கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2005.07

Page 1
đĩ)ņķī uotooɓudi sốīusão rimsoo loyoogooooooo
50வது ஆண்டை நோக்கி.
LN)6\S6XS
CabéînfińsLTñt
 


Page 2
@ർപ്പു മറ്റ്രlue
Digital Colouvadě Šudio
MAN FEATURES G盖 Automatic dust & scratch correction
* Maximum 5ize: I' x 18'Digital print) * Output Resolution: 4oodpi *Film lnput Formats: 135, Ix240, Izo, APS * Film Types: Colour negative & positive, Baw
negative, Sepia negative
* Compatible linput & Output Media:
Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia)
sk Print to Print * Conduct sheet & lindex print
ck Templates: Greeting Cards, Frame Prints, Calandar Prints,
Album Prints.
HEAD OFFICE
BLANCH HAPPYDIGITAL CENTRE Appy photo
DC్క:ပ္* 援A莎 5 rubo 'ñ:
等铁接笼浚 PoroctAPHEUS t:3:0CJA**
No. 64, Sri Sumanatissa Mw, No. 3oo, Wodera Street, Colombo - I2. Tel-o74-6Io652. Colombo - 15.Tel:-oII-2526345.

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற பெறு ம தி மிக்க கம்ப வம் இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்
团曲á队
; ༢ དགར་ €ნდორy
Տ15
'ഠൂർl് ീഗ്ഗഡ്രൂ മർർ i ദ്ധe !
படைப்பாளிகளின்
புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
4-6)
201-1/4, Sri Kathiresan Street, Colombo - 13. Te: 232O721
ஜூன் - 27
1927-c. நான் யாழ்ப்பாண நகரில் பிறந்தேன். 1939 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பூசத் தினத்தன்று செம்மா தெருவிலுள்ள ஜோசேப் சலூன் படிக் கட்டுகளில் பொடிப்பயலாக எதிர் காலக் கனவுகளுடன் படி ஏறினேன். 1966 ஜூலை மாதம் அதே சிகை அலங்கரிப்பு நிலைய முகவரியைப் வெளியீட்டிட மாகக் கொண்டு மல்லிகை மாசிகையை ஆரம்பித்தேன். 1960ம் ஆண்டுக்கான பூரீலங்கா சாஹித்திய மண்டலப் பரிசை முதன் முதலில் பெற்றுக்கொண்டேன்.
இன்று எனது பிறந்த தினமாகும். காலையில் மல்லிகை அலுவலகம் வந்தவுடனேயே இந்தக் குறிப்பை எழுதி உங்களுக்குச் சமர்பிக்கின்றேன். அருமை யான பிறந்தநாள் பொருத்தமிது.
இத்தனை ஆண்டுக் காலகட்டங் களையும் மனநிறைவுடன் பின் கோக்கிப் பார்க்கின்றேன். தடம் புரளாமல் நடை போடுகின்றேன்.
எத்தனையோ மகத்தானவர்கள் எல்லாம் எனது வளர்ச்சிக்குப் பசளையிட் டுள்ளார்கள். பல்கலைக்கழகங்களூடாக எத்தனையோ கல்விமான்கள் என்னையும் மல்லிகையையும் பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர். -
தனி நபர்கள் பல பல உதவிகள் புரிந்து, பண்ணி மதித்து வந்துள்ளனர். இவர்கள் அத்தனை பேர்களுக்கும் எனது நெஞ் சார்ந்த நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கின்றேன்.
எனது உழைப்பைக் கனம்

Page 3
Prop. V. Nagadevan J.P.
COLOMBO CENTREly
Importers & Dealers of DANA ALUMNUM
Toys, Fancy, INDUSTRIES
Oilment Goods & Textiles
49/6, Maligawatta Place,
Head Office: Maligawatta, 89/22, Prince Street, Colombo - 10.
Colombo - 11. T.P.: 2473314, 4717972 Manufacturers Of Fax : 94-1-449599, 94-1-445559 O ES
E-mail: ccimpddaOsltnet.lk Aluminium
KitchenWare Resident : 93/69, Kalyani Gangarama Mawatha, T.P.: 2459134 & 2430158
Mattakkuliya, Colombo - 15. Mobile : O777.551726
T.P.: 2523114, 2527572,2528177
COLOMBO CENTRE| COLOMBO CENTRE
(CC1) (CC2) Branches : O 89/22, Prince Street, Branches:
11611, Prince Street, Colombo - 11.
O Colombo. 11. Dealers of Toys, Fancy, Imitation
Jewelleries, Eversilver & Dealers of Toys, Fancy,
Oilment Goods Imitation JeWelleries We undertake all kinds of &
goods to send Jaffna. Oilment G00 ds
T.P.: 2345193,2478654, 2529888 T.P.:2325901, 2543999

வாய்க்கு எட்டியது வயிற்றுக்கு எட்ட வேண்டும்!
பெரிய ஆச்சரியம் இதுதான். கட்ள் கோளினால் துன்ப
துயரங்களுக்கு ஆட்பட்டு நொந்து நொருங்கியவர்கள் மாத்தளை
யிலிருந்து பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஈறாகக் கடற்கரையோரங்களில் வசித்து வந்த பாமர சிங்கள, முஸ்லிம், தமிழ் உழைப்பாளி மக்கள்தான்.
அவர்கள் தங்களது இழப்புகளை, கஷ்ட நஷ்டங்களைப் பேசி அதற்காக ஒன்று கூடி, தங்களது பாரிய துயரங்களில் இருந்து விடுபடக் கூட்டுச் சேர்ந்து திட்ட மிட்டால் அது நியாயம்.
அது தவிர்ந்து இந்தப் பிரச்சினையில் தமது கால் செருப்பைக் கூட இழந்தறியாத ஏனைய பிரதேசத்தவர்கள் தமது அரசியல் லாபத்திற்காகக் குட்டையைக் குழப்பி வருவதுதான் எரிச்சலைத் தருகின்றது.
இந்தச் சுனாமி சம்பந்தமாக மாத்திரமல்ல, கடந்தகால உள்நாட்டு யுத்தத்தினாலும் இவர்களில் பெரும்பான்மையானோர், இருந்து வாழ்ந்த இல்லிடங்களை விட்டு, அகதி முகாம்களில் இன்றுவரை வாழ்ந்து வருபவர்கள்.
இவர்களுக்கு இன்று சர்வதேச நிவாரண நிதி உதவி கிடைக்க ஏதுவாக இந்தப் பாமர மக்கள் கூட்டத்திற்கு இன்று ஏதோ சில பல உதவிகள் சர்வதேசச் சமூகத்திடமிருந்து கிடைக்கக் கூடிய வாய்ப்பு வசதி ஏற்பட்டுள்ளது.
இந்தப் பெறுமதி மிக்க சர்வதேசங்களின் மனிதாபிமானமான உதவிகளை இடையே புகுந்து, எந்தவிதமான நேரடிப் பாதிப்புகளுக்கும் உட்படாத பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு சிறு கூட்டம், அரசியலை முன் நிறுத்தி, தடுத்துப் பார்த்துவிடத் தீவிர முயற்சி செய்கின்றது.
இந்தத் தேசத்தின் எதிர்காலம் எப்படி எப்படி அமைய வேண்டும் என்ற தீர்க்கதரிசன முடிவுக்கு இது ஒரு சவாலாக அமைந்துள்ளது.
ஆரோக்கியமான எதிர்கால அரசியலுக்கு சவால் விட்டு நிகழ்ந்து வரும் இந்தத்
தற்காலிகக் குழப்பங்களிலிருந்து, முழு நாடும் முகிழ்ந்து வரும் என உறுதியாக நம்புகின்றோம்.

Page 4
இலக்கிய ஆர்வலர் எம்.எம்.பீர்முகம்மது
- மலரன்பன்
"உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். அஸ்லாமு அலைக்கும். ஆயுபோவன்."
மேடையில் பேச்சாளர். மாத்தளையில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றில் நானும் சபையில்.
1994ஆம் ஆண்டு என ஞாபகம்.
'தமிழகத்தில் பிறந்தவர் எம்.எம்.பீர்முகம்மது. மாத்தளையில் மணம் முடித்தவர். தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் இலக்கிய ஆர்வலர். இப்படித்தான் தலைமையுரையில் சொல்லப்பட்டது.
விழா முடிய ஆசிரியர் தெளஃபீக் எனக்குப் பீர்முகம்மதுவை அறிமுகம் செய்து வைக்கிறார்.
'உங்கள் "கோடிச்சேலை ? சிறுகதைத் தொகுதியை வாசித்தேன். சிறப்பாகவிருக்கின்றது."
எனக்குக் கூச்சமாக விருக்கின்றது. வாசிக்காமல் முகஸ்துதிக்காகச் சொல்கின்ற இலக்கியவாதிகள் இங்கே ஏராளம்.
“உங்கள் புத்தகத்துக்குச் சாகித்திய அக்கடமிப் பரிசு கிடைத்துள்ளதாகச் சொன்னார்கள். பாராட்டுகள்." y h
"சாகித்திய அக்கடமி என்பது இந்தியாவில். சாகித்திய மண்டலப் பரிசென்பதே இலங்கையில் கொடுப்பது" என்கிறேன் நான்.

அன்று "சிக்கென'ப் பிடித்துக் கொண்ட எங்கள் கைகளின் இறுக்கம் என்றுமுள்ளதாய்க் குடும்ப உறவாய்ச் செழித்து நிற்கின்றது.
சிறந்த இலக்கியப் பேச்சாளர் என்ற வரிசையில் எம்.எம்.பீர்முகம்மது ஒருவர் என்பதை இலக்கிய உலகம் நன்கறியும். இது வெறும் புகழ்ச்சி uabau).
'மல்லிகை அட்டைப் படத்தில் முகம் பதிக்கப் புத்திஜீவிகள் பலர் படும்பாட்டை நானறிவேன் என கம்ப வாரிதி இ.ஜெயராஜ் குறிப்பிட்
டுள்ளது உண்மையே.
மல்லிகையில் முகம் பதிக்கச் சிலர் ஆலாய்ப் பறப்பதின் காரணம் தான் என்ன?
இங்கிருந்து புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் தமிழகத்துக்கு அப் பால் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற பல நாடுகளில் எல்லாம் மல்லிகை மணம் பரப்புகின்றது; பேசப்படு கின்றது என்பதுதான். காரணம்.
மல்லிகையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் நண்பர் தெணி யான். 67ல் என்பதாக ஞாபகம்.
பண்டாரவளை அட்டம்பிட்டியா வில் ஆசிரியராக அப்போது! ஆரம்ப எழுத்தாளர் தெணியான் இன்று சிகரத்தை நோக்கிய பயணத்தின் முன் வரிசையில் சளைக்காமல்
மல்லிகையைப் போல்!
Air rv Spyke ta---T-aa
gurur
لکھ ست=
ama
அறுபதுகளின் பின் கூற்றில், மிகவும் பின்தங்கியிருந்த எங்கள் தோட்டக்காட்டினிலே, மலையக இளைஞர்களின் எழுச்சிக்காக வித் திட்டவர்களில் ஒருவரான இர. சிவ லிங்கம், ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் அதிபராக விருந்து அன்றைய தலைமைகளால் அரசியல் பழிவாங்கலில் பதவி நீக்கம் செய்யப் பட்டிருந்த வேளை சிவலிங்கத்தின் உருவப்படத்தை மல்லிகை அட்டை யில் பதித்து அவருக்கு நேர்ந்த கொடுமையை உலகறியச் செய்த பெருமை; சிறுமை கண்டு பொங்கும் துணிச்சலாளர் டொமினிக் ஜீவாவுக் கிருந்தது.
அன்றைய தலையங்கங்கள்
மிகவும் "காரசாரமாக" இருக்கும்.
நம் நாட்டின் பன்முக போதா விலாசம் கொண்ட உன்னதமான வர்களை அட்டையில் பதித்துக் கெளரவிப்பதில்
முன்னணியில் என்றென்றும்.
மல்லி கையே
கலாநிதிகள் க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, நடிகமணி வைரமுத்து, சிங்கள எழுத்தாளர் ஜி.பி. சேன நாயக்க, அமரதாஸ் மற்றும் என்.எஸ். எம்.ராமையா, பண்ணாமத்துக் கவி
ராயர், வானொலிக்
குயில் இராஜேஸ்வரி சண்முகம், ஒட்டப் பிடாரம் குருசாமி, துரைவிஸ்வநாதன், ஹாசிம் உமர் என மாதிரிக்குச் சில பெயர்கள்.

Page 5
மல்லிகை - கவிஞர்கள் எனத் தனது வட்டத்தை
எழுத்தாளர்கள்,
கலைஞர்கள், கல்வி வானொலி அறிவிப்பாளர்கள், தேசிய ஒருமைப்
மான்கள், ஒவியர்கள்,
பாட்டுக்குழைத்த பெரியார்கள், அரசியல்வாதிகள் என இன மத பேதமற்ற அதன் வரிசை நீண்டது.
அந்த வரிசையில் மற்றுமொருவர் மாத்தளை எம்.எம்.பீர்முகம்மது.
மாத்தளை இஸ்லாமிய தமிழ் கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்துக்கும் செயற்திறன் மிக்க அதன் வளர்ச்சிக்கும் எழுத்தாளர் புவாஜி மற்றும் தெளஃபீக் ஹமீட் ஹாஜியார், வர்களோடு இணைந்து செயல்படும் t ! ᏣᎼᎼf?
மரைக்கார்
பீர் முகம்மது அவர்களின் முதன்மையானது.
கலைஞர் மு.கருணாநிதிக்கும் இவரது குடும் பத்தாருக்குமிடை யிடையே - "கல்யாண சுகதுக்கங்கள்' கலந்து கொள்ளுமளவுக்குள்ள உறவுகளின் நெருக்கத்தின் தாக்கமே, தி.மு.க. பாணியிலான இவரது இலக்கியப்
போக்குக்குக் காரணமாகவிருக்கலாம்.
போன்ற நிகழ்வுகளில்
துபாயில் பணிபுரிந்த போது - க விக்கோ அப்துல் ரஹ்மான்,
மு.மேத்தா, வைரமுத்து, திருக்குறள்
முனுசாமி, குமரி அனந்தன் உட்பட
இன்னும் பல ரைத் துபாய்க்கு
6
போன்ற
அழைத்து நடாத்திய இலக்கிய விழாக் களின் அனுபவங்களை மலரும் நினைவுகளாகக் கூற, கேட்கச் சுவை
யாகவிருக்கும்.
கம் பராமாயணத்தை வியந் துரைப்பது போலவே கண்ண தாசனையும், வாலியையும், பண்ணா மத்துக் கவிராயரையும், மே மன்
கவியையும், தோப்பில் மீரானையும், வைக்கம் முகம்மது பஷி  ைரயும்
சிலாகித்துக் குறிப்பிடும் பக்குவம் இவரிடம் ஏராளம்.
'ரசிகர்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் ஏற்பாட்டில் சிறப்பாக நிறைவேறிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகத்தி லிருந்து வருகை தந்த பேராசிரி அறிஞர்கள், க விக்கோ, மணவை முஸ்தபா, பேரா.அறிவுடை
யர்கள்,
நம்பி, பேரா.அறிவுநம்பி, சுஸ்தானா
பர்வின் உட்பட தமிழகத்தின் அறுபதுக்கு மேற்பட்ட பேராளர் களை "மனம் கோணாமல்" கவனிக் கின்ற பொறுப்பைச் சிறப்பாக நிறை வேற்றி, அமைச்சர் உட்படப் பலரின்
பார்ாட்டைப் பெற்றதைப் பெரும்
பேறாகவே கருதுவதாகச் சொல்வார்.
மாத்தளையில் இடம்பெற்ற மத்திய மாகாண சாகித்திய விழாக் குழு வில் ஒருவராக வே.இராதாகிருஷ்ணனினால் நியமனம் பெற்று எழுத்தாளர் வலம் புரி ஜோனை தமிழகத்திலிருந்து அழைத்து
வந்து பார்வையாளர்களை மகிழ்
அமைச்சர்

வித்ததில் இவரது பங்கும் கணிச மானது. கலாநிதிகள் க.அருணாசலம், துரை மனோகரன், சாரல்நாடன்,
கலாபூஷணம் கவிஞர் சு.முரளிதரன் போன்ற விற்பன்னர்களைக் கொண்ட
சாகித்தியக் குழுவில் உறுப்பினராக
பீர்முகம்மது இடம் பெற்றுள்ளதும் இவரது திறமைக்குச் சான்று.
கொழும்பில் கம்பன் விழாவில் ஒரு நாள் பேச்சாளராக ஏனைய நாட் களில் பார்வையாளராக இவரைத்
தவறாமல் காணலாம்.
பண்ணாமத்துக் கவிராயரின் "காற்றின் மெளனம்", ஏ.எம்.புவாஜி யின் 'அல்லாமா உவைஸ்" நூல் வெளியீட்டு விழாக்களின் வெற்றியில்
பீர்முகம்மதுவின் பங்களிப்பு பிரதான
மானதாகும்.
யாத்ரா கவிதைச் சஞ்சிகை அறி முக விழா மற்றும் கெக் கிராவ சஹானா, உக்குவளை அக்ரம் , இளைய நிலா பஸ்மினா அன்சார், பாலரஞ்சனி ஜெயபால் என இளைய தலைமுறை எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு வைபவங்களிலும் பேச்
சாளராகப், பிரதி பெறுபவராகத்
தன்னைப் பதிவு செய்துள்ளார்.
திரைப்பட, தொலைக்காட்சி,
மேடை நாடகக் கலைஞரும் ,
எழுத்தாளருமான கலாபூஷணம்
மாத்தளை கார்த்திகேசுவின்
ஆலோசனையில் புத்துணர்ச்சியுடன்
செயல்படும் மாத்தளை சைவ மகா
1 کی حس۔
* Na
Yals; ജ്ജ്",ങ്കള്ള
۔ (دی~~
சபையின் வைர விழா நிகழ்ச்சி களிலும், மாத்தளை பாக்கியம் மகளிர் தேசியப் பாடசாலையின் பவள விழா குழு விலும் பூரண ஒத்துழைப்பை நல்கி உதவி புரிந்தவர். விபுலானந்தர் விழா, பாரதி விழா வென எல்லா விழாக்களிலும் பீர் முகம்மதுவைக் காணலாம்.
ஏற்பாட்டுக்
மீலாத் விழாவில் பங்குபற்றி கி. ஆ.பெ.விஸ்வநாதம், அம்பலவாணர் சிவராசா போன்றோரின் பாராட்டைப் மாத்தளை பூரீ முத்து மாரியம்மன் கோயிலுக்கு வருகை தருகின்ற தமிழ்நாட்டுப் பெரியார் களின் சொற் பொழிவுகளை ஒலி பெருக்கியில் கேட்பதற்காகக் கோவிலுக்கு வெளியே - முற்றத்தில் இவர் நிற்பதைக் காணலாம். எம் மதமும் சம்மதம் என்பது இவரது உயர்ந்த பண்பாகும்.
பெற்றவர்.
மலேசியா எழுத்தாளர் பீர்முகம் மது மாத்தளைக்கு விஜயம் செய்த வேளை பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமுவின் இளைய சகோதரர் மத்திய மாகாணசபை உறுப்பினராக சேவைகள் செய்த மாத்தளை எம்.சிவஞானம் அவர்களின் வீட்டில் தனது மனைவியாரோடு தங்கி
யிருந்தார்.
மலேசியா பீர்முகம்மதுவைக் கெளரவிப்பதற்காகத் திடீரெனக்
கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்தோம்.
ஹோம் சிங் ஹோட்டல் மேல் மாடியில் முன்னறிவித்தல் எதுவு
7

Page 6
۱. گسس
maar w
=± மின்றித் திடீரென ஏற்பாடு செய்தமை யினால் கூட்டம் வருமா என யோசனை யில் கைகளைப் பிசைந்து கொண்டி ருக்கின்றோம். ஒரு பத்து நிமிடத்தில் இளம் தமிழ் முஸ்லிம் ஆசிரியர், ஆசிரியைகள் ஒரு நூறு பேர்வரை திமுதிமுவென ஹோலுக்குள் வந்து அமர்கிறார்கள். எல்லோருக்கும் ஆச்சர்யம். பண்ணாமத்துக் கவிராயர் ஏ.எம்.புவாஜி, மாத்தளைக் கார்த்தி கேசு, மாத்தளை வடிவேலன் எல் லோரது முகங்களிலும் பிரகாசம். மாத்தளை பீர் முகம்மது எங்கள் அருகில் வந்து சொல்கிறார்,
'இளம் ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு நடைபெற விருப்பதை அறிந்து நானும் சிவ ஞானமும் கல்விப் பணிப்பாளர் செல்வக் குமாரோடு பேசி கருத்தரங்குக்கு வந்துள்ள அனைவரையும் இங்கே அழைத்து வந்துவிட்டோம். கல்விப் பணிப்பாளர் செல்வக்குமாரும் இங்கு உரை நிகழ்த்துவார்." என்கிறார்.
பர்தா அணிந்த ஆசிரியைகள் பலர் கூட்டத்தில் அமர்ந்திருந்ததைக் கண்ட மலேசியா பீர்முகம்மது வருகையைச் சிலாகித்துக் குறிப்பிட்டார்.
கூட்டம் முடிய அத்தனைப் பேருக்கும் பகல் போசனம் அதே ஹோட்டலில். மாத்தளை பீர்முகம் மதுவின் கணக்கில்!
மாத்தளையில் எத்தனை விழாக்கள்
நடைபெற்றாலும் விழாக்களில் பிரமுகர்
களாக, பேச்சாளர்களாக வருகை தரும்
8
அனைவருக்கும் விருந்துபசாரம் செய்து
கெளரவிப்பதை மாத்தளை பீர்முகம்மது வும் அவரது மனைவியும் பேறாகவே கருதுகிறார்கள். இவர்களது உபசரணை களைப் போற்றாதவர்கள் இல்லை.
எங்கள் வானொலி மதுரக் குரலோன் பி.எச். அப்துல் ஹமீத், கம்பவாரிதி ஜெயராஜ் போன்றோர் இதனை மேடையிலே குறிப்பிட்டுள்
6TITITyso,
மல்லிகை மாத்தளை மலர் வெளி வருவதற்கு முழு முதல் காரணம் திரு. எம்.எம்.பீர்முகம்மது அவர்களே. மதம் மறந்து மனிதனை மதிக்கும் பண்பே தனது கொள்கை குறிப்பிடுவது போலவே செயலிலும்
காட்டுவார்.
என அவர்
கனடாவில் குறமகள்
G856ITU6fi as UILITs.
பிரபல எழுத்தாளரான குறமகளின் ஐம்பது ஆண்டுக் காலச் இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடாவில் ஒரு பாராட்டு விழா சமீபத்தில் நடை பெற்றது.
இவ்விழாவில் குறமகள் அரை நூற்றாண்டுக் காலங் களாக அவர் செய்து வரும் இலக்கியப் பணிக்காக கெளர
விக்கப்பட்டார்.

தெணியானுக்குக் கலாபூஷணம் விருது கிடைத்துள்ளது. எமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி. நண்பர்கள் இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள் யாவரும் மகிழ்ச்சிப் பெருமிதம் அடைகின்றனர். சரியான ஒருவருக்குச் சரியான நேரத்தில் வழங்கிய ஒரு கெளரவமாகக் கொள்கின்றோம்.
பொதுவாக ஆக்க இலக்கியவாதிகள் ஒரு கால எல்லைக்குப் பின் தமது படைப்பாற்றலை இழந்து விடுவதைக் காண்கின்றோம். அவர்களது கற்பனை ஊற்று வற்றி விடுகின்றதோ என்னவோ.
காைபூஷணம் விருது Udip3ouleu VæOU-ởunởyyy3.3, man υδ.9. - ஆ. கந்தையா
பல்வேறு காரணங்கள் இதற்குக் கற்பிக்க முடியுமாயினும் ஆக்க இலக்கியத்தில் ஏற்படும் தொய்வு நிலை ஆக்க இலக்கியவாதிகளுக்குப் பெரும் மனத் தாக்கத்தை ஏற்படுத்துவதென்னவோ உண்மை.
மாறாகத் தெணியானின் படைப்பாற்றல் ஒரு விரிந்த பல்வகைத் தரிசனங்களைக் கண்டு கொள்ளும் திசை நோக்கி நகர்வதைக் கவனிக்க முடியும். ஒரு வகையில் தன் முதுமையில் இளமை காணும் எழுத்தாளனாக இன்று நாம் அவரைப் பார்க்கின்றோம். அவருக்குக் கிடைத்த விருது இவ்வகையில் பொருத்தமுடையது.
தெணியானின் படைப்பாற்றல் இன்று பல்வேறு திசைகள் நோக்கிய பார்வையாக மாறி வருகின்றது. சாதியத்தை, சமூக நீதியைக் கதைப் பொருளாகக் கொண்ட தெணியான் இன்று பல்வேறு மனப் பிறழ்தல்களை அணுகுபவராக மாறி வருகின்றார்.
இவரது இன்றைய படைப்புக்களை மூன்று முக்கிய பிரிவுக்குள் அடக்கலாம். 1. சமூகப் பார்வை 2. உளவியல் பார்வை 3. பாலியல் பற்றிய பார்வை.

Page 7
ང།
இலக்கியம் பற்றி
இரண்டு விமர்சகர்கள்
நாவல் இன்றைய கூறியவை இவ்விடத்தில் கவனிக்கப் பட வேண்டியவை.
யோன் கொல்மர் கூறுவார் :-
A ፷፰ GÙ o 丘 புரிந்து கொள்வதற்கான முயற்சியில்
மனிதன் ஒரு வரை
எதிர்கொள்ளும் கஷ்டங்களை நவீனம் ஆராய்கின்றது."
பெறடறிக் சி.குறுநூஸ் பின்வரு
மாறு கூறுகிறார் - “மனிதன் உள்
மனதுட்னான தனது தொடர்பை எவ் வாறு சொல்வது என்பதுதான் நவீனத் தின் இன்றைய பிரதான கேள்வி யாகும். இப்படியான நவீனம் இரண்டு மட்டத்திலான - மனித, தெய்வ அம்சங்கங்களின் உண்மையைச் சம நேரத்தில் ஆராய்கின்றது.”
மனித வாழ்வின் புற இயக்கம் ஒரு வகையில் அவனது அக முரண்பாடு களின் வெளிப்பாடாகும். அவ்வாறான முரண்பாடுகள் அவனது அடிமனதில் உறைந்திருக்கும் அகநிலைத் தளம்பல் களால் வெளிவருகின்றன. சில சமயங் களில் அவன் தெய்வமாகவும் சில சமயங் களில் மிருகமாகவும் தோற்றமளிக் கின்றான். இம்மன விகாரங்களைக் கலை வடிவங்களில் பார்க்கும்போதுதான் மனிதனை நாம் சரியாகப் புரிந்து கொள்கின்றோம். அவனது உளவியல் போக்குகளை எளிதில் எடை போடுகின் றோம். எல்லாவற்றிற்கும் மேலாக அவனது சமய, சமூகப் பொறுப்பு களைத் தெரிந்து கொள்கின்றோம்.
10
தெணியான் எழுதிய குறுநாவல் தொகுதி "சிதறல்கள்" பாவமே செய்யாத ஆனால் பாவிகளாக்கப்பட்ட, குற்றமே பிறந்த குற்றத்திற்காகக் குற்றவாளிகளாக்கப்பட்ட ஒரு வர்க்கம்
செய்யாத,
உயர்ந்தவர்கள்’ எனத் தம்மை உயர்த்திக் கொண்ட இன்னுமொரு வர்க்கத்தால் வஞ்சிக்கப்படுவதைப் பேசுகின்றது.
அங்கே சமூக விழிப்புணர்வு பெற்ற, நீதி வேண்டி நிற்கும் ஒருவன் மிதி யுண்ட, சிதையுண்ட மண்ணிலிருந்து தோன்றி, அம்மண்ணைக் கையால் எடுத்து, ஆவேசத்துடன் சீறி எழுவது அந்தச் சமூகம் இன்னும் செத்து விட வில்லை என்றும் செத்து விடமாட்டாது என்பதைத் தெணியான் தனது பாத்தித்தி இந்த எழுச்சிக்கு முன் எந்த அடக்குமுறையோ,
னுாடாகக் காட்டுகின்றார்.
அதிகாரமோ வெற்றி காண முடியாதென
அவர் அடித்துக் கூறுகின்றார். இது சாதி யத்துக்கப்பால் சென்று மனிதம் பேசும் அவரது பார்வையைக் காட்டுகின்றது.
'கானலில் நீர் ஒருபடி மேலே சென்று தாழ்வுச் சிக்கலில் அகப்பட்ட ஒரு மனிதன் சோகக் கதையைச் சொல்லும். இவற்றை ஓர் உளவியல் சார்ந்த நவீனமாக நாம் காண்கின்றோம். அவனிடத்தில் இயற்கையாக அமைந் துள்ள தோற்றப் பொலிவின்மை அவனை ஒரு உளவியல் நோயாளியாக மாற்றிவிடுகின்றது. அவனது தோற்றப் பொலிவின்மை அவனில் தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்தியது உண்மையா யினும், அவற்றை ஈடு செய்யும் தகைமைகள் அவனிடம் இருந்தன.

