கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2005.03

Page 1
|-
.鬚鱈
|- |-
 
 
 
 
 

|髮WWW
*|7 鬚 髮
T sae
■|-|-L____
·!------------------------|-『T**
DTTF 2005

Page 2
(7aaey Zഗ്ഗd ീe
Digital (Colouvlad & Sudio
MAN ZATURZS
念 Automatic dust & scratch correction
* Maximum 5ize: 12" x 18'Digital print) * Output Resolution: 4oodpi *Film lnput Formats: I35, Ix24o, Izo, APS * Film Types: Colour negative & positive, Baw
negative, Sepia negative
* Compatible linput & Output Media:
Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia)
sk. Print to Print * Conduct sheet & Index print
* Templates: Greeting Cards, Frame Prints, Casandar Prints,
Album Prints,
HEAD OFFICE BRANCH
HAppy B!!!!!!A!CENTRE HAppy PHOTO
Stupo A Professionimi PutorocRAerke jas 8. VtrotoctMFHť3
85тижo No. 64, Sri Sumanatissa Mw, No. 3oo, Modera Street, Colombo - I2. Tel-o74-6Io652. Colombо - 15. Те! :-оп-1526345.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
40-வது ஆண்டு
gMr
இ1
谈 படைப்பாளிகளின்
புதிய ஆக்கங்களை மல்லிகை V எதிர்பார்க்கின்றது.
STREET, COLOMBO - 13.
EL: 232O721
201-1/4, SRI KATHIIRESAN
மல்லிகை 40-வது ஆண்டு மல்ர்
நாட்டின் பல்வேறு திசைகளில் இருந்தெல்லாம் மல்லிகை மலர் பற்றி விசாரித்தவண்ணமுள்ளனர், இலக்கியச் சுவைஞர்கள்.
சந்தாதாரர்கள் பலரும் தங்களுக்குக் கிடைக்கவில்லையே எனக் குறைப்பட்டு எழுதுகின்றனர். சந்தாவைப் புதுப்பிக் காதவர்கள் கூட, மலர் கேட்டு எழுது கின்றனர்.
நாற்பதாவது ஆண்டு மலர் சந்தாவுக்குள் உட்பட்டதல்ல. அதற்குத் தனி விலை 150/- ரூபா. தபாற் செலவு 20/- காசுக் கட்டளையில் தபாலகம் Kotahena என எழுதப்பட வேண்டும்.
மல்லிகை மலர் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக பல்கலைக்கழக நூலகங்கள், பொதுசன நூலகங்கள், பள்ளிக்கூட நூல் நிலையங்கள் இம்மலரைப் பெற்றுக் கொள்வது மிக மிக முக்கியம்.
மல்லிகை மலர்கள் எப்பொழுதுமே இலக்கிய ஆஸ் "ரங்களாகத் திகழ்பவை. பாதுகாத்து வைத்து, எதிர்காலச் சந்ததி யினருக்குக் கையளிக்கத் தக்கவை.
இதைப் புரிந்துகொண்டால் சரி.
- ஆசிரியர்

Page 3
சந்தித்து உரையாட ஓரிடம் தேவை.
எழுத்தாளர்கள் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாட ஓரிட மில்லாமல் உதிரிகளாகத் தனிமைப்பட்டுப் போயுள்ளனர். மூலைக்கொருவராகத் தனித்துப் போயுள்ளனர்.
இன்றைய இலக்கியப் பின்னடைவுக்கு, படைப்புச் சோர்வுக்கு இதுவே முக்கிய காரணம் என நாம் நம்புகிறோம்.
முன்னொரு காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவி வந்ததென்றால் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது, அவர்கள் அடிக்கடி சந்தித்து, கலந்து உரையாடி வந்ததுதான் என்பது நமது கருத்தாகும்.
நாட்டுச் சூழ்நிலையும், வாழ்வுப் போராட்டமும், பிரச்சினைகளும் படைப்பாளிகளை ஒருங்கு சேர்த்து கூடிக் குலவ முடியாத அவல நிலைக்குத் தள்ளி விட்டது என்பது என்னமோ உண்மைதான்.
அதேசமயம் பிரச்சினைகளைக் கண்டு எழுத்தாளன் பயந்துபோய் ஒதுங்கி விடக் கூடாது. அதை நேர்கொண்டு, பிரச்சினைகளின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொண்டு, தமது படைப்புக்களின் மூலம் பொது மக்களுக்கு விளங்கப் படுத்த வேண்டியது எழுத்தாளர்களது முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
அதற்குப் படைப்பாளிகள் அடிக்கடி சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டியது முக்கியம். '.
நமக்குத் தெரியும் பல எழுத்தாளர்கள் மனசளவில் தவித்துப் போய்த் தனிமைப்பட்டுப் போயுள்ளனர். தாம் நினைப்பதை, எண்ணுவதை, சிந்திப்பதை வெளியே சொல்ல முடியாமல் ஏங்கிப் போய் மெளனியாக உலாவி வருவதை நாம் கண்டிருக்கிறோம்.
என்னதான் கருத்து முரண்பாடுகள் எழுத்தாளர்கள் மத்தியில் நிலவி வந்த போதிலும் கூட், எதிர்கால, புதிய இளந் தலைமுறையினரின் ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்காக பொது உடன்பாட்டின் அடிப்படையில் எழுத்தாளர்கள் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடுவது அதி முக்கியமானது என வற்புறுத்திக் கூறுகின்றோம்.

GITE60ՂԱՄՈՎի
இஸ்லாமிய கலை, இலக்கியத்துறையில் அகலக்கால் பதித்த மனிதநேயர்
5GT2OOTIÕ LqeitGofluITıñgir
- உடப்பூர் வீரசொக்கன்
LDத்திய மலை நாட்டில் கலை வளம் பொருந்திய கண்டியில் உடதலவின்னை -
மடிகே என்றதும் எமக்கு ஞாபகத்தை மீட்டும் பெயர் கலாபூஷணம் புன்னியாமீன் என்ற நாமமேயாகும்.
அந்த வகையில் புன்னியாமீன் கலை, இலக்கியத்துறையில் அகலக்கால் பதித்து, காத்திரமான படைப்பாளியாகவும், சிருஷ்டி கர்த்தாவாகவும், எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும், கவிஞராகவும் ஏன்? வெளியீட்டாளராகவும் திகழ்ந்து தமது நாமத்தை பதிவு செய்த ஒர் கர்த்தா.
கலாபூஷணம் புன்னியாமீனின் சிறந்த ஆளுமையும், மனித நேயமும், உதவிக்கரம் நீண்டுகின்ற பரோபாகாரமும், தூங்கிக் கிடக்கின்ற எழுத்தாளர் உள்ளங்களுக்கு நேசக்கரம் நீண்டி ஆபத்பாந்தவனாக உதவி புரியும் ஆன்ம நேயமும் ஒருங்கே கொண்ட கலாபூஷணம் புன்னயாமீனை அண்மைக் காலங்களில் தொடர்புகளை விரித்துக் கொண்டபோது உள்மன ஆரோக்கியத்தை அறிந்து கொண்டேன்.
புன்னியாமீனின் கடந்தகால கலை, இலக்கியத்துறையில் தான் ஆற்றிய பங்களிப்பின் சாதனைக்காக 2003ஆம் ஆண்டுக்கான ‘கலாபூஷண விருது வழங்கி 2004 பெப்ரவரி 4ஆம் திகதி கெளரவிக்கப்பட்டார்.
கலை, இலக்கிய, ஊடகப் பணியை நேர்த்தியாக, செவ்வனே செய்வதில்; செயல் வீரனாக ஆற்றுவதிலும் புண்ணியாமீன் தனக்கே உரிய பணியில் மேற்கொண்டு
வருகின்றார்.
-G3)

Page 4
ஏதோ ஒரு மனிதனுக்கு இறைவன் அருளால் ஒரு திறனைக் கொடுக்கிறான். அத்திறனை இனம்கண்டு வளர்த்துக் கொள்ளுபவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் புன்னியாமீன் பாடசாலைக் காலங்களில் தன்னிடம் மறைந்து கிடந்த எழுத்துத் திறனை இனம் காட்டி, வழி காட்டிய ஆசான்களை மறவாமல் இருக்கும் அதேவேளை, படிக்கும் காலத் திலே பத்திரிகைகளுக்கு எழுதி தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். இதுவே தனது எழுத்துலக பயணத்துக்கு ஒர் பரிமாணத்தை ஏற்படுத்தியது எனக் கூறுகின்றார்.
துடிப்புள்ள இளைஞராகக் காணப் பட்ட புன்னியாமீன் - பத்தொன்பதாம் வயதில் அசுர வேகத்தில் பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு தான் எழுதி பிரசுரமான பதினான்கு கதைகளைத் தொகுத்து, கட்டுகஸ்தோட்டை இஸ்லாமிய சேம நலச் சங்கம் 'தேவைகள்” எனும் பெயரில் முதல் கதைப் புத்தகத்தை வெளி யிட்டமை தன் வாழ்வின் ஒரு மைல் கல்லாகும் எனக் கூறும் புன்னியாமீனின் கை இன்னும் எழுதிக் கொண்டே இருக் கின்றது.
அத்துடன் உடதலவின்னை - மடிகே வை.எம்.ஏ. இயக்கத்தின் வெளியீடான முத்திங்கள் இதழான ‘விடிவு' சஞ்சிகைக்கு பிரதம ஆசிரியராகவும், கட்டுகஸ்தோட்டையை மையமாகக் கொண்டு இயங்கிய பூரீலங்கா இஸ்லா மிய காங்கிரஸின் மாதமிரு இதழான 'அல்ஹிலால்' இதழுக்கும் பிரதம
G4)-
ஆசிரியராக இருந்து காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அவைகளே இலக்கிய பயணத்தின் புதிய உத்வேகத்தையும், புதிய சிந்தனை இரத்தத்தையும் பாய்ச்சியது.
புன்னியாமீன் படைப்பிலக்கியத் துடன் மட்டும் நில்லாமல் தனது வீச்சை பல்நேய உணர்வுடன் வெளிப்படுத் தினார். அவர் வீசிய பார்வையில் அரசியல் கட்டுரைகள், சமூக பொருளா தாரக் கட்டுரைகள், உலக அரசியல் விவ காரங்கள், விளையாட்டுக் கட்டுரைகள், பாடக் கட்டுரைகள் பல புதிய பரிமாணங்
களுடன் அவ்வப்போது வெளிப்படுத்தி
யுள்ளார்.
கலாபூஷணம் புன்னியாமீன் தனது படைப்புகளை ஈழத்தின் முன்னணி பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அகலக்கால் பதித்ததுமல்லாமல், இந்தியா விலிருந்து வெளிவரும் கலைமகள், தீபம், கணையாழி, தாமரை, தடீ போன்ற சஞ்சிகைகளில் தனது பாச்சலை சிறு கதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
1973ஆம் ஆண்டிலிருந்து இலக்கிய உலகில் கால் பதித்த புன்னியாமீன் தனது முதல் படைப்பான அரியணை ஏறிய
அரசமரம்" என்னும் உருவக் கதையை
தினகரன் வார மலரில் பிரசுரிக்கப் பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 260 சிறுகதைகளை படைத்த ஓர் சாதனை வீரர். இதுவரையும் 75 புத்த கங்களை வெளியிட்டு படைப்பிலக்கிய கர்த்தா என்ற பெயரையும் பெறுகின்றார்.

எழுத்தாளர் புன்னியாமீன் 6 சிறு கதைத் தொகுதியையும், 3 கவிதைத் தொகுதிகளையும், அரசியல் ஆய்வு நூல்கள் 3, விளையாட்டு விமர்சன நூல் 1, வரலாற்று ஆய்வு நூல் 1 மற்றும் மாணவர்களுக்கேற்ற பாடவிதான நூல்கள், பொது அறிவு நூல்கள் என்பன வற்றை எழுதி வெளியிட்டு வைத்த பெருமைக்குரியவராக காணப்படு கின்றார்.
இந்த ஒரு சாதனையை எந்தவொரு முஸ்லிம் மகனும் இலக்கிய உலகில் பெறவில்லை என்பது துரதிருஷ்டம் தான்.
"ஈழத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ஒரு அரசியல் கட்சி அவசியம்” என்ற கருத்துச் சிந்தனையை 1979ஆம் ஆண்டில் 'விடிவு' சஞ்சிகை மூலம் வலியுறுத்தி நின்ற இவர் 1983 ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினையை கருப்பொரு ளாகக் கொண்டு அடிவானத்து ஒளிர்வு கள்’ எனும் நாவலை எழுதினார்.
இந்நாவல் முஸ்லிம் சமூகத்தின் சமுக, அரசியல் பிரச்சினைகளை அலசி ஆராயப்பட்டது. முஸ்லிம் இனத்துக்கு தனி அரசியல் கட்சி தேவை என்பதை பட்டவர்த்தனமாக சில கருத்துக்களை ஆணித்தரமாக இலக்கிய நயத்துடன் முன் வைத்தார். அந்த நாவலின் பின்னணியில் ‘முஸ்லிம் காங்கிரஸ்' தோற்றம் பெற வித்தாக முளையிட்டது. அந்த தூர நோக்கு அன்னாரின் அறிவுசார் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகும்.
கடந்த 25 வருட கால இலக்கிய பணியுடன் 12 வருட கால வெளியீட்டுத் துறையிலும் தன்னை அர்ப்பணித்த
புன்னியாமீன் 1995ஆம் ஆண்டில் மத்திய
மாகாண இந்து கலாசார அமைச்சர் கெளரவ வி.புத்திரசிகாமணி அவர் களினால் ஹட்டனில் நடாத்தப்பட்ட மத்திய மாகாண சாஹித்திய விழாவில் விருதும், பொற்கிழியும் வழங்கி கெளர
விக்கப்பட்டார்.
மற்றும் மலையகக் கலை, கலாசார சங்கம் 1999இல் நடத்திய ரத்னதீப" விருது வ ழங்கும் இலக்கியப் பணிக்காக அப்போதைய முதலமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்கவி னால் ரத்னதீப சிறப்பு விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
வைபவத்தில்
கண்டி மக்கள் கலை இலக்கியப் பேரவை அகஸ்தியர் நினைவு விழாவில் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் அவர் களினால் இலக்கியப் பணிக்காக பொன் னாடை போர்த்தி, விருது வழங்கி கெளர
விக்கப்பட்டார்.
இவைகளின் எல்லாவற்றிற்கும் மேலாக தனது கலை, இலக்கிய ஆர்வத் தின் பணிக்காக 2003ஆம் ஆண்டு அரச விருதான ‘கலாபூஷண விருது’ பெற்று கெளரவிக்கப்பட்டார்.
புன்னியாமீன் இலக்கியத்துடன் தன் ஆர்வத்தை மட்டுப்படுத்தாமல் நாடகத் துறையிலும் ஈடுபாடு கொண்டுழைத் துள்ளார்.
-G5)

Page 5
பாடசாலை காலத்தில் பல நாடகங் களில் நடித்து தனது திறமையை காத்திர மான முறையில் வெளிப்படுத்தியதுடன், தான் நடித்த நாடகங்கள் மாவட்ட, மாகாண மட்டங்களில் வெற்றிக்கொடி ஈற்றியுள்ளன. மலையக மக்களின் பின்புலத்தைக் கொண்ட நாடகங்கள் ஆறை எழுதி அரங்கேற்றியுள்ளார்.
தூங்கிக் கிடக்கும் எழுத்தாளர்களை தட்டி எழுப்ப வேண்டுமென்கின்ற ஒரே நோக்குடன் ‘சிந்தனை வட்டம்" என்ற நிறுவனத்தை நிறுவி 160 இற்கும் மேற் பட்ட நூல்களை வெளி உலகுக்குக்
கொண்டு வருகிற படைப்பிலக்கிய
வெளியீட்டாளர் சாதனை வரிசையில்
முதல் தரமாக திகழும் புன்னியாமீனின் தொண்டை மெச்ச வேண்டும். இதுவரை 21 இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
நவமணி தேசிய வார பத்திரிகை யில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர் விபரத் திரட்டுக்களைத் திரட்டி வெளியிட்டும் வருகின்றார்.
முஸ்லிம் சமூக இலக்கிய உலகில் சாதனை வீரராகத் திகழும் கலாபூஷணம் புன்னியாமீனின் அபார ஆற்றல், மனித நேயப் பண்புகள் அவரின் இலக்கிய வெற்றிக்கு கட்டியம் கூறி நிற்கின்றது.
GasTeiteit 6)TLD.
மலர்களையும் Qest eiteit 6)TLD.
-
గ2నn дволса ఏసిడిఏఎడి
: ܫ - G ܢ • NY. കൃതവ്ഗ/? ருெதடலை ONON).co.2)
ပßßလွှyĀGé) اله Gonnojašn. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல ஆக்கங்களையும் அவரிடமிருந்தே நேரில் பெற்றுக்
மற்றும் பள்ளிக்கூட, பொது நூலகங்களுக்கும் தேவையான நூல்களையும்,
மல்லிகைப் பந்தலில் பெற்றுக்
மல்லிகை ஆண்டு

“ஹாஜீ. ஹாஜி.”
இரண்டு மூன்று முறை அழைப்பு விடுத்தும் ஹாஜி வரவில்லை. பதிலாக இளைய மகனே வந்து எட்டிப் பார்த்தான்.
"இன்டக்கும் சரி வராது போல” என்று அலுத்துக் கொண்டபடியே சகபாடியைப் பார்த்தான் ஃபர்ஷத்.
அதீகின் முகமும் அழுது வடிந்தது.
"புள்ள. வாப்ப நிக்கியா?” ஃபர்ஷத் கேட்டான்.
"எனத்தியன் விஷயம்?
ஏதோ வாப்பா சார்பாக விடயத்தை நிறைவேற்றி வைக்கப் போவது போல் கேட்டான் மகன்.
................................................ "எங்கட மீலாது விழா
விஷயமா வாப்பவ நன்றி சொல்லும் / ' .
நேரம்
- திக்குவல்லை கமால்
கொழும்புக்குப் பெய்த் தேன்” இது செலவு விஷயம் என்பது
வாப்பாவின் மகனுக்கு புரிந்து விட்டது போலும்.
"அப்ப நாங்க தேடீட்டுப் போனென்டு சொல்லுங்கொ’ அதீக் பிரஸ்தாபித்தான்.
"சரி சொல்லியன்’
கேற்றை இழுத்து மூடிவிட்டு இருவரும் ரோட்டுக்கு இறங்கினர். கொஞ்ச நேரம் மெளனமாக நடந்தனர் இருவரும்.
ஊர் கலகலத்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே மீலாத் விழா தொடர்பான பச்சை பெனர்கள் கண்ணைப் பறித்தன.
இன்னும் இரண்டே நாள்தான் விழாவுக்கு. பெரும்பாலும் ஏற்பாடுகள் பூர்த்தியென்ற நிலை.
ー○

Page 6
அன்று மத்ரஸா மண்டபத்தில் விழா தொடர்பான மஷஜூராக் கூட்டம் நடை பெற்றது. சிறுவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளையும் வழிமுறைகளையும் மனப்பதிவாக்க இத்தகைய விழாக்களும் உதவும் என்ற வகையில் மெளலவி விளக்கமளித்தார். அவர் புதிதாகத்தான் அங்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரது கைவண்ணத்தைக் காட்டி ஊருக்குள் எடுத்த எடுப்பிலேயே ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொள்வதும் அவரது உள்நோக்க மாக இருக்கலாம்.
வாலிபர்கள், படித்தவர்கள், நலன் விரும்பிகள் என்று பல தரத்தவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
செலவுகளைச் சிலர் சுயவிருப்பின் பேரில் ஏற்றுக் கொண்டனர். இன்னும் சிலர் பணமாக அந்த சந்தர்ப்பத்திலேயே கையளித்தனர். w
அஜ்மல் ஹாஜியின் முறை அது.
“நீங்க மொதலாம் பரிச பொறுப்
பெடுத்தாச் சரி ஹாஜி" செயலாளர்
லிஸ்டைக் கையில் வைத்துக் கொண்டு எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
“மொதலாம் பரிசென்டா??? மேல் விபரம் கோரினார்.
"பதினைஞ்சி மொதலாம் பரிசு. ஒன்டுக்கு நூத்தம்பதுருவ மட்டில பொறு மதியாக் குடுக்கோணும்"
அவரது மனக்கணனி வேலை செய்தது.
AA
<弘......
சரி நான் ஆயிரம் ரூவத் தாரனே"
"எனத்தியன் ஹாஜி நீங்க.." இடையில் குறுக்கிட்டார் இன்னொருவர்.
"இப்ப பிஸ்னஸியள் மிச்சம் மோசம். இன்ஷா அல்லா அடுத்த வருஷம் பாப்பமே”
"ஆ. அப்ப ஸ்ட்பிகேட்ட ஒங்கட பேருக்கு போடியன். கிட்டத்தட்ட அந்தக் கணக்குத்தான் வரும்’ செயலாளர் விடயத்தை ஒப்பேற்றினார்.
"ஒவ்வொத்தரும் பொருந்தின
ஹக்க அனுப்புங்கொ’ முடியுந்தரு
வாயில் தலைவர் விசேட அறிவித்தல் விடுத்தார்.
கூட்டம் மகிழ்வோடு நிறைவு பெற்றது.
அஜ்மல் ஹாஜி தலைவரை நெருங்கினார்.
"இங்க எனக்கு ஆயிரம் வேல. தாரச்சரி கடக்கனுப்புங்கொ. நான் குடுக்கியன்" என்று தலைவரின் காதில் நெருங்கிக் குசுகுசுத்தார். V.
போஸ்டர், ஹேன்ட்பில், அழைப் பிதழ், சான்றிதழ் முதலான அச்சு வேலை களெல்லாம் ஃபர்ஷத்திடம் ஒப்படைக்கப் பட்டது. பொறுப்புதாரிகள் தங்கள் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இயங்கினர்.
"ஃபர்ஷத் இன்னம் ரெண்டு நாள் தானிக்கி. ஸெடிபிகேட் வந்தாத்தானே எழுதி வெக்கேலும்” செயலாளர் ஞாபக மூட்டினார்.
G8)

சான்றிதழ் அச்சிட்டுக் கிடந்தது. பணத்தைக் கட்டியல்லவா எடுக்க வேண்டும்?
முதன் முறையாக ஹாஜியைத் தேடி அவரது கடைக்குச் சென்றபோது "ஹாஜியார் ஊட்டுக்குப் பெய்த்த. நான் கோல் பண்ணிச் செல்லியன். நீங்க நாளக்கி வாங்கொளே” என்றார்கள்.
"எங்கடாள்கள் இப்பிடித்தான். மணிசரட முன்னுக்கு அப்பிடித் தாரன், இப்பிடித் தாரனென்டு செல்லுவாங்க. கால்த் தோல் தேயங்காட்டீம் திரிஞ்சாலும் கெடக்கியல்ல" தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் ஃபர்வுத்.
இரண்டு நாள் கழித்து இரண்டாம் முறையாக ஹாஜியின் கடைப்படியை மிதித்தான் அவன்.
‘ஹாஜி அவசரமா மையத்தூ டொன்டுக்குப் போன, வரச்செல்லே ரா வாகும். வந்தொடனே நான் செல்லியன்’
அவனுக்கு அலுத்துப் போய் விட்டது. இப்படியான விஷயங்களில் நிறைய அனுபவம் அவனுக்குண்டு. சொல்லுக்கும் மனசுக்கும் சம்பந்தமில்லா தவர்களோடு எல்லாம் கஷ்டந்தான்.
மூன்றாம் முறை வீட்டுக்கே போவ தென்று தீர்மானித்தான். தனியே போகக் கூச்சப்பட்டுத்தான் சகபாடி அதீக்கையும் அழைத்துக் கொண்டு வெளிக்கிட்டான். அதுவும் கூட பொய்த்துப் போய்விட்டது. "சரி இப்ப எனத்தியன் செய்யப் போற? பெரிசா சபேல பாரமெடுக்கிய" அமைதியைக் குலைத்து அதீக் கேட்டான்.
"எனக்கென்டா ஒன்டுமே வெளங் கல்ல' நடந்த படியே ஃபர்ஷத் சொன்னான்.
"அப்பிடிச் செல்லிச் சரிவாரல்ல. நாளக்கி ஸட்பிகேட் எடுத்தாத்தான் எழுதேலும்" யதார்த்தத்தைத் தொட்டான் அதீக்.
"சரி மசான் எப்பிடியோ விழா நடக்கும். எப்பிடிச் சரி சந்தோஷமா நடத்தி முடிக்கோணும். எடேல உட் டிட்டுப் போற பழக்கம் எங்களுக் கிட்டில்லேன்" ஃபர்ஷத் சற்றே உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான்.
"கடைசிப் பைணம்தான் ஹாஜி யாருக்கிட்டப் போன. பொது விஷய மென்டாலும் இப்பிடி நாய் மாதிரி திரி யேல..." மீண்டும் ஃபர்ஷத் அடித்துச் சொன்னான்:
இருவரும் செயலாளரின் வீட்டை நோக்கி நடந்தனர். அது ஒரு குட்டிக் காரியாலயமாக இயங்கிக் கொண்டி ருந்தது.
குறித்த நாளில் மத்ரஸா முற்ற வெளி நிரம்பி வழிந்தது. எட்ட நின்று பெண்மணிகளும் தங்கள் குழந்தைச் செல்வங்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பரவசமடைந்தனர். அவர்கள் ஒலி பெருச்சியில் தங்களது திறமையை வெளிப்படுத்தி நின்றனர்.
மேடையிலே மெளலவியும் விசேட அழைப்பினரும் மட்டுமல்ல, சில ஆயுள்
G9)

Page 7
«95ITGA) உள்ளூர் பிரமுகர்களும் அமர்ந் திருந்தனர்.
ஃபர்ஷத், அதீக் மற்றும் நண்பர்கள் சிலரும் தங்களது பங்களிப்பை திருப்திகரமாக முடித்த நிலையில் பலா மரத்தடிப் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். தூர நின்று நிகழ்ச்சிகளை இரசித்து மகிழ்ந்தனர். தங்களது முயற்சியின் ஒரு வெளிப்பாடல்லவா? மனசுக்குள் மத்தாப் புத்தான்.
இறுதிக் கட்டம்.
செயலாளர் நன்றி சொல்ல
எழுந்தார்.
பட்டியல் தொடர்ந்தது.
"சான்றிதழ் அச்சிட்டுத் தந்த பிரின்ஸ் டெக்ஸ் அல்ஹாஜ் அஜ்மல் அவர்களுக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
ஃபர்ஷதும் அதீக்கும் ஒருவரை யொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
"அஜ்மல் ஹாஜிம் இப்ப பொது
விஷயங்களுக்கு குடுக்கிய" பக்கத்தி லிருந்த யாரோ தன் சகபாடிகளுக்குச்
சொன்னார்.
அதீக் ஃபர்ஷத்தின் காதுக்குள் சொன்னான். "மசான் நானும் நீயும் ஐநூறு ஐநூறு போட்டு விஷயத்த முடிச்சிட்டோம். ம். அல்லாவுக்குத் தெரிந்தானே.”
மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
וף
நாம் பயணித்த புகை வண்டி (சிறுகதைத் தொகுதி) I. esebiIKGeeGair
அப்புறமென்ன. (கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்
என் தேசத்தில் நான் (கவிதைத் தொகுதி) பேராதனை பல்லைக் கழக
மாணவ மாணவியரது கவிதைகள்.
اسے

தூக்க நினைத்தது பாரம் தூக்கிடலாம் எனத் துணிந்தது பேரதிர் ஞானம்.
யார்க்கும் எளிதான தூரம் எவராலும் கடந்திட முடியாதது தீராத ஈரம்.
பார்வை செயலுடன் ஒன்றும் என்றாகிச் செயற்படின் யாவும் முடியாது போகும்.
யார்தான் துணிவுடை யோராம்
என்றார்க்கும் பணியினைத் தொடரும்
ஆதிக்கம் வீணாம்.
செயற்படுவோர் திறன் வேறு செயலில் இறங்கிய பின்னவர் தோற்பது வேறு.
அயலவர் கூட அற்பம் என்றெண்ணி அயர்ந்து அறிவை நண்ணுவர் திண்ணம்.
நியதிகள் யாவும் நின்று நிலைத்திட முடியா துலகிலதிர்ந்து புரளுதல் கூடும்.
காலம் கடந்தேறும் வாழ்வில் கண்டது மட்டுமே காட்சியென்றாகின் ஞாலம் ஒழியும்.
ஒழ ஒழிவார்
- கவிஞர் ஏ. இக்பால்
போலாக்கம் காண்பது போல்தான் நாளாக்கி நலிந்துட வழிந்துடன் போவதே ”ழ்வு
யார் ஆண்டு நிலைத்தார் இங்கே ஆடித்துவண்டு அல்லலே பட்டு
ஒடி ஒழிவார்.
-G)

