கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2005.05

Page 1


Page 2
&
%
ീഗ്ഗ 2é2éza മലീe
AAAIN F芝ATUR狂S
fe Automatic dust & scratch correction
CE
*Maximum 5ize: 12" x 8"Digital print) * Output Resolution: 4oodpi *Film lnput Formats: I35, 1x24o, Izo, APS * Film Types: Colour negative & positive, Baw
negative, Sepia negative
* Compatible input & Output Media:
Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia,
sk Print to Print * Conduct sheet & lindex print
2ද Templates: Greeting Cards, Frame Prints, Calandar Prints,
Album Prints.
EAD OF Fict BRANCH
HAppy DIGITAL CENTRE HAppy PHOTO
DCITAL Colour Las Stupko Professional
& Sortigo Porroxcapit sus & WoEocaro}+ks
No. 64, Sri Sumanatissa Mw, No. 3oo, Wodera Street, Colombo - Iz. el -o74-6τoός2. Colombo - 15.el:-oII-25.6345.
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்’
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம்தான் ஓர் இலக்கியச்
விதந்து பாடப் பெற்ற
எதிர்காலச் SM ஆவணப்படுத்தியுமுள்ளது.
4ዐ–ፀlg] émañmፀ (3D
31ଞ୍ଜି
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
STREET, COLOMBO - 3. TEL: 232O721
1201-1/4, SRI KATHIIRESAN
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மல்லிகையின் சுவைஞர்கள், எழுத்தாளர்கள், விளம்பர, விற்பனை யாளர்கள் அனைவருக்கும் எமது மங்களகரமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனநிறைவு கொள்ளுகின்றோம்.
ாற இதழில் புத்தளப் பிரதேசச்சிறப்புமலர் வெளியிடத் திட்ட மிட்டுள்ளதைத் தெரிவித்திருந்தோம். அந்தப் பிரதேசத்து மக்களில் பலர் கடித
சென்ற
மூலமும், தொலைபேசி ஊடாகவும் தங்களது பெருமகிழ்ச்சியையும், ஒப்புதல்களையும், வாக்குறுதிகளையும் தந்து தந்து எம்மை மெய் சிலிர்க்க வைத்து விட்டனர்.
வேறு வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பல எழுத்தாளர்களும் தங்கள் தங்களது பிரதேசத்து இலக்கிய ஆளுமைகள் பற்றியும் எமது கவனத்திற்குக் கொணடு வந்துள்ளனர்.
மல்லிகை நீங்கள் பசளையிட்டு வளர்த்து வரும் செடி. அது சகல
பிரதேசத்திற்கும் சொந்தம், சகல
பிரதேசத்து மக்களும் மல்லிகைக்குச் சொந்தம்
- ஆசிரியர்

Page 3
Prop. V. Nagadevan J.P.
COLOMBO CENTRE
Importers & Dealers of Toys, Fancy, Oilment Goods & Textiles
Head Office:
89/22, Prince Street, Colombo - 11. T.P. : 2473314, 4717972 Fax : 94-1-449599, 94-1-445559 E-mail : ccimpddaG).sltnet.lk
Resident : 93/69, Kalyani Gangarama Mawatha, Mattakkuliya, Colombo - 15. T.P. i. 2523114, 2527572, 2528.177
Factory: *
DANA ALUMNIU
INDUSTRIES
49/6, Maligawatta Place, Maligawatta,
Colombo - 10.
Manufacturers Of Aluminium KitchenWare
T.P. : 2459134 & 2430158 Mobile : O777 551726
COLOMBO CENTRE (CC1)
Branches: 89/22, Prince Street, Colombo - 11.
Dealers of Toys, Fancy, Imitation JeWelleries, EverSilver & Oilment G00ds
We undertake all kinds of goods to send jaffna.
T. P. 2345193, 2478654, 2529888
COLOMBO CENTRE (CC2)
Branches : 11611, Prince Street, Colombo - 11.
Dealers of Toys, Fancy, Imitation Jewelleries &
0ilment G00 dS ,
T.P. 2325901, 2543999

TJgB - புதுமைப்பித்தன் - ஜெயகாந்தனி
திரு. விஜயபாஸ்கரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சரஸ்வதி சஞ்சிகையில் ஜெயகாந்தனின் தொடர் எழுத்துக்களைப் படித்து வந்தவர்கள் ஒருண்மையை அப்பொழுதே உணர்ந்து கொண்டார்கள்.
இவர் கையாண்ட தனித்துவமான மொழியின் ஆற்றலையும், கருக்களின் ஆழ அகலங்களையும், பாத்திரப் படைப்புகளில் அவர் உலவ விட்டுள்ள உண்மை மனிதர் களின் மானுடச் செழுமைகளையும் அவர் சிறுகதைகளாக்கி மக்கள் மத்தியில் உலவ விட்டபோதே அவரையும் அவரது படைப்புக்களையும் நிமிர்ந்து பார்க்கத் தலைப் பட்டனர் தரமான இலக்கியச் சுவைஞர்கள் பலர்.
கருத்தியல் பலமும் படைப்பாற்றல் திறமையும், சரஸ்வதி கால நண்பர்களை இன்றளவும் உளமார நேசிக்கும் பண்பும் கொண்டவர் நண்பர் ஜெயகாந்தன் அவர்கள்.
அவருக்கும் வளர் படைப்புத் தமிழுக்கும் ஞானபீடப் பரிசு கிடைத்துள்ளது என்று செய்தி ஊடகங்களின் ஊடாக எமக்குக் கிட்டியபோது ஈழத்து நல்லிலக்கியச் சுவைஞர்கள் அத்தனை பேரும் பெருமிதத்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டனர்.
நமது மண்ணுக்கும் இங்கு வாழும் மக்களினது பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து படைப்புலகில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை படைப்பாளி களின் சார்பாகவும் நமது பெரு மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் அன்னாருக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இந்த நாட்டு இலக்கியச் சுவைஞர்கள் சார்பாக "மல்லிகைப் பந்தல் அழைப்பி னுாடாக இலக்கியச் சந்திப்பொன்றையும் 02.04.2005 சனியன்று ஏற்பாடு செய்திருந் தோம். பலர் இந்தச் சந்திப்புக்கு நேரில் வந்திருந்ததுடன், பாராட்டு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர். வந்தவர்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் முகமாக, ஜெயகாந்தன் அவர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ள பாராட்டுக் கடிதத்திலும் தமது கையெழுத்தை பதித்து சென்றுள்ளனர். இந்த நூற்றாண்டில்
வாழும் மகத்தான எழுத்துக் கலைஞனுக்கு இதையே பாராட்டாக வை.ன்ெறோம்.
பாரதி - புதுமைப் பித்தன் - ஜெயகாந்தன்!

Page 4
Gaa.Gaაიკდ Ал«2% — Wெary Oரை 77^ண்டுக் 2-Men) )لت( cنثالم.
- டொமினிக் ஜீவா
நான் நண்பர் ஜெயகாந்தனுடன் தொடர் நட்புப் பூண்ட கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தை நெஞ்சில் நினைத்துப் பார்க்கும் இந்த வேளையில் மனசுக்கு வெகு சுகமாக இருக்கிறது.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் அவர் தொடர்ந்து "சரஸ்வதி இதழில் எழுதி வந்தார். நானும் அந்தச் சஞ்சிகையில் தொடர்ந்து சிறுகதைக் எழுதி வந்தேன். அதன் ஆசிரியர் விஜயபாஸ்கரனுடன் தொடர்ந்து கடிதத் தொடர்புகள் வைத்திருந்தேன். வாரம் ஒரு கடிதம் எழுதுவார். நானும் சளைக்காமல் அவருக்குக் கடிதம் எழுதுவேன்.
அவர் எழுதிய கடிதங்கள் சிலவற்றில் நண்பர் ஜெயகாந்தன் உங்களையும் சுகம் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்’ எனக் குறிப்பிடுவார். நானும் இலக்கிய நண்பன் என்ற ஹோதாவில் ஜெயகாந்தன் அவர்களது சுகநலன்களை விசாரித்ததாக அவரிடம் நேரில் சொல்லும்படிக் கேட்டுக் கொள்வேன்.
இப்படியே எழுத்தில் எங்களது உறவும், சுகநல விசாரிப்புக்களும் தொடர்ந்த வண்ணமாகவே இருந்தன. இந்தக் காலகட்டத்தில் சரஸ்வதியில் வெளிவந்த ஜெயகாந்தனின் "போர்வை' என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தார், கனகரட்னா. அதை ஜே.கே.க்கு அனுப்பி வைத்தேன். இதையொட்டி தனது நன்றியை எனக்கும் ஏஜேக்கும் தெரிவித்திருந்தார்.
சரஸ்வதியில் ஜெயகாந்தனுடைய படம் அட்டைப் படமாக வெளிவந்த காலத்திலேயே எனது உருவப் படமும் அட்டையில் வெளிவந்தது.
4.

ug: இந்தச் சந்தர்ப்பத்தில் சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரன் இலங்கைக்கு வந்திருந்தார். அப்பொழுது திருச்சி - பலாலி விமானப் பயணம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். அவர் முதலில் யாழ்ப்பாணம் வந்து, பின்னர் கொழும்பு சென்று இலக்கிய நண்பர் செ.கணேச லிங்கனின் திருமணத்தில் கலந்து கொள்வதாகத் திட்டம்.
இந்த வருகையின் போது நானும் சில இலக்கிய நண்பர்களும் பலாலி விமான நிலையம் சென்று அவரை யாழ்ப் பாணம் அழைத்து வந்து உபசரித்தோம்.
அவர் சென்னை திரும்பிய சமயம் கணேசலிங்கனின் ஏற்பாட்டின்படி எனது சிறுகதைத் தொகுதியான தண்ணீரும் கண்ணிரும்' நூலை சரஸ்வதி வெளியீடாக வெளியிடுவதாக ஒப்புக் கொண்டு கையெழுத்துப் பிரதிகளை உடன் கொண்டு சென்றார்.
1961ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் முதல் முதலாகச் சென்னை சென்றி ருந்தேன். விஜயபாஸ்கரனின் இல்லத்தி லேயே தங்கியிருந்தேன்.
சென்ற அடுத்தநாள் காலை என்னை யும் அழைத்துக் கொண்டு எக்மோரி லுள்ள ஜெயகாந்தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். முதல் முதலாக நேரில் ஜெய காந்தனை அப்பொழுதுதான் சந்தித்து மகிழ்ந்தேன்.
இதுவரையும் தமிழ்நாட்டுக்கு நான் முப்பத்திரண்டு தடவைகள் பிரயாணம் செய்திருக்கிறேன். ஒரு தடவை கூட
அவரைப் பார்க்காமல் நாடு திரும்பியதே யில்லை.
ஆள்வார்ப் பேட்டையில் 'குடில்’ என அழைக்கப்பட்ட மாடிக் குகை அறையில் நீண்ட நெடு நேரமாகப் பேசிக் கொண்டிருப்போம். பலர் இங்கே அறி முகமானார்கள். அந்த ஆள்வார்ப்பேட்டை
மேல்மாடிக் குடில் இவரது கையை விட்டுப் போனது பெரிய இழப்பு.
வரலாற்றுக்குரிய ஞாபகச் சின்னம் அந்தக் குடில்.
ஜெயகாந்தனுடன் பேசுவதே ஒரு சுகம் கலந்த சந்தோஷம் பல நண்பர்கள் வந்து போவார்கள். நேரம் போய்விடும். அங்கு எடிட்டர் லெனினும் வந்திருப் பார். லெனினைத் தனது காரில் என்னைக் கொண்டு போய் விட்டு
வரும்படி கேட்டுக் கொள்வார்.
அந்த நடுச்சாம நேரத்தில் நான் பாலன் இல்லம் திரும்புவேன்.
அந்தக் குடிலில் மோகன் என் றொரு சிற்றுாழியன் வேலை செய்தார்.
அந்த மோகனையும் தனது சகாவாகவே
நடத்தினார், நண்பர் ஜே.கே.
எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியான "சாலையின் திருப்பம்’ நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.
என்னை ஆரம்ப காலத்தில் மகா பலிபுரம் அழைத்துச் சென்று அங்குள்ள சிற்ப வடிவங்களை கலாபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்த வரும், சென்னை மரினாக் கடற்கரைக்குக் கூட்டிச் சென்று, மணலில் சிக்காராகக்
5

Page 5
சுண்டல் வாங்கிக்
குந்தியிருந்து கொறிக்கத் தந்தவரும் இவரே,
ஓரிலக்கிய நண்பனைச் சம தோழனா கக் கருதி, ஒவ்வொரு தடவையும் நான் அவரை சந்திக்கும் வேளைகளில் எல்லாம் மனமுருக வைத்த மானுடப் பண்பை எண்ணியெண்ணி நான் பல தடவைகள் வியந்ததுண்டு.
நண்பர்களுடன் பழகும் போது எந்த விதமான பந்தாவுமற்றுச் சிறு குழந்தையைப் போலப் பழகும் அவர் சிலவேளைகளில் பலருக்கு நெருப்பன்! பலவேளைகளில் புதிர்!
சென்னைக்குப் போய் அவரைச் சந்திக்கும் நமது நாட்டு இலக்கிய நண்பர் களிடமெல்லாம் மறக்காமல் எனது சுக சேமங்களை விசாரித்துத் தெரிந்து கொள்வதில் அபார அக்கறை காட்டி யிருக்கிறார். மகனின் திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தார். நானும் சென்று மணமக்களை வாழ்த்தினேன்.
இவரிடம் இருக்கும் தலையாய பண்பு நேசிக்கும் நண்பர்களை உளமார இவர் எனது நெருங்கிய நண்பராக இருந்த போதிலும் எனக்கும் இவருக்கும் கருத்து முரண்பாடுகள் அநேகமுண்டு. கருத்து
முரண்பாடுகளைக் கூட, கண்ணியமாக
நேசிக்கும் தன்மை.
&n L,
மதிக்கும் தலையாய பண்பு இவரிடம் நிறையவும் உண்டு. ஆரம்ப கால மல்லிகை இதழ்களில் கூட இவரை விமர்சன ரீதியாகக் கடுமையாக விமர்
சித்துமுள்ளேன். இதை ரசித்துச்
சிரித்தவர் இவர்,
G
ஒUை
“ஞானச் செருக்கு!" எனக் கூறு வார்களே அந்த மேதைக் கிறுக்கை இவரிடம் நேரில் கண்டு, மனசுக்குள் இவரை வியந்து பாராட்டியிருக்கிறேன்.
சென்ற ஆண்டு சென்னைக்கு சென்று சமயம் மல்லிகையின் நாற்ப தாவது மலருக்கு வாழ்த்துரை கேட்டேன். உடன் எழுதித் தந்தார்.
இங்கு வாழும் சரஸ்வதி கால இலக்கிய நண்பர்களைப் பற்றியெல்லாம் பெயர் சொல்லி விசாரித்தார்.
இதையெல்லாம் இங்கு விவரமாக எழுத வேண்டுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டதுண்டு.
வருங்கால இளந்த லைமுறை யினருக்கு இந்த இலக்கிய நடப்புகள் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என மெய்யாகவே நான் நம்பியதால் எழுத்தில் இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி வைக்க விரும்பு கின்றேன்.
நம்ம ஜெயகாந்தனுக்கு ஞான பீடப் பரிசு' என ஊடகங்கள் தெரி வித்த சமயம் என் உணர்வுகளை என்னால்
கட்டுப்படுத்த இயலவில்லை. அத்தனை
குதூகலமடைந்தது என் நெஞ்சு.
ஜே.கே. அவர்களுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்திருப்பது அத்தனை பெரிய ஆச்சரியமில்லை. இப்பரிசு எப்போதோ அவருக்குக் கிடைத் திருக்க வேண்டியதே. அதற்காகத் தமிழ் முப்பது வருஷங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

oقايدواو
மல்லிகை ஏப்ரல் 2005 இதழ் வாசித்தேன். அவ்விதழில் செ.சுதர்சன் மார்ச் மாத மல்லிகையில் வெளியான எனது கடிதம் தொடர்பாக "உண்மைக்குப் புறம்பானது" என்ற தலைப்பில் எழுதியுள்ளார். எனது வாசிப்பை கேள்விக்குள்ளாக்குவதாகக் குறிப்பிடும் செ.சுதர்சன் அனுதாபமும் தெரிவித்துள்ளார்.
உண்மையில் நான் மார்ச் மாத மல்லிகையில் "புதுவை இரத்தினதுரையின் கவிதைகள் 1984, 1985களில் வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறாதது குறித்து பூரீபிரசாந்தன், செ.சுதர்சன் போன்ற கம்பன் கழகத்தவர்கள் மீண்டும் மீண்டும் கிளறுவதில் சில உள்நோக்கங்கள் உள்ளனவா? எனச் சந்தேகம் எழுகின்றது' என்றே எழுதினேன்.
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகள் 1984, 1985 காலப் பகுதியில் வெளியான கவிதைத் தொகுப்புகளில் இடம்பெறாதது குறித்து,
(1) பூரீபிரசாந்தன், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேட்டியொன்றில் வினவியமை. (2) செ.சுதர்சன் "ஞானம் (ஒக்டோபர் - 2004) இதழில் ஜபாரிடம் கருத்துக் கேட்டு எழுதியமை. (3) பூரீபிரசாந்தன் 'மல்லிகை"யின் 40வது ஆண்டு மலரில் 'ஈழத்துக் கவிதைத் தொகுப்புக்களும் நடுவு நிலையும் என்ற தலைப்பில் எழுதியமை என்பவற்றையே நான் 'பூீரீபிரசாந்தன், செ.சுதர்சன் போன்ற கம்பன் கழகத்தவர்கள் மீண்டும் மீண்டும் கிளறுகிறார்கள்' என எழுதினேன். மற்றப்படி செ.சுதர்சன் ஏப்ரல் மாத மல்லிகையில் குறிப்பிடுவது போல் "செ.சுதர்சன். பூரீபிரசாந்தன் போன்றவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்' என எழுதவில்லை. உண்மையில் யாருடைய வாசிப்பு கேள்விக் குள்ளாக வேண்டியது என்பதை மல்லிகையின் வாசகர்களே தீர்மானிக்கட்டும்.
எனது பெயரை பல இடங்களில் பூரீமான் குகனேசன் என்று செ.சுதர்சன் பயன் படுத்தி என்னைக் கெளரவப்படுத்தியுள்ளார். இப்படியான கீழ்த்தரமான நையாண்டிகள் வேண்டுமானால் சொற்பொழிவு, சுழரும் சொற்போர், பட்டிமன்றம் போன்றவற்றில் சபையோரின் கைத்தட்டல்களைப் செ.சுதர்சனுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால் இவை மல்லிகை போன்ற கனதியான இலக்கிய இதழ்களின் வாசகர்களுக்கு இவை
வெறுப்பையே ஏற்படுத்தும்.
'தொகுப்பு முயற்சிகள் தொடர்பான சர்ச்சைகள்' என்ற தலைப்பில் செ.சுதர்சன் எழுதத் தொடங்கியிருப்பதாக 'தம்பட்டம் அடித்திருக்கும் கட்டுரையை வாசிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன். அதனைச் செ.சுதர்சன் மல்லிகைக்கு அனுப்பினால்
தயவு செய்து பிரசுரியுங்கள்.
- ச.குகனேசன்

Page 6
மேலைத் திரையில் - 02
கே.எஸ்.சிவகுமாரன்
THE APARTMENT
இது 45 வருடங்களுக்கு முன் பிரச்சினைக்குரியப் படமாக வெளிவந்தது. குறைந்த வருமானம் பெற்று வந்த ஓர் எழுதுவினைஞன் உயர் பதவி பெற ஆசைப்பட்டான். அவன் குடியிருந்த பகுதியில் சிறிது நேரத்திற்குத் தகாத உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு பகுதியை வாடகைக்கு விடுவது மூலம் கூடிய வருவாயைப் பெற அவன் முனைந்தான். அவனுடைய உயர் அதிகாரியின் பெண் சினேகிதி அந்த வீட்டுப் பகுதிக்கு வந்த பொழுது அவிளிடம் மையல் கொண்டான் அந்த எழுதுவினைஞன். அங்குதான் பிரச்சினை எழுந்தது.
அருமையான சமூகக் கிண்டலாக இப்படம் 1960ல் வெளிவந்தது. ஜக் லெமன், ஷேர்லி மக்லெயின் என்ற பிரபல நகைச்சுவை நடிகர்கள் இலகு நோக்குப் பாங்கிலும், கனதி நோக்குப் பாங்கிலும் நடித்தனர். இப்படத்தை நெறிப்படுத்தியவர் பிரபல அமெரிக்க நெறியாளரான பி(B)லி உவைல்டர். கறுப்பு / வெள்ளை நிறத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு அமெரிக்காவிலும், பி(B)ரிட்டனிலும் பல விருதுகள் கிடைத்தன.
APOCALYPSE Now
நாலு கோடி டொலர் செலவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான படம் இது. நெறியாளர் : அமெரிக்கரான பிரான்ஸிஸ் போ(F)ர்ட் கப்போலா. இது 1979ல்
8

E. geese):
வெளிவந்தது. வியட்நாம் யுத்தத்தைச் சமூக விமர்சனக் கண்ணோட்டத்தில் நோக்கிய இப்படமும் பல விருது களைப் பெற்றது.
போலந்தில் பிறந்து ஆங்கில மொழியை அற்புதமாகக் கையாண்ட ஜோசப் கொன்றாட் எழுதிய HEARTOF DARKNESS என்ற நாவலைப் படித்த அருட்டுணர்வினால் இப்படத்தைத் தாம் நெறிப்படுத்தியதாகக் கப்போலா கூறியிருக்கிறார்.
தொழில் நுட்ப ரீதியிலும், படப் பிடிப்பிலும் உன்னதமான வளர்ச்சி இப்படத்தின் மூலம் காணக் கூடியதாக இருக்கிறது. அற்புதமான நடிப்பு. மார்லன் ப்(B)ராண்டோ, ரொபர்ட் டுவால், ஹெரிஸன் போ (F)ர்ட், மார்ட்டின் வீன் போன்ற நடிகர்களின் பங்களிப்பு பிரமாதம்.
யுத்தத்தின் கோரம் இப்படத்திற் காட்டப்பட்டவாறு வேறு எந்தப் படத்திலும் 1980கள் காட்டப்படவில்லை.
வரை வியட்நாம் யுத்தத்திற்கு எதிரான, அனேகமாக ஏகமனதாக அமெரிக்காவில் குரல் எழும்ப இப்படமும் உதவிற்று என்பர்.
THE ARRANGEMENT
எலியா கஸான் தலைசிறந்த அமெரிக்க நெறியாளர்களுள் ஒருவர். அவர் ஓர் எழுத்தாளருங்கூட. இவர்
எழுதிய நாவல்களுள் ஒன்று 'ஏற்பாடு அதனை அவர் 1969ல் படமாக்கினார். கேர்க் டக்டஸ், பே(F)ய் டன்னவே, டெப(B)ரா கார், ரிச்சர்ட் பூ(B)ன், எலியா கஸான் போன்ற சிறந்த நடிகர்கள் இப்படத்தில் நடித்தனர். விளம்பர நிறுவனமொன்றில் உயர் பதவி வகிக்கும் ஒருவர். அவருக்குத் தற்கொலை செய்து
என்ற ஓர் ஏற்படுகிறது. ஆயினும் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன என்று அறிய அவர் முற்படுகிறார். அவர் மனைவி, அவர் தகப்பன், அவர் வைப்பாட்டி
கொள்ள
வேண்டும் உந்தல்
ஆகியோருடன் சமரசம் காண அவர் ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறார். இது உளவியல் சார்ந்தவொரு படம்.
ASHES AND DAMONDS
கலைத் தரமான படங்கள் என்றால் என்ன என்பதை நான் அனுபவ ரூபமாக உணர்ந்து கொள்ள வைத்த ஆரம்ப காலப் படங்களில் இதுவும் ஒன்று. இது போலந்துப் படம். இப்படத்தின் நெறியாளர் உலகப் பிரசித்தி பெற்றவர். பெயர் 945(3g Gurtugs.T (Andrzet Waida) இரண்டாவது உலக மகா யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் சில வரலாற்றுக் கட்டங்களை இப்படம் சித்திரிக்கிறது. ஹிட்லரின் படையினரில் ஒருவனைக்
கொலை செய்வதாகக் கருதிப்

Page 7
பிழையான ஒருவனைக் கொலை செய்து விடுகிறான் போலந்துப் போராளி ஒருவன். அது ஒருபுறம்
க்க, னக்கச் னையாகச் (15 纽 (55 罗山
சரியான பெண்ணைத் தேடுவதிலும் அவன் ஈடுபடுகிறான். யதார்த்தம், உளவியல், படப்பிடிப்பு, மனித பலவீனங்கள் போன்றவற்றை மெது மெதுவாகப் பார்வையாளரிடையே நெறியாளர் காட்டிச் செல்கிறார். இப்படம் 1958ல் வெளியாகியது.
BABY DOLL
எலியா கஸாள்ன் நெறிப்படுத்திய மற்றொரு புரட்சிகரமான படம் இது. காம உணர்வுகளைக் கலை நயமாகக் காட்டுவதிலேயே இப்புரட்சி தங்கி யிருக்கிறது. இது 1956ல் வெளிவந்த
படம். (T)டெனஸி உவிலியம்ஸ் என்ற
பிரபல அமெரிக்க நாடகாசிரியர் எழுதிய நாடகம் ஒன்றைத் தழுவியது இப்படம். எலி வொலோச், கரல்
பே()(B)க்கர், கார்ள் மோல்டன் ஆகியோர் ஆபாசமின்றி இயல்பான காம உணர்வுகளை வெளிப்படுத்தி நின்றனர். கதை நிகழும் இடம் பருத்தி விளையும் நிலம்.
THE BAND WAGON
வின்சன்ட் மினேலி இயக்கியதும், நான் ரசித்து மகிழ்ந்ததுமான நாட்டிய இசைப் படங்களுள் ஒன்று இது.
Ο
Jogge
1953ல் வெளியாகியது. ப்(F)ரெட் அஸ்டயர், சிட் சரிஸ் ஆகியோரின் அற்புதமான மதுரமான பாட்டுக்களும் என்னைப் பரவசப்படுத்தின.
THE BAREFOOT
CONTESSA
ஸ்பானிய இசையும் நடனமும் என்னைக் கொள்ளை கொண்டன. 1954ல் வெளிவந்த இப்படம் ஒரு ஸ்பானிய நர்த்தகியின் கலைப் பயணத்தைச் சித்திரிக்கிறது. ஏவா கா(G)ர்ட்னர், ஹம்ப்(F)ரி போ(B) கா (G) ட் இருவரும் நடித்தனர். இப்படத்தின் நெறியாளர் : ஜோசப் எல் மன்க்கிவிச்.
சிறப்பாக
இவை யாவும் நான் பார்த்த படங்களுள் நினைவில் நிற்பவை. அடுத்த இதழில் மேலும் சில படங்களைப் பார்ப்போம்.
ጦ" SSLLL SSSSSSS SSYSSSSLSLS SLSLSS LSLS S LSLSLS SLSLS SLSSS SS SLLkSLLSS SLLLLLLSLS LSzLS ད།
வருந்துகின்றோம். பழம் பெரும் எழுத்தாளரான திரு. இரா. பத்மநாதன் அவர்கள் நம்மை விட்டு மறைந்து விட்டார்.
- வசிரியர் ಶ್ರೀ"
-- سیس۔ -- سے سے ــــــــــ ســــــــ ـــــــــ ــ ــــــــــــــا
ஆழ்ந்த துயரமடைகின்றது.
அன்னாரது மறைவையிட்டு மல்லிகை

ဂöÁ;%) ઉઠળતી ضGدغyہ:چ1کانہ) %
- டொமினிக் ஜீவா
உங்களைச் சென்னைக்கழைத்துக் கெளரவித்து விருது தந்ததன் பின்னரும் திரு. எஸ்.பொ. தொடர்ந்தும் உங்களை அவதூறு செய்து குதூகலிக்கின்றாரே, அவர் முன்முயற்சி எடுத்து நடத்திய ‘தமிழ் இலக்கியம் 2004 விழாவிற்குப் போய் அவரது முகதாவில் அந்த விருதைப் பெற்றுக் கொண்டது சரிதான் என இப்பொழுதும் நீங்கள் கருதுகிறீர்களா? ஏன் மெளனம் காக்கிறீர்கள்? இது தப்பல்லவா?
வத்தளை எம்.தனபாலன்.
இதே கேள்வியைப் பலரும் கேட்டுள்ளனர். எனவே பதில் சொல்லக் கடமைப் பட்டவன், நான். பதிலளிப்பது வரலாற்றுக் கடமைகளில் ஒன்று.
என்னுடைய வளர் சுபாவத்திற்கும், அநுபவத்தின் முதிர்ச்சிகும், வயதுக்கும் ஏற்ற அங்கீகரிப்புச் செயல்தான் அது என இப்பொழுதும் நான் கருதுகின்றேன். ஒன்றை நினைத்துப் பாருங்கள். இவர் உச்சக் கட்டத்தில் என்னை நாக்கு வளைத்துக் கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே இவரது உருவத்தை அட்டையில் பதித்து நானே இவரைப் பற்றிய குறிப்பையும் வரைந்திருந்தேன். எந்தவகையான காழ்ப் புணர்ச்சியுமற்று, இயங்கி வரப் பழக்கப்பட்டவன் நான். அந்தக் காலத்திலிருந்தே என்னை நெஞ்சார நேசித்து வரும் கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது ஆப்த நண்பர் ஒருவரிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டாராம். "ஜீவாண்ணருக்கு இந்த வயசிரல ஏனிந்த விசர் வேலையெல்லாம்?’ எனத் துக்கப்பட்டுக் கொண்டாராம். இவர் மாத்திர மல்ல, நெருங்கிய நண்பர்கள் பலரும் இந்த விருது பெறும் நிகழ்வை மனசார ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் எனக்குத் தெரியும். இதைத் தெரிந்திருந்தும் இவைகளை மீறிச் சென்றுதான் விருது பெற்று வந்தேன்.
ஆனால், நான் ஒரு வித்தியாசமானவன். சாஹித்திய மண்டலப் பரிசு பெற்று யாழ்ப்பாணம் திரும்பிய அந்தக் காலகட்டத்தில், புகையிரத நிலையத்தில் வைத்து வீரகேசரி நிருபர் செல்லத்துரை கேட்ட எனது கல்வித் தராதரம் பற்றி கேள்விக்கு 'சவரக் கடைதான் எனது சர்வகலாசாலை!" எனப் பகிரங்கமாகப் பதிலளித்தவன் நான். ஒன்றையுமே மறைத்தவனல்ல பகிரங்கமாகவே எழுத்தில் ஆவணப்படுத்தி யுள்ளேன்.
1.