அவன் தன் கல்வியால், பதவியால் இவற்றை ஈடு செய்து விடுகின்றான். அவனது மனைவி அவனை 'உத்தியோக மாப்பிள்ளை' என்ற அந்தஸ்தில் தான் கரம் பற்றுகின்றாள்.
தெணியான் இந்நாவலை உள வியலுக்கு அப்பாலும் நகர்த்திச் செல் கின்றார். விசேடமாக அவர் யாழ்ப்பாண மக்களை, அதுவும் வடமராட்சி மக்களை, அவர்களது வாழ்வுத் தத்துவத்தை நாசுக்காகச் சொல்ல விளைகின்றார்.
வடமராட்சிச் சமூக அமைப்பு ஆண் ஆதிக்கம் கொண்டதாகப் பொதுவாகப் பேசப்படுவதுண்டு. வைதீகப் போக்கு டைய - நெகிழ்ச்சியற்று சாதிய மேம் பாட்டைப் பேணுவதாகவும் வேறு சிலர் கூறுவர். ஆனால் உண்மை நிலை அதுவோ எனும் ஐயப்பாடு தெணி யானுக்கு இருக்கின்றது போலும்.
ஆண்கள்தான் இங்கு ஆட்சி புரி கின்றனர் என்றாலும், இங்கு ஆண் களைப் பெண்களே ஆட்டிப் படைக் கின்றனர் எனும் ஒரு கருத்தையும் இந் நாவல் ஊடாகத் தெணியான் பரவ விடுகின்றார்.
தவறிழைத்த நிலையில் கூடச் சகோதரனுடன் நேருக்கு நேர் நின்று எதிர்க்கும் சகோதரி வருகின்றாள். கணவனின் குறைகளை அப்பட்டமாகச் சொல்லும் மனைவி வருகின்றாள்; அவனுக்குத் தேநீர் தரமறுத்து அலைய விடும் 'இல்லத்தரசியும் வருகின்றாள். தெணியான் புதிய தத்துவம் தருகின்றார். யாழ்ப்பாணத்தில் ஆடவர்தான் ஆட்சி.
களை,
ஆனால் அங்கு ஆண்களை ஆள்பவர்கள்
பெண்களே எனக் கூறுகின்றார் தெணியான்.
இவ்வகையில் 'கானலில் நீர்?
உளவியல் நிலையில் நின்று சமூக தத்துவத்தை அலசும் நாவலெனக்
கூறுவது தவறாகாது.
ஆண், பெண் உறவுச் சிக்கல்களை வெளிக்கொணர்ந்த பாலியல் பேசும் நாவல் 'காத்திருப்பு". டி.எச்.லோறன்ஸ் துணிந்து எழுதிய பாலியல் பிரச்சினை பாலியல் பற்றிப் பேசுவது, எழுதுவது பாவம் என எண்ணும் தமிழ்ச் சமூகத்துக்குத் துணிந்து தருகின்ற வலிமை தெணியானுக்கு உண்டு. கணவ
னுடன் வாழ்ந்து கொண்டே கூடாத
நடத்தையில் ஈடுபடும் பெண்ணை பிர
தான பாத்திரமாகக் கொண்டு பாலியல்
என்பது பக்குவமாகக் கையாளப்பட வேண்டியதொன்று என்று இவற்றைச் சற்றும் கருத்திற்கெடாத தமிழ்ச் சமூகத் திற்கு அடித்துச் சொல்லுகின்றார். திருமணம் என்பது பணத்தாலும், தகுதி யாலும் நிறுவப்படுவதில்லை. அது பாலியல் திருப்தியாலேயே கட்டியெழுப் பப்படுவது என்பதைக் காட்டுகின்றார்.
இவ்வாறான பன்முகப்பட்ட பார்வைகள் கொண்ட கலைப் படைப்பு
களைத் தந்து கொண்டிருக்கும் தெணி
யான் இன்னும் பல நவீனங்களைப் படைக்க வேண்டுமென இலக்கிய இரசிகர்கள் விரும்புவதில் வியப்பு எதுவுமில்லையே!
11

Page 8
வானம்
பாடிகளின்
நடுவே
о
ளெமுைக்
குயில்
- மா. பாலசிங்கம் -
2
epLTLD6) முன்னேற்றுங்கள்
இனத்துவக் கலாசாரத்தையும் பண்பாட்டை யும் உச்சப்படுத்த ஒலிபரப்புக் கலையும் உதவு மென்பது கல்விசார் சமூகத்தின் கட்டித்த முடி வாகும். ஓரளவிற்கு இது உண்மையே! இதையோர் அடிகோலாக வைத்தே இலங்கையின் ஒலிபரப்புக் கலையைக் கணிக்க வேண்டியுள்ளது.
இலங்கைத் தமிழ் ஒலிபரப்புச் சேவையை இழுத்து மூடிவிட வேண்டுமென அண்மையில் தமிழ் அறிஞரொருவர் கருத்துரைத்தார். தமிழ் ஒலி பரப்புச் சேவையின் இன்றைய நிலையைக் கண்டு கொண்ட பொழுது தனது மனம் கனத்ததாக இன் னொரு மூத்த ஒலிபரப்பாளரொருவர் ஆதங்கித் தார். இவைகளை வெறும் வழிப்போக்கரது பிசத்த லெனப் புறந்தள்ளுவது தமிழ் இனத்திற்குச் செய்யும் படுபாதகச் செயலாகும்! தாம் ஊமத்தம் பூவைப் பார்த்ததில்லை என இரு அறிவிப் பாளர்கள் கூறியதை கேட்ட நேயரொருவர் அவர் களுக்கு இப்பூவைத் தென்னிந்தியாவிலிருந்து அனுப்பி வைத்தாராம். அத்தகைய விதத்தில் கடல் கடந்தும் இலங்கை வானொலி பாரிய செல் வாக்கைப் பெற்றிருந்தது. அரச திணைக்களமாக இயங்கிய இலங்கை வானொலியை, அதன் நிகழ்ச்சிகளை மேலும் செழுமைப்படுத்தி, அதற்குக் கட்டித்த ஜனரஞ்சகத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற இச்சையோடேயே ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக்கினர். இது நடந்தது 1967.01.05 ஆம் திகதியாகும். சில மேலதிக வசதிகளும் கொடுத்து மினுக்கப்பட்டது. வானொலிக் கலைஞர்களுக்கான பயிற்சிக் கூடமொன்றும் நிறுவப்பட்டது. அதன் பொறுப்பாளராகப் பல சர்வதேச வானொலி நிலையங்களுக்குச் சென்று

வானொலிப் பயிற்சியைக் கொடுத்த அனுபவசாலியான ஸ்ரூவேட் உவேவல் என்பவர் நியமிக்கப்பட்டார். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பலர் வெளி நாட்டு வானொலி நிலையங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றனர். ஒலி பரப்பைச் சகல பகுதிகளிலும் தடங்க லின்றிக் கேட்பதற்கு வசதியாகப் பிராந்திய ஒலிபரப்பு நிலையங்களும் திறக்கப்பட்டன.
நிகழ்ச்சிப் பிரிவில் மூத்த தயாரிப் பாளர்கள் சிலரும் தமது பணியைத் தொடர்ந்தனர். அவர்களோடு புதியவர் களும் இணைந்தனர். மூத்தோருக்கு அடிப்பொடியாக இருந்தவர்களும் கவனத் தைப் பெற்றனர். முன்னர் இலங்கை வானொலிக்குப் புதியவரொருவர் தயாரிப்பாளராகவோ அறிவிப்பாள ராகவோ நியமிக்கப்பட்டால் புதியவருக் குப் பயிற்சி கொடுப்பவர்கள் ஒலி பரப்புச் சேவையில் ஏலவே சேர்ந்துக் கொண்ட ஒலிபரப்பாளர்களாக இருப்பர். இந்த வகையில் அறிவிப்பாளர்களான எஸ்.நடராசா, சுந்தா சுந்தரலிங்கம், வி. ஏ.கபூர், வி.பி.தியாகராசா, எஸ்.பி.மயில் வாகனம், செந்தில்மதி மயில்வாகனம், வீ. ஏ. திருஞானசுந்தரம் ஆகியோரது சேவை பெறப்படும். தேவைப்படும் பட்சத்தில் தயாரிப்பாளர்களும் உதவினர். ஆனால் கூட்டுத்தாபனத்தில் நியமனம் பெற்ற ஒலிபரப்பாளர்கள், இதற்கான பயிற்சிக் கூடத்தில் ஸ்ரூவேட் உவேவல், ஒலிபரப்புக் கலை சம்பந்தமான தேடலில் என்றும் தன்னை அர்ப் பணிக்கும் சி.வி.இராஜசுந்தரம் ஆகி யோரது அதி உன்னத வழிகாட்டல்களைச்
༣
4-чвавжжежжя
LLLLLL SYSLSSqSLSSLSaS LLLSLSLLLSLSLSSLSLSALALALSLSS turfaceaesses
" لقيمدح*
சுகிக்க முடிந்தது. இது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமெனலாம்!
4 مشتتة
ܐܒܝ
இச்சமயத்தில் இலங்கையின் அரசி யல், சமூக சிந்தனை அசைவுகளில் புதியதொரு அலை பாயத் தொடங்கியது. அதன் உருவாக்கமாக இனத்துவ அடை யாளங்கள் பொலிவு பெற வேண்டு மென்ற எண்ணக்கரு தேசிய இனங்கள் மத்தியில் சடைத்தது. இதன் பூரண தாக்கங்களோடு கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த புதியவர்கள் செம்மையான மொழித் திறனும் அகலித்த கலை அறிவையும் பெற்றிருந்ததைக் காண முடிந்தது. இவர்களில் அநேகர் தமிழ் மூலக கலவையை பெற்றிருந்ததும் குறிப் பிடத்தக்கது.
இந்தப் புதிய பரம்பரையில், ஏற் கனவே தமது பெயர்களை கலை, இலக் கிய வட்டாரத்தில் பரம்பல் செய்து, தமக் கெனச் சிறப்பான ஒளி வட்டங்களையும் தேடிக் கொண்டவர்களும் இருந்தனர். கலைஞர்கள், எழுத் தாளர்கள், பத்திரிகையாளர்கள் தமது
கவிஞர்கள்,
கலை ஆளுமைகளை ஒலிபரப்புக் கலைக் குப் பாய்ச்சி அதை மேலும் மேன்மைப் படுத்தும் உந்து சக்தியோடு நிமிர்ந்தனர். இவர்களிடம் புதியன படைக்க வேண்டு மென்ற தணியாத தாகம் இருந்தது. இந்தப் புதிய அணியில் இளையதம்பி தயானந்தா, அமரர் இரா.பத்மநாதன், அமரர் அங்கையன் கைலாசநாதன், குல சிலநாதன், நடேசசர்மா, அருந்ததி பூரீரங்க நாதன், சனூஸ் மொகமட் பெரோஸ், எழில்வேந்தன் ஆகியோர் முன்னரங்கச் செயற்பாட்டாளர்களாக மிளிர்ந்தனர்.
13

Page 9
ig. Uglj9újgö
தங்களது நிகழ்ச்சிகளின் மூலமாக அரிய
விருந்தைப் படைத்தவர்கள் இவர்கள்.
வரன் முறையொன்றை அடிப்படை யாகக் கொண்டே இந்த எழுத்தூழியம் செயல்படுத்தப்படுகிறதென்பதை வாச கர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒலிபரப்பாளர்கள் "சிலரது பணிகள் மட்டுமே மிகவும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இது - தாமும் ஒலி பரப்புத் துறையில் முத்திரை பதிக்க வேண்டுமென இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை ஒலிபரப்பாளர் களுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக் கும்! ஆனால் நிர்ணயிக்கப்பட்ட வரன் முறை குலையக் கூடாதே! வானொலி யோடு எதுவித சம்பந்தமுமில்லாது - நேரடியாகவே வானொலிக்கு நியமனம் பெற்று ஒலிபரப்பாளர்களாகிய சில முன் னோடிகள், நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய தன் மூலமாகக் கணிசமான அநுபவங் களைப் பெற்ற மூத்தோர் ஆகியோரது ஒலிபரப்புச் சேவைகள் ஊடாக வானொலித் தமிழ்ச் சேவையின் வரலாற் றைப் பதிந்திட வேண்டுமென்ற இச்சை யும் இந்த எழுத்துழியத்தில் தொக்கி நின்றது குறிப்பிடத்தக்கதே.
இனி, இத்துறைக்குப் புதிய இரத்தம் பாய்ச்சும் கெடுவோடு வருகை தந்திருக் கும் ஆசீர்வாதத்தைப் பெற்ற இன்றைய இளைய சந்ததி ஒலிபரப்பாளர்கள் சிலரைக் காண்போம்!
இளையதம்பி தயானந்தா ஒரு
சிறந்த கவிஞர். இவர் இப்பொழுது ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தில் இல்லை.
14
இப்படி நடந்தது மிகவும் வேதனைக் குரிய விடயமே! இவரது தமிழ்ப் புலமை செழிப்பானது. மரபு இலக்கியத்தோடு நவீன இலக்கியத்தையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர். உருவத்தாலும் உள்ளடக் கத்தாலும் அலங்காரம் பெறும் இவரது கவிதைகள் தமிழுக்கு ஊழியமிடும் கனதி யானவை. யாப்பிலக்கணத்தை அறிந் தவர். இவர் நடத்தும் கவிதை அரங்குகள் மேடையிலும் சரி, வானொலியிலும் சரி கச்சிதமாகவிருக்கும், முன்னோடிகளான நாவற்குழியூர் நடராசன், சில்லையூர் செல்வராசன் ஆகியோரை நினைவூட்டும். பேட்டி எடுக்கும் போது பேட்டி கொடுப் பவரை திக்குமுக்காட வைத்து விடுவார். வானொலிப் பேட்டிக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர். கள நிகழ்ச்சிகளில் பல்வேறுபட்ட கருத்தாளர் களையும் வசைத்து ஒருமுகப்படுத்தி நிகழ்ச்சியைக் குழப்பமற்ற வகையில் நடத்திச் செல்லும் இவரது தன்மை வியக் கத்தக்கது. விவாத மேடைகள், பட்டிமன் றங்களில் ஒரு சட்டத்தரணியின் தர்க்க ஆளுமையோடு எதிரிகளை மடக்குவார். எந்த விடயத்திற்கும் ஒரு தனித் தன்மை யான பார்வையைக் கொடுக்கும் திறமை இவருக்குண்டு. இவர் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்தவர்
இத்தகைய பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவரை கூட்டுத்தாபனம் 'கை விட்டது' தமிழ் ஒலிபரப்புக்குக் கிடைத்த மாபெரும் இழப்பென்றே கூறவேண்டும். சோ.சிவபாதசுந்தரம், நாவற்குழியூர் நட ராசன் விதைத்த ஒலிபரப்பு வித்துகளை வளர்க்கக்கூடிய தயானந்தா வானொலி யை விட்டுச் சென்றது அவரது அபிமானி

களுக்குப் பெரும் கவலையே! இன்று போட்டி அரசியல் நடத்துவோர் இந்தத் தமிழ் இழப்பு"களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் போலும் மொழிக்கும் கலா சாரத்திற்கும் தனது மட்டுப்படுத்தப்பட் அதிகாரத்துள் தயானந்தா செய்த பணிகள் உரத்த அதிகாரங்களைக் கொண்ட மனங் களைக்கூடக் கலக்கக் கூடியவை! இப் பொழுதும் வானொலிக் கலை ஊழியத் தில்தான் தயானந்தா களி கொண்டிருப்ப தாக அறிய முடிகிறது. வாழ்வான்!
வல்லவன்
அமரர் இரா.பத்மநாதன் ஒரு மூத்த பத்திரிகையாளர். ஈழத்தின் பத் திரிகை ஊடக ஜம்பவானான எஸ்.டி.சிவ நாயகத்தோடு ‘சுதந்திரன்' பத்திரிகையில் பணிபுரிந்தவர். கூட்டுத்தாபனம் இவரை உள்வாங்கியதைச் சகலரும் பாராட்டினர். நல்ல உரைச் சித்திரங்களைத் தயாரித்து ஒலிபரப்பினார். சிறிது காலம் இவரது பொறுப்பில் சிறுகதைகளும் வானொலி யில் ஒலிபரப்பப்பட்டன. பத்திரிகையில் இவர் பெற்ற பரந்த அனுபவம் இவரை வானொலி அஞ்சலி நிகழ்ச்சிகளில் பிர காசிக்க வைத்தன. இவைகளுக்கும் மேலாக - 'பத்தர் அப்படித்தான் இவரை நண்பர்கள் அழைப்பதுண்டு வானொலி D to fig fits இருந்து er from LD (r Sor வானொலி மருமக்களைத் தேடினார். இன்று நாடறிந்த கலைஞராக விளங்கும் பூரீதர் பிச்சையப்பா இவரது நெறியாளு கையில் உயர்ச்சி கண்ட பலருள் ஒருவர். 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலைக்குப் பின்னர் இவரது வானொலிச் சேவை நிறைவு கண்டது! இவர் கிழக்கிலங்கை யைச் சேர்ந்தவர்.
ܐ ممم .................................
... prepress All
ς σε -
அமரர் அங்கையன் கைலாச நாதன் ஒர் சிறந்த எழுத்தாளர். வித்தி யாசமான சிறுகதைகள், நாவல்களைப் படைத்தவர். அடிமட்ட மக்களின் துன் பியல் வாழ்வை இலக்கியமாக்கியவர். அறுபதுகளில் சிலிர்த்தெழுந்த ஈழத்துப் புனைகதைத் துறைக்கு ஊட்டம் கொடுத் தவர்களுள் அங்கையனுமொருவர். மண்ணின் கொதிப்புகளை இவரது எழுத்துக்கள் பேசின. "கலை என்பது செயல் திறமையைக் காட்டுவதும், அழகு ஏற்படும் வகையில் செல்வதும் சுவை பயக்க வல்லதும் பற்றிய பல காரியங் களுக்கு உதவுவதுமான அறிவையும், ஆற்றலையுமே குறிப்பதாகும். ஆகவே கலையிற் செயல், பயன், திறமை, அழகு, கலை என்ற அம்சங்கள் உள்ளன" எனக் கலையை வரைவிலக்கணப்படுத்திவயவர். கடல் வாழ் மக்களின் வாழ்க்கையைத் தமிழில் முதலில் எழுதியவர் அங்கையன் கைலாசநாதனே என்கிறார் பிரபல எழுத் தாளரும், அங்கையனின் சமகாலத்த வருமான செ.யோகநாதன். எடுகோளின் இயல்பைப் படைப்பு 'தின்று'விடக் கூடாதென்ற மனத்தவரான அங்கையன் அதைத் தனது வானொலி ஊழியத்திலும் படர வைத்தவர். மிருகங்கள், பறவைகள் எழுப்பும் ஒலிகள் பதியப்பட்ட தட்டுகள் வானொலிக் காப்பகத்திலுண்டு. அதை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தேவைப்படும் சமயங்களில் பாவிப்பர். ஆனால் இவர் சித்திரமொன்றைத் தயாரிப்பதற்கு ஒரு நாயையே வானொலிக் கலையகத்திற்குக் கொண்டு வந்தாராம்! இதை அவரோடு மிக நெருக்கமான நண்பரொருவர் சொன்
15

Page 10
னார். தட்டில் ஒலிக்கும் நாய்க் குரைப்பு ஒலியைவிட நாயின் இயல்பான குரைப்பு நிகழ்ச்சியைத் தத்ரூபமாக்குமென்பது அங்கையனின் வாதம்! இத்தகைய மிக அக்கறையான தேடல்களோடு அங்கை யன் ஒலிபரப்புப் பணியைச் செய்து சில சுவையான நிகழ்வுகளையும் விட்டுச் சென்றார். அவைகள் பகிர்ந்து கவைக்கத் தக்க நல்ல படையல்கள். அத்தோடு மண் வளச் செறிவை அடக்கும் 'கடற்காற்று", ‘செந்தணல்", "வானம்பாடியும் சிட்டுக் குருவியும்' ஆகிய நாவல்களையும், அங்கையன் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார்.
கர்நாடக இசை வட்டத்தில் கலா சூரி அருந்ததி ழுநீரங்கநாதனின் பெயர் அதிபிரசித்தமானது. வி.என்.பால சுப்ரமணியம், கருணாகரன் போன்றோரின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய தொரு சங்கீத வித்தகி. கல்விச் சேவைக் கென நியமனம் பெற்றுத் தேசீய இதற்கு உடந்தையாக இருந்தது இவரது இசை ஞானம். இவரது பாண்டித்தியங்கள் இவரைத் தமிழ் சேவையின் பணிப்பாளர்
சேவைக்குள் புகுந்தவர்.
பதவி வரை உயர்த்தின. பூரீலங்கா சாகித் திய மண்டலத்திலும் உறுப்பினராக இருந் தார். இப்பொழுது ஒலிபரப்புச் சேவை யிலிருந்து ஒய்வு பெற்றுச் சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'இளைய கானம்' நிகழ்ச்சிக்கு ஆலோசகராகத் தன் கலைப் பணியைச் செய்கிறார்.
ஆத்ம ஜோதி நா.முத்தையா போன்ற பெரியார்களோடு தொடர்பு கொண்டி
16
ருந்த அறிவிப்பாளர் எஸ். நடேசசர்மா மிகத் தடிப்போ, மிக மெல்லியதான தாகவோ இல்லாத இடைப்பட்ட குரல் வளத்தைப் பெற்றவர். வர்த்தக சேவை யில் பணி செய்தவர் செய்தி வாசிப்பில் மோகம் கொண்டு தேசிய சேவைக்கு வந்தவர். நிறுத்தக் குறிகளைக் கவனத் திற்கெடுத்து, எந்தெந்த நிறுத்தக் குறிக்கு எவ்வளவு கால அவகாசம் கொடுத்து வாசிப்பைத் தணிக்க வேண்டுமோ, கூட்ட வேண்டுமோவென்பதை அனு சரித்து அவர் செய்தி வாசிக்கும் தன்மை மிகவும் அலாதியானது. வாசிப்பைச் சடுதியாக எழுச்சி படுத்தமாட்டார். இவரது வாசிப்பு கொந்தளிக்கும் சமுத் திரமாக இராமல் அமைதியான நீரோடை யாக கேட்டுநருக்கு விருந்தளிக்கும்.
இசைக் கச்சேரிகளில் அறிவிப்பாள
ராகப் பொழுது, தெலுங்குக் கீர்த்தனைகள், இராகங்களின்
பணியாற்றும்
பெயர்கள் என்பவற்றை மிகத் தெளிவாக அறிவிப்பாளர்களுக்கு கட்டுப்பாட்டாளராகவிருந்தவர். இப் பொழுது ஒய்வு பெற்றாலும் இவரது சேவையை இடைக்கிடை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பயன்படுத்துவதில் தவறுவதில்லை. நிகழ்ச்சித் தயாரிப்பிலும் இவர் முத்திரை பதித்தவர். "சமய சாரம்", "ஞானக் களஞ்சியம்' போன்ற சமய
உச்சரிப்பார்.
நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலி
பரப்பியவர்.
தனது ஒலிபரப்புத் தொழிலினூடாக
இவர் சமயத்திற்கு ஆற்றிய அரும் பணியைக் கெளரவிக்கும் முகமாக,
 

இலங்கை இந்து கலாசார அமைச்சு இவ
ருக்குச் 'சைவ நன்மணி" என்ற பட் டத்தை வழங்கிக் கெளரவித்தது. அஞ்சல் நிகழ்ச்சிகளிலும் பிரகாசிப்பவர். திறமை *ୋt பலவிருந்தும் அதையிட்டு ନtକର୍ତା ରହିs கர்வமும் காட்டாது மிகவும் அமைதிப் போக்காளராக விளங்குகிறார்.
சனூஸ் மொகமட் பெரோஸ் செய்தி வாசிப்பில் முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர்களில் இவருமொருவர். 1980இல் ஒலிபரப்புத்துறைக்கு வந்த இவர் 1995இல் சிறந்த ஆண் செய்தி வாசிப்பாளருக்கான விருதை ஜனாதிபதி யிடமிருந்து பெற்றார். இவரது செய்தி வாசிப்பைக் கேட்பவர் இவர் இலங்கை யின் தென்பகுதியைச் சேர்ந்தவரென்றால் ஆச்சரியப்படுவர். அந்தளவிற்கு உச்சரிப் புச் சுத்தத்தைப் பேணி வருகிறார்.
அத்தோடு தமிழ் ஒலிபரப்புக் கலையை உன்னதப்படுத்தும் நோக்கோடு அறிவிப்பாளர்களாக வீ.என்.மதியழகன், எஸ்.எஸ்.ராஜா, மயில்வாகனம் சர்வா னந்தா, அருணா செல்லத்துரை, கபீல், ஆமீனா பேகம், ரேலங்கி செல்வராசா, நாகபூஷணி கருப்பையா, ஜெயலக்ஷ்மி, ரஹ்மான், மனோகரி சதாசிவம், கலிஸ்ரா லூகாஸ்,
இஸ்மாயில் உவை சுர்
பெனடிக்ற், லூக்காஸ் திருச்செல்வம், ஏ.ஆர்.எம்.ஜிவ்ரி, ஜெயகிருஷ்ணா, கணேஸ்வரன் ஆகியோரும் தயாரிப்பாளர் களாக ரி.உருத்திராபதி, கனகசபாபதி நாகேஸ்வரன் (இப்பொழுது பேரா சிரியர்), ராஜபுத்திரன் யோகராஜன் முதலியோரும் கூட்டுத்தாபனத்தில் இணைந்தனர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பதில் பணிப்பாளர் நாயக மாக வி.ஏ.திருஞானசுந்தரம் நியமனம் பெற்றது ஒரு வரலாற்றுத் திருப்பமாகவே கருதப்பட்டது! இருந்தும், வானொலித் தமிழ்ச் சேவை "படுத்து விட்டதாக" விமர்சனங்கள் எழுதுவதற்குக் காரணந்தா னென்ன? கிடைக்கப் பெற்ற அதி உன்னத வளங்களால் அச்சேவையைச் செழிப்படைய வைக்க முடியாது போய் விட்டதா?
இலங்கையைப் பொறுத்த மட்டில் இலாபத்தை ஈட்டக் கூடிய கூட்டுத் தாபனங்கள், சபைகள் என்பன இப் பொழுது நட்டத்தையே காட்டுவதாக அறி விக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி அமைக்கும் பொருட்டுக் கை உதவிக்காக வெளிநாடுகளும் அழைக்கப்படுவதை அறிவோம். இது நாட்டிலேயே ஒரு குழப்ப நிலையை உருவாக்கி இருப் பதையும் அறியக் கூடியதாக இருக் கின்றது. இதற்கெல்லாம் காரணம் மேல திக ஆளணி, தவறான முகாமைத்துவ மெனவும் காரணப்படுத்தப்பட்டுள்ளது. இதே நிலை அண்மையில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் (BBC) எழுந்தது. அங்கு 20% ஊழி யரைப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டு
மெனச் சேவை நிறுத்த எச்சரிக்கை
செய்யப்பட்டது. எனவே, வீட்டுக்கு வீடு வாசல்படிதான்!
வானொலிச் சேவையின் தேசிய
முக்கியம் பெற்ற இந்த நிலையை நாமேன் ஒரு தேசிய அக்கறையோடு நோக்கக்
17

Page 11
கூடாது? கலை, கலாசரம் குறித்து இனிக்க இனிக்க பேசுபவர்கள் இதற்கோர் சுமூக முடிவை ஏற்படுத்தக் கூடாதா? ஒலிபரப்பு நேரங்களைக் குறைப்பதன் மூலமாக நிதியை மிச்சப்படுத்தலாம். அல்லது ஒலி பரப்புச் சேவை அதிகாரமுடையோருக்குத் தேவையான சமயங்களில் 'அத்தியா வசிய சேவையாவது தெரிந்த விஷயமே. நாட்டு மக்களின் விழுமியங்களை நிலை நாட்டும் ஒலிபரப்புச் சேவையின் ஆயுளை - செலவு போவதைக் கண்டு கொள் ளாமல் அத்தியாவசிய சேவைகளுக்குக் கொடுக்கும் சகல வசதிகளையும் கொடுத்து அரசு பராமரிக்கக் கூடாதா? யுத்தச் செலவு சமுத்திரமாக இருக்கும் பொழுது, இந்தத் துளியளவு ஒலிபரப்புச் சேவையின் செலவிற்கா குத்து விளக் கேற்றிக் கணக்குப் பார்ப்பது!
ஒலிபரப்புச் சேவைக்கு விளம்பரங் களால்தான் கணிசமான வருவாய் கிடைக்கும். உலக மயமாக்கல், திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவை நடை முறைப் படுத்தப் படுவதால் இலங்கை உற்பத்தியாளர்களுக்கும் வர்த்த கர்களுக்கும் பலத்த அடி! இதனால் வானொலி விளம்பரங்களும் அருகி விட்டன. இன்னொரு தாக்கத்திற்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தின் வர்த்தக சேவை (தென்றல்) முகம் கொடுக்கிறது. தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களை விழுங்கு கின்றது. வானொலியைப் பிடித்திருக்கும் 'குருக்குத்தி நோய்க்குச் சிகிச்சை செய்வது ஆட்சியாளரின் கடமை. நட்டத்தை மனம் கொண்டு மூடுவிழாச்
18
செய்தால் நாட்டின் கலை, கலாசாரம்
பொலிவை இழக்கும்?
இங்கு தமிழ் வானொலிச் சேவை "சோடை பத்திப் போனதிற்கும், தரத்தை பேண முடியாமைக்கும் பிறிதுமொரு காரணம் முன் வைக்கப்படுகின்றது. பிரதி ஆக்கத்திற்கும், பங்கு பற்றுவதற்கும் ஆற்றல் மிக்க கலைஞர்கள் இல்லையாம்! அப்போ ஈழத் தமிழரின் கலையூற்று வற்றிவிட்டதா? பேரினவாத யுத்தத்தால் இடம்பெயர்ந்தோருள் கலை, இலக்கிய வாதிகளும் அடங்குகின்றனர்தான் உள் நாட்டில் கலை வளம் அருகி விட்டது மெய்தான். ஆனால், இந்தப் புலப் பெயர்வு இந்நூற்றாண்டின் இலக்கியத்திற் குப் புதியதோர் இலக்கியக் கூறைத் தோற்றுவித்திருக்கின்றதை மறந்துவிடக் கூடாது.
"இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேச மயமாகும். அதற்குப் புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழும் ஈழத் தமிழரின் புதிய படைப் பாற்றல்தான் தலைமை) தாங்கும்."
இப்படிச் சொல்லியிருப்பவர் பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ.வென அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை. எனவே, புலம்பெயர்ந்து, சொந்த மண்ணை விட்டுச் சென்ற ஈழத்துப் படைப்பாளிகள் அங்கு காசை அள்ளும்' நோக்கோடு மட்டும் வாழவில்லை. அவர் களது ஆக்க இலக்கிய ஊற்றுக்கள் இன் னமும் பிரவகித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது இலக்கிய ஊழியம் வெளி நாடுகளிலும் தொடருகின்றது. இதற்கு இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்
 

