கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.03

Page 1
().
慧藏藏||
慧
)||론||一"_■『|
"慧W藏#
*盔一鬣 怀W|||||||||"||WW활확)請』 ||-|一들들|暑sae言"
||きシ |||]]Tae彗『』sss |-||(|-
《)
*
· |||||is.|-
事
ண்டை ஒரு
言|
*囊疊疊
iqsoņuse inşsı işgaots ooșH
. . . . . . . . .
50வது ஆ
3.
恒
6 嵌
s
 
 
 
 
 
 
 
 
 
 
 

|. . . .請- |
|-.
s s
T|----- sae.·*)*)
).|- .|-.『』『』·『國道議.----
|- :.-|-|.|-輯』-
』

Page 2
ll, Zഗ്ഗd ബ്ര
Digital Colouw (ladb, &o Sudio
MAN FEATURZS
egn G慈 Automatic dust & scratch correction
* Maximum Size: 12" x 8"Disill pint) * Output Resolution: 4oodpi *Film lnput Formats: 135, Ix24o, Izo, APS * Film Types: Colour negative & positive, Baw
megative, Sepia mesative
* Compatible linput & Output Media:
(Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia,)
sk Print to Print
& supo
No. б4, 5ri5umanatissа Мw, Colombo - 12. Tel :-o74-6το652.
* Conduct sheet & lindex print 来 Temp lates: Greeting Cards, Frame Prints, Casandar Prints,
Album Prints.
HEAp Office
BRANCHAPPyDIGITAL CENTRE HAppy PHOTO
Decital Colour. As s Simbo & PotšGRA.
PorrocAPHEs & VotoGRAPHE:s
No. 3oo, Wodera Street, Colombo - 15. Tel-o11-151645.

இலக்கியச் சுவைஞர்களுக்கு ஒரு வார்த்தை.
தேசத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தெல்லாம் மல்லிகை இதழ் கேட்டு, இலக்கியச் சுவைஞர்கள் நம்முடன் தொடர்பு கொள்ளுகின்றனர். முக்கியமாக ஆண்டு மலர் கேட்டு எழுதுகின்றனர். அத் துடன் 'மல்லிகைப் பந்தல்" வெளியீடுகள் சம்பந்தமாகவும் தகவல்கள் கேட்டு எழுதி வருகின்றனர்.
இவை அத்தனைக்கும் நம்மிடமுள்ள |ஒரேயொரு பதில், சிரமத்தைப் பாராமல் நம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் என்பது தான்.
சற்று யோசித்துப் பாருங்கள். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஓர் இலக்கியச் சஞ்சிகை இந்த மண்ணில் மலாந்து மணம் பரப்பி வந்துகொண்டிருக்கிறது. பல்வேறு பிரதேச மட்டங்களில் தனது வருகையை யும் இருப்பையும் தனது தொடர் வரவின் மூலம் நிறுவி வருகின்றது.
அதே சமயம் மல்லிகை எங்களுக்கு எப்படிக் கிடைக்கும்? மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் நமது கைகளுக்குக் கிடைக்க என்ன வழி செய்யலாம்? என வினா எழுப்புகின்றனர், பலர்.
தயவு செய்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்காக சற்றுச் சிரமப்பட்டு, எம் முடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களது ஆரோக்கியமான இலக்கிய உறவுக்காக மல்லிகை எப்பொழுதுமே காத்திருக்கும்.
- ஆசிரியர்
327 மல்லிகை
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, so sú so s S T - T t tro só o é, s 6d மாத்திரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற G u go to iš Lô - šis siis * b Lu 6 ib இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப் பெற்ற சஞ்சிகை மல்லிகை. இதனை இலங்கை நாடாளுமன்றப் பதிவேடான "விறன்ஸார்ட் பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது.
50- Gig) adirau நோக்கி. torf; 323 ീറ്റ്രe منبرxبرمج%///o ഠർn/lഗ്ഗ ദർശ്ശദ്ധe
படைப்பாளிகளின்
புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201-1/4, Sri Kathiresan Street, Colombo - 13. Te: 232O721

Page 3
Iិbut uffiញចារិ
bhIpblThរិ
- டொமினிக் ஜீவா
கதிரேசு சுப்பிரமணியம் என்ற தனது சுயப் பெயரை,
& ଽ : '' && , , , கே.எஸ்.மணியம் எனச் சுருக்கி, இன்று கொழும்பு திரு K.S. Losolutb புறக்கோட்டை வட்டாரத்தில் தனித்துவமாகத் தனது
வியாபார நிலையத்தை நடத்திச் செல்பவர், இவர்.
8%
இவரது பிறந்த ஊர் இளவாலை.
பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத மிக இளவயதிலேயே உழைப்பபை வாழ்க்கை நிலையாக ஏற்றுக் கொண்ட இவர், அந்த இடைவிடாத உழைப்பின் பெறுபேறாக பலருக்கும் நன்று தெரிந்த ஒரு பிரபலமானவராகத் திகழ்ந்து வருகிறார்.
ஆரம்ப காலத்திலிருந்தே குரு மகராஜ் பக்தன். கொழும்பினில் உள்ள குரு மகராஜ் பக்தி நிறுவனத்துடன் தொண்டுப் பணி புரிந்து வருவதில் மனநிறைவு காண்பவர்.
மல்லிகை ஆரம்பித்த காலத்திலிருந்தே நான் கொழும்பிற்கு மாதா மாதம் வரும் வேளைகளில் எல்லாம், இவரது செக்கடித் தெரு நிறுவனத்தில்தான் எனது வியாபார அலுவல்களைச் செய்து வருவது வழக்கம். இவரது பங்காளியான செல்வமும் எனக்குப் பல வழிகளில் உதவி வந்துள்ளார். உதவுவதில் தனிநிறைவு காண்பவர்.
மல்லிகை இன்று பலராலும் விதந்து பேசப்படுவதற்குப் பலரினது அனுசரணையும் ஒரு காரணமாகும். வெளி உலகிற்குப் பெரிதும் தெரியாமலே மறைமுகமாகப் பலரும் உதவி வந்துள்ளனர் என்று பலருக்குத் தெரியாது.
அப்படியான பலர் நெருக்கடி நேரங்களில் எல்லாம் எனக்கு வெளியே தெரியாமல் பல உதவி ஒத்தாசைகளைச் செய்து வந்தவர்களில் இவரும் ஒருவர்.
மற்றவர்களுக்கு உதவுவதில் தனி மகிழ்ச்சி காண்பவர், இவர். இது இவரது இயல்பான குணங்களில் ஒன்று. குரு மகராஜின் போதனைகளை வெகு சிறப்பாகத் தினசரி கடைப்பிடித்து ஒழுகி வருபவர்களில் முதன்மையானவர்களில் இவரும் ஒருவர். மிக அமைதியான குணம் கொண்டவர். ஆர்ப்பாட்டத்தை வெறுப்பவர். நெஞ்சுக்கு
நெருக்கமானவர்களுக்குத் தருணமறிந்து உதவுவதில் பேரின்பம் காண்பவர். இவரது தன்னலம் கருதாத உறவு மல்லிகைக்குரிய பெரும் பலங்களில் ஒன்று.
 
 
 
 
 

இலக்கிலத்தளத்தை 'ñante Ch&-3éQJnel
நாடு பூராவுமிருந்து மாத்திரமல்ல, நமது சகோதரங்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்நாடு, ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களின் பிரபல நகரங்களில் இருந் தெல்லாம் தமிழில் பல்வேறு வகைப்பட்ட நூல்கள் மாதா மாதம் வெளிவந்த வண்ணமாகவேயுள்ளன.
தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இந்தப் புத்தகங்களை ஏனைய பிரதேசங் களில், நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர்களால் பெற்றுக் கொள்ளவும், பெரும்பாலும் அறிந்து கொள்ளவும் முடிவதில்லை.
ஒரு காலகட்டத்தில் நம்மவர்கள் புலம்பெயர்ந்த கண்டங்களில் இருந்து 32 சிறு சஞ்சிகைகள் வெளிவந்ததாகப் புள்ளி விபரங்கள் கூறி வைத்தன. ஆனால், இவை களின் நாமங்கள், தகவல்கள் தக்க முறையில் ஆவணப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட வில்லை. எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டமிது!
யார் விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் சரி தமிழ் மொழி இன்று சர்வ தேசப் பாஷை - செம்மொழி! இதைத் தமிழர்களாகி நாம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். நமது பிற்சந்ததிக்குத் தகுந்த முறையில் அறிமுகப்படுத்த வேண்டும்.
கடந்த முப்பதுகளில் இருந்து தேசத்தில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தெல்லாம் சிற்றிலக்கிய ஏடுகள் காலத்திற்குக் காலம் வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பிடக் கூடிய சில வெளியீடுகள் சம்பந்தமாகத்தான் தகவல்களும் எழுத்துப் பதிவுகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அன்று எழுத்தையே - இலக்கியப் பணியையே - தமது உயிர் மூச்சாகக் கொண்டு எழுத்தில் இயங்கி வந்த பெரும்பாலான படைப்பாளிகளைப் பற்றிய எந்தவிதமான தகவல்களெதுவும் நமது சந்ததிக்குத் தெரிவிக்கப்படவில்லை.
தமிழகத்து எழுத்தாளர்களின், கலைஞர்களின் தகவல்கள் தான் நமது மண்ணிலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, எழுத்தில் வடிக்கப்பட்டு நமது நாட்டுத் தமிழ்க் கலை இலக்கியத் தகவல்களாக இன்று வரையும் பேணப்பட்டு வருகின்றன.
இவைகளை விடுத்து, நமது தேசத்தில் வாழ்ந்து, தமது இடையறாத உழைப் பினாலும் அர்ப்பணிப்பினாலும் இந்த மண்ணுக்கு உரமூட்டிய பலரை நாம் திரும்பவும் நினைவு கூர்வதுடன், அன்னாரது ஆரோக்கியமான செயல்பாடுகளைப் புனர் நிர்மாணஞ் செய்து அடுத்த தலைமுறையினருக்கு முதுசமாக விட்டுச் செல்வோம்.

Page 4
அEல்டற்டற்
பூத்தக வித்ததன்? (பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் முநீதரசிங் பற்றிய சில சிந்தனைகள்)
- கம்பவாரிதி இ.ஜெயராஜ்
"உங்களுக்கு திரும்ப ஒரு வேலை தரப்போறன். பழையபடி ஒரு அட்டைப்படக் கட்டுரை எழுத வேணும்." வழமை போல ஜீவா தொலைபேசியினூடாகக் குண்டு போட்டார். ஒரு பேச்சாளனுக்கு எழுதுவதிலுள்ள சிரமம் அவருக்குத் தெரியவா போகிறது? "யாரைப் பற்றி எழுத வேணும்" சற்று இழுத்தபடி கேட்டேன். "உங்கட ஆள்தான். எங்கட பூபாலசிங்கம் முரீதரசிங்கை அட்டையிலை போடப் போறன். நீங்கள்தான் பொருத்தமான ஆள். எழுதுங்கோ." ஜீவாவுக்கு எனது காசிம் உமர் பற்றிய கட்டுரை பிடித்திருக்கும் போல. என்பாடு சங்கடமாயிற்று.
முதலில் புதுவை இரத்தினதுரை.
அடுத்து இலக்கியப் புரவலர்.
இப்போது பூபாலசிங்கம் ருரீதரசிங். எல்லோரும் ஏதோ வகையில் செல்வாக்கானவர்கள். பெரிய மனுஷர்களைக் கைக்குள் போட, மல்லிகையைக் கம்பவாரிதியார் குத்தகை எடுத்திருக்கிறார். குற்றச்சாட்டு வரப்போவது.தீர்க்கதரிசனமாய்த் தெரிகிறது. குற்றச்சாட்டுகள் எனக்குப் பழக்கமானவை. என்றைக்குமே அவை என்னை உயர்த்தும் படிக்கட்டுகள்தான். அதனால் அச்சமில்லை.

ஜீவா சொன்ன ‘உங்கட', 'எங்கட என்ற வார்த்தைகள் மனதைப் பாதித்தன. ழுநீதரசிங்குடனான எனதும் ஜீவாவினதும் உறவை வெளிப்படுத்தும் உண்மைச் சொற்கள் அவை. என் நேசனை நான் எழுதாமல் யார் எழுதுவது? *சரி, எழுதுகிறேன்" என்று நான் பதில் சொல்ல, "மூன்று நாளைக்குள் தாங்கோ? ஜீவா உத்தரவிட்டுப் போனை வைத்தார். ஒரு பொதுவுடைமைவாதியின் சர்வாதிகாரம். அந்த சர்வாதிகாரத்தில் பொதிந்திருந்த அன்புரிமை தெரிந்ததால், சிரித்தபடி பேனையை எடுக்கிறேன்
- -- ح>
‘ழுநீதரசிங்' அறிமுகமில்லாதபோது,
ஒரு சீக்கிய முகத்தை இப்பெயர் நினைவூட்டியது ஞாபகத்திற்கு வருகிறது. யாழ்ப்பாணத்தில் வேறு எவருக்குமில்லாத தனித்த பெயர். பெயரால் கிடைத்த அடையாளம், பொதுவுடைமைவாதியான தந்தை தந்தது. யாழ் மண்ணில் பொதுவுடைமையை வித்திட்ட புகழோரில் பூபாலசிங்கத்தின் பெயரும் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு புரட்சிச் சிந்தனையாளர். எல்லாம் இயல்பாகிவிட்ட இன்றைய
St. யாழ்ப்பாணத்திலல்ல. புரட்சி என்ற சொல்லே குற்றமாய்க் கருதப்பட்ட, அன்றைய யாழ்ப்பாணத்தில். மரபுக் கொள்கைகளை உடும்பாய்ப் பற்றி நின்ற தீவுப்பகுதியிலிருந்து வெளிவந்த தீரன். படித்தது இரண்டாம் வகுப்பு மட்டுமே. புத்திக்கூர்மையால் வித்தை வெளிப்படுத்தி, பதவிகள் நோக்கியும், பயன்கள் நோக்கியும்
பொதுவுடைமை வேஷம் போட்டு
விளையாடிய வித்தைக்காரரில் வேறுபட்டு, பயனோ, பதவியோ எதிர்பாராது, கட்சிக்காக புகையிரத நிலையத்தில் பத்திரிகை விற்று, பொலிஸாரிடம் சவுக்கடிபட்டவர். புண்பட்ட முதுகோடும்,
பண்பட்ட நெஞ்சோடும் கட்சிக்காய் உண்மையாய்ப் பாடுபட்ட உத்தமன். தன் திருமணத்தில் வழமையான தாலிக்குப் பதில், சுத்தியல், அரிவாள்ச் சின்னத்தைச் செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடித்த இலட்சியக்காரன். உறவு பிள்ளையார்த் தாலி செய்துவிட, அதைக் கட்டாமல் வெறுங் கொடியை மட்டும் கட்டி, உறவை எதிர்த்து நின்ற உண்மை உறுதியாளன். தன் புத்தகசாலையை வெறும் விற்பனை நிலையமாகவன்றி, பொதுவுடைமைத் தத்துவத்தின்

Page 5
புகலிடமாய் ஆக்கிய புண்ணியன். இவர்தான் என்னை வாசிக்க வைத்தார் என்று பேராசிரியர் சிவத்தம்பியிலிருந்து மல்லிகை ஆசிரியர் ஜீவா வரை பலரும் பாராட்டும் பண்பாளர். கற்காமற், கற்க வைத்த கண்ணியன். பிள்ளைகளுக்கு கார்ல்மாக்ஸ் என்றும் ழுநீதரசிங் என்றும் அப்போதே புதுமைப் பெயர் வைத்த புரட்சியாளன். இந்தக் கொந்தளிக்கும் நெருப்பே தந்தை. இந்நெருப்பை உள்வாங்கி, மாண்போடும், மங்களச் சிரிப்போடும் நிழலாய் வாழ்ந்த அன்னை. இந்தப் பெருமைமிகு பெற்றோரின் வித்தால் விளைந்தவர்தான், முரீதரசிங்.
எப்போதும் சிரித்த முகம், எவரையும் எழுந்து கைபிடித்து வரவேற்கும் பண்பு. எவர் எதைக் கேட்பினும், மாட்டேன் என்று மறுக்கத் தெரியாத மனம், எவரது இன்னல் கண்டாலும் ஈரப்படும் இதயம், எல்லா இலக்கியவாதிகளையும்
உறவாய் வரவேற்கும் உயர்ந்த குணம்,
கற்றார் அனைவரையும் தன் சுற்றமாய் நினைக்கும் அன்புள்ளம். எப்போதாவது கொந்தளிக்கும் கோபம். இப்பண்புகளின் மொத்த வடிவம் தான் ழுநீதரசிங்.
இவ் இயல்புகள்தான், ஈழத்தின் இலக்கியவாதிகளையும், கற்றவர்களையும் பூபாலசிங்கம் புத்தகசாலையைத் தம் தாய் வீடாய் நினைக்க வைத்தன. காலம் வென்று கடையை நிலைக்கவும் வைத்தன. ஆரம்பித்த பெருமைதான் தந்தைக்கு. அதை விரிவித்து வலிமைப்படுத்தியது மைந்தன் தான். “என்ர முதற் பிரதி வாங்க வேணும்.” “என்ர சிறுகதை நூலை நீங்கதான் வெளியிட வேணும்." "இரண்டொரு புத்தகம் பார்க்க வேணும். பிறகு கொண்டு வந்து தர்றன்." ‘எங்கட மலருக்கு உங்கட விளம்பரம் தேவை." ஒரு இலக்கிய விழா எடுக்கிறம். நீங்கள் தான் முதல் டொனேஷன் தரவேணும்." கோயில்ல தண்ணிர்ப் பந்தல். நீங்கள்தான் தலைவராயிருந்து நடத்த வேணும்." "இண்டைக்கு எங்கட எழுத்தாளற்ர மகன்ர கலியாணம். வெளிக்கிடும் போவம்." (இது ஜீவா) "மலையகக் கலைஞர்களைக் கெளரவிக்கிறம். நீங்கள்தான் வந்து அதைச் செய்ய வேணும்." கோரிக்கை வைக்கும் அத்தனை பேருக்கும் சம்மதம் சொல்லும் ஆச்சரியன். இது வியாபாரஸ்தலமா? தர்மசாலையா? எனப் பலதரம் திகைத்திருக்கிறேன். இத்தனைக் கொடைத்தன்மையோடு வர்த்தக வெற்றி கைகூடுமா? கூடியது அதிசயம்!

அது வியாபார வெற்றியல்ல. அன்பின் வெற்றி தர்மத்தின் வெற்றியுமாம்! வஞ்சனை செய்வோரும் வாடிவிடக் கூடாது என்பதற்காக, தெரிந்தே ஏமாறும் இவரின் பண்பாடு கண்டு பிரமித்திருக்கிறேன். தக்காரின் எச்சமாய் வந்த தனித்த பண்பு. தோற்பதற்கான இலட்சணங்கள் அத்தனையும் இருந்தும், வெற்றி பெற்ற வியத்தகு வியாபாரி.
யாழ்ப்பாணம் ‘பஸ் ஸ்ராண்ட் மூலைக் கடையில் இவருடனான என் முதல் அறிமுகம் நிகழ்ந்தது. அப்போது நான் கல்லூரி மாணவன். வித்தகம் வெளிப்படா புத்தகப் பைத்தியம். என்னொத்த இளைஞர்கள் அழகழகான பெண்களைப் பார்க்கத் திரிந்த வேளையில், பைத்தியமாய் அழகழகான புத்தகங்கள் தேடித் திரிந்தவன். அவர்கள் புகலிடமும் ‘பஸ்ஸ்ராண்ட் தான். என் புகலிடமும் பஸ்ஸ்ராண்ட் தான். அவர்களைப் போலவே, சொந்தமாய் வாங்க முடியாது என்று தெரிந்தும்,
பார்த்துப் பசி தீர்ப்பேன். |வாங்காமற் பார்த்தாலும் கோபிக்காத ஒரே கடை,
سير
S பூபாலசிங்கம் புத்தகக் கடைதான். ஒருநாள், அப்போது பிரபல பேச்சாளரும், தனியார் கல்வி நிறுவன ஆசியருமாயிருந்த என் ஆசிரியர் குமரனுடன் அங்கு சென்றவேளை,
*சேர், புதுப் புத்தகங்கள் வந்திருக்கு.
ஸ்ரோரில வந்து பாருங்கோ." குமரனுக்கு அழைப்பு விட்டார் முரீதரசிங். 'குமரன் அழைக்க, நானும் இலவச இணைப்பாய்ச் சேர்ந்து சென்றேன். அழகான புத்தகக் கடல். காசில்லாமலே ஆசை பற்றி நானும் சில அள்ளினேன்.
குமரன் தொடர்பால், தொடர்பில்லாத எனக்கும் புத்தகங்கள் முகச்சுழிப்பின்றிக் கடனாய்த் தரப்பட்டன. இன்றுவரை அக்கடன் தீர்க்காக் கடன்காரன். 'வசதிபடேக்க காசைத் தாங்கோ.” முதல் உரையாடலே என்னை ஆச்சரியப்படுத்தியது. அப்போது என்னை யாரென்றும் அவருக்குத் தெரியாது. நான் புத்தகத்தின் மேற்பட்ட ஆசையைப் பார்த்து, அள்ளித் தந்த அந்த வள்ளற்தன்மை என் மனதிற் பதிந்தது. மனிதரும் பதிந்தார்! அன்று மட்டுமல்ல இன்றும் கூட, கடைக்கு வரும் உண்மை
வாசக ஏழை இளைஞர்களை, தட்டிக் கொடுத்தும் புத்தகங்களைக் கட்டிக் கொடுத்தும் அனுப்புகின்ற |அந்தக் கருணை உள்ளத்தால்தான்,

Page 6
பின்னாளில் பெரும் பதவிகளுக்கு வந்த பின்பும், ‘ழுநீ என்றும், "ழுீ அண்ணை’ என்றும் பலரும் தம் பதவிப் பெருமை மறந்து அவரோடு உறவு கொண்டாடுகின்றனர். சிலர் இதெல்லாம் வியாபார உத்தி என்று சொல்லக்கூடும். உள்மனதின் உண்மையுணர்வால் சொல்லுகிறேன்.
நிச்சயம் இது வியாபாரத் தந்திரம் அல்ல.
கொடையும், தயையும், நட்பும் பிறவிக் குணம். ஒளவை சொன்ன வெண்பா ஈற்றடியின் உண்மை உதாரணன். தந்தை வழிவரும் தனயன். தயையின் வழிவரும் தனயனுமாம்.
தந்தை சிறிதாய்த் தொடங்கிய வியாபாரத்தை, தனயர்கள் கொழும்பு வரை நீட்டியிக்கின்றனர். ஏன்? இலண்டன் வரை என்று சொன்னாலும் தவறில்லை. கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத அளவு தலைநகரப் பெரும் வர்த்தகர்களின் இராஜபடையாய்க் கருதப்படும் கொழும்பு செட்டித் தெருவில் கண் கவரும் கண்ணாடி மாளிகையாய், இன்று மூன்று மாடியில் உயர்ந்து நிற்கிறது, பூபாலசிங்கம் புத்தகசாலை. வெள்ளவத்தையில் இரண்டாம் மாடியில் எழுந்து உயர்ந்து நிற்கிறது பூபாலசிங்கம் புத்தகசாலை.
இலண்டன் மாநகரிலும் பெயர் பதித்து உயர்ந்து நிற்கிறது பூபாலசிங்கம் புத்தகசாலை. செட்டித் தெருவில் அண்ணன் முீதரசிங். வெள்ளவத்தையில் தம்பி இராஜன். லண்டனில் இளைய தம்பியான sitfirsoLDITsissin).
ஈழத்துப் புத்தகக் கடலை லண்டன் வரை நீட்டியிருக்கும் சகோதரர்கள். அண்ணனைத் தந்தையாய் நினைக்கும் தம்பியர். தம்பியரை மைந்தராய் நினைக்கும் அண்ணன். கூடு கலையாமற் குடும்பம் காக்கும் மருகியர். குறிக்கோள் நோக்கிய கூட்டு வாழ்க்கை. செட்டித்தெரு புதிய கடைத் திறப்பு விழாவில், தாயை நிறுத்தி மக்கள், மருமக்கள், பேரர்கள் என அத்தனை பேரும் பாதபுசை செய்து வணங்கிய காட்சி,
கண்டோர் கண்களைக்
கலங்க வைத்தது. பழைய நடிகை கண்ணாம்பாளை நினைப்பூட்டும் அத்தாயின் கண் கருணையிலும், நாசிக் கூர்மையிலும், மலர்ந்த முகத்திலுமாய் நிலைத்திருக்கும் கம்பீரம் இவர்கள் வியாபாரத்தின் மூலமந்திரம்" என்பது என் கருத்து. தாயைப் போலவே தாரமும் வாய்த்தது முரீதரசிங்கின் கொடுப்பனவு. கணவன் கிள்ளிக் கொடுத்தால் அள்ளிக் கொடுக்கச் சொல்லும் அற்புத மங்கை. இவையெல்லாம் முன்னைத் தவப்பயன்.

