கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.05

Page 1
50வது ஆண்டை நோக்கி.
&L)656.
Goffins LITTLs
 


Page 2
༢་༡་༡༩༥༩་༦༦:༣༦:༦༦༦༩་ཙཱ་
ஒலங்கையில் தமிழ் நூல்கள் விநியோகம் மற்றும்
விற்பனையில் புதியதோர் சகாப்தம்
இலங்கையின் அனைத்துத் துறைசார்ந்த நூல்களுக்குமான விநியோகஸ்தராகவும், விற்பனையாளராகவும் உங்கள் முன் காலடி எடுத்து வைத்துள்ளோம். வாசகர்கள், அபிமானிகள் எல்லோருடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
காந்தளகம் மறவன்புலவு க.சச்சிதானந்தன் இல. 68, அண்ணாசாலை, சென்னை 600002.
தொ.பே. 044 - 24814505.
தமிழ்மண் பதிப்பகம் தமிழ் மொழிக்காவலர் கோ.இளவழகன் இல, 2, சிங்காரவேலன் தெரு, தி.நகர், சென்னை 600017.
தொ.பே. 044 - 24339030
உத்தரவு பெற்ற இலங்கைக்கான ஏக விநியோகஸ்தர்கள் :
66(OOG பெருத்தகசாலை
49,50,52 uSesiresuo Lumrňrės, Q&m(լքլbւ 11தொலைபேசி: 011 - 2472362 தொலைநகல் : 011 - 2448624 Lól6óT60T6b5F6io : Chemamadu (ayahoo.com
 

மல்லிகை இலக்கியச் சிற்றேடு மாத்திரமல்ல, அது ஒர் இலக்கிய இலக்கம்!
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
LDல்லிகையின் வளர்ச்சியையும்,
மல்லிகைப் பந்தலின் பரந்துபட்ட விரிவுத் தளத்தையும் பார்க்கும்போது மெய்யாகவே நாம் பிரமித்துப்போய் விடுகிறோம்!
மல்லிகையின் பழைய பிரதிகளைக் கேட்டும், மலர்களின் தேவை கருதியும் வெளியீடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ள பல்வேறுபட்ட இலக்கியச் சுவைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுகின்றனர்.
இவர்களெல்லோரும் மல்லிகைக்குச்
சந்தா செலுத்தித் தம்மையும் ஒரு மல்லிகைக் குடும்பத்தினராகப் பதிவுசெய்து
30-வது ஆண்டை நோக்கி.
கொள்வதுதான் இப்போதைக்கு உகந்த ஒரு செயலாகும்.
எழுதுவதும் படிப்பதும் இரசிப்பதும் மாத்திரமல்ல, இப்போதைய நமது நோக்கம். இந்த மண்ணையே நமது எழுத் தாலும் செயலாலும் புரட்டிப் போட்டுவிட வேண்டும்.
இந்த மண்ணின் படைப்பாளிகளின் சிருஷ்டிகளை இந்தப் பூவுலகின் அனைத் துப் பக்கங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் சர்வதேச மொழி. அதற் கமைந்தாற் போல, நாம் காரியமாற்ற வேண்டும். இதற்கு நீங்கள் சம்மதமா?
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201-1/4, Sri Kathiresan
மல்லிகை உங்களை வாரியணைக்கத் C ವಿವಿ: 13
OOOO - தயாராகவுளளது. Te: 232O72
- ஆசிரியர்

Page 3
៣២៣ uffiញចារិ
IphIn
- டொமினிக் ஜீவா
திருவாளர் A.கந்தசாமி அவர்களை நான் முதன் திரு. A. கந்தசாமி முதலில் பார்த்தது கொழும்புக் கம்பன் கழக விழாவில். வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டப மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில்தான் நானவரைப் பார்த்தேன். அவரது குரலை முதன் முதலில் கேட்டேன். சிறந்த பேச்சாளர்களுக்கே அமைந்த குரல் வளம் அவருடையது. இரசித்துக் கேட்க வைக்கும் குரலில் அவரது உரையைக் கேட்டு நான் மகிழ்ந்திருக்கிறேன். இதை அவருக்கே நேரிலும் சொல்லியிருக்கிறேன்.
மல்லிகைப் பந்தலின் பாரிய வெளியீடு சம்பந்தமாக நான் இரவு பகலாக மனசைப் போட்டு அலட்டிக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் இவரது பெயரை நண்பர் பாலசிங்கம் ஞாபகப்படுத்தி, இவரை ஒருதடவை சந்திக்கும்படி என்னை வற்புறுத்தினார்.
கொழும்பில் பெரும் வர்த்தகப் பிரமுகர் இவர். இப்படியானவர்களுக்கு ஆயிரத்தெட்டுச் சோலிகள் இருக்கும். சந்திப்பதற்கு நேரமொதுக்கவே சிரமப்படுவார்கள். இருந்தும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
“என்னதான் உதவி தேவையென்றாலும் கூச்சப்படாமல் கேளுங்கள். என்னால் இயன்றதைச் செய்து தருகிறேன்!" எனச் சுமுகமான நட்புக் குரலில் என்னுடன் 2d 60guitigaOTTff.
நான் எனது புத்தக வெளியீட்டுத் திட்டத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் போதாமையையும் விரிவாகச் சொல்லி விளங்கப்படுத்தினேன்.
“நாளை என்ற சங்கதியே வேண்டாம். இப்பவே ஆளை அனுப்பும், உடனடியாக அனுப்பும், மிச்சத்தைப் பிறகு பேசிக் கொள்ளலாம்!" எனச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.
நான் நண்பர் பாலசிங்கத்தை அவரை நேரில் காண அனுப்பி வைத்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். கணிசமான ஒரு தொகையைப் பண நோட்டாகவே அடுக்கி, பொதி பண்ணி, ஒரு குறிப்புடன் எனக்கு அனுப்பி உதவினார். இலக்கிய இதயம் படைத்த கந்தசாமி அவர்கள்.
மல்லிகை ஆண்டு மலர்களைப் பார்த்தவர்களுக்கு தெரியும். மலர்களின் கடைசிப்
usas salsTibugib UINTED PARCEL SERVICE gouyg) speu601,55T60T.
 

சென்றதோ قائeقة ما
Sy"Tuleå aفانه) كتهاكام - அமெத்தது രിട്ട്ലിം إكثاره اتاق قلمرو
இதுதான் தமிழக இன்றைய ஆட்சியின் பின்னணி,
- இது எத்தகைய ஜனநாயகத்தில் சேருமதியாகும்? ஆட்சி அமைத்த ஆட்சிக் குழுவினரிடமும் போதியளவு சட்ட சபைப் பெரும்பான்மை இல்லை. அமைக்கப்பட்டுள்ள ஆட்சியோ தேர்தலில் ஒன்றுபட்டிருந்த ஜனநாயகக் கூட்டணியினரின் ஒருங்கு சேர்ந்த ஆட்சி என நிரூபிக்கப்படவுமில்லை.
இந்த இடத்தில் எங்கேயோ உதைக்கிறதே! இதுவே ஐக்கிய ஜனநாயகக் கோட்பாட்டு விதிகளுக்கு முரணாகத் தெரிகிறதே!
தேர்தல் மேடைகளில் பொறுப்பானவர்கள் முன்னிலையில் நடந்த சில கூத்துக்களை சன் தொலைக்காட்சியில் பார்த்து இரசிக்கும் இரசிகர்களின் மனநிலையில் பலர் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தனர்.
"ஒண்டிக்கு ஒண்டி வாரியா?” என ஒரு மத்திய அமைச்சர் சவால் விட்டதையும் பொதுமக்கள் ஒரு ரூபாய்த் தினசரியில் படித்து மெய் மறந்தனர். கட்சித் தடலவர் களிடையே கருத்து முரண்பாடு இருக்கலாம். அபிப்பிராய வித்தியாசங்கள் தென்படலாம். ஆனால், அடிப்படை நாகரிகம் அற்றுப் போகக்கூடாது.
மேடையில் தெருவோர ரவுடியைப் போல திரு. வைகோ அவர்களுக்கு ஒண்டிக்கு ஒண்டி சவால் விட்டவர் மத்திய அமைச்சர் மாத்திரமல்ல, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர். முரசொலி மாறனின் புத்திரன். கலைஞரின் பேரன். ஸ்டாலினின் மருமகன். தயாநிதி மாறன்.
வைகோ அவர்களின் வயதென்ன? அநுபவமென்ன? கருத்து வித்தியாசம் இருந்த போதிலும் அவரது போராட்ட வரலாறுதான் என்ன? இவையொன்றுமே தயாநிதி மாறனுக்குத் தெரியாதா, என்ன? ஆனால், தமிழக மக்களுக்கு இவைகள் அத்தனையும் தெரியும். இவைகளைக் கணக்கிலெடுக்காது சமீபத்தில் பெற்றுக்கொண்ட பதவி இறுமாப்பில் தடம் புரண்டு பேசுவது கலைஞரின் குடும்பத்தினருக்குத்தான் அரசியல் இழுக்கு.
பதவியேற்கும் வைபவத்தையும் அவதானித்தோம். அங்கும் பேரனாரின் விளம்பர முகமே பெரிதும் தெரிந்தது. தமிழக ஆரோக்கியமான எதிர்கால அரசியலுக்கு இவை நல்லதல்ல

Page 4
இைேQடுமுடிற்
வன்னிமுண்ணின் வாழ்வைச் சொல்லும் வலிமை மிக்க படைப்பாளி.
- தாமரைச் செல்வி
ச.முருகானந்தன் என்ற படைப்பாளி பற்றிப் பேசும் போது அவருடைய சமூக நேசிப்பின் தன்மை பற்றியும் பேச வேண்டிய தேவை ஏற்படுகிறது. போர் சூழ்ந்திருந்த வன்னிப் பிரதேசத்தில் அதுவும் பின் தங்கிய ஒரு காட்டுக் கிராமத்தில் மருத்துவராகக் கால் நூற்றாண்டு காலம் பணிபுரிவதென்பது சாதாரண விடயமல்ல. ஒரு மருத்துவர் என்ற ரீதியில் இவர் அன்றாடம் சந்திக்கும் மக்கள் மிக ஏழ்மையானவர்கள். வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள். இந்த மக்களுக்கான பணியை எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து வருபவர் இவர். இந்தப் பணிதான் இலக்கியம் எழுதும் இவரது பேனாவுக்கு மையாக ஊற்றெடுத்திருக்கிறது. இந்த மனிதர்களுடைய பிரச்சினைகள் இவருக்குள் இருக்கும் மனித நேயத்தை அசைக்கும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு படைப்பு இவரிடமிருந்து பிறந்திருக்கிறது.
இவர் தனது தரை மீன்கள் சிறுகதைத் தொகுதியில் குறிப்பிடுகிறார்; 'ஒரு கதாசிரியனுக்குச் சமுதாயப் பொறுப்புக்களும், அழகியல் உணர்வை மேம்படுத்தும் கடமைகளும் உண்டு. தான் வாழ்கின்ற சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் போலித்தனங்களையும், பிற்போக்குச் சிந்தனைகளையும் முறியடித்துச் சமூக அபிவிருத்தியில் சரியான பாதையை ஏற்படுத்தி மானிட வாழ்வை நெறிப்படுத்திட முடியும் என்ற நம்பிக்கையுடன் கலை இலக்கியவாதிகள் பேனா ஏந்திட வேண்டும் என்று உணர்ந்து, எனது படைப்புகளில் ஜனரஞ்சகமாகச் சமூக சீர்திருத்த முயற்சிகளை முன் வைத்துள்ளேன்."
இவரது இந்த வார்த்தைகள் படைப்பாக்க முயற்சியில் இவருக்குள்ள தெளிவையே பிரதிபலிக்கிறது. ஒரு படைப்பாளியின் நோக்கு எத்தகையது என்பதை அறியுமிடத்து அவனது படைப்புகளின் தன்மையைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

கடந்த பல வருடங்களாகப் போரின் நெருக்கடிக்குள் சிக்கியிருந்த ஒரு பிரதேசத்தில் மருத்துவராகவும், படைப் பாளியாகவும் இரண்டு துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரு பவர் இவர். வடமராட்சியைப் பிறப்பிட மாகக் கொண்டவர் ச.முருகானந்தன். இருந்தும் இவரது எழுத்துத் துறைக்கு அதிக களம் அமைத்துக் கொடுத்தது வன்னி மண்தான். வன்னி மக்களின் யதார்த்தமான வாழ்வு பற்றியே இவரது அநேகமான கதைகள் பேசியிருக் கின்றன. மூச்சு விட நேரமில்லாத மருத்துவப் பணியின் மத்தியிலும் தனது எழுத்துப் பணியை ஒரு தவம் போல மேற்கொள்பவர் இவர்.
கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி, யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடம் ஆகிய வற்றின் பழைய மாணவர். மாணவராக இருக்கும் போதே எழுத்துத் துறை யிலும் ஆர்வம் ஏற்பட, 1976ல் தினகரன் பத்திரிகையில் தனது முதலாவது சிறு கதையை எழுதினார். அன்றிலிருந்து இன்றுவரை 175 சிறுகதைகள், 5 குறு நாவல்கள், 50 கவிதைகள், பல மருத் துவ, விமர்சன, அறிவியல் கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டிருக்கின்றன. பல் கலைக் கழக மாணவனாக இருந்தபோது இவர் எழுதிய 'மீன் குஞ்சுகள் சிறு கதை சென்னை இலக்கிய சிந்தனை ப்ரிசு பெற்றது. தரமான சிறுகதை என இது தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொண்டது. இச்சிறுகதை இந்திய
2 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டது.
இவரது படைப்புகள் இலங்கையில் வெளியான அநேக சஞ்சிகைகள், பத்தி ரிகைகளில் வெளியாகியிருக்கின்றன. இவை தவிர தமிழகத்தின் தரமான இலக்கிய ஏடுகளான தாமரை, கணை யாழி, தீபம் என்பனவற்றிலும் இவரது எழுத்துக்கள் களம் கண்டிருக்கின்றன. "மல்லிகையில் எழுத ஆரம்பித்த பின்னர் தான் நான் முதிர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து எழுத வாய்ப்புத் தந்து டொமினிக் ஜீவா என்னை வளர்த் தெடுத்தார்’ என மனம் திறந்து இவர் சொல்வதுண்டு. மல்லிகைப் பண்ணை யில் வளர்ந்தவன் என்ற பெருமையும் இவருக்குண்டு.
பிரச்சினைகளும் துன்பங்களும் நிறைந்திருக்கும் நடைமுறை வாழ் வையே தனது படைப்புலகமாகக் கொண்டிருப்பவர் இவர். இவருடைய ஆரம்ப காலச் சிறுகதைகள் சமூகத்தில் எப்போதும் இருக்கக் கூடிய சாதியம், சீதனம், பெண்ணியம், வர்க்க முரண் பாடுகள், மனித மனங்களின் சிக்கலான உணர்வுப் போராட்டங்கள் என்பவற் றைக் கருப்பொருட்களாகக் கொண்டு
எழுதப்பட்டவை. கால மாற்றத்தினால்
போரும் அதன் அழிவுகளும் இந்த மண்ணில் முனைப்புப் பெற்ற போது
அந்த அவலங்களே இவரது பிந்திய
கதைகளின் கருப்பொருள்களாயின.
அந்த அழிவுகளின் துயரங்களை இயல் பாக இவர் வெளிக்கொண்டு வந்ததற்கு,

Page 5
PS
666
6
இவரும் அதே துன்பங்களுக்கு மத்தியி விருது இவரது தரை மீன்களுக்கு
லேயே வாழ்வதையும் ஒரு காரணமாகக் கொள்ள முடிகிறது.
எல்லா வாசல்களும் மூடப்பட்ட நிலையில் மூச்சடங்கிப் போயிருந்த வன்னி மக்களின் துயரச் சுமைகளை வாழ்வுக்கான வலி மிகுந்த போராட்டங் களைத் தனது கதைகள் மூலம் வெளி யுலகிற்குக் கொண்டுப் போய்ச் சேர்த் தவர் இவர். இந்த இடப்பெயர்வுக் காலத்தில் மிக அதிகளவு படைப்புக் களை எழுதியிருக்கும் படைப்பாளி என இவரைக் குறிப்பிட்டுச் சொல்லும் அதே சமயம் அந்த எழுத்துக்களில் கனதியும் தரமும் நிறைவாக உள்ளமையையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.
ஒரு படைப்பாளியின் படைப்புக் கள் நூல் வடிவில் வரும்போதுதான் காலத்தின் பதிவுகளாய் ஆவணப்படுத்த பட்டு நிலைத்து நிற்க வாய்ப்புக் கிட்டு கின்றது. அந்த வகையில் இவரது 7 நூல்கள் இதுவரை வெளியாகியிருக் கின்றன. தரைமீன்கள், மீன்குஞ்சுகள், இது எங்கள் தேசம், இனி வானம் வசப் படும், ஒரு மணமகளைத் தேடி எனும் 5 சிறுகதைத் தொகுதிகளுடன் நீ நடந்த பாதையிலே’ எனும் கவிதைத் தொகுதி யும், உற்சாகக் கட்டுரைகள் அடங்கிய என்ற நூலுமாக மொத்தம் 7 நூல்கள்.
நாளை நமதே"
சிறுகதைகள், கவிதைகளுக்காக 15 தடவைகள் இவர் பரிசு பெற்றிருக் கிறார். கடந்த வருடம் சிறந்த சிறு கதைத் தொகுதிக்கான அரச சாஹித்திய
கிடைத்திருக்கிறது.
ஒரு படைப்பாளி, ஒரு வைத்தியர் என்பதற்கும் அப்பால் ஒரு மனித
நேயம் மிக்கவராய்ப் பல சமூக
சேவைகள் மூலம் தன்னை அடையாளம் காட்டுபவர் இவர். கிளிநொச்சி தமிழ்ச் சங்கம், கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கம், யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம், வடக்கு கிழக்கு அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனம் ஆகியனவற்றில் பொறுப் பான் பதவிகளை வகித்தவர். னேரிக்குளத்தில் இயங்கிய முதியோர் இல்லத்தில் இவர் வழங்கிய மனிதாபி மான சேவையை அங்குள்ள முதிய
வன்
வர்கள் மகிழ்வோடு குறிப்பிடுவதுண்டு. இந்த மனித நேயமே இவரை நல்ல தொரு படைப்பாளியாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
'மானுட நேயத்துடன் தான் சார்ந் திருக்கும் சமூகத்தைப் பீடித்திருக்கும் பிணிகளுக்கு வைத்தியம் செய்வது மட்டுமல்லாமல் அச்சமூக வளர்ச்சியின் ஊட்டசக்தியாகத் திகழும் கருத்துக் களையும் வழங்கும் ஒரு வலுமிக்க பேனா இவருடையது”
என்று இவரது கதைகள் பற்றி மேமன்கவி குறிப்பிட்டிருப்பது முற் றிலும் சரியானது. இவருடைய பேனா விலிருந்து உற்பத்தியாகும் நல்ல படைப்புகளை ஈழத்து இலக்கிய உலகம் உள்வாங்கக் காத்தி(கக்கிறது.

2. - கருணாகரன்
'அலியன் யானை’ என்ற சிறு கதையை எழுதிய ச.முருகானந்தனின் ஞாபகங்களிற் பெரும்பகுதி யானை களால் நிரம்பியதாகவே இருக்கக் கூடும்.
ச.முருகானந்தன் இளைஞராக இருந்த
போது நியமனக் கடிதத்தோடு வன்னி யில் யானைகள் சூழ்ந்த குடியேற்றக் கிராமமொன்றுக்கு மருத்துவராக வந் திறங்கினார். அன்றிரவு அவர் நித்திரை கொள்ளவில்லை. ஒருபுறம் நுளம்புக்கடி. மறுபுறம் யானை பற்றிய பயம். மறுநாள் காலை ஆள் பஸ் ஏறி ஊருக்குத் திரும்பி விட்டார். திரும்பும்போது அவருடைய தீர்மானம் செத்தாலும் அக்கராயனுக்கு வருவதில்லை என்றிருந்தது.
ஆனால், பிறகு ச.முருகானந்தன் அக்கராயன் வாசியாகி விட்டார். யானை கள் அவருக்கு ஒரு பொருட்டாக இல்லா மற் போய்விட்டன. நுளம்புக்கடியை அவர் வென்றார். அக்கராயன், வன் னேரிக்குளம் ஆகிய குடியேற்றக் கிராமங் களின் மருத்துவராகவும், மருத்துவ அதி காரியாகவும் அவர் முப்பது வருடங் களாக வேலை செய்து வருகிறார். இப் பொழுது இந்தக் கிராமங்களில் ஒருவ ராக முருகானந்தனின் அடையாளம் இருக்கிறது.
முருகானந்தன் மருத்துவராகவும் எழுத்தாளராகவுமிருக்கிறார். அவரு டைய எழுத்துப் பணியை விட அவர் செய்து வரும் மருத்துவப் பணி உயர் வானது என்பேன். முருகானந்தன் கவிதைகள் எழுதியுள்ளார். சிறுகதை
கள், குறுநாவல்கள், கட்டுரைகள் என் றெல்லாம் எழுதியிருக்கிறார். நிகழ்வு களைப் பதிவாக்கும் எழுத்து முறை முருகானந்தனுடையது. நிகழ்வுகளைப் பதிவாக்குவதனூடாக வாழ்வின் அனுப வங்களைப் பேச எத்தனிப்பது இதன் நோக்கமாகும். இப்போது அநேகமான ஈழத்தமிழ் ஊடகங்களில் பல் வகையான எழுத்துகளையும் எழுதி வருகிறார் முரு கானந்தன். விமர்சனங்கள் ஒடுங்கிவிட்ட சூழலில், வெளியாகும் எழுத்துகளின் தொகை அதிகரித்திருக்கிற காலம் இது.
முருகானந்தனின் மருத்துவப் பணி முக்கியமானது. அவர் ஒரு கிராமிய மருத்துவர் - கிராம வைத்திய அதிகாரி. நோயாளிகள் மருத்துவமனைக்கு வரா மல் கோவிலுக்குப் பிணி தீர்க்கவென்ற நம்பிக்கையோடு போன காலத்தில் - கிராமத்தில் மருத்துவராகப் பணி தொடங்கியவர். மெல்ல மெல்ல நோயாளிகளை மருத்துவமனையை நோக்கி அழைத்து வரத் தொடங்கிப் பிர தேசக் கிராமங்களில் கல்வியறிவைப் பெருக்கியவர். குறைத்தவர். தன்னைச் சுற்றியிருந்த கிரா மங்களில் மது ஒழிப்பைக் கொண்டு வந்தவர்.
மூடநம்பிக்கையைக்
முப்பது வருடங்களாக அக்கராயன், வன்னேரிப் பிரதேசங்களில் மருத்துவராக இருக்கின்ற முருகானந்தன் சந்தித்த அனுபவங்கள் ஏராளம்.
"இந்தியன் ஆமிக்காலம்" என்ற 1987-1990 வரையிலும் காயப்பட்ட பொதுமக்கள், போராளிகளுக்கு முருகா னந்தன் பெரும்பணி செய்தார். அது

Page 6
சல்லடைப் போட்டு போராளிகளுக்கு உதவுகிறவர்களைத் தேடுகிற காலம். முருகானந்தன் அதில் எல்லா வகையான ஆபத்து நிலைகளுக்கும் அப்பால் தன் மனிதநேயப் பணியை, தேசக் கடமை யைச் செய்தார். அதற்காக அவர் படை யினரால் பயமுறுத்தப்பட்டதும், விசாரிக் கப்பட்டதும் கூட உண்டு.
பிறகு, மூன்றாம் கட்ட ஈழப் போர்க் காலம். அப்போது முருகானந்தன் அகதி களுக்கான மருத்துவப் பணியிலும், முதியோரைப் பராமரிக்கும் பணியிலும் முழுமையாக உழைத்தார்.
தினமும் ஆயிரக் கணக்காக குவியும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த முருகானந்தனின் கண்கள் அன்றைய நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தன. அவர் அப்போது ஓய்வற்றிருந்தார். சிறி லங்கா அரசின் பொருளாதாரத் தடை களும் மிக மோசமான - வெறித்தன மான மருந்துப் பொருட் தடைகளும் தமிழ் மக்களை வதைத்த நாட்களவை. மின்சாரமில்லை. விதிகளில்லை, போக்கு வரத்தில்லை. சனங்களுக்கு வீடு களில்லை. இப்படித் துயரும் வலியும் நிரம்பிய நாட்களில் துன்பப்படுவோருள் தானும் ஒருவராக நின்று முருகானந்தன் அகதி களுக்கு மருத்துவம் செய்தார். மருந் தினால் மட்டும் குணப்படுத்த முடியாத வாழ் நிலையைக் கண்டு அவர் வெந்த
நல்ல சாப்பாடில்லை.
அனுபவத்தைப் பல தடவை என்னுடன்
பேசியிருக்கிறார்.
வளங்களற்ற சூழலில் - தேவைகள்
அதிகமான போதிலும் ஒன்றுமே செய்ய
முடியாது என்ற தத்தளிப்பை மறைத்து அந்தக் காலத்தை வென்றவர் முருகா னந்தன். முருகானந்தன் போல அந்தக் காலத்தில் பலருக்கும் இந்த வகை அனுபவம் உண்டு.
யானைக்கும் நுளம்புக் கடிக்கும் கிராமியச் சூழலுக்கும் அஞ்சிய முருகானந்தன் அந்தச் சூழலுக்குள் நின்று காலத்தை வென்ற கதை பெரிது.
அந்தக் கதையை அவர் சிதை யாமல் எழுத முயல வேண்டும். அதற்காக அவருடைய அனுபவத்தளம் விரிந்திருக்கிறது.
(ም 粤 N
மெளனக் கன்னிர்.
- பிரமிளா செல்வராஜை
நான் கொழுந்தை ஆயும் ஒவ்வொரு தடவையிலும் - என் பெருவிரலுடன் கட்டுவிரல் ஸ்பரிசித்து மீள்கின்றது பலமுறை வந்து மோதும் பலமான தொடுகையில் இதமில்லை என்றாலும் ஒன்றையொன்று இம்சிக்காமல் ஒத்துழைத்து உழைக்கின்றது பல்லாயிரம் முறை இணைந்து பிரிந்து தேய்ந்து போன அதே விரல்களிலேயே ஊதியத்தையும் எண்ணிப் பார்க்கிறேன் விரலோரக் கறை வெடிப்புகளில் மெளனக் கண்ணிராய் சீழ் வடிகின்றது.
(இக்கவிதை வேறொரு பத்திரிகையில் ീ6-ല ܓ\
 

ർഗ്ഗ മറ്റ്ര
Digital Colouvladh & Suudio
AMAN FEATURZS
digitat R 《德 Automatic dust & scratch correction
* Maximum Size: I2” x 8”Ds. Prins * Output Resolution: 4oodpi * Film linput Fomats: 135, 1x24o, Izo, APS
* Film Types: Colour negative & positive, Baw
megative, Sepia negative * Compatible linput & Output Media:
(Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia)
as Print to Print * Conduct sheet & lindex print
*Templates: Greetins Cards, Frame Prints, Calandar Prints,
Album Prints.
HEAD Office BRANCH
HAPPYDIGITAL CENTRE Appy photo
DCTAL Couou As 3rupio i PaorissioNAi
Potocampass Worocampas
& Sruolo No. 64, Sri Sumanatissa Mw, No. 3oo, Modera Street, Colombo - 12. Τει -ογΑ-6ιο652. Colombo - 15. Tel-oII-2526345.

Page 7
10
O
கஞ்சாச் செடி.
- 6J.6T6in).6girlfSlalom அந்தப் புன்னகையுடன் ஆயுளின் கடைசிச் சொட்டுச் செக்கனையும் சொறுகிட வேண்டும்.
தாடியால் அவனையல்ல; அவனால் தாடியைத்தான் நேசித்திருக்கிறேன்.
உரோமங்கள் உயிர்ப்பின்றிருத்தலும் உடல் உப்பியிருத்தலும் சிநேகங்களின் சிதைவுக்குக் காரணமல்ல.
அவனுக்குள்ளிருக்கும்
ஏதோவொன்று என்னுள் முளைவிட்டுக் கொள்ள இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் கல்லாகிக் கிடப்பேன்?
கிரணங்கள் எத்தனை முறை வந்தாலும் சூரியன் எரிகல்லாவதில்லை - (gb6öTujLDITij 676ü6um.Lb ஆகிவிட்ட பின்னும் சூம்பி விழுவதில்லை உண்மைக் காதல்.