கூடச் சாட்சி! இந்தப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போல் வானொலித் தமிழ்ச் சேவையும் இந்த எழுத்தாளர்களோடு தொடர்பு கொண்டு அவர்களது i ninas aiffîn't ex) a'r Gl i gnocynnig un fras it? 3)6ni i களது எழுத்துக்கள் புதிய களங்களையும் நவீன கருத்துக்களையும் வாசகருக்குத் தந்து கொண்டிருக்கின்றன. புதுமையை நாடும் வானொலி நேயன் இவைகளை இரசித்துக் கேட்பானே! புகலிட எழுத் தாளர்கள் இங்கு வந்தால் அவர்கள் பின் ஒடித் தேடிப்பிடித்து அவர்களிடம் செவ்விகளை எடுத்து ஒலிபரப்பும் வானொலி, அவர்களிடம் நாடகங்களை, சித்திரங்களை, பேச்சுப் பிரதிகளை ஏன் வாங்கி ஒலிபரப்பக் கூடாது? வானொலி யின் கட்டுப்பாடுகளை அனுசரித்துப் பிரதிகளைப் பொறுக்கி எடுக்கலாமே! எனவே சென்றவர்களைக் கலைத்துப் பிடித்து ஒலிபரப்பைத் தரமாக்குவது விரும்பத் தக்கவோர் காரியமாகும். தமிழுழியமுமாகும்.
இன்னமும் உள்நாட்டிலும் புலம் பெயராமல் வானொலிக் கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களது பங்களிப்பை யும் படைப்பாளுமைகளையும் பத்திரி கைகள், சஞ்சிகைகள் ஊடாகக் கண்டு கொள்ளலாம். இவர்களுள் சிலர் கடந்த காலங்களில் வானொலிக்குக் கிரமமாக நாடக, சித்திரப் பிரதிகளை எழுதி வழங் கிய அநுபவசாலிகள். அந்தச் சிறப்பான, இவர்களது ஆற்றல் இப்பொழுது மழுங்கிக் கொண்டிருக்கிறது. தங்களது பிரதிகளை இவர்கள் வேறு எங்கேதான் அனுப்புவது? கொல்லன் தெருவுக்கு ஊசி விற்க வந்து விட்டார்களென தமிழ்
-
நாட்டு வானொலிகள் கூடப் பெருந்
தன்மை காட்டுமே!
அராலியூர் சுந்தரம்பிள்ளை, அன்பு மணி, மறைமுதல்வன், முல்லைமணி, மரைக்கார் ராமதாஸ், பூரீதர் பிச்சையப்பா, வீ.ஏ.திருஞானசுந்தரம், எம்.எம்.மக்கீன், எஸ். முத்துமீரான், எம்.அஷ்ரப்கான் போன்ற வானொலிப் பிரதிகளை எழுதக் கூடிய பலர் இங்கு இருக்கின்றனர். முருகையன், திமிலைத்துமிலன் ஆகி யோர் கவிதைச் சித்திரங்களையும், நாடகங்களையும் எழுதக் கூடியவர்கள். எனவே எமது கையில்தான் வெண்ணெய் இருக்கின்றது. நெய்க்கு ஏன்தான் அலை வான்! ஈழத்தின் எழுத்தூழியம் தானமே தவிர பணச் சம்பத்தியமல்ல என்பதை இலக்கியவாதிகள் நன்கு அறிவர்.
காய்த்த மாத்திற்குத்தான் கல்லெறி விழும் என்பார்கள்! அப்பிடியும் இருக் கலாம்! தற்போது பகுதி நேர அடிப்படை யிலேயே ஒலிபாப்புக் கூட்டுத்தாபனத் திற்கு ஆட்சேர்க்கப்படுவதாகக் கூறப்படு கின்றது. இத்தகைய அடிப்படையில் நியமனம் பெறுபவர்கள் தமது வளர்ச்சி யையும் பொருட்படுத்தாது அக்கறை யின்றிக் கடமையாற்றுவதாகச் சொல்லப் படுகின்றது. அப்படியாயின் இவர்கள் சுய முன்னேற்றத்தை விரும்பாத சோம்பேறி களாகத்தான் இருக்க வேண்டும்! இவர்கள் ஒவ்வொருவருக்கும் நேயர் கடிதங்களைக் காட்டி அவர்களை வாசிக்கச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஒலி பரப்புக் கலை மகா சக்தி கொண்ட ஒரு சாதனமென்பது விளங்கும்.
19

Page 12
தொலைக்காட்சியின் வளர்ச்சி வானொலி கேட்பதைப் பாதிக்கின்ற தென்கின்றனர். தொலைக்காட்சிச் சேவை இன்னமும் நாடு பூராவும் செறிய வில்லை. அந்தப் பெட்டியையே இன்ன மும் கண்டு கொள்ளாதவர்கள் இந் நாட்டில் இருக்கவே செய்கின்றனர். இவர் களது பொழுதுபோக்கு நண்பன் வானொலி தான்! அடிமட்ட ஏழை பாழை களின் தோழன் வானொலிதான். சிக்கன மானது. பொக்கட்டுக்குள்ளும் கொண்டு திரிந்து போகுமிடமெல்லாம் கேட்கலாம். வானொலிப் பெட்டியொன்றில் ஒலிபரப் பாகும் பாட்டையோ நிகழ்ச்சியையோ ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் கேட்கலாம். இந்த வசதி தொலைக் காட்சிக்கு இல்லை. இதனால்தான் வானொலி அதிகப்படியான ஜனரஞ்சகத் தைப் பெறுகின்றது. வெளிநாடுகளும் கூட தொலைக்காட்சியைக் காரணமாகக் கொண்டு வானொலியைப் புறக்கணிக்க வில்லை. எனவே தொலைக்காட்சியின் பரவலைக் கண்டு ஏக்கமடைவது அர்த்த மற்றதாகும். அடிமட்ட மக்களின் பாமரத் தன்மையை விரட்டி, அவர்களது அறிவுத் தளத்தை மேலெழுப்பக் கூடிய சிறந்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி நேயர்களின் பெருக்குவது இன்றைய வானொலி உத்தியோகத்தரது கடமையென்பேன். இம்மக்கள் பெரும் பாலும் கிராமத்திலேயே காணப்படுகின் றனரென்பதும் குறிப்பிடத்தக்க தாகும்.
எண்ணிக்கையைப்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையைக் கேட் பதில் தேக்கம் ஏற்பட்டதற்கு, அதிகார வலுவுள்ளோர் அதை அந்நியப்படுத்தி
20
யமையையும் ஒரவஞ்சனை பாராட்டி னதையும் அதிமுக்கியமாக்கலாம். பொது
வாகச் செய்தி ஒலிபரப்பானது அதன்
நம்பகத்தன்மையை கேட்டுநரிடமிருந்து இழந்தது. திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் ஒலிபாப்பப்பட்டன. இதை உணர்ந்து கொண்ட மக்கள் அதைக் கேட்பதை நிறுத்தினர். காலகட்டமொன்றில் செய்தி வாசிப்பவர், செய்தியொன்றை வாசித்து முடிந்த பின் 'இப்படி லங்கா புவத் அறிவிக்கின்றதெனக் கூறுவார். இதைக் கேட்பவர்கள் உடனேயே "இது லங்கா பொறு" என்பர். உடன் அந்தச் செய்தி கேட்பதும் நிறைவு பெறும். இத்தகைய நம்பகமற்ற தன்மையை இலங்கை வானொலி தொடர்ந்ததால், தமிழ் பேசும் மக்கள் அதைக் கேட்பதை நிறுத்தி பீபீசி, வெரித்தாஸ், ஆகாஷவாணி ஆகிய வற்றின் செய்திகளைத் கேட்கத் தொடங் திரிவுபடுத்தப்படாத செய்திகளைக் கொடுப்பதன் மூலமாக
கினர். எனவே
வானொலி கேட்டுநர் எண்ணிக்கையைப் பெருக்கலாம். புதிய செய்திகளை முந்திக் கொடுக்கும் வானொலியையே மக்கள் பாராட்டுவதுண்டு!
அன்றோ அல்லது அடுத்த தினமோ ஒலிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியலைச் செய்திக்குப் பின்னரே வாசிக்கின்றனர். நம்பகமற்ற செய்தி களைக் கேட்கக் கூடாதென வானொலி கேட்பதை நிறுத்திய நேயர்கள் எப்படி நிகழ்ச்சி நிரலைக் கேட்பர்? எனவே, நேயர்களுக்கு நிகழ்ச்சிகள் சம்பந்தமான முன்னறிவித்தல்களைக் கொடுப்பது மிக முக்கியம்! முன்னர் 'வானொலி மஞ்சரி?
 

வெளிவந்தது. அதில் இரு வாரங்களுக் கான நிகழ்ச்சிகளை நேயர்கள் அறியக் கூடியதாக இருந்தது. அந்த வசதி இப்போ தில்லை. எனவே அதற்கு மாற்றீடாகத் தமிழ்ச் சேவை எதையாவது செய்ய வேண்டும்! தேசிய ஒலிபரப்பும் தென் றலும் ஒரே கூரையின் கீழ்த்தான் இயங் கிக் கொண்டிருக்கின்றன. தேசிய ஒலி பரப்பின் விசேட நிகழ்ச்சிகளுக்குத் தென்றல் ஒலிபரப்பில் விளம்பரம் கொடுத்தால் அது பரவலான நேயர் களைச் சென்றடையும். நேயர்களுக்கு உதவும். உரியவர்கள் கவனிப்பார்களா?
ஒலிபரப்புக் கலையில் நாம் சிகரத் தைத் தொட்டு விட்டதாக எமது ஒலிபரப் பாளர்கள் இறுமாப்புக் கொள்வதுண்டு. ஆனால், வெளிநாட்டு ஒலிபரப்பு நிகழ்ச்சி களைக் கேட்கும் பொழுது "இது வெறும் மனப்பால் குடிப்பே' என்ற எண்ணந்தான் பிறக்கின்றது. வாழ்க்கை யில் இலங்கை வானொலியின் ஒலி வாங்கி சென்று விடாத பல களங்கள் இன்னமும் இருக்கின்றன. அவைகளை 6 TLDg ஒலிபரப்பாளர்கள் இனங்கான வேண்டும். இதுவரை கேட்டறியாத வற்றை எமது நேயர்கள் கேட்டுச் சுகிக்க வேண்டும். அத்தகைய நிலையொன்றை உருவாக்கிய பின்னர் தான் எமது ஒலி பரப்பாளர்கள் தாமே சாதனையாளர் களென மார் தட்ட முடியும். எடுத்துக் காட்டாக அடர்ந்த காடுகளை இன்னமும் தமிழ் ஒலிபரப்பாளர்கள் கண்டு கொள்ள வில்லை. அங்கெல்லாம் மக்கள் கேட்டு இன்புறக் கூடிய எத்தனையோ ரசமான நிகழ்வுகளுண்டு. அதேபோலக் கடலை யும் கண்டுகொள்ளவில்லை. தொழிலாளர்
Ya--
நிகழ்ச்சிகளுக்கு சினிமா இசைத் தட்டுக் கள்தான் கைகொடுக்கின்றன. செயன் முறைகளைக் கேட்டு அறியக் கூடிய்வை களாக அவைகள் அமைவதில்லை.
விளையாட்டுகளைப் பொறுத்த மட்டில் கிரிக்கட்டிற்குத் தமிழ் நேர்முக வர்ணனை கிடைப்பதுண்டு. கரப்பந் தாட்டம், கால் பந்தாட்டத்திற்குக் கிடைத் ததா? எனவே, எமது ஒலிபரப்புக் கலைக்கு நாம் கொண்டுவர வேண்டிய விடயங்கள் இன்னமும் எத்தனையோ இருக்கின்றன. அவைகள் முனைப்புப் பெறுவதற்கான ஆக்கபூர்வமான காரியங்
கள் ஊக்கம் பெற வேண்டும். எதிர்க் கடை பரப்பும் தனியார் வானொலிகளின்
தடங்கள் வேறு. செல்வச் செழிப்பான
ஒவ்வொரு பணக்காரரும் தமக்கென் றொரு எப்.எம்மைத் தொடக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
ஒலிபரப்புக் கலை சம்பந்தமாகத் தற்பொழுது நூல் வெளியீடுகள் தூள்' பறத்துகின்றன. இவைகளில் பெரும் பாலானவை மூத்த ஒலிபரப்பாளர்களைப் பற்றி அவர்களது நண்பர்கள், அபிமானி கள் குறிப்பிட்டவைகளின் தொகுப்புகள். சிலர் தமது ஒலிபரப்புப் பணி குறித்த அநுபவங்களைத் தாமே சுயமாக விபரித் துள்ளனர். இவைகள் இளைய தலை முறை ஒலிபரப்பாளர்களுக்கு வழி காட்டக் கூடியவையாக இருப்பின் முயற்சியைப் பாராட்டலாம்,
சில தசாப்தங்களுக்கு முன்னர் பிரபல தமிழ் இலக்கியவாதி சோ.சிவ பாதசுந்தரம் 'ஒலிபரப்புக் கலை' என்
21

Page 13
றொரு நூலை வெளியிட்டிருந்தார். இதற் குத் தமிழ் சூழலில் பெரு வரவேற் பிருந்தது. முயற்சியைக் கெளரவித்து இலங்கை சாஹித்திய மண்டலமும் பரிசு கொடுத்தது. தற்போதைய நவீன சாதனங் களோடு அசைவியக்கத்தைப் பெற்றுள்ள வானொலிச் சேவையை நோக்கும் பொழுது இந்நூல் காலம் கடந்ததாகவே படுகிறது. இருந்தாலும் இதைப் 'பிள்ளையார் சுழி'யாக வைத்துக் கொண்டு ஒலிபரப்புக் கலைப் படிப்பைத் தொடக்கலாம்.
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்புக் கலை பயிற்றுவிப்பாளராக இருந்த ஸ்ரூவேற் உவேவல் என்பவரும் இக்கலை சம்பந்தமான நூலொன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார். பிர பல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சி.வி.இராஜசுந்தரம் இதை "வானோசை” என்ற மகுடத்தில் தமிழாக்கம் செய் துள்ளார். வானொலி பற்றிய சிறந்த நூல். மொழிபெயர்ப்பு வாசகரை ஈர்க்கக் கூடியதாக இருக்கின்றது.
பல வானொலி நாடகங்களை எழுதிப் பரிசுகளைப் பெற்ற அராலியூர் சுந்தரம்பிள்ளை 'வானொலி நாடகங்கள் எழுதுவது எப்படி?" என்றொரு நூலை வெளியிட்டிருக்கிறார்.
இவைகளோடு, வானொலி நாடகத் துறைக்குத் தமது பிரதிகள் மூலமாகப் பங்களிப்புச் செய்த பல வானொலி நாடக எழுத்தாளர்கள் ஏற்கனவே வானொலியில் ஒலிபரப்பப்பட்ட தமது நாடகங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கின்றனர். இவைகள்
22
எமது வானொலிச் சேவையின் ஆற்றல் களுக்குக் கட்டியங் கூறுபவைகளாகச் சேவிக்கின்றன.
சேவை நலன்களை நூலாக்கு பவர்கள் ஆண்டுகளைக் குறிப்பிடுவது நன்று. முன்னோடி ஒலிபரப்பாளர்களான எஸ்.சரவணமுத்து, பிரபல வானொலிக் கலைஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் தமது வானொலிப் பணிகளை நூலாக்கினால் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு அவை நல்ல விருந் தாக அமையும்!
ஒலிபாப்புக் கலையில் சிறகசைக்கக் கெம்பிக் கொண்டிருக்கும் இன்றைய இளம் ஒலிபரப்பாளர்கள் அவசியம் இந் நூல்களைப் படிக்க வேண்டும். பழுத்த அனுபவசாலிகளின் அநுபவங்கள் புதிய வர்களுக்குப் பயன் தரக்கூடிய பாடங் களைப் புகட்டும். அத்தோடு இவர்கள் பன்முகப்பட்ட அறிவைக் கொண்டவர் களாகத் தம்மை தயார்படுத்த வேண்டும். தாம் கற்ற, அதன் மூலமாக உத்தியோகம் பெற்ற கல்வித் தரதாரத்திற்குள் அறிவை முடக்கி விடக் கூடாது. கலைப் பட்ட தாரிக்கு விஞ்ஞானம் தெரிந்திருப்பின் எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்க (Մ Iգ պւb. கொண்டிருக்கும் தமிழ்ப் பத்திரிகைகள்,
சமகாலத்தில் வெளிவந்து
சஞ்சிகைகள் என்பவற்றின் கிரமமான வாசகர்களாக ஊடகவியலாளர்கள் இருக்க வேண்டும். றையோ, நிகழ்ச்சியொன்றையோ தயாரிக் கும் நேரத்தில் இவைகளைத் தேடுவதைப் பழக்கமாக்கக் கூடாது! அத்தோடு பிற மொழி வாசிப்பில் மட்டும் தங்கி
பேட்டியொன்
 

இருப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒலிபரப்புக் கலைஞரொரு வர் பிரதியாக்கம், அறிவிப்பு, தயாரிப்பு என்ற பன்முகத் தன்மையைக் கொண்டிருப்பது
அவசியம்!
ஆக, ஒருவரது ஒலிபரப்புக் கலை ஆற்றலை, அத்துறையில் அவரது நீடித்த இருத்தலோ அல்லது அவருக்குக் கிடைத்த அதி வல்லமை வாய்ந்த கதிரை யோ உவந்தளிக்குமென நினைக்கக் கூடாது. தொடர்ச்சியான தேடலில் அதைத் தன்னில் பிரவகிக்க வைப்பவரே கலைஞராகின்றார். கலை ஒரு யோகம். வரம். இது ஒலிபரப்புக் கலைக்கும் ஏற்புடையதே!
இன்றைய ஒலிபரப்பாளர்கள்
gees): অৰ
தொழிலைத் தொண்டாக மதிக்க வேண்டும். இருந்த கால் மூதேவி, நடந்த கால் சீதேவி என்பதை உணர்ந்து புதிய வைகளை தேடுவதில் ஊக்கம் கொள்ள வேண்டும். தமக்குக் கிடைத்துள்ள அதி காரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந் தாலும் அதற்குள் நின்றே ஒலிபரப்புக் கலைக்குச் செய்யற்கரிய செய்வது எம் நாட்டைப் பொறுத்த மட்டில் எரிகின்ற வீட்டில் பிடுங்கியதை இலாபமாக்கும்!
"தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" இது பாரதியின் வேண்டு கோள். இதைச் செய்யக் கூடிய சாதனங் களுள் வானொலியுமொன்று! அதை இழுத்து மூடினால்.
- முற்றும் -
(0რdნიზამი 41 - வது ஆண்டு மலர்தலராகின்றது.
மலரில் தமது ஆக்கங்கள் மூலம் பங்களிப்புச் செய்பவர்கள் தமது படைப்புகளை இப்போதே அனுப்பி எம்முடன் தொடர்பு கொள்ளலாம். மலருக்கு விளம்பரம் நல்க விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். நாற்பத்தோராவது ஆண்டு மலர் தேவையானோர் முன் கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்வது விரும்பத்தக்கது.
- ஆசிரியர்
23

Page 14
சுவீகாரம்
- சோ.பத்மநாதன்
அறுபது வருஷத்துக்கு முந்திய கதை அடுத்தடுத்த வீடுகள் அவை ஒன்று அண்ணன் வீடு மற்றது தங்கை வீடு வேலியில் பெரிய பொட்டு இலகுவாகப் போய்வர!
அண்ணனுக்கு இரண்டு பிள்ளைகள் ஒர் ஆண், ஒரு பெண் தங்கைக்கு நால்வர் பிள்ளைகள் ஆண்மக்கள் மூவர், பெண் ஒருத்தி
அண்ணன் வீட்டில் சின்னக் குழந்தைகள் இல்லை அண்ணன் மகள் அன்னம் குமர்ப்பிள்ளை அவள்
அடிக்கடி மாமி வீடு போவது பிள்ளைகளைத் தூக்க எடுக்க' மாமியின் மூன்றாவது பொடியனில் அவளுக்குக் கொள்ளை ஆசை சுருட்டை மயிரும் துருதுரு என்ற கண்களும் பொடியனுக்கு
24

இந்த நிலையில்தான் இவன் பதினெட்டு மாதப் பிள்ளையாய் இருக்கும்போது
(ubחLD மற்றொரு மகனைப் பெற்றெடுத்தாள்!
இரண்டு பிள்ளைகளையும் பார்க்க மாமி சிரமப்படும்போது
மருமகள் கைகொடுத்தாள் மூன்றாவது பெடியனைச் சுவீகரித்துக் கொண்டாள் அந்தக் கதையை பெரியம்மா வாயால் கேட்க வேண்டும்!
‘மாலை அஞ்சுமணிக்கு வந்திடுவாள் அன்னம் பிள்ளையைத் தூக்கி விளையாடுவாள் அஞ்சரை ஆறாகும் இருட்டிக்கொண்டு வரும் அன்னத்தின் முகமும் இருட்டிக் கொண்டு வரும்!
கடைசியாக்
ClasTubLoT பால்போத்தலைக் கையிலை கொடுத்து உன்னையுந் தூக்கிக் கொடுத்து - 'தம்பியைக் கொண்டு போவன் பிள்ளை' எண்ட பிறகுதான் அன்னத்தின்ரை முகத்திலை சிரிப்பு வரும்! நீ திரும்பி வாறது
பொழுது விடிய
உப்பிடித்தான் மோனை பதினெட்டு மாதததிலை கொம்மான் வீடு போன நீ
பிறகு திரும்பி வரவே இல்லை!"
25

Page 15
"மல்லிகை ஜூன் இதழில் எனக்கு எழுத முடியாமற் போய்விட்டது. மன்னிக்கவும். இந்த இதழில் தொடருவோம். நினைவில் கே.எஸ், சிவகுமாரன் நிற்கும் கலைநயமும், களிப் T) பூட்டலும் கலந்த திரைப் படங்கள் பற்றிய சில குறிப்புகள் எதிர்காலத் திரைப்படத் திறனாய்வாளர்களுக்கு உதவும் எனக் கருதி இத்தொடரை எழுதுகின்றேன்.
BASIC INSTINCT
1992ல் வெளி வந்த இந்தப் படம் காம உணர்வைத் தீண்டும் சில காட்சிகளைக் கொண்டிருந்தாலும், திகிலூட்டும் சம்பவங்களை நேர்த்தியாகப் படம் பிடிக்கப்
பட்டதனாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பினாலும், ஒரு சீரான களிப்பூட்டும் அனுபவத்தைத் தந்தது. மைக்கல் டக்ளஸ், ஷரோன் ஸ்டோன் (Stone) மிகச் சிறப்பாக நடித்தனர். இப்படத்தை நெறிப்படுத்தியவர் போல் வேர்த்தோவென்.
கொலை ஒன்று நடந்து விட்டது. முதற் காட்சியிலே திடீரென அதிவிரைவுப் படிமங்களாக (mages), சில ப்ரேம்கள் (Frames). ஓர் அழகிய கட்டுடல் அழகி இக்கொலையைச் செய்தாள் என்று சந்தேகிக்கப்படுகிறாள். கடைசி வரையும் இக்கொலையை யார் செய்தார்? என்று நிரூபிக்கப்படவில்லை. புலன் விசாரணையின் போது துப்பறியும் இன்ஸ்பெக்டர் இக்கட்டழகியின் உடல் வனப்பில் மையல் கொள்கிறார். இது சலசலப்பை ஏற்படுத்திய ஒரு படம். BASIC INSTINCT என்றால்
அடிப்படை உணர்ச்சி எனலாம். THE BATTLESHP POTEMKIN
உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக முக்கியமானதொரு மைற்கல். பொட்டம்கின்" என்ற யுத்தக் கப்பல் படம். தலைசிறந்த ரஷ்யத் திரைப்பட நெறியாளர் களுள் ஒருவர் ஐஸன்ஸ்டைன் (EISENSTEN) ஐன்ஸ்டைன் என்ற விஞ்ஞானி வேறு, ஐஸன்ஸ்டைன் வேறு. பின்னையவர் நெறிப்படுத்திய படம் 1925ல் வெளி வந்தது. அக்காலத்திலேயே இப்படத்தின் ஒளிப்பதிவு உன்னதமாக அமைந்தது. மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்ட இப்படத்தின் ஒரு காட்சி இன்றும் நவீனத் திரைப்பட உத்தியாகக் கருதப்படுகிறது. அக்காட்சி எது?
26
 

G)_6vsvr (Odessa) 5 L-Ö கரையில் குடிமக்களைக் கண்மூடித்தன மாகச் சுட்டுக் கொல்வதற்காக, உயர் மாடியிலிருந்து நீண்ட அகன்ற படிகள் வழியாகப் போர் வீரர்கள் விரைந்து வரும் காட்சியும், பொதுமக்கள் செய்வ தறியாது அங்குமிங்கும் ஒடித் தப்ப முற்படும் காட்சியும் பார்ப்பவரின் புலன்களை விறைக்கச் செய்யும். இது பிரமாதமான படப்பிடிப்பு.
அக்காலத்திலேயே வித்தியாசமான
முறையில் நெறிப்படுத்தப்பட்ட இப்படம்
ஒளிப்பதிவினால் மாத்திர மன்றி,
“மொன்டாஜ்’ (Montage) வார்ப்பி
லமைந்த தொடர் காட்சிகளையும் உள்
ளடக்கிச் சிறப்புப் படமாக வெளிவந்தது.
அது சரி, சினிமாவில் "மொன்டாஜ்'
என்றால் என்ன ? திரைப்பட ஒட்டிணைப்பு என்போம். (தமிழ்ப் படங்களில் சிறந்த 'எடிட்டர்களில்
ஒருவராகக் கருதப்படும் பி(B) லெனின் - இவர் நெறியாளர் பீம்சிங்கின் புதல்வர் - "மொன்டாஜ்’ உத்தியைப் பிரயோகிப் பவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.) அதாவது, தனித்தனியாக எடுக்கப்பட்ட படங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டி முழுத் தொடராக இணைத்தலை (பாலு மகேந்திரா, மணிரத்தினம், கமலஹாசன்
"மொன்டாஜ்" என்பார்கள்.
படங்களில் இம்முறை சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.)
ஸார் (Czar) மன்னனுக்கு எதிராக 1905 இல் எழுந்த குடிமக்கள் எதிர்ப் பெழுச்சியையும் 'பொட்டம்கின்' யுத்தக்
கப்பலில் மாலுமிகள் தொடக்கிய அரசியற் புரளியையும் இந்தப் படம் சித்திரித்தது.
BECKET
ஜ் ஷோன் அனுய்ஸ் (JEAN ANOUILH) தலைசிறந்த பிரெஞ்சு நாடகா சிரியர்களில் ஒருவர். இங்கிலாந்தில் ஆட்சி புரிந்த இரண்டாவது ஹென்றி மன்னனுக்கும் கண்டர்பெரி (Canterbury) அதி மேற் றிராணியாருக்கு மிடையில் நிலவிய கொந்தளிப்பான உறவை இப்படம் சித்திரிக்கிறது. அதி மேற்றிராணியாரின் பெயர் தொமஸ் பெ(B)க்கிட். தேவ திருச்சபையைச் சேர்ந்த ஒருவர், அதிமேற்றிராணியாராக வரு முன்னர் தனது உடற் வேட்கை
களையும், உணர்வுப் பசிகளையும் எவ்வா
றேனும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது பெ(8)க்கிட்டின் நிலைப்பாடு. இதனால் மன்னனுக்கும் மதக் குருவான வருக்குமிடையில் எழும் முரண் பாடுகளை க்ளென்வில் (Genville) அற்புதமாக நெறிப்படுத்தியிருந்தார். ஆயினும் இப்படம் மேலும் சோபித்தது வியத்தகு நடிப்பினால், ரிச்சர்ட் பே(B)ர்டன், பி(P)ட்டர் ஒடுல் (Peter O'toole), Ggrgi o(G)35 (Glelgud) இப்படத்தின் சிறப்புமிகு நடிகர்கள். இப்படம் 1964ல் வெளி வந்தது.
அடுத்த இதழில் மேலும் சில
படங்களைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.
27