Page 8
எனது வாழ்க்கையே திறந்து வைத்துள்ள புத்தகம். இதை எனது சுய
வரலாறு நூல் நன்கு நிரூபிக்கும்.
நான் நாணல்ல, பனைமரம். முறிவேனே தவிர, வளைந்து கொடுக்க
Lorru (BL-söt!
"மண் புழுவிலிருந்து மனினா னவன், நான்!” என அடிக்கடிச் சொல்வ துடன் ஆத்ம பரிசோதனையும் செய்து வருபவன். இது நிச்சயம்!
எனக்குத் தெளிவாகவே தெரியும் வரலாற்றுக்குரியவன், நான். என் து செயல்கள் ஒவ்வொன்றும் கூர்ந்து கவனிக்கப்பட்டுப் பதிவு செய்யப்படும் என்பதைத் தெளிவாகவே புரிந்து வைத் துள்ளவன். அதைத் திடமாக நம்பிச் செயலாற்றி வருபவன் நான். அதற்கு உதாரணம், உலகப் பாராளுமன்ற வர லாற்றில் இலங்கை நாடாளுமன்றத்தில் தான், ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந் துரைக்கப்பட்டுள்ளது. அந்தச் சஞ்சிகை மல்லிகை. இந்தத் தகவலைப் பாராளு மன்றப் பதிவேடு “ஹன்ஸார்ட் பதிந்து ஆவணப்படுத்தியுள்ளது. அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா.
எனவே, எந்தச் சின்னத்தனமான காழ்ப்புணர்ச்சியுமற்று இயங்கிவரப் பக்குவப்பட்டுள்ளேன்.
கனடாவில் வாழும் இளைஞர் அள வெட்டி சிறீசுக் கந்தராசாவின் நேரடி வற்புறுத்தலை ஏற்று, எஸ்.பொ. அவர் களினது விழாவில் மனப்பூர்வமாகக் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டேன்.
12
صبر
"எஸ்.பொ. உங்களை இன்னமும் தனது இளமைக்கால நண்பனாகவே கருதுகிறார். எனவே அவ்விழாவில்
நேரடியாகவே நீங்கள் கலந்து கொள்ள
வேண்டுமாம். இனிமேலும் அவர் பழைய பொன்னுத்துரையாகவே நட்புப் பாராட்டு வாராம்! நிச்சயம் நீங்கள் இருவரும் பழைய கால நண்பர்களாகவே நெருங்கி வரப் போகிறீர்கள்!" எனக் கனடாவில் இருந்து கொழும்பு வந்து என்னைத் தேடி வந்த நண்பர் சிறீசுக்கந்தராசா வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.
ஒரு வித்தியாசமான, அபாரத் திறமை கொண்ட இளைஞர் இவர் எனப் புரிந்து கொண்டேன்.
"எனது பயணச் செலவைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும், சென்னையில் தங்கும் வசதிகளைத் தானே முன் னின்று ஒழுங்குபடுத்துவதாகவும் கூறிச் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கி மகிழ்ந்தார்.
என்னை வருந்தியழைத்த அந்தக் கனேடிய இளைஞனிடம் நான் கேட்டுக் கொண்டது இதுதான்!
"நான் இந்த விழாவில் கலந்து விருதைப் பெற்றுக் கொள்வதfனால் திரு. எஸ்.பொவே தனது கைப்பட எனக் கொரு கடிதம் எழுத வேண்டும்! அக் கடிதம் என் கைக்குக் கிடைத்ததன் பின்னர்தான் நான் விழாவுக்கு வரு வேன்!" என வற்புறுத்திக் கூறினேன்.
இரு வாரங்களுக்குப் பின்னர் திரு. எஸ்.பொ.விடமிருந்து அன்பு பாராட்டி

8 অ
அழைப்புக் கடிதம் அவரது கைப்பட எழுதி எனக்கு வந்து சேர்ந்தது. அந்தக் கடிதத்தையும் நான் ஓர் ஆவணமாகக் கருதி, கணனியில் பத்திரப்படுத்தி பதிவு செய்து வைத்துள்ளேன்.
என்னுடைய எழுத்துக்கள் அனைத் துமே, மல்லிகையின் தலையங்கங்கள் உட்பட இன்று நூலுருவில் வெளி வந்துள்ளன. தூண்டில் கேள்வி - பதிலும் இதில் அடங்கும்.
நான் ஒரு படைப்பை எழுதி வெளி யிட்டு வைக்கும் போது மட்டும்தான்
لون إليكي
உரிமை கொண்டாடுவேன்.
வெகுசன மக்களுக்குச் சமர்ப்பிக்கப்
பட்டதன் பின்னர் அது பொதுச் சொத்து. மக்கள் சொத்து. யாரும் அதைப் பற்றிச் சாதகமாகவோ பாதகமாகவோ கருத்துச் சொல்லலாம். அது அவர்களுடைய சுவை நேர்த்தியைப் பொறுத்த சங்கதி. நான் அதில் தலையிட மாட்டேன்.
மல்லிகை ஆண்டு மலரொன்றில் 'எனக்கான மொழியை நானே உரு வாக்கிக் கொள்ளுகிறேன்" எனத் தலை யங்கத்தில் எனது கருத்தைப் பகிரங்க மாகத் தெரிவித்துக் கொண்டுள்ளேன். நான் எனது தனித் தன்மையைப் படைப் பில் மாத்திரமல்ல, தினசரி வாழ்க்கை நடைமுறையிலும் பாதுகாத்து பேணி வளர்த்து வருபவன். எந்தக் கூட்டத் திலும் எனது உடைகளைப் பார்த்தே என்னை அடையாளம் கண்டு பிடிக் கலாம். தனித்தன்மையான ஆளுமை கொண்டவன். அது என்னுடைய எழுத் திலும் வெளிப்படும். எனது மேடைப்
பேச்சிலும் தென்படும். இதைத் தெரிந்த வர்கள் ஒப்புக்கொள்வர்.
எனது மேடை மொழியும், எழுத்து நடையும் நான் முயன்று முயன்று சிற்பியைப் போல செதுக்கிச் செதுக்கி செப்பனிட்டுக் கொண்டவை. வலிந்து எனது வித்வச் செருக்கை வெளிப் படுத்தும் முகமாக நான் எந்தக் கட்டத் திலுமே மொழியைத் திணிப்பவனல்ல! எழுத்தில் நான் யாருடனும் கூட்டுச் சேர்ந்தது கிடையாது. அது தேவையு மில்லை. நான் என்பது நான்தான்!
அந்தக் காலத்தில் வளரும் இளமைப் பருவத்தில் சக தோழர்களுடன் ஒன்றாகப் பழகிய, தர்க்கித்த வேளைகளில் ஆலோ சனைகள் பெற்றிருக்கலாம். இது தப்பல்ல. போதிய கல்வியறிவு அற்ற, பின் தள்ளப் பட்டுள்ள ஒரு சமூகத்தில் தோன்றிய ஓரிளைஞன் தன்னை ஒழுங்குபடுத்தி, தனது கருமத்தை ஒப்பேற்றிக் கொள்ள ஆலோசனை கேட்பதோ, அபிப்பிராயங் களைக் கலந்து பரிமாறிக் கொள்வதோ தப்பல்ல. அது விலை போகும் சங்கதி யல்ல. அதுவே வளர்ச்சியின் அறிகுறி.
சூழ உள்ள மக்களின் உள்மனக் கருத்துக்களைச் சரிவரப் புரிந்து கொள் வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் இத் தகைய கூட்டு யோசனைகள் பயன்தரும்
என இப்போது கூட நம்புகின்றேன்.
இன்று கூட, மல்லிகையின் நாற்ப தாவது ஆண்டு மலரை வெளியிட்டு வைத் ததன் பின்னர் கூட, நெஞ்சுக்கு நெருக்க மானவர்களுடன் கூடிக் கூடி ஆலோசிக்
கின்றேன். என்னை நானே வளப்படுத்த,
3

Page 9
என் எழுத்தைப் புதுப்பித்துக் கொள்ள முயன்று முயன்று உழைத்து வருகிறேன்.
என் வரைக்கும் நான் அசாதாரண மான மன ஓர்மம் கொண்டவன். அர்ப் பணிப்புடன் செயற் "டுபவன். நண்பர் களை உளமார நேசிப்பதில் பக்குவப் பட்டவன். எவர் மீதும் அவதூறு பொழி வதை விரும்பாதவன். மல்லிகையில் அதை ஊக்குவிக்காதவன். இதன் நேரடிப் பலம்தான் மல்லிகையின் இந்த நாற்பதாண்டு வளர்ச்சி. தொடர் வருகை.
என்னுடைய மன முதிர்ச்சிக்கும், ஒர்மத்திற்கும், தனித்துவப் பாங்கிற்கும் இரண்டு சம்பவங்களை வாசகர் முன் வைக்கின்றேன். நான் ரஷ்யாவிற்குப் போயிருந்த சமயம் எனது இயல்பான உடையுடன் மாஸ்கோவில் போய் இறங் கினேன். அந்த நாட்டு உபசரிப்புச் சம்பிர தாயப்படி எனது உடலைப் பரிசோதித்த டாக்டர் பார்த்துவிட்டுத் திடுக்கிட்டார். "உங்களு
ஒருவர், எனது உடைகளைப்
டைய நாட்டு உடைப் பற்றை நான் மெச்சு கிறேன். ஆனால், இந்தப் பற்றுடன் நீங்கள் நடமாடினால் ஊர் போகும் வரை மாஸ் கோவில் ஆஸ்பத்திரியில்தான் காலம் கழிக்க வேண்டி வரும்!" எனப் புன்முறு வலுடன் பயமுறுத்தினார். தொடர்ந்து "மாஸ்கோக் குளிரைப் பற்றி அலட்சியமாக நினைக்க வேண்டாம்! மாவீரன் நெப்போலி யனையே நடுநடுங்க வைத்த குளிரிது!’
இதைக் கேட்டதும் நான் உள்ளூர நடுங்கிப் போய்விட்டேன். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு கம்களிச் சால்வை களைப் போர்வையாகப் பயன்படுத்தி ஒரு
14.
S. g6SG)is
வழியாக ஒப்பேற்றிக் கொண்டேன். இதே போல எனது ஐரோப்பிய பயணத்தின்
போதும் எனது இயல்பான உடையையே
அணிந்து கொண்டேன்.
அடுத்தது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தந்த பட்டத்தை எனக்கு ஏற்புடை யதல்ல என நான் நிராகரித்தமை.
புகைப்பதைத் தவிர்த்தவன். மதுபான வகைகள் இதுவரை எனது உதட்டை ருசிபார்த்ததேயில்லை. ஒழுக்கம் எனது உயிர். இவைகளை இணைத்துப் பார்த் தால் என்னுடைய ஆளுமையும், தனித்து வமும், மனப்பலமும் சட்டெனப் புரியும்.
என்னுடைய கதைகளைத் தகுந்த ஆய்வாளர்கள், விமர்சகர்கள் எழுத் தெண்ணிப் படித்துப் பார்க்கட்டும். பரி சீலனைக்கும், பரிசோனைக்கும் உட்படுத் தட்டும். தங்களது கருத்துக்களை, அபிப் பிராயங்களைப் பொதுமக்கள் முன் வைக் கட்டும். அவர்களது மேலான ஒப்பு நோக்குக் கருத்துக்களை மல்லிகையில் நானே பகிரங்கமாக வெளியிடுகிறேன். இதனை நான் சர்வ சம்மதத்துடன் ஒப்புக் கொள்ளுகின்றேன். V
எனது மொழி வேறு. பாத்திரப் படைப்பு கள் வித்தியாசமானவை. என்னுடைய இலக்கிய நோக்கே என் அநுபவங்களில் இருந்து முகிழ்ந்தெழும்பியவை. புதுப் பார்வை கொண்டவை.
இந்த அவதூறுகள் இன்று நேற் றல்ல நான் முரீலங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற ஆண்டுக் காலத் திலிருந்தே தொடர்ச்சியாகச் சொல்லப்

অ
பட்டுவரும் விஷமத்தனமான தாக்கு தல்கள், பொறாமைப் பொச்சரிப்புகள். உண்மையை மனம் விட்டுச் சொல்லப் போனால், இந்த வார்த்தை விளையாட் டுத் தாக்குதல்கள்தான் என் வளர்ச்
சிக்கு இதுவரை பசளையிட்டு வளர்த்து
வந்துள்ளன. அதற்காக என் நன்றி.
தனது அன்பு அழைப்புக் கடிதத் திற்கு மாறாக, அளவெட்டி சிறீசுக்கந்த ராசாவின் வாக்குறுதிகளுக்கு எதிராக, அத்தனை மதிக்கத்தக்க பெரும் மக்க ளான விஜயபாஸ்கரன், தி.க.சி., சிட்டி, லசுஷ்மி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக் குச் சமதையாக என்னைக் கெளரவித்து
விருதளித்த சம்பவத்திற்கு முரணாகத்
திரும்பத் திரும்ப ஒரே குற்றச்சாட்டை விருது தந்ததன் பின்னரும் பேட்டிகளில் கூறி வருவது எழுத்து நாகரிகம் அல்ல. யோக்கியமானதுமல்ல. அடிப்படைப் Luodotul D66).
இத்தனைக்கும் நான் கோபிக்க வில்லை. வருத்தப்படவில்லை. எனது மன நேர்மையைச் சிதைக்க நான் யாரை யும், எந்தக் கட்டத்திலுமே அனுமதிக்கப் போவதுமில்லை. இதே அழுக்குத்தனம் தொடர்ந்தும் நிகழுமானால் என் மனச் சாட்சியின் முன்னால் ஒரேயொரு வழி தான் தென்படுகிறது. அது தவிர்க்க
(Լpւգաո ՑՑl.
சென்னைக்குச் செல்வது. பாலன் இல்லத்தில் தங்குவது. திரு. எஸ்.பொ. 'மித்ர காரியாலயத்தில் இருக்கிறாரா என விசாரித்துத் தெரிந்து கொள்வது.
புகைப்படக்காரரொருவருடன் ஆட்டோ
வில் 'மித்ர காரியாலயம் செல்வது. திரு.
எஸ்.பொ. எனக்களித்த பாராட்டு விழா விருதை அவரது மேசையின் முன்னால் வைப்பது. புகைப்படத்திற்காகச் சிறிது தாமதிப்பது. விருதளித்தவரைக் கை யெடுத்துக் கும்பிடுவது. திரும்ப அதே ஆட்டோவில் தங்குமிடத்திற்குத் திரும்பி விடுவது. அன்றிரவே முன்னேற்பாட்டின் படி கொழும்பு திரும்பி விடுவது.
என் சக்திக்கு மீறின பணச் செலவு தான் என்ன செய்வது? விலை கொடுத் துத்தானே ஆக வேண்டும்.
இதுதான் எனது திட்டம்.
தனியொரு மனிதனின் இச்செயலுக் காக அவ்விழா மேடையில் விருது பெற்ற மற்றவர்களிடம் அங்கிருந்தே கடித மெழுதி மன்னிப்புக் கேட்டுக் கொள்வது.
இந்த நேரடிச் செயலைத் தவிர, என் நேர்மையையும், மன ஆதங்கத்தை யும், தனித்துவச் செயல்பாட்டையும் வெளிப்படுத்த வேறெந்த விதமான வழி முறைகளும் இப்போதைக்கு எனக்குத் தெரியவில்லையே!
இதன் பின் விளைவுகள் எதுவாக
இருந்தாலும் அவை அத்தனையையும் ஏற்றுக் கொள்ள நான் சித்தமாக
வுள்ளேன்.
எனது மகன் திலீபனைப் போலவே நான் நினைக்கும் டாக்டர் அநுர - அந்த விழா மேடையிலேயே நான் பகிரங்க மாகச் சொன்னேன். 'எஸ்.பொ. இது வரை படைத்தவற்றுக்குள் எல்லாம் தலைசிறந்த மகத்தான சிருஷ்டி, மகன் அநுரதான்!' என மனநிறைவுடன் சொல்லிப் பாராட்டினேன்.
15

Page 10
கண்டமெல்லாம் கடந்து கொழும்பு வந்து, என்னை நேரடியாகச் சந்தித்து, விரும்பி அழைத்த அளவெட்டி சிறீசுக் கந்தராசா, என்னைத் தனது தங்கக் கவி இயல்புத் தன்மையினாலும் வசீகரித்த கவிஞர்
வரிகளினாலும், பழகும்
தமிழச்சி, தனது தனித்துவமான நுட்ப ஓவியப் பார்வையினால் ஆட்கொண்ட ஓவியர் மருது, புதிய கவிஞர் பரம்பரை யின் முன்னோடியாகத் திகழும் அறிவு மதி ஆகியோருக்கு இந்த மனச்சங் கடத்தை ஏற்படுத்தும் சம்பவத் தகவலை முன்கூட்டியே சொல்லி வைக்கின்றேன்.
ஏனெனில் அந்த விழாவில் கலந்து கொண்டு என்னைக் கனம் பண்ணிக் கெளரவித்தவர்களில் இவர்களும் அடங் குவர். ஏனெனில் இவர்களது மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கு மத்தியில் தானே இந்த விருதை நான் பெற்றுக் கொண்டேன்.
தயவு செய்து எனது மன உணர்வு களை மொத்தமாகப் புரிந்து கொள்ளுங்கள். என் நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டி ருந்தால் என்ன முடிவுக்கு வருவீர் களோ, அத்தகைய முடிவுக்குத்தான் நான் வந்திருக்கிறேன்.
இத்தனை அவதூறுகளைக் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாகப் பொழிந்து வரும் எஸ்.பொ. அவர்கள் ஏன் தனது முகதாவில் எனக்கு விருது தரச் சம்மதித் தார்? அது இன்றைவரை எனக்கு விளங்கவேயில்லை! சரி. என் ஆளுமை யை ஏற்றுக் கொண்டு விருது தந்ததன் பின்னரும் என் மீது அவதூறு பொழி கிறாரே, இது ஏன்?
1G
இது sal எனக்குப் புரியவில்லை!
தொடர்ந்தால் எனது திட்டம் நடை முறைப்படுத்தப்படும்.
பின்குறிப்பு :-
இதிலொரு குற்ற உணர்வும் எனக்கு ஏற்பட்டதுண்டு. என்னை விட ஆற்றலும், திறமையும், உயர் படிப்பும் வாய்க்கப் பெற்ற பலர் இவரது வார்த்தைத் தாக்குதல் களுக்கு உள்ளாகியதுண்டு. இவர்களில் சிலர் இன்று உயிரோடு கூட இல்லை. தனி ஒருவனாகிய எனது சுயலாபத்தைக் கருத்தில் கொண்டு அழைத்தவுடன், ஓர் ஒப்புதல் கடிதத்தைக் கண்டவுடன் ஏனை யவர்களின் மனச் சங்கடங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நான் மாத்திரம் என்னைத் தப்பித்து வைத்துக் கொள்ள ராஜதந்திர மூளையுடன் செய லாற்றியதன் பின் விளைவுதான் இதுவோ என ஆறுதலாக இருந்து சிந்திக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் யோசித்துப் பார்க்கிறேன்.
கதிரேசன் வீதியால் ஒருநாள் காலை நடந்து வருகிறேன். ஆண்டிவால் முடுக்கு. என்னை விழுத்தி விடுமாப் போல ஒரு பரட்டைத் தலை இளைஞன் ஆவேசமாக எதையோ உரத்துக் கதைத்தபடி கீழே கிடந்த சாணியை எடுத்து சுவரில் புத்தம் புதிதாக ஒட்டப்பட்டிருந்த கதாநாயகன் படத்தின் மீது ஓங்கி வீசி அழுக்குப்படுத்தி னான். வாய்விட்டுக் கடகடவெனச் சிரித் தான். பின்னர் அகன்று விட்டான். இது ஒரு தெருவோரக் காட்சி. நான் மெளனமாக நின்று கொண்டிருந்தேன்.

・一 ۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔۔۔۔ ۔۔۔۔ ۔ ۔ ۔۔۔۔۔ ༣ கொழும்புத் துறை யென்றால் i "> * w மனதில் படிபவர் “எப்பவோ முடிந்த Öዘ@Olgወ/ወ இன்றும் / r- காரியம்' என
- வாழ்க் கைக்கு
இ லக் கணம்
மறக்காத சொந்தங்கள்
- 6)Ժ6660ճճճճra)/ -
சொன்ன யோகர்
சு வா மிக ள் . அக்காலத்தில் யோகர் சுவாமிகளின் வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப் பாணத்தவர்கள் மட்டுமன்றிப் பிற பிரதேசத்தவர்களும் படையெடுப்பர். மக்களின் மனதைக் கவர்ந்த இன்னொரு இடமும் கொழும்புத்துறையில் இருந்தது. அது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை. இந்த வகையில் கொழும்புத்துறையை ஒரு ஞான பூமியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இதுவொரு கடலோரக் கிராமம். இவ்வூரின் மக்களது வாழ்க்கை முறைமைகளை இலக்கியமாக்கிய பெருமை பிரபல எழுத்தாளர் செ.யோகநாதனைச் சாரும். இந்த எழுத்தாளராலும் இவ்வூர் பெருமை கொள்கிறது. இலக்கியப் படைப்புகள் பல செய்து ஊருக்குள்ளும் தமிழர் வாழும் அனைத்து மண்ணிலும் வெற்றிக் கொடி கட்டியவர். பத்திரிகைப் பத்தி எழுத்துகளை எழுதுவதில் விற்பன்னர்.
இருபதாம் நூற்றாண்டின் சிறுகதைகள் என இரண்டு தொகுதிகளை வெளி யிட்டவர். ஈழத்து எழுத்தாளர்களது பல சிறுகதைகள் இத்தொகுதிகளில் பதிவாகி யுள்ளன. அறுபதுகளில் வெடித்தெழும்பிய ஈழத்துப் புதிய எழுத்தாளர் வரிசையில் முற்போக்குச் சிந்தனைகளோடு தன்னை இனங்காட்டியவர். சிறுவர் இலக்கியத்திற்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவரது இலக்கிய ஆளுமைகளைக் கெளரவிக்கும் முகமாக இவருக்கு இலங்கை அரசு சாஹித்தியப் பரிசை வழங்கியது. 'பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை' என்ற தனது நூலின் பிரபல தமிழ் இலக்கியவாதி வல்லிக்கண்ணன், எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ.)வின் உரைநடையோடு இவரது உரைநடையையும் சேர்த்து வெளியிட்டார். செ.யோ,வைப் பற்றி வல்லிக்கண்ணன்
கூறும்பொழுது இப்படிச் சொல்கிறார்;
"இலக்கியம் சமூக நோக்குடன், மண்ணின் மணத்துடன், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் பிரதிபலிப்பதாய் அமைய வேண்டும். பொருளாதார, அரசியல் பின்னணிகளையும், போராட்ட உணர்வுகளையும் சித்திரிக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்ச்சியைப் பெற்றுப் பலர் எழுத்து முயற்சியில் ஈடுபட்டார்கள்.
17

Page 11
இவர்களுடைய எழுத்தில் யாழ்ப் பாணத்துப் பேச்சு வழக்கும், யாழ்ப்பாண - இலங்கைச் சூழ்நிலை வர்ணிப்புகளும், மக்களின் பழக்க வழக்க விபரிப்புகளும் தாராளமாக இடம்பெற்றன. இந்த வகை எழுத்தாளர்களுள் ஒரு உதாரணமாக செ.யோகநாதன். உவமைகளைக் கூடப் பாத்திரங்கள் வாழ்க்கையோடு ஒட்டிப் பழகுகிறவற்றிலிருந்தே படைத்திருக் கிறார் யோகநாதன். யோகநாதன் தெளிந்த, எளிய, அழுத்தமான நடையில் விஷயங்களை விபரிப்பதில் தேர்ந்தவர்.
கதாபாத்திரத்தை வர்ணிக்கும் இடங் களிலும் இட வர்ணனை, சூழ்நிலை விபரிப்புகளிலும் யோகநாதனின் மொழி வளமும், நடை நயமும் சிறந்து விளங்கு கின்றன."
இவர் இலங்கை நிருவாக சேவை யில் தேர்ச்சி பெற்று உதவி அரசாங்க அதிபராகப் பதவி வகித்தவர். எனவே கொழும்புத் துறையின் விழுமியங்கள் யோகர் சுவாமி, செ. யோகநாதன் ஆகியோரால் துலக்கம் பெறுகின்றன.
Iழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியை கண்டிக்குளி என்பர். ஒரு பிரபலமான கலைஞர் சுண்டிக்குளியைத் தனது பெயரேரிடு இணைத்து சுண்டிக்குளிச் சோமசேகரனாக மக்களுக்குத் தன்னை அடையாளம் காட்டுகிறார். இவர் சிங்கள சினிமாவுக்கும் தனது பங்களிப்பை வழங்கியவர். 'டாக்ஸி றைவர்' என்ற ஈழத்துத் தமிழ் சினிமாவை சினிமா இரசிகர்களுக்குத் தந்தவர். இலக்கிய வெறி கொண்டு ஐம்பதுகளில் 'லட்டு'
KNS
என்ற சிறுவர் சஞ்சிகையை சிறுவர் இலக்கியத்திற்கு வழங்கியவர். இச்சஞ் சிகையில் இவரது கதையொன்றும் தொடர்ந்தது. இவர் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்.
அல்பிரட் தங்கராசா துரையப்பாவின் சுவடுகள் இன்னமும் யாழ் மண்ணி லிருந்து துடைக்கப்படவில்லை. யாழ் நகருக்கு ஒரு புதிய அழகிய முகத்தைக் கொடுத்துக் கொழும்பு, கண்டி போன்ற பிற நகரங்களோடு தலை நிமிர வைத் தவர், இவர். நகரை அலங்காரப்படுத்து வதில் முன்னுரிமை காட்டியவர். விதி களின் மத்தியில் சிறு சிறு மணற் பாத்தி களை அமைத்து அவைகளில் அழகிய செடிகள்ை நாட்டி அவற்றிற்கு நீர்பாசன வசதி செய்து கொடுத்து நகரத்தில் பசுமை யான தோற்றத்தைக் காண்பதற்கு வாய்ப்பைக் கொடுத்தவர்.
யாழ்ப்பாண மாநகர மண்ணை ஐவகை நிலங்களுள் எவற்றுள் அடக் கலாமென்பது 'மண்டை வலியைத் தரும் விஷயம்தான்! நெய்தலுண்டு, முல்லை யுண்டு. நிச்சயமாக பாலையாகவோ, குறிஞ்சியாகவோ, மருதமாகவோ இருக் காது. கடலுண்டு, வயல்களுண்டு. இம் மண்ணில் இப்பொழுதும் அன்றைய குளங்கள் இருக்கின்றன. தமிழுணர்வு, இலக்கியக் கரிசனை ஆகியவற்றின் உந்த லால் முன்னாள் யாழ். அரசாங்க அதிபர் அமரர். எம். மாணிக்கவாசகர், பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியானின் விடா முயற்சியால் வழங்கிய யாழ் தமிழ் எழுத் தாளர் ஒன்றியத்தின் கட்டிடத்திற்கு முன் பாக ஆரியகுளம் இருக்கின்றது. அது

