கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.10

Page 1

|
| . ||
|, , ,│ │
.
-sos藏
歴
|『|W|- |-sae|- |
F
|
|
|
|s
藏
|WWW)

Page 2
Compatible Input & Output Media (Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVI) RAM, DVD-R, DVD-ROM, PC Card, Compact Flash, Smart Media) Digital Camera Card Printing.
Film Rolls / Cameras / Batteries / CD/ Floppy / Album Sales. Os Framing of Pictures (Imported) S
9. p ܢN Laminating Services. N Wedding Album Binding. సోఫ్ట్వేలో, ી FOR ALL YOURREQUIREMENTS IN ( (రో NGO NYo Out Door Photography & Videography x 8 \s الاکe Weddings. o O ON Birthday Parties / Puberty Ceremonies બ્લેટો'
'%e ce, you cave Cീle '%/ ീle ? 70 ശ്രദ്ധീ
THE DIGITAL SERVICES WE PROVII). Digital Print I2”XI8” Maximum size in I0 Mın, Automatic dust and scratch correction. Print to Print services. w
Contact Cards and Index prints.
Greeting Cards/Frame Prints/Calender Prints/Album Prints.
Colour Negative, Positive, B/W and Sepia Negative Printing
OTHER SERVICES Developing & Printing of films in 20 Min Printing of Enlargements (5"2X7" to I2"XI8") Passport/Visa photos/B/W photos in I0 Min.
Seminars/ Any Other Special Functions & Occasion',
 
 
 
 

40-வது ஆண்டு மலர் மல்லிகை
ஜனவரி 2005
மலர் பிரமாதமாகத் தயாராகின்றது.
சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் ஒரு சிற்றேடு தனது நாற்பது வருடங் களைக் கடந்து வந்து அதன் ஞாபகார்த்த மாக ஆண்டு மலரை வெளியிடுவதே வரலாற்றுப் புதுமை! ஒர் அதிசயம்.
மல்லிகை அதனைச் சாதனை யாக்கியுள்ளது.
மலர் சந்தாப் பணத்திற்கு உட்பட்ட தல்ல. தனியாக அதற்குரிய பணத்தைப்
முன்னரே செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டியது முக்கியம்.
ஏனெனில் வரையறுக்கப்பட்ட மலர்களே தயாரிக்கப்படுகின்றன. எனவே, மலர்
உங்களது கரங்களுக்கு வந்து சேருவதில் எங்களுடன் ஒத்துழையுங்கள். மலரின் விலை 135/- தபாற் செலவு 15/- காசுக் கட்டளை அனுப்புவோர் ஆசிரியரின் பெயருடன் தபால் கந்தோரைக் குறிப் பிடும் இடத்தில் KOTAHENA என எழுதவும்.
உங்களினது ஒத்துழைப்புடன் தயாராகும் இம்மலரின் வெளியீட்டு விழாக்கள் கொழும்பிலும்.
மகிழ்ச்சியான
யாழ்ப்பாணத்திலும் இடம்பெறும். பணம் செலுத்தியவர்கள் இவ்விழாக்களிலேயே
மலரைப் பெற்றுக்கொள்ளலாம்.
- ஆசிரியர்.
மூல்லிகை
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்'
b)61تهريPے کaلمo-39
ഉർ6LtUി 2ംഭ
306
Αυτοgταβαίνο Monthly Mafay ine
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை 8.
எதிர்பார்க்கின்றது.
2oI-II/I, Sri Kathiresan Street, Colombo- I3. Tel: 232O721

Page 3
தற்போது விற்பனையில்
. சமூக அறிவு
சமூகம் அதனி அசைவியக்கம்பற்றிய ஓர் ஆய்விதழ்
ஆசிரியர் வி. நித்தியானந்தம்
புலமை தர உசாவல்களுக்கு உட்படுத்தப்பட்ட சமூகம் அதன் அசைவியக்கம் பற்றிய புலமைப் பேறுகளை ஒருங்கிணைக்கும் வருடம் இரு முறை வெளிவரும் இவ் ஆய்விதழானது பின்வரும் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது
கட்டுரைகள் * யாழ்ப்பாணச் சமூகப் பாரம்பரியத்தில் கட்டடம்
பற்றிய எண்ணக்கரு * நிறுவனக் கோட்பாடுகளும் சந்தைப்படுத்தல்
ஆய்வுகளும் - அவை மத்தியிலான கருதுகோள் ரீதியான தொடர்பு * ஈழத்தமிழரும் மருத்துவக் கல்வியும் அதன்
சமூகப் பொருளாதாரப் பரிமாணம் மேலாதிக்கமும் அதன் தடுமாற்றமும் மோதலும் மோதல் தீர்வும்
நூலாய்வு
வடக்குக் கிழக்கு நிலைமையின் பின்னணியில் வறுமைக் குறைப்பும் இலங்கையை மீட்டெடுத்தலும்
* சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களும்
நூல் விமர்சனங்கள்
* இலங்கையின் பொருளாதார வரலாறு வடக்கு - கிழக்குப் பரிமாணம்
* உலக அபிவிருத்தி அறிக்கை - 2004 : சேவைகளை வறியோருக்காக இயங்க வைத்தல்
அஞ்சலி
* எட்வர்ட் சயித் (1935 - 2003)
* போல் மார்லர் சுவிசி (1931 - 2004)
ஆண்டுச் சந்தா ரூபா 500/- (இரு இதழ்களுக்கு) தனி இதழ் ரூபா 300/-
itsisissi 187 : SSN 1391-9830; sanon 145mm X 210mm
குமரன் புத்தக இல்லம் 201 டாம் வீதி, கொழும்பு - 12. தொ.பேசி : 2421388 மின் அஞ்சல் kumhel.lk 3. மெய்கை விநாயகர் தெரு, சென்னை - 600 026.
 
 
 
 
 
 

நம்மவரின் சுகதுக்கங்களும் ܠܛ
bLoĝY UGO)LŬUTGIfl85Gfl6öI UpăJ856flŬUJŭ).
சமீப கால இலக்கிய உலக நிகழ்வுகளை ஊன்றி அவதானித்துப் பார்க்கும் வேளையில் நமக்குள்ளேயே ஒரு குற்ற உணர்வுவொன்று இளையோடாமலில்லை.
முன்னைய காலத்தில் இந்த நாட்டில் நாலா பகுதிகளிலும் வாழ்ந்து வந்த எழுத்தாளர்களிடையே பரஸ்பரம் ஒரு புரிந்துணர்வு இருந்து வந்துள்ளது. என்னதான் கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும் கூட, ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொண்டிருந்தனர். ஒருவர் சுக துக்கங்களில் கலந்து கொண்டு சகோதரத்துவத்தைப் பேணிவளர்த்து வந்துள்ளனர். ஆனால், இன்றோ நிலைமை மாறிவிட்டது. அதற்கான உதாரணங்கள் பலவற்றை நாம் சொல்லலாம். இதன் பிரகாரம் நமது நெஞ்சத்தில் ஏற்பட்ட எண்ணக் கருத்துக்களையே இங்கு எழுத்தில் பதிய வைக்கின்றோம். w
சமீப காலமாக சகோதர எழுத்தாளர்களின் சுக துக்க வைபவங்களில், நம்மில் அநேகர், பங்குபற்றுவதைத் தவிர்த்துக்கொண்டு வந்துள்ளோம். ஒருவரை விட்டு ஒருவர் தூரத் தூரப் போய்க்கொண்டிருக்கின்றோம். முரண்பாடுகள் இலக்கிய உலகில் இயல்பு. அதேசமயம் மனிதப் பண்புகளை மொழி ஆளுமைக்குள் உட்படுத்தித் தமது படைப்புகளின் உள்ளடக்கமாகக் கொண்டு படைத்துவரும் எழுத்தாளர்கள் தாங்கள் தூக்கிப் பிடிக்கும் மனிதப் பண்புகளை மறந்து நடமாடித் திரிகிறார்களோ என நியாயமாகவே நாம் சந்தேகப்படுகின்றோம்.
ஈழத்து இலக்கிய உலகில் பலர் தம்மைத் தாமே அர்ப்பணித்துக் கடந்த காலத்தில் உழைத்து வந்ததன் பெறுபேறுதான் இன்றைய செய்தித் தாள்களில் இந்த நாட்டுப் படைப்பாளிகள் முன் பக்கச் செய்தித் தகவல் பிரமுகர்களாக வலம் வர முடிகின்றது. இதை இந்த நாட்டு எழுத்தாளர்கள் மறந்துவிடக் கூடாது.
தாம் நடந்து வந்த பாதையையே பலர் மறந்துபோய் விடுகின்றனர். பலரின் பல்வேறுபட்ட உழைப்பின் அறுவடைதான் தமது இப்போதைய புகழ் என நம்ப இவர்கள் இன்று பயப்படுகின்றனர். நமது படைப்பாளிகளில் பலர் சமீபத்தில் நம்மைவிட்டு மறைந்து போயுள்ளனர். இந்த மண்ணுக்காகப் பேனா பிடித்து உழைத்த
அலட்சியம் செய்துள்ளனர்.

Page 4
9it-GooUVÝ V UV7
பல புனை பெயர்களில் எழுதி வந்தவர், பண்டிதர் சச்சி
- செங்கை ஆழியான்
1939 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆந் திகதி ஈழகேசரியில் தண்ணீர்த் தாகம்’ என்றொரு அற்புதமான சிறுகதை வெளிவந்தது. அதனை ஆனந்தன் என்பவர் எழுதியிருந்தார். அந்தச் சிறுகதை இவ்வாறு ஆரம்பிக்கிறது: "பங்குனி மாதம். வெயில் மிகவும் காய்தலாக அடித்துக் கொண்டிருந்தது. கள வர்ணனை யோடு கதை விபரிக்கப்படுகிறது. நீதிமன்றத்துக்கு முன் கடகத்தில் பொருள் கொண்டு வந்து வியாபாரம் செய்த கதிரன் மகளுக்கு வெயில் எரிய எரிய தாகம் எடுக்கத் தொடங்கியது. நீர் தேடிப் புறப்பட்டவள் பார்வையில் ஒரு வளவின் கிணற்றுக் கட்டில் செம்பு ஒன்று நீருடன் கண்களில் படுகின்றது. பொறுக்கவியலாத விடாய். செம்பை எடுத்துப் பருகுகிறாள். “என்னடி செய்தாய் பாதகி" என்று கர்ச்சித்தபடி நடேசையர் ஓடி வருகிறார். செம்பைப் பறித்து அவள் நெற்றியில் ஓங்கி அடிக்கிறார். நெற்றி உடைந்து இரத்தம் பெருகுகிறது. ஒடிவிடுகிறாள். வடு நெற்றியில் நிரந்தரமாகி விடுகின்றது. இது தண்ணீர் தாகத்தின் முதல் பகுதி. இரண்டாம் பகுதியில் ஆஸ்பத்திரியில் அனாதையாக விடப்பட்ட ஒரு வயோதிபர் விடாயால் 'அம்மா தண்ணீர் விடாய் நாவை வறட்டுகிறது’ எனக் கதறுகிறார். எவரும் கவனியாதிருக்க, ஒரு தாதி நீருடன் அவர் அருகில் வருகிறாள். நடேசையரை அடையாளம் கண்டுகொள்கிறாள். "ஐயா, பறைச்சி தொட்டுத் தண்ணீர் தந்தால் குடிப்பீர்களா? எனக் கேட்கிறாள். “என் மரணத் தாகத்தைத் தீரம்மா’ என்கிறார். அவள் நீரைப் பருக்குகிறாள். நடேசையர் அவளை அடையாளம் கண்டு கொள்கிறார். "அம்மா என்னை மன்னி" என்றபடி அவள் காலடியில் விழ எழுகிறார். இதுதான் அச்சிறுகதை. மிகவும் கலை நுட்பத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது.
எழுதப்பட்ட காலம் 1939. சாதிக் கொடுமைகளும் தீண்டாமையும் தலை விரித்தாடிய ஒரு காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புரட்சிகரச் சிறுகதையைப் பண்டிதர்
4

مسير
JPGGGDE
க.சச்சிதானந்தன் எழுதியிருக்கிறார். ஈழத்தில் நவீன புனைகதை இலக்கியத்தை அறிமுகப்படுத்திய இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்தியலிங்கம் வரிசை ufalio வைத்து எண்ணப்பட வேண்டியவர் க.சச்சிதானந்தனாவார். தரமான சிறுகதை ஒன்றினை முதன் முதல் எழுதிய பெருமை இவருக்கேயுரியது. ஈழ கேசரியில் ஆனந்தன் என்ற புனை பெயரில் எட்டுச் சிறுகதைகள் 1939-1944 காலகட்டத்தில் எழுதியுள்ளார். அவற்றில் தண்ணீர்த் தாகம் ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்றாகும். சாதியக் கொடுமைகளுக்கு எதிராக முதன் முதல் ஈழத்தில் மட்டுமன்றித் தமிழ் கூறும் நல்லு லகத்திலேயே குரல் எழுப்பிய படைப் பாளி க.சச்சிதானந்தன் ஆவார். அன்னா ரின் ஏனைய சிறுகதைகள் குறிப்பிடத்தக் கனவாகவில்லை. எனினும் முற்போக் கான சிந்தனையாளனாக க. சச்சி தானந்தன் 1939களிலேயே அடையாளங் காணப்பட்டிருக்கிறார்.
பண்டிதர் கணபதிப்பிள்ளை க.சச்சிதானந்தன் 1921ஆம் ஆண்டில் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தில் பிறந்தார். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி என்பனவற்றில் கல்வி கற்று இப்பாடசாலைகளுக்குப் பெருமை சேர்த் தவர். அவர் பிறந்த இடமும், ஆரம்ப கல்வி கற்றக் கல்லூரியும் இன்று இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற் குள் அமைந்து விட்டதால் கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெயர்ந்த ஆயிரக் கணக்கான மக்களுள் ஒருவராக பருத்தித்
5
துறையில் வசித்து வருகின்றார். இப் பேரறிஞனை உருவாக்கிய அவரது இல்லம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயி லிற்கு அருகில் யுத்தத்தின் கொடுமைக் குள்ளாகித் தரைமட் மாகி விட்டது. க.சச்சிதானந்தன் அவர்கள் லண்டன் சிறப்புப் பட்டதாரி. பின்னர் லண்டன் முதுகலைமானியுமாவார். இவர் ஒரு மதுரைப் பண்டிதர். யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம் இவருக்குக் கெளரவ இலக்கியக் கலாநிதிப் பட்டம் வழங்கி தன்னைப் பெருமைப்படுத்திக் கொண் டது. பலாலி ஆசிரியக் கலாசாலையின் உளவியல் விரிவுரையாளராகவும் பின்னர் உபஅதிபராகவும் விளங்கியுள்ளார். வானி யலில் மிக்க பரிச்சயமுள்ள க.சச்சி தானந்தன், சோதிடக் கலையில் பாண் டித்யம் பெற்றவர். முந்நூறு ஆண்டு களாகப் பஞ்சாங்கம் கணித்து வெளி யிடும் தொடர்ச்சியான பரம்பரையின் பாரம்பரியத் தொடர்ச்சிப் பொறுப்பு இன்று இவரிடமுள்ளது. இன்று ஓய்வு பெற்ற நிலையில் 33-வது அகவையில் வால்மிகி போன்ற துறவு வடிவில் ஒய் வில்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறார். லண்டன் சிவயோகம் அறக்கட்டளை யினர் செஞ்சொற் செல்வன் ஆறு.திரு முருகன் மூலமாக வழங்கிய உதவி நிதியைக் கொண்டு இரு பெரும் நூல் களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். புத்தக அமைப்பில் இன்று எவ்வளவோ புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்ற வேளையில் அவற்றினை மனங்கொள் ளாது பிளாஸ்ரிக் டயறி மேலுறையோடு தனது நூல்களை வெளியிட்டுள்ளமை பண்டிதரின் தற்காலப் புதுமைகளை ஏற்

Page 5
காத பிடிவாதத்தை உணர்த்துகின்றது. உள்ளடக்கம் எவ்வாறு உயர்வாக இருந் தாலும் நூலகக் கட்டமைப்பிற்குள் அடங் காவிடில் அவை நூல்களாகா என்பேன்.
ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி முதலான புனை பெயர் களில் கவிதைகள், சிறுகதைகள், ஒரு நாவல், ஏராளமான கட்டுரைகள், நாட கங்கள், சித்திரங்கள், காவியங்கள் என்ப வற்றினை பண்டிதர் க.சச்சிதானந்தன் ஆக்கியளித்துள்ளார். கவிதைத்துறை அவருக்குக் கைவந்த கலை. சிவக் கொழுந்து என்ற கவிஞர், யாழ்ப்பாணன் என்ற புனைப் பெயரில் கவிதைகள் ஆக்கத் தொடங்கியதும் யாழ்ப்பாணன் என்ற புனை பெயரைக் கைவிட்டு தனது சொந்தப் பெயரிலேயே பின்னர் கவிதை களையாக்கத் தொடங்கினார். "காதலியின் கையெழுத்து' என்ற அவருடைய முதலா வது கவிதை இந்திய தவசக்திச் சஞ்சிகை யில் வெளிவந்தது. அவருடைய கவிதை களின் தொகுப்பு ஆனந்தத் தேன்’ என்ப தாகும். ‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் - எந்தன் சாம்பல் தமிழ் மணக்க வேக வேண்டும்" என்ற புகழ் பூத்த பாடலின் ஆசிரியர் க. சச்சி தானந்தன் ஆவார். அப்பாடல் அக்காலத் தமிழரசுக் கட்சியின் பிரச்சார மேடை களில் முழங்கியது. பட்டிதொட்டியெல் லாம் ஒலித்தது. தமிழரசுக் கட்சியின் ஆஸ்தான கவிஞராகவே அவர் அக்காலத் தில் விளங்கினார். தனது பதினெட் டாவது வயதில் தண்ணீர்த் தாகம்’ என்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராக, அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்காகப் போர்க் குரலோடு சிறுகதை படைத்த
இந்தப் படைப்பாளி மதுரைப் பண்டி தராகியதும் கவிஞராகினார். அவருடைய கற்பனை இயற்கையைப் பாடுவதில் தமிழ் மொழியின் சிறப்பையும், குடும்ப பொது உணர்வுகளையும் கவிதைகளாக் குவதிலும் திசை திரும்பியது. மனைவி கட்டிக் கொடுத்த சாதம் என்னும் பொருளை வைத்துக் கொண்டு அவர் பாடிய 'அமிழ்தம்' எனும் கவிதையை
இரசிகமணி கனகசெந்தி நாதன் அடிக்கடி
பாராட்டுவார். தமிழ்ப் பற்றுக் கவிதைகள் நிறைந்த ஆனந்தத் தேன் என்ற கவிதைத் தொகுதியோடு அரசியல் வாதி கு.வன்னியசிங்கம் பற்றிய தியாக மா மலை" என்றொரு தொகுப்பும் வெளி வந்துள்ளது.
“எனக்கு இலக்கியக் கோட்பாடு என்று ஒன்றில்லை. உள்ளத்தில் என்ன எழுத வேண்டுமென்று மனமுட்டுப்படு கின்றேனோ அதை எழுதுகிறேன். அதைக் கோட்பாட்டுக்காரர் தான் இன்ன தென்று பிரித்துக் காண வேண்டும்" என்கிறார், சச்சிதானந்தன். அவர் எழுதிய ஒரேயொரு நாவல் அன்னபூரணி" என்ப தாகும். ஈழகேசரியில் தொடராக வெளி வந்தது. 1856களில் காவலப்பன் கதை யோடு ஆரம்பமாகிய ஈழத்தின் ஆரம்ப நாவலிலக்கியம் 1940களுள் ஐம்பது வரை யிலான நாவல்களைத் தனதாக்கிக் கொண்டது. இக்காலகட்டத்தில் சி. வை.சின்னப்பாபிள்ளையின் "விரசிங்கன்" (1905), 'நொறுங்குண்ட இருதயம்" (1914), இடைக்காடரின் நீலகண்டன்' (1925), "plupo வல்லி (1926), ம.வே.திருஞானசம்பந்தம்
மங்களநாயகி தம்பையாவின்
எஸ்.தம்பிமுத்துப்பிள்ளையின்

ஒUகை
பிள்ளையின் "காசிநாதன் நேசமலர்? (1927) ஆகிய ஐந்து நாவல்கள் ஈழத்து நாவலிலக்கியத்திற் தேறின. இந்த ஆரம்ப நாவல்களிட்ட நாவல் மனையை 1949-1950களில் முன்னெடுத்துச் சென்ற பெருமை க.சச்சிதானந்தன் ‘அன்ன பூரணி', சம்பந்தன் “பாசம்', வ.அ.இராசரத்தினம் "கொழுகொம்பு', தேவன் - யாழ்ப்பாணம்
கசின் “குமாரி ரஞ்சிதம்',
கேட்டதும் நடந்ததும்', சொக்கன் 'மலர்ப் பலி ஆகியோரைச் சாரும். இந்த நாவல் கள் sյմսգ யொன்றும் ஈழத்து நாவலி லக்கியத்தில் பெரும் வளர்ச்சியை ஏற் படுத்திவிடவில்லையாயினும் அடுத்த கட் டத்திற்கு நாவலிலக்கியத்தினை நகர்த்தி விட்ட பெருமைக்குரியன. நமது க.சச்சிதானந்தன் அவர்களில் ஒருவர். கவிதை போல நாவல் அன்னாருக்குக் கைவரவில்லை.
பண்டிதர் க.சச்சிதானந்தன் யாழ் நூல் தந்த சுவாமி விபுலானந்தரின் படி யெடுக்கும் மாணாக்கனாகச் சில காலம் இருந்துள்ளார். அதனால் ஆய்வுத் துறை யில் இயல்பாகவே அவருக்கு மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் உண்டு. அவர் ஆய்ந்தெழுதிய சமஸ்கிருதம் முதலான மொழிகளில் பாண்டித்யம் பெற்றவராக விளங்குவதால் ஆய்வுத் துறையின் நுணுக்கமான அணுகு முறைக்குப் பரிச் சயமானவராகவுள்ளார். தமிழர் யாழியல் என்ற இந்த நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதையும் பரிசிலையும் பெற்றது. அவ ராக்கிய இன்னொரு ஆய்வு நூல் 'மஞ்சு காசினியம் - இயங்கு தமிழியல்
என்பதாகும். மஞ்சு என்ற தன் மகளின்
நினைவாக இந்த இலக்கண நூல் அவரால் மஞ்சுகாசினியம் எனப் பெயரிடப்
பட்டது. மொழியியல், தொல்காப்பிய
அடிப்படையில் இன்றைய வழக்கையும் இலக்கண வரம்புக்குள் இந்நூல் அடக்கு கின்றது. புதிய கோணத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல் இதுவாகும்.
சச்சிதானந்தன் அண்மைக் காலமாக காவியம் படைக்கின்ற பணியில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறார். அவரது முதலாவது காவியம் “யாழ்ப்பாணக் காவியம்’ ஆகும். இந்நூல் ஈழத்துக் காவிய இலக்கியத் துறைக்கு புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்திருக்கின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு கால கட்டத்தினை இக்காவியம் சித்திரிக் கின்றது. கனக சூரியசிங்கை, ஆரியனின் மகன் பரராசசேகரன், சப்புமல் குமரையா என்ற செண்பகப் பெருமாள், விஜய பாகு, ஆறாம் பராக்கிரமபாகு ஆகிய வர லாற்று நாயகர்களோடு ஏராளமான கற்பனைப் பாத்திரங்களைப் பெய்து, இலங்கையின் பல பாகங்களில் அவர் களை உலவவிட்டு இக்காவியத்தை அவர் படைத்துள்ளார். “சொன்ன வரலாற்றுச் சம்பவங்கள் தூமலராய், மன்னன் பரராசன் மாமுடியின் மாண்கதையை' சொல்ல விழைந்திருக்கிறார். யாழ்ப் பாணக் காவியத்தினை எவரும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் மொழி கையாளப்பட்டுள்ளது. நின்று நிதானித்துக் கற்க வேண்டிய காவியம். இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு, வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, சம்பந்தர் விருது என்பவற்றினை இந்தக் காவியம் தனதாக்கிக் கொண்டது.

