கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.11

Page 1
『TT----- |-| |
)|||| 参见 |// 毫赛|| }|赛*『 『T, 「 「|| ,|-
 
 
 
 
 


Page 2
c. ': c .'-x ༣ } s
uè .ہے کہ سسٹڑالا کے ر
THE DIGITAL SERVICES WE PROVIDE O 。ーノ - Digital Print I2"X18" Maximum size in IO Min. . . . . . Automatic dist and scratch correction. -- Verv Print to Print services. イ。 م ."; ( ノ *ヘ Contact Cards and Index prints. ༦ s ܐܲܝ () o Greting Prints/Calender Prints/Album Prints. o : Compatible Input/& Output Media ( ) ༦་ (Floppy Disk, CD-Rom, CD-R,/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, Compact Flash, SmartMedia) Digital Camera Card Printing. ^ ് - - - - - Colour Negative, Positive, B/W and Sepiá Negative Printing " الرسمي
OTHER SERVICES B is . . Develo : Printing of films in 20 Min
Printing of Enlargements (5"2X7" to I2"XI8") . . . " .أنسجة Passport/Visa photos/B/W photos in IO Min. O; C.
Film Rolls/Cameras / Batteries/CD / Floppy / Album Sales. , so
F f Pi I d 。 * *、ぶ (... Q- -- . :
raming of Pictures (Imported) •
Laminating Services. . . . . . . ぷ ". بر Wedding Album Binding. . . . . و لاكتمعت ع م ... ( .
-M./ యా జ్వలో Al /ޞ" ,༠ g --- N : عہ FOR ALLYOUR REQUIREMENTS IN ( co ܘܢO Out Door Photography & Videography b \S N lxᏑ
$2 o CO ܬܼܢ
Weddings. - Birthday Parties /Puberty Ceremonies . . . .- Seminars/Any Other Special Functions & Occasions. . " 6<3 > ;4/>-ب
 
 
 
 
 
 

தேடல் முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!
நவம்பர் 2004 இதழ் உங்கள் கைவசம் கிடைக்கச் செய்துள்ளோம். படித்துப் பாருங்கள். உங்கள் அப்பிராயங்களை, ஆலோசனைகளைப் பதிவு செய்யுங்கள். அது மல்லிகையின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
அடுத்து 2005 ஆம் ஆண்டு ஆரம்பமா கின்றது.அதன் இலக்கிய வெளிப்பாடாக 40வது ஆண்டு மலரை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்க ஆவன செய்துள்ளோம்.
தொடர்ந்து பிறக்கப் போகும் புதிய ஆண்டில் மல்லிகையில் என்ன என்ன புதுமைகளைப் புகுத்தலாம், என்ன வகை களைச் சேர்க்கலாம் என உங்களது மேலான ஆலோசனைகளை எங்களுக்கு எழுத்தில் தாருங்கள். “தொடர்ந்தும் ஒரே பழைய முகங்களே மல்லிகையில் எழுதி வரு கின்றனர் என்றொரு குற்றச்சாட்டு எமக்குத் தெரியாததல்ல. இதை மாற்றக் கூடியவர் களும் நீங்களே!
இதை மாற்றியமைக்க, இளம் தலை முறையினர் துடிப்புடன் இலக்கியக் களத் திற்கு வந்தாக வேண்டிய கட்டாயத் தேவை இன்று நம்முன்னுள்ளது.
வளரும் இலக்கியம் குளமாக இருகக் கூடாது. அது நதியாக இயங்கிக் கொண்டே யிருக்க வேண்டும். இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள காரணத்தால்தான், புதிய புதிய ஆற்றல் மிக்கவர்களைக் கண்டறிய விரும்புகின்றோம்! அடுத்த ஆண்டு இந்தத் தேடல் முயற்சி தொடரவே செய்யும்.
- ஆசிரியர்
யாதியினைய கலைகளில் உள்ளம்
2 மல்லிகை
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவர்'
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
01-1/4, SRI KATHIIRESAN
STREET, R
COLOMBO - 13. TEL: 232O721

Page 3
  

Page 4
Tழத்து இலக்கியம் பற்றி தமிழ்
நாட்டில் கேட்டால், சாதாரண மனிதர் களுக்கு அனேகமாக எதுவும் தெரியாது.
இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட
உருவரG2//D வர்களுக்குத் தமிழியல் என்றவுடன் பேரா சிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகி
P யோரின் பெயர்களை உடனே சொல்லிக் AD60/05/IG2/5 கொள்வர். படைப்பிலக்கியம் என்றால் மஹாகவி, கே. டானியல், எஸ்.பொ. ஆகிய பெயர்கள் ஞாபகம் வரும். இதழி
உயர்ந்த ஒருவர் అత என்றால் டொமினிக் ஜீவாவைக்
குறித்துக் கொள்வர்.
ஆர். பத்மநாU 8U币 ஆனால், தமிழியலாளராகவோ,
படைப்பிலக்கியவாதியாகவோ, இதழிய லாளராகவோ இல்லாமல் உள்ள ஒரு 9. இரவி வரைத் தமிழ்நாட்டில் இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டோர் அறிந்து வைத் திருக்கிறார்களென்றால் அந்த ஒருவர் பத்மநாப ஐயர் அல்லாது வேறு யார்?
நெடிதுயர்ந்த தோற்றம், மழுங்கச் சவரம் செய்யப்பட்ட முகம், புன்னகை சிந்தும் கண், யாரும் எது கேட்டாலும் 'இல்லை" என்று சொல்லாத வார்த்தை. ‘இயலும்" என்று சொல்லாவிட்டாலும் "பாப்பம்" என்று சொல்லிச் செய்யும் செயல். சொல்லில் நம்பிக்கை அற்றுச் செயலில் நம்பிக்கை கொண்ட ஒருவர். இவ்வளவும் அல்ல, பத்மநாப ஐயர் பற்றி நான் வேறும் சொல்ல உண்டு.
1980ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் நல்லூரில் நெய்வாசம் விசி வர அய்யரது வீட்டில் நான் அய்யரை முதன் முதல் காண்கின்றேன். அப்போது நாங்கள் "புதுசு? நடத்திக் கொண்டிருக்கின்ற கால்ம். சைக்கிளும் வியர்வையுமாக ஒடித்திரிகின்ற காலம். அப்போது அய்யரைச் சந்திப்பதென்பது எங்களுக்கு மன ஆனந்தம் தருகின்ற ஒன்று. ‘புதுசு'வில் ஆகக் குறைந்தது இருபத்தைந்து பிரதிகளாவது வாங்குவார். அந்தப் பணம் அப்பொழுது எங்களுக்குப் பெரும் பொக்கிசம். புதுசுவிற்கு விளம்பரம் ஒன் றாவது தந்து விடுவார். அது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மற்றும் 'புதுசுவிற்கான படைப்புக்கள் சிலவும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்வோம். 'புதுசு மேலும் வளம்பெற அவை மிக உதவின. தமிழ்நாட்டிலிருந்து வெளிவருகின்ற சிற்றிதழ்கள்

5
பலவும், தொகுப்பாகச் சிலவும், அய்யரிடம் போகின்ற போது எங்களுக்குக் கிடைத்தன. அத்தனை
யையும் பெற்று, ஆனந்தம் மிக்கு அளவெட்டிக்குக் கொண்டு வருவோம். சோளகம் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தது. களைப்பு இல்லை. என்றாலும் இடையில் களைப்பு என்று சும்மா சொல்லி, சுன்னாகத்தில் ஒரு தேநீர்க் கடையில் போண்டாவும் சாப்பிட்டுத் தேநீரும் குடிக்கின்ற போது, அய்யரிடம் வாங்கிய அத்தனையையும் புரட்டிப் பார்த்து விடுவோம். கடுங்கோடைக்கு சோளகம் தருகிற மகிழ்ச்சியிலும் பார்க்க
இது மிக்க மகிழ்ச்சியானது.
ஈழத்து இலக்கியம் என்று சொல்லப் படுகின்ற யாவற்றுக்கும், பத்மநாப ஐயர் ஏதோ ஒருவிதத்தில் உதவி புரிந்தார். ஒரு சஞ்சிகை வெளிவருவதற்கு முதலாவதும் முக்கியமானதும் பொருளாதாரம், இரண் டாவதும் இறுதியானதும் படைப்பு. இயலுமானளவு இரண்டினையும் நிறைவு செய்தவர் பத்மநாப ஐயர். புதுசு என்று மாத்திரம் சொன்னோமல்லோம். அலை" வெளிவருவதற்கும் அய்யர் நிரம்ப உதவினார். மேலும் வேறு சஞ்சிகைகள் வெளிவருவதற்கு உதவிகள் பற்றி நான் அறிந்திலேன்.
அய்யர் செய்த
வெளியீட்டுத் துறையில் eյաամ வெளியிட்ட அல்லது வெளியிடுவதில்
அய்யர் உதவி புரிந்த மூன்று முக்கிய நூல்கள் பற்றி நான் இங்கு குறித்தல் சாலும்.
ஒன்று, பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்னும் கவிதைத் தொகுப்பு.
இதனை 1982 இல் எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா ஆகியோர் தொகுத்திருந் தனர். 1984இல் சென்னை க்ரியா அதனை வெளியிட்டிருந்தது. "மஹாகவி' யிலிருந்து சேரன் வரை ஈழத்தின் மிக முக்கிய பதினொரு கவிஞர்களின் கவிதைகள் அதில் தொகுக் கப் பட்டிருந்தன. ஈழத்தின் கவிதை வளம் இத்தொகுப்பு நூலினூடாகத் தமிழ் உலகிற்குத் தெரிய வந்தது. இத்தொகுப்பு வெளிவருவதற்கு முக்கிய முழு முதற் காரணியாக இருந்தவர் பத்மநாப ஐயர்.
இரண்டு, மரணத்துள் வாழ்வோம் என்னும் கவிதைத் தொகுப்பு. இதனை உ.சேரன், அ. யேசுராசா, இ.பத்பநாம ஐயர், மயிலங் கூடலூர் பி.நடராசன் தொகுத்திருக்க, 1985 இல் தமிழியில் அதனை வெளியிட்டிருந்தது. ஈழத்துத் தமிழ்த் தேசியத்தின் இன்னல்களை முதன் முதலில் உலகு அறியச் செய்த கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது. பத்மநாப ஐயர் இல்லையேல் இத் தொகுப்பு வெளிவந்திருக்க முடியாது என்பது, இத்தொகுப்பின் பின்னணியில் நின்று உழைத்தோர் அறிந்த உண்மை.
மூன்று, தேடலும் படைப்புலகமும்
என்னும் ஒவியர் மாற்கு அவர்களின் ஒவியங்களும், ஒவியம் பற்றிய ஆய்வுக்
கட்டுரைகளும் கொண்ட தொகுப்பு நூல். அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், கனக. ககுமார் ஆகியோர் தொகுத்த இந்த நூல் 1987இல் தமிழியில் வெளியீடாக வந்தது. நான் அறிந்தவரையில் ஒவியம் பற்றித் தமிழில் வெளியான முதலாவது நூலாக இது அமையும். மேலும் இதுபற்றி நான்

Page 5
ஒன்றும் கூறவில்லை. ஆனால் ஒரே யொரு வசனம், பத்மநாப ஐயரின் முயற்சி இல்லாது விட்டால் தமிழில் ஒவியம் பற்றிய இந்த முதனுலும் சாத்தி nnல்ல. யாவற்றுக்கும் மேலாக, இந்த நூல்களைப் பார்த்தீர்களானால், இரண்டினை உணர்ந்திருப்பீர்கள். ஒரு பதிப்பில் கொள்ளக் கூடிய அக்கறை,
மற்றது அதன் அழகியல். இவற்றுக்கும்
பத்மநாப ஐயர்தான் மிக முக்கிய காரண கர்த்தா என்பதனை நான் மேலும் கூறுதல்
அழகா?
மேலும் எந்த ஒரு குழுவாத முமின்றி, எந்த ஒரு பக்கச் சார்புமின்றிப் பல படைப்பாளர்களை, பல படைப்புக் களை பத்மநாப ஐயர் வெளிக் கொணர்ந்தார் என்கின்ற ஒரு வசனத் துடன் நான் இந்த ஒரு பந்தியை நிறைவு செய்கின்றேன்.
அய்யர் அவர்கள் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்தார். பெய்ர்ந்தவர் தன் பாடு பார்த்ததில்லை. தன் சோலிகளைச் செய்த தில்லை. மீண்டும் தன் இலக்கிய நாட் டத்தில் ஐக்கியமானார். இம்முறை அவர் செய்தது மிகப் பெரிய வேலை, வருடத் திற்கு ஒன்று என்று தொகுப்பு நூல் வெளியிட்டார். தான் பணி புரிந்த தமிழர் நலன்புரிச் சங்கம் நியூனம் சார்பாக இத்தொகுப்பு நூல்கள் வெளிவந்தன. எனது ஞாபகம் பிசகியிருக்காவிட்டால், நான் நம்புகின்றேன் 1996ஆம் ஆண்டு பெயரிடப்படாத ஒரு தொகுப்பு நூலைப் பத்மநாப ஐயர் வெளியிட்டிருந்தார். அதன் பிறகு 1997இல் கிழக்கும் மேற்கும் என்னும் தொகுப்பு நூலையும், 1998 இல்
யுகம் மாறும் என்னும் தொகுப்பு நூலையும், 2001இல் கண்ணில் தெரியுது
வானம் என்னும் தொகுப்பு நூலையும் உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் அய்யர் முன் வைத்தார். உலகத் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளைத் தாங்கியவையே இத்தொகுப்பு நூல்கள்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு இவர் வித்திட்டவை பற்றிய விபரங்களை இன்னும் பல பக்கங்களில் நான் விரித் துக் கொண்டு போகத்தான் வேண்டுமா? வேண்டாம். நான் வேறொன்றைச் சொல் கின்றேன். ‘எழுத்து' நடத்தியதனால் ஏற்பட்ட கடனை அடைக்க சி.சு.செல்லப்பா அவர்கள் தனது வீட்டை விற்றார் என்றொரு கதை நான் கேள்விப் பட்டதுண்டு. எழுத்து என்கின்ற பெயர் சி.சு.செல்லப்பாவுடன் ஒட்டிக் கொண்ட தற்கு ஒரு வீடு என்ன இன்று பத்து வீடுகளையும் விற்றிருக்கலாம். ஆனால் பத்மநாப ஐயருடன் எந்த ஒரு பெயரும் ஒட்டிக் கொண்டதில்லை. தான் காசு செலவழித்து, தான் புத்தகங்களைக் காவி, சென்னையில் ஈழத்துப் புத்தகங் களின் கண்காட்சி ஒன்றினை நடாத்து கின்றார். அக்கண்காட்சியில் அவரது புத்தகம் ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர் எழுதுவதேயில்லை.
அய்யரின் தாய் இப்போது இலங்கையில் இருக்கின்றார். “ஒருமுறை போய்ப் பார்த்து விட்டு வாருங்களேன்" என்றேன். நான் மாத்திரமல்ல, பல நண்பர்கள் அவருக்கு அதனைச் சொல்லி யிருப்பார்கள். “போனால் அம்மாவுக்கு கையிலை கொஞ்சக் காசாவது குடுக்க
 

7
வேணும். சொந்தக்காரரும் வருவினம். அவையஞக்கும் குடுக்க வேணும்." என்று கைத்துப் போன குரலில், ஆனால் சிரித்துத் தான் சொன்னார்.
வெள்ளையாகப் பகல் வெளிச்சம் விசிய ஒரு நேரத்தில் நான் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் அய்யரின் குரல். ஏதோ வெல்லாம் சொல் கிறார். அவற்றை விடுகின்றேன். "இங்கை இலண்டனிலை எங்கன்ரை தமிழ்ப் பிள்ளைகள் புத்தகம் வாசிக்கினம்தான். அவர்கள் அதை ஒழுங்கு முறையில் கற்க வேண்டும். இலங்கையர் கோனின் சிறுகதையைப் படிப்பினம். ஆனால் ஈழத்துச் சிறுகதை வரலாறு தெரியாமல் இருக்கும். அவையஞக்கு நீங்கள் தொடர்ந்து வகுப்பு எடுக்க வேணும். ஒரு நிறுவனத்தோடை கதைச் சனான். எல்லாம் சரி. ஒரு இருபது
ஒன்றைச் சொல்கின்றேன்.
ஆனால்,
இருபத்தைஞ்சு பிள்ளைகளைச் சேர்த் திட்டால் உடனை தொடங்கலாம்." இவர்தான் அய்யர் பத்பநாம ஐயர்!
)llo 1Po YDA.
EXCELLENT
PHOTOGRAPHERS MODERN COMPUTERIZED
PHOTOGRAPHY
OR WEDDING FORTRAITS
8 CHILD SITTINGS

Page 6
நூல் அறிமுகம் ரிழத்தின் வடக்கு, கிழக்குப் பிர தேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழரைப் பதம் பார்க்க, இருபதாம்
நூற்றாண்டின் கடைக் கூற்றில் சில சம்ப கே.டானியல் வங்கள் தோற்றம் காட்டின. அவற்றில்
உள்ளூருக்குள் இடப்பெயர்வு, வெளி
நாட்டிற்கான புலம் பெயர்வு என்பன நினைவு சர்வதேசக் கவனத்தைக் கூட ஈர்க்க
வைத்தன! oG)f இந்த இரு பெரும் இடப் பெயர்வு களும் ஈழத் தமிழனது அடிப்படைச் சிந்தனை மரபை குலைத்து ஆட்டம் காண செல்லக்கண்ணு வைத்தன்வா? அல்லவா? என நோக்கு V, W வது இங்கு பொருத்தமானதாக இருக்கும்! தீண்டாமை அனுட்டானத்தை மரபாகக் காத்து வருவது எமது தமிழ்ச் சமூகம்! இந்த விடயத்தில் சடுதியாக ஏற்பட்ட "பாய்ச்சல்" முன்னேற்றத்தைக் காட்டி, அக் கொடுரங்களால் உபாதையுறும் மக்களுக்கு ஏதாவது விமோசனத்தைக் கசிந்ததா? என விசாரிக்கும் பொழுது, இல்லையென்பதற்கான ஆதாரங்களே மலிந்து கிடக் கின்றன. NA
உள்ளூருக்குள் தமது பூர்வீக வாழ்விடங்களை இழந்து, பலிகள் பலதைக் கொடுத்து, ஏன் தங்களது மனங்களையே தாரை வார்த்து இழப்பதற்கு இனி ஏது மில்லையென்ற நிலையில் அகதிகளாகப் புறப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்கள் அந் நிலையிலும் அநுபவித்த நிஷ்டுரங்கள் ஏராளம்!
தமிழருக்குள் ஒடுக்கப்பட்ட அகதிகள், நிலமானிய அமைப்பின் ஏகப் பிரதி நிதிகளான வேளாள சமூகத்தினரின் கிணறுகளைப் பாவிக்கக் கூடாதென்ற, "கருவிடை? யான கருணையற்ற மனோபாவத்தினர், கிணறுகளுக்குள் குப்பைகளைக் கொட்டி அவற்றை அசுத்தப்படுத்தினர். இதைப் பத்திரிகைகள் பிரசித்தப்படுத்தின. புத்தூரிலுள்ள பிரபல கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவனொருவன் திறமை யாகக் கற்று முன்னேறுகிறான் என்றதைப் பொறுக்க முடியாத பிற்போக்குத் தன்மை கொண்ட ஆசிரியரொருவர், அம்மாணவனுக்குச் சகிக்க முடியாத நெருக்கடிகளைக் கொடுத்து அக்கல்லூரியிலிருந்தும் அவனை விலக வைத்திருக்கிறார். இது இந்நாட்டில்! இனி வெளிநாடுகளில் சாதியத்தின் தாக்கம் எப்படி என்பதைக் கவனிப்போம்!
குளிர்ச்சியான நாடொன்றில் சைவக் கோயிலொன்றிற்குப் பஞ்சமரொருவர் சென்றுள்ளார். பிரசாதம் வழங்கும் சமயத்தில் ஏனைய பக்தர்களோடு சேர்ந்து இவரும்

கையை நீட்டினார். அச்சமயம் இவரை நெருங்கி வந்த கோயில் பூசகர், “நீர் அங்க நின்ற இடத்துக்குப் போய் நில்லும்” எனச் சொல்லியபடி அந்த பஞ் சமப் பக்தரைத் தாண்டிச் சென்று ஏனைய பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினாராம்! இந்தப் பூசகர் ஏற்கனவே, ‘நந்தன் வழி வந்த பக்தரது கிராமத்துக் கோயி லொன்றில் பூசகராக இருந்தவர். "அங்க” எனச் சுட்டியது பக்கத்துக் கிராமத்தை. எனவே பக்தரது பூர்வோத்திரங்கள் அவருக்கு அத்துப்படி!
புலம் பெயர்ந்தோரும் சாதியமும் என்ற கருதுகோளில் தோழர் சூமார்க் என்பவரது பிரக்ஞையைப் பார்ப்போம். “புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தம்முடன் கூட வந்த பிற்போக்குச் சிந்தனைகளை உதறி வாழ முடியவில்லை. புலம் பெயர்ந்த நாடு களில், தமிழர்கள் தொழிலால், சொத்து டைமையால் கூறுபட்டு வாழவில்லை. பிறப்புரிமையால் மட்டும், அதுவும் சொந்த நாட்டில் கொண்டாடப்பட்ட உறவு முறையால் தாழ்த்தப்பட்டவன், உயர்ந்தவன் என்று பிரித்து நோக்கப்படு கிறான். புலம் பெயர்ந்த நாடுகளில் யாரும் குலத் தொழில் செய்வதில்லை. இலங்கையில் தாழ்ந்த தொழில் என ஒதுக் கப்பட்ட தொழிலுக்காகப் புலம் பெயர்ந்த நாடுகளில் உயர் சாதியினர் என மார்த் தட்டும் சாதிமான்கள் போட்டி போட்டு அலைவதை இங்கு காண்கிறோம். ஆனால் பொருத்தம் பார்த்து, கல்யாணம் செய்யும் பொழுது குலம், கோத்திரம் விசாரித்து மணம் முடித்து வைக்கின் றனர். காளான்கள் போல் தோன்றும் கோயில்களில் சாதியின் பெயரால் உற்ச
வங்கள், திருவிழாக்கள் நடைபெறுவது எமது சிறுமை யைப் பறைசாற்று கின்றது."
எனவே, தமிழனைக் கூறுபோட் டுள்ள சாதியம் குளிருக்கோ, சூட்டிற்கோ அஞ்சாது இன்னமும் பஞ்சப்பட்ட பாட் டாளிப் பஞ்சமர்களை உலுக்கிக் கொண்டு தானிருக்கின்றதென்பதை எவருமே மறுக்க ஏலாதுதானே!
இதையெல்லாம் மனங்கொள்ளும் பொழுது, பிராமணர்களுக்கு பெரியார் ஈ.வ.ரா எப்படிச் சிம்ம சொர்ப்பனமாக இருந்தாரோ அதே போல் ஈழத்து வேளாள சமூகத்திற்கு தீண்டாமை விரோ தத்தின் குறியீடாகத் தன்னை இனங் காட்டிய தோழர் கே.டானியலை நினைவு படுத்த முடியாதிருப்பது துர்லபமே!
"தீண்டாமை என்ற சிறுமைக்கு எதி ராகப் பூண்டோடதை அழிக்கப் புறப் பட்ட போராளி” என எழுச்சிக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை விழிக்கிறார்.
ஜனநாயக வழிமுறை அரசியல் பாராளுமன்றக் கதிரைகளைத் தருமே தவிர, சமுதாயத்தை மாற்றி அமைக்காது என்ற அசைக்க முடியாத கருதுகோ
ளோடு புரட்சிப் பாதைக்குத் தனது சாதி
யத்திற்கு எதிரான போராட்டங்களைத் தோழர் கேடானியல் ஆற்றுப்படுத்தினார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருக்கும் பொழுது தோழர்
இடது பக்கம் சரிந்திருப்பார். இதைப் பல தடவைகளில் கவனித்த வி.ரி. இளங் கோவன் (கவிஞர், டானியலின் மூச்சு நிற்கும் வரை அவரோடிருந்தவர்) “நிமிர்ந்து இருங்களேன். ஏன் இடப்
பக்கம் சரிகிறீர்கள்” என்றாராம். "இடப்
অ

Page 7
பக்கம் சரியும் பொழுது என்னில் புதிய தொரு சக்தி பிறக்கின்றது' என டானியல் தனது இடது சாரீயப் புரட்சி அரசியலைச் சட்டென நியாயப்படுத்தி Gormignrib!
ʻʻuu mT fif
யாருக்கு விடுதலை வேண்டுமோ அவர்களுக்கிடையே இருந்துதான் போராட்டங்கள் வெடிக்க வேண்டும். அப்போராட்டங்களுக்கு அவர் களே தலைமை தாங்க வேண்டும்" என்ற உண்மையை மக்கள் மத்தியில் விதைத்து, ஒடுக்கப்பட்ட மக்களை எழுச்சி கொள்ள வைத்து, உன்னையே நீ அறிவாய் என்ற கிரேக்க தத்துவஞானி சோக்கிரட்டீசின் வழியில் திசை திருப்பியவர் புரட்சித் தோழர் டானியல்.
சமபந்தி போசனம், கலப்புத் திரு மணம், சமரசப் பேச்சு என்ற தடங்களி லிருந்து விலகிச் சாதியப் போராட் டங்கள் புது வடிவங்களைப் பெற்று விரிந்த களத்தைப் பெற்ற பொழுது அவைகளில் தன்னை முழுமையாக ஈடு படுத்திய போராளியாகத் தமிழ்ச் சமூகம் டானியலைக் கண்டது. இதற்கு வெகுமதி யாக காவல் படையினரின் அடி உதை களையும், கைவிலங்குகளையும் தோழர் அனுபவித்தார். இத்தகைய போராட்டங் களாகச் சுன்னாகம் எழுச்சி ஊர்வலம், மாவிட்டபுரம் கந்தசாமி, தலைச்சி அம்மன், செல்லச் சந்நிதி வல்லி புர ஆழ்வார் ஆகிய ஆலயங்களில் பஞ் சமர்கள் நடத்திய ஆலயப் பிரவேசங் களைச் சுட்டலாம். தேநீர்க்கடைப் பிரவேசங்களிலும் தோழர் "மறத் தமிழனுக்கு கறல் பேணியா?” என்ற ஆவேசத்தோடு குதித்தவர்.
பண்டித்
செ.கணேசலிங்கம், செ.யோகராசா. தெணியான், வி.ரி.இளங்
10
தோழரின் தொண்டுப் பணி ஈழத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட வில்லை. தமிழகத்துச் சேரிகளுக்குள்ளும் புகுந்தது அங்குள்ள பஞ்சமர்களின் பிரச்சினைகளைக் கண்டிருக்கிறார். இந்த வகையில் அவரது தேடல் எந்த இடத் திலும், எந்தச் சூழ்நிலையிலும் சாதிய முனைப்போடு விழித்திருந்தது. மக் களிடம் கற்று மக்களுக்காக இலக்கியம் படைத்த மக்கள் இலக்கியவாதி டானியல். பஞ்சமரது பிரச்சினைகளுக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவதைக் கவனித்து, தன்னைப் பொதுப் பணி களுக்குப் பதப்படுத்திய தனது ஆசான் களைக் கூடத் துறந்து புரட்சிப் போராட் டத்துக்கு முன்னேறியவர்.
இத் தோழரை மையப்படுத்தி *கே.டானியல் நினைவு மலர்” என்றொரு நூலொன்று வெளியாகி இருக்கின்றது. இந்த அரிய பணியைக் கனடாத் தமிழர் கள் செய்துள்ளனர். இந்த வகையில் தமது வேர்களை மறக்காத புலம் பெயர்ந்த இத் தமிழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இந்நூலின் குவி மையமாகச் சாதியப் போராட்டங்கள், அதில் கே.டானியலின் வகிபாகம், ஆகியன வாசகனுக்குப் படைக்கப்பட் டுள்ளன. பதிப்பாசிரியர்களாக, சி.பால சுப்பிரமணியம், மார்க், தருமராசா, சிவம்
சி. சிவ
அவரது படைப்புகள்
ஆகியோர் இயங்கியுள்ளனர்.
சேகரம், சூ.மார்க், எம்.ஏ. சி.இக்பால்,
சி.கா.செந்திவேல்,
கோவன், என்.சண்முகதாசன், கே. பி. லிங்கம், எம். சி. சுப்ரமணியம், பிரேம்ஜி, இ.திருநாவுக்கரசு, க.கந்தசாமி, செல்வா இலங்கையன், தி.சிவபாலு, கோவை நேசன், ம.செல்வராசா ஆகியோர்
i 6696DE

