான். கடந்த மாதம் கனடா வில் இருந்து விடுமுறையில் அண்ணன் அனுசன் வருகின்றான் என்றபோது விடே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தது. ராதாவிற்கும் அண்ணனின் வருகை மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
“தங்கச்சி நான் சும்மா வரவில்லை. உனக்கு ஒரு மாப்பிள்ளையையும் கூட்டிக் கொண்டுதான் வரப்போகிறேன்" என்று அனுசன் அன்று ஒருநாள் தொலைபேசியில் கூறியபோது அதை ஏதோ விளையாட்டாகத் தான் நினைத்தாள், ராதா. அண்ணன் வந்த நாள் முதல் வீட்டில் நடந்த
ஆனால்
ஒவ்வொரு சம்பவமுமே ஏதோ கனவு போலத்தான் இருந்தது. தங்கச்சி நான் உழைக்கிறதெல்லாம் உனக்குத்தானேடி!" என்று அவள் கேட்காமலே அவளுக்குத் தேவையான தங்க நகைகள், மணிக்கூடு, உடுப்பு, தொலைக்காட்சிப் பெட்டி என்று
8 வாங்கிக்கொண்டு வந்திருந்தான், அனுசன். தான் சம்பாதித்த பணத்தில் ஏற்கனவே ஒரு காணி வாங்கி, வீடும் கட்டியிருந்தான். அதுவும் ராதாவிற் காகத்தான். தன் அண்ணன் மீது ராதாவிற்கு நிறைய அன்பும், அதே வேளை இனம்புரியாத ஒரு பயமும் இருந்ததேதோ உண்மைதான்.
விட்டுக்கு யார் யாரோ வந்தார்கள். சென்றார்கள். ஏதோவெல்லாம் பேசி னார்கள். ராதாவிற்கு இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரம் இருந்தது. பள்ளிக்கூடம் போகவும், ரியூசனுக்குப் போகவும்தான் நேரம் சரி. அதன் அவசியத்தை ராதா உணர்ந்தபோது அது அவளது கையை விட்டு வெகு தூரத்திற்குப் போய்விட்டது. ஆம்! அவளது விருப்பத்தைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. அண்ணனுக்குத் தெரிந்த, கனடாவில் இருந்து வந்த ஒரு மாப்பிள்ளைக்கு அவளை மணம் பேசி முடித்தார்கள். கல்யாணத்திற்கு நாளும் குறித்து விட்டார்கள்.
பொதுவாகவே ஒரு பெண்ணி னுடைய உள்ளத்தை எவருமே புரிந்து கொள்ள முடியாது என்று கூறுவார்கள். ஆனாலும் தன்னுடைய வெறுப்புக்களை வெளிப்படையாகவே கூறுவதற்கு ராதா தயாராக இருந்தாள். ஆனாலும் அதைக் கேட்பதற்குத்தான் எவருமே இல்லை. சும்மா ஒரு பேச்சுக் குத் தன்னும் செய்யப் போறம். உனக்கு மாப்பிள்ளை
விருப்பு
"உனக்குக் கல்யாணம்
யைப் பிடிச்சிருக்கா?’ என்று யாருமே அவளிடம் கேட்கவில்லை. இந்தப்
பொன்னையும், பொருளையும்,

கொட்டிக் கொடுத்து, ‘ஓகோ "வென்று நடாத்த வேண்டும். அதுதான் தன் தங்கைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று நினைத்து விட்டான் அனுசன். பாவம் 'பெண்ணாகத் தெரியாத, எந்த வொரு ஆணினாலுமே, ஒரு பெண்ணினது மனதைப் புரிந்துகொள்ள முடியாதாம்’. பாவம் அனுசன் ராதாவின் விருப்பங்களைத் தெரிந்து கொள்ளத் தவறி
கல்யாணத்தை
விட்டான். ஒரு தங்கக் கூண்டுக் கிளியாக கண்ணாடி முன்னால் வந்து நின்றாள், ராதா, அதிலே ஒரு தெரிந்தாள். நிச்சயமாக அது ராதா அல்ல.
மணப் பெண்
பிள்ளையார் கோயில் கல்யாண மண்டபத்தை நோக்கி நாதஸ்வரம் மேளம் நகரத் படப்பிடிப்புக் குழுவினரின் ஒளி வெள்ளத்
தொடங்கியது. தொலைக்காட்சி
திலே சுவாமிப் படத்திற்கு முன்னால் நின்றாள் ராதா. முதலில் சுவாமிப் படத்தை வணங்கியவள், பின்பு தனது பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள்
அவளை அவர்கள் ஆசீர்வதித்தார்கள்.
விலை 275
9 அடுத்துத் தனது அண்ணனின்
பாதங்களையும் தொட்டு வணங்கினாள். அவளை அணைத்து ஆசீர்வதித்த அனுசன், சற்று
உணர்ச்சிவசப்பட்டவனாக, "ராதா இன்னும் கொஞ்ச நேரத்திலை நீ இன்னொருவனுக்கு மனைவியாகப் போகிறவள். இது வரையில் நான் உனக்கு எந்தக் குறையுமே வைக்க வில்லை. இருந்தாலும் உனக்கு இன்னும் ஏதாவது வேணுமா? சொல்லு ராதா, உனக்கு என்ன வேணும்?"
மெல்ல அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் ஏக்கம். "அண்ணா! நான் படிக்க வேணும். தொடர்ந்து படிக்க விருப்பமாய் இருக்கு. முடியுமா அண்ணா?" என்று கேட்டாள் ராதா, அனுசனின் முகத்தில் ஈயாடவில்லை. அப்படியே நிலையாக நின்றான் அனுசன். அண்ணனைத் தாண்டி மணப்பெண்ணாக மண்ட பத்தை நோக்கிப் புறப்பட்டாள், ராதா.
*。
மல்லிகை ஆசிரியரின் பவளவிழா ஆர்த்தமாக வெளியீடு வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி
உள்ளடக்கி
--Lirë

Page 7
1 Ο
"ஆய்வுகளுக்கு மெத்தப் படிக்காதோரின் பதிவுகளும்
உசாத் துணையாகின்றன!" - பேராசிரியர் சோ. சந்திரசேகரம் -
சீழத்து நாடக வரலாறு எழுதப்படும் பொழுது அதில் நிச்சயமாக கொழும்பு நாடகக் கலைஞர்களின் பங்களிப்புகளுக்குக் கணிசமான இட ஒதுக்கீடு கிடைக்கு மெனலாம். இதில் பிரதம பாகமாக அன்ரனி ஜீவாவின் உழைப்பும் சுட்டப்படுவது தவிர்க்க முடியாததாகும். இவரது கலை, இலக்கிய ஊழியத்தை அங்கீகரிக்கும் முகமாக நாற்பதாண்டு வளர்ச்சி கண்டுள்ள 'மல்லிகை" சஞ்சிகை தனது 2004 பெப்ரவரி இதழில் இவரது உருவத்தை அட்டைப் படமாக்கியுள்ளது.
மிகுந்த அர்ப்பணிப்போடு நாடகத்துறையை மேம்படுத்தும் நோக்கோடு நாடகப் பிரதி ஆக்குநராக, ஆற்றுகையாளராக, நெறியாளராக, தயாரிப்பாளராக ஜீவா தன் பன்முக ஆற்றல்களை நாடகத்திற்கு ஆற்றியிருக்கிறார். கலைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் பொழுது எதிர்க்குரல் கொடுத்து வாதாடியிருக்கிறார். நாட்டின் பல பிரதேசங் களுக்கும் சென்று, அங்குள்ள கலைஞர்களின் தோழமையைச் சம்பாதித்துள்ளார். இதற்கும் மேலாக பத்திரிகைகள் மூலமாகவும், இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாகவும் இந்நாட்டின் இலக்கியம், கலை சம்பந்தமான அரிய பல தகவல்களைத் தமிழ்ச் சமூகத்திற்கு தானமிட்டிருக்கிறார். சஞ்சிகையாளன். 'கொழுந்து' என்ற சஞ்சிகையை தனது சுய உழைப்பில் உலாவ விட்டுள்ளார். தமிழகப் படைப்பின் உச்சத்தவரான ஜெயகாந்தன் மீது தான் கொண்டுள்ள அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் தனது சஞ்சிகையின் ஓர் இதழை ஜெயகாந்தனுக்கான விசேட இதழாக வெளி யிட்டிருக்கிறார். உழைப்பால் உயர்ந்து வரும் இந்த அந்தனி ஜீவாவுக்கு இவ்வாண்டு (2004) மணிவிழா ஆண்டு. அறுபதாவது அகவையில் பயணிக்கிறார். ஜீவாவின் கலைத்துறை பணியைக் கெளரவிக்கும் முகமாக இந்த மணிவிழா நாடு முழுதும் பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. முதல் விழா கண்டியில் கொண்டாடப்பட்டது. மற்றது கொழும்பு, சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தில் 08.08.2004 ஆம்

திகதி பெருந்திரளான கலை, இலக்கிய வாதிகளின் முன்னிலையில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் நடை பெற்றது. அந்தனி ஜீவாவின் 'திருந்திய அசோகன்' என்ற சிறுவர் நாவல் வெளியீட்டு விழாவும் இதில் இடம் பெற்றது.
இலங்கையில் வாழும் மலையக சமூகத்திற்கு மிகச் சிறிய அதாவது 170 ஆண்டு வரலாறே உண்டு. இவர்கள் 1830 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் இந்நாட்டு மண்ணை மிதித்தனர். இவர்களது கல்வித் துறை 150 ஆண்டுகள் பின்தங்கிய நிலை யிலேயே இருந்தது. ஆனால் சமகாலத்தில் சற்று நிமிர்ந்து வருகின்றது. இந்நாட்டின் மற்றைய பகுதிகளிலிருந்து இலகுவில் வியத்தகு சேவை புரிந்த பெரியவர்களை இனங்கண்டு கொள்ளலாம். ஆனால் மலையக மண்ணைப் பொறுத்த மட்டில்
அது மிகவும் கஷ்டமானது.
இருந்தும் அந்தனி ஜீவா தனது தேடலாலும், சுய ஈடுபாட்டாலும் நடேசய்யர் போன்றோரை இளைய தலை முறைக்கு இனங்காட்டினார். இது அவரது பொதுப் பணிக்குக் கட்டியமிடும். நடேசய்யர் ஒரு தொழிற்சங்கவாதி என்பது பலரும் அறிந்ததே.
ஜீவா ஒரு தீவிர வாசகர். தனது வீட்டில் நிறையப் புத்தகங்களை வைத்திருக்கிறார். தமிழைத் துறை போகக் கல்லாதவர்கள் ஏற்படுத்தி பதிவுகள், பின் தொடர்ந்த சந்ததிகளின் ஆய்வு முயற்சிகளுக்குக் கட்டித்த உதவி யைச் செய்துள்ளன. இந்த வகையில் தமிழ
வைத்துள்ள
றிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பதிவு கள்,அவருக்குப்பின் வந்த பேராசிரியர்.
க. கைலாசபதியின் ஆய்வுகளுக்கு மிகவும் கைகொடுத்துள்ளன. வையா புரிப்பிள்ளை ஒரு சட்டத் தரணியே! இதேபோல்தான் மா.பொ.சி.யும் பெரிய பட்டங்களைப் பெறாதவர். பல்கலைக் கழகம் செல்லாதவர். ஆனால் அவரது நூல்கள் காலத்தால் சாகாதவை.
அண்மையில் நடந்த சம்பவ மொன்று, இன ஒற்றுமையைப் பேண வேண்டுமென்ற கருதுகோளோடு, இலங்கையில் வெளியாகிய சினிமாப் படமெதுவென உயர்தர மாணவருக்குக் கேள்வியொன்று கொடுக்கப்பட்டது. படையப்பா என அதற்குப் பதில் எழுதியிருந்தனர். இந்த வகையில் இன்று அறிவுத் தரம் சுருங்கி விட்டது. இதற்கு விதிவிலக்காக ஜீவாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன, எனத் தலைவர் பேசினார்.
இவ்விழாவிற்குப் பிரதம அதிதி யாக மனித வள, கலை கலாசார அமைச்சர் விஜிதஹேரத் வருகை தந்தி ருந்தார். "ஜே.வி.பி.யோடு பி.ஜே.பி.யை இணைத்துப் பேசுவது சரியல்ல. மூவினங்களும் ஒன்று சேர வேண்டும். சமநீதி, சமத்துவத்திற்காகவே ஜே.வி.பி. போராடுகின்றது. எதையும் தேவைக் கேற்ற வகையில்தான் கொடுக்க வேண்டும். மெலிந்த ஒல்லியான ஒரு மாணவனுக்குக் கொடுக்குமளவு சீருடைத் துணியை பருமனான இன் னொரு மாணவருக்குக் கொடுப்பது எப்படிப் பொருத்தமாகும். இத்தகைய முரண்பாடுகளைத் தவிர்க்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.
மூன்று இனங்களுக்கும் வெவ் வேறான கலை இலக்கியக் குழுக்கள்

Page 8
இருப்பதை நாம் ஏற்கமாட்டோம். நாடகக் குழு, சாகித்திய மண்டலம் ஆகியவற்றில் மூவினப் பிரதி நிதித்துவத்தை உண்டாக்கி ஒரு நாடகக் குழுவையும், ஒரு சாகித்திய மண்டலத்தையும் நிறுவ முயற்சிக்கிறோம்.
திரைப்படக் கூட்டுத்தாபனத்தை மறு சீரமைப்போம். சமூகத்தைச் சீரழிக்கும் திரைப்படங்கள் நிறுத்தப்படும். தமிழ்த் திரைப்படமொன்றையும் தயாரிப்பதற்கான முயற்சியும் எடுக்கப்படும். நாடக விழாக் களில் தமிழ் நாடகங்களும் இடம்பெறும்.
பதியுதீன் முஹம்மதிலிருந்து ரவுப் ஹக்கீம் வரை மந்திரிகளாக இருந்திருக் கின்றனர். முஸ்லிம் சமூகத்திற்கு இவர்கள் செய்யாத ஒன்றை நாம் செய்ய இருக் கிறோம். முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா வழங்குவதற்கான நடவடிக்கை முறைக்கு வர இருக்கிறது. இத்தகைய விதத்தில் சிறுபான்மை இனங்களின்
560)
நலன்களைப் பேணும் எம்மை இனவாதிக ளென்பதுதான் வியப்பாக இருக்கின்றது? என அமைச்சர் பேசினார்.
அமைச்சருக்கு, "நான் உங்கள் தோழன்” இலங்கைத் திரைப்படப் புகழ் அரிதாஸ் மாலை அணிவித்தார்.
இந்த விழாவிற்கு “சரோஜா' திரைப் படப் புகழ் குட்டிச்சுட்டி, செல்வி. நித்திய வ்ாணி கந்தசாமியை அழைத்திருந்தது விழாவிற்குக் களைகட்டுவதாக இருந்து. அந்தனி ஜீவாவின் திருந்திய அசோகன்' என்ற சிறுவர் நாவலை குட்டிச் சுட்டி அறிமுகம் செய்து வைத்தார். நூலொன்றைப் பற்றி சிறுமியொருவர்
சிறுவர்
மேடையேறிப் பேசியது ஒரு வித்தி யாசமான அம்சமாக அமைந்தது. இலகு
12 தமிழில் சிறுவர்களுக்கேற்ற நடையில் எழுதியிருப்பதாகச் சொன்னார். ஜீவா மாமா இன்னும் பல சிறுவர் நூல் களையும் வெளியிட வேண்டுமென்ற முன் வைத்தார். குட்டிச் சுட்டி சிங்களத்தில்
கோரிக் கையொன்றையும்
நன்றியுரை கூறியது சபையோரை வியக்க வைத்தது.
அந்தனி ஜீவாவோடு நெருங்கிய தொடர்புகளுள்ள கலாபூஷணம் கலைச் செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜீவா பிறந்த மண் கொழும்பாக இருந் தாலும் தனது புகுந்த இடமான மலை யக மண்ணைத் தனது கண்ணாக நேசிப் பவர். கலைஞர்களின் வறுமையைச் சகித்து வாழ்பவர்கள் அவர்களது துணைவிமார். அதேபோல் ஜீவாவின் கலைப்பணிக்கு உறுதுணையாக இருப்பவர் அவரது மனைவி.
பொதுநலவாதிகளை எப்பொழு துமே சமூகம் வெகுஜன விரோதி களாகத்தான் பார்க்கின்றது. அந்த வகையில் ஜீவா தனது உழைப்பைப் பல ஏச்சுகளுக்கும், அவமானங்களுக்கு மிடையில்தான் செய்கிறார். இதுவரை பெண் எழுத்தாளர்களது நூல்கள் அடங்கலாக 15 நூல்களைத் தனது சொந்த முயற்சியால் வெளியிட்டிருக் கிறார். ‘மலையக முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்பு என்ற நூலை வெளியிட்டு இன ஒருமைப்பாட்டிற்கு அத்திவாரமிட்டவர். சிங்கள, ஆங்கிலக் கலைஞர்கள் ஜீவாவை நேசிக் கின்றனர். புரவலர் ஹாஸிம் உமர் ஏற்
நெஞ்சுக்கு இனியவராக
பாட்டில் ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர்

விமல் வீரவன்ஸ் வைச் சந்தித்த கலைஞர்கள் குழுவில் ஜீவாவும் இருந்தார். வாழ்வில் போராடிக்கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கோடு புதிய லொத்தரொன்றை ஆரம் பித்து வைக்கவிருப்பதாக அச்சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் உறுதி அளித் திருக்கிறார்.
'திருந்திய அசோகன்” நூல் நயவுரை செய்த "விஜய் பத்திரிகை ஆசிரியர் சட்டத்தரணி இரா.சடகோபன் கூறுகையில், "அந்தனி ஜீவாவின் கலை, இலக்கியப் படைப்புகள் முற்போக்குச் சிந்தனைக்கான அடித்தளமென்பதை நான் ஏற்கனவே அறிந் திருக்கிறேன். இவர் தனது சிறுவயதில் எழுதிய நாவல்தான் இது. இவரது துணிச்சல் மெச்சப்பட வேண்டியது. எமது நாட்டில் வாசிப்புத்துறை வெகுவாக வீழ்ச்சி கண்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இலத்திரனியல் ஊடகங்கள்தான். ஈழத்து நூல்கள் 1000 பிரதிகள் கூட விலை போக முடியாத இன்றைய துர்பாக்கிய நிலையில் எத்தகைய வணிக நோக்கையும் நச்சாது சிறுவர் சமுதாயத்தைப் போஷிக்கும் நோக்கோடு இந்நூலை ஜீவா வெளியிட்டி ருப்பது அவரது சமூக அக்கறையைக் காட்டுகின்றது. சிறுவர்களைக் கவரக்கூடிய வகையில் சித்தரிப்புகள் அமைந்துள்ளன. புறாப் போட்டி வாசிக்க உவப்பாக இருக் கின்றது. சிறுவர்களை எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக்கும் நோக்கோடு புனையப் பட்டுள்ள இந்நாவல் வாசிப்புத்துறைக்குச் சிறந்த அமையுமென நம்பலாம்" எனச் சொன்னார்.
Fad is
கவிஞர் இளைய அப்துல்லாஹ் தனது தத்துவ வரிகளில் - பக்குவம் தானாக
13 வருவதில்லை. வயதாகியும் சிலருக்கு அறிவு வருவதில்லை. சிலருக்கு நாற்காலி மீது ஆசை. மரணத்தைத் தமாகவே அழைப்பவரு முண்டு. நாற்பதில் நாய்க் குணம். மோப்பம், நன்றி, வயதிற்கு அத்திவாரம் மகிழ்ச்சி. சதை சுருங்குதல் மூப்பின் அடையாள மல்ல.
விசுவாசம் என்பன வாம்.
முதலாளி தொழிலாளியை வாழ்த்த மாட்டான், சம்பள அதிகரிப்பைக் கேட்பானென்று. இப்படியாக அவரது கவி வாழ்த்து அமைந்திருந்தது. கவிஞர் காசிம் ஹக்கிமும் கவி வாழ்த்துப் பாடினார்.
முதல் பிரதி பெறல் தொடரில் 339வது நூலாக புரவலர் ஹாஸிம் உமர் 'திருந்திய அசோகன்’ நாவலைப் பெற்று வெளியீட்டைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து பூபாலசிங்கம் பூரீதரசிங், துரைவி ராஜ்பிரசாத், கந்தையா J.P , மல்லிகா கீர்த்தி பூரீவாசன், கே. எஸ். சிவகுமாரன், தம்பிஐயா தேவதாஸ், ஆகியோரும் முதல் பிரதிகளைப்
மேமன்கவி
பெற்றனர்.
மணிவிழா நாயகனைப் பல பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி, மாலை அணிவித்துக்
கெளரவித்தனர். மணிவிழா நாயகன்
அந்தனி ஜீவா தனது ஏற்புரையில்,
“கொழும்பு டவர் மண்டபத்தைப் போல் முருகன் திரைப்பட மாளிகை யையும் புனருத்தாரணம் செய்து தமிழ்க் கலைஞர்களின் பாவனைக்கு வழங்கு மாறு கோரிக்கை விடுத்துள்ளோம். மூத்தக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம்

Page 9
வழங்குமாறு கேட்டிருக்கிறோம். நாடக் விழாவில் தெரிவாகும் 10 நாடகங்களில் 3 நாடகங்கள் தமிழ் நாடகங்களாக இருக்க வேண்டுமென கேட்டுள்ளோம். கிடைக்குமென்று நம்பிக்கையுண்டு. இவ் விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி' எனச் சொன்னார். வ.அ.தங்க வேலாயுதம் நன்றியுரை வழங்கினார்.
கலையையும், இலக்கியத்தையும் நேசிப்பதாக கூறும் பலரது முகங்கள் இவ்விழாவில் காணப்படாதது சிலரின் நெஞ்சை நெருடியது. ஒரு மூத்த கலைஞனுக்கு இப்படியா செய்வது? கலையுலகம் சிந்திக்க வேண்டும்!
இவ்விழாவைக் கொழும்பு தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
- எம்.பி.எஸ்.
மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
(சிறுகதைத் தொகுதி) ச. முருகானந்தன்
லீண் தேசத்தில் நாள்
(கவிதைத் தொகுதி) பேராதனைப் பல்கலைக் கழக மணவ மாணவியர் எழுதியத.
14
oხ0 କଁp', YP1.
EXCELLENT
FHOTOGRAPHERS
-MODERN COMPUTERIZED
FHOTOGRAPHY
FOR WEDDING PORTRAITs 8 CHILD SITTINGS
 

15
ஜெயபாலன் கவிதைகள்
கிறிஸ்மஸ் விடுமுறை
விடுமுறைத் தூக்கம் மதியப் பசியில் கலைய
எழுந்தேன்.
வீடு அமைதியில். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. வெளியே கொட்டுதே வெண்பனி. உள்ளே மின்னுதே என் பிள்ளைகள்
கோலமிட்டு நிறுத்திய கிறிஸ்மஸ் மரம்.
முன்றிலில் கணகணப்பு ஆடைச் சிறுவர்கள் வெண்பனியில் வனைந்தனரே ஒரு மனிதனை. சிறுமி ஒருத்தி கறட் மூக்கு வைத்துக் கைகொட்டிச் சிரிக்கிறாள். தேர்ந்த பொற்கொல்லனாய் கண் வாய் என்று கற்கள் பதிக்கிறான் என் பையன்.
ஒருநாள் உருகிவிடும் எனினும் ஆக்கி மகிழ்கிறாரே பனிமனிதனை. நாளை குப்பையில் எனினும் இன்றை ஒளிர வைக்குதே என் பிள்ளைகளின் கிறிஸ்மஸ் மரம்.
நீண்ட தூக்கமும், பெருஞ் சமையலும் மது விருந்தாடலும் தந்திர பெண் / ஆண் வேட்டையும் புணர்வதுமாய் கழிகிற விடுமுறைகளில் பிணிவாய்ப் படுகிற மேலை வாழ்வு கிறிஸ்மஸ் மரத்தில் பனி மனிதனில் கொண்டாடும் குழந்தைகளின் கூச்சலில் உயிர்க்குதே.
எப்போதோ குப்பையில் கிறிஸ்மஸ் மரத்தையும் முற்றத்துப் புல்லில் கரட்டையும் LITfrig) இரண்டுமே "வீண்" என்றாள் மனைவி. வீண் என்கிற வார்த்தைதான் வீணாக்குது நம் வாழ்வை.