Page 6
'பருவப்பாலியர் படும் பாடு” என்ற காவி யம் அண்மையில் வெளிவந்துள்ளது. இளம் வயதினரின் செயல்களை இக் காவியம் சித்திரிக்கின்றது. நாலாயிரத்து முந்நூறு கவிதைகளில், 1950 ஆண்டு முதலான இலங்கை வரலாற்றினை இக் காவியத்தில் கருப்பொருளாகக் கொண் டுள்ளார். வழமைபோல இலங்கையின் காடு கிராமம் எல்லாம் இக்கதை நடக்
கிறது. ஆற்றல் வாய்ந்த இக்கவிஞர்
தனது காவியத்திற்கு இப்படியொரு தலைப்பினை ஏன் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. நவீன இலக்கியச் செல் நெறியை ஆரம்பத்தில் தெரிந்திருந்த சச்சிதானந்தன் தான் ஒரு பண்டிதர் என்பதை இக்காவியத்திற்கான தலைப் பின் மூலம் நிரூப்பித்துள்ளார். எவ்வா றாயினும் அவரின் கவித்துவ ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
இலக்கியக் கலாநிதி, பண்டிதர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் நம் மிடையே வாழ்ந்துவரும் இலக்கிய முதுசொம் என்பேன். அவருடைய எழுத்துக் கள் தமிழுக்கு என்றும்
பெருமை சேர்க்கும் என நம்பலாம்.
மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
體 நாம் பயணித்த
uap ajaig
(சிறுகதைத் தொகுதி) ப. ஆப்டீன்
and saudatav.sg
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
Aur
(சுயவரலாற்று நூல்) தில்லை நடராஜா
ଡ୯୭ LIT&Liପi , டயரியில் இருந்து.
(வைத்திய அநுபவக் குறிப்பு)
எம்.கே.முருகானந்தனர்
திக்குவல்லை கமாலினால் எழுதி, அவரது பரீதா பதிப்பகத்தினால் வெளியிட்டுள்ள மல்லிகை ஜீவா மனப்பதிவுகள் நூல் விற்பனையாகின்றது. தேவை
uur (360TTf தொடர்பு கொள்ளவும்.
104, கஸ்ஸாலி மாவத்தை,
அட்டுலுகம, பண்டாரகம.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வானம்
பாடிகளின்
நடுவே
- TOT. UniGUπ]85th -
கொழும்பு தமிழ் சங்கத்திற்குச் சென்று பின்னர் திரும்பி ருத்திரா மாவத்தையில் நடந்து கொண்டிருக் கிறேன். எனது பார்வைக்கெட்டிய தூரத்தில் உயரமான ஒருவர் சாவதானமாக நடந்து வந்துகொண்டிருக்கிறார். இதை அன்ன நடையெனக் கூறமுடியாது. ஆனால் ஓய்வூதியம் பெற்றோரது "உலாத்து நடையெனச் சொல்லலாம்!
உயரமானவரென்றபடியால் இருவருக்குமான இடைத் தூரம் சற்று மிகையாக இருந்தாலும், என்னால் அவரை
இன்னாரென மட்டுக்கட்ட முடிகிறது. இடைத்தூரம் எமது
நடைமூலம் குறுகி வந்ததும், அடையாளப்படுத்தலுக்கு உதவியதெனலாம். அவரது மேலாடை ஒரு புஷ் கோட். அந்தக் காலத்தில் புஷ் கோட்டிற்குப் மேலுக்கும் கீழுக்கு மாக நான்கு பொக்கட்டுகள் இருக்கும். ஆனால் இவர் அணிந்திருந்ததற்குக் கீழ்ப் பகுதியில் இரண்டுதான்! நீளக் களிசானுக்கு மேலாக இந்தப் புஷ்கோட்.
எனக்கேயுரிய சொத்தான, என் பெற்றோர்களால் அளிக்கப்பட்ட கணனியை இயக்குகின்றேன். சொற்ப நேர யோசனைதான். "இவர் சரவணமுத்து மாமா' எனது கணனித் திரை அறிவித்து விடுகிறது. அவர் அருகே வந்துவிட்டார். அவர் முன் நிற்கிறேன். அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்! ஏற இறங்கப் பார்க்கிறார். என்னை அடையாளம் காணச் சிரமப்படுகிறார் என்பதை உணர்கின்றேன்.
"ஐயா நீங்கள் சரணமுத்து மாமாதானே?"
"ஆம்" என்கிறார். '
சுய அறிமுகமொன்றைச் செய்கிறேன்.
"ஆ" என்றவாறு அவர் புறப்படுகிறார்.
இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பில் சிறுவர் மலரென்ற நிகழ்ச்சி அப்பொழுது மிகவும் பிரசித்தமானது. தற்பொழுது தமது பிள்ளைகளுக்குப் பாடசாலைகளில் இடமெடுப்பதற்குப் பெற்றோர்கள் அலைவது போல் அன்று இந்தச் சிறுவர் மலரில் தமது பிள்ளைகளின்
9

Page 7
குரல்களை ஒலிக்க வைக்கப் பெற்றோர் இந்த நிகழ்ச்சி எத்தனையோ இன்றைய பிரபல
கள் ஆலாய்ப் பறப்பதுண்டு!
ஒலிபரப்பாளர்கள், நடிகர்கள், சங்கீதக் காரர்களுக்கு நாற்றங்காலாக அமைந்திருக் கிறது. சோ.நடராசா, ஞானதீபம் மோசஸ், பேரம்பலம், ராம் சுந்தரலிங்கம், வ.இராசையா, மகேசன், வி.ஏ. கபூர், நட ராசா ஐயர். இரா.பத்மநாதன், கு.இராமச் சந்திரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியைத் தயாரித்தளித்து ஏராளமான சிறுவர் களுக்கு வானொலி மாமா ஆகி இருக் கின்றனர். முதன் முதலாக இந்நிகழ்ச் சிக்கு வந்து ஒலிவாங்கிக்கு முன் நின்ற பல சிறுவர்கள் இன்று நாடறிந்த கலை ஞர்களாகத் திகழ்கின்றனர். அப்துல் ஹமீட், எஸ்.ஐ.எம்.எ.ஜப்பார், செந்தில் மணி, மரைக்கார் ராம்தாஸ், உபாலி செல்வசேகரன் ஆகியோருக்கு, கலைத் துறைக்கு அவர்கள் முன்னேற நாற்றங் காலாக இருந்திருக்கின்றது. இன்று வெகுவாகப் பேசப்படும் கலாபூஷணம் மானா.மக்கீன் இந்நிகழ்ச்சியில் குட்டி நாடகங்கள் எழுதியிருக்கிறார்.
சரவணமுத்து மாமாவுக்கு அவரது சொந்தப் பெயரோடு "மாமா' என்ற உருத்துரிமைச் சொல் உலாவரக் காரண மாக இருந்தது இந்தச் சிறுவர் மலர் நிகழ்ச்சி தான். நீண்ட காலமாக இவர் இந்நிகழ்ச்சியைத் தயாரித்து ஒலிபரப்பி யிருக்கிறார். தொடர்ச்சியற்ற 23 வருடங் இதனால் மற்றைய வானொலி மாமாக்களுக்கு இல் லாத பெருமை இவருக்குண்டு. தேசிய சேவையின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவுக்குள் இவரது ஆகிருதியைக் கண்டுவிட்டால் ஊழியர்கள் அனைவரும் "சரவணமுத்து
கள் எனலாம் என்கிறார்.
வருகிறார்” என்று சொல்ல மாட்டார்கள்.
O
"மாமா வருகிறார்" என்றுதான் சொல் வார்கள். ஆரம்பத்தில் நான்கூட அங்க லாய்த்ததுண்டு. இத்தனை பேருக்கும் இவர் மாமாவா? பின்னர்தான் சொன் னார்கள் இவர் பல இலட்சம் பிள்ளை களுக்கு 'வானொலி மாமா'வாக இருந்து சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தரமாக்கியவ ரென. இந்த மரியாதை வேறெவருக்கும் கிடைத்ததை நான் கண்டதில்லை.
அந்தக் காலத்தில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் நாடகம், பாட்டு, கதை என்பன உள்ளடக்கப்பட்டிருந்ததாம். விஜயலெட்சுமி அ.கனகரெட்ணம் என் பவர் வயலின் வாசிக்க வருவதுண்டாம். ஞானதீபம் மோசஸ், சிவபாக்கியம் ராச நாயகம் ஆகியோர் வீணை இசைப்பார் களாம். மிருதங்கக் கலைஞர் அமரர் கலாசூரி அ.அச்சுதன், சிங்களக் கலைஞர் கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவிருந்த வயலின் முத்துசாமி ஆகியோரும் அன்றைய சிறுவர் மலருக்கு வாத்திய இசை வழங்கியுள்ளனராம். ஞானதீபம் மோஸசின் திருமணத்துக்குத் தானும், சோ.சிவபாதசுந்தரம், சானா, எஸ்.சண் முகநாதன் ஆகியோரும் சென்றதை பூரிப்புடன் நினைவுபடுத்துகிறார்.
சரவணமுத்து மாமா இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் மிகவும் சுறு சுறுப்பாக இருந்த பொழுது, தகவல் துறைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர் நிகழ்ச்சித் தயாரிப்புக் குறித்து ஆலோசனை வழங்க உத்தியோகத்தர் களையும், தயாரிப்பாளர்களையும் அழைத் தாராம். இந்தப் பட்டியலில் சரவணமுத்து மாமாவின் பெயரும் இருந்ததாம். ஆனால் மாமா அந்த அழைப்பை ஏற்று அமைச்சரின் ஆலோசனைகளைக் கேட்க

སྔགས་གཟུ་ மறுத்து விட்டாராம். இத்தனை காலத்து வானொலி அநுபவமுள்ள எமக்கு
வானொலி வாசலை மிதித்து ஆறு மாதங் கூட ஆகாத அமைச்சர் அப்படி என்ன சொல்லப் போகிறார்! இதுவே மாமாவின் வாதம். வானொலி ஒரு அரச ஊடகம். அமைச்சருக்கும் அரசுக்கும் 'சலா மிடா தவர்கள் இன்றுபோல் அன்றுந்தான் ஒரங் கட்டப்பட்டார்கள். அந்த ஆயுதம் மாமா வையும் விட்டுவிடவில்லை. அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் நீக்கப்பட்டார். அந்தோ அநியாயம்! இப்படிப் பிள்ள்ை களாலும், மக்களாலும் நேசிக்கப்பட்ட இந்தக் கலைஞருக்கு இத்தகைய தண்டனையைக் கொடுத்தவர் ஒரு சிங்கள அமைச்சரல்ல! தமிழமைச்சர் செல்லையா குமாராசூரியரே.
அந்தக் காலத்தில் சிறுவர் மலரைத் தயாரித்து ஒலிபரப்புவதற்கு ரூபா 50/- தான் சன்மானமாகக் கிடைத்ததாம். பங்கு பற்றும் சிறுவர்களுக்கு ஒத்திகை செய்து அவர்களைக் கலையகத்திலுள்ள ஒலி வாங்கிக்கு முன்னால் நிறுத்த வேண்டும். ஒலிபரப்புப் பிரதிகளைப் பெற எழுத் தேட வேண்டும். வானொலிப் பிரதியைக் கூட எல்லோ ராலும் இலகுவில் எழுதிவிட முடியாது. உத்திகளைத் தெரிந்திருக்க வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள், சிலரது பிரதி களைத் திருத்தித்தான் ஒலிபரப்புவது வழக்கம். இருந்தும் சில ஆஸ்தான வானொலி எழுத்தாளர்கள் இருந்தது முண்டுதான்! இவர்கள் பிரதிகளி லில்லாது அந்தரிக்கும் பொழுது ஆபத் பாந்தவர்களாக உதவுவதுமுண்டு.
தாளர்களைத்
காலை புறப்பட்டு வரும் சிறுவர் கள் நண்பகலில்தான் அவரவர் வீடு
11
செல்ல முடியும். அதுவரை நிகழ்ச்சி முடியும் வரை அன்னந் தண்ணி இல்லாது நிகழ்ச்சியோடு ஒன்றிப்போயிருப்பார்கள். அவர்கள் நிகழ்ச்சியில் வைத்திருக்கும் ஆர்வம் அவர்களது வயிறுகளை ஊத வைத்துவிடும். நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் மருமக்களை, மாமா இலங்கை வானொலி சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் செல் அங்கு அவர்களுக்கு சிற்றுண்டி வகையறாக்களோடு தேநீரும் கிடைக்கும். இது இன்றும் கூட தொடருமென நினைக்கலாம்! இதற்கெல்லாம் நிலையம்
வார்.
கொடுக்கும் சன்மானத் தொகை எந்த மூலைக்குக் காணும்! அதுவும் அந்த 50.00 ரூபா.
சரவணமுத்து ஒரு வானொலி நடிகர். பல வருடங்களாக
D TO st
கிராம சஞ்சிகை நாடகங்களில் நடித்தவர். வானொலி நேயர்களின் ஒட்டு மொத்த மான பாராட்டைப் பெற்ற 'விதானையார் வீட்டில்’ என்ற நாடகத்தில் சட்டம்பிய ராக அவதாரமெடுத்தவர். இந்நாடகத்தில் விதானையாராக பேராசிரியர் கா.சிவத் தம்பியும், அவரது மனைவியாக தற் பொழுது அவுஸ்திரேலியாவில் இருக்கும் பரிமளாதேவி விவேகானந்தாவும் மற்றும் பிரபல அறிவிப் பாளர்களான செந்தில் மணி மயில்வாகனன், வி.சுந்தரலிங்கம் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரும் நடித்த தாக நினைவு கூருகிறார். சானாவின் புகழ் பெற்ற நாடகமான "லண்டன் கந்தையா? விலும் நடித்துள்ளார்.
வானொலியில் நேர்முக வர்ணனை செய்வதற்குத் தனித் திறமை வேண்டும். குரல் இருந்தால் மட்டும் போதாது! ‘செந் தமிழும் நாப்பழக்கம்” என்பார்கள். நாவுக் குத் தங்கு தடங்கலற்ற சொல் வழங்கல்

Page 8
கிடைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விடயம் குறித்து தெளிவு, சித்தரிப்பு என்பவற்றால் நேயர்களைக் கிறங்க வைக்க வேண்டும். இத்தகைய வளங்கள் செழிப்பாக இருந்தால்தான், நேர்முக வர்ணனையில் சோபிக்கலாம். இத்தகை மைகள்தான் விவிபன் நமசிவாயம், வீ.ஏ.கபூர், சி.வி.ராஜசுந்தரம், வீசுந்தர நாடறிந்த வானொலி நேர்முக வர்ணனையாளராக்
லிங்கம் ஆகியோரை
கின. இத்தகைய நேர்முக வர்ணனை களை சரவணமுத்து மாமாவும் செய்த துண்டு. நேர்முக வர்ணனை நேரடி அஞ்ச லென்பது குறிப்பித்தக்கது. தற்போதுள்ள ஐக்கிய இராச்சி (இங்கிலாந்து) யத்தின் அரசியான எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு வந்தபொழுது அவரது சுற்றுலாப் பயணத்தைத் தானும் நேர்முக வர்ணனை செய்ததாகச் சரவணமுத்து மாமா பின்னோக்கித் தனது வாழ்க்கைப் பயணத்தை இரசிக்கிறார். இதே வைப வத்தின் இன்னொரு நேர்முக வர்ணனை யாளராக விவியன் நமசிவாயம் இருந் ததும் குறிப்பிடத்தக்கது. சோமராம தேரோவினால் சுட்டுக் கொல்லப்பட்ட, முன்னாள் இலங்கைப் பிரதமரும் தற் போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்க அம்மையாரின் தந்தையுமாகிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கா வின் இறுதிக் கிரியைகளையும் இவர் வானொலி நேயர்களுக்கு வர்ணனை மூலம் அறியப்படுத்தி இருக்கிறார். இந் நிகழ்ச்சி கொரகொல்லையில் நடந்தது. ஆண்டை 1959 எனக் கூறுகிறார்.
அப்போதெல்லாம் ஆண்டு தோறும் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர், தீர்த்த வைபவங்கள் நேர்முக வர்ணனை செய்யப்படுவதுண்டு. இதுவொரு சமயம்
12
sea): অ
சார்ந்த நிகழ்வு. அதற்கான சொற்களைப் பாவித்தால்தான் வானொலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு பக்தி உணர்வு பிறக்கும். இதை தீட்சை பெற்ற சைவர்களெல்லாம் கேட்பதுண்டு. எனவே, 'யாகாவாராகிலும் நாகாக்க என்ற அச்சுறுத்தலுடனேயே வர்ணனை யாளர்கள் வர்ணிப்பதுண்டு. இதுவும் நேரடி ஒலிபரப்பு. இந்த வர்ணனைகளை சி.வி.ராஜசுந்தரம், "சுந்தர சுந்தரலிங்கம், ஏ.சுப்பரமணிய ஐயர் ஆகியோரும் செய் திருக்கின்றனர். தற்பொழுது நடராஜ ஐயர் இதைச் செய்வதைக் கேட்க முடி கின்றது. வெளியிலிருந்தும் தகுதியான வர்கள் இதற்காக நியமிக்கப்படுவதுண்டு. இந்த அதிமுக்கிய நிகழ்வில் தானும் பங்கு கொண்டு வர்ணனை செய்ததாக சரவணமுத்து மாமா இன்முகத்தோடு சொல்கிறார். தற்பொழுது கத்தோலிக்க திருச்சொரூப ஆராதனை, நத்தார் திருப் பலி என்பவற்றில் திருச்செல்வம் லூக்காஸ் என்பவரும் பங்கு பற்றுகிறார். பொருத்தமாக இருக்கின்றது.
சரவணமுத்து மாமா இலங்கை வானொலி தமிழ் பிரிவு அனைத்துக்கும் பொறுப்பான அதிகாரியாகவுமிருந்திருக் கிறார். இது அவரது வாழ்வில் மகத்தான திருப்புமுனை!
தங்கத் தாத்தா நவாலியூர் சோம சுந்தரப் புலவரை தெரிந்தளவிற்கு தமிழ் உலகம் சோ.நடராசாவைத் தெரிந்து வைத்திருக்காதெனலாம். 'கூடிப் பனங் கட்டி கூழும் குடிக்கலாம்" என்று தங்கத் தாத்தா பாடியதாலா? இந்த நிலை என வாசகர்கள் வியக்கலாம்! அந்தத் தாத்தா வின் மகன்தான் சோ.நடராசா என்றால் நிச்சயமாக வாசகன் திணறுவான்.

6696); তত্ত্ব
போராசிரியர் 'கல்கி" மூர்த்திக்கு தந்தையின் பெயரைத் தூக்கிச் செல்ல கி.ராஜேந்திரன், ஆனந்தி - கல் கண்டு தமிழ்வாணனுக்கு லேனா தமிழ்
கிருஷ்ண
வாணன், 'காலச்சுவடு சுந்தர ராமசாமிக்கு
கலைஞர் கருணாநிதிக்கு ஸ்ராலின், கனிமொழி ஆகிய வாரிசுகள்
கண்ணன்,
தந்தையர்களது ஒளி வட்டத்திலல்லாம லேயே தாமே தனித்து ஒளிரக் கூடிய வல்லமைகளோடு இருக்கின்றனர். ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில் அப்படி இல்லைத்தானே. வாரிசு கள் வரலாறு படைக்கவில்லை. யாரை நோவது மஹாகவிக்குச் சேரன் இருக் கிறார்ரெனலாம். கஞ்சிப் பயறுதானே. தங்கத் தாத்தா விஷயமும் அதுதான். தங்கத் தாத்தா அளவிற்று சோ.நடராசா பேசப்படவில்லை!
சோ.நடராசா 1939இல் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சிப் பிரி
விற்குப் பொறுப்பாக இருந்தவர். அப்
பொழுது தென்னிந்திய இசைத் தட்டு களை ஒலிபரப்பல், செய்தி வாசித்தல், கிராம சஞ்சிகை, இசை ஆகிய நிகழ்ச்சி இப் போதுள்ள இடமான ரொறிங்டன் சதுக் கத்தில்தான் வானொலி நிலையம் இருந் தாக அறியக் கிடைக்கின்றது. இப்போ
கள் ஒலிபரப்பப்பட்டனவாம்.
துள்ள வசதிகளில் 25% விகிதம் கூட இருக்கவில்லையாம். செய்திகள் கூட தினசரி வெளியாகும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை வாசிப்பதன் மூல மாகத்தான் ஒலிபரப்பப்பட்டதாம். இன்றைய தலைமுறைக்கு ஒரளவிற்கா கிலும் தெரிந்துள்ள டி. எஸ். மணி பாகவதர் நிலையத்திற்கு வந்து தேவாரம்
பாடுவாராம். வீணை நிகழ்ச்சியும் இருந்த துண்டு நிகழ்ச்சிக்குள் நேரடி ஒலிபரப்பு களாவே இருந்தவையாம்!
இதே காலகட்டத்தில் கொலம்பகே என்பவர் சிங்களப் பிரிவுக்குப் பொறுப் பாக இருந்திருக்கிறார். நான் முஸ்லிம் பிரிவில் கடமை புரிந்தபொழுது இவரே அப்பிரிவுக்கும் அதிகாரியாக இருந்தார்.
ஒருநாள் திடீரென ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்! அப்பொழுது வெளியாகிக் கொண்டிருந்த "யுத்த முனை என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராகச் சோ.நடராசா போக வேண்டும். இவரது பக்குவமான, விசுவாசமான வானொலிச் சேவை இத்தகைய மேலேற்றத்தைக் கொடுத்திருக்க வேண்டும்! முன்னாள் தபால், தகவல் அமைச்சராக இருந்த சேர்.கந்தையா வைத்தியநாதனை தமி ழுலகு மறந்திருக்காதென நினைக் கிறேன். சைவ சமயத்தில் மிகவும் அக் கறை கொண்டவர். சோ.நடராசாவுக்கான இந்நியமனத்திற்கு மூலவராகச் செயற் பட்டவர் இவரே. சோ.நடராசா புதிய நியமனத்தை ஏற்றுக் கொண்டார். இலங்கை வானொலியின் தமிழ் பிரிவுக்குத் தலை இல்லாது போயிற்று. அப்பொழுது இலங்கை வானொலியின் பணிப்பாளராக இருந்த சேர். டி. சில்வா உண்டாக்கப்பட்ட வேலை வெற்றிடத் திற்குத் தகுந்த ஒருவரைத் தேடினார். அப்பொழுது சரவணமுத்து மாமா Postal Wirelees Telegraphy îflaîloi 65alb உயர்ந்த உத்தியோகத்தில் கடமை புரிந்து கொண்டிருந்தார். அத்தோடு, சோ.நடராசா வோடு சேர்ந்து ஒலிபரப்புகளிலும் ஈடு
பட்டுக் கொண்டிருந்தார். இதைப்

Page 9
பணிப்பாளர் அறிந்திருந்தார். எனவே ஒலிபரப்பு அநுபவமுடைய இவரே தகுதி யானவரென முடிவு செய்து தமிழ் பிரிவின் தலைவராக சரவணமுத்து மாமாவை அப்பதவியில் நியமித்தார். இப் பொறுப்பை மாமா மூன்று மாதம் மட்டுமே நிறைவேற்றினார். நிகழ்ச்சிகள் தடங்கல் காணாது நேயர்களுக்கு வந்து கொண்டிருந்தன. நிரந்தரமாக இருக்கும் படி லம்சன் என்ற அதிகாரியும் கேட்டா ராம். தனது சொந்த உத்தியோகத்தில் வாய்த்திருந்த வசதிகளை உத்தேசித்து நிரந்தரமாகச் செயற்பட மறுத்து விட்டா ஆனால் அதையும் விட அருந் தொண்டொன்றை வானொலித்துறைக்கு
ராம்.
மாமா செய்தார். அதற்காக வானொலி வரலாறு என்றைக்கும் சாவகச்சேரியைச் சேர்ந்த இந்தச் சரவணமுத்து மாமாவை நினைக்க வைக்கும்!
தமிழ் வானொலியென்றால் இன்றைக்கும் முந்திரிக் கொட்டையாக முன்னுக்கு நிற்பவர் ஊர்காவற்துறை, கரம்பனைச் சேர்ந்த சோ.சிவபாதசுந்தரம் தான். இவரது அடிகொடிகள் இன்னமும் ஊர்காவற்துறையில் உண்டு. 'ஒலிபரப்புக் கலை என்ற காலத்தால் சாகாத நூலொன்றைத் தமிழுலகத்துக்குத் தந்தவர். இந்நூல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. சிட்டி, சுந்தரராசனோடு சேர்ந்து தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி என்ற ஆய்வு நூலை வெளியிட்டவர். தமிழுலகால் வியந்து பேசப்படும் ஒலி பரப்புத்துறை முன் னோடி. அப்பொழுது சோ.சி.ஈழத்து தமிழியல் வெளியீட்டை முடுக்கி விட்ட 'ஈழகேசரி’ பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து, சுன்னாகத்திலிருந்து அதை
14
S. pg. 65);
வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஈழத்து இலக்கியம் எழுச்சி கொள்ள கை கொடுத்தது இந்த ‘ஈழகேசரி’ பத்திரிகை தான். இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு இலக்கிய உண்மை. ஈழத்து மூத்த எழுத் தாளர்களான இலங்கையர்கோன், வைத்தியலிங்கம், சம்பந்தன், சொக்கன், கனக செந்திநாதன் அடங்கிய ஒரு காத்திரமான இலக்கியப் பரம்பரையை ஈழத்து இலக்கியத்திற்குப் படைத்தது.
சரவணமுத்து மாமா விவேகானந்த சபையில் இருந்த பொழுது அதே
சபையில் உறுப்புரிமை கொண்டிருந்த சோ.சி.யோடு தோழமை கொண்டிருந்தார்.
சோ. சி. யின் ஆளுமைகளை நன்கு அறிந்திருந்தார். எனவே வானொலியின் தமிழ்ப் பிரிவிற்குத் தலைமை தாங்க சோ.சிவபாதசுந்தரமே பொருத்தமானவ ரென்பதைத் தயக்கமின்றித் தீர்மானித்துக் கொண்டார். பேச்சோடு பேச்சாக சேர். டி. சில்வாவுக்கும், லம்சனுக்கும் தெரியப் படுத்தினார். "உனது நண்பனைச் சொல். உன்னைச் சொல்கிறேன்". அதைவிட "தாயைச் சந்தையில் பார்த்தால் மகளை வீட்டுக்குப் y வேண்டுமா?’ என்பது தமிழன் விதித்த
போயும் பார்க்க
விதிப்பு! இதன் உள்ளார்ந்த உண்மையை லம்சனும், சேர்ளி.டி.சில்வாவும் உணர்ந்து கொண்டனர். சரவணமுத்து மாமாவில் சோ. சிவபாதசுந்தரத்தைக் கண்டு கொண்டனர். வெற்றிடத்துக்குத் தகுதி யானவர் சிபாரிசு செய்யப்பட்டு விட்டார். அவருக்கே தான் நியமனம். சோ.சிவபாத சுந்தரத்தைக் கூப்பிடும் படி மாமா கேட்கப்பட்டார். மாமாவுக்கு மகிழ்ச்சி!
தபாலட்டையொன்றை எழுதிச் சுன் னாகத்திற்கு அனுப்பினார். காத்திருந்தார்.

