கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.04

Page 1
50வது ஆண்டை நோக்க்.
3.656
Goffins. If
sino-siouolo qioşıĪĢĝH soori,Tori qionosēĝH
 


Page 2
ീഴ്ച Zഗ്ഗd ീe
Digital Colou (a 89 Studio
AMAN ZATURZS
digitsi G意 Automatic dust & scratch correction
* Maximum Size: 12" x 8"Digital print * Output Resolution: 4oodpi * Film lnput Formats: I35, Ix24o, Izo, APS * Film Types: Colour negative & positive, Baw
megative, Sepia negative
* Compatible input & Output Media:
(Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, Smart Media)
sk Print to Print * Conduct sheet & lindex print
sk Templates: Greeting Cards, Frame Prints, Casandar Prints,
Album Prints.
HEAD Office BRANCH HAPPyDIGITAL CENTRE HAppy PHOTO
Digital Colour Las 5 tipo A Potsi)A
9 85Tuoio ProTout Apt as M. VuoIt X. KAPAs No. 64, Sri Sumanatissa Mw, No. 3oo, Modera Street'.
Colombo - 12. Tel :-o74-6Io652. Colombo - 15. Tel-oII-2526345.
 

உங்களுடன் மனந்திறந்து பேசுகின்றோடு!
இலக்கியச் சுவைஞர்களே, மல்லிகை யின் மீது நீங்கள் காட்டி வரும் அபார கரிசனையையும் மல்லிகைப் பந்தல் வளர்ச்சியில் நீங்கள் செலுத்தி வரும் அபிமான ஆதரவையும் கண்டு உண்மை யாகவே நாம் மெய் சிலிர்த்துள்ளோம்.
இந்த ஆரோக்கியமான உற்சாகம் நிரம்பிய ஆதரவுகளையும் அபிமானத்தை யும் நாம் ஆக்கபூர்வமான திசை வழியில் பயன்படுத்தலாம் என இந்தப் புத்தாண்டுத் துவக்கத்தில் எண்ணிச் செயலாற்ற முடிவெடுத்துள்ளோம்.
நம் முன்னால் ஏராளமான வேலைகள் குவிந்து போயிருக்கின்றன. மல்லிகையை இன்னும் இன்னும் சிறப்பாக வெளிக் கொணர வேண்டும். மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை இன்னும் ஆழப்படுத்தி, அகலப்படுத்தி வெளியிட வேண்டியது காலத்தின் கட்டாய தேவைகளில் ஒன்றாகும்.
இதற்குக் குந்தகமாக நம்முன் காட்சி தருவது பொருளாதார முடைதான். தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியின் மீது ஆறாத அக்கறையும் அபிமானமும் கொண்ட வர்கள் நமது சிரமத்தைச் சூசகமாகப் புரிந்து கொண்டு உதவ முன்வந்தால் அது எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
- ஆசிரியர்
S, மல்லிகை
‘ஆடுதல் பH டுதலீசி த்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் தடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்’
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற G : C ei săi. Es is är tib Lu 6 lub இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப் பெற்ற சஞ்சிகை மல்லிகை. இதனை | இலங்கை நாடாளுமன்றப் பதிவேடான
sறன்ஸார்ட் பதிவு செய்ததுடன் tilísti su á. ಹಸ್ತಿತ್ವಕ್ಷೌ9) .ಲೈಹಿ ಹT # 鄒
ஆவணப்படுத்தியுமுள்ளது.
30-வது ஆண்டை நோக்கி.
ീറ്റ്ര اoMaVkac ഭർn/lഗ്ഗ ഭർ(e ሪ
படைப்பாளிகளின்
புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201-1/4, Sri Kathiresan Street, Colombo - 13. Te: 232O72

Page 3
Iបារាំងយោh uញចារិ
២mpពិhIThរិ
- டொமினிக் ஜீவா
இளந்தாரி வயதிலே தீவகத்திலுள்ள எனது தாயா ரினது பிறந்த ஊரான சரவணைக்குப் போய்விட்டு,
திரு. எஸ். குணரத்தினம் அல்லைப்பிட்டியிலிருந்து பண்ணைக் கடலூடாகத் தோணி
யில் யாழ்ப்பாணம் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
பத்திருபது பேர்கள் மாத்திரம் பயணம் செய்யும் இட வசதியுள்ள அத்தோணியில் ஒரு மூலையில் நான் சிக்காராக வீற்றிருந்து, கடற் பிரயாணத்தை வேடிக்கையுடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பக்கத்தே இருந்தவர் என்னைத் தெரிந்தவர் போல, நட்புறவுடன் புன்னகைத்தபடி "எங்கே போய்விட்டு வாஹீங்க?" என அன்புடன் விசாரித்தார். "சரவணையில சின்னமடுவடியிலை சொந்தக்காரர் ஒருவருக்குக் கலியாணம், அதுதான் போய்விட்டு வாறன்!".
'அட.. அட... சோக்காப் போச்சு நானுமொறு சரவணையான்தான்!" என ஊர்ப் பாசத்துடன் எனது தோளை அன்று அனைத்துக் கொண்டவர்தான், இந்த எஸ்.குணரத்தினம் என்பவர். இன்று வரைக்கும் எனது நட்புக்கு இலக்கணமாகத் துலங்கி வருகிறார்.
தோழர் கார்த்திகேசனின் அபிமானத்திற்குரிய மாணவனான இவர், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவர். எந்த நேரமும் வெற்றிலையால் இவரது உதடுகள் சிவந்திருக்கும். நட்பின் நிமித்தம் இவரது இதயம் நிறைந்திருக்கும்.
நான் அவலப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடு இரவாக கொழும்பு வந்த சமயம் ஒருநாள் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் முந்தரசிங் ஒரு மூடிய தபாலுறையை என்னிடம் தந்தார். நான் விரித்துப் பார்த்தேன். சரவணையூர் நண்பன் குணரத்தினம் என்ற எழுத்து என் கண்ணில் பட்டது. முழுவதும் விரித்துப் பார்த்தேன். என்னால் அந்தக் கட்டத்தில் நம்ப முடியாத அளவுக்குப் பெருந் தொகையான பணம் மடித்து வைக்கப்பட்டிருந்தது.
நான் அப்படியே பிரமித்துப் போய்விட்டேன். பொருளாதார பின்புலமற்ற, மனச் சங்கடங்
களும் அவஸ்தைகளும் நிரம்பிய அந்தக் காலகட்டத்தில் எனக்கு இவர் செய்த அந்த மறை முகமான உதவி எனக்குப் புதிய பலத்தையும் புத்தூக்கத்தையும் நல்கின என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட அற்புதமான இதயம் படைத்தவர், இவர்.
பல உயர் பதவிகளை வகித்து, இன்று ஓய்வு பெற்றுள்ள வேளைகளிலும் இவர் என்மீதும் ஈழத்து இலக்கியத்தின் மீதும் கொண்டுள்ள பற்றும் பாசமும் வார்த்தைகளால் சொல்லி விளங்க வைக்க முடியாதவை.
 
 

IPhDIhlhUIIbUIhlh blhsh
மக்களைக் கவர்ந்த இலக்கிய விழா.
ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் நான்கு நாட்கள் தொடர்ந்து வெள்ளத்தை ராமகிருஷ்ண மண்டபத்தில் கொழும்புக் கம்பன் கழகத்தினரின் கம்பன் விழா நடைபெற்று முடிந்தது.
ஒரு பெரு விழாவை எப்படி வெற்றிகரமாக ஒழுங்கு குலையாமல் நடத்தி முடித்திட வேண்டும் என்பதற்கு இந்தக் கம்பன் விழாக்களின் ஒழுங்கு முறைகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
விழா அழைப்பிதழ் அமைப்பதில் அதி கவனம் செலுத்துவதில் இருந்து, இங்கிருந்தும், தமிழகத்திலிருந்தும் பேச்சாளர்களை ஒழுங்கு செய்வது ஈறாக அவர்கள் காட்டிவரும் அதீத திறமைக்குப் பெயர்தான் கம்ப வித்தையாகும்.
அத்தகைய அசகாய சூர வித்தையில் இன்று இந்த இலங்கைத் தீவில் கம்பன் குடும்பத்தினர் முன்னோடிகளாகவே திகழ்ந்து வருவது பாராட்டுக்குரியதும் பின்பற்றக்கூடியதுமான ஒர் அம்சமாகும்.
ஒவ்வோர் ஆண்டும் புத்தம் புதியதாகச் சிந்தித்து, நிகழ்ச்சிகளை வகுத்து, அவை ஒவ்வொன்றையும் சிந்தாமல் சிதறாமல் ஒழுங்குடன் செயற்படுத்தி, வெற்றி கரமாக நடைமுறைப்படுத்தப் பின் நின்றுழைத்த பலரினதும் உழைப்பு முயற்சியைப் பெரிதும் பாராட்டி மகிழ்கின்றோம்.
ஒட்டு மொத்தமாகத் தேசத்தின் யுத்தப் பதட்டச் சூழ்நிலையிலும், அரசியல் நெருக்கடிகளும் நம்பிக்கையினங்களும் மலிந்துள்ள இந்தக் காலகட்டத்தில் எந்த விதமான பதட்டம், பரபரப்புமில்லாமலும், ஒழுங்கு கெடாமலும் இந்த நான்கு நாள் விழாவையும் நடத்தி முடித்த குழுவினரை எப்படிப் பாராட்டினாலும் தகும்
பலவகையான வாழ்க்கைச் சஞ்சலங்களுக்கு மத்தியில் ஆட்பட்டுள்ள வெகுசன மக்களை ஒன்றுகூட வைத்து, ஒரு சில நாட்களாகவேனும் அவர்களை வேறொரு உலகத்தில் சஞ்சரிக்க வைத்து, மகிழ்ச்சியூட்டிய நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்த அமைப்பாளர்களைப் பெரிதும் பாராட்டுகின்றோம்.
இப்படியான பொது நிகழ்வுகளில் தங்களது கவனத்தைத் தற்காலிகமாவது செலுத்தி, வெளிச் சிரமங்களை மறந்து, மன இறுக்கத்திலிருந்து விடுவட உதவுவது மிகப் பெரிய மக்கள் தொண்டு என்பதே நமது அபிப்பிராயமாகும். மனப் பேதலிப்புக்குள் நசுக்கப்பட்டுள்ள மக்களை அம்மனநிலைப் பிறழ்விலிருந்து தற்காலிகமாகவாவது விடுபட வைப்பதே மக்கள் கலையின் அடிநாதமாகும்.

Page 4
ព្រលិbរាញ់ பரிச்சயமுள்ள Bញប្រៀu២០TIff கே.வி.சிவா சிவசுப்பிரமணியம்
- கே.எஸ்.சிவகுமாரன்
'தினகரன்’ நாளிதழ், வார மஞ்சரியின் தற்போதைய பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியத்தைக் கடந்த 10 ஆண்டுகளுக்குள் மாத்திரமே நேரில் அறிவேன். அதற்கு முன்னர் 'மல்லிகை" மூலமும் 'தினகரன் மூலமும் அவர் எழுத்துகளுக்கூடாக அவரை அறிவேன். அவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர் என்பது அவருடைய எழுத்துத் திறனுக்கு ஓர் அத்திவாரம். சிங்கள மொழிக் கதைகளை, குறிப்பாக குணசேன விதான, கே.ஜயத்திலக்க, ஏ.வி.சுரவீர போன்ற சிங்கள எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தமிழில் படிக்கும் வாய்ப்பு எனக்குச் சிவா சுப்பிரமணியத்தின் வாயிலாகவே கிடைத்தது. "சிவா அவர்கள் மொழி வன்மை கொண்ட தமிழாக்க எழுத்தாளராக இருந்தமையுடன், அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை முற்போக்கான" ரீதியில் தருபவராகவும் விளங்கினார். இவருடைய சிங்கள இலக்கிய அறிமுகம் தவிரத் தன்னளவில் தமிழ் மூலமும், மிகவும் சுவாரஸ்யமான கதைகளைத் தந்திருக்கிறார். இவருடைய ஆக்க இலக்கியத் திறனை நம்மில் பெரும்பாலானோர் மதிப்பீட்டுக்கு இன்னமும் உட்படுத்தாததற்கான காரணங்களுள் ஒன்று, இவருடைய ஆக்கங்கள் நூல் வடிவில் இற்றைவரை வராததே.
சிறுகதை தவிர, பயனுள்ள தகவல் தரும் பகுத்தாய்வுக் கட்டுரைகளையும் இவர் தந்துள்ளார். குறிப்பாக இவருடைய அரசியல் கட்டுரைகள் தெளிவாகவும், தர்க்க ரீதியாகவும் அமைவதை நாம் காண்கிறோம். இதற்கான காரணம் இவரிடத்தில் காணப்படும் சிந்தனைத் தெளிவாகும்.
சிவா சிவசுப்பிரமணியம் வெளிப்படையாகவே இடதுசாரிச் சிந்தனை யுடையவர். இவருடைய கருத்துக்கள் சில, என் போன்ற மார்க்சியர் அல்லாத முற்போக்காளர்களுக்கு விவாதப் பொருளாக அமையக் கூடும். ஆயினும் இவர் எழுத்தில் துலாம்பரமாகத் தெரியும் மனித நேயமும், பல்துறை அறிவும், சொல் நயத்துடன் தெரிவிக்கும் பாங்கும் இவரைப் புறக்கணிக்க முடியாத ஒருவராக ஏற்படுத்தியுள்ளன.
4.

இவருடைய யாழ்ப்பாண வாழ்க்
கையின் ஆரம்பகாலச் செய்திகளை நான் அறியேன். ஆயினும், இவர் அரசாங்கத்தில் ஒர் எழுதுவினைஞராகச் சேர்ந்து, பல இடங்களிலும் தொழில் பார்த்து, உயர் பதிவு பெற்றுத் தனது 45 வயதில் ஒய்வு பெற்றார் என்று அறி கிறோம். அதன் பின்னர் 1960களில் தன் னந் தனியனாக நின்று "தேசாபிமானி' என்ற இடதுசாரிக் கட்சி வாராந்த இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார் என்றும் அறிகிறோம்.
எந்தவிதமான பரபரப்பும் காட் டாத, அமைதியான சுபாவம் கொண்ட இவர் பழகுவதற்கு இலகுவானவர்.
இவரை அடிக்கடி தமிழ்க் கூட்டங் களில் காணலாம். கலை, இலக்கியம் சம்பந்தமான கூட்டங்களில் இவர் உரை யைக் கேட்டுப் பயனும், பரவசமும் பெற்றிருக்கிறேன். சினிமா முதல் தமிழ் இலக்கிய மரபுச் செல்வங்கள் வரை எடுத்துக் காட்டாகப் பல சுவை யான தகவல்களைத் தந்து வருகிறார், சிவா சிவசுப்பிரமணியம்.
இவரை முன் பின் தெரியாத காலம் முதல் இவரைச் சந்திக்க விரும் பினேன். ஆயினும் வெகு அண்மைக் காலத்திலேயே இவரை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.
'தினகரன்’ பத்திரிகையின் ஆசிரி யர்களுள் நான் பரிச்சயம் கொண்ட வர்கள் வி.கே.பி.நாதன், க.கைலாசபதி, ராஜ பூரீகாந்தன், மணியம் ஆகியோரே. இந்த ஆசிரியர்
சிவா சிவசுப்பிர
uouersa)85 তত্ত্ব
கள் ஒவ்வொருவரும் தத்தம்மளவில் தனித்தன்மை கொண்டவர்களாக விளங்கினர். 'தினகரன்' பத்திரிகை அரசாங்கத்தின் ஆதரவில் வெளிவரும் ஒரு "தேசியப் பத்திரிகை. எந்த அர சாங்கம் பதவியில் இருக்கிறதோ, அந்த அரசாங்கத்தின் சார்பாகவே தினகரன்' வெளிவரவேண்டிய ஒரு நிலைமை இருக்கிறது. வி.கே.பி.நாதனைத் தவிர, ஏனையோர் யாவருமே இடதுசாரிச் சார்புடைய இதழியலாளர்களாகவே விளங்கினர்.
சிவா சிவசுப்பிரமணியம் மார்க்சி யத்தைத் தழுவிய ஒரு முற்போக்காளர். மார்க்சியத்தை முற்று முழுதாக ஏற்றுக் கொண்டு, கட்சி அரசியற் பிரதிநிதி யாக எந்தவொரு பத்திராதிபரும் இருக்கவில்லை என்றுதான் அனு மானிக்கிறேன்.
சிவா சிவசுப்பிரமணியம் காலத் திற்கு ஒவ்வாத முற்போக்கு’ என்று மகுடமிட்ட ‘வாய்ப்பாடான சுலோகங் களை உதிர்க்காமலே சிறந்த முற் போக்கு நோக்கங்களைக் கொண்டவர் என்பது அவருடைய எழுத்துக்கள் மூலம் (அரசியல், கலை இலக்கியங்கள் தொடர்பானவை) தெரியக் கூடியதாக
இருக்கிறது.
சிவா சிவசுப்பிரமணியம் காலத் தின் வளர்ச்சிப் போக்கின் முன்னேற்றச் சிந்தனைகளையும் தமதாக்கிக் கொள் வதனால், அவர் வாழ்விலும், எழுத் திலும் வாய்மை வலம் வருகிறது. வாழ்த்துக்கள்.

Page 5
முருங்கைக்காய் துண்டு துண்டாக அந்தப் பாத்திரத்தில் விழுந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரே அளவான துண்டுகள். அம்மம்மா என்ன வடிவாக விரலை வைத்து அளந்து அளந்து வெட்டுகிறா! 'பிள்ளை, சோத்தைக் குழைய விட்டிடாதையம்மா. பேந்து அவனுக்குப் பிடியாது' என்று ஒரு குரலும் கொடுக்கிறா. சாந்தி சிரித்துக் கொண்டாள். கற்ராக்ற் - கண் தெரியாது! ஆனாலும், அம்மம்மா என்னவோ எப்பவும் போலத்தான் இருக்கிறா. இயங்குகிறா! எல்லாரையும் இயக்கிக் கொண்டும் இருக்கிறா!
இன்றைக்கு வழமையைவிட உசார் கூடத்தான்! ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு பேரன் குடும்பத்தோட வாறான் என்றால் சும்மாவா? உற்சாகமாக இருக்கிறா. காலை யிலையே சுடுதண்ணி வைப்பிச்சுக் குளித்து, பேரனுக்குப் பிடித்த சமையல் செய்வித்து. அம்மம்மா ஆயத்தமாயிட்டா தடியை ஊன்றிக் கொண்டு ஹோலுக்குள்ளே நடந்து திரிகிறா. 'டொக் டொக் சத்தத்தின் சீரற்ற ஒசையில், அவ பொறுமையிழந்து விட்டது தெரிகிறது.
எல்லாம் நேற்றுப் போல காலத்துக்கு எப்போதும் அவசரந்தான். செட்டை கட்டிக் கொண்டு பறந்து விடுகிறது. சாந்தியும் தம்பியும். கொழும்பில். அம்மம்மாவின் கைகளில் தொங்கிக் கொண்டு திரிந்தது அவவின் பாசத்தில் தோய்ந்து வளர்ந்தது எல்லாவற்றுக்கும் 'அம்மம்மா அம்மம்மா' என்று சுற்றிச் சுற்றி வந்தது ஒ. அது ஒர் இனிமையான காலம் இனக்கலவரம் வந்தது. எல்லோரையும் அள்ளிச் சுருட்டி, சொந்த மண்ணில் கொண்டுவந்து எறிந்துவிட்டுப் போனது.
அம்மம்மாவுக்கு வயது போய்விட்டது. குடுகுடு என்று ஓடித்திரிந்த அவ, வீட்டுக் குள்ளே முடங்கி விட்டா. அப்பு செத்தவுடன் ஏழு பிள்ளைகளோட, நல்லதங்காள்' போலத் தான் அந்தரித்த கதையை அவ சொல்லக் கேட்டால், அழுகைதான் வரும். எவ்வளவு கஷ்டம் அதற்குள்ளேயும் எவ்வளவு மனவுறுதி - வைராக்கியம் பிள்ளைகளைப்
படிப்பித்து. உத்தியோகமாக்கி. அவகெட்டிக்காரிதான் گ ص
صص "டொக் டொக் சத்தத்துக்கு மேலால் கார்ச் சத்தம் அம்மம்மதுச்7 கதவடியில் நின்று கொண்டு, நெற்றியில் கையைக் கூரை,ச போலப் பிடித்துக்கொண்டு, கண்களை வெட்டி வெட்டிப் த பார்க்கிறா. 'ஒரே புகைச்சலாகத் தெரிகிற سمع صے
கண்ணால். சாடையாகவென்றாலும்,
O தம்பியைப் பார்க்கலாமோ.,ச UTT606)
நப்பாசைதான்!
另 صص صص
வசந்தி' - ܐ ܐ صص ص
6

தம்பி கண்ணால் துளாவுகிறான். எங்கே அம்மம்மா? 'அம்மம்மா' தம்பியின் தழுவலில், முதிர்ந்து தளர்ந்துவிட்ட அந்தத் தேகம். சிலிர்த்து நடுங்குகிறது உதடுகள் அழுகையில் கோணுகின்றன! "அப்பு. 67ւնւսւջանւ 9(Ibâ கிறாய்? உன்ரை பெண்டிலும் பிள்ளையும்
மோனே!.
எங்கையப்பு?” தம்பியின் ஏக்கந் தீர்க்கும் மருந்து, அம்மம்மாவின் காய்ந்து உலர்ந்த கைகளில் இருந்தது
★
அம்மம்மாவின் சாய்மனைக் கதிரை ஒரு சிம்மாசனம் கைத்தடி, வெத்திலைத்
தட்டம், கைவிசிறி. எல்லாம் பக்கத்திலே ,
அதிலே உட்கார்ந்து கதைப்பதற்கும் நிறையவே விஷயம் இருக்கிறது.
'அக்கா கண் தெரியாமல். அம்மம்மாவைப் பார்க்கப் பெரிய பாவமாக கிடக்குது. கண் ஒப்பரேஷன் செய்தா என்னக்கா? டொக்டர் என்னவாம்? தம்பி
வாய் மூடவில்லை.
‘ஐயோ மோனே! வேண்டாம் மோனே! அது இம்மளவும் காணும். நான் என்ர அலுவல்களைப் பாப்பன் தானே
அப்பு. கூடக் கொக்காவும் இருக்கிறாள்."
அம்மம்மா என்ன சொல்வா என்று தெரியுந்தானே! சாந்தியும் சொல்லிக் களைச்சுப் போனாள். டொக்டருந்தான்! என்னவோ. ஒப்பரேஷன் என்றால் அப்படி ஒரு பயம். வேண்டாம் என்று மன்றாடு கிறா. இப்ப அந்தக் கதையே கதைக்கிறது இல்லை!
'grub Dub DIT! Lusot is disprse B6)6 oft யிருக்குது. மணமும் நல்லாயிருக்குது. என்ன இருந்தாலும், இந்த மண்ணுக்கு எண்டு ஒரு தனி ருசியும், மணமும் இருக்குத்தான். தம்பி சுவைத்துச் சாப்பிட, அம்மம்மாவுக்கு ஒரே புளுகு.
தம்பியின் குழந்தை மெல்ல மெல்ல அம்மம்மாவுக்குக் கிட்டப்போய், கைத் தடியைப் பற்றி இழுக்கிறது. அதற்கு, கைத் தடி ஒரு விநோதமான விளையாட்டுச் சாமான். தம்பி, குழந்தையை அப்படியே அம்மம்மாவின் கைகளுக்குள் பிடித்து விட்டான். சுருக்கம் நிறைந்த தனது பாசக் கரங்களால், அம்மம்மா குழந்தையை அனைத்துக் கொண்டா. முற்றத்து ரோஜா வுக்கும் அந்தப் பட்டுத் தேகத்துக்கும் ஏது வேற்றுமை? அந்தப் பிஞ்சினை உச்சி முகர்ந்து - தடவி, தன் அன்பையெல்லாம் கொட்டி விடத் துடிக்கும் அம்மம்மா! குழந்தை எட்டி விசிறியையும் எடுத்து 6660d6 Tuum Lņuugi.
"இஞ்சால வாங்கோ. ஆச்சிக்குக் கரைச்சல் கொடாம. வெகு சாமர்த்திய மாகக் குழந்தையை விலத்திக் கொண்டு போனாள் ரூபி - தம்பியின் மனைவி! சாந்தி, ரூபியையே பார்த்துக் கொண்டி ருந்தாள். கல்யாணம் முடிந்து வெளிநாடு போகும்போது, நார் போலச் செம்பட்டை யாய்க் கிடந்த கூந்தல். இன்று சுக வாழ்வின் அறிகுறியாக அடர்த்தியாக - பள பளத்தது! அதை வேண்டுமென்றே சிலுப்பி விட்டதால், முகத்திலும் தோளிலும் அது விழுந்து கிடந்தது. கண்ணில் கர்வக் கீற்று அம்மம்மாவால் இதையெல்லாம் பார்க்க ஏலாததும். ஒரு வகையில நல்லதுதான். 7

Page 6
'அம்மம்மா பாத்தியளே உந்தக் கண் ஒப்பரேஷனைச் செய்திருந்தா, இப்ப பூட்டியைப் பார்த்திருக்கலாந்தானே!" தம்பி பொருமினான்.
‘ஒப்பரேஷனுக்கு ஒம்படேல்லை எண்டு என்னில கோவமே' கேட்டுக் கொண்டே அம்மம்மா பொக்கைவாயால்
சிரித்தா.
"களைச்சுப் போயிருப்பியள் - சாப் பிடுங்கோவன்' அம்மம்மாவிற்கு எப் போதும் பிள்ளைகளின் வயிற்றைப் பற்றியே கவலை.
'அதுக்கென்ன அம்மம்மா, சாப் பிடுவம் தம்பி தானே ஒரு தட்டில் உணவைப் பரிமாறிக் கொண்டு வந்தான்.
"தீத்தி விடிநீங்களே அம்மம்மா?"
அம்மம்மா இரண்டு வாய் சோறுாட்டி னாள். குழி விழுந்த அந்தக் கண்களில் இரண்டு நீர்த்துளிகள் உற்பத்தியாகி, கன் னங்களில் உருண்டன. நினைவும் கால் நூற்றாண்டு பின்னோக்கி உருண்டது.
贪
குழந்தை அழும் சத்தம் ரூபியின் கையில் இழுபட்டபடி அது வந்தது. அதன் கை கால்களில் ஒட்டியிருந்த மண்ணை புறுபுறுத்தபடியே ரூபி தட்டிவிட்டாள்.
"ஏன் பிள்ளை, குழந்தை அழுகுது? 6T6ft 6016.JITub?'
'இந்த ஊத்தை மண்ணையெல்லாம் அளைஞ்சு பிரட்டிக்கொண்டு நிக்குது.
8
அந்தக் கோழியொண்டு முத்தத்தில. அதையும் கலைச்சுத் திரியது. உள்ளே வரமாட்டுதாம்.' ரூபி சிடுசிடுத்தாள்.
'பாவம். அதுக்கென்ன தெரியும். அதைப் பேசாத பிள்ளை" அம்மம்மாவால் தாங்க முடியவில்லை.
'உங்களுக்குத் தெரியாது. இந்த மண்ணில நிறையக் கிருமிகள் இருக்கு. கைகாலில புண், சிரங்கு வந்தாப்போல என்ன செய்யிறது?"
அம்மம்மா ஒன்றும் பேசவில்லை. ரூபி தவழ்ந்த மண் இந்த மண்தான் என்றதை நினைத்தாள். இந்த மண்; மாவும், பலாவும், பனையும் தந்து தங் களை வளர்த்ததை. மீட்டுப் பார்த்தாள்.
குழந்தை கதவுக்கு வெளியே இருந்து விந்தை உலகை. கண்கள் விரிய. ஆவ லுடன் பார்த்தது. முற்றத்து விலாட்டும், தென்னையும், வாழையும். வா. வா. என்று ஆடி அசைந்து தன்னை அழைப்பது அதற்குத் தெரிந்தது. கேற்றோடு பூத்துக் கிடந்த பெரிய சிவப்புச் செவ்வரத்தைப் பூக்கள். கொத்தித் திரிந்த கோழிக் குஞ்சு கள். எல்லாமே ஆசையைத் தூண்டின அம்மம்மாவின் முகத்தைப் பார்த்துப் பார்த்து விம்மியது குழந்தை!
கேற்றைத் திறந்து யாரோ வந்தார் கள். "என்ன ஆச்சி பேரனைக் கண்ட புளு கில இருக்கிறியளோ!" அயலில் இருக்கிற ராணி அக்கா. கசங்கின நூல் சேலை, வெறுமையான கழுத்து. அவவின் கஷ்டப் பட்ட சீவியத்தைச் சொல்லாமல் சொல்லிக் Qast souTG...
 

"ராணியே, வா. வா. தம்பி, உவள் தான் எங்களுக்கு ஏதும் அந்தரம் ஆபத் தென்டால் ஓடி வாறவள்" அம்மம்மா வரவேற்றா.
தம்பி மரியாதையாகச் சிரித்தான்.
"ஒம், அக்கா சொன்னவ. வாங்கோ..!"
ராணி அக்கா பலதும் பத்தும் கதைச் சாலும், ஓரக் கண்ணால் ரூபியையும் பார்த்துக் கொண்டா. ரூபி வேறெங்கோ பார்க்குமாப்போலப் பேசாமல் இருந்தாள்.
கதை சுழன்று, ராணி அக்காவின் மாமா எண்பது வயதில் கண் ஒப்பரேஷன் செய்ததில் நின்றது. தம்பிக்குச் சரியான
5666).
'பாருங்கோ அம்மம்மா! நீங்கள் மட்டும் உப்பிடியே இருக்கப் போறிங்களே! மனிசற்ர முகமும் பாராமல். என்ன இல்லாட்டியும் கண் தெரியாமல் இருக்க sort Cup'
அம்மம்மா வழமையான சிரிப்பினால் எல்லாவற்றையும் மழுப்பிவிட்டா.
★
ரூபி மடியில் பிள்ளையுடனும் முகத் தில் எரிச்சலுடனும் இருந்தாள் - அந்தரப் பட்டாள் "நேரம் போகுது. வெளிக் கிடுவமோ?
அம்மம்மா திடுக்கிட்டாள். 'என்ன மோனே. சாப்பிடாமல் எங்கை வெளிக் கிடுறிங்கள்? சாப்பிட்டிட்டு வெயில் தாழப் போங்கோவன்!"
petse):
"நாங்கள் தங்கச்சி வீட்ட போறம். நான் அங்கே சாப்பிடுறன்." நைசாக ரூபி வெட்டினாள்.
தம்பி சங்கடப்பட்டான். வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
ராணி அக்கா மணிக்கூட்டைப் பார்த்தாள். "எட மகன் பள்ளியால வாற நேரமாப் போச்சு. அப்ப ஆச்சி, நான் போட்டு வரட்டே?” என்றபடி ரூபிக்குக் கிட்டப் போனாள். "எங்கே. பபாவை ஒருக்காத் தூக்கிப் போட்டுப் போவம். வாங் கோம்மா!" ராணி அக்கா குனிந்து கைகள் இரண்டையும் நீட்டினாள்.
குழந்தை தனது குருணிப் பற்களைக் காட்டிச் சிரித்தது. தாயின் கைகளுக்குள் இருந்து வெளியே வர உன்னியது. ரூபி, வெடுக்கென்று குழந்தையைப் பின்னால் இழுத்து இறுக்கிக் கொண்டாள். ராணி அக்கா. செய்வதறியாமல் ஒரு நிமிடம் திகைத்துப் போனா! அவவின் நீட்டிய கைகள் தளர்ந்தன.
சாந்தி சங்கடத்துடன் ராணி அக்கா வைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்ப என்ன செய்வது?. ராணி அக்கா சமாளித் துக் கொண்டாள். சேலைத் தலைப்பால் முகத்தை ஒருதடவை அழுத்தித் துடைத்துக் கொண்டாள். "அப்ப. சாந்தி! நான் போட்டு வாறனம்மா. தம்பி வாறன்!"
ராணி அக்கா போய்ச் சில கணங்கள், மெளனமே நிறையப் பேசியது. நல்ல வேளை, அம்மம்மாவுக்கு நடந்தது
தெரியாது.

