கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.12

Page 1


Page 2
A. ཁ─། is أمس. 92%e ? '0 ദർ' και το c '. “,ኣ . R}
f أم ، ... "
THE DIGITAL SERVICES WE PROVIDE
C C Digital Print 12"X18" Maximum size in 10 Min. :
- ....., " : . ペー"|
/ ,ζ) sa نمبر • .ۂ Automatic dust and scratch correction. /“ \
Xry •° w C. ܐܲ--، ܥ Print to Print services. ཡོད ... " Contact Cards and Index prints. V} ; 7ܝܠ “) о
‘. .
Greeting Car /Frame Prints/ Calender Prints/Album Prints. o . . . .
Compatible Input & Output Media. ༠
(Floppy Disk, CD-Rom, CD-R,/RW. MO, ZIP, DVD-RAM, DVD-R, DV)-ROM, PC Card, Compact Flash, Smart Media) I
Digital Camera Card Printing. ', / “. : ya *** (. . Colour Negative, Positive, B/W and Sepia Negative Printing ./ OTHER SERVICES; ) ). 9 Develo 蠶 Printing of films in 20 Min ۰.-...۵۰۰ م. م r : ༢ ༽ a |{{#ifiးမွိုးနှီ nlargennents (5"?X7” to I2”XI 8”) ." : لها : سلم Q) Passport/Visa photos /B/ W photos in IO Min. (), Film Rolls / Cameras / Batteries / CD / Floppy / Album Sales. Οι frami f Pi − ( ROY raming of Pictures (limported) - .", • ܠܢO ,z ** Laminating Services. () r5 SO Wedding Album Binding - O c P لإضي
ཐག་ང་། 0 ". . J/ :: نه ど。 N༼འོ།།༽༠ XY公 ી.
FOR ALLYOUR REQUIREMENTS IN koopa Out Door Photography & Videography dx , NIN
Weddings. bخا Birthday Parties / Puberty Ceremonies Seminars / Any Other Special Functions & Occasions.
○
 
 
 
 

SN27 மல்லிகை
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
8:
ஓர்ே 2004 இடு6
ഠർഡ" ീറ്റ്ര ©ർ0ർഗ്ഗ ©ർഗ്ഗlabe
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
STREET, CCLC. E.g. - 18. TEL: 232O721
201-1/4, SRI KATHIIRESAN :
அடுத்த இதழ் ஆண்டு மலர்
நாற்பதாவது ஆண்டு மலரைத் தயாரிப்பதில் வெகு மும்முரமாக ஈடுபட்டு உழைத்து வருகின்றோம்.
இம்மலர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மலராகும்.
காரணம் தனி நபர்களால் ஆரம்பிக் கப்பட்ட எந்தச் சிற்றேடுகளுமே நாற்பது ஆண்டுகளைத் தாண்டி, தனது மலரை வெளியிட்டு வைத்தது கிடையாது.
சிறப்புச்
ஈழத்து
இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்து மகிழ்கின்றது.
மல்லிகை சாதனையைச்
இந்தச் செய்து,
இம்மலரில் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் எழுதுகின்றனர். மல்லிகை மலர்கள் எப்பொழுதுமே காத்திரமான உள்ளடக்கங்களையும், கனதியையும் கொண்டவைகளாகத் திகழ்வது வழக்கம். இம்மலரும் பாதுகாக்கப்பட வேண்டிய மலராகவே இருக்கும்.
இலக்கியச் சுவைஞர்கள் மலரை வெகு கவனமாகப் பெற்றுக் கொள்ள முயல வேண்டும். தபாலில் அனுப்பப்பட்ட மலர்கள் கடந்த காலத்தில் விலாசதாரர்களைச் சென்றடையவில்லை என்ற குற்றச் நாட்டொன்றுமுண்டு.
எனவே மலரைப் பெற்றுக் கொள்வதில் எம்முடன் தயவு செய்து ஒத்துழையுங்கள்.
*சூ தடவை மல்லிகைக்கு வாருங்கள்.
- ஆசிரியர்

Page 3
பண்டைய தமிழ்ச் சமூகத்தில்
BITL5lb
கார்த்திகேசு சிவத்தம்பி
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
தமிழியல் துறையில் மிக சிறந்த ஒரு நூலாகக் கருதப்படும்."பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்ற இந்நூல் சங்ககால ஆரம்பத்திலிருந்து சிலப்பதிகார காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் நாடகம் பற்றிப் பேசுகிறது. உண்மையில் இந்நூல் தமிழ்ச் சமூகத்தின் நாடகத்தை, நாடகச் சூழலை, நாடகக் கலைஞரை, நாடகப் பண்பாட்டை அவற்றின் சமூக வரலாற்றினூடாக ஆராய்கிறது. தமிழ் நாடகத்தின் பலங்களை, பலவீனங்களை விளங்கிக்கொள்ளக் கிரேக்க நாடகத்துடன் அதை ஒப்பீட்டாய்கிறது. இந்நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு 23 வருடங்களாகியும் இதிற் பேசப்பட்ட விடயங்கள் இன்னமும் தமிழ்மொழியில் வேறு ஆசிரியராற் பேசப்படவில்லை என்பதே இந்நூலின்
மிகப் பெரும் பலமாகும்.
பொருளடக்கம் ஆய்வுப் பிரச்சினைகளும் முறைமையும், கிரேக்க நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஆய்வு முலங்கள், ஆய்வுக்குரிய காலத்துத் தமிழகச் சமூகம் வரலாறு : பின்புலக் கட்டமைவு, விரயுகத்தில் நடனமும் நாடகமும், நிலப் பிரபுத்துவ மேலாண்மைக் காலத்தில் நடனமும் நாடகமும், வணிக மேலாண்மைக் காலத்தின் நடனமும் நாடகமும், நடன நாடக வடிவங்கிளின் இயல்பும் தொடர்ச்சியும், கிரேக்கத்திலும் தமிழ்நாட்டிலும் நாடகக் கலை : நெறி முறைகள் பற்றிய நோக்கு, தோற்றம் வளர்ச்சியிற் தொழிற்பட்ட காரணிகள்
uâů : 2004 / S9 ST6n : 145mm x 215mm / uksessi : lxxxii + 445 ISBN 955 - 9429 - 56 - 6/வெளியீட்டு எண் : 183/விலை 700.00
(5LDJsi jigs, gobsoli KUMARAN BOOK HOUSE
201 டாம் வீதி, கொழும்பு - 12. 201, Dam Street, Colombo - 12. Tel. : 2421388,
தொ.பேசி : 2421388 3, Meiga Venayagar Street, Chonnal - 26 3. மெய்கை விநாயகர் தெரு, சென்னை - 26 E-maill: kumbhGBaltnet. Ik
அகண்ட ஆழ்ந்த அறிவிற்காய்
 
 
 
 
 
 

கடந்த கால அலட்சியங்கள் இனிமேலும் தொடரக் கூடாது ܠܛ
இன்று இளைய தலைமுறையினரிடையே ஆக்கபூர்வமான ஓர் இலக்கிய உத்வேகம் தோன்றியுள்ளது. இந்த மண்ணில் தோன்றிச் செழிப்படைந்து வரும் கலை, இலக்கியச் செயற்பாடுகளை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேரவா இளம் வட்டத்தினரிடையே வேர் பரப்பி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்று இந்த நாட்டிலுள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள், தமது பட்டப் படிப்பின் ஆய்வுப் பொருளாக, 'ஈழத்துக் கலை இலக்கிய முயற்சிகள் என்ற விடயத்தை ஆய்வு செய்ய, முயன்று முயற்சித்து, உழைத்து வருகின்றனர். பல தனி நபர்களிடமும், சிறுசஞ்சிகை யாளர்களிடமும் இரந்து திரிந்து ஏமாற்றமடைந்து விடுகின்றனர்.
இதில் பெரிய சங்கடமான அம்சம் என்னவென்றால் அவர்களது ஆய்வுக்கான தரவு நூல்கள் அவர்கள் கல்வி பயிலும் பல்கலைக் கழங்களிலோ அல்லது நூலகங்களிலோ கிடைப்பதில்லை. தமக்குத் தேவையான நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் தேடித் தேடி அலுத்துப் போயுள்ளனர், பலர்.
பெரும் பெரும் நூலகங்களும், பல்கலைக்கழக நூலகங்களும் கடந்த கால நமது இலக்கியச் சொத்துக்களைப் பாதுகாத்துச் சேமித்து வைத்திருக்காத நிலையேதான் இதற்குக் காரணமாகும்.
இன்று வாரத்தில் இரண்டு தமிழ் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணம், திருகோணமலை, வன்னி, மட்டக்களப்பு, மலையகம், மன்னார், கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்தெல்லாம் நூல்கள் வெளிவந்த வண்ணமேயுள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பான்மையான நூல்கள் பாடசாலை, பல்கலைக்கழக, பொது நூலகங்களி னால் கண்டு கொள்ளப்படுவதேயில்லை. அலட்சியம் வேறு காட்டப்படுகின்றன! தமிழகத்துக் கடதாசிக் குப்பைகளுக்குக் காட்டப்படும் வாங்கும் ஆர்வம் கூடக் காட்டப்படுவதில்லை.
இதன் தாக்கம் இன்று தெரியாமல் இருக்கலாம். நாளை என்றொரு நாள் வரும். பத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்வரும் ஆய்வு மாணவன், இன்று அவலப்பட்டுத் தேடித் திரியும், மாணவனைப் போலவே நூல்களைத் தேடித் தேடி அந்தரித்துத் திரிவான் என்பது சர்வ நிச்சயம்.
w கடந்த காலங்களில் செய்த தவறை இனிமேலும் தொடர்ந்து செய்யக் கூடாது என
நூலகங்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

Page 4
வானொலி மாமா
திருமிகு. எஸ்.சரவணமுத்து
- மா. பாலசிங்கம்.
றேடியோ என்ற வாத்தியத்தை மார்க்கோனி உலகிற்கு அறிமுகப்படுத்தினான். இது நடந்து இன்று ஆண்டுகள் பலவாகிவிட்டன. கிடைத்தவொரு வசதியை, அது எதை இலக்காக வைத்து உருவாக்கப்பட்டதோ? அதற்கும் மேலாக அதனிடமிருந்து பெற வேண்டியதைப் பெருக்கு வேண்டும். இது மனித இயல்பு. இதைப் பேராசையெனக் கூறிக் கொச்சைப் படுத்துவது அறிவுப்பூர்வமானதல்லவென்பதை மனிதன் தனது அறிவுத் திறத்தால் மெய்ப்படுத்தி இருக்கிறான்.
மார்க்கோனி உண்டாக்கித் தந்த கருவி இன்று அரும் பொருட்காட்சியகங்களில் துயில் கொள்ளவில்லை. நூற்றுக்கு எழுபத்தைந்து (75 %) சதவீதமான மனிதர்களது இன்றியமையாத பாவனைப் பொருளாகி விட்டது. மானுடம் தனது உயிருக்கு நிகரானதாக ஒம்பும் மொழி, சமயம், கலாசாரம் என்ற இன அடையாளங்களைப் பரம்பல் செய்வதில் அதன் வகிபாகம் மகத்தானது. இதற்கு ஊட்டத்தைக் கொடுத்து உயிர்த் துடிப்பை ஏற்படுத்தும் வகையில் இக்காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் வானொலி நிலையங்கள் பேணப்பட்டு வருகின்றன.
இலங்கையிலும் வானொலிக்கென்றொரு அமைச்சர் இருக்கிறார். அரசின் சேவகனாக அரச வானொலி இயங்குகின்றது. இத்தோடு தனியார் வானொலிகளும் பண்பலை வரிசைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. றேடியோவை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஊடகங்களாக விளங்குவன அதன் மூலம் ஒலிக்கும் செய்திகள், பேச்சுகள், நாடகம், சித்திரம், அறிவிப்புகள், விளம்பாங்கள் என்பனவாகும்.
4.
 

இவைகளை ஒருங்கிணைத்து மக்களுக்குத் தேவையான முறையில், ஒலிபரப்புகளை ஒழுங்குபடுத்தி ஒலி பரப்பியதால் தான் இன்று வானொலிக்கு இத்தகைய செல்வாக்கு! தெற்காசியாவி லேயே அதி சிறந்த வானொலியாக இலங்கை வானொலி பெருமைப்
படுத்தப்படுகிறது!
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்ட ஹிலரியும், டென்சிங்கும் அந்த உச்சியிலும் றேடியோவைக் கேட்டனராம். சொர்க்கத்திலும் றேடியோ இருப்பதைக் கற்பனை செய்து நான் கண்ட சொர்க்கம்" என்ற தமிழ் சினிமாவில் சொர்க்கத்தில் றேடியோ மூலமாக எஸ். பி. மயில் வாகனத்தின் குரல் கேட்பதாகப் பட
மெடுத்திருக்கின்றனர்.
இத்தகைய உன்னத நிலைக்கு றேடியோவை வளர்ச்சி கொள்ள வைத்த வர்கள் ஒலிபரப்பு முன்னோடிகள்! அவர்கள் இட்ட தளத்தில் தான் இன்று றேடியோ சாதனை புரிகின்றது. இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையின் முன்னோடிகளில் ஒருவர் வானொலி மாமா எஸ்.சரவணமுத்து.
தமிழ் ஒலிபரப்புத் துறைக்கு இலங்கையில் வித்துான்றப்பட்ட காலத்தில், தமிழ் மக்கள் மத்தியில் தமிழைப் பேச வெட்கப்படுபவர்கள் தான் இருந்தார்கள்! அந்தளவிற்கு மஹா கவி சுப்ரமணிய பாரதியாரையும், ஐம் பெரும் காப்பியங்களையும் தமிழர் ஒரங் கட்டினர். இந்தச் சமூக அமைப்பில் கஞ்சிக்குள் பயறாகத்தான் தமிழை
நேசிப்பவர்கள் இருந்தனர். வெள்ளைக் காரன் ஆட்சியில் தனது காரியங்களை இலகுவில் நிறைவேற்ற இலங்கையிலும் ஒரு வானொலி நிலையத்தை ஆரம் பித்தான். அதை நடப்பிப்பதற்கு ஒருவர் தேவைப்படவே அன்றைய உத்தியோக குழாத்துள் ஒருவரைத் தேடினான். "சிறுவர் செந்தமிழ் நூல் தந்த தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகன் சோ.நடராசா இலங்கைக்கான வானொலியைப் பொறுப்பேற்றார். இவருக்கு உதவியாக அரசில் உயர்ந்த பதவி வகித்த எஸ்.சரவணமுத்து கடமை புரிந்தார். இவரொரு சிறந்த மொழி பெயர்ப்பாளர். இவ்விருவரும், தொடர் பாடல்களை, தொழிலை ஆங்கிலத்தில் செய்தாலும் தமிழுக்கான தங்களது
மரியாதையை மிகவும் நேர்த்தியாகக்
கடைப்பிடித்தனர். இவர்கள் வானொலி யில் தமிழை வள்ர்த்தனர். இந்நாடு சார்ந்த நிகழ்ச்சிகளை எழுதி ஒலிபரப்பி இந் நாட்டை நேசிக்க வைத்தனர். தேசிய இது ஒரு வகையில் ஆங்கில மோகத்தையும் மெல்ல
ஊட்டத்தைப் பரப்பினர்.
விரட்டியது.
வானொலி மாமா எஸ்.சரவண முத்துவும் சிறிது காலமாக இந்த ஒலி பரப்பிற்குப் பொறுப்பாக இருந்தார். திரு மறைப் பாடல்கள், தேவாரம், கர்நாடக சங்கீதக் கச்சேரி என்பவற்றை அடிக்கடி ஒலிபரப்பித் தமிழின் தொன்மத்தைத் தமிழனுக்கு அறிதல் செய்தார். தமிழ் மொழியை நன்கு ‘சுத்தமாக" அறிந்து வைத் திருந்த இவர்கள் இந்தப் பொறுப்பை எடுக்காது விட்டிருப்பின்

Page 5
இன்று தமிழ் வானொலியின் போக்கு வேறாக இருந்திருக்கும்! தமிழ்த் தன்மை இருந்திருக்காது!
வானொலி கலைஞர்.
மாமா ஒரு நல்ல வானொலி நாடகங்களில் பங்குபற்றி நாடகக் கலைக்கு மாபெரும் ஊட்டத்தைக் கொடுத்திருக்கிறார். மாலை நேரத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த 'விதானையார் வீட்டில்’ என்ற தொடர் நாடகத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பி யோடு நடித்தவர். “லண்டன் கந்தையா? என்ற சானா.எஸ்.சண்முகநாதனின் நாடு போற்றும் வானொலி நாடகத்தில் நடிக்கும் பெருமையைப் பெற்றவர். வானொலியில் நாடகம் இன்றியமை யாதது என்பதற்கான கருத்துருவாக் கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந் நாடகங்களே! மக்களின் அன்றாடப் பிரச் சினைகளைப் பின்ன வைத்து வசனங் களை அமைத்து, அவற்றைப் பாவங் களோடு பேசி நடித்தனர். இதனால் வானொலி நாடகங்கள் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்டன. பேசப் பட்டன. இத்தகைய நிலையை உருவாக்கி யதில் வானொலி மாமாவுக்குப் பெரும் பங்கு இருந்தது.
குழந்தைகளுக்கு எழுதுவது ஒரு தனிக்கலை. எழுதுபவர்கள் மழலைகளாக வேண்டும். எழுத்தை வாசிப்பவர்களும் அதேபோல் குழந்தை நிலைக்கு இறங்கிக் குழந்தை இலக்கியங்களை வாசிக்க வேண்டும். இதே போன்ற போக்குத்தான் வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சிகளுக்கும் இருக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் சிறுவர்கள்
G
வானொலிக்குக் கிட்டக் கூடப் போக மாட்டார்கள்! இப்படியான வகையில் வானொலிச் சிறுவர் நிகழ்ச்சிகள் அமை யாது விட்டால் வயதான பின்னர் கூட அவர்களை வானொலி அருகே கொண்டு வருவது சிரமமாக இருக்கும். அன்றும் சரி இன்றும் சரி வானொலி இளைய சந்ததிக்கு மேன்மையான இடத்தைக் கொடுத்துத்தான் வருகின்றது. இன்றும் தனது பெயரை இலங்கை வானொலி யில் மங்காது வைத்திருக்கும் "சிறுவர் மலரை ஊட்டி வளர்த்தவர் இந்த 23 ஆண்டுகள் 'வானொலி மாமா' என்ற பெயரைத் தக்க
வானொலி மாமா.
வைத்துக் கொண்டிருந்தவர்.
இந்த மலரில் தமிழைப் பேச, உச் சரிக்க,
பெற்ற பலர் இன்று நாடறிந்த கலைஞர் களாகத் திகழ்கின்றனர். வானொலியில்
நடிக்க மாமாவிடம் பயிற்சி
மரைக்கார் ராமதாஸோடு ஐயராக நடித்துப் புகழ் பெற்ற பி.எச்.அப்துல் ஹமீட் இன்று சர்வதேசப் புகழில் நனைந்து கொண்டிருக்கிறார். இவரும் மாமாவின் அன்றைய கைப்பிள்ளை தான்! அமரர் கு.ராமச்சந்திரன், S.M.A. ஜப்பார், மானா மக்கீன், இராஜோஸ்வரி சண்முகம், அருந்ததி பூரீரங்கநாதன் ஆகி யோரும் இந்த மாமாவுக்கு மருமக்களாக இருந்தவர்கள் தான்.
இம்மாமாவில் வைத்திருக்கும் பாசப் பெருக்கால் பேராசிரியர் கா. சிவத்தம்பி "இப்பொழுதும் கூட எமது தலைமுறை யினருக்கு அவர் மாமாதான்” என்கிறார். எத்தகைய மரியாதை!

வானொலி மாமா கிராம சஞ்சிகை யிலும் தனது பங்களிப்பை விரித்திருக் கிறார். பல காலமாக நாடகங்களில் நடித்துள்ளார்.
தூர இடங்களிலுள்ள வணக்க
ஸ்தலங்களுக்கு எல்லோரும் யாத்திரை
போக முடியாது. இந்த மக்கள் கஷ் டத்தை உள்வாங்கி வானொலி கோயில்
உற்சவங்களை அஞ்சல் செய்வதுண்டு. '
இதற்கென வர்ணனையாளர்கள் அனுப் பப்படுவார்கள். இவர்கள் தாங்கள் நேரில்
காண்பவற்றை அழகு தமிழில் ஒலி
பரப்புவார்கள். பக்தர்கள் வீட்டில் இருந்த படியே இந்த வர்ணனைகள் மூலமாகத் தெய்வ தரிசனம் பெற்றுப் பக்தி பரவச மடைவர். இத்தகைய அரிய தொண்டினை வானொலி மூலமாக மாமாவும் செய்தார்.
முப்பதுகளின் கடைக் கூற்றில் வானோசையாக வெடித்தெழுந்த மாமாவின் குரலொலி இன்னமும் தணிந்து விடவில்லை. இடைக்கிடை இப்பொழுதும் பெளத்த சிந்தனைகளை வானொலியில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்.
தமிழுக்கும் தமிழ் வானொலிக்கும் இவர் செய்த அரும்பணிகளில் இவரைப் பற்றி என்றும் பேசப்படக் கூடிய வகையில் ஆற்றுப் படுத்துவது இவர் சோ.சிவபாதசுந்தரத்தை ஒலிபரப்புத் துறைக்குக் கொண்டு வந்ததுதான்! அந்த வருகைக்கு இவரே சூத்ரதாரி!
மாமா இலங்கை வானொலி
வரலாற்றின் ஒர் அடையாளம்! மூலவேர்!
இத்தகைய மான்மியங்களை தன்னுள் அடக்கியபடி அன்றைய அவரது "சீருடையான புஷ்கோட்டோடு இன்றும் நடமாடுகிறார். கூட்டங்களுக்கு வருகிறார்.
அடக்கமாக இருக்கிறார். இளசுகள்
* சன்னதமாடுகின்றன. இந்த ஒலிபரப்புத் துறைப் பேராசான் அரிய புத்தமாக
-
மெளனித்து வாழ்கிறார். அதற்கான
காரணம் வள்ளுவன் வாய்
மொழியாகின்றது.
"செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்."
SEBAGAAP I

Page 6
சென்ற சில நாட்களாகவே சதுகீன் சேர், மனம் குழம்பிப் போய்த்
O e
Ց5ԱՔւDԿ தான் இருந்தார்.
துவான் ஜொஹரான் மெளவிக்கு - ப. ஆப்டீன் இப்படி நடந்திருக்கக் கூடாதுதான்.
அது ஒரு பக்கப் பார்வை.
விளைவை மற்றுமொரு கோணத்திலிருந்து நோக்கினால் அந்தச் சம்பவம் நடந்ததற்குப் பிறகு அந்த வட்டாரத்தில் அவருக்குத் திடீரென்று ஒரு பிரபலம் வந்து விட்டது. சகலரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். மற்றது அவரது துணிச்சல் மனுக்குல நேசிப்பு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக மலாய் மக்கள் வட்டாரத்தில் ஒரு பெரும் வரவேற்பு மெளலவிக்கு! ஆனால் ஒய்வு பெற்றிருந்த ஒரு சில மூத்த மலாய் ஜவான்களின் இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. 'மெளலவி மடையன். பேசாமல் அந்த இரத்த ஒழுக்குடன் பொலிசுக்குப் போய் ஒரு முறைப்பாடு செய்திருந்தால் அந்த மதவெறியர்களுக்குச் செம்மையான உதை கிடைத்திருக்கும்" என்று ஆவேசப்பட்டார்கள். ஆனால் அது முறையான அணுகுமுறை யல்ல. அது அவ்வாறிருக்க. அவசரப்பட்டுக் கல்லெறிந்து நாங்கள் தான் அவமானத் தைத் தேடிக் கொண்டோம். அந்தத் தழும்பு இனி அப்படியேதான் இருக்கப் போகிறது" என்று எதிர் கோணத்துச் சில புத்திஜீவிகள் அபிப்பிராயப்படுகிறார்களாம்!
அந்தத் தழும்பு நெற்றியில் இருக்க வேண்டுமென்பதுதான் ஜொஹரான் மெளவி யினதும் விருப்பம். எனவே காயத்துக்கு மட்டுமே சிகிச்சை பெற்றார்.
கால்போன போக்கில் வீட்டைச் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தார் சதுகீன் சேர்.
வீட்டின் முன்றலில், ஒரு பெரிய நீள் சதுர வடிவில் பரந்த புற்றரை. அதன் மத்தியில் சற்று உயர்ந்து வளர்ந்த பச்சைக் குடை விரித்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது அந்த ஜாம் மரம். கண்களைக் கிறங்க வைக்கும் அழகான சூழல்.
வழக்கம் போல் மரத்தடி ஆசனத்தில் அமர்ந்து பார்வையை அலையவிட்டுக் கொண்டிருந்தார் சதுகீன் சேர்.
அவரின் வீடு சொய்சாக்கொல ரோட்டிலிருந்து ஒரு சிறு மேட்டில் அமைந்திருக் கிறது. மேட்டிலிருந்து அவர் பார்வை காசிம் ஹாஜியார் விட்டின் முன் பகுதியில் அலைந்தது. ஹாஜியார் அப்பொழுதுதான் ஆற்றில் குளித்துவிட்டு வந்து சாரம் சட்டையெல்லாம் கொடியில் காயப்போட்டுக் கொண்டிருந்தார். ஆழ்ந்த வியாபாரச் சிந்தனையுடன் வெண் தாடியைக் கோதிக் கொண்டே உள்ளே நுழைகிறார். வியா

பாரச் சம்பந்தமாகப் புத்தளம் மாவட்டத் திற்கு போகத் திட்டம். அதற்கான ஆயத் தங்களைச் செய்ய வேண்டும். அதுதான் அந்த ஆழ்ந்த சிந்தனை. யோசிப்பதற்கு அவருக்கு வேறு என்ன கிடக்கிறது.
அவரது வீட்டையடுத்த பள்ளத்தில் காசிநாதன் மாஸ்டரின் விடும் தோட்டமும். அவருடைய சொந்த ஊர் யாழ்ப்பாணம்.
காசிம் ஹாஜியாரின் அந்த இடம் மிக அருமையானது. யார் யாருக்கோ கைமாறி இப்பொழுது காசிநாதன் மாஸ்ட ருக்குச் சொந்தம். அவர் ஒரு விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர். நல்ல பண்பாளர்.
சதுகீன் சேரின் பார்வை அவரது அழகான வீட்டுக் கூரையைத் துழாவி அந்த அத்திமரத்தையும், வேறு பலன் தரும் மரங்களையும் ஊட றுத்துக் கொண்டு, ரயில் பாதையில் ஒடிச் "சேலம் பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் பாலத்தில் நிலைத்து நிற்கிறது. எவ்வளவு ரம்மியமான காட்சி. இன்று அவருடைய ஆதங்கமெல்லாம் ஜொஹரான் மெளலவி யைப் பற்றித்தான். v«
இன்று சனிக்கிழமை. போல் ஜொஹரான் மெளலவி காலை பத்தரை மணிக்கு வரவேண்டியவர். ஆனால், தான் ப்டிப்பிக்கும் கம்பளை சாஹிரா கல்லூரியில் ஒரு விஷேட வைபவத்திற்குச் சமூகமளிக்க வேண்டி
இருப்பதாகக் கூறியிருந்தாரே!
நெற்றியில் அடிப்பட்ட காயத்துக்கு
பிளாஸ்டர் மாற்றிய கோலத்துடன்
போயிருப்பாரா? என்பது சந்தேகம்தான்.
போயிருந்தாலும், போயிருக்கா விட்டா
வயலையும்
வழக்கம் ,
லும் இன்று எப்படியும் வரக்கூடும். ஒரு தகவலாவது அனுப்பியிருக்கலாம். சே! எவ்வளவு படித்துத் தெளிந்தும் வேலை யில்லை.
சதுகீன் சேருக்கு ஒரே ஆவல்.
அன்றைக்கு நடந்தது இதுதான். நகரத்தில் அம்பகமுவச் சந்தியில் காசிம் ஹாஜியாரும். காசிநாதன் மாஸ் டரும் உரையாடிக் கொண்டிருந்திருக் கிறார்கள். திடீரென்று அவர்களுக்கு அருகே ஒர் ஆட்டா வந்து நின்றது. சேர்ட் முன் பக்கத்தில் இரத்தக் கறை களுடன் ஜொஹரான் மெளலவி இறங் கினார். நெற்றியில் காயம். தண்ணீரில் நனைத்த கைக்குட்டையால் பொத்திக் கொண்டு காட்சி தந்தார்.
காசிம் ஹாஜியாருக்கும், காசிநாதன் மாஸ்டருக்கும் விசாரிக்க நேரமில்லை. உடனே அவர்கள் அதே ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருந்து கட்டியிருக்கிறார்கள். பின்னர் அவரைப் பாதுகாப்பாக வீட்டில் விட்டி ருக்கிறார்க்ள். வீட்டுக்குப் போகிற வழியில் வந்து சதுகீன் சேருக்குத் தவகல் சொல்லி
காசிம் ஹாஜியார்
விட்டுப் போனார்.
"நெற்றியில் கல்லடி அவ்வளவுதான் சங்கதி. சதுகீன் சேர் உடனே பதறி யடித்துக் கொண்டு, மெளலவியின் இல் லத்திற்கு விரைந்து, விபரங்களை அறிந்து வந்தும் தொடர்ந்து சில நாட்கள் ஆழ்ந்த
அவதானத்துடன் போய்ச் சுகம் விசாரித்து
விட்டு வந்தார்.
வீசியெறிந்த ஒரு கல் நெற்றியைத்
தாக்கியிருந்ததாம்.