போல் நெடுங்குளம், கற்குளம், தேவரிக் குளம், வண்ணான் குளம், பன்றிக்குளம், தாராக் குளம், மறவன் குளம், றிகல் திரை அரங்கிற்கும், மணிக்கூட்டுக் கோபுரத்திற் கும் நடுப்பகுதியில் புல்லுக்குளம் என்பன இருக்கின்றன. இவைகள் இன்னமும் அன்றைய நிலையிலேயே காணப்படு கின்றன. சில நிரவப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளன. இருந் தும், அப்பொழுது யாழ் நகர பிதாவாக இருந்த அல்பிரட் துரையப்பா புல்லுக் குளத்தை நீச்சல் தடாகமாக்குவதற்கான ஆரம்ப முயற்சிகளைச் செய்தார். அதன் 'படுத்து' விட்டது. தொடர்ந்த நகர பிதாக்களும்
வேலைத் திட்டம் ஏனோ
அதைக் கவனிக்கவில்லை.
CPD. சில்வா என்பவரது கும்ப லோடு சேர்ந்து, பத்திரிகை மசோதாவை எதிர்த்ததால் அல்பிரட் துரையப்பா அன்றைய சுதந்திரக் கட்சி அரசின் கடும் சீற்றத்தைப் பெற்றார்.
பிரபல தமிழ் அரசியல்வாதியும், தனிப் பெருந் தலைவருமான ஜீ.ஜீ. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு யாழ் வரலாறு
பொன்னம்பலத்தோடு
காணாத வெற்றியைப் பெற்றவர்.
இவருமொரு சுண்டிக்குளியின் மைந்தன்.
"பாண்டியன் தாழ்வு' மூவேந்தர்
பரம்பரை ஒன்றைத் தூக்கிக் காவிக் கொண்டிருக்கும் இந்தப் பிராந்தியத்துள் நுழைவது சற்று மனக் கிலேசத்தைத்தான் உண்டு பண்ணும்! இருந்தாலும் யோசிக்க வேண்டாம்! இது தமிழ் வேந்தன் வாழும் மண், தமிழ் வேந்தன்' என்ற புனை
பெயருக்குள் ஒழிந்து அப்போதெல்லாம் இலக்கியம் எழுதிக்கொண்டு வந்த இந்த வி.சி.குஞ்சிதபாதம் ஒரு சிறந்த தமிழ் அபிமானி. மேடையில் பாரதியாக முழங் குவார். தமிழன் தன்னை உணர்ந்து தனது தாய் மொழியை மதித்து விழிப்புக் கொண்ட ஐம்பதுகளில் வேட்டியும் நஷனலும் அணிந்து பாடசாலைக்கு வந்து பாண்டியன் தாழ்வு மண்ணின் இனப் பற்றை அம்பலப்படுத்தியவர். சிறந்த நாடக நடிகர். கூத்தாடி வி.சி.குஞ்சித பாதம் எனக் கவிதைகளும் எழுதுபவர். 'லட்டு' என்ற சிறுவர் சஞ்சிகையின் உதவி ஆசிரியராக இருந்தவர். இன்றைய சிறுவர் இலக்கியவாதிகள் இந்த 'லட்டு" வையும் ஒரு சிறுவர் சஞ்சிகையாக சேர்த்துக் கொள்வது மனதிற்கு இங்கித மாக இருக்கிறது.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்து நாடக ரசிகர்கள் மத்தியில் பூரீதனம்" என் றொரு நாடகம் சிறப்பாகப் பேசப் பட்டது. இந்நாடகம் சீதனக் கொடுமை யைத் துருப்புச் சிட்டாக வைத்து அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தை நையாண்டி செய்தது. இந்த மேடை நாட கத்தை எழுதியவர் அமரர் வி.சி. பரம னந்தம். இவர் குஞ்சிதபாதத்தின் தமை யனார். பெரிய பட்டதாரி அல்ல. தபால் ஊழியர்தான்! பிரதியாக்கம், நடிப்பு, நெறி யாள்கை என்பவற்றில் அன்றைய நாடக உலகிற்குப் பங்களிப்புச் செய்தார். இக் காலகட்டத்தில் கலையரசு சொர்ண லிங்கமும் வசித்தார். வி.சி.பரமானந் தத்தை யாழ் நாடக முன்னோடி என்றும் கூடச் செல்லலாம்! நாடக ouy oli igbir
சிரியர் இதைக் கவனத்திற்கெடுப்பது
S

Page 12
நல்லது. பாண்டியன் தாழ்வு மக்கள் இதற்குத் தூண்டு கருவியாக இருப்பது அவர்கள் வாழும் பாண்டியன் தாழ்விற்குச் செய்யும் அரும்பணியாகும். இவரது அடங்காப் பிடாரி” என்ற நாடகமும் நாடக ரசிகனின் தாகத்தைத் தீர்த்தது. அன்றைக்குக் கிடைத்த குறைவான வசதி களைக் கொண்டு சமூகத்திற்கு நன்மை பயத்து, வாழ்வைச் செழுமைப்படுத்தக் கூடிய நாடகங்களை மேடையேற்றினார்.
இன்று விளம்பரம் மாபெரும் கலையாகி விட்டது. அத்தோடு பெரும் பொருளைத் தரக்கூடிய வியாபாரமுமாகி விட்டது. இதனால் தான் 'விளம்பரம் செய்தல் வியாபாரத்திற்க்ழகு" என் கின்றனர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் அந்தக் காலத்தில் இந்த விளம் பர உத்தியைச் சினிமாக்காரர் தான் பெரும்பாலும் பயன்படுத்தினர். இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில் அன்று எஸ்.பி.மயில்வாகனம் இலங்கை முழுதிலும் பொதுவாகச் சில மாவட்ட ரீதியில் - இன்ன தியேட்டரில் இன்ன படம் திரையிடப்படுகின்றதென்பார். "இன்றே கண்டு களியுங்கள், சிவாஜி கணேசன், பண்டரிபாய் நடித்த பராசக்தி. கொழும்பு கிங்ஸ்லி, கண்டி வெம்ளி, யாழ்ப்பாணம் வெலிங்டன் ஆகிய தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது" இது மயிலரின் விளம்பரப் பாணி. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் றேடி யோவா இருந்தது! இல்லை!
இதை உணர்ந்த யாழ்ப்பாணத்துத் தியேட்டர் செந்தக்காரர்கள் உள்ளூருக்
2O
குள் தாமும் தமது தியேட்டர்களில் திரை யிடப்படும் சினிமாப் படங்களை விளம் பரப்படுத்துவர். பொது இடங்களில் சுவ ரொட்டிகள் ஒட்டப்படும். சென்னையில் அச்சிடப்பட்ட பெரிய போஸ்டர்களும் ஒட்டப்படுவதுண்டு. அத்தோடு குக்கிரா மங்களில் வாழும் சினிமா ரசிகர்கள் அறிதல் செய்யும் பொருட்டு குதிரை வண்டிகளைப் பாவித்து விளம்பரப்படுத் துவர். குதிரை வண்டில் ஓடிக் கொண்டி ருக்கும். அதன் இரண்டு பக்கமும் அழ கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தட்டிகள் குதிரை வண்டி லுக்குள் சிலர் இருப்பர். ஒருவர் தற் போதைய தபேலா வடிவிலான மேளத்தை அடித்து இசை எழுப்புவார். இன்னொ ருவர் கையில் கிண்கிணியை வைத்து
கட்டப்பட்டிருக்கும்.
தாளமிட்டு ஒலி எழுப்புவார். இந்த ஒலி களைக் கேட்டுக் கிராமவாசிகள் சிறி யோரும் பெரியோருமாக ஒடிக் கொண்டி ருக்கும் குதிரை வண்டில்களைப் பின் தொடர்வர். அச்சமயம் குதிாை வண்டி யின் பின் ஆசனத்தில் இருப்பவர் சிறிய நோட்டீஸ் துண்டுகளை எறிவார். இவை களைப் பொறுக்கிக் கிராமத்தவர்கள் திரையிடப்பட்டிருக்கும், வரவிருக்கும் சினிமாப் படங்களைப் பற்றி அறிந்து கொள்வர்.
காலச் சுழற்சிக்கேற்ற வகையில் இந்த விளம்பர வடிவமும் மாற்றம் கண் டது. கார்கள், வான்கள் என்பன இதற் கான பாவனையில் வாத் தொடங்கின. ஒலி பெருக்கியும் பாவிக்கப்பட்டது. அச்சில் வார்க்கப்பட்ட போஸ்டர்கள், பிரபல ஒவியர்களால் துணிகளில் வரை யப்பட்ட நடிகர்கள், நடிகைகளின் உரு

NYM toesías
வங்கள் வரையப்பட்ட ஒவியங்கள் தட்டி களில் கட்டி அவைகள் கார்கள், வான்கள் என்பனவற்றில் கட்டப்பட்டு மக்களது பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. பிற் காலங்களில் 'கட் அவுட்"களும் பாவ னைக்கு வந்தன. நோட்டீசுகளும் பொது மக்களுக்குக் கொடுக்கப்பட்டன. அத் தோடு மைக் பாவித்து ஒலிபெருக்கியில் அறிவிப்புகளும் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் மக்கள் கூடும் இடங்களில் தரித்துச் சினிமாப் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகளைச் செய்யும். மக்கள் வாக னத்தைச் சூழ்ந்து நின்று கேட்பர். நோட் டீஸ்களைப் பெற்றுக் கொள்வர். வாகனம் புறப்படும் பொழுது சினிமாப் பாடலை ஒலிபரப்பியபடி புறப்படும்.
அக்காலத்தில், இத்தகைய சினிமா அறிவிப்புகளைச் செய்யும் அறிவிப்ப ாளர்களுள் மிகவும் முக்கியமானவராக டிங்கிரி கனகரெத்தினம் கருதப்பட்டார்.
வாகனத்தின் முன் இருக்கையில், சாரதிக்கு அருகாமையில் இருந்தபடி
இந்த அறிவித்தலைச் செய்வார்.
இவரொரு சிறந்த நகைச்சுவை நடிகர். இவருக்குச் சிவகுரு என்றொரு நாடக நடிப்புப் பங்காளி"யும் இருந்தார். இருவரும் நகைச்சுவை விருந்தைச் செய்தனர். இதில் விசேடமென்னவென்றால் இவர்களிடம், இவர்கள் பேசி நடிப்பதற்குரிய பிரதி இருக்காது. அக்காலகட்டத்தில் மக்களுக் குத் தாக்கத்தை ஏற்படுத்திய விடயங் களைத் தெரிந்து, இவர்கள் நகைச்சுவை விருந்தளிப்பார்கள். இந்த நாடக உத்தி மக்கள் மத்தியில் பெருத்த செல்வாக்கைப் பெற்றது. டிங்கிரி, சிவகுரு ஆகிய இரு
இணைந்தே மேடையேறி
வரது நகைச்சுவையைக் கேட்பதற்கும், ரசிப்பதற்குமென்றே அன்று ஒரு கூட்டம் இருந்தது. 'டிங்கிரி1
இரத்தத்தின் ரத்தம்’ என்ற இலங்கை, இந்தியக் கூட்டில் தயாரான சினிமாப் படமென்றிலும் பிரபல நகைச்சுவை நடிகர் நாகேசோடு நடித்தவர். இதில் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தார்.
கனகரத்தினம்
அன்றைய காலத்தில் நடிப்பில், அறி
விப்பில் மட்டுமன்றி இவர் டிங்கர்
(ஒட்டு) வேலையிலும் வல்லவராக இருந் தார். அதனால் தான் இவருக்கு 'டிங்கிரி என்ற பெயர் வந்ததாகச் சிலர் கூறு கின்றனர். 'டிங்கிரி கனகரத்தினம் யாழ்ப் பானம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர்.
Iழ்ப்பாணத்திற்குத் தேயிலை போன்றது புகையிலை, தேயிலை எந்தள விற்கு உற்பத்தியாளரின் மடியைக் கனக் கச் செய்யுமோ அதேபோல் புகையிலை யும் யாழ்ப்பாணத்தாருக்குப் பணத்தை அள்ளிக் கொட்டியது. எத்தனையோ குமருகளைக் கரை சேர்த்தது.
பீக்கொக் சிகரெட் மூன்று சதமாக இருந்த காலத்தில் கூட அதை வாங்கிப் புகைக்காமல் சுருட்டில் 'யா'ப் பிடித்து அலைந்தவர்கள் பலர். யாழ்ப்பாணத்துப் புகையிலை பருத்தித்துறையிலிருந்து ஈழத்தின் தென்முனையான துந்திரா வரை யாத்திரை சென்றது.
புகையிலையைச் சுருட்டாக்கிப் புகைப்பது மட்டுமன்றி, தாம்பூலத்தோடும் சேர்த்துச் சுவைக்கலாம். சிலர் புகை
யிலைக் காம்பை “சுவிங்கட் போல
o

Page 13
வாய்க்குள் அதக்கி நன்னுவதுமுண்டு. மூக்குப் பொடி தயாரிப்பிற்குப் புகை யிலையுமொரு மூலப் பொருள்.
புகையிலையை நரம்புகளை நீக்கி இலையை மட்டும் வேறாக்குவது எல்லோ ருக்கும் கைவராத அருங்கலை. அதைவிட அதைச் சுருட்டாக்குவது அற்புதமான கலை, மாலை கோர்ப்போரின் கை போல் சுருட்டுச் சுற்றும் தொழிலாளரது விரல் கள் செக்கன்ட் கூட ஒயாது சுழன்று கொண்டிருக்கும்.
தம்சிர்' என்ற நீண்ட வாசனைச் சுருட்டைக் கூட யாழ்ப்பாணத்துச் சுருட்டு ஒரங்கட்டி விட்டுச் சந்தையில் ஒகோ வென விற்பனையாகும். குளிரை எதிர்த்து நிற்கக் கூடிய சக்தியை உடலில் ஏற்றும் பொருட்டு ஆழ்கடலில் நின்று தொழில் புரியும் பொழுது மீனவர்கள் வாயில் சுருட்டைக் கெளவிப் பிடித்துப் புகைப்பர். உத்தியோகத்தர் கூட கடை வாயால் விணி ஒட ஒட புகையிலைச் சுருட்டை ருசி பார்ப்ப்ார். இதனால் இப் பொழுது உலகச் சந்தையிலும் யாழ்ப் பாணத்துச் சுருட்டு சிக்காராகக் குந்தி விட்டது. கனகலிங்கம் சுருட்டுக்கு "கியாதி அதிகம்.
சுருட்டுத் தொழிற்சாலைகளை அப் பொழுது "சுருட்டுக் கொட்டில்கள்’ என்பர். வீடுகளிலும் குடிசைக் கைத் தொழிலாக மக்களுக்கு வருமானத்தைக் காட்டியது. இதனால் இதைத் தொழிலா கக் கொண்டு வாழ்ந்தோரின் எண்ணிக்கை பருத்தது.
அனைத்து முதலாளிகளும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தானே!
22
DeGes
சுருட்டுத் தொழிலை நடத்திய முதலாளி மாரும் தம் கீழ் தொழில் பார்த்த தொழி லாளிகளை நியாயமான முறையில் நடத்
தாது, அவர்களைச் சுரண்டத் தொடங் கினர். இதனால் சுருட்டுத் தொழிலாளர் கள் தமக்கு இளைக்கப்படும் அநீதிகளை உணர்ந்து ஒன்றிணைந்து சங்கத்தை அமைத்தனர். சுருட்டுத் தொழிலாளர் சங்க மெனவும் தமது அமைப்பிற்குப் பெயரிட்டனர்.
இச்சங்கத்திற்குத் தலைமை தாங்கி வழி நடத்தியவர்தான் ஆதுரைராசசிங்கம். இவர் இடதுசாரிச் சிந்தனைகளை உடை யவர். லங்கா சமசமாசக் கட்சியின் முக் கிய யாழ்ப்பாண உறுப்பினராக இருந் தவர். இக்கட்சியின் பிதாமகர்களான - கலாநிதிகளான என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா ஆகியோரோடு
சேர்ந்து கட்சிப் பணி செய்தவர். கட்சிப்
பத்திரிகையான "சமதர்மம் ஏட்டைக்
கடை, கடையாகச் சென்று விற்பனை
செய்தவர். அன்றைய இளைஞர்களில் வி.பொன்னம்பலம், புதுமைலோலன், நாவேந்தன் ஆகியோர் சிறந்த பேச்சாளர் களாக வடபுலத்தில் தம்மை இனங் காட்டிக் கொண்டிருந்த சமயம் ஆதுரை ராசசிங்கம் தானுமொரு கணிக்கப்பட்ட பேச்சாளனாக யாழ்ப்பாணத்துச் சமூகத் திற்குத் தன்னை இனங்காட்டினார். அந்நிய மோகமற்றவராக வேட்டியையும், நஷனல் சட்டையையுமே அணிந்து கொள்வார்.
நல்லூர் வட்டாரத்திற்குப் பல தடவை மா நகர உறுப்பினராக இருந் தவர் ஆதுரைராசசிங்கம். உள்ளூர் அரசி யலில் ஒரு மூத்த உறுப்பினர். உதவி
 
 
 
 

அரியாலை யாழ் மா நகர சபையின் கிழக்கெல்லை. இதை ஊடறுக்கும் கண்டி விதியிலிருந்து நோக்கினால், நல்வரவு' என்ற வளைவு தெரியும். கிரிசாந்தி போன் றோரின் இனப் படுகொலைகளை அம்
பலத்திற்குக் கொண்டுவந்த செம்மணி,
கொழும்புத்துறை, பாண்டியன் தாழ்வு ஆகியன அரியாலையோடு கைகோர்த் துப் பூகோள ரீதியாக இணைந்துள்ளன. அரியாலையைச் சேர்ந்த சி.பொன்னம் பலம்தான் யாழ்ப்பாண மா நகர சபையின் முதல் மேயர் எனச் சிலர் கூறுகின்றனர்.
மா நகர சபையின் முதல்வர் பதவி எமது நாட்டில் தற்போதுள்ள வெஸ் மினிஸ்ரர் அமைப்பில் அதிமுக்கிய மானது. தற்பொழுது வாழ்ந்து கொண்டி ருக்கும் எலிசபெத் மகாராணியார், எமது நாட்டிற்கு ஐம்பதுகளில் விஜயம் செய்த பொழுது கொழும்பு மாநகர மேயராக இருந்தவர் ருத்ரா என்பவர். தமிழர். பொதுநல அமைப்பின் மகாராணியாருக்கு முதன் முதல் கைலாகு கொடுத்து அவரை வரவேற்றவர் ருத்ராவே! இந்தக் கெளரவம் பதவி வழியாக வருவதாம். நகர பிதாதான் அந்நகரத்தின் முதல் பிரஜையாம்!
இந்த இலட்சணமான, அதிகாரம் மிக்க பதவியை யாழ் மா நகரம் ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கும் கொடுத்தது அண்மைக் கால வரலாறு! இதையொரு மனப்புரட்சியெனவும் கருதலாம். முற் போக்குச் சிந்தனையாளன் இந்த அற்புதச் செயலுக்குத் தலை சாய்ப்பான். யாழ்ப் பாண மாநகர சபையின் மேயராகும்
பேறைப் பெற்றவர் பஞ்சமனான செல்லன் கந்தையன். இவர் இம்மாநகர சபையில் ஊழியனாக இருந்தவர். தாழ்த் தப்பட்டவரான NT செல்லத்துரை என்ப வர் உதவி மேயராக இருந்ததும் பதியப் பட வேண்டியதே! இவர் தமிழர் கூட்டணி யைச் சேர்ந்தவர். இவரொரு சமாதான நீதிவானாகவும் இருந்தவர். இவரும் ஒர் அரியாலை வாசியே!
அரியாலையின் பெருமையைச் சர்வ தேசத்திலும் கமழ வைப்பவர் நாடகவிய லாளர் கா.பாலேந்திரா. ஈழத்து நாடகத் துறைக்குப் புது இரத்தம் பாய்ச்சியவர். அரங்கை நவீனப்படுத்தியவர். தென் னிந்திய நாடகவியலாளர் சிலர் நாட கங்கள் இவரது நெறியாள்கையில் அரங் கேறிய போது அவர்கள் வியந்து பாராட் டினர். இவரது பல நாடகங்கள் கே.எம். வாசகரின் நெறியாள்கையில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகின. இந்த வளங்களெல்லாம் புலம்பெயர்ந்தது கவலைதான்!
இந்த ஊரைத் தன்னோடு காவித் திரிபவர் அரியாலையூர் கவிஞர் ஐயாத் துரைதான்! கவிதைத் துறைக்கு கணிச மான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
அரசாங்க அதிபராக இருந்த செல்லையா
பத்மநாதன் இந்த அரியாலை மண்ணுக்
குரிய்வரே!
நகர பிதாக்களையும், கவிஞர் களையும், கலைஞர்களையும், அரசாங்க அதிபர்களையும் யாழ் மண்ணிற்கு அளித் ததால் அரியாலை தமிழ்ச் சமுதாயத்தின் கட்டித்த கவனத்தைப் பெற்று வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது.

Page 14
0ெண்டன் சிற்றியில் இருந்து 25ஆம் நம்பர் பஸ்ஸில் மனோ பார்க்கில் உள்ள வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறுகிறது. மனதில் சந்தோஷம். இரட்டைத் தட்டு பஸ் புதியது. அழகாக இருந்தது. மேலே ஏறி ஆக முன்னால் இருக்கும் ஸிட்டில் இருந்து கொண்டேன். இந்த பஸ் ரூரிஸ்ட் பஸ்ஸிலும் பார்க்க நேர்த்தி
பெற்றோல் ஸ்டேஸன் யாக இருந்
இளைய அப்துல்லாஹ்
தது. ரூரிஸ்ட் பஸ் மேலே திறந்திருக்கும். முக்கிய ரூரிஸ்ட் இடங்களைக் கொண்டு போய்க் காட்டுவார்கள். 25 ஸ்ரேலிங் பவுன்ஸ் கொடுத்தால் சிற்றியில் முக்கிய இடங்களின் முன்னால் நிற்பாட்டுவார்கள். இறங்கி அந்த இடத்தைப் பார்த்துவிட்டு அடுத்து வரும் அதே கொம்பனி பஸ்ஸில் ஏறி அடுத்த இடத்துக்குப் போகலாம். இப்படி மூன்று நான்கு ரூரிஸ்ட் கொம்பனி பஸ்கள் ஓடுகின்றன. நல்ல வசதிதான். அந்த டிக்கட் 24 மணித்தியாலம் செல்லுபடியாகும். ஒரே பயணத்தில் MARBLE ARCH 6,606m6 RUSSEL SQURE, PICCADLY CERCUS, LISTER SQURE, SOUTH KENSINTON fué up, GLDCupg5u GuiTub60LD gaLib, usdragspub மாளிகை, விக்டோரியா, ஹைபார்க் என்று பல இடங்கள் இந்த 25 ஸ்ரேலிங் பவுண் டிக்கட்டில் பார்க்கலாம்.
25LD 36uss u6m) STATFORD 365.cbbgs MARBLE ARCH 6,609 (3UT(guib நீண்ட துாரம் ஒரு பவுண்தான் டிக்கட் கட்டணம். இது முக்கியமான ரூரிஸ்ட் இடங்களுக்குப் போகாவிட்டாலும் MARBLE ARCH இல் இருந்து OXFORD STREET வழியாகச் செல்லும் போது அழகான சிற்றியை தரிசிக்கலாம். ஒரு ஸ்ரேலிங் பவுண்தானே. லண்டனில் பஸ்களை மிகவும் அழகாக கழுவி சுத்தமாக வைத்திருப் பார்கள். அனேகமாகப் புதிய பஸ்கள் ஒடும். கனதுாரம் போகவேண்டிய தேவை குறைவு நீண்ட நெருக்கடி இல்லை. ஆனால் சிலநேரம் சனி - ஞாயிறு தினங்களில் சுரங்க ரயில் ஸ்டேசன்களின் திருத்த வேலைகளுக்காக Rail Replacement பஸ்களைப் போடுவார்கள். எங்கையிருந்து தான் கொண்டு வருவார் களோ தெரியாது. ஒரே சக்குமணமாக இருக்கும். ஆனால் இது நல்ல பஸ்.
பஸ் OXFORD STREET இல் ஒரு ஹோல்டில் நிற்கிறது. ஆட்கள் ஏறு கிறார்கள். ஒருவர் இறங்கினார். ஒருவர் வந்து எனக்கருகில் இருக்கின்றார். இவ்வளவு இடம் இருக்கிறது. ஆனால் எனக்கருகில் வந்து உட்கார்ந்திருக்கிறாரே.
24

தனிய சிற்றியை ரசித்துப் பார்க்க வேண்டும் என்றுதான் இந்த பஸ் பய ணத்தைச் செய்தேன். ஏன் என்னருகில் வந்திருக்கிறார். வந்தமர்ந்த உடனேயே
'நீங்கள் தமிழோ?’ அவர் கேட்டார்.
”ஓம் அவருக்கு மகிழ்ச்சி
‘எங்கை போறியள்’ பிடிக்கவில்லை.
எனக்குப்
‘'சிலோனிலை எங்கை”
` உடுப்பிட்டி’
‘நான் நெல்லியடி’ ` உடுப்பிட்டி எண்டால் கோயில் சந்தையடியோ, இல்லாட்டி பீடாக் கடைக்கு இங்கால்ை இமையானன் பக்கமோ?”
அவர் என்னத்துக்கு வாறார் என்று துல்லியமாக எனக்கு விளங்கியது. அவர் நான் யார்? எண் ன சாதி என்பதைத் தெரிந்து கொள்ள வாறார். “தங்கராசப் பத்தரைத் தெரியுமோ?” கேட்டார். எனது பிடி கொடுக்காத பதிலில் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். உடுப்பிட்டிக் கோவில் சந்தைக்கு வலது பக்கமாக நகைப் பத்தர்கள் இருக்கிறார்கள். இடது புறமாக தச்சு வேலை செய்பவர்கள் - அங்காலை கொல்லர்கள. இமைய்ாணன் பக்கம் சீவல் தொழிலாளர்கள். அவருக்கு என்னை யார் என்று அறிந்து கொள்ள வேண்டும். என்ன சாதி என்று தெரிய வேண்டும்.
லண்டனிலும் பல பத்திரிகை விளம் பரங்களில் உயர்குல சைவ வேளாள
வந்துதான் 'இப்போ
என்று தான் விளம்பரங்கள் வருகின்றன. அங்கு போயும் சாதி தேடும் மனிதர் களில் அவரும் ஒருவர்.
メ >{ メー
எனக்கு இது மூன்றாவது பெற் றோல் ஸ்டேஸன். லண்டனில் தமிழர் களுக்கு உதவுவது பெற்றோல் ஸ்டே சன்கள்தான். சில்லறைக் கடைகளை விடப் பெற்றோல் ஸ்டேஸன்கள்தான் வேலை செய்தவற்கு இலேசு. அகதி களாய் வரும் தமிழர்களுக்கு லண்டனி லும் அதன் சுற்றுப்புறங்களில் இருக்கும் தமிழர்களால் நடத்தப்படும் பெற்றோல் ஸ்டேஸன்களிலும் வேலை எடுப்பது di6)Lulf.
தேவன் அண்ணை நல்லவர். அவர்தான் என்னை வேலையில் சேர்த் தார். அவரும் லண்டனுக்கு அகதியாய் 2 பெற்றோல் ஸ்டேஸன்களுக்கு மனேஜராக இருக் கிறார். ‘நல்ல உசாரா வேலை செய்ய வேணும்” இது தான் தேவன் அண்ணை என்னை வேலைக்கெடுத்த நேரம் சொன்னது. சிரிச்சு சிரிச்சுப் பேசும் நல்ல மனிசன்.
பல நெளிவு சுளிவுகளை எனக்குச் சொல் லித் தந்த இரணி டாவது பெற்றோல் எல்டேசனில் வேலை செய்த கெம்பாவை என்னால் மறக்க முடியாது அவர் ஆபிரிக்கர். அவருக்கு நிறைய GIRL FRIEND 9 (bas (5. 696 (обштф
biT(65ub (Ib Girl Friend 2 L6 PUB
க்கு போய் குடிப்பார். சந்தோஷிப்பார். கதை கதையாய்ச் சொல்வார். எப்படிப் பெண்களைப் பிடிப்பது என்றும் சொல்
25

Page 15
வார். எல்லோருக்கும் அந்தக் கலை வாய்ப்பதில்லை. கெம்பா வலு கெட்டிக் காரர் உந்த விசயத்தில்.
கெம்பா சொல்வார் “ கவனம் கள்ள காட்டுகள் கொண்டு வருவினம்’ கள்ள கிறடிட் காட்டுகளைப் பிடித்தால் 50 ஸ்ரேலிங் பவுண்ஸ் Bank இல் இருந்து எடுக்கலாம். கள்ளகாட் பிடித்து கொடுப் பவர்களுக்கு வங்கிகள் கொடுக்கும் சன்மானம் அது. கள்ள கிறடிட் காட்டுகளுக்கு உகந்த இடம் பெற்றோல் ஸ்டேஸன் தான். கிறடிட் காட்டைத் தமிழர்களே கொம்பியூட்டரில் போட்டுச் செய்து கொண்டு வருவினம். எனக்கு உந்த விசயமே தெரியாது. நான் வேலைக்குச் சேர்ந்து 7 மாதம். இப்பொழுது தான் கைகள் நன்றாக CASH மெசினை கையாளத் தெரிந்து கொண்டு வருகிறது. காலையில் சிகரட் பைக்கட்டுகள் எண்ண வேண்டும். ஒயில் கான் கள் , போத்தல் கள் எண் ண வேண்டும். கணக்கு முடித்து அடுத்த கசியரிடம் ஸிப்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
அகதியாய்ப் போன ஆறு மாசத் துக்கு நம்பர் தர மாட்டார்கள். அகதிக் காசு தருவார்கள். வேலை செய்ய முடி யாது. ஆறு மாதம் முடிந்த பின்பு நம்பர் வந்த பின்பு தான் வேலை செய்ய (ԼքlգԱ-յլք. ஆனால் நம்பர் இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலை செய் யும் இடம்தான் பெற்றோல் ஸ்டேஸன். லண்டன் தவிர்ந்த ஏனைய நாடுகள் இன்சூரன்ஸ் நம்பர் விடயத்தில் மிகவும்
கடினம், லண்டனில் பொலிஸ் செக் பண்ணுவதில்லை. குறைவு. எனவே நம்பர் இல் லாமல் , இல் லாவிடில்
2G
6oT Lò
2> ༧ DeGSG):
வேறை யாருடைய கள்ள நம்பரிலாவது வேலை செய்ய முடியும். எல்லாம் எம்மவர்கள் தானே. நானும் கள்ள நம்பரில் தான் வேலை செய்தேன்.
இரவு 12 மணி இருக்கும் நைட் ஸிப்ட்டில் இருக்கிறேன். புதிதாக வேலை செயப் பவர்களுக்கு நைட் ஸிப்ட்தான் கொடுப்பார்கள். காரில் நான்கு பேர் வந்தார்கள். கை நிறைய ஸ் ரே லிங் பவுணி ஸ"டன் ஒருவர். மற்றவரின் கை நிறையக் கிறடிட் காட்டுகள்.
‘அண்ணை நீங்கள் புதுசோ’?
தமிழ் என்பது தான் முகத்தில் இருக்கிறதே.
‘ஓம்’ * காட் போடுவமோ’? ஏதோ சாமான் போடுவது போல் கேட் கிறார்கள்.
‘’ எனக்குத் தெரியாது உதெல் ’ கமரா 24 மணித்தியாலமும் இயங்கிப் படம் பிடித்துக்கொண்டு இருக் கிறது. எனக்குப் பயம். வந்தவரில் ஒருவர் கள்ளமாக மெசினில் எப்படி கிறடிட் காட்டைப் போட வேண்டும் எப்படிப் பெற்றோல் கணக்கை ஹோல்ட் பண்ணி வைக்க வேண்டும் என்று விலா வாரியாகச் சொல்லி விளங்கப்படுத்து கிறார். ஒரு விசா காட்டை என்னிடம் தந்து விட்டார்.
கிறடிட் காட் மோசடி கிரிமினல் குற்றம். பிடித்தால் கம்பி எண்ண வேண்டும் என்று கெம்பா சொன்னது நினைவில் வந்தது.