Page 16
ன்ேர் அல்லாவே, அந்த அலயள என்ன்ெண்டு செல்லுவன். நேத்துக் காலத்தால மலபோல வந்த அலயெல்லாம் எங்கிட ஊடு வாசலயெல்லாம் அடிச்சி நொறுக்கி அள்ளிக்கு பெயித்து. நாங்களெல்லாம் ஒண்டுக்கும் வழியில்லாத ஏழயள். எங்கிட ஊடு வளவெல்லாம் கடககாைக்குப் பக்கத்திலதான் இர்ந்த, அதுவும் கவுமந்து குடுத்த வளவுதான். இப்ப எங்களுக்கு ஊடுமில்ல வளவுமில்ல. அதால நாங்கெல்லாம் அகதிகளா வந்து இஞ்ச கெடக்கம். எங்கிட ஊரில அஞ்சாறு அகதி மொகாம் இரிக்கு எல்லாத்திலயிம் எங்கிட மொகாம்தான் பெரிசி. எங்கிட கொலனிதான் தர மட்டமா அழிஞ்ச, இஞ்ச இரிக்கிற எல்லாரும் கொலனில இரிந்தாக்கள்தான். எங்கிட கொலனிலதான் கனக்க ஆக்க ளெல்லாம் அழிஞ்ச.
A என்ன செய்யலாம், கெழவி கெட்டய يحي يسمحدسه M ܐܗܡܕ V ளோட குஞ்சு குறுமானயெல்லாம்
w ۔۔۔۔ C எங்கும்மா எப்ப வருவா? \ அலஅள்ளிக்கு பெயித்து.
--- -ܠܐܚܝ ܓܹ ̄ܐ எல்லாரையிம் அந்த W 55. முத்துநீரான் A அலலா, நலலாச சோதிச்சிப் போட்டான். ೫೧/ವೆ:- - حيحة -- A சோதினைக்கு முன்னால ஆருதான நிச்கேலும்? என்ர வந்த வரத்த இப்ப நெனச்சாலும் சரீரமெல்லாம் நடுங்கிது. சும்மா ஒரு சத்தம்தான் கேட்டிக்கு. மறுகாப் பாத்தா கடல் தென்ன மரத்திர ஒயரத்திக்கு எழும்பி வருகிறது. அங்கால பாத்து இங்கால திரும் புறத்திக்கிடயில எங்கிட ஊடு வாசலெல்லாம்
ஒடஞ்சி அலயில போகிது.
стеi
VJi
செல்லல்லாவே! அந்த அல
என்ர ரப்பே ஒன்ற கொதறத்த எப்பிடிச் செல்லுவன்.? இந்த அல லாவயில வந்திரிந்தா எல்லாரும் குல்லும் அஜம்தான். என்ர வாப்பா, இந்த அலைக்கு என்ன வெசெண்டிரா. சோறிண்ட நான் எழும்பி வாறத்துக்குள்ள என்ர பொண்டாட்டியயிம், ரேண்டு புள்ளயளயிம் அள்ளிக்கு பெயித்தே. என்ர பெண்டாட்டி புள்ளயளோட என்னயிம் அள்ளிக்கு போயிரிக்கபுடாதா..? என்ர பொண்டாட்டி புள்ளயன் இல்லாம நான் உசிரோட இரிந்திதுதான் என்னத்தக் காணப்போறன்? இப்ப இந்த ஒலகத்தில எனக்கு ஆரு வாப்பா தொண இரிக்கு?
இப்ப எங்கிட ஊரெல்லாம் உட்ட வட்ட மாதிரித்தான் அழிஞ்சி கெடக்கு. இஞ்சரிக்கிற ஆக்களெல்லாம் பர்ற பாட்டப் பாத்தா, வயிறெல்லாம் பத்தி எரியிது. அல்லா தந்தத்த கேக்காமலே எடுத்திற்ரான். தந்தவன் எடுத்தத்திக்கு நாங்க கோவப் படலாமா? இதுக்காக அவனோடப் போட்டி போடலாமா? எல்லாத்துக்கும் போது
மானவன்: அவன்தான். கந்கவன் இன்னமும் காாமலா உடப்புறான்?
28

எங்கிட கொலனிக்குள்ள மவுத்தான ஆக்கள்ள பேரெல்லாத்தையும் விதான வந்து எழுதி எடுக்காரு. இவருக்கு ஒதவியா குருவியாண்ட மம்மதும், செனத் தாண்ட செல்லப்புள்ளயிம் நிக்காக. இவகளோட வண்டு சப்பி நாகூராண்ட மகனும், றங்குப் பொட்டிர தம்பி ஆனயன் சீனியம்மதும் மொகாமுக்குள்ள போய் மவுத்தான ஆக்கள்ள பேருகள கேட்டுக்கந்து விதானட்ட செல்றாங்க. தண்ணிச் சோத்துக்கு திங்க இன்னமும் எங்களுக்கு ஒண்டும் வரல்ல, பசியால காதெல்லாம் அடச்சிப் பெயித்து. வெயிலும் நல்லா ஏறிற்ரு. வெதாணயிம் மவுத்தானாக்கள்ள கணக்கெடுத்துக்கு போப்புறாரு.
“மீரான் காக்கா! இப்ப நான் இந்த லிஸ்ரக் கொண்டு ஏஜிய கந்தோரில குடுக்கணும். நீ போய் இஞ்ச மவுத்தான ஆக்கள்ள பேரென்னயிம் உடுபட்டிரிந்தா கொஞ்சம் பாத்திக்கந்து செல்லுகா. இன்னா நான் குடுக்கப் போற லிஸ்ருப் படிதான் ஒங்களுக்கெல்லாம் கவுமந்தால வாற நெவாரணச் சாமானும், காசிம் கெடைக்கும். இந்த லிஸ்ரில பேரில் லாட்டி ஒருவருக்கும் ஒண்டும் கெடைக் காது. லிஸ்ரக் குடுத்தத்திக்கு பொறகு வந்து, எங்கு வாப்பாட பேரு பதியல்ல, பேரு பதியல் லெண்டு கொளறப்புடா."
உம் மாட
இவளவு நேரமும் பேயறஞ்சவனப் போல குந்திக்கிரிந்த குத்தியன்ர மகன் மம்மக்காசின் வெதானக்கிற்ா வந்து ஒப்பாரி வெச்சிக் கொளர்றான்.
گستبههESTLEISE Easszasm. -"jrسج<*
兹鲇 ob፡
காசீம் காக்கா, கொளறாம ஒண்ட வெசயத்த செல்லுகா."
'தம்பி, என்ர முழுப்பண்ணையே அழிஞ்சி பெயித்து. என்ர குடும்பத்தில நான் மட்டும்தான் மிச்சம். அண்டு விடியச் சாமத்தில வட்டைக்க நான் எண்ணடிக்க போகாட்டி, நானும் மவுத் துத்தான். ஒதப் பள்ளிக்குப் போன என்ர ரெண்டு புள்ளயஸ்ள மய்யத்துகளும் எடுக்கல்லம்பி. இதுக்குப் பொறகும் என்னத்திக்கம்பி நான் இந்த ஒலகத்தில இரிக்கணும்? என்னப் பாக்க இனி ஆரம்பி இரிக்காக...? என்ர சீதவி போனவள், என்னயிம் சேத்திக்கு போனாளா? அவள் என்ன மட்டும் உட்டுப் போட்டு, அவள்ள புள்ளயஸ் எல்லாத்தையிம் கூட்டிக்கு நல்ல பதவி பெத்து பெயித்தாள். என்ர ஈரக் கொழுந்த நெனச்சாத்தான் தம்பி மனமெல்லாம் அடிச்சிக்கி மாயிது."
குத்தியன்ர மகன் மம்மக்காசின் கொளறிக் கொளறி, அவன்ட பண்ணைக்கு வந்த கெதிய விதானற்ர செல்லிப் போட்டுத் தலயிலடிக்சிக்கி ஒப்பாரி வெய்க்கான். மொகாமெல்லாம் ஒரே சத்தமாக் கெடக்கு.
“காசீன் காக்கா அல்லாட கொதறத் திக்கு எல்லெரிக்கா..? ஏதோ கொஞ்ச நாளைக்கு வெச்சிரிக்கத் தந்தவன் எடுத் திட்டான். அவன் வெச்சிரிக்கத் தந்தத நாம குடுக்காட்டி, அவனென்ன எடுக் காமலா உடப்புறான்? கொளறாம ஒன்ட பொண் சாதி புள்ள யஸ்ள பேரச் செல்லுகா. இது அவகிட மரணப் பதி வெடுக்க ஒனக்கு வேணும்."
29

Page 17
Mwanan 旱溪园
வெதான சென்னதக் மம்மக்காசின் அவன்ட பொண்சாதி
கேட்டு,
புள்ளயஸ்ள பேரெல்லாத்தையும் செல்லிப் போட்டுப் போய், ஆலமரத்திக்கு கீழ குந்திக்கிரிக்கான்.
பசியால, குஞ்சி குறுமானெல்லாம் துடிச்சிக்கு எல்லா எடத்தையிம் ஒப்பாரியாத்தான் கெடக்கு,
மாயிது கள்.
"என்ன, மவுத்தானாக்கள் இன்னம்
ஆரும் இரிக்காகளா?
வெதான போறத்திக்கு அவதிப்பர் ராரு. வெயிலும் நல்லா ஏறிற்ரு.
"ஒம் சேர், எங்கும்மாவும் என்ர கைப்புள்ளயிம் மவுத்தாகி, இன்டக்கித் தான் அவகிட மய்யத்துகள எடுத் தடக்கின."
சொளகண்ட கொழந்தட மகள் அவள்ள உம்மாட பேரயிம், புள்ளட பேரயிம் செல்லிப் போட்டு போறாள்.
வெதான நெருப்புக்கு மேல நிக்கிறாப் போல நிக்காரு.
'அப்ப நான் போப் புறன், வேறாரும் பதியரிக்கா..?"
““○gr庁!
தில ரிந்த பத்தாசிர எளய வண்ட
என்ர ஊட்டுக்கு பக்கத்
புள்ளொண்டு இன்னாரிக்கான்."
"அவன்ட உம்மா வாப்பாவெல்லாம்
6Tiss?'
'எல்லாரயிம் கடலள்ளிக்கு பெயித்து. இவன் மட்டும்தான் மிஞ்சிரிக்
30
கான்." செலகண்ட மீரான் செல்லிப் போட்டு ஆலமரத்திக்குக் கீழ குந்திரிக்கான்.
“மீரான் காக்கா, அந்தப் பொடியன இஞ்ச கூட்டிக்காகா.'
விதானட செல்லக் கேட்டு, மீரான் பொடியனக் கூட்டிக்கு வாறாரு.
'சேர், இவனுக்கு ஒண்டும் வெளப்பமில்ல. நேத்தெல்லாம் உம்மா வத் தேடித் தேடிக் கத்திக்கிரிந்தான். லாவு எனக்கிற்ரதான் படுத்த. என்னேரமும் எழும்பி எழும்பி உம்மாவத்தான் கேட்டுக் கிரிந்தான். பெரிய பாவமாக் கெடக்கு சேர். இவன்ட வயசிலதான் என்ர இரிந்த, அவனையிம்தான் கடலள்ளிக்கு பெயித்து.'
மகனும்
"யா அல்லா, இதெல்லாம் என்ன சோதனயோ..?’ பத்தாசிர எளயவன் வளத்த நாயிம் வந்து, புள்ளைக்கு பக்கத்தில நிக்கி.
அவன்ட
"இதென்ன நாயொண்டு?”
"இது பத்தாசிர எளயவன் வளத்த நாய், சேர். இந்த நாயிம் இந்தப் பொடி யனும்தான் அவன்ட குடும்பத்தில தப்பின. இந்த நாய்தான் சேர், இந்தப் பொடியனக் காப்பாத்தின. இந்தப் பொடியன் தண்ணில கெடந்திக்கு தத் தளிக்கக்குள்ள, இந்த நாய்தான் இவன்ட சட்டயக் கவ்விப் புடிச்சி இழுத்திக்கந்து கரயில உட்டயாம். இந்த நாய் மட்டும் இல்லாட்டி இந்தப் பொடியனும் மவுத்தித்தான்."

"அல்லா. ஒனக்கிட்ட இல்லாத கருணயா எங்களுக்கிட்ட இரிக்கி?" வெதான பொடியனையிம், அவனுகள்ள நாயயிம் பாத்துப் பாத்து பெருமூச்சு உர் றாரு . நாய்
அணிஞ்சிக்கி நிக்கி."
பொடியனோட
“சேர்! இந்த நாய் என்னேரமும் இந்தப் பொடியனப் பாத்து ஒரே கொளர்றதும், ஊழ உர்றதுமாத்தான் இரிக்கி. ஆரு வெரசினாலும் போகாம இந்தப் பொடியனோடத்தான் கெடக்கு. இப்ப இந்த
வெரசிறல்ல."
நாங்காரும் நாய
வெதான பொடியனக் கையில புடிச்சி, அவன்ட தலயத் திறாவிக் கொஞ்சிறாரு.
'தம்பி ஒன்ட பேரென்ன மயில்?"
'ylfair...'
“ச்சா..! அச்சாப் பேரு. சமில் தம்பி சோறு திண்டயா?”
"சோறு வேணாம். எங்கும்மா
எப்ப வருவா..?"
'தம்பிர உம்மா, சமில் தம்பிக்கு பெருநாளைக்கு சட்ட, றவிசர், சப்பாத் தெல்லாம் வாங்கிற்ரு வர கடக்கி போயிரிக்கா. இப்ப வந்திருவா."
"அப்ப, குஸ்னா லாத்தா..!"
'உம்மாவோட எல்லாரும் போயிரிக்
காக. தம்பிக்கு நெறய உடுப்பெல்லாம் வாங்கிற்ரு வருவாக. நாம பெருநாளக்கி போட்டுக்கு போய் பள்ளியடிய
பாவப்புள்ள, வலுரன், முட்டாசெல்லாம் வாங்கெல்லாம் செரியா?
“ங். தெறி.”
“மீரான் காக்கா, நீ தம்பியக் கூட்டிக்கி போய், கவனமா வெச்சிக்க. நான் போய் தம்பிக்கு விஸ் கோத்
தெல்லாம் வாங்கிற்ரு வாறன்."
பத்தாசிர எளயவண்ட மகன மீரான் கூட்டிக்கிப் போய், ஆலக்கி கீழ வெச்சிக் கிரிக்கான். நாய் எளயவண்ட மகனுக்கு பக்கத்தில, கெடக்கு. எங்கிட மொகாமில இரிக் கிறாக்களுக்குச் சோத்துப் பார்சலெல்லாம்
சோகமாகப் படுத்துக்
சின்ன மிசின் பெட்டில ஏத்திக்கந்து குடுக்காக. . . .
“மீரான் காக்கோ இஞ்ச வாகா." ஆலக்கி கீழ குந்திரிந்த மீரான், பாஞ் சுழுந்து விதானட்ட வாறான்.
“என்னம்பி."
'எளயவண்ட மகனக் கொஞ்சம் அன்பாப் பாத்துக்க, காக்கா. இவன நாம இப்பிடி அநாதயா உடப்புடா. இந்தப் பொடியனுக்கு ஒரு ஒழுங்கான வழி செய்யணும். நான் எங்கிட டீஎஸ்சிக்கிட்ட இந்தப் பொடியனப் பத்திச் செல்லி, ஒரு
கடிதமெழுதிக் குடுததுப் போட்டு,
எங்கிட ஊட்ட கூட்டிக்கி போய் வெச்சிரிக்கப் போறன்.”
“சேர், அல்லா ஒங்களுக்கு நன்மயத் தருவான். அதச் சொணங்காமச் செய்ங்க. லாவு அந்தப் பொடியன் படுக்கல்ல சேர். ஒரே உம்மா, உம்மாண்டு வாய்
31

Page 18
D&GSG)
பெதற்ரிக்கித்தான் இரிந்தான். அவனுக் கிப்ப ஒண்டுமில்லாட்டியிம், பாசமுள்ள தொணயொண்டு வேணும் சேர்."
"அதுக்கு எங்கும் மாரிக்கா... ள்னக்கும் ஒரு தம்பி வேணும் காக்கா.”
வெதானட செல்லக் கேட்டிக்கு மீரான் காக்கா, மொகம் மலர்ந்து
வெதானட கையப் புடிச்சி கொஞ்சிறாரு.
"அப்ப நான் எங்கிட கந்தருக்கு போறன். எங்கும்மாவும், எங்கிட ஊட் டெரிக்கிற எளயம்பியிம் இப்ப வரு வாங்க. அவகிட கய்யில இந்தப் பொடி நாயயிம் கட்டிக் குடுத்திரு. எங்கும்மா சீதவிக்குச் சின்னப் புள்ளய
யனயிம்,
ளெண்டா செல்லத் தேவல்ல. ரெண்டு
கய்யாலயிம் அள்ளி எடுத்திருவா."
'ஒங்கும் மா செல்லக்கண்ட
எங்களுக்குத் தெரியாதா..? அவட மனசி
器イ
டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது.
தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள் மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும்
கடல். நீங்க போங்க, நான் எல்லாத் தையிம் ஒழுங்காகச் செய்யிறன்."
ஆக்களெல்லாம் சோத்துப் பார்சல வாங்க வரிசயா நிக்காக, வெதான அவரு எழுதி எடுத்த போமெல்லாத்தையிம் ஒழுங்கா அடிக்கி எடுத்திக்கு, அவர்ர மோட்டச் சைக்கிள்ள வெசயாப்
e変弘@ மில்லாத அநாத மாதிரி பத்தாசிர எளய வன்ட மகன் மவுத்தாப் போன அவன்ட
போறாரு, அன்னா பாருங்க!
உம்மா வாப்பாவத் தேடிக்கு ஆல மரத்திக்குக் கீழ கொளறிக்கு இரிக்கான். அவனுக்குப் பக்கத்தில அவனுகள்ள நாய், ஒண்டுமே தின்னாமச் சோந்து படுத்திக் கிடக்கு. இந்த ஒலகத்தில அல்லா, எப்பதான் அவனுக்கும் நாய்க்கும் அன்பான தொணயக் குடுக்கப் போறானோ? இன்னும் சுனாமி வருமா? இனி எங்கள அல்லாதான் காப் பாத்தணும்.
32
 
 
 
 
 
 
 
 

ඉල්වී பிரதியின்
முணுமுணுர்வுக்கள்
- மேமன்கவி
1. சதத் ஹஸன் மாண்ட2டோவின் கதைகள்
ઈીo இலக்கியப் படைப்புக்களைப் படித்து முடிக்கின்ற பொழுது, ஏற்படுகின்ற உணர்வுகள் மிகவும் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. மிகவும் நீண்ட காலத்திற்கு அந்த உணர்வும் அனுபவமும் நம்மோடு தங்கி விடுகின்றன.
அத்தகைய அனுபவத்தையும் உணர்வையும் தமிழகத்திலிருந்து "ஸ்நேகா பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கும் பஞ்சாபி எழுத்தாளர் சதத் ஹஸன் மாண்ட்டோ' வின் கதைகளின் தொகுப்பு ஏற்படுத்தியது. சதத் ஹஸன் பஞ்சாபி எழுத்தாளர் என மொழி ரீதியாக அறியப்பட்டாலும், இவரை இந்தியா - பாகிஸ்தான் எழுத்தாளர் என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
1912ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து, 1955ஆம் ஆண்டு 43 வயதில் பாகிஸ்தானில் லாகூரில் மறைந்த சதத் ஹசனின் கதைகள் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது நடந்த சம்பவங்களைக் கருக்களாய்க் கொண்டவை.
அதிலும் குறிப்பாக அக்காலகட்டத்தில் பெண்கள் மீது நடந்த பாலியல் வன் முறைகளைச் சித்திரித்து நிற்கின்றன. அவர் கதை சொல்லும் பாணி தனித்துவமானது. எளிய நடையில் அன்றைய காலகட்ட அனுபவங்களை அவர் சொல்லி இருக்கும் விதம் மனசைப் பிழிகின்றது.
இத்தொகுப்புகளிலுள்ள 14 கதைகளில் ஒன்பது கதைகளை இத்தொகுப்பைத் தொகுத்த ரவி இளங்கோவும், மற்ற மிகுதிக் கதைகளை சரஸ்வதி ராமநாத், எம்.சிவசுப்பிரமணியம், கல்பனாதாசன், யுவன் சந்திரசேகர் ஆகியோர்கள் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். இவர்களின் சிறப்பான மொழிபெயர்ப்பின்
33

Page 19
666): TANS
காரணமாக ஒரு மொழிபெயர்ப்புப் படைப்பைப் படிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வண்ணம் மிகவும் சரளமான முறையில் அவர்களின் மொழி நடை அமைந்து இருக்கிறது.
சதத் ஹஸன் தனது கதைகளில் பாலியல் பிரச்சினைகள் மீதுதான் அதிகம் கவனம் செலுத்துகிறார் என்ற குற்றச் சாட்டு அவர்மீது வைக்கப்பட்ட ஒன்று. ஆனால், அவரது எந்தவொரு கதையிலும் விரசம் வெளிப்படா வண்ணம் மிகவும் நயமாக அப்பிரச்சினைகளை அவர் கையாண்டு இருக்கிறார் என்பதை அவரது கதைகளை ஆழமாகப் படிக் கின்றவர்கள் புரிந்து கொள்வார்கள். அத்தோடு பெண் இனத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறையினதும், பரி வினதும் வெளிப்பாடுகள்தான் அவரது கதைகள் என்பதையும் புரிந்து கொள் வார்கள்.
மேலும், அவரது கதைகளில் சமூகப் பிரக்ஞையுடனான ஒரு அங்கத உணர்வு வெளிப்படுவதைக் காணலாம். அதற்கு உதாரணமாக இத்தொகுப்பில் அமைந் துள்ள "முற்போக்குக் கல்லறைகள் எனும் கதையைச் சொல்லாம்.
இத்தொகுப்பில் அமைந்துள்ள "திரும்புதல்' எனும் கதை என்னை மிகவும் பாதித்தது. அந்தப் பாதிப்பை வெறுமனே அக்கதைச் சுருக்கத்தைச் சொல்லுவதன் மூலம் ஏற்படுத்த முடி யாது. முழுக் கதையையும் நீங்கள் படித் தால்தான் நான் அனுபவித்த அந்த உணர்வை உங்களால் அனுபவிக்க (tքIգպմ.
34
மேலும், சதத் ஹஸன் கதைகள் தரும் அனுபவங்களுடன் எனக்கு வேறு வழியில் பரிச்சயம் உண்டு எனலாம். அதாவது, நான் சார்ந்திருக்கும் மேமன் சமூகத்தைச் சார்ந்த முதியோர்களிடம் அடிக்கடி இந்தியா - பாகிஸ்தான் பிரிவின் பொழுதான அனுபவங்களைக் கேட்டு அறிந்திருக்கிறேன். அவர்களின் அந்த அனுபவங்களின் இலக்கிய வெளிப்பாடுகளாக நான் சதத் ஹஸன் மாண்ட்டோ கதைகளைப் பார்க்கிறேன். அதனால்தான் என்னை அவரது கதைகள் அதிக அளவில் பாதித்து இருக்கின்றன
என்பதுதான் உண்மை!
2. மு. பவீரின்
நிஜங்களின் வலியும் உள்ளூர் வெளியீட்டு விழாக்களும்,
இன்று இலங்கையில் கிழமை
தோறும் ஒன்று அல்லது இரண்டு புத்த கங்களாவது வெளிவருவதைக் காணக்
கூடியதாக இருக்கிறது. அந்த நூல்களில் கணிசமானவைகளின் வெளியீட்டு
விழாக்கள் தலைநகரிலேயே நடை
பெறுகின்றன. ஆனால், நூல் எழுதிய படைப்பாளியின் சொந்த ஊரிலேயே
அவரது நூலின் வெளியீட்டு விழா நடை - י
பெறுவது ஒரு சிறப்பான விடயமாக எனக்குப் படுகிறது. அவ்வாறு நடை
பெறும் விழாவின் மூலம், அந்த ஊரில்
வெறுமனே "பேப்பரில் எழுதுபவர்' என்ற அடையாளத்துடன் மட்டுமே அறியப்பட்ட ஒரு படைப்பாளியினது

ஆளுமையைப் பற்றி அந்த படைப்பாளி சார்ந்த ஊர் மக்கள் அறியக்கூடியதாக இருக்கும். அவ்வாறான ஒரு விழாவாகச் சமீபத்தில் மினுவாங் கொடை - கல்லொளுவையில் நடைபெற்ற மீரா வெளியீடாக வெளிவந்திருக்கும் நண்பர் மு.பவுர் அவர்களது நிஜங்களின் வலி' எனும் சிறுகதைத் தொகுதியின் வெளி யீட்டு விழா அமைந்தது.
நண்பர் மு. பஷீரைப் பொறுத்த வரை அவர் தனது ஒவ்வொரு வெளி யீட்டையும் முதலில் தனது ஊரான கல் லொளுவையில் வைப்பது வழக்கமாகக் கொண்டு இருப்பவர். அவ்வாறான அவ் விழாக்கள் மூலம் அவரது ஊர் மக்களிடையே அவரது ஆளுமையும் பெறுமதியும் நன்கு உணரப்பட்டு இருக் கிறது என்பதை 'நிஜங்களின் வலி' என்ற அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் கூட்ட மாக வருகை தந்திருந்த அந்த ஊரின் மக்களின் வருகை நிரூபணம் செய்தது.
நண்பர் மு.பஷரின் சிறுகதைகளின் போக்கும் அவருடைய கதைகளில் வெளிப்படும் அனுபவங்களின் எடுத் துரைத்தலும், ஈழத்துச் சிறுகதைத் துறை வளர்ச்சிப் போக்கில் தனித்துவமானவை. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் படைப்பாளிகளில் நண்பர் மு.பவரின் ஒத்த போக்குடன் எழுதும் படைப் பாளிகள் யாரும் இல்லை என்றே சொல் லலாம். ஒர் ஆழமான விமர்சனத்தை முன்வைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்டவை அவரது படைப்புக்கள். அந்த வகையில் நண்பர் மு.பவுர் தனது
് 06: கதைகளில் கையாளும் பாலியல் பிரச்சினைகள் சம்பந்தமான பெண்ணிய நோக்கிலான விமர்சனம் ஒன்று வைக்கப் பட வேண்டுமென்று எனக்கு அடிக்கடி
தோன்றுவதுண்டு.
அவ்வாறான பார்வைகள் எல்லாம் நண்பர் மு,பவுர் டோன்ற படைப்பாளி களின் ஒட்டு மொத்தப் படைப்புக்களை வைத்துக் கொண்டு பார்க்கப்படுமிடத்துத் தான் அவரைப் போன்ற படைப்பாளி களின் தனித்துவமும், சிறுகதை வளர்ச்சிப் போக்கில், நண்பர் மு.பவுeர் போன்ற படைப்பாளிகளின் பங்கு என்ன? என்பதைப் புதிய தலைமுறை வாசகர்களுக்கு அடையாளப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது எனது கணிப்பு.
பொதுவாகவே ஒரு தனிப் படைப் பாளி பற்றிப் பூரணமான ஆய்வினை முன்வைக்கும் சூழல் ஈழத்து விமர்சன ஆய்வுத்துறையில் ஒரு பற்றாக்குறை யாகவே இருக்கிறது என்பதும் இவ் விடத்தில் ஆதங்கப்பட வேண்டி இருக்கிறது.
3. உயிர் = மெய் = எழுத்து
அன்று எழுத்தில் உயிர் இருந்தது - அந்த எழுத்தில் எழுதப்பட்ட மெய்யிலும், எழுதியவர்களின் மெய்யிலும் ஆரோக்கியம் இருந்தது. அப்படியும் அன்றைய எழுத்தில் உயிரும் மெய்யும் இல்லா எழுத்து கல்லறையில் புதைந்து போய்விட்டது
35

Page 20
என்பது கண்கூடு.
இன்றைய எழுத்தில் மெய் இருந்தால் - அந்த எழுத்தை எழுதியவனின் மெய்யில் உயிர் இருப்பதில்லை.
ஆனால் - இன்றைய பெரும்பாலான எழுத்தில்
மெய் இல்லை
அதனால் உயிர் இல்லை! ஒரு எழுத்திலும் உயிர்ப்பு இருந்தால் தான் அந்த எழுத்து மெய்யாக இருக்கும்.
!
மெய் எது? அதாவது சரியான மெய் எது? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்ற போராட்டமே இன்றைய நமது வாழ்வுக்கு முன்னான போர் என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்தப் போரில் பலியாகின்றவர்கள் யார் தெரியுமா? எழுத்தில் மெய் சொன்னவர்களும், மெய் சொன்னதால் உயிர் இழந்தவர்களும்
FHOTOGRAPHERS
MODERN COMPUTERIZED
PHOTOGRAPHY
OR WEDDING PORTRATS
A as
Si
iNií
S
 
 
 
 
 
 

நந்தி என்ஹாருமானிடன்
சோ.பத்மநாதன்
நந்தி என்றொரு மானிடன் வாழ்ந்ததும் நாங்கள் கண்டுற வாடி மகிழ்ந்ததும் எந்த நுண்பொருள் ஆயினும் யாவர்க்கும் எளிமையாக விளக்கிய நுட்பமும் சிந்தையாலுயர் வன்றிச் சிறியன சிந்தி யாத்தனிச் செம்மையும், தீயிலே வெந்து போகுதென்றெண்ணும் பொழுதிலே வேகு தேயெங்கள் நெஞ்சமும் கூடவே
இந்த மண்ணுள மக்களுக் குற்றவை இன்ப துன்பங்கள் யாவுங் கலந்தவன்; சொந்த நன்மைகள் சிறிதுங் கருதிடாத் Ֆրա உள்ளத்தன், தொண்டன், தவமுனி
விந்தை செய்தவன் பேனையால்; எங்களை
மேன்மை செய்த பெறற்கரும் நண்பனாம் நந்தி சாய்ந்தனன் என்பது பொய், இந்த நாளில் நாங்கள் வறுமை உழந்தனம்
SN ஆழ்ந்த துயரமடைகின்றோம். N நெருக்கடியான காலகட்டங்களில் எல்லாம் முற்போக்கு இலக்கிய முகாமில் மிகப் பற்றுறுதியுடன் நின்று செயற்பட்ட படைப்பாளி பேராசிரியர் நந்தி அவர்களும், யாழ் இலக்கிய வட்டத்தின் தீவிர இயக்குநர்களின் ஒருவராகத் திகழ்ந்து வந்த எழுத்தாளர் செம்பியன் செல்வன் அவர்களும் சமீபத்தில் நம்மை விட்டு மறைந்து விட்டனர்.
அவர்களது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், இலக்கிய
ل .நண்பர்களுக்கும் மல்லிகை தனது துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது ܢ أمـ ܠܐ
37.