Page 10
உயிர்த்தேன்.
காலப் பாலை நடுவினிலே விநோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஒய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய்
கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி.
16
கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர்த்தும் இந்த உலகம் தொடர்வதெல்லாம் உன் பொற்கரம் பற்றியன்றோ. மாண்டவர் மீழ்வதெல்லாம் பெண்ணே நின் மந்திரத் தொடுகையன்றோ.
பெண்களே பூமியர்கள் ஆண்கள் நாம் பிறகோளால் வந்தவர்கள் உன்னைப் புரியாமல் கண்ணம்மா இந்த உலகம் புரிவதில்லை.
எழுதப்படாத கவிதைக்கு
வரையய்படாத சித்திரம்
 

17
6.
0.
II.
2.
3.
I4.
IS.
16.
I.
8.
9.
2 Ο
2.
22.
23.
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு - புதிய அநuவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது)
எழுதப்பட்ட அத்தியாயங்கள் - (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் - (யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரத சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை) டொமினிக் ஜீவா
முனியப்பதாசன் கதைகள் - முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் (ஹைக்கூட) - பாலரஞ்சனி
அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) சேலை - முல்லையூரான் மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் தொகுத்தவை. (இரண்டாவத தொகுப்பு) 41 எழுத்தாளர்களின் படைப்பு நிலக்கிளி - பாலமனோகரன் நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் - தொகுப்பு: டொமினிக் ஜீவா நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் தரை மீன்கள் ~ சமுருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான் அப்புறமென்ன - குறிஞ்சி இளந்தென்றல் ~ (கவிதைத் தொகுதி) அப்பா - தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயறியில் இருந்த ~ எம்.கே.முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் 25 ~ தொகுத்தவர் செங்கை ஆழியான்
இந்தத் தேசத்தில் நான் ~ (கவிதைத் தொகுதி) (பேராதனைப் பல்கலைக் கழக மாணவ, மாணவியர் கவிதைகள்)
TOKOSCO)2.ö oho ခဗ်ပံခံ့ခြုံS గీసిain متر) تکلمlی
விலை: விலை:
விலை:
விலை:
25o/F Ι 4ο/- Ι8ο/- 175/=
: I Io/- : Ioo/=
: IIo/F : I5of
60/-
: 175/- : Isof: 275/=
: 35of F
; Ι 4ο/- : Iso/- : Iso/F : Isof: 1.5of F : 120/- : 130/= : 14.0/F : I50/=
: II.5/F
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
ஒ

Page 11
18
GJIGOItb UTç6Giflci 1503GGJ ஓர் ஊமைக் குயில்
— шот. штсuаfrüЈв5ib
தாய் வீட்டை மறக்கக் கூடிய மனிதனொருவனை இம் மாநிலத்தில் காண முடியாது. அதேபோல்தான் நானும், இலங்கை வானொலியிலிருந்து மாற்றம் பெற்ற பின்னரும் அதனோடு கொண்டிருந்த எனது தொடர்புகளை இடைநிறுத்தாமல் தொடர்ந்தேன். இதற்குக் காரணம் எனது எழுத்துப் பணி, வானொலி நண்பர்கள் எனலாம். சித்திரங்கள், நாடகங்கள் என்பனவற்றை எழுதினேன். ஒலிபரப்பப்பட்டன. அங்கு நான் கடமை புரிந்த காலத்தில் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதற்கு வந்தவர்கள் சிலர் நியமனங்கள் பெற்று ஒலிபரப்புத்துறையில் இணைந்தனர். இவர்களைக் காணும் போதெல்லாம் பழைய நினைவுகள் படையெடுக்கும். நான் அபிமானம் கொண்டிருந்த ஜோர்ஜ் சந்திரசேகரன், காவலூர் ராஜதுரை இன்னும் சிலர் முக்கிய பொறுப்பு களிலிருந்து ஒலிபரப்புக் கலைக்குப் பணி செய்தனர்.
ஜோர்ஜ் சந்திரசேகரன் கொட்டாஞ்சேனையில்தான் வசித்தவர். இவரை நான் அப்போதெல்லாம் அடிக்கடி சந்திப்பதுண்டு. இவரொரு சிறந்த ஒலிபரப்பாளர் மட்டு மன்றி, நாடறிந்த நாடகக் கலைஞருமாவார். இவர் நாடகத் தயாரிப்பாளர் சி. சண்முகத் தோடு மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்.
சி. சண்முகம் பல வானொலி நாடகங்களை எழுதியவர். அத்தோடு 'ஸ்புட்னிக் சுருட்டு உட்பட்ட அநேக நாடகங்களை எழுதி மேடையேற்றியவர். தட்டச்சு இயந்திரத்தின் முன் உட்கார்ந்து, தடங்கலெதுவுமின்றி அதை இயக்கி வானொலி பிரதி எடுக்கும் அற்புதமான திறமை பெற்றவர். பிரபல பெண் அறிவிப்பாளரும், இவரது துணைவியாருமான இராஜேஸ்வரி சண்முகத்திற்கு இவரது வானொலி, மேடை நாடகங்களே பிரபலத்தைப் பெற்றுக் கொடுத்தன எனலாம். இவரது நாடகத்தை ஜோர்ஜ் சந்திரசேகரனும் நெறிப்படுத்தி இருக்கிறார். வழி தெருவில் நான் ஜோர்ஜைச்

சந்தித்துக் கதைக்கும் பொழுது அவரோடு அநேகமாகக் நடராசா சிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ ஆகியோரும் இருப்ப துண்டு. இதனால் இவர்களும் எனது நண்பர்களாகினர். அப்பொழுது இவர்களும் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்று வதற்கு வருவதுண்டு.
வானொலி அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ மிகவும் எளிமையானவர். பந்தாக்கள் இல்லாதவர். இவர் புனித ஆசீர் வாதப்பர் கல்லூரியில் ஜோர்ஜ் சந்திர சேகரனோடு படித்தவர். பிறப்பிடமாகக் கொண்டவர்.
கொழும்பைப்
வானொலியில் நாடகங்களுக்கு மட்டும் மாவட்ட வழக்குப் பேணப் படுவதை வாசகர்கள் அறிவர். மற்றைய அம்சங்கள் அனைத்திற்கும் சுத்தமான உரை நடையே பேணப்படுகின்றது. இதற்குக் காரணம் சர்வதேச ரீதியாக வாழ்ந்து கொண் டிருக்கும் தமிழர்கள், தமிழ் தெரிந்தவர்கள் ஆகியோரது நன்மை கருதியே எனலாம். குறிப்பிட்ட ஒரு மாவட்ட வழக்கு மற்ற மாவட்டத்தவருக்கு விளங்காதிருக்கலாம். இதனால் நாடகங்கள் கூட பரவலாக மாவட்டக் கருக்களைப் உள்வாங்கவில்லை. பேராசிரியர். கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த மாவட்ட வழக்கை "சானா சண்முக நாதனும் வானொலி நாடகங்களில் புகுத்த முனைந்தார். நாடகங்கள் முற்று முழுதாக ஒரே மாவட்டத்தின் வழக்கில் இருக்காது. இந்த வகையில் இடைக்கிடை மட்டக்களப்பு
ஆனால் ஒலிபரப்பு
பேச்சு வழக்கு நாடகங்களும் ஒலிபரப்பப் பட்டன. தென்னிந்திய பேச்சு வழக்கிலும் நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. இந்நாட கங்களில் பெரும்பாலும் அந்தந்த
19 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே பங்கு பற்றினர். ஆனால் உரைச் சித்திரங் களுக்கு பேச்சு வழக்குத் தவிர்க்கப் பட்டது. எனவே வானொலி ஒரு பொதுச்சாதனமெனக் கருதியதால் குறுகிய வலயங்களுக்குள் உட்படுத்தப் படாது பாதுகாக்கப்பட்டது!
வானொலி நிலையம் கொழும் பில் அமைந்திருந்ததால், வானொலி யில் பங்கு பற்றக் கூடிய வாய்ப்புகள் பெரும்பாலும் கொழும்பு வாசி களுக்கே கிடைத்தன. இதில் பிற மாவட்டத்தினருமிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் தொழின் நிமித்தம் கொழும்பிற்கு வந்தவர்கள். வானொலி அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப் பாளர்கள், நடிகர்கள் உகந்த ஒலி வாங்கிப் பரீட்சைகளின் மூலமாகவே தெரிவாகினர். தமிழ் உச்சரிப்பு அறிவிப்பாளர்களுக்கு மிகவும் அவசிய மாகிறது. இப்படி வடிகட்டி அறிவிப் பாளர்கள் தெரிவு செய்யப்பட்டும் சிலரது தவறான உச்சரிப்புகளை வானொலியில் கேட்கவே முடிந்தது. ‘மாக்கள் வங்கி" "கொபி அண்ணனாகவும் பிரதான "பிதான"
மக்கள் வங்கி, யாகவும்; கொபி அனான்,
எனவும் நேயர்களின் காதுகளுக்குள் அபகரமாக ஒலித்தது. பி.சுசீலாவை கவனமற்ற அறிவிப்பாளர் சிலர் "பீச்” சுசிலாவெனவும் அறிவித்து விடுவது முண்டு. பற்பொடி 'பள்'பொடியாகவும் வானலைகளில் மிதந்ததுமுண்டு. இவைகளைக் கேட்டுவிட்டு பிரிவுக் குள் நாமனைவரும் பேசிச் சிரிப்ப துண்டு. இந்த இடர்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு அறிவிப்பாளர்

Page 12
களுக்கு உச்சரிப்பு உச்சத் தகுதியாக இருந் தது. இதனால்தான் அப்பொழுது கலப்பின மாவட்டங்களிலிருந்து அறிவிப்பாளர்கள் தோன்றாதிருந்தனர். இதற்கு இன்னொரு காரணம், இன்று போல் அன்று தமிழ் இந் நாட்டில் எழுச்சி கொண்டிருக்கவில்லை. ஆனால் இன்று அந்தத் தடம் மாறிவிட்டது. இன்று இலத்திரன் ஊடகங்களில் கணிச மான வடக்கு, கிழக்கைச் சாராத ஒலிபரப் பாளர்கள் இனங்காணப்பட்டு விட்டனர். இவர்கள் சர்வதேச ரீதியிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். பி.எச்.அப்துல்ஹமீட், ஜோர்ஜ் சந்திரசேகரன், இராஜேஸ்வரி சண் முகம், ஜோக்கிம் பெர்னாண்டோ ஆகி யோர் அத்தகையவர்களே! இவர்களது குரல் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக் கின்றது. நேயர்கள் கேட்டு மகிழ்ந்து கொண்டுமிருக்கின்றனர். இவர்களில் சிலர் பாடசாலைப் பருவத்திலேயே பாடசாலை இலக்கிய மன்ற நாடகங்களில் குறு நாடகங்களில் நடித்து நடிப்பு அனுப வத்தைப் பெற்றவர்கள். இத்தகைய ஒருவர் தான் ஜோக்கிம் பெர்னாண்டோ. இவர் கொட்டாஞ்சேனை ஆசிர்வாதப்பர் (ST BENEDICT COLLEGE) scists upiteral னாக இருந்தவர். அப்போது இக் கல்லூரி யிலிருந்த தமிழ் மன்றம் மிகவும் பிரசித்த மானது. சிறந்த கலைவிழாக்களை நடத்தித் தமிழ் பணி செய்தது. அப்பொழுது இக்கல் லூரியிலிருந்த ஜோக்கிம் பெர்னாண்டோ உட்பட்ட கலை இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பேரதிர்ஷ்ட மொன்று கிடைத்தது! தென்னிந்தியாவில் கல்வி கற்ற திரு. ராம் சுந்தரலிங்கம் இக்கல்லூரிக்கு ஆசிரியராக வந்தார். இவர் விளையாட்டுத் துறையில் ஈடுபாடு வைத்திருந்தாலும், சிறந்த கலைஞர். இவர் படிப்பிப்பதிலும்
2 Ο காட்டி, மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வத்தைக் காட்டினார். ஏற்கனவே மேடை நாடகத்தில் ஈடுபாடு கொண்டி ருந்த மாணவருக்கு இதன் மூலம் ராம் சுந்தரலிங்கத்தோடு ஒர் இறுக்கமான பிணைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் பின் சுற்றத் தொடங்கி அவரது நெறி யாள்கையில் நடித்துத் தமது நடிப்புத் திறமையை விருத்தி செய்து கொண் டனர். இந்தச் சந்தர்ப்பத்தை ஜோக்கிம் பெர்னாண்டோவும் கச்சிதமாகப் பயன்
படுத்தி இருக்கிறார்.
ஜோக்கிம் பெர்னாண்டோவின் வாழ்வில் 1959ஆம் ஆண்டு மறக்க முடி யாதது! இவ்வாண்டில்தான் அவரது றேடியோ சிலோன் பிரவேசம் நிகழ்ந்தது! இந்நாட்களை இலங்கை வானொலியில் மயில்வாகனம் கால அகிலமனைத்திலும் இலங்கை வானொலி ஒலிக்கக் கூடிய
மெனலாம் !
வகையில் தனது திறமையையும் குரல் வளத்தையும் பயன்படுத்தி இலங்கை வானொலி வர்த்தக சேவையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினார். விளம் பரங்களின் இடையே ஜனரஞ்சகமான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன. இரசி கர்கள் பேராவர்த்தோடு கேட்டனர். பெரிய கொம்பனிகள் தமது விளம்பரங் களையும் ஒலிபரப்ப 'மயிலரைச் சந்தித்தனர். துக்கு வருமானமும் பெருகியது.
வானொலி நிறுவனத்
அப்பொழுது குண்டன்மால்ஸ் அனுசரணையில் வர்த்தக ஒலிபரப்பில் நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கு செய்யப் பட்டது. இதில் 15 நிமிட நாடகமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நாடகப்

நிகழ்ச்சியை தயாரித்து நடத்த மயிலர் தகுதி
யான ஒருவரைத் தேடினார். அப்பொழுது மேடை நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த ராம் சுந்தரலிங்கம்தான் கிடைத்தார். இருவரது அபிப்பிராயமும் ஒன்றாகவே இருந்தது. இணைந்தனர்.
நான்கு நாடகங்களைத் தயாரித்து ஒலி பரப்புமாறும், அதில் ராம் சுந்தரத்தோடு மேடைகளில் நடித்தவர்களே நடிக்க வேண்டுமெனவும் மயிலர் நிபந்தனையிட்டி ருந்தார். இது ஒரு மாதத்திற்கான கிழமைக் கொன்றென்ற அடிப்படைக்கமைந்தது. இந்த இன்ப அதிர்ச்சியை தருவிக்கக் கூடிய தான தகவலை ராம், ஜோக்கிம் பெர் னாண்டோ உட்பட்ட தனது நாடகக் குழு விற்கு அம்பலப்படுத்தினார். மேடைகளில் நடித்து ஒரு சுற்று வட்டத்துக்குள் தமது ஆற்றுகையை மட்டுப்படுத்திக் கொண்டி ருந்த நடிகர்களுக்கு இச்செய்தி திருப்பதி லட்டைப் போலிருந்தது. வானொலி கோடிக்கணக்கான மக்களுக்குள் செல்லக் கூடியது! அதுவும் S.P மயில் வாகனனின் குரலில் ஒலிக்கும் நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தமாகியிருந்த காலமது. சர்வதேசக் கவனிப்பைப் பெற்றது. நடிகர்கள் அனை வரும் துள்ளிக் குதித்தனர்.
இந்நான்கு நாடகங்களில் மூன்று நகைச்சுவை நாடகங்கள். நான்காவது நகைச்சுவை கலக்காத வாழ்வின் பிரச் சினைகளை அலசும் நாடகம்! கலையைத் தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதிய ராம் சுந்தர் ஜோக்கிமின் ஆற்றல் 'களை நன்கு கணித்து வைத்திருந்தார். எனவே வாழ்வின் பிரச்சினைகளை அலசும் நாடகப் பிரதியை எழுதும் பணியை ஜோக்கிமுக்கே கையளித்தார். கலை உலகில்
21 ஜோக்கிம் சிறகசைக்கத் தொடங்கிய காலமது. அதுவும் வானொலிக்குள் நாடகத்தோடு நுழைவது சொர்க் கத்தைக் கண்ட மாதிரி இருந்தது. ஜோக்கிம் பூரித்துப் பெருத்தாராம்!
தனது எழுத்துப் பிரதியை மிகுந்த அக்கறையோடு எழுதி ஜோக்கிம், ராம் சுந்தரிடம் கொடுத்தார். ஆனால் அதி லொரு சிக்கல் இருந்தது. அப்பிரதியில் ஒரு பெண் பாத்திரமும் உட்பட்டி ருந்தது. அந்தக் காலத்தில், இங்கு மட்டுமன்றி தென்னிந்தியாவிலும் பெண்கள் நடிப்பில் ஊக்கம் காட்டா திருந்தனர். இன்றும் கூட தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்கள் கதா நாயகிகளாக வருவது மிகவும் குறைவே! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதன் காரணத்தால் பெண் வேஷங்களில் நாடகங்களில் ஜொலித் திருக்கிறார். இதே நிலைதான் ராம் சுந்தரின் நாடகக் குழுவிலுமிருந்தது. ஆண்களே பெண் பாத்திரங்களில் தோன்றி நடித்தனர். இந்த அலுவலை மிகக் கச்சிதமாக திரு. மோகனதாஸ் என்பவர் செய்ததாக ஜோக்கிம் நினைவு கூருகிறார்.
இப்படி வானொலியில் செய்ய முடியாது. பெண் பாத்திரத்தில் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட ஒரு பெண்தான் நடிக்க வேண்டும். இது ராம் சுந்தருக்கு சங்கடத்தைக் கொடுத்தது. இருந்தாலும் பெண் குரலொன்று நிகழ்ச்சியைக் கவர்ச்சிப்படுத்து மென்பதை உள் வாங்கி, விஷயத்தை மயிலருக்குக் கடத்தினார். அந்தப் பொறுப்பை மயிலர் தனது தலையில் தூக்கிப்

Page 13
போட்டார். பெண் கதாபாத்திரத்தைத் தேடிப்பிடித்து விட்டார்!
ஜோக்கிமுக்கு மீண்டுமொரு தலையிடி! மயிலர் தேடிப்பிடித்தது வேறு யாருமல்ல! அன்று வானொலி நாடகங்களில் சாதனை புரிந்த பிலோமினா சொலமனைத்தான்!
பிலோமினா சொலமன் ஒரு அற்புத மான நடிகை. இவர் ஈழத்துச் இனிமாவான 'குத்து விளக்கு" என்ற படத்தில் நடித் திருப்பதை வாசகர் அறிவர். நான் வானொலியில் கடமை புரிந்த காலத்தில் C.V. ராஜசுந்தரம் தனது நிகழ்ச்சிகளில் பற்றுவோருக்குத் தகவல் கொடுக்கும் பொறுப்பை எனக்குத்
u fi Ge5
தருவார். இத்தகவல் பரிமாற்றம் தபால் மூலமும், தொலைபேசி மூலமாகவும் இருக்கும். அத்தகைய ஒரு சமயத்தில் நான் பிலோமினாவை சித்திரமொன்றிற்குக் குரல் கொடுக்க அழைத்த பொழுது அவர், ‘என்னை நாடகத்திற்கு மட்டும் கூப்பிடுங்க, கித்திரங்களுக்கு ராஜேஸ் வரியைக் கூப்பிடுங்க.." எனச் கலைக் கர்வத்தோடு சொன்னார். தனது பெயர் அடிக்கடி வானலைகளில் வரவேண்டு மென்ற அவா அற்றவர். ராஜேஸ்வரி சண்முகம் நாடகத்திலும், சித்திரத்திலும் சோபிக்கக் கூடியவரென்பது குறிப் பிடத்தக்கதே!
இத்தகைய வானொலி அனுபவமிக்க, மூத்த கலைஞனொருவரோடு தான் நடிக்க முடியுமா? அதுவும் ஒவிவாங்கிக்கு முன் தோன்றப் போவது இதுவே முதல் தடவை நாடகத்தின் பிரதம பாகம் தனதே! கணிசமான நேரம் பிலோமினாவும் தானும் பேசி நடிக்க வேண்டும். ஏக்கம் பற்றிக் கொண்டது.
22
தானும் தனது நண்பர்களும் சார்ந்த காட்சிகளை ஏற்கனவே தாங்கள் ஒத்திகை பார்த்திருந்தனராம். ஆனால் பிலோமினா முழு நாடகத்தையும் ஒத்திகை பார்க்க வேண்டுமென தானொரு மூத்த வானொலி நடிகை யென்ற இறுமாப்பு'த் தோரணையில் பிடிவாதமாக நின்றாராம். வெற்றியும் பெற்றாராம். இருந்தாலும், உரிய ஒத்திகையின் பின்னர் நாடகம் ஒலி பரப்பானது. குண்டன்மால்ஸ் வர்த்தக நிறுவனம் வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், இந்நாட்டின் கலைஞர் களிலும் கரிசனை வைத்திருந்ததை அதன் சில செயல்பாடுகளை வைத்த தனது நிகழ்ச்சிகள் மக்களால் விதந்து பேசப்
உணர்ந்து கொள்ளலாம்!
பட வேண்டுமென்ற மன உந்துதலு மிருக்கலாம். மயிலரின் ஆலோசனை யாகவும் இருக்கலாம்! ராம் சுந்தரின் ஏற்பாட்டில் ஒலிபரப்பாகிய இந்த நான்கு நாடகங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகருக்கு வானொலி நேயரின் கருத்தின் அடிப்படையில் 3 யார் துணி வழங்குவதென்ற ஏற் பாடொன்றைச் செய்திருந்தனர்.
ஜோக்கிமின் நாடகம் ஒலிபரப் பானது. நடித்தவர்கள் அனைவரும் பழம் பெரும் வானொலி நடிகை பிலோமினா சொலமனுக்கே பரிசுத் துணி கிடைக்குமென்ற கருத்காளர்க ளாக இருந்தனர். ஜோக்கிமுக்கும் ஒரு பெண்ணிடம் தோற்கப் போகிறேனே யென்ற ஆதங்கமிருந்தாலும், குட்டு வாங்கினாலும் மோதிரக் கையால்தானே வாங்கப் போகிறேனென்ற பெருமை

அவரை ஆறுதல்படுத்தியது. இருந்தாலும், நேயர்களின் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அந்த 3 யார் பரிசுத் துணி ஜோக்கிமுக்கே கிடைத்தது. "அந்தப் பரிசு எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி யையும் ஒருவித பெருமை கலந்த இறுமாப் பையும் தந்ததென்னவோ உண்மைதான். பரிசாகக் கிடைத்த அந்தத் துணியில் தைத்த சேர்ட்டை நான் பத்து வருடங்களுக்கு மேலாகப் பாதுகாத்து வைத்திருந்தது என்னவோ வேறு விஷயம்" என்று இப்பொழுதும் ஜோக்கிம் பெர்னாண்டோ அந்த முதல் மரியாதையைக் குறித்துப் பெருமைப்படுகிறார்.
பிலோமினா மூத்த நாடகத் தயாரிப் பாளர் சானாவின் பாரம்பரியத்தில் தனது நாடகக் கலையை வளப்படுத்தியவர். சானா ஒழுங்கு செய்யும் மூன்று ஒத்திகை களுக்கும் நடிகர்கள் வந்தேயாக வேண்டும். அப்படி வராவிட்டால் அந்த நடிகர்களது குரல்கள் அடுத்த நாடகத்தில் ஒலிக்காது. இந்த வழிபாட்டைத்தான் பிலோமினா, ஜோக்கிமின் நாடகத்திலும் கடைப்பிடித் இன்னும், ஜோக்கிம் குழு வினருக்கு இதுவே வானொலி முதல் நாடகம். மேடை நடிப்பு வேறு வானொலி நடிப்பு வேறு! மேடையில் அங்க முத்திரை கள் மூலமாகவும் நடிப்பை வெளிப்
துள்ளார்.
படுத்தலாம். ஆனால் வானொலி அப்படி
இவையனைத்தையும் ஒருங் கிணைத்துக் குரலில் கொடுக்க வேண்டும்.
யல்ல.
இவைகளை நன்கறிந்தே பிலோமினா அப்படிச் செய்திருக்கிறார். அதையிட்டு ஜோக்கிம் சஞ்சலப்படத் தேவையில்லை. மூத்த நடிகை பிலோமினாவை நாடகத்தில் நடிப்பால் கீழிறக்கி தானே பரிசைப் பெற்ற தற்கு கடைசி நேரத்தில் பிலோமினா
23 பார்த்த ஒத்திகையும் காரணமாக இருக்குமல்லவா! எனவே, ஜோக்கிம் வானொலியில் வ்ைத்த முதல் சுவடே அவரது ஒலி பரப்புத்துறை இருப்பை நிரந்தரப் படுத்தி விட்டது! இது ஒரு யோகந்தான்!
அப்பொழுது குறுநாடகங்கள் மாதர் பகுதியிலும் ஒலிபரப்பாகின. இவைகள் தரத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து ஒலிபரப்பப்பட்டன. தெரிவில் சித்தி பெற்றவர்களே நடிப்பர். பிரதிகளை காவலூர் ராசதுரை, பாலாம்பிகை நடராசா, சி. சண்முகம் ஆகியோர் எழுதினர். தபால் மூலமாக பெறப்படும் நாடகங்களும் கவனிக்கப் பட்டன. இந்நாடகங்களை அதிதித் தயாரிப்பாளர்கள் (GUEST PRODUCERS) தயாரிப்பதுண்டு. இப்பொழுது பிரபல வானொலி, மேடை, தொலைக்காட்சி நடிகராக விளங்கும் நடராசா சிவம் என்பவரும் பொன்மணி குலசிங்கத்தின் ஏற் இக்குறு நாடகங்களை தயாரித்திருக்கிறார். இந் நாடகங்களில் ஜோக்கிமும் நடித்தவர். அப்பொழுது சன்மானமாக ரூபா 15/- வழங்கப்
பாட்டில்
பட்டது.
ஜோக்கிம் பெர்னாண்டோவின் ஒலிபரப்புத்துறை வருகைக்கு நாற்றங் காலாகவிருந்தது நாடகமெனலாம். இவர் நிரந்தர அறிவிப்பாளராகிய காலத்தில் இலங்கை வானொலி கூட்டுத் தாபனமா கி யிருந்தது . இலத்திரன் ஊடகங்கள் பல வசதி களைக் கண்டிருந்தன. புதியோருக்கு பயிற்சிக்கென ஒரு நிலையமும் அமைக்கப்பட்டிருந்தது.