Page 8
சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை கொழும்பில் arta1Clவேண்டுவமன்று யோசனை முன்வைப்பு.
எம்.ஏ.எம்.நிலாம்
ஈழத்து தமிழ் இலக்கியம் இன்று சர்வதேச மட்டத்தில் உயர்ந்து காணப்படுவ தாகவும், இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கு இலக்கியம் வளர்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் "மல்லிகை டொமினிக் ஜீவா இலங்கையில் உள்ளூர் தமிழ் படைப்புகளுக்குச் சரியான சந்தை வாய்ப்பு இல்லாமைக்கு விசனம் தெரிவித்ததோடு தென்னிந்திய குப்பை இலக்கியங்கள் வந்து குவிவதாகவும் வேதனைப்பட்டார்.
ஈழத்து தமிழ் இலக்கியப் படைப்புகளையோ, படைப்பாளர்களையோ தமிழகம் மதிக்கவில்லை எனவும், மாறாக அங்கிருந்து வருபவர்களுக்கு நாம் குருதட்சணை வழங்கும் நிலையே தொடர்வதாகவும் தமது ஆத்திரத்தை வெளியிட்டார்.
கடந்த சனிக்கிழமை மாலை கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள 'மல்லிகை அலு வலகத்தில் நடைபெற்ற, அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த ஈழத்துப் படைப் பி ல க் கி ய வ |ா தி லெ. முருகபூபதியுட 6T6 இலக்கியச் சந்திப்பின் G3LumT G3g5 டொமினிக் ஜீவா இந் தக் கருத்துகளைத் தெரிவித்தார். −
G2)-
 ః தமிழைச் சர்வதேச மயப்படுத்துவதில் ஈடுபாடும்
காட்டும் ஈழத்துப்படைப்பாளிகள்
 
 
 
 
 
 

"மல்லிகை" வட்டத்தைச் சேர்ந்த இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்ட இச்சந்திப்பில் டொமினிக் ஜீவா தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
எமது இலக்கியப் படைப்புகள்
இலங்கை ரூபாவால் கூட சந்தைப்படுத்த
முடியாத ஒரு காலமிருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. எமது படைப்புகள், நூல்கள், சஞ்சிகைகள் டொலரில், ஸ்ரேலிங் பவுணில், யுரோவில் வாங்கப்படு கின்றன. ஈழத்து தமிழ் இலக்கியம் இன்று சர்வதேசச் சந்தையில் விலை
பட்டுக் கொண்டிருப்பது எமக்கெல்லாம்,
பெரிய சந்தோஷத்தைத் தருகின்றது. இதனைச் செய்தவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களே ஆவர்.
மேற்குலகுக்குச் சென்ற இந்தியர்கள் தமது பிள்ளைகளுக்குப் பரத நாட்டி யத்தைக் கற்பிப்பதோடும், கோயில் கட்டு வதோடும் நின்று விட்டனர். ஆனால், எம் மவர்களோ மேற்குலகில் சிறுசிறு குழுக் களாகச் சேர்ந்து இலக்கிய அமைப்பு களை ஏற்படுத்திக் கொண்டனர். அங்கு இலக்கியம் வளர்ப்பதில் எம்மவர்கள் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றனர்.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்று பல இலக்கிய அமைப்புகளை நடத்தி வருகின்றனர். 32இற்கும் மேற் பட்ட தமிழ் சஞ்சிகைகள் எம்மவரால் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டின் புத்திஜீவிகள் அறிவைப் பணம் பண்ணுவதிலேயே கருத்தாக இருக் கின்றனர். ஈழத்துத் தமிழர்களோ தமிழை சர்வதேச மயப்படுத்துவதில் ஈடுபாடு காட்டி
வருகின்றனர். இங்கிருந்து தமிழர்கள் அவல வாழ்வு வாழ விரும்பாமல் அகதி களாக மேற்குலகுக்குச் சென்றனர். அவர்கள் கொண்டு சென்றது தமது தாய் மொழி தமிழை மட்டுமே ஆகும். இதனைத் தமிழகம் தனக்குச் சாதக
மாகப் பயன்படுத்திக் கொண்டது. அங்கி
ருந்து தமிழ் நூல்கள் அச்சாகி மேற் குலகுக்கு அனுப்பப்படுகின்றன. அவை இந்திய ரூபாவில் இரண்டாயிரம், மூவா யிரம் என்று விலை மதிப்புக் கொண்ட வையாகும். அவர்களது சர்வதேச சந்தைக்கு மூலாதாரமாக அமைந்
திருப்பது ஈழத்துத் தமிழர்கள்தான்.
அறிவுசார் புத்தகங்களை விட, ஆசைப் புத்தகங்களே தமிழ் நாட்டில் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதியினதும், சினிமாக்காரி யினதும் பட்ங்களைப் போட்டு எமது
தமிழினம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே
வருகின்றது.
பாரதியும், பாவேந்தனும் எமக்குப்
பாதை காட்டினர். புதுமைப்பித்தன் பேனா பிடித்துத் தந்தான். அதற்காக எமது
அறிவு விலை போக நாம் அனுமதிக்க
(Մ9լգաո5l.
தமிழ் நாடு எமது இலக்கியத்தை,
எழுத்தாளர்களை மதிப்பதாக இல்லை. ஆனால், நாம் தமிழகத்திலிருந்து வரும்
குப்பைகளையும் சந்தைப்படுத்திக்
கொண்டிருக்கின்றோம். அங்கிருந்து வரு
பவர்களுக்கு குருதட்சணை கொடுத்தாக வேண்டியுள்ளது.
-G3)

Page 9
இதற்கு ஒரு காரணமும் இருக் கின்றது. இந்தியச் சட்டத்தில் 16 மொழி கள் அங்கீகரிகப்பட்டுள்ளன. அதில் தமிழும் ஒன்று. இதன் பிரகாரம் அங்கீ கரிக்கப்பட்ட மொழிகளைக் கொண்ட இலக்கியங்களோ, புத்தகங்களோ அங்கு வரக் கூடாது என்பது விதிகளுள் ஒன்றாகும்.
எமது நாட்டைப் பொறுத்த மட்டில் இங்குள்ள படைப்பாளிகளின் கஷ்டம் இன்னமும் உணரப்பட்டதாகத் தெரிய எமது தமிழ் அந்நியரால் எவ்வளவு மோசமாக சுரண்டப்படுகின்றது.
வில்லை.
இதற்குத் தொடர்ந்தும் இடமளிக்க
(pLQuLDIT?
இந்தச் சந்தர்ப்பத்தில் மிக முக்கிய மான விடயத்தை உங்கள் சிந்தனைக்கு முன்வைக்க விரும்புகின்றேன். ஈழத்து எழுத்தாளர்கள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி மிக விரை வில் தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாடொன்று கூட்டப்பட வேண்டும். ஈழத்துத் தமிழ் இலக்கியம், தமிழ் எழுத் தாளர்களின் பிரச்சினைகள் இந்த மா நாட்டின் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உலகில் தமிழ் எங்கெல்லாம் வாழ்கின்றதோ, வளர்க்கப்படுகின்றதோ அங்கிருந்தெல்லாம் அறிஞர்கள், ஆய் வாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்ய வேண்டும். எங்களுக்குத் தமிழ் தான் வாழ்வு, தமிழ்தான் உயிர் மூச்சு என்பதை உலகுக்கு உணர்த்தியே ஆகவேண்டும்.
இந்த நாட்டிலுள்ள ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராவது இன்று வரை தேசத்தின் தமிழ் எழுத்தாளர் களைப் பற்றி குரல் கொடுத்திருக் கின்றாரா? இல்லவே இல்லை. நாங்கள் அமைக்கும் மேடைகளுக்கு வந்து எங்களுக்கே உபதேசம் செய்துவிட்டுப் போகிறார்களே தவிர, அவர்கள் மேடை போட்டு எமது பிரச்சினை குறித்து ஒரு நாளாவது பேசியதுண்டா? ஏன் பாராளு மன்றத்திலாவது குரல் எழுப்பியதுண்டா? இல்லவே இல்லை.
புரவலர் ஹாவழிம் உமரைப் புகழ்ந் தால் பிடிக்காதவர்கள் நிறையவே உள்ளனர். இலட்சாதிபதிகள், கோடீஸ் வரர்கள் ஏராளமாக இங்கு இருக் கின்றனர். ஆனால், ஒரு ஹாஷிம் உமர் மட்டும்தான் எப்போது வேண்டுமானாலும் எழுத்தாளர்கள் அழைத்த மாத்திரத்தில் முகம் சுழிக்காமல் ஆயிரமாயிரம் என அள்ளித் தந்து மகிழ்விக்கிறார். அந்த மனிதனைப் போற்றி வாழ்த்தாமல் வேறு யாரைப் பற்றித்தான் எழுத முடியும்?
வெறுமனே கடந்து போன காலத் தைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றி பேசிக் கால விரயம் பண்ன வேண்டிய தில்லை. எமது பிரச்சினையைப் பேச, இனி சர்வதேச மாநாடுதான் கூட்டப்பட வேண்டும். எமது மக்கள், எமது இனம், எமது மொழி இன்று உலகெங்கும் பரவி யுள்ளது. இந்த நிலையில் நாம் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கொண்டி ருக்க முடியாது. வெளியே வந்தாக வேண்டும்.
G2)

எமது மக்கள் புலம்பெயர்ந்ததால் வந்த மாற்றம் பெரியது. டேனிஸ் மொழியைப் படித்த தமிழன் அந்த இலக் கியத்தை தமிழில் கொண்டு வருகின்
றான். அதேபோன்று, பிரான்ஸ் மற்றும்
சர்வதேச மொழிகளைப் படித்து அந்த இலக்கியங்கள் தமிழுக்கு வந்து கொண்டி ருக்கின்றன. இது பெரிய சங்கதியாகும், உயர்வானதாகும்.
தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகள் வெளிவருகின்றன. தமிழில் இலத்திரனியல் ஊடகங்களும் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவை எழுத்தாளர்களை, இலக்கிய வாதிகளை மதிப்பதாக, கெளரவிப்பதாகத் தெரியவில்லை. இங்கு நிலைமை அப்படி யல்ல. ஒரு எழுத்தாளன் தும்மினால் கூட மறுநாள் அது செய்தியாக தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவருகின்றது. எழுத்தாளர்களுக்கு இங்குள்ள ஊட கங்கள் உயர்ந்த இடத்தைக் கொடுக் கின்றன. தமிழ் நாட்டிலோ சினிமாக்க
ாரிக்கும், அரசியல்வாதிக்கும் தான் இடம்
தரப்படுகின்றது. இது ஒரு சாபக்கேடாகும்.
கைலாசபதியை, டானியலை உலகில் தெரியாத தமிழன் இருக்க முடியாது. தமிழர் நெஞ்சங்களில் அவர் களைப் போன்றவர்கள் வாழ்கின்றார்கள். இதில் புதுமை என்னவென்றால் மரணத் தின் பின்னரே நாங்கள் பேசப்படுகின் றோம், தேடப்படுகின்றோம், உயிர் வாழும் போது, அவர்களை முழுவதுமாக நேசிக் கத் தவறுகின்றோம். இக்கோணத்தில் பார்க்கின்றபோது முருகபூபதியும் ஒரு
i
நம்பிக்கை நட்சத்திரம்தான். அவர் நிரந் தரமாகவும் முழுமையாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றார். சமுக உணர் வுடன் செயற்படுகின்றார். நாம் விளையும் அந்த அற்புதமான மாநாட்டை நடத்த சர்வதேச ரீதியிலான பங்களிப்பைச் செய்யும் பொறுப்பை பூபதி ஏற்றாக வேண்டும்.
கலந்துரையாடல்
அதன் பின்னர் இடம்பெற்ற கலந் துரையாடலின் போது, கருத்து வெளி
யிட்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால்,
அரசு பாடசாலைகளுக்கு சில தேவைப் பாடுகளைச் செய்து கொள்வதற்காக அதிபர்களுக்கு ஒரு தொகைப் பணம் ஒதுக்கிக் கொடுக்கப்படுகின்றது. அதில் ஆண்டு தோறும் புத்தகங்களை கொள் வனவு செய்ய 5 ஆயிரம் ரூபா செலவிட முடியும். இதனை எத்தனை அதிபர்கள் செய்கின்றனர். அவர்கள் துணை நூல்களை மட்டுமே வாங்குகின்றனர். எமது மண்ணின் இலக்கிய நூல்கள் வாங்க அவர்கள் தூண்டப்பட வேண்டும்.
இதற்கு நாம் மேல்மட்டத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அதிபர்கள் வேண்டும். அப்போதுதான் அது சாத்தியப்
கட்டாயப்படுத்தப்பட
.ւIւ- (լքւգալb.
அரசு கலாசார அமைச்சினுடாக வழங்கும் நூல் வெளியீட்டு உதவித் திட்டத்தை சரியாகப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். இம்முறை சிறுவர்
G15)

Page 10
நூல்களுக்கு நிதி உதவி வழங்க அறிவிக் கப்பட்டது. 168 சிங்கள நூல்களுக்கான பிரதிகளும், 18 ஆங்கில நூல்களுக்கான பிரதிகளும் வந்துள்ளன. ஆக தமிழில் 16 நூல்களுக்கான பிரதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.
இது விடயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நூலொன்றை வெளி யிடுவதற்காக நாம் எழுத முன்வர வேண்டும். சர்வதேச மாநாட்டுக்கான மையத்தளமாக முருகபூபதியை பயன் படுத்துவோம். இங்கிருந்து நாமனைவரும்
இயங்குவதோடு சர்வதேச மட்டத்தில்
பூபதி இயங்கினால் மாநாடு நிச்சயம் வெற்றியளிக்கும் என்றார்.
"ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரன் கருத்துக் கூறும்போது, எமது படைப்புகள், சஞ்சிகைகள் உள்ளு ரிலும், சர்வதேச ரீதியிலும் சந்தைப்பட வேண்டுமானால், அதற்கு ஒரு வலைப்
SlsóT6076io (NET WORK) D 56 JTäsasů
பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நாம் கஷ்டப்பட்டு சஞ்சிகைகளை, நூல்களை வெளியிட்டு தபால் செலவை யும் செய்து பிரதிகள் அனுப்புகின்றோம். அவற்றுக்குப் பணம் வருவதுமில்லை, சந்தாக்கள் கிடைப்பதுமில்லை எனவும் அவர் கவலை தெரிவித்தார். இதில் புலம் பெயர்ந்த இலக்கிய நண்பர்கள் எமக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் கிழக்குப் பல் கலைக்கழக மெய்யியல் துறை விரிவுரை
யாளர் எஸ். வாசுகியும் ஆரோக்கியமான
ஆலோசனைகளை முன்வைத்தார்.
இறுதியாக, முருகபூபதி தமதுரையின்
போது, நாம் கடந்த காலக் குறைகளைத்
தேடி அலட்டிக் கொள்வதை விட, இனி
என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.
சர்வதேச மாநாட்டுத் திட்டம் இலகு வான பணியல்ல. மிகக் கஷ்டமான பணி. பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். அதற்கு எம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு விடக்கூடாது. பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். மாநாடு தொடர்பில் ஆழமாக ஆராயப்பட வேண்டும். திட்ட மிட்டுச் செயற்பட வேண்டும். இந்த
மாநாடு, எழுத்தாளர்களின் அடிப்படைப்
பிரச்சினையுடன், தேசியப் பிரச்சினை குறித்தும் பேசக் கூடியதாக அமைய வேண்டும். Lņas bufeb நடத்துவது பொருத்தமானதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் வதிரி ரவீந்திரன், தேவகெளரி, ப. ஆப்டீன், மு.பவரீர்,
முரீதர்சிங், ஆ.கந்தசாமி, அனோஜா ராஜ ழுநீகாந்தன், எஸ்.செல்வம், கனவுமதி
மாநாட்டை
உட்பட பல இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
(நன்றி : தினக்குரல் 24.02.2005)
G6)

ஆழிப் பெரலைப் பெரழிவு
சுனாமி என்ற இந்த ஆழிப் பேரலையால் நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டீர்களா? உண்மையென்றால் விவரமாகச் சொல்லுங்கள்?
மாத்தளை எஸ்.தனஞ்செயன்
இந்த கேள்விக்கு விரிவாகப் பதிலளிக்க வேண்டியது எனது பொறுப்பு. எனவே இதற்கான பதில் கொஞ்சம் நீண்டதாகவே அமையக் கூடும். எனது மகன் வீடு மோதரைப் பக்கமுள்ள "குரோ ஐலண்ட்" என அழைக்கப்படும் காக்கை தீவில் கடலோரம் சரிந்த பக்கம் அந்த வீடு அமைந்துள்ளது. அங்குதான் இரவு நான் தங்குவது வழக்கம். உடல் நலமில்லாத எனது துணைவியாரும் அங்குதான் வசிக்கின்றனர்.
கிறிஸ்மஸ்ஸிற்கு அடுத்த நாள், காலை வழமை போல நான் புறப்பட்டு பஸ்ஸில் மல்லிகைக் காரியாலயத்திற்கு வந்து சேர்ந்தேன். எனது கவனம் முழுதும் அன்று மாலை நான் முன்னரே திட்டமிட்டிருந்த மல்லிகையின் 40ஆவது ஆண்டு மலர் வெளியீட்டைப் பற்றியே இருந்தது. காலை 10-11 மணியளவில் சற்றுப் பரபரப்பாக இருந்த்து. நான் இதைப் பெரிதாகக் கவனத்தில் எடுக்கவில்லை. முன்னர் பின்னர் இப்படியொரு அவலம் நடந் திருந்தால் தானே அதன் பாரிய தாக்கம் எனக்குப் புரிந்திருக்கும்? எனவே, ஒரே நோக்கில் நான் இயங்கினேன். பகல் இரண்டு மணியளவில் நானும், நண்பர் ஆப்டீனும் தமிழ்ச் சங்கத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம்.
அங்கு கூடப் பெரிய பரபரப்பு இல்லை. மந்தநிலையே காணப்பட்டது. இந்தச் சர்வதேசப் பேரழிவு முதல்நாள் ஏற்பட்டிருந்தால் கூட, நான் விழாவைப் பின் போட்டிருப்பேன்.
சகலருக்கும் அழைப்பனுப்பி, விழா ஏற்பாடுகளைத் துரிதகதியில் செய்திருந்த எனக்கு, இச்சடுதி நிகழ்ச்சி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. நான் கூட்ட மண்டபத்திற்குப் போகாமல் விடுவது பொது வாழ்க்கையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என மெய்யாகவே நம்பிச் செயலாற்றினேன்.
^2 GN CZ

Page 11
இரண்டு பேர் வந்தாலும் போதும், ஒப்புக்கு வரலாற்றுப் பதிவுக்காக முதற் பிரதியை வந்தி ருந்த ஒருவரிடம் கொடுத்து ஆசி பெறுவதே எனது நோக்கமாக இருந்தது.
ஆனால், கூட்டம் ஆரம்பிக்கும் நேரத்தில் ஒருவர் ஒருவராகப் பலர் வந்து சேர்ந்து விட்டனர். மாத்தளை, வத்தளை, பாணந்துறை போன்ற தூர இடங்களில் இருந்தெல்லாம் மல்லிகை அபிமானிகள் வந்து விட்டனர். களனிப் பல்கலைக் கழகப் பிரஞ்சுப் பேராசிரியர், ஜெர்மனியைச் சேர்ந்த இலக்கிய அபிமானியும், பெர்லின் நிகழ்ச்சிக்கு அழைத்தவரு மான இலக்கிய நண்பர், தமிழகப் பெண் கவிஞர் திலக் பாமா ஆகி யோரும் விழாவிற்குச் சமூகமளித் திருந்தனர்.
எனவே, வெகு எளிமையாக, அடக்கமாக மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளியீட்டு விழாவைச் சுருக்க நிகழ்ச்சியாக நடத்தி முடித்தேன். கூட்டத்தைத் துரிதமாக ஒருவழியாக ஒப்பேற்றி விட்டு, அவசர அவசரமாக வீடு திரும்பினால் காக்கை தீவுச் சந்தி ஒரே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் செய்வதறியாது பதுங்கிப் போய் கூட்டமாக அங்க ஒரே இருட்டு. சன நெரிசலால் கூட்டம் நகர
லாய்த்துக்கொண்டு நின்றனர்.
முடியாமல் தேங்கிப் போய் நின்றது. குழந்தைகளின் அழுகை ஒலி விட்டு விட்டுக் கேட்டது.
மின்சாரம், தண்ணீர் நிறுத்தப் பட்டு விட்டது. ஒரே இருட்டு.
பிள்ளைகள் அழுதழுது களைத்துப்
போய் விட்டனர். வீட்டிற்குள் கடல் நீர் திடீரென உட்புகுந்ததால் வீட்டி லுள்ள சகல பொருட்களும் நனைந்து கெட்டுப்போய் விட்டன. அதில் பெரிய அவலம் என்னவென்றால் பல இலட்சம் பெறுமதியான புகைப்பட நவீன சாதனங்கள் உப்பு நீரினால் குளிப்பாட்டப்பட்டு விட்டன. இன்
னமும் பாவிக்கப்படாத பல நவீன
சாதனங்கள் பயனற்றவையாக உரு மாற்றப்பட்டன. அத்துடன் வீட்டு மதில் தகர்ந்து போய்விட்டது.
இத்தனை துயரங்களுக்கு மத்தி யில் நான் மகனுடன் தெருவில் தவித்துப் போய், தனித்துப் போய்
நின்று கொண்டிருந்தேன்.
இந்த அவலத்திற்குள்ளே
நீங்கள் விழுந்து கையைக் காலை
உடைச்சுப் போட்டிடாதீங்க. இந்த வயசிலை அது வேறை உபத்திரவம். நானெல்லாத்தையும் பாக்கிறன். நீங்க மல்லிகைக்குப் போய் அங்கை படுங்க!' என்று மகன் திலீபன்
கூறினார்.
ஆட்டோ வர மறுத்தது. நின்று நின்று பார்த்து விட்டுக் கடைசியில் பொறுமை இழந்தவனாக நடக்கத் தொடங்கினேன். மட்டக்குளியி லிருந்து கொச்சிக்கடை வரை ஒரே நடை பவனி. இரவு நடுநிசி நேரம், தண்ணீர்த் தாகம், பகல் முழுவதும்
GB)

அலைச்சல், நடந்த அவலத்தின் அதி உயர் பயங்கரப் பின் விளைவுகள் பற்றிச் சிந்தித்துக் கொச்சிக்கடை வேளாங்கன்னி மாதா
கொண்டே
கோயிலுக்கு அருகாமையில் கதிரேசன் விதியிலுள்ள மல்லிகைக் காரியாலயத் திற்கு வந்து சேர்ந்தேன்.
மணியைப் பார்த்தால் 12.30 ஒரே பசி. இரவுச் சாப்பாட்டிற்கு எந்த விதமான நம்பிக்கையுமற்ற நிலை.
நிலத்தில் விரித்துப்
போட்டுக் கட்டையைச் சாத்தினேன். தூக்கம் வரவே மறுத்தது. வெறும் வயிறு கொதித்தது.
இப்படி வெற்றுத் தரையில் பேப்பர் விரித்துப் பத்து நாட்களுக்கு மேல் மல்லிகையில் படுத்தெழும்பி யதை என் சீவியத்தில் என்றுமே மறக்க மாட்டேன். இது ஒரு புதிய
அநுபவம்.
ஒரே மன விரக்தி. பேப்பரை எடுத்து
1 Sr...W. 3. S- - N
భ அமரர் எஸ்.வி. தம்பையா
சிறுகதைப் போட்டி.
மல்லிகையின் வளர்ச்சிக்கு அபார ஒத்துழைப்பு
நல்கியவரும், தொழிலதிபரும், எழுத்தாளருமான மறைந்த எஸ்.வி. தம்பையா அவர்களது ஞாபகார்த்தச்
சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்படவுள்ள தென்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இப்போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் முன்னர் வெளியிடப்படாத படைப்புகளாகவும் "புல்ஸ்கப் தாளில் எட்டுப் பக்கங்களுக்கு மேற்படாமலும் அமைய வேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் போட்டிச் சிறுகதை' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
முடிவு திகதி : 2005 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது, பரிசுக் கதைகள் தகுந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.
முதற் பரிசு 7000/-
இரண்டாம் பரிசு : 5000/-
மூன்றாம் பரிசு : 3000/-

Page 12
படிகர்
φσώυή 2004
- நாச்சியாதீவு பர்வீன்
தங்களின் மல்லிகையை 98களின் போது மொத்தமாக வாங்கி சுவைத்துள்ளேன். தங்களோடு கதைத்துமுள்ளேன். அதன் பிற்பாடு 2003களில் தான் மீண்டும் மல்லிகை யுடனான தொடர்பை தொடர வாய்ப்புக் கிடைத்தது. ப.ஆப்தீன், மேமன்கவி மற்றும் கெகிராவ சஹானா, அன்பு ஜவஹர்ஷா ஆகியோர்கள் தங்களைப் பற்றி செல்லக் கேட்டிருக்கிறேன். அச்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம் தங்களின் தொடர் கட்டுரையை வாசித்ததின் மூலம் தங்களின் அநுபவங்கள் எமக்கு வழிகாட்டியாக வழி கோலுகிறது.
இத்துணை ஆண்டுகள் தவறாது நடைபோடும் மல்லிகை நாடு தழுவிய ஒரு நந்தவனம் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும். அத்தோடு இம்முறை 40ஆவது ஆண்டு மலரினை வாங்கிப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கம்பவாரிதியின் மிக, மிக நீண்ட கவிதை எதைச் சொல்ல வருகின்றோம் என்று புரியாத ஒரு சில சிறு கதைகள் தவிர்த்து மற்றவைகள் தரமான தங்கங்கள், அநு.வை. நடராஜாவின் கட்டுரை, ஏ.இக்பாலின் கட்டுரை என்பன. நாம் சேமிக்க வேண்டியவைகள். மேமன் கவி, இளைய அப்துல்லாஹ் ஆகியோர்களின் படைப்புகளும் அவதானிக்கத்தக்கவை.
மல்லிகையில் ஒரு சில குறிப்பிட்டவர்களே எழுதுகின்றனர் என்ற ஒரு விமர் சனத்தை தொடர்ந்தும் நான் செவியேற்றுள்ளேன். ஆனால் அந்த விமர்சனம் வலு வற்றது என்பது என் கருத்து. ஒரு தனிமனிதனால் அவனது கனவுகள், எதிர் பார்ப்புகள், சுகங்கள் எல்லாம் தியாகம் செய்துவிட்டு மானிடத்தைப் பலப்படுத்தும் நோக்கோடு புரட்சிப் பயணம் மேற்கொண்டிருக்கும் உங்களை ஒரு ஈழத்தவர் என்பதில் நாம் பெருமையடைகின்றோம். மூன்று வரிகள் எழுதிவிட்டால் தன்னை கம்பனாயும், பாரதியாயும் கற்பனை பண்ணும் நமது இளைய தலைமுறையினர் எழுத்துலகில் தம்மை வருத்தி பயணம் செய்த கே.டானியல், மஹாகவி, சில்லையூர், ஷம்ஸ் ஆகியோர்களைப் பற்றி இன்னும் தெரியாமலே இருக்கின்றார்கள்.
தங்களின் சில படைப்புகளில் நான் முரண்பாடுடையவன். ஆனால் பல படைப்புகள் என்னைக் கவர்ந்தவை! நான் அநுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதிப்
(20)