ാ ܓ
இண்டைக்குப் புதுசுதானே நிறை யச் செய்ய வேண்டாம். ஒரு அறுபது பவுண்ஸ்க்கு செய்யுங்கோ. முப்பது பவுண்ஸ் உங்களுக்கு 30 பவுண்ஸ் எங்களுக்கு. வாழைப் பழத்தைத் தீத்துமாப் போல் அழகாகச் சொன்னார் வந்தவரில் ஒருவர்.
முதல் கிழமைதான் கள்ளக் காட் போட்டுக் கொடுக்காத பெற்றோல் ஸ்டேஸன் கவழியர் ஒருவரை மண்டை யிலை பிளந்து போட்டான்கள். பய மாகவும் இருந்தது.
இன்று வேலைக்கு வரும் போதே ஒரு தண்டம். 101 பஸ்ஸில் வரும் பொழுது மனோ பார்க்கில் இருந்து Army & Navy gal600ńlas ab 60DL g5 T60ÕTLọ வந்தவுடன் ஒரு தாயும் மகளும் பஸ்ஸில் ஏறினார்கள். தாய் கண்ணாடி போட்டிருந்தாள். மகள் எனது சீட்டுக்கு முன் சீட்டில் சிரித்துவிட்டு உட்கார்ந் தாள். தாய் எனக்கு அருகில் உட் கார்ந்தார். ஈஸ்ட்ஹம் ஸ்டேஸன் பஸ் ஹோல்டில் நான் இறங்கும் பொழுது தாயின் மூக்குக் கண்ணாடி எனது கை களால் தட்டுப்பட்டுக் கீழே விழுந்து விட்டது. நான் 'சொறி” சொன்னேன். மகள் சன்னதம் ஆடினாள். கண்ணாடி வாங்கித் தா என்றாள். பொலிஸைக் கூப்பிடுவேன். என்றாள். இப்படி இழுபறிப் பட்டு எனது பேர்ஸில் இருந்து 40 ஸ்ரேலிங் பவுண் ஸ்களைப் பிடுங்க விட்டாள். அது மட்டும்தான் பொக் கட்டில் இருந்த பணம்.
கிறடிட் காட்டை எப்படி லாவகமாக செய்கிறார்கள். கள்ளமாக கிறடிட் காட் செய்பவர்களிடம் இருபது முப்பது காட் இருக்கும். ஒரு இரவில் இருபது பெற்
பின்னர்
றோல் ஸ்டேஸண் களாவது கவர் பண்ணுவார்கள். தமிழர்கள் வேலை செய்யும் ஸ்டேஸன்களாகப் பார்த்து அவர்களுக்கு அதைப் பற்றி விளங்கப் படுத்தி ஆசையூட்டிக் கள்ள வியாபாரம் செய்கிறார்கள். செய்ய வேண்டியது இவ் வளவு தான். ஐம்பது அறுபது பவுண்ஸ் களுக்கு யாராவது பெற்றோல் டீசல காசுக்கு அடித்தால் காசை வாங்கி Till இல் போட்டு விட்டு மெசினில் ஹோல்ட் பண்ணி வைத்து விட்டுப் ஆட்கள் இல்லாத நேரம் அதனை Cash மெசினுக்கு எடுத்துக் கிறடிட் காட்டை இழுக்க வேண்டியது தானி காட்டில இருந்து Cash மெசினுக்குப் பணம் பதிவாகிவிடும் ஏற்கனவே வாங்கிப் போட்ட காசை எடுத்து விடவேண்டியதுதான். கள்ளக் காட்டில் இருந்து கணக்குச் சரியாகி விடும். காசு அரைவாசி அவருக்கு. அரைவாசி கவழியருக்கு.
குளிர் தாங்க முடியவில்லை மைனஸ் பயங்கரக் குளிர். வெள்ளைக் காரர்களுக்கு கிறிஸ்மஸ"க்கு பனிப் பெய்வது வலு புழு கம். அதனை ‘‘வைற் கிறிஸ்மஸ்” என்று அழைத்து குதுாகலிப்பார்கள். தாங்க முடியாத குளிருக்குச் சிகரட்தான் தஞ்சம். சிறி யவர். பெரியவர் என்று சிகரட்டில் மூழ்கி இருப்பர். இரவில் பெற்றோல் ஸ்டேஸன் கதவு மூடித்தான் இருக்கும். சாமான் கொடுக்க எடுக்க ஒரு ஒட்டை இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் ஒருவர் வந்து சிகரட் கேட்டார். 50 பென்ஸ் குறைவு ஒரு பெட்டிக்கு. தர முடியாது என்று விட்டேன். அவர் கையில் இருந்த பியர் கானிலுள்ள பியர் முழுவதையும் அந்த
ஒட்டையில் ஊற்றி விட்டார். பிறகு ஒரு
27

Page 16
ஜொக்கினால் அள்ளி வெளியில் ஊற்றி துடைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.
கிராமப் பக்கங்களில் பெற்றோல் ஸ்டேஸன்களில் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம், பிளட் வீடுகளில் இருக்கும் காவாலி கடபபிளிகள் வந்து ஒரே கரைச்சல் தரும். காசு இல்லாமல் சிகரட் , சொக் லட் கேட் பார்கள் கொடுக்கா விட்டால் கண்ணாடியில் துப்பி விடுவார்கள். பிறகு அதனைத் துடைக்க வேண்டும்.
ஒரு பெணி வந்து கஷரியர் ஒட் டைக் குப் பக்கத்தில் வந்து நிற்கிறாள்.
‘ என்ன?”
‘பென்ஸன் 10 தா” கொடுத்தேன்.
‘தீப்பெட்டி ஒன்று” கொடுத்தேன் சிரித்தாள்.
‘இதில் வைத்து பத்தாதே. இது
பெற்றோல் ஸ்டேஸன்”
'எனக்குத் தெரியும்’ “குளிருது. இன்று சரியான குளிர் கதவைத் திறக்கிறியா’
அவள் மார்புகளை நசித்துக் காட்டுகிறாள். கொஞ்சம் போதையாக இருப்பாள் போலத் தெரிகிறது.
‘உள்ளே வரவா’
‘கதவைத் திறப்பதற்கு எனக்கு அனுமதி இல்லை.” லேசாக வெண்மை
யான அவளது மார்பகத்தை வெளிப் படுத்திக் காட்டுகிறாள். கண்ணடிக்
28
கிறாள். வலது கை ஆட்காட்டி விரலை தனது வாயில் வைத்துச் சூப்பிக் காட்டு கிறாள். குளிர் பேய்க் குளிர். இந்த நேரத்தில் இவள் யார்? சிலவேளை யாராவது செற் பண்ணிக் கதவைத் திறக்கச் செய்து கொள்ளையடிக்க வரு கிறார்களோ? நாவால் அவளது சிவந்த உதடுகளை ஈரப் படுத்துகிறாள் என்னைப் பார்த்தபடியே.
ஒரு பெற்றோல் ஸ்டேஸனில் இரண்டு பேர் வந்து அவசரமாக மல கூடம் போக வேண்டும் கதவைத் திற என்று கஷியரைக் கேட்டிருக்கிறார்கள். ஒரு பெண் மற்றது ஆண். பாவப்பட்டு இரவு நேரம் என்று கவழியர் திறந்த வுடன் ஒருவர் கதவைப் பிடித்து கொண்டு நிற்க, மற்றவர் பிஸ்ட்டலைக் காட் டிப் பயமுறுத் தி அன்றைய கலக்ஷன் பன்னிரண்டாயிரம் பவுண் களை அள்ளிக் கொண்டு போயப் விட்டனர். பயமாய் இருந்தது இரவு நேரம் அவளைப் பார்ப் பதைத் தவிர்த்துக் கொண்டேன்.
குளிரிலும் உடம்பு சுட்டது. அவர் கள் தந்து விட்டுப்போன கிறடிட் காட் பொக்கட்டில் கிடக்கிறது. அனேகமான தமிழ் ஆக்கள் பெற்றோல் ஸ்டேஸனால் தான் உழைத்தார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதன் முழு சூட்சுமமும் எனக்குத் தெரியாது. பென்ஸ் கார், வீட்டுச் சாமான், எலக் ரோனிக் பொருட்கள் வசதியான வாழ்க்கை என்று பலருக்கு கிறடிட் காட்டுகள் வசதி வாய்ப்பை வழங்கி யிருக்கின்றதாம். ஆனால் பாவி போன இடம் பள்ளமும் திட்டியும் தானே.

geois
ஒரு முறை முதலாவது பெற்றோல் ஸ்டேஸனில் வேலை செய்யும் பொழுது ஒரு ஆபிரிக்கப் பெண்மணி ஹ"ட் உயர்ந்த லொறி ஒன்றை ஒட்டி வந்தாள். பம்பைத் துாக்கிப் பெற் றோலை "ஒன் பண்ணு என்று அடம் பிடித்தாள். இரவில் காசு வாங்கி விட்டுத்தான் பெற்றோல் கொடுக்கும் வழமையைச் சொன்னேன்.
ஆபிரிக்கக்காரி என்னைக் கறுப்பன் என்று திட்டினாள். பின்னர் ‘பாக்கி’ என்று திட்டினாள் பாக்கி’ என்பது ஐரோப் பியர் திட்டுவதற்கென்றே பாவிக்கும் சொல். பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கையைச் சேர்ந் தவர்களை இப்படிச் சொல்லித் திட்டு வார்கள்.
நான் உறுதியாகச் சொன்னேன் பம்பை ஒன் செய்யமாட்டேன். லிவரைத் துாக்கிப் பம்பில் ஓங்கி அடித்தாள். நான் எதிர்பார்க்கவில்லை அந்த உயர்ந்த லொறியால் கொண்டு வந்து கவியர் கூட்டை இடித்தாள் நான் எலாமை அழுத்தினேன். பொலிஸ் வந்தது.
கெம்பா ஒரு முறை இரவு நேரம்
வேலை செய்யும் போது தனது காதலி யையும் கூட்டி வந்திருக்கிறார். காதலி
யோடு இரவில் வேலை செய்து பார் வலு சோக்காக இருக்கும் என்று கெம்பா சொன்னார்.
அவள் வெளியில் நின்றபடி என்
னிடம் கேட்டாள் உன்னோடு ‘செக்ஸ்” செய்ய எனக்கு விருப்பமாக இருக் கிறது. உனக்கு என்னோடு செக்ஸ் செய்ய விருப்பமா?
கள் எல்லாம் இருக்கும்.
இல்லை. இல்லவே இல்லை. எனக்கு அந்த மூட் இப்பொழுது இல்லை. அதற்கான வசதியான இடமும் இது இல்லை.
அவள் ஒரு ஏமாற்றத்தோடும் வெறுப்போடும் தோளைக் குலுக்கிவிட்டு வலது பக்கமாக நடந்து போகிறாள். நேரம் இரவு 12.35
பெற்றோல் ஸ்டேஸனுக்கு அருகில் உள்பிளட்டில் இருந்து ஒரு கென்யா நாட்டவர். அவர் எப்பொழுதும் ஒரு
பென்ஸ் , இரண்டு பென்ஸ், ஐந்து பென்ஸ்,
பத்து பென்ஸ் சில்லரைகள் தான் கொண்டு வருவார். பிச்சை எடுப்பவர் போல.
பொலு பொலுவென்று Cash கவுண் டரில் ஒட்டைக்குள்ளால் சில்லரையைக் கொட்டுகிறார். சில நேரம் எரிச்சல் வரும். ஒவ்வொன்றையும் வேறாக்கி எண்ண வேண்டும். சந்தடிச் சாக்கில் இருபத்தைந்து பென்ஸ் ஐம்பது பென்ஸ் குறைத்து விடுவார்கள். ஒவ்வொரு பென்ஸ"ம் பெறுமதி. ஒரு பென்ஸ் அதாவது ஒரு சதம் இலங்கையில் 2 ரூபா பெறுமதி.
முதல் முதல் பெற்றோல் ஸ்டேஸ னுக்குப் வேலைக்குப் போகிற பெடியன் களுக்கு எதைக் கண்டாலும் அவா. பெற்றோல் ஸ்டேஸனிலை தின்பண்டங் மாஸ் , ஸ்னிக்கர் Twix போல பல வகைச் சொக்லேட்டுகள், எல்லாக் குளிர்பானங் கள், பிஸ்கட் வகைகள் என்று ஒரு மினி சுப்பர் மார்க்கட்டே இருக்கும். அங்கு போய்ப் பார்த்தவுடன் எல்லா வற்றையும் தின்னத்தான் ஆசையாக
25)

Page 17
இருக்கும். இரவு ஸிப்ட்காரருக்கு நல்ல வேட்டை. நல்லாச் சாப்பிடலாம். நான் இரவு நேர ஸிப்டில் எல்லாச் சொக் லட்டு வகைகளையும் சாப்பிட்டு, எல்லா பிஸ் கட் வகைகளையும் சாப்பிட்டு அலுத்து விட்டது. இப்பொழுது கூட மாஸ் சொக்லெட்டைப் பார்ப்பதோடு சரி. அவா இல்லாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. பிறகு இரவு நேர ஸிப்டில் குளிர் பானத்தில் Red Bul மட்டும் விருப்பமாகக் குடிப்பேன். இப்பொழுதும் அந்தப் பழக்கம் இருக் கிறது.
பெற்றோல் ஸ்டேஸனில் Till வேலை வலு கவனமாகவும் உசா ராகவும் இருக்க வேண்டும். வேண்டு மென்றே ஏமாற்றுபவர்கள் வருவார்கள்.
கிறிடிட் காட் தந்தவர்கள் வரப் போகிறார்களோ என்ற பயம் ஒரு பக்கம். வந்தால் வரட்டும்.
கறுப்பு நிறத்தவர்கள் வந்தாலே பயம் தான் ஒ. ஆ. என்று கத்துவார்
டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது.
தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள் மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும்
ygger
கள். காலையில் வேலைக்குப் போகும்
போது பெற்றோல் அடித்துக் கொண்டு
போக வரிசையாக அலுவலர்கள் நிற் பார்கள். பெரிய கியூ வரிசையாக இருக் கும் திடீரென்று ஒரு ஆபரிக்கனோ, கென்யனோ சில்லரையைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு சிகரட், சொக்லட், கேட்டுக் கொண்டிருப்பான். தாங்க முடியாமல் கோபம் வரும். எரிச்சலை வெளியில் காட்டிக் கொள்ள முடியாது அவனைச் சமாளிக்க வேண்டும்.
என்னிடம் கிறடிட் காட் தந்தவர்கள் வருகிறார்கள். அவர்கள் தமிழர்கள். ஒவ்வொருவரும் கள்வர்கள்.
காரைப் பத்தாம் நம்பர் பம்புக்கு அருகில் நிப்பாட்டி விட்டு லிவரை ஒருவன் துாக்கினான் பெற்றோல் அடிப்பதற்கு.
சிவிலில் வந்த பொலிஸ் காரொன்று அவர்களைச் கொண்டது.
சுற்றி வளைத் துக்
 
 

விளையாட்டுப் பொருட்கள் که K? 26 வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன. ?) ገI
எத்தனை தடவைகள் அடுக்கி வைத்தாலும்
அலங்கோலமாக்கி விடுகிறாள்
அன்பு மகள்
இப்போதெல்லாம் இரைந்து கிடக்கின்ற பொருட்களை அடுக்குவதில்லை
அலங்கோலமாக இருப்பது கூட
அழகுதான் அர்த்தப்படுத்தியது என் மகளின் பிஞ்சு விரல்
O
விளையாட்டாகக் Sral
விடை தெரியாத கேள்விகளுக்குப் பதிலளிக்கப் பயமாக இருக்கிறது கிளை விட்டுப் பறந்த பறவைகள்
இருந்த இடத்திற்கே மறுபடியும் வந்தமர்வது கூட
ஆச்சரியமாக இருக்கிறது
ॐ ଏ୯ శస్త్రచీ sy x: 姿然/4 KS
S.
LD6sfls0)& Lméé)
மின் கட்டணம்
நீர் வரி
மாதா மாதம் மல்லுக்கட்டி ஓடுகிறது வாழ்க்கை
நிரந்தர தொழிலில்லாதவனுக்கு நிலையானது எது நிரந்தரமானது எது நிம்மதியே ஏது?
O
31

Page 18
வீட்டில் மிக
சன்னல்
காற்று வர காட்சி ரசிக்க
சன்னலில்லா வீட்டில் நிலவு
O
கடலும்
ஒரு செடிதான் நுரைப் பூ பூக்கும்
O
சர்டு காட்டில்
இரு உருவங்கள் பிணங்கள் தோண்டிக் கொண்டிருந்தன
மற்றது இறைவன்
இங்கே என்ன செய்கிறீர்கள்?
இறைவன் சொன்னான் மனிதனைத் தேடுகிறேன்
32
DAUGSGEB
மனிதன் சொன்னான் இறந்து இறைவனாகிய மனிதனைத் தேடுகிறேன் இறைவன் வசப்படுவானென்று
O
வாங்கி வாங்கிக் குவித்துள்ளதை வாசிக்கத்தான் நேரத்தைக் காணோம்
எழுதியதெல்லாம் எதுக்கப்பா எதுக்கப்பா யப்பா யப்பா
யப்பா யப்பப்பா
ஏரோடு விவசாயி
சோத்துக்கு மட்டும்
OOO
 

டொமினிக் ஜீவாவின் மல்லிகைக்கு இன்று வயது நாற்பது
பராசக்தி. சுந்தரலிங்கம் (அவுஸ்திரேலியா)
'மல்லிகை" ஏடு பற்றி அறியாத ஈழத் தமிழர் இன்று இருக்க முடியாது.
40 ஆண்டுகளாக ஜீவா என்னும் தனிமனிதன் இந்த மல்லிகைச் செடியைப் பாதுகாத்து, இதை ஒரு பெரிய கொடியாக வளர்த்துப், பந்தலாக்கி, பூமிப் பந்திலே இன்று நறுமணம் கமழப் படர விட்டிருப்பது, ஈழத் தமிழருக்குப் பெருமையான விஷயம்.
"இந்த நாற்பது ஆண்டுகள் என்பது சும்மா இலேசுப்பட்ட காலமல்ல."
"இந்தக் காலகட்டத்திற்கு மல்லிகை கொடுத்து வந்துள்ள பாரிய விலையும் வார்த்தைகளுக்குள் அடக்கிச் சொல்லக் கூடியதல்ல."
அவர் மேலும் கூறுகிறார் :-
"ஒரு சலூன் தொழிலாளியால், ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அந்தச் சிறப்பிதழ், தனது 40வது ஆண்டையும் மலர் வெளியிட்டுக் கொண்டாடிக் களித்தது என்ற உண்மையைப் பகிரங்கமாக இந்தத் தமிழ் உலகிற்குச் சொல்லி மகிழும் எனத் திடமாக நம்புவதாலேயே, எழுத்தில் இந்தக் கருத்துக்களை ஆவணப்படுத்தி வைக்கிறேன்."
இது, அந்த சலூன் தொழிலாளியின், அந்த இலக்கியக் கர்த்தாவின் தர்மக்குரல். இந்த உண்மை ஒளியில் நாமும் கலந்து விடுகிறோம்.
தனிமனிதனாக, ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிடத் த்ான் பட்ட துன்பங்களையும், தனது சாதி காரணமாகச் சமூகத்தில் தான் சந்தித்த எதிர்ப்புகளையும் அவர் வேதனையோடு நினைவு கூரும்போது, எமக்கும் வேதனை ஏற்பட்டாலும், இவைதான் இன்று மல்லிகைக்கு உரமாக, பலமாக இருப்பதை உணர முடிகிறது.
33

Page 19
'இந்தச் சமூகம் என்மீதும், மல்லிகையின் மீதும் எத்தனைக் கெத்தனை கசப்புகளை அள்ளியள்ளி விசியதோ, அத்தனைக்கத்தனை ஆனந்த மயமான மனிதர்களையும் என்னை
நோக்கி ஈர்க்கச் செய்கம் உதவியது"
என்று தன்னை அணைத்த நண்பர் களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஜீவா நன்றி கூறுகிறார்.
இனி மலரைப் பார்ப்போம்.
ஆண்டு மலர் ஒன்றுக்கு இருக்க வேண்டிய பரிமாணம், கனம் இந்த மலருக்குச் சற்று அதிகமாகவே உள்ளது. இது சுமந்து, வந்திருக்கும் விஷயங் களைப் பார்க்கும்போது, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இந்த மல்லிகை மலர் சிறந்ததோர் ஆவணமாக விளங்கும் என்பது நிச்சயம்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம், வரலாற்று ஆய்வு, மொழிபெயர்ப்பு என எழுத்தின் பல பிரிவுகளையும் தாங்கி நிற்பது இதன் தனிச் சிறப்பு. அனுபவ முதிர்ச்சி பெற்ற இலக்கிய கர்த்தா ஒருவராலேயே இத்தகைய சிறந்த தொகுப்பை படைக்க
முடியும் என்று ஜீவா நிரூபித்து விட்டார்.
சாந்தன், பவீர், குந்தவை, அன்ன லெட்சுமி, கந்தராஜா, முருகானந்தம், செங்கைஆழியான், தெணியான், சட்ட நாதன் போன்ற படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஒவ்வொன்றிலும் மனதை விட்டகலாத கதைக் கருவையும், தனித்து வமான மொழிநடையையும் ரசித்து, அனுபவிக்க முடிகிறது.
34
சட்டநாதனின் 'பொழுது' மனதிலே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சிறுவன் ஒருவனின் வாழ்வில் 'ஒருநாட் பொழுது பற்றிய சிறுகதை. ஆசிரியர் இதை நகர்த்திச் செல்வது, அழகிய குறும் படம் ஒன்றைப் பார்ப்பது போலுள்ளது. காலையில் எழுந்தது முதல் அவன் தன் வீட்டுப் பசுக்கன்றோடும், மற்றும் வளர்ப்பு முயல், புறாக்களோடும் விளை யாடி மகிழ்வதும், பின்னர் வயல்வெளி யிலும் தோட்டத்திலும் குருவிக் கூட்டில் முட்டைகளை வருடிப் பார்த்து அதிசயிப் பதும், நாகதாளிப் புதரிலே பழம் பறிக்கும் ஆவலில் அந்தப் பிஞ்சு ஆபத்தில் சிக்குவதும்தான் கதை. அன்றைய பொழுது அந்தச் சிறுவன் சந்திக்கும் மனிதர், அப்பொழுது அந்தப் பிஞ்சு உள்ளத்திலே ஒடும் எண்ணங்கள் மூலம் மனித உறவுகளை, மனித உணர்வு களை ஆசிரியர் மிக யதார்த்தமாக, நளின மாக, விரசம் இல்லாமல் விபரிப்பதை அந்தத் துன்பியலிலும் அனுபவித்து ரசிக்க முடிகிறது.
வெளிநாடு ஒன்றிலே அவலங் களைச் சந்திக்கும் ஒரு தொழிலாளியை, சக தொழிலாளி ஒருவன், அதுவும் வேறு நாடொன்றைச் சேர்ந்தவன் காப்பாற்றி, 'மனிதம் வாழ்கிறது" என்று மானிடத்தின் பெருமையை உணர்த்துகிறது பஷிரின் "பொறி". கொட்டை பற்றிய கதையில் நல்ல
கந்த ராஜாவின் புளியங்
நகைச்சுவையையும், அதேசமயம் "சீதனம்" பற்றிய ஆழமான சமூகப் பார்வையையும் பார்க்கிறோம்.

இன்று நம் சமூகத்தில், முதியோர் படும்பாட்டை 'எட்டுவிட்டுச் செலவுக்கு" வரும் முதியவர் ஒருவரின் ஆவி கதை சொல்வது போல, ஒரு புது உத்தியைக் கையாண்டு அன்னலெட்சுமி 'மாய தரிசனத்தில் விபரிக்கையில், 'காவோலை லிழக் குருத்தோலை சிரித்த முதுமொழி நினைவுக்கு வந்தது. மனச்சாட்சியை உலுக்கும் இக்கதையைப் போலவே செங்கை ஆழியானின் கதை குந்தியிருக்க ஒரு குடிநிலமும்’ எம்மைப் பாதித்து விடுவதை உணர்கிறோம். விதானையார், பிரதேசச் செயலாளர் என்னும் யந்திர மனிதரிடம், மழைக்கு ஒழுகும் கூரைக்கு, தறப்பாளுக்காக யாசிக்கும் ஒரு மானஸ்தன், பொறுமையிழந்து கத்து வதைக் கேட்கிறோம்.
"இந்தச் சமாதானம், பேச்சுவார்த்தை எதுவும் எங்களுக்கு வேணாம். எனக்கு என்ர மாவிட்டபுரம் வேணும். அங்க என்ர வளவு வேணும். இவங்க ஒரு போதும் தரப்போவதில்லை. நாங்களாகத் தான் எடுத்துக்கொள்ள வேணும். நாங்கள் ஒருவரல்ல. அறுபதினாயிரம் பேர். எங்கட பிரதேசத்தை மீட்டுத் தாருங்கோ'
இதைக் கேட்கும் நாமும் உடைந்து போகிறோம்.
தெணியானின் ‘தீண்டத்தகாத வனில் கோயில் மனேஜரின் நாட்டாண் மையால் பாதிக்கப்பட்ட பிஞ்சு நெஞ்ச மொன்று பெரியவனான பின்னும், அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிப்பதை ஆசிரியர் மிக நுட்பமாகக் கையாளுவதைப் பார்க்கிறோம்.
கோயில்கள் பொதுச் சொத்து என்ற எண்ணம் நமக்கு எப்பொழுது வரப் போகிறது என்ற கேள்வியை, ஆசிரியர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுப்பி விடுகிறார். இக்கதையிலே, இறைவன் சன்னிதியில் ஏழைக்கொரு நீதியையும், பணக்காரருக்கு ஒரு நீதியையும் பார்க்க முடிகிறது.
"வானம் வசப்படும் ' என்ற முருகானந்தத்தின் எழுத்திலே வரும் ஆண் பெண் உறவின் ஆழம் சிந்திக் வைக்கின்றது. இப்படியே பல கதைகள் இம்மலரை அலங்கரிக்கின்றன. மானிட அவலங்களை, மனித உணர்வுகளைப் படைப்பிலக்கிய கர்த்தாக்கள் யதார்த்த மாகவும், நுட்பமாகவும் எழுத்திலே வடித் திருக்கிறார்கள்.
புதுவை இரத்தினதுரை பல ஆண்டு களாகக் கவிதைப் படைத்து வருகிறார். அன்று எப்படி எழுதினாரோ, இன்றும் அப்படியே எழுதுகிறார். இப்படியான ஒரு சிறந்த கவிஞர், ஈழத்துக் கவிஞர்கள் பற்றிய சமீபத்திய இரண்டு தொகுதிகளில் ஏன் இடம்பெறவில்லை என்று பூரீ பிரசாந்தன் கேள்வி எழுப்புகிறார். அன்று புதுவையார் எழுதிய கவிதைகளையும், இந்தத் தொகுதிகளிலுள்ள கவிதை களையும் ஒப்பிட்டு அவர் நியாயம் கேட் கிறார். அவருடைய கேள்வியில் நீதியின்
குரலைக் கேட்கிறோம். இன்றைய கால
கட்டத்தில் மல்லிகையில் இக்கேள்வி எழுப்பப்பட்டது மிகப் பொருத்தம்
என்றே கருத வேண்டும்.
தரமான பல கவிதைகளை இம் மலரிலே பார்க்கிறோம். கம்பவாரிதி ஜெய
35