Page 7
YPS tog;gógð8,
கடந்த வெள்ளியன்று தொலைபேசி மூலம் ஒரு பிரபல ஊர்ப் பள்ளிவாசல் நிர்வாகியின் அழைப்பை ஏற்றுத்தான் அவர் பிரசங்கத்துக்குப் போயிருந்தார். இயற்கையிலேயே எவரையும் தன் பக்கம்
9ģ அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
ஈர்க்கும் கவர்ச்சியான பேச்சு.
கம்பளைக்குப் போயிருந்தால் எப் படியும் இன்றைக்கு வரக்கூடும் என்று சதுகீன் சேரின் உள்மனம் சொல்கிறது.
எவ்வளவு நேரந்தான் ஜாம் மரத்துக்குக் காவல் காத்துக் கொண்டிருக் கிறது. எழுந்து மீண்டும் புற்றரையைச் சுற்றி உலாவிக் கொண்டிருந்தார் சதுகீன் சேர். தூரத்தே கடக். கடக். கடக் கென்று ரயில் வண்டியின் ஓங்காரம்.
நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிய உடறட்ட மெனிக்கா’ மீண்டும் ஹற்றணில் இளைப்
நாவலப்பிட்டி
பாற விரும்பி விரைந்து கொண்டிருந்தது.
"சேலம் பிரிட்ஜ்" என்னும் அந்த ரயில் பாலத்தைக் கடக்கும் போதுதான் அந்த இரைச்சல்.
சிலவேளை இந்தப் புகைவண்டியில் மெளலவி வந்திருக்கலாம். நிலையத்தை விட்டு நேராக ‘பெனிதுடுமுல்லை’க்குப் போயிருந்தால், வீட்டில் பகலுணவை முடித்துவிட்டு ஆள் பதறிக் கொண்டு வரும். அப்படி இல்லாமல் இங்கு நேராக வருவதாயிருந்தால் ரயில் பாலத்தைக் கடந்து பதினைந்து நிமிடங்களில் வர வேண்டும். எதற்கும் ஒருமுறை முன் ஹால் சுவரில் தொங்கும் கடிகாரத்தை
1Ο
எட்டிப் பார்த்துக் கொள்கிறார் சதுகீன்
சேர்.
ஜொஹரான் மெளலவி சிறுவயதி லிருந்தே சதுகீன் சேரின் அபிமானத்திற் குரிய மாணவன். அவரது தாய்மொழி மலாய். இருந்தாலும் அவரது தமிழ்மொழி ஆற்றல் தனி. தமிழில் கவிதைத் துறை யில் அவருக்கு நிறைய ஆர்வம். சதுகீன் சேருக்குக் கவிதை எழுதுவதில் ஈடு பாடில்லை. ஆனால் ரசித்துப் படிப்பார். நாவல், சிறுகதை வடிவங்களைப் பற்றியும் நிறையப் படித்திருக்கிறார். தற் பொழுது பின் நவீனத்துவம் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அவரது கருத் துக்கள் விமர்சனங்கள் அல்ல. வெறும்
ரசனை தான். மாணவர்கள் கேள்வி கேட்
பார்கள். அவர்களுக்கு அவர் கூறும் கருத் துக்கள் சரியான வழிகாட்டல்களாக, சரியான தகவல்களாக இருக்க வேண்டும். அதில் ஜொஹரான் மெளலவி கேட்கும் வினாக்களுக்கு விடைகள் கூறவே பல நூல்களைப் படித்துத் தெளிய வேண்டி யிருந்தது.
* ᏣᏪ- fi என்னைச் செழுமைப்படுத்தியிருக் கிறது.
உங்கள் கருத்துரைகள்
" என்று ஜொஹரான் மெளலவி
அடிக்கடி கூறும் போது சதுகீன் சேருக்குக்
கேட்கவே கூச்சமாக இருக்கும்.
பாடசாலைப் படிப்பு முடிந்ததும் ஜொஹரான் அறபுக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
ஒரு மெளலவியாக வரவேண்டும் என்பதற்குத் தனிப்பட்ட காரணம்
இருந்தது. சிறுவயதில் ஒரு சந்தர்ப்பத்தில் ஜாவா ஆட்கள் மார்க்கத்தில் பொடு

போக்கு" என்று ஒரு சோனகத் துவேசி ஏளனமாகச் சுட்டிக் காட்டியிருந்தான். இளம் வயதான ஜொஹரானின் மனதை அது பெரிதும் சுட்டு விட்டது. அதன் விளைவு தான் அரபிக் கல்லூரிப் பிரவேசம். அது தவிர நாட்டில் எத்தனை மலாய் இளைஞர்கள் அறபுப் பாட நெறியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், மார்க்க பக்தர்களாய் இருக்கிறார்கள் என் றெல்லாம் ஆராய முனையவில்லை.
ஆமி", "நேவி மட்டுந்தான் என்று ஒரு தவறான கணிப்பீடு. எல்லாவற்றிற்கும் சேர்த்துத்
மலாயர் என்றால் பொலிஸ்,
தான் ஜொஹரானின் நொந்த உள்ளம் ஒரு முன்மாதிரியைக் காட்ட விரும்பி யிருக்க வேண்டும்!
அரபுப் பாட விதானம் பல வருடங்களை விழுங்கி அன்று மெளலவி பட்டத்துடன் வந்து நின்ற போது -
சதுகீன் சேருக்குப் பெருமையாக
இருந்தது. முதன் முதலில் “ஜொஹரான் மெளலவி வாங்க வாங்க.." என்று வரவேற்று மகிழ்ந்தவர் சதுகீன் சேர்தான்.
"சேர் நான் உங்கள் மாணவன் தான்.
எனக்கு எதுக்கு இந்த மரியாதை எல்லாம்." என்று தயங்கினார்.
“இல்லை மெளலவி, நீங்கள் இப்ப ஒரு மதகுரு. உங்கள் இலட்சியம் நிறை வேறி விட்டது. அரசினர் பாடசாலையில் மெளலவி ஆசிரிய நியமனம் கிடைக்கப் போகிறது. ஆசிரியர்கள் எப்போதும் தம் மாணவர்களை மட்டமாகப் பார்க்கக் கூடாது. அவர்கள் எப்பொழுதும் கீழ்ப் படிந்து நடக்க வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. மாணவர்களின் தரமும்
S. pg. 656)
தராதரமும் உயரும் போது ஆசிரியர் களுடன் மனம் விட்டுக் கருத்துக்கள் பரிமாறி சமமாகப் பழக வேண்டும். ஆசிரியர்களும் சிம்மாசனங்களில் அமர்ந்து கொண்டு மாணவர்களை
அடிமைகளாக நோக்குவது நாகரிக
மல்ல." சதுகீன் சேரின் விரிவுரையால்
ஜொஹரான் மெளலவியின் மனம் குளிர்ந்தது. சொல்லி வைத்தாற் போல் கம்பளை சாஹிராவுக்கு நியமனமும் கிடைத்தது. இரண்டு வருடங்கள் உருண் டோடி விட்டன. பேராதனைப் பல்கலைக்
கழகத்தின் கலைப் பிரிவுக்கு வெளிவாரி
பட்டதாரி மாணவனாகப் பதிவு செய்து
கொண்டார்.
சதுகீன் சேரின் மனக் குழப்பத்திற்கு மருந்தாக, அவர் மனைவி, இஞ்சிப் பிளேன் டீயுன் வருகிறாள். அவள் உள வியல் படித்தவள் அல்ல! ஆனால் இப் படியான சந்தர்ப்பங்களில் அவரது மன நிலையை மாற்றுவதற்குக் கோப்பி அல்லது பிளேன்டி தான் என்பது அவளது கண்டுபிடிப்பு.
". இந்தாங்க பெளசியா, ஜொஹ ரான் மெளலவி வருவாரோ தெரியா. வந்தா லன்ச் ரெடி பண்ணுங்க. பள்ளத்து கடையில ஏதும் வாங்க வேணுமா..?”
அவள் ஒரு சிறிய பட்டியலைத் தயாரித்து வருவதற்குள், வலது பக்க மாகப் பரோபகார ஐயாவு வீட்டிற்கும், நண்பன் கருணே வீட்டிற்கும் இடையில் ஒரு 'சொங்கோ தொப்பி (மலாயரின் தொப்பி) தெரிந்தது. சந்தேகமில்லை.
ஜொஹரான் மெளலவிதான்.
"ஸ்லாமத் சேர்’
1

Page 8
S up gigs): (
'ஸ்லாமத்... வாங்க வாங்க.
.எக்ஸ்பிரஸிலா வந்தீங்க..?”
"ஒ. சேர்."
"அப்படியா..? அவளுக்குத் தான் நன்றி சொல்ல வேணும்."
"யார் சேர். அவள்."
“உடறட்ட மெனிக்கா. நீங்க வாரத சொல்லத் தான் இப்ப கொஞ்சத்துக்கு முந்திப் பாலத்தை உடைச்சிக் கொண்டு போகுது.'
மெளலவி வாய்விட்டுச் சிரித்தார்.
“சரி. சரி போன விசயமெல்லாம் முடிஞ்சுதா..?”
"ஒ சேர். மாற்றலாகிப் போகும் நயிமா ரீச்சருக்குப் பிரியாவிடை. நான் கவி வாழ்த்து, அவ்வளவு தான்.”
'அட... ! வெளுத்து வாங்கி
யிருப்பீங்களே!"
"இப்ப எல்லாம் வெளுத்து வாங்கித் தான். வாங்கிக் கட்டிக் கொள்
கிறேன்."
அப்பொழுது ரோட்டில் காசிம் ஹாஜியார் வந்து கொண்டிருந்தார்.
'இஸ்திரி' பண்ணப்பட்ட காவி நிற
ஜிப்பா. மடிப்புகள் கலையாமல் இடது பக்கத்தில் பிரயாணப் பை, தொங்கிக் கொண்டிருந்தது. அது தூரப் பயணங் களுக்கு மட்டுந்தான் வெளியே வரும். சதுகீன் சேரையும், மெளலவியையும் கண்டதும், "நான் போய் வருகிறேன்
என்ற கருத்தை வெளிப்படுத்த ஒரு
12
கையசைப்பு. மரத்தடி ஆசனத்திலிருந்து எழுந்து சென்று வழியனுப்பினார்கள்.
காசிம் ஹாஜியார் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் பொங்கச் சொன்னார், "ஜொஹரான் மௌலவி
நீங்கள் நெற்றியில் கல்லடி பட்டதும் எந்த வித அவசர நடவடிக்கையும் எடுக்காமல், குனிந்த தலை நிமிராமல், ஆட்டாவில் ஏறினீர்களே. அது சாதாரண விஷய மல்ல. உங்களுக்கே தெரியும் அது நபிகளாரின் முன்மாதிரி."
"ஜ ஸாக் கல்லா ஹ்.”
ஹாஜியார் கிளம்பிவிட்டார். பஜாரில் அவருக்கு நிறைய வேலை. மாலைத் தொழுகைக்குப் பிறகுதான் அவர் புத்தளத்திற்குப் பயணமாவார்.
மீண்டும் மரத்தடி ஆசனத்தில் அவர்களுடைய உரையாடல் தொடர்ந்து.
'ஜொஹரான் மெளவி, இன்றைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு விதமான பிரக்ஞையுமில்லாமல். மனம் போன போக்கில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."
"இஸ்லாம் வற்புறுத்தும் முக்கிய கடமைகளைப் புறக்கணித்து வாழ்ப வர்கள் நாடெங்கிலும் இருக்கிறார்கள். Ggo
'அப்படியானவர்கள் செறிந்து வாழும் ஊர்களில் உங்கள் ஜூம்மா பிரசங்கங்கள் தொடர வேண்டும் மெளல வி. இந்த நெற்றியடியால் உங்கள் பேச்சுகள் தளர்ந்து விடக் கூடாது. சொல்லப் போனால் இன்னும் முனைப்புப் பெற வேண்டும்."

“இன்ஷால்லாஹ். சேர் நீங்கள் சொல்வது போல் இனித்தான் எனது உரைகள் முனைப்புப் பெறும். அதில் சந்தேகம் இல்லை. தூய மார்க்கத்திற்கு மாறுபட்ட கொள்கைகள் உட்புகுந்து பிளவுகள், பிரிவுகள் தோன்றாமல் விழிப்பாக இருந்து பாதுகாத்துக் கொள் வது மிக அவசியம். பிரிவினைகளை இணைப்பதைத் தவிர மென்மேலும் பிரிவுகள் தோன்ற இடம் கொடுக்கக் கூடாது. மக்கள் இணைந்து மக்களாக வாழத்தான் என் பேச்சுக்களின் தொனிப் பொருளாக இருக்கும். அன்று வெள்ளிக் கிழமை பிரசங்கத்தில் இந்தக் கருத்துக் களைத்தான் முன் வைத்தேன். இஸ்லாத் தைப் புதுப் புதுக் கொள்கைகளைப் புகுத்தி ஒவ்வொரு ஒவ்வொரு தலை
மைத்துவத்தை உருவாக்கிக் கொண்டு.
ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று சொல்வது தவறா
சேர். 222
“யார் சொன்னது தவறென்று. வெற்றி உங்களுக்குத்தான். அதுவும் கல்லடி உங்களுக்கு பெரும் வெற்றி. உண்மையை நிலைநிறுத்தும் துணிச்சலை இழந்து விடாதீர்கள்."
'மெளலவி இன்னும் பிளாஸ் டரைக் கழட்டவில்லையா..? இந்தக் கல்லெறி எப்படி..?' இஞ்சிப் பிளேன் டீயை கொண்டு வந்து நீட்டிய பெளசியா ஆர்வமுடன் கேட்டாள்.
A
தாத்தா (அக்கா) இது சேர் சொல்ல வில்லையா? அன்றைக்கு ஜூம்மா தொழுகை முடிந்து வெளியே வந்ததும்,
ஒரே இன்ரச்சல். கருத்து வித்தியாசப்பட்ட
இரு சாரார் மோதிக் கொண்டார்கள்.
STI DAUGSGNE
சிலர் என்னை மறித்துக் கேள்விச் சரங்களைக் கொட்டினார்கள். நான் உணர்ச்சிவசப் படாமல் கூறினேன்: “உங்களுக்கு என் பிரசங்கம் புரிய வில்லை. விளக்கம் சொல்லிக் கொண்டி ருக்க இது சந்தர்ப்பமில்லை. நீங்கள் முன்வைக்கும் கொள்கைகளுக்கு மாறு பட்டவன். நான் என்ன விளக்கம் சொன் னாலும் நீங்கள் ஏற்கப் போவதில்லை. உங்கள் பள்ளிவாசல் டிரஸ்ர்மாருடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்." என்று கூறிவிட்டு நான் அவசரமாக நடந்தேன். நிர்வாகிகளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் மறந்துவிட்டேன். நான் வந்த முச்சக்கரத்தில் சாரதி என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நான் வண்டியில் ஏறுவதற்குள் யாரோ எறிந்த கல் என் நெற்றியைப் பதம் பார்த்து விட்டது. இதுதான் நடந்தது." W
ஜொஹரான் மெளலவி மனைவிக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போது சதுகீன் சேர் கடையில் வாங்கிய பொருட்களுடன் வந்துவிட்டார்.
“ஜொஹரான் மெளலவி இருங்க. பகல் சாப்பாடு இங்க தான். பதறாமல் இருந்து சாப்பிட்டு ஆறுதலா
பேசுவோம்.”
“சேர் சாஹிராவில திண்ட கேக், பட்டீஸ் இன்னும் வயிறு புள். அதான் வீட்டுக்குப் போகாம நேரா இங்க வந்தேன்’
"பரவாயில்லை நீங்கள் இளந்தாரி.
கருங்கல்லையும் விழுங்குகிற வயசு."
“கல்லால் அடிபடுகிற வயசு என்று சொல்லாமல் விட்டீர்களே சேர்."
13

Page 9
অ ty GSG)
இருவரும் சிரித்தார்கள். பல உரை யாடல்களை உள்ளடக்கி வைத்திருக்கிற அந்த ஜாம் மரத்தில் கூட "கீச்" என்று ஒரு சிரிப்பொலி.
'ளுஹரை (பகல் நேரத் தொழுகை) வீட்டிலேயே தொழுதுவிட்டு, பக லுணவைச் சாப்பிட்டார்கள். சற்று நேரம் இளைப்பாறிக் கொண்டிருந்த போதுதான் தொலைபேசி விரிட்டது.
சதுகீன் சேர் தொடர்பு கொண்டார். இரண்டு நிமிடங்களுக்குப் பின் மீண்டும் வந்து மெளலவியின் பக்கத்தில் அமர்ந் தார். அவருடைய முகம் கலவரமடைந் திருந்தது. மாற்றத்தை அவதானித்த மெளலவி மெளனமாக இருந்தார். “என்ன செய்தி?” என்று கேட்பது நாகரிக மல்ல என்று நினைத்த மெளலவி ஆவ லுடன் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
'மெளலவி செய்தி எங்களுக்குத் தான். எங்கள் பள்ளிவாசல் பேஷிமாம் பேசினார். உங்களைத் தேடி உங்கள் வீட்டுக்கு ஆளனுப்பியிருக்கிறார்.”
“என்னவாம் சேர்.?" பரபரப்புடன் மெளலவி.
"நீங்கள் பிரசங்கத்திற்குப் போன ஊரிலிருந்து பள்ளிவாசல் நிர்வாகிகள் எதிர்வரும் புதன் கிழமை அசருக்குப் பின் நீங்களும்
வருகிறார்களாம்.
நானும், காசிம் ஹாஜியாரும் எங்கள்
பேஷிமாமுடன். தலைவரும், செய
லாளரும். பள்ளிவாசலில் ஒரு சந்திப்பு” அச்சந்திப்பில் கலந்து கொள்வதற் காக, அலுவல் காரணமாகக் கம்பளைக்
14
குச் சென்றிருந்த ஜொஹரான் மெளல்வி ஊர் திரும்புவதற்காகப் பஸ் தரிப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தார் .
அன்றைக்கே அவர்களைச் சந்தித்து வந்திருந்தால் இன்றைக்கு இந்த நிகழ்வைத் தவிர்த்திருக்கலாம்". கடுமை யான சிந்தனைகளுடன் நடந்து கொண்டி ருந்தார். தூரத்தில் ஒரு பஸ் வருவதைக் கண்டதும் ஒட்டமும் நடையுமாக விரைந் தவர் கால்கள் இடறிக் குப்புற விழப் போனவரை பக்கத்தில் நடந்து கொண்டி ருந்த இரண்டு இளைஞர்கள் தக்க
சமயத்தில் வந்து தாங்கிப் பிடித்தார்கள்.
மெளலவிக்கு ஒருகணம் என்ன செய்வ தென்றே தெரியவில்லை. மிகுந்த நன்றி யுடன் அவர்களுடன் சில வார்த்தைகள் பேசிய போது, இனங்காண முடியாத ஒரு தெம்பும் மகிழ்ச்சியும் இழை யோடியது. அவரது பயணம் தொடர அந்த இளைஞர்கள் அவரைப் பஸ் ஏற்றி விட்டார்கள்.
“றிஸ்மி பார்த்தியா, அவரது
நெற்றியை, தொழுது தொழுது அவரது
நெற்றியில் தழும்பு அப்படியே பதிந்து போய் கிடக்கிறது."
".ஆழமா. தழும்புதான் ...هs"
வெளியில் அந்தப் புதிய இளை ஞர்கள் உரையாடிச் செல்லும் சொற்கள் ஜொஹரான் மெளலவியின் செவிகளைச் சிலிர்க்க மிகுந்த உற்சாகத்துடன் அவரை அறியாமலேயே அவரது கை அந்த நெற்றித் தழும்பைத் தடவிக் கொண்டது.
வைக்கிறது.

ஆங்கில இதழ்களில் "மல்லிகை"
- கே.எஸ். சிவகுமாரன்
கே.எஸ்.சிவகுமாரன் (68) வாரந்தோறும் டெயிலி நியூஸ்" (Gleanings) தி ஐலண்ட் (AS Like lt) என்ற இலங்கை ஆங்கில நாளிதழ்களில் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும், கலை, இலக்கியப் பத்திகளை எழுதி வருகிறார் என்பது பல ஈழத்துத் தமிழ் வாசகர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆங்கிலம் தெரிந்த வாகசர்கள் இவற்றைப் படிக்க வேண்டும். ஏனெனில், ஆங்கில, சிங்கள கலை இலக்கியங்கள் பற்றிய திறனாய்வுக் குறிப்புகள் மட்டுமன்றி, தமிழ் கலை இலக்கிய விஷயங்களையும். இவர் ஆங்கில வாசகர்களுக்காக அறிமுகம், திறனாய்வுக் குறிப்பு போன்றவையாக எழுதி வருவதும் ஒரு காரணமாகும். கே.எஸ்.சிவகுமாரன் கடந்த 50 வருடங்களாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் ஒரு திறனாய்வாளராவர். இவருடைய எழுத்துக்கள் ஒமான், அமெரிக்கா நாட்டு நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவருடைய சமீபத்திய நூல், திறனாய்வு என்றால் என்ன? தற்சமயம் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பகுதி நேர ஆங்கில அறிவிப்பாளராகவும் இருக்கிறார்.
- ஆசிரியர்
'மல்லிகை"யில் வெளிவந்த சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பை, தமிழில் எழுதும் முன்னணி எழுத்தாளர் "செங்கை ஆழியான் (கலாநிதி என்.குணராசா) தொகுத்துத் தந்துள்ளார். தற்சமயம் இலங்கையின் தலைசிறந்த ஒவியர்களுள் ஒருவரான 'ரமணி' கலைத்துவங் கொண்ட அட்டைப்பட ஓவியத்தைத் தந்துள்ளார்.
'மல்லிகைச் சிறுகதைகள்’ என்ற இத்தொகுப்பில் பின்வருபவர்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன.
15

Page 10
VNA
ராஜபூரீகாந்தன், குமாரன், மு. கனகராஜன்,
கே. எஸ். சிவ மருதூர் கொத்தன், பெரி சண்முகநாதன், சிதம்பர திருச்செந்திநாதன், சந்திரன், கே.விஜயன், சி.சுதந்திரராஜா, அ.பாலமனோகரன், மல்லிகை சி.குமார், எம்.புஷ்பராஜன், செந்தாரகை, கே.ஆனந் தமயில்,
யோகா பாலச்
மாத்தளை வடிவேலன், மாவை நித்தி
யானந்தன், துரைமனோகரன், எஸ்.ஜோன்
மு. பொன்னம்பலம்,
ராஜன், வி.தனபாலசிங்கம், க.தவம், மருதூர் ஏ. மஜீது, மலரன்பன், த.கலா மணி, புலோலியூர் க.சதாசிவம், நற்பிட்டி முனை ஃபளில், அருண் விஜயராணி, வட்கோவை வரதராஜன், அல்அஸஅமத், அ.இரத்தினவேலோன், எஸ்.எச்.நிஃமத், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், எம்.எம்.நெளஷாட், பன்னீரன், மு.பஷர், நெல்லை க. பேரன், கெக் கிராவ ஸ்ஹானா, மாத்தளை சோமு, தாட்சாயனி,
எஸ்.முத்துமீரான், செளமினி.
"மல்லிகைச் சிறுகதை 'களின் முதலாவது தொகுதியில் 30 கதைகள் இடம்பெற்றன. இது 2002இல் வெளி யாகியது. 'மல்லிகைப் பந்தலின் சார்பில், "மில்லர்ஸ்’ சந்திரனும், தொகுதி வெளிவர உதவியுள்ளனர்.
எஸ்.ஆர்.பாலச்
இத்
எம். தயாபரனும்
(டெயிலி நியூஸ் - ஆர்ட்ஸ்கோப் - க்ளினிங்ஸ் - செப்ரெம்பர், 15, 2004)
செங்கை ஆழியான்
செங்கை ஆழியான் பற்றி ஒரு வார்த்தை. அவருக்குக் கலாநிதிப் பட்டம் ஒன்றுண்டு. யாழ்ப்பாணம் மாநகர சபை
1G
ஆணையாளராக இப்பொழுது பதவி வகிக்கிறார். அதற்கு முன்னால் பல உயர் பதவிகளை அரசாங்கத்தில் வகித்திருக் கிறார். அவற்றுள் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் பதவியாகும். இந்த நாட்டில் அதிகம் எழுதும் முன்னணி எழுத்தாளராக அவர் திகழ் கிறார். அவர் ஒர் ஆராய்ச்சியாளருமாவர். ஈழத்து இலக்கியங்களை ஆவணப் படுத்தும் பல தொகுதிகளை அவர் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் (1960 - 1964) காலப் பகுதியில் பயின்று புவியியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு பயிலும் போதே, பல்கலைக் கழக மாணவர்களின் நான்கு சிறுகதைத் தொகுதிகளைத் தொகுத்து வெளி யிட்டவர். அவையாவன : க்தைப் பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம்.
இலங்கையின் ஆரம்ப காலச் சிறு கதை எழுத்தாளர்களுள் ஒருவரான சம்பந்தனின் கதைகளைச் செங்கை
ஆழியானும், இணைந்து தொகுப்பாகக் கொண்டு
செம்பியன் செல்வனும்
வந்தனர்.
இலங்கை மறுமலர்ச்சிக் காலம் எனக்
கருதப்பட்ட காலப்பகுதியில் எழுதிய 16 எழுத்தாளர்களின் 25 சிறுகதைகளையும்
தொகுத்துச் செங்கை ஆழியான் வெளி யிட்டிருக்கிறார்.
அது மாத்திரமல்லாமல், யாழ்ப்
பாணத்தில் செழிப்பாகச் சேவை செய்த "ஈழகேசரி’ (1930-1958) வார இதழில்