11
என் பார்வையில் :
ஆங்கில மூலம் : ரெவிஸ் ரஞ்சன் பெரேரா
O O O O மகிழ்ச்சியும் வறுமையும் எதிரிடையானதா?
தமிழாக்கம் ! நல்லைக்குமரன் க.குமாரசாமி
இந்த உலகில் வறுமை ஆரம்ப காலம் முதற் கொண்டே இருப்பதாக அறிய முடிகின்றது. பொதுவாக வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் பெற முடியாத மனிதர்கள், வறுமையானவர்கள் அல்லது வறியவர் என்று அடையாளப்படுத்தப் படுகின்றது. உணவு, உடை, உறைவிடம் ஆகியவையே மனிதனுக்குப் பாரம் பரியமான அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் இன்றைய நவீன காலத்தில் சிறந்த கல்வி, நவீன வசதிகளை இலகுவாக அடையும் மார்க்கம், ஆறுதலளிக்கக் கூடிய போக்குவரத்து, உல்லாசப் பயணத்தினூடாக ஓய்வெடுப்பதற் கான அவகாசம் ஆகியவைகளே வாழ்க்கையின் ஆடம்பரத் தேவைகளாகக் கருதப் படுகின்றன. இந்த வகையில் நோக்கினால் சிலருக்கு அடிப்படைத் தேவைகளா யுள்ளவை, மற்றவர்களுக்கு ஆடம்பரங்களாகத் தோற்றம் கொடுக்கின்றன. எனவே வறுமைக்கோடு என்ற எல்லையை வகுப்பது என்பது ஒரு சமுதாயத்திலிருந்து இன்னொரு சமுதாயத்திற்கு வேறுபடுகின்றது. வறுமையெனப்படுவது, தனது வீட்டில் அன்றாடம் உணவு சமைத்து உண்ண வசதியற்ற இல்லாக் கொடுமை யையும், அன்றாட வாழ்விற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளில்லாமல் தாக்குப் பிடிக்க முடியாத இயலாக் கொடுமையையும் இக்கட்டுரையின் வரைவிலக் கணமாகக் கொள்வோம்.
இந்த உலகில் வறுமை தோன்றுவதற்கான காரணிகள் பற்றிப் பல கோட் பாடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய அனைத்துச் சமுதாய மட்டத்தில் பற்றாக்குறையுள்ள ஆதார சாதனங்கள் சமமற்ற விதத்திலும் நேர்மையற்ற தன்மையிலும் விநியோகம் செய்யப்படுவதாலேயே வறுமை உண்டாகின்றது என்று அனேகர் வாதம் செய்கின்றனர். சிலர் ஒருவருடைய சோம்பேறித்தனம், அறியாமை, ஆவலில்லாமை, சுறுசுறுப்பின்மை ஆகியவையே வறுமைக்கான காரணம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் சிலரோ வறுமை எனப்படுவது அவரவர் துர்ரதிர்ஷ்டம் அல்லது தலைவிதி என்றும் வறுமைப்

Page 8
PS 665)8. St. பிணியில் பிறந்தவர்கள் அதிலிருந்து விடுபட வேறு வழியேயில்லை என்றும் தெளிவாக நம்புகின்றனர்.
அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இலாபத்துக்காக இனத்துவ, சமுதாய பிரச்சினைகளோடு வறுமைப் பிரச் சினையும் அடிக்கடி மையப்படுத்திச் சுயநல அரசியல் நடத்துகின்றார்கள். மக்களின் பொது எதிரியான வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் பலமாகக் குரல் கொடுத்து அதற்காகப் பலவித கஷ்டமான முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும் அனேக மான அரசியல்வாதிகளிடம் வறுமை காணப்படுவதில்லை. எப்படியிருந்த போதிலும் சமுதாயத்திலிருந்து வறுமையை விரட்டி அடிக்கும் உண்மை யான நோக்கம் அரசியல்வாதிகளிடம் இல்லை என்பது மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான அபிப்பிராய மாகும். அரசியல் வானில் சக்தி வாய்ந்த பண வருவாயுள்ள ஸ்தானத்தில் தொடர்ந்து இருப்பதற்காக அவர்கள் தந்திரமான வகையில் சாதுர்யமாக வறுமைப் பிணியைத் தொடரச் செய்வர் என்ற எண்ணம் நிலவுகின்றது. அரசியல் வாதிகள் நிலைப்பதற்கு மிகவும் கவர்ச்சியானதொரு விடயமாக வறுமை என்னும் பிரபல்யமான தலைப்பு அமைந்துள்ளது. சுதந்திரம் கிடைத்த ஆரம்ப காலகட்டத்தில் (சிலோன் என்று முன்னர் அழைக்கப்பட்ட) இலங்கை யின் அரசியல் வரலாற்றில் சில அரசியல்வாதிகள் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களைப் பலவீனப்படுத்தி
12
அதனால் அரசியல் இலாபம் பெறுவதற் காக வறுமையில் வாடும் மக்களையும், அரசாங்க ஊழியம் பெறுபவர்களையும் காலத்துக்குக் காலம் வேலை நிறுத்தங் களிலும், போன்றவற்றிலும் ஈடுபடச் செய்தார் கள். அனேகமான தொழிற் சங்க நடவடிக்கைகளுக்குத் தொழிற் சங்கங் களின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருந்தன. தங்கள் எண்ணப்படி தீர் மானிக்காத தொழிற் சங்க நடவடிக்கை ஒன்றிற்குப் பிரதி பலனாக ஏழைத் தொழிலாளர்கள் பலத்த பாதிப்புகளை
எதிர்ப்பு ஊர்வலங்கள்
எதிர்நோக்கினர். பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஒரு சோக சம்பவம் இன்னும் என் மனதில் ஞாபக மாக உள்ளது. ஓர் ஏழைத் தொழிலாளி ஒரு சக்திமிக்க அரசியற் கட்சியின் தூண்டுதலினால் அவர் சார்ந்த தொழிற் சங்கம் ஏற்பாடு செய்த கைத்தொழில் பேட்டை வேலை நிறுத்தத்தில் தொட ராகப் பங்கு பற்றிய அங்கத்தவர் என்ப தற்காக வேலையிலிருந்து நீக்கப் பட்டார். பின்னர் அந்தத் தொழிலாளி வாழ வழியின்றி விரக்தியுற்றுத் தற் கொலை செய்து கொண்டார். நேர்மை யற்ற திட்டத்துடன் இயங்கும் துர்க் குணம் படைத்த அரசியற் கட்சிகளின் இரையாகச் சில அப்பாவி ஏழை மக்கள் அகப்படுகின்றார்கள் என்பதனை இந்த உதாரணம் நிரூபணம் செய்கின்றது.
ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிராக வும், அதைப் பரிபாலனம் செய்யும் அர சாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக வும் மிக இலகுவாகத் தங்கள் அருவருக்

கத்தக்க விளையாடலுக்கு அமைய ஏழைகளைக் கிளர்ச்சி செய்யத் தூண்ட இயலும் என்பதையும், அவர்களைப் பணயக் கைதிகளாகப் பாவிக்க முடியும் என்பதையும் அரசியல்வாதிகள் நன்கு அறிவார்கள்.
வறுமை பற்றிப் பேசும் போது எம் மத்தியில் ஒருவரால் பிறருக்குத் தான மாக வழங்கக் கூடிய மேலதிகச் செல்வ மானது அவருடைய வாழ்க்கை மனத் திருப்தியுடன் சம்பந்தப்படவில்லை என்ற பொதுவான அபிப்பிராயம் உண்டு. பொருளில்லார்க்கு இவ்வுலக இன்பமில்லை என்று சிலரும் பொருட் செல்வம் மட்டும் மகிழ்ச்சியைத் தருவ தில்லை என்று சிலரும் வாதிடக் கூடும். இந்த அபிப்பிராயங்கள் ஏற்றுக் கொள் ளத் தக்கனவாகத் தென்படுவதால் ஒரு வனுடைய பொருட் செல்வம் விவேகத் துடன் நற்பயன் அளிக்கக் கூடிய வகை யில் பாவிக்கப்படும் பட்சத்தில் அவரு டைய வாழ்வில் மகிழ்ச்சியைத் தோற்று விக்கும் என்பதாகும். எனவே பொருட் செல்வம் எனப்படுவது ஒருவருடைய மகிழ்ச்சிக்கும் சுகவாழ்வுக்கும் இறுதி யான காரணியல்ல என்பதும் அது புகழ்ச்சிக்கான காரணியென்பதும் நிச்சயமாகப் புலனாகின்றது. "மகிழ்ச்சி’ எனப்படுவது உலகத்தில் கிடைக்கப் பெறும் பொருட் செல்வங்களைக் குறிக் காமல் ஒருவருடைய ஒழுக்கம், மனோ நிலை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிறரோடு ஒத்துப்போகும் குணாதிசயத் தின் தரம் உட்பட்ட பல காரணிகளி னால் ஏற்படும் மனத்திருப்தியைப்
13
čo page):
பொறுத்தே உள்ளது என்று அறுதி யிட்டுக் கூறலாம்.
வறுமை என்பது, வெவ்வேறான மக்களுக்கு, வெவ்வேறாக அர்த்தப்படு கின்றது. பணரீதியாகச் செல்வந்தராக உள்ளவரிடம் பரிவுடன் கூடிய உணர்வு கள் இல்லாத வறுமை’ (குறைபாடு) இருக்கலாம். இவர்கள் எவ்வளவு செல்வம் பெற்றாலும் திருப்தியடையாத வர்க்கத்தினராகும். தங்களிடமுள்ளதைப் பங்கிடுவதற்கு என்றும் தயங்குவார்கள். தங்கள் செல்வத்தின் அடிமைச் c) யாகவே மாறி வாழ்வார்கள்.
மறுபக்கத்தில் பரந்த மனப்பான்மை யுள்ள செல்வந்தர்கள் தங்களிடம்
உள்ளதோடு திருப்திப்பட்டுக் கொண்டு
மற்றவர்களிடம் காணப்படும் செல்வத் தையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள். மற்றவர்கள் சந்தோஷ மாக வாழ்வதைக் கண்டு இன்பம் காண் பார்கள். பெறுவதிலும் பார்க்க கொடுப் பதிலேயே திருப்தி அடைவார்கள் என்ப
தால் அவர்களின் இதயம் என்றும்
செல்வச் செழிப்புடன் இருந்து கொண் டேயிருக்கும்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பார்க் காமல் தங்களுக்குக் கிடைக்கும் அல்லது தங்களிடம் உள்ளவைகளைத் திருப்தி யுடன் அனுபவிப்பவர்களிடம் மகிழ்ச்சி உண்டாகுமே தவிரப் பணத்தைக் கட்டி ஆள்பவர்களிடம் அல்ல. அறிவு, திறமை, பரிசுகள் ஆகிய தன்னலமான தத்துவ நோக்கங்களை மையப்படுத்தி இந்த உலகம் தங்கள் நலனுக்காகவே

Page 9
665);
অs படைக்கப்பட்டது என்று எண்ணுபவர் களுக்கும் மகிழ்ச்சி ஒரு போதும் கிடைக்காது.
பொருள் சம்பந்தப்பட்ட வறுமை யைப் பணம் விரட்டி அடிக்கலாம். ஆனால் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று கொள்வதற்கில்லை. மனிதாபி மான உணர்வுச் செல்வத்துடன் பரந்த மனப்பாங்கோடு எவ்வித எதிர்பார்ப்பு மின்றி மனதார மற்றவர்களுக்குக்
கைகொடுத்துத் தங்களிடமுள்ளதை உவப்போடு பகிர்ந்தளிப்பவர்களிடம் நீடித்திருக்கக் கூடிய உண்மையான மகிழ்ச்சி சொந்தமாகிவிடும்.
அத்தகையவர்கள் மனித சமுதாயத் துக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாக அமைந்து இவ்வுலகை நிலையான சொர்க்கமாக ஆக்குவார்கள் என்பது திண்ணம்.
(ም
ശബ്ല്യു.
அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ்க் கவிஞர்களின் தொகுப்பை வெளியிடுவதற் காக அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (Australian Tamil Literary & Arts Society) கவிஞர்களிடமிருந்து கவிதைகளை எதிர்பார்க்கின்றது.
ஒவ்வொரு கவிஞரும் இரண்டு கவிதைகளை அனுப்பி வைக்கலாம். புலம்பெயர்
─────།༽
வாழ்வு, தலைமுறை இடைவெளி, முதியோர் - இளையோர் விவகாரம், பெண்கள் நிலை, பல்கலாச்சாரச் சூழல், இன அடையாளம், இயந்திர வாழ்விலும் இயங்கியல் தன்மை, பருவகாலம் முதலான கருப்பொருள் உள்ளடக்கப்படும் தமிழ்க் கவிதைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கவிஞர்கள் கைப்பட இரண்டு பக்கத் தாள்களிலும் (Footscap Paper) எழுதியோ அல்லது கணனியில் அச்சடித்தோ அனுப்பலாம். கவிஞர்கள் இரண்டுக்கு மேற்பட்ட கவிதைகளை அனுப்பியிருப்பின் அவற்றுள் ஒவ்வொரு கவிஞரினதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 கவிதைகள் மட்டுமே கவிதைத் தொகுப்பில் இடம்பெறும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
L. Muruga poopathy 170, Hothlyn Drive Craigieburn - 3064, VICTORIA T. P: (03) 93.081484
இக்கவிதைத் தொகுப்பு 2007 ஜனவரியில் நடைபெறவிருக்கும் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்படும். ノ ܓܠ

15
ஆசிரிய கலாசலை இரண்டாம் வருடம் - இறுதி ஆண்டு - மேலும் 8. பூச்சியம் a நான் பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்த பூச்சியம் அல்ல. மிகவும் முக்கியத்துவம் உடைய ஒரு காலம். சாதியத்தின் பல்வேறு வகை யான தோற்ற வெளிப்பாட்டினை தெணியான் அந்தக் காலகட்டத்தில் நான் அவ தானித்து, உணர்ந்து, அறிந்து கொண் டேன். இந்துத்துவம், சாதியம் ஆகிய இரண்டும் ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்களாக, ஆதிக்க சக்திகளின் வாழ்வில் இணைந்து ஒடுகின்றன என்பதனை அக்காலத்தில் நான் பெற்றுக் கொண்ட வாழ்வனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தின. அந்த வாழ்வனுபவங்களை வழங்கு வதற்கென்றே திருநெல்வேலியில் இருந்து ஆசிரிய மாணவர்கள் கொழும்புத்
துறைக்கு வந்து சேர்ந்தார்கள்.
நாங்கள் இரண்டாம் வருட மாணவர்களாகக் கற்கை நெறியை ஆரம்பித்த சமயம் (1963) திருநெல்வேலி சைவாசிரிய கலாசலை மூடப்பட்டது. அங்கு ஆசிரிய மாணவர்களாக இருந்த சைவாசிரியர்கள், தங்கள் கற்கை நெறியைத் தொடரும் பொருட்டுக் கொழும்புத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்புத்துறையில் இருந்த கிறிஸ்தவ மாணவிகள் - அப்பொழுது இந்துமதப் பெண்கள் மாத்திரம் கல்வி கற்றுக்கொண்டிருந்த - கோப்பாய் ஆசிரிய கலா சாலைக்கு அனுப்பி வைக்கப் பெற்றார்கள். தமிழன் எங்கு புகுந்தாலும் அங்கு சாதி வந்து புகுந்துவிடும். தமிழ்ச் சைவன் எங்கு புகுந்தாலும் அங்கு சாதி எழுந்து தலைவிரித்து ஆட ஆரம்பித்து விடும். கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் அதன் ஆட்டம் மெல்ல ஆரம்பமாயிற்று.
ஆட்டம் எங்கள் குடும்பப் பொருளாதாரத்திலும் ஏற்படலாயிற்று. வசதியாக வாழ்ந்து வந்த எங்கள் குடும்பம் அந்த ஆண்டு ஆட்டங் காணத் தொடங்கியது. எங்களுக்காக ஒய்வு ஒழிச்சலின்றி உடல் உழைப்புச் செய்து வந்த எங்கள். தகப்பனார் உடல் சற்றுத் தளர்ந்து போகலானார். அதனால் குடும்ப வருமானம் குறையத் தொடங்கியது. யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரி விடுதி மாணவனாகத் தங்கி இருந்து கல்வி கற்று வந்த தம்பி அந்தத் தருணம் கல்வி பொதுத் தராதரப் பத்திரப் (சாதாரணம்) பரீட்சையில் சித்தி அடைந்தான். குடும்ப வருமானம் குறைய ஆரம்பித்ததும், யாழ்ப்பாணத்து விடுதியில் இருந்து அவனை விடுவித்து, வடமராட்சி பொலிகண்டியிலுள்ள எங்கள் இல்லத்தில் தங்கி இருந்து

Page 10
AZUL கல்வி கற்கத் தகுந்த ஏற்பாட்டினைச் செய்யத் தீர்மானித்தோம். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி க.பொ.த. (உயர் தரம்)க் கல்வியை அவன் தொடர்ந்து
gigs):
கற்பதற்குப் பொருத்தமான இடமெனக் கருதினோம்.
அக்காலத்தில் ஹாட்லிக் கல்லூரியை நிருவகித்தவர், தேசத்தில் பிரபலியமான, புகழ் பூத்த ஓர் அதிபர். அவர் ஒரு கிறிஸ்தவர். அவரைக் கல்லூரி சென்று ஒரு தினம் சந்தித்தேன். தம்பியின் பாடசாலைத்
வடபிர
தேர்ச்சி அறிக்கையைக் கையோடு கொண்டு சென்றேன். அதனை வாங்கிப் பார்வையிட்ட போதும், அதில் அதிக கவனம் செலுத்தாது தம்பியின் விளை யாட்டுத்துறை ஈடுபாடு பற்றி அக்கறை யுடன் வினவினார். புனித சம்பத்திரி சியார் கல்லூரி உதைப்பந்தாட்ட அணி, கிரிக்கெட் அணி இரண்டிலும் அவன் விளையாடிக் கொண்டிருக்கின்றான் என்ற தகவல் அவருக்குத் திருப்தி அளித்தது. இனி என்ன அவனுக்கு அனுமதி கிடைத்துவிடும் என நான் எண்ணிக் கொண்டிருந்த தருணம், ஆரம்பக் கல்வியை எங்கே பெற்றுக் கொண்டாரென வினவினார். தேவரை யாளி இந்துக் கல்லூரி என நான் பதில் சொன்ன போது அவர் கண்டுகொள்ள விரும்பிய சாதிய அடையாளத்தை சற்று நேரத் தாமதத்தின் பின்னர், M.P இடம் இருந்து சிபார்கக் கடிதம் ஒன்று வாங்கி வந்தால் அனுமதி தரலாம் எனக் கூறினார். அப்பொழுது பருத்தித்துறைப்
அறிந்து கொண்டார்.
16
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கே.துரைரத்தினம் அவர்களிடம் சென்று விடயத்தைச் சொல்லிச் சிபார்சுக் கடிதம் ஒன்று பெற்று வந்து கொடுத்தேன். அதனை வாங்கி வைத்துக் கொண்டு வடமாநில வித்தியாதரிசின் அனுமதி பெற்றுக் கொண்டு வருமாறு கூறினார். அவனுக்கு அனுமதி வழங்குவதை எப்படியும் தட்டிக் கழித்துவிட எண்ணு கின்றார் என்பதனை நான் விளங்கிக் கொண்டேன். வித்தியாதரிசியின் அனுமதிக் கடிதம் என்னால் பெற்றுக் கொள்ள இயலாது என அவர் கருதி இருக்க வேண்டும்.
நான் அகில இலங்கைச் சிறு பான்மைத் தமிழர் மகாசபைத் தலைவர் M.C. சுப்பிரமணியம் அவர்களிடம் சென்று விஷயத்தை எடுத்துச் சொன் னேன். அவர் உடனே புறப்பட்டு வந்து, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இருந்த கல்வி அலுவலகத்துக்கு என்னை அழைத்துச் சென்று அனுமதிக் கடிதம் பெற்றுத் தந்தார். அந்தக் கடிதத்தைக் கொண்டு சென்று ஹாட்லிக் கல்லூரி அதிபரிடம் கை யளித்தேன். அதன் பின்னரே கிறிஸ்தவ ரான அந்த அதிபர் எனது தம்பி அந்தக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு அனுமதி வழங்கினார்.
யாழ்ப்பாணத்துக் கிறிஸ்தவர்களின் அசல் பிரதிநிதியாக அந்த அதிபர் அப்பொழுது விளங்கினார். கொழும்புத் துறை ஆசிரிய கலாசாலையில் உள்ள கிடந்த யாழ்ப்பாணத்துக் திருநெல்
டங்கிக் கிறிஸ்தவ மனப்பாங்கு,

வேலிச் சைவர்களின் வருகையுடன் சிறிது சிறிதாகச் சிலரிடத்தில் தலை காட்டத் தொடங்கியது.
கொழும்புத்துறை ஆசிரிய கலா சாலையில் இலங்கை சாஹித்திய மண்ட லத்தின் அனுசரணையுடன் இலக்கிய விழா ஒன்று நடைபெறுவதற்கு ஏற் பாடாகி இருந்தது. அந்த விழாவில் கலா சலை ஆசிரிய மாணவர்கள் சார்பில் நாடகம் ஒன்றினை அரங்கேற்றும் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண் டேன். விழாவில் மேடையேற்றுவதற் கென தரகர் குடும்பம்’ என்னும் நகைச் சுவை நாடகம் ஒன்றை எழுதினேன். அந்த நாடகம் பெயரளவில் ஒரு நகைச் சுவை நாடகமாக இருந்ததேயன்றி, உண்மையில் சமூகத்தை விமரிசனம் செய்யும் நாடகமாகவே அது இருந்தது. அந்த நாடகத்தின் பிரதான பாத்தி ாங்கள், தரகரும், அவர் மனைவியும் தான்! தரகர் பாத்திரத்தில் நானும், மனைவி பாத்திரத்தில் யாழ்ப்பாணத்தில்
17
வாழ்ந்த கத்தோலிக்கரான ஆசிரிய
மாணவர் ஒருவரும் நடிப்பதற்கான ஏற்பாட்டினைச் செய்து ஒத்திகையும் பார்த்து வந்தோம்.
பெண் பாத்திரம் ஏற்று நடிக்க இருந்தவர் வயதில் என்னிலும் மூத்தவர். திருமணமானவர். கடந்த ஒராண்டு காலம் நல்ல நட்புறவுடன் பழகி வந்தவர். அந்த நாடகத்தில் பெண் பாத்திரம் ஏற்று நடிப்பதற்குத் தானாகவே விரும்பி முன் வந்தவர். நாடகம் மேடை ஏறுவதற்கு இடையில்
č? DeGeo: আৰু
ஒரு தினம் மாத்திரம் இருக்கையில் அவர் தான் நடிக்க முடியாதெனத் திடீ ரென மறுத்து விட்டார். இன்னொரு வரைத் தயார் செய்வதற்குக் காலம் போதாதென நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் முடிவாக மறுத்து நின்றார். அவர் அவ்வாறு மறுப் பதற்கான காரணத்தையாவது சொல்லு
tDTTg)! முடியாதெனத் தட்டிக் கழித்தார். அப்பொழுதுதான் நான் தெளிவாக
கேட்டேன். அதனையும் கூற
விளங்கிக் கொண்டேன். அந்த முடிவு அவர் ஒருவர் மட்டும் தனித்து நின்று எடுத்த முடிவல்ல. இன்னும் சிலர் சேர்ந்து அந்தரங்கமாக எடுத்த முடிவு என்பதை அறிந்து கொண்டேன். அதனை எனக்கொரு சவாலாக எடுத்துக் கொண்டு செயற்படத் தீர்மானித்தேன்.
கலாசாலை முதலாம் வருடத்தில் மலையகம் இரத்தினபுரியைச் சேர்ந்த சாமி என்னும் ஆசிரிய மாணவர் ஒருவர் இருந்தார். அவர் கலாசாலைக்கு வந்த காலம் முதல் என்னுடன் நெருக்கமாக அன்புடன் பழகி வந்தார். அவரது நல்லி யல்புகள் காரணமாக எனக்கும் அவர் நெஞ்சுக்கு நெருக்கமான ஒருவராக இருந்தார். அவர் தோற்றத்திலும் பெண் பாத்திரம் தாங்கி நடிப்பதற்குப் பொருத்தமான ஒருவராகக் காணப் பட்டார். அவரை மெல்ல அணுகினேன். நாடகம் மேடை ஏறுவதற்கு இடையில் ஒருநாள் மாத்திரம் இருக்கிறது. எப்படி நாடக வசனங்களை மனனஞ் செய்வது? எப்படி நடிப்பது? என அவர் தயங் கினார். அவர் தயக்கம் நியாயமானது

Page 11
என உணர்ந்து கொண்டு, அதனை எவ்வாறு தீர்க்கலாமெனத் தீவிரமாகச் சிந்தித்து, இறுதியில் ஒரு மார்க்கம் கண்டேன்.
அந்த நாடகத்தில் தரகர் மனைவி சுளகில் அரிசியைப் போட்டு புடைத்த வண்ணம், அடுக்களைக்குள் இருந்து வெளி வருவதாகச் சிறிய மாற்றம் ஒன் றினைச் செய்தேன். அதன் பின்னர் நாடக உரையாடல்களைக் காகிதத்தில் எழுதி, கைகளில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் சுளகுக்குள் காகி தத்தை மறைத்து வைத்து, அந்தப் பிரதியை இரகசியமாகப் பார்த்துப் பார்த்துப் பேசி நடிக்க வைத்தேன். நாடகம் சிறப்பாக அரங்கேறி நடந்து முடிந்தும் பலரம் பாராட்டைப் பெற்றது.
பொன். கந்தையாவின் பாராளு மன்றத் தேர்தல் காலத்தில் உண்டான கே.டானியலின் உறவு விடுபடாமல் இக் காலத்திலும் தொடர்ந்து ருந்தது. டானியல் இடையிடையே கடிதம் எழுதினார். ‘டானியல் கதைகள்’ வெளியீட்டு விழா அழைப்பு கிடைத்து விழாவுக்குச் (03.02.1963) சென்றேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எடுத்த இலக்கிய விழா - அங்கத் தவர்கள் மாத்திரம் கலந்து கொண்ட இரண்டாம் நாள் நிகழ்வு (08.05.1963) யாழ்ப்பாணம் மாநகர சபை மண்ட பத்தில் நடைபெற்ற சமயம், அங்கு சென்றிருந்த அங்கத்தவரல்லாத என்னை மண்டபத்துக்குள் டானியல் அழைத்துச் சென்று தன்னருகே இருக்க வைத்துக்
கொண்டார்.
கொண்டி
18
எங்கள் ஆசிரிய கலாசாலையில் கலாசாலை நடைமுறைக் காரியங்களைச் செவ்வனே செய்து முடிப்பதற்கென ஒரு மந்திரி சபை இருந்தது. பிரதம மந்திரி, கல்வி மந்திரி, உணவு மந்திரி, சுகாதார மந்திரி எனப் பல மந்திரிகள் ஆசிரிய மாணவர்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப் பெற்றிருந்தார்கள். அந்த மந்திரி சபையின் பிரதம மந்திரி யாக, மாணவத் தலைவன் சந்தியாப் பிள்ளை இருந்தார். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் இள வாலையில் திருமணஞ் செய்து வாழ்ந்து வந்தார். அவர் என்னுடைய நல்ல நண்ப ராகவும் இருந்து வந்தார். அந்த மந்திரி சபை முழுவதற்கும் பொதுச் செயலாள ராக நான் தெரிவு செய்யப்பட்டிருந் தேன். பிரதமர், செயலாளர் ஆகிய இருவருக்கும் மாத்திரம் அந்த மந்திரி சபைக்குப் பொறுப்பான சகல காரியங் களிலும் தலையிடுவதற்கான உரிமை இருந்து வந்தது.
உணவு எப்பொழுதும் மனிதனுக் குப் பிரச்சினையான ஒன்றுதான்! மச்ச மாமிசம் உண்ணும் கிறிஸ்தவர்கள், மச்ச மாமிசம் உண்ணாத சைவர்கள், இரு வகையான உணவுகளையும் ஏற்று உண்ணும் சைவர்களென முத்திறத்தார் ஆசிரிய மாணவர்களாக அங்கு இருந் தார்கள். இந்த வகையான பிரிவுகளால் அங்கு எந்த விதமான சிக்கலும் அப்பொழுது உருவாகவில்லை. சிக்கல் யாழ்ப்பாணத்து மண்ணுக்கே உரித்தான குணாம்சத்துடன் வேறு வகையாக

19
அங்கு உருவானது. திருநெல்வேலியில் இருந்து வந்தவர்களே அந்தச் சிக்கல் களுக்கெல்லாம் மூலகாரணமாகப் பின் னணியில் இருந்து செயற்பட்டார்கள்.
என்னோடு படித்துக் கொண்டிருந்த மாணவர்களுள் இருவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள். அவர்களுள் ஒருவர் மல்லாகத்தைச் சேர்ந்தவர். மற்றையவர் அச்சுவேலியைப் பிறப்பிட மாகக் கொண்டவர். ஆசிரிய மாண வர்கள் உணவு உண்ணும் மண்டபத்துள் பல மேசைகள் போடப்பட்டிருந்தன. மல்லாகத்தைச் சேர்ந்த நண்பர் இருந்த மேசையில் அவருக்கு அண்மையிலுள்ள அளவெட்டியைச் சேர்ந்த ஒரு சைவம் இருந்தார். மல்லாகத்தைச் சேர்ந்த ஒடுக் கப்பட்ட சாதிக்காரன் தனது மேசையில் அமர்ந்திருந்து உணவு உண்பது அள வெட்டியைச் சேர்ந்த சைவம் மனதில் கொதிப்பை மூட்டி விட்டது. அந்த மனக்கொதிப்பை உள்ளே அடக்கி வைத்துக் கொள்ள இயலாமல், மல்லா கக்காரனைத் தனிய, அந்தரங்கமாகச் சந்தித்து, அந்த மேசையை விட்டு மாறி, இன்னொரு மேசைக்குப் போய் உட்காருமாறு அவர் தெரிவித்தார்.
மல்லாகத்து நண்பர் அந்த விடயத்தை இரகசியமாக எனது செவியில் போட்டு வைத்தார். அந்தக் காலகட்டம் அகில இலங்கைச் சிறு பான்மைத் தமிழர் மகாசபை எழுச்சி யுடன் செயற்பட்ட காலம். M.C.சுப்பிர மணியம் அதன் தலைவராக இருந்தார்.
நான் மகாசபைக்காரன் என்பது ஆசிரிய
ஒEகை கலாசாலையில் பரவலாக எல்லோருக் கும் தெரிந்திருந்தது. அளவெட்டிக் காரரின் சாதி அகங்காரம் வெளிப்பட்டு வீச்சுடன் செயற்படத் தகுந்த சூழ் நிலைகள் அப்பொழுது இல்லை என்ப தனை நான் உணர்ந்திருந்தேன். ஆயினும் எனக்குள் நகைப்போடு கூடிய ஒருவகைச் சினம் மனதில் எழுந்தது. எனது ஆசிரியர்களான க.முருகேசு, சைவப் புலவர் சி.வல்லிபுரம் ஆகியோர் 1929, 1930ம் ஆண்டுகளில், ஆசிரிய கலாசாலைகளில் முகம் கொடுத்த
சமாசனம், சமபோசனப் பிரச்சினை
இன்னும் முற்றாகத் தீர்ந்து போய் விடாது, மூன்று தசாப்தங்களின் பின்னும் அதன் மிச்ச சொச்சம் உறுத்த லாக வெளிப்படுவதை நான் உணர்ந்து கொண்டேன்.
நான் அந்தத் தகவல் அறிந்து ஒரு வார காலம் கழிந்திருக்கும். கலாசாலை உணவு மண்டபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருநாள் மதிய உணவு வேளை எல்லோரும் எங்கள் மேசையில்
உணவு அருந்திக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது அளவெட்டியைச் சேர்ந்த அந்த மாணவன் தான் உண்டு கொண்டி ருந்த உணவைத் தள்ளி விட்டுத் திடீரென எழுந்தார். 'ஆர் என்ரை கோப்பையை மாத்தி வைச்சது?’ எனக் கேட்டுக் கொதித்தார். உணவு உண்டு கொண்டிருந்த எல்லோரும் தங்கள் கோப்பைகளைக் கூறுகுறிப்பாகப் “என்ரை கோப்பையும் என வாய்விட்டுச்
பார்த்தார்கள். மாறிப் போச்சு?? சொல்லி சங்கடப்பட்டார் மல்லாகத்தார்.

