கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.02

Page 1
நோக்கி.
 
 


Page 2
POOBALASNIGHAM
BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head office: Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colomb906,Srila:
Fax : 2337313 4A, Hospital Road,
E-mail: pbdhoG)sitnet.Ik Bus Stand, Jaffna.
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள். நூல் வெளியீடிடாளர்கள்
reo6060DD 3 6өрөт: இல, 202, 340 செடியார் தெரு, இல. 309 A-23. காலி வீதி, 66Ipbl lം Georീഞ്ഞം 66T്യbL, O6. Seoൻഞ്ഞ 6gT. GBL 2422T32|| 6gT. GBL. 4-5||O773
தொ நகல் 23373l3 1Ó)eðrGorésseð * pbdho@sitnet.lk இல. AA, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பானம்,
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவர்’
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, sv. Più sono as : ğ Mr -- Try to sist på 9 6io மாத்திரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற a tu lip to Si iát át, s s tb. i. su Lb இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப் பெற்ற சஞ்சிகை மல்லிகை. இதனை இலங்கை நாடாளுமன்றப் பதிவேடான ஆறன்ஸ்ார்ட் பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது.
41 - வது ஆண்டை நோக்கி. பெப்ரவரி &
322
ർഡ് ീge !
படைப்பாளிகளின்
புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201-1/4, Sri Kathiresan Street, Colombo. 13. Te 232O72
(-|-ബa് ഉൺഡ്ര ഗ്രങ്ങ
நாற்பத்தோராவது ஆண்டு மலரை பலரும் விரும்பிப் படித்து முடித்திருப் பீர்கள்.
கடந்த காலங்களில் சுவைஞர் களாகிய நீங்கள் மல்லிகை வெளியிட்டு வைத்துள்ள பல்வேறு மலர்களையும் கருத்தூன்றிப் படித்திருப்பீர்கள்.
ஆனால், இந்த மலரை வெளியிடு வதில் நமக்கு இடையிடையே சில சில சிரமங்கள் குறுக்கீடு செய்தன. அத் துடன் தேசத்தில் ஏற்பட்டிருந்த யுத்த காலப் பருவ நிலை சாதாரண பொது மக்களைப் போலவே எம்மையும் பய முறுத்தி அசர வைத்து விட்டது.
அத்துடன், கணினி அமைப்பில் |ஏற் பட்ட நெருக்கடி, கலண்டர், டயரி போன்ற புத்தாண்டு வரவுகளால் அச்ச கத்தில் ஏற்பட்ட சுணக்கம் போன்றவை எம்மை இடையிடையே தவிக்க |வைத்துவிட்டது என்னமோ உண்மை தான். இருந்தும் சமாளித்து விட்டோம்.
இதன் காரணமாகவே இவ்வாண்டு மலர் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் தாமதமாகவே வந்தது. இருந்தும் தர |மான இலக்கியச் சுவைஞர்கள் இவை ஒன்றையும் பொருட்படுத்தாமல் மல்லி |கையை ஆதரித்தனர். மல்லிகை அபி மானிகள் தொடர்ந்தும் காட்டிவரும் அபிமானத்திற்கு என்றுமே நன்றியுடை |யவராகவுள்ளோம்.
|- ஆசிரியர்

Page 3
៣២៣n uffiញចារិ
IphIn
- டொமினிக் ஜீவா
ஒருநாள் சாயங்காலம்,
பொழுது படுவதற்கான அறிகுறிகள் தென் படும் நேரம். நான் வெள்ளவத்தையில் காலி விதியால் நடந்து வந்துகொண்டிருந்தேன். பஸ் பிடித்து மல்லிகைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டுமென்ற பரபரப்பு என்னுள்.
மில்லர்ஸ் பாலச்சந்திரன்
சொல்லாமல் கொள்ளாமல் அந்த நேரம் பார்த்துத் திடீர் மழை பிடித்துக் கொண்டக. மமைக் ங்க நினைத்து வீதியோரமுள்ள கடைப் படிக்கட்டில் து ழககு ஒது Cip ஒரு g |ஏறி நின்று கொண்டிருந்தேன். என்னை அண்மித்த ஒருவர் குடை பிடித்த வண்ணம் |நெருங்கி வந்து, "நீங்கள் தானே, மல்லிகை ஜீவா? எனக் கேட்டு விட்டு, மழைத்துளி என் மீது பொழிவதைத் தடுத்து, என் மீது மழைத் தண்ணீர் பட்டுவிடாது குடையைச் சாய்த்து, குடை மூலம் எனக்கு பாதுகாப்புத் தந்தார்.
“நான் மல்லிகையின் யாழ்ப்பாண ரசிகன். பொதுவா உங்கட பரம ரசிகன்!” எனச் சொல்லி விட்டு, இணக்க முகபாவம் காட்டிச் சிரித்தபடி நின்றார். நன்றாகப்
(p டிச சாததபடி நானற (D பழுத்துக் கனிந்த செம்பாட்டு மாம்பழத்தைப் போன்ற 6t க தேஹஸ் ழுதது நத ழததை அவரது மு தஜ எனக்கு அப்போதே பிடித்துப்போய் விட்டது.
H அவர்தான் மில்லர்ஸ் பாலச்சந்திரன் என்பவர். இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் மறைந்தோடி விட்டன.
இதன் இடைக்காலத்தில் மல்லிகை மலர்களில் இவரது கம்பெனி விளம்பரமாக முழுப் பக்க விளம்பரங்கள் தலை காட்டத் தொடங்கி விட்டன. தனது கம்பெனி விளம்பரத்தை மாத்திரமல்ல, தனது செல்வாக்குக்குட்பட்ட நிறுவனங்களின்
ததை து குககு pl விளம்பரங்களையும் பின்னர் இவர் மல்லிகைக்குச் சேகரித்துத் தந்துதவினார்.
պ கககு 25 555 ரம்ப காலகட்டங்களில் நான் மல்லிகைக்கு விளம்பரம் சேகரிப்பதற்குப்
@ பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மில்லர்ஸ் விளம்பரம் மல்லிகையில் வெளி வந்ததை அவதானித்த பலர், இந்த விளம்பரம் மல்லிகைக்கு எப்படிக் கிடைத்தது? என வியப்புத் தெரிவித்ததுமுண்டு.
இலங்கையில் வெளிவரும் அத்தனை நூல்களையும் தேடித் தேடி விலை கொடுத்து வாங்கி, உடனுக்குடன் வாசித்து ரசித்துச் சுவை மகிம்பவர் இவர்.
தது னுககு த
 

ஜெனீவAப் பேச்சு வWத்தைகள் செAலலெனக் கற்டப்படும் முக்களுக்கு விடிவு தருவதாக அமைய வேண்டும்.
ஜெனிவாவில் இம்மாத இறுதியில் இரண்டு நாட்களாக நடை பெறவுள்ள பேச்சு வார்த்தையை இந்த நாட்டு மக்கள் மாத்திர மல்ல, சர்வ உலகத்தில் வாழ்ந்து வரும் பெரும்பான்மையான மக்களும் வெகு வெகு ஆவலாக அவதானிக்கக் காத்திருக்கின்றனர்.
கடந்த காலங்களில் ܕܝܐܗ̄ நமது நாட்டு இனப்பிரச்சினை சம்பந்தமாக பல கட்டங்களில், பல மட்டங்களில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுத்தான் வந்துள்ளன. தீர்வைத் தேடும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள் இப்பேச்சு வார்த்தைகளின் பெறுபேறாக எந்த விதமான மனத் திருப்தியையும் அடைந்ததாகத் தெரியவில்லை.
எனவே, சமாதானப் பேச்சு, சர்வதேச மட்டத்தில் என்பதை எண்ணிப் பார்க்கும் இந்த வேளைகளில் கூட, இந்த ஜெனிவாப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தும், மீண்டும் மீண்டும் பேச்சு வார்த்தைகள் தொடருமோ எனச் சாதாரணப் பொதுமக்கள் நியாயமாகவே அச்சத்தின் விழிம்பில் இன்று நின்று கொண்டு, செய்வது என்னவென்று தெரியாமல் அல்லாடிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த இனப் பிரச்சினை நெருக்கடிகளால் முழு நாடும், இந்தத் தேசத்தில் வாழும் சகல இன மக்களும், இதுவரையும் எக்கச்சக்கமான அளவில் விலை கொடுத்து வந்துள்ளனர்.
இனிமேலும் இந்தத் துரதிர்ஷ்டமான சூழ்நிலை தொடர்ந்தால் முழு நாட்டு மக்களுமே செயலிழந்து, அதைரியப்பட்டுப் போவார்கள்.
இன்னும் இன்னும் நம்புகின்றோம். பெரும்பாலான பாமர மக்களும் மனதார எண்ணுகின்றனர். எப்படியும் இந்த ஜெனீவாப் பேச்சு வார்த்தைகள் நிச்சயமாக ஒரு சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்துமென்று.
நம்பிக்கையுடன் பொறுத்திருப்போம்.

Page 4
அEடைற்டற்
கிழக்கு முஸ்லிம்களின் பேச்சு மொழியின் காவலன் எஸ். முத்துமீரன்
- இளைய அப்துல்லாவற்
"கிக்கக் கனிய என்ற சிறுகதையின் தலைப்பு என்னை வெகுவாக கவர்ந் திருந்தது. எஸ்.முத்துமீரானை முதன்முதலாக இதில் இருந்துதான் அறிகிறேன். |கிழக்கிலங்கை பேச்சு மொழி ஒரு அற்புதமானது. சில இடங்களில் தமிழரும் முஸ்லிம்களும் ஒரே அரபு' பதத்தை உபயோகிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு "மகரிக்கு வாறன்’ என்பது “மஃரிபுக்கு வருகிறேன்". மஃரிபு என்பது முஸ்லிம்களின் 4ஆவது தொழுகை நேரம் 'கருக்கல்" பொழுது. |கிழக்கிலங்கை முஸ்லிம்களின் மண்வாசனைச் சொற்களின் செழுமையை முதன்முதலாக பேசும் பொழுது கேட்டு எனது காது குளிர்ந்தது எஸ்.எல். எம்.ஹனிபாவோடுதான். மேடைகளிலும், பொதுவாகவும் பேசும் பொழுது மட்டக்களப்பு தமிழில் சுவைபடப் பேசுவார், அவர். அது வலு சுவையாக இருக்கும்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் மண் வளத்துடன் கூடிய சுவையான சொற்களை வானொலி நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டு இருப்பவர் எஸ்.முத்துமீரான்.
|வெகு லாவகமாகவே மீரானின் கதைகளில் இந்த பேச்சு மொழி நிறைந்து கிடக்கும். அற்புதமாக உள்வாங்கி பதிப்பிக்கும் திறன் அவரிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது.
அவருடன் பேசும் பொழுது எப்பொழுதும் தனது கருத்தை தெளிவுபடச் சொல்வார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
4

முத்து மீரானின் வானொலி நாடகத்துறை
நீண்டவை.
அனுபவங்கள்
1958ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் திகதி இவருடைய சரித்திர நாடகமாகிய 'காதலும் கருணையும்’ இலங்கை வானொலியில் ஒலிபரப் |பானது. அதன் தயாரிப்பாளர் சானா அவர்கள்.
சுமார் 47 வருடத்துக்கு முன்பி ருந்தே இலக்கியம் படைக்க ஆரம் இன்று வரை எழுதிக்
உண்மையில்
பித்தவர்,
கொண் க்கிறார்.
டிருககற
நான் பிரமித்துப் போகிறேன்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, தமிழ் சேவைகளில் மீரா னுடைய 200க்கு மேற்பட்ட நாட கங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இது ஒரு பெருமுயற்சிதான்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் |பேச்சு மொழியை வானொலியில் அறிமுகப்படுத்தியவர்களில் முத்து மீரானுக்கு முதன்மை இடம் உண்டு.
2001ம் ஆண்டு "மானிடம் சாக வில்லை’ என்ற தலைப்பில் நாடகத் |தொகுதி ஒன்றை வெளியிட்டார். சிறந்த நாடக நூலுக்கான இலங்கை இலக்கியப் பேரவை"யின் பரிசு இத் தொகுதிக்கு கிடைத்தது.
எஸ்.மு.வினுடைய சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மனதால்
5
சுவைத்து வாசிப்பேன். அண்மையில் நான் படித்தது - சுனாமி பற்றியது. 'டேய், காக்காடா' என்பது அதன் தலைப்பு. கிழக்கிலங்கை முஸ்லிம் களின் வாழ்வியலைத் தரிசிக்க விரும்புவோர். மீரானுடைய சிறு |கதைகளை படித்து அந்த தரிசனத்தை |பெறலாம். அந்த அளவிற்கு தன் கிரா மத்தையும், அங்கு வாழும் மக்களை |யும், அவர்களின் வாழ்வியலையும் சிறுகதைகளில் எழுதி அழுத்தம் கொடுத்துள்ளார்.
தன்னை ஒரு கிராமத்தான் என்று |சொல்வதைப் பெருமையாகச் சொல்லுவார்.
|எப்பொழுதும் இவருடைய கதை களில் மானுட நேயம், மானுட கரி சனம் மிகுந்து இருக்கும். நிஜமான பிரச்சினைக்குரிய மாந்தர்கள் முத்து மீரானின் கதைகளில் வருபவர்கள்.
1991ம் ஆண்டு 'முத்துமீரான் ܚܖ சிறுகதைகள்’ என்ற தலைப்பில் முதற் சிறுகதைத் தொகுதியை வெளி |யிட்டார். 'மானிடம் உயிர் வாழ்கிறது’ சிறுகதைத் தொகுதி இந்த வருடம் வெளியாகி இருக்கிறது.
முத்துமீரானுக்கு ஆற அமர இருந்து எழுத இவ்வளவு நேரம் கிடைக்கிறதா? என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு.

Page 5
சிறுகதை, கவிதை,
நாடகம், உரைச்சித்திரம், உருவகக் கதை, நாட்டாரியல், பழமொழிகள் என்று தனது வாழ்வில் மிக அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.
முத்துமீரான் ஒரு நல்ல கவிஞரு மாவார்.
போரின் அவலங்கள், அதனால் ஏற்பட்ட தமிழ் - முஸ்லிம் விரிசல், துயரங்கள் என்பனவும் ‘காதல்" கவிதைகளும் இவர் படைத்ததில் வீரியமுள்ளவை.
சுரண்டலுக்கு எதிரான கலகக் குரலாக முத்துமீரானின் குரல் ஓங்கி ஒலிக்கும். அது முஸ்லிம் தனவந்தர் மார், மெளலானா மார், பள்ளி நிர்வாகிகள், மெளலவிமார் என்று பேதம் பார்க்காது. 1993இல் முதல் கவிதைத் தொகுதியும் 2005இல் இரண்டாவது தொகுப்பும் வெளி
வந்திருக்கிறது.
'உருவகக் கதை" எழுதும் முறை இப்பொழுது அருகி வருகிறது. இலங்கையில் உருவகக் கதைக்கு செழுமை சேர்த்தவர்கள் சு.வே. எஸ். பொ., எம். ஏ. ரஹ்மான், செம்பியன் செல்வன், ரூபராணி
ஜோசப் போன்றவர்கள்.
முத்து மீரானின் உருவகக் கதை
களை படித்திருக்கிறேன். அற்புத மானவை. தனித்துவம் நிறைந்த
நடையும், தத்துவார்த்த எண்ணக் கருத்துக்களும் கொண்டவையாக இருக்கும். 1982இல் ‘உருவகக் கதை" களின் முதலாவது தொகுதியை வெளியிட்டார். 1999ம் ஆண்டு இயற்கை தொகுதியை வெளி யிட்டார். இது அவரது இரண்டாவது உருவகக் கதைகளின் தொகுப்பு. இதற்கு அரச கரும மொழிகள் திணைக்கள விருது 2000ம் ஆண்டு கிடைத்தது.
இலங்கையில் உள்ள நாட்டார் இலக்கிய ஆய்வாளர்களில் முத்து மீரான் குறிப்பிடத்தக்கவராவர்.
அழிந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் நாட்டார் இலக்கியங் களைத் தேடியெடுத்து கள ஆய்வு செய்து பதிப்பித்திருக்கிறார்.
இவருடைய நாட்டார் இலக்கிய ஆய்வுகள் தென் இந்திய பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆய்வுகளுக்காகப் பயன்படுவதாக அறிகிறேன்.
1991ம் ஆண்டு "கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவிய முதம்', கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் இந்த வருடம் இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழ
1997ம் ஆண்டு "கிழக்
மொழிகள்" என்ற மூன்று நாட்டார் இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்

கின்றன. இவருடைய ஆய்வு நூல்கள் பெரும் பயனுடையவை.
'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்’ என்ற ஆய்வு நூலுக்கு 1997ம் ஆண்டிற்கான வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.
'இலங்கை கிராமத்து முஸ்லிம் களின் தாலாட்டு’ எனும் நூல் இந்த வருடம் வெளிவர இருப்பதாக முத்து மீரான் தெரிவித்தார்.
முத்து மீரானுடன் பேசும் பொழுது தனது கிராமத்து முஸ்லிம் கள், ஏழை மக்கள், அவர்களின் வாழ்வியல் பற்றியே பேசுவார். இது அவருடனான ஈர்ப்பை என்னுள் உண்டாக்கியது.
நிந்தவூரான்", "லத்திபா முத்து மீரான்', ‘நிந்தன்', 'முத்து" போன்ற |புனைபெயர்களுக்கு சொந்தக்காரர் முத்துமீரான்.
|யில் 'என் பிரியத்தைப் பெற்ற பிற
S மொழிச் சிறுகதைகள்’ என்ற தலைப் |பில் தொடர்ச்சியாக எழுதி வந்தவர்
மீரான்.
தாஜூல் அதீப் (முஸ்லிம் கலாச் சார அமைச்சு 1994), கலாபூஷணம் (கலாச்சார அமைச்சு 1998), தமிழ்
மணி (இஸ்லாமிய தமிழ் இலக்கிய |விழா - இந்தியாவில் 1998), கவிக்
குரிசில் (சமாதான சஞ்சிகை குழு
1999), இலக்கிய திலகம் (தென் |கிழக்கு கலாச்சார பேரவை 2000ம் ஆண்டு)
இப்படி பல பட்டங்களைப் பெற்றும் மீரான் தனது பெயருக்கு முன்னால் எதனையுமே கொழுவாது நிற்பது உண்மையில் எனக்கு பெரு மதிப்பை ஏற்படுத்துகிறது.
தொழில் ரீதியாக ஒரு சட்டத் தரணி முத்துமீரான். ஆனால் சிக்க லான பல வழக்குகளுக்கு ஆதாரங் களை தேடிக்கொண்டே இவ்வளவு இலக்கியம் படைக்கிறார் என்பது சாதனைதான்.
S.
SSRS
":
N amic.
50இற்கு மேற்பட்ட சிறுகதை களை ஆங்கிலத்தில் இருந்து மொழி ... |பெயர்த்து 'தினகரன் வார மஞ்சரி? ...
SSSSS SS શૈો ပျဲ

Page 6
ஒவ்வொரு மொழியிலும் எழுத்து இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே நாட்டார் பாடல்களின் கதை களம் தோன்றத் தொடங்கி விட்டன. அவை
வாழ்க்கை அநுபவங்களை நேரடியாக எடுத்துக் கூறுகின்றனவையாகவும், வாழ்க்கை அநுபவத்தை பின்னணியாகக் கொண்டு புராண இதிகாச கதை
களாகவும், கூத்துகளாவும் பல வடிவங்களில் அமைத்துக் காணப்படுகின்றன.
எழுத்து இலக்கியம் என்பது இவ்விலக்கியத்தின் அடியாகத் தோன்றிப் பின்னர் இதனின்றும் பிரிந்து விட்டது. அவை தேக்கம் ஏற்பட்ட காலங்களிலெல்லாம் நாட்டார் இலக்கியத்தின் துணை கொண்டு ஜீவசத்து பெற்று வந்திருப்பதனை இலக்கிய வரலாறு உணர்த்தி நிற்கின்றது.
மலையக நாட்டார் வழக்காற்றியல்
பற்றிய தேடல்
மனித குலத்தின் தலை சிறந்த படைப்புகள் யாவும் சாதாரண மக்கள் சாதிகளால் உருவாக்கப்பட்டவையே. அவ்வகையில் எழுத்தறிவு கிடைக்கப் பெறாத மக்களிடையே செவி வழி யாக வளர்ச்சி பெற்று வந்தவையே நாட்டார் இலக்கியம் என்றழைக்கப் படுகின்றது. இதனுடன் இணைந்த சகல கூறுகளும் நாட்டார் வழக்காற்று என்றழைக்கப்படுகின்றன.
மலையக நாட்டார் வழக்காற் றியல் என்பது மலையக மக்களின் வாழ்க்கையையும், பண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு முகிழ்ந்த நாட்டார் வழக்காற்றியல் துறை யாகும். மலையக சமூகவமைப்பானது
தென்னிந்திய தமிழ் கிராமப் பின்
- லெனின் மதிவானம்
னணியை அடிப்படையாகக் கொண் டெழுந்தது என்ற போதிலும் அவை புதிய வாழ்க்கை சூழல், உற்பத்தி முறை, உற்பத்தி உறவு என்பனவற் றுக்கு ஏற்ப புதிய பரிணாமத்தை அடைந்துள்ளமையை மலையக நாட் டார் வழக்காற்றியலை நுண்ணயத் துடன் நோக்குகின்ற போது அறிய முடிகின்றது. ஒர் உதாரணத்திற்காக பின்வரும் பாடலை நோக்குவோம்.
“ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்த தாயே நாமறந்தேன்"
"பாதையிலே வீடிருக்க பழனிச் சம்பா சோறிருக்க

எருமே தயிரிருக்க ஏன்டி வந்தே கண்டிச் சீமை?”
என்ற வரிகள் தாயக நினைவு களை மீட்பதாக மட்டுமல்லாது, தாம் வாழ்ந்த வாழ்க்கை முறையையும் எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் ஒர் நிலவுடமை சமூகவமைப்பில் விவசாயிகளாக கட்டுண்டு கிடந்த இம்மக்கள் விவசாய வர்க்கத்திற்குரிய குணாதியங்களையும், உணர்வுகளை யும் கொண்டிருந்தனர் என்பதை இவற்றினூடாக அறியக் கூடியதாக உள்ளன. பிறந்த மண்ணைத் துறந்து, புகுந்த மண்ணில் தம் வாழ்க்கையை அமைத்த போது அவர்களின் உணர்வு கள் இவ்வாறு பிரவாகம் கொண்டன.
"கூனி அடிச்ச மலை கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனைத் தோத்த மலை அந்தா தெரியுதடி"
"அந்தனா தோட்டமினு ஆசையா தானிருந்தேன் ஒரமூட்டத் தூக்கச் சொல்லி ஒதைக்கிறாரே கண்டாக்கையா'
இவ்வாறு மலையக மக்களின் வேதனை மிக்க வாழ்க்கை முறை களையும் ஒரு முதலாளித்துவ சமூகவ மைப்பில் தமது உழைப்பை சுதந்திர |மாக விற்க கூடிய தொழிலாளர் வர்க்கமாக இவர்கள் புதிய வர்க்கத் தன்மை பெறுவதனையும் இவ்வரி
களின் ஊடாக காணக் கூடியதாக
உள்ளன.
அவ்வகையில் மலையக நாட்டார் வழக்காற்றியலும் தனித்துறையாகவே அமைந்து காணப்படுகின்றது.
'ஒன்றுக்கொன்று எதிரான பகைமை வர்க்கங்களாகச் சமுதாயம் பிரிக்கப்பட்ட பின், மக்களின் வர லாறு என்பது அநீதி, சுரண்டல் என்ப தற்கெதிரான போராட்டம், எதிர்ப்பு என்பனவற்றின் வரலாறாகி விட்டது. வர்க்க சமுதாயத்தில் அதிகார பூர்வ மாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடப் புத்தகங்கள் எவ்விதச் சுவட்டையும் (Trace) கொண்டிருப்பதில்லை. அப்படி ஏதேனும் சுவட்டை (தடயம்) கொண்டிருப்பின், அது போராட்டத் தின் மிக மிகச் சிறு சுவட்டையே கொண்டிருக்கும்." (தே.லூர்து - 1995 - 46)
உழைக்கும் மக்கள் திரளினரின் நல்வாழ்வுக்கான போராட்டத்தினை முன்னெடுக்கின்ற போது, அம்மக் களின் கனவுகள், இலக்கியங்கள், விருப்பு வெறுப்புகள், அவர் தம் உறுதிப்பாடு என்பன குறித்த தேடல் அவசியமாகின்றன. இவற்றினை நாட் டார் வழக்காறுகளின் மூலமாக தரி சிக்கக் கூடியதாக உள்ளமை இத் துறை அமைப்பின் முக்கிய அம்சமாக அமைகின்றது. பிறிதொரு தளத்தில் பிறிதொரு நலன்களாகவும் நாட்டார்

Page 7
வழக்காற்றியல் தொடர்பான தேடல், ஆய்வு இடம்பெறுகின்றன என்ப தனையும் இவ்விடத்தில் நினைவு கூரல் அவசியமானதாகும்.
மலையக மக்களின் சுபீட்சம், நல் வாழ்வு என்பனவற்றுக்காக செயற் படுகின்ற சக்திகளுக்கு மலையக நாட்டார் வழக்காற்றியல் நீரோட்டம் மலையக மக்கள் வரலாறு சார்ந்த கூட்டுப் படைப்பாக அமைகின்றது. அவ்வகையில் மலையக நாட்டார் வழக்காற்றியல் பற்றிய தேடல் ஆய்வு என்பன இன்றியமையாததொன் றாகும்.
மலையக நாட்டார் வழக்காற்றி யல் தொடர்பான தேடலில் முக்கிய மான கவனம் செலுத்த வேண்டிய துறைகள் பின்வருவனவாகும்.
1. மலையக வாய்மொழி
வழக்காறுகள்
நாட்டார் பாடல்கள் (நேரடி அநுபவம் கொண்டவை), தாலாட்டுப் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், திருமணப் பாடல்கள், நலங்குப் பாடல்கள், கேலிப் பாடல்கள், ஒப் பாரிப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், மாரியம்மன் தாலாட்டு, குலவைப் பாடல்கள், உடுக்கடிப் பாடல்கள், கதைப் பாடல்கள், பஜனைப் பாடல்கள், நாட்டார் கதை கள், விடுகதைகள், நாட்டார் நம்பிக் கைகள், குழந்தை வழக்காறுகள்.
10
2. மலையக நாட்டார் நிகழ்
கலைகள்.
வில்லுப்பாட்டு, காமன் கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், கரகக் கலை, சிற்றாட்டங்கள்.
3. LD60d6MouLua5 5TL”LITT
பண்பாடும், வாழ்வினைப் பொருட்களும், உடைகளும்.
கைவினைக் கலைகள், மட்
பாண்டக் கலைகள், நாட்டார் உணவு.
4. மலையக நாட்டார் கலைகள்
l. கலை 3. ஒவியக் கலை.
கட்டிடக் கலை 2. சிற்பக்
5. மலையக நாட்டார்
வழிபாடுகள்
நம்பிக்கைகள், நாட்டார் வழிபாடுகள் தெய்வங்கள், சாமி பார்த்தல், குறி சொல்லுதல், சடங்குகள்.
6. மலையக நாட்டார் இசைக்
கருவிகள்.
மலையக நாட்டார் வழக்காற்றி யல் தொடர்பான சேகரிப்பு ஆய்வு என்பன அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ளன. சி.வி.வேலுப்பிள்ளை, சாரல்நாடன், சி.வே.ராமையா, ஏ.பி. வி. கோமஸ், அந்தனிஜீவா, டி.

|எஸ்.ராஜூ, மாத்தளை வடிவேலன், சு. முரளிதரன், வ. செல்வராஜா, அழகுப்பிள்ளை நவஜோதி, சுப்பிர மணியம், பேராசிரியர்கள் சி.தில்லை நாதன், க.அருணாசலம், கலாநிதி ந.வேல்முருகு, அம்பிகை வேல் |முருகு, ஆர்.ஜோதிமலர், சோபனா தேவி, லெனின் மதிவானம் முதலா |னோர் இத்துறை சார்ந்த நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளனர் |என்பது குறிப்பிடத்தக்கதாகும். கூர்ந்து நோக்கினால் மலையக நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான தேடல் ஆய்வு என்பன இன்னும் தொடர் நிலையிலேயிருப்பதைக் காணலாம்.
மலையக நாட்டார் வழக்காற்றி |யல் துறையில், மலையக நாட்டார் பாடல்களுக்கு வழங்கப்பட்ட முக்கி |யத்துவம் கூட, நாட்டார் நிகழ்கலை கள், நாட்டார் பண்பாடு, வினைப் பொருட்கள், நாட்டார் வழி
வாழ்
பாடுகள், கதைப்பாடல்கள் என்பன வற்றுக்கு வழங்கப்பட்டனவா? என்பதும் சுவாரசியமானதொரு வினா தான். மலையகக் கலைகள் குறித்து மாத்தளை வடிவேலனின் மலையகப் பாரம்பரிய கலைகள் என்ற நூலிலும், அம்பிகை வேல்முருகுவின் அருச் சுனன் தபசு என்ற நூலிலும் சில தகவல்களை வெளிக்கொணர்ந்த போதும், இத்துறைசார்ந்த பூரணத்துவ மான தகவல்களை பெற முடியா துள்ளது துரதிர்ஸ்டவசமே.
11
நாட்டார் பாடல்கள் தொகுப்பு முயற்சியில் சி.வி.வேலுப்பிள்ளை |யின் தொகுப்பே நாட்டார் பாடல்கள் தொடர்பான நம்பகரமானதாக காணப்படுகின்றது. சி. வி.க்குப் பின்னர் இத்துறையில் ஒரு தேக்க நிலையும், வெற்றிடமும் காணப்படு கின்றது என்பது விமர்சன நிலைப் பட்ட உண்மையாகும்.
மலையக நாட்டார் வழக்காற்றி |யல் தொடர்பாக வெளிவந்த பெரும் பாலான கட்டுரைகள் பெரும்பாலும் பனுவல்களை அடிப்படையாகக் கொண்டே வெளிவந்தவையாகும். சிற்சில மலையக நாட்டார் பாடல் |களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு மனம் போன போக்கில் கதையளந்து கதாப்பிரசங்கம் செய்கின்ற முயற்சி யாகவே அமைந்துக் காணப்படு |கின்றது. வரலாறு. அரசியல், பொரு |ளியல், அழகியல், உளவியல், சமூக வியல் முதலிய துறைகளின் உதவி யுடன் மலையக நாட்டார் வழக்காற்றி |யல் என்று கூறத்தக்க ஆய்வுப் பரப்பை உருவாக்க வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகும்.
மலையக நாட்டார் வழக்காற்று நீரோட்டமானது அரசியல், சமூகப் பொருளாதார நோக்கில் ஆய்வு செய்யப்படல் வேண்டும். ஆய்வு, தேடல் மூலமாகக் கிடைக்கின்ற முடிவுகள் பொதுமைப்படுத்தப்படல் வேண்டும்.