வெளிவந்த சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்தும் வெளியிட்டிருக்கிறார் செங்கை ஆழியான்.
அவர், பின்னர் தொகுத்த நூல்கள் வருமாறு:
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள், சிரித்திரன் சுந்தரின் கார்ட்டுன் ஒவிய
உலகில் நான், முனியப்பதாசனின்
கதைகள், புதுமை லோலன் சிறுகதைகள்,
சுதந்திரன் சிறு கதைகள். (109 ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன)
தமக்குரிய நேரத்தில், தமது ஆக்க இலக்கியப் படைப்புகளுக்கு நேரம் ஒதுக்காமலும், தனியே பிரயாசை எடுத்து இவர் தொகுத்தளித்த நூல்கள் தலை சிறந்த ஆக்கப் பணியாகும். செங்கை ஆழியானும், டொமினிக் ஜீவாவும் நமது
நன்றியுணர்வுக்குப் பாத்திரமானவர்கள்.
(டெயிலி நியூஸ் - ஆர்ட்ஸ்கோப் - க்ளினிங்ஸ் - செப்ரெம்பர், 15, 2004)
தமிழில் சிங்களச் சிறுகதைகள் என்ற தலைப்பிலும் டெயிலி நியூஸ் -
ஆர்ட்ஸ்கோப் - க்ளினிங்ஸ் - ஒகஸ்ட், 25, உலக இதழில் செங்கை ஆழியான் "மல்லிகைப் பந்தல்" வெளியீட்டுக்குத் தொகுத்த "சிங்களச் சிறுகதைகள்' பற்றியும் கே.எஸ்.சிவகுமாரன் எழுதி யிருந்தார். அத்துடன் 'மல்லிகை" 2003 ஆம் ஆண்டு மலர் பற்றி ஜூலை 21, 2004 டெய்லி நியூஸ் நாளிதழில் அவர் எழுதும் பத்தியில் திறனாய்வுக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். டொமினிக் ஜீவாவின் சுயசரிதையின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பற்றிய திறனாய்வுக் குறிப்புகள் ஜூலை 14, 2004 டெய்லி நியூஸ் பத்தியில் வெளி வந்திருக்கிறன.
இவை . தவிர, "தி நாளிதழில் கே.எஸ்.சிவகுமாரன் எழுதி 6AQ5 tid ‘AS I Like lit” GTGörp Lugšgulflav "மல்லிகை" (சச்சிதானந்தன் அட்டைப் படம்) இதழ் பற்றிய திறனாய்வுக் குறிப்புகளை எழுதியிருக்கிறார்.
۶ " میبیگ ஐலணட
இவற்றை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், வருங்கால ஆய்வாளர்களுக்கு உதவும் விதத்தில் இத்தகவல்களைப் பதிவு செய்வதற்காகவே.
U.K. Book Center
இங்கு சகல விதமான இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள்,
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான சகல
புத்தகங்களையும். உபகரணங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு தடவை எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
103, Vivekanandha Hill, Colombo - 13.
7ן

Page 11
연 1. ஜி.நாகராஜன் எனும்
U5 கவிஞனைக் குறித்து.
சமீபத்தில் ஜி.நாகராஜனின் "குறத்தி
முடுக்கு என்னும் நாவல் படிக்கக்
O கிடைத்தது. ஏலவே, அவரது நாளை மற்று பிரதியின் மொரு நாளே” எனும் நாவலையும் படிக்கக்
マ கிடைத்திருக்கிறது. “குறத்தி முடுக்கு
நாவலைப் படித்ததும் அவரைப் பற்றிய சில சிந்தனைகள் ஒடின.
நவீனத் தமிழ் இலக்கியத் தளத்தி UPGOU) னுாடாகப் பாரதி தொடக்கம் இன்றைய படைப்பாளிகள் வரை அதிர்வுகள் கொண்ட எழுத்துக்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அந்தந்தப் படைப்பாளிகள் வந்த சமூகப் பின்னணி, அப்படைப்பாளிகள் கொண்டி முனுப்புக்கள் : . அனுபவங்கள தநத உணாவுகளை அடிப படையாகக் கொண்ட பல படைப்புகள் - மேமன்கவி அதிர்வுகளைக் கொண்டிருந்தன. ஆனால், அப்படைப்பாளிகள் சிறு சஞ்சிகைச் சூழலின் வழியாக, நவீனத் தமிழ் இலக்கியத் தளத்தில் பெற்ற அவதானிப்பை ஜி.நாகராஜன் பெறவில்லை. அதேவேளை, அவரது எழுத்துக்கள் கொண்டிருந்த அளவான அதிர்வுகளையும், தன்மைகளையும் கொண்ட எழுத்துக்கள், பிற நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளி வட்டத்தினர் மூலமாக, நமக்குக் கிடைத்திருக்கவில்லை. அப்படியும் ஜி.நாகராஜனின் எழுத்துக்களுக்குச் சற்று நெருங்கி வரும் எழுத்துக்கள் என்றால் ஜெயகாந்தனின் எழுத்துக்களைத் தான் சொல்ல வேண்டும். ஆனால் ஜெயகாந்தனின் நவீன தமிழ் இலக்கியத் தளத்தில் பெற்ற இலக்கிய அந்தஸ்தையும், வெகுசன மட்டத்தில் பெற்றிருந்த அறிமுகத்தையும் ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் பெறவில்லை. இதற்குக் காரணம் என்னவென்று தேடிப் போனால், ஜி.என். தொகை அளவில் குறைவாக எழுதியது காரணமா? அல்லது அதைவிட்டு வேறு ஏதேனும் காரணமா? என்பதற்கான விரிவான ஆய்வு நமக்குத் தேவை.
இன்றைய சூழலில், ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் மீதான ஒரு மீள் வாசிப்பை நாம் நிகழ்த்தும் பொழுது, இன்று பரவலாகச் சிறுசஞ்சிகைச் சூழலில் பேசப்படும் பின்-நவீனத்துவ எழுத்து முறை அன்றே ஜி.நாகராஜனின் எழுத்துக்களில் பேணப்
18

பட்டு வந்திருப்பது தெரியவரும். ஆனால், இன்றைய தமிழ்
இலக்கியச் சூழலில், பின்-நவீனத்துவப்
சில்ை,
பிரியர்கள் எந்தவிதமான ஒரு சிறு கவனத்தையும் ஜி. நாகராஜனின் எழுத்துக்களை நோக்கிச் செலுத்தாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால், ஒரு சிறு அளவான முயற்சி என்ற வகையில் அவரது "குறத்தி முடுக்கு நாவலின் இரண்டாம் பதிப்புக்கு (அப்பதிப்பைத் தான் நான் படித்தது) சுரேஷ்குமார் இந்திரஜித் "ஜி.நாகராஜன் ஒதுக்கப்பட்டவர்களை முத்தமிட்டவர்" எனும் தலைப்பில் எழுதி இருக்கும் முன்னுரை ஒரு நல்ல முயற்சி எனலாம். அம்முன்னுரையில் சுரேஷ்குமார் ஜி.நாக ராஜனின் இரண்டு நாவல்களைப் பற்றிய
சிறப்பான ஒரு அறிமுகத்தை முன்
வைத்திருப்பதுடன், ஜி.நாகராஜன் மிகப் பொருத்தமாக, பிரான்ஸ் எழுத்தாளர் ழான் ஜெனேவுடன் ஒப்பிட்டு இருக் கிறார். நான் அறிந்த மட்டில் தமிழ் சிறு சஞ்சிகைச் சூழலில், ஜி.நாகராஜனைப் பற்றிய ஒர் ஆழமான ஆய்வு - குறிப் பாக அவரது நாவல்களைப் பற்றிய ஆழ மான பார்வையை முன் வைத்ததில் சுரேஷ் குமாரின் அம்முள்லுலர முன் னோடியாக இருக்கிறது.
ஜி.நாகராஜன் கம்யூனிஸ்டாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். சமூக ஒழுக்க மதிப்பீடுகளைப் பற்றிய அக்கறையின்றித் தனது வாழ்வைக் கழித் தவர். ஒதுக்கப்பட்டவர்களைத் தனது படைப்புகளின் கதை மாந்தர்களாக, படைத்துத் தந்தவர். ஒருவகையில் சொன்
. அவைகளைப் பற்றிய எந்த
னால் இன்று தீவிரம் பெற்றிருக்கும் தலித் இலக்கியப் படைப்பாக்க முறை மைக்குத் தமிழகத்துச் சூழலில் அவரின் எழுத்துக்கள் முன்னோடியாக இருந்திருக் கின்றன. ஒதுக்கப்பட்டவர் எனும் பொழுது அவர் இனங்காட்டிய ஒதுக்கப் பட்டவர்கள் நகரத்தை மையமாகக் கொண்டவர்கள். அதேவேளை ஒதுக்கப் பட்டவர்கள் என இவர் இனங் காட்டி யவர்கள் சாதியம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்களாக இல்லாமல், இன் றையச் சமூக அமைப்பில் உயரிய சமூக மதிப்பீடுகளாகப் பேணப்படுகின்ற சகல வற்றையும் நிராகரித்தவர்களாகவும், வொரு பிரக்ஞையும் அற்றவர்கள். இத்தகைய மாந்தர்களின் வாழ்க்கையை இலக்கியம் ஆக்குதல் என்பது ஜி.நாகராஜன் எழுதிய காலகட்டத்தில் நடைபெறாத ஒன்று. அதனால் தான் பரவலான முறையில், அவரது எழுத்துக்கள் கவனம் பெற வில்லைப் போலும். எது எப்படி ஆயி னும், ஜி.நாகராஜனின் அந்த எழுத்துக்கள் நவீன தமிழ் இலக்கியத் தளத்தில் தனி யாக நிற்பவை. அவரைப் பற்றிய பரவ லான ஒர் அறிமுகம் இன்றைய தலை முறை இலக்கியப் படைப்பாளிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
2. தருமு சிவராமும்
ஷங்கரலிங்கமும், சங்கரலிங்கமும்,
தமிழகத்திலிருந்து வெளிவரும் 'உயிர்மை" சஞ்சிகையின் அக்டோபர்
19

Page 12
இதழின் கடிதப் பகுதியில், ஒரு கடிதம் வெளிவந்திருக்கிறது. அக்கடிதம் 'உயிர்மை" ஜூலை இதழில், கால சுப்ர மணியம் தொகுத்து வெளியிட்டுள்ள 'பிரமிள் படைப்புகள்’ எனும் நூலுக்கு அ. மார்க்ஸ் எழுதி இருக்கும் விமர்சனக் கட்டுரைக்கு எதிர்வினை நிகழ்த்தும் வகையில் கருத்துக்கள் வெளிப்பட்டு இருக்கின்றன. அ. இருக்கும் "பிரமிளின் புனைவுலகில் வெளிப்படும் சிரமணப் பார்வை" என்ற அக்கட்டுரையில், வெளிப்பட்டிருக்கும் கருத்துகளைப் பற்றியும், அதற்கு எதிர் வினை ஆற்றும் வகையில் உயிர்மை அக்டோபர் இதழில் வெளிவந்திருக்கும் அக்கடிதத்தில் வெளிப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பற்றியும் அடுத்த முணு முணுப்பில் பார்ப்போம். அதற்கு முன்ன தாக, அக்கடிதத்தை எழுதியவரைப் பற்றிய ஒரு தெளிவு நாம் பெற வேண்டி
மார்க்ஸ் எழுதி
யவர்களாக இருக்கிறோம்.
உயிர்மை அக்டோபர் இதழில் அக் கடிதத்தை எழுதியிருப்பவர் சென்னை யைச் சேர்ந்த எஸ். வி. சங்கரலிங்கம் என்பவர். "சங்கரலிங்கம்" என படித்ததும் எனக்கு 70களின் மத்தியிலும், இறுதி யிலும் தமிழகச் சிறுசஞ்சிகைச் சூழலில் வெளிவந்த இரு நூல்கள் நினைவுக்கு வந்தன.
அன்றைய கட்டத்தில், 'கசதடபற' எனும் சிறு
ஒன்று, வெளிவந்த சஞ்சிகைச் சூழலினருடன் ஏற்பட்ட முரண்பாடுகளை வைத்து வெங்கட் சாமி நாதன் எழுதிய "இலக்கிய ஊழல்கள்' எனும் நூலும், இரண்டாவதாக, வெங்கட்
2O
சாமி நாதன், மற்றும் சுந்தர ராமசாமி போன்றோருடன் முரண்பட்டு, தருமு சிவராமு எழுதிய 'விமர்சன ஊழல்கள்" எனும் நூலும் நினைவுக்கு வந்தன. அதிலும், குறிப்பாக தருமு சிவராமு வெளியிட்ட விமர்சன ஊழல்கள் எனும் நூல்தான் அந்த நினைவில் முன் நின்றது. ஏனெனில் அந்த நூல் தருமு சிவராமுவுடனான ஒரு பேட்டி வடிவத் தில் அமைந்து இருந்தது. அந்த நூலில் தருமு சிவராமுவை பேட்டி கண்டவரின் பெயர் எஸ்.வி.ஷங்கரலிங்கம்! இந்த ஷங்கரலிங்கம் தருமுவின் நெருங்கிய நண்பர் என்பதையும், அவர் இலங்கையில் சில காலம் இருந்தவர் என்பதையும் அந்த நூலிலிருந்து எனக்கு அறியக் கிடைத்து இருந்தது.
இப்பொழுது எனக்குள்ள சந்தேகம் - அந்த ஷங்கரலிங்கமும் 'உயிர்மை" அக்டோபர் இதழில் கடிதப் பகுதியில் கடிதம் எழுதி இருக்கும் எஸ்.வீ.ஷங்கர லிங்கம் என்ற அன்பரும் ஒருவர்தானா? என்பதுதான்! இதில் என்ன சந்தேகம் ஒரே இனிஷியல்! ஒரே பெயர் என கேட்கத் தோன்றும் (ஒரு சிறு வித்தி யாசம் இருக்கிறது. தருமு சிவராமுவின் அந்த நூலில், வட 'ஷ"வையும், உயிர்மை கடிதத்தில் தமிழ் 'ச'னாவும் இருப்பது மட்டுந்தான்.) ஆனால், எனது சந்தேகத் திற்குக் காரணம் இருக்கிறது. அதாவது "விமர்சன ஊழல்கள்' எனும் நூலில் தருமுவைப் லிங்கம் தருமுவுக்கு நெருக்கமானவர். தருமு அன்று கொண்டிருந்த கருத்துக் களை அங்கீகரித்தவர். (அது அந்த நூலில் தெரிகின்ற உண்மை) ஆனால்,
பேட்டி கண்ட ஷங்கர

உயிர்மையில் கடிதம் எழுதிய சங்கர
லிங்கம் தருமுவின் புனைகதைப் பங் களிப்பை மறுக்கின்றவர். இது எப்படி?
தருமு சிவராமு இலங்கையில் இருந்த பொழுது அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனது எஸ்.விஷங்கர லிங்க, சங்கரலிங்கச் சந்தேகத்தை தீர்த்து வ்ைக்க உதவ வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். உயிர்மை ஜூலை இதழில் அ.மார்க்ஸின் கட்டுரை பற்றியும், அக்கடி தத்தின் உள்ளடக்கத்தைப் பற்றியும் முணுமுணுப்பில் உரையாடுவோம்.
3. பயில் நிலம்
ஈழத்தில் தொடர்ச்சியாகப் பல சிறுசஞ்சிகைகள் வெளிவருவதும், பின் நிறுத்தப்பட்டு விடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது சிறு சஞ்சிகைச் சூழலுக்கான இயல்பான ஒரு நிலைமை எனலாம். அவ்வாறு வெளி வந்த, வெளிவரும் எல்லாச் சிறுசஞ்சிகை களும், சிறுசஞ்சிகைச் சூழல் கொண்டி ருக்க வேண்டிய பண்புகளைக் கொண் டவையாக இருப்பது இல்லைதான். அவ்வாறான பண்புகள் கொண்டிருந்து வெளிவந்த சிறுசஞ்சிகைகள் இன்னும், இன்னும் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேவேளை, ஆரம்ப காலப் படைப்பாளிகளுக்கெனச் சஞ்சிகைகள் வரவேண்டிய அவசியமும் இருக்கத் தான் செய்கின்றது.
அந்த வகையில் கொழும்பு
தெஹிவளையிலிருந்து சில இளைஞர் களின் முயற்சியினால் வெளிவரத்
தொடங்கியிருக்கும் பயில் நிலம்" எனும் சஞ்சிகையின் இரண்டாவது இதழைப் படிக்கக் கிடைத்தது. அவ்விதழின் ஆசிரியத் தலையங்க்த்தில் சொல்லி இருப்பது போல் இளைய சமுதாயத்தைச் சிந்திக்கத் தூண்டுவதற்கான கடமை யையும் கையில் எடுத்துக் கொண்டு
பயணப்படத் தொடங்கி இருக்கும் 'பயில்
நிலம்" சஞ்சிகைக் குழுவினர், அவர் களது அச்சிறுசஞ்சிகைக்கான நோக் கத்தை நிறைவேற்றும் முகமாக மேலும் தங்களின் தேடலை விரிவாக்க வேண்டும். அதேவேளை, சிறுசஞ்சிகைக்கான பண்பு களில் ஒன்றான சஞ்சிகை அமைப்பிலும் (Layout) இன்னும் நவீனத்துவமாக பயில் நிலம் நகர வேண்டும். பொது வாகவே இன்றைய இளைஞர்களிடம் இருந்து கொண்டிருக்கும் அதிர்வுகள் கொண்ட ஆக்கங்கள் பயில் நிலத்தில் இடம்பெற வேண்டும். பயில் நிலத்தின்
இரண்டாவது இதழில் இம்பெற்றுள்ள
படைப்புகளில் அந்த அதிர்வுகளின் போதாமை இருக்கிறது என்பதை இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனாலும், இளைஞர்களின் முயற்சி என்ற வகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிச் சூழலுக்கு மத்தியில் இத்தகைய ஒரு சஞ்சிகையினை நாம் பாராட்டத்தான் வேண்டும். பயில் நிலம் இரண்டாவது இதழில் மனதைக் கவர்ந்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு.
வேறுபாடு
கோயில், விகாரையில் மசூதியில், தேவாலயத்தில் என பேதமின்றி
21

Page 13
তত্ত্ব
வந்து அமர்ந்து செல்லும் பறவைகள் வேறுபாடின்றி தம்முள் பேசிக் கொண்டன வேறுபாடுகளுடன் வந்து போகும் மனிதர்களைப் பார்த்து.
-அங்கவை
4. சிலம்பு, கொட் கொம்
இன்று இணையத் தளங்களின் பெருக்கம் அதிகரித்த வண்ணம் இருக் கிறது. அதிலும், தமிழ் மொழி மூலமான இணையத்தளங்களும் அந்தப் பெருக் கத்தில் பங்கு கொள்கின்றன. அவை களில் பெரும்பாலானவை தமிழகத்தி லிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களின் முயற்சியினாலும் நடைபெறுகின்றன. இலங்கையிலிருந்து தமிழ் பேசும் சமூகத்தின் பங்கேற்பாகத் தமிழ்
ஆனால்,
மொழி மூலமான இணையத் தளங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருக்கின்றன. சூரியன். கொட். கொம், (இதன் ஆரம்ப தளம் இலங்கையாக இருந்தது) நிலவு. கொட், கொம் ன்ன ஒரு சில இணையத் தளங்களே இலங்கை யிலிருந்து தமிழ் மொழி மூலமான
இணையத் தளங்களாக இயங்கின. இவ்
வாறாக இலங்கையை மையப்படுத்தித் தமிழ் மொழி மூலமான இணையத் தளமாகச் சமீபத்தில் சிலம்பு. கொட். கொம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் தளத்தை மறைந்த எழுத்தாளர் ராஜ பூீரீகாந்தனின் சகோதரரான ரவிவர்மா
22
மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மயூரன் ஆகியோர் இயக்கிக் கொண்டிருக் கிறார்கள். இந்தச் சிலம்பு. கொட், கொம் எனும் இணையத்தளம் வழமையான தமிழ் மொழி மூலமான இணையத் தளங் களைப் போன்று பல்சுவை அம்சங் இந்த இணையத்தள இயக்குநர்கள் கொண்டி ருக்கும் ஒரு நோக்கமானது ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய முழுமையான ஒரு விபரத் திரட்டை சிலம்பு. கொட் கொம் எனும் இந்த
களைக் கொண்டிருந்தாலும்,
இணையத்தளத்தில் கொண்டு வருவதே ஆகும். இந்த நோக்கத்துடனான முயற்சி தமிழ் மொழி மூலமான உலக இணையத் தளங்களிலிருந்து சிலம்பு. கொட், கொம் எனும் இந்த இணையத் தளத்தை வேறு படுத்திக் காட்டப் போகிறது. ஈழத்துத் தமிழ் கலை, இலக்கிய வாதிகள் எல்லோரும் தங்களைப் பற்றிய விபரத் திரட்டினை தாங்களாக அனுப்பி வைப்பது மூலம், மயூரன் மற்றும் ரவி வர்மா ஆகியோரின் தேடல் முயற்சி களைச் சற்று இலகுப் படுத்தும். அத் Gg5FTG, silambu. Com Grguib g)GOGOOTuu முகவரி வழியாக அந்த இணையத் தளத்திற்கு விஜயம் செய்து ஈழத்து தமிழ் கலை, இலக்கியவாதிகள் தங்களை அந்த இணையத் தளத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம். இணையத் தள முகவரி.
W. silambu.com

கிடந்த இரு மாதங்களும் நீங்கள் செய்தது உச்சமான வேலை. மல்லிகை முகப்பைத் தான் குறிப்பிடுகிறேன்.
வாழும் கவிஞர்களுள் மூத்தவர் க.சச்சிதானந்தன். பல்துறைப் புலமை சான்ற பேரறிஞர். அவரைக் கெளரவித்தது தக்கது; பாராட்டத்தக்கது. - -
ஆர். பத்மநாப ஐயரைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை. உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை. தமிழை - இலக்கியத்தை முன்வைத்து, தன்னை வாமனனாக ஒடுக்கிக் கொண்டு ஐயர் செய்துவரும் பணி தலை வணங்கத்தக்கது.
(8&nt. LugsLDBITg56öT
உங்களை நினைத்துப் பார்க்கும் வேளை களிளெல்லாம் நான் ஆச்சரியப்படுவ துண்டு.
இந்த மண்ணில் இலக்கியத்திற்காக இத்தனை துடிப்புடனும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறாரே! என்ற ஆச்சரியம்தான் அது.
சிலர் உருவாக்கப்படுகின்றனர். வேறு சிலரோ சில காரியங்களை ஒப்பேற்று வதற்காகப் பிறவி எடுக்கின்றனர். இப்படி ஒரு நோக்கத்திற்காகப் பிறவி எடுத்து உழைத்து வருபவர்களில் நீங்களும் ஒருவர் என்பது எனது கருத்து.
எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இந்த மண்ணில் இருந்து கொண்டு, எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் நீங்கள் மல்லிகைச் சஞ்சிகையை மாத்திரமல்ல, மல்லிகைப் பந்தல் புத்தகப் பிரசுர ஸ்தாபனத்தையும் தொடர்ந்து நடத்தி வருவதைக் காண இளைய தலைமுறையினர் சார்பாக எனது வாழ்த்துக்களை உங்களுக்குச் சொல்லி
வைக்கிறேன்.
எம். தேவநேசன் வவுனியா.
23

Page 14
நடிகர்காமினி ப்ென்ச் 醛* . 3" ,۹۳۰ نهS. ،حتی چوب போன்ற திரைப்பங்களின்மூலம் சிங்கள்1க்களின்
புகழைப் பாடுவதில் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டன். மறைந்திருந்த மனிதநேயத்தை வெளிப்படுத்த அவை மறந்தன.
தமிழர்கள் பால்ர்த்தவர் இல் மறைந்ததும்
பற்றி அன்னார் வைத்திருந்த மதிப்பு நன்றியுணர்வு பற்றி இக்க Gjë தெளிவாக விளக்குகிறது:
கிமினி பொன்சேகா மறைந்து விட்டார். ஒரு பொற் காலம் முடிந்து விட்டது.
காமினி சினிமா உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். என்றாலும் பெரும்பாலானோர் நினைத்தளவுக்கு அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மக்கள் வெள்ளம் கொழும்புக்குப் புடைத்துப் பாயவில்லை. அதையும் எம்மவர்கள்
ஒளித்திரையில் காட்டுக்கின்ற சினிமா சமாச்சாரமாக நினைத்தார்களோ என்னவோ?
காமினி ரீ.என்.எல். நிறுவனத்திற்கும், சுவர்ணவாஹினி தொலைக்காட்சிக்கும்
அளித்த நேர்காணல் நிகழ்ச்சியை, அவரது மறைவுக்குப் பிறகு என்னால் தரிசிக்க
முடிந்தது. அந்நிகழ்ச்சியைப் பார்த்ததும், என் மனம் பெரிதாக சலனமடைந்தது.
24
அந்த இரண்டு நிகழ்ச்சி
/ー களிலும் அவர் ஒரு
சிங்களத்தில் - முக்கிய விடயத்தை வலி
6s) 安 色 சூரி தான் நன்றி உணர்வு!
காமினி பொன்சேகா நேர் காணலின் ஒரு
கட்டத்தில் அவர் பின்வரு
O O O
நன்றியுனர்வுக்கு ஒர் மாறு கூறுகிறார்.
O O 'புத்த பெருமான் அந்தர்வு புருவுறர்
எங்களுக்குச் செய்நன்றி தமிழில் - மறவாமையைப் பயிற்று விப்பதற்காக, அந்த நல் வினைப் பயனை அறியப் ப டு த் துவ த ஹ் கா க
திக்குவல்லை ஸப்வான்.
 