Page 20
ராஜின் 'கிணற்றுத் தெளிவு" மனித உணர்வுகளை மிகத் துல்லியமாக விபரிக் கிறது. ஒரே குடும்பத்தில் இறுக்கமான பாசப் பிணைப்பில் வளரும் சகோதரர், வளர்ந்த பின் அவரவர் குடும்பச் சூழலால் ஒருவரை ஒருவர் பசைப்பதையும், புலம் பெயர்ந்து தூர தேசங்களில் பிரிந்து வாழும் போது, அவர்களிடையே பாசம் மீண்டும் துளிர்ப்பதையும் புரிய முடி யாமல் தவிக்கும் ஓர் உள்ளத்தை இந்தக் கவிதையிலே சந்திக்கிறோம். "கிணற்று நீர் தெளிந்தது போலத் தெரிந்தாலும், அதனடியிலே சேறு இருக்கத்தான் செய்யும்” என்று இந்த உறவை ஆசிரியர் உருவகப்படுத்துகிறார்.
"பகையிலும் பொய் இல்லை
உறவிலும் பொய் இல்லை" என்று பெரியதொரு வாழ்க்கைத் தத்துவத்தை அவர் கூறும்பொழுது, நாமும் ஆறுத லடைகிறோம்.
மேமன்கவி, சபா ஜெயராசா, வசந்தி ஆகியோர் தமிழின் இன்றைய நிலையை ஆராய்கின்றனர். இவர்களது கட்டுரைகள் ஆழமான விமர்சனப் பார்வையுடன் கூடியவை. அவர்கள் கூறும் ஆலோ சனைகள் ஆக்கபூர்வமானவை.
“நம் நாட்டிலே உடலையும் உயிரை யும் தமிழுக்காக அர்ப்பணம் செய்கின்ற இளைய தலைமுறையினர் மத்தியில், உல்லாசமாகத் தமிழைக் கூறுபோடுபவர் களை, உணர்வு செத்தவர்களை என் னென்பது?. தமிழுக்குச் 'செம்மொழி' அந்தஸ்தைக் கொடுத்து சிம்மாசனத்தில் அமர்த்தினால் மட்டும் பயனில்லை. தமிழ்
3G
சிதைவுறாது காக்க வேண்டும். அதன் தனித்துவமும், நவீனத்துவமும் ஒருங்கே பேணப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் வளரும்' என்கிறார் வசந்தி.
ஈழத்துக் கவிஞர் மஹாகவி ருத்திர மூர்த்தியின் கவிதைகள் தனித்துவ மானவை. 'மறுமலர்ச்சி" இதழிலே வந்த, இந்தக் கவிஞனின் படைப்புகளை, சுதர்சன் மல்லிகையிலே மீண்டும் பிர சுரித்து, அவற்றை விமர்சித்து இருப்பது, பலருக்கு நல்லதொரு மீள்வாசிப்பு ஆகிறது. மஹாகவியின் கவித்துவத்தை உணர வைப்பது இன்றைய தேவை.
"சன்னல்களைச் சாத்திய சனமெல்லாம் உறங்கிட சலனமற்ற ராவில் இரு சமமாகவும் அட! என்ன புதுமையில் இங்(கு) எத்திசையும் மெளனியாய் எழில் சிறந்திருக்குது ஆறுதல் கொடுக்குது' என்று இரவின் புதுமையில் அழகைக் காண் கிறார் மஹாகவி.
இக்பால், திக்குவல்லை கமால், ஆப்டீன் ஆகியோர் தமது முஸ்லிம் சகோதர எழுத்தாளர் பற்றியும் அவர் ஆக்கங்கள் பற்றியும் கூறுகிறார்கள்.
தமிழிலக்கியம், தமிழ்க் கலைகள், கலைஞர் பற்றி ஆங்கிலப் பத்திரிகை களில் எழுதும் கே.எஸ்.சிவகுமாரனின் கட்டுரை, விவரணப் படங்கள் பற்றிய தம்பிஐயா தேவதாஸின் ஆக்கம், புதுக் கவிதை படைத்த அமெரிக்க எழுத்தாளர் Gurcül GS) udaör (Walt Whitman) ujg5)

666) অ
ஆ. கந்தையாவின் ஆய்வு, மற்றும் மார்ட்டின் விக்கிரமசிங்க, குஷ்வந்த் சிங் ஆகியோரின் கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியன மல்லிகை மலருக்கு மெருகூட்டுகின்றன.
“தொண்ணுாறுகளில் ஈழத்து இலக்கி யத்திலே தோன்றிய புதிய அலை என்னும் தலைப்பில் செ.யோகராசா போராளிக் கவிதைகள், கதைகளை ஆராய்கிறார். இந்த அலையின் வீச்சை, விடுதலை வீரரின் மூச்சை மல்லிகையில் பதிய வைப்பது வரவேற்க வேண்டியது. இந்தப் புதிய அலை, ஈழத் தமிழ் இலக் கியத்திலே பெரிய பாதிப்பை இன்று ஏற்படுத்தியிருப்பதை இலக்கிய உலகம் உணர்ந்திருக்கிறது. மலரவன், அம்புலி, மலைமகள் ஆகியோரின் படைப்புகளை யோகராசா ஆராய்கிறார்.
"தமிழீழப் போரரங்கில் ஒய்வெடுக் கவும் நேரமின்றி எப்போதும் விழித் திருக்கும் என் தோழிகள் பேசப்படாதவர் களாகப் போய்விடுவார்களோ என்ற பயத்தினாலேயே நான் எழுத முனைந் தேன்’ என்று கூறுகிறார் மலைமகள்.
பால் போன்ற குளிர் நிலவு,
போராளிக்குக் கசக்கிறது.
"நிலவே மறைந்து விடு உலவுவதற்கும் குலவுவதற்கும் இதுவா நேரம்.?
எனது மண்ணைச் சிறை மீட்க இருளுக்குள்ளால் - நான் முன்னேற வேண்டும் நிலவே நீ மறைந்து விடு'
இவை அம்புலி நிலவை நோக்கிப் பாடும் வரிகள். வேறொரு பாடலின் சில வரிகள் இவை.
"காயமுற்றுக் கிடந்தேன் நான் இரத்தம் பெருகி இறந்து விடுவேன் போலும் முதற் கள அனுபவத்தின், பக்குவமின்மையால் உடல் பதறிற்று அம்மாவை ஒருமுறை நினைத்துக் கொண்டேன்"
உயிரோட்டமுள்ள இவ்வரிகளில் விடுதலை வீரரின் மனவேதனையையும், உடல் வேதனையையும் நாமும்
அனுபவிக்கிறோம்.
இந்தப் போராளிகளுக்கு உணவின் சுவை ஒரு பொருட்டல்ல. உணவைப் பற்றிய பாடலில் போர்க்களத்திலும் நகைச்சுவை பிறக்கிறது.
“காலையிலே சோறும் கத்தரிக்காயும் மதியம் கத்தரிக்காயும் சோறும் இரவும் சோறும் கத்தரிக்காயும் கத்தரிக்காயைக் கண்டு பிடித்தவன் நாசமாய்ப் போக! - நாவிலுள்ள சுவை மொட்டுகளுக்கெல்லாம் ஒய்வு கொடுத்தோம்"
இது மலைமகளின் வார்த்தைகள்.
மலரவனின் எழுதி முடிக்காத நாவல், அவன் இறந்த பின் அவனது உடைகளுக்குள் இருந்து எடுக்கப்பட்டது.
37

Page 21
இவர்களுடைய படைப்புகள் தனித்துவ
dITGST6).
அமரர், முதுபெரும் எழுத்தாளர் 'சொக்கன்" கோபால நேசரத்தினம் என்னும் நாவல் பற்றி எழுதியிருக்கிறார். இது 20ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலே, திருஞானசம்பந்தப்பிள்ளை என்பவரால் யாழ்ப்பாணத்திலே எழுதப் பட்ட சமூக நாவல். அக்காலத்தில் நிலவிய மதமாற்றம், மறுமணம், பெண் விடுதலை பற்றிய கருத்துகளை இந் நாவலில் பார்க்கலாம். இலகு தமிழில், பேச்சுத் தமிழும் விரவிவர, அனாவசிய "படித்த பாமரர் கேட்டு
வருணனைகளைத் தவிர்த்து, வர்கள் வாசிக்கவும், மகிழவும்" இக்கதையை எழுதியிருக் கிறார், சொக்கன் அவர்கள். இந்நாவலின் சுருக்கத்தையும், இந்நாவல் பற்றிய ஆய் விலிருந்து இது பற்றிய ஒர் விளக் கத்தையும், மல்லிகையிலே தொகுத்துத் தந்திருப்பதால், இன்று பலரும் இந் நூலின் சிறப்புப் பற்றி அறிய முடிகிறது.
புலம்பெயர்ந்து வாழும் ஆண்கள் பலர், சமையல் கலையில் திறமைசாலி களாக விளங்குவதை லெ.முருகபூபதி நளபாகத்தில் நகைச்சுவையாகப் பதிவு செய்கிறார்.
அகதிக் குழந்தைகளுக்கான நிதி சேகரிக்கும் நிகழ்ச்சியொன்றைப் பார்த்து வேதனையடைந்த அருண் விஜயராணி 'மனிதாபிமானம் எங்கே போய்விட்டது?" என்று வசதியாக வாழும் பலரைப் பார்த்துக் கேட்கிறார். 'மனிதம் சாக வில்லை சகோதரி. சுனாமி அனர்த்தத்தின்
38
போது மானிடம் கைகோர்த்து நின்றதைப் பார்த்தோமே" என்று அவரைத் தேற்றத் தோன்றுகிறது.
ஈழத்தில் தனது நாடக அனுப வத்தையும், புலம்பெயர் நாட்டிலே தனது தொலைக்காட்சி அனுபவங்களையும் இரு கலைஞர்கள் மல்லிகை வாசகரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். செல்லக் கண்ணுவின் யாழ்ப்பாண வாழ்க்கையும், கொட்டடிக் குறிப்புகளும் சுவையாக இருக்கின்றன.
ஒரு ஆண்டு மலரைப் பற்றி, இப்படி நீண்ட விமர்சனம் தேவையா இன்னும் எழுதப்படாத பல விஷயங்கள் இம்
என்ற கேள்வி எழலாம்.
மலரை அலங்கரிக்கின்றன. ஒவ் வொன்றுமே தரம் வாய்ந்தவை!
"மல்லிகையின் எதிர்காலம் என்ன?" என்று பலர் தன்னைக் கேட்பதாக 80 வயதை எட்டிக்கொண்டிருக்கும் ஜீவா சொல்வது எமக்கும் கேட்கிறது.
“மக்களால் ஆரோக்கிய உணர்வுடன் நேசித்துப் போற்றப்படும் எந்தச் செயலுமே தொடர்ந்து நடைபெறத்தான் செய்யும்" என்று தமக்கே உரித்தான நம்பிக்கையுடன் அவர் கூறுவதை நாமும் ஏற்றுக் கொள்வோம்.
1966ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம்
திகதி மலர்ந்த முதல் மல்லிகை மலரின்
அட்டைப் படம், 40வது ஆண்டு மலரின்
முதற் பக்கத்தை அலங்கரிப்பது பொருத்த மாக உள்ளது.

8 upaissa)85 তত্ব
"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
ஆதி இணைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டு என்றும் நடப்பவர் பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவர்” என்ற பாரதியின் கவி வரிகள் மல்லிகையின் தாரக மந்திரம்.
இவ்வரிகளுக்கு ஒவியர் ரமணி உயிர் கொடுத்து ஆண்டுமலரின் அட்டையை அலங்கரிக்கிறார்.
உள்ளும் புறமும் கலையம்சத்துடன் விளங்கும் இம்மலர் இலக்கிய உலகில்
தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது.
'மணிக்கொடி காலம்" என்று தமிழ் இலக்கிய உலகிலே சரித்திரம் படைத்த அந்த 'மணிக்கொடிக்கு நிகராக, அதைவிட இன்னும் ஒருபடி மேலென்று சொல்லக் கூடியதாக 'மல்லிகையின் காலம்' என்று சரித்திரம் படைக்கப்பட்டு
விட்டது.
அந்த வகையில் ஜீவா சாதனை
அமரர் எஸ்.வி. தம்பையா சிறுகதைப் போட்டி.
மல்லிகையின் வளர்ச்சிக்கு அபார ஒத்துழைப்பு நல்கியவரும், தொழிலதிபரும், எழுத்தாளருமான மறைந்த எஸ்.வி. தம்பையா அவர்களது ஞாபகார்த்தச்
சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்படவுள்ள தென்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இப்போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் முன்னர் வெளியிடப்படாத படைப்புகளாகவும் ‘புல்ஸ்கப்' தாளில் எட்டுப் பக்கங்களுக்கு மேற்படாமலும் அமைய வேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் 'போட்டிச் சிறுகதை’ என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
முடிவு திகதி : 2005 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது, பரிசுக் கதைகள் தகுந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.
முதற் பரிசு 7000/-
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
யாளன்.
5000/-
3OOO/-
39

Page 22
இரமெதியம (உச்சிப் பொழுதில்) சிங்கள சினிமாத்துறையில் இன்னுமொரு பரிணாமம்
- நாச்சியாதீவு பர்வின்
சீரழிந்து கொண்டிருக்கின்ற சினிமாத்துறையில் மிகுந்த அவதானிக்கத்தக்க யதார்த்தமான படைப்புகளை ஈரான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் திரைப்பட படைப்புகளே, அவ்வப்போது தருகின்றன. தமிழ் சினிமா உலகை எடுத்துக் கொண்டால் வர்ணம் பூசப்பட்ட ஒரு வசீகர வாழ்க்கையைக் காட்டுவதிலே அது குறியாக நிற்கிறது! அந்த வகையில் தென்னிந்தியத் திரைப்படங்கள் வாழ்வியலின் எதார்த்தப் போக்கிலிருந்து நழுவி வெறும் சோடனைகளுடான உலகிற்கு எம்மைக் கூட்டிச் செல்வதில் முன்னிற்கின்றன. இருந்தும் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் விதிவிலக்காக நல்ல பல சங்கதிகளை மக்களுக்கு வழங்குகின்றன என்பதனையும் மறுப்பதிற்கில்லை.
ஈழத்துச் சினிமாத்துறையினை எடுத்து நோக்கின் சிங்கள மொழி மூல சினிமாத் துறைக்கு வலுவான இடமுண்டு. நல்ல பல திரைப்படங்களைச் சிங்கள சினிமா உலகம் தந்திருக்கின்றது என்பதற்கு நிறையச் சான்றுகள் விரவிக் காணப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய பொழுதுகளின் மெய்யான ஒரு சூழலின் பிரசவமாகப் பிரசன்ன விதானகேயின் இரமெதியம (உச்சிப் பொழுதில்) திரைப்படத்தைச்
சுட்டலாம்.
கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி 'இரமெதியம சம்பந்தமான திறந்த கலந்துரையாடலொன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இரமெதியம தயாரிப்பாளர் பிரசன்ன விதானகே உற்படப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சுமார் நாற்பது பேர் வரை கலந்து கொண்டனர். அன்பு ஜவஹர்ஷா, நான் மற்றும் எல்.வசீம்அக்ரம் எனும் பாடசாலை மாணவன் தவிர்த்து மற்றெல்லோரும் சிங்களச் சகோதர்களே அதில் கலந்து கொண்டனர். அந்தக் கலந்துரையாடல் நிகழ்வே இந்தக் கட்டுரை எழுதுவதற்கான அடிப்படைக் காரணமும் ஆகும்.
ஒரேயொரு பழைய முகம் தவிர்த்து முற்றிலும் புது முகங்களை வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும், இரமெதியம ஈழத்தில் கடந்த இரண்டு தசாப்த காலங்களாக நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கும் யுத்தக் கெடுபிடிகளால் அல்லற்படு கின்ற, அல்லல்பட்ட ஆயிரமாயிரம் உயிர்கள் சம்பந்தப்பட்ட அழுத்தமான கதையாகும்.
4O

ウ 666):
யுத்தத்தின் அசுரக் கெடுபிடிகளால் சமூகம் எவ்வாறு தாக்கப்படுகின்றது என்பதை வித்தியாசமான மூன்று தளங் களிலிருந்து நோக்கியுள்ளார் பிரசன்ன விதானகே!
நிஜமாகவே இந்தக் கொடுர யுத்தம் எம் ஈழத்தின் அன்றாட வாழ்வியலின் சமநிலைக்குக் குந்தகம் ஏற்படுத்திய, ஏற் படுத்திக் கொண்டிருக்கின்ற மிகப் பெரிய காரணியாகும். இதன் விளைவு தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று முத்தரப் பினரும் வலுக்கட்டாயமாகத் தமது நிம்மதியான வாழ்க்கையைத் தாரை வார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் துணிச்சலான வெளி யீடே, இரமெதியம’.
மூன்று கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிலையில் நகருகிறது. இந்த மூன்று நிகழ்வுகளும், கதைகளும் நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திப்பது அல்லது நம்மைத் தாண்டிச் செல்வது. ஒருவேளை இந்தக் கதைகளில் ஏதாவ தொன்றில் நாமோ, நாம் சார்ந்த ஒருவரோ இருப்பதாய் மிக நெருக்கமான அருட்டல் உணர்வு படம் பார்ப்பவருக்கு நிச்சயமாய் தோன்றும்.
புலிகள் வடக்கு முஸ்லீம்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களது சுய பிரதேசங்களை விட்டு வெளியேறுமாறு காலக்கெடு விதிக்கிறார்கள். தமது சொத்து, சுகம், சொந்த பூமி என்று எல்லாவற்றையும் விட்டு வெளியேறுவது அல்லது இடம்பெயர்வது எத்துணை துர திர்ஷ்டம் என்பதைச் சுமார் பதினைந்து ஆண்டுகள் கடந்துபோன பின்னர் சர்வ
தேசத்தின் பார்வைக்கு "சினிமா'வாக வெளியிட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். அந்த வகையில், இந்த யுத்தம் தந்த பரிசுகளில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களென எல்லாத் தரப்பினரும் இந்த அவலமான இடப்பெயர்வுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். மிக அழுத்த மாக, ஒரு வரலாற்று ஆவணமாக இடம் பெயர்ந்தவர்கள் பதினைந்து ஆண்டு களுக்குப் பின்னாவது அவதானிக்கப் பட்டிருப்பது சந்தோஷப்பட வேண்டிய சங்கதியாகும்.
பைலட்டாக வேலை புரிந்த தனது கணவன் புலிகளால் கைது செய்யப் பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் யுத்தக் கைதியாக இருக்கும் பொழுதுகளில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து புலி களுக்கும் அரசுக்கும் இடையிலான புரிந் துணர்வை ஏற்படுத்தும் வகையில் டி.வி. யில் ஒரு நேரடி நிகழ்ச்சியில் கலந்து
கொள்ளும் வெளிநாட்டில் வசிக்கும்,
ஈழத்து அரசியல் விமர்சகரை எதேச்சை யாக டி.வி. நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்கிறாள், புலிகளின் பிடியில் சிக்கி யிருக்கும் அந்த பைலட்டின் மனைவி.
இது மெய்யான ஒரு பாத்திரப் படைப்
பாகும். தினமும் நமது சூழலில் தமது கணவனை யுத்தத்தின் ஏதாவது ஒரு விளைவால் பறிகொடுத்த கைம்பெண் களை நாம் சந்திக்கின்றோம். அவர்களின் கனவு, ஆசை, உணர்வு, எதிர் பார்ப்பு
என்பனவற்றையெல்லாம் புதைத்துக்
கொண்டு, மனசுக்குள் எரியும் எரிமலை யைத் தாங்கிக் கொண்டு, வெளியுலகுக்கு ஒரு ஒப்பனை வாழ்க்கையை வெளி காட்டும் ஆயிரமாயிரம் பெண்களில்
41

Page 23
இவளும் ஒருத்தி. தனது கணவனை எப்படியும் புலிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் அவள் அதற்குதவியாக அந்த அரசியல் விமர்சகரின் உதவியை நாடுகிறாள். ஆரம்பத்தில் அதனை மறுத்த அவர் பின்னர் அவளது பிடிவாதத்தால் கழிவிரக்கம் கொண்டு அவளுக்கு உதவ முன்வருகின்றார்.
அடுத்து, வடக்கிலிருந்து விடு முறைக்காக வீடு செல்லும் படை வீரர்கள் தங்கி ஒய்வெடுத்து செல்லும் மத்திய கேந்திர நிலையமாக அநுராதபுர நகரம் இருக்கிறது. இதனால் யுத்தத்தின் பக்க விளைவுகளால் பெரிதும் சமூகம், கலாச் சாரம் என்று எல்லாவற்றிலும் பாரிய முரணான தாக்கத்தைப் பெற்றுவிட்ட நகராக அநுராதபுர நகரம் சித்திரிக்கப் படுகிறது. அது நூறு விகித உண்மையும் கூட. வடக்கிலிருந்து விடுமுறைக்காக வீடு செல்லும் ஒரு இராணுவ படைவீரன் அநுராதபுரத்தில் ஒரு இரவு தங்கிச் செல்ல நினைத்துத் தனது நண்பர்களோடு அந்த புனிதப் பிரதேசத்தில் இருக்கின்ற விபச் சார விடுதியொன்றை நாடுகிறான். அந்த விபச்சார விடுதியில் தனது தங்கையும் பணி புரிவதைக் கண்ணுற்று ஆத்திர மடைகிறான், படைவீரன். அடுத்தடுத்த நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக நகர் கின்றன. எங்கோ கெளரவமாகத் தொழில் புரிவதாக தங்கை கூறியது இதைத்தானா? அவனுக்கு விடைகாண முடியாத பல கேள்விகள்! இந்த மூன் றாவது கதையில் ஒரு துணிச்சலான படைப்பாளியாக பிரசன்ன விதான கேவைச் சுட்ட முடிகிறது.
42
togge);
அநுராதபுரம் சிங்கள பெளத்த சகோதரர்களால் புனித நகராகக் கொள் ளப்படுகிறது. இந்தப் புனித நகரின் எல்லைக்குள் மெய்யாகவே நடக்கின்ற ஒரு அப்பட்டமான உண்மைதான் விபச் சாரம். இதனைத் தத்ரூபமாகப் படம் பிடித்து எமது பார்வைக்கு அல்லது இதனை கண்டும் காணாமலும் மெளன மாக அங்கீகரித்துக் கொண்டிருக்கும் புனித நகரின் மதப் பெரியார்கள், அரச அதிகாரிகள், சர்வதேசம் என்பவற்றின் பார்வைக்கு இனம் காட்ட முனைந் திருக்கும் தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டியவரே!
இனி, பாத்திரப் படைப்புகளின் இடைத் தொடர்பினை நோக்கின் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இதனை கணிக்கலாம். மூன்று கதைகளும் விறு விறுப்பாக நகருகிறது. வெளியேற்றப் படும் அகதிகளில் புடவை வியாபாரி, அவரின் மகன் அரபாத், அரபாத்தின் நாய் இவர்களுக்கான இடைத் தொடர்பு அல்லது நடிப்பு அபாரமாய்க் காணப்படு கிறது. பொதுவாகச் சிறுவர்கள் பிராணி களிடத்தில் மிகுந்த அன்புடையவர்களாக காணப்படுவார்கள். அவ்வாறே அர பாத்தும் தனது பிரதேசத்திலிருக்கும் ஒரு நாய் மீது மிகுந்த அக்கறை காட்டுகிறான். அந்த நாயும் அரபாத்தோடு மிகுந்த அன் பாக நடப்பதை அதன் செயற்பாடுகள் நமக்குச் சுட்டுகிறது. இஸ்லாமியர்கள் நாய் வளர்ப்பதில்லை என்ற மத ரீதியான அனுகலின் போது அது முரண் பட்டாலும், ஜீவகாருண்யப் பார்வையில்
பிரசன்ன விதானகேயின் ஆழமான

ஒ PEGGIE ༥། །
பார்வை அரபாத்தினதும், அந்த நாயி னதும் நடிப்பின் மீது விழுந்திருக்கிறது. மறுப்பதற்கில்லை.
நாம் சொல்ல நினைக்கும் விட யத்தை விரைவில் ஜனரஞ்சகப்படுத்த வேண்டுமெனில் அதற்கான மிகச் சிறந்த ஊடகமாகச் "சினிமா'வை குறிப்பிடலாம். அந்தளவுக்கு சினிமாவின் பக்கம் மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர் என்பதைப் பிரசன்ன விதானகே புரிந்து வைத் துள்ளார் போலும்.
'இரமெதியம" பற்றி அநேகமான
சிங்களப் பத்திரிகைகள் ஆரோக்கியமான
அலசல்களை மேற்கொண்டிருக்கின்றன. முற்றிலும் காத்திரமான ஒரு படைப்பை விடவும், மூன்றாம் தர "செக்ஸ்’ படங் களுக்கே தமிழ் ஊடகங்கள் அதிக இடம் வழங்குவது கவலைக்கிடமான விடய மாகும். படைவீரன், அவனது தங்கை, வெளிநாட்டு அரசியல் விமர்சகன், கணவனை மீட்கத் துடிக்கும் பெண் என உயிரோட்டமுள்ள பாத்திரப் படைப்பு களே, 'இரமெதியம"வில் மிளிர்கின்றன.
எப்படியோ, யுத்தத்தின் பக்க விளைவுகளை இன்றைய ஈழம் அது பவித்துக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனைச் சினிமாவுக்குரிய அதே பாணி யில் முற்றிலும் இரசிக்கத்தக்க விதத்தில் படமாக்கியிருக்கிறார் பிரசன்ன விதானகே. V,
இன்னொரு விடயம் இரமெதியம' வில் தெளிவு படுத்தப்படவில்லை என் பதும் இங்கு சுட்ட வேண்டியது அவசிய மாகும். தமிழ் தரப்புகளின் குறிப்பாக
விடுதலைப் புலிகளின் போராட்டத்திற் கான தெளிவான, நியாயமான காரணங் கள் 'இரமெதியம"வில் காட்டப்பட வில்லை. ஏலவே, பல திரைப்படங்களில் இது புடம் போடப்பட்டிருப்பதால் அது தவிர்க்கப்பட்டிருக்கலாம். இருந்தும், புலிகளின் பக்க நியாயங்களையும்
இரமெதியம தொட்டிருக்கலாம்.
இரமெதியம? இன்று நாடளாவிய ரீதியில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, இந்தக் கட்டுரையில் மேலோட்டமான ஒரு பக்க வாட்டுப் பார்வையை மட்டுமே தரு கிறேன். வாசகர்கள் இரமெதியம"வைப் பார்க்கும் போது அதன் இரசனை குன்றா மலிருப்பதே இதற்கான மிக முக்கிய காரணமாகும். மல்லிகை வாசகர்களும் இரமெதியம'வைப் பார்த்துத் தமது சினிமா தொடர்பான ஆளுமையை விருத்தி செய்தி கொள்ளலாம்.
கணவனை எப்படியும் தேடியாக வேண்டும் என்ற பிடிவாதத்தில் அல்லது அவன் மீதான அளவு கடந்த அன்பில், அல்லது கணவனின் வீட்டார் தம்மீது இட்டுக்காட்டும் பழிச்சொல்லை வலு விழக்கச் செய்வதற்கு அல்லது கண வனைத் தவிர வேறு துணையில்லாமை யினால் எதிர்கால வாழ்வின் மீதான அவ நம்பிக்கையில் அந்தப் பெண்ணின் அழுத்தமான தேடலில் நியாயமே தொனிக்கிறது. யாரைப் பிடித்தாவது, எதைச் செய்தாவது கணவனை மீட்க அவள் முயலும் அந்தப் பொழுதுகளில் அவளின் அபாரமான நடிப்பும் சரி, கதை யோடு ஒன்றும் பாங்கும் சரி பார்வை
43

Page 24
யாளரை நிமிர வைக்கிறது.
மடு தேவாலய மணற் பரப்பில்
தனிமையில் இருவரும் புலிகளின் அழைப்பிற்காகக் காத்திருக்கையில் புலி களின் பக்கமிருந்து வரும் சாதகமற்ற பதிலால் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து நெக்குருகிப் போகும் அவள் அந்த நிமிடத்தில் ஏதோ ஒரு உந்துதலி னால் இருவரும் அணைத்துக் கொள் கிறார்கள். நொடி நேர நீடிப்புத்தான் சுதாகரித்து விலகி விடுகிறார்கள். மனிதன் என்ற மரபிலிருந்து அந்த இரு வரும் மாறுபடவில்லை என்பதை அந்த நிமிஷங்கள் புடம் போட்டதை மறுப் பதற்கில்லை.
புனித நகரின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் பன்சாலை யில் வேதம் ஒதப்பட்டுக்கொண்டிருக்க அதை சட்டை செய்யாமல் இயங்கும் விபச்சார விடுதிகள், என்பன இன்றும், இன்னும் இயங்கிக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிட
மதுசாலைகள்
g অ
கொண்டு வருகிறது என்பதனை விபச் சாரம் செய்யும் பெண்பிள்ளைகள், படை யில் சேரும் இளைஞர்கள் ஆகியோர் களை அவதானிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது. அது உண்மையுங்கூட. இன்றைய பொழுதுகளில் எண்ணற்ற இளைஞர்கள், கருதி, வயிற்றுப் பிழைப்பிற்காக மிக
மிகக் கேவலமான தொழில்களை செய்
யுவதிகள் வருமானம்
, கின்றார்கள். அந்த வகையில் விபச்சாரத்
தொழிலில் கூட ஆயிரக்கணக்கான யுவதிகள் விரும்பியோ, விரும்பாமலோ ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுவும் யுத்தத்தின் பக்கவிளைவு தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இதனைச் சினிமாவுக்கே உரிய பாணியில் தெளிவு படுத்தியிருக்கிறார் பிரசன்ன விதானகே.
இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் ஒரே காட்சியில் சந்திக் கின்றன. இருந்தும் யாருக்கும் யாரையும் அறிமுகப்படுத்தாமல் வழமை யான சினிமாத்தனப் போக்கிலிருந்து வித்தி
o o யாசமாகக் காட்டுகிறார், பிரசன்ன வேண்டியதொன்றாகும். இந்நாடு வேலை
wV ح۔ --سمبر விதானகே. யில்லாத் திண்டாட்டத்தில் மூழ்கிக்
/ མཛོད།།
வாழ்த்துகின்றோம்.
நம் மண்ணிற்குச் சர்வதேசப் பெருமை தேடித் தந்த மணமகன் முத்தையா முரளிதரன், LD600TLD856T ஆர்.மதிமலர் ஆகிய
மணமக்களுக்கு மல்லிகை தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.
- ஆசிரியர்
است.
44