11
கே.டானியல் சம்பந்தமான தமது பார்வை களை விசிறி இருக்கின்றனர். இவர்க ளோடு டானியலின் எழுத்துக்களும் மறு பிரசுரம் கண்டிருக்கின்றன.
டானியலை மறுதலிப்போருக்குப் பதில் சொல்வது போல் தெணியான் எழுதியுள்ளார். அதே நேரம், டானியலின் கடும்போக்கு பிரேம்ஜியின் மனதில் இன்னமும் தழும்பாக இருக்கிறது போலி ருக்கிறது. அவரது கட்டுரை அத்தகைய கரு உருவாக்கத்தைத் தருகிறது. தலை வலியும், தடிமனும் தனக்குத் தனக்கு வந்தால்தான் அதன் தாக்கத்தின் வீச்சுத் தெரியும்! இதற்குத் தோழர் டானியலும் விதி விலக்கல்லவே!
டானியலின் புகைப்படங்கள் உருக் குலையாமல் மிக அழகாக இந்நூலில் பதிவாகி இருக்கின்றன. இது நூலுக்குப் பெறுமானத்தைக் கொடுக்கின்றது. இவைகளைப் பேணிப் பராமரிப்பது வருங்காலத் தலைமுறைக்குச் செய்யும் அரும்பணியாகும். அரசியலுக்கும், இலக் கியத்திற்கும் வெவ்வேறு முகங்களைப் பாவனைப்படுத்தாது ஒரே முகத்தை இரண்டிற்கும் காட்டி வாழ்ந்தவர் இத் தோழர். இவரைத் தலித் இலக்கியத்தின் பிதா மகனெனத் தமிழகத்து இலக்கிய வாதிகள் மனம் கூசாமல் ஏற்றுக் கொண் டுள்ளனர். அப்படி இருக்கையில் தோழ ரால் "பஞ்சமர் இலக்கியம்’ என அழைக் கப்பட்ட சாதியப் படைப்புகளை எதற் காக, இங்கு கூடத் தலித்’ இலக்கியம் என்கின்றனர்? இது எதிர்காலத்தில் கே. டானியலையே விழுங்கக் கூடிய ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என்பது யதார்த்தம்! எனவே, தலித்’ என்ற மராட் டியச் சொல்லைப் புழக்கத்திலிருந்து விலக்குவது டானியலுக்குச் செய்யும்
பெரிய அஞ்சலியாகும். அவரால் தோற்று விக்கப்பட்ட சாதீயப் போராட்ட இலக்கி யத்தை 'பஞ்சமர் இலக்கியம்' எனப் பதிவுகளை ஏற்படுத்துவது. அது மட்டு மன்றி தமிழ் இலக்கியத்தில் கே.டானிய லின் நாமம் நெடுநாள் வாழ வழி அமைக்கும்.
இலங்கையிலுள்ள தமிழ் எழுத் தாளர் உட்பட இன்று புகலிட எழுத்தா ளர்களும், தமது நூல்களை வெளிநாடு களில் பதிப்பிக்கின்றதைக் காணமுடி கின்றது. இத்தகைய புத்தகங்கள் பெரும் பாலும் இலங்கை வாசகர்களுக்குக் கிடை ப்பதில்லை! இதேநிலை 'கே.டானியல் நினைவு மலர்' என்ற இந்தப் புத்தகத் திற்கும் ஏற்படலாம். செப்டெம்பர் 2003
இல் கனடாவில் வெளியாகிய இந்நூலை செப்டம்பர் 2004இல் தான் படிக்க முடிந் தது. எனவே, அமரர் டானியலினால்
நேசிக்கப்பட்டவர்களுக்கும் இந்நூல் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக் கப்படுவது இப்பணியை மேலும் மேம் படுத்தும். அந்த வகையில் இலங்கைப் பதிப்பொன்று இலங்கையிலேயே ஆக்கப் பெறுவது பல விபரங்களைப் போக்கி சகல பஞ்சம மக்களது கைகளிலும் இந்
நூலைக் காண வைக்கும். புலம் பெயர்ந்து
வாழும் எமது தோழர்கள் இந்த இனிய வேண்டுகோளை ஏற்பார்களா இருந்தும், கே.டானியலின் நாமம் தொடர்ந்து வாழ
எடுக்கப்பட்ட இந்த ஆக்கப் பணி
காலத்தால் பேசப் படக் கூடியதே!
தொடர்புகளுக்கு
99, Gennala Sqvare
Scarborough Ontario
Canada - MIV 5 MT Tel: 416724 - 6169
অ

Page 8
12
வடபுலத்திற் பிறந்து
A60604/05 இலக்கியம் தந்த படைப்பானி புலோலியூர் க.ஞாசிவம் c9afaaif
- தெணியான்.
ஒருவர் தனது சொந்தப் பெயருடன் தான் பிறந்த ஊரின் பெயரையும் ஊர்ப் பற்றுடன் சேர்த்து எழுதும் வழக்கம் தமிழ் மரபுக்குள் என்றோ வந்து சேர்ந்து விட்டது. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் இலங்கையின் தமிழ் அறிஞரும் பண்டை நூல் பதிப்பு முயற்சியின் முன்னோடிகளுள் ஒருவருமான சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைக் குறிப்பிடலாம். தாமோதரம் பிள்ளை அவர்களின் பெயரின் முன்னுள்ள சி என்னும் எழுத்து அன்னார் தோன்றிய சிறுப்பிட்டி என்னும் ஊரின் சுருக்கமாக அமைந்துள்ளது. இந்த மரபினை எழுத்தாளர்களும், கவிஞர்களும் வேறு சிலரும் தமது பெயர்களுடன் தாம் பிறந்த ஊரின் பெயரை முழுமையாகவோ அன்றிச் சுருக்க வடிவிலோ இட்டுக் கொள்ளுகின்றனர். வடபுலத்துப் புலோலியூருக்கு இந்த வகையில் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த ஒரு முக்கியத்துவம் உண்டு. 'புலோலி என்னும் ஊரே கவி பாட வல்லது போலும். புலவர் ஒலி என்பதே புலோலி என மருவிற்று என்பாரும் உளர். புலோலி தமிழுக்கு உவந்தளித்த பெருந்தகைகள் பலர் (எஸ்.ரஞ்சகுமார் - புலோலியூர் சொல்லும் கதைகள்) என விதந்து கூறப்பெறும் புலோலிக் கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தமது பெயருடன் தாம் பிறந்த மண்ணின் பெயரைப் பெருமையுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த எழுத்தாளர்களுள் ஊரின் பெயரை மாத்திரம் சொல்லி 'புலோலியூரான்" என அழைக்கப் பெறும்போது ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் கவனத்துக்கு வருகின்றவர் க.சதாசிவம் அவர்கள்தான். புலோலியூரான் 20.03.1942இல் விவசாயி கந்தையாவின் புதல்வனாகப் பிறந்தவர். பத்தொன்பதாவது வயதில் நிகழ்ந்த இவரது எழுத்துலகப் பிரவேசமே பரிசிலோடு ஆரம்பமானது. மரகதம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு இவர் அந்தப் பரிசிலைப் பெற்றார். இந்த ஆரம்பம் இவருக்கு நல்லதொரு முகூர்த்தமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து
 

13
சிறுகதைக்கான பல பரிசில்களைப் போட்டிகளில் பங்கு கொண்டு பெற்றுக் கொண்டார். இவற்றுடன் இலங்கைச் சாஹித்திய மண்டலப் பரிசில்களையும், ‘இலக்கிய வித்தகர்', 'இலக்கியச் செம்மல் விருதுகளையும் கெளரவிப்பு களையும் பெற்ற பெருமைக்குரியவர்.
புலோலியூரான் அவர்களின் நூல் 'யுகப்பிரவேசம்’ (1973), "ஒர் அடிமையின் விலங்கு அறுகிறது' (1982), ஒருநாட் பேர் (1995), "புதிய பரிமாணம்’ (1998) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அண்மையில் தமிழ்நாடு மணிமேகலைப் பிரசுர வெளி யீடாக அன்னாரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு அக்கா ஏன் அழுகிறாய்? வெளிவந்திருக்கின்றது. புலோலியூரான் நாவல் இலக்கியத்துக்கு வழங்கிய பங்களிப்பு நாணயம்" (1980), மூட்டத்தினுள்ளே" (1983) என்னும் இரு
படைப்புகளாக விளங்குகின்றன.
đ956Lr.T36
ஈழத்து இலக்கிய உலகில் 'ஏகலைவ னாகப் பிரவேசம்’ செய்த புலோலியூரான் அவர்கள் தனது தந்தையாரைப் பின் வருமாறு நினைவு கூருகின்றார் :-
"அன்று, வடபுலத்தில் துலாவோடி நீர்பாய்ச்சிய புகையிலை, உப உணவுப் பயிர்ச் செய்கை உழைப்பாளிகளின் உதாரண புருஷனாக விளங்கி, நாலு பேரால் நாணயமான மனிதன் என மதிக்கப்பட்ட தனித்துவ ஆளுமை கொண்ட எனது தந்தை, எனது எழுத்து ஆளுமைக்கு வித்திட்டார். தோன்றாத்
துணையாக நின்றவர். (ந.பாத்திபன் -
S
t
"ஞானம்" ஏப்ரல் 2003) இத்தகைய ஒரு குடும்பப் பின்னணியில் வந்த புலோலி யூரான் அவர்கள் தமது இலக்கியப் பிரவேசம் பற்றிக் குறிப்பிடுகையில், “நான் இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்தில் எனக்கு நேரடி வழகாட்டியென யாருமே இருக்கவில்லை என்றும், எனது சுயமுயற்சியும் நான் பிறந்து வளர்ந்த இலக்கியச் செழுமை மிக்க புலோலி யூரின் பின்னணியும், நான் இளம்வயதில் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி இழையோடிய வாழ்க்கை நிலையும் என் சிந்தனையில் சமூக முரண்பாடுகள் பற்றி ஏற்படுத்திய தாக்கமும் எழுதத் தூண்டின." (ந.பாத்திபன் - ஞானம்? ஏப்ரல் 2003) என மனந்திறந்து பேசு கின்றார்.
புலோலியூரான் அவர்களின் குடும்ப, சமூகப் பின்னணியும் அன்னார் எழுது வதற்கு ஆரம்பித்த அன்றைய கால கட்டமும் அன்னாரின் இலக்கியப் போக்கினை நிர்ணயிக்கின்ற சக்திகளாக விளங்கின. அறுபதுகளின் ஆரம்பம் புலோலியூரான் அவர்களின் இலக்கியப் பிரவேசம் நிகழுகின்ற காலம். ஈழத்து இலக்கிய உலகில் முற்போக்கு இலக் கியம் எழுச்சி பெற்று வீறுடன் வெளி வந்து கொண்டிருந்த காலகட்டம் இது. அத்துடன் புலோலியூரான் அவர்களின் குடும்பச் சூழ்நிலையும் முற்போக்குச் சிந்தனை வழியில் அவர் செல்வதற்கு ஏற்புடையதாக இருந்திருக்கின்றது. எனவே குடும்பம், இலக்கியச் சூழல் என்பன இணைந்து புலோலியூரான் அவர் களை முற்போக்கு இலக்கியச் சிந்தனை யாளனாக உருவாக்கின. அன்னாரின்
ygge) s

Page 9
படைப்புக்கள் ஆரம்பகாலம் முதல் முற்போக்குச் சிந்தனைத் தெளிவுடன் வெளிவந்தன.
புலோலியூரான் அவர்களின் சிந்தனைப் போக்குக்குத் தகுந்த வண்ணம் அன்னார் டாக்டராகப் பணி புரிந்த பிரதேசமும் வந்து வாய்த்தது. பண்டாரவளை தேயிலைத் தோட்ட மக்கள் மத்தியில் வைத்தியராகப் பணி செய்யும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்ட அன்னார், மலையக மக்களின் ஒருவனாக நின்று, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்கள் துயரங் களையும், வாழ்க்கைப் போராட்டங் களையும் இலக்கியங்களாகப் படைத்தார். வடபுலத்தில் பிறந்த புலோலியூரான் அவர்கள் உண்மையில் மலையக இலக் கியப் படைப்பாளியாகவே விளங்கினார். மலையக மக்களின் கண்ணிர் நிறைந்த வாழ்வினைப் பதிவு செய்யும் நோக்குடன் படைப்பிலக்கியத்துக்குரிய உருவ அமைதியை மீறி செறிவாகப் பல தகவல்களைச் சில படைப்புகளில் தந்திருக்கின்றார். எந்த மக்களுடன் அவர் வாழ்ந்து வந்தாரோ அந்த மக்களின் வாழ்வினை இலக்கியமாக்கினார். சமூகத்தில் அடிநிலை மக்களின் பக்கம் சார்ந்து நின்று எப்பொழுதும் இலக்கியம் படைக்கும் புலோலியூரான், தமது கொள்கையை எந்தக் காலத்திலும் பெரிதாக வெளிப் படுத்திக் கொண்ட வரல்லர். பிரகடனங்களை அல்ல, படைப்புக்களையே அவர் முதன்மைப் படுத்தினார்.
14
புலோலியூரானின் உள்ளம் கலை மலிந்த நல்லுள்ளம். கலை, இலக்கி யங்களின் மீது அன்னாருக்கிருந்து வந்த ஆர்வம் காரணமாகத் தமது இல்லத்துக்கு 'கலை அகம்" எனப் பெயர் சூட்டிக் கொண்டதோடு அமையாது தமது அருமைக் குழந்தைகளுக்கும் கலை அழகன், கலைவாணி என நாமங்கள் சூட்டி மனம் மகிழ்ந்தார். புலோலியூரான் மனம் போல அவர் மைந்தன் இன்று டாக்டர் கலைஅழகனாக உயர்ந்து நிற்ப துடன், டாக்டர் குமுதினியைத் தனது மனைவியாக அடைந்துள்ளார். புலோலி யூரானின் செல்வப் புதல்வி இன்று டாக்டர் ச.அருட்செல்வனின் வாழ்க்கைத் துணைவியாக விளங்குகின்றார்.
புலோலியூரான் அவர்கள் எழுத் துலகில் பிரவேசித்த சமயம் முதல் வீர கேசரி, தினகரன் முதலிய பத்திரிகை களிலும் மல்லிகை, இளம்பிறை, ஞானம், தீபம், தாமரை ஆகிய சஞ்சிகைகளிலும் தமது ஆக்கங்களைப் படைத்து வந்திருக் கின்றார். அன்னாரின் சிறுகதைகள் சில சிங்களம், ஜேர்மன், பிரான்ஸ் மொழி களில் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுத் தமிழ் வாசக எல்லைக்கு அப் பாலும் வாசகர்களைச் சென்றடைந்
திருக்கின்றன.
புலோலியூரான் அவர்களின் இலக்கியப் பணியைக் கெளரவித்து 1991
மல்லிகை உருவத்தை அட்டையில் தாங்கி வெளி வந்திருக்கின்றது. 2002 புலோலியூரானின் மணிவிழா ஆண்டு என்பதனைக் கருத்தில் கொண்டு, இலக்கியப் பணியில்
நவம்பர் அன்னாரின்
gigs):

15
இவர். ' வரிசையில் ந.பார்த்திபன் கட்டுரை மூலம் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் “ஞானம் இவரைக் கெளரவித்திருக்கின்றது.
என்னும்
சிறுகதை, நாவல் என்பவற்றுடன் கட்டுரை, வானொலி நாடகம், நூல் மதிப்பீடு எனப் பல்துறை இலக்கியப் பணிகளை ஆற்றிய புலோலியூரான் அவர்கள் “ஞானம்" சஞ்சிகையின் இணை யாசிரியராகவும் இருந்து, சஞ்சிகை வெளி யீட்டுத் துறையில் தமது பங்களிப்பினை வழங்கி வந்திருக்கின்றார்.
மிக இளவயதில் ஆத்மார்த்தமாக இலக்கியத்தினை வரிந்து கொண்ட புலோலியூரான் அவர்கள் வாழ்க்கைத் துணையாக ஆசிரியை இலட்சுமிப் பிள்ளையை மாலைசூடிதமது பணிகளின் பங்காளியாக்கிக் கொண்டு வாழ்ந்தார்.
புலோலியூரான் அவர்கள் அனை வரையும் அரவணைத்துப் பழகுவதற்கு மிக இனியவர். தமது நட்பினை எக் காலத்திலும் பேணி நடக்கும் பண்புநலம் வாய்ந்தவர். இலக்கிய நண்பர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதில் நாட்டங் கொண்டவர். மற்றவர் சொல்லும் கருத் துக்களை கெளரவித்துச் செவிமடுத்துக் கேட்கும் இயல்பு பூண்டவர். தமது தொழில் சார்ந்த பணிகள் தொடரும்
வண்ணம் மகன், மருமக்களை டாக்டர்
களாகக் கண்டு மகிழ்ந்தவர். தமது இலக்கியப் பணியின் தொடர்ச்சியாகச் சகோதரி மகன் புலோலியூர் ஆ.இரத்தின வேலோன் உருவாகி இருக்கும் நிதர்சனத்தையும் அறிந்தவர்.
இல்லை உடையதாக இந்த உலகம் (திருக்குறள்
தெணியானின் மணிவிழா மலரில்,
“நண்பனே! நீ பங்காளி ஈழத்துப் புனைகதைத் துறைக்கு இன்னும் துறைக்கு இன்னும் நீ பங்களிக்க வேண்டும். பல்லாண்டு வாழ்ந்து முற்றிய அடிக்கரும்புதான் இனிக்கும். நலம் காக்கும் நல் வைத்தியன், நல்லாசிரியன், எழுத்தாளன் இவர்களது முறையே ஸ்டெதஸ்ட் கோப், பயன்தரும் நூல், எழுதுகோல் இறுதிவரை அவர்களது கையிலே இருக்கும்.
வா தோழனே, வளம் சேர்ப்போம் ஈழத்து இலக்கியத்திற்கு முற்போக்கு அணிவழியே' என உரிமையுடன் அழைப்பு விடுத்தவர். இன்று?
புலோலியூர் க.சதாசிவம் அவர்கள் மக்கள் உடல் நலம் காக்கும் நல் வைத்தி யனாக ஸ்டெதஸ்ட் கோப்பும், சமுதாய மேம்பாட்டை உருவாக்கும் எழுத்தாள னாக பயன்தரும் நூல்களுமாகக் கொண்டு வாழ்ந்தபோதும் தம்மை எண்ணிப் பெருமை கொள்ளாத ஒருவர். ஆனால் இந்த உலகத்துக்கு ஒரு பெருமை உண்டு. நேற்று இருந்த ஒருவன் இன்றைக்கு எனச் சொல்லும் பெருமை
336) இருப்பதற்கு வாய்ப்பினை அளித்து 15.09.2004 இல் திடீரென அன்னார் மறைந்து போனமை ஈழத்து இலக்கி யத்துக்கு குறிப்பாக மலையக இலக்கி யத்துக்கு ஈடுசெய்ய இயலாத இழப் பென்றே கூறலாம்.
PS 665);

Page 10
16
சகலசூரிய கடித உறையில் உள்ள சம்பளத்தை மீண்டும் எண்ணிப் பார்த் சிங்களத்தில் r தான். தொகை சரியாகத்தான் இருந்தது. நந்தசேன ஹேரத் ஏழாயிரத்து இருநூற்று நாற்பத்திரண்டு ரூபா முப்பத்தேழு சதம். முப்பத்தேழு சதங்கள் கூடச் செப்புக்காசும் குறை ug: யாமல் இருந்தன. எந்தவித தவறுதலும் 6°0U6IT நா ள். இடம் :ே"விெ.ை அவனை அறியாமலேயே ஒரு பெருமூச்சு பிறந்தது. சம்பளத்தைச் சட்டைப் தமிழில் :- பையில் சேர்த்தான்.
திக்குவல்லை ஸப்வான் சகலசூரிய எப்பொழுதுமே சம்பளம் எடுத்தவுடன் ஒன்றுக்கு இரண்டு தடவை எண்ணிப் பார்ப்பான். தொகை சரியாக இருக்கின்றதா? என்பதை விட, ஆயிரமோ இரண்டாயிரமோ தவறியாவது கூடுதலா கக் கலந்திருக்குமா? என்ற நப்பாசைதான்! ஒருதடவை அவனது நண்பனது சம்பள உறைக்குள் ஆயிரம் ரூபா தாள்கள் இரண்டு தவறுதலாக நுழைந்த செய்தியைக் கேள்விப்பட்ட நாளிலிருந்து இரண்டு தடவைகள் எண்ணிப் பார்க்கும் பழக்கம்
அவனைத் தொற்றி விட்டது. NA
சம்பள நாள் என்றால் அதிகமானோருக்கு மனம் மகிழ்ச்சியில் புளதிக்கும் நாள்! சகலசூரியவைப் பொறுத்த மட்டில் அதைவிடத் துக்கதினம் வேறில்லை. அந்த நாளில்தான் இல்லாத பிரச்சினைகள், சிக்கல்கள் வெளிக் கிளம்புகின்றன. வேறு எந்த நாளிலுமே அவ்வாறான நிலைமை இல்லாத படியால், சம்பள நாளே வராது விட்டால் எவ்வளவு நிம்மதி என்று நினைப்பான். தனது மேசையை நோக்கி மீண்டும் நகர்ந்த சகலசூரிய, ஒரு காகிதத் துண்டை எடுத்தான். வருகிற மாதத்திற்குரிய செலவுகளைக் கணக்கிடத் தொடங்கினான்.
அக்கா மகள்ட கலியாணம் மிக விரைவில் நடக்க இருக்குது. இதற்கு எப்படி யாவது போயே ஆகணும். தப்பவே முடியாது. மணமகளை மணமேடையில் ஏற்றி உட்கார வைப்பது தாய்மாமன் எனது பொறுப்பல்லவா..? அன்றைக்கு காலம்பரயே வந்துவிடும்படி அக்கா வழிக்கு வழி சொல்லி விட்டாள். அதற்கு குறைந்த பட்சம் ஆயிரமாவது தாரை வார்க்கணும். வழிச் செலவுக்கு ஐந்நூறாவது போகும். மொத்த மாக ஆயிரத்து ஐந்நூறு தேவை! சில மாதங்களுக்கு முன்பு நண்பன் ஒருத்தனின் திருமணத்திற்கு வாங்கிய சாறியை இந்த திருமணத்திற்கும் உடுத்த அமரா உடன்பட்டது பெரிய உபகாரமாய் போச்சு. இல்லா விட்டால் தலைதான் போய்விடும். சாமான் வாங்கும் கடையின் கடன் மாத்திரம் நாலாயிரத்தையும் தாண்டி நிற்குது. சென்ற

$17
மாதம் முழுத்தொகையும் செலுத்த முடி யாமல் போய்விட்டது. எப்படியாவது முதலாளியின் மூஞ்சி பார்க்க முடியாத அளவுக்கு அசிங்கமாகிப் போய்விடும். அது மட்டுமா? மகளுடைய டியூஷன் பீஸ். பாடசாலை
மகனுடைய, இளைய
விவகாரங்கள். ஒவ்வொரு மாதமும் ஆயிரத்தைக் கடந்துவிடும். ஒபிஸுக்குப் போய்வர பஸ் கூலி ஐந்நூறாவது தேவை. அடிக்கடி வருகின்ற கலி யாணம். கருமாதிக்கு அளவே இல்லை. அப்படிப் மானத்தை விட எக்கச் சக்கம்."
பார்த்தால் செலவு வரு
அவன் காகிதத்தைச் சுருட்டி குப்பைக் கூடையில் போட்டான். இந்தக் கணக்குப் பார்த்து "பட்ஜெட் போடு வதில் துளியும் பிரயோசனமில்லை. தலைக் குழப்பம் தான் மிஞ்சும்’ என்று மனம் கூறியது.
நண்பன் ஜயசிறி ஒரு பட்டியலை யும் தூக்கிக் கொண்டு, அலுவலகத்தின் மேசைக்கு மேசை தாவுவது கண்ணில் பட்டது. இந்தத் தடவை ஏதோ ஒரு சங் கடம் ஜயசிறியின் ரூபத்தில் வலம் வருவ தாக நினைத்தான். அவனைக் கண்டும் காணாதது போல மறுபக்கம் திரும்பிக் கொண்டான். ஜயசிறி அவனைவிடப் பெரிய கொம்பனாச்சே? விடுவானா என்ன? அவனது மேசைக்கருகிலே வந்து விட்டான்.
“மச்சான் சக்லே. விஜேநந்தாவின் பெயாவலுக்கு நீயும் இருநூற்றி ஐம்பது எழுதியிருந்தாய். அதை இப்பவே தந்தால் லேசாக இருக்கும். 'பிரசண்ட் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு."
ஜயசிறி இருநூற்றி ஐம்பது' என்று அழுத்தம் திருத்தமாக உச்சரித்தது, அவன் மற்றவர்களை விடக் குறைந்த தொகை எழுதியிருந்ததைக் குத்திக் காட்டுவது போலிருந்தது.
மற்றவர்கள் கூடுதலான தொகை எழுதியிருந்தது என்னவோ உண்மைதான். என்றாலும் சகலசூரிய குறைவாக எழுதி யது கூட ஒன்றுக்குப் பல தடவை சிந்தித்து முடிவெடுத்த பிறகுதான்!
'அவனுகளுக்கு என்ன? லேசா சொல்லி விடுவானுகள். சிலபேர் தனிக் கட்டைகள். ரெண்டு பேரும் சம்பாதிக் கிறவங்களும் இருக்காங்க. நான் தனிச் சம்பளக்காரன். அவனுகள போல எனக்கு அள்ளியா தரமுடியும்.? மனதுள் கரித்து கொட்டியபடியே பணத்தை நீட்டினான். உடம்பிலிருந்து துண்டுச் சதையைப் பிய்த்துக் கொடுப்பது போல இருந்தது.
மேலும் பற்பல சிக்கல்கள் பல்வேறு வடிவங்களில் கிளம்புவதற்கு வாய்ப்புக்கள் தென்படவே, அதில் சிக்க முன்பு அரைநாள் லிவு போட்டுவிட்டு வீட்டுக்குச் செல்வதே உடம்புக்கு நலம் என்று மனம் ஆலோசனை கூறியது. விடுப்புப் பத்திரத்தை நிரப்பி காரியாலய உதவியாளரின் கையில் சொருகி விட்டு, ஒபீஸ் பையையும் தூக்கிக் கொண்டு அடிக்கு இரண்டடி வைத்து வெளியே பாய்ந்தான்.
சம்பள நாளில் ஏதாவது விசேஷ மாக எடுத்துச் செல்வது அவன் வழக்கம். வீட்டாரும் அதனை எதிர்பார்த்து இருப் பது அவனுக்குத் தெரியும். மரக்கறி,
S. pg. 698