Page 12
pegs);
அவர்கள் இருவரது உணவுக் கோப்பைகளுந்தான் மாற்றி வைக்கப்பட் டிருக்கின்றன என்பது சட்டென்று எல்லோருக்கும் புரிந்தது. அளவெட்டி மாணவன் மேற்கொண்டு உணவு உண்ணாது, கோப்பையைத் தூக்கிச் சென்று சோற்றை வெளியே கொட்டி விட்டுத் திரும்பினார். அன்று மாலை கலாசாலையில் இருந்து புறப்பட்டுச் சென்று, புதிய உணவுக் கோப்பை ஒன்று அவர் வாங்கி வந்தார். மல்லா கத்து மாணவன் உணவு உண்ட தனது பழைய கோப்பையை உடைத்து வெளியே விசினார்.
மல்லாகத்து மாணவனுக்கு உண்மையில் என்ன நடந்ததென்று தெரிய வராது. அவர்கள் இருவரினது உணவுக் கோப்பைகளும் எவ்வாறு இடம்மாறின? என்பதை அறிந்தவர் ஒரேயொருவர் இருந்தார். ஆனால் அவர் அதனை வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை.
அந்தச் சம்பவம் நடந்து முடிந்து சில நாட்கள் கழிந்த பின்னர் இன் னொரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சுவேலி மாணவன் உணவு மந்திரியின் கீழ்ச் செயற்பட்ட உணவுக் குழுவில் இடம் பெற்றிருந்தார். எங்களுடைய உணவுக் கோப்பைகளில் உணவு பகிர்ந்தளிக்கும் வேலையை அங்கிருந்த சமையற் காரர்கள் செய்வார்கள். காலை வேளை வகுப்புகள் ஆரம்பிக்கும் நேரம் உணவு பரிமாறி முடிக்காதிருந்தால், உணவுக் குழுவைச் சேர்ந்தவர்கள் உள்ளே போய்
20
சமையற்காரர்களுக்கு உதவியாக நின்று உணவைக் கோப்பைகளில் வைப் பார்கள். சில சமயங்களில் அச்சுவேலி யைச் சேர்ந்தவர் அந்தப் பணியைச் செய்து வந்தார். திருநெல்வேலியில் இருந்து வந்த சைவங்களுக்கு அது தெரியவந்த போது, அச்சுவேலிக் காரனைக் கண்டு, "நீ தொட்டளைந் ததை நாங்கள் என்னெண்டு சாப் பிடுறது? இனி அப்பிடிச் செய்யக்
கூடாது" என எச்சரிக்கை செய்தார்கள்.
அச்சுவேலி நண்பருக்குத் தனது மனக்குமுறலை வெளியில் எடுத்துச் சொல்வதற்கு இருவர் மாத்திரந்தான் அங்கிருந்தோம். ஒருவர் மல்லாகத்தார். மற்றையவர் நான். எங்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கு இதைப் போய் அவர் முறைப்பாடு செய்ய முடியும்? முதலாம் வருட மாணவர்களாக ஒடுக் கப்பட்ட சமூகத்தில் இருந்து இருவர் வந்திருந்தார்கள். அவர்களுக்கு அங்கு சிக்கல் உருவாவதை நாங்கள் விரும்ப வில்லை. நாங்கள் மூவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்கி , அதனைச் செயற்படுத்தத் தீர்மானித்தோம்.
ஒருநாள் காலை நாங்கள் மூவரும் உணவு மண்டபத்துக்குப் போனோம். அப்பொழுது சமையற்காரர்கள் இடியப் பங்களை எடுத்து கோப்பைகளில் வைப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந் அவர்களைத் தடுத்து அடுக்களைக்குப் போகும் வண்ணம் அனுப்பி வைத்தோம். அவர்கள் திரும்பிச் சென்று மதிய உணவு
தார்கள்.

21
தயாரிக்கும் வேலைகளில் துரிதமாக ஈடு பட்டார்கள். நாங்கள் மூவரும் மிக ஆறு தலாக இடியப்பங்களை எண்ணி எடுத்து கோப்பைகளில் வைக்க ஆரம்பித்தோம். உணவு மண்டபக் கதவுக்கு வெளியே நின்ற சக மாணவர்கள் நேரம் பிந்திப் போய்விட்டது என அவசரப்பட்டார்கள். முதலில் மணி அடித்து, கதவு திறந்து விட்ட பின்னரே, எல்லோரும் உள்ளே வருவது வழக்கம். உணவு முற்றாகப் பகிர்ந்து முடிப்பதற்கு முன்னர், அந்த மணியை அடித்துக் கதவை நான் திறந்து விட்டேன். அவர்கள் எல்லோரும் பார்க் கத் தகுந்ததாக எனது நண்பர்கள் இரு வரும் கோப்பைகளில் இடியப்பங்களை எடுத்து வைத்துக் கொண்டு நின் றார்கள். சாதிமான்களான சைவங்களும் மெளனமாக இருந்து உணவு உண்டு முடித்துக் கொண்டு மனப் பொரு மலுடன் எழுந்து சென்றார்கள்.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களின் பிறகு ஒருநாள் காலை நாங்கள் படுக்கையில் இருந்து எழுந்து பார்த்த போது, எங்களுடைய உணவுக் கோப்பைகள் அனைத்தும் வெளியே தூக்கிப் போட்டு அடித்து நொருக்கப் பட்டிருந்தன. அந்தக் கைங்காரியத்தைச் செய்து முடித்தவர் யார்? என்பது அன்றே எல்லோருக்கும் தெரிய வந்தது.
நெடுந்தீவில் பிறந்த வயதில் மூத்த ஆசிரியர்தான் அவர் அவர் என் மீது மிகுந்த அன்புள்ள ஒருவராக இருந்தார். எங்கள் கலாசாலையில் அப்பொழுது வயதில் குறைந்தவர்களாக இருந்த
DGG
இரண்டொரு மாணவர்களுள் நானும் ஒருவன். “மருமேன். மருமேன்” என்று அழைப்
என்னை எப்பொழும்
பார். "மகள் வளர்ந்து விட்டாள் மரு மேன். என்னை ஏமாத்திப் போடாதே!” எனப் பகிடி பண்ணுவார். சாதி வேறு பாடு பார்க்கும் உணர்வு அணுவுமில்லாத ஒருவர். மாலை வேளைகளில் கலா சாலை விட்டுத் தினமும் வெளியே செல்வார். திரும்பி வரும்போது தலை யில் தலைப்பாகை கட்டியிருப்பார். வாயில் மதுவின் வாடை அடிக்கும். பேச்சிலும் அது வெளிப்படும். சத்தம் போட்டுப் வலிந்து யாருடனும் சண்டை சச்சரவுகளுக்குப் போக மாட்டார். இரவு நேரம் நாங்கள்
பேசுவார்.
படிக்கும் மண்டபத்தில் எப்பொழுதும் எனது மேசைக்கு அருகே அவரது மேசை இருக்கும். நான் எதனைச் சொன்னாலும் அதனைக் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டு, பின்னர்தான் தான் அதனைச் செய்ததாக மறுக்காமல் அவர் மது வெறியில் அந்தக் காரியத்தைச் செய்த
ஒப்புக் கொள்வார்.
தாக எல்லோரும் கருதுவார்கள். சாதி
வெறி
காரணமாக புதுக்கோப்பை
வாங்கியவர்களுக்கு ஒரு பாடமாகவே,
கோப்பைக் ள் எல்லாம் அடித்து நொருக்கப்பட்டன. அந்தக் கோப்பை கள் அடித்து நொருக்கப்படுவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் யார்? என்பதை அவர் எந்தக் காலத்திலும் வெளியே சொல்லவில்லை.
வளரும்.

Page 13
22 சிலாபம் வீதியால் கொச்சிக்கடையைத் தாண்டி, தன்கொட்டுவ வழியாகப் பயணிப்போமானால் ஒர் அழகான சிறு கிராமம் தென்படும். கொட்டாற முல்லைதான் அந்தக் கிராமம். நாத்தாண்டி இதன் சிறிய நகர
மாகக் கருதப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து நாங்கள் குடும்பமாகவே ઈો દ્વo பொருளாதாரச் சூழல் காரணமாக இடம் பெயர்ந்து அங்கிருந்து வந்தபோது இந்தக் கொட் டாறமுல்லை என்ற அழகிய கிராமமே எங்கள் கண்களுக்குப் பட்டது.
அந்த ஊரில் ரவூப் நானா என்பவர் கொஞ்சம் பெரிய ஆள் மூளைசாலி ஆயிரம் பொய்யைச் சொல்லி யாவது ஐந்து வீடுகளைக் கட்டி விடுவார். எனது தந்தைக்கும் இவர் நண்பர் என்றபடியால் அவர் மூலமாக வாடகைக்கு இருப்பதற்கு அக்கர என்னும் பகுதியில் ஒரு பெரிய விடே கிடைத்தது.
என்பது மட்டுமல்ல நல்ல
இருபக்க வயல்வெளிகளுக்கு நடுவே ஒரு சிறிய மண்பாதை உண்டு. இந்த வழியாகச் சென்றுதான் அக்கர என்ற இடத்தை அடைய வேண்டும். கொட்டாற முல்லைச் சந்தியிலிருந்து நடந்து இப்பகுதிக்கு வருவது மிகத் தூரம் என்பதால் இவ்வூர் மக்கள் பெரும்பாலும் சைக்கிளையே பிரதான வாகனமாகப் பாவிப்பர். இவ்வூரில் இரண்டு பள்ளிவாசல்களும் ஒரு மதரஸாவும் உண்டு.
எப்போதுமே இயற்கை சூழ்ந்த இடமான இக்கிராமத்தை விட்டுப் பிரிய மனம் இடம் தராது எனலாம். அவ்வூரின் அமைதியான அழகைப் போலவே மக்களும் இருந்தனர். இவ்வூர்ப் பகுதியில் சாராயக்கடை ஒன்றைக் கூடக் காண
(Մ)ւգաngil.
நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்த ஊருக்கு வந்த புதிதில் எம்மை எங்கோ ஒரு காட்டில் கொண்டுபோய் விட்ட மாதிரியான உணர்வு எனது உம்மாவுக்கும் எனக்கும் இருந்தது. நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து திடீரெனக் கிராமிய வாழ்க்கைக்கு தாவியதால் ஏதோ ஒரு தவிப்பு மனதினில் இருந்தது. போகப் போகவே இவ்வூர் மக்களின் பழகல் முறை கிராமிய வாழ்க்கைக்கு என்னையும் உடன்பட வைத்தது. உடன் பட்டே ஆகவேண்டிய சூழ்நிலை!
 
 
 
 
 
 

எனக்குள் சில வித்தியாசமான கற்பனைகள் எழும். அந்த ஊர் வயல் வெளிகளையெல்லாம் தார் விதியாக எண்ணிக் கொள்வேன். இது ஒரு நகரமாக மாறினால் எப்படியிருக்கும் என நினைத்துப் பார்ப்பேன். (வேண் டாத கற்பனை)
"கொன்கிறீட் நகரமே என் கண் களில் வந்து போவது சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் போனது.
நாங்கள் இருந்த விட்டுப் பக்கத்தில் தென்னை மரங்களும், அப்பால் வயல் களும் தெரிந்தன. மின்சார ஒளிக்குப் பழக்கப்பட்ட நாங்கள் குப்பி லாம்பு வெளிச்சத்தை இங்குதான் அனுபவித் தோம்.
முதன் முதலாக அந்தக் கிராமத் துக்கு வந்து இறங்கி வீட்டினுள் நுழைந்த போது ஒரு பேய் வீட்டைப் பார்ப்பது போல் இருந்தது. அந்தள வுக்கு அது மிகப் பழைய வீடு மாலை இருட்டியதும் அங்கங்கே வீடுகளில் குப்பி லாம்புகள் கண் சிமிட்டின.
அவ்வேளை ஜீனத்தும்மா என்ற அந்த ஊர்ப் பெண் ஒருத்தி எம் நிலையை அறிந்து ஒரு குப்பி லாம் புடன் ஒடோடி வந்து திரியை நீட்டிப் பற்ற வைத்து, "பாவம் நீங்கள் இந்த ஊருக்குப் புது சேன். என்ன சரி உதவியென்றா கேளுங்கோ’ என்று சொல்லிவிட்டுச் சென்றது இப்போதும் மங்கலான வெளிச்சத்தில் நினைவுக்கு வருகிறது. அவ்வாறான ஓர் இருள்
23
Ş (සංඝ অন্য சூழலிலும் சில விடயங்கள் என்
காதையும், கண்ணையும் கவர்ந்தன.
அது நாய்களின் ஊளைச் சத்தங் களும், பளிச் பளிச்சென்று வெட்டி மறையும் மின்மினிப் பூச்சிகளின் காட்சியுமே!
எம்மோடு அந்தக் கிராமத்து மனிதர்கள் ஒட்டிப் பழகியதைப் போன்று ஜிம்மி என்ற நாயும் எமது வீட்டு வளவுக்குள்ளேயே சுற்றி நின்றது. ஜிம்மி" என்றழைத்தால் வந்து எதைப் போட்டாலும் சாப்பிட்டு விட்டுப் போகும். வாலை ஆட்டிக் கொண்டே எம்மைப் பார்த்துக் கொண் டிருக்கும். எவராவது எமது வீட்டு வாசல் பகுதியில் நின்று கொண்டிருந் தால் ஜிம்மி நன்றி விசுவாசத்தைக் காட்டுவதைப் போல் "வள். வள்." என குரைக்கும். சிலர் அந்த ஜிம்மியைத் தாக்கவும் முற்பட்டனர். நாம் அவ்வூரில் இருந்தவரை ஜிம்மியும் எம்மோடு இருந்தது.
ரவூப்நானா இடைக்கிடை வருவார். எனது வாப்பாவிடம் "ஊர் பிடிச்
சிருக்கா..? எனக் கேட்பார்.
வாப்பாவுக்கும் கிராமிய மண் சுகமாக இருந்திருக்கும் போல. 'ஒரு குறையும் இல்லை." என்று சொன் னாலும் மின்சார வசதி இல்லாத ஒரு குறை எனது வாப்பாவுக்கும் இருந் திருக்கும். அதை சாடைமாடையாக ரவூப்நானாவிடம் தெரிவிப்பார். மங்க லான லாம்பு வெளிச்சத்தில் தான்

Page 14
நாங்கள் படிப்பது எல்லாம். இது என் வாப்பாவின் மனதைக் கொஞ்சம் உறுத்தியிருக்கும். பாட்டுக் கேட்பதாக இருந்தால் கூட ‘எவரெடி பட்டறி” இல் லாமல் கேட்க முடியாது. வானொலியை ஒரு நாளைக்கு மூன்றுமணி நேரம்தான் பாவிப்போம். இப்போது போல் முழு நாளுமே தொலைக்காட்சியில் மூழ்கிய காலம் இல்லை அது.
பகலிலும் கூட அவ்வூரில் சில பெண்களும், ஆண்களுமாக வானொலி யில் பழைய பாடல்களைக் கேட்டபடி பீடி சுற்றுவார்கள். பீடி சுற்றுவது இங்கு ஒரு தொழிலாகவே கருதப்பட்டது. ஆயிரம் பீடிகள் சுற்றினால் நூறு, நூற் றைம்பது ரூபாய் கிடைக்கும். இது அவர்களது அன்றைய, அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குப் போதுமானதாக இருந்தது. மற்றப்படி ஞாயிறு சந்தை வியாபாரத்துக்குச் செல்வார்கள். கொட்டாறமுல்லையில் அரிசி ஆலைகளும் உண்டு.
இக்கிராமத்தில் இருந்தபோதுதான் பொழுதுபோகவில்லையென்றால் கதைகள் வாசிக்கும் ஆர்வம் ஏற் பட்டது. பாடசாலை செல்லும் போது கால் றாத்தல் பாணில், பருப்புக் கறி வைத்துப் பாடசாலைக்கு நானும் எனது தங்கையும் கொண்டு செல்வோம். பாடசாலை மிகத் தூரத்தில் இருந்ததால் சில வேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்தபடி பாடசாலைக்குச் செல்வோம். இதில் மாலிக் என்ற நண்பன் தினமும் என்னுடன் வருவான். தினசரி பாட
24
சாலைக்குச் செல்லும் வழியில் ஒரு சிறு தேநீர்க் கடையில் சமூன் என்பவர் இருப்பார். அவரிடம் தான் எங்கள் அன் றாட கால் றாத்தல் பாண் வாங்குவது வழக்கம். பாடசாலை முடிந்த கையோடு வீட்டுக்கு வந்ததும் உம்மா சாப்பாடு பரிமாறுவார். வயிற்றுப் பசி முடிந்ததும் அறிவுப் பசிக்கு ஏதாவது தீனி வேண் டுமே! அக்காலத்தில் தமிழில் சித்திரக் கதைகள் நிறைய வரும். அதை ஆவலோடு வாசிப்பேன். "வேதாளன்’ என்ற சித்திரக் கதை அந்நாளில் சிறுவர்
மத்தியில் மிகப் பிரபலம். "உனக்கு
எனக்கு" என சண்டையிட்டு வாசிப்
போம். ரத்னபாலா, அம்புலிமாமா என்ற சிறுவர் இதழ்களையெல்லாம் என் னுடைய வாப்பா கொழும்பிலிருந்து வாங்கி வந்து தருவார். இப்படியொரு குதூகலம். இன்றைய தலைமுறைக்கு கிடைக்க வாய்ப்பில்லை. சனிக்கிழமை வாப்பா வரும் நாளை நாம் ஆவலோடு முடுக்கு வழி என்ற இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருப்போம். வாப்பா வந்ததும் குஷியாகி விடுவோம்.
"வாப்பா. வாப்பா.. என்ன கொண்டு வந்தீங்க?..” என்று எனது தங்கை சுட்டியும் சுட்டித்தனமுமாக வாப்பாவிடமிருந்து எப்படியோ பிஸ்கட் பார்சலைப் பறித்துவிடுவாள்.
அன்றைய இரவில் எங்கள் தகப்ப னாரை நாங்கள் எல்லோரும் சூழ்ந்து நச்சரித்துக் கொண்டிருப்போம். எதற் காக...? இன்றைய காலத்தில் சில பிள்ளைகள் தமது தந்தையர்களிடம் டி.வி. வாங்கித் தரும்படி கேட்பார்கள்.
 

அல்லது கம்பியூட்டர் வாங்கி கேட் பார்கள். மெகா தொலைக்காட்சி நாட கங்களில் மூழ்கி வாசிப்பு ஆர்வத்தையே மறந்து போய் போலல்லாது அன்று நானும், சகோதரர்களும் எமது தந்தையிட்ம் கதை
விடுவார்கள். அது என்
சொல்லக் கேட்போம். எங்களது மைமூன் உம்மும்மா ரவை மஸ்கட் செய்து கொண்டு வர நாங்கள் எமது தந்தையை மொய்த்தபடி பாயில் அமர்ந்து கதை கேட்போம். அதே மங்க லான குப்பி லாம்பு வெளிச்சத்தில் இலக்கியத் தொடர்கதைகள் ஆரம்ப மாகும்.
மகாபாரதம், இராமாயணம், விக்கிர மாதித்தன் கதைகள், சிந்துபாத் கதை எனச் சொல்லி எமது அறிவுக்கு விருந் தூட்டுவார் எங்களுடைய வாப்பா. ஒவ் வொரு சனியிலும் கதை சொல்லும் கதை தொடரும்.
காலப்போக்கில் இந்தக் கிராமிய வாழ்க்கை இரண்டு வருஷங்களோடு சுருங்கிக் கொண்டது. மீண்டும் நகர வாழ்க்கைக்குப் புறப்பட்டோம். யாழ்ப் பாணத்துக்கல்ல! கொழும்புக்கு!
இரைச்சல், சத்தங்கள், வாகனப் புகை. சன நெரிசல். இப்படியொரு இயந்திர வாழ்க்கையில் சிக்கியபோது மீண்டும் அன்றைய கிராமிய மண் வாழ்க்கைச் சுகம் என் நினைவுகளுக்குள் வந்து, வந்து போனது. அதுவே அம் மண்ணை மீண்டும் மிதிப்பதற்கு ஒரு பயணியாக என்னை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றது.
25
ä? gigs): অস্ত্ৰ
தனியாக அங்கே பஸ்ஸில் இறங்கி னேன். இறங்கியதும் எனக்குத் தெரிந்த முகங்கள், “எப்போ வந்தே?. வாருங் ளேன் வீட்டுக்கு. சாப்பாடு அடிச்சுட்டு போக ஏலும்.” என இனிய உபசரிப்பு கள் எனக்காகக் காத்திருந்தன. நண்பன் மாலிக்கைத் தேடிச் சென்றேன். ஆனால் அவன் வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்று விட்டதாக ஊரார் சொன்னார் கள், அன்று அவன் ஒரு மாணவனாக இருந்தாலும் இன்று ஒரு குடும்பஸ்தன்!
இருபக்க வயல் நடுவே நடக் கிறேன். முன்பிருந்த செம்மண் தரை இல்லை. தார் ஊற்றிய வீதியாக மாறி விட்டது. சில முகங்களும் மாறி யிருந்தன. அக்கரப் பகுதிக்கு மின் வெளிச்சம் வந்துவிட்டது. எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப் பின் ஆர்ப்பாட்டம். கிராமங்களையும், தமிழகத்தின் உதவாச் சரக்குகள் கட்டிப் போட்ட நிலை. வயல்களை நிறைத்து வீடுகள் கட்டும் திட்டங்கள், ஆள். ஆள் கைக்குள் செல்போன் சிணுங்கல் கள், எஸ்.எம்.எஸ். தூதுகள். பீடி சுற்றிய கைகள் மூடிய கைகளாய். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப் படலம். பழைய பாடல்கள் மறந்து புதிய தாளம் போடும் இளைய கூட்டம் என கிராமிய வாசனை மிகவும் மாறியே இருந்தன. வயல்களும், அதில் வசிக்கும் பறவைகளும் கிராமத்தை அடையாளமிட்டுக் கொண்டிருந்தன.
நான் பார்த்த பழைய கிராமமாக அது இல்லை!

Page 15
இக்கடிதத்தை - பிலிப்பைன்ஸ் நாட்டில் "சிபு என்ற தீவிலிருந்து எழுதுகின்றேன்.
எதிர்பாராத விதமாக - மனைவி மாலதி யின் தந்தையார் - இங்கே மகனிடம் வந்த இடத்
தில் காலமானார். 10ம் திகதி. துபாயிலிருக்கும் மகள்
சூரியகுமாரியும் உடனே வந்து சேர்ந்தார். மாமனாரின் பூதவுடலை کی سرے இங்கேயே தகனம் செய்தோம். எங்கோ பிறந்து எங்கோ மறைந்து போனார். இந்தத் தீவின் மக்கள், (நான் - மாலதி - சூரியகுமாரி - விக்னேஸ்வரன் - காருண்யன் (சூரியாவின் குழந்தை) எம் ஐவரையும் தவிர - அனைவரும் எம் மொழி தெரியாத அன்புள்ளங்கள். இந்த மரணச் சடங்கில் நான் பல உண்மைகளைப் புரிந்து கொண்டேன்.
எவருமே அருகில் இல்லாத நேரத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது. (மாரடைப்பு) எனினும், வேற்று நாட்டவன், வேற்று மொழி பேசுபவன் என்ற எண்ணம் ஏதும் இன்றி - நாம் வந்து சேர்வதற்குள் - சகல மரியாதைகளுடன் எமது இறுதி அஞ்சலிக்காக ஒரு மரண சேவை நிலையத்தில் பூதவுடலைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.
எனக்குப் பிரமிப்பாக இருந்தது. உலகெங்கும் வக்கிரம் பிடித்த அரசியல் சக்திகள் ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு தமது ஆணவத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும் - ஒரு தீவின் மக்கள் - எமது மொழியோ, எமது பண்பாடோ, கலாசாரமோ தெரியாத நல்ல உள்ளம் படைத்த இந்த பிலிப்பைன்ஸ் மக்கள் - எனது மாமனாரைச் சகல மரியாதைகளுடனும் தகனம் செய்வதற்கு வழங்கிய ஒத்துழைப்பு கண்டு நெகிழ்ந்து போனோம். (தமிழ் முகமே காணக் கிடைக்காத ஒரு அந்நியத் தீவில் தமிழர் ஒருவருக்கு இறுதி அஞ்சலி)
மைத்துனர் விக்னேஸ்வரன் தன்னந்தனியே இருந்து கஷ்டப்படுவார் என்று நினைத்து நானும் மாலதியுடன் அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்தேன். சுமார் 15 மணி நேரப் பயணம். முழுநாளும் நித்திரை இல்லை. மாமனார் ஆழ்ந்த நித்திரை கொண்டு விட்டார்.
அஸ்தியுடன் இன்னும் சில நாட்களில் சிங்கப்பூர் செல்கின்றோம்.
இறுதியாக - கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் திகதி எனது மகளின் திருமணத்தின் போது எனது மாமனார், கவிஞர் அம்பி, நீங்கள், நீர்கொழும்பு இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம், வயலின் வி.கே.குமாரசாமி, தினகரன் ஆசிரியர் சிவாசுப்பிரமணியம், தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் அந்தத் திருமண மண்டபத்தில் முன் வரிசையில் அமர்ந்து மணமக்களை ஆசீர்வதித்த காட்சி நினைவுக்கு வருகிறது.
அந்த நினைவுகளைத் தந்துவிட்டு மாமனார் போய்விட்டார். எனக்கு பல மாமனார்கள் இருந்தனர். ஆனால் எனக்கு அவர்களிடம் பயபக்திதான் அதிகம். நட்புணர்வு இல்லை.
ஆனால் இந்த மாமனார் Dr. பஞ்சநாதன் எனக்கு நல்ல நண்பராகவும் திகழ்ந்தார். ஒன்றாக அமர்ந்து பல விடயங்கள் பேசியதுடன், நாம் ஒன்றாகச் சியர்ஸ்' சொல்லி மதுவும் அருந்தியுள்ளோம். தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு. மனைவிக்கு எதிர்பாராத சோகம்.
 
 
 
 
 
 

உங்களுக்கு இதனையெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். எழுதுகின் றேன். முன்னர் அனுப்பிய கடிதம் உதயம் இதழ் நறுக்குக் கிடைத்திருக்கும் என நம்பு கிறேன். அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு நறுக்கும் அனுப்புகின்றேன்.
- முருகபூபதி
பிலிப்பைன்ஸ்
கடந்த முதலாம் திகதி சிங்கப்பூரி லிருந்து திரும்பினேன். நான் பிலிப்பைன்ஸி லிருந்து எழுதிய கடிதம், சில பத்திரிகை நறுக்குகள் கிடைத்திருக்கும் என நம்பு கிறேன்.
எனது மாமனாரின் இறுதிச் சடங்கு களைப் பிலிப்பைன்ஸில் முடித்துக் கொண்டு, ஏப்ரலில், 21ம் திகதி சிங்கப்பூர் வந்தோம். மாலதியை அங்கே விட்டுவிட்டு, நான் மாத்திரம் மலேசியாவுக்குப் பஸ்ஸில் சென்று
x
திரும்பினேன்.
சிங்கப்பூர், மலேசியாவில் பத்திரிகை யாளர்கள், எழுத்தாளர்களைச் சந்தித்தேன். சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கும் சென்றேன். மிகவும் பிரமாண்டமானது ஒரு மாடியில் தமிழ்ப் புத்தகங்கள். 24 உப - நூல் நிலை யங்களும் சிங்கப்பூரில் - தேசிய நூல் நிலை யத்தின் பொறுப்பில் இயங்குகின்றன. தங்கள் நூல்களும் அங்கு இடம்பெற்றுள்ளன. நவீன தொழில்நுட்ப உதவியுடன் கனணியில் டொமினிக்" என்ற எழுத்துக்களை தட்டிய வுடன் உங்கள் நூல்கள் எங்கு எங்கு இருக் கின்றன, அவற்றின் பெயர்கள் முதலான விபரங்கள் திரையில் வருகிறது. அங்குள்ள எழுத்தாளர்கள் உங்களை அன்புடன் விசாரித்தனர். பிலிப்பைன்ஸ், மலேசியா,
27
சிங்கப்பூர் பயனம் எதிர்பாராததுதான்.
passes
எனினும் சில அனுபவங்கள் கிடைத்தன.
அது பற்றிய விபரமான இலக்கிய மடல் விரைவில் மல்லிகைக்கு அனுப்புவேன். இரண்டு இதழ்களில் பிரசுரிக்கலாம். மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைச் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்குக் கிடைக்கச் செய்ய சில ஆக்கபூர்வமான நடவடிக்கை களும் மேற் கொண்டேன். கட்டுரையில் விபரம் எழுது வேன். அவர்கள் தங்களுடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளுவார்கள்.
மெல்பர்ன் வந்ததும், வீரகேசரியில் தங்கள் படம் பார்த்தேன். கம்பன் விழாவில் தாங்கள் கெளரவிக்கப்பட்டிருப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
மல்லிகை ஆண்டுமலர் குறித்த எனது பார்வையைப் பதிவு செய்த உதயம் இதழின் பக்கம் இதனுடன் அனுப்புகிறேன்.
"உதயம் 8 ஆயிரம் பிரதிகள் விநியோ
கிக்கப்படுகிறது. தவிர, இணையத்தளங் களிலும் பரவியுள்ளது.
சிங்கப்பூரில் ஒரு இணையத்தளம் (ஈழ இவர்
இலங்கையில் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர்.
நாதன் என்பவர் நடத்துகிறார்.
இலக்கிய ஆர்வலர். பொறியியலாளர்) மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை, அந்த இணையத்தளத்தில் பதிவு செய்ய விரும்பு கிறேன் எனச் சொன்னார். உங்களுடன் தொடர்பு கொண்டபின் விபரம் சொல்வதாகக் கூறிவிட்டு வந்தேன்.
சோமகாந்தன் மறைவு - சோகமானது. சிங்கப்பூரில் தகவல் கிடைத்ததும் அவரது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்தேன்.