Page 14
ஜோக்கிமின் குரல் கரகரத்த கடின மானதாக இல்லாமல் இனிமையான சிறு மென்மைத் தன்மையுடையது. இவர், எந்த வொரு பிரபல ஒலிபரப்பாளரையும் பாவனை செய்யாது தனக்கென்றொரு ஒரு ஒலிபரப்புப் பாணியை உருவாக்கி அறி விப்புகள் செய்வது ஒரு சிறப்புத் தன்மை யாகும். இப்பொழுதும் இவர் ஒலிபரப்புத் துறையில் மூத்த அறிவிப்பாளராக இருக் கிறார். கடந்த காலத்தில் இவர் கலைத் துறையில் பெற்ற பாரிய அநுபவங்கள் இவரது தொனியில் தோற்றமிடுகின்றன. படபடத்து சொற்களைக் கொட்டுவது அறிவிப்பல்ல. இதை இன்றைய தலை முறை ஜோக்கிமிடந்தான் கற்க வேண்டும்!
சந்தா செலுத்தி விட்டீர்களா? தயவுசெய்த மல்லிகையுடன்
ஒத்தழையுங்கள். அசட்டை செய்வோருக்கு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும்.
24
மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
நாம் பயணித்த
புதை வண்டி
(சிறுகதைத் தொகுதி) ப. ஆப்டீன்
டய்மா
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
(வரலாற்று நூல்)
தில்லை நடராஜா -
ஒரு டாக்டரின் டயரியில் இருந்து.
(வைத்திய அநுபவக் குறிப்பு) எம்.கே.முருகானந்தனர்
Y
பதிவு செய்துகொள்ள வேண்டும்.
வரவேற்கத் தக்கது.
ܢܠ
40-வது ஆண்டு மலர் பற்றி. சந்தாதாரர்கள் மலருக்குத் தனியாக பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக மலர் தமக்குத் தேவையெனக் கருதுவோர் தமது பெயரையும் முகவரியையும் முன்கூட்டியே எம்மிடம்
பல்கலைக்கழக நூலகங்கள், கல்லூரி நூலகங்கள், பொதுசன நூலகங்கள் முன்னரே நம்முடன் தொடர்பேற்படுத்திக் கொள்வது
வரலாற்று ஆவணப்பதிவு மிக்க மலர் இது.
N
grfui, gag:Film uiunt لم
 
 
 
 
 
 
 

25
&56ÖIpufl6Ů “TOĎgT6lTOIŲ TOMIGONGU’ வெளியீட்டு விழா
- கருகஸ்தோட்டை எம்.எம்.இர்வடிாத்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவன் செ. சுதர்சனின் 'மற்றுமொரு மாலை" என்ற கவிதைத் தொகுதி 15.08.2004 அன்று வெளியிடப்பட்டது. கண்டி பூரீ புஸ்பதான மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்குக் கலாநிதி துரை. மனோகரன் தலைமை வகித்தார். பேராசிரியர் க. அருணாசலம் பிரதம விருந்தினராகவும், ஆசிரியர் க. கனகேஸ்வரன், பதிவாளர் தனபாலசிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
சுதர்சனின் தாயாரின் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர் இராமன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கலாநிதி துரை.மனோகரன் “எமது நாட்டில் உள்ள இளங் கவிஞர்களின் செ. சுதர்சனும் குறிப்பிடத்தக்கவர். தரத்தைப் பற்றிக் கவலைப்படாது ஆண்டுதோறும் அவசர அவசரமாக வெளிவரும் கவிதை நூல்கள் போல அல்லாது தரமானதாக சுதர்சனின் நூல் வெளிவந்துள்ளது. கற்பனைகளை வேறு கவிஞர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று யதார்த்த வாழ்வியலை சுதர்சன் பாடியிருக்கிறார்” என்றார்.
'ஏகலைவன்’ பிரதம ஆசிரியர் சு.இ.முரளிதரன் வெளியீட்டுரையில் "இணையா சிரியரான சுதர்சன் அச்சஞ்சிகை சிறப்புற வெளிவர முக்கியமானவராக அமைகிறார். அவரது முதலாவது கவிதைத் தொகுதியை ஏகலைவனின் முதல் வெளியீடாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். குருதி கொப்பளிக்கும் தேசித்தில் நெருப்பு வரிகளை நெய்த சுதர்சன் பாராட்டுக்குரியவர்" என்றார்.
நூல் அறிமுகவுரை, ஆய்வுரை நிகழ்த்திய கம்பன் கழக அமைப்பாளர் பூரீபிரசாந்தன் "மூன்று வருட செம்மையாக்கத்தின் பின்பு வெளிவரும் இத்தொகுதி பாராட்டுக்குரியது. விமர்சனக் கோட்பாடுகளை மனதில் கொண்டு எழுத்து, தொகுப்பு முயற்சிகளால் இறங்கக் கூடாது. மூன்று வருட உழைப்பின் பின் இத்தொகுதியைக் கொண்டு வந்தது போல அடுத்த நூல்களையும் கடின உழைப்பின் பின்னே கொணர

Page 15
வேண்டும். கவிதையோ, கட்டுரையோ புத்தகம் போடும் ஆசையில் அலாதிப் பட்டுப் புத்தகம் போடுவதை இன்றைய இளைஞர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சுதர்சனின் இந்த முயற்சி மாணவன் என்ற அவரது நிலையில் வைத்துக் பார்க்கும்போது பாராட்டப்பட வேண்டியது" என்றார்.
ஏற்புரை நிகழ்த்திய செ.சுதர்சன் "யுத்தம் என்னைச் செதுக்கியது. நான் யுத்தத்தைச் சொற்களால் செதுக்கினேன். எனது ஆகியது. அதில் அவ்வப்போது எழுந்த வலிகள் ஒலங்கள் முதலியவையே எனது
தேசம் அவல அடுக்குகளால்
கவிதைகள்” என்றார்.
பின்னர் நடைபெற்ற 'பாரதியார் அடிதொட்டுப் பாடிடுவோம் நம் வாழ்வை' என்ற கவியரங்கிற்கு தமிழ்த்துறையைச் சேர்ந்த பரா. ரதீஸ் தலைமை தாங்கினார். தலைவரின் கவிதையில் கவித்துவம் துளியளவும் இடம்பெறவில்லை. அளவுக் கதிகமான உடல் வெளிப்பாடுகளில் கூடிய கவனம் செலுத்திய தலைவர் கவிதையில்
26 அதனைக் காட்டியிருக்கலாம். தவ.சஜி தரனை விட பெரும்பாலான கவிஞர் கள் வசனத்தோடு நின்று கொண்டார் கள். தவ.சஜிதரனும் சபைக்கேற்ப வெளிப்பாட்டு முறையினைச் செய்யவில்லை.
பின்பு நடைபெற்ற வி.வினோ தினியின் நடனம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
கண்டியில் இதுவரை நடைபெற்ற நூல் வெளியீடுகளில் அளவுக்கதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்ட விழாவாக இது அமைந்தது. ஏக லைவன் வெளியீடான "மற்றுமொரு மாலை"யின் விலை 100 ரூபா. கைய டக்கமான வடிவமைப்பிலும் அச்சு முறையிலும் அழகாக உள்ளது.
எது எவ்வாறாயினும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்லதொரு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மகிழ்ச்சி என்னைப் போல பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
作
வாழ்த்துகின்றோம்.
மல்லிகையின் மீது பேரபிமானம் கொண்டவரும்,
ཡ།༽
பொதுவாகப்
படைப்பாளிகள் மீது தனி அன்பு கொண்டவரும் Milers' மனேஜருமான | திரு. எஸ்.ஆர்.பாலச்சந்திரன் தம்பதியின் மகள் செல்வி. குந்தவி அவர்களுக்கும், திரு. பெர்னாண்டோ புள்ளே தம்பதியின் மகன் செல்வன். ராமல் அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பில் வெகு விமரிசையாகத் திருமணம் இனிதே நடந்தேறியது.
இந்தத் திருமணத்தின் அழைப்பிதழ் கலைத்துவ நேர்த்தியுடன் வடிவமைக்கப் பெற்றிருப்பது பெரிதும் மனதைக் கவர்ந்தது. நமது பாராட்டுக்கள்.
மணமக்களை மல்லிகை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர். \S- ノ

27
இந்த நாற்பது வருஷங்களும் நீங்களும்.
- ஆர்.முத்துராசன் உங்களது இந்த அயராத இலக்கிய உழைப்பை மதித்து வருபவன், நான்.
நானும் எத்தனையோ இலக்கியவாதிகளை எனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். பல எழுத்தாளரது வாழ்க்கைப் போக்குகளையும் நோக்குகளையும் நூல்களில் படித்து வந்திருக்கிறேன்.
இவர்களிலிருந்தெல்லாம் வித்தியாசப்பட்டவர்தான் நீங்கள். இதை உங்களது சுய வரலாற்றுத் தகவல்கள் நிரூபிக்கின்றன.
நான் உங்களை இதுவரை நேரில் சந்தித்தது கிடையாது. அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்க எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால், உங்களுடைய எழுத்து, நடைமுறை வாழ்க்கை, மல்லிகையின் அர்ப்பணிப்பு உழைப்பு, உங்களது மேடைப் பேச்சுக் கருத்துக்கள் அத்தனையையும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறேன்.
நீங்கள் ஈழத்து இலக்கியத்திற்கும் பொதுவாக மல்லிகையின் தொடர் வளர்ச்சிக்கும் இதுவரை கொடுத்து வந்துள்ள விலையை நான் நன்கு அறிவேன்.
பல காரணங்களாலும் சமகாலத்தில் உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் கூட இருக்கலாம். ஏன் உங்களது குடும்ப அங்கத்தவர்கள் கூட இவர்களில் அடங்கியிருக்கலாம்.
இதைப் பற்றி நீங்கள் மனசைப் போட்டு அலட்டிக்கொள்ள வேண்டாம்.
இது இயல்பே.
ča

Page 16
இத்தனை ஆண்டுக் காலமாக, இத்தனை யுத்தக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், கொழும்பிற்குப் புலம் பெயர்ந்த சூழ்நிலையிலும் அத்தனை சிரமங்களையும் தனி ஒருவராகத் தாங்கிப் பிடித்து வண்ணம் எப்படி இந்த நாற்பது ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளிர்கள் என நான் எனக் குள்ளேயே ஆச்சரியப்படுவதுண்டு.
உங்களைப் போன்றவர்கள் சமகால வாழ்வுக்குரியவர்களல்ல - வரலாற்றுக் குரியவர்கள்.
யாழ். பல்கலைக்கழகம் உங்களுக்கு அளிக்க முன்வந்த பட்ட அங்கீ காரத்தைக் கூட, நீங்கள் அங்கீகரிக்க மறுத்ததே ஒரு வரலாற்று நிகழ்ச்சி.
அந்தச் செய்தியைப் படித்ததும் நான் உங்களின் மீதும் உங்களது உழைப்பின் மேலும் வைத்திருந்த பெருமதிப்பை இன்னும் விரிவுபடுத்திக்
கொண்டேன்.
உங்களை நினைத்து உங்களை
ஈன்றெடுத்த யாழ்ப்பாண
என்றுமே பெருமைப்பட நியாயமுண்டு.
ז68% מu
இந்த நாற்பது ஆண்டுக் கால கட்டத்தை ஒருதடவை ஆறுதலாக இருந்து மீட்டெடுத்துச் சிந்தித்துப்
பாருங்கள்.
உயர்கல்வி, பல்கலைக்கழக வரலாற்று மாணவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளத்தக்கதான பல
தகவல்கள் உங்களது வாழ்வின்
28
ஒவ்வொரு கட்டத்திலும் பொதிந்து போய்க் கிடக்கின்றன.
"புகழாதீர்கள்... என்னை
மனமார வாழ்த்துங்கள்!" என உங்களுடைய கடந்த பிறந்த நாள் விழாவின் போது நீங்கள் விடுத்த வேண்டுகோள் எனது மனதை என்னமோ செய்தது. தொட்டு
விட்டது.
உங்களை, உங்களது குண இயல்புகளை, உங்களது இலக்கிய அர்ப்பணிப்புத் தொண்டுகளை யெல்லாம் வருங்கால மாணவர்கள் ஆராய்வார்கள் என்பது திண்ணம்.
ஆனால்,
இந்தக் காலகட்டத்தில் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும்
நீங்கள் வாழும் பலர்
மனக் கருத்துக்களையும் வெளி யிடத் தயவு செய்து சந்தர்ப்பம் தாருங்கள்.
இல்லாது போனால் எம்மைப் போன்றவர்கள் வரலாற்றிற்குத் து ரோக மிழை த்த வர்களாகி விடுவோம்.
இன்னமும் எழுத்தில் வடிக்க எவ்வளவோ கிடக்கு!
எதை எழுதுவது? எதை விட்டு விடுவது என்பதே தெரியாத நிலை. மேற்கொண்டு எழுதப் பயம். எங்கே இதையெல்லாம் நிராகரித்து விடுவீர்களோ என்று அச்சம்.

29 அறிமுகக் குறிப்பு :
攀 2 தமிழில் "சிங்களச் சிறுகதைகள் (பிரபல தமிழ் இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் 25.08.2004 இல் டெய்லி நியூஸ் பத்திரிகையில் எழுதியது)
ந்ெதவொரு சிங்கள வெளியீட்டாளாாவது இலங்கை எழுத்தாளர்களது தமிழ்ச் சிறுகதைகளைச் சிங்களத்திற்கு மொழி மாற்றம் செய்து பரந்த வாசிப்பிற்கென வெளியிட்டிருக்கிறார்களா? இல்லை! பொறுக்கி எடுத்த சில எழுத்தாளர்களது ஆக்கங்களை மொழி மாற்றஞ் செய்து தினமின, நவவிய, விவரண, மாவத்த ஆகிய சிங்கள ஏடுகள் பிரசுரித்திருக்கலாம். ஏன் இப்படி? ஏனெனில் பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள கணிச மானோர் வடக்கு, கிழக்கு, மலையகம், வடமேல், மேற்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் வாழும் தமது சகோதரர்களைப் பற்றி எதையாவது அறிந்துகொள்வதற்கு அக்கறைப்படுவ தில்லை. சிங்களச் சிறுகதைகளின் ஒரு தொகுப்பொன்று தற்பொழுது தமிழில் வெளியாகி இருப்பதை அறிய நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! 25 சிறுகதைகளடக்கிய இத்தொகுப்பைப் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் (கலாநிதி க. குணராசா) தொகுக்க, அதை மல்லிகைப் பந்தல் உரிமையாளர் டொமினிக் ஜீவா வெளியிட்டுள்ளார்.
மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைகளின் ஆசிரியர்கள்: மார்ட்டின் விக்கிரமசிங்க, ஜி.பி.சேனநாயக்கா, குணசேன விதான, கே. ஜயதிலக்க, குணதாச அமரசேகர, ரட்னா பி. எக்கநாயக்க, நிகால் ரஞ்சித் ஜயதிலக்க, எட்வின் ஆரியதாஸ, நிமல் சரத்சந்திர, குணதாஸ் லியனகே, திருமதி. ரி.பி.சுபசிங்க, வி.எம்.ஜயவர்தன, பொபி.பி.பொத்தேயு, ஆர்.ஜி.விஜயவர்தன, ஜோர்ஜ் ஸ்ரீபன் பெரேரா, எதிரிலிரசரத்சந்திர, திலக் சந்திரசேகர, ஆரியவன்ச சந்திரசிறி, வி.பியசோம பெரேரா, ஹெமா லியனகே, சோமசிறி பலவெல, விமல் எஸ். சமரசுந்தா, புத்ததாச கலபதிகே, விமலதாச சமரசிங்க, பிரியந்த சுஜித்த அத்தநாயக்க.
இவர்களில் கொஞ்சப் பேர் எனக்குத் தெரிந்தவர்களாக இருந்தாலும் அநேகர் என்னால் அறியப்படாதவர்களே! சிறுகதைகளை மொழிமாற்றம் செய்திருப்பவர்கள் நன்கு பிரசித்தமான தமிழ் எழுத்தாளர்கள். இப்மொழி மாற்றச் சிறுகதைகளில் அநேகமானவை டொமினிக் ஜீவாவால் பதிப்பிக்கப்படும் சஞ்சிகையான 'மல்லிகை இலக்கிய மாசிகையில் வெளியாகியவை. கொஞ்சக் கதைகள் 'மலர்" என்ற சஞ்சிகையிலும் பிரசுரமாகியுள்ளன. நல்லதொரு இலக்கிய சஞ்சிகை மட்டக்களப்பிலுள்ள ஆர்.நாகலிங்கம் (அன்புமணி) என்பவரால் வெளியிடப்பட்டது. ஆனால் அது அற்ப ஆயுளைக் கொண்ட ஏடாகும். 'மலர்" என்ற பெயரில் இன்னொரு சஞ்சிகையும் இருந்ததாம்! ஆனால் நானதைக் காண வில்லை. இத்தொகுப்பில் சில சிறுகதைகள் அவை பிரசுமான ஏடுகள் குறிப்பிடப்பட வில்லை. மொழி மாற்றங்கள் 1970களில் செய்யப்பட்டுள்ளன. ஒரு சிறுகதை 1967இல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருமதி. ரி.பி.சுபசிங்காவின் றாலஹாமி என்ற கதை சிவா சுப்பரமணியத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வி.எம். ஜயவர்த்தனாவின் அந்த வயிலின்காரன் பெரி சண்முகநாதனால் 1967இல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1967இல் "குருவிக் கூட்டை சிவா சுப்பரமணியம் மொழியாக்கம் செய்துள்ளார். இதன் சிங்கள வடிவம் ஆர்.ஜி.விஜயவர்தனா. 1969இல் நான்கும், 1980 இலும், 2004 இலும் ஒவ்வொன்று

Page 17
மொழிபெயர்க்கப்பட்டவை. இத்தொகுப்பி லிருந்து நான் சாமிநாதன் விமல் என்பவரது ஆளுமையைப் புரிந்து கொண்டேன். அவர் இன்னாரென்பதோ? அவாது பின்புலமோ? தெரியப்படுத்தப்படவில்லை. இத்தொகுப்பிற்கு அவரொரு முன்னுரை கொடுத்திருக்கிறார். அவரது முன்னுரையில் : “பியதாஸ் சிறிசேன என்பவர் 1909இல் நவீன சிறுகதையின் கட்டு மானத்தின் முதல் சிங்களச் சிறுகதையை எழுதினார். "சிங்கள ஜாதிய" என்ற பிரசுரத்தில் "டெய்சியின் துரதிர்ஷ்ட நாள் சமனாவின் அதிர்ஷ்ட நாளாகியது" என்ற கதை பிரசுரமா கியது. ஆரியதாஸ் சிறிசேன, டபிள்யூ.ஏ.டி. சில்வா, ஹேமபால முனிதாஸ், மார்ட்டின் சில்வா ஆகியோரே சிங்களச் சிறுகதைகளின் முன்னோடிகள்.
பியதாஸ் சிறிசேனாவின் சிறுகதைகள் சிங்களத் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவரது கதைகள் இன்னமும் நூல் வடிவாகவில்லை. சமூகத்தின் தீயசெயற் பாடுகளை ரி.ஜி.டபிள்யூ.டி.சில்வா, ஹேம பால முனிதாஸ் ஆகியோரது கதைகள் விமர் சிப்பவை. ரி.ஜி.டபிள்யூ.டி.சில்வாவின் மூன்று தொகுப்புகள் கிடைக்கக்கூடியதாகவுள்ளன. ஹேமபால முனிதாஸவின் "மானலிய" 1928 இலும் "வகல் லென்தேசிய 1946 இலும் வெளிவந்தவை.
டபிள்யூ.ஏ.டி.சில்வாவின் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. தனது கதைகளில் யதார்த்தத்தையும், காதலையும் அவர் உள்ளடக் கியுள்ளார். அவரொரு நாவலாசிரியர். மார்ட்டின் சில்வா ஒரு சிருஷ்டி எழுத்தாளர் மட்டுமன்றி திறனாய்வாளருமாவர். இலங்கை யின் தென்பகுதிக் கிராமங்களிலிருந்து அவரது கதா மாந்தர்கள் உருவாக்கப்படுவர். சிங்களச் சிறுகதைகளின் முன்னோடிகளில் மார்ட்டின் விக்கிரமசிங்க கலைத்துவமாகவும் எழுதக் கூடியவர். அவரது ஐந்து தொகுப்புகளுண்டு. அன்ரன் செக்கோ போன்ற ரஷ்ய எழுத் தாளர்களின் செல்வாக்கில் ஊறியவர். கை டி மொபசானின் தாக்கத்தையும் பெற்றவர்.
3 O அடுத்த கட்ட எழுத்தாளர்களில் ஜி.பி. சேன நாயக்க முக்கியமானவர். அவரது இரண்டு தொகுப்புகள் உண்டு. சிங்கள சமூகத்தின் மா நகர மத்திய தர வாழ்க்கையை அவரது ஆக்கங்கள் மையம் கொள்ளும். உளவியல் நிலைமைகளைத் தெரியப்படுத்த அவர் குறி யீடுகளைப் பயன்படுத்துவார். சிங்களச் சிறுகதைகளை மாபெரும் கலை வடிவங் களாக்கப் பொறுப்பாக இருந்தவர் குண தாஸஅமரசேகர. ரது றோச மல் என்ற அவரது முதல் தொகுதி 1953இல் வெளி யானது. 1950இல் இவரது ‘சோமா” என்ற சிறுகதை பொறுக்கி எடுக்கப்பட்ட 49 சிறந்த சர்வதேசச் சிறுகதைகளில் ஒன்றா கியது.
ஜே.ஜயதிலக்காவும், மடவெல எஸ்.ரத் னாயக்காவும் இரு முக்கிய சிங்களச் சிறுகதை ஆசிரியர்கள். கிராமிய மத்தியதர வர்க்கத்தை உள்ளடக்கி எழுதுபவர்கள். சிறுகதைகளில் சோசலிச யதார்த்தத்தின் அவசியத்தை 1970களில் காட்டின. ஏ.வி. சுரவிர, சைமன் நலகத்தேகம, குணசேன வடிதான ஆகியோர் 1970-1977 காலபகுதிக் குரிய அவதானத்தைப் பெற்ற எழுத் தாளர்கள். ஏ.வி. சுரவீர சிங்கள இலக்கிய விமர்சனத்திலும் பங்களிப்பு செய்துள்ளார். தற்போதைய முக்கிய எழுத்தாளர்கள் ஜயதிலக்க சமரவிர, எரிக் இலயப்பா ஆராச்சி, நிசங்க விஜயமன்ன, சோமரத்ன பாலசூரிய, ரெனிசன் பெரேரா ஆகியோர். இவர்கள் யதார்த்தவாதிகள். சிருஷ்டி ஆக் கத்தில் அஜித் திலகசேனாவின் மொழி யாளுகை பிரமாதமானது. கே.கே.சமன் குமார, அசோக சண்டகம, மஞ்சுளா விஜய வர்தன, டிமுது சிறிவர்தன ஹென்றி வர்ணகுல சூரிய, டிலினா வீரசிங்க, சுனித்ரா ராஜகருணாநாயக்க கேள்விகள் தொடுக் கின்றனர். சிங்களச் சிறுகதைகள் நூலை வாசித்த பொழுது சிங்கள கலாச்சாரம் பற்றிய புரிந்துணர்வை உள்வாங்கினேன்.
தமிழில் : செல்லக்கண்ணு