Page 11
பழங்கள், புதிய மீன்கள் என்று வாங்கிக் கொண்டான். அவசரமாக விட்டிற்குச் செல்ல நினைத்துப் பஸ்ஸில் ஏறினான். உள்ளே நுழைந்த லொத்தர்க்காரனிடம் ஒரு லொத்தர் சீட்டையும் வாங்கிக் கொண் டான். அதைச் சம்பளப் பணம் உள்ள கடித உறைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.
'திடீரென தூக்கம் வந்திருச்சுன்னா காணாமல் போக இடமிருக்கு கடித உறையை வெளியே எடுத்த அவன், பையைத் திறந்து அதற்குள்ளே கையை விட்டு, உறையை உள்ளே அமுக்கி விட்டான். மூலை ஆசனத்தில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான். நித்திரை சுகமாக வந்தது. மீண்டும் விழிப்பு வந்தபோது பஸ் வீட்டை நெருங்கி இருந்தது.
பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுப் பக்கமாகச் செல்லும் களிமண் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றான். வீட்டின் முன்னே ஒரு வேன் நிறுத்தப் பட்டிருப்பதைத் தூர இருந்தே கண்டு விட்டான்.
‘ஹஜூம்... கூடும்.. ??? சந்தேகத்துடன் தோட்டத்திற்குள் நுழைந் தான். முன் வாசலில் மூன்று இளை
u mr r IT 95
இருக்கக்
மூளையைக் குடையும்
ஞர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந் தார்கள். இதற்கு முன்பு அறிமுகமான முகங்களாகத் தெரியவில்லை. அவர்
களைப் பார்த்து மெலிதாகச் சிரித்துக் கொண்டே சகலசூரிய நேராக அடுக் களைப் பக்கம் சென்றான். அமரா அங்கு தான் இருப்பாள் என்ற யூகிப்புச் சரி யாகவே இருந்தது.
18
"அமரா. யார் வந்திருக்காங்க..?”
“மூத்தமகள் வேலை செய்கிற இடத் துப் பொடியன்மாருகள். அன்றைக்கு நான் உங்களுக்கிட்ட ஒரு விஷயம்
கதைச்சன் ஞாபகமிருக்கா. அந்த நீல
ஷேர்ட் உடுத்தியிருக்கிற பொடியன்தான் 9gio e o பேரும்
'ப்ரண்ட்ஸ்'மார்."
மற்ற ரெண்ட
மூத்த மகள் தொழில் புரியும் கம் பனியில் ஒரு பையன் அவளைப் பற்றிக் கரிசனை காட்டுவதாக அமரா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சொன்னது என்னவோ உண்மைதான்! அது அவனுக்கு முழுமையாக மறந்து போயிருந்தது.
“நான் தேநீர் ஊற்றிட்டு வரும் வரை யில நீங்க போய் அந்தப் பிள்ளைகளோட கதைச்சிட்டு இருங்கோ."
"நீங்க சொல்கிற அந்த ஆளும் வந்திருக்கிறதால வெறும் தேநீர் மாத்திரம் கொடுக்கிறது எனக்கு சரியாகப் படல்ல."
“எனக்கு என்ன செய்றதென்றே வீட்டில ஒன்றுமே
தோணல்ல. இல்ல."
“கொஞ்சம் பொறுங்க. அவசரமாக வாரன்."
சகலசூரிய பின்பக்கக் கதவு வழி யாக வெளியேறி, நான்குகால் பாய்ச்சலில் சந்திக் கடையை அடைந்தான். பிஸ்கட் பக்கெட், கப்பல் வாழைப்பழச் சீப்பு எல்லாம் வாங்கி வந்தான்.
3 மல்லிகை
Sa

19
"சம்பள நாள் என்றதால நல்லதாப் போச்சு தனக்குள் சொல்லிக் கொண்டே முன் வாசலுக்கு வந்தவன், அவர்களுடன் பேச்சு வார்ததைக்குத் தயாரானான்.
"நீங்கள் எல்லாரும் வந்து ரொம்ப நேரமாகுதா?”
"கொஞ்சம் நேரமாகிட்டுது அங்கிள்" சிவப்பு நிற ஷேர்ட் அணிந்து இருந்த பையனிடமிருந்து பட்டென்று பதில் வந்தது.
"நீங்கள் எந்தப் பக்கம்..?”
"நான் காலி. வேயங்கொடை யில. "போர்டிங்"குல தங்குறன். இவன் வந்து சுகத். ஊர் ஊராப்பொல. இவன் தான் உங்கட ஆள் கலன. ரொம்ப அருகில்தான் இருக்கான். மீரிகம." மீண்டும் அதே பையன் கடகடவென்று அறிமுகப்படுத்தத் தொடங்கினான். ஆள் பெரிய வாயாடி போல் தெரிந்தான்.
அப்போது நீல ஷேர்ட் அணிந் திருந்த பையன் சகலசூரியாவின் பக்க மாகத் திரும்பி இலேசாகப் புன்னகைத் தான். இவனது எடுப்பான தோற்றம் மனதை ஈர்க்கக் கூடியதாக இருந்தது.
'மூத்த மகளுக்குப் பொருத்தமான ஆள்தான் மனம் வழிமொழிந்து ஆமோதித்தது.
“மீரிகமையில் எந்தப் பக்கம்..?”
“மீரிகம என்று சொன்னதிற்கு நாங்க
மாலதெனியா?
“மாலதெனியாவா. எங்கட உறவுக்
காரங்க நிறையப் பேர் இருக்காங்க.
விஜேசிங்க நொத்தாரிசு ராலஹாமியை
தெரியுமா?"
"ஆஹ் அவர் எங்களுக்கு மாமா முறை வேணும். அவர்ட வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறம்.”
"நெசமாகவா..?’ சகலசூரியவின் மனதுள் சிறிது மகிழ்ச்சி பொங்கியது. 'விஜேசிங்க நொத்தாரிசு ராலஹாமிக்கு சொந்தக்காரர் என்றால் சாமானியப் பட்டவர்களா என்ன? நல்ல குடும்பமாகத் தான் இருக்கும். மூத்தமகள்ட விஷ யத்தை இயன்றளவு அவசரமாக முடிக் கிறதுதான் புத்தி." அவன் மனதுள் அலசத் தொடங்கினான். மூத்தமகள் கம்பனிக்கு வேலைக்குப் போய் இரண்டு வருடங்கள் இருக்கும். உயர்தரம் சித்தி யடைந்திருந்தும் தொழில் ஏதுமின்றி ஒரு வருடம் வரையில் வீட்டில் அடை பட்டுக் கிடந்தாள். அவளுக்குச் சகல சூரியவின் நண்பன் ஒருவனின் கருணை யினால் இந்தத் தொழில் கிடைத்தது. சொற்பமான சம்பளம்தான்! என்றாலும் அவளது துணிமணிகளுக்குச் செய்கின்ற செலவுகளையாவது சமாளிக்க முடிகின் றமை, மட்டில் பெரும் நிம்மதியைத் தந்தது.
சகலசூரியவைப் பொறுத்த
நல்ல வசதி வாய்ப்புக்கள் உள்ள குடும்பத்துப் பையன் மூத்த மகளுக்குக் கிடைப்பது எவ்வளவு பாக்கியம், மனசுக் குள் ஒரு தெம்பு பிறந்தது. சிலவேளை இந்த வேன்கூடப் பையனுக்குச் சொந்த மாகத்தான் இருக்கும்.
"யாருடைய வேன்?"
“தெரிந்த நண்பன் ஒருத்தனுடை யது. பயணத்துக்காக எடுத்து வந்தன்."
y

Page 12
வேனுக்குச் சொந்தக்காரனாக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தனது எதிர்கால மருமகனுக்கு வாகனம் ஒட்ட வாவது தெரிந்திருக்கின்றதே என்பதை நினைக்கும்போது மனதில் பெருமிதம் தோன்றியது. ஒர் உற்சாகத் தென்றல் வீசத் தொடங்கியது.
தேநீர் குடித்த பிறகு, சிறிது நேரம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த
இளைஞர்கள், குடும்பத்தவருக்கு
முன்னால் ஒரு புதிய கோரிக்கையை முன்
வைத்தார்கள்.
"அன்ரி. கம்பஹாவுல நல்ல
"காணிவல் ஒன்று நடக்குது. பார்க்கப்
போவோமா..?”
அதைக் கேட்ட மகனும், இளையவளும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.
'அம்மா.. அம்மா... போவோமே." அவர்கள் அமராவை நச்சரிக்கத் தொடங்கினார்கள்.
'எனக்கிட்ட கேட்டு என்ன பிரயோசனம். அந்தா உங்க அப்பா
இருக்காரு. அவருக்கிட்ட போய் கேளுங்கோ?
"அப்பா. போவோமே. . .
இன்றைக்கு எலியான்ஸ9ம் வாராங் களாம்.”
"எவன் வாறதாச் சொன்னீங்க..?"
20
"இப்போ இருக்கிற புதிய இசைக் குழு' சகல சூரிய வுக்கு சங்கீதக் காரர்களைப் பற்றிய எந்தவித ஞானமும் கிடையாது. அவர்களைப் பார்க்க வேண்டுமே என்ற ஆர்வம் துளியும் இல்லை. என்றாலும் இந்த அழைப்பை ஒரேடியாக தட்டிக் கழிக்க முடியாத இக் கட்டான நிலை! அமராவின் எண்ணத்தை அறியும் நோக்கில் ஏறிட்டுப் பார்த்தான். விருப்பமின்மையைக் காட்டும் எவ்வித அறிகுறியும் முகத்தில் இல்லை.
அவனது நினைவைப் பொறுத்த மட்டில் குடும்பத்துடன் இவ்வாறான பயணம் சென்றதே இல்லை. சிலவேளை அமராவின் உள்ளத்தில் அவ்வாறு செல்வ தற்கான ஆசைகள் துளிர்விட்டிருக்கக் கூடும். திருமணமான புதிதில் இடைக்கு ஒருதடவை திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றாலும், பிள்ளைகள் வளர்ந்த பிறகு அதற்குக்கூட சாத்தியம் கிட்டவே இல்லை. அமரா எந்தவிதப் பொழுது போக்கோ, உல்லாசமோ இல்லாமல் வீட் டினுள் அடைபட்டுக் நினைக்கும் போது கவலையோடு மனம் உழன்றது.
"அங்கிள். வேனும் இருக்கு தானே. அதில போகலாம். எல்லாரையும் வீட்டுக்கே கொண்டுவந்து இறக்கி விடுறம்.” இதற்கிடையில் அந்த வாய்ப் பந்தல் வாலிபன் வாயைத் திறந்தான்.
கிடந்ததை
“சரி. நான் குளிச்சிட்டு அவசரமா வாறன்’ சகலசூரிய முடிவில் சொன்
"arauaav” னான். வீட்டின் பின்புறத்திலுள்ள "யாரப்பா அது? ஒரு எழவும் கிணற்றுக்குப் போய் குளித்து விட்டு விளங்குதில்ல." வரும்போது, குடும்பத்தவர் எல்லோரும் தயாராக நின்றனர். அவர்கள் கண்காட்சி
S. pygge)
壁ク

21
நடைபெறும் இடத்தை அடையும்போது இரவு ஏழு மணியாகி விட்டது. அப் பொழுதே மைதானம் இடைவெளியின்றி நெரிசலில் பிதுங்கி வழிந்தது. இராட்டின ஊஞ்சல், மெரிகோரவுண்ட் போன்ற வேடிக்கை விநோதங்களுக்குக் குறைவே இல்லை. ஒன்றிலும் சிக்கிக் கொள்ளாமல் கவனமாகச் செலவழிப்பதற்கு சகலசூரிய தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான்.
இசை நிகழ்ச்சி ஆரம்பமாகும்போது ஒன்பது மணியளவில் இருக்கும். மகனும், இளையவளும் வாயைப் பிளந்து ரசிக்கத் தொடங்கினார்கள். சகலசூரிய வுக்கோ நிகழ்ச்சிகள் தரமானதாகத் தெரிய வில்லை. ஆனால் அமரா கூட அதை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்ததை முகம் காட்டியது. அவன் இதுவரை கேள்விப்படாத பாடகர்களின் பெயரை, ஊரை அவள் அறிந்து வைத்துள்ள விடயம் பேசும்போது தெரிந்தது. மூத்த மகள் முகத்திலும் இனந்தெரியாத மலர்ச்சி. அது நிச்சயமாய் பாடலால் அல்ல! காதலனோடு சேர்ந்து இவ்வாறான பயணம் வரக்கிடைத்ததை எண்ணிய மகிழ்ச்சியால் வந்ததாகத்தான் இருக்கும்! அதற்கிடையில் அந்த வாலிபர்கள் பல தடவை ஐஸ்கிரீம், சொக்கலேட் என வாங்கி வந்து பகிர்ந்தார்கள்.
"சுத்த அநியாயம். எதற்காக இப்படி பணத்தை வீணாக்குறீங்க..?" தனது பிள்ளைகளின் பக்கமாகத் திரும்பி, அவர்களை குற்றம் சுமத்துகின்ற பாவனையில் சகலசூரிய கடிந்தான். நேரம் பத்தை எட்டும்போது சுற்றியிருந்த ரசிகர் களின் நடத்தைக் கோலங்கள் மெல்ல மெல்ல வித்தியாசப்படத் தொடங்கியது. அங்கிருந்த சிலர் குடி போதையுடன்
நெளிவதையும் சகல சூரிய கண்டு
விட்டான்.
“போதும். இப்பவே புறப்படுறது தான் நல்லதுன்னு நினைக்கிறேன்' பிள்ளைகளுக்கு வரவே மனசு இல்லை.
“என்ன அப்பா இது. கொஞ்சம் இருந்திட்டுத் தான் போவமே."
'இனியும் தாமதிச்சா இந்த இடத்தில அடிதடிகளைத்தான் காணலாம். இப்பவே புறப்படுறதுதான் புத்தி. நேர மும் பத்தை தாண்டிட்டுது." சகலசூரிய சற்று சூடாகச் சொன்னதால், கும்பல் செல்வதற்கு உடன்பட்டது. திரும்பி
வரும்போது அமரா சகலசூரிய வின்
காதுக்குள் ஏதோ முணுமுணுத்து விட்டு இளைஞர்களை நோக்கினாள். அந்த யோசனை சகலசூரியவுக்கும் சரியாகவே பட்டது.
“ஒரு தேநீர் கடையாகப் பார்த்து நிறுத்துங்கோ" சகலசூரிய சொன்னான்.
கம்பஹா ஆஸ்பத்திரியைக் கடந்து சிறிது தூரம் சென்ற வாகனம், வீடு போலக் காட்சியளித்த ஒரு கட்டிடத்தின் முன்னால் நின்றது. மேலும் பல வாகனங் கள் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. இது சற்று வசதி படைத்தோர் வந்து போகின்ற உணவகம் போலச் சகல சூரிய வுக்குத் தெரிந்தது. அவர்கள் உள்ளே போய் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்தார்கள்.
"நாங்க பீஸா சாப்பிடுவம்" சின்ன மகள் சொன்னாள்.
“ vm...?”
VN

Page 13
"ஆமாம் அப்பா. சரியான சுவை. ஸ்கூல்ல என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் எடுத்திட்டு வருவாங்க”
"எனக்கு இந்த இழவுகள பற்றி தெரியாது. வேண்டியதை சாப்பிடுங்க" சகலசூரிய சொன்னான்.
சிறிது நேரத்தில் வெயிட்டர் வந் ததும் பீஸாவுக்கு ஒடர் கொடுத்தனர். அது வரவே அரை மணித்தியாலம் ஆகி விட்டது.
சகலசூரிய இருப்புக் கொள்ளாமல் தவித்தான். அந்த உணவில் எதுவித சுவையும் இருப்பதாக அவனுக்குத் தெரிய வில்லை. தோசை ஒன்றை சாப்பிட்டு விட்டு பிளேன்ரீயைக் குடித்திருந்தால் எவ்வளவு மேலாக இருந்திருக்கும் என்று நினைத்தான். தான் சாப்பிட எடுத்ததில் பாதியை அமராவுக்குக் கொடுத்து விட் டான். என்றாலும் பிள்ளைகள் ஆர்வத் துடன் அவற்றை ஒரேயடியாக விழுங்கு வதைக் கண்டான். இன்றைக்கு ஒருநாளா வது அவர்கள் விரும்பியதை எடுத்துக் கொடுக்க முடிந்ததே என்று மகிழ்ந்தான். சாப்பிட்டு முடிந்ததும், வெயிட்டர் பில்லைக் கொண்டு வந்து மேசையில் வைத்தான். கூட வந்த வாலிபர்களில் ஒருவன் அதை எடுப்பதற்குத் தயாராகும் போதே, சகலசூரிய முந்திக் கொண்டான். தான் அழைத்து வந்த விருந்தாளிகளை பில் கட்ட வைப்பது நாகரிகமான செய லாக அவனுக்குப் படவில்லை. சகல சூரிய அடிக்கண்ணால் பில்லை நோட்ட மிட்டான். சட்டென்று முகம் மாறியது. நாலாயிரத்து இருநூறு ரூபா! அவனால் நம்பவே முடியவில்லை. இரு கண்களும் சிவந்து, வியர்வை வெளியேறித் தெப்பமாகியது.
உடம்பிலிருந்து மெலிதான
22
நடந்துள்ளது என்னவென்று அவனால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடிய வில்லை. வெயிட்டருக்குத் தப்பு ஏற்பட வழியே இல்லை. பில்லை மீண்டும் நோக்கினான். ஐந்நூறு ரூபா வீதம் எட்டு பீஸாவுக்கும் நாலாயிரம். மீதி இருநூறு சேவைக்கட்டணம். அவன் ஒன்றும் பேசாமல் சம்பள உறையைக் கைக்கு எடுத்தான். ஆயிரம் ரூபா நோட்டுக்கள் ஐந்தை தட்டில் வைத்தான். வேறு கடை யில் இரு நூறு ரூபாவுக்குள் மனதிற்கு பிடித்ததை சாப்பிட்டு நிம்மதியாய் பசியையும் போக்கி இருக்கலாம். ஏதோ தவறுதல் நடந்துள்ள விவகாரம் அமரா வுக்கும் விளங்கியது போலத் தோன் றியது. என்ன பயன்? அவனுக்கு வீடு திரும்பிய பிறகு தான் சுயநினைவே வந்தது. வந்த வாலிபர்கள் புறப்படத் தயாரானார்கள். ஏதோ பந்துபோல ஒன்று வந்து நெஞ்சுக்குள் அடைப்பது போன்ற உணர்வில் சகல சூரிய தவித்தான். இந்த மாதத்துச் செலவுகளுக்கு எப்படி முகங் கொடுப்பது என்று தெரியாமல் திணறி னான். இவன் மனம் இடிந்துபோய் விட்டிருந்தது.
"அங்கிள் நாங்க போயிட்டு வாறம்"
இளைஞர்கள் வாகனத்தில் ஏறு கின்ற சத்தமும், வீட்டார் கையசைத்து விடைதகும் ஆரவாரமும் சகலசூரிய வுக்குக் கனவுபோல் தெரிந்தன.
“செரியோ அங்கிள்"
இளைஞர்கள் கைகாட்டியபடி கிளம் பினார்கள். வாகனத்தின் வெளிச்சம் மறையும் வரை அதையே கண் கொட்டாமல், ஜடம் போலப் பார்த்துக்
கொண்டிருந்தான் சகலசூரிய.
is upg;65);

தபால் விநியோகத்தில் (Parcells)
ஏற்பட்ட தடங்கல் நீக்கப்பட்டதால்
"மல்லிகை" இதழ்கள் ஒழுங்காக வந்து
சேர்கின்றன. மிக்க மகிழ்ச்சி. இத்துடன்
O O எனது சிறுகதை ஒன்று நீண்ட காலத்தின்
2b MV2 பின் அனுப்பி வைக்கின்றேன். அதனை
dYh ஒக்டோபர் மாத இதழில் பிரசுரிக்கவும்.
செப்டெம்பர் இதழ் கிடைத்தது. அதில்
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும்
புனரமைக்கப்பட வேண்டும் என்ற உங்
களது செய்தி மனதுக்கு ஊக்கமளிக்
கிறது. தற்போது யாழ் மண்ணில் நடை
பெறும் இலக்கியக் கூட்டங்களில் முற்போக்காளர் மீதும் சங்கத்தின் மீதும்
எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதற்குப் பதிலளிக்கக் கூடிய
தங்களைப் போன்றவர்கள் இங்கு இல்லாததும் துர்ப்பாக்கியம். அண்மையில்
கே.கணேஷ் அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்தோம்.
அதற்கு நானே தலைமை வகித்தேன். அதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செத்து
விட்டது என ஒருவர் பேச முற்பட்ட போது, அதற்குத் தெணியான் தக்கப் பதிலடி
கொடுத்தார். இதுபற்றிச் செப்டெம்பர் இதழிலும் குறிப்பிட்டுள்ளீர்கள். காலத்தின்
தேவை கருதி முற்போக்கு எழுத்தாளர் சிங்கத்தின் செயற்பாடுகள் புதிய தரிசனத்தோடு
தீவிரமாக முன்னெடுக்கப்படுவது அவசியம். அதற்கு அது குறித்த தத்துவார்த்தத்
தெளிவுள்ள படைப்பாளிகளை இனங்கண்டு ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக
இளம் படைப்பாளிகளை அதன் வழியில் ஈர்க்க வேண்டும். அதற்கு "மல்லிகை" ஆதாரமாகச் செயற்பட வேண்டும் என்பது என்போன்றவர்களின் பேரவா.
அத்துடன், அண்மைக் காலமாக, இதழ்களில் ஜெயபாலனின் கவிதைகள் வருவது காத்திரமாக உள்ளது. அவரது தொடர்பினைப் பேணுங்கள். நாற்பதாவது இதழுக்குக் கட்டுரை ஒன்று அனுப்ப எண்ணியுள்ளேன். விரைவில் அனுப்புகின்றேன். தங்களது "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்" என்ற நூலின் ஆங்கில மொழிப் பதிப்பினை யாழ்ப்பாணத்தில் கிடைக்க வழி செய்யவும்.
- அநாதரட்சகன்
இந்த முறை நாற்பதாவது ஆண்டு மலரை நேரகாலத்துடனேயே ஆரம்பித்து விட்டீர்கள். இது முக்கியமான வேலைதான். ஏற்கனவே ஆண்டு மலர்கள் பலவற்றைத் தயாரித்தளித்த முன் அநுபவங்கள் உங்களுக்கு நிறைய உண்டு. ஆண்டு மலர்களின் பெரும்பாலான அட்டைப்படங்கள் ஒரே தன்மை வாய்ந்தவைகளாகவும் அதிக வித்தி யாசங்களற்ற பாணியிலும் அமைந்து விடுவதைப் பல கட்டங்களில் நான் அவதானித்து

Page 14
வந்துள்ளேன். இந்த ஆண்டு மலர் அட்டைப் படத்தை வித்தியாசமான அமைப்பில் வெளியிட ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளு கிறேன். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பவர்களின் படைப்புக் களையோ அல்லது கட்டுரைகளையோ நிராகரித்து விடுங்கள்.
பழைய எழுத்தாளர்கள் பலர் இன்று எழுதுவதையே நிறுத்திக்கொண்டு விட்டார்கள். இவர்களிடம் காவலிருந்து பெற்றுக் கொள்வதை விட, நாடு பூராவும் ஏராளமான இளந்தலைமுறை தோன்றி, புதிய புதிய உத்தி முறைகளிலும் கண் ணோட்டத்திலும் எழுதி வருவதை இன்று ஊடக வாயிலாக அறிந்து வைத் துள்ளோம். இவர்களை அணுகுங்கள்.
மல்லிகையின் பெருமைகளில் ஒன்று என்னவென்றால் காலத்திற்குக் காலம் புதிய புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடிப்பது தான். கண்டுபிடிப்பதன் பின்னர் அவர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி வைப்பது தான்.
இப்படியாக அறிமுகம் செய்யப் பட்ட பலர் பின்னர் இலக்கிய வட்டாரத் விடு கின்றனர். ஒரு சிலர் தம்மைத் தாமே
திலிருந்து காணாமல் போய்
தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
மலர் சம்பந்தமாக ஏராளமான வேலை உங்களுக்கு இருக்கும். யாராவது இலக்கிய நண்பர்கள் உங்களின் இந்தப் பாரத்தைச் சுமக்கும் போது தோள் கொடுத்து உதவுகின்றனரா?
எம்.கருணைநாதன்
24
வணக்கம். தங்களது சுயசரிதை வித்தியாசமானது. ஏனைய வாழ்க்கை வரலாறுகளில் பெரும்பாலும் சாதனை களே பட்டியலிடப்படுவது வழக்கம். ஆனால் தங்களது சரிதையோவெனில் ஏற்றம், இறக்கம், யாவற்றையும் வெளிக்காட்டுகிறது.
பலம், பலவீனம்
உங்களது சொந்த வாழ்க்கை வாசகர் முன்பு விரித்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்நூல் தொடர்பாகச் சில விட யங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.
தங்களது சரிதையில் ஆரம்ப கால ஆசிரியர்கள், உங்களை உருவாக்கியோர், நண்பர்கள், பார்த்த திரைப்படங்கள், பிடித்த நடிகர்கள், மகன் திலீபன் எனப் பல்வேறு விடயங்
காதல் விவகாரம்,
களைக் காணக் கூடியதாக உள்ளது. ஆயி னும் இன்னும் இரண்டு விடயங்களை அங்கு தேடினேன். இல்லை. தங்களது மற்றப் பிள்ளைகள் பற்றிய விபரம். திலீபனுக்குக் கிடைத்த முக்கியத்துவம் ஏன் மற்றப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட வில்லை? தங்களது வாழ்க்தைத் துணை. அவர் இலக்கிய ரசனை உள்ளவரோ இல் லாதவரோ, படித்தவரோ, படிக்காதவரோ உங்களது வளர்ச்சியில் அவருக்கும் ஒரு பங்கிருப்பதனை நீங்கள் மறுக்க முடி யாது. அவரைப் பற்றிய எந்த விபரமும் தங்களது சரிதையில் குறிப்பிடப்படாமல் முற்று முழுதாக இருட்டடிப்புச் செய்யப் பட்டுள்ளார்.
"எஸ்.பொ."வைப் எழுத்தில் கடுமை யாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் சண்டைக்கு வரமாட்டாரா?
- க.பீற்றர்
VN

