கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2005.04

Page 1
š,
W
\|-疊
Gj 2005
50வது ஆண்டை நோ
ஏப்ர
 
 
 
 
 
 

|
|-
『W尋 ||| *盔壽 |-||-, !毛
| _ 「T, |

Page 2
അർപ്പു മറ്റ്രlue
Digital Colouv4ad & Sudio
AMAN FEATURES
digital 移 G意 Automatic dust & scratch correction
* Waximum Size: 12" x 18"Digital Pine) * Output Resolution: 4oodpi *Film lnput Formats: I35, Ix24o, Izo, APS * Film Types: Colour negative & positive, Bow
megative, Sepia negative
* Compatible linput & Output Media:
(Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZlP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SirmartMedia)
- se Print to Print
* Conduct sheet & lindex print sk Templates: Greeting Cards, Frame Prints, Calandar Prints,
Album Prints.
HEAD-OFFICE
BRANCH HAp
Py Pig Ali, CENTRE HAppy PHOTO
. istuoto . protocapritss a Wrotocratta No. 64, Sri Sumanatissa Mw, No. 3oo, Modera Street, Colombo - I2. Tel-o74-6Io652. Colombo - 15. Tel-o1-1526345.
 
 
 

புத்தளப் பிரதேசச் சிறப்பு மலர்
கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் மல்லிகை பல சிறப்பு மலர்களை வெளி யிட்டு இந்த நாட்டுக்கு அர்ப் பணிப்புச் செய்து வந்துள்ளது.
இதன் நிகழ்காலப் பெறுபேறு என்னவென்றால் இந்தப் பிரதேசச் சிறப்பு மலர்கள் மூலம் மறைந்து, ஒதுங்கி, முடங்கிப் போயிருந்த பல் வேறு படைப்பாளிகளை, எழுத்தாளர் களை திறமைசாலிகளைக் கண் டடைந்து, அவர்களை முழு நாட்டுக்கும் தெரியத்தக்கவர்களாக இனங்காட்டி
வந்துள்ளோம். அவர்களில் பலர் இன்று
நாடு போற்றும் எழுத்தாளர்களாகப்
பரிணமித்துள்ளனர்.
அந்த வரிசையில் புத்தளம்
பிரதேசச் சிறப்பு மலர் தயாரிக்க ஆவன
செய்து, மல்லிகையின் நீண்ட நாளைய
இலக்கிய நண்பரும் பிரபல எழுத் தாளருமான சுதாராஜ் அவர்களை இது சம்பந்தமாக இணைப்பாளராக நியமித் துள்ளோம். ஆர்வமுள்ளோர் அவருடன் தொடர்பு கொள்ளவும்.
- ஆசிரியர்
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
8ါ2)
ർഡ് മഴu !
படைப்பாளிகளின் 漫
புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
01-1/4, SRI KATHIIRESAN
STREET,
COLOMEBO - 13. TEL: 232O721

Page 3
RESHMAIMITATIONJEWELLERIES
Bangles, Chains, Necklaces, Ear Tops, Guaranteed Items Etc.
2 éalmaan Trading As
'Santhosh Plaza Complex 1st Floor, 231-1/14, Main Street, Colombo - 11. i Te : O11 2394512 Hot Line O77 6661336
 
 
 

ஈழத்து நூல்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்!
தேசம் தழுவிய ரீதியில் வாரா வாரம் ஒரு புத்தகம் இந்த மண்ணில் இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது.
f புதிய வெளியீடுகளின் வெளியீட்டு விழாக்கள் பற்றி வெகு கோலாகலமாக
இந்த நாட்டு-ஊடகங்கள் தகவல்களையும், படங்களையும் வெளியிட்டு வருகின்றன.
எப்படிப் பார்த்தாலும் அரை இலட்சத்திற்கு மேற்பட்ட ரூபாக்கள் இந்த வெளியீடுகள் மூலம் ஒரு புத்தகத்திற்கு முதலீடு செய்யப்பட்டு வருகின்றன.
நமது அச்சக ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் செலுத்துவதன் மூலமாக உழைக்கும் பணம் அவரவர் குடும்பங்களுக்கும் சுவறுகின்றது.
ஆனால், ஒரு நூலை வெளியிட்டு அதற்கான வெளியீட்டு விழாவை ஒழுங்கு படுத்தி, நடத்தி முடித்த கையுடன் வெளியீட்டாளர் காணாமலே போய் விடுகிறார். அவர் வெளியிட்ட நூலைத் தேடித் தேடிச் சிரமப்பட்டாலும் கண்களில் அந்தப் புத்தகம் தட்டுப்படுவதே அருமையிலும் அருமை. நூல்கள் முழுவதுமே அவை வெளியிட்டவரிடமே முடங்கிப் போய்க் கிடக்கின்றன.
எனவே நூலை வெளியிட்டு, வெளியீட்டு விழாக்களைக் கோலாகலமாகக் கொண்டாடுவது மாத்திரம் நூலாசிரியர்களின் கடமையாக முடிந்து விடக்கூடாது. அவற்றைச் சந்தைப் படுத்துவதில் வெளியிடுபவர்கள் ஒற்றுமையாக இயக்கம் நடத்தினால் தான் இந்தத் துறையை ஆரோக்கியமாக வளர்த்தெடுத்தவர்களாவோம்.
தேசம் இதைக் கவனத்தில் கொள்ளட்டும்!

Page 4
i.St. LG
எனும் புதுமை எழுத்தாளன்
- சுதாராஜ்
அப்போது நான் கதைகள் எழுதத் தொடங்கியிருந்த காலம். ஈழத்து எழுத்தாளர்
களில் குறிப்பிடத்தக்க சிலரின் எழுத்துக்களை விரும்பி வாசிப்பதுண்டு. அத்தகையவர் களில் திரு. கே.ஆர். டேவிட் அவர்களும் ஒருவர்.
1976ஆம் ஆண்டளவில் வீரகேசரி பிரசுரத்தினால் வெளியிடப்பட்ட 'வரலாறு அவளைத் தோற்றுவித்தது' எனும் நாவல் கே.ஆர். டேவிட் எனும் எழுத்தாளனைப் பற்றிய எனது அபிப்பிராயத்தை இன்னும் உயர்த்தியது. அவரது படைப்புகளில் நூல் வடிவில் முதலில் வெளிவந்தது இந்த நாவல்தான் என நினைக்கிறேன். ஏற்கனவே சிரித்திரன் சஞ்சிகையில் அவரது சிறுகதைகளைப் படித்த, அனுபவங்களின் உந்துதல் தான் அவரது நாவல் நூலாக வெளிவந்த சூட்டோடு சூடாக வாசிக்கத் தூண்டியது. அதை வாசித்தபின் எனக்கு, டேவிட் அவர்களைச் சந்திக்க வேண்டும் எனும் ஆர்வம் அல்லது ஆசை ஏற்பட்டது. எனினும் அதற்கு முயற்சி ஏதும் எடுக்கவில்லை.
ஒருநாள் சிரித்திரன் சுந்தர் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்த போது டேவிட்டைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. மேலுயர்ந்த நெற்றி. பெரிய பிரகாசிக்கும் கண்கள். அறிமுகமான காலத்திலேயே கலகலத்துச் சிரித்துப் பேசும் சுபாவம்.
டேவிட் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயிருந்தும், எப்படி ஒரு மலையக நாவலைச் சிறப்பாக எழுத முடிந்தது என அவரிடம் கேட்டேன். 'எனது அரசியல் கொள்கைகளும், அந்த அரசியலூட்ாக எனக்குக் கிடைத்த அறிமுகங்களும், அனுபவங்களும் அந்த அரசியல் நோக்கில் நான் நடத்திய தேடலுமே இந்த மலையக நாவலை எழுதத்
4.

தூண்டின" என்று கருத்துப்பட விளக்க மளித்தார். 1971ஆம் ஆண்டு கடமையின்
நிமித்தம் நுவரேலியா மாவட்டத்தில்
வாழ்ந்த காலத்திற்தான் அந்த நாவலை டேவிட் எழுதியிருக்கிறார்.
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திரு. கே.ஆர். டேவிட் அவர்கள். திருமண பந்தத்தின் மூலம் ஆனைக்கோட்டையை வதிவிட மாகக் கொண்டவர். 1971ல் ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் படிப்படியாக முன்னேறி இவர் பிறந்த சாவகச்சேரிப் பிரிவின் வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக்
கல்விப் பணிப்பாளராகக்
கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
1966ல் சுதந்திரன் பத்திரிகையூடாக சிறுகதை எழுத்தாளராக அறிமுகமான டேவிட் சிறுகதைகள் மட்டுமன்றிக் குறு நாவல், நாவல், விமர்சனம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்.
அவருடன் எனக்கு கிடைத்த அறி முகம் நல்ல இலக்கிய நட்பாக மலர்ந்த பின்னும் தொடர்புகள் குறைவாகவே யிருந்தது. இலக்கிய நட்புகள் எவ்வளவு தான் இனிமையானவையாக இருந் தாலும், அவரவர் சோலிகளைப் பார்க்க வேண்டிய கடப்பாடும் எல்லோருக்கும் உண்டு. எனினும் அவ்வப்போது ஊருக்கு லீவில் வரும் வேளைகளில் சந்தித்துக் கொள்வோம். அப்போதெல்லாம் அவரது இலக்கிய முயற்சிகள் பற்றி விசாரித் தறிந்து, இடைக்காலங்களில் வெளிவந் திருந்த அவரது படைப்புகளைப் பெற்று வாசித்திருக்கிறேன்.
1986ல் இவர் முரசொலி பத்திரிகை யில் பகுதி நேர ஊழியராகக் கடமை யாற்றிய காலத்தில், இன விடுதலைப் போர் உக்கிரமடைந்திருந்தது. அப்போது முரசொலி பத்திரிகையில் பிரசுரமான "ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை’ எனும் இவரது குறுநாவல் 1987ல் முர சொலி வெளியீடாக வந்தது. "தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தின் சுவடுகளைப் பதிவு செய்வதாகவே இக்
குறுநாவல் அமைந்துள்ளது' எனச்
சொக்கன் அவர்களால் விமர்சிக்கப்பட்ட
நூல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்கியப் பரப்பில் மிக உன்னத மான மனிதரானச் சுந்தர் அவர்களின் சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளி வந்த டேவிட் எழுதிய 'பாலைவனப் பயணிகள்' எனும் குறுநாவல் 1989ல் மீரா பதிப்பகத்தினரால் நூலுருப் பெற்றது.
"இரத்தமும் சதையுமாக, நாடி நரம்பு களுடன் பாத்திரங்களைப் படைப்பதிலும், வறுமை வெக்கையில் வறுத்தெடுக்கப் பட்ட மக்களின் துயரங்களை மிகத் துல்லியமாகக் காண்பதிலும், தான் அனுபவித்தவற்றை வாசகனையும் அனுப விக்க வைப்பதிலும் டேவிட் கைதேர்ந் தவர்; ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண் டிய முதல் இலட்சணமும் இதுவாகும்" எனச் சிரித்திரன் சுந்தர் கூறியுள்ளது இங்கு " கவனத்திற்கு வருகிறது.
வெள்  ைள யடிக் கப் பட்ட கல்லறைகள்’ எனும் இவரது குறுநாவல் ஈழநாதம் பத்திரிகையால் நடத்தப்பட்ட போட்டியில் முதற் பரிசு பெற்று; பின்னர்

Page 5
1991ல் மீரா பதிப்பகத்தால் நூலாக சமுதாயத்தின் குறுக்குவெட்டு முகத்தை மிகவும் சுருக்க மாகவும் தெளிவாகவும் இக்குறுநாவல் வெளிப்படுத்துகின்றது. ஒரு முனிதனின் சிறுமைத்தனத்தின் ஊற்றுக் கண்கள் பற்றி, அரசியல், பொருளாதார அடிப் படையில் மிகவும் நுணுக்கமாக இக்குறு
வெளியிடப்பட்டது.
நாவல் ஆராய்கிறது. 1994ல் “ஒரு பிடி
மண் என்ற இவரது சிறுகதைத் தொகுதி யும் மீரா வெளியீடாக வந்துள்ளது. இது நூறுக்கு மேற்பட்ட இவரது படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. தகவம்'
660 g
இலக்கிய வட்டம் வெளியிட்ட இரு சிறு கதைத் தொகுப்புகளில் இவரது நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தகவம் நடத்திய ஐந்து ஆண்டுகளுக்குரிய சிறு கதைத் தேர்வில் இவரது ‘தனி ஒருவனுக்கு’ எனும் சிறுகதை முதலாவ
தாகத் தெரிவு செய்யப்பட்டு அதற்கான விழாவும் தமிழ்ச் சங்கத்தில் நடத்தப்
ill-gil.
1985 வரை மிக வேகமாக எழுதிய இவரது படைப்புக்களில் இவர் சார்ந்த அரசியற் குறியீடுகளே பெருமளவில் காணக் கூடியதாக உள்ளது. டேவிட் தனது சிறுகதைத் தொகுதியின் முன் ஆணுரையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ள ஒரு கருத்தை இங்கு மீளக் குறிப் பிடலாம்; "நடைமுறையிலிருந்தே தத்து வங்கள் பிறக்கின்றன. ஆகவே அதே "த்துவங்கள் மீண்டும் நடைமுறைப் டும்; நடைமுறைப்படுத்தலாம் என்பதில் ந்தேகமில்லை. ஆனால் அந்த நடை றை வடிவங்களிலும், எதிர் விளைவு
களிலும் யதார்த்தப் பண்புகள் நிறையவே காணப்படும். ஆதலால்தான் நான் தத்து ഖs sഞ ബ് கருவூலமாகக் (o) sm 6T கிறேன்." இவ்வாறு கூறும் டேவிட் அவர்கள் 1983க்குப் பிற்பட்ட அவரது படைப்புகளில் கூடுதலாகப் போராட்டம், தியாகம் போன்ற விடயங்களைக் கூறு வதில் முனைப்பாக இருந்துள்ளமை கவனிக்கத்தக்கது. 1983ல் நடந்த இனக் கலவரத்தில் பல கொடூரங்கள் அரங் கேறின. அந்தச் சம்பவங்கள் இவரது இதயத்தில் வடுக்களாகி, இவரது ஆக்கங் களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக் secTub
டேவிட் அவர்களின் படைப்புக்களை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும் போது, "பஞ்சப்பட்ட மக்களினதும், அடக்கி யொடுக்கப்பட்ட மக்களினதும் அவலங் களையும், அந்த அவலங்களுக்கு அடி நாதமாகவுள்ள அரசியல், பொருளாதார காரணிகளைக் கூறுவதிலும், இக் காரணிகளை வெல்வதில் மக்களின் பங்களிப்பை எடுத்துக் காட்டுவதிலு மாகவே இவரது இலக்கியப் படைப்புகள் காணப்படுகின்றன எனலாம்.
யுத்தமும், இடப்பெயர்வுகளும் ஒவ் வொருவரையும் ஒவ்வொரு திசையில் பிரித்து வைத்தன. தொடர்புகள் விட்டு விட்டுப் போயின. நினைவுகள் மட்டும் அவ்வப்போது தலைகாட்டிச் செல்லும், யார், யாரை மீளவும் காண்போம் என்ற விருப்பமும் நம்பிக்கையும் இன்றி அவ ரவர் வாழ்க்கிைகள் நகர்ந்து கொண்டி ருக்கின்றன. எப்போதாவது நண்பர்கள்

யாரையாவது காண நேரும்போது நெஞ்சு நெகிழ்ந்துபோய் ஒருவித சந்தோஷம் தோன்றுகிறது.
அண்மையில் பூபாலசிங்கம் புதிய புத்தகசாலைத் திறப்பு விழாவில் கே.ஆர். டேவிட் அவர்களை எனக்கு மீண்டும் காணக்கிடைத்தது. தூர நின்று பார்த்துச் சிரித்தார். சனங்களுக்குள் முண்டி யடித்துக்கொண்டு போய் (கவனியுங்கள்; ஒரு புத்தகசாலைத் திறப்பு விழாவில் முண்டியடித்துக்கொண்டு அளவுக்கு சனங்கள். என்பது எவ்வளவு ஆரோக்கிய மான சங்கதி!) டேவிட்
போகும்
அவர்களின் கையைப் பிடித்தேன்.
"எப்படி?" என்று கேட்டேன்.
நிறையச் சோகங்களையும், துளித் துளியளவு சந்தோஷங்களையும் சுமந்து கொண்டும், கடந்து கொண்டும் எனது வாழ்க்கைப் பயணம் இப்போது கொழும் பில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். அவரைக் காணாமல் விட்டுப் போயிருந்த நீண்ட கால இடைவெளியில் எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்
களை, அவரது கதைகளைப் போலவே
மனதைத் போலிருந்தது.
தொடும்படி கூறியது
திரு. கே.ஆர். டேவிட் அவர்கள் இன்னும் நீண்டகாலம் இலக்கிய சேவை புரிய வேண்டுமென்பது எனது ஆசையும் வாழ்த்துக்களுமாகும்.
மலர்களையும் கொள்ளலாம்.
-ܠ
N గీn:Jan Und ఏసెబడి
C O ܢ • NZ 9్మరాng/^? Qe_కొంు అనినీరాజరి
.Gona)2šn له خGخيموال
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல ஆக்கங்களையும் அவரிடமிருந்தே நேரில் பெற்றுக் கொள்ளலாம். அவரே கையெழுத்திட்டுத் தருவார்.
மற்றும் பள்ளிக்கூட, பொது பாலகங்களுக்கும் தேவையான நூல்களையும், மல்லிகை ஆண்டு
மல்லிகைப்
பந்தலில் பெற்றுக்

Page 6
திெர்பாராமல் வந்தடித்த சுனாமிப் பேரலைகளினால், எங்கள் கிராமம்
அடித்து நொறுக்கப்பட்டு அழிந்து கிடக்கிறது. இரண்டு மாதங்களாகியும் வீடு வாசல் களோடு, உறவினர்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள எங்கள் கிராமத்து மக்கள் தஞ்சமடைந்த அகதி முகாம்களிலேயே அநாதைகளைப் போல் முடங்கிக் கிடக் கின்றனர். எத்தனையோ வாக்குறுதிகளை அளித்த அரசாங்கம், நாக்கில் தேன்
வைத்ததைப் போல் சில
நிவாரணப் பொருட் களைக் கொடுத்து விட்டு, மெளனமாகிக் கிடக்கிறது. அடிக்கடி அக்தி முகாம்களுக்கு அ  ைமச் சர் களும் ,
மசீக்கு அலைகளில்லை
எம்.பி.க்களும் வந்து குறை நிறைகளைக் கேட்டுப்
போவது வழக்கமாகி விட்டது. இங்குள்ள பாடசாலை களிளெல்லாம் அகதி முகாம்களாக ஆக்கப்பட்டுள்ளதால், எங்கள் பிள்ளை களெல்லாம் தங்கள் படிப்புகளைத் தொடர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக் கின்றனர். பசியால் வாடித் துடிக்கும் குழந்தைகளின் முகங்களைப் பார்த்து, தாய் மார்கள் அனல் போன்ற பெருமூச்சுகளை விட்டு விம்மிக் கொண்டிருக்கின்றனர்.
இரவு நேரங்களில், வளர்த்தவர்களை சுனாமிப் பேரலைகளுக்குப் பறிகொடுத்த நாய்களின் ஊளையும், ஒலங்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. எங்கள் கிராமத்தைப் பசியரக்கன் ஆட்சி செய்வதால், பயங்கரம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் துயரமும் துக்கமும் விசும்பலுமாகவே கிடக்கிறது.
சுனாமியின் அனர்த்தங்களைப் பார்ப்பதற்கு மனமின்றிவேதனையில் ஒழித்துக் கொண்டிருந்த சூரியன் இன்றுதான் பூரணமாக வெளியில் வந்து, எங்கள் அழிந்து கிடக்கும் கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
"என்ன தேத்தண்ணியக் கொண்டாறியா, இல்ல நான் போகட்டா?
'ஒழுப்பம் பொறுங்க. அடுப்புக்க வெச்ச கொள்ள பத்தாமப் பொகயிது.
கொள்ளியெல்லாம் நல்லா மழயில நலஞ்சி பெயித்து. இப்பதான் தண்ணி லேசாக்
8
 
 

கொதிக்கிது.”
“ஒனக்கு இது போதுமே. நீ எப்ப தான் ஒரு வேலயச் சட்டுப்புட்டின்டு செஞ்ச.? மனிசன் நகத்தால சொறண் டற வேலயக் கூட, நீ பீசாக்கத்திய எடுத்துக்கு வெட்டுவாய். ஊந்துாந்து ஒரு வேலயச் செய்ய ஒனக்குச் செல்லத் தேவல்லியே."
எங்களூர் முகையதின் ஜூம்மாப் பள்ளிவாசல் தலைவர் மீரான் போடியார் கொதிக்கிற எண்ணைக்குள்ள போட்ட பணியாரம் மாதிரித் துடித்துக் கொண்டி ருக்கிறார். தொடர்ந்து பத்து வருடங் களுக்கு மேலாக இவர்தான் இப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராக இருக்கிறார். எங்கள் பகுதி எம்.பி.யின் வலது கையாக இருக்கும் இவரும் ஒரு குட்டி அரசியல்வாதி தான். சுனாமி அலைகளால் பாதிக்கப் பட்ட எங்களூர் மக்களுக்கு கிடைத்த நிவாரணப் பொருட்கள் எல்லாம் இவருடைய தலைமையில்தான் பகிர்ந் தளிக்கப்பட்டன.
"இன்னாங்க தேயில. இவளவுக் குத்தான் இப்படிக் கொதிச்ச.!"
"என்ர அவசரமெல்லாம் ஒனக் கெங்க வெளங்கப் போகிது? எவளவு
சொமய என்ர தலையில செமந்திக்கு
இரிக்கனெண்டு ஒனக்குத் தெரியிமா? கொழும்பிலரிந்து பள்ளி வேலைக்கு வந்த மேசனெல்லாம் ஒரு மாசமா
ஒண்டுஞ் செய்யாமச் சோத்தத் திண்டிக்கு சும்மா படுக்காணுகள். ரெண்டாம் தட்டுக்கு மாபுள் பதிச்ச கொறயோடக் கெடக்கு. மூணாம் தட்டுக்கு மாபுள் பதிக்கணும். செவருக் கெல்லாம் பட்டி புடிச்சி அறபு எழுத்துக் களால பூவேலயெல்லாம் செய்யனும். இதுக்குள்ள இந்த நெவாரண வேல. மனிசெண்ட பாடு போயிரும் போல கெடக்கு."
'இதெல்லாம் ஓங்களுக்குத் தேவயா? செய்யிறவன் செய்வான். இத உட்டுப்போட்டு, பெருமைக்கு மாவிடிக்க போனா, பட்டுக்கிழுக்கிறான். எவளவு படிச்ச மனிசனெல்லாம் இந்த ஊருக்கு இரிக்கான். அவனுக்கெல்லாம் இந்த ஆச வருகிதா? அவனெல்லாம் இப்படித் தல புழுத்துக்கு அலயிறானுகளா?"
'அவனுக்கெல்லாம் எனக்கிட்ட இரிக்கிற காணி பூமி இரிக்கா? இல்ல. எங்கிட எம்பிர சப்போட்டிரிக்கா? சும்மா பேச்சி மாதிக் கதயாம ஒன்ட வேலயப் பாரு. எல்லாத்திக்கும் ஒரு தரம் தகுதி வேணும். அப்பதான் மனிசன மதிப்பான்."
"எல்லாத் தரமும் தகுதியும் கண்ண மூடினாத் தெரியும். எத்தின பேரத்தான் இந்த அல வந்து அள்ளிக்கு பெயித்து. கண்ண மூடி முழிக்கிறத்துக் குள்ள குஞ்சு குறுமானோட இந்த ஊரள்ளிக்கு போன அல, இன்னமும்

Page 7
வரமாட்டாண்டு ஆருக்குத் தெரியும்? பெரும புடிச்ச மனிசருக்குத்தான் இப்படியான அலயளயெல்லாம் அல்லா அனுப்புற. இதயும் பாத்து திருந்தாத மணிசருக்கு, என்னத்த ஆரும் செய்யலாம்?"
"இஞ்ச் ஒன்ட உப்புச் சப்பில்லாத
கதயள எடுத்துக்கு அங்கால போ பாப்பம். நீநெனக்கிறாப் போல, எனக்
கொரு பெருமயிமில்ல. சும்மா
ஒறட்டிக்கு மாத்தெள்ள ஏலாத வெறுந்
தலயனையெல்லாம் மனிசன் சந்தி சபைக்கு எடுப்பானா? எதுக்கும் ஒரு மொறதல இரிக்கில்லியா? இதச் சொன்னா ஒனக்கென்ன கோவம் பொத்துக்கு வாற? பள்ளித் தலவரா எல்லாரும் வரலாமா? இதச் சென்னா எனைக்கு பெருமயா?"
“ஒங்களுக்கு பெருமெண்டு இப்ப ஆரு சென்ன. அதுக்கு நீங்கென்ன கோவப்பர்ற?"
மீரான் போடியார் தன் மனைவி யைச் சற்று அதட்டி விட்டு, பள்ளிக்குப் போக ஆயத்தமாகிறார்.
போடியாரின் வளவிற்குள் செழித்து நிற்கும் மாமரங்களிலும், தென்னை மரங்களிலும் இளஞ் சூரியனின் ஒளிபட்டு, மினுங்கிக்
கொண்டிருக்கிறது. அப்பொழுது,
வாழைப் பாத்திக்குள் அமைதியாகப்
10
படுத்துக் கிடந்த நாய் அனுங்கிக் கொண்டு குரைக்கிறது.
"ஆரது?"
"நான்தான் பள்ளி அதியாரி'
"அடிய். போ. அங்கால. அது ஒண்டும் செய்யமாட்டா, நீ உள்ளுக்கு
6JT...'
பள்ளி அதிகாரி கொன்னயண்ட வெள்ளயன் பத்திப் பதறி வந்து நிற்கிறான்.
“என்னதியாரி, இப்பிடி வேரித்து விருவிருத்து வாறாய்? என்ன வெசயம்? வெள்ளைக் காரன் ஆரும் நெவா ரணங்கள் கொண்டாந்திரிக்கானா?"
"அப்பிடி ஆரும் வரல்ல. ஆனா நம்முட அகதி மொகாங்கள்ளரிந்த ஊராக்களெல்லாம் வந்து பெரிய தாறு பாறு காட்டிக்கு நிக்கானுகள்."
"அலயால அழிஞ்ச காணாதாமா?
இப்ப அவகளுக்கு
6T66T60T unt Lib
வேணும்.?"
"குடுத்த சாமானெல்லாம் ஒழிஞ்சி பெயித்தாம். ரெண்டு நாளா ஒழுங்காச் சோறு கறி கூட இல்லியாம்."
'அதுக்கு நாமென்ன செய்யிற? கவுமந்து குடுக்கிற சாமான பள்ளித் தலவரு எப்பிடிக் குடுக்கிற? இந்த கவுமந்தும் மனிசர நல்லா ஏமாத்திப்

போட்டு. எவளவு சாமானuயிம் காசயும் வெளிநாடெல்லாம் கொண்டந்து குடுத் திட்டு. இதில, இஞ்சாலப் பகுதிக்கு என்னத்த குடுத்த? எல்லாத்தையும் அங்காலப் பகுதிக்கு ஒரே அனுப்பினா, இஞ்சால இரிக்கிற மனிசனெல்லாம், பசி பட்டினியால சாகிறயா? இந்தச் சுனாமி அல வந்து மணிசென்ட சொத்துக் சொகத்தோட நிம்மதியும் பெயித்து."
"நீங்க ஒழுப்புளம் சொணங்காம
வாங்க.."
'நான் வந்து என்னடப்பா
செய்யிற?
'நீங்க அவடத்த 6). Τπι 1ς.
எல்லாரும் இஞ்ச வந்திருவானுகள். அவளவு பெரச்சினப்படுத்திறானுகள். காசி தரட்டாம். இல்லாட்டிச் சோறு தரட்டாம்."
"இவனுகளுக்கு குடுக்க, 6T60Tá5 கிட்டெங்க காசிரிக்கு?"
இவ்வளவு நேரமும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த போடியாரின் மனைவி, பள்ளி அதிகாரி போட்ட கட்டை அவிழ்த்து விடுவதில் யந்திர LDraproit.
"ஏன் காசில்லாம? ஒங்கிட பள்ளில தானே லெட்சக் கணக்கில காசிரிக்கு. அதில கொஞ்சத்த எடுத்து, பசிக்கிற
11
ஏழயளுக்கு பிரிச்சுக் குடுங்களன். கொறஞ்சா போப்புது? அல்லாவும் கோவிக்க மாட்டான்."
"இஞ்ச மடச்சியப் போல பேசாத. பள்ளிக் காசி பைத்துல்மால். அது ஏழட நெருப்பு, அதில தொட்டா அல்லா சுட்டுப் போட்றுவான்."
"அப்ப, இந்த ஏழயள்ள வயித்து நெருப்ப என்னத்தால அணைக்கப் போநீங்க..? ஏழயள்ள நெருப்ப ஏழ யளுக்கு குடுத்தா அல்லா சுட மாட்டான். நல்லா மனம் வெச்சி குடுங்க."
"அப்ப, பள்ளி கட்ற என்னத்தால?"
"அந்த ஆலத்தப் புடிச்சி, மூணு தட்டில பள்ளி கட்டின காணாதா? சும்மாரிக்கிற செவருக்கெல்லாம் என்னத்திக்கு பூவேல செய்யணும்.? இப்படியெல்லாம் அல்லா செய்யச் சென்னானா..?" ,
"நீயொரு மடச்சி. நம்முட ஊர்ர பவரெல்லாம் இந்த பள்ளிலதான் இரிக்கு. இஞ்ச வாற தப்லிக்கு ஜமாத் தாக்களெல்லாம் நம்மட பள்ளியப் பத்தித்தான் பெரிசாப் ப்ேசிற. எலங்கயிலேயே இப்பிடிப் பெரிய பள்ளி
'ரெண்டொண்டுதான் இரிக்காம். இத
இன்னங் கொஞ்சம் ஒயரமாக் கட்டி னாத்தான், நம்முட ஊர்ர மதிப்பும் ஒயரும். இதெல்லாம் அடுப்படிய