Př (සංඝාය
பொறுத்திருக்க முடியாமல் தந்தி யொன்றையும் அனுப்பினார். சரவண முத்து மாமாவின் நண்பர் சோ.சிவபாத சுந்தரம் வந்தார். தந்தி கிடைக்கவில்லை, தபால் அட்டைதான் கிடைத்ததென் பதையும் புன்னகைத்தபடி சொன்னாராம்! அப்போ! தபால் சேவை இன்று போல் தான் அன்றுமாக்கும்! அல்லது அந்த மரபை இன்றும் வாழ வைக்க வேண்டு மென்ற அக்கறையாக்கும்! இப்படித் தானாம் சர்வதேசத் தமிழனுக்கு தமி ழோசை தந்த சோ.சிவபாதசுந்தரம் ஒலி
பரப்புத் துறையில் தனது சுவட்டைப்
பதித்தாராம். சொன்ன பொழுது மாமா வின் முகம் மலர்ந்து காணப்பட்டது. நட்பு எப்படித் தமிழனது கலாசாரம்,
பண்பாடு என்பவற்றை மேம்படுத்தக்
கூடிய ஒலிபரப்புக் கலைக்கு ஒரு நவயுக
சிற்பியைத் தந்ததென்பதற்கு அசல் எடுத்துக் காட்டல்லவா இது!
சோ.சிவபாதசுந்தரம் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (B.B.C) பயிற்சிக்காகச் சென்ற காலத்தில் மோனி எலியாஸ் என்பவர் தமிழ் பிரிவிற் குப் பொறுப்பாக இருந்தாராம். இவர் அறுபதுகளில் திருமதி. ஜோசேப் என்ற பெயரில் கல்வி ஒலிபரப்பிற்குப் பொறுப் பாக இருந்தவர்.
சரவணமுத்து மாமா இத்தகைய அரும்பணிகளை இலங்கை ஒலிபரப்புத் இதைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக இலங்கை வானொலியின் பவள விழா
துறைக்குச் செய்துள்ளார்.
வில் விருதும், சன்மானமும் வழங்கப் பட்டுக் கெளரவிக்கப்பட்டார். இந் நிகழ்ச்சி பண்டார நாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்ததாகக் கூறுகிறார்.
அவரது குரல் இன்றும் வானொலி யில் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. போதி மாதவனின் போதனைகள் என்ற நிகழ்ச்சியை தயாரித்து ஒலிபரப்புகிறார்.
இன்றைய வானொலியின் தரங் குறித்து விசனிக்கிறார். அதிகாலை 4.00 மணிக்கு ஒலிபரப்பை ஆரம்பிக்கிறார். மங்கள இசை, சுப்ரபாதம், நற் சிந்தனைகள் ஆகிய நிகழ்ச்சிகள் அதி காலையில் புதுநாளுக்கு பூபாளம் இசைப்பது மனங்களை புனித நிலைக்கு இழுக்குந்தானே. பயன் படுத்துபவர்கள் இலாபம் பெறுவரல்லவா? 45 நிமிடமாக இருந்த சிறுவர் மலரை 30 நிமிட மாக்கியது குறித்தும் மன உளைச்சல் படுகிறார்.
இன்றைய சிறுவன்தான் நாளைய தலைவன்! இதை உத்தேசித்துத்தான் அகில இந்திய வானொலி நிலையம் சிறுவர் நிகழ்ச்சிக்கு இளைய பாரதமென பெயரிட்டுச் சிறுவர்களை முழுத் தேசத் திற்கும் பெருமைப்படுத்தி இருக்கின்றது. அவர்கள் இப்படி எதிர்கால சந்ததியை பெருமைப்படுத்தும் பொழுது எம்ம வர்கள் சிறுவர்களின் அறிவு, கலை போன்றவற்றை வளர்க்கும் ஒரு மகா சக்தியைத் தடுக்க முனைவது நியாய மாகுமா? மாமாவின் கோபம் நியாய
பொறுப்பானவர்களென
மானதே!
இவர் "சரவணன்' என்ற பெயரில் பத்திரிகைகளில், வானொலி நிகழ்ச்சிகள் குறித்து துள்ளார்.
விமர்சனங்களையும் செய்

Page 10
yS. ్యూటీ"
இருட்டுத் சரியத் தொடங்கிய ஒரு மாலை மம்மலுக்குள் அது நடந்தது
நீ.
உன் நாவு. விஷம் கொட்டியது. விஷம் பட்ட பயிரென ஒடிந்தேன்!
வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும்.
உட்கவிந்த மரணத்தை எவர் அறிவார்.?
உன்னுள் சுரந்த விஷத்தின் செறிவை நீயே உணராதிருக்கலாம்.
விஷம் என்று சொல்லுதல் uste (SLDIT...?
அது என் உயிர் குடிக்குமென, நீயே அறியாதவரைக்கும்.
... الولم
O - தாட்சாயிணி
முதல் மரணம் எந்தவித சம்மதங்களுமின்றி மிக மெதுவாய் அரங்கேறிற்று
உயிர் கசியும் ஒலி
மெதுமெதுவாய் உள்ளுக்குள் அமுங்கிற்று.
யாருமறியாதபடி
அந்த மரணம்.
இனியொரு பொழுதில்
உயிர்ப்பிழந்த உடம்பு
செயலற்றுப் போகலாம்.
அப்போது என் மரணத்துக்காக if sr-L- ஏங்கி அழலாம்
அதனால் சொல்லுகிறேன்!
'அது' எனக்கு இரண்டாவது மரணம்தான்.
அழவேண்டுமெனில் இப்போதே அழுதுவிடு

அன்புள்ள முரீபிரசார்ந்தனுக்கு.
- இளைய அப்துல்லாவற்
உண்மையில் 'என் தேசத்தில் நான் கவிதைத் தொகுதிக்கு ஒரு மனப் பூர்வமான குறிப்புத்தான் எழுதினேன், நான். எனது குறிப்பு பூரீ பிரசாந்தனாகிய உங்களுக்கு இவ்வளவு கோபத்தை உண்டு பண்ணும் என்று நான் எண்ணி யிருக்கவில்லை. உங்களுக்கு வந்த கோபத்தில் எனது பெயரை இவ்வளவு கொச்சைப்படுத்தி "மூத்த மூத்த அப்துல்லாஹ் என்று போதுமளவிற்கு உஷ்ணம் மேலோங்கியிருப்பது அவ்வளவு சிறந்ததாக எனக்குப்படவில்லை.
ஒரு நல்ல ‘செவ்வியாளராக உங்களை நான் பார்த்து வியந்து போயிருக் கிறேன். உங்கள் மீது எனக்கு கோபம் கிஞ்சித்தும் வரவில்லை. விமர்சனங்கள் பற்றி எனக்கு மிகுந்த மதிப்பிருக்கிறது.
மல்லிகை வாசகர்கள் நல்ல திறனாய்வாளர்கள். சீரிய பத்திரிகை வாசகர்கள் அவர்கள். மீண்டும் ஒருமுறை எனது குறிப்புக்களைப் படியுங்கள். நான் யாருக்குமே யாரையுமே எதிரிகளாக கருதுவதில்லை. ஒருமுறை டொமினிக்ஜீவா சொன்னது எனக்கு இன்னும் மனதில் அச்சொட்டாய்ப் பதிந்து போயிருக்கிறது.
"விமர்சனம் ஒரு மனிதனை குறுக்குவதல்ல. அவனை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி நகர வைப்பது."
அன்புள்ள பிரசாந்தன் நீங்கள் எனக்கு ஏசு ஏசு என்று ஏசியிருக்கிறீர்கள். எட்டு இடத்தில் "மூத்த மூத்தவர் என்று என்னைத் தாக்கி என்ன திருப்தியை அடைந்து கொண்டீர்களோ எனக்குத் தெரியவில்லை. எனது பெயர் வரும் இடங்களில் அப்படியே எனது பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.
அன்புள்ள பிரசாந்தன் 'பதினைந்து கவிதைகள் வெறும் காதல் கவிதை களாக மட்டும் இருந்ததைச் சுட்டிக் காட்டி "எழுதுங்கள் நூறு கவிதைகள்.
17

Page 11
காதலைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு. ’’ சொன்னேன் அந்தக் கவிஞர்களுக்கு.
என்றுதான் அன்பாகச்
இது எனது வேண்டுகோள்தான். முழுவதுமாக காதலை தூக்கி எறிந்து
விட்டு என்று எழுத வில்லை. “கொஞ்சம் என்றுதான் எழுதி யிருந்தேன்.
எனது ஒரு சொல் காதல் பற்றிய ஒரு வெளிப்பாட்டை உங்களிட மிருந்து வெளிக்கொணர்ந்திருக்கிறது. சந்தோஷிக்கிறேன். ஆனால் கோபம் மிகுதியில் இருந்து ஒரே மூச்சில் எழுதிய உங்கள் எதிர்வினையில் வள்ளுவர், கம்பர், மஹாகவி போன்ற மகான்களை எல்லாம் நான் வேண்டா மென்று சொன்னதாக கூறியிருப்பது ஒரு விமர்சனமாகவே படவில்லை. ஏதோ தெத்திக்கு எழுதியது போல் இருக்கிறது.
கவிதைத் தொகுதிக்கும் - எனது
குறிப்புக்கும் தொடர்பில்லாமல்
anumg
SUDEGGE
சேரனின் கவிதைகள் தொடர்பாக அவரை வைது இருக்கிறீர்கள். சேரன் ஒரு சிறந்த கவிஞன். அவனை இழுத்து வந்து சும்மா செருகியிருக் கிறீர்கள்.
ஒரு நல்ல இலக்கியப் புலமை யுள்ள நீங்கள் விமர்சனங்களை முன் மனித கொச்சைகளைத் தவிருங்கள். அது அவரை நோகடிக்கும்.
வைக்கும்
போது தனி
உங்கள் கவியரங்க கவிதைகளின்
இரண்டு பகுதிகளும் அருமை.
மனதார வாழ்த்துக்கள்.
வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி
விற்பனையாகின்றது.
கங்களில் இருக்க മ Gaga.
4. சிறுகதைகள்ை உள்ளடக்கிய yard LTL | ust
இ. தொடர்பு கொள்ளுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 

D60)6) is
ஒவ்வொரு மாதமும் தவறாமல் மலர்ந்து மணம் வீசிவரும் மல்லிகையை முகர்ந்து பார்க்க நான் தவறுவதேயில்லை. அதில் இடம்பெறும் அத்தனை ஆக்கங்களும் தரமானவை மட்டுமல்ல, தமிழக இலக் கியங்களுக்கு நிகரானவையென்றால் அது பொய் யல்ல. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இருந்தும், கொழும்பிலிருந்தும், கண்டியிலிருந்தும் எழுதப்படும் ஆக்கங்கள் யாவும் ஆரோக்கியமான இலக்கியத்தின் வெளிப்பாடுகளாகும்!
ஆனால் மலையகத்திலிருந்து தரமான ஆக்கங்கள் மல்லிகையில் இடம் பெறாததற்கான காரணம், என்ன வாக இருக்குமென்று சற்று ஆழமாக ஆராய்ந்து
பார்த்தபோது அழுகைதான் வந்தது. மற்ற பிரதேச
மக்கள் கல்வியிலும், வாழ்க்கைத் தரத்திலும் சற்று மேம்பாடடைந்துள்ள நிலையில் மலையகத்தில் மட்டும் இன்னமும் கீழ் நிலையிலிருப்பதனால் இலக்கியம் படைக்குமளவுக்கு அவர்களுக்கு சக்தி யில்லை. இருக்கும் ஒரு சில எழுத்தாளர்களும் 'உள் ளேன் ஐயா" என்று உருப்படியாக எதையும் செய் யாமல் ஆடிக்கும் அமாவாசைக்கும் தலையையும் வாலையும் காட்டிவிட்டு மறைந்து விடுகிறார்கள்.
1970களில் மலையகத்தில் புதிது புதிதாக நல்ல பல எழுத்தாளர்கள் தோன்றித் தொடர்ந்து எழுதினார்கள். ஆனால் எண்பதுகளுக்குப் பின் எண்ணிக்கை குறைந்தது. அதற்கு வறுமை மற்றும் கல்வித்துறையின் வீழ்ச்சி போன்றவை காரணங்களாக அமைந்திருந்தன. ஆனால் கடந்த ஐந்து வருடங் களுக்குள் பல்கலைக் கழகங்களுக்கு மலையகத்தி லிருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக் கிறது என்ற கூற்று உண்மையாக இருந்தாலும், இதனாலெல்லாம் இலக்கியவாதிகள் அதிகரிக்கிறார் களென்று கூறமுடியாது. ஏட்டுச்சுரைக்காயால் எழுத்தாளர்கள் உருவாவதில்லை.
19

Page 12
பல்கலைக் கழகப் பட்டப் படிப் பென்பது இன்று நல்ல சம்பளத்துடன் கூடிய தொழிலொன்றை பெற்றுக் கொள்ள உதவியாக இருக்குமேயன்றி இது இலக்கியவாதிகளை உருவாக்
காது. குறிஞ்சிப் பாலன் போன்ற நல்ல இலக்கிய வாதிகள் கோரப்பிடியில் சிக்கிச் சொற்ப இலக்கியங்களை மண்ணுக்கு அளித்து விட்டு விண்ணுக்கு பறந்து விட் டார்கள். இவர்களின் பூதவுடல்
குறிஞ்சித் தென்னவன்,
வறுமை யின்
மறைந்தாலும் இவர்களால் படைக்கப் பட்ட இலக்கியத்துக்கு புத்துணர்வு ஏற்படவில்லை. ஆனால் இவர்கள் பல்கலைக்கழகம் சென்றதில்லை. மறைந்த கவிஞர் லிங்கதாசன் பட்டம் பெற்றவரல்ல. ஆனால் பட்டம் பெற்ற
வர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய
ஒரு சிலரைத் தவிர வேறு யாருமே மலையகத்தில் இலக்கியவாதிகளாக தற் போதைய இந்த அவசர உலகில் ஒவ் வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள நினைக்கும் மலை யகத்தில் இலக்கிய வாதிகளாக தங்களை இனங்காட்டி வறுமையில்
இனங்காட்டப் படவில்லை.
வாட விரும்பவில்லை.
ஆனாலும், ஒரு இலக்கியவாதி இல்லாமல் போவதற்கு வறுமை மட்டுந்தான் காரணியாக இருக்க முடி யாது. என்னதான் திறமையான எழுத் தாளனாக இருந்தாலும் அவனுக்குச் சரியான களம் அமைத்துக் கொடுக்கப் பட வேண்டியது அவசியமாகும்.
20
வளமிக்க, இலக்கியவாதிக்கு களம் சரியாக அமையாவிட்டால் நீரில்லா நிலம் போல விளைச்சலில்லாமல் போய்விடுகிறார்கள்.
இன்று மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் பல்வேறு போராட்டங்களுடன்தான் வாழ்க் கையை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைப் போராட்டங் களின் மூலம் நாம் பல தகவல்களைப் பெற முடிகின்றது. சிறு துரும்பையும் இரும்பாக்குமளவுக்கு நம் மத்தியிலி ருக்கும் நல்ல இலக்கியவாதிகள் இந் தத் தகவல்களை வைத்து இலக்கியம் படைக்கிறார்கள். ஆனால் இவை புத்தகச் சந்தையில் எடுபடுவதில்லை. விலை போவதில்லை. இதனால் படைத்தவன் நிலை பரிதாபகரமாகி விடுகின்றது.
மலையகத்திலிருக்கும் சில மூத்த இலக்கியவாதிகள் அவ்வப்போது புதிது புதிதாகத் தொகுப்புகள் வெளி யிட்டாலும் கூட அவற்றைச் சந்தைப் படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுவத னால் தொடர்ந்து இந்த விஷப் பரீட்சைகளில் இறங்கப் பயப்படு கிறார்கள். மூன்றாந்தரமான ஆபாசக் குப்பைகள் வேறு இலக்கியம் என்ற பெயரில் மலிந்து விட்டதால் தரமான இலக்கியம் பொலிவிழந்து விட்டது.
இந்நிலையில் மணிமேகலைப் பிர சுரமாகத் திருகோணமலை இலக்கிய ஒன்றியத்தினால் தொகுத்து வெளியி டப்பட்ட மூன்று சிறுகதை தொகுப்பு
 

களிலும் மலையகச் சிறுகதை எழுத் தாளர்களின் சிறுகதைகளையும் காண முடிந்தது. தரமான அச்சிறுகதைகளை எழுதிய அவர்கள் தொடர்ந்து ஏன் ஆக்கங்கள் படைக்காமலிருக்கிறார்க ளென்று புரியவில்லை. அதேபோல மலையகச் சூழலை வைத்து ஆக்கங் களை படைத்து வரும் பிற மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள் மலையக பிரச்சினைகளை வெளியூர்களுக்குத் தெரிய வைப்பதன் மூலம் அவர் களுக்கு நாம் நன்றியுடையவர்களா கின்றோம். அதாவது படித்துப் பட்டம் பெற்ற நம்மவர்களால் செய்ய முடி யாததை அவர்கள் செய்கிறார்கள். உதாரணமாக "ஞானம் மாத இதழை வெளிக் கொணர்ந்துவரும் ஞா. ஞானசேகரன்,
வெற்றிகரமாக தொடர்ந்து
'குருதிமலை’ போன்ற நாவல்களை எழுதியதன் மூலம் மலையகத்தின் அவலங்களை வெளியுலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
"மலையகம்" சம்பந்தமான காத் திரமான படைப்புக்கள் அடிக்கடி வெளிவந்த அந்தக் காலம் மலையேறி விட, அத்திப் பூத்தாற் போல எப்போ தாவது ஒரு சில நல்ல படைப்புகள் வெளிவரும் இந்தக் காலம் மாறினா லொழிய மலையக இலக்கியத்திற்கு எதிர்காலம் இல்லையென்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும்! இவை எனது சொந்தக் கருத்தாகும். மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் செவிமடுக்க நான் தயார்!
କଁp', VD1.
EXCELLENT
PHOTOGRAPHERS
MODERN COMPUTERIZED
FHOTOGRAPHY
FOR WEDDING FORTRAITS
8 CHILD SITTINGS

Page 13
புத்தகழுல் செங்கல்லுல்
- யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
வானத்தையும் பூமியையும் அதிரச் செய்த வண்ணம் எறிகணைகள் வீழ்ந்து வெடித்து, அந்தப் பகுதியையே துவம்சம் செய்தன.
தம்மோடு போட்டியிடும் அந்த அதிர்வொலிகளைக் கேட்டு, அதன் காரணத்தை அறிய விரும்பிப் போலும் மின்னலும், இடியும் சோடியிட்டு வந்து அங்குமிங்குமாக ஒடியோடி எட்டிப்பார்த்தன.
போரின் கொடுரத்தினால் சிதைவுண்டு கிடந்த சாவகச்சேரிப் பிரதேசத்தைப் பார்த்துச் சகிக்க முடியாது போய், வேதனையில் வானமகள் கண்ணீர் விட்டழுதாள்.
அங்கேயுள்ள வீட்டின் அறையொன்றை நூலகமாக அந்த வீட்டுக்காரர் மாற்றியிருந்தார். பகுதி பகுதியாக அழகாக அடுக்கப்பட்ட நூல்கள், எறிகணை வீச்சினால் உடைந்து வீழ்ந்த சுவரினதும் கூரையினதும் சிதறல்களையும் தாங்கிக் கொண்டு உடைந்த கூரையினூடே வீழ்ந்த மழைநீரில் நீராடிக்கொண்டிருந்தன. முன்னர் பெய்த மழையிலும் நனைந்து கிடந்ததால் புத்தம் புதிதாக அடுக்கப்பட்ட நூல்கள் கூட கருமையேறி உக்கிப்போயிருந்தன. அப்போது பெய்த மழை அவற்றை மேலும் சீர்குலைந்துக் கொண்டிருந்தது.
தேடியெடுக்க முடியாத அருமையான பழைய நூல்கள் தொட்டுப் பார்க்க முடியாதளவு நைந்து கிடந்தன. யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் கணிசமானளவு புத்தகங்களிருப்பது வழமை. பல வீடுகளில் ஒரு குட்டி நூலகம் அமைக்கக் கூடிய அளவு புத்தகங்களிருக்கும்.
யாழ் மண்ணில் போரினால் இடப்பெயர்வு ஏற்பட்ட காலம் முதல், யாழ் மக்கள் தாம் போகும் இடங்களுக்கெல்லாம் நூல்களையும் எடுத்துச் செல்ல முடியாது போகும் அவலம் தொடர்ந்து வருகிறது.
22

Es page);
2000ஆம் ஆண்டு தொடங்கிய போர் தென்மராட்சிப் பிரதேச மக்களை அவ்வாறு ஒட வைத்திருந்தது.
அந்த நூலகத்தின் உரிமையாளர், அவற்றை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டிருந்திருப்பார். அவையோ தம்மை மீட்டெடுக்க யாராவது வரமாட் டார்களா? என ஏங்கிக் கிடந்தன.
திடீரென ஒரு தொகுதி இராணு வத்தினர் அந்த வீட்டினுள் புகுந்தனர். இந்த வீடு உட்பட அடுத்தடுத்திருந்த மூன்று வீடுகளை அவர்கள் தாம் தங்கு மிடமாக்கத் தீர்மானித்தனர்.
வீடுகளைத் துப்பரவாக்கி, உடைந் திருந்த கூரைகளையும் செம்மையாக்கு மாறு உத்தரவுகளைப் பிறப்பித்தார் இராணுவ அதிகாரி.
மளமளவென வேலைகள் ஆரம் பித்தன. கூரையிலிருந்து மழைநீர் ஒழு காதபடி, அவர்கள் உபயோகிக்காத வீடு களிலிருந்து ஒடுகள் கழற்றப்பட்டு இவ் வீடுகளின் கூரைகளுக்குப் போடப் பட்டன. அப்பாடா, இனி ஒழுகாது.
இராணுவ வீரனொருவன் மேலதி காரியிடம் வந்து சிங்கள மொழியில் உரையாடத் தொடங்குகிறான்.
“இந்தக் குப்பைகளை எங்கே GumLantib?'
"அதோ அதற்குள் நிறையப்
போடலாம்."
23
சிறிது தூரத்திலிருந்த கிண றொன்றை இராணுவ அதிகாரி சுட்டிக் காட்டினான்.
சிதறுண்டு கிடந்த உடைகள், பொருட்கள் எல்லாமே வாரி அள்ளப் பட்டுக் கொண்டுபோய் அந்தக் கிணற் றுள் போடப்பட்டன. காலங் காலமாக மிகவுங் கஷ்டப்பட்டு, எவ்வளவோ அந்த வீட்டினர் அவற்றையெல்லாம் சேர்த்திருப்பார்கள்! அழிந்தால் மீளப்பெற முடியாத நினைவுச் சின்னங்களும் பரம்பரைப் பொருட்களும் இவற்றுடன் போகக்கூடும்!
செலவு செய்து,
சில சிப்பாய்கள் தமக்குத் தேவை யெனக் கருதிய பொருட்களை மெல்லச் சுருட்டிக் கொண்டனர்.
"அந்த அறையையும் துப்பரவாக்க வேண்டுமா? ஒருவன் மேலதிகாரியிடம் கேட்கிறான்.
"ஒமோம். நாங்களிருக்க இடம் வேண்டுமே!’
அவர்கள் அந்த இடத்தையும் துப்பர வாக்க ஆரம்பித்தனர். வழமையாகவே புத்தகங்கள் கனதியானவை. மழை
நீரையும் உறிஞ்சி மேலும் கனத்தன.
இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து புத்தகங்கள் வைத்திருந்த பலகைத் தாங் கிகளுடனேயே அவற்றைக் கொண்டு போய் கிணற்றுள் போட்டார்கள்.
"போடாதே. போடாதே. அடடா அதையேன் போட்டீர்கள்?’ தூர நின்ற ஒருவன் உரத்த குரலிலே தடுத்தான்.