31
கடிதங்கள்
தமிழின் இலக்கியத் தளத்தில் 70களில் இருந்து எழுதியும், இயங்கியும் வருகிற நான் தங்களை அப்போதிருந்தே அறிவேன்.
அது நான் எழுதத் தொடங்கிய காலம். அதாவது 70களின் தொடக்கம். அப்போது 'மக்கள் செய்தி' என்று ஒரு நாளிதழ்?, 'உழைக்கும் மக்கள் பத்திரிகையாளர் சங்க சம்மேளனத்தின் வெளியீடாகத் தமிழ்நாட்டிலிருந்து வந்தது. அதில் தான் தங்கள் நேர்காணல் படித்ததாக நினைவு.
அதே பத்திரிகையில் 'வாசகர் அரங்கில் தங்களைப் பற்றி ஒரு விரிவான விமர்சனக் கடிதம் எழுதித் தங்கள் முகவரியையும் ஆசிரியரிடத்தில் கேட்டிருந்தேன். அந்த சுவாரஸ்யமான "கடிதக் கட்டுரை அப்போது பிரசுரமாகி நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்கள் முகவரியையும் தனியே வெளியிட்டிருந்தார்கள். அப்போது நான் தங்கள் 'மல்லிகை இலக்கிய இதழைப் படிக்க மிகவும் வாஞ்சையாக இருந்தேன். குடும்பம், இலக்கியம், அரசியல் என்று பல்வேறு அலைக்கழிப்புகளினால் அப்போதே நான் தங்களுக்குக் கடிதம் எழுதித் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது.
அன்றைய அரசியல், பண்பாட்டுச் சூழலில் எனக்கு "டொமினிக் ஜீவா என்றால் இலங்கையின் இடதுசாரி எழுத்தாளர் என்றும், 'மல்லிகை இலக்கிய இதழின் ஆசிரியர் என்கிற அளவில் மட்டுமே தெரியும்.
90களின் தொடக்கம் அது. இந்திய அளவில் "புரட்சியாளர் அம்பேத்கரின்
நூற்றாண்டு விழா' பெரும் காட்டுத் தீயென எழுந்தபோது, மராட்டியத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்டோரின் உள்ளக் குமுறலாக உரக்கப்

Page 18
பேசத் தொடங்கியது. நான் தலித் பண் பாட்டுப் பேரவை" போன்ற தத்தவார்த்த அமைப்புகளிலே என்னை இணைத்துக் கொண்டு நமக்கான அடையாளத்தை, நமக்கான இலக்கியத்தைப் பதிவு செய்யத் தொடங்கியதும், விரத்தின் விளை நிலமான ‘விடுதலைச் சிறுத்தைகள்” எனும் சாதி ஒழிப்பு இயக்கத்திலே சமரசமற்று இயங்கியதும் - இயங்கி வருவதும் ஒரு பெரிய திருப்புமுனையான காரியமாகும்.
அப்போதுதான் ஈழத்தின் தனிப் பெரும் தலித் எழுத்தாளர் திரு. டானியல் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு அறிமுக மாயின. அவரின் "பஞ்சமர்', 'அடிமைகள்' போன்ற படைப்புகளைப் படிக்க நேர்ந்த அவரைத் தொடர்ந்து திரு. டொமினிக் ஜீவா அவர்களும் கூட தலித் எழுத்தாளர்தான் என்கிறதை அறிய நேர்ந்த அந்தக்கணம் எனக்குள் ஏற்பட்ட இனந் தெரியாத உணர்ச்சிகளை எல்லையில்லாமல்
போது
செய்துவிட்டது.
அதன் ஊடாக நிகழ்ந்த ஒரு கலாச்சார மாற்றத்தின் இடையே ‘தலித் முரசு’ இதழில் தங்களின் இலக்கிய நேர்காணலை படிக்கிற வாய்ப்புக் கிட்டியது. தங்கள் முகவரியை அதிலும் பிரசுரிந்திருந்தார்கள். அப்போதும் கூட எனக்குத் தங்களோடு தொடர்புகொள்ள இயலாது போயிற்று.
ஆனால், "கலைமகள்' இதழில் தங்களைக் குறித்து ஒரு கட்டுரை வந்திருந்தது. அதனைப் படித்தபோதுதான் தங்கள் முகவரிக்கு இப் போது இந்தக் கடிதம் எழுத ஏற்பட்டிருக் கிறது. ‘நமக்கான இதழ், நமக்கான இலக்கியத் தளம்." என்கிற போது
பாருங்கள். ஜூலை மாத
32
ஏற்படாத ஒர் உணர்வு அல்லது நெருக்கம் வெளியே மாற்றுக் கலாச்சாரத் தளத்தில் நாம் வெளி படு கிறபோது ஏற்படுகிறது என்று சொன்னால் எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது. இதைத்தான் எல்லை களற்று விரிந்த மனங்களின் இணைப்பு அல்லது மனித நேயம் என்கிறோமா? எனக்குத் தெரியவில்லை.
எப்படியோ. 70களில் தங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்த நினைப்பு 2000 களில் நிறை வேறியிருக்கிறது. இந்த 30 ஆண்டு களில் நான் எழுத எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதைத் தொடர்ந்த வளர்ச்சிகள் ஊடாக 'ஈழத்தின் இலக்கியம்’ என்கிறபோது தாங்களும் என்னோடு கூடவே வந்திருக்கிறீர்கள். அதன் அடையாளம்தான் இந்தக் கடிதம்.
இதனோடு கூடவே என்னுடைய ‘புதுச்சேரியின் முதல் சென்ரியு தொகுப்பு' 'யாதெனில்" எனும் கவிதை நூல் தங்கள் பார்வைக்கு வருகிறது. இந்நூல் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் முன்னரே நமது மக்களிடத்தில் மிகவும் எளிய முறையில் வெளியிடப்பட்டது.
இதில் தமிழ்த் தேசியம், தலித் தியம், மார்க்சியம் என்று மனித விடு தலைக்கான கூறுகளும், எதேச்சதிகாரத் திற்கு ஏதிரான அறைகூவல்களும், எச்சரிப்புகளும் கவனமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இருண்ட கால அரசியல்" கீழ்மையை

மக்களுக்கு அம்பலப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டு, அதற்கேற்ப தேர்தல் முடிவு களும் அமைந்துவிட்ட சூழலில் தாங்கள் இந்நூலைப் படித்துப் பார்த்துத் தங்கள் கருத்தை, விரிவான விமர்சனத்தை எழுதி அனுப்பினால் அது என் தமிழ்ப்பணி சிறக்க ஏதுவாக இருக்கும். என் சமகாலத்து எழுத்தாளனாய் என் இனிய சகோதரனாய் இதை 'ஆத்ம திருப்தியோடு செய்வீர்க ளென்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது.
உண்மையில் நான் இந்தக் கடிதம் தங்களுக்கு எழுதியதின் நோக்கம் இதுதான் என்றாலும் கூட, என் பிரதானமான ஆசை, கனவு, இலட்சியம், இலக்கிய தாகம் இன்ன பிற வெல்லாம் இதழைப் படிப்பதும், அதில் எழுதுவதும் தான். என் நெடுநாளைய உள்ளக்
"மல்லிகை"
கிடக்கையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் "மல்லிகை இதழை எனக்கு அனுப்பித் தருவீர்களா..? பார்வைக்குப் புதிய இதழ் ஒன்றுடன் ஆண்டுக் கட்டணத்தையும் குறிப்பிட்டு எழுதினால் தொகை அனுப் பித்து இதழ்களைத் தொடர்ந்து பெற்றுக் கொள்கிறேன்.
கூடவே தங்கள் "வாழ்க்கைச் சரிதம் "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' நூலையும் மறவாமல் அனுப்பி வையுங்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த என் மூத்த எழுத்தாளரின் வாழ்க்கைத் துயரங்களைப் படித்தறிந்து என் 'பாடுகளோடு பொருத்திப் பார்த்துக் கண்ணீர் வடிக்கவும், அந்தக் காயங்களி லிருந்து நமக்கான "காலத்தை' உருவாக் கவும் தங்கள் புத்தகம் காரணமாக அமையக் கூடும் இல்லையா?
33
என் மன உணர்வைப் புரிந்து என்
வேண்டுகோளினை ஏற்று எல்லாம்
செய்வீர்களென்ற அன்பின் மிகுதியில்
தங்களிடமிருந்து பதிலை எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்.
பாரதி வசந்தன் புதுச்சேரி.
மாதா மாதம் மல்லிகையை சிரமமின்றிப் பெற்றுகொள்ளக் கூடிய வாய்ப்பை புத்தளத்தில் நண்பர் கதாராஜ் அவர்களின் சாஹித்திய புத்தக இல்லம் எமக்கு வழங்குகிறது. அண்மையில் சாஹித்திய புத்தக இல்லம் இடம் மாறியிருக்கிறது. ஆகஸ்ட் இதழைப் பெற அங்கே சென்றபோது இப்புத்தக இல்லத்தில் பணிபுரியும் ஒரு சிங்களச் சகோதரி, "மல்லிகையைத் தேடி இங்கேயும் வந்து விட்டீர்களா?” என்று கூறினாள். தமிழ் வாசிக்கத் தெரியாதவராயிருந்தாலும் மல்லிகை'யைப் பற்றி தரமான இலக்கிய சுவைஞர்களின் பரம் பரையைக் கொண்ட ஒரு சஞ்சிகை என்று அச் சகோதரி அறிந்து வைத் திருக்கிறார்.
'அப்பே சேருத் மேக்கே லியனவா” என்று அவள் நண்பர் சுதாராஜ் அவர்கள் மல்லிகையில் எழுதுவதை அறிந்தவளாக முன்னர் என்னிடம் கூறியிருக்கிறாள். ஆகஸ்ட் இதழ்; கவிஞர் சேரனின் அட்டைப் படமும் நண்பன் எஸ். எழில் வேந்தனின் கட்டுரையும் என் நெஞ் சத்துக்கு கிளுகிளுப்பூட்டின. நண்பன் மேமன்கவியின் யாழ் இலக்கிய விழா!

Page 19
சில பயணப் பதிவுகள் எம்மையும் பயணத்தில் இணைத்து விடுகிறது.
அச்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம் வளரும் சஞ்சிகைகளின் ஆசிரியர் களுக்கான வழிகாட்டி நூலாக வெளியிடப் பட வேண்டியது. நாற்பதாவது ஆண்டு மலர் சிறப்புற முன்கூட்டியே வாழ்த்தி விடை பெறுகிறேன்.
இ.புஸ்பராஜன்.
புத்தளம்.
அமரர் மஹாகவியின் மைந்தன் சேரனின் உருவப்படம் மல்லிகையின் ஆகஸ்ட் இதழில் அழகாக முகப்பை
அலங்கரிக்கின்றது. பார்க்கப், படிக்க மனநிறைவு தருகிறது. நன்றி.
தமிழோவியன்.
ஒரு மனித நேய டாக்டர் பல அன்புத்
தொல்லைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றார் என்பதற்கு, "டாக்டரின் டயரி" ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும்.
தங்களுக்குத் தாங்களே வைத்தியம் பார்த்துக் கொள்ளும் அப்பாவிகள்; டாக்டர் கொடுக்கும் மருந்தை ஒருவேளை உட் கொண்டு குணமடைய நினைக்கும் புத்தி சாலிகள் மருந்துக் கடைகளில் காலங் கடந்த மருந்துகளை வாங்கி ஏமாறும் நோயாளிகள்; கண்டவர் கூறும் மருந்து களைச் சாப்பிட்டு உயிராபத்தைத் தேடிக் கொள்ளும் தழும்பல் பேர்வழிகள்; தாங்களே ஊசி மருந்துகளை ஏற்றிக் கொள் பவர்கள்; உணவுக் கட்டுப்பாட்டை மீறி, ஆயுளைக் குறைத்துக் கொள்பவர்கள், எவ்வாறெல்லாம் பின் விளைவுகளுக்கு
34 ஆளாகின்றார்கள் என்பதை 'டாக்டரின் தெளிவாகச் காட்டுகின்றது.
u uuu if? ʼ சுட்டிக்
நூலில் காணப்படும் தலைப்பு களும் சித்திரங்களும் சிறப்பாக வுள்ளன. மருத்துவ ஆலோசனை நூலாகவும், அறிவுரை நூலாகவும் இதைக் கொள்ளலாம். எளிய, இனிய நடையில் நகைச்சுவையுடன் எழுதப் பெற்றிருப்பது ஆசிரியரின் எழுத் தாற்றலை நன்கு புலப்படுத்துகின்றது.
வைத்தியமும் இலக்கியமும்
கைவருவது அரிது.
டாக்டர். எம்.கே. முருகானந்தன் அவர்களிடம் இரண்டும் சிறப்பாகக் காணப் பெறுகின்றன.
நூலைப் படிக்கும் பொழுது, ஒரு சிறுகதைத் தொகுதியை படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெற வேண்டிய ஒரு சிறந்த நூல், 'ஒரு டாக்டரின் டயரியில் இருந்து.'
சாரணா கையூம்
பரிசளிப்பவர்கள் ழத்துப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுங்கள். இப்படி நீங்கள் பரிசளிக்கும்போது நமது
முத்தாளன் ஒருவன் மதிக்கப்படுகிறான். s உற்சாகப்படுத்தப்படுகிறான். இதைக்
கவனத்தில் கொள்ளுங்கள்
 

з5
நூல் மதிப்புரை
கோகிலா மகேந்திரனின்
முகங்களும் மூடிகளும்
- எம்.கே. முருகானந்தன்
சிறுகதைகள் என்பவை நவீன யுகத்திற்கானவை. கதையை அல்லது சம்பவத்தைச் சுருங்கச் சொல்லுதல், சுவாரஸ்யமாகச் சொல்லுதல், மனதில் உறைக்குமாறு சொல்லுதல் போன்றவை இவற்றின் சில முக்கிய பண்புகளாகும். இந்த இலக்கிய வடிவமானது காலத்தின் தேவையை ஒட்டி எழுந்தது. இந்த அவசர யுகத்தில், தான் எதைத் தேடுகிறான் என்பது கூடத் தெளிவில்லாமல் மனிதன் தலை தெறிக்க ஒடிக்கொண்டி ருக்கிறான். அவனுக்குக் கிட்டும் குறுகிய ஒய்வு நேரத்திற்குள் அவனை மடக்கிப் பிடித்துத் தன் கருத்துக்களைச் சொல்லிவிட வேண்டும் என்று எழுத்தாளன் விரும்பு கிறான். தான் வாழும் சமூகத்துடன் முரண்பட்டு அதன் சிதைவையும், சீரழிவையும் கண்டு பொறுக்காது, அதனை விமர்சித்து நல்லதோர் சமூகத்தைக் கட்டி எழுப்ப அவாவுறும் சமூகப் போராளியான எழுத்தாளனின் உள்நோக்கம் காரணமாகவே சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் சொல்லப்படும் இலக்கிய வகையான சிறுகதை எழுந்தது எனக் கொள்ளலாம்.
இதன் காரணமாக தமது கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல விரும்பி யவர்களின் வலுவான ஆயுதமாகச் சிறுகதைகள் பயன்பட்டன. வேறு வார்த்தைகளில் சொல்லுவதானால் பிரச்சாரத்திற்கான போர்க் கருவியாகப் உபயோகிக்கப்பட்டது. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடியான வ.வே.சு. ஐயர் இதனைச் செய்தார். இடைக்காலத்தில் எழுதிய ஜெயகாந்தன் போன்றோரிடமும் இப்பண்பு இருந்தது. இன்றைய பெரும்பாலான சிறுகதைகள் தலித் இலக்கியம், பெண்ணியம், இனப் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகளைப் பேசும் போதும் பிரச்சாரமே அடித் தளமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Page 20
ஒரு எழுத்தாளன் தான் விரும்பும் கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல சிறு பயன்படுத்து வதில் எந்தவித தவறும் கிடையாது. கோகிலா மகேந்திரனும் ஒரு சமூகப் போராளி. தான் வாழும் சமூகத்தில் அக்கறை கொண்டவர். ஆசிரியர், கல்வி
கதைகளைப் கருவியாகப்
யதிகாரி, எழுத்தாளர், நடிகர், உளவளச் சீர்மியர் எனப் பல முக மூடிகளை அணிந்து தான் வாழும் சமூக முன்னேற்றத் திற்காக அயராது உழைப்பவர். இந்த வகையில் பார்க்கையில் சமூக எழுச்சி நோக்கிய பயணத்திற்காகவே சிறுகதையும் சொல்லுகிறார். 'முகங்களும் முடிகளும்" என்ற அவரது இப்புதிய சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது.
இத்தொகுப்பின் முதற் கதையான முகங்களும் மூடிகளும் சூழல் மாசடைதல் பற்றிப் பேசுகிறது. மனிதனின் அதீத தலை யீட்டினால் காட்டு விலங்குகளின் சமநிலை குலைதல் பற்றி தலையீடு" பேசுகிறது. பெண்ணியம் பேச, "உயர்ந்து செல்லும் சீரழிவு மானி’ சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி அலசுகிறது. பல கதைகள் மனோதத்துவத்தை வெளிப்
*பெண் பனை?
படையாகவே பேசுகின்றன. இன்னும் பல கதைகளில் தாவரவியலும், விலங்கியலும் கதைகளோடு கலந்து வருகின்றன. இனப் பிரச்சினையும் அதன் காரணமாகத் தமிழ் இனம் எதிர்கொள்ளும் அவலங்களும், இதனால் அவர்கள் ஆழ் மனதில் ஏற்படும் வடுக்களும் இத்தொகுப்பின் எல்லாக் கதை களிலும் பின்னணியாக அமைந்திருக் கின்றன.
ஆனால் கருத்தை முன்வைப்பது மட்டுமே பெரு நோக்கமாக இருந்து
3 6 இலக்கிய உணர்வு தளர்வுற எழுதும் போது படைப்பின் கலைத்துவம் கெட்டு விடும். சப்பென்ற வெறும் கட்டுரையாக மாறிவிடும் அபாயம்
இருக்கிறது.
"மெத்தென்ற மெளனம்" இதற்கு ஒர் உதாரணம். இக்கதையைக் படிக்கும் போது ஒரு மனோதத்துவக் கட்டுரைக்கு ஆரம்பத்திலும் இறுதி யிலும் சில ஒட்டு வேலைகள் செய்து சிறுகதை வடிவம் கொடுக்க முயன்றி ருக்கிறார் என்ற உணர்வே தோன்று கிறது. இதனால் சிறுகதைக்கான கட்டமைப்பைப் பேணவோ, அநுபவப் பரிமாறலைச் செய்யவோ இக்கதை தவறிவிடுகிறது.
ஆயினும் கலையுணர்வு மிக்க வரான கோகிலாவின் பெரும்பாலான கதைகள் அவ்வாறு இல்லை என்பது மனங்கொள்ளத்தக்கது. "A good short story book is sound and Solid like a rock and answers every knock ’ ” GT Gör go Laurie. E.Dawson னின் கருத்தை தனது இலட்சியமாகக் கொள்வதாகத் தன் முன்னுரையில் கூறுவதன் மூலம் தன் சமூகக் கடப்பாட்டை மறந்து விடாத அதே நேரம் தனது படைப்பின் நேர்த்தி யிலும் கவனம் கொள்கிறார் என்பது தெளிவாகிறது.
கோகிலாவைப் போலவே எதோ ஒரு பிரச்சார நோக்கே அடிப்படையாக இருந்தபோதும், மேலோங்கி நிற்கும் எழுத்தாளர்கள் இரண்டு வகையில் தமது இலக்கிய வேட்கையை வெளிப்படுத்த முயல்
கலையுணர்வு

கின்றனர். முதலாவது வகையினர் புத்தம் புதிய மாற்றங்களைத் தமிழ்ச் சிறுகதை யினுள் புகுத்த வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். முக்கியமாக சிறு கதையைச் சொல்லும் பாரம்பரிய முறை யிலும் அதன் வடிவத்திலும் நவீனத்துவ மாற்றங்களைக் கொண்டு வருபவர்கள். இரண்டாவது வகையினர் மனத்தை ஈர்க்கும். மொழிநடையாலும், அநுபவப்
பகிர்வாலும் வாசகனோடு நெருங்கி
வருபவர்கள்.
கோகிலா தனது சிறுகதைகளில் இந்த இரண்டு விதமான மாற்றங்களையும்
கொண்டுவர முயன்றாலும் வடிவ மாற் றங்கள் முக்கியமாகக் குறிப்பிட வேண்டி
யவை. சம்பவச் சித்தரிப்பு, கதையை உச்சக் கட்டத்தை நோக்கி வளர்த்தல், எதிர்பாராத முடிவுடன் நிறைவு செய்தல் போன்ற வழமையான வாய்ப்பாட்டு வடிவமைப்பை அவரது சில முக்கிய கதைகள் அற்புதமாக மீறுகின்றன. கதைக்குள் கதை கூறி தான் சொல்ல வரும் கருத்திற்கு வலு சேர்க்கும் இப்பண்பு மூலம் சிறுகதைகளின் வழமை யான கட்டமைப்பைத் தகர்க்கிறார். ‘வாழ்வுந்தலும் மற்றும் சுமத்தல் என்பது. போன்ற கதைகளில்
'மலையைச்
இவ்வுத்தியைக் கையாள்வதைக் காண் கிறோம்.
‘வாழ்வுந்தலும்." என்ற சிறுகதையில் பிரதான கதைக்கு வலு சேர்க்க வேறு இரு கதைகளை இணைக்கிறார். அவை கதை யோடு கதையாக இரண்டறக் கலக்காமல் தனித்தனியாகச் சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்மாறாக "மலையைச் சுமத்தல் என்பது." என்ற சிறுகதையில் பிரதான கதையோடு ஏனைய கதைகள் இரண்டறக்
கலக்கும் உத்தியைப் பயன்படுத்துகிறார்.
37 கதைக்குள் கதை சொல்வது என்பது தமிழ் மக்களுக்குப் புதிய யுக்தி அல்லதான். மேடைப் பேச்சுகளிலும், வில்லுப்பாட்டு மற்றும் ஆன்மீக உரை களிலும் இவற்றை நாம் ஆண்டாண்டு காலமாக இரசித்து வருகிறோம். நாவல் களிலும் இது இடம் பெறுகின்ற போதும் சிறுகதைகளில் இவ்வாறு சொல்லப்படுவதில்லை. சிறுகதை களுக்குள், கதைக்குள் கதை சொல்லும்
உத்தியை மிக லாவகமாவும் நவீனத்து
வத்துடனும் கையாண்டு இக்கதைகளை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.
சிறுகதையின் வடிவத்திலும் அதனைச் சொல்லும் உத்தியிலும் அவர் பரீட்சித்துப் பார்த்த ஏனைய முறை களாகக் குறியீட்டு முறையில் கதை சொல்லுதலையும், கடித வடிவில் சொல்லுதலையும் குறிப்பிடலாம். 'விஷம்", "தலையீடு" ஆகிய இரு கதை களும் குறியீட்டுக் கதை என்பதை மேலோட்டமாகப் படிக்கும் வாசகன் கூட எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அவை பேசும் பொருள்கள் வாசகனுக்கு நன்கு பரீச்சயமானவை. ஆயினும் 'கூறானது "புலன்களுக்கு அப்பால் உள்வாங்குதல்" ஆகியனவற்றில் வெளிப்படையாகச் சொல்லப்படும் கதைகளுக்கு அப்பாலும் ஆழமான கருத்துக்கள் மறைந்திருக்கின்றன என்பதை சற்று ஆழ்ந்து படிக்கும் வாசகர்களும், உளவியல் அறிவு
மனம்",
சற்றேனும் உள்ளவர்களும் புரிந்து கொள்வார்கள்.
அதிலும் 'புலன்களுக்கு அப்பால் உள் வாங்குதல் முக்கியமாகக்