Page 8
பொதுசன தொடர்பு சாதனங்க்ள் இன்று மக்களிடையே அதிகம் செல் வாக்கு செலுத்துகின்றன. அவற்றில் திரைப்படப் பாடல்கள், கருத்துக்கள் மக்களின் சிந்தனைகளையும், உணர்வு களையும் கீழ்மைப்படுத்துகின்றன என்பது உண்மைதான். இதில் இன் னொரு வேடிக்கையான அம்சம்
என்னவெனில் மோசமான நச்சுக்
கருத்துக்களை பரப்புவதற்காக திரைப் படத்துறை நாட்டார் நகைச்சுவை, விளம்பரம், பாடல் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்கின்றது. சாஸ் திரிய சங்கீதத்தால் பரந்துபட்ட வெகு சனங்களை வென்றெடுக்க முடியாது என்பதை உணர்ந்தவுடன் நாட்டார் வழக்காற்றியல் துறையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண் டனர். எனவே திரைப்படத் துறை யானது நாட்டார் வழக்காற்றியல் துறையை முடக்கி விடும் என்பது முழுமையான உண்மையல்ல. இத் தகைய சிதைவுகளுக்கு மத்தியில் நாட்டாரியல் துறை ஜீவசத்து பெற்று விளங்குவதையும் காணக் கூடியதாக உள்ளது. V
மனிதனது சமூக வாழ்க்கை மாறுதல்களுக்கு ஏற்ப அவனது சிந் தனைகளும், உணர்ச்சிகளும் மாறு பட்டு விடுகின்றன. இவற்றின் வினை பொருளாக வெளிவருகின்ற கலை இலக்கிய சிந்தனைகளும் இவற் றினை பிரதிபலிப்பதுடன் வாழ்வை மாற்றியமைக்கவும் உதவுகின்றன.
12
இத்தியாதி மலையக நாட்டார் வழக் காற்றியல் துறைக்குப் பொருந்தக் கூடியதாக அமைந்துள்ளது.
"ஒரு காலத்தில் பரவலாக வழங்கி வந்த நாட்டுப் பாடல்களும், கதைகளும், கதைப்பாடல்களும், கூத்துகளும் அவற்றின் உள்ளடக்கம் காலவாதியாகிவிட்ட காலத்தில் படிப் படியாக மறைந்துவரும். ஆனால் சமூக மாற்றங்களினால் மனித உள்ளம் செத்து விடுவதில்லை. புதிய சிந்தனைகளும் புதிய உணர்ச்சிகளும் வழமையானவற்றை போக்கி விடு கின்றன. இவற்றினைக் கருவியாகக் கொண்டு புதிய பாடல்களும், கதை களும், கூத்துகளும் உருவாகின்றன. பழைய பாடல்கள் மறைவதும் புதிய பாடல்கள் தோன்றுவதும் புதிய எண் ணங்கள், சிந்தனைகள், உணர்ச்சி களின் விளைவே. ??
மலை - 2001 - 16)
(நா.வானமா
அவ்வகையில் மலையக நாட்டார் வழக்காறுகள் சில மறைந்து வரு கின்றன என்பதற்காக மலையக நாட் டார் வழக்காற்றியல் அனைத்தும் மறைந்து விட்டன எனவும், மலையக நாட்டார் வழக்காறுகள் இனித் தோன் றாது எனக் கருதுவதும் அபத்தமான
தாகும். மலையக நாட்டார். வழக்காறு
கள் இன்றும் புதிய புதியனவாக தோன்றி வருகின்றன. எனவே இன்று எம் மத்தியில் மலையக வழக்காறுகள் என்று கிடைக்கக் கூடிய சகல விட

யங்களையும் பதிவு செய்தல் மிக
պ த
க்கியமானதொரு விடயமாகும். (tp @ கு
மலையக நாட்டார் வழக்காற்றி யல் தொடர்பான தேடல், ஆய்வு என்பனவற்றுக்கு இது தொடர்பான கள ஆய்வு முக்கியமானதொன் |றாகும். “கள ஆய்வே மலையக நாட் டார் வழக்காற்றியலின் அடிப்படை யாகும். கள ஆய்வினை மேற்கொள் |ளாதவன் நாட்டார் வழக்காற்றியலின் நாட்டார் ஆக மாட்டான்” என பேரா சிரியர் தே.லூர்து குறிப்பிடுகின்றார். நாட்டாரியலை வளர்த்தெடுப்பதில் ஆவண காப்பாளர், நூலகர், ஆய் வாளர் என சகலருக்கும் பங்குண்டு. மலையக நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான ஆய்வு நேர்மையுடனும் சித்தாந்த தெளிவுடனும் மேற்கொள் கின்ற போது, அதன் முழுமையான பயனை தரிசிக்கலாம். மலையக நாட் டார் கூறுகளை இயன்றவரை முழுமையாகத் தேடி தொடுக்கக் கூடியதாக இருக்கும். சமூகச் சூழல், தொழில் முறைகள், பாடலின் வகை கள், வட்டார வேறுபாடுகள், மொழி வழக்குகள் முதலியவற்றினை நுட்ப மாக அறியக் கூடியதான சந்தர்ப் பத்தை கள ஆய்வு ஏற்படுத்தும்.
இவ்வாறாக கிடைக்கப் பெற்ற மூலகங்களை மிக அவதானத்துடன் பதிப்பித்தல், ஆவணப்படுத்தல் வேண்டும். தமிழகத்தில் பேராசிரியர் ந.வானமாமலை நடாத்திய நாட்டாரி
13
யலுக்கான சஞ்சிகை - ஆராய்ச்சி நாட்டார் வழக்காற்றியல் துறையை வலிமைப்படுத்தும் என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துகளுக்கு இட மில்லை.
தோட்டங்களில் நடைபெறும் கலை விழாக்கள், கோயில் திருவிழாக் Iகளின் போது நாட்டாரியலுக்கு முக்கியத்துவமளித்தல், நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான போட்டி களை நடாத்துதல், பாடல்கள், கூத்து கள் என்பவற்றினை பதிவு செய்து வெளியிடல் முதலிய முயற்சிகள் இத் துறையில் காத்திரமான வளர்ச்சியை
ஏற்படுத்தும்.
இவ்வாறே மலையக கல்வி நிறு வனங்களும், பாடசாலைகளும் இத் துறை சார்ந்த தேடுதல்களையும், ஆய்வுகளையும் மேற்கொள்ள முயற்சிக்கலாம். ஆங்காங்கே சில ஆரோக்கியமான முயற்சிகள் இடம் பெற்ற போதிலும் அவை பதிவு களாக இல்லாமையினால் காலப் போக்கில் அழிந்து போகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. மலையகத் தின் தேவையையும், அதன் அபி விருத்தி குன்றிய நிலையையும் உணர்ந்து மலையக பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று வலுப் பெற்று வருகின்றது. அவ்வாறு உரு வாகின்ற பல்கலைக் கழகத்திலும் 'மலையக நாட்டார் வழக்காற்றியல்’

Page 9
என்ற துறையை ஆரம்பிப்பது இன்றி யமையாத ஒன்றாகும்.
மலையக சமூக நலனில் அக் கறை கொண்டவர்கள் ஒன்று கூடி மலையக ஆவண காப்பகம் ஒன்றினை உருவாக்கி அவற்றில் மலையக நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த விடயங்களை சேகரித்து வைப்
பதும் இன்றைய தேவையாக உள்ளது.
மலையக மக்களின் சமூக வர லாற்றை இயற்றுபவர்கள் ஆய்வுகள், கல்வெட்டுகள், தொல் பொருள் சான்றுகளிலிருந்து வரையலாம். இது சமூகத்திலும் அாசியலிலும் ஆதிக்கம் செலுத்துவோருடைய கருத்துப்
போலவே பெரும்பான்மையானவை
அமைத்துக் காணப்படுகின்றன. இவர் களுடைய கருத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட மலையக நாட்டார் வழக் காற்றியல் பற்றிய தேடல், ஆய்வுகள் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் மலையக நாட்டார் வழக்காற்றியல் பற்றிய தேடல் என்பது வெறும் ஏட்டுச் சுரக்காயாக அல்லாமல் இம்மக்களின் ஒடுக்கு முறைகளுக்கும், துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டமாக திகழ வேண்டும்.
ー
Distributor of
GLASS WARE PORCELAIN WARE
GIFT ITTEMS
T.P. : O77-3241173
ク
N
14
 

மழை குடிசைக்குள்ளாகவே o, aco பெய்து கொண்டிருந்தது. பொத்தல் தென்னங்கீற்று கிடுகுகளில் புற்றுமண் காவிக் கொண்டேரிக் (கடியிருங்க கறையான்
குடியிருநத கறை - ச.முருகானந்தன் களின் வாழிடம் முதலாவது மழை |யிலேயே கரைந்து போய்விட, இவர் (திரு. எஸ்.வி. தம்பையா அவர் களது குடிசையின் கூரைகள் பொத்த 'களினது ஞாபகார்த்தச் சிறு லாகி ஒழுகத் தொடங்கி விட்டது. ஒன்றிரண்டு ஒழுக்குகள் என்றால் ஏதாவது செய்யலாம். முழுக் குடிசையும் ஒழுகும்போது என்ன
|செய்ய முடியும்?
கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)
|லோகேஸ்வரனுக்கு நெஞ்சை அடைத்தது. முதல் மழை பெய்தவுடனேயே கிடுகு வாங்கி வேய வேண்டும் என்றுதான் நினைத்தான். வழிதான் பிறக்க வில்லை. அகதி வாழ்வு வந்தபின் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செல்வதே பெரும்பாடாகிப் போய்விட்டது. இந்த நிலையில் சேமிப்பதெங்கே, கிடுகு வாங்குவது எங்கே? தினமும் வயிற்றுப்பாடே அரையும் குறையுமாக இருக்கையில், இதர தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை! அத்துடன் விரைவிலேயே சொந்த ஊருக்கு மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்திருந்தது இன்னொரு காரணம்.
அவனது சொந்த வீட்டில் சோலை போல் தென்னைகள் நிறைந்திருக் கின்றன. ஒரு மாதத்தில் விழும் பழுத்த ஒலைகளை நனைத்துக் கிடுகு ஆக்கினால், இந்தக் குடிலை வேய்ந்து விடலாம். மனைவி சிவாஜினியே கிடுகுகளைப் பின்னி விடுவாள். இன்று இன்று இல்லிடமாகிப் போய்விட்ட இல்லத்தையும், வதிவிடக் காணியையும் நினைக்கையில் இந்த மழை பொழியும் இரவில் மனம் வெதும்பியது.
மங்கி ஒளிரும் குப்பி விளக்கில் சிவாஜினியைப் பார்த்தான். அவள் குளிரில் முடங்கிப் போயிருந்தாள். அவள் குறண்டிப் படுத்திருப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது. அவனை நம்பி கைப்பிடித்து வாழ்வில் என்ன சுகம் கண்டாள்? இனிதாகப் போய்க்கொண்டிருந்த இல்லற வாழ்வு, இடப்பெயர் வோடு இப்படி இழிவாகப் போய்விட்டது.
15

Page 10
அந்த நாளில் சிவாஜினி எவ் வளவு அழகாக இருந்தாள் ஒரு கண் அசைவில் அவனைத் தன்வசமாக்கிய அவளது எழிலை இப்போது நினைத் துப் பார்க்கிறான். விடலை வயது தாண்டியதும் அவனை ஆக்கிரமித்த பெண் அவள் தான். அவள் அவனது மாமன் மகள் தான் என்றாலும் அதிகம் பேசிப் பழகுவதில்லை. கிராமிய வாழ்வின் அன்றைய கட்டுப்பாடு அப்படி! அவ் வப் போது பார்வைகள் தழுவி போர்வைகளாய் இதயத்தை நிறைத் திருக்கிறது. அதற்கு மேல் ஒரு அடி தானும் எடுத்து வைக்க வாய்ப் பில்லை. எனினும் அவள் அவனுக்கு மனைவியாக வாய்த்து விட்டதால் இருவருமே பேரானந்தமடைந்தனர்.
லோககேஸ்வரன் யோசனையில் ஆழ்ந்திருந்தபோது மழை மெல்ல மெல்ல எட்டம் கட்டியது. பொத்தல் கிடுகுகளினூடே தெரியும் வானத்தில் வெள்ளிகள் சில முளைத்துக் கண் பாதி வயிறு நிறைந்திருந்தவனுக்கு இப்போது சாமத்தில் மறுபடியும் பசித்தது. வயிற்றுப்பசி போக்க பானையில் காமத்தி லாவது பசியாற எண்ணி, குறண்டிப்
களைச் சிமிட்டின.
பழையதுகூட இல்லை.
போய் பழைய சேலைப் போர்வைக் குள் முடங்கிப் போய் இருக்கும் மனைவியை நெருங்கினான். “சிவாஜினி” என்று அவளைத் தட்டி யெழுப்பி அருகிலணைத்தான். அவள்
முதன் முதலில்
唯6
அருண்டெழுந்தாள். “விடிஞ்சிட்டுதே அத்தான்?”
'இல்லையம்மா’ என்றபடி மேலும் அவளை இறுக அணைத் தான். அவளுக்கு தேகம் அடித்துப் போட்டது போலிருந்தது. முடியாம லிருந்தாலும், துரைக்க மனம் இடம் தரவில்லை. அடுத்த சில நிமிடங்களில் துன்ப
கணவனை மறுத்
துயரம் மறந்து ஒன்றாகிப் போயிருந்
தனர். கூதலுக்கு காதல் அணைப்பு சுகமாக இருந்தது. இப்போது அவளுக்கும் வயிற்றை விறாண்டியது. தூக்கம் வரவில்லை. “தேத்தண்ணி போடட்டே?” என கணவனிடம்
கேட்டாள். அவனும் மறுக்கவில்லை.
தேநீரைப் பரிமாறியபடி "வீடு
வேய வேணும் அத்தான். தம்பிப்
பிள்ளை அண்ணையிடம் கேட்டுப் பாருங்கோ..." என்று கணவனை நோக்கினாள்.
“அந்தாள் சம்மதிச்சாலும் கடன் எண்டால் மனிசி விடாது. ம். சித்திரை மழையும் சிறு மாரியாகப் பெய்யத் தொடங்கி விட்டுது. ஆமி யும் திரும்பிப் போய் விட்டான். வீட்டுப் பக்கம் போய் பார்க்கலாம். இவங்கள் பொடியள் போக விடுகிறாங்களில்லை."
'கண்ணிவெடி அகற்றாமல் போனா எங்களுக்குத்தானே ஆபத்து. களவாய் வீடு பார்க்கப் போன

இரண்டு மூன்று பேருக்குக் கால் பறிபோயிட்டுது."
"ஆமி இருந்த காலத்தில் வீடு பார்க்கவென்று போனவை திரும் பியே வரவில்லை. இது பரவா |யில்லை... ?? சிரித்தான்.
லோகேஸ்வரன்
தனது காணியைப் போய்ப் பார்க்க அவனுக்கு அலாதிப் பிரியம். இரத்தத்தை வியர்வையாக்கி, உட லுழைப்பினால் உருவாக்கிய காணி, |வீடு அல்லவா? அந்த வெறும் காணியை அவர்கள் தமது பிரயாசை யினால் பொன் விளையும் பூமியாக |மாற்றியிருந்தனர். கமுகும், தென்னை |யும், மாவும், பலாவும், எலுமிச்சை |யும், மாதுளையும், கொய்யாவும் என பல பயன்தரு மரங்களை நாட்டி னான். முன்பக்க வேலிக்கரையில் |வேம்பும், தேக்கும் நாட்டியிருந்தான். பின் வேலியில் ஏற்கனவே இருந்த பனைகளை விட மேலும் புதிதாக பனங்கொட்டைகளை நாட்டினான். பின் வளவில் சிறிய மரக்கறித் தோட்டம் செய்தான். கத்தரியும், தக்காளியும், வெண்டியும், பயிற்றை யும், பூசணியும் என எப்போதும்
மரக்கறிக்கு குறைவில்லை. கீரைப்
பாத்திகளும், மிளகாயும், வெங்காய மும் கூட பயிரிட்டான். ஆடு, மாடு வளர்த்ததால் அவற்றின் எருவையே அடியுரமாகப் பயன்படுத்தினான்.
17
முன்புறமாக, பக்கவாட்டில் தென்னம்பிள்ளைகள் நாட்டி, அவற் |றிற்கிடையே வாழையும் போட்டான். வாழைக்கு இறைக்கும் நீரில் தென் னம்பிள்ளையும் செழித்தது. வாழை யின் பயன் விரைவிலேயே கிடைக்க, |தென்னைகள் துருதுருவென வட் டிட்டு வளர்ந்தன.
விவசாய வேளாண்மைத்துறை யில் அனுபவப்பட்டவர்களினதும், |பிரதேச விவசாய போதனாசிரியர்களி |னதும் ஆலோசனைகளையும், வழி நடத்த களையும் கேட்டு பின்பற்றி விவசாயத்தில் உயர்வுற்றான். வயற் |செய்கையிலும் அவனது கமமே அதிக அறுவடையைத் தந்தது.
இந்தத் தோட்ட உருவாக்கத்திற்கு
சிவாஜினியின் பங்களிப்பு நிறையவே
|எப்போதும் இருந்தது. சாடிக்கேற்ற மூடியாக அவனுக்குக் கைகொடுத்த துடன், கோழி வளர்ப்பு, ஆடு மாடு வளர்ப்பு, தையல் என ஒய்வின்றி அவளும் உழைத்தாள். அடிமைத்தனம் பெண் விடுதலை என்ற கேள்விக்கே இடமின்றி நகமும் சதையுமாக வாழ்ந்து வந்தனர்.
பெண்
அவர்களது அன்புடன் போட்டி போட்டுக் கொண்டு தென்னை மரம் பாளை தள்ளியபோது ஒரு பூப்புனித நீராட்டு விழாவையே கொண்டாடி னாள் சிவாஜினி. அவளும் அப்போது முதற் தடவையாகக் கருவுற்றிருந்

Page 11
தாள். லோகேஸ்வரன் இரட்டிப்பு மகிழ்வில் திளைத்தான்.
"நாங்கள் பெற்று வளர்க்கப் போகிற பிள்ளைகள் பிற்காலத்திலை எங்களைக் கைவிட்டாலும், இந்தத் தென்னைகள் எங்களைக் காப் பாற்றும். கடைசிக் காலத்தில் கை யைக் கட்டிக்கொண்டு சாப்பிடலாம்” என்று குதூகலமாகக் கூறினாள்
சிவாஜினி.
அவர்கள் தென்னையின் பயனை அனுபவிப்பதற்கு முன்னரே எல்லாம் ஏறுமாறாக நடந்து விட்டது. முதலா வது இளநீரைப் பிடுங்கி உச்சில் அம்மன் கோயிலுக்குக் கொடுத்த மறு நாளே இடப்பெயர்வும் எதிர்பாராமல் வந்தது.
அந்தக் கொடுரமான நாள்.
மறக்கப்பட வேண்டிய அந்த நாள் இப்பொழுதும் மனதை விட்ட கலாத நினைவுகளாக வருத்திக் கொண்டிருக்கிறது. யார்தான் நினைத் தார்கள், இப்படியாகுமென்று? ஒரு சித்திரை மாதத்தில் வந்த அந்தநாள்.
பகல் முழுவதும் பூவுலகைத் தீவதஞ் செய்துவிட்ட சந்தோசத் துடன், நெருப்புக் கோளாய் முகம் தகிதகிக்க, மேற்குத் திசையில் கடல் மடியில் இளைப்பாறக் காணாமல் போய்க்கொண்டிருந்தான் கதிரவன். இதே நேரம் எதிர்த்திசையில் இரகசிய
18
மாய் தலை நீட்டிய மழலை நிலா, பால் நிலவு பொழியத் தொடங்கியது.
அப்பொழுதுதான் முதலாவது செல் வந்து ஊர்க்கோடியில் விழுந்து வெடித்து அதிர வைத்தது. தொலை வில் கேட்க ஆரம்பித்த வேட்டொலி கள் மெல்ல மெல்ல காற்றில் மிதந்து நெருங்கி வந்து கொண்டிருந்தன. அடுத்தடுத்து சில் செல்கள் வந்து ஊர் மனைக்குள் வீழ்ந்து வெடித்துச் சில உயிர்களைக் காவு கொண்டன.
சந்திக் கடைக்குச் சாமான்
வாங்கச் சென்ற லோகேஸ்வரன் பதறி
யடித்துக் கொண்டு விரைந்து வீட்டுக்கு வந்தான். "ஆமிக்காரன் வெளிக் இனியும் நிண்டால்
வாறான். சனம் எல்லாம் கிடுதுகள். உயிராபத்து.”
"இந்த இராவிருட்டிலை எங்கே போறது? இது எனக்கு பெறு மாதம் வேறு. மாமாவுக்கு கால் ஏலாது. நடக்க மாட்டார்” கணவனைப் பரி
தவிப்போடு நோக்கினாள் சிவாஜினி.
“கவச வாகனங்கள், பீரங்கிகள் எல்லாம் தொடரணியாக வருகுது. என்ன கோலத்தில வாறானோ தெரி வெளிக்கிடுறது தான்
நல்லது. முக்கியமான சாமான்களை
யேல்லை.
எடு, கிளினிக் காட்டை மறக்காதை. அப்பாவைச் சையிக்கிளிலை ஏத்திக் கொண்டு போவம். ஊரெல்லாம்
வெளிக்கிடுது."