அதிகாலை இருளை அகற்றும் தெரு விளக்கின் வெளிச்சம்
கோட்டைப் புகையிரத நிலையத்தில் புறப்படப்போகும் புகைவண்டியின் அறிவிப்பு நித்திரைக் குரலில்.
பேருந்துகளின் இறக்கத்தில் அவசரமில்லாச் சில பிரயாணிகள்.
நடைபாதையில் நிரந்தரமாகிய இடை தங்கல் முகாங்கள்.
தாயின் மடியைத் தலையணையாக்கி, தகப்பன் உடம்பின் மேல் கால்பரப்பி, பத்துவயதுச் சிறுவனின் கவலையில்லாத் தூக்கம்.
'காட்போர்ட்' பெட்டிக் கூட்டில் ஆண் - பெண் மனிதங்களின் மீண்டும் எழும் வேட்கை உள்தலின்
இயல்பான மன்மத உரசல்.
நடைபாதைக் கடைகளின் தட்டுக்கள் எலும்புக் கூடுகளாய்.
காசிம் நானாவின் சூடான இலைக்கஞ்சி குளிருக்கு இதமாய். குடலுக்குச் சுகாதாரமாய்.
புத்திளம் மனைவியின் பூரிப்பான சுகபோகத்தை விட்டுவந்த நினைப்பில் விடிகடைக் காசாளன் விஜேந்திரன்.
இன்னும் விடியவில்லை!
- கலா விஸ்வநாதன்
தெம்பிலிக் குவியலின் மத்தியில் தீட்டிய கத்தியுடன் ஜெயசேகரவின் எதிர்பார்ப்பு.
மிச்சமிருக்கும் சில்லறைகளைப் பிச்சைக்காரன் எண்ணும் சத்தம் நிசப்தச் சூழலில் சங்கீதமாய்.
45

Page 25
கிலை ஏழு மணியிருக்கும்.
Ghafiba)LD கடற்கரைக் காற்று, இதமான
குளிர். காக்கைத்தீவுக் கடற் கரையில் மீன் கொள்வன்வு
கே.ஆர்.டேவிட்
செய்யும் வியாபாரிகளும், வீட்டுத் தேவைக்காக மீன்
வாங்க வந்தவர்களுமாக நிறையப் பேர் கூடி நிற்கின்றனர். துடிக்கத் துடிக்க மீனை வாங்கிக் கொண்டுபோய் சட்டியுக்கை கொட்டி குந்தியிருந்து அந்த மீனின் துடிப்பைப் பார்பதிலும். இரத்த உறவுகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதிலும் இப்பகுதி மக்களுக்கு அலாதி விருப்பம்!
இன்று சனிக்கிழமை. விடுமுறை நாள், நீளக் களிசான் போட்டவர்களே அதிகமாக நிற்கின்றனர். இன்றுதான் உத்தியோகத்தர்கள் கையைக் காலை நீட்டி, ஆறுதலாகச் "சுடுசோறு? சாப்பிடும் நாள்...!
நடுநிசி கடந்து, ஒரு மணியளவில். இராணுவத்தினரின் அனுமதிக்காகக் காத்துக் கிடந்து. இரண்டு மணிக்குப் பிறகு தொழிலுக்குச் சென்றவர்கள். ஒவ்வொருவராகத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். வள்ளங்களின் வயிற்றுப் பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள். தங்களின் இயல்பான இருப்பை இழந்ததால் துள்ளி மிதந்து பெருமூச்சு விடுகின்றன. மரண மூச்சு!
ஒன்றின் மரணத்தில், இன்னொரு உயிரின் வாழ்வு!
சந்திரன் - அவனும் இந்தக் கூட்டத்தில் ஒருவனாக நின்று நண்டு தேடுகின்றான். சந்திரனின் ஒரே மகள் துளசிக்கு நண்டென்றால் அலாதி விருப்பம்! சந்திரனுக்கோ, அவனது மனைவி செல்வராணிக்கோ நண்டு ஒத்துவராது, இருந்தும் பிள்ளையின் விருப்பம்!
சந்திரன் எப்படியோ நினைத்தது போல் நீலக்கால் நண்டு நிறைய வாங்கிக் கொண்டான்.
சந்திரன் -
இவனது உண்மைப் பெயர் சந்திரராஜா. இவனது குடும்பத்தில் முதல் பிறந்த அருமை தீர்த்த பிள்ளை. அவன் ஒரு கிராமசேவை உத்தியோகத்தன். நிறையச் செல்வாக்குள்ளவன், நல்லவன் மட்டுமல்ல, எதையும் சாதிக்கின்ற வல்லமையுள்ளவன்!
4G

ペ 配 petes): பிரச்சினைகளைச் சட்டத்திற்கு அப்பால்
நின்று மனிதாபிமானமாக நோக்கி விடை காண்பன்.
கடற்கரையிலிருந்து புறப்பட்ட சந்திரன் ஆனைக்கோட்டையில் ஒரு மாஸ்ரரைச் சந்திக்க வேண்டியிருந்ததால், காக்கை தீவுச் சந்தியிலிருந்து ஆனைக்
கோட்டை நோக்கிச் செல்லும் விதியில்
சைக்கிளைத் திருப்புகிறான்.
முன்பெல்லாம் இந்தச் சந்திக்கு யாரும் வருவதில்லை ஏனென்றால் இந்தச் சந்தியில் மிகப் பெரியதொரு இராணுவ முகாம் அமைந்திருந்தது. மொழிப் பிரச்சினையால் இராணுவத் தினரின் கேள்விகளுக்கு அப்பாவித்தன மாய்ச் சிரித்து, தலையைச் சொறிந்து. அடையாள அட்டையைக் காட்டி. அது மட்டுமல்லாமல் இராணுவத்தினரின்
நையாண்டித் தனமான சேட்டைகளையும்
முழுமனதோடு பொறுத்துக் கொள்ள வேண்டுமென்ற பயம் சகலருக்கும்!
இன்று, சமாதான உடன்படிக்கை என்ற நடவடிக்கையால் அரசு தமிழ் மக்களை இரட்சித்திருக்கின்றது!
சந்திரன் சைக்கிளில் ஏறிப் புறப்படு கின்றான். நண்டுகளின் அட்டகாசத் தினால் கடதாசிப்பை சரசரக்கின்றது! அவைகளும் தங்கள் இருப்பை இழந்து
விட்டன!
சூரியப் பிரசவத்தின் முனகல், கடற் காற்றின் நளினம், இதமான குளிர். இலேசான புகார். விதியின் வலது பக்கம் தறுதலைகளாக வளர்ந்து நிற்கும்
தென்னை மரங்கள். அதையடுத்து வயல் வெளி. இடதுபக்கம் 'வசந்தபுரம்" என்ற நாமங்கொண்ட குடியேற்றத் திட்ட வீடுகள். பெட்டிகள் போல் அடுக்காக அமைந் திருக்கின்றன. அதையடுத்து, வயல் வெளி., வயல்வெளியில் றோட்டுப் பக்கமாக இந்து மயானமும், கிறிஸ்தவ மயானமும் அமைந்திருக்கின்றன. ஒரே பார்வையில் அத்தனை காட்சிகளும் கண் குழிக்குள் அடங்கி விடும். சந்திரனுக்கு இந்த இடங்களெல்லாம் மிகவும் பழக்கப் பட்ட இடங்கள் இருந்தபோதும், அந்த இடங்களெல்லாம் இப்போது புதுப் பொழிவுடன் தென்படுகின்றன. நின்று பார்த்தாலென்ன என்றொரு மனவுணர்வு அவனுக்கு!
நசிக்கப்பட்ட நெருப்புப்
அந்தக் கிறீஸ்தவ மயானம். அது கூட இப்போது அழகாகத்தான் தெரி கின்றது. மரித்துப்போன மக்களின் தசை புழுக்களையும், எலும்பு களையும், சித்தப்பிரமையை ஏற்படுத்தக் கூடிய துர்நாற்றத்தையும் மூடியிருக்கும் 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்."
களையும்,
மரித்துப்போன மக்களின், நாமங்களின் வாழ்விடம்!
சந்திரன் குடியேற்றத் திட்டத்தை
அண்மித்து விட்டான் சைக்கிள் ஆமை வேகத்திலேயே நகர்ந்து கொண்டிருக்
கின்றது. குடியேற்றத் திட்டத்திற்குச் செல்லுகின்ற பிரதான பளபளப்பான விதியல்ல. முதலையின் முதுகு போன்ற விதி..! ஆனைக்கோட்டை றோட்டுடன் குடியேற்றத் திட்ட விதி சந்திக்கும் அந்தச் சிறிய முற்சந்தி வளைவில் இடதுபக்க
47

Page 26
மாக ஒரு வைரவர் கோவில். ஒரு கல்லு. ஒரு சூலம். ஒரு கொட்டில் அவ்வளவுதான். அதனருகே அப்பப்பா களைத்துக் குறண்டிப் போனதொரு பூவரசு மரம்.
அந்தப் பூவரசு மரத்தின் கீழ் ஒரு சிறுமி.
ஏறத்தாழ ஐந்து வயதிருக்கும். பொது நிறம், பாற் சொக்கை, குளம்பிப் போன தலைமயிர், கறுப்புக் கோடன் நித்திரை வடுக்கள் படர்ந் திருக்கும் முகம். இடதுகையில் நாலோ ஐந்து கறுத்தக் கயிறுகள், சப்பாணி கொட்டி அமர்ந்திருக்கின்றாள். அவளது மடியில் ஒரு இறாத்தல் பாண். அந்தப் பச்சை மண்ணின் பிஞ்சுக் கரங்கள்
சட்டை.
அந்தப் பாணை அணைந்திருக்கின்றன.
இடையிடையே அந்தப் பாணைத் தடவிப்
பார்த்துக் கொள்கிறாள்.
சந்திரன் சைக்கிளை நிறுத்தி, இடது காலை நிலத்தில் ஊன்றி. சைக்கிளில் இருந்த படியே அந்தச் சிறுமியை அவதானிக்கின்றான். ஆனால் அந்தச் சிறுமி சந்திரனை அவதானிக்கவில்லை. அவளது பார்வை கடற்கரைப் பக்க மாகவே பதிந்திருக்கின்றது. அவள் யாரையோ எதிர்பர்க்கின்றாள்.
இதுவரை பாணின் கருகிய பக் கத்தைத் தடவிக்கொண்டிருந்த அவள், என்ன நினைத்துக்கொண்டாளோ பான்ைனத் திருப்பி வைத்து அதன் மென்மையான பகுதியை இப்போது அந்தப் பிஞ்சுக் கரங்களின் ஸ்பரிசத்தில் அந்தச்
தடவுகிறாள். . .
48
சிறுமியின் இதயம் எதையோ அனுபவிக் கின்றது.
இடையிடையே தனது சின்ன விரல் நகத்தால் பாணைக் கிள்ளி, நகப் பருமனில் வருகின்ற சிறு துகழ்ப் பாணை பற்களுக்கிடையே வைத்துக் குதப்பு கிறாள்.
சந்திரனின் இதயம் சிலிர்த்துப் போய்விட்டது.
அவள் இன்னமும் சந்திரனை அவதானிக்கவில்லை. யாரையோ எதிர் பார்க்கின்றாள்!
அந்த வறுமையின் குறியீடு திரும் பத் திரும்ப அந்தப் பாணைத் தடவு கின்றது. திருமணமாகி முதற்பிள்ளைக் குத் தாயானவள். தன் முதல் வாரிசை மடியில் வைத்து. புண்ணுடம்போடு தடவுவாளோ. அப்படித்தான்!
சந்திரனுக்கு இப்போது தனது மகள் துளசியின் முகம் மனதில் நிழலாடு கின்றது. சந்திரன், கச்சேரி நல்லூர் வீதி யிலுள்ள தனது வீட்டிலிருந்து புறம்படும் போது. பெற்சிற்றால் துளசியைப் போர்த்து, முதுகுப்புறமாக தலையணை
வைத்து புதிய ஒரு நுளம்புத்திரியும்
கொழுத்தி வைத்து விட்டுத்தான்
வந்தான். அதுமட்டுமா அறைக் கதை
வைக்கூட மெதுவாகத்தான் மூடினான்.
எந்த வகையிலும் துளசியின்
நித்திரைக்குப் பங்கமேற்பட்டுவிடக் கூடா
தென்ற மன உந்தல்...!

6666):
சிந்தனையிலிருந்து விடுபட்ட சந்திரன் திரும்பவும் அந்தச் சிறுமியைப் பார்க்கிறான். அவள் அப்படியேதான்
இருக்கிறாள்!
சந்திரன் “மனிதம் உள்ளவன். அவனால் அந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. சைக்கிளால் இறங்கி சைக்கிளை விதிக் கரையோடு நிறுத்தி விட்டு அந்தச் சிறுமிக்கருகே வரு
கின்றான்.
'தங்கச்சி உங்கடை பேரென் னம்மா..." சந்திரன் மிகவும் பவ்விய மாகக் கேட்கிறான். இப்போதுதான் அந்தச் சிறுமி சந்திரனைப் பார்க்கிறாள்.
“செல்வதி" அந்தச் சிறுமி கீச்சுக் குரலில் கூறுகிறாள். அந்தச் சிறுமியின் பெயரைக் கேட்டதும் சந்திரனின் மனம் சிரிக்கின்றது. உணர்வுகளற்ற வரண்ட சிரிப்பு.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் தெரிவு செய்யும் போது. தங்கள் பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி மிக உச்சமாகவே கற்பனை செய்கின்றனர். இது சகல பெற்றோருக் கும் இருக்கும் சராசரி இயல்பு. ஆனால் எழுபத்தைந்து வீதத்திற்கு மேற்பட்ட பெற்றோரின் உச்சக் கற்பனைகள் தடம் தெரியாமல் சரிந்து போய்விடுகின்றன! மிஞ்சுவது கண்ணீர் தான்!
“செல்வதி. உங்கடை அப்பாவின்ர பேரென்ன..???
"முத்துக்குமாரு." பிள்ளையின் பெயருக்கு முன்னால் "செல்வம்" தந்தை
யின் பெயருக்கு முன்னால் 'முத்து' சந்திரனின் மனம் மீண்டும் சிரிக்கின்றது. அதே சிரிப்பு!
"இதிலை ஏன் இருக்கிறியள்."
'அண்ணன் பாண் வாங்கித் தந்திட்டுக் கடற்கரைக்குப் போனவர். இப்ப வருவார்."
“செல்வதி. உங்கடை வீட்டிலை எத்தினை பேர் இருக்கினம்"
பெரியக்கா, சின்
னண்ணை, நான் ஏழுபேர்.” தன் பிஞ்சு
"அப்பா, அம்மா,
சின்னக்கா, பெரியண்ணை,
விரல்களை மடித்துக் கணக்குப் பார்த்து அவள் கூறுகிறாள்.
‘ஏழு பேருக்கும் ஒரு றாத்தல் பாண் போதுமா செல்வதி?”
"அப்பாவும், அம்மாவும் பெரி யக்காவும் சாப்பிடமாட்டினம், நாங்கள் தான் சாப்பிடுவம்.” வயது வந்தவர்கள் வயிற்றை ஏமாற்றக் கற்றுக் கொண்டு விட்டனர்!
"அப்பாவுக்கும், அம்மாவுக்கும், பெரியக்காவுக்கும் பசிக்காதா?’ சந்திரன் நிலவரத்தைப் புரியாதவன் போல் பாசாங்கு பண்ணிக் கேட்கின்றான்.
“என்னவோ தெரியாது. அவை சாப்பிடாயினம்.'
“ஒவ்வொரு நாளும் பாண் வாங்கு வீங்களா..?"
"அப்பா காசுதந்தால்தான் பாண் வாங்குவம்.'
49

Page 27
"அப்பா காசு தராட்டி’
"அப்பா காசு தராட்டி. பாண்
வாங்க மாட்டம்."
“பாண் வாங்காட்டி பசிக்குமே." “பசிக்காது." செல்வதி சர்வசாதார ணமாகக் கூறுகின்றாள். உணவு கிடைத் தால்தான் பசியைப் பற்றிச் சிந்திக்கின்ற மனிதக் கூட்டம்!
சந்திரன் தலையைத் திருப்பி அந்தக்
குடியேற்றத் திட்டத்தைப் பார்க்கிறான். சந்திரன் கிராமசேவை உத்தியோகத்தராக நீண்ட காலம் கடமையாற்றியதால், குடி யேற்றத் திட்ட நடைமுறைகள் பற்றி பெருமளவு அவனுக்குத் தெரியும். இந்தக் குடியேற்றத் திட்ட அமைவு பற்றிய மாதிரி வரைபடமொன்று எவ்வளவு அழ காக வரையப்பட்டிருக்கும். எத்தனையோ இலட்சங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். விதி அமைப்புகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், மனித தேவைகள் அத்தனையும் வரை படத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்ட பணத் தொகைக்கான கணக்கு வழக்குகளும் சரியாகவே காட்டப்பட்டிருக்கும்.
ஆனால். இங்கு?
பஞ்சப்பட்டவர்களை இனங்கண்டு பொறுக்கியெடுத்துக் கொண்டுவந்து குவித்து வைத்துள்ளார்கள்.
வல்லூறுகளின் பறப்பும், தாய்க் கோழியற்ற குஞ்சுகளின் பரிதவிப்பும்!
50
666): অS
“செல்வதி நான் ஒண்டு சொல்றன் கேக்கிறீங்களா" சிந்தனையிலிருந்து விடு பட்ட சந்திரன் செல்வதியைப் பார்த்தபடி கேட்கின்றான்.
**ଟrଜstଗor... ? ''
"நான் காசு தாறன். என்னும் ஒரு இறாத்தல் பாண் வாங்கி எல்லோரும் சேர்ந்து சாப்பிடுங்கோ." இப்படிக் கூறி, சந்திரன் இருபது ரூபாநோட்டை அவள் முன் நீட்டுகிறான்.
"ஐயையோ. எனக்கு வேண் டாம்." செல்வதி பதறிப் போய்க் கூறு கிறாள்.
"ggör?”
"அப்பா அடிப்பார்."
'விதானையார் தந்தவர் எண்டு சொல்லுங்கோ. அப்பா அடிக்க
மாட்டார்.”
'ஆரிட்டையும் கைநீட்டக்குடா
- தெண்டு அப்பா சொல்லியிருக்கிறார்.
எனக்கு வேண்டாம்.”
"நான் வந்து அப்பாவுக்குச் சொல் றன். நீங்கள் காசைப் புடியுங்கோ." இப்படிக் கூறிய சந்திரன் பலாத்காரமாக
அவளது கைக்குள் பணத்தைத்
திணிக்கின்றான். இதை எதிர்பார்க்காத
செல்வதி காசை எறிந்துவிட்டு, எழுந்து ஒடுகின்றாள்...! செல்வதி இப்படிச் செய்வாளெண்டு சந்திரன் எதிர்பார்க்க வில்லை.

is tygge)
சந்திரனின் உடல், இதயம், உணர்வு கள் அனைத்துமே விறைத்துப் போய் விட்டன. இப்படியும் ஒரு சிறுமியா? இப்படியும் ஒரு வளர்ப்பு முறையா? அநேக பெற்றோரால், ஏன் பாடசாலை களால். அதற்கு மேலேயுள்ள பல் கலைக்கழங்களால் கூடக் கற்பிக்க முடியாத ஒரு 'பண்பை செல்வதியின் பெற்றோர் கற்பித்திருக்கின்றனரே. எப்படி?
வறுமையிலும் செம்மை.!
பட்டறிவுகள்தான் செல்நெறியின் புனிதங்களை வழிப்படுத்தும்
ஆசான்களா?
சந்திரன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, செல்வதி ஒடிய அந்த விதியைப் பார்க்கின்றான். செல்வதி ஒடி மறைந்து விட்டாள்.
செல்வதியைப் பெற்றானே. அவளின் தந்தை முத்துக்குமாரு. அவனை ஒருமுறை பார்க்க வேண்டும். இப்படியொரு ஆசை சந்திரனின் மனதில் முளைவிட்டு, விருட்சமாகுகின்றது.
முத்துக்கு மாரனைப் பார்க்க வேண்டும். அவனைப் பாராட்ட வேண்டும்.
சந்திரன் குடியேற்றத் திட்ட விதியில் இறங்கி மெதுவாக நடக்கிறான். யாராவது ஒரு அறிமுகம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை.
உடுத்தியிருந்த சாறத்தால் உடலை மூடிக்கொண்டு குந்தியமர்ந்திருந்த
வாலிபர்கள். அரைகுறை அம்மணக் கோலத்தில் தூங்கி வழியும் மூஞ்சியுடன் முற்றத்தில் நின்று தலையைச் சொறியும் சிறுவர்கள். சப்பாணி கொட்டியமர்ந்து தங்கள் தலைமயிருக்குள் பேன் வேட்டை நடத்தும் பெண்கள். காலைக் கடன் களை நிறைவேற்றும் பொருட்டு கிறீஸ்த்தவ மயானத்தின் பின்புறமாக வுள்ள பனங்காணியை நோக்கிச் செல் வோர். நேற்றைய பொழுது எப்படியோ கழிந்து விட்டது, இன்றைய பொழுதைப் பற்றி இனிமேல்தான் அவர்கள் சிந்திக்கப் போகிறார்கள்...! இன்றைய பொழுதும் எப்படியோ கழியத்தான் போகிறது. காலம் தரிப்பதில்லையே!
ஒரு குடிசைக்குள்ளிலிருந்து பப்பாசி வெளியே வருகின்றான். பப்பாசி சந்திரனுக்கு மிகவும் அறிமுக
மானவன்.
பப்பாசி.
கறுத்த உள்வளைந்த உடல், காய்ந்து நீர்ப்பிடிப்பை இழந்த புல்லுப் போன்ற தலைமயிர், வெற்றிலைக் காவி படிந்த பற்களும், உதடுகளும், ஒரு நாலு முழத் துண்டு, ஒரு துவாயால் உடலைப் போர்த்தியிருக்கின்றான். வறுமை வெக்கையில் வறுத்தெடுக்கப்பட்ட தோற்றம்.
“என்ன விதானையார் ஐயா. காலங்காத்தாலை" பப்பாசி பேச்சை
ஆரம்பிக்கின்றான்.
"மீன் வாங்க வந்தன். உன்னையும் ஒருக்கா பாப்பமெண்டிட்டு வந்தன்."
51

Page 28
சந்திரனும், பப்பாசியும் செல்வதி அமர்ந்த்திருந்தாளே பூவரசு மரத்தடி, அதை நோக்கி நடக்கின்றனர். பப்பாசி தனது சுட்டு விரலால் கண்குழிக் குள்ளிருந்த நித்திரை வடுக்களைச் சுரண்டியபடி நடக்கின்றான்.
՛ւյւյլ յո9Պ...”
“என்னையா..??
"இதுக்குள்ளை. செல்வதி எண் டொரு புள்ளை இருக்கிறாள். அவளைத் தெரியுமா?"
'ஒமையா நல்லாய்த் தெரியும்.”
"அந்தப் புள்ளையின்ரை அப்பன் முத்துக்குமாரு'
6 á
ஒ. . . அவனையும் நல்லாத் தெரியுமையா."
'அந்த முத்துக்குமாரை நான் ஒருக்காப் பாக்கவேணும்"
"ஏதாலும் பிரச்சினையா..?
காலையில் தான் செல்வதியைச் சந்தித்ததையும், தான் கொடுத்த பணத்தை உதறித்தள்ளிவிட்டு அவள் ஒடிய சம்ப வத்தையும், சம்பவத்தோடிணைந்த பண் பாட்டு நிலையையும் உணர்ச்சி வசப் பட்டுக் கூறுகிறான் சந்திரன்.
பப்பாசி அர்த்த புஷ் டியாகச் சந்திரனைப் பார்க்கிறான். இதயப் பொக் கணைக்குள் பிரசவித்து, கண்குழிக்குள் புரள்கின்ற வெள்ளை முழியிலுள்ள சிறு
கறுத்தப் பொட்டை ஊடறுத்து வந்த
52
பார்வைக் கோடு.நீர்மட்டம் வைத்த
நிதானமும். அந்தப் பார்வையில்...!
குண்டுசிக் கூர்மையும்
"என்ன பப்பாசி பாக்கிறாய்."
"ஒண்டுமில்லை. முத்துக்குமாரு போலை பரதேசியளின்ரை துன்ப துயரங்களை விளங்கிறதுக்கும் இந்த மண்ணிலை ஒரு மனிசனாவது இருக் கிறான்.” சந்திரனைப் பார்த்து இப்படிக் கூறிய பப்பாசி, சில விநாடிகள் தரித்து மீண்டும் பேச ஆரம்பிக்கின்றான்.
"ஐயா! முத்துக்குமாரு குடும்பத் திலை ஏழுபேர். முத்துக்குமாருவையும், பெண்சாதியையும் விட. ஐஞ்சு புள்ளை யள். புதுக்குடல்கள். தின்னக்கூடிய வயது." இப்படிக் கூறிவிட்டுப் பெரு மூச்சு விட்ட பப்பாசி மீண்டும் தொடர்கிறான்.
"முத்துக்குமாரு இருதய வருத்தக் காறன். பெரிய வேலையள் செய் யேலாது. பண்ணையிலுள்ள மீன்சந்தை "சைக்கிள் பாக்கிலைதான் வேலை செய் யிறான். எழுபத்தைஞ்சு ரூபா சம்பளம். இந்த எழுபத்தைஞ்சு ரூபாவிலை தான் ஏழுபேர் சாப்பிட வேணும்.
சோத்தை அகப்பையாலை அள்ளிப் போடேலாது. ஒவ்வொரு சோத்துப் பருக்ன்கயாய் எண்ணித்தான் போட வேணும்." இப்படிக் கூறிய பப்பாசி மெளனமாகி பூமியைப் பார்க்கிறான்.
பப்பாசி ஒரு மனிதச் சுமைதாங்கி..!
‘என்ன பப்பாசி சொல்லு."

reses):
சந்திரன் பப்பாசியைப் பார்த்துக் கூறுகிறான்.
"பகல் பொழுது போனால் இரவு வரும். அடியிலை ஏதாவது கிடக்கும். அதுக் குள்ளை சுடுதண்ணியை விட்டுச் சிலா
பகல் சமைத்த கறிச்சட்டியின்ரை
விப்போட்டு, புள்ளையஞருக்குக் குடுப் பாள் அதுகளின்ரை தாய்." துயரச் சுமை. பப்பாசியால் தலையை நிமிர்த்த முடிய வில்லை. தலை குனிந்தபடியே கதைக் கின்றான்.
"ஐயா வீட்டிலை புள்ளயஞக்கு மாதச் சுகயினம் வந்திட்டால். அது களுக்கு சம்போவும், சவுக்காரமும் வாங்க அவன் ப்டுகிறபாடு. ஒருநாள் சம் பளத்தை ஒதுக்க வேணும். முடியுமா..!
இரப்பையும் வயித்துக்கை தான். கருப்பையும் வயித்துக்கை தான். இதுகளுக்கு மேலை. நெஞ்சுக்குள்ளை இதயம். இதயத்துக்கு மேலை. காதும், வாயும், கண்ணும். எல்லாம் ஒண்டோடை ஒண்டு தொடர்பு பட்டு. சங்கிலிக் கோர்வையாய் நீண்டு. முடிவு.? கண்ணிர் தான்..! பப்பாசியின் குரல் தளதளத்துப் பேச முடியாமல் மெளனமாக நிற்கிறான்.
"அது சரி பப்பாசி இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?' சந்திரன் தனது சந்தேகத்தைக் கேட்கிறான். தலை குனிந்து நின்ற பப்பாசி தலையை நிமிர்த்திச் சந்திரனைப் பார்க்கிறான். அவனது பார்வைக் கோட்டிலிருந்து துயரத் துளிகள் சிந்துகின்றன.
娜娜
ஐயா. நீங்கள் பார்க்க விரும்புற முத்துக்குமாரு நான்தரன்' பப்பாசி இப்படிக் கூறியதும் சந்திரன் திகைத்துப் போய்விட்டான்.
"அப்படியெண்டால் பப்பாசி எண்ட பெயர்."
"அது என்ரை பட்டப் பெயர். என்னைப் பெத்தவனுக்கும் வறுமை தான். எனக்கப்ப பத்து வயதிருக்கும். விட்டிலை நாலைஞ்சு பப்பாசி மரம் நிண்டது. நல்லாய்க் காய்க்கும். பள்ளிக் குடத்துக்குப் போகாமல், பப்பாசிப் பழங் களைக் கொண்டு சந்தைக்குப் போவன். எப்பிடியோ இந்தச் செய்தி பள்ளிக் குடத்துக்குப் போகிடும். மற்றநாள் நான் பள்ளிக்குடம் போவன். மற்றப் பொடி யள் எல்லாம் "பப்பாசி வாறான். பப்பாசி வாறான். எண்டு நையாண்டி பண்ணுவினம். அந்தப் "பப்பாசி எண்ட பேரே நிரந்தரமாகி முத்துக்குமாரு எண்ட பேர் மறைஞ்சு போச்சு..." பப்பாசி தனக்கு ஏற்பட்ட பட்டப் பெயர் பற்றிய விபரத்தைக் கூறி முடிக்கிறான்.
சந்திரன், பப்பாசியைப் பரிதாப மாகப் பார்க்கிறான். சந்திரனின் நாக்குச் செயலிழந்து, வாய்க் குகைக்குள் கிடக் கின்றது. அவனால் பேச முடியவில்லை. சந்திரனின் பார்வையில் எத்தனையோ உணர்வுகள் குமைகின்றன. சந்திரன் கண் வெட்டாமல் பப்பாசியைப் பார்க்கிறான்.
A
ஐயா. நீங்கள் இப்படி ஏன் பாக் கிறியள் எண்டது எனக்குத் தெரியும். சின்னனிலேயே பள்ளிக்குடத்தை
53