Page 21
குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். மிகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டுள்ள கதை இது. அதற்குள் மெல்லிய நகைச்சுவையும் ஈடோடுகிறது. நல்ல கதை என இரசித்துப் படித்து மன நிறைவு கொள்ளும் கடைசித் தருணத்தில், அதன் இறுதி வசனம் கூராக குத்தி எம் மனதை ஊடறுத்துச் செல்கிறது. ஒரு உளவியல் உண்மை அப்போது தெளிவு
சுவாரஸ்யமாகவும்,
பெறுகிறது. அவரது வெள்ளை ஆடையை இப்பொழுது நான் உற்றுப் பார்க்கத் தொடங்கினேன்” இதுதான் அந்த இறுதி வசனம். இவ்வசனத்தை நீங்கள் இப் பொழுது தனியாக கதைத் தொடர்புகள் அற்று வாசிக்கும் போது எந்த ஆழமான கருத்தையும் வெளிப்படுத்தாத "வெள்ளை மனம்" கொண்ட வாக்கியமாகப் புலப்படும். ஆயினும் அக்கதையை முழுமையாகப் படித்துப் பாருங்கள். அதன் வீச்சுப் புலப் படும். இக்கதையே இத்தொகுப்பில் மற்ற எல்லாக் கதைகளையும் மேவி நிற்கும் சிறந்த கதையாக நான் உணர்கிறேன்.
இவற்றைத் தவிர தன்னனுபவ மாகவும், தன்னனுபவம் போன்ற உணர்வைக் கொடுப்பதாகவும் சொல்லப் படும் கதைகள் பல. முகாமுக்குப் போகாத அகதி" 'நெருஞ்சி', இளங்கனவு’, ‘பூக்குளிப்பு', 'ஏ-9 பாதை'
“பெண் பனை",
போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் 'முகாமுக்குப் போகாத அகதி", பூக்குளிப்பு ஆகிய இரண்டும் மிகவும் நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்ட அனுபவப் பகிர்வாக அமைகின்றன. இதனால் வாசகனை இலகுவாகச் சென்றடை கின்றன.
இத்தொகுப்பில் உள்ள சிறு கதைகள் அனைத்திலும் சீர்மிய உளவியல் சார்ந்த
38
எண்ணக் கருக்கள் இருப்பதால் அவற்றை ஒரே தொகுப்பாக்கி இருப்ப தாக கதாசிரியர் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இக்கதைகள் யாவும் சீர்மிய உளவியல் சார்ந்தவை என்ற கூற்றை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் வாசகர் களாகிய எமக்கு இல்லை. ஏனெனில் படைத்து முடித்து, பிரசுரம் ஆனபின் அப்படைப்பானது வாசகனின் சொத்தாகி விடுகிறது. ஆயினும் தன் தொழில்சார் பணிகளுக்கு மேலாக
உளவியல் சீர்மியராகவும், சாந்தீகத்தில்
உளவளத் துணைப் பயிற்சி அளிப்ப வராகவும் இருக்கும் அவரது தெளிந்த அறிவும், பரந்த அனுபவமும் கதைக ளில் ஆங்காங்கே தெறித்து விழ்கின்றன என்பது உண்மையே.
"உயர்ந்து செல்லும் சீரழிவு மானி' கதையில் வரும் இவ்வசனத்தை
இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
"இதுகளையெல்லாம் யோசிச்சா வாயாலையும் மூக்காலையும் இரத்தம்
வரும். மூக்காலை மூச்சே வராது. அப்ப வாயாலைதான் மூச்சு விடுறனான்."
மேலே சொல்லபட்ட அறிகுறிகள் மனவியல் நோயான மெய்ப்படுதல் (Somatization) aSai Gau Giffů u Li; கூடியவை. அதாவது மனதில் உள்ள நோய் உடலில் உள்ள நோயாக வெளிப் படுத்தலாகும். இதை மிக நுட்பமாக அவதானித்துத் தெளிவாகத் தனது கதையில் சொல்லியிருக்கிறார்.
பல சிறுகதைகளின் முடிவுகள், கதாசிரியர் தான் ஒரு பாடசாலை ஆசிரி

யரும் கூட என்பதை நிரூபிப்பது போல வாசகனுக்கு கதை விளங்குகிறதா? என அறிய வினாத்தாள் கொடுப்பது போல் சிக்கலாக இருப்பதாக நான் உணர்ந்தேன். ஆயினும் இவர் கதைகளை நிறைவு செய்யும் பாணி இன்னொரு சிறுகதைக்கு தொடக்கமாக அமைவது போல அமை வதும் உண்டு" எனக் கலாநிதி எஸ்.சிவ லிங்கராசா தனது அணிந்துரையில் சிலா கித்துச் சொல்கிறார். ஆம்! ஒரு படைப்புப் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் முற்றும் முடிவானவை அல்ல. வாசகனின் தன்னணு பவம், நோக்கம், வாசிப்பு உலகின் விஸ் தாரம் போன்ற காரணங்களால் மாறுபடவே செய்யும்.
அழகியலை விட அறிவியல் மேலோங்கி நிற்பது பல கதைகளில் துருத்திக் கொண்டு நிற்கிறது. ஆவியு யிர்ப்பு, ஈர்ப்புவிசை பிரதான காரணியாக இருந்தும், வேரமுக்கம், நீர் மூலக் கூறு களின் பிணைப்பு விசை, மயிர்த்துளை எழுகை ஆகிய விசைகளுடன் நீர்மணிகள் என் எல்லையை அடைந்த போது." என்றும், “மன்னிக்கவும் போஸ்ட் gjiGLITL876) Gor (Post Abdomen) ët’iqë கொண்டிருக்கிறார்" என்றும் 'இழப்புத் தொடர்பான சீர்மியம் செய்வதாயின் பூனையை எந்தெந்தப் படிநிலைகளூடாக அழைத்துச் செல்ல வேண்டும்" எனவும்
39 எழுதும் போதும் வாசகன் எப்படி அச்சிறு கதையுடன் நெருங்கி வர முடியும் என்பது கேள்விக் குறியா கிறது. தான் கற்றவற்றை வாசகனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவனது அறிவு நிலையை உயர்த்த வேண்டும் என்ற கோகிலாவின் பள்ளி ஆசிரிய இயல்பு, கலையுணர்வுள்ள கதா சிரியரின் பணியைச் சிதைத்து விடுவ தாகவே எனக்குப் படுகிறது.
மொத்தத்தில் சொல்வதானால் இது ஒரு வித்தியாசமான தொகுப்பு. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட சிறுகதைகளை அடக்குகிறது. இதற்குக் கதாசிரியரின் பன்முகம் கொண்ட ஆளுமைதான் காரணமாகும். இதனால் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் வெறும் பொழுதுபோக்கு வாசிப்புக்கு உரியனவாக அமைய வில்லை. பரிசோதனை முயற்சிகளை வாசிக்க முனையும் திறந்த மனது கொண்டவர்களும், உயிரியல், உள வியல் போன்ற அறிவியல் துறைகளில் நாட்டம் உள்ளவர்களும் விரும்பக் கூடிய உயர் வாசிப்பிற்கு உரிய நூல் எனலாம். ஆயினும் எந்தவித வாச கனையும் கவரக் கூடிய சில சிறுகதை களையும் உள்ளடக்கியுள்ளன என்பதும் உண்மையே.
"மல்லிகைப் பந்தல்" வெளியீடுகளை விரும்பி வாசிக்க
ஆர்வமுள்ளோர் தயவு செய்து நமது பணிமனைக்கே
நேரில் வந்து வாங்குங்கள். இது நமது உறவைப் பேணிப்
பாதுகாப்பதுடன் மல்லிகைக் காரியாலயத்தையும் நேரில்
கண்டுகொண்டதாக அைைமயும்.
ஆசிரியர்.

Page 22
V மழையின் வருகையை
படம் பிடித்தது மின்னல்.
V இறக்காமல்
6) ITUp6)ITLD உறுப்புக் கொடை.
V gıç
குடியைக் கெடுக்கும் பெப்சி - கோலா.
Y ஏமாற்றத்துடன்
கொக்கு வறண்ட ஏரி.
Y முயற்சி
திருவினை ஆக்கும் சிலந்தி.
Y பண்பாட்டுச் சீரழிவை
விலைக்கு வாங்கினார்
தொலைக்காட்சிப் பெட்டி.
* நேரம்
சரியில்லை ஓடாத கடிகாரம்.
V கார்ல் மார்க்சின்
மூளை தானம் ep6560TLb.
W ஏன்
கள்ளிப்பால்
முடியும் பெண்ணால்.
4 O
gJGflÜUI
- கு.அ.தமிழ்மொழி
நிலவையும் விட்டுவைக்கவில்லை மதம்.
நல்லநேரம் பார்த்து
புறப்பட்டார் சோதிடர்
குறுக்கே ஓடியது பூனை.
செடியின் புன்னகை அழகுதான் பூக்கள் பறிப்பதற்கில்லை.
மரம் வெட்டிய இடத்தில் நடந்தது
மரம் நடும் விழா.
எங்கெங்கும்
சூழல் கேடு
ஞெகிழி (பிளாஸ்டிக்)

41
சுெவி 2ܨܘܬܐ-ܠܗܐ
QA فلماليك ህራJወጣ® ஆடாமினிக் ஆறடொமினிக் ஜீவா
இரண்டொரு நாட்கள் காத்திருந்தேன்.
எந்தவிதமான தகவல்களும் நண்பர் வித்தியாதரனிடமிருந்து எனக்கு வந்த பாடாகத் தெரியவில்லை. ‘இப்படி ஒரேயொருவரை நம்பிக் காவல் காத்திருப்பது அத்தனை பெரிய சங்கதியல்ல!’ என என் உள்மனது அடிக்கடி எனக்குச் சொல்லி எச்சரித்தது. இப்படியே நாட்கள் கழிந்திருக்கும்.
ஒருநாள் பகல் ஓர் இளைஞன் சைக்கிளில் என்னைத் தேடி மல்லிகைக்கு வந்திருந்தான். வந்தவன் ஒரு கடித உறையை என்னிடம் நீட்டினான். கடிதத்தை விரித்துப் படித்தேன். நான் எதிர்பார்த்திருந்த தகவல்கள் அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
நண்பர் வித்தியாதரன் தான் அக்கடிதத்தை எனக்கு எழுதியிருந்தார். தனது மச்சான் சரவணபவனுடன் மல்லிகைக்கு அச்சு இயந்திரம் சொந்தமாகக் கொள் வனவு செய்வது பற்றி நேரடியாகப் பேசி விட்டதாகவும், நீங்கள் நேரில் வந்து பேசினால் எல்லாம் சுமுகமாக நடந்தேறிவிடும் எனவும் அக்கடிதத்தில் குறிப் பிட்டிருந்த அவர், இன்று திங்கட் கிழமை. நல்ல நாள். பின்னேரம் நாலுமணிக்கு வந்தால் எல்லாமே சுபமாக முடியும் எனக் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார், J946) lff.
இதற்காகத்தானே இத்தனை நாட்களாக நான் ஆவலுடன் காத்திருந்தேன்.
எனவே கடிதம் தர வந்திருந்த "உதயன்' பத்திரிகை இளைஞனிடம் நான் நிச்சயமாக நான்கு மணிக்கு வந்து சந்திப்பதாகத் தகவல் சொல்லி அனுப்பி வைத்தேன்.

Page 23
நேரத்தை நிமிஷம் நிமிஷமாகக் கவனித்த வண்ணமிருந்த நான் நான்கு மணியானதும் எனது பிரசித்தி பெற்ற சைக்கிளில் உதயன் காரியாலயத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றேன். அங்கு உதயன் பொறுப்பாளரான சரவணபவன் என்னை முகமலர்ச்சியுடன் வரவேற்றுப் பேசினார். '
நானவரைச் சந்திக்க வந்துள்ளதின் நோக்கத்தைத் தனது மைத் துனர் வித்தியாதரனின் மூலம் விளப்பமாகத் தெரிந்து வைத்திருந்த அவர் “நீங்கள் ஒப்பேற்றி முடியுங்கள். மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை வித்தியாதரனே நேரில் நிண்டு கவனிச்சுச் செய்து தருவார்!’ எனப் பச்சைக்பொடி காட்டி, எனது ஆர்வத்துக்கு வடிகாலமைத்துத் தந்தார் சரவணபவன். காரியங்கள் யாவுமே வெகு கச்சிதமாக நடந்தேறி முடிந்தன.
அந்த வாரக் கடைசியில் வித்தியா தரனே முன்னின்று எல்லாக் காரியங் களையும் ஒப்பேற்றி முடித்து மல்லிகைக் குச் சொந்தமான அச்சு இயந்திரத்தை லொறியில் ஏற்றி வந்து, தானே முன்
கையெடுத்து மல்லிகைக் காரியாலயத்
தில் பொருத்தியமைத்து, முதல் அச்சுப் பக்கத்தை அந்த அச்சு இயந்திரத்தில் இயக்க வைத்து அச்சடித்துத் தந்துவிட்டுச் சென்றார்.
நாற்பது வருஷ மல்லிகை வரலாறு என வாயோதியாக நான் சொல்லி வந்த போதிலும் கூட, எத்தனை எத்தனை மனித உள்ளங்கள் இந்த மல்லிகையின் நாற்பது ஆண்டுக் கால வரவுக்குத் தங்களது பாரிய பங்களிப்புகளைத் செய்து தந்
ஒ
42
துள்ளனர் என எண்ணிப் பார்க்கும் இந்த வேளையில் மெய்யாகவே மனம் நெகிழ்ந்து அன்னாருக்கு எனது நன்றிகளை இந்தத் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அடுத்த கிழமை மல்லிகைக்கான சொந்த அச்சுக் கூடத் திறப்பு விழாவை வெகுகோலாகலமாக நடத்தி முடித்தேன்.
மல்லிகையின் நீண்ட கால அபி மானியும், கொழும்பும் ஐந்தாம் குறுக் குத் தெருவில் பிரபல வர்த்தகரும், தொடர்ந்து மல்லிகை இதழுக்கு விளம்பரம் நல்கி வந்தவரும் நல்ல மனசு படைத்தவருமான இ.சிற்றம் பலம் கம்பனியின் முதலாளி சிவ லிங்கம் அச்சிறப்பு நிகழ்ச்சியை முன் நின்று வெகு விமரிசையாக நடத்தி முடித்தார்.
யுத்தக் கொடுமையால் பஞ்சப் பட்டு அடுத்தவேளை உணவுக்குத் திண்டாடிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில், பத்துக் கொத்து அரிசி, அதற்கேற்ற வகை வகையான காய் கறிகளுடன், நானில்லாத சமயம் எனது வீடு தேடி வந்து ‘ஒரு மக் களுக்கானவனின் குடும்பம் பட்டினி கிடக்கக் கூடாது!’ என எனது இளைய மகள் பிரேமாவிடம் அவை களை ஒப்படைத்துச் சென்றது என் மீது தனியபிமானம் கொண்டவர், இவர். இவரது துணைவியாரும் ஓர் எழுத்தாளரே! மரகதா சிவலிங்கம் என்பது இந்த எழுத்தாளப் பெண்மணி யின் பெயர். இவரது தலைமையில் மல்லிகை அச்சகத் திறப்பு விழா
இனிதே நடந்தேறியது.

மல்லிகையை இதயபூர்வமாக நேசிக்கும் பலர் நேரில் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர். அந்த நிகழ்ச்சி இன்று கூட, என் மனசில் வெகு பசுமை யாகப் பதிந்து போயுள்ளது.
சகோதரர் சந்திரசேகரம் மல்லிகை இதழின் முதல் பாரத்தை அச்சு இயந் திரத்தில் பதித்தெடுத்து வந்திருந்த அனைவருக்கும் அந்த அச்சு அசல் நேர்த்தியை நேரடியாகவே காண்பித்து மகிழ்ந்தார்.
மல்லிகைக் காரியாலயத்திற்குள் வந்திருந்தவர்களை வரவேற்று உட்கார வைப்பதற்கான இட வசதியில்லை. எனவே, அச்சிற்றொழுங்கையின் இரு கரைகளிலும் கதிரைகளை வரிசையாக நிரைப்படுத்தி வந்திருந்தோரை உட்கார வைத்தோம். நடந்தேறி முடிகிற நிகழ்ச்சி யின் கனதிதான் முக்கியமே தவிர, நடை பெறும் இடம் அங்கு யாருக்குமே முக்கிய மாகப் படவில்லை. வந்திருந்த சகலரின தும் முகங்களில் ஏதோ தங்கள் தங்களது வீட்டு விசேஷங்களுக்குக் கூடியிருப்பது போன்ற சந்தோஷமும் பூரிப்பும் நிழலாடியது.
மகிழ்ச்சியின் உச்சக்கட்ட வெளிப் பாடாகப் பலர் என்னைக் கட்டிப்பிடித்து அரவணைத்து மகிழ்ந்தனர். இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியம் மேலிடுகிறது. சிற்றிலக்கிய ஏடுகளின் வரவு, வரலாற்றில் ஓரிரு இதழ்கள் வெளி வந்து நின்று போனவைதான் அதிகம். பிரபல எழுத்தாளர்களின் முன் முயற்சி யால் சில இதழ்கள் ஓரிரு ஆண்டுகளைத் தாக்குப் பிடித்து வெளிவந்ததுடன் மரித்துப் போய் விட்டன.
43 சிற்றிலக்கிய ஏடுகளின் வருகை யும் அவற்றின் இடை நிறுத்தமும் முன்கூட்டியே தரமான இலக்கிய ரசிகர்களால் கணிக்கப்பட்டு முடிவு கட்டப்பட்டுக் கூட விடுகின்றன. ஆனால், யாழ்ப்பாணத்திலோ ஒரு சிற்றிலக்கிய ஏடான மல்லிகை ஒரு வருஷ காலகட்டத்தில் சிறிது காலம் தடைப்பட்டு அதன் வருகை நின்று போன நிலையிலும் கூட, யுத்தக் காலகட்ட கஷ்ட நஷ்டங்களையும் கடந்து தாண்டி, மீண்டும் வெளிவந்து கொண்டிருப்பதுடன் அதற்கான சொந் தக் கட்டடமும் அதைத் தொடர்ந்து வெளியிட்டு வரக் கூடிய அச்சக அச்சு கூடச் சாதனங்களும் சொந்தமாக நிறுவப்பட்டு வெளிவந்து கொண்டிருக் கிறதென்றால் இந்தச் சாதனையை என்ன பெயர் சூட்டி அழைப்பது என்பதை வாசகர்களே நிர்ணயித்துக் கொள்ளக் கடமைப்பட்டவர்களா வார்கள்.
அதுவும் எப்படிப்பட்ட காலகட்ட மது? உள்நாட்டு யுத்தக் கெடுபிடி யால் மக்கள் தங்கள் தங்களது தினசரி வருவாய்க்கே, உணவுத்
தேவைக்கே ஆலாய்ப் பறந்து திரிந்த
காலகட்டத்தில் மல்லிகை என்ற சிற் றேடொன்று தனக்குத் தனக்கேயான சாதனங்களைப் பொருத்திக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெகு கம்பீர மாக வெளிவந்து கொண்டிருக்கிற தென்றால் இதை வரலாற்றுப் புதுமை என்று சொல்லாமல், புரட்சி எனக் கூறாமல் வேறென்ன பெயர் சொல்லி அழைப்பது?
இதில் குறிப்பிடக்கூடிய சங்கதி என்னவென்றால் இந்த யுத்த அவலச்

Page 24
சூழ்நிலையில்தான் எனது இரு மகள் களுக்கும், மகன் திலீபனுக்கும் இனிதே திருமணங்களை நடத்தி வைத்திருக் கிறேன்.
மல்லிகை மாத இதழின் வேலை பத்து நாட்களுக்குள் ஒப்பேற்றி முடிந்து விடும். மாதத்தின் மிச்ச நாட்களை எப்படிப் போக்குவது? வேலை செய்யாமல் முடங்கிக் கிடப்பது பொருளாதார நஷ்ட மல்லவா? என்ன செய்வது? மிச்சமுள்ள நாட்களுக்கு என்ன வேலையைச் செய்து ஒப்பேற்றி முடிப்பது?
அந்தக் காலகட்டத்தில்தான் தேவை கருதி மல்லிகைப் பந்தல புத்தக வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். நூல்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவது எனது நோக்கமாக இருக்கவில்லை. முடங்கிப் போகாமல் வேலைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற காரிய நோக்குடன்தான் மல்லிகைப் பந்தல் வெளியீட்டு நிறுவனம் ஆரம்பித்து நடத்த எத்தனித்தேன்.
இன்றுவரை திரும்பிப் பார்த்தால் மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் மூலம் அறுபது நூல்கள் தொடர்ந்து வெளிவந் துள்ளன. தமிழ் இலக்கியத் துறையில் எவ்வளவு பெரிய சாதனை இது? இரு சிங்கள மொழிபெயர்ப்பு நூல்களையும் ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலையும் உள்ளடக்கிய மல்லிகைப் பந்தல் புத்தக வெளியீட்டுப் பட்டியலில் இதுவரை அறுபது நூல்களை வெளியிட்டு வைத் திருப்பதை பல விமரிசகர்கள் தேவை கருதி மறந்துபோய் விடுகின்றனர்.
மல்லிகையின் இந்த நாற்பது வருஷ காலத் தொடர் வரவைப் பாராட்டி வர
4 4 வேற்கும் பலர், அது தனது ஆளு மைக்குட்பட்டுப் பக்கம் பக்கமாகச் செய்துவரும் புத்தக வெளியீடுகளைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் இருப் பது அவர்களது இலக்கியப் பார்வை யின் நேர்மையைத் தான் சந்தேகிக்க வைக்கிறது. இந்த மல்லிகையின் தொடர் வரவுக் காலகட்டமான நாற்பது ஆண்டுகளில் சரி பாதிக்கு மேற்பட்ட ஆண்டுக் காலகட்டங்கள் மிக மிக நெருக்கடி மிக்க காலகட்டங் களாகும்.
மின்சாரம் தடைப்பட்ட இடைப் பட்ட காலத்தில் மண்ணெண்ணெயில் இயங்கும் மின்சார மோட்டார் வாங்கி,
அச்சு வாகனத்தில் இணைத்து, அந்த
மெஷினை இயக்கி வேலை செய்த சோகம் நிரம்பிய நாட்களை இப் பொழுதும் எண்ணிப் பார்க்கத்
தோன்றுகின்றது. சாதாரணர் என்றால்
சோம்பிப் போய்க் குந்தியிருந்து விடுவார்கள்.
ஆனால், பிரச்சினைகளின் ஆழ அகலங்களைக் கண்டு பயந்து சும்மா சோம்பியிருக்கவா நாம் பிறவி எடுத்தோம்? இல்லையே! மகத்தான் ஓர் எதிர்காலத்திற்கு முகம் கொடுக் கிறோம் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கை உணர்வுகள் உந்தித் தள்ள, நாம் வாழுவது மட்டும் நமது நோக்கமல்ல, மல்லிகையையும் வாழ வைத்தே தீருவோம் என்ற அசைக்க முடியாத மனவுறுதியுடன் அந்தக் காலகட்டத்தில் தினசரி காரியமாற்றி வந்துள்ளதை இந்தக் காலகட்டத்தில் எண்ணிப் பார்க்கும்போது கூட, பெரு மிதத்தால் மனசு அப்படியே விம்மிப்