Page 16
& 3 paigSp5
অ
மெல்பர்ன் வந்ததும் பத்மாவுக்கு கடிதம் எழுதினேன். சோமகாந்தன் பற்றி விரிவான கட்டுரை இனித்தான் எழுதுவேன்.
- முருகபூபதி அவுஸ்திரேலியா.
மல்லிகையின் ஒரு எழுத்தைக் கூட மிச்சம் வைக்காமல் வாசித்து முடித்து விட்டேன். ஆனாலும் சின்னதொரு நெருடல். மார்ச் மாத இதழ் என் கரம் வந்தது ஏப்ரல் மாதத்தில். இனிவரும் காலங்களில் காத்திருப்பை மல்லிகை தவிர்க்கும் என நம்புகிறேன்.
கம்பலாரிதி இ.ஜெயராஜ்ஜின் கவி வரி கள் அட்டைப்படக் கட்டுரைக்குப் புத் துயிரைத் தந்தது. ஈழத்து நாவல் வரலாறும் வளர்ச்சியும்", "கஜல் சில அறிமுகக் குறிப்புகள் எனக்குள் புது அறிவைத் தந்தன. ஈழத்தின் முதல் நாவல் "அஸன்பேய்" என் றல்லவா என் மூளை பதித்து வைத்திருந்தது. திருத்திக் கொண்டதில் திருப்தியடைகிறேன். மொத்தத் தில் மூளையைச் சலவை செய்து, இன்னும் இன்னும் மல்லிகை எழுதத் தூண்டியது. ‘கந்தப்பு வாத்தியார் கண் கலங்க வைத்து விட்டார். ‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் - பாலா சங்குப்பிள்ளையின் வரிகள் எத்தனை உணர்வுப்பூர்வமானவை. உயர் வானவை. இந்த வரிகளை மெய்ப்பிப்பதற் காக அயராது உழைக்கும் மல்லிகைக்கு என் ஸ்நேகயூர்வ வாழ்த்துக்கள்.
- ஏ.எஸ்.ஷர்மிளா அனுராதபுரம்
மல்லிகை மார்ச் இதழ் கண்டேன். அட்டையில் நண்பர் முரீதரசிங் கம்பீரமாகக்
28
காட்சியளிக்கிறார். கம்பவாரிதி புத்தக வித்தகன் என நாமமிட்டு எழுதியது சத்திய மான வார்த்தைகள்.
தங்கத் தேரோடும் - செட்டியார் தெருவில் அறிவுக்கு வழிகாட்டும் மூன்று மாடிப் புத்தக கடையைத் திறந்து. இலங்கையில் தமிழ் புத்தகாலயத்திற்குப் புது
வரவு கூறியவர் முீதரசிங்.
எழுத்தாளர்களை இன்முகத்தோடு வரவேற்பவர். இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை வாங்கி அதற்குரிய தொகை யையும் தருபவர்.
தந்தை தொடக்கி வைத்ததைத் துலங்க வைப்பவர்.
எழுத்தாளர் சுந்தரராமசாமியை நமது படைப்பாளிகள் கண்டு கொண்ட அளவு எழுத்தாளர் தனுஷ்கோடியைக் கண்டு கொள்ளவில்லை. அவருக்காக இரண்டு வரி அனுதாபச் செய்திகள் கூட நமது ஊடகங்கள் போடவில்லை. ஆனால் 41-வது ஆண்டு மலரில் அவரது இழப்புக் குறித்து அஞ்சலிக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மார்ச் இதழில் நான் எழுதிய குறிப்பையும் வெளி யிட்டதற்கு நன்றி.
- அந்தனி ஜீவா
கண்டி
ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கியப் பரப்பில் கணிச மான, கனங்காத்திரமான இலக்கிய அறு வடைகளுக்குப் பின்னணியாக இருக்கும் மல்லிகையின் நாற்பத்தோராவது ஆண்டு மலரும் ஒரு முக்கிய மைற்கல்லாகும். கடந்த சில மாதங்களாக மல்லிகை மாதத்தின் 3ம், 4ம் வாரங்களிலே கைகளில் தவழ்கிறது. இந்தக் காலதாமதத்தின் மற்றொரு கவலை

யான விடயம், 41வது ஆண்டு மலர் (ஜனவரி 2006) பெப்ரவரியிலேயே கரம் கிட்டியதாகும். ஆழிப்பேரலை (சுனாமி) உருவெடுத்த கடந்த 2004ஆம் ஆண்டு, அன்று 40வது ஆண்டு மலர் வெளிவந்த அந்தத் துடிப்பு, 41வது ஆண்டு மலரில் துவண்டு விட்டது போலும், எது எவ்வாறாயினும், 41வது ஆண்டு மலரின் அட்டைப் படமே மல்லிகையின் இலக்கியத் தரத்தை உமிழ்கிறது. எனவே உள்ளே எவ்வாறு இருக்கும் என்பது விமர்சனத்திற்குப் புறம்பான ஒன்று.
வழமையான மல்லிகை ஆசிரியரின் கடிதம், இம்முறை சற்று ஆழமான, மரபு வழி வந்த இயல்புகளுக்கு எதிரான ஒரு இலக்கிய சிருஷ்டியின் குரலாக இருக்கிறது.
புனைகதைகளும், மத்திய வர்க்கத்தி னரது புலக்காட்சியும் என்ற கட்டுரை மிக முக்கியமான குறியீட்டுக் கட்டுரை. இலக் கியத்துள் புனைகதை இலக்கியத்தின் நகர்வு தொடர்பான பூரண அறிவைத் தருகிறது. தெளிவத்தை ஜோசப்பின் துரைவி அவர் களுக்கான அநுபவ அஞ்சலிக் குறிப்பு நீண்டு செல்வதாயினும் மிக எளிய வார்த்தைக் கோலங்கள் எம்மை நெருடுகிறது. இதுவும் ஒரு இலக்கியப் பதிவாகிறது. திக்குவல்லை கமாலின் "கடிதம் தொடர்பான ஆதங்கம் நிதர்சனம், தொடர்பாடலின் முதுகெழும்பு முறிந்து வருகிறது என்பதை புலப்படுத்தி யிருக்கிறது. நல்லைக்குமரன் அவர்களின தும், திக்குவல்லை ஸப்வான் அவர்களின தும் மொழிபெயர்ப்புகள் இதழுக்கு அணி சேர்த்திருக்கின்றன. நாச்சியாதீவு பர்வீனின் கட்டுரையும் கவித்துவமாக முகிழ்கிறது.
அவர்களும் அந்த மரணமும் தவிர்ந்த
இதர சிறுகதைகள் யதார்த்தத்தை இழை யோட விட்டிருக்கின்றன. குறிப்பாக தெணி
29
665); অস্ত্ৰ
யான், கெகிராவ ஸ்ஹானா, செ.யோக நாதன், மு.பவரீர் ஆகியோரின் படைப்புகள்
கவனத்தை ஈர்த்தன. த.ஜெயசீலனின்
கவிதையும், ஏ.எஸ்.சர்மிளாவின் கவிதையும் 'கவிதைகள்' என்று என்னை கவர்ந்தன. கனிவுமதியின் துளிப்பாக்களும், அவரின் ஒவி பங்களும் (மதிபுஷ்பா), ஹைக்கூவாகவும், கவித்துளிகளாகவும் துலங்குகின்றன. கவிதைகளுக்கு ஒவியம் எத்துணை துலங் கல் குறியீடு என்பதற்கு கனிவுமதியின் முனைப்பு எடுத்துக் காட்டுகின்றது.
- எல்.வளிம் அக்ரம்
ஈழத்து நாவல் வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் செங்கை ஆழியான் அவர்கள் தொகுத்து தந்த 451 நாவல்களின் பட்டியல் மல்லிகையின் மார்ச் இதழுடன்
நிறைவடைந்திருக்கின்றது.
இப்பட்டியல் ஒரு தொகுப்பாக வெளிவர வேண்டும். தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, தமிழ் மக்கள் பற்றியோ ஆவணங்கள் இருக்க வேண்டும். ஆவணம் இல்லாவிடில் கோவணம் இல்லாதது போலத்தான். அது
தான் எம்முடைய தற்போதைய நிலை.
- அருள் கொழும்பு 13.
பேராசிரியர் வீ. அரசு அவர்களின் தொ.மு.சி. குறித்த முன்வைப்புகள் ஆழ மானவை. அவரை பல்வேறு தளங்களில் பார்க்க அரசு உதவியிருக்கிறார். செங்கை ஆழியானின் கட்டுரைகள் மீள் பதிப்பு போல் வருகிறது. அவரது நூல்களில் இதே குறிப்புகள் உள. வேறு வகையில் இக் கட்டுரையை கொண்டு செல்வது நல்லது என்பது என் அபிப்பிராயம்.
- மா.ரூபவதனன்
பதுளை.

Page 17
30
இலக்கியத்தை வாழ்வாக நேசித்தவர்
- - - டொமினிக் ஜீவா
மறைந்த நண்பர் சோமகாந்தனிடம் உள்ள சிறப்பான குணம் சகோதர எழுத்தாளர்களைத் தொடர்ந்து நேசித்தது.
அவர் ஒர் இடதுசாரியல்ல! மார்க்ஸியத்தை அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டவருமல்ல. ஆனால், தொடர்ந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கட்டுறுதியுடைய செயல் வீரனாகக் கடைசி வரையும் இயங்கி வந்துள்ளவராவார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மிகத் தீவிரமாக இயங்கி வந்த காலகட்டங் களில் எல்லாம் இ.மு.எ.ச.வைப் பற்றிப் பல்வேறு வகைப்பட்ட எழுத்தாளர்கள் பல வகையான குற்றச்சாட்டுக்களை அதன் மீது சுமத்தி, அதனது செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்தி, அவதூறு செய்த காலங்களில் எல்லாம் மிக உறுதியாக நின்று, இலக்கியப் பிற்போக்குக் கும்பலின் கபடத்தனமான பிரசாரங்களையெல்லாம் முறி யடித்து, ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் மேன்மைக்காக உழைத்து வந்தவர், அவர்.
ஈழத்துச் சோமுவாகச் "சுதந்திரன்’ காலகட்டத்தில் இலக்கிய உலகில் புகுந்த இவர் சோமகாந்தனாக மலர்ந்து, முடிவில் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயங்கு சக்தியாகத் திகழ்ந்து அதே பெருமையுடன் நம்மை விட்டு மறைந்து விட்டார். வரதர், நந்தி, சொக்கன், நான் உட்பட எழுத்தாளர்களினது மணி விழாக் களை வெகு விமரிசையாகக் கொண்டாட வழி சமைத்து, இந்த மண்ணின் சிறப்புக் காகப் பாடுபட்ட படைப்பாளிகளைக் கனம் பண்ணிக் கெளரவித்து மகிழ்ந்தவர். 75-ல் பண்டார நாயக்கா சர்வதேச மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற எழுத்தாளர் மகாநாட்டிற்கு இவரளித்த பங்களிப்பு அபாரமானது.
இவரது முதற் சிறுகதைத் தொகுதியான "ஆகுதி மல்லிகைப் பந்தல் வெளியீடாகவே பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து, இலக்கிய வட்டாரத்தில் பேசப்பட்டது வரலாற்றுச் செய்திகளில் ஒன்றாகும். உடல் நலன் சீரற்று இருந்த சமயத்தில் கூட, கனடா சென்று ஈழத்து இலக்கியத்தின் இன்றையப் பெறுமதியை அங்கு வாழ் புலம்பெயர்ந்த மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்த ஓர் இலக்கிய ஆத்மா சோமு அவர்கள்.
நண்பனே போய் வா! உனது அடிப்படை இதய விருப்பத்தை இந்த மண்ணில் வென்றெடுப்போம். இது உறுதி!
 
 
 

31 Alpg52560 புனைகதைப் படைப்பாளிகள்
- செங்கை ஆழியான் க. குணராசா
6. ஆனந்தன்
1939 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ஈழகேசரியில் ‘தண்ணித் தாகம்’ என்றொரு அற்புதமான சிறு கதை வெளிவந்தது. அதனை ஆனந்தன் என்ற பண்டிதர் க.சச்சி தானந்தன் எழுதியிருந்தார். சாதிக் கொடுமையும் தீண்டாமையும் தலைவிரித் தாடிய ஒரு காலகட்டத்தில் அவற்றிற்கெதிரான குரலாக இச்சிறுகதை அமைந்தது. சாதிக்கொடுமைக்கு எதிரான ஈழத்தின் முதற் சிறுகதை இதுவே! ஈழத்தின் தரமான சிறுகதை ஒன்றினை முதன் முதல் எழுதிய பெருமை இவருக்குரியது. 1938இல் சிறுகதைத்துறையுள் ஆனந்தன் பிரவேசித்தார். ஆனந்தன் என்ற புனைப் பெயரில் 1939 - 1944 காலகட்டத்தில் ஈழகேசரியில் எட்டுச் சிறுகதைகள் எழுதியுள்ள போதிலும் அவை குறிப்பிடத் தக்கனவாயில்லை. தண்ணிர்த் தாகம் ஒன்றின் மூலமே சிறுகதையுலகில் தன்னைத் தக்க வைத்துள்ளார்.
பண்டிதர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் 1921இல் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தில் பிறந்தார். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி என்பனவற்றில் கல்வி கற்றார். க.சச்சிதானந்தன் லண்டன் சிறப்புப் பட்டதாரி. பின்னர் லண்டன் முதுகலை மானியுமாவார். இவர் ஒரு மதுரைப் பண்டிதர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியக் கலாநிதிப் பட்டம் வழங்கித் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. பலாலி ஆசிரிய கலாசாலையின் உளவியல் விரிவுரையாளராக விளங்கினார். சோதிடக் கலையில் பாண்டித்தியம் பெற்றவர். இன்று ஓய்வு பெற்ற நிலையில் 85ஆவது அகவையில் வால்மீகி போன்ற துறவு வடிவில் ஒய்வில்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

Page 18
岛 (DG6608 32
ஆனந்தன், யாழ்ப்பாணன், பண்டிதர், சச்சி, க.சச்சிதானந்தன் ஆகிய புனைப் பெயர்களில் இலக்கியம் படைத்துள்ளார். கவிதைத்துறை அவருக்குக் கைவந்த கலை, கவிதைகள், சிறுகதைகள், ஒரு நாவல், ஏராளமான கட்டுரைகள், நாடகங்கள், காவியங்கள் என ஆக்கியளித்துள்ளார். அவருடைய கவிதைத் தொகுதி ஆனந்தத்தேன்’ என்பதாகும். ‘சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும். எந்தன் சாம்பல் தமிழ் மணத்து வேக வேண்டும்’ என்ற புகழ் பூத்த பாடலின் ஆசிரியர். “யாழ்ப்பாணத்துக் காவியம்’ ‘பருவப்பாலியர் படும்பாடு’ என்பன ஆசிரியரின் காவியங்களாம். தமிழர் யாழியல், மஞ்சுகாசினியம் என்பன ஆய்வு நூல்களாகும். பின்னையது புதிய கோணத்தில் எழுதப்பட்ட இலக்கண நூலாகும். அவை அனைத்தும் தனித்து ஆய்விற்குட்படுத்தப்படல் வேண்டும்.
புனைகதைப் படைப்பாளி என்ற வகையில் அவர் எழுதிய சிறுகதைகளும் ‘அன்னபூரணி’ என்ற ஒரேயொரு நாவலுந்தாம் அடங்குகின்றன. 1942இல் சச்சிதானந்தன் ஈழகேசரியில் ‘அன்னபூரணி’ நாவலைத் தொடராக எழுதினார். ஈழத்தின் ஆரம்ப நாவல்கள் 47இல் வீரசிங்கன் (1905), நொறுங்குண்ட இருதயம் (1914), நீலகண்டன் (1925), அழகவல்லி (1926), கோபால நேசரெத்தினம் (1926) ஆகிய ஐந்து நாவல்கள் தேறிய நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1942இல் அன்னபூரணி வெளிவந்தது. ஆனால் அக்காலத்தில் தமிழில் வெளிவந்த நாவல்களுக்கு இணையாக வைத்து எண்ணப்படும் பாங்கில் அமையவில்லை. ஆனால் நாவலிலக்கித்தினை முன்னெடுக்க 1949 - 1950களில் முன்வந்த சம்பந்தன், கசின், வ.அ.இராசரெத்தினம், தேவன் - யாழ்ப்பாணம் என்போர் வரிசையில் சச்சிதானந்தம் ஒருவராவார்.
தனது பதினெட்டாவது வயதில் ‘தண்ணிர்த்தாகம்’ என்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராக அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்காகப் போர்க் குரலோடு சிறுகதை படைத்த இந்தப் படைப்பாளி மதுரைப் பண்டிதராகியதும் கவிஞராகினார். புனைகதைத்துறை, இன்னமுஞ் சிறப்பாக வந்திருக்கக் கூடிய ஒரு படைப்பாளியை இழந்தது. கவிதைத் துறை அவரைச் சுவீகரித்துக் கொண்டது.
கலாநிதி, பண்டிதமணி, கவிஞர் க.சச்சிதானந்தன் நம்மிடையே வாழ்ந்து வரும் எங்களது முதுசொம். 1939இல் சமூக அடக்குமுறைக்கு எதிராக எரியும் பிரச்சினை ஒன்றினைச் சிறுகதையாக எழுதி ஈழத்தின் சிறுகதைச் செல்நெறியைத் தடம் திருப்பி விட்டார். அவர் அச்சிறுகதையை எழுதிய காலச் சூழ்நிலையையும் அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளையும் ஒப்பு நோக்கும் போது தண்ணிர்த் தாகத்தின் உச்சத்தினை மறுக்க முடியாது.

33
7. சம்பந்தன்
fழத்துச் சிறுகதை வரலாற்றினை ஆராய்வோர் ஈழத்துச் சிறுகதைத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட திரிமூலர்கள் எனக்கொள்ளும் . சி.வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், சம்பந்தன் என்போரில் - தனித்துவமான போக்கினையும் படைப்பாற்றலையும் கொண்டிருந்தவர் சம்பந்தனாவார். 1913இல் பிறந்த சம்பந்தன் என்ற கதிருஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்து பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் பாடம் கேட்டுப் புடம் போடப்பட்டவர். ஆசிரியப் பணியில் பயிற்றப்பட்ட தமிழாசிரியராக ஈடுபட்டு இந்தியத் தமிழறிஞர் களுடன் நெருங்கிய தொடர்பும் அதன் விளைவான பாதிப்புகளையும் உள வாங்கியிருந்தவர். சம்பந்தனின் சிறுகதைப் பிரவேசம் அக்காலத்துத் தென்னிந்தியச் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் ஏற்படுத்திய அவசரத்தில் பிறந்தவை. முக்கியமாகக் கலைமகள், கிராம ஊழியன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவையாக விளங்கின.
சம்பந்தன் தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துலகில் பிரவேசித்தார். 1939ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘தாராபாய்’ என்ற சிறுகதை கலைமகளில் வெளிவந்தது. அச்சிறுகதையைத் தொடர்ந்து அவள் எழுதிய இருபது வரையிலான சிறுகதைகள் கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. தாராபாய், விதி, புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, தூமகேது, மஹாலக்சுமி, மனித வாழ்க்கை, சபலம், மனிதன், சலனம், மதம், துறவு ஆகிய சிறுகதைகள் கலைமகளிலும், அவள், இரண்டு ஊர்வலங்கள் ஆகியன மறுமலர்ச்சிலும், அவன் கிராம ஊழியனிலும், கலாஷேத்திரம் ஈழகேசரி யிலும் பிரசுரமாயின.
அல்லயன்ஸ் கம்பனி வெளியிட்ட கதைக் கோவைத் தொகுதியில் சம்பந்தனின் விதி என்ற கலைமகள் சிறுகதை இடம் பிடித்திருந்தது. சிற்பி தொகுத்து வெளி யிட்ட 'ஈழத்துச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் இவரது மனிதன் என்ற சிறுகதை உள்ளது. செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட மறுமலர்ச்சிச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் அவரின் அவள், இரண்டு ஊர்வலங்கள் என்ற இரண்டு சிறுகதைகள் இடம் கொண்டுள்ளன. 1967இல் செம்பியன் செல்வனும் செங்கை ஆழியானும் அவரின் சிறுகதைகள் ஏழினைத் தேடிப் பெற்று ‘விவேகி' சஞ்சிகையின் ஒரிதழைச் சம்பந்தன் மலராக வெளியிட்டனர். அதன் பின்னர்

Page 19
page); 34
அவரின் ஏனைய சில சிறுகதைகளையும் சேர்த்துச் ‘சம்பந்தன் சிறுகதைகள்’ என்ற தொகுதியைச் செங்கை ஆழியான் வெளியிட்டார். அண்மையில் சம்பந்தனின் இருபது சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுத் துறவு’ என்ற சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளது.
“தேர்ந்தெடுத்த சொற்களை வைத்துக் கொண்டு ஓரிரண்டு பாத்திரங்களை நடமாடச் செய்து அற்புதமான சிறுகதைகளைப் படைக்கும் கலை அவரிடம் இலாவகமாக அமைந்துள்ளது. எண்ணிக்கையில் நம்பிக்கை வைக்காது தரம் ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு அற்புதமாக எழுதுகிறார்’ என இரசிகமணி கனக செந்திநாதன் குறிப்பிட்டுள்ளார். ‘இவரின் கதைகளைப் படிக்கும்போது சுத்த மனதுடன் கூடிய ஆத்மபலத்தின் தவமே அவையெனக் கண்டு கொள்ளலாம். இவரின் உரைநடை கற்பனை வளம் மிக்கது. ஒவ்வொரு சொற்களும் தேவை கருதிப் பொருத்தமான இடங்களில் அழகாகக் கோவை செய்யப்பட்டுள்ளன’ எனச் செம்பியன் செல்வன் குறித்துள்ளார்.
சம்பந்தன் ஆக்கிய ஒரேயொரு நாவல் “பாசம்’ என்பதாகும். 1947இல் ஈழகேசரியில் இந்த நாவல் தொடராக வெளிவந்தது. கல்லூரி மாணவியர் இருவருக்கும் ஆசிரியர் ஒருவருக்குமிடையிலான முக்கோணக் காதல் கதை இதுவாகும். காண்டேகரின் அக்கால நாவல்களின் பாதிப்பு இதில் இருப்பதாக நா.சுப்பிரமணியம் குறித்துள்ளார். இருபதிற்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாவலையும் எழுதிய சம்பந்தன் பிற்காலத்தில் “சிறுகதைகள் அமர இலக்கியமாகா. உரைநடை இலக்கியத்திற்கு அமரத்துவமில்லை’ என்றார். அதனால் அவர் முப்பது வருடங்களுக்கு முதலே சிறுகதை எழுதுவதைக் கைவிட்டுக் காவியம் இயற்றுவதில் ஈடுபட்டார். அவ்வாறு பிறந்த காவியம்தான் ‘சாகுந்தல காவியம்’ என்பதாகும். ‘இலக்கியம் சத்திய நெறிப்படுவது. சத்தியமாகிய பண்புகள் பிரதிட்டை செய்யப்பட்ட கோயில்' என்றார் சம்பந்தன்.
இதுவரை சாகுந்தல காவியத்திற்காகச் சம்பந்தன் பேசப்படவில்லை. ஈழத்து இலக்கியத்தில் சிறுகதைத் துறையின் மூலவர்களில் ஒருவராகவே பேசப்படுகின்றார். சம்பந்தனின் துறவு, மதம் என்ற சிறுகதைகள் என்றும் கருத்திற்கு எடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

8. சி. வைத்தியலிங்கம்
fழத்தின் தமிழ்ச் சிறுகதைதுறைக்குப் புதுநீர்ப் பாய்ச்சிய சி.வைத்தியலிங்கம் ஏறக்குறைய 25 சிறுகதைகள் எழுதி யுள்ளார். 1939ஆம் ஆண்டு ஈழத்துச் சிறுகதை உலகிற்கு ‘ஏன் சிரித்தார்?’ என்ற கலைமகள் கதையுடன் அவர் காலடி எடுத்து வைத்தார். இவருடைய சிறுகதைகள் தென்னிந்தியப் பத்திரிகைகளை மனதிற் கொண்டு எழுதப்பட்டவை அதனால் தூய தமிழ்நடை பயன்படுத்தப் பட்டுள்ளது. அவரின் சிறுகதைகள் சரித்திரக் கதைகளாவும் சமூகக் கதைகளாகவும் உள்ளன. கலைமகள், ஈழகேசரி, ஆனந்தவிகடன், கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் அவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ரவீந்திரன் என்ற புனைப் பெயரிலும் எழுதியுள்ளார்.
சி.வைத்தியலிங்கம் தனது பதினைந்தாவது வயதில் எழுத ஆரம்பித்தார். முப்பைந்தாவது வயதில் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். 1939 - 1956 வரையிலான காலகட்டத்தில் அவருடைய சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மின்னி மின்னி மறைந்த வாழ்க்கை, கோட்டை இடிந்தது. விதவையின் இருதயம், இரவு கழிந்தது, நெடுவழி, என் காதலி, இப்படிப் பல நாள், உள்ளப்பெருக்கு, கடல் கடந்து வந்த சிலை, சுபாசினி, புல்லுமலையில், மரணத்தின் நிழல் ஆகிய பன்னிரண்டு சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. ஏன் சிரித்தார்? களனி கங்கைக் கரையில், பார்வதி, தியாகம், நந்தகுமாரன், ஏமாளிகள், பூதத்தம்பிக் கோட்டை, அழியாப் பொருள், பைத்தியக்காரி, மூன்றாம் பிறை ஆகிய பத்தும் கலைமகளில் வெளிவந்தன. கங்காகிதம் கிராம ஊழியனிலும், பாற்கஞ்சி ஆனந்த விகடனிலும் பிரசுரமாயின. 1990இல் இவருடைய சிறுகதைகளில் பதினேழு தொகுக்கப்பட்டு ‘கங்கா கீதம்’ என்ற பெயருடன் வெளிவந்துள்ளன.
சி.வைத்தியலிங்கத்தின் சிறுகதைகளில் சரித்திரக் கதைகள் இலங்கையர் கோனைப் போலவே தமிழகப் பத்திரிகைகளை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. இவரின் சமூகக் கதைகள் இலங்கைக் களத்தையும் மக்களது வாழ்க்கை நெறி களையும் வைத்து எழுதப்பட்டுள்ள போதிலும் இந்த மண்ணின் வாழ்வை ஆழமாகச் சித்திரிக்கவில்லை. மக்களின் பாசாங்கற்ற பேச்சு வழக்கு இவரால் கைக்கொள்ளப் படவில்லை. சி.வைத்தியலிங்கத்தின் நெடுவழி, பாற்கஞ்சி, உள்ளப் பெருக்கு ஆகிய மூன்று சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் பங்களிப்புச் செய்துள்ளன. வைத்தியலிங்கத்தின் சமூகக் கதைகள் பெரும்பாலும் காதலையும்

Page 20
ဒွိဒ္ဓံန္တိ 36 স্পেস্ குடும்ப உறவு நிலைகளையும் கருவாகக் கொண்டவை. சமுதாய சீர்திருத்ததையோ மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரல்களையோ அவை கொண்டிருக்கவில்லை.
வைத்தியலிங்கத்தின் சிறந்த சிறுகதையென ஆனந்த விகடனில் வெளிவந்த பாற்கஞ்சியைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றின் ஏழைத் தாயையும்". பாற்கஞ்சிக் கேட்கும் அவளது பிள்ளையையும் தத்ரூபமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் இச்சிறுகதை சித்திரிக்கின்றது.
9. கோ. நடேசைய்யர்
நன்றி. அந்தனி ஜீவா
மலைநாட்டின் முதல் மூத்த தமிழ் புனைகதை ஆசிரிய ராகக் கோநடேசைய்யர் இனங்காணப்பட்டுள்ளார். அவரது எழுத்துலகக் காலம் ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் களான இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்திய லிங்கம், ஆனந்தன் முதலானோரின் காலகட்டமாக விருப்பதால் அவரையும் ஈழத்தின் முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராகக் கருத வேண்டுமென்ற கருத்து நிலை அவ்வளவு தூரம் வலிமையற்றதாக இருப்பதற்குக் காரணம் அவர் சிறு கதைத் துறையில் தொடர்ந்து ஈடுபடாமையும் ஒரேயொரு சிறுகதையை மட்டும் எழுதியிருப்பதுமாகும். எனினும் அச்சிறுகதை சாதாரணமான சிறுகதைகளிலும் பார்க்கத் தரம் உயர்ந்ததாயும் எழுதப்பட்ட காலகட்டத்தின் மாந்தரையும் சூழலையும் சிறப்பாகச் சித்திரிப்பதாகவும் இருப்பதால் கோ.நடேசைய்யரைப் புனைகதைப் படைப்பாளிகளின் வரிசையில் சேர்க்காது ஒதுக்கிவிட முடியாதுள்ளது.
கோதண்டராமர் நடேசைய்யர் தஞ்சாவூரில் பிறந்து, 1920இல் இலங்கைக்கு வந்து தோட்டத் தொழிலாளரின் முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர். அம்மக்களுக்காகத் தொழிற்சங்கம் ஒன்றினை முதன் முதல் அமைத்துப் பாடுபட்டவர். பத்திரிகையாளராக விளங்கியது மட்டுமன்றி அரசியலில் அம்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியல்வாதியானவர். கிளர்ச்சிக்காரர் என அக்கால அரசினரால் அழைக்கப்பட்டவர்.
1947இல் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகையின் முதல் ஆசிரியர் கோநடேசைய்யர் ஆவார். சாதாரண மக்களிடம் அரசியலில், ஞானத்தைப் பரப்ப வேண்டியது முதற் கடமையாகும் எனச் சுதந்திரனின் முதல் இதழில் குறித்துள்ளார். அவர் எழுதிய ஒரேயொரு சிறுகதை ‘திரு ராமசாமி சேர்வையின் சரிதம்
 
 