"மாமா ஆமிக்காரர் வாறாங் களாம். சனம் எல்லாம் வெளிக்கிடுது கள். சயிக்கிளிலை இருந்து போவம் வெளிக்கிடுங்கோ...?? என்று அன் போடு கேட்டாள் சிவாஜினி.
“என்னால ஏலாது பிள்ளை. நீங்கள் ஒடித் தப்புங்கோ. கடற் கரைத் தாளங்காய் நான். எங்கே இருந்தால் தான் என்ன..?”
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரு செல் அவர்களது வீட்டைக் கடந்துகொண்டு அண்மை யில் வெடித்தது. இனியும் நிற்பது அசாத்தியம் என்று உணர்ந்தான் லோகேஸ்வரன். “வெளிக்கிடுவம்.”
முன்நிலவுக் காலமாதலினால் நிலவும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. அவர்கள் வெளிக் கிட்டபோது அடர்த்தியாகிக் கொண்
டிருந்த இருள் பூமியை விழுங்கிக்
கொண்டிருந்தது. வீட்டை விட்டு வெளிக்கிட்டபோது தென்னங் கீற்றுகள் காற்றிலசைந்து விடை யளித்தன.
ஊர்நாய்கள் எல்லாம் ஒருமித்துக் குரைத்தன. கையில் சுமையுடன் லோகேஸ்வரனும், மடியில் சுமை யுடன் சிவாஜினியும் இடம்பெயரும் ஊரவர்களோடு இணைந்தனர்.
ஆகாயத் தோட்டத்தில் அங் கொன்றும் இங்கொன்றுமாக நட்சத் திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டி
19
ருந்தன. வேகமாக நடக்க சிவா ஜினிக்கு மூச்சு வாங்கியது. இரத்தம் காணாது என்றும், கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் ஏற்கெனவே கிளினிக்கில் அவளுக் குக் கூறியிருந்தார்கள். முட்டுப் பிள்ளைத்தாச்சி வயிற்றுடன் பின் தங்கும் மனைவியை நின்று உடன ழைத்துச் சென்றான் லோகேஸ்வரன்.
உடம்பை ஊசியாகக் குத்தியது குளிர்காற்று. பின் ஒழுங்கை வெள்ள வாய்க்கால் கரை, பள்ளம், மேடு, வயல் வரம்பு என விழுந்து எழுந்து கப்பூதுப் பகுதிக்குச் சென்ற பின்தான்
மூச்சு விடக்கூடியதாக இருந்தது.
சிலர் கப்பூதுவில் தங்கி இன்னும் சிலர் வரணி நோக்கிப் பயணித்தனர்.
மாமாவை நினைக்க சிவா ஜினிக்கு அழுகை அழுகையாக வந்தது. பிரச்சினை இல்லாவிட்டால் நாளையோ மறுதினமோ வீடு திரும்பி விடலாம். இல்லாது போனாத்தான் சிரமம்.
சிவாஜினிக்கு மாமாவில் பிரியம் அதிகம். மாமாவுக்கும் அப்படித்தான். மகள்மாரை விட, எல்லா மருமகளை |யும் விட இவளோடு தான் ஒட்டுதல். சிவாஜினியும் அதிக அன்பைப் |பொழிவதால் தான் கடைசிக் காலத் தில் இவர்களோடு தங்கியிருக்கிறார்.
மாமி அப்படியல்ல. அவளை எப்பொழுதும் மகள் மாதிரி நோக்க

Page 12
மாட்டார். செய்யும் நல்ல காரியங் குறை கண்டு எதற் கெடுத்தாலும் நொட்டை நொடி சொல்லிக் கொண்டிருப்பாள். எப் பொழுதும் இசகுபிசகாகப் புறட் டணியம் கூறினாலும் சிவாஜினி
கோபம் பாராட்டாமல் மாமிக்குரிய
களுக்குக்கூட,
பணிவிடைகளை எல்லாம் செய்தாள். மகள் உடைத்தால் மண்குடம், மரு மகள் உடைத்தால் பொன் குடம் என் றிருந்த மாமியை சாவுப் படுக்கையில் பார்த்தெடுத்ததும் சிவாஜினிதான்.
சிவாஜினியின் மனது மாமாவுக் காக அழுது கொண்டிருந்தது. லோகேஸ்வரன் தன் கவலையை மறைத்துக்கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றி அழைத்துச் சென்றான். அவர்கள் சாவகச்சேரி வீதியை கடந்து வரணியை நோக்கி நகர்ந்து கொண்டி
குறுக்காகக்
ருந்த போது சாமக்கோழி கூவியது.
வரணி ஆஸ்பத்திரியில் குடும்ப நல உத்தியோகத்தராக அவனது ஒன்றுவிட்ட சகோதரி மலர் பணி யாற்றுவதால் அங்கே சென்றால் பிர வசத்திற்கு இலகு என நினைத்தான்.
சிவாஜினியால் நடக்க முடிய வில்லை. நாரி உழைந்து அடிவயிற்றி லும் நோவு எடுக்கவே, இது பேறுக் குத்துதான் என்று புரிந்தது.
சிவாஜினியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. நாரி
2O
யில் த்ொடங்கி அடிவயிற்றை நோக்கிக் குத்தியது. நாரியைக் கை களால் பிடித்துக் கொண்டு கணவ னிடம் தனது இயலாமையைச் சொன் னாள். அவனுக்குக் கையும் ஒட வில்லை, காலும் ஒடவில்லை. விதி யோர மரத்தடியில் அவளை அமர வைத்துவிட்டு, செய்வது என்ன வென்று புரியாமல், உடன் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் பெண் களில் ஒருத்தியிடம் கூறினான்.
மனிதநேயம் மரித்துவிடவில்லை என்பதற்கு அமைய பெண்கள் துரித மாக ஒத்தாசை வழங்கினார்கள். சிவா ஜினி வயிற்று வலியால் "அம்மா” என்று முனகி, பின் வீறிட்டுக் கத்தி னாள். இதற்கிடையில் மழை பெய்ய ஆரம்பித்தது. பங்குனி மழை, ஒரு பாட்டம் பெய்துதான் ஒயும் என்று யாரோ கூறினார்கள். மனைவி துடித் துக் கொண்டிருப்பதை லோகேஸ்வர
னால் தாங்க முடியவில்லை.
சேலையால் சுற்றிவர மறைப்பை ஏற்படுத்தி டோச்லைற் ஒளியில் அந்தப் பெண்கள் பிரசவம் பார்க்க, அந்தச் சாமத்தில் விதிக்கரையில் சிவா ஜினி தன் முதற் குழந்தையைப் பெற் றெடுத்தாள். பிரசவம் பார்த்த பெண் களைத் தெய்வங்களாக நினைத்து கையெடுத்துக் லோகேஸ்வரன். மழையும் ஒய்ந்தது. விடியும் வரை காத்திருந்து, வண்டில் ஒன்றை ஒழுங்கு செய்து அவர்கள்
கும் பிட்டான்

வரணியைச் சென்றடைந்தனர். துன் பத்திற்கிடையிலும் இன்பமாகக் கிடைத்த குழந்தையின் பிறப்பால் அவர்கள் மகிழ்ந்தனர்.
அன்று இடம் பெயர்ந்தவர்கள் இன்று இதோ குழந்தைக்கு ஐந்து வயதாகப் போகிறது. இன்னமும் சொந்த ஊருக்குத் திரும்ப முடிய வில்லை. அகதியாகி வாழிடம் இழந்து, தொழில் இழந்து, பொருள் இழந்து இந்த நாலைந்து வருடங் களாக அவர்கள் அனுபவித்து வரு கின்ற துன்பத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது.
மகள் அனுசுயாவும் வளர்ந்து சுட்டிப் பிள்ளையாக ஒடியாடி விளை யாடுகிறாள். அடுத்த வருடம் பாட சாலையில் சேர்க்க வேண்டும். அதற்கு முன்னர் மீளக்குடியேறினால் நல்லது என நினைத்தார்கள். போர்த் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்ட தால் அவர்கள் மனதில் நம்பிக்கை ஒளிக்கீற்று ஏற்பட்ட போதிலும் மீளக்குடியேறும் கனவு நனவாதல் அசாத்தியமாகவே இருக்கிறது.
சிவாஜினி மறுபடியும் கேட் டாள், “ஆமி இருந்த போதுதான் போக முடியாமல் போச்சு, போன வையும் திரும்பி வரவில்லை. இனி யெண்டாலும் போகலாமெண்டால் இப்பவும் விடுகிறார் களில்லையே. ஒருக்கா வீடு வாசல்
போக
21
இருக்கோ என்றாவது பார்த்து வரலாம்"
“விட்டோட மறுபடியும் ப்ோய்ச் சேர்ந்திட்டால் வளவு வரும்படி யிலையே சீவிக்கலாம். ஒடியல், புளுக் கொடியல், பனாட்டு என்று வைத் திருந்தும் சாப்பிடலாம். இப்படி பசி கிடக்கத் சிவாஜினி ஆதங்கத்தோடு கூறினாள். அவர்கள் கதைத்துக் கொண்டிருந் ததில் மறுபடி உறங்க நீண்ட நேரமாகி
தேவையில்லை... ??
விட்டது.
மறுநாள் காலையில் லோகேஸ் வரன் எப்படியும் களவாக என்றாலும் வீட்டைப் போய்ப் பார்த்து வர நினைத்தான்.
“பிள்ளை. நான் ஒருக்கா வீட்டைப் பார்த்துக் கொண்டுவர
யோசிக்கிறன்..??
“தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் போங்கோ. நானும் கூட வரட்டே அத்தான்?"
“இந்த முறை நான் தனியப் போறன். கள்ளப் பாதையிலதான் போக வேணும். அடுத்த முறை
பார்ப்பம்."
“பார்த்து நடவுங்கோ. கண்ட கண்ட இடமெல்லாம் கண்ணிவெடி
விதைச்சிருக்காம்.”

Page 13
சரி என்று தலையாட்டிவிட்டுப் புறப்பட்டான் லோகேஸ்வரன். வழி
முழுதும் கொடிய யுத்தத்தில் சிதில
மாகிப் போனவற்றின் எச்சங்கள்
வடுக்களாய்த் துருத்தி நின்றன.
உடைந்து சரிந்த வீடு மனைகள், கோபுரமிழந்த கோயில்கள், குன்றும் குழியுமான பாதைகள், தூர்ந்து போன கிணறுகள், புதர் மண்டி புதுக் காடாய்க் காட்சியளிக்கும் காணிகள் என பார்க்கும் எல்லாமே மனதை நெருடின.
சிதைவடைந்த சில வீடுகள் கற் குவியல்களாகக் காட்சியளித்தன. இன்னும் சில வீடுகள் அரையும் குறையுமாகச் சின்னாபின்னப்பட்டுப் போயிருந்தன. எங்கட விடும் இப்ப டித்தர்னோ என நினைத்த லோகேஸ் வரனின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.
அவர்களது வீடு மேற்குவாசல் வீடு. பிற்பகலானால் வெயில் முகத் தில் பளார் என்றடிக்கும். எனினும் மரங்கள் வளர ஆரம்பித்த பின்னர் அந்தத் தொல்லை குறைவடைந்து வந்தது. மாவும், பலாவும் சூரியக் கதிர்களை வாங்கிக் கொண்டு வீட் டிற்கு நிழல் கொடுத்தன. இப்போது இன்னமும் சடைத்து வளர்ந்திருக்கும்.
அவன் தனது ஒழுங்கையில் கால் பதித்தபோது உள்ளமெல்லாம் குதூ கலித்தது. தாய்மண் பட்ட பாதங் களில் சுகம் தெரிந்தது. கோயில் பின்
22
வீதியில் இறங்கி நடந்த போது அவனது அக்காவின் வீடு, அவன் பிறந்து வளர்ந்த பெரிய கல்வீடு, பொட்டு பூவுமிழந்த விதவைக் கோலத்தில் இடிந்து சிதைந்து காட்சி யளிக்கவே அவன் உடைந்து உறைந்து போனான்.
அவன் சிறுவனாக இருந்தபோது தான் அந்த வீடு கட்டி முடிக்கப் பட்டது. அப்பாவிடம் அதிக பணம் இல்லாததால் மெல்ல மெல்லத்தான் கட்ட முடிந்தது. அந்த வீட்டைக் கட்டுவதில் ஒவ்வொரு கட்டத்திலும் அவனது உடலுழைப்பின் பங்களிப்பு இருந்தது.
பணக் கஷ்டம் ஒருபுறம், உடற் கஷ்டம் மறுபுறமென அவர்கள் பட்ட சிரமம் அளப்பரியது. அம்மாவும், அப்பாவும் கட்டட வேலையாட் களுடன் தாமும் சேர்ந்து தலைச்சுமை யாக மண்ணும் கல்லும் சுமந்து கட்டிய நாட்கள் அவன் மனக் கண்ணில் தோன்றியது. ஒருகணம் மலைத்துப் போய் நின்றவன், பின்னர் பனித்த கண்களுடன் நெஞ்சு அழுத்த
அடியெடுத்து வைத்தான்.
ஊரில் ஒரு சில வீடுகள்தான் அதிக இருந்தன. அவற்றில் கூட சுவரில் சன்னங்கள் பாய்ந்திருந்தன.
பாதிப்புக்குள்ளாகாமல்
அவன் தனது வீட்டை அடைந்த போது எல்லையில்லா ஆனந்தமும்,

ஆச்சரியமும் காத்திருந்தது. அவனது வீடு சேதமடையாமலிருந்தது. இறை வனுக்கு நன்றி சொன்னபடி உள் நுழைந்தான் லோகேஸ்வரன். விடெங் கும் தூசியும் ஒட்டறையுமாக இருந் தது. அவன் வரவில் வெளவால்கள் பறந்தன. வீடு பாழடைந்து போயிருந் தாலும், சிதைவடையாமலிருந்தது
அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
வீட்டிற்குப் பூசப்பட்டிருந்த இளநீல நிறத்தை சிவாஜினி தான் தெரிவு செய்திருந்தாள். நீல நிறமென்றால் அவளுக்குப் பிடிக்கும். வானத்தை யும், கடலையும் மணிக்கணக்கில் ரசிப்பாள். முதலிரவு மாற்றுடை கூடி இளநீல நிறத்தில்தான் அணிந்து வந் தாள். இவனுக்கும் இளநீல சேட்டு களையே தெரிவு செய்வாள்.
வீடு முழுவதும் சுற்றிப் பார்த் தான் லோகேஸ்வரன். முன்னறை, அதனுடன் இணைந்த மூன்று அறைகள், சமையல் அறை எல்லாம் சேதமின்றி இருந்தன. அவன் பூரிப்புடன் சுவாமி அறையில் நுழைந்தான்.
ஹோல்,
சுவாமிப் படங்கள் தூசு நிறைந்
திருந்தன. துர்நாற்றம் வீசியது. அப்பா
வின் நினைவு வந்தது. ஒடி ஒடித் தேடினான். எங்கும் எலும்புக் கூடு களில்லை.
வெளியே வந்து சுற்றிப் பார்த்தான். முற்றத்து பூமரங்கள் கூட அழிந்து
23
போகவில்லை. தேனீக்கள் தேன் குடிக்கப் பறந்து கொண்டிருந்தன.
வடக்கு மூலையிலிருக்கும் |கொய்யா மரம், தோடம்பழம் அளவு பெரிய காயாகக் காய்க்கும். கனிஞ் சிட்டா அப்படி ஒரு ருசி. அணில்களி டமிருந்தும், பட்சிகளிடமிருந்தும் பாதுகாப்பதே பெருங் கஷ்ரம். கொட்டை போட்டு முளைக்க வைச்ச பலா மரம். ஒவ்வொரு சுளையும் |தேன் போல இனிக்கும். மரந் தாங் காத பெரிய காய்கள், அந்தக் காணி யில் உள்ள ஒவ்வொரு மரத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்தக் காணியில் முன்னால் பக்கவாட்டில் இருந்த வேப்ப மரங் கள் அழகாய் வெள்ளைப் பூக்களால் கண்களைப் பறித்தன. முற்றமெல் லாம் குப்பை கூழங்களாக இருந்த சருகுகளின் மேல் வேப்பம் பூ கொட்டிப் போயிருந்தது. இதைக் கண்டிருந்தால் சிவாஜினி வடகம் |போடலாம் என்று கூறி மகிழ்ந்திருப் |பாள். இடம் பெயர்வுக்குப் பின்னர் வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு எத்தனை நாட்களாகி விட்டது?
வெகுதூரம் சயிக்கிள் ஓடிவந்த தில் அவனுக்குக் களைப்பாக இருந் தது. கைக்கெட்டும் உயரத்தில் குலை தள்ளியிருந்த செவ்விளநீர் குலையி லிருந்து ஒன்றை முறுக்கிப் பிடுங்கி பருகினான். தேவார்மிதம் போலிருந்

Page 14
தது. மாமரங்களில் கறுத்தக் கொழும் பான், விலாட்டு, அம்பலவி என காய்த்துச் சொரிந்தன. வேலியோர முருங்க மரங்களில் காய் பிடுங்கு வாரின்றி முற்றிக் காய்ந்தவை யாகவும், பிஞ்சுகளாகவும் நீண்ட காய் கள் பொலிந்திருந்தன. கொஞ்ச முருங்கக்காய்களைப் பிடுங்கிக் கொண்டுபோக நினைத்தான். எனி னும் கால்பதித்து நடந்து மரத்தடிக்குச் செல்வதற்கு நிலக்கண்ணிக்குப் பயமாக இருந்தது.
அறையில் சீமெந்து நிலத்திலும்
புத்தெடுத்து கறையான்கள் தளபாடங்
களை அரித்திருந்தன. புத்தகங்க ளெல்லாம் சேதமடைந்திருந்தன.
‘ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அவன் வீடு திரும்பிய போது பொழுது சாய்ந்து விட்டது. அவனை அவர்கள் கண்டு விட்டார் கள். “உதென்ன வேலை? எங்கட சென்றியைத் தாண்டி எப்படிப் போனிங்கள்???
“வீடு பார்க்கத் தம்பியவை."
"கள்ளப் பாதையில போயிருக் கிறியள். என்ன களவுக்கே போனனிங் களே? போகக் கூடாது என்று தடை போட்டது தெரியும் தானே?"
லோகேஸ்வரன் தடுமாறினான்.
“இரண்டு நாளைக்கு உம்மை பங்கரிலை போட்டால்தான் சரி.”
24
ஒருவாறு அவர்களிடம் மன்னிப் புக் கோரி மீண்டு வரணிக்குத் திரும் பினான். வீட்டிற்கு வந்து மனைவி யிடம் அனைத்தையும் கூறினான்.
"மாமாவின்ர எலும்புகூட இல்லா மல் போச்சு” என கவலைப்பட்டாள்
சிவாஜினி.
“எங்கட சனத்துக்கு இந்தக் கொடிய யுத்தத்தில் சாவு எங்கே வரும், எப்படி வரும் என்று கூடத் தெரியாது. செத்த வீடுமில்லாமல், அந்தியேட்டியும் இல்லாமல் காணாமல் போனவை பட்டியல்தான் நீளுது.”
“காலையில போன நீங்களும்
பொழுதுபட்ட பிறகும் வரவில்லை
எண்டதும் நான் கலங்கிப் போனன். இனிப் போறதென்டால் தனிய விட மாட்டன்.”
“போகேலாது பிள்ளை, ஆமி
போனாலும் விடமாட்டாங்கள்”
“எங்கட நன்மைக்குத்தானே தடுக்கினம். சரி சாப்பிடுங்கோ..?
“நல்லாய்க் களைச்சும் போனன்.
தேத்தண்ணி கொண்டா முதல்ல,
பிறகு குளிச்சிட்டுச் சாப்பிடுவம்.” சோம்பல் முறித்தான் லோகேஸ்வரன்.
அடுத்த சில நாட்கள் ஒருவித எதிர்பார்ப்பில் அவர்கள் கவலையை மறந்திருந்தனர். விரைவில் கண்ணி வெடி அகற்றி குடியேற அனுமதிப்

பார்கள் என்ற செய்தி மனதில் பாலை வார்த்தது. லோகேஸ்வரன் மனதில் பல பல திட்டங்கள் தீட்டினான். எப்படியும் விரைவில் மறுபடியும் வாழ்வில் முன்னுக்கு வரமுடியும் என உறுதியாக நம்பினான்.
அவர்கள் வீடு திரும்பும் நாளும் விரைவில் வந்தது. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீளக் குடியேறலாம் என்று அறிவிக்கப் பட்டதை அடுத்து இடம்பெயர்ந்திருந் தவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். இவர்களும் கையிலிருந்த பொருட்களுடன் ஒரு மாட்டு வண்டிலில் புறப்பட்டனர். வழியெல்லாம் சிதைந்திருந்த வீடு களைப் பார்த்து சிவாஜினி கலங் கினாள். "இந்த வீடுகளை எல்லாம் ஏன் உடைச்சவை அப்பா?” என்று அனுசுயா கேட்கவே என்ன பதில் சொல்வதென்று புரியாமல் தவித்தான்.
கிராமத்துள் நுழைந்த போது சில முகங்கள் நிழலாடின. இருள் நீங்கி, அந்த முகங்களில் ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. வீட்டை அடைந்ததும் குதுரகலமாக இறங்கிய லோகேஸ் வரன் ஒருகணம் அதிர்ந்து போய் நின்றான்.
கோப்பிசம், ஒடுகள் எதுவும் இல் லாமல் மொட்டையாகக் காட்சிய ளித்துக் கொண்டிருந்தது வீடு. ஆடை யிழந்த பெண் போல் ஜன்னல்களும்
25
கதவுகளும் காணாமல் போயிருந்தன. நிலைகள் கூட உடைத்து எடுக்கப் பட்டிருந்தன. "ஐயோ” என்று தலை யில் கைவைத்து அலறிய சிவாஜினி யோடு சேர்ந்து அவனும் கதறி யழுதான்.
நீண்ட நேரத்தின் பின்னர் தான் அவர்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிந்தது. யாரோ சிலர் கழற் றியதாக காற்றோடு தகவல் வந்தது. வெறி பிடித்தவன் போல் தலையைப் பிய்த்துக் கொண்டான் லோகேஸ் வரன். இதற்கிடையில் மலசல கூடத் திற்குச் சென்ற சிவாஜினி அலறி யடித்துக் கொண்டு வந்தாள். "கக்கூசுக் குழியில எலும்புக்கூடு” திக்கித் திக்கி கூறியழுதாள்.
அப்பாவினுடையதாகத் தானி ருக்க வேண்டும் என ஊகித்துக் அழக் கூடத் திராணியற்று சிலையாக நின்
கொண்ட லோகேஸ்வரன்,
றான். "ஐயோ மாமா." என்று கதறியபடி சிவாஜினி அவன் மீது சாய்ந்தாள்.
இத்தனை சோகங்கள் மத்தி யிலும் நம்பிக்கையூட்டுவது போல தென்னங் கீற்றுக்கள் காற்றில் ஆடி அசைந்து கொண்டிருந்தன.
தென்னங்கீற்றுகளின் அசைவில் தென்றல் காற்று வந்து உடலைத் தழுவிய போது மனதில் புத்தொளி தோன்றுவதாக புதிய நம்பிக்கையுடன் நிமிர்ந்தான் லோகேஸ்வரன்.

Page 15
5 கெளசிக முனிவனின் மனைவி அகலிகையை இந்திரன் தவறாக அணுகியதும்,
அதனால் கெளசிகன் இட்ட சாபத்துக்குள்ளாகி இந்திரன் தன் உடலெங்கும் ஆயிரம் கண்கள் தோன்றின என (மாணவர் மத்தியில் விரசமின்றிக் கதைகள் எனக்கூறி) கூறி, அதன் பின்னரே இந்திரனுக்கு ஆயிரம் கண்ணுடையவன் என்று சொல்லப்படுகின்றன முடிந்தார்.
அதன் பிறகு அவர் திரும்பி நின்று கரும்பலகையில் எழுதிக்கொண்டு நிற்கையில் நான் மெல்ல எழுந்தேன். நான் எழும்பும் போது உண்டான கதிரை அரக்கும் சத்தம் கேட்டு, எழுதுவதை நிறுத்திக் கொண்டு, தலையைப் பின்புறமாகத் திரும்பி வகுப்பை நோட்டமிட்டார்.
கரும்பலகையில் எழுதுவதை நிறுத்தினார். எனது பக்கம் திரும்பி நின்று “என்ன?’ என்று எரிச்சலுடன் கேட்டார்.
“ஸேர், கெளசிகனின் சாபத்தினால் இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் தோன்றி இருந்தால், அவனுக்கு முன்னர் இருந்த இரண்டு கண்களோடு மொத்தம் ஆயிரத்து இரண்டு கண்களல்லவா இருக்க வேண்டும்! எப்படி அவனை ஆயிரம் கண்கள் உடையவன் என்று சொல்லுவது சரி!” எனப் பிடரியில் சொறிந்து கொண்டு பணிவாக மெல்லக் கேட்டேன்.
"இரடா. கணக்குக் கேட்க வந்து
விட்டான்' எனச் சைவப்புலவர் சீறி பூச்சியம் விழுந்தார். C) O
பூச்சியம் அல்ல.
நான் அமைதியாக எனக்குள் சிரித்து வண்ணம் மெளனமாக அமர்ந்து கொண்டேன். தெணியான்
எனது வாசிப்புப் பழக்கம் - கண் சமூக அதிகார வலுவுடைய மேன் னிலைச் சமூகத்தின் பாரம்பரியந்தான், முழுச் சமூகத்தினது பாரம்பரியம் என இன்று சொல்லப்பட்டு வருகின்றது. சமூக அதிகார வலுவுடைய சமூகத் எனது தேடலுக்கான வினா துக்கு மத்தியில், அதிகார வலுவற்ற இன்றும் என்னுள்ளே எழுந்து சமூகங்கள் பல இருந்து வருகின்றன. கொண்டுதான் இருக்கின்றது. அந்தச் சமூகங்களுக்கென குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த தனித்துவமான பாரம் 26
மூடித்தனமாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாது. எதற்கு? ஏன்? என்று கேட்கும் ஒரு மனப்பாங்கினை எனக்குள்ளே வளர்த்து விட்டது.

பரியங்கள் சில இல்லாமல் போய்விட வில்லை. ஆனால், அவை சமூக அதி கார வலுவற்ற சமூகங்கள் என்பதனால் அச்சமூகங்களின் பாரம்பரியங்கள் பெரிதும் வெளியே எடுத்துப் பேசப் படாது மூடி மறைக்கப்பட்டே வருகின்றன.
யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்விப் பாரம்பரியம் எனப் பலராலும் பேசப் பட்டு வருவது அதிகார வலுவுடைய யாழ்ப்பாணத்து மேன்னிலைச் சமூகத் தின் கல்விப் பாரம்பரியந்தான். இந்தப் பாரம்பரியத்தினுள்ளே பிரத்தியேகமான தனித்துவமான ஒரு கல்விப் பாரம் பரியம் உண்டென்பதனை மிகச் சரியாக இனங்கண்டு “யாழ்ப்பாணத்தின் இன் னொரு கல்விப் பாரம்பரியம்’ என அதனை பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டு சுட்டிக் காட்டி யுள்ளார். சைவப் பெரியார் கா.சூரன் வழிவந்த தேவ்ரையாளிக் கல்வித் தாபனத்துக்கூடாக வளர்ந்து வந்தி ருக்கும் கல்விப் பாரம்பரியமே பேரா சிரியர் கா.சி. குறிப்பிடும் பாணத்தின் இன்னொரு கல்விப் பாரம்
“யாழ்ப்
பரியம்” என்பதாகும்.
யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவல ராலும் அவர் வழி வந்தவர்களாலும் நிராகரித்து ஒதுக்கப் பெற்ற ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுள் ஒரு பகுதியினர் (பள்ளர் சமூகத்தினர்) ஒன்று சேர்ந்து தமது சிறார்களின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் தமக்கென நிறுவிக் கொண்ட சைவப் பள்ளிக்கூடம் (1971)
27
யா/ தேவரையாளி சைவ வித்தியா சாலை. இன்று யா/ தேவரையாளி இந்துக் கல்லூரி.
கிறிஸ்தவத்துக்கு எதிராகவும் - தம்மை ஒடுக்குமுறைக்குள்ளாக்கிய சைவத்தையே ஆயுதமாகக் கொண்டு - அந்த ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகவும், தேவரையாளிக் கல்வித் தாபனத்துக்கூடாகப் புதிய ஒரு சமூக, கல்விப் பாரம்பரியம் உருவாக்கம் பெற்றது.
அந்தக் கல்விப் பாரம்பரியத்தில் வளர்ந்து வந்தவன் நான்.
தேவரையாளிக் கல்வித் கூடம் மாணவர்களுக்கான கல்வி ஒன்றினை மாத்திரம் வழங்கும் தாபனமாக அக் காலத்தில் விளங்கி வரவில்லை. ஒடுக் கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக் காகத் தீவிரமாகச் செயற்படும் சமூக நிறுவனமாகவும் அக்காலத்தில் இருந்து வந்திருக்கின்றது.
இந்தக் கல்விக் கூடத்தின் சமூக முக்கியத்துவத்தை, அக்காலத்தில் இங்கு வருகை தந்த பெரியார்களைக் கொண்டும் ஒரளவு உணர்ந்து கொள்ள முடிகின்றது.
தமிழ்த் தென்றல் திரு. வி.கலி யாணசுந்தர முதலியார் (1929), 'கல்கி" கிருஷ்ணமூர்த்தி (1949), பெரியசாமித் தூரன் (1949), சுவாமி சுத்தானந்த பாரதி யார் (1952), குன்றக்குடி அடிகளார் (1955), பிரதமர். டி.எஸ்.சேனனாயக்க (1948), பிரதமர். சேர்.ஜோன் கொத்தலா

Page 16
வல (1955), ஆகியோரும் வேறு
சிலரும் இந்தக் கல்வித் தாபனத்துக்கு
வருகை தந்திருக்கின்றார்கள்.
இந்தக் கல் விக் கூடத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய கவிஞர் மு.செல்லையாவின் கவிதைத் தொகுதி “வளர்பிறை 1952இல் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த வெளியீட்டு விழாவுக்கு நவநீத கிருஷ்ண பாரதியார் அன்று தலைமை தாங்கினார்.
பிற்காலத்தில் நான் நெருக்கமான உறவு பூண்டு இரசிகமணி கனகசெந்தி நாதனை அந்த நூல் வெளியீட்டு விழா மேடையில்தான் முதன்முதலாகக்
கண்டேன்.
அந்த நூல் வெளியீட்டு விழா
நடைபெற்ற சமயம், தேவரையாளி
பள்ளிக்கூட மாணவனாக, தந்தையார் அருகே அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக் கின்றேன்.
எனது
நான் மாணவனாக இருந்த காலத்தில் தேவரையாளி கல்வித் தாபனத்தில் ஆசிரியராக பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும், ஒடுக்கப் பட்ட சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு மிகுந்த சமூக அக்கறையுடன் செயற்பட்டு வந்தார் கள். மாணவர்களிடத்தில் காணப் பெறும் ஆற்றல்களை இனங்கண்டு அவர்களது ஆளுமையை வளர்த்து விடுவதில் ஆர்வம் காட்டினார்கள்.
28
அதிபராக வந்து சேர்ந்தார்.
இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் எம்.எஸ் சீனித்தம்பி அவர்கள் அதிபராக வந்த காலம் முதல் மேலும் உத்வேகம் பெறத் தொடங் கின. எம்.எஸ். எஸ். அவர்கள் 1954இல் தேவரையாளி இந்துக்கல்லுரியின் அந்த ஆண்டு முதல் 1957இல் நான் S.S.C. சித்தி அடைந்து கல்லூரியில் இருந்து வெளியேறும் வரையுள்ள நான்காண்டு காலம் அவரது மாணவனாக இருந்து கல்வி கற்று வந்திருக்கின்றேன்.
அந்த நான்காண்டு காலம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு
காலம்.
அந்த நான்காண்டு காலம் எனது வளர் இளம் பருவகாலம்.
சமூகத்திலும் அரசியலிலும் முக்கி யத்துவம் வாய்ந்த ஒரு காலமாகவும் அக்காலம் இருந்திருக்கிறது. சமூக, அரசியல் மாற்றங்களும் போராட்டங் களும் ஆரம்பிப்பதற்கான அடித்தளங் கள் அக்காலத்தில் இடப்பெற்றன.
கல்லுரியின் பொறுப்பினைப் புதி தாக வந்து ஏற்றுக்கொண்ட அதிபர் மாணவர்கள் மத்தியில் 'விவாத மேடை’ ஒன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அப்போது செய்தார். இன்றைய பட்டி மண்டபம் அன்று “விவாத மேடை" எனப் பெயரிட்டு அழைக்கப் பெற்றது. அந்த விவாத அரங்கின் தர்க்கித்தல் தலைப்பாக, “பெண்களுக்குக் கல்வி அவசியமா?