25
6)
வாழிய
நலமுடன் ஒவ்வொரு மாதமும் தங்களிட
வணக்கங்கள்
மிருந்து கிடைக்கப் பெற்று வரும் மல்லிகையை நுகர்ந்து வருகின்றேன். மகிழ்ச்சி. நன்றிகள்!
"மல்லிகை கிடைத்தவுடன் என்ன வேலையிருந்தாலும் சரி அப்படியே போட்டு விட்டு மல்லிகையைப் படித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். மல்லிகையின் சகல இதழ்களும் நறு மணம் பரப்பி நிற்பது குறிப்பிடக் கூடியதே. மட்டுமல்லாது அறிஞர்களின் கலைஞர்களின் படங்களை அட்டைப் படமாகத் தாங்கி வருவதும் மல்லிகைக் கொரு சிறப்பம்சமே.
இருந்தும் எனக்கு ஒரு சிறு வருத்த முண்டு. என்னவெனில் தொடர்ந்து குறிப்பிட்ட எழுத்தாளர்களின் ஆக்கங் கள் மட்டுமே பிரசுரமாகிக் கொண்டு வருகிறதே, புதியவர்களுக்கும் மல்லிகை
சந்தர்ப்பம் கொடுக்கலாமே என்பதுதான்.
மேலும், அச்சுத்தாளினூடாக ஓர் அநுபவப் பயணம் என்னும் தங்களின் அனுபவத் தொடரில் தங்கள் சாதனை, சோதனை, வேதனைகளை எழுத்தினூ டாகச் சகலரோடும் பகிர்ந்து கொள்வது பற்றியும் மகிழ்ச்சி.
இகழ்தல், அவமதித்தல்கள் மனதில் நீங்காத வடுவாக பதிந்து ரணமாகி அதுவே காலப்போக்கில் வாழ்க்கையின் வெற்றிப் பாதைக்கு வழியாக ஆகிச் சாதனைகள் பல புரிந்து சாதனையாள ராகத் திகழ்வதற்கு எத்தனையோ வித மான சம்பவங்கள் காரணமாக அமைந்து விடுகிறது. உள்ளத்துறுதியில்லாத சில
ரின் வாழ்க்கைப் பாதை மாறிய பயண
மாகவும் போயிருக்கிறது. தங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் தங் களுக்கு எப்படியான மனத்தாக்கத்தை யும், அதன் வழியே வந்த ஊக்கத்தையும், உறுதியையும் உயர்ச்சியையும் பற்றி ஒவ் வொரு மல்லிகையினூடும் அறிந்து நான் தங்களைப் பற்றி எங்களூரில் உள்ள இலக்கிய ஆர்வலர்களிடம் பாராட் டியும் தங்களையொரு முன்னோடி யாகவும் சுட்டிக் காட்டிப் பேசுவதுண்டு. தீமையிலும் நன்மை உண்டு என்பது உண்மையன்றோ.
வாழையே வெட்ட வெட்டத் தழைக்
கும் போது நாம் ஆறறிவு படைத்த
மனிதர்கள். குட்டக் குட்டக் குனிவது வீரமுடன் நிமிர்ந்து உயர்ந்து நிற்க வேண்டும் என்று சொல்
கோழைத்தனம்.
வது போல் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வு களைக் கூறி நிற்கிறது தங்களின் அச்சுத்
தாளினூடாக ஒர் அநுபவப் பயணம்
(பவனி) என்னும் பகுதி.
மல்லிகையின் இடையறாத மலர்வு மூலம் தாங்கள் உலகிலேயே ஒரு அரும்
பெரும் சாதனை புரிந்துள்ளீர்கள்.
நிச்சயம் கின்னஸ் புத்தகத்தில் தங்கள் பெயரும் விரைவில் பொறிக்கப்பட்டு சாதனையாளராக மிளிரப் போகிறீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி. அதற்காக முன்கூட்டியே வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் கூறுவதோடு மேலும் தங்கள் இலக்கிய உலகிற்கு ஆற்றிவரும் பணி தொடரவும் இறைவனைப் பிரார்த் திக்கின்றேன். இத்தோடு எதிர்வரும் ஜனவரியில் மலர இருக்கும் நாற்பதாவது ஆண்டு மல்லிகைக்கும் வாழ்த்துக்களும், வரவேற்பும் கூறி விடை பெறுகிறேன்.
- லோகேஸ் கிருஷ்ணமூர்த்தி
5 yeSG)
S

Page 15
26
முல்லிகை ஜீவா மனப்பதிவுகள்
சில குறிப்புகள்
- இளைய அப்துல்லாவற்
வாழ்வனுபவங்கள் தொடர்பான
{###f ###}} சுவாரஸ்யங்கள் அற்புதம். ஒவ்வொரு மனித
திருவன அடால் னுள்ளும் ஒவ்வொரு அற்புதங்கள் குவிந்து போய் கிடக்கும். அதனை வெளிக்கொணர எல்லாருக்கும் தெரியாது. ஒரு மூடை தூக்கு பவரின் வாழ்க்கையின் அனுபவங்கள்,
சுவடுகள், ஏமாற்றங்கள் ஏய்ப்புகள், பண் பாடுகள், குடும்பம் என்று பார்த்துக் கேட்டு எழுதினால் ஒரு அற்புதக் குவியலே கிடைக்கும். அது வித்தியாசமான படிப்பினைகளையும் பக்குவத்தையும் கொண்டுவந்து தரும்.
ஒரு ட்றைவரின் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். ஒரு கமக்காரரின் வாழ்வு சுவை நிரம்பியதாய் இருக்கும். உண்மையில் அனுபவம் என்பது பகிரப்பட வேண்டியது.
டொமினிக் ஜீவாவின் வாழ்வனுபவங்கள் ஒரு சந்ததியின் கதை மட்டுமல்ல, அடக்குமுறையில் இருந்து பீறிட்டு வந்த எழுச்சி. டொமினிக் ஜீவாவைப் பார்த்து அவருடனான அனுபவத்தை ஜீவானோடு எழுதியிருக்கிறார், கமால்.
எளிமையான மொழி நடையால் ஒரே மூச்சில் படித்து முடித்து விடக்கூடிய நேர்த்தியாக இருக்கிறது. நான் இப்படி ஒரு பிரமுகரின் வாழ்வனுபவத்தை படிப்பது இரண்டாவது முறை. முதலில் டில்லியைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தின் ஆரம்ப கர்த்தா இல்யாஸ் ஹஸ்ரத் அவர்களின் வாழ்க்கையை அவரோடு இருந்த ஒருவர் பார்த்து பார்த்து எழுதியிருந்தார். வலு சுவாரஸ்யமாகவும் படிப்பினை நிறைந்ததாகவும் இருந்தது.
 

27
ஜீவாவின் மீதுள்ள அளவு கடந்த பிரியத்தை மனப் பதிவுகள் கட்டுரைகளில் பதிய வைத்திருக்கிறார், கமால், ஒருவர் பார்த்து அனுபவித்து எழுதுவது என்பது இன்னொரு பார்வை. தானாக தன்னனு பவங்களை பதிவதென்பது உண்மை யானதும் விரிவானதாகவும் விளக்க மாகவும் அமையும் என்பதற்கு "அச்சுத்
| ş தாளின் ፰ጋ@ff፱ - ITm.. ஒா giuG I Litu600LD
தொடர் சான்றாகும்.
திக்குவல்லை கமாலின் அநுபவ முதிர்ச்சியும், செறிவும் இந்தக் கட்டுரைகளில் மிகத் தெளிவாகப் புலப் படுகின்றது.
ஜீவா பற்றிய இன்னும் சொல்லப் படாத குறிப்புகள் பல இருக்கும்.
அவரின் உணவுப் பழக்க வழக்கங்கள்
ஒரு ஆரோக்கிய மனிதரின் தேவைக்கள வானதாக இருக்கும். இப்பொழுதும் உறுதியுடன் ஒடியாடி வேலை செய்ய முடிகிறது அவரால்.
அதனால்தான்
நான் ஒன்றைக் கண்டேன். ஜிவா ரீ குடிப்பது செட்டியார் தெருவிலுள்ள செட்டி நாடு ரெஸ்ரூரண்டில் என்று ஒரு முறை அவரோடு தேநீர் குடிக்கச் சென்ற போது சொன்னார். அவருக்கென்றொரு மூலை மேசை இருக்கிறது. அதில் காலை வேளை வலப் புறக் கதிரையில் இருப் பார். மாலை வேளை அதற்கு எதிர்ப் பக்கம் இருந்து ரீ குடிப்பார்.
ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஒழுங்கு அவரை வாழ்வின் ஒழுங்கில் தொடர்புபடுத்தும். இதனை அனுபவ பூர்வமாக ஜீவாவில் கண்டிருக்கிறேன். ஜிவா எப்பொழுதுமே நான் நேசிக்கும்
ஆதர்ஷமான மனிதர். கமாலைப் போல
இன்னும் எத்தனையோ பேர் ஜீவாவோடு பழகியிருப்பார்கள். அவர்களது மனப் பதிவுகளை எழுத வேண்டும். ஒவ்வொரு வருடைய பார்வையும் ஒவ்வொரு
கோணத்தில் இருந்து வரும்.
கமாலுக்கு வாழ்த்துக்கள்.
மனதார at 637

Page 16
8
நடராஜா தமிழ்ப் Lரத்திரம் ஏற்று நழத்த ஒரே சிங்கார நழகர்
தாமினியொன்சேதா
- ஏ.எஸ்.எம்.நவாஸ்
இந்தியாவை எடுத்துக்கொண்டால்
வடக்கில் ராஜ்கபூர், திலீப்குமார், சுனில்தத், ராஜேந்திரகுமார் என்று சிலர் தமது சிறந்த நடிப்பு, திறமை என்ற முதலிட்டினால் முன்னுக்கு வந்தார்கள்.
தென்னகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, மேஜர் சுந்தர்ராஜன் என்று சிலர் மேடை நாடக அனுபவங்களினூடாக நிறைந்த தேர்ச்சி பெற்றுத் திரையுலகில் நுழைந்து முத்திரை பதித்தவர்கள்.
ஆனால் எந்தவொரு மேடை நாடக அனுபவமும் இல்லாமல், இயக்குநராக வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்த காமினி பொன்சேகாவுக்கு அவரது இருபதாவது வயதில் இலங்கையில் ஒரு சத்யஜித்ரே என்று அழைக்கப்படும் லெஸ்டச் ஜேம்ஸ் பீரிஸின் படைப்பு, இயக்கத்தில் உருவான “ரேகாவ" (ரேகை) என்னும் படத்தில் முதன்முதலாக நடிக்கத் கிடைத்தபோது அவருக்குப் போதிய நடிப்புத் தீனி வழங்கப்பட்டிருக்கவில்லை. லெஸ்டரின் படத்தில் நடித்தோம் என்ற திருப்தி மட்டுமே கிடைத்தது. 1956இல் இப்படம் வெளியானது.
சாத்திரம் என்பது ஏதோ ஒரு குருட்டுவாக்கினால் சாத்தியமாகிறது. ஆனால் அது மெய்யல்ல. அதனால் நம்பிக்கை கொள்வதால் உயிர்ப்பலி போவதும் உண்டு என்கிற யதார்த்தத்தை உணர்த்திய "ரேகாவ' படத்தில் ஒரு பாகத்தில் நடித்திருந்தவர் மறைந்த காமினி பொன்சேகா. சிங்கள சினிமாவில் தமிழகத்து அல்லது இந்திய சாயல் விழுவதை அடியோடு மாற்றிய படம் இந்த "ரேகாவ". லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் உன்னதமான படைப்பு என்பதால் அவருக்கு விருதையும் பெற்றுக் கொடுத்தது.
 

29
காமினிக்கு மூன்றாவது படமாக லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் படமே அவரை அடையாளப்படுத்தியது. என்பதே அப்படம். 1960இல் வெளியான
"சங்தேசய?
இப்படம் காமினி என்ற நடிகனிடமிருந்த இயல்பான திறமைகளை வெளிப்படுத் தியது. அதைத் தொடர்ந்து கம்பெரலிய" (கிராமப் பிறழ்வு) என்ற சிங்களப் படம் காமினியை விருதுக்குத் தகுதியான ஒரு நடிகராக அவரை மாற்றியது. பிரபல சிங்கள எழுத்துலகப் படைப்பாளி மார்டின் விக்கிரமசிங்காவின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை இயக் ' கியவரும் பேராசிரியர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்தான். 1963இல் வெளியான இப் படம் சர்வதேச மட்டத்தில் தங்கமயில் விருதை வென்றெடுத்தது. இலங்கையில் சிறந்த நடிகருக்கான விருது காமினிக்குக் கிடைத்தது.
காமினி என்ற ஆதர்ஷக் கலைஞன் சிங்கள சினிமா தட்டுத் தடுமாறி, தடம் புரண்டு போவதை விரும்பவில்லைப் போலும், தனக்குரிய பாத்திரங்களை மிகச் சிந்தித்து முடிவெடுத்துத் தரமான படங்களில் நடிக்கவே தலைப்பட்டார் என்பதற்கு உதாரணமாக அவர் நடராஜா என்ற தமிழ்ப் பாத்திரத்தை ஏற்றுத் தமிழில் பேசி நடித்த "சருங்கலே’ என்ற மிகச் சிறந்த படமாகும்.
இவருக்குரிய தமிழ் வசனங்களை நம்நாட்டின் பெண் எழுத்தாளர் யோகா பாலச்சந்திரன் எழுதியிருந்தார்.
ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழனிட மிருந்த மிடுக்கு, நடை, பாவம், பேச்சு இதில் காமினியிடம் தெரிந்தது.
‘தெனாலியில் கமலஹாசன் யாழ்ப் பாணத் தமிழ் பேசி நடித்தாராம் (?). ஆனால் அது ஏதோ நகைச்சுவைக்குப் பொருத்தப்பட்ட ஒரு விகடப் பாத்திர மாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் ‘சருங்கலே"யில் காமினியின் நடராஜா' பாத்திரம் அப்படிப்பட்டதல்ல! பேரின வாதச் சுற்றுச் சூழலில் ஒரு தமிழ் மக னாக, அரச ஊழியனாக ஒரு குடை, கண்களில் மூக்குக் கண்ணாடியுடன் சுற்றி வரும் அப்பாத்திரம் அனுதாபத்தை மாத்திரமே எடுத்துக் கொண்டது. சுனில் ஆரியரத்ன இப்படத்தை மிகத் திறம்பட இயக்கியிருந்தார்.
'நிதானய" (புதையல்) என்கிற படமும் மசாலாத்தனங்களுக்கு அப்பாற் பட்ட ஒரு கதாநாயகனைப் படம் பிடித்துக் காட்டியது. அந்த நாயகன் காமினிதான்.
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய தரமான படைப்புகளில் இதுவும் ஒன்று. காமினியுடன் மாலினி பொன்சேகா இணைந்து நடித்திருந்தார்.
புதையல் ஒன்று கிடைப்பதாக நம்பிக் கொண்டு தான் பெற்ற பிள்ளை யைப் பலி கொடுக்கத் துணியும் ஒரு தந்தையின் உணர்வுகளை இப்படத்தின் மூலம் காமினி பொன்சேகா வெளிப் படுத்தி இருந்தார். நமது ஊர்க் கிராமங் களில் இன்றும் நடக்கும் ஒரு மூடத் தனமான கொள்கையான புதையல், நர பலி என்ற பொய்யான எதிர்பார்ப்பு களைச் சித்திரித்து அவை பொய்யெனச் சமூகத்துக்கு உணர்த்திய படம்.
:) 06ത8
t

Page 17
இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த சில சிங்கள சினிமாக்கள் காமினி என்ற சிறந்த நடிகனின் திறமையை மழுங் கடித்த போதும், தனக்குத் திருப்தி வராத கட்டத்தில் தானே சில படங்களை இயக் கவும் செய்தார். அவற்றுள் 'சாகரயக் மெத', 'கொடிவலிகய', 'நொமியன மினிசுன் போன்ற படங்களைக் குறிப் பிடலாம். இம்மூன்று படங்களை எடுத்துக் கொண்டால் ‘காமினி என்ற மனிதாபிமானி தெரிவார்.
தமிழினத்துக்கு எதிரான பேரின வாதத்தின் அடக்க, ஒடுக்கு வாதங்களை பச்சையாகவே தோலுரித்துக் காட்டிய படங்கள் எனலாம். இதனால் இப்படங் கள் பேரினவாதக் கோஷங்களுக்கும், குழப்பத்துக்கும் தீனியாகியது. எதிர் பார்த்த ஆதரவைச் சிங்கள மக்கள் இதற்கு அளிக்கவில்லை. தமிழ் ரசிகர் களிடமிருந்தும் சரியான அங்கீகாரம் கிட்டவில்லை என்றும் சொல்லலாம்!
அரசியல் பதவிகளில் அதிகம் நீடிக் காத ஒரு அரசியல்வாதியாகவும் இவர் இருந்திருக்கிறார். அவ்வாறே அவர் துறந்த வடக்கு கிழக்குக்கான ஆளுநர் பதவி. மற்றும் பிரதி சபாநாயகர் பதவி.
மறைந்த காமினி பொன்சேகா தென் னிந்தியா சென்றும் ஒரு தமிழ்ப் படத்தில் நடித்தார். கே.சங்கர் இயக்கிய நீலக் கடலின் ஒரத்திலே இதுதவிர இலங்கை யில் தயாரான இளைய நிலா. இப்படம் முழுமையடைந்த நிலையில் திரைக்கு வரும் முன்பே ஜூலை இனக் கலவரம் படச்சுருள்களையும் பதம் பார்த்து விட்டது. காமினி என்னும் நடிகனிடம்
30
சரளமாக ஆங்கிலம் பேசும் திறமையும் இருந்தது. அதனால் சில ஆங்கிலப் படங்களில் நடிக்கவும் சந்தர்ப்பம் கிட்டி யது. ராம்பேஜ்' என்று இங்கு தயாரிக்கப் பட்ட ஆங்கிலத் திரைப்படத்தில் காட்டு இலாகா அதிகாரியாக நடித்து தனி முத்திரை பதித்தார். மிகக் குறைவான நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் படம் முழுவதும் நிறைந் திருந்தவர் காமினி பொன்சேகா. வித்தி யாசமான அசைவுகளை இதில் அவர் செய்திருந்தார். மார்லன் பிரோண்டாவால் தான் முடியுமா. தன்னால் முடியாதா..? என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித் திருக்கிறார். ஆங்கில நடிகர் ஒமர் ஷெரீப் பாணியில் மிகை இல்லாத அமைதியான நடிப்பே அப்படத்தில் தெரிந்தது.
சினிமாவில் அவருக்குப் பிடிக்காத விஷயம் பாடல்கள் புகுத்துவது. தான் பல தயாரிப்பாளர்களிடம் இது பற்றி விபரித்திருக்கிறார். தனது படத்தில் தனக் குப் பாடல்கள் அதிகம் வேண்டாம் என வும் பலமுறை வேண்டுகோள் விடுத்திருக் கிறார்! அப்படியும் மீறி அவரால் பாடல் களுக்கு ஆடி நடிக்கச் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. பொதுவாக காமினி தான் எடுக் கும் படங்களில் பாடல்கள் புகுத்துவ தில்லை. பாடலின்றிச் சில படங்களில் நடித்துமுள்ளார். ஆசிய சினிமாவை சரி யான ஒரு எல்லைக்கு இட்டுச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள், செயல் முறைகள் பராட்டத்தக்கது.
உண்மையான கலைஞன் இறப்ப தில்லை. மீண்டும் பிறக்கிறான். அது காமினி பொன்சேகாவுக்கும் பொருந்தும்.
ஒUதுை

31
1. கெளசிகனின் பணியும்
டுரு இளம் ஓவியர்களது ஆற்றல்களும்
அண்மைய ஈழத்து இலக்கியப்
பிரதியின் பரப்பில் பல்வேறு புதிய தரிசனங்களின்
வருகை மிகவும் அதிகரித்த வண்ணம்
இருக்கிறது. குறிப்பாக, வடக்கு கிழக்கு
முறு/ பிரதேசங்களில் பலவிதமான காத்திரமான
கலை இலக்கிய முயற்சிகள் குறிப்பாக,
G4P 77 க்க O திரைப்படம், ஓவியம், கலைத்துறை
று/ կ 67 முயற்சிகளில் தமிழ் பேசும் மக்கள் பங்
காற்றும் அளவுக்கு, தென்பகுதியில் மேற்
. மேமன்கவி குறித்த துறையில் தமிழ்ப் பேசும்
மக்களின் ஈடுபாடு குறைவாகவே இருக்
கிறது. அத்தகைய குறையைத் தீர்க்க, வட கிழக்கைச் சார்ந்தவர்களின் ஒவியக் கண்
காட்சிகள் அவை பற்றிய ஒரு பரவலான அறிதலும், இங்குள்ள ஓவிய ரசிகர்களுக்குக்
கிடைப்பதில்லை. அதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த வட மற்றும் கிழக்கைச்
சார்ந்த ஒவியர்களான வாசுகி ஜெய்சங்கர், கிக்கோ ஆகிய இருவரதும் ஒவியக்
கண்காட்சி பற்றித் தென்பகுதி ஒவிய ரசிகர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? என்பதும் கேள்விதான்.
இத்தகைய சூழலின் மத்தியில் தென்பகுதி தமிழ் பேசும் மக்களின் ஒவியத்துறை சார்ந்த பங்களிப்பை எடுத்துக் காட்டும் வகையில் தனதும் தனது மாணவ மாணவி களினதும் ஒவியங்கள் கொண்டதுமான கண்காட்சிகளை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறார் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் என்.எஸ்.எம்.ராமையாவின் மகன் கெளசிகன் அவர்கள். கெளசிகன் அவர்கள் உருவப் படம் திறன் மிக்கவர்.
இரண்டாவது முறையாக நடந்த ஓவியக் கண்காட்சி இம்முறையும் கொழும்பு Lionel Wendt அரங்கில் கடந்த செம்டெம்பர் 24ஆம் திகதி முதல் 26ஆந் திகதி வரை நடந்தது. கெளசிகன் இம்முறை கண்காட்சியில் கடந்த முறையை விட, கூடுதலான தனது மாணவர்களின் ஒவியங்களை இம்முறைக்கான கண்காட்சியில் இடம்பெறச் செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு கெளசிகன் ஏற்பாடு செய்திருந்த முதலாவது கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அவரது ஓவிய மாணவிகளான ராஜி மற்றும் rumjhum போன்ற மாணவிகளின் ஒவியங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அத்தோடு அவ்விருவரது புதிய ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன. அந்தப் புதிய ஒவியங்கள்

Page 18
மூலம் அவ்விரு வரும் தங்க ளது தேர்ச்சியினைக் குறிப்பாக, ஒவியங்கள் வரையும் பாணிகளிலும், ஒவியத்தில் சொல்ல எடுத்துக் கொண்ட விடயத்திலும் காட்டி நின்றார்கள்.
அதேவேளை இம்முறை கண்காட்சி யில் இணைந்து கொண்ட கெளசிகனின் மாணவியான அனுஜா எனும் பெண்மணி யின் ஒவியங்கள் மூலம் அந்த இளம் ஒவியர்களின் மத்தியில் அவரைச் சற்று வேறுபடுத்திக் காட்டியது. எதிர்காலத்தில் இவர் ஒரு சிறந்த ஒவியராக மிளிரக் கூடியவர் என்ற நம்பிக்கையை அக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இவரது ஒவியங்கள் நிரூபித்தன.
அதேபோன்று, இம்முறை கண் காட்சியில் இடம்பெற்றிருந்த கெளசி safair sourisashai Wearly Traveler எனும் தலைப்பிலான ஒரு முதியவரைக் கொண்ட உருவப் பட ஓவியம் மனதைக் கவர்ந்தது. உருவப் படங்கள் வரைவதில் தனித்துவத்தை வளர்த்துள்ள கெளசி கனின் பாணி அந்த ஒவியத்தில் இருந் தாலும் வர்ணத் தேர்வில் கெளசிகன் சற்று வித்தியாசமாக வெளிப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
மற்றும் சவிதா, சாய் சுதன், ராகுலன், பிரசாத், மயூரி, செந்தூரன் மற்றும் அபினேஷ் போன்ற தனது இளம் ஒவிய மாணவர்களின் ஒவியங்களையும் இக்கண் காட்சியில் இடம்பெறச் செய்திருந்தார். அந்த ஒவியங்களின் மூலம், இந்த இளம் ஒவியர்கள் ஒவியத் துறையில் ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள் எனத் தெரிந் தாலும், ஒவியத்துறையில் பல்வேறு பரி
32
சோதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் ஒவியர்கள் எல்லோரிடமும் இருக்கிறது என்பதை அவர்களின் ஒவியங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் சிற்சில தனித்துவமான L- gil 60 LD unt65T வெளிப்பாடுகள்
நிரூபித்தன.
ஒரு கலைக் கல்லூரி போன்ற நிறு
வனம் செய்ய வேண்டிய பணியினைக் கெளசிகன் போன்ற தனிமனிதர் நின்று செயற்பட்டு இவ்வாறாகப் பல புதிய ஒவியக் கலைஞர்களை உருவாக்குவது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
ஆனால், கெளசிகனின் இந்தப் பணி யிட்ட தகவல் பரவலாக நமது தமிழ் கலை இலக்கிய வட்டாரத்திற்கு தெரி யாமல் இருப்பது பெரும் குறையாகும். அவ்வாறு கெளசிகனின் இத்தகைய பணி யினைப் பற்றிப் பரவலாக அறிய வைப்பதும் நமது கடமை ஆகிறது என்றாலும், கெளசிகன் இத்தகைய அடுத்த முயற்சியின் போது, அதைப் பற்றிய தகவலைத் தமிழ் கலை இலக்கிய சமூகத்தினருக்குப் பரவலாக அறிய வைப்பதும் முக்கியமான ஒரு தேவை யாகும். இந்த தேவை நிறைவேறும் பட்சத்தில் கெளசிகனதும் அவரது ஒவியத்துறை மாணவர்களும் ஒவிய முயற்சிகளைப் பற்றிய ஒரு பரவலான அறிமுகமும், ஒரு அவதானமும் ஏற்படும் என நம்பலாம்.
அத்தோடு நண்பர் கெளசிகன் தனது மாணவர்களைக் கொண்டு ஒவியத் துறைக்கான ஒர் அமைப்பை உருவாக்கி, தேசத்தின் பகுதிகளுக்கும் இந்த இளம்
N