Page 21
6
னம், இனத்தைச் சேரும்"
என்பது தமிழினம் உபாசிக்கும் அனறும இன்றும் திருமந்திரம். இது காலாதி காலமாகத்
தொடுத்துக் கொண்டி ருக்கிறது. அகதி வாழ் விலும் கூட இதை ஒரு மறககாத "குண்டு பிசகாது கடைப்பிடிக் 態 ● கின்றனர். கொழும்பில் இன்ன சொந்தங்கள் ノ லொட்ஜில் இன்ன பகுதியார் தான்
தங்குவர் எனப் பிரகடனப்படுத்தப் செல்லக்கண்ணு பட்டு விட்டது.
புலம்பெயர் வாழ்விலும் கூட இதன் தாக்கம் இறுக்கமாகவேயுள்ளது. தன் தன் பகுதியாரோடுதான் புலம் பெயர்ந்தோர் அண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மெல்போனில், சிட்னியில், ரொறன்ரோவில், மொன்றீலில் இன்ன இன்ன பகுதியினர் எனத் தமது பிறப்பு அடையாளங்களுக்கு இசைவாகக் குழுமாமாகின்றனர்.
கலப்பற்ற இப்படியான வாழ்க்கை தம்மைத் தாமே ஒடுக்கிக் கொள்வதற்கு உதவக்கூடியது என்பாருமுண்டு. இருந்தாலும் உறவுகளின் பிணைப்புகள் இதை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
ரத்துத் தண்ணி ஆபத்திற்குதவாது” தனது முன்னோரது வழிகாட்டல்களை அனுசரித்தே மனிதன் இன்றும் தன்னோடு ஒட்டக்கூடிய போக்குகளைக் கொண்ட தனது இன பந்துக்களோடேயே ஒட்டுண்ணியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். இது அவனது சொந்த மண் அவனுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.
யாழ்ப்பாணத்தில் கொட்டடியென்றால் இன்னார்தான்! பாசையூரென்றாலும் சரி, முலவையென்றாலும் இங்கெல்லாம் இன்ன பயிர்தான் என்ற கட்டித்த கணிப்பு. இப்படிக் கிராமமொவ்வொன்றிற்கும் சாதிக் குறியைச் சுட்டிருக்கின்றனர் கட்டுப் பெட்டித்தனமான வாழ்க்கை நடத்தும் எமது சகோதரங்கள் சிவன் கடாட்சம் போலும் "வண்ணார்' பண்ணை தப்பிக் கொண்டது. இந்த வாகடம் அதற்கு ஒத்து வராது.
புனித பத்திரிசியார் கல்லூரியின் தெற்கெல்லையிலிருப்பது திட்டி. ஒருவரை இழிகோலப்படுத்த வேண்டுமாகில் திட்டியை உச்சரித்தே அவரை இழிவு படுத்துவதை ஒரு பொன்மொழியாக எம்மவர்கள் வாலாயப்படுத்தி இன்றும் வைத்திருக்கின்றனர்.
காகங்களைச் சுடுவது சட்டப்படி குற்றமாகும்! சுற்றாடலை அசிங்கப்படுத்தும்
கழிவுகளை காகம் இரையாக்கிச் சூழலைச் சுத்தப்படுத்துவது இதற்குக் காரணமாகும்.
38

ஆனால் இந்தக் காரியத்தைத் தொழி லாகக் கொள்ளும் ஆறறிவு படைத்த மனிதனைச் சமூகம் தீண்டத் தகாததாக்கி யுள்ளது.
இருந்தும், ஆதிக்க சாதியினது வல்லாண்மைகளைப் பொருட்படுத்தாது, தாழ்வுச் சிக்கல்களிலிருந்து தம்மை விடு வித்து இப்பொழுது இப்பகுதி மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக ஆதிக்க சாதியினது கதவுகளைத் தட்டத் தொடங்கி விட்டனர். சமூகத்தில் அவர் முன்னேறு
'வழிவாய்க்கால்களை'
கள் நிமிர்ந்து விட்டனர். வதற்கான அவர்கள் கண்டறிந்து கொண்டனர். இந்தச் சுயஎழுச்சியை உள்வாங்கி இப் பகுதிச் சிறுவனொருவன் புனித பத்திரி சிரியார் கல்லூரிக்குப் படிக்க வந்தான். இந்து இளைஞன். தான் மற்ற மாண வருக்கு இளைத்தவனல்ல என்ற றாங்கி அவனுக்கிருந்தது. எப்பொழுதும் ஆசார சீலனாகவே விளங்குவான். நெற்றியில் மெல்லிதாக நீறணிந்திருப்பான். இவனது அடக்கமான போக்கு அனைத்து ஆசிரியர் மட்டத்திலும் இவனுக்குச் செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது.
புனித பத்திரிசியார் கல்லூரியை அன்றைய அடிமட்ட மக்கள் "பெரிய பள்ளிக்கூடம்" என்று அழைப்பதுண்டு. இப்பொழுது புனித சாள்ஸ் மகாவித்தி யாலயம் எனப்படும் பாடசாலை அன்று 'மாவடிப் பள்ளிக்கூடம்" என்றே அழைக் கப்பட்டது. இப்பாடசாலையிலும் திட்டிச் சிறுவர்கள் கற்றனர். புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்க வந்த திட்டியின் அந்த மாணவன் இடைமட்டக் கல்வியைப்
பெற்று, அதையொரு தகைமையாக்கி இலங்கை போக்குவரத்து சபையில் ஒரு ஊழியனானான். இந்தச் சாதனை யாளனைப் பின்தொடர்ந்து இப்பகுதியில் பலர் பொருளாதாரம், கல்வி, பண்பாடு என்பவற்றில் ஆதிக்கச் சாதியோடு இப் பொழுது போட்டியிடுகின்றனர். முற் போக்கு அபிமானிகளுக்கு இது இனிமை யைத் தருகின்றது. அந்தத் திட்டியின் முன்னோடி நாகநாதி என்பவரே!
திட்டி மண்ணின் மைந்தர்கள் யாழ் மப நகரசபைத் தேர்தல்களிலும் போட்டி யிட்டுத் தாமும் ஆட்சி வல்லமையைப் பெற்றவர்களென்பதை யாழ் மண்ணிற்கு அறியப்படுத்தினர். பணி செய்த இவர்களில் சிலர் அப்
மாநகர சபையில்
பொழுது வேலை நிறுத்தமொன்றையும் செய்தனர். இது மோகினி திரையிடப் பட்ட காலம்! "பீம்சிங் இது என்ன புதுக் குழப்பம்?” எனச் சிலர் இதைக் கிண்டல் செய்தனர்!
தெய்வம் கூட இந்த மக்களுக்குக் கருணை காட்டாது "சற்றே விலகும் பிள்ளாய்" எனத்தான் கூறியது. "நந்தா உள்ளே வா!" என அழைத்திருக்கலாமே. ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டு அவன் வில் வித்தையை முடக்கப் பார்த்தனர். ஆனால் அந்த மக்களின் உயர்வைக் காலம் கனிய வைத்து விட்டது. அவர்கள் நிமிர்ந்து விட்டனர்.
யாழ்ப்பாணத்தின் ஆனைப்பந்திப் பகுதிக்கு அக்காலத்தில் பெரும் 'கியாதி" இருந்தது. இங்குதான் தனிப்பெருந் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையில்
39

Page 22
இயங்கிய அகில இலங்கைத் தமிழ்க் காங் கிரஸ் கட்சியின் தலைமைச் செயலகம் இருந்தது. பெரும் முக்கியஸ்தர்களுடைய கால்பட்ட பிரதேசமிது. யாழ்ப்பாணத்தின் அரசியல் பெரும்பாலும் இந்திய அரசி யலின் தாக்கத்தை உள்வாங்கியதென்பது தான் நோக்கர்களது அபிப்பிராயம். அந்த வகையில்தான் அகிம்மைக் கொள்கை இங்கு வரவேற்பைப் பெற்றது. மகாத்மா காந்தியைத் தெய்வமாக மதித்தனர். அவர் அறிமுகப்படுத்திய குல்லாவைச் சிலர் அணிந்து திரிவதை கெளரவமாக நினைத் தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் அக் காலத்தில் ஆனைப்பந்தி வட்டாரத்தின் மா நகர சபை உறுப்பினராக மக்கள் ஊழியம் செய்தார். அவரே முதலியார் முத்துத்தம்பி.
அன்று தமிழரசுக் கட்சியின் பணி மனை மெயின் வீதியில் டறம்ஸ9க்கு அருகில் இருந்தது. பொதுவுடமைக் கட்சியின் ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி விதி என்பவற்றில் வெவ்வேறு கால கட்டங்களில் இருந்தது.
நல்லூர் திருவிழாக் காலத்தில் ஆனைப்பந்திச் சந்தி மிகவும் கலகலப் பாக இருக்கும். நீண்ட பந்தல் அமைத்து கடதாசிச் சோடனைகள் செய்து கந்தன் பக்தர்களுக்குச் சக்கரைத் தண்ணீர், தேசிக்காய்த் தண்ணீர், ஊறுகாய்த் ஒலி பெருக்கி பக்திப் பாடல்களையும், பக்திச் ஒலித்துக்
தண்ணீர் என்பன வழங்குவர்.
சொற்பொழிவுகளையும் கொண்டிருக்கும்.
அக்காலத்தில் இளசுகளின் கவனத்தை மிகவும் ஈர்த்தது கஸ்தூரியார்
40
விதி சர்பத் கடையொன்றில் வைக்கப்
பட்டிருந்த குறுஞ்சிலை. இதில் நேரு குல்லாவும், கறுத்த மேல் அங்கியும் அணிந்திருப்பார். அவருக்கு அருகில்
கையை ஊன்றியபடி மகாத்மா காந்தி
வின்சன் சேச்சில் அவரை நையாண்டி Gattig, Half Naked Fakhir (Guda) is யற்று) என்ற உருவில் ஏதோ பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றுவார். இது அப்பொழுது சிறுவருக்கு விநோதக்
காட்சிப் பொருளாகியது.
குருநகரில் சின்னப்புப் பரியாரி என்றொரு வைத்தியர் அன்றிருந்தார். இவர் போக்குவரத்திற்கு ரிக்ஷாவைத்
தான் பாவித்தார். இந்த ரிக்ஷா மிகவும்
அழகானது. இருக்கை தனி ரகம். அத் தோடு இருக்கையின் ஒரங்களில் மணிச் சோடனை காணப்படும். வெள்ளித் தகடு கள் அங்குமிங்குமாக பதிக்கப்பட்டி ருக்கும். எப்பொழுதும் மினுமினுத்துக்
கொண்டிருக்கும். திட்டியை வதிவிட
மாகக் கொண்ட இதன் உரிமையாளரும் சாரதியுமானவரும் சாதாரண ரிக்ஷா ஒட்டிகளை விட வித்தியாசமாகக் காணப் பட்டார்.
அந்தக் காலத்தில் மக்களுக்கு நற்பணி செய்து இன்று காணமல் போய் விட்டவைகளுள் த.தம்பித்துரை புத்த சாலையுமொன்று. இது அப்பொழுது மின்சார நிலையத்திற்கு எதிராகவும்,
சிற்றி பேக்கரிக்கு அருகாமையிலும் ஆஸ்பத்திரி வீதியில் இருந்தது. இதன்
கிளை பஜார் விதியில் இருந்தது.
தம்பித்துரை வெள்ளைக் குறுங்கை நசனலும் வேட்டியும் அணிந்திருப்பார்.
 

நெற்றியில் திருநீறும் குங்குமப் பொட்டு மிட்டிருப்பார். நசனலுக்கு வெளியே 'கல்கி" சஞ்சிகை தமிழ் மண்ணில் விதைக்கப் காலத்தில் அதன் பாழ்ப்பானத்து முகவராக இருந்து இச்சஞ்சிகையை யாழ்ப்பாணத்திற்குத் தருவித்து வாசிப்பை மேம்படுத்தினார். இப்போ
கழுத்துச் சங்கிலி தெரியும்.
I
தெல்லாம் மக்களை அறிவு மயப்படுத்த வேண்டுமென்ற நோக்கோடு, வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டுமென்ற இலக் கோடு பெரும் 'எடுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அன்று த.தம்பித்துரை போன்றவர்கள் அடக்க மாக இப்பணியை முன்னெடுத்தார்கள். தம்பித்துரை அவரது புத்தகக் கடையில் யாராவது வந்து ‘ஏமலாந்தி, ஏமலாந்தி' புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு நின்றால், "உள்ளுக்குப் போய் எடுத்துப் பாருங்க" என்பார். ‘என்ன வேணுமென விசாரிக்க மாட்டார். அன்றைய புத்தகக் கடைக்காரர்கள் இலவசமாகப் புத்தகங் களைப் பரிமாறி வாசிப்புப் பண்பாட்டை வளரச் செய்ததாகவும் சில எழுத் தாளர்கள் நினைவு கூருகின்றனர். தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கமும் ஏற்கனவே இவரோடுதான் இருந்து புத்தக விற்பனை செய்தவர். பின்னர் பிரிந்துதான் தனது சொந்தத்தில் புத்தக சாலையைத் தொடக்கியவர். இவரது புத்தகசாலை அப்பொழுது பஸ் நிலையத்திற்கு எதிரில் கஸ்தூரியார் வீதியில் இருந்தது.
பஜார் விதியிலிருந்த த.தம்பித்துரை புத்தகசாலையின் கிளையில் "கிட்டு' என்கின்ற கிருஷ்ணசாமி முழுநேர ஊழியராக இருந்தார். இக்கடைக்குத்
தம்பித்துரை வருவதில்லை.
மாலைவேளைகளில் இக்கடைக்கு
அடிக்கடி மல்லிகையாசிரியர் டொமினிக்
ஜிவா வருவதைக் காணமுடியும். அன்றைய இளமைத் துடிப்பிற்கு அமைய சிட்டுக்குருவி போலப் பறந்து வருவார். உள்ளுக்குள் நுழைவார். கிட்டு புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். ஜீவா புத்த கங்களை நோட்டமிடுவார். எடுத்துப் பார்ப்பார். இக்கால கட்டத்தில்தான்
ஈழத்து எழுத்தாளர்களது புகைப்படங்
களைச் "சரஸ்வதி அட்டைப்பட்மாக் கியது. டொமினிக் ஜீவா, கே.டானியல் ஆகியோரது படங்களும் இச்சஞ்சிகை யில் அட்டையாகின. இன்னொருவரின் தரிசனமும் அடிக்கடி கிடைக்கும். இவர் வெள்ளை வேட்டி, நசனலுடன், கழுத்தைச் சுற்றி சால்வையும் அணிந் திருப்பார். நெற்றியில் திரு நீறிருக்கும். இவரைக் கண்டதும் கிட்டு எழுந்து "வாங்க மாஸ்டர், வாங்க" என்று அழைப்பார். அன்றைய இளசுகளுக்கு இவரை இன்னாரென அடையாளமிட ஏறத்தாழ ஒரு தசாப்தமெடுத்தது. இவர் தான் இரசிகமணி கனக செந்திநாதன்,
இவரும் புத்தக றாக்கைகளை நோட்ட
மிட்டு, எடுத்துப் பார்த்து வாங்க வேண்டி
யதை வாங்கிக் கொண்டு சென்று
விடுவார்.
இரசிகமணி அமரர் கனக செந்தி நாதன் மிகவும் பரந்த நோக்கங் கொண் டவர். இலக்கியத்தில் தணியாத தாக முடையவர். வெண்சங்கு இவரது சிறு
கதைத் தொகுதி. கருத்து முரண்பாடுடை
யோரிடமும் மிகவும் அந்யோன்யமாகப்
A1

Page 23
"ஈழத்து இலக்கிய
பழகுவார். தனது வளர்ச்சி" என்ற நூலில் உண்மைகளை
மறைக்காது துணிவோடு தரவுகளை முன் வைத்துள்ளார். "அட சொக்கா" என்பது அவரது தாரக மந்திரம். பஞ்சமர் இலக்கி யத்தின் பிதாமகர் கே. டானியலும் இடைக்கிடை தலையைக் காட்டுவார். அப்பொழுது அவர் சோடா விற்பவராக இருந்தார். சைக்கிளில் வருவதுண்டு. அக்காலத்தில் கிட்டுவின் கடையில் ஒரு திருக்குறள் புத்தகத்தை விற்றார்கள். அதை உள்ளங் கைக்குள் அடக்கிப் பொத்திப் பிடிக்கலாம். இப்பொழுதும் சிறிய திருக்குறள் புத்தகம் இருக்குத் தான். ஆனால் அது தடித்தது. மிகவும் சிறியது. விலையோ 25 சதங்கள் மட்டுந்தான்!
அன்று காங்கேசன்துறை விதியிலும் சில புத்தகக் கடைகள் இருந்தன. அவை பூருரீலங்கா புத்தகசாலை, விவேகானந்தா புத்தகசாலை, சிற்றம்பலம் புத்தகசாலை, தமிழ் பண்ணை என்பனவாகும். தமிழ்ப் பண்ணையைத் தவிர்ந்த ஏனையவற்றில் பாடசாலைப் புத்தகங்களும், எழுது கருவிகளும் விற்பனைக்கு இருந்தன. 'கத்தி, பொல்லுக்காரரின் கட்சியென்று அப்பொழுது நாமகரணமிடப்பட்ட பொதுவுடைமைக் கட்சி, யாழ் குடாவில் தனது இருப்பை செயற்படுத்தி, கட்சிப் பத்திரிகைகளையும், நூல்களையும் விற் பதற்கென கே.கே.எஸ். விதியில் ஒரு புத்தகசாலையைத் திறந்திருந்தது. இது 'பாரதி புத்தகசாலை ஆகும். நாத்திகக் கட்சியான பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராக இருந்த பிராமணரான இராமசாமி ஐயர் அப்பொழுது இந்த
42
புத்தகசாலைக்கு வந்து போவதாக அன்றைய மாக்சிசவாதிகள் தகவல் தரு கின்றனர். அப்பொழுது இந்த புத்தக சாலையின் முகாமையாளராக இருந்தவர், இன்றைய பிரபல தமிழ் எழுத்தாளரும், விமர்சகரு மென்றால் வாசகருக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்! அவர் எஸ்.பொ. எனப்படும் எஸ்.பொன்னுத் துரை!
தற்பொழுது மெயின் வீதியில் காணப்படும் ஏ.பஸ்தியாம்பிள்ளை அன் சன்ஸ் புத்தகசாலையும் அன்றிருத்தது! இங்கு பாடப் புத்தகங்கள், எழுது கருவிகள் என்பன விற்பனைக்கிருந்தன.
அக்காலத்தில் தீவுப்பகுதிக்குப் போவதென்றால் கடல் மார்க்கமாகத்தான் போக வேண்டும். காரைநகர் பகுதியால் போவதென்றால் கடல் பயணம் குறைவு. பாதை (FERRY), மச்சுவாய் (சிறிய தோணி) என்பனவற்றைப் பாவிக்க முடியும். பண்ணையிலிருந்து மண்டைத் தீவுக்கு ஊடாகப் போவதற்கு ஏறத்தாழ ஒன்றரைக் கிலோமீற்றர் கடல் பயணம் செய்ய வேண்டும். பாவனைக்கு விடப்பட்டது. நயினாதீவில் இரண்டு வழிபாட்டு ஸ்தலங்கள் இருக் கின்றன. ஒன்று நாகபூஷணி அம்மன். மற்றது பெளத்த விகாரை. எனவே அடிக்கடி யாத்திரிகர்கள் பயணித்துக்
பாதை தான்
கொண்டிருந்தனர். சேவையில் ஈடு படுத்தப்பட்ட பாதைக்கு ஒர் அழகான பெயரும் சூட்டப்பட்டிருந்தது. 'மாருதப் புரவி' இதுவே அதன் பெயர்.
சினிமா இன்று மக்களின் இன்றி யமையாத பொழுதுபோக்குச் சாதனமாகி
 

விட்டது. திரையிடப்படும் படங்களுக்கு புத்திஜீவிகள் ஒருதலைப்பட்சமாக உரத்த அடி கொடுத்துக்கொண்டுதான் இருக் கின்றனர். இருந்தும் சுரணை கெட்டு விட் து! பெயரை மாற்று, கதையை மாற்று இப்படியெல்லாம் ஆலோசனை கள். ஆனால் புத்தம் புது நடிகர்களோடு சினிமா தினம் தினம் பொலிந்து கொண்டிருக்கின்றது. இது இப்படி இருக்க, யாழ்ப்பாணத்தின் அந்தக்கால வித்துக்களான இரு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஒன்று மனோகரா, மற்றது மஹேந்திரா. மனோகரா களஞ்சி யமாகி விட்டது. மஹேந்திரா பரியோ வான் கல்லூரியின் விடுதி மாணவரின் பாவனைக்குட்படுத்தபட்டிருக்கிறது. மனோகராவில் முதல் திரையிடப்பட்ட படம் பிச்சைக்காரி. மஹேந்திராவில் நாம், ஜெனோவா, பணம், நல்லதம்பி ஆகிய படங்கள் அன்று மண்டபம் நிறைந்த காட்சிகளோடு திரையிடப்பட்டன.
இப்பொழுது யாழ்ப்பாணத்தில் மித மான புழக்கத்திலிருக்கும் கரட், கோவா, லீக்ஸ் என்பனவற்றை அன்றைய யாழ்ப் பாணத்தார் இங்கிலிஸ் மரக்கறிகள் என்றனர். இவைகளதுப் பாவனை பெரும்பாலும் அடிமட்ட மக்கள் மத்தியில் குறைந்திருந்தது. இப்பொழுது அந்த நிலை இல்லை! மண்ணியல் நிபுணர் யாழ் மண்ணை சோதனைக்கு உட்படுத்தி இப்பயிர்களை அங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தி விட்டனர். எனவே இவைகள் இப்போ தமிழ் மரக்கறியாகிவிட்டன. அக்காலத்தில் இவைகள் தென்பகுதி, மத்திய பகுதி
என்பவற்றிலிருந்துதான் லொறிகளில் யாழ் மண்ணுக்கு கொண்டுவரப்பட்டன. இதை அப்பொழுது யாழ்ப்பாணத்தில் வசித்த மூன்று சிங்கள வர்த்தகர்கள்தான் இறக்குமதி செய்தனர். கே.கே.பொடி
அப்புகாமி (கே.கே.பி), சமி, ஜெயவர் தன என்பது அவர்களது பெயர். சர்பத்
கடைகளுக்கு பின்னால் இருந்த பஜார் விதியை நோக்கிய வங்களாவில் தான் இவர்களது கடைகள் இருந்தன. இவர்கள் யாழ்ப்பாணத்து விவசாயிகளுக்கு இன் னொரு நன்மையையும் செய்தனர். தக்காளி யாழ்ப்பாணத்தில் மிகவும் செழிப்பாக வளரக் கூடியது. தேவைக்கு அதிகமாகப் பழங்கள் குவியும். தக்காளிப்
பழச் செய்கைக்கு இந்தச் சிங்கள வர்த்த கர்கள் அப்பொழுது கைகொடுத்தனர். விவசாயிகளிடமிருந்து தக்காளிப் பழங் களை வாங்கி, கண்ணறையான பலகைப்
பெட்டிகளில் அடைத்து லொறிகளில்
சிங்களப் பகுதிக்கு அனுப்பினர். இத
னால் வெங்காயத்தைப் போல தக்காளிச்
செய்கையும் யாழ்ப்பாணத்துக் கமக்
காரரின் மடியைக் கணக்க வைத்தது.
யாழ்ப்பாணத்து வெதுப்பகங்களின் (பேக்கரி) பிதாமகர்களும் சிங்கள வர்த்தகரே. கிறவுண் பேக்கரி, றினவுன் பேக்கரி, சிற்ரி பேக்கரி என்பன ருசியான வெதுப்பி (பாண்), குதப்பி (கேக்) என்ப
வற்றைத் தயாரித்தன.
யாழ்ப்பாணத்துத் தமிழ் பிரமுகர்கள் மத்தியில் அப்பொழுது றிச்சட் பத்திரானா என்பவர் பிரபலமாக இருந்தார். இவர் மாநகர சபை கோட்டை வட்டார தேர்தலிலும் பங்கு பற்றியவர். இவரது
43

Page 24
மூக்குக் கண்ணாடிக் கடை பிரதான விதி யில் இருந்தது. சிங்கள இனத்தவர்கள் மோட்டார் வாகனங்களைத் திருத்தும் கராஜ்களையும் நடத்தினர். வினி என் பவர் கே.கே.எஸ். விதி பண்ணைச் சந்தி யிலும், சில்வா என்பவர் ஆஸ்பத்திரி விதியிலும் கராஜ் நடத்தினர்.
& 1 & rr6) i zi, L' i afanatu t’ 3) இன்றும் மக்கள் மத்தியில் தனது ஆதிக்க வலுவை இழக்காதிருப்பதை அனைவரும் அறிவர். இதில் பல வகையான போட்டி விளையாட்டுக்களை விளையாடலாம். இதில் தடைசெய்யப்பட்ட விளையாட்டு களுமுண்டு பணத்தைப் பணயம் வைத்து இது விளையாடப்படும் பொழுது 'சூது’ என்ற முத்திரையிடப்படுகிறது. இச் சின்னஞ்சிறு 'ஸ்ரிக்கற் போன்ற கடதாசி மட்டைகளைக் கொண்டு வேலி வெட்டு தல், 304, சோடி சேர்த்தல், 31 போடுதல் என்பனவற்றை விளையாடுகின்றனர். அக்காலத்தில் பெருநாள் காலங்களில் களை கட்டும்.
இவ்விளையாட்டுகள்
சிலருக்கு இது கொண்டாட்டம். சிலர் திண்டாட்டமும் கொள்வர். அக்காலத்தில் இவ்விளையாட்டுகள் யாழ்ப்பாணத்தில் பிரம்படி என்ற இடத்தில் நடைபெறுவ துண்டு. இதை மறைவிடங்களிலேயே விளையாடினர். இவைகளுக்கு பொலிஸ் தடை விதித்திருந்தது. சிலர் இவைகளைப் பழக்கப்படி தமது வாழ்க்கையை இழந்து ஒட்டாண்டி ஆகி இருக்கின்றனர். மகா பாரதத்தில் தருமனுக்கு ஏற்பட்டது போல்! அக்காலத்தில், உயர் பொலிஸ் அதிகாரிகளாக இருந்த சிட்னி சொய்சா, எல்.சி.டி. சேரம் என்பவர்கள் இந்த
44
விடயத்தில் விட்டவர்களாகவிருந்தனர். அகப்பட்டுக் கொண்டோருக்கு நல்ல 'விருந்துதான்! இலவசமாக மொட்டையும் அடித்து விடுவர்.
'கண்ணுக்கு எண்ணெய்"
அக்காலத்தில் ஆண்களுக்கு சிகை அலங்கார வடிவமைப்புகளுக்கு பெயரு மிட்டிருந்தனர். "பொலிஸ் குரோப்" மயிரை அரை அங்குலத் தடிப்பில் இருக்க வைத்து வெட்டல், நடுப்பகுதியில் மயிரை வைத்து கன்னங்கள், பிடரி என்பனவற்றை சுற்றி வெட்டுவதை "சிலுப்பா" என்றனர். முழுவதையும் வெட்டித் தள்ளி, மண்டை மினுங்க வழித்து விடுவது மொட்டை அடித்தல், இதில் குற்றங்களுக்காக பொலிசார் செய்வது மொட்டை அடித்தல்.
நடிகரும் பாடகருமான எம்.கே. தியாகராஜப் பாகவதரின் தலை ஸ்ாைலை அநேக ஆண்கள் பின்பற்றிப் 'பாகவதர் கிறோப்"போடு திரிந்தனர். இதனால் இவர்களிடம் ஒரு கலைஞரின் தோற்றத்தைக் காண முடிந்தது.
சில ஆண்களும் கொண்டை வைத் திருந்தனர். பஜார் விதியில் புடவைக் கடை வைத்திருந்த வியாபாரி ஒருவர், மேலங்கி அணிய மாட்டார். வேட்டி கட்டுவதுண்டு! இவரும் கொண்டை வைத்திருந்தார். இப்படி இன்னொரு முதலாளி அரை நிர்வாணியாகத் தோற்ற மிட்டார். இவர் அப்புத்துரை. மதுர
மித்திரன் கூல்பார் முதலாளி. சேட்
அணியமாட்டார். இரு பக்க நெஞ்சிலும் முதுகிலும் பச்சை குத்தி இருந்தார்.
 