உலகை அனைத்து நிற்கும்
ஒப்பற்ற குடும்பம், வியாபார வெற்றியில் இதுவும் ஒரு
ep6)560TLDIT b.
கண்படாது ஒழிக.
காக்கக் காக்க கடவுள் காக்க,
-> ->
இன்று பூபாலசிங்கம் புத்தகசாலை வியாபார நிலையம் என்னும் எல்லையைத் தாண்டி விட்டது. ஈழத்தமிழரின் கலாசாரச் சின்னங்களில் ஒன்றாகிவிட்ட பெருமை இப்புத்தகசாலைக்கு மட்டுமே வாய்த்த பெருமை. அதனால்தான் யாழ் நூலகம், செல்வச்சந்நிதி, நயினைத் தேர்கள் GLirsötsp தமிழர்களின் கலாசார அடையாளங்கள் அரச படைகளால் தீயபூட்டப்பட்டது போலவே, பூபாலசிங்கம் புத்தகசாலையும் பலதரமாய் எரிக்கப்பட்டது. தீயுள் பாய்ந்த சீதை புதுப்பொலிவுடன் வெளிவந்தது போல், ஒவ்வொரு தரமும் தீப்பட தீப்பட இவர்கள் புத்தக நிலையம் நாட்பட நாட்பட நிலைக்கும் ஆற்றல் பெற்றது. ஆயிரம் பேர், ஆயிரம் புத்தகக் கடைகளை ஆரம்பிக்கலாம். |வியாபாரமும், பணமும் இவர்களை விட அதிகம் பெருக்கலாம். ஆனால், புத்தகசாலை என்றதும், ஈழத்தமிழர் எவரது நெஞ்சிலும் வரும்
配江西口
முதற் பெயர் பூபாலசிங்கம் புத்தகசாலை என்பதாய்த்தான் இருக்கும். காரணம்,
தத்துவ வேரோடெழுந்த புத்தகசாலை என்னும் தனித்த அடையாளம். அது தந்தை தந்தது. கற்றாரை உற்றாராய் ஆக்கிய கனிந்த உறவு.
இது மைந்தன் தந்தது. இந்த வெற்றிச் சூத்திரம் வேறெவர்க்கும் கைவராது என்பது திண்ணம்.
<> <> >م
軍 w y
இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
கட்டுரை நீள்கிறது.
ஆனாலும், இரண்டு விடயங்களைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
ஒன்று,
மல்லிகையாசிரியர் ஜீவாவின் கடும்போக்கும், தன்மானமும், தலை நிமிர்வும்
இலக்கியவுலகம் அறிந்த விடயங்கள்.
தன்மானத்திற்கு சோதனை வந்தால் எதையும் தூக்கியெறியத் தயங்காதவர் அவர் என்பது எவர்க்கும் தெரிந்த விஷயம். பல்கலைக்கழகப் பட்டத்தையே தூக்கியெறிந்த இரும்பு மனிதன். அவர் மேல் அன்பு நிறைந்த நானே, அவரோடு வார்த்தைகளை அளந்துதான் பேசுவேன். இன்றுவரை எனக்கு

Page 7
ஆச்சரியமாயிருக்கும் ஒரு விஷயம் இந்தப் பிடிவாத ஜிவா, காலை வந்து மல்லிகையில் கால் பதித்ததும் அடுத்துச் செய்யும் அவசிய வேலை, பூபாலசிங்கம் புத்தகசாலைக்குப் போவது. பல ஆன்மீகவாதிகள் காலையிற் கோயிலுக்குச் செல்வது போல, பூபாலசிங்கம் புத்தகசாலைக்குப் போவது, ஜீவாவின் நாளாந்தக் கடமையாய் இருக்கிறது. “என்ன ஜீவா?. வாரும்" என்று தனதுடன் படித்த மாணவனைப் போல் ஜீவாவுடன் முீதரசிங் உரிமையாய் உரையாடும்போது நான் ஆச்சரியப்படுவேன். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு வயது வித்தியாசம். ஆனாலும் சிநேகிதன் போல் ஜீவாவுடன் கிண்டலும், நக்கலுமாய்ப் பேசுவார். வேறு யாரும் ஜீவாவுடன் அப்படிப் பேசினால் கதை முடிந்த கதைதான். ஆனால், ஜிவா ஒருநாளும் இவர் பேச்சில் மட்டும் மானம் பார்ப்பதில்லை. தந்தை, மகன் போன்ற அவர்கள் உறவு என்னை ஆச்சரியப்படுத்தும். மூன்று மாடியில் பூபாலசிங்கம் புத்தகசாலை எழுந்தபோது, முரீதரசிங்கை விட ஜீவா அதிகம் மகிழ்ந்ததுவும், ஒவ்வொரு நாளும் கட்டிட வளர்ச்சியை ஒடி ஒடிப் பார்த்ததுவும், “மூன்று மாடியில் ஒரு புத்தகக் கடை. நினைக்க முடியுமா? இந்தியாவிலையும் இல்லை.
எங்கட ஆள் செட்டித் தெருவில
கொடிகட்டிப் பேர்ட்டான். அப்பப்பா பெரிய சாதனை" என்று நடையாய் நடந்து பலரிடமும் சென்று ஓயாமற் சொல்லிச் சொல்லி புகழ்ந்து மகிழ்ந்ததையும், கண்டும், கேட்டும் நெகிழ்ந்திருக்கிறேன். இலக்கியவுலகின் கடும்போக்காளரான ஜீவா அவர்கள் குழந்தையாய்க் குதூகலித்து நிற்கும் ஒரே இடம் என்ற தகுதி பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு மட்டுமேயுண்டு. இவ்வுறவு தந்தையிட்ட அத்திவாரத்தில் தனயன் கட்டியெழுப்பிய கட்டிடம். இன்று அவ்வுறவுக்கு அட்டைப்பட மகுடம் சூட்டுகிறார் ஜீவா. இவ்வுறவே பூபாலசிங்கம் புத்தகசாலையுடனான இலக்கியவுலகின் ஈடுபாட்டிற்காம் தனித்த உதாரணமாம்.
மற்றது,
இது என் தனித்த அனுபவம். 1995ம் ஆண்டு இடப்பெயர்வால் கொழும்பு வந்தோம். அப்போது கொழும்பில் எங்கு போகிறோம் என ஒரு முகவரி கொடுக்க வேண்டும் என்பது அரச சட்டம். ஆயிரம் சொந்த உறவுகள் இருந்தும், இவர்களே பெரும் உறவாய்ப்பட்டதால் முந்தரசிங்கின் முகவரி கொடுத்து
 

கொழும்பு புறப்பட்டோம். எங்கள் யாழ்ப்பாணக் கம்பன் கோட்டம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாளிகை என பொய்யாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வேளை. வவுனியாவில் கைதாகி விடுபட்டு, கொழும்பு வந்து சேர்ந்ததும் மீண்டும் கைதாகினோம். எல்லோருமாய்ப் பொலிஸ் ஜீப்பில் ஏற, உள்ளே முரீதரசிங் உட்கார்ந்திருந்தார். எங்களால் அவருக்கும் கைதாகும் கதி குற்றவுணர்ச்சியில் நாங்கள் பெரிதும் வாடினோம். ஆனால், துளியளவும் எங்களாற் கைதான வெறுப்பின்றி, சிறைச்சாலையில் ஒன்றாயிருந்து உற்சாகத்துடன் உறுதி தந்த அந்த உறவை,
நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வேன்.
கொழும்புச் செல்வாக்கால் பலர் அவரைத் தனித்து விடுவிக்க, 'இல்லை உங்களை தனிய விட்டிட்டு நான் போகமாட்டன்' என்று கண்ணிர் விட்டழுத அந்த மானுட இதயத்தை மறக்க முடியுமா? நெஞ்சிருக்கும் வரையும் நினைவிருக்கும். இன்றும், என் பெருமை கேட்டு விம்மியழும் விநோத மனிதன். இது என்னுடன் மட்டுமான உறவல்ல. எத்தனையோ இலக்கிய உள்ளங்களுடனான உறவு. இவ்அன்பும் உண்மையும்தான் பூபாலசிங்கம் புத்தகசாலையை உளவாக்கலும் நிலைபெறுத்தலும்
செய்திருக்கும் நுட்பச் சூத்திரம். இந்நுட்பம் புத்தியாலானதல்ல. இதயத்தாலானது.
கம்பன் கழக உறுப்பினர், இலங்கைத் தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியத் தலைவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கநிர்வாக உறுப்பினர், சின்மயாமிஷன் ஆயுட்கால உறுப்பினர், முரீலங்கா புத்தக வெளியீட்டாளர் சங்க உறுப்பினர், இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், கொழும்பு தமிழ்ச் சங்க
ஆயுட்கால உறுப்பினர், ஞானம் சஞ்சிகை இலக்கியப்
u600T606001& Qayuus)T6Tf,
நயினாதீவு அபிவிருத்திச் சபைத் தலைவர், நயினாதீவு சமூக பொருளாதாரக் கல்வி கலாசார சங்கத்தின் பொருளாளர். இப்படிப் பல பதவிகள் முரீதரசிங்
என்னும் பெயருக்குப் பின்னால்
இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் முரீதரசிங்கின் பெருமைகளல்ல. உண்மையும், அன்புமாய் உருகி நிற்கும் அவரின் மனித நேய உள்ளம்தான் அவரின் தனித் தகுதி. ஏன் பூபாலசிங்கம் புத்தகசாலையின் தனித்த தகுதியுமாம். இத்தகுதி இவர்கள் உயர்வின் உறுதி.
உள்ளத்தனைய உயர்வு.
<> م> حمه
w Vy w

Page 8
(சமீபத்தில் நடைபெற்ற அமரர் எஸ்.வீ.தம்பையா அவர்களது ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவில் திரு. ச.முருகானந்தன் தம்பையா' அவர்களினது துணைவியார் நாகம்மா அவர்களிடமிருந்து பரிசு பெறும் காட்சி. அருகே, மல்லிகை ஆசிரியரின் மகன் திலீபன் நன்றி சொல்லுகின்றார்.)
' . ४ 零。 - - - ఖ, ** **
& ४ V & :
மானுடத்தை நேசித்தவர் எஸ்.வீதம்பையா
- LDIT.urrouársisib
வெள்ளவத்தை, தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் சென்ற 2006.02.25ஆம் திகதி இரு விசேட இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. மிக நீண்ட காலமாக இலங்கையிலிருந்து வெளிவரும் இலக்கியச் சஞ்சிகை என்ற சாதனையை நிலை நாட்டி வரும் மல்லிகை தனது 41வது ஆண்டு மலரை வெளியிட்டது. அடுத்தது அமரர் எஸ்.வி.தம்பையாவின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றோருக்கு பரிசு வழங்கல்.
ஆடம்பரமெதுவுமின்றி மிகவும் அடக்கமாக நடைபெற்ற இவ்விழாவுக்கு மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தலைமை தாங்கினார். அவரது உரையில் கண்ணீர் விட்டே மல்லிகையை வளர்த்தேன் என்ற பாங்கில் தமிழ்ச் சமூகம் இம் முயற்சியை எப்படி வரவேற்றதென்பதைச் சுட்டிக் காட்டினார். காசைக் கொடுத்து மல்லிகையை வாங்கிய ஒருவர் அதைக் கிழித்து எனது முகத்தில் வீசினார்.
 
 
 
 

இருந்தும் தான் தனது நம்பிக்கையை தளர்த்தாமல் முன்னேறியதாகவும் இன் னொரு சந்தர்ப்பத்தில் தான் மல்லிகை இதழ்களைக் கொண்டு கடையொன் றிற்கு விற்கச் சென்றபொழுது கடை முதலாளி வெள்ளிக் கிழமையா? இந்தாளேன் வருகுது’ எனத் தன் பணியை இழிவு படுத்தியதாகவும் இருந்தும் இன்று தமி ழகத்திற்கும் அப்பாற் சென்று சர்வ தேசத்திலும் மல்லிகையின் இலக்கியப் பணி பரந்து விட்டதாகவும் சொன்னார்.
'இண்டைக் கென்ன
யாழ்ப்பாணத்தில் பாரிய இடப் பெயர்வு அரங்கேற்றப்பட்ட பொழுது மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா கொழும்பில் ஒரு நாளைக் கூட போக் காட்டக் கூடிய நிதி வளத்தோடு வர வில்லையெனவும், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்
பல நண்பர்கள்
எனக் கவலைப்பட்டதாகவும் சொன் னார். சஞ்சிகை ஆசிரியனாகிய தன் னால் அதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாதிருந்ததாகவும், இக்கை யறு நிலையில் தன்னை உபாசித்தவர் அமரர் தம்பையாவென ஜீவா நன்றி தெரிவித்தார்.
தம்பையா அண்ணர் எனக்குச் சம் பந்தியாக இருந்தாலும் நான் அவரை யொரு நண்பராகவே மதித்தேன். தனது கடையில் எனக்குத் தங்குவதற்கு அவர் ஒழுங்கு செய்தார். காலையில் நான் சிகை சீவுவதற்காக கீழ்மாடிக்கு வந்த பொழுது அவர் மேல்மாடி சென்று அதைச் செய்யும்படி சொன்னார். அங்கே சென்ற பொழுது எனது சேட்
பொக்கட்டுக்குள் ரூபா 200/- இருந் தது. ஒரு நாளல்ல இது பல மாதங்க ளாக நடந்தது. இதனால் கொஞ்சக் காலம் எனது கொழும்புச் சீவியம் கலக்கமில்லாது நடைபெற்றது.
பரிசு பெற்றவர்கள் அனைவருக் கும் உரிய முறையில் அறிவித்தும் ச. முருகானந்தம் மட்டுமே இங்கு வந்துள்ளாரென்ற செய்தியையும் ஜீவா ஆதங்கத்தோடு சொன்னார்.
சாதனையாளர்களை நினைவு கூரு வது இப்பொழுது அருகி வருகின்றது. இது ஆரோக்கியமானதல்ல. இது குறித்து நாம் கூட்டாகச் சிந்திக்க வேண்டுமெனவும் தலைமையுரையில் கூறிய ஜீவா, அமரர் எஸ்.வீதம்பையா சிறுகதைப் போட்டிக்குப் பின்னணியில் இருந்தவர் கொழும்பு, வோல்ஸ் வியா பார நிறுவன அதிபர் மணியம் என்பதை யும் சபையில் அறிவித்தார்.
பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அமரர் எஸ்.வீ.தம்பையா குறித்து உரை நிகழ்த்தினார். அவர்
பேசும் பொழுது - 'அமரர் தம்பையா
ஓர் அபூர்வ மனிதர். புகழாசை கொண்ட வரல்ல. தனது அறிவுத் தளத்தை உயர்த்த வேண்டுமென்ற ஆசையோடு தேடித் தேடிக் கற்றார். தானொரு எழுத்தாளன், தொழில் அதிபர் என்ற திமிரோ, அகங்காரமோ அற்ற சாந்த குணத்தவர். கடும் உழைப்பில் நாட்டங் கொண்டவர். தேவைப்பட்டோருக்குக் கொடுத்து உதவியவர் 'அம்” என்றால் அழகு, "பட்டன்' என்றால் சீர்படுத்து பவன் என அம்பட்டன்’ என்ற பதத்

Page 9
سیر،
திற்கு வியாக்கியானம் கூறித் தனது தொழிலைத் தெய்வமாகப் பூசித்தவர்.
அம்பட்டன் கெட்டிக்காரன் என அவரை
ஏளனப்படுத்திய ஆசிரியர் ஒய்வூதிய
காலத்தில் மருத்துவமனைக் கட்டிலில்,
நோயோடு போராடிக் கொண்டிருந்த பொழுது மாணவ அடக்கத்தோடு
மருத்துவமனைக்குச் சென்று கற்றுக்
கொடுத்த ஆசிரியருக்கே அன்பளிப்புக் கொடுத்துத் தனது குருபக்தியை எண் பித்த அற்புதமான மனித நேயர். தெளி வத்தை ஜோசப் தொடர்ந்து பேசுகையில் - பிரமுகர்களின் நினைவாக போட்டி கள் நடத்தும் பொழுது அனைத்து எழுத்தாளர்களும் தமது பங்களிப்பு களைச் செய்ய வேண்டும். இதில் பரிசல்ல முக்கியம். அந்தப் பிரமுகரைக் கெளரவிப்பதே முதன்மையானதாக இருக்க வேண்டும். ஆண்டு மலரில் அனைத்துப் பரிசு பெற்றக் கதைகளை யும் பிரசுரித்திருந்தால், ஒரே நேரத்தில் படித்திருக்க முடிந்திருக்கும். 1983ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கு உரிய அறிமுகமோ விளம்பரமோ கிடைக்கவில்லை. அமரர் தம்பையாவின் "கடலில் கலந்த கண்ணீர்" என்ற சிறு கதைத் தொகுதிக்கும் அதே நிலைதான் கிடைத்தது. சூழ்நிலை காரணமாக அத் தொகுதிக்கு அப்படி ஏற்பட்டிருந் தாலும், எஸ்.வீதம்பையாவின் தன் வரலாற்று நூலான "நினைவின் அலைகள் தமிழ்ச் சமூகத்தால் கண்டு கொள்ளப்படாதது மனதை நெருடுகின் றது. தம்பையா என்னும் மானுட நேசனின் பெயரைச் சொல்லி மற்றை யோர் தம்மை அறிமுகப்படுத்துமள
தது.
விற்கு எஸ்.வீதம்பையா உயர்ந்தவர்”
எனவும் தெளிவத்தை ஜோசப் கருத்
துரைத்தார். சிறுகதைப் போட்டியில்
1ஆம் பரிசை தாட்சாயிணியும், 2ஆம்
- பரிசை ச.முருகானந்தமும், 3ஆம் பரிசை
மலரன்னையும் பெற்றிருந்தனர். தனது பரிசைப் பெற வந்திருந்த ச.முருகானந் தம் பேசுகையில், எனது படைப்புகளுக் காக 24 பரிசுகள் கிடைத்திருக்கின்றன. இருந்தும் மல்லிகையில் எனக்குக் கிடைத்த பரிசு என்றும் மறக்க முடியா எனது எழுத்திற்கு ஆதர்சம் மல்லிகை ஜீவாதான். எழுத்திற்கு வய தில்லை. எந்தப் பருவத்தவர்களும் எழுதலாம். போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் தொகுதியாக வெளிவர வேண்டும். மல்லிகையின் இலக்கிய உழைப்புத் தொடர வேண்டும்.
நன்றியுரையை மல்லிகை ஆசிரிய ரின் மகனும், அமரர் எஸ்.வீதம்பையா வின் மருமகனுமாகிய திலீபன் நிகழ்த்தி னார். அவரது உரையில் - மல்லிகையை
s * 8 a மட்டுமன்றி அமரர் எஸ்.வீதம்பையா
சிறுகதைப் போட்டியையும் தொடர்ந்து நடத்துவோம். அது எமது கடமை. நன்றிக் கடன். இடம் பெயர்ந்த எனது குடும்பத்திற்கு நேசக்கரம் நீட்டியவர் எனது மாமா அமரர் தம்பையாதான். அநுபவக்குறை கொண்ட எனக்கு நம்பிக்கை உரத்தை நாளாந்தம் இட்டு என்னை வளர்த்தவர் எனது அப்பா. இவ்விருவரும் மனைந்த மனைதான் எனது குடும்பம். எனவே இவர்களது பணிகளை நாம் தொடர்வோம். அது
எமது தலையாய கடமை.
 

எஸ்.வீ.தம்பையா
போட்டியில் பெற்ற சிறுகதை கந்தப்பு வாத்தியார்
சிறுகதைப்
3ம் பரிசுப்
- மலரன்னை
அந்த அகால வேளையில் சாக் குருவியொன்றின் சடாரிட்ட அலறல் ஒலி ஆழ்ந்த உறக்கத்தில் கனவுடன் ஒன்றிப் போயிருந்த கந்தசாமியின் கனவைக் கலைத்து நனவுலகை எட்டிப் பார்க்க வைத்துவிட்டது.
|தொடர்ந்து நாய்களின் குரைப்பும், ஊளையிடுதலும். அந்த முதியோர் இல்லத்தின் சூழலைப் பதட்டத்தில் ஆழ்த்தியது.
|விழிப்புற்று எழுந்த கந்தசாமி பட படக்கும் இதயத்தை ஒரு கையினால் பொத்திப் பிடித்துக் கொண்டு, நாய் களைச் சபிக்கத் தொடங்கினார்.
“சீ..! இந்த நாய்கள் பெரிய மோசம். மனிசரை எப்பன் கண்ண
|யரவும் விடமாட்டுதுகளாம். இதுகளுக்,
குச் சாப்பாடு போட்டு அண்ட விடு கிறது தான் நாங்கள் செய்யிற பிழை."
வாழ் நாளெல்லாம் அயராமல் உழைத்து, உன்னதமான வாழ்வைத் தமது பிள்ளை
அந்த உழைப்பினால்
}களுக்குப் பெற்றுக் கொடுத்து,
வயோதிபத்தின் ஆதிக்கத்தால் தம் வலு |விழந்து போனதனால் பிள்ளைகளின் |பிரியத்தை இழந்து. இன்று அநாதர |வான நிலையில் இந்த முதியோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் |வேளை. தாம் உண்டு எஞ்சிய உணவைக் கட்டுக்கோப்பெதுவுமின்றி அலைந்து திரியும் நாய்களுக்கிடுதலும் அவைகளைத் திட்டுவதும் எந்த வகை யிலும் நியாயமல்ல என அவரது உள்ளுணர்வு உணர்த்தியது.
|"அடீக்...! அடிக்...!"
காவலாளி நாய்களை அடித்துத் துரத்தும் ஒசை செவிகளில் வந்து மோதிய போது சற்று நிம்மதி ஏற் பட்டது. கட்டிலில் இருந்தவாறே பார்வையை ஒரு தரம் அவர்கள் படுத் திருக்கும் அந்த மண்டபத்தை நோக்கிச் சுழற்றின்ார்.
பார்வையாலேயே நீள அகலங் களை அண்ணளவாக மதிப்பீடு செய்யும் வல்லமை அவருடையது. ஏனெனில் அவர் ஒரு ஒய்வு பெற்ற நில அளவையாளர். ஆனால். அவர் இப்போது படுக்கையில் இருப்பவர் களை கணிப்பிட முயன்று கொண்டி lருந்தார். மனம் வேகமாக அடித்துக் |கொண்டது. அவரது நினைவுகளும்
தான.

Page 10
湖
அப்பு அடிக்கடி சொல்லுறவர். இப்படி ஏம சாமத்தில பறவைகள் கத்துறது கூடாதாம். கந்தசாமி சின்னப் பையனாக இருந்த காலத்தில் ஒருநாள் இரவு நடுச்சாமத்தில் அவர்கள் வளர்த்த நாம்பன் அவலமாய்க் கத்தியதும், அயலவர்களது நாய்களெல்லாம் ஒன்றாக ஊளையிட்டுக் குரல் எழுப் பியதும் இன்றைக்கும் அவருடைய மனதில் பசுமரத்தாணி போல் பதிந் திருக்கிறது. அப்பு சொன்னார்.
“ஏதோ வில்லங்கம் நடக்கப் போகுது கண்டியோ. அசுமாத்தம் எதையோ கண்டுதான் உந்த மிருகங்கள் குரல் குடுக்குது'
அப்பு சொன்னதைக் கேட்டு பீதி யினால் மனம் 'பட் பட்டென அடிக்கத் தொடங்கியது. ஆச்சியின் சேலைத் தலைப்புக்குள் சுருண்டு கொண்ட போதும் படபடப்பு தணிந்த பாடா யில்லை. எத்தனை நேரம்தான் அப் படியே கிடந்தானோ. ஒருவாறு ஆச்சி யின் அரவணைப்பு அந்த ஆறுதலில் அவன் உறங்கிப் போனான்.
காலை வெய்யிலின் கடுகடுப்பு அவனது மேனியைத் தாக்கியபோது மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தான்.
அயலவர்களெல்லாம் தலை வாசலில் கூடியிருந்தார்கள். எதுவும் புரியாதவனாய்க் கண்களைக் கசக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தான்.
தலைவாசல் நடுவே வாங்கிலில் யாரையோ வெள்ளைச் சேலையால்
போர்த்தி வைத்திருந்தார்கள். ஆச்சி பக்கத்தில் குந்தியிருந்து தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டிருந்தாள்.
சிறுவன் கந்தசாமியைப் பயம் கவ்விக் கொண்டது. செய்வதறியாது திகைத்தவன், ஒடிப்போய் ஆச்சியைக் கட்டிக் கொண்டான்.
“கந்து! இஞ்சை பாரடா. உன்ரை பெத்தாச்சி எங்களை விட்டிட்டுப் போயிட்டா..??
அலறியவாறே அம்மா துணியை விலக்கி பெத்தாச்சியின் முகத்தை அவனுக்குக் காட்டினாள்.
புல்லரித்த மேனியை ஒருதரம் சிலிர்த்துக் கொண்ட கந்தசாமி நினைவுத் தொடரிலிருந்து நனவுல
கிற்குத் திரும்பினார்.
திரும்பிப் பார்த்தார். சுவருக்குப் பக்கத்து கட்டில்காரர், எழும்பிக் குந்திக் கொண்டிருந்தார். முதுகுப் புறம்தான் தெரிந்தது. அவரைச் சுற்றிலும் ஒரே புகை மண்டலம்.
கந்தசாமிக்குப் புரிந்து விட்டது. கட்டிலை விட்டு இறங்கியவர் நடந்து நேரே அவரிடம் போனார்.
"இஞ்சாரப்பா கணபதி! உன்னை யெல்லே புகையிலையைக் கையால தொடக்கூடாதெண்டு டொக்டர் சொன் னவர். பேந்தேன் உப்பிடி புகைச்சுத் தள்ளுறாய். எக்கணம் முட்டு வந்து தொலைக்கப் போகுது.”

திடுக்கிட்டுப் போனார், கணபதிப் பிள்ளை. தலையைச் சொறிந்து கொண்டே சொன்னார்.
'அண்ணை பாழாய்ப் போன நித்திரை வருகுதில்லை. அதுதான். ஒருக்கா இழுத்தா எப்பன் நித்திரை
கொள்ளலாமெண்டு."
"உந்த நாய்கள் மனிசரை நித்திரை கொள்ள விட்டாத்தானே. பாத்தியே! ஒரேயடியாய் ஊளையிடுகுதுகள்." மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப் பவர்களுக்கு ஒருவிதமான மரண பயம் இருக்குமோ என்னவோ.
இருவரும் நாய்களைத் திட்டத் தொடங்கி விட்டனர். ஏதோ அரவம் |கேட்கவே இருவரும் ஏக காலத்தில் பார்வையைத் திருப்பிய போது.
அங்கே. ஈரம் சொட்டச் சொட்ட முற்றிலும் நனைந்த நிலையில் கந்தப்பு வாத்தியார் வெளிப்புறத்திலிருந்து அவர்களது மண்டபத்தினுள் நுழைந்து |கொண்டிருந்தார். வாத்தியாரை அந்த நிலையில். அதுவும் அந்த அர்த்த சாமத்தில் கண்டுவிட்ட கந்தசாமி |யருக்கு இருப்புக் கொள்ளவில்லை. புதினத்தை அறிந்து கொள்ள புஸ் |ஸெனப் புறப்பட்டுப் போய் அவர் முன் நின்றார்.
"வாத்தியார் ! என்ன இந்த நேரத்தில. இப்பிடி ஈரத்துணியோட வந்து நிக்கிறியள். என்ன சங்கதி?”
'ஆர் கந்தசாமியே. அதையேன் கேக்கிறாய். எங்கட வேம்படி
配剑 மண்டபத்தில இருக்கும் அந்த ஒல்லி மனுசன்.”
"நீங்கள் ஆரைச் சொல்லுறியள் வாத்தியார். அந்தப் பரமு எண்டு கூப் பிடுவினம். பரமசாமியோ என்னவோ. அந்த மனுசனோ.”
ஒரே குறிப்பில் அந்தாளை இனங்கண்டு விட்ட கந்தசாமியரை நினைத்து பெருமிதமடைந்தார், வாத்தியார்.
“விட்டிடாதை. அந்தாள்தான். எனக்கும் இண்டைக்கெண்டு நித்திரை |யும் வரயில்ல. ஒருக்கா வெளியில போட்டு வந்து படுப்பம் எண்டு போ |னன். பெரிய குறட்டைச் சத்தமாய்க் |கேட்டுது. பத்தாக் குறைச்சலுக்கு சளியும் வந்து அடைக்குமாப் போல கிடந்தது. மெதுவாய் அந்த மண்ட |பத்தை ஒருக்கா எட்டிப் பாப்பமெண்டு
போனா."
"போனா." கதையை அறிந்து |விடும் ஆவலில் கந்தசாமியார் விடாப் பிடியாய் இருந்தார்.
"போனா என்ன. அங்கை அந் தாளுக்கு சேடம் இழுத்துக் கொண்டு இருந்தது. அடிவயித்தில இருந்து கொய்து கொய்து மூச்சு இழுத்தது. |எனக்கு விளங்கிப் போச்கது. வேதினை |யிலயாக்கும் கையைக் காலைப் போட்டு அடிச்சுக் கொண்டிருந்தது மனுசன்."
"ஏன் வாத்தியார் அங்கை ஒரு சனமும் இல்லையே?