Page 7
அம்மம்மாதான் நிசப்தத்தைக் கலைத்தாள். "மோனே! நேரமும் போகுது. உன் ரை மனிசி பசி கிடக்குதல்லே!
வெளிக்கிடுங்கோவன்"
தம்பி, குழந்தையை அம்மம்மாவின் முன்னால் நீட்டினான். "ஆச்சியைக் கொஞ்சி விடுங்கோ!'
அம்மம்மாவின் முகம் வாடி யிருந்தது. "எங்கை எண்டாலும் நல்லா
இருங்கோ அப்பு' குரலில் நடுக்கம்.
தம்பி, பிள்ளையைக் கீழே இறக்கி விட்டான். தன்னைத் தூக்கி வளர்த்த அந்தக் கைகளைப் பிடித்துக் கன்னத்தில் அழுத்தினான். அது, பாசத்தின் செய்தி யைப் பரிமாறியது
★
'அம்மம்மா! தேத்தண்ணி குடிக் கேல்லையே!”
'குடிப்பம் சாந்தி. கொஞ்சம் ஆறட்டும். உதிலை வை. சொன்னாப் போல. பிள்ளை சாந்தி, நான் கேக்க வேணும் எண்டு இருந்தனான். உன்ர மச்சாள் எப்பிடியம்மா ஆள்?"
அம்மம்மா, எதிர்பாராத வேளையில் கேள்விக் கணையைத் தொடுத்தா...! சாந்தி தடுமாறிப் போனாள். என்ன வென்று. எதையென்று சொல்வது?
"ஏன் அம்மம்மா புதிசாக் கேக் கிறியள்? ரூபி நல்ல பெட்டைதானே!" அம்மம்மாவைப் பார்த்துக் கொண்டு இப்படி. பொய் பேச முடியவில்லை.
10
r N
NX
NRSRS
அம்மம்மா சிரித்தா. வேதனையோடு "சாந்தி. உன்ரை தம்பி பெண்சாதி எண்டு சமாளிக்காதேயம்மா! எனக்கு எல்லாம் விளங்கும்! உம். பழசெல்லாம் மறந் திட்டுதுகள். இங்க இருக்கிற சனமெல்லாம் மணிசரில்லையே. வெளிநாட்டில மட்டுந் தானே மணிசர் சீவிக்கீனம்? என்ன புதினம் இது? தான் பிறந்த மண் ஊத்தையாம். மணிசர் ஊத்தையாம்!"
"அம்மம்மா. சும்மா கனக்க யோசிக் கிறியள். வெளிநாட்டில கனகாலம் சீவிக்க. சில பேரின்ர குணம் மாறுறது இயற்கைதானே!” சாந்தி குறுக்கிட்டாள்.
"என்னம்மா இது இந்த மண்தானே எங்கட தாய். பூமித்தாய் இந்த மண்ணுக் காண்டி என்ன பாடெல்லாம் படுறம்? இந்த மண்ணிலேயே சீவிச்சு. கடைசி காலத் தில இந்த மண்ணுக்கையே போக வேனும் எண்டுதானே அந்தக் கடவுளை நேருறம்...!" சொல்லிக் கொண்டே இருந்தாள்.
SibLolbLDT
சாந்திக்கு ஒன்று மட்டும் புரிந்தது! இந்த அம்மம்மா கண் ஒப்பரேஷன் செய்யிறா இல்லை என்று கவலைப்படுவது வீண் மனிதர்களின் முகம் தெரியாது தான். ஆனால் அதற்கென்ன!
 
 
 
 
 
 

நீயும் நானும்
நீயும் நானும் புல்லின் இறக்கையிலும் பூவின் இருக்கிலும் பழந்திருக்கும் பனித்துளிகளில் orG 6orü86
கிழக்கைக் கிழித்தெழும் காலைப் பரிதியின் தொருகையில் சூரியக்குளியல் செய்வோம்
வெளிறி நிற்கும் நிலவின் மீதேற மயிலிறகைச் சூழக்கொண்டு சுற்றுலாச் செல்வோம்
யாருமற்ற தீவில் கதைகள் பேசுவோம் கவிதைகள் பாருவோம்
- எல்.வளிம் அக்ரம்
அலைகளுக்குப் பழிபோன மணல் வீடுகளைச் செப்பனிருவோம்.
6)ED6T60yds othedra DL திரித்து வாரியழத்துக் கொண்டு 6ss) 905 (55usTö...
ஆனால், அதற்கும் முன் சமரசம் பற்றிய, சமத்துவம் பற்றிய உனது நிலையை நிரப்பி விரு. நீயும் நானும் (8gõugp6Oolo tubo இலக்கணம் எழுதுவோம்.
11

Page 8
எங்களது அறிவின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. எங்களைப் போலவே எல்லோரும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்திருக்கின்றோம். எல்லோரும் வேறு வேறு மொழிகளைப் பேசினாலும், வேறு வேறு பண்பாட்டினைப் பின் பற்றினாலும் பிரச்சினைகள் அநேகமாக ஒன்றானதாகவே இருக்கின்றன. பிரச்சினையின் வடிவங்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் உணர்வுகள், வெளிப்பாடுகள், அடக்குமுறைகள் எல்லாம் எல்லோருக்கும் நடக்கிறது. எல்லோரும் இவை எல்லாவற்றையும் ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் வேறு வேறு மொழிகளில் வெளிப்படுத்து கிறார்கள். இதனால் எங்களுக்குப் பிறருடைய வெளிப்பாடுகளை அறியமுடியாமல் போகின்றது. இந்த இடத்தில்தான் மொழிபெயர்ப்பு எமக்குக் கைகொடுக்கிறது. இது மிகச் சிக்கலான ஒரு பணியை மிக இலகுவாகச் செய்து முடிக்கின்றது. இதனால் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் சொல்லப்பட்ட விடயங்களை எமது தாய் மொழியில் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இந்த வாய்ப்பு அமையாது போயிருந்தால்
மார்க்சையோ, டார்வினையோ, கார்க்கியையோ, காஸ்ரோவையோ நாம் அறிந்திருக்க முடியாது. மொழிபெயர்ப்பு பல்வேறு பண் பாட்டுத் தளங்களை ஒன்றாக இணைக்கிறது. மொழி பெயர்ப்பானது முக்கியம் பெற்ற காலப்பகுதியில்
அறிந்திருத்தல் அவசியம்.
வழமையாக மொழிபெயர்ப்பை
நான்கு வகையாகப்
வார்த்தைக்கு
வார்த்தை மொழிபெயர்ப்பு
2. நேருக்கு நேர் மொழிபெயர்ப்பு
3. சுதந்திரமான மொழிபெயர்ப்பு
மாற்றுப் படைப்பு.
மொழிபெயர்ப்பில் மொழியியலின் ஆதிக்கமும் தாக்கமும் மிக இவை எப்போதும் மொழி குறித்த தெளிவிலும் கருது .فهو ككسر கோளிலும் அடிப்படையாக நம்பியிருக்கின்றன. எனவே மொழிபெயர்ப்ப کیسر வருடைய மொழி மாற்றலும் திறனுமே மொழிபெயர்ப்பின் தரத்தை நிர்ணயிக்கின்றன
' 6Т60,16).)(T D,
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதாரண மொழிபெயர்ப்புகளைத் தவிர பிறவகையான எல்லா மொழி பெயர்ப்புகளும் கட்டாயமாக மாற்றத்துக்கு உள்ளான மொழிபெயர்ப்புகளாகவே அமைதல் வேண்டும். ஏனெனில் மூலப் பிரதியை அப்படியே பிரதி பண்ணுதல் பய னற்ற ஒன்றாகி விடும். எனவே ஒரு மொழி பெயர்ப்பாளரால் மூலப் பிரதியை மொழி பெயர்க்கும் போது மூலப் பிரதி குறித்த அறிவார்ந்த பின்புலமும் தான் செய்வது என்ன என்பது பற்றிய தெளிவும் அவசியம்.
வேறொரு பண்பாட்டுத் தளத்தில் வேறொரு மொழியில் மிகவும் வேறுபட்ட பின்புலங்களை உள்ளடக்கிய மூலப் பிரதியை மொழிபெயர்க்கும் போது கீழ்க் கானும் செயற்பாடுகளை (எல்லாவற்றை யும் அல்லது சிலதை) செய்ய வேண்டிய 856) d மொழிபெயர்ப்பாளனுக்கு 2-600TG.
O சுருக்குதல்
விரிவாக்கல்
* மாற்றுதல்
* நீக்குதல்
O சேர்த்தல்
* விளக்குதல்
இன்றைய தமிழ்ச் சூழலில் மொழி பெயர்ப்புக் குறித்துப் பார்த்தோமாயின் இங்கே செய்யப்படுகின்ற அனேகமான மொழிபெயர்ப்புக்கள் மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புகளே. ஏதாவதொரு தாய் மொழியில் எழுதப்பட்ட மூலப் பிரதி ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு
பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படுகின்றது. ஆங்கிலம்
தவிர்ந்த ஏனைய மொழிப் படைப்புக்கள்
பெரும்பாலும் மொழிபெயர்ப்பின் மொழி
பெயர்ப்புகளே. மொழிபெயர்ப்பின் பெரும் பாலான சிக்கல்களின் தோற்றுவாய் இது
தான்!
மொழிபெயர்ப்பின் முதலாவது மொழி பெயர்ப்பு ஆங்கில மொழிக்கு நிகழ்கிறது. இந்த இடத்தில், ஆங்கிலேய மொழிபெயர்ப் பாளர்கள் குறித்த ஒரு பார்வை மிகவும் முக்கியமானது.
"எந்தவொரு பெயரையும் கைக்கு வந்த விதமாக எழுதி, வாய்க்கு வந்த விதமாக உச்சரித்து, அவ்வடிவங்களை எல்லோர் மீதும் திணிப்பது ஆங்கில மொழி பேசும் சமூகங்களுக்குக் கைவந்த கலை" - (சி.சிவசேகரம்)
ஆங்கில வழி மொழிபெயர்ப்பானது
மிகவும் சிக்கலானதும் ஆபத்தானதுமான
ஒரு பணியாக மாறிவிடுகின்றது என் பதைப் பலரும் உணர்வதில்லை. ஏராள மான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்து குவிகின்றன. இவற்றில் பல மூலப் பிரதி களை தற்கொலை செய்து உருவானவை. அதிலும் குறிப்பாக இலத்தீன் அமெரிக்கா குறித்தான இலக்கிய மொழிபெயர்ப்பு களோ, அரசியல் மொழிபெயர்ப்புகளோ பெரும்பாலும் அபத்தமானவையாக அமைந்து விடுவது வழமை. இலத்தீன் அமெரிக்கா பற்றியோ அதனது அரசியல், சமூக, பண்பாடு பின்புலம் பற்றியோ தெளிவு இல்லாத நிலையில் செய்யப்படும் மொழிபெயர்ப்புகள் இயல்பை இழந்து
13

Page 9
s pegs); Q
விடுதல் தவிர்க்க இயலாததாகிறது. இவ் வாறான மொழிபெயர்ப்புகள் வலுவற்றதாக, காத்திரமான ஒன்றாக அமையாததாக ஆகிவிடுவதோடல்லாமல் 6J BF 65 6D 60 விலக்கி வைக்கின்ற முயற்சியையும் செய்து விடுகிறது. கட்டுரைகள் தவிர்ந்த கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் மொழிபெயர்க்கப்படும்போது உண்மை யான உணர்ச்சி வாசகனுக்கு வழங்கப்பட வேண்டும். மூலத்தின் முதல் மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் அமையும்போது ஆங்கில மொழிபெயர்ப்பாளன், மூலத்தை ஆங்கிலப் பின்புலத்திற்கு மாற்றி விடு கிறார். நாங்கள் மொழிபெயர்க்கும் போது ஆங்கிலப் பின்புலத்தையே மொழி பெயர்ப் பதால் மூலப்பிரதி செத்து விடுகிறது. மொழி பெயர்ப்பின் மொழிபெயர்ப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அம்சம் இது.
ஆங்கில வழி தமிழுக்கு வரும்போது அங்கே பயன்படுத்தப்பட்ட உருபொலியங் கள், ஒலிக் குறிப்புகள் கவனமாக மாற்றப் படல் வேண்டும். மூலத்தை ஆங்கில மாக்கும் போது பயன்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுத் தமிழுக்கு உரிய முறையில் அவை தரப் படல் வேண்டும். கட்டுரை மொழிபெயர்ப்பு கள் கரடுமுரடானதாக இருப்பினும் சிரமப் பட்டேனும் வாசிக்க முடியும். ஆனால் இலக்கிய மொழிபெயர்ப்புக்கு அது சாத்திய மாகாது. உணர்ச்சியுள்ள ஒரு சிறுகதை மொழிபெயர்ப்பாளரின் கவனக் குறைவால் சடமான ஒரு சிறுகதையாக காட்சியளிக்க லாம். எனவே எமக்கே உரித்தான மொழி நடையில் மொழிபெயர்ப்புச் செப்பனிடப்
14
பட்டிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பில் சொல்லப்படுகின்ற மிக முக்கியமான விடயம் பெயர்கள். அவை மூலத்தின் உச்சரிப்பை மொழிபெயர்ப் பாளன் (ஆங்கில வழி) அறிந்திராமையால் இது இயல்பாகவே நடந்து விடுகிறது. மொழிபெயர்ப்பில் மூல மொழிச்சொல் அப்படியே பயன்படுத்தப்படும்போது அச் சொல் குறித்த உண்மையான பொருள் விளக்கம் கட்டாயம் வழங்கப்படல் வேண்டும்.
மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புக் குறித்துக் கவனமெடுக்கும் போது மூலம் எழுந்த இடம், அதன் சூழ்நிலை அதன் பின்னணி, எழுதியவரின் பின்னணி போன்ற விடயங்கள் நிச்சயமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மூலம் குறித்த அக்கறை மட்டுமல்லாமல் மூலத்தை உருவாக்கியவன் குறித்த அக் கறையும் தெளிவான மொழி பெயர்ப்பைக் கொடுக்கும். ஒரு மூலத்திற்கு இரண்டு மூன்று ஆங்கில மொழி பெயர்ப்புகள் கிடைக்கின்றன. எனவே அவற்றை ஆராய்ந்து சரியானதை உள் வாங்க வேண்டிய பாரிய பொறுப்பு மொழிபெயர்ப் பாளனின் கைகளிலேயே தங்கியிருக் கின்றது. பல சமயங்களில் ஒரே வடிவத் திற்குப் பல தமிழ் மொழிபெயர்ப்புக்கள் அமைவதும் உண்டு.
கவிதையை மொழிபெயர்ப்பதே மிகக் கடினமான காரியம் எனச் சொல்லலாம். அதிக உணர்வுகளையும், செய்திகளை யும், சொல்லாடல்களையும் ஒருங்கே கவிதை தாங்கிக் கொண்டிருப்பதால் மொழிபெயர்ப்பு மிகவும் கடினமாகிறது.

ஆங்கில வழி வரும்போது அவை பல சமயத்தில் வேறு வடிவம் கொண்டவை யாகவே அமைவதால் எம்மால் உண்மை யான மூல வடிவத்தைக் கொண்டுவர முடிவதில்லை. இது மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பில் மிகப் பெரிய குறைபாடு. மொழி பெயர்ப்பாளன் மூலத்தை (ஆங்கில வழி) மொழிபெயர்த்தவற்றை நம்பியே மொழிபெயர்க்க வேண்டியிருக்கின்றது. இதனால் பல பயனுள்ள பிறமொழிக் கருத்துக்கள் எமக்குக் கிடைப்பதில்லை. கிடைப்பனவும் எவ்வளவு தூரம் சரி யானவை என்பதை உறுதி செய்யவும் முடியாது. உலக வரலாற்றின் பல பக்கங் கள் இன்னமும் தூசி தட்டிப் பார்க்கப் படாமல் இருண்ட பக்கங்களாக தொடர்ந்
PS gigs):
y
தும் எங்களுக்கு இருப்பது இதன் விளை வாலேயே என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தவறுதலான மொழிபெயர்ப்புக்கு ஆதரவாகக் கட்டுடைத்தல்', 'ஆசிரியன் இறந்து விட்டான்' என்ற பின்நவீனத்துவப் பிற்போக்குவாதக் கோட்பாடுகளும் ஒலிக் கின்றன. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது வெறுமனே ஒரு கலையாக மட்டுமல்லா மல் சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் செய்யப் பட வேண்டிய ஒன்று. மொழி பெயர்க்கும் ஆற்றலிருக்கும் என்பதால் எல்லா வற்றையும் மொழிபெயர்த்தல் என்பது தாய்
மொழிக்குச் செய்யும் துரோகமே
/=
வாழ்த்துகின்றோடு
* அண்மையில் முரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்
கழகத்தின் விரிவுரையாளராக (தகுதிகாண்) நியமனம் பெற்றுள்ளார்.
* கம்பன் கழக அமைப்பாளர் 9 8
ழுநீ. பிரசாந்தன்
米 பேராதனைப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்விக்கான புலமைப்
பரிசில் பெற்று 'பாரதியும் மஹாகவியும்' என்கிற தலைப்பில் முதுதத்துவமானி ஆய்வு செய்து வருகின்றார்.
米 பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியிடவுள்ள இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்' என்ற நூல் உட்பட 7 நூல்களின் பதிப்பாசிரியர் இவர்.
- ஆசிரியர்
S------
15

Page 10
தோழர் ரகுநருன்
- வீ.அரசு
தொ.மு.சி.ரகுநாதன் மறைந்து நான் காண்டுகள் ஆகிவிட்டன. அண்மையில் மறைந்த சுந்தர ராமசாமிக்குத் தமிழ் ஊடகம் அளித்த மரியாதை வரவேற்க வேண்டிய செயல். ரகுநாதன் மறைந்தபோது எந்த ஊடகமும் கண்டுகொண்டதாகத் தெரிய வில்லை. அவர் தொடர்பு கொண்டிருந்த இடதுசாரி ஊடகங்கள் மட்டுமே கண்டு கொண்டன. "கட்சி சாராதவர்கள் அங்கீகரிக் கப்படுவதில்லை" என்ற வாதம் எவ்வளவு பொய்யானது என்பதைச் சுந்தர ராமசாமி மறைவு குறித்த ஊடகப் பதிவால் அறிய முடியும். உண்மையில் ஒரு சார்பில் இருப்பவர்களைத்தான் வெகுசன ஊடகம் கண்டு கொள்வதில்லை. அண்மையில் ரகுநாதன் குறித்துப் பல இடங்களிலும் பேசத் தொடங்கியுள்ளார்கள். புதுமைப்பித்தன் நூற்றாண்டுக் கருத்தரங்கங்கள் நடை பெறுகின்றன. புதுமைப்பித்தன் பற்றிப் பேசுபவர்கள் தவிர்க்க இயலாமல் ரகுநாதன் பற்றியும் பேசுகிறார்கள். ரகுநாதன் பற்றிய புரிதல் தமிழ்ச் சூழலில் ஒருதலைப் பட்சமாகவே பதிவாகியுள்ளது. உண்மையில் ரகுநாதன் அப்படிப்பட்டவரா? என்ற விசாரணை தேவைப்படுகின்றது. 1940கள் தொடங்கி சுமார் அறுபது ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சூழலில் இயங்கியவர் ரகுநாதன். இன்றைய கண் ணோட்டத்தில் ரகுநாதனை எப்படிப் புரிந்து கொள்வது என்ற உரையாடல், அவரது நான்காம் ஆண்டு (மறைவு : 31.12.2001) நினைவு அஞ்சலியாக அமையக்கூடும்.
ஜமீன்தார்கள் வம்சாவழியில் வந்த குடும்பமாகத் தொண்டமான் குடும்பங்கள் கருதப்பட்டன. ஒத்துழையாமை இயக்கம் நடந்த காலத்தில் (1942) கல்லூரி மாணவ னாகப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், ரகுநாதன். அதனால் படிப்பைத் தொடர முடியவில்லை. தமது குடும்பத்தாரின் ஜமீன்தாரிய வெற்றுக் கெளரவத்தை முச்சந்தியில் போட்டு உடைத்தவர். தமது திருமணம், இடதுசாரி கருத்துச் சார்பு, பொது வாழ்க்கை ஈடுபாடு ஆகிய பிறவற்றால் குடும்பத்தின் வறட்டுத் தனத்தை உடைத்து வெளியேறினார். அவரது உறவினர்கள் பலரும் பொருளாதார ரீதியாக வளமாய் இருந்தபோது - அதிலிருந்து வேறுபட்டு, சாதாரண நடுத்தரக்
16
 

குடும்ப வாழ்வை மேற்கொண்டவர். இளம் வயதில் இவ்வகையான மன நிலை, இவரது குடும்பப் பின்புலத்தை அறிந்தவர்களுக்கு வியப்பளிப்பதாகவே உள்ளது. குடும்பத்தை விட்டு வெளி யேறியவர் முழுநேரப் பத்திரிகையாளராக வாழ்த்தார்.
ரகுநாதனின் இளமைக் காலம் பற்றி மேலும் அறிய விரும்புகிறவர்கள், அண்மையில் பொன்னீலன் தொகுத்து வெளியிட் டுள்ள ரகுநாதன் குறித்த மூன்று
நூ ல க  ைள வாசிக்கலாம். ('தொ. மு.
தமது குடும்பத்தாரின்
ஜமீன்தாரிய வெற்றுக் கெளர
வத்தை முச்சந்தியில் போட்டு உடைத் தவர். தமது திருமணம், இடதுசாரி
665);
கொள்ள உதவலாம். இவருடைய இம் மனநிலை குறித்து தோழர் நல்லகண்ணு சுவைபடக் கூறியுள்ளார். (பார்க்க "எங்கள் ரகுநாதன் 2004:17)
1940களில் ரகுநாதன் "தினமணி", 'சக்தி', 'முல்லை" ஆகிய இதழ்களில் பணியாற்றினார். "சக்தி” இதழில் மொழி பெயர்ப்புகளைச் செய்தார். புனைகதை களையும் எழுதத் தொடங்கினார். ரகு நாதன் முதலில் எழுதியவை நாவல்களே. "புயல்" (1945), “முதலிரவு' (1949), "கன்னிகா? (1950) ஆகியவை
பெண் களை
முத ன் மை ப்
சி. ரகுநாதன் கருத்துச் சார்பு, பொது வாழ்க்கை ஈடுபாடு படுத்தி எழுதி இலக்கியத் ஆகிய பிறவற்றால் குடும்பத்தின் வறட்டுத் GR) A
த ட ம் " , தனத்தை உடைத்து வெளியேறினார். அவரது பி ன் ன ர் தொ.மு.சி.ரகு உறவினர்கள் பலரும் பொருளாதார ரீதி  ெந ச வு த் நாதன் வாழ் யாக வலமாய் இருந்தபோது - தொழிலாளர் வும் பணியும்", அதிலிருந்து வேறுபட்டு, சாதாரண G L T J m
‘எங்கள் ரகு நாதன்"). கரடு தட்டிப் போன நிலப் பிரபுத்துவக் குடும்பப் பின்னணியை உதறுவது மன ரீதியான விடுதலைக்கு வழி வகுக்கும். ரகுநாதன் இளமையில் அதைச் செய் திருக்கிறார். நிலப்பிரபுத்துவ மதிப்பீடு களைத் தூக்கிப் பிடித்த அவரது அண்ணன் தொ.மு.பாஸ்கரத் தொண்ட மானோடு இறுதிக் காலம் வரை தொடர்பு கொள்ளாத வாழ் முறையை மேற்கொண்டார். இத்தன்மைகள் ரகு ந்ாதனின் மனநிலையைப் புரிந்து
நடுத்தரக் குடும்ப வாழ்வை மேற் கொண்டவர்.
டத்தை அடிப் ப  ைட ய ர க க்
கொண்ட 'பஞ்சும் பசியும்" (1950) நாவலை எழுதினார். இக்காலத்தில்
கார்க்கியின் தாய்’ நாவலையும் மொழி பெயர்த்தார். இவரது முதலிரவு' நாவல் தடை செய்யப்பட்டது. தமிழ்ப் புனை கதை உலகில் கு.ப.ரா.வும், தி.ஜானகி ராமனும் பெண் உலகத்தைப் பற்றி எழுதியவர்கள் என்று கூறுகிறோம். இதில் எம்.வி.வெங்கட்ராமனும் சேர்ந்து கொள்கிறார். ஆனால் இவர்களுக்கு முன் னோடியாகப் பெண் மனதைப் பதிவு
17

Page 11
* gets): অন্ম
செய்தவர் ரகுநாதன். பாலியல் சிக்கல் களைப் பதிவு செய்வதில் நடைமுறைச் சமூக விழுமியங்களுக்கு முரணான சூழல் நிலவியபோது, அச்சிக்கல்களைப் பற்றி விவாதிக்கத் தமது நாவல்கள் மூலம் முன்வந்தவர் ரகுநாதன். இப்பதிவு நாவலாக வெற்றி பெற்றதா? ரகுநாதன் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற விவாதங்கள் ஒருபுற மிருக்க, அவரது இந்தப் பதிவைத் தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ளவில்லை. தடை செய்யப்பட்ட அவரது ‘முதலிரவு' காந்தியின் பிரம்மச்சரியம் குறித்த விமர் சனமாக அமைந்த நாவல். பெண்ணின் உணர்வைப் புரிந்து கொள்ளாத, பழம் நிலப்பிரபுத்துவ மன நிலையே காந்தியின் மனநிலை என்ற கடுமையான விமர் சனத்தை அந்நாவல் மூலம் வெளிக் கொண்டு வந்தார். காந்தியார் மறைந்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டில், இவ்வகை யான காந்தியக் கருத்து விமர்சனத்தைத் தமது படைப்பில் கொண்டு வந்ததால், அரசாங்கம் அதன்
கொள்ளும் சூழலால் அவர்களுக்கு உருப் பெறும் மன உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளார். உலா இலக்கியத்தில் பெண்ணைப் பதிவு செய்ததற்கு மாற் றான ஒரு அணுகு முறையை இதில் மேற்கொண்டார். பெண்ணின் பாலியல் உணர்வின் நியாயப்பாட்டைப் புரிந்து கொள்ளாத ஆண்களின் திமிர் குறித்துப் "புயல்” நாவலில் எழுதினார். எனவே பெண்ணின் ஒடுக்கப்பட்ட மற்றும் அமுக்கப்பட்ட பாலியல் குறித்த உரை யாடலாக இவரது நாவல்கள் அமைந்து போனதாலோ என்னவோ, ஒழுக்க விழுமியத்தைத் தூக்கிப் பிடிக்கும் தமிழ்ச் சமூகம் இப்படைப்புகள் குறித்த பதிவு கள் எதையும் செய்யவில்லை. ஒருவரின் படைப்பு குறித்த விமரிசனம் என்பது வேறு; அந்தப் படைப்புக் குறித்துப் பேசாமல் விடுவது என்பது வேறு. விடு வது என்பதன் மூலம், அதில் பேசப்படும் செய்திகளை அணுகுவதில் உருவாகும் மன விழுமியமாகக் கருத முடியும். அந்
நாவல்களைப் படித்த
வேலையைச் செய்து,
9565) L
போது தான் அதிர்ந்து போனதாக சுந்தர ராம
அதனைத் செய்து ரகுநாதனுக் குப் பெருமை செய் தது. இதைப் போலவே பெண்களின் வளர்ச் சிப் பருவத்தில் (ஏழு வகை) ஏற்படும் மன உணர்வுகளைப் பற்றிய பதிவாக "கன்னிகா' நாவலை எழுதினார்.
பாரம்பரிய நிலவு டைமைப் பண்பாட்டில் பெண்கள் எதிர்
18
பெண்ணின் ஒடுக்கப்பட்ட மற்றும் அமுக்கப்பட்ட பாலியல் குறித்த உரையாடலாக இவரது நாவல்கள் அமைந்து போனதாலோ என்னவோ, ஒழுக்க விழுமியத்தைத் தூக்கிப் பிடிக்கும் தமிழ்ச் சமூகம் இப்படைப்புகள் குறித்த பதிவுகள் எதையும் செய்யவில்லை.
சாமி குறிப்பிடுகிறார். ரகுநாதன் தமது தொடக்க காலப் புனைவுகளின் மூலம் யாரும் தொடுவதற்கு அஞ்சும் பாலியல் சிக் கல் குறித்துத் துணிந்து விவாதித்திருக்கிறார் என்பது பதிவு செய்ய வேண்டிய செய்தி.
பசியும் " வெறும்
"பஞ்சும் நாவலை