ஒவிய ஆற்றல்களைக் கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுதுதான் மிகவும் சிரமம் எடுத்துத் தனிமனிதனாக நின்று இத்தகைய ஓவிய ஆற்றல்களை வழி நடத்தும் கெளசிகனினதும் அவரது இளம் ஒவிய ஆற்றல் களினதும் ஒவியத் துறை சார்ந்த பங்களிப்பு நாடளாவிய ரீதியாக தெரியக் கூடியதாக இருக்கும்.
2. புதிதாய்ப்புத்தகம்
வெளியிடுபவர்களையிட்டு.
இன்று இலங்கையில் பல நூல்கள் வாரந்தோறும் வெளிவந்து கொண்டிருக் கின்றன. அச்சு ஏற்றும் வசதிகள் பெருகி
விட்டதனால் யாரும் புத்தகம் போடலாம்
எனும் நிலை!
இன்னார்தான் கலை இலக்கியம் படைக்க வேண்டும். இன்னார்தான் புத்தகம் போட வேண்டும் என்று யாரும் ஜனநாயக யுகத்தில் உத்தரவு போட முடியாதுதான். ஆனால், தனக்கு எந்தத் துறை கைவரக் கூடியது, தன்னுடைய நூல் மூலம் தான் பிரவேசிக்கும் களத்தில், கலை இலக்கியம் மட்டுமல்ல வேறு துறை ஆயினும் எந்த அளவுக்கு தான் வெளியிடும் நூல் தாக்கத்தையும் அவ தானத்தையும் ஏற்படுத்துகிறது என் பதையும் உறுதி செய்து கொண்ட ஒருவர் புத்தகம் போட முனைவதே நல்லது.
பல்வேறு சிரமப்பட்டு ஒரு நூலை வெளியிடும் பொழுது, இறுதியில் அந்த நூல் எந்தவிதமான அவதானத்தையும், கவனத்தையும் ஏற்படுத்தாத பட்சத்தில்
அப்படைப்பாளியின் முயற்சி வீண் போகிறது.
அத்தோடு இன்றைய புத்தகங்களின் அமைப்புகளைப் பொறுத்தவரை பல்' வேறான லே-அவுட் நுட்பங்கள், பல் வேறு நாடுகளிலிருந்து வரும் நூல்களைப் ‘இன்னும் நான் ஊதுபத்தி பெக்கெட்டின் வர்ண வெளிப்
பார்த்த பின்னும்,
பாட்டில் தான் எனது நூலின் அட்டைப் படம் போடுவேன்' என அடம் பிடிக் கின்ற நண்பர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
தனக்கு என்ன துறை கைவரும் என்பதை ஒவ்வொரு படைப்பாளியும் தனக்குள் சுய பகுப்பாய்வு செய்து கொண்டு எழுத வரவேண்டும். அவ் வாறாகச் சுய பகுப்பாய்வு செய்யாமல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் (குறிப்பாக புத்தக ரூபத்தில்) படைப் பாளிகள் பின் கடுமையான விமர்சனத்தை சந்தித்ததும் தளர்ந்து போய்விடுகிறார்கள்! பிறகு அங்குமில்லை. இங்குமில்லை என்ற நிலைதான்.
எதிர்காலத்தில் புத்தகம் போட முனைபவர்கள் இந்தச் சிந்தனைகளை மனங்கெள்வது நல்லது.
3. தமிழச்சியின் கவிதைகள்
எந்தவொரு படைப்புக்கும் அப்படைப்பை படைக்கின்ற படைப் பாளியின் சொந்த அனுபவத்தின் அடைப் படையில் படைக்கின்ற பொழுதுதான் அப்படைப்பு மிகவும் காத்திரமாகவும் மனசைக்
கிள்ளும் வகையிலும்
VIS

Page 19
அமைகிறது. அத்தோடு குறித்த அனுபவம் படைப்பாளியை வாட்டும் பொழுது மற்ற நிகழ்வுகளுடன் அந்த அனுபவத்தை இணைத்துப் பார்க்கை யிலும் ஒரு படைப்பு நமக்கு கிடைத்து விடுகிறது. அவ்வாறான பல கவிதைப் படைப்புகளைக் கொண்ட தொகுப்பான தமிழகத்துப் பெண் கவிஞரான தமிழச்சி யின் "எஞ்சோட்டுப் பெண்’ எனும் மகுடத்தில் அழகிய அமைப்பில் அடங்கிய தொகுப்பை ஜீவா அவர்களின் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார். அத் தொகுப்பைப் பற்றி விரிவாக விமர்சனம் எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் மத்தியில் இப்பொழுது உங்கள் ரசனைக்குத் தமிழச்சியின் இரண்டு கவிதைகள் -
ഉ99തക
தின்பதற்கு இனிய மிட்டாய் உடைத்து விளையாட பொம்மை உதறி எறியப் பழங்கள் எல்லாமும் கொடுத்த பின்பும் அம்மாவிற்காய் ஏங்கி அலறி அழுகின்ற படப்பிடிப்பில் பங்கெடுப்பதற்காய் வாடகைக்கு வரவழைக்கப்பட்ட ஏழைக் குழந்தை போல் தவிப்பாய் இருக்கிறது எனக்கு அப்பா உங்களை இழந்துவிட்ட பிறகு கருத்தாய்க் கவனிக்கும் உறவு வலிக்காத மென் சுமையாய்த் தாய்மை அலுக்காத மெல்லிசையாய்க் கவிதை எல்லாமும் இருந்த போதும் சலிக்காமல் என்னைச் சீராட்டிச்
சட்டென்று மரணித்துப் போன
உங்களுக்காய்
இதுவரை அழுகின்ற என்னை
விடாப்பிடியாய்த் தூக்கி
வைத்துக் கொண்டு ஒத்திகை பார்க்கிறது
இந்த வாழ்க்கை!
இடம்
இருக்கை முழுதும் கால் பரப்பியபடி சம்பந்தமில்லாதொரு பாவனையுடன் சொகுசாய்க் கணவன் புத்தகத்தில் முகம் புதைத்திருக்க புகைத்துக் கொண்டிருந்த வெண்சுருட்டை விட்டெறிந்து எதுக்களித்துத் தெறித்த கைக்குழந்தையின் பால் வாந்தியினை முகஞ்சுழிக்காமல் துடைத்துக் கொண்டு இரு கம்பிகள் இணைத்துத் தொட்டில் கட்ட புடவை நுனி பிடித்தும் தூங்கும் குழந்தையில் இடிபடாமல் தன் முழங்கால் குறுக்கியும் இங்கு அமர்ந்தால் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் நிலாவை என்று இங்கிதமுடன் தன் இடமும் விட்டுக் கொடுத்த
அவனை வெறும் இரயில் சிநேகிதம் என்றெப்படி மறக்க?
PS 666):

35
துர கிழக்கு நாடுகளில், கவிதை
தனிநபர் சார்ந்த முயற்சியாக மட்டு
மல்லாமல் சமூக ர்ந்த முயற்சியாகவும்
O கருதப்பட்டது. க முகம் சார்ந்த கவிதை
முலலை முஸ்ரிபாவின் பல்வேறு பாடுபொருளைத் தழுவி
மேலெழுந்தது.
g O en) ås دان M சுதந்திரப் போராட்டம் உக்கிரமடைந்
(ტბუმ / có) துள்ள நாடுகளில் கவிதைகள் இலட்சிய
வேட்கையுடன் கிளர்வூட்டின. அதன்
ισοgώς), இயக்கம் சாமான்ய மனிதனையும்
விடுதலைக்கான நகர்வில் ஒர் அங்குல
மேனும் முன் தள்ளியது. பெயர்த்
அவலங்களின் தலையும் கவிஞர் குழாம் தம் வாழ்விடம்
குறித்த பிரக்ஞையைத் தக்க வைத்துக்
அவசரக்குரல்" கொள்ள கவிதையை ஒர் இயக்கமாகப்
பயன்படுத்தினர்.
- ஒடடமாவடி அறபாத பைஸ் அஹ்மத்பைஸ் 1978லிருந்து
1984 வரை தேசாந்திரியாய்க் காலமாகும்
வரை, அவர் எழுதிய கவிதைகள் மிக
முக்கியமானவை. சமகாலப் பிரச் சினைகள் அதன் அவலங்கள் போன்ற அவலங்களைக் கோபத்தோடும் அதன் அழகு சிதையாமலும் அவர் எழுதினார். இவ்வாறே மஹ்முத்தர் வீசும் பெயர்ந்தலைதலின் அலைச்சலையும், வேர்விட்டு முளைத்தெழுந்த இடத்திற்குத் திரும்பும் அவாவையும் வெளிப்படுத்தும் கவிதைகளை எழுதிக் குவித்தார். நாடு, மொழி, இனம் வித்தியாசப் படினும், கவிதையின் உயிர் மொழி ஒன்றே என்பதை முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்புக் கவிதைத் தொகுதி ஓர் அழுத்தமான செய்தியை நமக்குத் தருகிறது. மஹ்மூத்தர்வீஷின், நிஸார் கப்பானியின் ஆக்ரோஷம் போல், முல்லை முஸ்ரிபாவின் தொப்புள் கொடி வீழ்ந்த மண்ணின் மீதான வெறி கவிதை முழுக்க திமுதிமுவென கவ்விப் பரவியுள்ளது.
1983களுக்குப் பின் ஈழத்தில் எதிர்ப்புக் கவிதைகளின் வரவு அதிகரித்தது. சிங்களப் பேரினவாதத்தினால் மன உளைச்சளுக்குள்ளாகிய தமிழர், அவற்றை கவிதைகளாக வெளிப்படுத்தினர். தமிழ்ச் சகோதரர்களின் குமுறல்களுக்குக் குரல் கொடுக்குமாப் போல் முஸ்லிம் கவிஞர்களும் கவிதைகளால் தைரியமூட்டினர். எம்.ஏ.நுஃமான், எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றோர் இந்தவகையில் மனங் கொள்ளத்

Page 20
தக்கவர்கள். "மரணத்துள் வாழ்வோம்’ துயரங்களின் கவிதைத் தொகுப்பு.
90களுக்குப் பின் தமிழ்ப் பேரின வாதத்தை எதிர்த்துப் பலர் கவிதைகள் புனையத் தொடங்கினர். அவர்களில் முல்லை முஸ்ரிபாவும் முக்கியமானவர்.
வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப் பட்ட மக்களின் துயரங்கள், ஏக்கங்கள், அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்கள், அம்மக்களின் தொடரும் அகதி முகாம் வாழ்க்கை, சொந்த மண்ணின் மீதான காதலின் அடர்த்தி போன்ற இன் னோரன்ன அவலங்களை ஒட்டு மொத்த மாகக் கவிதைகள் மூலம் முல்லை முஸ்ரிபா வெளிப்படுத்தியுள்ளார்.
அகதி முகாமில் அல்லல்பட்டு அடுத்து 'என் செய்வேன்' என இடிந்து போய் வீழ்ந்து விடாமல் ‘கவிதை"யை ஒரு ஊன்று கோலாகவும், ஆயுதமாகவும் முல்லை முஸ்ரிபா பயன்படுத்தியுள்ளார்.
35 கவிதைகள் அடங்கிய இத் தொகுப்பின் கணிசமான கவிதைகள் இடம்பெயர் வாழ்வின் அவலங்களையும், சொந்த மண் மீதான ஏக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன. அடைக்கலம் தந்து அரவணைத்த மக்களை நன்றியுடன் நினைவு கூறும் முஸ்ரிபாவின் குரல் போலியாகவன்றி ஆழ்மனக் கிடங்கி லிருந்து நினைத்திருத்தலாக பொங்கி வழிகிறது? பக்கம் : 67, 'சிறகிலெழுதல்” பக்கம் 63 கடந்த கால நினைவு களையும், மண் மீதான காதலையும், பிரிவின் வலியையும் அற்புதமாகப் பாடுகிறது. சில கவிதைகளில் பல்வேறு
36
தளங்களை ஊகிக்குமாப் போல், அநுபவங்கள் விரிகின்றன. மொழியின் அழகில் லயிக்கும்படியான கவிதைகளில் சிறகிலெழுதலும் ஒன்று.
தவித்த முயலை அடித்துப் பழகிய அரசியல் கூத்தாடிகள் அகதிகளின் வாழ்வையும் மூலதனமாக வைத்து அரசியல் நாடகமாடி வருகின்றனர். இன்று வரை முஸ்லிம் அரசியலின் மகா சாபக் கேடாகவும், இதுதான் நிகழ்கிறது. இந்தப் பொய் முகங்களின் முகத்தில் சாணியடிக்குமாப் போல் பல கவிதை களை முஸ்ரிபா எழுதியுள்ளார். எலிக் கூத்து, ஐம்பத்தைந்தாவது கொடியேற்றம், மையத்தின் புலம்பல், இன்னும் கொஞ்சம் உயிர் வாழும் கனவு, சேவக சேவகம் போன்ற கவிதைகளைக் குறிப் பிடலாம்.
"இன்றும் அலைந்து திரிந்தவன், சைக்கிளில் வளைந்தவன், மோட்டார் சைக்கிளில் பறந்தவன், பஜிரோ பருந்தாகி வட்டமிட்டனன் உயர' பக்கம்: அரசியல்வாதி களின் உரோசமற்ற நரம்புகளைத் தாக்கியழிக்கும் என்ற கனவுகள் முஸ்ரிபா போன்ற பலருக்கும்
33 என்ற சாட்டையடிகள்,
வெறும் 'கானல்தான் என்பதை நிதம் உணர்த்துகிறது.
"என் இளைய அகதிக்கு இத் தொகுதியின் குறிப்பிட்டுச் சொல்லும் படியான கவிதை சொந்த மண்ணிற்கு மீளவும் சென்று வாழும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் துயரக் கவிதை, பெயர்ந்தலையும் மனிதர்கள் சொந்த

மண்ணின் மீதான பற்றுதலையும், அங்கு வாழ்ந்த நினைவுகளையும் மனசில் காவியபடி அவைகளை அசைபோட்டு அலைந்து திரிவதும் சுகமான இன்ப வலி. அந்த வலி முல்லை முஸ்ரிபாவுக்கும் ஏற்படுகிறது.
"வாசல் மர ரோசாவில் பூத்தபடி
வரவேற்றபடி நானிருப்பதாக!" என அவர் முடிக்கின்ற போது அந்த வலியின் அடி நரம்பையும் சுள்ளெனத் தைத்து விடுகிறது.
'கைஸ்' என்ற மஜ்னுன் தன் காதலி லைலாவைப் பிரிந்து புலம்பும் Lin Labsor அறபு இலக்கியத்தில் தனிச்சுவையுடன் பதியப்பட்டிருக்கின்றன. இம்ரஉல்கைஸ் என்ற கவிஞனின் காதல் கவிதைகளிலும் இத்தகைய துயரம் மிகு கவிதைகளை படிக்க முடிகிறது. காதலி பார்த்த நிலாவை இவன் பரவசமாய் லைலாவைக் கண்ட நிலா என உருகி வழிவான். லைலா தடவிய மானையும் லைலா தொட்ட மானே’ எனக் கசிந்துருகுவான். இத்தகைய ப்ரேமை வெறி முல்லை முஸ் ரிபாவுக்கும் ஏற்படுகிறது.
தனது மண்ணையும், வீட்டையும் கண்டு வந்த தோழர்களை அவர் அந்தக் காதலுணர்வுடன் தான் கெளரவிக் கின்றார். தோழர்களை விழித்து விம்மு கிறது 'வச மிழந்த உதயம் பக் 78 என்ற கவிதை,
"உன் வீட்டுக் கிணறு ஊறி வழிகிறது. எமதின் நெஞ்சம் உனதின் நினைப்பிலுாறுவது போலென வாளிபோடக் கிணற்றில் செத்து நாறிக் கிடக்குதொரு கழுகு”
'இருத்தலுக்கான அழைப்பின் மையக் கவிதை போல் "மயூரா" என்றாகி விட்ட நிஸ்மியாவுக்கு பக் 89 என்ற கவிதை வரலாற்று ஆவணமாகிவிட்டது. தமிழர்களின் விடுதலைப் போர் வரலாற் றில் முஸ்லிம்களின் பங்களிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது. முஸ்லிம்கள், புலிகளுக்கு வரி செலுத்தினார்கள். வாழ் விடம் தந்தார்கள். உணவு தந்தார்கள். இராணுவக் கெடுபிடிகளின் போது அடைக்கலம் தந்து போராளிகளை காப் பாற்றினார்கள். உச்சக்கட்டமாக முஸ்லிம் இளைஞர்களே விடுதலைப் போரில் தம்மை இணைத்து மாவீரர்களானார்கள்.
அந்த மக்கள் கவிதையின் உணர்வை உள்வாங்கி படிக்க முடியாதபடி அவரின் “மொழி இறுக்கம்" கட்டிப் போட்டிருக் கின்றது. இதைத்தான் சு.வி. தனது முன்னுரையில் வாய்மொழி மரபின் இலகு வடிவம் சார்ந்த முயற்சிகள் கவிதையை சாதாரண வாசகர் மட்டத் திற்கும் கிட்டக் கொண்டு போகும் என் கிறார் என நினைக்கின்றேன்.
முல்லை முஸ்ரிபாவின் கவிதை களுக்கு கிட்டப் போகச் சாதாரண வாசகன் பயப்படும் வண்ணம்
வளர்ந்து விட்டிருக்கின்றது. அவர்
č UD gCGGGDE:

Page 21
கவிதை மீதான மீள் பரிசீலனை செய்யவும், கவிதையின் சொல்லி றுக்கத்தை தளர்த்துமான முயற்சிக்குத் தன்னை உட்படுத்த வேண்டிய தேவையை இந்தத் தொகுதியின் பல கவிதைகள் உணர்த்து கின்றன.
தவிர, கவிதைகளின் கனதியைப் போல், எழுத்துப் பிழைகளும், 'இருத்தலுக்கான அழைப்பின் அழகை கெடுத்து விடுகிறது.
இருத்தலுக்கான அழைப்பு சதையும் இரத்தமுமான நமது இனத்தின் துயரங்களின் ஒட்டுமொத்த அவலம் நிறைந்த ஆவணம் எனில் மிகையல்ல.
38
GercüTcuncUTuficio
மல்லிகைப்பந்தல் வெளியீடுகள் கிடைக்குமிடம்
நீயூபுக் லாண்ட் 52C, நோர்த் உஸ்மான் ரோடு, சென்னை - 17.
2
கலாசார
மகிழ்கின்றது.
பாராட்டுகின்றோம்.
சென்ற ஆண்டுப் படைப்புகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும், இவ்வாண்டு இலங்கைச் சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களையும், வடக்கு - கிழக்கு கல்வி,
விளையாட்டுத்துறை அமைச்சு யாழ்ப்பாணத்தில் நடத்திய விழாவில் கெளரவ விருதுகள் பெற்றவர்களையும், பரிசு பெற்றவர்களையும் மல்லிகை பாராட்டி
அண்மையில்
- ஆசிரியர்
তত্ত্ব
ウ DEGGGGDE
 

39
Z 凹NM厄lö凹U闵f凹
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
30.
31.
32.
Q
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு (2ஆம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் - (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா கார்ட்டுன் ஒவிய உலகில் நான் - (2ஆம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் - (யாழ் பல்கலைக்கழக 13 மாணவ மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாவற் முப்பொரும் தலைநகரங்களில் 30 நாட்கள் (பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் - முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் - (ஹைக்கூ) பாலரஞ்சனி
அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை
அலங்கரித்தவர்களின் தொகுப்பு)
சேலை - முல்லையூரான் மல்லிகைச் சிறுகதைகள் - (30 சிறுகதைகள்) செங்கை ஆழியான் மல்லிகைச் சிறுகதைகள் - (41 சிறுகதைகள்) செங்கை ஆழியான் நிலக்கிளி - பாலமனோகரன் நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் - டொமினிக் ஜீவா நாம் பயணித்த புகைவண்டி - (சிறுகதைத் தொகுதி) - ஆப்டீன் தரை மீன்கள் - ச.முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான்
அப்புறமென்ன - குறிஞ்சி இளந்தென்றல் அப்பா - தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து - எம்.கே.முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் 25 - தொகுத்தவர் செங்கை ஆழியான் இந்தத் தேசத்தில் நான் - கவிதைத் தொகுதி (பேராதனைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் கவிதைகள்)
9േക് ပÁ;?)ဇံဃ 9్కంగా 6ીડીટી (જીજા الأهددهم
விலை
விலை
விலை
விலை
விலை
sists)
விலை
விலை
silsons)
விலை
விலை
விலை 6660so
விலை
விலை
விலை விலை
விலை
விலை
விலை
விலை
விலை
விலை
Undrawn Portrait for Unwritten Poetry - QLITLSafs garrsasi,
வாழ்க்கை வரலாறு ஆங்கிலப் பதிப்பு டொமினிக் ஜீவா சிறுகதைகள் அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு - 2ஆம் பாகம்
விலை விலை
விலை
250A
14.0/-
180/-
175/-
1.10/-
100/-
110/-
50/.
60/-
175/-
150/-
275/-
350/-
14.0/-
150/-
150/-
150/.
150/-
120/-
130/-
140/-
150/-
115/-
200/-
350/-
200/-

Page 22
வானம்
பாடிகளின்
நடுவே
ஒா
ஊமைக்
குயில்
- TOI. UMGUéläJ85s -
40
'ஒல்றவுண்டர் வீ.ஏ.கயூர்
"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம் தகுதியான் வென்று விடல்"
உலகை வழி நடத்தும் பொது மறை திருக்குறள் என்பது உலகோரின் ஏகோபித்த கருத்தாகும். இதன் வழி நின்று வாழ்வில் வெற்றி
கண்டவர்கள் ஏராளம்!
பணம், அதிகாரம் என்பவற்றால் திமிர் கொண்டு மற்றவர்களுக்குத் தீங்கிழைப்போரைப் பண்பான செயல்களின் மூலமாகவே வென் றெடுக்க வேண்டுமென மேற்படி குறள் திசை வழி காட்டுகின்றது. இந்தத் திசை வழியில் தனது வாழ்வை நெறிப்படுத்தி, மெளனத்தையே தனது பேராயுதமாக்கி வாழ்க்கையில் தனது இலக்கைச் சென்றடைந்த ஒரு பிரபல ஒலிபரப்பாளரை வாசகர்கள் சந்திக்க இருக்கின்றனர்.
"சார், உங்கட அணவுன்ஸ்மென்ற், எனக்கு அகில இந்திய வானொலியின் ஸ்ரூடியோ ஒன்றுக்குள்ளிருந்து கச்சேரி பண்ணிய உணர்வைத் தந்தது". இப்படிச் சொன்னவர் சாமானியமான ஒருவரல்ல. சங்கீத உலகம் சிகரத்தில் வைத்து ஆராதிக்கும் பிரபல சங்கீத வித்துவான் பத்மபூரீ பாலமுரளி கிருஷ்ணா இந்தச் சங்கீத மேதையின் குரலுக்கு அடிமையாகதவர் யார்தான் எமது தமிழ்ச் சூழலில் உண்டு!
ராகத்தையும், தாளத்தையும், சுருதியையும், லயத்தையும் இசை ரசிகனின் செவிக்குள் தேனாகச் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த இனிய குரலில் மேற்படி புகழாரத்தைத் தொடுத்தது

41
யாருக்கு? அதுவும் வானொலி ரசிகர் களைத் தமது மதுரக் குரல்களால் கிறங்க வைத்து கொண்டிருக்கும் ஒரு வானொலி அறிவிப்பாளர் பட்டாளத்தையே வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்தோடு ஒப்பிட்டு!
அந்தப் பெருமையைப் பெற்றவர் தான் வானொலி அறிவிப்பாளர் வீ.ஏ.கபூர். பிரபல சங்கீத வித்துவான் பாலமுரளி கிருஷ்ணா இலங்கைக்கு வந்தபொழுது இலங்கை வானொலி நிலையம் அவருக் கொரு கச்சேரியை ஒழுங்கு செய் திருந்தது. அந்தக் கச்சேரிக்கான அறிவிப் புக்களைச் செய்ய வேண்டிய அரிய வாய்ப்பு கபூருக்குக் கிடைத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கபூர் இசை ராகங்களை இலங்கை வானொலி அறிவிப்பாளர்களாலும் அட்சரம் தவறாது உச்சரித்து அறிவிக்க முடியுமென்பதைத் தனது அறிவிப்புத் திறமையின் மூலமாக வெளிப்படுத்தி பாலமுரளியைக் கிறங்க வைத்து, ஈழத்து அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் பெருமையைத் தேடித் தந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, வி.ஏ.கபூரை கட்டித் தழுவி அணைத்து இந்தப் புகழாரத்தைச் சூட்டினார். மறைந்த கடம் வித்துவான் கலாசூரி கே.கே.அச்சுதன் இந்நிகழ்வை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாராம். 'வியேஜி" எனச் சுருக்கமாகவும் செல்லமாகவும் அழைக்கப்படும் கபூரின் வாழ்வில் இது வொரு பெருந் திருப்புமுனை! இந்தக் கச்சேரிக்கு இவரை அறிவிப்பாளராக நியமித்ததும் ஓர் அபூர்வ நிகழ்வு எனலாம். ஏனென்றால், அக்காலத்தில்
சங்கீதம் படித்துச் சாதகம் செய்து கொண்டிருந்த வானொலி அறிவிப் பாளர்களும் பதவி வகித்தனர்! அவர் களையெல்லாம் புறந்தள்ளி ஒரு துணி வுள்ள அதிகாரி கபூருக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். எனவே, திறமையை அளந்தறியக் கூடிய ஒருவர் எங்கயாவது இருக்கவே செய்வார். அதைக் காலம் உணர்த்தாது விடாது.
தனது செய்தி வாசிப்பினாலும், பக்குவமான அறிவிப்பு ஆற்றலாலும் அனைத்துலகிலும் இலட்சோ இலட்சம் இரசிகர்களைப் பெற்றுள்ள வி யே ஜி கல்லடி உப்போடையிலுள்ள சிவானந்த வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். அப்போதெல்லாம் றேடியோக்கள் எல்லா இல்லங்களிலும் இருக்காது. எனவே வானொலியைக் கேட்பது மிகவும் அபூர்வம். அதுவும் கேட்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அதை விட்டு விலகுவது முடியாத காரியமாக இருக்கும். அத்தோடு சிறுவர் களாகவும் இருந்துவிட்டால். படித்துக் கொண்டிருந்த பாடசாலையில் பாயில் உட்கார்ந்திருந்துதான் முதன் முதலில், வானொலியின் சகல கூறுகளுக்கும் இலக்கணம் சொல்லக் கூடிய ஆளுமை யுடைய கபூர், வானொலியின் சத்தத்தைக் கேட்டு ரசித்தாராம். அன்று பிடித்த பைத்தியம்தான் இன்றும் தூக்கம் கலைந்து விட்டால் வீட்டு வானொலியை முறுக்கி ஏதாவதொரு நிலையத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியைக் கேட்பாராம்!
y