Page 11
“இருந்தவை தான். எல்லாரும் நல்ல நித்திரை. நான் கிட்டப்போய் அந் தாளுக்கு ஆதரவாய் கையைக் காலை பிடிச்சு விட்டன்."
“என்ன கனநேரமே இழுத்தது அந்தாளுக்கு” கந்தசாமியருக்கு மனதில் மரண பயம் தோன்றி விட்டதை உணர்ந்து கொண்டார், கந்தப்பு வாத்தியார்.
“ஒரு ஒண்டரை மணித்தியாலம் இருக்கும். பேந்து. ஆளுக்கு உணர்ச்சி யெல்லாம் ஒடுங்கி சாடையாய்க் கண்ணைத் திறந்து பாத்துது. விசாலம்! விசாலம் எண்டு இரண்டு தரம் கூப் பிட்டுது. அவ்வளவுதான். தலை சரிஞ்சு போச்சு. ம்..!"
அவரையறியாமலே பெருமூச் சொன்று அடிவயிற்றிலிருந்து புறப் பட்டுச் சுவாசத்துடன் வெளியேறி காற் றுடன் கலந்து விட்டது.
"வாத்தியார்! பொடி இப்ப எங்கை ? ஆரும் வருவினமாமே அடக்கம் பண்ண.”
எந்த விதமான சந்தர்ப்பத்திலும் புதினங்களை ஆதியோடந்த மாய் அறிந்துவிட வேண்டுமென்ற ஆவல் அவருடையது.
“என்னவோ எனக்குத் தெரியாது. மக்கள் இரண்டு பேர் வெளிநாட்டிலை யாம். மெஸேஜ் அனுப்ப வேணு மெண்டு பொறுப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தது காதில விழுந்தது. எனக்கு உதைப் பற்றியெல்லாம்
கவலையில்லை. இருக்கேக்க வந்து பாத்து அல்லது வைச்சுப் பார்த்து ஆறுதல் கொடுக்காத பிள்ளைகள் கொள்ளி வைக்கவும் கொண்டு போய் அடக்கம் பண்ணவும் வரவேணு மெண்டு எதிர்பார்ப்புகளை நாங்கள் மனசில வைச்சிருக்கக் கூடாது கண்டீரோ. என்ன..! நான் சொல்லு றதில நியாயம் இருக்கெண்டு நினைக் கிறீரோ."
ஈரத்துணிகளை மாற்றியவாறே
நியாயம் கேட்டார், வாத்தியார்.
"வாத்தியார்! நீங்கள் சொன் னால். அந்த நியாயம் சரியாய்த்தான் இருக்கும். அதுக்கு அப்பீல் கிடை யாது”
கந்தசாமியரின் ஆதரிப்பான வார்த்தைகள் அவருக்குச் சிறிது ஆறுதலைத் தந்தன. ஈரத்துணிகளைப் பிழிந்து உணரவிட்டு வரப் புறப்பட்டுப் போனார்.
கந்தசாமி படுக்கையில் வந்து சரிந்து கொண்டார். சிறிது நேரத்தில் வாத்தியாரும் வந்து படுத்துக் கொண் டார். ஆனால். உறக்கம் அவரை நெருங்கவில்லை. கைவிட்டுப் போய் எட்டத்தில் நின்று வேடிக்கை காட்டியது. உள்ளத்தில் உயிரூட்டமான நினைவுகள் உலா வரத் தொடங்கின.
அவரது இல்லற வாழ்வுக்கு இணையாக வந்தவள் கனகம்மா. கனகம்" என்று அவளை வாய் நிறைய அழைப்பார் அவர். அவர்களது தாம் பத்திய வாழ்வுக்குச் சாட்சியாக

அச்சுதன், அமுதா என இரு பிள்ளைச் செல்வங்கள். அவர் அன்பு மழை பொழிந்து தோளிலும், போட்டு வளர்த்த பிள்ளைகள் இன்று இந்தப் பூமியில்தான் இருக்கிறார்கள். தன்னுடைய வருவாய்க்கும் பிள்ளை களின் தகுதிக்கும் ஏற்றவாறு அவர் களுக்குக் கல்வியறிவூட்டினார். அச்சு தன் இன்று மாத்தளையில் ஒரு பிரபல கல்லூரியின் அதிபராக இருக்கிறான். மகள் அமுதாவை ஒர் எழுதுவினைஞ ருக்குக் கட்டி வைத்தார். நாட்டில் ஏற் பட்ட குழப்ப நிலை காரணமாக அவர்
மார்பிலும்
கள் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு வாழ்வு தேடிப் புறப்பட்டு விட்டார்கள்.
கனகம் இருந்த வரை அவருக்குக் குறையேதும் இருக்கவில்லை. திடீரென ஒருநாள் கனகம் அவரை ஏமாற்றி விட்டு மாரடைப்பு நோய்க்குப் பலி யாகி விட்டாள். சற்றும் எதிர்பாராத இந்தப் பிரிவு அவரை உலுப்பி விட்டது. மரணச் சடங்குக்கு வந்திருந்த மகன் அப்பாவைத் தன்னோடு அழைத்துப் போனான்.
பேரக் குழந்தைகளோடு சில காலம் அமைதியாக வாழ்ந்தார். இடை யிடையே கனகத்தின் நினைவு வந்து அவரை வாட்டி வதைக்கும். ஆனால். கண்ணனும், கவிதாவும் தங்கள் மழலை யினால் அவரைக் கவர்ந்து ஆறுதலளித் தனர். "அப்பப்பா! அப்பப்பா!” என்று அவர்கள் அவரை வளைய வரும்போது அவர் தன்னையே மறந்து விடுவார். உயிரும் பிராணணுமாய் அவர்கள் அவரிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்
புகட்டினார்.
களுக்கு கல்வியறிவூட்டுவதிலும் அவர் ஆர்வம் கொண்டார்.
தாயை விட அவர்கள் தாத்தா விடம் நெருங்கியிருப்பதை அந்தத் தாய் உணர்ந்தபோது. பொறாமை உணர்வு அங்கு தலைதூக்கியது. சிறிதாக ஏற் பட்ட விரிசல் நாளடைவில் விஸ்வ ரூபம் எடுத்து அவரை அவர்களிட மிருந்து விலகித் தன் சொந்த ஊருக்கு வரவழைத்தது. தன்மானத்தையும் சுய கெளரவத்தையும் பெரிதென மதித் தவர், கண்ணன் கவிதாவின் அன்பை யும் பாசத்தையும் கூட மறக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப் பட்டார். மகன் அச்சுதன் இருதலைக் கொள்ளியாய் வாழ வேண்டியிருந்த சூழ்நிலையை அவர் தகர்த்தெறிந்து விட்டுப் புறப்பட்டு விட்டார்.
சொந்த ஊரில், சொந்த வீட்டில் சிறிது காலம் வாழ்ந்தவர் நோய்வாய்ப் அவருக்குள் ஒரு வெறுமையுணர்வு தோன்றி வெறுப் பூட்டியது. ஓய்வூதியம் அவரது வாழ்க்கைச் செலவுக்குப் போதுமான தாயிருந்த போதும், தனிமை நிலை
பட்ட போது.
அவரை வாட்டியெடுத்தது. நன்றாகச்
சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
முதியோர் இல்லம் அவரை அரவணைத்து வரவேற்றது. கந்தப்பு வாத்தியார் அந்த இல்லத்தில் அனை வரது அன்புக்கும் பாத்திரமானது மட்டு மல்ல அறிவையும் அவர்களுக்குப் மாலை வேளைகளில் வேப்ப மரங்களின் கீழ் ஒரு கூட்டம்

Page 12
斑T瓦
\s
கூடியிருக்குமாயின் நிச்சயம் அதன் நடுவே நாயகனாக வாத்தியார் இருந்து பகவத் கீதை, கம்பராமாயணம் போன்ற நல்லுபதேசங்களைப் பொழிந்து கொண்டிருப்பார். சாதி மத பேதமற்ற, அந்தஸ்து வேறுபாடற்ற இந்த அநாதர வான அன்புள்ளங்களின் சங்கமத்தில் அவர் அமைதியும் சாந்தியும் பெற்றார்.
நினைவலைகள் மீட்டுத் தந்த சுகந்தமும் சோகமும் அவரை நிலை யானதோர் சுகத்தில் ஆழ்த்தக் கண்கள் தாமாகவே சொருகிக் கொண்டன. நித்திராதேவி அவரைத் தழுவிக் கொண்டாள்.
அவர் நோயாளியாக ஆஸ்பத்திரிக் கட்டிலில் கிடக்கிறார். அவரைப் பரிசோதித்து விட்டு மருந்து எழுதுகிறார்.
டாக்டர்
"ஐயா! உங்களுக்குச் சலரோகம். இனிப்பு வகைகளைச் சாப்பிடக் கூடாது. தினமும் இந்த மருந்துகளைப் பாவிக்க வேணும்.”
அப்போதுதான் அவர் டாக்டரின் முகத்தைக் கூர்ந்து கவனிக்கிறார். அவருடைய அருமைப் பேரன் கண்ணன்.
"கண்ணா. கண்ணா..!"
பெரிதாகக் குரலெடுத்துப் புலம்பு கிறார்.
வாத்தியாரின் குரல் கேட்டு கந்த சாமி ஓடி வந்து அவரை உலுப்புகிறார். "என்ன வாத்தியார் கனா கினாக் கண்டனிங்களே?"
வாத்தியார் திடுக்கிட்டு விழித்தவ ராய்க் கண்களைக் கசக்கி விட்டு நிமிர்ந்து பார்த்து விழித்தார்.
“உதுக்குத்தான் சொல்லுறனான். கண்டபாட்டுக்குத் திரியாதையுங்கோ எண்டு. ஆவி அந்தரிச்சு வெளியேறுற நேரத்தில. நீங்கள் போய் அந்தாளுக் குப் பக்கத்தில நிண்டிருக்கிறியள். அது தான். ஏதோ பயந்து போயிருக் கிறியள் போல” அடுக்கிக் கொண்டே போன கந்தசாமியரை அடக்கி நிறுத்தினார் வாத்தியார்.
“நிறுத்தும் காணும். நான் ஒண்டும் பயந்து போகேல்ல. என்ரை பேரனைக் கனவில கண்டனான். அவ்வளவுதான்.”
மறு பேச்சின்றிக் கந்தசாமியர் தனது படுக்கையை நோக்கி நடந்தார். கந்தப்பு வாத்தியார் மீண்டும் படுக்கை மீண்டும் சிந்தனைக் குதிரை சீறிப் பாயத் தொடங்கியது.
யில் சரிந்து கொண்டார்.
நான் என்ரை பேரக் குஞ்சுகளைப் பார்த்து பத்து வருசங்களுக்கு மேல போயிட்டுது. ஒருவேளை கண்ணன் டாக்டருக்குப் படிக்கிறானோ என் னவோ. பிள்ளை அடிக்கடி சொல்லு வான். "அப்பப்பா! நான் படிச்சு டொக்டராய்த் தான் வருவன்."
அந்த நிமிடத்திலேயே அவர் தனது பேரனை ஒரு டாக்டராக "ஸ்டெதஸ்கோப்பும் கையுமாகக் கற்பனையில் பார்த்துப் பரவசப்படு வார். அந்த நினைவுகள் தான் இன்று கனவாக வந்து தோன்றியிருக்குமோ.

அவர் அன்போடு பேரப்பிள்ளை களுக்கு இனிப்புத் தின்பண்டங்கள் வாங்கித் தருவதும், மருமகளிடம் திட்டு வாங்குவதும்.
"கிழவன் இனிப்புகளை வாங்கிக் கொண்டு வந்து என்ரை பிள்ளை யளுக்கும் குடுத்து அதுகளையும் |சலரோகக்காறர் ஆக்கப் போகுது”
மனம் வேதனையால் துடிக்க. மேனியெங்கும் புல்லரித்துக் குளி |ரினால் தேகம் வெலவெலத்தது. போர்வையை இழுத்துப் போர்த்திக்
கொண்டார்.
இதயத்தை முறுக்கிப் பிழிவதாய் ஒரு வலி. தாங்க முடியாமல் நெஞ்சைப் பொத்திப் பிடித்தவர், கால்களை உதைத்துச் சுருண்டு கொண்டு முனகினார்.
"க.ன.க.ம்.”
மரண ஒலமாய் அந்த வார்த்தை கந்தசாமியரின் காதுகளில் விழ ஓடி |வந்து பார்த்தார். வாத்தியார் வியர்வை யினால் தொப்பையாக நனைந் திருந்தார். −
|போர்வையைத் தளர்த்தி விட்டு |வியர்வையைத் துடைத்து விட்டவரது கண்களை உற்றுப் பார்த்தவாறே வாத்தியாரது தலை சரிந்தது. கந்தசாமி ஒருகணம் கிறங்கிப் போனார்.
சிறிது நேரத்தில் யாழ். மருத்துவ பீடத்திலிருந்து வந்தவர்கள் அவரது வெற்றுடலை எடுத்துப் போனார்கள். அவர் உயிருடன் இருக்கும் போதே
அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த தாக பொறுப்பாளர் சொல்லித்தான் |தெரிய வந்தது.
புதிதாகப் பயில வந்திருந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அன்று செய்முறை வகுப்பு. அறைக்குள் நுழை யும் போதே போமலின் மணம் அவர் களை வரவேற்க மாணவிகள் சிலர் மூக்கைச் சுழித்துக் கொண்டனர். ஒவ் வொரு குழுவினரும் தமக்குரிய உடல் |களை (கடாவர்) வைத்திருந்த மேசை களை நோக்கிச் சென்றனர்.
கண்ணன் தனது குழுவுக்குத் தலைமை வகித்தான். எடுத்துப் போட்ட உடலைப் பார்த்ததும் கண்ணனுக்குத் தலை சுற்றியது. சந்தேகத்தை உறுதிப் படுத்தப் பரிசோதனை உடலின் கையை எடுத்துப் பார்த்தான். கைகள் நடுங்கு வதை அவதானித்த நண்பர்கள் அவனைக் கேலி செய்தனர்.
"என்னடா மச்சான் கை நடுங்குது. பயப்படுறியோ’ அவனது காதில் எது |வும் விழவில்லை. உடலின் கையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'கந்தப்பு பச்சை குத்தியிருந்தது. கண்கள் கலங்கத் தொடங்கியதும் அவன் மெதுவாக நழுவினான்.
"மச்சான் கண்ணிலை ஏதோ |விழுந்திட்டுது. கொஞ்சம் பொறுங் கோ. நான் போய் கழுவிப் போட்டு வாறன்." ஊற்றெடுக்கும் கண்களை மறைக்க அவன் அறையை விட்டு வெளியே நடந்தான்.

Page 13
6. சின்னது முதல் தொடக்கம் S.S.C. சித்தி அடையும் வரை நான் கல்வி
கற்ற - என்னை வளர்த்து உருவாக்கிய - தேவரையாளி இந்துக் கல்லூரியின் ஆசிரியராக நியமனம் பெற்றுச் சென்ற சமயம், எனக்குக் கல்வி போதித்த ஆசிரியர்களுள் ஒரு சிலர் தவிர, ஏனையோர் அனைவரும் அப்பொழுதும் அங்கு கடமை ஆற்றிக் கொண்டிருந்தார்கள்.
மாணவனாக இருந்த நான், திடீரென மாணவ நிலையில் இருந்து விடுபட்டு ஆசிரியராக வந்து சேர்ந்தேன்.
மாணவர்களுக்கு ஆசிரியனாகவும், அங்கிருந்த ஆசிரியர்களுக்கு மாணவனாகவும் ‘மாணவாசிரியர் நிலையில் நான் இருக்க வேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலை எனக்கு அப்போது அங்கிருந்தது.
O நான் ஆசிரியராகக் கல்லூரிக்குள் цðýðРшib நுழைந்த ஃ நாள், அதிபர் என்னை O O அழைத்துப் பிரம்பொன்றை எனது 1þððfulö (96b6). கையில் தந்து, அந்தப் பிரம்புடன்தான் கல்லூரிக்குள் நடமாடித் திரிய வேண்டு மென அன்பாகப் பணித்தார்.
- தெணியான் |எனது கையில் பிரம்பைத் தந்தனுப்பிய அதிபரின் மனக்கருத்தைத் தெளிவாக நான் விளங்கிக் கொண்டேன். V.
அந்தக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமகாலத்தில் கல்வி கற்ற சகமாணவன் நான். என்னுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் சிலர் நான் ஆசிரியனாகப் போன சமயத்திலும் அங்கு படித்துக் கொண்டிருந்தார்கள்.
என்னுடன் சேர்ந்து விளையாடி, கூடித் திரிந்தவர்கள், எனது நண்பர்களாக இருந்தவர்கள் அனைவரும் மாணவர்களாக அங்கே அப்பொழுது படித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மத்தியில் என்னை நான் ஆசிரியனாக நிறுவுவதற்கு அதிபர் தந்த அந்தப் பிரம்பு எனக்குத் துணையாக இருந்து வந்தது. ஆறு மாதங்களின் பின்னர் அந்தப் பிரம்பின் தேவை எனக்கு இல்லாமற் போயிற்று.
எனது ஆசிரிய வாழ்க்கையில், முன்னர் என்னுடன் ஒரே வகுப்பில் சக மாணவர்களாக இருந்தவர்கள் படித்துக் கொண்டிருந்த வகுப்புக்குச் சென்று

அவர்களுக்குப் படிப்பித்திருக்கின்றேன் என்பது எனக்குக் கிடைத்த அரிய ஒரு சந்தர்ப்பம் என்றே சொல்ல வேண்டும்.
எனது தொடர்ந்த வாசிப்பு, தெளி வாக எதையும் எடுத்துச் சொல்லும் |பேச்சாற்றல் என்பன தந்த பலம் அவர் கள் மத்தியில் அன்று தன்னம்பிக்கை யுடன் என்னை நிமிர்ந்து நிற்கச் செய்தன.
மாணவர்கள் மத்தியில் நான் ஆசிரியனாக என்னை நிறுவிக்கொண்டு விட்ட போதும், ஆசிரியர்கள் மத்தியில் தொடர்ந்து மாணவனாகவே இருந்து வந்தேன்.
அந்த இருப்பு" எனக்கு மகிழ்ச்சி யாக, ஆனந்தமாக இருந்தது.
நான் தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவனாக இருந்து வெளி யேறிய மறு ஆண்டு பட்டதாரிகள் சிலர் அங்கு ஆசிரியராக நியமனம் பெற்றார்கள். அவர்களுள் புலோலி யைச் சேர்ந்த எஸ்.ஆழ்வார்ப்பிள்ளை ஆசிரியரும் ஒருவர். பெரியார் கந்த முருகேசனாரின் உறவினர்; மாணாக்கர். தமிழ்நாடு விருது நகரில் படித்துக் கலைமானி பட்டம் பெற்றவர். படிக் கின்ற காலத்தில் தி.மு.க. தலைவர்கள் சி.பி.சிற்றரசு, ஆசைத்தம்பி ஆகியோ ருடன் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்தவர், மேடைகளில் சோனா வாரியாகத் தொடர்ந்து கொட்டுகின்ற சிறந்த பேச்சாளன். அவர் தன்னோடு மிக நெருக்கமாக என்னை வைத்துக் கொண்டார். நான்
卤厂互口
SZ அங்கு ஓர் ஆசிரியன். அதனால் ஆசிரி யர்கள் மத்தியிலுள்ள விவகாரங்களை அறியாமல் இருக்கக் கூடாதென அனைத்தும் அந்தரங்கமாக எனக்கவர் |சொல்லி வந்தார்.
அப்பொழுது அவர் அங்கே இல் |லாதிருந்தால், நான் பல விஷயங்களை அறியாதவனாக இருந்திருப்பேன்.
தொழில் சார்ந்த நிலையில் நான் கற்ற கல்லூரிக்குள்ளேயே ஆசிரிய அனுபவங்களை நான் பெற்றுக் கொள்ள ஆரம்பித்த சமயம், கல்லூரிக்கு வெளியே சமூக, அரசியல் விவகாரங்களிலும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினேன்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டி |யிட்ட பொன்.கந்தையாவை ஆதரித்து கிராமங் கிராமமாகப் பிரசாரக் கூட் டங்கள் அப்பொழுது நடைபெற்றன. அந்தக் கூட்டங்களுக்கு எல்லாம் கே.டானியல் முன்னின்று ஏற்பாடுகள் செய்தார். வடமராட்சிக் கிராமங்கள் சிலவற்றில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களுக்கு டானியல் என்னை அழைத்துச் சென்று பேச வைத்தார்.
எங்களூர் அயிட்டியப் புலம் வயிரவர் கோயில் வீதியில் நான் ஒழுங்கு செய்த பிரசாரக் கூட்டத்தில் (02.03.1960) M.C.சுப்பிரமணியம், |டானியல், எனது ஆசிரியர் சைவப் புலவர். சி.வல்லிபுரம் ஆகியோர் பங்கு பற்றி உரையாற்றினார்கள்.
அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக உடுவில் தொகுதி

Page 14
24
யில் திரு. ப.பொன்னம்பலம் போட்டி யிட்டார். அவரை ஆதரித்து உடுவிலில் 16.03.1960ஆம் ஆண்டு பிரமாண்டமான பிரசாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக எனது ஆசிரியர் சைவப் புலவர் சி.வல்லிபுரம் புறப்பட்டுச் செல்லும் போது என்னையும் உடன் அழைத்துச் அந்தக் கூட்டத்தில் ப.பொன்னம்பலத்தை ஆதரித்துப்
சென்றார்.
பேசுவதற்கான வாய்ப்பினை வழங்கி, அன்று என்னைப் பேச வைத்தார்கள்.
அந்தப் பொதுத் தேர்தல் 19.03.1960இல் நடைபெற்றது. பொன். கந்தையா உட்பட வடபிரதேசத்தில் போட்டியிட்ட இடதுசாரிகள் அனை வரும் தோல்வியுற்றார்கள்.
தேர்தல் முடிந்த சில தினங்களின் பின்னர் மீண்டும் டானியல் என்னைத் தேடி (27.04.1960) வீடு வந்து சந்தித்து நீண்ட நேரம் என்னுடன் உரையாடி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், எழுத் தாளர் அகிலனைச் சந்திப்பதற்கு ஏற் பாடு செய்திருந்த கூட்டத்திற்கு வரு மாறு அழைப்புத் தந்து போனார். அவரது அழைப்பினை ஏற்று 29.04.1960இல், யாழ். மத்திய கல்லூரி யில் நடைபெற்ற அந்தக் கூட்டத்துக்குச் சென்று கலந்து கொண்டேன்.
டானியல் ஒருவரை இனங்கண்டு மட்டிடுவதில் மகா நிபுணர் என்பதை அப்பொழுது நான் அறிந்திருக்க வில்லை. நான் என்னைச் சரியாக உணராதிருந்த காலத்தில் அவர் என்னை
அப்பொழுது அறிந்து கொண்டார் என் பதை இன்று நான் உணருகின்றேன்.
அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வாலிப முன்னணிச் செயலாளராக ஆசிரியர் கோ.மகாலிங்கம் அப்பொழுது இருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர் களை ஒன்று திரட்டுவதில் அயராது உழைத்தார். அவர் மகாசபைக் கூட்டத் துக்கு என்னை அழைத்துச் சென்று அதன் அங்கத்தவராகச் சேர்த்து விட்டார்.
மகாசபைக் கூட்டங்களுக்கு அக் காலத்தில் டானியல், ஜீவா, பசுபதி ஆகியோர் தவறாமல் வருகை தரு வார்கள். அவர்கள் மீது ஒரு வகைக் கவர்ச்சி எனக்கு அப்போது இருந்து வந்தது.
தேவரையாளிச் சமூக முன்னோடி கள் என்று குறிப்பிட்டுப் பேசப்படுப வர்கள் காந்தியவாதிகள். சமய நம்பிக்கை மிக்க சைவர்கள். ஒடுக்கப் பட்ட சமூகத்தின் முன்னேற்றத்தைக்,
சாத்வீக வழியில் கண்டடையலாம் என
நம்பியவர்கள்.
அந்த நம்பிக்கையின் அடிப்படை ல் ஆ.ம.செல்லத்துரை ஆசிரியர் 1960 இல் யாழ். வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டம்
ஒன்றுக்கு என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.
யாழ். நகரத்தில் 1956இல்
ஆலயங்கள் சில திறந்து விடப்பட்டன. சாதிய சமூகத்தின் முழுமையான

மனமாற்றம் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு யாழ். நகரத்து ஆலயக் கதவுகள் திறந்து விடப்பட்டன என்று |சொல்வதற்கில்லை. அந்த ஆலயங் களின் நாகரிகமான முன்மாதிரியைப் பின்பற்றி வேறு எந்தவொரு ஆலயமும் திறந்து விடப்படவில்லை. அதனால் தாராளப் போக்குள்ள நல்மனம் கொண் டவர்கள் சிலர் ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக மேலும் ஆலோசனைகளை அவ்வப்போது மேற்கொண்டனர். அத் தகைய ஓர் ஆலோசனைக் கூட்டந்தான் |வைத்தீஸ்வராக் கல்லூரியில் நடை |பெற்றது. தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருந்த அ. ச. ஞான சம்பந்தன் அந்தக் கூட்டத்தில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்துக் கல்விமான்கள் என்று கருதப்பட்ட சுமார் ஐம்பது பேர் வரை அந்தக் கூட்டத்துக்குச் சமூகம் அளித்திருந்தனர். அனைவரும் நஷனல் சால்வையும், திருநீற்றுப் பூச்சுமாகத் தோன்றினார்கள். பெரும்பாலும் எல் லோரும் ஆசிரியர்களாகவும் இருந் தார்கள். அவர்கள் சாதிய வெறி பிடித்த வைதீகர்கள் என்பதனை அவர்கள் தோற்றம் பறைசாற்றிக் கொண்டி ருந்தது.
ஆசிரியர் ஆ.ம.செ. தோற்றத்தில் அவர்களைப் போன்றே இருந்தார்.
அங்கே வருகை தந்தவர்கள் அனைவரும் ஐம்பதாண்டு கால வாழ்வைக் கண்டவர்களாகவே காணப்பட்டார்கள்.
அவர்கள் மத்தியில் முற்றிலும் வித்தியாசமான ஒருவனாக நான் அங் கிருந்தேன். வயதில் மிகவும் குறைந்த இளைஞன். நஷனல் அணியாது, சேட் அணிந்திருந்தேன். ஆலயப் பிரவேசம் என்பது என்னைப் பொறுத்தவரை சமய வழிபாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின்
மனித உரிமையுடன் சம்பந்தப்பட்ட
ஒன்றாகவே நான் கருதினேன்.
அந்தக் கூட்டம் ஆரம்பித்த பின்னர்
தான் அங்கு வருகை தந்திருந்தவர் களைப் பார்த்த எனக்கு மேலும்
அதிசயமாக இருந்தது. அவர்களுள்
சிலர் எழுந்து ஆலயப் பிரவேசத்தை எதிர்த்து மிக மூர்க்கமாக வெட்க |மின்றிப் பேசினார்கள். சபையில் இருந்த பெரும்பாலானவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியில் எடுத்துச் |சொல்லாமல் மெளனமாக அமர்ந்திருந் தார்கள். அந்த மெளனம் ஆலயப் பிர வேசத்தை எதிர்த்துப் பேசியவர்களின் கருத்தினை ஆதரிப்பதாகவே இருந்தது. ஒருவர் தானும் ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து ஒரு வார்த்தை சொல்ல வில்லை.
அவர்களுக்கெல்லாம் தனியொரு |வராக நின்று ஆ. ம.செ. பதில் சொன்னார். இடையிடையே நான் சில கருத்துக்களை எடுத்துச் சொன்னேன். அங்கு நடைபெற்ற வாதப்பிரதி வாதங்களின் பிறகு அ. ச. ஞான
|சம்பந்தன் தமது கருத்துக்களை முன் வைத்துப் பேசினார். ஐம்பதாண்டு