Page 8
கெடக்கிற ஒனக்கெங்க தெரியப் போகிது.”
'நீங்க செல்றாப்போல எனக் கொண்டும் தெரியா தான். ஆனா, இந்தப் பெரிய பள்ளிக்குள்ள எத்தன பேரு தொழ வாறான்? செவகிக்குத் தொழ பத்துப் பேரும் வாறல்லியாமே...! இதுக்குள்ள இன்னமும் பெரிசா பள்ளியக் கட்டி என்ன செய்ய?
"இஞ்ச சவியாக் கதயாத. இது எங்கிட ஊர்லரிக்கிற மெளலவிமார்ர காதுகள்ள பட்டா, நாங்க தப்பின பாடில்ல."
'இந்த மெளலிவிமார்ர பொட்டு வித்தயெல்லாம் எங்களுக்கா தெரியா..? நீங்கதான் அவகளுக்குப் பயப்புடனும். இவகிட நாத்தமெல்லாம்
மக்கா மதினாவிலயிம் நாறுதாம்."
"இஞ்ச, இதெல்லாம் ஒனக்கென் னத்திக்கு? அவகளுக்கு கட்டயிம் தெரியிம். தெரியும். அவகெல்லாம் அல்லாட
கட்டினத அவுக் கயிம்
சீதவிகள். அவகிட துவாப் பறக்கத்து களாலதான், பொங்கி வந்த சுனாமி அலயெல்லாம் தணிஞ்சிக்கு (3urteoT. இல்லாட்டி நாமெல்லாம் கடலுக்கதான் போயிருக்கணும்."
"இந்தப் பித்தினாக்களப் பாக்காம அப்பிடிப் போயிரிந்தா எவளவோ நல்லாந்திரிக்கும்."
12
அப்பொழுது, மீரான் போடியாரின் வீட்டில் எடுபிடி ஆளாக இருக்கும் இளயதம்பி தன் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசிக்கொண்டு வருகிறான். அவனைக் கண்ட போடியாரின் நாய், வாலைக் குழைத்துக் கொண்டு போய், அவனை மறித்து ஊளையிட்டுக் கொண்டு, அவன் கால்களோடு ஒட்டி வருகிறது. இளயதம்பி மனித நேய முள்ள ஒரு மனநோயாளி. பல வருடங் களாகப் போடியாரின் வீட்டிலேயே இருக்கிறான்.
"அன்னா ஊரானெல்லாம் பள்ளி யப் போட்டு ஒடைக்கப் போறானுகளாம்! பள்ளிக்குள்ள ஆக்களெல்லாம் திமி திமிக்கிது. எத்தின நாளைக்குத்தான் மனிசன் சோறு தண்ணியில்லாமக் கெடக்கிற? மனிசர்ர ஊடு வளவ யெல்லாம் அடிச்சிக்குப் போன கடலிப்ப கொளம் மாதிரிக் கெடக்கு. அதுக் கென்ன கவல கக்கிசம்? கவல கக்கிச ஏழயளுக்குத்தானே வந்திரிக்கு. இதுக்குதவாத பள்ளியும், தல வரும் என்னத்திக்கு? 6T reisl
QLD 66) Th
பாட்டன் பூட்டன் பள்ளிக்கு குடுத்த காணியக் கூறி வந்த காசெல்லாத்தை யிம் எடுத்துக்குப் போய், வேங்கில
போட்டுப் போட்டு, வேங்கிக்காறன்
வட்டிக்கு குடுத்துழைக்க உட்டுக்கிட்டு இரிக்கானுகள். இஞ்ச புள்ள குட்டி களோட உடுமானங்களையும் கடலுக்கு குடுத்துப் போட்டு, ஏழயளெல்லாம்

பசியால் சாகிது. இந்தப் பள்ளிக் காறனுகள ஏழயள்ள நெருப்பு சும்மா உடுமா? எத்தின நாளைக்கு மனிசன் பசியால சாகிற? இந்த வேங்கில கெடக் கிற காசெல்லாத்தையும் எடுத்து, பசி பட்டினியாகக் கெடக்கிற எங்கிட ஊராக் களுக்கு குடுத்தா, அல்லா என்ன கோவிக்கயா போறான். இதெல்லாம் செய்யாம உட்டுத்தான், அல்லாட கோவம் இப்பிடி அல அலயா வந்த. பள்ளிய இந்த மொற கட்டாட்டி அடுத்த மொற கட்ற. தொழ ஆளில்லாம பள்ளி யெல்லாம் ஒட்ற புடிச்சிக் கெடக்கு.
இதுக்குள்ள மூணாம் தட்டும்
கட்டணுமா? எல்லாத்தையிம் நான்
எங்கிட அல்லா, ஜின், மலக்குமாரு, அவுலியாமாரு எல்லாரிட்டையிம் செல்லி, இந்த ஒலகத்த அழிக்கச்
செல்லப் போறன். எங்கிட சாதிக்கு ?
ஜின்னிட்ட செல்லி இந்தப் பள்ளிக் காரனயெல்லாம் உசிரோட விழுங்கச் செல்லப் போறன். என்ன இவகளுக்கு நல்லாத் தெரியா. நான் லாவயில லாவயில அல்லாவோடத்தான் பேசிக்கிரிக்கிற. கறுமம் செய்யிற எல்லாரையிம், வந்த அலயப் பாக்க இன்னம் பெரிய அலயா அனுப்பி, கெதில 966)IT அழிப்பானாம். நான்
பெரிய ஆலிமு மெளலானா. என்ன
செல்லக் கேக்காட்டி எல்லாரையிம் அழிப்பான். நான் லூசிதான். ஆனா LD6oss6öT.'
13
"ங். பெரிய ஜின்காராள் வந்திற் ராரு...! இனியெல்லாம் கிழிஞ்ச மாதிரித் தான். ஒனக்கு அவன்ட இவன்ட கதயக் கதயாட்டி சோறிறங் காதே. நீயும் ஒன்ட ஜின்னும். வந்தா ஒன்ட வேலயப் பாரன்."
"இதுக்குத்தான் நானொண்டும் பேசிறல்ல. சும்மா, கண்ட நிண்ட கஞ் சாங்கொத்தியெல்லாம் என்ன மாதிரி பள்ளியடிய நிண்டுக்கு ஓங்களுக்கு
ஏசிறான். இத நான் கேட்டுக்கு சும்மாரிக்
கணுமா? நானொரு ஓங்கிடஊட்டரிக் கிற பொடிகாட்டு. ஒங்களுக்கு ஏசி னென்ன எனக்கேசினென்ன. இப் பயிம் என்ர கொடலிக்கரிக்கிற சோறு ஓங்கிட சோறுதான். லாவைக்கு என்ர சாதிக்கு ஜின்னோடச் செல்லி, இன் னொரு பெரிய அலயக் கொண்டந்து
இவனுகளயெல்லாம் அடியோட
அழிக்கச் செல்லப் போறன்."
“என்ர சீதேவி! அத மட்டும் செஞ்
சிராத. வந்துபோன அலயால மனிசன்
பர்ற கஷ்ரம் காணாதா? இனியும் அலகில வந்தா, இந்த ஒலகம் தாங்கா. என்ர வாப்பா பட்டது போதும். நீ போய் ஒன்ட தண்ணிச் சோத்த திண்டு போட்டு, வட்டைக்க போய்வா...' மீரான் போடியார், போருக்கு போகும் வீரனைப் போல், தன் மோட்டார் சைக்கிளில் ஏறிப் பள்ளிக்குப் போகின்றார்.

Page 9
"போற செரி, அங்க ஆரோடயிம் சண்டகிண்ட புடியாம, ஆறுதலாப் பேசி, வெசயத்த முடிச்சிற்று வாங்க." மனைவியின் அன்புக் கட்டளையை சிர மேற்று, போவதைப் பார்த்து, இளயதம்பி மன நிறைவோடு நிற்கிறான்.
போடியார் பக்குவமாகப்
முகையதீன் ஜம்ைமாப் பள்ளியின் வளவு போர்க்களமாகிக் கிடக்கிறது. சுனாமிப் பேரலைகளால் அடித்து நொறுக்கப்பட்ட மக்கள், பசியின் கொடுமையால் சீறிச் சினந்து, உண விற்காகப் போராடிக் கொண்டிருக் கின்றனர். மக்களின் மூர்க்கமான போராட்டத்திற்கு ஈடுகொடுக்க முடி யாமல், பள்ளியின் பரிபாலன சபை யினர் கதிகலங்கி நிற்கின்றனர்.
பள்ளித் தலைவர் மீரான் போடி யாரின் மோட்டார் சைக்கிள் வந்து நிற்பதைக் கண்ட மக்கள், சுனாமி அலைகளைப் போல் ஆர்ப்பரித்து எழுந்து கூக்கிரலிடுகின்றனர்.
"அன்னா தலவர் வந்திற்ராரு...!"
போர்க்களம் உக்கிரமடைகிறது. எங்கும் பசியின் கொடுமை.
“தலவர்! எங்கிட புள்ள குட்டிக G6T 6io 6oT Lb G8 som Da5 Ó SQ6io 6-om up iš சாகிதுகள். எங்களுக்கு தொழிலிம் இல்லாமக் கிடக்கு. நம்முட பள்ளி கட்ட வெச்சிரிக்கிற காசில எடுத்து எல்லாருக்
14
பெரிசா ஊருக்கும் எங்களுக்கும் பெரும.
கும் பிரிச்சித் தாங்க. நாங்க பொறகு ஒழச்சித் தாறம். அல்லாக்காக எங்கிட புள்ள குட்டிகள்ள மொகத்தப் பாருங்க."
'பள்ளிக் காசி பைத்துல்மால். அந்த நெருப்பில மட்டும் நான் தொட மாட்டன். அதில ஓங்கிட பசிக்குத் தந்தா, இந்தப் பள்ளிய நாங்க எப்பிடிக்
கட்ற? எல்லாத்தையிம் பாக்க எங்களுக்
குப் பள்ளித்தான் முக்கியம். பள்ளியப் கட்டினாத்தான் எங்கிட
நான் இப்பயே போய், நம்முட ஏஜியவக் கண்டு ஓங்களுக்கு ஒரு வழி செய்றன். நீங்க கொஞ்சம் சபூறடைங்க."
'தலவர், நாங்க எல்லாரிட்டையிம் கேட்டிட்டம். எல்லாரும் ஓங்களுக் கிட்டக் கேக்கத்தான் செல்றாங்க. நீங்கதான் எங்களுக்கு காசி தரணும்."
‘பைத்துல்மால் ஏழயள்ள நெருப்பு.
அத நான் தொடமாட்டன்."
'அந்த நெருப்புக்கு சொந்தக் காரங்க நாங்கதான். எங்கிட பசிக்கு அதத் தாங்க. இல்லாட்டி நாங்க எங்கிட புள்ள குட்டிகளோட வந்து, இந்தப் பள்ளிக்குள்ளதான் குடியாட்டமா இரிப்பம். பள்ளி மூணு தட்டில கட்டின தானாதா?”
"இஞ்ச, என்ர செல்ல நீங்க கேக் காட்டி பொலிசத்தான் கூப்பிடுவன்."

"பொலிசென்ன, ஆமி, எஸ்ரீஎப்
ஆரு வந்தாலும் எங்கிட பசிக்கு காகி தந்தாச்
எல்லாரையிம் கூப்பிடுங்க.
செரிதான். அவகளும் மனிதன்தானே? எங்கிட பசி அவகளுக்கும் இரிக்குத் தானே..?
போர்க்களம் உக்கிரமடைந்து மக்கள் ஆவேசத்துடன் முன்னேறி பார்த்துப் பள்ளித் தலைவரும், பள்ளி நிர்வாகிகளும் செய்
வருவதைப்
வதறியாது திண்டாடிக் கொண்டிருக்
கின்றனர்.
"அப்ப, நீங்கெல்லாரும் இண்டைக்கு முகாமுக்கு போய், நாளைக்கு வாங்க. எதுக்கும் நாங்க கொரு கூட்டத்தைப் போட்டு ஒரு முடி வெடுக்கம்.”
‘எங்களுக்கெல்லாம் பசியால உசிரு போகப் பாக்கிது. என்ன கூட்டமும் நாட்டமும், கூட்டம் போடுற எல்லாரிந்தானே இஞ்ச நிக்கிங்க. எங்கள நீங்க ஏமாத்தப் பாத்திங்க; இவடத்த கொலதான் உழும."
பசியால் வாடித்
பள்ளித் தலைவரும் அவரின் நிர்வாகி களும் அடித்து நொறுக்கப்படுகின்றனர்.
மறுகணம், எங்கள் கிராமத்து மக்களின் பசியைப் போக்குவதற்கு
துடிக்கும் மக்களின் உணர்வலைகளினால்
15
பள்ளிக் காசை எடுத்துவரத் தலை வரும், பொருளாளரும் காசோலைப் புத்தகத்தோடு வங்கிக்கு போகின்றனர்.
போர்க்களம் ஒய்ந்து, சுனாமியால் பாதிக்கப்பட்டுப் பசியோடு குமுறிக் கொண்டிருந்த மக்கள் அமைதியாக நிற்பதைப் பார்த்து, பள்ளியின் இரண்டாம் தட்டில் படிந்துள்ள ஒட்டறை
களையும், புழுதியையும் துடைத்துக்
கொண்டிருந்த பள்ளி அதிகாரி
பதுக்களிசாட பக்கீரும், குண்டுக்
கோப்படமகன் அலியார் மோதினும் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக் கின்றனர். எதுவுமே அறியாத அப்பாவி போல் எங்கள் கிராமத்தை அழித்து நொறுக்கிய கடல், அமைதியாகக் கிடக்கிறது.
6. L- L-ITT வழக்குகளுக்கான
விளக்கம்.
Glanto - 86olo
தாறுபாறு - பிரச்சினை பைத்துல்மால் - பள்ளிவாசல் சொத்து/
பணம் லாவயில - இரவையில் ஒழுப்பம் - கொஞ்சம்/குறைவாக ஆலத்த - உலகத்தை பித்தி - பிரச்சினை ஏஜிய - பிரதேச செயலாளர் செவகு - சுபஹன சபூர் - அமைதி

Page 10
கலையும், அழகியலும். ஒரு பன்முகப் பார்வை
மு. அநாதரட்சகன்.
í a
அழகியல் என்ற பதம் சமகால இலக்கிய உலகில் பல்வேறு வியாக்கி
யானங்களையும், சர்ச்சைகளையும் தன்னளவில் எழுப்பி வருகின்றதை இலக்கிய ஆர்வலர்கள் நன்கறிவர். இச்சர்ச்சைகளின் மூலம் இதுவரை ‘அழகியல்' பற்றிய மதிப்பீடுகள் வெவ்வேறு கருத்தியல்களின், சிந்தனைகளின் வெளிப்பாடுகளாகவே இருந்து வருவதுடன் இது குறித்து நியமமான முடிவினை எவரும் எட்டவில்லை என்பதே இதன் தார்ப்பரியமாகவும் உள்ளது.
அழகியல்' என்ற பதம் 'Alesthetikos" என்ற கிரேக்கச் சொல்லை அடி யொற்றி ஜேர்மனிய தத்துவவியலாளரான அலெக்சாண்டர் பவும்கார்தேன் என்பவ ரால் முன்வைக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது கவிதைகளையும், கவிதைகளின் தத்துவார்த்த உள்ளடக்கத்தையும் குறித்தாகவே இருந்தது. பிற் காலத்தில் இக்கருத்தியல் பல பரிமாணங்களில் விளக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் பல சர்ச்சைகளுக்கு அடிப்படையாக இருந்து வருகின்றது.
"அழகு" என்றால் என்ன? உண்மையான அழகு என்பது யாது? போன்ற கேள்விகள் தத்துவ உலகில் கிரேக்கர் காலத்திலிருந்தே எழுப்பப்பட்டு, அது பற்றிய தேடல் இன்றுவரை தொடர்கின்றதென்பதே யதார்த்தமாகும்.
காலத்துக்குக் காலம் இதுபற்றி முன்வைக்கப்படும் சொல்லாடல்கள் எக்காலத்துக்கும் பொருந்துவனவாக இருக்கவில்லை. ஒருவனுக்கு அழகாகத் தோன்றுவது, இன்னொருவனுக்கு அழகற்றதாகத் தெரிகின்றது.
இச்சிக்கலிலிருந்து விடுபடுவதற்காகவே அழகு" என்பது அவரவர் பார்வையின் வழியாகவும் கற்பனை அகல்விரிவினாலும் ஏற்படும் ஒருவகையான "இன்ப
16

அனுபவமே' எனக் கூறுவோரும் உளர்.
அழகியல்' என்பது மனிதனின் கவன ஈர்ப்புக்கு உள்ளாகி அக உணர்வுகளுக்கு திருப்தியளிப்பதுடன் அவனது பொழுதுபோக்கான ஆர்வத் தினைத் தூண்டுவதாகவும் அமைகிறது என்பது இன்னொரு சாராரின் கருத் தாகும். இத்தோடு அழகியலின் கடமை முழுமை பெறாது. அது வாழ்வின் சாராம்சத்தினை வெளிப்படுத்துவ தாகவும், முன்னேற்றமான வாழ்விற் கான செல்நெறியை வழிகாட்டுவ தாகவும் அமைதல் வேண்டும் என்பது சமூக நோக்கில் சிந்திப்போரின் கருத்தாக உள்ளது.
காலத்துக்குக் காலம் அழகியல், கலை என்ற பதங்களுக்கு விளக்க மளிக்க முற்பட்டவர்கள் அவை குறித்த விளக்கத்தினை எளிமைப்படுத்தச் சில கொள்கைகளை முன்வைத்துள்ளனர். அந்தவகையில் அழகியல் என்பதைக் கலை என நோக்கும் பார்வையும் விரிவு கண்டது.
இந்திய
மக்களை ஈர்ப்பதையும், மனிதப் பண்
மரபில் கலைகள்
பினை மேம்பாடடையச் செய்வதையும் நோக்காகக் கொண்டிருந்தன. உண்மை, நன்மை, அழகு என்பவை கலைகளின் உட்கிடக்கையானவை எனப்பட்டது. அதாவது, சமூகத்தின் உண்மை நிலையைக் கலைகள்
s
17
கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம் சமூகத்தின் மேன்நிலைக்கு உதவக்
கூடிய நன்மைகளைத் தரவேண்டும்.
இத்தகைய கலைகளே அழகை வெளிப் படுத்தும் என்பது இதன் சாரமாகும். இக்கொள்கையானது, உண்மையான கலைகள் மனிதனின் ஒழுக்க நெறியை மேம்படுத்துவதுடன், மானிட நேயத்துக் கான இசைவினைக் கொண்டவை
யாகவும் இருத்தல் வேண்டும். இத்
தகைய மேன்நிலையைக் கலைகள் எய்தும் போதுதான் அவற்றின் ‘அழகு முழுமை பெறும். அதாவது கலைகளில் முகிழும் அழகியல், ஒழுக்க மேம் பாட்டினை அடிப்படையாகக் கொண்டி
ருக்க வேண்டும் என்பதை வலியுறுத்து
கின்றது.
ஆரம்பகாலத்தில் "கலை" என்பது போலச் செய்தலைக் குறித்தது. சிலைகள், சிற்பங்கள் என்பன மனிதரைப் போலவும், நாடகங்கள் மனித நடத்தைக் கோலங்களை காட்சிப் படுத்துபவை போலவும் பிரதிமை
செய்யப்பட்டன.
மேலும், கலைஞனை முதன்மைப் படுத்தும் கலைக்கொள்கை உருவாக கத்தில் டேவி என்பவர் முக்கியமானவர். "கலை" என்பது கலைஞனின் வினை யாற்றலினால் உருவானது என்பது இவர் கருத்தாகும். கலைஞன் இல்லா மல் கலைப் படைப்பென்பது சாத்திய மற்றது. இயற்கையில் உள்ள அழகு

Page 11
மிளிரும் எப்பொருளானாலும் இது கலைப்பொருளல்ல. அதற்கு எந்தக் கலைப் பெறுமானமும் இல்லை என்பது இவரின் கராரான கருத்தாகும்.
's 606) குறித்த ઠીકંup 61 விராய்ட்டின் கருத்து இன்னொரு பரி மாணத்தைப் புரியவைக்கிறது.
இளமைக் காலத்தில் சமூகத் தடை களாலும், ஒடுக்குமுறைகளினாலும் ஒருவனது நனவிலி மனதில் அடக்கப் பட்டிருந்த எண்ணங்களும், ஆர்வங் களும் தூண்டுதல் பெறும்போது கலைப் படைப்புகள் உருவாகின்றன. அவையே சமூகத்தின் உண்மையான அங்கீகாரத்தைப் பெற்ற கலைகளாக மிளிர்கின்றன என்கின்றார்.
கலைப் படைப்பாக்கத்தின் போது கலைஞன் தன்னை அதில் முழுமை யாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். தன்னை இழந்த நிலையில் கலை ஞனும், கலையும் ஒன்றான நிலையில் உன்னதமான கலைப் படைப்பு உருவா கின்றது என்பது, டி.எஸ்.கிரியட் என்ற தத்துவாச்சாரியரின் கருத்தாகும். இவரது கருத்தின் உட்கிடை ய்ாதெனின், கலைஞன் தன் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து, அதன் வழியில் தொடர்ந்து சிந்திப்பதன் மூலம் சமுதாய உண்மைகளைப் பற்றிய உணர்வைப் பெற்றுக் கலைப் படைப்பினை உரு வாக்குகின்றான் என்பதாகும்.
18
படைப்பாளி ஒருவன் தனது உன்னதமான, தனித்துவமான அனு பவத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து (tpւգաn 5 தூண்டலே கலை என்பதாகும். அந்த
கொள்ளும் அடக்க
அனுபவம் மக்களின் வாழ்வோடும், போராட்டத்தோடும் அதுகொண்டி ருக்கும் பிணைப்பிலிருந்தே பிறப்பது. அவனது அனுபவத்தின் தரம், தூண்டலின் ஆழம் என்பவைதான் ஒரு படைப்பாளி உருவாக்கும் கலையின் அழகை நிர்ணயிக்கின்றன என்பது அழகியல் பற்றிய மார்க்சிய நோக்கின்
அடிப்படையாகும்.
அதாவது, மக்களுக்கு ஏதாவது புதிதாக, தனித்துவமாகச் சொல்ல வேண்டும் என்ற படைப்பாளியின் தூண்டல்தான் படைப்பின் யதார்த்தத் தினை வெளிக்கொணர்ந்து, அதன்
வழியில் அழகியல் வெளிப்பாட்டுக்கும்
காரணமாகின்றது.
மேலும், மார்க்சியக் கருத்தியலின் படி வரலாற்று அனுபவங்களின் போக்கில் மனிதன் சேகரித்துக் கொண்ட உணர்வே கலையுணர்வு
எனப்படுகிறது. அதனுள் அழகு, உன்னதம்,
பெருமிதம் முதலிய உணர்வுக் கூறுகள் அடங்கியுள்ளன. புற உலகை ஊடுருவிப் பார்த்து அதன் இயக்கத்தினை அகத்தினால் உணர்தல் என்பதுவும் கலையுணர்

வின் பாற்பட்ட உள இயக்கமே யாகும் என்பது இவர்களது கருத் என்கிறது. தாகும்.
கலை இலக்கியங்களில் மனித இவ்வாறு, கலை / அழகியல் நேயம், சமூகப் பார்வை, வர்க்கச் சார்பு என்பதற்கு விளக்கமளிக்க முற்பட்டோர் என்பன பற்றிப் பேசாத அழகியலை கலைஞன், கலைப் பொருள், கலையின் மார்க்சிய நோக்கினர் ஏற்பதில்லை. சமூகச் சார்பு, கலைக்கான சந்தர்ப் கலை இலக்கியங்களின் முதன்மைப் பங்கள் என்பவற்றின் தளத்தில் நின்றே பணியாக இருக்க வேண்டியது, சமூக தமது கருத்துக்களை முன்வைத்து உறவுகளைப் பிரதியட்சப்படுத்துவதே வந்துள்ளனர் என்பதே உண்மை
யாகும்.
அமரர் எஸ்.வி. தம்பையா சிறுகதைப் போட்டி.
மல்லிகையின் வளர்ச்சிக்கு அபார ஒத்துழைப்பு நல்கியவரும், தொழிலதிபரும், எழுத்தாளருமான மறைந்த எஸ்.வி. தம்பையா அவர்களது ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்படவுள்ள தென்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இப்போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் முன்னர் வெளியிடப்படாத படைப்புகளாகவும் ‘புல்ஸ்கப்' தாளில் எட்டுப் பக்கங்களுக்கு மேற்படாமலும் அமைய வேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் போட்டிச் சிறுகதை' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
முடிவு திகதி : 2005 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது, பரிசுக் கதைகள் தகுந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும.
முதற் பரிசு - 7000/-
இரண்டாம் பரிசு : 5000/-
மூன்றாம் பரிசு : 3000/-
19

Page 12
இரட்ஷகன் வருகிறான்.
- பொ. கருணாகரமூர்த்தி (ஜேர்மனி)
9-cirol சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதஸ்நாள் இரவு
இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவு உயரத்துக்கு ஏறி மினுங்கிக் கொண்டிருந்தாலும் பெரிசாக அழத்தா மலிருந்தார். வர்ஷிணி பதினொரு மணியிருக்கும் என நினைத்தாள். இரண்டு மாத முதலே அவள் கடிகாரம் துடிப்பதை நிறுத்திவிட்டிருந்தது. புதிய செல் மாற்ற வேண்டும். அவள் நடத்தும் மினி பாலர் பாடசாலைக்கும் அன்று விடுமுறை.
இந்நேரம் மீன் அங்காடியில் வியாபாரிகள் வந்து, கூடத் தொடங்கியிருப்பார்கள். வர்ஷிணி அவர்களது நாலு வயதுக் குழந்தை அநாமிக்காவுக்கு மடத்தலை (பேபி றஸ்க்) தேநீரில் நனைத்து ஊட்டுகையில் "வசீகரன் நேரத்துக்குப் போய் மீன் வாங்கி வந்தானென்டால் இனிக் காலைப் பலகாரமென்று எதையும் பண்ணி மினைக்கெடாமல் விறகு தேடிச் சமையலையே முடித்து விடலாம்" என்று எண்ணவும், அவளின் மனதைப் புரிந்துவிட்டவன் போலத் தான் சீராக்கிக் கொண்டிருந்த நீரிறைக்கும் இயந்திரத்தை ஒரு பக்கமாகத் தள்ளி உரச்சாக்கொன்றால் மூடிவைத்துவிட்டு, “வர்ஷி பையை எடுத்துத்தாரும். நான் மீன் வாங்கி வாறன்’ என்று விட்டுப் பற்பொடியை வாயிலிட்டுத் துலக்கிக் கொண்டு முகம் கழுவக் கிணற்றடிக்கு ஒடிப்போன வசீகரனைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சூரியகதிர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்த போது ‘எம்மினமே அவர்கள் வாழ்ந்திருந்த சிறிய வீட்டையும், கூரையையும் கல்லுக் கல்லாய் பெயர்த்துக் கொண்டு போய் விட்டது. வீட்டிலுள்ள பொருட்கள் திருட்டுப் போவதென்பது எந்த நாட்டிலும் வழக்கந்தான். இங்கே தீராப் போரும், இழப்புக்களும் ஒரு வீட்டையே திருடிச் சென்று பிழைப்பதற்கு இந்தச் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. ጳ
2O

இரண்டு வருஷம் முன்னர் அரசுக்கும் போராளிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உண்டானதும் புலம்பெயர்ந்து வாழ்ந்து விட்டுத் தத்தம் வாழிடங்களுக்கு மீளத்திரும்பிய மக்களுக்கு யுனெஸ்கோ நிறுவனம் வீடமைப்பதற்கென 50 பக்கெட்டுகள் சீமெண்ட், நாலோ ஆறோ கொங்கிறீட் தூண்கள், அலுமினியக் கூரைத் தகடுகள், வாளி, சமையல் பாத்திரங்கள் எனச் சில பொருட்களை நிவாரணமாக வழங்கி
யிருந்தது.
இயல்பிலேயே வல்ல வியான வசீகரன் அத்தூண்கள்ை நிறுத்திக் கூரை யமைத்து, தரைக்குச் சீமெந்து போட்டு, அரையளவு உயரத்துக்குக் குந்துச் சுவர் வைத்து, மீதி உயரத்தை பீப்பாய்த் தகரத் தாலும், சப்புப் பலகையாலும் அடைத்து, அதுக்கான சிறியதொரு வீட்டை அமைத் திருந்தான். தகரத்தால் வேய்ந்த கூரையின் இரு பக்கங்களையும் சாய்வு ஒத்தாப்புக் களாக இறக்கி, அவற்றினுள் ஒருபக்கம் சமையல், மற்றது அவனது மினிவேக் ஷொப். அதனுள்தான் உந்துருளிகள், விசையுருளிகள், நீரிறைக்கும் இயந் திரங்கள், கதவுகள், பூட்டுகள் திருத்த வேலைகள் என்று செய்து கொண்டி ருப்பான்.
சமாதானத்தோடு வடக்கில் சில பகுதிகளுக்கு மின்சார விநியோகமும் வந்துவிட்டதால் அவ்வப்போது மின் காற்றாடிகள், நீர்தாங்கி மோட்டார்களின் றிவைண்டிங், வீடுகளுக்கு மின்சுற்றுக்கள் அமைத்தல் என்று வேலைகள் கிடைக்கும். உழைப்பதற்கு எப்போதும்
2
தயங்குவதில்லையாதலால் யாராவது கோழிக்கூடு அமைத்தல், கழிப்பறைக் கதவு மாற்றுதலென்ற சிற்றுாழியங் களுக்குக் கூப்பிட்டாலும் மறுக்காது போய்ச் செய்து கொடுப்பதால் நகர்கிறது அவர்களது சீவியம்.
ஜேர்மனியிலிருந்து அவன் தோஷ்க்கு வேந்தனின் கடிதம் அடுத்த மாதம் ஊருக்கு வருகிறேன்" என்று வந்த நாளிலிருந்து ஒரு புது ஆளாய் மாறித்
தானாகவே எல்லாக் காரியங்களையும்
ஒரு சிறுவனின் உற்சாகத்தோடு செய்து
முடிக்கிறான் வசீகரன். :
சாதாரணமாகக் காலையில் வேர்க் ஷொப்பினுள் புகுந்து விட்டானே யென்றால் அவனை மதியம் அங்காடிக்கு அனுப்பி மீனோ, காய்கறிகளோ வாங்கு விப்பதானால் பெரும் வல்லையாக விருக்கும். பத்து மணிக்கே வர்ஷ்ணி அவனை உருவத் தொடங்கினால் வேண்டா வெறுப்பாய் முனகிக் கொண்டு சந்தை கழுவிற நேரம் போய் 'மீன்காரி யின் காலிக் கடகத்தை தலைக்கு எடுக்கி விட்டு வருகிறேன்" என்று வருபவன் இப்போ என்னடாவென்றால் 'நீ உத்தரவைக் காலாலே இடு, நான் தலை யாலே முடிக்கிறேன்" என்று நிற்கிறான். இந்த அதீத உற்சாகமும், பூரிப்பும் எங்கேயிருந்து வந்தனவென்பதுதான் அவளுக்கம் அடியோடு பிடிபடவில்லை.
உந்துருளியில் வர்ஷிணியை வளைஞ்சு வளைஞ்சு கொண்டு திரிந்த காலத்தில் இருந்ததைப் போல முகத்தி லொரு மலர்ச்சி கூடிவந்து சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் சிரிக்கிறான்