Page 23
புனித பத்திரிசியார் கல்லூரி எப்படியோ அத்தகைய கட்டுப்பாடுகள், கண்டிப்பு என்பவற்றின் குறியீடாக அக்காலத்தில் கொழும்பில் சாஹிராக் கல்லூரி இயங்கிக் கொண்டிருந்தது. அக்கல்லூரியின் பிரபல அதிபர்களில் ஏ.எம்.ஏ. அஸிசும் ஒருவர். இவரொரு யாழ்ப்பாணத்து முஸ்லிம். இவர், தான் பிறந்த மண்ணான யாழ்ப் பாணத்தை எப்படி நேசித்தார் என்பதற்கு அத்தாட்சியாக ஒரு முக்கிய விடய
யாழ்ப்பாணத்தில்
மொன்றைச் சுட்டலாம்! கொழும்பு, பாண்ஸ் பிளேஸில் அஸிஸின் இல்லம் இருந்தது. அதன் முன் முற்றத்தில் வடலி யொன்றை வளர்த்து அதைப் பனை யாக்கியிருந்தவர். கொழும்பு வீடுகளில் அலங்காரத்திற்காக என்னென்னவோ செடிகளெல்லாம் வளர்க்கும் பொழுது இவரேன் பனை மரம் வளர்க்கிறார் என இவரது நண்பர்கள் விசனப்படும் பொழுது, அதற்கு அவர் தான் பிறந்த மண் யாழ்ப்பாணம். அந்த ஊரின் குறியீடு பனை என்பாராம். அத்தகைய மண் பற்றாளன் ஏ.எம்.ஏ. அஸிஸ். இவருக்கு இன்னொரு சிறப்புமுண்டு. சிவில் சேவைப் பரீட்சையில் தகுதி பெற்று ஒரு சிவில் சேவை அதிகாரியாக பதவி வகித்த முதல் முஸ்லிம் இவரே!
சாஹிராவில் அஸிஸ் காலம் கோலோச்சிய பொழுது, அதாவது 1949 இல் இடைநிலை, உயர் கல்விகளைப் பெற கபூரின் பெற்றோர் அவரை அக்கல்லூரியில் சேர்த்தனர். இவ்வருகை கபூரின் அடி மனதில் வானொலி சம்பந்தமாகச் சுடரிட்டுக் கொண்டிருந்த பேராவலை பேரொளியாக்கியது.
42
அடிக்கடி தனது நண்பர்களிடம் நானொரு வானொலி அறிவிப்பாளனாவேன் எனச் சொல்வாராம். இக்காலகட்டத்தில் இவரது வகுப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, ஆர். சிவகுருநாதன் ஆகியோரும் கற்றுக்கொண்டிருந்தனராம். தமிழுலகில் இம்விருவரும் தமது இருத்தலை நிரந் தரப்படுத்தியிருப்பதை இன்றைய சந்ததிக் குச் சொல்லி விளக்கத் தேவையில்லை! பேராசிரியர் சிறந்த தமிழறிஞர்; ஆர்.சிவ குருநாதன் (சட்டத்தரணி) தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தவர். இவர்களோடு இன்றைய தமிழர்களது கூர்மையான அவ தானிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஆனந்த சங்கரியும் சக மாணவனாக இருந்தாராம்.
தற்பொழுது இலங்கை வானொலி நிலையம் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஒரு காலத்தில் மனநோய் ஆஸ்பத்திரி அமைந்திருந்ததென்றால் இன்றைய வானொலி நிலையத்தவர்கள் மூர்க்க மடையக் கூடும். அதுவே யதார்த்தம்! பின்னரே முல்லேரியாவுக்கு மன நோயாளர் நிலையம் கொண்டு செல்லப் பட்டது. இதனால் தான் சிலர் வானொலி நிலையத்தவரை அரைப் பைத்தியங்கள்' எனக் கேலி செய்துண்டு போலும்!
பொரளை கொட்டா விதியிலும் இந் நிலையம் இயங்கியதுண்டு. அத்தோடு, குதிரைப் பந்தயத் திடலாக இருந்து, பின்னர் உலகச் சந்தையாகி தரங்கனி படமாளிகையையும், சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விஞ்ஞானக் கண்காட்சியின் கோள்மண்டலத்தையும்

அடக்கி, இப்பொழுது திரைப்படக் கூட்டுத்தாபனம் இருக்கும் சூழலிலும் இலங்கை வானொலி நிலையம் அமைந்திருந்ததாகக் கூறுகின்றனர்.
அக்காலகட்டத்தில் வானொலியில் சாஹிரா கல்லூரி மாணவர்களின் கதாப் பிரசங்கம் ஒலிபரப்பப்பட்டதாம். இதில் சாஹிரா மாணவர்கள் பலர் கலந்து கொண்டனராம். அந்தக் குழுவில் தானு மிருந்ததாக கபூர் நினைவு கூருகிறார்.
கபூரின் தமிழ் மொழி ஆற்றலை அதிபர் அளிஸ் நன்கு மதிப்பிட்டிருந்தார். ஒரு வானொலிப் பைத்தியமென்பதும் அவருக்குத் தெரியும். இதற்கெல்லாம், கபூர் படித்துக் கொண்டிருந்தது மருத்துவத் துறைக் கல்வி. அக்காலத்தில் augilsafai Speak in English 6Tairp காகிதக் குறிப்பு ஒட்டப்பட்டிருக்கும்.
தமிழில் பேசினால் தெண்டம்! அப்படி
இருக்க விஞ்ஞானம் கற்கும் கபூர் தமிழில் பேரபிமானம் கொண்டிருந்தது அதிபருக்கு வியப்பாகி விட்டதாம். கபூருக்குச் சகவாச தோஷமாக்கும். சக மாணவன் பேராசிரியர் சிவத்தம்பி அல்லவா!
கபூரின் ஏதாவது செய்ய வேண்டுமென அதிபர்
வானொலி ஆசைக்கு
முனைப்போடு இயங்கினார். அவரது தடங்கலற்ற தேடல் கனியாகியது. வானொலியில் 'எங்களூர் என்றொரு குறு நேர நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதற்கு, எழுதும்படி கபூர் கேட்கப்பட்டார். கபூர் எழுதிய பிரதி நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக இருந்த செல்வி. மோனி எலியாசிடம் கொடுக்கப்
பட்டது. தனது குரலை வானலைகளில் பறக்க விட கபூருக்கு அனுமதி கிடைத்தது. முதல் பறப்பு! தனது முழுத் திறமையையும் ஒருங்கிணைத்து, வானொலிக்குள் தான் நுழைய வேண்டு மென்ற துடிப்போடு, தனது ஊரான *தோப்பூர் சம்பந்தமான அந்தக் கட்டுரையை வாசித்தாராம். அதுவே தனது ஒலிபரப்புத்துறை வருகைக்குப் பிள்ளையார் சுழி இட்டதனை உணரும் பொழுது கபூர் புளகாங்கிதமடைகிறார்.
இதில் முக்கிய விடயமென்ன வென்றால், இந்த எங்களூர் நிகழ்ச்சிக்கு, கபூரின் வருகைக்கு முன்னர் ஆசிரியர் களே சந்தர்ப்பங்களைப் பெற்றார்களாம். அதை நொருக்கிக் குருவுக்கு மிஞ்சிய மாணவனாகியது கபூர்தானாம்! எனவே, கபூரின் முதல் வானொலி நிகழ்ச்சியே சாதனையாகியது. இது கல்வி ஒலி பரப்பிற்கான நிகழ்ச்சியென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய திருப்பத்திற்குக் கால் கோளாக அமைந்தது கபூரின் எழுத்து வடிவந்தானெனத் திருமதி. ஜோசப் சொன்னாராம்.
தனது அன்னையாரின் மரணம் காரணமாகத் தான் தோப்பூர் சென்றிருந்த பொழுது வானொலி அறிவிப்பாளர் பதவிக்கான அறிவித்தல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்ததாம். தான் நெடு நாள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அந்த நாள் நெருங்கி விட்டதென இறும் பூதெய்தினாராம். தனது விண்ணப்பத்தை அனுப்பினார். அப்பொழுது நாவற்
\N.

Page 24
குழியூர் நடராசன் என்ற, தமிழ் இலக்கிய முன்னோடி, கே.எஸ்.நடராசா தான் தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் இருந்தாராம்.
பொறுப்பாக
ஒலிவாங்கியில் குரல் பரீட்சிக்கப் பட்டு, நேர்முகப் பரீட்சை நடாத்தப் பட்டது. தெரிவுக் குழுவிற்கு அன்றைய ஒலிபரப்பு மா அதிபர் எம்.ஜே. பெரேரா தலைமை தாங்கினார். குழுவின் உறுப் பினர்களாக கே.எஸ்.நடராசா, வேணன் அபேசேகரா, சமரக்கோன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
எல்லோரும் பல்வேறு வகைப்பட்ட கேள்விகளைக் கேட்டனர். கடைசிக் கேள்வியாக குழுவின் தலைவர் எம்.ஜே. பெரேரா கேள்வியொன்றைக் கேட்டார். “Can you name the particular instrument used by tamils in their Cultural events' Gail G. gali Ghirapu மூடுமுன் கபூர் “நாக சுரம்" எனச் சொன்னார். அதைச் சொல்லி ஆறுமுன் goalali "Can you take over the Job Tomorrow' கபூருக்கு மனங் குளிர்ந்து விட்டது. தனக்கே நியமனமெனக் குதூகலித்தார்.
நெடுநாள் எதிர்பார்த்துக் காத்திருந்த - ஒரு டாக்டர் ஆக வேண்டிய கபூருக்கு - 20.02.1953ஆம் திகதி வானொலிப் படிகளில் அறிவிப்பாளராக மிதிக்கும் அபூர்வப் பொசுப்புத் தேறியது.
நிலையத்தின் 4ஆவது கலை யகத்தில் வியேஜி செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார். இளைஞர் கபூரின் முதல் செய்தி வாசிப்பு. இன்று புதியவர்
44
களுக்கெனப் பயிற்சி கொடுப்பதற்கு நிலையத்தில் தனிப் பிரிவொன்று இருக் கின்றது. இங்கு புதிய வழிகாட்டல்கள், பயிற்சிகள் வானொலி நிபுணர்களால் புகட்டப்படும். அதன் பின்னர் தான் புதியவர்கள் ஒலிவாங்கியின் முன் நிறுத்தப்படுவர். ஆனால், தங்கள், தங்கள் சொந்த முயற்சியால்
அன்றோ!
தேடல் செய்துதான் பயிற்சியைப் பெற முடியும். இதற்காக அநுபவம் வாய்ந்த அறிவிப்பாளர்களது செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி அறிமுகம் என்பனவற்றை அறிவிப்புத்துறைக்கு வர விரும்புவோர் கிரமமாகக் கேட்க வேண்டும். அதில் பொறுக்கி எடுத்தவைகள் தான் புதியவர்களுக்கு வானொலி அறிவிப்புத் தொழில் புரிவதற்கு கைத்தடியாக உதவும்.
நாலாவது கலையகத்திலிருந்து கபூர் செய்தி வாசித்ததை மூன்றாவது கலை யகத்திலிருந்து அன்று கிராம சஞ்சிக்குப் பொறுப்பாக இருந்த எம்.எஸ்.இரத்தின மும், அவருக்கு உதவியாளராக இருந்த விவியன் நமசிவாயமும் கேட்டிருக் கின்றனர். வாசிப்பு முடிந்து கபூர் வெளியே வந்ததும் இருவரும் தன்னை வெகுவாகப் பாராட்டியதாகக் கபூர் பொச்சடிக்கிறார்.
அன்று அறிவிப்பாளராக இருந்த ஊர்காவற்துறை, சரவணையைச் சேர்ந்த சங்கீத பூஷணம் சந்திரசேகரம் மனந் திறந்து சொன்னாராம், ஒருநாள் சிறந்த அறிவிப்பாளராக திகழு விரென. அகில இந்திய வானொலியில் அன்று ஜி.என்.பி. என்ற மூன்றெழுத்துப்
என்றைக்கோ
Qs

45
பிரபலமாக இருந்தது போல இலங்கை வானொலியிலும் வி.என்.பி. மூன்றெழுத்து மிகப் பிரபலமாக இருந்தது. இதற்குரியவர் வி.என்.பால சுப்பிரமணியம். அகில இலங்கை வானொலி நிலையத்திலும் கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்த இலங்கைப்
என்ற
பாடகர். கிராம சஞ்சிகைக்குப் பொறுப் பாக இருந்தவர். அறிவிப்பாளராகவும் இருந்தவர். 'ஈழ நாடு’ பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலிருந்தவர். மல்லிகைச் சஞ்சிகை இவரைக் கெளரவப்படுத்து முகமாக அதன் அட்டைப் படத்தில் இவரது உருவத்தை வெளியிட்டது. இவரும் தன்னைப் பாராட்டி ஊக்குவித்த தாகக் கபூர் நன்றி மறக்காது ஒப்புக் கொள்கிறார்.
அறுபதுகளில் தேசிய ஒலிபரப்பின் தமிழ்ப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த கே.எஸ்.நடராசா சரியாக மாலை நாலு மணிக்குத் தன் அறையை விட்டு வெளி வந்து சானா சண்முகநாதனின் மேசைக் கருகே இருக்கும் நடை பாதையில் நின்று கொள்வார். வாயில் சுங்கான் புகை கக்கிக் கொண்டிருக்கும். கண்கள் அலுவலர்கள் ஒவ்வொருவரது மேசைக்கும் பார்வையை விசிக்கொண்டிருக்கும். திடீரெனச் சொல் வார்; “நாலு மணியாச்சு. ஒருத்தரும் பேகேல்ல." நாமெல்லாம் திரு திருவென முழிகளைப் பிதுக்குவோம். இப்படிச் சொல்லும் அவரது அந்தரங் கத்தில் ஒன்று மறைந்திருக்கும்! முதல் நாள் எங்களில் யாரோ ஒருத்தர் அவ
என்ன
ரிடம் கேட்காது போயிருப்பார். அந்த அலுவலரை ஊகித்து விட்டால் எமது
பார்வை அவரில் குவியும். முகத்தில் அசடு வழியும்!
அவரது
இதே மேற்பார்வையைத் தமிழ் நிகழ்ச்சிக்கு அதிகாரி அறிவிப்பாளர்கள் பொருட்டும் செய்வதுண்டு. மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் கலையகத்துள் சென்று விடுவார். தொழில் நுட்ப உதவியாளர் இருந்து இயங்கும் பகுதிக்குள் சென்று கண்ணாடி ஊடாக அறிவிப்பாளர் பகுதியை நோக்கு வார். அதற்குள் கபூர் இருந்தால் உடனே வெளியே சென்று விடுவார். வேறு அறிவிப்பாளர்கள் இருந்தால் உள்ளே சென்று தொடரவிருக்கும் ஒலிபரப்புக் கான ஒழுங்குகளை கேட்டறிவார்.
இத்தகைய வகையில் கபூர் தனது மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமாக இருந்து கடமையைப் புரிந்தவர். கபூர் எதைச் செய்தாலும் அதற்கு மறு வாசிப்பு இருக்காது!
நிகழ்ச்சி உதவியாளர்கள் விடுமுறை யில் செல்லும் பொழுது தமது கடமை களைக் கவனிக்க அநேகமாக கபூரையே ஒழுங்கு செய்வர். இந்த ஒழுங்கைத் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியும் ஏற்றுக் கொள்வதுண்டு. இதன் மூலம் இவர் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பயிற்சியையும் பெறமுடிந்தது.
ஒருமுறை சானா சண்முகநாதன் விடு முறையில் உடனடியாகச் செல்ல வேண்டி இருந்தது. நாடகமொன்றைத் தயாரிக்கும் பொறுப்பைக் கபூரிடம் ஒப்படைத் திருந்தார். இந்நாடகம் ஒர் இராச கதையை அடிப்படையாகக் கொண்டது.
ygger); অত্ব

Page 25
பெண்ணொருவர் ஆணாக மாறு வேட மிட்டு நடிப்பதாக கதை அமைக்கப்பட் டிருந்தது. இதை மேடையில் இலகுவில் செய்து விடலாம். ஆனால் வானொலி யில் நடிப்பது சிரமம். குரல் மூலமாகத் தான் சகல பாவங்களையும் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நகர்த்த வேண்டும். இந்தப் பெண் பாத்திரம் போரில் காயப்பட்டுக் குற்றுயி ரோடு போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கடைசி நேரத்தில் தான் உண்மை யில் ஆணல்ல, பெண் என்பதை வானொலி நேயருக்கு உணர்த்த வேண்டும்.
இதற்கு நாடகத்தைத் தயாரித்த கபூர் ஒர் உத்தியைக் கையாண்டார். அந்தக் கதா பாத்திரத்தை முதல் ஆண் குரலில் பேச வைத்துப் பின்னர் சுயமான பெண் குரலில் பேச வைத்தாராம். விடுமுறை முடிந்து திரும்பியதும் சானா, கபூரின் இந்த உத்தியை வெகுவாகப் பாராட்டினாராம்.
தென் கிழக்கு ஆசிய நேயர்களுக் காக புதிய சேவையொன்று ஆரம்பிக்கப் பட்டு, சி.வி.இராசசுந்தரம், கபூர், மேரி ஜோசப் (தொழில் நுட்ப உதவியாளர்) ஆகியோரின் கூட்டு முயற்சியில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டதாம். இந் நிகழ்ச்சி வெளிநாட்டவர்களது பேரா பெற்றது. கடிதங்கள் குவிந்து கொண்டிருந்தன. ஆனால் சில அறிவிப்பாளர்கள் தமக்கும் தயாரித் தளிக்க சந்தர்ப்பம் தர வேண்டுமென வாதாடி, அந்நிகழ்ச்சியை எடுத்தனராம். அதன் பின்னர் நிகழ்ச்சி உரிய தரத்தைப்
பிமானத்தைப்
46
பெறாத படியால் நிறுத்தப்பட்டதாகக் கபூர் கவலையோடு சொன்னார்.
குறுக்கெழுத்துப் போட்டி, 25 கேள்விகள் ஆகிய நிகழ்ச்சிகளையும் தயாரித்து ஒலிபரப்பினார். 'குதூகலம்’ என்ற பல்சுவை நிகழ்ச்சியை மலையகம் சென்று ஒலிப்பதிவு செய்து ஒலிபரப் பினார். இதனால் மலையகத்திலிருந்த வளர் இளங் கவிஞர்கள் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெற முடிந்தது. தமிழ் நிகழ்ச்சிப் பிரிவின் அதிகாரியாக இருந்து அண்மையில் ஒய்வு பெற்றுள்ள கலாசூரி அருந்ததி பூரீரங்கநாதன் கபூர் தயாரித்து ஒலிபரப்பிய வளரும் பயிர் நிகழ்ச்சியில் அக்காலத்தில் குரல் கொடுத் தவர். இசையும் கதையும் என்றொரு நிகழ்ச்சியை நேயர்கள் வர்த்தக சேவை யில் கேட்டிருப்பார்கள். ஆனால் இதே தலைப்புடைய நிகழ்ச்சியொன்று தேசிய ஒலிபரப்பிலும் ஒலிபரப்பானது. இதை கபூர் தான் தயாரித்தார். இந்த நிகழ்ச்சி யைக் கேட்ட ரி.கே.எஸ் பிறதேஸ் நாடகக்
குழுவைச் சேர்ந்த ரி.கே.சண்முகம் வெகு
வாகப் பாராட்டியதுண்டு. இதன் முக்கிய அம்சம், பாடல்கள் அனைத்தும் ஒரே பாடகரின் குரலில் ஒலித்ததே!
ஒலிபரப்புக் கலையின் ஒர் முக்கிய அம்சமாக விளங்குவது நேர்முக வர்ணனை. இந்த நேர்முக வர்ணனைகள் பலதைக் கபூர் செய்துள்ளார். அவைகளில் அவரால் மறக்க முடியாதவை அணி சேரா நாடுகள் மகாநாடு, திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழா அணி வகுப்பு வர்ணனைகள் என்பனவாகும்.

47
சுதந்திர தின விழா அணிவகுப்பு வர்ணனைக்கு இவரோடு இன்னு மொருவர் சேர்க்கப்பட்டிருந்தாராம். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. இந்த வர்ணனையைத் தான் தனித்துச் செய்வதாகக் கபூர் விருப்பம் தெரிவித்தார். வெயிலில் நடந்து இதைச் செய்ய வேண்டுமானதால் தமிழ் நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக இருந்தவர் மறுத்தாராம். ஆனால் கபூர் அது தன்னால் முடியுமெனக் கூறித் தன்னையே அனுமதிக்கும்படி கேட்டாராம். தமிழ் நிகழ்ச்சி அதிகாரி ஒப்புக் கொள்ளவே இருவர் செய்ய வேண்டிய அந்த வர்ணனையைத் தானே தனித்துச் செய்து மிகுந்த பாராட்டைப் பெற்றார் கபூர்,
ஒலிம்பிக் போட்டிகளின் போது எத்தனையோ மறக்க முடியாத சம்ப வங்கள் நடந்துள்ளன. அதில் இலங்கை சம்பந்தமான நிகழ்வொன்று மிகவும்
சுவையானது.
1964 ஆம் ஆண்டில் டோக்கியே ாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி களில் 5000 மீற்றர் ஒட்டப் போட்டியில் பங்கு பற்றுவதற்காக ரணதுங்க கருணா னந்த என்ற ஒட்ட வீரர் அனுப்பப் பட்டார். இப்போட்டியில் அவருக்கு 29ஆவது இடமே கிடைத்தது. இடையில் நின்றுவிட்டால் அச்சாதனை கிடைக்காது. எனவே இந்த இடத்தை அவர் பெறு வதற்காக மூன்று சுற்றுக்களைத் தனித்தே ஒட வேண்டி ஏற்பட்டது. ஏனெனில் அவரோடு ஒடிய ஏனைய வீரர்கள் அனைவரும் 5000 மீற்றர் தூரத்தை ஒடி முடித்து மைதானத்தை விட்டு வெளி
யேறி இருந்தனர். இவர் தனியொரு வராக, எந்தவித தாழ்வுச் சிக்கலுமில்லாது மூன்று சுற்றுக்களையும் ஒடி முடிக்க, பார்வையாளர்கள் எழுந்து நின்று கர கோஷமிட்டுக் கருணானந்தாவை கெளர வித்து அவரைப் பரவசத்திற்குள்ளாக் கினர். இது தோல்வியினால் உலகை வெற்றி கொண்டவரென இன்றும் விளையாட்டுலகில் கருணானந்தாவை நினைவுபடுத்திப் பேசப்படுகிறது.
இதைப் போன்ற இன்னொரு சம்ப வமும் உலகின் கவனத்தை ஈர்த்தது. 1972 ஆம் ஆண்டு மியூனிச் நகரில் இடம் பெற்ற ஒலிம்பிக் விழாவில், வீரர்கள் தங்கி இருந்த விடுதிக்குள் புகுந்த பலஸ்தீனத் தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இஸ்ரேலிய வீரர்களிருவர் உயிரிழந்தனர். அத்தோடு பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ஒன்பது இஸ்ரேலிய வீரர்களைத் தீவிர இது
உலகத்தின் கண்டனத்தைப் பெற்றது.
வாதிகள் சுட்டுக்கொன்றனர்.
மியூனிச் ஒலிம்பிக் திடலில் இச் சம்பவம் நடந்தபொழுது கபூர் அங்கிருந் தார்! வேறெவருக்கும் கிடைக்காத வகையில் 15 மாத வானொலிப் பயிற்சி இவருக்கு ஜேர்மனியில் கொடுக்கப் பட்டது. அச்சமயமே தனது குழுவோடு இவர் ஒலிம்பிக் திடலுக்குச் சென்றி ருந்தார். தனது வாழ்வில் இதுவொரு மறக்க முடியாத சம்பவமெனக் கபூர் நினைவு கூருகிறார்.
பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தைச் (B.B.C) சேர்ந்த சங்கர் ஒருமுறை இலங்கைக்கு வருகை தந்து
QN

Page 26
இலங்கை வானொலி நிலையத்திற்கும் சென்றிருந்தார். அவருக்கு நிலையம் ஒரு விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்தது, அதில் தமிழ் சேவையிலிருந்த சகலரும் கலந்து கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில், உங்களது சேவையில் சகல துறைகளிலும் afiră alu All Rounder G56usori, கூற முடியுமாவெனத் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியைக் கேட்டார் சங்கர். அதற்கு, அப்பொழுது தமிழ் நிகழ்ச்சி அதிகாரி யாக இருந்த கே.எஸ்.நடராசா, சிரேஷ்ட அலுவலர்களுக்குப் பின்னால் உட்கார்ந் திருந்த கபூரை நோக்கி "அப்படிப்பட்ட ஒருவராக கபூரைத் தான் சொல்லாம்" இது குழுமியிருந்த அனை வருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இந்த வகையில் வியேஜியின் வல்லமைகளை மேலதிகாரி கணித்து வைத்திருந்தார். இருந்தும் குடத்துள் விளக்காகவே இவர் இருந்தார்! சலசலப்புக் காட்டாது!
என்றார்.
இவர் இலங்கை வானொலி, கூட்டுத்தாபனமாகிய பின்னர் தான், அதாவது 1967க்குப் பின்னர் ஒரு கட்டத்தில் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவிலிருந்து வெளியேறினார்.
முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் தானி ருந்தால் தனது இனத்திற்கு ஏதாவது செய்ய முடியுமென்ற காரணத்திற்காகத் தான் அப்பிரிவிற்குச் செல்ல விரும்பிய தாகச் சொல்கிறார்.
கட்டுப்பாட்டாளராகவும், உதவிப் பணிப்பாளராகவும் முஸ்லிம் பிரிவில் இயங்கி இருக்கிறார். ஆனால் இவர்
48
நினைத்தவைகளை நிறைவேற்ற முடியா திருந்தது. சுயமாக இயங்குவதற்குப் பல தடைகள் ஏற்பட்டனவாம். அரசியல் தலையீடு மேலோங்கி இருந்ததாம். இதனால், வானொலிக் குடும்பத்தில் அங்கத்த வனாக இருந்த இவர் கசப்பான அநுப வங்களையும் அனுபவிக்க வேண்டி இருந்ததாம்.
நான்கு தசாப்தங்களாக
பொது நிருவாக அமைச்சில் Pool" என்றொரு பிரிவு இருக்கின்றது. ஆட்சி யில் இருக்கும் அரசுக்கு வேண்டப்படாத, குற்றமிளைக்கப்பட்ட அலுவலர்களை இங்கே அனுப்புவதுண்டு. இவர்களுக் கெனக் குறிப்பிட்ட கடமைகள் இருக் காது. கொடுக்கப்படுவதை இவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
இதே போன்று ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் சைபிரியா என்று அழைக் கப்படும் சில பிரிவுகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இத்தகைய பிரி வொன்றிற்குக் கபூரும் அனுப்பப் பட்டாராம். முன்பிருந்தே சோவியத் அரசு தனக்குப் பிடிக்காதவர்களை சைபிரியா வுக்கு நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது!
இப்பிரிவில் இவர் வானொலி மஞ்சரிக்குப் பொறுப்பாக இருக்க வேண்டி இருந்தது. இக்காலத்தில் தானாம் வானொலி மஞ்சரி விற்பனை யில் உச்சத்தைத் தொட்டது. தனது திறமையை அர்ப்பணித்து, வானொலி மஞ்சரியில் பல புதிய அம்சங்களைப் புகுத்தினாராம். அதில் பிறந்த நாளைக் கொண்டாடும் பிள்ளைகளின் படத்தை
வர்ணத்தில் பிரசுரிப்பது ஒன்றாகும். இந்த
666):