37 665);
என்பதாகும். தமிழ்நாட்டின் பஞ்சம் காரணமாகத் தாய்க்கும் தெரியாமல் ராமசாமி இலங்கைக்கு வேலை தேடி வருகிறான். கண்டிப் பிரதேசத்தில் தேனும் பாலும் ஓடுவதான கற்பனைகளுடன் வந்திறங்குகிறான். அவன் அவ்வாறான எண்ணத்துடன் கப்பல் ஏறுவதற்குக் காரணம் தோட்டத்துக்கு ஆள் சேர்க்கும் கங்காணி ஒருவனின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கியமைதான். கண்டியில் கால்களைப் பதித்ததும் அவனது கற்பனை சிதறுகிறது. இந்தக் கருவை நடேசைய்யர் மிக எளிமையாகத் தன் சிறுகதையில் விபரித்துள்ளார். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு எவ்வாறு தொழிலாளர்களைக் கொண்டு வந்தார்கள் என்பதை அறிய உதவும் ஆவணமாக இச்சிறுகதை விளங்குகின்றது.
கோ.நடேசைய்யரின் கதை சொல்லும் பாங்கு அக்காலகட்டத்துக் கதை மரபினை ஒட்டியதாக அமைந்துள்ளது. கதையின் தொடக்கத்தில் கதைக் கருவை நெகிழ்த்தும் பாங்கில், 'ஒருவன் தன் உழைப்பால் எவ்விதம் உயர்நிலையை அடையலாம் என்பதைப் பற்றி விளக்க ஒரு நண்பரது சரித்திரத்தைச் சொல்ல விரும்புகிறேன்' என ஆரம்பமாகின்றது. மேலும் இக்கதை இராமசாமிச் சேர்வையின் பிறப்பிலிருந்து ஆரம்பித்து பெரிய கங்காணியாக உயர்ந்தது வரை விபரிக்கின்றது. ஆனால் இச்சிறுகதையில் தான் ஏற்றுக் கொண்ட கருப்பொருளை வேறுவிதமாக அவரால் கூறிவிட முடியாது. அவர் இதனைச் சிறுகதை என்று எண்ணி எழுத வில்லை. அவரது வழமையான பல கட்டுரைகளுடன் ஒன்றாக ஆனால், கதாம்சத்துடன் எழுதியதால் சிறுகதை முன்னோடிகளில் எண்ணப்பட வேண்டிய வராகிறார்.
N ص
வருந்துகின்றோம்
தோழர் ஐ.ஆர்.அரியரத்தினம் - அரியம் எனத் தோழர்களால் அழைக்கப்பட்டவர் - சமீபத்தில் கொழும்பில் காலமானார். இவர் நெருக்கடியும் சிரமமும் மிக்க காலகட்டத்தில் வடபகுதிக் கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் பிரதேசச் செயலாளராகக் கடமை புரிந்தவர். மல்லிகை ஆரம்பித்த சமகாலத்தில் அதன் வளர்ச்சிக்கென நாற்பது ரூங்ா தந்துதவியவர். அன்னாரது இழப்பு உழைக்கும் மக்களுக்குப் பெருந்துயர் தருவதாகும்.
அவரது இழப்பால் துயருற்றிருக்கும் தோழரினது குடும்பத்தினரது துயரத்தில் மல்லிகையும் பங்கு கொள்கின்றது.
- ஆசிரியர் لمحے ܥ

Page 21
38
உலக மயமாக்கலின் விளைவால் எம்மை நாமே இழந்து கொண்டிருக்க o எமது கிராமங்கள் எங்களை விட்டு bO கண்ணுக்கெட்டாத தொலைவில் இருப்ப தாய் உணர்கிறேன். பல கிராமங்கள் O O இன்று கிராமங்களாக இல்லை. ஒடி
O நாடிருப்புறவியல் விளையாடிய மாமரத்தடியும், நடந்து வந்த வயற்கட்டும் இன்று இல்லை. d 0 A S6))க்குரியனவும் ஆனால் இருக்கிறது. 40 மாடிச் சாந்துக்
கட்டடங்கள், பல வாகனங்கள், கணினி
d - p 0 கவனிக்கப்பட கள, இரைச்சல் இவைகள் atsati. உண்மைதானே 'பழையன கழிதலும்
d y வேண்டியவையும் புதியன புகுதலும் காலத்தால் வழுவல".
எங்கள் பண் பாட்டின் அடித்தளம் எங்கள் கிராமங்களிலேயே இருக்கிறது. w இன்கா " வழக்கங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்று முன்பு இருந்ததாய்ச் சொல்கிறார்கள்" என்ற பதிலுக்கு உரியனவாய் ஆகிவிட்டன. இதை அறியவோ அல்லது அடுத்த தலைமுறைக்கு இது குறித்த செய்திக் குறிப்புகளை யாவது கொடுக்கவோ நாட்டாரியலும், நாட்டுப்புற கோட்பாட்டியலும் மிகுந்த அவசியமான ஒன்றாக இருக்கின்றன.
16ம் நூற்றாண்டிலேயே நாட்டார் வழக்காற்றியல் குறித்த தேடல் தொடங்கியது. இதைத் தொடக்கியவர்கள் பின்லாந்தியர். பின்னர் 18ம் நூற்றாண்டில் ஜேர்மனி யர்களும் இதில் அக்கறையாக ஈடுபட்டனர். இவ்விரு செயற்பாடுகளும் அரசியல் காரணங்களும், அதுசார் தேவைப்பாடுகளாலுமே சாத்தியமாகின. ஒரு அமைப்பாக 1832ல் 'ஃபின்னிஸ் நாட்டார் வழக்காற்றியல் கழகம் தொடங்கப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்டு இன்று உலகளாவிய ரீதியில் மிகவும் வளர்ச்சியடைந்த துறையாக நாட்டார் வழக்காற்றியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாம் இன்று இத்துறையில் எங்கு நிற்கிறோம் என்பது மிக முக்கியமானதொரு வினா. இலங்கையில் மேற் கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மேலைத்தேயக் கோட்பாடுகளையும் கருத்தேற்றங் களையும் மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டவை. அனேகமானவை மாலி நோவ்ஸ்கியின் செயற்பாட்டுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருச் கின்றன. அவை தாண்டிய விரிவான பாதையில் எமது கோட்பாட்டுத் தளமும் சிந்தனைத் தளமும், ஆய்வுத் தளமும் பயணிக்கவில்லை என்பது மிகவும் வருத்தத் திற்குரியது. எமக்கெனத் தனியான ஒரு கோட்பாட்டையோ ஆய்வுமுறையையோ எம்மால் இதுவரை உருவாக்கவோ கட்டமைக்கவோ முடியவில்லை. எழுதப்பட்ட

39
ஆய்வுகளும் கருத்தேட்டங்களும் பொது
மக்களைச் சென்றடையவில்லை.
நாட்டுப்புறவியல் குறித்து அக் கறையோ, கவனமோ மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படாமையும் கூட நாட்டுப்புற வியல் தொடர்பிலான ஆய்வுகளுக்கு வித்திடவில்லை எனக் கூறமுடியும். வழமை போலவே மேலைத்தேய ஆய்வு முறைகளை எவ்வித கேள்வியோ, விமர் சனமோ இன்றி அப்படியே ஏற்றுச் செயல் முறையில் ஈடுபட்டிருப்பதால், ஈடுபடுவதால் எமக்கே உரித்தான பல தனித்துவங்களை நாம் இழக்க நேரிடு கிறது.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டுப் புறவியல் தொடர்பில் இருக்கின்ற பொதுமைப்படுத்தப்பட்ட அணுகுமுறை களில் இருந்து பல வகையான தனித்துவ மானதும் எமக்கே உரியதுமான ஆய்வு களைச் செய்ய முடியும். ஏனெனில் திடீ ரென ஒரு கோட்பாட்டை உருவாக்கி விட முடியாது. முதலில் ஒரு கருத்தாக இருந்து பல படிநிலைகளில் இறுதி நிறைவாகவே கோட்பாடு உருவாக முடியும். அதேவேளை உருவான கோட் பாடு முற்று முழுதாக இருக்கும் என எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் இவை நோக்கிய செயற்பாடு மிகவும் அவசியம். உலகம் சுருங்கி எல்லோரை யும் பொதுமையாக்கி சுயத்தை அழிக்கும் செயற்பாடுகள் முன்னிலை அடைந் துள்ள நிலையில் எமது வேர்கள் குறித்த அறிவும் தெளிவும் நிச்சயம் அவசியமா கின்றது.
666): VN
இன்றைய காலகட்டத்தில் நாட்டுப் புறவியலை ஆராயப் பலவகையான அணுகுமுறைகள் இருக்கின்ற போதும் எல்லா வகையான அணுகுமுறைகளை யும் பயன்படுத்தக் கூடிய நிலையில் நாங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வாய் வழி யாகச் சொல்லிவரப்பட்ட பல கதைகள் இன்று அருகிவிட்டன. எனவே நாட்டுப் புறவியலின் முக்கிய அம்சமாகக் கருதப் படுகின்ற நாட்டுப்புறக் கதைகள் குறித்து நிறைவான தகவலை எம்மால் சேகரிக்க முடியாமல் உள்ளது. இந்தக் குறை பாட்டை நாம் சூழலியல் கோட்பாடு மூலம் ஓரளவு நிவர்த்தி செய்யலாம். ஆனால் சூழலியல் கோட்பாடு நாட்டுப் புறக் கதைகளை ஒர் ஒலிப்பு முறையி லேயே பதிவு செய்ய வேண்டுகிறது. அதேபோலக் கதைகள் வாய்வழியாக வந்தமையால் அவை பல திரிபுகளையும், மாற்றங்களையும் நிச்சயம் கண்டிருக்கும். எனவே அவ்வாறான வழிவரும் ஆய்வு கள் முழுமை தராமல் போக வாய்ப் புள்ளது.
நாட்டுப்புறவியலின் இன்னுமொரு முக்கிய கூறுபாடு நாட்டுப்புற பாடல் கள். இவை ஈழத்தில் போதியளவில் பதி வாகியுள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. அதேபோல சடங்குகளும் நாட்டுப்புறத் தெய்வங்களும் கூட ஒரளவு பதிவுகளாக இருக்கின்றன என அறியக் கிடைக்கின்றது. ஆனால் ஈழத் தின் எல்லா மக்கள் தொகையினரையும் கொண்டதாக ஆய்வுகள் இல்லை என்பது வருந்தத்தக்கதே. நாங்கள் தவற விட்ட மிக முக்கிய அணுகுமுறை பெண்

Page 22
D&GSGB VN
வழக்காற்றியல் என்ற அணுகுமுறை என்றே கருதுகிறேன். அவர்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்
40
படாமையால் அவர்களிடம் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டிய பல விடயங்களை, தகவல்களை நாம் இழந்து விட்டோம், விரிவான ஆய்வுகளை மேற் கொள்ளாமை, அக்கறையின்மை என்பன வையே இன்றைய நிலைக்கு எம்மைத் தள்ளியுள்ளது.
நாட்டுப்புறவியல் தொடர்பான ஆய்வுகள் மிகவும் பிற்காலத்திலேயே (1970களில்) ஈழத்தில் தொடங்கப்பட்ட தால் மிகப் பழமையான தகவல்களை நாம் இழந்து விட்டோம். அதேபோல "சாதி வேற்றுமை’ என்ற ஒரேயொரு காரணத்துக்காக பல்வேறுபட்ட இனக் குழுமங்களின் வரலாறுகளும் பண்பாடு களும் கவனத்தில் கொள்ளப்ப்டாமல் விடப்பட்டிருக்கின்றன. எமது நாட்டுப் புறவியல் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய கொடுமை இதுவாகத்தான் இருக்க முடியும்! எங்கள் கிராமங்கள்
பற்றிய தெளிவும், பூரணமான தகவல் களும் இல்லாமைக்கும், சேகரிக்கப்
படாமைக்கும் இதுவே காரணம்.
எங்களது நாட்டுப்புற ஆய்வுகளை
தெளிவாகப் பார்ப்போமாயின் அவற்றில்
ஆய்வாளரின் கருத்துத் திணிப்பையும் பக்கச் சாரலையும், செய்திகள் இருட் டடிப்புச் செய்யப்பட்டிருப்பதையும் காண முடியும். ஈழத்தின் நாட்டுப்புற வியலுக்கு விளைந்த சாபக்கேடு என்றே இதைச் சொல்ல வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது நாட்டுப்புறவியல் ஆய்வுகள் நடுநிலை நோக்கோடு விரிவான தளத்தில் செய்யப்
படும் போதே எங்கள் வரலாறும் பண்
பாடும் அறியப்படுவதற்கும், பதியப் படுவதற்கும் உரிய களம் அமையும்
என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது.
"வரலாற்றில் இருந்து நாம் கற்ற ஒரே பாடம் வரலாற்றில் இருந்து நாம் பாட மெதனையும் கற்கவில்லை
என்பதே"
°8 ሽ❖
ΝΣ ܠܠܠܠܠ N N ܐܠ \ a N
``ဒ်ဗ်နုံ့ဖြိုဋ်၊ ဇွန်ု
|Հ NèRèK
QNÈSINIRINN § YSSSSS
སྔགས་སྔགས་སྔ་སྔགས་བུ་
3 PN ܠܓܠ
w YXX No N
§
A.
 
 
 
 
 
 
 
 
 

5fte-LDIrelaf'LTs
gglug LIGITs எஸ்.புண்ணியமூர்த்தி
- UT6)
ஓவிர்காவல்துறை, மக்கள் நேயம் மிக்க பலரை இந்நாட்டிற்கு இனங்காட்டி இருக்கின்றது. இதனால் இலங்கைப் படத்தில் அது ஒரு முக்கிய ஊராகக் கருதப்
படுகின்றது. கடந்த காலத்தில் இந்தியச் சரக்குப் படகுகளின் துறைமுகமாகவும் பயன்பட்டிருக்கிறது.
இதன் ஒரு கிராமம்தான் கரம்பொன். இலங்கையின் தமிழ் ஒலிபரப்புத் துறைக்கு முகமொன்றைக் கொடுத்த அமரர் சோ.சிவபாதசுந்தரம் இந்தக் கிராமத்த வரே. கரம்பொன் தந்த இன்னொரு ஒலிபரப்பாளர் அண்மையில் அமரரான எஸ்.புண்ணியமூர்த்தி.
ஒரு காலத்தில் செய்தி வாசிப்பிற்கு நிகரானவர்கள் ஆகாஷவாணியின் அறிவிப்பாளர்களே என்றொரு அபிப்பிராயம் வானொலி நேயர்கள் மத்தியில் இமயமாக உயர்ந்து நின்றது. அந்த நிலையைத் தகர்த்து, இலங்கை வானொலிச் செய்தியைக் காத்திருந்து கேட்கச் செய்தவர்களில் சுந்தா சுந்தரலிங்கம், வி.ஏ.கபூர், எஸ்.புண்ணியமூர்த்தி ஆகியோரது பங்களிப்பு வரலாறு படைத்தது. இதில் செந்தில்மதி மயில்வாகனமும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகும்.
அறிவிப்பில் கே.எஸ்.ராஜா எத்தகைய புதிய உத்தியொன்றைக் கையாண்டு, தனக்கெனப் பாரிய நேயர் பட்டாளமொன்றைத் தேடிக் கொண்டாரோ, அதற்கு நேர் எதிர்மாறான உத்தியொன்றைப் பாவித்து புண்ணியமூர்த்தி நேயர்களை ஈர்த்தார்.
கே.எஸ்.ராஜாவின் அறிவிப்பு மிகவும் வேகமானது. ஆனால் புண்ணியமூர்த்தி மிக ஆறுதலாக அந்தரப்படாது நிகழ்ச்சி அறிவிப்பை மட்டுமன்றிச் செய்தி வாசித்தலையும் செய்வார். செவிப்புலன் மந்தமானோர் கூட மூர்த்தியின் வாசிப்பை அட்சரந் தப்பாது கேட்க முடிந்தது. அத்தகையதொரு தனித்துவமான அறிவிப்புப் பாணியை அவர் தனதாக்கிச் செயற்படுத்தினார்.

Page 23
page): 42
இன்றைய அளவிற்கு ஐம்பதுகளின் முற் கூறில் தமிழ் மோகம் இருக்க வில்லை. ஆங்கிலமே கோலோச்சியது. ஆங்கிலத்தில் உரையாடுவது ஒர் அதி உயர் கெளரவமென மெத்தப் படித்த வர்கள் தமிழைப் புறக்கணித்த காலமது! இக்காலத்தில் மூர்த்தியின் செய்தி வாசிப்பில் நல்ல தமிழைக் கேட்க முடிந்தது. புதிய தமிழ்க் கலைச் சொற் களை தமிழ்ச் செய்தியில் அவர் உட் புகுத்தினார். அக்காலத்தில் ஆங்கில மொழி மூலம் கொடுக்கும் செய்திகளை அறிவிப்பாளர்களே தமிழ்ப்படுத்தி, வானொலிக்கென வடிவமைத்து வாசித் தனர். அவர்களது மொழிபெயர்ப்பு ஆங்கில - தமிழ் மொழி பெயர்ப்புக் கலைக்கும் புதியதோர் தோற்றத்தைக் கொடுத்தது. இதில் மூர்த்தியின் மொழி பெயர்ப்பிற்கு அதி உன்னத வரவேற்புக் கிடைத்தது.
இத்தகைமைதான் இவரை எழுபது களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் செய்திப் பிரிவின் பணிப்பாளராக உயர்ச்சி பெற வைத்தது.
சமய ஆசாரங்களில் மிகவும் அக் அக்காலத்துச் சைவப் பெரியார்களான முன்னாள்
கறை கொண்டவர்.
அமைச்சர் சேர்.கந்தையா வைத்திய நாதன் உட்படப் பல சைவப் பெரியார் களது செல்வாக்கைப் பெற்றவர். பெரும்பாலும் வெள்ளை ஆடை அணிகளையே விரும்புவார்.
வானொலி அஞ்சல் நேர்முக வர்ணனையிலும் முத்திரை பதித்தவர்.
கண்டதும் கேட்டதும் செய்திச் சுருள், வளரும் பயிர், எமது அதிதி, சுழலும் ஒலிவாங்கி, நாளைய சந்ததி, இசைச் சங்கமம், இசையும் கதையும் ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலி பரப்பியவர்.
ஒலிபரப்புக் கலையில் இவர் சோ.சிவபாதசுந்தரத்தைத் தனது ஆதர்சக் குருவாகக் கொண்டிருந்ததாகவும் கூறப் பட்டது.
நியாயத்தைத் தேடத் இந்த நேர்வழிப்
போக்கால் பல சங்கடங்களுக்குள் அகப்
எதிலும்
தயங்காதவர்.
பட்டவர். அவைகள் அனைத்தையும் வென்றெடுத்துத் தனது ஒலிபரப்புப் பணியைத் தொடர்ந்தவர்.
அறுபதுகளிலேயே இவருக்கு இருதய வியாதி இருந்ததாகப் பேசப் பட்டது. இருந்தும் அவரது வாழ்க்கை இருபத்தோராம் நூற்றாண்டு வரை நீட்சி பெற்றது அவரது தெய்வ விசுவாசத் தால்தானென அவரது அபிமானிகள் கூறுகின்றனர்.
எஸ். புண்ணியமூர்த்தி தனது வானொலி அநுபவங்களை "NEWS READ BY S.PUNNIYAMOORTHY' graip நூலில் பதிவு செய்திருக்கிறார். இது வொரு ஆங்கில நூல். இதைத் தமிழாக் கம் செய்து தமிழ்ச் சமூகத்திற்குக் கொடுப்பது இன்றைய வானொலிச் சமூகத்தின் கடமையாகும்.
எஸ்.புண்ணியமூர்த்தி வானொலி அறிவிப்பாளருக்கும் தயாரிப்பாளருக் கும் என்றும் ஆதர்சமாக இருப்பார்!

43 ஒரு கவிஞனின் பிரிவு
- கல்வயல் வே.குமாரசாமி
காரை செ.சுந்தரம் பிளளைக் கவிஞன் மேல் ஆராத காதலுடைய பெரியோர்கள் ஈரநெஞ்சென்னை இவண் இழுத்து வந்திருக்கு. நிலை நீரில் நிறை கலத்து; படுமாரித் துளி போல கலை மலிந்த தமிழ்க் கவிதை மலை நிமிர்ந்த செழும்பரப்பில் தேனாறு பாய விட்டோய் அன்புற்றார் அழ; நீத்து அகன்ற அருங்கவிஞ? இன்புற்றவேளை (இன்புற்ற ஏழை) முன் இன்றுன்னை முன் நிறுத்த; அன்றெம்மை அரவணைத்த நேரம் அரவணைத்து (அரவு அணைத்து) நின்று நிமிர்ந்து உன் சிறகு இடுக்குள்
ஒன்றிவிட
சென்ற நெறி நீழல் ஆறி நெடுமூச் செறிந்து இன்று கலங்குகிறோம். ஒன்றா உனது செயல்
ஒன்றா!
உனது உறுதி நிறைந்த செயல் சண்பகப் பூப்போலக் கலந்து அவர் கலந்தவர் நாமத்தைப் போலக் கவினறிவாய்
கலந்தும் கலங்கல் இலாதாய் எமைப் பயந்தாய்
நலம் பயப்பாய் நட்பாய்
நட்பாய் நிலைப்பாய்
நட்பாய் நிலைப்பாய்

Page 24
ウ upajaja)
விழிப்பாய்.
Lumrülu 193667
பாய் இருட் பரப்பைப் பகல் விழுங்கினாற் போல சேய் எமைச் சேவிக்க; சாயங் கழற்ற வருவோர்க்கு முன்னாலே தீயாய் எழுவாய் திசையின் பெரி விரிவாய். வட நூற்றுறையும் தென் திசைத் தமிழும் விதிமுறை பயின்ற
நெறியறி புலவ! பனி பொழிய, மழை பொழிய, பாலை நிலாப் பொழிய இனிய பல இரவு; பகல் அன்றெல்லாம் ஒன்றாக இநாகராஜன், கந்த வன மம்பி, அரியாலையூர் ஐயாத்துரை என்றிவர்களொடு ஒன்றாக - நானும் கனி அமுதக் கவிதைகளை அரங்கேறி அரங்கேற்றி மனித குல மாண்பை மாண்பார் தமிழ் குலத்தின் புனிதப் பணியைப் புடமிட்ட செந்தமிழில் பாலாக்கி நின்று பரணி படைத்தவனே! புலம் பெயர்ந்து போனோம்
5T (SLDm
தனி மரங்களானோம்.
O - O -0
வாரம் சில முன்னர் வயல் வரம்பில் நிற்கின்றேன்.
O - O -0 நீர்க்காகம்
தண்ணிரில் மூழ்கித் தலை காட்டும்; ஊர்க்குருவி - ஆள்காட்டி வாலாட்டிக் கத்தும், வயல் கடந்து வீடு வரவும்
வழியில்
இயல்பிழந்து நெஞ்சு
இதயம் படபடக்கும் வீடு வந்து சேர்ந்தாச்சு; வேர்வை வழிகிறது சூடான கோப்பி மணஞ் சுமக்கும் காற்று கறி முருங்கைக் கொப்பு அண்டம் காகம் இருக்க முறிகிறது! மனம் முறிய மூக்குளையும் வேளை மகன் 'காரை போய் விட்டாராம் லண்டனிலை’ என்றபடி "பாருங்கோ' - என்று அந்தப் பத்திரிகை LDLç2 GBLITTLகாரை கவிதைக் கடலுடன் கரைந்து நின்றார்
ஆர் அறிய வல்லார் அதை.
தேற்றம் :
காரை செ.சுந்தரம்பிள்ளை ஒர் கல்விமான். கவிதையும் பாட வல்லார். காவியம் புனை, யவும் ஆராய்ச்சி செய்யவும் கலைகளை விதந்துரைத்தே ஆரையும் தன் வசம் ஈர்க்கின்ற ஈர நெஞ்சன்பெனும் பேராற்ற லால் அறிவினாற் கலாநிதி அருளினாற் தோழனாய் அருந்தமிழ் பணி புரிந்தோன்.
(20.10.2005) யாழ். இந்துக் கல்லூரி குமார சாமி மண்டபத்தில் நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.)
 

45
அண்மையில் மலையக மூத்த எழுத்தாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்த போது அவர் மனவேதனையுடன் இப்படிச் சொன்னார். "மலையக அரசியலில் ஏதேதோ மாற்றங்கள் மற்றும் புதிய சிந்தனைகள் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் எங்களைப் போன்ற மலையக எழுத்தாளர்களுக்குத்தான் எந்த விடிவுமில்லை. மலையகத்தில் தரமான இலக்கி யத்தைப் படைக்கும் நமக்கு பிழைக்க வழியில்லை. ஒய்வுபூதியத் திட்டம், வீடு கட்ட பணம் என்று என்னவெல்லாமோ சொல்லுறாங்க. ஆனா எல்லாமே வெறும் பேச்சளவில்தான். அரசியல்வாதிகள் சிலர் வாக்குகளை வாங்குவதற்காக அவ்வப்போது நாக்குப் புரளாமல் வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். ஆனால் நடைமுறையில் எதுவுமே சாத்தியமாக வில்லை. குறிஞ்சித் தென்னவன், குறிஞ்சிப் பாலன் போன்றவர்கள் வறுமையுடன் போராடித் தங்களின் தரமான படைப்புகளை மக்களுக்குப் படைத்தார்கள். அவர்கள் இறந்து பல வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்னமும் மலையகத்தில் இலக்கியம் படைத்துக் கொண்டு வறுமையில் வாடும் எங்களை ஏறெடுத்தும் பார்க்க யாருமேயில்லை."
திறமை மிக்க மலையக எழுத்தாளர்களின் வறுமை நிலை மாறுமா?
- பாலா. சங்குப்பிள்ளை
அவர் சொன்னது அத்தனையும் உண்மைதான். சோத்துக்கு வழியில்லா விட்டாலும் தரமான இலக்கியத்தைப் படைத்து வரும் இத்தகைய நல்ல இலக்கியவாதிகளின் நிலைமை உண்மையிலேயே சொல்லும்படியாக இல்லை. இவர்களில் பலர் அரசியல் கண் ணோட்டத்தில் பார்க்கப்படுகிறார்கள். உள்ளதை உள்ளபடி எழுதுவதனால் இவர்கள் மற்ற வர்கள் கண்களுக்கு எதிரிகளாகத் தெரிகிறார்கள். அழுக்கைத் தின்று ஊரைச் சுத்த மாக்கும் காக்கையைப் போலச் சமூகத்தில் நிரம்பிக் கிடக்கும் அவலங்களைச் சுட்டிக் காட்டிச் சமூகத்தைச் சுத்தமாக்க நினைக்கும் இவர்களைப் பரம வைரிகளாகவே சிலர் நினைக்கிறார்கள்.
வெளிநாடுகளில் எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதையும் கெளரவமும் கிடைக் கின்றது. அவர்கள் அங்கே வசதியுடன் வாழ்கிறார்கள். ஆனால் இங்கே இவர்கள் கவனிக் கப்படுவதில்லை அலட்சியம் செய்யப்படுகிறார்கள்.
மலையகத்திலிருக்கும் அநேக எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளைப் புத்தகமாக வெளியிட முடியாத அவல நிலையிலிருக்கிறார்கள். திறமையிருந்தும் வசதி வாய்ப்புகள் இல்லை. அண்மையில் கூட நல்ல பல கவிதைகளைப் புனைந்து வைத்துக் கொண்டு அவற்றைப் புத்தகமாக வெளியிட முடியாத நிலையிலிருந்த ஒரு மலையகக் கவிஞரைச்

Page 25
്യബം
சந்தித்தேன். அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிய போதும் மேற் கொண்டு செயல்பட முடியாதளவுக்கு அவருக்குப் பொருளாதாரச் சிக்கல் இருந் தது. கற்பனைக் குதிரையை ஒட விட்டு அவ ரால் பொருளாதாரத்தினை தேட முடிய வில்லை. இதே நிலைதான் அநேகமா னோருக்கு.
மலையகப் பிரச்சினைகளை வெளியே கொண்டுவரும்போது சில நேரங்களில் அவற்றில் சில தீர்க்கப்படுகின்றன. ஆனால் அதை வெளியே கொண்டு வந்தவரின் வாழ் வில் வெளிச்சமில்லை. இன்னும் சில மலை யக எழுத்தாளர்கள் தங்களின் நல்ல படைப்புகளைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்ய முடியாதளவுக்குப் பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள். அவர்கள் மலைக்குப் போனால்தான் கால் வயிறு சோறாவது கிடைக்கும்.
இந்த அவலங்களையெல்லாம் தீர்க்க இவர்களுக்கென்று மிகச் சக்தி மிக்க அமைப்பு தேவைப்படுகின்றது. இந்த அமைப்பின் வாயிலாக மலையக எழுத் தாளர்களின் நல்ல படைப்புகளைப் பிரசுரம் செய்யலாம். அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யலாம். ஒய்வுபூதியத் திட்டம், வீடு கட்டக் கடன் போன்றவற்றை ஏற்படுத்தித் தரலாம். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவதென்பதில்தான் பிரச் சினையே. தற்போது இந்திய அரசாங்கம் அதன் தூதரகங்கள் மூலமாக மலையக மக்களுக்காகப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. அவர்களின் பார்வை இந்த ஏழை எழுத்தாளர்களின் மீதும் பட்டால் நன்றாக இருக்கும்.
46
N
N
Mì à
F
N
Y
ܐܠ
-
` ရွိေ
N N
s
Š
ג
ဇိုရိုဇို ဖွဲနှဲ၊
১৯৯৫৯
NNNN
ಇಿ
炒
RN
S
N
ܠ ܐ
N
K
ΑΣ
'', S N
N
N
KÒ MR જે ÈòN
N N
S
Σ
y Š
N N
 
 
 
 
 
 
 
 