Page 13
சின்னப்பயல் போல. அவனை நுட்ப
மாகக் கவனிக்கிறவர்கள் யாரும் "கொஞ்சம் பிசகிப் போச்சுப் போல என்று நினைக்கப் போகிறார்கள் என்று கூட வர்ஷிணி லேசாகப் பயந்தாள்.
இரவு இரண்டு மணிக்குப் படுக்கை யில் நித்திரை வராமல் புரண்ட வசீகரன் அவள் காதுச் சோணைகளை நீவிக் கொண்டு சொல்கிறான், ‘இனி நமக்கு ஒரு வாழ்வு வாறதெண்டால் அது வேந்த னாலைதான்." அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. தம் வாழ்வில் ஒளியேற்றக் குசேலரைத் தேடிக்கொண்டு 'ஒரு கண்ணனே வருவதான ஒரு கனவில் இருக்கிறான் அவன். அவனுக்கு ஆடு அடிக்க வேணுமாம், கோழி பிடிக்க வேணுமாம். பனங்கள்ளுக்குச் சொல்லி வைக்க வேணுமாம், இராசவள்ளிக் கிழங்கு, பலாப்பழம், மாம்பழம், கப்பல் வாழைப்பழம் எல்லாம் வாங்க வேணு மாம். முழு நீளப்பட்டியலே வைத்திருக் கிறான். ' '
"உங்க தோஷ்த்து ஜேர்மனிக்குப் போயும் இப்ப பத்துப் பதினைந்து வருஷங்களாச்சு. ஒவ்வொரு முறை வாற போதும் தவறாமல் 'நீ பாஸ்போட்டை எடு, பாஸ்போட்டை எடு" என்கிறாரே யொழிய உருப்படியாய்க் கூப்பிடுறதுக்கு வழியொன்றும் பண்றதாய்க் காணமே."
6
ஃபோறினுக்குப் போவதெண்டாப் போலை என்ன டிப்ளோமட்ஸ் விசா வோட போய் இறங்கிற மாதிரியான விஷயமே. அதிலும் றுாட்ஸ் எல்லாம் இப்ப முன்னை மாதிரி இல்லை, ஒவ்வொன்றும் இறுகிப் போய்க் கிடக்கு.
s
22
இடையிலை ஒவ்வொரு நாட்டிலும் அங்
கங்கே ஆறுமாதம், ஒரு வருவுமென்று
தொங்க வேணும். அவனும் சுளுவாய் முடியிற விஷயமெண்டால் எனக்குப் பண்ணாம லிருப்பானோ. அவன்
முன்னை வந்துபோன சமயங்களை
விடவும் இந்த முறை பேரழிவுகள்,
தாக்குதல்கள், சிதைவுகள், இடப்பெயர்வு
களுமாய் இந்த அவல வாழ்க்கையின்ர தரிசனங்கள் அவன்ரை மனதை மாற்றி ஏதோ ஒன்றை எமக்கு உருப்படியாய்ப் பண்ண வைக்காமல் விடாது. . . பாருமன்.”
வசீகரனும் நண்பனை இலகுவில் விட்டுக் கொடுத்து விடமாட்டான்.
வேந்தன் அவனுடைய பால்ய நண்பன் மாத்திரமல்ல; உறவுக்காரனும். தந்தை வழியில் பார்த்தால் சகோதரனாம். வசீகரனின் தகப்பனுக்கு அவனின் அம்மம்மாதான் மச்சாளாம். அவரோ மச்சாளுக்குப் பதிலாய் மச்சாளின் மக ளென்று இவன் தாயை முறைமாற்றி முடித்ததால் தாய்வழியில் பார்த்தால் மச்சானாம்.
வசீகரனே தன்னுடைய உறவுமுறை களைத் தமாஷாகச் சொல்வான். "நானே இரண்டு தலைமுறை அப்பா வழியிலை றிவேர்ஸில் போயிட்டு அம்மா வழி GNO வந்தேனெண்டால் எனக்கு நானே
மச்சானாகியிருப்பன்"
ஊர் பள்ளியில் இருவருமே ஒரே வகுப்பில் படித்ததால் வகுப்புகளுக்கு மட்டமடித்துவிட்டு மாட்டுக்கார வேலன், ராஜராஜசோழன் பார்க்கப் போனா

லென்ன, கீரிமலைக்குப் போய் நீச்சல டிக்கிறதென்றாலென்ன இரண்டு பேரும் ஒன்றாகத்தான் போவார்களாம். "வெளிக் குப் போகிறதென்றால் கூட அவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றாய்ப் போனால் தான் சரியாகப் போகும்” என்று அயலில் பகடி சொல்வார்களாம்.
வேந்தன் மனைவி கோமதியைப் பார்த்தாலும் சாது போலத்தான் இருக்கு. எல்லாருடனும் நல்ல மாதிரித்தான் பழகுகிறாள். அப்படி வில்லத்தனங்கள் பண்ணக் கூடியவள் மாதிரித் தெரிய வில்லை. ஆனால் இந்தத் தீனர் மேலே அந்தக் காருண்யனின் பார்வை விழுகிற தில ஏன் இத்தனை மெத்தனம் என்பது தான் அவனுக்கோ வர்ஷிணிக்கோ பிடிபடுகுதில்லை. ஆனாலும் அப்பாவித் தனமாய் வசீகரன் இன்னமும் வேந்தன் தன்னை ஜேர்மனிக்குக் கூப்பிடுவான் என்று நம்பிக் கொண்டிருப்பது
வர்ஷிணிக்கு முட்டாள்தனமாகவும்,
அவன் மேல் கோபத்தையுண்டு பண்ணுவ தாகவுமிருக்கிறது.
தன் குரலிலே ஒருவித கடுமையை ஏற்றி வைத்திருப்பதான பாவனையில் புருஷனிடம் சொன்னாள், "வசீகரனும் இவ்வளவு காலத்திலை தன்னுடைய குடும்பத்துக்குள்ளதான் ஒவ்வொருத் தரையும் ஜாக் அடித்து எழுப்பிவிட்டிருக் கிறாரே தவிர வெளியாலை யாருக்கும் வெள்ளைச் சல்லி கட்டின மாதிரித் தெரியேல்ல"
"அவன்ரையும் பாரிய குடும்பந் தானே. அவன் ஒருத்தன் தனிச்சு அடிச்சு
என்னதான் செய்வான்?
23
* தருவமென்று.
"நான் சொல்ல வாறதென்னென் றால் பச்சிலர் வாழ்க்கையில அவருக்கு உதவிறதுக்ச்கு சந்தர்ப்பங்கள் இருந்திருக் கலாம். ஆனாப் பொதுவாக் குடும்பம் மனைவியெண்டு வந்தால் பிறகு அவளவை அவங்களைத் தங்கடை இஷ்டத்துக்கு எதுவும் செய்யவிட மாட்டாளவையப்பா. கால்கட்டு. கைக் கட்டென்று வந்திடும். அவருக்கு மன
தில மாற்றும் வந்தால் வருகுது, வராட்டிப் போகுது. எதுக்கும் இன்னும்
சும்மா விண் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு இருக்காமல் இந்தமுறை தோஷ்த்தை இருத்தி வைத்து நெற்றிக்கு
நேரே விஷயத்தைக் கேளுங்கோ. அவர்
ஒன்றும் எமக்கு நிந்தத்துக்குப் பண்ண வேண்டாம், போய்ச் சேர்ந்து உழைக்கத் தொடங்கினவுடனே முதல் காரியமாய் அவற்றை காசு வட்டியோடை திருப்பித் முடிஞ்சால் கூப்பி டட்டும், முடியாட்டிப் போகட்டும். உண்டு அல்லது இல்லையெண்
இருப்பம்.”
“நீர் ஏதோ கொடுத்து வைச்சதைக் கேட்கிற மாதிரியல்லோ கதைக்கிறீர். அவனுக்கும் சொல்லக் கொள்ள கூடாத
என்னென்ன இடைஞ்சல்களோ யாருக்
குத் தெரியும்? செய்தானே யெண்டால் பார்க்கலாம். அதைவிட்டுப் ஃப்றெண் டென்றாலும் இதைச் செய், அதைச் செய் g ஃபோஸ் பண்ணறதுن۔ بtL (6) அன்ஃபெயர். என்ர அப்பரும் நேரத் தோட கண்ணை மூடிவிட அம்மா என்னை ஏழ்மையிலைதான் வளர்த்தவ. ஆனாலும் அவ அடிக்கடி சொல்ற

Page 14
விஷயம் ஒன்று அவகுரலோட என்ர அடிமனதிலை தங்கி நிக்குது. "தோழ னோடும் ஏழ்மை பேசேல்". அந்தக் குரல் என்னை யாரிடமும் எதையும் யாசிக்க விடாது."
"உதைத்தான் ‘ஈகோவென்றது. இவனிட்ட என்ன கேட்கிறதென்ற கர்வம். கொம்மாவிட்டையும் அதுதான் நிறைய இருந்திருக்க வேணும். நான் ‘கேட்கிறது? என்றன். நீங்கள் 'யாசிக் கிறது" என்றியள். எமக்குப் பொட்டுக் கிளாலை புகுந்தால்தான் போகலா மெண்டால் தலை குனிஞ்சுதானே ஆக வேணும். காரியம் ஆக்வேணுமென்றால் கிடந்து நுழைகிறவனுக்கும் கீழாலை நுழையிறதுக்கு அவனவன் ஆயத்த மாயிருக்கிறாங்கள்."
"எதை வேணுமென்டாலும் சொல்லி என்னைத் திட்டும். எனக்கு தலை குனி
யறதல்லடா பிரச்சினை, அவனுக்கு நம்ம
நிலமை, நாட்டு நிலமை உள்ளும் புறமும் நல்லாய் விளங்கும். நாம எடுத்து எல்லாம் விளம்பித்தான் தெரிஞ்சுகொள்ற பேர்வழி யுமல்ல அவன், பெரிய தத்துவார்த்தி யாக்கும்."
"சாமி கும்பிடுங்கோவென்றாலும் அவர்தானே கரும ஆதி. அவர் அறி யாமல் ஒரு கருமம் இந்தப் பிரபஞ்சத் திலை இருக்குமோ? என்கிறியள். ஃப்றெண்டோடை பேசுங்கோவெண் டாலும் அவனுக்கு எல்லாம் தெரியும்"
என்கிறியள்."
“நீர் அறியமாட்டீர், யு.கே.யிலை உடையார் கட்டு) இருண்டு பேரும்
24
தோட்டஞ் செய்யிற காலத்தில எத்தனை இரவுகள் நுளம்புக் கடிக்கு எழும்பி இருந்துகொண்டு சொறியிற நேரத்தில் கூட இந்த மேகத்தை எப்படித் தொடுறது, வானத்தை எப்பிடி வளைக்கிறதெண்டு எத்தனை பிளானுகள் பண்ணியிருப்பம். அவன் தனது குடும்பத்தைத்தான் முதல்ல நிமித்த வேணும். 'ஒரு மனிதனுடைய தர்மங்கள் முதல்ல அவனுடைய குடும்பத்திலைதான் ஆரம்பிக்குமாம்"
அதனால முதல்ல உள் வட்டம், பிறகு
தான் வெளிவட்டம்."
குழந்தை அநாமிகா போய் வர்ஷிணி யின் மடியில் தலை வைத்துக்கொண்டு படுத்திருக்க வர்ஷிணியும் அவளது தலைக்குள் தன் விரல்களை விட்டுச் சுகமாகக் கோதி விட்டபடி வசீகரனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அநாமிகா அந்தக் கோத்லின் சுகத்தை அனுபவித்தபடி இயல்பில் தாயிடம் வளவள"வென்று பேசவோ விவாதிக்காத அப்பா இன்று ‘என்ன விஷயமாக இப்படி விவாதிக்கிறார்" என்பது புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டாள், "ஏனம்மா அப்பாவும் ஜேர்மனிக்குப் போகப் போறாராமோ..?
"ம்ம்ம்ம்.. அப்பா எங்கை போறது. எங்கட செல்லக்குட்டிதான் நல்லாய் படிச்சு ஸ்கொலSப்பில ஜேர்மனி, அமெரிக்காவெல்லாம்
போகுமாம்."
“ஸ்கொலவழிப், ஸ்கொலவழிப்’ என்று இரண்டு தரம் சொல்லிப் பார்த்து

விட்டு “ஸ்கொலவிப்பிலை இல்லை. நான் பிளேனிலைதான் போவன்"
“Fif?... னிலைதான் பறந்து போகுமாம்." என்று
என்ரை செல்லம் பிளே
அவளை வாரி முத்தமிட்டுவிட்டு வர்ஷிணி கேட்டாள், வட்டம். பிறகு வெளிவட்டம் என்றது
“முதல்ல உள்
சரிதான். பெண்சாதியின்ரை தம்பிக் களிசடையை எந்த வட்டத்திலை இருந்தாமனை கூப்பிட்டவர்?"
"களிசடையென்று நீயே சொல் லுறீர், அவன் போனதால இப்ப ஊர் திருத்தமல்லே. அப்ப அதைச் சமூக சேவையிலை வைக்கிறது."
“நல்ல சமூக சேவை. அங்கை போயும் அந்த நரகாலி டிறக்ஸ் ஏதோ வித்துப் போலிஸிலை மாட்டுப்பட்டு உள்ளுக்கைத்தான் கிடக்குதாம்."
“இப்ப அவனுக்கு களிசடை மச்சானை எப்படி கூப்பிடலாம்" என்றொரு நோட்டீஸ் அனுப்பலா மென்றிரோ?
“உங்களுக்கு எல்லாம் தமாஷ்தான்.”
“இந்த இதயம் இருக்கல்லோ இதயம். அது உடம்பிலுள்ள அத்தனை அங்கங்களுக்கும், இழையங்களுக்கும் முக்கி முக்கி ஓய்வில்லாமல் இரத்தத்தைப் பம்ப் பண்ணிக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் தன்னுடைய சுவர்த் தசைகளுக்குப் போதுமான சப்ளை இருக்கோ இல்லையோ என்கிறதை அறி யாது. நாளடைவிலை சப்ளை போதாத செல்லுகள், இதயத் தசைநார்கள் சாகத்
'நீ உன்ரை ,
25
தொடங்கினாப் போலதான் கடைசியா அது 'பக் பக்கென்று கொண்டியடிக்கும். அதிலதான் ‘ஹார்ட் அட்டாக்" வாறது. நான் நினைக்கிறன் அந்த மாதிரித்தான் வேந்தனும் என்னைத் தன்னுடைய இதயத்துக்குள்ள வைச்சிட்டான்."
"இண்டிமேசி கூடினதால ஃப்றெண்ட் சப்ளை இல்லாமக் காயிறதை உணரேலாமலிருக்கு அவரால. அப்போ அவருக்கது புரியவர அந்திமக்காலம் வரவேணுமென்றியள்.” −
“அவன் உணராட்டிப் போறான். போகட்டும். அந்திமம் கருமாதி என் றெல்லாம் கதையாதையும். அவனும் குடும்பமும் சகல ஐஸ்வரியத்தோடையும் நூறு வருஷத்துக்கு வாழ வேணும். மற்றவருக்கும் உதவி செய்யிறதுக்கு வசதியும் வாய்ப்பும் இருக்கிற ஒரு மனுஷன் வெளியுந்தல்கள் இல்லாமல் தன்னுணர்வில் அதைச் செய்தானே யெண்டால் வரவேற்கலாம், பாராட்ட லாம். ஆனால் 'ஏன் நீ அப்பிடிச் செய் யேல்லை, இப்பிடிச் செய்யேல்லை யென்று கேட்கிற உரிமை இன்னொரு வருக்கு எப்பிடி வரும்?' என்று விட்டு நல்ல தண்ணீர் அள்ளி வருவதற்காகப் பிளாஸ்டிக் குடத்தை உந்துருளியில் வைத்துக் கட்டினான். பின் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டு, “இப்படியும் இருக்கலாமப்பா. 'ஏய் மனுஷா. இரக் கத்தை மட்டும் உன் மனதின் பக்கம் அணுக விடாதே. அது நாளடைவில் உன்னை முழுக் கோழையாக்கிவிடும்" என்று அவங்க தேசத்துக்காரர் ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். இவனும்

Page 15
அதைப் படிச்சிட்டு எதுக்குக் கோழையா. வீரனாவே இருப்பாமென்று தீர்மானிச்சிட்டானோ..? என்றுவிட்டு உருளியை உந்தலானான்.
வர்ஷிணிக்கு ஆயாசத்திலும் சிரிப்புத்தான் வந்தது.
///////////
ஈழப் போர் உக்கிரமாக வெடிக்கு முன்னம் இருவரும் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு எல்லாரையும் போல வேலை தேடி அலைந்த காலத்தில் சும்மா சொல்லக் கூடாது தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடெல்லாம் இப்போதுள்ள அளவுக்கு முனைவாக்கம் பெற்றிருக்க வில்லை. வங்கி சிறாஃப், சுங்கப் பகுதி போலிஸ் சப்இன்ஸ் பெக்டர்கள் நியமனங்களுக்குப் பதினை
பரிசோதகர்கள்,
யாயிரம், மீன்பிடிக் கூட்டுத்தாபனம், கட்டிடக் கூட்டுத்தாபனம், எழுதுவினைஞர் சேவை, ஆசிரியர் நிய மனங்களுக்குப் பன்னிரண்டாயிரம் என்ற றேட்டுகளில் அரச பணி வாய்ப்புகள் நிறையவே இருந்தன.
பொது
வசீகரனுக்கு அத்தகைய தொகை யைத் திரட்டி அவ்வாறொரு பணியில் தன்னை அமர்த்தக் கூடிய பொருண்மியப்
பின்னணி இருக்கவில்லை. அங்கொன்
றும் இங்கொன்றுமாக இளைஞர்கள் கொஞ்சம் பணம் புரட்டக் கூடிய குடும் ஜேர்மனி, நோர்வே என்று ஐரோப்பிய நாடு களுக்கும், கனடாவுக்கும் வேலை தேடிச் சென்று கொண்டிருந்தார்கள்.
பங்களிலிருந்து பிரான்ஸ்,
s
26
வேந்தன் குடும்பத்தைப் பொறுத்த மட்டில் பத்துப் பதினைந்து செலவு செய்து அவனையொரு அரச உத்தி யோகத்தில் அமர்த்துவதை விட, இருந்த நிலத்தை ஈடு வைத்தும், கொஞ்சம் கடனைகிடனைப் பட்டும் இருபத்தைந் தாயிரம் செலவு செய்து பாரீஸஅடாக ஜேர்மனிக்கு அனுப்பி விடுவதென்பது உகந்த முதலிடாகப்பட்டது. அவனும் குடும்பப் பொறுப்பு, பிள்ளை. அவர்களின் நம்பிக்கையை
கரிசனையுள்ள
வீணடிக்காமல் குடும்பத்தை அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாகவே நிமிர்த்தி உயர்த்தி விட்டுவிட்டான். அவனும் ஜேர்மனி போய்ச் சேர்ந்து வேலை கிடைத்தவுடனேயே குடும்பத்தில் சடுதியில் பல மாறுதல்கள் ஏற்படலாயின.
"எப்போது பொழுது செக்கலாகு காத்திருந்து முதுகுக்குப் பின்னால் கைகளைக் கோர்த்துக் கட்டியபடி விதிக்கு வந்து கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டு இருளோ டிருளாகிக் கள்ளுக்குக்கேகிய அவன் தகப்பனார் தம்பாபிள்ளையார் இப் போதெல்லாம் டவுணிலிருந்து ‘மெண்டிஸ் ஸ்பெஷல் சாராயம்" சங்கை யாக எடுப்பித்து நடுக்கூடத்தில் சாய் மனைக் கட்டிலில் அமர்ந்து பந்தாவாகக் குடிக்கிறார்.
மா நகர சபையில் எழுதுவினைஞர் வேலைக்கு அடைக்கோழி மாதிரிக் கேரும் ஒரு பழைய 'றலி உந்துருளி யில் உந்தித் திரிந்த மூத்த சகோதரன் ராஜ்குமாரன் இப்போ அதை வீட்டுக் கோடியில் சாய்த்துவிட்டு, புது யமஹா
மென்று'

- ஃப்ளாஷர் விசை உருளியில் 80 கீ.மீட்டர் வேகத்தில் உருண்டோடித் திரிகிறான்.
குடும்ப அக்கறைகள் இல்லாத வனும் சுயநலமியுமான இரண்டாவது சகோதரன் ஒருத்தன் குடும்பத்தோடேயே ஒட்டாமல் ஒரு வேற்று மனுஷன் மாதிரி அவர்களோடு வாழ்ந்தவன், ராஜ் குமாரனையும் முந்திக் கலியாணம்
பண்ணிக் கொண்டு மாமியார் விடே У
சொர்க்கம் என்று வீட்டு மாப்பிள்ளை யாகப் போய்விட்டிருந்தான். அவன்கூட இப்போது இரவு வேளைகளில் ஒவ் வொரு நாளைக்கொரு பிள்ளையாக உந்துருளியில் பாட்டியிடம் கூட்டிவந்து அவர்களுக்கு ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொண்டு போகிறான்.
உக்கிரமான ஈழப் போர் தொடங்க முன்னரே ஐந்தறையில் ஒரு வீடு எழும்பியது. இரண்டு சகோதரிகளைக் கட்டிக் கொடுத்து அவர்கள் குடும் பங்களை ஜேர்மனிக்கு அழைத்தது, இளைய தம்பிமார் இரண்டு பேரையும் கனடாவுக்கு அனுப்பியது என்று நிறையவே சாதித்து விட்டு ஒன்பது வருஷங்களின் பின் ஜெயராமனாக வந்து வேந்தன் இறங்கவும், பற்பல ஊர்களி லிருந்தும் பெண்களைப் பெற்றவர்களும், கல்யாணத் தரகர்களும் அவன் வீட்டில் குழுமத் தொடங்கினர்.
பார்த்த பல இடங்களில் அவன் மனசை ஈர்த்துவிட்டிருந்த கோமதி வீட்டாருடன் கடைசியில் தம்பா பிள்ளையார் சீதனத்தில் கடும் போக்குக் காட்டிப் பிச்சாது ஒரு லட்ஷம் ரூபாயில்
27
பண்ணியிருப்பன் தெரியுமே..?
சம்பந்தமே குழம்பி விடுமோ என்ற நிலைக்கு வந்தபோதும் வேந்தன் தேச வழமைப்படி வாலயத் திறவாது 'அச்சாப் பிள்ளையாகவே இருந்தான்.
"ஏன்டா.
வசீகரனுக்கு ஆற்றாமல்
மேற்கத்தை நாடுகளிலையெல்லாம்
இப்போ நம்ம பெடியங்களுக்கு 'நோ டெளறி" என்றதுதான். புது "ட்றென்
டாமே". வட் எபௌட் யூ கொம்
றேட்..?" என்றதுக்கு “இது ஆர். ஆர். ஆற்றை விசர்க் கதை. இப்ப இதுவே ஜேர்மனியாயிருந்தா இந்த "சம்மை ஜேர்மனி மார்க்கில டிமாண்ட்
ஒரு சின்னச் சம்பவம் சொல்றன் கேள், ‘என்ரை ஃப்றெண்ட் ஒருத்தன் கர வெட்டிப் பெடியன். நாலு மாசமுன்னே இங்கே வந்து கலியாணங் கட்டி வைஃபை அங்கே கூட்டியந்தவன். அவள் வந்தது வரக்குள்ள அவனிட்ட "ஏன் உங்கடை கார் எங்கே?" என்றா ளாம். அவனும் கபடில்லாமல் 'பாங்கில கொஞ்சம் கிறெடிட் இருக்கு டியர். இன்னுமொரு ஆறு மாசத்தால தான் காருக்கு லோன் எடுக்க வசதிப்படு மென்று" உண்மையைச் சொல்ல, "உப்பிடியெண்டால் அப்பரிட்டை இன்னொரு பத்து லட்சத்தைக் காருக்கு நீங்கள் கூட்டிக் கேட்டிருக்கலாம். காணி
வித்து வைச்சிருந்தவர்' என்றாளாம்
இது எப்படியிருக்கு. நானும் சீதனத்தை ஆகக் குறைச்சு விட்டனேயெண்டால்
கோமதியே என்னைக் கோபிக்கிற
மாதிரியும் வரும்." என்று விட்டுச் சிரித்தான்.

Page 16
வாழ்க்கையில் நிறைய முன்னேற வேணும், சாதிக்க வேணும் என்ற கனவு களுடனிருந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பள்ளிப் படிப்பு முடிந்ததிற்கும்,
ஜேர்மனிக்குப் புறப்படுவதற்குமிடை
யிலான கால இடைவெளியில் சேர்ந்து முயன்று பாராத தொழிலேயில்லை.
முதலில் முள்ளியவளை புதுக்குடி யிருப்புப் பகுதிகளுக்குப் போய்த் தென்னந் தோப்புகளில் திரிந்து தேங் காய்கள் வாங்கி சாக்குகளில் கட்டித் தட்டிவானிலே கொண்டுவந்து சாவகச் சேரி, சுன்னாகம் சந்தைகளில் விற்றார் கள். சீசனிலை மிளகாய் கட்டி பாரவுந்து களிலை கொழும்புக்கு ஏற்றினார்கள். எதிலும் இலாபம் அவர்கள் உழைப்புக் குப் போதுமானதாக இருக்கவில்லை.
தோட்டம் செய்து பார்ப்போமென்று முத்தையன்கட்டிலும், உடையார்கட்டிலும் காணிகளைக் குத்தகைக்கு எடுத்து மிளகாயும், வெங்காயமும் வைத்தார்கள். மிளகாய்ச் செடிகள் பூத்துப் பிஞ்சு பிடிக் கிற நேரம் பார்த்துப் பாசனக்குளம் வற்றிக் கையை விரிக்கிறது. மனம் தளர வில்லை. சும்மா இருக்கவும் மனமில்லை. காடு வெட்ட, கழனி துப்பரவாக்க, அரிவு வெட்ட, வேலியடிைக்க வென்று அங்கேயே கூலி வேலை செய்தார்கள், போதவில்லை. * .
மணிச் சாமான்கள், வளையல்கள், அலுமினியம், பிளாஸ்டிக் பாத்திரங் களைக் கொழும்பில் மொத்த விலைக்கு வாங்கி வந்து முல்லைத்தீவில் பேருந்து நிலையப் பக்கமாகக் கடையொன்றைப் பிடித்து அதில் வைத்து விற்றார்கள்.
i
W
28
வெட்கத்தை விடுத்து வன்னிவிளாங் குளம் அம்மாள், தண்ணீரூற்று, முள்ளிய வளை வில்லுரன்றிப் பிள்ளையார், புதூர் நாகதம்பிரான், மடுமாதா கோவில் திரு விழாக்களுக்கெல்லாம் எடுத்துப் போய் கடை விரித்தார்கள். எவ்வளவு தான் பாடு பட்டாலும் இவைகளெல்லாம் ஜீவித் திருக்கப் போதுமானதாய் இருந்ததே யொழிய அவர்கள் கனவுகள் இன்னும் தூரத்திலேயே இருந்தன.
வசீகரன் வேந்தனைக் கேட்டான், "மச்சான் திருவிழா மணிச் சாமான்கள்
வியாபாரத்தோடை ஒத்துப்போகும் பார்.
சின்னதாய் மல்லாகத்திலை சிகரமும் ஒன்று கட்டி, மலையகத்தில லேசாப் பிடிக்கலாமாம் மார்க்கண்டற்றை செற்
மாதிரி ஒரு செற். சதுர்க் கோஷ்டியும்
இறக்குவமே?”
“சூடாலக் வாசிக்க, பித்தளைத் தகட்டில "சொடாங்’கென்று போட வொன்றுக்கும் ஆள் தேவையில்லை. சும்மா நீயே பூந்து விளையாடு வாயாக்கும். நாய்விட்டு நாயே.. இப்பவே பார்க்கிற உத்தியோகத்துக்கு ஊராட்களைக் கண்டால் காட்டுக்க ஒளிக்க வேண்டியிருக்கு. இதுக்குள்ள சதுர் இல்லாததுதான் கேடென்ன?”
"பிழைக்க வேணுமெண்டால் சன் லைற்றுப் பெட்டி கட்டி மீன் விக்கவும் தயாரெண்டு பறைஞ்சது யாராக்கும்?”
"பொம்பிளையளை வைச்சு
அவர்களைச் சுரண்டியொரு நாய்ப் பிழைப்புத் தேவையா நமக்கு?”