Page 15
E江西丁
অন্ম களுக்கு முன்னதாக இந்தியாவில் இந்தப் பிரச்சினை தீர்ந்து விட்ட தாகவும், இன்னும் இந்தப் பிரச்சினை இங்கு தீர்க்கப்படாது இருப்பது கண்டு தான் வெட்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து வெகு கரிசனையுடன் கருத்துக்களை அவர் முன்வைத்தார், என்பது மறக்க முடியாத உண்மை. ஆனால் இந்தியா வில் எல்லாம் தீர்ந்து விட்டது என அவர் சொன்ன கருத்தில் உண்மைத் தன்மை இல்லை என்பதனை நான் அப் பொழுது விளங்கி வைத்திருந்தேன்.
காந்தீயக் கொள்கையின் வெற்றி தான் இந்தியாவில் நிகழ்ந்த ஆலயப் பிரவேசம் என அவர் தெரிவித்த கருத்து ஆ.ம.செ.வுக்கு உடன்பாடான தாக இருப்பதனை நான் உணர்ந்து கொண்டேன். உரிமை மறுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் தமது உரிமைக்காகப் போராடாமல் அந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ளவனாக நான் இருந் தேன். எனது நம்பிக்கையின் உண்மைத் தன்மையை யாழ்ப்பாணத்தின் சமூகப் போராட்ட வரலாறு பின்னர் எனக்கு உறுதிப்படுத்தியது.
அந்தப் போராட்டம் - அதன் வழி வந்த வெற்றிகள் - பின்னர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ் நிலையில் தடைப்பட்டுப் போனதற் கான காரணங்களை விளங்கிக்
கொள்ளாது, போராட்ட வழிமுறைகள் தவறானதென இன்று சொல்லுகின்ற வர்களின் அறியாமையைக் கண்டு நகைக்க வேண்டியதாக இருக்கின்றது.
நான் வயதில் சிறியவனாக இருந்த போதிலும் வயதில் மூத்தவர்கள் சிலரின் கண்களுக்கு அக்காலத்தில் உறுத்தலாக இருந்தேன்.
இலங்கைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 1960இல் நடைபெற்ற சமயம் தமிழ்க் கட்சி ஒன்றின் முகவர் ஒருவர் என்னுடன் நேரில் மோதிக்
கொண்டார்.
அவருக்குக் கட்சிக் கொள்கை என்று ஒன்றும் கிடையாது. அவர் எம்.பி.கட்சி. யார் அதிகாரத்தில் இருக் கின்றாரோ, அவரைச் சார்ந்து நின்று, அதன் வழி சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கு முற்படுகின்ற ஒருவர். இடதுசாரிகள், M.C.சுப்பிரமணியம் என்றால் அவருக்கு ஒவ்வாமை நோய் வந்துவிடும்.
பொதுத் தேர்தலில் நான் பொன். கந்தையாவை ஆதரித்து நிற்பது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்க வில்லை. அவர் ஒரு தினம் என்னை நேரில் சந்திக்க நேர்ந்த போது, என்னுடன் வலிந்து வாக்குவாதப் பட்டார். இறுதியில் "உனக்கொரு நோட்டீஸ் எழுதத் தெரியுமா?’ என என்னைப் பார்த்துக் கேட்டார்.
அவர் அப்படி என்னைக் கேட்டது என் நெஞ்சைச் சுட்டது. நான் அப்

பொழுது அவருக்குச் செயல் மூலம் பதில் சொல்ல விரும்பினேன். "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த பண் டாரிகள்” என மகுடமிட்டு துண்டுப் பிரசுரம் ஒன்றினை எழுதி, அச்சுப் பதித்து வெளியிட்டேன்.
அந்தத் துண்டுப் பிரசுரத்தில் என் னோடு மோதிக் கொண்டவரின் பெயரை நான் எங்குமே குறிப்பிட வில்லை. ஆனால் அதனை வாசிக்கின்ற வர்களுக்கு அந்தப் பிரசுரம் அவரையும் அவர் அரசியலையும் விமரிசிப்பதாக இருக்கின்றது என்பதனை விளங்கிக் கொள்ளத் தகுந்த வண்ணம் அது அமைந்திருந்தது. அந்தத் துண்டுப் பிரசுரத்தை எழுதுவதில் மார்க் அந்தணி யின் பேச்சுச் சாதுரியங்களை நான் நன்றாகப் பயன்படுத்தி இருந்தேன்.
அதனைப் படித்த அவர் என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகச் சட்டத்தரணிகளை நாடி ஓடினார். இறுதியில் எதுவும் செய்ய இயலாத நிலையில் எனது தந்தையாரிடம் வந்து முறைப்பாடு செய்தார். எனது தந்தை யார் அவரிடம், "அவனுக்கு நோட்டீஸ் எழுதத் தெரியாது எண்டு நீர் சொல்லி யிருக்கக் கூடாது" எனத் தெரிவித்து விட்டு, என்னைக் கண்டித்து வைப்ப தாகச் சொல்லி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் 'தம்பி வயதுக்கு மூத்தவயளை எடுத்தெறிஞ்சு நடவாத" என எனக்குச் சொன்னார். ஆனால் அந்தத் துண்டுப் பிரசுரத்தை நான் வெளியிடுவதற்குத் தேவையான
函区方
பணத்தை எனது தந்தையாரிடந்தான் பெற்றுக் கொண்டேன்.
கல்லூரி முகாமையாளர் எனக்கு ஆசிரிய நியமனம் வழங்கி நான் ஆசிரியராகக் கடமை ஆற்றிய போதும் வித்தியா பகுதி 06.09.1960இல்தான் எனது நியமனத்தை உறுதிப்படுத்தியது. அந்த நியமனம் பெற்று ஒரு மாத காலத்தின் பின்னர் நாட்டிலுள்ள பாட சாலைகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப் பெற்றன. எங்கள் கல்லூரியும் அரசாங்கப் பாடசாலை ஆனது. பதில் நியமனம் பெற்று ஆசிரிய சேவையில் இணைந்த நான் அரசாங்கப் பாட சாலையில் நிரந்தர ஆசிரியர் ஆனேன்.
எனது முதல் மாதச் சம்பளத்தைப் |பெற்றுச் சென்று தந்தையார் கையில் அதனைக் கொடுத்தேன். தந்தையார் எனது தாயாரை அழைத்து அவர் கை
யில் கொடுத்து விட்டு, "இனி அம்மா
விடம் கொடு" என்று சொன்னார். அடுத்த மாதம் தொடக்கம் தாயா ரிடமே சம்பளத்தைக் கொடுத்தேன். பின்னர் சகோதரிகளின் கையில் கொடுத்து வந்தேன். அதன் பிறகு மனைவியிடம் கொடுக்கலானேன்.
எனது தேவைகளுக்கெல்லாம் அவர்கள்தான் எனக்குப் பணம் தந்து கொண்டிருந்தார்கள். கடந்த காலத்தில் பணத்துடன் இந்த வகையான ஓர் உறவுதான் எனக்கு இருந்து வந்தது.
அந்த ஆண்டு ஆசிரிய கலா சாலைப் பிரவேசப் பரீட்சைக்கு நான்

Page 16
卤互口
விண்ணபிக்க இயலாது போயிற்று. அடுத்த ஆண்டில் அந்தப் பரீட்சைக்கு நான் விண்ணப்பத்துடன், ஆசிரிய தரா தரப் பத்திரப் பரீட்சைக்கும் தோற்றி னேன். அந்தப் பரீட்சையில் சித்தி அடைந்ததுடன், ஆசிரிய கலாசாலைப் பிரவேசப் பரீட்சையிலும் சித்தி அடைந்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப் பெற்றேன்.
அப்பொழுது வடமாநிலக் கல்விக் கந்தோர் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் விதியில் இந்துக் கல்லூரிக்கு அண்மை யில் இருந்தது. பிற்காலத்தில் சைவப் பெரியாராகக் காவி உடை தரித்துக் கொண்டு திரிந்த ஒருவர் அப்பொழுது வித்தியாதரிசியாக இருந்தார்.
நேர்முகப் பரீட்சை 10.03.1962ம் ஆண்டு காலை நேரம் கல்விக் கந்தோரில் நடைபெற்றது. எனது அறிவைச் சோதித்துப் பார்ப்பதற்கு, பல்வேறு வினாக்களைக் கேட்பார்கள் என்னும் நம்பிக்கையுடனேயே நான் அங்கு சென்றிருந்தேன். அந்த வித்தியா தரிசி நான் கொண்டு சென்ற எனது தராதரப் பத்திரம் முதலியவற்றைத் தட்டிப் பார்த்து விட்டு, “நீர் எந்த ஆசிரிய கலாசாலைக்குப் போக விரும்புகிறீர்? எனக் கேட்டார்.
"திருநெல்வேலி சைவாசிரிய கலா சாலைக்குப் போக விரும்புகின்றேன்" என நான் சொன்னேன்.
அப்பொழுது உடனே அவர், "நீர் கொழும்புத்துறை ஆசிரியக் கலா
சாலைக்குப் போம். இப்ப அது கத்தோலிக்க ஆசிரிய கலாசாலை அல்ல. அரசாங்கம் அதைக் கையேற்று விட்டுது. நீர் அங்கே போய்ச் சைவம் வளர்க்க வேண்டும்” எனக் கூறினார்.
தேவரையாளி இந்துக் கல்லூரியில் இருந்து சென்றிருந்த என்னை அந்தச் சைவப் பெரியார் இனங்கண்டு கொண்டார் என்பதனைச் சட்டென்று நான் விளங்கிக் கொண்டுவிட்டேன்.
அதுவரை காலம் கத்தோலிக்க ஆசிரிய கலாசாலையாக இருந்த கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை யில் சைவம் வளர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட முதல் ஆசிரிய மாணவன் நான்.
தேவரையாளி இந்துக் கல்லூரியில் எனக்குக் கல்வி கற்பித்த எனது ஆசிரி யர்களுக்கும் இத்தகைய வரலாற்றுப் பெருமை உண்டு. சைவாசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற (1925) தாழ்த்தப்பட்ட சமூகத்து முதற் சைவாசிரியன் தான் எனக் கவிஞர் மு.செல்லையா பெருமைப் பட்டுக் கொள்வார். சமாசன, சம போசன உரிமை பெற்று சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் (1930) பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்ட சமூக முதல் ஆசிரியர் தான் என சைவப்புலவர் பெருமைப்பட்டுக் கொள்வார். தெல்லிப்பளை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் அனுமதி பெற்று பயிற்சி பெற்ற (1930) தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல் சைவாசிரியர் தான்

என க.முருகேசு ஆசிரியர் பெருமைப்
பட்டுக் கொள்வார்.
அவர்கள் வரிசையில் - அவர்கள் மாணவனாகிய என்னை - 1962இல் அந்தப் சைவப் பெரியார் வரலாற்றுப் பெருமைக்குரியவன் ஆக்கினார்.
ஆனால் எனது ஆசிரியர்கள் போல அவர்கள் பாதையில் சென்று அதனைப் பெருமைக்குரியதாகக் கருதும் மனக்கருத்து எனக்கு இருக்க வில்லை.
ஆனால் அதற்கு முதல் ஆண்டு (1961) மார்கழி விடுமுறையில் கொழும்புத்துறை ஆசிரிய கலா சாலைக்கு நான் செல்வதற்கான ஆசீர் |வாதம் கிடைத்து விட்டதான எண்ணம் மனதில் அப்பொழுது தோன்றியது. யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரி விடுதி மேற்பார்யாளராக இருந்தவர் வண.பிதா. தாவீது அடிகள். அவர் பன் மொழிப் புலமையாளர். தமிழ் அறிஞர். யாழ். பொது நூலகம் தீயிட்டுக் கொளுத்தி எரிக்கப் பெற்ற |சம்பவம் கேள்வியுற்ற அதேகணம் உயிர் துறந்தவர்.
அவர் ஒரு தினம் இருந்தாற் போல, ஒரு மாலை நேரம் கால் நடை |யாக எங்கள் வீடு வந்து சேர்ந்தார். எனது தம்பி அப்பொழுது புனித சம்பத்திரிசியார் கல்லூரி விடுதி மாணவனாகப் படித்துக் கொண்டிருந் தான். அடிகளார் வீட்டில் இருந்த எல்லோரையும் அழைத்து நீண்ட
江西丁
অs
நாட்பழக்கம் உள்ளவர் போல அன் போடு உரையாடினார். பின்னர் தம்பி 'யையும் என்னையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். |எங்கள் இருவருக்கும் பல விடயங் களை எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்த அவர், 'கனங்குழாய்" என்னும் சொற்றொடருக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இருந்து உதாரணங்களை எடுத்துச் சொல்லி விளக்கிக் கொண்டு போனார்.
பொலிகண்டி கடற்கரை விதியில் ஆரம்பித்த எங்கள் நடை இரண்டு கிலோமீற்றர் தூரம் திக்கம் சந்தி வரை நீண்டு சென்றது. அப்பொழுதும் "கனங் குழாய்"க்கான விளக்கம் பெருகிக் |கொண்டே இருந்தது.
நான் உண்மையில் பிரமித்துப் போனேன். அடிகளார் ஒரு தமிழ்க் கடல் அல்ல, சமுத்திரம் என்பதனை உணர்ந்தேன். மாலை மயங்கி வரும் வேளை அடிகளார் எங்கள் இருவரை |யும் ஆசீர்வதித்து விட்டுப் பருத்தித் துறை நோக்கி நடந்து சென்றார்.
அடிகளாரின் அந்த ஆசீர்வாதம் கத்தோலிக்க ஆசிரிய கலாசாலையாக இருந்து வந்த கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கு என்னை கொண்டு வந்து சேர்த்ததோ என நான் எண்ணினேன்.
(வளரும்.)

Page 17
அஞ்சலிக் குறிப்பு ! தோழர் தறுவிற்கோழ ராமசாமி
- அந்தனி ஜீவா
எழுத்தாளரும், தோழருமான தனுஷ்கோடி ராமசாமி மறைந்து விட்டார் என்ற செய்தியைத் தாமரை, தீராநதி போன்ற சஞ்சிகைகள் மூலம் \ அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
அட்டகாசமான சிரிப்பு உரிமையுடன் உறவாடும் தோழமை மிகுந்த நட்பு. |எண்பதுகளில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். எழுத்தாளர் பொன்னீலன் அவரை அறிமுகப்படுத்தினார்.
|மதுரையில் நடந்த கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொழுது, இந்த அறிமுகம் கிட்டியது. முதலில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற எண்பதுகளில் இலக்கியம்" என்ற கருத்தரங்கில் |கலந்து கொண்டு, பின்னர் பேராசிரியர் போத்திரெட்டி அவர்களின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மதுரைக் கிளைக் கூட்டத்தில் |கலந்து கொண்ட பொழுதுதான் தனுஷ்கோடியின் அறிமுகம் கிடைத்தது.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சிக்குத் திரும்ப நினைத்த பொழுது மதுரை ஒட்டல் அறையில் தங்களோடு தங்கும்படி அன்போடு அழைத்தார் தனுஷ் கோடி ராமசாமி. அப்பொழுது அங்கே கவிஞர் ஞானம், எழுத்தாளர் அழகர்சாமி ஆகியோர் இருந்தனர்.
அன்றிரவு தனுஷ்கோடி சுவையான உணவு வழங்கியதோடு, நீண்ட நேரம் மூவருமாக இலக்கியம் பேசியபடி இரவு கழிந்தது.
மடல் மூலம் நட்பைத் தொடர்ந்தோம். மீண்டும் 2000-ல் சென்னையில் நடைபெற்ற "தமிழ் இனி 2000" நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது - எழுத்தாளர் தனுஷ்கோடி அவர்களும் வந்திருந்தார்.
Iதோழமையுடன் தோளைத் தட்டியவாறு நலம் விசாரித்தார். விழா முடிந்த பின்னர் - பாலன் இல்லத்தின் மேல் மாடியில் - தாமரை ஆசிரியர் மகேந்திரன், கவிஞர் அறிவுமதி, சாரல்நாடன், நான் உட்பட அனைவரும் இலக்கிய சம்பந்தமாக உரையாடிய பொழுது கவிஞர் அறிவுமதி தமிழ் இனி நிகழ்வுகளைக் காரசாரமாக விமர்சித்தார். . . . .3
 
 

SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL L L L L L L L L L S
தனுஷ்கோடியைப் பார்த்து ஏன் கலந்து கொண்டீர்கள்? என கோப மாகக் கேட்டார்.
அதற்கு தனுஷ்கோடி ராமசாமி அமைதியாகப் புன்முறுவல் பூத்தபடி “வெளியே இருந்தால் ஒன்றும் தெரியா தல்லவா, எழுத்தாளர் என்ற ரீதியில் அழைப்பு விடுத்தார்கள். கலந்து கொண்டேன். இப்பொழுது அவர் களின் தில்லு முல்லுத் தெரிந்து விட்டது” என்றார்.
அதன் பின்னர் - நாடு திரும்
|பியதும் அவரிடமிருந்து கடிதங்கள் -
R.R.R. HAIRDRESSERS
89, St. Mary's Road
| ||Mattakuliya Colombo - 15. முற்றிலும் குளிரூட்டப் பெற்ற சலூன்
தொலைபேசி : 0777 - 790385
LL L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L L L
பதில் தோழமையுடன் - எமது நட்புத் தொடர்ந்தது. தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயலாள. ராகத் தெரிவு செய்யப்பட்டது பற்றி அறிவித்திருந்தார். புதிய உற்சாகத்துடன் செயல்படப் போவதாக எழுதி யிருந்தார்.
காலன் இவ்வளவு விரைவாக அவரை அழைத்துக் கொள்வான் என நினைத்துப் பார்க்கவுமில்லை. தோழமை மிகுந்த தனுஷ்கோடி ராம சாமியின் படைப்புகள் என்றும் அவர் பெயரைப் பறைசாற்றும்.
Z
கொள்ளுகின்றது.
N
மனம் வடுக்கிேன்றேnம்.
கிழக்கு மாகாணத்தின் தனிப்பெரும் கவிஞன் பஸில் காரியப்பர் சென்ற மாதம் நம்மை விட்டு மறைந்து விட்டார். அன்னாரது மறைவால் பெரும் துயருற்றிருக்கும் குடும்பத்தினரினதும், சகோதர எழுத்தாளர்களினதும் துயரத்தில் மல்லிகையும் பங்கு கொண்டு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்
ஆசிரியர்)

Page 18
32 கவிதை என்று பேசத் தொடங்கும் போதே கேள்வி வந்து விழுகிறது. மரபுக் கவிதையா? புதுக் கவிதையா? இக்கேள்வித் தீயில் பொசுங்கிப் போகாமல் ஒரு விடயம் குறித்துப் பேச மிகவும் ஆசை. நான் பேசப் போவது கஜல் பாடல்கள் பற்றி. கஜல் பாடல்கள் தானே கவிதைக்குள் வருமா? எனக் கேட்க வேண்டாம். உங்கள் உங்கள் எண்ணப்படியே கஜலைப் பாடலாகவோ கவிதை யாகவோ எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான முழுச் சுதந்திரம் உங்களுக்கு இருப்பதால் எனது சுதந்திரத்தை நான் பயன்படுத்தலாம் என எண்ணுகிறேன். கஜல் என்ற வடிவம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பாரசீகத்திலிருந்து தென் N னிந்தியாவிற்கு வந்ததாகச் சொல்
es அரசியல் நிலைமைகளாலும் வர்த்தக C வாணிபத் தொடர்புகளாலும் கஜல்
கிறார்கள். அக்காலத் தென்னிந்திய
அறிமுகமானது. கஜலின் தாய்மொழி சில உருது என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஆரம்ப காலத்தில் அதாவது கஜல் அறிமுகமானது பாரசீக மொழி அறிமுகக் யில்தான். காலப்போக்கில் தான் அது உருதுவைத் தத்தெடுத்துக் கொண்டது குறிப்புகள் என்பதே உண்மை.
கஜலின் பா வடிவம் என்ன? ano O என்று உங்கள் புருவங்கள் உயர்வது இன்கா புரிகிறது. கஜலை எந்தவொரு பா
.リ வடிவத்தின் உள்ளும் அடக்க முடியாது ܠܐ
தனக்கே உரித்தான சில இலக்கண அடிப்படைகளைக் கஜல் கொண்டிருக்கிறது.
இரண்டு அடிகளைக் கொண்ட கண்ணிகளின் தொகுப்பே கஜல், இந்தக் கண்ணிகள் "ஷேர்' எனப்படும். ஆனால் வெறும் கண்ணிகளின் தொகுப்பு கஜலாகி |விடாது. அதற்கும் சில இலக்கண விதிகள் உண்டு. அவை திருப்திப்படுத்தப்படும் |போதுதான் அவை கஜலாகக் கருதப்படும். இல்லாது போயின் அவை ருபை, கீத், றக்ம் என்ற வேறு ஏதாவதொரு வடிவத்தினுள் அடக்கப்படும்.
ஒரு பாடல் வடிவமாகவே கஜல் முக்கியம் பெறுவதால் அதனது முதலிரு அடிகள் தான் முக்கியமானவை. உண்மையில் இவைதான் முழுப்பாடலின் மனநிலையையும் எடுத்தியம்பும் வரிகளாக அமைகின்றன. பாடல் என்ற வகையில் கேட்பவரைப் பாடல் சொல்லுகின்ற மனநிலைக்கு இழுத்துச் செல்லும் வரி

களாகவே இவை கருதப்படுகின்றன. இதை 'மத்லா என அழைப்பார்கள். மத்லா என்பது தொடக்கத்தில் வரு கின்ற ஒர் இரண்டடிக் கண்ணி. இது எத்தனை சீர்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். (சொற்கள்) என்ற கட்டுப்பாடு இல்லை.
இத்தனை சீர்கள்
"எனது வீதிக்கும் அடிக்கடி வந்து போ எனக்கு உறக்கமும் உயிரும் தந்து போ' என்று ஐந்து சீர் கொண்ட மத்லாவாகவும் இருக்கலாம்.
அல்லது,
எவரது விழியிலும் ஒளியல்லேன் நான் எவரது மனதிலும் நினைவல்லேன் நான்' என நான்கு சீர் கொண்ட மத்லாவாகவும் இருக்கலாம்.
இந்தச் சீர்களின் அளவைக் குறிக் கும் சொல் "பெஹர் எனப்படுகிறது. தமிழிலே எண்சீர், அறுசீர் என்று அழைப்பதைப் போலப் பெஹர்' என்று பொதுவாகச் சீர்களின் அளவு அழைக்கப்படுகின்றது. சிறிய பெஹர், இடைப் பெஹர், பெரிய பெஹர் என மூன்று வகைகளில் தான் இவை பிரித்து வகைப்படுத்தப்படுகின்றன. சிறிய பெஹர் குறைந்தது மூன்று சீர்களைக் கொண்டதாகவும், பெரிய பெஹர் ஆகக் கூடியது பதினாறு சீர்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
இலக்கண விதிகள் என்று பார்க்கும் போது முக்கியமானது முதலாவது வரியில் வருகின்ற சீர்களின் எண்ணிக்கை மாறாமல் பாடல் முழுக்க அப்படியே வரவேண்டும். சந்தம் மாறக் கூடாது. அடுத்த முக்கியமான அம்சம் ஒவ்வொரு கண்ணியின் இறுதிச் சொல்லும் ஒன்று போல் ஒலிக்க வேண்டும் மாறக் கூடாது. ஆனால் ஒரே சொல்லாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு ஒலிக்கும் கடைசிச் சொல் 'காஃபியா" என அழைக்கப்படுகிறது. பாடலில் தொடர்ந்து வருகின்ற கண்ணியின் கடைசிச் சொற்கள் ஒன்று போலன்றி ஒரே அமைப்பிலான ஒலி நயத்துடனும் ஒலிக்க வேண்டும். அதாவது தொடர் அடிகளில் ஒலிநயம் பேணப்படல் வேண்டும். இவ்வாறு பேணப்படுவதை 'ரத்ஃப்’ என்று அழைப்பர்.
கஜல் பாடல்கள் கவிதைகளாக இரசிக்கப்படுவதை விடப் பாடல்களாக ரசிக்கப்படுவதே நல்லது என்று எண்ணுகிறேன். அவை பாடல்களா கவே ஆக்கப்பட்டதும் பாடப்படும் போது வரிகள் மீள மீள மெருகுடன் |வேறு வேறு கோர்வைகளில் பாடப் படும் போது இனிமையாக இருக்கும். வரிகள் விளங்காத போதும் எம்மால் கஜல் பாடல்களை இரசிக்க முடிவதற்கு பாடலில் சந்த நயமும் பாடுபவரின் குரல் திறனும் தான் காரணமாக இருக்க முடியும். ஆனால் அதனது கவிதை வடிவத்தையும் முற்றாகப் புறக்கணித்து விடவும் முடியாது.