Page 29
விட்டிட்டு பப்பாசி விக்கப் போன நீ. கலியாணம் ஏன் முடிச்சனி. புள்ளை யளை ஏன் பெத்தனி எண்டுதானே கேக்கப் போறியள்." பப்பாசியின் மார்பு விம்மித் தணிகிறதே தவிர, அவன் கண் கள் கலங்கவில்லை. ஆனால் கண் குழிக்குள் வேதனையின் மப்பு, மந்தாரம் நிறைந்திருக்கிறது.
சந்திரன் எதுவும் பேசவில்லை.
"ஐயா இருண்டுபோன எங்கடை வாழ்க்கையிலை மின்மினிப் பூச்சிகளாய் மின்னுகின்ற சிறு சுகங்கள் தான். கலி புள்ளைகுட்டியளும் . . . வறுமையிலும் ஏதோவொரு சுகம்
யாணமும்,
எங்கடை குடிசைக்குள்ளை இருக்கு. அதை நான் அனுபவிக்கிறன். ஆனால் அது அல்லது துன்பமா? அது கூட எனக்கு விளங்கயில்லை”
விளக்க முடியயில்லை . . .
இன்பமா?.
சந்திரனுக்கு அவனது உணர்ச்சிகள் வானத்தை நோக்கி விரைகின்ற உணர்வு. புதியதொரு உலகத்தின்
தரிசனம்!
"நான் உன்னை மட்டுந்தான் பாக்க
இப்ப
குடும்பத்தைப் பாக்க வேணும் போலை
உன் ரை
விரும்பினன்.
இருக்கு. Lumajigsaumor?''
"தாராளமாய் பாக்கலாம். ஆனால் ஒண்டு. உங்களை இருக்க வைக்க வீட்டிலை ஒரு கதிரையில்லை. முதல் முறையாய் வாற உங்களை உபசரிக்க விட்டிலை சீனி தேயிலை இருக்காது.”
54
5 passes
பப்பாசி வெளிப்படையாகவே
கூறுகின்றான்.
இருவரும் பப்பாசியின் குடிசையை சந்திரனின் மனத்திரையில் அவனது மகள் துளசியின் முகமும், அவளது வாழ்க்கை முறையும் திரைப்படமாய் நீள்கின்றது.
நோக்கி நடக்கின்றனர்.
go tu T. . . என்னாலை வெல்ல முடியயில்லை. நான் ஒரு நோயாளி, இனிமேலும் இந்த வறுமையை என்னாலை வெல்ல முடி
ա ո51 . . . புள்ளையளாலை அந்த வறுமையை
என்ரை வறுமையை
ஒரு காலத்திலை என்ரை
வெல்ல முடியுமோ என்னவோ. சில வேளை வெல்ல முடியாமல் போகலாம். வெல்ல முடியாமல் போனால் உள்ளதை வைச்சுத் திருப்திப்பட அவர்களுக்குத் தெரியவேணும். அதுக்குப் பொறுமை யும். தற்துணிவும் வேணும். அதைத்தான் புள்ளையஞக்கு என்னாலை குடுக்க முடிஞ்சிது. என்ரை அப்பன் பப்பாசி மரத்தடியிலை  ைவச்சு எனக்குப் போதிச்சதை. இப்ப நான் என்ரை புள்ளையஞக்குப் போதிச்சிருக்கிறன். அவ்வளவுதான்." பப்பாசி கூறியபடி நடக்கிறான். சந்திரன் மெளனமாகப் பின் தொடர்கிறான்! எரிந்துபோன வாழ்க்கை யின் சாம்பல் மேட்டில் பண்போடு வாழத் துடிக்கும் சில சீவன்களை அவன் தரிசிக்கப் போகின்றான்!
பப்பாசியின் குடிசை வாசலில் அவள் செல்வதி நிற்கிறாள்!
()

4M ONYNNOõPYLösV
19.
2O.
2.
22.
23.
30.
3.
32.
Q
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு'ஆர்வதிப்பு) எழுதப்பட்ட் அத்தியாயங்கள் - (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா கார்ட்டுன் ஒவிய உலகில் நான் - (2ஆம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் - (யாழ் பல்கலைக்கழக 13 மாணவ மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாவற் முப்பொரும் தலைநகரங்களில் 30 நாட்கள் (பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் - முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் - (ஹைக்கூ) பாலரஞ்சனி அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை
அலங்கரித்தவர்களின் தொகுப்பு)
. சேலை - முல்லையூரான் 12.
13.
14.
15.
16.
17.
18.
மல்லிகைச் சிறுகதைகள் - (30 சிறுகதைகள்) செங்கை ஆழியான் மல்லிகைச் சிறுகதைகள் - (41 சிறுகதைகள்) செங்கை ஆழியான் நிலக்கிளி - பாலமனோகரன் நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் - டொமினிக் ஜீவா நாம் பயணித்த புகைவண்டி - (சிறுகதைத் தொகுதி) - ஆப்டீன் தரை மீன்கள் - ச.முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான்
அப்புறமென்ன - குறிஞ்சி இளந்தென்றல் அப்பா - தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து - எம்.கே.முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் 25 - தொகுத்தவர் செங்கை ஆழியான் இந்தத் தேசத்தில் நான் - கவிதைத் தொகுதி (பேராதனைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் கவிதைகள்)
9േക് Uň,?š0 9్కcఎడా مشهد، ۱۰٫۱متر) تکلمlی
விலை விலை விலை விலை
விலை விலை
விலை
விலை
விலை
விலை
விலை
sists)
விலை
விலை
விலை
விலை
Undrawn Portrait for Unwritten Poetry - Glirlssons gourtsis,
வாழ்க்கை வரலாறு ஆங்கிலப் பதிப்பு டொமினிக் ஜீவா சிறுகதைகள் அச்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம் டொமினிக் ஜீவாவின் வாழ்கை வரலாறு - 2ஆம் பாகம்
விலை
விலை
shee)
200/-
250/-
140/-
180/-
175/-
110/-
100/-
1)/-
150/.
60/-
75/-
150/-
275/-
350/-
14.0/-
150/-
150/-
150/-
150/.
120/-
130/-
40/-
150/-
115/-
200/-
350/-
55

Page 30
ഖrതൻ
பாடிகளின்
நடுவே
f
ளெமுைக்
குயில்
-, LDT. LUT6) értja:5 Lb -
5G
காற்றில் கலை வடிக்கும் C. நடராஜசிவம்
அக்காலத்தில் கல்வி, தகவல் அமைச்சின் கீழ் இயங்கிய ஒலிபரப்புத் திணைக்களத்தை அனைவரும் பொதுவாக “றேடியோ சிலோன்" எனவே அழைத்தனர். திணைக்களமாக இருந்த ஒலிபரப்புத்துறை பின்னர் 1967 ஜனவரியில் கூட்டுத்தாபனமாயிற்று.
இக்காலகட்டத்தில் சுதேச மொழிகள் கூர்ப் படைந்து அவைகளது ஆளுமையை நிறுவுவதற் கான புதிய பிரக்ஞை இலங்கையரிடம் படரத் தொடங்கியது. நாட்டுப் பற்று, மொழிப் பற்று என்ற பதங்களெல்லாம் புழக்கத்திற்கு வந் திருந்தன. சிங்கள, தமிழ் மொழிகள் சார்ந்த
கலைகள் - அவைகளது செழுமைகள் வெகுவாகப்
பேசப்பட்டு, அவைகளை மேலும் எழுச்சி கொள்ள வைப்பதற்கான மும்முரமான முயற்சிகள் கனிந்தன. இவைகளை மனச்சாட்சியோடு பார்க் காதவர்கள் இவைகள் வகுப்புவாதத்திற்கான மிதி கற்களென பகிரங்கமாகக் கூறத் தொடங்கினர். ஆனால், தன்நிறைவு, சுதந்திரம் என்பவற்றை விரும்பியவர்கள் அக்கருதுகோளைப் பேணி வளர்த்தனர். இதன் விளைவாக அந்நிய மோகத்தி
லிருந்த இலங்கையர் தமது மொழிக்கும்,
கலைக்கும் மெருகூட்டத் தொடங்கினர். இந்நல்ல நோக்கம் சந்தர்ப்பவாதிகளால் பிசக்கப்பட்டு நாட்டை, இன்றைய துர்பாக்கிய நிலைக்கு கொண்டு வந்ததற்காக இந்த பற்றுகளைப் பேணி
வளர்த்ததைத் தவறென நியாயப்படுத்துவது
"ஆற்றாதவர்களது கூற்றாகத்தான் கொள்ள வேண்டும்! இந்த விழிப்புக் காலத்தில் ஒலிபரப்புத் துறைக்குள்ளும் ஒரு புதிய அலை மோதத் தொடங் கியது. தாய்மொழிக் கல்வியில் கற்றுத் தேறிய

sa GEGE
வர்கள் வானொலிக்குள் பிரவேசித்தனர்.
இவர்களுள், ஈழத்து இலக்கியம் புத் தெழுச்சி கொண்ட காலத்தில் எழுத் தரங்கில் தம்மை இனங்காட்டியவர்களும் தேர்ந்த கலை ஆளுமை உடையோரும் அடங்குவர். இக்குழுவில் முக்கியமாக ஜோர்ஜ் சந்திரசேகரன் இராஜேஸ்வரி சண்முகம், நடராஜசிவம் ஆகியோரும் இலங்கை வானொலிக்குள் அறிவிப்
பாளர்களாகும் மேன்மை பெற்றனர்.
இலங்கை வானொலி தேசிய சேவை
யில் அறிவிப்பாளர்களாக இருந்தவர்கள்
அனைவருக்கும் நிகழ்ச்சித் தயாரிக்கும் பொறுப்புக் கிடைப்பது அரிது. இப் பிரிவில் நிகழ்ச்சி தயாரிப்பதற்கென உத்தி யோகத்தர்கள் இருக்கின்றனர். ஆனால் வர்த்தக ஒலிபரப்பில் அப்படியல்ல. அறிவிப்பாளர்கள்தான் நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளிக்கை செய்ய வேண்டும்.
கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளர் களாகவும், தயாரிப்பாளர்களாகவும் நிய மனம் பெற்றோருக்கு ஒலிபரப்பு முன் னோடிகளை விட மேலதிக வசதியொன்
றிருந்தது. அவர்கள் பயிற்சி பெறு
வதற்கு பயிற்சிக் கூடமொன்று கூட்டுத் தாபனத்தில் பேணப்படுகின்றது. இதில் பயிற்சி பெற்ற பின்னர்தான் உரிய கடமைகள் பொறுப்புக் கொடுக்கப்படும்.
மக்களின் பேரபிமானத்தைப் பெற்ற அறிவிப்பாளர் C. நடராஜசிவம் வர்த்தக சேவை நிரந்தர அறிவிப்பாளராக இருந்தவர். இவர் அறிவிப்பாளர் புவன லோஜனியின் கணவர்.
இவரது ஒலிபரப்புச் சேவைக்கு
நாற்றங்காலாக அமைந்தது மாதர் பகுதியே என கூற முடியும். இப்பகுதி குங்குமம், மஞ்சள் குங்குமம், மாதர் பகுதி என்ற மகுடங்களின் கீழ் மாதர் களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பியது. 60களில் பொன்மணி குலசிங்கம் இதன் தயாரிப்பாளராக இருந்தவர்.
இந்நிகழ்ச்சிப் பிரிவின் ஆஸ்தான நாடக நடிகராக நடராஜசிவம் இருந்தார். பிலோமினா சொலமன், ஜோர்ஜ் சந்திர சேகரன் ஆகியோருடனும் சேர்ந்து மாதர் பகுதி நாடகங்களில் நடித்துள்ளார். சில நாடகங்களது நட்டு வாங்கத்தையும் இவரே செய்திருக்கிறார். இளைஞர் மன்றம், சிறுவர் மலர் ஆகிய நிகழ்ச்சி களும் பிற்காலத்தில் இவர் ஒலிபரப்புத் துறையில் செழிப்பதற்கான வளமாக்கி களாக இருந்திருக்கின்றன.
இவரது செம்மையான குரல் வளத் தாலும், கலைத்துறை ஈடுபாடுகளாலும் இவர் 1968ல் பகுதி நேர அறிவிப்பாளராக ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண் டார். இதன் பின்னர் நிரந்தரமாக ஏறத் தாழ மூன்று தசாப்தங்கள் வானலையில் தனது குரலைப் பாயவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குள் ஒலிபரப்பில் மிக முக்கியமாக விளங்கும் செய்தி வாசிப் பதற்கான பொறுப்பு இவருக்குத் தேறியது. இதில் தனது அதி உன்னதத் திறமையைக் காட்டி இதானுமொரு சிறந்த செய்தி வாசிப்பாளராகத் தேறினார்.
முன்னாள் இலங்கை வானொலி அறிவிப்பாளரும், தயாரிப்பாளரும், கலை
57

Page 31
ஞரும், சிறந்த எழுத்தாளருமான ஜோர்ஜ் சந்திரசேகரன், நடராஜசிவத்தை நடிகர் திலகம் சிவாஜியின் விசிறியாகத் தனது நூலில் குறித்துள்ளார். நடராஜ சிவமும் ஒரு நல்ல நடிகர். இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பல நாடகங்களில் நடித் திருக்கிறார். ஜோர்ஜ் சந்திரசேகரனின் பரீட்சார்த்த நாடகமான நத்தையும் மாமியும்’ என்ற நாடகத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அத் தோடு, முன்னாள் இலங்கை வானொலி நாடகத் தயாரிப்பாளரான பி.விக்னேஸ் வரன் புதுமையை நச்சுபவர். வானொலி நாடகத்தில் புதிய பரிமாணங்களைத் தோற்றுவிக்கக் கடுமையாக உழைத்தவர். ஒரு மணித்தியால "ஒதெல்லோ' நாடகத்தை விக்னேஸ்வரன்
நாடக மான
மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு தயாரித் தார். அவருக்கு வலது கரமாக இருந்து அவரோடு ஒத்துழைத்து 'ஒதெல்லோ" நாடகத்திற்கு பெருமதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் நடராஜசிவம்.
நடராஜசிவம், நடிகவேள் லடிஸ் வீர மணியின் நாடகங்களில் நடித்ததுண்டாம். இவரது நடிப்புலக வரலாற்றில் இவரை என்றென்றும் நினைக்க வைப்பது இவர் நடித்த ஆங்கில நாடகம். அத்தோடு எந்த வொருக் கலைஞனுக்கும் கிடைக்காத பெருமையையும் இவருக்குத் தந்திருக் கிறது. அரங்கில் மூன்று மொழிகளிலும்
நடித்த ஒரேயொரு நடிகன் நடராஜ
சிவமே. இதனையிட்டுத் தமிழ் நடிகர்
அத்தனை பேரும் பெருமிதம் கொள்ள
வேண்டும்.
சிறிது பின்நோக்கிச் சென்று 1996ஐ
58
சந்திப்போமாகில் பாரிய இடப்பெயர்வின் வலியை உணர முடியும். சொந்த மண்ணி லிருந்து மண்ணின் மைந்தர்கள் பிடுங்கி எறியப்பட்ட காலமது. தமிழ், சிங்கள வெறுப்புணர்ச்சியின் உச்சக்கட்டம். ஆளையாள் பார்ப்பதில் சந்தேகம்! இலங்கைத் தமிழனுக்குத் தேசிய அடை யாள அட்டை உயிர் காக்கும் தோழனாக இருந்த காலமது!
அக்காலகட்டத்தில் கொழும்பில் THE YOUNGADULTS FELLOWSHIP
i grgöp 9ygotol, THOSE WHO SOW
THE WIND" GTGörp ši Gav 5 TL35 மொன்றை அரங்கேற்றியது. இது இடப் பெயர்வின் வலிகளை உணர்த்தியது. இனக் குரோதங்கள் உச்சமாக எழுந்து நின்ற அக்காலத்தில் இந்நாடகத்தில் நட ராஜசிவம் எவ்விதமான மனக்கிலேசமு மின்றி மிக அற்பணிப்போடு நடித்துத் தனது இனமானத்தை உறுதிப்படுத் தினார். இந்நாடகத்திற்கு "காற்றை விதைப்பவர்கள் எனத் தமிழாக்கம் செய்திருந்தனர். இரசிகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
1983 ஜூலை இனச் சங்காரம் புத்த கங்களுக்குள் மட்டுமன்றி தமிழ் மனங் களுள் இன்னுந்தான் கிடக்கின்றது. தமது சொந்த மண்ணை நினைக்க வைத்து இலங்கைத் தமிழரை 'கப்பலோட்டிய தமிழராக்கி" வடபுலத்துக்குச் செல்ல வைத்தது தீர்க்கதரிசனமற்ற இந்தச் சங் காரம். அப்படிப்பட்ட சிலருக்கு 'மருந்த ளவாவது இனக் குரோதத்தைக் குறைய வைத்தது. 'லாகிருத ஹசக்' என்ற தொலைக்காட்சி நாடகம். இது கிழமை

ஒ ge):
தோறும் ரூபவாஹிணியில் 1985ல் ஒளி பரப்பானது. இதைப் பராக்கிரமநிறிஅல்ல என்பவர் நெறிப்படுத்தினார். நடராஜ சிவம் நடித்தார். தமிழ்ப் பாத்திரமொன் றைச் சிங்களத் தொலைக்காட்சி இரசிகனுக்கு காட்டுவதாகில் வேட்டி, சால்வை, நெற்றியில் நீறு இவைகளில் லாமல் காட்ட முடியாதென்ற மாயை யிலிருந்து பெயர்த்துவதற்கு இந்நாடகம் உதவியது. நடராசசிவம் கட்டைக் கழிசா
னோடும் சேட்டுடனும் நடித்தது ஞாபகம்.
யசோராவய, அவசந்த, வனஸ்பந்து, யுக விலக்டுவ ஆகிய சிங்கள நாடகங்களில் இவர் தனது நடிப்பாளுமையைக் காட்டிச் சிங்கள ரசிகனையே வியக்க வைத்திருக் கிறார். இதில் சில நாடகங்கள் 20 வாரங் களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டன.
திரிசூல, யுக கினிமத்த, திகவி ஆகிய சிங்கள மொழிச் சினிமாப் படங்களிலும் இவர் நடித்தவர். இலங்கைத் தமிழர் களால் கைவிடப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ்ச் சினிமாவிற்கான தனது பங்களிப்பாக இவர் 'பாதை மாறிய பருவம்' என்ற ஈழத்துத் தமிழ் சினிமா விலும் நடித்துள்ளார்.
இவரது கலையுலக வாழ்வில் மற்று மொரு திருப்பமாக இவர் பிரபல தென்னிந்திய நடிகை ராதிகா சரத்குமா ரோடு நடித்தது அமைகிறது. நடிக வேள் எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா புலிக்குப் பிறந்தது பூனையாவதில்லை யென்பதைத் தமிழ் உலகிற்குக் காட்டி சினிமாவில் சிகரத்திற்குச் சென்று தற்பொழுது தொலைக் RADAN
விட்டவர்.
காட்சிக்கு வந்திருக்கிறார்.
என்ற நிறுவனமொன்றை அமைத்து அநேக தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து ஒளிபரப்புகிறார். "சித்தி", 'அண்ணாமலை இந்நிறுவனத்தின் வெற்றித் தொடர்கள். தொலைக்காட்சி நாடகங்கள் பெண்களைத்தான் திருப்திப் படுத்துகின்றனவென புத்திஜீவிகள் அபிப்பிராயப்பட்டாலும் இத்தொடர் களில் நடிக்கும் சிலரது நடிப்பு எதிர்கால நடிகனுக்கு பலவற்றைக் கற்பிதம் செய்யக் கூடியன. உதாரணமாக கிருஷ்ணா (சித்தி), (அண்ணாமலை) ஆகிய கதாபாத்திரங்க
வள்ளியம்மை
ளாக நடிப்போரது நடிப்பு இரசிகர்களை வியக்க வைப்பவை.
'மீண்டும் மீண்டும் நான்" என்ற ராதிகாவின் நாடகத்தில் நடராஜசிவம் நடித்துப் பாராட்டைப் பெற்றவர். இதை இயக்கியவர் மனோபாலா.
இவரது திறமைகள் இவரை 19716) ஒப்பந்தத் தயாரிப்பாளராக்கியது. இந்த வாய்ப்பை வானொலி நேயர்களுக்கு மேல திகப் பயனைக் கொடுக்கும் வகையில் உத்திகளாலும், மேன்மையான சமய நிகழ்ச்சிகள், உரைச்
உள்ளடக்கத்தாலும்
சித்திரங்கள், சைவ நறிசிந்தனை என்பன வற்றைத் தேடி எடுத்து ஒலிபெருக்கிப் பயனுள்ளதாக்கினார். இந்நிகழ்ச்சிகளுக் குச் சி.சண்முகமும் எழுதியதாகச் சொல் கிறார்.
“வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்கள். ஆனால் தமிழ்ச் சமூகம் அதன் பெறுமானம் தெரி யாமல் இன்னமும் இருட்டுனுள் குருட் டாட்டமாடுகிறது. எமக்கெல்லாம் நகைச்
59

Page 32
சுவை மறக்கப்பட்ட விடயமாகிவிட்டது. எதையும் நகைச்சுவையோடு சொல்லிப்
புரியவைக்கும் தன்மை எமக்கு அருகி
வருகின்றது. யுத்தம், சுனாமி இவை களுக்கு மத்தியில் சிரிப்பு எப்படி வரும்! என வாதிப்போருமுண்டு. இவைகளது அனர்த்தங்கள் இருந்தும் எமக்குப் பசிக்க வில்லையா? புசிக்காமலிருந்தால் வாழத் தான் முடியுமா? நோய்க்கு மருந்தாகும் சிரிப்பை ஏன் மறந்து போகிறீர்கள்?
நடராஜசிவத்தோடு உரையாடல் செய்யும் பொழுது அவர் நகைச்சுவை வெடிகளை முழக்குவது குறைவு! ஆனால், வானொலியில் அரை மணி நேர நகைச்சுவை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி இருக்கிறார். நிகழ்ச்சிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு இரசனை மிக்கவை. கலை அழகியல் சார்ந்தவை. ‘விகடத் தடாகம்’, ‘சர்க்கரைப் பந்தல்" என்பனவற்றிற்கு நதிமூலம் நடராஜ சிவமே!
'அறிவிப்பாளர் எவராக இருந் தாலும் தவிர்க்க வேண்டும். அவர்கள் நேயருக் குக் கூறுபவை ஆகக் குறைந்த சொற்க ளில் ஆகக் கூடிய விடயங்களைத் கடத்தக்
"சளசள"வென்ற பேச்சைத்
கூடியவைகளாக இருக்க வேண்டும். இதை விளம்பர வரிகளை எழுதும் பொழுது கவனத்திற்கெடுக்கப்பட வேண்டும். எனவே அறிவிப்பில் சொற் சிக்கனத்தை நடராசசிவம் வற்புறுத்து கிறார். அதையே தனது குரலில் ஒலி பரப்பாகும் விளம்பரங்களிலும் கடைப் பிடித்து வருகிறார்.
GO
* 666):
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சர்வதேச வர்த்தக ஒலிபரப் பில் இவரும் இவரது மனைவியார் புவன
லோசனி நடராஜசிவமும் சேர்ந்து குரல்
கொடுத்து ஒலிபரப்பிய விளம்பர மொன்று 500 தடவைகளுக்கு மேலாக ஒலிபரப்பானதாக இவர் கூறுகிறார்.
தொண்ணுரறுகளில்
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனந்தான் முதன் முதலாக பன்(FM)பலை வரிசையில் ஒலி
இலங்கை
பரப்புச் சேவையை ஆரம்பித்ததாக நினைவு கூறுகிறார். இதற்குச் CITY FM எனப் பெயரிடப்பட்டதாம். தனது வானொலி அனுபவத்தைக் கெளரவப் படுத்தும் வகையில் இந்த பன்பலையின் தமிழ்ப் பிரிவிற்குத் தன்னையும் சிங்களப் பிரிவிற்கு K.S.K.தர்மவர்த்தன என்பவரையும் பொறுப்பாக்கியதாகவும் பெருமிதத்தோடு சொன்னார்.
இவரது ஒலிபரப்புத்துறைசார் ஆற்றல்கள் சூரியன் FM பன்பலை ஒலி பரப்புக்கும் சுவறியதை வானொலி நேயர் கள் மறந்திருக்கமாட்டார்கள். ஒலிபரப்புத் துறையில் மூத்தவர் என்ற தகைமை இவரை மக்கள் களரி (JANA KALARYA) என்ற பொது அமைப்பின் ஆலோசகராக்கிக் கெளரவப்படுத்தியது.
வர்த்தக ஒலி ரப்புத்துறையில் girGaoTITO TREND SETTER GTGirSpiti.
ஆக, இந்த நாடு போற்றும்
கலைஞனை நாடு உற்சாகப்படுத்திக்
கொண்டிருப்பது ஒலிபரப்புக் கலைக்கும் நாடகக் கலைக்கும் செய்யும் அதிபெரும் பணியாகும்.