அவசியமில்லையா?” என்பதே தரப் பட்டது. அவசியம் என்ற அணியில் மாணவிகள் மூவரும், அவசியமில்லை என்ற அணியில் மாணவர்கள் மூவரும் வாதிட்டோம். ஆண்கள் அணியின் தலைவனாக நான் இருந்தேன். அணி யின் தலைவனாக நான் இருந்ததினால் அரங்கில் இருதடவைகள் வாதிடுகின்ற வாய்ப்பு எனக்கு வழங்கப் பெற்றது. அந்த விவாத அரங்கில் மாணவர்கள் அணியே அன்று வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குப் பெருமளவு காரண மாக நான் இருந்தேன் என்று சொல்ல லாம். எதிர் அணிக்குத் தலைமை தாங்கிய மாணவி, விவாத முடிவில் மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.
அந்த விவாத மேடையே அதி பரின் பார்வை என் பக்கம் திரும்பு வதற்குக் காரணமாக அமைந்தது. சிறுவயது முதல் என்னிடத்தில் இருந்து வந்த பேச்சாற்றலை இனங்கண்டு எனது ஆளுமையை வளர்த்து விடுவ தில் மிகுந்த கரிசனையோடு அவர் செயற்பட்டு வந்தார். பாடசாலைகளுக் கிடையே மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்ற சந்தர்ப் பங்களில் எல்லாம் தவறாது நான் கலந்து கொள்ளும் வாய்ப்பினை முன் னுரிமை தந்து வழங்கி வந்தார். ஒரு மாணவன் மாத்திரம் பங்குபற்றுகின்ற போட்டியாக இருந்தால், நிச்சயம் அந்த ஒரு மாணவனாக எங்கள் கல்லூரி சார்பில் நான் கலந்து கொள்வேன்.
ஆனால், எங்கள் கல்லூரிக்கு வெளியே நான் கலந்து கொண்ட
29
பேச்சுப் போட்டிகளில் - ஒரேயொரு போட்டி தவிர, வேறு எந்தவொரு போட்டியிலும் நான் பரிசில் பெற்ற தில்லை. எங்கள் கல்லூரி மாணவர்கள் சிலர் அந்தப் பேச்சுப் போட்டிகளில் பரிசுகளை அக்காலத்தில் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
அக்காலத்தில் பேச்சுப் போட்டி களுக்கு நடுவர்களாக முதிய ஆசிரியர் களே பெரும்பாலும் வந்து அமர்ந்திருந் தார்கள். மேடைப் பேச்சுகளுக்குரிய பழமையான வரைவிலக்கணங்களை கொண்டு
பேச்சுக்கள் கணிக்கப் பெற்ற போது,
அளவுகோல்களாகக்
விறுவிறுப்பான எனது பேச்சுக்கள் பரிசில்களைப் பெற்றுக் கொள்ளத் தவறி இருக்கின்றன.
எங்கள் கல்லூரியில் 1955 ஆண்டு முதல் பரிசளிப்பு விழா ஆரம்பிக்கப் பெற்றது. அந்த ஆண்டு முதல் இன்று வரை அந்த விழா வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது.
கல்லூரிப் பரிசளிப்பு விழாப் போட்டியில் நான் கலந்து கொள்வதற் கான பேச்சினை எனது ஆசிரியர் ஆ.ம. செல்லத்துரை அவர்கள் தெரிவு செய்து தாந்தார். ஸி.என்.அண்ணதுரை அவர் கள் நிகழ்த்திய மேடைப் பேச்சின் ஒரு பகுதியே எனது ஆசிரியர் எனக்குத் தெரிவு செய்து தந்த பேச்சாக அமைந் திருந்தது. ஆ.ம.செ. அவர்கள் நல்ல ஒரு வாசகன். நல்ல பேச்சாளன். அவரது கையில் எப்பொழுதும் ஏதாவ தொரு புத்தகம் இருந்து கொண்டே

Page 17
இருக்கும். ஓய்வு கிடைக்கும் சமயங் களில் எல்லாம் அவர் வாசித்துக் கொண்டு இருப்பார். 'கல்கி"யை அவர் கையில்தான் நான் முதன்முதலாகக் சிறுவயதில் பார்த்திருக்கின்றேன்.
நான் பேசுவதற்குரிய பகுதியினை அவர் தெரிவு செய்து தந்ததோடமை யாமல் பேச்சப் பயிற்சியும் எனக்களித் தார். கல்லூரி விட்டு நான் வெளி
யேறும் காலம் வரை அவரே எனக்குப்
பயிற்சியாளராக இருந்து வந்தார்.
எங்கள் வீட்டில் பெரிய நிலைக்
கண்ணாடி ஒன்று இருந்தது. அந்த நிலைக் கண்ணாடி முன் நான் போய் நின்றால், எனது முழு உருவத்தையும் அந்தக் கண்ணாடியில் பார்க்க முடியும்.
கல்லூரி விட்டு வந்து சேர்ந்த பிறகு அந்த நிலைக் கண்ணாடி முன் போய் நின்று, எனது ஆசிரியர்
சொல்லித் தந்த மாதிரி எல்லாம் பேசிப்
பழகினேன்.
கல்லூரிப் பரிசளிப்பு விழாப் போட்டியில் நான் முதலிடம் பெற்று
வெற்றி பெற்றேன்.
அன்றைய பேச்சுப் போட்டி
நடுவர்களுள் ஒருவராக அப்பொழுது
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறை மாணவனாக இருந்த இரத்தினசிங்கம் அவர்கள் வந்திருந்தார். எனது பேச்சாற்றல்
கண்டு வியந்து, தனது அன்பளிப்பாக
இரண்டு நூல்களை அதிபர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார். அவர்
3O
வனுக்குச் சொந்தமாகும்.
எனக்கு அன்று வழங்கிய நூல்கள், 'பாரதியார் கவிதைகள்', 'விதியில் ஒரு விடுதி” என்னும் ரஷ்ய நாவல் ஆகிய இரண்டுமே. அந்த நூல்களில் தனது கைப்பட எழுதி, எனக்குப் பாராட்டும், எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டுமென வாழ்த்தும் தெரிவித் திருந்தார்.
இன்று இதனை எழுதிக் கொண்டி ருக்கும் சமயத்தில் அந்த நல்ல இதயத் தின் நல்லாசியை என்னல் நினைவு
கூராமல் இருந்துவிட முடியவில்லை.
தேவரையாளி இந்துக் கல்லுரியில் நான் மாணவனாக இருந்த காலத்தில் மூன்று பரிசளிப்பு விழாக்கள் நடை பெற்றன. அந்த விழாக்கள் நடை பெற்ற மூன்று மேடைகளிலும் ப்ரிசுப் பேச்சுக்களை நான் நிகழ்த்தி இருக்கின் றேன். வகுப்பறைப் பாடங்களுக்கான பல பரிசில்களை வருடந்தோறும் பெற்று வந்திருக்கின்றேன். கல்லூரிப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற தற்கான பரிசிலாக 'கந்தசாமி நினைவுச் சுழல் கிண்ணம்" எனக்கு அப்போது வழங்கப்பட்டது. அந்தச் சுழல் கிண் ணத்தை மூன்று தடவைகள் ஒரு மாண வன் பெற்றுக் கொண்டால் அந்தக் கிண்ணம் குறிப்பிட்ட அந்த மாண இரண்டு ஆண்டுகள் இலகுவாக அந்தச் சுழல் கிண்ணத்தை நான் தட்டிக் கொண் டேன். மூன்றாவது ஆண்டும் நான் வெற்றி பெற்று அந்தச் சுழல் கிண்
‘ணத்தை எனக்குச் சொந்தமாக்கிக்

கொள்வேன் என்ற நம்பிக்கை எனக் கிருந்தது. ஆனால் அப்படி நடக்க வில்லை. மூன்றாவது தடவை என் னுடன் சேர்த்து இன்னொரு மாண வனுக்கு முதல் பரிசினை வழங்கி, கல்லூரி அந்தக் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது.
நூல்களை வாசிப்பதில் எனக் கிருந்து வந்த விருப்பார்வம் போலவே, மேடைப் பேச்சுக்களைக் கேட்பதிலும் மிகுந்த நாட்டம் உள்ளவனாக இருந் தேன். எங்கு பொதுக்கூட்டம் 560) - பெற்றாலும் அங்கெல்லாம் சென்று மேடைப் பேச்சுக்களை அவதானித்துக் கேட்டு வந்தேன்.
எங்கள் கல்லுரியில் 1955ம் ஆண்டு ஒரு விடுமுறை தினத்தில் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் பன்னிரண்டாவது ஆண்டு மகாநாடு நடைபெற்றது. கல்லூரி மாணவனான எனக்கும் அந்த மகாநாட்டுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இருக்கவில்லை. அன்று ஒரு விடுமுறை தினமாக இருந்தமையால் நான் அங்கு செல்ல வேண்டிய அவசியமும் இருக்க வில்லை.
ஆனால், அன்று மகாநாட்டுக்கு நான் போனேன். காலை முதல் மாலை வரை நடைபெற்ற முழு நிகழ்ச்சிகளை யும் மகாநாட்டு மண்டபத்துள் இருந்து பார்த்தேன். பேச்சுக்களை உன்னிப் பாகக் கேட்டேன். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதும், எனது குடும்பச் சூழல், கல்வி கற்ற சூழல்
31
காரணமாக சாதியம் பற்றிய அனுபவங் கள் சாதி ஒடுக்கு முறையின் கொடுமைகள் என்பவற்றைப் பெரிதாக அறியாமல் இருந்து வந்தேன். அன்று அந்த மகாநாட்டில் "நான் கலந்து கொண்டதன் மூலம் என்னை நான்
அறிந்து கொண்டேன். ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குக் காலங் காலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயங் களை, அவமதிப்புக்களை, கொடுமை களை எல்லாம் கேட்டு அறிந்து கொண்டேன்.
அந்த மகாநாடு எனது உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு முன்னர், 1952இல் இந்தச் சமூகத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் எனது மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது.
கரவெட்டி கலட்டிப் பகுதியில் வாழ்ந்த எமது சமூகத்தவர்களின் வீடுகள் சாதி வெறியர்களால் தீ மூட்டி அக்காலத்தில் எரிக்கப்பட்டன.
அக்காலம் நான் சயிக்கிள் ஒட்டிவ தற்கு எனது தந்தை என்னை அனுமதிக்
காத காலம்.
எனது பாடசாலை நண்பன் ஒருவனை உடன் அழைத்துக் கொண்டு கரவெட்டியிலுள்ள கலட்டிக்கு நடந்து போனேன்.
சிறிய ஒரு நிலப்பரப்புக்குள்ளே நெருக்கமாக இருந்த பல வீடுகள் எரிந்து சாம்பல் மேடுகளாக ஆங் காங்கே குவிந்து கிடந்தன.

Page 18
என்ன கொடுமை இது! ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? ஏன் தீ வைத்துக் கொளுத்தினார்கள்? தமது வீடுகளுக்குத் தீ மூட்டி எரிக்கப்படும் போது குடியிருந்த இந்த மக்கள் என்ன செய்தார்கள்?
எனது பிஞ்சு மனதில் எழுந்த வினாக்களுக்கு அப்பொழுது எனக்கு விடை கிடைக்கவில்லை.
ஆனால், சாதி வெறியர்களால் எரி யூட்டி எரிக்கப் பெற்ற அந்த வீடுகளின் சாம்பல் மேட்டினை அன்று அரைக்காற் சட்டை போட்ட சின்னஞ்சிறு பள்ளிச் சிறுவனாக இருந்த நான் சென்று பார்வையிட்டேன். ஆனால் இன்று அதனை நினைத்துப் பார்க்கையில் அங்கு ஏன் போனேன் என்பது எனக்கே அதிசயமாக இருக்கிறது.
இன்னொரு அதிசயம் 1955இல் அகில இலங்கைச் சிறபான்மைத் தமிழர் மகாசபையின் பன்னிரண்டாவது மகாநாட்டுக்கு மாணவனாகச் சென்று பார்வையாளனாக இருந்த நான், பின் னர் அந்த மகாசபையில் இணைந்தது மாத்திரமல்லாமல், அதன் உடுப்பிட்டிக் கிளைச் செயலாளராக இருந்திருக் கின்றேன்.
தேவரையாளி இந்துக் கல்லூரியில் மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நாடகத்தில் நான் நடிப்பதற்கு எனது மேடைப் பேச்சுக் காரணமாக இருந் திருக்கிறது. சேக்ஸ்பியரின் யூலியஸிஸர் நாடகத்தில் நான் மார்க் அந்தனியாக
32
நடித்தேன். அதற்கு முன்னர் கவிஞர் மு.செல்லையா தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் அவரது நாடகம் ஒன்றில் பெண் பார்க்கப் போன மாப் பிள்ளையாக கோட்டும் சூட்டும் போட்டு மேடையில் தோன்றி இருக் கின்றேன். ஆனால், அந்த நாடகத்தில் ஒரு சொல் தானும் வாய் திறந்து பேசும் சந்தர்ப்பம் எனக்கு இருக்க வில்லை.
அதிபர் எம். எஸ். சீனித்தம்பி நெறிப்படுத்திய யூலியஸிஸர் அதற்கு எதிர்மாறாக அமைந்திருந்தது. தமிழ்ச் சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்த நடிகர்களுக்காகக் குறிப்பிட்ட சில படங்கள் தயாரிக்கப்பட்டது போல, எனது பேச்சாற்றலை மையமாகக் கொண்டு அதிபர் நெறிப்படுத்திய நாடகந்தான் அது என்பது எனது நம்பிக்கை. சேக்ஸ்பியரின் நாடகத்தை அதிபர் தமிழில் மொழிபெயர்த்திருந் தார். மார்க் அந்தனி என்ற பாத்திரம் மேடையில் தோன்றி, மேடை விட்டு இறங்கிப் போகும் வரை பொதுமக்கள் மத்தியில் பிரசங்கித்துக் கொண்டு நிற்ப தாகவே அமைந்திருந்தது. கல்லூரிப் பரிசளிப்பு விழா, யாழ் நகரத்தில் நடந்த விழா எனப் பல மேடைகள் ஏறி அந்த நாடகத்தில் நடித்தேன்.
அன்று நாடகத்தில் நான் நடித்த மார்க் அந்தனி பாத்திரம் பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு விசேடமான ஒரு காரணம் உண்டு. சபையில் உள்ளவர் களின் உள்ளங்களை ஒரு பேச்சாளன்
தனது பக்கம் திருப்புவதற்கான தந்தி

ரோபாயங்கள் எவை என்பதை அந்தப் பேச்சின் மூலம் நான் கற்றுக் கொண் டேன். காலப்போக்கில் அந்தப் பேச்சு முறைமையே நான் பின்பற்றும் மேடைப் பேச்சுப் பாணியாக ஆக்கிக் கொண்டேன்.
அந்தக் காலகட்டம் இலங்கை அரசியலிலும், வடபிரதேசத்து சமூக, அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ் வதற்கான மிக முக்கியமான காலகட்ட மாக அமைந்தது. எஸ்.டபிள்யூ.ஆர். டி.பண்டாரநயக்கா தேர்தலில் வெற்றி பெற்று (1956) இந்த நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றார்.
வடபிரதேசத்தில் கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன்.கந்தையா பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று (1956) பருத்தித்துறைப் பாராளு மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டார். பருத்தித்துறை தொகுதி வேட் பாளராக சி.தர்மகுலசிங்கம் (ஜெயம்) 1947 இல் போட்டி இட்ட சமயம் எனது குடும்பம் அவருக்கே ஆதரவாக இருந் தது. அவர் வாக்குக் கேட்டு எங்கள் வீட்டுக்கு வந்த சமயம், சிறு பையனாக இருந்த நான் “ஜெயத்துக்கு ஜே” எனக் கோஷம் எழுப்பியது இப்பொழுதும் எனது நினைவில் இருக்கிறது. எனது குடும்பம் எக்காலங்களிலும் இடதுசாரி வேட்பாளர்களையே ஆதரித்து வந்தது. பொன்.கந்தையாவுக்கும் பூரணமான ஆதரவு வழங்கியது.
ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பற்றி அறியக் கிடைத்த சந்தர்ப்பங்களின்
33
மூலம் சிறிது சிறிதாக சமூக உணர்வை வளர்த்துக் கொண்ட எனது உள்ளத் தில், எமது பிரச்சினைகளின் தீர்வுக் கான மார்க்கம் எது என்பதை கம்யூ னிஸ்ட் உறுப்பினர் பொன்.கந்தையா வின் வருகையுடன் தெளிவாக உணரத் தொடங்கினேன்.
வடபிரதேசத்து ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் 09.07.1956 குறிப் பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒரு தினமாக அமைந்தது. நல்லூர் கந்தசாமி கோவில், பெருமாள் கோவில், வண்ணைச் சிவன் கோயில் ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அன்று திறந்து விடப்பெற்றன. எனது ஆசிரி யர்கள் ஆ.ம.செல்வத்துரை க.முருகேசு, சைவப் புலவர் சி.வல்லிபுரம் ஆகி யோர் ஆலயப் பிரவேசத்தில் கலந்து கொண்டு பின்னர் கல்லூரிக்கு வருகை தந்து அது பற்றிக் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்ததை நான் அப்போது கண்டிருக்கின்றேன்.
நான் S.S.C. பரீட்சை சித்தி யடைந்த பின்னர், தமிழ் மொழி மூலம் H.S.C. படிப்பதற்கான அனுமதிப் பரீட்சை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் எழுதினேன். ஹாட்லிக் கல்லூரியில் அனுமதி பெறுவதென்பது அக்காலத்தில் பல்கலைக்கழக அனுமதி பெறுவது போலத்தான். கிறிஸ்தவக் கல்லூரியாக இருந்த போதிலும், ஒடுக் கப்பட்ட சமூகத்து மாணவன், அதுவும் இந்துவாக இருக்கும் மாணவன் ஒருவன் அனுமதியைப் பெறுவது என்பது சுலபமான காரியமல்ல.

Page 19
கிரிக்கெட் பிரபல்யம் பெறாத அந்தக் காலத்தில், உதைப்பந்தாட்டம் கல்லூரிகளில் முக்கியத்துவம் பெற்றி ருந்தது. உதைப்பந்தாட்ட அணியில் சேர்ந்து விளையாடத் தகுந்த விளை யாட்டு வீரர்களான ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர் சிலருக்கு அந்தக் காலத்தில் அனுமதி வழங்கினார்கள். இன்றும் அந்த நிலைமை முற்றாக மாறிப்போய் விட்டதாக சொல்வதிற் கில்லை.
விளையாட்டுத் துறை சார்ந்த ஈடுபாடு இல்லாதவன் நான். ஹாட்லிக் கல்லூரி அனுமதிப் பரீட்சையில் மாண வர்கள் எட்டுப்பேர் தெரிவு செய்யப் பட்டார்கள். அந்த எண்மரில் ஒருவ னாக நான் இருந்தேன். ஆனால் தமிழ் மொழி மூலமாக அந்த ஆண்டு (1958) வகுப்பினை நடத்த முடியவில்லை யெனக் கூறி, அடுத்த ஆண்டு அங்கு படிப்பதற்கு வந்தால் அனுமதிப்பதாகத் தெரிவித்தார்கள்.
ஓராண்டு காலம் வீணாகக் கழிந்து போவதை விரும்பாத நான், கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியில் பல் கலைக்கழகப் புதுமுக மாணவனாகப் போய்ச் சேர்ந்து கொண்டேன்.
இதுவரை காலமாக "எங்கள் பாட சாலை"யில் கல்வி கற்று வந்த எனக்கு, விக்கினேஸ்வராக் கல்லூரி புதிய அனு பவமாக, சமூகம் பற்றிய அக்கறையை
உள்ளத்தில் மேலும் தூண்டி விடுவதாக
அமைந்திருந்தது.
(தொடரும்.)
(),00
EXCELLENT
FHOTOGRAPHERS MODERN COMPUTERIZED
、 PHOTOGRAPHY
FOR WEDDING PORTRAITs 8 CHILD SITTINGS
të Photo Copies of idetity
Cards (IC), Passport & Driving Licences With in 15 Minutes
 
 

சுவாசிக்கும் திரணியற்று நோயில் உழன்று அரை மயக்கத்தில் சூழலை வெறிக்கிறேன். பழங்கள் அழுகிய துர்வாடை கூமந்து வந்த காற்று வார்டினுள் பிரவேசிக்கிறது. சன்னமாய் தேய்ந்து கரைந்து விழும் வார்த்தை ஒலிகளைத் தவிர, மருத்துவமனை அமைதி தட்டிப் போய் கிடக்கிறது. நெஞ்சில் பாறாங்கல்லொன்று அழுத்துவதைப் போன்ற, இம்சை. புலன்கள் சக்தியற்று சோர்ந்து போயின. நலிந்தடங்கிய குரலில் நெகிழ்ந்து இறைநாமம் விளித்தேன்.
“யா அல்லாஹ்! ரப்பே, ரட்சகனே!"
இருதய நோயின் உக்கிரத்தில் துடித்த என்னை, இங்கு கொண்டு வந்து சேர்த்துச் சில நாட்கள் ஆகிவிட்டன. உடல் மரத்து சிறிதும் பிரக்ஞையற்று ஒரு பொதியாக என்னை வாரிச் சுருட்டிக் கொண்டுவந்து, இங்கு சேர்த்தார்களாம். என் மனைவி நபீஸா சொன்னாள்.
அறுபது வயது வாழ்க்கைப் பயணத்தில் இப்படியொரு கடுமையான நோய், முன்னெப்போதும் நேர்ந்ததில்லை. மூப்பின் பரப்பில் நோய்களின் பேய்க் குதியாட்டம். வயது போகப் போக, உடலின் வளங்கள் வரட்சியுற்றுப் போகின்றன. மனிதனது வாழ்வில் பிள்ளைப் பருவம், வாலிபம் இரண்டும்தான் வசந்த காலங்கள். அவை இனித் திரும்பி வரும் சாத்தியமில்லை. வயது போன காலத்தில் இவற்றை எண்ணி நான் ஏன் மாய்ந்து போக வேண்டும்? வயது போனால் என்ன? இளமை மனதில் மட்டுமாவது இருக்கிறதே!
வயது என்பதுதான் என்ன? அது மனசுதான்! நிலவும், சூரியனும், ug6) TGOL கடலும் காற்றும் எப்போதாவது முதுமையை அணைத்து மூச்சடைத்துக் மு.பவர் கொண்டனவா? அவற்றுக்கு எப் போதும் உயிர்ப்புடன் கூடிய இளமை வேகம். ஒக்ஸிஜன், சேலைன், ஸ்கேன், வெள்ளைக் குருவிகளாய் மேனி
எக்ஸ்ரே என உடனுக்குடன் அவசரப் பளபளக்க உலலாச நடைபோடும்
பிரிவில் ஒஇச்சை இட்டியதில், நர்சுகள். இங்கு எந்த நோயாளியின்
பொல்லாத காலன் தற்காலிகமாகப் மனதிலும் உற்சாகமில்லை. நோய்
பின்வாங்கி விட்டான். மரணத்தின் பற்றிய நெருடல். ஆனால், மருத்து
தீவிர வருடலை உதாசீனம் செய்து வரிடம் மனித சக்தியையும் மீறிய
விட்டு இப்போது விறிது தேறியிருக் ஏதோவொரு ஆற்றல் பொருந்தியிருப்ப
கிறேன். தாக நோயாளிகள் மனதிற்குள்
கணிப்பர்.
35

Page 20
"கரீம் மாஸ்டர் எப்போதும் இளமையாகவே இருக்கிறார்!’ என என்னைச் சூழ உள்ளவர்கள் விமர் சிப்பர். இளமையென்றோ, முதுமை யென்றோ மரணத்தின் தாட்சண்யமற்ற பார்வை மனிதன் மீது விழுவதில்லை. அது பல்வேறு உருவெடுத்து எப் போதும் வரலாம். தன் கயிற்றை இறுக் கமாகப் பற்றிக் கொண்டு பித்துப் பிடித்து, அது பிரபஞ்சமெங்கும் அலைந்து திரிகிறது. கடுமையான நோயின் நெருக்குதலில், மரணத்தின் வெம்மை கோரமாய் என் மீது பரவுவ
எனது நோயினை தீவிர மருத்துவப் பரி சோதனை சரியாக கிரகித்து விட்டதாம்.
தாய் நான் உணர்வேன்.
அன்று மனைவி நபீஸா நெஞ்சடைத்து குமுறியழுத காட்சி, இன்னும் என் விழியோரங்களில் நிலைத்து நிற்கிறது. பேரக் குழந்தைகளும், அதிர்ந்து போய் கதறியழுதது செவிப் புலனில் இன்னும் ஒலித்தபடிதான்.
வாரிசுகளும்
"உயிர் இதன் தாற்பரியம்தான் என்ன?
காலம் காலமாக ஊனுருக்கி, துயரம் சொரித்து பாதுகாத்து வந்த ஜீவத் துடிப்பை திடீரென ஓடிவரும் ஒரு அனாமதேயக் காற்று வந்து அள்ளிக் கொண்டு போவதா? இருப்பின் முற்றுப்புள்ளி மரணமா?
மேனியை அசைத்துப் புரண்டு படுக்க இயலவில்லை. உடம்பிற்குள் அரக்கன் புகுந்து கொண்ட உளைச்சல்.
36
ஜீவனைக் கடித்துக் குதறும் பொல்லாத
அவஸ்தை.
“என் இருதயத்தில் துளை விழுந் திருக்கிறதாம்! அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே உயிர் பிழைத்தல் சாத் தியம் என்பது மருத்துவரின் கணிப்பு. பெருங்குடி மன்னரெல்லாம் கருங் காலிக் கட்டை உடம்புகளோடு கம்பீர மாகச் சுற்றித் திரிகிறார்கள். எந்தத் தீய பழக்கமற்ற எனக்கு இப்படியொரு நோயா? இறைவா! இது என்ன சோதனை? பள்ளிக்கூட ஆசிரியராக வாழ்நாள் முழுதும் சேவை செய்தேன். எத்தனை பேருக்கு அறிவொளியூட்டி யிருப்பேன்? எங்கே அந்த எல்லோரும்?
கிடைக்கும் ஓய்வூதியம் ஒன்று தான் வாழ்வின் பற்றுக்கோல். அதன் மூலம் வாழ்வு மெல்ல நகர்கிறது. இது வரை வாழ்ந்த அனுபவங்கள் தூரத்துப் புள்ளிகளாய் நெஞ்சுறுத்தி நிற்கின்றன. மரத்தில் உறைந்த பறவை பறத்தல் பற்றிய கனவுகளில் மனம் லயித்துச் சிலிர்ப்பதைப் போல், கடந்த காலங் களை சல்லடை போட்டுப் பார்ப்பதை தவிர்க்க இயலவில்லை.
நெஞ்சில் நினைவுகள் பீறிட்டு ஊற்றெடுக்கின்றன. எந்த நினைவலை களும் ஒரு கால அட்டவணைக்குள், ஒடுங்கக் கூடியனவா? நினைவுகள்! நினைவுகள்! நெஞ்சில் உயிர்ப்பிருக்கும் வரை. என் மனைவி நபீஸா பாவப் பட்டவள். அசாத்திய பொறுமைசாலி. எந்தத் துன்ப துயரங்களிலும் நாங்கள் வசைபாடிக் கொண்டதில்லை. நாற்பது