இருபக்க தோள்மூட்டுக் கைகளிலும் செவ்விந்தியனின் தோற்றத்தை பச்சைக் குத்தி இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் முறுக்கு மீசைக் காரர்கள் குறைவு! பெருத்த வரவேற்பிருந்தது. பி. யூ. சின்னப்பாவின் சினிமாவைப் பார்த்த இரசிகர்கள் 'பொயின்ற் கட்" மீசையோடு பவனி வந்தனர். பெண்களில் பெரும்
கிட்லர் மீசைக்கு
பாலும் பறங்கிப் பெண்கள்தான் மயிரை நீளமாக வளர்க்காது தோள் வரை வளர்த்து 'பாகவதர் குறோப்'போடு நட மாடினர். முன்பு சின்னக்கடை, மெயின் தெரு வெனத்தான் அழைத்தனர். இங்கு கலப் பினத்தவரே இருந்தனர். அநேகமாக இங் குள்ள பெண்களே தமது தலை மயிரை
விதிச் சுற்றாடலைப் பறங்கித்
நீளமாக வளர்த்துக் கொண்டை போடாமல் வெட்டிக் கொண்டனர்.
ராக்ஸி' என்றால் இன்றைய இளக களுக்கு தடுமாற்றமாக இருக்கும். எவருடையவோ "மினி"ப் பெயராகவும் இருக்குமோவென அசந்து போய் நிற்பர்.
விட்டுள்ளது. ராக்ஸிகள் போக்குவரத்திற்குப் பாவிக்கப்பட்ட கார்கள். அறுபதுகளில் ၈%) களில் நடமாடியவை இவையே. மொறிஸ் மைனர் கார்கள்தான் பாவிக்கப்பட்டது. சாரதியைத் தவிர நான்கு பயணிகள் பயணம் செய்யலாம். சாரதிக்கு அருகே ஒருவரும், பின் இருக்கையில் i marr ம் சாரதி தனக்கருகே இருக்கும் மீற்றரை இயக்கி விடுவார். ஒடிக்கொண்டிருக்கும் பொழுது ரிக்கூடு நேரத்தைக் காட்டுவது போல் மீற்றர் கட்டணத்தைக் காட்டும். ஒரு மைலுக்கு 75
சதமே கட்டணமாக இருந்ததாக நினைவு. இவைகளுக்கு முன்னர் றிக்ஷாக்களை வாடகைக்கு அமர்த்தக் கூடியதாக இருந் தது. இவற்றை மனிதரே இழுத்தனர்.
யாழ் நகரில் முதன் முதலில் சேவை
ரதம்" எனப் பெயரிட்டிருந்தனர். இதை நடத்தியவர் செல்லர் என்பவர். இவர் பிரபல பொதுவுடைமைவாதி அரசடி கணபதி இரசையாவின் மாமனாரெனச் சொல்லப் படுகின்றது. இதுவொரு தனி மனித சாதனை. இத்தகைய இன்னொரு
அன்றையச் சாதனையைக் கூறமுடியும்.
ராணி திரை அரங்கிற்கு அருகில் சூரியப் பிரகாஸ் லோன்றியை இப் பொழுதும் காணலாம். இதற்கு அருகே முன்னர் ஜெகநாதன் என்பவரது யுனானி கண் வைத்தியசாலை இருந்தது. சூரியப் பிரகாஸ் லோன்றிக்கு செல்லையா என்பவர் உரிமையாளராக இருந்தார். நவீன முறையில் இங்கு துணிகள் சலவை செய்து கொடுக்கப்பட்டன. இந்த லோன்றியே றைக் கிளின் முறையையும் முதன் முதல் தொடக்கி வைத்தது. யாழ்ப்
பாணத்திலிருந்து முதன் முதல் வெளி
யான தன் வரலாற்று நூலை இந்த லோன்றியின் உரிமையாளர் செல்லை
யாவே வெளியிட்டு சாதனை புரிந்தார்.
இது இன்று பலருக்கு அருட்டுணர்வைக் கொடுக்கின்றது. தற்பொழுது இந்நூலை யாராவது வைத்திருந்தால், அதை மல்லிகையின் பணிமனைக்கு அனுப்பி வைத்தால் இவரது சம்பந்தமான மேலும் பல தகவல்களை வாசகர்களுக்குக் கொடுக்கலாம். கொம்யூனிஸ்ட் கட்சியின்
45

Page 25
பஞ்சம முன்னோடிகளில் செல்லையாவு மொருவரென அறியக் கிடக்கின்றது.
சென்ரல் பஸ் கொம்பனி, நொதேர்ன் பஸ் கொம்பனி, வலிகாமம் பஸ் கொம்பனி,
போக்குவரத்தைச் செம்மைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது கொஞ்ச காலத்திற்கு முன்னர் குதிரை வண்டில்களும் கை கொடுத்தன.
நொதேர்ன் பஸ் கொம்பனி என்றதும் சட்டென ஒருவர் நினைவில் பதிகிறார். சென்ற ஆண்டு தடக்களப் பேட்டிகள் கொழும்பு சுகததாஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற பொழுது ஆரம்ப நிகழ்வாக இருவர் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியபடி மைதானத்தைச் சுற்றி வருகின்றனர். அதில் ஒருவர் ஒட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க. மற்ற நெடுத்த ஆண் யார்? அவர்தான் என்.எதிரிவீரசிங்கம். உயரம் பாய்தலில் ஆசிய சாதனையை நிலைநாட்டி இலங்கைக்குப் பெருமை யைத் தேடிக் கொடுத்தவர். நொதேர்ன் பஸ் கொம்பனி முதலாளி நாகலிங்கத்தின் மகன். இந்த நாகலிங்கத்தின் மகன்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பெருமை பெற்றது. என்.எதிரிவிரசிங்கம், என்.பர ராசசிங்கம், என்.ஜெகராசசிங்கம். இந்த மூவரும் இக்கல்லூரியின் கிரிக்கட் அணியில் விளையாடியவர்கள். பரா இருந்தவர். மைதானத்தில் நின்று எதிர் பந்து வீசும் பொழுது மிகவும் வேடிக்கையாக இருக்கும். உயர்ந்த மனிதரல்லவா! ஒலிம்பிக் தீபம் கொண்டு இவர் ஓடியதை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இதை
அணியின் தலைவராக
46
மறுக்கார்.
கல்லூரியில் சந்திரனும் பிரபலமாக இருந்தார். கிரிக்கட் அணியின் கப்ரினாக இருந்தவர். நைல்ஸ்
இக்காலகட்டத்தில் இக் “பிரேமா" என்ற பிரேம
தம்பர் ஆகியோர் முன் பின்னாக அதிபராக இருந்தனர்.
இதன்தாற்பரியத் த்தார் அன்ே உள்வாங்கி விட்டனர். அல்லாவிடில், தென் கிழக்கு ஆசியாவிலேயே சிறந்ததெனக் கல்வி மான்களால் 'வாயுறச் சொல்லும்படியான
ம் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்காது!
(சொந்தங்கள் தொடரும்)0
 

நந்தி என்னும் கொள்கையில் குன்றாத இமயம்
- தெணியான்
பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள் வாழ்நாள் பேராசிரியராக நம்மிடையே வாழ்ந்தவர். துறைசார்ந்த சாதனையாளராக இந்த நாட்டிலும், நாட்டுக்கு வெளியேயும் தமது புலமைத் தடத்தினை ஆழப்பதித்த பெருமைக்குரியவர். பல ஆயிரம் வைத்திய மாணவர்களுக்கு நல்லாசானாக விளங்கி வந்தவர். பேராசிரியருக்குரிய அறிவு, அனுபவங்களுடன் பாமர மக்கள் மீது பரிவுடன் தமது பார்வையைச் செலுத்த ஆரம்பித்த சமயம், 'நந்தியாகத் தம்மை மாற்றிக் கொண்ட எழுத்தாளர் அவர்.
நந்தி தமிழ் இலக்கிய உலகில் மிகப் பிரபலம் பெற்ற மூத்த படைப்பாளி. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மூன்று தலைமுறை சார்ந்த எழுத்தாளர்களுடனும் சோர்வின்றித் தொடர்ந்து எழுதி வந்ததோடு, கால மாற்றத்தைப் புரிந்துகொண்டு எழுதி வந்த ஒருவர்.
நந்தியின் மிகப் பெரிய பலம் கொள்கைத் தளப்பமின்றி ஆரம்ப காலம் முதல் இறுதிவரை முற்போக்கு எழுத்தாளராக வாழ்ந்தமையே! நந்தியின் இத்தகைய கொள்கைப் பிடிப்பினை இன்றைய எழுத்தாளர்கள் சிலரால் முறையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் ஜீரணிக்கவும் அவர்களுக்கு இயலவில்லை. அந்த இயலாமை காரணமாகவே அவர் பிடிவாதமாகவே முற்போக்குத் தத்துவத்தில் நம்பிக்கை பூண்டிருந்தாரெனக் கருதுகின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை அரசியலாகவே முற்போக்குத் தத்துவத்தை அப்பாவித்தனமாக அவர்கள் நோக்குகின்றார்கள். நந்தி அடிப்படையில் மானிடத்தை நேசித்த ஒருவர். துன்ப துயரங்களுடன் வாழ்க்கைப் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும் வறிய மக்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டவர். அந்த ஏழை மக்களின் துயரங்களுக்கு மருந்தாக முற்போக்குத் தத்துவத்தினை இறுதிக் காலம் வரை அவர் பின்பற்றினார். முற்போக்கு இலக்கியங்களை அவர்களுக்காகப் படைத்தார்.
நந்தி பல பரிமாணங்களைக் கொண்ட கலை இலக்கியவாதி. தம்மிடம் இருந்த பல்வேறுபட்ட பரிமாணங்களை காலத்துக்குக் காலம் அவர் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். நந்தியின் ஆற்றல்களைப் பருமட்டாக எடுத்துக் கூறுவதானால், அவர் ஒரு நடிகர், எழுத்தாளர் எனச் சொல்லவும், நடிகர் எனும்போது வானொலி
சாாநத
88&ES
நாடக நடிகர், மேடை நாடக நடிகர், சினிமா நடிகரென நடிப்புத்துறை
47

Page 26
அவரது பங்களிப்பு விரிந்து செல்லும். எழுத்தாளர் நந்தியின் பங்களிப்பினை இலக்கியம், ஆத்மீகம், மருத்துவம் என பகுத்துப் பார்க்கலாம். இலக்கியம் என
சிறு கதைகள், நாடகம், சிறுவர் நூல்களென நந்தியின் பேனாவில் இருந்து பிறந்திருக் கின்றன. சாயி பக்தர்களுக்கான ஆத்மீக
நோக்கும் போது நாவல்கள்,
நூல்கள், வேண்டிய மருத்துவ நூல்கள், மருத்துவ மாணவர்கள் கற்க வேண்டிய பாட நூல் என மொத்தம் பதினாறு நூல்களுக்கு மேல் தமிழுக்கு நந்தி தந்திருக்கின்றார்.
'கண்களுக்கு அப்பால் மனித மனங்களை ஊடுருவி நோக்கும் ஆழ்ந்த பார்வையை உடையவர் நந்தி, கலைத் துவமும், மானுட நேயமுமே ஆத்மா வாகக் கொண்ட நந்தியின் படைப்புக்கள்
பொதுமக்கள் படித்தறிய
தமிழ் இலக்கியத்தின் சிகரங்களாக அமைந்து, அரச உயர் விருதுகளைப் பல தடவைகள் பெற்றுக் கொண்டன.
நந்தி மெல்லப் பேசுவார். இனிமை யாகவும், சுருக்கமாகவும் பேசுவார். அனைவரையும் அரவணைத்து அனு சரித்துப் போவார்.
நந்தியிடம் மானுடத்தை விளங்கிக் கொள்ளும் தீர்க்கமான ஒரு பார்வை இருந்தது. நந்தியின் நட்பு - நேயம் அவரது இதயத்தில் இருந்து வெளி வந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக பொய்மையற்ற, தெளிந்த உண்மை மனிதனாக வாழ்ந்து போனமையி னாலேயே நந்தி அவர்கள் இமயமாக உயர்ந்து நிற்கின்றார்.
V4M
ዐNM፴በ0)õ[ዛዚዘጻÔለቦU
மற்றும் பள்ளிக்கூட,
D 6 of a6 6Od 6T u quid
G)&5T 6ï16TT6.)TLb.
48
f/02.3 ддолол ఏసెటఎడి )ՓSSc»at لa-GDcر)Q ?۱/راعلGOc,2 ပÁ;%)လွှyĀGé) ܐܠܘhy Gಲ^^ಬ೩8)
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல
ஆக்கங்களையும் அவரிடமிருந்தே நேரில் பெற்றுக் கொள்ளலாம். அவரே கையெழுத்திட்டுத் தருவார்.
பொது நூலகங்களுக்கும் தேவையான நூல்களையும்,
மல்லிகைப்
மல்லிகை ஆண்டு
பந்தலில் பெற்றுக்
 
 

இருபத்தொரு நாட்களாக கெளரி விரதத்தை அனுஷ்டித்து இன்று காலைதான் பாரணையை முடித்துக் கொண்ட கெளரிக்கு இன்றுதான் கொஞ்சம் அசதியாக இருந்தது.
வீட்டு வெளித்திண்ணையில் சோர்வாகப் படுத்திருந்தாள்.
வெளிப்படலையில் விசில் ஒசை கேட்டது. தலையை நிமிர்த்தி எட்டிப் பார்த்தாள். தபால்காரன் நின்று கொண்டிருந்தான். எழுந்து போய் கடிதத்தை வாங்கி வந்தாள். தன் கணவன் சுதாகரால் எழுதப்பட்ட வெளிநாட்டுக் கடிதமாக இருக்கலாம் என எண்ணிப்போன அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அது உள்நாட்டுக் கடிதம். பிரித்துப் பார்த்தாள். அது சிநேகிதி கலா எழுதிய நீண்ட கடிதம். கடிதத்தோடு காசுக் கட்டளையையும் இணைத்திருந்தாள் கலா. திண்ணையில் வந்து படுத்துக்கொண்டே கடிதத்தைத் தன் மனதிற்குள்ளாக வாசிக்க ஆரம்பித்தாள்.
என்றும் அன்புச் சிநேகிதி கெளரிக்கு, நான் ஊருக்கு வந்த பிறகும் உன்னைப் பற்றிய கவலையும், சிந்தனையும் என்னை விட்டுப் போகவில்லை. உன் குடும்ப வாழ்க்கையைப் பற்றி உன்னிடம் கேட்டு அறிந்ததால் உன் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது என்று எனக்கு ஒரே கவலை. எத்தனையோ ஆம்பிளைகள் வெளிநாடு போய் உழைக்கிறார்கள். மாதா மாதம் பணம் அனுப்பி மனம் நோகாமல் மனைவிமாருக்கு கடிதங்களை எழுதி அவர்களைத் திருப்திப் படுத்துகின்றார்கள். ஆனால், உன் கணவரோ சரியாகப் பணமும் அனுப்பாமல், கடித மூலம் உன்னைக் கண்டித்துக் கொண்டும் இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் இருக்கும் மாமியார் தானும் இடையிடையே உன்னிடம் வந்து ஆறுதல் சொல்லி விட்டுப் போனாலும், உன் மனம் அமைதிப்படும். உன்னிடம் அதிகம் சீதனம் இல்லாத
காரணத்தால் அவ உன்னை வெறுக்
கிறா. அவவும் ஒரு பெண்தானே.
O O O O அவவுக்கே உன் மீது இரக்கம் நில்லுங்கோ நானும் வாரேன்! வரவில்லை என்றால் அவ என்ன மனுஷி, அவ என்ன லட்சக் கணக்கில்
- திருநகர் நடராசன் சீதனம் கொடுத்தே தான் கலியாணம்
செய்தவ?
இப்ப கொஞ்சக் காலமாய்த்தான் வெளிநாட்டு பயணங்களினாலும், வயது முதிர்ந்த காரணத்தினாலும் காசு காசாய்க் கொட்டி கலியாணங்கள் நடக்குது. அது போகட்டும். உன்ர
49

Page 27
ബ আৰু
கணவர் உன்னை விரும்பித்தானே எடுத்தவர். சீதனம் கேட்டே உன்னைத் தொட்டவர். மற்றவர்கள் எதைச் சொன்னாலும் கேட்பதற்கு அவருக்கு என்ன மதி? தங்களின்ர உடல் பசிக்காக ஒரு பெண்ணை பழி ஆக்கு வது, பசி தணிந்ததும் அவளை விட்டு விலகிப் போய் வேறு ஒரு சீதனக் காரியைத் தேடுவது. அப்படி இப்படி என்று பொய்யைச் சொல்லி பெண் களிட்ட லட்சக்கணக்காய் பணத்தை கறந்து, எடுத்து ஊதாரிச் செலவுகள் செய்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பவனி வருவது அனேகர்களின் இன்றைய வாழ்க்கையாய் போய்விட்டது. தன் உழைப்பில் ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்ற முடியாதவன் ஒரு ஆணா? வெறும் பேடி, சீதனம் வாங்கக் கூடாது. பெண்ணுக்கு விடுதலை வேண்டும் மேடைகளிலே பேசுகிறார்கள். பத்திரிகைகளில் எழுது
என்றெல்லாம்
கிறார்கள். அதைத் தன் வாழ்க்கையிலே கடைப்பிடிக்கிறார்களா? இல்லையே! எல்லாம் ஏமாற்று வித்தை. மலரிலே மது குடிக்கும் வண்டைப் போல்
ஏன்?
ஒரு பெண்ணைத் தன் வழிக்குக் கொண்டு வரும் வரை மயங்கிக் கிடப்பார்கள். தங்கள் காரண காரியம் முடிந்ததும் மற்ற வரின் நகைப்புக்காக அவள் குறைந்த சாதி, அவளுடைய நடத்தை சரி இல்லை என்றெல்லாம் தான் விலகி விட்டதற்கு காரணம் கூறுவார்கள். நான் கண்ட சிறு சிறு அனுபவங்களைக் கொண்டுதான் இதை எழுதுகிறேன்.
பெண் சமுதாயம் கட்டில் பதுமை
50
களாக, பாரம் தாங்கிகளாக மட்டும் வாழக் கூடாது. கலியாணம் என்பது வெறும் சம்பிரதாயத்திற்காக செய்யப்படுவது அல்ல. இரண்டு பேரின் இரத்தங்களும் ஒன்றாகக் கலப்பது. இரண்டு சீவன்களும் ஒன்றாக இணைவது. கலியாணம் ஆகாத பெண் நிறைகுடம் போன்றவள். தளம்ப மாட்டாள். தளம்பவும் கூடாது. ஆனால் கலியாணம் ஆகியும் கணவன் பக்கத்தில் இல்லை என்றால் அவள் தன் பருவ
தாகத்தைக் கட்டுப்படுத்துவது கடினமான
காரியம். பெண்ணினுடைய உள் உணர்ச்சிகள் பெண்ணுக்குத்தான் தெரியும். எங்கள் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றை உதாரணமாகக் குறிப்
பிடுகின்றேன்.
கட்டிளங் கன்னியான அவளுக்கு வயது இருபது. கலியாணம் செய்து நாலு மாதத்திலேயே கணவன் பிரிந்து வெளி நாடு போய்விட்டான். ஐந்து வருடங்கள் ஆகியும் அவனுடைய தரிசனம் அவளுக் குக் கிடைக்கவில்லை. மாதா மாதம் அவனிடமிருந்து பணம் அவளுக்கு வந்து கொண்டிருந்தது. அதனால் என்ன பயன். பருவப் பசி அவளை விட்டபாடில்லை. பாவம், என்ன செய்வாள் அவள்? கணவன் என்ன பூட்டா போட்டுவிட்டுப் போனான். ஒரு புடவை வியாபாரியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாள். ஆறு வருடங்கள் கழித்து அவள் கணவன் வந்தான். மூன்று மாதங்கள் அவளுடன் இருந்துவிட்டு மீண்டும் திரும்பினான். இப்படியான பெண்ணும் இருக்கத்தான் செய்கிறாள். ஆனால் நீயோ கணவனே கதி என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக் கிறாய். உன்னையும் கெட்டுப்போகச்

சொல்லி இதை எழுதவில்லை.
கோயில் கோபுரம் எவ்வளவுக்கு உயர்ந்து நிற்கிறதோ அவ்வளவுக்கு அந்தக் கோயிலுக்குச் சிறப்புண்டு. அது சரிந்தால் கோயிலின் மதிப்பும் மகிமையும் குறையும். மனைவி கோயில் என்றால் கணவன் கோபுரம், கணவனுக்கு மனைவி பணிந்து நடக்கலாம். ஆனால், கணவன் மனைவியை அடிமைப்படுத்தும் பட்சத்தில் தான் பலவீனப்பட்டவள் அல்ல என்பதை உணர்த்த மனைவி தவறக் கூடாது.
என்றாவது ஒருநாள் உன் கணவர் பணிந்து போய் உன்னைத் தேடி வருவார். அப்போது நீ உன் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது. அப்போது தான் அவரை உன் வழிக்குக் கொண்டுவர முடியும். அதுதான் தலையணை மந்திரம். உன் நன்மைக்காகவே இதை எழுது கிறேன். இத்துடன் ஐயாயிரம் ரூபாய் அனுப்பி இருக்கிறேன். நிராகரிக்காமல் ஏற்றுக்கொள். உன் செலவுக்கு உதவும்.
இப்படிக்கு
உன் அன்புச் சிநேகிதி
ASGAOIT,
கலாவின் கடிதத்தில் உள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், ஒரு சில கருத்துக்கள் கெளரியின் அடிமனதில் ஆழமாய் பதிந்து கொண்டன. கடிதத்தை வாசித்துவிட்டுத் தலை நிமிர்ந்தபோது மாடு ஒன்று வெளிப்படலையைத் தள்ளிக் கொண்டு உள்ளே வருவதைக் கவனித்தாள். எழுந்துபோய் மாட்டை
வெளியே துரத்திவிட்டு படலையைச்
சாத்தினாள்.
அதே சமயம் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து அவள் வேலி ஒரமாக நின்றதையும், அதிலிருந்து அவள் கணவன் சுதாகர் இறங்குவதையும் கவனித்தாள். ஐந்து வருடங்களுக்கு மேலாக அவனைக் காணாதிருந்த கெளரிக்கு ஓடிப் போய் அவனை வரவேற்க வேண்டும் என்னும் பேராவலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். கண்டும் காணாதவள் போல் விட்டுக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள்.
**G} s 6rt fl... Go)35 6m fl’’
கூப்பிட்டுக் கொண்டே முற்றத்திற்கு
என்று
வந்தான் சுதாகர்.
"இஞ்ச ஏன் வந்த நீங்கள்? இஞ்ச ஆர் இருக்கினம்! பெண்சாதி ஒருத்தி இருக்கிறாளே என்ற நினைவே இல்லாமல் இதுவரை காலமும் வாழ்ந்த நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து
உங்களின்ர அம்மா வந்து கூப்பிட்டதும்
என்னைப் பற்றிக் கொஞ்சமும்
சிந்திக்காமல் கலியாணம் செய்து ஆறு
மாதத்தில் என்னை விட்டுப்பிரிந்து அவவுக்குப் பின்னால் போனியள். உங்களின்ர நண்பனான ரகுவை எங்கள் வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று வெளிநாட்டிலிருந்து கடிதம் எழுதி னிர்கள். இதெல்லாம் சரியா? இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வராதேயுங்கோ" தன் கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் கெளரி.
5

Page 28
"ஐயோ கெளரி என்னைப் பற்றிக் கொஞ்சமும் விளங்காமல் கதைக்கிறியே, இடம்பெயர்ந்த காலத்தில் ஆமிப் பிரச்சினையால் நான் வந்து கந்தபுரத்தில் இருந்தபோது நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி ஒன்று சேர்ந்ததும் உண்மை. அம்மா வந்து வெளியில அனுப்பினதும் உண்மை. என் அக்கா ஒருத்தி கன்னியாக இருக்க, கலியாணம் செய்திட்டன். அவவுக்குக்
என்னைக் கூட்டிப்போய்
நான்
கலியாணம் செய்து வைப்பது என் கடமையாய் இருந்தது. கடமை முதல் காதல் பிறகு என்று சொல்லுவினம். அதனாலே தான் அம்மாவின் சொல்லுக்கு அடிபணிந்து வெளிநாடு போனேன். அங்கே ஒய்வு உறக்கமில்லாமல் உழைச் சேன். அக்காவுக்கு ஒரு காணி வாங்கி வீடு கட்டி, முடிஞ்சுது. அத்தோடு என் கடமையும் முடிஞ்சிட்டுது. இதுவும் உண்மை. வளவுக்குள் வந்த மாட்டை வெளியே
கலியாணமும் நடந்து
துரத்தினாயே ஏன்? நீ பாசமாய் வளர்த்த பூ மரங்களை தின்று விடும் என்றுதானே. அது மாதிரித்தான் ரகு வந்துபோகும் சங்கதியை அயலவர்கள் சொன்னதைக் கேட்டு அம்மா எனக்குக் கடிதம் எழுதினா. அதை வைத்துத்தான் உனக்குக் கடிதம் எழுதினேன். இதுதான் நடந்த உண்மை. நாங்கள் பிரிந்திருந்த காலம் போதும். இனிமேலாவது உன்னை விட்டு விலகக் கூடாது என்ற எண்ணத்தோடு தான் இங்கே வந்தேன். ஆனால், நீயே என்னை வெறுக்கும்போது என்ன என்று சொல்லிவிட்டு வெளிப்படலையை நோக்கி நடந்தான் சுதாகர்.
செய்வது?"
"நில்லுங்கோ நானும் வாரேன்" என்று கத்திக் கொண்டே பின்னால் ஒடினாள் கெளரி.
திரும்பி நின்று ஓடிவந்த கெளரியை
அப்படியே கட்டி அணைத்துக் கொண்டான் சுதாகர்.
「つ
திருமணம் நடந்தேறியது. வாழ்த்துகின்றோம்.
மனநிறைவுடன் வாழ்த்துகின்றோம்.
மல்லிகையின் நீண்ட காலப் பேரபிமானியும் கொழும்பு மா நகரில் குறிப்பிடத்தக்க வர்த்தகருமான நாகதேவன் தம்பதியினரின் செல்வப் புதல்வி தயாநிதி அவர்களுக்கும் திரு. இராசையா தம்பதியினரின் செல்வன் புதல்வன் சசிதரன் அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பு மா நகரில் மிகச் சிறப்பாகத்
மணமக்கள் சீரும் சிறப்புடனும் வாழ்க என
கொழும்பு மா நகரில் சமீபத்தில் நடந்த திருமண விழாக்களில் இது நினைவில் நிற்கத்தக்க திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Թiհաd. ஆ "
52
 

அப்பம் பிரித்த குரங்கின்
தப்பான கதை
அனைவர்க்கும் தெரிந்திருக்கும்.
இரண்டாகப் பிரித்த போது சமனிலியால் பக்கங்கள்
தாழ்ந்து உயர்ந்து நின்றது.
தாழ்வில் கொஞ்சம் கிள்ளி குரங்கு உண்ணவே அது உயர்ந்தது மேலாய். மீண்டும் மறுபக்கம் பிய்த்துண்ணவே மாறி உயர்ந்தது மீண்டும்.
இப்படியே LDITgÓ LDTgÓ குரங்கு முழு அப்பமும் தின்று முடித்தது. எம் தேசத்தின் கதையும் இன்று இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது.
எண்ணைக் குதங்களும் பிரிமா ஆலைகளும் இயற்கைத் துறைமுகத்திற்காய்
திருமலையில் எரிமலை சிலை வைப்பால் மட்டும் வெடித்ததல்ல.
காலூன்ற நினைக்கும் தேசிய, விதேசிய கபடதாரிகளாலும்தான்!
රිඝoෆථිqráōද්r
- ச.முருகானந்தன்
53