விவரணமாக இன்று கருத முடியும். தாய்’ நாவலில் வரும் நிகழ்வுகள் இந் நாவலில் மீட்டுருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறலாம். நாவல் எழுதப்பட்ட காலத்தில் நெசவாளர் வாழ்க்கை என்பது கேள்விக் குறியாகியிருந்தது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி அனைத்துத் தரப்பிலும் எழுந் தது. நவீன எந்தர வருகைக்கும் பாரம் பீரிய தொழில் முறைக்குமான முரணாக அமைந்த அச்சிக்கல் இன்றும் தொடர் கிறது. அதனைக் கருப்பொருளாக்கினார் தொ.மு. சி. அன்று அவர் நம்பிய சோசலிச எதார்த்த முறையை அடிப் படையாகக் கொண்டு அதனை உருவாக் கினார். அவரே பிற்காலத்தில் சோசலிச எதார்த்தம் குறித்த விமர்சனத்தை முன் வைத்தார். அன்றைய சூழலில் தமது புரிதலும் பின்னர் உருவான புரிதலும் வேறுபடும் புள்ளிகளை அவர் விரி எழுத் தாளர்கள் என்போர் கடவுளைப் போல் சிரஞ்சீவியாக இருக்க முடியாது. கால வளர்ச்சியோடு தாங்களும் வளருவார்கள் என்பதை தொ.மு.சி. நம்பினார். இப்படி யான பார்வைகளை க.நா.சு. போன்றவர்
வாகப் பதிவு செய்துள்ளார்.
களிடம் காண முடியுமா? பிறக்கும் போதே நாவில் எழுதப் பெற்றவர்கள் அல்லவா அவர்கள்! தமிழ் நாவல் பற்றிப் பேசுபவர்கள் எல்லாரும் தொ. மு.சி.யின் "பஞ்சும் பசியும் பற்றியே கூறுவதும், பிறவற்றைப் பற்றி மெளனம் சாதிப் பதும் சுவையான நிகழ்வாகும். தமக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும் தட்டையான பார்வையாகவே
இதனைக் கொள்ள முடியும்.
t stage):
ரகுநாதன் ஹரீந்திரநாத் சட்டோ பாத்தியாய படைப்புகளில் ஈடுபாடு கொண்டவர். தமது மகனுக்கு அரீந்திரன் என்று பெயர் வைத்தவர். இந்தியா முழு வதும் இடதுசாரி மன நிலையாளர் களிடம் செல்வாக்குச் செலுத்தியவர் ஹரீந்திரநாத். இவரது படைப்பு நெறி மீது ரகுநாதன் மரியாதை கொண்டிருந் தார். ரகுநாதன் சிறுகதைகள், நேரடியான நிகழ்வுகளைப் பதிவு செய்தவையாகப் பெரும்பகுதி அமைந்தன. விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட அவரது நீயும் நானும்’ கதை இதற்கு நல்ல எடுத்துக் காட்டு. கட்சித் தலைவரைக் காப்பாற்றுவதற் காக, அடிமட்டத்தில் இருந்த கட்சித் தோழரின் மனைவி, தனது குழந்தையைக் கொலை செய்யும் நிகழ்ச்சி சார்ந்த கதை இது. கட்சியின் மீது கொண்ட நம்பிக்கை யாக இதனைக் கருத முடியும். இடதுசாரி இயக்கங்களின் அடிமட்டத்தில் செயல் படும் தோழர்கள் மனநிலை, இவ்வகை யில் செயல்படுவதை இன்னும்கூடக் காண முடியும். இது ஒரு வகையான மனநிலை. இதனை எப்படி மதிப்பிடுவது என்பது சிக்கலானது. இக்கதை மூலம் இடதுசாரி இயக்கங்கள் மீது ரகுநாதன் கொண்டிருந்த நம்பிக்கையைக் காண முடிகிறது. ஆனைத்தீ’, ‘வென்றிலன் என்ற போதும் ஆகிய சில கதைகள் புதுமைப்பித்தன் கதைத் தரத்திற்கு எவ் வகையிலும் குறைந்ததாக மதிப்பிட முடி யாது. இவர் சிறுகதைகளை எழுதினாரா என்று கேட்கும் சூழல் இன்று இருப் பதைக் காண்கிறோம். அழகிரிசாமியும் ரகுநாதனும் இரட்டையர்களாகப் பேசப் பட்ட காலம் இருந்தது. அழகிரிசாமி கதைகளில் காணப்படும் பல கூறுகளை
19

Page 12
ரகுநாதன் கதைகளில் காணலாம். புதுமை பித்தன் செல்வாக்குக்கு உட்பட்டுச் சில நல்ல கதைகளை ரகுநாதன் எழுதியிருக் கிறார். தமிழ்ச் சிறுகதை வரலாறு, ரகு நாதனை அப்படிப் பதிவு செய்யவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் எழுத்தாளர் களைப் பற்றிய பதிவு என்பது அவர் களது இறுதிக் காலங்களில் எப்படி அமைகிறதோ அப்படியே ஆகிப் போகிறது. அவர்களுடைய கடந்த காலங் கள் பதிவாவதில்லை. ரகுநாதனை ஆய் வாளராக அறிந்த தமிழ்ச் சமூகம், படைப்பாளராக அறியாமல் இருப்பதற்கு அவரது இறுதிக்காலச் செயல்பாடுகளே காரணம். எல்லோருக்கும் இவ்வகையான ஆபத்து நிகழ்வது இயல்பு. குறைந்த வயதில் மறைந்த பாரதி, புதுமைப்பித்தன் ஆகியவர்களுக்கு இப்படி நிகழவில்லை. தொடர்ச்சியான ஊடகச் செல்வாக்குப் பெற்று வாழ்ந்த க.நா.சு, சி.சு.செ. மற்றும் சுந்தரராமசாமி ஆகியோருக்கு இவ்வகையான ஆபத்து ஏற்படவில்லை என்பதை இங்கு நாம் பதிவு செய்யலாம்.
ரகுநாதன் பழந்தமிழ் இலக்கியத் தில், குறிப்பாகப் பிரபந்த இலக்கியங் களில் பயிற்சி மிக்கவராக இருந்தார். சதகம், பள்ளு, குறவஞ்சி ஆகிய பிற வடிவங்கள், தனிப்பாடல்கள் ஆகியவற் றில் அவரது ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. புதுமைப்பித்தனுக்கும் இவ்வகை ஈடு பாடு இருந்தது. அழகிரிசாமியும் அவற் றில் ஈடுபாடு காட்டியதை நாம் அறி வோம். இம்மூவரைத் தவிர, பழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு, இவர்களது சமகாலப் படைப்பாளிகளிடம் இல்லா மல் இருந்ததை நாம் புரிந்து கொள்ள 20
வேண்டும். குறித்த பார்வைக்கும் நவீனத் தமிழ் இலக்கிய உருவாக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்தக் கண்ணோட்டத் தில் புதுமைப்பித்தன், ரகுநாதன், அழகிரி சாமி ஆகிய மூவரின் செயற்பாடுகள் தனித்தது. அன்றைய தமிழ் எழுத் தாளர்கள் எவரிடமும் காண இயலாத
பழந்தமிழ் இலக்கியம்
பண்பு. இத்தன்மை ரகுநாதனின் கவிதை ஆக்கத்தில் செல்வாக்குச் செலுத்திய தாகக் கூற முடியும். பேச்சாக இருந் தாலும், அதில் ஓர் ஒசைநயம் இருக்க வேண்டும் என்பதில் ரகுநாதன் குறியாக இருந்தார். இலக்கியம் என்ற ஊடகம், வாசகனிடத்தில் அதன் வெளிப்பாட்டு முறைகளில் செலுத்தும் செல்வாக்கு குறித்து அக்கறையோடு விவாதித்தவர் ரகுநாதன். இப்பின்புலத்தில் கவிதை என் பதை ஒசையாகக் கருதினார். இதுவே, திருச்சிற்றம்பலக் கவிராயராக வெளிப் பட்டது. இவரது கவிதை உருவாக்கங் களுக்கு அன்றைய கேட்பு ஊடகமான வானொ லிக்கும் ஒரு பங்கு இருந்தது. 1930களின் இறுதி - 40களின் தொடக் கத்தில் தமிழ் வானொலியில் தமிழின் முதன்மையான படைப்பாளிகள் பலரும் பங்குகொண்டனர். வானொலிக்கென எழுதிய கவிதைகள், அதன் நீட்சியாக அமையும் கேட்போசையை முதன்மைப் படுத்தும் கவியரங்கம் சார் கவிதைகள் ஆகியவை ரகுநாதன் கவிதைகளாக அமைகின்றன. படைப்பு வடிவத்தில் சோதனை என்பது தாம் படித்த புதிய தன்மைகளின் செல்வாக்கை உள்வாங்கிச் செயல்படுவது. தமிழில் புதுக்கவிதை, ஐரோப்பிய இலக்கிய வடிவங்களை உள்வாங்கிய சோதனையாக அமைந்தது.

புதிதாகக் கற்ற மொழியின் செல்வாக்கு அங்கு முதன்மையாக அமைகிறது. இத் தன்மைக்கு எதிரான சோதனையாக, மரபு சார்ந்த கவிதையின் ஒசையை உள்வாங் கிய புதிய கவிதையாக ரகுநாதன், புதுமைப்பித்தன் கவிதைகளைப் பார்க்க முடியும். இவர்கள் கவிதைகளை பேச் சோசை வடிவமாகக் கண்டனர். வானொலியில் இக் கவிதைகளின் தொடர்ச்சியாக நாடகங்களையும் ரகு தாதன் எழுதினார். நாற்பதுகளில் தமிழ் வானொலிக்கும் நவீனத் தமிழ்ப் படைப் பாளிக்குமான உறவு குறித்த பதிவு இன்னும் செய்யப்படவில்லை. அன்றைய சூழலில் புதிதாக உருவாகி வளர்ந்து வந்த அச்சு ஊடகத்திற்கு இருந்த செல் வாக்கு அளவிற்கு அன்றைக்குப் புதிதாக உருவாகி வந்த வானொலி ஊடகத் திற்கும் இருந்தது. வ.ரா., கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, ரகுநாதன், அழகிரிசாமி ஆகிய பலர் வானொலிக்கு எழுதியவை களே நாடகங்கள் என்றும், "சம்பாவு ணைகள்' என்றும் அழைக்கப்பட்டன. சமகால ஊடகத் தாக்கத்திற்கு எழுத் தாளர்கள் உட்படுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்று. களையும் நாடகங்களையும் இவ்வகை யில் பார்ப்பதற்கு இடமிருப்பதாகவே கருதலாம்.
ரகுநாதன் கவிதை
கவிஞராகவும் புனைகதை பத்தி ரிகையாளராகவும் இருந்த ரகுநாதன் அன்றைய தேவையையொட்டி மொழி பெயர்ப்பாளராகவும் வாழ்ந்தார். "சக்தி” மற்றும் 'முல்லை’ இதழ்களில் பணியாற் றியபோது மொழிபெயர்ப்பதற்கான சூழல் அமைந்தது. அது இதழியல்துறை சார்ந்து நிகழ்ந்தது என்றும் கூறலாம்.
PS D&GSG);
Su பின்னர் 'சாந்தி இதழை அவர் நடத்திய போதும் "சோவியத் நாடு’ இதழில் பணி யாற்றிய போதும் மொழிபெயர்ப்பில் ஈடு பட்டார். மாக்சிம் கார்க்கியின் தாய்', 'மூன்று தலைமுறைகள்", சாரியின் டைரி", "தந்தையின் காதலி" ஆகிய நாவல்களையும் சில சிறுகதை
"பிரம்மச்
களையும் ரகுநாதன் மொழியாக்கம் செய் துள்ளார். அலெக்சி டால்ஸ்டாய், இலியா எரன்பர்க், மைக்கேல் ஷோல கோவ், மாயகோவ்ஸ்கி ஆகிய படைப் பாளர்களின் ஆக்கங்கள் சிலவற்றைத் தமிழில் ரகுநாதன் கொண்டு வந்துள் ளார். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் அரசியல் படைப்புகளை மிகுதியாக மொழியாக்கம் செய்துள்ளார். இவரது மொழியாக்கப் பணி சக்தி, முல்லை ஆகிய இதழ்களில் தொடங்கி, சோவியத் தூதரகத்தின் மூலம் விரிவாக நடைபெற்றது. இவரது அனைத்து மொழியாக்கங்களும் நூல் வடிவம் பெற்றுவிட்டதாகக் கூறமுடியாது. தமிழில் ரகுநாதன் அளவிற்கு மொழி யாக்கம் செய்தவராக க.நா.சு.வைச் சொல்ல முடியும். வேறு யாரையும் கூற முடியுமா? என்பது ஐயம். இவ்வளவு தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபட்ட அவரின் பங்களிப்பைத் தமிழ்ச் சமூகம் எப்படிப் புரிந்துள்ளது என்பது கேள்விக் குறி. க.நா.சு.வின் மொழிபெயர்ப்புக் குறித்துப் பேசப்படும் அளவிற்கு ரகு நாதன் மொழிபெயர்ப்புக் குறித்துப் பேசப்படுகிறதா என்கிற கேள்வியை தாம் எழுப்பிக் கொள்வது அவசியம். சோவியத் இலக்கியங்களின் மொழி பெயர்ப்புப் பணியாக அவரது பணி அமைந்தது. க.நா.சு. பணி யுனெஸ்கோ
2

Page 13
665); তত্ত্ব
நிறுவனம் சார்ந்த பணியாக அமைந்தது. க.நா.சு. அங்கீகரிக்கப்படுவதும் ரகு நாதன் மெளனப்படுத்தப்படுவதும் அவர் கள் சார்ந்த அணுகுமுறை அளவினதே. தனிப்பட்ட மனிதர்கள் சார்ந்த விஷய மாக இதைப் பார்க்க முடியாது. 1948இல், புதுமைப்பித்தன் மறைந்தபின், புதுமைப் பித்தனின் வாழ்க்கை வர லாற்றை தொ.மு.சி. எழுதி னார். தான் மறைவதற்கு முன்பு, அவரது இறுதி நூலாக அமைந்தது
தமிழின் முதன்மையான சிறுகதைப் படைப்
ராமசாமி அவர்களின் எதிர்வினையை இங்குப் பதிவு செய்வது சுவையாக அமையலாம்.
“.புதுமைப்பித்தனை ஏத்துக்காத வங்க அவர சாதிங்கிற காரணத்துக்காக மட்டும் ஏத்துக்கல. சில ஆட்கள் புதுமை என்கிற காரணத்துக்காக ஏத் துக்கல. சில ஆட்கள் அவ ருடைய தமிழ் நல்ல தமிழ்
இல்லை
காக ஏதுக்கல. இன்
என்கிறதுக்
னும் சில ஆட்கள்
‘புதுமைப்பித்தன் பாளியாக புதுமைப் பித்தனை ர் ரொம்பத்
s s கதைகள் - விமர் அங்கீகரிக்க ரா.ரு.தேசிகன், இ ராம பத சனங்களும், விஷ ES துணிச்சலா எழுது 9 .நா.சு, சி.செ.சு. சிட்டி மற்றும் β) η π ή இந்தச் மத் தனங்களும் " அசோகமித்திரன் · · '? எனனும நூல. ரகு \ ஆகியவர்கள் து த
நாதன் தமது வாழ்நாள் மறுத் சிந்தனையோட்டமாகப் புது  ைம ப் பித்த  ைன க் கொண்டிருந்தார் என்று கருத
முடியும். தாம் தொடர்பு கொண்டிருந்த இடதுசாரி வட்டங்கள் புதுமைப் பித்தனை நம்பிக்கை வறட்சியாளராகக் கட்டமைத்த நேரத்தில், அதற்கு மாற் றான பிம்பத்தைப் புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்துப் பதிவு செய்தார். இறுதிக் காலங்களில், வெள்ளாள - பார்ப்பானிய முரணாகப் புதுமைப் பித்தனை அணுகுவதில் ஏற்பட்ட தன்மை களை அம்பலப்படுத்தினார். தமிழின் முதன்மையான சிறுகதைப் படைப்பாளி யாக புதுமைப்பித்தனை அங்கீகரிக்க ரா.பூரீ.தேசிகன், க.நா.சு, சி.சு.செ., சிட்டி மற்றும் அசோகமித்திரன் ஆகிய வர்கள் மறுத்தனர் என்பதைப் பதிவு
செய்துள்ளார். இது குறித்த சுந்தர
Οι சாரத்துக்கானதல்ல. 56oTFT.
அவர் ரொம்ப செக்ஸியா எழுதுகிறார். இப்படிப் பல் வேறுபட்ட காரணங்களால அவருக்கு எதிரான மனோபாவம் வந்திருக்கு. இந்த எல்லாத்தையும் நீங்க தொகுத்திருக்கணுமே ஒழிய, சாதிய மட்டும் நீங்க தொகுத்தது எனக்கு உடன் பாடான விஷயம் இல்ல. நீங்க புத்தகம் எழுதுகிற காலத்துலே அந்த விஷயமே யில்லை. முன்னால இருந்தது. அது ஒரு வரலாறே ஒழிய இப்போது உண்மை இல்லை." (பொன்னீலன் : தொகுப்பு "எங்கள் ரகுநாதன்". ப 38-40)
தமிழ் நாட்டின் சாதிய ஓர்மைக்கும் வரலாறு எழுதுவதற்குமான உறவு நிலைகள் எல்லோரும் அறிந்த ஒன்றே. இடதுசாரி இயக்கம், இத்தன்ன்மகளில் கொண்டிருந்த அணுகுமுறையே தமிழ்
22
நாட்டில் கோட்பாட்டு வறுமை மிக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி.மு.க. போன்ற அமைப்புகள் உருப் பெற வழிகண்டது. படைப்புலகில் செயல்பட்ட இத்தன்மையை ரகுநாதன் தமது இறுதிக் காலங்களில் பதிவு செய் திருப்பது முக்கியமானது. புதுமைப் பித்தன், சாதிய ஆதிக்கத்தில் தாம் புறக் கணிக்கப்பட்டதை, அவர் இறப்பு நேரத் தில் பதிவு செய்ததைக் கடைசி நாட் களில் புதுமைப்பித்தன்” என்ற எஸ்.சிதம் பரம் (என்.சி.பி.எச். 2005) அவர்களின் நூல் உறுதிப்படுத்துகிறது.
தமிழில் புனைவு மொழியைக் கண்டுபிடித்தவர் புதுமைப்பித்தன். காலனியத்தின் மூலம் நமக்குக் கிடைத்த நவீனத் தன்மைகள், நமது மரபு சார்ந்த கதை சொல்லலோடு இணைந்து தமிழில் புனைவுகள் உருப்பெற்றன. இவற்றில் நவீனமும் மரபுசார் கதை சொல்லலும் இணைந்தே இருந்தன. புத்தம் புனைவு (Fiction) என்பது உருப்பெறவில்லை. இவ்வகையான புத்தம் புனைவைக் கண்டுபிடித்தவர் புதுமைப்பித்தனே. தமிழ்ப் புனைகதை வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு இது. இதனை இனம் கண்டு, தம் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்துவதில் ரகுநாதன் முனைப் பாக இருந்தார். புதுமைப்பித்தன் பற்றிய ரகுநாதன் தொகுப்புகள் அண்மையில் ஒரு நபரால் கையகப்படுத்தப்பட்டு, அவ ரது அடையாளமாகவும் வணிக நிறு வனம் ஒன்றின் வெற்றிகரமான வணிக மாகவும் உருப்பெற்றிருப்பதை நாம் காண்கிறோம். எனவே, புதுமைப்பித்தன் பற்றிய உரையாடல் என்பது ரகுநாதனை தவிர்த்ததாக அமைய இயலாது என்ற உண்மையைப் பதிவு செய்வது அவ
Vウ சியம். ஒரு படைப்பாளி சக படைப்
geese):
பாளியை இப்படிக் கொண்டாடிய வர லாறு தமிழில் மிக மிகக் குறைவு.
தமிழில் 1940களின் - இறுதி ஐம்பதுகளின் தொடக்கத்தில், வெகுசனத் தன்மை மிக்கதான அச்சு ஊடகச் செயல் பாட்டில், நவீனத் தன்மைகளைச் சிரத் தையுடன் கொண்டு வந்ததில் இடதுசாரி இயக்கங்களுக்கு முக்கியமான இட முண்டு. ரகுநாதன் - அழகிரிசாமி கூட் டணி, ‘சக்தி இதழிலும், 'முல்லை’ இதழிலும் இப்பணியைச் செய்தது. 1954இல் ரகுநாதன் தாம் நடத்திய 'சாந்தி’ இதழ் மூலம் இதனைச் சாத்தியப்படுத்தினார். தரமான சிறுகதை களைக் கண்டுபிடித்து வெளியிட்டார்.
பின்னர்
சுந்தர ராமசாமி, டி.செல்வராசு ஆகிய படைப்பாளிகளை இனம் கண்டார். தர மான ஆய்வுக் கட்டுரைகள் வெளி வந்தன. பேரா.வையாபுரிப்பிள்ளை போன்றவர்களை இவ்விதழில் எழுதச் செய்தார். சமகாலத்தில் உருவான "சரஸ்வதி", பின்னர் உருவான தாமரை” ஆகிய இதழ்களின் உருவாக்கத்தில் ரகு நாதனின் 'சாந்தி’யின் தாக்கத்தை நாம் காண முடிகிறது. பின்னர் இடதுசாரி இயக்கம் சார்ந்த சிறுபத்திரிகை இயக் கத்திற்குச் "சாந்தி" அமைந்திருப்பதை நாம் கொள்வது அவசியம்.
முன்னோடியாக புரிந்து
1950களின் இறுதி - அறுபதுகள் தொடக்கம் ரகுநாதன் படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தார். தம்மை முழுமையான ஆய்வாளராகவே அடையாளப்படுத்திக் கொண்டார். இதன் விளைவாக பாரதி குறித்தும் சிலப்பதி
23

Page 14
リフ காரம் குறித்தும் தொடர்ந்தும் செயல் படத் தொடங்கினார். தமிழ்ச் சூழலில் பாரதிதாசன் திராவிட இயக்கக் குறி யீடாகக் கருதப்பட்டார். 1940களில் இத்
தன்மை வலுப்பெறவில்லை. 1930களில் தி.மு.க. போன்ற இயக்க வளர்ச்சியோடு பாரதிதாசன் பற்றிய அடையாளமும்
ஒட்டிக் கொண்டது. 1930-1950கள் காலப்
பகுதியில் பாரதிதாசன் பாடல்களை, காங்கிரஸ் மற்றும் காந்திய, தேசிய இயக்கம் சார்ந்த இதழ்களும் வெளி யிட்டன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். "சக்தி", முல்லை" ஆகிய இதழ்களில் மிக அதிக மாக வெளியிடப்பட்டவை பாரதிதாசன் பாடல்கள். இவ்விதழ்கள் திராவிட இயக்கச் சார்புடையவை அல்ல. ஆனால்
‘மணிக்கொடி",
1950களில் பாரதிதாசன் அடையாளம் மாறியது. திராவிட இயக்கச் செயல்பாடு களுக்கு எதிரான பண்பாட்டுச் செயல் பாடுகளில் இடதுசாரி இயக்கம் செயல் பட்டது. தி.மு.க. போன்ற கட்சிகளின் வெகுசன விருப்புசார் உரையாடல்கள் மற்றும் வெகுசன அங்கீகாரம் இவற்றை ஏற்க மறுத்த இடதுசாரிகள் - பாரதியை முதன்மைப்படுத்துவதைத் தங்கள் சமூகக் கடமையாகக் கொண்டனர். இதில் முன்னத்தி ஏர் பிடித்தவர் தோழர் ஜீவா. வெகுசனத் தளத்தில் பாரதியைப் பற்றிப் பேசிய ஜீவாவைத் தொடர்ந்து, இந்திய தேசீயம், மனிதாபிமானம், கற்பனா சோச லிசம், கவிதை வளம் ஆகிய பல்வேறு கூறுகளில் பாரதியை முதன்மைப் படுத்தும் பணியை ரகுநாதன் முன்னெ டுக்கத் தொடங்கினார். பாரதி குறித்த பல நூல்களை எழுதினார். உலகப்
பெருங் கவிஞர்களோடு ஒப்பீடு, ஏகாதி
24
பத்திய எதிர்ப்பின் குறியீடு ஆகிய பிற வற்றின் முன்னோடியாகப் பாரதியை இனம் கண்டார். இதன் முழுமையான “பாரதி காலமும் கருத்தும்" என்ற அவரது நூல். பாரதி யைப் பற்றிய ரகுநாதன் ஆய்வுகளை முழுமையாக ஏற்பதா? இல்லையா? என்ற உரையாடல் ஒருபுறமிருக்க, பாரதி யைப் பற்றி ரகுநாதன் அளவிற்குத் தமிழில் ஆய்வு செய்தவர்கள் வேறு யார் என்ற கேள்வி முக்கியமானது. வேத ரிஷியாகவும், மாகவும், இந்தியக் கலாச்சார அடையாள
அடையாளமே
பிரம்மசமாஜ வடிவ
மாகவும் பாரதியைக் கொண்டாடும் கூட்டத்திற்கு மத்தியில் அவனை ஏகாதி பத்திய எதிர்ப்பின் அடையாளமாகக் காட்டுவதில் ரகுநாதனின் உழைப்பு மிக அதிகம். இந்திய வரலாற்றில் தாகூரை மிஞ்சிய கவியாகப் பாரதியைக் காட்டு வதில் ரகுநாதன் வெற்றி பெற்றிருக் கிறார் என்றே கூற முடியும். இக்கருத்து நிலைகள் இன்று பல்வேறு மாற்று உரை யாடலுக்கும் இடமளிக்கலாம். ஆனால் ரகுநாதனோ கூறுவதைப் போல் அன்றைய காலமும் கருத்தும் குறித்த அவரது தேடலைக் குறைத்து மதிப்பிடு வதற்கில்லை. இன்றைக்கும் பாரதி குறித்த அடையாளம் புதிய பரிமாணங் களில் புரிந்து கொள்ளப்படுவதற்கு ரகு நாதன் ஆய்வுகள் முதன்மையாக அமை கின்றன.
பாரதி குறித்த ஆய்வு மனநிலை போன்றே சிலப்பதிகாரம் குறித்த ஆய்வு மனநிலையில் ரகுநாதன் வாழ்ந்தார். இளங்கோவடிகள் யார்? என்ற அவரது ஆய்வு, தமிழ்ச் சமூக வரலாறு குறித்த மார்க்சிய நெறிமுறை சார்ந்த ஆய்வாக

அமைந்துள்ளது. தமிழ் இலக்கியங்களில் நிகழ்ந்த தத்துவப் போராட்டத்தின் அடையாளமாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை இவர் கட்டமைத்தார். பேரா.எம்.ஏ.நுஃமான், "1500 ஆண்டு கட்கு முற்பட்ட தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய ஆய்வை இன்றைய சமூகம் குறித்த கண்ணோட்டப் பார்வையில் ரகு நாதன் மேற்கொண்டுள்ளார். இது கால முரண். இவ்வாய்வு அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள இயலாது” என்று பதிவு செய்கிறார். (மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் 1987) நுஃமான் முன் னெடுக்கும் ஆய்வு நெறிமுறையும் ரகு நாதன் முன்னெடுக்கும் ஆய்வு நெறி முறையும் அடிப்படையில் முரண்படு கின்றன. இவ்விவாதத்தை மரபுசார் மார்க்சியம் பல நிலைகளில் எதிர் கொண்டிருப்பதை நாம் அறிய முடியும். வரலாற்றியல், பொருள்முதல்வாதம் சார் அணுகுமுறைகள் குறித்த வேறுபட்ட பார்வையாக மேற்குறித்த உரையாடலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன் ஏற்பு அல்லது மறுப்பு வேறு தளத்தில் விவாதிக்க வேண்டிய செய்தியாகும். இது ஒருபுறமிருக்க, சிலப்பதிகாரம் குறித்த ஆய்விற்குத் தொடர்ந்து சுமார் முப்பது ஆண்டுகள் ரகுநாதன் மேற் கொண்ட உழைப்பு மிகுந்த ஆச்சரி யத்தைத் தரவல்லதாக இருக்கிறது. இவ் வாய்வு தொடர்பாக அவரது தொடர்ந்த தேடல் வியப்பளிப்பதாக இருப்பதைக் காண்கிறோம். இவ்வகையான மனநிலை அரிய ஒன்றாகவே நம்மால் இனம்காண முடிகிறது. இப்படியாக, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து தொடர்ச்சியான தேடலில் ஈடுபட்ட பிறிதொருவரைக் காண்பது
6656);
அரிதாகவே இருப்பதை நாம் பதிவு செய்யலாம்.
சிலப்பதிகாரம் குறித்த அவரது ஆய்வு என்பது சுமார் 1500 ஆண்டு காலத் தமிழ் இலக்கியம், இலக்கணம் மற்றும் தமிழ்ச் சமூக நிகழ்வுகள் குறித்த தொடர்ச்சியான தேடலாக இருப்பதைக் காண்கிறோம். இந்த அர்ப்பணிப்பை நவீன தமிழ் எழுத்தாளர்கள் வேறு எவரிடமும் நாம் காண முடியுமா? என்ற விவாதமும் இங்கு முக்கியமாக அமை கிறது. இதே கண்ணோட்டத்தில் திருக் குறள் குறித்தும் அவர் தொடர்ச்சியாகச் செய்து வந்த ஆய்வுகள் தமிழ்ச் சமூகத் திற்குக் கிடைக்காமல் போய்விட்டது.
ரகுநாதன் 1948இல் எழுதிய "இலக்கிய விமர்சனம்" என்ற நூல், தமிழின் முதன்மையான சிறுகதைப் படைப்பாளியாக புதுமைப்பித்தன், மெளனி, லா.சா.ரா. என்று வகைப்படுத் தப்படுகிறது. இம்மதிப்பீடு, அவர் அன்று சார்ந்திருந்த இடதுசாரி இயக் கத்தின் மதிப்பீடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. காந்தி சுடப்பட்ட பின்பு, கம்யூனிஸ்டுக் கட்சியின் வெளியீடாக வந்த ஜனநாயகம்' இதழில், காந்தி குறித்த கவிதை ஒன்றை ரகுநாதன் எழுதி யுள்ளார். கவிதை குறித்த குறிப்பு ஒன்று எழுதப்பட்டுள்ளது. இக்கவிதையின் கருத்து ரகுநாதனின் கருத்து, கட்சியின் கருத்தன்று' என்பது அக்குறிப்பு. இவ் வகையில், தான் சார்ந்திருந்த அரசியல் இயக்கத்தின் கருத்துநிலைகளுக்கு முரண் பட்ட கருத்துடையவராக அவ்வியக் கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள் ளார். புதுமைப்பித்தன் தொடர்பான ரகு 25