ஆண்டுகளாக குடும்பச் சுமைகளைத் தாங்கிக் கொண்டு என்னோடு ஒடிக் களைத்துப் போனாள். இத்தனை கால ஜீவத இருப்பில் பெரிய சுகபோகங்கள் எதனையும் அனுபவித்தவளில்லை. மாசற்ற நேசம், உயர்ந்த பண்பு. இவை அவளைச் சராசரி பெண்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்.
நேற்று முன்தினம் நான் மூச் சடைத்து துடித்தபோது, அவளிடம் ஏன் தான் அந்த கடைசி வார்த்தைகளைக் கூறினேனோ?
"நபீஸா..! நீ நல்ல பெண். கண வனின் மனம் நோகாமல் நடப்பவள். உனக்கு மேலான சுவர்க்கம் கிடைக்க வேண்டும். குடும்பத்தை நல்லபடியாகப் பார்த்துக்கொள்! வாழ்வின் மீதான
பிடிப்பு எனக்கு அற்றுப்போய்
விட்டது. நபிஸா என்னால் உனக்கு ஏதும் தவறுகள் நேர்ந்திருந்தால் அல்லாஹலிக்காக மன்னித்துக்கொள்!" அந்த வார்த்தைகளின் கனத்தில் அவள்
மனம் கசிந்து துடித்தாள். என்னைத்
தொடர்ந்து பேச விடாது, விரல்களால் என் இதழ்களை அழுத்தித் தடுத்தாள். ஆனால், அப்படியேதும் இசகு பிசகாய் உடன் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. கடந்துபோன இருப்பின் நிஜங்கள் தடம்பதித்து வலித்தன.
ஜனனமும், மரணமும் வாழ் வெனும் நூல் இழையின் இரு முனை கள்தானே? மரணமேன் மனிதனை இப்படிப் பீதி கொள்ள வைக்கிறது? மரணத்தின் பரிபாஷை மெளனமா?
{37
அதன் சைகையும் கைகாட்டலும் என்னையேன், பதட்டத்தில் ஆழ்த்து கிறது? இறப்பை மட்டும் மனிதன் ஏன் மூர்க்கத்தனமாகப் புறக்கணிக்கிறான்?
வாழ்வோடு முரண்பாடின்றி அவ னால் சமரசம் செய்து கொள்ள முடி கிறதா? மரணத்தோடும் முரண்பாடு, வாழ்வோடும் திருப்தியில்லையென்றால் இந்த ஜீவித நியாயங்களுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? சாவு மனிதனை எப்போதுதான் நிழல்போல் கவிந்து, பின்தொடராமல் இருந்தது? மனித உயிர்களைக் காவு கொள்வதில் மரணத்தின் தாகம் என்றுமே தணிந்த தில்லை.
அது பல பொழுதுகளில், என்னை வெறிபிடித்த வேட்டை நாயாய் துரத் திய நிகழ்வுகள், நெஞ்சை விட்டு நீங்க மறுக்கின்றன.
அன்று - வீட்டினர் எல்லோரும் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு வெளியூர் போய்விட்டார்கள். இரவு நான் மட்டும் உறக்கத்தில் ஆழ்ந் திருந்தேன். ஒரு சீதளக் குளிர்ச்சி என் மேனியை ஊடறுத்து படர்ந்து கொண் டிருந்தது. “உஸ்!” என்ற சீறல் ஒலி அசாதாரணமாகக் காற்றோடு போட்டி போட்டது. இருட்டில் உறங்கிப் பழக்க மில்லை எனக்கு. நைட் பல்ப், சிகப்பு வர்ணத்தில் மெல்லிய ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. கெட்ட கனவொன்று கண்டுவிட்ட பதட்டத்தில் திடீரெனக் கண் விழித்தேன். என் உடல் அருகே ஒரு சர்ப்பம் தலை உயர்த்தி நிழலாய்

Page 21
நெளிந்தது. என் மூளையில் மின்சாரம் பாய்ச்சிய அதிர்ச்சி!
சிறிது உடல் அசைந்தாலும் சர்ப் பம் என்னைப் பழி வாங்கிவிடும் துர்ப் பாக்கிய நிலை. உடன் துள்ளிக் குதித்து எழுந்து நிற்பதிலும் உயிராபத்து காத் திருந்தது. மரணம் மிகச் சமீபத்தில் சாது ரியமாக வந்து சூழ்ந்துவிட்ட தருணம். மூளை நுட்ப இழை பின்ன மறுக்கும் சங்கடம். கண்களை இறுக மூடிய வாறு, பிரக்ஞையற்று விறைத்துக் கிடந் தேன். பாம்பின் மூச்சுக்காற்று என் மேனியில் பட்டு மெய் சிலிர்த்தேன்.
இந்தச் சிறு இடைவெளிக்குள் - ஒரு நீண்ட கொடிய மெளனம். பீதி யுற்ற நெஞ்சமெங்கும் இறைநாமம்
பீறிட்டு வழிந்தது. மூடிய விழிகளுக் குள் மரணத்தின் கரிய நிழல் பூதாகார
மாய்த் தெரிந்தது. சில கணங்கள் அச்சத்திலேயே உறைந்து போயிற்று.
திடீரெனக் கண் விழித்து திருடனைப்
போல் சூழலை வெறிக்கிறேன். எந்தச் சலனமுமில்லை. சர்ப்பம் நகர்ந்து சென்ற சுவடு தெரியவில்லை. அச்சம் அடிமனதிலிருந்து விலகிட மறுத்தது. உதவிக்கு யாருமின்றி பாம்பை தேடி யடித்துக் கொல்லும் திராணியுமில்லை.
விடியும்வரை உறக்கம் தொலைந்து வெளித்திண்ணையில் உறைந்திருந் தேன். இதைப் போன்று மரண தேவ னோடு கைகுலுக்கிய சம்பவங்கள் பல உண்டு. ஒரு பொழுது, தாக்கி நூலிழையில் தப்பி உயிர் பிழைத் திருக்கிறேன். வாகன விபத்தில் சிக்கி,
மின்சாரம்
38
படுகாயமுற்று காலனுக்கு டாட்டா
காட்டி, நழுவியிருக்கிறேன். ஆற்று நீரில் அள்ளுப்பட்டுப்போய் துடித்துத் துவண்டிருக்கிறேன். இவையனைத்தும் தடயங்களாக மன அரங்கில் பதிவாகி யிருக்கின்றன. மரண தேவனுக்கு உருவ மில்லை - மொழியில்லை. ஆனால், ஒரு வாடை இருக்கிறது என்பது எனது அனுபவ வெளிப்பாடு. மரணம் என்னைப் பின்தொடர்ந்து வந்து, ஒரு வாடையை பரீட்சயமாக்கி விட்டுப் போயிருக்கிறது. அதுதான் பழங்கள் அழுகிய துர்வாடை! வெளவால்கள் குடியிருக்கும் இடத்தில் எழுமே, கவிச்ச வாடை, அதை நுகரவே சங்கடமாக விருக்கும். அந்தத் துர்வாடை என்னைத் துரத்தியிருக்கிறது. நான் அதை வெறுப் போடு சுவாசித்திருக்கிறேன்.
இந்த மருத்துவமனையிலும் அந்த நெடியின் வருகை தொடர்ந்திருக்கிறது. இங்கு அதன் தீராப்பசிக்கு நிறைய சோளப் பொரி கிடைப்பதாய் இருக்கக் கூடும். மரணமே! உன் பரிபாஷை எனக்குப் புரிகிறது. இந்த மனிதர்கள் என்னைக் கண்டு ஏனிப்படி மிரண் டோடுகிறார்கள்? என்பது தானே உனது கேள்வி.
தெருநாய்களைத் துரத்தி, கழுத்தில் தொண்டு போட்டிறுக்கி, மிருகக் கொலை செய்யும் நபர்களைப் போல - உன்னிடம் தயவு தாட்சண்யம் இருப் பதே இல்லை. துப்பாக்கிச் சத்தம் மலிந்து போன இந்த யுகத்தில், அன் றாடம் உன் ஆசை அமோகமாக நிறை வேறுகிறது. என்னிடம் நீ விரைவில்

வரலாம். அதற்கான சமிக்ஞையினை
நான் உணர்கிறேன்.
உயிர் வாங்கியே! உன்னை மீறி நான் எங்கு போய் ஒளிந்து கொள்ள? நீ வரும் போது வா! ஒரு வெறி கொண்ட விலங்கினைப் போலல்லாது, ஒரு மெல்லிய தென்றலாய் என்னை வந்து தழுவு. இந்தப் பிரபஞ்ச ஒட்டுறவுகளையெல்லாம் இழந்துவிடும் இறுதித் தருணத்தில் ஒரு நண்பனாக தரிசனம் தந்து உன் கடமையை செய்து விட்டுப் போகமாட்டாயா?
ஆப்ரேஷன் தியேட்டரில் மயக்க ஊசி ஏற்றிய அயர்வில் சோர்ந்து கிடக்கிறேன். இருதய சத்திர சிகிச்சை உடன் நடக்கலாம். முகமூடியணிந்த மருத்துவர்கள் சுறுசுறுப்பாக இயங்கு கின்றனர். ஆப்ரேஷனுக்குப் பின் - நான் சுகதேகியாகி விடுவேன் என்பது மருத்துவரின் எதிர்பார்ப்பு. மீண்டும் அழுகிய பழவாடை ஆப்ரேஷன் அறை யில் ஊடுருவிப் பாய்கிறது. அது என் நாசித் துவாரம் வழியாக, முதுகுத் தண்டில் ஊடுருவி குருதியில் உறை கிறது. மரணத்தின் பின்புலம் என் ஆழ் மனதில் புதைந்து கிடக்கிறது. மூடிய இமைகளில் கனவொன்று கருக்கொள் கிறது.
வானம் பெருவெளியாய் விரிந்து கிடக்கிறது. நான் ஒற்றைப் பறவையாய் உச்சிவானில் பறந்து திரிகின்றேன். சூரிய வெப்பம் என் மேனியை சுட் டெரிக்கவில்லை. கால்கள் ஒடுக்கி,
39
சிறகுகள் விரித்து, அத்துவான வெளியை வேகமாக கடக்கிறேன்.
என்றுமில்லாத பறத்தல் சுகம்!
திடீரென உடல் பெருத்த இராட் சத பருந்தொன்று என்னை வெறி கொண்டு துரத்துகிறது. கலக்கமும் பீதி யும் என் அடிவயிற்றை கவ்விப் பிடித் தாட்டுகிறது. பருந்து என்னை வீழ்த்த வியூகம் அமைக்கிறது. அதன் வலிமை மிக்க கால்களால் எனையறைந்து, பேய் அலகினால் என்னைக் குதறி சிதைக் கிறது. நான் நிலம் நோக்கிச் சிதறி விழுகிறேன். என் அவலக் குரல் ஓங்கி யெழுந்து காற்றில் கரைகிறது. பிரக் ஞையற்ற நெடுந்தூக்கம் என்னைத் தழுவி அரவணைக்கிறது.
ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த டாக்டரை சூழ்ந்து கொண்டு, நிலமை என்னவென்று உறவினர் வினவுகின்றனர்.
ஒரு இழப்பை சந்தித்த வெறுமை அவர் முகமெங்கும் பரவியிருக்கிறது.
முருகபூபதியின் சிறுகதைத் தொகுதி கங்கை மகள் |வெளிவந்து விட்டது.

Page 22
275.
276.
277.
278.
°79.
280.
281.
282.
283.
284.
g് ബി ബസ്ത്രി
liuli
- செங்கை ஆழியான்
(மலரின் தொடர்ச்சி.)
நடந்தாய் வாழி வழுக்கியாறு (1984) செங்கை ஆழியான். சிரித்திரன் வெளியீடு - யாழ்ப்பாணம்.
புதியதோர் உலகம் (1985) கோவிந்தன், தீப்பொறி வெளியீடு - சென்னை.
ஓ அந்த அழகிய பழைய உலகம் (1985) செங்கை ஆழியான், ரஜனி வெளியீடு - யாழ்ப்பாணம்.
குங்குமம் (1985) முல்லையூரான், சோமு புத்தக நிலையம் - சென்னை.
புதிய அலைகள் (1985) முல்லையூரான், சிறி மீனாட்சி நிவையம் - சென்னை.
அயலவர்கள் (1985) செ.கணேசலிங்கன். குமரன் பதிப்பகம் - சென்னை.
விமானங்கள் மீண்டும் வரும் (1985) நெல்லை க.பேரன், ஷர்மிளா பதிப்பகம் - கரவெட்டி
தீம்தரிக்கிட தித்தோம் (1985) செங்கை ஆழியான், யாழ் இலக்கிய வட்டம் - யாழ்ப்பாணம்.
கடல் கோட்டை (1985) செங்கை ஆழியான், ஈழநாடு வெளியீடு - யாழ்ப்பாணம்.
புதியதோர் உலகம் (1985) கோவிந்தன், தீப்பொறி வெளியீடு - சென்னை.
40

285.
286.
287.
288.
289.
290.
291.
292.
ஈழம் எழுந்து வருகிறது (1985) முல்லைத்தீவான் சென்னை.
கானல் (1986) கே.டானியல், தோழமை வெளியீடு - கும்பகோணம்.
சலதி (1986) சொக்கன், முரசொலி வெளியீடு - யாழ்ப்பாணம்.
துயிலும் ஒரு நாள் கலையும் (1986) கோகிலா மகேந்திரன், சிவன் கல்வி நிலைய வெளியீடு - யாழ்ப்பாணம்.
பத்திக்சந்த் (1986) சொக்கன், வங்க மூலம் -
சத்தியஜித்ரே, பூபாலசிங்கம்
வெளியீடு, கொழும்பு.
தில்லை ஆற்றங்கரை (1987) ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியம், சிந்தனை அகம்.
தியாகராஜ நகர், சென்னை.
தாய்வழித் தாகங்கள் (1987) அ.பாலமனோகரன், டென்மார்க்.
காட்டில் எறித்த நிலா (1987) ஜூனைதா ஷெரிப், மட்டக்களப்பு.
41
293.
2.94.
295.
296.
297.
298.
299.
300.
ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை (1987) கே.ஆர்.டேவிட், முரசொலி வெளியீடு - யாழ்ப்பாணம்.
பொய்மையின் நிழலில் (1987) செ.கணேசலிங்கன், பாரி
நிலையம் - சென்னை.
அடிவானத்து உணர்வுகள் (1987) பி.எம்.புன்னியாமீன், சென்னை.
தண்ணீர் (1987)
கே.டானியல், வராவொல்லை வெளியீடு. யாழ்ப்பாணம்.
வித்தியாசப்படும் வித்தியாசங்கள் (1987) பார்த்திபன், ஜேர்மனி.
தெய்வதரிசனம் (1988) செ.குணரத்தினம், உதயன்
வெளியீடு - மட்டக்களப்பு.
தூவானம் கவனம் (1988) கோகிலா மகேந்திரன், கலை இலக்கியக் களம், தெல்லிப்பளை.
காட்டில் ஒரு வாரம் (1988) அனு.வை.நாகராஜன், வைரமான் பதிப்பகம், யாழ்ப்பாணம்.

Page 23
301
302.
303.
304.
305.
306.
307.
பயணம் தொடர்கின்றது (1988) நாவண்ணன், தொண்டன் வெளியீடு, யாழ்ப்பாணம்.
தீபங்கள் எரிகின்றன (1988) நாவண்ணன், சுவாமி ஞானப் பிரசாச சனசமூக வெளியீடு, LD606) b.
GņFb (1988) லீல்குணசேகர. மொழிபெயர்ப்பு: ஜூனைதா ஷெரிப், தமிழ்மன்றம். கல்கின்னை.
LD60).pdseBIT6)b (1988) செங்கை ஆழியான், மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.
நம்பிக்கைகள் (1989) நந்தி, வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து (1989) செங்கை ஆழியான், வரதர் வெளியீடு. யாழ்ப்பாணம்.
பொற்சிறையில் வாழும் புனிதர்கள் (1989) தெணியான், முரசொலி வெளியீடு, யாழ்ப்பாணம்.
42
308.
309.
310.
311.
312.
313.
314.
315.
கே.டானியலின் குறுநாவல்கள் (1989) வாரவொல்லை வெளியீடு, யாழ்ப்பாணம்.
னிடிவெள்ளி பூத்தது (1989) சோமகாந்தன், வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.
ஒரு தந்தையின் கதை (1989) அன்புமணி. உதயம் வெளியீடு. மட்டக்களப்பு.
எழுதிச் செல்லும் விதியின் கை (1989) மஹராஜசிறி. வரதர் வெளியீடு - யாழ்ப்பாணம்.
மண்ணின் தாகம் (1989) செங்கை ஆழியான், மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.
சங்கரன் (1989) வளவை வளவன், மிரா வெளியீடு, யாழ்ப்பாணம்.
ஒரு திட்டம் மூடப்படகிறது (1990) து.வைத்திலிங்கம், கல்யாணி பதிப்பகம், கொக்குவில் யாழ்ப்பாணம்.
உள்ளத்தின் உள்ளே (1990) ந.பாலேஸ்வரி உதயம் வெளியீடு. மட்டக்களப்பு.

316.
37.
318.
319.
320.
321.
322.
323.
324.
இராவணன் கோட்டை (1990) கே.எஸ்.ஆனந்தன், மீரா வெளியீடு. யாழ்ப்பாணம்.
அந்தநிலை, (1990), பி.எம்.புன்னியாமீன், மாத்தளை.
கந்தவேள் கொட்டம் (1991) செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்
குவேனி (1991) செங்கை ஆழியான், தமிழ்த் தாய் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
விலங்கில்லா அடிமைகள் (1991) செ.கணேசலிங்கன்,
குமரன் பதிப்பகம், சென்னை.
ஜன்ம பூமி (1991) செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
அகதியின் முகம் (1991) செ.யோகநாதன், சத்தியபாரதி பதிப்பகம், சென்னை.
ஆறுகால் மடம் (1991) செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
u JT85g5600 lb (1991) செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
43
325.
326.
327.
328.
329.
330.
331.
332.
அக்கினி (1991) செங்கைஆழியான், மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை (1991) கே.ஆர்.டேவிட், uJITp LJT600TLD.
காற்றும் சுழிமாறும் (1992) செ.யோகநாதன், சத்தியபாரதி பதிப்பகம், சென்னை.
தனியாக ஒருத்தி (1992)
செ.யோகநாதன், பாரி நிலையம், சென்னை.
வழி பிறந்தது (1992) மாத்தளை கார்த்திகேசு, இளவழகன் பதிப்பகம், சென்னை.
பாதை மாறியபயணங்கள் (1992) மண்டூர் அசோகா,
மட்டக்களப்பு.
மீண்டும் புதிதாய்ப் பிறப்போம் (1992) இணுவையூர் சிதம்பர திருச் செந்திநாதன், மீரா வெளியீடு, யாழ்ப்பாணம். கடலில் ஒரு படகு (1992) காசி.வி.நாகலிங்கம், ஜேர்மனி.
(தொடரும்.)

Page 24
சோப-வின் கவிதைகள்
oufudd Goal fadeool
அந்தக் காந்ைதில்
அண்ணாமைை
புகழ்பெற்ற வைத்தியர் வைத்தியம் இவைசம் கைநீட்டிக் காசு வாங்குவதில்லை. "9/ai/awn upoo 605/7cupantia?oor ഖ@ഖffഖമf ബ0ിup' சுதுமலையில் வைத்தியர் முன்றிலின் சனம் அைைமோதும் விடியற்காைை/காலுமணிக்கே கூட்டம் கூடத் தொடங்கிவிரும். அப்போது மாமாவுக்குப் பக்கவாதம் பருத்த பகுக்கையாகக் கிடந்தார் அண்ணாமலை வைத்தியம் குறுக்குவழியாய்ப் போனான் 6777766ir afiególo sig/ அண்ணாமைை விருக்கு இரண்டு மைல்தேறும்
44

மருந்து வாங்குறது பெரியப்பு நாலு மணிக்கே எழும்பி 67Uffa si6Olufo6D 6usiaisofo.6/mi. பொழுது விடிஞ்சு /காங்கள் எழும்பேக்கை ஆள் விட்டிலை நிற்கும். அன்றைக்கும் அப்படித்தான்
காைையிைை எழும்பி
பல்லு விளக்கிக் கொண்கு நிற்கிறன் பெரியப்பு வருகுது
ustrifunafuti 65ict stoodoo
முதுகுப் பக்கத்திைையிருந்து/ இரண்டு காடா தொங்குது. சால்வைக்கு ஏது//காடா? கிட்டப்போய்ப் பார்க்கிறன்
6ufutburo767
67a2/oioanrü uma rouவி7ைங்கியிட்ருது:
விடியப்Uறம்
வெளிக்கிடேக்கை
62a5/72u56060
@ഗ്രtegഞങ്ങ
சால்வையோடை கிடந்த பாவாடையை எருத்து/ 605/767f76O6D 6Bustació665/767d, சுதுமைை போய் வந்திருக்கு மனுஷன்!
45
оайофом
அய்யன்னா கானாவுக்கு மக்கள் எழுவர் ஆண்கள் இருவர், பெண்கள் ஐவர்.
epoió562/ 67ՍՈան», 67ՄՈoi, 67ՄՈ, 6.usful burr 67arty
ரோயிரம் பரவி/நாம் ஏத்திய afeion defljofoiroor; இந்தப் பெரியம்மா மீது எங்களுக்கு
ത്രേ/ தங்கை பிள்ளைகளாகிய எங்களுக்கு
தனி உரிமை! ஒன்று 'கதை குருத்து",
uff76i5a5/7tel ஒன்று தைைபின்னிவிட்குப் பேச்சு வாங்கும்,
፴ህóቻ68∂ግff, 67óቻ68∂ግff அன்பில் குழைத்துத்தான் வரும். "a losair upstai?cia665/60/7
676ib6Dnd
ஆறு மாதத்திலை பிறந்ததுகள்”

Page 25
(இது வி7ைங்க ஆறுமாதம் பிடித்தது)
தங்கை மேல் உள்ள பாசத்தை
எங்கள் மேல்
67uf?6uto U7õv?
விளையாடிக் கொண்டிருந்தான் (96.76Oldišo பெரிக்குக் குருட்கு Luck
6urfi Transfer važvapg/67zövd. | ofiačtavů 6upuvair
வி7ைாங்க அருத்தருத்துத் தோற்ற மேலும் கனகா பிடிச்சுது ஆத்திரத்திைை
c2a5, எழும்பினான், பெரி என்ற தோழியோரு "இறுக்கடி சின்னாச்சி” /05/am57at56jor 'uv7azièvag” 6.usfuburro7.condard 6uston. விளையாகுவதுண்கு அuைெல்ாைம் கதைபுரவி U776zů7gů U6up6zabuyb, ஒரே ககைய்ைபு
Jomfluunzóñ67a5f7 tapu uyub (9/62/6060765 at Utill to தலைவாசலில் இருக்கும். இந்தக் கதையைத்திருப்பிச் இப்பிடித்தான் ஒருநாள் 67ժn666Dծ (8a6լ:ժ, இவன் சண்முகம் சிரித்து மகிழ்ந்தவர்
பெரியப்பு.
序
NNNN NNN N NAMN ડ્ઝરે SN Nod, N 5Q SNSS C2S2 SS N.N N\ Տ No
SOM
Nid N. LrLLkLLLLrSLLLLLLLLkLkqLLLLreLLLLLLLLJLLLLLLLLHrHLLLLHHLLLLLLLS BằờỉNềNừồừừừềề
al 冷 Sas r
ჭაჭჯზsდöზაჭმსაჭადstბს&R&წწNGS&ზ6 RěùNNèùÈRèßlsčNNò šèSSès
SAGÈÈNYÈSNA Sà *8ჭ&პსზ&U&t}&&სწაჯჭlცhჩაპS$სზზზჭ8სპN&&itôზiş ܠܼܠ R
 
 
 
 
 
 
 
 

தற்காலத்து ஈழத்து எழுத்துக் கலை பெரும்பாலும் தன் வரலாறுகளையே ஆக்கிக் கொண்டிருப்பதை இலக்கிய அவதானிகளால் காண முடிகின்றது. எழுதும் வல்லமை பெற்றோர் தமது கடந்தகால அறுவடைகளை நூலுருப்படுத்தி ஆவணமாக்குகின்றனர். புகழ் பூத்த பேனா மன்னர்கள், சமூகப் பணியாளர்கள், வாழ்க்கையில் வெளிச்சம் பெற்றோர் இம்முயற்சியில் தமது எழுத்துத் திறனை ஈடுபடுத்தித் தமது சாதனைகளையும், உன்னதங்களையும் பிரசித்தப்படுத்துகின்றனர்.
இத்தடத்தில் முகிழ்ந்தவொரு எழுத்துருவை, அண்மையில் வாசிக்க முடிந்தது. ‘வாழ்வும் வடுவும்" என்ற நூலேயது. கனடா, நான்காவது பரிமாண வெளியீடிது. எங்குமே விலை குறிப்பிடாதபடியால், இலவச வழங்கலோவென எண்ண வைக்கிறது!
இரசனைக் குறிப்பு கல்வியியலாளரும் சமூகப் பணி யாளரும் தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவருமாகிய இலங்கையன் (ஈ.வே.செல்வரத்தினம்) d ed இக்கையடக்க நூலில் தனது வாழ்வை - மா.பாலசிங்கம் விபரிக்கிறார்.
"υ ιώδες - 63νηςδοι ιδί
இவரது வாழ்வை ஏனையோர் அறிதல் செய்வதற்கு அவரது வாழ்க்கை அப்படியென்ன உன்னதமான?தெனத் தமிழ்ச் சமூகம் பட்டிமன்றம் நடத்தலாம்! இத்தகைய மனப்பிறழ்வு ஏன்ைய தன் வரலாற்றுப் படைப்புகளைப் பார்ப்பவர்களுக்கும் ஏற்படலாம்! அது மானுட சுபாவம்! இதற்கு இலங்கையனே விளக்கம் சொல்கிறார் -
"நீண்ட காலமாக இரக்கமற்ற வகையில் ஒடுக்கப்பட்டு வந்த எமது சமூக வரலாறும், நான் பிறந்து வளர்ந்து வந்த கதையும் ஒன்றுக்கொன்று ஓரளவு சமாந்தரமானவை என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் எனது வாழ்க்கையைப் பதிவு செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை ஒன்று எனக்கு உண்டு என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.”
இந்நூலாசிரியரான இலங்கையன் - கருவில் திருவைப் பெற்றவரல்ல! இவர் பிறந்து வாழ்ந்த சூழலும், இவரை வாழ்வில் மேம்படுத்தக்கூடிய வழிகாட்டல்களை வழங்கக் கூடிய அறிவுத் தளத்தைக் கொண்டதாக இருக்கவில்லை. இருந்தும், இலங்கையன் தன் ஊக்கத்தாலும் சலியா உழைப்பாலும் வாழ்வில் மிதந்துள்ளார். இதுவே இவரது வாழ்வின் தடத்தை ஏனையோர் தேடல் செய்யும் அளவிற்கு இவரை வித்தியாசப்படுத்துகின்றது.
47