படுத்துபவன் என்ற ரீதியில் எமது இலக் கிய நகர்வுகள் பற்றி ஒரு சிறு குறிப்பை எழுதுவது நல்லது என நினைக்கின்றேன்.
இலக்கிய வரட்சியிலிருந்து மெல்ல
விடுபட்டு மலர்ந்து வரும் போக்கினை எமது மாவட்டம் கொண்டி
மெல்ல
ருக்கிறது. ஆரம்பத்தில் ஏகப்பட்டவர்கள் எழுதியிருக்கின்றார்கள். அவர்களில் அநு. வை நாகராஜன், அன்பு ஜவஹர்ஷா ஆகியோர்களே! இன்னும் இலக்கிய படைப்பவர்கள் இன்றைய பொழுது களில் புற்றீசல்களாய் கவிதை எழுதத் துடித்து வெளிக் கிளம்பும் இளசுகள், வந்த வேகத்திலே காணாமல் போய்விடும் ஒரு போக்கு எமது மாவட்டத்தில் வெகு வாகக் காணப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி அன்பு ஜவஹர்ஷா மற்றும் நான், இன்னும் சில இலக்கிய நண்பர்கள் இணைந்து அநுராதபுரம் இலக்கிய வட்டத் தினை நிறுவி எம்மாலான இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருகின்றோம். அவ்வாறே கடந்த வருடம் நட்சத்திர நற் பணி மன்றம் எனும் பெயரில் உருவான ஒரு அமைப்பு படிகள்’ எனும் இலக்கியச் சஞ்சிகையை வெளியிடுகிறது. அன்பு ஜவஹர்ஷா அடிக்கடி சொல்வார், தம் இலக்கியத் தரம் உயர வேண்டுமென
நினைப்பவர்கள் மல்லிகை போன்ற
தரமான சஞ்சிகைகளைப் பெற்று வாசிக்க வேண்டுமென்று. படிகளின் 5
ஆவது இதழை இத்தோடு இணைத்து
அனுப்புகிறோம். தங்களைப் பற்றிய சிறிய விவரணம் ஒன்றை கிடைத்த தகவல்களை மட்டுமே வைத்து நான்
எழுதியுள்ளேன். தங்களது போட் டோவை அட்டைப் படமாக்க மிகுந்த
முயற்சி எடுத்து அதில் ஒரளவு வெற்றி
கண்டோம். எமது மாவட்ட இலக்கியத்
தரத்தைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக மல்லிகையில் எமது பகுதி ஆக்கங்களும் மலருவது வரவேற்கத்தக்கது.(உ+ம் - கெகிராவ சஹானா)
மணக்கும் மல்லிகை
வாழ்க்கையின் அநுபவங்களுக்கு உயிர் கொடுத்து நிஜமான நிகழ்வுகளை அடுத்தவரின் ரசனைக்கு ஏற்றவாறு படம் பிடித்துக் காட்டுவது ஆக்க இலக்கி யத்தின் அலாதியான பண்பாகும்.
புண்பட்ட எழுத்துக்களால் ஒரு சமூகம் சார்ந்த காத்திரமான படைப்பு களை இலக்கியத்தின் நிலா முற்றத்தில் நாம் தரிசிக்கலாம். இதில் ஒரு சிக்கலான விடயம் என்னவென்றால் பலரது எழுத் துக்கள் சமூகமயமாக்களுக்குள் அகப்படு வதில்லை. அத்தோடு சிலரது எழுத்
துக்கள் நிஜ வாழ்க்கையோடு முரண்
பட்டு இரு வேறு கோணங்களாக பாகு பட்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை யாகும். இதையும் தாண்டி சிலர் நிஜ வாழ்க்கையை எழுத்தில் சொல்ல முனைந்து அதில் வெற்றியும் அடைந் துள்ளனர்.
இந்த வகையில் ஈழத்து இலக்கியப் பரப்பிலே ஒரு காத்திரமான படைப் பாளியாகவும் எழுத்தில் வடிப்பதையே நிஜத்திலும் செயற்படுத்த முனையும் டொமினிக் ஜீவா அவதானிக்கத்தக்கவர்.
'A (2)

Page 13
வெறும் 5ஆம் வகுப்பு மட்டுமே படித்த போதும் தனது சமூகம் சார்ந்த வியக்கத் தக்க சிந்தனையோட்டத்தின் பயனாக இன்றைய நாட்களில் ஈழத்து இலக்கியம் உலகில் ஜாம்பாவானாக டொமினிக் ஜீவா அவர்கள் பிரகாசிப்பது அவரது தன்னம்பிக்கையையும் போராடும் குணத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது.
இன்றைய பொழுதுகளில் அச்சுக் கலை வெகுவாக வளர்ந்துபோய் புதிய தொழில்நுட்பங்களுக்கூடாக பிரசவிக்கப் படும் பல சஞ்சிகைகள் காலப்போக்கில் காணாமல் போய் இப்படியொரு சஞ்சிகை வெளிவந்ததா என்று அதே தலைமுறையினர் கேட்குமளவுக்கு புதிய சஞ்சிகைகளின் தோற்றமும் மறைவும் குறுகிய கால எல்லைக்குள் முடங்கி முடிந்து போய்விடுகின்றது. அதற்கான நிஜமான நிறையக் காரணங்களை கூற முடியும். பொருளாதாரச் சிக்கல், சந்தா தாரர்களின் அசமந்தப்போக்கு, சந்தைப் படுத்தலில் உள்ள நெருக்கடி இன்னும் நியாயமான காரணங்கள் எத்தனையோ! இந்த வகையில் ஒரு சஞ்சிகையின் ஆயுளை தன் ஆயுளை பணயம் வந்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் மல்லிகை ஜீவா அவர்கள் தன்னம் பிக்கையுள்ள எழுத்துலக போராளி
யாவார்.
மல்லிகை என்றாலே டொமினிக் ஜீவா என்றும் ஜீவா என்றால் மல்லிகை என்றும் இன்று உலகத் தமிழ் இலக்கியப்
பரப்பில் பரிச்சயமாகியிருக்கும் ஜீவா
தலித்துவ சிந்தனைக்கூடாக பயணித்த ஒரு இலக்கிய சாதனையாளராவார்.
1966களில் ஆரம்பித்த மல்லிகையின் போராட்டப் பயணம் சுமார் 40 ஆண்டு களை அண்மித்து இன்று வரைக்கும் வெற்றிநடை போடுகிறது என்றால் அதன் பின்னணியில் ஜீவாவின் கனதி யான உழைப்பு, அயராத அர்ப்பணிப்பு, தனது சமூகம் மீதான மெய்யான அன்பு இவைகள் தான் பிரதானமான காரண LDITSub.
ஒரு தனிமனிதனின் முயற்சியின் விளைவாக உருவாகிய மல்லிகை இன்றைய பொழுதுகளில் வெகுவாகப் பேசப்பட்டாலும் மல்லிகையின் ஆரம்பம் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்க வில்லை. முடி வெட்டும் (நாவிதன்) தொழிலை மேற்கொண்டிருந்த டொமினிக் ஜீவா அவர்களை ஆதரித்தவர் களையும் விட, எதிர்த்தவர்களே அதிகம் பேர். அவரை ஒருதலைப்பட்சமாக விமர் சித்தவர்களும், அவரது படைப்புகளைக் கொச்சைப்படுத்தி தாழ்த்த நினைத்தவர் களும் அநேகம் பேர். இத்தனை சவால் களுக்கும் மத்தியில் தெளிந்த நீரோட்ட மாய் ஜீவாவின் மல்லிகைக்கூடான பயணம் இன்று மட்டுக்கும் ஆரோக்கிய மாகவே உள்ளது. டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்" எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு சுவையான கவிதையாகும்.
தனது தந்தையின் சொத்தான
ஜோசப் சலூனில் ஆரம்பித்து எழுத் துலகின் நாடி நரம்பு நாளம் என்று எல்லா
வற்றிலும் பரவியிருந்த தனது பரந்த
சிந்தனையை நிஜமாய் அழுதும், சிரித்
(22)

தும், சிந்தித்தும், சந்தோசித்தும் அவரது வாழ்நாளின் கனவுகள், ஏக்கங்கள், எதிர் பார்ப்புகள் என்று அர்ப்பணிப்புகளுக் கூடாக ஒரு சவரக்கடையில் இருந்து கொண்டே இன்று தனது காத்திரமான படைப்புகளால் சந்தனமாய் மணக்கிறார் ஜீவா அவர்கள். மெய்யாகவே ஒரு யதார்த் தமான படைப்பாளி வெறும் சடத்துவ வாதங்களால் கவரப்படுவதில்லை. அவ் வாறே வெற்றுப் புகழுக்கும், வெள்ளிக் காசுக்கும் அடிபணிந்து வாலாட்டித் திரியும் ஈனம் ஒரு மெய்நிலை எழுத் தாளனுக்கு வருவதில்லை. இதனை வர லாற்று ரீதியில் நிறுவியவர்களின் வரிசை யில் டொமினிக் ஜீவாவும் உள்வாங்கப் பட வேண்டியவர். பெயருக்குப் பின்னால் பட்டங்களை வைத்துக் கொண்டு தமது படைப்புகளே காத்திரமானவை என எண்ணுபவர்களுக்கு டொமினிக் ஜீவா விடம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு கள் நிறையவே உள்ளன. மல்லிகை இன்று நாடு தழுவிய ஒரு நந்தவனம் ஒரு வளமான வாசகர் வட்டத்தை தன தாக்கியிருக்கும் பிரபல்யமான சஞ்சிகை யாக இன்றைய பொழுதுகளில் மனம் நிறைந்து குறிப்பிடலாம். மல்லிகையின் வயதைப் போலவே அதன் ஆக்கங்களும் காத்திரமானவை. மூத்த எழுத்தாளர்கள் பலரும் முகர்ந்து அதன் கிளைகளில் உட் கார்ந்து பயணிக்கின்ற பொழுது இளைய வர்கள் இன்னும் மல்லிகையை நெருங்க
ஏன் தயங்குகிறார்கள் என்பது மட்டும்
இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
மல்லிகை ஜீவா மனப்பதிவுகள் திக்குவல்லை கமாலின் அண்மைக் கால அறுவடையாகும். டொமினிக் ஜீவாவின்
அநுபவங்களை வடித்தெடுத்து சொல் லோவியமாக்கியிருக்கும் திக்குவல்லைக்
கமால் டொமினிக் ஜீவாவை உள்ளூர
நேசித்தவர் மட்டுமல்ல. உண்மையில் வெகுவாக அருகில் இருந்து கொண்டே வாசித்தவர் என்றும் தனது மனப்பதிவு களுக்கூடாக சுட்டியுள்ளார்.
ஜாதியக் கொடுமை ஒழிய வேண்டு மென்று போராடிய கே.டானியலைப் போலவே குரல் கொடுக்கின்ற ஜீவா அவர்கள் தான்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக் களின் அழுகுரல்களுக்கு ஆறுதலாயும், அவலங்களுக்கு ஒத்தடமாயும், அவர் களின் மனஉளைச்சல்களுக்கு மருத்துவ னாகவும் தனது படைப்புகளால் பணி யாற்றுவது அவர் மீதான இனந்தெரியாத நட்பையும், மதிப்பையும் உண்டு பண்ணுகிறது.
ஈழத்தில் மட்டுமல்லாது உலகத் தமிழ் இலக்கியப் பரப்பினால் வெகுவாக அறியப்பட்டிருக்கும் டொமினிக் ஜீவா அவர்கள் பல கெளரவங்களோடு சாகித்திய மண்டலப் பரிசையும் பெற் றவர். அத்தோடு பிறமொழி இலக்கிய வாதி களாலும் நன்கு அறியப்பட்டவர். படைப்பாளிகளுக்கு உதவும் வகையில் மல்லிகைப் பந்தல் வெளியீட்டகத்தை உருவாக்கி பலரது புத்தகங்களை அதன் மூலம் வெளியிட்டு ஊக்கப்படுத்தும் உயர்ந்த பண்பு ஜீவாவிடம் அதிகமே காணப்படுகிறது. அவ்வப்போது சில முரண்பட்ட இலக்கிய நகர்வுகளை ஜீவா அவர்கள் கொண்டிருந்தாலும் கனதியான படைப்புகளைத் தருவதில் ஒருபோதும்
சளைக்காதவர்.
( 23)

Page 14
இஸ்லாமியச் சிந்தனையோட்ட
முடைய எழுத்தாளர்களோடு முரண் பாடுடையவர் மல்லிகை ஜீவா என்று
யாரோ சொன்ன ஞாபகம். ஆனால
மல்லிகையின் எழுத்தாளர்கள், வாசகர் கள் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்களே என்பதை பார்க்கும்போது இவ்வாதம் வலுவிழந்து போகிறது. வெளிநாட்டு இலக்கியப் பயணங்களுக் கூடாக நிறைய அநுபவங்களை சேமித் திருக்கும் டொமினிக் ஜீவாவிடம் இருந்து இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கிறது.
இந்த நேரத்தில் மல்லிகையின் 40 ஆவது ஆண்டுமலர் மணக்கப் போவதாக எமக்குச் செய்தி கிடைத்தது. மிக நீண்ட ஆயுளோடு வரலாற்றுச் சாதனை படைத்து வரும் மல்லிகையின் பயணம்
மிக நீண்டதாய் அமைய வாசகர்கள்
பாலமாய் அமைய வேண்டுமென கேட்டுக்
கொள்வதோடு, மல்லிகையின் ஆண்டு விழா சிறப்புற வாழ்த்துகிறோம்.
இது மல்லிகையின் வெறும் குறுக்கு வெட்டுமுகம்தான். ஆனால் ஒரு சஞ்சிகை வழமையாக எதிர்நோக்கும் அத்தனை சவால்களையும் மல்லிகையும் மல்லிகை ஜீவாவும் எதிர்நோக்கியுள்ளனர். பல தடவைகள் மல்லிகையின் கால தாமதம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்த போதும் தன்னை சுதாகரித்துக் கொண்டு மீண்டும் பிரவசமாகிய புதிய உத்வேகத்துடன் அதன் வெற்றிப் பயணம் தொடர்கின்றது. தமது இலக்கிய நுகர்ச்சி மேம்பட வேண்டுமென நினைப்
பவர்கள் மல்லிகையையும், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையும் வாசிப்பது அவசியம்.
சுமார் 30 இற்கும் மேற்பட்ட இலக் கிய நூல்களைஅமல்லிகைப் பந்தல் வெளியீட்டகத்திற்கூடாக வெளியிட்டி ருப்பது அவதானிக்கத்தக்கவை. இதில் டொமினிக் ஜீவாவின் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் எனும் ஜீவாவின் வரலாற்று நூலின்
ஆங்கிலப் பதிப்பும் உள்ளடங்கும்.
மற்றெந்த சிற்றேடுகள், சஞ்சிகை களுக்கு இல்லாத ஒரு உயர்ந்த பண்பு
மல்லிகையிடம் காணப்படுகிறது. அது
தான் அட்டைப்பட அலங்கரிப்பு. பொது வாகவே அட்டைப் பகுதி சித்திரங்களால் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால் இந்த மரபி லிருந்து மாறுபட்டு இலக்கிய பிர பலங்களை அட்டைப்படத்தில் வைத்து அழகு பார்க்கிறது மல்லிகை.
/ N
வருந்துகின்றோம்.
பழம் பெரும் பத்திரிகையாளரும், சமூக சேவையாளருமான திரு. எஸ்.எம். கார்மேகம் அவர்கள் சமீபத்தில் எம்மைவிட்டு மறைந்து விட்டார். அன்னாரது இழப்பு ஊடாகத் துறைக்கு ‘பெரும் இழப்பாகும். அன்னாரது மறைவிற்காக மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
- ஆசிரியர்
ܠ
اس
(22)

1. சுனாமி தந்த சேதிகள்
சுனாமி !
இலங்கையில் இதுவரை காணாத இயற்கை அனர்த்தத்திற்கு பேர் பெற்றுவிட்ட நிகழ்வு எத்தனையோ ஆயிரம் உயர்களைக் காவு கொடுத்துவிட்டோம். போர் அலைகளால் அழிந்து நலிந்து கிடந்த ஒரு தேசத்திற்கு பேரலைகளால் வந்த பாரிய அழிவுச் சோதனைதான். ஆனால் இந்த சோதனைக்கு மத்தியிலும் அந்நிய தேசங்கள் வழங்கிய உதவிகள் மூலமும், சக சகோதர மக்கள் வழங்கிய நிவாரண உதவிகள் மூலமும் இந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பி விடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் அந்தச் சோதனைகளுக்கு மத்தியிலும் இத்துணை காலம் இந்த தேசத்தை நாசப்படுத்திக் கொண்டிருந்த இனவாத அரசியலும் அதன் கீழ்த்தனங்களும், நிர்வாக துஷ்பிரயோகங்களும் இந்த பேரழிவுக்கு மத்தியிலும் தனது அரக்க கரங்களை விரிப்பதில் பின் நிற்கவில்லை என்பது பெரிய கொடுமைதான்.
வாரி வழங்கிய வெளிநாடுகள் எனும் பாரி வள்ளல்களின் உள்நோக்கம் (சில நாடுகளின் நோக்கம் மனிதாபிமானம் என்று இருந்தாலும்) என்ன என்பதை உணர்ந்து இருப்பவர்கள் பிராந்திய, அதிகார, ஆதிக்க அரசியலைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் மட்டும்தான் என்பது நமக்கு புரியும்.
அதேவேளை, சக சகோதரர்கள் வாரி வழங்கிய நிவாரண உதவிகளின் வேகத்தைக் கண்டு இந்தத் தேசத்தில் தேசிய ஒருமைப்பாடு வந்துவிட்டதாக நாம் எண்ணிக் கொண்டிருப்பதும் ஒருவகையான மாயைதான். உண்மையில் அப்படி வாரி வழங்கிய சகோதரர்களின் மனதில் தேசிய ஒருமைப்பாடு இருந்ததா? அல்லது மரண
பயத்தின் காரணமாக எழுந்த மனிதாபிமானாமா? என்பது உளவியல் சார்ந்த கேள்வியாக எனக்குப் படுகிறது. அப்படியும் சரி நமக்குத் தேவையான ஒருமைப்பாடு பாரிய அழிவு ஒன்றுக்குப் பின் வந்துவிடும் என்று நாம் நம்புவோம் என்றால் சுனாமி யினால் தம் உறவுகளையும் உடைமைகளையும் இழந்த வர்களைப் பற்றியும், அந்த நிகழ்வுகளில் காணாமல் போனவர்களைப் பற்றியும் சக சகோதரர்களுக்கும், ஆட்சியாளர்களுக் கும் ஏற்பட்டு இருக்கும் அதே அள வான அனுதாபம் கடந்த 20 வ ரு ட ங் க ஞ க் கும் மேலான போர் அரக் கனின் கொடுரத்தால் பலர் தம் உடைமை
-(25)

Page 15
களை இழந்த போதும், பெருந் தொகை யினர் காணாமல் போன போதும் வந்து இருந்தால், ஒருமைப்பாடு வந்திருக்க வேண்டுமே!
நமக்குத் தேவையான
ஆனால் வரவில்லையோ!
சுனாமி அனர்த்தத்திற்கு பிறகு
தேசிய ஒருமைப்பாடு வந்துவிட்டதாக
சொல்வதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. இந்த சுனாமி அனர்த்தத்தினால் நாம் இழந்த உயிர்களிட்ட அனுதாபம் நமக்கு இருக்கிறது. உதவிய கரங்களின் மனிதா பிமானத்தில் நமக்கு சந்தேகம் இல்லை என்று சொல்லுவோமே. ஆனால், தேசத்தைக் கட்டியெழுப்பவோ அல்லது தேசிய ஒருமைப்பாடான ஒரு தேசத்தை நாம் காணவோ வெறுமையான அனு தாபம் மட்டும் போதாது. அதற்கு அப் பால், அந்த ஒருமைப்பாட்டிற்கும், கட்டி யெழுப்புவதற்கும் தேவையான சகல
விதமான, மானசீகமான, நடைமுறைக்குச்
சாத்தியமான யதார்த்தங்களை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே நமக்குத் தேவை யான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப சாத்தியமாகும்.
இயற்கை அதன் கடமைகளை செய்துகொண்டிருக்கும். அது ஆக்கும். அழிக்கும். அதனை நாம் யாரும் தடுக்க முடியாது. இயற்கை எவ்வாறு தனது கடமையைச் சரிவர செய்து கொண்டிருக் கின்றதோ, அதே அளவான உணர்வுடன் அரசு, மக்கள், கட்சிகள், தலைவர்கள் தமது கடமையை சரிவரச் செய்வார்களா னால், நமக்கும் தேவையான ஒற்றுமை யும் கட்டியெழுப்புதலும் தானாக சாத்தியமாகி விடும்.
@୭
8. உயிரின் ஒலி
ஜனவரி 261
சுனாமி அனர்த்தம் முடிந்து ஒரு மாதம் முடிந்துவிட்ட நாள். சுனாமி பேரலைகளின் கூட்டத்தை விட, அந்தத் தேசத்தில் இருந்து வந்த அழிவை இட்டு எழுந்த அனுதாப அலை மிகப் பெரிது போல் தோன்றுகின்றது. பல்வேறு பிரார்த்தனைகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 26 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில், இணையத்தளத்தில்
ஒலிக்கும் உலகத் தமிழர் வானொலியினர்
தயாரிப்பில் சுனாமி அனர்த்தத்தின் நினைவாக ‘உயிரின் வலி என்னும் இறு வட்டு வெளியீட்டு நிகழ்வு நடந்தது.
உலகத் தமிழர் வானொலியுடன் தொடர்பு கொண்ட இளைஞர்களின் முயற்சி இது. அருமையான ஆறு பாடல்கள். சுனாமி தந்த சோகத்தை உணர்த்தி நிற்கின்றன. அடியனின் தலைமையில் நடந்த கவியரங்கில் பங் கேற்ற கிண்ணியா அமீர் அலி, மாவை வரோதயன், இரா. கோகுல்நாத் ஆகி யோரின் கவிதைகள் மனதைப் பிழிந்தன. இன்றைய அரசியல் கட்டமைப்பின் மீது கேள்விகளை எழுப்பி வியக்க வைத்தனர்.
அதேவேளை இவ்விழாவில் சிறப் புரையாற்றிய தேசமானிய கலாநிதி பொன்னா விக்னராஜா அவர்கள் ஆற்றிய உரை சுனாமி யுகத்தில் இலங்கை அரசி யல் நிலமையை மிகச் சரியாக எடுத்துக் காட்டியது. உலகத் தமிழர் வானொலி யைச் சார்ந்த இளைஞர்களின் இந்த

முயற்சி பாராட்ட வேண்டிய அதே வேளை நிகழ்வுகளை ஒழுங்கு செய் வதில் அவர்கள் இன்னும் தேர்ச்சிப் பெற வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. பேச் சாளர்களாய் கலந்து கொண்ட மூத்த ஒலி பரப்பாளர்களையும், அறிஞர்களையும் சபையில் இருந்து அழைத்து பேசவைத்த பொழுது மொட்டையாகக் காட்சி தந்த மேடை கண்ணுக்கு உறுத்தியது. அது
பரிசோதனை முயற்சி என்று சொன்னால்
பாராட்டலாம். ஆனால் மறதி என்றால் அந்த அந்த இளைஞர்கள் எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் அந்தக் குறையை நிவர்த்தி செய்யலாம். மற்றப் படி உலகத் தமிழர் வானொலியின் "உயிரின் வலி' என்னும் இவ் இறு வெட்டுக்கு இனி பல்வேறு விமர் சனங்கள் வரலாம். இருந்த பொழுதும் சுனாமி யுக வெளியீடுகளில் இந்த இறு வெட்டு ஒரு முக்கியமான பதிவு என்பது மறுப்பதற்கில்லை.
3. பழனிபாரதியின் சுனாமிக்
கவிதை
தமிழக கவிஞர் பழனிபாரதியை 80 களின் தொடக்கமே அறிமுகம். ஏற் கனவே அவரது நல்ல கவிதைகள் படித்த அனுபவம் உண்டு. இலங்கைக்கும் வந்து போய் இருக்கிறார். சினிமாவுக்கு அவர் போனபின் அவர் பேர் பிரபல்யம். சமீ பத்தில் பெண்ணிய கவிதைகள் சம்பந்த மாக வெளியிட்ட கருத்துக்களில் எனக்கு நிறைய முரண்பாடு உண்டு. ஆனாலும், சமீபத்தில், ஆனந்தவிகடன் இதழில் சுனாமி அனர்த்தத்தையிட்டு எழுதிய
கவிதை மனதைக் கவர்ந்தது. அந்த கவிதை உங்கள் பார்வைக்கு.
நீல மிருகம்
as LC36)
உன் உப்பு இனி எனக்கு ஆகாது என் மக்களின்
சாம்பலை
எனது உணவில்
சேர்க்க முடியாது.
நீலம் நிறமென்றிருந்தோம் விஷமென்று விளங்கி விட்டது.
ஆண்கள் பெண்கள் குழந்தைகளைத் தின்று வாயில் நுரை தள்ள இன்னும் வேட்டையாடக் காத்திருக்கும் தண்ணிர் மிருகமாய்
படுத்துக்கிடக்கிறாய்.
உலகெங்கும் உன் கரையில் குழந்தைகள் கட்டும் ஒவ்வொரு மணல் வீட்டிலும் இனி ஆவிகள்
வசிக்கக் கூடும்.
இனி எப்போதும்
உன்னிடம் ”* 6uJupTu E 6öt என் மக்களின் கண்ணிரில்
என்னால்
கால் நனைக்க முடியாது.
@

Page 16
ெக ள if
வீட்டுப் படலைக்கு முன்னால் ஆட்டோ ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிக் கொண்ட கலா, "காசு எவ்வளவு?" என ஆட்டோக் காரனைக் கேட்டாள். அவனோ, 'பரவா யில்லை இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு ‘விர் என ஆட்டோவைக் கிளப்பினான். ஆட்டோ வேகமாக ஓடி மறைந்தது. படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் கலா.
'யார் கலாவா? வாடியப்பா உன்னைக் கண்டு கன காலமாய் போச்சு' என்று முகம் மலர முகமன் கூறிக் கொண்டே முற்றத்திற்கு ஓடி வந்தாள் கெளரி. கலாவின் கைகளைப் பிடித்து உள்ளே கூட்டிப் போய் பிளாஸ்ரிக் கதிரையில் உட்கார வைத்தாள். எதிரே தானும் ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு இருந்தாள்.
"இடப் பெயர்வோட ஆர் இருக்கினம், ஆர் செத்திட்டினம் என்று கண்டுபிடிக்க முடியாமல் கிடக்கு” என்ற கலா "எங்கேடியப்பா உங்களின்ர கல் வீடு இருந்த இடமே தெரியவில்லை’ என்று கேட்டாள்.
“சண்டைத் துவக்கத்தில முதல் அடித்த ஷெல் எல்லாம் எங்களின்ர பரந்தனுக் குத்தானே. வீடு வாசல் இருக்குமே? புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகல்லோ நாங்கள் வந்து இந்த ஒலை வீட்டைப் போட்டுக் கொண்டு இருக்கிறம். இன்னும் என்ன நிச்சயமோ? அது போகட்டும். இந்தப் பக்கம் எப்போ காத்து அடிச்சுது. நல்லாய் இருக் கிறீயே" என்று விசாரிக்க ஆரம்பித்தாள் கெளரி.
“எனக்கு ஒரு குறையும் இல்லையடி யப்பா’ என்று தொடங்கிய கலா “என்ரை - Alth ax யவர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில (666) அவன்தான்! வேலை செய்யுறார். ரெண்டு பிள்ளையஸ். மூத்த பிள்ளைக்கு ஆறு வயது. அடுத்த - திருநகர் நடராசன் பொடியனுக்கு நாலு வயது. ஆண்டவனே என்று எங்களுக்கு ஒரு குறையும்
(28)-
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லை. இவரின்ர தாய் திரு நகரில இருக்கிறா. அவவக்கு சுகமில்லை என்றாப் போல பார்க்க வந்த நான்
அவவைப் பார்த்திட்டுத் திரும்பய்க்கத் தான் உன்ர ஞாபகம் வந்தது. எதிரே
ஆட்டோவும் நின்றது. ஆட்டோக் காரனிட்ட விசாரித்துப் போட்டுத்தான் அதில ஏறிவந்தனான். அவனுக்கு உன்னை நல்லாத் தெரியுமாமே, உண்மையா? என்னை ஏற்றி வந்த காசைக் கூட அவன் வேண்டாம் என்று
போறான்' என்று கூறி முடித்தாள் கலா.
"ரகுவைச் சொல்லுறியே, ரகு தங்க மானவர். நான் கலியாணம் செய்த காலத் தேயிருந்து எங்களோடு பழகின வர். என்ரையவர் வெளிநாட்டுக்கு போறதிற்கு முன்னே ஆட்டோ வச்சுத்தான் ஓடினவர். அவரின்ர பழக்கத்தில வீட்டை வந்து போய் நல்லாய் பழகிட்டார் ரகு, அவர் எங்களுக்கு எவ்வளவோ உதவியிருக் கிறார். ஆனையிறவுப் பக்கமிருந்து ஆமி கிளம்பி வெடில் அடிச்சுக் கொண்டு
வரய்க்க ஷெல் பட்டு அப்பா செத்துப்
போனார். திறந்து கிடந்த கதவுகளை இழுத்து சாத்த நேரமில்லை. அவ்வளவு ஷெல்லடி. நானும் அம்மாவும் பட்ட அவதி வாயால் சொல்ல முடியாது. அந்த நேரத்தில் தன்ர உயிரையும் மதிக்காமல் ஓடிவந்து எங்களை ஆட்டோவில் ஏற்றி கந்தபுரம் கொண்டு போய், அப்பாவையும் தகனம் செய்து எங்களுக்கு இடவசதியும் செய்து தந்தவர். மீளக் குடியமர பரந் தனுக்கு வந்தாப் பிறகும் இங்கே வந்து எவ்வளவோ உதவியிருக்கிறார். வீட்டுக்கு வந்தால் வேடிக்கையாக சிரித்துக்
கதைப்பார். பொழுது போவதே தெரியாது. இப்ப கொஞ்ச நாளாய்த்தான் இஞ்ச வாரதில்லை. அல்லது இடையிடையே வந்து போவார். நான்தான் வராதை
யுங்கோ என்று சொல்லிப் போட்டன்'
ஆற்ற முடியாக் கவலையோடு சொன் னாள் கெளரி.
'ஏன் என்ன அப்படி நடந்து விட்டுது?" என்று ஆவலோடு கேட்டாள்
S6).
அந்த நேரத்தில் கெளரியின் தாயார் நாகபூசணி கோப்பிச் சில்வரைக் கொண்டு வந்து கலாவின் கையில் கொடுத்து
விட்டு, 'ரெண்டு பேரும் கதைச்சுக்
கொண்டு இருங்கோ, நான் சந்தைக்குப்
போட்டு வாரன்' என்று சொல்லி விட்டு உமல் பையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
கோப்பியைச் சுவைத்துக் கொண்டே "உனக்கும் ரகுவுக்கும் என்ன பிரச்சினை அதைச் சொல்லு" என்று துரிதப்படுத்தி 60TITsit assoit.
"ஆரம்பத்திலிருந்து சொன்னால் தான் உனக்குப் புரியும்' தொடங்கினாள் கெளரி.
என்று
"நானும் சுதாகரும் விரும்பிச் சேர்ந்த வர்கள். அவரும் நானும் ஆறு மாதங்கள் கூட சரியாகக் குடும்ப வாழ்க்கை நடத்த இல்லை. அவரின்ர அம்மா யாழ்ப்பாணத் தில இருந்து வந்து அவரைக் கூட்டிப் போய் வெளியில அனுப்பிப் போட்டா. என்னட்ட பெரிசா சீதனம் ஆதனம் இல்லை என்று சுதாகரின்ர அம்மாவுக்கு
(29)