 

அதனைச் செயலில் காட்டியுள்ளார். புத்தர் பட்டம் கிடைத்ததும், தனக்கு ஞானோ தயம் பெற வழி செய்த அரச மரத்திற்கு நன்றிக் கடன் செலுத்த, அம்மரத்தின் கீழ் ஒருவாரம் கண் இமைக்காமல் லோசன பூசை நடத்தியுள்ளார். இதன் மூலம் செய்நன்றி மறவாமை என்னும் மாபெரும் பண்பை எமக்கு உணர்த்தி யுள்ளார். புத்தர் இந்தியாவில் பிறந்
தாலும், அவரது இந்தச் செயல் இங்குள்ள
சிங்கள மக்களுக்குச் சொல்லித் தந்த தகுந்த பாடம் போலாகும். ஏனென்றால் நான் அறிந்த, பழகிய வகையில் இந்தி աfig56ir எவ்வளவு வறியவர்களாக இருந் தாலும், எங்களை விடச் செய்நன்றியின் மேன்மையை வெகுவாக அறிந்தவர்கள். இதனைப் புத்தகங்கள் வாயிலாகவும், அவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பழகிய தன் வாயிலாகவும் என்னால் அறிந்து கொள்ள முடிந்த்து. என்றாலும் சிங்கள மக்களைப் போல் செய்நன்றி மறந்து, கைகொடுத்த கையையே கடித்துக் குதறுகின்ற இனம் வேறு இல்லை என்பது எனது கருத்து.'
அதையடுத்து, அவரிடம் "சிங்களச் சினிமாவின் கோத்திரக் கதை" பற்றி நிகழ்ச்சியை நடாத்தியவர் கேள்வி
எழுப்பினார். அதற்கு அவர் அளித்த
பதில் :
“சிங்களச் சினிமாவின் அம்மா யாராக இருந்தாலும். அப்பா எஸ். எம்.நாயகம். ஆர்.செல்லமுத்து - சேர்.சிற்றம்பலம் கார்டினர் போன்ற தமிழர்கள் தான்."
அதிரும் விதத்தில்
Y. g6S
அப்பேட்டியில் அவர் கே. குண ரத்னம் பற்றியும் விசேடமாகக் குறிப்
பிட்டார்.
"அப்போதிருந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுள் நடிகர்களுக்கு அதிகத் தொகையினை வழங்கியவர். அத்தோடு இவ்வாறு கலைஞர்களை நன்றாகக் கவனித்தவர்களில் அதிக மானோர் தமிழர்கள் தான். என்றாலும்
ஒரு பத்திரிகையாசிரியர் இவர்களிடம்
சகலவித சலுகைகளையும் பெற்றுவிட்டு, பின் முரண்பட்டார். பல வருடங்களாக சிங்களச் சினிமாவின் தொடக்கத்திற்கும், எழுச்சிக்கும் பெரும் பங்களிப்புச் செய்த இத்தகைய மனிதர்களை தமிழன்' (தெமழா என்று விளித்து, இழிவுபடுத்தி அவமதித்து தனது பத்திரிகையின் பக்கங்களை நிரப்பினார். அதை வாசித்த
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனது மனம்
அதிர்ந்து கலங்கிப் போனது" என்றார்.
கே.குணரத்தினத்திற்கும், காமினி பொன்சேகாவுக்குமிடையே மிக நெருக்க காமினி 'நன்முதுதுவ" மற்றும் "கெடவரயோ' போன்ற திரைப்படங்களில் வெளிப் படுத்திய நடிப்பாற்றல், அந்த நடிப்புக்கு மக்கள் காட்டிய ஆதரவு, சிங்களத் திரைப் படத்துறைக்குப் புத்தொளியைத் தந்தது. காமினி பொன்சேகா நடிக்கும் திரைப்
மான நட்பு நிலவியது.
படம் குறிப்பிட்ட திரையரங்கில் காட்டப் மூலம் கண்டதும் தான் தாமதம், கொட்டகை
‘விசில்" அடிக்க
படும் என்பதை "ட்ரேலர்'
மக்கள் பழக்கப்பட்டிருந்தனர். எம்.ஜி.ஆருக்கு, சிவாஜி கணேசனுக்கு,
25

Page 15
ஜெமினி கணேசனுக்கு 'விசில்? அடிப் பதை பழக்கமாகக் கொண்டிருந்த சிங்கள நடிப்புத்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய காமினிக்கும் அதே வரவேற்பை அளித்தனர். இதை அவதானித்த சினிமாஸ் கம்பனித்
ரசிகர்கள்,
தலைவர் கே.குணரத்னம் காமினியைத்
தனது இணைத்துக் கொண்டார்.
Lu L i GS Gf Gö
கே.குணரத்னத்தைக் கண்டவுடன் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து, சிரந் தாழ்த்தி வணக்கம் கூறும் நடிகர் நடிகையர்கள் இருந்த காலகட்டத்தில், காமினி தனது நடிப்பாற்றலின் மேன்மை யாலும், திறமையால் கட்டியெழுப்பிய ஆளுமை யினாலும், கே.குணரத்தினத்தை "சேர்? என்று அழைப்பதற்குப் பதில், "மிஸ்டர்
இயல்பாக தன்னிடமுள்ள
குணரத்னம்" என்றும். “குணம்” என்றும் அழைக்கப் பழக்கப்பட்டிருந்தார். அது மட்டுமன்றி அவரின் முன்னால் சிகரட் பிடிக்கவும், அவரது கழுத்தில் கையை இட்டுப் பேசவும் காமினியால் மாத்திரமே முடிந்தது.
சிங்களத் திரைப்படங்களின் முழு தான சிதைவுக்குக் காரணம் குண ரத்தினம், கார்டினர் போன்றவர்கள்தான் என்ற அபாண்டங்களைச் சுமத்தி, அவர் களின் தனியுரிமை ஒழிக்கப்பட வேண்டு அதற்குத் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள சகல நடிகர்
மென்றும்,
நடிகையர்களும் அணி திரள வேண்டு மென்றும் ஒரு தடவை தேர்தலின் போது
குரல் எழுப்பப்பட்டது.
2G
XN
குணரத்தினம் போன்றோரைத் துதித்துப் போற்றிய சில நடிகர் நடிகை யர்கள் தமது நோக்கத்தை வெளிப்படை யாகக் காட்டாமல் காமினியிடம் மூடி மறைத்து, சிங்களத் திரைப்படத் துறை யின் முன்னேற்றத்திற்காக, நடிப்புக்கு கூடிய தொகை பெற்றுக் கொள்வதற்காக ஒரு கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வுள்ளதாகவும், அதற்குக் காமினி தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதுவரை முதுகெலும்பை வளைத்த படி தாசர்களாக குணரத்தினம், கார்டினர் போன்றோருக்குப் பாத பூசை செய்த சில நடிகர் நடிகையர்கள் இந்தப் போராட்டத் திற்கு முன்னணி வகித்தார்கள். அன்று நடந்த கூட்டத்தில் மேலே குறிப்பிட்ட தயாரிப்பாளர்களை அவர்கள் ஆக்ரோச மாகத் தாக்கி, சொற்பொழிவுகள் நிகழ்த் தினர். அவர்களைப் பற்றிய கட்டுக் கதைகளை எடுத்து விட்டனர்.
"தமிழர்களிமிருந்து சிங்களத் திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும்" என்பதே அவர்களது ஒரே குறியாக, வெறியாக இருந்தது. காமினி அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின் மேடை யிலிருந்து இறங்கிப் போய் விட்டார்.
“காமினி எமது போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார். அவர் துரோகி” அவர்கள் கூச்சலிட்டார்கள்.
அதன் பிறகு ஐக்கிய முன்னணி
அரசு பதவிக்கு வந்தது. திரைப்படக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது.

அன்று போராட்டத்தில் ஈடுபட்ட சில நடிகர் நடிகையர்கள் கூட்டுத்தாபனத்தின் முக்கிய நாற்காலிகளுக்காக இழுபறி பட்டனர். என்றாலும் அரசு இவர்களது தலைமைகளை அறிந்து இருந்தபடியால், நல்லவேளை தகுதியானோரே நியமிக்கப் பட்டனர். இந்த விடயத்தில் அவர்களது
உண்மையான சொரூபத்தை அறிந்து
கொள்ள முடிந்தது.
அந்நாட்களில் சினிமாஸ் கம்பனி யின் தயாரிப்பில் காமினி நடித்த, "வீரவிஜயா என்ற திரைப்படம் காமினி தியேட்டரில் திரையிடப்பட்டது. காமினி திரையில் தோன்றியதும் ‘விசில் சத்தத் திற்குப் பதிலாக, வெற்றுப் போத்தல்கள் எறியப்பட்டன. திரைப்படமும் திரை யரங்கிலிருந்து கழற்றப்பட்டது. சிங்களத் திரைப்படங்கள் அதிகமானவற்றைத் திரையிட்ட காமினி தியேட்டர், மற்றும் விஜய் ஸ்டுடியோ போன்றன, இனத்தைக் காப்பாற்றும் மாபெரும் போராட்டமான கறுப்பு ஜூலையில் தீக்கிரையாகின. இவை நெருப்பில் பொசுங்க இனப் பற்றுடன் இணைந்த கட்டுக் கதைகளை எடுத்துவிடத்தான் சிங்களவர்களால் முடிந்தது.
'உங்களுடைய வாழ்க்கையில் உங்கள் உள்ளத்தை வெகுவாகப் பாதித்த நிகழ்வுகள் ஏதேனும் உண்டா? சுவர்ண வாஹினி நிகழ்ச்சி நடாத்துபவர் காமினி யிடம் கேட்டார்.
காமினி மிகவும் அமைதியாக, ஆனால் ஆழமான உணர்வுடன் பின்வருமாறு கூறினார் :-
" நாம் எமது சகோதர இனமான தமிழ் மக்களை நடாத்துகின்ற விதத்தைப் பார்த்து என் மனம் கவலைப்படுகிறது. 1956இற்குப் பிறகு ஆரம்பமான இந்தச் சீரழிவினால் எங்கள் தமிழ்ச் சகோதர மக்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளார்கள். அவர்களைத் துன்புறுத்தி, கொலை செய்து, சொத்துக்களை அழித்து இல்லா தொழிக்க முயற்சித்தார்கள். என்றாலும் அவர்கள், பொழுதும் அடிபட்டு வாழத் தயா ரில்லை" என்றார்கள். எப்பொழுதாவது
"நாங்கள் இதுபோல் எப்
ஒருநாள் அவர்கள் பொறுக்க முடியாமல் தலையைத் தூக்கித் திருப்பி அடிப்பார்கள் என்பதை நான் அப் பொழுது உணர்ந்து கொண்டேன். அவ்வாறான நிலை ஏற் பட்டால் எமது இரண்டு சமூகமுமே அழிந்து போகும் எனவும் நினைத்தேன். நான் அன்று சொன்ன தீர்க்கதரிசனத்தை அப்போது எந்த அரசியல்வாதியும் பொருட்படுத்தவில்லை, அலட்டிக் கொள்வுமில்லை. தெற்கில் புத்திஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் சிங்களப் பத்திரிகைகளுக்குப் பக்கக் கணக்கில் இந்த விவகாரங்களை எழுதி எங்களைப் பித்தர்களாக்கினார்கள். வடக் கிலும் இதுவே நிகழ்ந்தது. இவற்றை நினைக்கும் போதெல்லாம் உன் உள்ளம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது."
என்றார்.
போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த
துரோகி காமினிக்கு ரசிகர்களின் ஆதரவு
என்றும் மங்காமல் பொங்கிக் கிடந்தது எவ்வாறு? ஐந்த்டி ஆறு அங்குலமாவது உயரமற்ற அந்தக் குட்டை மனிதருக்குச்
27

Page 16
S. Deesi
t
சினிமாவில் இவ்வளவு பலசாலியாகத் திகழ முடிந்தது எவ்வாறு? 36 வயது இளவலாக இருக்கும் போதே “பரசதுமல்" போன்ற முதற் தரமான படத்தை இயக்க முடிந்தது எவ்வாறு? அது அவருடைய இயல்பான திறமை யினால் மட்டுமா? அல்லாவிட்டால் அவரி டமுள்ள சிறந்த பண்பான நன்றி யுணர்வைக் காரணமாக்கிக் கொண்டதா? சிந்திக்க வேண்டிய விடயம்!
இவர் பாராளுமன்றத்தில் Liu5) FLIT நாயகராகப் பணிபுரிந்தார். அன்றும் இன்றும் பணி புரிந்தோரில் பாரபட்ச மற்ற நடுவு நிலையான சபாநாயகர் என அவரை விடயமறிந்தோர் மெச்சு கின்றனர். அன்று ஐ.தே.கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து, சிறிமாவோ பண்டாநாயக்காவை மிகக் கீழ்த்தரமாகச் சாடி குற்றச் சாட்டுக் களைச் சுமத்தி நிந்தித்தார். உடனே குறுக்கிட்டு அதை நிறுத்திய காமினி பொன்சேகா, “இலங்கையின் முதன்மை யான பெண்மணியை இவ்வாறு தாக்கு வதை அனுமதிக்க முடியாது. அரசியல் கற்றுக்குட்டிகளான உம்மைப் போன் றோர் இத்தகைய சிறந்த பெண்மணிகளை ஏச முனைவது கவலை தரும் விடயம். உடன் உட்காருங்கள்” என்று கூறினார். தான் சார்ந்த ஐ.தே. கட்சியின் சபாநாயக ராக இருந்த காமினியின் கட்டளையி னால் அந்தக் கற்றுக்குட்டி உறுப்பினர் கலங்கி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
அவர் ஜாஎல பிரதேசத்தில் தங்கி இருந்த போது, அவரை நேசித்தவர்களில்
28
அதிகமானோர், அவரது பழைய தமிழ் நண்பர்கள்தான். அவர்களிடையே சேர். சிற்றம்பலம் கார்டினர், கே.குணரத்தினம், ராஜா மகேந்திரன் போன்றோர் குறிப் பிடத்தக்கவர்கள்.
காமினி வாய் நிறைய யாருடனும் சிரித்ததில்லை. என்றாலும் வாய் நிறையச் சிரித்து, அன்போடு பேசி, தங்களுக்குக் கைகொடுத்து வழி காட்டியவர்களின் கைகளைக் கடித்து, கண்களைக் குரு டாக்க அவர் முனைந்ததில்லை. குண ரத்தினம், சிற்றம்பலம் கார்டினர், செல்ல முத்து, ரொபின் தம்பு போன்றோரை அவர் அடிக்கடி நினைவு கூர்ந்து பேசுவார். இது காமினியின் மேலான நன்றியுணர்வைக் காட்டுகிறது. அவர் எந்தவித சுயலாபத்தையும் எதிர் பார்த்து அவர்களை நினைவு கூரவில்லை. காரணம் அவர் நினைவு கூரும் அந்தப் "பலவான்கள் ஒருவருமே அச்சமயம் உயிரோடு இருக்கவில்லை. சிங்களத் திரைப்படத் துறை உருவாவதற்கு, வழி நடாத்தலுக்குக் காரண கர்த்தாக்களாக அவர்கள் இருந்தபடியால் அடிக்கடி நினைவு கூர்ந்தார்.
இந்தியாவின் பொலிவூட் ஹிந்திப் படங்களுக்கு முஸ்லிம் இனத்தவர் களான மெஹபூப்கான், திலிப்குமார் போன்றோர் சேவை செய்தது போல, அமெரிக்காவின் ஹொலிவூட் திரைப் படத் துறைக்கு யூதர்களான சிறில் - பீ - தமெல், சேவையைப் போல், மேலே குறிப்பிட்ட
வோனர் பிரதர்ஸ் செய்த
தமிழ்த் தயாரிப்பாளர் செய்த சேவை விலைமதிக்க முடியாதவை என்பதனை

காமினி அறிந்திருந்தார். அதனாலேயே
நன்றி உணர்வுள்ள காமினி அவர்களை
அடிக்கடி நினைவூட்டினார்.
காமினி உயிரோடு இருக்கும் பொழுது அவருடன் மிக நெருக்கமாகப் பழகிய நண்பர்களுள் "சிரச ஊடகத்தின் உரிமையாளர் ராஜா மகேந்திரனும் முக்கியமானவர்.
இந்த நாட்பைப் பாரிய நெருப்புக்
கிடங்குள் தள்ளி, புளுகுகளினால் மக்களை ஏமாற்றி, தமிழ் மக்கள் தான் எங்கள் நிஜமான விரோதிகள் என்று குறி சுட முயற்சிக்கும், தங்களுக்கும் உதவி செய்த, கைகொடுத்த நண்பர்களை, ஆசிரியர்களை ஒழிப்பதற்குச் செயற்படும் பொய்யர்கள் காமினியிடம் கற்க வேண்டிய பாடம் எவ்வளவோ உள்ளன
என்று உறுதியாக நம்புகிறேன்.
காமினியைப் போலே நாமும் இந்தப் நெருக்கத்தி லிருந்து தூர விலக்க வேண்டும்.
பொய்யர்களை, எமது
FOR WEDDING FORTRAITS
8 lett,50E
oto କଁr', Yp)1.
EXCELLENT
PHOTOGRAPHERS MoDERN COMPUTERIZED FHOTOGRAPHY
8. CHILD SITTINGS
2S)

Page 17
ஜீவ சாஸ்திரப் பிரகாரம் மானிடர்களும் விலங்குகளும் பிராணிகளாக அல்லது உயிருள்ள பொருள்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மானிடர்களுக்கும், விலங்குகளுக்கும் சந்ததி விருத்தி செய்வதற்கும், தப்பிப் பிழைப்பதற்கும் சரியாக ஒரே மாதிரியான காரணிகளும், சூழ்நிலைகளும் அவசியமாகும். இரு சாராருக்கும் தண்ணீரும் உணவும் தேவை. சுவாசிப்பதற்குப் பிராண வாயு (சுத்தமான காற்று) அவசியம். வசிப்பதற்கு உறைவிடம் அல்லது இயற்கைப் பகுதி தேவை. இரு சாராருக்கும் திருப்திப்படுவதற்கு (சந்தோஷப்படுவதற்கு) விருப்பங்கள் (ஆசைகள்) உள்ளன. இனவிருத்தி செய்து தங்கள் இனங்களைப் பெருக்கத்தக்க ஆற்றல் (சக்தி) இருசாராருக்கும் உண்டு.
எனவே மானிடருக்கும், விலங்குகளுக்கும் இடையே காணப்படும் மாறுபட்ட
நிலை எங்கே உள்ளது? நாங்கள் வாஞ்சையுடன் வளர்க்கும் நம்பிக்கைகள் (எதிர்பார்ப்புக்கள்), மனக்கிளர்ச்சிகள் (உணர்வுகள்), அவா (ஆசைகள்) ஆகியவற்றுள் அடங்கியுள்ளனவா? எங்களையும் விலங்குகளையும் வித்தியாசப்படுத்தும் மிக முக்கிய
காரணியாக ஒருயிரின் நன்றியுணர்வு அல்லது மனமார்ந்த அன்பு நாம் ஆதரவு" காட்டும் உணர்வுகளாக அமைகின்றன. வளர்ப்புப் பிராணிகளான நாய், குதிரை,
காளை மாடு போன்றவையும் தங்கள் எஜமானர்கள் மீது வெவ்வேறு சந்தர்ப்பங்களில்
அல்லது சூழ்நிலைகளில் நன்றியுணர்வைக் காண்பிக்கின்றன.
அப்படியாயின், இந்த விலங்குகள் எந்தச் சூழ்நிலையிலும் கூட எவரிடமும் நன்றிக் குணமின்றி நடந்து கொள்ளும் எம்மவர் சிலரிலும் பார்க்க ‘மிகுந்த மனிதாபிமான உணர்வு அதிகம் உள்ளனவாகக் காண்பிக்கின்றன அல்லவா?
நன்றியுணர்வு எனப்படுவது இன்னொருவர் செய்த நன்மை அல்லது சமிக்ஞையால் அவர்பால் ஈர்க் w
கப்பட்டு வந்தனம் கூறுவதாகும். அதாவது என் பார்வையில் அவரின் நல்ல செய்கைக்கு அன்பின் பிரதியுபகாரமாகத் O G கின் தன் மன் மார்ந்த அன்பை அழிந்து D வெளிக் காட்டும் பாராட்டுதல் ιρGσή தாபி шотGотüb பண் பாடாகும். அந்த நன்றி யுணர்வை ஆதரவான தமிழாக்கம் : வார்த்தைகளாலோ அல்லது
கந்தையா குமாரசாமி
இன்னொருவர் அனாதரவான நிலைமையின் போது அதி
3O
 

அவசரமாகத் தேவைப்படும் சிறிய உதவியைப் புன்சிரிப்புடன் செய்து கொடுப்பதால் அப்பண்பை வெளிக் காட்டலாம். அவசியமான சமயத்தில் எவ் வளவு சிறிய உதவியாயிருப்பினும்என்னதான் மாற்றங்கள் ஏற்பட்டிருப் பினும் நன்மை பெற்ற ஒருவன் செய்த உதவியை நன்றியுள்ள மனிதன் எவனும் ஒருபோதும் மறப்பதில்லை.
தன்னுடைய பழங்கால நிலைமை யினை மறப்பவனிடமே நன்றியுணர்வற்ற தன்மை உண்டு. அப்படியானவன் காலத் துக்கேற்ற - சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு விடுவான். அவன் இப்பொழுது தன்னை வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்த்துக் கொள் வான். மற்றவரிடமிருந்து பெற்ற நன்மை - அதனால் ககபோகம் அனுபவித்ததை மறுப்பதற்கு, அவனது தற்போதைய செல்வச் செழிப்பும், இனிமேல் பிறரது ஆதரவு தேவையில்லை என்ற மனப் பான்மையும் மேலோங்கி நிற்பதினாலே
யாகும்.
அப்படியானவர்களை
விலங்கு
களுக்கு நிச்சயமாக ஒப்பிடலாம்.
அவர்கள் மானிடர் மத்தியில் வாழும்
பிறரைக் கொன்று அல்லது சுரண்டல் பேர்வழி' என்று தயக்கமின்றி நாமம் சூட்டலாம்.
தின்பவர்கள்
தனது பழங்கால நிலைமையை மறந்து செயற்படுவது என்பது உண்மை யில் வெட்கக்கேடானதாகும். எங்கள் மத்தியில் தங்கள் தேவைக்காக மற்றவர் களைத் தங்கள் நன்மையை முன்னிட்டுப் பாவிப்பதற்குத் தயங்காத பலர் வாழ்கின்
ᏗᏠᎭ . page).5
t ۰٫۸ .3 றார்கள். அப்படியானவர்களிடம் யாரா வது உதவி கோரினால் தாங்களாகவே ஒதுங்கிக் கொள்வார்கள்.
தங்கள் பெற்றோர்களிடம் நம்ப முடியாத விதத்தில் நன்றியுணர்வின்றி நடந்து கொள்ளும் பிள்ளைகளையும் இந்த நவீன சமுதாயத்தில் காண்கின் றோம். தாங்கள் படைத்த" குழந்தையைப்
பாராட்டிச் சீராட்டி வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சி பெற்
றோரிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் இந்தச் சமுதாயம் அந்தப் பிள்ளைகளிடம் நன்றிக் கடனாகப் பெற் றோரைப் பிற்காலத்தில் பராமரிக்கும் விடயத்தில் மாற்று யோசனை சொல் வதில் பல வருடங்களைக் கழித்துக்
கொண்டிருக்கின்றது!
உலகம் மகிழ்ச்சிகரமாவதற்கு பயனப் பண்பாட்டுணர்ச்சியுடனும், அன்புள்ள உபசார (நன்னயம்)த்துடனும், மற்றவர் களுடன் பழகுதலில் தங்கியுள்ளது. பணி வான - அன்பான - மனிதாபிமமe: வார்த்தைகள் மற்றவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். ஒரு அன்பான வாழ்த் துரை, இனிய அறிகுறி அல்லது மரியா தையுடனான புன்னகை போதுமானது.
உன் தாகத்தை நீக்கிய தண்ணீர் உள்ள கிணற்றை அசுத்தமாக்காதே! உனக்கு உணவூட்டிய கையைக் கடித்து விடாதே! உன்னை உயர ஏறிச் செல்வதற்கு உதவிய ஏணியை உதைத்து விடாதே! இப்படியான பல பழமொழிகள், நன்றி மறவாமையானது நல்வாழ்த்துக் கூறும்
3.

Page 18
8 GREGGE
།
இன்றியமையாத மனித தர்மங்களுள் ஒன்றாகப் பண்டைய இலங்கையின் பாமர மக்களால் கருதப்பட்டது.
கடந்த காலத் தலைமுறையில் கஷ்
டப்படும் ஒருவருக்கு வலிந்து சென்று
மனமுவந்து உதவி செய்தார்கள். அதே
போன்று அப்படி உதவி செய்தவர்களை ,
நெஞ்சுள்ளளவும் நினைந்து தங்கள் நன்றி பித்தார்கள்.
மறவாத தன்மையைக் காண்
சுயநலமின்மை, அன்பு காட்டும் நன்றி
போன்ற குணாதிசயங்கள் விரைவாக
மனப்பான்மை, மறவாமை
அகன்று வரும் ஒரு சமுதாயப் பின்னணி யில் பாகுபாடு, அநீதி, பரந்த அளவில் சுரண்டல் போன்றவை நித்தம் காணும் நியதிகளாகியுள்ளன. அதனால் மானி டருக்கும் விலங்குகளுக்கும் மத்தியில் உள்ள இடைவெளி குறுகிக் கொண்டு வருவதாகத் தோன்றுகின்றது.
32
பாரிய படுகொலைகள், சட்ட விரோதக் குற்றச் செயல்கள், கும்பலாகப் பாலியல் வல்லுறவுகள் போன்றவை எமது 'முன்னேறிய சமுதாயத்தில் காணப்படுவதால் விலங்குகளின் மனோ பாவத்திலும் பார்க்க மானிடரை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்க முடியாது என்ற நிலை உள்ளதல்லவா?
நல்ல தர்மங்கள் தவிர்க்கப்பட்டால், மானிடத்தில் காண்பதற்கு வேறென்ன உண்டு? மானிடராகிய நாம் மிகவும் புத்தி சாலிகளாக மாறி உலகம் இதுவரை கண்டும் கேட்டிராத இரக்கமில்லாத பயங் கர விலங்குகளாக முடிவுறப் போகின் றோமா?
முன்னர் கூறியது போல் மானிடர்
ஜீவ சாஸ்திரப்படி பிராணிகளாக அல்லது
உயிருள்ள பொருள்களாக வகைப்
படுத்தப் பட்டுள்ளார்கள். நாங்கள் தர்க்க சாஸ்திரப்படி இந்தக் கூற்றை மெய் யானது என்று நிரூபிக்க முயல்கின்றோம் என்று கொள்ளலாமா?
 