Page 26
கற்க வேண்டுமெனத் தந்தையிடம் கெஞ்சி மன்றாடியவர். தந்தைக்குப் படிப்பிக்க மனமிருந்தும், கடமை இருந் தும், பொருளாதார வரட்சி தடைக் கல்லாக இருந்தது. பால்ய தொழிலாளியாக்கவே எத்தனித் இருந்தும் இலங்கையனின் தெண்டிப்பால் மனம் மாறினார்.
மகனையொரு
தார்.
உயர் சாதியினது எழுதாச் சட்டத் திற்கமைய இலங்கையன் அரையில் சுற்றிய துணித் துண்டொன்றுடன், மேலங்கி இல்லாது பாடசாலை சென் றார். மண் தரையிலும் கடைசி வாங் கிலும் இருந்தே கற்பதற்கு அன்றைய மேட்டுக் குடித் தமிழர்கள் இவரை அனுமதித்தனர். அத்தோடு நின்றனரா? இவர் பாவித்த மேசைக்குள் வெற் றிலை எச்சிலைக் கற்கும் புத்தகங்களை நாசப்படுத்தினர். இவர் வசமிருந்த ஆங்கில அகராதியை மலவாளிக்குள் எடுத்தெறிந்தனர். படித்த பாடசாலையில் சிறுவன்
கொப்பளித்துக்
இலங்கையன் ஒரு அந்நியனாகவே கருதப்பட்டான். இருந்தும், தடைக்கற் களைத் தனது வெற்றியின் படிக்கற் களாக்கினார். இலங்கையனின் பிஞ்சு மனதில், "அவமானங்களில்லாது வெகு நிஷ்டுரங் களை அனுபவித்தாவது கல்வியில்
மானங்கள் கிடைக்காது",
முன்னேற வேண்டுமென்ற ஆவேசம் ஓங்காரித்தது.
மிகவும் பின்தங்கிய குக்கிராமமான உடுப்பிட்டி, நாவலடியில் பவள வளவு என்ற குறிச்சியில் பிறந்தார். ஆறுமுக
48
நாவலர் பெருமானின் உபரிப்பில் நிறுவப்பட்ட சைவப் பாடசாலையில், உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட பஞ்சமருக்குக் கற்கும் வசதி கிடைக்காத போதும், அந்நிய தேசத்த வர்களால் முகாமைத்தவம் செய்யப் பட்ட, உடுப்பிட்டி, அமெரிக்கன் மிசன் பாடசாலையில் இலங்கையனுக்குக் கல்வி பெறும் வாய்ப்புக் கனிந்தது. இருந்தும் தெய்வம் வழி விட்டாலும் பூசாரிகள் மல்லுக்கு நிற்பது போல் கற்பித்த யர்கள் எந்தளவிற்குத் தமது திமிர்த் தனங்களை இலங்கையன் மீது ஏவ முடியுமோ அந்தளவிற்கு ஏவியு முள்ளனர். பாடசாலையில் கடமை புரிந்த, இந்தியாவின் கேரள மா நிலத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள்
"சாதிமான்'களான ஆசிரி
இலங்கையனின் உன்னத திறமையை உள்வாங்கி - வஞ்சகத் தனமாக இவ ரது கல்விக்கு ஏற்படவிருந்த விபத்துக் களை முறியடித்தனர். இதில் மிகவும் முக்கியமானவர் கல்லூரி அதிபர் கே.ரி.ஜோன்.
மிகச் சிறந்த சித்தி எஸ்.எஸ்.சிப் பரீட்சையில் கிடைத்தது. இச்சிறப்புச் சித்தி பட்டப் படிப்புப் படிப்பதற்கு மெற்றிக்குலேசன் பரீட்சையிலிருந்து இலங்கையனுக்கு விலக்களித்தது. அத் தோடு அடிமட்ட மக்களின் பாமரத் தன்மையைப் போக்க வைத்த CW
W.கன்னங்கராவின் இலவசக் கல்வித்
திட்டம் அமூலுக்கு வரவே இலங்கை யனுக்கு வெள்ளிசை பிறந்த யோகம்! நிதி வளம் பட்டப் படிப்புக் கற்கப்

போதாதென்ற ஏக்கம் தணிந்தது. இலங்கையின் நானா திக்குகளிலி ருந்தும் வந்த மேட்டுக்குடி வர்க்கத்து மாணவர்கள் கற்ற வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியில் விஞ்ஞான
Dirgof (BSC) கற்று, சித்தியடைந்து சாதிமான்களின்
பட்டப் படிப்பைக்
அகந்தையை அடக்கினார்.
இதுவரை பயிலப்பட்ட இவரது பெயர்களான மெல்லியன், செட்டி என்ற நாமங்கள் இதன் பின்னரே உரிய திருத்தம் பெற்று E.V. செல்வரெத் தினம் என்ற பெயர் புழக்கத்திற்கு வந்தது.
1953இல் புனித பத்திரிசியார் கல்லூரியில் கணிதம், பெளதீகம் ஆகிய பாட நெறிகளை -
இரசாயனம்,
தனக்குக் கல்வியை மறுத்த உயர் குலத் தோரின் வாரிசுகளுக்கு - புகட்டும் ஆசிரியராக நியமனம் பெற்றார். இக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபலம் பெற்ற சேர்ந்த - ரி.எம்.எல்.லோங் அடிகளார்
- அயர்லாந்தைச்
இக்கல்லூரியின் அதிபராகக் கடமை புரிந்தார். புகழ் பூத்த ஆசிரியர்களாக விளங்கிய எவ்.என்.சி.சவரிமுத்து, இன்று தமிழ், ஆங்கில இலக்கியத்தில் முத்திரை பதித்து வரும் ஏ.ஜே.கனக ரத்னா, வித்வான் கே.எம்.ஜோசேப், சாம். அல்பிரட், ஞானரெத்தினம் ஆகி யோரும் இக்காலத்தில் இக்கல்லூரியின் ஆசிரியர் குழுவிலிருந்தனர்.
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதால் இலங்கையன்
காலி, றிச்மென்ட் கல்லூரிக்கும் பின் னர் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வ ராக், கல்லூரிக்கும் மாற்றங்களைப் பெற்றார்.
கல்வி அமைச்சின் பாடப் புத்தகக்
குழு உறுப்பினராகவும், விஞ்ஞானக் கல்வி அதிகாரியாகவும்
மன்னார்
கொழும்பு தெற்கு கல்வி வலயத்து விஞ்ஞானக் கல்வி அதிகாரியாகவும், காலத்திற்குக் காலம் ஏற்றங்களைப் பெற்று இலங்கையன் இலங்கையின் கல்விச் சேவைக்கு அரும் பணி செய்தார்.
இலங்கையனின் வெளிநாட்டுப் பயணம் 1980இல் பலித்தது. நைஜீரியா, கனடா ஆகிய நாடுகளில் இவராற்றிய, ஆற்றும் கல்வி, சமூகப் பணிகள் - அன்று இவர் மீது தீண்டாமை பாராட்டி யோரையும் இன்று இவர்பால் நகர்த்தி யுள்ளது. கனடாவில் 6.75 சிலிங்கிற்குப் unastill (SECURITY GUARD) அலுவலராகக் கடமை புரிந்ததாக் கூறுகிறார். மொறிசியஸ் நாட்டின் நாணயத் தாளில் தமிழ் பொறிக்கப் பட்டிருப்பதென்ற இனிமையான தகவலையும் பரம்பல் செய்துள்ளார்.
தாயகத்தில் மானுட நேசத்தோடு ஆற்றிய பணிகளைப் போலத் தற் பொழுது தான் வாழும் கனடாவிலும் புலம்பெயர்ந்தோருக்குத் தொண்டு செய்கிறார். விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்தும், தாய்மொழியில் கொண்ட மோகத்தால் - அங்கு வாழும் இளைய சந்ததி தமிழை மறக்காதிருக்கும்
49.

Page 27
பொருட்டுத் தமிழ் வகுப்புகளை நடத்துகிறார். அத்தோடு, இலங்கையன் இல்லாத பொது நிகழ்ச்சிகள் இல்லை யென்ற அளவிற்குத் தமிழ்சார் கலை, பண்பாடு, கலாசார நிகழ்வுகளில் தன்னையும் அர்ப்பணிப்போடு பங்காளி யாக்கிக் கொள்கிறார்.
மிகவும் காத்திரமான எழுத்துருக் களை நூல்கள், சஞ்சிகைகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் இவர் எந்தவொரு விடயத்தையும் விஞ்ஞான உண்மைகளோடு ஒப்புநோக்கியே பார்க் கிறார். இதன் மூலம் புலம் பெயர் இலக்கியத்தின் கட்டுரை வளம் செழுமை கண்டு வருகிறது. தமிழர் தகவல் - 14வது ஆண்டு மலரில் இவர் எழுதிய கருத்தற்ற அடிப்படையற்ற பழைமைகளை விட்டு எம்மொழியில் புதுமை காண்போம்" என்ற கட்டுரை கல்வி சார் உலகை வியக்க வைத்தது! விஞ்ஞானக் கல்வியோடு இவர் தமிழ் இலக்கியத்தையும் கற்றவர். கற்றல், கற்பித்தல் இவரது சுவாசக் காற்று!
இவரது சொந்த மண்ணில் இன்றும் செழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் நாவலர் சனசமூக நிலையம் இவரது சமூக அக்கறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. அது மட்டுமன்றி இது இவரது சிந்தனையில் சிதறிய முத்து! இவரது குறிச்சியில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவராக இவர் விளங்கினார். சுற்றாடலில் வாழ்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளுக்கும் ஆங்கிலம் கற்பிக்க
50
விருப்பம் கொண்டனர். அவர்களது விருப்பத்தைக் கேட்ட பொழுது இலங்கையன் அதற்கொரு வாசிக சாலை இருந்தால் சாத்தியப்படுமெனச் சம்மதித்தார். அந்தச் சிபாரிசின் உதயமே இச்சனசமூக இன்றும் மறக்காது அதைப் போசித்தும் வருகிறார். இது ஒரு நூல் நிலையக் கதவு திறக்கப்படும் பொழுது ஒரு சிறைச்சாலையின் கதவு தாழிடப்படு கிறது." என்ற சுவாமி விவேகானந்
நிலையம்.
தரின் சுவட்டில் இலங்கையன் பயணிப் பதைக் காட்டுகின்றது.!
130 பக்கங்களைக் கொண்டுள்ள
சிறு
பான்மைத் தமிழர் மகாசபை சம்பந்த
இந்நூலில் 20 பக்கங்களை,
மான விடயங்களுக்கு இலங்கையன் ஒதுக்கி இருக்கிறார். இம்மகா சபை யின் பொதுச் செயலாளராக இருந்தவர். நாடளாவிய ரீதியில் உறுப்பினரைப் பெருக்கித் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு இம்மகா சபை செய்த பெறுமதி மிக்க பணிகள் இன்னமும் இம்மக்களது இல்லங்களில் பேசப்பட்டுக் கொண்டு தானிருக்கின்றன. தோழர் எம்.சி.சுப்பிர மணியத்தின் தலைமை இச்சபையை வரலாறு படைக்க வைத்தது. இன்றும் தமிழ் மக்களின் ஒரு சாரார் மத்தியில் உபாதையைப் பெருக்கி வரும் தீண் டாமை இப்பூமிப் பந்திலிருந்து துடைக் கப்பட வேண்டுமென்ற மனஉந்தல் 1930லேயே தாழ்த்தப்பட்டோர் மத்தி யில் முளைவிடத் தொடங்கி விட்டது. இதற்கு நெம்புகோலென ஆங்கிலக்
கல்வியைச் சுட்டலாம்.
கஞ்சிக்குள்

பயறாக - அந்த இருண்ட யுகத்தில் பஞ்சமர் சமூகத்தில் ஞானத் தெளிவு பெற்றவர்களாகிய கவிஞர் வி. டி. கணபதிப்பிள்ளை,
ஜி.எம். பொன்னுத்துரை, எஸ்.ஆர்.ஜேக்கப், யோவேல் போல்,
டி. ஜேம்ஸ் மூப்பர்,
கவிஞர் மு.செல்லையா ஆகியோரது துணிகர உழைப்பால், பஞ்சம சமூகங் களின் மேம்பாட்டிற்காக ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம், தாழ்த்தப்பட்டோர் சங்கம், வடமராட்சி சேவா சங்கம் என்பவற்றின் சங்கமமே இலங்கை சிறு பான்மைத் தமிழர் மகாசபை. மகா சபையின் குன்றாத உழைப்பால் தேச வளமையைச் சாட்டாக வைத்து உழைக் கும் பாட்டாளிகளாகிய ஒடுக்கப்பட்ட பஞ்சமரை ஏய்த்து வடபுலத்தில் குவிக் கப்பட்ட பொய்மைகள் பிடுங்கி வீசப்பட்டன. பஞ்சமர்கள் கல்வி, பொருளாதார மேம்பாடு என்பவற்றைச் சுகிக்க வழி கிடைத்தது. சைவப் பெருந்தகைகளால் இந்த அப்பாவித் தமிழருக்கு மறுக்கப்பட்ட கல்வி அர சின் அனுசரணையுடன் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்பட்டன. இம்மக்கள் வாழ்ந்த குறிச்சிகளில் மட்டும் 15 பாடசாலைகள் நிறுவப்பட்டுக் கல்விப் பணி செழிப்பாகியது. அத்தோடு இம் மக்களுக்குள் ஆசிரியர்கள் தோன்றவும் மகாசபை தன் உழைப்பை ஊன்றியது. பெரும் முன்னேற்றத்தைத் தற்பொழுது கண்டிருக்கும் இப்பாடசாலைகளில் தற்பொழுது மேட்டுக்குடியினரும் பயில்கின்றனரென்பது மகாசபையின் தூரநோக்கின் உச்சத்தைப் புலப்படுத்து கின்றது.
51
@@ கட்டத்தில், அமரர் எஸ். டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க - முன்னாள் இலங்கைப் பிரதமர் - கொலைஞனொருவனின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானவர் - ஆட்சி அதி காரம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் தந்தையார் - வடபுலத்தில் சாதி வெறியின் வதை களால் உபாதைக்குள்ளாகி வரும் தாழ்த் தப்பட்ட தமிழர் குழாத்தைத் தனி இனமாகப் பிரகடனப்படுத்துகின்றேன் என்றொரு தீர்மானத்தை முன்மொழிந் தார். இதை இம்மகாசபை ஏகமனதாக மறுத்து, நிராகரித்து இன மானத்தை அன்றைய பிரதமருக்கு அம்பலப்படுத் தியது. இச்சூழ்நிலையில் எம்.சி.சுப்பிர மணியத்திற்குப் பக்கப் பலமாக இருந்து தனது
பங்களிப்பைச் செய்தார்.
இலங்கையன்
சத்தியக் கடதாசிகள் பெறுவதற் காக அன்றைய பஞ்சமர்கள் ஆயிரம் தடவைகள் மேட்டுக்குடியினருக்கு கும் பிடு போட வேண்டி இருந்தது. வீடு களில் தொட்டாட்டு வேலைகள் செய்ய வேண்டும். இத்தகையவொரு சந்தர்ப் பத்தில் சமாதான நீதிவானொருவரின் வீட்டுத் தாழ்வாரத்தில் தான் தவம்’ கிடந்து தனது கையொப்பத்தை அத்தாட்சிப்படுத்தியதாக இலங்கையன் தெரிவிக்கிறார். இந்த அவலங்களை மகாசபையின் தோற்றம் நொருக்கிச் சரித்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தி யில் தகுதியானவர்கள் சமாதான நீதி வான் நியமனத்தைப் பெற்றனர். அதில் இலங்கையனுமொருவர்.

Page 28
தன்னையொரு பிரமுக நிலைக்கு ஆற்றுப்படுத்திய பின் தன் பிஞ்சு உள்ளத்தில் பதிந்த வடுக்களைத் தடவிப் பார்த்து இலங்கையன் தனக்கு இன்னா செய்தாரைப் பழிவாங்க நினைக்கவில்லை. மேட்டுக்குடிகளிட மிருந்து தனக்குக் கிடைத்த அடிகளை யும் உதைகளையும் ஒரு நாகரிகமான தர்மாவேச உணர்வுடனேயே அணு கினார். அதில் அவர் பெற்ற கல்வியின் மேன்மையும் மனித நேயமும் உச்சம் பெற்றன.
1930இல் தீண்டாமையில் கருத் தூன்றி நின்ற வேளாளச் சமூகத்தின் எதிர்ப்பையும் மனங் கொள்ளாது அமரர் ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் வடபுலத்தில் இயங்கிய இளைஞர் காங்கிரஸ் சம ஆசனம், சம
போசனம்" என்ற இயக்கத்தை நடத்
தியது. இதன் பிரசாரத்திற்கெனத் தமி ழக அறிஞர் திரு. வி.க.வும் இலங்கை வந்து இந்நடவடிக்கைகளில் கலந்து இருந்தும் இதன் வெக்கையைத் தணிக்க முடியவில்லை. இச்சமபந்தி போசனம் குறித்து - விமர் சனக் கண்ணோட்டத்தோடு பிரபல
கொண்டார்.
சிறுகதை ஆசிரியர் என்.கே.ரகுநாதன் சிறுகதையொன்றையும் படைத்துள் அதன் தலைப்பு நிலவிலே பேசுவோம்'. திரு. வி.க. தமிழகம் சென்று தனது இல்லத்தில், தேநீர் குடித்திருக்க மாட்டாராம்! அதற்குள் எமது வேளாளத் தமிழர் இச்சமபந்தி போசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
atni.
14 பாடசாலைகளைத் தீயூட்டி எரித்தன
52
செனட்டர் நாகலிங்கம்,
ராம்! இந்த இளைஞர் காங்கிரசுக்குச் ஒறேற்றர் சுப்பிரமணியம், கலைப்புலவர் க.நவரத் தினம் ஆகியோரது ஒத்தாசையும் இருந்ததெனப் பதிந்திருக்கிறார்.
அக்காலத்தில் தீண்டாமைக்கு எதி ராகக் குரல் எழுப்பிய பத்திரிகைகளாக, ஆதிதிராவிடன், மேல் நோக்கம், ஈழ கேசரி னேற்றம்' என்பவற்றைச் சுட்டி இருக் "சனதர்ம போதினி இதே இலக்கோடு, ஒடுக்கப்பட்ட மக்களின்
பொன்னையாவின் 'முன்
கிறார்.
முன்னோடி யோவேல் போல் என்பவ ரால் நடத்தப்பட்டது. சமாதான நீதி வானாக இருந்த எம்.பி.முருகேசு என்ப வரும் 1951இல் 'தூதன்' என்ற பத்திரிகையை நடத்தினார்.
தீண்டாமை ஒழிப்புப் பணிகள் இன்று ஸ்தம்பித்து நிற்கின்றதே தவிர, தீண்டாமை ஒழிக்கப்படவில்லையென நம்பும் இலங்கையன் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உடைவிற்கு கட்சி அரசியலே காரணமென்கிறார்! தேர்தல் நடைமுறை இலங்கையில் தோற்றம் காட்டிய பின்னர் தமிழ் பிரதேசங்களில் கட்சிகள் புழுத்தன. தீண்டாமையை ஒடுக்கலாம் என்ற உத்தியோக வசதிகள் பெற்றுப் பொருள் வளத்தைப் பெருக்
நம்பிக்கை,
கலாமென்ற சிந்தனை பஞ்சம மக்கள் மத்தியிலும் கிளைத்தது. இவை பஞ்சம மக்கள் மத்தியில் இருந்த கட்டமைப் பைக் குலைத்தன. இதன் அறுவடையே மகாசபையை நாசப்படுத்தியது! தீண் டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்,

சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சிசார் சிறுபான்மைத் தமிழர் விடுதலை இயக்கம் என்பவைகள் மகாசபையின் துண்டங்களாகச் சிதறின. இலங்கையன் துக்கித்தார். மகாசபையின் உடைவு பால் தந்த பசுவை கொன்றது போன்ற நோவை அவர் உள்ளத்தில் ஏற் படுத்தியது.
இலங்கையனின் சிந்தனையும் நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த மாகச் சுயநலம் களைந்த தாழ்த்தப் பட்ட மக்களின் முன்னேற்றத்திலேயே குவிந்து நின்றது. 1947இல் நடை பெற்ற பொதுத் தேர்தலில் பருத்தித் துறைத் தொகுதியில் ‘ஜெயம்’ எனப் பாட்டாளி வர்க்கத்தால் உருக்கமாக அழைக்கப்பட்ட அமரர் ஆர்.தர்மகுல சிங்கம் இலங்கையின் மூத்த இடது சாரிக் கட்சியான இலங்கை சமஜா மாஜக் கட்சியில் போட்டியிட்டார். இவரோடு பொன்.கந்தையா கொம்யூ னிஸ்ட் கட்சியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இலங்கையன் தர்மகுல சிங்கத்திற்காக பிரசாரம் செய்தார். அப்பொழுது இவர் எஸ்.எஸ்.சி. வகுப்பில் மாணவராக இருந்தார். இரண்டு இடதுசாரிகளுமே தோல்வி யைத் தழுவினர்.
கோப்பாய்த் தொகுதியில் தாழ்த் தப்பட்டவரான க.நல்லதம்பி 1960இல் நடைபெற்ற தேர்தலில் போட்டி யிட்டார். இவரை எதிர்த்து கொம்
53
யூனிஸ்ட் கட்சியும் தனது வேட் பாளரை நிறுத்தியது. இதற்குத் துணை நின்றது. இருந்தும் இலங்கையன் தாழ்த்தப்பட்டவரான
D 595 ITF G6)
நல்லதம்பிக்கே தனது ஆதரவைக் காட்டினார். இதன் மூலம் நல்லதம்பி கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட அதிக வாக்குகளைப் பெற்றுத் தோற்றார். இதே தடத்தில் உடுப் பிட்டியில் நடைபெற்ற தேர்தலொன் றில் சாதி அபிமானத்திற்கு அடி பணிந்து இராஜலிங்கத்தை இவர் ஆதரித்ததாகப் பதிவுகள் கூறு கின்றன.
"அரசியல் கட்சிகள் ஒவ்வொன் றும் சாதியம், தீண்டாமை ஆகிய வற்றைப் பொறுத்த வரையில் அவற்றை ஒழிப்பதற்கான தங்கள் தங்கள் திட்டங்களை வகுத்துத் தொழிற்படுவதே சாலச் சிறந்த தெனவும் இதைத்தான் இலங்கையில் சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியும் செய்து வந்தது.” எனவும் இறுக்க மாகச் சொல்கிறார்.
“இன்றைய ஈழப் போராட்டத்
திற்கு எமது மண்ணில் அன்று ஆரம்
பிக்கப்பட்ட சாதிப்போராட்டங்களும் கிளர்ச்சிகளும் முன்னோடிகளாக இருந்துள்ளனவென நிறுவும் இலங்கையன் சுதந்திரத்தின் கதவு சும்மா திறப்பதில்லை!" என்கிறார்.

Page 29
இலங்கையன் இந்நூலில் பேசி இருக்கும் வாழ்வின் வடுக்களையும் அவரது தொண்டின் சிறப்பையும் அவரது 75வது அகவையைச் சிறப் பிக்குமுகமாக வெளியிடப்பட்ட “செல்வாயம் என்ற பவள விழா மலரில் அடக்கப்பட்டிருக்கும் ஆக்கங் கள் எண்பிப்பதாக விளங்குகின்றன. கல்வி, சமூக அக்கறை கொண்ட பல தமிழ்ப் பிரமுகர்கள் இலங்கையனின் பண்பார்ந்த மானுடத்தையும், வைராக் கியம் மிக்க பொதுப் பணியையும் இதில் பேசி இருக்கின்றனர்.
“உள்ளத்தை உணர்ந்தவாறும் உணர்ச்சிகளுக்கு உகந்தவாறும் கலை வடிவம் கொடுத்துத் தருவதற்கு நான் ஒன்றும் கைதேர்ந்த கலை இலக்கியப் படைப்பாளி அல்ல” என இலங்கை யன் தனது எழுத்தாற்றல் குறித்துச் சொல்லி இருக்கிறார். இந்தளவிற்கு
தொலைபேசி :
A.R.R. HAIR DRESSERS
89, St. Mary's Road Mattakuliya Colombo - 15.
முற்றிலும் குளிரூட்டப் பெற்ற சலூன்
அவர் ஆதங்கிக்கத் தேவை இல்லை. அவரது எழுத்து மராட்சியின் கிராமியத் தமிழ் செழித்து நிற்கிறது. இந்நூல் கருத் தாலும் எழுத்து நடையாலும் வாசகனை கவர வைக்கிறது. வட புலத்துச் சாதியக் கோலம் குறித்து மிகவும் நேர்மையாகப் பேசுகின்றது.
நடையில் வட
அது ஒரு கல்விமானின் உள்ளத்தில் பதித்த வடுக்களின் நிதர்சனத்தை வாசகனுக்குக் கொடுக்கின்றது. இது யாழ்ப்பாணத்துச் சமூக இயல் குறித்து கற்கப் போகும் சந்ததிக்கு கை கொடுக்கப் போகும் அரிய ஆவணம்! ஒடுக்கப்பட்ட மக்களது முன்னேற்றத் திற்கு அணி சேர்ந்து சமரிட்ட சில தொண்டர்களது பெயர்கள் சுட்டப் பட்டுள்ளன. இவர்களது புகைப் படங்களும் இடம் பெற்றிருப்பின் நூலின் ஆவணப் பெறுமானத்தை மேலும் அதிகரித்திருக்கும்.
m
O777 - 790385
in
54

இலங்கை இலக்கியத்துறையில் சிறுகதை, குறுங்கதை, நெடுங்கதை, தொடர்கதை, நாவல் என எண்ணும் பட்சத்தில் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்து எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் மத்தியில் கிடைக்கின்ற பரந்த வாசிப்ப மரியாதை, விற்பனை அதிகரிப்பு என்பன இங்குள்ள எழுத்தாளர்களுக்கு உள்ளூர் வாசகர்களால் கிடைப்பது மிகவும் தூரமான விடயமாகவே உள்ளது.
அங்கு ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற வாழ்வு யாதார்த்தத்துக்கு மாறாக எழுதுகின்ற இவ்விதமான எழுத்தாளர்களால் வளர்க்கப்படும் க்ரைம் ஸ்டோரி, பாக்கட் நாவல், மர்ம நாவல்கள் கொண்ட இவ்விதமான மூன்றாந்தர கற்பனைப் படைப்புகளே அங்குள்ள வாசகர்களை மட்டுமல்ல, நமது இலங்கை வாசகர்களையும் வசீகரிப்பு செய்வதால் நல்ல தரமான இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் விற்பனைக்காகத் தவம் கிடக்க வேண்டியிருப்பது இன்றைய யதார்த்தம்.
st goTo GJrts scoficit UTfrCOGJuSci) இந்திய, இலங்கை எழுத்தாளர் படைப்புகள்.
- ஏ.எஸ்.எம். நவாஸ்
இங்கு எழுத்தாளர்கள் எண்ணிக்கையிலும், படைப்பு எண்ணிக்கையிலும் குறைவாக இருக்கின்ற போதும், நல்ல வீச்சான சமூக வார்ப்புடன் எழுதுகின்றவர்கள் இலங்கை எழுத்தாளர்கள்" என்ற பெருமை இந்திய தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து கிடைத்திருக்கின்ற பாராட்டுக்கள் என்பதையும் நாம் மறக்கலாகாது. அவ்வாறான ஒரு எழுத்தாற்றலை தமிழகம் வியக்கும் வண்ணம் தனது சிறுகதை, நாவல் மூலமாக உணரச் செய்தவர்களில் செ.யோகநாதனுக்கு பெரும் பங்குண்டு. இவர் பல சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு தனது இலக்கியப் பணியை சளைக்காது செயல்படுத்தினார் என்பது கூறத்தகும்.
இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களாக மணிக்கொடி காலத்து எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டார்கள். கு.பா.ரா, தி.ஜ.ரா, போன்றவர் களுடைய எழுத்துக்கள் வெகுவாக வாசகர்களால் அங்கீகரிக்கப்பட்டன. அதன் பின் சரஸ்வதி காலம் என்று ஒன்றிருந்தது. இதன் மூலமே ஜெயகாந்தன் என்ற வீரியமிக்க ஒரு எழுத்தாளர் தமிழகத்துக்குக் கிடைத்தார். அண்மையில் இவருக்கு இந்தியாவின் ஞானபீட விருதும் கிட்டியது. இவர் எழுதிய “கைவிலங்கு',
55