Page 15
彦 666):
நாதன் மதிப்பீட்டால், அவர் கட்சியி லிருந்து வெளியே வந்துவிடுவார் என்று தாம் கருதியதாக சுந்தர ராமசாமி குறிப் பிடுகிறார். புதுமைப்பித்தனா? கட்சியா? என்றால் ரகுநாதன் புதுமைப்பித்தனையே தேர்வு செய்வார் என்றும் சுந்தர ராமசாமி எழுதுகிறார். துரதிர்ஷ்டவசமாக ரகு நாதனுக்கு அவ்வகையான சங்கடம் நிகழ வில்லை. தாம் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதான விமர்சனத்தோடு அவ்வியக்கத்தில் தொடர்ந்தார் ரகுநாதன். இடதுசாரி இயக் கத்தின் இலக்கிய அணுகுமுறை குறித்த தீவிரமான விமர்சனத்தை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பொன்விழாக் கருத் தரங்கு திருநெல்வேலியில் நடந்தபோது முன்வைத்தார். அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நான் அதிர்ந்து போனேன். கட்சிக்குள் இருந்துகொண்டு இப்படியும் விமர்சனம் செய்ய முடியுமா என்று. தமிழ்நாட்டில் ஜீவாவோடு இணைந்து கலை இலக்கியப் பெருமன்றத்தை உரு வாக்கியத்தில் முதன்மைப் பங்கு வகித் தவர் ரகுநாதன். இவ்வியக்கத்தின் மூலம் உருவான தாமரை இதழ் தமிழ்ப்
படைப்பிலக்கிய வரலாற்றில் உருவாக் கிய அதிர்வுகள் முக்கியமானவை. இதற்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர் ரகுநாதன். இடதுசாரி இயக்கச் சார்பாளராகத் தமது படைப்பு வாழ்வைத் தொடங்கிய கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி ஆகியவர்களின் படைப்புலக வாழ்வையும் ரகுநாதன் வாழ்வையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டிய அவ சியம் நேரிடுகிறது. இவ்வகையில் தமிழ்ச் சமூக வரலாறு, தமிழக இடதுசாரி இயக்கம், நவீனத் தமிழ்ப் படைப்புலகம் என, பல பரிமாணங்களில் ரகுநாதன் பங்களிப்பை நாம் வியப்புடன் அணுக முடிகிறது.
தமிழகத்தின் இடதுசாரி இயக்கம் சார்ந்த பண்பாட்டுப் போராளிகளில்
மறுக்க இயலாது.
நன்றி : கவிதாசாரன்
N ܠܐܠ N NR NS ܠܐ
Š
R
སུ་ཅུང་སྔ་སྔ་གྲགས་སུ་
Ν
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அஞ்சலிக் குறிப்பு:
ஒலில்ரம்புக் கலையின் ஊற்றுக் கண்ணொன்று வற்றிஸ்து!
- மா.பாலசிங்கம்
பணிமனை ஒன்றிற்குள் சென்று கொண்டிருந்த பொழுது இலங்கை சூரியன் ஒலிபரப்பில், "மூத்த ஒலிபரப்பாளர் வீ.ஏ.கபூர் காலமாகிவிட்டார்” என்ற செய்தி காதிற்குள் நுழைந்து நடையைத் தணித்தது. "என்ன வீ.ஏ.கபூரா?" எனச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தோரை விசாரித்த பொழுது, "ஆம்" என்ற பதில் வந்து மனதைக் குடைந்தது. பின்னர் பத்திரிகையைப் பார்த்த பொழுது அவருக்கு மரணத்தைக் கொடுத்தது மாரடைப்பெனத் தெரிய வந்தது.
இந்த மரணந்தான் எத்தனை கொடுமையானது சில மாதங்களுக்கு முன், குழந்தை முகத்தவரான வீ.ஏ.கபூரைச் சந்தித்து உத்தியோகத்தில் சிறகசைக்கத் தொடங்கிய அந்தப் பழைய காலம் பற்றிய பசுமையான நினைவுகளை இருவருமாக மீட்டி, மீட்டிப் பார்த்துப் பொச்சடித்தோம். அருகருகே அமர்ந்து எதையெதை யோவெல்லாம் பேசினோம். தேநீர் அருந்தினோம்.
கபூர் ஒலிபரப்புக் கலையின் நீண்டநாள் பயணி. அதில் அவரொரு ஒல் றவுண்டர். அறிவிப்பாளர், செய்தி மொழிபெயர்ப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், கட்டுப்பாட்டாளர், பணிப்பாளர், ஆலோசகர் இப்படியாக ஒலிபரப்பு நிலைகளி லிருந்து தனது பன்முக ஆளுமைகளை ஒலிபரப்புத்துறைக்கு அர்ப்பணித்தவர். இந்தவகையில் பாரியதொரு வானொலி நேயர் பட்டாளத்தைத் தனதாக்கிச் சுகித்தவர்.
தமிழ் இனத்துவ அடையாளமான - மங்களகரமான நாதஸ்வரம்’ என்ற பதத்தைப் பதிலாகச் சொல்லியதால் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் பதவிக்குத் தெரிவானவர் சிலருக்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்! உண்மை தான்!
அறிவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்துக் கபூர் நேர்முகப் பரீட்சைக்குத் தோன்றிய பொழுது, தெரிவுக் குழுவின் தலைவராக இருந்த எம்.ஜே.பெரேரா
27

Page 16
665); অ
"Can you name the particular instrument used by tamils in their events' தொடுத்தாராம். அதற்கு இளைஞர் கபூர் நொடியொன்று கூடத் தாமதிக்காது நாதஸ்வரம்' என்றாராம். அதைக் Gs'L LDirgiguggai), "Can you take Over the job tomorrow" GTGord, agus, அறிவிப்பாளர் நியமனத்தைத் தெரிவுக் குழுத் தலைவர் உறுதிப்படுத்தினாராம்.
என அவரிடம் கேள்வி
இப்படித்தான் வீ.ஏ.கபூர் இலங்கை வானொலிக்குள் தனது ஒலிபரப்புக் கலை வாழ்வை ஆரம்பித்தார். இது 1953இல் நடந்தது.
இலங்கை வானொலிக்குள் அது வும் தமிழ் தேசிய ஒலிபரப்புப் பிரிவுக் குள் முதல் கால் பதித்த முஸ்லிம் இன அறிவிப்பாளர் கபூர்தான். அத்தோடு கிழக்கிலங்கையின் ஒலிபரப்புக் கலை முன்னோடியும் இந்தத் தோப்பூர்காரர் தான்.
அமரர்களான நாவற் குழியூர் நடராசன் (கே.எஸ்.நடராசா); சானா எஸ்.சண்முகநாதன் ஆகியோரது காலத் திலிருந்து இலங்கை ஒலிபரப்புத் துறைக்குப் பங்களிப்புச் செய்தவர். இந்த ஒலிபரப்புக் கலை முன்னோடி களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தைத் (BBC)ச் சேர்ந்த பிரபல ஒலிபரப்பாளர் சங்கர் ஒருமுறை இலங்கை வந்தபொழுது, இலங்கை வானொலியின் தமிழ்ப் பிரிவு அவருக் கொரு விருந்துபசாரத்தைக் கொடுத்துக்
28
கெளரவித்தது. அச்சமயத் தில் பிபிசி சங்கர் “உங்களது ஒலிபரப்பாளர்களில் யாரை ஒல் றவுண்டர் எனக் கூற முடியும்?' எனக் கேட்டபொழுது, அப்பொழுது தேசிய ஒலிபரப்பிற்குப் பொறுப்பாக இருந்த நாவற்குழியூர் நடராசன் "எம்முள் ஒல் றவுண்டர் என்றால் அது வீஏ.கபூர்தான்” என்றார். அத்தகைய வகையில் ‘வசிட்டர்’ வாயால் 'பிரம்மரிஷி”ப் பட்டத்தைப் பெற்றவர் கபூர்.
தனது தொழிலைத் தெய்வமாக மதித்தவர். திறக்கும் பொழுது கூட, தான் வாசிக் கப் போகும் செய்தித் தாளில் தனது பார்வையை ஊன்றி வைத்திருப்பவர். இத்தகையப் பக்குவமான அக்கறைதான் செய்தி வாசிப்பில் அவரை முன்னணிப் படுத்தியது. தனக்குப் பின்னரும் இன் னொரு ஆற்றல் மிக்க ஒலிபரப்புப் பரம்
கலையகத்துக் கதவைத்
பரை தொடர வேண்டுமென்ற மனத் தவர். நிகழ்ச்சிகளை அறிவிப்புச் செய்வ தில், செய்தி வாசிப்பதில், செய்தி மொழிபெயர்ப்பதில் புதியவர்களுக்குச் சலிக்காமல் பயிற்சி கொடுத்துக் காத்திர மான ஒரு ஒலிபரப்பு அணி இலங்கை யில் தோன்ற கால் கோள் அமைத்தவர்.
இந்நாட்டில் நீண்ட காலமாக இலக் கியப் பணி ஆற்றிவரும் இலக்கிய ஏடு என்ற சாதனையை ஏற்படுத்தி இருக்கும் "மல்லிகை" நவம்பர் 2004இல் வெளி யிட்ட தனது இதழில் வீஏ.கபூர் சம்பந்த மான கட்டுரையொன்றை வெளியிட்டு அவரது ஒலிபரப்புப் பணியை அவர் வாழ்ந்த பொழுதே கெளரவித்தது.

உரையாடலொன்றின் போது தனது இலங்கை வானொலி அநுபவங்களை நூலுருப்படுத்தப் போவதாகச் சொன் னார். அது சாத்தியப்படவில்லை!
இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர் கள் இன்று அனைத்துலகிலும் தமிழ் ஒலிபரப்பு ஆளுமையை நிறுவிக் கொண்டிருக்கின்றனர். இருந்தும் இந் நாட்டின் ஒலிபரப்புக் கலை வரலாற் றுக்கு உரிய ஆவணங்களில்லை. இது இந்நாட்டின் இளைய சந்ததிக்கு ஏற் பட்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலையாகும். 'ஈழகேசரி சோ.சிவபாதசுந்தரம் 'ஒலி பரப்புக் கலை" என்றொரு நூலை எழுதி யிருக்கிறார். இதையே ஒலிபரப்புக் கலையின் சுவிசேஷமாக இன்னமும் எமது ஒலிபரப்புச் சமூகம் பேணி வரு கின்றது. இந்நூல் வெளியாகி ஏறத்தாழ அரை நூற்றாண்டாகி விட்டது. இதற் கிடையில் சர்வதேசத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் ஒலிபரப்புக் கலைக் கான நவீன பரிமாணங்கள் தோற்றம் காட்டி விட்டன. இந்தக் காலகட்டத்தை அநுபவித்தவர் கபூர். எனவே அவரது நூல் வெளிவந்திருப்பின் நிச்சயமாக சோ.சி.யின் நூலின் தொடர்ச்சியாக இருந்திருக்கும்!
மர்ஹஜூம் கபூர் புகழை நச்சாதவர். நூல் வெளியிடாததற்கு அதுவுமொரு காரணமாக இருக்கலாம்! புத்தகம் வெளியிடும் இன்றைய எழுத்தாளர்கள், தமது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டே அதைச் செய்கின்றனரென் பது இலக்கிய அபிமானிகளுக்குத் தெரி யும். கபூருக்கும் நிதி நெருக்கடி நூல்
ബ8 Sl
வெளியீட்டிற்குத் குந்தகமாக இருந் திருக்கலாம். இதனால் எமது இளைய சந்ததி இலங்கை தமிழ் வானொலி வரலாற்றை, ஒலிபரப்பு நுட்பங்களை அறியும் வாய்ப்பை இழந்து விட்டது.
அர்த்தமற்ற யுத்தம், சுனாமி அனர்த்தம் ஆகியவற்றால் தமிழ் பேசும் மக்களது விலை மதிக்க முடியாத பொருள்களெல்லாம் அழிந்து விட்டன. அத்தோடு காலாதி காலமாகப் பயன் படக்கூடிய அரிய நூல்களும் அக்னிக் கும் ஆழிப் பெருவெள்ளத்துக்கும் தீனி யாகி விட்டன. எமது இளைய சந்ததிக் குத் தேவையான அரிய விடயங்கள் இன்று மூத்தோரது சிரசுக்குள்தான் பாது காப்பாக இருக்கின்றது. தமிழுத்துவத் தில் அக்கறை காட்டுபவர்கள் இவர் களைத் தேடிப் பிடித்து இவர்களிட மிருந்து எமது இனத்தின் விமோசனத் திற்கு பயன்படக்கூடிய விடயங்களைக் கறந்தெடுக்க வேண்டும். இது காலத் தின் கட்டளையே! அல்லாத பட்சத்தில் மர்ஹஜூம் கபூரது இலக்குச் சாத்தியப் டாதது போல் ஊமை கண்ட கனவாகி
விடும்!
இலங்கை வானொலியின் இசைத் தட்டு, நாடா ஆகியவற்றின் காப்பகத் தில் பேணப்பட்ட தொன்மை வாய்ந்த அரிய இசைத் தட்டுக்கள், நாடாக்கள் என்பவையும் விஷமிகளால் அழிக்கப் பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. எனவே பெருமைகளைப் பேசிக் கொண்டு தூங்கி வழியும் தமிழ் பேசும் சமூகத்திற்கு வீ.ஏ.கபூரின் திடீர் மரணம் ஒரு பாடமாக அமைய வேண்டும்!
29

Page 17
நண்பர் வதிரி சி.ரவீந்திரன் -
மல்லிகை ஆண்டு மலர் 4 பிரதிகளும், பெப்ரவரி இதழ் 4 பிரதிகளும் ஒரு அன்பர் மூலம் அனுப்பி யிருந்தார். எமக்கு இன்று வரும் மல்லிகையைவிட, எதிர்காலத்தில் மலரவிருக்கும் மல்லிகை குறித்த கவலை தான் அதிகம். ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில் - திலீபன் உரையாற்றியது மகிழ்ச்சியைத் தந்தது. திலீபனுக்கு துணையாக சிலரை நீங்களே இப்பொழுது இணைத்து விடுங்கள். நான் அருகில் இருந்தால் பக்கத் துணையாக இருப்பேன். விதி - என்னை கலைத்து விட்டது. இங்கு வந்து களைத்தும் போனேன். யாழ். பல்கலைக் கழகமோ - ஏனைய பல்கலைக் கழங்களோ - மாணவர்கள் முன்னிலையில் உங்களை பேச அழைக்க வில்லை என்ற ஆதங்கம் அர்த்தமற்றது. மக்ஸிம் கோர்க்கியை நினைவில் கொள் ளுங்கள். அவருக்கு ஒரு பல்கலைக் கழகம் - விருதோ பட்டமோ வழங்க முன்பு - கல்வித் தகுதி பற்றி கேட்டதாம். அதற்கு கோர்க்கி அளித்த பதில் :- "உலகம் என்ற பல்கலைக் கழகத்தில் மக்கள் என்ற பாடத்தை படித்துள்ளேன்." உங்களுக்கும் இதுதான் பொருத்தம்.
தங்கள் மலர் ஆசிரியத் தலையங்கங்களும், தூண்டில் கேள்வி - பதிலும் விமர்சனத் திற்கும் விவாதத்திற்குமுரியது. நீங்களே - மீண்டும் பல தடவை அவற்றை படித்துப் பார்த்து சுயவிமர்சனம் செய்யுங்கள். கூறியது கூறல் - வாசகர்களை அலுப்படையச் செய்யும். இக்கருத்தை நட்புரிமையுடன் சொல்கிறேன்.
நாம் இன்று போராட வேண்டிய துறை ஒன்றுள்ளது. அதுதான் பதிப்பகத்துறை. மணிமேகலை பிரசுரம் என்ற திமிங்கிலம் எம்மவரை விழுங்கி ஏப்பம் விடுகிறது. இ.மு.எ.ச. சோர்ந்தமையால் - களைகள் முளை விடுகின்றன. எமது எழுத்தாளர்களுக்கு விழிப்பு ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக நான் எழுதிப் பிரசுரமானதைத் தங்கள் பார்வைக்கும்
அனுப்புகிறேன். இது திண்ணை இணைய இதழிலும் பிரசுரமானது.
முருகபூபதி - அவுஸ்திரேலியா
அற்புதம்! மல்லிகை ஆண்டுமலரைக் கண்டதும் மனம் மகிழ்வோடு குதித்தது. அது எங்கள் முற்றத்து மல்லிகை மலர்தான். வெள்ளை வெளேரென்ற அழகுடன் இனிய சுகந்தம் மனதுள் பரவிப் பரவசப்படுத்தும் அதே மலர்தான். ஆனால் அதற்கு இடப்பட்ட உரத்தின் பயனோ என்னவோ? ஒரு புதுமைப் பொலிவுடன் அழகு மெருகூட்டப்பட்டதாக.
ஒ. ஐம்பதாம் ஆண்டில் அந்த மலர் எப்படி இருக்கும்!
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
- (3SITLusti
30
 
 
 
 
 
 

இன்று தாங்கள் நேசத்துடன் அனுப்பி வைத்திருந்த மல்லிகை மலர் கைவசம் கிட்டியது. சந்தா செலுத்தவில்லையே என்று மனதில் குற்றவுணர்வுடன் நீங்கள் தனி மனிதனாக இதழை வெளிகொண்டு வருவதற்கான மனஉறுதியை கண்டு மெய் சிலிர்க்கின்றேன். ஏனென்றால் நான் தற்சமயம் விழித்திரை' என்ற சினிமாவுக் கான தட்டச்சு வேலையில் ஈடுபட்டுவரும் இந்த கடினமான மலையக சூழலில் தமிழ் எழுத்துருக்களை விழித்திரைக்காக கோர்த்து பார்க்கும் இந்த கணிப்பொறி காலத்தில் நான் படும் துயரம் அவ்வளவு வலி நிறைந்தது. நம் மலையகச் சூழ லுடன் என் ஊரில் இது போன்ற வேலை கள் செய்வதென்பது நினைத்தும் பார்க்க முடியாது. மிகவும் பின்தங்கிய பிரதேச மான என் ஊரில் இருந்துதான் விழித் திரைக்காகத் தட்டச்சு வேலைகளை செய்ய வேண்டும் என்ற மனஉறுதியுடன் வேலை செய்து வருகிறேன். 70% வீதம் வேலை பூர்த்தியாகி விட்ட போதும் இன்றும் முயற்சியை நோக்கி நகர்ந்தபடி இருக்கின்றேன்.
சரி, "விழித்திரை’ சிறு சஞ்சிகை சினிமா பற்றிய நமது வாடிக்கையான எண்னத்தின் மீது ஒரு சலனத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.
மேலும் மல்லிகையில் காதல் கொண்டவன் என்ற வகையில் ஓரிரு எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள ஆவல். பொதுவாக மல்லிகையின் உள்ளடக் கத்தை பற்றி அல்ல, அதன் அளவு, வடிவம் பற்றியும் எனது மனநிலையைப் பகிர்ந்து கொள்வதன் நோக்கம் வெறும்
occo புகழ்ச்சிக்காக அல்ல, மல்லிகையின் புதிய பரிமாணத்தையும், 50 வருட கால சாதனையை நோக்கி பயணிக்கும் ஒரு சிற் றேடு ஒரு தனிமனிதனுடன் முடிந்து விடக் கூடாது. அது தற்கால வாழ் சூழலுக்கு ஏற்பப் புது வடிவம், புதுப் பொலிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் படைப்பில் இன்னும் கவ னத்தை செலுத்தி, வடிவத்திலும், சஞ்சி கையின் அளவிலும் மாற்றத்தை ஏற் படுத்தி - உள்ளே இருக்கின்ற காகிதத் திலும் கவனத்தை குவித்து - புதிய ஆசிரி யர் குழுவுடன் நீங்கள் தலைமை தாங்கி மல்லிகையின் புது வடிவத்தைக் கொண்டு வந்தால் அது வழமையான ஒரு பழகிய போக்கை விட்டுப் புதிய சிந்தனையுடன் நவீன வாழ்வின் தேவைகளுடன் தமிழ் மொழியின் உயிர்ப்புடன் வேண்டும். இது குறித்து உங்களிடம் பேச ஆவல்.
கலக்க
மாரிமகேந்திரன் - பொஹவந்தலாவ
తి
§§
SÈYÈNÈN
Sಷ್ರ
a. Š
S §
Š
§
જે
NKŠ
31

Page 18
தரமான தமிழ்ப் படைப்புகள் சிங்கள வாசகனுக்குக் கிடைப்பதில்லை
-- திக்குவல்லை கமால் --
ஒரு குறித்த படைப்பாளியின் படைப்பு ஆளுமையைப் பல நிலைகளில் பல கோணங்களில் ஆய்வு செய்யும் இலக்கோடு விபவி கலாசார மையமும் முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்தி வரும் ஆய்வுக் கருத்தரங்கின் மூன்றாவது அரங்கில் பிரபல நாவலாசிரியர் செ.கணேசலிங்கனின் படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. கலாநிதி செ.யோகராசா ஆய்வுரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வு கொழும்பு 6, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் 09.04.2006இல் தடைபெற்றது.
செ.கணேசலிங்கன் தனது முற்போக்கு இடதுசாரியப் பார்வையை நாவல், சிறுகதை, கட்டுரை என்பவற்றின் மூலமாகவே வாசகருக்குச் சென்றடைய வைத்தார். அடிக்கடி பேட்டிகளை ஏற்பாடு செய்து அவைகள் மூலமாகத் தனது கருத்துக்களை வெளியிட அவர் ஊக்கம் கொள்ளவில்லை. தனது இளமைக் காலத்தில் தனது தந்தையாரோடு சேர்ந்து தோட்டத்தில் விவசாயம் செய்துள்ளார். இவரது இளமைக் கால நண்பராக பிரபல தமிழ் இலக்கியவாதி எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ.) இருந்திருக்கிறார். இருவரும் சமகால மாணவர்கள்.
பொதுப் பணியில் ஊக்கத்தை ஊன்றிய இளமைக் காலத்தில் அகிம்சா மூர்த்தி மகாத்மா காந்தியின் கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தார். சாதிப் பிரச்சினையைக் காந்தியக் கொள்கை அடிப்படையில் அணுகிக் கட்டுரைகளையும் எழுதினார். மகாத்மா காந்தியின் மேல் வைத்த மாறாத பற்றால் மகாத்மா காந்தியின் பெயரில் சங்கமொன்றையும் நிறுவினார். அன்றைய அநேக பொதுவுடைமையாளர் களைப் போல் செ.க.வும் திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் கவரப்பட்டிருந்தார். அதன் பின்னர் தான் தீவிர மார்க்சியவாதியானார். மார்க்சியத்தில் முதிர்ச்சி பெறாத வளர் இளம் பருவத்தில் மு.வரதராசன், அகிலன், காண்டேகர் ஆகியோரது நாவல் களின் தீவிர வாசகராக இருந்தார்.
தனது நாவல் இலக்கியப் பங்களிப்பாக இதுவரை 40 நாவல்களைத் தமிழ் வாசகருக்குத் தந்திருக்கும் செ.க. தனது முதல் நாவலான நீண்ட பயணம்" என்ற நாவலை 1960இல் வெளியிட்டார். இந்நாவல் தமிழ் நாட்டு விமர்சகர்களால் வியந்து பாராட்டப்பட்டது. 1960 முன் வெளிவந்த நாவல்கள் காட்டிய மனோரதியம், துணிகரச்
32

சாகசங்கள், திடீர்த் திருப்பங்கள் ஆகிய அர்த்தமற்ற போக்குகளில் வாசகனைச் சிக்க வைக்காமல் சமூக வாழ்க்கையின் யதார்த்த தன்மையையே பேசியது. எனவே இவரது நாவல்களில் இது முக்கியம் பெறுகிறது.
மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இருந்தும் இவர் பாட்டாளி வர்க்கத்துள்ளேயே காலூன்றி நிற்கிறார். ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை இலக்கியமாக்கிய முதல் தமிழ்ப் படைப்
செ.க.
பாளி என்ற கெளரவத்தை செ.க. நீண்ட பயணம்’ நாவல் மூலம் பெறுகிறார்.
மார்க்சிய எழுத்தாளர்களது படைப்புகள் பிரசாரத் தன்மை வாய்ந் தவை என்ற குற்றச்சாட்டுகளுக்குச் சவா லாக இவரது படைப்புகளாக நீண்ட பயணம், சடங்கு, போர் கோலம் ஆகிய
நாவல்கள் அமைந்துள்ளன.
நீண்ட பயணத்தில் இரத்தமும் சதையும் கொண்ட கதாமாந்தர்கள், யதார்த்தப் பண்புடைய உரையாடல், உள வியல் பார்வை என்பன கலாபூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
தனது பார்வையை சாதியத்துக்குள் மட்டுமே புகுத்தாமல் மத்தியதர வர்க்கப் பிரச்சினைகள், புகலிட வாழ்வு, தமிழ்த் தேசியம் ஆகிய தளங்களுக்குள்ளும் நகர்த்திச் சமகாலத் தமிழர் மத்தியில் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினை களின் பலவீனத்தையும் பொய்ம்மை களையும் யதார்த்த நிலையையும் வாசகர் அறிய வைக்கிறார்.
06ത8 நாவலுக்கு இலக்கண வரம்பில்லை எனும் செ.க. சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். இருந்தும் நாவலில் பெற்ற வெற்றியை செ.க. சிறுகதையில் சாதிக்க வில்லை. அவரது நாவல்களின் தளங் களிலேயே படர்ந்து செல்லும் அவரது சிறுகதைகளுள் நல்லவன்' கலாபூர்வ மானதாகும்.
கலாநிதி செ.யோகராசாவின் மேற் படி ஆய்வின் ஊடாகச் செ.கணேச
லிங்கனின் படைப்புகளின் செல்நெறி,
சமூகப்பணி, ஆழம் என்பன வெளிக்
கொணரப்பட்டன.
செ.கணேசலிங்கன் நீண்ட கால மாக 'குமரன்" என்ற மார்க்சிய இலக்கிய சஞ்சிகை நடத்தியவரென்பது கவனத்திற் குரியது! ஆல் பழுத்தால் அங்கும் அரசு பழுத்தால் இங்குமெனத் தன் கொள் கையை மாற்றாது வாழ்நாள் பூராவும் சோஷலிச யதார்த்தவாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஆய்வுரை கேட்டுநரால் கலந்து ரையாடப்பட்டது. பத்திரிகையாளரும் பிரபல நாவல், சிறுகதைப் படைப்பாளி யுமான கே.விஜயன்
மார்க்சிய இலக்கியவாதிகள் மார்க் சிய சிந்தனைகளுள் கட்டுப்பட்டு எழு தினர். ஆரம்பகால எழுத்தாளர்களிடம் யதார்த்தத் தன்மை இருக்கவில்லை. இவர்களது படைப்புகள் நிஜத் தொழி லாளியை வாசகனுக்குக் காட்டவில்லை. படைப்பாளிகளுக்கும் தொழிலாளி களுக்கும் இடையில் ஒட்டியும் ஒட்டாத உறவுமே இருந்தது. எனவே இவர்களது படைப்புகள் கற்பனை ரீதியானவையாக
33

Page 19
čo অ
இருக்கின்றன. இவர்களது சாதனைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது மகா கஷ்டம் எனக் கூறிக் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார்.
மூத்த முற்போக்கு இலக்கியவாதி யான நீர்வை பொன்னையன் -
வாசகருக்குச் சரியான புரிதலை ஏற்படுத்தும்படி எழுதாத சிங்கள எழுத் தாளர்கள் சிலர் தமிழ் படைப்புகளில் கலாபூர்வத்தன்மை இல்லையெனக் கூறு பால் இயல், மார்க்சியப் போமிலா செயல்பாட்டில்
கின்றனர். கற்பனை,
ஈடுபடாத படைப்பாளிகளே அத்தகைய வர்கள். மார்க்சிய எழுத்தாளரான கே. டானியல் கற்பனையை எழுதாத யதார்த்தப் படைப்பாளி - எனச் சொன்னார்.
கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் க.ரவீந்திரன் -
இந்நாட்டின் இலக்கியம் விரிவு பெற்றது பேராசிரியர் சதாசிவத்திற்கு கூழ்முட்டை விசிய பின்னர்தான்! இந் நாட்டின் வரலாற்றில் 1960இல் நடை பெற்ற சாதீயப் போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் அம்பேத்காருக்குக் கிடைத்த வரவேற்பை விட இலங்கையில் சாதியப் போராட்டத் திற்கு நாடளாவிய ரீதியில் வரவேற்புக் கிடைத்தது. சாதீய தகர்ப்புக்கு பஞ்சம ரோடு கணிசமான வெள்ளாளரும் இணைந்தது சாதீய வரலாற்றில் மா பெரும் சாதனையாகும் எனத் தனது முற்போக்குச் கருத்துக்களை முன் வைத்தார்.
34
இலக்கியவாதியான திக்குவல்லை கமால் கலந்துரையாடலில் கலந்து கருத் துரைத்த பொழுது சில உண்மைகளை முன் வைத்தார். செ.கணேசலிங்கனின் ஆரம்பகாலப் படைப்புகளைத்தான் இப்பொழுது படிக்க முடிகின்றதென்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை யாகும். ஆய்வாளர் சொன்ன நாற்பது நாவல்களில் இன்றைய வாசகனுக்கு எத்தனை நாவல்கள் வாசிக்கக் கிடைக் கின்றன தென்னிந்தியாவில் வெளியிடப் படும் சகல ஈழத்து நூல்களுக்கும் இதே நிலைதான்! ஈழத்து தமிழ் இலக்கியப் படைப்புகளைச் சிங்கள வாசகர்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு தரமான தமிழ்ப் படைப்புகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படுவதில்லை. வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திச் சில எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை சிங்கள மொழியில் பெயர்க்கின்றனர். இத்தகைய சில நூல்களில் மொழி பெயர்ப்பாளரது பெயர்கள் கூட அச் சிடப்படுவதில்லை. மிக முக்கியமான தமிழ் இலக்கியப் இன்னமும் சென்றடையவில்லை.
படைப்புகள் சிங்கள வாசகனைச்
- திக்குவல்லை கமால் கூறியவை கேட்டுநரை சிந்திக்க வைத்தன.
இந்நிகழ்வுக்குச் செல்வி திருச் சந்திரன் தலைமை தாங்கி கலந்துரை யாடலை நெறிப்படுத்தினார்.
தொகுப்பு : மா.பா.சி.