"அதொரு கலைதானே
கொம்றேட்?
"கலை, கொலையெண்டு பறைஞ் சாப் பல்லைத் தட்டிப் போடுவன். மூடிக் கொண்டிரு நாயே.”
'நீ முக்காதை மூலம் வெளிக்கிடப் போகுது. நான் சும்மாதான் விட்டுப் பார்த்தனான்.”
வசீகரன் திருமணத்திலும் பந்தல் போடுவதிலிருந்து, சந்தையில் அரிசி
மூடை, காய்கறி சாமான்கள், எண்ணை,
சீனி வாங்குவது, கூறை எடுப்பது, ஐயர்
‘மேளக்காரர், சமையல்காரரை அழைப்ப தோடு, நாலாம் சடங்கு முடிய பந்தல் கால்கள் பிரித்து அடுக்கி வைப்பது வரை எல்லாக் காரியங்களையும் உள்வீட்டுப் பிள்ளையாயிருந்து
கச்சிதமாகவே செய்து முடித்தான்.
பந்தலுக்கு விரிக்க ஊரில் யாரி டமோ இரவலாக வாங்கிய கதிர்ப்
பாய்களை ஒரு ஹாண்ட் டிராக்டரில் ஏற்றிக் கொண்டுவரும் பொழுது வசீகரன்
வானத்தைப் பார்த்துக் கொண்டு
சொன்னான்; “பெண்களைச் சுரண்டிறது, டீஸ் பண்றதெல்லாம் சூவானிஸம் எனக்குப் பிடிக்காது, சீதனம் வாங் கிறவன் முதகெலும்பில்லாத பேடி என் றெல்லாம் தோழர் ஒருகாலம் நம்மோட பறைஞ்சிருக்கு."
"தோழர் எதை மனதில வைச்சு முணுக்கிறாரெண்டு விளங்குது... இப்பவும் அந்தக் கொன்செப்டிலை எனக்கு ஒரு மாற்றமுமில்லை. பெண்
களை டீஸ் பண்றது எனக்கு என்றைக்குமே பிடிக்காதுதான். ஆனால் இதொரு மெட்டீரியலிஸ்டிக் உலகம் என்கிறதை நாங்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் பார், தத்துவங்களை எத்தனை தொன் வேணுமானாலும் நாங்கள் உற்பத்தி செய்யலாம், ஆனாலும் இதே நடைமுறை உலகத்திலதான் நாம் வாழ வேண்டியிருக்கு. சோஷலிச மெல்லாம் எப்பவோ குடை சாய்ஞ்சு போச்சு, என்ரை மச்சான்மார் என்னட்டைச் சீதனம் வேண்டாமெண் டாங்களோ, இன்னும் என்னத்தை உருவலாமெண்டு தான் இன்றைக்கும் உள்மடியைப் பார்த்துக்கொண்டு இருக் கிறாங்கள். சீதனம் கூடாதுதென்கிறதில எனக்கு மறுப்பேயில்லை. அந்த வீட்டிலும் இரண்டு பேர் கனடா விலையிருந்து வருறாங்கள். அதனால இருக்கிறவனிட்டை எடு, இல்லாதவனை விடு. இதுதான் த மொடேர்ன் அண்ட் அப்பிளிக்கபிள் பிறின் சிபிள். பி அப்டேட்டட் வித் திங்ஸ் மேன்."
ஜேர்மனிக்குப் புறப்படுகையில் வேந்தன் கல்யாணத்திலே மாய்ந்து தேய்ந்த தோஷ்த்துக்குத் தான் பாவித்து மீதமிருந்த ஷேவிங் கிறீமைத்தான் கொடுத்தான். ஒருகணம் 'சுருக்கென்று தான் அவனுக்கும் இருந்தது. குறைந்த பட்சம் அவன் கொண்டு வந்திருந்த 'டீ- ஷோடவில் ஒன்றையாவது கூடவே கொடுத்திருக்கலாம். எல்லாம் அந்நியோன் யத்தில் நான் குறை விளங்கமாட்டேன்’ என்றுதானே தருகிறானென்று உடனே
சமாதானமுமானான்.
29.

Page 17
அவன் அறிந்து வந்திருக்கிற புதுப் பிறின்சிபிள்களோ, முகம் விரவிய கண்களை வைத்துக்கொண்டு அவனைத் தியங்கத் தியங்க பார்த்துக் கொண்டி ருக்கிற புதுப்பெண்ணின் மோகமோ, கலியாணச் சந்தடி அலைச்சல்கள், தூக்கக் கலக்கங்களோ பயல் இப்ப கொஞ்சம் குழப்பத்திலதான் இருக்கிறான். இயல் பான சிந்தனை புத்தி இருக்காதுதான், போகட்டும் இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள் வர்ஷிணியிடம் கூட அதுபற்றி” இதுவரை ஒரு வார்த்தை
வசீகரன் சொன்னதில்லை.
வேந்தனின் புதிய வாசிப்புகளின் விளைவாயிருக்கும் உலகத்தில் அதிஷ்டம்" என்று ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம், அப்பிடி நாங்கள் நம்பிறது சில பொசிடிவ் /
சொல்கிறான்:
சாதக இயக்கங்களின் ஒத்திசைவைத் தானாம்.
அப்பிடித்தான் சுதந்திரத்துக்குக்கூட இப்ப புது வியாக்கியானம் வைத்திருக் கிறான். "சுதந்திரம்” என்றொரு விஷயம் உலகத்திலேயே இல்லையாம். எதிலி ருந்து விடுதலை வேணுமென்று கருதுகி றோமோ அது கிட்டிய பிறகுதான் அந்தப் "பேருண்மை புரியவருமாம். வசீகரனுக் கும் அதுகள் கொஞ்சம் புரிகிற மாதிரியும் புரியாத மாதிரியுந்தான் இருக்கின்றன.
வேந்தனை ஜேர்மனிக்கு கட்டு நாயக்க விமான நிலையத்தில் முதல்முதல் வழியனுப்பிவிட்டு வந்தபோது அவனில் பாதியை யாரோ பெயர்த்து எடுத்துக்
கொண்டு போய்விட்ட மாதிரித்தான்
30
இருந்தது. ஆரம்பத்தில் அவனும் ஆறுத லாக நீண்ட நீண்ட கடிதங்கள் எழுது வான். நாட்டு நடப்புகள், ஜேர்மனியரது பார்த்தவிட மெல்லாம் வழுக்கிக் கொண்டு செல்லும் மகிழுந்துகள், சுரங்க ரயில்கள், நவீன போக்குவரத்து வசதிகள், 'வெள்ளை வெள்ளை மிஷினுகள்" என்று விரிவாக எழுதிவிட்டு அனேகமாக எல்லாக் கடிதங்களிலும் இறுதி வரிகளாக "பாஸ் போட்டைச் சீக்கிரம் எடு மச்சான். தாமதி யாதை, தொடர்ந்து இரண்டு பேரும் ஒன் றாயிருக்க விரைவில் நான் வழியொன்று பண்ணுவேன்' என்று முடித்திருப்பான். வசீகரனுக்கு அப்போதே தான் ஜேர் மனிக்குப் போய் அங்கே அகலமான மார்க் நோட்டுகளை விரித்துப் படுத் திருப்பதைப் போலிருக்கும்.
பழக்க வழக்கங்கள்,
பின்பெல்லாம் ஆறு மாசத்துக்கு ஒன்று என்றிருந்த கடிதப் போக்குவரத்து ஆண்டுக்கொன்றாகி அவன் திருமணத் தின் பின் நின்றே போனது. இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நினைத்துக் கொண்டு இப்போது கடிதம் அதுவும் வருகிறேனென்று போட்டிருக் கிறானென்றால் குஷி பிறக்காதா பின்னே?
இந்தக் காலவெளியில் வேந்தனின்
வாழ்க்கை அஜந்தாவிலும் பல நிகழ்வுகள்.
வர்ஷிணியோடு காதலாகி அது வானளாவி வளர்ந்ததும் வேறு வழி யில்லாமல் அவளுடன் ஒடிப்போக நேர்ந்தது. அழைதிப் படையினருக்கு ஆடுகள் ஏற்றிவந்த பாரவூந்தை இடை

மறித்து விடுதலைப் புலிகள் மடக்கிக் கொண்டு போகவும், அதைத் தேடிக் கொண்டு ‘ஆட்டு வண்டி எங்கே சொல்லுடா?’ என்று வந்த படையி னரிடம் அகப்பட்டு "என்ன ஆடு' 'என்ன வண்டி என்று புரியாமலே மிதிபட நேர்ந்தது, வசதிகள் குறைந்த ஆஸ்பத் திரியில் உடம்பை அசைக்க முடியாமல் பத்து வாரங்கள் படுத்துக் கிடந்தது. அமைதிப்படையினரின் ஊர் சுற்றி வளைப்பில் அகப்பட்டுக் கொண்டு அவர் களால் தகிக்கும் தார்விதியில் உட்கார வைக்கப்பட்டுப் பிருஷ்டம் அவிந்தது.
ஜெயசிக்குறு, சூரியக்கதிர்த் தாக் குதல்கள் வந்தது. மேலும் பதுங்கு குழி வாழ்வைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தது. இருந்த சிறிய வீட்டையும் ‘மக்களிடம்" இழந்தது. தற்காலிக போர்நிறுத்தம் - சமாதானம் வந்தது. யுனெஸ்கோ உதவி யுடன் கட்டிய வீட்டில் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் திவ்ய தரிசனங்கள்.
வாழ்வு வரண்டு உருள மறுத்த போது வர்ஷிணியும் சும்மா இருந்துவிட வில்லை. தனிப்பட்ட முறையில் பத்துப் பதினைந்து சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு பாலர் வகுப்பொன்று நடத்து கிறாள். இரண்டொரு இடங்களில் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கும் பாடங்கள் சொல்லிக்கொடுத்து அவர்களைத் தயார் படுத்துகிறாள். தேச நிலலமையில் எந்தப் பெற்றோரையும் பணம் தரச்சொல்லி வற்புறுத்த முடியாது, கொடுத்தால் காண வேண்டியதுதான்.
31
அவர்கள் வன்னியில் இருந்தபோது தான் அநாமிகா பிறந்தாள். அவனுக்கு வந்த சந்தோஷத்தில் கைகால் பரபரக்க என்ன செய்வதென்றே தெரியாமல் வேந்தனுக்கு ஒரு கடிதம் எழுதினான். அவனும் பதிலுக்கு விநோதமான PC ஒன்றை (கணனி என்றே கருதற்க) அனுப்பினான். அழகான ஒரு குழந்தை றோஸாப் பூவொன்றினுள் ஜோராகப் படுத்துக்கொண்டுள்ள படம் போட்ட போஸ்கார்ட் ஒன்று. அதைச் சரித்தால் அக் குழந்தை குறும்பாகக் கண் சிமிட்டும். அதை வாங்கிப் பின்பக்கத்தில் சிக்கன மாகக் குழந்தை' கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி, அனைவருக்கும் எம் நல் வாழ்த்துக்கள்’ என்று எழுதி ஒரு கவரில் வைத்து அனுப்பினான்.
90ல் வேந்தன் முதலில் யாழ்ப் பாணம் திரும்பி வந்தபோது தான் அவன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னரும் மூன்று நான்கு தடவைகள் இலங்கைக்கு வந்துபோய்விட்டான். வந்து ஒவ்வொரு முறை புறப்படும் போதும் வசீகரனிடம் தவறாமல் "நீ பாஸ்போட்டை எடு, மற்றதெல்லாம் நான் வென்று தருவேன்' சொல்லியே செல்வான்.
என்று
ஒருமுறை வேந்தன் நாட்டுக்குத் தனியாக வந்திருந்தபோது திடீரென உக்கிரமான போர் வெடித்துவிட்டது. அந் நேரம் ஆனையிறவு அரச படையினர் வசம் இருந்ததால் ஏ-9 பாதையூடானப் போக்குவரத்தெல்லாம் கிடையாது. கிளாலிக் கடல், சங்குப்பிட்டி, பூநகரி

Page 18
எல்லாம் 24 மணிநேரமும் ஷெல்லடி சவளம், படுநாசம். நடு இரவுக்குப் பின் ஷெல்லடி ஒரு அரைமணி நேரம் ஒயு மென்றால் அதுவரை காத்திருந்து படகில் வெளிச்சமேதும் ஏற்றாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடலைக் கடக்க வேணும். வேந்தனுக்கோ குறித்த தேதியில் திரும்பாவிட்டால் விமான டிக் கெட்டும் காலாவதியாகி வேலையையும் இழக்க வேண்டி நேரும் நிலைமை.
அத்தனை ஷெல் வீச்சுக்குள்ளாலும் ஒரு அமாவாசை இரவில் வர்ஷிணி போக வேண்டாமென்று மன்றாடித் தடுக்கவும் நீக்க்மற எல்லா இடமும் ஷெல்கள் விழுந்து வெடித்துச் சிதறிக் கொண்டி ருக்க வேந்தனோடு ஒரு உந்துருளியை யும் விசைப்படகில் ஏற்றிக்கொண்டு
கிளாலிக் கடலுக்கூடாகப் பூநகரி போய்
அங்கிருந்து அவனை உருளியிலேற்றி 110 கி.மீட்டர் தொலைவிலுள்ள வவுனியா
வரை உந்திச்சென்று வழியனுப்பிவிட்டு '
வந்தவன் வசீகரன்.
'நீங்கள் முழு விசரன் மாதிரி உயிரைப் பணயம் வைத்து அவருக்காக இவ்வளவு செய்துவிட்டும். ஒவ்வொரு பயணத்திலும் எத்தினை சிப்பம் துணி மணியளை, சொக்கிளேற்று பார்களைக் கொண்டு வந்து இறக்கியிருப்பார். எங்கட பிள்ளைக்கெண்டும் ஒரு சொக் கிளேற்று விள்ளலை, அரை மீட்டர் துணியைக் கொண்ணந்தும் நீட்டியிருப் பாரே. இதுக்குள்ள ப்ராண ஸ்நேகன் வேறை" என்றுவிட்டுப் பாட்டி மாதிரிக் கழுத்தை ஒடிப்பாள் வர்ஷிணி.
C
32
"வர்ஷிணி நீர் உப்பிடி நினைக்
கிறதும், துண்டறப் பிடிக்கேல்லை.
கதைக்கிறதும் எனக்குத் நானும் முடியாதென்று கைவிட்டால் அவன் ஜேர்மனிக்குப் போறதெப்படி. அது என்ரை சுயதர்மத்திலை செய்த, செய்ய முடிந்தவொரு காரியம். பிரதிபலனாய் எதையும் எதிர்பார்த்து அல்ல."
/////////
வேந்தன் குடும்பம் இரண்டு முயல் குட்டிகள் மாதிரிப் பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தது. "நாம கொஞ்சமும் எதிர் பார்க்காமல் இண்டர்நெட்டில சூடைமீன். விலைக்கு ஃப்ளைட் டிக்கெட்ஸ் கிடைச்சுது. அதாலை வாய்ச்சதுதான் இந்தப் பயணம்” என்றார்கள்.
வர்ஷிணியின் புறுபுறுப்பை அலட் சியம் செய்துவிட்டு அவர்கள் நின்ற நாட்கள் முழுவதும் தனக்கு வந்த கொஞ்சநஞ்ச வேலைகளையும் தள்ளி விட்டு வேந்தனோடேயே பிணைந்து கொண்டு திரிந்தான் வசீகரன்.
அவர்களுக்குப் பிரமாதமாகத்தான் விருந்து வைத்தான். அவ்விருந்தின் போது அவர்களின் குழந்தைகள் இரு வரும் போட்டிருந்த அழகான சன்சூற்றை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அநாமிகா ஆசை யோடு கேட்டாள், "நாங்களும் ஜேர் மனிக்குப் போனா எனக்கும் 'சன்சூற்’ கிடைக்கும் என்னப்பா?”
திடுக்குற்ற வசீகரன் "தாங்கள் அவளைச் சொல்லி வைத்துத்தான் அப்படிப் பேசுகிறாள்' என்று வேந்தன்

நினைக்கப் போகிறான் என்று அநாமிகாவை நோக்கி கண்களை உருட்டி முழுசவும் "கப்சிப்பென்று அடங்கிப் போனது குழந்தை.
சாப்பிடும் வேளை கொஞ்சமாக நன விடை தோய்ந்தான் வசீகரன். ‘புதுக்குடி யிருப்பிலை குத்தகைக்கு காணி தந்த குல சிங்கம் எப்படியிருக்கிறான்? அவன் தமையனுக்கு கழுத்திலை வளர்ந்த கழலைக்கு என்னாச்சு? மணவறைச் சுப்பையர் மகள் சகுந்தலா ஆறேழு வருஷமாய் பிள்ளையில்லாமல் இருந் தாளே பிறகு பெத்துக்கொண்டாளோ? என்று யார் யர்ரையெல்லாமோ வெகு கரிசனையாய் விசாரித்தான். 'அட எப்பிடீடா நகருது உன்ரை பிழைப் பென்று அவனை ஒரு வார்த்தை கேட்க வில்லை.
“சண்டை ஓய்ஞ்சிருக்கிற சமயந் தானே ஒருக்கால்போய் வன்னியையும் பார்த்து வரவேணும் போலைக் கிடக்கு” என்று வேந்தன் ஆசைப்படவும் "நாளைக்கே போவம் வெளிக்கிடு’ என்றுவிட்டு யாரிடமோ போய் இரவலாய் ஒரு விசையுருளியை வாங்கிக்கொண்டு வந்து அவனைக் கூட்டிப் போனான்.
////////// நாளைக்கு அவர்கள் ஜெர்மனிக்குப்
புறப்படுகிறார்கள்.
இரவு வசீகரன் வர்ஷிணியிடம் வந்தான். "அவர்கள் ஏர்போட்டுக்கு போகப் பிடிக்கிற வேனிலை இட மிருக்காம். வேந்தன் என்னையும் வரச் சொல்றான், பின்னைப் போகட்டே?”
s
33
"போற வான்லை போவியதான். பிறகு வாறதுக்கல்லே ஆயிரம் ரூபாய் வேணும்.”
முதல் முதல் வேந்தன் ஜெர்மனிக் குப் போனபோது வெறும் பத்து ரூபா ரயில் டிக்கெட்டில் கொழும்புக்கு வழி யனுப்ப போனதுவும், அதுவே இப்போ ஆயிரமாகி விட்டதுவும், ரயில் பாதையே இல்லாமல் போனதுவுமான காலங் காட்டும் விசித்திரக் கோலங்கள் ஒரு கனவைப் போலிருக்கின்றன.
கொஞ்சிப் பார்த்தும் இந்த முறை
போகவேண்டாம்" என்று அவனைத்
தடுக்க வர்ஷிணி ஊடல், காதல் எனப் பல தினுசான அஸ்திரங்களையும் பிரயோ கித்தும் எப்படியும் கட்டுநாயக்காவுக்குப் போகவேணுமென்று கட்டவிழ்த்த ஒரு கன்றுக்குட்டியைப் போல் உன்னிக் கொண்டு நிற்கிறான் அவன்.
புருஷனது கையறுநிலை அவளுக் கும் மனதில் ஒரு ஈரத்தைக் கொண்டு
வருகிறது. ஒரு முடிவுக்கு வந்தவளாய்,
"அநாமிகா எல்லோரையும் போலத்
தனக்கும் முதுகில் போடிற Rucksack
வேணும் என்று ஒரு வருஷமாய் உயிரை வாங்கிறாள். ஒறுப்பித்துச் சேர்த்து அவளுக்காக ஒரு இரண்டாயிரம் ரூபா வைச்சிருக்கிறன். சரி அவயளை வழி அனுப்பிப்போட்டு கொழும்பில அவளுக் கொரு RucksackSb, ஒரு சோடி சப்பலும் வாங்கிக்கொண்டு வாங்களன்
பின்னே."
நீர்கொழும்பு தரை வழியாக பத்து மணி நேரப் பயணம். இரண்டு இடத்தில்

Page 19
மாத்திரம் சோதனைச் சாவடிகள் இருந்தன. வெளிநாட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் சாவடியில் இருந்ததால் கெடுபிடிகள் குறைவாக இருந்தன. இதுவே போர்க்காலமாயின் சோதனைச் சாவடிகளைக் கடப்பதே ஒரு நரகானுபவமாய் இருந்திருக்கும். காட்டின் நெடிய மரங்களூடு தெரிந்த நிலவு வானின் வேகத்துக்கு பட்டுத்துணியைப் போலத் துடிக்கவும், அவர்களது குழந்தைகள் குதூகலித்தனர். வழியில் புத்தளம், சிலாபத்தில் வாங்கிய செவ் விளணி, வறுத்த முந்திரிப்பருப்பு, வாட்டிய/அவித்த சோளப் பொத்திகள் என்பவற்றை எல்லோருமே அனுப வித்துச் சாப்பிட்டார்கள். இடைக் கிடையே வானுக்குள் ஜெர்மனிய வாழ்க்கை பற்றிச் சிலாகித்துக்கொண்டு வந்தான் வேந்தன்.
"இந்தப் பயணம் அங்கே ஹைவே யிலயென்றால் மக்ஸிமம் ஒரு த்றீ
அவர்ஸ் டிறைவ்'தான். அதுக்காக அங் கத்தைய சமாச்சாரங்கள் எல்லாமே உசத்தி என்றில்லை. இக்கரைக்கு அக்கரைப் பச்சையென்ற கதைதான் பல விஷ யங்கள். இன்னுஞ் சொன்ன. பொழுது இருள்றதும் தெரியாது, விடியிறதும் தெரியாது, எல்லாத்துக்கும் மணிக் கூட்டைப் பார்த்துக் கொண்டிருக்க வேணும். நம்பமாட்டியள் நானங்கே போனதுக்கு பூரண நிலவைப் பார்த்தது இங்கை வந்துதான்.”
வேன் சாரதி அப்பாவியாய் "ஏந்தம்பி நிலவெல்லாம் அங்கை எறிக்காதோ அப்ப?”
கேட்டார்,
34
'எறிக்காதெண்டில்ல அண்ணை. வின்டர் காலங்களில் அநேகமாய் பொழுதுகள் பனியும் மப்பும் மழையும் மூடாப்புமாயிருக்கும் தெரியாது.
சம்மறிலை பகல் பொழுதுகள் நீண்டதா யிருக்கும், அதில நிலவு எறிச்சாலுந்தான்
கட்டிடக் காட்டுக்குள்ளாலை காண மாட்டம். அநேகமான இரவுகளிலை வேலைக்குப் போயிடுவம். நிலவை எங்கே, யார் பார்க்கிறது?
இஞ்ச றுபீஸ், அங்கை மார்க். பெருக்கிப் பார்த்தா நல்லாத்தானிருக்கும். எடுக்கிற சம்பளத்தில பாதி வாடகைக்குப் போகும். அதோட போச்சா. கரண்ட் பில், காஸ் பில், கணப்பு பாவிச்ச காசு, ஸ்நோ தள்ளின காசு என்றுபோட்டு பில்லுகள் தனித்தனியாய் வரும். பிறகு ரெலிபோன் பில், காருக்கான டாக்ஸ் இன்சூரன்ஸ், போக்குவரத்துச் செலவு கள், உடுப்பு நடப்பு, அடுப்படியெண்டு போக கையும் கணக்கும் சரியா இருக்கும். மூத்திரம் போகிலும் காசெண்டு நிக்கிற ஒரு நாட்டிலை ஒன்றைப் பெற்றுக் கொள்கிறதுக்காக இன்னொன்றை ஒறுக்க வேணும். அல்லது முற்றாக இழக்க வேணும்.
என்ன வைட் கொலர் ஜொப்புகளே பார்க்கிறது, இத்தாலிக்காரன்ரையோ, ஜப்பான்காரன்ரையோ றெஸ்ரோறெண்டு களிலை நின்ற நிலையிலை அடிச்சுக் கொடுக்கிறதிலை மாதத்திலை இருநூறு முந்நூறு மணித்தியாலங்கள் கழியும். அப்பிடியே செய்துகொண்டுவர ஒரு பத்து வருஷத்துக்குள்ளே முழங்கால் மூட்டுகள், நாரித் தண்டுவடங்கள்

தேய்ஞ்சு குத்து உளைவு எடுக்கத் தொடங்கிவிடும். ஆசைப்பட்டால் பிறகு காசை எண்ணி, றுப்பீஸிலை பெருக்கிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் பணத்தாலை விலை பேசவோ, மீட்கவோ முடியாத ஆரோக்கியத்தை முதலில் இழந்துவிடுவோம். எங்களை அறியாமல் அது மெல்ல மெல்ல விடை பெற்றுவிடும். வெளியிலிருந்து நோக்கு கிறவர்களுக்கு எங்கட வசதிகள் மட்டும் தெரியும், ஆனால் நிம்மதியில்லாத மன உளைச்சலில் எப்படிக் குமைகிறோ மெங்கிற சங்கதி அங்க வாழ நேர்ந்தாலே தெரியவரும். வெளிநாட்டுக்கென வந்து இறங்கியபிறகு சந்தோஷமான தருணங்கள் என்றால்
வாழ்க்கையிலை
வெகு கொஞ்சந்தான். சம்மர் டைம்ஸ்ல எப்போதாவது ப்றெண்ட்ஸோடை சேர்ந்து வைக்கிற ஒரு கிறில் பார்ட்டி, பார்க்கிலயோ, இல்லை நட்ப்பதற்காக
புறோமினேட்ஸ் என்று இருக்கிற வழி ?
களிலோ போக வாய்க்கும் ஒரு நடை பொழுது, ஒரு பார்ட்டியிலை பழைய ப்றெண்ட்ஸை சந்திக்க நேரும் தருணங்கள், நீந்தப் போகிற ஒருநாள். ஒரு நல்ல கலை நிகழ்ச்சி. இப்படி வெகு சொற்பந்தான்."
“வேலையிலேயே கழிகின்றன பகல் பொழுதுகள் வேலைக்கான தயார்ப்படுத்தலில் நம் இரவுகள் மாற்றுப் போக்கின்றிக் குதிக்க நேர்ந்ததால் நீந்தியே தீரவேண்டிய அகதிச்சுழி என்று புலம்பெயர் வாழ்வைக் கிரிதர னென்ற நம்ம கவிஞன் ஒருவன் பாடி
35
யிருக்கிறான். எப்படிப் பட்டு ' வந்திருக்கு வந்திருக்குப் பாருங்கோ
வார்த்தைகள்?"
இவன் பொதுவில் சொல்கிறானா, இல்லை தனக்குத்தான் சொல்றானா? என்று வசீகரன் குழம்பிக்கொண்டிருக்க,
“அதாவது நீந்திறதை நிறுத்தினால் ஆழவேண்டியதுதான் என்றியள். ஏன் மாப்பிள்ளை, தாலியைக் கட்டமுதல் இதுகளைப் பற்றி இந்த வெளிநாட்டுக்
காரர் யாரும் மூச்சு விடுகிறதில்லையே."
என்றுவிட்டு பெரிய ஜோக் அடித்தவர் மாதிரித் தானே தனியாகச் சிரித்து ஒய்ந்தார் மாமன்காரன்.
நீர்கொழும்பில் அவர்களின் ஒரு உறவுக்காரர் வீட்டில் சற்றுத் தரித்து மாலை விமான நிலையம் போவதாக ஏற்பாடு. நீர்கொழும்பை வேன் அடை யவும் நிலம் தெளியத் தொடங்கி யிருந்தது. மத்தியானவேளை அவர் களைப் பார்க்கப் கோமதியுடன் கூடப் படித்த தோழியென்று ஒடிந்து விடுவாள் போன்றதொரு ஒடிசலாய் ஒரு இளம் பெண் வந்திருந்தாள். அவர்கள் கூடி அமர்ந்து கலகலத்துச் சற்று ஓய்ந்தபோது வசீகரனைத் தனியாகக் கூட்டிவந்து வேந்தன் கேட்டான், "கோமதியின்ரை பழைய ஃப்றெண்டாம் அது, வத்தளை யில் டீச் பண்றாளாம். இவளைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறாள், சரியில்லை அவளுக்கேதாவது கொடுத்துதான் அனுப்ப வேண்டும். நாங்க கொண்டுவந்த காசெல்லாம் யாழ்ப்பாணத்திலேயே "ஸ்வாகா”வாயிட்டுது. மாமனிட்டை வாய் வைக்கிறதும் மரியாதையிராது.