Page 19
கஜல் வேற்பும் அது அடைந்திருக்கின்ற வெற்றியும் அதனது சில அடிப்படை யான குணாம்சங்களால் சாத்திய
பெற்றிருக்கின்ற வர
மாயிருக்கின்றது.
* கஜல் பாடலாகவே பாடப்படுவ தால் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைவதால் மக்களுக்குப் பழக்கப் படுவது சாத்தியமாகி விட்டது.
* கஜல் இலகுவான மொழியில் சொல்ல வந்த செய்தியைச் சொல்வ தால் மக்களுக்குப் பாடல்கள் விளங்கு வது சுலபமானது.
* பாடல்கள் மனித உணர்வுகளையே அடிநாதமாகக் கொண்டிருப்பதால் மக்களுடன் அந்நியப்பட்டுப் போக வில்லை.
* பாடுபவரது குரலும் திறனும் மனித உணர்வுகளின் பல நிலைகளைத் தொடுவதால் மக்கள் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள்.
வாழ்க்கையே உன்னுடன் வழிப்போக்கன் ஆகவோ கோப்பையே உன்னுடன் குடிகாரன் ஆகவோ எங்கு நான் மாற்றுவேன் இதயத்தின் காசோலை (ELDub LD600TLDIT606) மறுபுறம் மதுச்சாலை
இவ்வாறு கஜல் பாடல்களில் பெரும்பாலானவை காதலையும், காதல்
சோகத்தையும் தருவதை அவதானிக்க முடியும். இந்த வரிகளின் சோகம் போதாதென்று மனது கனக்கக் கஜல் பாடல் கேட்க அமர்ந்தால் பாடுபவரோ மெல்லிய பின்னணி இசையுடன் குரல் திரும்பத் திரும்பப் பாடுதல், நீட்டி இராகம் இழுத்தல் என மொத்தச் சோகத்தையும் பத்திரமாக தரு வார். மனது கனத்த நாட்களில் விரக்தி யின் விளிம்பிற்கே எடுத்துச் செல்லக் இதில்
அசைவுகள்,
கூடிய சில பாடல்களும் அடக்கம்.
கஜல் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைந்து அதன் வெற்றிக்கான முதன்மையான காரணமாக இருந்த போதிலும் மிக அண்மைக்காலம் வரை இந்த வரம் எல்லோருக்கும் வாய்க்க வில்லை. தொடக்க காலங்களில் அரச மாளிகைகளுக்குள் முடங்கிப் போய்ப் பின்னர் பணம் படைத்தவருக்கான விருந்தாக இருந்து பின்னர் சில திரைப்படங்களின் மூலமே சாதாரண மக்களைச் சென்றடையத் தொடங் கியது. பின்னர் இசைத் தொகுப்புக் களாக வெளியிடப்பட்ட பிறகே மக்களுக்கான சுவையாக அது மாற்ற மடையத் தொடங்கியுள்ளது.
கஜல்கள் காதல், அன்பு போன்ற மென்மையான உணர்வுகளை வெளிப்
இருக்
கின்றன. மக்களின் பிரச்சினைகளை
படுத்தும் பாடல்களாகவே
மக்களின் தேவைகளை அவை வெளிக் காட்டுவதில்லை என்றே கருதுகிறேன். நீண்ட காலமாகவே அதிகார வர்க்கத் தின் கைகளில் தவழ்ந்த காரணத்தால்

அவ்வாறான பொது நோக்குடனான கஜல்கள் உருவாகாமல் இருந்திருக்க லாம். ஆனால் மக்களின் கலை என் பதன் அடிப்படையில் மக்கள் பற்றிய சிந்தனைகளுடன் இவை எழுதப் பட்டால் இவற்றின் தளம் விரி |வடையும். கஜலில் காணப்படும் இந்தக் குறைபாடுதான் கஜலைப் பாடலாகவே |வைத்திருக்கிறதோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது. இதனால் கஜலைக் கவிதைகளாகப் பார்க்காமல் பாடல் களாகப் பார்ப்பது நல்லது. இதுவும் கவிதை தானே என நீங்கள் கேட்டால் 'இல்லை" என்பது என் பதிலல்ல. தமிழில் கஜல்கள் கிடைப்பது மிகவும் அரிது. கஜல்கள் தமிழில் மொழி
|பெயர்க்கப்படும் போதே கஜலின் பல் வேறு முகங்களைக் காண முடிவதுடன் அவற்றின் இனிமையையும் இரசிக்க முடியும். இறுதியாக என்னைப் பாதித்த சில கஜல் கண்ணிகள்.
காதல் நெஞ்சில் மின்னும் இன்பம் என்னவாகுமோ கதறித் துடித்துக் கண்ணீர் சிந்திக் கிடந்து சாகுமோ
காதல் என்னைக் கொல்வதொன்றே இங்கு சட்டமோ |எந்தன் சாவை உலகம் பேசும் என்ன நட்டமோ
r
Vy4M NMōālākā
5/Jain дочолса ఏసిడీఏబడి అనినీరాజు لمoعه رای) ?^ویلهلمo ,2 ပါßßလှုံ့yĀ@ پالم Gonavašn.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல
ஆக்கங்களையும் அவரிடமிருந்தே நேரில் பெற்றுக் கொள்ளலாம். அவரே கையெழுத்திட்டுத் தருவார்.
மற்றும் பள்ளிக்கூட, பொது நூலகங்களுக்கும் தேவையான நூல்களையும், மலர்களையும் மல்லிகைப் பந்தலில் பெற்றுக் கொள்ளலாம்.
மல்லிகை ஆண்டு

Page 20
333.
334.
335.
336.
337.
338.
339.
340.
341.
342.
343.
ஒரு பெண்ணின் கதை (1992) செ.கணேசலிங்கன், பாரிநிலையம், சென்னை.
காளை விடு தூது (1992)
கதைவாணன், புத்தளம்.
அரசு (1993) செ.யோகநாதன், சத்திய பாரதி பதிப்பகம், சென்னை.
(8 JIIf s 6)IT (1993) மலரவன், தமிழ்த்தாய் பதிப்பகம், யாழ்ப்பாணம். நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே (1993) செ.யோகநாதன், சத்தியபாரதி பதிப்பகம், சென்னை.
மாது என்னை மன்னித்துவிடு (1993) ந.பாலேஸ்வரி, இலக்கிய வெளியீடு, திருகோணமலை.
Pagចំឡងទាំ ជាថៃ្ងទាញយំ lਘ
- செங்கை ஆழியான் பஞ்சகோணங்கள் (1993) கே.டானியல் விடியல் பதிப்பகம், கோவை. விடிவெள்ளி பூத்தது (1993) சோமகாந்தன், பாரி நிலையம், சென்னை. இவர்களும் வாழ்கிறார்கள் (1993) சோ. ராமேஸ்வரன், கொழும்பு. இரண்டாவது சாதி (1993) செ.கணேசலிங்கன், பாரி நிலையம், சென்னை.
சிறுபொறி பெருந் தீ (1993) செ.யோகநாதன், சத்யபாரதி பதிப்பகம், சென்னை.

344.
345.
346.
347.
348.
349.
350.
351.
352.
தாகம் (1993) தாமரைச்செல்வி, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.
அவன் பெரியவன் (1993) அநு.வை நாகராஜன், வைரமான் வெளியீடு. தெல்லிப்பளை.
விதி (1993) தேவகாந்தன், வேர்கள் இலக்கிய இயக்கம், நெய்வேலி.
பணி பெய்யும் இரவு (1993) ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியம், சென்னை.
மரக்கொக்கு (1994) தெணியான், நான்காவது பரிமாணம் வெளியீடு, கொழும்பு.
ஓ கனடா (1994) பாரதிநேசன் வி.சின்னத்தம்பி யாழ்ப்பாணம். சாலை விளக்கு (1994) ஹக்கனை றிவ்ழான், கல்கின்னை.
இலட்சியப் பயணம் (1994)
சோ.ராமேஸ்வரன், கொழும்பு.
லயத்துச் சிறை (1994) தி.ஞானசேகரன், மலையக வெளியீட்டகம், கண்டி.
353.
354.
355.
356.
357.
358.
359.
360.
361.
மகாகனம் பொருந்திய (1994) எஸ்.அகஸ்தியர், நியூ புக் செஞ்சரி புத்தகசாலை சென்னை.
அக்கரைச் சீமையில் (1994) அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை, அராலி நாடகமன்ற வெளியீடு, அராலி.
நம் தாயர் தந்த தனம் (1994) வல்லை கமலா பெரியதம்பி, வல்வெட்டித்துறை.
ஒரு ஜனனத்தின் அஸ்தமனம் (1994) நீர்கொழும்பூர் முத்துலிங்கம், தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்பு.
காவோலை (1994) செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
ஒரு மண்ணின் கதை (1994) செ.கணேசலிங்கன், பாரி நிலையம், சென்னை.
அழிவின் அழைப்பிதழ் (1994) இ.தியாகலிங்கம், சென்னை.
நரகத்திலிருந்து (1994) எஸ். அகஸ்தியர், சென்னை.
தூரம் தொடுவானம் (1995) பொன் கணேசமூர்த்தி, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Page 21
St 362.
363.
364.
365.
காதலும் கடிதமும் (1995) கசின், கொழும்பு.
அயலவர்கள் (1995) செ.கணேசலிங்கன், பாரி நிலையம், சென்னை.
நிதானபுரி (1995), கசின், கொழும்பு.
மெளன ஒலங்கள் (1995),
சோ.ராமேஸ்வரன், கொழும்பு.
366.
367.
368.
369.
370.
371.
372.
வீரஆனந்தன், (1995) ஓ.கே.குணநாதன், பிரியா பிரசுரம், அமிர்தகழி. கடமையின் பாதையில் (1995) காசி.வி.நாகலிங்கம், ஜேர்மனி.
இன்றல்ல நாளையே கலியாணம் (1996) சோ.ராமேஸ்வரன், கொழும்பு
சத்தியங்கள் சமாதியாவதில்லை (1996) சோ.ராமேஸ்வரன், கொழும்பு.
LDITudisap6) (1996), ஓ.கே.குணநாதன்,பிரியா பிரசுரம், அமிர்தகழி.
நகரமும் சொர்க்கமும் (1996) செ.கணேசலிங்கன், பாரி நிலையம், சென்னை.
அவள் வாழத்தான் போகிறாள் (1996) மாத்தளை சோமு, திருச்சி.
373.
374.
375.
376.
377.
378.
379.
380.
381.
வீட்டிற்குள் வந்த வெள்ளம் (1996) காசி. வி. நாகலிங்கம், ஜேர்மனி.
தர்மங்களாகும் தவறுகள் (1997) அ.ஸ்.அப்துஸ்ஸமது, இஸ்லாமிய நூல் வெளி யீட்டுப் பதிப்பகம், கல்முனை.
ஈனத்தொழில் (1997) செ.கணேசலிங்கன், பாரி நிலையம், சென்னை.
துன்பக்கேணியில் (1997) செ.யோகநாதன், சத்யபாரதி வெளியீடு. சென்னை.
இந்த நாடகம் அந்த மேடையில் (1997) சோ.ராமேஸ்வரன், கொழும்பு பூதத்தீவுப் புதிர்கள் (1997), செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
UITGortui (1997) தெளிவத்தை யோசெப், துரைவி வெளியீடு, கொழும்பு
கனவுச்சிறை (1998) தேவகாந்தன், இளம் பிறைப்
பதிப்பகம், சென்னை.
சிவபுரத்துச் சைவர்கள் (1998) சோ.இராமேஸ்வரன், கொழும்பு.

382.
383.
384.
385.
386.
387.
388.
389.
390.
வன்னியர் திலகம் (1998), முல்லைமணி. முத்தமிழ் கலா மன்றம். வவுனியா. கொழும்பு லொட்ஜ் (1998) செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம். யாழ்ப்பாணம்.
அடைப்புகள், (1988) செ.கணேசலிங்கன், குமரன் பதிப்பகம், சென்னை.
கருக்கொண்ட மேகங்கள் (1999), ப.ஆப்டீன், பேசும் பேனா, கொழும்பு. ஒரு தீயம் தீயாகிறது (1999), ஸனிறா காலிதீன், முஸ்லீம் மகளிர் கல்லூரி வெளியீடு. களுத்துறை. தொண்ணுாறு நாட்களுள் (1999) மனுவல் ஜேசுதாசன்,
56TL.
காத்திருப்பு (1999) தெணியான், பூபாலசிங்கம் புத்தகசாலை. கொழும்பு.
ஒரு துளி (1999) ஓ.கே.குணநாதன், வவுனியா.
அவளுக்கு ஒரு வேலை (86u6OST(Bb (2000) சுபைர் இளங்கீரன், தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்பு.
391.
392.
393.
394.
395.
396.
397.
398.
399.
கமுகஞ் சோலை (2000) முல்லைமணி, வவுனியா.
நிலாக்கால இருள் (2000) சோ.ராமேஸ்வரன், கொழும்பு.
மரணங்கள் மலிந்த பூமி (2000), செங்கை ஆழியான், யாழ் இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம். நாம் ஒன்று நினைக்க (2000) |ஒலுவில் அமுதன், றக்ஸானா வெளியீடு. அக்கரைப்பற்று. அக்னி திரவம் (2000) தேவகாந்தன், பல்கலைப் பதிப்பகம், சென்னை.
மனநதியின் சிறு அலைகள், (2000), கே.விஜயன், பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு. கொழும்பு.
உணர்வின் எல்லை (2000) இர்பானா ஜப்பார், கல்கின்னை. செந்தணல் (2000) அங்கையன் கைலாசநாதன், அங்கையன் பதிப்பகம், கொழும்பு. அவனும் சில வருடங்களும் (2000) ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சென்னை.

Page 22
400. சிவபுரத்துக்கனவுகள் (2000)
40.
402.
403.
404.
405.
406.
407.
408.
சோ.ராமேஸ்வரன், கொழும்பு.
விடியலில் மலரும் பூக்கள் (2000) காசி.வி.நாகலிங்கம், ஜேர்மனி.
வாழ்வற்ற வாழ்வு (2001), சி.வி. வேலுப்பிள்ளை, தமிழாக்கம்: சாரல்நாடன், சாரல் வெளியீட்டகம். கொட்டகலை.
வடக்கும் தெற்கும் (2001), சோ.ராமேஸ்வரன், கொழும்பு,
விழிகளை நனைத்திடும் கனவுகள் (2001) காசி.வி.நாகலிங்கம். ஜேர்மனி.
வசந்த காலக்கோலங்கள் (2001), புரட்சி பாலன், மணி மேகலைப் பிரசுரம், சென்னை.
கூடில்லாக் குஞ்சுகள் (2001) செல்லையா குமாரசாமி, வவுனியா இலக்கிய நண்பர்கள் வட்டம், வவுனியா. மறைவில் ஐந்து முகங்கள், (2001) க.பாலசுந்தரம், ტ560]][L_-[T.
கொரில்லா (2001)
ஷோபா சக்தி, அடையாளம் வெளியீடு, பிரான்ஸ்.
409.
410.
411.
412.
413.
414.
415.
416.
417.
418.
ஒரு கிராமம் தலை நிமிர்கிறது (2001) செ.குணரெத்தினம், மணி மேகலைப் பிரசுரம், சென்னை.
சகடயோகம் (2001) கசின், சந்திரா வெளியீட்டகம், கொழும்பு. ஒரு காதலின் கதை (2001) அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம்.
செல்லி (2001) செ.கணேசலிங்கன். குமரன் பதிப்பகம், சென்னை. பிணந் தின்னும் சாத்திரங்கள் (2001) சாரல் நாடன், கொட்டகலை.
உதிர்வின் ஓசை (2001) தேவகாந்தன், சென்னை. ஒரு புதிய காலம் (2001) தேவகாந்தன். சென்னை. இன்றைய சுகந்தம் (2001) கதைவாணன் மொஹிடீன் ரஜா. புத்தளம். கானலில் மான், (2002) தெணியான், பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு. போரே நீ போ (2002)
செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.

49.
420.
421.
422.
423.
424.
425.
426.
திசைமாறிய தென்றல் (2002) அகில், சென்னை.
துன்ப அலைகள் (2002) செ.குணரெத்தினம், தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்பு.
மாலையில் ஓர் உதயம் (2002) ஆனந்தா ஏ.ஜி.இராஜேந்திரன், ஈழத்து இலக்கியச் சோலை, திருகோணமலை.
வீரச்சிறுவன் ஜம்பு (2002) யோ.சுந்தரலட்சுமி, கொழும்பு
மண்ணைத் தொடாத விழுதுகள் (2002) செல்லையா குமாரசாமி, மிக் புத்தக நிறுவனம், யாழ்ப்பாணம்.
கரையைத் தொடாத அலைகள் (2002), |ஒலுவில் அமுதன், அக்கரைப்பற்று.
இனி வானம் வெளிச்சிடும் (2002) தமிழ்க்கவி, அறிவு
அமுது வெளியீடு, கிளிநொச்சி. காதல் என்னைக் காதலிக்க வில்லை(2002) எஸ்.செல்வகுமார், மணி மேகலைப் பிரசுரம், சென்னை.
427.
428.
429.
430.
431.
432.
433.
434.
435.
És 41
অত্ব
துளித் துளியாய், (2002) பொன்.கணேசமூர்த்தி,
கிளிநொச்சி.
மழைக்கோலம் (2003) முல்லைமணி, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், மட்டக்களப்பு.
வானும் அனல் சொரியும் (2003) செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
கனகு (2003) சோ.ராமேஸ்வரன். கொழும்பு.
கூலிக்கு வந்தவன் (2003) ச.வே.பஞ்சாட்சரம், தூண்டி வெளியீடு, யாழ்ப்பாணம்.
யுத்தத்தின் முதலாம் அதிகாரம் (2003) தேவகாந்தன், பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு.
பூமி பொறுக்காது (2003) கதிர் பாலசுந்தரம், கனடா.
இயந்திர நண்டு (2003) எஸ்.பி.கிருஸ்ணன், கண்ணன் வெளியீடு, யாழ்ப்பாணம். g|Tibugi (2003)
செங்கைஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.

Page 23
436.
437.
438.
439.
440.
441.
442.
443.
444.
ஒட்டாத உறவுகள் (2003), காசி.வி.நாகலிங்கம், ஜேர்மனி. நாளைய மனிதர்கள் (2003) ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியம், சென்னை.
நீரலைகள் (2003), வல்லை ந.அனந்தராஜ், வல்வெட்டித்துறை. வீதியெல்லாம் தேரணங்கள் (2003) தாமரைச்செல்வி, கொழும்பு.
கடல்கட்டி (2003), எஸ்.எம்.கமால்தீன், கல்கின்னை.
இருள் இனி விலகும் (2004) தமிழ்க்கவி, அறிவு அமுது பதிப்பகம், கிளிநொச்சி. மீண்டும் வசந்தம் (2004) திருமலை வீ.என்.சந்திரகாந்தி, திரு. ஜெகாந்தி கலை கலாச்
சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், திருகோணமலை.
மறைவில் ஐந்து முகங்கள் (2004) கதிர் பாலசுந்தரம்,
5560 LT.
ஈழராஜா எல்லாளன் (2004) செங்கை ஆழியான், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
445. உறங்குமோ காதல் நெஞ்சம் (2004) குரு அரவிந்தன். மணி ( மேகலைப் பிரசுரம், சென்னை.
446. Đ6ð6DTaF LJu 600 lb (2004)
க.அருளானந்தம், திருகோணமலை.
447. பச்சைவயல் கனவு (2004)
தாமரைச்செல்வி, புதுக்குடியிருப்பு.
448. ...lib... (2004)
ஷோபா சக்தி, சென்னை.
449. வெள்ளாவி (2004),
விமல் குழந்தைவேல், சென்னை.
450. சில்லிக்கொடி ஆற்றங்கரை
(2004) ஆ.மு.சி.வேலழகன.
451. ரங்கநாயகியின்
காதலன் (2005) தம்பலகாமம் க.வேலாயுதம், தம்பலகாமம்.
(முற்றும்)
முருகபூபதியின் சிறுகதைத் தொகுதி கங்கை மகள் வெளிவந்து விட்டது.

EELE്
H எல்.வளிம் அக்ரம் படினிக்குப் பழகிப் போன மேனி
தடவிப் பார்க்கையில் தழும்புகளின் தடயங்கள் தெரியும்: துருப்பிடித்த கைகள்,
வரமசி படிந்த
முகத்தில் இரவல் புன்னகைகள் ஒளிரும். வெம்மையில் விழிகள் வெறிக்கும்.
ஒய்வுக்கு
ஒதுங்கவியலாது
வேலைகள்
வேர் விடிருக்கும்.
ஒய்வு - ஊதியம் ஒரங்கபடப்பட்டு உழைப்பு ஒன்றே உறிஞ்சப்படும்.
"படிகள்" ஏறமுடியாது Luecorúb GSm-I முடிகளின் விழிகள் முழியும்.
江互 சுவாசத்தைக் al வேவுபார்க்கச் சூனிய எண்னத்துடன் ஏசி அறைகளிலிருந்து elerosesir
ஊர்ந்து வரும்,
്രl8്
ஒர் இரவைப் போலிருக்கிறது லீவனம்.
துயர்க்கனலும் பொழுதில் நேசத் தூண்டில்கள் வீசப்படுவதாயில்லை.
புகை உமிழும் பூமியில் காலாவதியானது சுதந்திரம்
மனிதத்தை முலாமிபட திரையைத் துலக்கித்தர
யாருமற்ற 6UITp வஞ்சனை மட்டும்
பீறிட்டுப் பொழிகிறது.
நெய்து விடிட நெருப்பு இழைகள் நிம்மதித் தழுவல்களை நெரித்து,
நாளாந்தம் - மனதெங்கும்
சுமைகளை நிரப்பிச் செல்கின்றன.

Page 24
44
புதிய சிந்தனை, புதிய மலையகம் DGROGNA) என்ற தொனிப் பொருளில் மத்திய O O O மாகாண கல்வி, கால்நடை போக்கு எழுததா GTIGT வரத்து அமைச்சர் திரு. எஸ்.அருள்சாமி யின் தலைமையின் கீழ் மத்திய
srfumor மாகாண சாகித்திய விழா மிகக் கோலா கலமாக நுவரெலியாவில் நடந்து
O முடிந்துவிட்ட இச்சந்தர்ப்பத்தில் பல் முறையில் வேறு சர்ச்சைகள் எழத்தொடங்கி
O O விட்டன. கெளரவிக்கப்படிட
இவ்விழாவானது முதன்முறையாக O வேறொரு தலைமையின் கீழ் நடந்தது சாகித்திய ஒருபுறமிருக்க இவ்விழாவில் கெளர விக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக முணு விழா முணுப்புகளும் எழாமலில்லை. இதில் வேடிக்கையென்னவென்றால், மிக - LT6) சங்குபிள்ளை நீண்ட காலம் திட்டமிடப்பட்டுத் தங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தும் விருதுகளை அன்று வழங்கிய போது யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் தகுதியானவர்கள் மற்றும் உண்மையானவர்களுக்கு இவ்வாறான விருதுகளை அளித்து அவர்களைகக் |கெளரவித்த போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் முணுமுணுப்புகள் வரத் தொடங்கி விட்டன.
மலையக வரலாற்றிலே இதுவரை காலமும் நடைபெற்ற சாகித்திய விழாக் களிலேயே மிகவும் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் பாகுபாடற்ற முறையிலும் நடந்த சாகித்திய விழா இதுவேயாகும். இந்த விழாவானது முழுக்க முழுக்க மலையக இளைஞர்களின் பூரண ஒத்துழைப்புடனும் அவர்களின் அரிய பங்களிப் புடனும் ஜனரஞ்சகமாக நடந்து முடிந்தது.
மலையகத்துக்குக் கல்விப் பணி செய்தவர்கள், மலையக சமூகம் முன்னேறப் பாடுபட்டவர்கள் அனைவருக்குமே விருதுகுள் வழங்கப்பட்டன. மூத்த, இளைய புதிய கலைஞர்கள், எழுத்தாளர்கள், புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்கள், காவல்துறையில் தன் கடமையை மிகச் சிறப்பாகச் செய்தவர்கள் என்ற முறையில் |ஏறக்குறைய 60 பேர் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்த மலையக சாகித்திய விழா வானது ஏனைய மாகாணங்களிலும் பார்க்க மிகச் சிறப்பாக நடந்தேறியதை உண்மையிலேயே பாராட்டத்தான் வேண்டும். அதிலும் மிகவும் குறுகிய காலத்தில் அதாவது ஒன்றரை மாதங் களுக்குள் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் சில சில குறைபாடுகள் இருந்தாலும் கூட ஏற் கனவே நடைபெற்ற சாகித்திய விழாக் களிலிருந்து இந்த விழா முற்றிலும் மாறுபட்டிருந்தது.
"எனக்கு இவ்விழாவில் கெளரவம் கிடைக்கவில்லையென்பது உண்மை தான். நான் இத்தகைய விண்ணப்ப மெதுவும் அனுப்பவில்லை. இத்தகைய கெளரவங்களைக் கேட்டுத்தான் பெற வேண்டும் என்ற அவசியம் எனக் கில்லை. எனினும் இந்தக் கேட்டு வாங்கும் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்களைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும். ஏற்கனவே நடந்து முடிந்துள்ள சாகித்திய விழாக் களையும் தற்போது நடந்த விழாவை யும் சீர்தூக்கிப் பார்க்கும் போது இது சற்றுப் பரவாயில்லையென்றுதான் கூற வேண்டும். இதில் தேவையற்ற பந்தா, விண் ஆடம்பரங்கள் இருக்கவில்லை. இளைஞர்களிடையே ஒர் உற்சாகத்தை, சுறுசுறுப்பை காணக்கூடியதாக இருந்தது. அதாவது விண் கட்டுப் பாடுகள், பாதுகாப்பு வட்டங்கள் எவை யும் இருக்கவில்லை. பாகுபாடற்ற முறையில் மிகச் சரியாகக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையாக
( ,
卤T西丁
অস্ত্ৰ விருதுகள் வழங்கப்பட்டதை அவ தானிக்க முடிந்தது. "புதிய சிந்தனை, புதிய மலையகம்" என்ற தொனிப் பொருளில் நடந்த இவ்விழாவானது உண்மையிலேயே வித்தியாசமாக
இருந்தது."
இது ஒரு மூத்த மலையக எழுத் தாளரின் கருத்தாகும். மிகத் துடிப் புள்ள மலையக மக்களுக்கு எதை யாவது செய்தேயாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படும் தற் போதைய மத்திய மாகாணக் கல்வி யமைச்சர் மலையகக் கலைஞர்களைச் சரியான முறையில் கெளரவித்ததன் மூலம் அவரின் சிந்தனையில் ஒருபடி மேலே சென்று விட்டார் என்றே கூற வேண்டும். வீழ்வது நாமாக இருந் தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
Distributor of
GLASS WARE PORCELAIN WARE & GIFTTEMS
T.P. : O77-324,1173
كنيكتسع سنتسكيتمتعتخ

Page 25
ஒஸ்லோ நோக்கி லோகன் பயணமாகிய பின்பே மீனலோஜினி தலைகீழாக மாறிப் போனாள். சமூக நிலைப்பாட்டின் உச்சியிலே தான் ஒருத்தி மட்டுமே தனித்து வந்து விட்டிருப்பதாகக் கருதினாள். ஸ்கன்டிநேவிய நாடு பற்றிக் கண்டு கேட்டிராத அறிவிலிகள் மத்தியிலே ஒரேயொரு மேதை என்கிற புதிய போதை தலைக்கேறிக் கிறங்கிப் போனாள்.
பிரதீபன் யூரோ டொலரட உள்நாட்டு நோட்டின் நூற்றியிருபது பங்கு கூடியதின் தாற்பரியத்தை விலாவாரியாக விளக்கித் தர்க்கித்த போதெல்லாம்
KN லோகன் உள்வாங்கிக் கிரகித்ததோ ஏது
O ఖ மில்லை. நமது நாடுகளின் உற்பத்தி éo களுக்கு உயர்விலை வகுத்து ஏழை நாடு v. களைச் சுரண்டி ஏப்பம் விடுகிற விவகாரமே
ട് \y 欲
நாணய வேறுபாடு என்கிற வாதம் லோகனிடம்
எடுபடுவதாயில்லை. நுகர் பண்ட வெறியிலேயே திளைத் தான். டிஜிற்றல்ஸ் லாகிரி மயக்க மூட்டுவதை உணர்பவனாகத் தெரியவில்லை.
வொயில் சேலைகளுக்கே வக்கில்லாமல் கசக்கிப் பிழிந்து மாற்றி மாற்றிக் கட்டியவள் சல்வார் கமிஸ9கள் சமுத்திரம் போல் வாங்கி இறைத்தாள். வீடு முழுவதும் ஆடம்பரமும் அட்டகாசமும் ஜொலிக்கும்படி மாற்றி வைத்தாள். பிரதீபன், “றிலாக்ஸ் மூட்டிலை உப்புடி ரீவி பாக்கிறதையும் விட திரையரங்கிலை பாத்தா எக்கச்சக்கமாய் வேறுபடுந் தெரியுமா?” என்று வாதிடுவது புரிந்ததும் புரியாததும் போலிருப்பாள். அறிவுநிலை மங்கி மறைந்தொழிவது சர்வ சாதாரண மானது.
எளியவனாகப் பிறப்பினும் இளையவனாகப் பிறந்திடக் கூடாது என்பதை மெய்ப்பித்தது போன்று பிரதீபனை ஒதுக்கி லோகனைத் தான் மிகுந்த பிரயாசைப் பட்டு ஆளாக்கிப் படிப்பித்து வளர்த்தார் சுந்தரத்தார். பந்த பாசங்களை ஒரு சேரக் கொட்டித் தனக்கான வசதி வாய்ப்புகளை ஒறுத்து வாழ்ந்தவர். கரைசேராக் குமர்கள் இருவர் இவனது உழைப்பிலே நம்பியிருக்க இவனுக்கு முதலில் கால்கட்டுப் போட்டு அழகு பார்த்தவர்.
வெளிநாட்டுக்குப் புருஷன் கிளம்பிய கணத்திலேயே அடிமனதில் புதையுண்ட எண்ணங்கள் எல்லாமே அவரது மருமகளுக்குக் கிளறியிருந்தன. அவற்றிற் கெல்லாம் வாய்க்கால் வடித்தெடுத்திடச் சிறீயன் கிடைத்தான். அவளது ஈர்ப்பினால் எந்நேரமும் சிறியனின் புத்தம்புதுப் பைக் விட்டு வாசல் முகப்பிலே நிற்கலாயிற்று.