நீண்ட நாளைக்குப் பிறகு அண்மையில் ஒரு நல்ல நாவல் வாசிக்கக் கிடைத்தது. அதுதான் வான்டா வாஸிவெல்ஸ்காவின் ‘வானவில்" என்ற நாவலாகும். இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புத்தான் இந்தக் கட்டுரையின் வருகை, 1945இல் எழுதப்பட்டு 1946இலேயே தமிழுக்கு வந்து விட்டமையானது இதன் முக்கியத்தை எடுத்துக் காட்டுகிறது. இது 2005இல் மீண்டும் அலைகள் வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
வானவில் தோன்றினால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையினூடாக இந்தக் கதையின் சம்பவங்கள் நகர்த்திச் செல்லப்பட்டதுடன் அவர்களின் கிராமம் விடுதலை பெறும்போது அது தோன்றுவது கூறப்படுகிறது. வான்டா வாஸிவெல்ஸ்காவின்
7ne,29N.
- அம்மன்கிளி முருகதாஸ்
மனப்பதிவுக் குறிப்பு :
இந்த நாவல் பற்றி இதன் மொழிபெயர்ப்பாளர் ஆர். ராமநாதன், ஆர்.எச்-நாதன் ஆகியோர் இவ்வாறு கூறுகின்றனர். சோவியத் யூனியன் மீது உலகை அச்சுறுத்திய ஹிட்லரிசம் பாய்ந்த போது ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் - எல்லோரும் போர் புரிந்தனர். உலகம் அது வரையில் கண்டிராத கடும்போர் அது. பத்து வாரத்தில் சோவியத் யூனியனைக் கைப்பற்றுவதாகச் சொன்னான். ஆனால் அவன் அழிந்தான். இந்தப் போருக்குப் பின்னே ஒரு சரித்திரம் இருக்கிறது. சோவியத் யூனியன் எவ்வாறு போர் புரிந்தது என்னும் கேள்விக்கு இந்தப் புத்தகம் பதிலளிக்கிறது. ஆனால் மேலும் சில விடயங்களை நாம் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். பெண்களும் குழந்தை களும் வேறும் பேதைகளாக இல்லாமல் அழகுப் பதுமைகளாக இல்லாமல் தமது கிராமத்தை எந்தளவுக்கு நேசித்தார்கள். எந்தளவுக்கு ஜெர்மன் இராணுவத்தினரின் அட்டுழியங்களைத் தாங்கிக் கொண்டார்கள்; மற்றவர்களின் துன்ப துயரங்களில் எந்தளவுக்கு பங்கு கொண்டவர்கள் ஈற்றில் தமது கிராம விடுதலைக்கு எந்தளவுக்குப் பங்களித்தார்கள் என்பதையும் இது விவரிக்கிறது.
உண்மையில் மொழி பெயர்ப்பென இனங்காண முடியாதளவுக்கு இயல்பான நடையில் அமைந்துள்ள இந்நூல் வாசகனின் கவனத்தைக் கதை சொல்லும் அழகால் கவர்ந்திழுக்கிறது. வான்டா வாஸிவெல்ஸ்கா நாவலைக் கொண்டு செல்லும் முறை மிகவும் அலாதியானது. கிராமத்தின் இயற்கையை, போர்ச்சூழலை
35

Page 20
p6u656285
விபரிக்கும் முறை, அங்கு வாழும்
மக்களின் உணர்வுகளை விபரிக்கும்
முறை, பெண்களைக் குழந்தைகளை ஜெர்மனிய வீரர்கள் கொடுமைப் படுத்துவதைச் சொல்லும் முறை, செம் படை வீரர்களின் போராட்டத்தைச் சொல்லும் முறை போன்றன எமது தமிழ் நாவல்களிற் காணமுடியாத ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. பின்வரும் பெண் பாத்திரங்களினூடாக இந்தக் கதை நகர்த்திச் செல்லப்படுகிறது.
பெடோஸ்யா - ஜெர்மனிய இராணுவத்
தினரால் கொல்லப்பட்டுப் பனிக்கட்டிப்
புதரிடையே வீசப்பட்ட வாஸ்யா என்ற இளைஞனின் தாய். அவனையும் அவனைப் போன்றவர்களையும் (அதாவது செம்படை வீரர்களை) அடக்கம் செய்யக் கூடாதென ஜெர்மன் இராணுவத்தினரால் மறிக்கப்பட்டிருந்தவேளை அடக்கம் செய்யப்படாத நிலையில் பனிக்கட்டியில் விறைத்துக் கிடக்கும் தனது மைந்தனின் உடலை எந்த நாளும் காணச் செல்பவள். அவளின் வீட்டிலே தான் ஜெர்மன் இராணுவ அதிகாரி குர்ட் வெர்னர் தனது வைப்பாட்டி புஸ்ஸியுடன் குடியிருக் கிறான். எனினும் பெடோஸ்யா அவனுக் குத் தெரியாமல் தன்னால் இயன்றவரை செம்படை வீரர்களுக்கு உதவுகிறாள்.
ஒலினா - நிறைமாதக் கர்ப்பிணி. போர் வீரன் ஒருவனின் மனைவி. செம்படை வீரர் களோடு வாழ்ந்து அவர்களுக்கு உதவு பவள். பாலத்தைத் தகர்த்தவள். ஜேர்மன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட போதும் இரகசியத்தை
36
வெளியிடாததால் நிர்வாணமாக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்படுகிறாள். பிறந்த குழந்தையும் அவர்களால் கொல்லப் படுகிறது. எனினும் உறுதி தளராதவளாக ஜெர்மன் இராணுவத்தின் கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டு இறக்கிறாள்.
மல்யுக்சிக்கா - வதைக்கப்பட்டுப் பட்டினி போடப்பட்ட ஒலினாவுக்கு இரகசியமாகத் தன் மகனிடம் ரொட்டித் துண்டைக் கொடுத்து அனுப்புகையில் இராணுவத் தினரால் அவன் சுடப்பட்டு இறக்கிறான். ஜெர்மன் அதிகாரிகள் அறியாமல் தன் மகனின் உடலைத் தன் வீட்டில் புதைக் கிறாள். தன் கிராமத்தின் விடிவுக்காகக் கடைசிவரை உழைக்கிறாள்.
செக்கோரிக்கா - மல்யுக்சிகாவின் மகனின் உடலைக் காணாத ஜெர்மன் இராணுவம் மக்களிடம் ஆத்திரத்தைத் தீர்க்க முனைந்த போது கைது செய்யப் பட்ட ஐந்து பேரில் ஒருத்தி. தனது கிராம விடுதலையை நேசிப்பவள்.
மாலாஷா - ஜெர்மன் இராணுவத்தின ரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டுக் கருத்தரித்துள்ளவள். வயிற்றில் வளரும் குழந்தையை வெறுக்கிறாள். ஈற்றில் ஜெர்மன் இராணுவத்துக்கெதிரான போராட்டத்தில் இறக்கிறாள்.
புஸ்ஸி :- ஜெர்மன் இராணுவ அதிகாரி வெர்னரின் வைப்பாட்டி பெடோஸ்யா வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பவள். கிராமத்தவர் எல்லோராலும் வெறுக்கப் படுகிறாள்.
 
 

இளைஞர்கள் செம்படை வீரர் களாகச் சென்றுவிட பெண்களுடன் சிறுவர்கள் கிழவர்கள் மற்றும் ஜெர்மன் இராணுவத்தினர் இதில் அதிகமாக நடமாட வைக்கப்பட்டுள் ளனர். நாவல் கிராமம் பற்றிய அறிமுக வருணனையுடன் ஆரம்பிக்கிறது. கிரா மத்திற்குச் செல்லும் பாதை குன்றி லிருக்கும் அக்கிராமம்; வீடுகள், மாதா கோவில், அருவி, அருவி மீது படிந் திருந்த நீல நிறப் பணிக்கட்டி, வெடித்
திருந்த பனிக்கட்டியின் கீழ் ஒடும்
ஜலம் என்பன பற்றி விளக்கம் கொடுக்கும் ஆசிரியர் ஒரு பெண்ணின் (பெடோஸ்யா) நடவடிக்கைகள் ஊடாகக் கதையை ஆரம்பிக்கிறார். அவள் ஜெர்மனிய வீரர்களாற் கொல் லப்பட்டு யாராலும் அடக்கம் செய்யப் படக் கூடாதென்று கட்டளையிடப் பட்டதால் பனியில் கிடந்து விறைக்கும் மகனின் உடலை இராணுவத்தினருக்குத் தெரியாமல் இரகசியமாக எந்த நாளும் காணச் சென்று உடலைப் பார்க்கும் போது அவளுள் எழும் நினைவுகளி லூடாக அவளது மகன் கொல்லப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு விசி எறியப் பட்ட முறை விளங்கப்படுத்தப்படு கிறது. தாயின் உணர்வுகள் அருமை யாகச் சித்தரிக்கப்படுகின்றன.
அந்த இடத்துக்கு அவள் சென்ற பொழுதெல்லாம் அந்தக் கூந்தலைக் கோதிச் சீர்படுத்த விரும்பினாள். ஆனால் அதைச் செய்ய அவள் துணியவில்லை. ஏனெனில் அதைச் சீர்படுத்துவதால் இறந்து கிடப்பவனுக்கு வேதனை
リエ
ஏற்படுமோ, அவன் காயம் திறந்து விடுமோ என அவள் பயந்தாள். "என் மகன்" இந்த வார்த்தைகளை அவளின் உலர்ந்த அதரங்கள் தானாகவே உச்சரித்தன. (பக் 11)
தொடர்ந்து வரும் வர்ணனைகள் அதைத் தெளிவாகக்
எனத்
காட்டுகின்றன. செம்படையினருடன் வேலை செய்த கர்ப்பவதியான ஒலினா வைக் கைது செய்த இராணுவத்தினர் அவளைக் கொடுமைப்படுத்துவதை மிகத் துல்லியமாக வாசகனுக்குத் துயரத்தை ஏற்படுத்தும் வகையில்
கூறுவது வருமாறு :
பட்டப் பகலைப் போன்று பிரகாசமாக இருந்தது சந்திரனின் ஒளி. அது உலகத் தைப் பனிக்கட்டியாலாக்கிய நீலப் பலகை யாக்கியது. நிர்வாணமான ஒரு பெண் புல் வெளியிலிருந்து ஓடுவதை தெளிவாகக் கண்டாள் அவள். (பெடோஸ்யா) இல்லை அவள் ஒடவில்லை. அவள் குனிந்து கொண்டு தள்ளாடித் தள்ளாடி மெதுவாக அடி வைத்தாள். சந்திரன் ஒளியில் அவளின் பெரிய வயிறு தெளிவாகத் தெரிந்தது. அவளுக்குப் பின்னே ஒரு சிப்பாய் நடந்தான். அவனுடைய துப்பாக்கி பிரகாசித்தது. ஒருகணம் அவள் நின்றால் சிப்பாய்கள் அவள் முதுகில் குத்தி னார்கள். பின்னே நடந்த சிப்பாய் ஏதோ கத்தினான். அந்தப் பூரண கர்ப்பிணி மீண்டும் குனிந்து ஓட முயன்றாள். அவளால் ஒட முடியவில்லை. அவள் மெது வாக நகர்ந்தாள். அவள் ஐம்பது கஜம் நடந்தாள். பிறகு சிப்பாய் தனது இரையைப்
37

Page 21
g பின்னோக்கி ஐம்பது கஜம் நடக்கச் செய் தான். முன்னும் பின்னும் மீண்டும் மீண்டும் அவள் நடந்தாள். அவளைச் சித்திரவதை செய்பவர்கள் சிரித்தார்கள். எனத் தொடருகிறது.
ஜேர்மனியனால் பாலியல் வல்லுற வுக்குள்ளாக்கப்பட்டு கருத்தரித்தி ருக்கும் மாலாஷா அக்குழந்தை பற்றி நினைப்பது இங்கு குறிப்பிடற்குரியது.
ஆனால் அவள் மாலா வடிா தன் கருப்பையில் எதைச் சுமக்கிறாள். அவள் பிரசவிக்கப் போவது ஒரு குழந்தை அல்ல. ஒநாய்க்குட்டி. அது ஜெர்மனியனின் குழந்தை; இதை எந்தச் சக்தியாலும் மாற்ற முடியாது என்பதை அவள் அச்சத்துடன் உணர்ந்தாள்.
போர்காலச் சூழலில் நிகழும் கேட் பாரற்ற மரணங்களை ஊர் முழுதும் மரணம் உலாவுவதாக வருணிக்கிறார். பின்வருமாறு அதைக் காட்டுகிறார்.
மரணம் - ஜெர்மன் மரணம் - கிராமத் திற்கு மேலே சிரித்துக் கொண்டும், முனகிக் கொண்டும், கதறிக் கொண்டும் காற்றுடன் பறந்தது. வீடுகளிலே இருந்த கிராமவாசிகள் அதைக் கேட்டனர். இரவில் தங்கள் ஸ்தானங்களில் பாராக்கெடுத்துக் கொண்டிருந்த ஜெர்மன் சிப்பாய்கள் குளிரால் நடுங்கினார்கள். பயந்தார்கள். நொறுங்கும் பனிக்கட்டி மீது ஒசையின்றிச் சத்தமில்லாமல் அவர்கள் நடக்க விரும்பி னார்கள். அவர்களைத் தாக்க மரணம் ஒளிந்து கொண்டிருந்தது. இது அவர்களை நெருங்கி அவர்கள் முகத்தில் குளிர்ந்த
38
மூச்சு விட்டது. அது நீர்க்காலில் நடமாடு வதும் வீடுகளின் மூலையில் ஒளிந்து கொண்டிருப்பதும் வேய்ந்திருந்த கூரையில் மெளனமாக ஊர்வதும் அவர்களுக்குத் தெரிந்தது. உணர்ச்சியற்ற ஆயிரம் கண் களால் அது அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது
- என சூசகமாக ஜெர்மனியரால் கிராம மக்கள் அடையும் மரண பயத்தையும் செம்படை வீரர்களாலும், கிராம மக்களாலும் ஜெர்மனியர் களுக்கு ஏற்படப்போகும் மரணத்தை யும் தெரிவிக்கிறார். உணர்ச்சியற்ற ஆயிரம் கண்கள் என்பது எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டிருக்கும் கிராமத்தவர் கண்கள். அவர்களும் ஒரு நாள் கிளர்ந்தெழப் போகிறார்கள் என்பதை அது காட் டிற்று. கிராமத்தவர் கொடுமைபடுத்தப் பட்ட சூழலில் செம்படை கிராமத்துக் குள் நுழைந்து வேவு பார்க்கும் போது பெடோஸ்யா அவர்களுக்கு உதவு கிறாள். ஜெர்மன் இராணுவத்தினர் சஞ்சரிக்கின்ற இடங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கிறாள். இராணு வத்தினருடன் சேர்ந்து இயங்கும் கிராம அதிகாரி காப்ளிக் கிராமத்தவருக்கு எதிராக ஜெர்மனியருக்கு உதவியவன். மக்களின் துயரத்தைத் தனக்கு இலாப மாக்கியவன். இறுதியாக மக்களிடம் பிடிபடுகையில் டெர்பிலிக்கா என்ற பெண் அவனது கொடுமையை விவரிக் குமிடம் முக்கியமானது.

இவனால்தான் லிவான்யுக்கைத் தூக்கிலிட்டார்கள். இவனால்தான் இராணுவக் காரியாலயத்தில் ஐவர் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். மாடுகளைக் கைப்பற்ற இவன் ஜெர்மனியருக்கு உதவி புரிந்தான். தொழு விலிருந்த கால்நடைகளை வெளியில் துரத்தினான். என் கடைசிப் பசுவையும் இவன் கடத்திச் சென்றான். கிராமத்தைச் சூறையாட இவன் ஜெர்மனியருக்கு உதவினான். (பக் 165 - 166)
இவனுக்கு எதிராக மக்களே தீர்ப் பளிக்கின்றனர். இறுதியாகச் செம்படை வீரர்கள் கிராமத்துக்குள் புகுந்து ஜெர்மனியர்களைக் கிராமத்தவரின் உதவியுடன் வெற்றி கொண்டனர். ஜேர்மனியரால் அடக்கம் செய்யப்படக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளின், உறவினரின், வீரர்களின் பிணங்கள் எல்லாவற்றையும் அடக்கம்
č? ye;636):
அவர்கள் சார்பாக
பிரசங்கம் செய்தான். அவனது உறுதியான
6çmr G36 omrsiu
சர்வ சாதாரணமான வார்த்தைகள் காற்றில் தவழ்ந்து சென்றன. வானவில் அலங்கரித்திருந்த வான மண்டலத்தையும் 6TL géOT.
தொடர்ந்து செம்படை வீரர்கள் உக்ரேனை நோக்கிச் செல்ல அதனை வானவில்லின் ஒளியில் கிராமத்தவர் இமை கொட்டாது பார்ப்பதுடன் நாவல் முடிவடைகிறது.
துயரமும் மகிழ்ச்சியும் அழுத்த எழுத்தாளர் எம்மை இன்னொரு உலகுக்கு இட்டுச் சென்று விடுகிறார். மொழிபெயர்ப்பிலேயே இந்தக் கவர்ச்சி இருக்குமானால், தாய் மொழியில் அதன் தாக்கம் எப்படி யிருக்கும் என்பதை உணர முடிகின்றது.
செய்தனர்.
r N
?//дрола ఏనాటబడి ág ثم يدلنمة پلوٹولہ ض) تاہم قافل نہض (Soدم&9 ܠܘܗܝܟܣz Qܓ ANVMMsOãYLUõõAV)
Gommwain.
அவரிடமிருந்தே கையெழுத்திட்டுத் தருவார்.
பெற்றுக் கொள்ளலாம்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல ஆக்கங்களையும்
நேரில் பெற்றுக்
மற்றும் பள்ளிக்கூட, பொது நூலகங்களுக்கும் தேவையான நுர்ல்களையும், மல்லிகை ஆண்டு மலர்களையும் மல்லிகைப் பந்தலில்
கொள்ளலாம். அவரே
:39

Page 22
நானும் நீயும் குழந்தைகளும்
- மும்தாஸ் ஹபீள்
நானும் நீயும்
ஒரு கவிதையின் சுவை மிக்க இரண்டு அழகள் இரு கதைகளின் வெவ்வேறு துருவங்களின் நிழல் பழந்த நினைவுகளாய் ஆவதற்கு முன்பு
ද්මiගීjp| -
- O - O -
நிலவைக் கைகளுக்குள் மூழ மேகம் உரசிய நினைவுகளில் §8g bഞ്ഞിതu உண்டு களித்தோம் காற்றைக் கால்களில் அணிந்து ஒரே சிறகுக்குள் உறங்கிப் பறந்தோம்
- O - O -
கேள்விகள் எல்லாம்
வேள்விகள் ஆகாமலேயே விழயல்களைத் தரிசித்தன cefarg) வீணையின் நாதமானோம் விழாக்களில் கூட
பொம்மைகளாய் கூத்தாழத் திரிந்தோம்
- Ο - Ο --
40
எனதான பாதையில் நீ நடந்துவர முழயாமலும் உனதான பாதையில் திரும்பி வர முழயாத பழயும் திசைமாற்றிய அதன் வேலிகள் எல்லாம் நொருங்கிப் போய்க் கிடக்கின்றன
-س۔O خسہ "O -۔
நாம் பூப்பறித்த அந்த மரமா
இப்பழயெல்லாம் உதிர்ந்து போய்க் கிடக்கிறது? அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை
6alflbioloJuDM இவ்வளவு வேகத்தில் வாழப் போக வேண்கும்?
- O - O -
நாங்கள்
இன்று நண்பர்கள்
8ഖങ്ങLi காதலர்களாகவே இருப்போம் ஏனெனில் காதலர்களால் மட்டுமே பிரிந்துபோக முழயும் என்பதால்.
- O - O -
நேரம் ஆகிறது
புறப்படு.
எனதான குழந்தையும் உனதான குழந்தையும் தனித்தனியே அழும் குரல் கேட்கிறது புது ஜீவித வேட்கையில்
புறப்படு. முகூர்த்த நேரம் முழவதற்குள்.

ஆனை வெள்ளாப்புத்தான்,
இன்னம் ஒரு பக்கம் முழுசாக விடியவில்லை. இப்பொழுது வெளிக்கிட்டால் தான் சரியாக இருக்கும்.
குழந்தை முழித்துக் கொண்டது. விரல்களை மடக்கி, விரித்துத் தொட்டில் சாணையில் சித்திரம் வரைகிறது. அதனையும் தூக்கி மடியினில் வைத்து பாலூட்டினாள்.
குறுணல் அரிசியில் காய்ச்சிய உப்புக் கஞ்சியை இறக்கிப் பால்போத்தலில் ஊற்றிக் கொண்டாள். மேல் மூடியை இறுக்கி அதன் மேல் விளிம்பிக்காயை வைத்து றப்பர் தொலியால் கட்டி விட்டாள்.
குழந்தையை இடுப்பில் தூக்கியாயிற்று. அகதி நிவாரணத்தில் கிடைத்த பிளாஸ்டிக் தாச்சியைத் தலையில் நிறுத்தி அதற்குள் கஞ்சிப் போத்தலையும், தண்ணியையும், தொட்டில் துணிகளையும் வைத்துக் கொண்டாள். வலது கையில் கீறு கத்தி. ஒரு பாவ நீளத்தில் இலந்தைத் தடியில் ஒரு பக்கம் கத்தியைப் பொருத்தி செய்த கோல் அது.
அவர் பாவித்த கீறு கத்தி அது. s கடலோரமாக கண்டல் இடுக்குகளில் ...) சகதித் தரையில் அரையடிக்குக் கீறிக் கீறு ஆத்தி கொண்டு வரும். மட்டியின் சிப்பித் தலையில் படும்போது மட்டும் "ணங்’ என்று சத்தம் கேட்கும். அந்தக் குழிக் 1 - எம்.எஸ்.அமானுல்லா குள் கைவிட்டுத் துளாவினால் உள்ளங். " கை அகலத்திற்குக் கண்டல் மட்டி கிடைக்கும். பத்து மட்டி எடுத்தால் காணும். ஒரு கறிக்குச் செல்லா வாத்தியாகக் காணும். ஒரு நாளைக்கு நாற்பது ஐம்பது என்று கண்டல் மட்டி அகப்படும். அதனையே கூறு கட்டி விற்று வருவார். எப்படியும் இருநூறு ரூபாவுக்குத் தேறும். அது போதும் அவர்களுக்கு.
நிறைமாத சூலியாக அவள் இருந்தபோதுதான் அந்தப் பயங்கரம் நடந்தது. கண்டல் காடு, கள்ளிக் காடு என்று கீறு கத்தியோடு சென்று நிலத்தைக் கீறி அவர் மட்டி தோண்டிக் கொண்டிருந்தபோது -
அதே சத்தம். "ணங்" ஆவலோடு கையைவிட்டுத் துளாவினார். அது மட்டியல்ல! ஆனால் என்ன இது? அங்கு இங்கு என்று தட்டித் தடவிப் பார்த்த போது காதைச் செவிடாக்கும் ஓசையோடு வெடித்துக் சிதறியது. புதைவெடி. இங்கு எப்படி?. 41

Page 23
yege);
வெள்ளத்தில் மிதந்து வந்து புதைந்து இருந்ததா? அவள் விதவையாகிப் போனாள். கிடைத்த பணம் எல்லாம் நாலுமாத இத்தா” வீட்டிலேயே கரைந்து போனது. அவர் விட்டுச் சென்ற சொத்து அந்தக் கீறு கத்தியும், அந்தக் குழந்தையும் தான்.
A. A
உம்மாவைப் பிடிச் வேகத் தோடு புள்ளைக்கு ஒதினாள். குழந்தைக்கு விளங்கியதா? மார்போடு தலை சாய்த்து அவள் மீண்டும் உறங்கிப் போனாள்.
★
இரண்டு மைல் நடந்து கடலோரம்
புள்ள.
சுக் கோ” நடை
வந்துவிட்டாள். மணல் பரப்பை ஊடறுத்துக் கள்ளிப் பத்தைகளில் ஒரு வழிப் பாதையாகச் சதுப்பு நிலத்தை யண்டிச் சேற்று நிலத்திற்கு வந்து விட்டாள். இங்குதான் கண்டல் மட்டி விளைந்து கிடக்கும்.
சில நாட்களில் அவருடன் சேர்ந்து மட்டியெடுக்க வந்திருக்கிறாள். ஆனால் அப்போது கண்டல் மட்டி சீசன் இல்லை. பின் இருட்டுக் காலத்தில்தான் கண்டல் மட்டிகள் தரைக்கு அண்மித்து வரும். மற்றக் காலங்களில் சேற்றுப் பகுதியின் ஆழமான பகுதிகளுக்குச் சென்றுவிடும். அந்த நேரத்தில்தான் அவற்றின் பேறுகாலத்தையும் வைத்துக் கொள்ளும்.
நட்சத்திர மீன்கள் உலவுகின்ற காலங்களிலும் மட்டிகளின் நடமாட்டம்
குறைந்துவிடும். நண்டு, கீவி என்று
42
எந்தக் கரையோர ஜீவன்களையும் காண முடியாது. முருகைக் கற்களில் விளையும் கடலணிமணியைக் கூட அவை தூக்கிச் சென்றுவிடும்.
கடலின் உள்ளே சென்றால் ஆழம்
குறைந்த பரவல் பகுதிகளில் பாக்கு
மட்டிகள் கிடைக்கும். பன்னல் எனப் படும் கடலையளவு சப்பட்டை மட்டி களும் கும்பல் கும்பலாகக் கிடைக்கும். இருவருமாகப் பாக்கு மட்டியை வாரிக் கொண்டு வந்தார்கள். சுமக்க முடியாத பாரம், கரையோரத்தில் சுள்ளிகளை மூட்டித் தீ மூட்டினார்கள். பானைக்குள்
நீரூற்றிப் பாக்கு மட்டியை அள்ளிப்
போட்டபோது வெப்பத்தில் வாய் பிளந்துவிட்டது. மட்டிச் சதையை எடுத்துக் கொண்டு மட்டிச் சிப்பிகளை மலை போலக் குவித்தார்கள். குவி யலைச் சுண்ணாம்புச் சூளை வைத்திருப்
பவர்களுக்கு விற்றுவிட்டால் அதிலும்
கொஞ்சம் பணம் புரளும்.
"அவிச்சது போதும் புள்ள. மட்டி வாய் பிளந்து விட்டது. அகப்பையால மட்டியை வாரி எடுத்து வெளியே போடு புள்ள."
அவளும் அப்படித்தான் செய்தாள். அகப்பை மூக்கில் பானை இடறி விட்டது. கொதி நீர் கைமுழுவதும் தெறித்துச் சிதறியது. “ஆ. ஊ." என்று அழுதாள். கடற்கரையைச் சுற்றி ஓடினாள். வலி பொறுக்க முடியாமல் கடல் நீருக்குள் கையை வைத்து அரற்றி அரற்றி அழுதாள்.

அதற்குள் பன்னப் பழம் போல் கொப்பிளங்கள் தோன்றி விட்டன. அவை ஆறுவதற்கே ஒரு மாதம் சென்றது. இப்பொழுதும் கைகளில் தீக் காயங்களின் வடு இருக்கின்றது.
★
பச்சைப் பசேல் என்று கிளை பரப்பி நின்ற கண்டல் மரத்தில் தொட்டில் கட்டினாள். பழைய காலத்து காட்டா ஒயில் சேலை. அதனுடன் கலம்பக் கயிற்றை இணைத்து வாகாகத் தொட்டில் அமைத்தாள். அதற்குள் குழந்தையைக் கிடத்தினாள். ஆனால் அவளால் தலையை உயர்த்த முடிய வில்லை. ஒரு கற்றை முடி குழந்தையின் கைகளுக்குள் பிணையாக இருந்தது.
'உம்மாட தலைமுடியை உடுபுள்ள. உம்மா நாலுபாடு மட்டி பார்த்து வந்தாத் தான் நமக்கும் சோறு கிடைக்கும். கொஞ்ச நேரம் படுத்திடம்மா."
குழந்தைக்கு என்ன விளங்கி யிருக்கும்? பாலாகச் சிரித்து உறங்கிப் போனாள்.
குப்பிறப்படுத்து உடும்பு பிடிக்கிற வயசு, தத்துப் பித்தென்று எழுந்து நடக்க வேண்டிய பருவம். எதுவுமே இல்லை. எலும்பும் தோலுமாக. தாய் குடிக்கும் குறுணல் கஞ்சியின் சத்தைப் பாலாக உறிஞ்சிப் போசாக்குத் தேடும் குழந்தை வேறு எப்படி இருக்கும்?
தொட்டிலுக்குள் குனிந்து முகத்தில் முத்தமிட்டு நிமிர்ந்த போது கண்களில் நீர் திரண்டு கோர்த்துக் கொண்டது.
s stage):
অৰ அவர் இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா..?
ஒரு பாக பொழுது ஆகிவிட்டது.
கீறு கத்தியுடன் சேற்று நிலத்தில் புகுந்து விட்டாள். சதக் சதக் என்று கத்தியால் நிலத்தின் வயிற்றைக் கீறி கண்டல் மட்டியைத் தேடினாள்.
பத்து மணிக்குள் மட்டி தோண் டலை முடித்துக் கொள்ள வேண்டும். அதற்குள் வெயில் ஏறிவிடும். நமக்கு அமச்சது கிடைக்கும். கண்டல் மட்டியை அவள் சந்தைக்கு கொண்டு செல்ல மாட்டாள். பெரியப்பாவின் பொடியன் வருவான். அவனிடம் கூறு கட்டி கொடுத்துவிட்டால் அவன் நாலு ஒழுங்கை சுற்றி விற்றுவிடுவான். இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. கண்டல் மட்டி ரோசமாக விற்றுவிடும்.
தேர்ந்த கலைஞனின் கைலாவகத்
தோடு கீறு கத்தியால் சகதி நிலத்தில்
நெடுங்கோடுகள் இழுத்தாள். அங்கு இங்கென்று ஒலி வேறுபாடுகள். அந்த வேறுபாட்டின் சுரலயத்தில் கண்டல் மட்டியா, கல் குவியலா, கண்டல் வேரா என இலகுவாக அடையாளம் கண்டு விடுவாள். கண்டல் மட்டி என்றால் கீறு கத்தியை இடது கைக்கு மாற்றிக் கொண்டு வலது கையால் சேற்றில் துழாவி எடுத்து-விடுவாள். அது இல்லை யென்றால் மீண்டும் மாறா வேகத்தோடு கோடு கிழிப்பாள்.
மகள் அழும் சத்தம் மெல்லிதாகக் கேட்கிறது.
43

Page 24
geSG) ܓ
மட்டிப் பையையும் கீறு கத்தி யையும் கீழே வைத்துவிட்டு மகளை நோக்கி நகர நினைத்தபோது, இடுக்கில் நண்டுக் குஞ்சொன்று ஊர்ந்து மேலேறியது.
கால்
அவளுக்குச் சிலிர் என்றது.
மறுபடியும் மகளை தண்டு நறுக்கி யிருக்குமா?
பதை பதைப்போடு தொட்டில் கட்டியிருந்த கண்டல் மரத்தை நோக்கி ஒட்டமும் நடையுமாக.
மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி அது. மேகம் மூட்டம் கொண்டு அந்தா இந்தா என்று மழை கொட்டத் தொடங்கிவிடும் என்ற நிலை யில் தனது மட்டி தேடும் போராட் டத்தை முடித்துக் கொண்டு மகளைக் கிடத்தியிருந்த தொட்டிலை நோக்கி நகர நினைத்தவளை நிலைகுலைய வைத்தது குழந்தையின் அழுகை ஒலி. கீறு கத்தியையும் மட்டிப் பையை யும் தூர எறிந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக ஓடிவந்து மகளை வாரி எடுத்தபோது குழந்தையின் உள்ளங்காலி லிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டி ருந்தது.
தாயைக் கண்ட வெப்புசாரத்தில் மகள் மேலும் சத்தம் வைத்து அழத் தொடங்கினாள்.
சிவப்புக் கால் நண்டொன்று தனது கொடுக்குகளை இடுக்கிக் கொண்டு தனக்கும் இதற்கும் தொடர்பில்லை
44
என்று சாதிப்பது போல நிமிர்ந்து பார்த்துவிட்டு ஓடத் தொடங்கியது.
நண்டுக் கொடுக்கின் பிடிக்குள் தன் கால்துண்டுச் சதையை இழந்து விட்ட வலி பொறுக்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழத் தொடங்கியது.
அவள் ஓட்டமும் நடையுமாக இரண்டு மைல் தூரம் பேய் பிடித்தவள் போல ஓடிவந்து ஆஸ்பத்திரியில் காட்டி ஒரு வாரம் பத்து நாள் கூடவே இருந்து கண் விழித்து வைத்தியம் பார்த்தாள். அவளை விட்டால் தனது வாழ்க்கையில் வேறு என்னதான் பிடிமானம் இருக் கிறது? குழந்தை இல்லையென்றால் அவள் தொடர்ந்து வாழ்ந்துதான் என்ன பிரயோசனம்..?
ஒருவாறாகக் காயம் ஆறியது. ஆனால் வலதுகால் பாதத்தில் மாங்காய் பிளந்தது போல் அந்த வடு இன்னமும் இருக்கிறது.
இந்தக் காலத்தில் பெரியப்பாவின் மகன் கீறு கத்தியைத் தூக்கிக் கொண் டான். அவனால்தான் அவளுக்கு அந்த ஆஸ்பத்திரிக் காலத்தில் வொஜிபனம்
கிடைத்தது.
குழந்தையின் அழுகை ஒலி கேட் டதும் அவளுக்குப் பழைய ஞாபகம் தான் வந்தது. மீண்டும் நண்டுதான் கடித் திருக்குமோ..? அவள் வேகமாக ஒடத் தொடங்கினாள்.
ல்லகாலம் ப்படியொன்ாறும் நி -9Jl II Jlg g) இல்லை. குழந்தை கைகளை ஆட்டி