Page 30
*சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற பல நாவல்கள் பிரசித்தமாகும். இன்றைய தமிழகத்து எழுத்தாளர்களில் ஜெயமோகன் புதிய கருத்தியலைக் கொண்டவராகவும், ஏன். ஜெயகாந்த னுக்கு மேலாகவும் துதி பாடப்படுபவ ராகவும் அவர் திகழ்வது அவரது படைப்புகளை வைத்தா என்பதை தீர்மானிக்க முடியவில்லை?
மற்றும் மாயாவி, கோவி, மணி சேகரன், புஷ்பா தங்கதுரை போன்ற தரமான எழுத்தாளர்களையும் இவ் வரிசையில் ஒரளவாவது இணைக்க வேண்டும்.
தமிழகத்தின் தலைசிறந்த எழுத் தாளர்களாக வாசகர் வட்டத்தால் ஆராதிக்கப்படும் சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்கள் கூட, இன்றைய மூன் றாந்தர சினிமாவின் சகதிக்குள் அகப் பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர்.
1975, 80, வாசகனாக (இன்னும் வாசகன்தான்) இருந்த காலகட்டத்தில் இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை எனது கரம் ஏந்தியதில்லை. அப்போது தமிழ் நாட்டிலிருந்துதான் பெரும்பாலான நூல்கள் இங்கு வந்து கொண்டிருந்தன. கொழும்பிலே எந்தப் புத்தகசாலைக்குச்
85களில் சிறுவயது
சென்றாலும் தமிழகத்துப் படைப்பாளி களின் நூல்களே கண்களுக்குப் படும் படியாக கவர்ச்சியாக இருக்கும். ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்கள் ஒரங்கட்டப்பட்டிருக்கும். இந்த வகை யில் உள்ளூர் வாசகர்களின் அறிவுக்
56
கூர்மையை மழுங்கடித்த பெருமை இலங்கைப் புத்தகசாலைகளுக்கும் ஒரு பகுதி உண்டு என்பதை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.
முன்பு நமது எழுத்தாளர்களின் "ஸ்கிரீன் பிரிண்ட் அச்சு அட்டையின் லட்சணத்தை மறைத்து தமிழகப் படைப்பாளிகளுக்கு (தரம் குறைவான) தட்டு ஏந்தும் மிகப் பெரிய தவறை புத்தக இன்று வரை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நிலைய உரிமையாளர்கள்
இதைத் தவிர்ந்த நம் நாட்டு படைப்பாளிகளுக்கு கீர்த்தி தரும் புத்தக நிலையங்களும் உள்ளன. இவை அதிகமாக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட புத்தக விற்பனை நிலை யங்கள் எனலாம். பூபாலசிங்கம் புத்தக சாலையையும் அந்த வகையில் குறிப் பிடத்தக்கதொன்றாகும்.
நான் ஏற்கனவே குறிப்பிட்ட என் இளமைக்காலப் பகுதியில் நான் எனது பொழுதைப் போக்கவென நிறைய நாவல்கள் வாசிப்பேன். அதிகமாக தமிழகத்துப் படைப்பாளிகளின் நூலா கவே அவை இருக்கும். அப்படியொரு லயிப்பு இருந்தது. பொழுது போவது தான் பெரிய வேலையாக இருந்தது.
எனது தந்தையார் வாங்கிக் குவித்த பெட்டிகளில் கிடந்த பழைய நூல்களை எடுக்கும்போதே வாசிக்கும் எண்ணம் ஏற்பட்டுவிடும். இவ்வாறே ராஜாஜியின் "மகாபாரதம்", மற்றும் விக்கிரமாதித்தன்

கதைகள், ராமாயணம் போன்றவை
எனது வாசிப்பு நேசிப்புக்குத் தீனியாக
அமைந்தன.
நாவல் என்று நான் வாசித்தது வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் "சிவராமகிருஷ்ணன்" என்ற நாவலைத் தான் குறிப்பிட முடியும். வடுவூர் துரை சாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் படைப்பதில் வித்தகர். இவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. 'திகம்பரசாமியார்” (1950), (1954) என்பன குறிப்பிடத்தக்கவை. குடும்பச்
"மோகனசுந்தரம்?
சூழலை வைத்து எழுதப்பட்ட நாவல் தான் "சிவராமகிருஷ்ணன்".
அந்நாவலில் ஒரு குடும்பத் தலைவன் படுகின்ற வாழ்வின் அவஸ்தை, வறுமை, பிணி என்பன மிக யதார்த்தமாக வடுவூரார் அந் நாவலில் எழுதியிருந்தமை கூரத்தக்கது.
அடுத்து தாய்ப்பாசத்தை விளக்கிய மு.வரதராசனின் பெற்ற மனம்", வை. மு.கோதைநாயகி அம்மாளின் மிகப் பழைய நாவலான "வாத்ஸல்யம்", லக்ஷமியின் 'மைதிலி', பி.டி.சாமியின் ‘பேய்க்கதைகள்', தமிழ்வாணனின் 'சங்கர்லால் துப்பறியும் கதைகள்", குலாம் ரசூலின் "சில இஸ்லாமிய கதைகள்', மற்றும் அரேபியக் கதைகள் எனது நாளாந்த வாசிப்பின் ஆதர்ஸ் மாக விளங்கின. மறைந்த கவியரசு கண்ணதாசன் எழுதிய பல நாவல்கள் இருந்த போதும், ‘விளக்கு மட்டுமா
57
சிவப்பு நான் வியந்து வாசித்த
நூலாகும்.
இலங்கையில் 1970களில் ஜ.நேசன் என்பவர் ஜனரஞ்சக தொடர்கதைகளை மித்திரனில் எழுதி வந்தார். இது பிற்பாடு வீரகேசரி பிரசுரமாக நாவல் வடிவிலும் வெளிவந்தமை குறிப்பிடத் தக்கது.
இந்த நாவல்களோடும் எனது வாசிப்புத் தொடர் இலங்கை எழுத் தாளர்களின் கதைகளைத் தேட வைத்தது எனலாம். Y
ஜ.நேசனின் நரர்தேவி, குஜராத் மோகினி என்பன மிகுதிப்பட்ட என் நேரத்தை உச்ச வாசிப்புக்கு உர மிட்டவர் எனலாம்.
கே.வி.எஸ்.வாஸ் ரஜினி' என்ற
புனைப் பெயரில் எழுதி வந்தார். இவரது கதைகளும் என்னை ஆகர்ஷித்தன.
பிற்காலத்தில் ஜூனைதா ஷெரீப், எஸ்.ஐ. நாகூர்கனி, ப. ஆப்டீன், மு.பஷீர், எம்.எச்.எம்.ஷம்ஸ், ராஜ பூரீகாந்தன் (நீதிபதியின் மகன்’ நாவல்) ஆகியோரது எழுத்துக்களில் என்னை நாட்டம் கொள்ள வைத்தது. அண்மை யில் ரசித்துணர்ந்த நாவல்களில் எம். எச்.எம். ஷம்ஸின் “கிராமத்துக் கனவுகள்’ கிராம மண்ணின் யதார்த்த நடப்புகளை துல்லியமாக வெளிப் படுத்திய நாவலாகும். அதேபோல் 1996 இல் மல்லிகைப் பந்தல் மூலம் வெளி வந்த மு.பஷீர் எழுதிய 'மீறல்கள்"

Page 31
சிறுகதைத் தொகுதிகூட வாசகர்களை கவரும் வண்ணம் இருந் த தை அவதானிக்கலாம். இதிலே அவரது எழுத்துநடை, கதை சொல்லும் பாங்கு, மற்றும் இவரது கதைகளில் பிராணிகள் உலவுவதும் விசேஷ அம்சங்களாகும்.
என்னாலும் ஒரு நெருடல் -
தெணியான், நந்தி, செம்பியன் செல்வன், டொமினிக் ஜீவா, டானியல் போன்ற ஈழத்தின் முக்கிய படைப்பாளி களான இவர்களின் கதையுலகுக்குள் நுழையாமல் விட்டது வாசிப்புலகில் நான் செய்த பெரும் பிழை என எண்ணத் தோன்றுகிறது. டொமினிக் ஜீவாவின் பிற நூல்களைப் படித்திருக் கிறேன். அவரது சிறுகதைகளைத் தவிர.
1985களிலே "மல்லிகை" இதழ் களைத் தேடி வாசித்த பொழுதினிலே அதிலே பிரசுரிக்கப்பட்ட தரமான சிறு கதைகளையும் தரிசிக்கக் கிடைத்தன. முற்போக்கு இலக்கியத்தை நுகரவும் கிடைத்தன. அந்த வகையில் மல்லிகை பல நல்ல தரமான எழுத்தாளர்களின் படைப்புருக்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இன்னும் அந்தப் பணி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
நான் மேலே சொன்ன அவ் வாறானவர்களின் படைப்புகளை படிக் கத் தவறவிட்ட நான் இப்போது ஒரு வாசகன், எழுத்தாளன் என்ற வகையில் தேடித் தெரிந்து வாசித்துணர ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வாசிப்புணர்விலும்
58
ஏதோ ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேடலின் உணர்வு என்ன என்பதை என்னால் சொல்ல முடிய வில்லை.
இலங்கை எழுத்தாளர்கள் பொது வாகவே அதில் சிலர் 'வளர்ந்த வர்களோ வளராதவர்களோ தெரிய வில்லை. பொதுவாக ஒரு கதையை ஏதாவது பத்திரிகையில் எழுதும்போது அதன் ஆரம்பம் மிக அதிகமாக ஒரு As g) ca) நேரத்தையே சுட்டிக் காட்டுகிறது. அல்லது ‘வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந் தான்" என்பது போல் எல்லாம் கதைகள் நகர்த்தப்படுகின்றன.
இந்தத் தோற்றத்தில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் தோன்றக் கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
பொதுவாக எழுத்தாளர்கள் சிந்தித்து எழுதுபவர்களா? அல்லது சிந்திக்கத் தூண்டப்பட்டு எழுதுபவர் களா?. அல்லது சில பாதிப்புகள் இவர்களை எழுத வைக்கிறதா? என்ற மூன்று விதமான எண்ணங்களில் மூன்றாவது எண்ணமே நிஜமானதாகும்.
சிந்தித்து கற்பனையுடன் எழுது வதைவிட, மனதில் பதிகின்ற விஷ யங்கள் சிதறுவதே சிறந்த படைப்புக்கு சித்தியாக அமையும் என்பதையும் நான் உணர்ந்துள்ளேன்.
சில எழுத்தாளர்கள். அதிலும் புதிய எழுத்தாளர்கள் ஒரு கதையை

எழுதிவிட்டு முடிக்கும் போது, அல்லது முடித்து விட்டு கீழே ஒரு அடைப்புக் குறிக்குள் (யாவும் கற்பனை) என எழுதுகின்றனர். இது யதார்த்தமான படைப்பு அல்ல என்பதற்கு அத்தாட்சியே இந்த யாவும் கற்பனை.
ஒருமுறை சிறுகதை எழுத்தாள ரும், நாவலாசிரியருமான செ.கணேச லிங்கன் ஒரு கவியரங்கு உரையின் போது, “ஒரு எழுத்தாளனின் ஆன்மா வின் அடித்தளத்திலிருந்து உண்மை யான உணர்வாக எழுதுவதே சிறந்த சிறுகதைப் படைப்பாகும். சமூகம் பற்றி எழுதிவிட்டு 'யாவும் கற்பனை" யென்றால் அது யதார்த்தமற்றது." என்பதை விளக்கினார்.
சுமார் 20 வருடங்களுக்கு முன் அவர் சொன்ன இவ்வார்த்தைகள்
நான் அவ்வப்போது கதை எழுதும் போது ஞாபகத்துக்கு வருகிறது. எனி னும் கற்பனை உலகில் வாழ்ந்த ஒரு காலகட்டத்தைக் கடந்து யதார்த்தம்
"எழுதுதல் நிலைக்கு என்னை வர வைத்ததும் நான் மேலே குறிப்பிட்ட சில ஜன
பேசுதல்", என்கிற
ரஞ்சக நாவல்கள் தான்.
எனவே ஒரு ஆரம்ப வாசக னுடைய வாசிப்பு அனுபவம்
இப்படியேதான் ஆரம்பிக்கறது.
இது கற்பனையில் வாழ்கின்ற காலமில்லை.
கண்ட கண்ட விஷயத்தை எழுதி னாலும் அது எழுத்துமில்லை. கால மறிந்து எழுத்தாளர்கள் தம் பேனா திறக்க வேண்டும்.
序
ஆண்டுச் சந்தா
N
Dominic Jeeva 201/4, Sri Kathiresan Street Colombo - 13 T.P: 2320721
மல்லிகை புதிய ஆண்டுச் சந்தா 300/- அத்துடன் ஆண்டுமலர் விலை தனி. 150/- இதுவரை சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் தயவு செய்து உங்களுடைய சந்தாவைப் புதுப்பித்துக் கொண்டால் அது மல்லிகைக்கு பேருதவியாக இருக்கும்.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். 15T55 5L66T eigüL(36JTi Dominic Jeeva. Kotahena, P.O.| 676Tä குறிப்பிட்டு அனுப்பவும்.
WS
Zسے
59

Page 32
மார்க்சியம் செத்து விட்டது. மார்க்சியம் ஒரு செல்லாத தத்துவமாகி விட்டது. |மார்க்சியத்தைக் கடைப்பிடித்த சோவியத் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இன்று மார்க்சிய பொருளாதாரத்தைக் கைவிட்டு விட்டு, முதலாளித்துவ பொருளாதார அமைப்பைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன என்றெல்லாம் மார்க்சிய எதிர்ப்புவாதிகள் இன்று பறைசாற்றிக் கொண்டு திரிகிறார்கள். இது ஒரு காலகட்டம். மார்க்சிய தத்துவம் சாகவில்லை. புதிய சூழ்நிலையில் முற்போக்கு சக்திகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் முரண்பாடு தோன்றத்தான் செய்யும்.
கார்ல் மார்க்ஸ், ஏன்? எப்படி? எக்காலத்தில்? தன்னுடைய தத்துவத்தை எழுதினார் என்பதைப் பார்ப்போம். மார்க்கின் தத்துவத்திற்கும், இலக்கியத்திற்கும் |என்ன தொடர்பிருக்கிறது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
மனித வரலாற்றை ஒரு வர்க்கப் O O e. மnர்க்சிஸ்மும் போராட்டமாகக் கண்டார் கார்ல் மார்க்ஸ். ஆரம்பத்தில் சுதந்திரமாக O O O 8 p. னிகன் ப்போக்கில் (p.36VMéhe இலக்கியமும் வாழநத மனதன காலப T5895 6) உற்பத்தி பெருகியதனால் அவனுடைய உறவுகளிலும் மாற்றம் ஏற்பட்டது. உழைக்கும் வர்க்கம், உழைப்பவனை
- அ.முகம்மது சமீம்
ஆதிக்கம் செய்யும் வர்க்கம் என இரு பிரிவுகளாகப் பிரித்தனர். மனித வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று மார்க்ஸ் கூறினார். அடிமையாக்கப்பட்ட மனிதன் தன்னை அடிமைத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு செய்த போராட்டம்தான் வர்க்கப் போராட்டம் என்று கூறுகிறோம். சுரண்டுபவர்களும், சுரண்டப்படுகிறவர்களும் ஓயாத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது சமாதான ரீதியாகவும், ஆயுதம் தாங்கியும், தத்துவார்த்த ரீதியாகவும், பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் நடை பெற்று வருகிறது. இந்தப் போராட்டம், பொருளாதாரம், அரசியல் ஆகிய எல்லா துறைகளிலும் நடைபெறுகிறது. சுரண்டலற்ற ஒரு பொதுவுடைமை சமுதாயத்தை அடைவதே அவரது லட்சியம். சமுதாய மாற்றம் ஏற்பட்டால்தான் மனிதனுடைய நிலை மாறும் என்று ஒடுக்கப்பட்ட மனிதன் நம்பினான். வர்க்கப் போராட்டத்தில் |உறுதியாக நம்பிக்கை வைத்திருந்த மார்க்ஸ், "இதுவரையிலான தத்துவங்கள் உலகத்தை விளக்கின. ஆனால் இனிச் செய்ய வேண்டியது உலகத்தை மாற்றுவது தான்” என்று கூறினார். எனவே உலகை மாற்றுவதற்கான செயல்முறைக்கு அழுத்தம் கொடுத்தார் மார்க்ஸ். லெனின் கட்சி முறையில் இம்மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று செயல்பட்டார்.
மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுதான், பொருள் முதல் வாதம். ஆன்மீகத்தை முற்று முழுதாக மார்க்சியர்கள் மறுக்கவில்லை. ஆன்மீகக் 60

கருத்துக்கள் மனித வரலாற் றுக்கு ஒரு காலகட்டத்தில் உதவின. ஆனால்,
-9յ6ն னுடைய சக்திகளைக் குறைப்பதற்கும்
மனிதனை அடக்குவதற்கும்,
இக்கருத்துக்கள் பயன்பட்டன. மனி தனைச் சிறுமைப்படுத்தும் அளவிற்கு மதவாதிகள் இக்கருத்துக்களைப் பயன் படுத்தினர். தனிஉடைமை அரசு ஒரு காலகட்டத்தில் தேவைப்பட்டது. அது மாறவும் செய்தது. தனிஉடைமை அரசு களின் ஆதிக்கங்களினால் மனித வளர்ச்சி ஏற்பட்டது என்ற உண்மையை நாம் மறுக்கவும் முடியாது. ஆனால், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் ஒத் துழைப்பு இல்லாமல், இவ்வாதிக்க வர்க்கம்தான் வரலாற்றை நடத்திச் சென்றது என்ற வாதத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அடிமைப் பட்டுக் கிடக்கும் மனிதன், போராட்டத் தின் மூலம் தன்னை விடுவித்துக் கொள் கிறான். மீண்டும் இன்னொரு சூழலில் தன்னை இழக்கிறான். திரும்பவும் போராடுகிறான். இப்படித்தான் வர லாற்றில் மனிதனின் வாழ்வும், வளர்ச்சி யும் ஏற்படுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனின் போராட்டத்தைச் சித்திரிப் பதுதான் இலக்கியம், இலக்கியத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் பார்த்த வர்களில் ஒருவர்தான் பேராசிரியர் “கலாநிதி கைலாசபதி அவர்களின் வருகையின் மூலம் தமிழ்
கைலாசபதி,
இலக்கிய ஆய்வில் மார்க்சிய நெறி
உறுதிப்பட்டது' என்று கூறுகிறார் ஞானி. மேலும் அவர் “இன்று தமிழ் ஆய்வுத் துறையில் மார்க்சியமும் ஒரு
61
ஆய்வு நெறி என்ற முறையில் கேள்விக்கு இடமற்றதாகத் திகழ்கிறது" என்று கூறுகிறார்.
இலக்கியம் சமூகத்தோடு தொடர் புடையது. சமூகத்தைப் பிரதிபலிப்பது தான் இலக்கியம். இலக்கியம் யாருக் காக? என்ற கேள்வி அடுத்து எழு கிறது. இலக்கியம் யாருக்காக என்பதில் முற்போக்காளர்களுக்கிடையே கருத்து வேற்றுமை இல்லை. இலக்கியம் இன்ப நுகர்ச்சியில் தெவிட்டி நிற்கும் ஒரு சீமாட்டிக்கோ, சலிப்புற்றிருக்கும் மேல் தட்டு பத்தாயிரம் பேருக்கோ எழுதப் படுவது அல்ல. இது கோடிக் கணக்கான பாட்டாளி மக்களின் கலை" என்று நம்பூதிரிபாட், தனது "மார்க்சியமும் இலக்கியமும்" என்ற நூலில் கூறுகிறார்.
இன்று நாம் சனநாயக யுகத்தில் வாழ்கிறோம். நமக்குத் தேவையான இலக்கியமும் கலையும் மக்கள் இலக் கியமாகவும், மக்கள் கலையாகவுமே இருக்க வேண்டும். மக்கள் இலக்கியத் தைப் பற்றி ப.ஜீவானந்தம் கூறும்போது, "இத்தகைய இலக்கியமும் கலையும் மக்களுடைய நல உரிமைகளை அடிப் படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவை பொதுஜனத் தன்மை வாய்ந்த வையாக, யதார்த்த கண் படைத்தவை யாக, தேசியத் தன்மை உடையவையாக இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார். இலக்கியத்தில் மனிதப் பண்பு இருக்க வேண்டும். யதார்த்தம் இருக்க வேண் டும். இந்தப் புதிய மரபை உருவாக்குப வன்தான் முற்போக்கு எழுத்தாளன்.

Page 33
“வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா’ என்று கம்பன் கூறும்போது அவனில் மனித நேயத்தைக் காண்கிறோம். மக்களோடு மக்களாக நின்று, மக்கள் நலனுக்காக, மக்கள் நல்வாழ்வுக்காக வாழ்பவன், தெய்வ ஸ்தானத்தில் வைத்துப் போற் றப்படுவான் என்ற மனித நேயத்தை வள்ளுவன் பின்வரும் குறளில் விளக்கு கிறான்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
வாழ்க்கையைப் பற்றிய உண்மை நிலையை எடுத்துக் கூறும் எழுத்தாளன் தான் மக்கள் எழுத்தாளன். “கோடானு கோடி மக்களுக்காக எழுதுகிறேன்" இருக்க இயல் வாழ்க்கையை
என்ற உணர்வு அவனில் வேண்டும். நேர்மையாக எடுத்துக் கூறும் எழுத் தாளன் என்றைக்கும் மக்கள் மனதில் இருப்பான். இவன்தான் மக்கள் எழுத் தாளன். மக்கள் கவிஞன். இத்தகைய எழுத்தாளனைப் பற்றி ஜீவானந்தம் பின்வருமாறு கூறுகிறார்.
“வாழ்க்கையை அதனுடைய இயக் கத்தில் வைத்து புதுமைக்கும் பழைமைக் கும் இடையறாது நடக்கும் போராட் டத்தை வெளிப்படுத்தும் முறையில்
அதன் சகலவித வேறுபாடுகள், மாறு
பாடுகளையும் ஒவியம் தீட்டிக் காட்ட வேண்டும்" என்று கூறுகிறார்.
இலக்கியத்தை ‘நல்ல இலக்கியம்", நசிவு இலக்கியம்’ என்று இரு பிரிவு களாக ஜீவானந்தம் பிரிக்கிறார். “நல்ல
62
இலக்கியம் மனித நேர்மையையும், சிறந்த தீர்க்க தரிசனத்தையும் கொண்ட இலக்கியம்' “சிதைந்து சீரழிந்து வருகிற சமுதாயத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகிற இலக்கியம், நசிவு இலக்கியம்’ என்றும் ஜீவா விளக்கம்
என்றும்,
கூறுகிறார்.
“நமக்குத் தொழில் கவிதை,
நாட்டுக்குழைத்தல்,
இமைப்பொழுதும்
சோராதிருத்தல்" என்று மகாகவி பாரதி பாடும் போது, நல்ல இலக்கி யத்திற்கு உதாரணமாக விளங்குகிறான்.
இந்த நல்ல இலக்கியத்தைப் படைப்பவன்தான் முற்போக்கு எழுத் தாளர். முற்போக்கு எழுத்தாளர்கள் சேர்ந்து, "முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை 1930ம் ஆண்டு லக்நோவில் நிறுவினார்கள். இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய வங்க எழுத்தாளர் பிரேம்சந்த் "விமர்சன ஆர்வ எழுச்சியைத் தூண்டாத நமது உணர்வை விழிப்புறச் செய்யாத உறுதி யான மனவலியோடு கொடிய வாழ்க் கையின் யதார்த்தத்தை எதிர்நோக்கு வதற்கான வலிமை தராத இலக்கியத் தால் இன்றைக்கு நமக்கு எவ்விதப் பயனுமில்லை. அதை ஒரு இலக்கிய மாகவே அழைக்கக் கூடாது" என்று முழங்கினார். “அடங்கிப் போதல், செய லின்மை, பகுத்தறிவின்மை ஆகியவற் றுக்கு இழுத்துச் செல்லும் அனைத்தை யும் நாம் பிற்போக்கு என்று ஒதுக்கித் தள்ளுகிறோம்’ என்று சங்க அறிக்கை கூறியது.

முற்போக்கு சிந்தனையாளர்கள்.
பொதுவுடைமை இயக்கத்தோடு நெருங் கிய தொடர்பு வைத்திருந்தார்கள். புதுமைப்பித்த்ன், வ.ரா., சண்முகசுந்தரம் போன்றவர் பொதுவுடைமைக் கட்சிக்கு வெளியே நின்று முற்போக்குக் கருத்துக் களைப் பரப்பினார்கள். ஐம்பதுகளில், முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. ‘விடி வெள்ளி' 'வாரம்” (குயிலன்), "சாந்தி’ (தொ.மு. சி.ரகுநாதன்), "சரஸ்வதி (விஜயபாஸ் கரன்), (விந்தன்). இச் சஞ்சிகைகளில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும் எழுதத் தொடங்கினர். இலங்கையிலும் ஐம்பதுகளில் முற் போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றக்
(விஜயபாஸ்கரன்),
'மனிதன்"
காரணமாயிருந்தனர்.
முற்போக்கு எழுத்தாளர்களுடைய
படைப்புகள் மக்கள் சார்ந்ததாக இருந்
தது. செ.கணேசலிங்கன், கே.டானியல்,
டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னை
யன், என்.கே.ரகுநாதன், இளங்கீரன் போன்றவர்களுடைய கதைகளும், நாவல்களும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இவர்களுடைய படைப்புகள் வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்தின. முற்போக்கு இலக்கியம் மக்களின் தேவை என்று வாதிட்ட ஒர் அமெரிக்க விமர்சகன், “சிறப்பு மிக்க கலை எப்பொழுதும் மக்களின் கலை யாகவே இருந்திருக்கிறது" என்று கூறு கிறான். 'கலை மேலும் மேலும் மக்களையும், மக்கள் மேலும் மேலும் கலையையும் நெருங்கி வரவேண்டும்” என்று வலியுறுத்தும் லெனின் கலை
63
மக்களுக்கு அளிக்கக் கூடிய பயன் குறித்து விளக்குகிறார்.
"கலையானது மக்களுக்கு உரிய தாகும். உழைப்பாளி மக்களிடையே அதன் வேர்கள் ஆழப் பதிந்திருக்க வேண்டும். அவர்களது நேசத்துக்கு உரியதாய் இருக்க வேண்டும். அது அவர்களுடைய சிந்தனையையும் சித்தத் தையும் ஒன்றிணைத்திட வேண்டும். உயர்த்திட வேண்டும்." (லெனின், கலாச்சாரமும் கலாச்சாரப் புரட்சியும்) இதே கருத்தில் சீனக் கம்யூனிஸ்ட் முற்போக்குக் கலையின் தேவை பற்றிக் கூறும்போது, "தேசத்தை ஒன்றுபடுத்தி எதிரியை முறியடிக்கும் கடமை' கலைக்கு இருப்பதாகக் கூறுகிறார்.
முற்போக்கு இலக்கியத்தின் இலட்சியம் ஒன்று சமூகம். மற்றது அரசியல். முற்போக்கு இலக்கியத்தில் அரசியல் அதிகமாகக் கலந்தவுடன்,
தலைவர் மாஒசேதுங்,
அதை பிரச்சார இலக்கியம் என்று பிற் போக்குவாதிகள் கூறுகின்றனர். முற் போக்குவாதிகளின் கடைசி இலக்கு அரசியல். அரசியலை மறந்து முற்போக் காளர்கள் எழுதினால், அவ்வெழுத்தில் சாரம் இருக்காது. ஆகவே முற்போக்கு எழுத்தாளர்கள், கலைக் கூத்தாடி கம்பத் தில் நடப்பது போல மிகவும் கவனமாக, இரண்டையும் கலந்து, பிரச்சார இலக் கியம் என்ற கண்டனத்துக்கு உள்ளாக மல் ஒரு முழுமையான வடிவத்தில் தமது எழுத்துக்களைப் படைக்க வேண்டும்.