ஒரு இருள் வெளியில் அலைபாய்கிறது மனது. வெள்ளொளி கீறி சுமை தாங்கும் ஒரு கோடென விரிகிறது.
பலர் கனவாகி வருகின்றனர் நனவு துப்பாக்கி, குழல், சிரட்டை, பாண், பஞ்சாராத்தி எல்லாமே இளைய அபதுலலாஹ இது கனவாகத் தானிருக்க வேண்டும்.
ஒரு காட்சி இரத்தம் சொட்டியது கூடி நின்றவர்கள் ஏதோ சொன்னார்கள். இரண்டு பாணுக்காக சிந்திய இரத்தம் என்று.
ஒரு நெருப்பு வெளியில் தேய்கிறது தேசம். போராட்டம் மனிதர்களைக் கொல்கிறது பின்னர் கூட்டுகிறது. ஒரு தெறிப்புக்குள் உள்வாங்கி அச்சப்பாடாய் நகர்கிறது வாழ்வு.
தோல் சுருங்கிய மனிதர்களும் இன்னும் சிலரும் தூக்கி வருகிறார்கள் இருளிலும் மெல்லிய போர்வைக்குள் அதனைச் செலுத்தி பின் ஊர்வலம் போகிறார்கள் "அப்பிட்ட எப்பா” என்றபடிக்கு
அது ஒரு கட்டிடமாயும் அரசவையாயும் தெரிகிறது கனவில். கொடும்பாவி போல கொண்டு வருகிறார்கள். அரிசி மூட்டை, எரிவாயு சிலிண்டர், பாண் பொம்மை எல்லாத்தையும் போட்டு எரிக்கின்றனர். “விலை உயர்வு’ என்ற கோஷம் காலை வரை கேட்கிறது என் காதில்.
33

Page 19
Lஸ் வந்து சேர்ந்த போது உச்சி வெயில் அடித்தது. நாங்கள் இருவரும் மட்டுந்தான் பிரயாணிகள். தங்களது வேலையைச் செய்து முடித்த திருப்தியுடன் டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை விட்டிறங்கிப் பெயர் தெரியாத இரு மரங்களின் பின்னே சென்றார்கள். இயற்கையில் பசளை இல்லாத கடற்கரை சார்ந்த மண்ணில் இவர்களின் உரங்களை நம்பி வளரும் மரங்கள். கண்டக்டரிடமோ அல்லது டிரைவரிடமோ நாங்கள் போக வேண்டிய பாதையைக் கேட்டிருக்க வேண்டும். ஐந்து நிமிட நேரமாகியும் இயற்கை உபாதைகளை நீக்கச் சென்றவர்கள் வரவில்லை. பொறுமை இழந்து சிறிது தூரத்தில் இருந்த பெட்டிக் கடைக்காரரிடம் கேட்கலாம் என நினைத்துக் கொண்டு அங்கு சென்றோம்.
மேசையின் முன்வரிசையில் இனிப்புப் பதார்த்தங்கள் போத்தில் வரிசையாக இருந்தது. கதிரையில் அமர்ந்து அன்றையத் தினந்தந்தியை கடைக்காரர் படித்துக் கொண்டிருந்தார்.
எம்மைப் பார்த்தவுடன் 'சிலோன் ܀ காரங்களா?” என்றார். தூரத்தில் பார்த்த வுடன் சிலோன்காரர் என்று அடையாளம் கண்டுகொண்டார் என்று சிறிது ஆச்சரியப் பட்டாலும், "ஆமாங்க. சிலோன் அகதிகள் குடியிருக்கும் புயல் பாதுகாப்பு மண்டபத் திற்குச் செல்ல வழி எது?’ எனச் சிறிது அவர் பாணியிலே கேட்டேன்.
மனக்கிேரிலக்
- என்.எஸ். நடேசன்.
“அதோ அந்தப் பக்கம் போங்கோ. பதினைந்து நிமிடத்தில் மண்டபம் வந்து விடும்."
அவர் காட்டிய பாதை காலடித் தடத்துடன் சில மரங்களுக்கூடாகத் தெரிந்தது. எந்த மேகமும் இல்லாத அகன்று விரிந்த நீலவானம் அந்தப் பக்கம் கடல் பகுதி எனக் காட்டியது.
கடைக்காரரிடம் நன்றி கூறிவிட்டு நடக்கத் தொடங்கிய போது இருந்த சில மரங்களும் தொலைந்து விட்டன. இப்போது நானும் எனது மருத்துவ நண்பன் நாதனும் மதிய வெயிலில் நடந்து கொண்டிருந்தோம். எமது நிழல் கூட எமக்கு இருக்கவில்லை. மருந்துகள் நிறைந்த பைகள் தோளில் அழுத்தியது.
புயல் பாதுகாப்பு மண்டபம் தெரிந்ததால் வேகமாக நடந்தோம்.
எண்பத்தைந்துகளில் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டு கரையோரங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மண்டபங்களில் சாடின்மீன் தகரங்களில் அடைப்பது போல் நிரப்பப்பட்டார்கள். நாகப் பட்டினத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மண்டபத்தில் உள்ளவர்களைச் சந்திக்கச் சென்னையில் இருந்து நேற்று இரவு பஸ் ஏறிப் பின்பு நாக
34
 

பட்டினத்தில் காலையில் இருந்து பஸ் எடுத்து இந்தக் கிராமத்துக்கு வந்து நண் பகலில் வந்து சேர்ந்தோம்.
மண்டபத்திற்கு அருகில் வந்தபோது மண்டபத்தைச் சுற்றி அடுப்புகளில் சமையல் நடந்து கொண்டிருந்தது. குஞ்சு குருமான் களகக் குழந்தைகள் விளையாடிக் கொண்டி ருந்தார்கள். காற்றில் கலந்து வந்த சமையல் மணம் பசியைத் தூண்டியது. காலையில் நாகபட்டினத்தில் உண்ட இட்டலி பஸ்ஸின் குலுக்கலில் விரைவாகச் சமிபாடு அடைந்து விட்டது போலும்.
இப்பொழுது எம்மைச் சுற்றி ஒரு பாரிய சிறுவர் கூட்டம் கூடி நின்றது. என்னுடன் வந்த நாதன் 'தம்பிமார் இந்த முகாமின் பக்கத்தில் நின்ற சிறுவனின் தலையைத் தடவியபடி
தலைவர் யார்?"
கேட்டான்.
"அதோ அவர் தான்’ எனப் பல சிறுவர் கள் ஒருமித்த குரலில் கை காட்டினார்கள்.
காம்பின் வாசலில் நின்ற ஐம்பதுக்குச் சற்றே மேல் மதிக்கத் தக்கவர் வாயில் இருந்த சுருட்டை எறிந்துவிட்டு எம்மை நோக்கி வந்தார்.
ஆறடி உயரத்தில் அகலமான தோள் களும், பரந்து விரிந்த நெஞ்சும் கடின உழைப் பில் ஈடுபட்டவர் என்பதை எடுத்துரைத்தது. ந்லை பாதி நரைத்திருந்தாலும் அடர்த்தி யான கரிய மீசை கம்பீரத் தோற்றத்தைக் கொடுத்தது.
"நீங்கள் யார்?" என்றார் மீசையைத் தடவியபடி.
'நாங்கள் சென்னையில் உள்ள மருத்துவ நிலையத்தில் இருந்து வந்திருக் கிற்ோம்." என எம்ம்ை அறிமுகப்படுத்தி னோம்.
காம்பின் உள்ளே வரும்படி எங்களை sos 6o suT6o கூறியவரைப் பின்
தொடர்ந்தோம்.
"இல்லை. இப்பத்தான் பஸ்ஸை விட்டு இறங்கி நேரே வருகிறோம். பசி இல்லை’ என்றான் நாதன்.
அகதி முகாங்களில் வந்து அவதிப்படு பவர்களிடத்தில் மேலும் சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்ற நினைப்பு அவனுக்கு.
"நாங்கள் பலருக்குச் சாப்பாடு போட்ட வர்கள். காலத்தின் கோலத்தால் இப்படி நாடு விட்டு நாடு வந்து அகதிகளாக இருக்கின் றோம். எங்கள் குணம் மாறாது’ என்று சிரித்தார்.
எங்கள் தயக்கத்தைப் பார்த்து விட்டு மீண்டும், "இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிடு வோம். வாருங்கள்’ என உள்ளே சென்று செம்பு நிறையத் தண்ணிருடன் திரும்பி வந்தார்.
தோளில் இருந்த மருந்துப் பையை இறக்கி வைத்துவிட்டுக் கையைக் கழுவினோம்.
“பெரியவருக்கு எந்த ஊர்” என்றான் நாதன்.
“வங்காலை. நாங்கள் போட்டு வைத்து மீன் பிடித்தவர்கள்."
35

Page 20
இ ை
உள்ளே சென்றதும் வர்ண வர்ணச் சேலைகள் மண்டபம் முழுக்கக் கட்டப் பட்டிருந்தது. குடும்பத்துக்கு எட்டடிச் சதுர மாக, பெண்களின் சீலைகளால் ஒவ்வொரு குடும்பத்தின் பிரத்தியேகப் பாவிப்புக்காக பிரிக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது.
"தற்சமயம் இதுதான் எங்களுக்கு வசிப்பிடம்” என்று ஒரு பகுதியை காட்டினார்.
ஒலைப் பாயை நிலத்தில் விரித்து விட்டு இருக்கச் சொன்னார். இரவு முழுக்க பஸ் பிரயாணம் செய்த உடம்புக்கு இருக்கும் போது ஆறுதலாக இருந்தது.
‘மேரி சாப்பாடு கொண்டு வா" என்றதும் சேலைகளின் மறைப்பில் இருந்து கனிவான சிரிப்புடன் ஒரு கையில் சாப்பாட்டுக் கோப்பையும் மற்றக் கையில் அலுமினியப் பானையுடனும் நாற்பது மதிக்கத்தக்கப் பெண் தோன்றினாள்.
சோற்றை எமது கோப்பைகளில் வைத்தபடி 'தம்பியவை எந்த இடம்?"
'முன்பு யாழ்ப்பாணம். தற்போது சென்னை' என்று சொல்லிச் சோறு மேலும் போட வேண்டாம் எனத் தடுத்தான் நாதன்.
பேரைக் கேட்க முன்பு இடத்தை அறியும் மரபு எம் தமிழர் விழுமியங்களில் ஒன்றோ என பல காலம் நான் வியந்தது р-6ќл(6.
“காம்பிற்கு மருந்து கொண்டு வந்திருக் கிறார்கள்" என இடையில் பெரியவர் குறுக் கிட்டார். மீண்டும் 'தம்பியவை நல்லா சாப்பிடுங்கோ’ எனக் கூறிவிட்டு "எங்கே ரீட்டா? மீண்டும் கோயிலுக்கு போய் விட்டாளா?" என மனைவியிடம் கேட்டார்.
3G
**இல்லை இப்பத்தான் வந்தாள். வெளியே விளையாடுகிறாள்" எனக் கூறி விட்டு சென்றாள் அவள்.
"மகள் பற்றித் தான் கவலை’ எனத் தனக்குள்ளே கூறிக்கொண்டு உணவை р-6ќлц mї.
அவரது விடயத்தில் தலையிடாமல் மெளனமாக இருந்தோம். கவலைக்கா பஞ்ச மில்லை. அகதி முகாமில் சிலநாள், சில வாரங்கள் என எண்ணிக் கொண்டு ஒதுங்கு பவர்கள், மாதங்கள், வருடங்கள் என வாழும் போது ஏற்படும் துயரங்கள், துன்பங்கள் ஆறுதல் வார்த்தைகளால் தீர்க்கப்படக் கூடியவையா?
உணவு அருந்தி முடிந்ததும், புயல்
ப்ாதுகாப்பு மண்டபத்தின் ஒரு பகுதி மருத் துவமனையாக்கப்பட்டது. ஐம்பதுக்கு மேற்
பட்டவர்களை டாக்டர் நாதன் பரிசோதித்த
போது நான் கம்பவுண்டராகத் தொழிற்பட்டு மருந்துகளை வழங்கினேன். மூன்று மணி நேரத்தில் எமது மருத்துவ முகாம் மூடப் Ull-gil.
மாலை நேரத்து கடற் காற்று வீசத் தொடங்கியதும், கடற்கரையில் காலாறச் சென்று பார்த்தபோது பல வள்ளங்கள் கடற் கரையில் கட்டப்பட்டிருந்தன. பெரும்பாலான வற்றில் மடுமாதாவின் பெயர் இருந்ததால் அவை மன்னாரைச் சேர்ந்தவை என அறிய முடிந்தது.
'காலம் மாறுவதைப் பார்த்தாயா? அக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து வந்த வர்களை கள்ளத் தோணி என அழைத் தோம். இப்பொழுது எம்மவர் அதே மாதிரி

தோணிகளில் தமிழ் நாட்டிற்கு வர வேண்டி இருந்தது” என்றேன் நாதனிடம்.
திரும்பி வந்தபோது, தேநீர் தயாராக இருந்தது. தேநீர் குடிக்கும் போது, "இஞ்சருங்கோ, ரீட்டாவைப் பற்றிப் பேசுங்க" என்றார் கணவரிடம்.
"என்னத்தைப் பேசி" என பெரியவர் சலித்துக் கொண்டார்.
'சொல்லுங்கோ மனம் ஆறுதல் அடையும்’ என உற்சாகப்படுத்தினான் நாதன்.
'அவளை இங்கே கூப்பிடு."
'இவள்தான் நம்மடமகள் ரீட்டா" என சுமார் 18 வயது பெண்ணை எமக்கு அறி முகப்படுத்தினார். அப்பாவித்தனமான சிரிப் புடன் அலைந்த கண்களுடன் எங்களை நோக்கி வந்தாள்.
"எங்கே போனாய் ரீட்டா? எனச் சிறிது காரமான குரலில்,
"எங்களைப் பார்த்தபடி "எனக்கு இந்தப் பகுதியில் சாத்தான் இருப்பதாகச் செய்தி வந்தது. அதுதான் கோவிலுக்குச் சென்று என் தாய்மார்களைப் பார்த்தேன். அதுக் கென்ன இப்போ? ஆண்டவரிடம் முறையிட் டால் சாத்தான் வராது எனத் தாய்மார்கள் சொன்னார்கள். அதுதான் ஏசு குமாரனிடம் விண்ணப்பித்தேன்."
'உன்னை சிஸ்டர்மாரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக் கிறேன்" எனக் கடிந்தார். "அம்மா பாருங்க அப்பா ஏசுகிறார்’ எனக் கூறும் போது கண்களில் கண்ணிர் வந்தது.
D&GS63 ས། །བུ་
"சரி அவளை பேசாதீங்கள்' தாயார் இடைமறித்தார். "அப்பா பேசமாட்டார். நீங்கள் அழவேண்டாம்" என நாதன் கூறி யதும் நீங்கள் நல்ல டாக்டர்தானே எனக் கூறிக் கொண்டே எங்கள் இருவருக்கும் இடையில் குழந்தைகள் மாதிரி இடித்துக் கொண்டு அமர்ந்தாள். நாங்கள் விலகி வசதி யாக இருக்க இடம் விட்டோம்.
"நானும் டொக்டருக்குப் படிக்கிறேன். எனது புத்தகத்தைக் காட்டட்டுமா?" என் றதும் நாதன் தலையை ஆட்டியதும், ஒரு விநாடியில் புத்தகத்துடன் வந்து கொடுத்தாள். நான் புத்தகத்தைப் பார்த்த போது வெளிப்
புறத்தில் ஒன்பதாவது வருடம் விஞ்ஞானம்' என எழுதப்பட்டிருந்தது.
"சரி இந்தப் புத்தகத்தில் எந்தப் பாடம் படிக்கிறீர்கள்’ என நாதன் கேட்டதும் பதில் சொல்லாமல் "நான் நல்லாப் படிப்பேன்’ எனக் கூறிப் புத்தகத்தை மீண்டும் வாங் கினாள். "நான் சிஸ்டரிடம் போகிறன்" என்றாள் தந்தையைப் பார்த்தபடி,
"நாளைக்குப் போகலாம்"
"இல்லை. நான் போவேன்."
"அவள் போட்டும்" என்றார் தாயார்.
தாய் சொல்லி முடிக்கவில்லை, இரண்டு எட்டில் வெளியேறினாள்.
"இப்பொழுது மருந்து கொடுப்ப தில்லையா' என நாதன் வினவினான்.
"சென்னையில் பெரிய டாக்டரிடம் காட்டி மருந்து எடுத்தோம். அடிக்கடி எங்க ளால் போக முடியவில்லை' என இயலாமையுடன் கூறினார்.
37

Page 21
Կ2 மல்லிகை
'இந்த சிசேபிரினியா மன வியாதி எப்படி ரீட்டாவுக்கு வந்தது?" என்றேன்.
"நாங்கள் இந்தக் காம்பிற்கு வந்து ஆறு மாதம் தான். எங்கள் சொந்த ஊர் வங்காலை. இவளோடு ஒரு பொடியன் சினேகமாக இருந் தான். உறவுக்காரன் என்றதால் நாங்கள் ஏதும் சொல்லவில்லை. பொடியன் திடீர் என இயக்கத்தில் சேர்ந்து விட்டான். எங்களுக்கு பெரிய கவலை. என்னத்தை செய்யிறது. இப்படி இருக்கும் பொழுது ஒருநாள் போட்டில் இயக்கத்திற்கு ஆயுதம் வந்து இறங்கியது. நாங்களும் கூட பொடியளுக்கு உதவி செய்தோம். எப்படியோ ஆமிக்காரன் மணந்து பிடிச்சிட்டான். ஊரைச் சுத்தி வளைச்சு அந்தப் பொடியனை பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அதற்குப் பின்பு இவளுக்கும் இப்படியாகி விட்டது. அடிக்கடி ஆமி வந்து கொடுத்த தொல்லையினால் நாங்களும் வள்ளத்தில் ஏறி இங்கு வந்து விட்டோம்."
“பெரியவர், தலையிடி, காய்ச்சல் எனச் சொல்லியவர்களுக்கு எங்களால் மாத்திரை கொடுக்க முடிந்தது. உங்கள் மகளுக்கு வந்த நோய்க்கு எங்களிடம் ஒன்றுமில்லை. இக் காலத்தில் சிசேபிரினியாவுக்கு நல்ல மருந்துகள் உண்டு. பலர் குணமாகி உள்
ளார்கள்" என்றான் நாதன்.
நான் எழுந்து "இப்பொழுது வெளிக்
கிட்டாதான் நாகப்பட்டினத்திற்கு பஸ்
எடுக்கலாம்” எனக் கூறினேன்.
'சரி போய் வாருங்கள்' எனக் கணவனும், மனைவியும் 6S60L. கொடுத்தார்கள்.
வெளியே வந்ததும் "எப்படி இந்த வயதில் சிசேபிரினியா வ்ந்தது?" என்றேன்.
"இந்த வயதில் தான் மூ ைஈயின் முக்கிய பகுதிகள் முதிர்ச்சியடைவது. இக் கால கட்டத்தில் நடந்த சம்பவங்கள் மன ம்ே வளர்ச்சி நிலையைப் பாதிக்கும்."
இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் Log, 60075.856İT, 2-L-6ü ஊனங்களுக்குக் கணக்கு வரலாம். இந்த ரீட்டா போன்றவர் களின் மனப் பாதிப்பை யார்தான் கனக் கெடுப்க்ஷபார்கள் ள்ன நினைத்தேன்.
(குறிப்பு : காதில் கேட்பது, கனவில் காணுவது போன்ற உணர்வுகள் (Hallucinations) ssöTGosoTL uiguu sot கனவுலக நினைப்பு (Delusions) மற்றும் தொடர்பற்ற பேச்சுக்கள் சிசேபிரியாவின் (Schizophrenia) முக்கிய குணங்கள்.)
Undrawn Portrait for
. Unwritten Poetry டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின் ஆங்கில
மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது.
தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள் மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும்
38
 

66,563
అనునీగా2ర ωήης» പൗb elovy (ါဂJ၏မ်ဖ-(96now /്കി
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு (2ஆம் பதிப்பு) 6606). 250/- 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் - (சிறுகதைத் தொகுதி) சாந்தன் விலை 140/- 3. அநுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா seos) 180/- 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - (2ஆம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் saleosu 175/- 5. மண்ணின் மலர்கள் - (யாழ் பல்கலைக்கழக 13 மாண்வ
மாணவியரது சிறுகதைகள்) 6606) 10/- 6. கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாவற் 66606) 100/- 7. முப்பொரும் தலைநகரங்களில் 30 நாட்கள் (பிரயாணக் கட்டுரை) விலை 110/- 8. முனியப்பதாசன் கதைகள் - முனியப்பதாசன் 6,606 50/- 9. மனசின் பிடிக்குள் - (ஹைக்கூ) பாலரஞ்சனி விலை 60/- 10. அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை sileos 175/-
அலங்கரித்தவர்களின் தொகுப்பு) 11. சேலை - முல்லையூரான் 6&l6oი6სა 150/- 12. மல்லிகைச் சிறுகதைகள் - (30 சிறுகதைகள்) செங்கை ஆழியான் seos 275/- 13. மல்லிகைச் சிறுகதைகள் - (41 சிறுகதைகள்) செங்கை ஆழியான் விலை 350/- 14. நிலக்கிளி - பாலமனோகரன் 66606) 140/- 15. நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் - டொமினிக் ஜீவா saleo)6) 150/- 16. நாம் பயணித்த புகைவண்டி - (சிறுகதைத் தொகுதி) - ஆப்டீன் விலை 150/- 17. தரை மீன்கள் - ச.முருகானந்தன் விலை 150/- 18. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் -
செங்கை ஆழியான் shops) 150/- 19. அப்புறமென்ன - குறிஞ்சி இளந்தென்றல் 66606) 120/- 20. அப்பா - தில்லை நடராஜா setsu 130/- 21. ஒரு டாக்டரின் டயரியில் இருந்து - எம்.கே.முருகானந்தன் 66606) 140/- 22. சிங்களச் சிறுகதைகள் 25 - தொகுத்தவர் செங்கை ஆழியான் 6isos) t50/- 23. இந்தத் தேசத்தில் நான் - கவிதைத் தொகுதி
(பேராதனைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் கவிதைகள்) விலை 115/- 30. Undrawn Portrait for Unwritten Poetry - GLITLSsold gourofsir
வாழ்க்கை வரலாறு ஆங்கிலப் பதிப்பு shaos) - 200/- 31. டொமினிக் ஜீவா சிறுகதைகள் 6flsosu 350/-
32. அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம்
டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு - 2ஆழ் பாகம் sisosu 200/-
3S)

Page 22
வானம்
பாடிகளின் நடுவே
ஓர்
ளெமுைக்
குயில்
- LDrt. Lurr6vénslæLib –
4.O
திண்ணை வெளிக்குமெனத் திரு காத்திருக்கவில்லை!
"5னவுகளை நனவாக்க நீ நன்றாகப் படிக்க
வேண்டும்.” தன்னைச் சந்திக்கும் போதெல்லாம்
பேராசிரியர் கா.சிவத்தம்பி இப்படி உற்சாகப்படுத்து வாராம்! தனது பெயரில் மூவகை இலட்சணங்களை அடையாளப்படுத்தும் வீ.ஏ.திரு ஞானம் சுந்தரம் பெருமையோடு இப்படிச் சொன்னார். திரு
ஞான(ம்) சுந்தரம் இந்த வகையில் மூன்று இலட்
சணங்களைத் தம் பெயரில் தாங்கி அனைவரையும் உச்சரிக்க வைக்கும் பேறு ஒரு சிலருக்குத்த:ன் தேறும். இருந்தாலும், இவர் அவரோடு நெருக்கமாக அனைவருக்கும் திருதான்!
பேராசிரியர் சிவத்தம்பியும் கனவு கண்டவர் தான். பிரபல வானொலி அறிவிப்பாளரும், நாடகத் தயாரிப்பாளரும், கலைஞருமான ஜோர்ஜ் சந்திர சேகரனோடு முன்பொரு நாள் பேராசிரியர் பஸ்
தரிப்பு நிலையமொன்றில் நின்ற பொழுது, "நான்
என் பிரயாணங்களை எனது சொந்தக் காரில் செய்ய வேண்டும். நூலக ராக்கைகளில் எனது புத்தகங்கள் வைத்திருப்பதைப் பார்க்க வேண்டும்" இப்படி அவர் சொன்னதாக ஜோர்ஜ் தனது நூலில் எழுதி இருக் கிறார். தனது ஊக்கத்தாலும், உழைப்பாலும் பேரா சிரியர் தற்பொழுது இக்கனவுகளை மெய்ப்பட வைத்திருப்பது தமிழுலகிற்குத் தெரியாத சங்கதி யல்ல! அந்த அநுபவ வெக்கையால் தான் திருவிட மும் மேற்படி வேண்டுகோளை விடுத்தார் போலும்!
ஒவ்வொரு மனிதனும் கனவு காண வேண்டு மென்ற, மனித மேம்பாட்டிற்கான இந்த உசார்ப் படுத்தலை அண்மையில் ஒர் உலகப் பெரியாரும் அத்தாட்சிப்படுத்தி இருக்கிறார். அவர், தற்போதைய இந்திய ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாம்!