Page 20
உன்னட்டை இருந்தால் ஒரு "ரூ தெளசன்ட் றுப்பீஸ்" வெட்டு. போன வுடன் உண்டியல்ல அனுப்பி விடுறன்"
"நோ ப்றொப்ளம் அட் ஒல்" என்று விட்டுப் பக்கெட்டில் கைவிட்டு இருந்த இரண்டாயிரத்தையும் அவனிடம் தூக்கிக் கொடுத்தான்.
வந்ததிலிருந்து வேந்தனின் மாமன் “எனக்கு இந்தத் தண்ணிதான் ஒத்துக் கொள்ளேல்லைப் போலை. கொஞ்சம் நீர்க்கடுப்பாயிருக்கு” என்றுவிட்டுப் பாத் றுாமுக்குப் போகிறதும் வருகிறதுமாயிருந் தார். அவரை யாரும் விமான நிலையத்
துக்கு வரச்சொல்லி வற்புறுத்தவில்லை.
மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வேந்தன் : “விடுதலைப்
புலிகள் ஏர்ப்போட்டை அடிச்சாப்போல
இங்கை எப்படிப்பட்டி கெடுபிடிகள் சோதனைகள் எண்டது தெரியுந்தானே. எல்லாத்தையும் திறந்து திறந்து பார்த்துக் கொண்டு வைச்சு மினைக்கெடுத்து வாங்கள். நாங்கள் உள்ளபோறம். நீ ‘என்றன்ஸ் டிக்கெட்டை எடுத்துக் கொண்டு பின்னாலை வா” என்றுவிட்டு ஒரு ட்றொளியில் சூட்சேஸ்களை வைத்துத் தள்ளிக்கொண்டு மனைவி குழந்தைகளுடன் முதலில் உள்ளே நுழைந்தான்.
நுழைவுச் சீட்டு பெறுவதற்கான கவுண்டருக்குப் போனபோது அங்கிருந்த ஆமிக்காரன் அடையாள அட்டையைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு "அனு மதிக் கட்டணம் இருநூறு ரூபாய்கள்” என்றான் சிங்களத்தில். அப்போதுதான்
36
தன்னிடம் பணமே இல்லாத விஷயம் 'திடுக்கென உறைக்க உள்ளே எட்டிப் பார்த்தான். அவர்கள் இரண்டாவது கண்ணாடித் தடுப்புக் கதவுகளையும் தாண்டி வெகுதொலைவில் போய்விட்டி ருந்தனர்.
"சொறி சேர். ஐ ஹாவ் சேஞ்ட் மை ஐடியா." என்று சொல்லி அடை யாள அட்டையைத் திருப்பி வாங்கிக் காற்சட்டைப் பாக்கெட்டில் சொருகிக் கொண்டான்.
முதன் முதல் ஜேர்மனிக்கு
வேந்தனை வழியனுப்பியபோது பிரிவாற்
றாமல் அவனைக் கட்டி அழுதான். பின்னர் வந்து கலியாணம் கட்டிக் கொண்டு போனபோது அவன் மனைவி நிற்கிறாளேயென்ற சங்கோசத்தில் ஒரு மீட்டர் தள்ளி நின்றே 'குட் பை' சொல்லிவிட்டுத் தனியே நின்று கலங்கினான். இன்று "குட் பை" சொல்லவே அமையாதவொரு தூரத்தில் அவன் போய்விட்டிருந்தான்.
உள்ளே போயிருந்தாலென்ன,
பத்தாயிரம் ரூபா செலவு செய்து ஒரு
பாஸ்போட் எடுப்பதற்கான வகை இவனிடம் உண்டோ இல்லையோ அவனது "நீ பாஸ்போட்டை எடு மச்சான்” என்ற பல்லவியை இன்னொரு தடவை கேட்கவேண்டி இருந்திருக்கும்.
வசீகரன் செலவுக்குத் தரும் , பணத்தை ஒறுத்துச் சிக்கனமாகச் செலவு செய்து அதிலும் சிறு பகுதியைச்
சேமித்து வைத்திருந்து அவன் பண
மில்லாமல் அந்தரிக்கும் தருணங்களில்

தூக்கித் தரும் காமதேனு வர்ஷிணி அவர்கள் ஓடிப் போன தினத்தின் முதலாவது ஆண்டின் போது அவன் கையைப் பிடித்து “உங்க மாமன் செய்து
தந்த மாப்பிள்ளை மோதிரம் என்று நினைத்துக் கொள்ளுங்கோ’ என்று சொல்லித் தனது சேமிப்பில் செய்வித்துப் போட்டுவிட்ட மோதிரத்தைப் பார்த்தான். லேசாக இருந்தாலும் எப்படியும் அநாமிகா வின் Rucksackக்குக்கும், சப்பலுக்கும், பஸ் கட்டணத்துக்கும் வரும்.
"வேந்தன் கண்ணபிரானாகவே இருக்கட்டும், தன் ஏழ்மையைச் சொல்லி இறைஞ்சினாலே இரட்சிப்பவனென்றால் அவன் சங்காத்தம் வேண்டாம். நான்
குசேலனாகவே இருப்பேன்" என்று நினைத்த வசீகரன் தன்மனதின் அடியாழ அடுக்குகளில் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒரு 'கசப்பு” சுரந்திருப்பதை முதன் முதலாக உணர்ந்தான்.
Gg டர்புகொள்ளுங்க
""Undrawn Portrait for i Unwritten Poetry
if VN 2.8 室日 VN ཕྱོ་ s S షా டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின் ஆங்கில i () た。 மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது.
メ s 중 さイベ தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள் ; மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும்
37

Page 21
શ્રl46છે
U49-boa
நடுவே
ତୁର୍ଥ
உசைதி
குயில்
- மா. பாலசிங்கம் -
வபாம்புளை சிவாஜி
ஒலி மனிதனது தொடர்பாடலுக்குப் பிரதான
மார்க்கமாகச் சேவிக்கின்றது. தனக்கென இயல்
பான ஒலி இருந்தும் மனிதன் வேறுபட்ட உயிரி களின் ஒலியை மெச்சுகிறான். கிளியின் ஒலி அவனைக் கிறங்க வைக்கின்றது. குயிலின் ஒலியை உவமித்துப் பேசுகின்றான். தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலிலுள்ள சிலரது ஒலிகளைப் பதிவு செய்து அவைகளைத் திருப்பித் திருப்பி கேட்பதிலும் இன்பம் காண்கின்றான். ஏன்? அவையே தனக்குத் தீனியாகப் பசியைத் தணிப்ப தாகவும் கருத்துச் சொல்கிறான்.
தமது வர்க்கத்தையே சொக்க வைக்கும் அபூர்வ ஒலியை எழுப்பி இம்மண்ணில் சாகா வரத்தைப் பெற்றவர்களாக எம்.கே. தியாகராஜா பாகவதர், என்.சி.வசந்த கோகிலம், எம்.எஸ்.சுப்பு லெட்சுமி, பாலமுரளிக்கிருஷ்ணா ஆகியோரைக் கூறலாம். இவர்கள் தங்களது குரல் வளத்தால் மானுடத்தை வெற்றி கண்டவர்கள். இவர்கள் இசை என்ற கலை ஊடகம் மூலமாக, தமக்கு யோகமாகக் கிடைத்த ஒலியை கலவைப்படுத்தி மங்காத கீர்த்தியைப் பெற்றவர்கள். இவர்கள் சாதனையாளர்களாவதற்கு இவர்களுக்கு ஏணியாக இருந்தது இவர்களது சுயமான ஒலியே! தமது தனித்துவமான குரல்களால் எழுப்பும் ஒலிகளின் மூலமாகச் சமுதாயத்தில் தமக்கென ஒளி வட்டங் களைப் பெற்றவர்களாக வானொலி அறிவிப் பாளர்கள் சிலரையும் இனங்காட்ட முடியும். இவர்களது முகத்தையே காணாதவர்கள் கூட இவர்களது பெயர்களை உச்சரிப்பதில் சுகம் காண்பர். தாம் இவர்களது அபிமானிகள் என்பதில் தமது அந்தஸ்த்தைக் கூட உயர்த்த முயல்வர்! இத்தகைய வரத்தைப் பெற்றவர்களாக அகில இந்திய வானொலியைச் சேர்ந்த பஞ்சாபிகேசன்,
38

வெங்கட்ராமன், தர்மாம்பாள், சரோஜ் நாராயணஸ்வாமி, இலங்கை வானொலி யைச் சேர்ந்த எஸ்.பி.மயில்வாகனம், செந்திமணி மயில்வாகனம், வி.சுந்தர லிங்கம், பி.எச். அப்துல் ஹமீட், இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரைக் கூறமுடியும். இவர்கள் தமது குரல் வளத்தை நிகழ்ச்சி அறிவிப்புகள், செய்தி வாசிப்பு, விளம்பர அறிவிப்பு, நேர்முக வர்ணனை என்ற வானொலிக் கூறுகளுக் குள் ஊடாடச் செய்து மக்களுக்கு மோகன வலை விரிப்பவர்கள். அதன் மூலமாகத் தமது ஆளுமைகளை விருத்தி செய்த வர்கள். இவர்களுக்குக் குரல் மு சொமானது!
திராவிட முன்னோற்றக் கழகத் தினால் தமிழ் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது மணிப்பிரவாளத் தமிழ் நடை. இந்த நடையை தமிழ்ச் சமூகத்தின்
மீது பொழிந்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குரல். இத்தமிழ் நடையைத்
தம்மீது பாய வைத்த சிவாஜியின் குரலை தமிழ்ச் சமூகம் "சிம்மக் குரல்" எனக் கொண்டாடியது. இத்தகைய நிகரற்ற பேறைப் பெற்ற சிவாலியர் கணேசன், "இலங்கையில் நீதான் பொம்புளை சிவாஜியாமே ??? என இலங்கை வானொலி நிலையத்தில் பிரபல அறிவிப் பாளரும், நாடகக் கலைஞருமான இராஜேஸ்வரி சண்முகத்தைச் சந்தித்த பொழுது கேட்டாராம். சிவாஜி இப்படிக் கேட்டபொழுது அவரது மனத்திரையில் “கொடுத்தவனே எடுத்துக் கொண் டான்டி” என்ற பாடலுக்கு அவர் நடித்த பொழுது, 'கருணையே வடிவான
அந்தக் கடவுளா உங்கள் கண்களைப் பறித்தது." என வசனம் பேசி, தங்கப் பதுமை’ என்ற படத்தில் நடித்த நாட்டியப் பேரொளி பத்மினி படிம மிட்டிருப்பார். அல்லது “பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே." என மனோகரா என்ற திரைப்படத்தில் ஆவேசமாக வசனம் பேசி இரசிகர் களைத் திகைக்க வைத்த பி.கண்ணாம்பா சலனமிட்டிருக்கலாம்! இந்த இரு பழம் பெரும் நடிகைகளும் சிவாஜியின் சிம்மக் குரலுக்கு ஓரளவிற்கேனும் ஈடுகொடுத்து நடித்தவர்கள். அதுமட்டுமன்றி நடிப் பாலும் நடிகர் திலகத்திற்கு "வகை" சொன்னவர்கள். சினிமாவில் இவர்களே “பொம்புளை சிவாஜியாக இருந்ததை சினிமா இரசிகன் அறிவான். இருந்தும் சிவாஜி மனம் திறந்து இவ்விருவரில் ஒருவரைக் கூட இப்படிப் பாராட்டியதை சினிமா வரலாறு இன்னமும் வெளிப் படுத்தவில்லை!
ஆனால், இராஜேஸ்வரி சண்முகத் திற்கு - ஒரு இலங்கை நடிகை, பெண் அறிவிப்பாளருக்கு - அந்தப் பெருமை கிடைத்தது அபூர்வந்தான்! இதற்கு அடி ஆதாரமாக இவரது குரல்தான் இருந் திருக்க வேண்டும். ஆண்டுகள் சிலவற் றிற்கு முன்னர் அகில இந்திய வானொலி யில் காலைச் செய்தி முடிந்த பின்னர் "இன்றைய தகவல்' என்ற குறுநேர நிகழ்ச்சியொன்று ஒலிப்பரப்பப்படுவ துண்டு. இதில் தெற்கச்சி கோ.சுவாமி நாதன் என்பவர் ஏதாவது புத்தம் புதிய விடயமொன்றைக் குறித்து மூன்று நிமிடங்கள் மட்டும் விளக்கம் தருவார்.
39

Page 22
இதன் அதிமுக்கிய அம்சமென்ன வென்றால் சுவாமிநாதன் நிகழ்ச்சியை நேயருக்கு ஒலிபரப்பும் விதம் ஒரு வித்தியாசமான பாங்கானதாக இருக்கும். அசல் வட்டார வழக்கு, எவ்வித திரிபு மற்ற நிலையில் இடம்பெற்றிருக்கும்.
செய்தி முடிந்ததும் வானொலிப்
பெட்டியை "சடாரென நிறுத்தாமல் இந் நிகழ்ச்சியும் கேட்டுவிட வேண்டு மென்ற ஆவலைப் பிறப்பிக்கும். இந்நிகழ்ச்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் தனது இரசிகராக்கியது சாதனை! தெற்கச்சி கோ.சுவாமிநாதனைப் போல் தானும் அந்த வட்டார வழக்கை உச்சரித் துப் பேசி நடிக்க வேண்டுமென சிவாஜி வாழ்ந்தபோது ஆசைப்பட்டாராம்! இக் குறிப்பு இங்கு ஏன் முன் வைக்கப்படு கின்றதென்றால், தானொரு மிகப் 'பிஸி" யான நடிகராக இருந்த சிவாஜி வானொலி கேட்க கிடைத் திருக்குமா? என வாசகர்கள் விசனிக்கக் கூடும். அதற் அவர் அகில இந்திய வானொலியை மட்டுமன்றி இலங்கை
காகவே !
'வானொலியையும் கேட்டதற்கான சாட்சி
களுண்டு.
அந்தச் சிம்மக் குரலின் பாராட்டைத் தட்டிக் கொண்ட இராஜேஸ்வரி சண் முகத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தனது தமிழ் அறிவிப்பாளராக் கியது தமிழுலகிற்குக் கிடைத்த பெருமையே! அறிவிப்பாளரொரு வருக்குக் குரல் வளந்தான் கைத்தடியா? எனச் சிலர் வாதாடக் கூடும்! வானொலி அறிப்பாளரொருவருக்கு குரல் வளம் மட்டுமன்றி உச்சரிப்பும் அத்தியாவசியமா
40
கின்றது. இன மானங்கள், மொழி மானங்கள் உச்சமாகப் பேணப்படும் இக் காலகட்டத்தில் உச்சரிப்பின் பெறுமானம் குரலின் தகைமையோடு சமநிலைப் படுத்தப்பட்டு விட்டது. ஒருவரது மொழி வளத்தை அவரது படிப்பறிவைக் கொண்டு நிதானப்படுத்தலாம். ஆனால் குரலையும், உச்சரிப்பையும் எவராலும் கொடுத்துவிட முடியாது. இயற்கையாக ஒருவருக்கு ஆசீர்வதிக்கப்படுவது குரல். உச்சரிப்பிற்கு இடைவிடாத பயிற்சி தேவை. இதையே செந்தமிழும் நாப்
பழக்கம் என்கின்றனர். "பற்பொடி"யை
'பள் பொடி' என உச்சரிக்கப் பழகிக்
கொண்டால் அதைச் செம்மைப்படுத்து வது மிகச் சிரமம். எப்படித்தான் கட்டுப் படுத்தி, ஜாக்கிரதையாக இருந்தாலும், சில
தருணங்களில் நாப்பழக்கம்" காட்டிக்
கொடுத்து விடும்.
கலையகத்தில் அறிவிப்பாளருக்கு முன்னிருக்கும் இலத்திரன் கருவிகளின் குமிழ்களைத் திருகுவதன் மூலமாக குரலை ஓரளவிற்குத் தடிப்பாகவும், மென்மையாகவும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், குரலை இனிமைப்படுத்தவும், வசீகரப்படுத்தவும் இவைகளுக்கு இயலாது. உச்சரிப்பையும், வாசிக்கும் தன்மையையும் அறிவிப்பாளர்கள் தங் களது பயிற்சிகளின் மூலமாகத் தனித்து வப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாடறிந்த பிரபல அறிவிப்பாளர்கள் கூட, அந்தக் காலத்தில், செய்தி வாசிக் கும் கலையகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது தாமே மொழி
யாக்கம் செய்த செய்தித் தாள்களை

(NewS Bulletin) airgigi GarradarGL நடப்பதுண்டு. தமது கடைசி நேர பயிற்சி யும் தமது செய்தி வாசிப்பை செம்மைப் படுத்திக் கேட்டுக் கொண்டிருக்கும்
வானொலி நேயருக்கு தாம் கூறும் தகவல்
களைக் கிரகிப்பதில் இலகுபடுத்தும் என்ற காரணத்தால்!
செய்தித் துறையோடு சம்பந்தப் பட்டிருந்தவரும், செய்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளராக இருந்தவருமான பி.முத்தையா கூறும் பொழுது, “ஒரு செய்தியை வாசிக்கும் பொழுது, அந்தச் செய்தி யாரோ ஒருவர் யாரோ ஒருவருக் குச் சொல்வதாக அமைந்துவிடக் கூடாது. கேட்கின்றவர் அந்தச் செய்தி தனக்கே கூறப்பட்டதாக எண்ண வேண்டும். அப் போதுதான் 'செய்தி செய்தியாகின்றது” என்கின்றார்.
இந்த அநுபவ விளம்பலை மெய்மைப்படுத்தி, வானொலிச் செய்தி யைச் கேட்பரைக் கட்டுண்ட நிலைக்குக் கொண்டு வருவது செய்தி அறிவிப்பாளர் களது உத்திமுறைகள் தான்!
அரச ஒலிபரப்புத் துறையில் தேசிய, வர்த்தக சேவைகள் என இரு வகையான பிரிவுகள் இருப்பதை வானொலி அபி மானிகள் அறிவர். அத்தோடு வெளி நாட்டிற்கான சேவைகளும் உண்டு.
முன்பெல்லாம் வர்த்தக சேவை அறிவிப்பாளர்கள் செய்தி வாசிப்ப தில்லை. தேசிய ஒலிபரப்பில் மட்டுமே செய்தி, மரண அறிவித்தல்கள் என்பன ஒலிபரப்பப்பட்டன. வர்த்தக சேவையின் முன்னோடி அறிவிப்பாளரான ஜஸ்ரின்
4.
ராஜ்குமார் செய்தி வாசித்திருக்க மாட் டார். இருந்தும் ஆசிய சேவையில் மூத்த அறிவிப்பாளரான எஸ்.பி.மயில் வாகனம் செய்தி வாசித்ததுண்டு. ஆனால் தற் பொழுது இத்தடைகள் நெகிழ்ச்சி கண்டுள்ளன. இராஜேஸ்வரி சண்முகம், வர்த்தக சேவை அறிவிப்பாளராகவே நியமிக்கப்பட்டவர். இவரது ஒலிபரப்புப் பணி மிகவும் அகலித்ததாக இருந்ததால் இவர் இரு சேவைக்கான அபிமானி களையும் கவரக் கூடியவராக இருந்தார்.
செய்தி வாசிப்பு இன்று தொலைக் காட்சி, வானொலி என்பவற்றில் ஒளி, ஒலிப்ரப்பப்படுகின்றது. இதில் பல பெண்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். தமது திறமைகள் மூலம் இவர்கள் சகல குடும்பங்களிலும் பேசப்படுபவர்களாவும் தமது ஆளுமையை நிறுவி இருக்கின் றனர். தொலைக்காட்சியில் ரேலங்கி செல்வராசா, கருணைரெத்தினம், சூரிய பிரபா, திருமகள், கிருஷா, வானொலி யில் சற்சொருபவதி நாதன், இராஜேஸ் வரி சண்முகம், பரமேஸ்வரி கருப்பையா, ஜெந்நாதன் ஆகியோர் நாடறிந்த பெண் செய்தி அறிவிப்பாளர்களாகி விட்டனர். செந்திமதி மயில்வாகனம், மனோகரி சதா ஆகியோரை இன்னமும் வானொலிச் செய்தி அபிமானிகள் மறக்க
சிவம்
வில்லை.
ஆனால் இராஜேஸ்வரி சண்முகம் இவர்களது எல்லையையும் தாண்டி விட்டார் எனவே சொல்ல வேண்டி இருக்கின்றது.
“ஈராயிரம் ஆண்டுகளாய் வேரோடிக் கிடக்கின்ற தமிழ் இலக்கியத்தின் பெரும்

Page 23
பரப்பினைப் பரபரப்பிற்கு மத்தியில் அறி முகப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களை நான் வணங்கி மகிழ்கிறேன்” இப்படியாக கவிப் பேரரசு வைரமுத்து மகுடம் சூட்டுகிறார். இந்த நூற்றாண்டில் வெகுவாகப் பேசப்படும் ஒரு கவிஞன் இத்தகைய முறையில் இராஜேஸ்வரியின் தமிழ் ஆளுமையைத் தரப்படுத்தி இருப்பதை நினைக்கும் பொழுது ஈழத்துத் தமிழிச்சிக்கு கிடைக்கும் இந்தப் பெருமை சகல ஈழத் தமிழரையும் இங்கிதப்படுத்தும்.
இராஜேஸ்வரி சண்முகம் மெத்தப் படித்தவரல்ல. ஆங்கில மொழி மூலமாக க.பொ.த (சாத) பரீட்சை இவரது கல்வித் அப்படிப்பட்ட இவரை கவிஞர் தமிழோடு இணைத்து அவருக்கு வணக்கம் தெரிவிப்பது, அறிவிப்புகளி னுாடே இவர் கூறும் "குறுகத் தரித்த"
தகைமை.
பொருள் பொதிந்த வரிகளின் ஆகர்சிப்
பிளாவாகவுமிருக்கலாம்.
இலங்கை வானொலித் துறை தற்பொழுது எண்பதாவது அகவையில் சென்று கொண்டிருக்கின்றது. பிரமுகர் கள் பலர் இதையொட்டிய வாழ்த்துச் செய்திகளை வெளியிடும் பொழுது, தெற்காசியாவிலேயே முதன்முதலாக வானொலிச் சேவையைத் தொடக்கி வைத்தது இலங்கையே எனவும், தற் பொழுதும் இலங்கைத் தமிழரே சர்வ தேசத்தில் ஒலிபரப்புத் துறையில் முத்திரை பதித்து வருவதாகவும் பொச் சடிக்கின்றனர். ஆனால், இலங்கை வானொலி வட்டாரத்தைப் பொறுத்த வரையில் அன்றைய அகில இந்திய
42
வானொலி அறிவிப்பாளர்களான பஞ் சாபிகேசன், தர்மாம்பாள் ஆகியோரையே தமது முன்னோடிகளென மரியாதை செய் கின்றனர். இன்றையவர்களான சரோஜ் நாராயணசாமி, ராஜராம் ஆகியோரையும் அடையாளம் காட்டுகின்றனர்.
அகில இந்திய வானொலியில் (ஒல் இண்டியா றேடியோ) செய்தி வாசிக்கும் பொழுது சரோஜ் நாராயணசாமி செய்திகள் வாசிப்பவர் "ச.ரோ.ஜ். நா.ரா.ய.ண. சா.மி.” என எழுத் தெண்ணித் தனது பெயரை அழுத்த மாகவும், ஆறுதலாகவும் அறிவிப்பார். இலங்கை வானொலியின் முன்னாள் அறிப்பாளரான எஸ்.புண்ணியமூர்த்தி யும் தனது பெயரை இதே பாணியில் சொல்வதுண்டு! இராஜேஸ்வரி சண்முக மும் இவர்களையே அடியொற்றியவ ராகவே இருக்கிறார். குரலில் காணப் படும் அழகியல் சார்ந்த இனிமை, நேயர் களைச் செய்தியைக் கேட்க உசார் நிலைப்படுத்தும். அத்தோடு அதை "மீண்டுமொரு முறை கூறமாட்டாரா வென்ற தவிப்பையும் கொடுக்கும்.
சில அறிவிப்பாளர்களது பேச்சு வழக்கை வைத்தே அவர்கள் இன்ன இன்ன பிரதேசத்தை சேர்ந்தவரென அனுமானிக்க முடியாது. யாழ்ப்பாண, கொழும்பு, தென்னிந்திய, மலையக வட்டார வழக்குகள் நம்மிடையே புழக்கத்தில் இருப்பதை நாமறிவோம்! இத்தகைய வட்டார வழக்குகள் பேச்சுத் தொடர்பாடலின் மூலம் தலைகாட்டா திருப்பது ஒரு அறிவிப்பாளருக்குரிய அதி உன்னத தகைமையாகும்!

ந்தகைமை கணிசமான விப்பாளர் தத ےH
களால் பேணப்படுகிறது. இதற்குச் சாதகமாக இருப்பது அவர்கள் நாளாந்தம் தமது அறிவிப்புச் சேவையினுடாகப் பெறும் தனித் தமிழின் பரிச்சயமே! இதற்கு இராஜேஸ்வரி சண்முகமும் விதி
விலக்கானவரல்ல!
இவர் கொழும்பு கொட்டாஞ்சேனை யில் பிறந்து வளர்ந்தவர். கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை அடி மட்டப் பாட்டாளி வர்க்கத்தின் பாசறை. பழம்பெரும் பொதுவுடைமைவாதியான பீற்றர் ஹெனமன் கொழும்பு மத்திய தொகுதியில் வேட்பாளராக நின்று பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றமைக்கு இதுவே முக்கிய காரணம். இதேபோல் சாதாரண தபால் ஊழியராக இருந்த எம். எஸ்.தேமிஸ் பாராளுமன்றப் பிரதிநிதி யாகியதும் இப்படித்தான்!
மேல்தட்டு வர்க்கத்தினருக்குக் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை என்றால் வேப்பங்காய்க் கசப்பு இந்த பஸ்களில் பயணிக்கக் கூட அருவருப்பர். கள்ளுக் கடைகளும் இப்பகுதியில் இருப்பது அவர்களுக்குச் சாதகமாகி விட்டது. "கள்ளு நாத்தம், சத்தி வரும்" புனிதர்கள் இப்படித் திருவாய் மலர்வது முண்டு! இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு தகவலும் ஞாபகத்தில் குத்துகிறது.
தமிழ் வானொலியின் "சிறுவர் மலர்' என்ற நிகழ்ச்சி வளர்முகக் கலைஞர்களுக்குத் தொட்டிலாக இருப்பது. இந்நிகழ்ச்சியை ஆக்கிரமிப் பவர்கள் பெரும்பாலும் கொழும்புச்
s
ཧཱ
43
சிறுவர்களே. நேரடி நிகழ்ச்சி. 45 நிமிடங் களை (அப்பொழுது - இப்போ 30 நிமிட) கொண்டது. பதினைந்திற்கு
மேற்பட்ட சிறுவர்கள் தமது ஆற்றல்
களை வெளிப்படுத்த முடியும். கொழும்பு மா நகரம் 15 வலயமாகப் பகுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அத்தனை வலயங்களிலிருந்தும் சிறுவர் கள் வந்து பங்கு பற்றுவர். ஒரு சந்தர்ப் பத்தில் கொச்சிக்கடை, கொட்டாஞ் சேனை பகுதியிலிருந்து வரும் சிறுவர்க ளோடு தாம் சேர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியாதென சில வலயங் களைச் சார்ந்த மேட்டுக்குடிக்குரிய சிறுவர்கள் "எழுப்பம் காட்டியதாக அன்றைய நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இன்றும் கூறுகின்றனர். அண்மையில் வெளியான பேட்டியொன்றில் பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இதை ஏற்கும் வகையில் இப்படிக் கூறுகிறார் :-
"அந்தக் காலத்தில் கொழும்பு, தெற்கு மேட்டுக் குடியினரினருடைய நாடகப் பண்ணையாகவும், கொழும்பு வடக்கு இழிசனர்களுடைய நாடகப் பண்ணையாகவும் கருதப்பட்டது. கொழும்பு வடக்கிலே இருந்தவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள், இந்திய வம்சாவழியினர் ஆகிய நாடகக் கலைஞர்கள். கொழும்பு தெற்கில் வாழ்ந் தவர்கள் வானொலியுடனும், பல ஊடகங் களுடனும் தொடர்புடையவர்கள் என்ற
படியினாலும்? ஆங்கில அறிவு மிக்கவர்
களாகவும் அவர்கள் மேட்டுக்குடியான ஒரு கலை ஜம்பவான்களாக கருதப் Lu LimTiesar.”