47
அன்னங்கை ஒழுங்கையிலிருந்து மிதிக்கத் தொடங்கினால் முதலிலே ܠܘܵ دکتاد நிறுத்துவது முனியப்பர் கோயில் «Šა ్యగళి மரத்தடிதான். அந்த மரம் ரோட்டோரத் g தில், மிக விசாலமான பருப்பத்தில் کرتی لالک s ჯ.2* சிகப்புச் சால்வைச் சூலத்துடன், கறுப்பு மை அப்பியபடியும் உண்டியல் திருநீற்றுக் குடுவையோடும் ஓயாமல் சளசளக்கிற கிளைகளோடும் இருக்கிறது. பக்கத்துக் கால் வாயில் மழை வெள்ளம் மேவி ஓடினால் சூலமும் தாண்டி மிதக்கும். மகேந்திரன் இறங்கி நின்று கும்பிட முன்னால் சயிக்கிளை அதே மரத்தின் பக்கவாட்டுப் பிட்டியில்தான் சாத்தி வைப்பான். சிறு மேடை மீது தினமும் அய்யர் வந்து ஏறி நின்று தீபம் காட்டிச் சால்வை மாற்றிப் பூச்சூடிப் பூசைகள் செய்து மந்திரங்கள் முணுமுணுத்து உண்டியலைத் திறப்பது காணலாம். சிலவேளைகளில் சில்லறை களால் உண்டியல் நிரம்பிப் பிதுங்கி ஒட்டைகளினால் வெளித் தெரிவதுமுண்டு. வழிப்போக்கர்கள் எவரையும் இழுத்துப் பிடிக்கும் காந்த வலயம் உண்டியலானது. மரத்திலிருந்த கறுப்பு மையை மகேந்திரன் குழந்தைகளுக்குப் பொட்டு வைக்கிற சிரட்டை உட்பக்கத்தில் கண்டதுண்டு. அஞ்சனம் பார்க்கிறவள் உள்ளங்கையில்
உரசிக் கொண்டிருக்கிற போதிலேயும் கண்டிருக்கிறான்.
பெடல் கட்டைக்கு ரப்பர் கவர் சோடி வாங்கிப் போட்ட பின் மிதிக்கிறதில் ஒரு வகைச் சுகம் உள்ளங்கால் சொகுசு இருக்கத்தான் செய்தது. ஹாண்டில் பிடியில் இருக்கிற ரப்பர் கட்டையையும் மாற்றிப் போட வேண்டும் என்றே மகேந்திரன் விரும்பினான். அரையில் வெள்ளி பக்கிள்ஸ் போட்ட அரைக் காற்சாட்டையே விரும்பி அணிவான். வேறு அரைக் காற்சட்டைகள் மாற்றுகின்ற போது அதிலிருந்த வெள்ளி பக்கிள்ஸ் எல்லாவற்றையும் கழற்றியெடுத்து இதிலே மாட்டி விடுவான். அந்த வெள்ளி மினுங்குதல் எல்லா அரைக் காற்சட்டைகளிலும் துலங்கிடப் பிரயாசைப்பட்டான். றிம்மில் கம்பிகளில் படிந்த தூசிகளையும் மினுக்கியெடுப்பான். சீற்றில் மட்டும் என்றில்லாமல்; கால் எட்டாமல் இடை நடுவில் பாறில் இருந்தபடி முழுத்தூரமும் ஓடியதுமுண்டு. ஒட்டிப் பிறந்த சயிக்கிளாக அவனை சயிக்கிளில்லாமல் காணவே முடியாது.
சோமஸ்கந்தன் மிக நெருக்கமானவன். ஒரே வகுப்பு. அவன் நெருங்கி வந்த காரணமோ சிகறெட் இனிப்புப் பெட்டி. திறீரோஸஸ் சிகறெட் அளவில் நுனி சிகப்பாகிச் சுவையான இனிப்புப் பத்துத் துண்டு அடுக்கியிருந்த பெட்டியிலே சில தின்று தீர்த்தபின் மகேந்திரனுக்குத் தாரை வார்த்திருந்தான். அன்றிலிருந்தே மகேந்திரன் மனமுருகி ஒன்றிப் போனான். பிறவகுப்பு மாணவர்கள் சோமஸ்

Page 26
48
கந்தனோடு சேஷ்டை விட்டால் முதலில் எதிர்த் தாக்குதல் விடுவான். பின்னால் கையால் கதை விடுவான். மகேந்திரனின் முன்னிலையில் எவராலும் சோமஸ்காந்த னுடன் சண்டைக்குப் போகவே இய லாது. டபிள்ஸ் போட்டபடி சோமஸ் கந்தனைக் கூட்டிக்கொண்டு போய் பொற்பதி ரோட்டிலே அவனது வீட்டிலே இறக்கிய பின்பே தன்வழி தொடர்ந்திடு வான். சோமஸ்கந்தன் நாலே நாலு சேட் மட்டுமே வைத்திருந்தான். பழுப்பு நிறத் தில், இளமஞ்சளில், நீலக் கட்டங்களில், வெளிறல் நிறத்தில் - மாறி மாறிப் போட்டிடுவான்.
மதிய போசனம் மூன்றே மூன்று தோசை. மகேந்திரன் கடையின் வாங்கில் அமரத் தாமரை இலை மீதில் பரிமாறப் படும். வானொலி மதியச் செய்தியைச் சுடச்சுடச் சொல்லிக் கொண்டிருக்கும்.
வகுப்புப் பாடம் முடியும் மணிய டிக்கும் முன்னரே வயிறு தாமரை இலை மீதே வட்டமடித்துப் பசியைக் கிளறிக் கொண்டிருக்கும். காலை வேளைகளில் சீரான சாப்பாட்டைக் கண்டறியாத குணத்தால் மகேந்திரன் தோசை மீதே விழுந்ததிலிருந்து உச்சிப் பொழுதுகள் வரை இலயித்திருந்தான். குரங்கர் படிப் பிக்கிற அல்ஜிபிறா மீதில் மனசு படிகிற தேயில்லை, தோசைகள் சுட்டுப் பழக்கிட குரங்கர் லாயக்கானவர் என்பதே அவனது கருத்து. வாயில் வெற்றிலைச் சாறு வழிந்தொழுகிட குச்சி ஐஸ்பழம் விற்கிறவன் கடை யன்னலால் தெரிவது முண்டு. குந்தியிருந்தபடியே முழுக் குச்சி ஐஸ்பழத்தையும் அங்கு விற்றுத் தீர்க்கா
மல் திரும்பிட மாட்டான். மகேந்திரன் ஐஸ் பழக்காரனோடும் நெருக்கமாயிருந் தான். உடையாத குச்சி ஐஸ்பழம் பெற்றுக் கொண்டான். புரையேறக் குடித்துக் கடித்தான். தணிந்தது.
வெக்கை
சாப்பாட்டுக்குப் பின் விளையாட்டு மைதானத்து ரெனிஸ் - பந்து உதை பந்தாட்டம்தான். வெயிலின் அகோரம் புரியாதவனாகப் பந்தோடு ஒடியோடி அடிப்பதே அரைமணித்தியால நேரக் கழிப்பாயிடும். வீட்டுக்குப் போய் மீள வருபவர்கள் வரிசைக் கிரமத்தில் அணிப் பிரிவில் சேர்ந்து விளையாட வாய்ப்பு மிருந்தது. பதினாறு பேர் வரையில் எல்லாமாக விளையாடிச் சேறு கலந்த ரெனிஸ் பந்தை உருள உருள உதைத்துக் கொண்டிருந்தார்கள். சோமஸ்கந்தன் விளையாடுவதேயில்லை. சேற்றுப் பக் கத்துப் பிட்டியில் நிழலில் இருந்தபடியே பார்த்திடுவான்.
மகேந்திரன் உதைத்ததுமே பந்து விளையாட்டு மைதானத்தின் எல்லை கடந்து அடுத்த வீட்டுக் கண்ணாடி யன்னலைப் பதம் பார்த்து உடைத்தது. அங்கமுத்து சைஸ் வீட்டுக்காரி திடீ ரெனச் சன்னதம் கொண்டாள். குழறி யடித்து எட்டுக்கு வைக்குமாற் போல் ஒப்பாரி வைத்தாள். உலகம் ஒடிந்தது போல் விளையாடியவர் மீதே வசை மாரியும் பிலாக்கணமும் பாடினாள்.
மொனிற்றர் வேலைக்கும் ஆலாய்ப் பறந்தவனை வீட்டுக்காரி அழைத்து மேலும் முறையிட்டாள்.

மகேந்திரனே குற்றவாளியாகவும் விளையாடிய மற்ற எல்லோருமே தப்பிக் கொண்டனர். ஒருவனால் உதைபந் தாட்டம் விளையாட முடியாதே என்கிற நியாயம் அவர்களின் முன் எடுபடுவதா யில்லை. விவகாரம் தலைமை வாத்தி யார் வரை சென்றது. வீட்டுக்காரி வெட் கத்தை விட்டு மல்லுக்கட்டியபடி வகுப்பு களைத் தாண்டி வந்தே விட்டாள்.
பிரம்பு மகேந்திரன் உள்ளங் கையைப் பதம் பார்த்தது. ஏழெட்டு விளாசல்கள். நீட்டுப் பிரம்புத்தடி விளாசல் கண்டு குதூகலித்தவன் மொனிற்றர் மோகன் குமார் ஒருத்தனே. மோகன்குமாரின் இரண்டு அண்ணன்மார் உயர்வகுப்பு ஆசிரியர்களாக இருப்பதால் அங்கு வேறு எவருமே வாலாட்ட முடியாமலிருந்தது.
கோணங்கிச் சிந்தனை எடுபட்ட
தால் வாத்தியாரும் உள்ளடங்கிப் போனார்.
49
অত্ব
கமக்காரப் பரம்பரை. உத்தியோகம் பார்த்தறியாத குடும்பத்தவன் என்பதால் மொனிற்றரால் மகேந்திரனை அடக்கி அமுக்கத் தோதான காரணம் கிடைத்தது. உயர எகிறி விடக்கூடாது என்கிற ஆணவமிருந்தது.
அத்தனை கஷ்டப்பட்டு வேர்க்க வேர்க்க சயிக்கிளோடி வகுப்புக்கு வரு கிறவன் என்பதால் இளக்கமானவன் என்றுதான் வாத்தியாரும் கணித்திருந்
தாா.
ஆத்திரமடைந்த மகேந்திரனைப் பெற்றவர் படிப்பிற்கே ஒரு முற்றுப் புள்ளி போட்டு வைத்தார். தோட்டக் கிணறுத் துலா மிதித்துப் பயிர்களுக்கு நீரிறைத்து விட்டால் போதும் என்று சொல்லிப் பள்ளியிலிருந்து நீக்கிக்
கொண்டார்.
மண்வெட்டி கொண்டு வாய்க்கால் வரம்புகள் வழி நடந்த அவரின் பின் னாலே அடங்கிப் போன மகேந்திரனும் போய்க் கொண்டான். மண்ணை நம்பும் பயணம் அதிலிருந்தே ஆரம்பமானது.
(′
படும்.
V
సగానిM 9.69( تفاعلنیۃ /ჩჟირეოAოiol(ხ கிடி @ضلمہشنرلOlc
கவிஞர் செல்லையாவின் நூற்றாண்டை வெகு விமரிசையாகவும் பரந்தளவிலும் கொண்டாட வடமராட்சி அல்வாயில் நூற்றாண்டு விழாக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விழா வேலைகள் வெகு துரித கதியில் நடைபெற்று வருகின்றன. விபரங்கள் பின்னர் அறிவிக்கப்
R
لے

Page 27
50 லரீனா ஏ.ஹக்கின்
ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்?
நாவல் சில குறிப்புகள்
- எல்.வளிம் அக்ரம்
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில், சிறுவர் பிரச்சினைகள் நாளுக்கு நாள் கூர்ப்படைந்து வருவது கவனிக்கத்தக்கதொன்று. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், சிறுவர்கள் மூலம் பாலியல் வியாபாரம், போதைப்பொருள் வியாபாரம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றன இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கன.
இந்தப் பின்னணியில் லரீனா ஏ.ஹக்கின் ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் நாவலும் சிறுவர் பிரச்சினைகளைக் குறியீடாக்கிப் புனையப்பட்ட நாவலாகும்.
சிறுவர் பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களில் அணுகும் இந்த நூலின் கர்த்தா லரீனா ஏ.ஹக், ஈழத்து (முஸ்லிம்) பெண் படைப்பாளிகள் வரிசையில் ஒரு முக்கிய நிலையை எய்தியவராவர். இவர் ஒரு கவிதாயினியாக, கதைஞராக, ஆய்வாளராக இன்றைய பொழுதுகளில் முகிழ்கிறார். இதை இவரின் பின்வரும் நூல்கள் நிறுவியிருக்கின்றன. அவை வீசுக புயலே' (கவிதை), ‘எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதை), தமிழ்மொழியும் இலக்கியமும் சில சிந்தனைகள் (ஆய்வு நூல்) என்பனவாகும்.
தற்போது பேராதனைத் தமிழ்த்துறையில் பணி புரியும் லரீனா ஏ.ஹக், பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களின் மாணவர்களில் ஒருவராவார்.
இந்நாவலின் கதாபாத்திரங்கள் கற்பனையில் புஷ்பித்தவையல்ல, வாழ்க்கை பூவினத்தின் கூறுகளுக்கூடாக மலர்ந்தவை. யதார்த்தமாகச் சிருஷ்டிக்கப்பட்டவை.
சின்னஞ்சிறிய குழந்தைகளின் வறுமை, அறியாமை போன்ற (தவிர்க்க முடியாத) காரணிகளால் வாழ்வின் எதிர்காலக் கனாக்கள் காணலாகி விடுகிறது. இதற்குக் குடும்பப் பின்புலமும், சமூகச் சூழலும் தூண்டியாய் இருந்து வருகிறது என இந்நாவல் தத்ரூபமாக நிறுவியிருக்கிறது.

ஒரு நாட்டின் நாளைய தலைவர்கள் என மலட்டு மொழி பேசித் திரியும் சடத்துவ வாதிகளுக்குச் சாட்டை அடிகளாகவும், இந்நாவலின் குரல் இழையோடுகிறது. நமது சமூகக் கட்டமைப்பின் மீது ஆக்ரோச மான கிலேசத்தைக் கிளறிப் பாய்ச்சுகிறது. இந்நாவலின் சம்பவங்கள் சிறுவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்கான அடையாளத்தைத் தருகின் றன. ஆசிரியர் கதாபாத்திரங்கள் மூலம் மிகத் துல்லியமான யதார்த்தப் பண்பு புலப் படுகிறது. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றி னதும், மிக நேர்த்தியான வார்ப்பு, மிக ஆழ்ந்த அநுதாபத்தை ஈனுகிறது.
ஆசிரியர் தான் சொல்ல உந்தும் விடயத்தைச் செறிவோடும், எளிய வடி விலும் துவக்கிச் செல்லும் மொழி நடை நூலை ஒரே கணத்தில் வாசித்து முடிக்க இழுக்கிறது.
இந்நாவலானது ஒரு பாடசாலையின் மையத்திலிருந்து, சமூகத்தின் நீண்ட பரப்பை நோக்கி வியாபித்துச் செல்கிறது.
51
666):
ஒரு ஆசிரியரைப் பிரதான கதாபாத்திர மாகக் கொண்டு மிக நுண்ணிய சிந்தனை மிகுந்த கதைக்கரு பிரசவிக்கிறது. கதை முடிவும் அநுதாபத்தினை ஈய்த்து ஆசுப் படுத்துவதாக அமைந்துள்ளமை சிறப்பான அணுகுமுறையாகும்.
சமூகத்தின் மீதான மிக ஆழமான பிரக்ஞை இலக்கிய சிருஷ்டிகளிடமே சரணடைந்துள்ளது என்பது இவ்வாறான நாவல்களுக்கூடாக வெள்ளிடையாகிறது.
அரசியல்வாதியை விட, சினிமாக் காரனை விட, இலக்கிய சிருஷ்டியாளன் ஒருவனாலேயே சமூகத்தின் கட்டமைப்பு சார் நெளிவு சுழிவுகள் நுணுக்கமாக உள் வாங்கப்படுகிறது என்பது நல்ல படைப்புகள் மூலம் நிதர்சனமாகும். இவ்வாறான மிகக் கனதியான நூல்களை நுகர நாமும் மேலும் ஆவலாய் இருக்கிறோம். லரீனா ஏ.ஹக் போன்றவர்களின் இலக்கியப் பணி மேலும் இடையறாது ஊற்றெடுக்க வேண்டுமென வேண்டுகிறேன்.
იაცაჩტ24უGო^ó,
யாழ். பல்கலைக் கழக மாணவர் காலந்தொட்டே
N
மல்லிகை மீதும் ஈழத்து எழுத்தாளர்கள் மேலும் தனி கொண்டிருந்தவரும், எழுத்தாளருமான முல்லையூரான் சமீபத்தில் டென்மார்க்கில் காலமாகி
அபிமானம்
விட்டார். இவரது சிறுகதைத் தொகுதியான "சேலை” 2002-ல் மல்லிகைப் பந்தலின் வெளியீடாக வெளி Šპ་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་8 வந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னாரது இழப்பிற்காக மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிக்கின்றது.
- ஆசிரியர்
ܓܠ

Page 28
52
ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சர்வதேசப் பரம்பலைக் கொடுத்த முற்போக்கு இலக்கியத்தில், அக்கறை ஊன்றி அதன் தடத்தில் தமது இலக்கி யத்தைப் படைத்த மூத்த முற்போக்கு எழுத்தாளரது படைப்புகளுக்கான ஆய்வுக் கருத்தரங்குத் தொடரின் நான்காவது அங்கமாகப் பிரபல எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் ஆய்வுக்கெடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த 2006.04.23ஆம் திகதி கொழும்பு 06, தர்மராம வீதியிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் இந்நிகழ்வு நடந்தது.
பேராதனை, பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வ.மகேஸ்வரன் ஆய்வுரை நிகழ்த்தினார். செல்வி திருச்சந்திரன் தலைமை வகித்தார்.
g ܖ -- gł நீர்வை பொன்னையன் சிறுகதைகள்
ஆயவுக கருததரங்கு
- LDIT.Ln.é. நிறைந்த விஷயங்களைக் குறைந்த எண்ணிக்கையான கூட்டங்களில் பேசுவதே ஆத்ம திருப்தியைத் தருகின்றது. நீர்வை பொன்னையன் ஒரு விவசாயக் குடும்பத்தின் பிரதிநிதி. பட்டம் பெற்ற பின்னரும் அதையொரு துருப்புச் சீட்டாகப் பாவித்து உத்தியோகத்திற்கு அலையாதவர். பல ஆண்டுகளுக்குப் பின்னரே திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகத்தவரானார். படிப்பிற்காகக் கல்கத்தா (கொல்கத்தா) சென்றதால் அங்கு பெற்ற அநுபவங்களே இவரது வாழ்க்கையை நெறிப்படுத்தின. 1950ற்கு முன்பிருந்த சமூக அக்கறையற்ற இலக்கியப் பார்வையைத் தகர்த்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்குப் புதுமுகம் கொடுக்கக் கிளர்ந்தெழுந்த மார்க்சியக் கோட்பாடுகளை உள்வாங்கிய முற்போக்குப் புத்தி சீவிகளின் குழுமத்தைச் சேர்ந்தவராக எழுத்தில் தன்னை அறிமுகப்படுத்திய நீர்வை பொன்னையன் தனது வாழ்வுக் காலத்தில் இலக்கியத்தில் தோன்றிய அத்தனை அசைவியக்கங்களுக்கும் முகம் கொடுத்தவராக - இன்றுவரை இடதுசாரிக் கண்ணோட்டத்துக்குள் நின்று தனது எழுத்துப் பணியை செய்து வருகிறார். இவரது சிறுகதைகளில் தொழிலாளர் பிரச்சினை, மனோ ரதியம், இனப்பிரச்சினை என்பவற்றைக் காணமுடிகின்றது. இவைகளை இவர் தான் விசுவசிக்கும் மார்க்சியக் கோட்பாடுகளுக்குள் அடக்குவது ஒரு பிரசாரத் தன்மையை வாசகனுக்குக் கடத்துகின்றது. இதனால் கலாபூர்வமான பார்வை இழக்கப்படுகிறது.

சாதி அடக்குமுறையின் விகாரத் தைத் தனது கதைகளில் பதிவு செய் துள்ளார். புதிதாக மணம் புரிந்த பஞ் சமப் பெண் தனது முதல் இரவை நில மானிய சமூகத்தின் காவலாளியான நயினாரோடு கழிக்க வேண்டுமென்ற அன்றைய எழுதாச் சட்டங்களையும் இவரது கதைகள் பேசுகின்றன. இந்த மேலான அக்கறையால் இவரையொரு தலித் (பஞ்சம) எழுத்தாளரெனவும் இனம் காணமுடிகிறது. இருந்தும் யாழ்ப் பாணத்தாரின் வாழ்வியல் கோலங்களை இவரது எழுத்துக்கள் மிகவும் காட்ட மாக விமர்சிக்கின்றன.
- நீர்வைப் பொன்னையனின் நான்கு தசாப்த எழுத்துக்களில் தன்னைப் பாதித்த கருத்துக்களை ஆய்வாளர் மேற் கண்டவாறு எடுத்துரைத்தார். ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களது வறுமையைப் பொன்னையன் எப்படி உள்வாங்கினார் என்பதற்குச் சோறு? என்ற சிறுகதையை ஆய்வாளர் சுட்டிக் காட்டினார்.
அறுசுவை கொண்ட சோற்றை உட் கொள்ள ஆவல் கொண்ட சிறுவன், தனது இளைய சகோதரன் மரணித்தால் அவனது ஆண்டுக் கழிவுத் திவசத்தன்று அத்தகைய சோறு கிடைக்குமென்ற அவனது ஏழ்மை வாழ்வுக்குத் தக்கதான தளத்தில் சிந்திக்கிறான். நஞ்சூட்டியும் தனது தம்பியாரைக் கொல்கிறான். இக்கதை
சிறுபிள்ளைத்தனமான,
யில் பொன்னையன் பஞ்சமரின் வறுமை, பசியின் கொடுமை என்பன
53
வற்றை மிக நேர்த்தியாகச் சித்தரித்திருப் பதாக ஆய்வாளர் பொச்சடித்தார். இப் படியாகப் பொன்னையனின் ஏனைய வித்தியாசமான சில சிறுகதைகளையும் சிலாகித்தார். ஈழத்து எழுத்தாளர் இன் னாரது சாயலில்தான் எழுதுகிறேன் என்று சொல்லும் ஓர் ஈழத்து எழுத் தாளர் பரம்பரை ஈழத்து எழுத்துலகில் தோன்ற வேண்டும்.
ஆய்வுரை கலந்துரையாடப்பட்ட சமயம், பிரபல மார்க்சிய விமர்சகர் ஏ.எம்.சமீம் கருத்துரைத்த பொழுது -
1980ற்குப் பின்னர் முற்போக்கு எழுத்தாளர்கள் மக்கள் தொடர்பை இழந்தனர். இன்றைய போலித்தனங் களை நீர்வை பொன்னையன் நன்கு இனங்கண்டு வைத்திருக்கிறார். அவர் தொழிலால் விவசாயி, ஒரு தொழிற் சங்கவாதி. அத்தோடு அரசியல்வாதி.
உருவமா? உள்ளடக்கமா? என்ற பிரக்ஞையே 1950களில் ஈழத்து இலக்கியத்தில் முதன்மை பெற்றி ருந்தன. நவீன சிறுகதையின் மூலவர் எனப்படும் புதுமைப்பித்தன் கதைக்குக் கதை புதுமையான உத்திகளைக் கையாண்டார். ஆய்வுரையில் உத்திகள் கண்டு கொள்ளப்படாதது ஆய்வு முழுமையற்ற தென்பதைப் புகட்டு கின்றது - எனவும் சமீம் சொன்னார்.
@@ கட்டத்தில் கருத்தரங்கில் சாதியம் சம்பந்தமான கருத்து மோதல் கோலோச்சி, கருத்தரங்கின் இலக்கு தகரப் போகின்றதோவென்ற உணர்வை யும் கேட்டுநர் மத்தியில் தோற்றுவித்தது.

Page 29
getse):
இதற்குத் தூண்டுதலாக அமைந் தவை, இந்நிகழ்வுக்குத் தலைமை தாங் கிய செல்வி திருச்சந்திரன்; யாழ்ப்பாணத் துச் சாதியம் பற்றிய படைப்புகளை சிங் களத்தில் மொழிபெயர்த்து சிங்கள மக் கள் மத்தியில் சந்தைப்படுத்த வேண்டா மெனச் சிங்கள நண்பரொருவர் வேண்டு கோள் விடுத்ததாகச் சொன்னதும்,
கலந்துரையாடலில் தனது பதில் கருத்தொன்றை முன்வைக்கையில் ஆய்வாளர், தலித் இலக்கியத் (பஞ்சமர்) திற்கான விதை முதன் முதல் ஈழத்தவ ராலேயே ஊன்றப்பட்டதெனத் தென் னிந்திய இலக்கியவாதிகள் முன்மொழிந் தமை, அந்த இலக்கியம் தீவிர பரம் பலைப் பெற உதவி, யாழ்ப்பாணத்தாரை விற்குமளவிற்குப் பலம் கொண்ட தாகவும், இதற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உடந்தையாகிய தாகவும் சாதியத்தைப் பிரசாரப்படுத் தினால் வெறுப்பே மேலோங்குமென வும், யாழ்ப்பாணத்துச் சாதிய ஒடுக்கு முறை பாடப் புத்தகங்களில் இடம் பெறக் கூடாதெனத் தனக்கு பாட நூல் குழு உறுப்பினரொருவர் சொன்னதாகக் கூறியது என்பவையே.
கலை இலக்கியப் பேரவைத் தலைவர் சோ.தேவராசா கருத்துரைக்கை யில், கவிஞர் சுபத்திரனின் யாழ்ப்பாணத் துச் சாதியம் சம்பந்தமான கவிதையைப் படித்த சிலர் அக்கவிஞர் ஒரு தலித் தாகவே இருக்க வேண்டுமென்றனர். ஆனால் அது தவறு. சுபத்திரன் கிழக் கிலங்கைக் கவிஞர். ஒடுக்கப்பட்ட ஒரு வனது குரல் என்றும் சமூகத்தில் ஒடுக்
54
கப்பட்ட ஒருவனுக்கானதாகவே இருக் கும். அது இயல்பு. எதையும் பிறப்பு அடிப்படையில் பார்க்கும் ஒரு போக்கு எம் மத்தியில் முகிழ்ந்து எம்மைத் தவ றாக வழி நடத்துகின்றது எனச் சொன் னார். வேறு சிலரும் இன்றைய சாதியக் கோலங்களைக் கூட்டத்தில் அம்பலப் படுத்தினார்.
சஞ்சிகையாளர் தெ. மதுசூதனன் தமிழ் இனம் சாதியச் சமூக அடிப்படை யில் அமைந்த தெனவும் உருவம், உள்ளடக்கம் என்ற தளத்திலிருந்து இலக்கியவாதியின் பார்வை விலகி வேறொரு தளத்திற்கு மாற வேண்டு மெனத் தனது எண்ணத்தை வெளிப் படுத்தினார்.
\ရဲနဲ့ရဲ့ရှ် ရွဲ့`ရဲ့ရဲ့ရွဲ`ရွဲရှ်`
སུ་
R§
 
 
 
 
 
 
 
 
 
 

பிரச்சினைகள் குொனிக்கும் - சிலருக்குப் AjééPeogotaursor நாவல்கள்
- LDrt. Lum6vérolæub
சமூக மாற்றம், வர்க்க ஒருமைப்பாடு, சாதீயத் தகர்ப்பு, அடிமட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் என்ற மானுடம் சார்ந்த விடயங்களில் அக்கறை கொண்டு போராளியாகவும் எழுத்தாளராகவும் தன்னைத் தமிழ் சமூகத்தின் மத்தியில் அடையாளப் படுத்தியவர் பிரபல நாவலாசிரியர் கே.டானியல்.
சிலர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்! அத்தகைய ஒருவராக வாழ்ந்தவர் கே. டானியல். அவரது வார்த்தைகள் அரட்டைகளல்லாமல் அர்த்தம் கொண்டவைகளாக இருந்தன. மானுட ஏற்றத்திற்குப் போஷணையாகச் சகாயித்தன. எனவே அவரை வெறும் கதை சொல்லியாக ஆற்றுப்படுத்தவது பார்வைப் பிழை எனலாம்! அவர் மக்களிடமிருந்து கற்றவர். தான் கற்றதை மக்களுக்குக் கற்பித்தவர். புதுமையையும் புரட்சியையும் மக்கள் மத்தியில் விதைக்கத் தன் பணியை அர்ப்பணித்தவர். அவரது எழுத்துக்கள், பேச்சுக்கள் என்பன மானமுள்ள, உரோசமுள்ள சமுதாயமொன்றைத் தோற்றுவிக்க நெம்பு கோலாகின. அரை நூற்றாண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட கிராமங் களின் இதயத்தைத் தரிசிக்க வேண்டுமாகில், அது டானியலின் நாவல்களினூடாகத் தான் ஏலுமென்பதைச் சாத்தியப்படுத்தினார். இதற்கான முக்கிய காரணியாக இவரது எழுத்திலோ, சிந்தனையிலோ பாசாங்கில்லாதிருந்ததைக் கூறலாம்!
தன் இலக்கிய நோக்கை அவர் இப்படியாக அறியப்படுத்தி இருக்கிறார் -

Page 30
கிராமப் பகுதிகளை அப்படியே
DataSapa
காண வைத்து, அதைக் குலைக்காமல், நலுங்காமல் நகரவும் வைத்து, அந்த நகர்வுகளுக்கேற்றதான கதையொன் றினையும் கண்டடைந்து, சாமுத்திரிகா இலட்சணங்கள் பொருந்திய தலைவன் தலைவியையும், வில்லன் வில்லிகளை யும், நடுநிலையாளர்களையும் உலாவ விட்டு, அந்தப் படைப்புக்குட்பட்ட கதா மாந்தர்கள் பாரம்பரிய சம்பிரதாய உறவு முறைகளை மீறிவிடாமல் பக்குவமாகப் பாதுகாத்துச் சுபம் சொல்லி முடிக்கும் “சோலி சுறட்டற்ற இலக்கியக்காரனாக என்னால் இருக்க முடியவில்லை.
- சோலி சுறட்டுள்ள இப்போக்கு டானியலுக்கு வாழ்க்கையில் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இருந்தும், அவர்தான் நோயோடு சமரிட்டுக் கொண்டிருந்த காலத்தில் கூட அதே தடத்திலேயே தனது எழுத்தைச் சாரத்தி யப்படுத்தினார்.
மக்கள் இலக்கியம் என்ற சஞ்சி கையை வெளியிட்டவர். நாவலுக்கென
இருமுறை இலங்கை மண்டலப் பரிசைப் பெற்றவர்.
பஞ்சமர் (தலித்) இலக்கியத்தின் பிதாமகர் எனத் தென்னகத்து இலக்கிய வசிட்டர்களால் கெளரவப்படுத்தப்பட்ட அவர் 1986.03.23இல் தஞ்சாவூரில் அமர ரானார்.
அவர் மரணித்து இரண்டு தசாப்தங் களாகி விட்டன. அவரால் தொடக்கப் பட்ட பஞ்சமர் இலக்கியம் சற்று
56
சாஹித்ய
வளர்ச்சியை எட்டி விட்டாலும் ஈழத்து இலக்கிய உலகு அவரது இலக்கிய வல்லமைகளை எமது இளைய சந்ததிக்கு அறியப்படுத்தப் பெரும் அக் கறை எடுக்கவில்லையென்றே ஆதங் கிக்க வேண்டியுள்ளது.
முற்போக்கு இடதுசாரி இலக்கியச் செல்நெறிகளில் ஆழக்கால் பதித்த எழுத்தாளர்களது படைப்புகளை ஆய்வு செய்யும் நோக்கோடு விபவி கலாசார மையம், முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை ஆகிய இலக்கிய அமைப்புகள் அண்மையில் ஏற்பாடு செய்த கருத் தரங்கில் கே.டானியலின் படைப்புகள் கலாநிதி ந.ரவீந்திரன் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டுக் கலந்துரையாடப் பட்டன. இதற்கும் மேலாக அமரர் கே.டானியலின் இலக்கியச் செல் நெறியை ஆராதிக்கும் சென்னையைச் சார்ந்த இலக்கியவாதிகள், அவரது மகன் வசந்தனின் உதவியோடு, 1132 பக்கங்களைக் கொண்டதும் அவரது ஆறு நாவல்களை உள்ளடக்கியதுமான “கே. டானியல் படைப்புகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
அடையாளம் வெளியீட்டகம் இந் நூலை அச்சிட்டிருக்கின்றது. விலை இந்தியா ரூபா. 540/- இலங்கைக்கான விநியோக உரிமையைப் பூபாலசிங்கம் புத்தகசாலையினர் பெற்றுள்ளனர்.
இத்திரட்டில் நாவலாசிரியர் வாழ்ந்த காலத்தில் நூலாக்கப்பட்ட பஞ் சமர், கானல், கோவிந்தன், அடிமைகள், பஞ்ச கோணங்கள், தண்ணீர் ஆகிய