அன்று பேராசிரியர் கா. சிவத்தம்பி ஏவிய 'சப்பட்டை'யற்ற வித்துகள் திரு வால் நேர்த்தியான முறையில் பேணப் பட்டு, கனவுகள் நிஜமானதை அவரது வாழ்வினுள் புகுந்து பார்க்கும் பொழுது புலனாகின்றது. இன்றைய சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகிய காகித ஊடகங் களுக்குக் கேள்வி - பதில்" என்ற பகுதி தவிர்க்க முடியாததாகி விட்டது. இதை இந்த ஊடகங்களுக்கு வரும் கடிதங்கள் மூலமாகக் கண்டு கொள்ளலாம். இந்த ஊடகங்கள் தம்மால் வெளிப்படுத்த முடி யாத கருத்துகளை, இக்கடிதங்களுக்குப் பதிலளிப்பதன் மூலம் தெரிவித்து விடு கின்றன. இந்த உத்தியைத் தற்பொழுது இலத்திரன் ஊடகங்களும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. தொலைபேசி மூல மாக நேயர்கள் கேள்வி கேட்பதன் மூல மாகவும், அவைகளுக்குப் பதில் எழுது வதன் மூலமாகவும் சமகாலப் பிரச்சினை களில் பொது மக்கள் எத்தகைய அக்கறை கொண்டிருக்கின்றனர், எந்தப் பிரச்சினை மக்களுக்கு வெப்பத்தைக் கொடுக்கிறது இத்தகைய போக்குகளை அம்பலத்திற்கு இழுக்கின்றன.
கடந்த காலத்தில் வெளியான கேள்வி - பதில்கள் பகுதி ஏராளமான வாசகர்களைப் பெற்றிருந்தது. தமிழ் வாணன் பதில்களை எழுதினார். அறி வியல், சினிமா, அரசியல், இலக்கியம் போன்ற வாசகனுக்கு, புதுமையான தகவல்களை அள்ளி வழங்கக் கூடிய கூறுகளை உள்ளடக்கியதான களஞ்சிய மாகவும், நூலகமாகவும் இப்பகுதி அமைந்திருந்தது. 'கலை மகள்" என்ற சஞ்சிகையில் 'விடையவன்' என்ற புனை
665); Sb2 பெயரில் கி.வா.ஜகந்நாதன் பதில் சொன்னார். பழந் தமிழ் இலக்கியம் சம் பந்தமான சகல கேள்விகளுக்கும் விடை யவன் சளைக்காது பதில் சொன்னார். இது தமிழ் அபிமானிகளுக்குப் பெரு விருந்தாக இருந்தது. உயர் கல்விக்குத் தமிழை ஒரு பாடமாக எடுத்த மாண வருக்கு அப்பொழுது கலைமகள் ஒரு பாட நூலாக உதவியது.
இந்த உத்தியை இலங்கைப் பத்திரிகைகளும் கையாண்டு, வாசகப் பரப்பை அகலித்தன. இப்பொழுது காணாமல் போய்விட்ட "சுதந்திரன் - இது தமிழரசுக் கட்சியின் உத்தியோகப் பூர்வமான பத்திரிகையென்பது அனை வரும் அறிந்த விஷயமே! இப்பத்திரிகை யிலும் "கேள்வி-பதில் பகுதி வெளி யாகிக் கொண்டிருந்தது. இதைத் தயாரித் தவர் அப்பொழுது இப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பத்திரிகைத்துறை ஜம்பவான் எஸ்.டி.சிவநாயகம். இவர் குயுக்தியார் என்ற புனை பெயருக்குள் ஒளிந்து பதில் சொன்னார். இவரது பதில்கள் ஹாஸ்யமாகவும், நளினமாகவும் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் சிலே டையாகவும் இருக்கும். இப்பதில்களை வாசிக்கும் வாசகன் தமிழ்மொழியின் வளத்தையும், கொள்ளும் வகையில் குயுக்தியார் தனது
வீச்சையும் புரிந்து
மேதைமையை இப்பதில்களூடாகக் காட்டுவார்.
இப்பகுதியின் வாசகப் பரப்பை மேலும் அதிகரிப்பதற்காக எஸ்.டி.சிவ நாயகம் ஒரு தந்திரோபயத்தை அன்று
கையாண்டிருக்கிறார். வாசகர்கள்
41

Page 23
g;65);
STZ கேட்கும் சிறந்த கேள்விக்குப் பரிசு வழங்குவதே அத்தந்திரம் ஆசிரியரின் இலக்கு மகத்தான வெற்றியைப் பெற்றது. ஏராளமானோர் கேள்விகள் கேட்டனர். பரிசைப் பெறுவதற்காக!
ஒருமுறை இப்பரிசைப் பெறும் பேறு 'திரு'வுக்கும் கிடைத்தது. மிகவும் சந்தோசப்பட்டாராம்! இப்பணப் பரிசை என்ன செய்திருப்பார்! நண்பரோடு சேர்ந்து சிற்றுண்டி புசித்தாரா சினிமா பார்த்தாரா ஞாபகத்திற்காக பாதுகாத்து வைத்திருந்தாரா! இல்லை. இல்லவே இல்லையாம்! அப்போ. சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் வாங்கினாராம்! அறிய அவாக் கொண்ட அன்பான வாசகனுக்கு ஏமாற்றமா?
வாங்கிய புத்தகங்களைத் தனது அலுவல் முடிந்ததும் வீசிவிடவில்லை. அல்லது ஒரு "சிறங்கை கடலை வாங்க கடலைக்காரியிடம் கொடுக்கவில்லை! சந்தித்த பொழுது எடுத்துக் காட்டினார். அவைகள் இதோ இருக்கின்றனவென்று! இரண்டு கட்டுகள். புத்தகங்கள் எந்த விதமான ஆக்கிரமிப்புகளையும் பெறாது சிதைவுகளற்ற நிலையில் பக்குவமாக இருக்கின்றன.
ஒரு சந்தர்ப்பத்தில், முற்போக்குத் தமிழ் கவிஞர் சில்லையூர் செல்வராசன் இவரது தமையனார் வீ.ஏ.சிவஞானத் தைப் பார்க்க இவர்களது இல்லத்திற்கு வந்தாராம்! அப்பொழுது ரேடியோ பாடிக் கொண்டிருந்ததாம். "நீர் உரத்த ரேடியோ அபிமானி என்கிறீரே? இந்தப் பாட்டின் ராகத்தைச் சொல்லும் பார்ப்போமெனத் திருவிடம் கேட்டாராம் கவிஞர். திருவுக்
42
குச் சங்கடமாக இருந்ததாம்! செல்வராசன் சிரித்தாராம். உடனே திருவின் தமைய னார் “அந்தப் புத்தகக் கட்டை கொண்டு வாடா" என்றாராம். சினிமாப் பாடல் புத்தகக் கட்டை விரித்துப் பார்த்து ராகத் தோடு, தாளத்தையும் கவிஞர் செல்வ ராசனுக்குச் சொன்னார்களாம். அந்தச்
சந்தர்ப்பத்தில் அப்புத்தகங்கள் உசாத்
துணையாக இருந்தது, தேவையற்ற கருத்தாடலொன்றைத் தவிர்த்ததாம்!
இந்தப் புத்தகக் கட்டுகளில் சிவ கவி, ஹரிதாஸ், பில்கணன், ஜகதவப் பிரதாபன், பசியின் கொடுமை, லவகுச, வாசவத்தை, மந்திரி குமாரி, சந்திரலேகா இத்தகைய சினிமாப் படங்களின் முழுப் பாடல்களும் பதி வாகி இருக்கின்றன. இதில் விஷேட பாடல்களுக்குரிய
சுதர்சன், புயல்,
மென்னவென்றால், ராகம், தாளம், பாடியவர், எழுதியவர் ஆகிய விபரங்களும் தரப்பட்டிருக் கின்றன.
பிற்காலத்தில் இலங்கை வானொலி யில் அறிவிப்பாளராகப் பணியேற்று, கர்நாடகச் சங்கீதக் கச்சேரிகளுக்கு ராகங் களை அறிவிக்க வேண்டிய திருவுக்கு அத்தகைய ராகங்களின், தாளங்களின் பெயர்களை முன்கூட்டியே வாசித்து உச் சளிக்கும் சந்தர்ப்பம் இதன் மூலம் கிடைத் தது அவரது தூர நோக்கின் மகத் துவத்தைக் காட்டுகின்றதல்லவா! பொன்னையா பிள்ளை அன் சன்ஸ் என்ற புத்தகசாலையில் இப்புத்தகங்களை வாங் கினாராம். இன்னமும் குன்றாத ஞாபக சக்தி!
நான் உயர்ந்த இலக்கியங்களைத் தான் படித்தேன் என்று போக்குக் காட்

டாமல், விலை கொடுத்து சினிமாப் பாடல் புத்தகங்களையும் வாங்கிப் படித்தேன் என ஒப்புக்கொண்ட திருவின்
உள்ளம் "சுந்தரமானது தானே!
சுதந்திரன் கொடுத்த பரிசு ரூபா 3/- அன்றைய சூழலில் மட்டுமன்றி இன்றும் தமிழர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உதவிப் பணிப்பாளர் (1980.03.28 - நிருவாகம்) பதவி நிலையி லிருந்த திரு முதன் முதலில் அதாவது 1955ஆம் ஆண்டில் "கோழி வளர்ப்பு' என்ற கட்டுரையை வாசித்ததன் மூலமா கவே வான் அலைகளில் தனது குரலைப் பரவச் செய்தாராம். பிரபல அறிவிப் பாளரான எஸ்.சுந்தரலிங்கம் (சுந்தா) தயாரித்து ஒலிபரப்பிய ‘மாலை மதியம்’ என்ற நிகழ்ச்சியில் இவர் இக்கட்டு ரையை நேரடியாக வாசித்தார். இத்தகைய நேரடி ஒலிபரப்புகளுக்கு எல்லோரும் அனுமதிக்கப்படுவதில்லை. பொறுக்கி எடுத்துத்தான் ஒலிவாங்கிக்கு முன் நிறுத்துவார்கள். இந்த வகையில் திரு வின் வாசிப்பு ஆற்றல் சுந்தாவின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். எனவேதான் இத்தகைய நேரடி ஒலிபரப் பிற்கு அவரைத் தேர்ந்தெடுத்தார். இக் கட்டுரையை வாசிப்பதற்குத் தனக்கு உரியமுறையில் பயிற்சி கொடுத்தவர் எஸ்.ரி.தம்பிராசா என்கிறார்.
இப்போதெல்லாம் மருதோண்டி யென்றால் இளைய சந்ததிக்கு முழி சாட்டமாக இருக்கும். இதன் இலைகளை அரைத்து கையிலும், நகங்களிலும் பூசி னால் பூசிய இடம் கடும் மஞ்சளைக்
காட்டும். சில தசாப்தங்களுக்கு முன்னர் மருதோண்டி பெண்களின் அழகு சாதன மாக இருந்தது. இப்பொழுது சந்தையில் மலிந்து கிடக்கும் "கியூரெக்ஸ்' போன்ற வைகள் மருதோண்டியை ஒரம் பேர்க வைத்து விட்டன. இந்த மருதோண்டி யைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி திரு மாதர் பகுதியில் வாசித்தாராம்.
இவர் பிரதிகள் மூலமும், தனது குரல் மூலமாகவும் வானொலியில் பங்கு பற்றுவதோடு தனது ஒலிபரப்புத் துறைக்
கான பணியை மட்டுப்படுத்திக் கொள்
ளாமல் சில 30 நிமிட நிகழ்ச்சிகளையும் தயாரித்து ஒலிபரப்பி இருக்கிறார். 'வளரும் பயிர்' என்ற நிகழ்ச்சி இவை களில் முக்கியமானது. அன்று வானொலி யில் ஒலிபரப்பான இத்தகைய நிகழ்ச்சி கள் பல ஈழத்துக் கலைஞர்களுக்குத் தொட்டிலாக இருந்திருக்கின்றன. இப் படிப்பட்ட சிலர் தாங்கள் வானொலி வளர்த்த கலைஞர்கள் என்பதை இப் பொழுதும் பகிரங்கமாக் ஒப்புக்கொள்வ துண்டு. இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாள ராகத் திரு பணி செய்த காலத்தில் இன்று பிரபல கலைஞராக ஒளிரும் மரைக்கார் எஸ்.ராமதாஸிற்கு இந்நிகழ்ச்சி பயில் அரங்காகச் சேவித்ததாம். அமரர். ஆர்.விக்ரர், கலைதாசன், சி.சண்முகம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் குரல் கொடுத் திருக்கின்றனர். சில்லையூர் செல்வ ராசனின் வள்ளுவர் வந்தார் என்ற இசை இடையிட்ட உரைச் சித்திரம், திருவின் 'ரேடியோவின் சுய சரிதை” ஆகிய வானொலி நிகழ்ச்சிப் பிரதிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒலி பரப்பப்பட்டதாம். இவர் தயாரித்து ஒலிபரப்பிய நாளைய
43

Page 24
. 6565);
சந்ததி' என்ற நிகழ்ச்சியில் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன்
ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதே நிகழ்ச்சியில் திரு எழுதிய 'விடே நாடகம்" என்ற தொடர் சித்திரம் பல வாரங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதில் உரைஞர்களாக இன்றைய பிரபல அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம், ஆர்.விக்டர் ஆகியோர் பங்கு பற்றி
னார்கள்.
தனது வானொலிப் பிரதி ஆக்கத் தில் ‘கண்(அம்மா) என் காதலி' என்ற இசை இடையிட்ட உரைச்சித்திரப் பிரதியை தன்னால் இன்னமும் மறக்க முடியாதிருப்பதாகத் திரு சொல்கிறார். இத்தலைப்பைக் கேட்பவர்களுக்கு மஹா கவி பாரதியாரின் நினைவுதான் தோன் றும். ஆனால் எழுத்தில் வித்தியாசம் உண்டு. பாரதியாருடையது 'கண்ணம்மா என் காதலி' திருவினுடையது 'கண் (அம்மா) என் காதலி" வானொலிப் பிரதி களை எழுதி அநுபவம் பெற்ற எழுத் தாளர்களுக்கு, அடைப்புக்குறிக்குள் (அம்மா) இருப்பது குழப்பத்தைக் கொடுக்கக் கூடியது. இச்சொல்லை அறிவிப்பாளர் சிலர் கருத்து விளங்காமல் கண்ணம்மா எனவும் அறிவிப்பதற்கு இட முண்டு. அந்தளவிற்குப் பாரதியாரின் தலைப்புத் தமிழுலகுள் புகுந்திருக்கிறது. இது சம்பந்தமாகத் திருவிடம் பிரச்சினை எழுப்பியதற்கு அது கண் சம்பந்தமானது. அதுதான் அப்படி எழுதினேன் என்றார். நிகழ்ச்சியை முழுதாகக் கேட்போருக்கு எதுவித தடுமாற்றமும் இருக்காதென்றார்!
இப்படியாகக் 'கண்ணம்மா" எனப்
44
போக்குக் காட்டினால் கேட்பவருக்கும் ஒரு ஈர்ப்பு எழலாந்தானே! இந்நிகழ்ச்சி இசை அமைத்து அமரர் கே.பரராசசிங்கம் LITIgoriti.
இலங்கையின் விளம்பரக் கலைக்கு புதிய பரிமாணத்தைத் தந்தவர் அமரர் சில்லையூர் செல்வராசன். கருத்துச் செம்மையுள்ள அழகிய சொற்களை யெல்லாம் வானொலி விளம்பரத்தில் புகுத்திப் புதுமை புரிந்தார். 'குமிழ் முனைப் பேனாக்கள் என்ற சொல்லை Bal Point பேனாவுக்கு தந்தவர் அவரே! 'மக்கள் மணமறிந்த வங்கி மக்கள் வங்கி" என்ற சொற்றொடர்களுக்குச் சொந்தக் காரரும் அவரே!
திருவும் அக்கறையோடு தமிழ் விளம்பரத்துறைக்கு இத்தகைய பணி யைச் செய்துள்ளார். இவர் 1961ஆம் ஆண்டில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்தார். காப்புறுதி சம்பந்தமான ஆவ ணங்கள் பலவற்றை இவரே தமிழ் வடி வப்படுத்தினார். இவைகள் இன்னமும் அங்கு நடைமுறையில் இருப்பதைக் காணலாம். ஒரு காலத்தில் காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் தமிழ் விளம்பரத் துறைக்கு மட்டுமன்றி, நாடகத் துறைக் கும் ஊட்டமாக இருந்தது. தேன் கூடு, விடிவெள்ளி, ஆயிரம் பொன், காப்புறு தியே காவற் கலசம், செத்தும் கொடுத் தான் சீதாகாதி இத்தகைய காப்புறுதியின் ஆத்மாவை வெளிப்படுத்தும் தலைப்பு கள் வானொலியில் ஒலித்ததற்கு இவரே ரிஷி மூலம்! இதைக் குமுதம் சஞ்சிகை யும் விமர்சித்ததாம்!

1965ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு பிரமாண்டமான கைத்தொழில் கண் காட்சி நடைபெற்றது. இது சுதந்திர சதுக் கத்தில் தற்பொழுது இலங்கைத் திரைப் படக் கூட்டுத்தாபனமுள்ள திடலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்பு குதிரைப் பந்தயம் நடப்பதுண்டு. இலங்கையின் சகல கூட்டுத்தாபனங் களும் இதில் பங்கு பற்றித் தமது இயந் திர சாதனங்கள், உற்பத்திப் பொருட்கள் என்பனவற்றை காட்சிப்படுத்தின. தற் பொழுது மாணவர்கள் மிகவும் ஆவ லோடு கண்டு களிக்கும் கோள் மண்டலம் இச்சந்தர்ப்பத்தில் கென்றே அமைக்கப்பட்டது. இதைச் சகல மக்களும் கண்டு களிக்க வேண்டுமென்ற பரந்த நோக்கோடு இலங்கை வானொலி யின் தேசிய சேவை முன்னேற்றப் பாதையில் 38 நாட்கள்" என்றொரு நிகழ்ச் சியை ஒலிபரப்பியது. இதற்கான பிரதி களை எழுதி வாசிப்பதற்கு 'சானா' விவியன் நம சிவாயம், வீ. ஏ. கபூர் இவர்களோடு தானும் சேர்க்கப்பட்டிருந்ததாகத் திரு நினைவு கூருகிறார். புடைவைக் கூட்டுத் தாபனப் பிரதிக்கு ஐந்து வயது மகள் கோலமிட்டால், அதை அழகல்ல என்ப
எஸ்.சண்முகநாதன்,
வருமுண்டோ” எனவும்; லொத்தர் சபைப் பிரதிக்கு "சிறுதுளி பெரு வெள்ளம்" எனத் தலைப்பிட்டும் ஒலிபரப்பப்பட்ட தாம். தலைப்புகள் வானொலி கேட்டு னரைச் சுண்டி இழுக்குமல்லவா!
வானொலித் துறைக்குள் பிரதிகள் மூலமாக நுழைந்து கொண்ட திரு 1962.7.12இல் பகுதி நேர அறிவிப்பாள ராக நியமனம் பெற்றார். அப்பொழுது
இக்கண்காட்சிக்
Կウ 666):
தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்த க.செ.நடராசா, (நாவற்குழியூர் நடராசன்) இவரது வானொலிப் பிரதியாக்கம், நிகழ்ச்சித் தயாரிப்பு என்பனவற்றை அக் கறையாக அவதானித்து, தகுந்தோரிடம் விசாரித்து இப்பதவிக்கான வெற்றிடங் கள் வந்த பொழுது, விண்ணப்பிக்கும் படி அவரே நேரில் கேட்டாராம்! அதன் படி செய்தே தான் பகுதி நேர அறிவிப் பாளராகிதாகத் திரு கூறுகிறார்.
அக்காலத்தில் பலர் பகுதி நேர அறி விப்பாளராக இருந்தனர். ஆனால், திரு இடைக்கிடைதான் கூப்பிடப்படுவார். இவர் தனது கடமை நேரம் மட்டுமே வந்து சென்று விடுவார். வானொலியில் இவரது செய்தி வாசிப்பைக் கேட்டுத் தான் இவர் வருவது போவதை அறிய முடியும். பகுதி நேர அறிவிப்பாளர்களுள்
செய்தி வாசிப்பதற்கு அதிகமாக வரு
வதும் இவரே! இது குறித்து வானொலி வட்டாரத்தில் கேட்ட பொழுது இவரது மொழி மாற்றம் வானொலிக்கு ஏற்றதாக இருப்பதாகவும், வாசிப்பு இயல்பானதாக வுள்ளதாகவும் சொன்னர்ர்கள். செய்தி வாசிப்பில் தான் இந்திய வானொலியைச் சேர்ந்த அறிவிப்பாளர் வெங்கட்ராமனைப் பின்பற்றுகிறாராம்.
தனது வாழ்வை இத்தகைய சிறப்பு நிலைக்கு உயர்த்தி விட்ட தமிழ் மொழி பெயர்ப்புக் கலையைத் தான் கற்றுக் கொண்டது வீரகேசரி ஆசிரிய பீடத்தில் தான் என திரு சொல்கிறார். 1956இல் இவர் இப்பத்திரிகை நிறுவனத்திற்கு ஒரு மொழிபெயர்ப்பாளராகச் சென்றார்.
45

Page 25
E: D666):
a இக்காலகட்டத்தில் பத்திரிகை உலகின் ஜம்பவான்கள் பலர் அங்கிருந்தனர். கே.பி.ஹரன் ஆசிரியர். பல தொடர் கதைகளை எழுதிய கே.வி.எஸ்.வாஸ் உதவி ஆசிரியர். செய்தி ஆசிரியராக ஆர்.வெங்கட்ராமன் இருந்தார். இந்த வெங்கட்ராமன் திருவை ஒய்வெடுக்க விடமாட்டாராம். ஏற்கனவே மொழி பெயர்த்துக் கொடுத்தவைகள் பத்திரிகை யில் வெளியிடப்படாமலிருந்தாலும், எதையாவதொன்றைத் தூக்கிக் கொடுத்து “மொழிபெயர்த்துத் தா” என்பாராம். திரு வும் பொறுமையா வாங்கிச் செய்து கொடுப்பாராம். இந்தத் தடங்கலற்ற பயிற்சிதான் இந்தக் கரவையூற்றின் தமிழ் மொழிபெயர்ப்பை பிற்காலத்தில் அனைவரும் மெச்சும் பெருமைக்கு உயர்த்தியதாம்! இதை இலங்கை வானொலியும், காப்புறுதிக் கூட்டுத் தாபனமும் அங்கீகரித்தனவாம்! −
இவருக்குப் பாடசாலையிலேயே கலை வித்துக்கள் ஊன்றப்பட்டன. கர வெட்டி, விக்னேஸ்வராக் கல்லூரியில் இவர் மாணவனாக இருந்த காலத்தில் அங்கு நிழல் பாராளுமன்றம் (Shadow Pariment) இருந்ததாம். அதில் தனக் கொரு அமைச்சுமிருந்ததாம். இவர் கலாசாரம் என்பவற்றிற்கு பொறுப்பு. கலாசார அமைச்சரென்ற வகையில் கலை நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாகவுமிருந்தார். ‘இன்ஸ் பெக்டரின் மனைவி' என்றொரு நாடகம் நெல்லியடி மகாத்மா தியேட்டரில் இவர் களால் அரங்கேற்றப்பட்டது. இதில் திரு வுக்கும் ஒரு பாத்திரம். நடித்தார்! இதில்
சமயம்,
4G
சுன்னாகம் ஆர்மோனிய வித்துவான் சரவணமுத்து என்பவரும் கலந்து கொண் டதுண்டாம். பாரதி விழாவொன்றில் பாடகரொருவர் வரத் தாமதித்த பொழுது, அவர் வரும்வரை, தான் தனது இசை ஞானத்தை இசை அபிமானிகளுக்கு வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார்.
ஒருநாள், வானொலி தொடர்ச்சி பேண் கூடத்துள் அன்று தன்னோடு இணைந்து ஒலி பரப்புவதற்கென வந்தி ருந்த அறிவிப்பாளரொருவரோடு பேசிக் கொண்டு இருந்தாராம். கதவைத் திறந்து கொண்டு மூத்த அறிவிப் பாளர் எஸ்.நடராசா கலையகத்துள் நுழைந்தாராம். "திரு நடிகனொருத்தரைக் காணேல்ல. நேர மாகுது. நீர் வந்து அந்த இடத்துக்கு நடியும்” என்றாராம் நடா. நாடகத்திற்குப் பொறுப்பாக இருந்த சானா, விடுமுறையில் சென்று தனது
அச்சமயம்
பொறுப்பை எஸ். நடராசாவிட்ம் ஒப் படைத்திருந்தார். சானாவுக்கு இப்படி யொரு நிலை ஏற்பட்டிருந்தால் வராத
வரது பகுதியை அவரே செய்து நாட
கத்தை ஒப்பேற்றி இருப்பார். ஆனால் நடாவுக்கு நடிப்பு வராது! நடாவின் வேண்டுகோளை நிறைவேற்ற திரு மறுத்து விட்டாராம்.
சானாவின் நாடகங்களில் நடிப்ப வர்கள் அனைவரும், உரிய முறையில் ஒலிவாங்கிப் பரீட்சையில் சித்தி பெற்று, அதன் பின் சானாவின் கவனிப்பில் பயிற்சி பெற்றவர்களே! இந்த நடை முறையைப் குழப்பக் கூடாதென்ற நோக் கிலேயே திரு வேண்டுகோளை நிராகரித் தார். பாடசாலையில் பெற்ற நாடக அநுப

வங்கள் இருந்தும் திரு கட்டுப்பாடுகளுக் குள் நின்று இப்படிச் செய்தது, அவரது பிற்கால முகாமைத்துவச் சீருக்கானவோர் முன்னறிவிப்பெனலாம்! இச்சிறப்புகளே அவரை உயர்த்தும் ஏணிகளுமாகின.
நிரந்தர அறிவிப்பாளர், பிரதி எழுதுநர் ஆகிய பதவிக்கெல்லாம் விண் ணப்பித்து அறுபதுகளில் தனக்கு எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லையென் கிறார். "நடப்பவை நல்லதற்கே’, ‘எப்பவோ முடிந்த காரியம்’ என மனதை ஆறுதல்படுத்தி, எதுவித வக்கணை களையும் அளக்காமல் தனக்கேயுரிய தொழிலைப் பார்த்து வந்தார். திண்ணை வெளிக்கட்டுமெனக் காத்திருக்கவில்லை!
காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்குச் செல்வதற்காக பஸ் தரிப்பு நிலையத்தில் பேருந்துக்காகக் காத்து நிற்பார். அந்நேரங் களில் இவரைக் கடந்து பொன் மணிகுல சிங்கம் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வாக னத்தில் செல்வாராம். "இப்படி நானும் செல்வதற்கு எப்படிக் காலம் கனியும்' எனக் கனவு காண்பதுண்டாம்! திருவின் பெரு மதிப்பிற்குரிய கரவையூற்று பேரா ரிரியர் கா.சிவத்தம்பியின் கனவுகள் மெய் பட்டது போல் இவரது கனவுகளும் நன வாகின. 1980.03.28ஆம் ஆண்டு முழு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் உதவிப் பணிப்பாளரா(நிருவாகம்)கவும், 1983 ஏப்பிரலில் மேலதிகப் பணிப்பாளர், வர்த்தக சேவையாகவும் பதவியேற் றங்கள் பெற்று நீண்ட நாள் இலக்கை அடைந்தார். 1983 ஒக்டோபர் 10ஆம் நாள் மேலதிகப் பணிப்பாளர் தமிழ் சேவை
LGES)
ra யானார். நிருவாகப் பொறுப்புத் தனக்குக் கிடைத்ததும், தான் ஊழியருக்கு மேலதிக ஆண்டேற்றம் வழங்கி அவர்களைக் கடமையைச் செய்ய ஊக்குவித்ததாகக் கூறுகிறார்.
இலங்கையில் இனவாத பிரச்சினைகள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் இவரை மூன்று மாதங்களுக்கான பயிற்சிக்காக ஜேர்மன் அரசாங்கம் அழைத்தது. Training Of Trainers For Broadcasing' ga/Gay பயிற்சிக்குரிய பொருள். ஆனால் இக்காலத் தில் வானொலியில் கடமை புரிந்த அனைத்து ஊழியர்களும் நிர்வாகத்தால் சந்தேகிக்கப்பட்டதுண்டாம். இதனால் இவருக்குக் கிடைத்த பெருவாய்ப்புக் கை நழுவவிருந்தது. இந்த விடயம் அப்பொழுது இ.ஒ.கூதாபனத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சரான ஆனந்த ரிச டி அல்விசுக்கு அறிவிக்கப்பட்டு, அவர் திருவை பயிற்சி பெற அனுப்பும்படி கட்டளையிட்டார். 1986.5.19ஆம் திகதி திரு பயிற்சி பெற ஜேர்மனிக்குச் சென்றார்.
ஒலிபரப்பு முகாமைத்துவத்தில் மூன்று வாரப் பயிற்சியையும் திரு ஜப்பானில் பெற்றவர்.
எனவே, வீ.ஏ.திருஞானசுந்தரத்தின் ஒலிபரப்புத்துறை சார் வல்லமைகளை g ந்ததிக்கும் சென் வைப்பது தமிழுக்குச் செய்யும் அளப்பரிய தொண்டாகும்!
47

Page 26
மழை பிடிக்கும் குடையில் நிலம் குளிக்கும்
மலர் விழிக்கும்
இதழில் மனம் சிரிக்கும்
இடி கொடுக்கும் முழக்கத்தில் அடி விழிக்கும்
துடிதுடிக்கும் மின்னலில் யுகம் சிவக்கும்
கடல் வழங்கும் கொடையில் நிழல் கரையும்
அஃர்தினை உழைப்பில் உலகம் நிமிரும்.
உன் உயர்தினை உழைப்பில் உலகம் குவியும் ஏன்? ஏன்? ஏன்?
48
சிறகுகள்
வர்ணங்கள் LDTs51Gub
LomiolóGSub குழிகளில் எண்ணங்கள் பொறிகள் ஆக்கும் பொறிகள் ஆக்கும்.
சுரங்கள் பேசிடும் சுயவரத் தென்றலில் வரங்கள் - பாவங்கள் கோர்க்கும்
பாவங்கள் கோர்க்கும்
வெள்ளத்தில் விளைந்த மண் கதிர்கதிர்கள் உள்ளத்தில் நுழைந்து
260D6)&660d6 TT 85 86
உலைகளைக் கட்ட
6u6oo6o86086 TT
வாழ்வாகும்.
விதைகளே சாம்பலாகும் நேரம் சிறகுகள் முளைப்பது எப்போது?