Page 14
போட்டவர்கள் கிணற்றுள் புத்தகங்கள் அமிழ்ந்து கொண்டிருந்தன. அவர்கள் திரும்பினர். தடுத்தவன் அருகே வந்து 'புத்தகங்களை மட்டும் போட்டு விட்டு றாக்கைகளை
பார்த்தனர்.
வையுங்கள். அடுப்புக்கு விறகு தேவை. .
இதை வைக்கலாம்" என்றான்.
பின்னர் மிகுந்த சிரமத்துடன் அவர்கள் புத்தகங்களை மட்டும் சுமந்து வந்து கிணற்றுள் கொட்டினார்கள்.
ஆசையாக, அருமையாக, ஆர்வ மாகச் சேகரிக்கப்பட்ட நூல்களில் ஒரு தாள் கூட எஞ்சவில்லை. அவற்றுள் எதுவுமே அவர்களுக்குத் தேவையானதாக இருக்கவுமில்லை.
அடுத்து, ஒரிடத்தில் குவிக்கப்பட்ட உடைந்த ஒடுகள், வீட்டின் உடையாடுகள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வந்து அதன்மேல் கொட்டினார்கள்.
வீடு குளிர்மையாக இருக்க வேண்டு
மென்று செங்கற்களைக் கொண்டுவந்து
S. pygge)
கட்டியிருந்தார் அந்த வீட்டுக்காரர். எறிகணைகளால் உடைக்கப்பட்ட அந்தச் செங்கற்கள் கிணற்றினுள் குளிர்மை காணச் சென்று புத்தகங்களின் மேல் படுத்துக் கொண்டன.
சுழன்றடித்த காற்றொன்று கிணற் றின் அருகே கிடந்த புதினத் தாள் களையும் அள்ளிச் சென்று நீரின் மேற்பரப்பில் மிதக்க விடுகிறது.
அதில் ஒரு படம்.
சுட்டெரிக்கப்பட்ட யாழ் நூல் நிலையத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவி கோரி அழகிய புன்னகையோடு கையிலே புத்தகமும் செங்கல்லும் ஏந்தி நிற்கும் படம்.
“எங்கள் ஜனாதிபதி அம்மாவின் படமிருந்த ஒரு பத்திரிகையை இங்கே வைத்தேனே. காண வில்லையே! ஒருவர் பரபரப்பாக அங்குமிங்கும் தேடுகிறார்.
பத்திரிகை நீருள் மெல்ல மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்தது.
Undrawn. Portrait fo
டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின் ஆங்கில
மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது.
தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள்
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும்
 

குளிர்காற்று குழந்தையின் சிரிப்பு கலந்து இனிக்கிறது
பாலுக்கு அழும் பிள்ளை
துளிப்பாக்கள்
பாசிமாலை விற்கிறாள்
பசியோடு தாய்.
தவறாமல் பூசைகள் குறையவில்லை
பட்டினிச் சாவுகள்
சாதிச் சண்டைகள் ஆலயச் சந்நிதியில்
ரத்தக்கறை
கொடியில் துணிகள்
எடுக்க மனமில்லை
மழை ரசிக்கிறேன்.
காடுகள் அழிப்பு சுவாசத்திற்கு
கொள்ளி
ரத்தம் சிந்தியே
விடுதலைகள்
விடியும் கிழக்கு
உச்சி வெய்யில்
நிழலில் பாதங்கள்
பாவம் மரங்கள்
25
- குறிஞ்சி இளந்தென்றல்
G36JsLDT as 6JT856OTLD
வழியில் மாடு
இருவேறு உலகம்
தவழும் குழந்தை கையில் புத்தகம்
எது கவிதை
கடல் கண்ட மகிழ்ச்சி
குழந்தை கொலுசோடு காணாமற் போயிற்று
ш60)p Fryib வழுக்கி விழுந்தது
உள்ளம்
எங்கும் இரைச்சல்
அமைதியில் நான் அருகில் நீ.

Page 15
வீர.வேலுச்சாலி யதார்த்தவியல் என்ற நவீன பிரிவுக்குக் கை நிறைய அன்னமிட்டவர்
- பா. செயப்பிரகாசம்
வீர. வேலுச்சாமி, சிறுகதை வெளியில் பூத்த வித்தியாசமான பூ. எழுபதுகளில் அவருடைய வருகை நிகழ்ந்தது. காடெல்லாம் மணக்க நடந்தார். வாழ்வுப் பாலையின் வெக்கை தாங்காமல் வதங்கி உணங்கும் செடி, கொடிகளின் பிரதிநிதியாகத் தன்னை வெளிக்காட்டி, அவர்களுக் கூடாகவே வாழ்ந்து அனுபவங்களை எழுத்தில் தந்தார். இது யதார்த்தச் சித்திரிப்பு எனப் பெயர் கொண்டது.
நிறங்கள் - சிறுகதைத் தொகுப்பு 70களின் தொடக்கத்தில் அன்னம் வெளியீடாக வந்தது. அதை வால் பிடித்தபடியே அவரே கேட்டுக் கேட்டுச் சேகரித்த தமிழ்நாட்டு கிராமியக் கதைகள்” வெளிவந்தது. அவருடைய படைப்புப் பயணம் ஏழெட்டு வருடங்களுக்குள்ளாகவே தடைப்பட்டது. சீக்காளியாகி, மருத்துவம் பார்த்து நோயைச் சீராட்டுவதிலேயே படைப்பு ஆற்றல் முடங்கிவிட்டது. திட்டமிட்ட விலகல் இல்லை அது. படைப்புத் தளத்திலிருந்து விலகியது, அவருக்கொரு விபத்து.
நிறங்கள் - யதார்த்த நிறம் கொண்ட தொகுதி. எல்லை மீறல்கள் அற்ற சித்திரிப்பு. மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு. அவருடைய கதைகள் நம்மோடு நேரடியாகப் பேசுபவை.
ஆசிரியர் பணி. அதன் தொடர்ச்சியாகவே அரசு மாணவர் விடுதிக் காப்பாளர் (வார்டன்) பணி. வார்டன் என்றுதான் அந்த ராஜபாளையம் வட்டாரம் முழுதும் அறியப்பட்டிருந்தார்.
24 வயதிலேயே அவருக்குக் காச நோய் வந்தது. 1960களில், அந்த நோய்க்கு இன்று கண்டிருக்கிற மருத்துவ முன்னேற்றம் இல்லை. நோய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அவருக்குள் வசமாக சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது. கி.ராஜநாராயணன் ஆலோசனையின் பேரில், நுரையீரல் மருத்துவ நிபுணர் கதிரேசன் மேற்பார்வையில் சென்னை ஒட்டேரி காசநோய் மருத்துவ மனையில் சேர்ந்தார். அப்போது நானும் பூமணியும் சென்னை நகர வாசிகள். கிராமங்களில் இருந்து அப்போதுதான் நகரத்துக்குள் குடியேற்றம் ஆகி இருந்தோம்.
26

čo geot VS
மருத்துவமனைக்குப் போய்
அவரைப் பார்த்துப் பேசி வந்தோம்.
"சிவனேன்னு வாத்தியார் தொழி லேயே இருந்திருக்கலாம். அதிலிருந்து விடுதி வார்டனா மாறி வந்ததுதான் தப்பாய் போச்சு. ராத்திரி பகலா தூக்கம் இல்லாம நோய் கூடிக்கிருச்சி" என்றார்.
இரவுத் தூக்கம் இல்லை, பதிலாய் பகல் தூக்கம் கிடையாது. இளைப்பும் தகையும் கூடுகட்டிக் கொண்டது.
சுத்தமான ஆளாய், பிரியமும்
பாசமும் கொண்ட மனிதராய் நோயின்
பின்னணியிலும் அவர் சேர்த்துக் கொண்ட பிரபல்யங்கள் நிறைய.
பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கவன முள்ள அப்பா.
மனைவிக்கு பிரியமுள்ள கணவர். (அவர் கவனித்துக் கொண்டது போல் கணவரை உயிராய்ச் சீராட்டிப் பாராட்டி யாரும் பார்க்க மாட்டார்கள்.)
நண்பர்களுக்கு அறிவார்த்தமான ஈர முள்ள நண்பர்.
எல்லோரும் இழந்து விட்டார்கள்.
யதார்த்தவியல் என்ற இலக்கியத்தின் நவீன பிரிவிற்கு கை நிறைய அன்ன மிட்டவர். சிறுகதை உலகத்திற்கு இழப்பு.
படைப்புக் களத்தின் சிலம்பத்தை நோய் அவர் கையிலிருந்து பறித்துக் கொண்டாலும், வாசிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. நோய் அனு மதித்த அளவுக்கு வாசித்தார். கடைசி ஐந்தாறு மாசத்தில் நோய், வாசிப்பையும் கடன் கொடுத்து வாங்கிக் கொண்டது. "எல்லோருக்கும் சுமையாக இருந்து விட்டேன்’ இறப்பை தழுவிக்கொண்ட போது - 1.07.2004 இல் முழுநிலவு நாளன்று அவர் பிரிந்த போது வயது 67.
என்ற கவலையிலேயே
எழுதப்படாத கவிதைக்கு
வரையய்படாத சித்திரம்

Page 16
இவுஸ்திரேலியாவிலிருந்து Qeoả5ìưu tot_ẻı
- முருகபூபதி
அவுஸ்திரேலியா - நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் (சிட்னி) கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி மாலை இலக்கியத் திருவிழாவே நடந்தது.
கவிஞர் அம்பியின் பவள விழாவும், ஆறு நூல்களின் அறிமுக நிகழ்வும் இந்த விழாவில் இடம்பெற்றன.
ஹோம்புஷ் ஆண்கள் உயர்நிலைப் பாடசாலை மண்டபத்தில் இவ்விழாவின் முதலாவது அரங்காக கவிஞர் அம்பியின் பவள விழா, பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம் தலைமையில் நடந்தது.
அம்பி தமிழ் மக்கள் மத்தியில் - குறிப்பாக இலங்கையிலும், இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும், தமிழகத்திலும் நன்கு அறிமுகமான கவிஞர். கவிதை நாடகம், ஆய்வு முதலான துறைகளிலும் ஈடுபட்டுப் பல நூல்களை எழுதியுள்ளார். சிறுவர் இலக்கியத்திற்கு அம்பி வழங்கியுள்ள காத்திரமான பங்களிப்பைப் போராசிரியர் பொன்.பூலோகசிங்கம் சிலாகித்துப் பேசினார்.
கலைஞர் ந.கருணாகரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்தந் பவள விழாவில் எஸ்.பொ. பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
அந்தச் சிரிப்பு, யாழ்பாடி, அன்னம் விடு தூது முதலான கவிதை நாடகங் களைக் கொண்ட அந்தச் சிரிப்பு" என்ற அம்பியின் நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார் திரு. நந்தகுமார். திருவாளர்கள் சிறீரஞ்சன், எஸ். சுரேஷ், வி.துஷ்யந்தன், திருமதிகள் சி.இராதாகிருஷ்ணன், கீ.வேலும்மயிலும் ஆகியோர் நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
28

pages তত্ত্ব
இங்கு ஒளிபரப்பாகும் சிகரம் தொலைக்காட்சியின் சார்பில் அம்பிக்குக் கவிப்பேரரசு” பட்டம் வழங்கப்பட்டது. எனினும் இந்தப் பட்டமளிப்பு சிறிய நெருடலையும் ஏற்படுத்தவே செய்தது. ஏற்கனவே கன்பரா மாநிலத்திலும் அம்பி பவள விழாவை முன்னிட்டுப் பாராட்டி கெளரவிக்கப்பட்ட சமயமும் சிகரத்தின் சார்பில் இதே பட்டமளிப்பு ஒலிவாங்கி களுடாக சொல்லப்பட்டது.
இதில் நெருடல் என்னவென்றால் பட்டமளிப்பு என்பது பெறுமதியான விடயம். அது சான்றிதழாக அல்லது நினைவுச் சின்னமாக விருதின் வடிவில் வழங்கப்பட வேண்டும்.
காற்றிலே கலந்துவிடும் ஒசையாக எழுந்தமானத்தில் ஒலிவாங்கியின் முன் தோன்றி வழங்கக் கூடாது. கன்பராவில் நிகழ்ந்த அதே தவறு மீண்டும் சிட்னியில்
நடந்தமை கவலையானது.
சிகரத்தில், முன்பு ஒளிபரப்பான கவியரங்கிலும் இவ்விதம் கவிப்பேரரசு" பட்டம் வழங்கப்பட்டதாக அறிகிறோம். பெறுமதியான கவிஞருக்கு முறையான பட்டமளிப்பு வழங்குவதே உரிய கெளர வமாகும். இது தொடர்பாக சிகரம் தொலைக்காட்சிக்கும் கடிதம் எழுதியிருக் கிறேன்.
விழாவில் இரண்டாவது அமர்வாக, எனது தலைமையில் ஆறு நூல்களின்
வெளியீட்டு அரங்கு நடந்தது. ஆ.சி.கந்த
ராஜாவின் 'உயரப் பறக்கும் காகங்கள்' சிறுகதைத் தொகுதியை டொக்டர் ஜே. ஜெயமோகன் வெளியிட்டுப்
29
பேசினார். தமிழச்சி" (சுமதி)யின் ‘எஞ்சோட்டுப் பெண்’ (கவிதை) மா. அருச்சுணமணியும், டொக்டர் நடேசனின் "வண்ணாத்திக் குளம்" நாவலை டொக்டர் தி.ஞானசேகரனும், எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல்" (சுயசரிதை) நூலின் இரண்டாம் பாகங் களை எம்.தனபாலும், "எஸ்.பொ. ஒரு பன்முகப் பார்வை' நூலைச் சுமதியும், எஸ்.பொ. வின் 'பூ' சிறுகதைத் தொகுதியைக் குலம்சண்முகமும் வெளி யிட்டுப் பேசினர்.
இந்நூல்களின் சிறப்புப் பிரதிகளை முறையே திருமதி. செ.சிவசுப்பிர மணியம், டொக்டர் கே.இராஜேந்திரன், சி.துரைசிங்கம், தா.இராசரட்ணம், டொக்டர் பா.நல்லதம்பி, க.நடராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கந்தராஜாவின் 'உயரப் பறக்கும் காகங்கள்', அவரது இரண்டாவது கதைத் தொகுதி. ஏற்கனவே 2001 இல் தமது முதலாவது கதைத் தொகுதியான பாவனை பேசலன்றி நூலுக்கு இலங்கை யின் சாஹித்திய விருதினைப் பெற்றார். இணைப் பேராசிரியராக சிட்னி பல் கலைக்கழகமொன்றில் பணியாற்றுபவர். தமது தொழில் நிமித்தம் உலகின் பல பாகங்களுக்குச் சென்றுவரும் யாத் திரீகன். தமது பயணங்களின் மூலம் சிறுகதை இலக்கியத்திற்குப் புதிய வரவு களைக் கொண்டு வருபவர்.
சென்னை இராணி மேரி கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணியாற்றும் திருமதி த. சுமதியின் புனை பெயர் தமிழச்சி" தமிழகத்தின் கிராமமொன்றில்

Page 17
பிறந்து நகர வாழ்வுக்கு இடம்பெயர்ந்த இவர் முன்னாள் அமைச்சர் தங்க பாண்டியனின் புதல்வி.
சென்னை பெருநகரில் தொழில் நிமித்தம் வாழ நேர்ந்த போதிலும், கிராமத்தின் ஆத்மாவையே நேசித்துக் கொண்டு, கிராமத்துக் காற்றை தனது கவிதைகளில் தென்றலாகவும் புயலா கவும் தந்து கொண்டிருப்பவர்.
தமிழச்சி சுமதியும் இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியமை குறிப் பிடத்தகுந்தது.
டொக்டர் நடேசன் ஒரு மிருக வைத்தியர். இலக்கிய ஆர்வம் மிக்கவர். அவுஸ்திரேலியாவில் 'உதயம்' என்ற மாத இதழை ஸ்தாபித்தவர். இன்றும் அதன் வளர்ச்சிக்கு முதுகெலும் பாகத் திகழ்பவர். ஏற்கனவே 'வாழும் சுவடுகள்" என்ற தனது மிருக வைத்தியத் துறை அனுபவங்களைக் கதைகளாகத் தொகுத்துத் தந்தவர். அவரது முதலாவது நாவல் 'வண்ணாத்திக் குளம்".
வடமத்திய மாகாணத்தில் மதவாச் சிக்குச் சமீபமாகப் பதவியாவில் 1983 இற்கு முற்பட்ட காலத்தில் பணியாற்றிய தனால், அன்றைய வாழ்வின் தரிசனங் களை நாவலாக்கியவர். பதவியா குளத்தின் தமிழ்ப் பெயர் வண்ணாத்திக் குளம். ஒரு காலத்தில் தமிழ்ப் பிரதேசம், இந்த நாவலும் சென்னை 'மித்ர பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது. சென்னையில் பிரபல திரைப்பட வசன கர்த்தாவும் இயக்குநருமான மகேந்திர னுக்கு இந்நாவல் நன்கு பிடித்து விட்டது.
ஏற்கனவே எம்.ஜி.ஆரின் பணிப் பின் பேரில் கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை வசனம் எழுதினார். எனினும் அது படமாக வில்லை. பின்னர், கல்கி வெள்ளி விழா நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' புதுமைப் பித்தனின் சிற்றன்னையைத் தழுவி ‘உதிரிப் பூக்கள் எடுத்தார். அத்துடன் 'நெஞ்சத்தை கிள்ளாதே', 'கண்ணுக்கு
நாவலை படமாக்கினார்.
மை எழுது முதலான தரமான படங் களையும் எழுதி இயக்கியுள்ளார்.
வண்ணாத்திக் குளம் நாவலுக்கும் திரைக்கதை வசனம் எழுதி ஒரு திரைப் படச் சுவடியை மகேந்திரன் படைத் துள்ளார். இப்படத்தை இலங்கையில் தயாரிக்கத் தகுந்த ஃபைனான்ஸியர் களைத் அவர் தேடுவதாக அறிகிறேன்.
இந்நாவலைப் பற்றி உரையாற்றிய "ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞான சேகரன் “இது உண்மைக் கதையாக இருக் கலாம். காதல் உணர்வுகள் சொட்டும் தமிழ் சிங்கள உறவுகளை சித்திரிக்கும் நாவல்' என்றார்.
எஸ். பொ. வின் வரலாற்றில்
வாழ்தல்" இரண்டு பாகங்களைக் கொண்ட பெரிய நூல்கள். 1924 பக்கங் களைக் கொண்டவை. நூலைப் பார்த்து பிரமித்தது நான் மட்டுமல்ல, விழாவுக்கு வருகை தந்தவர்களும்தான். இங்கி ருக்கும் நேர அவகாசத்தில் தினமும் பத்துப் பக்கம் படித்தாலும், சுமார் 192 நாட்கள் இந்நூலைப் படித்து முடிக்க தேவைப் படலாம். ஏற்கனவே கோவை

ஞானி இந்தப் பாகங்களைப் படித்து விட்டு ஒரு காட்டு மனிதனின் சரித்திரம்" என்று விமர்சித்துள்ளார்.
எஸ்.பொ.வின் தந்தை 'அப்பையா? என அழைக்கப்பட்ட சண்முகம் அவர் களும் ஒரு காட்டு மனிதன்தான் என்று எஸ்.பொ. சொல்வதாக அவரது புதல்வன் அநுரா நூலின் பதிப்புரையில் குறிப்பிடுகிறார். சுதந்திரமான மனிதன் - காட்டு மனிதன்தான் என்ற வாதத் துடன் எஸ்.பொ. தனது வரலாற்றை எழுதியிருக்கிறார்.
எஸ்.பொ.வின் ‘சுதந்திர உணர்வு முன்பு பலரைக் காயப்படுத்தியுமிருக் கிறது. பக்குவப்படுத்தியுமிருக்கிறது. எனினும் இந்தச் சுயசரிதையை அவர் எழுதி முடிக்க கடின உழைப்பை நாடி யிருக்கிறார் என்பது உண்மை. "எஸ்.பொ. ஒரு பன்முகப் பார்வை நூல் 536 பக்கங்களைக் கொண்டது. 76 பேர்
ஆற்றல், கோபம், இலக்கிய நேசம், ஆற்றாமை
எஸ்.பொ.வின் ஆளமை,
இப்படிப் பலவற்றையும் தமது கண் ணோட்டங்களில் பதிவு செய்த நூல்.
சுடுமண் சிற்ப வடிவங்களும், ஒவியங்களும் நூலை உள்ளே அலங் கரிக்கின்றன. மொத்தத்தில் 'மித்ர வெளி யீடுகளின் நூல் வடிவமைப்பு நேர்த்தி யாகத் திகழ்கின்றன. அதனால் நூலின் விலையும் அதிகம்.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு எஸ்.பொ.வின் 'பூ' சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது. சிறுகதை எழுத்தாள ராகவே இலக்கிய உலகிற்குள் பிரவேசித்
தவர் எஸ்.பொ. ஏற்கனவே 'வி, அவா, ஆண்மை" முதலான கதைத் தொகுதி களைத் தந்தவர். தற்பொழுது தமது பவள விழாவை நெருங்கிக் கொண்டி ருக்கும் (இன்னும் இரண்டு ஆண்டு களில்) எஸ்.பொ. அயராமல் எழுதிக் கொண்டிருக்கிறார்.
இந்த இலக்கிய விழாவில் ஒவியர் "ஞானம் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். எஸ்.பொ.வின் நூல்களில் ஒவியர் ஞானத்தின் ஒவியங் களும் இடம்பெற்றுள்ளன. அவுஸ்தி ரேலியாவில் ஒவியக் கலைக்குத் தமிழ் மக்கள் மத்தியில் புத்துயிரூட்டி வருபவர் ஒவியர் ஞானம். எழுத்தாளர் விழாக் களில் நடந்த ஒவியப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர்.
இந்த விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராக பூரீரங்கன் பணியாற்றினார். பத்திரிகை யாளர் எஸ். சுந்தரதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
எஸ்.பொ.வின் ஏற்புரை சுருக்க மாகவே நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியவர், ஒரு சில நிமிடங் களில் ஏற்புரை நிகழ்த்தியது அதிசயம். எனினும் இரத்தினச் சுருக்கமாகத் தான் புகழாரங்களை எதிர்பார்க்கவில்லை
யென்றும்,
விமர்சனங்களினாலும்,
கண்டனங்களினாலுமே தான் வளர்ந்த
31
தாகவும் கூறினார். அவுஸ்திரேலியா சிட்னி வாழ் இலக்கிய ரசிகர்களுக்கு எஸ்.பொ.வின் குடும்பத்தினர் இலக்கிய விருந்தும், இரவு அறுசுவை விருந்தும் வழங்கினர்.