லோகனின் குஞ்சுக் குழந்தை விபரம் புரியாமல் அப்பா - பெப்பே - மாமா என்றெல்லாம் சிறீயனைக் கூப்பிடும்படியும் ஆயிற்று. சிறியனின் சுறுசுறுப்பும் பரபரப்பும் மீனலோஜினிக் குத் தேவையாயிருந்தது. ஹெல்மட் கூட அணியாமல் குஞ்சுக் குழந்தையை மடியில் வைத்தபடி போகவரப் போக்கு வரத்துக்கான தேவையாயுமிருந்தது.
இடக்கையில் அவளது குழந்தையை எடுக்கியபடி அவளோடு சேர்ந்து நின்றெடுத்த படச்சுருளை அவளே நோர்வே வான் அஞ்சலில் அனுப்பியுமிருந்தாள்.
"என்னப்பா உம்மடை அவர்
எழுதுறவர்?’ கிண்டலடித்துத் தோழி ரூபி கிண்டிக் கேட்டாள்.
“என்னிலை வாகக் றைய
அவருககு நம்பிக்கையிருக்கு”
"அப்பிடியெண்டா?
"அப்பிடித்தான் எழுதுறார்.”
கலகலவென்று தோழி சிரித்தாள். கடைவாய்ப் பல்லெல்லாம் தெரியவே வைத்தாள். ரூபியின் பொறாமைத் தீயை மூட்டி வைத்தாள். ஊரெல்லாம் பரவினால் அது பெருமையாகிடும் போலிருந்தது.
காஸ் சிலிண்டர் சமையல் |தேவைக்கெல்லாம் சிறீயன் தான் காவிக் கொண்டு போய்த் திரும்புவான். ஸிலிண்டர் தீர்ந்து போனது மே
|சமையல் தடைபட்டுப் போய்ச்
配汤工 சாப்பாட்டுத் திண்டாட்டம் உரு வெடுத்து விடும். சில சமயத்தில் மிக்ஸியும் ரிப் பெயர் கொள்ள நேரிடும். சிறீயன் சளைக்
பண்ணிக்
காமல் உதவினான்.
வீட்டின் முற்றத்து ஓரங்களில் வளர்ந்த புல்லை நறுக்கிக் கத்தரித்து அழகு படுத்திட லோன் மெஷின் கூட மீனலோஜினி வாங்கிக் கொண்டாள்.
பித்துக்குளியின் பக்திப் பாடல் சீடியை அமுக்கி காதுத் தூவாரங் களையும் அடைத்துப் புதிய குட்டி சீடி பிளேயரில் பரவசமடைந்து இரசித்த சுந்தரத்தாரிடமிருந்து வெடுக்கென்று பிளேயரைப் பிடுங்கிக் கொண்டாள். நச்சரித்தபடி எங்கோ மறைத்திடக் கொண்டு சென்றாள். தன் மகன் வீட்டுப் புதுமை தனக்கு அந்நிய மாவதை அவரால் தாங்கிடவும் முடிந்த தில்லை. வயல்வெளி தேடி ஒதுங்கிக்
கொண்டார்.
அங்கிருந்த பூச்செடிகளுக்கு நீண்ட ஹோர்ஸ் பைப் வைத்தே தண்ணீ ரூற்றலும் நடைபெற்றது. அவையும் வாடி விடாமல் பாதுகாக்கப்பட்டது.
எரிகிற வீட்டில் பிடுங்கியதே லாபம் என்பது போல் சிறியனின் தாய்க்
காரி அங்குள்ளதை ஒவ்வொன்றாக
அமுக்கத் தொடங்கினாள். சொந்த மாமியாரை ஒதுக்கி இந்த மாமிக்கு உடுத்தப் பனாரிஸ் பட்டுகளை ஏகாந்த |மாகத் தாரை வார்த்துத் தள்ளினாள் மீனலோஜினி. வந்த வெள்ளம் இருந்த

Page 26
வெள்ளத்தையும் அள்ளியடித்துக் கொண்டு போனது போலிருந்தது.
சூட்டோடு சூடாகச் சிறியனுக்கும் நல்ல சம்பந்தம் செய்து இங்கிருந்து தொடர்புகளை ஒட்டவே அறுத்து லாபமே சம்பாதிக்கும் யோசனை தாய்க் காரிக்குத் தூபமிட்டது.
"அவரு க்கு இப்ப என்ன அவசரம்?” மீனலோஜினி தடங்கல் மொழிந்தாள்.
“வெளிநாட்டுக்குப் போற பொம் பிளைக்கு நான் பேந்தெங்கை போற"
காற்றுள்ள போதே காரியமாற்றும் தன் பக்கத்தின் நியாயத்தை முன் னெடுத்தாள் தாய்க்காரி.
'மழைக்கு முளைக்கிற காளான்
மாதிரியா விடுவழிய வாற"
'மழை பெய்யேக் கை தான் உள்ளுக்கை வாற. இல்லாட்டி ஏன் வாறம்.”
சொல்லிய போது மீனலோஜினி பெருமூச்சையே விட்டாள்.
பொன்னிற முன்னங்கால்களால் நிலத்தைப் பிராண்டி கழுத்தை உசுப் பியதும் மீனலோஜினிக்குப் புரிந்து விட்டது. சங்கிலியை அவிழ்த்து விட்டாள். நாய்க் குணமறிந்து முறுவலித்தாள். நாயோவெனில் ஒரே ஒட்டமாக ஓடி மதிலோரத்தில் சலங் கழித்து ஆசுவாசப்பட்டது.
கட்டியிருந்த வெள்ளிச்
பிரதீபனின் தலைக் கறுப்புக் கண்டதும் மிருதுவாக முனகியது. மயிலிறகு வருடுதல் போல் நாய் சிலிர்ப்பைக் காட்டியது. உணர்கொம் பெல்லாம் உள்வாங்கி விட்ட பிராணி யானது.
சிறியனுக்கு சரிப்பட்டு வராதது பிரதீபனின் வாதப்பிரதி வாதங்கள். சரியான கருத்தெல்லாம் வானத்தி லிருந்து வீழ்ந்து கொண்டிருப்பன அல்ல என்பதில் மிகத் திடமான நம்பிக்கை கொண்டவன். கல்லெறியக் குனியும் முன்னால் ஒட்டமெடுத்திடும் நிலைப்பாட்டில் சிறியன். மீனலோஜினி போட்ட தாளங்களுக்கு ஆட்டமடித்த சிறியனின் இடத்தை இட்டு நிரப்பும் இன்னொருத்தன் போலாகாமல் தனித்தே ஜொலித்தான்.
ஒஸ்லோ போகும் அவகாசம் சிறியனுக்குக் கிட்டினாலும் இவனுக் குக் கிட்டுவதாயில்லை. தூரத்துப் பச்சை கண்ணுக்கழகு.
ஈழத்தின் புனைகதை
UaDLiluaraflasdf
அன்று தொட்டு இன்றுவரை இந்த மண்ணைச் செழுமைப்படுத்தி எழுதி வந்த பல சிருஷ்டி கர்த்தாக்களைப் பற்றிய விமரி 56 ரீதியான ஆழமான தொடர் கட்டுரை ஒன்று ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரைப் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான எழுதுகின்றார். இலக்கிய மாணவர்கள், தரமான சுவைஞர்கள் இத்தொடரைத்
தொடர்ந்து படிக்கத் தவறக் Al:

கனிவுமதியின் “கeடனந்தரை" நூல் வெளியீடு நிகழ்விலிருந்து.
|- ஏ.எஸ்.எம்.நவாஸ்
“பாலும் பஞ்சணையாய் வாழ்ந்தவரல்ல கவிஞர் கனிவுமதி.
கூழும் குடிசையுமாய் வாழ்ந்தவர்.”
மலையகம் தந்த கவிஞர்கள் பரம்பரையில் தலை முகம் காட்டித் தனதாளுமை யால் கவிதைகள் தீட்டித் தன் பத்து வருட இலக்கிய நுழைவு அனுபவத்தில் ஏற்கனவே மல்லிகைப் பந்தல் மூலமாக அப்புறமென்ன” நூல் கண்ட குறுகிய காலத்தில் "கட்டாந்தரை கவிதை நூலும் கனிதா பதிப்பகம் மூலம் வெளியிடப் பட்டு, கடந்த 19. 02.0 6 இல் |கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அநேக இலக்கியச் சுவை
i kra" .i ai hall.
ஞர்கள் மத்தியில் இதன் நிகழ்வும் நடந்தேறியது.
இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த GL g T 6) ff) u † சோ.சந்திரசேகரன்
பல உதாரணங்
களுடன் இக்கவிஞனை அடையாளமிட்டார்.
"கனிவு தனது உள்ளார்ந்த ஆற்றல், தனது ஆக்கத் திறன், படைப்பாற்றல் ஆகிய தனது ஆளுமைகளால் கட்டாந்தரை மூலமாக நூல் படைத்துள்ளார்” என்று கூறிய அவர் தற்போதைய கல்வித்துறை பற்றியும் விமர்சித்தார்.

Page 27
ā
“ஒரு எழுத்தாளன் ஆகுவதற்கோ, கவிஞன் ஆகுவதற்கோ அதற்கான கல்வியை வழங்குகின்ற கல்விக் கூடங்கள் உலகில் எங்குமே கிடையாது. இங்கே வீற்றிருக்கிற டொமினிக் ஜீவா அவர்கள் சிறுகதை அல்லது நாவல் எப்படி எழுதுவது என்பதை எந்தப் பள்ளியிலும் படித்தவரல்ல. கம்பன் பன்னிரண்டாயிரம் பாடல்களைப் பாடி யுள்ளான். தொல்காப்பியர் மூன்று எழுத்ததிகாரம் என்றெல்லாம் வெளி யிட்டிருக்கிறார். இதேபோன்று சங்கப் புலவர்கள் கூட எட்டுத் தொகை பத்துப் பாட்டு என்றெல்லாம் எழுதி யிருக்கிறார்கள். இப்படி இலக்கிய வரலாற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கனிவுமதி என்ற கவிஞன் எப்படி உருவாகினான் என்பது அவருடைய பெற்றோருக்கே தெரியாது. இதுதான் படைப்புத்திறன். எம்முடைய கவிஞ ருக்கு ஒரு வழிகாட்டி இருந்திருக் கிறார். அவரது ஆத்ம நேசிப்புக் கவிஞ ரான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். நல்ல சாதனைகளைச் செய்த வர்களைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். நடிகர்களையோ, மட்ட ரக அரசியல்வாதிகளையோ நாங்கள் உதாரணப் புருஷர்களாக கொள்ளக் கூடாது.
கனிவுமதியின் இலக்கிய
ஆற்றலைக் கொண்டுதான் இந்த நூல் வெளிவருகிறது” என்றும் கூறினார்.
அப்புறமென்ன" என்ற கவிதைத் தொகுப்பை அற்புதமான அச்சு
பந்தல் மூலமாக வெளியிட்டு. கனிவு மதி என்ற கவிஞனை உரக்கச் சப்தமிட வைத்தவர் சந்தேகமின்றி டொமினிக் ஜீவா அவர்கள் தான். ஒவ்வொரு வருக்கும் ஓர் அறிமுகம் தேவை என்பதைப் போல் முதல் நூல் அறி முகம் மூலமாகப் பல முகங்கள் இக் கவிஞனைத் தேட வைத்ததற்கு அப்புற மென்ன? ஒரு சான்றாகும். டொமினிக் ஜீவா தனது வாழ்த்துரையில் -
"மல்லிகையை 41 வருஷங்களுக்கு
முன் நான் கையில் கொண்டு திரிந்த
பொழுது கடைசிப் பக்க விளம்பரக் கட்டணமாக இருநூறு ரூபாவை யாரும் தரமாட்டார்கள். கவிஞனையோ, எழுத் தாளனையோ உற்சாகப்படுத்துகிற தன்மை அன்று அவ்வளவாக இருந்த தில்லை. அந்த மாதிரி ஒரு நேரத்தில் எனக்கு கை கொடுத்து உதவிய சேவகன் செட்டியார் மறக்காத ரங்க நாதனை இந்த நிகழ்வில் நினைவு
கூர்ந்து பார்க்கிறேன்.
அப்புறமென்ன” மல்லிகை வெளி யீடாகக் கனிவுமதியின் தொகுதியை வெளியிட்ட போது அன்று உங்கள் அனைவருடைய முகங்களையும் அவதானமாகப் பார்த்தேன். அந்த இளைஞனுக்குக் தாங்கள் அனைவரும்
காட்டிய ஆர்வம் இதே மண்டபத்தில்
நடந்த அந்த நிகழ்வை நினைவூட்ட விரும்புகிறேன். கூட்டம் கூட்டமாக

வந்து அந்தக் கவிஞனுக்கு அளித்த மரியாதையை எண்ணி அன்றே நான் பூரிப்படைந்தேன். இது நம் சமூகத் திடம் இருக்கின்ற ஒற்றுமை அக்கறை என்றும் கூட சொல்லலாம்.
கனிவுமதி வந்ததல்ல முக்கியம்.
மதிபுஷ்பா ஒவியராக வந்ததல்ல பிரமாதம்.
இந்தச் சமூகத்துடைய விடி வெள்ளியாக ஓர் இளைஞனைக் |கொண்டு வந்து இந்த மண்ணுக்குத் தந்துள்ளீர்களே. இதுதான் பெருமை” என்றார்.
இவ்வுரைகளின் போது கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த திரு. |எஸ்.சிவநிர்த்தானந்தாவின் உரை பார்வையாளர்களை ஈர்த்தது என்பதில் வியப்பில்லைதான். அவரது உரை யிலிருந்து -
66
அதாவது தந்போதைய காலத்தில் பொருளாதார வசதிகள் எப்படியிருந் தாலும் பண்டைக் காலத்தில் நாங்கள் கவிஞர்களைக் கடனாளிகளாகத்தான் காண்கிறோம். இலக்கியவாதிகள் எப்போதும் கடனாளிகளாக இருந்தது பற்றி மக்களிடையே பலவாறான கருத்துக்கள் இருப்பதுண்டு. ஆனால் இப்போது அப்படியல்ல. காலங்கள் மாறி வருகின்றன. உண்ம்ையில் கனிவு மதியின் "கடன்" என்ற கவிதையை வாசிக்கும் போது பலவாறான கடன் களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கனிவுமதி உண்மையில் ஒரு யதார்த்த வாதி.
51 தான் பட்டுக் கெட்ட அனுபவங் களையே தன் கவிதையில் சொல்ல முற்பட்டிருக்கிறார். பெண்ணியம் சார்ந்த இவரது கவிதைகள் நம்மை அதிர வைக்கிறது."
“அதிக நேரம் பேசமாட்டேன். ஐந்தே நிமிடங்கள்தான் பேசப் போகி |றேன்” எனப் பேச ஆரம்பித்த ஞானம் சஞ்சிகை ஆசிரியர் திரு. ஞானசேகரன்,
"கனிவுமதியின் திறமை பற்றி இங்கு பலரும் பேசினார்கள். அவர் மீது எனக்கு ஒரு கோபம் உண்டு. அவர் நன்றாக வரையக் கூடியவர். எனது "ஞானம்" சஞ்சிகைக்கு கவிதை களும், ஓவியங்களும் அனுப்பி வைப் |பார். அவரை ஊக்கப்படுத்த வேண்டும் |என்ற நன்நோக்குடன் ஞானத்தின் தலைமை ஒவியராகவும் அவரை நான் நியமித்தேன். ஞானத்தின் அட்டைப்
படங்களையும் அவரே வரைந்து தந்தி
ருந்தார். ஆனால் திடீரென "ஒவியங் கள் வரையமாட்டேன்’ என்ற முடி வுக்கு வந்தார். அவரது 'கட்டாந்தரை" தொகுப்பைப் பார்த்த போது எனக்கு
கோபம் இரட்டிப்பாக வந்தது. ஏனென்
|றால் அவரது ஓவியங்களை இதில் காண முடியவில்லை. புகைப்படங் களை எடுத்துப் போட்டிருக்கிறார். ஒவியங்கள் வரைய மாட்டேன் என்று இவர் சொல்வதற்குக் காரணம் அரச மட்டத்தில் ஒவியர்கள் அங்கீகரிக்கப் சாஹித்திய விருதுகள் ஒவியர்களுக்கு வழங்கப்
படுவதில்லையாம்!
படுவதில்லை என்ற அவரது மனக்
குறை காரணமாக இப்படி ஒரு

Page 28
配汤区工
முடிவை எடுத்திருக்கிறாராம்! கனிவு மதிக்கு சொல்கிறேன். கடமையைச் செய்யுங்கள். மற்றவை உங்களைத் தேடிவரும் "' முடித்துக்
கொண்டார்.
6T GT
"கனிவுமதிக்கும் கவிதை உதிக்கும்”
"ஒ. வியந்தேன் - உன்
ஒவியந் தேன்!” என்று பல ஆழமான வரிகளைக் கனிவுமதியை வாழ்த்தும் கவிதையில் கவி வித்தை காட்டினார் கிண்ணியா அமீர்அலி. அரசியல் பிர
குமர குருபரன் போன்றோரும் உரை
முகர்கள் மனோகணேசன்,
யாற்றினர்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமான நூல் வெளியீட்டை ஆரம்பித்து "லங்கா ஸ்டீல்" நிர்வாக இயக்குநர் திரு. எம்.சுப்பிரமணியம் முதல் பிரதியை
வழங்க திரு. எஸ்.முத்துசாமி பெற்றுக்
கொண்டார். இந்நூல் இங்கு வெளி யிடப்பட மிக முக்கிய காரணமாக இருந்தவர் "ஜெம்ரிச் த.கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்தி அறிவிப்பாளர் கே.குணாவின் நிகழ்ச்சித் தொகுப்பு ஆரம்பம் முதல் முடிவு வரை அவரது தமிழ் உச்சரிப்பு தித்திப்பாக இருந்தது. ஒரு வளர்ச்சிக்குரிய அறிவிப்பாளராக அவரை இனங்காட்டியது.
எஸ்.
"உடல் உறுப்பறுந்து போனாலும் மனங் களங்கேன். இந்தச் செறுப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன்.
நெருப்பாற்றையும் நீந்தத் துணிந்தேன் கொதிக்கும் தார் எனக்கு குளிர் நீர்” என மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரி களைத் தொட்டு ஆரம்பித்தது கனிவுமதியின் ஏற்புரைச் சுருக்கம் -
"ஒரு கை மண்ணை மட்டும் கண் முன் கொண்டு வந்த இந்தச் சிறிய வனின் கட்டாந்தரைக் கவிதை நூலுக்கு முன்னுரிமை தந்து வாழ்த்தியமைக்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்." என்றார்.
எளிமையின் அடையாளம் கனிவு மதி என்றாலும் அவர் சம்பந்தப்பட்ட நூல் நிகழ்வோ வலிமையுடையதாக இருந்தது என்றால் அது மிகையன்று. இந்நிகழ்வு குறிஞ்சித் தென்னவன் அரங்கில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. இதில் கவனிக்கப்பட வேண் டியது என்னவென்றால் மறைந்த மலை யகத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவ ரான கவிஞர் குறிஞ்சித் தென்னவன்
அவர்களுக்கு மரியாதை செய்யும்
வகையில் அவரது பெயரை இவ்விழா அரங்கிற்கு சூட்டியிருந்தமை நம் அனைவரது மனதையும் வசீகரித்தது எனலாம்.
ஓர் இளம் கவிஞனின் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்குச் சென்று வந்த மனநிறைவு என்னைப் போல் அனை வருக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்பதில்
துளியும் ஐயமில்லை.

சித்திலெவ்வை மரைக்காரின்
அலன்பே சரித்திரம்
பேராசிரியர் அ.சண்முகதாஸ்
1. முன்னுரை
|எங்களுடைய தமிழ் நாவல் வரலாறு ஒரு நூற்றாண்டைத் தாண்டி விட்டது. முதல் தமிழ் நாவல் எது என்பது பற்றிக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அலன்பே சரித்திரம் என்னும் நூலைப் பதிப்பித்து (1974) எமக்கு வழங்கிய
89). 另 கு வழ னாப் எஸ்.எம்.கமாலுதீன் ஆராய்ச்சி ( b 1 மலர் 3, 1972, பக். 30 தழில்
639I 4کے 芦驴 திரு. தோத்தாத்திரி கூறிய ஒரு கருத்தினைத் துணையாகக் கொண்டு அஸன்பே சரித்திரமே தமிழ்ப் புனைக்கதைத் துறையிலே முதலாவது இடத்தைப் பெறுகிறது என்று கூறியுள்ளார். திரு. தோத்தாத்திரி கூறிய கருத்து வருமாறு :
|
கமலாம்பாள் சரித்திரம் இரண்டாவது தமிழ் நாவலென்றாலும் உண்மையி லேயே இதைத்தான் முதல் நாவல் என்று கூறுதல் தகும். வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் நாவலுக்குரிய சூழலை உருவாக்கவில்லை. ஓர் அற்புத நவீன வகையைச் சேர்ந்தது அது. ஆனால் ராஜம் ஐயர் நடப்பியல்பிற்கு ஏற்பக் கதையை அமைக்கிறார். அவர் சமூக மக்களைக் குறைகளுடனும் நல்லவை கெட்டவையுடனும் காண்கிறார்."
திரு. தோத்தாத்திரியின் கருத்து ஏற்புடையதாயின் ஜனாப் கமாலுதீனுடைய கருத்தும் ஏற்புடையதாகும். கமலாம்பாள் சரித்திரம் நடப்பியல்பிற்கு ஏற்ற நாவல் என்று கொள்ளின், அஸன்பே சரித்திரம் நாவலும் நடப்பியல்கிற்குப் பொருந்துவ தாகவே அமைந்துள்ளது. கமலாம்பாள் சரித்திரம் நாவல் 1886ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. ஆனால், அஸன்பே சரித்திரம் 1885ஆம் ஆண்டு வெளிவந்துவிட்டது. ஆயின், அஸன்பே சரித்திரம் ஈழத்தின் முதலாவது நாவல் என்பது மட்டுமன்றி தமிழிலே முதலாவது நாவலாகவும் அமைகின்றது. இவ்விடத்தில் இன்னொரு சிக்கல் உருவாகின்றது.

Page 29
函E
Parley the Porter GT Gör gp við ஆங்கில நாவலின் தமிழ் வடிவமாக காவலப்பன் கதை என்னும் நாவல் 1856இல் வெளியாகியது என்று அறிகிறோம். அண்மையில் வெளிவந்த ஞானம் (நவம்பர் 2002) இதழில் விவாத மேடைப் பகுதியில் திரு. வி.சண்முகலிங்கம் (கரவெட்டி) இது பற்றிக் குறிப்பிடுவதை இங்கு தருகிறேன் :
“முதல் தமிழ் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் 1879ஆம் ஆண்டு மாயூரம் ச.வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டது என்றும் ஈழத்தின் முதல் நாவல் அஸன்பேயுடைய கதை 1885 ஆம் ஆண்டு சித்திலெவ்வை மரைக் கார் என்பவரால் எழுதப்பட்டது என்றும் கூறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் 1856ஆம் ஆண்டிலேயே காவலப்பன் கதை" என்ற ஈழத்துத் தமிழின் முதல் தமிழ் நாவல் வெளி வந்து விட்டது எனக் கூறுகிறார் மு.கணபதிப்பிள்ளை. காவலப்பன் 5Gogs Parley the Porter GTGörp iš Gao நாவலின் தமிழ் வடிவமாகும். இது மொழிபெயர்ப்பு அல்ல. வால்மீகி இராமாயணம் தமிழ் வடிவம் பெற்று கம்பராமாயணமாக வந்து, அதனைத் தமிழுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது போல் இந்தக் காவலப்பன் கதையின் தமிழ் வடிவத்தையும் நாம் ஏற்றுக் கொண்டு இந்நாவலைத் தமிழின் முதல் நாவலாகக் கொள்ள வேண்டும் என்று செங்கை ஆழியான் அபிப்பிராயப்படு கிறார்.”
ஈழத்தின் முதல் நாவல் எனப்படும் காவலப்பன் கதைப் பிரதி இதுவரை யாருடைய கையிலும் கிடைத்ததா யில்லை. இந்நூல் பற்றி நா.சுப்பிர மணியம் (ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், 1978, பக்.9) பின்வருமாறு கூறுகிறார் :
“Parley the Porter , ši Gav நூலின் தமிழாக்கமாக அமைந்த இது யாழ்ப்பாணம் ‘ரிலிஜஸ் சொசைட்டி? யின் வெளியீடாகும். ஹன்னா மூர் என்பவர் இதன் ஆசிரியர். இந்நூல் பார்லே என்ற சுமை தூக்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புகளுடன் தமிழ்
நாட்டில் வெளிவந்துள்ளது. இந்நூற்
பிரதிகள் கிடைக்கவில்லை. இதனை நாவல்" என்று கொள்ளலாமா? என்பது ஆய்விற்குரியது."
கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா? நாவலில்லையா? என்று எப்படிக் கூறலாம்? எனவே கதையை விட்டு அஸன்பே சரித்திரத்துக்கு வருவோம்.
காவலப்பன்
அஸன்பே சரித்திரம் ஈழத்தில் தோன்றிய முதல் தமிழ் நாவலாகும்.
தோத்தாத்திரி, கமாலுதீன் போன்றோர்
இவ்வாறே அபிப்பிராயப்படுகின்றனர். நா.சுப்பிரமணியம் இது தமிழ் நாவல்
இலக்கிய வரலாற்றில் இரண்டாவது
எனக் கூறியுள்ளார். முதலில் இது அஸன்பேயுடைய கதை என்றே 1885ல் கொழும்பு முஸ்லிம் நேசன் அச்ச