49
உத்தி சிறந்த பலனைக் கொடுத்து ஏராளமான வாசகர்களது கவனத்தை ஈர்த்ததாம்.இதனால் மேலதிகாரிகளின் பாராட்டும் இவருக்குத் தேறியது. இவரது திறமை பரவலாகியது.
கபூருக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை சிங்கள அலுவலர்களும் உள்வாங்கி இருக்கின்றனர். லிவி விஜய மன்ன என்ற அதிகாரி உயரமானவர். வானொலிப் பணிப்பாளர் நாயகம், வர்த்தக சேவைப் பணிப்பாளர் ஆகிய உயரிய பதவிகளை வகித்தவர். அறிவிப் பாளராகவும் இருந்தவர். இவர் கபூரைக் காரின் “பவற்று"க்கு உவமிப்பாராம். ஏனென்றால் அடிகளையும் உதைகளை யும் வாங்கிக் கொண்டு பபற் அமைதியாக இருக்குமாம். அத்தகைய நிலையில் தான் கபூர் பொறுமை காத்திருக்கிறார். தீங்கிழைத்தோரை மன்னித்திருக்கிறார். இவரது பொறுமைக்கு வெகுமதியாக நிருவாகம் முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப் பாளர் என்ற பதவியை பிரத்தியேகமாக இவருக்காக உருவாக்கி அதில் இவரை
அமர்த்திக் கெளரவித்தது. அத்தோடு உண்டா விருதையும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் பெற்றார்.
இந்த வகையில் கபூர் ஏற்கனவே கூறப்பட்டுள்ள குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்து சாதனை மேடையில் உயர்த்தப் பெற்றார். ஆனால் அன்றைய கபூரைத் தான் இன்றும் காண முடிகின்றது. ஒலி பரப்புக் குடும்பத்தோடு தனக்குள்ள பந்தத்தினை துண்டித்துக் கொள்ளாமல் இன்றும் ஒலிபரப்பு ஆலோசகராக இருக் கிறார். திறமைதான் தொடர்ந்து வந்து மனிதனுக்குக் கைகொடுக்கும் என்பதற்கு இந்த ஒல்றவுண்டர் கபூர் சிறந்த எடுத்துக்
காட்டு!
snosiš kesep இதாடர்புகொள்ளுங்கள்

Page 27
50
இந்த உலகத்தில் பிறந்துள்ள மானிடர் அனைவரும் ஏதாவது ஒருவனின் சாகியம், மொழி (தாய் மொழி என்று பெயர் சூட்டப்பட்டு) மதம் கலாச் சாரம் அல்லது சமுதாய அந்தஸ்து "சட்ட 8 gA0 பூர்வமாகப் பெற்றுக் கொண்டு அல்லது gebrTLO GiroG2, 'அடையாளம் வழங்கப்பட்டு வாழ் gMe கின்றார்கள். சிலர் தங்கள் உலகில் Gha- ATOUA ஜனனத்தை அபூர்வமான தனி அடை rý யாளக் குறியீடு இட்டு வரைவிலக்கணம் ge gb காண்பிக்க எது போகின்ரோம்? எப்படி இருப்பினும் எந்த மானிட னுக்கும் ஜனனத்தின்போது தனது - நல்லைக்குமரன் 'அடையாள"த்தை தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதில்லை. இந்த நவீன கால சமுதாயம் வெவ்வேறு வகையாக
என் பார்வையில்
மானிடமும் பல்கலாச்சாரமும் :
மக்களை எடை போடுவதாலேயே அந்த வித்தியாசங்களைப் பற்றிச் சிரத்தை காண்பிக்கின்றார்கள். V
சில சாகியத்தவர்கள் அல்லது அவர்களின் கலாச்சாரங்கள் மற்றவைகளிலும் பார்க்க 'உயர்வானது அல்லது அதிகம் மேன்மையானது" என்றும் சில மதங்கள் மற்றவைகளிலும் பார்க்க "மிகவும் ஒழுங்கானவை" அல்லது 'இணக்கமானவையாகக் கருதப்படுகின்றன என்றும் சில மொழிகள் மற்ற மொழிகளிலும் பார்க்க "மிகவும் உசிதமான" அல்லது 'சகல விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கன' என்றும் இன்றைய காலகட்டத்தில் நம்பக் கூடிய வகையில் எங்களில் அநேகர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள். மற்றையவர்களிலும் பார்க்க சில அடையாளம் கொண்ட மக்கள் சமுதாயத்தில் பாரபட்சமான முறையில் நடத்தப்படுவதே காரணமாகும். நாங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்ட அடையாளச் சின்னங்கள் (தேசியம், சாதி, மதம், மொழி, கலாச்சாரம் போன்றவைகளால் வருவிக்கப்பட்ட) தராதரங்கள் அல்லது "உயர்பதவி நிலைகள் போன்றவற்றை ஆராய்ந்து கண்டுபிடிப்பதிலும் பகுத்துக் கொடுப்பதிலும் வெகு ஆழமாக ஈடுபாடு கொண்டுள்ளோம். சகலவிதமான பிற சிந்தனைகளுக்கும் அப்பால் நாம் எல்லோரும் பூரணமான சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய "மானிடர்” என்ற ஒரேயொரு வர்க்கமான மிக முக்கிய அடையாளத்தை மறந்துவிட்டோம்.
எங்களது சம்மதம் பெறாமல் அல்லது எமக்குத் தெரியாமல் நாங்கள் ஒவ்வொருவரும் ஜனனமான சமயம் சட்டபூர்வமான உரிமையாக்கப்பட்ட இந்த

51
அடையாளங்களே முரண்பாடுகள், சச் சரவுகள், யுத்தமோதல்கள் ஆகிய வற்றுக்கு அடிப்படைக் காரணி என்பதை இன்று நாமெல்லாம் அறிவோம். மாறு பட்ட அபிப்பிராய முரண்பாடு ஏற்படு வதற்குச் சாகியங்கள், மொழிகள், கலாச் சாரங்கள், மதங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று பிரிவினரே சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது உணர்ந்து கொள்ளக் கூடியதாயிருக் கின்றது.
வேறு வார்த்தைகளில் கூறப் போனால் துரதிர்ஷ்டவசமான வகையில் எங்கள் ஜனன காலத்தில் எம்மீது 'திணிக்கப்பட்ட', 'தராதரங்கள்' அல்லது அடையாளங்கள் ஒற்றுமையின்மையை யும் அமைதியின்மையையும் தப்பாக எடைபோட்டுக் கொள்ளும் உணர்வையும் மானிடரிடம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையைச் சிக்கலாக்கும் வகையில் எங்கள் அரசியல் தலைவர்கள், அரசாட்சிக் கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள் தங்கள் மேம்பட்ட நிலைக்காக எம்மிடமுள்ள 'மனித பல வீனத்தைச் சுயநலத்துக்காக அடிக்கடி உபயோகிக்கின்றார்கள். இந்த அடை யாளங்களில் எமக்குள்ள பற்றுதல் அல்லது முக்கியத்துவங்களை உப யோகித்துச் சமுதாயத்தில் தங்கள் உயர் நிலைகளை அல்லது அந்தஸ்தை வலுப் படுத்துவதற்காக அம்மக்கள் மத்தியில் திருவிளையாடல்களைச் செய்கின்றனர். உதாரணமாக அரசியல்வாதிகள் வழமை யாகத் தாங்கள் வகுக்கும் கொள்கைகள்
S
அல்லது செயற்பாடுகள் சமுதாயம் முழு வதற்கும் தூர நோக்கில் எதிர்காலச் சந்ததி யினருக்கு நன்மை பயக்கக் கூடியதா? இல்லையா? என்பதைக் கருத்திற் கொள் ளாமல் தங்கள் வாழ்க்கை அல்லது தப்பிப் பிழைப்பு பெரும்பான்மை யினரின் கண்ணோட்டத்திலேயே தங்கி யுள்ளதைத் தெரிந்து வைத்துக்கொண்டு தங்கள் கொள்கைகளை வகுக்கும்போது மற்றவர்களிலும் பார்க்கச் சலுகைகள், மிதமிஞ்சிய சிறப்புரிமைகள், அளவுக்கு மீறிய முக்கியத்துவங்கள் வழங்குவதாகப் 'பெரும்பான்மை' பகுதியினரைத் திருப்தி செய்யும் நோக்கில் செயற்படுகின்றார்கள். தங்கள் சொந்த இலாபங்களுக்காக அல்லது தனிப்பட்ட வசதிகளுக்காக மக்கள் அனைவரும் எங்ங்ணம் ஏமாற்றப் பட்டுச் சமுதாயத்துக்குப் பலத்த பாதிப்பு ஏற்படுத்தும் சீரழிவுகளை அரசியல் வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது உலகெங்கும் நடந்துமுடிந்த சம்பவங் களின் அரசியல் சபித்திரங்களிலிருந்து நாங்கள் அடுக்கடுக்கான பாதிப்பு ஏற் பட்ட பின்னர் பின்னைய காலச் சூழ் நிலைகள் உண்மையைத் தெளிவுபடுத்தும் வரை பல தசாப்தங்களாகத் தலைவர்கள் சாதாரண பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவி அவர்கள் மனதைத் திசை திருப்பும் தங்கள் முயற்சியில் அநேகமாக வெற்றி கண்டுள்ளனர்.
முன்னர் சிலோன் என்றழைக்கப் பட்ட பூரீலங்காவின் அரசியல்வாதிகள் பரந்த அளவில் தவறான மனப்பான்மை வழியில் ஈர்க்கப்படக் கூடிய சாதாரணப் பொதுமக்களைப் பகடைக்காய்களாக
ஆக்கி இந்த வகையான திருவிளை
see:

Page 28
யாட்டுக்குப் பெயர் போனவர்கள். நாடு சுதந்திரமடைந்த பின்னர் வந்த ஆரம்ப வருடங்களில் மொழி ஒரு பிரச்சினை யாக ஆக்கப்பட்டது. 1970-1980களில் தேசியம் என்ற கோஷம் எழுந்து தற் சமயம் மத விவகாரம் அண்மைக் காலம் முதல் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. எந்தவொரு மானிடனாயிருப்பினும் அவனுக்குத் தனது சொந்த அடையாளத் தைப் பேணும் உரிமையும் சுதந்திரமும் தனிப்பட்ட ரீதியாக இருந்து அதற்கு விசேட முக்கியத்துவம் கொடுத்தாலும் அரசியல்வாதிகளாய் இருந்தாலும் சரி மதப் போதகர்களாய் இருந்தாலும் சரி ஆதிக்க ஆட்சி நிலையைப் பிடிப்ப தற்குத் துணிச்சலாக முயற்சி எடுக்கச் சுளை பிடுங்கும் பேர்வளிகள் பற்றி அவ தானமாக இருந்து அத்தகையவர்கள் மற்ற வர்களைத் தங்கள் அந்தரங்கமான உள் இடமளித்து நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
ளெண்ணங்களுக்கு
இந்த வகையில் பல்கலாசார அனு சரிப்பு எனப்படுவது உலகில் எந்தப் பகுதியிலிருந்தாலும் முக்கியமானதொரு விடயமாகும். பல வருடங்களாகப் பரந்த அளவிலான புலம்பெயர் குடிவரவுகள் நடைபெற்ற அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதன் பொருத்தமானது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. அத் தகைய நாடொன்றில் ஒருவன் மற்றவர் களின் கலாசாரத்தைப் பரிந்துணர்வுடன் மதித்துப் பரஸ்பர நட்புடன் நடப்பதோடு தனது கலாசாரத்தையும் (தான் வாழ்ந்த நாட்டின் சரித்திரம், தேசியம், மதம், மொழி, பாரம்பரிய பண்பாடுகள்) பேணிக்
52
காக்கும் அதிமுக்கிய உரிமை உண்டு. இருந்த போதிலும் எமது இறுதி இலக் கான பரஸ்பர இணக்கப்பாடு நிச்சயமாக வெவ்வேறு பல்கலாசார அனுசரிப்பு களுக்கு அப்பால் உள்ளது. எங்களி டையே வேற்றுமைகள் இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்ளும் அதே நேரத் தில் (அநேகமானவை சுயமாக உருவாவ தற்குப் போதிக்கப்பட்டவை) அவை களை இப்பொழுது ஒன்றையொன்று அனுசரித்துப் போக முயற்சிக்கும் போது மனித நேயம் ஒன்றழைக்கப்படும் அழகிய தொடர்புணர்வு மூலம் சர்வதேசத்தவர் களான நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பது மீண்டும் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகையதொரு நிலையைப் பலாத் காரமாகவோ அல்லது சட்டத்தினாலோ நடைமுறைப்படுத்த இயலாது. ஆனால் எமது தேர்வினாலும் மதிநுட்பத்தாலும் அதைச் சாதிக்க முடியும்.
மானிட வர்க்கத்தினராகிய நாம் எமது போர்வைகளைப் (ஆண்டாண்டு காலமாக எம்மைப் பிரித்து வைத்துள்ள தராதரங்கள், பட்டப் பெயர்கள் அல்லது வகுப்புக்கள்) படிப்படியாகத் துறந்து சகலரும் உலகளாவிய ரீதியில் தனி ஒரு குடையின் கீழ் மனித குல மேம்பாட்டுக் காக எங்களின் எண்ணங்களையும் மனப் போக்குகளையும் கவனமாக மீளாய்வு செய்வோமாக.
இதய சுத்தியுள்ள மனித நேயமே எமது இறுதி மூச்சாக உலகளாவிய ரீதி யில் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த நாளே மனித சமுதாயத்திற்கு மிகச்
y

53
சிறந்த கொண்டாட்டமான நாளாகும். அந்த நாளே கறுப்பர்களாகவோ, வெள்ளையர்களாகவோ, மண்ணிறத்தவர் களாகவோ அல்லது மஞ்சள் நிறத்தவர் களாகவோ அல்லது சிங்களவராகவோ, தமிழராகவோ, பறங்கியராகவோ, மலே யினத்தவராகவோ, இலங்கையராகவோ, அவுஸ்திரேலியர்களாகவோ, ஆப்கானிஸ் தானியர்களாகவோ அல்லது அமெரிக்கர் களாகவோ பெளத்தர்களாகவோ, இந்துக் களாகவோ, கிறிஸ்தவர்களாவோ அல்லது இஸ்லாமியர்களாகவோ வகைப்படுத்தப் படாமல் நாங்கள் ஒவ்வொருவரும் மனிதர்கள் என்ற கருத்தில் கணிக்கப் பட்டு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் பொன்னான நாளாகும். இது எமக்கு நீண்டதொரு ஆச்சரிய மிக்க பயணமாகத் தென்படலாம். ஆனாலும் மானிடம் என்ற பெயரில் அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் மிகவும் பிரயோசனமானது.
Source : Pahana July 2004 - Written in English by : Trevis Ranjan Perera
தமிழ் மொழியாக்கம் : கந்தையா குமாரசாமி
ماريم" " . . .
| ტეხ, م""*
ނ&/
மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
CAO205 11eg UANCYFE2
நாம் பயணித்த ஆ"
(சிறுகதைத் தொகுதி) ப. ஆப்டீன்
Musalupaiar.
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
(வரலாற்று நூல்) தில்லை நடராஜா
எண் தேசத்தில் நாள்
(கவிதைத் தொகுதி)
பேராதனை பல்லைக் கழக
மாணவ மாணவியரத கவிதைகள் リ
\S-
i Unyritën Poet
டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது.
தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள்
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும்
t
S upgrg56);

Page 29
54
ஈழத்தின் இன்றைய இலக்கியப் உயர்தரத்தை போக்கு பல தரப்பட்ட வாதப் பிரதி
வாதங்களுக்கு உள்ளாகி நிற்கிறது. இலக் நேரத்தி நகரும்
கியப் போலிகள் உருவாகி வருவதாக
ஒரு சிலரும், தரமான இலக்கியம் P f9 ::Co:T C GUfಹಹjr@ಣೆ ಹ@@ சாராரும் கூறிக்கொள்கின்ற போதிலும், fO V மேல்நிலை ஆய்வாளர்கள் இன்றைய இத்ைதிரங்கன் இலக்கியப் போக்குப் பற்றி அதிகம்
அலட்டிக் கொள்ளாமல் கை கட்டி - பிரகலாத ஆனந்த் நிற்கின்றதாகவும் படுகிறது.
உலகத் தரமிக்க இலக்கியங்கள் போர்க் காலத்திலேயே பல நாடுகளிலும் அறுவடையானதற்கான சான்றுகள் பல இருப்பது கண்கூடு. எனினும் ஆர்முடுகளில் செல்லும் ஈழத்து கலை இலக்கிய வடிவங்கள் உயர்தரத்தை நோக்கிப் பயணிக்கிறதா என்பதே இன்றைய கேள்விக் குறியாகும்! இவ்விடயம் வரன்முறையான கட்டி றுக்கத்துடன் ஆழமாக ஆராயப்பட்டு நெறிப்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாக மேலோங்கி நிற்கிறது.
மல்லிகையின் அசுர சாதனையான 40 வருடங்களுக்கும், ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதை எவரும் ஏற்றுக் கொள்வர். எனினும் இன்றைய போர்க்கால இலக்கியத்தின் போக்கை மல்லிகை முழுமையாகப் பிரதிபலித்து நிற்கின்றதா? என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் போராடும் பிரதேசங் களிலிருந்தும், போராடுகின்ற நபர்களிடமிருந்தும் இன்று பல படைப்புகள் அரங்கிற்கு வருகின்ற போதிலும், மல்லிகையில் அதன் வரவு குறைவாகவே உள்ளது. எனினும் இன்று எழுதும் பலரும் மல்லிகை எழுத்தாளர்கள் உட்படச் சமகாலப் போரியலிலிருந்து விலகி நின்று எழுத முடியாதுள்ளது.
இந்தவேளையில் மனதில் எழும் சில நியாயமான கேள்விகளையும் தவிர்க்க முடியாதுள்ளது. இலக்கியம் என்பது சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டிய கட்டாய முண்டா? சமூக, அரசியல் தளங்களில் காணப்படுபவைதான் இலக்கியமாக்கப்பட வேண்டுமா? போராட்டத்தின் வளர்ச்சிக்கு இலக்கிய வடிவங்களும் கலை வடிவங்களும் எந்த அளவில் பங்காற்றியுள்ளன? இன்றைய ஈழப் போராட்ட இலக்கியங்கள் சர்வ தேசத் தரத்தை நோக்கிப் பயணிக்கின்றனவா? விமர்சனங்கள் இலக்கியத்தைச் செழுமைப்படுத்தும் நிலையில் இன்று ஆய்வு ரீதியில் பங்காற்றுகின்றனவா?
இன்று எமது நாட்டில் போர்க்கால இலக்கியப் படைப்புக்கள் நிறையவே வரு கின்றன. ஆனால், இவற்றில் பலவும் அவசரப் படைப்புகளாகவும், கனதியான அடிப்படை அம்சங்கள் அற்றனவாகவும் இருக்கின்றன. வெறும் விவரணங்களாகச்

சம்பவங்களைத் தரும் ஊடகத் தன்மைப் போக்கையே பல இளையவர்களினதும், போராளிகளினதும் படைப்புகளில் தரி சிக்க முடிகிறது. பழையவர்களின் படைப் புகள் கூட இந்த நிலையிலிருந்து அதிகம் மேலெழவில்லை.
இலக்கியம் என்பது ஒளித்தெறிப்புப் போன்ற ஒரு நிகழ்வேயன்றி, பிம்பப் பிரதிபலிப்புத் தொழிற்பாடன்று எனப் பல விமர்சகர்களும், ஆய்வாளர்களும் சுட்டி நிற்கின்றார்கள். இலக்கியம் சிறிது கற்பனா வாதத்துடன் வாசகனுக்குத்
காலத்தின் கண்ணாடி என்று
தருதல் முழுமையான இலக்கியமாகிவிட முடியாது. உயர் வாசிப்பு அனுபவத்தைத் தரவும், சர்வதேச தரத்தை எட்டவும் இவ் வாறான படைப்புகளால் முடியாது. எனினும் தீவிரவாதச் சிந்தனைகளைப் பரப்பவும், எதிர் புத்தத்தின் நியாயத் தன்மையை எடுத்தியம் பவும், புதியவர்களைப் போராட்டத்தில் இணைக் கவும் இவ்வாறான கலை இலக்கிய உருவாக்கங்கள் பெரிதும் உதவின என்பதை மறுப்பதற்கில்லை. இலக்கியத் திற்கும், நெருக்கமான தொடர்பு நில விட
இயக்கங்களுக்கு மிடையில்
வேண்டும் என பல போராட்ட அமைப்புக்
களும் முனைப் போடு இருந்தன. இன்று புலிகளும் அவ்வாறேதான்.
தமிழர்களின் சமூக அரசியல் வாழ்வை ஒன்று சேர மாற்றிட முனையும் கலை இலக்கியப் போக்கானது போரி யலில் ஆட்சி செலுத்திய அளவுக்கு சமூக வாழ்வின் மாற்றங்களுக்கு வித்திட வில்லை என்பது தெரிகிறது. பெண் விடுதலை அம்சங்கள் பலவும் இன்றைய
basede
இலக்கியத்தில் பெரிதும் பேசப்பட் டாலும், சமசுதந்திரம் பெண்ணினத்திற்கு இன்னமும் கிட்டவில்லை. சமூக ரீதியில் மரபு பேணலும், சீதன அரக்கனும், குடும்பத்தில் தாழ் நிலையும் இன்னமும் தொடர்கதை தான்.
இன்றைய போர்க்கால இலக்கியத் தரமானது இன்னமும் மிகச் சாதாரண நிலையில் இருப்பதாகப் பலர் கூறிக் கொண்டாலும், இன்றைய போரியல் இலக்கியங்கள் சில பிரதேசங்களுக்குள் முடங்கிப் போயிருப்பதனாலும், உதிரி களாகப் பத்திரிகை சஞ்சிகைகளில் வரு பவை நூலுருப் பெறாமையினாலும், இவை பரந்துபட்ட வாசகர்களையும், வாசக விமர்சகர்களையும், ஆய்வு விமர் சகர்களையும் சென்றடைவதில்லை என்ற உண்மையும் மனம் கொள்ளத் தக்கதாகும். வன்னியில் மட்டும் எழுதிக் கொண்டி ருக்கும் புதிய எழுத்தாளர்களினதும், போராளிகளினதும் படைப்புகள் பற்றிப் காத்திர
மாக எழுதும் யோ. கர்ணனையும்,
பலரும் அறிந்திருக்கவில்லை.
கருனை ரவியையும் வெளியுலகில் எத்தினைப் பேருக்குத் தெரியும்? ரஞ்ச குமாரும், ச. முருகானத் தனும், உமா வரதராஜனும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கும் தந்தியும், செங்கை ஆழியானும், தாமரைச் செல்வி
சுதாராஜூம்,
யும், கோகிலா மகேந்திரனும் போர்க்கால இலக்கியங்கள் படைப்பவர்களாக அறி யப்பட்டளவுக்குப் புதியவர்கள் இன்ன மும் அறியப்படவில்லையேயொழிய, அவர்களில் சிலர் குறிப்பிடும் படியான படைப்புகளைத் தந்துள்ளார்கள். இவை பற்றிய தெரிதலும், புரிதலும், ஆய்வுமே இன்று அவசியமாக இருக்கிறது.

Page 30
இன்றைய கலை இலக்கிய வடிவங் களில் ஈழத் தமிழர் போரியல் வரலாறு பதிவு செய்யப்பட்ட வண்ணம் இருக் கின்றது. இலக்கியம் என்பது வரலாற் றின் குழந்தை என்பது எவ்வளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு இலக்கியமும் வரலாற்றை உருவாக்குகிறது என்பதும் மறக்க முடியாத உண்மையாகும்.
போரியல் இலக்கியங்கள் இன்று தேடி வாசிக்கப்படுகின்றன. இலத்திர னியல் ஊடகங்களின் வரவு வாசிப்பைக் குறைத்துவிட்ட பின்னரும் கூட, போர்க்
கால இலக்கியங்களுக்கு இருக்கும் வர
வேற்பினைப் புரிந்து கொண்ட பலரும் கூட, அதை எழுதுவதிலுள்ள நடை முறைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்கிப் பேனாவை மூடியபடியே வைத் திருக்கின்றனர். அல்லது நழுவல் போக் கில் எழுதுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகளே போரியல் படைப்புகளை வெளியிட அஞ்சின. ஆனால் காலமாற்றம் எழுத்து சுதந் திரத்தை முற்று முழுதாகச் சிறையில
டைக்க விடவில்லை. ஒரு காலத்தில்
பிரபாகரனின் படம் வந்த பத்திரிகையைத் தற்செயலாகப் பார்சல் சுற்றிக் கொண்டு சென்றமைக்காகச் சிறைவாசமும், சித்திர வதையும் அனுபவித்த நிலைமாறி இன்று தேசியப் பத்திரிகைகளே அவ்வாறான படங்களைப் பக்கம் பக்கமாகப் பிரசுரிக் கின்றன அல்லவா?
எதிர்த்து முகிழ்ந்த பிரிவினைவாதம் இலக்கியத் திலும் எழுபதுகளில் அரும்பி எண்பது களில் மலர ஆரம்பித்தாலும், தொண் ணுாறுகளிலேயே அதிக முனைப்புப்
தேசியவாதத்தினை
56
பெற்றது. அரச பேரினவாதச் சிந்தனை களே புதிய வாதத்தினை நியாயப்படுத்த ஏதுவாயிற்று. தீவிரவாதப் போராட் டத்தின் பின் தோன்றிய ஒரு புதிய உணர் நிலையாக இலக்கிய ஆக்கங் களிலும் கருத்தியல் மாற்றம் ஏற்பட்டது.
புதியவர்களின் படைப்புகள் சில கற்பனா வாதமின்றி இயல்பாக இருந்த போதிலும், கலைத்துவ வரட்சி மலிந்த படைப்புகளாகத் தரிசனமான அதே வேளை, அனுபவப்பட்ட சிலரது எழுத் துக்களில் இயல்பு நிலைமையுடன் இலக்கிய நயமும் பேணப்பட்டுச் சம காலத்திற்கு முந்தைய நிலையையும், இனி வரப் போகின்றவையையும் உணர்வு பூர்வமாகப் பார்த்து இக்காலகட்டத்தின் உயிர்ச் சாரமாக மிளர்கின்றன. எண்ணிக் கையில் இவை சிலவாக இருந்தாலும், புதிய திசையில் ஈழத்து இலக்கியம்
பயணிக்க இவ்வாறான படைப்புகள் வழி
சமைத்தன. வன்னியிலிருந்து சிறுகதை
படைக்கும் மூத்த எழுத்தாளர்களான
தாமரைச்செல்வியும், ச.முருகானந்தனும் சில குறிப்பிடத்தக்கச் சிறுகதைகளைத் தந்துள்ளனர். இவர்களது சிறுகதைத் தொகுதிகள் தாயகக் கோட்பாட்டுக்குச் சார்பு நிலையான படைப்புகளைத் தாங்கி வந்தபோதும் கூட, இலங்கை அரசின் தேசிய சாஹித்திய விருதினை வென் றமைக்கும் இதுவே காரணமாக இருக்கக் கூடும்.
எழுத்தாளன் தனது கருத்து நிலை யைக் காண முற்படும்போது, பக்கச் சார் புள்ளவனாகத் தன்னைக் காட்டிக் கொள் ளாது படைப்புகளை உருவாக்குதலே இலக்கியச் செழுமைக்கு உகந்ததாகும்.