Page 24
ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது கொட்டாஞ்சேனைச் சேர்ந்த வர்கள் வானொலியில் வரலாறு படைத் துக் கொண்டிருக்கின்றனர். இராஜேஸ்வரி சண்முகம், ஜோர்ஜ் சந்திரசேகரன், நடராச சிவம், ஜோக்கிம் பர்னாந்து ஆகிய வானொலிக் கலைஞர்கள் வரலாற்றில் உன்னதமான அத்தியாயங்களைத் தொடக்கி இருக்கின்றனர். இலங்கைக் கல்விமானொருவர் சொன்னார், அடி மட்ட மக்களிடமிருந்துதான் கலை, இலக்கிய உச்சங்கள் வெடித்துக் கிளம்பு மென. இந்த விடயத்தில் அவரது விளம்பல் சரிதானே!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் செய்தி ஒலிபரப்பும் பொழுது முதலில் குறி இசையை ஒலிபரப்பும். இது அந்தக் காலத்தில் அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு கொட்டும் முரசொலி போன்றிருக்கும். இதைப் பறை அடித்தல் எனவும் அக் காலத்தில் சொல்வதுண்டு. இந்தச் செய்திக்கான குறி இசை (Interlude Music) உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும். செய்தியின் இடையே "மக்களின் மன தறிந்த வங்கி மக்கள் வங்கி” என இரா ஜேஸ்வரி சண்முகத்தின் குரலில் விளம் பரம் இடம்பெறும். இதுவும் தூங்கின வரை விழித் தெழ வைக்கும் அதி உச்ச ஸ்தாயியில்தான் ஒலிக்கும். இவைகளைத் தவிர இராஜேஸ்வரி - ஆ.குருசாமி, ரி. எஸ். பிச்சையப்பா, தாசன் பெர்னாண்டோ, ஆர்.விக்டர், கே.மார்க் கண்டன், ஆனந்தி சுப்ரமணியம் ஆகியவர் களோடு ஏராளமான நாடகங்கள், சித்திரங் களில் நடிகையாகவும், உரைஞையாகவும்
s
44
பங்கு பற்றியவர். இந்த வானொலிக் கலைஞர்கள் அனைவருமே கனதியான குரல் வளத்தைக் கொண்டவர்கள். இன்னும், இவரது வானொலி நுழைவு பேச்சுப் போட்டி ஒன்றோடுதான் தொடங் கியதாம்! 1950ஆம் ஆண்டு இவர் பன்னிரண்டு வயதாக இருந்த பொழுது, தேசிய ஒலிபரப்பு, நல்லை நகர் பூரீலபூரீ ஆறுமுக நாவலர் நினைவாகப் பேச்சுப் போட்டியொன்றை நடத்தியது. இதில் பங்குபற்றி இவர் முதல் பரிசைத் தட்டிக் கொண்டவர். எனவே இவரொரு
மேடைப் பேச்சாளராகவும் தகைமை
பெற்றவர். இவைகளைக் கூர்மையாக அவதானித்துச் செய்தியைக் கேட்கும் ஒரு வானொலி இரசிகனுக்கு இயல்பாகவே நெருடலொன்று உண்டாகும். மத்தியில் கொண்டை போடுபவர்கள் ஏராளந்தானே!
எம்
கண்ட பாவனையில்
வானொலிச் சுவைஞனொருவன் ஏன்
பின்வருமாறு இப்படிக் கேட்கக் கூடாது.
கெம்பீர ஒலியைக் கொண்ட செய்தியின் குறியிசை, ஓங்கார ஒலி இளம் வயதி லிருந்தே ஒட்டிக்கொண்ட மேடைப் பேச்சு அடிக்கடி கேட்ட வானொலிக் கலைஞர்களின் கனத்த குரலோலி இவை நான்கும் தங்களது செய்தி வாசிப்பில் ஊடுரு ஆதிக்கம் பெறுவதில்லையா? இதை இராஜேஸ்வரி சண்முகத்துடன் கேட்ட பொழுது அவர் மிகவும் அழுத்த மாகச் சொல்கிறார், “இல்லை. ஒரு போதும் இல்லை. நான் செய்தியை வாசிப்பின் மூலமாகச் சொல்கிறேன் தவிர நடிப்பதில்லை. இதற்குக் காரணம் எனது வானொலி நெடும் பயணத்தில் நான்
யுடைய விளம்பரம்,

பெற்ற அநுபவந்தான்’ இருக்கலாம்! அநுபவமே சிறந்த பல்கலைக் கழகம்!
முன்னாள் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான வி.ஏ.சிவஞானம் தயாரித்து ஒலிபரப்பிய ‘வளரும் பயிர்", டொக்டர் சோபனா தயாரித்தளித்த 'ஒடி விளையாடு பாப்பா ஆகிய சிறுவர் நிகழ்ச்சிகள் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஒலிபரப்புத்துறை வளர்ச்சிக்குத் தொட்டி லாக இருந்திருக்கின்றன. அத்தோடு பிரபல வானொலி நாடக நெறியாளரான "சானா சண்முகநாதன், புகழ்பெற்ற வானொலிச் சித்திரங்களை நெறிப்படுத்தி ஒலிபரப்பிய சி.வி.இராசசுந்தரம் ஆகி யோரது நெறியாள்கையில் புடமிடப் பட்டவர். வானொலியில் இவர் நடித்த முதல் நாடகம் பிரபல மலையகப் படைப் பாளி என்.எஸ்.எம்.ராமையா எழுதிய ‘விடிவெள்ளி" என்ற நாடகமாகும். வானொலியில் இவர் முதல் முதல் உச்சரித்த சொற்களும் இந்நாடகத்தில் இடம்பெற்றவையே!
“ரொம்பக் களைச்சுப்போய் வந்திருக் கீங்களே அப்பா. காப்பி ரெடி, முகத்தை அலம்பிட்டு வாங்கோ? இந்தக் கனி வான மொழிகள் தான் அவரை இன்றைய நிலைமைக்கு அழைத்து வந்தனவோ. அவர் வானொலியின் அதிஉயர் அறிவிப் பாளர் என்ற உச்சப் பெறுமதிக்கு ஆட் பட்டார். பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் "சிலம்பின் ஒலி நாட கத்தில் ஆ.குருசாமியோடு நடித்தவர். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ‘பதியூர் ராணி', கவிஞர் இ.இரத்தினத்தின் 'வளவன்' ஆகிய நாடகங்களில் இவரது
குரல் நடித்து ஒலித்தது. சானாவின் நெறி யாள்கையில் பாலாம்பினை நடராசா எழுதிய ‘மனோ ரஞ்சிதம்’ என்ற நீண்ட தொடர் நாடகத்தின் மூலமாக கிழமை தோறும் தனது குரலைப் பாயவிட்டவர்.
தென்னிந்திய, கொழும்பு வட்டார வழக்குகளைக் கச்சிதமாக உச்சரித்து நடிக்கக் கூடியவர் இவர். அந்தக் காலத்தில் அமரர் நாவற் குழியூர் நடராசன், சில்லையூர் செல்வ ராசன் போன்ற மூத்த கவிஞர்கள் கவிதை அரங்குகளின் கவிதைகளை அறுத்து, உறுத்து வாசிப்பது போல் இவர் கவிதை நாடகங்களில் கவிதை நடைபிசகாது கவிதைகளை உச்சரித்து நடிப்பதில் வல்லவர். மேற்படி கவிஞர்களது நெறி யாள்கை இவருக்குக் கிடைத்துமிருக் கிறது. எனவே ஏராளமான கவிதை நாட கங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குத் தேறியது.
அசட்டு வேலைக்காரன்" என்ற மேடை நாடகத்தில் 'சானா" எஸ்.சண்முக நாதனோடு நடித்துள்ளார். ஈழத்துக் கவிஞர் முருகையனின் ‘விடியலை நோக்கி", நாடறிந்த நாடக நெறியாள ராகிய அமரர் சுஹைர் ஹமீட்டின் தேரோட்டி மகன்' ஆகிய நாடகங்களில், இவரது கணவரான சி.சண்முகத்தின் “ஸ்புட்னிக் சுருட்டு உட்பட ஏராளமான மேடை நாடகங்களில் நடித்து ஈழத்து நாடக அரங்கை மேன்மைப்படுத்தியவர்.
யாழ்ப்பாண,
‘தேரோட்டி மகன்? நாடகத்தை பார்த்த பேராசிரியர் அமரர் க.கைலாசபதி இப்படிச் சொல்லி இருக்கிறார்.
45

Page 25
"எம்மிடையே நடிகைகள் குறைவு என்பது வாய்ப்பாடாக இருப்பினும் திருமதி. சண்முகம் அக்குறைபாட்டிற் கெல்லாம் ஈடுசெய்வது போல் நடித்தார். அர்ச்சுனன், கண்ணன், கர்ணன் ஆகி யோருடன் வேறுபட்ட உணர்ச்சி நிலை களில் உரையாடும் பொழுது தனது திறமை அத்தனையையும் வெளிப்படுத்தி னார் எனலாம்” இத்தகைய முறையில் தனது நடிப்பில் நவரச முத்திரைகளை வெளிப்படுத்திப் பெரியோர்களது பேரபி மானத்தைப் பெற்றவர் இராஜேஸ்வரி சண்முகம். இத்தகைய ஆற்றல் வெளிப் பாடுகளை வானொலியிலும், மேடை யிலும் ஆற்றுகை செய்தவர் இவரைத் தவிர வேறொருவரும் இருக்க முடியா தெனலாம்!
தனக்குள்ளிருந்த நடிப்பாற்றலை விருத்தி செய்வதற்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் தனது கணவன் சி.சண் முகமும், ஈழத்து நாடகக் கலைக்கு பெரு விசையைக் கொடுத்த 'சானா' எஸ்.சண்முகநாதனுமே என்கிறார்.
இச்சந்தர்ப்பத்தில் சி.சண்முகத்தைப் பற்றிச் சிறிது கூறுவது பொருத்தமாக இருக்கும். இவரது "சரிபாதி" அல்லவா
சி.சண்முகம்!
சி.சண்முகம் கொழும்பு நாடக அரங் கிற்குப் பெரும் பங்களிப்பைச் செய்தவர். பல நாடகங்களை எழுதி மேடையேற்றியவர். இவரொரு "றெடி மேட்" நாடகாசிரியர். சண்முகம், இலங்கை வானொலியில் இணைந்த சேவையில் கடமை புரிந்தவர். இவர் வானொலிக்கென எழுதிய நாடகங்களின்
46
எண்ணிக்கை எவ்வளவென அவருக்கே தெரியாது. எதுவிதமான பதிவுகளுமில் லாமல் தட்டச்சில் கடதாசியைக் கொழுவி, சிகரெட்டைப் புகைத்தபடியே நாடகப் பிரதியாக்கம் செய்வார். இவர் எழுதிய நாடகமான துணி விடு தூது", "லண்டன் கந்தையா ஆகிய நாடகங்கள் ஓராண்டிற்கும் மேல் ஒலிபரப்பாகின. "அப்பாவும் மகனும்" என்ற சிறுவர் நாடகம் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் 100 வாரங்களுக்கு மேலாக ஒலிபரப்பாகிச் சிறார்களை மெய்மறக்க வைத்தது.
இவரது முதலாவது மேடை நாடகம் 'மனிதருள் மாணிக்கம் 1957 இல்
கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில்
மேடையேற்றப்பட்டது. சண்முகத்தின் மேடை நாடகங்கள் அனைத்திலும் இராஜேஸ்வரி சண்முகமே முக்கிய பாகமேற்று நடித்தது குறிப்பிடத்தக்கது. சண்முகத்தின் நகைச்சுவை நாடகங்கள் நாடகச் சுவைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன! ஈழத்து நகைச்சுவைக்கு நீர்ப் பாய்ச்சி வளர்த்தன.
சி.சண்முகம் பகுதி நேர அறிவிப் பாளராகவும் ஒலிபரப்புத்துறைக்குப் பங்களிப்புச் செய்தவர். இவரொரு விளையாட்டு இரசிகர். அறுபதுகளில் இவர் இலங்கை வானொலி நிலையத் திற்கு அருகே இருந்த சிறு கைத்தொழில் திணைக்களத்தில் உத்தியோகம் பார்த்தார். அக்காலகட்டத்தில் காலை நேரத்தில் விவியன் நமசிவாயம், சானா ஆகியோ ரோடு "செஸ் விளையாடிக் கொண்டி ருப்பார். அவர்கள் விளையாடுவதைப்
பார்த்துக் கொண்டு நிற்பார். மாலை

நேரத்தில் இவர்களோடு சேர்ந்து பட்மின்ரன் விளையாடுவதுமுண்டு.
ஆங்கில மொழி அறிவிப்பாளரான ரொபி பெரேரா என்பவர் அறுபதுகளில் 'பிறிஸ்ரல் ஸ்குபாட்ஸ் நியூஸ் என்ற
நிகழ்ச்சியை ஆங்கில சேவையில்
தயாரித்து ஒலிபரப்பினார். இத்தகைய நிகழ்ச்சியொன்றை விளையாட்டுப் பிரியர் களுக்காகத் தயாரித்து முதன் முதலாக தமிழ் தேசிய சேவையில் ஒலிபரப்பியவர் சி.சண்முகமே! இவர் யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்தவர்.
திடீரெனச் சில சமயங்களில் விசேட நிகழ்ச்சியொன்றை ஒலிபரப்புமாறு வானொலித் தலைமைப் பீடத்திற்கு உத்தரவு கிடைப்பதுண்டு. இத்தகைய நேரங்களில் தயாரிப்பாளர்கள் தடுமாற்றம் கொண்டு தவிப்பர். இன்று போல் அன்று கையடக்கத் தொலைபேசிகள் புழக்
அணுகி மேலிடத்துக் கட்டளையை நிறை வேற்றுவது? தயாரிப்பாளர்கள் பக்கட் பக்கட்டாகச் சிகரெட்டை ஊதித் தள்ளு வர். இப்படியாக விசேட நிகழ்ச்சியை ஒலிபரப்புவதற்காக "அந்தரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சண் முகத்தைக் கண்டுவிட்டால் குதித்துக் கும்மாளமிடுவர். “டே! சண்முகம் இஞ்ச வா’ எனக் கூப்பிட்டு ஆக வேண்டியதை அறிவிப்பர். கேட்டுக் கொண்ட தவணைக் குள் ஒலிபரப்புப் பிரதி உரிய பிரதி களோடு தயாரிப்பாளரின் மேசையில் இருக்கும். வானொலிப் பிரதி தயாரிப் பில் சண்முகம் மன்னர்”. தயாரிப்பாளர் களை மாட்டிக் கொடுக்காத வகையில்,
47
அரசின் நெழிவு, சுழிவுகளை அனுசரித்து தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை குலைக்காமல் பிரதியைத் தயாரிப்பார்.
இந்த வகையில் சி.சண்முகம் வானொலிக்கு உதவுகரமாகிச் சேவித் தவர். தனது கவிதையொன்றில் கவிஞர்
வாலி " ஊக்குவிக்க ஆள் இருந்தால்,
ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பார் என்ற கருத்தைக் கக்கியிருக் கிறார். எனவே இராஜேஸ்வரி சண்முகம் தனது இல்லத்திற்குள்ளையே ஒரு விநோதமான கலைஞனை வைத்திருந் தார்! இத்தகைய அரிய வாய்ப்பே அவரது கலைத் தொண்டையும், ஆற்றலையும் மேம்படுத்தியதென்றால் தப்பிருக்காது
தானே! தனது கலாபிமானத்தை மேற்
றளப்படுத்தியவர் தனது கணவனேயென அவர் கூறி மகிழ்கிறார். இது கலைகளின் சங்கமம்! இந்தச் சங்கமத்தின் அறுவடை
a List கத்தில் இருக்கவில்லை! யாரை? எப்படி : இன்று தமிழ் உலகு பாராட்டி
மகிழும் இராஜேஸ்வரி சண்முகம்!
ஏறுத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தச் சண்முகப்பிரியாவைச் சந்திக்க முடிந்தது. அன்றைய இரா ஜேஸ்வரிதான் இன்றும் குரலின் கெம்பீரமோ, நெஞ்சை நிமிர்த்திய நடையோ இல்லாது வானொலிக் கட்டிட விறாந்தைகளில் அன்று எப்படித் தனது முந்தானைச் சேலையைக் கையில் ஏந்திய படி நடப்பாரோ இன்றும் அப்படியே நிலம் நோக்கிய நடையில் வருகிறார். அடக்கமான மென்சிரிப்பு. முன்னரும் தெரிந்தவரெவரையும் பார்த்தால் பெரிதாகக் கதைப்பதில்லை. இரண் டொரு வார்த்தைகளோடு நகர்ந்து

Page 26
விடுவார். இலங்கை வானொலி சம்பந்தப் பட்ட எந்தவொரு விடயத்தையும் பேச
மாட்டார்!
ஒலிப்பதிவாக இருந்தாலும், நேரடி ஒலிபரப்பாக இருந்தாலும், அக்காலத்தில் முன் கூட்டியே விண்ணப்பித்து கலை யகங்களை ஒழுங்கு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களும் இருந்தன. இதை நிரப்பித் தயாரிப்பாளர் கள் கையொப்பமிட்டு Programme Traffic என்ற கிளைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இக்கிளையே கலையகங் களைப் பகிரும். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழி வாரிச் சேவைகள் கலையகங்களைப் பெறு வதற்குக் கடும் போட்டி! இப்படியான நெருக்கடிகளுக்கு மத்தியில் கலை யகங்களைப் பெற்றுவிட்ட பின்னரும் தயாரிப்பாளர்களுக்குச் சில எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படுவதுண்டு நோயின் காரணத்தாலோ அல்லது எதிர்பாராத நிகழ்வுகளால் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் கலைஞர்கள் வராமையை அற வித்து விடுவார்கள். தனிநபர் சம்பந்தப்பட்ட பேச்சு நிகழ்ச்சியென்றால் இசைத் தட்டுகளை ஒலிபரப்பிச் சமாளித்து விடலாம். இசைக் கச்சேரி களுக்கும் அப்படிச் செய்து விடலாம். நாடகம், சித்திரம் போன்ற பல கலைஞர்கள் சம்பந்தப்படும் நிகழ்ச்சி யென்றால் தயாரிப்பாளர்களுக்கு உதறல் எடுத்துவிடும். இத்தகைய நெருக்கடி சானாவுக்கு ஏற்பட்டால் தானே அரங்கத்திற்கு வந்துவிடுவார். மற்றைய தயாரிப்பாளர்கள் கையைப் பிசைவார்கள்!
s
48
இத்தகைய சந்தர்ப்பங்களில் இருந்து தயாரிப்பாளர்களை பல தடவைகள் இராஜேஸ்வரி சண்முகம் மீட்டெடுத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக என்ற சொற்றொடரை வானொலியில் காப்பாற்றி
ஒலிக்க
வைக்காது
இருக்கிறார்.
இவர் மாதர் பகுதியில், உரைச் சித்திரத்தில், நாடகத்தில் பங்குபற்ற வந்திருப்பார். பிரச்சினைக்குள்ளான தயாரிப்பாளர்கள் தனது கஷ்டத்தை வெளிப்படுத்தினால் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வருவதாகச் சம்மதிப் நிகழ்ச்சி முடிந்து திரும்பிக் கொண்டு இருப்பாராகில் மீண்டும் கலையகத்திற்குச் செல்வார். ஒத்திகை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. துறை
Lu mtiif.
போன கலைஞரல்லவா! எதையும் கச்சித மாகச் செய்யக் கூடியவர். அன்றைய தயாரிப்பாளர்கள் அத்தனை பேரும் இத் தகைய நம்பிக்கையை இராஜேஸ்வரி சண்முகத்தில் வைத்திருந்தனர். இன்றைய இளம் கலைஞர்கள் 'அன்பளிப்பு'ப் பணத்தை நினைவு கூர்ந்து இந்த அர்ப்பணிப்பைக் கொச்சைப்படுத்தலாம்! அதை உடனடி பெற்று விடவும் முடியாது. அதற்காக இவர் தமிழ்ச் சேவைப் பணிமனைக்கும் அலைவதில்லை!
штвstй
இந்த வகையில் சி.சண்முகம் குடும்பத்தின் வானொலிப் பங்களிப்பு உயர்ந்த பெறுமானத்தை உடையதாக இருந்தது.

60ம்சா குள்ளமான தோற்றம் கொண்டவன். அவனுடைய வகுப்பிலே அவன்
தான் வயதால் மூத்தவன். அதனால்தான் அவனை மொனிட்டர் வேலையில் வகுப்பின் மாஸ்ரர் வல்லிபுரத்தார் நியமித்துமிருக்கலாம். தேர்தல் நடாத்தி மொனிட்டர் நியமிப்பதில் அக்கறைப்பட்டவரல்ல. கணுக்காலிலிருந்து தொடை வரை கறுப்பு மயிர்க்கற்றை தெரிந்திடும்படி நீல அரைக்காற் சட்டை, வெளிர் நிற அரைக்கை மடித்த சேட்டுடன் அவனை ஏழேமுக்காலுக்கும் முன் தினந்தோறும் காணலாம். கஹட்டபிட்டிய தரிப்பில் இறங்கிக் கொள்வான். மேடை இல்லாமல் நிலத்தோடு ஒட்டிய தரிப்பிடமேயானாலும் அவனால் வெகு சாதுரியமாக இறங்கிட
(ԼՔԼջԱվք.
இரண்டு பெட்டிகள் மாத்திரமே பொருத்திப் புகை கக்கியபடி நாவலப்பிட்டி ரயில், இடைத் தரிப்பிடங்களிலே தொற்றுகிற பயணிகளுக்குக் கடைசிப் பெட்டியின் ரயில் கார்ட் ரிக்கற்று ートイ「> கொடுக் கிற துண்டு. மத்தியான சாப்பாட்டுக்கு \ ހ \ ஹம்சா வீடு திரும்பியும் விடுவான். அதற்கும் இப் போது ரயில். புத்தகக் கட்டுகள், கொம்பாஸ்
- சி. சுதந்திரராஜா
பெட்டிகள் எப்போதும் அவன் கைகளில்.
ரயிலின் இருக்கை களில் இருந்தபடியே அவன் ஸோலஜி நோட்ஸை உச்சாடனம் செய்வதுமுண்டு. அமீபாவையும் ஹைட்ராவையும் மிக ரசித்தபடி பென்ஸிலால் கீறி மகிழ்வதுமுண்டு. ரயிலின் ஆட்டத்துக்கேற்றபடி அமீபாவின் புறத்தோற்றம் நொருங்குண்டு போகிறதுழுண்டு.
வல்லிபுரம் மாஸ்ரர்தான் அவனுக்கு கிளாக்கர் புத்தியை ஊட்டியதில் முன்நிலை எடுத்தவர். அதனால் அவன் வாப்பாவிடம் கொனா டிக்கா எஸ்டேட்டில் கிளாக்கர் வேலைக்கு இப்போதே புக்கிங் செய்து வைக்கச் சொல்லி மன்றாடினான். தேவசபையில் முழந்தாளிட்டு மன்றாடுவத போல் ஹம்சா நடந்தும் காட்டினான்.
49

Page 27
தேர்வு நாட்களில் திருத்திய வினாத் தாள்களில் புள்ளிகள் இடப் பட்ட பின்னால் ஹம்சாவின் வேலை அவற்றுக்குரிய மாணவர் தவணை அறிக்கைகளில் இட்டு நிரப்புவதே. சளைக்காமல் செய்வான். வகுப்பின் மாணவர்களுக்கெல்லாம் அவன் கொம்பு முளைத்த குமாஸ்தாவாகத் தெரிந்தான். மாணவர் வருகை விடுப்பு இடாப்பு பதிவெல்லாம் அவன் மூலமே. பெளதீக ரசாயனக் கூடக் குடுவை களின் மத்தியில் மூழ்கிப் போயிருப் பான். அன்றாடப் படிப்புடன் பதிவு வேலைக்கு சம்பளமில்லா உத்தியோக யோகம் நன்கு அடித்திருந்தது.
லுவுறர் நடக்கிற வேளைகளில் ஒரு நேரத் தொழிற்பாட்டில் மூடப்படும் கல்லூரியாக இயங்கி வந்த காரணத் தால் மாலை வேளைகளில் மகாவலி பாயும் இலவத்துறை ஆற்றுப்படுக்கை யில் கிரிக்கெற் விளையாட எல்லோ ருக்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்தது. இதற்கெல்லாம் ஹம்சா வாயபூறினான். நகரப்புறத்து மாணவர்களுக்கோ திரை யரங்குகளும் நூலகமும் பெரும் பின்னேரப்பொழுதுபோக்குக்கு வாய்ப்பு ஏற்படுத்தி வைத்திருந்தன. ஹம்சாவின் இருப்பிடம் அந்த வாய்ப்பை நறுக்கி எடுத்து படிப்பிலே மாத்திரம் மூழ்கடிக்கப் பண்ணியது. பனிப்படலம் தூரத்தில் தெரிபவர்கள் தெரிபடாமல் மூடியிருக்
50
கிற போதிலும் ஹம்சாவின் வருகை நிற்காது.
ஹாஜியார் தருகிற கடனில் ரவுணுக்குள்ளே வீடு வாங்கிடும் ஆசை உம்மாவுக்கு இருப்பதை ஹம்சா அறிவான். வாப்பாவின் வருவாய்
அப்படிப் பிரமாதமானதுமல்ல.
தேயிலைப் பெட்டிகள் சேகரித்து
விற்கிற வேலை. அவருக்கு ஹம்சா குமாஸ்தாவாகி விட்டாலே வாழ்க்கை யின் வெற்றிக் கம்பம் எட்டிப் பிடி
பட்டதுக்கு ஒப்பாகும்.
கழுத்தை இறுக்கும் வர்ண வர்ண ரைகள் வல்லிபுரம் மாஸ்ரரின் ஆளுமைக்கு மெருகேற்றும். கிட்டத் தட்ட அவனை ஒரு ஏவலாளி போன்றே மேற்பார்வையிடுவார். ஹம்சாவின் மாணவப் பருவம் கழிவதில் அவருக்கு அலாதியான அக்கறையுமுண்டு. தடித்த பிரேமிட்ட கண்ணாடியும், கோரமான முகவெட்டும் கொண்டவன் என்ப தாலோ வயதில் குறைந்த அதே வகுப் பினர் அவனோடு பழகுவதையும் தவிர்த்துக் கொண்டார்கள்.
"புட்டு விழுங்கி, ரெக்னிக்கலர்' என்றெல்லாம் மசூட் மாஸ்ரருக்குப் பட்டப் பெயர் சூட்டி விட்டிருந்தான். தொண்டைக் குழியில் புட்டு விழுங்கிய படி சொல்லிக் கொடுக்கிற காரணத்
தால் அப்படியும் அவனுக்குத் தோன்றி
யிருக்கலாம். அங்கே பலருக்கும்

பலவித இடுகுறிப் பெயர்களே சூடப் பட்டிருக்கும்.
ஹம்சா எவரையும் முஸ்லீம் ஆக்குவதில் சர்வ வல்லமை காட்டி னான். ரஸாக் என்றே ராஜாவையும் பதிவு ஏட்டில் அரபுமொழி துலங்கச் செதுக்கியும் வைத்தான். யாருமே முறைப்பாடு இட்டுக் கட்டாததால் அவன் காட்டில் மழையாக இஷ்டப்பட்டு இடாப்புத் தயாரிப்பதில் முனைந்தான்.
இளகிக் கொண்ட மனம் ஹம்சா வில் இப்படித்தான் நடந்தேறியது.
வகுப்பு மாறும் தேர்வில் வீகுல வத்தை கமகே சித்தி எய்திடாமல் தத் தளித்தான். கமகே கன்னங்கரேல் உருவத்தான். நாளும் கிழமையும் வீகுலவத்தை வயல் காட்டில் சேறும் சகதியும் புரண்டிட உழன்றும் படித் தவன். தடித்த திரண்ட தோள். மண் வெட்டி பிடித்து மரத்துப்போன உள்ளங் கை. அவன் சித்தி எய்திடாமல் வதக்கி வறுத்த முப்பத்தாறு புள்ளி வினாத்
தாளின் விடைத்தாளை ஹம்சா
அறுபத்துமூன்று என்றே மாற்றிப் பதிந்தான்.
வல்லிபுரம் மாஸ்ரர் வைத்தது வெறும் கையெழுத்து மாத்திரமே. கமகேயின் தலையெழுத்து நன்றாகிட ஹம்சா விசையாகிக் கொண்டான். தான் பார்த்த வேலைக்கும் பரிகாரம் தேடிக் கொண்டான்.
51
EXCELLENT
PHOTOGRAPHERS
MoDERN COMPUTERIZED
PHOTOGRAPHY" FOR WEDDING PORTRAITs
8 CHILD SITTINGS

Page 28
நாவாந்துறைக்கு நாவாய்த்துறை" என இன்னுமொரு பெயருமுண்டு. தென்னிந் தியாவிலிருந்து அரிசி மற்றும் பொருட்களை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரும் அக்காலத்துப் பெரிய வள்ளங்கள் (தோணி) இப்பகுதியில் தான் வந்து தரிப்பதுண்டாம். இதனால் இவ்விடத்தை நாவாய்த்துறை எனவும் சொல்வதுண்டு. நாவாய்' என்பதன் பொருள் வள்ளம் அல்லது தோணி. எனவே 'நாவாய்த்துறை நாவாந்துறையாக மருவி இருக்கலாம்!
யாழ் மா நகரின் மேற்குப் பகுதியில் இக்கிராமமுண்டு. முற்று முழுதான கத்தோலிக்கக் கிராமம். பரிசுத்த பரலோக அன்னை தேவாலயம், புனித நீக்கிலஸ் தேவாலயம் என இரு வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன.
மிகப் பழைமை வாய்ந்த சந்தை ஒன்றுண்டு. அந்தக் காலத்தில் இதை "றாத்தல்” என அழைத்தனர். இப்பெயர் எப்படி வந்ததென்பது இன்னமும் விளக்கப் படவில்லை! ஆனால் இன்றும் மூத்தவர்கள் 'றாத்தல்" எனத்தான் சொல்கின்றனர். இக்கிராமத்தை ஏனைய பகுதியினரை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் அமரர் கலைக்கவி நீ. எஸ்தாக்கி. இவர் தான் பிறந்த இந்த மண்ணிற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.
இவரது தொண்டு சமூக விழுமியங்களைத் துலங்கக் கூடிய வகையில் திட்டமிட்டுச் செயற்படுத்தப் பட்டதெனலாம். ஒரு சமூகத்தின் கண்களாக விளங்கக் கூடிய சமயம், கல்வி, கலை, விளையாட்டு ஆகிய கூறுகளில் நீ.எஸ்தாக்கி தனது பணிகளை விரித்து நாவாந்துறையை நாடறிய வைத்தார்.
ஆன்மீகத் துறையில் மக்களின் கவனத்தைத் திருப்பினால், ஒரு செழுமையான சமூகத்தைத் தோற்றுவிக்க முடியுமென்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. "கோவிலில்லா ஊரில் குடியிருக்கக் கூடாது" என்ற அனுபவச் சித்தாந்தத் திற்கு முன்னுரிமை கொடுத்து, தனது கிராமத்தில் கோவிலொன்றை அமைக்க, முன்னேற்ற நோக்கம் கொண்ட தனது சக இளைஞர்களோடு இணைந்து பாடு
一 一ー一、“一ー” இவ்வகையாக, 1940ஆம்
ஆண்டு கொட்டில் வடிவில் அமைக்கப்
Y o a >4 >� خ� d مسس سے
அன்றும் இன்றும் / பட்டு இப்பொழுது பாரிய வழிபாட்டுத்
5& g5 a LD T -تاس.................. مسس...........................م. -سسد. م..............مست. ۰۰۰۰ح--- ""
~
M
༄། உருவாகி மறக்காத சொந்தங்கள் '
d- A- பரலோக - செல்லக்கண்ணு - அ ன்  ைன
தேவாலயம்.
52
 
 
 