Page 18
అసినీగా2ర ܘܐܶܢܬ ജ്ഞു
VS27 ८lo१8-७:१०१ గ్కిసిమిదn
፵፩ ሠNMቧበዉÖUሀIጻ፴ቦU
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு - புதிய அநபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) விலை: 250/= 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் விலை: 140/= 3. அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் 6606): 18oft 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் ഖിതസൈ: 175/= 5. மண்ணின் மலர்கள் -
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ ~மாணவியரது சிறுகதைகள்) 65506); I IO/- 6. கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாஹ் விலை: 100/= 7. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா 6606): II of F 8. முனியப்பதாசன் கதைகள் - முனியப்பதாசன் 65605u: Isof9. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ)~ பாலரஞ்சனி விலை: 60/= 10. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) ിഞ്ഞ: 175/- 11. சேலை - முல்லையூரான் விலை: 150/= 12. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் ഒിഞ്ഞുണ്ഡ: 275/-
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 13. மல்லிகைச் சிறகதைகள் - செங்கை ஆழியான் தொகுத்தவை. விலை: 350/=
(இரண்டாவது தொகுப்பு) 41 எழுத்தாளர்களின் படைப்பு 14. நிலக்கிளி - பாலமனோகரன் விலை: 140/= 15. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா விலை: 150/- 16. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) - ப.ஆப்டீன் 65606); Iso/F 17. தரை மீன்கள் - சமுருகானந்தன் 6606): I50/- 18. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான் 65606u: I5of 19. அப்புறமென்ன ~ குறிஞ்சி இளந்தென்றல் - (கவிதைத் தொகுதி) விலை: 120/- 20. அப்பா - தில்லை நடராஜா விலை: 130/= 21. ஒரு டாக்டரின் டயறியில் இருந்த ~ எம்.கே.முருகானந்தன் ഖിഞ്ഞുണ്ഡ: 14o/- 22. சிங்களச் சிறுகதைகள் 25 - தொகுத்தவர் செங்கை ஆழியான் ഖിജ്ഞ: 1 50/- 23. இந்தத் தேசத்தில் நான் - (கவிதைத் தொகுதி)
(பேராதனைப் பல்கலைக் கழக மாணவ, மாணவியர் கவிதைகள்) 65606): IIS/-
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
32
 
 

Š2(Gრ
இருதியின்
S
முணுமுணுப்புக்கள்
- மேமன்கவி
1. சிரித்திரன் சுந்தரும்
añas Tigrargoö
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் முணுமுணுக்கின்றேன். அந்த இடை வெளிகளுக்குள் கொழும்பு மா நகரில் பல இலக்கிய நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. இப்பொழுதெல்லாம் கொழும்பு நகரில் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், அது போதாதென்று வேலை நாட்களிலும் கலை இலக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
அவைகளைப் பற்றி நமது வெகுசன ஊடகங்கள் போதிய அளவில் செய்தி களையும், விபரங்களையும் வெளியிட்டு விட்டன என்பதன் காரணமாக அவை பற்றி மீண்டும் இப்பகுதியில் எழுதுவதில் அர்த்தமில்லை. ஆனால், நடந்து முடிந்த
கம்வகளில் சில நிகழ்வுகளின் கனதியினை உணர்ந்ததன் காரணமாக அவை
ழவு @@ ழவு த >یکH
பற்றிப் பிரஸ்தாபிப்பது அவசியமாகிறது.
அந்த வகையில், 01.09.2004 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் சிரித்திரன் சுந்தர் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிரித்திரன் சுந்தர் இலக்கிய விழா, நமது கவனத்தை அதிகளவில் கவர்ந்தது.
அவ்விழா, Lua சிறப்பான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தமையால், இவ்விடத்தில் அவ்விழா பற்றிய பல குறிப்புக்களைப் பதிய வேண்டிய அவசியம் இருக்கிறது.
இலங்கையின் சிறு சஞ்சிகை வரலாற்றில் நகைச்சுவை உணர்வுடனும், அதற்கும்
மேலாகச் சமூக உணர்வை அடிப்படையாகக் கொண்டும், நீண்ட காலமாக வெளிவந்த
33

Page 19
"சிரித்திரன்' சஞ்சிகையின் ஆசிரியர் அமரர் சிவஞான சுந்தரம். அவர் பற்றிய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த விழாவின் சிறப் பம்சமாக வெளியிடப்பட்ட 'மகுடி நூல் மூலம் அவர் விதைத்துப் போன சிந்தனைகளின் கனதியினை உணரக் கூடியதாக இருந்தது.
அவ்விழாவின் ஒர் அம்சமாகச் சிரித்திரன் சுந்தர் அவர்களின் நினைவாக சுதாராஜ் அவர்களின் தேனுகா பதிப்ப கத்தின் ஆதரவில் வழங்கப்படும் சிரித்திரன் சுந்தர் நினைவு இலக்கிய விருது - 2002 வழங்கும் வைபவமும் நடைபெற்றது.
மறைந்த ஒரு படைப்பாளியின் பேரால் (சிரித்திரன் சுந்தர்), இன்னொரு படைப்பாளி (சுதாராஜ்) தன் சொந்த முயற்சியால், சக படைப்பாளிகளின் சிறந்த நூல்களுக்கு பெரும் தொகைப் பணத்தை விருதுடன் வழங்கிக் கெளர என் நினைவுக்கு எட்டியவரை இலங்கையின் கலை இலக்கிய வரலாற்றில் இதுவரை நிகழ்த்தப்படாத ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
விப்பது என்பது,
நிறுவனங்கள் அல்லது அரசு மட்டுமே இத்தகைய பணியினைச் செய்து கொண்டிருக்கும் எமது நாட்டின் சூழலில், இத்தகைய ஒரு பணியினை சுதாராஜ் என்ற ஒரு தனிப்படைப்பாளி செய்து இருப்பதைச் சொல்லாமல் வேறு என்ன என்பது?
சாதனை என்று
് ബ
01.09.2004 அன்று நடந்த சிரித்திரன் சுந்தர் நினைவு இலக்கிய விழாவில் 2002ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங் கப்பட்டன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த குந்தவை அவர்களின் 'யோகம் இருக்கிறது’ எனும் சிறுகதைத் தொகுதிக்கும், உவைஸ்கனியின் 'மனித னோடு நடந்தபடி எனும் கவிதைத் தொகுதிக்கும், அநு. வை.நாகராஜனின் "சிறுவர் சிந்தனைக் கதைகள்’ எனும் சிறுவர் இலக்கிய நூலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டதோடு, ஒவ்வொரு நூலுக்கும் ரூபா. 10000.00 வீதம் வழங்கப் பட்டது.
சிரித்திரன் சுந்தர் நினைவு இலக்கிய விருது, சுதாராஜ் என்ற தனிமனிதனின் முயற்சியினால் வழங்கப்பட்டாலும், அவ் விருதுகளுக்கான நூல்களின் தெரிவு களை, அந்ததந்தத் துறைகளைச் சார்ந்த குழுவினர்களுக்குக் கொடுத்துத் தெரிவு செய்து, விருதுகளை வழங்கி இருந்தமை சுந்தர் நினைவு இலக்கிய விருதின் கனதி குறைவுபடக் கூடாது என்ற சுதாராஜ் அவர்களின் எண்ணத்தை நமக்கு எடுத்துக் காட்டியது.
‘யோகம் இருக்கிறது' எனும் சிறுகதைத் தொகுதிக்கான விருதைப் பெற்ற குந்தவையைப் பொறுத்தவரை, ஈழத்துக் கலை இலக்கியத் தளத்தில் பெண்ணிய எழுத்தோடு, சமகால வட புலத்து வாழ்வை பெண்ணியப் பார்வை யில் எடுத்துச் சொன்ன படைப்பாளி என்ற வகையிலும், 90க்குப் பின் முனைப்புப் பெற்ற இடப்பெயர்வு இலக்கியத்தின் கவிதைக்கான இளைய

படைப்பாளியான 'மனிதனோடு நடந்த படி" எனும் கவிதைத் தொகுதியைத் தந்த உவைஸ்கணிக்கு அவ்விருது வழங்கப் பட்டமை இடப்பெயர்வு இலக்கியத்திற் கான ஒர் அங்கீகாரமாகப்பட்டது. அதைப் போன்று, அநு. வை. நாகராஜனின் "சிறுவர் சிந்தனைக் கதைகள்’ எனும் சிறுவர் இலக்கிய நூலுக்கு வழங்கப் பட்ட அவ்விருதானது ஈழத்துச் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் பங்கு கொள்ளும் ஒரு சிறுவர் இலக்கியப் படைப் பாளியைக் கெளரவித்தது போல் அமைந்தது.
மேலும் ஒரு படைப்பாளி மறைந்த பின், அவரைப் பற்றிய ஞாபகப்படுத்தல் என்பது அவர் சார்ந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களோ அல்லது அப்படைப் பாளியின் அபிமானிகளோ, நண்பர்களோ பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்படைப் பாளியை நினைவு கூருவர்.
ஆனால், அமரர் சிரித்திரன் சுந்தர் அவர்களைப் பொறுத்தவரை அவரது துணைவியார் கோகிலம் சுந்தர் அவர் களும், அவரது பிள்ளைகளும் இம் முறைக்கான சிரித்திரன் சுந்தர் இலக்கிய விருது வழங்கலுக்கான பணியில், தமது பங்களிப்பபையும் வழங்கி இருந்தமை மனதைக் கவர்வதோடு, சிரித்திரன் சுந்தர் அவர்கள் மீதான அவர்களது குறையாத பாசத்தை எடுத்துக் காட்டியது. அதைப் போன்று அவ்விழாவில் திக்கவயல் தர்ம குலசிங்கம் செய்த கவிதாஞ்சலி மூலம் சிரித்திரன் சுந்தர் மீது அவரது அபிமானி களின் நேசத்தை இயம்பியது. (இந்த இடத்தில் மறைந்த இலக்கியப் பெரியார் இ. இரத்தினம் அவர்களின் மூன்று
நூல்களை இதே காலகட்டத்தில்
வெளியிட்ட திருமதி. இரத்தினம் அம்மை
35
யாரும் நினைவுக்கு வருகிறார்.)
ஒரு தனிமனிதனாக நின்று, கடந்த வருடம் 2001ஆம் ஆண்டு சிரித்திரன் சுந்தர் இலக்கிய விருதைத் தனது சொந்தப் பொருளாதாரத்தில் படைப் பாளிகளுக்கு வழங்கிய சுதாராஜ் அவர்கள், இம்முறை வழங்கப்பட்ட 2002 வருடத்திற்கான விருது வழங் கலுக்கும், தனது பங்களிப்பைச் செய்ததோடு,
கணிசமான
தனது சொந்தச் செலவிலே 'மகுடி' எனும் மகுடத்தில், சிரித்திரன் சுந்தர் அவர்களின் சிரித்திரன் சஞ்சிகையில் வெளிவந்த கேள்வி - பதில் தொகுப்பையும், ஒர் அழகிய நூலாக வெளியிட்டுள்ளார். சுதா ராஜின் இப்பணி மெச்சத்தக்கது.
இவ்வாறாகச் சிரித்திரன் சுந்தரின் நாமம் வாழத் தனது உழைப்பை அர்ப் பணிக்கும் சுதாராஜ் அவர்களின் பணியினை வெறுமனே மொட்டையாக என்ற ஒற்றைச் சொல்லில் பாராட்டி எழுதுவது சரியா காது என்றே எனக்குப் படுகிறது! அவரது இந்தப் பணி கலை இலக்கிய வரலாற்றில் முழுமையாகப் பதிவு செய்யப் படுவதன் மூலம்தான் அவரை
‘மெச்சத்தக்கது?
நாம் சரியாக அடையாளப் படுத்தியவர் களாகின்றோம். அவ்வாறான பதிவே சுதாராஜ், மற்றும் இவரைப் போன்று எதிர்காலத்தில் இவ்வாறான பணியில் ஈடுபட நினைப்போரும் ஊக்கம் பெறுவர் என்பதை நினைவில் நிறுத்திக் கொள் வது நல்லது என எண்ணுகிறேன்.

Page 20
2. லகான்' எறும் திரைப் படமும்
கிரிக்கெட்டும்.
அண்மையில் (கடைசியாக நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது) சக்தி தொலைக்காட்சியின் மூலமாக, தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட லகான்' எனும் திரைப் படம் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.
நீண்ட நாட்களாகப் பார்க்க யோசித்து வைத்திருந்த படம்.
இந்தியாவில் காலனித்துவ ஆட்சிக் காலகட்டத்தில் இந்தியக் கிராமம் ஒன்றில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து இத்திரைப்படத்தை எடுத்து இருக் கிறார்கள். இந்தித் திரைப்பட உலகின் ஜனரஞ்சக நடிகர் அமீர்கான் தனது சொந்தத் தயாரிப்பில் இப்படியான படத்தைத் தயாரித்து வழங்கி இருப்பது ஆச்சரியமாக இருந்தது.
ரஹ்மானின் அருமையான இசை கதையின் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான மெட்டுகளுடன் பாடல்கள் இயற்றப் பட்ட மொழி ஆளுகை சிறப்பாக அமைந்து இருந்தது. நடித்த நடிகர்கள் எல்லோரும் தமக்கான பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதைக் காணக் கூடிய தாக இருந்தது. அத்தோடு, கையாளப் பட்டு இருக்கும் கதைக் கருவிலிருந்து எந்தவிதத்திலும் வெளியே பாயாது காட்சி அமைப்புகளை வடிவமைத்து இருப்பது பாராட்டக் கூடியதாக இருந்தது.
குறிப்பில்
36
கிராமத்தில் முகாம் போட்டு இருக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும், அந்தக் கிராம மக்களுக்கும் நடக்கின்ற வரி விதிக்கும் போராட்டத்தில் ஒரு ஆயுதமாகக் கிரிக்கெட் விளையாட்டு அமைகிறது.
கிரிக்கெட்டைப் பற்றிய அறிவற்ற நிலையில் தம் கிராமத்தை வரிச் சுமையி லிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அக்கிராம மக்கள் தமது சரீர வலுவை மட்டுமே மூலதன மாக்கிக் கொண்டு (அக்கிராம மக்கள் ஒரு சிலர் தம் சரீர பலவீனத்தையும் மீறியும்) அந்த வெள்ளையருடன் கிரிக்கெட் விளையாடி, அந்தக் கிராமத்தை வரிச்
சுமையிலிருந்து விடுவிப்பதும், அக்கிரா மத்திலிருந்தே பிரிட்டிஷ் படையினரின்
முகாமை அகற்ற வைப்பதும் அம் மக்களின் வெற்றி ஆகின்றது.
ஒரு தலைவனின் கீழ் தளராத நம்பிக்கையுடன் போராடும் பொழுது வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாக லகானின் கதை சொல்லுகின்றது.
இத்திரைப்படத்தைப் பற்றித் தமிழகச் சஞ்சிகையான தாமரையில்
2001) இதழில் எம்.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய பின்வருமாறு குறிப்
(அக்டோபர்
பிடுகின்றார்.
“பார்வையாளன் ஒவ்வொருவரும் அந்தக் கிராமவாசியாக மாறி விடு கிறோம். திரையரங்கத் திரை கிரிக்கெட் மைதானமாகி, அமீர்கானும் கிராம வாசிகளும் இந்திய ஆட்டக்காரர்களாகி

665); অস্ত্ৰ
நமது கனவுப்படி எப்படி புகுந்து, புகுந்து விளையாட வேண்டுமென நினைக்கின் றோமோ? அப்படியெல்லாம் விளையாடி நம்மை சீட்டிலிருந்து எகிறி, கைதட்ட வைக்கின்றனர். ' என விதந்து கூறுகின்றார்.
லகான்’ எனும் இத்திரைப் படத்தைப் பற்றி யோசிக்கும் வேனை கிரிக்கெட்டைப் பற்றியும் சற்று யோசிக்க வேண்டி இருக்கிறது.
காலனித்துவ ஆட்சி அமைப்புத்
தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடு
களில் அவ்விளையாட்டைத் திணித்து விட்டதன் மூலம், பின் - காலனித்துவக் காலகட்டத்தில் அந்த நாடுகளில் கிரிக்கெட் என்ற விளையாட்டு எவ்வாறு அரசியலாக மாற்றப்பட்டு, இனத்துவ, மதவாத உணர்வுகளைத் தூண்டி விடு
வேண்டி இருக்கிறது.
இந்த வகையில் தமிழகத்துச் சஞ்சிகையான 'காலச்சுவடு கடந்த மார்ச், ஏப்ரல் இதழில் சிறப்புப் பகுதியாக வெளியிட்ட கட்டுரைகளைச் சொல்ல வேண்டும்.
அக்கட்டுரைகள் இந்தியச் சமூக மைப்பில் காலனித்துவக் காலம் தொடக்கம் பின் - காலனித்துவ கால வரையில் கிரிக்கெட் என்ற விளையாட்டு
ஏற்படுத்தி வந்திருக்கும் சமூகவியல்
கின்ற ஆயுதமாக மாறி இருப்பதையும்,
இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அவ்விளையாட்டு எவ்வாறான சூதாட்ட மாக மாறி இருக்கின்ற வளர்ச்சிப்
போக்கினை நாம் இங்கு நினைவுகூர
வேண்டி இருக்கிறது.
அதேவேளை காலனித்துவ கால கட்டத்தில், வெள்ளையர்களுக்கு எதிராகக் கிரிக்கெட்டை விளையாடியதும் அதே விளையாட்டுக் குறிப்பாக இந்தியா வில் தேசிய விடுதலைப் போராட்ட இயக் கத்தின் ஊடாக செயல்பட்டது போன்ற சமூகவியல் ரீதியாக ஆய்வுகளும் இன்றைய காலகட்டத்தில் நடந்தேறி வரு கின்றன என்பதையும் நாம் அவதானிக்க
37
ரீதியான தாக்கங்களைப் பற்றி ஆழமாக ஆய்வுச் செய்தவையாக இருக்கின்றன.
அத்தோடு, லகான்’ எனும் அத் திரைப்படத்தில் நான் இன்னுமொரு செய்தியினையும் பூடகமாக உணர்ந்தேன். அதாவது, குறிப்பாக கறுப்பின (நீக்ரோக்களை மட்டுமில்லாமல்
கீழைத்தேய,
கீழைத்தேய மக்கள் அனைவரையும் (Black People) GaugiraogiTuissoir (515. பிடுகின்றனர் என்ற ரீதியில்) மக்களின் சரீர வலுவுக்கு முன்னால், இந்த வெள்ளைத் திமிர் மிரண்டு விடுகின்றது என்ற செய்திதான்.
காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள் விடுதலை அடைந்து அரை நூற்றாண்டு மேலாகியும், அந்த நாடுகள் எல்லாத் துறைகளிலும் (கிரிக்கெட் உட்பட) சுயமான முன்னேற்றங்கள் அடைந்த பின்னும், வெள்ளைத் திமிர் அடங்காத நிலையின் ஒரு வெளிப் பாடாக, அந்தக் கறுப்பின மக்களின் சரீர
வலுவைக் கண்டு இன்றும் மிரளுகிறது

Page 21
என்பதற்கான சமகால உதாரணம்தான், நம் நாட்டுச் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனின் பந்து வீச்சையிட்ட விசாரணைகளும் சோதனைகளும்தான்.
3. இளைய பாரதியின் சிந்தனை
fict CUTGibsoit
சமீபத்தில்
"மரணத்தின் நட்சத்திரங்கள்' எனும்
கவிதைத் தொகுதி நண்பர் குறிஞ்சி இளந் தென்றல் வழியாகக் கிடைத்தது.
இளைய பாரதியின்
அழகான புத்தக அமைப்பு. அத் தொகுதியில் வெளிப்பட்டவை எல்லாமே கவிதைகளாக இல்லாது இருப்பினும், அக்கவிதைத் தொகுதியில் ஆங்காங்கே தெறித்த சிந்தனைப் பொறிகள் மனதை வருடின. அறிவை ஆச்சரியப்பட வைத்தன.
DataSalas
உங்கள் சிந்தனைக்கு இளைய பாரதியின் சில வரிகள்.
கடவுளே வந்து கூப்பிட்டாலும் குழந்தைகள் திரும்பிப் பார்க்காது பட்டாம்பூச்சி பிடிக்கும்போது.
பதிலுக்குக் கையசைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பின்றி ரயில் பயணிகளுக்கு தினந்தோறும் கையசைக்கும் கிராமத்துச் சிறுவர்கள்.
கடல் மீனின் அனுபவங்கள் கண்ணாடித் தொட்டி மீன்களுக்கு வாய்க்குமா?
வெட்டுக்கிளிகளுக்குத் தெரிவதில்லை விவசாயிகளின் வேதனைகள் நெசவாளிகளுக்குப் புரிவதில்லை பட்டுப்பூச்சிகளின் பரிதவிப்புகள்.
வாழ்த்துகின்றோம்.
மல்லிகையின் தொடக்க காலத்திலிருந்தே அதன் வளர்ச்சியிலும் விநியோகத்திலும் அபார ஆதரவு காட்டி வந்த எழுத்தாளர் ப. ஆப்டீன் தம்பதியின் புதல்வி, செல்வி.
சமீலா அவர்களுக்கும்,
அவர்களுக்கும்
செல்வன் சஹாரான்
சமீபத்தில் கொழும்பில் வெகு
விமரிசையாகத் திருமணம் இனிதே நடந்தேறியது.
புதுமணத் தம்பதிகளை மல்லிகை இதயக் கனிவுடன்
வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர்
 
 

நிமிர்வு
- அநாதரட்சகன்
IDதியம் பன்னிரண்டு மணி.
உச்சியில் தகித்தபடியிருந்த வெயிலைப் போல, அவள் மனமும் கொதிக்கிறது.
நகரத்தின் சந்தடி மிக்க சத்திரச் சந்தி. அந்தச் சந்தியின் மையத்தை அண்மித்த சமயம் பார்த்துச் சைக்கிள் செயின் கழன்று கவருக்குள் கிடந்தபடி உராய்கின்றது.
கறகறா. கறகறா. கறகறா. என அது எழுப்பிய சத்தம் அவளுக்கு எரிச்சலை மூட்டுகிறது.
விதியில் பயணிப்பவர்கள் அவளையும் ஒருமுறை பார்த்துக் கொண்டு, தத்தம் தேவைகளுக்கு விரைந்து கொண்டிருக்கின்றனர்.
சந்தி முகப்பில் புற்றுப் போலக் குடிகொண்டிருக்கும் காவலரணுள் முடங்கிக் கிடக்கும் சிப்பாய்களின் வழமையான சிக்காய் ஒலி. பெண்கள் மேனியில் மேயும் வக்கிரப் பார்வை குற்றும் கணைகளாய் அவளை ஊடுருவக் கூச்சமும், பயமுமாகி,
“சீ... என்ன மனிதர்கள்..!" என தான் பெண்ணாய்ப் பிறந்ததற்குத் தன்னை நொந்து கொள்ளுகிறாள். -
கல்வித் திணைக்களத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தை வெறும் வயிற்றோடும் சையிக்கிள் வலித்து வந்தவளுக்கு, கால்கள் வேறு விண்விண்ணென குற்றி வலிக்கின்றன.
சைக்கிளிலிருந்து குதித்து மேற்குப் புறமாக நீளும் வீதியில் மீன் சந்தையை அண்டியிருக்கும் கடையை நோக்கி நடக்கின்றாள்.
39

Page 22
வீதியில் இரைச்சல். கடைகளுக்கு ஒடியோடி மூட்டை சுமப்பவர்களின் சத்தம். இவை
வாகன நெரிசல்,
எல்லாவற்றையும் மேவி நிற்கும் மீன் சந்தையின் ஆரவாரம்.
தினமும் அவ்வழியில் போய்வரும் அவளுக்குப் பழகிப்போனவைதான். எதிலும் மனம் பதித்து வேடிக்கை பார்க்கும் நிலையிலா அவள் இருக் கின்றாள்.
சைக்கிள் கடையின் முன் நின்றபடி
பையனை அழைக்கிறாள். எழுந்து வந்து
பெளவியமாகச் சைக்கிளை வாங்கிய அவனை எங்கோ பார்த்த உணர்வு வந்து
குதிக்கிறது.
கவின்ஸ்ரன். கவின்ஸ்ரன்.
ஐந்தாம் வகுப்புவரை அவளிடம்
படித்தவன். கோட்டை அடிபாட்டின் போது, பண்ணைக் குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து இன்று வரை போரினால் அவன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் அவனைத் தொடர்ந்து படிக்க விடவில்லை.
சைக்கிளைச் சரிபார்த்து விட்டு,
"ரீச்சர் செயின் நல்லாத் தேஞ்சு போச்கது. புதிதாகப் போட்டால் நல்லது” என எச்சரிக்கையுடன் சொல்லிக்கொண்டு சைக்கிளைத் தருகிறான். இப்படி இரண் டொரு மாதத்துக்கு முன்னரும் யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வர, கையில் காசு வரும்போது அவசியம் செயின்
மாத்த வேண்டுமென முன்னர்
40
Desses): অ நினைத்துக் கொண்டது போல இப்
போதும் நினைத்துக் கொண்டாள்.
நீண்ட இடைவெளிக்குப் பின் கவின்ஸ்ரனைப் பார்த்ததில் சின்ன வயதில் பொறுப்புணர்ந்து குடும்பச் சுமையைத் தாங்கும் அவன் மீது ஒரு மதிப்பு மேலிட, அவன் வயதையெண்ணி அவனில் ஒரு பரிவு பிறக்கிறது.
கடையிலிருந்து இன்னும் நூறு மீற்றர் வரை மிதித்தால் பாடசாலை வந்துவிடும்.
நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர் பட்டியலில் தன் பெயரைப் பார்க்கும் ஆவலில், காலையில் அம்மா தந்த தேநீருடன் கிளம்பியவளின் வயிறு இப் போது பசியெடுக்க ஆரம்பித்து விட்டது.
தலையும் இலேசாக வலியெடுக் கிறது.
அரச நிறுவனம் ஒன்றுக்காக இத்தனை வருட காலமும் பொறுப்போடு மூச்சுப் பிடித்து நின்றவளுக்கு.
இப்போ..? இந்தப் பாடசாலையில் அத்தனை பேரிலும், அவள் ஒருத்தியே தொண்டர் ஆசிரியர். ஆனால், எந்த வேலையையும் பின்னிற்காது முந்திக் கொண்டு செய்பவள்.
இதனால் மாணவர்களின் மதிப்புக் காளாகிச் சக ஆசிரியர்களின் தீட்டான பார்வைக்கும், அர்ச்சனைகளுக்கும் ஆளாகியவள்.
'தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர
நியமனம், கல்வி அமைச்சு தீர்மானம்

என அவ்வப்போது முகங்காட்டி வந்த பத்திரிகைச் செய்திகள் எவ்வளவு நம்பிக்கையை அவளுள் விதைத்தன. அதனை உறுதிப்படுத்தும் படியான, அதிபர், அதிகாரிகளின் தெம்பூட்டும்
வார்த்தைகள்.
இன்று. எல்லாமே அர்த்தமிழந்து போய்,
ஏமாற்றம். விரக்தி. சோர்வு. என ஒன்றை மேவி இன்னொன்று அவளது மனவெளியை ஆக்கிரமித்தபடி
இருக்கின்றன.
மாதத்தில் ஒருமுறை அதிபர் தரு கின்ற ஐந்நூறு அவளின் தேவைகளுக்கு எப்படி எட்டும்? அதற்காக வீட்டில் உறவு களிடம் கேட்கும் வசவுகள், நச்சரிப்பு களை எவ்வளவு காலம் தாங்கி வந்திருக் கிறாள்.
அத்தனைக்கும் அம்மாவின் அர வணைப்பே அவள் மனதுக்கு இத மளிக்கிறது. இரவில் தூங்கும்போது பக்கத்தில் வந்தமர்ந்து அம்மா கால்களைத் தடவி விடுவாள். அப்போதெல்லாம் அம்மாவின் பார்வை பல அர்த்தங்களை அவளிடம் பேசும். “இப்படியே உனது காலம் கழிய வேண்டுமா..?" எனக் கேட்பது போல அந்தப் பார்வை இவளுள் அர்த்தம் கொள்ளும்.
இடப்பெயர்வின் அவளைக் குடும்பத்தோடு சாவகச்
அவலம்
சேரியில் தஞ்சமடைய வைத்து, அவள் மீது உயிராக இருந்த அப்பாவை நோயின் பிடியில் சிக்க வைத்து அவரைக் கொன்று
போட்டது. அதன் பின்னர் எல்லாமே
அவளுக்கு அம்மா தான்.
இந்த முறை நடந்து முடிந்த நேர் முகத் தேர்வுக்கும் வேண்டிய ஆவணங் களைச் சரியாகத்தானே சமர்ப்பித்திருக் கின்றாள். தினவரவுப் பதிவு, சேவை விபரம், அதிபரின் சிபார்சுக் கடிதம், கல்விச் சான்றிதழ்கள் என எல்லாமே
சரியாகத்தான் இருந்தன."
எவ்வளவு நம்பிக்கையுடன் குதுர கலித்துக் காத்திருந்தாள்.
பாடசாலை வந்து சைக்கிளை விட்டி றங்கி, உடலில் ஊறிப் பிசுபிசுத்த வியர்வையைத் துடைத்து விட்டுக் கொண்டு அதிபர் முன்போய் நிற்கிறாள்.
அசுகை கண்டு நிமிர்ந்து பார்த்தவர்,
“கந்தோருக்குப் போயே வாறிர்"
தலையசைத்தாள். “உம்மடை பேரும் இருக்கோ..?
“இல்லை சேர்' சோர்வுற்றபடி கூறு கிறாள்.
“என்ன சொன்னவை.?”
"அப்பீல் பண்ணட்டாம்"
"அப்பீல் தனிரோ..?
எழுதிக் கொடுத்
பொங்கி வந்த அழுகையைத் தன்னுள் அடக்கிச் செரித்தவளாக, கடிதத்தைக் கொடுக்கின்றாள்.