57
சம்பவங்களாலும், கதாபாத்திரங்களின் உணர்வு, உரையாடல் மூலமாகவும் மறை பொருளாகவே தன் கருத்து நிலையை வெளிக்கொண்டு வரல் அவசியமானது. சமகாலப் பிரிவின் பிரதான கருத்து நிலை களின் எடுகோள்களையும், அக்கருத்து நிலை எவ்வாறு தமது ஆக்கங்களில் சரி யான தடத்தில் சொல்லப்படுகின்றது என்பது பற்றிய தெளிவான பார்வையும், எழுதுபவனுக்கு அவசியம் எழுத்தினது கருத்து நிலை பற்றிய இயைபு, யதார்த்த வாதம் பற்றிய இலக்கியத் தெளிவு என்பனவும் இருக்க வேண்டும்.
இலக்கியப் போலிகள் என்பது உருவாதலை இவ்வாறான தெளிவு நிலை தவிர்க்க உதவும். இலக்கியத் தெளிவில்லாத முற்போக்குப் போலிகள் ஒருபுறம், கருத்து நிலைத் தெளிவில்லாத அழகியல் போலிகள் மறுபுறமாக இலக் கியப் படைப்புகள் சோரம் போகாதிருக்க வேண்டுமானால் தனிமனித அனுபவங் கள் மட்டும் போதாது. உயர் வாசிப்புகள் மிகமிக அவசியம். குறிப்பாக பிற மொழி இலக்கியப் பரிச்சியம் மிகவும் முக்கியமான விடயமாகும். இன்றைய புதியவர்களில் சிலருக்குப் பிறமொழி இலக்கியங்களிலும் சிறதளவு பரிச்சியம் இருப்பதை அவர்களது சில நல்ல படைப்புகள் மூலம் காண முடிகிறது. அவர்களது புதிய திசையிலான படைப்பு களுக்குக் காலாக இருந்த தமிழக இலக்கி யங்கள், பிறமொழிப் போரியல் இலக்கி யங்கள் தந்த தூண்டுதல்கள் உயர்தரத்தை நோக்கிய பயணத்திற்கு வித்திட்டுள்ளன. எனினும் வாசகர் வட்டத்தில் ஏற்படு கின்ற சரிவு நிலையும், அவசர வாசிப்பை விரும்பும் சூழலும், இயந்திர மயப்பட்ட
இவ்வுலகில் அமர்முகடுகளில் செல்கின்ற இலக்கிய ஆர்வமும் இலக்கிய உற் பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இலக்கியங்களை விட இன்று கலை வடிவங்களுக்கு வரவேற்பு அதிகரித் துள்ளன. இந்த வகையில் போர்க்கால விதி நாடகங்கள், பட்டிமன்றங்கள் என்பன வரவேற்புப் பெற்றுள்ளன. மேலும் மேடை நாடகங்களும், குறும் படங்களும் கூட உயர்வடைகின்றன. கூத்து மீட்டெடுப்பும், நவீனமாக்கமும் இவ்வாறான கலைகள் மேம்பட வழி வகுத்தன. தாசியெஸ், சுந்தரலிங்கம், சண்முகலிங்கம், சிதம்பரநாதன், மெள குரு போன்றோரினால் ஆரம்பிக்கப்பட்ட இக்கலை வடிவங்கள், பின்நாளில் போர்க் காலப் பிரசாரப் பீரங்கியாக நின்றுதவின. புதியவர்கள் ஒருபடி மேலே சென்றனர்.
இந்த வகையில் வன்னியில் குறிப் பிட்டுச் சொல் லத்தக்க பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து கலை இலக்கியப் பணி புரியும் நா.யோகேந்திர நாதனின் பங்களிப்பைச் சொல்லாதிருக்க முடியாது. புதுவை அன்பன், கேசவன், ஞானரதன் என இப்பட்டியல் புதிய போராளிகள் வரை நீண்டு கொண்டே செல்கிறது.
அடுத்து, வானொலி நாடகங்களும், இசைப் பாடல்களும் அண்மைக் காலத் தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் வளர்ச்சியுற்றன. தமிழ் வானொலியும், நிதர்சனமும் அதற்குத் தூண்டுத லளித்தன. புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் முதற் கொண்டு இன்றைய புதியவர்கள் வரை பலர் இசைப் பாடல்
i tala

Page 31
களைத் தந்து சினிமாப் பாடல்களையே இங்கு பின் தள்ளியுள்ளன.
போராளிகளில் பல இலக்கிய கர்த் தாக்களும், கலைஞர்களும் உருவாவதற்கு அவர்களுக்கு ஊட்டப்பட்ட மொழி பெயர்ப்பு இலக்கியங்களும் பெரும் துணை புரிந்தன. பாலஸ்தீன, ஆபிரிக்கக் கவிதைகளும், புரட்சி இலக்கியங்களும் இதில் குறிப்பிடத்த தக்கவை. சர்வதேச இலக்கியப் பரிச்சயத்தினால் பல இளை ஞர்கள் புடம் போடப்பட்டார்கள். பெண் போராளிகளில் பெரும் எண்ணிக்கை யானோர் எழுதுகின்றனர். இவர்களது ஆக்கங்கள் துணிச்சல் மிக்க படைப்பு களாக மிளிர்கின்றன.
வன்னியில் வெளிச்சம் சஞ்சிகையும், வெள்ளி நாதமும், கிழக்கில் தமிழ் அலை முதலான பத்திரிகைகளும் புதியவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தன.
புதிதாக எழுதும் சிலரின் பெயர் களை வெளிக்கொணரும் நோக்கில் இறுதியாக வன்னி எழுத்தாளர்களில் சிலரின் சில பெயர்களைத் தருகிறேன். தீபா குமரேஷ், தவபாலன், ஜெயசீலன், தாட்சாயினி, மலைமகள், ஆதித்த நிலா, அம்புலி, ஞாலவன், செல்வம், அஜந்தி, ஈரத்தி, மாதுளா, மாலிக, ஆதிலட்சுமி, மீரா, வினோதினி, நாமகள், பாண்டியன், சுஜந்தன், வானதி, பாரதி, கெளதமி, இராஜி, வேலவன், தூயவன், ஆதவன், வளவன், கஸ்தூரி, ஆர்த்தி, ஆரதி, கர்ணன், சிவேந்திரன், வசந்தன், சுதாகர், பரந்தனுாரான், முல்லையூரான், முல்லை யேசுதாசன், முகிலன்,
மலரவன்,
கோணேஸ் இப்படிப் பட்டியல் இன்னும்
58
நீண்டு செல்லும். இவர்களது படைப்பு களில் கள அனுபவங்கள் முனைப்பு டனும், பட்டிருக்கும். புத்தக வடிவில் வெகு சிலரே வெளியிட்டுள்ளனர். தமிழ்க்கவி, மலரவன் ஆகியோரது நாவல்கள் குறிப்
யதார்த்தமாகவும் சித்திரிக்கப்
பிடத்தக்கவை. கவிதைகளை எழுது பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். நெஞ்சை நிறைக்கும் சில கவிதைகள் (இக் கட்டுரையில் ஏனைய பிரதேச எழுத் தாளர்கள் பற்றி நான் அதிகம் குறிப்பிட வில்லை)
கண்ணில் தட்டுப்படுகின்றன.
இவர்களது படைப்புகள் பற்றிய திரட்டும், ஆய்வு நிலை விமர்சனமும் போர்க்கால இலக்கியத்தைச் செழுமைப் படுத்த உதவும். எம்மிடையே விமர்சகர் கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். சிவத்தம்பி, கிருஷ்ணராஜா, கே.எஸ்.சிவ குமாரன், சபா ஜெயராசா, அருணாசலம் போன்றோர் புதியவர்களின் படைப்பு களின் பக்கம் பார்வையைத் திருப்ப வேண்டும்.
எமது நாட்டில் போர்க் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களானது இதுவரை காலமும் சந்தித்திராத அதிர்வுகளைத் தந்து வருகின்றன. இதனால் புதிய கலாச் சார, தத்துவார்த்த கோட்பாடுகள் இனங் காணப்பட்டு வருகின்றன. எமது இலக் கியம் தனித்துவமான ஒரு இலக்கியப் பிரிவாக தமிழ் மொழி சார்ந்த அளவில் இப்பொழுதுதான் உருவாகி வருகிறது. பரந்தபட்ட தமிழிலக்கியக் கடலில், எமது நவீன கலை இலக்கிய வடிவங்களும் தமிழகச் சார்பு நிலைப்பட்டவையாகவே இருந்து வந்தன. இன்று போரின்
 

59
வெம்மையினால் கனன்று எமக்கென
ஒரு புது இலக்கியம் - ஈழத்து இலக்கியம் உருவாகி வருகிறது.
ஈழத்து இலக்கியமானது தமிழ் சிங்களம் என இரு பிரிவுகளைக் கொண்டிருந்த போதும், இன்று வரை அவை வெவ்வேறு இலக்கியங்களாகவே கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழர் களுக்கு சிங்கள இலக்கியத்திலும், சிங் களவர்களுக்கு தமிழ் இலக்கியத்திலும் பரிச்சயம் ஏற்படுத்தல் இன்றியமையாத தேவையாகவுள்ளது. பரஸ்பர புரிந் துணர்வை இலக்கியம் மூலம் ஏற்படுத்த வேண்டுமானால் இந்த நிலை அவசியம். இனவாதம் இதற்கு முட்டுக்கட்டை இட்டாலும் இதனை உடைக்கத் தமிழ் சிங்கள இலக்கியவாதிகளின் ஒன்று கூடல்கள் வித்திட்டுள்ளன.
எமது இலக்கியம் உயர்தரத்தை நோக்கி நகரவும், தேசிய இனங்களுக் கிடையே புரிந்துணர்வு ஏற்படவும் இதை நடைமுறைப்படுத்த இரு தரப்பு இலக்கிய வாதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதன் ஒரு அம்சமாகச் சூரிய குடும்பத்தினரின் இனவாதிகளுக்கெதி ரான செயற்பாட்டை இவ்வேளை நினைவு கூறலாம். தாயக கலை பண் பாட்டுக் கழகமும் இந்நேரத்தில் செயற் படுவது தெரிகிறது. கலை இலக்கிய திறமையாளர்களும் இருவழிப் பாதையில் செயற்படலாம். இன்றேல் நாடுபோல் நம் இலக்கியமும் உடைபடும் ஆபத்துள்ளது.
எமது இலக்கியம் உயர்தரம் அடையத் திறனாய்வு விமர்சனங்கள் மேலும் தெளிந்த கருத்தியல் வளத்துடன்
செய்யப்பட வேண்டும். சமூக இருப்பின் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இந்த விடுதலை யுத்த வரலாற்றுக் காலகட்டத்தில் வாழும் மக்களிடம் காணப்படுகின்ற உணர்வுகள், விருப்பு வெறுப்புக்கள், கருத்துக்கள், சமூக இருப்பைப் பிரதிபலிக்கும் கோட் பாடுகள் என்ற அனைத்தையுமே உள்ள டக்கியதே சமூக உணர்வாகும். யுத்த காலத்தில் மக்கள் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் போராட் டத்தை நேசிக்கின்றார்களல்லவா? போராளிகளை ஏற்காத சிலர் கூட, போராட்ட நியாயத் தன்மைகளையும், அதன் வெற்றியையும் ஏற்கின்றார்கள். இந்நிலைப்பாடானது கலை இலக்கி யத்திலும் பிரதிபலிக்கும் கருத்தியலை அல்லது கோட்பாட்டை ஆதரிப்பதே இம்முரண்பாடான நிலைப்பாட்டினைத் தரிசனமாக்குகிறது.
கலை இலக்கியங்கள் மன உணர்வு களுக்குத் தீனி போட வேண்டியவை. கலை இலக்கியங்கள் முதலில் அழகுப் பரிமாணங்களைத் தம்மிடையே கொண்டி ருத்தல் வேண்டும். அவ்வாறு அமைதல் மூலமே அது வாசகனை எட்ட முடியும். ஆனால் அத்தோடு அதன் பணி முடி வடைந்து விடுவதில்லை. அதனால் சமூகத்திற்குப் பயன்பாடு இருக்க வேண்டும்.
இன்றைய இலக்கியங்கள் இரண்டா வது அம்சத்தில் காட்டுமளவுக்கு முதலா வது அம்சத்திலும் அக்கறை செலுத் தினால் எமது இலக்கியம் உயர்தரத்தை எட்டுவது சாத்தியமானதே!

Page 32
60
விதையாய் முளையாய் வேராய் கிளைகள் உயரும் பரிணாமம் பனிநீர் வடிந்த பூவிதழ்கள் மயங்கிச் சிரிக்கம் விந்கை
ரிக்கும் விந்தை விருட்ஷம் மேகம் தழுவும் கனவுகளில் விண்ணளவு கரங்கள நீண்டாலும் - Cup. Lu6ft பூமியைப் புணரும் வானம் சொட்டுநீர் மட்டுமே சுகம்!
மலையாளக் கவி வயலாரின் அர்த்தமுள்ள வரிகளிது இலைகளால் மேனி மறைக்கும் விருட்ஷமே! உனக்கேன் இத்தனை கைகள்?
,賺
கூனற் தென்னைகளாய்க் கரைநெடுக
S
. تهیه .
リ*い。リ 335 ...' تھ
| 3T3523 و هیالSلا
S 8፬ረኣsኞችጀ፩
காவல் காக்குமுன் கால்களை
ஆராதிக்கும் நதிப்பெருக்கு மனுக்குலப் பிணிகள் மூலிகையினால்
களைந்தெறியும் ஞானி நீயின்றிக் காற்றுக்கு ஒசையில்லை! இசைக்குச் சுருதி இல்லை!
உன் கைகால்களை ஈரமின்றித் தறித்து விறகாக்கி எரியும் போதும் உன்னைச் சிதைத்துக் கட்டிடம் எழும்போதும் என் ஆன்மா கசிந்துருகிறது!
 
 
 
 
 
 
 
 
 
 

6
– 6ીવતr6ી. ઈજીr
இன்றைய இளம் எழுத்தாளர்களிடம் நீங்கள் கவனித்த குணாம்சங்கள் என்ன?
chuca CorfuLurT எஸ்.தவேந்திரன்
இலி நிறைய'ஆத்துப்பறந்து எழுதித்தள்ளுகிறார்கள். அதையும்விடநிறையநிறையப்பேசுகிறார்கள். குறைவாகப் படிக்கிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வு என்பது இல்லவேயில்லை.
இலக்கியவாதிகளிடையே கருத்தொற்றுமை நிலவ வேண்டும் என்பது தேவையா?
6.šстrcurrcuлсо க. சண்முகன்
23 இலக்கிய உலகில் இயங்கிவருபவர்களிடம்பரஸ்பரம்புரிந்துணர்வும் தக்க மரியாதையும்தான் நிலவ வேண்டும். கருத்து முரண்பாடுகளும் வித்தியாசமாகச் சிந்திக்கும் சிந்தனை வீச்சும் இருந்தால்தான் புதிய புதிய இலக்கியப் படைப்புகள் உருவாக்க முடியும்.
உங்களைத் திரும்பத் திரும்ப எஸ்.பொ. அவர்கள் தாக்கி எழுதி வருகிறாரே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தெவறிவளை ஆர்.முருகவேல்
2 மணமறிய அவரைப் பாராட்டுகின்றேன். ஒரு பட்டதாரி, பல திறமைகள் வாய்க்கப் பெற்றவர் என்னைத் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக எந்தவித ஆதாரமுமில்லாமல் அவதூறு செய்து வருகிறார் என்றால் என்னிடம் ஏதோவொரு தனித்திறமை இருக்கத்தானே வேண்டும் எனச் சிறிது காலம் சென்றபின்னர்எனக்குள் நானேயோசிக்கத்தொடங்கினேன். எனக்குள் ஒருவபாறிகனன்றது.

Page 33
என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தியவர்களை
விட, இப்படியாக அவதூறு பொழிந்து என்னை ஊக்குவித்தவர்களை நான் மனசாரப் பாராட்டு கின்றேன். அதில் ஒருவர் இந்த எஸ்.வா. அது மட்டுமல்ல, இவர் சென்னையில் நடத்திய விழாவில் பல தமிழகத்துப் பிரபலங்களுடன் சேர்த்துவிருதுதந்து சிறப்பித்தார். மேடையில் என் கூடப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். எஸ்.வபா.நடத்தும் இந்த 'மித்ரவிழாவில்நான் கலந்து கொள்ளக் கூடாது என்று என் வநஞ்சுக்கு நெருக்கமான பலரும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டனர். ஆனால், எனது அணுகு முறைவேறுபட்டது. இலக்கியனதிரியை நிராயுத பாணியாக்குவது. அதில் எனக்குவெற்றி. இந்த முரண்பாட்டை அவரை விழா மேடையில் வைத்துக்கொண்டே பகிரங்கமாக எனது உரை யில் குறிப்பிட்டேன். இதை அவதானித்துக் கொண்டிருந்த எஸ்.வபா.வும் சொண்டிற்குள் சிரித்தபடியே வீற்றிருந்தார். இதில் இலக்கிய ராஜதந்திர வெற்றி எனக்கா? அல்லது அவருக்கா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். காலமும் தீர்ப்புச்சொல்லும்.
X மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள்'
என்ற பெயரில் திக்குவல்லை கமால்
நூலொன்று எழுதி வெளியிட்டுள்ளாரே, இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
நீர்கொழும்பு, எம்.தாயுமானவன்
இ என்னைப் பற்றி இப்படியாகச் சிலர் தமது மனப்பதிவுகளை நூலாக்கியிருக்கின்றனர். நண்பர்முருகபூபதி கூடச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான நூலிலான்றை வெளியிட்டி ருந்தார். என்னைப்பற்றிநானே தெரிந்திராத பல தகவல்களை இவர்கள் நான் வாழும்போதே
வட்டுக்கோட்டை.
62
எழுத்தில் பதிய வைத்துள்ளனர். பூபதி நீர் கொழும்பைச் சேர்ந்தவர்.கமால்வதன்னிலங்கை முஸ்லிம். நானோ யாழ்ப்பாணத்தைப் பிறப்பிட மாகக் கொண்டவன். எழுத்தின் பெருமையைப் பார்த்தீர்களா? இலக்கிய நேசிப்பு நம்மை யெல்லாம் ஒன்றிணைக்கிறது. பரஸ்பரம்புரிந்து கொள்ளச் செய்கிறது. இதுதான் எழுத்து அர்ப்பணிப்புக்குள்ளதனிப்பெரும் வல்லமை.
X உண்மையைச் சொல்லுங்கள். உண்மையாகச் சொல்லுங்கள். இந்த நாட்டில் இனங்களுக்கிடையே இன்று
தோன்றியுள்ள கசப்பான நெருக்கடி
தீருமா? தீராதா?
எம்.கனகசூரியர்
மி உண்மையைத்தான் சொல்லுகிறேன். உண்மையாகத்தான் சொல்லுகிறேன். இந்தப் பயங்கரமான உயிர்குடிக்கும் நெருக்கடிதீரவே தீர்ந்து விடும். நீண்ட நெடுங்காலமாக நிலவி வந்த இனப்பூசல் நீங்கள் அவசரப்படுவதுபோல கிட்டிய காலத்தில் தீராதுதான். ஆனால், நிச்சயம் தீரும். அதற்காக நாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா பார்வையாளர்களாக இல்லாமல் இந்தமண்ணில்நிரந்தரச் சமாதானம் தோன்றுவதற்குரிய பங்காளர்களாகவும் செயல்படவேண்டும்.
சென்ற அக்டோபர் மாத மல்லிகை இதழில் வெளிவந்த கவிஞர் சச்சி அவர் களுடைய உருவ அட்டைப் படம் வெகு இயல்பாகவும் புதிய கோணத்தில் அமைந்ததாகவும் இருந்ததே. இந்தப்
ウ Desses):

புகைப்படத்தை எடுத்து உங்களுக்கு உதவியவர் பெயர் என்ன?
கிளிநொச்சி. cTuio. Scufu uchucür
மி அந்தப் படத்தைப் பற்றிப் பலரும் கேட் டார்கள். விசாரித்தார்கள். பாராட்டினார்கள். அந்தப்படத்தை எடுத்து எனக்கு அனுப்பிஉதவி யவர் இளம் புகைப்படக்காரர் செல்வி ஹம்ஸா குணராசா என்பவர். இவர் செங்கை ஆழி யானின் மூன்றாவதுவபண். கடைக்குட்டி,
அப்பனுக்கேற்றமகள்தான்!
உங்களது சுயசரிதையின் ஆங்கில மொழிபெயர்ப்புப் படித்தேன். மொழி பெயர்ப்புத் தரமாக அமைந்திருக்கிறது. இது ஒரு பெரிய சாதனைதான். எந்த வொரு தமிழ் எழுத்தாளனும் இதுவரை
செய்ய முடியாத சாதனை. அதுசரி. இப்படி
யாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்கள் மனதில் முளைவிட்டது?
வத்தளை. எம்.ஆர். ரஞ்சன்
23 நாள் தினசரிபுதுசு புதுசாக ஏதாவது பற்றி யோசித்துக் கொண்டிருப்பது வழக்கம், நான் எழுதி வெளியிட்டுள்ள நூல்களில் எனது சுய வரலாறு நூலே அதிகளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. அதன் வெகுசனப் பிர பலமும் மகத்தானது. சும்மா நமது மக்களி டையே குதிரை ஒட்டிக் கொண்டிருப்பதை விட, கொஞ்சம் மாற்று மொழிக்காரர்களிடமும் சென்றடைந்தால் என்ன எனச் சிறிதுசிந்தித்துப் பார்த்தேன். இதுசித்திக்கக்கூடியவழிமுறைகள் தானாகவே தேடி வந்தன. செய்து முடித்து
விட்டேன். உங்களுக்கு ஒருண்மையைச் சொல்லுகின்றேனே. ஆங்கிலப்பிரதியில் ஒன்றை இந்திய ஜனாதிபதிக்கே அனுப்பி வைத் துள்ளேன். அவரிடமிருந்து ஏதோ ஒரு தகவல் வரும் என நிச்சயமாகக் காத்திருக்கின்றேன்.
தொலைக்காட்சி நாடகங்கள்
பார்ப்பதுண்டா?
கோப்பாய். ஆர்.தனமணி
இ மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை எனது ஓய்வு நேரம். எனவே தொடர்ந்து பார்க்காது போனாலும் இடை யிடையே பார்ப்பதுண்டு. காதிலே பூசுற்றுவது எனச் சொல்வார்களே அதுதான் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களின் உள்ளடக்கக் கதைகளாக அமைக்கப்பட்டுவருகின்றன. இந்த மாதிரியான கதையமைப்பும் நம்பகத் தன்மை யற்ற காட்சியமைப்பும் கொண்ட தொலைக்காட்சி நாடகங்களால்வதாடர்ந்துவெற்றிநடைபோட்டு முன்னேற முடியாது என்பது எனது எண்ணம்.
முன்னர் உங்களை அடிக்கடி யாழ்ப் பாணத்தில் பார்க்க முடிந்தது. இன்றோ காண முடிவதில்லை. உங்களைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. எப்பொழுது யாழ்ப் பாணத்திற்கு வருவீர்கள்?
நல்லூர். க.தருமசீலன்
இ எனக்குள்ளேயும் அந்த மண்ணின்
மீதுள்ள பாசம் அடிக்கடி கிளர்ந்தெழுவதுண்டு.
யாழ்ப்பாணத் தெருவீதிகளில் சந்தித்த மக்கள் தான் என்னை வளர்த்தெடுத்தனர். மல்லிகை யைப் பிரபலப்படுத்தியவர்களும் அந்த மக்களே.

Page 34
அவர்களை நான் மறக்கவில்லை. அங்கு வந்து நான் நடந்து திரிந்த வீதிவயான்றில் விழுந்து அந்த மண்ணை முத்தமிடவேண்டுவமன்ற அவா என்னுள்ளே கனன்று கொண்டிருக்கின்றது. 40ஆவது ஆண்டு மலர் முடிந்ததும் அதன் அறிமுக விழாவை அங்கு நடத்தி வைக்க விரும்புகிறேன். அவ்விழாவுக்கு அவசியம் நீங்களும் வர வேண்டும் என இப்போதே உங்களுக்கு அழைப்பு விடுகின்றேன். எங்கு வாழ்ந்து வருகிறேன் என்பது என்னைப் வபாறுத்தவரை முக்கியமல்ல. மல்லிகை தோற்றுவிக்கப்பட்ட நோக்கங்களைச் செம்மை யாகச் செய்து வருகின்றேனா? என்பதே முக்கியமானதாகும். என்மனசுக்கு என் வேலை ரொம்பத்திருப்தியே.
X இந்த ஆண்டு சாஹித்திய விழாவிற்குப் போயிருந் தீர்களா?
நடைபெற்ற
grT-Gra). எம்.ரமணன்
23 போயிருந்தேன். நமது எழுத்தாளர்கள் பரிசு பெற்றதை நேரில் பார்த்துக் குதூகல மடைந்தேன். குறிப்பாகநாவலுக்கானபரிசைச் செங்கை ஆழியானும், சிறுகதைக்கான பரிசை
கரங்களால் வபற்றுக்கொள்வதை நேரடியாகப் பார்த்து மனநிறைவடைந்தேன். அக்காட்சியை அடுத்தநாள் தொலைக்காட்சியிலும் பார்த்து ரசித்தேன். ஏனோ தெரியவில்லை இப்பரிசுக் குரியவர்களின் வபயர்களோ, பரிசு கொடுக்கப்
64
பட்டவர்கள் பற்றிய விழாத் தகவல்களோநமது செய்தித்தாள்களில் ஒருபத்திரிகையைத் தவிர இடம்வuறவில்லை. இப்படியான தேசிய கெளர விப்பு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் சென்றடைவது பரிசு கொடுப்பதைவிட, முக்கிய மானது. இந்தக்குறையைச்சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வது எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்குமிகமிகநல்லது.
நான் மல்லிகையை விரும்புகிறேன். சந்தா கட்ட வசதியில்லை. தூர இடத்தில் நான் வாழ்ந்து வருவதால் தொடர்ந்து அதைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை. மாணவனாகிய என்னைப் போன்றவர்கள் மல்லிகையைப் பெற்றுப் படிக்க என்ன திட்டம் வைத்துள்ளிர்கள்?
முள்ளியவளை. a. FGuavair
இ8 உங்களைப் போன்ற மாணவர்களை நான் அடிக்கடிநினைத்துப்பார்ப்பதுண்டு. உங்களது கல்லூரி அதிபரையோநாலகரையோ அணுகிக் கேட்டுப்பாருங்கள். அல்லதுநாலுரூபா தபால் தலை ஆறு மல்லிகைக்குத் தபாலில் அனுப்பி வையுங்கள். அந்த அந்த மாதஇதழ்உங்களைத் தேடிக்கொண்டு வரும், இலவசமாக என்னால் மல்லிகையை அனுப்பிஉதவமுடியாது. கண்டிப் பாக இலவசமாக மல்லிகையை அனுப்ப மாட்டோம். இந்த ஆரோக்கியமான யோசனை யைத்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல dypgulųúib.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு .
13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும்
வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
g;656);

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் 垒 சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக காட்சியும் விற்பனையும்
N O (y சாஹித்திய புத்தக இல்லம் ,இல. 4A, குருநாகல் வீதி میب۰۹t
(பஸ்நிலையத்திற்கு அண்மையில்)
புததளம. தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து
விற்பனை செய்து உதவுவோம்.”

Page 35

vember 2004
- t
ters of . . . . Iditional.
On اللہ
. - F ( " .
ܕ ܘ ܒe. In Ο О S . ) الة = ن
| . 3 - سمې" |
ད།
"تلا
C
--
- it
I C
ܨ ܩ 1 9 Venue, ","
酋 _- bo'-03.
:: l
لr ܩ T
i. - " " " -