நான் சிவ்றமணிக்கு அவளுடைய பெயரைச் சிங்களத்தில் எழுதுவதற்குக் கற்பிக்கிறேன். சிவ றமணி.
அவளது மெல்லிய கைவிரலை வலிக்கின்ற அளவிற்கு எனது வலது கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு 'ம'வை எழுதுகின்ற விதத்தினைப் படிப்பிக்கின்ற போது “ஓம், ஒம், உங்களது மொழி எனக்குப் புரிகிறது” எனச் சொல்வதைப் போல சிவறமணி என்னை ஒரக்கண்ணால் பார்த்தாள்.
ம - ம - இரண்டு to - DO
மம சிவறமணி.
மம சிவறமணிட்ட?
“ம். ம். நான் சிவறமணியைக் காதலிக்கிறேன்."
எனது இருவிழிகள் மீதும் தொடுக்கப்பட்ட பார்வை பாறையாகியது.
• • • • • • ? ه . .2
“பொய் சொல்ல வேண்டாம்”
'நான் பொய் சொல்லவில்லை’
"நீங்கள் கூறுவது எல்லாம் பொய்” என்று கூறிய சிவறமணி பேனையை மேசையின் மீது வைத்துவிட்டு கதிரையின் பின்னால் சென்று கதிரையில் சாய்ந்தபடியே அவளது இரு விழிகளினதும் பார்வை எங்கோ தொலைதூரத்தில் தனிமை உலகிற்குச் சென்று நிலைத்தது.
ཡོད།། ஒருபோதும் வாயால்
சிங்களத்தில் - \ சொல்லாவிடினும் சிவ ற மணி ஜயதிலக கம்மெல்ல வீர \_ட எ ன்  ைன க் - . . . . . ,
歌 O O O O A காதலிக்கிறாள் *GOL ○3子 உ L- 599 எ ன் ப து т pOGO é @ण т i எ ன க் குத் ܕ ܟ
ம் தமிழில் : :  ெத ரி யு ம் , வல்லையூரான் !
அந்தக் காதலின் அச்ச உணர்வோடும், சந்தேகத் தோடும் கண்களின் அடியில் ஒழித்திருக்கும் விதத்தினை நான் கண்டுள்ளேன்.
49

Page 27
č? разбоa.
তত্ত্ব
"யூ ஆர் ஹான்ட்சம்'
'உண்மைதான். எனக்கு எப்பொழுதும் அதுபற்றி சொல்கிறது” V
கண்ணாடியும்
“சிவறமணி அழகானவள்”
“G)Lumtui”
அந்த அழகான சிவறமணி எனக்குத் தான் பொருத்தம். அவளைப் போன்ற இளமையான யுவதி சிவதாசன் போன்ற எவ்வித அங்க இலட்சணமும் இல்லாத முரடனான மனிதனுக்கு எப்படி ; என்றாலும் பொருந்தாது. ஆயினும், அந்த அழகான சிவறமணி சென்றது அந்த அழகில்லாத சிவதாசனோடு.
சிவறமணி கொழும்பிற்கு வந்தது எங்கள் அலுவலகத்தில் தொழில் செய்வ தற்கல்ல. மரணத்தில் இருந்து தப்புவதற் காக, சிவதாசனும் அப்படித்தான். சிவ றமணிக்குக் கிடைத்ததும் என்னுடையது போன்றே நிரந்தரமான தொழில், ஆனால் அவள் வேலை செய்ததும், உண்டு குடித்ததும், வந்து போனதும் அவை மாத்திரமன்றிக் கலந்துரையாடியதும் தற் காலிக அடிப்படையிலேயே. எதன் மீதும்
பற்று வைக்காத, தங்காத விதமாக
தற்காலிக அடிப்படையிலேதான்.
நாங்கள் யுத்தத்தினால் அகதிகளான பிள்ளைகளின் நலன்களின் பொருட் டான நிறுவனத்தில் வேலை செய்தோம். அந்த அகதி முகாம்களுக்குச் சென்று, அந்தப் பிள்ளைகளுக்குத் தேவையான, தேவையில்லாதவைகள் பற்றிக் கண்டறிந் தோம். எனக்கு அந்தப் பிள்ளைகளைக் காண்கின்றபோது தாங்க முடியாத அள
SO
விற்கு அனுதாபம் ஏற்படுகிறது. நாங்கள் கொண்டு செல்கின்ற உணவு, ஆடை அணிகள், மற்றும் புத்தகங்கள் என்பன வற்றை அவர்களுக்கிடையே பங்கிட்டுக் கொடுத்த பிறகு நான் அந்தப் பிள்ளை
களின் ஒருவருக்கு இருவருக்குக் கிட்டச்
சென்று அவர்களது தலையைத் தடவு வேன். ஆனால் சிவறமணி செய்வது கொண்டு சென்றவைகளைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு விரைவாக அவர்களிடம் இருந்து தூரத்திற்குச் செல்வது. தொலைவில் இருந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கின்ற அவளது அனுதாபம் என்னுடைய அனுதாபத்தை விட அதிகமானது என்பதை நான் விளங்கிக் கொண்டேன். w
ஒருநாள் அவள் என்னையும் அதே பார்வையில் பார்த்துக் கொண்டிருக்கும் விதத்தை நான் கண்டேன். அப்பொழுது எனக்குள்ளும் தோன்றியது அநாதை உணர்வே. உண்மையாக யுத்தத்தினால் அநாதையாகிப் போன அதுபோன்ற விதமாகப் பார்த்ததை நான் எப் பொழுதுமே கண்டதில்லை. சிவறமணி சிவதாசனைப் பார்த்தது எப்படியென்று எனக்கு ஞாபகப்படுத்த முடியவில்லை. அதுபோன்றதொன்று எனது ஞாபகத்தில் குறிக்கப்படவுமில்லை.
சிவறமணியினுடைய தாய் திருக் கோவிலில் அவர்களது வீடுவாசலில் விழுந்த ஷெல் தாக்குதலில் இறந்து போனதாயும், ஒரேயொரு தம்பி காணமற் போனதாயும், அந்தக் கவலையினால்
தந்தையார் உடல் நலம் குன்றி இருப்
பதாயும் எங்களது அம்மா அப்பாவிடம் கூறினேன்.

"இனி மகன் அந்தப் பிள்ளையைக் கட்டவோ நினைச்சுக் கொண்டிருக் கிறாய்? அம்மா பெரிய அதிர்ச்சியோடு விசாரித்தாள். அம்மாவின் நடுநிலை நிற்கும் தன்மை பற்றி நன்கு தெரிந்த எனக்கு அவரது அந்த அதிர்ச்சி என் பொருட்டானது அல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.
'உம்முடைய எதிர்காலத்தைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியது நீர்தான். எடுக்கின்ற முடிவை சிந்தித்துப் பார்த்து எடு”
நன்றாகச்
அப்பா எப்பொழுதும் அமைதி யானவர். ஆனால் வழமைக்கு மாறாக ஆழமான சப்தத்தில் கூறினார்.
'ஐ வில் மெரி யூ" சொல்லாலும், ஸ்பரிசத்தாலும் சிவ றமணியிடம் கூறினேன்.
நான்
அவள் எனது இரு கரங்களையும் பற்றியபடி தனது கரங்களை விடுவிக்க முயற்சி எடுக்காமல் “செய்ய முடியாத வைகளைப் பற்றிக் கன்தக்க வேண்டாம்" என்று எனக்கு நன்றாக விளங்கக் கூடிய சிங்களத்திலேயே கூறினாள்.
எங்களோடு கொழும்பில் வாழ்வ தற்குத் தேவையான சிறிதளவு சிங்களத்தைக் கற்றுக் கொள்வதற்கு சிவ றமணிக்கு ஆறு மாதத்திற்கும் குறைவான காலமே சென்றது. நானும் அந்தக் காலத்தினுள் மிகுந்த முயற்சி செய்து தமிழ்ச் சொற்கள் சிலவற்றைக் கற்றுக் கொண்டேன்.
"ஒயா ஹரி லஸ்ஸனாய்" - "நீங்கள் மிகவும் அழகானவர்”
* Eகை অস্ত্ৰ
“மம ஒயாட்ட ஆதறேயி" - "நான் உங்களைக் காதலிக்கிறேன்"
“எய் அண்டன்னே?? - “ஏன்
அழுகிறீங்க?"
"அப்பி (B) பந்திமு" - "நாங்கள் கலியாணம் கட்டுவோம்”
சிவதாசன் முதலில் எங்கள் அலுவலகத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் நான் சிவறமணியிடம் தமிழ் கற்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தேன். “உங்களுக்குத் தமிழ் படிக்க வேணு மென்று தேவை என்றால் நான் படிப்பிக்
கிறன். நான் ஒருகாலத்தில் ஆசிரியனாக
வேலை செய்திருக்கிறன்." சிவதாசன் ஆங்கிலத்தில் என்னிடம் கூறினான்.
"அப்படியென்றால் நான் உமக்குச் சிங்களம் படிப்பிக்கிறன்" நான் மறு மொழியாகக் கூறினேன்.
"இல்லை அவசியம் இல்லை. நான் கனடாவுக்குப் போகத்தான் ஆயத்த மாகிறன்."
"கனடாவுக்கு.? சிவறமணி இரு கண்களாலும் துளைத்தவாறு கேட்டாள்.
"ஒம். என்னுடைய தம்பிமார்
இருவர் இங்கு இருக்கிறார்கள்’ சிவ
தாசன் அப்படிக் கூறியது எங்கள் இரு வருக்குமே.
"உட்காருங்க.." சிவறமணி அவனுக்குத் தனது மேசையின் முன் பக்கமாக உள்ள கதிரையில் அமருமாறு அழைப்பு விடுத்தாள். இதன் பிறகு அவர்கள் அதிக நேரம் தமிழ் மொழியில் பிதற்றுவதை நான் பார்த்துள்ளேன்.
51

Page 28
岛 DeGSG): অস্ত্ৰ
சிவறமணி புதிய வாழ்வு கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சியோடு ஒரே நீளத்திற்கு வேகமாகக் கதைத்தாள். எனக்கு அதில் எதுவுமே விளங்கவில்லை.
அன்று வேலை முடிந்த பிறகு நான் மற்றைய நாட்களைப் போன்றே சிவ றமணியைப் பஸ்ஸில் ஏற்றி அனுப்பு வதற்குப் பதிலாக, அவளோடு தெஹி வளையில் உள்ள அவளது தங்கு மிடத்தின் வாயிற்கடைக்கே கொண்டு போய் விட்டேன். இருக்கும் போது அவளது இடது கரத்தின் விரல்களைத் தொடர்ச்சியாகத்
பஸ் வண்டியில்
தடவினேன். அவள் ஜன்னலினூடாக வெளி உலகின் பக்கம் விழித்திரைகளை மூடாது எங்கோ பார்த்தபடி இருந்தாள்.
"நான் சிவதாசனிடம் தமிழ் மொழியைப் படிக்கிறன். சிவறமணிக்கு நன்றாகச் சிங்களம் கதைப்பதற்குப் படிப் பிக்கிறன். அப்ப எங்களுக்கு திருமண மாகி எங்களுக்கு இப்படிச் சந்தோஷமாக வாழ்வதற்கு முடியும்."
அந்நாட்களில் எனது நேர்மையான எண்ணம் அதுவாக இருந்தது.
வெடிப்புக்கள் இரண்டு.
நாங்கள் வேலை முடிந்து சென்று கிருலப்பனை பஸ் தரிக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்தச் சப்தம் கேட்டது. சந்தேகமின்றி அதென் றால் குண்டு வெடித்த சப்தம்தான் என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவிற்குரிய அறிவு எங்கள் எல் லோருக்கும் இருந்தது. எங்கள் சூழல்
52
‘எறும்புப் புற்றில் நெருப்புப் போன்று
பற்றிக்கொண்டது. சிவறமணி முதற் தடவையாக எனது கரத்தைப் Lafays இறுக்கிப் பிடித்தாள். அவளது நெற்றியில் இருந்த பொட்டை அழிப் பதற்கு பைக்கட்டில் இருந்து எனது கரத்தை எடுத்தாலும், மிகுந்த கஷ்டப் பட்டு அதனை விலக்கிக் கொண்டேன். அவள் எனது கரங்களைப் பற்றியபடியே நின்றாள். தெருவில் அங்கும் இங்கும் ஒடுகின்ற பஸ்வண்டிகளில் தொங்கியபடி செல்கின்ற மனிதர்கள் எங்களைப் பார்க் கின்றார்கள். எனது இருதயம் அந்த அளவிற்கு வேகமாக அடித்ததை நான் இதற்கு முன்பு எப்பொழுதுமே அனுப வித்திருக்கவில்லை.
“மஹரகம. சரியாக போதிக்கு முன்னால”
"இருபது முப்பது முடிஞ்சிது"
இந்த இடத்தில் இப்படியே நிற்பது ஆபத்து. செய்ய வேண்டியது என்ன? எதுவுமே விளங்கவில்லை. நான் தெரு நீளத்திற்கு வேகமாக நடந்து செல்லத் தொடங்கினேன். சிவறமணி எனது கையை இறுகப் பற்றியபடி தளர்வின்றி இழுபட்டபடி வந்தாள். அப்படி நடந்து போகும்போது நான் தெருவில் ஒடுகின்ற அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கையைக் காட்டினேன். ஒன்று எங்களுக் குப் பக்கத்தில் வேகத்தைக் குறைத்தது. நான் வேகமாக அதில் நுழைந்து கொண்டேன். என் பின்னால் சிவ றமணியும். ஏறிக்கொண்டாள்.

“தெஹிவளைக்கு. தெஹிவளைச் சந்திக்கு."
'மஹரகம விலாம் என்ன?”
A
ஒம். மஹரகமவிலையாம். அதிகம் செத்தா?”
நான் அவனுக்கு பதில் வழங்கிய வாறே கேட்டேன்.
“எப்படியென்று தெரியேல்லை சேர்."
“நீர் முஸ்லிமா?
“இல்லை”
"தமிழ்”
'பிறந்ததும் கொழும்பில்"
"பயம் இல்லையா?”
"நாங்கள் யாருக்கும் பிழை செய்ய இல்லைத்தானே சேர்.”
"அது சரி ??
எனக்கு எண்பத்து மூன்று கறுப்பு ஜூலை ஞாபகத்திற்கு வருகிறது. இதெல்லாம் ஆரம்பிச்சது அதிலையி ருந்தே. தெருவிலை போற வாக னங்களை மறிச்சு வாள்களாலை வெட்டி நெருப்பு வைச்சு.
"உமக்கு முடியுமா இந்த அம்மாவை தெஹிவளையில் இறக்கிவிட”
எனது இடது கையின் மணிக் கட்டில் பலமாக அழுத்துவதை உணர் கிறேன்.
S Lys8S9) is
“பிரச்சினை இல்லை சேர்’
"அப்படியென்றால் நான் இறங் கினால் பரவாயில்லையா?”
“சேர் எங்கை போகவேணும்?
"கம்பஹாவுக்கு”
"அப்ப சேர் சரியான தூரந்தானே. அப்படியென்றால் இறங்கி ஒடுங்கோ’
“சிவறமணியின் கை தளர்ந்தது.
"ஒம் நீங்க போங்கோ. கவனமாக" அவள் கூறினாள். நான் முச்சக்கர வண்டி யினின்றும் இறங்கிக் கொண்டேன்.
'கடவுளே துணையில்லாதவர் களுக்கு கரைச்சல் ஏற்படக்கூடாது."
கழிந்துபோன மாதத்தின் முன் னேற்ற அறிக்கை தயாரிக்கப்பட்டு முடிக் கப்பட வேண்டியிருந்தமையால் நானும் சிவறமணியும் அலுவலக நேரத்திற்குப் பின்பும் சிறிது நேரம் வேலை செய்தோம். குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டது ஐந்து ஐம்பத்திற்கு. அதன் எதிரொலி ஐந்தாறு நிமிடம் வரை செவிகளில் எதிரொலித் தது. மேசையின் இருபுறமும் அமர்ந் திருந்த நாங்கள் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடியே அப்படியே கல் லாகிப் போனோம். எனது உடலில் தலை உச்சியிலிருந்து இரு கைகளின் விரல் நுனிகள் வரை விறைத்துப் போயிருந்தது தெரிந்தது.
53

Page 29
ä: ge:GSG);
"குண்டு வெடித்தது எங்கே? எத்தனை பேர் இறந்தார்களோ? ஊரடங்குச் சட்டம் போட்டோ?”
தெருக்களின் நீளத்திற்கு அந்த இந்தப் பக்கம் ஒடுகின்ற மனிதர்களினது உள்ளங்களில் இந்தக் கணப்பொழுதில் சுற்றுகின்ற பிரச்சினைகளை நான்
அறிவேன். ஆனால் எனது உள்ளத்தில்
எழுந்த பிரச்சினை அதுவல்ல.
இப்ப நான் சிவறமணியை தெஹி வளைக்குக் கொண்டுபோய் விடுவ
6 тийш ниg?
எனக்கு மீண்டும் எண்பத்து மூன்று நினைவுக்கு வருகிறது. வாள்கள், பொல்லுகள், பெட்ரோல் கான்களைக் கையில் எடுத்துக் கொண்ட மனிதர்கள் தெருவில் இறங்கி இருந்தார்கள். இறங்குங்கோடா பறையர் வெளியிலை. நீங்கள்தான் பிசாசுகள். இனத்தைக் காட்டிக் கொடுக்கிறவங்கள்."
அவதாரங்கள் தோற்றம் எடுத்ததைப் போன்று சிவதாசன் எனக்கும், சிவ றமணிக்கும் முன்னால் தோன்றியிருந் தான். நான் நின்றிருந்தது தெருவில். வெடிச்சத்தம் கேட்ட உடனேயே இவனை ஞாபகத்திற்கு வந்தது. "போவம். நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போறன். கெதியா வாங்கோ, நாங்கள் போவம்." அவன் அதனை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே
தொடர்ச்சியாக
போனான்.
"நீங்கள்?’ சிவறமணியினுடைய அச்சங்கொண்ட இரு விழிகளும் என் னிடம் விசாரித்தன.
54
'சரி... நான் எப்படியாவது போறன். நீங்கள் சிவதாசனோடு
போங்கோ"
ஹாரணை அடித்துக்கொண்டு விதிச் சட்டங்கள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு ஒடுகின்ற வாகனங்களில் ஒன்று கூட கைகாட்டிய யார் பொருட்டும் நிறுத்தாமையால் நூற்றுக்கணக்கா னோரின் உடல்களில் மோதிக்கொண்டு அந்தக் கையையும் இந்தக் கையையும் வீசிக்கொண்டு அங்கும் இங்குமாக நுழைந்து சென்று மருதானை புகைபிாத நிலையம்வரை விரைவாக நடந்து செல் வதற்கு எனக்கு நேர்ந்தது. நான் புகை யிரதப் பெட்டியின் கதவோடு பிணைக் கப்பட்டிருந்த மனித மரக்கொடிகளில் தொங்கிக் கொண்டு வீட்டிற்குப் போனேன்.
கொழும்பில் இருப்பதும் பாதுகாப் பற்றது என்று விளங்கிக் கொண்ட அவர்கள் இருவரும் வவுனியாவிற்குத் தற்காலிகமாக வசிப்பதற்குச் சென்று இப்பொழுது இரண்டு வருடங்கள் கழிந்துபோய் விட்டன. வவுனியாவிற்குச் சென்றதற்கு அடுத்தநாளே இருவரும் விவாகம் செய்து விட்டதாகவும், முடிந் தளவு விரைவில் கனடாவுக்குப் போவ தாகவும் எனக்கு எழுதித் தெரிவித் திருந்தது சிவதாசன்தான். ஆனால் இப் பொழுது யுத்தம் நின்று போயுள்ளதால் விருப்பமென்றால் வவுனியாவிற்கு வந்து செல்லுமாறு கூறி கடந்த வாரம் எனக்குக் கிடைத்த இருவரிக் கடிதத்தை சிவறமணி எழுதியிருந்தாள். அந்த இரண்டு ஆங்கில

வரிகளின் கீழே
கையொப்பம் இட்டிருந்தது, கற்பித்த சிங்களத்தில்,
'சிவறமணி" என்று நான்
--
“உம்மைக் காணக் கிடைத்தது பெரிய சந்தோசம். கடைசியிலை எங்கள் ரெண்டு பேருக்கும் விசா கிடைச்சிட்டுது. அடுத்த கிழமை நாங்கள் கனடாவுக்குப் போறம்."
சிவதாசனின் முகம் சுதந்திரமான சிரிப்போடு பிரகாசிக்கிறது. நான் அவர்கள் வசித்த சிறிய அறைத் துண்டில் சிறிய கதிரையில் இறுகியவாறு பார்த் திருந்தேன். அறையை இரண்டாகப்
பிரித்து குறுக்கே போடப்பட்டிருந்த
ஸ்கிரீனுக்கு அந்தப் பக்கத்தில் குழந்தை யொன்று அழும் சப்தம் கேட்கிறது.
குழந்தையைத் தூக்கியவாறு எனக்கு முன்னால் தோன்றிய சிவறமணி, இப் போது இருமடங்கு அழகோடு. எனக்கு அவளது முகத்தைப் பார்க்க முடிய வில்லை. நான் அவளது மிக மென்மை
Ø (සංඝයාය
யான இரு பாதங்களையும் பார்க்கிறேன். செருப்போடு அவளது பாதங்கள் இரண்டும் எவ்வளவு அழகானவை?
எனக்குத் திடீரென்று இந்தச்
சந்தர்ப்பத்தில் எவ்வித தொடர்பும் இல்லாதவை ஞாபகத்திற்கு வருகிறது.
“இப்ப சிவறமணியின் அடிப்பாதங்
களில் வியர்ப்பதில்லையா?”
'இல்லை?! அவள் கேட்டும் கேட்காத துக்கச் சுமையோடு கூடிய
குரலில் கூறுகிறாள்.
சிவறமணி எங்களோடு வேலை செய்த காலத்தில் அடிக்கடி கைப்பையி லிருந்து பெரிய கைக்குட்டையை எடுத்து
கதிரைக்குக் கீழே கையைப் போட்டு
அடிப்பாதங்கள் இரண்டையும் துடைத்துக் கொள்வாள். அது அவை
வியர்வையினால் நனைக்கின்றபடியால்.
மனநிறைவுடன் வாழ்த்துகின்றோம்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களுக்கு இந்த மாதம் மணிவிழாக் காலமாகும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி அன்னாரது பிறந்த தினத்தை மணிவிழாக் கொண்டாட்டமாக நண்பர்கள் பலர் வெள்ளவத்தை இராமகிருஷணா மண்டபத்தில் கொண்டாடி மகிழ்கிறார்கள். பேராசிரியர் நீடுழி வாழ்கவென மல்லிகை வாழ்த்துகின்றது.
N
- ஆசிரியர்.
三ク
55

Page 30
மைத்துனியின் மாமிக்கு வயதுதான் அறுபதுக்கு மேல் நூல் சேலை
தொட்டதுமில்லை பட்டை விட்டதுமில்லை உதட்டுக்கு சாயமில்லாவிட்டாலும் யாருக்கும் தெரியாமல்
உறங்கும்வேளை
மருதோன்றி பூசிக்கொள்வாள் C' . இடுப்பின் மடிப்பு (spar G, ола,ć, தெரிவதற்கு ஜாக்கட் அணிவாள்! - ஒலுவில் அமுதன்
டிவியில்.
காதல் படமென்றால் காளையரோடு கதைத்து மகிழ்ந்து காட்சி ரசிப்பாள்! குதியுயர்ந்த செருப்பில் குட்டி நடனமாய் நடப்பாள்!
u6) LDITLssa56floor 6T600T600Treasoit
இளமைதான்
குமரி நினைப்பில்
குதூகலமா? w உங்களைக் கண்டு இளைஞர்கள் ஒடிமறைகிறார்கள் உங்களுக்கு வெட்கமாயில்லை?
56
 