கத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது. "இஃது இலங்கை சுப்பிறிம் கோட்டுப் பிறக்றரும், முஸ்லிம் நேசன் பத்திராதிபரும் ஆகிய சித்திலெவ்வை மரைக்கார் முகம்மது காசீம் மரைக் காரவர்களால் இயற்றியது" என்று நூல் முகப்பிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நூலின் இரண்டாவது பதிப்பு
அஸன்பேயுடைய சரித்திரம் என்ற தலைப்பில் 1890இல் சென்னை அர்ச். சூசையப்பர் அச்சுக் கூடத்தில் அச்சிடப் பட்டு பா.முகம்மது அப்துல்லா சாகிப் அவர்களால் வெளியிடப்பட்டது. பின்னர் புதிய பதிப்பொன்று 1974இல் திருச்சிராப்பள்ளி இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக வெளியீடாக ஜனாப் எஸ்.எம்.கமாலுதீன் அவர்களுடைய அறிமுகவுரையுடன் வெளிவந்தது. அறிமுகவுரையில் -
'இப்போது வாசகர்களுக்கு நாம் வழங்கும் இப்பதிப்புப் பல தவிர்க்க முடியாத காரணங்களால் இனம் காணாத ஒரு பதிப்பிலிருந்தே உருவா கின்றது. இன்ஷா அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் மூல நூலின் மறுபதிப் |பொன்றை வெளியிட முடியுமென்று நம்புகிறோம்."
என்று குறிப்பிடுகின்றார். 1974இல் இந்த முன்னுரையை ஜனாப் கமாலுதீன் எழுதும் போது “தமிழ் நாவல் வரலாற் றில்; தமிழகத்திலும் ஈழத்திலும் முன் னோடிகளாயமைந்த நாவல்கள் பற்றிய
Eg. த ஆய்வில் இதுகாறும் அறிஞர் சித்தி லெவ்வையின் அசன்பேயுடைய கதை"
配江国
இடம்பெறவில்லை என வருத்தப் பட்டுக் கூறியுள்ளார். ஆனால், பிற் |காலத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆய்விலே அறிஞர் பலர் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியவுடன் அறிஞர் சித்தி லெவ்வை போன்ற அறிஞர்கள் இனங்காணப்பட்டனர். அவருடைய "அஸன்பேயுடைய கதை" நுணுக்க ஆய்வுக்கும் உட்படுத்தப்படுகின்றது.
2. அஸன்பே சரித்திரக்
கதை
மிசுறு தேச அரசரின் மந்திரிமார் களில் ஒருவரான யூசுபு பாஷா என்பவருக்கும் குல்னார்பது என்னும் பெண்ணரசிக்கும் பிறந்த பிள்ளை பதினாறாம் நாளில் கடத்திக் கொண்டு போகப்படுகின்றது. அப்பிள்ளை பொம்பாய்க்குக் கொண்டு செல்லப் பட்டு ஜகுபர் - ஆயிஷா தம்பதிகளிடம் வளர்ப்பதற்காகக் கொடுக்கப்படு கின்றது. அழகான அப்பிள்ளைக்கு அஸன் என்னும் பெயர் சூட்டப்படு கின்றது. அப்பிள்ளை வளர்ந்து வரும் போது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியினால் தந்தை காணாமற் போய் விடுகின்றார். தாய் இறந்து விடு |கின்றாள். ஏதிலியாகி விட்ட அஸனை அலி என்பவன் தான் ஜகுபருடைய சகோதரன் என்று கூறி அவனைப் பாது காப்பதாக ஒப்புக் கொள்கின்றான். அஸனுடைய தாய் இறக்கவும், தந்தை காணாமற் போகவும் காரணமாயிருந்த இபுறாகீம் என்பவனும் அலியும்

Page 30
56
சேர்ந்து சதி செய்து அஸனை ஒரு மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டார்கள். எனினும், அஸன் அந்தத் துன்பத்திலிருந்து தப்பி வந்தபோது மீண்டும் அவனைக் கொல்வதற்கு இபுறாகீமும் அலியும் சதி செய் கிறார்கள். இத்தடவை அஸன் ஊரை விட்டே ஓடிக் கல்கத்தாவுக்குச் சென்று விடுகின்றான். இவன் இவ்வாறு ஒடும் போது தன்னுடைய நண்பன் காசிமின் உடைகளைத் தான் அணிந்து கொண்டு தன்னுடைய உடைகளைச் காசிமுக்குக் கொடுத்து விட்டுச் சென்றான். காசிம் அஸனைக் கொன்று விட்டான் என இபுறாகீமும் அலியும் பொய்ச் சாட்சியம் கூறிக் காசிமைச் சிறைக்குள் தள்ளிவிட்டனர். கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த அஸனுக்கு இந்திய தேசாதி பதியின் உதவி கிடைத்து அங்கு உயர்கல்வி பெறுகிறான். இடையில் சிறையில் இருந்த காசிமின் வழக்கு நடைபெற்ற அன்று பொம்பாய்க்கு வந்து மகாதேசாதிபதியிடமிருந்து கொண்டுவந்த கடிதத்தை நியாயாதிபதி யிடம் கொடுத்துக் காசிம் தன்னைக் கொலை செய்யவில்லை என்பதை அஸன் நிரூபிக்கின்றான். பின்னர் தன் னுடைய உண்மையான தாய் தந்தை யரை அறிவதுடன் பாளினா என்னும் ஆங்கிலேயப் பெண் மதம் மாறி ஆமீனாவாக அவனுடைய மனைவியா கிறாள். அவனுடைய செயலினாலே ஒரு கள்வர் கூட்டமே பிடிபடுகின்றது. இதனால் அவனுக்கு "பே" என்னும்
பட்டம் சூட்டப்படுகின்றது. அவன்
அஸன்பே ஆகிறான்.
3: கதை நடத்தும் உத்தி
கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்று ஒரு தனிமனிதனின் கதை கூறுவதாகவே இந்நாவல் அமை கின்றது. எனினும், துப்பறியும் நாவ லிலே இடம்பெறும் எதிர்பாராத் திருப் பங்கள் போல் இந்நாவலிலும் பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. நாவலின் தொடக்கமே ஒரு திடீர் நிகழ்வினை ஏற்படுத்தி வாசர்களுடைய ஆவலினை ஆசிரியர் தூண்டி விடுகிறார். ஒரு பிள்ளை பிறக்கின்றது. அப்பிள்ளை பதினைந்தாம் நாளன்று காணாமற் போய்விடுகின்றது. இப்படித்தான் அஸ் னுடைய சரித்திரம் தொடங்குகின்றது. ஆவலைத் தூண்டிவிடும் வகையில்.
இது இப்படியிருக்க, முன்னவர் பிள்ளை காணாமற் போன மூன்றாம் நள்ளிரவில் ஒரு அபவியும் ஒரு அபவி பெண்ணும் அழகு பொருந்திய ஒரு குழந்தையையெடுத்துக் கொண்டு மிசுறு தேசத்தின் முக்கிய கரைதுறைப் பட்டண மாகிய அலக்ஸான்றிரியான் குடாவிலிருந்த புகைக் கப்பலில் வந்து ஏறினார்கள். அவர்கள் வந்தேறிச் சற்று நேரத்திற்குள்ளாக கப்பல் பயணப்பட்டு எட்டாம் நாளிலே பொம்பாய்க் குடாவிலே நங்கூரம் போடப்பட்டது. உடனே அந்தக் கப்பலிலுள்ள ஜனங்க ளெல்லோருமிறங்கினார்கள். அது போலவே அபவியும் அபவிப் பெண் ணுமிறங்கிப் பட்டணத்திற் போய்ச் சேர்ந்தார்கள். அன்றிரவு நான்காம்

சாமத்திலே அந்த அபவுதி அப்பிள்ளை,
ய்ைக் கையிலெடுத்து ஒப்புடன் நெஞ் சோடணைத்து அஞ்சியஞ்சிப் பம்பிப் பம்பி பொம்பாய்த் தெருக்கடோறுந் திரிந்தான். இப்படித் திரியும்போது ஓர் அறபி தன் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். இந்த அபவி, அவருடைய முகத்தையுற்றுப் பார்த்துச் சலாஞ் சொல்லி யாஷெய்கு, ஷெய்கே இந்தப் பாலகனையும்மிடத்தி |லொப்புவித்தார் நீர் உவப்புடன் வளர்ப் |பிரோவென்று கேட்டான். அந்த துறவி அதைக் கேட்டுத் திடுக்கிட்டுத் தடு மாறிப் பேச்சுக் குழறி ஆச்சரிய |முடையவராகி அந்தப் பிள்ளையை உற்றுப் பார்த்தார்."
.- (பக். 4)
என்று கதையை நடத்திச் செல் கிறான். எதிர்பாராத திருப்பங்கள் பல இந்நாவலிலே இடம்பெறுகின்றன. |ஒன்று வகை மாதிரிக்குக் காட்டலாம். கொலையிலிருந்து தப்பி கல்கத்தாவுக்கு அஸன் செல்வதாக ஆசிரியர் காட்டு |கின்றார். கல்கத்தாவில் என்ன நடந்தது? உயிர் தப்பி ஓடின அஸன் கல்கத்தா 'விலே வந்து அங்குமிங்கும் அலைந்து திரிந்தான், மூன்று நாட்களுக்குப் பின் ஒரு சம்பவம் நடந்தது. கல்கத்தா பட்டணத்தில் சிரேஷ்ட தேசாதிபதி யாகிய இராஜப் பிரதிநிதியின் அரண் மனைக்கு அருகிலே ஒரு பீடம் இருந்தது. அஸன் அதற்கருகாமையிலே நிற்கும்போது, ஓர் உயர்ந்த ஆங்கி |லேயத் துரைமகன், அமர்ந்த நடையாக நடந்து வந்து அந்தப் பீடத்தின் மேல்
භුණි. உட்கார்ந்தார். அவர் அங்கே சற்று iநேரம் இருந்து இளைப்பாறிய பின்பு எழுந்து போகும் போது தன் கையி |லிருந்த ஒரு சிறு குறிப்புப் புத்தகத்தை அப்பீடத்தின் மேல் வைத்து விட்டு எடுக்க மறந்து போய்விட்டார். கொஞ்ச நேரத்திற்குப் பின் அஸன் அப்பீடத் தின் மேலிருந்த புத்தகத்தைக் கண் |ணுற்று ஓடிப்போய் அதைக் கையி |லெடுத்துக் கொண்டு அந்தத் துரை மகன் போன திசையை நோக்கி ஓடினான். அவனால் அவரை அணுக முடியாத வேளையில் அவரைப் போல் இன்னொருவரைக் கண்டான். எனினும் புத்தியுள்ள அஸன் அவனிடம் ஏமாறா |மல் உரியவரிடம் அச்சிறு புத்தகத்தைச் சேர்த்து விடுகிறான். அத்துரைமகன் இந்திய தேச சிரேஷ்ட தேசாதிபதி. அவர் தொலைத்த புத்தகமோ பல இரா ஜாங்க இரகசியங்களைக் கொண்டி ருந்தது. இதனைக் கண்டெடுத்துக் கொடுத்ததால், அஸன் அவ்வூரிலுள்ள
உயர்கல்விச் சாலையிலே படிப்பதற்கு
ஏற்ற ஒழுங்குகளைச் செய்து கொடுக் கிறார். இந்நிகழ்வு இந்நாவலிலே ஏற்பட்ட ஒரு திருப்பமாகும்.
தொடக்க கால நாவல்களிலே காணப்பட்ட போதனைப் பண்பு இந் நாவலிலும் இடம்பெறுகின்றது. இபுறா கீமும் துறவி வேடம் பூண்ட திருடனும் அஸனை நித்திரையிலே தூக்க முயற் சிக்கும் சந்தர்ப்பத்தில் போலி வேடம் பற்றி ஆசிரியர் ஓர் அறிவுரை கூறு கிறார். அது,

Page 31
“இப்படியே எத்தனையோ குபுஜி களும், எகூதிகளும், வஞ்சனைக்காரர் களும், சையிதுமார்களைப் போலும், ஷேகுமார்களைப் போலும், மஸ்தான் களைப் போலும் கோலமெடுத்து இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள்ை மாற்றித் திரிவதை இன்றும் காணலாம்.” என்று அமைகின்றது.
4. கதைமாந்தர் உருவாக்கம்
அஸன்பே சரித்திரம் ஆசிரியர் கதை மாந்தர்களைப் படைக்குமிடத்து முடிந்த அளவு உண்மைத்தன்மை பேண முற்படுகிறார். சமூக, சமய, பண்பாட் டுப் பின்னணியிலேயே கதை மாந்தர் கள் உருவாகுகின்றார்கள். அவர்களு டைய குணநலன்கள் அவற்றினா
லேயே உருவாகின்றனவேயொழிய
காவிய நாயகர்கள் போலக் கரு விலேயே குறிப்பிட்ட குணங்களுடன் பிறந்தவராக உருவாக்கப்படவில்லை. அஸன் என்னும் பாத்திரத்தினை நோக்குமிடத்து இந்த உண்மை புலப் படும். கடத்தப்பட்டு சிறுபிள்ளையாக அஸன் வாழ்கின்ற போது அவனுடைய ஆறாவது வயதிலே ஓர் அறபி வாச லிலே வந்து தன் தாயுடன் ஏதோ கூறிய தையும், பின்னர் தாய் முக்காடிட்டு வெளியே போய்ச் சில நேரத்தின் பின் வந்ததும் பற்றி நாவலாசிரியர் விவரித்துவிட்டு, அஸன் பற்றி அவர்,
"இவைகளெல்லாவற்றையும் அஸன் பார்த்திருந்த போதிலும், அவன் சிறு பிராயமானபடியால் அவைகளை
அவன் கவனிக்கவில்லை." என்று பிள்ளைக்கேற்ற வகையில் அஸனை அவர் படைக்கிறார். பின்னர் அவனுக் குத் துன்பம் ஏற்பட்டது. எதிர்பாராத வகையிலே அவன் வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றுப் படிக்கலா னான். மாணாக்கனாக அஸனைப் படைக்குமிடத்து ஆசிரியருக்கு நன் னுால் (கி.பி. 10ஆம் நூற்றாண்டு) என்னும் தமிழ் இலக்கணத்தை எழுதிய ஆசிரியர் நன் மாணாக்கர் பற்றிக் கூறிய
இலக்கணம் நினைவுக்கு வருகின்றது.
அஸனுடைய குணங்களைப் பற்றிக் கூறுமிடத்து சித்திலெவ்வை மரைக்கார் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :
“பாடசாலைக்குக் குறித்த நேரத் திற் சென்று, ஆசிரியருக்கு வழிபாடு செய்தலில் வெறுப்பில்லாதவனாகி அவர் குணத்திற்குத் தக்கபடி அவரோடு பயின்று அவர் குறிப்பின் வழியே சார்ந்து, இருவென்று சொன்ன பின் னிருந்து, படியென்று சொன்ன பின் படித்து, மிக்க விருப்பத்தையுடையவனாகி சித்
பசித்துண்பவனைப் போல
திரப் பாவையைப் போல அசைவற்ற குணத்தினோடடங்கி, காதானது வாயா கவும், கவும், முன் கேட்கப்பட்டவைகளைத்
மனமானது கொள்ளுமிடமா
திரும்பிக் கேட்டு, அன்னப்பட்சி நீரைப் பிரித்துப் பாலைப் பருகுவது போல் குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டு பசுவானது புற்கண்ட ஒரே யிடத்தினின்று மேய்ந்து, வயிற்றை நிரப்புவது போல், உபாத்தியாயர் சொல்லுகிற பொருள்களை தன்

உள்ளத்தின் கண் நிறைத்துக் கொண்டு, அவர் போவென்று விடை கொடுத்த பின் இருப்பிடஞ் சேர்ந்து, பார்த்த வர்கள் இவன் கல்விக் களஞ்சிய |மெனச் சொல்லவும், ஆ1 ஹா! இவன் மிகவும் புத்திசாலியாயும், நற்குண நற்செய்கைகளினின்றும் வழுவாதவ iனாயுமிருக்கிறானேயென்று வியக்கும் படியாகவும் மிகவும் விரைவாய்க் கல்வி யிற்றேர்ந்து வந்தான்." (பக். 43-44)
ஜூகறா என்னும் பெண்ணினு டைய குணநலனை உண்மைக்குப் புறம் பாகாமல் ஆசிரியர் படைப்பதை இன் னொரு எடுத்துக்காட்டாக இங்கு தர லாம். தகப்பன், சுற்றத்தார் அவளைப் படித்த, நல்ல குணத்தினன் ஒருவனுக் குத் திருமணஞ் செய்து கொடுக்க வேண்டுமென எண்ணினர். ஆனால் தாயோ அவளை ஒரு மகா கோடீஸ் வரனுக்கே |கொடுக்க வேண்டுமென்று விருப்
கல்யாணம் செய்து
புற்றாள். இந்தப் பெண்ணும் அந்தக்
கனவிலே ஊறி, "தன்னையலங்கரித்துக் கொள்வதில் தினே தினே அதிகப் பிரியமுற்றுத் தன்னைச் சிங்காரித்துக் |கொண்டு, தன் கன்னிகைப் பருவத் திற்குத் தகாவண்ணம் அன்னிய பாலி யர்களோடு வேடிக்கையாகவும், பரிகாச மாகவும் கூசாமல் பேசி வந்தாள்.' (பக். 74) இவ்வாறு உருவாகிய அவள் நடத்தை முடிவில் அவள் தகாத முறையிலே கர்ப்பமுற்றுக் குடும் பத்திலே ஒரு பெரிய துன்ப நிலை 1யையே உண்டாக்கி விடுகிறாள்.
5. மொழிநடையும்
அணிநலனும்
தமிழிலே தோன்றிய தொடக்க கால நாவல்களைப் போல இந்த நாவ |லிலும் சித்திலெவ்வை மரைக்கார் |எழுத்து வழக்குத் தமிழ் நடையினையே பயன்படுத்துகிறார். ஆனால் அது பொதுவாகப் பத்தொன்பதாம் நூற் |றாண்டுச் செந்தமிழ் நடையல்ல! அது பல்வேறு பண்புகளைக் கொண்டதாக
அமைகின்றது.
பெருந் தொகையான வடமொழிச் சொற்களின் பயன்பாடு இந்நாவலிலே எடுத்துக் காட்டாகப் பின்வரும் மேற்கோளினைக்
காணக்கூடியதாயுள்ளது.
காட்டலாம்.
|"ஆகிலும் என்னுடைய கஷ்ட |காலம் அந்தப் பணம் முழுவதும் வியா பாரத்தில் நஷ்டமாகிப் போய்விட்டது.”
இச்சிறிய மேற்கோளினிலேயே கஷ்டம், வியாபாரம், நஷ்டம் என்றும் மூன்று வட சொற்கள் இடம்பெற் றுள்ளன.
நாள்தோறும் பயன்படுத்தப்படும் உவமைகள், பழமொழிகள், ஆங்கில, அறபுச் சொற்கள் ஆகியனவற்றை ஆசிரியர் தன்னுடைய உரைநடையிலே கையாண்டுள்ளார்.
'அவன் , கேட்ட மாத்திரத்தில், நடந்த காரியத்தையெல்லாம் சவிஸ்தார |மாய் அவனறியச் சொல்லி விட்டு

Page 32
سمہ سی
ஐயோ என் அன்பான சகோதரனே,
அருமைத் துரைமகனே நாங்கள் பட்ட
துயர் தீர்த்த பண்புள்ளவென் தம்பியே, வாடிச் சுருண்ட என் முகம் மலர வைத்த ஆதவனே, நாங்கள் சலித்து மனம் வருந்துகையில் தாங்கியவென் கண்மணியே, உன்னை விட்டுப் பிரிய
விடம் எங்களுக்கு நிலவில்லா இரவும் சூரியனில்லாப் பகலும் போலாயிருக் குமே." (பக். 33) என்னும் பகுதியில் ஆசிரியர் 'முகம் மலர வைத்த ஆத வனே', 'என் கண்மணியே', 'நில வில்லா இரவு', 'சூரியனில்லாப் பகல் என்னும் உவமைத் தொடர்களையும் நாள்தோறும் நாம் பயன்படுத்தும் தொடர்களையும் கையாண்டுள்ளார்.
பழமொழியினையும் அறபுச் சொற் களையும் கையாளுகின்ற இடமாகப் பின்வரும் பகுதியினை மேற்கோளாகக் காட்டலாம் :
"ஆரியக் கூத்தாடினாலும் காரியத் தின்மேற் கண் என்பது போல இவ் வளவு சம்பத்து வாய்த்ததேயென்று தன்னை மறந்து தட்டழிந்து போகாமல், தனக்கு அந்தச் சம்பத்துகளைக் கொடுத் துக் காப்பாற்றிய சர்வ வல்லமையுள்ள அல்லாகுத் தாலாவைச் சதா காலமும் வாக்கு மனமுமொத்துப் புகழ்ந்து, ஐந்து வேளையும் தவறாது தொழுகைளை நிறைவேற்றுவதுமன்றி ஈமான் இசுலாத் திற்குரிய, எல்லாக் கிரியைகளையும் ஒழுங்கு தவறாது நடத்திக் கொள் வான்.”
ஆரியக் கூத்தாடினாலும் காரியத் திற் கண்" என்னும் பழமொழியும், அல்லாகுத்தாலா', 'ஈமான்' என்னும் இம்மேற் கோளிலே ஆசிரியர் கையாண்டுள்ளார்.
அறபுச் சொற்களையும்
“என்னைப் பிடிக்கிறார்கள், பாதா
ளத்தில் தள்ளப் போகிறார்களென்று
புலம்பி அலறுகிறதுமாக ஏழுநாள் வரையில் சீக்காயிருந்தான்” என்னும் பகுதியிலே Sick என்னும் ஆங்கிலச் சொல் தமிழ் வடிவமாக்கி "சீக்காயிருந் தான்’ என்று பயன்படுத்தியுள்ளார்.
கதை மாந்தர்களை அறிமுகஞ் செய்யும் போது சிற்சில இடங்களில் கவிதை நடையிலே பல உவமைகளை யும் உருவகங்களையும் ஆசிரியர் பயன் படுத்துவதைக் காணலாம்.
"அந்த நேரத்திற் சந்திரமன் தெளி வாய் ஒளி பிரகாசிக்க அப்பிள்ளை யானது அன்று மலர்ந்த ரோஜா புஷ்பச் செண்டு போலிருந்தது. அந்த அபவியோ பார்த்தவர்கள் வேர்த்து நீர்த்து வார்த்தையாடாமல் மனங்கலங்கி நினைவு மயங்கப் பனைமரப் பருமை யுங் கருநிறவுருவமும், அகன்ற முகமும் வெகுண்ட பார்வையும், மடித்த நுதலும், தடித்த உதடும், கடுகடுத்த பல்லும், வெடுவெடுத்த சொல்லும், கொடுமை நடையுமுடையவனாகவிருந் தான். அவன் முகத்தைப் பார்த்து அப் பாலகனைப் பார்க்கும் போது பூரணச் சந்திரனை இராகு தீண்டச் சமீபித்தது போலிருந்தது. yy,

அன்று மலர்ந்த ரோஜா புஷ்பச் செண்டினைப் பிள்ளைக்கு உவமித்து அப்பிள்ளையின் வண்ணம், மென்மை, புத்திளமை, நீர்மை ஆகியனவற்றைப் புலப்படுத்துகிறார். மேலும், கரிய நிற அபவி அவ்வெள்ளைப் பிள்ளைக்கு அருகில் சென்ற போது அத்தோற்றப் பாட்டை பூரணச் சந்திரனை இராகு தீண்டச் சமீபித்தது போலிருந்தது என்று உவமை காட்டித் தெளிவாக்கு கின்றார். அபவியை மிகக் கொடுரமான தோற்ற முடையவனாகக் காட்டுதற்கு ஏற்ற சொற்றொடர்களைப் பயன் படுத்துகிறார். அச்சத்தை உண்டாக்கக் கூடிய மடித்த, தடித்த, கடுகடுத்த, வெடுவெடுத்த என்னும் வல்லினச் சொற்றொடர்கள் இடம்பெற்றுள்ளன.
6. முடிவுரை
அஸன் என்னும் அழகான ஒழுக்க மான பிள்ளை பல்வேறு துன்பங்
களுக்கு ஆட்பட்டுப் பின்னர் "பே' என்னும் பட்டத்தினைப் பெறும் தலைவனாக ஆவதை சித்திலெவ்வை
மரைக்கார் மிக அருமையாக இந்
நாவலிலே படைத்துள்ளார். அஸனுக்கு * Ꮳ1 Ꭵ ? பின்வருமாறு கூறுகிறார் :
பட்டம் கிடைத்தமையைப்
பாக்ஷா அவர்கள், அஸனைப் பார்த்து "மாட்சிமை தாங்கிய சுல்தான் அவர்கள் நீர் செய்த சாமர்த்தியங்களுக் காக மெச்சி உமக்கு "பே" என்னும் பட்டம் கொடுக்கும்படி ஓர் உத்தரவு அனுப்பியிருக்கிறார்கள். ஆகையால்
இன்று முதல் உமக்கு "அஸன்பே' என்ற பட்டம் வழங்கக் கடவது" என்று சொன்னார்.
BE என ஆங்கிலத்தில் எழுதப் படும் இப்பட்டம் சாதனை செய்பவர் |களுக்கு வழங்கப்படுவதாகும்.
ஈழத்துத் தமிழிலக்கியத் துறை |யிலே முஸ்லிம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அமைந் துள்ளது என்பதற்கு ஈழத்து முதல்
நாவல் எனக் கருதப்படும் சித்தி
லெவ்வை மரைக்காரின் அஸன்பே. சரித்திரம் நல்ல சான்றாக அமை |கின்றது. கதைக் களம், கதை மாந்தர், கதையை நடத்திச் செல்லும் பாங்கு என்பவற்றில் நாவலாசிரியர் சிறந்து விளங்குவதை காணக் கூடியதாயுள்ளது.
இத்தகைய நாவலை அறிமுகஞ் செய்து இக்கட்டுரையை எழுதும்படி கேட்டுக் கொண்ட நண்பன் கலாநிதி. க.குணராசாவுக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் சிறப்பான பழைமையை இளை |யவர்கள் அறிந்து கொள்ள நாம் வழி சமைக்க வேண்டும்.