Page 17
என்னைப் பிடிக்கிறதில்லை. மனதுக்க ஒரே புகைச்சல். அதால என்னைப் பற்றி இல்லாததும் - மகனுக்கு கடித மெழுதுகிறவ. மகனும் நம்பி விடுவார். எனக்குச் சரியாக காசு அனுப்புறதில்லை. இருந்து இருந்து ஐயாயிரம், பத்தாயிரம் என்று அனுப்புவார்.
பொல்லாததுமாக
தாய்க்கு மட்டும் ஒழுங்காய் அனுப்புவார்.
எனக்கு கடிதம் மட்டும் ஒழுங்காய் கண்டித்து எழுதுவார். நீ ஒழுங்காய் வீட்டில் இருப்பதில்லையாம். கண்டபடி ஊர் சுற்றுகிறாயாம். அடிக்கடி மினிக்குப் போறியாம். எனக்குத் தெரிய வராது என்ற எண்ணமா? இப்படியானவைதான் அவர் எனக்கு எழுதும் வாசகங்கள். கடைசியாக வந்த கடிதத்தில் "நான் இல்லாத வீட்டில் எந்த நேரத்திலும் ரகுவுக்கு என்ன வேலை? இப்படியான சங்கதி எல்லாம் இனியும் இருக்கக் கூடாது' என்றெல்லாம் எழுதியிருந்தார். வீணான கெட்ட பெயரை நான் கேட்டாலும் ரகுவுக்கு ஏற்படுத்தக்
கூடாது என்றுதான் ரகுவை வீட்டுப்
பக்கம் வராதேயுங்கோ என்று சொல்லிப் போட்டன். அதை நினைச்சா பெரிய கவலையாய் கிடக்கு" என்று ஆழ்ந்த வெகு மூச்சோடு சொல்லி முடித்தாள் கெளரி.
கெளரியின் வாழ்க்கை நிலையைக் கேட்டதும் கலாவுக்கு வேதனையாக இருந்தது.
' கெளரி உன்னை எண்ணிப் பார்க்கைக்க எனக்கு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கடி. வைக் (385.T6) ult L-60L. p5IT60)u (SuTei) 2-66T J புருஷன் இருக்கிறார். ஏன் தெரியுமா?
என்று உணர்ச்சிப்
உன்னைச் சந்தோசப்படுத்தவும் அவரால்
முடியவில்லை. நீ சந்தோசமாய் இருப் பதையும் அவர் விரும்பவில்லை. அவர்
ஒர் சந்தேகப் பிராணி. இப்படி வாழ்றதை
விட நீ கலியாணமே செய்யாமல் இருந் திருக்கலாம். கலியாணம் என்றது வாழ்க் கையில் ஒரு திருப்பம். அது மலர்ச்சி திருப்தியாகவும் அமைய வேண்டும். இப்படி உன்னைப் போல்
աn & 6ւյւb,
துன்பமும் துயருமாக வாழ்றதில என்ன
அர்த்தம் இருக்கு. இப்படிப்பட்டவர் அப்படி இப்படி என்று தன் சுகத்தைப் பார்த்துக் கொள்ள இடம் இருக்கு. ஆனால் பெண் ணான நீ உன்ரை இளமைப் பருவத் தைப் பழி கொடுத்துப் போட்டு வீணாய் காத்துக் கிடக்கிறாய். இளமை போனால் திரும்பி வருமா? இதை ஆர் உணரப் போகினம். இதை விட ரகுயைப் போன்ற ஒருவனைச் செய்து கொண்டு கூழோ
கஞ்சியோ குடித்துக் கொண்டு நிம்மதியாய்
வாழ்ந்திருக்கலாம். இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி வாழா வெட்டியாய் வாழப் போகிறாய். நானும் ஒரு பெண். அதுவும் என் பழைய பள்ளித் தோழி நீ. எனக்கு உன்ர நிலைமை விளங்குது. பருவகாலம் பொல்லாதது. மதுவைத்
தொடாதவன் மதுவைப் பற்றி அறிய
மாட்டான். மதுவைக் குடித்து ருசி கண்டவன் மது இல்லாமல் இருப்பது கடினம். ஆண்களுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்த காலம் இல்லை இது. எந்த விஷ
யத்திலும் பெண்ணுக்குச் சுதந்திரம்
இருக்க வேணும். இல்லை எண்டால்
அதை உதறித் தள்ளிவிட வேணும்"
பெருக்கோடு சொன்னாள் கலா.
(30)

〜
வழிகளிலும் உதவி வந்த
N
கலா போய் ஒரு வாரம் ஆகியும் அவள் சொல்லி விட்டுப் போன வார்த்தைகள் உள்ளத்தில் பதிவாகி ஒலித்துக் கொண்டு தான் இருந்தன. அது ரகுவை நினைக்கத் தூண்டியது. அவன் செய்த உதவிகளை எல்லாம் ஒவ்வொன்றாக எண்ணத் தூண்டியது. அவனைப் பார்க்க வேண்டும், அவனோடு மனம் விட்டுப் பேச வேண்டும் என்ற இனம் புரியாத உணர்வுகள் அலை அலையாக மோத ஆரம்பித்து விட்டன.
ஒரு மாதம் கழிந்தது.
கெளரி வீட்டுப் படலைக்கு முன் ரகு வின் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ரகு இறங்கி நின்றான். ஆவலோடு வெளிப் படலைக்கு விரைந்து வந்த கெளரி 'உள்ளே வாருங்கோவன்’ என்றாள்.
"அவசரமான அலுவல்கள் கிடக்கு. ஆறுதலாக வாரன்"
“என்னோடு கோபமா”
"இல்லையே!" என்று வழக்கம் போல் சிரித்த ரகு மடல் ஒன்றை நீட்டினான்.
வாழ்த்துகின்றோம். ஆரம்பகால மல்லிகைக்கான பொருளாதாரச் சிரமங்களில் பல "5ஆம் குறுக்குத்தெரு’ சிற்றம்பலம் சிவலிங்கம் திருமதி. சிவலிங்கம் அவர்களின் மகள் திருநிறைச் செல்வி பவதாரிணி அவர்களுக்கும், திரு.திருமதி. அருந்தவச்செல்வன் தம்பதி களின் மகன் திருநிறைச் செல்வன் திவாகரன் அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பில் வெகுகோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மணமக்களை மல்லிகை மனநிறைவுடன் வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர்.
لك–
கெளரி வாங்கிக் கொண்டதும்,
'தவறாமல் வர வேண்டும்" என்றவன் ஆட்டோவில் ஏறினான். ஆட்டோ நகர்ந்தது. கெளரி மடலைப் பிரித்தாள். ரகுவின் திருமண மடல் அது.
அவள் அந்தராத்மாவின் அடித்
தளத்திலிருந்து ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
Ꭺ 'அவன் அவன்தான். அவனைப்
போல் யாருமே இருக்க முடியாது”

Page 18
· რასაირუს 2Gდ:85ყა&
தேயிலை மணத்தை - கலா விஸ்வநாதன் தென்றல் தேசமெங்கும் கொண்டு செல்லும் 'சிலோன் டீயென உலகம் புகழும்.
உழைப்பு உயர்வை தரும் ஒதியுணர்ந்த முதுமொழி ஓ! தேயிலைத் தோட்டங்களில் உழைப்புக்கேற்ற ஊதியமின்மை தாழ்ந்த வாழ்வை தகர்க்கும் ஒப்பந்தங்கள் எல்லாம் தீப்பந்தங்களாய் தொழிலாளர் ஜீவாதாரத்தைச் சுடும்.
ஒட்டுப்போட மட்டும் உரிமைக் கை கொடுத்திருக்கிறது. நாட்டில் வாழும் மக்களில் நலிவுற்றோர்
தோட்டத் தொழிலாளரென நாடும் ஏடும் பேசும்.
குளிர் மலைகளில் தொழிலாளர் தோழர்களுக்கு நியாய ஊதியம் கூடாது
குறைப் பிரசவமாய் உயிர்விடும்.
(32)

எடுப்பார் கைப்பிள்ளையாக மலையக எழுத்தாளர்கள்!
- Limeon. Sisis596T6061T
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டார் என்பதைப் போல அரச ஊடகத்துறைகளில் போனால் போகட்டுமென சில விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் விடாக்கொண்டன் கொடாக் கொண்டனாக இருப்பதால் இறைப்பதெல்லாம் நீரில் விழுந்து வீணாகி விடுகின்றது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை சற்று விளக்கமாகவே சொல்லுகின்றேன்.
மலையகத்தில் மறைந்தும் மறையாமலும் ஆங்காங்கே மறைந்து கிடக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்களைச் சந்தித்து அவர்களைப் பேட்டி கண்டு அரச தொலைக் காட்சியில் இடம்பெறச் செய்யும் திட்டமொன்றை அண்மையில் வெளியிட்டார்கள். சில எழுத்தாளர்களைப் பேட்டியும் கண்டு ஒளிபரப்பினார்கள். ஹட்டனில் சில எழுத்தாளர்களை பேட்டி காண்பதற்காக தேவையான ஆவணங்களுடன் ஒரு குறிப்பிட்ட நாளில் தயாராக இருக்கவும் சொன்னார்கள். தலவாக்கலை, பூண்டுலோயா, வட்டவளை போன்ற இடங்களிலிருந்தும் வந்து தயாராக இருந்தார்கள். இரண்டு, மூன்று என்று ஆறு மணியாகியும் யாரும் வரவில்லை. மேற்கொண்டு காத்திருப்பதில் பயனில்லையென்ற எண்ணத்தில் மனவேதனையுடன் அனைவரும் கலைந்து சென்றார்கள்.
அடுத்த நாள் தான் அவர்கள் வராமைக்கான காரணம் விளங்கியது. அதாவது அவர்கள் ஹட்டனுக்கு வந்தால் அவர்களுக்கான தங்குமிட வசதி, உணவு போன்ற வற்றை எழுத்தாளர்கள் தான் செய்துதர வேண்டுமாம். ஏற்பாட்டாளர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளாத படியால்தான் அவர்கள் வரவில்லை. அதேசமயம் வேறு பிரதேசங் களுக்கு இதே மாதிரியான நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தபோது அவர்களுக்கான செலவினை அரச ஊடகத்துறையே பொறுப்பெடுத்துக் கொண்டதாக கசிந்து வந்த விஷயத்தையும் கேட்க நேரிட்டது.
ஆக மலையகத்தில் இருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இளிச்சவாயன்கள். அவர்கள் தலையில் மிளகாய் அரைத்து அவர்களை அவமானப்படுத்துவதொன்றையே சிலர் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான அநாகரிகமான செயல்கள்
G33)

Page 19
மற்றும் முன்னேற்றத்துக்குப் போடப் படும் முட்டுக்கட்டைகளால்தான் மலை யக எழுத்தாளர்கள் இன்னும் முன்னுக்கு வராமல் பின்தங்கியிருக்கிறார்கள்.
பலமுறை இதைச் சுட்டிக்காட்டி எழுதினாலும் கூட அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது. நல்ல எழுத்துத் திறமை வன்மையிருந் தாலும் கூட வழிகாட்டவோ ஒளியேற் றவோ யாருமேயில்லாமையினால் மலை யக எழுத்தாளர்கள் தொடர்ந்து வாடிக் கிடக்கிறார்கள். ஏற்கனவே எழுதிய வர்கள் இப்போது எழுத்தைக் கைவிட்டு விட்டு பிழைப்பைப் பார்க்கப் போய் விட்டார்கள். விடாது துன்பங்கள் வந்த போதும் எழுத்தை விடாமல் எழுதிய இன்னும் சிலர் ஏழ்மையின் பிடியில் சிக்குப்பட்டு தங்களை வளர்த்த அதே மண்ணுக்கு உரமாகி விட்டார்கள்.
மலையக அரசியல்வாதிகள் பட்டம்
பதவிகளையே முன்னிலைப்படுத்து கிறார்களேயன்றி பின்னடைந்த நிலையி
லிருக்கும் மலையக எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. சாகித்திய விழாக்கள் போன்ற அரச விழாக்களில் கூட உண்மையான திறமை மிக்க எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்டு தங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் கைத்தடிகளுக்கு கெளரவமளிக்கிறார்கள். இதனால் உண்மையான எழுத்தாளர்கள், கலைஞர்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இந்நிலை தொடர்வதனால் தான் மலையகத்தில் புதிய எழுத்தாளர்கள் உருவாகுவதில்லை. ஏற்கனவே ஒரளவு தடம் பதித்தவர்களும் பாராமுகத்தினால் இலக்கியத் துறையிலிருந்து விலகி வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வரு கிறார்கள். மலையக எழுத்தாளர்களின் இன்றைய உண்மையான நிலை இதுதான். புதிய மலையகம் உருவாகும் போது புத்துணர்ச்சியுடன் புதுயுகம் படைக்க நிச்சயமாக புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றுவார்கள். அந்நாளுக்காக நாமும்
காத்திருப்போம்!
7ー
திருமணம் நடைபெற்றது.
வாழ்த்துகின்றோம்.
மல்லிகையின் நீண்டநாள் தொடர் அபிமானியும், எழுத்தாளரும், உதவியாளருமான திரு. மா.பாலசிங்கம் திருமதி. மேரி ஜெசிந்தா அவர்களினது மகன் திருநிறைச் செல்வன் செல்வசேகரன் அவர் களுக்கும், திரு.திருமதி. தருமலிங்கம் இராசமலர் தம்பதிகளின் மகள் திருநிறைச் செல்வி சுகதாஜினி அவர்களுக்கும் சமீபத்தில் சென்னையில்
மணமக்களை மல்லிகை நிறைவுடன் வாழ்த்துகிறது.
- ஆசிரியர்.
السـ
24
S (34)

கடிதங்கள்
* دهb o بقیع الاع نمo به Dasعی گنگoع பாதுகாக்க வேண்டிய உரிய பொக்கிஷம்!
மல்லிகையின் 40வது ஆண்டு மலரைச் சுவைத்தேன். சுத்தமான கொம்புத் தேனை அணு அணுவாக சுவைத்துக் குடித்த சுகமான அனுபவமாக இருந்தது. தென்னக படைப்பாளிகளுடன் ஒப்பிடுமளவிற்கு இலங்கையிலும் நல்ல திறமான இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். காத்திரமான காலத்தால் அழியாத நல்ல படைப்புகளை அளிக்கக் கூடிய திறமை வாய்ந்த இத்தகைய படைப்பாளிகளின் படைப்புகள் அணிகலன்களாக மல்லிகை 40வது ஆண்டு மலர் அணிந்து அமர்க் களமாக வெளிவந்திருக்கிறது.
உண்மையிலேயே நாற்பதாண்டுகள் என்பது இலேசான விடயமல்ல. எத்தனையோ இலக்கிய சஞ்சிகைகள் குறைப் பிரசவங்களாக பாதி வழியிலேயே மரித்து விட இன்னும் சில சஞ்சிகைகள் தத்தித் தள்ளாடி அற்ப ஆயுளில் காணாமல் போய்விடுகின்றன.
அந்த வகையில் மல்லிகையின் 40வது ஆண்டு சாதனையென்பது உண்மை யிலேயே பிரமிக்க வைக்கின்றது. மேலும் இந்த ஆண்டு மலரில் இடம் பெற்றிருக்கும் அனைத்து ஆக்கங்களுமே பெறுமதி மிக்கவை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவை. ஒவ்வொரு விதத்தில் தரமானவை. அதேபோல அனைத்துக் கட்டுரைகளுமே இளம் படைப்பாளிகளுக்கு பயனுள்ளவை மட்டுமல்ல, படித்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களாக இருக்கின்றன.
G5)

Page 20
இலங்கையில் இலக்கிய சஞ்சிகை களுக்கு எதிர்காலம் இல்லை. நல்ல படைப்பாளிகள் இல்லையென்றெல்லாம் குறை கூறிக்கொண்டு தென்னக சஞ் சிகைகளை மட்டுமே வாசிக்கும் பழக்க முள்ளவர்கள் நிச்சயமாக இந்த 40வது ஆண்டு மலரை வாசித்தேயாக வேண்டும். மொத்தத்தில் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஒரு பாதுகாக்க வேண்டிய பாடப் புத்தகமாகவும் புதிய எழுத்தாளர்களுக்குத் தங்களை பட்டைத் தீட்டிக் கொள்ளும் வைரமாகவும் திகழ் கின்றது. 'மல்லிகை' யைத் தொடர்ந்து மணம், குணம் மாறாமல் படைத்து வரும் டொமினிக் ஜீவாவுக்கு எமது உளப்பூர்வ மான வாழ்த்துக்கள்.
- பாலா. சங்குபிள்ளை ஹட்டன்.
நாற்பதாவது ஆண்டு மலர் படித் தேன். “உலகம் பலவிதக் கதை களின் வரிசையில் கோபால நேச ரத்தினம் ஒர் அறிமுகம்" என்ற சொக்கனின் கட்டுரை அருமை. செங்கை ஆழியானும் நல்ல கட்டுரையைத் தந்திருக்கலாம். சிறு கதைகள் நன்றான உள்ளன. உங்களுக்குப் பாராட்டுக்கள்.
புதுவை இரத்தினதுரையின் கவிதைகள் 1984, 1985களில் வெளி வந்த கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறாதது குறித்து முநீ. பிரசாந்தன் எழுதிய கட்டுரை வாசித்தேன். முநி. பிரசாந்தன், செ.சுதர்சன் போன்ற கம்பன் கழகத்த வர்கள் மீண்டும் மீண்டும் இதைக் கிளறு
(36)
வதில் சில உள்நோக்கங்கள் உள்ள னவா? எனச் சந்தேகம் எழுகின்றது.
ஏனெனில் நாட்டில் உக்கிரச். சண்டை இடம்பெற்ற காலப்பகுதியில் கம்பன் கழகத்தவர் கோலாகலமாக விழாக்கள் செய்ததை கண்டித்தவர் புதுவை. அவரைச் திருப்திப்படுத்தவே கம்பன் கழகத்தவர்கள் இதைக் கிளறு கிறார்கள் போற்படுகின்றது. கம்பன் கழகத்தார் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு மற்ற வற்றை விமர்சிக்கட்டும்.
முதலில் தாம் செய்த
- ச. குகனேசன் வவுனியா.
மல்லிகை பெப்ரவரி 2005 இதழ் அட்டை பிரமாதம். கம்பவாரிதியின் கணக்குகள் சரியானதல்ல. ஒளவை உளவியல் சார்ந்த கம்பரையே பதில் கூறி மடக்கியவள்.
கெட்டிக்காரி,
வரலாற்றில் கம்பவாரிதி கூறும் அரசன் மிகப் புகழ் விரும்பி. தொங்க வைத்த பொற்கிளியின் அறுவைச் சூட்சுமம் அவன் கையிலிருந்தது. உளவியல் அறிவுத் தந்திரி அரசனின் முகபாவம் கண்டு, ‘திருவே தாதா கோடியி லொருவர் என்றாள். அறம்பாடுதல் கூட இந்த இடத்தில் சரிவரா.
ஹாஸிம் உமர் சாதி, மதம், மொழி பாராது இலக்கியத்தை நேசித்தாரோ என்னவோ, இலக்கியங்களுக்குக் கை கொடுத்தார். அதனால் இலக்கியச் சஞ்சிகை மல்லிகை அட்டையிலிட்டு முந்திக் கொண்டது. இலக்கிய உலகம்

ஹாஸிம் உமரை மறந்து விடாது. அவருக்காக பொருள் வாய் பெருக்கத்திற்
காக அவரை விரும்பாதவர் கூடப் பிரார்த்திப்பார்கள்
ஏ. இக்பால்
தர்ஹா டவுன்.
சோதனையை வென்ற
சாதனை
"மல்லிகை நாற்பதாவது ஆண்டு மலர் பல கனதியான ஆக்கங்களைக்
கொண்டு அமைந்திருப்பது பாராட்டத்
தக்கதாகும். "மல்லிகை கால்பதித்த காலம் முதல் அனுபவித்து வந்த பல் வேறுபட்ட சோதனைகளின் சாதனை யாக இந்த ஆண்டு மலரைக் கொள்ள லாம். அட்டைப் படம் நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் அமைந்துள்ளது.
SSSR
ஜீவாவின் குறிப்பில், 'அஞ்சலட்டை முகவரியில் கூட, 'ஆ சிரையர்' என்றே பல காலமாக விலாசமிட்டு எழுதி வந்தனர்' என்று கட்டிக் காட்டியிருப் பதைப் படிக்கும் போது, எந்த அளவுக்கு ஜீவாவின் உள்ளம் வேதனைப் பட்டிருக்கும் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. "மல்லிகை வளர்ச்சிக்கு இது போன்ற அவலங்களையும் ஜீவா சவா லாக ஏற்றுக் கொண்டதை நினைக்கும் பொழுது பெருமிதமாக இருக்கின்றது. மலரில் இடம்பெற்றுள்ள அனைத்து ஆக்கங்களும் சிறப்பாகவே உள்ளன.
கம்பவாரிதியின் 'கிணற்றுத் தெளிவு நயக்கத்தக்க ஒரு படைப்பாகும்.
"மல்லிகை நாற்பதாவது ஆண்டு மலர் எல்லோரும் வாசித்துப் பயன் பெறக் கூடிய ஒரு கலைக் களஞ்சியமாகவே கொள்ளலாம்.
- சாரணாகையூம்
பதுளை.