சாணைக் கயிற்றுப் பக்கம் திசைகாட்டிச் சிலிர்த்தாள்.
அந்தத் திசையில் அவள் பார்வை சென்று நிலைத்தபோது அடி வயிற்றில் பகீர்’ என்றது. குழந்தையை அப்படியே விழுங்கும் நோக்கத்தோடு வந்திருந்த மலைப்பாம்பு ஆள் அரவம் கண்டதும் பின்வாங்கி ஊரத் தொடங்கியது.
மகளை வாரி எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கேவத் தொடங் கினாள். கொஞ்சம் தான் பிந்தியிருந் தால் ஏற்பட்டிருக்கக் கூடிய விபரீதத்தை நினைத்தபோது அவளுக்கு மயக்கம் வரும்போல இருந்தது. அப்படியே நிலத்தில் குந்திவிட்டாள்.
இது சோதனை? இந்தக் குழந்தையும் இல்லை யென்றால் நான் எப்படித் தனியாக
"ஆண்டவனே என்ன
வாழ்வேன்.
இருக்கவே செல்வமே..?
நான் உயிரோடு
மாட்டேன்... என்
மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளுக்குப் பசியெடுத்தது. சாப் பிடப் பிடிக்கவில்லை. போத்தலில் அடைத்து வைத்திருந்த உப்புக் கஞ்சியை எடுத்துத் தரையில் கவிழ்த்து விட்டாள்.
பாதிக் கஞ்சி மண்ணில் சங்கம மாகிக் கொண்டிருந்தபோது அவளுக்கு மனம் மாறிவிட்டது. இந்தக் கஞ்சி தன் குடலுக்குள் இறங்காவிட்டால் குழந்தைக்கு பால் இல்லாமல் போய்
তত্ত্ব
விடுமே. பாதி மண் கலந்தும் கலவா மலும் எஞ்சி நின்ற கஞ்சியை இயந்திர வேகத்தோடு விழுங்கி முடித்தாள். தூரத் தில் உருண்டு கிடந்த விரும்பிக்காய் அவளை விநோதத்தோடு பார்த்துக்
கொண்டிருந்தது.
பாம்பைக் கண்டு அரண்டிருந்த குழந்தை இன்னும் அந்தப் பயம் தெளி யாமல் தாயின் நெஞ்சோடு மேலும் புதைந்து கொண்டது. குழந்தையின் கால் பாதத்தில் வடுவாகப் பிளந்திருந்த பழங் காயத்தை அவள் வாஞ்சையோடு வருடிவிட்டாள். இது முதல் தத்து. இன்று இரண்டாவது தத்து. இன்று எத்தனை தத்துக்களை இவள் சந்திக்க நேருமோ?. தலை உயர்த்திக் குழந்தை யின் முகத்தை முத்தமிட்டு மீண்டும் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள்.
வாடை பெயர்ந்திருந்தது. கச்சான் தொடங்க இன்னம் நேரம் இருக்கிறது. கடற்காற்று வீசுகின்ற நேரம் அது. இந்தக் காற்றுத் திசையில் தோணிக ளெல்லாம் அலுப்பின்றிக் கரைக்கு வந்துவிடும்.
ஆனால் இங்கு காற்று திசைமாறி வீசுகிறது. வாடை பெயர்ந்தவுடன் சோளகம் வேகம் கொள்ள வேண்டும். ஆனால் இன்று திசைமாறிச் சுழன்று வீசுகின்றது. கால்களுக்குக் கீழ் சொத சொதப்பான கறுப்பு நீர் மேலெழத் தொடங்கி விட்டது.
45

Page 25
E. page): ང་།
வித்தியாசமான நிறமும் துர்நாற்றமு மாகக் காலில் சொற சொறக்கின்ற நீரிலிருந்து பாதுகாக்கத் தனது கீறு கத்தியையும் தொட்டில் துணியையும் வாரிக்கொண்டு நிமிர்ந்த போது. இதென்ன ஊழிக் கூத்து..?
நூறு பாக தூரத்தில் கறுப்பு மய மாக அலையொன்று மேலெழுந்து. மேலெழுந்து. தென்னை உயரத்தையும் தாண்டி. கரையை நோக்கி. கன்று போட்டப் பசுவின் வேகத்தோடு.
இனி தாமதிக்க நேரமில்லை.
கீறு கத்தி, தொட்டில் எல்லா வற்றையும் கைவிட்டாள். குழந்தையைத் தூக்கி பிளாஸ்டிக் தாச்சியில் வைத்தாள். தாச்சியை தலையில் வைத்துக் கொண்டு ஒடத்தொடங்கினாள். முள்ளிச் செடிகள் காலைக் கீறி ரணமாக்குகின்றது. கண்டல் வேர்கள் விரலை உடைக் கின்றன. சேலை நழுவிப் போகப் பார்க் கிறது. கீழே குனிந்து பார்க்க நேர மில்லை. காற்றைவிட வேகத்தோடு கடல். கறுப்புக் கடல் துரத்தி வரு கிறது. ஒட்டம். ஒட்டம். இதைத் தவிர இப்போது வேறு வழியில்லை. 'யா அல்லாஹ்.. என்ட புள்ளையைக் காப்பாத்து.'
தலையில் குழந்தையின் சுமை
யோடு காலில் இரத்தக் காயங்களோடு அவளால் எவ்வளவு வேகத்தோடு ஒட
முடியும்? கடலாகிப் போன ஊரோடு
மக்களின் ஒலமும் "காப்பாத்துங்க. காப்பாத்துங்க.." என்ற கூக்குரலும் அவளது காதுகளில் விழத்தான் செய்
46
கிறது. அவளால் அதனைக் கவனிக்க முடியவில்லை. அதற்கு இப்போது நேர மில்லை. ஒடுவதைத் தவிர வேறு வழி யில்லை. ஒரே மூச்சோடு மகளையும் சுமந்து கொண்டு ஓடினாள். . . ஓடினாள்.
ஆனால் அவளால் முடியவில்லை. போர்க்கால வேகத்தோடு வந்த இராட்சத அலை அவளைப் பந்தாடியது. கன்னா மர உயரத்திற்கு வந்த கறுப்பு அலை அவளையும் சேர்த்துக் கொண்டு மரத்தில் மோதியது. மகளைத் தாங்கி யிருந்த கைகள் வலுவிழந்து போனது. மரக்கிளையில் மோதிய வேகத்தில் நினைவிழந்து. நினைவிழந்து.
தனது கரங்களில் இருந்து மகளை யும் பிளாஸ்டிக் தாச்சியையும் யாரோ திருகிப் பறிப்பது போல. கனவுக் காட்சி போல. மலைப்பாம்பு தன்னை யும் மகளையும் சுற்றி வளைப்பது போல.
★
அன்று மாலைதான் அவளைக் கண் டெடுத்தார்கள். கன்னா மரக் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த - கண் இடுக்குகள், காது, மூக்கு வாயெல்லாம் கறுப்பு நீர் திட்டுத் திட்டாக படிந்திருக்க - உயிரிருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகத் தோடு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
ஆனால்,
அவள் உயிரோடுதான் இருந்தாள். மரத்தில் மோதிய காயங்கள் உடல்

முழுக்க இரத்தவாறாக காட்சியளிக்க முகமெல்லாம் கறுப்பு நிறமாக மாறி ஆளடையாளம் தெரியாமல். மூர்ச்சை தெளியாமல். நினைவிழந்து.
பெரியம்மாவின் மகன் தான் இரண் டாவது நாள் அடையாளம் கண்டான். அவளால் பேச முடியவில்லை. உடல் முழுவதும் காயங்களுக்குக் கட்டுப் போட்டு இருந்தது. மூக்குத் துவாரம் வழியாக உணவு சென்று கொண்டி ருந்தது.
மூன்றாம் நாள் இலேசாகக் கண் விழித்தாள்.
'தம்பி என்ட புள்ள...?"
தம்பியால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அவனும் இந்த மூன்று நாட்க ளாகத் தேடிக்கொண்டுதான் இருக் கிறான். குழந்தைகளின் இறந்த உடல் கள், கமராக்காரர்களால் பிடிக்கப்பட்ட படங்கள், ஆஸ்பத்திரி வார்டுகள். ஒவ் வொன்றாகப் பார்த்துத்தான் வருகிறான். தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்து வருகிறான். ஆனால் குழந்தை அகப்பட வில்லை. இறந்ததற்கான - அடக்கியதற் கான தடையங்களும் ஒன்றும் இல்லை.
“கொஞ்சம் பொறுங்க ராத்தா. ஆறுதலாயிருங்க. கிடைத்து விடுவாள். எங்காவது - யாராவது காப்பாற்றி வைத்திருப் பாங்க."
பரீனா எப்படியும்
அவனது நம்பிக்கை வீண் போக வில்லை. ஆஸ்பத்திரி வட்டாரங்களுக் குச் செய்தி ஒன்று கிடைத்தது. ஒரு
č? 6666)
வயதுப் பெண் குழந்தையொன்று தென்னை மரவட்டில் பிளாஸ்டிக் தாச்சி யில் இருந்த வாறு மூன்று நாளைக்குப் பிறகு மீட்கப்பட்டுக் கொண்டு வரப் பட்டதாக. அவன் விரைந்து விவரம் சேகரித்தான்.
ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கிடையில் உயர் பராமரிப்பு பிரிவுக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
“ராத்தா.”
"ம்.” - அவளால் கண் விழிக்க முடியவில்லை.
“ராத்தா..."
"ம். சொல்லு தம்பி. பரீனா கிடைச்சிட்டாளா?
'இல்லை" அவனுக்கு மனம் வரவில்லை.
என்று சொல்ல
'பரீனாட வயசில ஒரு புள்ளைய கண்டெடுத்திருக்கிறாங்க. தென்னை இருந்ததாம் பெண் குழந்தை. ஒரு வயசு சொல்றாங்க. மூணு நாளா சாப்பாடு இல்லாம இருந்த தால ஐசி வாட்டுக்கு கொண்டு போயிட்டாங்க."
மர வட்டுல
"அது பரீனாதானா?
‘தெரியாது.
சொல்றன்."
நான் பார்த்துச்
அவள் எழுந்து இருக்க பிரயாசப் பட்டாள். முடியவில்லை. மீண்டும் மயக்கமுற்றுப் போனாள்.
47

Page 26
8 Letse): ܓ
மாலையில் குழந்தையை வார்ட்
டுக்குக் கொண்டுவந்து விட்டார்கள். குழந்தைக்கு மயக்கம் தெளிந்திருந்தது. ஆனால் பலவீனமாக இருந்தது. கண் கூடுகள் எல்லாம் உள்வாங்கி...
மெலிந்து.
கட்டில் அருகில் வேறொரு தம்பதியினர் நின்று கொண்டிருந் தார்கள்.
"இது உங்கள் குழந்தையா?”
"ஆமாம்” "குழந்தையின் பெயர்?"
'56 furt' "நீங்கள் இந்த ஊரா?" “இல்லை. கொழும்பு. ஆனால் எங் கட சொந்தக்காரங்க இங்க இருக்காங்க. தென்னந்தோட்ட றோட்டோரமா வரும் போதுதான் சுனாமி வந்தது. காரை உருட்டி புரட்டிப் போட்டது. எப் படியோ உயிர் தப்பிட்டோம். குழந்தை கிடைச்சது பெரிய பாக்கியம்."
அவன் மலைத்துப் போனான். இது நஸ்ரியா இல்லை. பரீனாதான். இது எங்கட ராத்தாட புள்ளதான். இது அநியாயம். இது அநியாயம். இத விட யேலாது.
அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். தம்பதியர் விறைத்துப்
"இது எங்க ராத்தாட புள்ள. நான் தரமாட்டேன்."
போனார்கள்.
48
அவள் அழத் தொடங்கிவிட்டாள். குழந்தையைப் பறித்துக் கொண்டாள். “இது என்ட புள்ள. என்ட வயித்துல பொறந்த புள்ள. இவன் யாரு இங்க வந்து கரைச்சல் கொடுக்கிறது?”
அதற்குள் கூட்டம் கூடிவிட்டது.
அவன் மெதுவாக நகர்ந்து ராத்தா வின் வார்ட்டுக்குப் போனான். அவள் இவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.
'பரீனா கிடைச்சிட்டாளா?"
"ஆமா ராத்தா. ஆனால் கொழும் புக்கார குடும்பம் - யான ஆட்கள் போல. தங்கட மகள் நஸ்ரியா’ என்று சொல்லிக் கொண்டு நிற்கிறாங்கள்."
கொஞ்சம் வசதி
"இல்ல இல்ல. அது பரீனாதான். நான் விடமாட்டேன். என்ட புள்ளய நான் யாருக்கும் தரமாட்டேன். என்ட
புள்ள எனக்கு வேண்டும். போய்த்
தூக்கி வா. தம்பி.”
தம்பி புறப்பட்டான். 'தம்பி அவள்ர வலது கால் பாதத் துல நண்டு கீறுன காயம் இருக்கும். அதப்பாரு, அது இருந்தா. அது என்ட குலக்கொடிதான்."
தம்பி அம்பாக வெளியேறினான். கொழும்புத் தம்பதியினர் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
“வந்த இடத்துல கஷ்டப்பட்டுப் போனோம். நல்ல காலம் மூணு நாளைக்குப் பிறகாவது ஸ்ங்கட மகள்
கிடைச்சாள்."

"இது உங்கட மகள்தானா?”
ஆமா. இந்த வலது கால் பாதத் தைப் பாருங்க. ஏழு மாசமா இருக்கும்
போது தாய்க்காரி பாத்ரூம்ல வழுக்கி
விழுந்ததில குழந்தையும் அடிபட்டு பேசன் வெட்டின காயம். இந்தா."
அவர் வலது காலைத் தூக்கிக் காட்டுகிறாள்.
கூட்டம் கலைந்து செல்கிறது.
அவனும்தான் அந்தக் காயத்தைப் பார்த்தான். மாங்காய்ப் பிளவுபோலப் பிஞ்சுக் கால்களில் வடுவாக தெளிவாக இருந்தது.
“ராத்தா நீங்க வந்து பாருங்க. அது அவங்கட குழந்தை எண்டுதான் சாதிக் கிறாங்க. கால் காயத்தைக் கூட ஆறு மாசத்தில விழுந்த காயம் என்று சொல்றாங்க."
அவனுக்குக் கண்ணிர் முட்டி விட்டது. அவளுக்கு ஆவேசம் பிடித்து விட்டது.
தன் வாழ்க்கைக்கு இருந்த ஒரே யொரு பற்றுக்கோடு. அதுவும் கை நழுவிப் போகப் போகிறதா? பரீனா இல்லாமல் நான் எப்படிச் சீவிப்பது?
மூக்கிலும் கையிலும் மாட்டியிருந்த பிளாஸ்டிக் குழாய்களை ஆவேசத்துடன் கழற்றி வீசினாள். மேலாடையால் உடம்மைப் போர்த்துக் கொண்டாள்.
வார்டெல்லாம் - நடையெல்லாம் சனங்களின் ஒப்பாரி.
, (урцg иушо т?”
ge:GSG); অ “மூணு பிள்ளைகள் தாயே. தாயும் தகப்பனும் கடலோடு போயிட்டாங்க. இனி இந்தப் பிள்ளைகள்ர கதி?”
“எல்லாம் எட்டு உருப்படி. மூத்தது ரெண்டும்தான் உழைக்கிற வயது. ரெண்டுமே போயிற்று. இனி அந்தக் குடும்பம் என்ன பாடுபடப்போவுதோ?”
“என்ட உம்மா, என்ன உட்டிட்டு எங்கம்மா போன நீ?"
“ஊடும் போய் தொழிலும் போய் வல வள்ளம் எல்லாமே போயிற்றுது. இனி என்ட குடும்பத்த எப்படிக் காப் பாத்துவேன்.'
எல்லாக் குரல்களையும் வேதனை களையும் செவிமடுத்துக் கொண்டே அவள் வேகம் வேகமாகக் கைவிசி ஆவேசம் வந்தவள் போலப் பரீனா இருந்த இடம் தேடி ஓடினாள். பின்னால் பெரியப்பா மகன்.
உடம்பெல்லாம் இரத்தக் காயங் கள். மரத்தோடு அடிபட்டதில் உடலில்
பலவீனம், விண் விண் என்று வலி.
அத்தனையும் சகித்துக் கொண்டு அவள் பரீனாவைக் காண நடந்து வந்திருந் தாள்.
அவள் மனதில் மெல்லிதாக - மின்னல் கீற்றாக ஒரு சிந்தனை. 'பரீனாவை நல்ல வாழ்வு வசதியோடு என்னால் எதிர்காலத்தில் வாழ வைக்க தம்பியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
கீறு கத்தி அவள் இதயத்தை வரி வரியாகப் பிளந்து இரத்தம் சொட்டுவது
49

Page 27
46565 KSA
இவ்வாண்டு நடைபெற்ற கம்பன் விழாவில் மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் விற்பனைக் காட்சி
போல் உணர்வு மேலோங்கியது. கால்கள் தளரத் தொடங்கின.
பரீனா. பரீனா. பரீனாதான். சந்தேகமில்லை. கால் பாதத்தைத் தூக்கி அந்த மாங்காய்ப் பிளவுக் காயத்தைப் பார்த்தாள். சந்தேகமில்லை. இது பரீனா
தான்.
குழந்தை கண் விழித்து அரக்க பரக்க பார்க்கிறது.
வலது கண் இமையை மருவினாற் போல் கறுப்பு மச்சம். இருக்கிறதா?. ஆமாம் இருக்கிறது. இது அவருக்கும் இருந்தது. ஆமாம் இது பரீனாதான்.
இரண்டு கைகளாலும் அள்ளிக் கன்னங்களில், காதுகளில், கண்களில் முத்தமிட்டாள். அந்தக் குழந்தையும் 50
.ફે:
* ܠ ܐܰܢ݈ܬ݁ܪܶ2܀ நினைவற்ற மயக்க நிலையில் ஆவு ஆவு என்று கைகளை வீசி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டது.
கீறு கத்தி மறுபடியும் இதயம் நோக்கி.
இடது புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தனது கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த இரு பிஞ்சுக் கைகளையும் விலக்கி, மார்பில் வைத்து விட்டு மெதுவாக திரும்பி நடந்தாள்.
"ராத்தா. பரீனாவை விட்டுப் போட்டு. இது. நம்ம குழந்தை அல்லவா?”
அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள் - பரீனாவின் தாயாக அல்ல. ஒரு குழந்தையின் தாயாக.
 
 
 

Lupūum6OOJ Ĝ9ja5JJĝ5 ബൈബിൾ്ത്ര ഗ്രെ
1842 இல் வெளிவந்தது. 163 ஆண்டுகளுக்குப் பிறகு 2005இல் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளிவருகிறது.
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2037 நிகழும் சித்திரை 31 (14.05.06) ஞாயிறு
நேரம் : மாலை 4.30
இடம் : கொழும்புத் தமிழ்ச் சங்கம் (சங்கரப்பிள்ளை மண்டபம்)
1000 ற்கும் மேற்பட்ட பக்கங்களில் ஏறத்தாழ 60,000 சொற்களுடன் 390/- விலையில் வெளியாகி உள்ளது. வெளியீட்டு
மண்டபத்தில் 2500/- விலையில் விற்பனை செய்யவுள்ளோம்.
வெளியீட்டாளர் : சதடியூ பத்மசீலன்
(d சேமமரு பொத்தகசாலை
யூஜி 52, பீப்பிள்ஸ் பார்க், . கொழும்பு - 11. தொலைபேசி 2472365 தொலைநகல் : 2448624
தமிழர்களே! வாருங்கள் தமிழர்களே! தமிழுக்கு வளம் சேர்க்க வாருங்கள்!
51

Page 28
ஈழத்தின் புனைகதைப் படைப்பாளிகள்
செங்கை ஆழியான் க. குணராசா
முன்னுரை
ஈழத்தின் புனைகதைத்துறையில் நாவல் இலக்கியத்தின் முதற் படிக்கல் 1856 ஆம் ஆண்டு காவலப்பன் கதை' என்ற மொழிபெயர்ப்பு நாவலுடன் பதிக்கப்பட்டது. ஈழத்தின் சிறுகதைத்துறை 1860களில் ஆர்னால்ட் சதாசிவம்பிள்ளை என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்விரு படைப்புக்களும் நாவல், சிறுகதை என்ற நவீன மேலைத்தேச இலக்கண வரம்புகளுள் அடங்குமா? என்பது ஆய்விற்குரியது. எனினும் அவையே ஈழத்தின முதலாவது புனைகதைகளாக எமக்கு அறிமுகமாகின.
அதன் பின்னர் ஈழத்தின் முதல் நாவலெனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்திலெப்பை மரைக்காரின் ‘அசன்பேயுடைய கதை’ (1885) யைத் தொடர்ந்து ஈழத்தின் ஆரம்ப நாவல்களாகக் கருதக்கூடிய நாற்பத்தேழு நாவல்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் தேறிய நாவல்களாகச் சி.வை.சின்னப்பபிள்ளையின் 'வீரசிங்கன் கதை" (1905), மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம்' (1914), எஸ்.தம்பிமுத்துப்பிள்ளையின் அழகவல்லி (1926), இடைக்காடரின் நீலகண்டன் - ஒரு சாதி வேளாளன்’ (1925), ம.வே.திருஞானசம்பந்தம்பிள்ளையின் "கோபால - நேசரெத்தினம்’ (1926) ஆகிய நாவல்களைக் குறிப்பிடலாம். இவர்களின் வழியைத் தொடர்ந்து நானுறுக்கு மேற்பட்ட நாவல்கள் ஈழத்தில் வெளிவந்துள்ளன. ஈழத்தின் நாவல் மனை கூரை வரை கம்பீரமாக எழுந்துள்ளது. கூரையிடப் போகின்ற எமது படைப்பாளிகள் யாவர்?
ஈழத்தின் சிறுகதைத்துறையின் நவீன போக்கினை 1939 களிலிருந்து அவதானிக்கலாம். ஈழத்துச் சிறுகதை வரலாற்றினைக் கால ரீதியாகவும், நவீன சிறுகதை வடிவ ரீதியாகவும் ஆராய்விற்கு எடுக்கும்போது ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளாக இலங்கையர்கோன், கோ.நடேசையர், நவாலியூர் சோ.நடராஜன், சோ.சிவபாதசுந்தரம், சுயா என்ற சுநல்லையா, சம்பந்தன், ஆனந்தன், பாணன், சி.வைத்தியலிங்கம், பவன் முதலானோர் அடங்குவர். அவர்களைத் தொடர்ந்து ஈழத்தின் சிறுகதை மனை கம்பீரமாக உயர்ந்தெழுந்துள்ளது.
52

PS 6696DE
இப்புனைகதைகளை ஈழத்திற்குத் தந்த படைப்பாளிகளையும், தந்து கொண்டிருக்கும் படைப்பாளிகளையும் கணித்து ஆவணப்படுத்துகின்ற முயற்சி கடந்த முப்பதாண்டுகளாகத் தனிப்பட்ட சிலராலும், அமைச்சுக்களினாலும், மாவட்டச் செயலகங் களினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை அவை செயல் வடிவம் பெறவில்லை. இந்நிலையில் ஈழத்தின் அப்புனைகதைப் படைப்பாளிகளைத் தகுந்தவாறு பதிவு செய்து பேணுகின்ற பணியை வழமைபோல மல்லிகை டொமினிக் ஜீவாவும் நானும் ஏற்றுள்ளோம். இந்த முயற்சியில் உங்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது. தொடர்ந்து எழுதாது மெளனம் பேணுகின்ற என் இனிய மூத்த படைப்பாளிகளும், தொடர்ந்து தம் பேனாவை இயக்கிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர் களும், துடிப்போடு எழுதுகோலைக் கரங்களில் ஏந்தியுள்ள இளம் படைப்பாளிகளும் தத்தமது எழுத்துலகோடு சம்பந்தப்பட்ட சுயவிபரங்களையும் தமது புகைப்படத்தையும் மல்லிகைப் பணிமனைக்கு அனுப்பி வைக்குமாறு தயவாக வேண்டுகின்றோம். தேடிப் பெறுவதென்ற அசுர முயற்சி எம்மிடமுண்டு. ஆனால் எங்களது முயற்சிக்கு அப்பாற்பட்ட தடைகள் சிலபொழுது தகுதியான புனைகதைப் படைப்பாளியைப் பதிவு செய்வதிலிருந்து தடுத்துவிடலாம்.
உங்கள் படைப்புகளை நாம் மதிக்கின்றோம். உங்கள் எழுத்தாற்றலை என்றும் குறைத்து மதிப்பிட்டதில்லை. "இவர்களுக்கு நாம் ஏன் வலிய எம் பற்றிய தகவல்களை வழங்குவது” என்ற எழுத்தாளக் கர்வமும், "இதில் பதிவு பெறுவதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது” என்ற அலட்சியமும் உங்களைப் பற்றிய உண்மைத் தகவல்களைத் தரக் குறுக்கே நிற்கலாம். உங்கள் கள்வமும் அலட்சியமும் நியாய மானவை. உண்மை. இவற்றால் நிச்சயமாக உங்களுக்குப் பயனில்லை. ஆனால் எம் வருங்காலச் சந்ததியினர் எம் புனைகதைப் படைப்பாளிகளை இனங்கான இந்த ஆவணக் கணிப்பீட்டுப் பதிவு அவசியம். ஈழத்தின் மூன்றாந் தலைமுறை எழுத்தாளரான டொமினிக் ஜீவாவும், நான்காம் தலைமுறை எழுத்தாளரான செங்கை ஆழியானும் உங்கள் முன் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம். இந்தச்
சிரமமான இலக்கியப் பதிவிற்கு உதவுங்கள். பின்னர் குறை கூறாதீர்கள்.
நன்றி.
1. ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளை
தமிழின் முதலாவது சிறுகதை ஆசிரியர் என்ற பெருமை ஈழத்தவர் ஒருவருக்கே உரியதாகவுள்ளது. சுப்பிரமணிய பாரதியார் (1905), வ.வே.சு.ஐயா. (1915), அ.மாதவையா (1925) ஆகிய சிறுகதை முன்னோடிகளுக்கு முதலே 1860 களில் சிறுகதைத்துறைக்குள் புகுந்தவர் ஆர்ணல்ட் சதா சிவம்பிள்ளை ஆவார். 1841இல் ஆரம்பிக்கப்பட்ட உதய தாரகை என்ற பத்திரிகையின் ஆசிரியராகக் கரோல்
53

Page 29
666):
விசுவநாதபிள்ளையும், 1860களில் இருந்து ஜே.ஆர்.ஆர்ணால்ட் சதாசிவம்பிள்ளையும் விளங்கினர். அக்கால கட்டத்தில் சதாசிவம்பிள்ளை உதயதாரகையில் தாம் எழுதிய பல சிறுகதைகளை வெளியிட்டார். அவள் உடுவில் பெண்கள் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் இருபது சிறுகதைகள் வரை எழுதி வைத் திருந்தார். உதயதாரகையின் ஆசிரியராகப் பதவி மாறியதும் அவற்றோடு மேலும் பலசிறுகதைகளை எழுதி உதயதாரகையில் 'நன்னெறிக் கதாமாலிகை’ என்ற தலைப்பில் பிரசுரித்துள்ளார். அவ்வாறு எழுதிய 40 சிறுகதைகளைத் தொகுத்து 1869 இல் 'நன்னெறிக் கதாசங்கிரகம்’ என்ற பெயரில் 328 பக்கங்கள் கொண்டதான தொகுதியை வெளியிட்டுள்ளார்.
ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளை சிறுகதைகள் எழுதவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டமைக்கு அவர் கூறும் காரணங்கள் வருமாறு:
1. இன்பமும் வினோதமுமான கதைகளை வாசிக்கும் வாஞ்சை எமது தேசத்தில் மிகுதி. எனினும் ஆணும் பெண்ணும் வாசிக்க யோக்கியமான சன்மார்க்க நேசம் கொண்ட கதைப் புத்தகம் எம் நாட்டில் அருமருந்துக்கு ஒப்பானது.
2. சன்மார்க்க கதைப் புத்தகத்தினைச் சிலர் யாவரேனும் எழுதினாலோ என்னும் ஆசையும், நாமாயினும் ஒன்றைத் தொடங்கினாலோ என்ற வாஞ்சையும் எழுதத் தூண்டின.
ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை தமது கதைகள் சிலவற்றினை ஆங்கில மொழி யிலிருந்து பெயர்த்தெடுத்து, தமது இஷ்டப் பிரகாரம் கூட்டிக் குறைத்துப் பேதப்படுத்தி வேற்றுருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதேவேளை தனது சுய ஞாபகக் களஞ்சியத்திலிருந்து துடைத்தெடுத்து கற்பனை சேர்த்து எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இப்போது வழங்கும் கதைப்புத்தகங்களிலிருந்து ( மதனகாமராசன் கதை போன்றன) எதனையும் தான் எடுத்துக்கொள்ளவில்லை எனக் குறிப்பிடுகிறார்.
சதாசிவம்பிள்ளையின் 40 சிறுகதைகளும் அக்கால வழக்கிற்கேற்ப ஏதாவது ஒரு நன்னெறியைப் போதிக்கும் பாங்கில் அமைந்துள்ளன. அவரது முதல் சிறுகதை யான “சிதடகண்டீஸ்வரன் கதை’ இணக்கம் வாழ்வுதரும் என்ற நன்னெறியைப் போதிக்கின்றது. ‘வீம்பாகரன் கதை’ அகங்காரம் அருமை குலைக்கும் என்ற நெறியையும், ‘ஆபராவலம்பிரபு கதை’ அஞ்சியவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பிசாசு என்ற பழமொழியையும் மையமாகக் கொண்டுள்ளன. இவ்வாறு 40 கதைகளும் ஒவ்வொரு கருவை விளக்குவதற்காகக் கதாரூபம் பெற்றிருக்கின்றன. இச்சிறுகதைகளை விபரிக்கும் உரைநடை எளிமையானதன்று. அக்காலத்தில் இந்நடை எளிமையான உரைநடையாக இருந்திருக்கலாம். வடமொழிச் சொற்கள், பேச்சுவழக்குச் சொற்கள் என்பன இவரின் கதைகளில் விரவி வருகின்றன. நீண்ட வாக்கியங்கள் ஆறுமுகநாவலர் வசனநடை போல இவரது சிறுகதைகளில் உள்ளன. (இருவரும் சமகாலத்தவர்).
54