57
ஆறு நாவல்கள் ஒன்றிணைக்கப் பட்டிருக்கின்றன. பஞ்சமர் நாவலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்தூன்றி இந்நாவல்களை வாசிக்கும் ஒரு தரமான வாசகனுக்குச் சில உண்மைகள் புலப்படலாம்! சாதிக் கொடுமைகளைத் தகர்ப்பதில், இறுதி மூச்சுவரை தன்னை அடையாளப் படுத்தியவர் டானியல். அதுவே அவரது வாழ்நாள் முழுதும் அவரது சுவாசக் காற்றாக இருந்ததென்பதைத் தமிழுலகு நன்கறியும். இருந்தும், அந்த ஒரே முகத்தைத்தான் அவர் தனது இலக்கியப் படைப்புகளில் படைத்தாரா? என்ற வினாவுக்கு இந்நாவல்கள் பதிலைத் தருகின்றன. இவைகள் பஞ்சமர் தொடரில் வெளிவந்த வைதான்! இருந்தும் 'சாதீயம் மட்டுமே" என்ற அடைவு பொருத்தமற்றதென்பதையும் இவைகள் புலப்படுத்தி நிற்கின்றன.
தன்
வர்க்க முரண்பாடுகள், பெண் னியம்,
அன்றைய பண்பாடு, கலாசாரக் கோலங்
யாழ்ப்பாணத்தார் பயின்ற
கள் என்பவையும் ஊடுபாவமாக வந்து வாசிப்பில் விடயக் கனதியை ஏற்படுத்தி இருக்கின்றன. சாதியின் குறியீடு கே.டானியல் என்ற அளவிற்கு அவரது சிந்தனையில் சாதியம் மேவி நின்றது மெய்யே! அதை மிகவும் அழுத்தமாக எழுத்தில் வார்த்தார். இருந்தும், அவர் சமூகத்தின் ஏனைய சில முரண்பாடு களை நோக்கியும் தனது எழுத்தைச் சாரத்தியப்படுத்தியிருப்பதை இந் நாவல்கள் புகட்டுகின்றன.
s begg)
1890ஆம் ஆண்டிலிருந்து ஈழத் தேசியச் சிந்தனை வெடித்த எழுபதுகள் வரைக்கான காலப்பகுதியில் யாழ் குடா வின் சில பகுதிகளான வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய குறிச்சிகளில் வாழ்ந்த மக்கள் மத்தியில் அரசியல், சாதீயம், கல்வி ஆகிய விடயங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வு, பலவீனங்கள் என்பவைகளின் தொகுப் பாக இந்நாவல்கள் கணிப்பைப் பெறுவ தால் இவைகள் சமூக இயல் சார்ந்த ஆவணப் பெறுமானத்தையும் சுவீகரிக் கின்றன.
நிலவுடைமையாளர் என்ற அந் தஸ்தைப் பாரிய பலமாகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட, பஞ்சப்பட்ட வர்க்கத்தை மேட்டுக்குடி வேளாளர் எவ்வண்ணம் "ஆடாக்கட்டித் தோலா உரிக்க' எத்தனித்தரென்பதை இந்நாவல்கள் வாசகனுக்குக் கடத்துகின்றன. இந்த நிஷ்டுரங்களுக்கு எதிராக அடிமட்ட மக்கள் எவ்வண்ணம் இயக்க வலுப் பெற்று - தமது அத்தியாவசிய வசதி களைக் கூடத் தியாகித்து, உயிர்களை இழந்து - எதிர்வினை செய்தனரென் பதை உணர்ச்சி பூர்வமாகவும் இயல்புத் தன்மை சோரம் போகாமலும் நாவல் களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டாயத் தொண்டு துரவு, ஏதோ இந்த மக்களில் சிணி அடிப்பது போல் அவர்கள் வரவை முன்கூட்டியே அறி விப்பதற்கு காவோலை கட்டிக்கொண்டு நடத்தல் வேண்டும், வாலைக் குமரிகள் கூட மேற்சட்டை அணியக் கூடாது,

Page 31
தாவணியும் கட்டக் கூடாது, பிணங் களை எரிக்கக் கூடாது - இதன் மூலம் அந்தியேட்டி மறுக்கப்பட்டது. கிணறு களில் நீர் மொள்ளக் கூடாது, கடல் மீன் சாப்பிடக் கூடாது.
இத்தகைய ஆதிக்க சாதியெனத் தமக்கு முலாம் பூசிய வேளாளர் ஏவிய மனிதாபிமானமற்ற அடாவடித்தனங் களை விஞ்ஞான வளர்ச்சியால் கூட ஒடுக்க முடியவில்லை. மத மாற்றம் கூட கானலாகவே இருந்தது! ஆனால் பஞ்ச மரது உணர்வுகள் சீண்டப்பட்டன. அவர்கள் சமூக மாற்றத்திற்கான போராளிகளாகினர்.
பட்ட மரந்தான் இன்னொரு பட்ட மரத்துக்கு நெம்புகோல் என்றதற்கமைய இந்த எழுச்சி ஒரு வர்க்க இணைப்பை ஏற்படுத்தியது. ஏனைய சாதிகளைச் சேர்ந்த பாட்டாளி மக்களும் பஞ்சமருக் குத் துணை நின்றனர். இந்த விடயத்தில் நாவலாசிரியர் தீவிர சாதி எதிர்ப்பாள ராக இருந்தாலும் அதன் தகர்ப்புக்கு அடிமட்ட உயர் சாதிகளையும் பங்கு பெற வைப்பது அவரது வர்க்க இணைப்பை உணர்த்துகின்றது.
வேளாளருக்கு எதிரான இரகசியப் போராட்டங்கள் கிராமத்துள் துளிர் விடுகின்றன.
தொழிலாளிப் பெண்கள் தட்டுவங் களிலும் சிரட்டைகளிலும் உண்ணவும் குடிக்கவும் மறுக்கின்றனர். மேட்டுக் குடியினரின் வேலைகள் முடங்கு கின்றன. வயல்களில் புழுதி கிளம்பு
58
கிறது. பண நஷ்டம் ஏற்படுகின்றது. நயினார்களும் நயினாத்திகளும் பல தந்திரோபாயங்களை அரங்கேற்றுகின் றனர். தெளிந்த சிந்தனைகளோடு போராடப் புறப்பட்ட பஞ்சமப் பெண் கள் மசிந்து கொடுக்காமல், பட்டினிச் சாவுக்குப் பயப்படாமல், சாதிமான் களால் ஏவப்பட்ட அரச பயங்கரவாதத் தையும் கண்டுகொள்ளாமல் தமது போராட்டங்களைத் தொடருகின்றனர். பஞ்சமரது வதிவிடங்கள் எரியூட்டப்படு கின்றன. சமைப்பதற்கும் குடிப்பதற்கு மான நீர் மறுக்கப்படுகிறது. இன்னும் ஏராளமான வசதியீனங்கள் பஞ்சமருக் குச் செய்யப்படுகின்றன! சாதீயம் என வரும் பொழுது யாழ்ப்பாணத்தார் எவ் வளவு கொடுரமானவர்களென உணரு மளவிற்கு பஞ்சமரது நேர்மையான போராட்டங்களை நசுக்கப் பல துரோகத் தனங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இருந்தும், கொண்ட பஞ்சமர்கள் இவைகளனைத் தையும் எதிர்த்துத் தமது போராட்டத்தை உச்சப்படுத்துகின்றனர். ஒடுக்குமுறை யைக் குலைப்பதில் தெளிவைப் பெறு
ஒர்மமும் நம்பிக்கையும்
கின்றனர்.
இந்த அநுபவங்களை உள்வாங்கிய - அன்றைய கணிசமான பஞ்சமரது விதைப்புகள் தான் இன்று களத்தில் இறங்கி சிங்களப் பயங்கரவாதத்திற்குச் சவால் விடுத்துக் கொண்டிருக்கின்ற தென்பது குறிப்பிடத்தக்கதாகும்!
இலக்கிய மென்பது காலத்தின்
தரிசனமென்பது, புகழ் பூத்த இலக்கியத் தத்துவாச்சாரியர்களால் முன் வைக்கப்
 

பட்ட கோட்பாடாகும். அந்த எல்லைக் குள் இந்நாவல்கள் நிற்கின்றன. நாவல் கள் நகர்த்தப்படும் காலத்தில் பஞ்சமர் களது பாவனையிலிருந்த 'உள்ளத்துக்கு வள்ளிசான" பாட்டாளிகளின் உணவுகள்
பதிவாகி இருக்கின்றன.
பஞ்சமரது பட்டினியை - பழங் கஞ்சியும் பினாட்டும்; பிரண்டைத் தண்டுச் சம்பல், குரக்கன் பிட்டு; முசுக் கறி முருங்கை இலைச் சேர்த்த தேறகை மீன்
கொட்டை இலைச் சம்பல்,
சொதி - என்பன அன்று தணித்தன.
இந்த ஆறு நாவல்களிலும் படு முடிச்சுகளையுடைய சிக்கலான கதை களைப் படிக்க முடியாது! ஆனால் அன்றைய ஒர் அசலான யாழ்ப்பாணத் துக் கிராமத்தின் இதயம் எழுத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது! கிராமத்தவரின் பலங்கள், பலவீனங்கள் என்பன சொல்லப்பட்டுள்ளன. நாவலாசிரியரது பேனா ஒரு வீடியோ கமராவின் இயக் கத்தைப் பெற்றிருப்பதைத் தரிசிக்க முடிகின்றது!
இன்றைய சந்ததிக்கு அரிதாகி விட்ட அன்றைய கிராமத்தின் நகர்வை உச்சம் பெற வைத்த வாண வேடிக்கை, சிலம்படி, கடதாசிக் கூட்ட (Playing Cards) விளையாட்டு, போர்த் தேங்காய் அடித்தல் என்பன நாவலாசிரியரின் விபரிப்பில் வானொலி நேர்முக
வர்ணனையை எட்டுகின்றன.
“பெரிசு கண்டோண்றை கழிச்சு,
கம்மாரிசு அடிக்கோணும். கேட்டுத்
59
3, čo lege):
অ
தோத்தா இரண்டு மேசை, கைக் கோட் எண்டா கைவளக்காறனுக்கு பத்து
மேசைக்கு ஒரு கேம்."
"துரும்பைக் கவிழ்த்தார். கைவளக் காரன் இறக்கினான். மற்றவன் மேல் வைத்தான். அதற்கும் மேல் அடுத்தவன் வைத்தான். ஐயாண்ணன் துரும்மை நிமிர்த்திக் காட்டி ‘கலாவரை" என்று பேசிவிட்டு வெட்டினார். வெட்டிய பிடியை எடுத்துக் கவிழ்த்து விட்டுத் துரும்பை இறக்கினார். ஐயாண்ணன் துரும்பை வைக்க, கலாவரை இனம் எதிராளி ஒருவனின் கையில் வீறு, மணல், ஆசு, பத்து என்ற பெரிய துரும்புகள் அடுத்து இருந்தன - இப்படி யாக இன்றும் வழக்கொழிந்து போகாத 304 என்ற விளையாட்டை அதன் பழகு" சொற்களுடன் நாவலாசிரியர் வர்ணிக் கிறார்.
“அடி தூக்கி, அடி தூக்கி - அடி மாறி, அடி மாறி - அடிமுன் வைத்து, அடிமுன் வைத்து - பின்வைத்த முறைப் படி, பின் வைத்து பின்வைத்து - எம்பித் துள்ளி, எம்பித் துள்ளி - நுனித் தடி களையும், அடித் தடிகளையும் முறையே முட்ட வைத்து முட்ட வைத்து - குரு வட்ட வடிவில் காட்டி - நடுத் தடி களைப் பிடித்துச் சுழற்றிப் பாய்ந்து, பாய்ந்து - கிறுதாப் போட்டு.”
அருகி வந்து கொண்டிருக்கும் சிலம்படிக் கலையை நாவலாசிரியர் இப்படியாக வாசகனது மனதில் பதிய வைக்கிறார். எத்தகைய சுவாரஸ்யமான விளையாட்டு!

Page 32
pages
"இருந்தாற் போல் வெடித்த அவிட் டொன்று முதல் வெடியின் உந்தலில் வானளாவத் தாவி வெடித்த போது சிதறிய வெள்ளித் துகள்களின் ஒளியில் குடைகள் இரண்டு விரிக்கப்பட்டு வடக்கு நோக்கிக் காற்றில் அசைந்து சென்றது." இது வாண வேடிக்கையின்
ஒரம்சம்!
“காந்தன் ஒரு காயை உருட்டி விட்டான். கறுத்தான் மோதினான். இரண்டுமே நொருங்கி விட்டன. கறுத்தான் உருட்டி விட்டான்.”
“கந்தன் பங்கத்தை முடித்தான்.”
இது போர்த் தேங்காய் அடிக்கும் போட்டி. இது பெரும்பாலும் சித்திரை வருடப் பிறப்பிற்கே கிராமங்களில் நடப்பதுண்டு.
போரடிச் சேவலை எப்படி வளர்த்து எப்படிப் போருக்குத் தயார்ப் படுத்துவது, அவைகள் சண்டையிடுதல் என்பன மிகவும் தெளிவாகவும் விபர மாகவும் புதியோருக்குக் கற்பிப்பது போல் மிக அக்கறையோடு நாவ லொன்றில் காட்டப்பட்டுள்ளது.
'பொன்னுவில் செபமாலை" என்ற நாட்டுக் கூத்தை விபரிப்பதன் மூலமாக நாவலாசிரியர் ஒர் அண்ணாவியாரின் தகைமையைப் பெறுகிறார்.
இப்படியாகக் கிராமத்தின் அன் றைய கோலங்களை அதன் கட்டுக் குலையாமல் எழுத்தில் வடித்து, தனது பன்முக, ஆளுமைகளை நிறுவி இருக்
60
கிறார். மெத்தப் படித்தவர்கள் மட்டு மன்றி, அறிவு வளம் குறைந்த அடி மட்ட மக்களும் வாசிக்க வேண்டு மென்ற நோக்கோடு மிகவும் இலகு நடையில் இந்நாவல்கள் பின்னப் பட்டிருக்கின்றன.
இந்தியாவைச் சேர்ந்த ஆச்சாரிய் விநோ பாவே என்ற பெரியார் கால் நடையாகக் கிராமங்கள் தோறும் சென்று நிலமுள்ளவர்களிடம் நிலங் களைப் பெற்று நிலமற்ற மக்களுக்கு நிலத் தானம் செய்தவர். நாவலாசிரியர் கே.டானியலும் அதே வகையில் கிரா மங்களுக்குள் புகுந்து அங்குள்ள அடி மட்ட மக்களது அவல வாழ்வை இந் நாவல்களின் ஊடாக வாசகருக்குத் தந்தி ருக்கிறார். தமிழ் நாட்டில் கிராமத்தைத் தரிசிக்க வைத்தவர் கே.ராஜநாராயண னென்றால் யாழ்ப்பாணத்துக் கிராமங் களை பொய்மையெதுவுமின்றித் தமிழ் வாசகனுக்கு தந்தவர் கே.டானியலே என்பதை இந்நாவல்கள் நிறுவுகின்றன!
செழிப்பான பல வளங்களைப் பெய்யும் இந்நாவல் தொகுப்பை தமிழ் வாசகருக்குத் தந்த வெளியீட்டாளரை பாராட்டுவது நாகரீகம். அதேநேரம் இந் நாவல்களை அக்கறை ஊன்றிப் படித்த பொழுது மனதில் கெளவிய சில சஞ் சலங்களையும் சொல்ல வேண்டியே யுள்ளது! எந்தவொரு இன்றைய நாவ லுக்கும் அங்கீகாரத்தைக் கொடுப்பவை களுள் மிகப் பிரதானமாகக் கருதப் படுவது அந்த நாவல் எந்த மண்ணில் கட்டி எழுப்பப்படுகிறதோ அம்மண் ணின் வாசனை! அது எப்பொழுதும்

வட்டார வழக்கையே சார்ந்து நிற்கும்! கே.டானியலின் சகல நாவல்களுக்கும் மெருகைக் கொடுத்து இலங்கையரான அவரைத் தமிழ் நாவல் பரப்பில் உச்சம் பெற வைத்தது அவரது நாவல்களில் காணப்படும் வட்டார வழக்குத்தான்! கிராமத்து மொழி வழக்கை அவர் அட் சரம் தவறாது பதிவார். இது மொழியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஊட்டமாகக் கூடியது! மொழியியலாளருக்கு அதி மதுரம்!
தொகுப்பை வாசித்த பொழுது செறிந்து கிடக்கும் எழுத்துப் பிழைகள், வாசிப்பு ஆர்வத்தைச் சிதைப்பதோடு நாவலாசிரியரின் எதிர்பார்ப்பிற்குப் பாதகமாவதை உணரக் கூடியதாக இருக் கின்றது. இந்நாவல்கள் நாவலாசிரியர் வாழ்ந்த காலத்தில் அவரது நேரடிச் கண்காணிப்பில் தனித்தனி நூலாக வாச கனுக்குக் கிடைத்தவை. அவைகளிலும் இத்தகைய செறிவான எழுத்துப் பிழைகள் உண்டா? இல்லையென்பேன்! இவைகள் வட்டார வழக்குக்குக் குந்தக மாகவும் இருக்கக் கூடியவை. இந்தப் பாரிய தவறு இனிவரும் பதிப்புகளில் கவனிக்கப்படுமென நம்புகிறோம். இதை டானியல் வசந்தன் முன் நின்று செய்ய வேண்டும்!
ஈழத்து இலக்கியம் சிறகடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் வட்டார வழக்குக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டதை வாசகர்கள் அறிவார்கள். இதைத் தென்னிந்திய இலக்கியவாதிகள் கொச்சைப்படுத்திப் பேசியதுண்டு. தமிழின் தொன்மத்தை அத்தாட்சிப்
61
E. 666):
অস্ত্ৰ படுத்தக்கூடிய வட்டார வழக்குச் சொற் களை எம்மவர்கள் தமது படைப்புகளில் பதிந்த பொழுது அதைக் ‘கொழும்புத் தமிழ் என நளினப்படுத்தினர். அத் தோடு அடிக்குறிப்பும் கேட்டனர். எமது இலக்கியவாதிகள் கொதித்தெழுந்தனர்! இருந்த போதும் இந்நூலில் அருஞ் சொற்கள் விளங்க பதிவாகி இருக் கின்றன. இது ஈழத்தவரல்லாத வாசகரது நன்மை கருதியதாக இருக்கலாம்! அத்தோடு எமது வட்டார வழக்குப் புனைவுகள் குவிந்த பொழுது அவை களை இன்னமும் ஈழத்தவரல்லாத வாசகர் வாசிக்கவில்லையோவென்ற பொறியும் சிந்தனையில் சிதறுகின்றது. எப்படியிருப்பினும் உலக மயமாக்கல் என்ற மாயையில் எமது ஈழத் தமிழர் கூட இன்று ஆங்கிலத் தமிழர்களா கவே தம்மை பிரசித்தப்படுத்த ஆர்வம் கொள்கின்றனர். அந்த வகையில் அந்த அரைகுறைத் தமிழருக்கு இந்த அருஞ் சொற்கள் விளக்கம் உதவலாமென்ற நிம்மதி மனதை ஆற்றுகின்றது.
தூர நோக்கை நச்சி நிற்கும் அமரர் கே.டானியலின் இந்த நாவலாக்கப் பணியை இரை மீட்டிப் பார்க்கும் பொழுது, அவர் பேதங்களற்ற ஒரு தமிழுலகைக் காண முயன்றார் என் பதை அறிய முடிகின்றது. இதற்கான எடுப்புகளை இலக்கியங்களிலும் மேடைகளிலும் செய்திருக்கின்றனர். ஆனால் இவை தமிழர் மத்தியில் ஒரு மனப்புரட்சியைத் தோற்றுவித்தனவா? சில முற்போக்கான" பிரமுகர்கள் இன்று சாதி இலக்கியங்களில்தான்

Page 33
உண்டு. நடைமுறை வாழ்க்கையில் இல்லையென்கின்றனர். இது கிணற்றுத் தவளைகளின் 'ஒடுங்கிய சிந்தனை யென்பதைச் சாதீயம் சம்பந்தமான தற் போதைய சில நடவடிக்கைகள் எண்பிக் கின்றன. பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் திருமண விளம்பரங் களில் மணமகனோ, மணமகளோ இந்து வேளாளராக இருக்க வேண்டுமென விளம்பரப்படுத்தப்படுகின்றது. நளச் சமூகத்தைச் சேர்ந்த மணமகன், மண மகள் தேவை எனக் கேட்கப்படு கின்றது. இவைகள் இப்பிரமுகர்களது கண்களில் தைப்பதில்லையா? வெளி நாடுகளில் யாழ்ப்பாணத்தார் சாதீயத்தை விதைத்து விடுவார்களோவென அஞ்ச வேண்டி இருக்கின்றது! சாதித் தகர்ப் பில் நெடுநாட்கள் அக்கறை காட்டி வரும் மூத்த எழுத்தாளர்கள் இப்படி மேடைகளில் முழக்கமிடுகின்றனர். இன்று சாதியைக் கண்டு கொள்ள முடியவில்லையென அறை கூவும் தமிழர்களது காதுகள் இத்தகைய பேச்சு களைக் கேட்பதில்லையா?
எனவே, பஞ்சமர்கள் தமக்குக் கிடைத்த கல்வியால் இன்று பொருளா தார, ஒழுக்க, சிந்தனை வளங்களைப் பெற்றிருக்கின்றனர். இருந்தும், அவர் களது சமூகப் பெறுமானம் சாதியை வைத்தே இன்றும் கணிக்கப்படுகின்றது. ஆதலால் பஞ்சமர் இலக்கியம் தரிப் பைக் காணாது தொடரக் கூடிய சாத்தி யக் கூறுகள்தான் பலித்து வருகின்றன. இதற்கு மறுத்தானாக இன்றைய சூழலில் என்ன செய்ய முடியும்?
62
டானியலின் எழுத்தின் அடைவுகள் என்ன? சாதித் தகர்ப்பு வீடுகளில் உருக் கொள்ள வேண்டும். அதைத்தான் Charity Begins at Home grairSaipaoTii. மானுட சமத்துவம் வீடுகளில் பரிணமித் தால் அது புற உலகையும் ஆக்கிர மிக்கும். இதற்கு சோலி சுறட்டைத் தராத ஒரே வழி கலப்புத் திருமணந் தான்! இதைத்தான் சாதி ஒழிப்பில் காந்தியமும் பெரியாரியமும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஊக்கப் படுத்தின. இருந்தும், சமத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோ மெனக் கூறிவரும் இடதுசாரிய மார்க் சியவாதிகள் இதைக் கண்டு கொள்ள வில்லை! இது அவர்களது மார்க்சியப் போக்கையே கேள்விக்கு உட்படுத்து கின்றதல்லவா?
இன்னும், சாதிய விடுவிப்பை நாளாந்தம் நாடிக் கொண்டிருக்கும் பஞ்சமர்களுக்குள் கூட "வாய் நனைக் காத - வாய் நனைக்கும் சாதிப் பகுப்பு கள் உண்டு. பஞ்சமர்கள் இக்கட்டுகளை நொருக்கி பஞ்சம சாதிக்குள் வேறு பாட்டைக் களைந்து தம்மை ஒடுக்கும் இந்து வேளாளருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
ஆக, இந்த இலத்திரனியல் யுகத் தில் கூட இறந்த காலப் பழமைகளைச் சொல்லித்தான் புது யுகத்தைக் காண எத்தனிப்பதா? என விசனிப்போருக்கு கடந்த காலத்தைப் புரிந்து கொள்ளாது நாளையை நோக்கி செல்ல முடியாது என்பதுதான் இந்நாவல்கள் புகட்டும் போதம்!
 

63 卧 6696DE
ஆய்வுக் கருத்தரங்கு
vgt git s என்.கே.ரகுருருன் படைப்புகள்
- செல்லக்கண்ணு
வில்லூன்றி மயானக் கொலை வழக்கு, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பிரவேசம் ஆகிய இரண்டு தீண்டாமைத் தகர்ப்புப் போராட்டங்களும் புதிய பரி மாணத்தைத் தோற்றுவித்து, அப்போராட்டங்களுக்குச் சரித்திரம் காணாத வலுவை ஏற்படுத்தியதைத் தமிழ் சமூகம் நன்கு அறியும். இந்த இரண்டு போராட்டங்களிலும் வழமைக்கு மாறாக நீதி, ஆதிக்க வர்க்கத்தின் விலங்குகளுக்குள் அகப்படாது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவே நின்றது. இது நிகழ்ந்து - முன்னது அரை நூற் றாண்டையும், பின்னது மூன்று தசாப்தங்களையும் கண்டும் விட்டன. இருந்தும், தீண்டாமையின் ஆதிக்க வலு இன்னமும் தலைகாட்டாமலில்லை! சாதீய ஒடுக்கு முறை சமகாலத்தில் இலக்கியங்களில்தான் காணப்படுவதாகத் தம்மைச் சமூக அக்கறையுள்ள முன்னேற்றவாதிகளெனப் பம்மாத்துச் செயயும் சில பிரமுகர்கள் பிலாக்கணம் வைக்கின்றனர். தீண்டாமை நடைமுறை வாழ்க்கையில் அருகி விட்டதாக வாக்கு மூலங்களையும் தருகின்றனர். இதனை மறுதலிக்க எத்தனையோ நடைமுறைச் செயற்பாடுகளை ஒப்புவிக்கலாம்! செழுமையான அறிவையுடைய மெத்தப் படித்த அறிஞர்கள் மனங்களில் கூடச் சாதீயம் இன்றும் தனது தோற்றத்தைக் காட்டிக் கொண்டே இருக்கின்றது. பணிமனைகளில் ஆற்றாக் கைக்கு தீண்டாமைக் கணையே மேட்டுக் குடியினருக்குத் துணை போகின்றது.
இன்றைய இலக்கியம் சாதியத்தையும் பேசுகின்றது என்பது உண்மைதான்! அது காலோசிதமான எதிர்வினை. இன்றல்ல அன்றும் இலக்கியங்கள் இத்தகைய தன்மையைக் கொண்டிருந்தனவே! தமிழர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏகலைவன், கண்ணப்ப நாயனார், நந்தனார் ஆகியோரது வாழ்வைத் தொனிப் பொருளாகக் கொண்ட பக்தி இலக்கியங்களைப் படிக்கின்றனர். கேட்கின்றனர். மேடை அளிக்கைகளில் பார்க்கின்றனர். இதே மரபைத்தான் இன்றைய இலக்கியமும் பின்பற்றுகின்றது. இன்றைய இலக்கியவாதிகள் இத்தொன்மை மிக்க கதைகள் பேசும் தொனிப் பொருளுக்கு சமூகம் சார்ந்த இன்றைய வாசகனைத் திருப்தி செய்யக்கூடிய வகையில் புதிய வார்ப்புகளைச் செய்து ஆக்க இலக்கியம் படைக் கின்றனர். பாகுபாடு, வித்தியாசம், பேதம் என்பவற்றை மலை போல வளர்த்து விட்டிருக்கும் தமிழர் இந்த எழுத்துருக்களையும் பாகுபடுத்தி இத்தன்மையான சாதீயத்தை விலாவாரியாகச் “சின்னத்தனப்படுத்தும் எழுத்துருக்களுக்குப் பஞ்சமர் (தலித்) இலக்கியம் என நாமகரணம் செய்திருக்கின்றனர்.