Page 21
எங்கள் ஊரில் அதிகமானோரும் ஆற்றிலேயே குளிப்பார்கள். புடவை, சீலை
கழுவவும் ஆற்றையே நாடுகிறார்கள். சிற்றாறுகள் இரண்டு ஒடும் எமது கிராமம் வனப்பு மிக்கது. பளிங்கு போன்ற நீர் அங்கு ஒடுகின்றது.
அலிமா தாத்தா தனது பிள்ளைகள் மூவரினது உடுப்புகளையும், தனது உடு புடவைகளையும் தோய்த்துப் போட்டுக் குளிக்கவென்று ஆற்றுக்குச் செல்கிறாள்.
அலிமா தாத்தா மிக உயர்ந்த மரியாதையான வாழ்க்கை வாழ்ந்தவள். ஆனால் இன்று மூன்று பிள்ளைகளுடனும் தனியாக அவதிப்படுகிறாள். மட்டுமல்ல, ஊரார் பேச்சுகளுக்கும் இலக்காகிக் கொண்டிருக்கிறாள். புடவைகளில் சோப்பைத் தோய்த்துத் தப்புத் தப்பென்று கல்லிலே தட்டும் போது பழைய அவளது வாழ்க்கை சிந்தனையில் ஊடுருவியது.
அலிமா விமானத்தில் பயணிக்கிறாள்
- வெலிப்பன்னை அத்தாஸ்
~-------------------
è>0 OK6FS >0 OK6F v fè>IO OK6F
அலிமா தாத்தா என்று எல்லோரும் கெளரவமாக அவளை முன்பெல்லர்ம் அழைத்தார்கள். ஊரில் லெப்பை வேலை பார்த்த வஹ்ஹாபு நானா மகள். அந்த நாட்களில் கந்தூரி கத்தம், பாத்திஹா மட்டுமல்ல, கல்யாண நிக்காஹ் வைபவத்திலும் வஹ்ஹாபு லெப்பைக்கு முதலிடம். ஆலிம் சாஹிபு இல்லாத இடத்தில் வஹ்ஹாபு லெப்பை நிக்காஹையும் நடத்துவார். விவாகப் பதிவாளரும் அவரே! எனவே மதிப்பு மிக்க பிரஜையாக ஊரில் திகழ்ந்தார். வஹ்ஹாபு லெப்பை, அவருடைய ஒரே மகள் அலிமா உம்மா. சீரும் சிறப்புமாக வளர்த்த மகளைத் தாய் மர்யமுத்து நாச்சியாவுடையப் பேச்சைக் கேட்டு தாயின் சகோதரன் யூசுப்உடைய மகனுக்கு முறைப் பெண்ணைக் கட்டி வைத்தார்கள். குடும்பக் கெளரவம் பேணியும், சொத்துகள், வெளியே போகக் கூடாது என்பதும் ஒரு காரணம் தான்.
(33)
 

ஆனால் நடந்ததென்ன? அலிமா தாத்தாவுடைய கணவன் சரீபுடைய மூத்த சகோதரிக்கு வீடு வளவுடன் கல் ராணத் தைக் கட்டிக் கொடுத்துச் செலவு நடந்ததில் சரீபு மிகவும் கஷ்டத்திலிருந் தான். அது மட்டுமல்ல, இளைய தங்கச்சி கல்யாணத்தை எதிர்பார்த்திருந்தாள். அவளுடைய கல்யாணத்தில் சீதனமும் மற்றும் செலவுகளும் என்று ஆனபோது அலிமாவுடைய வீட்டை ஈடு வைத்தாவது கல்யாணத்தை நடாத்தி வைக்க அலிமா தாத்தா இணக்கம் காட்டினாள். வங்கியில் காணியையும் வீட்டையும் வைத்து 2 இலட்சம் பெற்றது ஆறு, ஏழு வருடங்கள் ஆகியும் மீட்க முடியாத நிலை ஆகிவிட்டது. வங்கி அதனை ஏல விற்பனைக்கு விட்டது. 5 இலட்சத்துக் கும் மேல் விலை போயிற்று. அலிமாவும் கணவனும் பிள்ளைகளும் தெருவில் ஆகி விட்டனர். சிறு விடொன்றில் கூலிக்கு வசிக்கத் தொடங்கினர்.
அலிமாவுக்குக் கல்யாணம் நடந்து ஒரு வருடத்துள் தகப்பன் காலஞ் சென்றார். அலிமாவுக்குத் தலைப்பிள்ளை கிடைத்து ஆறு மாதம் சென்று தாயும் நெஞ்சு நோ பிடித்து இறந்தார். எனவே ஒரே மகளான அலிமா தாத்தா இட்போது சரீபுடன் நிர்க்கதியான நிலைக்கு ஆளா னாள். மூன்று பிள்ளைகள் என்றால் சாமான்யமா? அங்காடி வியாபாரம் செய்த சரீபினால் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. ஒருநாளில் இரு நூறு, முந்நூறு உழைத்தும் அன்றாடச் செலவுக்குப் போதாது. வீட்டுக் கூலி வேறு. மனம் உடைந்த நிலையில் தன்னால் முடிந்த
அளவு குடும்பச் செலவுக்குத் தலை அடித்தான்.
அடிக்கடி யோசனையில் ஆழ்ந்து தனது வாழ்க்கை பற்றிச் சிந்தித்து மனம் நொந்து கொண்டான். தனது பிள்ளைகள் மூவரும் ஐந்தாம், மூன்றாம், இரண்டாம் வகுப்பில் ஊர்ப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய செலவையும் ஈடுகட்ட முடியாத நிலையில் அல்லற்பட்டான் சரீபு.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தனது மனைவியின் வீடு வாசலை ஏலத்தில் போட வைத்தவன் என்ற அவப் பெயரும் அவனுக்கிருந்தது.
ஒருநாள் வியாபாரத்திற்குச் சென்று வந்த சரீபு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமானான். அன்று முதல் அலிமா தாத்தா தன்னந்தனியானாள். மூன்று பிள்ளைகளும் அவளும் காசீம் ஹாஜியாருடைய வீட்டுப் பின்பக்கத்தில் குடிசையில் அடைக்கலம் புகுந்தனர். இன்றும் அங்கேயே வசிக்கின்றனர்.
è>IO OK6F fè>IO OK55 fò>IO OK6F
ஓடிவந்த பையன் ஒருவன் ஆற்றில் பாய்ந்த சப்தம் கேட்டு அலிமா தனது எண்ணச் சுழற்சியிலிருந்து நனவுலகிற்கு மீண்டாள்.
அவசர அவசரமாகப் புடைவை களைத் தோயத்துக் கழுவிக் குளித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினாள் அலிமா, அவளுடைய எண்ணமெல்லலாம் பாட சாலைக்குச் சென்று மீளும் பிள்ளை
களுக்குச் சாப்பாடு ஏதாவது செய்ய
-(39)

Page 22
வேண்டுமே என்பதாகும். அங்கே குளிக்க வந்த மர்யம் கண்டு, வலிலா ஆகியோர் அவளைப் பற்றி அலசத் தவறவில்லை.
'அலிமா பேச்சு மூச்சில்லாமல் போறாள் பார்த்தியா?"
"முகம் கொடுக்க ஏலா. இப்ப ஹாஜியார்ட மெனேஜரோட சம்பந்தம் என்று கதை அடிபடுகுது” இது வஸிலா.
"அலிமாவில இப்ப துப்பரவாக்க ஒண்டுமில்ல. ஊட்டுகளில வேலைக்குப் போறண்டு பெய்த்து எத்தனப் பேரோ டயன் கள்ளத் தொடர்பு வச்சிருந்த? மூன்று புள்ளட உம்மா. நாப்பத்தஞ்சு வயதுப் பொம்புள மாதிரியா. குமரென்ற நெனப்பில அவன்ட இவன்ட பின்னால சுத்துற "'
கூடடினாள.
மார்யம் கண்டு மெரு
“பெரிய குடும்பத்துப் பொம்புளப் புள்ள இண்டக்கு உள்ள நெலம என்ன?”
'உம்மா வாப்பா செஞ்ச நன்மதான் புள்ளக இப்படிப் போகக் காரணம்'
"லெப்பட மகளவியன் அலிமா,
அப்படியெண்டா..? வளிலோ கேள்விக்
குறியோடு நின்றாள்.
èXO OK6F - fè>IO OK6F fòXO OK6F
காஸிம் ஹாஜியார்ட வீட்டுப் பின்பக்கக் குசினி அறையில் ஒரு பகுதியில அடைக்கலம் புகுந்தவள் தான் அலிமா,
மனமிரங்கி ஒம்பட்டவர் காஸிம் ஹாஜியார். அவருடைய காதில அலிமா
பற்றிய இந்தக் கதைகளெல்லாம் படாம லில்லை. ஆனால் ஒரேயடியாக விரட்டிக் கொள்ளவும் முடியாது. தாயும் சேர்ந்து நாலு ஜீவன்கள் நடு ரோட்டில இறக்கின மாதிரி ஆகிவிடும்.
காஸிம் ஹாஜியார்ட மெனேஜரும் அலிமாவுடன் சேர்த்தி என்றதை ஹாஜி யார் ஏற்றுக் கொள்ளவில்லை. ஹாஜி யாருடைய மனைவியும் சில பொழுது அலிமாவுக்கு உதவுவார்கள். மெனே ஜரும் ஏதும் உதவி செய்வதுண்டு. இதை வைத்துத்தான் இந்தக் கட்டுக்கதை என்பது காஸிம் ஹாஜியாருக்குப் புரிந்து விட்டது. நல்ல வேளை ஹாஜியாரும் பேசித் தொடர்புகள் இருந்தால் அவருக்கும் கதை வந்திருக்கும்.
எனவே ஹாஜியார் ஒரேடியாக முடிவுக்கு வரவில்லை. அலிமாவிடம் ஹாஜியார் கூலி பெறுவதில்லை. ஹாஜி யாரின் மனைவி வீட்டில் ஏதும் வேலைகள் அலிமாவிடம் வாங்கிக் கொள்வாள். செலவுக்கும் கொடுத்து விடுவா. இடியப்பம் சுட்டு விற்று அலிமா வின், பிள்ளைகளின் வாழ்க்கை ஒரு வாறு கழிந்தது. வசதி படைத்த இடங் களில் வீடு வீடாகச் சென்று வீட்டு வேலைகளைச் செய்து கூலியும் வாங்கு வாள் அலிமா. இதனால்தான் அலிமா தாத்தா என்று சொன்ன வாய்கள் அலிமா பொறுக்கி என்று கூப்பிடத் தொடங்கி
விட்டன.
fè>IO OK6S rè>IO OKSF rè>IO OK6F
நாற்பத்தைந்து வயதானாலும் வெளி நாடு செல்லும் ஆசை அலிமாவையும்
GO)

தொற்றிக் கொண்டது. தேடியும் ஈடு கொடுக்க முடியாத நிலை யில் தத்தளித்த அலிமா வெளிநாடு செல்வதே சரி என்ற முடிவுக்கு வந்தாள்.
எவ்வளவு
தனது கணவனின் இளைய சகோதரி யிடம் மூன்று பிள்ளைகளும் ஒப் படைக்கும் உடன்பாட்டுக்கு வந்தாள். வெளிநாட்டுக்கு காசு வரும் என்ற அடுத்து அலிமாவின் வீடு காணி போனதும் தனது
எண்ணமாக இருக்கலாம்.
கல்யாணம் காரணம் என்பதால் மறு தலிக்கவும் முடியவில்லை. மூன்று பிள்ளைகளையும் பெறுப்பேற்றாள்.
வெளிநாடு போவ தென்றால் போட்டோ பிடிக்க வேண்டும். பாஸ் போட் எடுக்க, ஏஜன்சியைக் காண, மெடிக்கல் செய்ய, வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பயிற்சி வகுப்புக்குச் செல்ல என வெளியில் அடிக்கடி சென்று வந்தாள்.
இப்பொழுதெல்லாம் ஊரில் கதை தீவிரமாகப் பரவி விட்டது. ஊரில் அவன் இவனுடன் சல்லாபித்தவள் கொழும்பு ராஜ்ஜியத்திலும் இந்த வேலை தான் என்று பெண்கள் பேசத் தொடங்கினர். இத்தகைய வாய்ப்பேச்சுக்கு இலக்காகி னாலும் தனது தீவிர முயற்சியை அலிமா கைவிடவில்லை. கொழும்பு சென்று வீடு வரத் தாமதமான நாட்களில் அவளுடன் படித்த ஸலிமா வீடு கொழும்பில் உள்ளது. அங்கு தங்கி வரும் சந்தர்ப் பமும் அமைந்தது.
è>IO OK6F fè>IO OK6S rèXO OK6F
s
அன்று புரோக்கர் வேலை ஒன்றுக் காக பிஸினஸ் விடயமாகக் காஸிம் ஹாஜியாரைக் கண்ட காதர் நானா அலிமா பற்றிய ஊர்ப் பேச்சை எடுத்துப் போட்டார்.
“இப்படியெல்லாம் பேசப்படுகிற ஒருத்திய ஒங்கட வீட்டில் ஏன் வச்சிருக்கீங்க?"
"காதர்! இந்தப் பிரச்சினையில் ஒனக்கு வேல இல்ல. அலிமா இன்றோ நாளையோ வெளிநாட்டுக்குப் போகப் போறாவாம். அப்ப பிரச்சினை சும்மா தீர்ந்திடும். தவிர என்ட மெனேஜரும் அவளும் தொடர்பு என்டெல்லாம் செய்தி வந்தது. இதெல்லாம் வெறும் புளுகு. ஊர் மணிசர்தான் தவறு செய்யுறாங்க. அலிமா நல்ல குடும்பத்துப் புள்ள. அவள் நிர்க்கதியாகி விட்டாள். எவராவது ஊர்ப் பெரிய மனுஷர் யோசிச்சா. அவளுக்கு ஆதரவு காட்டி ஏதாவது செய்யனும் என்டு.
இளம் வயதில அலிமா விதவை யானாள். விதவைக்கு வாழ்வு கொடுக்கச் சொல்லி இஸ்லாம் சொல்லுது. றஸன லுல்லாங்க இப்படி விதவைகளைத் திருமணம் செஞ்சு வாழ்ந்து காட்டினாங்க. விஷயம் இப்படி இருக்க நான் போக வரத்திக்கில்லாதவளுக்கு வீட்டக் கொடுத் ததும் குத்தம் என்ட்றாங்க. இதுதான் எங்கட முட்டாள் சமூகம். அதனால இந்த விஷயத்தில ஏதும் என்னிட்டப் பேச வராத காதர். பிஸினஸப் பேசிட்டுப் போ” என்று வெட்டி விட்டார் காஸிம் ஹாஜியார்.
GD

Page 23
పొందా6గి పొందా6గి పొందా6గి
திட்டமிட்டபடி அலிமா வெளிநாடு செல்லும் நாள் வந்தது. பெரிதாக மதினி எயாபோட் வரை வந்து உதவி நின்றாள் என்று கூறமுடியாது. தனது மூன்று பிள்ளைகளையும் ஒழுங்காகப் பேணிப் பார்ப்பாள் என்ற உத்தரவாதமும் இல்லை. எனினும் இதைத் தவிர அலிமாவுக்கு வேறு ஏதும் செய்யவும் முடியாது. இந்த நிலையில் தனது மூன்று பிள்ளைகளையும் பிரிந்து விட்டுச் செல்வது அவளால் பொறுக்கவே முடியாத காரியம். எனினும் பிள்கைளின் எதிர்காலம்? தான் தங்கி வாழ ஒர் இல்லம் வீடு என்ற நினைப்பைச் சுமந்தவளாகவே அலிமா வெளிநாடு நோக்கி விமானத்தில் பயணிக்கிறாள். தனக்கு எதிராகக் கதை கட்டுகிறவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வும் வைராக்கியம் கொண்ட அலிமா தன்
பயணம் அதற்கு வழியமைக்க வேண்டும் 2 என்றும் உள்ளூரப் பிரார்த்தித்துக் கொண்டாள்.
Clarcüтслалтuicio மல்லிகைப்பந்தல் வெளியீடுகள் கிடைக்குமிடம்
நீயூபுக் லாண்ட்
52C, நோர்த் உஸ்மான் ரோடு,
சென்னை - 17.
ノ
FOR WEDDING PORTRAITs
EXCELLENT
FHOTOGRAPHERS MODERN COMPUTERIZED PHOTOGRAPHY
8. CHILD SITTINGS
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையின் விளையாட்டுத்துறை கூர்மம் பெறாத, வெள்ளைக்காரனது ஆட்சி நடைபெற்ற அந்தக் காலத்தில், உலக சாதனையொன்றை நிலை நாட்டுவதற்குப் பங்காளியாக இருந்த Z.சிங்கராயர் குருநகர் மண்ணின் மைந்தன்! அன்றிலிருந்து இன்றுவரை இவர் விளையாட்டுப் பித்தராகவே இருக்கிறார். விளையாட்டு இவரது சுவாசக் காற்று! தற்பொழுது யுத்தத்தின் நிமித்தம் கொழும்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் விதிகளில் தனது இளமைக்கால நண்பர்களோடு பேசும் பொருள் அநேகமாக கிரிக்கெட் அல்லது உதைப்பந்தாட்டமாகத் தான் இருக்கின்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தவறாது தொலைக்காட்சிகளில் பார்த்து நன்மை தீமைகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறார். பேச்சில் விளையாட்டுகள் சம்பந்தமாக சமகாலத்தில் புழக்கத்தில் இருக்கும் கலைச் சொற்கள் சரளமாகத் தொனிக்கின்றன.
புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சிங்கராயர். இக்கல்லூரியின் பொற்காலமாகத் தமிழ் சமூகத்தால் பேசப்படும், சாள்ஸ் மத்தியூ லோங் அடிகளார் களின் நிர்வாகக் காலத்தில் (1939-1949) இக்கல்லூரியின் மாணவராக இருந்தவர். புனித பத்திரிசியார் கல்லூரி யாழ்ப்பாணத்தின் நெற்றித் திலகமெனலாம். இங்கே பேணப்பட்ட ஒழுக்கக் கட்டுப்பாடு உலக மயமானது. இதற்காகவே அருட்திரு. சாள்ஸ் மத்தியூ அடிகளார், லோங் அடி களார் ஆகியோர் யாழ்ப்பாணத்தாரின் இதயங்களை வென்றனர். இக் கல்லூரி 1850ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மிகச் சிறந்த 'உருப்படிகளைத் தயாரித்து இப்பிர பஞ்சத்திற்குத் தந்திருக்கிறது. இத னால்தான், கடல் கடந்து நைஜீரியாவில் இருந்தும் கூட ஒரு மாணவன் இங்கு வந்து கல்வி கற்றான். இந்த நீக்ரோ மாணவனின் பெயர் கிபுக்கா. இக்
அன்றும் இன்றும்
மறக்காத
கல்லூரியின் சுவரில் இவனது புகைப்
படம் தொங்கியதுண்டு. ஆனால் இப் 6?&*/7/7ნფங்கள் பொழுது அதற்கு என்னவாகியதோ தெரியாது! இவனொரு சிறந்த உதைப் பந்தாட்ட வீரன். விதிக்கு வந்தால் ཆ ཆ་ Ós. இவனை மடக்கிப் பிடிக்க அன்றைய - செல்க்ைகண்னு - யாழ்ப்பாணக் கன்னியர்கள் வரிசை யில் நிற்பார்களாம்! பெண்கள்

Page 24
மட்டுமா! இவனது உயரத்தையும், கறுத்த உருவத்தையும், உடல் வாகையும் பார்க்க ஆண்கள் கூட இவனைத் துரத்துவார் களாம்!
தென்னிலங்கை மாணவர்கள் கூட இக்கல்லூரியில் கற்றதற்குத் தரவுக ளுண்டு. இவர்களுள் அன்று யாழ்ப் பாணத்தாரின் கண்களை உறுத்தியவன் மடவளை. இவன் கல்லூரியின் கிரிக்கட் அணிக்கு 1939ஆம் ஆண்டில் கப்ரினாக இருந்தவன்.
இந்த வகையில் அன்று இக்கல்லூரி
தனது ஆளுமையை அகிலத்திற்குப்
பிரசித்தப்படுத்தியது. யாழ்ப்பாணத்தை நினைக்க வைத்தது. இவைகளை விட இன்னொரு பெரும் சாதனையும் இக் கல்லூரியால் நிகழ்த்தப்பட்டுள்ளது. அது வொரு உலக சாதனை!
1946ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இக்கல்லூரிக்கும், யாழ் மத்திய கல்லூரிக்
குமிடையில் கிரிக்கட் போட்டியொன்று
நடைபெற்றது. இப்போட்டியில் தொடக்க துடுப்பாட்டக்காரராகக் கள மிறங்கிய பத்திரிசியார் அணியைச் சேர்ந்த Z. சிங்கராயரும், B.வில்பிரட்டும் ஒர் உலக சாதனையை அன்று நிலை நாட்டி னர். இணைப்பாட்டமாக 234 ஒட்டங் களைக் குவித்தனர். ஒட்டத்தையும், வில்பிரட் 112 ஓட்டத்தை
சிங்கராயர் 122
யும் பெற்றனர். அக்காலகட்டத்தில் வேறெந்த நாட்டிலும் இத்தகையவொரு சாதனை நிலைநாட்டப்படவில்லை. விளையாட்டுத் துறையில் சுதந்திர இலங்கை பெற்ற முதல் சர்வதேசச் சாதனை இதெனலாம். கராச்சி (பாகிஸ்
தான்) குழுவொன்றினால் முறியடிக்கப் பட்டது. ஆனால், இத்தகையவொரு சாதனை இன்னமும் வேறெந்தவொரு நாட்டாலும் ஏற்படுத்தவில்லையெனக் கிரிக்கெட் அபிமானிகள் கூறுகின்றனர். இச்சாதனை இன்னமும் யாழ் கல்லூரி களால் கூட தகர்க்கப்படவில்லை யென்பது அனைத்துப் பத்திரிசியார் கல்லூரி மாணவர்களையும் பெருமைப் படுத்துகின்றது. எனவே இப்படியொரு உன்னத சாதனையை முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள் யாழ்ப்பாண மாணவர் களெனும் போது உள்ளம் பூரிக்கின்றது. சாதனை படைத்த இணைப்பாட்டத்தில் ஒரு வீரராக இருந்த Z சிங்கராயர் குருநகர் மண்ணின் மைந்தன்! அன்றிலிருந்து இன்றுவரை சிங்கராயர் விளையாட்டுப் பித்தராகவே இருக்கிறார்.
படிப்பிற்குப் பின் இதே கல்லூரி யின் பிரதம எழுதுநராகப் பணி செய்த வர். இக்காலத்தில் உதைப்பந்தாட்டம், கிரிக்கெட் என்பவற்றில் ஆர்வம் கொண்டு கல்லூரி அணியில் இடத்தைப் பிடித்தார். 1945-1948 ஆம் ஆண்டுகளின் காலப் பிரிவில் உதைப்பந்தாட்ட அணி யில் ஒரு வீரனாக இருந்தார். அத்தோடு, 1948 ஆம் ஆண்டில் உதைப்பந்தாட்ட அணியின் தலைவராக இருந்து பத்திரிசி யார் அணியைப் பிரபலப்படுத்தினார்.
இவர் கல்லூரிக்கு மட்டுமல்லாது கழகங்களுக்கும் விளையாடி இருக்கிறார்.
ஜூபிலி ஸ்போட்ஸ் கிளப், புனித றோக்
கிளப், பற்றீஸRயன் ஸ்போட்ஸ் கிளப், வதிரி டையமன்ட்ஸ் ஸ்போட்ஸ் கிளப் ஆகிய கிளப்புகளுக்காக விளையாடி
G4)

அவைகளை உதைப்பந்தாட்ட உலகில் பிரபலபடுத்தியவர்.
1953 ஆம் ஆண்டில் யாழ் மாவட்ட உதைப்பந்தாட்ட அணியிலும் விளை யாடினார்.
சிங்கராயருக்கு இடது கண் உதைப் பந்தாட்டமென்றால் அவரது வலது கண் கிரிக்கெட் கிரிக்கெட்டில் இவர் ஈட்டிக் கொடுத்த உலக சாதனை முழு இனத்தை யுமே நிமிர வைத்தது. 1945 ஆம் ஆண்டு தொடக்கம் 1949ஆம் ஆண்டு ଘ I ଘ3) 0 அதாவது உதைப்பந்தாட்டத்திலும் கிரிக் கெட்டிலும் சமகாலத்தில் ஈடுபட்டிருந் தார். 1949இல் பத்திரிசியார் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் தலைவரானார். ஜூபிலி ஸ்போட்ஸ் கிளப், பத்திரிசியார் ஸ்போட்ஸ் கிளப் ஆகியவற்றின் கிரிக் கெட் வீரனாக இருந்தார்.
தனக்குப் பயிற்றுவிப்பாளராக இருந்தவர் திரு. கந்தையா மாஸ்டர் என் கிறார். கந்தையா கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர். எவ்.சி. டி.சேரம் இக்கல்லூரியின் கிரிக்கெட் அணிக்குத் தலைவராக இருந்த பொழுது கந்தையா மாஸ்டர் உபதலைவராக இருந் தார். இவர் கொக்குவிலைச் சேர்ந்தவர்.
கிரிக்கெட் விளையாட்டில் இவர் காட்டிய திறமையை உணர்ந்த பத்திரி சியார் கல்லூரி இவரை 1949ல் அதன் கிரிக்கெட் அணிக்குத் தலைவராக்கியது.
தற்பொழுது பாடசாலைகளுக் கிடையில் பிேக் மச்" நடப்பதை விளை யாட்டு ரசிகர்கள் அறிவார்கள். பத்திரிசி யார் கல்லூரி தனது பிக் மச்சை (Big
கம்புகளும் பாவிக்கப்படும்.
Match) யாழ்ப்பாணக் கல்லூரியோடு தான் நடாத்தும். இரு கல்லூரியின் பதாகையிலும் தங்க நிறமான மஞ்சள் உண்டு. ஆனால் இன்றும் சரி அன்றும் பற்றிக்ஸ், சென்ரல் கல்லூரியுடன் விளை யாடுவதைத்தான் விளையாட்டு ரசிகர்கள் பார்க்கக் காத்திருப்பர். அரச உபசரிப் புடன் இப்போதுள்ளது போன்ற விசாலித்த பல வசதிகள் கொண்ட விளையாட்ட்ரங்குகள் அப்போதிருக்க வில்லை. போட்டிகளை நடாத்துவதற்குத்
தற்காலிக அரங்குகளையே அமைப்பர்.
அக்காலத்தில் கொட்டடியின் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், கோட்டைக்கும் இடையில் தற்பொழுது இலங்கை வானொலி கலையரங்கக் கட்டிடமி ருக்கும் திடலில் இத்தற்காலிக அரங்கை அமைப்பார்கள். போட்டிக்குத் தேவை யான திடலைச் சுற்றி கிடுகு வேலி அடைப்பார்கள். இதற்குக் காட்டுக் ரிக்கற் விற்பனைக்குச் சிறு கொட்டிலுமிருக்கும்.
இச்சுற்றாடலில் அந்தக் காலத்தில் நிறையப் பூவரச மரங்கள் நின்றன. பிற் காலத்தில் இவ்விடத்தில் கட்டடங்களை எழுப்ப வேண்டி இருந்ததால் அவைகள் தறித்து வீழ்த்தப்பட்டன. இந்தப் பூவரசு மரங்களில் ஏறி இருந்தும் ரசிகர்கள் விளையாட்டைக் கண்டு களிப்பதுண்டு.
இந்த மைதானப் பராமரிப்பை அப் பொழுது கொட்டடிச் சுப்பர் என் றொருவர் கவனித்து வந்தார். தலையில் அங்குமிங்குமாக 'மின்மினி காட்டும்’ உள்ளங்கைக்குள் அடக்கக் கூடிய
மயிரைக் கோதி சிறு புளியங்கொட்டைக்
G15)

Page 25
கணியத்தில் கொண்டையொன்றைப் போட்டிருப்பார். அரையில் வேட்டி. சவுக்கமொன்று தோளில் கிடக்கும். உடல் முழுக்க விதவிதமான பச்சை குத்தி யிருப்பார். இவர் பத்திரிசியார் கல்லூரி 'சப்போட்டர்". இக்கல்லூரி போட்டிக்கு வரும் பொழுது மிகவும் ‘கண கண’ப் பாக நிற்பார். விளையாட்டு வேகம் கொள்ளும் பொழுது இவருமொரு விளையாட்டு வீரராக காட்சியளிப்பார். பந்தைத் துரத்திக் கொண்டு பத்திரிசியார் கல்லூரி அணிவீரர்கள் ஒடும் பொழுது அவர்களோடு சேர்ந்து இவரும் எதிர் அணியினரின் "புல் பாக் கோடு வரை ஒடுவார்.
“விடாதயுங்க, தம்பி. அடியுங்க. வாறதுக்கு இந்தக் கொட்டடிச் சுப்பன் இருக்கிறன்' இப்படிச் சூளுரைத்தபடி பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார். இவரைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் காசு கொடுத்து ரிக்கற் வாங்கி மைதானத்துக்கு வருமெனச் சிங்கராயர் சிரித்தபடி சொல்கிறார்.
அக்காலத்தில் சிங்கராயர் கிரிக் கெட்டிலும், உதைப்பந்தாட்டத்திலும்
காட்டிய அபாரத் திறமை அவரையொரு
யாழ்ப்பாணப் பிரமுகராக இனங்
காட்டியது. இரண்டு விளையாட்டுகளுக்
கும் நடுவராகும் பெரும் வாய்ப்பு இவ ருக்குத் தேறியது. இவர் நடுவராக ஆற்றிய பணியில் இவர் சந்தித்த சில மறக்க முடியாத சம்பவங்கள் இவரை இன்னமும் மீட்டிப் பார்க்க வைக்கின்றன.
சில தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியாவின் சர்வதேச கிரிக்கெட் அணி முற்று முழுதாக சுழற் பந்து வீச்சாளர் களிலேயே தங்கி இருந்தது. பீசன் சிங் பேடி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட் ராகவன் ஆகியோர் தங்களது சுழற் பந்து வீச்சால் சோபேர்ஸ் போன்ற உன்னதத் துடுப்பாட்டக்காரர்களைக் கூடக் கலக் கினர். இந்த நால்வரில் பீசன் சிங் பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகியோர் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி இருக்கின்றனர்.
யாழ் மாவட்டம் அப்பொழுது விளையாட்டுத் துறைக்கு காட்டிய கட்டித்த ஆர்வத்தை உள்வாங்கிய வெளி நாடுகள் தங்களது விளையாட்டு அணி களை யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பின. இந்த வகையில் ஒருமுறை இந்தியாவும் தனது அணியொன்றை அனுப்பியது. இது இந்தியாவிலுள்ள சகல மாகாணங் களிலுமிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட அணி. இந்த அணிக்குச் சர்வதேச புகழ் பெற்ற சுழல் பந்து வீச்சாளரும், தமிழரு மான வெங்கட்ராகவன் தலைமை தாங்கினார்.
இந்த இந்திய அணி, யாழ் மாவட்டக் கிரிக்கெட் அணியை எதிர்த்து விளை யாடிய பொழுது, அப்போட்டிக்கான
நடுவராக தான் கடமை புரிந்ததை சிங்க
ராயர் சொல்லிச் சொல்லிப் பொச் சடித்துச் சிரிக்கிறார். வெங்கட்ராகவனும் கிரிக்கெட் ஆட்ட நடுவராகப் பணிபுரிந்து அண்மையில் ஒய்வு பெற்றவர். பழைய ஆட்டக்காரர்கள் பயிற்றுவிப்பாளர் களாகவும், நேர்முக வர்ணனையாளர்
டு6)