புளகாங்கித மடைகின்றது. இருந்தாற் போல இருந்து ஓரிரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.
யாழ்ப்பாணம் டச்சுக்காரன் கோட்டை யைச் சுற்றிலும் மூன்று மைல்கள் தூரத்திற்கு யாருமே வசிக்கக் கூடாது! என்ற திடீர் அறிவிப்பு மக்கள் சகலரையும் ஒருகணம் திக் குமுக்காட வைத்து விட்டது. திணறச் செய்துவிட்டது.
கோட்டையிலிருந்து இரவு பகலாகச் ‘வெடில்லடிகளும் மும்முரத்தில் நடந்து கொண்டிருந்த உச்சக் காலகட்டமது. மல்லிகைக் காரியாலயமும் அந்த எல்லைக்குள்தான் இயங்கி வந்தது. நான் வசித்த எனது வீடும் அந்த எல்லைக்குட் பட்டுத்தான் இருந்தது.
என்ன செய்வது? இனி என்னத்தைத்
தான் செய்வது?
மல்லிகையைத் தொடர்ந்து வெளி யிட முடியாத இக்கட்டான அவல நிலை. அது வல்ல இங்கு முக்கியம் . மல்லிகையின் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாத கட்டாய அறிவுறுத்தல் இது. நிம்மதியாகப் படுத்து உறங்கு வோ மென் றால் வீட்டுப் பக்கமே தலைகாட்ட முடியாமல் இரவு பகலாகப் பாதுகாப்பு வலயம் பயமுறுத்தியது.
யாழ்ப்பாண நகரமே அணு குண்டு வெடித்த ஹிரோஷிமா நகரம் போலக் காட்சி தந்து கொண்டிருந்தது. தினசரி
வருமானத்திற்கு எந்த விதமான வழிகளும் திறந்திருக்கவில்லை. சகல மக்களுமே
பயத்தாலும் யுத்த பீதி யினாலும் கட்டுண்டு போய்க் கிடந்தனர்.
4.5
வீட்டாரை அழைத்துச் சென்று
மனைவியின் அண்ணன் வீட்டில் விட்டு
விட்டு, நான் மாத்திரம் தனியே
நல்லூரி லிருந்த கம்பன் கோட்டத்தில்
போ யப் அங்கு அவசர காலத் தங்குமிடம் தேடிக் கொண்டேன்.
தம்பி சந்திரசேகரம் உரும்பிராயி லிருந்து சைக்கிளில் என்னைத் தேடி வருவார். நல்லுTர்க் கந்தசாமி கோயில் முன்றிலில் இருவரும் சந்தித்துக் கொள்வோம். பாவம் அவரும் பிள்ளைக்குட்டிக்காரன்! எதிர்காலம் நம் முன்னே இருண்டு கிடந்தது.
நானோ அவரை விடப் பரிதாப கரமான நிலையில் நேரப் போக்குக் காக எனக்குள் நானே சிந்தித்துச் சிரித்த வண்ணம் கோயில் வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தேன்.
சூழ்நிலை கொஞ்சம் கொஞ்ச மாகத் திருந்தியது. நெஞ்சு சற்று ஆறுதல்பட்ட மனநிலையில் வீடு திரும்பினோம். திரும்பி வந்து பார்த் தால் எனது பிரசித்தி பெற்ற ஹொட்டன் ஹோல் சைக்கிள் களவு போனது தெரிந்தது. இது மனசை
என்னமோ செய்தது.
பொடி நடையாக நடந்து சென்று மல்லிகைக் காரியாலயத்தையும் எட்டிப் பார்த்தேன். நெஞ்சு வலித்தது.
நான் மல்லிகைக்கு வந்து விட்டதைக் கேள்விப்பட்டு சந்திர சேகரமும் இடையிடையே வந்து போய்க் கொண்டிருந்தார்.

Page 25
மல்லிகை இதழ்களும் போல வந்து கொண்டிருந்தன. உற்சாகம் இல்லை. பழைய நண்பர் களும் திக்குக்கொருவராய்ச் சிதறிப் போய்க் கிடந்தனர். எட்டிக்கூடப் பார்க்க வில்லை.
வழக்கம்
Լ16ճծքեւ
‘ஊர் இருக்கிற நிலையில் இவற்ரப் புத்தகத்தை ஆர் வாங்கி வாசிக்கத் தவங் கிடக்கின்றனர்? என நக்கல் பேர்வழி களின் குத்தல் பேச்சுக்களையும் இடை யிடையே காதால் கேட்க முடிந்தது.
தினசரிப் பத்திரிகைகளின் படிப்பு வளர்ச்சி பெற்றிருந்த அளவிற்கு, இலக்கிய சஞ்சிகைகளின் வாசிப்புத் தேவை மட்டுப்பட்டேயிருந்தது!
‘ எதிர்காலம் எப்படி அமையப் போகின்றதோ!' என மக்களனைவரும் அங்கலாய்த்த வண்ணமே தினசரி நட மாடித் திரிந்து கொண்டிருந்தனர்.
மல்லிகையின் தொடர் வரவினால் ஈழத்து இலக்கியம் செழுமைப்பட்டதோ? இல்லையோ? இரண்டு குடும்பங்கள் அதை நம்பித் தமது வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தன.
ஒன்று என்னுடையது. மற்றது சந்திர சேகரத்தினுடையது. இடைப் பட்ட காலத்தில் தகுந்த வருமானமில்லை என்பது மாத்திரமல்ல, நினைப்பதைக் கூட எழுத முடியாத ராணுவக் கெடுபிடிகள். மக்கள் கருத்தை வெளியிடப் பேனாவை ஒட்டினால் புதுப்புதுச் சிக்கல்களெல்லாம் வந்து வந்து முளைத்தன.
காலையில் மல லரிகைக் குப் போவதும் சாயங்காலமென்றால் கால்
46 நடையில் வீடு திரும்புவதும்தான் தினசரிக் கடமை. மதிய உணவு கடையில். பிரயாணம் செய்துவந்த வாகனம் தானி களவாடப் பட்டு விட்டதுதான் உங்களுக்குத் தெரியுமே!
பக்கத்தே வாழ்பவர்கள் ஒருவர் முகத்தையே ஒருவர் பார்க்க அச்சப் பட்டனர். இயல்பு வாழ்க்கையே கைத்துப் போய்விட்டது. பயத்தினாலும் பீதியினாலும் வெருட்டப்பட்ட மக்க ளாகத் தம்மையறியாமலேயே மக்கள் அந்த அவல நிலைக்கு உட்படுத்தப் பட்டு விட்டனர்.
‘இனி என்னதான் செய்வது?’ என மன மருட்சியுடன் ஏங்கிப் போய்க் கிடந்த நெருக்கடியான காலகட்டத் தில்தான் ‘இன்னும் 24 மணித்தியாலத் திற்குள் நகரைவிட்டு வெளியேறுக! என்ற அபாய அறிவித்தல் கொடுக்கப் பட்டது. செய்வதென்ன என அறியாத மக்களைனைவரும் தெருத் தெரு வாக, வீதி வீதியாக அல்லோல கல் லோலப்பட்டனர். மன மருட்சியினால் வெருணர்டு ஓடத் தலைப்பட்டனர். அதன் பின்புலத்தில் தான் நான்
கொழும்பு வரத் தலைப்பட்டேன்.
என்னுடன் சேர்ந்து மல்லிகையும் புலம்பெயர்ந்து கொழும்பு வந்து சேர்ந்தது.
- அடுத்து (பூத்துக் குலுங்கும் மல்லிகைச் செடியும் புதிய மண்ணின் பசளையும்)

4ア
யாழ் இலக்கிய விழா!
சில பயணப் பதிவுகள்
- மேறன்கலி
6ஆந் திகதி யாழ்ப்பாணத்திற்குரிய அந்த நாள் ரொம்பவும் பரபரப்பாக இருந்தது. நேரத்தின் போதாமையை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. இன்னும் அந்த மண்டபத்தில் நின்று பல எழுத்தாளர்களைத் தேடித் தேடிச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு அதிகமாகவே இருந்தது. அதே நேரத்தில் செங்கை ஆழியான் அவர்களது இல்லத்தில் எங்கள் எல்லோருக்கும் பகல் சாப்பாட்டை ஒழுங்கு செய்திருந்தார். அதற்கும் போய்விட வேண்டும் என்பதோடு, வதிரியில் அன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நண்பர் ராஜபூரீகாந்தன் அவர்களின் ஞாபகார்த்தக் கூட்டத்திற்கு தவறாமல் சென்றுவிட வேண்டும் என்ற பரபரப்பும் என்னைச் சூழ்ந்து கொண்டது. அதே நேரத்தில் அன்று இரவு ஈழநாடு பத்திரிகையின் சார்பாக எங்கள் எல்லோருக்கும் இரவுச் சாப்பாடு ஒழுங்கு செய்து இருப்பதாக யாழில் இறங்கியவுடன் செங்கை ஆழியான் எம்மிடம் அறிவித்திருந்தார். அந்த இரவுச் சாப்பாட்டுக்குப் பின் நண்பர் புதுவை ஒரு எழுத்தாளர் சந்திப்பையும் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார். முதலில் ஈழநாடு ஆசிரியர் நண்பர் ராதேயன் அவர்களுக்கு எமக்காக ஒழுங்கு செய்த இரா விருந்துக்காக நன்றி கூறி நான் வதிரிக்குச் செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொன்னேன். நான் அவ்விருந்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதையிட்டு அவருக்கு ஏமாற்றமாக இருந்தபொழுதும் என் நிலைமையைப் புரிந்துகொண்டு முடிந்தால் வந்துவிடுங்கள் என்றார். அடுத்து நண்பர் புதுவையிடம் விஷயத்தைச் சொன்னேன். அதைப் பற்றியெல்லாம் யோசிக்கத் தேவையில்லை என்றும் வதிரிக் கூட்டத்தை முடித்து தங்களுடன் வந்து இணைந்து கொள்ளுமாறும் கூறி, அவரது உதவியாளரும் “வெளிச்சம்' சஞ்சிகைக்கு பொறுப்பாளருமான கனகரத்தினம் அவர்

Page 26
களுடனும் நண்பர் ரவீந்திரனுடனும் பேசி, இரவு எட்டு மணிக்கு வாகனம் அனுப்பு வதாகச் சொன்னார்.
எல்லோருமாக மண்டபத்தை விட்டுப் புறப்பட்டுச் செங்கை ஆழியான் வீட்டுக்குப் பகல் சாப்பாட்டுக்குச் சென்றோம்.
செங்கை ஆழியானின் வீட்டுப் பகல் சாப்பாட்டைப் பற்றி குறிப்பாகச் சொல் லித்தான் ஆகவேண்டும். வந்திருந்த எழுத்தாள அன்பர்களில் முஸ்லிம்களும் இருந்தமையால் செங்கை ஆழியான் அவர்கள் ஹலாலான உணவு களைத் தேடி அத்தோடு சமையல் செய்ய
யாழ்ப்பாணம்
ஒரு முஸ்லிம் பெண்மணியினையும் ஏற் பாடு செய்திருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அப்பெண்மணி வர முடியாமல் போனதனால் செங்கை ஆழியான் குடும்பத்தினர் தான் சமைத்திருந் தார்கள். சுவையான நளபாகம். முஸ்லிம்கள் தான் சுவையாக இறைச்சி சமைக்க முடியும் என்றுதான் இவ்வளவு காலமாக எண்ணி இருந்ததாகவும், இன்று செங்கை ஆழியான் வீட்டு இறைச்சிச் சமையலைச் சாப்பிட்ட பின், அந்தக் கருத்தை தான் மாற்றிக் கொண்டதாகவும் டாக்டர் ஜின்னாஹ் சொல்லிக் கொண்டிருந்தார். பொதுவாக நான் இறைச்சிப் பிரியன். அதுவும் இந்தள வான சுவையான இறைச்சிக் கறி கிடைத்து விட்ட்ால் எனக்குச் சொல்லவா வேண்டும்? சோற்றை விட இறைச்சிதான் அதிக அளவில் சாப்பிட்டேன் என்ற உண்மையை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த அளவு செங்கை ஆழியான் வீட்டு இறைச்சிக் கறி சுவையாக இருந்தது.
செங்கை ஆழியான் அவர்களின்
‰እዩ சுவையான சாப்பாடு தந்த களைப்பையும்
48 மீறி, வதிரிக்குப் போகவேண்டிய அவ சரம் எனக்குள் ஒடத் தொடங்கியது. செங்கை ஆழியான் அவர்களுக்கு எனது நிலையை எடுத்துச் சொன்னதும் தனது வாகனத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். நான், தெணியான் அவர்கள், டாக்டர் ஜின்னாஹ், ரவீந்திரன் ஆகியோர் வதிரிக்குப் புறப்
ப. ஆப்டீன்,
பட்டோம். வடமராட்சிக்குப் போகும் பாதைகளை நோட்டமிட்டவாறே வதிரிக்குப் பயணம் செய்து கொண்டி
(95 (up வினருக்கு வர முயற்சிக்கிறேன் எனச்
ருந்த எனக்குள் “ஞானம்'
சொன்ன வார்த்தை உறுத்தியது.
வதிரிக்குப் போகும் வழியில் மாவீரர்கள் துயிலும் கல்லறைகள், வெளியையும் தரிசித்தோம்.
பொலிகண்டியில் உள்ள தெணி யான் அவர்களின் வீட்டுக்குச் சுமார் 4.00 மணியளவில் போய்ச் சேர்ந்தோம். ”தெணியான் அவர்களின் வீட்டிலும் பெரிய இலக்கிய விவாதம் தான். குறிப் பாக எனக்கும் டாக்டர் ஜின்னா ஹஅக்கும்தான். 76 ஆம் ஆண்டு யாழ் போயிருந்த பொழுது பொலிகண்டியில் இருந்த தெணியான் இல்லத்திற்குப் போனது நினைவுக்கு வந்தது. அவரது விட்டுச் சந்தியருகே வைத்துத்தான் நண்பர் ராஜபூரீகாந்தன் அவர்களை முதல் சந்தித்தேன். வதிரிக்குப் போய் நண்பர் ராஜபூரீ இல்லமான வாசாவுக்குச் சென்று,
முதலாக ச்
காந்தன் அவர்களின் பாக்கிய அப்படியே கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சி.க.ராஜேந்திரன் அவர்

களின் இல்லத்திற்கும் சென்று சிறிது நேரம் கதைத்து விட்டு கூட்டம் ஏற்பாடு செய்திருந்த மண்டபம் நோக்கிப் புறப் பட்டோம்.
வதிரி அழகிய சிறிய கிராமம். அங்கு பட்டுவத்தை சனசமூக நிலையம் பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்த நண்பர் ராஜபூரீகாந்தன் இந்த அமைப்புடன் இணைந்து பல பணி கள் ஆற்றியவர். கூட்டத்திற்கு பெரும் தொகையான ஊர் மக்கள் வருகை தந்திருந் தமை நண்பர் ராஜபூரீகாந்தனுக்கு ஊரில் இருந்த மதிப்பை அறியக் கூடியதாக இருந்தது.
அமைப்பாகும்.
நண்பர் ராஜபூரீகாந்தனின் கூட்டம் நிறைவாக நடந்தது. சி.க. ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில் டாக்டர் ஜின்னாஹ், ப.ஆப்டீன், தெணியான் அவர்கள், சிறு கதையாளர் இராஜேஸ் கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள். நண்பர் ரவீந்திரன் உருக்கமான ஒரு கவிதை மூலம் நண்பர் ராஜபூரீகாந்தன் அவர்களின் ஞாபகங்களை மீட்டினார். நன்றியுரையை சி.க. லோகநாதன் நிகழ்த்தினார்.
வதிரி ஊர் மக்களுக்கு அங்கு நான் நிகழ்த்திய உரையிலும் நேரடி உரை யாடலின் மூலமும் ஒரு செய்தியினை உறுதியாகச் சொல்லி வந்தேன்.
ராஜபூரீகாந்தன் பிறந்ததனால் இந்த ஊர் பெருமை அடைந்திருக்கிறது. ராஜ பூீரீகாந்தனின் பெருமையை இந்த நாடு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் அவரது பேர் சொல்லும் வண்ணம் ஒரு பணியினை இந்தத் தமிழ் மன்றம் மேற்
49
கொள்ள வேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைத்து வந்தேன்.
கூட்டம் நிறைவேறுவதற்கு சற்று முன்னதாகவே நண்பர் புதுவை அவர்கள் அனுப்பிய வாகனத்துடன் நண்பர் கனகரத்தினம் எம்மை அழைக்க வந்திருந்தார். பின் புறப் ட்டோம். அங்கு குழுமி
கூட்டம் நிறைவேறிய
யிருந்த பெரியோர்களிடம் மன்னிப்புக் கோரி, நண்பர் ரவீந்திரன் விட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராச் சாப் பாட்டை அவசரமாக முடித்துக் கொண்டு நண்பர் கனகரத்தினத்துடன் யாழ் நோக்கிப் புறப்பட்டோம். ரவீந்திரன் ஊரில் தங்கி விட்டார்.
வதிரியிலே ஒருநாள் தங்க முடி யாமல் போனதும், நண்பர் ரவீந்திரன் வீட்டார் சிரமப்பட்டு ஏற்பாடு செய் திருந்த இராச் சாப்பாட்டை ஆற அமர்ந்து உண்ண முடியாமல் போனதை யுமிட்டு மன நெகிழ்வுடன் எண்ணிக் கொண்டிருந்த எமக்கு நண்பர் கனக ரத்தினம் சொன்ன தகவல் என்னை ክ செய்தது! அதாவது எங்களை யாழ் அழைத்துச் செல்ல வந்திருந்த வாகனத்தை ஒட்டி வந்தவர் புதுவையின் மகன் என்பதுதான்!
என்ன வோ
யாழ்ப்பாணம் சென்றடைந்ததும் இரவு 9.30 மணி நெருங்கி விட்டது. ஈழநாடு பத்திரிகை ஏற்பாடு செய் திருந்த இராச் சாப்பாடு முடிய, நண்பர் புதுவை ஏற்பாடு செய்திருந்த இலக் கியச் சந்திப்பும் முடியும் தறுவாயில் இருந்தது. எங்களுக்குச் சங்கடமாய்ப் போய்விட்டது. இவ்வளவு சிரமப்பட்டு
நண்பர் புதுவை எங்களுக்காக

Page 27
வாகனம் அனுப்பியும் அவர் ஒழுங்கு செய் திருந்த சந்திப்பில் முழுமையாய் கலந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு எங்களுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் போய் வந்தது நண்பர் ராஜ பூரீகாந்தன் கூட்டம் என்பதனால் நிலைமை யைச் சொல்லி நண்பர் புதுவையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். எந்த விதமான முகச் சுழிப்பும் இல்லாமல் எல் லோரையும் வழி அனுப்பி, தான் செங்கை ஆழியான் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார். செங்கை ஆழியான் அவர்கள் மறுநாள் காலை நாங்கள் எல்லோரும் அதிகாலையிலேயே கொழும்பு புறப்பட வேண்டி இருப்பதால், அதிகாலையில் வருவதாகக் கூறி விடை பெற்றார். சிவபாதம் ஐயா எங்களுடன் தங்கியிருந்து பல விடயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
இரவு 11.00 மணியளவில் நண்பர்
புதுவை,
வெளிச்சம்' சஞ்சிகைப் பொறுப்பாளர்
பத்திரிகையாளர் ஐங்கரன்,
நண்பர் கனகரத்தினம் சகிதம் நாங்கள் தங்கியிருந்த இல்லத்திற்கு ஒரு புத்தகச் சுமையுடன் எங்களைச் சந்தித்தார்கள். நீண்ட நேரம் மனம்விட்டுப் பல விடயங் களை அந்த நேரத்தில் கதைத்தோம். இலக்கியம் மற்றும் அரசியல் சம்பந்தமான பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். அவருடனான கலந்துரை யாடலில் அவர் முன் வைத்த முக்கியமான செய்தியாக இருந்தது என்னவென்றால், நாங்கள் போரை விரும்பவில்லை என்றும் முஸ்லிம்கள் விடயத்தில் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டோம். இனி பழைய விடயங்களை மறந்து நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சமாதானத்தைக்
5 O கொண்டுவர வேண்டும் என்றும், கலை ஞர்களாலும் இலக்கியவாதிகளாலும் தான் ஒருமைப்பாட்டைக் கொண்டுவர முடியும் என்பதைத் தான் உறுதியாக நம்புவதாக எம்மிடம் சொன்னார்.
இந்தச் செய்தியினைச் தென்பகுதி
சமூக, அரசியல் சக்திகளுக்குக் கொண்டு செல்வது உங்களது கடமை யாகும் என வேண்டிக் கொண்டார்.
எங்கள் எல்லோரையும் சந்தித் ததில் அவர் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொண்டிருந்தார் என்பது எங்கள் எல்லோருக்கும் புரியக் கூடியதாக இருந்தது. அவர் கொண்டி ருந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் விட பன்மடங்கான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நாங்கள் எல்லோரும் அவரைச் சந்தித்ததில் அடைந்திருந் தோம் என்பது உண்மையாக இருந்தது. அந்த உணர்வுடன் நள்ளிரவு நெருங்கிய நிலையில் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினோம்.
கடந்த கால எல்லாத் துயரங் களையும் மறந்த நிலையில் யாழ் மண் ணில் நடந்தேறிய சந்திப்புக்களை அசை போட்டவாறே மறுநாள் கொழும்புக் குப் போகும் விடியலுக்காய் உறங்கிப் போனோம். '
7ஆந் திகதி காலை 6.00 மணியள வில் செங்கை ஆழியான் அவர்கள் வழி அனுப்ப வந்தார். புத்தொளி சிவபாதம் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் செங்கை ஆழியான் அவர்களின் வாகனத்தில் யாழ் பஸ்தரிப்புக்குக் போய் இறங்கினோம். போவதற்கான பஸ்ஸலிக்காகக் காத்
முகமாலை

திருந்தவேளை எங்களில் யாரோ ஒருவர் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்று அன்றைய உதயன் பத்திரிகையைக் கொண்டு வந்தார். நேற்றைய பரிசளிப்பு விழாவில் பரிசு வாங்கிய எங்கள் எல் லோரினதும் படங்கள் வெளிவந்திருந்தன. பஸ் புறப்படத் தயாராக இருந்தது. ஒவ் வொருவராக ஒடிப் போய் உதயன் பத்திரிகைகளை வாங்கிக் கொண்டோம். அதிலும் எனது அவசரத்தைப் புரிந்து கொண்ட பூபாலசிங்கம் அன்பர் விஜிதரன் எனக்கு இலவசமாகவே உதயன் பிரதி களைக் கையில் திணித்துவிட்டார். அவருக்கு நன்றி கூறிய நிலையில் விடை பெற்ற எங்களை வழி அனுப்ப வந்திருந்த செங்கை ஆழியான் அவர்களிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டோம்.
யாழ் போகும்போது இருந்தளவாகச் சோதனைகள் கொழும்புக்கு வரும்பொழுது இருக்கவில்லை. பகல் 1.00 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தை அடைந்தோம். 1.15ற்கு ரயில் நேரம். சற்று நேரத்துடன் வந்திருந்தால் நண்பர் அகளங்கன் அவர்களையும் அங்கு பணி புரியும் திக்குவல்லை கமால் அவர்களை պ th, மகேந்திரன் அவர்களையும் சந்திக்க உத்
எனது நண்பர் கொட்டகலை
தேசித்திருந்தேன். ஆனால் முடியவில்லை.
வவுனியா ரயில் ஏறி கொழும்பு நோக் கிப் புறப்பட்ட எங்களிடையே மீண்டும்
இலக்கிய விவாதங்கள் தொடங்கியது.
இப்போதைய உரையாடலில் பெரும் பங்கு யாழில் நாங்கள் பெற்ற அனுபவங்களை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பங்களாகவே அமைந்தது. இரவு 8.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில்
51
எங்களின் யாழ் பய"ணத்தை முடித்துக் கொண்டோம்.
: : : :
யாழ்ப்பாணம் போவதையிட்டு வீட்டில் பிரஸ்தாபித்த பொழுது பெரிய பிரச்சினையாகப் போய் விட்டது. கடந்தகாலப் போர்க் கால நிகழ்வுகளும் சசப்பான அனுபவங் களும் யாழ்ப்பாணம் என்றாலே பயங்கர பூமி என்ற மாயையும், பயத்தையும் பொதுவாக தென்பகுதி மக்கள் மத்தியில் வளர்த்தெடுத்திருந் தாலும், இன்றைய சுமூகமான சூழலில் அப்படி இல்லை புரிந்து கொண்ட நிலையிலும், என் குடும்பத் தினர் அந்த மாயையிலிருந்தும் பயத்தி லிருந்தும் முழுமையாக இன்னும் விடுபடவில்லை என்றேதான் சொல்ல
சமாதான,
என்று கணிசமானவர்கள்
வேண்டும். என்னளவில் ஒரு கலை இலக்கிய உணர்வு மிக்கவனாக என்னை வளர்த்தெடுத்திருந்ததினால் சமகால சமூக அரசியல் நிலவரங் களைப் பற்றிய தெளிவும், பரிச்சயமும் எனக்கு இருந்ததினால் அந்த மாயையும் பயமும் எனக்கு இருக்கவில்லை.
அதன் காரணமாக இந்தக் கால கட்டத்தில் இனியும் தாமதிக்காமல் யாழ் சென்றுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளை இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்பு விழா ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. அதற்காக அப் பேரவைக்கு நன்றி சொல்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது.