Page 34
PS stees
ஈழத்தில் சாதீயம் சம்பந்தமாகப் படைக்கப்பட்டவைகளுள் இரண்டு
இலக்கிய உருக்கள் தமிழ் வாசகரது கவனத்தைச் சுண்டி இழுத்திருக்கின்றன. ஒன்று நிலவிலே பேசுவோம்! இது சிறு கதை. அடுத்தது, "கந்தன் கருணை". இது வொரு ஒரங்க நாடகம். இரண்டையும் படைத்த படைப்பாளி என்.கே.ரகு நாதன் ஆவர்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள் வித்தி யாசமான போக்குகளைக் கொண்டவர்க ளென்பதை இவர்களில் அக்கறை கொண்டவர்கள் பகிரங்கப்படுத்துவ துண்டு. இதற்குள் இத்தகையோராகத் தம்மை பாவனைப்படுத்தும் போலிகள் வரார்கள்!
தான் எழுதிய ஒரே ஒரு ஒரங்க நாடகம் மூலமாகவும் அளவுக்கதிகமற்ற சிறுகதைகள் மூலமாகவும் இலக்கிய உலகின் கணிப்பைச் சுவீகரித்துள்ள என். கே.ரகுநாதன் மிகவும் அடக்கமானவர். மாலைகள், பொன்னாடைகள், பட்டங் கள், பரிசுகள் என்பவற்றை நச்சாதவர். தனால்தான் இன்னமும் இவர் ‘கலா பூஷணம்’ விருதைப் பெறாதிருக்கிறார். எந்தவொரு விடயத்திலும் சத்தியவழி நிற்கும் நக்கீரர்! தான் மற்றவர்களுக்கு எழுதுவதைப் போல் தானும் வாழ்ந்து காட்ட வேண்டுமென அறைகூவல் செய்பவர்.
மிகுந்த சமூக அக்கறை கொண் டவர். எம்.சி. சுப்ரமணியத் தோடு இணைந்து சிறுபான்மைத் தமிழர் மகா சபையைக் கட்டியெழுப்புவதில் தனது பணியை அர்ப்பணித்தவர்.
64
நிலவிலே பேசுவோம்", கலம்" ஆகிய சிறுகதைத் தொகுதிகளை պւb எழுச்சி" என்ற தன் வரலாற்று நூலையும் வெளியிட்டவர்.
தசமங்
'பனைச் சோலைக் கிராமத்தின்
தீண்டாமை ஒழிப்பிற்கான வெகு ஜன இயக்கத்தின் மகாநாட்டு மலருக்காக இவர் எழுதிய ஒரங்க நாடகம் ‘கந்தன் கருணை". அதன் தொனிப் பொருளின் சமகாலப் பெறுமானத்தை கணிப்பிற் கொண்டு அரங்க ஆற்றுகையாளராக - அதில் துறை போன விற்பன்னர்களான இளைய பத்மநாதன், சி.மெளனகுரு, தாஸியஸ் ஆகிய மூவ ரால் வெவ்வேறு அரங்க உருப்பெற்று அரங்கில் ஆற்றுகை செய்யப்பட்டு, பாரம்பரிய கூத்து அபிமானிகளால் மட்டு மன்றி நவீன நாடகமாடிகளதும் ஏகோ பித்த பாராட்டைச் சுவீகரித்தது.
இந்த எழுத்துரு பிறந்த கால்த்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் பஞ் சமருக்குத் திறந்து விடுவதில் பாரிய போராட்டத்தைக் கண்டது. பஞ்சமர்கள் அகிம்சா வழியில் போராட்டத்தை நடை முறைப்படுத்தினர். மேட்டுக்குடியினர் அரச அதிகாரப் பலத்தோடு மாவிட்ட புரம் கந்தனுக்கு பூசையும் இல்லாமல் பூட்டி வைத்தனர்.
இதைத் தொனிப் பொருளாக
வைத்துப் புனையப்பட்டதே 'கந்தன்
கருணை". தேவலோகத்திலிருந்து நேரில் வந்து கந்தன் மேட்டுக்குடியினரின் அடா வடித்தனங்களைக் காண்கிறார். அநீதி யெனத் தீர்மானிக்கிறார். அன்பு மார்க்கம் தவறி விட்டதை உணர்கிறார். அசுரர்

களைச் சங்காரித்த தனது சக்தி வாய்ந்த வேலை நிராயுதபாணிகளான பஞ்சமப் பக்தர்களுக்குக் கொடுக்கிறார். 'கெஞ் சினால் மிஞ்சும் தலைக்கணம் படைத் தோருக்கு இது தகுந்த பதிலடியாகப் படுகிறது!
தீண்டாமையின் கழுத்தை நெரிப் போமெனப் போக்குக் காட்டும் வேளாங் குடிகளுக்கு ‘நிலவிலே பேசுவோம்!" அசல் நெத்தி அடி! அன்று பஞ்சமருக்கு நெருடலாக இருந்த தீண்டாமை சார்ந்த பிரச்சினைகளைக் கலந்தாலோசிக்கும் பொருட்டு அவர்களது பிரதிநிதிகளை அழைத்து, வீட்டுக்குள் இருத்திப் பேசு வதற்கு மனங்கொள்ளாது, வெளியே எறித்துக் கொண்டிருந்த நிலா வெளிச் சத்தில் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. இந்த அசிங்கமான நஞ்சுத் தனமான செயலை படைப்பாளி என். கே.ரகுநாதன் கலை நயத்தோடு, வாச கனின் மனதில் உறையும் படியாக, உறைக்கும் படியாக படைத்துள்ளார். பஞ்சமர் இலக்கியச் சிறுகதைகளில் சகல அம்சங்களிலும் இச்சிறுகதை முதன்மை காட்டி, காலத்தால் சாகாத் தன்மை கொண்டதாக விளங்குகின்றது. முற் போக்கு இலக்கியத்திலும் இக்கதை பேசக் கூடியதாக வாழ்க்கையின் பிற் போக்குத் தனங்களையும் விமர்சிக் கின்றது.
விபவி கலாசார மையம் + முற் போக்கு கலை இலக்கியப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் அண்மையில் நடாத்தப்பட்ட முற்போக்கு இலக்கிய ஆய்வுக் கருத்தரங்கின் இறுதி நிகழ்வில் என்.கே.ரகுநாதனின் படைப்புகள் ஆய்
65
ベ
page):
வுக்குட்படுத்தப்பட்டன. இது 7.5.2006 இல் கொழும்பு 6. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றது. முன்னாள் உதவி தேர்தல் ஆணையாளர் ஜெயரத்தினம் தலைமை தாங்கினார். ஆய்வுரையை சஞ்சிகையாளர் தெ.மது சூதனன் நிகழ்த்தினார். - எமது இலக்கிய வரலாறு முழுமைப் படுத்தப்படாததாகவே விளங்குகின்றது. கலந்துரையாடல்கள் கூட குறிப்பிட்ட சில படைப்பாளிகளோடேயே நின்று விடுகின்றன. விமர்சனம் எதிர்பார்க்கும் வளர்ச்சியை எட்டவில்லை. இலக்கியப் படைப்புகளை அதனதன் தளங்களில் வைத்துப் பார்க்கும் தன்மை பின்பற்றப் படுவதில்லை! மேலோட்டமான பார்வை களே எமக்குக் கிடைக்கின்றன. புதுமைப்பித்தனை எடுத்துக் கொண்டால் அவர் தனது படைப்புகளைப் பல தளங் களுக்கு நகர்த்தினார்.
இதழியல் வளர்ச்சியில் காலத்திற் குக் காலம் தோற்றமிட்ட புனைகதை மரபுகளைக் காணக் கூடியதாக இருக்கின் றது. ஈழகேசரி மரபு என்றவொரு மரபு எமக்குண்டு, பெரியசாமி என்பவரது மறு மலர்ச்சிக் கதைகள் மிக லாவண்ய மானவை. அவைகளில் காணப்படும் சிறுகதை நுட்பங்கள் அலாதியானவை. 50களில் தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகள் வெளியிட்ட புனைகதை களில் விரிவுத் தன்மை மேலோங்கி நின்றது.
மார்க்சிய வாதத்தை உள்வாங்கிய இடதுசாரிகள்தான் சிறுகதையின் தளத்தை மாற்றியவர்கள். 50களிலிருந்து

Page 35
666):
தான் அரசியல் சார்ந்த பிரச்சினைகளைத் தொனிப் பொருளாகக் கொண்ட புனை கதைகள் படைக்கும் முயற்சி ஓங்கத் தொடங்கியது. ஏற்றத் தாழ்வுகள், சுரண் டல் என்பன புனைகதைகளில் விரிவைப் பெற்றன. இதே சமயத்தில் எழுத்தாளர் அமரர் இராசநாயகன் ஈழத்துச் சிறு கதையை இன்னொரு தளத்திற்குப் பெயர்த்த முயன்றார்.
1924இல் வெளியான "இந்து சாதனம்’ என்ற ஏட்டில் குமரன் என்பவர் சொன்னதாக குறிப்பொன்றுண்டு. அதில் - இலக்கியமெழுதுவதாகில் ஆங் கிலக் கல்விமான்களும் பண்டிதர்களும் எழுத வேண்டும். இந்த விடயத்தில் பாமரர்கள் அனுமதிக்கக் கூடாது. - எனச் சொல்லப்பட்டிருப்பதாகவும் ஆய்வாளர் சொன்னார்.
தனது ஆய்வுரையில் தொடர்ந்து தெ. மதுசூதனன் சொன்னதாவது படைப்பாளியான என்.கே.ரகுநாதன் மிக
வும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவர். இவர் பேச்சில் தீவிரவாதியாக இருந் தாலும் இவரது எழுத்துக்கள் மென் போக்கைக் கொண்டவையாகவே இருக் கின்றன. வாழ்க்கையில் தன்னை ஈர்க்கும் முரண்பாடுகளை இலக்கியமயப்படுத்து பவர். புராதன இதிகாச உண்மைகளைச் சமகாலத்தோடு ஒப்பு நோக்குபவர். இவ ரது கதையை நடத்திச் செல்லும் தன்மை இயல்பானதும் அலாதியானதுமாகும். பாத்திரங்களைச் சித்திரிக்கும் பொழுது உளவியல் ரீதியான எழுத்தைச் சாரத்தி இவரது போக்கும், தன்மைகளும் இவரை முற்போக்காளரிட
யப்படுத்துவார்.
66
மிருந்து வித்தியாசப்படுத்துகின்றது. இவர் எடுத்த எடுப்பில் கேட்டவுடன் 'இந்தாப் பிடி கதை என எழுதித் தரும் அசுர எழுத்தாளரல்ல. எந்தவொரு தொனிப்பொருளையும் ஊறப்போட்டுத் தான் அதற்குச் சிறுகதை உருவைக் கொடுப்பார். தனக்கு ஏற்படும் தார்மீகக் கோபங்களை இலக்கியமாக்குகிறார். இடதுசாரி முற்போக்குச் சிந்தனைகளைத்
தனக்கேயுரிய ஆளுமையோடு வெளிப்
படுத்துகிறார். இவர் 1950இல் சுதந்திரன் பத்திரிகையில் நல்ல தீர்ப்பு", 1950இல் வெளியே நல்ல நிலவு' (நிலவிலே பேசு வோம்) ஆகிய கதைகளையும் 1956 இல் ஈழகேசரியில் இலட்சியநெருப்பு’ ஆகிய உருவத்தாலும் சிறந்த சிறுகதைகளை எழுதித் தமிழ் சிறுகதை மன்னர்களில் தானுமொருவ
உள்ளடக்கத்தாலும்,
ரெனச் சாதனை படைத்தார். என்.கே.ரகு நாதன் படைப்புகள் சம்பந்தமான தனது மேற்படி ஆய்வுக் கருத்துக்களை தெமது சூதனன் இப்படி வெளிப்படுத்தினார்.
- முற்போக்கு இலக்கியத்தை முன்னெ டுத்த அடுத்த பரம்பரையின் படைப்பாளு மைகளையும் இதேபோல் ஆய்வுக்கெடுத் துக் கொள்ளப்பட வேண்டும். இலக்கி யத்தை இயக்கமாக நடத்தியவர்கள் முற் போக்காளர்கள். உண்மையான நடை முறை வாழ்க்கையை அவர்களில் சிலர் தத்ரூபமாக வெளிக் கொணர்ந்திருக்கின் றனர். பக்தி இலக்கிய காலத்தில் அவ் வியக்கம் எப்படி அதற்கு எதிரானவர் களுககு மத்தியில் பலாத்காரத்தை ஏவி யதோ அதே தடத்தைத்தான் முற்போக்கு இலக்கியமும் அடியொற்றி எதிராளிக ளோடு சமராடியது. இவைகள் தவிர்க்க

: 67
முடியாதவை. இதை மன்னிப்பது அறி வுலகின் கடமை.
ஈழத்தில் விமர்சனம் அருகி வரு கின்றது. அக்குறைகளை இது போன்ற கருத்தரங்குகள் நிறைவு செய்யும். எனவே இவைகள் தொடர்வது இலக்கி
தனது தலைமையுரையில் தலைவர் ஜெய ரத்தினம் மேற்படி கருத்துக்களை முன் வைத்தார். ஆய்வுரைக்கான கருத்துப் பரிமாறல்கள் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை! மிகக் குறைந்த நேரத்துள் நிறைவைக் கண்டுவிட்டது.
யத்தைப் பாசனப்படுத்தும்.
வருகை தந்திருந்த விரிவுரையாளர் கலாநிதி செ.யோகராசா, இந்து சாதனத் தில் குமரன் குறிப்பிட்டிருந்தது போல் 1924இல் இலக்கியத்தில் பாமரர்கள் இருந்ததில்லையெனவும் அக்கருத்து மீள் பரிசீலனைக்குரியதெனவும் சொன்னார். அப்படி இருந்தபடியால் தான் அத்தகைய தொரு கருத்து எழுந்திருக்க வேண்டு மென ஆய்வாளர் பதில் சொன்னார்.
- இந்த இருவரது கருத்துகளுக்கும் மேலாக இன்னொரு கருத்தையும் சொல்ல முடியும் குமரன் முன்வைத்த கருத்து எதிர்காலத்தை முன்வைத்தும் இருக்கலாமல்லவா!
ஐந்து அமர்வுகளைக் கண்ட ஆய்வுக் கருத்தரங்கு - ஒரு வெட்டுமுகப் பார்வை
இந்த ஆய்வுக் கருத்தரங்கைச் சாத்தி யப்படுத்தியவர்களை நிச்சயமாக இலக் கிய உலகு போற்றும் ஈழத்து விமர்சனம் இன்று எத்தன்மையைக் கொண்டிருக்
666):
கின்றதென்பதை அறிய முடியாத நிலை யில் இன்றைய இலக்கிய அபிமானி தத்
தளிக்கிறான். இதனால் எமது படைப்
பிலக்கியத்தின் தரம் என்னவென்பது புதி ராகி விட்டது! பத்திரிகைகள், சஞ்சிகை களில் அறிமுகங்களே காணப்படு கின்றன. மேடைகளில் பேசுபவர்கள் கட்டியக்காரராகச் செயல்படுகின்றனர். இந்த நிலையில் இந்த நாட்டின் இலக் கியப் போக்கை மாற்றி அமைத்த முற் போக்கு இலக்கியம் ஆய்வு செய்யப்பட் டப் போகின்றதென்ற தகவல் இலக்கிய நெஞ்சங்களை இங்கிதம் கொள்ள வைத்தது.
ஈழத்து முற்போக்கு இடதுசாரி இயக்கத்தில் ஆழக்கால் பதித்த ஐவரது இலக்கியப் படைப்புகள் இக்கருத்தரங் கில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. கே. டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேச லிங்கன், நீர்வை பொன்னையன், என். கே.ரகுநாதன் ஆகிய ஈழத்து முன்னணிப் படைப்பாளிகளது ஆக்கங்கள் முறையே கலாநிதி. ந.ரவீந்திரன், இதழியல் விரி வுரையாளர் ம.தேவகெளரி, கலாநிதி. செ.யோகராசா, முதுநிலை விரிவுரை யாளர் வ.மகேஸ்வரன், சஞ்சிகையாளர் தெ. மதுசூதனன் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டன. இவர்கள் மிகுந்த வீச் சோடும், ஆவேசத்தோடும் முற்போக்குக் கோட்பாடுகளை விபரித்தனர்.
முற்போக்கு இடதுசாரி இலக்கியத் தின் அடிநாதமாக தேசிய ஒருமைப்பாடு, வறுமை, சாதீயம், வர்க்க முரண்பாடு என்பன இருந்ததை முற்போக்கு இடது சாரி இலக்கியத்தின் தீவிர வாசகர் அறிவர். இவைகள் மார்க்சீய அணுகு

Page 36
68
முறையோடு பெரும்பாலும் இலக்கிய மாக்கப்பட்டன. இக்கருத்தரங்கு தேசிய ஒருமைப்பாடு, வறுமை ஆகிய இரண் டிற்கும் முக்கியத்துவம் கொடுக்காததை அறிய முடிந்தது. இவை தவிர்க்கப்பட்ட தற்கான முக்கிய காரணம் புரியவில்லை.
முற்போக்கு முளைவிடத் தொடங் கிய ஆரம்ப காலத்தில், அணியைச் சார்ந்த இலக்கியவாதிகள், எதிரணியினர் காதல் கதைகளை எழுதுவதாகச் சாடி ஆனால், அனைத்து ஆய்வாளர் களும் இந்த ஐந்து படைப்பாளிகளும் மனோரதியக் கதைகளையும் எழுதியதாக கருத்துரைத்தனர். இந்த அடைவை எடை போட்டுப் பார்க்கும் பொழுது அந்த ஐவரைப் பின் தொடர்ந்த சந்ததியினரான
னர்.
தெணியான், பென டிக்ற் பாலன், ராஜ பூரீகாந்தன் ஆகியோர் இதற்கு விதிவிலக்காக இருந்திருப்பதைச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஈழத்து இலக் கியத்தில் முற்போக்கு இடதுசாரியம் ஆழக்கால் பதித்து நின்ற சமயத்தில் இவர்கள் இலக்கியம் படைக்கத் தொடங்
செ.யோகநாதன்,
கியதால் இவர்கள் மனோரதியக் கதை கள் குறித்து அக்கறை காட்டாதிருந் துள்ளனர். இக்கருத்தரங்கு இவ்வுண் மையை வெளிப்படுத்தி இருக்கின்றது!
இக்கருத்தரங்கு குறித்தான பத்தி ரிகைக் குறிப்பொன்றில் ந.ரவீந்திரன் டானியல் எழுதியது போல் வாழ வில்லை. கம்யூனிஷம் பேசிய அவர் கட்சிப் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. கட்சி உறுப்பினரா கவும் இருக்கவில்லை. ஒரு குட்டி பூர்சுவா என டானியலைக் குற்றம் சாட்டியதாக நாவலாசிரியர் கே. விஜயன்
கூறியுள்ளார். குட்டி பூர்சுவா என்ற குற்றச்சாட்டு அக்காலத்தில் டானியலின் எதிரணியினரால் முன்வைக்கப்பட்டது உண்மைதான்! அதற்கான காத்திரமான பதில்களை டானியல் அவ்வப்போது வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் கட்சிப் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. கட்சி உறுப்பின ராகவும் இருக்கவில்லையென்ற ரவீந் திரனின் வாக்குமூலம் வாதத்திற்குரியதே. டானியல் தடம் புரளாத கொள்கை யாளர். தோழர் கார்த்திகேசனோடு இணைந்து கொம்யூனிஸ்ட் கட்சி நட வடிக்கைகளில் ஈடுபட்டவர். ஒரு கட்டத் தில் என்.சண்முகநாதனோடு இணைந்து கொண்டவர். அத்தகையவர் குறித்து - அவர் அமரராகி விட்ட இக்காலத்தில் குறை காண்பது முறையாகுமா? உண்மை நிலை தெரியத்தான் வேண்டும். இதற்கு மூத்த இடது சாரிகள் உதவ வேண்டும்.
இக்கருத்தரங்கை இளைய தலை முறை கண்டுகொள்ளவில்லையென் பேன். இதுவொரு ஆரோக்கியமான செயலல்ல. பழையனவற்றை நவீனப் படுத்துவதிலேயே எமது புதுமைகளும் புரட்சிகளும் அமைய வேண்டும். பழைய விதைதான் புதிய செடியைத் தரும்!
ஆய்வுரைகள் நூலாக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நூல் கருத் தரங்கில் தென்பட்ட குறைகள் களையப் பட்டு, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலச்கியத்தின் உண்மை நிலையை வாச கருக்கு தருமென்ற எதிர்பார்ப்போடு, இது போன்ற இலக்கிய கருத்தரங்குகள் உரிய விளம்பரத்தோடு மேலும் நிகழ வேண்டுமேன எதிர்பார்ப்போமாக!

69 G- ત اسٹی" لئے
- டொலிக் ஜீவn
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவை அதன் உற்பத்தி ஸ்தலத்திற்கு நேரே போய்ச் சாப்பிட்டிருக்கிறீர்களா?
வெள்ளவத்தை. எஸ்.தனஞ்சயன்
அடிச் சக்கை அப்படிக் கேளுங்கள். ஒட்டப்பிடாரம் அண்ணாச்சி குருசுவாமி அவர்களினது மூத்த மகன் ஆறுமுகத்திற்குத் திருமணம் திருநெல்வேலியில் நடைபெற்றது. என்னை அவர் கொழும்பிலிருந்து அழைத்திருந்தார். எனது நிபந்தனை ஒன்று. 'முதற் தடவையாகத் திருநெல்வேலி வருகின்றேன். அங்கு இருட்டுக் கடைக்கு நேரே சென்று அந்தப் பிரபலமான அல்வாவைச் சாப்பிட வேண்டும். சம்மத மென்றால் திருமணத்திற்கு வருகிறேன் என்றேன். பிரச்சினையின் சிரமம் *குத் தெரிந்ததுதான். இருந்தும் ஒரு மன ஆசை. திருமண இடைவேளையில் இருட்டுக் கடைக்கு என்னை நேரில் அழைத்துச் t சென்று அல்வா வாங்கிச் சுவைத்து உண்ணத் தந்தார், அண்ணாச்சி. இன்று
இலக்கிய நண்பர் ஏ.ஜே.கனகரட்னா உடல் நலமில்லாமல் கொழும்பில் தங்கியுள்ளாராமே, அவரது உடல் நிலை எப்படி? எந்த முகவரியில் தங்கியுள்ளார்?
நீர்கொழும்பு. கே. மாணிக்கராஜா.
இப்பொழ5 அவர் உt ல் நிலை தேறி வருகிறது. அடிக்கடி போய்ப் பார்த்து வருகிறேன். : , றொஸ்மிட் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரியிலுள்ள அவரது சகோதரனின் இல்லத்தில் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Page 37
岛 70
অ
41வது ஆண்டு மலர் விற்பனை லண்டனைச் சேர்ந்த வண்ணை எந்தளவிற்கு இருக்கிறது? ய்வம் என்பவர் தொகுத்து வெளி
ட காலங்கள் வாழ்த்தும் 300 த்துக் கலைஞர்கள் என்ற நூலைப் ார்த்துப் படித்துப் பிரமித்துப் போய்
விட்டேன். பெரும் உழைப்பு. பெரும்
புத்தளம். எஸ்.சிவதாசன் 繼 雛翁° :38
மல்லிகையின் ஆண்டு மலர்களே பலராலும் போற்றிப் புகழப்படுபவை. அதன் உள்ளடக்கக் கனதி கருதிப்
பலராலும் பாதுகாக்கத் தக்கவை. மாத 8: இதழ்களை விட, மலர்கள் வேக
...& .38 :... " இலக்கியப் படைப்புகள் காலத்தின் வேக விற்பனையாகி வருகின்றன. O 88: 滚※ * கண்ணாடி என்பது இந்தக் காலத்
திற்கும் பொருந்துமா? இவற்றினை விட,
இலக்கிய நண்பர்களை எப்படித் எதனைப் பிரதிபலிக்க வேண்டுமென தேர்வு செய்கிறீர்கள்? இளைய தலைமுறைப் படைப்பாளி
களுக்குக் கூற விரும்புகிறீர்கள்?
நல்லூர். க.செல்வராஜ்.
ч து வருவேன். இலக்கியத் துறையில்
படியுள்ளது எனக் கூர்ந்து பார்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீண்டாமை வெகுசன இயக்கத் தின் போது முரணாக நடந்து கொண்ட
சமீபத்தில் நீங்கள் படித்து வியந்த தாக ஒரு பத்திரிகை குற்றம் சாட்டு புத்தகம் என்ன? கின்றதே, இதற்கு என்ன பதில் கிளிநொச்சி. எஸ்.தயாபரன் சொல்லப் போகிறீர்கள்?
கொழும்பு 15. க.பீற்றர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது வெறும் அவதூறுப் பிரசாரம்.
சொல்பவர்கள் எந்த வகை சொல்லியே தீரு தெரிந்தவர்களுக்கு
இதன் உண்மை புரியும்.
இந்தியாவில் இடதுசாரிகளின் துணை கொண்டு காங்கிரஸ் மத்திய ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இன்று அந்த மத்திய சர்க்கார் ஆட்டங்கண்டு விடும் போலத் தெரிகிறதே, மத்திய ஆட்சி கவிழ்ந்து போய்விடுமா?
கொழும்பு 06. எஸ்.ஆர்.பாலச்சந்திரன்
篷&ళ్ల
மத்தியில் இடதுசாரிகளின் அனு ரணையுடன் ஆட்சியைக் காங்கிரஸ் ட்டணி கைப்பற்றியது டின்னவோ ண்மைதான். ஆனால், அதே இடது சாரிகள் கேரளத்திலும், வங்காளத்திலும்
மாநிலத்திலும் இடதுசாரிகள் நிர்ணய சக்திகளாக அரசி ல் மலர்வார்கள்.
நீங்கள் அறிவுபூர்வமாகச் சிந்திப்ப வரா? அல்லது உணர்வுபூர்வமாகச் சிந்திப்பவரா?
மாத்தளை. வி.ஞானதேவி
71
பெரும்பாலு
அதேசமயம் நானொரு நீண்டகால இடதுசாரி என்ற வகை ufaid அறிவுபூர்வ மாகவே சிந்தித்து முடிவுகளை எடுப்பவன்.
நீங்கள் அதிகமதிகம் நேசிக்கும் நண்பர்கள் யார்? - யார்?
su66turt. ம.தவலோகன்
யார் யார் ஈழத்துத் தமிழ் இலக்கி யத்தையும் அத்துடன் மல்லிகையையும் சுயநலமில்லாமல் நேசிக்கிறார்களோ, அவர்களையே நான் குறைவு படாமல் நேசிக்கின்றேன்.
நீங்கள் உங்கள் சம்பந்தப்பட்ட சகல ஆவணங்களையும் பாதுகாத்து வருகிறீர்களா?
க.ஜெபநேசன்
னம்ாகவும், பொறுப்பாக வும் நான் சம்பந்தப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள்,அச்சில் வடிக்கப்பட்ட ஊடகச் செய்திகள் அனைத்தையும் பாது காத்து வருகின்றேன். இந்தச் சேமிப் பைச் சேமிக்கக் கற்றுத் தந்தவர் இரசிக மணி கனக.செந்திநாதன் அவர்கள்.
மல்லிகையில் தொடர்ந்து மாதா மாதம் இந்த நாட்டில் மதிக்கப்படத்தக்க

Page 38
s page)
வர்களின் உருவங்களை அட்டையில்
பதிவு செய்து வருகிறீர்களே, அதன் நோக்கம் என்ன?
ஜாஎல. எஸ்.சோதிநாதன்
நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் நமது பின் சந்ததியினரின் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய முனையும் போது, அவர் களுக்குத் தகவலாகக் கிடைக்க வேண்டு மென்ற நீண்ட நெடுநோக்குப் பா யுடன் செய்யும் பதிவுதான் இது. இன்று வெறும் அட்டைப் படமும் உள்ளே ான்கு பக்கக் குறிப்புகளாக வும் சாதாரணர் கண்களுக்குத் தென்பட லாம், பொறுத்திருந்த ருங்கள். காலஞ் செல்லச் செல்ல, இவை அனைத்தும் நூலாக வெளிவர, வெளி தனது ஆழ அகலங்கள் புரியும்
வார இதழ்களில் வரும் தொடர் கட்டுரை, நீங்கள்
தொடர்ந்து படித்து வருவதுண்டா?
கதைகளை
கண்டி. எஸ்.மனோகரன்
慈、羟。孪蕊、 玖、裘 : " చేళ தொடர் கட்டுரை, கதைகளை நான்
ம் நூல்களையே நான் பெரிதும் விரும்பி வாசிப்பேன். இருந்தும் விகடனில் கவிஞர் வைரமுத்து எழுதும் ெ தாட ': வாச்சி காவியம்", சேரனின் டூரிங் டாக்கீஸ்? கட்டுரையையும்
72
முத்துக் கவிஞரை பாடலாசிரியராக மாத்திரம் தான் நானவரைக் கருதி வந் தேன். ஆனால் விகடனில் அவரெழுதும் தொடரைப் படித்த பொழுது, அந்தக் 5ள்ளிக்காட்டு மண்ணின் ஒவ்வொரு
நுகர்ந்து பார்த்துச் சுவாசிக்க முடிந்தது.
டேயப்பா என்ன எழுத்து i
> ண்னால்
மறைந்த எழுத்தாளர் சோம காந்தனின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றிக் கூற முடியுமா?
ந.நவநீதன்
புத்தளம்,
விமரிசகர்கள்தான் எதிர்காலத்தில் அவரது படைப்புகளைப் பற்றித் தமது
மரிசன மதிப்பீடுகளை ழத்தில் வடிக்க முடியும். ஆனால், அவரது
இலக்கிய இயங்கு தளம் வியப்பிற்கும் பெருமைக்கும் உரியதாகும். நான், நந்தி, சொக்கன் உட்பட நமது : னி விழாக் களை அவர் முன் நின்று நடத்திய விதம் <ன்றுமே பாராட்டுக்குரியது. முற் போக்கு எழுத்தாளர்களது மாநாடு, விழாக்கள் வெற்றிகரமாக நடந்தேற அவரளித்த பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதொன்றாகும். தொடர்ந்து பழம்பெரும் எழுத்தாளர்களெல்லாம் நம்மை விட்டு விடை பெறுகிறார்கள். அவர்களினது இடத்தை நிரப்பத்தக்க தாகப் புதியவர்களைக் கண்டுபிடிப்பது தான் மிகவும் சிரமமாக இருக்கிறது.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13.
முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும்
வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

POOBALASING|HAM
BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS & PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head office: Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colombo 06, Sri Lanka.
Fax. 2337313 4A, Hospital Road,
E-mail : pbdhoG)sitnet. Ik Bus Stand, Jaffna.
பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
256OcepeoDLD 3 கிளை இல, 202, 340 செடியார் தெரு, இல. 309 A-23. காலி வீதி, கொழும்பு II, இலங்கை, 6a5m"Qypúbl Oó, Sò6Aomerodas 65nT. GBL. 2422T32|| 6gT. GBL. 4-55775
தொ. நகல் 23373|3 LólasteoT56 pbdhoG)Sltnet.lk இல.A. ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம், யாழ்ப்பானம்.

Page 39
Malikai
RSHAMAT.
Bangles, Chair Ear Tops, Guaran
éSalmaan
XV. "Santhosh Pla * 15. F 229-1114, M: Colomb Te: O11 : Hot Line : O7
 
 

ONJEWELLERIES
as, Necklaces, nteed Items Etc.
こ/
థ్రో Tradin 8
za Complex' # Xği loor, ■ a in Street, O - 11. 2394512 "7 666 1336