P(b துன்பத்தின் பிடி தாங்க இன்னொன்று தொடர்கிறது. வெட்ட வளரும்
வேர் போல்
எழும்
வேதனை எச்சம்
() 0 ()
பெரும் நினைவு
அது கனவு வெறும் உணர்வு வேறொன்றும் இல்லை.
() () ()
சுழற்சி
- ஏ.எஸ்.எம். நவாஸ்.
கடன் அழிக்க. கடன் வளர. பொருள் வாங்க பாதிக்காசு போதவில்லை பொறுப்புகள்.
() () ()
சம உழைப்பு சதை அலுப்பு சற்றே ஓய்வு.
மீண்டும் -
சக்கரம் போல் சுழலும் சக வாழ்வு
G

Page 33
எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதைகளில் வரும் பாத்திரங்கள் இன்றும் இலக்கிய வாசகர்களால் விதந்து கூறப்படுபவை. அவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் அதற்கு ஒர் உதாரணம்.
அவரது சிறந்த கதைகள் சினிமாப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. அப்படங்களில் தன் கதையின் நேர்த்தி குறைந்து விடவோ, சிதைந்து விடவோ கூடாது என்பதற்காகச் சில படங்களை ஜெயகாந்தனே நேரடியாக இயக்கவும் செய்தார்.
யாருக்காக அழுதான்', 'உன்னைப் போல் ஒருவன்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற படங்கள் ஜெயகாந்தனின் கதைகள். ஜெயகாந்தனால்
இயக்கப்பட்டவை.
|“ஞானபீட விருதும் ஜெயகாந்தனும்
محبر
ஏ.எஸ்.எம். நவாஸ்.
'உன்னைப் போல் ஒருவன்’ படத்தை ஜெயகாந்தன் எடுத்தார். புரட்சிகரமாகக் குறைந்த செலவில் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடனும், ஜெயகாந்தன் சினிமாத்துறையிலும் புகழ் பெற வேண்டும் என்ற நினைப்பிலும் எடுக்கப்பட்ட படம். மொத்தச் செலவே ஒரு இலட்சத்துக்குள் தான்.
பொருளாதார ரீதியாக அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அந்தப் படத்திற்கு இந்தியாவின் மத்திய அரசின் மூன்றாவது பரிசு கிடைத்தது. இது மட்டுமே சினிமாவில் ஜெயகாந்தனுக்குக் கிடைத்த வெற்றி. ஜெயகாந்தனைப் போலவே அவரது எழுத்துக்களும் நிமிர்ந்து நிற்பவை. அதனால் சக நண்பர்களுடன் கூட அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டது. சினிமாவில் அவரது பிடிவாதம் அவரை முன்னேற விடாமல் தடுத்தது.
அவரது பிடிவாதத்தின் படியே இறுதியாகச் சினிமாவாக எடுக்கப்பட்ட ‘புதுச் செருப்புக் கடிக்கும் படம் கூட ஓடவில்லை. இதுவும் ஜெயகாந்தனின் கதைதான். அவரது கதைகளில் ஒன்றுதான் அந்நாளில் காவல் தெய்வம்' சினிமாவாக வெளிவந்தது. இப்படத்தைக் குணசித்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா தயாரித்திருந்த போதும் ஜெயகாந்தன் வேறு விடயங்களிலும் தலையிடாமல் கதையை
G2

Nita petse):
மட்டும் எழுதிக் கொடுத்தார். இப்படம் கூட பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரது கதைகள் சினிமாவாக உருப் பெற்ற போது அது எப்படியிருந்த போதும், பண ரீதியாக வெற்றி பெறா விட்டாலும் சிறந்த படைப்பாளிக்கான விருதுகளும், மக்களின் அங்கீகாரமும் கிடைத்தது.
அப்பேர்ப்பட்ட எழுத்தாளர் ஜெய காந்தனுக்கு அண்மையில் 2002 இற் கான ஞானபீட விருது இந்திய மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்துலக தமிழ் எழுத்தாள நெஞ்சங் களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் தான்.
இவ்வெற்றியை வாழ்த்தும் முக மாகவும், வாழ்த்திப் பொதுக் ğ5 Lq g5
மொன்றை அனுப்பும் முகமாகவும் கடந்த
02.04.2005 அன்று "மல்லிகைப் பந்தலில் இலக்கியவாதிகளின் ஒன்று
கூடல் வைபவம் ஒன்று இடம்பெற்றது.
மல்லிகை ஆசிரியரும், மல்லிகைப் பந்தல் பதிப்பாளருமான டொமினிக் ஜீவா தமது கருத்தைக் கூறுகையில் :-
‘எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அகில இந்திய ஞானபீடப் பரிசு கிடைத் ததையிட்டு உண்மையில் நெகிழ்வடை கிறேன். அவர் ‘சரஸ்வதி காலத்து எழுத் தாளர். அவர் சரஸ்வதியில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் நானும் இங்கு எழுதிக் கொண்டிருந்தேன். அவரை அன்றைய காலத்தில் நேரில் சந்திக்கா விடினும், அவர் பற்றிய இலக்கிய விட யங்களைத் தெரிந்து வைத்திருந்தேன்.
பிற்காலத்தில் நாங்கள் இருவரும் இலக்கிய நண்பர்களானோம். தாழ்த்தப் பட்ட மக்களுக்காக அவர் எழுதினார். அவர் சரஸ்வதியில் எழுதிக் கொண்டி ருந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் மணியனை ஜெயகாந்தனிடம் அனுப்பி விகடனில் ள்முதச் சொன்னதன் பயனாக ஜெய காந்தன் காத்திரமான படைப்புகளை ஆனந்த விகடனில் எழுதத் தொடங் கினார்.
ஒரு பெரிய ஸ்டுடியோ (ஜெமினி)
நிர்வாகி இப்படியொரு அழைப்பை
விடுத்தது ஜெயகாந்தனுக்கு மட்டுமாகத் தான் இருக்க முடியும். அப்படியொரு ஆளுமை ஜெயகாந்தனுக்கு இருந்தது.
நான் 32 தடவைகளுக்கு மேலாக தமிழகம் சென்றிருக்கிறேன். அப்படிப் போன சமயங்களில் எல்லாம் என்ன பிரச்சினைகள் என்றாலும் அவரைச் சந்திக்காமல் வருவதில்லை.
ஒரு எழுத்தாளராக ஜெயகாந்தன் இருந்த போதும், சிறந்த இயக்குநர் என்பதை அவர் எழுதிய கதையான "யாருக்காக அழுதான்’ படம் எடுத்துக் காட்டியது. தன்னாலும் சினிமாவில் சிறப்பித்துக் காட்ட முடியும் என்று நிரூபித்தவர் ஜெயகாந்தன்.
கணிப்பாகச்
பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகிய
எனது சொந்தக்
சொல்லப் போவதானால்,
இம்மூவரையுமே என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். தவிதைத் துறையில்
G3

Page 34
பாரதியும், சிறுகதையில் புதுமைப் பித்தனும், நாவல், சிறுகதை, சினிமா
போன்றவற்றில் ஜெயகாந்தனும் ஏற்
படுத்திய புதிய வீச்சை, புரட்சியை நான்
யாரிடமும் காணவில்லை. அதனால் தான் இம்மூவரையும் குறிப்பிடுகிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன் ஞான பீட விருது அகிலன் பெற்றார். இத்தனை வருட இடைவெளிக்குப் பின்னரே ஜெயகாந்தன் இன்று பெற்றி ருக்கிறார். இந்த இடைவெளிகளில் எத்தனையோ தடைகள் இருந்து வந் திருக்கின்றன’ என்று டொமினிக் ஜீவா கூறினார்.
இவ்வொன்று கூடலில் அண்மை
யில் தமிழகம் சென்று வந்திருந்த அந்தனிஜீவாவும் உரையாற்றினார்.
அவர் தென்னகம் சென்றபோது, ஜெய
காந்தன் ஞானபீடப் பரிசு பெற்றிருப்பதை அறிந்ததும் ஜெயகாந்தனை நேரடியாகச் சென்று சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்திய
è 665); অ
கல்யாண சுந்தரம் மறைந்தபோது ஜெய காந்தன் சொன்ன அவ்வரிகளைத் தனது நன்றியுரையில் ஞாபகப்படுத்தி எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததை உலக தமிழ் எழுத் தாளர்களுக்கே கிடைத்ததைப் போன்ற சந்தோஷத்தை அவர் தனது நன்றியுரை யில் வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் பூபாலசிங்கம் புத்தக சாலையின் அதிபர் திரு. ஆர்.பி. முநீதர சிங், மா.பாலசிங்கம், ஜின்னாஹற் ஷெரிபு தீன், மேமன்கவி, 'தினக்குரல் தேவ கெளரி, ஏ.எஸ்.எம்.நவாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் முக்கிய விடயமாக ஜெய காந்தனை வாழ்த்திப் பொதுக் கடித மொன்றை அனுப்பும் முகமாக எழுத் தாளர்களிடமிருந்து கையொப்பம் பெறப் ul-L-5).
சிறிய கூட்டமாயினும் மனநிறை வாக இருந்தது.
சம்பவத்தையும் இக் கலந்துரையாடலில் நம்முடன் கொண்டார்.
இந் நிகழ் வி ன் போது நன்றியுரை யில் கனிவு மதி
"'85 IT 6) b
பகிர்ந்து
கவிஞர் கூறியது க வி ஞ  ைன க் கொன்றுவிடும்' என
மக்கள் கவிஞர்
ப ட் டு க் கோ ட்  ைட
வாழ்த்துகின்றது
தேசியக் கலைஞர் விருதும் பண முடிப்பும் பெற்றுக் கொண்டவ ரான திருமலை சித்தி அமரசிங்கம் அவர்களுக்கு மல்லிகை தனது பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து மகிழ்கின்றது.
- ஆசிரியர்.
G4
 
 

ثيودمستانه)ود خA8كمود
சுனாமிக்குள் சுழியோடிகள் தத்தளிக்கும் தனி உயிர்களை(த்) தப்ப வைக்கும் தாட்சண்ய சிந்தையுடன் செயற்பட்டுக் குற்றுயிராய்க் குறை உயிராய்க் கிடந்தோரின் கழுதிலுள்ள
மாலைகளை, கையிலுள்ள காப்புகளை, விரலிலுள்ள மோதிரங்களை அறுத்தும் வெட்டியும் அனுதாபங் காட்டினர்; இரக்கமற்ற அரக்க மனத்து அநாதை ரட்சகர்
- சாரணா கையபூம்

Page 35
'ānâ വേ കരിവകn'
மீண்டும் நனவாகட்டும்.
(தாமரைச் செல்வியின் ‘பச்சை வயல் கனவுகள் நாவல் பற்றிய கண்ணோட்டம்)
- ச. முருகானந்தன்
நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு காத்திரமான நீண்ட நாவல் ஈழ மண்ணில் அறுவடையாகியுள்ளது. ஏற்கனவே தனது நாவல்களாலும், சிறுகதைகளாலும் வாசகர்களுக்கு நன்று அறிமுகமான ஈழத்தின் சிறந்த பெண் எழுத்தாளரான தாமரைச் செல்வியின் பேனாவால் ஊற்றெடுத்த இந்நாவல் அவரது வன்னி வாழ்வின் மனவூற்றுத்தான்!
இவரது எட்டாவது நூலான இந்த நாவல் சுப்ரம் பிரசுராலயத்தால் வன்னியிலிருந்து அழகாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் கிளிநொச்சி மக்களின் குடியேற்ற வரலாறு தொட்டு இன்று வரையான மாவட்ட நிகழ்வுகளை மக்களின் வாழ்க்கை முறைகள், அபிலாசைகள், கனவுகள், நம்பிக்கைகள், போராட்டங்கள், கலைப் பண்பாடுகள், நன்மை தீமைகள், எழுச்சி, வீழ்ச்சிகள் அனைத்தையும் சுவாரஸ்யமான கதையின் ஊடாகப் பதிவு செய்வதில் வெற்றி கொண்டுள்ளது. இந்த நாவல் குறிப்பிடத்தக்களவு நீளமுடையதாகவும், பாத்திரங்களின் இயல்புகளை வாழ்க்கையில் உள்ளபடியே யதார்த்தமாகச் சித்தரிப்பதாகவும், ஒரு காலகட்ட வரலாற்றினூடே தமிழர் அடக்குமுறை மற்றும் எழுச்சியைக் கூட்டுவதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண் வாசனையோடு வன்னி மண்ணின் மருதநில வாசனையைப் பாத்திரங்களின் உரையாடல் மூலமும், செயற்பாடுகள் மூலமும் தரிசனமாக்கியுள்ளார். ஆரம்பப் பகுதி யாழ்குடா நாட்டின் குழைக்காடாக இருந்து வளர்ச்சியுற்ற தென்மராட்சிப் பிரதேசத்தையும், பின்னர் கிளிநொச்சி பிரதேசத்தின் மலர்வையும் காட்டி நிற்கின்றது. கட்டிய சாரமும், வேட்டியும், தோளில் ஒரு துவாயுமாய் வெறுங்கையுடன் வந்து குடியேறி, யானைகளும், பாம்புகளும், நுளம்புகளும், கொடு நோய்களும் அச்சுறுத்திக் கொண்டிருந்த காட்டுப் பிரதேசத்தில் மிகத் துணிச்சலுடன் போராடி வாழ்ந்து, தமது
GG

صمم
அயராத உழைப்பின் மூலம் அம் மண்ணைப் பொன் விளையும் பூமியாக மாற்றி வளமான வாழ்வையும் அமைத்து கிளிநொச்சியையும் கட்டியெழுப்பிய மக்களின் கதை இது.
ஒரு காலகட்டத்தின் நகர்வுகளூடே விவசாய விரிவாக்கம் பற்றியும், இதே காலகட்டத்தில் இம்மண்வாசிகளின் வாழ் வுடன், எமது நாட்டுச் சிறுபான்மையின
ரான தமிழரின் வாழ்வையும் தரிசன
மாக்குவதுடன் அதனூடே தாயக விடுதலைப் பயண உருவாக்கத்தையும், தமிழர் ஆயுதமேந்த ஏற்பட்ட சூழ்நிலை யையும் காட்சிப்படுத்துகிறது. எனவே இது கிளிநொச்சிக் கதையுடன், தாயக விடுதலைப் போராட்டத்தின் கதை யாகவும் இருக்கிறது.
கிளிநொச்சி மண்ணின் சாதாரண விவசாயியின் வியர்வையையும், குருதி யையும், அவலத்தையும், தியாகத்தையும் ஆசிரியர் சுய அனுபவமாகப் பதிவு செய்யும்போது நாவல் யதார்த்தமாக அமைந்து விடுவதில் வியப்பில்லை.
கிளிநொச்சி மண்ணில் குமார புரத்தில் மிக நீண்ட காலம் வாழ்கின்ற இவர், இப்பிரதேசத்தின் இற்றை வரையிலான வரலாற்றைப் பக்கச் சார்பின்றியும், பிரசார முன்னெடுப் பின்றியும் சித்தரித்துள்ளார். கடந்த நூற் றாண்டின் நடுப்பகுதியில் கிளிநொச்சிக் காட்டில் குடியேறிய குடாநாட்டு விவசாயிகளின் அயராத முயற்சியும் அதன் அறுவடையும், பின்னர் வந்த இன ஒடுக்குமுறைகளும், தேசிய இனப்
பிரச்சினையும், அதையடுத்த யுத்தமும், இடப்பெயர்வும், மீள்வரவும் என உண்மை வரலாற்று நிகழ்வுகள் திரிபு படுத்தப்படாமல் கூறப்படுகிறது. அயராத உழைப்பினால் எழுச்சியினால் உயர் வடைந்த பிரதேசம், நாச யுத்தத்தினால் குறுகிய காலத்தில் சிதைவுற்றமையின் பாரிய மனத்தாக்கமே இந்நாவல் உரு வானதற்கான காரணியாக இருக்க வேண்டும்.
தாமரைச் செல்வி தனது எழுத்தின் ஆளுமையினால் ஒரு கால கட்ட வாழ்வின் சாட்சியாய் நின்று, நடந்த முக்கிய சம்பவங்களைக் கோர்த்து அழகிய கிளிநொச்சி வரலாற்றுடன் தேசிய
மாலை யாக்கியுள்ளார்.
இனப்பிரச்சினை வரலாற்றையும் பச்சை வயல் கனவு நாவல் மூலம் எதிர் காலத்திற்குக் கொடுத்திருக்கிறார் என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறும் ஆவணமாகிறது. இந்த நாவலுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஈழத்துத் தமிழ் நாவல் பரப்பில் வேறெங்கும் வாய்க்காதவை.
ஞானசேகரனின் குருதிமலை, மலையகத்தின் ஒரு குறுகிய கால கட்டத்தை வெகு துல்லியமாகக் காட்சிப்படுத்தியது போல இந்த நாவல் கிளிநொச்சியின் ஒரு நீண்ட காலத்தை அனுபவ நேர்மையோடு பதிவு செய் துள்ளது எனலாம். செங்கை ஆழியானின் காட்டாறு, பாலமனோகரனின் நிலக்கிளி முதலான வன்னி வாழ்வின் மண் வாசனையைச் சிறப்பாகத் தந்த நாவல்களைப் போலவே இங்கும் வன்னி
G7

Page 36
வாழ்வு இன்னும் ஒருபடி யதார்த்தமாகத் தரிசனமாகின்றது.
பச்சை வயல் கனவு எதையும் தன் நோக்கு நிலையில் வாசகனுக்குத் திணிக்க முனையவில்லை. சம்பவக் கோர்வை களினூடே மனிதர்களின் மனவோட்டத் தைச் சொல்லிப் போகும் பாங்கில், மெளனித்திருக்கும் கேள்விகள் தேடலுக்கு வித்திடுகின்றன.
கிளிநொச்சி மண்ணின் தோற்றம், எழுச்சி, வீழ்ச்சி என்பவற்றை விசித்திர அனுபவங்களோடு பேசும் இந்நாவலில் மீண்டும் துளிர்த்து எழும் நம்பிக்கையும் இலகுவான மொழியில் மனதைத் தொடும் வண்ணம் காட்சிப் படுத்துவதில் கதாசிரியை வெற்றி கண்டுள்ளார். குடும்ப உறவுகளைச்
இயல்பாக,
சித்தரிக்கும் போது இயல்பான அன்புப் பிரவாகம் மனதை நெகிழ வைக்கிறது.
கிளிநொச்சிப் பிரதேசம் இன்று சமாதான முன்னெடுப்பின் கேந்திர நிலையமாக மாறியுள்ளதால் சர்வதேச மட்டத்தில் பலராலும் அறியப்பட்ட நகராக மாறியுள்ளது. இப்பிரதேசம் பற்றி அறியப்படாத பல தகவல்கள் இந் நாவலின் மூலம் அரங்கிற்கு வருகிறது.
மண்ணை நம்பி உழைத்த மக்களின் வாழ்க்கையின் துன்ப துயரங்களும், மகிழ்வுகளும் அதேவேளை அழுத்தமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. வெகு இயல்பாக நம் கண் முன்னே
இயல்பான நடையில்
பாத்திர வார்ப்புகள்
நடமாடுவது போன்ற உணர்வை இந்தக் கதை நமக்குத் தருகிறது. சிவம்.
G8
р:90снобой.
வேலாயுதம், அன்னம், கார்த்திகேசு,
மரியகண்டு, தாமோதரி, விநாசி,
வெற்றிவேலு, பண்டா, முருகானந்தம்,
ஒவசியர், விதானையார் எல்லோருமே
எமது உறவுகள் போல் கதையில்
நடமாடுகின்றனர். கதை மாந்தர்களும், களமும் நம்மிலிருந்து அந்நியப்
படாமையும், ஆற்றொழுக்கான மொழி
நடையும் வாசகனைக் கதையோடு கட்டி
நிறுத்துகிறது. பாத்திர வார்ப்புக்கள் வெகு இயல்பாக நம் கண் முன்னே நட
மாடுவது போன்ற உணர்வு வாசகனுக்குக்
கிட்டுகிறது.
நாவலின் பிற்பகுதியில் வருகின்ற கடந்த இரு தசாப்தங்களின் நிகழ்வு களினூடே தேசிய இனப்பிரச்சினை ஆழமாக, பக்கச் சார்பின்றிச் சித்திரிக்கப் பட்டுள்ளமை இன்னொரு சிறப்பம்ச மாகும். இன்றைய நெருக்கடிகளையும், நிகழ் வாழ்வின் இடுக்குகளையும் எதிர்கொண்டு, அவலங்களை ஆழமாகப் பார்வைப்படுத்திய ஒரு பெரும் படைப் பாக இந்த நாவலைக் கொள்ளலாம். புறவய நிகழ்வுகள், அகவய நெருக் கடிகளுக்கு காரணிகளாவதன் சித்திரம் உள்ளது.
இதுவரை தாமரைச் செல்வி படைத்த நாவல்களில் பச்சை வயல் கனவு சற்று மாறுபட்டது. இவரது முதலாவது நாவலான சுமைகளிலிருந்து முதிர்ச்சி யுற்ற ஒரு முதுமையான நாவலாக இதைக் குறிப்பிடலாம். ஒரு நீண்ட வரலாற்றை 300 பக்கங்களுக்குள் அடக்கி வெற்றி கண்டுள்ளார் எனலாம்.

- டொமினிக் ஜீவா
சமீபத்தில் பேரழிவையும், பெருநாசத்தையும் ஏற்படுத்திய சுனாமி பற்றி உங்களது
கருத்து என்ன? w
நீர் கொழும்பு w எஸ். தியாகசீலன்
* இயற்கையையே வெற்றி கொண்டு விட்டதாக மனிதன் இறுமாப்படைந்திருந் தான். இயற்கையோ மெளனமாக காத்திருந்து காத்திருந்து தனது குன்றா வலிமையை
வெளிக்காட்டி விட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் சுனாமி. இயற்கையை அனுசரித்துப் போகலாம். எந்தக் கொம்பனாலும் அதை வெற்றி கொள்ள முடியாது.
- O - O - O - O -
ΣΚ. தேசந் தழுவிய வகையில் எழுத்தாளர் உறவு மல்லிகைக்கு எப்படி உள்ளது?
பதுளை ஆர். கணேசன்
* மல்லிகை ஆசிரியர் என்கின்ற முறையில் மாத்திரமல்ல, தனிப்பட்ட ரீதியிலும் நான் சகல எழுத்தாளர்களுடனும் நட்புறவைப் பேணிப் பாதுகாத்து வருகின்றேன். இதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறேன்.
- O - 0 - 0 - 0 -
X மல்லிகை தங்களுக்கு இப்பொழுது கிடைப்பதில்லை எனச் சிலர் குற்றஞ் சாட்டுகின்றனரே, இதற்கென்ன பதில் சொல்லுகிறீர்கள்?
நல்லூர் க.கயிலைநாதன்
* சகல சந்தாதாரர்களின் விவரங்களையும் நானே என் கைப்படக் கையாள்கின் றேன். அத்தனை முகவரிகளையும், தகவல்களையும் கணினியில் பதிவு செய்து ஒழுங்குபடுத்தியுள்ளேன். எப்போவோ ஒர் ஆண்டில் இவர்கள் ஆண்டுச் சந்தா
GS)

Page 37
செலுத்தியிருக்கலாம். அதை இப்படி யானவர்கள் ஆயுள் சந்தா என நினைத்து விட்டார்கள் போலும். இப்படிச் சொல் வது கூட ஒர் இலக்கிய நாகரிகமாகி விட்டது, இன்று.
- 0. - O - O - O -
区 காஞ்சி மடத்து ஜெயேந்திரர்
கைது பற்றி உங்களது கருத்து என்ன?
கொக்குவில் எம். கணபதி
2 பழைய பெரியவர் இருந்த காலத்தி லேயே இவர் மடத்தை விட்டு வெளி யேறிப் போனவர். அப்போதே என் மனம் கணக்கிட்டுக் கொண்டது. காவி உடையில் துடக்குப் படிந்து விட்டது. படிந்த கறையை வலிந்து அகற்ற முற் பட்டால் காவித் துணியே கிழிந்து போய் விடும். பட்ட கறை படிந்த கறையாகவே முடிவில் மிஞ்சும். கவனம்.
- O - 0 - 0 - 0 -
X தூண்டில் கேள்வி - பதிலில்
உங்களைப் பற்றிய கேள்விகளே அதிகம்
இடம் பெறுகின்றன. இதைத் தவிர்த்தால்
நல்லதல்லவா?
uLurrpu Lurcuuruio எம். முரளிதரன்
2 எனக்கே எரிச்சலாக இருக்கிறது.
நாற்பது ஆண்டுகளாக எனது நடவடிக்கை
களை தெரிந்து வைத்திருக்காதவர்களா, வெறும் கேள்வி பதிலில் அறிந்து விடப் போகிறார்கள்? ஆனால் ஒரு வகையில் ஆறுதல். வெறும் சினிமாக்காரர்களைப் பற்றிக் கேட்காமல் ஒரு படைப்பாளி
7Ο
অs யின் அநுபவங்களைப் பற்றிக் கேட்டறி வதில் அக்கறை காட்டுகின்றனரே, அது ஒரு வகையில் வளர்ச்சி. தொடர்ந்தும்
pesosos
தனி மனிதப் பிரதாபங்களைக் கேட் காமல் இருப்பதுதான் அறிவு வளர்ச்சிக்கு நல்லது.
- D - O - O - O -
இலங்கையில் இத்தனை வகை யான தமிழ் நூல்கள் வாரா வாராம் வெளி வருகின்றனவே, இவைகள் அத்தனைக் கும் விற்பனவுச் சந்தை வசதி உண்டா?
மருதானை க. நிஷாந்தன்
23 எழுத்தாளர் முன்னால் நின்று பயமுறுத்தும் பிரதான பிரச்சினையே, அதுதானே!
- O - O - O - O -
X மல்லிகையின் நாற்பது ஆண்டுக்
காலத்தை நீங்கள் நினைத்துப் பார்ப்பதுண்டா?
chucu curful urr எம்.இம்மானுவல்
* மிக ஆறுதலாக இருந்து நினைத்துப் பார்ப்பேன். சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்வேன். என் முடிவில் அநு. பவங்களைத் திட்டமாக வடிவமைத்துக் கொள்வேன்.
- O - O - O - O -
ΣK உங்களுக்கேற்பட்ட மறக்க முடி யாத இலக்கிய அநுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

卧 666): கோப்பாய். கா. திரவியம்
25 சென்ற ஆண்டு முற்பகுதியில்
நண்பர் தனுஷ்கோடி ராமசாமியின் மூத்த
மகனின் திருமணத்திற்கு கோயில்பட்டிக் குப் போயிருந்தேன். பின்னர் சென்னை யில் 'பாலன்" இல்லத்தில் தங்கியி ருந்தேன். இலக்கியச் சஞ்சிகை 'தீராநதி" யிலிருந்து பேட்டிக்காக நேரம் ஒதுக்கித் தரும்படி தொலைபேசியில் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். நானும் சம்மதித் தேன். பகல் ஒய்வு நேரத்தில் பேட்டி காண நிருபரும் புகைப்படக்காரரும் பாலன் இல்லம் வந்தார்கள். பேட்டி முடிந்த பின்னர் புகைப்படக்காரர் ஒரு சில படங்களை எடுத்தார். இது தாமரை மகேந்திரனுக்கும் தெரியும். பிரபல எழுத் தாளர் பா.செயப்பிரகாசம் அப்பொழுது பக்கத்தே இருந்தார். விடைபெற்றுப் போகும் பொழுது நிருபர் 'அடுத்த இதழில் பேட்டி இடம்பெறும் எனச் சொல்லி விட்டுச் சென்றார். ஆனால், அடுத்த அடுத்த இதழ்களில் எனது பேட்டி இடம்பெறவில்லை.
எனக்கு அது வருத்தமில்லை. ஆனால் வலிந்து என்னைப் பேட்டி காண நேரம் ஒதுக்க வற்புறுத்தி, வந்து பேட்டியும் படங்களும் எடுத்த பின்னர் தீராநதி இதழில் அப்பேட்டி இடம் பெறாமல் போனதற்கு என்ன காரணம்? ஆசிரியரை யும் விட ஒரு வலிமையான சக்திதான் இந்த இருட்டடிப்புக்குக் காரணம் என முடிவில் புரிந்து கொண்டேன்.
பத்திரிகா தர்மம் ஈழத்து எழுத்தாளன் மீது சுரண்டிப் பார்க்க முனைகிறது.
சுரண்டிப் பார்க்கட்டுமே!
உறவாடி மகிழ்ந்திருந்தோம்.
- 0 - 0 - O - O -
உங்களது காலத்தில் யாழ்ப் பாணத்தில் இயங்கிய எழுத்தாளர்கள் மத்தியில் சுமுகமான புரிதல் உணர்வு நிலை நிலவியதா?
சுன்னாகம் cssr.Curresqrrgrr
23 மிக மிக நெருங்கிப் பழகினோம். நமக் கிடையே கருத்து முரண்பாடுகள் இல்லா
மல் இல்லை. ஆனால் இவைகளையும் மீறி ஒருவரது நலனில் ஒருவர் அக்கறை
கொண்டிருந்தோம். ரஸிகமணி போன்ற அற்புதமான மனிதனின் நட்பையும் பண்பையும் இன்று நினைத்துப் பார்க் கிறேன். பலரும் சந்தித்து மகிழும் சங்கப் பலகையாக அன்று மல்லிகை விளங் கியது. அந்தக் காலகட்டத்து இலக்கிய நட்பு இன்றும் மனசில் பல இனிய நினைவுகளை நிழலாடச் செய்கிறது.
- 0 - 0 - 0 - 0 م.
நீங்கள் ஒரு தடவை தலையங்
கத்தில் குறிப்பிட்டது போல, எழுத்தாளர்
டானியலுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை நிறுவப்படுவது சாத்தியமா?
ஆனைக்கோட்டை கே.எம்.ரவி
இ நல்லெண்ணங்கள் எந்தக் காலகட் டத்திலும் வீண் போவது கிடையாது. காலம் கனிய நாட்கள் போகலாம். ஆனால், நிச்சயமாக நடந்தே தீரும். டானியல் அவர்களுக்கு நிச்சயம் ஒரு நாள் சிலை நிறுவப்பட்டே தீரும்! கனடாவில்
71

Page 38
இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
- 0 - 0 - 0 - 0 -
மல்லிகையின் எதிர்காலமென்ன?
வேலனை
ஆர்.பசுபதி
மி பயப்படும் படியாக ஒன்றுமே நடை பெறாது. மல்லிகை தனது நூற்றாண்டை நானில்லாமலே கொண்டாடி மகிழும். இது சர்வ நிச்சயம்.
- O - O - 0 - 0 -
X மல்லிகைப் பந்தல் ஒன்றுகூடல் பற்றி நாங்களும் அறிந்து கொள்ளலாமா?
கல்கிசை стcho.arcucuллтcйг
23 அந்தக் காலத்திலிருந்தே யாழ்ப்
பாணத்தில் மல்லிகைப் பந்தல் ஒன்று கூடல் இயங்கி வந்துள்ளது. பல இலக் கியச் சந்திப்புகளை இதன் கீழ் ஒழுங்கு செய்து வெற்றிகரமாக நடத்தியிருக் கிறேன். இது பொதுக் கூட்டமல்ல, அழைக்கப்பட்ட - விரும்பி, வரச் சம்மதம் தெரிவித்துக் கொண்டுள்ள நெருங்கிய இலக்கிய நண்பர்கள் ஒருங்கு சேர்ந்து ஒரு நோக்கத்தை நிறைவேற்றவே கூடிக் கலைகிறோம். விருப்பமுள்ளோர்
தத்தமது சம்மதத்தைத் தெரிவித்தால்
கலந்து கொள்ளத் தகவல் தருவோம்.
- 0 - 0 - 0 ۔ 0 س۔
8 EGGE
8 * 8 سند
வேடிாபாசக்தி
凶 உலகத் தமிழ் எழுத்தாளர் கொழும்பில் ஒன்று கூடுவது பற்றி ஒரு தகவல் சொல்லப்பட்டதே, இந்த ஒன்று கூடல் பற்றி மேற்கொண்டு தகவல் பெற (tpւԶԱկլOT?
цолбө5гтсилсалт ஆர்.முகுந்தன்
2 இந்த யோசனை முருகபூபதியை வரவேற்று உபசரித்த கூட்டமொன்றில்
முன் வைக்கப்பட்டது. மிகப் பாரிய
முயற்சி இது. ஆரம்ப கட்டத்தில் தான் அதன் இன்றைய செயற்பாடுகள் உள்ளன. தொடர்புகள் தொடரப்படு
கின்றன. நிலைமை சீராகியவுடன் இந்த
உலகத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் ஒன்று கூடிக் களிக்கவே செய்வார்கள்.
سه 0 - 0 - 0 س- 0 -
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு -
13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும்
வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72
 

புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள், இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
S.
1) சாஹித்திய புத்தக இல்லம் இல. 15, குருநாகல் றோட், பஸ்நிலையம், புத்தளம். தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 39
| g Malika
RESHMA IMITATi
Bangles, Chai Ear Tops, Guara
1 Ya レ驚
融
öalmaan
Χέζ "Santhosh Pla 1 St F 231-1114, M Colomb
Te: O11 Hot Line : Ol
 
 
 
 
 
 

ONJEWELERS
as, Necklaces, nteed Items Etc.
こ《
§
F། نہیr:Rورہ
ஜீ
ჯჭჯვაწჯ
Trading
Iza Complex /X, loor, W a in Street, O - 11. 239.4512 77 666 1336