Page 23
அதிபர் அதில் ஒப்பமிட்டுவிட்டு, "ரீச்சர், இதுகளுக்கெல்லாம் கவலைப்
படக் கூடாது. பேர் வந்தவையிலை
எத்தினை பேர் வெளிநாடு, வேற வேலை அடுத்த வெயிட்டிங் லிஸ்ட் ஒண்டு வரத்தானே
யெண்டு போயிருப்பினம்.
வேணும். அதிலை எப்படியும் உங்கடை பேர் வரும். கவலைப்படாதையுங்கோ”
அதிபரின் மாமூலான ஆறுதல் வார்த்தைகள் இன்று அவளைத் தேற்ற முடியாமல் வலுவிழந்து போயின. கடிதத்தை
வாங்கிக் கொண்டு திரும்புகையில்,
"ரீச்சர், நாளைக்குக் கட்டாயம் வந் திடுங்கோ. கோட்டத்திலையிருந்து கடிதம் வந்திருக்கு. தமிழ்த் தினப் போட்டிக்கு விண்ணப்பிக்கட்டாம், போன முறையும் வடிவாச் செய்தனிங்கள். இந்த முறையும் உங்களைத் தான் நம்பியிருக்கிறன்." எனத் தனது கருமத்தில் கண்ணாக இருப்பதை மேலும் உறுதிசெய்ய,
பதிலளிக்க வார்த்தைகள் ஏதுமின்றி
வெப்பிசாரத்துடன் பாடசாலையை
விட்டு வெளியேறுகின்றாள்.
மதியச் சாப்பாட்டு நேரம்.
திணைக்களத்தில் கதிரையை விட்டு எழுந்துபோய் விடுவார்கள் என்ற அவ சரத்தில் சைக்கிளை ஊன்றி ஊன்றி மிதிக் கின்றாள். வழியில் எதிர்ப்பட்டவர்களைக் கண்டுகொள்ளாமல் ஆஸ்பத்திரி வீதியி லிருந்து பருத்தித்துறை வீதியில் மிதந்து, அவ்வழியில் பயணித்து முத்திரச் சந்தை சந்தியில் திரும்பி திணைக்களத்தினை அடைந்தவளுக்கு இன்னொரு ஏமாற்றம்.
42
E. Dagsabai
கல்விப் பணிப்பாளர் வெளியே விசாரித்ததில் சாப்பாட்டுக்குப் போனவர் இன்னமும் திரும்பவில்லை எனத் தெரிகிறது.
வெளியில் கன்ரீனில் தண்ணீரைக் குடித்துவிட்டு, அலுவலகத்தில் முன் நிழல் பரப்பி நிற்கும் மாமரத்தின் கீழ் காத்து நிற்கிறாள். மெல்லிய காற்று வந்து உடலைத் தழுவச் சற்று ஆசுவாச மாய் இருக்கிறது.
மனது மட்டும் அந்த அலுவலகம் போல வெறுமையாக.
போய்விட்டார்.
சாப்பிடப் போனவர்கள் ஒவ்வொரு அவளது பள்ளிக்காலத் தோழி சாந்தியும் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டு
வராக வந்துகொண்டிருக்க,
வருகிறாள்.
சாந்தி முதலாம் வகுப்பு முதல் அவளுடன் ஒன்றாகப் படித்தவள். கணக்குப் பாடமென்றால் 'வாணி " யென்று வழிந்தபடி இருப்பவள். கணிதத்தில் எல்லாமே தவறாமல் பார்த்து எழுதுபவள்.
o
அருகில் வந்ததும் பசையில்லாமல் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, ஒரு வித மிதப்பில் அலட்சியமாகச் சென்று மறைகிறாள். இன்று அவள் ஒரு "கிளார்க்'. யாரோ அரசியல்வாதியின் அருட்கடாட்சம் பெற்று அரச நிய மனத்தில் நிலைத்து விட்டவள்.
நேரம் இரண்டைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. கடைசியாகக் கல்விப் பணிப்பாளரும் வந்து சேர்ந்தார்.

665);
শু
வெளியில் காத்திருப்போரைக் கண்டுகொள்ளாதவராக, தன் அறையி னுள்ளே போய் இருக்கையில் அமர் கிறார்.
அந்த அறையின் வாசலில் இன்னும் சிலர் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
கல்விப் பணிப்பாளர் யாரையும் உள்ளே அழைப்பதாகத் தெரியவில்லை. முகம் சற்று இறுகிக் கிடக்கிறது. தனது கருமத்தில் தான் சீரியஸாக இருப்பது போல பாவனை பண்ணிக் கொண்டிருக்
கிறார்.
உள்ளே காலடி வைப்பதற்கு எல் லோருக்கும் தயக்கம். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு நேரந்தான் 9)ւնւյւգ.?
மனதுக்குள் துணிவை வரவழைத் துக் கொண்டவளாக மெல்ல அடி யெடுத்து உள்ளே போகின்றாள்.
அவர் நிஷ்டை அப்பொழுதும் கலைவதாக இல்லை.
“சேர். எக்ஸ்கியூஸ்மி" அவள் குரல் மெல்ல நடுங்குகிறது.
அப்போதுதான் அவளைக் கண்டு கொண்டவர் போல, தலைநிமிர்த்தி, “என்ன வேணும்.? என விறைப்பாகக் கேட்கின்றார்.
கையில் வைத்துக்கொண்டிருக்கும் அப்பீலை அவரிடம் நீட்டுகின்றாள். கை லேசாக நடுங்குகிறது.
கையை நீட்டிக்கொண்டே, “என்ன இது..?” அதிகாரமாகக் கேட்கின்றார்.
"அப்பீல் சேர்’
"உன்னை அப்பீல் தரச்சொல்லி ஆர் கேட்டது?
'நியமனம் கிடைக்காதவை
எல்லோரும் அப்பீல் தந்துகொண்டிருக் கினந்தானே சேர்!”
ஏதோ நரகலைத் தொட்டழைகின்ற
அசூசையில் விரல் நுனியினால்
கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவாறு,
“எங்களுக்கு உவத்திரம் தாற தெண்டுதான் நிக்கிறியள்' என எடுத் தெறிந்து பேசுகிறார்.
அவளுக்கு உள்ளே அதிர்ந்து போகிறது.
வாங்கிய அப்பீலை மேசை மீது
போட்டுவிட்டுக் கேட்கிறார். “ஏ.எல். இருக்கா?
"இருக்கு சேர்.”
'அதிபர் சிபார்சு செய்திருக் கிறாரா?”
"ஆம்" எனத் தலையாட்டுகிறாள்.
“எந்தப் பள்ளிக்கூடம்?”
‘‘கொட்ட டி
பரமேஸ்வரா வித்தியாலயம்."
"அப்பா என்ன செய்கிறார்..??
"அப்பா இறந்து போனார் சேர்”

Page 24
“என்ன வேலை செய்தவர்.?”
"ரவுணிலை நாட்டாமை வேலை செய்தவர் சேர்’
"ஆ. மூட்டை சுமந்தவரே? அது தானை பார்த்தன். அது சரி சேவையிலை தொடர்ச்சியாக இருக்கிறீரோ?"
"ஒம் சேர்’
“எத்தினை வருஷமாக?"
பத்து.' 'இதென்ன... பன்னிரண்டு பதினைஞ்சு வருஷ மாய் வேலை செய்யிறவையும் இருக்கினம்."
வெளியே காத்து நிற்பவர்களின் கவனத்தையும் அவள் மீது ஈர்க்க வைக்கும் பிரயத்தனம் அவரது ஏளன மான வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
கையில் கொடுத்த ஆவணங்களில் உள்ள விபரங்களைத் தெரிந்து கொண்டும் வேண்டுமென்றே இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பது அவளுக்கு எரிச்சலை மூட்டுகின்றது.
“சேர், பள்ளிக்கூடப் பக்கம் போகாத வைக்கும் இந்தமுறை நியமனம் கிடைச் சிருக்கு."
"அதுனக்கு எப்படித் தெரியும்?" வார்த்தைகளில் கடுமை தொனிக்கிறது.
அவளுள் நியாயம் கோரும் தார்மீகப் பலம் திடீரென மெல்ல அரும்புகின்றது.
"சேர் அகல்யாவும் என்னோடைதான் படிச்சவ."
44
அவர் ஒருகணம் அதிர்ந்து, பின்னர் தன்னைச் சுதாகரித்தவராக,
'ஆர் அந்த அகல்யா' என
ஒன்றுமறியாதவராக வினவுகிறார்.
"உங்கட மருமகள் தான்."
"ஒ. அதுக்கென்ன இப்ப"
"அவ எந்தப் பள்ளிக்கூடத்தில் படிப்பிச்சு இப்ப தொண்டராசியர் நியமனம் கிடைச்சிருக்கு?"
“என்ன...நீரார் அதைக் கேட் கிறதுக்கு.? எனக்கேட்ட வண்ணம் கதிரையைப் பின்னே தள்ளிவிட்டுத் துள்ளி எழுகிறார். கோபாவேசத்தில் விரிந்த கண்களில் வன்மமும் ஆவேசமும் வெளிப்படுகிறது.
'போ வெளியிலை, அந்தப் புத்தியைக் காட்ட வந்திட்டாய்."
“ஓம் நான் வெளியிலை போகத் தான் போறன். போகவேண்டிய இடங் களுக்கும் போய் என்ர புத்தியைக் காட்டத்தான் போறன். நான் கேட்டதுக்கு முதலிலை பதில் சொல்லுங்கோ?
LLLLLLLLLLL LSLCLLLLCLSLL0L LSLLLLL LL LLLLL SLS LLLLLL
அற்ப புழு வாய் அவள் முன் திகைத்துப்போய் நின்றவரை, தலை நிமிர்ந்து கேட்டுவிட்டு, கல்வி உலகின் போலித்தனங்களை ஜீரணிக்க இயலாத மனக்கரிப்புடன் வெளியே இறங்கி நடக் கிறாள்.
 

ஆங்கிலத்தில் "D6b6aరా6 జీam'
சுயசரிதம்
- உதயம், ஆகஸ்ட் 2004 அவுஸ்திரேலியா.
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளரும், சஞ்சிகையா ளருமான டொமினிக் ஜீவா தமது சுயசரிதையை ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்" மல்லிகையில் முன்பு தொடராக எழுதினார். ஜீவா
கவிதை எழுதியவரல்ல. தமது சுயசரிதைக்கு புதுமையான தலைப்பை வைத்திருக்கின்றார்.
மல்லிகையில் வெளியான தொடர் பின்பு நூலாக இரண்டு பதிப்புகளைக் கண்டது. மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த, முதலாவது பதிப்பு 1999 இலும், ஜீவாவின் 75 வயது பவள விழா ஆண்டை முன்னிட்டுத் திருத்திய இரண்டாம் பதிப்பாக 2001 இலும் வெளிவந்து விட்டன.
spôGOLJITQupası gø56ör gų iš Sav Guq Gulub “Undrawn Portrait for Unwritten Poetry” அவரது 78ஆவது வயதில் வெளியாகியுள்ளது. ஜீவா தமது இயல்புகளை மறைத்து வாழ்பவரல்ல. மிகவும் வெளிப்படையானவர். தனது குலம் குறித்துப் பெருமை பேசாவிட்டாலும், தனது முன்னுதாரணமான வாழ்வின் மூலம் தமது குலத்திற்கும் மானுடத்திற்கும் பெருமை சேர்த்தவர். தர்மாவேசம் கொண்ட இப்படைப்பாளி, எழுத்தையே ஆயுதமாக்கிப் போராடியவர். தனது போராட்ட வரலாற்றை ஆவணமாகப் பதிவு செய்தார்.
ஆங்கில வடிவத்தை தந்திருப்பவர், அவுஸ்திரேலியாவில் வதியும் நல்லைக் குமரன் குமாரசாமி. இவரது மொழிபெயர்ப்பில் "உதயம்" வாசகர்கள் 'விலங்குப் பண்ணை"யை தற்போது படித்துக் கொண்டிருக்கின்றார்கள். மொழிபெயர்ப்புத் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டிவரும் குமாரசாமி, அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும், முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதை" நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
டொமினிக் ஜீவாவின் கதைகள் ஏற்கனவே ஆங்கிலம், சிங்களம் உட்பட சில ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில் "Undrawn Portrait for Unwritten Poetry Ligu again Sairpg51.
45

Page 25
அண்மையில் அமரராகிய மலையக எழுத்தாளர் ஏ.வி.பி. கோமஸ் அவர்களால் எழுதி ஏற்கனவே பிரசுரமாகிய இக்கட்டுரை அவரது ஞாபகார்த்தமாக மறுபிரசும் செய்யப்படுகிறது.
நைை ைநதுைகையில்
- ஏ.பி.வி.கோமஸ்
இன்றைக்கு நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள். இந்த நிலையில்தான் என்றும் இருப்போம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவ்வாறெனின் அந்நிலை யிலேயே இருப்பீர்கள். ஆனால் அது பெருந்தவறு என்பதை மட்டும் நான் ஞாபகப் படுத்த விரும்புகிறேன். "ஆண்டவன் கொடுத்தது அவ்வளவுதான்”, “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பதெல்லாம் உண்மையிலேயே பழமொழிகளில் தான். ஆமாம். கிழடு தட்டிவிட்ட பழைய மொழிகள் தான். வேண்டாமே அவை நமகசூ.
ஆனால் நாளைக்கு நான் நல்ல நிலையிலே வாழலாம், நம் பிள்ளைகள் உயர்ந்த நிலையிலே வாழவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், உடனடியாக நல்லதோர் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்று, அதற்கான திட்டங்களைத் தீட்ட முற்படுங்கள், செயற்படுங்கள். சும்மா 'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்" என்று விதண்டாவாதம் புரிவது அழகல்ல! ஏன்! இன்றைக்கு அதுவும் அஸ்பஸ்டஸ் ஷீட்'டும், களிகட் ஒடும் போடப்பட்ட கூரைகளைத்தானே அதிகமாகக் காண்கிறோம். கடவுளுக்கும் கொஞ்சம் கஷ்டம்தான். என்ன செய்வது நிற்க.
நாளைக்கு நீங்கள் அடைய விரும்புவதை உங்கள் மனக் கண் முன் கொஞ்சம் கொணர்ந்து பாருங்கள். இலட்சியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். ஆசைப் படுவது பாவம் அல்ல என்பதைக் கொஞ்சம் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ஆனால் ஆசைப்படும் போது அதிகமாக ஆசைப்பட்டு விடாதீர்கள். இரப்பர் வெட்டு
46

ಐಟಿಐ
வோர் இரவோடு இரவாக சூப்ரின்டன்ட்” ஆக வேண்டும் என்றால் முடியுமா? ஒரு கரையில் இருந்துகொண்டு மறுகரையில் உள்ள தோணியில் கால்வைக்க முடியாது தானே! அதற்கும் வழிவகைகள் உள்ளன வன்றோ. அன்றியும் காலற்ற முடவனும் கொம்புத்தேனை அடையலாம்தான் ஒரு நீண்ட கோல் கொணர்ந்தால், மரத்தின் கீழ் வந்தால் முடியாதா என்ன? ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இராது நான்கு கால்கள்தான் உண்டு. ஏனெனில் அதுதான் இயற்கை நியதி. ஆகையால் ஆசைப்படுவது பாவமல்ல. ஆனால், அடைய முடியாததை அடைய யோசிப்பதுதான் பாவம். எதற்கும் ஒரு அளவு உண்டுதானே,
இங்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டு, திட்டம் தீட்டுதல் பற்றி ஆராய் வோம். நாம் இவ்வாண்டு இறுதியில் இந்தியத் தாய்த் திருநாட்டிற்கு போய்வர வேண்டும் என்று நினைக்கிறோம் என்றோ அல்லது சீனாவை எதிர்க்க பண வுதவி செய்ய நினைக்கிறோம் என்றோ வைத்துக்கொள்வோம். நம்மிடம் தற் போது தேவையான பணம் இல்லை. யோசிக்கிறோம். குறுக்கு வழியில் பணத்தைப் பெற எண்ணுவது என்பது பாவம். அந்தோ அதைப்பற்றி நினைக் கவும் கூடாது. ஆக, இன்னும் நான்கு வழிகள் நமக்குத் தோன்றுகின்றன. ஒன்று நமக்கு இப்பொழுது கிடைக்கும் சம்பளத்தில் ஒர் உயர்வை எதிர்பார்க் கிறோம். இரண்டாவது ஆஸ்பத்திரி சுவிப் வாங்கி அதிலே நமக்கு பிரைஸ், வெகு மதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கி
றோம். மூன்றாவது ஒரு பணக்கார
47
சொந்தக்காரர் இறக்க, அவர் தமது சொத்துக்களை நம் பேரில் எழுதி வைத்துவிட்டு இறப்பார் என்று எதிர் பார்க்கிறோம். நான்காவதாக நாம் புகைக்கும் சிகரட்டுகளை நிறுத்தி விட்டால், அதற்காகும் செலவை ஓர் இடத்தில் சேர்த்து வைத்தால் நல்லது என்ற எண்ணம் தோன்றுகிறது. இவ் வாறு நான்கு எண்ணங்கள் தோன்று கின்றன.
சரி. நாம் சாய்வு நாற்காலியில் சாய் கிறோம். ஒரு சிகரட்டை எடுக்கிறோம். உதடுகளின் இடுக்கில் வைக்கிறோம். நெருப்புப் பெட்டியை எடுக்கிறோம். தீக்குச்சியை எடுத்து, உரசிப் பற்ற வைக் கிறோம். அந்தோ! திட்டத்தில் நெருப்பை வைக்கிறோம். எதிர்காலத் திட்டம் நெருப்பில் எரிகிறது. ஆமாம் மேற்கூறிய நான்கு வழிகளிலும் முதன் மூன்று வழி களும் வெறும் கற்பனைகள். நடந்தாலும் நடக்கலாம். நடக்காமல் போனாலும் போகலாம். ஆனால் நான்காவது திட்டம் புகைத்தலை நிறுத்துவது நல்லதொரு வழி. நம்மால் மனமிருந்தால் செயல் படுத்த முடிந்தது. ஆக சிகரட்டைப் பற்ற வைப்பதன் மூலம் சிதைத்து விட்டோம். அவ்வழியைப் பொசுக்கி விட்டோம். நம் எதிர்காலத்துக்கான எண்ணத்தை. ஆகவே எவ்வழி நல்வழி என்று ஆராய்ந்து அறிந்து அவ்வழி நடப்பதுதான் நம் கடமை. எதிர்காலத்தை ஏற்றம் உடைய
தாக ஆக்க உற்றவழி.
இன்றுதான் நாளையின் திறவுகோல். நிகழ்காலம்தான் எதிர்காலத்தின் வாயிற் படி. இதனை மறந்திடலாகாது. இப்

Page 26
பொழுதே இக்கணமே நீங்கள் ஒர் அடி எடுத்து வைக்கலாம். அது சிறு குழந்தை யின் சிற்றடியாய் இருக்கலாம். ஆனால், அதுவே எதிர்காலத் திட்டத்தில் எடுத்து வைக்கும் ஏற்றம் பெற்ற அடியாக அமையும். பிள்ளை இப்பொழுது நடக்கிறதென்றால் அது வெற்றி. ஆனால் அதுவும் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, விழுந்து எழும்பி நாற்காலியின் விளிம்பைப் பிடித்து நடந்து நடந்து பழக்கப்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட வெற்றிதானே. ஆம். சிறு சிறு முயற்சி களின் சிறு சிறு வெற்றிதானே பெரும் வெற்றியாக அமைகிறது. மந்திரத்தால் மாங்காய் காய்ப்பதில்லையே! சிறு துளி கள் சேர்ந்துதானே பெரும் வெள்ளமாக மாறுகிறது. ஆணியை அடிக்கும் போது ஒரே அடியாகவா அடிக்கிறோம், இல்லையே. அடிமேல் அடி அடித்துத் தானே கொஞ்சம் கொஞ்சமாக இறக்கு கிறோம். அதேபோல் தோல்வி, வறுமை, கெட்டகாலம், துர்அதிர்ஷ்டம் என்று சொல்லப்படுபவைகளின் தலையில் கொஞ்சம் கொஞ்சமாக அடித்துத்தான் வெற்றியை நல்லதொரு எதிர்காலத்தை நிலைநாட்ட வேண்டும்.
நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நாம் மற்றவர்களையும் கவர்தல் வேண்டும். ஏனெனில் வாழ்க்கை யில் வெற்றி என்பது ஒருவன் ஒரு நூலின் உதவியுடன் ஆகாயத்தில் பறக்க விடும் பட்டம் அல்ல. ஆனால் பதி னொரு பேர் சேர்ந்து விளையாடுகின்ற உதைப்பந்தாட்டம். முன்னுக்குப் போய் 'கோல்" அடிப்பது உங்களின் கடமை. ஆகையால், நாம் முன்னுக்குப் போக
g 6666):
வேண்டும் என்றால் மற்றவர்களை நிரா கரிக்கக் கூடாது. துச்சமாக எண்ணக் கூடாது. ஏன்! சிறு துரும்பும் பல் குத்த உதவும்தானே.
பலர், தாங்கள் முன்னேற வேண்டும் என்ற தணியாத ஆவலால், தங்களுக்கு உதவியாக அமையக் கூடியவர்களையே தள்ளி விடுகிறார்கள். அவர்கள் மனம் புண்ணாகும்படி நடந்து கொள்கிறார்கள். என்னே பரிதாபம், செங்கல்களால் மட்டும் நம்மால் வீட்டைக் கட்டிவிட முடி யாது. ஆமாம். சுண்ணாம்பும் சாந்தும் சாதாரண மணலும் மற்றும் பொருள்களும் தேவை என்பதை மறக்க வேண்டாம். புண்பட்ட நெஞ்சத்தினர் பின்வந்து உதவி செய்வார்களா? இல்லையா?
மற்றவர்களைக் கவரும் நோக்கத்தில் நம்முடைய கருத்தை அவர்களிடம் புகுத் தப் பார்ப்பது மிக மிக மோசமானது. மாறாக இப்படிச் செய்யலாம். அதாவது, 'பாருங்கள் இப்படிச் செய்தால் நன்றா யிருக்கும். இஷ்டமானால் செய்யுங்கள். உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் விட்டு விடுங்கள்" என்று ஒரு யோசனை தனைக் கூறி அதனால் வரும் வெற்றியை அவர்களே அடைந்து கொள்ளட்டும்
என்று விட்டு விடுவதே மேல். நியாய
48
மானது. வெற்றியைத் தரக்கூடியதும் கூட. ஆக மற்றவர்களின் உதவி நமக்குத் தேவை என்பதை நாம் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் வசிப்பது ஒரு சமூகத்தில், புசிப்பது ஒரு குடும்பத்தில்!
எது எவ்வாறு போயினும் நாம் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் போது நம்

ভ
மனதில் உண்மை, தூய்மை என்பவை இருக்க வேண்டும். உண்மை இன்றி எதுவும் இல்லை. தவறான திட்டமாக இருந்தாலும் நீங்கள் உண்மையுள்ளவர் களாக இருந்தால் உங்களைச் சூழ்ந் திருப்பவர்கள் உங்களது திட்டத்தை ஏற் பதை, போற்றுவதைக் காண்பீர்கள். அன்றி அசகாயத் திட்டத்துடன் மனதில் உண்மையில்லா விட்டால் அருகில் இருப் போர் அதனை ஏற்க மாட்டார்கள். வர வேற்க மாட்டார்கள். இது உண்மை.
அடுத்து உங்களின் எதிர்காலத்தைப் பற்றி உங்கள் மனதில் ஏதாவது பயம், அதிருப்தி இருந்தால் இப்பொழுதே, இவ் வேளையே அவைகளை எடுத்து எறி யுங்கள். முயற்சி, செயல், வெற்றி எனும் முத்தீயில் அவைகளை இட்டுப் பொசுக் குங்கள். தோல்வி எனும் பயமேகம், வாழ்வின் வெற்றி எனும் நிலைவை மறைப்பதா? வேண்டாமே! வெற்றி எனும் தங்கத்தட்டை, பயம் எனும் பயங்கரத் தூசி பங்கப்படுத்துவதா? வேண்டாமே! முயற்சி எனும் நீரில், செயல்முறை
தீட்டி,
எனும் துணியை நனைத்து, உடனடியாக துடைத்து விடுங்கள் தங்கத் தட்டை!
ஆமாம். பகுத்தறிவு, உணர்ச்சிகளை அடக்கி ஆண்டால் கட்டாயம் பயம் எனும் பூதம் பறந்தோடும். சிந்தனைதான் முதலில் தேவை. சிந்தனை செயல்பட வேண்டும். சிந்தனை எனும் வீட்டில் செயல் எனும் தீபம் ஏற்றப்பட்டால் வெற்றி எனும் வெற்றி மகள் கொலு விருப்பாளே அங்கு. சிந்தியுங்கள், சிந்தி யுங்கள். பின் செயற்படுங்கள், வெற்றி பெறுங்கள்.
ஒருநாள் நீங்கள் விழித்தெழுவீர்கள். அப்பொழுது நீங்கள் சிந்தித்துத் திட்டம் செயலாற்றியதன் பயனாய், 'கற்பனை செய்த எதிர்காலம், வெற்றி எனும் அழகுத் தெய்வம், அரும்பும் புன்முறுவலுடன் எதிரில் நிற்பதைக் காண்பீர்கள்.
ஆகையால், "சிந்திப்போம்’ திட்டம் தீட்டுவோம். செயல்படுவோம். வெற்றி காண்போம். நாளை நமது கையில்.
r
மனங்கொள்ளத்தக்கது.
வருந்துகின்றோம்.
மலையகப் படைப்பாளிகளில் முன்னணியில் திகழ்ந்த திரு. A.PV கோமஸ் சமீபத்தில் எம்மை விட்டு மறைந்து விட்டார். மலையகத்தில் சொல்லப்படத் தக்கதாகத் திகழ்ந்த அன்னாரது இழப்பையொட்டி எமது ஆழ்ந்த துயரத்தையும், அனுதாபத்தையும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய உலகத்திற்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது உருவத்தை அட்டைப் படத்தில் பதிப்பித்து மல்லிகை கனம் பண்ணிக் கெளரவித்தது. இங்கு
N
- ஆசிரியர் لم