களாகவும் தற்பொழுது பிரகாசிக்கும் பொழுது நீங்கள் எதற்காக இந்த நடு வெயிலில் காயும் இந்த நடுவர் பதவியைத் தேர்ந்தெடுத்தீர்களென நிருபரொருவர் கேட்டதற்கு முழு விளையாட்டையும் கூர்மையாகக் கண்டு களிக்கக்கூடிய வாய்ப்பு இதில் இருப்பதால்தான் என்ற வர். வெங்கட் நடுவராகப் பணி புரிந்த ஆட்டங்களைத் தான் தொலைக்காட்சி யில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் தனது கையை உயர்த்தி, விரலைக் காட்டி ஆட்டமிழப்புகளைக் (அவுட்) கொடுக்கும் பொழுது, இதே வெங் கட்டின் அணிக்குத் தான் கையுயர்த்தி ஆட்டமிழப்புகளைச் செய்த அந்த பசுமை யான நினைவுகளை மனதில் சிங்கராயர் படரவிடுவாராம்!
அக்காலத்தில் கிரிக்கட்டுக்குப் போல் உதைப் பந்தாட்டத்திற்கும் கழகங்கள் (கிளப்புகள்) இருந்தனவாம். லோங் அடிகளாரின் மேற்பார்வையில் யூபிலி ஸ்போட்ஸ் கிளப், முஸ்லிம் லீக்,
தமிழ் யூனியன், பாசையூர் சென்
அந்தனிஸ், அரியாலை யுனைரெட், !
ஜொலி ஸ்ரார்ஸ், கிறாஸ்கொப்பேஸ் என்பவற்றோடு சென் மேரிஸ், சென் நீக்கிலஸ், குருநகர் உதைப்பந்தாட்டக் கழகம், தாசன் உதைப்பந்தாட்டக் கழகம் என்பனவும் மிகவும் உற்சாகமாக இயங்கிச் சுற்றுப் போட்டிகளிலும் பங்கு பற்றினவாம்.
இத்தகைய சுற்றுப் போட்டிகளில் அடிதடி'களும் ஏற்படுவதுண்டாம். அப் பொழுது யாழ் மாவட்ட பொலிஸ் அத்தி யட்சகராக இருந்த சிட்னி சொய்சா
இத்தகைய அடிதடிகளைச் சமரசமாகத் தீர்த்து வைத்ததாகச் சிங்கராயர் சொல் கிறார்.
விளையாட்டு (Sports) என்பது மனித மனங்களைச் செழுமைப் படுத்துவது. நட்புறவு, விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை, சம நோக்கு என்பவற்றிற்கான அடித்தளத்தை விளை யாட்டுகள் மூலமாகப் பெற முடியும் என்பதே விளையாட்டிற்கான வியாக்கி யானமாகும். இத்தாற்பரியத்தை அன்றும், இன்றும் விளையாட்டுக் கட்டிக் காக் கின்றதா? என்பது விசனத்தைத் தரக்கூடிய விடயமாகவே இருக்கின்றது!
ஒரு சமயம் சிங்கராயர் யாழ்
மாவட்ட உதைப்பந்தாட்ட நடுவர் சங்கத்
திலிருந்து விலகி இருந்தாராம். அப் பொழுது சில நடுவர்கள் தன்னிடம் வந்து உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றிற்கு நடுவராகக் கடமை புரியும்படி கேட்ட னராம்.
இராஜினாமாச் செய்துள்ள தான் எப்படி அவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற முடியுமென மறுத்தாராம். வந்தவர்கள் விடாமல் எதற்கும் தாங்கள் இருப்பதாகவும், கேட்போருக்குத் தங்க ளால் பதில் சொல்ல முடியுமெனவும் விடாக்கண்டர்களாகத் தெண்டித்தனராம். சிங்கராயர் சம்மதித்தாராம்.
சிங்கராயர் இந்த உதைப்பந்தாட்டப் போட்டிக்கு நடுவராகப் பணிபுரிந்து விளையாட்டு விதிகளுக்கு முரணாக விளையாடியதற்காக இரு அணிகளிலும் ஒன்றிற்கு மூவர் என்ற வகையில் ஆறு
-@

Page 26
வீரர்களை மைதானத்திற்கு வெளியே அனுப்பி, எந்தவொரு சச்சரவுமின்றி ஆட்டத்தை நிறைவுபடுத்தியதாகக் கூறுகிறார்.
உரிய நடுவர்கள் ஏன் இந்த ஆட் டத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென் பதைக் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் அதிர்ச்சியைத் தந்தது!
தாசன் உதைப்பந்தாட்டக் கழகம் கொட்டடியைச் சேர்ந்த இளைஞர்களது கழகம். இவர்கள் தங்கள் மத்தியிலும் ஒரு விளையாட்டுக் கழகம் இருக்க வேண்டுமென்ற மன உந்துதலால், சுய முயற்சியால் தாசன் கழகத்தை ஆரம் பித்தனர். விளையாட்டில் பயிற்சி பெறு வதற்கு இவர்களுக்குப் போதிய மைதான வசதி இருந்தது! கொட்டடி மீனாட்சி அம்மன் கோயில், கோட்டை, சவக்காலை இவற்றால் சூழப்பட்ட பெரும் தரை, முன்பு மேய்ச்சல் தரையாகவே இருந்தது. இந்தத் தரையில் நினைத்த நேரமெல்லாம் விளையாடி, விளையாடி இந்த இளைஞர் களுக்கு நல்ல அனுபவம் இருந்தது. அத்தோடு சுற்றுப் போட்டிகளும் இத் திடலிலேயே நடைபெறுவதுண்டு. இவை களை அடிக்கடிப் பார்ப்பதன் மூல மாகவும் சில இளைஞர்கள் தமது விளை யாட்டுத் திறனைச் செம்மைப்படுத்தினர். இத்தகுதியை பணயம் வைத்தே ஒடுக்கப் பட்ட, அடிமட்டத்திலுள்ள இத்தொழி லாள இளைஞர்கள் இக்கழகத்தை ஏற் படுத்தி யாழ்ப்பாணத்து மேட்டுக் குடி யினரது அணிகளோடு மோத முயன்றனர். களத்தில் குதித்தனர்.
G8)
தாம் மறுப்பதற்கு அன்றைய நடுவர்கள் சிங்கராயருக்கு ஒப்புவித்த வாக்குமூலம்; மூட்டை தூக்குகிறவங்கள், சண்டைக்
"தாசன் கிளப்பாக்கள்
gslagi.”
எப்படி நியாயம்! தனது மண்ணில் தன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனித குழுமத்தின் முன்னேற்றத்தைப் பொறுக்காத இந்த நாவலர் பரம்பரை என்றுதான் திருந்துமோ!
சிங்கராயர் கிரிக்கட், உதைப்
பந்தாட்டம் என்பவற்றின் பயிற்றுவிப்
பாளராகவும் இருந்தார். முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் S.S.நவரத்தின ராசா இவரது பயிற்சியால் உதைப் பந்தாட்டத்தில் பிரபலமாகினார். பத்திரிசி யார் அணிக்குத் தலைவராகவும் இருந்தார்.
யாழ்ப்பாண இரசிகர்களால் மிகவும் சிலாகித்துப் பேசப்பட்ட வேகப் பந்து வீச்சாளர்களான எஸ்.எல். சேவியர், என்.நவநீதராஜா, எம்.ஏ.தியாகராசா, ரஹிம் ஆகியோர் இவரின் கீழ் பயிலுநர் களாக இருந்தவர்களே!
அப்பொழுது வித்தியாசமான தண்டனைகள் கொடுக்கப்பட்டனவாம்! அவற்றிலொன்று;
ஒருமுறை சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையில் உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்ற பொழுது புனித பத்திரிசியார் கல்லூரி 18 கோல்களையும், யாழ் இந்துக் கல்லூரி 22 கோல்களையும் அடித்ததாம். அப்பொழுது கட்டுப்பா

டொன்று நடைமுறையிலிருந்ததாம். 12 கோல்களுக்கு மேல் எதிர் அணியை
அடிக்க விடும் அணிக்கு விளையாடுவ
தற்கு 3 வருடத் தடை இருந்ததாம். இதனால் மேற்படி கல்லூரிகள் தண்டனைக்கு உட்பட்டனவாம்.
யாழ்ப்பாணத்து விளையாட்டுச் சம் பந்தமாக ஒரு வேண்டுகோளை விடுக்க வேண்டியுள்ளது. இத்துறை சார்ந்த பதிவுகள் மிகவும் அரிதாகவே இருக் கின்றன. இந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு விளையாட்டு ஆர்வலர்கள் முன்வந்து சிங்கராயர் மனதுக்குள் காவித் திரியும் அரிய விடயங்களை நிரந்தரப் பதிவாக்கினால் எதிர்காலச் சந்ததிக்கு உதவியாக இருக்கும்.
இவரது தகவல்களின் tulg (5(5 நகரில் நரையர் சின்னத்துரை என்றொரு
அண்ணாவியார் இருந்திருக்கிறார். செபஸ்ரியார் கூத்து, நொண்டி நாடகம் என்பன இவருக்குப் புகழ் சேர்த்தவை.
நாட்டுக் கூத்தில், வடபுலத்தில் குறிப் பிட்ட இடத்தைப் பிடித்த அண்ணாவியார் பூந்தான் ஜோசேப், இந்த நரையர் சின்னத் துரைக்கு பிற்பாட்டுப் பாடியதாகச் சொல்லப்படுகிறது. இவரது பிற்பாட்டுப் பாடகராக பக்கிரி சின்னத்துரையும் இருந்தாராம். இவர்கள் இருவரும் நரையர் சின்னத்துரையருக்குப் பாடு வதற்கு மிகுந்த சிரமப்பட்டதாகவும், அவரைத் திருப்திப்படுத்த முடியாதிருந்த தாகவும் சொல்லப்படுகிறது. சங்கீத பூஷணம் அல்வின் தேவசகாயம் என்ற வானொலிப் பாடகரொருவர் குருநகரில்
வாழ்ந்ததாகவும் சிங்கராயர் நினைவு கூருகிறார்.
விளையாட்டுத் துறைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்த சிங்கராயர், சமூகங் களின் மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர். இவரொரு சமாதான நீதிவான். மூன் றாண்டுகளாக சென் றோச் சனசமூக நிலையத்தின் தலைவராக இருந்து சமூகப் பணி செய்தார். பிரஜைகள் குழு வின் தலைவராக இரண்டு ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். யாழ்ப்பாணச் சிறைச்சாலைக் கைதிகளின் நலன் புரி சம்பந்தமான விடயங்களை மேற்பார்வை செய்யும் அலுவலராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த நியமனம் உலகின் முதல் பெண் பிரதமரான பூரீமாவோ பண்டாரநாயக்காவால் இவருக்கு
வழங்கப்பட்டது.
ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத் தின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்குப்பணி புரிந்த சிங்கராயர் என்றுமே மறக்க முடியாத ஒரு சிறந்த மானுட நேசர்!
தற்பொழுது திருமறைக் கலா மன்றத்திலிருந்து ‘கலக்கும் கலா பூஷணம் பேமினசும் குருநகர் மண்ணின்
மைந்தனே. பல நாட்டுக் கூத்துகளின் மூல
மாகத் தனது கலைமுகத்தைக் காட்டி கூத்தரங்கிற்கு அரிய பணிகளைச் செய்கிறார்.
கடைசிவரை நவீன ஒவியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒவியர் அ.மார்க் தனது நவீன ஒவியங்களால் குருநகரை நினைக்க வைத்தவர். இடம்
G9)

Page 27
பெயர்ந்த நிலையிலும் ஒவியப் பணியைத் தொடர்ந்தவர்.
இன்னொரு இசைத்துறை வல் லாளனையும் குறிப்பிட வேண்டி இருக் கின்றது!
சக்தி தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு, மாதங்கி என்ற சினிமாப் பாடகியால் தயாரித்து ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சியான 'இளைய கானம்" என்ற நிகழ்ச்சியைத் தமிழுலகம் நன்கு அறியும். இங்குள்ள கர்நாடக, மெல்லிசை ஆர்வமுள்ள கலைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி தொட்டி லாக அமைந்துள்ளது. நாட்டின் சகல
பாகங்களிலிருந்தும் இளம் கலைஞர்கள்
படையெடுத்து வந்து இதில் தமது இசை ஞானத்தை அரங்கேற்றுகின்றனர். இந் நிகழ்ச்சியின் வாத்தியக் கோஷ்டிக்குத் தலைமை தாங்குபவர் இரத்தினம் இரத்தினதுரை. இவரொரு தபேலாக்
கலைஞர். இவரது தகப்பனார்
m m
பொழ்த்துகின்றோம்.
இந்த ஆண்டுக்கான தமிழ்ப் பேசும் கலைஞர்களுக்கான கலாபூஷண விருதைப் பெற்றுக் கொண்ட அனைத்து கலைஞர்களையும்
அமரர் ரி.இரத்தினம். ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலியின் வாத்தியக் கோஷ்டியில் மிருதங்க வித்துவானாகச் சேவித்தார். இப்பொழுது அங்கே வாத்தியக் கோஷ்டியே கிடை யாது! இரத்தினம் ஏராளமான அரங்கேற் றங்களுக்கு மிருதங்கம் வாசித்தவர். சிங்களப் படங்களிலும் இவரது மிருதங்கம் ஒலித்தது. இவரும் குருநகர் வாசியே! இவரது தந்தையார் கோடை இடி தம்பாபிள்ளை எனவே இதுவொரு பாரிய இசைக் குடும்பம். இதன் வேரும் வித்தும் குருநகரல்லவா!
இந்த வகையில், யாழ்ப்பாண மா நகரத்திற்கு அற்புதமான சமூகத் தொண்டர்களையும், விளையாட்டு வீரர் களையும், கலைஞர்களையும் தந்ததில் கரையூர் - இல்லை - குருநகர் யாழ் குடா வரலாற்றில் தன் இருப்பை நிரந்தரப்படுத்தியுள்ளது.
(சொந்தங்கள் தொடரும்)
m N
மல்லிகை வாழ்த்துகின்றது. பாராட்டி மகிழ்கின்றது.
- ஆசிரியர்.
N - - - - - - - - - - - - - - - - - - 17

வந்த கடன் முடிந்தவுடன் வந்த வழி இடும்U 2ుగిశీaజీ ఓuజీఓa இங்கொடு உயில்
ஆன்றிக் கடன் aெ-hல் கடன்
ტუბuás aაU-6ბl இடுப்புக் கடன் இறப்புக் கடன்
கடன் கடன்
ൺങ്ങ6o a_ൺ
au-681 UCul62)6öl
a_ഞഗ്രീUL 6ബങ്ങ്ട്രേ
aങ്ങb aങ്ങJoa
aം_ൺaം. തഴ്സ് aഞ്ഞുങ്ങിക്രൻ തമ്രീ
எழுதக் குவித்ததை விட வnங்கி வnங்கிக் குவித்தவை ஒதம்ை ஒஇலம்
gbaം(paം ശ്രaബങ്ങä இடைநிறுத்த வைத்தேன் ஆவசியமில்லnததை სJryA ფეტდეrāa 6laაიძრმ>უიwჩaაძNo’ს,
ബ്രൂബകൃ9ിaംങ്ങ്
புதிய புதிய Uெnய்கள் புறப்படுகின்றன. எல்லn uெnய்கலிலும்
ഞ_്കൗ Uഞ്ഞ
தேவைைைலn மருடும்
തgബ ി?-ബകൃaം്തങ്ങ
கடன் வnங்கச்
2-AJSuuju26f
வைத்திருந்த இல் குவலைnயில் தெளிவnaத் தெரிந்தன
கடன் aெnடுத்தவல்களின்
aംആഞ്ഞുങ്ങി ഗ്രaaം്

Page 28
'கைலாசபதி முன்னுரைகள் d
რთმთ6თnröfugრზußmaმ7 - ஒரு விளக்கம் - ه حے یه به Df7f76efusei
கொள்கைகள்.
பதினைந்து நூல்களுக்குக் கைலாசபதி எழுதிய முன்னுரைகள்" என்ற நூலுக்கு விமர்சனமாக இக் கட்டுரையை நான் வரையவில்லை. மாறாக, பேராசிரியர் கைலாசபதியின் கருத்துக்கள் இம்முன்னுரைகளில் எப்படி ஆழப் பதிந்துள்ளன என்னு விளக்குமுகமாகத்தான் இக்கட்டுரையை வரைகின்றேன்.
பதினைந்து நூல்களிலுள்ள விஷயங்களின் பின்னணித் தத்துவத்தையும், அதன் சராம்சத்தையும் இம்முன்னுரைகளில் விளக்குவதோடு, இவ்விஷயங்கள் சம்பந்தமான அடிப்படைக் கருத்துக்களையும், தன்னுடைய பார்வையில், தன்னுடைய தத்துவ நோக்கில் இவைகளுக்கு விளக்கமளிக்கையில் ஒரு புதிய நூலை வாசித்த உணர்வு ஏற்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் கூறிய இக்கருத்துக்கள் பிற்காலச் சந்ததியினருக்குப் பயன்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இடதுசாரிக் கொள்கையும், பொதுவுடமைக் கருத்துக்களையும் கொண்டவர் பேராசிரியர் கைலாசபதி என்பதை யாரும் அறிவர். கைலாசபதியின் இலக்கியப் பார்வையில் மார்க்சியத்தின் கண்ணோட்டத்தைக் காண்கிறோம்.
மார்க்சியம் அரசியல் பொருளாதாரத்துறையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை யாவரும் ஒப்புக் கொள்வர். அதேபோல இலக்கியத்தை மதிப்பிடுவதற்கான அணுகு முறைகளுள் ஒன்றாக இன்று மார்க்சியம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இடம், பொருள், சூழல் இவைகளை மையமாக வைத்து மார்க்சியக் கோட்பாடுகள் உருவாக்கப் பட்டுள்ளன. மார்க்சிம் கார்க்கி, ஷோலொக்காவ், ஆன்டரொங்ன்சி போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் மார்க்சிய கண்ணோட்டத்தில் இலக்கியத்தை விமர்சித்த இலக்கிய மேதைகளாக நாம் கணிக்கிறோம். இலங்கையில் இந்த மார்க்சிய கண்ணோட்டத்தில் இலக்கியத்தை விமர்சித்தவர்களில் முக்கியமானவர்தான் கைலாசபதி, "ஒப்பியல் ஆய்வியல் தந்தை அறிஞர் கைலாசபதி அவர்கள் மரபுக்கு மாறுபட்ட கருத்துக்களை ஆற்றலோடு, சீற்றத்தோடு, அழுத்தமாகப் பதிவு செய்து விட்டார்கள் என்று முனைவர் மெய்யப்பன் கூறுகிறார்.
G52)
 
 
 
 
 
 
 
 

திறனாய்வுத் துறையில் மார்க்சியம் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. மரபு வழிவந்த திறனாய்வாளர்கள் இலக்கியத்தை உணர்வு நிலையில் நின்று பார்த்தனர். இலக்கியத்தை ஒரு பொழுது போக்குக் கருவியாக இவர்கள் நோக்கு கின்றனர். இலக்கியங்களில் அமைந்து கிடக்கும் உணர்ச்சி, கற்பனை, வடிவம் போன்ற பொதுத் தன்மைகளை அடிப் படையாகக் கொண்டு நோக்கினர். இலக் கியத்தின் வடிவமைப்பையும், அதில் அமைந்துள்ள அணி, நலன்களை எடுத் துரைப்பதிலும் ஆர்வம் காட்டினார்கள். உதாரணமாக சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கையாண்டுள்ள இலக்கிய நடையின் தனித்தன்மைகளைப்
பற்றிக் கூறுவது இதன் பாற்படும். ஒர் ஜ் இலக்கியப் படைப்பை நுகர்வது எப்படி, !
அதைப் படித்து சுவைத்து இன்புறுவது எப்படி என்பதுதான் திறனாய்வு என்று கருதினார்கள். இலக்கியப் படைப்புகளை ரசனைக்கு நிலைக் களமாக விளங்கவல்ல உண்மைகளையும், சிந்தனைகளையும் தொகுத்துக் கூறும் ஒரு சாதனம்தான் திறனாய்வு. ஆகவே இம்முறையை நாம் அடியோடு ஒதுக்கிவிட முடியாது.
இலக்கியத்தைப் பகுத்தறிவு முறை யில் ஆராய்ந்து அதன் சமூகப் ц шат பாட்டைத் திட்டவட்டமாக எடுத் துரைக்கும் அணுகுமுறைதான் மார்க்சிய விமர்சனம். ஓர் இலக்கியப் படைப்பு எத்தகைய பின்னணியில் எழுந்துள்ளது, சமூகத்தில் எந்தத் தரப்பினர் மன நிலையை எடுத்துக் காட்டுகிறது என் பதனை ஆராய்ந்து எழுதுவதுதான்
t
படைப்பினால் சமூகத்துக்கு ஏற்படும் நன்மையையும், அந்த படைப்பின் நோக் கத்தையும், எந்த வர்க்கத்தைச் சார்ந்தவன் என்பதையும், இப்பை ப்பு எந்தக் காலத்துச் சூழ் நிலையை பிரதிபலிக்கிறது என்பதையும் ஆராய்தல்தான் இத்திறனாய்வு முறை யின் நோக்கம். இலக்கியத்தை உணர்வு நிலையில் நோக்கி வந்த அணுகுமுறை மாறி, அறிவியல் நிலையில் ஆய்வு நிலை மார்க்சியத் திறனாய்வாலே ஏற்பட்டது.
படைப்பாளி
மார்க்சியத் திறனாய்வு ஏனைய ஆய்
வறிவுத் துறைகளான உளவியல், சமூக
வியல், மானிடவியல், வரலாறு, நில வியல் ஆகியவற்றின் துணை கொண்டு
விரிந்து பரந்த இலக்கிய ஆய்வுக்கு
என்று முனைவர்
வழிவகுத்தது' மறைமலை கூறுகிறார்.
செ.கணேசலிங்கன் எழுதிய *செவ் என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையில் கைலாசபதி, மார்க்சியத்
வானம்"
திறனாய்வு முறையை மையமாக வைத்து இம்முன்னுரையை எழுதுகிறார். இந்
நாவலைப் பற்றிக் குறிப்பிடும் போது
கைலாசபதி இதை ஒரு வரலாற்று நாவல் ধ্ৰুবক্টোj கூறுகிறார். "சமகால வரலாறு
ஒதை ஒரு வாலாற்று நாவல் என்று கூறுகிறார்.
என்ற அடிப்படையில்
வரலாற்று நாவல்களைப் பற்றிக் கூறப் புகுந்த கைலாசபதி, கல்கி, அகிலன்,
சாண்டிலியன் போன்ற நாவலாசிரியர்கள்
எழுதிய வரலாற்று நாவல்களைச் சாடு கிறார். இந்நாவல்களில் "வீர தீர புருஷரே வரலாற்று நாயகராகவும் மதிக்கப்படு கின்றனர்" என்று கூறுகிறார். பல நூற் றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்
மார்க்சிய திறனாய்வு. அத்தோடு ஒரு
(53)

Page 29
தின் சிறப்பியல்புகளைப் பற்றியும், அச்சமூகத்தில் நடமாடிய வீர தீர புருஷர் களைப் பற்றியும் புனை கதைகளாக எழுதுவது வரலாற்று நாவலாக முடியாது. வரலாறு என்பது ஒரு ஒடும் நதியைப் போன்றது. சமுதாய மாற்றங்கள், அம் மாற்றங்களினால் ஏற்படும் அரசியல் கொந்தளிப்புகள், பொருளாதார உற்பத்தி சாதனங்களினால் ஏற்படும் உறவு முறை மாற்றங்கள் இவைகளைப் பற்றிக் கூறு வதுதான் வரலாற்று நாவல்கள். 'சென்ற கால வரலாறானது, இன்றைய வரலாற் றின் பூர்வாங்கம் என்றும், காரண காரியத் தொடர்புடன் காலங்கள் பிணைக்கப்
பட்டுள்ளன என்றும் உணர்பவருக்கு
வரலாறு வீரதீர புருஷரின் விவகாரமாக
வன்றிச் சமுதாய இயக்கத்தின் கூட்டு மொத்தமாக விருக்கும் என்று கைலாசபதி கூறுகிறார்.
பல்லவர் காலத்தில்தான் 'பக்தி' இலக்கியம் தோன்றியது. இப்பக்தி இலக் கியம் விவசாய மக்களின் எழுச்சியைப்
பிரதிபலிக்கிறது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட பக்தியியக்கத்தை சமயத்துறை யில் மட்டுமன்றி அரசியற்துறையிலும்
பூரணத்துவம் பெறுகிறது" என்று கூறு கிறார். இக்காலத்தைப் சித்திரிக்கும் கல்கி, இதை வடநாட்டு சளுக்கர் களுக்கும், தென்னாட்டு பல்லவர்களுக்கு மிடையில் ஏற்பட்ட ஒர் ஆதிக்கப் போராட்டமாகக் காட்டுகிறார். ஆகவே வரலாற்று நாவல் என்பது ஒரு காலகட் டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களைக் கூறுவதாக அமைதல் வேண்டும்.
"செவ்வானம்" என்ற நாவல், ஐம்பது களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல்,
(54)-
வர்கள்,
பொருளாதார, சமூக மாற்றங்களை மைய மாக வைத்து எழுதப்பட்டது. 1950ம் ஆண்டு எற்பட்ட அரசியல் மாற்றத்தைக் கைலாசபதி, தேசிய முதலாளித்துவத்தின் எழுச்சி என்று கூறுகிறார். இதனை இன, மொழி மத கலாசார இயக்கங்கள்
தேசிய முதலாளித்துவத்தின் உடனிகழ்ச்சி
களான இத்தேசிய உணர்வு, பொதுப் படையாகச் சமூகத்தின் மட்டத்திலுள் ளோரையும், மேல் மட்டத்திலுள் ளோரையும் ஒன்றாகச் சேர்த்திணைக்க உதவுகிறது" என்று கூறுகிறார்.
1950ம் ஆண்டு இலங்கை அரசி யலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கூறப் புகுந்த கைலாசபதி, சிங்கள இலக்கியத் திலும், தமிழ் இலக்கியத்திலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது" என்று கூறுகிறார்.
கிறிஸ்தவ சமயத்திலிருந்து பெளத்த சமயத்திற்கு மாறியதும், மேனாட்டு உடையை விட்டு, தேசிய
பண்டாரநாயக்க போன்ற
உடையாம் வேட்டி சால்வையை அணிந் ததும், தாய்மொழி (சிங்களத்திலேயே) உரை நிகழ்த்த முனைந்ததும், இன்னும் பிறவும், தேசிய எழுச்சியின் சின்னங் களாகக் காண்கிறார் சைலாசபதி. இது தேசிய முதலாளித்துவத்தின் இன்னொரு முகம். மக்களை ஏமாற்றும் ஒர் அரசியல் தந்திரம். இக்காலகட்டத்தில் தான் சிங்கள ஆதிக்க வெறியின் ஆரம்பத்தைக் காண் கிறோம். சிங்கள மொழி மட்டுந்தான் அரச மொழியாக இருத்தல் வேண்டு மென்றும், பெளத்த மதம் அரச மதமாக இருத்தல் வேண்டும் என்றும், வெளி நாட்டு உள்நாட்டு வியாபாரம், கைத் தொழில் ஸ்தாபனங்கள், போக்குவரத்துச்