သ္မီウ giggot எவ்வாறாயினும் ஆர்ணல்ட் சதாசிவம்பிள்ளை தமிழில் சிறுகதை மரபினைத் தொடக்கி வைத்த முதல்வர் என்பதை எவரும் மறுக்கவியலாது.
2. சித்திலெப்பை மரைக்கார்
ஈழத்தின் முதலாவது நாவலாகவும் தமிழின் இரண்டாவது நாவலாகவும் பலராலும் கருதப்படும் ‘அசன்பேயுடைய கதை என்ற நூலின் படைப்பாளி சித்திலெப்பை மரைக்கார் ஆவார். இவர் இலங்கைச் சுப்பிறீம் கோர்ட் புறக்ரராகவும் அதேவேளை முஸ்லீம் நேசன் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கி யுள்ளார். ஈழத்தின் முதலாவது புனைகதையை எழுதியவர் என்ற வகையில் சித்திலெப்பை மரைக்கார் பெருமையோடு நினைவு கூரத் தக்கவராகிறார். அசன்பேயுடைய கதை 1885ஆம் ஆண்டு கொழும்பு முஸ்லீம் நேசன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பட்டுள்ளது. பின்னர் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியினரால் 1974இல் ‘அசன்பேயுடைய சரித்திரம்' என்ற தலைப்புத் திருத்தத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.
1879ஆம் ஆண்டு தமிழின் முதலாவது நாவலெனப்படும் வேதநாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் வெளிவந்தது. அதனை அடுத்த ஆறாண்டுகளில் சித்திலெப்பை மரைக்கார் அசன்பேயுடைய கதையை எழுதி வெளியிட்டார். ஆரம்பத் தமிழ் நாவல்களைப் போன்று அசன்பேயுடைய கதையும் ஒழுக்கத்தையும் சமூக சீர்திருத்தங்களையும் வலியுறுத்துவதாகவுள்ளது. சித்திலெப்பை மரைக்கார் தமிழ், ஆங்கிலம், அரபு முதலான மொழிகளில் நல்ல அறிவுந் தெளிவுமுள்ளவர். ஆங்கில நாவல் இலக்கியம் பற்றிய அறிவு அவருக்கு இருந்துள்ளது. எனவே உரைநடை இலக்கியம் ஒன்றினைப் படைக்கும் ஆவலால் அசன்பேயுடைய கதையை எழுதியுள்ளார்.
ஈழத்தின் இந்த முதலாவது நாவலெனக் கருதப்படும் அசன்பேயுடைய கதையின் ஆசிரியர் இலங்கையராயினும் கதை நிகழும் களம் இலங்கையன்று. மிசுறு (எகிப்து) தேசத்தில் அரச குலத்தில் பிறந்த அசன், கடத்தப்பட்டு பம்பாயில் வளர்கிறான். பின்னர் அங்கிருந்து கல்கத்தாவிற்கு தப்பி ஓடி வருகிறான். அங்கு ஆங்கிலத் தேசாதிபதியின் உதவியுடன் கல்வி கற்றுத் தேறுகிறான். ஒருத்தியிடம் காதல் வயப்படுகின்றான். பின்னர் தன் தாய் தந்தையரைக் காண எகிப்து வருகின்றான். இந்தத் தேச சஞ்சாரத்தில் அவன் எதிர்கொள்ளும் இன்னல்கள், தீயவர்களின் சதி வலைப்பின்னல் அனைத்தையும் அவன் வெற்றி கொள்வதை இக்கதை சித்திரிக்கின்றது.
அசன்பேயுடைய கதையின் உரைநடை அக்காலகட்டத்திற்குரியதாகும். அதனால் செம்மொழி என அர்த்தப்படாது. மக்களுக்குப் புரியக்கூடிய வகையில் நாவலின் மொழிநடை அமைந்துள்ளது. தமிழில் மொழி பெயர்த்த அராபியக் கதைகளின் 55

Page 30
pategor
ད། மொழிநடைபோல அமைந்துள்ளது. பலவிடத்து நன்னெறிக் கருத்துக்கள் ஆசிரியர் கூற்றாக மேலோங்கி நிற்கின்றன. அத்தியாயப் பிரிவுகளின்றி ஒரே ஓட்டமாகக்
கதையைக் கூறி முடித்து விடுகிறார்.
ஈழத்துப் புனைகதையின் தொடக்கப் புள்ளி சித்திலெப்பை மரைக்கார் என்ற முஸ்லிம் பெருமகனால் இடப்பட்டது. அந்தப் புள்ளியிலிருந்து நவீன புனைகதை வளரத் தொடங்கியது.
3. ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை
ஈழத்தின் மிகப் பழைய சஞ்சிகையான இந்துசாதனம்' என்ற பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர் ம.வே.திருஞான சம்பந்தம்பிள்ளையாவார். வேறொரு காரணத்திற்காக இந்து சாதனம் ஆசிரியராகவிருந்த திருஞானசம்பந்தம்பிள்ளையின் சேவையை ஈண்டு குறிப்பிட்டாக வேண்டும். பொது சனங்கள் ரசிக்கக் கூடிய விதமாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், பழ மொழிகள் மிகுதியாய்க் கொண்டதாய், உலகம் பலவிதம் என்ற தலைப்பில் கதை நூல்களை எமக்கு அளித்துள்ளமைக் காக அவர் கணிப்பிற்குள்ளாக வேண்டுமென இரசிகமணி கனகசெந்திநாதன் கருதுகிறார். நவீன புனைகதைத்துறைக்கு திருஞானசம்பந்தர் அளித்திருக்கும் இலக்கியப் பங்கு மிக அதிகமாகும்.
கோபால - நேசரத்தினம், துரைத்தினம் நேசமணி என்பன அவர் எழுதிய இரு நாவல்களாம். கோபால - நேசரத்தினம் 1921ஆம் ஆண்டு இந்துசாதனம் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அதன் பின்னர் அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு 1927இல் நூலுருவாக வெளிவந்தது. அதன் முதற் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்த நிலையில் 1948இல் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. துரைரத்தினம் - நேசமணி என்ற நாவல் 1927 - 1928ஆம் ஆண்டுகளில் இந்துசாதனத்தில் தொடராக வெளிவந்தது. 1931இல் நூலுருப் பெற்றது.
ம.வே.திருஞானசம்பந்தம்பிள்ளையின் நாவல்கள் எழுதப்பட்டதன் நோக்கம் தெளிவானது. அக்கால சமய மாற்றத்திற்கு எதிராக ஆறுமுகநாவலரின் சமயப் பணிக்கு ஆதரவாக இவர் எழுத்துப் பணி கதை ரூபத்தில் தொடர்ந்துள்ளது. கோபாலனை மதமாற்றம் செய்ய குட்டித்தம்பிப் போதகர் விரும்பி முயலும் போது அவருடைய மகளையே மணந்து அவளையும் தன் மதத்திற்கு மாற்றிக் கொள்ளும் பாங்கில் கோபால - நேசரத்தினம் அமைந்துள்ளது. அதேவேளை துரைத்தினம் - நேசமணி நாவல் சமூக சீர்திருத்தத்தையும் ஒழுக்க நெறிகளைப் பேணும் அவசியத்தையும் வற்புறுத்தி எழுதப்பட்டுள்ளது. சீதனத்தால் வரக்கூடிய பிணக்கு, மதுபானத்தால் வருங்கேடு, தீயவர் சகவாசத்தால் நேரும் அநர்த்தம், பரத்தையர் "56
 

čo 665); QN சேர்தலால் வரும் பழி என்பனவற்றினை எடுத்துரைக்க அந்த நாவல் எழுதப்பட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
நாவலாசிரியரின் இலக்கிய நோக்கமும் தெளிவானது.
(அ) படியாதவர்கள் தாமும் கேட்டு விளங்கக் கூடிய இலகுவான தமிழ் வசனநடையில்
எழுதல்.
(ஆ) ஆண்பாலார் பெண்பாலார் எவருங் கூசாது படிக்கவும் கேட்கவுந் தக்கதாக
எழுதல்.
(இ) காமசிருங்கார வருணனை, அசாத்தியமான நிகழ்ச்சிகளின் வரலாறு எவையுமின்றி
எழுதல்.
உலகம் பலவிதம் என்ற பொதுத் தலைப்பில் எழுதப்பட்ட இந்த நாவல்கள் யதார்த்தப் பண்பு வாய்ந்தனவென்பதை மறுப்பதற்கில்லை. நம்ப முடியாத கற்பனை இவற்றில் இல்லை. இவற்றில் வருகின்ற பாத்திரங்கள் அனைத்தும் நம்முடன் நாளாந்தம் வாழ்கின்றவர்களாகவுள்ளனர். பேச்சுத் தமிழும் செந்தமிழும் கலந்த உரையாடலை இந்நாவல்களிற் காணலாம்.
ஈழத்தின் தொடக்கால நாவல்களில், குறிப்பிடத்தக்க ஐந்து நாவல்களில், ஒன்று திருஞானசம்பந்தபிள்ளையின் "கோபால . நேசரத்தினம்" என்ற ஆய்வாளரின் தெரிவு, படைப்பின் முக்கியத்துவத்தினை விளக்குகின்றது.
4. இலங்கையர்கோன்
ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை மூலவர்களாக இதுவரை காலமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கையர்கோன், சி.வைத்திய லிங்கம், சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைக்குப் புத்தூக்கமும் புதிய வடிவமும் வழங்கியவர்கள் என்பதில் ஐயமில்லை. இலங்கையர்கோன் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர். அதனால் சிறுகதையின் மேலைத்தேயப் பண்பு களையும் வளர்ச்சி நிலைகளையும் தெரிந்திருந்தார். அதே வேளை தமிழகச் சமகாலச் சிறுகதையாசியர்களான புதுமைப் பித்தன், குப.ரா. ந.பிச்சமூர்த்தி, மெளனி முதலானோரின் செல்வாக்கும் இருந்ததால் நவீன சிறுகதையின் அழுத்தமான பண்புகள் இவரின் கதைகளில் உள்ளன. மேலும் தென்னிந்தியச் சஞ்சிகைகளான நவசக்தி, சுதந்திரச் சங்கு, கலைமகள், மணிக்கொடி, ஆனந்தவிகடன். ஹனுமான், கிராம ஊழியன் போன்றவற்றின் மூலம் அறிமுகமான சிறுகதைகள் இலங்கையர்கோனின் சிறுகதை முயற்சிக்குத் தூண்டுதலாகவிருந்துள்ளன.
57

Page 31
č? petse):
1930ஆம் ஆண்டு நவீன உருவப் பிரக்ஞை கொண்ட மரியமதலேனா’ என்ற சிறுகதை இலங்கையர்கோனின் முதலாவது கதையாக எழுதப்பட்டு கலைமகளில் வெளிவந்தது. இலங்கையர்கோனின் இயற்பெயர் த.சிவஞானசுந்தரம். அவரது கல்விப் பின்னணியும், காரியாதிகாரியாகக் கடமையாற்றிய நிர்வாகப் பின்னணியும் அவரது சிறுகதைகளின் களங்களை நிர்ணயித்தன. அவரது உணர்வுபூர்வமான சித்திரிப்பு களுக்கு அவரது பரந்த வாசனை உதவியது. பாரததேவி, சக்தி, சூறாவளி, கிராம ஊழியன், கலைமகள், சரஸ்வதி ஆகிய தமிழக ஏடுகளிலும், ஈழகேசரி, தினகரன், ஈழநாடு, கலைச்செல்வி, வீரகேசரி முதலான ஈழத்து ஏடுகளிலும் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதைத்துறைக்கு வலுவூட்டிய மணிக்கொடிச் சஞ்சிகையின் கடைசி கால இதழ்களில் இலங்கையர்கோனின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
இலங்கையர்கோன் மிகச் சிறுவயதிலேயே, பதினெட்டாவது வயதிலேயே எழுத்துலகில் புகுந்தார். ஆரம்ப காலத்தில் பல ஆங்கிலக் கதைகளை மொழி பெயர்த்துள்ளார். மேலும் அவரது ஆரம்பக் கதைகள் இதிகாசங்கள் சம்பந்தமான பாத்திரங்களைக் கொண்டனவாயும், இலங்கைச் சரித்திரத்தினை விபரிக்கும் கதைகளாகவும் விளங்கின. சரித்திரம் சம்பந்தமாகச் சிறுகதைகளுக்குத் தென்னிந்தியப் பத்திரிகைகளில் சிறப்பாகக் கலைமகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது. அனுலா, சிகிரியா, யாழ்ப்பாடி முதலான சரித்திரக் கதைகளும், மரியமதலேனா, மேனகை, தாய் முதலிய இதிகாசக் கதைகளும் ஆரம்ப காலத்தில் எழுதினார்.
சரித்திர, இதிகாச, புராணக் கதைகளை வெறுமனே பத்திரிகைக் கதைகள் என ஒதுக்கி விட்டாலும், இலங்கையர்கோனின் சமூகக் கதைகளை அவ்வாறு தள்ளிவிட முடியாது. வெள்ளிப் பாதசரம், மனிதக் குரங்கு, தாழைமர நிழலிலே, சக்கரவாகம், நாடோடி, மச்சாள், கடற்கரைக் கிளிஞ்சல், வஞ்சம் முதலான சமூகக் கதைகளில் யாழ்ப்பாணம் வெறும் களமாக மட்டுமில்லாது, இந்த மண்ணின் வாழ்க்கை அம்சங்களைப் பேசுகின்றன. இலங்கையர்கோனின் வெள்ளிப் பாதசரம் மண் வாசனைக்குரிய சிறுகதை இலக்கணமாகின்றது. புதுமணத் தம்பதியரிடையே வல்லிபுரக் கோயிலில் ஏற்படும் ஊடலை மிகத் தத்ரூபமாக அவர் வெள்ளிப் பாதசரத்தில் சித்திரித்துள்ளார். இச்சிறுகதை மண்வாசனைக்குத் தக்க உதாரணம் என்றால் அவரின் வஞ்சம் என்ற சிறுகதை கலாபூர்வமான சிறுகதை ஒன்றிற்குத் தக்க உதாரணமாகும். இரண்டு சேவல்களை வைத்து 1939இல் பாரததேவியில் அவர் எழுதிய மஜிக்கல் றிஜலிசக் கதை இந்த வஞ்சம் ஆகும்.
சரித்திர புராணக் கதைகளை எழுதும்போது மிகவும் . கம்பீரமான தமிழ் நடையையும் சமூகக் கதைகளை எழுதும்போது மிக எளிதான வழங்கு தமிழையும் பயன்படுத்தியுள்ளார். இவரது பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாக ‘வெள்ளிப் பாதசரம்” என்பதுள்ளது.
58

ஒEகை இவரால் படைக்கப்பட்ட சிறுகதைகளில் "வெள்ளிப் பாதசரம் ஈழத்தின் உன்னதமான கதைகளில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றது. வஞ்சம், கடற்கரைக் கிளிஞ்சல் என்பன சிறப்பான ஏனைய சிறுகதைகளாம். இலங்கையர்கோன் பல திறன் கொண்ட ஒரு படைப்பாளி. சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சங்கீதம், விமர்சனம் ஆகிய பன்முகங் கொண்ட கலைத்திறன் அவரிடமிருந்தது.
5. சோ.சிவபாதசுந்தரம்
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர் சோ.சிவபாதசுந்தரமாவார். 1936இல் அவரது முதற் கதையாக தோட்டத்து மீனாட்சி ஆனந்தவிகடனில் வெளிவந்தது. அச்சிறு கதையோடு சிவபாதசுந்தரம் ஈழத்துப் புனைகதைத் துறையுள் நுழைந்தார். அதன் பின்னர் அழைப்பு, எப்போது காண்பேன், பரதேசி, நண்பர்கள், எட்டாந் திருவிழா, சங்கு வளையல், காஞ்சனை, பொன்னர் செத்த கதை, வைரவகோயில் விளக்கு, பரிசுக் கட்டுரை முதலான சிறுகதைகளைக் காலத்திற்குக் காலம் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளில் காஞ்சனை அக்காலகட்டத்துக் கதைகளில் குறிப்பிடத் தக்கது. கவிகளின் கற்பனாலோகத்தில், இயற்கையின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டும் காவியத்திலும் இலக்கியத்திலும் கிடக்கும் இனிமையைச் சுவைத்துக் கொண்டும் இருந்த கண்ணன், தான் கற்பனையில் சிருஷ்டித்து வைத்திருக்கும் பெண்ணைத் தேடுகிறான். அவனுடைய தாயார் அவன் முன் காஞ்சனையை நடமாட விடுகிறாள். நித்தம் பார்வையில் பட்டதால் தான் தேடிய பெண் அவள்தான் என அவன் நம்புகிறான். திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறான். இச்சிறுகதையில் இன்றைய இளைஞர்களின் மனநிலையை ஆசிரியர் சித்திரித்துள்ளார். அல்லயன்ஸ் குப்புசாமி முதலியார் 1942இல் தொகுத்து வெளியிட்ட கதைக்கோவை 2இல் சிவபாதசுந்தரத்தின் காஞ்சனை இடம் பிடித்துள்ளது.
சோ.சிவபாதசுந்தரம் சிறந்த கட்டுரையாளர். ஆய்வாளர். மாணிக்க வாசகள் அடிச்சுவட்டில், ஒலிபரப்புக்கலை, புத்தரின் அடிச்சுவட்டில் எனும் நூல்களையும் சிட்டி என்பவருடன் இணைந்து தமிழ் நாவல் இலக்கியம், தமிழ்ச் சிறுகதை வரலாறு, நடந்தாய் வாழி காவேரி ஆகிய ஆய்வு நூல்களையும் ஆக்கியுள்ளார்.
சோ.சிவபாதசுந்தரத்திற்குச் சிறுகதை தவிர்ந்த ஏனைய துறைகளில் இருந்த படைப்பாற்றல் மிக உச்சமானதென்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். எனினும் ஈழத்துப் புனைகதைத்துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை.
(இன்னும் வரும்.)
59

Page 32
7. எனது தகப்பனாரின் அக்கா மகன் சொந்தமாக வைத்திருந்த காரில்
கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கு 15.03.1962 காலையில் பெட்டி படுக்கை களுடன் போய்ச் சேர்ந்தேன். அன்றைய தினத்துக்கு மறுநாள் விட்டு அடுத்தநாள் தேவரையாளி இந்துக் கல்லூரி அபிவிருத்தி நிதி சேகரிப்பதற்கான நாடக விழா. அந்த விழாவில் எமது கிராமத்து நாடக நடிகர்கள் இணைந்து நடித்த - நான் எழுதிய ‘வாழ்வளித்தவன்" என்னும் நாடகம் ஒன்றும் இடம்பெற்றது. ஆசிரிய கலாசாலை விடுதியில் அனுமதி பெற்றுக் கொண்டு அங்கிருந்து நாடக விழாவுக்குச் சென்றேன்.
அந்த நாடகத்தில் திரை விலகியதும் முதற் காட்சியாக ஆசார சீலரான சைவப் பெரியார் பாத்திரம் ஒன்று மேடையில் தோன்றி சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரம் ஒன்றை ஒசையுடன் பாடுகிறது. “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன், நீலகண்டத்து குயவனார்க்கு. குயவனார்க்கு. ஐயையோ. எப்படி நான் குயவனுக்கு அடியேன் என்று இந்த நாவினால் பாடுவேன்?" என அந்தப் பாத்திரம் சாதிக் கொழுப்பினால் அல்லற்பட்டு, அந்தரப் படுவதாக எழுதி இருந்தேன். அதுவே சாதியத்துக்கு எதிராக நான் எழுப்பிய முதற் கலகக் குரல். பழைமை வாதம், வேண்டாத மரபு என்பவற்றை உடைக்கின்ற நவீன சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக அந்த நாடகத்தை நான் எழுதி இருந்தேன். அதனால் எனக்குக் கல்வி கற்பித்த மூத்த ஆசிரியர்கள் சிலரின் முணுமுணுப்பை சம்பாதித்துக் கொண்டேன்.
O சிரிய கலாசாலை விடுதியில் பூச்சியம் தங்ஸ்ே ஆசிரிய பயிற்சி பெற்றுக் O கொள்ள ஆரம்பிப்பதற்கு முன்னர், பூச்சியம் அல்ல. எனது குடும்பத்தவர்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்த அநுபவம் எனக்கு அப் தெணியான் பொழுது இருக்கவில்லை. அதனால் அந்த ஆசிரிய கலாசாலையின் ஆரம் பகால வாழ்க்கை மனதுக்குக் கொஞ்சம் கவலையாகவே இருந்தது. முதல் ஆண்டு வரை கத்தோலிக்க சமயத்தவர்களான ஆசிரியர்கள் மாத்திரம் பயிற்சி பெற்று வந்த ஆசிரிய கலாசாலையாக அது இருந்து வந்தது. அதனால் இரண்டாம் வருட மாணவர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாக இருந்தார்கள். முதலாம் வருடத்தில் இந்துக்கள் பத்துப் பேர் வரை இருந்தனர். ஏனையவர்கள் அனைவரும் கத்தோலிக்க சமயத்தவர்கள். போத்துக்கேயர் வருகையுடன் இந்த நாட்டில் பரவிய கத்தோலிக்க மதத்தின் செல்வாக்குக் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலேயே அதிகமாக இருந்தது. அந்தப் பகுதிகளில் இருந்து வந்த அனேகமானவர்கள்
60

ஆசிரியர்களாகப் பயிற்சி பெற்றார்கள். புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர் களின் பேச்சிலும் நடையுடையிலும் பெரும்பான்மை இனத்தவர்களின் பாதிப்புக்களைக் காணக்கூடியதாக இருந்தது.
முதலாம் வருடத்தில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாணவிகளும் அங்கு படித்தார்கள். கலாசாலைக்கு வெளியே பெண்களுக் குரிய விடுதியில் தங்கி இருந்த அவர்கள், காலையில் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் சமயம் கன்னியாஸ்திரி களாக இருந்த ஆசிரியைகள் முன்னே வர, ஏனையவர்கள் அவர்களைத் தொடர்ந்து இரண்டு வரிசைகளில் வகுப்பறைகளுக்கு வந்து சேருவார்கள். வகுப்புகள் முடிந்து கலாசாலையில் இருந்து திரும்பிச் செல்லும் சமயத் திலும் அந்த வரிசைகள் தப்புவதில்லை. வரிசையாக வரும் அவர்களைக் கண்டு கரிக்கோச்சி வருகிறது என மாண வர்கள் தமக்குள் கிண்டலாகப் பேசிக் கொள்வார்கள்.
கொழும்புத்துறை ஆசிரிய கலா சாலை வகுப்பறையில் அதுவரை நான் அறியாத ஒரு புதுமையைக் காண முடிந்தது. நான் படித்த, அறிந்த, பாட சாலைகளில், கல்லூரிகளில் எல்லாம் மாணவிகள் முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருக்க, மாணவர்கள் அவர் களுக்குப் பின்னுள்ள ஆசனங்களில் வரிசையாக உட்கார்ந்திருப்பார்கள்.
Russians
ஆனால் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் மாத்திரம் ஆசிரிய
மாணவர்கள் முன் வரிசைகளில் அமர்ந் திருக்க வேண்டும். பின்வரிசை ஆசனங்கள் ஆசிரிய மாணவிகளுக் குரியதாக ஒதுக்கப்பட்டிருந்தது. அத னால் மாணவர்கள் சிலர் முகம் பார்க்கும் உடைந்த கண்ணாடித் துண்டு களைத் தம்மோடு எடுத்து வரத் தவறு வதில்லை என்பது இந்த ஏற்பாட்டி னைச் செய்து வைத்தவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
கலாசாலை வளாகத்துக்குள், கலா சாலையுடன் சேர்த்துக் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்தது. கத் தோலிக்க மாணவர்கள் தினமும் காலை யில் எழுந்து, அந்த ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்து முடித்துக் கொண்டு திரும்பிய பின்புதான், விரிவுரை வகுப்புகளுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். நான் கலாசாலைக்குச் சென்று சில காலத்தின் பின்னர் அவர் களின் வழிபாட்டு முறைகளை அறிந்து கொள்ளும் ஆவல் எனது மனதில் எழுந்தது. கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த எனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தினம் அவர்களது தேவாலயத்துக் குச் சென்று, அவர்களைப் போல முழந் தாளில் நின்று வழிபாட்டில் கலந்து கொண்டு விடுதிக்குத் திரும்பினேன்.
ஆசிரிய கலாசலை வாழ்வில் ஆரம் பம் முதல் இன்றுவரையுள்ள இரண்டு ஆண்டுகளும் உணவு எனக்கொரு பிரச்சினையாக இருந்து வந்திருக்கிறது.
61

Page 33
Ecco: অনু
விடுதிச் சாப்பாடு உண்ண முடியாது மிகச் சிரமப்பட்டேன். மச்ச மாமிசம் உண்ணும் குடும்பத்தில் பிறந்தவனாக நான் இருந்த போதும், கலாசாலை விடுதியில் அவைகளை என்னால் உண்ண முடியவில்லை. கலாசலையில் சைவ உணவு உண்ணும் ஒருவனாக அக்காலத்தில் நான் இருந்து வந்தேன்.
இதுவரை இருந்து வந்த எனது வாழ்வு முறையில் ஆசிரிய கலாசாலை வாழ்வு சில மாற்றங்களைத் தோற்று விக்கத் தவறவில்லை. ஆனால், என் னிடம் இருந்த வாசிக்கும் பழக்கத்தை என்னால் ஒதுக்கி வைத்துவிட முடிய வில்லை. அதனால் வகுப்புக்குரிய பாடங்கள், பாட நூல்களைப் படிப் பதில் அதிக நாட்டம் கொள்ள முடிய வில்லை. அதேசமயம் கலாசாலைப் பரீட்சைகள் எனக்குச் சிரமமானவைக ளாக இருக்கவுமில்லை. கலாசாலைப் பாடங்களில் கல்வி உளவியல், கல்வித் தத்துவங்கள் போன்ற பாடங்கள் எனக் குப் புதியனவாக இருந்தன. அந்தப் பாடங்களைக் கவனமாகக் கற்றேன். முதலாம் வகுப்பு முதல் ஆசிரிய கலா சாலைக்கு வந்த காலம் வரை எனது கல்விசார் கற்றல் முயற்சிகள் இடை யீடின்றித் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளமையினால் ஆசிரிய கலா சாலையில் ஏனைய பாடங்கள் எனக்குப் பாரமானவைகளாகத் தோன்றவில்லை. அதனை இங்கு குறிப்பிட்டுச் சொல் வதன் மூலம் நான் தொடர்ந்து வாசித் துக் கொண்டிருந்தேன் என்பதனை வலியுறுத்துவதே எனது நோக்கம்.
62
எனது சம்பளத்தின் ஒரு பகுதியை மாதந்தோறும் பத்திரிகைகள், சஞ்சிகை கள், புத்தகங்கள் வாங்குவதற்கு ஒதுக் கினேன். அக்காலத்தில் வெளியிடப் பெற்ற ஈழத்து இலக்கிய நூல்கள் அனைத்தும் பணம் கொடுத்து வாங்கிப் படித்தேன்.
நான் ஆசிரிய கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எஸ்.பொ.வின் "தீ" நாவல் பிரதி ஒன்றினை வாங்கிச் சென்றேன். கலா சாலையில் அக்காலத்தில் தீவிர வாசகர் களாக இரண்டாம் வருட மாணவனாக தா.பி. சுப்பிரமணியமும், முதலாம் வருடத்தில் நானும் இருந்தோம். வேறு இரண்டொருவர் நூல்கள் கையில் கிடைத்தால் மாத்திரம் இடையிடையே வாசித்துக் கொள்ளும் பழக்கமுள்ள வாசகர்கள். பெரும்பாலானவர்கள் தின சரிப் பத்திரிகைகளைத்தானும் கையி னால் தொடுவதில்லை. அவர்கள் அனைவரும் ஒருவர் தவறாது போட்டி போட்டுக் கொண்டு என்னிடம் வாங்கிப் படித்த நூல் எதுவென்றால், அது எஸ்.பொ.வின் தீ ஒன்றுதான்.
எங்கள் கலாசாலைக்குத் தமிழ் பண்டிதர் ஒருவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இருந்து தமிழ் விரிவுரை
யாளராக மாற்றலாகி வந்திருந்தார்.
நான் ஆசிரிய கலாசாலை சென்று சுமார் ஒருமாத காலத்தின் பின்னர் ஒரு தினம், தெரியுமா?’ என அவர் என்னைச்
“கவிஞர் செல்லையாவைத்
சந்தித்தபோது வினவினார்.