Page 28
13 வருடங்களுக்குப் பின்னாலான மிகவும் திருப்தி கரமாய் இருந்ததற்கு முதல் காரணகர்த்தா வாக அமைந்தவர் என்றால் அவர் செங்கை ஆழியான் தான். அவர் சார்ந்திருந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழாவுக்கு நாங்கள் எல்லோரும் போய் இருந்தாலும்,
செங்கை ஆழியான் அவர்கள் எங்களை
எமது யாழ் பயணம்
தனிப்பட்ட முறையில்
உபசரிப்பதிலும் கவனித்துக் கொள்வதிலும் அவர் காட்டிய சிரத்தைக்கு வெறுமனே வார்த்தைகளால் நன்றி சொல்லிவிட முடி யாது. ஏனெனில் அவரும் அவரது குடும் பத்தினரும் எமக்குச் செய்த பணிவிடைகள் அப்படியானவை.
அடுத்து எம்மை மதித்து, கெளரவம் வழங்கும் வகையில் இரவு விருந்து கொடுத்தமைக்கு 'ஈழநாடு" நிறுவனத்திற்கு நாங்கள் நன்றி சொல்லக் கடமைபட்டுள் ளோம்.
நண்பர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எங்கள் மீது காட்டிய நேசத்தின் மூலமும், நமக்குக் கொடுத்த வரவேற்பின் மூலமும் சகல பேதங்களையும் கடந்து, கலை இலக்கியத் தொடர்பின் காரணமாக ஏற்படும் உறவின் பூரிப்பைக் கண்டோம்.
52 மனநார அந்தப் பூரிப்பை வெளிப் படுத்தியமைக்காய் நண்பர் புதுவைக்கும் எங்கள் நன்றிகளைச் சொல்ல கடமைபட்டுள்ளோம்.
அத்தோடு யாழில் இருந்த பொழுது எமக்கு ஒத்துழைப்பு வழங் கிய இலக்கிய அபிமானி வீ.ஆனந்த லிங்கம் அவர்களுக்கும், வதிரி கவிஞர் சி.ரவீந்திரன் அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டியவர்களாவோம்.
திருப்திகரமான இந்தமுறை யாழ் பயணத்தில் சிறிய குறை ஒன்றும் எனக் குள் இருந்தது. அது கம்பன் கழகத்தின் கம்பன் கோட்டம், தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் கட்டிடம், (அதனை நானும் கூட பார்த்திருக்கவில்லை) மல்லிகைக் காரியாலயம் ஆகியவற்றை என்னுடன் வந்த சக எழுத்தாள நண்பர் களுக்குக் காட்ட முடியாமல் போனது தான்!
மற்றப்படி எனக்கும் சரி, என்னுடன் வந்த எழுத்தாள நண்பர் களுக்கும் சரி இந்த யாழ் பயணம் வெற்றிகரமான, மகிழ்ச்சியான ஒரு பயணம் என்றே சொல்ல வேண்டும்.
(முற்றும்)
Undrawn Portrait for
Unwritten Poetry
டொமினிக் ஜீவாவின் சுயவரலாறு ஆங்கில
மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது.
தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள்
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும்
 

53
"காதலுக்கும் வேண்டும் கவி
என் தேசத்தில் நான்
தொகுப்புப் பற்றி
குறிப்புகள் குறித்த எதிர்வினை
- பூரீ பிரசாந்தன்
ஆகஸ்ட் மாத மல்லிகையில் குறிஞ்சிக் கிழானுடனான நட்பு - சில குறிப்புகள்" என்ற தலைப்பில் இளைய அப்துல்லாஹ் எழுதியிருக்க வேண்டிய பகுதி, தவறுதலாக "என் தேசத்தில் நான் - கவிதைத் தொகுதி பற்றிய குறிப்புகள்' என்ற தலைப்பிலே பிரசுரமாகிவிட்டது போலும்.
தனதும் குறிஞ்கிக் கிழானதும் தொடர்பை விரிவாகச் சொல்ல முடிந்தளவு சொல்லிவிட்டு, போகிற போக்கில் - நிறைவில் தொகுப்பிற்குப் பங்களிப்பை நல்கி யுள்ள 24 இளம் படைப்பாளிகளுக்கும் அந்த மூத்த படைப்பாளி ஒரு அருமை பெருமை(?)யான அட்வைஸ்" தந்திருக்கிறார். அந்த அட்வைஸ்", "காதலைத் தள்ளி வைத்துவிட்டு எழுதுங்கள் நூறு கவிதைகள்” என்பது.
'மலரினும் மெல்லிய காதலின் செவ்வி தலைப்படாத பலருள் ஒருவரான மேற் படி "மூத்தவர், இளம் கவிஞர்கள் சிலரின் கவிதை வரிகளிற் சிலவற்றைப் பட்டியல் போட்டுக் காட்டிவிட்டு, இந்தக் கவிதைகள் காதலையும் நட்பையும் தவிர வேறு என்னத்தைச் சொல்ல வருகின்றன? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
காதல் கவிதைகள் காதலையும், நட்பையும்தாம் சொல்ல முடியுமென்ற அடிப் படையைக் கூட அறியாத மேற்படி "மூத்தவர்", இலக்கிய வெளிப்பாட்டில் காதலை வெளிப்படுத்தும் கூறுகளே வேண்டாமெனக் கருதுகிறார் போலும். அப்படிக் கருதுகிற அவர் அதிகம் சிரமப்படாமல் அதே மல்லிகையின் 7ஆம் பக்கத்தைத் தயவுசெய்து கண் நோக்குவாராக. அது கவிஞர் சேரன் ப்ற்றிய குறிப்பு - "போர்ச் சூழலில் காதல், காமம், விரகம் போன்றவற்றுக்கும் இடமுண்டு என்பதை அவனது (சேரனது) கவிதைகள் மெய்ப்பித்தன” என்கிற பாராட்டு அப்பக்கத்தில் சேரனுக்கு விழுந்திருக்

Page 29
கின்றது. 'மூத்த அப்துல்லாஹ் அருளிய அதே அட்வைஸை" சேரனுக்கும் அருளு வாராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். காதல் பாடிய இந்த இளைஞர் கள் இருக்கட்டும். காதலை மட்டுமல்ல காமத்தையும், சேரனுக்கு அருளுவது எவ்வளவு முக்கிய மானது.
விரசத்தையும் பாடியுள்ள
மூத்தவர் போல, காதலைப் பாடாமல் இருக்கிற கவிஞர்கள் வேறு வேறு சமுதாய விடயங்களைப் பாடிக் கொண்டு அப்படியே இருக்கட்டும். அது அவர்களது தனியுரிமை. ஆனால், தங்கள் காதலற்ற - அன்பற்ற கவிதைகளைப் போலத்தாம் பிறரும் கவி பாட வேண்டும் என்று ஆலோசன்ை அருளச் செய்வதிலே தான் அந்தக் "காதலற்ற கவிஞர்கள் தவறிழைத்து விடு கிறார்கள். இன்னதைத் தாம் பாட வேண்டும் என்கிற கருத்தியல் கடப் பாடுகளை ஒரு படைப்பாளிக்கு - அவன் படைப்பு சமுதாயத்தைப் பாதிக்காமல் இருக்கும்போது வேறு எவரும் விதிக்க (Upւգաո51.
'மூத்த அப்துல்லாஹ் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அது மனித உளவியல் சார்ந்த சமூக விஞ்ஞானக் குறிப்பொன்று. அக்குறிப்பு ஒரு உண்மை யைச் சுட்டிக் காட்டுகிறது. எந்த மனிதனும் முதலில் தன்னையே போஷிக்கின்ற சுய நலமியாகவே உள்ளான். அடுத்த கட்டத் தில் குடும்பத்தையோ, உறவையோ போஷிக் கின்றான். பின்புதான் ஊாையும், பிரதேசத்தையும், தன் நட்பையும், தன் பிராந் தியத்தையும், உலகையும், பிரபஞ்சத்தையும் போஷிக்கின்ற படிமுறை வளர்ச்சியைப்
தன்
பெறுகிறான். இவ்வாறு அன்பு தன்னிலி
54 ருந்துதான் பிரபஞ்சம் நோக்கி விரிகிறது. தன்னை - தன் தேவையை நினையாமல் உலகத் தேவையை நினைப்பதென்பது சமுதாய முரண். முப்பது கோடியும் வாழ வேண்டிப் பாடிய பாரதி தனக்கு 'விசையுறு பந்தினைப் போல் வேண்டியபடி செல்ல வல்ல உடல் வலிமையைக்
கேட்க வில்லையா? அது தான் யதார்த்தம்.
தன் தேவையைத், தன் அனு
பவத்தை உண்மையாகப் பதிவு செய் கின்ற ஒருவன்தான் அது கடந்த நிலை யில் சமுதாயத் தேவையையும் பதிவு செய்ய முடியும். அப்பதிவே சத்திய மானதாயிருக்கும். தன்னை - தன் குடும்பத்தை - தமது பிரச்சினைகளை மறந்து விமர்சகர்கள் பாராட்டட்டும் என்பதற்காகச் சமுதாயத்தைப் பாடு வோரின் படைப்புகளில் சத்தியம் இருக் *கோது. அப்படைப்புகள் தாம் போலியா சொல்லிக் 'கொண்டே இருக்கவல்லன.
னவை என்பதைச்
‘புணர்தலும் - புணர்தல் நிமித் தமும்" என்று தமிழ் இலக்கணம் ஒழுக் கம் வகுத்த குறிஞ்சி நிலப் பேரா தனையில், இளம் பருவ வயதுக் கவி ஞர்கள் தம் காதலையும், காதல் முறிவு களையும், ஒருதலைக் காதல் ஏக்கங் களையும் பதிவு செய்வது இயல் பானதே என்பதை ஏன் 'மூத்த ' அப்துல்லாஹ் புரிந்து கொள்கிறார் இல்லை? எப்படிச் சமுதாயம் சார்ந்த புறத்துறை இலக்கியம் முக்கியமோ, அப்படித்தான் தனிமனித அகம் சார்ந்த அகத்துறையும் முக்கியம். இரண்டு

துறைகளதும் நோக்கங்கள் வேறு வேறு. அவ்விரு துறைகளையும் ஒரே தராசில் நிறுத்து விட்டு ஒன்று வேண்டும், மற்றது வேண்டாம் என்பது எவ்வளவு பேதைமை யானது. அப்படியானால் அகத்திணை இலக் கியங்களை இழக்கிற அபாயமல்லவா நேரும்.
அவ்விடத்தில் காதல் பற்றிச் சொல்லக் கூடிய இன்னுமொரு குறிப்பும் உள்ளது. காதல் தனிமனித அக உணர்ச்சி தான். அதேவேளை எல்லோரிடமும்
இருப்பதனாலும், தொடர்பில் ஆயிரக்கணக்கான சமுதாய
நிச்சயம் காதல்
மோதல்கள் உருவாகின்றமையாலும், காதல் பல பேரை மரணக் குழியுள் வீழ்த்தி
விடுவதனாலும் இக்காதல் சமுதாய ஒட்டு
மொத்தத்திற்கும் உரிய பிரச்சினையாகவும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தூரம் ஒரு கொடிய யுத்தம் ஒரு மனிதனுக்கு உளைச்சல் தருகிறதோ அவ்வளவு தூரம் காதலும் அவனுக்கு உளைச்சல் தருகிறது. போரால் இடம்பெயர்ந்து ஊரும் உறவும் அல்லற் பட்டுக் கொண்டிருந்த பொழுதில், தன் காதலி வேறு திருமணம் செய்து விட்டாள் என்பதற்காகத் தற்கொலை செய்து கொண்ட இளைஞன் இந்தத் தேசத்தில் இருக்கவில்லையா? அவனைப் பொறுத்த அளவில் யுத்தமும், அது தொடர் பில் நிகழ்ந்த இடப்பெயர்வும், வீதியில் குடி யிருந்த அந்தர வாழ்வும் தராத துக்கத்தைக் காதல் முறிவு தந்துவிட்டது என்பதுதானே பொருள்? பிறகெப்படி காதல் சமுதாயப்
இல்லாமல் இந்தளவுக்கு மனதை அலைக் கழிக்கும் காதலைப் பாட வேண்டாம் என்று பிறகெப்படித் தடுக்க முடியும்?
VEğa
பிரச்சினை போகும் ?
55
இவ்வளவுக்குப் பின்னும் 'மூத்தவர்' "காதலைப் பாடாதீர்கள்" என்று தொடர்ந்தும் மூன்று காலையே பிடிப்பார் என்றால் பிடிக்கட்டும். என்ன செய்வது? களப்பிரான் ஆட்சி யில் ஏற்பட்ட கொடிய அழிவுக்குப் பின்னான தமிழகச் சமுதாய நிலை யிலும் ‘காதலுக்கு’ என ஒரு பாலையே அமைத்த வள்ளுவர் கவிஞன் இல்லை. "கண்ணொடு கண்இணை நோக்க" வைத்த கம்பன் கவிஞன் இல்லை. சுதந்திர போராட்ட காலத்தில் ‘காதல் போயிற் சாதல்’ என்று பாடிய பாரதி கவிஞன் இல்லை. ‘காதலுளம் அதுவும் வேண்டும்" எனக் கேட்ட நம் மஹாகவி கவிஞன் இல்லை. என்னே! இவர்தம் விமர்சனம் இனிதே, அம்மா!!
நிறைவில் அண்மையில் கவியரங் கத்துக்காக எழுதவேண்டி நேரிட்ட இரு கவிதைகளைக் குறித்து, இம்
மறுப்பை நிறைவு செய்கிறேன்.
(3uTrumpù (3UTff ung புலவர்கள் பேனைக் கூர் கூடக் குருதி சொரிகிறதே, மார்வாடி அடவுக்கடையில் அதை வைத்த பின்னால் நட வேண்டும் காதல் நாற்று. 来 来 来 来
“அகம் பாடல் தமிழுக்கு ஆகாது’ - என்று எந்த முகங் கொண்டு மூடி வைத்தீர்கள். யுகந்தோறும் மானிடரை நல்ல மகிழ்ச்சிக்குள் ஆழ்த்துகிற தேனுடனா உங்களுக்குத் தீட்டு?

Page 30
56
2004 ஜூலை கலைமகளில் வெளிவந்தது.
660&dlШU UGOLJUПОfl
6LILúl6oflở GJIT
- தாமரை செந்தூர்பாண்டி
டொமினிக் ஜீவா இலங்கை எழுத்தாளர். 1960லேயே சாகித்திய அகடமி (இலங்கை) விருது பெற்றவர். பல சிறுகதைகளைச் சென்னையில் பிரபலமான அன்றைய "சரஸ்வதி'யில் எழுதிப் பாராட்டுக்கள் பெற்றவர்.
இலங்கை தலித்’ எழுத்தளர்கள் என டானியல் - டொமினிக் ஜீவா என்ற இருவரும் புகழப்படுவது மட்டுமல்ல, அவர்களே தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகப் பிறந்தோம் என்பதைப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொண்டவர்கள்.
டொமினிக் ஜீவா சவரக்கடை வைத்துத் தொழில் செய்து கொண்டே எழுத்திலும் தன்னை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர்.
அவரின் வாழ்க்கைச் சரிதத்தின் முதல் பகுதி 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்". இதைப் படித்ததும் தாமரை செந்தூர்பாண்டி கலைமகள் மூலம் டொமினிக் ஜீவாவிற்கு எழுதும் கடிதம் இது.
டொமினிக் ஜீவாவின் முகவரி :
டொமினிக் ஜீவா 201 - 1/1, முறி கதிரேசன் வீதி, கொழும்பு - 13.
டொமினிக் ஜீவா அவர்களுக்கு. தாமரை செந்தூர்பாண்டி எழுதுவது, அன்பு கெழுமிய அண்ணாச்சி. உங்களை நான் இப்படி அழைக்கலாமல்லவா? அழைக்கலாம். ஏனெனில் யாழ்ப்பாணம் பெரிய
கடைப் பிரதேசத்திலுள்ள செம்மா தெரு என்ற கஸ்தூரியார் விதியிலுள்ள ஏ.ஜோசேப்பு

சலூனை மேற்பார்வை செய்தவரும், தங்க ளனைவராலும் ‘அண்ணாச்சி" என்றழைக்கப்பட்டவருமான திரு. சங்கரன் எங்கள் ஊர்க்காரர்தான். நீங்கள் சென்னை வந்திருந்த போது தொலைபேசியில் என்னிடம் கொஞ்சம் கதைத்தீர்கள். நீங்கள் எழுதிய வரையப்படாத சித்திரம்" என்ற தங்களின்
‘எழுதப்படாத கவிதைக்கு
சுயசரிதக் கட்டுரைத் தொகுப்பை எனக்கனுப்பியிருந்தீர்கள். நான் ஒரு சோம்பேறி. இத்தனைக் காலம் கழித்து நான்கு நாட்களுக்கு முன்னர்தான் படித்தேன். படிக்கப் படிக்க நான் ஆழ்ந்து அமிழ்ந்து போனேன். நூலுக்குள் மட்டுமல்ல. உங்களுக்குள்ளும்.
ஆரம்பமே உங்கள் தந்தைக்குச் சொந்த மான ஜோசேப்பு சலூனுக்குத் தொழில் கற்றுக்கொள்ள நீங்கள் புறப்படுவதை விவரிப்பதாயமைந்திருந்தது. “அது வெறும் சவரக்கடையல்ல. அதுதான் என்னை உரு வாக்கிச் செழுமைப்படுத்திய சர்வகலா சாலை என்ற பெருமை எனக்குண்டு' என்று முதல் அத்தியாயத்திலேயே நீங்கள் குறிப்பிடுவது எத்தனை சாத்தியமானது என்பது தெரிகிறது. ஆமாம்! உலகப் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளரை ஒரு சவரக்கடை உருவாக்கியிருக்கிறது என்பதே நிஜம். ஒரு சவரத் தொழிலாளியாய் நீங்கள் கண்ட சாதீய நசுக்கம், அதனால் உங்கள் மனதில் பட்ட காயங்களின் வடுக்கள் எல்லாம் ஆழமாகத் தங்கள் கட்டியக்காரன் என்ற முன்னுரையே உணர்த்துகிறது.
சின்ன வயதிலிருந்து இத்தருணம் வரை உங்கள் வாழ்க்கையைப் போல. வடுக்களைப் போல. மன நிலையைப்
போல. லட்சியங்களைப் போல எனக்
5ア
குள்ளும் உண்டென்பதுதான் உண்மை
யாயிருக்க முடியும். ஆனால் பொருளா தாரமே என்னை நசுக்கிய கொடுரன். அதனால்தான் உங்கள் ஆவணப் பதிவுகள் என்னை வெகுவாகப் பாதித்
துள்ளன.
காற்சட்டையைக் கழற்றி மூக்குச் சளியைத் துடைத்து விட்டு, அதைத் தோளில் போட்டுக் கொண்டு 'உரிஞ்சான் குண்டி"யாக உங்களைப் போலவே உங்களுக்குப் பின் இருப தாண்டுகள் கழித்து நானும் திருநெல் வேலி மாவட்டத்து (தமிழகத்தில்) உவரியூர்க் கிராமத்துச் செம்புழுதித் தெருக்களில் அலைந்திருக்கிறேன். இந்தக் “குண்டி’ இலங்கைத் தமிழருக்கும், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்
என்ற சொல்
டத்தினருக்கு மட்டுமே தெரியுமென்பது உங்களுக்குத் தெரியுமோ?
உங்களிடமிருந்து, நாமிருவரும் வட்டார வழக்கால் கூட ஒன்றுபட்ட வர்கள் என்பதையும் நமக்கே சொந்த மான நல்ல பல கலைச் சொற்களை இந்த எங்கள் தமிழ்நாடு அறிந்து கொள் ளாமலேயே தமிழைக் கையாள்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன்.
"பம்மாத்து" என்பதை நாங்களும் பேசுகிறோம்.
எங்கள்
'சப் பாத்து" என
நெல்லைக் குமரியினர் இன்றும்
வழங்குகின்றனர்.
'கெதியாப் படி', 'கெதியா நட' என்பது என் அம்மா எனக்கு அடிக்கடி சொன்ன மொழி.