Page 27
இப்பா ஏன் இழுகிறார்?
- தெணியாஸ்
வேலைகள் எல்லாம் முடித்து அங்குமிங்குமாகப் பரத்திக் கிடக்கும் சட்டுமுட்டுச் சாமான்களை எடுத்து ஒழுங்குபண்ணி வைத்தாகி விட்டது. இரவு உணவின் பின் கணவன், பிள்ளைகள் எல்லோரும் போய்ப் படுத்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால் தனக்கு இன்னும் அங்கு பல சோலிகள் இருப்பது போல அடுக்களை விட்டு வெளியே வருவதற்கு அவளுக்கு மாத்திரம் இயலவில்லை. இதைத் தூக்கி அதிலே வைத்து. அதைத் தூக்கி இதிலே வைப்பதில் அவள் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது.
மூத்தவள் மூன்று தினங்களாக அவளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இன்றும் சாப்பாடு முடிந்து போவதற்கு முன்பு கேட்டாள்.
"அம்மா, அப்பாவுக்கு இன்னும் சொல்லவில்லையா?”
"சொல்லுவம்"
“எப்ப.???
"இண்டைக்கு. ஒம். இண்டைக்கு. நீ போய்ப்படு”
மகள் கேட்கும் போதெல்லாம் அவள் இப்படிச் சொல்லிக்கொண்டுதான் இருக் கின்றாள். கடந்த மூன்று தினங்களாக அவள் மனதில் ஒரே போராட்டம். ஒவ்வொரு தினமும் இண்டைக்கு வேண்டாம். நாளைக்குச் சொல்லுவம். நாளைக்குச் சொல்லுவம். எனத் தயங்கித் தயங்கி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றாள். இன்று தவறாமல் சொல்லித்தான் ஆகவேண்டுமென நினைத்து மகளுக்கு அப்போது உறுதி சொன்ன சமயம் மனதில் இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லாமற் போயிற்று.
50

gigs)
w அவரிடம் போய் எப்படிச் சொல் வது? இந்தச் செய்தி அறிந்து அவர் என்ன செய்வார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஏவுகணை ஒன்று சீறிக் கொண்டு கிளம்புவது போலக் கொதித் துக் கிளம்புவார். அது குடும்பத்துக்குள் வந்து விழுந்து குடும்பம் வெடித்துச் சிதறப் போகின்றது. இன்றுவரை அவர் கட்டிப் காத்து வரும் குடும் பக் கெளரவம், பெருமை எல்லாம் தரை மட்டமாகத் தகர்ந்து விழப் போகின்றன. அதைத் தடுப்பதற்கு ஒரு மார்க்கம் இருப் பதாக அவளுக்குத் தோன்றவில்லை. அவரிடம் சொல்லாமல் இனிமேலும் மறைத்து வைத்துக்கொண்டிருந்தால் விப ரீதமான விளைவுகள்தான் உண்டாகும் என நினைக்கிறாள்.
உண்மையில் அவர் உள்ளம் எப்படி இதைப் போய்த் தாங்கிக்கொள்ளப் போகிறது! சமூகத்தில் அவருக்கு இருக் கும் கெளரவம் என்ன? மதிப்பென்ன?
இந்தக் கிராமத்தில் "வாத்தியார்? என்றால் அது அவர்தான். அவரைத் தவிர இன்னொரு "வாத்தியார் இங்கில்லை என்று சொல்லிவிடலாம். அவருக்கு முன்னரும் உபாத்தியாயர் சிலர் இங்கு இருந்துதான் இருக்கின்றார்கள். இன் றைக்கும் பலபேர் ஆசிரியர்களாக இங்கே
இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள்.
எவருக்கும் இல்லாத செல்வாக்கு, ஒரு மதிப்பு, அவருக்கு உண்டு. உபாத்தி யாயருக்கு உதாரணம் அவரேதான். இந்தக் கிராமத்துக்கு வந்து "வாத்தியார் வீடு எது?’ என்று கேட்டால் எந்தப் பச்சைக் குழந்தையும் தவறாமல் அவர் வீட்டைக்
51
காட்டிவிடும். அந்த அளவுக்கு அவர் பிரபலமானவர். அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் என்ன? என்பது அனேக மானவர்களுக்குத் தெரிய வராது. அவரை வாத்தியார் என்றுதான் யாவரும் அறி வார்கள். “பண்டிதர்" என்றும் அவர் அழைக்கப்படுவதுண்டு. அவர் பண்டிதர் பரீட்சை எதுவும் எழுதி அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவரல்லர். அவரது தமிழ் இலக்கண இலக்கிய அறிவு நடை உடை என்பன 'பண்டிதர்' என உயர்வாக எல்லோரும் அவரைக் கொண்டாடும் வண்ணம் உயர்த்தி வைத் திருக்கின்றது.
தமிழ், சைவம் இரண்டும் தமது இரு விழிகளெனப் போற்றும் ஆசிரியப் பரம் பரையைச் சேர்ந்தவர். அந்தப் பரம்பரை யின் கடைசிக் கொழுந்துகளுள் அவரும் ஒருவரென்று சொல்லலாம். இறைவன் மீது மிகுந்த பக்தி பூண்டு வாழுகின்ற ஒரு பக்தர். வெள்ளை வேட்டி, வெள்ளை நஷனல் அணிந்து, வெண் முகில் மத்தியில் ஒளிரும் நிறை நிலாப் போன்று வெண்ணிறனிந்த நெற்றியில் சந்தனத் திலகமிட்டுச் சைவப் பொலி வுடன் கம்பீரமாகத் தோன்றுவார். ஒழுக் கம், கட்டுப்பாடு, கடமை உணர்வு தவ றாது நடக்கும் உத்தமர். தன்னம்பிக்கை மிகுந்தவர். இறைவனைத் தவிர இன் னொருவனுக்குத் தலை பணிய மாட் டேன் என்ற இறுமாப்பு அவருக்கு உண்டு. சத்தியமே அவர் வாழ்வின் அடி அத்திபாரம். பொய்மையைச் சந்திக்க நேரும் வேளையில் வெகுண்டெழும் பொல்லாத கோபக்காரன்.

Page 28
அவசியமின்றி அதிகம் பேசாத ஒருவர். கண்கள். தீர்க்கமான மூக்கு. அழுத்தமான உதடுகள். இறுக்கமான முகம். அவரைச் சந்திக்கின்றவர்கள் தம்மை அறியாமல் அவருக்குப் பணிந்து கை எடுத்து வணங்கி நிற்பார்கள்.
அவருக்கு தீட்சணியமான
தான் பெற்ற பிள்ளைகளாகவே தனது மாணவர்களைக் கருதி வந்தார். இறுக்கமும் கண்டிப்புமாக அவர்களை அவர் வழிப்படுத்தி வந்தார். அவரது மாணவர்கள் பலர் இன்று உயர் பதவி களில் நாட்டின் பல பாகங்களில் இருக் கின்றார்கள். விடுமுறைக் காலங்களில் தவறாது வந்து சந்தித்துப் போகின்ற வர்கள் சிலர் இன்றும் இருக்கவே செய் கின்றார்கள். இன்னும் சிலர் இடை யிடையே கடிதங்கள் மூலம் நலன் விசாரித்து ஆசியைக் கேர்ருவார்கள்.
மாணவன் ஒருவன் வந்து அவரைச் சந்தித்துப் போனால், அல்லது மாணவன் எழுதியிருக்கும் கடிதமொன்று கைக்கு வந்து கிடைத்து விட்டால் அன்றைய தினம் அவர் உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கிப் பெருகும்.
அண்மையில் ஒரு தினம் அவளிடம் அவர் சொல்லி மெல்லச் சிரித்தார். "ஒருநாள் காலையில் மாமா வந்து ஐயாவைக் கண்டு இருவரும் ஏதோ பேசி னார்கள். பிறகென்ன என்றால் உனக்குத் தாலியைக் கட்டச் சொன்னார்கள். அவ் வளவுதான்!” இத்தனை ஆண்டுகளாக அவரோடு அவள் வாழ்ந்து முடித்து விட்டாள். இப்படி ஒருகதை இதுவரை அவர் வாய் திறந்து சொன்னதில்லை.
52
y 6666):
།།
இன்று இப்படியெல்லாம் ஏன் பேசு கின்றார்? தன் பிள்ளைகளுக்கு வரன் தேடிக் களைத்துப்போன அதிருப்தியில் தன் பழைய நினைவுகளை மீட்டுப் பார்க் கின்றாரென எண்ணத் தோன்றுகின்றது.
முதல் குழந்தை பெண்ணாக வந்து பிறந்தாள். குடும்பத்தில் தலைப்பிள்ளை பெண்ணாகப் பிறந்தால் அந்தக் குடும்பம் செழித்து வளரும் என்னும் நம்பிக்கை அவருக்கும் இருந்து வந்தது. அந்த முதல் குழந்தைக்குக் கலைவாணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அடுத்துத் தனக்குப் பிறக்கப் போவது ஆணாக இருக்கும்
என்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்
தது. அந்த நம்பிக்கையான எண்ணத்தைப் பொய்யாக்கிக் கொண்டு தமிழ்வாணி வந்து பிறந்தாள். மேலும் மூன்று ஆண்டு களின் பிறகு இன்னொரு பெண் பிறந்து இசைவாணி என்று பெயரும் பெற்றாள்.
போதும். மூன்று குழந்தைகள் போதும் என மனதை அவர் தேற்றிக் கொண்ட போதிலும் மனதில் ஒரு பெரிய குறை இருக்கவே செய்தது. அவர் தந்தை ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை சென்று புனித தீர்த்தத்தில் நீராடித் தனது தந்தைக்குப் பிதிர்க்கடன் செய்யும்போது தான் பெற்ற பிள்ளையான அவனைத் அருகில் வைத்துக் கொள்வது வழக்கம். தனது பிள்ளையை அருகில் வைத்துக் கொண்டு தனது தந்தைக்குச் செலுத்தும் பிதிர்க்கடன்கள்தான் புண்ணிய பலன் களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு அந்தப் புண்ணிய பலன்கள் பெறும் பாக்கியம் வந்து சித்திக்க வில்லை என்பதுவே அவருக்கு உள்ளத் தில் இருக்கும் மனக்குறை.

ஆனால் ஜாதகத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்து வந்தது. பண்டித நேரு சொன்னதுபோல, "நான் ஜாதகத்தை நம்புகின்றேன். சாத்திரியை நம்ப வில்லை" என்று சில சமயங்களில் அவர் சொல்லிக் கொள்ளுவார். ஜாதகம் பார்க் கத் தெரிந்த அவரது நண்பரான ஆசிரியர் ஒருவர் ஒருதினம் அவர் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து "ஆண் குழந்தைக்கான பலன் நிச்சயமாக உமக்கு இருக்கிறது. அப்படிப் பிறக்கவில்லை என்றால் நான் சாதகம் பார்ப்பதைக் கைவிட்டு விடு கிறேன்" எனச் சபதமிட்டுக் கூறினார். அவர் மனதில் இருந்து வந்த அந்தத்
தீராத ஆசைக்கு அந்த நண்பர் மேலும்
நம்பிக்கை ஊட்டினார். அந்த நம்பிக்கை யின் பேரில் இசைவாணி பிறந்து ஆறு ஆண்டுகளின் பிறகு அவர் ஒரு குழந்தைக்குத் தந்தையானார். அந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்னர் மூத்தவள் கலைவாணி பருவம் வந்து பூப்படைந் திருந்தாள். அதனால் அவர் உள்ளுக்குள் சற்று ஆடிப் போனார். அந்தக் குழந்தைக் குப் பெயர் சூட்டும் பொறுப்பை மூத்தவர்களிடம் விட்டு விட்டார். அக்காக்கள் மூவரும் தேர்ந்தெடுத்த பெயர்தான் பிரியதரிசினி. நேரு மகள் இந்திரா காந்தியின் பெயராக அது இருந்ததால் அவர் மனதுக்கும் அந்தப் பெயரில் உடன்பாடுதான்.
மூத்தவள் பயிற்றப்பட்ட ஆசிரியை. அவளுக்கு இப்போது வயது முப்பத் தாறு. அடுத்தவள் பிரதேச சபையில் எழுதுவினைஞராக வேலை பார்க்கின் றாள். மூன்றாவது பெண் பட்டதாரி
5
ஆசிரியை. கடைக்குட்டி பிரியதரிசினி பல்கலைக் கழகத்தில் இறுதி ஆண்டில் கற்றுக்கொண்டிருக்கும் விஞ்ஞானப்
பட்டதாரி.
கடைக்குட்டி பிரியதரிசினி தோற்றத் தில் அவரைப் போலத்தான். அவர் குடும் பத்தில் அவள் ஒரு செல்லப்பிள்ளை. ஆண்பிள்ளை இல்லாத குறையைப் போக்க அவளை ஆணாகவே அக்காக்கள் ஆசையாக வளர்த்தார்கள். ஆண்கள் போட்டுக்கொள்ளும் உடைகளை அணிந்து அழகு பார்த்தார்கள். கூந்தலைக் கத்தரித்துவிட்டு, பாகவதர் தலையோடு பருவமடைந்த பிறகும் சில ஆண்டுகள் திரியவிட்டார். அவள் பொல்லாத பிடி வாதக்காரி. நினைத்ததைச் சாதிக்கும் குணம் அவளுக்கு. மாதா மாதம் அரசாங் கச் சம்பளம் வாங்கும் அக்காக்கள் அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பாவின் ஒய் வூதியம் வேறு வருகிறது.
அவர் ஆசிரியப் பணியில் இருந்து ஒய்வு பெற்றுப் பத்து ஆண்டுகள் கழிந்து போய்விட்டன.
அண்மையில்தான் ஒரு நாள் மனைவிக்கு அவர் சொன்னார்,
"மாமா எனக்கு தங்கமும் வைரமு மாகக் கொட்டித் தந்திருக்கிறார்” என்று அவளைச் சுட்டிக் காட்டி. கனகமணி என்னும் தன் பெயர் உணர்த்தும் கருத்து, கனகம் - தங்கம், மணி - வைரம் எனப் பொருள் கொண்டு அவர் சொல்லு கின்றார் என்பது அவள் விளங்கிக் கொண்டாள். மனைவியாக வந்து சேர்ந்த தன்னைத் தவிர அவர் ஒரு சீதனமும்

Page 29
அப்போது எதிர்பார்க்கவில்லை என்பதை இன்று நினைத்துப் பார்க்கின்றார். ஆனால் இன்று தன் பிள்ளைகளுக்கு.?
குடும்பத்துக்குள் பெரிய ஒரு குண்டைத் தூக்கி இப்போது வீசி இருக் கிறாள் கடைக்குட்டி பிரியதரிசினி. பல் கலைக்கழகத்தில் அவள் தன்னோடு படித் துக் கொண்டிருக்கும் முரளிதரன் என்ற மாணவனை விரும்புகிறாளாம். அவனைத் திருமணம் செய்யப்போகின் றாளாம். நாளை விடிந்தால் அவனுக்கும் தனக்கும் பதிவுத் திருமணம் நடப்
பதற்கான ஏற்பாடுகளை அவள் செய்து
முடித்திருக்கிறாள். இந்தத் தகவலை
யாருக்கும் வெளியிடாது மிக இரகசிய
மாக மறைத்து வைத்திருந்தாள். மூத் தவள் கலைவாணி அவளோடு மிக நெருக்கம். தன் பிள்ளை போலவே மூத்
தவள் அவளை நடத்தி வந்தாள். கலை
வாணிக்கு இந்தத் தகவலை மெல்லச் சொன்னாள்.
'அக்கா, என்ரை பஜ்மேற் முரளியை நான் விரும்புகிறன்."
அக்கா சிரிக்கின்றாள்.
"ஏன் அக்கா சிரிக்கிறாய்!" "நீ இப்பவும் குழந்தைதான் என்று நான் நினைச்சுக் கொண்டிருக்கிறன். "
இருபத்திநாலு வயதுக் குழந்தை. அப்பிடித்தானே!"
"ஒமோம்"
"குழந்தை செய்கிற விளையாட்டுக் காரியம் இது எண்டு நீ சொல்லுறியா, அக்கா?"
54
Diges):
"பிரியா, உன்ரை வயது. சூழல் அப்பிடி. அதுதான் இப்படியெல்லாம் பேசுகிறாய்?
'இல்லை அக்கா, நான் சீரியஸாக கதைக்கிறன்."
“என்ன சொல்லுகிறாய்?"
'றிஜிஸ்ரேஸன் செய்து கொள்ளப் போகிறோம்"
"பிரியா, சிறுபிள்ளைத் தனமாகக் கதைக்காதே! அப்பா உன்ரை முடிவை ஏற்றுக் கொள்வாரா?”
"கலியானம் செய்து கொள்ளப் போகிறது நான்"
"அதுக்கு.?"
"அதுக்கென்ன. அதுக்கு! அப்பா வுக்கா கலியாணம்?"
'பிரியா, நீ அளவுக்கதிகமாகப் பேசுகிறாய்!"
“பேசுகிறதென்ன செய்து காட்டு
கிறன் பார்!’
அம்மாவிடம் போய் அவள் காதில் மூத்தவள் இந்தச் செய்தியை மெல்லப் போட்டுவிட்டாள். அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மா சொல்லி மற்றைய இரு சகோதரி களுக்கும் தகவல் அறிந்து திகைத்தார்கள். அன்று முதல் வீடு இருண்டு கிடக்கிறது. உள்ளே புழுங்கினாலும் வெளியே மகிழ்ச்சியாகத் தோன்றிய குடும்பத்தின் நிம்மதி குலைந்தது. அடுத்து என்ன நடக் கப் போகின்றது என்று எல்லோரது உள் ளங்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.
 
 

அப்பாவைச் சமாதானம் பண்ணி வைக்க யாருக்கும் இயலாது. அவர் பொல்லாத பிடிவாதக்காரன். அவர் என்ன செய்வார் என்று நிச்சயமாகச் சொல்ல இயலாது. மானம் எல்லாவற்றிலும் பெரிதெனக் கருதுகின்றவர் அவர்.
குடும்பத்தில் அவர் மாத்திரம் இன் னும் அறியாமல் இருக்கின்றார். காலை விடிந்தால் அவள் வீட்டில் இருந்து புறப் பட்டுப் போய்விடப் போகின்றாள். நாளைய தினம் அவள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக் கின்றாள். அவருக்கு இனியும் சொல் லாமல் எப்படி மறைத்து வைத்துக் கொண்டிருக்கலாம்?
அம்மா அடுக்களைக் கதவை பூட்டிக் கொண்டு கண்ணாடி இலாம்பைக் கையில் தூக்கியபடி விறாந்தைக்கு வரு கின்றாள். விறாந்தையில் தன் படுக் கையை விரித்து தயார் பண்ணிக் கொண்டு சற்று நேரம் படுக்கையில் அமர்ந்திருக்கின்றாள். இதைப் போய் அந் தாளுக்கு என்னெண்டு சொல்லுறது. அவளுக்கு நெஞ்சு படபட என்று அடிக்க ஆரம்பிக்கின்றது. ஒரு தெய்வமாக. மகா இன்றுவரை அவள் கருதி வாழ்ந்த அவர். இன்று இந்தப் பிள்ளை யால்...? இந்தச் செய்தி அறிந்து இந்த நடு இரவில் என்ன நடக்கப் போகிறதோ!
ØTo
பிள்ளைகள் எல்லோரும் படுத்து இதுவரை உறங்கிப்போய் இருப்பார்கள் என்று அவள் எண்ணிக் கொண்டு மெல்ல எழுந்து ஒசை எழுப்பாத வண் ணம் மெல்ல அடி எடுத்து வைத்து நடந்து
55
சிறிது வெளிச்சம் சிந்தும் லாம்புடன் அவர் அருகில் வந்து அமருகின்றாள்.
அவள் வருகையை அவர் எதிர் பார்த்திருந்தவர் போல படுக்கையில் இருந்து எழுந்த வண்ணம், “என்னப்பா இந்த நேரம்!" வினாவுகின்றார். "ஒண்டு மில்லை" பெரிதாகப் பெரு மூச்சொன்று அவள் நெஞ்சைச் சுட்டுக் கொண்டு வெளியேறுகின்றது.
"நானுந்தான் இரண்டு மூன்று நாட் களாகப் பார்க்கிறன், எல்லோருக்கும் முகம் வாடிப்போய்க் கிடக்கிறது."
"ஒண்டுமில்லை” தயக்கம் அவளை விட்டு இன்னும் போனபாடாக இல்லை.
‘'நீ சும்மா வரமாட்டாய். சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு."
அவள் நேரடியாகச் சொல்வதற்குத் தயங்கி, "இந்தப் பிள்ளை எல்லாம் இருக் குதுகள்.” என புதிய சங்கதி ஒன்றை அவருக்குச் சொல்வது போலச் சுற்றி வளைத்துக் கொண்டு பேச்சை இழுக்க,
அவர் அவள் பேச்சுக்கிடையே குறுக்கிட்டு, சோற்றுக்கும் சேலைக்கும் குறையில்லைத் தானே” என்று உறுதியாகக் கூறுகின்றார்.
“பிள்ளையஞக்கென்ன.
“இப்ப கொஞ்சக் காலமாக இப் படித்தான் நீங்கள் எப்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறியள்! உங்களுக்கு எல் லாம் தெரியுந்தானே! நான் இதுக்கென்ன சொல்ல!"
அவள் சொல்கின்றவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு அவர் மெளனமாக அமர்ந்திருக்கின்றார். பிறகு அவள்

Page 30
தொடர்ந்து, 'இவள் பிரியா." எனச் சொன்னவள் மேற் கொண்டு தொடர்ந்து சொல்வதற்கு இயலாமல் தொண்டை கம்மி, கண்கள் நிறைந்துவர மீண்டும் பெருமூச் செறிகின்றாள்.
“பிரியாவோ, அவளுக்கென்ன. அவள் பட்டதாரி. நிச்சயமாக அவளுக்கு உத்தியோகம் கிடைக்கத்தான் போகிறது. பிறகென்ன. சோற்றுக்கும் சேலைக்கும் குறைவில்லை" என்கிறார் அவர்.
f O
இல்லை. அவள.
“என்ன அவள். அவள். என் கிறாய். சொல்லித் தொலையன்!”
“அவள் தன்னோடை படிக்கிற ஒரு பொடியனைக் கலியாணம் செய்யப் போகிறாளாம். நாளைக்கு றிஜிஸ்
ரேஸ்னாம்."
“என்ன!” அவர் குரல் அதிர்ந் ஒங்கி ஒலிக்கிறது.
அடுத்து என்ன நடக்கப்போகிறது! பிள்ளைகள் எல்லோரும் இதயம் பட படக்க அப்பா, அம்மா பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டு படுக்கை களில் கிடக்கின்றார்கள்.
பிரியா தனக்குள் மெல்ல நகைத்துக் கொள்ளுகின்றாள். அப்பா என்ன
(1pւգաn35l. அப்படி நடக்க நான் விடமாட்டேன்.
சொல்லப் போகின்றார்;
என்ரை மானத்தைக் காற்றிலே பறக்க வைக்கிறதுக்காகவா அவள் பிறந்திருக்
கின்றாள்! நான் வெளியிலே தலைகாட்ட முடியாது. அவமானம். எங்கே அவள்! கூப்பிடு இஞ்சை" என்று தான் துள்ளிக்
நான் இதற் கெல்லாம் மசிந்து குடுக்கப் போவ தில்லை. நான் எடுத்திருக்கிறது தான் முடிந்த முடிவு. இந்த அப்பாவை எதிர்த்து நான் நினைத்தது போலச் செய்வேன். என்னை யாரும் தடுக்
குதிக்கப் போகின்றார்.
கேலாது. என்ரை வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டியது நான்தான்’ என
நினைத்து உள்ளத்தை உறுதிப்
படுத்திக்கொண்டு எதற்கும் தயாரான
56.
நிலையில் படுக்கையில் கிடந்து புரளு கின்றாள்.
மனைவி சொன்ன எதிர்பாராத செய்தி கேட்டு அதிர்ந்துபோன அவர் தொடர்ந்து பேசுவதற்கு இயலாமல் வாய் அடைத்துப்போய் இருக்கின்றார்.
அவரது மெளனத்தால் அவள் மனதில் அச்சமும் ஆச்சரியமும் திடீ ரெனத் தோன்ற, “என்ன பேசாமல் இருக்கிறியள்! அவளை இப்பிடியே அவளின்ரை எண்ணத்துக்கு விட்டு விட்டால்." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,
அவர் பட்டென்று அவளை இடை மறித்து, “இல்லைக் கனகம். அவளைப் போகவிடு. அவள் எண்ணம் போல போகவிடு" எனச் சொல்லிச் சொல்லி தேம்பித் தேம்பி அழுகின்றார்.
அவரா அழுகின்றார்? அவன் குலம் கோத்திரம் சாதி சமயம் எதையும் கேட்ட றியாமல் அவரா இப்படி. அவர்கள் எல்லோரும் திகைத்துப் போகின்றார்கள். அவர்கள் கண்கள் நிறைந்து கண்ணிர் வடிந்துகொண்டிருக்கின்றது.
 