Page 34
'கம்யூனிஸ்ட் அமைப்புக்கு வழி கோலுவதுதான் முற்போக்கு இலக் கியம்’ என்ற ஒரு கருத்து இன்று நிலவு கிறது. கசோபன் சர்க்கார் என்ற வங்காள எழுத்தாளர், முற்போக்கு என்பதற்கு விளக்கம் கூறும்போது, "முற்போக்கு என்பது திட்டவட்டமான
இலக்கணம் கூறமுடியாத ஒரு சொல். '
விரும்பத்தக்க பெரிய மாறுதல்களை நோக்கிச் செல்வதே முற்போக்கு என்று பொதுபடச் சொன்னால் அது அனை வருக்கும் ஒரளவு ஏற்புடையதாக இருக் கும்'. இதே கருத்தைத்தான் ராஜ் கெளதமனும் தன்னுடைய "எண்பது களில் தமிழ்க் கலாச்சாரம் என்ற நூலில், "பாட்டாளி வர்க்கத்தை மட்டும் எழுதி முற்போக்கு ஆக வேண்டிய தில்லை. சகல மட்டங்களிலும் நசிந்து கொண்டிருக்கிற மனிதனைச் சார்ந்திருத் தலே முக்கியம்' என்று கூறுகிறார்.
முற்போக்கு இலக்கியத்தின் வர லாற்றை, ச. மாடசாமி தன்னுடைய “பொதுவுடைமை இலக்கியம்' என்ற நூலில், மூன்று காலகட்டமாகப் பிரிக்
A 6
கிறார். "ஒரு வர்க்கப் பார்வையோடு மார்க்சிய வெளிச்சத்தில் எழுத்தாளர் கள் எழுதத் தொடங்கிய காலம் 1930ம் ஆண்டுகளையொட்டியே விடுதலைக்கு முற்பட்ட ஒர் இருபதாண்டு காலத்தை முற்போக்கு இலக்கியத்தின் முதல் கால கட்டம் எனலாம். சுயமுயற்சி குறை வாகவும், சோவியத் இலக்கிய தாக்கம் மிகுதியாகவும் இருந்த காலகட்டம் இது."
"1950-1990ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை முற்போக்கு
இலக்கியத்தின் இரண்டாவது கால கட்டம் எனலாம். முற்போக்கு இலக்கிய முயற்சிகள் காலூன்றி வளர்ந்த காலம் இது. பொதுவுடைமைச் சிந்தனையாளர் கள் தேர்ந்த இலக்கியப் படைப்பாளி களாகவும் மலர்ந்த காலகட்டம் இது."
“1990க்குப் பின் வந்த காலம் முற் போக்கு இலக்கியத்தின் மூன்றாவது காலகட்டம், சோவியத் வீழ்ச்சி. பொரு ளாதாரத்தில் முதலாளித்துவம் உலக மய மாக்கல் மூலம் தலை தூக்கிய காலம். முற்போக்கு இலக்கியத்திற்கு எதிரான நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற கருத்துக்கள் இலக்கியத்தில் புரையோடிய காலம். இவைகளை எதிர்த்து, திரும்பவும் முற்போக்கு இலக்கியம் புதிய சக்தி பெற வேண்டிய காலம் இது."
இந்நிலை பொதுவாக இந்தியா விலும், இலங்கையிலும் ஏற்பட்டு வரு கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரொலி இன்று உலகம் முழுவதும் கேட்கிறது. முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற் காக புதுப்புது தத்துவங்களை அது உலகில் பரப்பி வருகிறது. இலங்கை யிலும் அதன் பாதிப்பு தெரிகிறது. முற் போக்கு சக்திகள் அரசியலில் எவ்வித மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், இனவாதம், அந்த சக்திகளை மழுங் கடிக்கச் செய்கிறது. சிங்களவரும்,
தமிழரும் தங்களை எதிரிகளாகப் பார்க்
கிறார்கள். இரு சமூகங்களிடையேயும் நட்புறவும், தால்தான், முற்போக்கு சக்திகள் திரும்ப வும் தலை தூக்கலாம்.
நல்லெண்ணமும் வளர்ந்

டில்லியில் கடந்த ஜனவரி 27 தொடக்கம்
பெப்ரவரி 4ந் திகதி வரையும் டில்லியில் உலகப் புத்தகக் கண்காட்சி நடை பெற்று முடிந்தது.
IbLÍböl
முடிந்த இக்கண்காட்சியில் பங்குபற்ற
இலங்கையின் பிரபல புத்தக விற்
பனை, வெளியீட்டு நிறுவனத்தினரான
17-6).It விஜித யாப்பா, சரஸவிய, சமரநாயக்கா
போன்ற நிறுவனத் தலைவர்களுடன்
966) உலகப் நானும் சேர்ந்து சுமார் பதினாறு பேர்
விமானத்தில் டில்லிக்குப் பயணப்
យ៉ាប៉ា பட்டோம். என்னுடன் எனது நிறுவனத்
U西西 தின் மேலாளர் திரு. பிரின்சிலி
பிகராடோ அவர்களும் உடன் வந்தார்.
56ចំbITed தொடர் பயணம் மகிழ்ச்சியாகவும்
சுமுகமாகவும் நடந்தேறியது. மறக்க - முரீதரசிங் பூபாலசிங்கம் முடியாத அநுபவம் இது
இந்த உலகப் புத்தகக் கண்காட்சி 17-வது அகில உலகப் புத்தகக் கண்காட்சி யாகும்.
ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் நடைபெறும் அகில இந்தியப் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்று வருவது வழக்கம்.
இந்தத் தடவை டில்லியில் நடைபெறும் இந்த உலகப் பெரும் புத்தகக் கண்காட்சி விழாவில் அவசியம் நான் கலந்து கொள்ள வேண்டுமென முன்னரே தீர்மானத்திற்கிணங்க, தமிழ் நாட்டுப் புத்தகக் கண்காட்சியைத் தவிர்த்துக் கொண்டு எனது நிறுவனத்தின் புத்தக விநியோகப் பொறுப்பாளரான செல்வி. எஸ்மின் அவர்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்திருந்தேன்.
டில்லிக்கு நான் செல்வது இதுவே முதற் தடவையாகும். தமிழ் நாட்டிற்கு நான் பல தடவைகள் வியாபார நிமித்தமாகவும் ஸ்தல யாத்திரையாகவும் சென்றிருக்கிறேன்.
65

Page 35
ஆனால், டில்லி - இந்தியத் தலை நகர் எனக்குப் புதுமையாகப்பட்டது. அதிசயப் பட்டணம் போலவும் தென்
lill-gil.
டில்லியில் அமைந்துள்ள அக்ஸ் ஸ்டாம் கோவிலை பார்ப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இக்கோவில் இந்தியாவிலேயே பிர மாண்டமான கோவில். இதை அமைத் தது சுவாமி நாராயணன் சமூகத்தினர். இதே போன்று பிரமாண்டமான கோவிலை லண்டனிலும் பார்த்து பிரமித்தேன்.
முழு இந்தியாவின் கலாசாரத்தை யும் மக்களையும் ஒருங்குசேர ஒருவன் பார்க்கப் பழக வேண்டுமென்றால், அது
என்றார். நாங்கள் விக்கித்துப் போய் பாதையோரம் நின்றோம்.
தமிழ் நாட்டிலிருந்து காலச்சுவடு, பாவை, உலகத் தமிழாராய்ச்சி நிறு வனம் போன்றவை தமிழகத்தின் அனைத்துப் புத்தக வெளியீட்டு நிறுவனங்களில் சார்பாக நூல்களைக் காட்சிக்கு வைத்திருந்தன.
குமரன் புத்தக நிலைய குமரனை யும் டில்லியில் நான் பார்த்தேன்.
இந்தியாவிலுள்ள 14 மொழிகளி லும் வெளிவந்த நூல்கள் அனைத் துமே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உலகப் பரப்பில் பல்வேறு நாடுகளில் சமீபத்தில் வெளி வந்துள்ள ஆங்கில
நூல்களும் பார்க்கும்படி இருந்தது.
டில்லியைத் தவிர, வேறொரு நகராயும்
இருக்க முடியாது.
நானும் இன்னொரு நண்பரும் அங்கு தெருவில் சரளமாகத் தமிழில் கதைத்த வண்ணம் சென்று கொண்டி ருந்தோம். ஒரு பாதசாரி இடைமறித்து “ஸார் நீங்க தமிழ் நாட்டுக்காரரா?" என எம்மை வீதியோரம் நிறுத்தி வைத்துக் கேட்டான்.
'இல்லை! நாங்க இலங்கை நாட்டுக்காரங்கள்!" என நான் சொன் னேன். "அப்படியா ஸார்! உங்க பலமே
9.SS தொடர்ந்து "நம்ம தமிழன் டில்லியில்
தானே ஸார்!" என்றார்.
தமிழில் பேசவே பயப்படுவான் ஸ்ார்!’
66
சமீபத்தைய அச்சக வித்தைகளை காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங் களைப் பார்த்தோர் வியக்கக் கூடிய தாக அமைந்தது.
ஆர்வமுள்ள எழுத்தாளன் ஒருவன், மற்றும் பதிப்பகத் துறையில் புதுமையை விரும்பும் புத்தக வெளி யீட்டாளன் ஒருவன் நிச்சயம் இரண்டு ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்தச் சர்வதேசப் புத்தகச் சந்தையை ஒரு தடவையேனும் பார்த்துக் களிக்க வேண்டுமென விழா முடிந்து டில்லியை விட்டுப் புறப்படும் போது மனதார நான் விரும்பினேன்.

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா - 2005
- ப. ஆப்டீன்
இலக்கிய ரீதியாக கடந்த சில வருடங்களைப் பின்நோக்கிப் பார்த்தால் வசதி வாய்ப்பு நிதி ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப தொடர்ந்து, மாகாண மட்டங்களில் சாகித்திய விழாக்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றுள் மத்திய மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் தமிழ் சாகித்திய விழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கின்றன என்பதை அவதானிக்க (урц}ициѣ.
2005ம் ஆண்டிற்கான மத்திய மாகாண சபையின் தமிழ் சாகித்திய விழா, கடந்த ஜனவரி மாதம் 28ம், 29ம் திகதிகளில் இருநாள் பெருவிழாவாக நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இயற்கை அழகு மிகுந்த நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது!
இப்பெருவிழாவிற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சர் எஸ்.அருள்சாமி அவர்கள் தலைமை வகித்தார்.
இந்த முறை அமைச்சர் அருள்சாமி அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு ஒரு குறுகிய கால அவகாசத்தில் பெரிய அளவில் இவ்விழாவை வெற்றிகரமாக உரிய அரசாங்க அங்கீகாரம் பெற்று நடத்தி முடித்திருப்பது என்பது சிறப்பம்சமாகும். "சினிசிட்டா நகர மண்டபம் ரசிகப் பெருமக்களால் நிறைந்து வழிந்தது. நாட்டியம், நாடகம் என்று பலதரப்பட்ட தரமான கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கால அவகாசம் போதாமையினால் கருத்
67

Page 36
தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட வில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். இனிவரும் காலங்களில் பல்வேறு கருத்தரங்குகளும், ஆய் வரங்குகளும் இடம்பெற வாய்ப்புகள் அமையும் என்று அறியக் கிடக் கின்றது.
இவ்விழாவிற்கு வகித்து, உரையாற்றும் போது, மத்திய மாகாண கல்வியமைச்சர் அவர்கள்
தலைமை
"புதிய சிந்தனை, புதிய மலையகம் என்னும் இவ்விழாவின் தொனிப் பொருள் பற்றி விரிவாக விளக்கம் கூறினார். மத்திய கல்வி, தோட்ட பற்றி அமைச்சர் எஸ்.அருள்சாமி
மாகாண தமிழ்க் உட்கட்டமைப்பு என்ற வகையில் அவர்களினதும், உறுப்பினர் எஸ்.திகாம்பரம் அவர்களி னதும், அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய சகல இனிய நெஞ்சங்களினதும் உழைப்பும், அர்ப் பணிப்பும் பாராட்டிற்குரியது.
அமைச்சர்களான ஜெயராஜ்
பெர்னாண்டோ புள்ளோ, சி.பி.ரத்
னாயக்க, மத்திய மாகாண ஆளுநர், பிரபல தொழிற்சங்கவாதி டி.அய்யா துரை உட்பட பல்வேறு துறை சார்ந்த வர்கள் கலந்து கொண்டு உரை யாற்றினர்.
மலையக மாணவர்களின் கல்வி தொடர்பான கருத்துக்கள் நிறைய இடம்பெற்றன.
68
மலையகத்தின் இளம் மாணவ மாணவிகளை பொருட்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றவர்
ஊக்கு விக்கும்
களுக்கும் பதக்கங்கள் அணிவித்து
உற்சாகமளிக்கப்பட்டது.
எழுத்தாளர்கள், கலைஞர்கள் உட்பட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த அறுபது பேருக்கு விஷேட விருதுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்து
பாராட்டப்பட்டனர்.
திரு. ஆர்.மகேஸ்வரன் அவர் களை ஆசிரியராகக் கொண்டு - 2005ம் ஆண்டுக்குரிய மத்திய மாகாண சாகித்திய விழா மலர் வெளியிடப் பட்டது.
பரிசு பெற்ற திரு. அந்தனி ஜீவா, திரு. இரா.அ.ராமன், செயலாளர் திரு. எஸ்.எஸ்.தேவசிகாமணி ஆகி யோரது பங்களிப்பு குறிப்பிடத் தக்கது.
சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியர் வீ. அரசு, மலேசிய உலக தமிழாராய்சி நிறுவனத்தின் துணைச் செயலாளர் ஆ. குணநாதன் ஆகி யோர் விசேட அதிதிகளாகவும்
கலந்து கொண்டனர்.
வெல்ல "புதிய சிந்தனை, புதிய மலையகம்’

rరెTumసి
- டொமினிக் ஜீவா
D மல்லிகையின் இந்த நாற்பது வருஷஅநுபவங்கள் இத்தனையையும் ஒரு நூலாகநீங்களே எழுதி வெளியிட்டால் என்ன? அது ஒரு வரலாற்றுச் சாசனமாக இருக்குமல்லவா?
கொக்குவில். தேவதாஸன்
இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியராகிய நான் எழுதுவதை விட, மல்லிகை மீது தொடர் அபிமானமும் அக்கறையும் கொண்ட யாராவது எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.
டு இத்தனை சிரமங்களுக்கும் கஷ்ட நிஷ்குரங்களுக்கும் மத்தியில் மல்லிகையைத் தொடர்ந்து விடாது நடத்தி வருகிறீர்களே, மல்லிகைக்குக் கடன் ஏதாவது உண்டா?
பதுளை. எம்.ராகவன்
இதைப் பற்றியெல்லாம் எழுத்தில் பதிய வைப்பது இலக்கிய வளர்ச்சி கருதிச் செயல்படும் எதிர்காலத் தலைமுறைக்கு உகந்த காரியமல்ல. ஒன்றை உறுதியாக நம்புங்கள். மல்லிகை ஆர்வலர்கள் என்னைக் கடன்காரனாக உருவாக்க மாட்டார்கள்.
உங்களுடைய இந்தக் காலத்து யாழ்ப்பாணத்து இலக்கிய நண்பர்களின் சுகதுக்கங்களை இடிக்கடி விசாரித்துக் கொள்வீர்களா? தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
வத்தளை. essf.6Bu(BIDIror
உங்களுக்கு ஒன்றைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன். அன்று யாழ்ப்பாணத்தில் குச்சொழுங்கையில் மல்லிகை ஆசிரியராக இயங்கி வந்த வேளையிலும் இனறு கொழும்பு மாநகரில் சஞ்சின்க்யைத் தொடராக வெளியிட்டு வரும் இந்த வேளையிலும் சரி, சகல எழுத்தாளர்க்ளையும் நெஞ்சார நேசித்து வந்தவன், நான். தொடர்ந்து மல்லிகை வெளிவருவதற்கும் இந்த நேசிப்புத்தான் காரணம். என் வளர்ச்சிக்கு ஆதார்மாக விளங்கிய நண்பர் கனகரட்னாவை, அவர் உடல் நலமில்லாமல் கொழும்பு
69

Page 37
வந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலும் அவரை மறந்து விடாமல் தேடிச் சென்று பார்த்தேன். ஆத்மார்த்திகமான நண்பர்கள் தான் எனது பலம்
D கனடா இலக்கிய நண்பர்கள் உங்களை இங்கு
இழைத்தார்களாமே, நீங்கள் போகவில்லையாமே, என்ன காரணம்?
புத்தளம். எஸ்.செல்வநாதன்
வேலைப் பளு. மற்றும் இப்பொழு தெல்லாம் எனக்கு ஊர் சுற்ற உண்மை யிலேயே ஆர்வமும் இல்லை. நிறைய நிறைய இங்கு வேலைகள் இருக்கின்றன. உண்மையாக காரணம் இதுவேதான்.
D சிறுவயதுக் குறும்புத்தனம் ஏதாவதொன்றைச்
சொல்ல முடியுமா? சும்மா வெடகப்படாமல் சொல்லுங்கள்.
disor Lisb. எஸ்.சிவதேவன்
பேருந்துகள் வந்து போகும் பிரதான சந்திகளுக்கு அணித்தாக உள்ள நீள ஒழுங்கை முகப்புகளில் என்னைப் போன்ற வாலுகள் நின்று கொள்வோம். பஸ் வரும்போது ஒழுங்கை முகப்பில் சிக்காராக நின்று கொண்டு நிறுத்தும்படி கையைக் காட்டுவோம். வாகனம் தரித்து நின்றதும் சொல்லி வைத்தாற் போல, ஒழுங்கையினுாடாக எடுப்போம், ஒட்டம். இந்தச் சடுகுடு விளையாட்டில் சிக்குப்பட்டு அடி வாங்கியதும் பழைய கதை.
இலக்கியப் படைப்புகள் காலத்தின் கண்ணாடி
என்பது இந்தக் காலத்தில் பொருந்துமா? இவற்றினை
70
விட, எதனைப் பிரதிபலிக்க வேண்டுமென இளைய படைப்பாளிகளுக்குக் கற விரும்புகிறீர்கள்?
இறுத்தோட்டை. ந.சந்திரசேகரன்
படைப்பின் இலக்கணத்தை முன் னால் வைத்துக்கொண்டு எந்தச் சிருஷ்டி யையும் படைத்துவிட முடியாது. தரமான படைப்புகளைத் தொடர்ந்து ஊன்றிப் படியுங்கள். அப்புறம் உங்களது இயல்பான எழுத்தை எழுத்தில் வடியுங்கள். சோர்வு தட்டாமல் தொடர்ந்து எழுதி வாருங்கள்.
நீங்கள் கவிதைகள் ஏதாவது இதுவரை எழுதியதுண்டா?
களுத்துறை. 6rsio.6rfb.86DIIf
ஆரம்ப காலங்களில் ஏதோ ஒர் உந்து தலுக்குட்பட்டுச் சிறு சிறு கவிதைகளைக் கிறுக்கிப் பார்த்து ஆசை தீர்த்ததுண்டு. உண்மையில் நான் கவிதா ரசிகனே தவிர, கவிஞனல்ல. இப்பொழுது சில கவிஞர்கள் சிறுகதை என்ற பெயரில் எழுதும் எழுத்துக் களைப் படித்துப் பார்க்கும் பொழுது எனக்கு அவர்களது அணுகுமுறையில் பரிதாபம்தான் ஏற்படுகின்றது. பெயரைக் கெடுத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
டு உங்களது நண்பர்களை எப்படித்தேர்ந்தெடுத்துப் பழகுகிறீர்கள்?
5.D3GOrrebar
இலக்கிய ஆத்மார்த்திகமாக நேசிக்கப் பழக் வர்கள் அனைவரும்
எனது நண்பாக ன்னுடன் சிநேகமாக
இருக்க வேணyaபது கடடாயமில்லை.

அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் இலக் கிய உலகை நேசித்தால் எங்கிருந்தாலும் - எனக்குத் தெரியாமல் தூர இருந்தாலும் - அவர்கள் அனைவரும் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர்களே ஆவார்கள்.
ஓர் எழுத்தாளனுக்கு அரசியல் அறிவு தேவையா?
நல்லூர். க.கயிலைநாதன்
அரசியல் அறிவு மாத்திரமல்ல, விஞ்ஞான, தொழில் நுட்ப அறிவுகூடத் தேவை. இன்றைய வளரும் விஞ்ஞான யுகத்தில் காத்திரமான, எதார்த்தப் பாத்திரங்களைப் படைத்து நடமாட வைப்பதற்கு இந்த நவீனயுக அறிவுகள் அத்தியாவசியம் தேவை!
56f6b7 56bMarxg5ga Daxě albáğg 2DJUIFT, யிருக்கிறீர்களா?
பதுளை. හිම35fi.[3656u{I}Töör
இரண்டு தடவைகள் சென்னையில் நேரில் சந்தித்து அவருடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். பி சில ஆண்டுகளுக்கு முன்னர் மல்லிலக ஆசிரியத தலையங்கத்தில் எழுத்தாளர் டானியலுக்க் UlIQů பாணத்தில் ஏநாபகார்த்தச் சிலைநிறுவவேண்டும் எனத் கோரிக்கை வைத்தீாகளே, இன்றை உங்களது நிலை 66.68
Babпüшпії. எம்.பரஞ்சோதி
அன்றைய எனது கோரிக்கை நிச் சயம் ஒருநாள் நிறைவேறியே தீரும். நம் புங்கள். நடைபெறும். சமீபத்தில் தமிழகத் திலிருந்து 'அடையாளம்' என்ற வெளியீட்
71
டகம் தோழர் டானியலின் ஆறு நாவல் களடங்கிய பாரிய நூலொன்றை வெளியிட் டுள்ளது. கே.டானியல் படைப்புகள் என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். மக்கள் எழுத்தாளன் காலம் போகப் போகத்தான் மக்கள் மத்தியில் வேர் பாய்ச்சி நிமிர்ந்து நிற்பான்.
O 2ங்களது இலக்கிய வாழ்வு பற்றி இன்று பூன திருப்தி இடைகிறீர்களா?
கொக்குவில், க.நவநீதன்
பரிபூரண திருப்தியும் தன்னிறைவும் அடைகின்றேன். இந்தத் துறையில் நான் இன்று நின்று நிலைப்பதையிட்டு இந்த நாட்டு வாசகப் பெருமக்களுக்கு எப்பொழுதுமே நன்றியுடையவனாக இருப்பேன்.
D யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களின் தொடர்பு இப்பொழுது எப்படி இருக்கிறது?
DðrGUrTTsf. ஆரி.சரவணன்
ஆரம்ப காலத்திலிருந்து மல்லிகை யில் எழுதி வந்தவர்கள் இன்று அடிட, மல்லிகையில் தொடர்ந்து எழுதி வருகின் றனர். இவ்வருஷ ஆரம்பத்தில் கூட, சங்கை ஆழியான், தெணியான் போன்ற சகோதர எழுத்தாளர்கள் மல்லிகைக்கு நேரடியாக வந்து கலந்துரையாடிச் சென் றுள்ளனர். நண்பர் கணகரெட்னா உடல் நலம் குன்றி பொரளையில் தனது சகோதரனது இல்லத்தில் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போய் பார்த்து வந்தேன். நண்பர் சிவச்சந்திரன் மகளுக்குத் திருமணம் நடந்தது. போய்

Page 38
வந்தேன். நண்பர்களைப் பார்த்தேன். உரையாடி மகிழ்ந்தேன்.
D உங்களையும் மல்லிகையையும் ஆரம்ப காலங் களில் சுமந்து திரிந்த ஹொட்டன் ஹோல் இதுதான் 2ri 56Igi figu6OLDIOI dari 6x6rix 19 Odipub பத்திரமாக இருக்கிறதா?
ാർഡ്രജ്ഞ. எம்.நேசேந்தின்
அதையேன் கேட்கிறீர்கள். நான் பாவித்த பொருட்கள் ஒவ்வொன்றையும் நான் மிகமிகப் பத்திரமாக வைத்திருக்க எண்ணி வருபவன். சைக்கிள் வண்டியை மல்லிகையில் வைத்துப் பத்திரப்படுத்திப் பூட்டி விட்டு வந்தவன்தான் நான். இடையில் ஒரு தடவை ஊருக்குப் போய்ப் பார்த்தால் அந்தச் சைக்கிளைக் கான வில்லை. எடுத்தவர் அதனது பெறுமதியை உணர்ந்து பாவித்தால் எனக்கும் மனத் திருப்தியே! *
உங்களுடைய சுயவரலாறு நூலான எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' விற்பனை எந் தளவில் இருக்கிறது?
கொழும்பு 6. ம.கதிரவேலன்
முதற் பதிப்பு விற்று முடிந்து, இரண் டாம் பதிப்பு விற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களிடம் சென்று, பரவி வாசிக்கப்பட்டு வருகிறது. அதன் சிங்கள மொழிபெயர்ப்பு வேலைகளில் தற் சமயம் கவனம் செலுத்திக் கொண்டிருக் கிறேன்.
回 மல்லிகையை அச்சுக் கோத்துப் பக்கமாக்கி, இச்சகத்திற்குச் சைக்கிளில் கொண்டு சென்ற சமயம், இது நடுவழியில் கொடுப்பட்டுச் சிதறிப் போனதை மல்லிகையில் படித்த போது இப்படியே மனசு தவித்துப் போனது எனக்கு. அத்தகைய அவல சூழ்நிலைக்குப் பின்னரும் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிட்டு வரக் காரணம் என்ன?
சுன்னாகம். 6rfb.6EIILD(356)|Gr
மல்லிகையின் நாற்பது ஆண்டுக் கால வரவில் ஏற்பட்ட ஒரு இக்கட்டான சம்பவத்தைத்தான் எழுத்தில் பதிய வைத் துள்ளேன், நான். இப்படியே பல சம்பவங் களைத் தொகுத்து 'அநுபவ முத்திரைகள் என்ற நூலில் பதிந்து வைத்திருக்கிறேன். படைப்பாளி ஒருவனுக்கு ஏற்படும் இப்படியான சிரமங்களும் தற்காலிகக் கஷ்டத்தை தந்து விடுமே தவிர, அவை பின்னர் நினைத்துப் பார்க்கும் வேளை களில் ஆத்ம சமர்ப்பணம் செய்து உழைக்கும் போது புதுப்பலத்தையும், புதுத்தெம்பையும் தந்து விடுகின்றன. இப்படித்தான் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் வைத்து மாணவன் ஒருவன் மல்லிகையைக் காசு கொடுத்து வாங்கி, என் முன்னால் இரண்டாகக் கிழித்து அதை என் முகத்தில் அடித்தான. அதில் பெருமை என்னவென்றால் ஐம்பது சதக் காசைத் தந்து, பின் இதழைச் சொந்த மாக்கிய பின்னரே, கிழித்து முகத்தில் வீசி னான். மல்லிகையின் வளர்ச்சிக்கு இவை தான் பசளையாகப் பின்னர் அமைந்தன
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு -
3. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72

DEUA TRADING CO. DEU CHETCU INDUSTRI
Manufacturers & Importers of Pappadam, N00dles, Candles and Indian Appalam
35/3, Sri Gunananda Mawatha, w Colombo - 13.
T.P.: 244O448,2441134 Mobile : o777-317654

Page 39
N|Z;
| Wallikai
@ർഗ്ഗ
Digidad Cod
MAJN FA
is Automatic dust |CE
* Maximum Size: 1 * Output Resolutic * Film limput Forma * Film Types: Colo
negati
* Compatible Impul Floppy Disko, CD-Rom, CD DVD-R, DVD-ROM, PC
: Print to Print
* Conduct sheet &
* Templates: Greetin Album I
HEAD OFFICE
HAppy DIGITAL CENT
h3. TÅL. CILICIJA, LA LTLI
No. 64, Sri Sumanatissa Mv Colombo - 1). Tel:-074-6Io65
 

FEBRUARY 2006
Zഗ്ഗ0 ബ്രe huv (dhad, &o Šuudio, ZATUR1ZS
& scratch correction
۸۷ 18”рsiы Print dpiסס4 :lוג ts: 135, IX240, Izo, AP5 It negative & positive, B&W ve, 5epia negative
t & CDutput WMedia:
D-R/RW, MO, ZIP DVD-RAM, Ca Tid, CotinpactFlash, STT:n artMedia,
lindex primt
3 Cards, Frame Prints, Calandar Prints, Prints.
ERCH
RE HAppy PHOTO
TIL DE APPLIFI 43 KCl 4L rich. First WILD.T. FHE
v, No. 300, Modera Street, 구. Colombo - 15.Tel:-OII-252-6345.