தனது கிராம மக்கள் மத்தியில், கத்தோலிக்க மதத்தைப் பிரசாரப்படுத்தும் நோக்கோடு, கத்தோலிக்க புனிதர்களின் சரிதங்களை மக்கள் அறிதல் செய்யும் பொருட்டு, அவைகளைக் கூத்து, நாடக வடிவங்களுள் புகுத்தி மேடையேற்றி னார். இதன் மூலமாக இப்பிரிவு மக்கள் கத்தோலிக்க மதத்தை இலகுவில் அறிதல் செய்வது இலகுவாக இருந்தது.
இவரொரு ஆசிரியர். அதிபர் பதவி வரைக்கும் உயர்ச்சி கண்டவர். மன்னார், நெடுந்தீவு, அஞ்சணந்தாழ்வு, நாவாந் துறை ஆகிய ஆசிரியப் பணியை நிறைவுறவும் அவ்வப் பகுதி மக்கள் மகிழ்வுறவும் செய்தவர்.
நாவாந்துறை றோ.க.த.க, பாட சாலையில் 1964ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பு வரைதான் கற்கக் கூடியதாக இருந்தது. எஸ்தாக்கி அதிபராக வந்ததும் தனது தடங்கலற்ற முயற்சிகளால் பதி னோராம் வகுப்பு வரை மாணவர் கற்கக் கூடிய வசதிகளைச் செய்து கொடுத்தார். புதுப்பொலிவான கட்டிட அமைப்பும் சுவறியது.
தனது சிறப்பான அணுகுமுறைகள் மூலமாக ஏனைய ஆசிரியர்களின் உதவி களையும் பெற்றுச் சிறந்த பெறுபேறு களைத் தனது பாடசாலை பெறக்கூடிய வகையில் மாணவர்களை ஊக்கப் படுத்தினார். இதனால், நாவாந்துறை மாணவர்கள் கற்பதற்குப் பெரிய பாட சாலைகளைத் தேடித்திரிய வேண்டிய அலைச்சல்கள் அருகின. அக்கிராமத்தின் ஏழை, பாட்டாளி மக்களின் பிள்ளைகள் மேலதிகச் செலவிட்டு, தனிப்பட்ட
இடங்களில் தனது
53
ஆசிரியர்களை ஒழுங்கு செய்து படிக்க (Tution) முடியாதென்பதை உள்வாங்கி, தனது பாடசாலையிலேயே விசேட
மேலதிக வகுப்புகளை ஒழுங்கு செய்து
பாழைகளுக்கும் கல்வித் தானத்தைச் செய்தார். இச்செழுமையான பணி மூலம் இரவு நேரங்களில் ‘பெற் றோமக்ஸ்" வெளிச்சத்தில் வசதியற்ற மாணவர்கள் கற்றுக் கல்வி விருத்தியைப் பெற்றனர்.
கல்வி, சமயம் என்ற விடயங்களில் கலைக்கவி திறந்த மனத்தவர். ஒர வஞ்சனையற்றவர்! இவர் யாழ்ப்பாணம் அஞ்சணந்தாழ்வுப் பாடசாலையில் ஆசிரியப் பணியை மேற்கொண்டிருந்த பொழுது அப்பாடசாலையை மட்டுமன்றி அதன் சூழலில் இருந்த தேவாலயத்தையும் திருத்தி அமைத்து அவ்வூர் மக்கள் கல்வி யோடு, சமயத்தையும் பேணி வாழ்வில் முன்ன்ேற வைத்தார். இதன் மூலமாக அஞ்சணந்தாழ்வு மக்களது உள்ளங்களில் தன்னோடு தன் மண்ணையும் இடம்பெற வைத்தார்.
ஆசிரியத் தொழில்சார் பிரச்சினை களுக்கும் முகம் கொடுத்தவராக, வட பகுதி ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்து ஆசிரியத்துறை சிறக்கப் பணி செய்தார்.
இவரது சமய, சமூகத் தொண்டுகள் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை யகத்தையும் சென்றடைந்தது. இதன் மூல மாக எவருக்கும் கிடைக்காத மிக அரிய பேறு நீ. எஸ்தாக்கிக்கிக் கிடைத்தது. 1962இல் பரிசுத்த பாப்பரசர் 6ஆம் சின்னப்பர் இவரைப் பாராட்டிச் சான்

Page 29
றிதழ் வழங்கினார். இது இவர் தான் பிறந்த மண்ணிற்குச் செய்து மாபெரும் தொண்டனெலாம்!
இவரொரு சமூகமாகவே தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்தார். தூய வெள்ளை வேட்டி, நஷனல். எந்நேரமும்
புன்னகை இதுதான் நீ.எஸ்தாக்கி!
இவர் 1936இல் சென் மேரிஸ் ஐக்கிய வாலிபர் சங்கத்தினை அமைத்த முன்னோடி. சென் மேரிஸ் விளை யாட்டுக் கழகம், சென் மேரிஸ் முத்தமிழ் மன்றம் ஆகியவற்றின் தலைவராக
இருந்து அவைகளை நெறிப்படுத்திப்
பல சாதனைகளைக் காண வைத்தவர்.
இவரது வழி காட்டலில் சென் மேரிஸ் உதைப்பந்தாட்டக் கழகம் வர லாறு காணாத வெற்றிகளைப் பெற்றது. யாழ் மாவட்ட உதைப்பந்தாட்டச் சங்கத் தலைவராகவும் இருந்து, யாழ் குடாவுக் குள் முடங்கிக் கிடந்த உதைப்பந்தாட்டத் தைப் பரம்பல் செய்தார். தென்னிந்தியா விலிருந்து உதைப்பந்தாட்டக் கழகத்தை அழைத்து எமது விளையாட்டு வீரர்களின் வல்லமைகளை அறிய வைத்தார்.
இவரது கலைமுகம் மிகவும் பிரகாச மானது. நாட்டுக் கூத்துச் சக்கரவர்த்தி எனக் கூத்துக் கலையில் துறை போனவர் களில் விதந்து கூறப்படும் பூந்தான் ஜோசேப் தனது நாட்டுக் கூத்துக் கலை வாழ்விற்கு ஊக்கமும், அறிவுரையும் வழங்கிய பெருந்தகை ஆசிரியர் நீ.எஸ்தாக்கி என்கிறார். இத் தகைய வகையில் கூத்துக் கலைஞர்
உற்சாகமும்
களையே நீ.எஸ்தாக்கி ஆசிரியரின்
54
கூத்துக்கலை மான்மியம் கிறங்க
வைத்துப் பொன் முடியை ஏந்தியது.
பல நாடகங்களை எழுதிப் பாட
சாலை மாணவர்களாலும், நாவாந்துறை
நாடகக் கலைஞர்களாலும் ஆற்றுகை
செய்ய வைத்தார். நெறியாள்கையைத் தானே முன் நின்று செய்தார். நாவாந் துறை நாட்டுக் கூத்து மரபை இன்றும் கூடத் தக்க வைத்த பெருமை இந்த மண்ணின் மைந்தன் எஸ்தாக்கியைத்தான்
சாரும்.
அரங்கை ஒரு புதிய பரிமாணத்திற்கு உட்படுத்தி, நாட்டுக் கூத்தை தூங்கி வழிந்து கொண்டு பார்க்கும் ஒரு ஆற்றுகையாக அல்லாமல் அடுத்தது என்னவாக இருக்குமென்ற ஆவலைத் தூண்டும் வகையில் நவீனப்படுத்தியவர் இவர்.
மக்களின் பாரம்பரிய கலையாக இருந்து
இதன் மூலமாக பஞ்சப்பட்ட
வந்த கூத்து புது வனப்பைக் கண்டது.
வேதசாட்சிகளான ஞானசவுந்தரி, செபஸ்தியார், அந்தோனியார், தொம்மை அப்பர், அலசு ஆகிய நாட்டுக் கூத்துக் களும், 3 மணித்தியால நாடகங்களான - வன்னியன், பொறையின் நிறை, கண்டி யரசன், ஒரு மணித்தியால நாடகங்களான அன்புள்ள அப்பா, நீதியின் நேர்மை, வெனிஸ் வணிகன் சோக்கிரட்டிஸ். இவைகள் அனைத்தும்
எல்லாளன்,
எஸ்தாக்கியாரின் சொந்த உழைப்பில் எழுதி நெறிப்படுத்தப்பட்டு மக்களுக்கு ஆற்றுகை செய்யப்பட்டவையாகும். பாரம்பரியக் கலையான கூத்துக்கு இவர் ஆற்றிய தினகரன் இவருக்கு ‘அண்ணாவியார்’
பணியைக் கெளரவித்து
என்ற பட்டத்தை வழங்கியது.

வாழும் போதே வாழ்த்த வேண்டு மென்ற உயர் நோக்கோடு சென் மேரிஸ் சனசமூக நிலையம் 1962ஆம் ஆண்டில் நீ.எஸ்தாக்கி அவர்களுக்குப் பெரு விழா வெடுத்தது. இவ்விழாவிற்கு அழைக்கப் பட்ட கலையரசு சொர்ணலிங்கம் அண்ணாவியார் நீ. எஸ்தாக்கிக்கு 'கலைக் கவி’ என்ற பட்டத்தைச் சூட்டினார்.
இந்தக் கலை மேதையைக் குடத்துள் விளக்காக்கி விட்டது யாழ்ப்பாணத்துச் சமூகம் செய்த பெருந்தவறு! இருந் தாலும், எஸ்தாக்கியின் இரத்தத்தின் இரத்தங்கள் - அதாவது புலம்பெயர்ந்த
நாவாந்துறை இளைஞர் தமது ஊரையும், .
தம்மையும் வளப்படுத்தியவருக்குச் சாகா வரம் கொடுத்து விட்டனர். ஆம்! 'சாகா வரம்” என்றொரு சிறு நூல் வெளியிடப் பட்டுள்ளது. இது ஈழத்துக் கூத்துக் கலைஞர்களை விழிப்படைய வைக்கு மெனலாம். அத்தோடு கலைக்கவி நீ.எஸ் தாக்கியின் அரங்காற்றுகை வல்லமைகளையும் இளைய சந்ததி அறிதல் செய்ய உந்து சக்தியாக எதிர் காலத்தில் பயன்படும்.
நாவாந்துறையைப் பற்றிச் சிந்திக் கும் பொழுது இன்னொருவரது தாக் கமும் பளுவாகித் தலையை நெரிக்கும். இலக்கிய உலகு இந்த இளம் இலக்கிய வாதியை இன்னமும் மறந்திருக்காது. ஈழத்து இதழியல் துறைக்கு 'சமர் தந்த வர். இதுவரையில் ஊகித்திருப்பீர்கள். மல்லிகையின் அட்டை நாயகராகும் கெளரவத்தைப் பெற்றவர். ஆம்! அவர் தான் அமரர் டானியல் அன்ரனி, இலக்கிய வேள்வியில் பலதைச் செய்திருப்பார். நாவாந்துறைக்கென ஒரு தனியான இலக்
s
55
கிய ஆளுமையைத் தரக்கூடியவர் மறைந்து விட்டார்!
ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் இவ் வூரில் இருந்தார். இவரைச் சொலமன் என்பர். பொலிஸ் வாத்தியக் குழுவில் இவர் இருந்தவரெனச் சொல்லப்பட்டது. பொலிஸ் அணி வகுப்பில் குழல் போன்ற ஒரு இசைக் கருவியை இவர் இசைப்பதுண்டாம்.
அக்காலத்தில் வில் லூன்றிப் பிள்ளையார் கோயில் வீதியால் குழந்தை களைத் தோளில் படுக்க வைத்தபடி தாய்மார்கள் போவார்கள். "எங்கே எனக் கேட்டால் “தேறு கயிறு போட நாவந் துறைக்கு என்பர். குழந்தைகளுக்கு வயிற் றோட்ட நோய் வந்தால் அல்லது அவர்கள் மெலிந்தால் இந்த தேறு கயிற்றைக் கட்டு வார்கள். கழுத்தின் ஒரு பகுதியையும், கமக்கட்டையும் சுற்றி இந்தத் தேறு கயிறு கட்டப்படும். இதைக் கட்டிவிட்டால் தமது குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் நின்று விடும். உடம்பு பருக்கும் என்பது அன்றைய சில அன்னையர்களது நம்பிக்கை. மந்திரத்தை உச்சரித்து இந்தத் தேறு கயிறு கட்டுபவர்கள் நாவந்துறை யில் இருந்தனர். இவர்களுள் மிகவும் பிரசித்தமானவர் சுவாம்பிள்ளை என்பவர். சின்னத்தம்பி, சண்முகசாமி என்பவர் களும் இத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வகையில் நாவாந்துறை மண் ணில் ஆல், வேல் போன்ற நல்ல விருட் சங்கள் சடைத்திருந்தன. யாழ்ப்பாண மா நகர வரலாற்றில் நாவாந்துறை ஓர் ஒளி தரும் தாரகை என்பதை எவரும் மறுக்க
முடியாது.

Page 30
கனகசெந்தி கதா விருது 2004 - 2005
இரசிகமணி கனக செந்திநாதன் நினைவாக கனக செந்திநாதன் கதா விருது' வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு இலங்கை இலக்கியப் பேரவையின் பெருவிழாவின் போது தெரிவு செய்யப்பட்ட நான்கு சிறுகதைகளுக்குக் கணகசெந்தி கதா விருது வழங்கப்பட்டது. ஈழத்தின் மூத்த சிறுகதையாளரும், விமர்சகருமான இரசிகமணியின் பெயரால் தெரிவு செய்யப்பட்டு வரும் இச்சிறுகதைகள் ஈழத்தின் சிறுகதை இலக்கியத்திற்குப் பெருமை சேர்ப்பனவாக அமைகின்றன. இவ்விருதுக்கான நிதி நன்கொடையை ஈழத்தின் இன்னொரு மூத்த எழுத்தாளரான ந.அனந்ததேவன் (கனடா) வழங்கி வருகின்றார். இந்தத் தடவை ஆறு சிறுகதைகள் கதா விருதுக்காக தெரிவாகியுள்ளன.
கனகசெந்தி விருது பெறும் சிறுகதைகள் வருமாறு :
1. முள்ளை முள்ளால் - ஜூனைதா ஷெரிப்
தினகரன் வாரமலர் - 03.10.2004
2. மயாவதியின் கனவு - செம்பியன் செல்வன்
நமது ஈழநாடு - 01.10.2004
3. மீள்தல் - சாந்தன்
நமது ஈழநாடு - 01.10.2004
4. ஜென்மம் - நீர்வைப் பொன்னையன்
தினக்குரல் - 20.12.2004
5. நாடும் நம் மக்களும் - குந்தவை
மல்லிகை - 40வது ஆண்டுமலர் - ஜனவரி 2005
6. பொழுது - சட்டநாதன்
மல்லிகை - 40வது ஆண்டுமலர் - ஜனவரி 2005
56

உண்மைக்குப்புறம்Umதுை
- செ. சுதர்சன்
Dல்லிகை ஆசிரியருக்கு வணக்கம்! மார்ச் 2005 இதழ் கிடைத்தது. நன்றி. அவ்விதழில் வவுனியாவிலிருந்து ச.குகநேசன் என்பவர் எழுதியது போல எழுதிய கடிதத்தைப் படித்தேன். அதில் தவறான கருத்து ஒன்றும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. மல்லிகை வாசகர்களின் நன்மை கருதி அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி உண்மையை அவர்களுக்குத் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். முழுமையாகப் பிரசுரிப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
பூரீமான் குகநேசன் “செ.சுதர்சன், பூறி.பிரசாந்தன் போன்றவர்கள் புதுவையின் கவிதைகள், தொகுப்பில் இடம்பெறாதது குறித்துச் சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்" என்ற கருத்துப்பட எழுதியிருந்ததைப் படித்தேன். சிரிப்புத்தான் வந்தது. புதுவையின் கவிதைகள், தொகுப்பில் இடம்பெறாதது குறித்து இதுவரை நான் எந்த சர்ச்சையையும் கிளப்பவில்லை. அப்படியிருக்க எனது பெயரையும் சேர்த்து எழுதியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இது ஒரு அப்பட்டமான பொய்யும் ஆகும்.
ஞானம் சஞ்சிகை (ஒக்டோபர் 2004) இல் "சமகாலக் கலை இலக்கிய நிகழ்வுகள்" என்ற தலைப்பில் நான் 'தொகுத்து’ வழங்கிய ஒரு விடயத்தைக் கொண்டே பூரீமான் குகநேசன் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். பூரீமானின் இந்த முடிவு அவரது வாசிப்பையே கேள்விக்குறிக்கு உள்ளாக்குகிறது.
என்றும் எனது மதிப்பிற்குரிய அ.யேசுராசா அவர்களின் தெரிதல் (வெளியீடு - 5) என்ற பத்திரிகையில் பகிர்வு என்ற பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மகேஷ் என்பவர் கேட்ட கேள்வி ஒன்றைக் குறிப்பிட்டு, அப்பகுதியின் ஆசிரியர் வேல் என்பவர் எழுதிய பதிலையும் குறிப்பிட்டு, இக்கேள்வி, பதில் தொடர்பாக ஜபார்
57

Page 31
அவர்களின் கருத்தையும் குறிப்பிட்டு "தொகுத்து’ வழங்கும் வேலையையே நான் செய்தேன். அதில் எனது கருத்துகள் எதனையும் பதிவு செய்யவில்லை. தொகுத்து வழங்கும் வேலை யொன்றையே நான் செய்துள்ளேன்.
தெரிதலில் குறிப்பிட்ட கேள்வி, பதில் வந்த காலத்தில் ஈழத்து இலக்கிய நண்பரிடையே பலத்த கருத்து மோதல்கள் நிகழ்ந்ததை நான் நன்கு அவதானித் துள்ளேன். எனவே சமகாலத்தில் ஏற் பட்ட அக்கருத்துத் தொடர்பாக "சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்" என்ற பகுதி யில் அது பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்பினேன். அக்காலத்தில் இதனைப் பதிவு செய்வது அவசியமான தாகவும் விளங்கியது. தெரிதலில் வெளி யாகிய பகிர்வு" பகுதி ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்பதை மறுக்கவியலாது. அதற்காகவே யேசுராசாவுக்கு நன்றி கூறலாம்.
தெரிதலில் வெளியாகிய அக் கேள்வி, பதில் தொடர்பாக தீவிர வாசகர்; படைப்பாளி; சமயம், மரபு என்ற அடிப் படை வாதங்களை விட்டு அறிவியல் ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்; நவீன இலக்கிய உலகில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர்; குறிப்பிட்ட தொகுப்புக்களின்
தொகுப்பாசிரியர்களுடனும், தொகுப்பில்
உள்ள கவிதைகளின் சொந்தக் காரருடனும் நெருங்கிப் பழகி வருபவர்; ஏனைய இலக்கியவாதிகளுடனும் நீண்ட கால உறவைப் பேணி வருபவர் என்ற தகைமைகள் வாய்க்கப் பெற்ற, அரசியல் சமூக வரலாற்றைச் சரியாகப் புரிந்து
58
கொண்ட ஒருவரைத் தெரிவு செய்து
அவரிடம் கருத்தினைக் கேட்டுப் பிரசுரிப்பதாக முடிவு செய்தேன்.
அந்த வகையில் என்னுடையதும், என்னுடைய நண்பர்கள் சிலரதும் அபிப் பிராயத்தின் பேரில் ஜபாரைத் தெரிவு
செய்தேன். அவரிடம் 23.09.2004 காலை
சென்று தெரிதலில் வந்த குறிப்பிட்ட கேள்வி பதில் தொடர்பான அவரின் கருத்தினைக் கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலை அப்படியே பதிவு செய்து ஞானத்தில் எனது பகுதியில் தெரிதலில் பதிலோடு சேர்த்துத் தொகுத்து வாசகருக்கு வழங்கினேன். அதில் நான் எனது கருத்துக்களைப் பதிவு செய்யவில்லை. மகேஷ் கேட்ட கேள்வி, வேல் கூறிய பதில், இவை தொடர்பாக ஜபார் முன்வைத்த கருத்து, இவற்றையே பதிவு செய்து தொகுத்து வழங்கினேன். தொகுத்து வழங்கியது
வந்த கேள்வி
மட்டுமே எனது வேலை. அவற்றைப் பிரசுரித்த ஞானம் ஆசிரியருக்கு எனது நன்றிகள்.
ஞானத்தில் நான் தொகுத்து வழங்கி யதை, நான் சர்ச்சையான கருத்தை முன் பூரீமான் குக நேசனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் வாசிப்பில் கொண்டிருக்கும் சிரத்தைக்காக அவர் மீது பரிதாபப்படு
வைத்ததாகக் கூறிய
கிறேன். புதுவையின் கவிதைகள், தொகுப்புகளில் இடம்பெறாதது குறித்து நான் இது வரையும் எனது கருத்துக்கள் எதனையும் எங்கும் எழுதவில்லை என்பதுதான் உண்மை.

தொகுப்பு முயற்சிகள் தொடர் பான சர்சிசைகள்' என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளேன். அக்கட்டுரை விரைவில் பிரசுரமாகும். அப்போது எனது கருத்துக்களை பூரீமான் குகநேசன் அறிந்து கொள்ள முடியும். அக்கட்டுரையில் சர்ச்சை கிளப்பியவர் களின் கருத்துக்கள் மீதும் சில வினாக் களைக் கேட்க உள்ளேன்.
புதுவையின் கவிதைகள் தொகுக்கப் ll.-Ing5ġ தொடர்பாகப் பிரசாந்தன் முன் வைத்த கருத்துக்களை விட ஜபார் முன் வைத்த கருத்து அதிக முக்கியமானது. விமர்சனப் பாங்குடன் கூடிய ஜபாரின் கருத்தினை நான் பெரிதும் மதிக்கிறேன். அதில் உடன்பாடில்லாத அம்சங்கள் சில எனக்கு உள்ளன எனினும், ஒரு ஆழ்ந்த, தெளிந்த அறிவியல் ரீதியில் முன்வைத்த கருத்து என்ற வகையில் ஜபாரின் கருத்தினை நான் பெரிதும் வரவேற் கிறேன். பூரீ பிரசாந்தனின் கருத்து ஜபாரின் கருத்துக்குக் கட்டப்பட்ட அலங் காரமாக்வே அமைந்துள்ளது. அதில் பல கவிதைகளை முழுமையாகத் (சில ஜபார் குறிப்பிட்டவை என்றாலும்) தந்தமையால் வாசகருக்குக் கவிதைச் சுவையை வழங்கும் பயன் மிக்க வேலையொன்றை மட்டுமே செய்துள்ளார் என்றே கொள்ள
வேண்டியுள்ளது.
ஜபார், தொகுப்பாசிரியர்களின் கருத்து நிலை; அரசியல் கவிதைகள் என்ற ரீதியில் தொகுப்பின் கருத்து நிலை; தொகுப்பில் உள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலத்துக் கருத்து நிலை; அவை வெவ்வேறு இதழ்களில் பிரசுர
மான காலத்தில் இருந்த கருத்துநிலை; தொகுத்த காலத்துக் கருத்துநிலை என்ற அடிப்படைகளை முன்வைத்து அறிவு பூர்வமாகச் சமூக அரசியல் வரலாற்றுப் பின்னணியில் விமர்சன ரீதியாக முன் வைத்த கருத்துக்கள் இலக்கிய உலகோடு நன்கு பரிச்சயப்பட்டவர் அவர் என்பதைக் காட்டுகின்றன. பிரசாந்தனின் கட்டுரைக் குப் பல மாதங்களுக்கு முன் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் என்ற வகையில் அவை முக்கியமானவை. ஜபாரின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றை எனது
கட்டுரையில் சுட்டிக்காட்டவுள்ளேன்.
ஒரு இலக்கியக்காரன் என்பவன் இலக்கியக்காரர்களுடனும், இலக்கியக் கழகங்களுடனும் நெருங்கிய தொடர்பு
களைக் கொண்டிருப்பவன். ஆனால்
ஒவ்வொரு இலக்கியக்காரனுக்கும் ஒவ்
59
வொரு கருத்துநிலைத் தளம் உள்ளது. அதனை அவனது எழுத்தினை அடிப் படையாகக் கொண்டு வாசகன் கண்டு கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனில் இருந்து நுட்பமான முறையில் கருத்துநிலை அம்சத்தில் வேறுபடுகிறான். எனவே அவனை அதைச் சார்ந்தவன், இதைச் சார்ந்தவன் என்று அவன் உறவு கொண்ட குழுக்களையும், அமைப்புக் களையும் கொண்டு அடையாளப்படுத்தக் கூடாது. நான் சில கழங்களுடனும், இலக் கியப் பண்ணைகளுடனும், இலக்கிய வட்டங்களுடனும் தொடர்புடையவன். அதற்காக குறிப்பிட்ட கழகமோ,
பண்ணையோ, வட்டமோ என்னைத்

Page 32
தனது அணி என்று கொண்டாடுவதை நான் விரும்பவில்லை. "நான் நானாக இருக்கிறேன்’ என்ற தத்துவஞானி ஒருவனின் வாக்கை இவ்விடத்தில் நினைவு கூருதல் பொருந்தும். நான் இன்னும் இந்த கழகத்துக்கு, அமைப் புக்கு, பண்ணைக்கு என்று உறுதி எழுதிக் கொடுத்துவிடவில்லை. கொடுக் கவும் மாட்டேன். எனவே முத்திரை குத்தி அணியில் சேர்க்கும் வேலைகளையும், அணி சேர்க்கும் வேலைகளையும் விட்டு விடுவது இலக்கிய உலகத்திற்கு ஆரோக் கியமானது. நான் கம்பன் கழகத்தைச் சேர்ந்தவன் என பூரீயான் குகநேசன் குறிப்பிட்டு எழுதுகிறார். நான் எந்தக் கழகத்தைச் சார்ந்தும் இயங்கவில்லை. நான் நானாகவே இருக்கிறேன். எந்தக் கழகத்தைச் சார்ந்தும் இயங்க வேண்டிய நிலையும் எனக்கு இல்லை. ஆனால் எல்லா இலக்கிய அமைப்புகளுடனும் உறவுடையவன் என்பதுதான் உண்மை.
60
முடிவாக, சர்ச்சை கிளப்பாமல் இருக்க கிளப்பியதாக எனது பெயரைக் குறிப்பிட்டுக் கூறிய ச.குகநேசனின் கருத்து முற்றிலும் பொய்யானதே. இதனை நான் தெரிவிக்காவிட்டால் மல்லிகையில் தவறான கருத்துக்கள் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டு விடும். அத்தோடு 40 வருட சாதனை படைத்து போடும் மல்லிகைக்குச் செய்த துரோகமும் ஆகிவிடும்,
வீரநடை
Саағайтсалалrш5ісі
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்
கிடைக்குமிடம்
நீயூபுக் லாண்ட்
52C, நோர்த் உஸ்மான்
ரோடு, சென்னை - 17.
المـ
 
 

சம்பந்தர் விருது
2004
பேராசிரியர் சி.மெளனகுருவின் அரங்கியல்’
2004 ஆம் ஆண்டிற்கான சம்பந்தர் விருதுக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட படைப்பாளி பேராசிரியர் சி. மெளனகுரு ஆவார். அவரது "அரங்கியல்' என்ற ஆய்வு நூல் விருதுக்கும் பரிசுக்குமுரியதாகத் தெரிவாகியுள்ளது. இலக்கியக் கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை நினைவாக ஈழத்தின் முன்னோடிச் சிறுகதைப் படைப்பாளி சம்ப்ந்தர் பெயரால் வருடா வருடம் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி பண்டிதர் க. சச்சிதானந்தன், எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் எஸ்.பத்மநாதன், மூத்த எழுத்தாளர் சு.வே. ஆகியோர் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இவ்வாண்டு இவ்விருதினைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி. மெளனகுரு பெறுகிறார். மட்டக்களப்பு, தமிழுக்குத் தந்த பல்துறை அறிஞர் மெளனகுருவாவார். ஆரம்ப வயதிலிருந்தே கலை நிகழ்ச்சிகளிலும், நாடகத்துறையிலும் மிகுந்த நாட்டம் கொண்டு விளங்கிய அவரைப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் புடம் போட்டு, அரங்கியலுக்கு வழிகாட்டிகளில் ஒருவராகத் தந்தார். பேராதனைப் பல்கலைக்கழகக் காலத்தில் கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலி வதை ஆகியவற்றில் நடித்துத் தன்னைச் சிறந்த நடிகனாக அடையாளம் காட்டிக் கொண்டார். சடங்கிலிருந்து நாடகம் வரை, தப்பி வந்த தாடி ஆடு, மெளனகுருவின் மூன்று நாடகங்கள், பழையதும் புதியதும், சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும், சங்காரம், ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு, நடிப்பு முறைகள் பற்றிய எண்ணக் கருக்கள், கலை இலக்கியக் கட்டுரைகள், மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் முதலான பல நூல்களின் ஆசிரியர். நவீன அரங்கியலில் மிக்க பரிச்சயமுடையவர். மைல் கல்லாகக் கூடிய பல நாடகங்களை ஈழத்தில் மேடையேற்றியுள்ளார். பதினாறிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி இவ்வாண்டிற்கான சம்பந்தர் விருது அன்னாரின் அரங்கியல் என்ற நூலிற்கு வழங்கப்படுகின்றது. எழுத்தாளர் சம்பந்தனின் மகள் திரிவேணி கஜன் அவ்விருதுக்கான பணப் பரிசில் ரூபா.10,000 ஐ வழங்கி வருகிறார். இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் விழாவில் இப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படவிருக்கின்றன.
61

Page 33
40வது ஆண்டு மலர் மல்லிகைச் சிறுகதைகள்
- பிரகலாத ஆனந்த்
ஒரு சிறு சிகையலங்கார நிலையத்தில் நாற்பது வருடங்களுக்கு முன்னர்
ஊன்றப்பட்ட சிறு விதை ஒன்று இன்று பெரு விருட்சமாய்ப் பூத்துக் குலுங்கி
மணம் பரப்பி நிற்கின்றது. இன்று அந்தப் பெரு விருட்சம் எத்தனையோ பேருக்குப் பெரு நிழல் தந்து கொண்டிருக்கிறது.
மல்லிகைக்கு எழுதும் யாருக்கும் எதுவித பொருள் வரவும் கிட்டுவதில்லை. எனினும் மல்லிகையில் தம் படைப்பு வெளி வரவேண்டுமென்பதில் பெரு ஆர்வம். இம்முறை மல்லிகை ஒரு சிறப்புச் சிறுகதை மலர் போலவே மணம் பரப்பி நிற்கிறது. மொத்தம் 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இரண்டு மொழிபெயர்ப்புக் கதைகள். எமது சகோதர மொழியான சிங்களத்தில் பிரபல எழுத்தாளர் மாட்டின் விக்கிரமசிங்காவின் 'பாவிகளுக்கு கல்லெறிதல்" கதையை எஸ்.ஏ.ஜே. பைஸ்தீன் மொழிபெயர்த்துள்ளார். குஷ்வந் சிங்கின் கதையை சங்கராபரணி "கலவரம்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து தந்துள்ளார். நேரடிச் சிறுகதைகள் 11. இவை அனைத்துமே ஈழத்தின் பிரபலமான எழுத்தாளர்களின் கதைகள். குந்தவை, அருண் விஜயராணி, அன்னலட்சுமி இராஜதுரை ஆகிய மூன்று பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன.
ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் அசுர சாதனையான 40வது ஆண்டு மலரில் பிரபலங்கள் எழுதியிருப்பினும், கதைகள் எல்லாம் அற்புதமானவை என்று கூறிவிட முடியாது. ஒரிரு இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருக்கலாமோ? என்று தோன்றுகிறது. எல்லாக் கதைகளும் சராசரிக்கு மேல் தேறியுள்ளன. சில கதைகள் அவசரப் படைப்புகளாகவும், புதுமைகளற்ற பழைய கதைகளின் மறுவடிவங்களாகவும் தான் இருக்கின்றன. சற்று வித்தியாசமாக எழுதப்பட்ட கதைகள் கூட உயர் தரத்தை எட்டவில்லை எனலாம்.
இன்றைய எழுத்தாளர்களுக்கு, மாற்றுக் கலாச்சாரச் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்ட தலைமுறைக் கடத்தலையும், கையளிப்பையும் உருவாக்குதல் என்ற தெளிவும், நவீன இலக்கியப் போக்கை இனம் கண்டு அவற்றோடு இணைந்து பயணித்தலின் அவசியம் பற்றிய பிரக்ஞையும் இல்லாதவிடத்து, நல்ல காத்திரமான அறுவடையை எட்டமுடியாமற் போய்விடும் என்பதை எடுத்தியம்புவதாகவே ஆண்டு மலர்க் கதைகள்
62