சாதனங்கள் அரசாங்க மயமாக்கப்படல் வேண்டு மென்றும் சட்டங்களைக் கொண்டுவந்து, சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களை அடிமைகளாக நடத்த முற்பட்டது இக்காலப் பகுதியில் தான். இதன் காரணமாகச் சிறுபான்மை மக்களின் போராட்டமும் ஆரம்பித்தது இக்காலகட்டத்தில்தான். இதைக் கைலாசபதி காண மறந்து விட்டார்.
தேசிய உடையணிந்து மக்களை ஏமாற்றும் வித்தையில் ஈடுபட்ட இவர் களின் செய்கையைக் கைலாசபதி முதலாளித்துவ வர்க்கத்தின் பாசாங்கை யும், முரண்பாட்டையும் வலியுறுத்து கிறது" என்று கூறுகிறார். ஆட்சியை அமைக்கத் துணையாக நின்ற தொழிலாள வர்க்கம் தனக்கு நேரெதிராகப் போகும் சக்தி பெற்றிருப்பதைத் தேசிய முதலாளித்துவ வர்க்கம் வெகுவிரையில் உணரத் தொடங்கியது. இந்த முரண் பாட்டைக் கைலாசபதி, "தொழிலாளி வர்க்கம் தனது நலன்களின் அடிப்படை யில் கோரிக்கைகளை முன்வைத்து அணி தேசிய முதலாளித்துவ வர்க்கம் தான் காட்டிய
திரளத் தொடங்கியதும்,
அற்ப சொற்பமான ஜனநாயக மனோ பாவத்தைக் கைவிட்டது என்று
கூறுகிறார்.
தொழிலாள வர்க்கத்தின் துணை கொண்டு ஆட்சியை ஸ்தாபித்த தேசிய முதலாளித்துவம் தனக்கும், தொழிலாள வர்க்கத்திற்குமிடையில் முரண்பாடுகள் தோன்றத் தொடங்கியதை அடுத்து, சோஷலிசக் கொள்கைகளை மெல்ல, மெல்லக் கைவிடத் தொடங்கியது.
தொழிலாள வர்க்கத்தினின்றும் பிரிந்த தேசிய முதலாளித்துவத்தின் உண்மை விஸ்வரூபம் மக்களுக்குத் தெரியத் தொடங்கியது. தேசிய முதலாளித்துவம் தனது அதிகாரத்தை பொருளாதாரத்திலும் காட்டத் தொடங்கியது. "மூலதனத்தின் எசமானர்கள், பொருளாதாரக் குத்த கையை நிலை நிறுத்தவும், அதனைப்
பேணிப் பாதுகாக்கவும் அரசியல் அதி
காரத்தைப் பயன்படுத்திக் கொள்வர்' என்று மார்க்ஸ் கூறுகிறார். தேசிய முதலாளித்துவம் தன்னுடைய அதி காரத்தை நிலைநாட்ட மொழி, மதம், கலாச்சாரம் என்ற கோஷங்களை எழுப்பி தொழிலாள வர்க்கத்தின் அபிலாஷை களை மழுங்கடிக்கச் செய்து, அவர்களை இன ரீதியாகவும், மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிரிக்க முற்பட்டது.
எழுத்தாளர்களை மூன்று பிரிவு களாகப் பிரிக்கிறார் கைலாசபதி, அவர் "மேல்தட்டு வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டு இலக்கியம் படைப்பவர்கள், கீழ்தட்டு உலகைச் சித்திரிப்பவர்கள், இவ் விரண்டையும் தொடர்புபடுத்தி எழுது பவர்கள்' என்றும் கூறுகிறார். மேல்தட்டு மக்களைப் பற்றி எழுதுபவர்கள், சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களையும், அசம்பாவிதங்களையும், ஊழல்களையும் கண்டும் காணாதவர்கள் போல், கலை கலைக்காக என்று கூறிக்கொண்டு மேல் தட்டு வர்க்கத்தினரின் பொழுதுபோக்கிற் காக எழுதுபவர்கள். இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் புதுமைப்பித்தன், விந்தன் போன்றவர்கள். கீழ்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கு முகமாக அச்சமூகத்திலுள்ளவர்களைக்
கதாபாத்திரங்களாக வைத்து எழுது
(55)

Page 30
பவர்கள். அதோடு அவர்கள் வேலை முடிந்து விடும். மூன்றாவது பிரிவில் உள்ளவர்கள்தான் தமிழ்நாட்டில் தோ.மு. சி.ரகுநாதன், இலங்கையில் செ.கணேச நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா போன்றவர்கள் தம் முடைய படைப்புகளில் கீழ்மட்ட
லிங்கன்,
மக்களின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கையை மாற்றி யமைக்கும் வழியையும் கூறுவார்கள். இப்பிரிவைப் பற்றிக் கூறும்போது, கைலாசபதி 'மூன்றாவது பிரிவே கலை யுண்மையும், கலை வடிவமும் சிறந்து பொலிவுறுவதற்கேற்றது. சமுதாயத்தில் வர்க்கங்களின் அடிப்படையிலும், சமூக
வேறுபாடுகளினடிப்படையிலும் பிளவு
இருப்பதை எழுத்தாளன் பொது நியதி யாக ஏற்றுக் கொள்கிறான்.
மூன்றாம் பிரிவைச் சேர்ந்தவர்கள்
தான் தம்முடைய படைப்புகளில்
கற்பனை வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் யதார்த்தத்திற்கு முக்கி யத்துவம் கொடுக்கின்றனர். யதார்த்தமாக படைக்கப்படும் இலக்கியங்கள் என்றைக் கும் நிலைத்து நிற்கக் கூடிய தன்மை வாய்ந்தது. அவர்கள் சித்திரிக்கும் அச் சமூகங்கள் கால ஓட்டத்தில் அழிந்தாலும், அவர்களைப் பற்றிய இலக்கியம் அழி யாமல் இருக்கும். இக்கதாரியர்களால் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள் சாகா வரம் பெற்று வாசிப்போர் மனங்களில் வாழும் வரத்தைப் பெற்றிருக்கும். தகழி எழுதிய “செம்மீன்", ரகுநாதன் எழுதிய "பஞ்சும் பசியும் நாவல் காலத்தால் அழியாது நிற்கும். யதார்த்தத்திற்கு விளக் கம் கூறவந்த கைலாசபதி யதார்த்தம் என்பது உண்மையைத் தேடிக் காணும்
நெறி' என்கிறார். மேலும் "மேலோட்ட மான நுணுக்க விவரங்களையும் ஊடுருவி உள்ளியல்பினைக் கண்டறிதல் வேண் டும். இது யதார்த்த இலக்கிய நெறியாகும். யதார்த்தம் என்பது எடுத்துக் கொண்ட பொருளில் மட்டும் தங்கியிருக்கவில்லை. பொருளை கையாளும் உணர்விலே தங்கியுள்ளது" என்கிறார்.
முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி ஈழத்து இலக்கியங்களைப் பற்றிக் கூறும் பொழுது, 'ஒன்று கனவுக் கதைகளாக இல்லாமல் யதார்த்தக் கதைகளாக இருத் தல். இரண்டு, நமது தேசத்தின் சொந்த மண் வாசனையைக் காட்டும் தேசிய இலக்கியங்களாய் உருப்பெற்றிருத்தல், மூன்றாவது, ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்து, அப்பிரச்சினைக்கு தீர்வு காண முயலுதல்' என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். இம் மூன்று பண்புகளையும் கொண்டு ஈழத்து இலக்கியம் வளர்ந் துள்ளது என்று கைலாசபதி கூறுகிறார். இக்காலப் பகுதியில்தான், தேசிய இலக் கியக் கோஷமும், முற்போக்கு இலக்கியக் குரலும் ஓங்கி ஒலித்தது என்று
கைலாசபதி கூறுகிறார்.
ஈழத்து இலக்கியத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் நோக்கி அவைகளுக்கு விளக்கம் கொடுத்த பேராசிரியர் கைலாசபதியின் கருத்துக்கள், ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வலுவூட்டுவ தாகவும், அதற்கு ஒரு திருப்பத்தை உண்டாக்குவதாகவும் அமைந்தன. ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வேறு யாரும் செய்யாத சேவையைக் கைலாசபதி செய்தார் என்றால் அது மிகையாகாது.
G56)

വിത്ര
பாடிகளின்
நடுவே
2ഞ്ചഗ്ര
குலில்
- LDT. Lum6vérslæLb –
ஒஸ்ரின் ராஜ்குமார் დpმრ6ნ ტrფlo?0Unró77777
தமிழ் வர்த்தக சேவையில் பிரபல
அறிவிப்பாளர் எஸ்.பி. மயில்வாகனத்தின் நுழைவின் போது இச்சேவையில் இன்னொரு
முன்னோடி அறிவிப்பாளர் இருந்தார்.
உண்மையைச் சொல்வதாகில் ஒலிபரப்புக் கலையின் அகரத்தை மயில் வாகனத்தார்
இவரிடந்தான் கற்றிருக்க வேண்டும். எத்தகைய நிபுணர்களாக இருந்தாலும், தனக்கு முன்பு
வந்தவர்களை அனுசரித்துப் போவது இயல்பு தானே! இந்த மரியாதை வயதுக்காகவும் இருக்கலாம்! சேவைக்காகவும் செய்யப்படலாம்!
தமிழ் சேவையில் கடமை புரிந்த பொழுது, மயில் வாகனத்தாரின் குரலோசை எனது காதுகளில் கொஞ்சக் காலமாகக் கிணுகினுத்துக் கொண்டு தான் இருந்தது. அவரைப் பற்றிப் பேசுவதிலும் எனக்கு அலாதிப் பிரியமிருந்தது. சில சந்தர்ப்பங்களில் இப்படி பேசும் பொழுது
எனது நண்பர்கள் "மயிலருக்கு முன்னம்
இன்னொரு அனவுன்சர் இருந்தவர். அவருடைய சாரீரமும் மிகவும் சிறப்பானது. மைக்குத் தோதானது" என என்னை மடக்குவதுண்டு!
எனக்கு அன்றிலிருந்த இந்த மயில்வாகனத் தாருக்கு மூத்த அறிவிப்பாளரைப் பார்க்க வேண்டும். அவரோடு பேச வேண்டுமென ஒரு பேராவல்! அவரது புகைப்படங்கள் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் கூட எனது கைக்கு எட்டவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புத் துறையின் 75 ஆவது ஆண்டு (பவள விழா) நிறைவையொட்டி வெளியிட்ட சிறப்பிதழில்
-டு)

Page 31
கூட, வர்த்தக சேவையின் அந்த மூத்த முதல் அறிவிப்பாளரின் புகைப்படம் இருக்கவில்லை. இது எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது! வானொலி வரலாற்றின் ஒர் உன்னதப் பதிவை எப்படி மறந்தார்கள்! எனது மனதைக் குடைந்தது. காத்திராப் பிரகாரமாக கொழும்பு இந்து மாமன்றத்தில் எழுத் தாளர் அ.கனகசூரியரைச் சந்தித்தேன்.
பேச்சோடு பேச்சாக இந்த விடயமும்
“பவள
உரையாடலுக்குள் விழுந்தது. விழா மலரில் போட்டோ இல்லையே? என அலுத்துக் கொண்டேன். “ஏன் புவன லோசனி பேட்டி கண்டாரே கேட்க வில்லையா?" எனக் கனகசூரியர் திருப்பிக் கேட்டார். அவர் தொடர்பு கொள்ளக் கூடிய தகவல்களைத் தந்தார்.
எனக்கு இன்ப அதிர்ச்சி!
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். "ராஜ்குமார் தான் பேசு கிறேன்" என் அழைப்பிற்குப் பதில் கொடுத்தவர் சொன்னார். சகுனம் நல்ல தாக இருக்கின்றதென எண்ணிக் கொண்டேன். சந்திக்குமிடத்தைச் சொன்னார். அடுத்த நாள் பேருந்தில் புறப்பட்டேன். சொன்னதிற்கு ஒரு குண்டு கூடப் பிசகாதபடி தேடியவர் நின்றார். “நான் தான் ராஜ்குமார்”.
எழுபத்தேழு வயதாக இருந்தாலும்
ஒரு தசாப்தத்தைக் குறைத்து மதிக்கக் கூடிய உடல்வாகு. உச்சரிப்பில் குழப்ப மேதுமில்லை. பற்கள் இருந்தன. 'பல்லுப் போனால் சொல்லுப் போகும்" என்பது தமிழன் கண்டுபிடிப்பு. இவருக்குப் பற்கள் இருப்பதால் வான் பரப்பில்
இன்னமும் குரலைச் செறிய விடலாமே? ஏன் இன்னொரு ‘இனிங்ஸ் ஆடக் கூடாது! என எண்ணிக் கொண்டேன். கதிரைகளை இவர்களே பிடித்துக் கொண்டிருந்தால் இவர்களது வாரிசு களான பிள்ளைகள், பேரர்கள் தொழிலுக்கு எங்கே போவது இந்த உண்மை சடாரென மனதைச் சுட்டு வாயை அடைக்க வைத்தது!
ராஜ்குமாரோடு அவரது இல்லம் சென்று வானலைகளில் மிதந்தோம்! இவரது முழுப் பெயர் ஜஸ்ரின் ராஜ் 1951ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரைக்கான ஒரு
குமார்.
தசாப்த காலம் ஒலிபரப்புத் துறையில் இருந்துள்ளார். கொழும்பு வானொலி யின் முதல் அறிவிப்பாளர் எஸ்.விநாயக மூர்த்தி. அப்பொழுது வர்த்தக சேவை இல்லை. தமிழ் வர்த்தக சேவையின் முதல் அறிவிப்பாளர் எஸ்.விநாயமூர்த்தி.
அரச சேவைகளில் தற்பொழுதும் இணைந்த சேவைகள் என்ற ஒரு பிரிவு இருக்கின்றது. எழுதுநர்கள், தட்டெழுத் தாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். இதற்கான போட்டிப் பரீட்சை நடாத்திய பொழுது இவர் சுருக்கெழுத்தாளர் பதவிக்கான பரீட்சை எழுதி அதில் தேர்ச்சி பெற்றார். இவரது அதிர்ஷ்டம் - இவரை காலம்
காலமாக பேசப்பட வேண்டிய பிராப்தம்
இவருக்கிருந்தது. அரச சேவைக்கு எத்தனையோ உத்தியோகத்தர்கள் வந்து போகிறார்கள். அவர்களைப் பற்றிச் சனங்கள் எத்தனை நாட்கள் பேசுகின்றன!
ஆனால் சேவையை விட்டு விலகியும்
(SB)

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ் குமாரைத் தேடிச் சென்று அவரைப் பற்றிப் பேசினோம். இந்தப் பரீட்சையை எழுதிய பொழுது, தான் இலங்கைத் தமிழ் வானொலி வரலாற்றில் இடம் பெறுவாரென இவர் நினைத்திருப்பாரா?
1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராஜ் குமார் ஒர் ஆங்கிலச் சுருக்கெழுத்தாள ராக வானொலிக்குள் நுழைந்தார். அப்பொழுது பணிப்பாளர் நாயகமாக ஜோன் லம்சன் இருந்தார். ஒலிபரப்பின் பணிப்பாளராக கிளிபோட்
வர்த்தக
ஆர் டொட்டும், தேசிய ஒலிபரப்பின்
பணிப்பாளராக தொற்ரனும் இருந்தனர்.
வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு 30.09.1950இல் ஆரம்பமானதென்கிறார். அப்போது ஒலிபரப்புகள் ஆங்கிலத் திலும், சிங்களத்திலும் மட்டுமே செய்யப்
பட்டனவாம். பெரும்பாலும் இது பரீட்
சார்த்த முயற்சியாகவே இருந்ததாகச்
சொல்கிறார். அப்பொழுது ஆங்கில சேவையில் ரிம் கோசிங்ரன் (தமிழன் கிறிஸ்தவர்), பொப் பார்லே, மில் சன் சோனி (இவர் நீதியரசர் சன்சோனியின் மகன்), டான் துரைராஜ் ஆகியோரும், சிங்கள சேவையில் புறஸ்பெனான்டோ
வும் அறிவிப்பாளர்களாக இருந்தவர்
களாம்.
வர்த்தக ஒலிபரப்பில், தமிழ் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பொழுது (1951) ஒலி பரப்பிற்கென அரை மணித்தியாலமே ஒதுக்கப்பட்டதாம்! ஆங்கில சேவையி லிருந்த டான் துரைராஜ் இச்சேவையின் தற்காலிக அறிவிப்பாளராகக் கடமை புரிந்தார். இந்த அரை மண்'த்தியால ஒலி
பரப்பிற்கு தென்னிந்தியச் சினிமா இசைத் தட்டுகளே கைகொடுத்தன.
படிப்படியாக வர்த்தக சேவை தமிழ்
வர்த்தகர்களது கவனத்தையும் ஈர்க்கத்
தொடங்கியது. ஆங்கில, சிங்கள வர்த்தக ஒலிபரப்புகளினது பரம்பலை உள் வாங்கி, மனத்தெளிவு கொண்டு தங்களது பொருட்களையும் தமிழில் விளம்பரப் படுத்தினால் அவை கூடுதலாகத் தமிழ் பாவனையாளர் மத்தியில் செல்வாக்கைப் பெறுமென எத்தனித்தனர். எனவே தமிழ் வர்த்தக சேவைக்குப் படையெடுத்தனர். இதனால் தமிழ் வர்த்தக ஒலிபரப்பின் நேர அவகாசம் கூட்டப்பட்டது. 1951ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலை 10.00 தொடக்கம் 11.00 வரையும் ஒலிபரப்பு நேரம் கூட்டப்பட்டது. அதன் பின்னர் 1952இல் மாலை நேர ஒலிபரப்பும் ஆரம் பிக்கப்பட்டது. காலை ஒலிபரப்போடு மாலை 4.00 மணியிலிருந்து 6 மணிக்கான ஒலிபரப்பும் ஆரம்பிக்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் டான் துரை ராஜூக்கு அவரது நிரந்தர ஆங்கில ஒலி பரப்பு அறிவிப்பாளர் பதவியோடு தமிழ் அறிவிப்பாளர் பதவியையும் நிறைவேற்ற முடியாதிருந்தது. இரு சேவைகளும் சம காலத்தில் ஒலிபரப்ப வேண்டியதால் இத்தகைய சூழ்நிலையில்தான் ஆங்கிலச் சுருக்கெழுத்தாளராகக் கடமை புரிந்த ஜஸ்ரின் ராஜ்குமார் ஒலிபரப்புத்
துறைக்குக் கொண்டு வரப்பட்டார்.
குரலும் ஒத்துழைத்தது, இவருக்கு பேர் உதவியாக இருந்தது. பொறுப்பை ஏற்று மகிழ்ச்சியுடன் அறிவிப்பாளராகக் கடமை புரிந்தார்.
(59

Page 32
இக்காலகட்டத்தில் அகில இந்திய வானொலியில் தர்மாம்பாள், பூரணம் விஸ்வநாதன் ஆகியோர் பிரபல அறிவிப் பாளராக இருந்ததாகக் கூறுகிறார். இக் காலந்தான் அவர்களதும் பொற்கால மென்கின்றனர்!
வானொலியில் அறிவிக்கப்படும் வர்த்தக விளம்பரங்களுக்கு 25 வார்த்தை களுக்கு ரூபா. 10.25 வீதம் கட்டணம் அறவிடப்பட்டதாம். தனது குரலில் விளம்பரமான பொருட்களில் ஆனந்தா அக் காலத்தில் யானைப் பயில்வான், சிட்டுக்
லேகியமும் ஒன்றென்கிறார்.
குருவி லேகியங்கள் பிரபலமாக இருந்தன. அப்பொழுதும் விளம்பரங் களுக்கு இசை அமைத்து ஒலிபரப்பப் படுவதுண்டாம். தமிழ் விளம்பரங்களுக்கு டி.எஸ்.மணிபாகவதர் இசை அமைத்த தாகக் கூறுகிறார். பிற்காலத்தில் சில்லையூர் செல்வராசன், கமலினி செல்வராசன் ஆகியோரது “அத்தானே, அத்தானே" என்ற விளம்பரப் பாடல் பலரை முணுமுணுக்க வைத்ததை வாசகர்கள் அறிவார்கள்.
சிங்களப் பிரிவில் புசால்ஸ் (Pushals) என்ற கோப்பி தயாரிப்பாளர் களின் அனுசரணையுடன் அரை மணித்தி
யால நிகழ்ச்சியொன்று வானொலி
நிலையத்திற்கு வெளியே மண்டப மொன்றில் நடத்தப்பட்டதாம். இதை நடத்தி, ஒலிபரப்பியவர் தேமிஸ் குரு கே என்கிறார். இந்த உத்தியைப் பயன் படுத்தித் தற்பொழுது பி.எச்.அப்துல் ஹமீத் கலக்குகிறாரே!
(60)
'வயிற்று வலி வந்திருக்கே அக்கா..” என்ற பாட்டு வரிகளோடு வின்சென்ற் ஏபிசி மாத்திரைகளுக்கு விளம்பரமொன்றை ஒலிபரப்பினாராம் ராஜ்குமார்.
கொழும்பு கிங்ஸ்லி திரை அரங்கில் 'பராசக்தி திரைப்படம் திரையிடப்பட்ட பொழுது, தொழில் நுட்பவியலாளர் களுடன் திரை அரங்கிற்குச் சென்று திரைப்படத்தை ஒலிப்பதிவு செய்து, பின் ஒலிபரப்பிற்கு ஏற்ற வகையில் பகுதி பகுதியாக ஒலிப்பதிவு செய்து தனது குரலில் ஒலித்த வசனங்களோடு, பரா சக்தி சினிமாத் திரைப்படத்தை ராஜ்குமார் வானொலி விளம்பரத்திற்காக ஒலி பரப்பினார். இவர் சேர்த்திருந்த இவரது சொந்த வரிகளில் இப்படம் பற்றிய இவரது கண்ணோட்டம் கலந்திருந்ததோடு பார்ப்பதற்கும் ரசிகர்களுக்கு வலை விரித்ததாம்!
இந்த வகையில் பார்க்கப் போனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குரலை முதன் முதலில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் ஒலிக்க வைத்தவர் இவரேயென ஊகிக்க முடிகின்றது.
இப்படத்தின் பாடலான 'புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே என்ற பாடலைத் தனது குரலில் பாடிக் காட்டினார். கேட்டுக் கொண்டிருந்த எனக்கு - பொருத்தமான பாவங்களை முகத்தில் குவித்து, இரசித்துச் சுகித்து இப்பொழுதும் இவர் இப்படிப் பாடுவாராகில், 'பொயின்ற் கட்" மீசையோடு, நடிகர் நாகேஸ்வரராவின்

பொலிவான தோற்றத்தோடு காணப் பட்ட அந்த இளமைக் காலத்தில் இப் பாடலை இவர் எப்படி இரசித்திருப்பா ரென அந்த ஐம்பதுகளை நினைத்துப் பார்க்க வேண்டி ஏற்பட்டது. அவரது அக்காலத்துப் புகைப்படத்தையும் காட்டினார்.
தனது காலத்தில் வானொலி இரசிகர்கள் பெரும்பாலும் ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பி.சுசிலா ஆகியோர் பாடிய பாடல்களை விரும்பிக் கேட்டதாகச் சொல்கிறார்.
இலங்கை வானொலி, ஆசிய சேவை யென ஒன்றையும் ஒலிபரப்பியது. இது ஹிந்தி மொழியில் ஒலிபரப்புகளைச் செய்ததாம். இதில் விமலா காமின் சகோதரிகள் இருவர் அறிவிப்பாளர் களாகப் பணி புரிந்ததாகச் சொல்கிறார். ஆசிய சேவையின் தமிழ் ஒலிபரப்பு 1953 இல் தொடக்கப்பட்டதாகவும், ஒலிபரப்பு நேரம் மாலை 5.00 தொடக்கம் 7.00 மணி வரையாக இருந்ததாகச் சொல்கிறார். திருச்சி, சென்னை, திருநெல்வேலி வானொலி நிலையங்களும் இயங்கின வாம். ஒலிபரப்பு காலை 6.00 மணியி லிருந்து நண்பகல் 2.00 மணிவரை இருந்தது. தங்களுக்குத் தென்னிந்தியாவி லிருந்து ஏராளமான கடிதங்கள் வந்ததாகப் பெருமிதப்படுகிறார்.
தமிழ்ச் சினிமாத் திரைப்படங்களில் நகைச்சுவைக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தவர் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஸ்ணன். இவர் அந்தக் காலத்தில் சினிமா சமூகத்திற்கு நஞ்சூட்டு கின்றதென புதுமைகளை ஏற்று
பழைமைவாதிகள் ஓலமிட்ட பொழுது தனது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை வெடிகளால் சினிமா இரசிகனின் உள்ளத்தை உழுது பண் படுத்தியவர். இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களைப் போல் உடலைக் குலுக்கி நெளித்து இரசிகர்களைச் சிரிக்க வைக்க "பறையரோடு இங்கு தீய புலயருக்கும் விடுதலை, விடுதலை, விடுதலை" என்ற சீர்திருத்தப் பாடல் களைத் திரைப்படத்தில் பாடிக் காட்டியவர். நல்லதம்பி, சந்திரலேகா, பணம், மதுரை வீரன் ஆகிய சினிமாப் படங்களில் நடித்தவர். s
முயலாதவர்!
இந்த நகைச்சுவை மன்னன் தனது மனைவி TA, மதுரத்தோடு இலங்கை வந்த பொழுது (1953) என்.எஸ்.கே.யை ராஜ்குமார் பேட்டி கண்டார். இக்கால கட்டத்தில் 'அடிக்கிற கைதான் அணைக்கும்” என வண்ணக்கிளி என்ற படத்தில் பாடி நடித்த நடிகர் ஆர். எஸ்.மனோகர் இங்கு வந்தபொழுது அவரையும் பேட்டி எடுத்தாராம். மனோகரும் நாடகக் குழுவொன்றை வைத்திருந்தார்.
தனக்குப் பின்னர் இரண்டாவதாக 1953இல் கிறிஸ்ரி கந்தையா என்பவர் தமிழ் வர்த்தக சேவைக்கு அறிவிப்பாள ராக வந்தாராம். இவர் சிறிது காலத்திற் குப் பின் விலகியதால் ஏற்பட்ட வெற்றி டத்திற்கே பிற்காலத்தில் மிகப் பிரபல மாகப் பேசப்பட்ட எஸ்.பி.மயில்வாகனம் - 1954 மார்ச்சில் வர்த்தக ஒலிபரப்பிற்கு நியமிக்கப்பட்டாராம். இக்காலகட்டத்தில் எஸ்.நடராசா, வி.என்.பாலசுப்ரமணியம்,
(6)

Page 33
செந்திமணி மயில்வாகனம் ஆகிய மூத்த அறிவிப்பாளர்கள் தமிழ் தேசிய சேவையில் பணி புரிந்தனராம்,
எனவே, மூத்த அறிவிப்பாளர் ஜஸ்ரின் ராஜ்குமார் இலங்கை வானொலி யைப் பொறுத்தமட்டில் ஒரு வரலாற்றுச் சின்னம்! سم.ی をー
"அண்ணன் எப்போ சாவான். திண்ணை எப்போ வெளிக்கும்' என்பார்கள். இவரொரு தசாப்த காலம் வானொலி அறிவிப்பாளராக இருந்தும், அதனோடு வாழ்நாள் பூராவும் ஒட்டிக் கொண்டிருக்காமல், எவருடைய இடத்தையாவது பறித்துக் கொள்ளாமல் தனது விருப்பின் பேரில் மாற்றத்தைப் பெற்று தனது சுருக்கெழுத்தாளர் பதவிக்கே திரும்பிச் சென்றாராம்! நேயர்களின் கடித மழையால் நனைந்து கொண்டிருந்த இவருக்கு இப்படியாக மனப்பக்குவம் உண்டாகியது சீரணிக்க முடியாத ஒன்றுதான்! இருந்தாலும், சீரழிவுகளுக்குத் தானும் பங்காளியாக
இருக்கக் கூடாதென நினைத்தாராக்கும்! புகழை விடக் கெளரவம் மேலான தென்பது இவரது சுவிசேஷம் போலும்!
ஜஸ்ரின் ராஜ்குமார் விலகி ஏறத்தாள இவரது தடத்தில் தனது காலைப் பதித்து ஒலி பரப்பு வர்த்தகத் துறையைச் செழுமைப் படுத்திய ஒரு இளந்த லைமுறை அறிவிப்பாளர், இவரை அழைத்து, 'லக்ஸ்பானா’ பற்றி விளம்பரத்தில் தனது குரலோடு இவரது குரலையும் ஒலிக்க வைத்தாராம்! இந்த முன்னோடிகளை
ஏழாண்டுகளுக்குப் பின்னர்,
ஆராதிக்கும் அறிவிப்பாளர் வேறு யாரு
மல்ல! தற்போதைய வானொலி நேயர் களின் அபிமான அறிவிப்பாளர் அப்துல் ஹமீடே!
எது எப்படி இருப்பினும் நிச்சயமாக இவரது பிரிவைச் சகிக்க முடியாத வர்த்தக ஒலிபரப்பு “உங்க எண்ணத்தைச் சொல்லி விட்டுப் போங்க" என ஒலித் திருக்கும்! நன்றி ஜஸ்ரின் ராஜ்குமார்.
G2)
 