Page 31
'உமல்’ என்பது மீனவர்கள் பிடித்த மீனைக் கொட்டி வைக்கும் பனை ஒலை யில் செய்யப்பட்ட பெட்டி என்று நாங் களும் அறிகிறோம். அதை, உமலில் மீனும் காய்கறியும் உங்கள் பாட்டனார் கொண்டு வந்தாரெனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஒர்மம்" என்ற சொல்லை எங்களூர்த் தாய்மார்கள் அட ஒர்ம கெட்டவனே என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
"கள்ளன்', 'காடையன்", "காவாலி", 'இளந்தாரி', 'தராதரம்', 'ராவிருட்டு', 'அசு மாத்தம்', 'உடுப்பு', 'தொகுப்பு', 'எசகு பெசகு', "சீனி’, ‘கச்சவடம்', 'பாவலா" என
எத்தனை வார்த்தைகள் உங்களூரிலும் எங்களூரிலும் ஒரே மாதிரி? ஏனிவ்வளவு பிரமிப்புத் தெரியுமா? எங்களுர்ச் சொற்கள் மதுரையைக் கடந்ததும் மாறிப்போய் விடு கிறது. ஆனால் யாழ்ப்பாணத்துக்கும் தென் தமிழ் நாட்டுக்கும் எப்படி இந்த செளஜன்யம்? ஒ. இடையிலிருப்பது கைய கலக் கடல்தானே? "சிக்காரப் பிடித்து' என்ற வார்த்தை எங்கள் வீட்டு வழக்கு, "சோறு திங்கனும்" என்பது நம் ஊர்களில் மட்டும்தான்.
" "சூள்' என்பது அருமையான கடல் வேட்டை. காய்ந்த தென்னை ஒலைகளை ஒருங்குசேர நீளத்திற்குக் கட்டி, அதனூடே டயர் துண்டுகளைப் பொருத்தி எரிய விட்டு..." எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். (பக்கம் 60, 6ம் பத்தி) "சூள்' என்றதும் எனக்குள் பாலிய பருவத்தில், கார்த்திகை மாதம் பிறந்ததும் தொடங்கி கார்த்திகை தீப நாள்வரை எங்கள் ஊரின் விசால மான. “ஹோவெனக் காற்றிரைச்சலிடும் மணல் தேரிகளில் தென்னை ஒலை மட்டு மல்லாது வாழைச் சருகுகளையும் நீள
58
வாக்கில் நேர்த்தியாக இடையிடையே ஒலை இலக்குகளால் கட்டி "சூள்' ஆக்கி, நுனியில் நெருப்பிட்டு, இப்படியும் அப்படியும். சிலம்பம் போலச் சுழற்றியும், அத்துவானக் காட்டில் "பேய்கள் பந்தம் பிடிக்கும் என்ற பாட்டி கதைபோல நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களும், இளைஞர் நின்று பந்தம் பிடிப்பது என் மனதில் வந்தது. ஒரு சின்னச் சந்தேகம். "சூள்' என்பது வெளிச்சத்திற்காகக் கட்டப்படும்
களும் அங்கங்கே
பந்தம் மட்டும்தான். அதன் துணை யோடு வேட்டைக்குப் போவதால் "சூள்' என்றால் கடல்வேட்டை என்று குறிப்பிட்டு விட்டீர்களே..?
அதென்ன அப்படி. தமிழ்ப் பதங்கள், வாழ்வியல் சம்பவங்கள், கலாச்சாரங்களில் தமிழகத்துத் தென் நெல்லைக்கும் ஈழத்தின் எல்லைக்கும் இத்தனை பிணைப்பு.? சந்தோஷ மாயிருக்கிறது.
சரி, உங்கள் மன எழுச்சிகளுக்கு வருகிறேன். தங்கள் புனைப்பெயராக 'நாவிதன்" என உங்கள் ஜீவிதத் தொழிலைக் குறிக்கும்படி சூடி யுள்ளீர்களே, இது உங்களுள் உள்ள போராளியை வெளிப்படுத்துகிறது. ஒன்று அத்தொழிலைச் செய்வது பெருமை என்பதால். மற்றொன்று எத்தொழிலைச் செய்தாலும் அதைக் கொச்சைப்படுத்தப் புறப்பட்டிருக்கும் உயர்சாதியினரை என் சாதியிலிருந்தே எதிர்க்கிறேன் என்ற நேர்மை வெளிப் பாட்டால் என்று தாரதம்யப்படுத்தினால் நீங்கள் மற்றொன்றின் தூணாகிறீர்கள்.

தாங்கள் சார்ந்திருக்கும் "பஞ்சமர்” என்ற தலித் வர்க்கத்தை எட்டி நிறுத்திய சாதீயத்தை நெட்டித் தள்ளத் துடித்தத் தங்களின் மனவேதனைக்காகச் சத்தியமாய் நான் பச்சாதாபப்பட மாட்டேன். மாறாக மகிழ்ச்சியே கொள்கின்றேன். காரணம். அப்படி ஒரு சாதீய நெருக்கடி மட்டும் இல்லாதிருந்தால் வெறும் ஜோசேப்பு டொமினிக்கிலிருந்து உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டொமினிக் ஜீவா கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.
"நீ தெருக்
கூட்டுகின்றவனாக வேலை செய்யப்
கென்னடியின் தந்தை,
போகின்றாயா? எனக்குச் சம்மதம். ஆனால் தெருக்கூட்டுவதிலும் நீதான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும்' என்று கென்னடிக்குச் சொன்னாராம்.
நீங்கள் அதைச் செய்து காட்டியிருக் கிறீர்களல்லவா?
புறா வளர்த்தீர்கள். இலங்கையிலேயே உங்கள் புறா வளர்ப்பு பிரபல்யமாகச் செய்து, இன்றளவும் புறாவிற்காகப் பழகிய நண்பர்களைக் கொண்டுள்ளீர்கள்.
சரி. சவரத் தொழில் செய்தீர்கள்! அதில் கொடிகட்டிப் பறக்கவில்லையா நீங்கள்? இலங்கைத் தமிழ்த் தலைவர்கள், பெரும் பிரமுகர்கள் என நாங்கள் அறிந்து வைத்திருக்கும் அன்றைய பெருந்தலைகள் அத்தனையும் உங்கள் முன் குனியவைத் தழகுபடுத்திய வர் என்ற தொழில் திறமையை நிரூபித்திருக்கிறீர்களல்லவா?
அட. தீப்பெட்டி மூடி ஒட்டுவது என்ற சூழல் வந்தபோது அதில் வலு விண்ணராகத் திகழ்ந்துள்ளிர்களே..?
59
உங்கள் கன்னிப் பேச்சிலேயே உங்களுக்கென இடம்பிடித்து 1960 லிருந்து நாளது திகதி வரை பேச்சாற் றலை மக்களிடம் நிரூபிக்கவில்லையா நீங்கள்? இதற்கெல்லாம் எது காரணம்? நசுக்கப்பட்ட பஞ்சமர் வகுப்பில் பிறந்து, நசுக்கப்பட நாமென்ன புழுக் களா?" என்ற உங்களுக்குள் நின்ற எழுச்சிதானே?
ஐந்தே வகுப்புடன் பள்ளிப்படிப் புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட உங்களுக்குள் எழுத்து முளைத்ததற்கு எது காரணம்? எழுத்தில் உலகளாவிய வெற்றி கண்டுள்ளீர்களே. காரணம்? சாதீய நெருப்பைப் பாய்ச்சிய மாந்தர்கள்தானே? அவர்களுக்குத் தமிழ் எழுத்துலகம் நன்றி சொல்லியாக வேண்டும்.
யார்
'நாவிதன்” என்ற புனைப் பெயரை உபயோகிக்க எனக்குக் கற்றுத் தந்த வர்கள் தமிழ்நாட்டு நாடார் சமூகத்தார் கள். ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர் களின் சாதிப் பெயராகக் கருதப்பட்ட இந்த நாடார் என்ற பெயர் காமராஜ் நாடார் என்பதின் மூலம் வரலாற்றுச் சிறப்புப் பெற்றதை நானறிவேன். அது ஒரு புது அனுபவம். புதிய நம்பிக் கையை எனக்குள் ஏற்படுத்தியது. கற்றுத் தந்தது, எனத் தாங்கள் 15 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆம். இங்கு நாடார்கள் தங்களை இழிவுபடுத்தியவர்களை லட்சிக்காது வளர்ந்து, தங்கள் பெயர்களுக்குப் பின் நாடார்" எனக் குறிப்பிடுகிறார்கள். இது ஒரு பக்கம் வளர்ச்சி என்றாலும்

Page 32
மறு பக்கம் சாதியத்தால் ஏற்படும் தளர்ச்சி யாகவும் தோன்றுகிறதே.
எங்கள் பாரதத்தில்தான் சாதிய வெறி என்றிருந்த அப்பாவிகளுக்கு உங்கள் நாட்டுச் சாதீயம் அதிர்ச்சியைத் தரும். இன்று கூட யாழ்ப்பாணத்தில் ‘உள்பேணி, வெளிப்பேணி சமாச்சாரம் மாறவில்லை என்பதே மனதை வருத்துகிறது.
உங்கள் நாட்டில் நடந்த வில்லுான்றி மயானத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனுசியின் பிணம் எரியூட்டக் கொண்டு செல்லப்பட்டதால் மேல்குடியினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை உணர்ச்சி ததும்பக் குறிப்பிட்டுள்ளீர்கள். இங்கும் அந்தக் கதைதான். ஒரு சவரத் தொழிலாளி கிறிஸ்தவனாயிருந்தான். பின்னர் அவன் மனம் மாறி மதம் மாறினான். தாய் மதம் திரும்பிய தகைமையாளன் என இந்துக்கள் ஒருநாள் அவன் இறந்து போனான். அவனைப் புதைப்பதற்கு மயானத்திற்குப் போனால் ஒவ்வொரு சாதி யும், 'இது எங்கள் சாதிச் சுடுகாடு. இது எங்கள் சாதி இடுகாடு, நாவிதனுக்கு நாங்
கள் தரமாட்டோம்" என்று விரட்டினார்கள்.
பாராட்டினர்.
இறந்தவனின் மகனும், உறவினர்களும் இரத்தக் கண்ணீர் வடித்தனர். 'இந்து' என் றால் சாதி. கிறிஸ்தவன் அல்ல என்பதால் மதம். நடுஜாமத்தில் அந்த இறந்துபோன மனிதனின் மகன் எடுத்த முடிவை வைத்துத் தகனம்" என்றொரு சிறுகதையை 1993 இல் தினமலரின் தீபாவளி மலருக்கு நான்
எழுதினேன். அந்த முடிவிற்காகப் பலர்
என்னைப் பாராட்டினார்கள். படித்தபோது பாராட்டிய யாராவது அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சிகளைச் சந்தித்தால் மனம் மாறுவார்களா?
6 O
அண்ணாச்சி.
உங்கள் உழைப்பு, உங்கள் ஒழுக் கம், உங்கள் வைராக்கியம், தாய்ப் நன்றி எதிர்த்து நின்று வெற்றி கொள்ளும் வல் லாண்மை என உங்கள் அகஒழுக்கம் தான் எனக்கு மிகவும் பிடித்தது. என்னையும் திரும்பிப் பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்ளச் செய்கிறது.
LuftFuib, மறவாமை,
இலங்கையின் துப்பாக்கிச் கலாச் சாரத்தின் வித்து வில்லூன்றித் துப்பாக் கிச் சூடு என நீங்கள் கணித்தது கன கச்சிதம்.
உங்களின் உள்ளார்ந்தக் காதலை நீங்கள் உங்கள் மகனிடம் வெளிப் படையாக்கி, வாசகர்களுக்கும் பொதுப் படையாக்கியது சிறப்பு. உங்கள் "மல்லிகை பதிப்பகம்", "மல்லிகைப் பந்தல்' எல்லாவற்றிற்கும் உங்களை ஆழமாகக் காதலித்த. உங்கள் இடது கையில் அழுந்தச் சூடு வைத்த அந்தப் பரிதாபத்திற்குரிய அம்மையாரை நினைத்தால் எனக்கு வணங்கத் தோன்றுகிறது.
உங்கள் நூல் முழுக்க உங்களின் அந்தராத்ம கீதம் இசைத்துக் கொண்டே யிருக்கிறது. நீங்கள் அங்கங்கே குறிப் பிடுவது இந்த உங்கள் ஆவணப் பதிப்பு சத்தியம் மட்டுமே பேசுகிறது. தலை வணங்கி ஏற்றாக
போலவே
வேண்டும். உங்கள் 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்" வாசகர்கள் அனைவராலும் வாசிக்கப்
பட்டாக வேண்டும்.

61
Sater. 于二三二一厂
- സ്കെ ജയ
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இன்று பலர் மேடையில் கொச்சைப் படுத்திப் பேசி வருகின்றனரே. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
像 arrestarf எம. தவராஜா
இதற்கு விரிவாகப் பதில் சொல்ல வேண்டும். அதற்கு ஏற்ற இடமல்ல, இது. சமீபத்தில் ஒருவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கும் நமது இயக்கத்தை இறந்து விட்டது' எனச் சாடினாராம். தெணியான் விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார். எமது உழைப்பிலும் வியர்வையிலும் தமது கனதியை உயர்த்திக் கொண்ட பேராசிரியப் பெருந்தகை ஒருவர் விமரிசனம் என்ற போர்வையில் இளந்தலைமுறையினருக்குப் பிழையான தகவல்களைச் சொல்லி வருகின்றார். காலத்திற்குக் காலம் பிழைக்கத் தெரிந்த இந்தக் கனவான் எந்தக் காலத்திலுமே தான் சொல்லி வந்த அரசியல் - இலக்கியக் கருத்துக்களுக்கு நம்பகத் தன்மையுடன் நடந்துவந்தவருமல்ல. இந்தப் பண்டிதரின் மகன் என்னதான் முற்போக்குப் பேசினாலும் எங்களுடன் தொடர்ந்து வரமாட்டார் என்பது எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். மூன்று நிகழ்வுகளில் இவரை அவதானித்து வந்துள்ளேன். இவரது முன்னுரை எனது படைப்புக்களில் என்றுமே இடம் பெற்றதுமில்லை. விரிவாக வேறொரு கட்டத்தில் எழுதுகிறேன். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு சங்கமல்ல. அது ஒர் இலக்கியத் தத்துவம். சிலர் சிலகாலம் வருவார்கள். போவார்கள். அந்தத் தத்துவம் காலத்தால் அழியாததொன்று. இனிமேலும் பல இளசுகளை உருவாக்கி வழிநடத்திக் கொண்டிருக்கக் கூடிய தத்துவ இலக்கிய இயக்கமது. அந்த ஜிவ தத்துவத்தின் ஈழத்து இலக்கியக் குறியீடுகள் தான் நானும் டானியலும். அதன் பரிணாம

Page 33
வளர்ச்சிதான் மல்லியிைன் வரவு - தொடர்ந்து அதன் செயற்பாடு. லிபியற்ற மொழி பேசிய வட இந்திய மைந்தன் மேமன்கவியைத் தமிழ் எழுத்தாளனாக உருவாக்கிய, மலேசிய மொழி பேசிய ஆப்டீனைத் தமிழ் நாவலாசிரியராக்கி இந்த மண்ணில் உலவ விட்ட அந்த ஜீவ இயக்கம் தற்காலிகமாகச் சூழ் நிலை களால் செயற்பாடற்று இயங்காமலிருக் கலாம். ஆனால், செத்து விடாது. இப்படியான தத்துவங்கள் ராவணன் தலைகள். வெட்ட வெட்ட முளைக்கும்.
ཉ། ཏ་
இன்று இலக்கியக் கூட்டங்களில்
இருந்து பொறுமையாகக் கேட்க முடிவதில்லையே, இதற்கு என்ன காரணம்?
மருதானை ச.முருகவேல்
ஒரு காலத்தில் இலக்கியக் கூட் டங்கள் இலக்கியத்திற்காகவே நடத்தப் பெற்றன. இன்று நூல் வெளியீடுகளில் இலக்கியம் பேசப்படுகிறது. ஓர் இலக்கிய நோக்கம் வியாபாரப் பிரச்சினையாகும் பொழுது அங்கு இலக்கியம் இயல்பாகவே மரணித்துப் போய்விடுகிறது.
ཏེ་ཉ་ཏ་
9 மல்லிகையின் சுகந்த நறு மணத்தை மாதாந்தம் மணந்து ரசிப் பவள், நான். மல்லிகை மீது பெண்கள் காட்டும் அபிமானம் எத்தகையது?
കെrgbu-13. T.பிரியா
62
ரமணிச் சந்திரனை ரசித்துச் சுவைத்து தொடர்ந்து படிக்கும் பெண்கள் பற்றி அக்கறையும் இல்லை. வைக்கோல் தின்னும் பசுக்கள். மற்றும் கல்லூரி, பல்கலைக் கழக மாணவிகள், தரமான
எனக்கு எந்தவிதமான
குடும்பப் பெண்கள் மல்லிகையைத் தொடர்ந்து ரசித்துப் படித்து வருகின்றனர். அவர்களில் பலரை எனக்குத் தெரியும்,
☆ ☆ ァ
9 நாற்பதாவது ஆண்டு மலரைத் தயாரிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் ஓடி வந்த பாதையை நினைத்துப் பார்ப்பதுண்டா?
saJsaqsofluUmr. எஸ்.குணாளன்
மலர் வெளியிடுவதற்கு முன்னரே எனது சஞ்சிகை உள்ளடக்கிய "அச்சுதாளின் ஊடாக
அனுபவங்களை
ஒர் அநுபவப் பயணம்" என்ற நூலை வெளியிட்டு வைக்க விரும்புகின்றேன். படித்துப் பாருங்கள். பல புதுமையான தகவல்களையெல்லாம் சொல்லியிருக் கிறேன்.
女 女 方
உங்களுடைய சுய வரலாற்று நூலைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படித்துப் பார்த்தேன். இப்படியான தொரு முயற்சி தமிழில் வருவது இதுதான் முதற்தடவை என நம்பு கின்றேன். நான் நினைப்பது சரியா?
நீர்கொழும்பு. க.கதிரவேலு
இதைப் பற்றியெல்லாம் நான் கவனத்தில் கொள்வதில்லை. திட்ட

மிட்டுச் செயல்படுபவன், நான். தமிழில் இது புதுமையாக இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே!
ཉ། ཏ་
• உங்களிடமிருந்து பொன் மொழி ஒன்றைப் பெற்றுக் கொள்ள விரும்பு
கிறேன். பொன்மொழி ஒன்றைச் சொல்வீர்களா?
சிலாபம். செல்வி கற்பனா
பொன்ம்ொழி கட்டத்திலேயா, நான் இருக்கிறேன்? மலர் தயாரிக்கும் வேலை யில் மூழ்கிப் போயுள்ளேன். பொன்மொழி யல்ல. தெரு மொழி ஒன்றை வேண்டு மானால் சொல்லுகிறேன். பஸ் நிறுத் தத்தில் நான் கேட்ட மொழி இதுதான். ‘கடவுள் இல்லை எண்டு சொல்லாதை யப்பா இருக்கிறார். இருக்கிறார் எண்டு சொல்லிக் கொண்டிரு. நீ கண்மூடின திற்கு அப்புறம் மேலே போயிட்டாய் எண்டு வைச்சுக்கொள். அங்கை கடவுள் இருந்திட்டார் சங்கடம் அதுக்குப் பதிலா இருக்கிறார், இருக்கிறார் எண்டு சொன்ன நீ, அங்கை போய் கடவுள் இல்லாட்டிப் போனா,
எண்டால் உனக்குச்
உனக்கும் பிரச்சினையில்லை. அந்தக் கடவுளுக்கும் பிரச்சினையில்லை!
চৱ সুমুৱা চু
இன்று பல வகைப்பட்ட பெண்கள்
எழுத்துத்துறைக்கு இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
வந்துள்ளனரே,
வத்தளை. என்.தயாபரன்
இந்தப் பரவலாக்கப்பட்ட ஊடக விஸ்தரிப்பு நிலையில் ஒய்வு நேரத்தில்
63
தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னா லிருந்து கொண்டு அழுது தொலைக்கும் காட்சியைப் பார்த்துவிட்டுத் தானும் கண்ணிர் ஆறுதல் பெறலாம். அல்லது ரமணிச் சந்திரனின் நாவலில் வந்த Eyþg ef eypg é தங்களைத் தாங்களே மயக்கத்திற்குள் உட்படுத்தி மனச்சுகம் கண்டு களிக்
வர்ணனைகளில்
கலாம். இதையெல்லாம் தவிர்த்து விட்டு, பேனாவும் பேப்பரையும் எடுத்து வைத்து ஒரு பெண் தனது மனக் கருத்தை எழுத்தில் வெளிப்படுத்த நினைக்கிறாள் என்றால் இது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய விஷயம். பேப்பர் பேனாவுடன் மேசைக்கருகில் குந்தினாலே, "என்னடி கள்ளக் கடிதம் எழுதப் போறாயா?" எனச் சந்தேகம் கிளப்பும் குடும்ப உறவினர் மத்தியில் ஒரிளம் பெண் எழுத்தில் தனது நோக்கங்களைப் பதிய முன்வருவதே ஒரு முன்னேற்றம் என நான் மெய்யாகவே கருதுகிறேன்.
ཏེ། ཏ་
குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் ஒருங்கு சேர்ந்து நகரமல்லாத ஓர் ஊரில் ஒருங்கு கூடி ஒருநாள் முழு வதும் தங்கியிருந்து இலக்கியப் பரிவர்த்தனை அவர் களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஏற்படு மல்லவா?
செய்தால்
மன்னார். எஸ்.மோகனதாஸ்
இது ஒரு நல்ல யோசனை. இப்படி யான இலக்கிய ஒன்றுகூடலை ஆனைக்கோட்டையிலும், புத்தளத்திலும் பரீட்சார்த்தமாகச் செய்து பார்த்துள்ளேன்.

Page 34
அது இலக்கியப் பதிவாகவும் ஆவணப் படுத்தப் இப்பொழுது மாத்தளையில் இப்படியான ஒன்று கூடலைச் செய்யலாமா? என யோசித்து
பட்டுள்ளது.
அங்குள்ள இலக்கிய நெஞ்சங்களுடன் தொடர்பு கொண்டு வருகிறேன். இதைப் போன்ற ஒன்றுகூடல்களைத் தத்தமது ஊர் வட்டாரத்தில் நடத்த வேண்டுமென விரும்புகிறவர்கள் இதற்கான ஆயத் தங்களைச் செய்து தரலாம். மல்லிகை இப்படியான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு எப்பொழுதுமே ஒத்துழைப்பு நல்கும்.
པའི་་་་་་་་་་་་་་
9 என்ன ரஜனிகாந்திற்கு இத்தனை பெரிய பின்னடைவு?
ஆர்.முரீதரன்
இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? சினிமா நடிக, நடிகைகளை நட்சத்திரங்கள் என்றுதான் அழைப் பார்கள். விடிந்தால் வானத்தில் இரவு முழுவதும் கண்சிமிட்டிக் கொண்டி ருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் காணாமலே போய்விடும். இன்று அங்கு விடிந்து விட்டது
女 女 ★
பதுளை.
அரசியல் ஒரே குழப்பமாகத் தெரிகிறதே?
நீர்கொழும்பு. omt. ćeligsfils56ởr
இங்கு மாத்திரமல்ல, உலகெங்கும் பல நாடுகளில் அரசியல் குழம்பிப் போய்த்தான்
64
இருக்கிறது. பொறுத்திருங்கள். இந்தக் குழப்பங்களுக்கிடையே ஒரு நல்ல தெளிவு ஏற்படத்தான் செய்யும்.
ཉ། ཏ་
நமது எழுத்தாளர் ஆழியான் யாழ். மா நகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள் ளார் எனச் சமீபத்தில் பத்திரிகையில் செய்தியொன்றை வாசித்தேன். இது
செங்கை
பற்றி என்ன கருதுகிறீர்கள்?
கொக்குவில். ஆர்.சிவதாசன்
கலாநிதி குணராசா என்ற செங்கை ஆழியான் எதிலுமே அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர். அவரைப் பார்த்து நான் பிரமிப் படைவதுண்டு. மிகக் கடுமையான உழைப் பாளி. எழுத்தாளர்களில் பெரும்பாலோர் வெறும் கற்பனைவாதிகளே. திட்டமிட்டுக் காரியமாற்றத் தெரியாத கனவுவாதிகள். அவர் எதார்த்தவாதி. எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர். அவர் யாழ். மாநகர சபை ஆணையாளராக வந்தது உழைப்பின் பெறுபேறே. இந்தப் பதவியை வகிக்கும் முதல் எழுத்தாளரும் அவரே. எழுத்தாளர்கள் சார்பாக அவரை மனப் பூர்வமாக வாழ்த்தி மகிழ்கின்றேன்.
ཏེའི་ཧའི་ཏེ་
உங்களுக்கு பேய்களில் நம்பிக்கையுண்டா? நீர்கொழும்பு. மா.அரவிந்தன்
எனக்கு மனிதர்கள் மீதான் நம்பிக்கை
201 - 111 ரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் சாஹித்திய புத்தக இல்லம்
&l எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல, 4, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்)
புத்தளம். தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து
தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து
விற்பனை செய்து உதவுவோம்.

Page 35
Mallikai
 

September 2004
TS (PVT.) LTD.