Page 29
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பார்கள். ஆனால் நல்ல நண்பர்களை உடையவர்களும் எதுக்கும்
அஞ்ச வேண்டியதில்லை. es
அமைதிப்படை
"மச்சான் உனக்காக உயிரையும் கொடுப்பம்" என்றார்கள். எனக்குப்
பெருமையாக இருந்தது. WM) இணுவையூர் உத்திரன்
"மச்சான் விடக்கூடாது இதை' என்றான், ரூபன்.
"அவனுக்கு என்ன துணிவு! எங்கட ஏரியாவிலை வந்து கிண்டல் செய்யிறான்" என்றான் ஐங்கரன்.
"உன்னுடைய தங்கச்சியைக் கிண்டல் செய்தது தவறு மச்சான்' என்றான் பார்த்தீபன்.
பரா, சிறி, ராசன் என்று என்னுடைய படை தயாராக இருந்தது. அருண் கிரியும் கண்ணனும் கையில் பொல்லாங் கட்டைகளை எடுத்துக் கொண்டார்கள். எனக்காக யுத்தத்திற்கு தயாராக நின்றது எனது நண்பர்களின் படையணி. ஆனாலும் எனக்கு ஏதோ இந்த யுத்தம் தேவையற்றதாகவே பட்டது.
நான் கொஞ்சம் மிதவாதி. தேவையில்லாத சண்டைச் சச்சரவுகளை கொஞ்சம் தவிர்த்துக் கொள்வேன். ஆனால், எனது நண்பர்கள் எந்தப் பிரச்சினைக்கும் பொல்லைத்தான் தூக்குவார்கள்.
"பிழை சரி இரண்டு பக்கமும் இருக்கும். அதனாலே இந்தப் பிரச்சினையை ஏன் வீணாக ஊதிப் பெரிசாக்குவான்? பிரச்சினை வேண்டாம்" என்று எவ்வளவோ கேட்டுப் பாத்தன். நண்பர்கள் விடுவதாய் இல்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் எனது அருமைத் தங்கை சரோஜா. அவளுக்கு தான் ரோஜா என்ற நினைப்பு. அடக்க ஒடுக்கமாய் உடுப்பு போட்டுக் கொண்டு ஒழுங்காய் போய் படித்துவிட்டு வரலாம். ஆனால் இவள் அந்த ரகம் அல்ல. சினிமா நட்சத்திரம் மாதிரி, உடுப்பு போடுவாள். நல்லாய் வம்பு அளப்பாள். எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேன்.
'நீங்கள் பதினாறு முழம் சேலை கட்ட வேண்டாம். ஒழுங்காய் பாவாடை சட்டையையாவது போட்டுக்கொண்டு போகலாம்தானே! இல்லையே? ஜின்சும் ரிசேட்டும் போட்டுக்கொண்டு தலைமயிரும் பறக்க வெள்ளைக்காரிகள் மாதிரி ஏன் எங்கடை கலாசாரத்தையே சீரழிக்கிறீர்கள்?' என்று. ஆனால் அவளுக்குப் புத்திமதி சொல்ல
54

வேண்டிய அம்மாவே அவளுக்கு ஆதர வாகத்தான் கதைப்பாள். சரி பட்டுத் திருந் தட்டும் என்று விட்டுவிட்டேன்,
ஒரு மனிதனுடைய உடுப்பு நடப்பு களைக் கொண்டுதான் மற்றவர்கள் அவனைக் கணிப்பது. நாகரிகம் என்பது வெறும் உடுப்புக்களில் தங்கி இருக்க வில்லை. இப்படித் தழுக்கி மினுக்கிக் கொண்டு போனால் நாலு காவாலி களின்ரை கண் படத்தான் செய்யும். ஏதாவது சொல்லத் தோன்றும் . அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. காய்க்கிற மரத்திற்குத்தானே கல்லடி படும். காசையும் பார்க்கிற இடத்தில் வைத்தால், எங்கள் தாப்பிலும் தவறு இருக்கத்தான் செய்கிறது. சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் இவளையும் இவளது சிநேகிதியையும் பெடியன் என்றும்,
எடுக்கத்தான் தோன்றும்.
ரோஜா என்றும், பூலான் தேவி என்றும் கிண்டல் செய்து இருக்கின்றார்கள். ஜீன்ஸ் போட்ட ஒளவைப் பிராட்டிகள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதே வேளை இவர்களும் விட்டு வைக்க வில்லை. அவர்களை "கவுண்டமணி, செந்தில்" என்று திருப்பிச் சொல்லி ஒரே
கசமுச. அதன் விளைவுதான் இந்தப் படைக்குவிப்பு. இந்த இரண்டு இளைஞர் களினதும் வீட்டுக்குப் போய் கொஞ்சம் புத்தி சொல்லுவம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவங்களுக்கு 'நாலு அடி போடவேணும். காலை முறிக்க வேணும்' என்று எனது நண்பர்கள் நின்று கொண்டார்கள். சரி வருவது வரட்டும். எங்கள் படையணி புறப்பட்டது.
அந்த இளைஞனின் வீட்டிற்கு முன்னால் சுமார் பத்து சைக்கிள்களில் இருபது பேர் வரையில் போய்க் குதித் தோம். ரூபன் கோபத்தோடு போய் வீட்டுக் கதவைத் தட்டினான். கண்ணன் பொல்லை கையில் எடுத்துக் கொண் டான். அகிலன் மீசையை முறுக்கிக் கொண்டான். கதவு திறக்கப்பட்டது.!
என்ன ஆச்சரியம்..! எல்லோரும் ஒருகணம் ஸ்தம்பித்துப் போனார்கள்.
சுமார் பதினெட்டு வயது இருக்க லாம். செந்தளிப்பான முகம். ஒழுங்காகப் பூ வைத்து, எண்ணெய் வைத்து பின்னிக் கட்டப்பட்ட கூந்தல். கறுத்தப் பொட்டு, களங்கம் இல்லாத சிரிப்பு. அழகு! தெய்வீக அழகு! ஆராதிக்கப்பட வேண்டிய அழகு! தேவதையைப் போல அவள் கதவைத் திறந்தாள். ஒரு வருக்குமே பேச்சு எழவில்லை.
"உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டாள்.
கண்ணன் கையில் இருந்த பொல்லை நழுவவிட்டான். ரூபன் தடு மாறினான். கஜன் சிலையாகிப் போனான். பார்த்தீபன் நழுவத் தொடங்
கினான்.
"இல்லை நாங்கள் சும்மா வந்த நாங்கள்' என்றான் பரா,
“அரவிந்தன் எங்கடை பிரண்ஸ் தான்" என்றான் சிறி. என்னுடைய சிங்கங்கள் எல்லாம் பசுக்களாக்கிக் கொண்டிருந்தன.
55

Page 30
நான் கொஞ்சம் முன்னாலே வந்து "அரவிந்தனை சந்திக்க வேண்டும்"
என்றேன்.
'ஒ. அண்ணாவா? கடை
வரைக்கும் போயிருக்கிறார். இப்ப
வந்திடு வார். நீங்கள் உள்ளே
வாங்களேன்” என்று அழைத்தாள் அந்தப் பெண்.
“வேண்டாம் போவோம்' என்று
O)
என் கையில் சுரண்டினான் உசன்.
சிலர் சையிக்கிளைத் திருப்பிக் கொண்டார்கள். "காலை அடித்து முறிக்க வேணும்' என்றவர்களின் கால்கள் தாமாகவே பிள்வாங்கிக் கொண்டன. எட அவளைப் பார்த்து அன்பாக இரண்டு வார்த்தை பேசுவோம் என்றால் என்னை யும் விடாமல் இழுத்து சயிக்கிளில்
ஏற்றிக்கொண்டு அமைதிப்படையாக வீடு
திரும்பிக்கொண்டு இருந்தார்கள். அடிதடி
என்றால் புகுந்து தூள் கிளப்புகின்ற எமது சூரர்கள் அடங்கிப் போனார்கள். விடுவந்து சேரும்வரை எவருமே வாய் திறக்கவில்லை. அவர்களது மனோ நிலையை நானும் புரிந்து கொண்டேன்.
இவை எல்லாவற்றையும் விட என்னைச் சிந்திக்க வைத்தது ஒரு
விடயம். எனக்குள் ஒரு நெருடல்.
எங்கோ ஒரு இடத்தில் உதைக்கிறது.
ஆம்! அதாவது இப்படி ஒரு அழகான தங்கையுடன் பிறந்த அரவிந்தன்' என்ற அந்த இளைஞன் எனது சகோதரியைக் கிண்டல் செய்கின்றான் என்றால் இதில்
எங்கோ ஒரு இடத்தில் தவறு இருக்கின்றது?
அது எங்கே? சிந்திக்கத்
தொடங்கினேன், நான்.
இன்று பல்கலைக்கழக மாணவர்களும் இளந்தலைமுறைப் படைப்பாளிகளும் புதிய சிந்தனை வட்டத்தைச் சார்ந்த இளைஞர்களும், யுவதிகளும் இன்று அதிக அதிகமாக இலக்கியத் துறையில் காலடி வைத்துள்ளனர்.
இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. மல்லிகையை சுவைத்துப் படிக்கும் சுவைஞர்கள் அதனையோ அதன் ஆசிரியரையோ புகழந்து, முகஸ்துதி செய்யாமல் மல்லிகை பற்றிய தங்களது சுயமான விமரிசனங்களை எழுத்தில் பதிவு செய்து உதவும் வண்ணம் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
எத்தகைய விமரிசனக் கருத்துக்களையும், விமரிசனங்களையும் மல்லிகை விரும்பி வரவேற்கும்.
ஆசிரியர்
 
 

(கனடாவில் இயல் விருது பெற்ற பத்மநாப ஐயர் அவர்களைப் பாராட்டி கனடாவிலிருந்து வெளிவரும் காலம் என்ற சஞ்சிகை ஒரு விஷேச சிறப்பிதழைக் கடந்த 2005 ஜூன் மாதம் வெளியிட்டு ஐயரைக் கனம் பண்ணிக் கெளரவித்திருந்தது. அந்த LD6)floi) u6) (pāsailuuLDIT60T எழுத்தாளர்கள் ஐயரின் இலக்கிய உழைப்புப் பற்றிக் கட்டுரைகள் வரைந்திருந்தனர். அதில் வெளிவந்த கட்டுரை ஒன்றை இங்கு பிரசுரித்துள்ளோம். காலம் சஞ்சிகைக்கு
எமது நன்றிகள். கடந்த 2004 நவம்பர் மல்லிகை இதழின் அட்டைப் படத்தில் ஐயரின் உருவப் படம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியர்) இலக்கியப் பாலம் கடீருபவர்
- ஏ.ஜே. கனகரட்ணா
2004 ஆம் ஆண்டுக்கான இயல் விருது இ.பத்மநாப ஐயருக்குக் கிடைத்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் எனது முதல் எதிர்வினை, இறுதியில் ஐயருக்குக் கிடைக்க வேண்டிய அல்லது கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதுவும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற, கீர்த்தி மிக்க ஒரு அமைப்பால் வழங்கப்பட்டிருக்கிறது" என்பதே.
கடந்த கால் நூற்றாண்டு காலம் அல்லது அதற்கும் மேலாக ஐயர் ஒர் இலக்கியப் பாலமாக இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் சேவை செய்து வருகின்றார். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் சிறந்த சீரிய இலக்கிய சஞ்சிகைகளையும், நூல்களையும் இங்கே கிடைக்குமாறு செய்வதில் கருவியாக இருந்து வருகிறார்.
லங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் நடைபெற்ற இலக்கியப் போக்குவரத்
கும தமழ @ குவரதது ஒருவழிப் பாதையாகவே பல காலமாக இருந்து வந்துள்ளது. ஐயர் இந்தச் சமமற்ற
57

Page 31
§ অস্পষ্ট
தன்மையைச் சரிசெய்ய வெளிக்கிட்டார். தனது தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டு இலங்கையில் வெளியான சீரிய இலக்கிய சஞ்சிகைகளையும், நூல் களையும் தமிழ் நாட்டு உய்த்துணரும் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்தார்.
இப்பொழுது அவரின் இலக்கியச் செயற்பாடுகள் உலகளாவிய அளவில் விரிந்து விட்டது.
உட்கதை ஒன்று என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. யாழ்ப் பாணப் பொது நூலகம் அரச குண்டர் களால் ‘கொளுத்தப்பட்டு ஏறக்குறைய எல்லாப் பெறுமதி மிக்க நூல்களும் எரிந்த போது, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் 'மறுமலர்ச்சிக் கழகம்’ என்ற ஒர் அமைப்பை உருவாக்கினார்கள். எரிந்த நூலகத்திற்கு நூல்கள் வாங்கு வதற்குப் பணம் சேர்த்தார்கள். ஐயர் அதற்குத் தேவையான நூல்களை வாங்கி வருவதற்காக, தமிழ் நாட்டுக்கு கடற் பிரயாணம் செய்வதற்குத் தன்னார்வத் துடன் முன்வந்தார். சிறிலங்கா கடற் படையால் கண்டு பிடிக்கப்பட்டால் நேரும் ஆபத்து அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், எந்த இடருக்கும் பயப் படாமல், களவாகக் கடற் பிரயாணம் செய்ய முன்வந்தார். எந்த ஆபத்துக் களையும் பொருட்படுத்தாமல் இந்து சமுத்திரத்தைத் தாண்டிச் சென்று, தன் நண்பர்களின் உதவியுடன் மிகத் தரமான நூல்களைத் தெரிவு செய்து பத்திரமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அந்த நூல்களுள் மிசேல் ஃபூக்கோவின் பல நூல்களும் இருந்தன. அப்படித்தான்
58
விடுவார்.
முதன் முதலாக எமது கால முக்கிய சிந்தனையாளர் ஒருவரின் நூல்களுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.
ஐயர் பணத்தைப் பற்றிக் கவலைப்பட்டதோ, படுவதோ கிடை யாது. நான் வாசிக்க விரும்புவேன் என்று ஒரு நூலை எங்காவது அவர் கண்டு விட்டால் அதை வாங்கி இங்கிலாந்தி லிருந்து எனக்குத் தபாலில் அனுப்பி கடைசியாக வந்த உலக இலக்கிய அறிவு அபிவிருத்திகளில் நான் பின்தங்கிவிடக் கூடாது என்று நான் அவரை கடிந்து கொண்டால், நான் அக்காலத்தில் இலங்கையில் இருந்தபோது ரூபாவில் கடனாளியாக இருந்தேன். இப்போ பவுணில் கடனாளியாக இருக் கிறேன். அவ்வளவுதான் என்று பகிடியாக எனக்குக் கூறுவார்.
இயல் விருதுக்குச் சரியாகவே தெரிவு செய்யப்பட்ட இம்மனிதனின் குணவியல்பு இது.
GaleFcircuncurruício
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்
கிடைக்குமிடம்
நீயூபுக் லாண்ட் 52C, நோர்த் உஸ்மான் ரோடு, சென்னை - 17.
الصر
 

கிஒை6ாச்சில்ை கலை
இலக்கிலவின்திகன்ை ஒன்றுகடல்
- பிரகலாத ஆனந்த்
போர்க் காலத்தினைத் தமது படைப்புகளில் காத்திரமாகப் பதிவு செய்த எழுத்தாளர்களிலும், பத்திரிகையாளர்களிலும் போரின் வடுக்கள் நிறைந்த கிளிநொச்சி மண்ணிலிருந்து மலர்ந்தவர்கள் அதிக கவனத்தைப் பெறுகிறார்கள். ஈழத்தின் முன்னணிப் படைப்பாளிகளான தாமரைச் செல்வி, யோகேந்திரநாதன், கருணாகரன், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், ச.முருகானந்தன் முதல் இன்றைய கர்ணன், ஆதித்தநிலா வரை இன்று இம்மண்ணிலிருந்து காத்திரமான படைப்புகளை நல்கி வருகின்றார்கள். எனினும் இவர்கள் அனைவரும் சந்தித்து இலக்கியப் பகிர்வில் ஈடுபடுவது அபூர்வமே!
அண்மையில் பத்திரிகையாளர் க.இரத்தினசிங்கம் அவர்கள் தனது புதுமனை புகுவிழாவின் போது சற்று வித்தியாசமான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம் இப்பிரதேச எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் அனைவருமே அழைக்கப்பட்டிருந்தார்கள். மதியபோசன விருந்தின் பின்னர் அங்கு எழுத்தாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததே அந்த சிறப்பம்சம்.
இந்நிகழ்வு முன்னர் மல்லிகை ஊடாக எழுத்தாளர் சுதாராஜ் வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இலக்கியம் பேசாது இலக்கியவாதிகளின் சந்திப்பை ஒத்தது. அன்றுதான் பல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மனம்விட்டு உரையாடினர். கவிஞர் கருணாகரன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்களுடன் பத்திரிகையாளர்களும், படப்பிடிப்பாளர்களும், ஒவியர்களும் கூடக் கலந்து சிறப்பித்தனர். வருகை தந்தோரில் மருத்துவ இலக்கிய கர்த்தாக்களான சுஜாந்தன், ச.முருகானந்தன், பத்திரிசையாளர்களான ஜெயராஜ், தேவகெளரி, பெண் எழுத்தாளர்களான தாமரைச்செல்வி, தமிழ்க்கவி, ஆதிலட்சுமி, கலைச்செல்வி மற்றும் கண்டாவளைக் கவிராயர், வளவை வளவன், கந்தசாமி, பெருமாள் கணேசன், சுரேஸ், இளந்திரையன் உட்பட இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறினார்கள்.
இத்தகைய ஒரு இனிய மாலைப் பொழுதை ஒழுங்கு செய்த பத்திரிகையாளர் க.இரத்தினசிங்கம் பாராட்டுக்குரியவர்.
59

Page 32
இரசனைக் குறிப்பு:-
கூத்தரங்கம் ஒர் ஆண்டு நிறைவு இதழ்
- T6)T
அரங்க ஆற்றுகைக் கலையான நாடகம் முத்தமிழிலொன்றாகும். இன்றும் இக்கலைக்கு அளப்பரிய இரசிக ரஞ்சகம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. சினிமாவின் தோற்றம் இதை இன்னமும் அடித்து மடக்கிவிடவில்லை. குலுங்கிக் கலங்கிக் கொண்டிருக்கும் ஈழத்திலும் கூட அதை ஒடுக்க முடியவில்லை. கலைப் பற்றும், இனப் பற்றுமுள்ள அபிமானிகள் நாடகத்தையும், கூத்தையும் இங்கும் ஆற்றுகை செய்து கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் அரசின் நாடக விழா நடைபெறுகின்றது. பல்கலைக் கழகத்தில் பாட நெறியாக்கி இதற்கான புதிய பரம்பரை உருவாகிக் கொண்டிருக்கிறது.
இதெல்லாம் எம்மவருக்குப் புதிய புதினங்களாக இருக்க முடியாது! ஆனால் இத்துறைக்கெனச் சஞ்சிகையொன்று வெளிவந்து கொண்டிருக்கின்றதென்றால் அநேகருக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதுவும் அச்சஞ்சிகை வெற்றிகரமாக ஓராண்டைப் பூர்த்தி செய்து இரண்டாவது ஆண்டில் சுவடு பதிக்கின்றதென்றால் இந்நாட்டைப் பொறுத்தவரை சாதனைதான்!
அச்சாதனையை நிலைநாட்டி இருக்கின்றது 'கூத்தரங்கம்' சஞ்சிகை. இதன் ஓராண்டு நிறைவு இதழைப் படிக்க முடிந்தது. பயனுள்ள வாசிப்புத் தேறியது. அதுவும் கலை வாசிப்பாகத் திருப்தி கிடைத்தது!
நாடகம், கூத்து சம்பந்தமான புதிய தகவல்கள், கட்டுரைகள், நேர்காணல் என்பன அறிதலுக்கானதானதும், கற்பதற்கானதுமான கலைத் தகவல்களை வாசகனுக்கு விருந்தாக்குகின்றன.
யுத்தமற்ற இக்காலகட்டத்தைக் கலைஞர் தர்மசிறி பண்டாரநாயக்க மிகச் சாதுரியமாகப் பயன்படுத்தி விட்டார். றிகோன் ஆட்ஸ் சென்ரர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிலையத்தின் சிறு நிதியம் போன்ற நிறுவனங்களின் அனுசரணையோடு 'சந்த லங்க மரணய" (நிலவருகே மரணம்) என்ற சிங்கள நாடகத்தை யாழ்ப்பாணம், கைலாசபதி கலை அரங்கில் 23.04.2005 இல் அரங்கேற்றினார். இந்நாடகம், ஸ்பெயின்
60.

நாட்டின் புகழ் பூத்த நாடகக் கலைஞரான
வெட்றிகோ கார்ஷியா வோர்காவின் "Blood Wedding' Graip is TLoisair மொழிமாற்றமாகும்.
இந்நாடகம் தேசிய நாடக விழாவில் சிறந்த சிங்கள நாடகத்திற்கான பரிசோடு, அதன் சில கூறுகளுக்கும் பரிசைப் பெற்றுச் சிங்கள மக்கள் மத்தி யில் அமோக வரவேற்பைப் பெற்றது. இத்தகையவொரு சந்தர்ப்பம் யாழ் மக்களுக்குக் கிடைத்தது, அவர்களது நாடக உருவாக்கங்களை உரசிப் பார்ப் பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும். இத்தகைய கலைப் பரிவர்த்தனைகள் ஒரு வழிப் பாதையாக இருக்காமல் தமிழ் நாடகங்களும், கூத்துகளும் சிங்களப் பிர தேசங்களிலும் ஆற்றுகை செய்யப் படுவது விரிசல்களை இணைக்க வைக்கும் அருஞ்சாதனமாகும்.
இந்நாடகம் குறித்து நயம்பட எழுதி யிருக்கிறார் ஆனந்த்.
நெய்தல் நில மக்கள் இற்றை வரை பாரம்பரியமாகத் தம்மோடு இணைந்து விட்ட மரபுவழி நாட்டுக் கூத்தைப் பேணிக்காத்து வருவதில் சளைக்காத வர்கள் அல்லர் என்பதை இளவாலை, போயிட்டி மக்கள் சென்ற பங்குனி மாதம் 27ஆம் திகதி "மனம் போல் மாங்கல்யம்' என்ற நாட்டுக் கூத்தை ஆற்றுகை செய்த தன் மூலம் மேலுமொருமுறை மெய்ப் பித்து விட்டனர். இத்தென்மோடி நாட்டுக் கூத்தை உரு மலர்த்தி ஆற்றுகை செய்தவர் தென்மோடி நாட்டுக் கூத்துத் திலகம் அண்ணாவியார் இராசதம்பி.
Drag
இந்நிகழ்வு குறித்துத் தனது காய்தல் உவர்த்தலற்ற இரசனைக் குறிப்பை இவ்விதழில் ஆனையூர் இ.வரதர் பகிர்ந் துள்ளார்.
தாம் நாளாந்தம் தரிசிக்கும் மருத்துவ கூடம், வைத்தியம், சமூக, இன
வற்றைத் தமது நாடக எழுத்துருக்களில்
முடக்கி, அவைகளை அரங்கில்
ஆற்றுகை செய்துவரும் யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்கள் கைலாசபதி அரங்கில் 12.03.2005இல் நாடக விழாவொன்றை நடத்தியதாகப் பதிவொன்றை இவ்விதழ் தந்துள்ளது. இவ்விழாவிற்கு பேராசிரியர் செ.சிவ ஞானசுந்தரம் (எழுத்தாளர் நந்தி) சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். 'என் கடன் பணி செய்து கிடப்பதே", "கிழக்கு மீண்டும் சிவக்கும்', "ஊழித்தீ", "உளி யிழந்த சிற்பிகள்', 'தண்ணீர் விட்டே வளர்த்தோம்" ஆகிய 05 நாடகங்கள் போட்டியிட்டன.
இம்மூன்று நாடக ஆற்றுகைகளும் யாழ்ப்பாணத்திலேயே நடந்திருப்பதை அறியும் பொழுது ஏனைய தமிழ் பிர தேசங்களினதும் நாடக ஊற்று வற்றி விட்டதாவென்ற ஆதங்கம் ஏற்படு கின்றது. அல்லது போனால் 'கூத்தரங் கிற்கு அறிவிக்காமல் விட்டார்களா?
'என்னில் உள்ள நல்லவைகள் எல்லாம் எனது நண்பர்கள் மூலமும், பழகியவர்கள் மூலமும் கிடைத்தவைகள் தான்". இவ்விதழில் பதிவாகியிருக்கும் நேர்காணலில் பேராசிரியர் கா.சிவத்தம்பி இப்படிச் சொல்லித்தான் பழகிய வட்டத்
61

Page 33
தின் மேன்மையைப் புகழ்கிறார். பேரா சிரியரின் இன்றைய பெறுமதியை நோக்கும் பொழுது அந்த நண்பர்கள், பழகியவர்கள் என்போரின் விழுமியங் களைச் சொல்லித்தான் தெரியப்படுத்த வேண்டுமா?
பேராசிரியரின் நெடுநாள் நாடகப் பணி ஊடாக ஈழத்து நாடக வளர்ச்சியை உள்வாங்கக் கூடிய வகையில் நேர்காணல் அமைந்துள்ளது. கண்டுள்ளார்.
தே. தேவானந்த் நேர்
"ஒரு நிறைகுடம் இடம்பெயர்ந்து விட்டது" எனப் பேராசிரியர் கா.சிவத் தம்பியும், “இசைப்பார் இல்லாத இராகம்" எனப் பேராசிரியர் சி.மெளனகுருவும், கூத்து மரபை இணைத்து இம்மண்ணுக் கென்று வடிவங்கள் தோன்ற வேண்டு மென்ற உளமார்ந்த பிரக்ைைஞயோடு நாடகப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்த, அரங்கியல் ஊற்றான அமரர். நா.சுந்தர லிங்கத்தின் இழப்பைச் சோகிக்கின்றனர்.
இரு நாடறிந்த நாடகவியலாளர் களின் ஆழமான பார்வைகள், அமரர் நா.சுந்தரலிங்கம் தனது பன்முக அரங் கியல் ஆற்றல்கள் ஊடாக எவ்வண்ணம் தான் வாழ்ந்த காலத்து நாடகக் கலைக் குப் புதியதோர் தோற்றத்தை உண்டாக்கி அதைப் பொலிவுறத் தூண்டுதலாக இருந்தாரென்பதை அறிதல் செய்ய உபகரிக்கின்றன. இக்குறிப்புகள் அரங்கி யலில் புதிதாகச் சிறகசைக்க எத்தனிக்கும்
புதுமுகங்களுக்குச் சிறந்த வழிகாட்டல்
களாகவும் சேவிக்கின்றது.
62
பரந்த சிந்தனையாளரான அமரர் குறித்து அவர் மரணித்த பொழுது, இந் நாட்டுப் பத்திரிகை, இலத்திரன் ஊடகங் கள் என்பன எதுவித முக்கியத்துவமும் காட்டாததையிட்டுப் பேராசிரியர் மெளன குரு கலைஞர்கள் விடயத்தில் எம்மவரது இது
எமது கலாசார வறுமையெனவும் கண்டித்
கரிசனையைச் சாடியிருக்கிறார்.
துள்ளார்.
நாடக எழுத்துருக்கள் இரண்டு பிரசுரமாகியுள்ளன. இவை நாடக எ( துருப் படைப்பாளிகளுக்கு உதவக் கூடி யவை. அரங்கியலில் முத்திரை பதித்த குழந்தை ம.சண்முகலிங்கம், ஆங்கிலத் தில் கொன்ஸ்ரைன் கார்னெட், ருஷ்ய
மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்த
அன்ரன் செக்கோவின் நாடகத்தை அந்தி மாலைப் பாடலொன்று' என்ற தலைப் பில் தமிழில் தந்திருக்கிறார். யாழ். பல் கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்த நாடக விழாவில் முதற் பரிசு பெற்ற மெள. மதுர கீதன், அ.கிறிஸ்ரா நிசாந்தினி, செயசோதா ஆகி யோரது நாடக எழுத்துருவான 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற எழுத் துருவும் பதிவாகியுள்ளது.
வேட உடைகள்,
அரங்க அமைப்புகள், காட்சித் திரைகள்,
ஒப்பனைகள்,
தட்டிகள் என்ற கூத்து, நாடகம் என்பவற் றோடு களில் தனது வல்லமையை ஊன்றிப்
சம்பந்தப்பட்ட முக்கிய கூறு
பங்களிப்புச் செய்த மூத்த அரங்கியல் கலைஞர் பெஞ்சமின் ஐயா பற்றி இலக் கியா என்பவர் எழுதிய குறிப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. இப்பொழுது 90வது
 

அகவையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர். இம்மூத்த முன்னோடி நாடகக் கலைஞரின் ஆற்றல்களை இதுவரை இந் நாட்டின் ஊடகங்கள் வெளிக்காட்டாதி ருந்தது, இவ்விதழின் ஆசிரியத் தலையங் கத்தில் ஆசிரியர் குறிப்பிடும் ‘கட்டுப் பெட்டித்தனம்', 'யாரி கட்டி நிற்கும் பண்பு', 'கன்னை பிரித்து கோடு கீறி நிற்பது' என்பனவற்றின் மேலாதிக்கமா? இந்த நிரலில் சாதியையும் நிரல்படுத்தி இருக்கலாமே! பிரமுகர்கள் குறித்து எழுதுபவர்கள், அவர்களது பிறப்பிடம், பிறந்த தேதி என்பவற்றையும் குறிப் பிட்டால் எழுத்துருவொரு ஆவணமாகி விடும்.
"உண்மையைச் சந்தர்ப்பத்திற்கேற்ற வாறு ஆணித்தரமாக வெளியிடுவது, நடிப்பு' என்ற தலைப்பில் 24.05.2005 இல் அமரர் நந்தி வழங்கிய கருத்துரையும் உண்டு. அநேகமாக இதுவே அவரது கடைசிக் கருத்துரையாக இருக்க
வேண்டும்.
தமிழ் நாடு, ந. முத்துசாமியின்
N peggio;
நடிகனுக்கான பயிற்சி ஆர்கொலோ சதுரர் - நாடகத் தயாரிப்புப் படிமுறை (எழுதியவர் சா.சிவயோகன்) ஆகிய கலைசார் கற்கைகளைப் படிக்கும் மாண வருக்குப் பொருத்தமான கட்டுரைகளும் உண்டு. இதில் சா.சிவயோகனின்
கட்டுரை நடன நாடகம் சம்பந்தமானது.
'நாடகம் ஆடுபவனே நாடகம் எழுத வேண்டிய நிலை" என ஆசிரியர் எழுத்துருக்களின் தட்டுப்பாட்டை பூடக மாகச் சுட்டுகிறார். வாசகர்கள், அபிமானி களின் பங்களிப்பையும் வேண்டுகிறார்.
ஆக, 'கூத்தரங்கம்" சஞ்சிகையின் இலக்கு கூத்து, நாடகம் என்பனவற்றின் விழுமியங்களை மக்கள் மயப்படுத்தலே என்ற குறுகிய எல்லைக்குள் நின்று கணிப்பீடு செய்யாது, இது வரவேற்கத்
தக்கதொரு தமிழுழியம் என உபாசித்து,
தமிழ்ச் சமூகம் இச்சஞ்சிகையின் முக்கி யத்துவத்தை மதித்து இதனை வாழ வைத்தல், நாளைய சந்ததிக்குத் தேடி வைக்கும் சொத்தாகும்!
எழுதப்படாத கவிதைக்கு
*:
வரை பார்படாத சித்திரம்
63

Page 34
ασπίδηση πύ6υπου... 02
ஒரு நோக்கு
- வசந்தி
Fழத்துத் திறனாய்வுத்துறை, கடந்த அரைநூற்றாண்டு காலமாக, கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் பயனாக படைப்பாளி ஒருவர் பெறும் முக்கியத்துவமும் அங்கீகாரமும் திறனாய்வாளன் ஒருவருக்கும் வழங்கப் படுகின்ற ஆரோக்கியமான சூழல் இன்று நிலவுகிறது.
நாடறிந்த திறனாய்வாளர் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள், "சொன்னாற்போல - 02” என்ற தனது நூலை கடந்த மாதம் வெளியிட்டுள்ளார். நூலாசிரியர், தன்னை 'பத்தி எழுத்தாள விமர்சகர்' என்று அறிமுகஞ் செய்து கொள்கின்ற போதும், அதற்கும் மேலாக அவர் 'பல்துறை ஆற்றல் படைத்த ஒரு திறனாய்வாளர்" என்பது நாமறிந்ததே! பத்தி விமர்சனங்கள்; சுருங்கக் கூறல், மேலோட்டமான குறிப்புக்களாக அமைதல், தகவல்களையும் அறிமுகங் களையும் தொட்டுச் செல்தல் முதலிய பண்புகளால், மரபு ரீதியான விமர்சனங் களினின்றும் வேறுபடுகின்றன. அவ்வகையில், அண்மைக் காலத்தில் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த கே.எஸ். அவர்களின் பத்தி எழுத்துக்கள் தொகுக்கப் பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளன. முன்னுரையில் தினக்குரல் ஆசிரியர், கே.எஸ். சிவகுமாரனின் கலை - இலக்கியப் பயணத்தின் அனுபவத் திரட்டுக்களின் பயனுறுதி உடைய கூறு' என்று நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நூல், ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றினதும் உட் பிரிவுகளில் ஏராளமான தகவல்கள் நிரப்பப்பட்டுள்ளன. முதல் இரண்டு பிரிவுகளிலும், தனது சொந்த அனுபவங்களை மீட்டு, அசைபோட்டு மகிழ்கின்ற கே.எஸ். எமக்கும் அந்த இரசனை உணர்வைத் தொற்ற வைக்கிறார். ஏனைய
64

பிரிவுகளை விட முற்றிலும் மாறு பட்ட பக்திகள் இவை 'வானொலி யில் சில அனுபவங்கள்', 'அமெரிக்கா வில் சில அனுபவங்கள்" என்ற தலைப்புகளிலான இவை, ஆசிரியரின் பார்வைத் தளத்தில் எம்மையும் ஏற்றி விடுகின்றன.
வானொலி என்கின்ற ஊடகம் அறிவிப்
பாளர்கள் சினிமா நட்சத்திரங்களே
ஒரு கனவுலகமாகவும்,
போன்றும், நேயர்கள் மயக்குற்றிருந்த அந்த நாட்களை, கச்சிதமாகச் சுவை படக் கூறுகிறார் ஆசிரியர். ‘உள் வீட்டு விடயங்களையும் இடை யிடையே சொல்லி, வாசகரின் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறார். மறு புறத்தில், இலங்கை வானொலியின் தமிழ்ப் பிரிவு குறித்த தகவற் பெட்டகமாகவும் அது வடிவம் பெற்றுள்ளது.
மேற்குலகின் சமூகவியற் கூறு களை நாம் ஒரளவு பரிச்சயப் படுத்திக்கொள்ள, அமெரிக்க வாழ்வு பற்றிய பக்கங்கள் உதவுகின்றன. அந்த எழுத்து நடை இருக்கிறதே, அது ஒரு உல்லாசமான கட்டற்ற நடை! நாமோ, ஒரு வாய்ப்பாட்டின் படி எழுதவும், அவற்றையே இாசிக் கவும் அங்கீகரிக்கவும் பழக்கப்பட்ட வர்கள். எனவே ஆசிரியரின் எழுத்துக் களைச் சீரணிப்பது நம்மிற் பலருக்குச் சிரமமாகக் கூட இருக்கலாம். ஆயினும், அந்த எழுத்து சமூகப் பண் பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு
தனது வாழ்வியல் அனுபவங்களை உணர்வுபூர்வமாக எம்முடன் பகிர்ந்து கொள்ளும் தன்னார்வ வெளிப்பாடு! தன்னைத்தானே விமர்சித்துக் கொள் கின்ற அவரது நயமான பாணி நூலெங்கணும் விரவிக் கிடக்கிறது. மேற்குலகினைப் பற்றிய இந்தப் பகுதி, 'திடுதிப்பென்று முடிவுக்கு வந்ததன் காரணத்தை நூலாசிரியர் மட்டுமே அறிவார் போலும்!
நூல் நுகர்விற் சில என்ற பிரிவு, பத்தி எழுத்திலேயே சற்றே அதிகப் படியான நேரமும் இடமும் எடுத்துக் கொண்டு சாவகாசமாக எழுதப் பட்டுள்ள திறனாய்வுகளை உள்ளடக் கியது. சிறுகதை, கவிதை, நாடகம் என்ற பல்துறை தொடர்பான தனது இரசனையினை, தனது உளக் கிளர் வினை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார், ஆசிரியர். திறனாய்வு என்பது ஒருபோதும் முடிந்த முடிபு களாகவோ, கருத்துத் திணிப்பாகவோ இருக்க முடியாது! அந்தக் கோட் பாட்டின் அடிப்படையில் நூலாசிரி யரின் நாகரீகமான திறனாய்வு அணுகு முறையை நாம் உணரலாம். அனுபவிக்
56) s TLD
நூலின் மீதமுள்ள பிரிவுகளோ, முற்று முழுதாகப் பத்தி எழுத்து வரைவிலக்கணத்துள் அடங்குகின்றன. உதிரிப் பூக்கள் பல வண்ணங்களில் கோர்க்கப்பட்டுள்ளன! நமது பார்வை யில் படாத, நாம் தவறவிட்ட நூல்கள், சிற்றேடுகள்; நமது செவிக்கு எட்டாத
65

Page 35
தகவல்கள், நாம் காணத்தவறிய நிகழ்வுகள் பற்பல. அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து எமக்கு வழங்குகிறார் கே.எஸ்.
மற்றும் சில நிகழ்வுகள் என்கின்ற பத்திகள் நூலின் இதர பிரிவுகளின்
தாரதம்மியத்திலிருந்து சற்றே வேறு பட்டவையோ என்ற நெருடல் ஏற்படு
கிறது. அப்பகுதியை நூலிற் சேர்த்துக்
கொள்வது குறித்து ஆசிரியர், இன்னுமொரு தடவை சிந்தித்திருக் கலாம். நூலின் தரவு நிலைப் படுத்தலில் இன்னும் சற்றே அக்கறை காண்பித்திருக்கலாம்.
கே.எஸ்ஸின் எழுத்து என்றுமே ஒரு சமநிலை பேணும் தன்மையது எனினும், சில இடங்களில் தனது கருத்தைக் காட்டமாகக் கூறலாம் - தவறில்லை. சுய விமர்சனங்களையும், சுய கண்டனங்களையும் தயங்காது ஏனையோர்
முன்வைக்கும் அவர்,
விடயத்தில் மட்டும் இனியவராக இருப்பது முரண்பாடு! அவரது பலமோ பலவீனமோ நானறியேன்!
எதிர்கால எழுத்துத் துறைக்கும், திறனாய்வுத்துறைக்கும் தனது பங்களிப்பை நல்க அவர் மிகவும் அவாவுகிறார். ஆயினும், அவர் தன்னை முன்னிலைப்படுத்தியே எழுதியிருக்குமாற் போன்றதொரு மாயத் தோற்றம் இந்நூலுக்குண்டு. அதனைப் புறந்தள்ளி, உண்மைப் பொருளை உணர்வதும், சுவைப்பதும் நம்மிடத்தில் உள்ளது!
'பத்தி எழுத்து, சிந்தனைக் கனதி குறைந்த ஒன்றல்ல - இது பத்திரிகை எழுத்து வழி வரும் இலக்கிய எழுத்து' என்று நூலாசிரியரின் எழுத்தைச் சிலாகிக்கிறார் சிரியர் கா.சிவத்தம் பி. அதனை மீண்டும் நிரூபித்திருக்கிறது, 'சொன்னாற்போல் - 02'.
பேரா
66
 

கடிதங்கள்
ஜூன் மாத இதழ் குறிப்பிட்ட தினத்திலேயே கிடைத்தது. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சிறிய ஒரு ஐயப்பாடு ஏற்படவே முன்னட்டையைத் திருப்பிப் பார்த்தேன். முஸ்லிம் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறீர்களோ? என அறிவதற்காக, அதிகமான ஆக்கங்கள் முஸ்லிம்களாலும், ஏனையவை முஸ்லிம்களைப் பற்றியும் இருந்ததனாலேயே இந்த ஐயப்பாடு. படைப்பிலக்கியத்துறையில் முஸ்லிம்களின் ஈடுபாடு ஒரளவேனும் இதன் மூலம் புலனாகிறது. பரிச்சயமானவர்களோடு புது வரவுகளும் வரும் சூழ்நிலை உருவாகாதா? என மனம் ஏங்குகின்றது.
கமாலின் சிறுகதை நடப்பு நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மொழிபெயர்ப்புக் கதை நாட்டின் யதார்த்தத்தை எடுத்துக் காட்டினாலும் முடிவு பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளைக் கூறுவதாக அமைக்கப்பட்டிருப்பினும் சற்று சினிமாத்தனமாகத் தெரிகிறது.
தூண்டில் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் கேட்ட கேள்வியும் அதற்கு உங்களால் அளிக்கப்பட்ட விளக்கமும் சிறப்பாய் அமைந்துள்ளது. பைபிள் ஹீப்ரு மொழியில் அமைந்திருந்தாலும், யேசுநாதர் பேசிய மொழி அரமெய்க் என்றே அறிந்துள்ளேன். புத்தர் பேசிய மொழி பிராகிருதத்தின் மகதியாக இருந்தாலும் அவரது போதனைகள் பாளி மொழியில் ஆவணப்படுத்தப்பட்டதைப் போலவே இதனையும் கொள்ளலாம். துறை சார்ந்தோர் இது தொடர்பாக மேலும் விளங்கங்களைத் தரலாம். எது எப்பிடியிருப்பினும் சம்பிரதாயப் பூர்வமான கேள்வி பதில் பாணியில் இருந்து விலகி தூண்டில் ஆழமான விடயங்களையும் ஆராய்வது மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஏ.எல்.எம். ராசீக்
மல்லிகை மாதத் தொடக்கத்திலேயே கிடைத்து விடுவது மகிழ்வைத் தருகிறது. புதியவர்கள் பலரின் வரவு ஆரோக்கியமானது. எனினும் மல்லிகையின் தரம்
பேணப்படுதல் அவசியமே! செ.யோகநாதனின் அட்டைப்படம் பிந்திய தரிசனமாயினும்,
67

Page 36
് 06: y
கட்டாயமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றே. ஈழத்து இலக்கியத்திற்கு பல பெருமைகளைச் சேர்த்த எழுத்தாளர். வீண் சச்சரவுகளில் அதிகம் ஈடுபடாது எழுதுபவர். பாராட்டுதல்கள். கவிதைகளின் அதிகரிப்பு காலத்தின் தேவை! அதுவும் மிக நீண்டு போவதைத் தவிர்க்கலாம். சில கட்டுரைகள் மிக நீண்டவை. இவற்றைத் தொடராகப் பிரசுரிக்கலாம்.
சிறுகதைகள் வந்து சேர்வது குறைவு என்பதற்காகப் போட்டி முடிவுத் திகதிகளைப் பின்போட்டுக்கொண்டு
போவது உசிதமல்ல.
நீங்கள் எல்லா விதமான விமர்சனக் கணைகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பதை ஏற்றுக்கொள்றேன். மண் அள்ளித் தூற்றுவார் தூற்றட்டும். சேற்றினை வீசி எறிவார் எறியட்டும். கடமையைச் செய்யுங்கள். மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் வரவேண்டும். தாமதம் விரும்பத்தக்கதல்ல. எனது தொகுதி ஒன்றை விரைவில் மல்லிகை யூடாக எதிர்பார்க்கின்றேன்.
தங்களுக்கு எனது மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்தை முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன். முதுமையை விரட்டி முழுமையைப் பிரசவியுங்கள்.
நந்தி, ஆகியோரினது இழப்புகள் பாரியவை.
செம்பியன் செல்வன்
குறிப்பாக நந்தி என்னை நேசித்தவர்,
68
மல்லிகையில் நிறைய எழுதியவர். எனது மருத்துவ ஊக்கி. இலக்கிய ஆசான்.
- ச. முருகானந்தன்
(இந்த இதழில்
முஸ்லிம் சகோதரர்களின் ஆக்கங்கள்
இடம்
பெற்றிருப்பது தற்செயலான சம்பவம்
கூடியளவு
பெரும்பான்மையாக
தான். திட்டமிட்டுச் செய்யப்பட்ட தொன்றல்ல. தேசம் பூரவுமிருந்து முஸ்லிம் சகோதரர்களின் ஏராளமான படைப்புகள் வாரா வாரம் எமக்கு வருகின்றன. மகிழ்ச்சியாக இருக் கிறது. ஒரு பத்திரிகை எனது சொற் பொழிவைத் தவறாகத் திரித்துப் போட்டிருந்தது. நான் அக்கூட்டத்தில் தெரிவித்திருந்த கருத்து இதுதான். "யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தொன்று தொட்டே பரம்பரை பரம்பரையாகத் தமிழை உயிர் வளர்த்து வரு அது இயல்பானதே. சிங்கள மக்களால் சூழப்
போலக் காத்து, கின்றனர். ஆனால், பட்டுள்ள கிராமங்களில் இருந்து முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று நவீன தமிழுக்கு ஜீவ இரத்தம் பாய்ச்சி அதை வளர்த்து வரு கின்றனரே. அது தமிழுக்குப் புது வரவு. மல்லிகைக்கும் இதில் பெரும் பங்குண்டு!' இவைதான் எனது சொற்பொழிவின் சாரம்.)
- ஆசிரியர்

eے مستحصے
- ශඋqගිණී හීමq
இலங்கை பாராளுமன்றத்தில் உங்களையும், மல்லிகையின் சாதனைகளையும் விதந்து பாராட்டப்பட்டதாகவும் அது நாடாளுமன்றப் பதிவேடான “ஹன்ஸார்ட்"டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறேன். பேரினவாதம் தலை தூக்கி, ஆழிக் கூத்தாடி வரும் இந்தக் காலகட்டத்தில் நமது நாட்டில் அது எவ்வாறு சாத்தியமானது? மல்லிகையின் பெறுமதியை யார் எடுத்துரைத்தவர்? அந்தப் பெருமகனின் நாமத்தை நாம், வாசகப் பெருமக்கள் தெரிந்து கொள்ளலாமல்லவா?
அனுராதபுரம். crciu. CucribóláJulio
ဒွိ த நன்றிக்குமுரிய கெளரவ ஏ.எச்.எம். அ ஹாஜியார்தான் இதற்கு முழுமுதற் காரணம். அவர் சென்ற யு.என்.பி. அரசாங்ககாலத்தில் மிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகக் கடமையாற்றினார். இன்று பல கலைஞர்கள்
லாபூஷணம் எனப் பெருமையுடன் நடமாடி வருகின்றனரே அவர்கள் அத்தனை பேர்களையும் அன்புடன் அரவனைத்து அவர்களுக்கொரு சமூக அந்தஸ்தை g6g நீல்கியவரே இந்த அஸ்வர் ஹாஜியார் தான். அவரிடம் அன்றைய நிகழ்வை எழுத்தில் திவு செய்து தரும் வண்ணம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் எனது ஆவல் நிறைவேறும். வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வல்லவா, அது
Xa ஞான பீடப் பரிசு பெற்றவரான எழுத்தாளர் ஜெயகாந்தன் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இன்று காட்சி தருகின்றாரே, அப்படியானவரை மல்லிகையும், நீங்களும் இத்தனை அளவுக்குத் தூக்கிப் பிடிப்பது விரும்பத்தக்கதுதானா?
தெவறிவளை. éř. acrée.Jěr
69

Page 37
ன். மல்லிகை ஆசிரியர், வாய்ந்த பொது மனிதன். எனது பட்ட விருப்புவெறுப்புகள் மல்லிகை இடம் பெறக் கடாது என்பதில் வெகு
வரலாற்றுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்.
சென்ற தடவை தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் மகனுடைய திருமணத்திற்கு நான் தமிழகம் சென்றிருந்த சமயம், நண்பர் ஜெயகாந்தன் இல்லம் சென்று அவரைச் *ந்தித்தேன். உள்ளே, சென்று அவரது மூத்த மகளைக் கன் டு பேசினேன். கவனம், கவனம் இந்தத் தேசத்தின் மா சொத்து அவர். தமிழின் சொத்து. வரது உடல்நலன்களைக் கவனமாகப் ଘେର୍ଡା பாதுகாப்பது உங்களது கடமை svrši Glasomeosě விட்டு வந்தவன், நான். 1றை நீங்கள் அவதானிக்க வேண்டும். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அகில இந்தியாவிலும் பிரசித்தி பெற்ற ஞானபீடப் பரிசைத் தமிழுக்கு இந்த முறை பெற்றுத்
நதவா அவா.
அவரது கருத்துக்கள் எப்படியும் இருக்கட்டும். அவர் தமிழுக்கு, அதுவும் படைப்பிலக்கியத்திற்குப் பெற்றுத் தந்துள்ள ந்தப் பெறுமதி மிக்க சாதனைக்காக நாம் வரைப் பாராட்டுவது போற்றவது சரியா * தப்பா? சொல்லை விட்டு விடுங்கள். செயலைப் பாருங்கள் :
凶 காஞ்சி
சின்னவா எதிர்காலம் எப்படி இருக்கப்
மடம் பெரிய வா -
போகிறது?
70
எம். திவ்வியநாதன்
அரோகரா!
凶 சென்ற ஜூன் மாத இதழில் 'தமிழ் மொழியைச் செம்மொழியாக இந்திய அரசு அங்கீகரித்தன் பின்னணி பற்றிக் கேள்வி க்குப் பதில் சொன்ன பாங்கைப் படித்துப் படித்துச் சுவைத்து ரசித்தேன். அப்படியே பிரமித்துப் போய்விட்டேன். இத்தனை ஆழமான அறிவுத் தேடல் முயற்சி கொண்டவர்தான் நீங்கள் எனப் புரிந்து கொண்டபோது, முன் எப்பொழுதிலும் பார்க்க இப்போது உங்கள் மீது தனி அபி மானம் ஏற்படுகின்றது. இத்தனையையும்
படித்து வைத்திருப்பவர்தானா நீங்கள்? errcusé0erf. எஸ்.சரவணன்
8 எழுத்தாளன்ை விட், ஒரு சஞ்சிகை
災 என் மிகப் பொறுப்பு வாய்ந்தவன். விஞ்ஞானியைப் போல, புதுசு புதுசாக அவன் சிந்தித்துச் சிந்தித்துப் படித்துப் படித்து, வாசகர்களுக்குத் தீனி போட்டுக் கொண்டேயிருக்க (866фот (Бо. சென்ற இதழை மட்டுமல்ல, கடந்த மாதங்களில் வெளிவந்த மல்லிகை இதழ்கள் உங்கள் கைவசம் இருந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருந்து தூண்டில் பக்கங்களைப் படித்துப் பாருங்கள். இன்னும் புதிய அறிவுத் தகவல்களைப் பெற்றுக் கொள்வீர்கள்
தமிழ்ச் சஞ்சிகைகள் ஐம்பது அறுபது இலட்சம் என விற்பனையாகும் புள்ளி விபரங்களைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இந்தப் பெரும் சந்தை வளர்ச்சி பற்றி என்ன
இலட்சம்,
கருதுகிறீர்கள்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம். காந்தன்
யும் இளந்தலைமுறையினருக்குக் காட்டிக் காட்டிப் பணம் பண்ணுவதில்தான் இந்த இலட்ச விற்பனவுகள் போட்டி போடு கின்றன. இது ஆரோக்கியமான வளர்ச்சி
புல்ல, எதிர்காலத்திற்கு
கொழும்புக் கம்பன் கழகத்தில் அடிக்கடி உங்கள் தலை தெரிகிறதே, அக் கழகக் பாடுண்டா, உங்களுக்கு?
கருத்துக்களில் உடன்
வத்தளை. மு. கதிரேசன்
8. கொழும்பு மாத்திரமல்ல, நல்லூர்க் கம்பன் கழகத்திலும் என் தலை அடிக்கடி தென்பட்டது. அந்தக் காலத்தில், எனது இலக்கிய ஆசான்களான ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் காட்டிச் சென்ற வழி இது. இந்தத் தடவை நடந்த கம்பன் விழா, விழாக்களுக்கெல்லாம் உச்சம். அதிலும் திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனங்களுக் கிடையியே உச்சக்கட்ட குரோத உணர்வு கொப்பளித்துக் கொண்டிருந்த சூழ்நிலை யில், சிங்களப் பாடகி நந்தா மாலினியைக் கெளரவித்ததுடன், விருது கொடுக்கும் சமயம் சபையோர் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்த காட்சி வரலாற்றில் மறக்க (piņu. Tgs 60). இச்சாதனை ஒன்றுக்காகவே கம்பன் கழகத்
சமீப காலங்களாகப் படைப்பாளி
களில் பலரைத் தொட்டம் தொட்டமாக இழந்து போய் விடுகிறோமே, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
O CAUGGG OG
w భ மூப்பும் கிட்டக் கிட்ட காவோலைகள் வீழ்ந்து போவதுதான் நியதி. மனதார இவர்களது இழப்பை நினைத்து வருந்தி னாலும், குருத்தோலைகளின் விக்கம் ஆற்றலும் இறந்து போனவர்கள் குருத்
தோலைகளாக இருந்து ெ (&tar 6 då காண இயலs ಭನ್ತ ஏக்கம் எனது அடி நினைவில் நிழலாட்ா மலும் இல்லை. வளர்ந்து வரும் இளசுகள் தான் நாம் இழந்துள்ள இடங்களை நிரப்ப வல்லவர்கள். 强ரப்புவார்கள்,
>< நவீன சாதனங்களின் வளர்ச்சி பற்றி இன்று நீங்கள் என்ன கருது கிறீர்கள்?
ιρευταυτπά. எஸ்.தயாழினி
A இந்த அகர வளர்ச்சிகளைப் பார் 6Tsotschassisterior பயமாகத்தானிருக்கிறது. தொடர்ந்து ශූuái ய்க் கொண்டேயிருந்தால் முடிவில் மனிதகுலம் அம்பு - வில்லை நாட வே வந்து விடுமோ என அச்சப்படுகிறேன்: ஜ
xx நான் மாணவன். சந்தா செலுத்த எனக்கு மொத்தமாகப் பணம் இருக்க மாட்டாது. மல்லிகையை நான் ஒழுங் காகப் பெற்றுக் கொள்ள என்ன செய்ய 636au6ाGSub?
Gasvry" Lurruu. assy-Trrogenbarreir
71

Page 38
யில் இலவசமாகத் தொடர்ந்து அனுப்பு இயலாது ஒன்றை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். ரூபா 4.50 சதத் தபால் தலைகளில் «Ջեֆi எமது மு #ళ్ల அனுப்பினால் தனி :
இப்பொழுதெல்லாம் இலக்கியக் கூட்டங்களில் உங்களைக் காண முடிய வில்லையே, என்ன காரணம்?
வெள்ளவத்தை. எஸ்.மகேந்திரன்
முடிந்து நான் தங்கியிருக்கும் شاہانہ ہچکچی வீடு வந்த சேரப்பஸ் வசதி ரொம்பவும் குறை இiாக இருப்பதன் காரணத்தால் திரும்ப ஆட்டோவில் வந்து சேர 250 El jfr css வழிக்க வேண்டியுள்ளது. மல்லிகைக்கு இது கட்டுப்படியாகாது. ឃ្លb முன்னர் போல நான் ஓடி ஆடித் திரிந்து பழகும் வயதைக் கடந்துகொண்டிருப்பவன். எனவே பாதுகாப்பும் தேவைப்படுகிறது. தற்செயலாக எங்காவது விழுந்து காயப்பட்டுப் படுக்கை யில் கிடந்து விட்டால் அது மல்லிகைக்குத் தான் நஷ்டம். எனவே இப்பொழுது பொறுப் புன் சிந்தித்துச் செயற்பட்டுத் தினசரி
凶 உங்களது சுயசரிதை ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாக வெளிவந்துள்ளது பெரிய சாதனைகளில் ஒன்று. இந்த யோசனை எப்படித் தோன்றியது?
கொக்குவில், கா.நே.சேந்திரன்
* அவுஸ்திரேலியாவிலுள்ள இலக்கிய நண்பரான கந்தையா குமாரசாமி seõst எனது சுயசரிதை நூலான எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் தமிழ் BASo6v ஆங்கிலப்படுத்த விரும்பி, அதை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உதவி
தமிழில் வெளிவந்த பிரபல
褒 38ᏱᏯ88 భ.::
ΣΚ. அட்டைப்படத் தேர்வை எந்த
வகையில் நிர்ணயிக்கிறீர்கள்?
புத்தளம்.
இலக்கிய அநுபவமுதிர்ச்சியை முதன்மை யாகக் கொண்ட பல ஆ நம ர்த்திகமான நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ல் முடிவெடுத்து அட்டையில் பதிப்
ఖడ్ట్యౌఃఖళ్ల 図 மல்லிகை ஆரம்பித்த காலத்தி லிருந்த வாசகர்களுக்கும், இன்றைய வாசகர்களுக்குமிடையே உள்ள வேறு பாடுகளைக் கூற இயலுமா?
மிருசுவில். எஸ்.தருமராஜா
இ8 ஆரம்ப பால மல்லிகை வாசகர்கள்
என் மீது கொண்ட அபிமானத்தால் மல்லி கையை ஆதரித்தனர். இன் று போட்டி அதிகரித்துக் கொண்டு வருகிறது.நவீன சாதனங்களின் வரவு வேறு. எனவே புதுமை யையும் தரத்தையும் எதிர்பார்க்கின்றனர்.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கோழும்பு
13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும்
வெளியீட்டாவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

mitm
புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள், இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
ܠ ܐ
3. சாஹித்திய புத்தக இல்லம் இல. 15, குருநாகல் றோட், பஸ்நிலையம், புத்தளம். தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 39
|RESHMAMITATIO
Bangles, Chains Ear Tops, Guarant
ஜே &almaan
H%llySanthosh PlaZ 1S FO
229-1/14, Mai
Colombo
Te: O11 2. Hot Line - O77
 
 
 
 

July 2005
H
NEVELERIS
, Necklaces, eed Items Etc.
シ
స్టో
&RS ଝୁଣ୍ଟୀ പ്പ*
(rading
#3 a Complex Or, もくミ江。 n Street, - 11. 39.4512
" 666 1336