“நான் அவருடைய மாணவன்" என அவருக்கு அப்பொழுது சுருக்க மாகப் பதில் சொன்னேன். "நேற்று என்னைச் சந்தித்தவர். உம்மைச் சொந்த மென்று சொன்னார்’ எனக் கூறிக் கொண்டு போய் விட்டார். அவர் எனது சாதி அடையாளத்தைத் தான் அறிந்து கொண்டு விட்டேன் என்பதையே அப் பொழுது எனக்குச் சொல்லி வைத்து விட்டுப் போனார் என்ற உண்மையை அந்தச் சமயம் நான் விளங்கிக் கொள்ளத் தவறி விட்டேன்.
திருநெல்வேலி ஆசிரிய கலா சாலையில் வருடந்தோறும் தமிழ் விழா மூன்று தினங்கள் நடைபெற்று வந்தன. அந்த விழாவுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்த ஏனைய ஆசிரிய கலாசாலை களில் இருந்து தினமும் இரண்டு மான வர்கள் சொற்பொழிவு ஆற்றுவதற்கு அழைக்கப்பட்டு வந்தார்கள்.
அந்த ஆண்டு விழாவில் பங்கு கொள்ளும் ஆசிரிய மாணவர்கள் இரு வரின் பெயரைத் தருமாறு திருநெல் வேலியிலிருந்து கேட்டிருந்தார்கள். எங்கள் கலாசாலை கடந்த காலத்தில் இரண்டாம் வருடத்து மூத்த மாணவர் கள் இருவரையே அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் அந்த வருடம் பழைய நடைமுறையை இரண்டாவது வருட மாணவர்கள் சிலர் எதிர்த் தார்கள். அவர்களிடம் இருந்து ஆட் சேபணை எழுந்தமையால் அதனைத் தட்டிக் கழிக்காது நடைமுறையை மாற்றுவதற்குத் தீர்மானித்தார்கள். முதலாம், இரண்டாம் வருட மாணவர்
pesos অ
கள் மத்தியில் ஒரு போட்டி நடத்தி, இருவரைத் தெரிவு செய்து, தமிழ் விழாவில் பேசுவதற்கு அனுப்பி
வைப்பதென முடிவு செய்யப்பட்டது.
ஒரு நாள் இருந்தாற் போலத் தெரிவுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரிய மாணவர்கள் தங்கள் பெயர்களைத் தருமாறு அறிவித்தல் வந்தது. போட்டி அன்றைய தினம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. பெயர்களைப் பதிவு செய்து ஒரு மணி நேரத்தின் பிறகு,
விரிவுரை மண்டபத்தில் வந்து கூடுமாறு அறிவித்தார்கள்.
முதலாம், இரண்டாம் வருட மாண வர்கள் பதினைந்து பேருக்கு அதிக மான தொகையினர் அந்தப் போட்டி யில் கலந்து கொண்டார்கள். போட்டி யாளர்கள் யார் யார் எந்த ஒழுங்கில் பேச வேண்டுமெனக் குலுக்கல் துண்டு மூலம் தீர்மானிக்கப் பெற்றது. முதலாம் இலக்கத் துண்டு எனது கையில் வந்து
கிடைத்தது. அப்பொழுதுதான் இலக் கியச் சொற்பொழிவு ஒன்று செய்ய
வேண்டுமெனத் தெரிவித்தார்கள். “காண்மாண்ட தெங்கின் பழம் வீழ.” எனத் தொடங்கும் நைடதப் பாடல் ஒன்றினை மையமாகக் கொண்டு இயற்கை அழகு பற்றிப் (06.07.1962) பேசினேன். அந்தப் போட்டி முடிவில் முதலாம் வருட மாணவர் ஒருவரும், இரண்டாம் வருட மாணவர் ஒருவரு மாகத் தெரிவு செய்யப் பெற்ற மாண வர்களுள் முதலாம் வருடத்தில்
63

Page 34
படித்துக் கொண்டிருந்த நான் தேர்வு செய்யப் பெற்றேன்.
திருநெல்வேலி ஆசிரிய கலா சாலையில் நடைபெற இருந்த தமிழ் விழாவுக்குப் பத்து நாட்கள் முன்னதாக இந்தத் தெரிவுப் போட்டி நடந்து முடிந் தது. அந்த விழாவில் பேசுவதற்குத் தெரிவு செய்யப் பெற்ற இரண்டாம் வருட மாணவன் தமிழ்ப் பண்டிதரைச் சிக்கனப் பிடித்துக் கொண்டான். நான் பண்டிதரை அணுக விரும்பவில்லை. பண்டிதர் என்னை இனங்கண்டு எனது வளர்ச்சியை உள்ளூர விரும்பாத ஒருவ ராக அவர் இருக்கின்றார் என்பதனை நான் அவதானித்து வைத்திருந்தது மாத்திரமல்லாது, அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
ஒருநாள் காலைவேளை பண்டிதர் எங்கள் வகுப்புக்கு வந்திருந்தார். எங் களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடத் தைக் கைவிட்டு விட்டு, பொழுது போக்கும் நோக்கத்துடன் வழமை போல வேறு விடயங்களைப் பேச ஆரம்பித்தார். இடையே இருந்தாற் போல, “உங்களுக் குத் தெரியுமா? நாவிதன் ஒருவனுக்கு சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத் திருக்கிறது" என நக்கலாகச் சொல்லி
அந்தப் பேச்சின்
விரிவுரை மண்டபத்தின் மேடையில் நின்று சிரித்தார். டொமினிக் ஜீவாவின் 'தண்ணீரும் கண்ணீரும் சிறுகதைத் தொகுதிக்கு சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்தமை கண்டு மனம் பொறுக்க இயலாமல் அவர் இப்படி
64
ஏளனம் செய்கின்றார் என்பதனை நான் உடனே விளங்கிக் கொண்டேன். நாவி தனாக இருக்கும் டொமினிக் ஜீவா பரிசு பெற்றமையை அந்தப் பண்டித ரால் ஜீரணிக்க இயலவில்லை என்ப தனை நான் அப்பொழுது உணர்ந்தேன். பண்டிதரின் அந்த நக்கல், அந்த ஏளனம் எனது நெஞ்சில் ஆழமாகக் குத்தியது. மனித நாகரிகமற்ற கொடுமையான இந்த சாதியத்துக்கு எதிராக எழுத வேண்டும் என்னும் எண்ணம் அந்தக் கணமே எனது மன தில் தோன்றியது. அதன் பிறகு அந்தப் பண்டிதரை நான் நாடிச் செல்வதை முடிந்தவரை தவிர்த்து வந்தேன்.
திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ் விழாவுக்கு எங்கள் இருவரையும் பண்டிதர் அழைத்துச் சென்றார். 16.07.1962 காலை நேர நிகழ்வில் நாங் கள் இருவரும் பங்கு பற்றினோம். பலாலி ஆசிரிய கலாசாலை அதிபர் கந்தசாமி அன்றைய நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். என்னுடன் வந் திருந்த இரண்டாம் வருட மாணவன் பண்டிதரின் வழிகாட்டலில் கம்ப ராமாயணம் பற்றிப் பேசினான். கம்ப ராமாயணம் சுந்தரகாண்டம் அப் பொழுது எங்களுக்குப் பாட நூலாக இருந்தது. அந்த மாணவனின் பேச்சு அந்தப் பாட நூலை ஒட்டியதாக அமைந்திருந்தது.
பலாலி ஆசிரிய கலாசாலை தமிழ் விரிவுரையாளர் பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை, நான் பேசுவதற்கு
முன்னர் கம்பராமாயணம் பற்றிச் சிறப்
 

பான சொற்பொழிவு ஒன்று ஆற்றி னார். 'கற்கண்டுப் பண்டிதர்" எனப் பெயர் பெற்ற சுவையான இலக்கியப் பேச்சாளர் அவர்.
அவரது பேச்சைத் தொடர்ந்து "புரட்சிக் கவிதைகள்' என்னும் தலை யங்கத்தின் கீழ் ஒருமணி நேரம் நான் பேசினேன். பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற கவிஞர்களது
பாரதி,
புரையோடிப் போன பழைய சமு தாயத்தை அழித்து, புதியதோர் உல கத்தைச் சிருஷ்டிக்க விழைந்த பாடல் களை எடுத்துச் சொல்லி எனது பேச் சினை நிகழ்த்தினேன். பொன். கிருஷ்ணபிள்ளை பேசும்
பண்டிதர்
போது, இராவணன் பற்றிச் சொன்ன 'பத்துத் தலைகளை உடைய இராவணன்' என்று திரும்பத் திரும்பக் கூறினார். அவர் மேடையில் அமர்ந்திருக்க, இராவணன் பற்றி பாரதிதாசன் எடுத்துச் சொன்ன, ஐயிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்’ என்ற பாடல் அடியை
சமயங்களில் எல்லாம்
நான் எடுத்துச் சொன்னேன். இரா வணன் பத்துத் தலைகளை உடையவன் என்பது தவறு. பத்துத் திக்குகளிலும் புகழைப் பரப்பியவன் அவன். வலிமை பொருந்திய பத்து மன்னர்களுக்குரிய பலத்தினை உடையவன் அவன். அதுவே அவனது பத்துத் தலைகள் எனப்படுகின்றன என விளக்கிக் கூறி னேன். எனது கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை மேடையில் இருந்து முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்.
ஆனால், நான் சொல்ல வந்த கருத்துக் களைத் தெளிவாகத் தயக்கமின்றி
எடுத்துக் கூறிய பின்னர், எனது
பேச்சை முடித்துவிட்டு அமர்ந்தேன்.
காலை நேர நிகழ்வுகள் நடை பெற்று முடிந்த பின்னர் எங்கள் கலா சாலைப் பண்டிதர் எங்கள் இருவரை யும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். எனது பேச்சைக் கேட்டு, பண்டிதர் என்னைக் குறைபட்டுக் கொள்வாரென்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அப்பொழுது அவர் வாய் திறந்து ஒன்றுமே பேசவில்லை. சபை யோரை எனது பேச்சு மிகவும் கவர்ந்தது. அவர் மெளனத்துக்கு அதுவே காரணமென நான் உணர்ந்து கொண்டேன்.
எங்கள் இரு வரையும் கலா சாலைக்கு அண்மையில் வாழ்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை இல் லத்துக்கு அவர் அழைத்துச் சென்றார். பண்டிதமணியின் மாணவன் தான் எனவும், நாவலர் வழிவந்தவர் பண்டித மணி எனவும், தன்னிடத்தில் கல்வி கற்கும் மாணவர்களாகிய நாங்கள் நாவலர் பரம்பரையில் வந்தவர்க ளெனவும், விரிவுரை வகுப்புகளில் பெருமையாகப் பண்டிதர் சொல்லிக் கொண்டிருப்பார். எங்கள் இருவரையும் பண்டிதமணியிடம் அழைத்துச் சென்ற அவர், “நான் இராம இலட்சுமணருடன் வந்திருக்கிறேன்" எனக் கூறி, தன்னை விசுவாமித்திரனாக மகிமைப்படுத்திக் கொண்டார்.
65

Page 35
பண்டிதமணி முகம் மலர்ந்து அன் புடன் எங்களை நோக்கி மெல்ல ஒரு தடவை சிரித்தார். எங்கள் கலாசாலைப் பண்டிதர் சற்று நேரம் அமர்ந்திருந்து அவரோடு உரையாடிய பின்னர் அவ ரிடம் விடைபெற்றுக் கொண்டு அங் கிருந்து புறப்பட்டார்.
பண்டிதமணியை அன்றுதான் முதன் முதலாக நான் சந்தித்தேன் என்பதால், அந்தச் சந்திப்பு எனக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருது கின்றேன்.
தமிழ் விழா நடந்து முடிந்து மறு நாள் கலாசாலையில் என்னைச் சந்தித்த பண்டிதர், தன்னிடம் வந்து பேச்சை நான் தயார் பண்ணவில்லையெனக் குறைபட்டுவிட்டு, குணம், உம்மை விட்டுப் போக வில்லை” எனக் கூறினார். எனது தமிழ்
"சிறுபிள்ளைக்
விழாப் பேச்சினால் அவருக்குண்டான மன உளைச்சலை இவ்வாறு அவர் வெளிப்படுத்தினார் என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்.
அவர் இராம இலக்குமணரெனப் பண்டிதமணிக்கு அறிமுகப்படுத்திய இராமன் என்னானான் என்பது எனக் குத் தெரியவராது. ஆனால் இலக்கு மணனாகிய நான் பாணத்துக்குப் பதி லாக எனது கையில் பேனாவைப் பிடிக்கப் போகின்றேன் என்னும் உண்மையை அப்பொழுது பண்டிதர் அறிந்திருக்க நியாயமில்லைத்தான்.
66
இந்தக் காலகட்டத்தில் எங்கள் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் அகில இலங்கை சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து ஒரு தினம் கலாசாலை யில் இருந்து பஸ் வண்டி ஒன்றில் புறப்பட்டார்கள். அவர்களுடன் நான் இணைந்து இந்த நாட்டின் பல பாகங் களுக்கும் இரண்டு வார காலம் சுற்றுப் பயணம் செய்தேன். மலையகப் பகுதிக்கு எதற்கும் அதற்கு முன்னர் சென்ற அநுபவம் எனக்கிருக்கவில்லை. அந்தச் சுற்றுலாவில் எனது உள்ளத் துக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்த பிர தேசம் மலையகம், அந்தச் சுற்றுப் பய ணத்தின் போது மலையகத்தின் பல் வேறு இடங்களிலும் இரவு வேளை தங்கி இருந்திருக்கிறோம். ஓர் இரவு
"பண்டாரவளையில் கழித்தோம். அந்தப்
பண்டாரவளையே பின்னர் சில ஆண்டு கள் நான் வாழப்போகும் இடம் என் பதனை அப்பொழுது நான் அறிந் திருக்கவில்லை.
வருடத்தின் பிற்பகுதியில் ஒரு தினம் எங்கள் கிராமத்துக்கு அடுத்த கிராமத்தில் நடைபெற்ற உதைப்பந் தாட்டப் போட்டியைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அந்த விளையாட்டுப் போட்டி முடிவுற்று நான் வீடு புறப் படும் சமயம் எனது ஆசிரியர் கவிஞர் மு.செல்லையா திடீரென்று அங்கு வந்தார். 'நாளைக்கு பின்னேரம் வீட்டுக்கு ஒருக்கால் வா’ எனச் சொல் லிக் கொண்டு அவருக்கே இயல்பான வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டார்.
 

அடுத்தநாள் மாலை வேளை அவர் சொன்னது போல அவர் வீடு போய்ச் சேர்ந்தேன். அப்பொழுது ‘என்னைக் கவர்ந்த என் கவிதை” என்னும் தலைப் பில் ஈழத்து பிரபல கவிஞர்களின் கட்டுரைகள் "கலைச்செல்வி"யில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டி ருந்தன. கவிஞர் செல்லையாவிடம் அத்தகைய கட்டுரை ஒன்றினைக் கேட்டிருந்தார்கள். கவிஞர் மு.செ. "தோட்டியின் துயரக்குரல்" என்னும் தனது கவிதையே தன்னை மிகவும் கவர்ந்தது என்றும், அதற்கான காரணங் களையும் விளங்க வைத்து, அக்கவிதை யையும் எனது கையில் தந்தார். “நான் நீண்ட காலமாகக் கட்டுரைகள் எழு தாமல் விட்டு விட்டேன். நீ இந்தக் கட்டுரையை எழுதி வைத்துவிட்டுப் போ” என உரிமையுடன் சொல்லிக் கொண்டு வெளியே போய்விட்டார்.
நான் கட்டுரை எழுதி முடிக்கச் சுமார் இரவு எட்டு மணிக்கு மேல் ஆகி யிருக்கும். அப்பொழுதும் கவிஞர் திரும்பி வீடு வந்து சேரவில்லை. நான் எழுதிக் கொண்டிருந்த மேசையில் அந்தக் கட்டுரையை வைத்துவிட்டு, கவிஞரின் மனைவியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு வீடு வந்து சேர்ந் தேன். பின்னர் ஒரு தினம் கவிஞரை நான் சந்தித்த போது அந்தக் கட்டுரை யைத் தான் அனுப்பிவைத்து விட்ட
தாகவும் அவர் என்னிடம் சொன்னார்.
கவிஞரின் கருத்துக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் நானே அல்
லாது, அந்தக் கட்டுரை எந்த வகை யிலும் எனக்குச் சொந்தமானதன்று.
ஐம்பதாண்டுகள் கழிந்த பின்னர் இந்த விவகாரத்தின் வெளிப்பாடு எப்படி அமைந்திருந்தது என்பதை குறிப்பிட்டுச் செல்வதற்காகவே, அந்தச் சம்பவத்தை இங்கு நான் தெரிவிக்க வேண்டி நேர்ந்திருக்கிறது.
ஆசிரிய கலாசாலையில் முதலாம் ஆண்டு முடிவுறும் இறுதி நாள். காலை விடிந்ததும் இரண்டாவது வருட மாண வர்கள் பெட்டி படுக்கைகளுடன் தத் தமது ஊருக்குப் புறப்படத் தயாராக இருந்தார்கள். கலாசாலையில் ஒன் றாகத் தங்கியிருந்து படித்த அனை வரையும் பிரிவுத் துயர் வருத்திக் கொண்டிருந்தது. ஒன்றாக உண்டு, ஒன் றாகப் படித்து, ஒன்றாகப் படுத்துறங் கிய நண்பர்கள். பிரிவு நிச்சயமானது என்று அறிந்திருந்தும் மனது துயரப் படாமல் இருக்க முடியவில்லை.
அப்பொழுது புத்தளத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவன் எட்மன் lføv என்னைத் தேடி எனது கட்டி லுக்கு வந்தார். நான் வேறு சில நண்பர் களுடன் அப்பொழுது கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். 'தம்பி, இஞ்சை வா" என என்னைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு அவர் விடுதி வாசல் நோக்கி நடந்தார். அவருடைய அந்த அழைப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுடன் கூடி இருந்த நண்பர்கள் என்னை அதிசயமாகப் பார்த்தார்கள்.
67

Page 36
எட்மன் பீரிஸ் எங்கள் கலா சாலையில் வாழ்ந்த வித்தியாசமான ஒரு மாணவர். யாரோடும் அதிகம் நெருங் கிப் பழகாத ஒருவர். இயல்பில் அவர் ஒரு முற்கோபி. அதனால் மற்றையவர் களும் பெரிதாக அவருடன் உறவாடுவ தில்லை. உடல் தோற்றத்திலும் ஒங்கி உயர்ந்த கம்பீரமான ஒருவர். அவருக் கும் எனக்குமிடையே நெருக்கமான உறவேதும் இருக்கவில்லை. அங்கே நேரில் சந்திக்கும் சமயங்களில் எல்லாம் அன்பாகச் சிரித்துக் கொள்வார். விரி வுரைக்குப் புறப்படும் சமயம் முகத்தில் பூசிக் கொள்ளும் பவுடர் தன்னிடத்தில் இல்லாதிருந்தால், என்னிடம் வந்து 'தம்பி கொஞ்சம் பவுடர் தா” எனக் கேட்டு வாங்கிக் கொள்வார். சாலை விடுதியில் ஒன்றாக வாழு
G).
கின்றவர் இடையே இருக்கக் கூடிய சாதாரணமான உறவுதான் அவருக்கும் எனக்குமிடையே இருந்து வந்தது.
அப்பொழுது இரவு எட்டுமணி இருக்கும். வெளியே கும் மென்ட இருள். அவர் விடுதியில் இருந்து வெளிவந்து விளையாட்டு மைதானம் நோக்கி அந்த இருளில் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். நான் அவர் பின் னால் மெளனமாகப் போய்க் கொண்டி ருக்கின்றேன். மைதானத்தின் நடுப் பகுதிக்கு வந்ததும், அந்தப் புற்றரையில் தான் மெல்ல அமர்ந்த வண்ணம் 'தம்பி இரு" எனக் கூறுகின்றார். நான் அவர் முன்னால் வியப்புடன் உட்காரு
கின்றேன். ஒருவர் முகம் ஒருவருக்குத்
68
தெரியாத அந்த இருளில் இருவரும் அமர்ந்திருக்கின்றோம்.
அப்பொழுது அவர், 'தம்பி, காலையிலே நான் ஊருக்குப் புறப்பட்டு விடுவேன். நான் அடுத்த வருஷம் இங்கே இருக்கிறதாக இருந்தால் இதை உமக்குச் சொல்ல மாட்டேன். என்ன பிரச்சினை உமக்கு வந்தாலும் நான் உம்மைப் பாதுகாப்பேன். நான் போகப் போகிறேன். அதனாலே நீர் இஞ்சை கவனமாக இருக்க வேணும். எங் களுடைய வோடனாக இருக்கின்ற பாதர் உம்மை ஒரு கொம்யூனிஸ்ட் என்று சொல்லி, உம்மோடை மற்றவர் களைப் புழங்க வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறார். அவராலே உமக்கு இடைஞ்சல் வரும். கவனமாக இருக்க வேண்டும். உம்மிலே எனக்கு நல்ல விருப்பம். நீர் கெட்டிக்காரன். உம்முடைய எதிர்காலம் நன்றாக இருக்கும். எனது வாழ்த்துக்கள்” எனச் சொல்லி முடித்து விட்டு அவர் எழுந்தார்.
முரடன் என்று மற்றையவர்கள் கணித்து வைத்திருக்கும். அந்த மனிதனுக்குள்ளே எத்தகைய கசிவு! எப்படியான நல்ல இதயம் உள்ளத்தில் உண்டான அதிசயத்தில் இருந்து நான் விடுபடாத நிலையில், என்னை இதயத் தால் நேசித்த அந்த மனிதனின் பின்னே தொடர்ந்து நடந்தேன்.
வளரும்.
 

- டெnகிேக் ஜீவ/
எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களான பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவரோடும் உங்களுக்குள்ள உறவு, ஊடாட்டம், கருத்துநிலை பற்றிக் கூறமுடியுமா?
ஏறாவூர் 03. ரி.மீராலெப்பை
இவர்கள் இருவரைப் பற்றியுமே நான் ஏற்கனவே எழுத்தில் பதிய வைத் துள்ளேன். கைலாசபதி அறிஞன்; சிவத்தம்பி சிந்தனையாளன். ஆனால், இவர்கள் இருவருமே விமரிசகர்கள். படைப்பாளிகளல்ல. எனவே இந்தக் கோணத்தில்தான் நான் இவர்கள் இருவரது இலக்கியக் கருத்துக்கள் மீதும் அபிப்பிராயம் கொண்டுள் ளேன். பல்கலைக் கழக மாணவர் மட்டத்திலேயே இவர்கள் இருவரும் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். இதனால் இவர்களது கருத்துக்களுக்கு நாடு கடந்த இலக்கியச் செல்வாக்குக் கிடைத்தது. புகழ் பரவியது. இந்தக் கல்விமான்களின் தொடர் உழைப்பால் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மக்கள் மத்தியில் புதுப் பலம் பெற்றுத் திகழ்ந்தது. படிப்பாளிகளும் படைப்பாளிகளும் ஒன்றிணைந்ததன் பெறுபேறே ஈழத்து இலக்கியத்தின் நவீன வளர்ச்சி என இன்று வரலாறே பதிவு செய்துள்ளது. இதில் ஒருவர் இறந்து விட்டார். இருப்பவர் சிவத்தம்பி அவர்கள்தான். இவருக்கும் எனக்கும் சமீப காலமாக கருத்து ரீதியில் முரண்பாடுகள் உண்டு. இவைகள் சகோதர நேச முரண்பாடுகளே தவிர, அடிப்படை முரண்பாடு களல்ல. அவர் இன்னும் இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென மனப்பூர்வமாக ஆசிக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை கருத்து முரண்பாடுகள் காரணமாக எந்தவொருவரையும் நான் இதுவரையும் பகைவர்களாக கருதுவதே யில்லை. வெறுப்பதுமில்லை. அது மடத்தனங்களில் ஒன்று.
என்னையும் தோழர் டானியலையும் யாழ்ப்பாணச் சாதீய பண்டித வெறிக் கூட்டத்தினர் இழிசனர் இலக்கியம்' எழுதுகிறவன்கள் எனக் கொச்சைப்படுத்திக் கேலி
69

Page 37
செய்து எமது எழுத்துக்களை இழிவு படுத்திய அறுபதுகளில் எங்களுக்காக நெஞ்சு நிமிர்த்திக் குரல் கொடுத்தவர் களில் இவர்கள் இருவரும் குறிப்பிடத் தக்க கல்விமான்கள்.
சில எழுத்தாளர்கள் - குறிப்பாகக் கவிஞர்கள் - இருக்கிறார்கள், இவர் கள் சகோதர மனிதர்களைப் பார்த்துச் όήύυμ5ώgδά, σολιτύ υδρόεύύθεράδμοιτά αδ6ir. இவர்களது எழுத்தை நாம் எப்படி மதிக்க முடியும்?
நெல்லியடி. எம்.சுகுணசபேசன்
ஒரு மனிதன் - குறிப்பாகக் கலை ஞன் - முதலில் ஒரு மனிதனாகப் பழகத் தெரிந்திருக்க வேண்டும். அப்புறம்தான் அவனது எழுத்தும் கருத்தும் என்னைப் பொறுத்தவரை முதலில் மனிதனாக இரு. அதன் பின்னர் பேனா பிடி
இலக்கிய உலகில் காழ்ப்புணர்ச்சி கொண்டு இயங்கிவருபவரா, நீங்கள்?
வவுனியா. ந.தவநேசன்
நான் ரெம்பவும் எளிமையான குடும்பச் சூழ்நிலையிலிருந்து முகிழ்ந்து
வநதவன. ஆனால, அசாதரணமான கொள்கைப் பற்றாளன். அதேசமயம் சகல படைப்பாளிகளையும் சகோதரம் என நினைப்பவன். மதிப்பவன். இத் தகைய குணாம்சங்கள் இல்லாது போனால் தொடர்ந்து நாற்பது வருவடிங் களாக ஒரு சிற்றிலக்கிய ஏட்டை வெளி யிட்டுவர இயலாது.
70
நீங்கள் சமீபத்தில் படித்த, கேள்விப் பட்ட இரண்டொரு செய்திகளை எங்களுக்குச் சொல்ல முடியுமா?
உரும்பிராய். க.நவநீதன்
பஞ்சமர் சாதி மக்களை மிக மலின மாகவும் சாதி அகம்பாவத்துடனும் விமரி சனம் செய்த நாவலரது நல்லூர் ஞாப கார்த்த மண்டபத்தில் தலித் இலக்கிய முன்னோடி என ஒத்துக்கொள்ளப்பட்ட (35Typři Lm sílusý)6öT படைப்புகள்' நூல் அறிமுக விழா, சமீபத் தில் நடைபெற்றுள்ளது. அடுத்தது என் காதில் விழுந்ததொரு பேச்சு : "நாங்க தான் இப்ப சாதிகீதியெல்லாம் பாக்
“Lmo esfluu 6io
கிறதைப் பேசுறதை விட்டுட்டோமே, இப்ப கூடக் கூட்டங்களிலேயேயும் மேடையிலும் இந்த எழியதுகளைப் பாருங்கோவன். எல்லாருமே இன்னமும் கூட சாதி இருக்கிறதெண்டு சொல்லிக் கொண்டு திரியுதுகள். இதைத்தான் கலி காலம் எண்டு சொல்லுறது!’ தினசரி ஒன்றில் விளம்பரம் பார்த்தேன். 'அவசர அவசியமாக சிறுநீரகம் தேவை. பிரா மணருடையதாக அது இருந்தால் பெரிதும் விரும்பத்தக்கது! கனடாச் செய்தி ஒன்றை வாசித்தேன். இரு மரபும் துய்ய உயர்குல மரபில் வழிவந்த உயர்ந்த உத்தியோகம் வகிக்கும் யாழ். வேளாள மணமகனுக்கு அதே தகுதி கொண்ட மணமகள் தேவை!
 

சந்தா தாரர்களை நம்பியே ஒர் இலக்கிய சஞ்சிகையைத் தொடர்ந்து
5-55 (prgupr?
தெஹிளை.
எத்தனை தான் சந்தாதாரர்களின் ஒத்துழைப்பு இருந்தாலும் அவற்றின் ஒத்துழைப்பை நம்பி ஒரு சிற்றிதழை நடத்திவிட முடியாது. இதில் சங்கடம் என்னவென்றால் தொடர்ந்து பலர்
எஸ்.செல்வகுமார்
சந்தாக்களைப் புதுப்பிக்க மாட்டார்கள். ஆனால், அவர்களது நல்லெண்ணத்தின் மீது அபார நம்பிக்கை வைத்துத் தொடர்ந்து இதழை அனுப்பி வைப்போம். இதில் தபாற் செலவும் நம்முடையதே. அவர்களுக்கோ ஆயிரம் சோலிகள். நம் முடன் மினைக்கெட நேரமிருக்காது.
அஞ்சலட்டை கூடப் போடமாட்டார்கள்.
இருந்தும் இந்த மண்ணின் இலக்கிய வளர்ச்சிக்காகச் சிலர் தம்மை ஒப்புக் கொடுத்து உழைக்க வேண்டியுள்ளது. அயராத விடா முயற்சியின் மூலம்தான் ஒரு சிற்றேட்டைக் கொண்டு நடத்திவர (plgub.
பல எழுத்தாளர்கள் வாய்ப்பந்தல் (šumrobů ujibg5r č5reg(3u 660á5á5uU உலகில் நடமாடுகின்றனரே தவிர, ஒரு வரும் ஆமானதைப் படைப்பதாகத் தெரியவில்லையே, என்ன காரணம்?
ம.தவமணிதேவி
LD661 Ts.
ஊர் உலகில் சொல்வார்கள், பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை! என்பார்கள். இதுதான் இவர்களினது
மனப் பின்னணி ஒரு படைப்பாளி தனது ஆகச் சிறந்த ஆக்கத்தைக் களப்படுத்த வேண்டும். இல்லாது சும்மா சும்மா
வாய்ச் சவடால் மூலமும் நக்கல் மொழி
மூலமும் தனது இருப்பை நிலை நிறுத்த முற்பட்டால் கடைசியில் அவர்களது இறுதிக் காலம் ரொம்பவும் பரிதாபகர மாகவே முடியும். நேசித்து, அன்பு செலுத்த ஒரு குஞ்சு குருமானும் இருக்க
DII LTfs6.
தமிழ் நாட்டுத் தலைவர்களிடம் இன்று யாரை நீங்கள் அதிகம் மதிக்
கிறீர்கள்?
மருதானை. 6T6).yneoidur
முன்னர் ஒரு காலத்தில் தலைவர்
காமராஜர் அவர்களை நான் ரொம்பவும்
மதித்துப் போற்றினேன். பின்னர் தோழர் ஜீவானந்தம் அவர்களை மதித்தது மாத் திரமல்ல, மனசில் கனம்பண்ணி மதித்து வந்தேன். இன்று உயிருடன் உள்ளவர் களில் தோழர் ஆர்.நல்லகண்ணுவை நெஞ்சு நிறைய மதிக்கிறேன். போற்று கின்றேன். இன்று தமிழக மண்ணில் வாழ்ந்து வரும் மகத்தான மனிதர்களில், அரசியல் தலைவர்களில் தமிழக மக்க ளால் பெரிதும் நேசிக்கப்படுபவர் தோழர் நல்ல கண்ணு என்பது எனது அபிப் பிராயம். எனக்கும் அவருக்கும் கடந்த நாற்பத்தைந்து வருட காலத் தோழமை நட்பு நிலவி வருகின்றது.
முற்போக்கு எழுத்தாளர் ஐவரைப் பற்றிவிபவி இயக்கம் தொடர்ந்து அவர் 71

Page 38
களினது இலக்கியப் பணி பற்றி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறதே, இதைப் பற்றிள்ன்ன கருதுகிறீர்கள்?
நீர்கொழும்பு. ஆ.மகாதேவன்
டானியலைப் பற்றியும் என்னைப் பற்றியும் ஆய்வுக் கூட்டங்களில் கட்டுரைகள் படிக்கப்பட்டன. என்னைப் பற்றிய ஆய்வுக் கூட்டத்திற்குத்தான் என்னால் போய்க் கலந்து கொள்ள முடிந்தது. கணேசலிங்கன், என். கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன் பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன. இளந் தலைமுறை எழுத்தாளர்கள் கண்டிப்பாக இத்தகைய கருத்தரங்கு களில் பங்கு பற்ற வேண்டியது மிக மிக முக்கியமாகும்.
நீங்களும் உங்களையொட்டிய நெருங்கிய நண்பர்களும் மனசு வைத் தால் பழையபடியும் முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தை இயங்க வைக்க முடியுமே, என்ன சொல்கிறீர்கள்?
களுத்துறை. ஆர்.வெற்றிவேலன்
உண்மைதான். நமக்காக இல் லாது போனாலும் எதிர்கால இளந் தலைமுறையினரின் இலக்கிய வளர்ச் சிக்காக, தத்துவார்த்த ரீதியில் அவர் களினது படைப்பாற்றல்களைப் பண்
படுத்தி நிறுவுவதற்காகவாவது முற்
போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் புனர் நிர்மானம் செய்ய வேண்டியது காலத் தின் கட்டாயப் பணியாகும். காலை யிலிருந்து மாலை வரை - ஞாயிறு தினமும் உட்பட - நான் மல்லிகைக் காகவும் மல்லிகைப் பந்தல் வெளி யீடுகள் சம்பந்தமாகவும் உழைக்க வேண்டியுள்ளது. எனக்கு நேரம்தான் முக்கியம். சரியான திசை வழியில் வளரத் துடிக்கும் இளந்தலைமுறை யினர் முன் நின்று உழைக்க முன் வந்தால் நானும் ஒத்துழைக்கத் தயாராக வுள்ளேன்.
மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை ஒரு தடவை நேரில் பார்த்து அவற்றில்
சிலவற்றை வாங்க விரும்புகின்றேன்.
எந்தெந்த நேரங்களில் நான் வரலாம்?
க.சரோஜினி
வெள்ளவத்தை.
காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 suso Losios960sés stuntsoutb . இயங்கிக் கொண்டிருக்கும். ஞாயிறு விடுமுறை. இருந்தாலும் நான் ஒய் வெடுத்துக் கொண்டு அங்குதான் தங்கி யிருப்பேன். வருவதற்கு முன்னால் தொலைபேசியில் அறிவித்துவிட்டு வரத் தெண்டியுங்கள். பரஸ்பரம் மனம் விட்டுக் கதைப்போம்.
201 - 1/4, g கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72
 

POOBALASING|HAM вооковрот
IMPORTERS EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head office: Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colomb006. SranKa: Te: 2422321 Tel.: 4-515775, 2504266 Fax. 2337313 4A, Hospital Road,
E-mail: pbdhoG)sitnet.Ik Bus Stand, Jaffna.
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், நூல் வெளியீடeடாளர்கள்
56OD6D6CDLD 3 doeT இல, 202, 340 செடியார் தெரு, இல. 309 A-23, காலி வீதி, கொழும்பு II, இலங்கை கொழும்பு O6, இலங்கை 65T. (Bu. 2422321 6gT. GBL. 4-55775
தொ. நகல் 233753
lóleöreoTé5veb : pbdhoG)sltnet. Ik இல. AA, ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பானம்,

Page 39
张 Malikai
「エ
SUR
TEXTEM
32/34, 3rd ( Colom,
Te: 233697
244 FadX: 24
 

April 2006
YA
LS (PWT) LTD.
Cross Street, bo - . 1.
77, 2438494, 91 (Ο5 4.38531
SS =ســــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