Tெசிப்பதன் மூலம் மனிதன் முழுமையடைகிறான் என்பது ஒரு ஆணித்தரமான
கருத்தாகும். மானிட வாழ்வில் ஒருவனது ஞானக் கண்ணைத் திறப்பது கல்வியாகும். இதனால் தான் கல்லாதாரைக் கண்ணில் இரண்டு புண்ணுடையார் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். கல்வியின் பிரதானமானதும் இறுதியானதுமான நோக்கம் ஒருவனை நற்பிரஜைாக்குதலே யாகும்.
மனித வாழ்வுக்குப் பொருளிட்டல் இன்றிமையாதது. தொழில் வாய்ப்பைத் தேடித் தருவதிலும் கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதனால் இன்றைய கல்வி பிரதான இலக்கை விடுத்துத் தொழில்சார் முயற்சியாகப் போய்விட்ட துர்ப்பாக்கிய நிலையைக் காண்கிறோம். பட்டங்கள் பெறுவதற்கும், வேலைவாய்ப்புப் பெறுவதற்குமான கல்விமுறையில் வரையறுக்கப் பட்டுவிட்ட கல்விமுறை, தேடல் அற்றதாக அமைந்து விடுகிறது. இதனால் வாசிக்கும் பழக்கம் குறைவடையும் நிலை சிறுவயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது.
ஏற்றமிகு வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கல்வியானது
C) 0) O தேடலுடன் அமையுமானால், @I電澳 பின் 59{5] மனிதநேயம் மிக்கவராகவும், செயல் வீரரா - சந்திரகாந்தா முருகானந்தன் கவும், நற்பிரஜையாகவும், M சாதனை புரியக்கூடியவராகவும் உருவாக்குகிறது. கல்வியின்
மிக்க பயன்பாடானது மனிதனை மானுடநேயம் மிக்கவனாக ஆக்குவதே என்பதனை உணர்ந்து நாம் இளமை யிலேயே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். படிக்கும் வயதில் பிள்ளைகளை இடைமறித்து, உடனடிப் பொருளாதாரத் தேடலுக்கு பயன்படுத்தும் போது அது அவர்களது எதிர்காலச் சுபீட்சத்தை நாசமாக்கிவிடும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள்.
பாடசாலைக்கு வெளியிலான தேடல்கள் இன்றைய மாணவர்களிடையே மிகக் குறை வாகவே உள்ளன. ஆசிரியர்கள் அதற்கான வழி நடத்தலைச் செய்யத் தவறி விடுகிறார்கள். இதனால் இன்று நல்ல புத்தகங்களைத் தேடிப் படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலரும் உடனடி மகிழ்வுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மட்டுமே வாசிக்கிறார்கள்.
நல்ல புத்தகங்கள் அறிவை விருத்தி செய்து வாழ்வை ஒளிமயமாக்கும் கலங்கரை விளக்குகளாகும். புத்தகங்கள் அறிவுக்குக் கல்வி புகட்டி, மனதுக்கு ஆறுதல் அளித்து, தெரியாதவற்றைத் தெரிய வைத்து, விவேகத்திற்கும், மகிழ்ச்சிக்கும் வித்திட்டு, ஒழுக்கத்தை மேம்படுத்துகின்றன.
57

Page 31
புத்தகங்கள் பற்றி அறிவியல் மேதைகள் குறிப்பிடும்போது, அவை எம்மைத் தொலைதூரப் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்கின்ற நண்பர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அவை தெரியாத இடங் களிலுள்ள காட்சிகளைத் தரிசன்மாக்கி எமது கவனத்திற்குக் கொண்டு வருகின்றன.
கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சாத்தியமானவைப் பற்றிப் பேசுகின்றன. வாழ்க்கை பற்றிய இரகசியங்களை நம்மிடம் கதைக்கின்றன. புத்தகங்களின் தோழமை யுடன் எங்கெங்கும் புதிய விடயங்களை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது.
புத்தகங்களைப் படிக்கும்போது நல்ல விடயங்களும், விவேகமான சிந்தனைகளும் அதனுடைய பக்கங்களிலிருந்து ஊற்றெடுக் கின்றன. உடலுக்கு நிறையுணவு முக்கிய மானது போல், அறிவுக்குப் படிப்பு முக்கியம். மக்களுக்குப் பயன்படும் நூலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகை தன்னைத் தானே அறிந்து கொள்ள உதவுவது. மற்றது முன்னேற்றத்திற்கு
உதவுவது. இவை தவிர்ந்த பயன்பாடற்ற
மலிவான நூல்களும் இன்று புற்றீசல் போல் வெளிவருகின்றன. நல்ல புத்தகங்களைத்
தேடிப் படிக்க ஆசிரியர் வழி காட்டலாம்.
பெரியவர்கள் தாமே தேடிப் படிக்கலாம். உற்சாகமூட்டிச் செயற்பட வைக்கின்ற புத்தகங்கள் பற்பல இருப்பினும், நாம் எமது மத நூல்களையும், திருக்குறளையும் படித் தாலே நிறைய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். பைபிள், பகவத்கீதை, திருக்குர்ஆன், பெளத்த தத்துவம் முதலான நூல்களை நம்மில் எத்தனையோ பேர்
58
முழுமையாகப் படித்திருக்கிறோம்? சித்தாந்த தத்துவ நூல்கள் வாழ்க்கையை ஒழுங்கு படுத்தவும், சிதறிக் கிடக்கின்ற விடயங் களைத் திரட்டி ஒன்று சேர்க்கும் வில்லைகள் போலவும் வாழ்விற்குப் பயன்படக் கூடியன.
கடந்த மிலேனியத்தில் மார்க்சிய சிந்தனைகள் நூலுருப் பெற்றுள்ளது. பயன் பாடு மிக்க இந்நூலை நம்மில் எத்தனை பேர் படித்துப் பயன் பெற்றிருக்கிறோம்? நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் மற்றும் கவிதை - குறிப்பாக புதுக்கவிதை கடந்த நூற்றாண்டில் பெரிதும் வளர்ச்சி பெற்றன. இவை வாசகர் வட்டத்தைப் பெருக்: கியதுடன், வாசிப்பவர்களின் சமூகச் சிந்தனைகளையும், மானிடப் பண்புகளை யும் வளர்த்தெடுத்தன. சமுதாயப் புரட்சி களோடு கைகோர்த்த ஆக்க இலக்கியங்கள் காலத்தின் பதிவாகவும், தெறிப்பு வடிவ மாகவும், சமூகத்தின் மாற்றத்திற்கு வித்திடு பவையாகவும் மிளிர்ந்தன.
- வாசித்தல் என்பது அடிப்படையில் மனிதரசனைக்கு விருந்தளிப்பதாகவே இருந் தாலும், அதன் பயன்பாடானது அறிவு விருத்தியும், மனமாற்றமும், சமூகப் பங்களிப்பும் என விரிந்து சமூக மாற்ற்த்திற் கான இதர காரணிகளோடு இணைந்து பங்காற்றுவதை மறுக்க முடியாது.
இந்த நாட்டில் கடந்த நூற்றாண்டில் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திர
தேசத்தில் சாதியொழிப்புப் போராட்டத்திலும்
பின்னர் இன்றைய இனவிடுதலைப் போராட் டத்திலும், பெண் விடுதலையிலும் கலை இலக்கியங்கள் ஆற்றிய பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. புத்தகங்கள் மூலம் பல சிந்தனைகள் பரவலாக்கப்பட்டன.

பேனா என்பது ஒரு கூரிய போராயுதத்
திற்கு ஒப்பானதாகும் என்று பலரும் குறிப் பிடுவர், இதர கலை வடிவங்களுக்குக் கூட எழுத்து முதன்மையாகத் தேவைப்படு கின்றது.
இன்றைய புதிய மிலேனியத்தில் மின்னியல் சாதனங்களின் வரவினால் தொடர்பு சாதனங்களும் பல்கிப் பெருகி விட்டன. தகவல் ஒலி, ஒளிபரப்புகள், வலைப் பின்னல்கள் என்று பலவிதமான தொடர்புச் சாதனங்கள் மனிதனை ஆக்கிரமித்திருக் கின்றன. இதனால் வாசிக்கும் பழக்கத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இப்போதெல்லாம் பலரும் அவசர வாசிப்புக்காரர்களாகவே இருக்கிறார்கள். ஆழமாக வாசிப்பது குறைந்து வருகிறது. எனினும் வாசிப்பதன் மூலம் எதையும் ஆழ்மனதில் பதிய வைக்க முடிந்தளவு வேறு வழிகளால் முடிவதில்லை என்ற உண்மையை நாம் உணர வேண்டும். சிறந்த நூல்கள் சிறப்பான வாழ்வுக்கு வழி வகுக்கும். பல நல்ல விடயங்களைக் கட்டுரை வடிவில் பலராலும் ரசித்துப் படிக்க முடிவதில்லை. இக்குறையைப் போக்க இன்றைய இலக்கிய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. கம்யூனிசிய எழுச்சியும், புரட்சியும் பற்றிப் பேசிய இலக்கிய வடிவங்கள் மக்கள் மனதில் சோஷலிச சிந்தனைகளை விதைத்து நெறிப்படுத்தப் பெரிதும் உதவின.
பிரஞ்சுப் புரட்சி, ஆபிரிக்கப் புரட்சி, கியூபாப் புரட்சி, பாலஸ்தீனப் புரட்சி, வியட் நாமியப் புரட்சிக் காலங்களில் எழுந்த கதை களும், கவிதைகளும் இன்றும் பிரசித்த மானவை. சீனா, ருஷ்சிய எழுத்தாளர்களின் நூல்களின் ஆக்கிரமிப்பினால் கடந்த
ஒUை நூற்றாண்டில் மக்கள் மத்தியில் பல எழுச்சி களும், உரிமைப் போராட்டங்களும் பண்பு களும் வளர்ச்சி கண்டன. பொருளாதார சுபீட்சமும் ஏற்பட்டது. பேதங்கள் நீங்கின. இதைச் சாத்தியமாக்கியவை நூல்களே. இன்றும் ருஷ்சியப் புரட்சிக் கால நூல்கள் பல மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. எமது இலக்கியங்களை உயர்வடையச் செய்ததில் இவற்றிற்குப் பெரும் பங்குண்டு.
புதிய மிலேனியத்தில் ஏற்படுகின்ற வாசிப்புத் தேக்கம் ஒரு பின்னடைவு என்பதை நாம் உணர வேண்டும். வாசிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்தச் சிறுவயதிலிருந்தே
தூண்டப்பட வேண்டும். விமர்சனங்களும், ஆய்வுகளும் எந்த அளவுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்துள்ளன என்பது கேள்விக்குறியே. இதற்குப் பல காரணங் களைக் குறிப்பிட முடியும். விமர்சன ஆய்வு
களை மேற்கொள்பவர்கள் பலரும் பல்
கலைக்கழகச் சமூகத்தினராக இருப்பதும், பல ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் முக்கிய காரணிகளாகும். இன்னொரு விடயம், ஆய்வு விமர்சகர்கள் சாதாரண வாசகனைப் பற்றி அதிகம் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
இன்று எமது நாட்டில் புத்தக வெளி யிடும், விநியோகமும் சீராக இல்லை. பல நூல்கள் வெளிவந்தாலும் அவை குறுகிய வட்டத்துள் முடங்கிப்போய் விடுகின்றன. வாசிக சாலைகளில் கூட பல நூல்கள் இல்லை. எரிந்து போன வாசிக சாலைகள் பற்றியும், யாழ் பொதுசன நூலகம் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்கின்ற நாம் அவை இருந்தபோது எந்தளவுக்குப் பயன்படுத்தி னோம்? இப்போது கூட இருக்கின்ற
59

Page 32
இல்லை.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சொல்வார்கள், சிறுவயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். இதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும்.
வன்முறையான, விரசமான, வேண்டப் படாத வகையில் பொழுதுகளைக் களிக்கும் இளைஞர்கள் நல்ல திசையில் திரும்ப, வாசிப்புப் பழக்கம் பெரிதும் உதவும்.
வாசகர்களின் அநுபவங்களுக்கும், முதிர்ச்சிக்கும் ஏற்ப அவனுடைய தேடல் பசிக்கு விருந்தளித்து, அவர்களின் அனு கூலங்கள், பிரதி அனுகூலங்கள் பற்றி இலக்கியப் படைப்புகள் வழி சமைக்குமானால்
மனதில் அலசி ஆராய
இன்றைய வன்முறைக் கலாச்சாரத்தி
லிருந்து இளைஞர்களை விடுவிக்க முடியும். ஆற்றலும், சக்தியும் நிறைந்த இளைய தலை முறையினர் தம்மைத் தமது சக்தியை உணர வைக்க வாசிப்பு பெரிதும் உதவும். எனவே வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதன் மூலமும், நல்லவற்றைத் தேடி வாசிக்கும் பழக்கத்தை வேரூன்ற வைப்பதன் மூலமும் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட முடியும்.
நாம் அன்றாட இறுக்கத்திலிருந்து விடு பட, சோர்வ்ைப் போக்கிட, தனிமையை இயங்க, சிந்தனையை வளப்படுத்த, மனதைத் தெளி
விரட்ட, சுறுசுறுப்புடன்
வாக வைத்துக்கொள்ள வாசிப்பு எமக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதமாகும். எனவே சிறந்தவற்றைத் தேடிப்படியுங்கள். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாசிக் கின்ற போது எமது சிந்தனையும், அறிவும் விரிவடையவே செய்யும்.
a
ல்லிகையின் மீது
l ல்லிகை வாழ்த்தி மகிழ்கின்றது.
تسمح
奇 * 3 வாழ்த்தி மகிழ்கின்றோம்.
g
பேரபிமானம் கொண்டவரும், கொழும்புக் கம்பன் கழகத் தலைவரும், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீது தனி அன்பு கொண்டவருமான திரு. தெஈஸ்வரன் தம்பதியின் மகள்
திருநிறைச்செல்வி சண்முகப்பிரியா அவர்களுக்கும், ః 3. கனநாதன் தம்பதியின் திருநிறைச்செல்வன். பிரணவன் அவர்களுக்கும் கொழும்பில் சமீபத்தில் வெகு சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது.
கொழும்பில் நடைபெற்ற திருமணங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க
திருமணங்களில் இதுவுமொன்று என வியந்து பேசப்படுகிறது.
மணமக்களை இந்த நாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சார்ப்பில்
GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

X மல்லிகையை ஆரம்பிக்க வேண்டுமென்ற உணர்வு உங்களுக்கு ஏன் ஏற்பட்டது?
யாழ்ப்பாணம். ச.சுகுமாரன்
* இயற்கையிலேயே இலக்கிய அர்ப்பணிப்பு வாய்க்கப் பெற்றவன், நான். அந்தக் கால கட்டத்தில் முதன் முதலில் சாஹித்திய மண்டலப் பரிசைப் படைப்பிலக்கியத்திற்காகப் பெற்றுக் கொண்டவனும் நானே. அதைவிட ஒரு தேவை இருந்தது. பெரும்பாலான எழுத் தாளர்கள் என் தொழிலகம் தேடி வந்து கலந்துரையாடினர். அத்துடன் அன்று பிரபலமாக விளங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ். கிளைச் செயலாளராக நான் பணியாற்றினேன். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்த்த பொழுது சிற்றேடொன்றின் தேவையை அன்று உணர்ந்தேன். மல்லிகை இதழ் இயல்பாகவே மலர்ந்தது.
X மல்லிகையின் வளர்ச்சி இன்று எப்படி இருக்கிறது?
நீர்கொழும்பு. க.நவநீதன்
இ நீங்கள் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சிற்றிலக்கிய ஏடு தொடங்கியவர்கள் அந்தச் சிற்றிலக்கிய ஏட்டின் தொடர் வருகைக்காகவே உழைத்தனர். மல்லிகை இதிலிருந்து வேறுபட்டுச் சிந்தித்தது. மல்லிகைப் பந்தல் என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தையும் பக்கம் பக்கமாக ஆரம்பித்தது. இதற்கு அது துணை. அதற்கு இது துணை. மல்லிகையின் வளர்ச்சியையும் அதனது ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும் தொடர்ந்து படித்து வரும் உங்களைப் போன்றவர்களல்லவா எனக்குச் சொல்ல வேண்டும்!
- 6ીcતr6ીર્દિ ઈજીr
61

Page 33
6666):
凶 சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
6ούντια. எஸ்.சிவமோகன், 23 தமிழ் நாட்டின் அவமானச் சின்னம். ஒன்றை வெகு அவதானமாகக் கவனித் தீர்களா? அயோக்கியர்கள், மக்கள் விரோதிகள், மதத்தின் பெயரால் கொலைக் கூட்டத்தினரை வளர்த்து வரும் பெரும் நிறுவன தாதாக்கள், பெண்லோலர்களை யெல்லாம் தமிழக ஊடகங்கள் பெரும் பெரும் ஹிரோக்களாக ஆக்கி வருவதைக் கண்டு நான் தமிழக மக்களுக்காக ஆழ்ந்த கவலை யடைகின்றேன். இப்படியே பத்திரிகை களும் தொலைக்காட்சிகளும் இப்படியான வர்களைப் பிரபலப்படுத்துவதன் மூலம் இளந் தலைமுறையினரைத் தப்பான வழிகளில் இட்டுச் சென்று விடுவார்களோ என்ற நியாயமான மனப் பயம் கூட எனக்கு 2-6бот05).
டானியலுக்குச் சிலை வைக்க வேண்டும் என்ற கருத்தைச் சென்ற இதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தீர்களே, இந்தக் கருத்துச் சரிதானா?
Lonrasfiuunrui. ச.மோகனதாஸ்
இ அறிஞர் வ.ரா ‘தமிழ் நாட்டுப் பெரியார்கள் என்றொரு நூலை எழுதியிருந் தார். அதில் பெரியார் ஈ.வே.ரா, மூதறிஞர் ராஜாஜி உட்படப் பலரைத் தொகுத்தெழுதி, அதில் ஒருவராக நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனையும் அப்பெரியார்கள் வரிசையிலே சேர்த்தெழுதியிருந்தார். அன்று
G2
பலர் இதை மறுத்துக்குரல் கொடுத்தனர். ஆனால், வ.ரா. தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. காலம் அன்னாரது கருத்தை அங்கீகரித்ததுடன் பின்னர் ஏற்றுக் கொண்டும் விட்டது. நான் சில கருத் துக்களை மக்கள் முன் வைக்கும் போது ஆழமாகச் சிந்தித்த பின்னர் அவற்றை எழுத்தில் பொறித்து வைப்பதுண்டு. என் காலத்திற்குப் பின்னரும் என் கருத்து வாழும், அது செயல் வடிவம் பெற்றே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன், நான். கொஞ்சச் காலம் பொறுத்திருங்களேன். எனது கருத்துச் சரியா, தவறா என்பது புரிந்துவிடும்.
>< சமீபத்தில் வெளிவரும் மல்லிகை இதழ்களைப் பார்க்கும் பொழுது ஒரு பெரிய மாற்றம் தெரிகிறதே, குறிப்பாக அட்டைப் படங்களைப் பிரசுரிப்பதில்
விரிந்த எல்லைக் கோடுகளைப் பயன்
படுத்துகிறீர்களே, இதற்கு என்ன காரணம்?
நெல்லியடி. எம்.சிவதாஸன்
23 காரணத்தைக் கண்டறிய நீங்கள் சிரமப்பட வேண்டாம். எனக்கென்றொரு அடிப்படையான இலக்கிய நோக்குண்டு. அதில் சமரசம் செய்தால் நான் நானாக இருக்க மாட்டேன். அதே சமயம் நானொரு தொடர் சஞ்சிகையின் ஆசிரியர். எந்த வித மான கல்மிஷமுமில்லாமல் இந்த நாட்டில் வாழும் சகல எழுத்தாளர்களையும் நேசிப் பவன். அவர்களது ஆற்றலில் ஆழமான நம்பிக்கை கொண்டவன். எனவே அர்ப் பணிப்பு உணர்வுடன் இலக்கிய உலகில்

ஈடுபட்டு உழைத்து வரும் அனைவரையும் நான் மல்லிகை மூலம் கெளரவிக்க முயற்சிக்கின்றேன். மல்லிகையில் வெளி வந்த அட்டைப் பட முகங்களை ஒரு தடவை நினைவு கூர்ந்து பார்த்தாலே அது
புரியும். இந்தத் தடத்தில் நான் இடறி
விழாமல் கடந்த காலத்தில் நடந்து வந்ததன் பெறுபேறுதான் மல்லிகையின் நாற்பதாவது மலரின் வருகை என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் எனது செயலின் ஜனநாயகத் தன்மையை விளங்கிக் கொண்டவர் களாவீர்கள்.
X நீங்கள் சமீபத்தில் ரசித்துச் சுவைத்த நிகழ்ச்சி ஏதாவது உண்டா?
தெவறிவளை. கதிருவாசகன்
* கம்பன் கழகம் முன்னின்று நடத்திய ஒரு வார இசை வேள்விதான் எனது நெஞ்சை விட்டு அகலாத நிகழ்ச்சி. தரமான இசை அரங்கம், சுதாரகு நாதன், பம்பாய் ஜெயழுநீ. சேவடி கோபாலன் போன்ற இசை விற்பன்னர் களின் தேனாமிர்த இசை கேட்டு மெய்ம் மறந்து போனேன். என் வாழ் நாளிலேயே இந்த இசை வேள்வியின் கானா மிர்தத்தின் ருசியை மறந்து விட முடி யாது. இத்தனை இசைச் செல்வத்தை պմն இலவசமாகத்தான் நுகர்ந்து மகிழ்ந்தேன். இசை மனித குலத்தை இணைக்க வல்லது என்பதை வெகு துல்லியமாகப் புரிய வைத்தது இந்த இசை வேள்வி. ஆகா. ஆகா.
page): St.
X மல்லிகையைப் பலர் us) (36 go கோணங்களில் அன்றிலிருந்து இன்று வரை விமர்சிக்கின்றனரே, அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
cucucufu Im. எஸ்.எஸ்.ருத்ரமூர்த்தி
23 ஒரு பொருளுக்கு விலை போட் டாலே, அது இலக்கியச் சிற்றேடாக இருந்தாலும் கூட - அதைப் பணம் கொடுத்து வாங்கியவுடன் அது அவர் களது உடமையாகி விடுகின்றது. எனவே
கொடுத்துப் பெற்றவன், ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லவே செய்வான். இது இயல்பு.
BE TT BF பண்டத்தைப்
எனவே பண்டத்தை விற்பவன் அதற்குத் தனித்தனியாக விளக்கம் சொல்ல முடி யாது. கூடாது. ஆனால் வெகுசன அபிப்பிராயத்திற்குக் காது கொடுக்க வேண்டியது அவசியம். இத்தனை ஆண்டுக் கால அநுபவத்தில் எத்தனை எத்தனையோ அபிப்பிராயங்களையும், விமரிசனங்களையும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.
உங்களையும், உங்களது உழைப்
பையும் குறை கூறுகிறவர்கள் உண்டா?
ιρούταστπή. எஸ்.நவநீதன்
23 குறை கூறுகின்றவர்களின் குற்றச் சாட்டுகளைப் பசளையாக்கிக் கொண்டு இத்தனை காலமாக வளர்த்து வருகிறேன்.
தான் மல்லிகையை
53

Page 34
666): অs
வேறெந்தத் தமிழ் எழுத்தாளனை யும் விட, ஊடகங்கள் உங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தருகின்றனவே, என்ன காரணம்? -
cuccufu ur. ஆர்.சுரேந்திரன்
2 உழைப்பு, அர்ப்பணிப்புடன் கூடிய அயராத செயல்பாடுகள் தான் காரணம் என நினைக்கின்றேன்.
உங்களுடன் கடித மூலம் தொடர்பு
கொள்ள விரும்புகின்றேன். பதில் போடுவீர்களா?
திருகோணமலை, க.எழிலன்
23 தனி நபர்களுக்குக் கடிதம் எழுதிக் கொள்ள எனக்கு நேரம் போதாது. தயவு செய்து எனது நேரத்தை எனக்கு மிச்சப் படுத்த உதவுங்கள். முடியுமானால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதையுங்கள்.
X அட்டைப் படப் பிரமுகர்களின் நான் காவது தொகுப்பு எப்பொழுது வெளி வரும்?
GlaucíLoL. எஸ்.சாரங்கன்
23 நான்காவது தொகுப்பு வேலைக் கான ஆயத்த வேலைகளைச் செய்யத் தொடங்கி விட்டேன். இன்னும் சில
ருடைய அட்டைப் படக் கட்டுரைகள் அதில் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. அத னால் கொஞ்சம் தாமதமேற்படுகின்றது.
தமிழகத்துச் சஞ்சிகையாளரிடம் போட்டி தென்படுகிறதே, கவனித்தீர்
களா? இந்தத் தீபாவளி தருணத்தில்
இப்போட்டி உச்சக் கட்டத்தை அடைந்து விட்டதே!
எம்.சுகுTாஜா
வத்தளை.
இ8 வியாபாரப் போட்டிதான் இ:ற்றி டையே நிலவுகின்றது. இப்போட்டியால் கவர்ச்சி அதிகமாகின்றதே தவிர, தரம் உயரவில்லை. இது வியாபார தந்திரமே தவிர, வேறெந்தப் புடலங்காயுமில்லை!
எழுத்தாளர் டானியலுக்குச் சிலை வைக்க வேண்டும் என்ற கருத்து உங் களுக்குத் தோன்றக் காரணம் என்ன?
புத்தளம். ஆர்.சிவநேசன்
23 சமீபத்தில் தமிழகம் சென்றிருந்த சமயம் பலர் நண்பர் டானியலைப் பற்றி விசாரித்தனர். உயிருடன் நடமாடிய டானியலை விட, மரணித்து விட்ட டானிய லின் பெருமையை வியந்து பேசினர் பலர். தலித் இலக்கியத்தின் முன்னோடி அவர் எனப் பலரும் ஒப்புக் கொண்டனர். இந்தத் தாக்கம் தான் எனக்கு இந்தக் கருத்தை என் நெஞ்சில் விதைத்தது.
201 - 114. . . ;
வெளிit
கதிரேசன் விதி, கெ: . .
• 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் * ஆtiன டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103,
இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
G4

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் 垒 சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
N
y சாஹித்திய புத்தக இல்லம் Ο کلابېل
இல. 4A, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்) புததளம. தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 35
Valikai
( ). ' '
Expo
...'
ს C კი - ი Non Tr( 17+ "س رة
”ع-___-=*"--م...","م
ܠܐ ܡܨ
{تعي
ܘ ܘܐ
Y Sri Lank
 
 
 
 
 
 

" Avenue,
boʻ- 08. ماخ 2 – :
است.
573717