VN4M ፴Nለቧበ0ለõዞዚዘጻõቦV)
1.
12.
13.
14.
15.
16.
17.
8.
19.
20.
21.
22.
23.
3O.
31.
32.
Q
అసన్గా 20 υήής) ఏఎడా
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு (2ஆம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் - (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா கார்ட்டுன் ஒவிய உலகில் நான் - (2ஆம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் - (யாழ் பல்கலைக்கழக 13 மாணவ மாணவியரது சிறுகதைகள்)
கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாவற் - முப்பொரும் தலைநகரங்களில் 30 நாட்கள் (பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் - முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் - (ஹைக்கூ) பாலரஞ்சனி
அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை
அலங்கரித்தவர்களின் தொகுப்பு)
சேலை - முல்லையூரான் மல்லிகைச் சிறுகதைகள் - (30 சிறுகதைகள்) செங்கை ஆழியான் மல்லிகைச் சிறுகதைகள் - (41 சிறுகதைகள்) செங்கை ஆழியான் நிலக்கிளி - பாலமனோகரன் நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் - டொமினிக் ஜீவா நாம் பயணித்த புகைவண்டி - (சிறுகதைத் தொகுதி) - ஆப்டீன் தரை மீன்கள் - ச.முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான்
அப்புறமென்ன - குறிஞ்சி இளந்தென்றல் அப்பா - தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து - எம்.கே.முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் 25 - தொகுத்தவர் செங்கை ஆழியான் இந்தத் தேசத்தில் நான் - கவிதைத் தொகுதி (பேராதனைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் கவிதைகள்)
6ીડીટી (જીજા 1ܗܶܝ2ܘܗܶ
விலை
விலை
விலை விலை
விலை விலை விலை விலை விலை விலை
விலை விலை விலை 6606)
68léთ6vა
விலை
விலை
shes) விலை
விலை
விலை
விலை
விலை
Undrawn Portrait for Unwritten Poetry - GLITL5sfai gourtsissist
வாழ்க்கை வரலாறு ஆங்கிலப் பதிப்பு டொமினிக் ஜீவா சிறுகதைகள் அச்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம் டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு - 2ஆம் பாகம்
6file.0-ი6ს விலை
6sos)
250/-
14.0/-
180/-
175/-
110/-
100/-
110/-
150/-
60/-
175/.
150/- 275/- 350/-
40/-
150/-
150/-
150/-
150/-
120/-
130/-
140/-
150/-
115/-
200/-
350/-
200/-
63

Page 34
அம்மம்மா எனது அன்புக்குரியவர். அவவின் அன்பு அளவு கடந்தது. அம்மம்மாவின் பாலுண்ணிதான் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது அம்மம்மவின் முதுகின் இடது பக்க சள்ளைக்கு மேலால் திரண்டு அழகான ஒரு சின்ன கொட்டப்பாக்கு அளவில் இருக்கும்.
அம்மம்மா பாவாடை கட்டி குளிக்கும் போதும், குறுக்கை கட்டிக் கொண்டிருக்கும் போதும் அது வெளியில் தெரிந்து வேடிக்கை காட்டும். “விடு. சும்மா அங்காலை போ. விடு” என்று கலைத்தாலும் கைகளால் தொட்டு மெதுவாக அந்தப் பாலுண்ணியை விரல்களால் நசிப்பதிலும், அதனை மெதுவாக உறுட்டுவதிலும் நான் அடையும் மகிழ்ச்சியே தனி. சிலநேரம் பாலுண்ணியை வாயில் வைத்து "பப்பா' குடிப்பேன். அம்மம்மா ஏசுவா, திட்டுவா, ஆனால் எனக்கு பாலுண்ணி என்றால் தனி ஆகர்ஷிப்பு. அம்மம்மாவில் இருப்பதனால் அதிலும் எனக்குத் தனிப்பிரியம்.
தங்கச்சியிலும் பார்க்க அம்மம்மா என்னோடுதான் சரியான விருப்பம். புளிய மரத்தடிக் கடைக்குப் போனாலும், ஒட்டுசுட்டான் பக்கம் போனாலும் கள்ளத் தீனி வாங்கி வருவா. அம்மம்மா எப்பொழுதும் சேலை கட்டி இருப்பா. சேலை முந்தானையை முன்பக்கமாக மடியாக்கி, அந்த மடியுக்குள்ளை பிஸ்கட், ரொபி, றோஸ்பாண், பணிஸ், சிறிய சொக்லட் என்று கட்டிக்கொண்டு வந்து தருவா. அம்மம்மா எங்காவது பயணம் போய்விட்டு வந்தாவென்றால் வீட்டு ஜிம்மிக்கு
நாக்கால் தண்ணி வடிகிற மாதிரி எனக்கும் வாயில் தண்ணி ஊறும். அம்மம்மாவின் மடிக்குள்ளை ஏதாவது கிடக்கும். அம்மம்மாவின் சேலை நூல் சேலையாக இருக்கும். அந்தச் சேலையின் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பிடிக்காத ஒரு விசயம் அம்மம்மா காலை அகட்டி நின்று கொண்டு மூத்திரம் பெய்வது.
"மனிதி' என்றுதான் அம்மய்யா அம்மம்மாவை கூப்பிடுவார். செருமல் சத்தம்தான் அவர்கள் இருவருக்கும் அழைப்பு மொழியாக இருக்கும். அம்மம்மாவை ஏதாவது தேவைக்கு ஒரு செருமல். அம்மம்மாவுக்கு விளங்கும் அம்மய்யா என்ன சைக்கினை செய்கிறார் என்று. c9cbububusz
விறகெடுக்க ஒவ்வொரு நாளும் பின்னேரம் ம்மம்
3. இளைய அபதுலலாலுற அலகரை பக்கம் நல்ல வீரவிறகு இருக்கு. பல கதைகை
G4)
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்மம்மா எனக்குச் சொல்லுவா, சின்ன வண்டில் எனக்கு விருப்பம், சைக்கிள் 'றிம்" ஐ தடிக்குள் செலுத்தி வண்டில் ஒடுவோம். டயர் வண்டில், நொங்குக் கோம்பை வண்டில், குரும்பட்டி தேர் ஈக்கிள் குத்தி அழகாய் இருக்கும்.
எங்கள் இருவரின் கதைகள் சில நேரம் பழைய கதைகளாக இருக்கும். அம்மாவின் காதல் விவகாரம், ஐயா முரண்டு பிடித்து அம்மாவை கலியாணம் செய்து கொண்டது என்று எங்களது கதை காடு வரை நீளும். 'y
மாமா எப்பொழுதும் பொல்லாதவர் போலவே எங்களுக்குக் காண்பிக்கப் பட்டார். குடிப்பவர், மாமியோடு உறவு மேம்பாடு இல்லாதவர், ஒட்டுத் தொழிற் சாலையில் வேலை செய்பவர் என்று
மட்டுமே எங்களுக்குத் தெரியும். அம்மா :
வையும் ஐயாவையும் பிரிப்பதற்கு செய் வினை செய்தவர். முகமாத்து செய்வினை அது. மாமா கூடாதவர்.
அம்மம்மாவை எப்பொழுதும் ஒரு எதிரியைப் போலவே அம்மா பார்ப்பா. இருவருக்கும் திரிவெடி மாதிரி ஏதாவது ஒரு உரசலில் பத்தி விடும். அந்த சண்டையில் அர்த்தம் இருக்காது. பழைய
கோபம் ஒன்றின் தொடர்ச்சியாய்
இருக்கும். பழைய கோபம் என்றால் சிலநேரம் இருபது வருடப் பழையதாக இருக்கும்.
அம்மம்மா சுருட்டுப் பத்துவா. என்ன சுருட்டு என்று "B பிராண்ட்” இல்லை. கிடைக்கிறதை பத்துவா. அம்மய்யா மண்டான் சுருட்டுத்தான் பத்துவார். கோடாப் போட்டு சுருட்டு நல்லாய் இருக்கும் என்று அம்மய்யாவும்
முன்வீட்டு செல்லையா அண்ணரும் கதைப்பார்கள். ஒரேடியாக அம்மம்மா சுருட்டைப் பத்தி முடிக்க மாட்டா. அம்மய்யாவும் அப்படித்தான். குறையன் சுருட்டை வீட்டு வளையில் வைத்து
விட்டு அம்மம்மா தேடுவா. சுருட்டு
காணாமல் போயிருக்கும்.
குறையன் சுருட்டுகளைச் சேர்த்து எடுத்து வயல் கொட்டிலுக்குக் கொண்டு போய் நூல் கழட்டி பேப்பரில் சுத்தி நானும் சேகரும் பத்துவோம். சுருட்டின் காரம் சுகமாக இருக்கும். சிகரட் குடிப் பதில் கொள்ளை ஆசை. அதன் மணம் மிகவும் பிடிக்கும். பீக்கொக் சிகரட் வாங்கி களவாகக் குடித்தோம். கண்டால் அம்மா தோலை உரிப்பா. காவிளாய் வேரினால் அடித்தால் அடையாளம் அடுத்த நாளுக்கும் இருக்கும்.
நெடுங்கேணிப் பக்கம் இருந்து வரும் பஸ் ஒன்று எங்களது வீட்டுக முன்னால் வந்து நின்றது. வேலங்குளம் போன அம்மம்மா ஒரு பெரிய சாக்குக் கட்டோடு வந்தா. பஸ்ஸில் இருந்து இறங்கும் போது கடகட என்று சத்தம்.
என்னவாக இருக்கும்? சாறக் கட்டோடு
ஓடிவந்து சாக்கை தூக்கிக் கொண்டு வந்து அவிழ்த்துப் பார்த்தால் அதுக்குள் ஒரு குட்டி வண்டிலின் பாகங்கள். உடனடி யாக எடுத்துப் பொருத்தினால் வண்டில் தயார். உச்சபட்ச மகிழ்ச்சி எனக்கு. ஆசை ஆசையாய் ஒரு வண்டில் கிடைத்து விட்டது.
வருத்தம் வந்தால் அம்மம்மா. காச்சல் வந்தால் அம்மம்மாவைக் கட்டிப் பிடித்தபடி படுத்தால்தான் உடம்பு உழைவு எடுபடும், எனக்காக அம்மம்மா
G5)

Page 35
வாழ்ந்திருக்கிறா. என் சுகதுக்கங்களில் எல்லாம் அவ பங்கெடுத்திருக்கிறா.
அம்மாவுக்கும் அம்மம்மாவுக்குமான உறவு திடீரென்று அறுபடும். பின்னர் கொஞ்ச நாட்களில் ஒட்டுப்படும்.
ஒரு சண்டையில் அம்மா அழுதா. கேவிக் கேவி அழுதா. சண்டை பெரிதாகி விட்டிருந்தது. பொறுமை, விட்டுக் கொடுப்பு, உதவியாய் இருத்தல் என்ற ஒன்றுக்குமே இருவருக்கும் அர்த்தம் தெரியாது. அம்மாவும் சாறிதான் கட்டுவா. அன்று சாறி முந்தானையை முகத்தில் மூடி கேவிக் கேவி அழுதா.
ஒட்டுசுட்டானுக்கு சைக்கிளில் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி சொன்னா அம்மா. பக்கத்து வீட்டுச் சைக்கிளில் கூட்டிக்கொண்டு போனேன். மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்குப் போய் கனநேரம் அம்மா அழுதா. ஆனால் மாணிக்கப்பிள்ளையார் அவர்களுடைய நிறுத்திவிடவில்லை. சண்டை தொடர்ந்து கொண்டேயிருந்தது.
சண்டையை
புளியங்குளத்தில் கொலனி காணி
களை அரசாங்கம் கொடுக்கும்போது
ஐந்து ஏக்கர் குளத்துத் தரையை தெரிவு
செய்தவர் அம்மய்யா. அது ஒரு ஊர் ஆவதற்கு அந்தக் கிராம மக்களின் அர்ப்பணிப்பு பெரியது. காணிகளை காடு வெட்டி களனியாக்கினார்கள். அந்தக் காணிக்கு அம்மய்யாவின் பங்களிப்புக்கு சமமாக அம்மம்மாவின் பங்கும் இருந் திருக்கிறது. "நீ வேர்ப் பகுதியைத் தூக்கி னால் மரத்தின்ரை நுனியை நான் தூக்கிப் பாடுபட்டிருக்கிறன்” அம்மம்மா ஒரு முறை சண்டையில் அம்மய்யாவுக்குச்
புளியங்குளத்தில் அம்மம்மாவும் நானும் குளிக்கப் போவோம். குளிக்கப் போனால் என் கவனம் முழுக்கப் பாலுண்ணியில்தான் இருக்கும். "முதலை வந்திடும். ஆழத்துக்குப் போகாதை, சேறு வழுக்கும்’ என்று அம்மம்மா எப் பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்பா,
அம்மம்மாவை யாரோ கிண்டி விட்டிருக்கினம். காணி அம்மய்யாவுக்குப் பின்பு உரிமை அம்மம்மாவுக்கு, அதுக்குப் பின்னுரிமை அம்மாவுக்கு. அதுக்குப் பின்னுரிமை எனது தங்கச்சிக்கு. இந்த பின்னுரிமை ஒரு சிக்கலை ஏற்படுத்
'வயல்
தியது. அம்மம்மா சொன்னா, காணியிலை என்ரை பங்கை பிரிக்கப்
போறன்."
அம்மய்யா கண்ணை மூடினாப் பிறகு ஏற்பட்ட குடும்பப் பிளவு இது தான். காணியைத்தானே கேக்கிறா. குடுக் கிறதுதானே. அம்மம்மா மிக நல்லவா.
அம்மய்யா சாக முதல் ஒருநாள் அம்மம்மா சொன்னவா "கொம்மாவுக்குத் தெரியாம காணி உறுதியை ஒருக்கா ரங்குப் பெட்டிக்கை இருந்து எடுத்துக் கொண்டுவந்து தா” என்று. அம்மா முள்ளியவளைக்குப் போனாப் பிறகு காணி உறுதியைக் கொண்டுவந்து குடுத் தேன். தெரிஞ்சால் தோலுரிபட்டிருக்கும். அம்மம்மா சொன்னா செய்தேன். அடி விழுந்தாலும் பரவாயில்லை.
ரங்குப் பெட்டிதான் வீட்டில் பாது காப்பான பொக்கிஷம். மற்றது அம் மய்யாவின் ஒரு மரப்பெட்டி. அதற்கு
ான்னா. 66

மூன்று நாலு முழம், மூன்று சால்வை, காசுப்பை, ஒரு வேட்டி என்பன இருக்கும். அம்மய்யா எளிமையானவர். அழகாக ஒரு குடும்பி கட்டியிருப்பார். எனக்கு பள்ளிக்கூடத்தில் பட்டப் பெயர் அம்மய்யா.
ரங்குப் பெட்டிக்குள் கலியாண
வீட்டுக்கு உடுக்கும் சேலைகள், எங்களது .
நல்ல உடுப்புகள் இருக்கும். ரங்குப் பெட்டிக்குள் யாரும் கை வைப்பது கிடையாது. ஆனால் அதனைத் திறக்க எனக்கு ஆசை. அம்மா அதற்குள் பூச்சி முட்டைகளைப் போட்டு வைத்திருப்பா. பூச்சி முட்டை வாசம் எனக்கு விருப்பம். ரங்குப் பெட்டிக்குள் இருந்து ஒரு சேலை எடுத்துக் கட்டினால் அம்மாவின் சேலையை அடிக்கடி கொஞ்சியபடி இருப்பேன்.
அம்மம் மாவுக்கு ஒரு அக்கா இருந்தா. அவ வலு துப்பரவு. காலையில் எழும்பி குளித்து முழுகி வெள்ளைச் சேலை கட்டி பார்ப்பதற்கு அழகாகவும் லட்சணமாகவும் இருந்தா. அவவோடு நான் பெரிதாக ஒட்டவில்லை.
அம்மம்மாவின் உறவினர்கள் வேலங் குளத்திலும், அதிகமாக இருந்தார்கள். அம்மம்மாவுக் கென்று பொழுதுபோக்கு ஒன்று
முள்ளியவளையிலுமே
மில்லை. காலையில் எழும்புவது. முகம் கழுவுவது. பின்னர் தேத்தண்ணி, சாப் பாடு. சாப்பாடு செய்வதில் அம்மாவுக்கு உதவி செய்வா. மீன் வெட்டுவது, பயித் தங்காய் உடைப்பது, வாழைக்காய் சீவுதல், முருங்கைக்காய் வெட்டுதல், வெங்காயம்
உரித்தல், இப்படியான உதவிகள் தான் செய்வா.
வெள்ளைப்பூடு உரித்தல்
அம்மாவோடு கோபம் என்றால் அதுவும் இல்லை. முன்விட்டு வள்ளி யக்காவோடு கதை, தங்கராசர் வீட்டுக்குப் போவது என்பதோடு பொழுது போய் விடும். அத்தோடு நானும் அம்மம்மாவும் பின்னேரம் விறகு எடுக்கப் போவோம்.
காலையில் அம்மம்மா பழங்கறி யோடு பழஞ்சோறு தின்னுவா. தண்ணி ஊத்தி வைச்ச சோறு முத்துப் போல இருக்கும். காலையில் சுடச் சுட அவிச்ச புட்டோ இடியப்பமோ இருக்கும். தின்னச் சொன்னாலும் பழஞ்சோற்றைத் தானே போட்டு சாப்பிட்டு விட்டு அன்று முழுக்க புறு புறுத்தபடி திரிவா. "நான் ஒருத்தி இருக்கிறன் பழஞ் சோறு தின்னுறதுக்கு. போட்டு வடிக்கிறது எனக்கு என்னவினை பழசு தின்னு றதுக்கு" என்று அன்று முழு நாளும் பழஞ்சேலை கிழிஞ்ச மாதிரி இருக்கும்.
அம்மம்மா ஆசை கடைசிக் காலத்தில் என்னை தங்களின் உறவுக்கார ஆக்கள் யாருக்காச்சும் கலியாணம் செய்து குடுக்க வேண்டும் என்று.
ஒசைப்படாமல் எத்தனை கனவுகள் அம்மம்மாவின் மனதில் இருந்திருக்கும். எத்தனை விடயங்களை சொல்ல (έρες. யாமல் தத்தளித்திருப்பா. சொன்னால் நிறைவேறுமா என்ற ஏக்கங்கள் இருந் திருக்கும். அம்மய்யா சாகும் போது அம்மம்மா உயிருடன் இருந்தவா. ஒரு இரவு படுத்த அம்மம்மா எழுந்திருக்க வேயில்லை என்று தங்கச்சி சொன்னாள்.
@

Page 36
பாடம்
இப்பிரபஞ்சத்தில் ஒரு பூச்சிய வெளியில் எம் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் அடித்துச் சென்றுவிட்டாய்.
உன் ஆழத்தின் ஒரு புள்ளியில் வெடித்தெழுந்த ஒரு பூகம்பப் பேரலையில் 6TLb6 odupės alsiT6ńGBuu சென்றுவிட்டாய் உன் இரையாக.
இரை கொடுத்த உனக்கு நீ ஊட்டி வளர்த்த உயிரின் ஊனினை இரைகொள்ள எப்படி மனம் வந்தது?
...!يږي؟
வெள்ளாட்டையும்
6TւÐ60»ւՕպւb
பார்த்துத்தானா?
நேற்று வேறு இன்று வேறு
நேற்றைய பொழுது தென்றல் தாலாட்ட
அலை நுரை தழுவ நடந்து சென்றோம்.
இன்று அலையும் கடலும் தென்றலும் நானும் இருந்தென்ன?
کته مه محاسمکي ک\.
محمي
கூடி மகிழ்ந்த குழந்தைகளையும் மனைவியையும் பேரலைகள் விழுங்கி விட்ட பின்னர் கடலோடு நட்புடன் எந்த முகத்தோடு உறவாடுவது?
சத்தமின்றியே அட்டகாசமாய் புது வருடப் பிறப்பை வரவேற்கக் காத்திருந்தோம்.
நெருடிச் சென்றன சுனாமிப் பேரலைகள்
புத்தாண்டு பிறந்தது சத்தமின்றியே! சாவுகளின் மத்தியிலே சந்தோசம் விடைபெற்றதால்

ॆक्षं
ன காலமாகத் தொடர்ந்து Que
மல்லிகை, என்ற சிற்றேடு
வருவதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
எஸ்தவசீலன்
雛
நாற்பதாவது ஆண்டு மலரை வெளியிட்டு வைத்த Tg T 6ò 60 நினைத்தீர்கள்?
Lorrağıbanu. கேதங்கவடிவேல்
భు. ---
VA గస.స.శ. 8:48:
இ முதலாவது இதழை வெளியிட்ட போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில்தான் நாற்பதாவது ஆண்டு மலரை வெளியிட்டு வைத்து போதும் இருந்தேன்.
ஆனால் ஒன்று, ஒர்மமும் விடாமுயற்சியும் சாதிக்க வேண்டும் என்ற பேரவாவும் இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்துவிடலாம் என்ற மனநிறைவு எனக்கு அந்தச் சமயத்தில் ஏற்பட்டிருந்தது.
སྤྱི་྾་་་་ ష్ర
XX இந்தச் சூழ்நிலையில் மல்லிகை மலர் வெளியீட்டு விழா, தேவைதானா?
Geirawrirradici.
"చl.*;

Page 37
23 மிகப் பாரிய உள்நாட்டு தினசரி
யுத்தக் கொடுமைகளில் இருந்தெல்லாம் முகிழ்ந்து வந்தது மல்லிகை. அதன் ஆண்டு மலர் வெளியீடு, சோர்ந்து வாடிப் போயுள்ள மக்களுக்குத் தன்னம்பிக்கை
XX
Ld.: கனகர
23 சகல பிரதேசங்களையும் சென் றடைவது மாத்திரமல்ல, தமிழுகம், இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், அவுஸ் திரேலியா, நோர்வே, டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் இன்று சென்று கொண்டிருக்கிறது.
X உங்களது அசுர சாதனை களைப் பார்க்கும் இந்த வேளையில் இளைஞனாக இருக்கும் எனக்குப்
28 சோர்வடையாமல் உழைக்கப் பழகுங்கள். மக்களை நேசியுங்கள். பிறந்த இந்த மண் மணக்க ஏற்ற வேலைகளைத் தேர்ந்தெடுத்து அர்ப் பணிப்புடன் செயலாற்றுங்கள். நீங்கள்
நீங்களாகவே உருவாகலாம்
X 2
ங்களுடைய அசுர,
羲翼
பொறாமைதான் ஏற்படுகிறது. உங், ளைப் போல, நான் உருவாகி வளர் வதற்கு நானென்ன செய்ய ഖേങ്ങ?
எஸ்.கந்தவேள்
பிரளயம் வந்துள்ள
போதிலும் மனுக்குலம் தன்னம்
பிக்கையை இழந்து போகக் கூடாது. இதை நடைமுறையில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கவே நான் தினசரி இயங்கி வருகிறேன்.
யா ழ் ப் ப ா ண த் தி ற் கு இப்போதைக்கு வரும் நோக்க மில்லையா? உங்களையும் மல்லிகை
யையும் 2. ருவாக்கி வெளி உலகத் திற்கு அறிமுகப்படுத்தி
வை த் 5
மண்ணை இன்று நீங்கள் மறந்து
விட்டீர்களா?
23 எந்த நேரமும் யாழ்ப்பாணத்தை யும் அங்குள் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான |56ծԾTւսf & 6Ծ) SiTuկւb நினைத்துக் கொண்டுதான் இருக் கிறேன். மலருடன் வருவதற்காகத் தான் திட்டமிட்டிருந்தேன். அது நடை முறையில் சாத்தியமில்லாமல் போய் விட்டது. என்னதான் வானத்தில் சிறகு கட்டிப் பறந்தாலும் அந்த மண்ணையும் அங்கு வாழும் அன்புள்ளங்களையும் மறந்து போய்விட முடியுமா, என்ன?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Σκ இந்தக் கடல் கோள் அழிவி னால் உங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கிறீர்களா? பெரிய இழப்பேதாவது ஏற்பட்டுள்ளதா? s:
வவுனியா,
23 சொந்த பந்தங்களுக்கு ஏறபட்ட மாபெரிய இழப்பை விட, மண்ணுக்கும் மக்களுக்கும், எனது மண்ணை அண்டியுள்ள பல்வேறு நாட்டு மக்களுக்கும் மண்ணுக்கும் ஏற் பட்டுள்ள இழப்பை எண்ணித்தான் மனச் சஞ்சலமடைகிறேன். மனுக் குலமே, இயற்கை எத்தனையோ நன்மைகளை நமக்கெல்லாம் நல்கி
எனது
யிருக்கிறது. இடைக்கிடையே இப்படி யான பேரழிவுகளையும் செய்து முடித்து விடுகிறது. இந்தத் துயரத்தையும் இழப்பையும் கண்டு ஒடுங்கிப் போய் விடாதே! நிமிர்ந்து நில்! நிமிர்ந்து பார்! சகல இழப்புகளில் இருந்து விடு பட்டெழு
চিত্ৰ ॥৫৫ - , (':'.'
X மல்லிகை போன்ற சிற்றேடுகள் கிடைக்க முடியாத பிரதேசங்களில் வாழ்ந்து வரும் என்னைப் போன்ற இலக்கிய ரசிகைகளுக்கு அவை s கிடைக்க என்ன வழி? நாற்பதாவது ஆண்டு மலரைப் பெற்றுக் கொள்ள
கலோச்சனா
es.
23 தரமான இலக்கிய ஏடுகளைப் பெற்றுக் கொள்ள ஒரே வழி, அந்தந்த இதழ்களைத் தேடித் திரிந்து பெற வேண்டியதுதான் சுலபமான வழி.
ళ్ల్యళ్లుళ్ల
மல்லிகை மலர் அவசியம் தேவைப் பட்டால் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள். அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கிறோம்.
சிறந்த எழுத்தாளர்களை எப்படி, இனங் காண்கிறீர்கள்?
2 இது ரொம்பச் சுலபமான வழி. அவர்
களது படைப்பின் மூலம் அவர்களை இனங் கண்டு பிடிக்கிறேன்.
------ 雛
ாவது ஆண்டு மலரி எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிலரின் ஆக்கங்கள் இடம் பெறவில்லையே,
என்ன காரணம்? நீர்கொழும்பு. ஆர்.சிவநேசன் -
2 மலர் தயாரிப்பதற்கு ஆக்க வேலை களில் ஈடுபட்டிருந்த சமயம் எல்லா எழுத்தாளர்களுடனும் தொடர்பு கொண் டிருந்தேன். அச்சகங்கள்
இயங்கும்
நான்
சுறுசுறுப்பாக டிசம்பர் மாதத்தில்தான்
(36.606) as 6061T ஆரம்பித்தேன். எனது
Lp6ხაfr
தனி மனித உழைப்பின் ஆளுமையைப் புரிந்து கொண்டவர்கள் என்னுடன் ஒத்துழைத்தார்கள். சிலரது படைப்புகள் உரிய காலத்திற்குப் பின்னர்தான் கைக்குக் கிடைத்தன. அது சரி மலரை
முழுமையாகப் படித்துப் பார்த்தீர்களா?
చ:చ: --. ళ్ల
இந்த முறை (doslci கணிச மான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ள னவே, இத்தனை சிறப்பான்

Page 38
இ மல்லிகையை மனசார நேசிக்கும் நெஞ்சங்களின் ஒத்துழைப்புத்தான் பிரதான காரணம். அத்துடன் மல்லிகை யின் இன்றைய பிரபலமும் ஒரு
23 உலகத்திற்கு எனது சுய குரல் கேட்க வேண்டுமென விரும்பியதன் விளைவுதான் அந்த ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்.
ஜெயகாந்தன் இத்தனை பிரபல
ஒன்றுக்கு இவர்கள் அத்தனை பேருமே வாழ்த்துத் தெரிவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. ? పజిళక్కజొన్లో நண்பர்களுடனும்
Lu päsas (p6oT L-IT
போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் நான் இந்த வழியைக்
இ யாருடைய
கையாளவில்லை. வரலாற்றுக்கு நான் சி வாழ்த்துத் தெரிவித்திருந்த பதில் சொல்லக் கடமைப்பட்டவன். அனைவருமே எனது நீண்ட கால எனக்கென்றொரு இலக்கியக் நண்பர்கள். நான் கடந்த காலத்தில் கொள்கை உண்டு. எக்காரணத்தைக் மல்லிகையால் பணம் சம்பாதித்துப் கொண்டும் எனது கொள்கையை பணக்காரனாகவில்லை. இத்தகைய மல்லிகையில் திணிக்க மாட்டேன். இது மகத்தான மனிதர்களின் அன்பைப் சர்வ நிச்சயம். பெற்று ஆத்ம திருப்தியுடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்.
ங்களுை u u. x 6ng yJ 6Ü TgIDI
ஆங்கில நூலை லண்டனிலுள்ள ஒரு
• 14, tứ கதிரேசன் வீதி, கொழும்பு ... 13. முகவரியில் வசிப்பவரும் 1ல்லிகை ஆசிரியரு வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா 21:களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103,
இலக்கத்திலுள்: U.K. பிரிண்டர்லில் ஆக்லி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TNUla புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் 垒 சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள், இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல. 15, குருநாகல் றோட், பஸ்நிலையம், புத்தளம்.
தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்கள்ை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 39
A Malikai
Clearing Fo & Transpo
No. 96/37, Con
Front Colom
Sri La
 
 
 
 
 

WarCh 2005
sistory Building Street,
ubo 1 1,
anka.
Te: 542354 Fax : 542355 Hot Line : ()77 7991.63