666):
பிரியா அதிர்ந்து போனாள். "ஒ. அப்பா! நீங்களா இப்படி! நீங்களா இப்படி! அந்த அப்பாவா இப்படி!" தனக்குள்ளே திரும்பத் திரும்ப அவள் கேட்டுக் கொள்ளுகின்றாள்.
அவள் இதயம் வீங்கி வெடித்து விடுவதுபோல வேதனை அழுந்திக் கனக்கிறது.
அவள் தனது படுக்கை மீது எழுந்த மர்ந்து நிதானமாகச் சிந்திக்கின்றாள்.
அவள் இதயத்தில் மீண்டும் மீண்டும் 'அந்த அப்பாவா இப்படி! அந்த அப்பாவா இப்படி!??" என்ற வினா தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றது. சில கணங்கள் அவள் தெளிவாகச் சிந்தித்து பின்னர் ஒரு முடிவுக்கு வரு
கின்றாள். கன்னங்களில் வழிந்தோடிக் கொண்டிருக்கும் கண்ணிரைத் துடைத்து விட்டுக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து அறைக்கு வெளியே வரு கின்றாள்.
இருளில் மென்முலாம் பூசும் அந்தச் சிறிது வெளிச்சத்தில் அப்பா, அம்மா இருவரும் கண்ணிர் வடித்துக் கொண்டி ருக்கின்றார்கள். அவர்கள் எதிரில் வந்து நின்று நிதானமாக நெஞ்சில் உறுதியோடு அவள் சொல்லுகின்றாள்.
"அப்பா, நான் ஒருபோதும் அப்படி இனிச் செய்யப் போவதில்லை. என் முடிவை நான் மாற்றிக் கொண்டு of 'GLair.'
பட்டுள்ளார்.
வாழ்த்தி மகிழ்கின்றது.
கலைப் பீடாதிபதி
இலக்கிய அபிமானியும், ஆழ்ந்த சிந்தனையாளரும், மல்லிகையின் நீண்ட கால அபிமானியுமான பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் திற்குக் கலைப் பீடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்
இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டு மல்லிகையும் தனது மனமார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்து
- ஆசிரியர்
57
/محصے

Page 31
“abaneAyó” ஆசிரியர் செல்வம் அவர்களுடனான
ஒரு சந்திப்பு
- கவிபாய்
நீண்ட இடைவெளிக்குப் பின் 10.09.2004 அன்று மாலை துரைவி" பணிமனையில் ஓர் இலக்கிய நிகழ்வு!
கனடாவிலிருந்து வெளிவரும் "காலம் செல்வம் அவர்களுடனான ஒர் சந்திப்புத்தான் அது.
தமிழகத்தைப் போன்றும், ஈழத்தைப் போன்றும் புலம் பெயர்ந்தவர்களிடையேயும பல சிறு சஞ்சிகைகள் வெளிவருவதும், நின்றுபோவதுமாக இருக்கின்றது.
ஆனால், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து போன செல்வம் அவர்களின் அயராத முயற்சியினால் காலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சஞ்சிகையாகும். கனடாவிலிருந்து வெளிவருவதனால் அங்கு புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளின் படைப்புக்களைக் கொண்ட சிறு சஞ்சிகையாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமல், தமிழ் இலக்கிய உலகம் முழுவதுற்குமான ஒரு சிறு சஞ்சிகையாக காலம் தனது ஆரம்ப காலத் தொடக்கம் தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளதை தமிழ்ச் சிறு சஞ்சிகை வாசகர்கள் நன்கு அறிவார்கள்.
அத்தகைய ஒரு சஞ்சிகையின் ஆசிரியரான செல்வம் அவர்களுடனான சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாகவும், காத்திரமாகவும் அமைந்தது.
துரைவி ராஜ் பிரசாத் அவர்களின் அனுசரணையுடன், மேமன்கவியின் தலைமையில், தெளிவத்தை ஜோசப் அவர்களின் 'காலம் செல்வம்" அவர்களைப் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பமான இச்சந்திப்பில்,மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஞானம் ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேகரன், மூன்றாம் மனிதன் ஆசிரியர் எம்.பெளஸர், தினகரன் ஆசிரிய பீடத்தைச் சார்ந்த ஏ.கே.பிள்ளை, தினக்குரல் கார்ட்டுன் ஒவியர் மூர்த்தி, பத்திரிகை நிருபர் புஸ்பராஜன், கவிஞர் சக்தி பாலையா ஆகியோருடன் பல இலக்கிய அன்பர்கள் அச்சந்திப்பில் பங்கேற்றுச் செல்வம் அவர்களுடன் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இச்சந்திப்பின் உரையாடலின் பொழுது, மூன்று முக்கிய விடயங்கள்
பேசப்பட்டன.
58

ge:Geo;
1. இன்றைய நிலையில் புலம்பெயர்ந் தோர் சிறு சஞ்சிகை நடத்துவதில் உள்ள இடர்பாடுகளும், பிரச்சினைகளும்.
2. கலை இலக்கியப் பங்களிப்பும், தமிழ் இலக்கியத் தளத்தில் அதற்கான இடமும்.
3. பெறும் போராட்டக் களத்திலிருந்து எழுதப்படும் எழுத்துக்களை தமிழ் இலக்கியத் தளத்தில் இணைத்துக் கொள்ளும் விதம் போன்ற அம்சங்களின்
புலம்பெயர்ந்தோரின் இன்றைய
ன்றைய லில் கிடைக்கப் இன்றைய சூழ
அடிப்படையிலேயே செல்வம் அவர் களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, கனடாவிலிருந்து, தமிழ் இலக்கியத்திற்கு வாழ்நாள் பணி செய்த வர்களுக்கு வழங்கப்படும் இயல் விருதைப் பற்றியும் அக்கலந்துரை யாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
சம்பிரதாயமாக கூட்டங்களிடையே பிரதான பேச்சாளருக்கும், பங்கேற்பாளர் களுக்கும் இடையே நிலவும் நெருக்க மின்மையையும் கடந்து, ஒரு சிநேகயூர்வ மான நெருக்கம் நிலவியது. அதன் காரணமாக என்னவோ இது காலமும் எந்தவொரு இலக்கியக் கூட்டத்திலும் நாம் கண்டிராத செல்வம் அவர்கள் மீது அபிமானம் கொண்ட நித்தியானந்தன் எனும் பெயர் கொண்ட இளைஞர் ஒருவர் பத்திரிகை செய்தி வாயிலாக அறிந்திருந்து வந்தவர், அச்சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருந்த அந்த அறையில் இருந்தவர்களிடையே வெளிப்பட்ட நெருக்கத்தை உணர்ந்தாரோ என்னவோ, அந்தரங்கமாக நடக்கின்ற ஏதோ ஒரு கூட்டத்திற்கு வந்துவிட்டோமோ என்ற சங்கோஜ உணர்வுடன் வந்து அமர்ந்த
59
ஐந்து நிமிடத்திற்குள் எழுந்துபோய் விட்டார்.
இன்று புலம்பெயர்ந்து வாழ்வோரின் முயற்சியினால் வெளிப்படும் சிறுசஞ் சிகைகளும், அங்கு தமிழகத்திலிருந்து வரும் வியாபாரச் சஞ்சிகைகளின் ஆதிக் கத்தால் பாதிக்கப்படுகின்றன என்ற செய்தியினையும் செல்வம் அவர்களுட னான உரையாடலின் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. ஷோபா சக்தியின் கொரில்லா என்ற நாவலின் உள்ளடக் கத்தின் கருத்தியல் பற்றிய சர்ச்சைக்கு அப்பால் அந்த நாவல், தமிழ் நாவல் இலக்கியப் போக்கில் ஒரு புதிய பரி மாணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் என்றதோடு, அத்தகைய பரிமாணங்களை நாம் தொடும் பொழுது தான் உலகத் தமிழ் இலக்கியம் என்ற ஒரு தளத்தை நாம் அடையக்கூடியதாக இருக்கும் என்றார் செல்வம்.
இன்று புலம்பெயர்ந்தவர்களால் வளர்த்தெடுக்கப்படும் தமிழ் இலக்கி யத்தை அவர்கள் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளுக்கான தமிழ் இலக்கியம் என்று அடையாளப்படுத்த வேண்டும் என குறிப் பிட்ட செல்வம், அந்த வகையில் படைக் கப்படும் தமிழ் இலக்கியம் கனடா தமிழ் இலக்கியம் என அடையாளப்படுத்தும் நிலை இருக்கிறது என்பதோடு, அவ்வா றாகத் தமிழ் வாழும் நாடுகளில் படைக்கப்படும் தமிழ் இலக்கியத்தின் அடைவு மூலமே உலகத் தமிழ் இலக்கி யத்தை நாம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந் தோர்களால் படைக்கப்படும் இலக்கி யத்தை ஈழத்து இலக்கியம் எனக் கூறலாமா? என சமீப காலமாக ஈழத்து

Page 32
எழுத்தாளர்களிடையே எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்வி ஒன்றுக்கு செல்வம் கூறிய மேற் குறித்த கருத்துக் களால் பதில் ஒன்று கிடைத்தது போல் இருந்தது எனக்கு.
இன்று நமக்குக் கிடைக்கப்பெறும் போராட்ட களத்திலிருந்து படைக்கப் படும் இலக்கியப் படைப்புகளில் காணப் படும் பிரசாரத் தன்மை பற்றியும், அவைக் குத் தேவைப்படும் கலையம்சத்தைப் பற்றிய ஒரு தெளிவு நமக்குத் தேவை என்பதோடு, தமிழ்க் கலை இலக்கிய வளர்ச்சியில் போர்க்கள இலக்கியத்தைப் பற்றிய பங்கைப் பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது என்றார். கனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருதைப் பற்றிய பிரஸ்தாபத்தின் பொழுது செல்வம் தான் விருது வழங்கும் குழுவின் அங்கத்தவன் என்ற வகையில் அவ்விருதுக்கான குழுவின் தீர் மானங்கள் பற்றி கருத்து கூறமுடியாது எனக் கூறிய செல்வம் அவர்கள் இயல் விருதுக்கான தேர்வும் சரி, காலம்
岛 665); অs
சஞ்சிகையின் உள்ளடக்கத் தேர்வும் சரி உலகத் தமிழ் இலக்கியத்தை நல்கியதாக இருக்கிறது என்றார்.
ஆனால் அச்சந்திப்புக்கு வருகை தந்திருந்த சில எழுத்தாள நண்பர்களி டையே இயல் விருதுக்கான தேர்விலும் சரி, காலம் சஞ்சிகைக்கான உள்ளடக்கத் தெரிவும் சரி, ஈழத்துப் படைப்பாளி களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் அழுத்தமாக இருந்தது. அத்தோடு புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களுக்கும், இங்கு வாழும் ஒரு நெருக்கம் உருவாக்கம் பெறும் வகையில் செல்வம் போன்றோர் தங்கள் வழி முறைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்ற வேண்டு கோள் செல்வம் அவர்களை நோக்கி முன்வைக்கப்பட்டது. இவ்வாறாக துரைவி பணிமனையில் நடந்த காலம் ஆசிரியர் செல்வம் அவர் களுடனான சந்திப்புப் பல காத்திரமான விவாதங் களையும், சிந்தனைகளையும் கிளறிடும் வண்ணம் அமைந்தது எனலாம்.
N r- வருந்துகின்றோம்.
இலக்கிய உலகில் பிரபலம் வாய்ந்தவரும் ஞானம்' சஞ்சிகையின் முக்கிய பொறுப்பு வகித்தவருமான புலோலியூர் சதாசிவம் திடீரென நம்மைத் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார்.
இவரது உருவப் படம் சில ஆண்டுகளுக்கு முன் மல்லிகையில் அட்டைப் படத்தில் பிரசுரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது திடீர் இழப்பால் சோகமுற்றுத் துயருறும் குடும்பத்தினருக்கும் இலக்கிய உலகத்திற்கும் எமது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
- ஆசிரியர் لم ܢܠ
60

- ශඋ(rඟිණී හීණq
• சில எழுத்தாளர்களை அணுகிப் பேசலாம் என நினைத்தால், அவர்கள் 'பந்தா' காட்டுகிறார்களே, இதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? வத்தளை எம். சரவணன்
முதலில் நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். இப்படியானவர்களை நெருங்கி உரையாடுவதைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். இந்தப் பந்தாவெல்லாம் கனகாலத்திற்குச் செல்லுபடியாகாது. நிச்சயம் அவர்கள் தனிமைப்பட்டு விடுவார்கள். என் அநுபவத்தைக் கேளுங்கள். மல்லிகை ஆசிரியர் என்ற முறையில் சந்திக்கும் சகோதர எழுத்தாளர்களிடம் "மல்லிகைக்கு எழுதுங்களேன்! எனக் கேட்டு வைப்பேன். அவர்கள் காட்டும் பந்தாக்களைப் பார்த்துவிட்டு மனசுக்குள் நான் சிரித்துக் கொள்வதுமுண்டு. நான் பார்க்காத எழுத்தாளர்களா? ஆனால் இப்படிப் பந்தாக் காட்டுபவர்களிடம் நான் அடுத்த தடவை சந்திக்கும் போது பேசுவதை மட்டுப்படுத்திக் கொள்வேன். அத அவர்களுக்கும் விளங்கும்.
羲 羲 毅
9 தூண்டில் பகுதியை நான் ஒழுங்காகப் படித்து வருபவன். சமீப காலமாக நீங்கள் ஒரு சிலரைச் சாடி எழுதுவதாகத் தெரிகிறதே, என்ன கோபம் அது? நீர்கொழும்பு எஸ். நாகராஜன்
தார்மீகக் கோபமது. பூனை குட்டியையும் கெளவுகிறது. தனக்கு இரையாக எலியையும் கெளவிப் பிடிக்கிறது. ஒன்று பாசத்தினால், மற்றது வயிற்றுக்காக. நான் தோழமையானவர்களைச் சாடும்போது பூனை குட்டியைக் கெளவுவது போலத்தான் கருத்துச் சொல்லுகின்றேன்.
61

Page 33
மல்லிகை என்றொரு தளம் எனக்கு இருப்பது போல, நான் கருத்தால் தாக்குபவர்களுக்குச் சொந்தமான தளம் இல்லை என்பது எனக்குத் தெரியும். நான் பொறுமையாக இருந்து பல நாட்கள் சிந்தித்தவற்றையே எழுத்தில் வடிக்கிறேன். பதில் சொல்ல விரும்பு வர்கள் மல்லிகையின் தளத்தைப் பாவிக்கலாம். நான் அதில் தலையிட மாட்டேன். அதேசமயம் இரத்தமும் இருந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் வளர்த்தெடுத்த நமது இயக்கத்தை எந்தக் கொச்சைப் படுத்தினாலும் நான் கருத்துச் சொல்வதில் பின்நிற்க மாட்டேன்.
&60) g5u4upmes
கொம்பன்
羲 羲 毅 இதுவரை மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் எத்தனை வெளி வந்துள்ளன?
கேகாலை. க.நமசிவாயம்
இதுவரையும் அறுபது நூல்கள் வெளிவந்துள்ளன.
M *A
羲
பல தகைமை வாய்ந்தவர்களின்
O உருவங்கள் இன்னமும் மல்லிகை அட்டையை அலங்கரிக்கவில்லையே,
காரணம் என்ன? கருத்து (pJ 6oöTusTL/T?
வவுனியா. எம்.ஆர்.ராஜன்
இந்தக் கேள்வியை நான் எதிர் பார்த்துக் காத்திருந்தேன். பலரிடம், இந்த மண்ணில் மதிக்கப்படத்தக்க அநேக ரிடம் நேரிலும் கடித மூலமும் அவர்களது
62
6696DE
கேட்டுக் கடந்த காலத்தில் நேரிடையாகத் தொடர்பு
புகைப்படத்தைக்
கொண்டேன். அவர்களது . ஒப்புதல் இல்லாமல் அட்டையில் அவர்களது உருவத்தைப் பதிப்பித்து வெளியிடுவது நாகரிகமல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் காட்டிய அலட்சியமும் ஒருவகைப் பந்தாவும் தொடர்ந்தும் அவர்களுடன் தொடர்பு வைக்க என்னைத் தடுத்து விட்டது. சிறிதோ பெரிதோ ஆசிரியர் நான். சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் ஒரு மதிப்பார்ந்த ஸ்தா பனத்தை இன்று பெற்றுத் திகழ்கின்ற தொடர் வரவுச் சஞ்சிகை மல்லிகை.
Lo 6o 666oo asul 6öT
நாளைய வரலாற்றுக்குப் பதில் சொல்ல வேண்டியவன், நான். இன்று மல்லிகை யின் அட்டைப்பட ஒத்துழைப்பு இவர் களுக்குச் சிறு சம்பவமாக இருக்கலாம். அதனால் அலட்சியம் செய்யலாம். நாளை நான் மறைந்து விடலாம். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்வரக் கூடிய இவர்களது சந்ததியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஆய்வுக்காக நூலகத்தைக் குடையும் பொழுது தனது கொள்ளுத் தாத்தாவின்
அட்டைப் படத் தகவல்களைக் கண்டு
பூரித்துப்போய் ஒருகணம் மெய்ம்மறந்து நிற்பான். அந்தப் பூட்டனை மனசில் வைத்துக்கொண்டுதான் நான் அட்டைப் பட ஆவணங்களை இன்று தயாரிக்க முனைந்து செயல்படுகிறேன்.
உண்மையைச் சொல்லப் போனால் மல்லிகை அட்டைப்பட நூல்களைக்
கேட்டு கனடா, அவுஸ்திரேலியா,

gigg);
நோர்வே, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து அவர்களது இன சனத்தவர் கடிதம் எழுதுகின்றனர்.
இதைப் புரிந்து கொள்வோர் தெரிந்து கொண்டால் போதும்
羲 羲 毅
மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலரைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். எப்படிப் பெறலாம்?
கேகாழைல. எம்.பி.முகம்மது
இந்த இதழின் முகப்புப் பகுதியில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. படித்துப் பார்த்து, ஆவன செய்யுங்கள்.
拳,羲 毅
9 நமது பிரதேச கல்லூரி நூலகங் களில் மல்லிகையோ, மல்லிகைப் பந்தல் வெளியீடுகளோ இதுவரை காணப்படவில்லையே, இதற்கு என்ன Garului shortlib?
மாத்தளை. எஸ்.சாகுல்ஹமீது
உங்களது கல்லூரி அதிபரிடம் இது பற்றி முறையிடுங்கள். நூலகரை அணுகி மல்லிகையின் முகவரியை நேரில் கொடுங்கள். இலக்கிய ஆர்வமுள்ள உங் களைப் போன்ற மாணவ மாணவியர் ஒன்று சேர்ந்து சொற்ப சொற்ப பணம் போட்டு மல்லிகையுடன் தொடர்பு கொள் ளுங்கள். இங்கிருந்து நானென்ன உங் களுக்குச் சொல்லித் தருவது? உசிதம் போலச் செய்யுங்கள்.
羲 羲 毅
9 தமிழ் நாட்டு எழுத்தாளர்களுடன் இருக்கும் உங்களது நட்புத் தொடர்பு இப்பொழுது எப்படி இருக்கிறது?
கிளிநொச்சி. எஸ்.பாலசுந்தரம்
அடிக்கடி தமிழகம் போய் வருவ தால் அவர்களை நேரடியாகச் சந்தித்துக் கதைப்பதன் மூலம் உறவையும் நட்பை யும் புதுப்பித்துக் கொள்ள்க் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
拳,娄 毅 0 மல்லிகையை ஆரம்பித்த காலங் களில் இருந்த இன்றைய மனநிலைக்கும் uuT&Fub 9-6oor LT?
மனநிலைக்கும் வித்தி
LusijGod Girl. எம்.சுகுராமன்
நிறைய நிறைய வித்தியாசங்கள் 2-60йл (6. அன்று ஆரம்பித்த ஆண்டுகளில் வெளியே சொல்ல முடியாத மனப் பயம் அடி நெஞ்சில் நிழலாடிய வண்ணம் இருந்தது. இன்றோ மல்லிகையை இன்னும் இன்னும் சிறப்பாக வெளிக் கொணர
மல்லிகையை
லாமே என்ற மன அங்கலாய்ப்பு என் நெஞ்சு நிறைய படிந்திருக்கிறது.
粪 粪 毅
0 கொழும்பில் நட்ைபெறும் பெரும் பாலான இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளிர்கள். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சில இலக்கிய கூட்டங்களில் உங்களது முகத்தை காணவில்லையே. என்ன காரணம்?
3f76TGu. எம்.தேசநேசன்

Page 34
முன்னரெல்லாம் குறிப்பிட்ட நாட் களில் இரண்டொரு இலக்கியக் கூட்டங் கள்தான் இடம்பெற்று வந்துள்ளன. ஆனால், இப்பொழுதோ வாரத்திற்கு மூன்று கூட்டங்கள் நடைபெறுகின்றன. எதற்குப் போவது? எதை விட்டு விடுவது? அத்துடன் எம்மைப் போன்றவர்களுடன் கலந்து பேசாமலேயே விளம்பரத்தில் பெயர் பதித்து விடுகின்றனர். இதைத் தொடர்ந்து அனுமதிக்க இயலாது. ஆர்வம் நல்லதுதான். ஆனால், அதீத ஆர்வம் உறவுகளைத்தான்
பாதிக்கும்.
羲 羲
மலையகத்தில்
6TibLDT 65)
辛狱
O எழுத்தாளர்கள் பின்னடைந்துள்ளதற்கு d606).35 அரசியலும் ஒரு காரணமாக இருக்க லாமல்லவா?
ஹட்டன். பாலா.சங்குப்பிள்ளை
இலங்கையில் பல்வேறு பிரதேசங் களில் வாழும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து மாறுபட்டது, மலையக மக்களின் அரசியல், இலக் கியப் பிரச்சினைகள். அவர்கள் முதலில் இந்த மண்ணின் மைந்தர்கள் எனப் போராடி வெற்றி பெற வேண்டியிருந்தது. அடுத்தது வாக்குரிமைப் போராட்டம். இந்தப் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது மலையக எழுத்தாளர்கள் ஏனைய பிரதேச எழுத்தாளர்களுக்குத் தக்க வகை யில் இந்த நாட்டில் அங்கீகாரம் பெற்றுத்
i ヴ gigs):
திகழ்ந்து வருகிறார்கள் என என்னால் உறுதிபடக் கூற முடியும்.
aMa
粪 毅
புலம்பெயர்ந்து இன்று மேலை நாடுகளில் வாழும் நமது நாட்டு இலக் கியச் சுவைஞர்கள் மல்லிகைப் பந்தல்
羲
O
வெளியீடுகளை வாங்குகிறார்களா? சுன்னாகம். எம்.பார்த்திபன்
பெரும்பாலானவர்கள் தொடர்ந்து ஈழத்து நூல்களைப் படித்து வரு கின்றனர். வந்துபோகும் சமயங்களில் பலர் மல்லிகைக்கு நேரில் வரத் தவறுவ தில்லை. மேலும் பலர் இங்கு வந்து போகும் நண்பர்கள் மூலமும், இன்னும் பலர் இங்குள்ள அவர்களது இன சனத்தினர் மூலமும் நமது வெளியீடு களைப் பெற்று வருகின்றனர். எனது நோக்கம் வெறும் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைச் சந்தைப்படுத்துவது மாத்திரமல்ல. ஈழத்தில் வெளிவரும் புத்த கங்களை இவர்கள் கொள்முதல் செய்து தமது இளைய பரம்பரைக்கு அறிமுகப் படுத்த வேண்டுமென்பதே.
羲 羲 毅 இலக்கியம் உங்களுக்குச் சோறு போடுகிறதா?
o
புத்தளம். ம.ரவீந்திரன்
கிட்டத்தட்ட இந்த நாற்பது ஆண்டு களாக நான் இந்த மண்ணில் எப்படிச் சீவியம் ஒட்டி வந்திருப்பேன். இதைப் பற்றி நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?
201 - 1/1, யூரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U.K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
64

۔۔۔۔۔۔
TNUla புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் 垒 சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல. 4, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்) புததளம. தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும்,
பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 35
ܘ ܥ ܘ ܒ t 毯
|-
. . . . . . .1
s
Malikai
EXPO PRODU.
Expor
Non Trá
| Sri Lanki
30, SeCl
CO|Onn
Te: 25
 

October 2004
CTS (PVT) LTD.
ters of aditional an Foods
Avenue, OO – O3, 737 7