அமைந்திருக்கின்றன. சாந்தனும், சட்ட நாதனும், முருகானந்தனும், முருக பூபதியும் சற்று ஆறுதலளிக்கின்றனர். குந்தவையின் சிந்தனை மீண்டும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி நிற்க, அதை செங்கை ஆழியான் வித்தியாசமாகப் தெணியான் நீறுபூத்த நெருப்பை மீண்டும் தூசி தட்டியுள்ளார். அழகான நடைக்கு சட்டநாதனும், ச.முருகானந்தனும் விருந்தளிக்கின்றனர்.
பார்க்கிறார்.
தெணியானின் தீண்டத்தகாதவன் தேரில் ஏறினாலும் உச்சத்தைத் தொட முடியவில்லை. அவரது வழமையான சாம்பல் தட்டிவிடும் நீறுபூத்த நெருப் பாகவே அமைந்த கதையாகவே இருந் தாலும் அவரது எழுத்தோட்டத்தினால் கவர்ந்து விடுகிறார். சிறுவயதில் இதயத் தைத் துளையிட்ட வலியானது, முதிர்ச்சி யுற்ற நிலையிலும் ஆழ் மனதில் நீடித்து
ரணமாக வலிப்பைத் தேர்த் திருப்பணி : மூலம் சித்திரித்துள்ளார். பணம் என்பது
தனி மனிதனுடைய அந்தஸ்தை மாற்றி விடுகிற சமுதாயப் போக்கைக் காட்டு கிறார். அழிந்து விட்ட சாதியத்தை ஒரு புறம் காட்ட முனைந்தாலும், அதையே சாம்பல் தட்ட மறுபடியும் நினைக்க வைக் கிறாரோ? என்றும் தோன்றுகிறது. இக் கதையில் சாதீயம் நேரிடையாகப் பேசப் படாமல், வர்க்க பேதமே பேசப்படுகிறது.
மு.பஷrரின் "பொறி சிறுகதை பாலைவன வேலைவாய்ப்பு அவலங் களையும், நம்மவர் சிலரது திருகுதாளங் களையும் புட்டுக் காட்டுகிறது. நட்புப் போலிகளைத் தரிசிக்க வைக்கின்ற
போதிலும், வழமையான பஷீரின்
s
63
நூலிழை இறுக்கமும், அந்த அழகு நடை யும் இந்தக் கதையில் இல்லாதிருக்கிறது. முள்ளை முள்ளால் எடுக்கும் முடிவு திடகாத்திரமானதாயினும், கதையின் வலு சொல்லிய முறையினால் பிறழ்வடைந்து போகிறது.
பாவிக்குக் கல்லெறிதல் என்ற சிங்கள சிறுகதை, ஒரு தரமான எழுத் தாளராலும் வெகு சாதாரணமான கதையை எழுத முடியும் என்பதைக் கூறி நிற்கிறது. ஒருவேளை இது மாட்டின் விக்கிரமசிங்காவின் ஆரம்ப காலக் கதையோ தெரியவில்லை. அடிக்கடி எழுத் தாளர் வந்து பிரசங்கம் செய்கிறார். எனினும் மொழிபெயர்ப்பாளரின் பணி, பல்லின படைப்பாளர்களின் ஆக்கங் களைத் தரிசிக்க வைப்பதைப் பாராட்டத் தான் வேண்டும்.
காத்திரமான பல கதைகளைத் தந்த முன்னணி பெண் எழுத்தாளர் குந்தவை யின் நாடும் நம் மக்களும்” என்ற சிறு கதை மீண்டும் தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதில் முனைகிறது. யுத்தம், புவிப்பெயர்வு, பல்வேறு போராட்ட இயக்கங்கள் என்று பலவற்றைத் தொட்டுச் செல்லும் இவரது கதையின் கரு இன்றைய காலகட்டத்தில் கேள்விக் குரியதே. இந்த நாடு அழிந்ததற்கே
பழகாததுதான் என்ற கருத்து வலுவான தாக இருந்தாலும், வழமையான குந்தவையைக் கதையில் காண முடியா துள்ளது.
சி. சுதந்திரராஜாவின் அஃபர் சிறுகதையில் திருமணமான இளைய

Page 34
தம்பதியினர் அந்நியநாட்டு வேலை நிமித்தம் பிரிந்திருப்பது தொடர்பான பிரிவுத் துயரமும், அவலமும் சுட்டிக் காட்டப்படுகிறது. அத்துடன் இவ்வா றான குடும்பப் பிரிவுகள், மனைவி உறவுகளின் பிறழ்வுகளுக்கு வித்திடுவதும் சூசகமாகத் தெரியப் படுத்தப்பட்டுள்ளது. வழமையான நடை, சிந்திக்க வைக்கும் கரு. எனினும் ஏனோ முழு நிறைவைத் தரவில்லை.
மயிலுச்சாமி கோயிலுக்கு அழைத் துச் செல்லும் சர்ந்தனின் கதை சொல்லப்பட்டிருக்கும் விதம் ரசிப் பானது. பக்தர்களே இல்லாத துஸ்டர்கள் கூட கித்தர்களாக்கப்படுகிறார்கள் என் பதை அழகாகச் சொல்லும் சுவாரசியமான கதை. கதையினூடே நாட்டு நடப்பு களையும், கோர யுத்தத்தையும் பிரசார மில்லாமல் தரிசனமாக்குகிறார். கதையில் ஆழமான கரு இல்லாதவிடத்தும் அழகு ணர்வில் மேலோங்கி ஒரு நல்ல சிறு கதையாக மிளிர்கிறது.
சட்டநாதனின் பொழுது கதையும் இவ்வாறே அழகுணர்வு மேம்பட்ட ஒரு நல்ல கதை. நாம் மறந்து போய்விட்ட நம் கிராமியத்தையும், எமது இளமைக் காலத்தையும் 'ஆட்டோகிராப்' திரைப் படம் போல் நினைவூட்டுகிறது. விடலைப் பருவத்து உணர்வுகளையும், இச்சைகளையும், தேடும் வடிகால்களை யும் இயல்பாகக் காட்டியுள்ளார். வாசிக்க இனிமையாக இருந்தாலும் சில இடங்கள் விரசமாகவோ, அன்றி விபரீத
விடலைப்
மாகவோ பருவக்
கோலங்களை நினைவூட்டுகிறது. 'ரதி
கணவன்
s
64
மச்சாளின்ர நெஞ்சு என்ன ஆப்பிக்கோ ரப்பராலை செய்ததா? போன்ற சில
பச்சையான வசனங்கள். கதையின்
முடிவு அந்த மரணம் யாவும் அழியாத கோலங்களை நினைவூட்டி நிற்கின்றன.
அருண் விஜயராணியின் 'மனிதா பிமானக் கூட்டம்’ சோபிக்கவில்லை. புலம்பெயர்ந்தோர் சிலரிடமுள்ள போலித்தன்மையையும், உதவிட முன்
வராத செயலையும் கூறுகிறார். யதார்த்த
மாகப் பார்த்தால் பல புலம் பெயர்ந்த வர்கள் தாயகத்திற்குத் தாராளமாக உதவுகிறார்களல்லவா? எங்கோ உதைக் கிறது.
அசுர எழுத்தாளர் செங்கை ஆழி யானின் குந்தியிருக்க ஒரு குடிநிலம்’ கரு நன்றாக இருந்தாலும், உருவாக் கத்தில் பிசிறு தெரிகிறது. பொதுவாக நாவலில் பெரிதும் வெற்றி பெறும் முன்னணி எழுத்தாளர் செங்கை ஆழியான் சில சமயங்களில் சிறுகதையில் தோற்றுப் போவது வியப்பளிக்கிறது. எனினும் கதையை ரசிப்புடன் வாசிக்க முடிகிறது. இறுதியில் கதையின் நாயகனின் சீற்றம் நியாயமானதாக இருந் தாலும், யதார்த்தமாக இல்லை.
அன்னலட்சுமி இராஜதுரையின் மாய தரிசனம் முதியோரின் அவல நிலைப் பாட்டை, செ.கதிர்காமநாதனின் நான் சாகமாட்டேன் பாணியில் சொல்ல முனைகிறது. முதியோரைப் பேணலின் அவசியம் கதையில் வலியுறுத்தப் படுகிறது. எனினும் அவரது முன்னைய கதைகள் போலவே இக்கதை சிறப் படையவில்லை எனலாம்.

முருகபூபதியின் 'நளபாகம் வித்தி யாசமான கதை. பெண் விடுதலையைக் கிண்டல் செய்கிறாரா? அல்லது அதைத் தப்பாகப் புரிந்து கெர்ண்டவர்களைக் கிண்டல் செய்கிறாரா? இந்த நான்கு பக்கக் கதையில் சில விடயங்களை அழுத்தமாகச் சொல்ல முனைகிறார். எனினும் இக்கதை ஒரு பக்கச் சிறு எழுதப்பட்டிருந்தால் இன்னமும் வீச்சாக இருந்திருக்கும். முன் பகுதி தொலைபேசி உரையாடலும், பின்பகுதியில் தந்தைக்குத் தேநீர் தயாரித்தலும் மாத்திரம் இருந்திருந்தால் கதை சிறப்பாக இருந்திருக்கும். வித்தி யாசமான உத்தி பாராட்டத்தக்கது.
கதையாக
குஷ்வந் சிங்கின் "கலவரம் ? நாய்களை வைத்து அநாவசியமாக ஏற் படும் இனமோதல்களைப் புட்டு வைக் கிறார். அற்ப விடயங்களால் இன மோதல்கள் பலமான அடிப்படை யின்றியே வெடித்துப் பேரழிவுகளை ஏற்படுத்துவதைக் கூறியுள்ளார். புதுமை எதுவும் இல்லை.
இனி வானம் வசப்படும்” மலரின் இறுதிக் கதை. இன்னொரு தாத்தா சுட்ட மானை சமுருகாந்தனிடம் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். நேராகச் சொல்லப் பட்டுள்ள இக்கதையின் நடையும், உரை யாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளமை யின் காரணமாகவே இச்சிறுகதை சர்வ தேசப் பரிசிலைப் பெற்றதாக நினைக்க வைக்கிறது. நளபாகம் போலவே இங்கே யும் பெண்ணியம் அலசப்படுகிறது. பெண் விடுதலை அம்சங்களுக்கு மேலாக, ஆண் பெண்ணிடையே பரஸ்பர
65
என்ற
புரிந்துணர்வு அவசியம் என்பதைக் கதை வலியுறுத்துகிறது. கணவன், மனைவி யரிடையே கோபம் சாதிக்கப்படக் கூடாது என்பதையும், பரஸ்பர விட்டுக் கொடுப்பு களே பெண் விடுதலையைக்கூட ஈட்டித் தரும் என்பதையும் சூசகமாகக் கூறி யுள்ளார். இன்று தடம் மாறிக்கொண்டி ருக்கும் பெண்ணியமும், அதன் எதிர் வினையும், அதற்கான தீர்வுகளும் எட்டப் பட வேண்டியதன் அவசியமும் ஆழமாகச் சுட்டப்பட்டுள்ளது. பொதுவாக "ச.முருகானந்தனின் கதைகள் குடும்ப உறவுகளை அழகாகச் சித்திரிக்கின்றன’ எம். கே. முருகானந்தனின் கூற்றினையும் இக்கதையில் தரிசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ஒரு சமகால சிறு கதைத் தொகுதியை படித்தது போல, மலர் உணர்வைத் தருகிறது. மலரில் வந்த கட்டுரைகளும் கனதியாக உள்ளன. சொக் கனின் நீண்ட கட்டுரையைப் படிக்கும் போது அவரது இழப்பு எவ்வளவு பாரி யது என்பது புலனாகிறது. செல்லக் கண்ணுவின் கட்டுரையும் நன்றாக உள்ளது. கவிதைகளுக்கான பக்கங்களின் ஒதுக்கீடு போதாமலுள்ளது. கவிதைகள்
நன்றாக உள்ளன. மல்லிகை எதிர்வரும்
காலங்களில் மல்லிகையைப் பற்றி பேசுவது அவசியமில்லை. மல்லிகையின் மணம் எங்கும் பரவி விட்டது. ஆசிரிய தலையங்கத்தின் ஆதங்கமும், பெரு மிதமும், மகிழ்வும் நியாயமானதே.
ஐம்பதாவது ஆண்டு மலரை வெளி யிடும் போதும் ஜீவா எம்மோடு இருக்க வேண்டும். அவருக்காக அல்ல. ஈழத் தமிழ் இலக்கியத்திற்காக!

Page 35
மேலைத் திரையில் - 01
கே.எஸ். சிவகுமாரன்
ઈીo மேலைத்தேயப்படங்கள் நினைவில் நிற்பவை. இதற்கு முக்கிய காரணம் அவை உள்ளடக்க ரீதியாகவும், கலைத்துவமாகவும் பர்ர்வையாளரைப் பரவசப்படுத்தியமையே என்பது வெளிப்படை. அத்தகைய படங்களிற் சிலவற்றை நீங்களும் பார்த்திருக்கக் கூடும். பார்க்காதிருந்தால் பார்க்கும் வாய்ப்பு இப்பொழுதும் உண்டு. இவை விடியோ வார்ப்பில் கிடைக்கின்றன. (Videoவை தமிழில் வீடியோ’ என்றழைப்பது தப்பு. அதேபோன்று Computerஐக் கணினி என்றும் Calculator ஐக் கணணி என்றும் அழைப்பதே சரி.) N
எனது நினைவிற்கு உட்பட்ட வகையில் நான் பார்த்து லயித்துப்போன சில மேலைத்தேயப் படங்களை உங்கள் மதிப்பீட்டிற்கு உதவும் விதத்திலே இப்பத்தித் தொடரை "மல்லிகை வாசகர்களுக்காகத் தருகிறேன். அபிப்பிராயங்களை
女 丧 黄
ஆங்கில அகர வரிசையில் ஞாபகத்திற்கு வந்த சில படங்களைப் பார்ப்போம்.
எழுதுங்கள்.
முதலிலே 'A'யில் ஆரம்பமாகும் படங்களை நினைவுபடுத்துவோம்.
* * * ALL THE PRESIDENT'S MEN
இது அமெரிக்க அரசியல் வாழ்வில் உண்மையாகவே நடந்த சம்பவத்தின் சில அம்சங்களைக் காட்டும் படம். அமெரிக்காவின் ஆங்கில நாளிதழ்களில்
66

குறிப்பிடத்தக்க ஒன்றின் பெயர்
உவோ வழிங்டன் போஸ்ட்" (Washington Post). Es பொ(B)ப்(B) உவுட்வட், கார்ள்
ப்(B)ரென்ஸ்டைன் என்ற புலன் விசாரணைச் செய்தியாளர்கள் பணி புரிந்து வந்தனர். அவர்கள் திரட்டிய எழுதிய புத்தகம் உவோட்டர் கேட் (Watergate) விவாகாரம் சம்பந்தப் பட்டது. இந்த விவகாரம் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸனுடன் தொடர்புடையது. 1970
முன்னாள்
களில் இந்த விவகாரம் உலக நாடு களின் கவனத்தை ஈர்த்தது. நிக்ஸன் நிர்வாகத்தினர் தொலைபேசி ஒற்றுக் கேட்டல்’ நாடகத்தை நடத்தியமை
தொடர்பான இந்தச் செய்தித்
திட்டங்கள் வெளியானதும் ஜனாதிபதி
நிக்ஸன் நெருக்குவாரம் காரணமாகப் பதவியிழந்தமை வரலாற்றுச் சம்பவம்.
இந்த நிஜக் கதை 1976ல் படமாக வெளிவந்தது. அலன் ஜே பக்குலா இதனை அற்புதமாக நெறிப்படுத்தி யிருந்தார். அருமையான நடிப்பு செய்தி யாளர்கள் ரொபர்ட் ரெட்ஃபட் (Robert Redford), ஜஸ்டின் ஹொஃப்மன் (Justin Hoffman) eacurrit Biggs தனர். பல விருதுகளைப் பெற்ற படம், விறுவிறுப்பாகவும், நவீனகால சினிமாப் போக்கிலும் அமைந்திருந்தது.
* 丧 酋
67
AMERICAN GRAFFIT
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜே.எப்.கெனடி அரசியற் கொலைக்கு ஆளாவதற்கு முன்னரும், வியட்னாம் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரும் 1960களின் தொடக்கத்தில் அமெரிக்கா வில் நிலவிய சமூகச் சூழலை இத் திரைப்படம் படம் பிடிக்கிறது.
கலிபோ(F)ர்னியாவில் ஒரே இரவில் நடந்த சம்பவங்கள் படக் கதையின் கருப்பொருள்கள் (Plots). அங்குள்ள உயர்வகுப்பு மாணவர்கள் அடுத்து தாம் நடத்த விருக்கும் வாழ்க்கைப் போக்கு இன்னதென்று அறியாத வேளையில் திக்குத் தெரியாமல் தடுமாறும் குழப்ப நிலையே படத்தின் சித்திரப் படிமங்கள்.
இந்தப்படத்தை நெறிப்படுத்தியவர் ஜோர்ஜ் லூக்கஸ். பிரதான நடிகர் ரிச்சர்ட் ட்ரிப்(F)ஸ். இந்தப் படமும் பல விருதுகளை 1973ல் பெற்றது.
* * 黄
AND GOD CREATED WOMAN
1957ல் வெளிவந்த இந்தப் படத்தை பார்க்கத் தூண்டியமை பி(B)ரிஜிட் பா(B)ர்டோ என்ற பிரஞ்சு நடிகை நிர்வாணமாக ஒரு காட்சியில் தோன்றியதே. ரொஜர் வாடிம் இப் படத்தை நெறிப்படுத்தியிருந்தார்.

Page 36
ரொக் அன்ட் ரோல் (Rock & Rol) என்ற இசை வடிவம் பரவிய காலத்தில் தானும் ஒரு பாடகியாகவும், நர்தகியாகவும் விரும்பிய, ஆண்களை தூரத்தில் வைத்துக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் கதையிது. அக் காலச் சூழலில் (1957), வளரிளம் நான் இருந்த பொழுது, இப்படம் 'விடுப்பு அறியும்" உணர்வைத் தூண்டியது.
* * 黄
AN NA
சில்வானா மங்கானோ (Sylvana Mangano) என்ற இத்தாலிய நடிகை யின் அழகும், அவர் பாடும் பாட்டும் 1950களில் திரை விரும்பிகளைப் பரவசப்படுத்தின.
பருவத்தினனாக
* * *
· AN NA KARENINA ·
லியோ டோல்ஸ்டேரய் (Leo Tolsto) எழுதிய அனாகரினினா என்ற நாவலைத் தழுவியது. மணம் முடித்த
ஒர பெண்ணுக்கும், இராணுவ உத்தி
யோகத்தன் ஒருவனுக்கும் இடையில் எழுந்த அக்காலத் தகாத உறவைச் சித்திரித்தது இப்படம். சைமன் லங்டன் நெறிப்படுத்திய இந்தப் படத்தில் போல் ஸ்கொபீ(F)ல்ட், ஜக்கலின் பி(B)ஸே ஆகியோர் அற்புதமாக நடித்த இந்தப் படம் 1985ல் வெளியாகியது.
(மீண்டும் அடுத்த இதழில்)
கலைச்செல்வன்
இவரது மறைவு சர்வதேசத் தமிழுக்கு மிகப் பெரிய இழப்பு
நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- ஆசிரியர்
 

இந்தப் பக்கம் உங்களுக்கான பக்கம். மல்லிகையில் அதிகம் பேர் படிக்கும் பக்கம். எனவே எத்தகைய கேள்விகளையும் கேட்கலாம். நான் சொல்லும் பதில்கள் தான் சரியானவை என எண்ணம் சிறிது கூட என்னிடம் இல்லை. நீங்கள் திருத்தலாம். அது எனக்குப் புதிய அறிவையும் தேடலையும் தரும். உங்களது ஒத்துழைப்புத் தேவை. குறிப்பாக மாணவர்கள் தூண்டில் பக்கங்களைப் பகிர்ந்து கொள்வதை விரும்புகின்றேன். கேள்விகள் அஞ்சலட்டையில் அமைவது பெரிதும் விரும்பத்தக்கது.
ymua
G
οιαδαία, છંજીr
உங்களது சுனாமி அனுபவத்தைச் சென்ற இதழில் படித்துப் பார்த்த பொழுது, அப்படியே பிரமித்துப் போய்விட்டேன். கொழும்பில் ஒரு மூலை யில் வாழும் எழுத்தாளனுக்கு இப்படியோர் அனுபவம் இருந்ததென்பது ஆச்சரியமாக இருந்தது. கொழும்பில் வாழும் உங்களுக்கே சுனாமி மூலம் இத்தகைய சங்கடமென்றால் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனை சிரமப்பட்டிருப்பார்கள்?
நலலுள க.கயிலைநாதன்
சுனாமி என்ற பேரலைப் பேரரக்கனால் ஓரிரவு மாத்திரம் எனக்கு இத்தனை கஷ்ட நிஷ்டுரங்கள் ஏற்பட்டுள்ளதென்றால் அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனை துன்ப துயரங்களையெல்லாம் அனுபவித் திருப்பார்கள் என நினைத்து நினைத்துத் துக்கப்படுகிறேன்.
69

Page 37
பேப்பர்களை வாங்கிப் பார்த்தால் உங்களது படங்களும், செய்தி களும்தான் அடிக்கடி இடம்பெறுகின்றன. அப்படிப்பட்ட புகழை அடைவதற்கு நீங்கள் என்ன செய்துள்ளிர்கள்?
தெஹிவளை. assengrarir
முதலாவதாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தத் தேசம் அங்கீகரித்த முதல் சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றேன். அடுத்ததாகச் சிறந்த மேடைப் பேச்சாளனாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். மூன்றாவதாக நாற்பது வருஷங் களுக்கு மேலாக இத்தனை கஷ்ட நிஷ்டுரங்களுக்கு மத்தியிலும் ஒரு சிறு இலக்கியச் சஞ்சிகையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறேன். நான்காவதாக மல்லிகைப் பந்தல் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நிறுவி 70இற்கும் மேலான நூல்கள்ை வெளியிட்டுள்ளேன். e
இந்த நான்கு சாதனைகளையும் தனது வாழ்வுக்குரிய காலத்தில் உலகத்தில் வேறெந்த நாட்டு எழுத்தாளனும் இதுவரை சாதித்ததேயில்லை. இப்பொழுது சொல்லுங்கள். எனக்கு இயல்பாக வந்துள்ள இந்தப் புகழுக்கும் பிரபலத் திற்கும் நான் தகுதியானவனா? இல்லையா? என்பதை உங்களது மனச் சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்த மண்ணையும், மண்ணில் வாழும் மக்களது நெஞ்சங்களையும் எனது நூலினாலும், பேனாவாலும் உழுதுழுது செம்மைப்படுத்திப் பசளையிட்டு விதைத்து வந்துள்ளேன். இப்பொழுது அறுவடை செய்து வருகிறேன்.
உங்களது நெஞ்சைத் தொட்ட நிகழ்ச்சி ஒன்றைக் கூற முடியுமா?
ελιασίλιμπ எஸ். கனகசபை
சமீபத்தில் நம்மை விட்டு மறைந்த முன்னை நாள் தினகரன் ஆசிரியர் ராஜழறிகாந்தனது நினைவாக நண்பர் முருகபூபதி ஒரு நூலெழுதி வெளியீட்டு விழாச் செய்து அதில் சேர்ந்த பணத்தை அந்தக் குடும்பத்தினருக்கு அதே மேடையில் வைத்துக் கையளித்தாரே அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய நான் அப்படியே மெய் சிலிர்த்து உருகிப் போய்விட்டேன். முருகபூபதி - முருகபூபதிதான்! என் நண்பன்.
70

சென்ற இதழ் தலையங்கம் படித்தேன். எழுத்தாளர்கள் சந்தித்து உரை யாடிக் களிக்க வேண்டுமென்ற உங்களது மன ஆதங்கத்தை வெளி யிட்டிருந்தீர்கள். இது நடைமுறைச் சாத்தியமா?
வத்தளை எம். சிவநேசன்
"எழுத்து செல்லப்பா அவர்கள் சென்னையில் ஒருநாள் மாலை என்னை உடன் அழைத்துக் கொண்டு மரீனாக் கடற்கரைக்குச் சென்று காட்டினார். மணல் பரம்பலுக்கு நடுவே தனியாக நின்ற லைற் கம்பத்தைக் காட்டி, "அந்தக் காலத்தில் நாங்கள் சிலபேர் இந்த இடத்தில் தான் வாரமொருமுறை சந்தித்து உரையாடி மகிழ்வோம். பலதையும் மனந்திறந்து பேசிக்கொள்வோம். பலர் இன்று உயிரோடு இல்லை!” எனச் சோகம் கலந்த குரலில் சொன்னார். கண் கலங்கினார்.
இலக்கியப் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கலைவதை விட, ஒரு சிலராவது நெருக்கம் நெருக்கமாகச் சந்தித்து மனந்திறந்து கதைத்துப் பேசி, தேநீர் பருகி, தோளின் மீது ஒருவருக்கொருவர் கைபோட்டுச் சிரித்துக் கதைத்துக் கலைவோமானால் இந்த அந்நியோன்னியம் அடுத்த தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்பது எனது அநுபவம். கருத்து முரண் பாடுகள் குறுக்கீடு செய்யமாட்டா. விரும்பினால் இதை நடைமுறைப்படுத்த என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த தலைமுறையினருக்கு முன் மாதிரியாகச் செய்து காட்டுவோம்.
40 ஆவது ஆண்டு மலர் விற்பனவு எந்த அளவில் உள்ளது?
Süduypanoacyr எஸ். தவசீலன்
மலர் வெளிவந்த அந்த வாரமே 40 மலர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு விட்டன. 30இற்கு மேற்பட்ட மலர்கள் தமிழகம் சென்றன.
ஐரோப்பா, கனடா என மலர்கள் வாரா வாரம் சென்று கொண்டிருக்கின்றன. பெரிய திருப்பம் இது.
71

Page 38
72
முன்னர் போல, உலக வலம் வரத் திட்டமுண்டா?
5v5CastrauroBOB). − எஸ். லசல்வமணி
கனடா சென்று வர அழைப்பொன்று உண்டு. உடல் நிலை இடம்
தந்தால் செல்வேன். இப்பொழுதெல்லாம் என் வரைக்கும் சர்வதேச ஆசைகள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன.
கொழும்பு 06. ஆர். குலசேகரம்
தூங்கும் நேரத்தைத் தவிர, இதர நேரங்களில் எல்லாம் சிந்திக்கப் பழக்கப்பட்டவன், நான். அனுபவமும் வயது முதிர்ச்சியும் ஒரு காரணம். அத்துடன் தினசரி பலவகையான மக்களைக் கண்டு கண்டு அவர்களுடன் உரையாடி மகிழ்பவன். எனக்கே என் மேடைப் பேச்சு உற்சாகம் தருகிறது.
இளம் வயதில், பிற்காலத்தில் எழுத்தாளனாகப் பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களது அடிமனசில் இருந்ததா?
கம்பளை C3ass.eolir... afflen4C. Bu unrassifio
அப்படி அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஆனால், எதையாவது
எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும் என்ற வெறி என் நெஞ்சில் சுடர்விட்டுக் கொண்டிருந்தது என்பது உண்மை.
வளர்ந்து வரும் புதிய எழுத்தாளர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கிளிவநாச்சி. எம். தயாநிதி
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து நின்று நிலைத்து வரும் எழுத்தாளர்கள் அவர்கள். புதிய கோணத்தில் புதிதாகச் சிந்தித்து எழுது கின்றனர், பலர். எனக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையுண்டு.
சமீப காலமாக உங்களது இலக்கியப் பேச்சுக்களைக் கேட்டு வரு கிறேன். மேடைக்கு மேடை மெருகேறி வருகிறது, உங்களது பேச்சு. இந்த \ வளர்ச்சிக்கும், புதிய மெருகுக்கும் என்ன காரணம்?
201 - 114, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள், இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
?ே சாஹித்திய புத்தக இல்லம் இல. 15, குருநாகல் றோட்,
பஸ்நிலையம், புத்தளம். * தொலைபேசி தொலைநகல் : 032-66875
V i. ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 39
Clearing, F. Ö Transpc
No. 96/3/7, CO
FsOnt COOn
**, Y SriLC
 
 
 

nsistory Building Street,
hbo 11,
InkO.
Te: 2542354 FCX : 2542355 HOf Line : O77 7991 63