Page 33
ဒို့ချွဲနဲ့ နွဲ့၌ SSSSSSSSSS SSRS
S
SS နွှဲရှ်`န်ုရှ် `န် `ရှ် ရှဲ့ရှိ်
§
$క్షNQఖ MYA லல்
熙 ŠaščRSRR ડ્રેો N S&
 

சிந்தையி லொரு பூ வளர்த்திடுவீ - ரதன்
சுகந்தம் நாற் றிசை பரப்பிடுவீர் சொந்தமா யொரு பூ வளர்த்திடுவீர் அதன் சுகந்தம் தனக் கென அமைத்திடுவீர்
அச்ச மகன்றிட பூ வளர்ப்பீ - ரிந்த
ஆணவ மடங்கிட பூ வளர்ப்பீர் “ጅ منشية மிச்சமாய் மீதியாய் தின மொரு பூ - இந்த - முமதாஸ் ஹபீள் மடைமை ஒழிந்திட வளர்த்திடுவீர் -
புத்தனைக் காந்தியைத் தொழுதுவிட்டு - பின்னே பூதமாய்ப் பேயாட்டம் செய்பவர்க்கு நித்தம் நித்தம் கல் மண் தின்பவர்க்கு தத்தம் மூரினி லொரு பூ வளர்த்திடுவீர்
ஞானம் வந்தவர் போல் நடித்து - பின்னர் நீதம் தவறிப் போனவர்க்கு மானம் கெட்ட இந்தச் சிறு மூடர்த் - தம் மதி தன்னி லொரு பூ வளர்த்திடுவீர்
மந்திரம் தந்திரம் யாகமென - தினம் மோனத் திருக்கும் நம் மாந்தரிடை - நிந்தனைகள் விரைந் தோடிடவே நேசத் தீவினி லொரு பூ வளர்த்திடுவீர்
சுற்றத் தோடு கொஞ்சம் மகிழ்வதற்கும் - காலை தென்றலி லிதமாய்க் குளிப்பதற்கும் கற்றோ ருடன் பழகிக் களிப்பதற்கும் - கண்ணே கருத்து யொரு பூ வளர்த்திடுவீர்
சித்திரம்போ லொரு சிறு குழந்தை - யெங்கோ பத்திரம் தவறிப் போனதற்குச் சத்தா யொரு பூ வளர்த்திடுவீரிந்த சகமது வாழும் நாள் வரைக்கும்

Page 34
இலக்கியவாதிகளுக்கும் இலக்கிய அபிமானிகளுக்கும் அத்தோடு இளைய தலைமுறையினருக்கும் அதிக பயனைச் சொரியக் கூடிய இலக்கிய நிகழ்வுத் தொடரொன்றைத் தற்பொழுது விபவி கலாசார மையமும் முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதில் முற்போக்குப் படைப்பிலக்கியங்கள் காத்திரமான தமிழ் இலக்கிய வல்லாளர்களால் திறனாய்வு செய்யப்படுகின்றன. அமரர் கே. டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன், என்.கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன் ஆகிய மூத்த முற்போக்குப் படைப்பாளிகளின் ஆக்க இலக்கியங்கள் இத்தொடரில் திறனாய் வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்
"GJGi"uflõI கின்றன. இப்பட்டியலில் இளங்கீரன், அ.ஸ்.அபதுஸ் ஸ்மது மறறும அறுபது
களில் தம்மை முற்போக்கு ஆக்க
O இலக்கிய கர்த்தாக்களாக இனங் வித்தியாசமான காட்டிய அமரர் பெனடிக்ற் பாலன், செ. யோகநாதன், ராஜபூரீகாந்தன்
ஆகியோர் அடக்கப்படாதது குறித்து
இலக்கியப் முற்போக்கு இலக்கிய அபிமானிகள்
விசனப்படுகின்றனர்!
UTİJğGGÜ! அமரர் கே.டானியலின் படைப்பு
களே முதலில் திறனாய்வுக்கு எடுக்கப் பட்டு, ரவீந்திரன் என்பவரால் ஆய்வுரை செல்லக்கண்ணு நிகழ்த்தப்பட்டு, பார்வையாளர்களால்
கலந்துரையாடப்பட்டது.
இத்தொடரின் இரண்டாவது நிகழ்வாக 12.03.2006இல் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவ்வாய்வை இதழியல் விரிவுரையாளர் ம.தேவகெளரி நிகழ்த்தினார். வெள்ளவத்தை, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில், தினகரன் பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. . دي -
- அன்றைய முற்போக்கு எதிராளிகள் சாதிய, வர்க்க வேறுபாடுகள் இல்லை யெனவும் அதையே முற்போக்காளர்கள் தூக்கிப் பிடிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டினர். 1945ஆம் ஆண்டிலிருந்து மொழி உரிமை பேசப்பட்டு வருகின்றது. சாதிய வர்க்கப் பிரச்சினைகளைப் பின் தள்ளுவதற்கு இந்த மொழிப் பிரச்சினை தந்திரோபாயமாகக் கையாளப்படுகின்றது. இதனால் சாதியப் போராட்டங்களும்

பின் தள்ளப்படுகின்றன. முற்போக்கு இலக்கிய அணி தேசிய இலக்கிய நிறுவலை முன்னிறுத்தி இனங்களுக் கான ஒருமைப்பாட்டை வற்புறுத்தியது. அதுவே மக்கள் இலக்கியமாகவும் |கருதப்பட்டது. அதன் கோட்பாடு களுக்கு அனுசரணையாக இந்நாட்டின் அரசியல், பொருளாதார அசைவியக்கம் இல்லாது போனமையே நாட்டின் இன்றைய துர்ப்பாக்கிய நிலைக்குக் காரணம். இத்தொடரில் சமர்ப்பிக்கப் படும் ஆய்வுக் கட்டுரைகள், அக் கட்டுரை ஆசிரியர்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ஒருங்கிணைக்கப் பட்டு நூலுருப் பெறும். அதில் முற் |போக்கு இலக்கியத்தின் வளர்ச்சி
யையும் வீச்சையும் நிச்சயமாகத் தரிசிக்கலாம்.
தலைமையுரையில் இப்படிக் கூறப்பட்டது.
தொடர்ந்து ம.தேவகெளரியின் திறனாய்வுக் கட்டுரை வாசிக்கப் பட்டது.
தற்பொழுது இதழியில் விரிவுரை யாளராகப் பணிபுரியும் ம.தேவகெளரி வீரகேசரி, தினக்குரல் ஆகிய தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர் பீடங்களில் பத்திரிகையாளராகப் பணி செய்தவர். '80களில் மல்லிகை விமர்சனம்" என்ற நூலின் ஆசிரியை. எண்பதுகளின் பிற் கூற்றில் பட்டப் படிப்பை மேற் |கொண்டவர். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவோடு ஒப்பிடுகை யில் ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள்
卤百丁
St
இடைவெளி கொண்ட வயதினர். எனவே இவர் அரசியல், பொருளாதார, சமூக, கலை, இலக்கிய அசைவியக்கங் களால் ஜீவாவைக் காட்டிலும் மிக |வித்தியாசமான தாக்கங்களைப் பெற்ற வரெனலாம். எனவே ஒர் இலக்கிய முன்னோடியின் படைப்புகளில், ஒரு இளைய தலைமுறையின் பார்வை எப்படி இருக்குமென்பதை அறியும் Iநோக்குடனேயே இந்த ஒழுங்கு |செய்யப்பட்டிருக்கலாம்! இதே தடத் தில்தான் கே.டானியலின் படைப்பு களும் பார்க்கப்பட்டன. ரவீந்திரனும் மொழியுரிமை மூர்க்கங் கொண் டெழுந்த காலத்தவர்தான்!
இனி, ம.தேவகெளரியின் ஆய் வின் வெளிப்பாடுகளைக் காண்போம்.
- உழைத்துப் பிழைத்து வாழும் அடிமட்ட மக்களின் அவல வாழ்வைப் |பெரும்பாலும் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் தரிசிக்க வைக்கின்றன. பின்தள்ளப்பட்ட யாழ்ப்பாணத்து மக்களது குரல்கள் அவை. கதைகளில் தனி மனித வரட்டுக் கர்வம் மிகவும் நேர்த்தியாக இனங்காணப்பட்டுள்ளது. வட்டார வழக்கை அக்கறையோடு உள் வாங்கி எழுதி இருக்கிறார். எழுத்தும் |சமூக வாழ்க்கையும் அவருக்குச் சவா |லாக இருந்திருக்கின்றன. யாழ்ப்பாணச் சாதியத்தின் வரலாறாகவும் அவரது படைப்புகளையும், வாழ்வையும் இணைக்க முடிகின்றது. ஆய்வாளர் களும்,
சாதியம்,
விமர்சகர்களும் அவரை வர்க்கம் என்பவற்றுக்குள்

Page 35
:ಲ?
வைத்தே பார்த்து வருகின்றனர். அது தவறாகவே படுகின்றது. ஏகாதிபத்திய அடக்குமுறை, மனித நேயம் என்ப வற்றையும் அவரது படைப்புகள் வெளிக் கொணர்ந்திருக்கின்றன. எழுத் தில் மிகவும் மென்மைத் தனமே தென் படுகின்றது. தனது சொந்த உணர்வு களில் அவைகளைத் தோய்த்து ஆக் ரோசப்படுத்தவில்லை. இதனால் பாத்திரப் பண்புகள் மிக நேர்த்தியாகப் பேணப்பட்டுள்ளன. அவர் முற்போக்கு முகாமின் போராளி. அவரது குரல் ஒட்டு மொத்தச் சமூகத்தின் குரல். அவரது முற்போக்குச் சிந்தனையைச் சிறுகதைகளுக்குள் மட்டும் வைத்துப் பார்த்தால், அது யானை பார்த்த அந்த கர்களின் கதையாகத்தான் இருக்கும். இலக்கியத்திற்காக அவர் சிந்திய வியர்வைத் துளிகள் அவரையொரு பளிங்குக் கல்லாக மின்ன வைத்திருக் கின்றன. சமூக நன்மைகளை வீழ்த்தி மக்களுக்குக் கொடுப்பதற்காக அவர் எறிந்த கற்கள் அவரையொரு விடியலைத் தரும் கதிரவனாக்கி இருக் கின்றன. தனது படைப்பாற்றலுக்கும் இன்றைய நிலைக்குத் தனது முதற் காதலே காரணமென ஜீவா கூறியிருக்கிறார்.
- டொமினிக் ஜீவாவின் படைப்பு களுள் கண்டெடுத்த மேற்படி உணர்வு களை ம. தேவ கெளரி வெளிப் படுத்தினார்.
மேற்படி திறனாய்வுரை பார்வை யாளரது கருத்தாடலைப் பெற்றது.
பிரபல விமர்சகர் கே.எஸ்.சிவ குமாரன் -
டொமினிக் ஜீவாவொரு முற் போக்குச் சிந்தனையாளன். படாப டோபமற்றவர். அடிக்கடி அவர் தன்னைப் பற்றிச் சொல்வது பிரசாரத் திற்காகவல்ல. அல்லது அகங்காரத் தனத்திற்காகவல்ல. ஆழமாக அவ தானித்தால் அவர் புதிய இலக்கியத் தகவல்களையே பதிவுகளுக்கு உட் படுத்துகின்றார். இதில் எமது இளைய சந்ததி அறிந்திராத புதிய செய்திகள் தொக்கி நிற்கின்றன. அரை நூற்றாண்டு கால ஈழத்து இலக்கிய வரலாற்றின் முக்கியஸ்தர். இந்த விடயங்களின் இன்னமும் ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் வித்தியாசமான பார்வை அமை யவும் கூடும். இலக்கிய வளர்ச்சியை எழுத முற்பட்ட சிலர் ஜீவாவின் முழுமையான இலக்கியப் பணியைக் கண்டு கொள்ளாது விட்டது ஏனென்று புரியவில்லை!
பிரபல நாவல், சிறுகதை ஆசிரியர் கே.ஆர்.டேவிட்
முற்போக்கு இலக்கியம் ஆவணப் படுத்துவது மெச்சத் தக்கதே. தான் வைத்த சுவட்டிலிருந்து தடம் புரளாமல் ஜீவா இன்றும் அதையே பின்பற்றி வருகிறார். தனக்குப் பின்னரும் காத்திர மான இலக்கியத் தலைமுறையொன்று தேற வேண்டுமென்ற வேட்கையோடு இயங்குகிறார். அத்தகையதொன்றை உண்டாக்கியும் வருகிறார். இன்னமும் வரவேண்டும்.

கவிஞர் மேமன்கவி -
ஆக்க இலக்கிய ஜீவாவை இழந்து விட்டோம். தற்பொழுது மல்லிகை ஜீவாவைத்தான் காண்கிறோம். தனது முழுமையான உழைப்பை அவர் இப் |பொழுது மல்லிகைக்குத்தான் வார்த்துக் கொண்டிருக்கிறார்.
- மல்லிகை ஆசிரியரின் சிறுகதை களை மட்டுமன்றி, அநுபவ முத்திரை' போன்ற அவரது ஏனைய எழுத்துருக் களையும் ஆய்வுக்கெடுக்க வேண்டு மென, உதவிக் கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான திக்குவல்லை கமால் கருத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
பின்வருமாறு சொன்னார் -
இத்தகையவொரு வித்தியாசமான இலக்கிய நிகழ்ச்சி இதுவரை தமிழ் நாட்டில் கூட நடந்ததில்லை. படைப் பாளியின் முன் அவரது படைப்புகளின் குறை நிறைகள் கூறப்பட்டன. இதை யிட்டு நான் பெரு மகிழ்ச்சி கொள் |கிறேன். யாழ் மண்ணில் சுரந்தது தான் முற்போக்கு இலக்கிய ஊற்று. இருபது ஆண்டுகளாக நான் முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் யாழ் செயலாளராக இருந்திருக்கிறேன். நான் படைப்பிலக் கியத்தில் ஈடுபட்ட காலத்தில் பேராசிரி |யர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் மாணவர்களாக இருந்தனர். |மெத்தப் படித்தவர்களது ஒளி வட்டத் தில் குளிர் காய்ந்து நான் இலக்கியத்
தில் எனது இருப்பை நிலை நாட்டிய |வனல்ல. எனது அயராத தேடலும் உழைப்புமே எனக்கு முன் நின்ற அனைத்துத் தடைக்கற்களையும் சித |றடித்து என்னைத் தமிழ் சமூகத்தில் நிமிர வைத்தன. இன்று வரை எனது நூல்களுக்கு எந்தவொரு பல்கலைக் கழகப் பேராசிரியரைக் கொண்டும் நான் முன்னுரை எழுதுவிக்கவில்லை. அதை அவசியமாகவும் கருதவில்லை. கண்ணியமானவர்கள் எனது இலக்கிய உழைப்பை ஆவணப்படுத்தி இருக்கின் றனர். என்னைச் சிந்திக்க வைத்து பொது வாழ்வில் நெறிப்படுத்தியவர் கள் தோழர்கள் மு.கார்த்திகேசன், பொன்.கந்தையா, ஆர்.தர்மகுலசிங்கம் (ஜெயம்), ஆகியோரே.
அ. வைத்திலிங்கம்,
மார்க்சியவாதிகள் தீண்டாமைக்கு எதிரானவர்கள். எனவே ஜீவா அடிக் கடி தனது சாதியை அடையாளப் படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டு மென கூட்டத்திலிருந்த ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு ஜீவா, பதிலளித்த பொழுது - வேளாள, சைவம் ஆகிய இரு மரபு களும் துய்ய வந்த வேளாளராக இருக்க |வேண்டும் - இப்படியான திருமண விளம்பரங்களை இப்பொழுதும் வெளி நாடுகளிலேயே பத்திரிகைகளில் படிக்க முடிகின்றது. தாம் தஞ்சமடைந்து வாழும் வெளிநாடுகளிலும் எமது தமிழர்கள் சாதீயத்தை ஊன்றுவதாக முற்போக்குச் சிந்தனையாளர்கள் கவலைப்படுகின்றனர். இவைகள்

Page 36
என்று நிறுத்தப்படுகின்றனவோ அன்றே நான் இத்தகைய வேண்டு கோள்களை நிறைவேற்றுவேன். அது வரை எனது சாதீய எதிர்ப்புப் பேச்சு நிற்காது - எனச் சூளுரைத்தார் ஜீவா.
இலங்கை முற்போக்கு இலக்கி யத்தின் ஆழத்தையும், விரிவையும், பரம்பல் செய்யும் இலக்கோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தங்களை அடக்கி வாசிப்பதாகப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டும் இன்றைய இளைய தலைமுறை கலந்து கொள்ளாதிருந்தது பல இலக்கிய அபிமானிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. இருந்தும் மூத்த இலக்கியவாதிகள் பலர் மண்டபத்தை நிறைத்திருந்தனர்.
S
with in 15 Minutes is
驚。
S.
A 慧 ミ姿釜溢ミ နှီးနှုံး No ミリミリミ注料
)ᏓᏍᏓ0 କଁp', VD1.
EXCELLENT
FHOTOGRAPHERS
MODERN COMPUTERIZED
FHOTOGRAPHY
FOR WEDDING PORTRAITs
8 CHILD SITTINGS
Photo Copies of Idetity Cards (IC), Passport &
Driving Licences .
 
 
 
 
 

|- ශඋqගිණී හීමq
இடதுசாரித் தோழர்களான என்.எம்.பெரேரா, கொல்வின் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளீர்களா? மற்றும் பீட்டர்கெனமனை நேரிடையாகச் சந்தித்து உரையாடியிருக்கிறீர்களா?
கொழும்பு 6. கே.எஸ்.பாலச்சந்திரன்
ఖజ***####ఖఃఖ్యఖ్యఖ్య த்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்
என்னுடைய இளம் L தோழர்கள் என்.எம். கொல்வின் ஆகியோரைச் சந்தித்து, அவர்களது பேச்சுக்களைக் கிரகித்துக் கேட்டிருக்கிறேன். பின்னர் என்.எம். பீட்டர், சுபசிங்க - இவர்கள் அந்தக் காலகட்டத்தில் மூன்று கட்சிகளினதும் செயலாளர்களாகவும், அமைச்சர்களாகவும் பணியாற்றியவர்கள் இவர்களு க்குத் தோழர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் தனது கொட்டடி வீட்டில் ஏற்பாடு செய்த இராப் போசனவிருந்திலும் நான் கலந்து கொண்டுள்ளேன். பீட்டர் அமைச்சராக இருந்: ஒரு காலகட்டத்தில் எனது இல்லத்தில் ஓர் இராப் போசன விருந்தளித்தேன். டைசியான அன்ல து இறுதி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன்.
பேரினவாதம், சிற்றினவாதம் என இன்று பலரும் பல மேடைகளில் அரசியல் முழக்கம் செய்து வருகின்றனரே, மிகச் சிறிய ஓர் இனக் குழுவைச் சார்ந்த பீட்டர் கெனமனை மத்திய கொழும்பு மூவின மக்களும் பல தடவைகள் தமது பிரதிநிதியாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்து அனுப்பி வைத்தனரே இதற்கு என்ன சொல்லப் போகின்றனர், இவர்கள்? பிரதிநிதியாக மத்திரமல்ல, அமைச்சராகவும் பதவி வசித்தவர் பீட்டர் நான் பஸ்ஸில் மருதானை எல்பிஸ்டன் சந்தியால் வரும் சமயங்களில் எல்லாம் தாழர் பீட்டர் கெனமனின் சிலையைப் பார்த்துவிட்டு அப்படியே மெய் சிலிர்த்துப்
றேன். பெரும் பெருமையே அதுதான்! றன. பெரும பெருமையே அதுதான
%ధ
மல்லிகையில் உங்களைப் பற்றிய உங்களது எழுத்து, சுயபுராணம் போலத் தெரிகிறதே! 96iola)LDUIII?
அனுராதபுரம். வளிம் அக்ரம்

Page 37
பதிந்து
கவை.(எனது கைப்பட நான்
க்கும் தகவல்கள் அத்தனையும் நம்
ஒரு ரூபாய் தினகரன் தினசரி சென்னை யிலிருந்து வெளிவருகின்றதே, படித்துப் பார்க் கிறீர்களா? உங்களது கருத்து என்ன?
தெஹிவளை. எம்.தனேந்திரன்
窦滚、
tists.
F63, குறுப்பி இன்னொரு கரன் :ளிதழ் சென்னையில் ஒரு tij. கொழும்பி அதன் விலை
து கூட ஒருவகைக் கொள்ளை it. இப்படியே தொடர்ந்து போய்க்
ண்டிருந்தால் கலைஞரின் குடும்பம்
இம்முறை வெளிவந்துள்ள 41வது ஆண்டு மலர் அமைப்பிலும் கவர்ச்சியிலும் தனித் தன்மை வாய்ந்ததாகத் திகழுகின்றதே, காரணம்
ஆர்.மணிகரன்
. சிறும் புதுமையாகச் செய்து விடவில்லை. நாம் வழமைபோலத் ன் மலரைத் தயாரித்து முடித்தோம். உங்களது ரசனைக்கு அது புதுமையாகத் தெரிந்தால், நமக்கும் அது மகிழ்ச்சிய்ே
தெரிந்தால், நமக்கும் அது மகிழ்ச்சியே
ఛపభ
குமுதம் அரசு கேள்வி - பதிலில் நமது அ.முத்துலிங்கத்தைப் பாராட்டி எழுதியுள்ளதைப் படித்துப் பார்த்தீர்களா?
(385 T Luruitu.
படித்துப் பார்த்தேன் முத்துலிங்கம் ஆபிரிக்காக்க பல்வேறு ஊர்களில் எல்லாம் ஊழியம் ய்த பின்னர், இன்று ஓய்வு பெற்று டாவில் வசித்து வருகிறார். இன்று மிழகத்திலிருந்து வெளிவரும் தரமான சிற்றிலக்கிய ஏடுகளில் எல்லாம் எழுதி வருகிறார். தினகரன் காலத்தில் கைலாச் பதியால் கண்டெடுக்கப்பட்ட, இன்று வரை .தொடர்ந்தெழுதும் எழுத்தாளர் அவர் فابن அவரது அக்கா சிறுகதை வெளிவந்த காலத்தில் வெள்ளவத்தை லாரன்ஸ் றோட்டிலுள்ள அன்னாரது இல்லத்திற்குச் சென்று அவரை வாழ்த்திவிட்டு வந்த ஞாபகம் என் நெஞ்சில் இன்னமும் பசுமை யாக இருக்கிறது: 8,883 8.3:
Q61) ()55 ID616 diot) 66).d5 616) (3) வேகமாகப் புத்தகங்கள் வெளிவருகின்றனவே, இது ஆரோக்கியமான நிலையா?
ஜாஎல. எம்.சரவணன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்தகங்கள் சுடச் சுடவெளிவருவதை வத்துக் கொண்டு நர்ம் ஆரோக்கியத் தக் கணிப்பிடுவது தவறு. கணினி அச்சுச் சாதன வளர்ச்சி இது. இலக்கிய
பொழுது போக்கு
இந்தத் தடவை தமிழகத்தில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள்?
கல்கிசை,
வாரா வா > குமுதத்தைத் தொடர்ந்து
படித்து வாருங்கள் உண்மை நிலவரம் ஓரளவிற்குப் புரியும்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதன் தேர்தல் வெற்றிக் ணிப்பு சரியான 1ணிப்பாகக் கொள்ளப் ட்டதைத் தமிழகமே நன்கு அறி
இத்தனை ஆண்டுக் காலமாக மல்லிகை மாதஇதழைத்தொடர்ந்து நடத்திவருகிறீர்களே, உங்களுக்குமணச்சலிப்பேஏற்படுவதில்லையா?
புத்தளம். க.நடராஜன்
வேலை செய்யாமல் இருந்தால்தான் எனக்குச் சலிப்பும் எரிச்சலும் ஏற்படும். மல்லிகைக்குத் தினசரி நான் உழைத்து வரும்போது எனக்குப் புதுப் பலமும் மனக் கம்பீரமும் ஏற்பட்டு வருவதை அடிக்கடி உணர்ந்து வருபவன், நான். என்னைப்
வரையில் மல்லிகைக்காக
ட்ழைப்பதில் தனி உற்சாகம்தான் ஏற்படு
கின்றது. ള്ള
விஜயபாஸ்கரனின் சரஸ்வதி காலத்தி லிருந்தே தமிழகத்து எழுத்தாளர்களுடன் நெருங்கிய நம்பும் தொடர்பும் கொண்டுள்ளவர், நீங்கள், சாலையின்திருப்பம்'என்ற2ங்களது மூன்றாவது சிறுகதைத் தொகுதிக்குப் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதி யுள்ளார். இது வரலாற்றுச் சிறப்பு. தமிழக எழுத்தாளர்கள் பற்றி நீங்கள் உங்களது அனுபவத் தொடரை எழுத்தில் பதிய வைத்தால் 6)?
வவுனியா. எஸ்.செல்வசேகரன்
நான் 1960இல் இருந்து தமிழகத் ற்கு 32 தடவைகள் இலக்கியப் பிர யாணம் செய்துள்ளேன். பல இலக்கிய விழாக்களிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன். சொல்லத் தக்க எத் தனையே தகs களும் இலக்கியச் செய்திகளும் என்னிடம் உள்ளன. பல நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் போயி ருக்கிறேன். பேட்டிகளும் கொடுத்திருக் கிறேன். ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல்" என்ற எனது நூலில் இந்தத் தகவல் களும் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. எனவே அரைத்த மாவையே அரைக்க எனக்கு விருப்பமில்லை. உங்களது ஆலோசனையை கவனத்தில் கொள்ளு கின்றேன். புதுப் புதுக் கோணங்களில் எனது அநுபவங்களை எழுத்தில் வடித்து |வைக்கத் தெண்டிக்கின்றேன்.
స్ట్వీళ్ల -

Page 38
i
நேரடியாக வந்தால் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைப் பார்த்து வாங்க முடியுமா? எந் தெந்த நேரங்களில் நேரடியாக வரச் சாத்தியப் LIcblb?
தெஹிவளை.
எம்.தேவயானி
வசதியிருந்தால் தொலை தொடர்பு கொள்ளுங்கள்.
அச்சகத் துறையில் அசுர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதே, இதனால் இலக்கியத்துறைக்கு 6OITLIDIT3 p6qLIDIT?
εb6υστις. ஆர்.கணேசன்
8 8:888
சமீப arrators வளிவரும் தமிழ்ச்
భ;ళ్ల
ஞ்சிகைகளைப் பார்க்கும் போது மன ச்சல்தான் ஏற்படுகின்றது. ஒரே வ: ண்ண கக் காட்சி தருகின்றன வெ ரிவரும் Ᏹ; கள்.அதிலும் இளம் பெண்களின் மயமான உருவங்களே LDITirti திக் கொண்டு காட்சி தருகின்றன. பதற்கு ஒன்றுமே ஆழமாகத் தரப்படுவ தில்லை. சும்மா கண்களால் பார்த்து ட்டே திருப்திப்பட வேண்டியதுதான்.
மல்லிகையால் இதுவரை நீங்கள் சம்பாதித்த செல்வம் என்ன?
இளவாலை, க.தர்மா
நாடு பூராவும், நாடு கடந்தும் அற்புத ன இலக்கிய இதயங்களைச் சம்பாதித் ளேனே, அதுவே போதும். வேறெந்:
மறைந்த கைலாசபதி, டானியல் போன்ற வர்களினது இலக்கியத் தகவல்கள்தான் அடிக் கடி செய்திகளில் இடிபடுகின்றன. ஆனால், அவர் களது காலத்தில் இலக்கிய உலகில் பெயர் பதித்த மறைந்த எழுத்தாளர்களின் பெயர்கள் செய்திகளில் அடிபடுவதில்லையே, என்ன b[0]p?
மட்டக்களப்பு. க.த.வேல்முருகு
意签移签※ w
எந்தத் துறையைச் சேர்ந்தவர்களா னாலும் சாதனை படைத்தவர்களைத் தான் பிற்காலத்தில் பிற்சந்ததியினரால் பேசப்படுவார்கள். இது இவர்கள் இருவரது ஞாபகார்த்த நினைவு நடவடிக்கைகளிலும் இன்று காணப்படும் உண்மையாகும். இவர்கள் இருவரைத் தவிர, வேறு Lisogo.g
யும் எனக்குத் தெரியும். அவர்களையும் எதிர்காலம் கனம் பண்ணிக் கெளரவிக்கும் என உறுதியாக நம்புகின்றேன். மல்லிகை அட்டைப் படத்தில் கெளரவிக்கப்பட்டவர் களில் சிலர் நிச்சயமாக எதிர்காலத் தலை முறையினரால் தகுந்த முறையில் கெளர விக்கப்படுவார்கள் என்பது திண்ணம். அதற்குத் தகைமையை நாமும் நமது துறையில் சாதனைகளை படைத்துழைக் கத் தெண்டிப்போம்.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

POOBALASINGHAM
BOOK OEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head office: Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colombo006. SraK: Te: 2422321 Tel.: 4-515775, 2504266 FaX : 2337313 4A, Hospital Road,
E-mail: pbdhoGsltnet.lk Bus Stand, Jaffna.
স্থা
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
geodesO6OLD 3 , éleobert : இல, 202, 340 செடியார் தெரு இல. 309 A-23, காலி வீதி, கொழும்பு II, இலங்கை, 6a5TQpib Oó, Sò6omeopa5 65т. С8ш. 2422О21 6gT. GBL 4-55775
தொ. நகல் 2337315 LóesteoTesses pbdhoGDsltnet.lk இல, 4A, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பானம்,

Page 39
毯 Malikai t
RESHMA MITAT
Bangles, Chai Ear Tops, Guara
イ
éalmaan 4. ᏛᎦ
XY), "Santhosh PI
TSE: || 229-1114, I Colom Te: O11 Hot Line :
 
 

March 2006
ONEVELERS
ins, Necklaces, inteed Items Etc.
"X
ནི་རྩི། థ్రో ༣ ཙོའི་ SJ
Trading
Floor, Main Street, bO – 11.
2394,512 }77 666-1336